Archive for the ‘பெரிய ஆழ்வார் திரு மொழி’ Category

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-10–துப்புடையாரை அடைவது எல்லாம்—

August 4, 2021

கீழில் திரு மொழியிலே
புருஷகாரத்தால் அல்லது பகவத் ஸமாஸ்ரயணம் ஸித்தியாது என்னும் இடமும்

எல்லாத் தேஸத்திலும்
எல்லாக் காலத்திலும்
எல்லா அவஸ்தைகளிலும்
மங்களா சாஸனமே ஸ்வரூபத்தோடே சேர்ந்த நிலை நின்ற புருஷார்த்தம் என்று
அறுதி இட்டார் கீழ்

மங்களா ஸாஸனம் பண்ணாத போது க்ஷண காலமும் பொறுக்க மாட்டாத
தம்முடைய மார்த்தவத்தை அவன் திரு உள்ளத்திலே படும்படியாக விண்ணப்பம் செய்கிறார் –

இது அந்திம ஸ்ம்ருதி ஆனாலோ என்னில் –
அது கூடாது
ப்ரபன்னரான இவருக்கு அந்திம ஸ்ம்ருதி உபாய பூதனான ஈஸ்வரன் பக்கலிலே கிடக்கையாலே
அஹம் ஸ்மராமி –என்னக் கடவது இறே

ஆகையால் கரணங்கள் அவிதேயங்களான மரண காலத்திலும்
மங்களா ஸாஸனம் பண்ணாத போதும் தரிக்க மாட்டேன் –
இதுக்கு விச்சேதம் வராதபடி பரிஹரித்துத் தந்து அருள வேணும் என்று
பெரிய பெருமாளை அர்த்திக்கிறார் –

இம் மங்களா ஸாஸனம் ஸ்வரூபத்தோடே சேருமோ என்னில்
ரஷ்ய ரஷக பாவம் மாறாடும்படி
ப்ரேமம் தலை மண்டி இட்டு அதன் காரியமாய்க் கொண்டு வருகிற
பரிவாகையாலே சேரும் –

———–

சர்வ சக்தியான நீ அந்திம தசையிலே எனக்கு ரக்ஷகனாக வேணும் என்கிறார் –

துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்து துணை யாவர் என்றே
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே- 4-10-1-

பதவுரை

அரங்கத்து–திருவரங்கம் பெரிய கோயிலில்
அரவு அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல்
பள்ளியானே–பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே!
துப்பு உடையாரை அடைவது–(அடியாரைக் காப்பதில்) ஸாமர்த்தியமுடைய தேவரீரை ஆஸ்ரயிப்பது
உடையாரை–முன்னிலை படர்க்கை பிரயோகம்
எல்லாம் சோர்வு இடத்து–‘ஸர்வ இந்திரியங்களும் சிதிலமாய் விடுங்காலத்தில்
துணை ஆவர் என்றே–தேவரீர் துணையாயிருக்கும் என்கிற எண்ணத்தினாலன்றோ?

(அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் ப்ரபன்னர்களுக்கு அன்றோ என்று அவன் சொன்னதாகக் கொண்டு
சரணம் என்று வாய் வார்த்தையாக
புரிதல் இல்லாமல் செய்தேன் என்கிறார் )

ஒப்பு இலேன் ஆகிலும்–(இவ்வாறு துணை செய்வதற்கு உரிய அதிகாரிகள் இன்னாரென்னு தேவர்
திருவுள்ளத்திற் கொண்டிருக்கும் அவர்களோடு) அடியேன் ஒப்பற்றவனாயினும்,
நீ ஆனைக்கு அருள் செய்தமையால்–தேவர் கஜேந்திராழ்வானைக் காத்தருளியவராதலால்
(அவரைப் போல் அடியேனையுங் காத்தருள்வீரென்று)
நின் அடைந்தேன்–தேவரைச் சரணம் புகுந்தேன்

(அப்போது வந்து ரக்ஷிக்கிறேன் என்று சொன்னதாக )

எய்ப்பு–(வாத பித்த ச்லேஷ்மங்களினால் நெருக்குண்கையா லுண்டாகக் கடவதான) இளைப்பானது
என்னை–அடியேனை
வந்து நலியும் போது–கிட்டி வருந்துங்காலமாகிற
அங்கு–அந்த சரம தசையில்
நான்–அடியேன்
உன்னை–தேவரீரை
ஏதும்–க்ஷண காலமாயினும்
நினைக்க மாட்டேன்–நினைக்க முடியாதவனாவேன்
இப்போதே–(கரண களேபரங்கள் தெளிவு பெற்றிருக்கிற) இப்போதே
சொல்லி வைத்தேன்–(என்னுடைய பிரார்த்தனையை) விண்ணப்பஞ் செய்து கொண்டேன்

துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்து துணை யாவர் என்றே
சக்திமான்களை ஆஸ்ரயிக்கிறது தானும் தன் கரணங்களும் தனக்கு உதவாத ஆபத் தசையிலலே
தனக்கு ரக்ஷகர்கள் ஆவார் என்று இறே
ஆன பின்பு ஸர்வ ஸக்தியான நீ உன் பக்கலிலே ஸர்வ பர ந்யாஸம் பண்ணி இருக்கிற என்
சரீர அவசான காலத்திலே என் ஆத்மீயங்கள் ஒன்றும் எனக்கு உதவ மாட்டாதே
அத் தசையில்
அஹம் ஸ்மராமி
நயாமி
என்று நீ அருளிச் செய்தபடி ரக்ஷகனான வேணும் –

ஒப்பிலேன் ஆகிலும்
உன்னை ஆஸ்ரயிக்கைக்கு யோக்யதை இல்லாத படி தோஷ யுக்தனாய் இருக்கும் இருப்பு
அஸத்ருசனாய் இருந்தேனே யாகிலும்
உன்னுடைய ஷமா வாத்சல்ய தயாதி குணங்களை அனுசந்தித்து உன்னை ஆஸ்ரயித்தேன்
இப்படி நம்மை ஆஸ்ரயித்தவர்களை நாம் ரக்ஷிக்க எங்கே கண்டீர் என்ன

நின் அடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
ஏன் -ஸ்ரீ கஜேந்திரனை ரஷித்தது இல்லையோ
ஆனையினுடைய துதிக்கை முழுத்தின ஆபத்தில் உன் கிருபையாலே ரக்ஷித்திலையோ

உமக்கு அப்படி ஆபத்து ஏது என்ன

எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
தேஹ விமோசன காலத்திலே
த்ரிவித கரணங்களும் சோரும்படியான தசையிலே

அன்றிக்கே
அத் தசையிலே மங்களா ஸாஸன விச்சேதத்தால் வந்த
இளைப்பு நலியும் அளவில் -என்னவுமாம்

அப் போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே-
அத் தசையில் உன்னை ரக்ஷகனாக அனுசந்திக்க ஷமன் ஆகேன்
அதுக்காக அனுசந்தான ஷமனான இப்போதே விண்ணப்பம் செய்து வைத்தேன்

இந்த ரக்ஷகத்வத்தை பிரத்யஷப்பித்துக் கொண்டு
கோயிலிலே திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே
பிராட்டியோடே கூடப் பள்ளி சாய்ந்து (கொண்டு )அருளுகிறவனே
சொல்லி வைத்தேன் -என்று அந்வயம் –

————-

சரீர வியோக காலத்தில் யம படர் வந்து கிட்டாதபடி நோக்கி அருள வேணும் என்கிறார் –

சாமிடத்து என்னை குறிக்கொள் கண்டாய் சங்கோடு சக்கரம் ஏந்தினானே
நாமடித்து என்னை யனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள்
போமிடத் துன்றிறத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
ஆமிடத்தே உன்னை சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே -4- 10-2 –

பதவுரை

சங்கொடு–ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும்
சக்கரம்–ஸ்ரீஸுதர்சனாழ்வானையும்
ஏந்தினானே–திருக் கையில் அணிந்து கொண்டுள்ளவனே
அரங்கத்து அரவு அணை பள்ளியானே!
அனேக தண்டம் செய்வதா நிற்பா–பல வகைகளால் தண்டிக்க நினையா நின்றவர்களாய்
போம் இடத்து–இழுத்துக் கொண்டு போம் போது
(என்னுடைய நெஞ்சானது)
உன் திறத்து–உன் விஷயத்தில்
எத்தனையும்–சிறிதாயினும்
புகா வண்ணம்–அவகாஹிக்க மாட்டாதபடி
நிற்பது ஓர் மாயை வல்லை–மறைந்து நிற்கையாகிற ஒப்பதொரு மாயையைச் செய்வதில் (நீ) வல்லவனாக யிரா நின்றாய்
நமன் தமர்கள்–யம படர்கள்
நா மடித்து–(மிக்க கோபத்தோடு) நாக்கை மடித்துக் கொண்டு
என்னை–(மஹா பாபியான) அடியேனை
(ஆதலால்)
ஆம் இடத்தே–ஸர்வேந்திரயங்களுடங் தெளிவு பெற்றிருக்கை யாகிற இக் காலத்திலேயே
சாம் இடத்து என்னை குறிக்கோள் கண்டாய் என்று–“சரீர வியோக ஸமயத்தில் (உன்னை நினைக்க மாட்டாத)
அடியேனைத் திருவுள்ளம் பற்றி யருள வேணும்”
உன்னை–உன்னைக் குறித்து
சொல்லி வைத்தேன்–விண்ணப்பஞ் செய்து கொண்டேன்–

சாமிடத்து என்னை குறிக்கொள் கண்டாய்
தேஹ விமோசநம் பிறக்கும் போது என் ப்ரக்ருதி அறிந்து
என்னைத் திரு உள்ளம் பற்றி அருள வேணும்
என் ஸ்வபாவம் கண்டாய் இறே

சங்கோடு சக்கரம் ஏந்தினானே
அழகுக்கும்
ஆண் பிள்ளைத் தனத்துக்கும்
உறுப்பாக ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடு திருவாழியையும் பூ ஏந்தினால் போல் தரித்தவனே
கையும் ஆழ்வார்களுமான அழகைக் கண்டால் பரியாது இருக்க மாட்டார் இறே –

நாமடித்து என்னை யனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள்
பூர்வ தோஷங்களை நினைத்து நாவை மடித்துப் பல் கறுவிக் கொண்டு
நாநாவான தண்டங்களைச் செய்யக் கடவதாக அவசர பிரதீஷராய் நிற்பர்களாய்த்து யம படர்

போமிடத் துன்றிறத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
அவர்கள் கொண்டு போம் இடத்து உன் விஷயத்தில் அத்யல்பமும் நினைவு உண்டாகாதபடி பண்ணும்
அத்விதீயமான ஆச்சர்ய சங்கல்பத்தை யுடைய

ஆமிடத்தே உன்னை சொல்லி வைத்தேன்
காரணங்கள் விதேயமான தசையில் -நீயே அத் தசையிலே ரக்ஷகனாக வேணும் -என்று
சொல்லி வைத்தேன்

அரங்கத்து அரவணைப் பள்ளியானே
எனக்கு விண்ணப்பம் செய்யலாம் படி அடுத்து அணித்தாக
பள்ளி கொண்டு அருளுகிறவனே –

————

அந்திம ஸ்ம்ருதி என் கையில் இல்லை
ரக்ஷணத்துக்குப் பரிகரமுடைய நீயே எனக்குத் துக்கங்கள் வராதபடி
ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் –

எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன் தமர் பற்றும் போது
நில்லுமின் என்ன வுபாயம் இல்லை நேமியும் சங்கமும் ஏந்தினானே
சொல்லலாம் போதே உன்னாமம் எல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக் கொள் என்றும்
அல்லல் படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10- 3-

பதவுரை

நேமியும்–திருவாழியையும்
சங்கமும்–ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்
ஏந்தினானே–கையில் அணிந்து கொண்டுள்ளவனே
வாசல் குறுகச் சென்றால்–(யம புரத்துக்குப்) போம் பழியைக் கிட்டப் புகுந்தால்
நமன் தமர்–யம கிங்கரர்கள்
எற்றி–அடித்து
பற்றும் போது–பிடிக்குங் காலத்தில்
நில்லுமின் என்னும்–“கடக்க நில்லுங்கள்” என்ற (அவர்களைக் கிட்ட வர வொட்டாமல்) தடுக்கும் படியான
உபாயம் இல்லை–ஓரு உபாயமும் (என் கையில்) இல்லை;
சொல்லலாம் போதே–வாய் விட்டுச் சொல்லுகைக்கு உரிய இப்போதே
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!
எல்லையில்–(அடியேனுடைய வாழ் நாளின்) எல்லையாகிய சரம தசையில்
உன்–உன்னுடைய
நாமம் எல்லாம்–திரு நாமங்களை யெல்லாம்
சொல்லினேன்–சொன்னேன்;
என்னை–அடியேனை
குறிக் கொண்டு–திருவுள்ளத்திற் கொண்டு
என்றும்–எப்போதும்
அல்லல் படா வண்ணம்–அநர்த்தப் படாதபடி
காக்க வேண்டும்–ரக்ஷித்தருள வேணும்–

எல்லையில் வாசல் குறுகச் சென்றால்
ஆயுஸ்ஸூ னுடைய எல்லையிலே யாம்ய மார்க்கம் அத்யா சன்னமானால்
வாசல் -வழி

எற்றி நமன் தமர் பற்றும் போது
பிடரியிலே ப்ரஹரித்து யமபடர் பிடிக்கும் தசையிலே

நில்லுமின் என்ன வுபாயம் இல்லை
அவர்களை நிவாகரிக்கத் தக்கதொரு சாதகம் என் பக்கலில் இல்லை

நேமியும் சங்கமும் ஏந்தினானே
நிவாரண பரிகரமான திருவாழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
இடைவிடாமல் தரித்துக் கொண்டு இருக்கிறவனே
உன் கையில் சாதநத்துக்கு என் பக்கலிலே ஜீவனமும் உண்டு என்கை
(குறைகளை போக்கியே திருவாழி போல்வாருக்கு ஜீவனம் )

சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம் சொல்லினேன்
கரணங்கள் வச வர்த்தியான தசையிலே
உன்னுடைய ப்ராப்ய வாசகமான திரு நாமங்களை சொல்லி
மங்களா ஸாஸனம் பண்ணி அனுபவித்தேன்

என்னைக் குறிக் கொள் என்றும்
இவன் மங்களா சாசனத்தால் அல்லது தரியான் என்று திரு உள்ளம் பற்றி அருளி

அல்லல் படா வண்ணம் காக்க வேண்டும்
மரண தசை தொடங்கி மேல் உள்ள காலம் எல்லாம் மங்களா ஸாஸன விச்சேதத்தால் வரும்
கிலேசங்கள் வாராத படி ரக்ஷித்து அருள வேணும்

அரங்கத்து அரவணைப் பள்ளியானே-
என்னுடைய அல்லலைப் போக்குகைக்கு
அவசர ப்ரதீஷரராய்க் கோயிலிலே
கண் வளர்ந்து அருளுகிறவனே காக்க வேணும்
என்று அந்வயம் –

————–

மரண தசையில் மங்களா ஸாஸன விச்சேதத்தால் வந்த வியசனம்
யம பாதையோடு ஒக்கும் என்றார் கீழே
இப் பாட்டில் அந்த வியசனத்தை ப்ரணவ ப்ரதிபாத்யனான நீயே
ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் –
(இத்தாலே பகவான் ப்ரகர்ஷேண ஸ்துதிக்கப்படுவதால்
அது பிரணவம் ஆகிறது -தாது அர்த்தம் )

ஒற்றை விடையனும் நான் முகனும் உன்னை அறியாப் பெருமையோனே
முற்ற உலகு எல்லாம் நீயேயாகி மூன்று எழுத்தாய முதல்வனேயோ
அற்றது வாழ் நாள் இவருக்கு என்று எண்ணி யஞ்ச நமன் தமர் பற்றலுற்ற
வற்றைக்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவணை பள்ளியானே -4 -10-4 –

பதவுரை

ஒற்றை விடையனும்–ஒப்பற்ற ரிஷப வாஹநனானன ருத்ரனும்
நான்முகனும்–ப்ரஹ்மாவும்
உன்னை–உன்னை
அறியா–(உள்ளபடி) அறிய வொண்ணாமைக்கு உறுப்பான
பெருமை யோனே–பெருமை பொருந்தியவனே!
நமன் தமர்–யம கிங்கரர்கள்
இவற்கு வாழ் நாள் அற்றது என்று எண்ணி–இவனுக்கு ஆயுள் காலம் முடிந்தது என்று நினைத்து
முற்ற உலகு எல்லாம்-ஒன்றொழியாதபடி எல்லா உலகங்களும்
நீயே ஆகி–நீயே ஆய்
மூன்று எழுத்து ஆய–மூன்று அக்ஷரமான பிரணவ ஸ்வரூபியானவனும்
ஓ முதல்வனே–ஸர்வ காரண பூதனுமானவனே!
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!.
அஞ்ச–(பிடிக்கிற பிடியில்) அஞ்சும்படி
பற்றல் உற்ற அற்றைக்கு–பிடிக்கப் புகுகிது அன்றைக்கு
நீ என்னை காக்க வேண்டும்–

ஒற்றை விடையனும்
ருஷப வாஹனத்தைத் தனக்கு அசாதாரணமாக யுடையனான ருத்ரனும்

நான் முகனும்
அவனுக்கும் கூட ஜனகனாய்
நாலு வேதங்களையும் அதிகரிக்கைக்கு நாலு முகங்களை யுடையனாய் இருக்கிற ப்ரஹ்மாவும்

உன்னை அறியாப் பெருமையோனே
இவர்கள் ப்ரஹ்ம பாவனை தலை எடுத்து ஸ்வ யத்னத்தாலே உன்னை அறியப் பார்த்தால்
அவர்களுடைய ஞானத்துக்கு அபூமியான மஹாத்ம்யத்தை யுடையவனே
யஸ்ய மஹிமா ஆர்ணவ விப்ருஷஸ்தே (ஸ்தோத்ர ரத்னம் )-என்னக் கடவது இறே
வேதங்களால் அபரிச்சேதயனான வுன்னை கர்ம வஸ்யரான இவர்களால்
ஓவ்பாதிக ஞானம் கொண்டு அறியப் போமோ

(ஸ்வ பாவிக அநவததிக அதிசய ஈஸிக்ருத்யம் உன்னிடமே
மஹிமைக்கடல் நீ
அதன் சிறு துளி அவர்களுக்கு ஒக்குமோ )

முற்ற உலகு எல்லாம் நீயேயாகி
அவன் ப்ராதேசிகன் ஆகில் அன்றோ இவர்களுக்கு அறியலாவது
லோகம் அடங்கலும் ஓன்று ஒழியாமல்
நீ என்கிற சொல்லுக்கு உள்ளே அடங்கும்படி ஜகதாகாரனாய்

மூன்று எழுத்தாய முதல்வனேயோ
இவ்வர்த்த ப்ரதிபாதகமாய்
அக்ஷர த்ரயாத்மகமான ப்ரணவ ப்ரதிபாத்யனாய்
(தஸ்ய ப்ரக்ருதி லீ நஸ்ய )யஸ் பரமஸ் மஹேஸ்வர என்று
அத்தாலே
ஸர்வ ஸ்மாத் பரனாக ப்ரதிபாதிக்கப் பட்டவனே
ஜகத் காரண பூதன் என்றுமாம்

அற்றது வாழ் நாள் இவருக்கு என்று எண்ணி யஞ்ச நமன் தமர் பற்றலுற்ற வற்றைக்கு
இவர்களுக்கு ஜீவன ஹேதுவான ஆயஸ்ஸூ க்ஷயித்தது என்று மநோ ரதித்துத்
தங்கள் தர்சனத்தாலும் செயல்களாலும் இவர்கள் பயப்படும்படி
யமபடர் பற்றுகையிலே உத்யுக்தரான வந்த திவசத்திலே

நீ என்னை காக்க வேண்டும்
நமன் தமர் என் தாமரை வினவப் பெறுவாரலர்-என்னும் நீ
உன்னையே ரக்ஷகனாக அத்யவசித்த என்னை
ரக்ஷித்து அருள வேணும்

அரங்கத்து அரவணை பள்ளியானே
உன்னுடைய பிரணவ ப்ரதிபாத்யதையைப் பிரகாசிப்பித்துக் கொண்டு
கோயில் ஆழ்வாருக்கு உள்ளே பள்ளி கொண்டு அருளுகிறவனே

(பிரணவ ஆகார விமானம் அன்றோ –
ப்ரபத்யே பிரணவ ஆகாரம் பாஷ்யம் ரெங்க மந்த்ரம் பாஷ்யம் —
சேஷித்வம் ஸ்புடம்)

————-

ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணி
ரக்ஷணார்த்தமாகத் திருப்பாற் கடலிலே சாய்ந்து அருளி
அதிலும் ஸூலபனாய்க் கோயிலிலே பள்ளி கொண்டு அருளுகிற நீயே
ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் –

பைய அரவின் அணை பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி யுந்தியில் தோற்றினாய் நான்முகனை
வைய மனிசரை பொய் என்று எண்ணி காலனையும் உடனே படைத்தாய்
ஐய இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10-5-

பதவுரை

பால்கடலுள்–திருப் பாற் கடலில்
பை அரவ இன் அணை–(பரந்த) படங்களை யுடைய திருவனந்தாழ்வானகிய இனிய படுக்கையின் மீது
பள்ளி கொள்கின்ற–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
இன் -சாரியை என்றுமாம்
பரம மூர்த்தி–பரம சேஷியானவனே !
உய்ய–(எல்லா வுயிர்களும் தன்னை அடைந்து) உஜ்ஜிவிக்கும்படி
உலகு–லோகங்களை
படைக்க வேண்டி–ஸ்ருஷ்டிக்க விரும்பி
உந்தியில்–திரு நாபிக் கமலத்தில்
நான் முகனை–பிரமனை
தோற்றினாய்–தோற்று வித்தவனே!
வையம்–பூமியிலுள்ள
மனிசர்–மனுஷ்யர்கள்
பொய் என்று எண்ணி–பொய்யர் என்று எண்ணி (நமது கட்டளையாகிய சாஸ்த்தர மரியாதையில் நிற்கமாட்டாது) க்ருத்ரிமராய்
நடப்பவர்களென்று நினைத்து (அந்த விபரீதாசரணத்துக்கு தக்க தண்டம் நடத்துதற்காக)
காலனையும்–யமனையும்
உடனே–கூடவே
படைத்தாய்–ஸ்ருஷ்டித்தருளினவனே!
ஐய–பரம பந்துவானவனே!
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!
இவர் என்னை காக்க வேண்டும்–

பைய அரவின் அணை பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
ஸ்வ ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை யுடையவனாய்
மென்மை நாற்றம் குளிர்த்தி -இவைகளை பிரக்ருதியாக யுடையவனாய் இருக்கிற
திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாகக் கொண்டு
திருப்பாற் கடலிலே இவ்விபூதியில் உள்ளார்கட்க்கு கிட்டலாம் படி
அணித்தாகப் பள்ளி கொண்டு அருளுகிற பரம புருஷனே

அநந்த ஸாயித்வத்தாலே உன்னுடைய ஸர்வ ஸ்மாத் பரத்வத்தையும்
உபாய உபேயத்வங்களையும் பிரகாசித்தவன் என்கை

இத்தால்
வ்யூஹ குணங்களும் பெரிய பெருமாள் பக்கலிலே உண்டு என்கை –

(மூர்த்தி -இங்கு உபாய உபேய இவற்றை பிரகாசித்து அருளினவன் என்றவாறு
வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் இங்கு )

உய்ய உலகு படைக்க வேண்டி யுந்தியில் தோற்றினாய் நான்முகனை
லோகமாக ஆத்ம ஞானம் பிறந்து உஜ்ஜீவிக்கைக்கு உறுப்பாக சேதனர்க்கு
சரீர இந்த்ரியங்களைக் கொடுக்க வேணும் என்று
நினைத்து அந்த ஸ்ருஷ்டிக்கு உனக்கு உபகரண பூதனான சதுர்முகனை
திரு நாபி கமலத்திலே ஸ்ருஷ்டித்தாய் –

வைய மனிசரை பொய் என்று எண்ணி காலனையும் உடனே படைத்தாய்
ஜகத்தில் உண்டான மனுஷ்யரை அஸ்த்திரர் என்று நினைத்து
அவர்களுடைய நித்ய ஸம்ஹாரத்துக்கு
உனக்கு உபகரண பூதனான மிருத்யுவையும் கூடவே ஸ்ருஷ்ட்டித்தாய் –
(சதத பரிணாம பூமி தானே இது )

இத்தால்
உன்னாலே உண்டாக்கப் பட்டவற்றை நீயே போக்கும் இடத்தில்
உனக்கு அருமை இல்லை என்கை

ஐய
மாதா பிதா பிராதா (ஸூபால உபநிஷத் )-என்கிறபடியே
எனக்கு நிருபாதிக பந்து ஆனவனே

இனி என்னைக் காக்க வேண்டும்
நான் உன் அபிமானத்திலே ஒதுங்கின பின்பு
கைம்முதல் அற்ற என்னை
ரக்ஷித்து அருள வேணும்

அரங்கத்து அரவணைப் பள்ளியானே
திருப்பாற் கடலிலே வந்து கிட்ட மாட்டாத என் போல்வாருக்காக அன்றோ
நீ கோயிலிலே சாய்ந்து அருளிற்று –

————

சர்வ அந்தர்யாமியான நீ என்னை ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் –

தண்ணன இல்லை நமன் தமர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்
மண்ணோடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமுமாகி நின்றாய்
எண்ணலாம் போதே உன்னாமம் எல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக் கொண்டு என்றும்
அண்ணலே நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10 -6-

பதவுரை

மண்ணொடு–பூமியும்
நீரும்– ஜலமும்
எரியும்–தேஜஸ்ஸும்
காலும்–வாயுவும்
ஆகாசமும்–ஆகாசமும் (ஆகிய பஞ்ச பூதங்களும்)இவை காரணம்
மேல் கார்யம் -மற்றும் ஆகி நின்றாய்–மற்றுமுள்ள பதார்த்தங்களுமாய் நின்றவனே!
ஆகி நின்றாய்-பிரகார பிரகாரி நிபந்தமான சமாநாதி கரண்யம்
அண்ணலே–ஸர்வ ஸ்வாமி யானவனே!
அரக்கத்து அரவணைப் பள்ளியானே;
நமன் தமர்கள்–யம கிங்கரர்கள்
தண்ணென வில்லை–இரக்க மற்றவர்களாய்க் கொண்டு
சால–மிகவும்
கொடுமைகள்–கொடிய சிஷைகளை
செய்யா நிற்பர்–பண்ணுவர்கள்;
(அப்படிப்பட்ட சிஷைகளுக்கு ஆளாகா தொழியும்படி.)
எண்ணலாம் போதே–அநுஸந்கைக்கு உரிய காலத்திலேயே
உன் நாமம் எல்லாம்–உன்னுடைய திருநாமங்களை யெல்லாம்.
எண்ணினேன்–அநுஸந்தித்தேன் (ஆதலால்)
என்னை–அடியேனை
நீ–நீ
குறிக் கொண்டு–திருவுள்ளத்தில் கொண்டு
என்றும்–எப்போதும்
காக்க வேண்டும்–காத்தருள வேணும்-

தண்ணன இல்லை நமன் தமர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்
ஐயோ என்னும் இரக்கம் இல்லாத யமபடர் தண்டிக்கும் போது
ஆஸ்ரயங்கள் பொறுக்கும் அளவு அன்றிக்கே
மிகவும் க்ரூரங்களைப் பண்ணா நிற்பர்கள்
கிருபாவானான நீ இத்தைப் பரிஹரித்து அருள வேணும் -என்கை

மண்ணோடு நீரும் எரியும் காலும்
ஒன்றுக்கு ஓன்று காரணமாய் நின்ற பூத பஞ்சகங்களும்

மற்றும் ஆகாசமுமாகி நின்றாய்
தன் மாத்திரைகளும்
இந்திரியங்களும்
மஹத் அஹங்காரங்களும்
இவை எல்லாத்துக்கும் காரணமான மூல ப்ரக்ருதியும்
தத் கதரான ஜீவ சமஷ்டியும்
இவற்றையும் நினைக்கிறது
மற்றும் -என்று

ஆக
இவற்றையுடைய உன்னோடே சமாந அதிகரித்துச் சொல்லலாம் படி
இவற்றுக்குள் அந்தர் யாத்மாவாய் நின்றாய்

இத்தால்
அந்தர் யாமியும் பெரிய பெருமாளே என்கை –

எண்ணலாம் போதே உன்னாமம் எல்லாம் எண்ணினேன்
கரணங்கள் வச வர்த்திகளாய்
அனுசந்தானத்துக்கு சக்தி உள்ள போதே மங்களா ஸாஸன விஷய பூதனான
யுன்னுடைய ப்ராப்ய வாசகங்களாய்
மேன்மைக்கும் நீர்மைக்கும் வடிவு அழகுக்கும் வாசகங்களான திரு நாமங்களை
வாசகமாக்கி மங்களா ஸாஸனம் பண்ணினேன்

என்னைக் குறிக் கொண்டு என்றும் அண்ணலே நீ என்னை காக்க வேண்டும்
இப்படிப்பட்டவன் என்று என்னைத் திரு உள்ளம் பற்றி அருளி
எல்லாக் காலத்திலும்
இதினுடைய இழவு தன்னதாம் படி ஸ்வாமியான நீ
உன் கை பார்த்து இருக்கிற என்னை ரக்ஷித்து அருள வேணும்

அரங்கத்து அரவணைப் பள்ளியானே
அந்தர்யாமித்வத்தில் இழிய மாட்டாதவர்களுக்கு அன்றோ
நீ கோயிலிலே சாய்ந்து அருளிற்று –

———–

வேதைக சமைதி கம்யனாய் சர்வாதிகனான நீ
எனக்கு அபய பிரதானம் பண்ணி அருள வேணும் என்கிறார் –

செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகனே எம்மானே
எஞ்சல் இல் என்னுடை இன்னமுதே ஏழ் உலகும் உடையாய் என்னப்பா
வஞ்ச வுருவில் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னைப் பற்றும் போது
அஞ்சலம் என்று என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணை பள்ளியானே – 4-10- 7-

பதவுரை

செம் சொல்–ருஜுவான சொற்களை யுடைய
மறை–வேதத்துக்கு
பொருள் ஆகி நின்ற–அர்த்தமாயிருப்பவனும்
தேவர்கள்–நித்திய ஸூரிகளுக்கு
நாயகனே–தலைவனுமானவனே!
எம்மானே–எம்பெருமானே!
எஞ்சல் இல்–குறை வற்ற
இன்–பரம போக்யமான
என்னுடை அமுதே–எனக்கு (ரஸ்யமான) அம்ருதம் போன்றவனே!
ஏழு உலகும் உடையாய்–உலகங்களுக் கெல்லாம் ஸ்வாமி யானவனே!
என் அப்பா–எனக்கு உபகாரகனானவனே!
தேவர்கள் நாயகனே எம்மானே நித்ய விபூதி நாயகனாய் இருந்து எனக்கு உபகாரகன்
ஏழ் உலகும் உடையாய் என் அப்பா -லீலா விபூதி நாயகனாய் இருந்து எனக்கு உபகாரகன்
அரங்கத் தரவணைப் பள்ளியானே!;
வஞ்சம்–வஞ்சனை பொருந்திய
உருவின்–ரூபத்தை யுடையவரான
நமன் தமர்கள்–யம கிங்கரர்கள்
என்னை–அடியேனை
வலிந்து–பலாத்கரித்து
நலிந்து–ஹிம்ஸித்துக் கொண்டு
பற்றும் போது–பிடிக்கும் போது
அஞ்சல் என்று ‘அஞ்ச வேண்டா’ என்று என்னை காக்க வேண்டும்-

செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற
யதா பூத வாதியாய்
பாஹ்ய குத்ருஷ்டிகளான ஆஸூர ப்ரக்ருதிகளுக்கு ஸ்வார்த்தங்களைப் பிரகாஸியாத
வேதத்துக்குப் பிரதான அர்த்தமாய்
ஸர்வே வேதா யத்ரை கம்ப வந்தி
ஸர்வே வேதா யத்ரை பதம் ஆமநந்தி
வேதைஸ் ஸர்வைர் அஹ மேவ வேத்ய –என்னக் கடவது இறே

தேவர்கள் நாயகனே
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனே
ப்ரஹ்மாதிகளுக்கு நிர்வாஹகன் என்னவுமாம்

எம்மானே
உன்னுடைய வேதைக சமதி கம்யத் வத்தையும்
ஸர்வ நிர்வாஹகத்வத்தையும் காட்டி
என்னை அடிமை கொண்டவனே

எஞ்சல் இல் என்னுடை இன்னமுதே
நாஸ ரஹிதமாய்
போக்யமுமான அம்ருதம் போலே
எனக்கு நித்ய நிரதிஸய போக்யனாவனே

ஏழ் உலகும் உடையாய்
பதிம் விஸ்வஸ்ய -என்கிறபடியே
ஸர்வ லோக ஈஸ்வரேஸ்வரன் ஆனவனே

என்னப்பா
எனக்கு இவ் வர்த்தங்களையும்
ப்ரமாணங்களையும் உபகரித்தவனே
எனக்கு நிருபாதிக பந்து என்றுமாம்

வஞ்ச வுருவில் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னைப் பற்றும் போது
வரவு தெரியாதபடி வருமவர்களாய்
எமனுக்குப் பரதந்த்ரராய் இருக்கிற படர் பலாத்கரித்து ப்ரஹரித்து என்னைப் பிடிக்கும் அளவிலே

அஞ்சலம் என்று என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து
அத்தசையில்
மாஸூச என்று ரஷித்து அருள வேணும்

அரவணை பள்ளியானே
எனக்கு அபய பிரதானம் பண்ணி அருளுகைக்காகவே
கோயிலிலே சாய்ந்து அருளினவனே –

———–

பரமபதத்தின் நின்றும் போந்து கிருஷ்ணனாய் அவதரித்த நீ
என்னை ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் –

நான் ஏதும் உன் மாயம் ஒன்றும் அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புக என்று மோதும் போது அங்கு உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்
வானேய் வானவர் தங்கள் ஈசா மதுரைப் பிறந்த மா மாயனே என்
ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10- 8-

பதவுரை

வான் ஏய்–பரம பதத்திற் பொருந்தி யிரா நின்ற
வானவர் தங்கள்–நித்ய முக்தர்களுக்கு
ஈசா–தலைவனே!
மதுரை–திரு வட மதுரையில்
பிறந்த–அவதரித்த
மா மாயனே–மிக்க ஆச்சரிய சக்தியை யுடையவனே!
என் ஆனாய்–(பாகனுக்கு வசப்பட்டொழுகுகின்ற) யானை போல் எனக்கு வசப்பட்டிருப்பவனே!
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!
நான்–அடியேன்
உன் மாயம்–உன் மாயைகளில்
ஏது ஒன்றும்–யாதொன்றையும்
அறியேன்–அறிய மாட்டேன்;
நமன் தமர்–யம கிங்கரர்கள்
பற்றி–(என்னைப்) பிடித்து
நலிந்திட்டு–(இந்தச் சரீரத்தோடே) பண்ண வேண்டிய ஹிம்ஸைகளை யெல்லாம் பண்ணி விட்டு, (பின்பு,)
இந்த ஊன் புகு என்று–‘இந்த யாதநா சரீரத்தினுள்ளே பிரவேசி’ என்று
மோதும் போது–அடிக்கும் போது
அங்கு–அவ் விடத்தில்
உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்;
நீ என்னை காக்க வேண்டும்–

நான் ஏதும் உன் மாயம் ஒன்றும் அறியேன்
உனக்குப் பரிந்து அல்லது நிற்க மாட்டாத நான்
உன்னுடைய ஆச்சர்யாவஹமான குணங்களை ஒன்றும் அறியேன்
உன்னுடைய சங்கல்பங்களை என்றுமாம்

நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த ஊனே புக என்று மோதும் போது
யமபடர் முற்பட இந்த ஸரீரத்தோடே பிடித்து
ஹிம்சித்து இத்தை விடுவித்து
யாதநா ஸரீரத்தை யுண்டாக்கி
அத்தைக் காட்டி
நீ இந்த ஸரீரத்திலே பிரவேசீ -என்று நிர்பந்திக்க
இவன் அதில் புக இசையாமையாலே கண்ணற்று ப்ரஹரிக்கிற ஸமயத்திலே

அங்கு உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்
ஆபத் விமோசகனான யுன்னை
ஒரு பிரகாரத்தாலும் ரக்ஷகனாக நினைக்க மாட்டேன் –

வானேய் வானவர் தங்கள் ஈசா
பரமபதத்தில் பொருந்தி வர்த்திக்கிற
நித்ய முக்தருக்கு நியாந்தா வானவனே

மதுரைப் பிறந்த மா மாயனே
அது உண்டது உருக் காட்டாமையாலே
முமுஷு ஸா பேஷனாய் ஸ்ரீ மத் மதுரையிலே வந்து திரு அவதரித்து
அத்ய ஆச்சார்யா வஹமான குண சேஷ்டிதங்களை பிரகாசிப்பித்தவனே

என் ஆனாய்
ஆனை தன் பலத்தை அறியாதே
பாகனுக்கு வச வர்த்தியாமாம் போலே
என் மங்களா ஸாஸன ஸூத்ர வ ஸீ க்ருதனானவனே

நீ என்னைக் காக்க வேண்டும்
ரஷ்ய ரக்ஷக பாவத்தை ப்ரேமத்தால் நான் மாறாடி பிரதிபத்தி பண்ணிலும்
நீயே ரக்ஷகனாக வேணும்

அரங்கத்து அரவணைப் பள்ளியானே
அந்த கிருஷ்ண அவதாரத்தில் உதவாதாருக்கும்
உதவுகைக்கு அன்றோ நீ கோயிலிலே சாய்ந்து அருளிற்று –

———–

அந்த கிருஷ்ண விருத்தாந்தம் பின்னாட்டி
(மதுரைப் பிறந்த மா மாயன் கீழே )
அந்த கிருஷ்ண குணங்களைப் பெரிய பெருமாள் பக்கலிலே மீளவும் அனுசந்திக்கிறார் –

குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வந்து என்னைப் பற்றும் போது
அன்று அங்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவிணைப் பள்ளியானே -4-10-9 –

பதவுரை

குன்று–கோவர்த்தந மலையை
எடுத்து–(குடையாக) எடுத்து (ப்பிடித்து)
ஆநிரை–பசுக்களின் திரளை
காத்து–ரஷித்தருளின
ஆயா–ஆயனே (கோபாலானே!)
கோ நிரை–மாடுகளின் கூட்டத்தை
மேய்த்தவனே–மேய்த்தருளினவனே!
எம்மானே–எனக்கு ஸ்வாமி யானவனே
அரங்கத்து அரவணைப் பள்ளியானே
அன்று முதல்–(உமக்குப் பல்லாண்டு பாடுமவனாக்கக் கொண்ட) அந்நாள் தொடங்கி
இன்று அறுதி ஆக–இன்றளவாக
ஆகி–ஸர்வ காரண பூதனான உன்னுடைய
அம் சோதி–விலக்ஷண தேஜோ ரூபமான திவ்ய மங்கள விக்ரஹகத்தை
மறந்து அறியேன்–(அடியேன்) மறந்ததில்லை
திவ்ய மங்கள விக்ரஹ அழகைக் காட்டியே ஆழ்வார்களை விஷயீ கரித்தான் அன்றோ –
நன்றும் கொடிய–மிக்க பொறுமை பொருந்திய
நமன் தமர்கள்–யம கிங்காரர்கள்
என்னை–என்னை
நலிந்து–ஹிம்ஸித்து
வலிந்து–பலாத்கரித்து
பற்றும் போது அன்று–பிடிக்கும் அத் தருணத்தில்
அங்கு–அவ் விடத்தில்
நீ என்னைக் காக்க வேண்டும்-

குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா
இந்திரனால் பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தை ரக்ஷகமாகச் சொன்ன
மலையை எடுத்துக் கவித்து ரஷித்த கிருஷ்ணனே

கோநிரை மேய்த்தவனே எம்மானே
தன்னுடைய ரக்ஷணத்து விலக்காமையை யுடைய பசுக்களை ரக்ஷித்து
அத்தாலே
உன்னுடைய ஸ்வாமித்வத்தை பிரகாசிப்பித்தவனே

அன்று முதல் இன்று அறுதியா
நீ மயர்வற மதி நலம் அருளின அன்று முதல் இன்று அளவாக என்னுதல்
கருவரங்கத்து உட் கிடந்து கை தொழுத அன்று முதல் என்னுதல்
ஞானம் பிறந்த பின்பு கீழும் ஒரு போகியாய்த் தோற்றுகையாலே
மயர்வற மதி நலம் அருளின அன்று முதல் என்னுதல்

ஆதியம் சோதி மறந்து அறியேன்
காரணமாய் வி லக்ஷணமான விக்ரஹம் என்னுதல்
காரணத்வ ரக்ஷகத்வங்கள் என்னுதல்
இவற்றில் எனக்கு விஸ்ம்ருதி இல்லை என்கை –

நன்றும் கொடிய நமன் தமர்கள்
நல்ல நெருப்பு என்னுமா போலே
நன்றும் கொடிய-என்று
க்ரூரத்தின் மிகுதி சொல்லுகிறது

நலிந்து வந்து என்னைப் பற்றும் போது
உனக்குப் பரிந்து அல்லது நிற்க மாட்டாத என்னை
அவர்கள் பலத்தாலே பாதித்துப் பிடிக்கும் போது

அன்று அங்கு நீ
அக்காலத்திலேயே
அவ்விடத்திலேயே
ரக்ஷகனான நீ
நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் (திருமங்கை )-என்ற நீ

என்னை காக்க வேண்டும்
மங்களா ஸாஸனம் விச்சேதம் வரும் என்று அஞ்சுகிற என்னை
ரக்ஷித்து அருள வேணும்

அரங்கத்து அரவிணைப் பள்ளியானே
மங்களா சாசன விரோதியைப் போக்கி
மங்களா ஸாஸனம் பண்ணுவித்துக் கொள்ளுகைக்காகக் கோயிலிலே
திருவனந்த ஆழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளுகிறவனே

இது எல்லாம்
சரம சதுர்த்தியிலே
திரு மந்திரத்திலே காணலாம் இறே –

(நாராயணாயா -ஆய -பிரார்த்தனாயாம் சதுர்த்தி
அதுக்கு உண்டான விரோதிகளைப் போக்கியது நமஸ்சில் சொல்லிற்றே
கீழே லுப்த சதுர்த்தி தாத்தார்த்த சதுர்த்தி )

———–

நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார் –

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே – 4-10 -10-

பதவுரை

மாயவனை–ஆச்சரிய சக்தி யுடையவனும்
மதுசூதனனை–மது என்ற அசுரனை ஒழித்தருளினவனும்
மாதவனை–பெரிய பிராட்டியார்க்கு வல்லபவனும்
மறையோர்கள்–வைதிகர்கள்
ஏத்தும்–துதிக்கப்படுமவனும்
ஆயர்கள் ஏற்றினை–இடையர்களுக்குத் தலைவனும்-ஏறு மேனாணிப்பு
அச்சுதனை–(அடியாரை ஒரு நாளும்) நழுவ விடாதவனும்
அரங்கத்து–கோயிலில்
அரவு அணை–சேஷ சயநத்தில்
பள்ளியானை–கண் வளர்த்தருள்பவனுமான எம்பெருமானை நோக்கி
வேயர்–தாம் திருவவதரித்த குடியிலுள்ள ரெல்லோராலும்
புகழ்–புகழப் பட்டவரும்
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
மன்- நிர்வாஹருமான
விட்டுசித்தன்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
மாலை–சொல் மாலையான
பத்தும்–இப் பத்துப் பாசுரங்களையும்
தூய மனத்தனர் ஆகி–நிர்மலமான நெஞ்சை யுடையராய்க் கொண்டு
ப்ராப்யாந்தர ப்ராபகாந்த்ர விருப்பு இல்லாத தூய்மை
வல்லார் தாம்–ஓத வல்லார்கள்
தூய மணி–பழிப்பற்ற நீலமணி போன்ற வடிவை யுடைய எம்பெருமானுக்கு
ஆளர்–அடிமை செய்யப் பெறுவர். (ஏ அசை.)–

மாயவனை
ஆச்சர்ய சக்தி யுக்தனை

மதுசூதனனை
மங்களா ஸாஸன விரோதிகளை
மதுவாகிற அஸூரனை நிரஸித்தால் போலே நிரஸிக்குமவனை

மாதவனை
அதுக்க்கடியாக ஸ்ரீ யபதியானவனை

மறையோர்கள் ஏத்தும் ஆயர்கள் ஏற்றினை
வேத தாத்பர்யம் கைப்பட்டு இருக்குமவர்களுடைய மங்களா ஸாஸனத்துக்கு
விஷய பூதனான கிருஷ்ணனை
கோப குலத்தின் நடுவே மேனாணித்து இருக்குமவனை-

அச்சுதனை
இப்படி மங்களா ஸாஸன பரரை ஒரு நாளும் நழுவ விடாதவனை

அரங்கத்து அரவணைப் பள்ளியானே
மங்களா ஸாஸனத்துக்கு விஷய பூதனாய்க் கொண்டு
கோயிலிலே தன் ஸுகுமார்யத்துக்குத் தகுதியாக
திரு வனந்த வாழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளுகிறவனை

வேயர் புகழ்
வேயர்–குடிப் பெயர்
இந்த கோத்ரஜர் எல்லாரும் தங்கள் வம்சத்தில் இவர் வந்து அவதரிக்கப் பெறுகையாலே
க்ருதராத்ரயாய் புகழா நிற்பர்களாய்த்து –

விட்டு சித்தன் வில்லி புத்தூர் மன்
திருமாளிகைக்கு நிர்வாஹகராய்
பெரிய பெருமாளைத் தம் திரு உள்ளத்திலே வைத்து மங்களா சாசனம் பண்ணும் பெரியாழ்வார்

சொன்ன மாலை பத்தும்
மங்களா ஸாஸன விரோதி நிவ்ருத்தியை பிரார்த்தித்து அருளிச் செய்த
வாஸிகமான திரு மாலையை
அநந்ய ப்ரயோஜனராய்
அநந்ய ஸாதநராய்
மங்களா ஸாஸன பரராய்
அப்யஸிக்க வல்லார்

தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே
நிர்த்துஷ்டமான நீல மணி போலே இருக்கிற திருமேனியை யுடைய பெரிய பெருமாளுக்கு
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -என்று
மங்களா ஸாஸன ரூப கைங்கர்யங்களைப் பண்ணப் பெறுவர்கள் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-9–மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய்-

August 4, 2021

கீழில் திருமொழியில்
திருவாளன் திருப்பதி -என்றும்
உருவுருவே கொடுத்தான் -என்றும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து -என்றும்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் கிடந்தான் -என்றும்
கரிக்கட்டையான மருமகன் சந்ததிக்கும்
அதுக்கு யோக்யரான மைத்துனன்மார்க்கும் ப்ராணன்களைக் கொடுப்பதிலும்

ஸங்கல்ப ஸஹஸ்ர ஏக தேசத்தில் நடக்கிற
ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார மோக்ஷ பிரதத்வ அந்தர் யாமித்வந்தங்களிலும்

ஒருவனை ஆத்ம குணம் பிறப்பிக்கை அரிது என்னும் இடத்தை
இத் திரு மொழியாலே அருளிச் செய்கிறார் –

————

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ
செரு உடைய திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே – 4-9 1-

பதவுரை

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் -பரதாழ்வானுக்கு திருவடி நிலைகளை மீண்டு எழுந்து அருள
மிகவும் நம்புவதற்காக அடையாளமாக கொடுத்து அருளி
வானோர் வாழ
செரு உடைய  திசைக் கருமம் திருத்தி -ராவணாதிகளை நிரசித்து விபீஷணனுக்கு அரசை அருளி
வந்து உலகாண்ட திருமால் கோயில்-ஸ்ரீ யபதி -ரத்ன மயமான பீடம்
உருவுடைய -அழகை யுடைய
மலர் நீலம்-நீல மலர் -கரு நெய்தல் மலர்
திருவடி தன் திரு உருவமும் -பெரிய திருமாலின் திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று- -இரண்டையும் பிரகாசித்து-மைய கண்ணாள்
மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே -காற்று அசைக்க
ஒன்பது ராமர் சந்நிதிகள் உண்டே
நம்பெருமாளே ராமர் தானே

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய்
பரதாழ்வான் -ப்ராதுஸ் சிஷ்யஸ்ய தாஸஸ்ய -என்று
தனக்கும் அவருக்கும் உண்டான சம்பந்த விசேஷங்களைச் சொல்லிக் கொண்டு செல்லச் செய்தேயும்
இவர் தம்பி என்கிறாரே பாக வாசி அறிந்தவர் ஆகையாலே

இவள் மீள வேணும் என்று ஸ்ரீ பாதத்தில் விழுந்து நிர்பந்தித்தவாறே

நாம் மீண்டால் உமக்கு பிரயோஜனம் என் என்ன

தேவரீர் திரு அபிஷேகம் செய்து ஸ்வதந்திரராகவும் நான் பரதந்த்ரனாகவும் அபேக்ஷை என்ன –
ஐயர் உமக்கு அன்றோ ராஜ்ஜியம் தந்து போனார் என்ன

ராஜ்ய ஸ்வதந்த்ரயம் தேவரீரது அன்றோ என்ன

வீர போக்யை யன்றோ வஸூந்தரை -அதுக்கு ராஜ குல ஜாதத்வம் அன்றோ வேண்டுவது என்ன

என்னை இங்கனே அழைக்கிறது என்-ஐயர் காலம் என்னை தம்பி தம்பி என்று அழைத்து
நான் அபேக்ஷித்ததும் எனக்கு வேண்டுவதும் செய்து அன்றோ போந்தது
இன்று தம்பி அல்லேனோ -பழைய சம்பந்தம் -ரோதனம் -போய்த்தோ என்ன

அது என் -தம்பியாகில் தமயன் சொன்னது செய்யும் என்ன

நான் கூற்றுக்கு ஸ்வதந்திரனோ -சிஷ்யன் என்ன

ஆனால் ஆச்சார்யன் சொன்னத்தைச் செய்யும் என்ன

அது தனக்கு கிரய விக்ரய அர்ஹனோ -தாஸன் அன்றோ என்ன

ஆனால் ஸ்வாமி சொன்னதைச் செய்யும் என்ன

இந் நிர்பந்தங்களால் ஸ்வாதந்தர்யம் மிகும் அத்தனை காணும் என்று நிருத்தரனாய்
செய்ய அடுப்பது என் என்ன

இவனுக்கு என் செய்வோம்
ந ச ஸீதா ந ச அஹம்
ஸீதாம் உவாஸ –என்றானாய் இட்டு ஒன்றைச் செய்கிறோம் அன்றே என்று திரு உள்ளம் பிசகி
வாரீர் நீர் தாம் பாரதந்தர்யம் அபேக்ஷை என்றும்
செய்ய அடுப்பது என் என்றும் கேட்டீரே
நமக்காகவும் போய் அபிஷேகத்தைச் செய்யும் என்ன

அது திரு உள்ளமாகில் திருவடி நிலைகளாலே என்னை அபிஷேகம் செய்து அருளும் மீண்டு -என்று
தம்முடைய கிலேசத்தை முன்னிட்டு கிருபை செய்து அருள வேணும் என்ன

கிருபையால் செய்தேனாகில் உம்முடைய பிரார்த்தனை ஸ்வாதந்தர்யமாகும் காணும் என்ன

தேவரீருடைய ஸ்வாதந்தர்யத்தாலே அடியேனை இங்கே தானாகிலும் பரதந்த்ரனன் ஆக்கும் என்ன

அங்குப் போனாலும் அபேக்ஷை இதுவாகில் அத்தை இங்கேயே பெறும் என்று கொடுத்து அருளி
நாம் வந்த போது காணும் ஐயரும் ஆச்சியும் சொன்ன நாள் கழித்தால் வருமோ என்று இரும் என்ன

அது தன்னை விஸ்வசிக்கும் படி என் என்ன

இத்தை விஸ்வசியும் என்று திருவடி நிலைகளைக் கொடுத்து அருளி
தம்பியார் போகீர் -என்ற குணங்களிலே அறிவு பிறந்தார் நெஞ்சு உளுக்கி
அடி நிலை ஈந்தான் -என்றவர் தாமே
மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய்-என்கையாலே
இது நெடு வாசி தோன்றும் இறே

அல்ப த்ரவ்யத்துக்காக பஹு த்ரவ்யத்தைப் பணயம் வைப்பாரைப் போலே இறே
வான் பணையம் என்றது

இவர் தாம் அவர் பக்கலில் கொண்ட அல்ப த்ரவ்யம் தான் என் என்னில்
இப்போது உத்யோக பங்கம் பண்ணாமல் இசைந்து மீளும் அளவே இறே
விள்கை விள்ளாமை விரும்புகைக்கு பிரகாசம்
இரண்டும் இரண்டு தம்பிமார் பக்கலிலும் காணலாம் –

இவர் தமக்கு உத்யோகம் தான் என் என்னில்
வானோர் வாழ
தேவர்கள் தங்கள் அபிசந்தி பெரும்படியாக

செரு உடைய திசைக் கருமம் திருத்தி
தெற்கு நோக்கி அடி இட்ட போதே -பூசல் பூசல் -என்று எதிரே வந்த துர் வர்க்கம் எல்லாத்தையும்
தர்ம ரூபேண ராவண வத பர்யந்தமாக நிரஸித்து
நாட்டில் யுத்தம் செய்வார்க்கு எல்லாம் இவ் வியாபாம்ர அமாத்ருகையாம் படி இறே திருத்தின படி –

வந்து உலகாண்ட திருமால் கோயில்
ஸ்ரீ பரதாழ்வான் முதலானோர் கிலேசங்கள் எல்லாம் போம்படி
திரு அயோத்யையிலே மீண்டு எழுந்து அருளி
நாய்ச்சியாரோடே கூடித் திரு அபிஷேகம் செய்து
லோகத்தில் ஸங்கல்ப நிபந்தநமான பாத்ய பாதகங்களும்
விஸ்லேஷத்தில் வாட்டமும் தீர்த்து தேறி
ரமிக்கும் படி தர்ம ரூபேண தாமும் ஆசரித்து லோகத்தையும் நியாயத்திலே ரக்ஷித்து

பின்பு உள்ளார் இழவாத படி யாகவும்
ஸ்ரீ ரெங்கராஜர் நித்ய வாஸம் செய்கிற வூர் கோயில் –

திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
அவனுடைய விக்ரஹ வை லக்ஷண்யத்தையும்
அவளுடைய காருண்ய கடாக்ஷத்தையும்

உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே
உபமான த்வாரா நன்றான நீல மலரானது காட்டி
காற்று அசைக்கச் சலியாத ஒளியை யுடைத்தான திருவரங்கம்

ஓ
அசையாதல்
நிஷேதமாதல்

இத்தால்
ஸ்ரீ மன் நாராயணன் என்கிற அர்த்த விசேஷத்தைக் காட்டுகிறது
திருமங்கை மலர் கண்-என்று நித்ய புருஷார்த்தத்தைக் காட்டுகிறது
திருவடி தன் திரு உரு-என்று திருவடிகளைக் காட்டுகிறது

உருவுடைய மலர் நீலம் -என்று
ஆத்ம குணத்தின் கீழே யான தேஹ குணத்தையும்
ஸுவ் மனஸ் யத்தையும் உடையராய் இவ் வர்த்த நிஷ்டராய் இருக்கும் ஆச்சார்யர்களைக் காட்டுகிறது

காற்றாட்டச் சலியா -என்கையாலே
ஸ்பர்ச இந்த்ரிய பிரதானமான விஷயங்கள் சலிப்பித்தாலும்
சலியாத தேஜஸ்ஸை யுடையராய் இறே அங்கு உள்ளார் இருப்பது

கீழே மன்றூடு தென்றல் உலா -என்ற இடத்தில்
திரு மதிளுக்குள் அன்றிக்கே புறம்பு இருப்பாரையும் தென்றல் நலியாது
அவர்களும் அநாதர மதிளுக்குள்ளே இருக்கையாலே –

——

தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே – 4-9 -2-

பதவுரை

தன்னடியார் திறத்தகத்து -தனக்கு அடிமைப்பட்டவர்கள் மேல்
தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்-லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி -என்பவளும் கூட
குற்றம் சொல்பவள் அன்றே -மென்மை மிக்க புருஷகார பூதை –
என்னடியார் அது செய்யார் -செய்ய மாட்டார்கள்
அது என்று –பேர் சொல்லவும் கூசும்படியான குற்றங்கள்
பேதை பாலகன் அது ஆகும் -யவ்வனம் சொல்லக் கூசி -அதே போல்
செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்–கவனக் குறைவால் செய்து இருந்தாலும் –நல்லத்தை நினைத்தே செய்து இருப்பார்
ரக்ஷிக்க நாம் உள்ளோம் என்று அறிந்த சேஷ பூதர் அன்றோ -பொறுக்க நாம் உள்ளோம் என்று
பிராமாதிகமாக செய்தாரேலும் நல்லதே செய்வார் ஆவார்
எனக்கு அது போக்யம் -உதாசீன யுக்திகளை சொல்லி அவளுக்கு பதில் -மறுதலித்து வாயைத் திறந்து சொல்லுவார்
நினைத்து இருப்பர் இல்லாமல் என்பர் -வெட்டிப் பேசுவது யாவரும் அறியும்படி
மன்னுடைய விபீடணர்க்காய் -கைங்கர்ய செல்வமுடைய விபீஷண ஆழ்வானுக்காக
மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த-கடாஷித்திக் கொண்டே இருந்து
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே-இந்தக் குணம் அறிந்தவர்கள் வேறே யாருக்கு ஆள் ஆவார் –

தன்னடியார் -இத்யாதி-
இப்பாட்டை -சென்னி யோங்கு பாசுரத்தில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யாநித்த
பிரக்ரியைக்கு இணங்க இங்கும் ஸ்ரீ மா முனிகள் வ்யாக்யாநித்து அருளுகிறார்-

பிராட்டி சிதகுரைத்தாலும் –
குணத்தை தோஷமாக பிரமித்தாயோ -என்று இறே அவன் பாசுரம்
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய ஆஸ்ரித பஷ பாத அதிசயம் சொல்லுகிறது
இருவரும் -இசலி -ஸ்பர்த்தித்து -ஆஸ்ரிதரை நோக்கும்படி சொல்லுகிறது –
என் அடியார் அது செய்யார் -என்பதிலும் -சிதகுரைக்கும் -என்கிறது இறே உத்தேச்யம்
கைக் கொள்ளுகைக்கு சொல்லும் வார்த்தை போல் அன்றிக்கே கை விடாமைக்கு சொல்லும் வார்த்தை

அடியார் -என்று ஸ்வா தந்த்ரய நிவர்த்தி
தன்னடியார் -என்று அந்ய சேஷ நிவர்த்தி

அடியார் என்பது சேஷியும் உபாயமும் உபேயமும் தானாக பற்றினவர்களை –

அடியார் -என்று நிரூபகம் இவர்களுக்கு -குல சரண கோத்ராதிகள் நிரூபகம் மற்றையார்க்கு
ஒவ்பாதிகமுமாய் அநித்யமுமாய் இருக்கும் அது –
நிருபாதிகமுமாய் நித்யமுமாய் இருக்கும் இது
பல சதுப் பேதிமார் -என்று நிரூபகம் அவர்களுக்கு
திரு நாரணன் தொண்டர் -என்று இறே இவர்களுக்கு நிரூபகம்

ஒரு மிதுனம் சேஷி ஆனால் –
தம் அடியார் என்ன வேண்டாவோ என்னில் –
தன் என்கிறதுக்கு உள்ளே தானும் அந்தர்பூதை ஆகையாலே
அவன் ஸ்வரூப ரூப குண விபூதி இத்தனையும் இவள் தோயல் வாசி இறே என்னுதல் –
அடியார் -என்பதுக்கு உள்ளே அடிமையில் அந்தர்பாவம் தனக்கும் உண்டாகையாலே என்னுதல் –

இத்தால்-நார கோடி கடிதை என்கை-
மித்ர பாவேன -என்றும் –
உகந்த தோழன் -என்றும் –
அவன் நினைவு ஆகையாலே அவன் முன்னே -நம் அடியார் -என்ன மாட்டாளே
தானும் -மித்ர மௌபிகம் -என்றாலே -அத்தாலே என்னுதல் –

அடியார் -என்ற பஹூ வசனம் –
ஊர் இரண்டிட்டவாறே அடியாரும் இரண்டிட்டதே
மேலாத் தேவர்களும் -நிலத் தேவரும் -என்று இந் நிலத் தேவர் விஷயமாக இறே சிதகுரைப்பது
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது
இருள் தெரிந்து நோக்கின அடியார் விஷயம் இறே இது –

திறத்தகத்து –
அவர் விஷயமாக

தாமரையாள் ஆகிலும் –
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆகிலும்
அபி சப்தம் –
ஆஸ்ரித விச்லேஷம் பொறுக்க மாட்டாத மார்த்த்வ பரம்
தன்னடியார் -என்னும்படி காட்டிக் கொடுக்கையாலும் சொல்லக் கூடாது
வெந்நீரை குளிர் நீராக ஆக்கும் அத்தனை அல்லது தான் சுடக் கூடாது இறே –
அப்படியே இவள் சிதைகுரைக்கக் கூடுமோ –

தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வன் -என்று
தான் சத்தை பெற இறே அவள் அனுபவிப்பது
இப்படி சத்தை பெரும்படியான போகத்திலே -புருஷகாரமாம் போது தெளிவு உண்டாக வேணும்
அப்போது பிரணயித்வதுக்கு நமஸ்காரம் இறே

அனால் புருஷகாரமும் போகமும் சேரும்படி என் என்னில் –
இவளைப் போலே அவன் தானும் -பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -என்று
இவள் விஷயத்தில் பிரேமம் கனத்து இருக்கும்
இருவருக்கும் உண்டான ப்ரேமம் இவர்கள் பாசுரத்தில் தெரியும் இறே

ந ஜீவேயம் ஷணம் அபி -என்னும் ஒருதலை
இறையும் அகலகில்லேன் -என்னும் ஒரு தலை
அவன் விஸ்வரூபம் எல்லாம் கொண்டு இவளை அனுபவிக்க இழிந்தாலும்
தன் குண ரூப சேஷ்டிதங்களாலே குமிழ் நீருண்ணப் பண்ணும்

இவ் அனுபவ ஜனித ப்ரீதிக்கு போக்கு வீடாக -உனக்கு என் செய்கேன் -என்று
ஓன்று கொடுத்து அல்லது தரிக்க மாட்டாத அளவிலே –
நாம் இவன் பக்கலிலே ஓன்று கொள்ளாத போது இவன் முடியும் -என்று பார்த்து
அவன் -உனக்கு வேண்டுவது என் -என்ற அளவிலே சேதனர் அபராதத்தை பொறுக்க வேணும் -என்ன
தன் ஸ்வா தந்த்ர்யத்தையும் -இவர்கள் அபராதத்தையும் —சாஸ்திரத்தையும் —மறந்து பொறுத்தேன் -என்ன-

இவன் பொறுத்தது நமக்காகவா -இவர்களுக்காகவா –நம் போகத்துக்காகவா -என்று
ஆராய்க்கைகாக சிதகுரைக்க தொடங்கினாள் ஆனால்
என் அடியார் அது செய்யார் -என்னும் அவன்
நீ சிதகுரைக்க கூடாதப் போலே அவர்கள் செய்யவும் கூடாது
சாஷி உண்டு என்னிலும் அவர்கள் செய்யக் கூடாது- உன் பிரமமாம் இத்தனை

என் அடியார் அது செய்யார் –
ஸ்வதந்தரும் அந்ய சேஷ பூதரும் செய்யும் அத்தை என் அடியார்களும் செய்வார்களோ
செய்தார்கள் என்று நிர்பந்த்தாய் ஆகில் –
அவர்கள் என் அடியார் ஆகிறார் -உன் அடியார் அன்றே- நீ செல்ல நில்லு

அது செய்யார்
ஆஸ்ரயணத்துக்கு முன்பு இவள் மன்றாடும் -பின்பு அவன் மன்றாடும்
அன்று இன்னாதான செய் சிசுபாலன் -என்றால் போலேயும்
இவள் சிதகுரைக்கும் -என்றால் போலேயும்
ஸ்ரீ ஈஸ்வரனும் -அது செய்யார் -என்று அதன் பேர் சொல்ல கூசின படி

செய்தாரேல் நன்று செய்தார் –
நாம் உண்டு -என்றும்
ஒரு பிரமாணம் உண்டு -என்றும் –
நாம் பொறுப்போம் -என்றும்
நினைத்து செய்தார்கள் ஆகில் அழகிதாக செய்தார்கள்
ஒரு தர்ம அதர்மமும் பர லோகமும் இல்லை என்று செய்தார்கள் அன்றே
ப்ராமாதிகதுக்கு நாம் உளோம் -என்று அன்றே செய்தது
அதாவது
மடல் எடுக்கையும் காமன் காலில் விழுகையும்
செய்யும் கிரிசைகள் இத்யாதி

என்பர்
நாம் நெஞ்சாலே பொறுத்து இவளுக்கு முகம் கொடுத்துக் கேட்கில்
இவள் இன்னமும் குறை சொல்லக் கூடும் -என்று வாய் திறந்து அருளி செய்வர் போலும் –
ஓம் காண் போ என்றால் போலே உதாசீன உக்தி

மன்னுடைய விபீடணருக்காய்
கீழ் அருளிச் செய்த அர்த்தத்தை மூதலிக்கிறார்-
ஐஸ்வர்யம் மாறாத ஸ்ரீ விபீஷணர்க்காக ஸ்ரீ பிராட்டியையும் விட்டுப் பற்ற
வேண்டும்படியான ஸ்ரீ மகாராஜரையும் விட்டு
விபீடணற்கு வேறாக நல்லானை -என்னும்படி இறே ஸ்ரீ விபீஷண பஷ பாதம்
ஆகையால் சேர்க்கைக்கு ஈடான பாசுரம் கேட்கும் இத்தனை ஒழிய பிரிப்பார் பாசுரம் கேளான் -என்கிறது

குற்றம் உண்டு என்ற ஸ்ரீ மகா ராஜரையும்
குற்றம் இல்லை -என்ற ஸ்ரீ திருவடி ஸ்ரீ இளைய பெருமாளையும்- பூர்வ பஷம் ஆக்கி –
குற்றம் உண்டு நான் கொள்ளக் கடவன் -என்றார் இறே ஸ்ரீ பெருமாள் –

சிதகுரைக்கும் -என்றது ஸ்ரீ மகாராஜர் கோடி
என் அடியார் அது செய்யார் -என்றது ஸ்ரீ திருவடி -ஸ்ரீ இளைய பெருமாள் கோடி
சிதகுரைக்கை -புருஷகார க்ர்த்யம்
அடியார் அது செய்யார் -என்றது சரணாகத க்ர்த்யம்
நன்று செய்தார் -என்றது சரண்ய க்ர்த்யம்

மதிள் இலங்கை திசை நோக்கி –
ஸ்ரீ விபீஷணனையும்
இலங்கையும்
மதிளையும்
அத் திக்கையும்–நோக்கி இறே கண் வளர்ந்து அருளுகிறது

மலர்க் கண் –
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி -நீண்டது இறே
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வாரை கண்டவாறே

என்னுடைய திருவரங்கர்க்கு
இச் செயலுக்கு தோற்று அடிமை புக்கு எழுதிக் கொடுக்கிறார்

மற்று ஒருவர்க்கு ஆளாவாரே
மற்று ஒன்றினை காணா -என்கிறபடியே
ஸ்ரீ பெரிய பெருமாளை ஒழிய வேறு ஒருத்தர்க்கு ஆளாவாரோ

ஆகையால் சிதகுரைத்தார் ஸ்ரீ ரெங்க நாயகியாரும்
நன்று செய்தார் -என்று மன்றாடினார் ஸ்ரீ பெரிய பெருமாளாயும்-இருந்தது இறே
அன்றே தந்தையும் தாயும் ஆவார் -ஸ்ரீ திருவரங்கத்துள் ஓங்கும் ஒளி உளார் தாமே இறே
ஆளாவாரே
ஆட்கொள்வான் அமருமூர் அணி அரங்கம் -என்று ஆட்கொள்வார் ஸ்ரீ பெரிய பெருமாள் இறே
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா –

(சேஷத்வம் அதிசயகரத்வம்
பாரதந்தர்யம் -அவனுக்கு அடங்கி அவன் அதீனமாக இருப்பது
அதீனத்தில் இருக்காமல் அதிசயம் தேடலாம்
அரசனுக்கு பிரஜை -முதலாளிக்கு தொழிலாளி அதிசயம் சேர்க்க வேண்டாமே
அடியார் -ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி
தன்னடியார் -அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி
அடியார் சொல் சேஷத்வம் தானே சொல்லும் -பாரதந்தர்யம் குறிக்காதே என்னில்
பாரதந்தர்யம் புரிந்தால் தான் சேஷத்வம் விளங்கும்
இது பிராப்த விஷயத்தில்-லௌகிக விஷயம் போல் அல்லவே )

தன்னடியார் –இத்யாதி
பெரிய பெருமாளும் ஸ்ரீ ரெங்க நாயகியாருமாக இசலி
ஆஸ்ரிதரை ரக்ஷிக்கிற பிரகாரத்தை அருளிச் செய்கிறார்

தன்னடியார் –இத்யாதி
அடியார் என்றது
கர்ம பல பிரதான ஸ்வத் வத்தால் வந்த ஸ்வாதந்தர்ய நிவ்ருத்தியையும்
(கர்ம பலத்துக்காகக் கொடுக்கப் பட்ட சரீரம் அடியாகவே ஆத்மா செயல் பட வேண்டுமே
இத்தாலேயே ஸ்வா தந்தர்யம் போகுமே )
அகரணே ப்ரத்யவாய பரிஹார தர்மத்தால் வந்த ஸ்வாதந்தர்ய நிவ்ருத்தியையும் உடையவர்களை –
(செய்யாமல் விட்டால் குற்றம் வருமே என்று பண்ணும் கர்மங்கள் -எனவே ஸ்வ தந்தர்யமாக செய்ய வில்லையே )

ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி பாரதந்தர்யம் அன்றோ -சேஷத்வம் ஆமோ என்னில்
அது (ஸ்வ ஸ்வா தந்தர்ய) நிவ்ருத்தம் ஆனால் அன்றோ அது (சேஷத்வம் )தான் தோன்றுவது
தோன்றுகையாலே அடியார் என்கிறார்

(சேஷ கத இச்சா ப்ரயுக்த சேஷத்வம்
சேஷி கத இச்சா ப்ரயுக்த சேஷத்வம்
உபய கத இச்சா ப்ரயுக்த சேஷத்வம்
இதர கத இச்சா ப்ரயுக்த சேஷத்வம்
நான்கு வகை சேஷத்வம்
முன்பி வந்து நிற்ப -என் இச்சை -முகப்பே கூவி பணி கொள்வது அவன் இச்சை
அருளப்பாடு தான் முகப்பே கூவி பணி கொள்வது
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது சேஷி கதம்)

இனி தன்னடியார் -என்று
அந்ய சேஷத்வ நிவ்ருத்தியைச் சொல்லுகிறது
அந்ய சேஷத்வத்துக்கு உதயம் எங்கே என்னில்

கீழ் (லுப்த-தாதர்த்த )சதுர்த்தியில் கழிந்தது காம நாதிகாரத்தால் வந்த அந்ய சேஷத்வமும்
காம்ய விதியால் (பக்தி -சாதனாந்தரம் )வந்த ஸ்வ ஸ்வாதந்தர்யமும் இறே மிகவும் கழிந்து தோன்றுவது

(பரமாத்வாவுக்கு ஜீவன் அடிமை சொல்லி மற்றவருக்கு அடிமை அல்ல -அந்ய சேஷத்வம் கழிந்ததே
அவனையே உபாயமாகக் கொண்டதால் ஸ்வ ஸ்வா தந்தர்யமும் கழிந்ததே
ஈஸ்வர ப்ரீதி -அதிருஷ்ட -பல சாதனம் -)

அந்த அந்ய சேஷத்வம் கழிவதும் வர்ணாஸ்ரம தர்மத்தில் நிலை நின்றவர்களுக்கே இறே உள்ளது
(பகவத் ஆஜ்ஜா -இருப்பதால் செய்து -பலம் எதிர்பார்க்காமல் கைங்கர்ய ரூபமாக செய்ய வேண்டுமே )

இவர்களுக்கு (ரிஷிகளுக்கு ) ஸ்வ ஸ்வாதந்தர்ய கர்ப்பம் உண்டாகையாலே
தேஹ உபாதியும் கர்ம உபாதியும் வைதம் யாகையாலே கழியாது –

இப் பத விவரணத்திலே (நமஸ் தான் விவரணம் ) போகிற அதிகாரிக்கு இது (காம்ய விதி )தானும் அந்ய சேஷத்வமாய்
உகாரத்திலே ஸ்த்தான பிராமண பிரதானமான அவதாரணத்தாலே கழியக் கடவது
(பரமாத்வுக்கே சேஷ பூதன் -உகாரம் ஏவ அர்த்தம் )

இவ் வகார ஸப்த வாஸ்யனுடைய சேஷித்வம் இளைப்பாறுகிற அவதாரணை –
(உகாரம் -எல்லாருக்கும் அவன் ஒருவனே சேஷி )
அபர சேஷித்வத்தையும் அதிக சேஷித்வ சங்கையையும் அறுக்கிறது

சர்வாதிகனுக்கு சேஷம் என்ற போதே அர்த்த பலத்தாலே கழிந்தது
(உகாரம் இல்லா விட்டாலும் அர்த்த பலத்தால் கிட்டும்
அனைவரைக் காட்டிலிலும் உயர்ந்தவனுக்கு சேஷம் என்றதும்
வேறே ஒருவருக்கு சேஷம் அல்ல என்று தேறும்)

உகாரம் லஷ்மீ வாசகம் என்றாலும் நிரூபக நிரூப்யங்கள் மறி படாது (மாறி விடாது )
(அகாரம் அவன் உகாரம் பிராட்டி மகாரம் -ஓங்காரத்தால் -மிதுனத்துக்கு சேஷ பூதன்
ஜீவனுக்கு சேஷத்வம் -நிரூபகம் மாறாதே
இருவருக்கும் நிரூப்யம் -அதுவும் மாறாதே )

பட்டர் பிரிய அருளிச் செய்தார் என் என்னில்
அவன் தன்னைப் போலே இவளும் ஆச்சார்ய பதத்தை ஆசைப்பட்டாள் இறே லஷ்மி தந்த்ராதிகளிலே
அத்தாலே அது சேரும்

இது தன்னை ப்ரமேய சாரத்தில் அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
அவ் வானவர்க்கு- என்று விளங்க அருளிச் செய்தார் இறே

(அவ் வானவருக்கு மவ் வானவர் எல்லாம்
உவ் வானவர் அடிமை என்று உரைத்தார் -இவ்வாறு
கேட்டு இருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியிலா
நாடு இருப்பார் என்று இருப்பன் நான் –பிரமேய சாரம்-1-)

(இனி மூன்றாவதாக உகாரம் அசித்தை சொல்லும் )
இது தான் அசித் வாசகமுமாம்
ஸ்தான பிராமண ஸித்த மாகையாலே
இவை எல்லாம் இவ்வுகாரத்திலே உண்டானாலும்
இவை எல்லாத்தாலும்
இவ் வந்ய சேஷத்வ நிவ்ருத்தியே பிரதானம்
(இது தானே -தன்னடியார்- என்கிறது )

(அகாரத்துக்கு சேஷமாகவே ஜீவர்கள்
அகாரத்துக்கே சேஷ பூதன் –
இரண்டுமே வேண்டுமே )

சர்வாதிகனுக்கு சேஷம் என்றதும்
விசேஷ்ய பர்யந்த அபிதானத்தால் வந்த ஆதிக்யமும்
தேவத அந்த்ரயாமித்வத்தால் வந்த ஆதிக்யமும்
பிராப்தம் அல்லாத ஸர்வ ஸப்தத்திலே (ஜீவர்கள் சப்தம் இல்லா விட்டாலும் ) தோற்றுகையாலும்
முமுஷுக்களுக்கு அநு பாஸ்யங்கள் ஆகையாலும் -அவதாரணையோடே சேராது
ஆகையால் அந்ய சேஷத்வ நிவ்ருத்தியே பிரதானம்

ஓவ்பாதிகமான விஹித தர்மத்தில் நிற்கிறவன்
(உபாதி தேகம் -பிறப்புக்குத் தக்க வர்ணாஸ்ரமம் வ்யாஸ பராசராதிகள் சாஸ்திரத்தில் நோக்கு )
அத்யந்த ஓவ்பாதிகமான காம்ய தர்மத்தில் நிற்கிறவர்களை
(அத்யந்த உபாதி தேகம் ஆசை இரண்டும் உள்ள அத்ரி போல்வார் -பிரஜாபதி ஆக ஆசை கொண்டவர் -போல்வார் )
ஆதரிக்கிறது ஒவ்பசாரிகம் (அப்ரதானம் )
அகரேண ப்ரத்யவாயம் இல்லை
(ஆகவே நம் பூர்வர்கள் இவர்களை ஆதரிக்க வில்லை )

அவர்கள் தான் ஸத்யாதி தபஸ்ஸூக்களைச் செய்யும் காலத்திலே இவர்கள் ஆதரிக்கும்படி கோலிச் செய்கையாலே
அவர்கள் புண்ய பல பூர்த்தி இவர்கள் ஆதரமாய் இருக்கும்
(ஸத்யாதி -சத்யம் ஆர்ஜவம் தானம் போல்
கள்வா -வரம் கேட்டு பெற்றான் ருத்ரன் -பேரனைப் பார்த்து தாத்தா கேட்பதோ
ஆதரிக்க பிரார்தித்ததால் பெற்ற பெருமை போல் )
வசிஷ்ட வாக்காலே ப்ரஹ்ம ரிஷி என்ன வேண்டிற்று இறே
(இதே போல் முமுஷுக்கள் ஆதரித்தால் தான் இவர்களுக்கு இதில் பூர்த்தி வரும் )

அகரேண ப்ரத்யவாய தர்மங்களிலே
ஓரோ ப்ரதேசங்களிலே
அர்த்த க்ஷேத்ர பஸ்வாதிகளைப் பலமாக விதித்ததும்
ப்ரரோசகமாம் இத்தனை
(இவை பலத்துக்கு சாதனம் அல்ல -ஆஜ்ஜா கைங்கர்யம் -தூண்டிச் செய்ய வைக்க சொன்னவை
பகவத் ஆஜ்ஜா பகவத் கைங்கர்ய ரூபமாக தானே செய்கிறோம் )

இவை எல்லாம் கண்டு நீக்கினால் இறே
அந்ய சேஷத்வம் அற்றதாவது

சேஷியும்
உபாயமும்
உபேயமும்
(மூன்றுமே )
தானாகப் பற்றினவர்களுக்கு
மந் -என்கிற பதத்தில்
தன்னடியார் என்று நிரூபகம்

(மன்னுடைய விபீஷணர்க்காக -என்று கொண்டால் இது பொருந்தும்
அந்தரிக்ஷகத ஸ்ரீ மான் -செல்வம் உடைய
மந்-மன்-என்று இருக்க வேண்டும் )

———–

கருளுடைய பொழில் மருதம் கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும்
உருளுடைய சகடரையும் மல்லரையும் உடைய விட்டோசை கேட்டான்
இருளகற்றும் எரி கதிரோன் மண்டலத்தோடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆள்கொள்வான் அமருமூர் அணி அரங்கமே – 4-9 3-

பதவுரை

கருளுடைய பொழில் -பார்த்தவர் மதி மயங்கப் பண்ணும் சோலைகள்
மருதம் கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும்-விரோதி நிராசனம் -பிளம்பர் நம்பி மூத்த பிரான்
உருளுடைய சகடரையும் மல்லரையும் உடைய விட்டோசை கேட்டான்-நிரசித்து -அறிவுடையார் ஸ்தோத்ரம் பண்ணும் ஒலியைக் கேட்டான்
இருளகற்றும் -அந்தகாரம் போக்கு
எரி கதிரோன் மண்டலத்தோடு ஏற்றி வைத்து -அர்ச்சிராதி கதி -ஆதித்ய மண்டலம் வழியாக
ஏணி வாங்கி-உபாய பாவம் நிவர்ப்பித்து
அருள் கொடுத்திட்டு -மறுபடியும் மடீலாமைக்கும் கைங்கர்யம் வர்த்திப்பிக்கவும் அருளுபவன்
அடியவரை ஆள்கொள்வான் அமருமூர் அணி அரங்கமே –

கருளுடைய பொழில் மருதம் கதக் களிறும் பிலம்பனையும்
இருண்ட தழையை யுடைத்தான மருதும்
அதி கோபத்தை யுடைத்தான குவலயா பீடமும்
கொடுமைக்கு விசேஷணம் இட்டுச் சொல்ல வேண்டாதபடி கொடியனான பிரலம்பாஸூரனும்

கடிய மாவும்
ஓர் உயிராய் இருக்கிறவனை முடிக்க வந்த குதிரையும்

உருளுடைய சகடரையும் மல்லரையும்
தன்னையே சொல்ல அமையும்

உடைய விட்டோசை கேட்டான்
இவர்கள் எல்லாரையும் நிரசிக்கும் படியான நல் விரகை இட்டு நிரஸித்து
ஜகத்தை ரக்ஷித்து
விரோதி நிரசன சீலன் என்று
சாதுக்கள் ஸ்தோத்ரம் செய்கிற ப்ரஸித்தியைக் கேட்டான்

ஒரு சொல்லாலே உடைய விட்டான் என்ற
அநாயாஸ்த்வம் பாரீர் –

இருளகற்றும் எரி கதிரோன் மண்டலத்தோடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி
திமிர ஹரமான கிரணங்களை வீசும் சக்தியை யுடைய ஆதித்யன் பிரபா மண்டலத்தூடே
ஆச்சார்ய பர தந்த்ரருமாய்
முமுஷுக்களுமான ஆர்த்த ப்ரபன்னரை
ஆச்சார்ய உபதேச கம்ய மார்க்கம் வழியே
ஏற்றி வைத்து ஏணி -என்கையாலே
அன்னதோர் இல்லியூனூடு போய் (பெரிய திருமடல் )-என்று
நிஷேதித்த ஸ்வயம் சக்தியையும் நிஷேதிக்கிறது

அன்றிக்கே
உபதேச நிரபேஷ ஞானம் உடையார்
இவர் அபிமானத்தாலே இரண்டு அருகும் சில விளக்கு ஏற்றினால் போலே
கதிரவர் அவரவர் கை நிறை காட்டினார் (திருவாய்-10-9- )-என்கிறபடியே
துவாதச ஆதித்யர்களும் தாழ்ந்து அங்கீ கரிக்கப் போன வழி
இவர் உபதேச ஸா பேஷராய்
இவர் அபிமானத்தில் ஒதுங்கி
அநந்ய கதித்வமும் ஆகிஞ்சன்யமும் உடையவர்களுக்கும் கொடுக்கும் என்னவுமாம் –

வைத்து
சூழ்ந்து இருந்து ஏத்த வைத்து என்றும்
அடியாரோடே இருக்க வைத்து -என்றாலும்
ப்ராப்ய கௌரவத்தாலே உபகார ஸ்ம்ருதி தலையெடுத்து
இத்தை உபகரித்தவனைக் காண வேணும் என்னும் ஸ்ரத்தை உண்டாய்த்தாகில்
இப் பிராப்யத்துக்கு பூர்வ பாவி தானாகையாலே தன்னைக் காட்டுதல்
அவரோஹத்தில் பரம குருவைக் காட்டுதல்
சரம உபகாரகனான இவன் தன்னை (ஆச்சார்யனை) அங்கே அழைத்துக் காட்டுதல் செய்தால் இறே
நித்ய ஸங்கல்பத்தால் வந்த அபுநா வ்ருத்தி தான் கூடுவது

இவன் ஏறின ஏணியை அங்கே வாங்கி காட்டியாகிலும் இவனை ரமிப்பிக்க வேணும் இறே
(கீழே ஏணி என்று தனது உபாய பாவம் -இங்கு ஏணியான இவனுடைய ஆச்சார்யனை என்றவாறு )
பிணை கொடுக்கிலும் போத ஒட்டாரே -என்னா நின்றது இறே
அத்ர பரத்ர சாபி

அருள் கொடுத்திட்டு
அங்கே ஏறுகைக்கும்
இங்கே மீளாமைக்குமாய் இறே
அவன் கொடுத்த அருள் தான் இருப்பது

இட்டு
தன் முகோல்லாஸத்தாலே ஜீவனம் இட்டு

அடியவரை ஆள் கொள்வான்
தான் செய்த நன்மைகள் ஒன்றையும் நினையாதே
அடிமைக்கு இசைவதே என்ற ஒன்றையுமே நினைத்து இறே
கால தத்வம் உள்ளதனையும் அடிமை கொள்வதுவும்
(இசைவித்து உன் தாளிணைக் கீழ் வைக்கும் அம்மான் அன்றோ
இசைவது மட்டுமே நம் கர்தவ்யம் )

அமருமூர் அணி அரங்கமே
இவ் வடிமைக்கு இசைவாரை இன்னமும் கிடைக்குமோ என்று இறே
இங்கே அமர்ந்தமை தோன்றக் கண் வளர்ந்து அருளுகிறது

உபதேச கம்ய ஞான அனுஷ்டானங்களை யுடைய நம் பூர்வாச்சார்யர்கள் இறே
அவ் வூருக்கு ஆபரணம் ஆவார் –

———-

ஸ்ரீ மத் த்வாரகையிலே பெண் பிறந்தாருக்கு முகம் கொடுத்த பிரகாரத்தை அனுசந்திக்கிறார்

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – 4-9 4-

பதவுரை

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய படைவீட்டில் -கோப கன்னிகள் -கைங்கர்யம் செய்ய
துவரை என்னும் அதில் –
நாயகராகி -ஸ்வாமியாக
வீற்று இருந்த மணவாளர் -பெருமை தோற்ற வீற்று இருந்த
மன்னு கோயில்-தீர்த்த பிரசாதம் பண்ணி போகாமல் நித்யவாஸம்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்-திரு நாபி கமலம் போல் பாவித்து
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் -கர்வத்துடன் இருந்து
புனல் அரங்கமே -நீர் வளப்பம் மிக்க திருவரங்கம் –

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய
நரகாசூரன் சேர்த்த ராஜ கன்யைகளைப் பாணி கிரஹணம் செய்து
அவர்கள் இஷ்ட அநு வர்த்தகம் செய்ய

துவரை என்னும் அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
ஸ்ரீ மத் துவாரகை என்னும் பிரசித்தியை யுடைய
அதிலே இவர்கள் எல்லாரும் தனித்தனியே
என்னை ஒழிய அறியான் என்னை ஒழிய அறியான் -என்னும்படி வேறுபாடு தோன்ற
அவர்கள் இஷ்ட அனுவர்த்தனம் செய்து மணவாளராய் இருந்த
அழகிய மணவாள பெருமாள் நித்ய வாஸம் செய்கிற கோயில் –

புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
அப்போது அலர்ந்த செவ்வித் பொற்றாமரை
ஜகத் காரண வஸ்துவினுடைய திரு வயிற்றில் பொற்றாமரைப் பூப் போலே

பொது நாயகம் பாவித்து
தன்னை சர்வ சேஷியாக நினைத்து –

இறுமாந்து
கர்வித்து

பொன் சாய்க்கும் புனல் அரங்கமே
அதன் பொன்னிறத்தைத் தன நிறத்தாலே தள்ளும்படியான ஜல ஸம்ருத்தி மாறாத
திருவரங்கமே மணவாளர் மன்னு கோயில்

இத்தால்
பகவத் ஸுவ் மனஸ்யத்திலும்
ததீய ஸுவ் மனஸ்யத்துக்கு உண்டான ஏற்றம் சொல்லுகிறது

பதினாறாம் ஆயிரவர் தேவிமார்–பொது நாயகம் பாவித்து இறுமாந்து–பணி செய்ய-என்று
கீழே அந்வயிக்கவுமாம்

————-

ஆமையாய் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய்
நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய் தக்கணையாய் தானும் ஆனான்
சேமமுடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில்
பூ மருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே -4 9-5 –

பதவுரை

ஆமையாய் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய்  அரு வரைகளாய்-ஐந்துக்கள் -கங்கை –
அகாதமாய் கங்கை ஒப்புக்களிடமான சமுத்திரம்
நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய் தக்கணையாய் தானும் ஆனான்-இங்கும் ஐந்து விஷயங்கள் –
தக்ஷிணை முகமாக பலம் அருளும் அசாதாரண விக்ரஹ விசிஷ்டனான தானும்
சேமமுடை நாரதனார்   -ப்ரஹ்ம பாவனை நிஷ்டை யாகிய ரக்ஷை யுடைய நாரதர்
சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில்-வணங்கப்பட்ட வாசஸ்தானம்
பூ மருவிப் புள்ளினங்கள் -ஹம்ஸங்கள் நீர்ப்பூவில் பொருந்தி இருந்து
புள்ளரையன் புகழ் குழறும் -தங்கள் ஜாதிக்கு ராஜாவான கீர்த்தியை அனஷர ரஸமாக பேசும்
புனல் அரங்கமே–நீர் வளம் மிக்க

ஆமையாய் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய் நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்
தக்கணையாய் தானும் ஆனான் சேமமுடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில்

ஸர்வஞ்ஞனான ஸ்ரீ நாரதன்
ப்ரஹ்ம ஈஸா நாதிகள் முதலானோரை தத்வ நிர்ணய ஸா பேஷனாய் அனுவர்த்தித்துக் கேட்க்கும் அளவில்

பெரியனாய் தனிகனாய் இருப்பான் ஒருவனே தத்துவமாக வேணும் என்ன

இந்த ருசியும் கங்கா ஸ்நானம் ஸூத்தனாய் நமக்கு இது விளங்கும் படி என் என்று நிற்கும் அளவில்

கங்கைக்குள்ளே ஆகாஸ அவகாஸம் அறும் படி பெரியதோர் கூர்மம் வந்து தோன்ற

அத்தைக்கு கண்டு ஆச்சர்யப்பட்டு
ப்ருஹத்யோஸி தந்யோஸி -என்று நமஸ்கரிக்க

நீ இங்கன் சொல்லுகிறது என்
இவை எல்லாம் உள்ளது என்னைத் தரிக்கும் கங்கைக்கு என்ன
கங்கையும் தன்னுடைய பிரவாகத்தை ஸஹிக்கிற சமுத்ரத்தைக் காட்ட
ஸமுத்ரம் தன்னைத் தரிக்கிற பூமியைக் காட்ட
பூமியும் ஆதாரமான பர்வதங்களைக் காட்ட
அவையும் சிரேஷ்டமான ப்ரஹ்மாவைக் காட்ட
அவனும் தனக்கு இப்பத்தைக் கொடுத்த வேதத்தைக் காட்ட

வேதமும் யாகங்களைக் காட்ட
அந்த யாகமும் தக்ஷிணையைக் காட்ட
இவை எல்லாவற்றிலும் தான் பிரகாரியாய் நின்று அசாதாரண விக்ரஹ யுகதனுமானவன் இப்படி
உபரி உபரி நாரதன் சென்று ஸ்தோத்ரம் பண்ணக்
கண் வளர்ந்து அருளின சேமமுடைய கோயில்

சேமம் -ரக்ஷை

——–

மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி
உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட உயிர் ஆளன் உறையும் கோயில்
பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்சி திசை விளக்காய் நின்ற திருவரங்கமே – 4-9 -6-

மைத்துனன்மார் காதலியை -அபிமதையான திரௌபதியை
மயிர் முடிப்பித்து அவர்களையே  மன்னராக்கி-பாண்டவர்களையே அரசர்களாக்கி
உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட -அபிமன்யுவின் மனைவியான உத்தரை
பிள்ளை பரிக்ஷித்தை திருவடிகளால் ஸ்பரிசித்து
உயிர் ஆளன் உறையும் கோயில்–அனைவருக்கும் ஸ்வாமி
பத்தர்களும்
பகவர்களும் -சன்யாசிகளும்
பழ மொழி வாய்  முனிவர்களும் -அனாதையாய் உள்ள வேதம் –
வாய்  முனிவர்களும்-வாக்கில் உள்ள ரிஷிகளும்
பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்சி -அஞ்சலி பண்ணி சாஷ்டாங்க பிராணாமம் செய்து
திசை விளக்காய் நின்ற திருவரங்கமே

மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து
மைத்துனன்மாருடைய காதலியான திரௌபதியை
அவள் ப்ரதிஜ்ஜையைத் தலைக்கட்டி
மயிர் முடிப்பித்து

அவர்களையே மன்னராக்கி
அந்தப் பாண்டவர்களையே அவளுக்காக ராஜ்ய ப்ராப்தராம் படி பண்ணி

உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட
உத்தரை யுடைய புத்ரனையும் பிராணன் உண்டாம்படி உஜ்ஜீவிப்பித்து

உயிர் ஆளன் உறையும் கோயில்
ஆத்மாக்களை ஆண்டு போருகிறவன் நித்ய வாஸம் பண்ணுகிற கோயில்

பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும்
நிருபாதிக ஸ்நேஹிதிகளும்
த்ரி தண்டிகளான ஸந்யாஸிகளும்
வேத பாராயண பரராய் மனன சீலரான ரிஷிகளும்

பரந்த நாடும்
பரப்பை யுடைத்தான தேசங்களில் உள்ளவர்களும்

சித்தர்களும்
ஆனந்த நிர்ப்பரரான நித்ய முக்தரும்

சித்தர் என்று
முமுஷுக்களை சொல்லவுமாம்
(நிலத் தேவர் விண்ணுள்ளாரிலும் சீரியர் அன்றோ )

தொழுது இறைஞ்சி
பக்தாஞ்சலி புடாஹ்ருஷ்டா நம இத்யே வாதிந -என்று
அஞ்சலி பூர்வகமாக ப்ரணாமத்தைப் பண்ண

திசை விளக்காய் நின்ற திருவரங்கமே
திக்குக்கள் தோறும் பிரகாசகமான கோயில் என்னுதல்
சேதனருக்கு ஞான பிரகாசகம் (ப்ரணவாகார விமானமன்றோ )என்னுதல்
இது வாய்த்து உயிராளன் உறையும் கோயில் –

—————————-

மஹா பலியைச் செருக்கு வாட்டினவன் நித்ய வாஸம் பண்ணுகிறவன் இடம் கோயில் என்கிறார் –

குறள் பிரமசாரியாய் மாவலியை குறும்பதக்கி அரசு வாங்கி
இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த வெம்மான் கோயில்
எறிப்புடைய மணி வரைமேல் இள நாயிறு எழுந்தால் போல் அரவணையின் வாய்ச்
சிறப்புடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே -4 9-7 –

குறள் பிரமசாரியாய்  மாவலியை -வாமனனாக சென்று
குறும்பதக்கி -செருக்கை அடக்கி
அரசு வாங்கி-ராஜ்யத்தை நீர் ஏற்று வாங்கி
இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து -க்ஷண காலத்தில் பாதாளத்தை இருப்பிடமாக கொடுத்து அருளி
வைகுந்தம் கலவிருக்கை போல் இவனுக்கு இது கொடுத்து அருளி
உகந்த வெம்மான் கோயில்-ஸ்வாமியானவன் நித்யவாஸம் செய்யும் கோயில்
எறிப்புடைய -மிக்க ஒளியை உடைய
மணி வரைமேல் -நீல பர்வதத்தின் மேலே
இள நாயிறு -பால ஸூர்யன்
எழுந்தால் போல் -உதித்தால் போல்
அரவணையின் வாய்ச் சிறப்புடைய பணங்கள் மிசை செழு மணிகள் -ஆதிசேஷன் –
விட்டு எறிக்கும் திருவரங்கமே-மிகவும் விளங்கா நிற்கும் கோயில்

குறள் பிரமசாரியாய்
நாட்டில் குறள் வளர்ந்து அருளினை இடம் என்னும்படி வாமன ப்ரஹ்மசாரியாய்

மாவலியை குறும்பதக்கி
இந்த்ரனதான ராஜ்யத்தைப் பறித்துக் கொண்ட மஹா பலியுடைய குரும்பை அடக்கி

அரசு வாங்கி இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த வெம்மான் கோயில்
அவன் தானே வரும்படி விரகிட்டு அல்ப காலத்திலே ராஜ்யத்தை வாங்கி
இந்த்ரனுக்குக் கொடுத்து அவனுக்குப் பாதாளத்தைச் சிறை இருப்பாகக் கொடுத்து விரோதியை ஜெயிக்கையாலே
உகந்த என் ஸ்வாமியானவன் நித்ய வாஸம் பண்ணுகிற கோயில்

கலவிருக்கை
கலந்த இருக்கை
மனஸ்ஸூக்குப் பொருந்தின இடம் என்றபடி –

எறிப்புடைய மணி வரைமேல் இள நாயிறு எழுந்தால் போல்
கிரணங்களை யுடைய ஸ்படிக ரத்ன கிரியின் மேலே தருணாதித்யன் உதித்துத் தோற்றுமா போலே
(நீல ரத்னம்-மா முனிகள் இங்கு ஸ்படிக ரத்னம் -ஆதிசேஷன் வெளுத்த ஒளி மிக்க திவ்ய ரூபம் என்றபடி 0

அரவணையின் வாய்ச் சிறப்புடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே
பெரிய பெருமாளுக்குப் படுக்கையான திரு அனந்தாழ்வானுடைய அழகிய பணா மண்டலங்களின் மேலே
அதி ப்ரகாஸமான மாணிக்ய ப்ரபை பிரகாஸியா நின்றுள்ள திருவரங்கமே எம்மான் கோயில்
சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி -என்னக் கடவது இறே–

———

ஆஸ்ரித விரோதி நிரசன பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்பு உறைக்க ஊன்றிச்
சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலரத் தெழித்தான் கோயில்
உரம் பெற்ற மலர்க் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட
வரம் புற்ற கதிர் செந்நெல் தாள் சாய்த்து தலை வணங்கும் தண் அரங்கமே -4- 9-8 –

உரம் பற்றி -தேவர்கள் இடம் பெற்ற வர பலமுடைய
இரணியனை
உகிர் நுதியால் -உகிரின் கூர்மையாலே
ஒள்ளிய மார்பு உறைக்க ஊன்றிச்-மாறுபாடு உருவும் படியாக முடி
சிரம் பற்றி -தலையைப்பிடித்து
முடி இடிய கண் பிதுங்க வாய் அலரத் தெழித்தான்-ஆரவாரம் செய்த
கோயில்
உரம் பெற்ற மலர்க் கமலம் – -செழிப்பு உடைத்தான தாமரைப்பூ
உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட—திருவிக்ரமானது திருவடிகளை போலவே கிளர வளர்ந்து பிரகாசிக்க
வரம் புற்ற -வரம்பு சேர்ந்து விளைந்து நிற்பதாய்
கதிர் செந்நெல் -கதிர்களை யுடைத்தான செந்நெல்
தாள் சாய்த்து தலை வணங்கும் –தாளை சாய்த்து அடியவர்கள் போல் வணங்கி
தண் அரங்கமே –குளிர்ந்த திருவரங்கத்தில் வளப்பம் சொன்னவாறு

உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்பு உறைக்க ஊன்றிச்-
ஸ்வர்ண மயமான தேஹத்தை யுடையவனாகையாலே ஹிரண்யன் என்ற பேரை யுடையவனை
அவன் பதையாதபடி மார்வை அமுக்கித் திரு உகுரின் அக்ரத்தாலே-
திரு உகிருக்கு இறையாகப் பெறுகையாலே அழகிதான மார்பிலே அவன் உளையும் படி யூன்றி

சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலரத் தெழித்தான் கோயில்-
அவன் தலை அபிஷேகத்தோடே நெரியும்படியாகப் பிடித்துக்
கண்கள் பிதுங்கிப் புறப்படும்படியாகவும்
வாய் விட்டுக் கூப்பிடும்படியாகவும்
கிழித்துப் பொகட்டவன் நித்ய வாஸம் பண்ணுகிறவன் கோயில்

தெழித்தல் -ஆர்ப்பரவம் செய்கை என்னவுமாம்

உரம் பெற்ற மலர்க் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட
நில வுரத்தாலே வயல்களில் யுண்டான தாமரைப்பூ வானது
திரு உலகு அளந்து அருளின போது எடுத்த திருவடிகள் போலே வளர்ந்து தோற்ற

வரமபுற்ற கதிர் செந்நெல் தாள் சாய்த்து தலை வணங்கும் தண் அரங்கமே
வரப்பிலே கதிர் கனத்தாலே சாய்ந்த செந் நெல் கதிரானது
அத் திருவடிகளுக்குத் தோற்று
நிர்மமரான வர்களுடைய ப்ரஹ்வீ பாவத்தைக் காட்டா நின்றுள்ள ஸ்ரமஹரமான கோயில் –

இத்தால்
கருந்தரையில் ஆச்சார்யனுடைய ஞான அனுஷ்டானங்களாலே (உரம் பெற்ற )
ஊர்த்தவ கதியைப் பிராபித்த
சிஷ்யனுடைய ஸுவ் மனஸ் யத்தை ( மலர்க் கமலம்–உயர்ந்து காட்ட )

அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்களை
நிஷேதித்த திருவடிகளுக்குப் போலியாகக் கண்டு ( உலகு அளந்த சேவடி போல் )
அஹம் அன்ன பூதராய் இருக்கச் செய்தேயும்
அதிகார அனுகுண பிராமண வியவசாயம் கடவாமல் (வரம் புற்ற கதிர் செந்நெல் )
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர்களைக் காட்டுகிறது ( தாள் சாய்த்து தலை வணங்கும்)

(ஜடவத் பரதந்த்ரராய் இருக்கச் செய்தேயும்
சேதனராய் இருக்கும் இருப்பு பிரயோஜனம் –
அஹம் அன்னம் –அஹம் அந்நாத
படி போல் இருந்து பவள வாய் காண வேண்டுமே )

———-

எல்லா அவதாரங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார் –

தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-

தேவுடைய–திவு -காந்தி -தேஜஸ்
இது அனைத்து அவதாரங்களும் விசேஷணம்
மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய்
கண்ணனாய் கல்கியாய்
முடிப்பான் -அசுர ராக்ஷஸாதிகளை முடிக்கவே அவதாரம் எடுத்து அருளியவன்
கோயில்-நித்ய வாசம் செய்யும் திவ்ய தேசம்
சேவலோடு பெடை அன்னம் -புருஷ ஹம்சம் பெண் அம்சத்துடன்
செங்கமல மலர் ஏறி யூசலாடி-
பூவணை மேல் துதைந்து-புஷ்ப்ப சயனத்தில் விளையாடி
எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே-நீர் வளப்பம் சொன்னவாறு

தேவுடைய
த்யோதமாந குணங்களை யுடையவனாய்
ஆபத் ரக்ஷகங்களுமான

மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய் மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய்
மத்ஸ்யாதி அநேக அவதாரங்களைப் பண்ணி

1-(மீனமாய் )பிரளயத்தை வற்றுவித்து
2-(யாமையாய்)ஜகத்தைத் தரித்து
3-(ஏனமாய்)பிரளயத்தின் நின்றும் ஜகத்தை எடுத்து
4-(அரியாய்)ஆஸ்ரிதனுடைய ஆபத்திலே தோற்றி
5-(குறளாய்)தன்னுடைமை பெறுகைக்கு இரப்பாளனாய்

மூவுருவில் ராமனாய்
6-ஷத்ரிய குலங்களை அறுத்துப் பொகட்டு
7-லங்கையை தஹித்து
8-கிருஷ்ணனுக்குப் பரிவனாய்

9-(கண்ணனாய்)பாண்டவ சாரதியாய்
10-(கல்கியாய் )ஜகத் ஸம்ஹாரத்தைப் பண்ணினவன்

முடிப்பான் கோயில்
அவ் வவதாரங்களுக்கும் பிற்பட்டவர்களுக்கும் இழக்க வேண்டாத படி
நித்ய வாஸம் பண்ணுகிற கோயில் –

சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
சிவந்த தாமரைப் பூவின் மேலே அன்னமானது பேடையோடே கூடிச் செருக்குக்குப் போக்கு வீடாகக்
காற்று அடித்து அசைந்த பூக்களின் மேலே இருந்து ஊசலாட

பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே
அந்தப் பூப் படுக்கைகளின் நின்றும் அவற்றினுடைய ஸஞ்சாரத்தாலே கிளம்பின
சிவந்த சுண்ணங்களிலே அவகாஹித்து
லீலா ரஸம் அனுபவிக்கும் படி ஜல ஸம்ருத்தியை யுடைய திருவரங்கம் –

இத்தால்
சார க்ராஹிகளாய் (அன்னம்)
ஸூத்த ஸ்வ பாவருமான
ஸிஷ்ய ஆச்சார்யர்கள்
ஸுவ் மனஸ்யத்தோடே
ராகோத்தரராய் வர்த்திக்கும் படியைக் காட்டுகிறது –

(சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும்
ராகம் -பக்தி வண்ணம் சிகப்பு )

———-

செரு ஆளும் புள் ஆளன் மண் ஆளன் செரு செய்யும் நாந்தகம் என்னும்
ஒரு வாளன் மறை யாளன் ஓடாத படை ஆளன் விழுக்கை ஆளன்
இரவாளன் பகலாளன் என்னை ஆளன் ஏழுலகப் பெரும் புரவாளன்
திருவாளன் இனிதாக திருக் கண்கள் வளர்கின்ற திருவரங்கமே 4-9- 10-

செரு ஆளும் புள் ஆளன் -தானே போர் செய்ய வல்ல பெரிய திருவடியை ஆளுமாவான் -நித்ய விபூதி ஆள்பவன்
மண் ஆளன் -லீலா விபூதி ஆளுபவன்
செரு செய்யும் நாந்தகம் என்னும் ஒரு வாளன் -ஒப்பற்ற கொற்ற ஒள் வாள்
மறை யாளன் -வேதங்களை அலுமவன்
ஓடாத படை ஆளன் –
விழுக்கை ஆளன்-சீர்மையுடன் கூடிய திருக்கை -அஃலம் புரிந்த தடக்கை
இரவாளன் பகலாளன் என்னை ஆளன்
ஏழுலகப் பெரும் புரவாளன்-நல்ல ஷேத்ரங்களை ஆளுபவன்
திருவாளன் -ஸ்ரீ மஹா லஷ்மிக்கு
இனிதாக திருக் கண்கள் வளர்கின்ற திருவரங்கமே -ஆனந்தமாக திருக்கண் வளருபவன் –

செரு ஆளும் புள் ஆளன்
விரோதி நிரசன ஸ்வ பாவனான பெரிய திருவடியைத் தன்
திரு உள்ளத்தின் படியே நடத்துமவன் –

மண் ஆளன்
பெரிய திருவடி தோள் இருப்பைக் காட்டி
பூமியை எழுதிக் கொண்டவன்

செரு செய்யும் நாந்தகம் என்னும் ஒரு வாளன்
யுத்த உன்முகமாய்
நாந்தகம் என்னும் திரு நாமத்தை யுடைத்தாய்
அத்விதீயமான வாளைத் திருக்கையில்
சரியாமல் பிடிக்க வல்லவன்

மறை யாளன்
வேதத்தினுடைய ஸ்வரூபாதிகளையும்
நித்யத்வத்தையும்
தன் புத்தி யதீனமாய் யுடையவனுமாய்
வேதைஸ் ச சர்வைர் அஹ மேவ வேத்ய -என்கிறபடியே
வேதைக சமதி கம்யன் யானவன் –

ஓடாத படை ஆளன்
வளையாத அல்லாத ஆயுதங்களை யுடையவன்
ஓடுதல் -கெடுதல்
அன்றிக்கே
நாட்டில் நடையாடாத ஆயுதம் என்னவுமாம்

விழுக்கை ஆளன்
சீர்மையை யுடையவன்
விழுக்கை -நீக்குதல் என்றுமாம்
அத்தால் -சத்ருக்களை ஓட்ட வல்லன் என்கை –

இரவாளன் பகலாளன்
அஹோ ராத்ர உப லஷிதமான காலத்துக்கு நிர்வாஹகனானவன்

என்னை ஆளன்
என்னை அநந்யார்ஹன் ஆக்கி ஆண்டு கொடு போருகிறவன்

ஏழுலகப் பெரும் புரவாளன்
உபய விபூதியையும்
அங்கு ஆதும் சோராமல் ஆளுமவன்

ஏழு உலகு
த்ரிவித சேதனரும்
சதுர்வித ப்ரக்ருதியையும்

புரவு
வரிசையும் தரங்கட்டும்

திருவாளன்
இவை எல்லாத்துக்கும் ஹேதுவாகப் பெரிய பிராட்டிக்கு வல்லபனானவன்
திருவாலே ஆளப்பட்டவன் என்னுதல்
திருவை ஆளுமவன் என்னுதல்
(நாராயணன் விஷ்ணு சித்தன் போல் இரண்டு சமாசங்களும் இதுக்கும் )

இனிதாக திருக் கண்கள் வளர்கின்ற திருவரங்கமே
பெரிய பெருமாள் பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் உடன் கூடி
ஆஸ்ரித ரக்ஷணத்துக்குப் பாங்கான தேசம் என்று உகந்து
கண் வளர்ந்து அருளுகிற இடம் கோயில் –

———-

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார்

கைந்நாகத் திடர் கடிந்த கனல் ஆழி படை வுடையான் கருதும் கோயில்
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரந்தத் திருப்பதியின் மேல்
மெய்நாவன் மெய்யடியான் விட்டு சித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார்
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணை அடிக் கீழ் இணை பிரியாது இருப்பர் தாமே – 4-9 -11-

கைந்நாகத் திடர் கடிந்த கனல் ஆழி படை வுடையான -பெரிய துதிக்கை யுடைய ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய துக்கம் நீக்கினவனாய்
கனல் ஆழி படை வுடையான் கருதும் கோயில்
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற
திருவரந்தத் திருப்பதியின் மேல்-க்ஷேத்ரம் விஷயமாக
மெய்நாவன் -வாக் ஸூத்தி
மெய்யடியான் -காய ஸூ த்தி -மங்களா ஸாஸன பரர்
விட்டு சித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார்-பேசும் சக்தர்
எஞ்ஞான்றும்   எம்பெருமான் இணை அடிக் கீழ் -ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகள்
இணை பிரியாது இருப்பர் தாமே-அடியார் குழாங்களுடன் திருவடிகளைப் பிரியாமல் அடிமை செய்யப் பெறுவர் –

கைந்நாகத் திடர் கடிந்த கனல் ஆழி படைவுடையான் கருதும் கோயில்
கையை யுடைய நாகம் உண்டு ஸ்ரீ கஜேந்திரன்
அவனுடைய துதிக்கை முழுத்தும் படியான ஆபத்தை ஸவாஸனமாகப் போக்கினவன்
விரோதி நிரசன பரிகரமான திருவாழி யாழி ஆயுதத்தோடே உகந்து வர்த்திக்கிற கோயிலான

ஆனைக்கும் தனக்குத் தக்க வாதம் -என்னுமா போலே
வடிவின் கனத்துக்குத் தக்கபடி இறே துக்கத்தின் கணம் இருப்பது
ஆனை யின் துயரம் -என்றார் இறே

ஆனைக்கு வாசகங்கள் பலவும் உண்டாய் இருக்க
கைந் நாகத்து இடர் என்றது
கைம்மா துன்பம் என்கிறபடியே
துதிக்கை முழுத்தின ஆபத்து என்று தோற்றுகைக்காக

அதாவது
நெடுங்காலம் வர்ஷ அபாவத்தாலே வரண்டு லோகத்திலே ஒரு பூக் காணக் கிடையாத படி யாகையாலே
எங்கே ஒரு திருப்பள்ளித் தாமம் கிடைக்குமோ என்று தடுமாறா நிற்க
மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை-என்கிறபடியே
தூரத்தில் குளிர்ந்த சோலையும் பூத்த பொய்கையுமாய்த் தோற்றக் கண்டு
பெரிய அபி நிவேசத்தோடே ஓடிச் சென்று உள்ளே துஷ்ட ஸத்வம் கிடக்கிறது என்று அறியாமல்
பொய்கையிலே இழிந்து பூவை வாரிப் பரித்து கரையிலே ஏறத் தேடுகிற அளவிலே முதலை வந்து காலைப் பிடிக்க

ஒரு நீர்ப் புழு நிமித்தமாக ஈஸ்வரனை அழைக்க வேணுமோ நாமே தள்ளிப் போகிறோம்
என்று போகப் பார்த்த அளவிலே
பிடித்த முதலை பிரபலமாகையாலே
கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஜ தே ஜலே -என்கிறபடியே
இங்கனம் ஆயிரம் தேவ ஸம்வத்ஸரம் சென்ற அளவிலே
முதலைக்குத் தன்னிலும் ஆகையால் அபிமத லாபத்தாலும்
முழு வலி முதலை என்கிறபடியே பலம் அபி வ்ருத்தமாய்
ஆனைக்கு தன்னிலம் இல்லாமையாலும் அபிமத அலாபத்தாலும் –
பலம் ஷீணம் ஆகையாலே துதிக்கை முழுத்தும்படி ஆய்த்து இறே –

இப்படி ஆனவாறே தன்னால் செயல் அற்று மனசா சித்த யத்தரிம் -என்கிறபடியே
சர்வேச்வரனையே ரஷகனாக அனுசந்தித்து –
நாராயணா ஒ ஒ மணிவண்ணா நாகணையாய் -வாராய் -என்ன
இந்த ஆர்த்த த்வனி செவிப்பட்டவாறே -அதந்த்ரித்த சமூபதி பிரஹிதஹச்தம்-இத்யாதிப் படியே
பகவதஸ் த்வராய நம – என்று அறிவுடையார் ஈடுபடும் படி பெரிய த்வரையோடே மடுக் கரையிலே வந்து –
ஆனையை ஒரு கையாலும் -முதலையை ஒரு கையாலும் எடுத்து அணைத்து கொண்டு -கரையில் ஏறி –
கையில் திருவாழி யாலே முதலையின் வாயைப் பிளந்து விடுவித்து -சாத்தி அருளின திரு பட்டத் தலையை சுருட்டி
திருப் பவளத்திலே வைத்து அதனுடைய புண் வாயை வேது கொண்டு -நெடு நாள் பட்ட கிலேசம் எல்லாம்
தீரும்படி திருக் கையாலே குளிர ஸ்பர்சித்து-திருக் கண்களாலே குளிரக் கடாஷித்து அதன் கையில் பூவைத் திருவடிகளில்
இடுவித்துக் கொண்டு அதனுடைய துக்கத்தை போக்கின படியைச் சொல்லுகிறது –
இடர் கடிந்த -என்று –

கனல் ஆழிப் படையுடையான் –
ஜ்வலியா நின்றுள்ள திரு ஆழியை ஆயுதமாக உடையவன் –
இடர் கடிந்த கனல் ஆழிப் படையுடையான் –என்கையாலே கையும் திரு ஆழியுமாக கொண்டு வந்து
தோற்றி ஆய்த்து முதலையை விடுவித்ததும் ஆனையை ரஷித்ததும் –
தொழும் காதல் களிறு அளிப்பான் -மழுங்காத வைநுதிய சக்கர நல் வலத்தையாய் – தோன்றினையே
என்று அறிவுடையார் ஈடுபடும்படி இறே அப்போது அவன் வந்து தோன்றினபடி

கருதும் கோயில் –
ஸ்ரீ பரம பதம் ஸ்ரீ ஷீராப்தி தொடக்கமான ஸ்தலங்கள் எல்லாவற்றிலும் காட்டில்
ஆஸ்ரிதரை அனுபவிப்பிக்கைக்கும்
ரஷிக்கைக்கும் உடலான ஸ்தலம் என்று விரும்பி வர்த்திக்கும் ஸ்ரீ கோயில்

தென்னாடும் வட நாடும் தொழ நின்ற திருவரந்தத் திருப்பதியின் மேல்
ஸகல லோகங்களில் உள்ளாரும் பெரிய பெருமாள் குணங்களுக்குத் தோற்று நிர்மமராய்த் தொழும் படி விஷயமாய்
திருவரங்கம் என்கிற திரு நாமத்தை யுடைத்தாய்
நித்ய அபிமதமான தேசம் என்கிறது –

மெய்நாவன்
விப்ர லம்ப கரர் அன்று என்கை
யதார்த்தவாதி என்று ஆப்திக்கு உடலாக அருளிச் செய்கிறார்

மெய்யடியான்
ப்ரயோஜனாந்தர பரர் அன்றிக்கே
அநந்ய ப்ரயோஜனராய்
அநந்ய ஸாதநாராய
மங்களா சாஸனமே யாத்ரையாம் படியான
தாஸ்ய பூர்த்தியை யுடையவர்

விட்டு சித்தன்
திரு உள்ளத்துக்குள்ளே அவனை வைத்து நோக்குமவர்

விரித்த தமிழ் உரைக்க வல்லார்
மங்களா ஸாஸன புருஷார்த்தம் விசதமாம் படி சர்வாதிகாரமாக திராவிட பாஷையாலே
விஸ்திருதமாக்கின இந்தத் திருமொழியை அப்யஸிக்க வல்லவர்கள்

எஞ்ஞான்றும் எம்பெருமான் இணை அடிக் கீழ் இணை பிரியாது இருப்பர் தாமே
எல்லாக் காலத்திலும் எங்களுக்கு சேஷியான ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பான
திருவடிகளின் கீழே விஸ்லேஷ ரஹிதராய் தங்களில் ஒரு நினைவாய் இருப்பர்
பரமாத்மாவை சூழ்ந்து இருந்து ஏத்துவார் என்னக் கடவது இறே

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-8–மாதவத்தோன் புத்திரன் போய்–

August 2, 2021

கீழே
வடதிசை மதுரை என்றும்
சாளக்கிராமம் என்றும்
வைகுந்தம் என்றும்
(விபத்தையும் ) பரத்வத்தையும் அர்ச்சாவதாரத்தையும் சொல்லிற்று
அவை மூன்றும்
அஞ்சுக்கும் உப லக்ஷணம்

இவை இத்தனையும் சேர யுள்ளது பெரிய பெருமாள் பக்கலிலே
விண்ணோர் முதல் -என்றும்
கடல் இடம் கொண்ட -என்றும்
கட்கிலீ -என்றும்
காகுத்தா கண்ணனே -என்றும்
திருவரங்கத்தாய் -என்றும்

ஆராமம் சூழ்ந்த அரங்கம் -என்றும்
திருப்பதிகள் எல்லாம்
பெரிய பெருமாளுக்கு பகல் இருக்கை இறே

உபய விபூதியிலும் நடக்கும் செங்கோலும் தனி ஆணையும் பெரிய பெருமாளது இறே
பொங்கோதம்
ஏழு உலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருக்கிறாரும் பெரிய பெருமாள் இறே

பை கொள் நாகத்தணையான் பயிலும் இடம் -என்று
கோயிலில் இறே திரு உள்ளம் பொருந்தி இருப்பது –

அரங்கம் ஆளி விண்ணாளி ( திருமங்கை )
ஆயிரம் சுடர் வாய் அரவு அணைத் துயின்றாரும் ( திருமங்கை ) பெரிய பெருமாள் இறே

துவரை யதனில் மணவாளராக வீற்று இருந்தாரும் இவரே

அயோத்தி எம் அரசே -என்று
திரு அயோத்யையிலே திருவாராதனம் கொண்டு அருளினாரும் பெரிய பெருமாளே இறே

அந்தணர் தம் சிந்தையாலும் அரங்கம் மேய அந்தணன் (திரு நெடும் தாண்டகம் )இறே

அன்போடு தென் திசை நோக்கிப் பள்ளி கொள்ளுகிறதும்
வன் பெரு வானகம் முதலானவை எல்லாம் உஜ்ஜீவிக்கவே இறே

ஆகிலும் இரண்டு பிரதானம்
தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் -என்று
ஆஸ்ரிதர் யாம்ய மார்க்கத்தில் போகாமையும்
ஆஸ்ரிதனான விபீஷணனைக் கடாக்ஷித்தும் இறே

வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இடமுடை
வதரி இட வகையாக வைகுந்தன் புகழாத் திருக் கண்டம் கடி நகரிலே
இருந்து அரசு ஆண்டாரும் பெரிய பெருமாளே இறே

எங்கும் பெரிய பெருமாளே யாகிலும்
திருவரங்கம் என்பதுவே என் திருமால் சேர்விடம் -என்கிறார் -(இதில் )

———

அவன் ஆச்சார்ய வரணம் செய்து ஓதின பிரகாரத்தை அனுசந்திக்கிறார்

மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா வுருவுருவே கொடுத்தானூர்
தோதவத்தி தூய் மறையோர் துறை படிய துளும்பி எங்கும்
போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே – 4-8- 1-

பதவுரை

மறி–அலையெறியா நின்றுள்ள
கடல்வாய் போய்–கடலிற் புகுந்து
மாண்டானை–முதலை வாயி லகப்பட்டு உயிரொழிந்த
மாதவத்தோன் புத்திரன்–மஹா தபஸ்வியான ஸாந்தீபிநியினுடைய பிள்ளையை
ஒதுவித்த தக்கணையா–(ஸாந்தீபிநி தன்னை) அத்யயனம் பண்ணுவித்ததற்கு தக்ஷிணையாக
உரு உருவே–(அப் புத்திரன் மரணமடையும் போதுள்ள ரூபம் மாறாதபடி) யதா ரூபமாக
கொடுத்தான்–(கொணர்ந்து) கொத்தருனின எம்பெருமானுடைய
ஊர்–திருப்பதியாவது;
தோதவத்தி–பரிசுத்தமாகத் தோய்த்து உலர்த்தின வஸ்திரங்களை அணியா நிற்பவரும்
தூய் மறையோர்–நிர்த்தோஷ ப்ரமாணமான வேதத்தைத் தமக்கு நிரூபகமாக வுடையவருமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
துறை–காவேரித் துறைகளில்
படிய–அவகாஹிக்க (அதனால்)
எங்கும்–அக் காவேரி முழுதும்
துளும்பி–அலை மோதப் பெற்று (அதனால் தாமரை மலர்களின் நாளங்கள் அலைய)
போதில்–(அந்தப்) பூக்களில்
வைத்த–இரா நின்றுள்ள
தேன்–தேனானது
சொரியும்–பெருகப் பெற்ற
புனல்–நீரை யுடைய
அரங்கம் என்பது–திருவாங்கமென்னுந் திருப்பதியாம்–

மா தவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா
மஹா தபஸ்ஸைப் பண்ணின ஸாந்தீபனி புத்ரன்
மறி கடலிலே போய் முடிந்தவனை
மா தவத்தோன் ஓதுவித்ததுக்கு குரு தக்ஷிணையாக

வுருவுருவே கொடுத்தானூர்
பூர்வ மேவ யுண்டான அவயவம்
கால பரிணாமம் நடக்கிற தேசத்திலே அது இல்லாதபடி செய்த இது -என்ன ஆச்சார்யம் தான்

இப்படிக் கொடுத்தவன் நித்ய வாஸம் செய்கிற வூர்

தோதவத்தி
ஸ்நானமாடி தோய்த்து உலர்ந்தது
பட்டுப்படி -பருத்திப்படி -என்கிறவற்றிலும் காட்டில் இது இறே
ப்ராஹ்மணருக்கு யோக்யமாய் இறே இருப்பது

தூய் மறையோர்
வேதாந்தத்துக்கு வியாஸ பதம் செலுத்த வல்லவர்கள்

மறைக்குத் தூய்மையாவது
நித்ய
நிர்தோஷ
ஸ்வயம் ப்ரகாஸ
அபவ்ருஷேய
ஏகார்த்த நிர்ணாயகமாய்
அத்யந்த ரஹஸ்யமாய் இருக்கை

இதில்
பரஸ்பர தோஷ பரிஹாரம் செய்ய வல்லவருமாய்
தன் நிஷ்டருமாய் இருக்கும்
ஆழ்வான் போல்வார்
தூய மறையோர் ஆவார் –

துறை படிய துளும்பி எங்கும் போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே
எவ் வுலகத்து எவ் வவையிலும் ஓதுவார் ஓத்தான
அநந்த வேதங்களும் சொல்லுகிற
சின்னமும் திரு நாமமும் இவள் வாயனவாயத் திருந்தின பிரகாரம் அறிந்து
தொன்மையூர் அரங்கமே -என்னும் ஆசை யுடையார்
அங்கே நித்ய வாஸம் பண்ணி

கங்கையில் புனிதமான தெளிவிலாக் கலங்கல் திரு முகத் துறை படியத் துளும்பின ஜலம்
தாமரைத்தாள் முதலானவற்றை அலைக்க
பக்வமான பூக்கள் அவ் வலைச்சலாலே மலர்ந்து மது வெள்ளத்தை விட
பரந்த தேனே நிரூபகமான படியே
புனல் சூழ்ந்த திருவரங்கம் என்னும் ப்ரஸித்தியால்
பெரிய பெருமாளுக்கும் அபிமதமான ஏற்றத்தை யுடைத்தாய்
ரெங்கம் ரெங்கம் இதி ப்ரூயாத் -என்னும் படியே இறே
உரு வுருவே கொடுத்தானூர் இருப்பது –

இந் நேரை மிகவும் அறிந்த நம் ஆச்சார்யர்கள்
வணங்கும் பல துறை ஒரு துறையாக்கித்
தங்கள் அனுஷ்ட்டிக்க
இவர்களுடைய குணம் தேங்கி
எங்கும் பரந்து
ஸூ மநாக்களை
அஞ்ஞாத ஞாபன சா பேஷராக்கித்
தங்கள் பக்கலிலே அஞ்ஞாத ஞாபன சா பேஷ ப்ரார்தனையோடே வந்து
ப்ரஸ்னம் பண்ணும் படி இருப்பார்க்கு இறே
ஸம்ஸ்க்ருத திராவிட வேதங்களில்
நேர் கொடு நேர் பரஸ்பர விரோத பரிஹாரம் செய்ய வல்லராவது என்கிறது இத்தால் –

————

வைதிக புத்ர நயன ஆச்சர்யத்தை அருளிச் செய்கிறார்
கீழ்ச் சொன்ன ஆச்சர்யம் போல் அன்று இறே இது

பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப் படுத்த உறைப்பனூர்
மறைப் பெரும் தீ வளர்த்து இருப்பார் வரு விருந்தை அளித்து இருப்பார்
சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே – 4-8-2 –

பதவுரை

பிறப்பு அகத்தே–ஸூதிகா க்ருஹத்திலேயே
மாண்டு ஒழிந்த–இறந்தொழிந்த
பிள்ளைகளை நால்வரயும்–புத்திரர்கள் நால்வரையும்
இறைப் பொழுதில்-ஒரு நொடிப் பொழுதில்
கொணர்ந்து–(ஸ்ரீவைகுண்டத்தினின்றும்) கொண்டு வந்து
கொடுத்து–மாதா பிதாக்கள் கையில் கொடுத்து
ஒருப்படுத்த–(இப் பிள்ளைகள் எம் பிள்ளைகள் தான் என்று) ஸம்மதி பண்ணுவித்த
உறைப்பன்–சத்தியந்தன் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்– திருப்பதியாவது:
மறை–வேதங்களிற் கூறப்பட்டுள்ள (வைதிகமான)
பெரும் தீ–சிறந்த (மூன்று) அக்நிகளையும்
வளர்த்து இருப்பவர்–(அலிச்சிந்தமாக) வளர்த்துக் கொண்டிருப்பவர்களும்
வரு–(தம்தம் திருமாளிகைக்கு) எழுந்தருளுகிற
விருந்தை–அதிதிகளான ஸ்ரீவைஷ்ணவர்களை
அளித்திருப்பவர்–ஆதரித்துப் வோருமவர்களும்
சிறப்பு உடைய–(இப்படிப்பட்ட) உத்கர்ஷங்களை யுடையவர்களுமான
மறையவர்–வைதிகர்கள்
வாழ்–வாழப்பெற்ற
திரு அரங்கம் என்பதுவே–

பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும் இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்த
கிருஷ்ணனை ஆஸ்ரயித்த வைதிகன் என்று இருப்பான் ப்ராஹ்மணனுடைய ஸ்த்ரீ
ஸூதிகா க்ருஹத்திலே பிரசவிக்க பிரசவிக்க

நாய்ச்சியார்
பிராகிருத அப்ராக்ருத சக்தி பரிணாமம் காண வேணும் என்றும்
கிருஷ்ணன் விக்ரஹத்தை அங்கே காண வேணும் என்றும்
நசையாலே
ஸூதிகா க்ருஹத்திலே கிடவாதபடி
தங்கள் ஸங்கல்பத்தாலே பெறப் பெறக் கொண்டு போய் அங்கே இட்டு வைக்க

அது அறியாதே
அவளும் சோஹார்த்தையாய்ப்
பின்னையும் தன ப்ரஸவ காலத்திலே பர்த்தாவைப் பார்த்து
என் பிள்ளைகள் எல்லாரும் இங்கனே போவான் என் -என்று கிலேசித்துக் கேட்ட அளவிலே

அவனும் கிருஷ்ணன் இடம் சென்று இச் செய்திகளை அறிவித்து
என் ப்ராஹ்மணி ப்ரஸவிக்கக் காலமாய்த்து –
இனி யாகிலும் இப்பிள்ளையை ரஷித்துத் தர வேணும் என்ன

கிருஷ்ணனும் ஏகாஹ தீஷையிலே மாத்த்யாந்திக ஸ்வநத்திலே இருக்கிறவர் எழுந்து இராமல்
நான் போகிறேன் -என்று அர்ஜுனன் போய்
ஸூதிகா க்ருஹத்தைச் சூழச் சரக் கூட்டம் கட்டி நிற்க

அவள் பிரசவித்த பிள்ளை ஆகாசத்தில் கதறிக் கொண்டு போக
ப்ராஹ்மணன் அர்ஜுனனைப் பிடித்து -ஷத்ரிய அதமா -என்று
கிருஷ்ணன் பக்கலிலே இவனைக் கொண்டு போய் காட்டின அளவிலே

இவனை விடு
நான் உனது அபேக்ஷித்தத்தைச் செய்கிறேன் என்ன
அவன் இசையாத படியாலே -எல்லாரையும் கூடக் கொண்டு போய் விரஜைக்கு இக்கரையில் நிறுத்தி

அக்கரையில் போய் அங்கு திரு ஓலக்கம் குறையாமல் இருக்க
பிள்ளைகள் கிடந்த இடத்தே
இட்டு வைத்தவன் எடுத்துக் கொண்டு போகுமா போலே கொண்டு போந்து
ப்ராஹ்மணன் வாசலிலே
இவன் கண்ட வுருப்படியே காட்டிக் கொடுத்து நீக்கி விட்டான் இறே
மாதத் யந்தி னத்துக்கு முன்பே
அது தானும் மிகை இறே அத்யல்ப காலம் என்கையாலே
இத்தை
ஸத்வ தநு- என்னாதே –
ந அகாரணாத் -கேவலம் தர்ம த்ராணாய -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-51 )-என்றார்கள் இறே

உறைப்பனூர்
தேச கால அதிகாரி நியதி இன்றியிலே
நித்ய வாஸம் செய்கிற வூர்

மறைப் பெரும் தீ வளர்த்து இருப்பார்
மறைத்தீ -பெரும் தீ
காம்ய யஜ்ஞமும் –
நித்ய யஜ்ஞமும்

காம்ய யஜ்ஞத்துக்கு
த்வீ பரார்த்த காலம் ப்ரஹ்மாவாய் இருந்து ஜீவிக்கை

நித்ய யஜ்ஞத்துக்கு வளர்த்தி யாவது
ஸங்கல்ப நிபந்தமான வர்ண பாரதந்தர்யத்தோடே
அகரணே ப்ரத்யவாய பரிஹாரம்
பிரயோஜனம் என்று இருக்கை

இவற்றுக்கு சாஷாத் பிரயோஜனம்
காம்ய தர்மத்தை விட்டு வர்ண தர்மத்தில் நிற்கையும்
வர்ண தர்மத்தை த்யஜித்து
வெண்ணெய் யுண்ட வாயனான இன்னமுதான பெரிய பெருமாளை உபாய நிரபேஷமாகப் பற்றி
மற்ற ஒன்றினைக் காணாது இருக்கையும் –

வரு விருந்தை அளித்து இருப்பார்
இப்படி ஸாஸ்த்ர ஜன்ய ஞானத்தாலே கரை ஏறினார்கள் உளர் ஆகில் -அவர்களுக்கும்
இந்த நிரதிசய புருஷார்த்தம் உபதேச கம்ய ஞானத்தாலே ஸித்தித்த பாகவதர்க்கும்
கைங்கர்ய பரராய் தம் தாம் திரு மாளிகையிலே எழுந்து அருளி வந்த ஸ்ரீ வைஷ்ணவர்களை
ஸ்வரூப அனுரூபமாக ஆதரித்து அமுது செய்யப் பண்ணியும்

இவர்கள் அமுது செய்வதற்கு முன்னே வேறே சில ஸ்ரீ வைஷ்ணவர்கள்
ஸ்வரூப அனுரூபமாக அங்கே அமுது செய்யும் படி அருளிச் செய்ய வேணும் என்று பிரார்த்தித்தால்
தங்கள் இழவு பாராதே
பர ஸம்ருத்தியே பிரயோஜனம் என்று இருக்கையும்

இழவு தோன்றித்தாகில்
தாங்களும் அவர்களோடே சென்று அங்கே அமுது செய்கையும்
இங்குச் சமைந்த வற்றையும் அங்கு கொண்டு போய் அமுது செய்கையும்

வந்து மேயும் குருகினங்கள் போல் அன்றிக்கே
அபேக்ஷித்து அழைத்தால்
வரு விருந்தான ஸ்ரீ வைஷ்ணவர்களை ஸ்வரூப அனுரூபமாக
நியதமான பதார்த்தங்களில் அவர்கள் அபிமதமான பதார்த்தங்கள் தமக்கு அரிதாய்த்தாகில்
வருந்தியும் தேடி அமுது செய்யப் பண்ணி இருப்பார் –

பாகவத் சேஷத்வ ஸீமை அன்றோ ஸ்வரூபம்
அப்போது அவர்கள் அபிமதத்தில் தமக்கு ஸக்யமானவையும் உபகரிக்க வேண்டாவோ
ரஹஸ்ய ரூபேணவும் என்னில்
இவர்கள் உபகரித்தாலும் அவர்கள் அங்கீ கரியாமையால் இவர்கள் உபகரிக்க விரகில்லை

பகவத் விஷயத்தில் பிரார்த்தனை போல் பிரார்த்தித்திக் கொடுத்தால் அவர்கள் அங்கீ கரியாமை என் என்னில்
பகவத் விஷயத்திலும் போக்ய பூர்வகமான போக்த்ருத்வம் இறே சேதனர்க்கு உள்ளது
போக்த்ருத்வம் முந்துமாகில் முகோலாஸ ப்ராப்யம் ஸித்தியாமையால் ஸ்வரூப நாஸமும் வரும் இறே
ஆகையால் இங்கும் அவர்கள் கொடுத்தாலும் அவர்கள் ஆதரியார்
( அஹம் அன்னம் முதலில் பின்பே அஹம் அந்நாத -படியாய் கிடந்தது பவள வாய் காண வேண்டுமே )

உபய அநு ராகமான மதீயத்வம் உண்டாகையாலே
இவ் வர்த்தத்தை அறிந்தவர்கள் உபகரிப்பதும் செய்யார்கள் –
உபகரிக்கில் உபய அநுராகம் இல்லாத பதார்த்தங்களை அவர்கள் விரும்பினார்களாகில் அவற்றை உபகரிக்கும் அத்தனை
இந் நேர் அறியாதார் செய்து போகிறதை அறிந்தவர் செய்யார் இறே

இவ்விடத்தில் நம்பிள்ளை அரக்கறைச் சூடிக்கு அருளிச் செய்த வார்த்தை
சந்மர்யாதா அதி வர்தநமோ என்னில்
அதுவும் லோக அபவாத பீதி பரிஹார அர்த்த மாகவும்
லோக ஸங்க்ரஹதயா கர்த்தவ்யமாகவும் அன்றிக்கே
மங்கள ரூபேண
ஷேத்ராணி மித்ராணி-இத்யாதி ஸர்வே பவந்தி பிரதிகூல ரூபா
இதில் உபய அநுராகம் இல்லை —
நல்ல புதல்வர் படியே (ஞான சாரம் -இவை அனைத்தும் அல்லல் )
இவ்வதிகாரிக்கு தேஹ தாரண ஸுவ்ஷ்ட்டவ மாத்ரமே பொறுப்பது –

சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பு -என்கிற
சிறப்பை யுடையவர்கள் என்னுதல்

இது தன்னைத் தங்கள் பக்கலிலே ஞான அனுஷ்டான ஸா பேஷராய்
நித்ய சேவை செய்து போரும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பக்கலிலே இவ்வர்த்தத்தை அனுசந்தித்து

உடையவர் திருக் குருகைப் பிரான் பிள்ளானையும்
அருளாளப் பெருமாள் எம்பெருமானாரையும் திரு உள்ளம் பற்றி இருக்குமா போலேயும்

பெரிய நம்பி முதலானோர் உடையவரைத் திரு உள்ளம் பற்றி இருக்குமா போலேயும்

நஞ்சீயர் நம்பிள்ளையைத் திரு உள்ளம் பற்றி இருக்குமா போலேயும்

பெரிய வடக்கில் திருவீதிப் பிள்ளை தம் திரு மகனான லோகாச்சார்யாரைத் திரு உள்ளம் பற்றி இருக்குமா போலேயும்

வளர்த்ததனால் பயன் பெற்றுச் சிறப்புடைய மறையவர் வாழ் என்னுதல்

இவை எல்லாமாகிலும்
சிறப்புடைய மறையவர் என்கிறது
கலியும் கெடும் என்கிற விஷயத்தைக் கண்டு கொண்டவர்களையே இறே

வாழ்
நல்லோர்கள் வாழ் நளிர் அரங்கம் -என்று இறே
கோயிலிலே வாழ்வு இருப்பது

திரு வரங்கம்
மண்ணில் பரிமளமாயும் இருக்கிற பிராட்டிமார்
நித்ய வாஸம் பண்ணுவதும் இங்கேயே இறே

என்பதுவே
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராண பிரசித்தமே அன்றிக்கே
ஆழ்வார்கள் எல்லாரும்
திரு மகளாரும்
ப்ராப்யமாக விரும்பி அருளிச் செய்த ப்ரஸித்தி இறே முக்யம்
(பதின்மர் பாடும் கோயில் என்பதே பிரதானம் )

தர்மஞ்ச ஸமய பிரமாணம் வேதாஸ் ஸ

திருவரங்கம் என்பதுவே உறைத்திட்ட வுறைப்பனூர் –

———–

மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன் மார்
உரு மகத்து வீழாமே குருமுகமாய்க் காத்தானூர்
திருமுகமாய் செங்கமலம் திருநிறமாய் கரும் குவளை
பொரு முகமாய் நின்று அலரும் புனல் அரங்கம் என்பதுவே – 4-8-3-

பதவுரை

மருமகன் தன்–மருமகனான அபிமன்யுவினுடைய
சந்ததியை–புத்திரனான பரிஷித்தை
உயிர் மீட்டு–மறுபடியும் உயிர் மீட்டு
மைத்துனன் மார்–மைத்துனன்னாரான பாண்டவர்களுடைய
உரு–சரீரமானது
மகத்து–(பாரத யுத்தமாகிற) நரமேதத்திலே-அஸ்வ மேதம் போல் இது நர மேத யாகம்
வீழாமே–விழுந்து அழிந்து போகாதபடி
குரு முகம் ஆய்–ஆசார்ய ரூபியாய்
(ஹித உபதேசங்களைப் பண்ணி)
காத்தான்–ரக்ஷித்தருளிய கண்ண பிரானுடைய
ஊர்–திருப்பதி யாவது:
செம் கமலம்–செந்தாமரை மலர்களானவை
திரு முகம் ஆய்–(பெரிய பெருமாளுடைய) திரு முகத்துக்குப் போலியாகவும்
கரு குவளை–நீலோத்பல புஷ்பங்கள்
திரு நிறம் ஆய்–திருமேனி நிறத்துக்குப் போலியாகவும்
பொரு முகம் ஆய் நின்று–(ஒன்றுக் கொன்று) எதிர் பொருகிற முகத்தை யுடைத்தாய் கொண்டு
அலரும்-நீர்வளத்தையுடைய
புனல்–நீர் வளத்தை யுடைய அரங்கம் என்பது–

மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு
உத்தரை தன் சிறுவனான மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு

தன் என்று
அவனுடைய விருப்பத்தைக் காட்டுகிறது

மைத்துனன் மார் உரு மகத்து வீழாமே
1-திரௌபதியினுடைய ஸஹ தர்ம பதி விரத அக்னியாலும்
2-சரணாகதை யுடைய பரிபவத்தில் லஜ்ஜை அசக்தி கண்டு இருந்த தந்தாமுடைய சக்தி லஜ்ஜா அபாவத்தாலும்
3-நியாய நிஷ்டூர (எதிரான )தர்மத்தை முக்கியமாக நினைத்து இருந்த பிரமத்தாலும்
4-ருணம் ப்ரவர்த்த மிவ -என்ற கிருஷ்ண அபிப்ராயத்தாலும்
கரிக் கட்டை போலே அழிந்து சரணாகதைக்காகக் கொடுத்த சரீரங்களைப்
பின்னையும் மகத்து என்கிற சப்தம்-
மகத்தாய்
மஹத்தான யுத்தத்தில்
மடிந்து போகாமல் என்னுதல்

மகம் என்று
யஜ்ஞமாய்
யுத்தம் நரமேத யஜ்ஞமாய்
அதிலே கொலை யுண்ணாமல் என்னுதல்

பிரகரண ஒவ்சித்யங்களாலே சப்தங்கள்
விரிந்தும்
சுருங்கியும் வரும் இறே

குருமுகமாய்க் காத்தானூர்
கீத உபநிஷத் ஆச்சார்யனாய்
அஞ்ஞாத ஞானம் செய்து கொண்டு போருவது
அதில் முதிர்ச்சி தோன்ற விபூதி அத்யாய விஸ்வரூபம் காட்டுவது
அதுவும் போராமல் -மாம் -அஹம் -என்று தன்னைக் காட்டுவது
வ்ரஜ -த்வா-மாஸூச -என்று தெளிவித்து
தவ வசனம் கரிஷ்யே -என்பித்து
ஈஸ்வரனான தான் இவர்களை சிஷ்ய வர்க்கமாக்கித்
தான் முகஸ்த்தனாய் (முன்னே நிற்பவனாய் )-குருவாய் ரஷித்தான் -என்னும் இடம்

அபாண்டவஸ்ய என்ன
ஏவுக்கும் இலக்குக்கும் (அம்புக்கும் கர்ப்பத்துக்கும் ) நடுவே-யாதவஸ்ய -என்பது
பாலப் பிராயத்தே அருள் செய்வது
என்னுடைய பஞ்ச வ்ருத்தி பிராணன் -என்றவை
முதலாக ரக்ஷித்தான் என்னும் இடம் பிரசித்தம் இறே

இப்படி இருக்கிறவன்
நித்ய வாஸம் செய்கிற வூர் –

திருமுகமாய் செங்கமலம் திருநிறமாய் கரும் குவளை
திரு முகத்துக்கு சத்ருசம் செங்கமலமாய்
திரு நிறத்துக்கு ஸத்ருசம் கருங்குவளையாய்

பொரு முகமாய் நின்று அலரும் புனல் அரங்கம் என்பதுவே
ஒன்றோடு ஓன்று பொருந்தி ப்ரபைகள் பிரதி பிம்பிக்கும் படி அலரா நின்ற புனலாலே
சூழப்பட்ட திருவரங்கம் என்பது –
காத்தானூர்

இத்தால்
கண்ணன் கோள் இழை வாண் முகத்தே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும்
உருவொத்தன நீலங்களே -என்று
சமுதாய சோபைக்குத் தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் காட்டுகிறது –
(நீல மேனி ஐயோ சமுதாய சோபை )

————

இவ்வளவேயோ -பித்ரு வசன பரிபாலனம் செய்த அருமை என்கிறார் –

கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தானூர்
தேன் தொடுத்த மலர் சோலை திருவரங்கம் என்பதுவே -4- 8-4 –

பதவுரை

கூன்–கூனைவுடைய
தொழுத்தை–அடியாட்டி -வேலைக்காரி யாகிய மந்தரை யானவள்
சிதகு–(ஸ்ரீராமபட்டாபிஷேக மஹோத்வசத்துக்கு விநாசகமான தீய சொற்களை
உரைப்ப–சொல்ல (அச் சொற்களை அங்கீகரித்துக் காட்டுக்கு எழுந்தருளச் சொன்ன)
கொடியவள்–மஹா க்ரூரையான கைகேயியினுடைய
வாய்–வாயிலுண்டான
கடிய சொல்லைக் கேட்டு–கடினமான சொல்லைக் கேட்டு
ராமன் திரு முகம் பார்த்த பின்பு இவள் பேசியதால் இது கூனியை விட கடிய சொல்
ஈன்று எடுத்து தாயாரையும்–(தன்னைப்) பெற்று வளர்த்த தாயான ஸ்ரீகௌஸலையாரையும்
இராச்சியமும்–ராஜ்யத்தையும்
ஆங்கு ஒழிய–கைவிட்டு
தொழத்தை–அடிமைப் பெண்
தாயார்–பூஜையிற்பன்மை
கண்டகர்–முள்ளைப் போன்றவர்
கான் தொடுத்த நெறி போகி–காடுகள் அடர்ந்திரா நின்றுள்ள வழியே (ஸ்ரீதண்டகாரணியத்திற்கு) எழுந்தருளி
கண்டகரை–(முனிவர்களுக்கு) முள் போலப் பாதகராயிருந்த (ஜநஸ்தாந வாசிகளான ராக்ஷஸரை
களைந்தான்–நிரஸித்தருளின எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்–திருப்பதி யாவது
தேன் தொடுத்த மலர்–தேன் மாறாத மலர்களை யுடைய
சோலை–சோலைகளை யுடைத்தான
திரு அரங்கம் என்பது–

கூன் தொழுத்தை சிதகுரைப்ப –
அவள் சரீரம் கோணினால் போலே காணும்
தொழும்பியுடைய நெஞ்சில் கோணுதலும் தோன்றச் சிதகுரைத்த படி

சிதகாவது
அவள் குணாதிகையாய் வார்த்தை சொல்லி சம்பாவிக்க-
அவள் சம்பாவனையும் சிதறி
அவள் வார்த்தையும் சிதையும்படியான
துர் உக்திகளைச் சொல்லுகை இறே

கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
இவளுடைய கொடிய வார்த்தையை கேட்டவளுடைய கடிய சொற்களைக் கேட்டு

அவள் இவன் முகம் பாராது இறே துர் யுக்திகளை சொல்லிற்று –
இவள் ரமயதீதி ராம -என்கிறவருடைய முகத்தைப் பார்த்து இறே சொல்லிற்று
இவள் அவளிலும் கடியவள் இறே
அவளுக்கும் தாஸி இவள் இறே

ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
ஐயரைத் தேற்றிப் பொகிடீர் -என்ன

நான் அவரை சோக நிவ்ருத்தி பண்ணிக் கொள்கிறேன்
புத்தி பேதிக்கிலும் நீர்
இப்போதே போம் என்ற சொல்லைக் கேட்பதாம்

லோக ரக்ஷணார்த்தமாகவும்
தன்னுடைய ஸ்நேஹ கார்யமாகவும்
பெற்று எடுத்தவள் வார்த்தை கேளாமல் –
விஸ்லேஷ அஸஹ மாநத்தாலே வாடின சராசரங்களை ஒழியக்
கான்று ஓடுத்த நெறி போனதாம் –

கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தானூர்
வாடின சராசரங்களை ஒழியக் கான்று ஓடுத்த நெறி போனதாம் –
இதுக்கு எல்லாம் அடி
கண்டகரை களைகை இறே

விரோதி நிரஸனம் ஒரு தலையானால்
தோஷா குணாகுணா தோஷா -என்கிறபடியே
தோஷ குணங்கள் மாற்றும்படியாய் இறே இருப்பது –
(மாதா சொல் மாறாத -சராசரங்களை விட்டுப் பிரிந்த தோஷமும்
குணமாகுமே இவர் கண்டகரைக் களைய போனதாலே )

கான் தொடுத்த
இடை வெளி அறச் செறிந்த காடு

கண்டகர்
ஆஸ்ரித விரோதிகள்

நெறி போகி களைந்தானூர்

ஏவம் பிரகார பூதனானவன்
நித்ய வாஸம் செய்கிற தேசம்

தேன் தொடுத்த மலர் சோலை திருவரங்கம் என்பதுவே
தேன் மாறாத மலர்களால் அலங்க்ருதமான சோலை என்னுதல்
வண்டுகள் மது பானம் செய்து களித்து வார்த்தைக்கும் சோலை என்னுதல்

கோல் தேன் பாய்ந்து ஒழுகும் -என்னுமா போலே கொம்பிலே தேன் என்னுதல்
சோலைத் திருவரங்கம் கண்டகரை களைந் தானூர்

இத்தால்
ஸர்வ ரஸ ஸர்வ கந்த என்கிற பெரிய பெருமாளுக்கு
ஸர்வ ரஸ ஸர்வ கந்த விகாஸ ஸூ மநாக்களாய் ஸூரிகளும்
செண்பகமாய் நிற்கும் முமுஷுக்களும்
ஸ்த்தாவர ரூபேண நின்று
அடிமை செய்வார்கள் என்று காட்டுகிறது –

(அணைய புணைய ஊர பெரியோரும் பெருமக்களும்
பிரார்த்தித்து பரிக்ரஹித்து வாழ்வார்கள் அன்றோ )

————-

பெருவரங்கள் அவை பற்றி பிழக்கு உடை இராவணனை
உருவரங்க பொருது அழித்து இவ்வுலகினை கண் பெறுத்தானூர்
குருவு அரும்ப கொங்கு அலர குயில் கூவும் குளிர் பொழில் சூழ்
திருவரங்கம் என்பதுவே என் திரு மால் சேர்விடமே – 4-8 5- –

பதவுரை

குரவு–குரவ மரங்களானவை
அரும்ப–அரும்பு விடா நிற்க
கோங்கு–கோங்கு மரங்களானவை
அலரா–அலரா நிற்க.
குயில்–குயில்களானவை
கூவும்–(களித்துக்) கூவும் படியான
குளிர் பொழில் சூழ்–குளிர்ந்த சோலைகளாலே சூழப் பெற்ற
திரு அரங்கம் என்பது–திருவரங்கமென்னும் திருப்பதியானது;
பெரு–பெருமை பொருந்திய
அவை வரங்களை
பற்றி–பலமாகக் கொண்டு
பிழக்கு உடைய–(தேவர் முனிவர் முதலாயினோரிடத்துப்) பிழை செய்கையையே இயல்பாக வுடைய
இராவணனை–இராவணனுடைய
உரு–உடலானது
மங்க–சிந்ந பிந்நமாம்படி
பொருது அழித்து–போர் செய்து (அவனைத்) தொலைத்த
இ உலகினை–இந்த லோகத்தை
கண் பெறுத்தான்–காத்தருளினவனும்
என்–எனக்குத் தலைவனும்
திருமால்–ஸ்ரீய: பதியுமான எம்பெருமான்
சேர்வு இடம்–சேருமிடாகிய
ஊர்–திருப்பதியாம்-

பெரு வரங்கள் அவை பற்றி பிழக்கு உடை இராவணனை
ப்ரஹ்ம ஈஸா நாதிகளாலே பெற்ற வரங்களைத் தனக்குத் தஞ்சமாகப் பற்றி
இவ் வரங்கள் உள்ளதனையும் நமக்கு பிழை வாராது என்று
தான் தேவர் ரிஷிகளுக்கு எல்லாம் பிழைகளே செய்து வரும் ராவணனை

ரமயதீதி ராம -என்கிறவருக்குப் பிரதியான ராவணனை
(ராவணோ லோக ராவணா -என்கிறபடி )

பிழக்கு -பிழை

உருவரங்க பொருது அழித்து
அவனுக்கு ரூப ஹானியாக
அவன் புத்ர மித்ரர்களில் யுத்த உன்முகர் ஆனவர்களை எல்லாம் அழித்தவன்

ச சால சாபஞ்ச முமோச வீர -என்னும்படி
வெறும் கை வீரனாக்கி
இப்போதாகிலும் சொன்னது செய்தானாமோ என்னும் நசையாலே
போய் வா என்றது
ரூப ஹாநியாய்த்து போனால் போலே வாராமையாலே இறே

உருவரங்க
அரங்க -என்றது
கழிய என்றபடி

ஆனாலும் வரச் சொல்ல வந்தவனோடு பொருகையும்
கொல்லுகையும்
தவறுதல் உண்டானாலும்
கர்தவ்யமோ என்னில்

இவன் சேவகக் கோழை யாலே விஜய ஸா பேஷனாய் வர மாட்டான் –
பெருமாளுக்கும் இவனைக் கொல்லுகை குண பாவம் அன்று –
ஆனால் கூடின படி என் என்னில்

பெரிய கோபத்தோடே வந்து
கொன்று போ என்று சலிப்பித்துப் போக விட்டு
விஜயத்தோடே நிற்க
அவரைக் கால் கட்டின பின் உதறிப் போந்தது இறே உள்ளது

இவ்வுலகினை கண் பெறுத்தானூர்
அஞ்சினோம் என்று இவ் விலங்கையில் உள்ளாருக்கு
ஒரு ரக்ஷகனைக் கொடுத்தவன் என்னுதல்

எல்லா லோகத்துக்கு உண்டான விரோதியைப் போக்கித்
தன்னை உண்டாக்கிக்
கண் பெறுத்து வித்தானூர்

கண் இல்லை இறே தன்னைப் பாராதார்க்கு
யஸ் ச ராமம் ந பஸ்யேத்–தன்னைப் பாராதார்க்கு
கண்கள் வச வர்த்தி யாகாதாப் போலே
தன்னைப் பார்த்தார்க்கும் கண்கள் வச வர்த்தி ஆகாது இறே

பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹரிணாம்
இவ் விளைப்பாறி கண் வளருகிறவனூர்

குருவு அரும்ப கொங்கு அலர குயில் கூவும் குளிர் பொழில் சூழ் திருவரங்கம் என்பதுவே
குரவு கோங்கு முதலான வ்ருக்ஷங்கள் புஷ்பிதங்களாகவும்
குயில் வண்டுகளை அழைத்துக் கூவும் படியாகவும்
வண்டுகள் முகத்தில் ஒழியப் பூ அலராது இறே

குளிர்த்தியை யுடைத்தான சோலையாலே சூழப்பட்ட திருவரங்கம் என்று
பரம பதத்திலும் –
வ்யூஹ -விபவங்களிலும் –
மற்றும் உகந்து அருளினை நிலங்களிலும் –
எல்லா ஸாஸ்திரங்களிலும் ப்ரஸித்தம் என்கையாலே –
என்பதுவே என்கிறார் –

என் திரு மால் சேர்விடமே
என் திருமால் என்று
வஸ்து நிர்தேஸித்தால் போலே
அவனுக்குச் சேர்விடம் ஆவதும் இதுவே
என்று நிர்தேஸிக்கிறார்

இவர் நிர்தேஸித்த இடத்தில் விரும்பி கண் வளருகையாலும்
என் திருமால் என்கிறார்

இவ்வுலகினைக் கண் பெறுத்தானான
என் திருமால் சேர்விடமான வூர்
திருவரங்கம் என்பதுவே

இத்தால்
முமுஷுக்களும்
ஸூரிகளும்
ஸ்த்தாவர ரூபிகளாய் நின்று -(குருவு அரும்ப கொங்கு அலற )
பெருமாளை ஸேவிக்கப் பெற்றோம் என்கிற ஸுமநஸ்யத்தை
மதுர பாஷிகளான நம் ஆச்சார்யர்கள் (குயில் கூவும்)
அக்கரை நோக்கின ஆர்த்த ப்ரபன்னரை அழைத்துக் காட்டி
இந்த ஸூ மனாக்களோடே சேர்த்து
திருப்தியை விழைப்பித்து (குளிர் பொழில் சூழ் திருவரங்கம் என்பதுவே )
தாங்களும் உகந்து
வர்த்திக்கும் தேஸம் என்று காட்டுகிறது –

———–

கீழ் உலகில் அசுரர்களை கிழங்கு இருந்து கிளராமே
ஆழி விடுத்தவருடைய கருவழித்த வழிப்பனூர்
தாழை மடலூடு உரிஞ்சித் தவள வண்ண பொடி அணிந்து
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – 4-8- 6-

பதவுரை

கீழலகில்–பாதாள லோகத்திலுள்ள
அசுரர்களை–அஸுரர்களை
கிழக்க இருந்து–அடக்கிடந்து
கிளராமே–கிளம்ப வொட்டாதபடி
ஆழி விடுத்து திருவாழியாழ்வானை ஏவி
அவருடைய–அவ் வசுரர்களுடைய
கரு–கர்ப்பந்தமாக
அழித்த–அழித்தருளினதாலும்
அழிப்பன்–சத்ருக்களைத் தொலைத் தருளுவதையே இயல்பாக வுடையவனுமான எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
ஊர்–திருப்பதி யாவது:
யாழ்–(வீணையினுடைய ஓசை போன்ற)
இன் ஓசை–இனிய இசையையுடைய
வண்டு இனங்கள்–வண்டுகளின் திரள்களானவை
தாமழை மடலூடு–(மலரத் தொடங்குகிற) தாழை மடல் முன்னே
உறிஞ்சி–உடம்பை உரசிக் கொண்டு (புகுந்து)
தவள வண்ணப் பொடி–(அம்மடலிலுள்ள)வெளுத்த நிறத்தையுடைய வண்ணத்தை
அணிந்து–உடம்படங்கலும் அணிந்து கொண்டு
அந்தக் களிப்பிலே
ஆளம் வைக்கும்–தெனதென என்று ஆளத்தி வைத்து பணிமிடமான
அரங்கம்–திருவரங்கம்–

கீழ் உலகில் அசுரர்களை கிழங்கு இருந்து கிளராமே ஆழி விடுத்தவருடைய கருவழித்த வழிப்பனூர்
மேல் உலகில் தேவர்களுக்காக
கீழ் உலகில் வர்த்திக்கிற அஸூரர்களை நிரஸிக்க

அடிக் கெடாமல் வந்தபடியாலே
திருவாழி ஆழ்வானை ஏவி
அவர்களுடைய கருக்குலைய அறுத்துப் பொகட்டு அழித்த ஸர்வேஸ்வரன்
நித்ய வாஸம் செய்கிற தேசம்

தாழை மடலூடு உரிஞ்சித் தவள வண்ண பொடி அணிந்து
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே
தாழை மடலுக்குள் நெருங்க முழுசி
அப் பூவில் உண்டான வெள்ளைச் சுண்ணம் அணிந்த உடம்போடு கர்வித்து
யாழ் நரம்பில் கிளம்பின த்வனியாலே வந்த இசை போலே
வண்டினங்களானவை ஆளத்தி வைக்கும்படி
தாழை முதலான சோலையை யுடைத்தான திருவரங்கம்
கருவழித்த வழிப்பனூர்

இத்தால்
தூரத் கந்திகளாய் -(தாழை – தூரமாக இருந்தாலும் மணம் கமழும் அன்றோ )
ஸூத்த ஸ்வபாவரான ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய (தவள வண்ண பொடி )
ஸ்ரீ பாத ரேணுவை
ப்ரபன்னரானவர்கள் (வண்டினங்கள்)
சிரஸா வஹித்து
தர்ஸனத்தர் சீரை அறிந்து ஆனந்த நிர்பரர்கள் ஆவர்கள் என்று காட்டுகிறது –

————-

கொழுப்புடைய செழும் குருதி கொழித்து இழிந்து குமிழ் தெறிய
பிழக்கு உடைய வசுரர்களை பிணம் படுத்த பெருமானூர்
தழுப் பரிய சந்தனங்கள் தடவரை வாய் ஈர்த்து கொண்டு
தெழிப் படைய காவிரி வந்து அடி தொழும் சீர் அரங்கமே – 4-8 -7-

பதவுரை

கொழுப்பு உடைய–கொழுப்பை யுடையதும்
செழு–செழுமை தங்கியதுமான
குருதி–ரத்தமானது
கொழித்து–ஊற்று மாறாமல் கிளர்ந்து
இழிந்து–நிலத்தில் பரவி
குமிழ்ந்து–குமிழி கிளம்பி
பிழக்கு உடைய–(பர ஹிம்சையாகிய) தீமைகளைச் செய்கிற
அசுரர்களை–அஸுரர்களை
பிணம் படுத்த–பிணமாக்கி யருளின
பெருமான்–எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்–திருப்பதியானது:
தழுப்பு அரிய–(ஒருவரிருவரால்) தழுவ முடியாத
சந்தனங்கள்–சந்தந மரங்களை
தடவரைவாய்–பெரியமலைகளினின்று
ஈர்த்துக் கொண்டு–(வேரோடே பிடுங்கி) இழுத்துக் கொண்டு வந்து
(இவற்றைத் திருவுள்ளம் பற்ற வேணும் என்று எம்பெருமானைப் பிராரத்திக்கின்றதோ என்னலாம்படி)
தெழிப்பு உடைய–இரைச்சலை யுடைய
காவிரி-திருக்காவேரி நதியானது
அடி தொழும்–(எம்பெருமானது) திருவடிகளைத் தொழுகையாகிற
சீர்–சீர்மையைப் பெற்ற
அரங்கம்–திருவரங்க நகராம்–

கொழுப்புடைய செழும் குருதி கொழித்து இழிந்து குமிழ் தெறிய பிழக்கு உடைய வசுரர்களை
நிணம் (மாம்சம் )கொழுத்து செருக்கும் படியாக இறே ஊட்டி இட்டால் போலே
சரீரங்களை வர பல புஜ பலங்களாலே வளர்த்துப்
பிழை செய்து பொருகிற மலை போல் இருக்கிற அஸூரர்களுடைய சரீரங்களை
பிள எழ விட்ட கூட்டம் (பெரிய திருமொழி -11 -துவாதச நாம திரு மொழி ) -என்னும் படி
குத்திப் பிளக்க ஊற்று மாறாமல்
ரத்தம் கிளம்பி நிலத்திலே இழிந்து குமிழி எழக் குதித்து அலை எறியும்படி –

பிணம் படுத்த பெருமானூர்
பிணமாக்கின சர்வேஸ்வரன் நித்ய வாஸம் செய்கிற தேசம் –

தழுப் பரிய சந்தனங்கள் தடவரை வா ஈர்த்து கொண்டு
நால்வர் இருவர் தழுவினாலும் கைக்கு அடங்காத படி இடமுடைத்தான மலை மேலே நின்று வளர்ந்த
சந்தன மரங்களை வேர் பறிய வகழ்ந்து ஈர்த்துக் கொண்டு

தெழிப் படைய காவிரி வந்து அடி தொழும் சீர் அரங்கமே
இது பெரிய பெருமாளுக்கு சாத்துப்படியாம் –என்று தெளிந்து காவேரியானது வந்து
திருவடிகளிலே சமர்ப்பித்துத் தொழா நிற்கும்படி சீரிதான திருவரங்கம் என்கிறார்

இத்தால்
அங்கு வர்த்திப்பார் எல்லாம் நல்ல பதார்த்தம் கண்டால்
பெரிய பெருமாள் திருவடிகளிலே நிருபாதிகமாக ஸமர்ப்பித்துத்
திருவடி தொழுவார்கள் என்கிறது –

————–

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8- 8-

பதவுரை

வல் எயிறு கேழலும் ஆய்–வலிவுள்ள பற்களையுடைய வராஹமாய்த் திருவவதரித்தும்,
வாள் எயிறு சீயமும் ஆய்–ஒளியை யுடைய பற்களை யுடைய நரஸிம்ஹமாயத் திருவவதரித்தும்
எல்லை இல்லா தரணியையும் அவுணனையும் இடந்தான்–ஹிரண்யாஸுரனையும் கிண்டருளின எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்–திருப்பதியாவது
இரு சிறை வண்டு–பெரிய சிறகுகளையுடைய வண்டுகளானவை
எல்லியம் போது–அந்திப் பொழுதிலே
எம்பெருமான் குணம் பாடி–பெரிய பெருமாளுடைய திருக் குணங்களைப் பாடிக் கொண்டு
மல்லிகை வெண் சங்கு ஊதும்–மாலைப்பூவான மல்லிகைப் பூவாகிற வெளுத்த சங்கை ஊதா நிற்கப் பெற்றதும்
மதிள்–திருமதிள்களை யுடையதுமான
அரங்கம் என்பது-

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
வலிய எயிறுகளை யுடைய ஸ்ரீ வராஹமும் ஸ்ரீ நரஸிம்ஹமுமாய்

எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
முழுகி எல்லை காண ஓண்ணாமல் பாதாள கதையான பூமியையும்
பிராதி கூல்யத்துக்கு எல்லை காண ஒண்ணாத படியான பாகவத அபசாரத்தையும்
(தவத்துக்கு எல்லை இல்லை மா முனிகள் வியாக்யானம் )
விளைத்துக் கொண்ட ஹிரண்யனை
கொம்பாலும்
திரு உகிராலும்
இடந்தானூர்

எல்லியம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே
சந்த்யா காலமான ராத்ரியிலே முகிளி தமான மல்லிகைப் பூக்களின் மேல் இருந்து
மது பாநம் பண்ணும் பெரிய சிறகை யுடைத்தான வண்டுகளின் த்வனி
தூய்தாக வெளுத்த சங்கத்தை ஊதினாலே போலே இருப்பதான
கொடி படர்ந்த சோலைகளாலும் திரு மதிள்களாலும் சூழப்பட்ட
திருவரங்கம் அவுணனையும் இடத்தானூர்

பெரிய பெருமாளுடைய திவ்ய குணங்களைப் பாடி ஊதினால் போலே இறே
கர்வத்தாலே மேலே பறப்பது
பூவின் மேலே வண்டுகள் வருவதாய் இருப்பது

இத்தால்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்துக்கும்
ஆர்த்த ப்ரபன்னருக்கும் உண்டான சம்பந்த ப்ராதான்ய
ப்ரகாசத்தைக் காட்டுகிறது

அன்றிக்கே
ஷட் பத நிஷ்டராய் பகவத் குணங்களுக்குப் போக்கு விடுமவர்களுக்கும்
ஸூத்த ஸ்வபாவரான ஸூ மநாக்களுக்கும் உண்டான சேர்த்தி சொல்லுகிறது –

————-

அநேக த்ருஷ்டாந்தம் இட்டுச் சொல்ல வேண்டும்படியான
விக்ரஹ வை லக்ஷண்யத்தை யுடையனாய்
ஆஸ்ரித வ்யாமுக்தனானவன் வர்த்திக்கிற தேசம் இது என்கிறார் –
பரத்வாதிகளை உபமான த்வாரா கோயிலிலே அருளிச் செய்கிறார் –

(மேகம் -பரத்வம்
குவளை -அலர்வது உள்ளம் அந்தர்யாமி
கடல் வ்யூஹம்
மயில் -விபவம் )

குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரை கடல் போல்
நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமாலூர்
குன்றாடு பொழில் நுழைந்து கொடி இடையார் முலை அணவி
மன்றூடு தென்றல் உலா மதிள் அரங்கம் என்பதுவே -4- 8-9 –

பதவுரை

குன்று ஆடு–மலையினுச்சியிற் சார்ந்த
கொழு முகில் போல்–நீர் நிறைந்த மேகம் போலவும்
குவளைகள் போல்–கரு நெய்தல் பூப்போலவும்
குரை–ஒலி செய்யா நின்ற
கடல்போல்–கடல் போலவும்
நின்று ஆடு–(களிப்பாலே) நின்று ஆடா நின்றுள்ள
மயில் கணம் போல்–மயில்களின் திரள் போலவும் (இரா நின்ற)
நிறம் உடைய–வடிவழகை யுடையவனான
நெடுமால்–எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்–திருப்பதி யாவது
தென்றல்–தென்றல் காற்றானது
குன்று–(மலய) பர்வதத்திலுள்ள
பொழிலூடு–சோலைகளினிடையிலே
அழைத்து–அழைத்து
(அங்குள்ள பூத்களின் தாதுகளை அனைத்து பரிமளத்தைக் கொய்து கொண்டு)
கொடி இடையார்–கொடி போன்ற இடையை யுடையரான பெண்களினுடைய
முலை–(கலவைச் சாந்தணிந்த) முலைகளை
அணவி–வியாபித்து
(அந்தப் பரிமளத்துடனே)
மன்றூடு–நாற் சந்திகளினூடே
உலாம்–உலாவப் பெற்ற மதிள் அரங்கம் என்பது-

குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரை கடல் போல் நின்றாடு கண மயில் போல்
பர்வத அக்ரத்திலே மிகவும் நீர் கொண்டு எழுந்து ஸஞ்சரிக்கிற மேகம் போலேயும்
அப்போது அலர்ந்த குவளைகள் போலவும்
மிக்க ஆரவாரத்தை யுடைத்தான கடல் போலவும்
வர்ஷாவில் ஸஞ்சரிக்கிற நின்று ஆடுகிற மயில் திரள் போலவும்

நிறமுடைய நெடுமாலூர்
திரு நிறத்தையும்
மிக்க வியாமோஹத்தையும்
உடைய பெரிய பெருமாள் நித்ய வாஸம் செய்கிற வூர்

குன்றாடு பொழில் நுழைந்து
மலய பர்வத்தில் பொழில்களூடே நுழைந்து
அங்குத்தைப் பரிமளத்தைக் கொடு போந்து

கொடி இடையார் முலை அணவி
வல்லி ஜாதக் கொடி போலே இருக்கிற இடையை யுடைய ஸ்த்ரீகளுடைய முலைகளில்
அங்கராக பரிமளத்தை அளைந்து கொண்டு போந்து

மன்றூடு தென்றல் உலா மதிள் அரங்கம் என்பதுவே
இளம் தென்றல் பசும் கொழுந்தானது உள் புகப் பெறாமல் மன்றிலே நின்று தடுமாறி உலவா நின்றது
இதன் வரவு பார்த்துப் படுக்கை படுப்பார் இல்லை இறே அவ்வூரிலே

பற்றிலார் பற்ற
அற்ற பற்றர் சுற்றி வாழுமூர் இறே

இது புறம்பே நின்று உலாவுமது ஒழியச் செய்யலாவது இல்லை இறே
பெரிய பெருமாள் ஆஜ்ஜை நடமாடுகிற வூரிலே காமன் ஆஜ்ஜை நடையாடாதே
இது புகுராமைக்கு இறே மங்களா ஸாஸன பரர் திரு மதிள் இட்டது
உள்ளிருப்பார் மங்களா ஸாஸன பரரே இறே
கண்ட கண்கள் மற்ற ஒன்றினைக் காணா என்று இறே அவர்கள் இருப்பது –

———–

நிகமத்தில் இத் திரு மொழியைக் கொண்டு ஸ்ரீ பெரிய பெருமாளை ஏத்தும் அவர்கள்
விஷயத்தில் தமக்கு உண்டான சேஷத்வ பிரதிபத்தியை அருளிச் செய்கிறார்

பருவரங்கள் அவை பற்றி படை யாலித்து எழுந்தானை
செருவரங்க பொருது அழித்த திருவாளன் திருப்பதி மேல்
திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு
இருவரங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே -4 -8-10 –

பதவுரை

பருவரங்கள் அளை பற்றி–பிரமன் முதலியோரிடத்துப் பெற்ற பெரிய வரங்களைப் பலமாகக் கொண்டு
படை ஆலித்து எழுந்தானை–யுத்த விஷயமாகக் கோலாஹலஞ் செய்து வெளிப் புறப்பட்ட இராவணனை
செரு–யுத்தத்திலே
அரங்க–ஒழியும்படி
பொருது–போர் செய்து
அழித்த–ஒழித்தருளின
திருவாளன்–(வீர்யமாகிற) லக்ஷ்மியைத் தனக்கு நிருபகமாக உடையனான எம்பெருமானுடைய
திருப்பதி மேல்–(திருவரங்கமென்னும்) திருப்பதி விஷமாக
விட்டுசித்தன்–பெரியாழ்வார்
விரித்தன–அருளிச் செய்த
திரு அரங்கம் தமிழ் மாலை கொண்டு–(பாட்டுத் தோறு ம்) ‘திருவரங்கம்’ என்கிற திருநாமத்தையுடைய
தமிழ் மாலையாகிய இப் பத்துப் பாசுரங்களையுங்கொண்டு.
இருவர் அங்கம் மெரித்தானை–(மதுகைடபர்களாகிற) இருவருடைய உடலைத்
(திருவனந்தாழ்வானுடைய மூச்சு வெப்பத்தினால்) கொளுத்திப் போகட்ட எம்பெருமானை
ஏத்தவல்லார்–துதிக்க வல்லவர்களுக்கு
அடியோம்–அடிமை செய்யக்கடவோம்–

பருவரங்கள் அவை பற்றி படை யாலித்து எழுந்தானை
ப்ரஹ்ம ஈஸா நாதிகள் பக்கல் மேல் எழச் சில வரங்களைப் பெற்று
அது தான் விசேஷண பர்யந்தம் என்று அறியாதே
அத்தாலே தானும் தன் பரிகரமும் பெரிய கர்வத்தோடே யுத்த உன்முகனாய் வந்தவனை

செருவரங்க பொருது அழித்த திருவாளன் திருப்பதி மேல்
யுத்த நியாயம் நடத்த மாட்டாத படி அவனைச் சலிப்பித்து போ வா என்று அழைத்த
வீர ஸ்ரீ யை யுடையவன் நித்ய வாஸம் செய்கிறவூர்

கண்டகரை களைந்தானூர்
நம் சேவகனார் மருவிய மதிள் திருவரங்கம் பெரிய கோயில் (திருமாலை -11) என்கிற திருப்பதி மேல்
பத்துப் பாட்டும் திருவரங்கம் வருகையாலே

திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு
விட்டு சித்தன் விரித்த–திருவரங்க தமிழ்மாலை-கொண்டு

இருவரங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே
விரோதி நிரசன சீலராய் இருக்கிற பெரிய பெருமாளை ஏத்த வல்லார்
இவர் தம்மைப் போலே மங்களா ஸாஸன பரராய்
இவர் அபிமானத்திலே ஒதுங்கி ஏத்த வல்லாருக்கு
அடியோமே என்கிறார்

இவருடைய பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -முதலாயன உள்ளது எல்லாம் இது இறே
நானும் உனக்குப் பழ அடியேன் -என்ற இடத்தில் பெறாத குறை தீர
எம் தம்மை விற்கவும் பெறுவார்களே -என்ற இடத்தில்
சேஷத்வம் தோன்றாதே பாரதந்தர்யத்தாலும்
ஸந்தோஷம் விளையாதே
பாகவத சேஷத்வம் தோன்ற ஏத்த வல்லாருக்கு அடியோமே -என்று
அருளிச் செய்தது இங்கே இறே

இருவரங்கம் எரித்தான் என்றது -மது கைடபர்களை
அது என்
அவர்கள் திரு அநந்தாழ்வானுடைய வெய்ய யுயிர்ப்பிலே அன்றோ எரிந்தது என்னில்
ராமஸ்ய தஷினோ பாஹு -என்றும்
தடித்த என் தாசாரதி – என்றும் உள்ள இடங்களில்
சாமானாதி கரண்யம் சேராமையால் ஸாயுஜ்ய பரர் (ஸமான யுக போகம் உடையவர் )
கருதும் இடம் பொருதது காண் என்று
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

அன்றிக்கே
சாணூர முஷ்டிகர் என்னுதல்
ஆனால் அவர்களை வெண் கலப்பை போலே நெருக்கித் தூக்கிப் பொகட்டான்
என்னா நின்றதீ என்னில்
அவர்கள்
தம் தம்முடைய அகங்கார அக்னியாலும்
மீட்சியில் கம்ஸ பய அக்னியாலும்
இவன் தன்னைக் கண்ட போதே குவலாய பீட நிரசன பய அக்னியால் எரிந்தார்கள் என்னலாம் –

வெறிய வவர் வயிறு அழல நின்ற பெருமான் (பெரிய திருமொழி -5-10-9 )-என்னக் கடவது இறே
ந ப்ரஹ்ம ந ஈஸா ந -என்கையாலே
அவர்களுக்கு முன்பு சொன்ன அக்னிகளும்
நிபந்தமான கால அக்னி அழியாத வ்யக்திகளிலும் தோன்றிச் சுடுகையாலே
சுடு தடி சுட்டால் போலே இருவரங்கம் எரித்தான் என்கிறார்

ஏத்த வல்லார் அடியோமே –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-7–தங்கையை மூக்கும் தமையனை தலையும்–

August 1, 2021

கீழில் திரு மொழியிலே
நாரணன் தன் நாமங்களான திரு நாம ப்ரபாவத்தைப் பல பிரகாரமாக அருளிச் செய்தார்

அத்திரு நாமங்கள் தானும்
ஸ்வரூப
ரூப
குணங்களுக்கு –வாசகம் ஆனாலும்
உகந்து அருளின நிலங்களில் அல்லது குண ப்ரகாஸம் இல்லாமையாலே
திரு நாமங்களை அங்கே சேர்த்து அனுபவிக்கிறார் –

அங்குச் சேர்த்த பிரகாரம் தான் என் என்னில்
வடதிசை மதுரை -என்று தொடங்கி
உகந்து அருளின நிலங்கள் எல்லாத்தையும் எடுத்துத்
திரு அயோத்தியைப் பிரதானம் ஆக்கி
அதிலே இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை
திருக் கண்டங்கடி நகர் என்கிறார்

(வட திசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி
இடமுடை வதரி இடவகயுடைய வெம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிர தரணி விண்டிடிய  தலை பற்றி கரை மரம் சாடி
கடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 -7-9 )

கீழே
வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் (4-2-2 )-என்றது
பின்னாட்டித்
தங்கையை மூக்கும் -என்கிறார்

நந்தன் மதலையைக் காகுத்தனை -என்றது
முடியப் பின்னாட்டிப் போருகிற படி
இதில் காகுத்தனை முன்னதாக அனுசந்திக்கிறார் –

————

இரண்டு அவதாரத்திலே ஊற்றமாக
பல காலும் புருஷோத்தமன் என்று மனுஷ்யத்வே பரத்வத்தை அருளிச் செய்கிறார்
புருஷோத்தம வித்யை என்றும் உண்டு இறே
(அவதார ரஹஸ்யம் புருஷோத்தம வித்யை இடண்டாலும் உபாசித்தில் அதுவே அவனுக்கு கடைசி பிறவி
சரீர அவசா னத்தில் முக்தி பிரபன்னனுக்கு போல் உபாசகனுக்கும் இந்த இரண்டு ஞானமும் கொடுக்கும் )
நந்தன் மாதலை காகுத்தன்
புருஷோத்தம வித்யை கீதையில் 15 அத்யாயம்

தங்கையை மூக்கும் தமையனை தலையும் தடிந்த தாசரதி போய்
எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடுவினை களைந்திட கிற்கும்
கங்கையின் கரை மேல் கை தொழ நின்ற கண்டம் என்னும் கடிநகரே -4 -7-1 –

பதவுரை

கங்கை கங்கை என்ற வாசகத்தாலே–கங்கை கங்கை என்ற சப்த்தத்தைச் சொல்லுவதனால்
என்ற வாசகத்தைச் சொல்லுவதாகும்.
கங்கை காயத்ரி கீதா கோவிந்தன் -நான்கு க காரம் பாவனம்
கடு வினை–கடுமையான பாவங்களை
களைந்திட கிற்கும்–ஒழிக்க வல்ல சாமர்த்தியம் கொண்ட
கரை மேல்–கரையிலே
கை தொழ நின்ற–(பக்தர்கள்) கை கூப்பித் தொழும் படியாக நின்ற
கண்டம் என்றும்–‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய
கடி நகர்–சிறந்த நகரமானது (எதுவென்னில்,
தங்கையை–(இராவணனுடைய ) தங்கையாகிய சூர்ப்பணகையினுடைய
மூக்கும்–மூக்கையும்
தமையனை–அவளுடைய தமையனான ராவணனுடைய
தலையும்–தலையையும்
எங்கும்–நாட்டெங்கும்
தன் புகழ்–தன்னுடைய கீர்த்தியே யாம்படி
இருந்து–பதினோராயிரம் ஸம்வத்ஸரம் எழுந்தருளி யிருந்து
அரசு ஆண்ட–ராஜ்ய பரிபாலகஞ் செய்தருளினவனும்
எம்–எமக்குத் தலைவனுமான
தாசரதி–இராமபிரானுமாகிய
எம் புருடோத்தமன்–புருஷோத்தமப் பெருமாளுடைய
ஆத்மாநாம் மானுஷ்ய மன்ய -உங்களில் ஒருவன் என்று கொண்டாடியது போல் எம் தாசாரதி
எமது இருக்கை–வாஸஸ்தாநமாம்–

தங்கையை மூக்கும் தமையனை தலையும் தடிந்த தாசரதி போய்
தோளும் தலையும் இழக்கும் படி கார்யம் பார்க்கும் வல்லாளன் தங்கை இறே
தன் மூக்கும் தமையன் தலையும் இழக்கும் படி கார்யம் பார்த்தவள் இவள் தானும் இறே
விஷய பாரவஸ்யம் தான் என் செய்யாது தான்

(உலக இன்பம் விஷயாந்தரம்
இவள் பெருமாள் -விஷயம் -மேல் ஈடுபட்டாலும் மூக்கும் காதும் இழந்தாள்
விஷய பாரவஸ்யம் -மடல் எடுக்கப் பண்ணுமே -திருமங்கை ஆழ்வாருக்கும் உண்டே
சூர்பணகையும்-திருமங்கை ஆழ்வார்
அடையும் முறை வாசி உண்டே
பிராட்டியை முன்னிட்டே பிரார்த்தாலும்
வழி அல்லா வழி -துடிப்பால் சென்றார்
அது இல்லையே இவளுக்கு )

தாசரதி போய் எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட
ராவண வத அநந்தரம் ப்ரஹ்ம ஈஸாநா திகள் வந்து
பவான் நாராயணோதி தேவ என்ன
ஆத்மாநம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம் -என்று
பொருந்தாமை தோற்ற வார்த்தை அருளிச் செய்தார் இறே

அத்தையும்
பின்பு விளைந்த காரியங்களையும் பற்றத் திரு அயோத்தியை நோக்கி மீண்டு எழுந்து அருளித்
திரு அபிஷேகம் செய்து எல்லாரையும் உகப்பித்து தர்ம சமஸ்தானம் செய்து
ரமயதீதி ராம -என்னும் படி
எங்கும் தம் புகழ் ஆக்கி ராஜ்யத்தை ஈர் அரசு தவிர்த்து
நெடு நாள் ஆண்டு
தேவ தூதன் வந்து வீசு வில் இடும்படி திரு உள்ளம் பொருந்து எழுந்து இருந்து அருளி
இருந்தது எல்லாம் தம் பேறாக நினைத்து
எம் தாசரதி போய் இருந்து அரசாண்ட என்கிறார்

எம் புருடோத்தமன் இருக்கை
தாசாரதியான எம் புருடோத்தமன்
இங்குப் போலே கால பரிகணநை இன்றிக்கே நித்ய வாஸம் செய்கிற தேசம் –

கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடுவினை களைந்திட கிற்கும் கங்கையின் கரை மேல்
யாதோர் இடத்திலே யாவன் ஒருவன் கங்கா ஸ்நானம் செய்கிறவனாக நினைத்து
கங்கை கங்கை என்று ஸ்நானம் செய்ய
பூர்வாகத்தில் நின்றும் பிரிப்பட்டுப் போந்தவற்றில் ஆஸன்ன அனுபவ யோக்யமான
கொடிய பாபங்களை எல்லாம் போக்கி ரக்ஷிக்க வல்ல கங்கையின் கரை மேல்

கை தொழ நின்ற –
கங்கை முதலான தீர்த்த தேவதைகளும்
கங்கா ஸ்நானம் செய்தவர்களும்
மற்றும் உண்டான லோக விசேஷங்களில் ருசி பிறந்தவர்களும்
கை தொழ நின்ற

கை தொழ நின்ற கண்டம் என்னும் கடி நகரே
எல்லாரும் கங்கையின் கரை மேல் சென்று கை தொழும்படி இருந்த புருஷோத்தமனிலும் காட்டிலும்
நிலை நின்ற புருஷார்த்தம் திருக்கண்டங்கடி நகர் என்கிறார் –

அன்றிக்கே
கங்கை தான் எல்லாருடைய பாபங்களையும் போக்கும்
கங்கை முதலான தீர்த்தங்கள் தான் எல்லாருடைய பாபங்களையும் தாம் தாம் ஏறிட்டுக் கொண்டு
போக்குமது ஒழியத் தானாகப் போக்க மாட்டாது என்றும்
தாம் தாம் ஏறிட்டுக் கொண்ட பாபங்கள் போய் பாவநமாவது
விஷ்ணு பக்தாநாம் பாத ப்ரஷாள நோதகம் -என்கிறபடியே
அவ்வோ தீர்த்தங்களிலே ஸ்ரீ பாதம் விளக்கினால் அவை ஸூத்தமாம் என்கிற அர்த்தம்
பல இடங்களிலும் காணலாம்

ஆகையால்
கண்டம் என்னும் கடி நகர் தானே
கங்கை கங்கை என்கிற வாசகத்தாலே கடுவினை களைந்திட கிற்கும் -என்னவுமாம் –

வடுக நம்பி உடையவர் தீர்த்தத்தாலே
கீழ் நாட்டில் ஷாமம் தீர்த்த வார்த்தையை இவ்விடத்தே ஸ்மரிப்பது

அன்றிக்கே
ஸத்வாரமான மாத்ரமே அன்றிக்கே அத்வாரமாகத் திருக் கண்டங்கடி நகர் தானே
கடுவினை களைந்திட கிற்கும்-என்கிறதே இறே
முக்யமும் பிராப்தமும்
(கங்கையை விட திவ்ய தேசத்துக்கு ஏற்றம் என்றவாறு
இதுவே இப் பதிகத்துக்கு முக்யமும்-வகுத்ததும் ஆகும் )

மோக்ஷயிஷ்யாமி -என்று பாபத்தைப் போக்குகிறேன் -என்றது போலேயோ
பண்டை வல்வினை பாற்றி அருளினான் -என்றது
உண்ணாது வெங்கூற்றம் ஓவாது பாவங்கள் சேரா -(பெரிய திருமொழி -7-4 )

கங்கை கங்கை என்ற
கங்கையின் கரை மேல் கை தொழ நின்ற
எம் புருடோத்தமன் இருக்கை
கண்டம் என்னும் கடிநகர்
வாசகத்தாலே
கடு வினை களைந்திட கிற்கும்
என்று அந்வயம் –

————-

சலம் பொதி உடம்பில் தழல் உமிழ் பேழ் வாய் சந்திரன் வெங்கதிர் அஞ்ச
மலர்ந்து எழுந்து அணவு மணி வண்ண வுருவின் மால் புருடோத்தமன் வாழ்வு
நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்
கலந்து இழி புனலால் புகர்படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4-7-2 –

பதவுரை

நலம் திகழ்–(எம்பெருமானுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தை வஹிக்கின்றமையாலுண்டான) நன்மை விளங்கா நிற்கிற
ஜடையன்–ஜடையை யுடையவனான சிவபெருமானுடைய
முடி–தலையில் (அணியப் பெற்றுள்ள)
கொன்றை மலரும்–(செந்நிறமுடைய) கொன்றைப் பூவோடும்
நாரணன்–(அச் சிவபிரானுக்குத் தலைவனான) நாராயணனுடைய
பாதத் துழாயும்–திருவடிகளிற் பனைந்த (பசுமை நிறமுடைய) திருத்துழாயோடும்
கலந்து–சேர்ந்து
இழி–ஆகாயத்தில் நின்றும் பூமியில் இழிந்து வெள்ள மிடா நின்ற
புனலால்–ஜலத்தினால்
புகர் படு–விளங்கா நின்றுள்ள
கங்கை–கங்கைக் கரையிலுள்ள
கண்டமென்னும் கடிநகர்
சலம்–ஜலத்தை
பொதி–பொதிந்து கொண்டிருக்கிற
உடம்பின்–வடிவை யுடைய
சந்திரன்–சந்திரனும்
தழல்–நெருப்பை
உமிழ்–உமிழா நின்றுள்ள
பேழ்–பெரிய
வாய்–கிரணங்களை யுடையவனாய்
வெம்–வெம்மையே இயல்வாக வுடையவான
கதிர்–ஸூர்யனும்
அஞ்ச–அஞ்சும்படியாக
மலர்ந்து எழுந்து–மிகவும் பரம்பின சரீரத்தை யெடுத்துக் கொண்டு கிளர்ந்து
அணவு–(அந்த சந்த்ர ஸூர்யர்களுடைய இருப்பிடத்தைச்) சென்று கிட்டின
மணி வண்ணன் உருவின்–(நீலமணி போன்ற நிறம் பொருந்திய வடிவை யுடையவனும்
மால்–(அடியார் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான
புருடோத்தமன்–புருஷோத்தமன்
வாழ்வு–வாழுமிடம்–அவனுக்கும் இதுவே ப்ராப்ய ஸ்தானம்

சலம் பொதி உடம்பில்
அம்ருத கிரணன் ஆகையாலே
ஜல மயமான சரீரத்தை யுடைய சந்திரன்

அழல் உமிழ் பேழ் வாய் சந்திரன்
அக்னியை உமிழா நின்ற கிரணமாகிற பெரிய வாயை யுடையனுமாய் பிரபாவானான தானும்

வெங்கதிர் அஞ்ச
வெம்மை யுடையவனாய் இருக்கிற ஆதித்யனும் தாழ

மலர்ந்து
ஒரு திருவடிகளைப் படிக்கு அளவாக விரித்து

எழுந்து அணவு
ஒரு திருவடிகள் மேலே கிளர்ந்து
ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் குலையும் அளவும் எழா நிற்குமாய்த்து –

(கீலோகம் அளந்து அந்நிய சேஷத்வம் களைந்து
மேலோகம் அளந்து ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் களைந்து )

மணி வண்ண வுருவின் மால் புருடோத்தமன் வாழ்வு
நீல ரத்னம் போன்ற வடிவு அழகையும்
பதறி அளந்த வியாமோஹத்தையும்
யுடைய புருஷோத்தமனுக்கு ப்ராப்யமான தேசம்

நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்
தீர்த்தத்தை தரிக்கையாலே -நலம் திகழ் சடையான்-என்கிறது
அவன் தலையில் கொன்றையும்
இவனுக்கு சரீரியும்
சேஷியுமான நாராயணன் திருவடிகளில் ப்ரஹ்மா சாத்தின திருத்துழாயும்

கலந்து இழி புனலால்
இரண்டும் கூடி பூமியிலே தாழ்ந்து வருகிற புனலால்

புகர் படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே
தேவதாந்த்ர பரரும்
பகவத் பரரோடு கூடினால்
தாஸோஹம் என்று விளங்குவர்கள் என்று காட்டுகிறது
(ஸ அஹம் ஸோஹம் போய் தாஸோஹம் ஆவார்கள் )

சந்திரன் வெங்கதிர் அஞ்ச என்றது
திருச் சிலம்புக்குக் கீழ் தாழ்கை யாலே –

———-

அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்து அழல் உமிழ் ஆழி கொண்டு எறிந்து அங்கு
எதிர் முக அசுரர் தலைகளை இடரும் எம் புருடோத்தமன் இருக்கை
சது முகன் கையில் சதுப் புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 -7-3 –

பதவுரை
(எம் பெருமானுடைய திருவடியை விளக்குகிற போது.)
சதுமுகன் கையில்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய கையிலும்
சதுப்புயன் தாளில்–சதுப்புஜனான எம்பெருமானுடைய திருவடியிலும் (பின்பு)
சங்கரன் சடையினில்–சிவபெருமானுடைய ஜடையிலும்
தங்கி–தங்கி,
கதிர்–ஒளியுடையனவும்
மணி–ரத்னங்களை
கொண்டு–கொழித்துக் கொண்டு
இழி–இழிகிற
புனல்–தீர்த்தத்தை யுடைய
கங்கை–கங்கைக் கரையிலுள்ள
கண்டமென்னும் கடிநகர்;
அங்கு–உலகமளந்த அப்போது,
அதிர் முகம் உடைய–முழங்கா நின்ற முகத்தை யுடைய
வலம் புரி–ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தை
குமிழ்த்தி–திருப் பவளத்தில் வைத்து ஊதியும்
அழலுமிழ்–நெருப்பை வீசா நின்றுள்ள
ஆழி கொண்டு எறிந்து–திரு வாழியை யெடுத்து விட்டெறிந்தும்,
எதிர் முகம்–(போர் செய்வதாக) எதிர்த்த முகத்தை யுடைய
அசுரர்–அஸுரர்களுடைய
தலைகளை–தலைகளை
இடறும்–உருட்டி யருளின
எம் புருடோத்தான் இருக்கை–எமது புருடோத்தமனுடைய வாஸஸ்தலமாகும்–

அதிர் முகம் உடைய வலம்புரி
அதிர் குரல் சங்கம் -என்கிறபடியே
வலம் புரிக்கு அதிருகை ஸ்வபாவமாய் இருக்கும் இறே

குமிழ்த்து
ஊதி
குழல் முழஞ்சுகளினூடு குமிழ்த்து (பெரியாழ்வார் -3-6 )-என்னுமா போலே

அழல் உமிழ் ஆழி கொண்டு எறிந்து
திருக் கையில் இருந்து கருதும் இடம் பொருதும் இறே விரோதி நிரஸனம் செய்வது

அங்கு எதிர் முக அசுரர் தலைகளை இடரும் எம் புருடோத்தமன் இருக்கை
விரோதி நிரஸனம் செய்த பின் –
எம் புருடோத்தமன் இருக்கை-என்கிறார் –

சது முகன் கையில் சதுப் புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
நான்முகன் கையில்
நால் தோள் அமுதின் திருவடிகளில்
சங்கரன் தலையில் தங்கி –

கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கை கண்டம் என்னும் கடி நகரே
மிக்க ப்ரகாஸத்தை யுடைத்தாய் இருக்கிற ரத்நாதிகளை இரு கரையும் வீசி
எறிந்து கொண்டு இழிகிற புனலை யுடைத்தான
கங்கைக் கரை மேல் கண்டம் என்னும் கடி நகர்

அங்கு என்றது
பாரத சமர விபரீதரை –

———–

இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை
நமபுர நணுக நாந்தகம் விசுறு நம் புருடோத்தமன் நகர் தான்
இமவந்தம் தொடங்கி இரும் கடல் அளவும் இருகரை உலகு இரைத்தாட
கமைஉடை பெருமை கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகரே -4 -7-4 –

பதவுரை

இமவந்தம் தொடங்கி–இமய மலையின் உச்சி முதற் கொண்டு
இரு கடல் அளவும்–பெரிய கடல் வரைக்கும்
இரு கரை–இரண்டு கரைகளிலுமுள்ள
இரைத்து–ஆரவாரித்துக் கொண்டு
ஆட–நீராட
கமை உடை பெருமை–(அவர்களது பாபங்களைப்) பொறுக்கையால் எந்த பெருமையை யுடைய
கங்கையின் கரை மேல்–கங்கைக் கரையில்
கண்டம் என்னும் கடிநகர்;
இமையவர்–(இந்திரன் முதலிய) தேவர்கள்
இறுமாந்து இருந்து–அஹங்காரப் பட்டுக் கொண்டிருந்து
அரசு ஆள–ராஜ்யம் நிர்வஹிப்பதற்காகவும்,
ஏற்று வந்த எதிர் பொரு சேனை–துணிந்து வந்து (தன் மேலும் அத் தேவர்கள் மேலும்) எதிந்து போர் செய்கிற (அஸுர ராஷஸ) ஸேனையானது
நமபுரம்- யமலோகத்தை
நணுக–கிட்டுகைக்காகவும்
நாந்தகம்–நந்தகமென்னும் வாளை
விசிறும்–வீசா நிற்குமவனும்
நம்–நமக்குத் தலைவனுமான
புருடோத்தமன்–புருஷோத்தமப் பெருமாளுடைய
நகர்–நகரமாகும்–

இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை
தேவர்கள் எல்லாம் தங்கள் ஜெயித்தார்களாக கர்வித்துத் தம் தாம் ஆசனங்கள் குலையாமல் இருந்து
தத் தத் பதங்களைத் தம் தம் ஸ்வம்மாக நினைத்து
ஸ அவதியான தத் தத் போக மாத்ரம் ஒழியத் தாம் தாம் அபிமானித்து
நிருபாதிக சேஷித்வ சங்கல்ப நிரங்குச ஸ்வா தந்தர்ய ஹேதுத்வம் முதலான குணங்களோடே
ஸ்ரீ யபதியாக பாவித்தார்கள் –

இவர்களுக்கு ஜென்ம சத்ருக்களாய் இவர்கள் ஈஸ்வரன் கொடுத்த போகத்தை புஜிக்கிறார்கள் என்று
காண மாட்டாமல் அஸஹமானரான அஸூரர்கள் அவர்களை நலியாமல்
தானே ஏறிட்டுக் கொண்டு இருக்கச் செய்தேயும்
தன் மேலும் வெல்லலாம் என்று வந்து யுத்த உன்முகரானவர்களுடைய கூட்டுக்கட்டு எல்லாம்

நம புர நணுக
அதர்ம பலம் புஜிப்பிக்கிற தர்ம ராஜனுடைய
ராஜ்யத்திலே சேர

நாந்தகம் விசுறு நம் புருடோத்தமன் நகர் தான்
திருக் கையில் வாளை அசைத்து வீசா நின்ற

விசுறும் -என்ற
வர்த்த மானத்தாலே எதிர் பொரு சேனை போயிருக்கச் செய்தேயும்
இன்னமும் எதிர் பொர வருவார் உண்டோ என்று யுத்த உன்முகனாய் நின்று வீசுகையாலே
எம் புருடோத்தமன் என்கிறார் ஆதல்
அவன் நித்ய வாஸம் செய்கிற நம்மூர் என்னுதல்

இமவந்தம் தொடங்கி இரும் கடல் அளவும் இருகரை உலகு இரைத்தாட
ஹிமவானுடைய உச்சி முதலாக மகத்தான ஸமுத்ரம் முடிவாக இரண்டு கரையில் உண்டான
லோகத்தில் உள்ளார் எல்லாம்
தம் தாமுடைய அபிமத ஸித்திக்கு ஜல ஸம்ருத்தி பெற்றோம் என்று
ஸ ஸம் ப்ரஹ்ம ந்ருத்தம் செய்யும்படியாக

கமை உடை பெருமை கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகரே
க்ஷமையால் வந்த பெருமையை யுடைத்தான கங்கையின் கரை மேல்
அதாவது
இரு கரையும் கடந்து அழித்து அடைவு கெடப் பெருகாமல் அமைவு தோன்றத்
தெளிந்து குளிர்ந்து பெருகுகை இறே பெருமை –

அமைவு -சமைவு என்ற போது
சைதன்ய விவசாயத்தைக் காட்டும்

கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகர் நம்மூர் –

———-

உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும்
மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால் புருடோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழுது அளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-5-

பதவுரை

எழுமையும்–ஏழு ஜந்மங்களிலும்
கூடி ஈண்டிட–சேர்ந்து திரண்ட
பாவம் எல்லாம்–பாவங்களை யெல்லாம்
இறைப் பொழுது அளவினில்–க்ஷண காலத்துக்குள்ளே
கழுவிடும்–போக்கி விடும்படியான
பெருமை–பெருமையை யுடைய கங்கையின் கரை மேல்;
கண்டம் என்னும் கடி நகர்;
உழுவது ஓர் படையும்–உழுவதற்கு உரிய கருவியாகிய கலப்பையும்
உலக்கையும்–உலக்கையையும்
வில்லும்–ஸ்ரீசார்ங்கத்தையும்
ஒண் சுடர்–அழகிய தேஜஸ்ஸையுடைய
ஆழியும்–திரு வாழியையும்
சங்கும–ஸ்ரீபாஞ்ச ஜன்யத்தையும்
மழுவொடு–கோடாலியையும்
வாளும்–நந்தக வாளையும்
படைக்கலம் உடைய–ஆயுதமாக வுடையவனும்
மால்–ஸர்வேச்வரனுமான
புருடோத்தமன்–புருஷோத்தமப் பெருமான்
வாழ்வு–எழுந்தருளியிருக்குமிடம்–

உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும் மழுவோடு வாளும்
படைக்கலமுடைய மால் புருடோத்தமன் வாழ்வு
கலப்பை முதலாக ஸாதாரண அசாதாரண ரூபத்தால் அநேகம் ஆயிரம் திவ்ய ஆயுதங்களை
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக யுடையனாய் –
அது தானே பெருமையாக இருக்கிற புருஷோத்தமனுக்கு ப்ராப்ய ஸ்தலம்

எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழுது அளவினில் எல்லாம் கழுவிடும் பெருமைக்
கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே
பூர்வ ஆகத்தில் பிரி பட்டு ஏழு ஜென்மம் முடிவான ப்ராரப்தம் எல்லாம் கூட்டியிட்ட தொகையில்
புண்ய அம்சத்தை நீக்கி பாப அம்சம் எல்லாம் ஸ்நாந வ்யாஜத்தாலே
அல்ப காலத்திலே கழுவிடும் பெருமை கங்கைக்கு உண்டாவது –

ஸ்வ தோஷ தர்சனம் செய்து
தோஷ நிவ்ருத்தி ஸாபேஷனாய் தர்ம ஸபையிலே அறிவித்து
அவர்கள் விதிக்கச் சென்று
திருக் கண்டங்கடி நகர் துறையாலே பூர்வ தோஷமும் நிவர்த்தமாம் என்னுமது அறிந்து
பாப விமோசன ப்ரார்தனையோடே கூடினால் இறே விமோசனம் பிறப்பது –
(இதனால் தான் ஸ்நாந வியாஜ்யம் என்கிறார் )

கழுவிடும்
கழுவி ஸூத்தனாக்கி விடும் –

————–

தலைப் பெய்து குமிறி சலம் பொதி மேகம் சல சல பொழிநதிடக் கண்டு
மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன் வாழ்வு
அலைப்பு உடை திரைவாய் அரும் தவ முனிவர் அவபிரதம் குடைந்தாட
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-6-

பதவுரை

அரு தவம் முனிவர்–அரிய தவங்களைப் புரிந்த மஹர்ஷிகள்
அலைப்பு உடை–அலைத்தலை யுடைய (கரை யெறியா நின்றுள்ள)
திரை வாய்–அலையிலே
அவபிரதம் குடைந்து ஆட–அவப்ருத ஸ்நாநம் பண்ண, (பிறகு பெரும் ஆறாய்)
கலப்பைகள் கொழிக்கும்–(யாக பூமியிலுண்டான) கலப்பை முதலிய உபகரணங்களெல்லா வற்றையும் எடுத்துத் தள்ளிக் கொண்டு போகா நிற்கிற
கங்கையின் கரை மேல்
கண்டம் என்னும் கடி நகர் ;
சலம்–(கடலிலுள்ள) ஜலத்தை
பொதி–பொதிந்து கொண்டிரா நின்ற
மேகம்–மேகங்களானவை
தலைப்பெய்து–திருவாய்ப்பாடியில் வந்து கிட்டி
குமுறி–கர்ஜனை பண்ணி
சலசல பொழிந்திட–சள சள வென்று மழை பொழிய
கண்டு–(அதைக்) கண்டு
மலை–கோவர்த்தன மலையாகிற
பெருங் குடையால்–பெரிய குடையாலே
மறைத்தவன்–(அம்மழையைத்) தடுத்தருளினவனும்
மதுரை–திரு வடமதுரையில்
மால்–விருப்பமுடையவனுமான
புருடோத்தமன்–ஸ்ரீபுருஷோத்தமப் பெருமான்
வாழ்வு–எழுந்தருளி யிருக்குமிடம்–

தலைப் பெய்து குமிறி சலம் பொதி
சலம் பொதி -தலைப் பெய்து குமிறி-
இந்திரன் ஏவல் படியே ஸமுத்ரம் தரையாம் படி ஜலத்தை எல்லாம்
தன் வயிற்றிலே பொதிந்து கொண்டு
திருவாய்ப்பாடியிலே தலைப்பட்டு இடித்து முழங்கிச்

மேகம் சல சல பொழிந்திடக்
சல சல எனக் குடத்திட்டுச் சொரிந்தால் போலே சொரிந்திட
சலசலப்பு -அநுகார த்வனி

கண்டு
மேகங்களினுடைய மிகையையும்
திருவாய்ப்பாடியில் உள்ளார் எளிமையையும் கண்டு

மலைப் பெரும் குடையால் மறைத்தவன்
மலையாகிய பெரிய குடையாலே
ஒரு துளி ஒரு கல்லு ஒரு இடி என்றவையும்
ஒருவர் மேல் விழாமல் மறைத்தவன்

மதுரை மால்
அவதரித்த இடத்தில் வ்யாமோஹம் இறே
விரோதி நிவ்ருத்தியும்
நிகள பந்த நிவ்ருத்தியும்
உக்ரசேனனை அபிஷேகம் செய்வித்ததும் முதலானவை எல்லாம் –

புருடோத்தமன் வாழ்வு
அவனுக்கு நிரதிசய போக்யமான தேஸம்

அலைப்பு உடை திரைவாய் அரும் தவ முனிவர் அவபிரதம் குடைந்தாட
கங்கை அலைகிற திரை வாயிலே தீஷா நிபந்தனமாக அரிய தபஸ்ஸூக்களை செய்து
வாங் நியதியும் செய்து
யாகாதிகளையும் மந்த்ர க்ரியா த்ரவ்ய லோபங்கள் வாராமல் செய்து
அவ ப்ருத ஸ்நானமும் யுக்த லக்ஷணத்திலே செய்த அநந்தரம்

கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே
பெருக்காறாய் யாக சாலையில் உண்டான கலப்பை முதலான யுபகரணங்களை எல்லாம்
எடுத்துத் தள்ளிக் கொண்டு போகா நிற்கிற கங்கையின் கரை மேல் –

————–

தேவ ஸ்த்ரீகளுடைய அங்க ராக அலங்க்ருதமாய் வருகிறது
கங்கை என்று வர்ணிக்கிறார் –

வில் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி மேல் இருந்தவன் தலை சாடி
மல் பொருது எழப் பாய்ந்த அரையனை உதைத்த மால் புருடோத்தமன் வாழ்வு
அற்புதம் உடைய ஐராவத மதமும் அவர் இளம்படியர் ஒண் சாந்தும்
கற்பக மலரும் கலந்து இழி கங்கைக் கண்டம் என்னும் கடி நகரே – 4-7- 7-

பதவுரை

அற்புதம் உடைய–ஆச்சர்யமான
ஐராவதம்–‘ஐராவதம்’ என்னும் (தேவேந்திரனது) யானையினுடைய
மதமும்–மத நீரும்,
அவர்–அத் தேவர்கள் (விரும்பத் தக்க)
இள படியர்–இளம் பருவத்தை யுடையவர்களான தேவ மாதர்கள் (அணிந்த)
கற்பகம் மலரும்–(அவர்களது குழலில் சொருகி யிருந்த) கற்பகப் பூக்களும்
கலந்து–ஒன்று சேர்ந்து
இழீ–இழியா நின்றுள்ள
கங்கை–கங்கைக் கரையில் கண்டம் என்னும் கடிநகர்
வில் பிடித்து இறுத்து–(கம்ஸனுடைய ஆயுதச் சாலையிலிருந்து) வில்லிப் பிடித்து முறித்து.
(இங்கு உள்ள புருஷோத்தமனும் கையில் வில் பிடித்து சேவை )
வேழத்தை–(குவலயாபீடம் என்ற ) யானையை
முறுக்கி–பங்கப்படுத்தியும்
மேல் இருந்தவன்–(அந்த யானையின்) மேலிருந்த யானைப் பாகனுடைய
தலை–தலையை
சாடி–சிதறப் புடைத்தும்
மல்–(சாணுர முஷ்டிகாதி) மல்லர்களோடு
பொருது–போர் செய்தும்
அரயைனை–உயர்ந்த கட்டிலின் மேலிருந்த அரசனாகிய கம்ஸனை
எழப் பாய்ந்து உதைத்த–அவன்மேற் பாய்ந்து (கீழே) தள்ளித் திருவடிகளால்) உதைத்தவனான
என் புருஷோத்தமன் வாழ்க–
(மூன்று பொருள்கள் இங்கு இழியவும் மூன்று சேஷ்டிதங்கள் அங்கு கண்ணன் செய்ததும்
இவருக்கு மங்களா சாசனத்துக்கு உத்தேச்யம் )

வில் பிடித்து இறுத்து
கம்சன் பரீஷார்த்தமாக இட்ட வில்லை நடுவே பிடித்து முறித்து

வேழத்தை முறுக்கி
குவலயா பீடத்தைக் கொம்பை முறித்துச் சலிப்பித்துக் கொன்று

மேல் இருந்தவன் தலை சாடி
ஆனை கொம்பு இழந்து விழுந்த பின்பும்
சிஷா பலத்தாலே விழாதபடி நடத்த வல்ல பாகனை திருக் கையால்
ஒரு கொம்பாலே தலை சிதறச் சாடி

மல் பொருது
முற்ற வெளியில் நின்ற மல்லரை யுத்தம் செய்து
நெரித்து வெண் கலப்பைப் போலே தூக்கி எறிந்து

எழப் பாய்ந்த அரையனை உதைத்த
எத்தனையேனும் உயர ஏறினது எல்லாம் தனக்கு அரணாம் என்று இருந்த கம்சனை
மஞ்ச ஸ்தலத்திலே இருந்த கம்சன் தலைக்கே மேலே அநேகம் தூரம் எழப் பாய்ந்து
அவன் தலையை இடது திருவடிகளால் உதைத்துக் கொன்ற

மால் புருடோத்தமன் வாழ்வு
வ்யாமோஹத்தாலே உக்ரசேனனை அபிஷேகம் செய்வித்த பின்பு இறே
புருஷோத்தமன் ஆய்த்து

அற்புதம் உடைய ஐராவத மதமும் அவர் இளம்படியர் ஒண் சாந்தும் கற்பக மலரும் கலந்து
இழி கங்கைக் கண்டம் என்னும் கடி நகரே
இந்திரனுக்கு நித்ய அபூர்வ புருஷார்த்தமான ஐராவதத்தின் மத ஜலமும்
ஸ்வர்க்க காமரான தேவர்களுக்கு அத்யந்த அபிமதைகளுமாய்
அப் பதம் உள்ள அளவும் யவ்வனம் குலையாத தேவ ஸ்த்ரீகள் முலைகளில் அணிந்த சாந்தும்
அவர்கள் குழலிலே சொருகின கற்பக மலரும்
கலந்து இழி கங்கை –

—————–

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
அரசனை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு இட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – -4-7-8 –

பதவுரை

நெடியன–நீண்டவையா யிரா நின்றுள்ள
யூபம்–(பசுக்கள் கட்டுகிற) யூப ஸ்தம்பங்களானவை
நிரை நிரை ஆக–திரள் திரளாக
நிரந்தரம்–இடை விடாமல்
ஒழுங்கு விட்டு–நெடுக ஓடா நிற்பதும்
இரண்டு கரை புரை -இரு பக்கத்துக் கரைகளும் தம்மிலே ஒத்து
வேள்வி புகை கமழ்–யாக குண்டத்திலுண்டாகும் புகைகளால் பரிமளியா நிற்பதுமான
கங்கை–கங்கைக் கரையில்
கண்டம் என்னும் கடி நகர்;
திரை பொரு–அலை யெறியா நின்றுள்ள
கடல் சூழ்–கடலால் சூழப் பெற்ற
திண் மதிள்–திண்மையான மதிள்களை யுடைய
துவரை–த்வாரகைக்கு
வேந்து–தலைவனும்
தன்–தன்னுடைய
மைத்துனன் மார்க்கு–மைத்துனன் மார்களான பாண்டவர்களுக்கு
ஆய்–பக்ஷபாதியாய் நின்று
அரசனை அவிய–துரியோதநாதி ராஜாக்களை அழியச் செய்து
அரசினை–ராஜ்யத்தை-அரசை -இன் சாரியை
அருளும்–(அப்பாண்டவர்கட்குக்) கொடுத்தருளினவனும்
அரி–(ஸகல பாபங்களையும்) போக்குமவனுமான
புருடோத்தமன்–புருஷோத்தமப் பெருமாள்
அமர்வு–பொருந்தி யெழுந்தருளி யிருக்குமிடம்–

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து
பொரு திரை கடல் சூழ்கையாலே ஜல துர்க்கமும்
அதுக்கு உள்ளே திண்ணிதாக யுண்டான கிரி துர்க்கமும் சூழப்பட்ட -என்னுதல்

அன்றிக்கே
செய் குன்றம் போன்ற கற்பார் மதிள் என்னுதல்

இப்படி இருக்கிற ஸ்ரீ மத் துவாரகைக்கு நிர்வாஹகராய்
ஈர் அரசு தவிர்த்து விட்டு விளங்க இருந்தவன் –

தன் மைத்துனன் மார்க்காய்
திரௌபதியினுடைய ப்ரீதியிலே நின்று
மைத்துனன் மார்க்காய்-என்கிறார்

அரசனை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு-
வந அக்னி மஹா வர்ஷத்திலே அவியுமா போலே
மிகை விருதூதி வாய் மாறி வந்த ப்ரதி பக்ஷத்தை நிரஸித்து
பாண்டவாதிகளுக்கு அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு

வேத வாத ரதராய் ஸப்த மாத்ரத்திலே நிற்பாருக்கும்
வேத வேதாந்த நிகமன தத்வ தர்சிகளாய் பரஸ்பர விரோத ஸமாதான ஸா பேஷராய் இருப்பார்க்கும்
பிரணவ உச்சாரணத்துக்குப் பூர்வ பாவியாயும்
பிரணவ ஸப்த வாச்யனாயும் இறே
ஹரி என்றால் தோற்றுவது
(இருவருமே ஹரி என்றே முதலில் சொல்லுவார் -ஹரி என்றாலே பிரணவமே என்றவாறு )

புருஷோத்தமன் என்றால்
பிரதம அக்ஷர (அகார )விவரண நாராயண பதத்தில்
அசாதாரண குண விசிஷ்டனாய்
வாஸ்ய பிரதானனாயத் தோற்றும்

ஸத்
ப்ரஹ்ம
(ஆத்மா )
இத்யாதிகளில் (போன்ற பொதுச்சொற்கள் )
பஸ்வதி கரண நியாயத்தாலே அது தான் சேராது

(பசு -நாலு கால் பிராணி -ஆடு சாமான்ய விசேஷ நியாயம் போல் அல்ல
ஹரி சாமான்யம் புருஷோத்தமன் விசேஷம் அல்ல
இரண்டுமே அவன் ஒருவனையே குறிக்கும் )

அமர்வு
இதுக்கு அவ்வருகு அவனுக்கு
அபிமதமும்
பிராப்தமுமாய் இருப்பது இல்லை இறே

நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு இட்டு
நிரை நிரையாக ஒழுங்கு பட நாட்டப்பட்டு
நெடிதான யூபங்களும் செய்கிற யாகத்தில் ஹோம தூ மங்களும்

இரண்டு கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே
இரு கரை குறிக்க ஒண்ணாத படி ஒரு கோவையாய்த் தோற்றுகிற கங்கையின் கரை மேல்

—————-

வட திசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி
இடமுடை வதரி இடவகை யுடைய வெம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிர தரணி விண்டிடிய தலைப் பற்றி கரை மரம் சாடி
கடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 -7-9 –

பதவுரை

தட வரை–(மந்தரம் முதலிய) பெரிய மலைகளானவை
அதிர–சலிக்கும் படியாகவும்
காணி–பூமியானது
விண்டு இடிய–பிளவுபட்டு இடிந்து விழும்படியாகவும்
தலைப் பற்றி–(மரங்களினுடைய) தலை யளவுஞ் செல்லக் கிளம்பி
கரை–கரையிலுள்ள
மரம்–மரங்களை
சாடி–மோதி முறித்தும்
இடம் உடை–இடமுடையத்தான் (விசாலமான)
கடல்–(ஒன்றாலுங் கலங்காத) கடலுங்கூட
கலங்க–கலக்கும்படி
கடுத்து–வேகங்கொண்டு
இழி–இழியா நின்றுள்ள
களித்திழி-பாட பேதம்
கங்கை–கங்கா தீரத்திலுள்ள
கண்டம் என்னும் படி நகர்;
(யதா காஷ்டஞ்ச காஷ்டஞ்ச -கட்டைகள் -மரம் பிரிந்து வருவது போல் பிறவிகள் தோறும்
சுற்றத்தார் மாறும் -இந்த மரங்களை வைத்தே ஸம்ப்ரதாயார்த்தம் சொல்லுவார்கள் )
வட திசை–வடக்கிலுள்ள
மதுரை–ஸ்ரீ மதுரையும்
சாளக்கிராமம்–ஸ்ரீ ஸாளக்ராமமும்
வைகுந்தம்–ஸ்ரீவைகுண்டமும்
துவரை–ஸ்ரீத்வாரகையும்
அயோத்தி–திருவயோத்தையும்
இடம் உடை–இடமுடைத்தான (விசாலமான)
வதரி–ஸ்ரீ பதரிகாஸ்ரமுமாகிற இவற்றை
இடவகை உடைய–வாஸஸ்தானமாக வுடையனான
எம் புருடோத்தமன் இருக்கை-

வட திசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி இடமுடை வதரி
இடவகயுடைய வெம் புருடோத்தமன் இருக்கை
உத்தர மதுரை தொடக்கமாக அநேகம் திருப்பதிகள் யுண்டாய் இருக்கச் செய்தேயும்
திரு உள்ளம் பொருந்து வர்த்திக்கும் திருப்பதி

தடவரை அதிர தரணி விண்டிடிய
இடமுடைத்தான ஹிமவான் ஒரு சிறு கல் போலே அதிர்ந்து சலிக்கும் படி அதன் மேல் குதித்து
அதில் நின்றும் போந்து
பூமி ஆழ்ந்திட இடம் கொண்டு தளம் இடியும்படி குதித்து

தலை பற்றி கரை மரம் சாடி
நடு நின்ற மரங்களின் தலையிலே மணல் ஏறக் கிளம்பி
கரை நின்ற மரங்களும் வேரோடு சாய்ந்து ஒழுகும் படி தள்ளி

கடலினை கலங்க
ஒன்றாலும் கலங்காத (அஷோப்யமான )சமுத்திரமும் கலங்கும்படி

களித்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே
தரணி விந்து இடியக் குதித்த வேகம் அடங்காமல்
குதியா நின்ற கங்கையின் கரை மேல் –

————

மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் மூன்று எழுத்தாக்கி மூன்று எழுத்தை
ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்க நன்குடைய வெம் புருடோத்தமன் இருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு ஆனான்
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-10-

பதவுரை

கான்–நறு நாற்றம் கமழா நின்றுள்ள
தட–பெரிய
பொழில்–சோலைகளினால்
சூழ்–சூழப் பெற்ற
கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகர் ;
மூன்று எழுத்ததனை–அகார, உகார, மகார ஸ்வரூபமான ‘ஓம்’ என்னும் பிரணவத்தை
மூன்று எழுத்தனால்– (‘நிருக்தம்’ என்று) மூன்றக்ஷரமான பெயரை யுடைத்தான நிர்வசக ப்ரியையாலே
நிருக்தம்’-வேத சொற்களுக்கு அர்த்தம் சொல்லும் நூலுக்கு மூன்று எழுத்து என்றபடி
மூன்று எழுத்து ஆக்கி–(மூன்று பதமாய் மூன்று அர்த்தத்துக்கு வாசகமாயிருக்கும்) மூன்றெழுத்தாகப் பிரித்து
மூன்று எழுத்தை–(அந்த) மூன்றெழுத்தை (பிரணவத்தை)
ஏன்று கொண்டிருப்பார்க்கு–(தஞ்சமாக நினைத்து) அது ஸந்திக்குமவர்கள் பக்கலில்
இரக்கம் நன்கு உடைய–சிறந்த கருணையை யுடையவனும்-தனது பேறாக கொண்டு தயை பண்ணுபவன் -இரக்கமே உபாயம்- இனிமை புருஷார்த்தம்
மூன்று அடி நிமிர்த்து–அந்த பிரணவத்தை நம பதத்தோடும் நாராயண பதத்தோடும் நாராயண பதத்தோடுங்கூட்டி மூன்று பதமாக்கி (திருவஷ்டாக்ஷரமாக்கி)
மூன்றினில்–(அந்த) மூன்று பதங்களிலும்
தோன்றி–(ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்துவம், அநந்ய சரணத்துவம், அநந்ய போக்யத்துவமாகிற மூன்று ஆகாரங்களையும்) தோன்றுவித்து.
மூன்றினில்–அந்த ஆகார த்ரயத்துக்கும் பிரதி ஸம்பந்தியாக
மூன்று உரு ஆனான்–(காணும்) சேஷித்வம், சரண்யத்வம், ப்ராப்யத்வம் என்கிற மூன்று ஆகாரங்களை யுடையவனுமான
எம் புருடோத்தமன் இருக்கை–

மூன்று எழுத்து அதனை
அகார பிரதானமாய் இருக்கிற பிரணவத்தை

மூன்று எழுத்து அதனால்
நிருத்தம் என்கிற ப்ரக்ரியையாலே

மூன்று எழுத்தாக்கி
அகார உகார மகார என்கிற மூன்று எழுத்துக்கள் ஆக்கி

மூன்று எழுத்தை ஏன்று கொண்டு இருப்பார்க்கு
அகார வாஸ்யனே உத்தேச்யன் என்று பிரதிபத்தி பண்ணி இருப்பார்க்கு

இரக்க நன்குடைய வெம் புருடோத்தமன் இருக்கை
இவர்கள் அளவிலே தன் பேறாக கிருபை பண்ண வல்லனாய்
எனக்கு ஸ்வாமியான
அந்தப் புருஷோத்தமன் நித்ய வாஸம் செய்கிற தேசம்

மூன்றடி நிமிர்த்து
இத்தைப் பிராணவத்தோடே மூன்று பதமாக விவரித்து

மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு ஆனான்
அந்தப் பத த்ரயத்திலும் தோற்றின
அநந்யார்ஹ சேஷத்வ
அநந்ய சரண்யத்வ
அநந்ய போக்யத்வங்களாய்த் தோன்றின அர்த்தங்கள்
மூன்றுக்கும் பிரதி சம்பந்தியாய்

சேஷித்வ
சரண்யத்வ
போக்த்ருத்வ
ப்ரகாசங்களான மூன்று உரு ஆனான் என்னுதல்

அன்றிக்கே
மூன்றில் பிரதி சம்பந்தியாய்த் தோன்றின மூன்றிலும் காட்டில்
மேன்மையும் நீர்மையும் வடிவு அழகுமான
ஸ்வரூபேண மூன்று உரு ஆனான்
(மாலே மணி வண்ணா ஆலின் இலையாய் -பசும் கூட்டம் )

ஆனாலும் அவன் தன்னுடைய மேன்மையைக் காட்டில் அவனுடைய நீர்மையும் குண பரமாம் அத்தனை இறே
சேதன பரமாய் இருக்கிற மூன்றில் ஸாஷாத் ஸ்வரூபேண
தேவும் தன்னையும் (2-7-4 )மூன்று உரு ஆனான்
(கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் –தேவு -ஐஸ்வர்யம் தன்னையும் -ஆஸ்ரித பாரதந்தர்யம் ஈடு )

கான்றடம் பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே
கான் என்று கடல் கரைக் கழிக்கும் பேர்
நீரோடு காலுக்கும் பேர்
இவ்வளவு இறே கங்கைக்கு உள்ளது
பாப விமோசனம் கடி நகரிலே

(கங்கை வெறும் 60000 பாப விமோசனம் அக்காலத்தில்
அனைவர் பாபங்கள் -அனைத்து காலங்களிலும் -போக்கவே இங்கே எழுந்து அருளி உள்ளான் )

நீரோடு கால்களாலும்
தடாகங்களாலும்
திருச் சோலைகளாலும்
சூழப் பட்ட திருக்கண்டங்கடி நகர் எம் புருடோத்தமன் இருக்கை –

————

நிகமத்தில் இத்திரு மொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார்-

பொங்கு ஒலி கங்கை கரை மலி கண்டத்துறை புருடோத்தமன் அடி மேல்
வெங்கலி நலியா வில்லிபுத்தூர் கோன் விட்டு சித்தன் விருப்புற்று
தங்கிய வன்பால் செய் தமிழ் மாலை தங்கிய நா வுடையார்க்கு
கங்கையில் திரு மால் கழல் இணைக் கீழே குளித்து இருந்த கணக்காமே -4- 7-11 –

பதவுரை

பொங்கு–நீர்க் கொழிப்பால் வந்து கிளர்த்தியை யுடையதும்
ஒலி–கோஷத்தை உடையதுமான
கங்கை கரை–கங்கைக் கரையிலுள்ளதும்
மலி–எல்லா வகை ஏற்றங்களை உடையதுமான.
கண்டத்து–திருக் கண்டங் கடி நகரில்
புருடோத்தமன்–புருஷோத்தப் பெருமானுடைய
அடி மேல்–திருவடிகளில்,
வெம்கலி நலியா–கொடிய கலியினால் நலியப் பெறாத-விபரீத ஞானம் இல்லாத என்றபடி
வில்லிபுத்தூர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
விருப்புற்ற–ஆசைப் படல்
தங்கிய அன்பால்–நிலை நின்ற பக்தியினால்
செய்–அருளிச் செய்த-பாடியது மட்டும் இல்லாமல் அனுஷ்டான பர்யந்தமாக செய்தாரே
தமிழ் மாலை
தங்கிய–நிலை நின்றிருக்கப் பெற்ற
நா உடையார்க்கு–நாக்கை உடையவர்களுக்கு
கங்கையில்–கங்கா நதியில்
குளித்து–நீராடி
திருமால்–ஸ்ரீயபதியினுடைய
இணை–ஒன்றொடொன்றொத்த
கழல் கீழே–திருவடிகளின் கீழே
இருந்த கணக்கு ஆம்–நிரந்தர ஸேவை பண்ணுமையாகிற பயன் பெற்றதாகும்–
அவன் திரு உள்ளம் உகப்பானே ஆகவே ஒக்கும்

பொங்கு ஒலி கங்கை கரை மலி கண்டத்துறை புருடோத்தமன் அடி மேல்
மிகவும் பெரிய ஆரவாரத்தோடே கிளம்பி வருகிற கங்கையினுடைய
உயர்ந்த கரை மேலேயாய் இருக்கிற திருக்கண்டங்கடி நகரிலே நித்ய வாஸம் செய்வானாய் இருக்கிற
புருஷோத்தமன் திருவடிகளின் மேலே

வெங்கலி நலியா வில்லிபுத்தூர் கோன்
கலி யுகம் ஒன்றும் இன்றிக்கே (திருவாய் -5-2-11 )-என்னுமா போலே
வெவ்விதான கழியும் நலியாதபடியான திரு மாளிகைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்

வெங்கலி
பிராகிருத ஸ்ருஷ்டியில் க்ருத யுகாதிகளில் முடிவில் வருகிற கலி யுகத்தில்
வெம்மை இல்லை போலே காணும்
வெம்மை யுள்ளது பர்வ க்ரமமாக இறே

விட்டு சித்தன்
இதுவும் ஒரு ஸமாஸ த்வயம்

விருப்புற்று
அத்யந்தம் ப்ரீதியின் மேலே

தங்கியவன் பால்
நிலை நின்ற பக்தி பாரவஸ்யத்தாலே

செய் தமிழ் மாலை
செய்யப்பட தமிழ் மாலை

சொன்ன மாலை என்னாமல்
செய்த -என்கையாலே
அனுஷ்டான பர்யந்தமாகச் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை

தங்கிய நா வுடையார்க்கு
மந பூர்வ வாக் உத்தர -என்னாத நா யுடையாருக்கு
நான் தான் வேண்டா என்றாலும்
என் வாய் அவனை அல்லது வாழ்த்தாது (முதல் திருவந்தாதி -11)-என்பார்க்கு

கங்கையில் திரு மால் கழல் இணைக் கீழே குளித்து இருந்த கணக்காமே
கங்கையில் குளித்து -திரு மால் கழல் இணைக் கீழே இருந்த கணக்காமே

1-தேசாந்தர
2-த்வீபாந்தரங்களிலே இருந்ததார்க்கும்
3-உபரிதன பாதாள லோகங்களில் இருந்ததார்க்கும்
4-நித்ய விபூதியில் இருந்து தங்கிய நா யுடையார்க்கும்
5-சேவடி செவ்வி திருக்காப்பு -என்ற இவர் தம்மைப் போலே -இவர் அபிமானத்திலே ஒதுங்க வல்லாருக்கும்
அவன் திருவடிகளின் கீழே இருந்து மங்களா ஸாஸனம் பண்ணின இவர் நேர் ப்ரயோஜனத்தில் ஒக்கும் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-6–காசும் கரை வுடை கூறைக்கும்–

July 31, 2021

நாவ காரியத்திலே (4-4 )
ப்ராப்ய அநு ரூபமான பக்தியோடே திரு நாம விசேஷங்களை ஓர் ஆச்சார்ய முகத்தால் அறிகை அன்றிக்கே
தம் தாமுடைய தர்ம வீர்ய ஞானத்தாலே பிறந்த வெளிச் சிறப்பு கொண்டு
திரு நாமங்களை ஒரு போகியாகச் சொல்லி நிர்ணயித்துப் பரிகணித்து ஊர்த்வ கதியிலே பர்வ க்ரமமாய்ப் போய்
ஒரு நிபுண ஆச்சார்யர் முகத்தாலே அடிமைத் தொழிலிலே திரு நாமங்களைச் சொல்லி மூளாத அளவே அன்றிக்கே
நின்ற நிலை தெரியாமல் நிற்க நிலை இன்றி ஏறின வழியே மீளுவாரைப் போல் அன்றிக்கே
ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் தன்னாலே ஏறி நிபுண ஆச்சார்யரைக் கிட்டி அடிமைத் தொழிலிலே மூண்டு மூண்டு
திரு நாம வாசி அறிதல்
உபதேச கம்ய ஞானத்தாலே இவர்களுடைய சரமத்தைப் பிரதமம் ஆக்கி
அடிமையாய்த் திரு நாமம் சொல்லுவாரையும் அடைவிலே அருளிச் செய்தார் –

இவ் வடைவிலே திரு நாமம் சொல்ல வல்லார்
செத்துப் போவதோர் போதை இப்போது இப்போது என்று நினைத்து
பக்தி பாரவஸ்யத்தாலும்
கைங்கர்யம் தேச கால அவஸ்தா ரூபமாகச் செய்யும் அடைவு அறிந்து செய்து போருமவர்கள்
சரீர அவசானத்திலே பெரும் பேற்றை ஆசை வாயிலே (4-5 ) அருளிச் செய்தார் –

இப்படி திரு நாமம் சொல்லும் அடைவு அறியாதவர்களும்
ஒரு வழியே அறிவிப்பதாகவும்
தம் அபிமானத்திலே சேர்ப்பதாகவும்
திரு உள்ளம் பற்றி அருளி

நெஞ்சு இளகி இருப்பாரும்
பாரதந்தர்யத்திலே ஒருபடிப்பட்டு இருப்பாரும் ஸ்த்ரீகள் ஆகையாலே
ந ஸ்த்ரீ ஸ்வாதந்தர்யம் அர்ஹதி -ஸ்திரீகளுக்கு ஒரு காலும் ஸ்வாதந்தர்யம் இல்லை

கன்யகையான போது மாதா பிதாக்கள் கீழ் நின்றும்
பின்பு பர்தாவின் கீழ் நின்றும்
பர்தா பாணி கிரஹண சமயத்தில் ப்ரதிஜ்ஜை குலைந்தாலும் தான் படி கடவாமல் நடந்தும்
அவன் தர்மத்தில் ஓருப்பட்ட போது தான் ஸஹ தர்ம ஸாரியுமாய்
அவனுடைய நியதி அநியதங்களைப் பாராமல் பாதி வ்ரத்தையாலே அத்யந்த பரதந்த்யையுமாய்
இவனுடைய வியோகத்தில் புத்ராதிகள் கீழ் ஒதுங்கியும்
அது இல்லையாகில் பின்னையும் மாதா பிதாக்கள் ஞாநி வர்க்க சம்பந்திகள்
இல்லையாகில் லோக அபவாதத்தின் கீழ் ஒதுங்கியும் போருகையாலே

பித்ராதிகளையும் காட்டில் மாத்ரு வர்க்கத்துக்கு புத்ராதிகளைத் திரு நாமம் சாத்தினால்
நிரய நிஸ்தாரகமான அநிஷ்ட நிவ்ருத்தி
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்-என்று
முற்பட இவர்களுக்குக் கண் அழிவு அற சித்திக்கும் என்று திரு நாம ப்ரபாவத்தை
இதர சம்பந்த ரஹிதமாக்கி வைதமாக அருளிச் செய்கிறார் –

—————–

ஆபாசமான பேர்களை நச்சி நீங்கள் பெற்ற பிள்ளைகளை இதரர் பேரிட்டு
நரகாத்மாவாய்ப் போகாதே
எல்லாரையும் பெற்றவர்களை பெற்றவன் பேர் இட்டால்
யம அவஸ்யதை தவிரும்
பின்னையும் ஊர்த்வ கதியைப் பிராபிக்கவுமாம்
என்று உபதேசிக்கிறார்

காசும் கரை வுடை கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்
ஆசையினால் அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள்
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இருமின்
நாயகன் நாரணன் தம் மன்னை நரகம் புகாள் – 4-6 -1-

பதவுரை

காசுக்கு–ஒரு காசுக்காகவும்
கறை உடை–(தலைப்புகளில் நல்ல) கறைகளை யுடைய
கூறைக்கும்–வஸ்திரத்துக்காகவும்
ஓர் கற்றைக்கும்–ஒரு கட்டுக் கற்றைக்காகவும் (உண்டான)
ஆசையினால்–ஆசையாலே
பேர்–(ஷூத்ர பேர் பிள்ளைகளுக்கு) இடுகிற
ஆதர்காள்–அறிவு கெட்டவர்களே!
நீங்கள்
கேசவன்–கேசவனென்னுந் திருநாமத்தை யுடையவனும்
நாயகன்–ஸர்வ சேஷியுமான
நாரணன்–நாராணனுடைய
பேர்–திரு நாமங்களை
இட்டு–(உங்கள் பிள்ளைகளுக்கு) இட்டு
தேனித்து இருமின்–மகிழ்ச்சி கொண்டிருங்கள்
(அப்படி நாமகரணஞ் செய்தால்)
தம் மன்னை–அப் பிள்ளைகளுடைய) தாய்மார்
நரகம் புகார்–துர்க் கதியை அடைய மாட்டார்கள்–
மாதாவைச் சொன்னது பிதாவுக்கு உப லக்ஷணம்

காசும் கரை வுடை கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்
ஆசையினால்
நாலு இரண்டு காசு கிடைக்கும் என்றும்
ஒரு தலைக்கு அறைச்சீரை கிடைக்கும் என்றும்
அங்கே பின்னையும்
ஒரு கோட்டை நெல் -ஒரு கட்டுக் கற்றை -ஒரு பொய்த்தரவும் கிடைக்கும் என்றும் ஸ்ரத்தையாலே

அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள்
அங்கு அவத்தப் பேர்-என்று ஸமஸ்த பதமான போது
மிகவும் பொல்லாப் பேர் அளவில் நிற்கும்

அங்கு என்றும்
அவத்தம் என்றும் பதமான போது
அங்கு என்று வஸ்துக்கள் விலகிப் போம் இடங்களிலே வசிக்குமவர்களைக் காட்டும்
அவத்தம் என்று அங்கு உள்ளவர்களும் பேர் சொல்லக் கூசும் படியான துர் நாமங்களைக் காட்டும்

ஆதர்காள்
அறிவு கேடர்காள்

கேசவன் பேரிட்டு
சர்வ காரண பூதனாய்
கிலேச நாசகனாய் இருக்கிறவனுடைய
பேரிட்டு -கேசவா -என்று அழைத்து

(ஸ்வரூப -ப்ரஹ்மாதிகளுக்கும் இடம் கொடுத்து
கேச பாசம் ரூபம்
குணம் -கிலேச நாசனம்
சேஷ்டிதம் விபவம் கேசி ஹந்த
நான்கையும் கேசவா காட்டுமே )

நீங்கள் தேனித்து இருமின்
நீங்கள் அப் பிள்ளை அளவிலே ஸ்நேஹித்து
ஸந்தோஷத்தோடே இருங்கோள்
தேனித்து -ஸ்நேஹித்து

நாயகன்
நாயகன் -சர்வ சேஷீ

நாரணன்
ஸமஸ்த கல்யாண குணாத்மகன்

தம் மன்னை
தம் மன்னை-தன் அன்னை

நரகம் புகாள்
பிள்ளைக்கு நாராயணன் என்று பேரானால் அவனைப் பெற்றவளுக்கு எங்கனே யம வஸ்யதை கூடுவது
பிள்ளை பெற்று நாராயணன் என்று பேர் இட்டது வஸ்யதை கூடுகைக்கோ

அன்றிக்கே
தம்மன்னை என்று
நாராயணனுடைய மனையில் உள்ளார் நாராயணன் என்று அழைக்கையாலே
இப்படி அழைத்தவர்கள் எல்லாருக்கும் யம வஸ்யதை இல்லை
ஆகையால் நரகம் புகார்கள் என்று சொல்லி விரித்ததாகவுமாம் -(புகார்கள் )

கேசவன் என்றது
நாராயணன் அளவில் பர்யவசிக்கும் பேர் இடும் மாதர்கள் என்னவுமாம்
நங்கைகாள் -என்னுமா போலே –

———–

அங்கு ஒரு கூறை யரைக்கு உடுப்பதனாசையால்
மங்கிய மானிட சாதிப் பேரிடும் ஆதர்காள்
செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்தக்கால்
நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6 -2-

பதவுரை

அங்கு–அந்த நீசரிடத்தில்
ஒரு கூறை–ஒரு வஸ்த்ரத்தைப் (பெற்று)
அரைக்கு உடுப்பதன் ஆசையால்–அரையில் உடுக்க வேணுமென்னு மாசையினால்
மங்கிய–கெட்டுக் கிடக்கிற
மானிட சாதி பேர் இடும்–மநுஷ்ய ஜாதியிற் பிறந்தவர்களுடைய பெயரை இடுகிற
ஆதர்காள்–குருடர்களே!
நங்கைகாள்–சொல்லிற்றை அறிய வல்ல மதியினால் நிறைந்தவர்களே!
(நீங்கள் உங்கள் பிள்ளையை)
செம் கண் நெடு மால்–புண்டரீகரக்ஷனான ஸர்வேச்வரனே!
சிரீதரா–ஸ்ரீதரனே!
அழைத்தக்கால்–அழைத்தீர்களாகில்
நாரணன்–நாராயண நாமத்தைப் பூண்ட அப் பிள்ளையினுடைய
தம்மன்னை–தாயானவள்
நரகம் புகார்–

அங்கு ஒரு கூறை யரைக்கு உடுப்பதனாசையால்
அங்கு என்று
ஸூ தூரஸ்தர் வர்த்திக்கிற தேசத்தைக் காட்டுகிறது

ஒரு கூறை என்று
ஹேயமாய்
கொள் கொடைக்கு ஆற்றிப் போராது-மாற்றப் போகாது – என்கிறது
ஓன்று என்று
மேல் புடைவையும் தலைச் சீரையும் புறம்பே தேட வேணும் என்கிறது

ஆசையால்
இவனுக்கு ஆசையும்
அவனுக்கு நிராசையுமாய் இறே இருப்பது

மங்கிய மானிட சாதிப் பேரிடும் ஆதர்காள்
ஹேயராய்ச் செத்துப் போனவர்களுடைய
உங்களை ஆண்டார்
அப்பாண்டார்
ஜளி பிளி -ஐளி பிளி-என்றால் போலே சில பேர்களை இட்டுச் சென்றால் ஆகிலும் சில தருமோ என்று பேர் இடும் அல்பர்கள் –

செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்தக்கால்
இப்படி பேர் இட்டு அழைத்தக்கால்

நங்கைகாள்
ஸ்த்ரீ பிராயம் இதரஞ் ஜகத்
நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர் -என்று எல்லாரையும் ஸ்த்ரீகளாகச் சொல்லுகையாலே
நங்கைகாள் என்கிறார்
(அவன் ஒருவனே புருஷோத்தமன் -மணி வல்லி பேச்சு வந்தேறி இல்லையே )

நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
நாராயணன் தாயார் நரகம் புகாள்-

————

உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து
எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேர் இட்டீர்
பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே
நச்சுமின் நாரணன் நம் அன்னை நரகம் புகாள் – 4-6- 3-

பதவுரை

எச்சம் பொலிந்தீர்காள்–ஸந்தாநத்தினால் விளக்குமவர்களே!
உச்சியில்–உச்சியில் (தடவத் தக்க)
எண்ணெயும்–
சுட்டியும்–(நெற்றியில் தொங்கும்படி கட்டத்தக்க) சுட்டியையும்
வளையும்–(கையில் அணியத் தக்க) வளையையும்
உகந்து–விரும்பி
என் செய்வான் ஏதுக்காக
பிறர்–(எம்பெருமானை யொழிந்த) மற்றவர்களுடைய
பேர்–பெயர்களை
இட்டீர்–(உங்கள் பிள்ளைகளுக்கு) இட்டீர்கள்?
பிச்சை புக்க ஆகிலும்–பிச்சை யெடுத்து ஜீவித்தாலும்
எம்பிரான் திரு நாமமே–எம்பெருமானுடைய திரு நாமத்தையே
நச்சுமின்–விரும்பி இடுங்கள்; (அப்படி இட்டால்)
நாரணன் –இத்யாதி பூர்வவத்–

உச்சியில் எண்ணெயும்
பேர் இட்டாலும் பிள்ளை தலைக்குத் துளி எண்ணெய் கிடைக்கும் அத்தனை அல்லது
(பேர் )இட்டவர்கள் தலைக்குக் கிடையாது இறே

சுட்டியும் வளையும் உகந்து
உங்கள் உகப்பு இறே

எச்சம் பொலிந்தீர்காள்
எச்சம் பிள்ளை
பிள்ளை பெற்று இருவர் பலராய் பொலிந்தீர்காள்
நாஸி -ஆத்மாவை புத்ர நாமாஸி –

என் செய்வான் பிறர் பேர் இட்டீர்
1-இந்தப் பிள்ளையை முழுக்க ரஷித்துத் தலைக்கட்ட வல்லர் என்றோ
2-உங்கள் மிடி -வறுமை -தீர்க்க வல்லர் என்றோ
3-அவர்கள் தங்கள் மிடி-வறுமை – தீர்ந்து நின்றது கண்டோ
4-லோக அபவாதம் தீரும் என்றோ
5-நிரய நிஸ்தாரகர் என்றோ

பிறர் என்று
உறவு அறுத்து வைத்தார் இறே

பிச்சை புக்காகிலும்
ஒரு ப்ராஹ்மணன் தன் பிள்ளையைப் பேர் இடுகின்ற ஸமயத்தில்
ஐஸ்வர்யம் தர வல்லான் ஒருவன் பேர் இட வேணும் என்ன
வைஸ்ரவணன் பேரை இடு என்ற அளவிலே
ஜளி பிளி -என்று இட்டு அழைத்து உஜ்ஜீவிப்பதில்
நாராயணன் என்கிற திரு நாமத்தைச் சாத்தி பிக்ஷை புக்கு ஜீவிக்கிறேன் என்றான் என்று
( நாலூர் ) பிள்ளை அருளிச் செய்வர் என்று ( நாலூர் )ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

எம்பிரான் திரு நாமமே நச்சுமின்
இதரர் பேர் இடுவதில் எனக்கு ஸ்வாமியானவன் திரு நாமத்தை பக்தியோடே சாத்தி அழையுங்கோள்
வர்ணாஸ்ரம தர்மம் வைதமானவோ பாதி
இதுவும் வைதமாக இடுங்கோள்

ஆகிலும் என்பான் என் என்னில்
வர்ணாஸ்ரம தர்மிகளுக்கு
ஜன்மாந்தர ஸித்தமான புண்ய பாப பலங்களை புஜிக்க விதித்தவோ பாதி
உங்களுக்கும் அந் நேர் வரும்

அது போராதாகில் பிச்சை எடுத்தாவது எம்பிரான் திரு நாமமே நச்சுமின்
(பிராணன் பரித்யஜ்ய அரியை காக்க வேண்டும்
பிராணனை விட்டாவது இல்லாமல் விட்டே காக்க வேண்டும்
அதே போல் பிச்சை எடுத்து அவன் பெயரை வைக்க விதியாகவே கொள்ள வேண்டும் )

————–

மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை
மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
வானுடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நானுடை நாரணன் நம் அன்னை நரகம் புகாள் – 4-6- 4-

பதவுரை

மானிட சாதியில்–மநுஷ்ய ஜாதியில்
தோன்றிற்று–உண்டான
ஓர் மானிட சாதியை–ஒரு மநுஷ்ய ஜந்துவை
மானிட சாதியின் பேர் இட்டால்–(கர்ம பலன்களை அநுபவிக்கப் பிறந்த) மநுஷ்ய சாதியர்க்கு உரிய பெயரை இட்டழைத்தால்
மறுமைக்கு இல்லை–அத்ருஷ்ட பலம் (மோஷம்) பெறுகைக்கு யாதொரு வழியுமில்லையாம்,
வான் உடை–பரம பதத்தை (விபூதியாக) உடைய
மாதவா–ஸ்ரீயபதியே
கோவிந்தா–கோவிந்தனே!
என்று அழைத்தக்கால்–என்று (எம்பெருமான் திருநாமத்தை யிட்டு) அழைத்தால்,
நானுடை நாராணன்–எனக்கு நாதனான நாராயணனுடைய திருநாமத்தைப் பூண்ட அப் பிள்ளையினுடைய
தம்மன்னை நரகம் புகார்–

மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை
மனுஷ்ய ஜென்மத்தில் பிறந்த
மனுஷ்ய ஜென்மத்தை

மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
மனுஷ்ய ஜென்மத்தின் பேர் இட்டால்
மறுமைக்கு என்ன பிரயோஜனம் உண்டு
வருகிற ஜன்மத்துக்கு என்ன பிரயோஜனம் உண்டாம் –

வானுடை மாதவா
நித்ய விபூதியை யுடைய ஸ்ரீ மானே

கோவிந்தா என்று அழைத்தக்கால்
லீலா விபூதியை விரும்பி ரக்ஷிக்கிற
கோவிந்தா என்று அழைத்தக்கால்

நானுடை நாரணன் நம் அன்னை நரகம் புகாள்
அஹம் அர்த்தோ நசே தாத்மா -என்கிறபடியே
அஹம் அர்த்தத்தை யுடையனான நாராயணன் என்று
பரம சேதனன் பேர் இட்ட சேதனனைக் காட்டுகிறது

(ஸ்ரீ பாஷ்யம்
அஹம் அர்த்தம் -ஆத்மா
அந்தக்கரணம் அத்வைதி பக்ஷம்
அப்படி இருந்தால் ப்ரத்யக்த்வம் வராதே
தனக்குத் தானே ஒளி விடும் தன்மையே வராதே
பராக் ப்ருத்யக் வேறு படுத்த வேண்டுமே
ஞானமும் ஆத்மா ஞானம் உடையவனும் ஆத்மா
என்னை யுடையவன் ஆத்மா )

நம் அன்னை நரகம் புகாள்
தம் அன்னை நரகம் புகாள்-

————

மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை
மலமுடை யூத்தையின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நலமுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4 -6-5 –

பதவுரை

மலம் உடை–மலத்தை யுடையதும்
ஊத்தையில்–ஹேயமுமான சரீரத்தில் நின்றும்
தோன்றிற்று ஓர்–தோன்றினதொரு
மலம் ஊத்தையை–(தானும் அப்படியே) மலமுடையதும் ஹேயமுமான சரீரத்தோடே கூடி யிருக்கிற ஐந்துவை
அதனால் இம்மையிலே சில அல்ப பலன் கிடைத்தாலும்,
மறுமைக்கு–அத்ருஷ்ட பலத்துக்கு
இல்லை–ஒருவழியு மில்லையாம்:
குலம் உடை–நற்குலத்திற் பிறந்த
கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக் கால்–கோவிந்தனே! கோவிந்தனே! என்று (பகவந் நாமத்தை யிட்டு) அழைத்தால்.
மலம் உடை–(கீழ்ச் சொன்ன படியே) மலத்தை யுடையதும்
ஸத்தையின் ஹேயமுமான சரீரத்தையுடைய மற்றொரு ஐந்துவினுடைய
பேர்–பெயரை
இட்டால்–இட்டு அழைத்தால்,
நலம் உடை–(தன் திருநாமத்தைச் சொன்னவர்களை வாழ்விக்கையாகிற) நன்மையையுடைய
நாரணன்–எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய
தம்மன்னை நரகம் புகார்–

மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை
மலத்தை யுடைத்தான மலத்திலே தோன்றின மல ஊத்தையை

மலமுடை யூத்தையின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
மலமுடை மலத்தின் பேர் இட்டால்
வருகிற ஜன்மத்துக்கு என்ன பிரயோஜனம் உண்டு

குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்
கோப குலத்திலே பிறந்து
கோவிந்த அபிஷேகம் செய்த
கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்

ராஜ குலத்தில் அவதரிக்கிலும் கோப குலம் இறே பிரதானம் ஆவது
கறையினார் -என்னக் கடவது இறே

நலமுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
கோவிந்தன் பேர் இட்ட
கோவிந்தன் பக்கலிலே ஸ்நேஹத்தை யுடையளான
அந்த
நாரணன் தம் அன்னை நரகம் புகாள்-

————-

நாடும் நகரும் அறிய நாடு மானிடப் பேர் இட்டு
கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்காதே
சாடிறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று
நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4- 6-6 –

பதவுரை

நாடும்–குக்ராமங்களிலுள்ள ஸாமாந்ய ஜ்ஞானிகளும்
அறிய–(இவன் உயர்ந்தவன்’ என்று) அறியும்படி,
நாடு மானிடர் பேர் இட்டு–(ஷுத்ர) மனுஷ்யர்கள் பெயரை விட்டு
கூடி–அவர்களோடு கூடி
அழுங்கி–ஒளி மழுங்கி
குழியில் வீழ்ந்து–(அவர்கள் விழுந்த) குழியிலே விழுந்து
வழுக்காதே–தவறிப் போகாமல்,
சாடு–‘சகடாஸுரன்
இற–முறியும்படி
பாய்ந்த–உதைத்தருளின
தலைவா–பெரியோனே!’ (என்றும்)
தாமோதரா என்று–‘தாமோதரனே! என்றும்
நாடுமின்–வாழ்த்திக் கொண்டு திரியுங்கள்;
(இங்ஙனேயாகில்,)
நாரணன் தம்மன்னை நரகம் புகாள்-

நாடும் நகரும் அறிய நாடு மானிடப் பேர் இட்டு
நாடு என்று அஞ்ஞரை
நகர் என்று நாகரீகராய் ஞாதாக்களைக் காட்டும்
இவர்கள் எல்லாரும் அசாரம் என்று அறிந்து நெகிழச் செய்தேயும்
அத்தை மதியாமை ஹேய மனுஷ்யர் பேர் இட்டு

கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்காதே
அவர்களோடே கூடி
அவர்கள் பக்கலிலே கால் தாழ்ந்து
அவர்கள் விழுந்த குழியில் விழுந்து
அவர்கள் அறிவு கற்பிக்கும் படி தவற வர்த்தியாதே

சாடிறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று
பிள்ளையைப் பேர் இட்டு
இதுவே நமக்கு ஊற்றம் என்று

நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

————

மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேர் இட்டு அங்கு
எண்ணம் ஓன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள்
கண்ணுக்கு இனிய கரு முகில் வண்ணன் நாமமே
நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6-7-

பதவுரை

மண்ணில் பிறந்து–மண்ணில் நின்று முண்டாய்
மண் ஆகும்–பின்பு மண்ணாய் விடுகிற
மானிடர்–அல்ப மநுஷர்களுடைய
பேர் இட்டு–பெயரை (த் தங்கள் பிள்ளைகளுக்கு) இட்டு
அங்கு–ஆமுஷ்மிக பலத்தில்
எண்ணம் ஒன்று இன்றி இருக்கும்–ஒரு விசாரமற்றிருக்கிற
ஏழை மனிசர்காள்–அறிவற்ற மனுஷ்யர்களை!
கண்ணுக்கு–கண்ணால் காண்கைக்கு
இனிய –போக்யனாயும்
கரு முகில்–காள மேகம் போன்ற
கண்ணன்–நிறத்தை யுடைவனாயுமுள்ள எம்பெருமானுடைய
நாமமே–திரு நாமத்தையே
நண்ணுமின் நாரணன்–விரும்பி யிடுங்கள்
நாரணன் தம்மன்னை நரகம் புகாள்–

மண்ணில் பிறந்து
தேஹ உபாதானமான பஞ்ச பூதங்களிலும்
பிராஸுர்யமாகத் தோற்றுவது பூமி அம்சம் ஆகையால்
சாரீரத்தை மண் என்கிறது –
அதிலே
பார்த்திவமான ரேதஸ்ஸூ மூலமாகப் பிறக்கையாலே மண்ணில் பிறந்தேன் என்கிறது

மண்ணாகும்
சரீர அவசானத்திலே பின்னையும் மண்ணாகவே போகிற

மானிடப் பேர் இட்டு
அம் மானிடப் பேர் இட்டு

அங்கு எண்ணம் ஓன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள்
அவர்கள் இடத்திலே கூடி
த்ருஷ்ட அத்ருஷ்டங்களில் விளைவது ஒன்றும் அறியாமல்
நிர்பரராய் இருக்கும் சபல பாவத்தையும் உடைய மநுஷ்யர்காள்

கண்ணுக்கு இனிய கரு முகில் வண்ணன் நாமமே நண்ணுமின்
காண்கை தானே ப்ரயோஜனமாய் இருக்கிறவனுடைய திரு நாமத்தை உங்கள் பிள்ளைகளுக்கு இட்டு
உங்கள் பிள்ளையைச் சேர்ந்து போருங்கோள் –

நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

————-

நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால்
நம்பும் பிம்பும் எல்லா நாலு நாளில் அழுங்கிப் போம்
செம் பெரும் தாமரைக் கண்ணன் பேரிட்டு அழைத்தக்கால்
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6- 8-

பதவுரை

நம்பி பிம்பி என்று–நம்பி என்றும் பிம்பி என்றும்
நாட்டு மானிடப் பேரிட்டால்–க்ஷுத்ர மனுஷ்யர்களுடைய பெயரை
(உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்) இட்டால்
நம்பும் பின்பும் எல்லாம்–‘நம்பி’ ‘பிம்பி’ என்னும் பெயர்களுக்கு அடியான முதன்மை யெல்லாம்
நாலு நாளில்–நாலு நாளைக்குள்
அழுங்கிப்போம் அழிந்துபோம்;
செம் பெருந் தாமரை–சிவந்தும் பெருத்துமிருக்கிற தாமரைப் பூப் போன்ற
கண்ணன்–திருக் கண்களை யுடைய எம்பெருமானுடைய
பேர் இட்டு–திரு நாமத்தை இட்டு
அழைத்தக்கால்–அழைத்தால்
நம்பிகாள்–(அறிவினால்) குறைவற்றவர்களே!
நாரணன் தம்மன்னை நரகம் புகாள்–

நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால்
ஐஸ்வர்யத்தால் பூரணமாய் இருக்கிறவர்கள் பேரை எங்கள் பிள்ளைக்கு இட்டு
நாங்கள் அவர்கள் பக்கலிலே ஜீவனத்தை வாங்கி ஜீவித்தால் என்ன பொல்லாங்கு உண்டு
நரக ஹேதுக்களான கார்யம் செய்யில் அன்றோ நரகம் வருவது என்று சம்சாரிகள் அபிப்ராயமாக

நான் நிஷேதித்த பின்பு செய்வி கோளாகில் அநர்த்த பரம்பரைகள் ஆகும் என்ன

நீர் நிஷேதிப்பதற்கு முன்னே நாங்கள் அறியாத தனத்தால் இட்ட பேரை
என் செய்வான் பிறர் பேர் இட்டீர் -என்று நிஷேதித்தால்
நாங்கள் ஜீவிக்கும் படி என்
இனிமேல் தவிர்க்கும் அத்தனை அன்றோ -என்ன

அது ஒண்ணாது –
பிக்ஷை புக்காகிலும் ஜீவியுங்கோள்
இட்ட பேரை மாற்றி எம்பெருமான் திரு நாமத்தை இடுவதாக ஸ்ரத்தை பண்ணுங்கோள் -என்ன

இது தன்னையும் மாற்ற வேணும் என்றால் செய்வது என் என்ன

நிஷேத அபாவ ஸ்திதியில் அவதாரணையை பிரயோகித்து
தேவ தத்த நாமம் -ஆஸ்ரம பேதங்களாலும்
தீஷா பேதங்களாலும்
ஐஸ்வர்ய பேதங்களாலும்
ஜாதி வியக்தி நாமங்கள் பேதித்தமையைக் காட்டி
அவதாரணையைத் தெளிவித்தவர் ஆகையால்
நம்பி பிம்பி என்று நிஷேதிக்கிறார் –

(சர்வம் வாக்கியம் ஸாவதாரண்யம்
எம் அன்னை தளிகை பண்ணும் உள்ளில் இருக்கிறாள் என்றால் அங்கேயே இருக்கிறாள் சொல் இல்லா விட்டாலும்
தளிகை பண்ணும் உள்ளில் இருப்பது அவள் வரவேற்பு அறையில் இருக்கிறாள் என்ற மாற்ற கருத்து வரும் வரை
அதே போல் இங்கும் செந்தாமரைக் கண்ணன் பேரையே இட்டு என்றே இங்கும் கொள்ள வேண்டும்
சுருதி தேவ தத்தன் என்றே பல இடங்களிலும் உண்டே
ஆஸ்ரமம் மாற பேர் மாறும்
நாமும் இராமானுஜ தாசன் பேர் மாற்றிக் கொள்கிறோம்
தீஷா எஜமானனுக்கு பெயர் மாறுமே
பெரிய பண்ணையார் சின்ன பண்ணையார் ஐஸ்வர்ய பேதத்தாலும் மாறும்
ஆகவே இங்கும் பெயரை மாற்றியே ஆக வேண்டும் )

நம்பும் பிம்பும் எல்லா நாலு நாளில் அழுங்கிப் போம்
பிம்புக்கு ஒரு பொருள் உண்டாய்த்தாகில் ஆய்த்து நம்பிக்கு ஒரு பொருள் உண்டாவது
உங்கள் அபிப்ராயத்தால் பிம்புக்கு ஒரு பொருள் உண்டாகிலும்
யோக ரூடிப் பேரும் நீங்கள் நினைத்த நம்பில் செல்லாது
(பங்க ஜ-சேற்றில் பிறந்த -தாமரை ரூடி யவ்வ்கிகம் நாய்க்குடையும் சேற்றிலே பிறந்ததே )
பிரபஞ்ச அவலம்ப நியாயத்தாலே சென்றாலும் அந் நியாயம் தன்னாலே நாலு நாளிலே அது நழுவிப் போகும்
நாட்டு மானிடம் -என்னும் அளவே நிலை நிற்பது
நாட்டு மானிடத்தை நம்பி பிம்பி என்னுமிவை நிலை நில்லாது இடாதே கொள்ளுங்கோள் –

செம் பெரும் தாமரைக் கண்ணன்
தாமரை போராமையாலே
செம் பெரும் -கண்ணன் என்கிறார்

பேரிட்டு அழைத்தக்கால்
இப்படிக்கு ஒத்த வனுடைய திரு நாமத்தைச் சாத்தி அழையுங்கோள்

அழைத்தக்கால்
இத்தை நிஷேதிக்க வல்லார் ஒருவரும் இல்லை என்ற அளவிலே

இங்கன் எல்லாத்தையும் நிஷேதிக்கிறது என்
மாதா பிதாக்கள் இட்ட பேரை வைத்தால் யம வஸ்யத்தை வருமோ -என்ன
வைதிக மார்க்கத்தில் கர்ம ஸ்ரேஷ்டரானவர்கள் வந்து ப்ரத்ய வஸ்திதராய்
மாத்ரு தேவோ பவ -பித்ரு தேவோ பவ -என்னா நின்றதீ என்ன

நம்பிகாள்
என்று நீங்கள் பூர்ணர் என்கிறார்
அதுக்கடி விஹித கர்மம் ஜென்மத்தில் மூட்டும்
ஜன்மத்துக்கு உஜ்ஜீவனம் பூர்வ பூர்வ ஜென்மங்களில் ஆர்ஜனத்திலேயாய் இருக்கும்
அத்தைப் பற்றி வரும் வாசனையாலே ஆர்ஜனம் கூடுதல்
பிரரோசக வாக்யங்களாலே ஆர்ஜனம் கூடுதல் செய்தால்
யம வஸ்யதை வரவும் கூடும் இறே

அவ்வளவே அன்றிக்கே
நான்ய தஸ்தீதி வாதிந (கீதை -2)-என்று இறே நீங்கள் தான் இருப்பது
மேலில் நிஷேதம் பாராமே —

நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

————

ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள்
மூத்திரப் பிள்ளையை என் முகில் வண்ணன் பேரிட்டு
கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ
நாத்தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4- 6-9 –

பதவுரை

ஊத்தை குழியில் அமுதம் பாய்வது போல்–அசுத்தமானதொரு குழியிலே அம்ருதம் பாய்ந்தாற்போலே
உங்கள் மூத்திரப் பிள்ளையை–உங்களுடைய அசுத்தனான பிள்ளைக்கு
என் முகில் வண்ணன் பேர் இட்டு–எனக்குத் தலைவனும் காளமேகம் போன்ற திரு நிறத்தையுடையனுமான
எம்பெருமானுடைய திருநாமத்தை நாமகரணம் பண்ணி
(அதனால் அப்போதே நீங்கள் எம்பெருமானுடைய பரிக்ரஹமாகப் பெற்று)
கோத்து குழைத்து–(அவ் வெம்பெருமானோடு) கூடி கலந்து
(அதனாலுண்டாகும் ஆநந்த்த்துக்குப் போக்கு வீடாக)
குணாலம் ஆடி–குணாலைக் கூத்தாடிக் கொண்டு
திரிமின்–திரியுங்கள்
(இப்படியாகில்)
நாத்தகு நாரணன்–நாவினால் துதிக்கத் தக்க நாரா யணனுடைய பெயரைப் பூண்ட அப்பிள்ளையினுடைய
தம்மன்னை நரகம் புகாள்–

ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல்
துர் கந்த நிஷித்தச் சேறாய் இருபத்தொரு அங்கணக் குழியிலே
ஸூ கந்தமாய்
ஸூத்தமாய்
போக்யமாய்
தாவள்யமாய்
நிரய நிஸ்தாரகமாய்
மண ரஹிதமாய்ப்
ப்ராப்தமாய்
ஸகல லோக ஸங்க்ரஹமாய்
இருப்பதொரு அம்ருதம்
அதிலே பாய்ந்தால் போலே இருப்பது ஓன்று இறே

உங்கள் மூத்திரப் பிள்ளையை
உங்கள் ஸூக்ல ஸோணித பரிணாமமாய்
அஸூத்தாஸ் பதமான கர்ப்ப கோளகையில் நின்றும்
ஜல நிர் கமந யோநி ஜாதமான பிள்ளையை

என் முகில் வண்ணன் பேரிட்டு
என்னுடையவன் என்னும்படி தன்னை எனக்கு அமைத்து வைத்து
என்னாலே தனக்கு ரக்ஷையாம் படி இருக்கிற
ஸ்ரீ மன் நாராயணன் ஆகிற முகில் வண்ணன் திரு நாமத்தைச் சாத்தி

கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ –
எங்கள் குழுவினால் புகுதல் ஒட்டோம் -என்றது
எங்கள் அபிமானத்தில் புகுராமையால் அன்றோ

எங்களை அபிமானித்தவன் திரு நாமத்தைச் சாத்தின நீங்கள்
எங்களோடு பகவன் திரு நாமம் சொல்லும்படி இயல் கோத்துக்
குழைத்து
உங்கள் நெஞ்சை எங்களோடு கூட்டிக்
கோர்வை விடாமல் குணலைக் கூத்தாடி
எங்களை யுடையவர்களோடே திரியுங்கோள்

நாத் தகும்
உங்கள் நா உங்களுக்குத் தகுதியாம்

அந்ய சேஷத்வமும் துர் போஜனமும் தவிர்ந்தால்
பகவச் சேஷத்வமும் தீர்த்த ப்ரஸாதங்கள் ஜீவனம் ஆகையும் கூடும்

நாப் படைத்த பிரயோஜனமும் பெற்றி கோளாவுதி கோள்

நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

———-

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

சீரணி மால் திரு நாமமே இடத் தேற்றிய
வீரணி தொல் புகழ் விட்டு சித்தன் விரித்த
ஓரணி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் வல்லவர்
பேரணி வைகுந்தத்து என்றும் பேணி இருப்பரே – 4-6- 10-

பதவுரை

சீர்–கல்யாண குணங்களை
அணி–ஆபரணமாக வுடையவனும்
மால்–(அடியார் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான எம்பெருமானுடைய
திரு நாமமே–திருநாமத்தையே
இட–(தம் பிள்ளைகளுக்கு இடும்படி)
தேற்றிய–உபதேசித்தருளினவரும்
வீரம் அணி–(இந்திரியங்களை வெல்லுகை யாகிற) வீரப் பாட்டை ஆபரணமாக வுடையவரும்
தொல் புகழ்–சாச்வதமான கீர்த்தியை யுடையவருமான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
விரித்த–விரிவாக அருளிச் செய்தமையும்
ஓர் அணி–(கற்பார்க்கு) ஒப்பற்ற ஆபரணம் போன்றவையும்
ஒண் தமிழ்–அழகிய தமிழ்ப் பாஷை யுமாயிருந்துள்ள
ஒன்பதோடு ஒன்றும்–இப் பத்துப் பாட்டுக்களையும்
ஒன்பதில் விரோதி நிரஸனம் -ஒன்றில் இஷ்ட பிராப்தி
வல்லவர்–ஓத வல்லவர்
பேர் அணி–பெரியதும் அழகியதுமான
வைகுந்தத்து–ஸ்ரீவைகுண்டத்தில்
என்றும்–எந்நாளும்
பேரணி இருப்பர்–(எம்பெருமானுக்கு) மங்களாசாசனம் பண்ணிக் கொண்டு வாழப் பெறுவர்–

சீரணி மால் திரு நாமமே இடத் தேற்றிய
சீரணி
குணங்களை ஆபரணமாக யுடையவன் என்னுதல்
குணங்கள் புறம்பு ஓர் வியக்தியில் கிடவாமையாலே
கல்யாண குணங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமானவன் என்னுதல்

மால்
ஆஸ்ரித ரக்ஷணத்தில் வந்தால்
வ்யாமோஹத்தை யுடையவன்

திரு நாமமே இடத் தேற்றிய
இதர நாமங்களை மாற்றி
நாரணன் தன் நாமங்களையே தாம் தாம் பெற்ற பிள்ளைகளுக்குச் சாத்தும் படியாகப்
பல ஹேதுக்களாலும் தெரிவித்த

வீரணி தொல் புகழ் விட்டு சித்தன்
வீரப்பாட்டை ஆபரணமாக யுடையருமாய்
ஸூரிகளைப் போலே அநாதி ஸித்த மங்களா ஸாஸனப் புகழையும்
விஷ்ணு சித்தர் என்கிற திரு நாமத்தையும் யுடைய ஆழ்வார்

விரித்த
பகவத் அனுபவ பிரகாரத்தைத் திருப்பல்லாண்டு தொடங்கி
இவ்வளவும்
அந்யாபதேசத்தாலும்
ஸ்வா பதேசத்தாலும்
ஜகத்தில் உள்ளார்க்கு எல்லாம்
அத்விதீய ஆபரணமாக

ஓரணி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் வல்லவர்
ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றாக விரித்து உரைத்த இப் பத்துப் பாட்டையும்
ஸ அபிப்ராயமாக வல்லார்

அதாவது
மலை எடுக்கவும் –
கடலைச் சிறாங்கிக்கவும் வல்லார் என்கிற அளவேயும் அன்று இறே
இவர் திரு உள்ளத்தில் கருத்து அறிகை

அதாவது
இப் பிள்ளைகளுக்கு இட்ட திரு நாமம் விசேஷண பர்யந்தமோ விசேஷ பர்யந்தமோ என்று விகல்ப்பித்தால்
அசாதாரண நாமம் விசேஷணத்தில் நில்லாதாப் போலே
அசித் விசிஷ்ட ஜீவாந்தர்யாமி அளவிலும் நில்லாது

இது அறியும் போது
ஆச்சார்ய சேவையாலே வந்த வ்யுத்பத்தி அனுஷ்டான அபிமானங்களும் வேணும்

இவற்றில்
உத்தேஸ்யமுமாய்
ஸூலபமுமாயும் இறே இருப்பது இவர் அபி மானம்
இத்தை இறே வல்லார் என்கிறது

இப் பிரதிபத்தி யுடையவன் இட்டது இறே திரு நாமம் ஆவதும்
இத் திரு நாமமே யாகிலும் புத்ராதிகள் இடை ஈடனானால் அத் திரு நாமம் ஆகாது இறே

பேரணி வைகுந்தத்து என்றும் பேணி இருப்பரே
அவனுக்கு அசாதாரணமான திரு நாமங்களைத் தங்களுக்கு ஆபரணமாகக் கொண்டு
ஸூரிகள் வர்த்திக்கிற தேசத்திலே என்றும் விரும்பி மங்களா ஸாஸன பரராய் வர்த்திக்கப் பெறுவர்

வீரணி -என்றது ஜிதேந்த்ரியத்வம்
அதாவது
பிராகிருத விஷயம் போலே அப்ராக்ருத விஷய ஸுந்தர்யத்தையும் ஜெயிக்க வல்லராய் இருக்கை

தம் தாம் பிள்ளைகளை ஆழ்வார்கள் அருளிச் செய்யப் பெற்றோம் என்கிற
அபிமானத்தோடே திரு நாமம் சாத்தினவர்கள் –
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா -என்றதை
விஸ்வஸித்து
நரக பீதி தவிர்ந்த அளவன்றிக்கே
இவர் அபிமானத்தாலே பரமபதமும் பெறுவர்கள் என்கிறது –

இது அன்றோ மேல் படி –
ஆச்சார்ய கைங்கர்யத்தில் ஈடுபட இதுவும் வேண்டுமே
அவனையும் தாண்டி ஆச்சார்ய கைங்கர்யத்தில் ஈடுபட வேண்டுமே
(பெரியாழ்வார் அருளிச் செய்த படியே நின்று அவர் அபிமானத்தில் ஒதுங்கி பேறு நிச்சயமாகப் பெறலாமே )

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-5–ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி —

July 30, 2021

கீழில் திரு மொழியில்
ஆதியான் அடியாரையும் -அடிமை இன்றித் திரிவாரையும் -என்று
சம்சாரிகள் பொல்லாங்கும்-ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஏற்றமும் -இறே சொல்லிற்று

சம்சாரிகளுக்கும் பகவத் சம்பந்தம் ஒத்து இருக்க -அவர்களை கழிக்கைக்கு அடி –
சம்பந்த ஞானம் இல்லாமை -இறே

வணக்கொடு மாள்வது வலமே -என்று
சரம சமயத்திலே (ஆகிலும் )பகவத் சமாஸ்ரயணம் பண்ணுகை ஸ்ரேஷ்டம்
ஆகையால் -சம்சாரிகளை பார்த்து ஹிதோ உபதேசம் பண்ணி அருளுகிறார்-
இத் திரு மொழியில்-

————

திரு நாமங்களை சொல்லுமவர்கள் பெரும் பேறு என்னால் சொல்லப் போகாது -என்கிறார்-

ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாசவார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லைக் கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – 4-5 -1-

பதவுரை

ஆசை வாய்–(தனக்கு) ஆசையுள்ள விதத்திலே
சென்ற–போர்ப் பாரத்த
சிந்தையார் ஆகி–நெஞ்சை யுடையாராய் கொண்டு
என் அன்னை–என்னுடைய தாய்
என் அத்தன்–என்னுடைய தகப்பன்
என் புத்திரர் என்னுடைய பிள்ளைகள்
என் பூமி–என்னுடைய நிலம்
வாச வார்–பரிமளம் வீசுகின்ற
என் குழளான–கூந்தலை யுடையவளான என் மனைவியான
என்று–என்று சொல்லிக் கொண்டு
மயங்கி–(அவர்கள் பக்கத்தில்) மோஹமடைந்து
(பழூதே பல பகலும் போக்கினாலும்)
மாளும் எல்லைக் கண்–சரம ஸமயத்தில்
வாய் திறவாதே–வாய் திறந்து(அவர்கள் பேச்சை) சொல்லி யழையாமல்
கேசவா என்றும்
கேசவனே என்றும்
புருடோத்தமா என்றும்–புருடோத்தமனே என்றும்
கேழல் ஆகிய கேடு இலீ என்றும்–‘வராஹ ரூபியாய் அவதரித்தவனும் அழிவில்லாதவனுமான எம்பெருமானே! என்றும்
பேசுவார் அவர்–சொல்லுவார்கள்
எய்திய–அடையக் கூடிய
பெருமை–பெருமைகளே
பேசுவான் புகில்–பேசப் புக்கால்
நம் பரம் அன்று–நம்மால் பேசித் தலை கட்டப் போவது-

ஆசை -இத்யாதி
சிநேகம் இருந்த இடத்திலே கை கழிந்த மனசை உடையராய்
அன்னை-என்று தொடங்கி -வாசவார் குழலாள் அளவும் ஆசை இருக்கும் இடம் மயங்கி
இவர்கள் பேரும் சொல்ல மாட்டாதே மயங்கி

மாளும் எல்லைக் கண்-
வைத்த நாள் வரை எல்லை குறுகி -என்கிற படியே சரம காலத்தில்

வாய் திறவாதே
அவ்வளவிலே கீழ் சொன்னவர்கள் பேரை சொல்லி அழையாதே-
அவர்கள் பேர் சொல்ல ஒண்ணாதாகில் பின்னை யார் பேரை சொல்லுவது என்னில்

கேசவா
உங்கள் மரண வேதனை போக வேணும் ஆகில் –
கேசவா க்லேச நாசன -என்னப் பாரும் கோள்
கெடும் இடர் ஆயவெல்லாம் கேசவா என்ன -என்று சொல்லக் கடவது இறே

புருடோத்தமா-
ஒவ்தார்யம்
அதாவது-
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் பண்ணுகை

என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
இவர்கள் கேடு போனால் தன் கேடு போச்சுதாக நினைத்து இருக்கை

பேசுவார் அவர் எய்தும் பெருமை-
அவர்கள் ஏற்றத்துக்கு பாசுரம் இடப் போகாது
அவர் -என்னும் இத்தனை இறே
அவர்கள் பேரும் பேற்றை நம்மால் பேசப் போகாது

பேசுவான் புகில்-
பேசப் புக்கோம் ஆகில்

நம் பரம் அன்றே-
நம்மால் பேசித் தலைக் கட்டப் போகாது- கொடுக்கிறவன் தான் அறியும் இத்தனை
அதாவது
இதர சங்கம் குலைய பெறுவதாம்
சரம காலத்தில் அவர்களை அழையாது ஒழிய பெறுவதாம்
நம்முடைய பேச்சுக்களை சொல்லப் பெறுவதாம்
இது என்ன ஏற்றம் இது என்ன ஏற்றம் -என்று இதன் ஏற்றம் அறிந்து ஈடுபடுவான் அவன் இறே

—————–

சீயினால் சிறந்து ஏறிய புண் மேல் செற்றல் ஏறி குழம்பிருந்து எங்கும்
ஈயினால் அரிப்புண்டு மயங்கி எல்லை வாய்ச் சென்று சேர்வதன் முன்னம்
வாயினால் நமோ நாரணா என்று மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி
போயினால் பின்னை இத் திசைக்கு என்றும் பிணைக் கொடுக்கிலும் போக ஒட்டாரே -4= 5-2 –

பதவுரை

சீயினால்–சீயாலே
செறிந்து எறிய–மிகவும் நிறைந்த
புண் மேல்–புண்ணின் மேல்
செற்றல் ஏறி–ஈ இருந்து முட்டை யிட்டு
குழம்பிருந்து–அலை புழுத்து சீயாய்ப் பாயுமளவில்
எங்கும்–உடல் முழுதும்
ஈயினால்–ஈயாலே
அரிப்புண்டு–அரிக்கப்பட்டு
மயங்கி–(வேதனை பொறுக்க முடியாமல்) மூர்ச்சை யடைத்து
எல்லை வாய்ச் சென்று சேர்வதன் முன்னம்–சரம காலத்தைக் கிட்டுவதற்கு முன்னே
வாயினால்–வாயாலே
நமோ நாராணா என்று–‘நமோ நாராயணாய்’ என்று சொல்லிக் கொண்டு
மத்தகத்திடை–உச்சியிலே
கைகளைக் கூப்பி–அஞ்ஜலி பண்ணி
(சரீர வியோகமான பின்பு)
போயினால்–(பரம பதம்) போய்ச் சேர்ந்தால்
பின்னை–பிறகு
பிணைக் கொடுக்கிலும்–(நித்ய முக்தர்கள்) ‘நாங்கள் உத்தர வாதம் பண்ணுகிறோம்’ என்றாலும்.
என்றும்–ஒருகாலும்
போக ஒட்டார்–(இந்த முக்தர்களைப்) போக வொட்டார்கள்–

சீயினால் சிறந்து ஏறிய புண் மேல்-
சீயானது விஞ்சி புடைபட்ட புண் மேல்

செற்றல் ஏறி-
ஈயிலில் இருந்து முட்டை இட்டு

குழம்பிருந்து-
அவை புழுத்து நீராய் பாயும் அளவிலே

ஈயினால் அரிப்புண்டு மயங்கி –
அது பொறுக்க மாட்டாமல் மூர்ச்சித்து

எல்லைவாய்ச் சென்று சேர்வதன் முன்னம் –
சரம காலத்தை சென்று கிட்டுவதற்கு முன்னே

வாயினால் நமோ நாரணா என்று-
வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி -எனக்கு நான் உரியேன் அல்லேன் –
உனக்கு உரியேன் -என்று சொல்லுகை இறே வாய் படைத்ததுக்கு பிரயோஜனம்-

மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி –
தலை படைத்த பிரயோஜனம் பெற்று-

போயினால் –
இப்படி செய்து போனால்-
போயினால் என்றது வழிப் போக்கு தானே பிரயோஜனம் -என்கை-
இவன் ஒருகால் தொழுதால் இதுக்குப் பலம் வழிப் போக்கில்-
மற்று எல்லாம் கை தொழப் போய் -என்றும்
தொழுதனர் உலகர்கள்-என்றும்-
சொல்லுகிறபடியே இவன் பார்த்த பார்த்த இடம் எல்லாம் அஞ்சலிக் காடாய் இறே இருப்பது –

அங்கு புக்காலும்-
பத்தாஞ்சலி புடா ஹ்ர்ஷ்டா -என்றது இறே பலம்-
இவன் ஒருக்கால் ஆத்ம சமர்ப்பணம் பண்ண-
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் -என்று த்ரிபாத் விபூதியாக சமர்பிப்பர்கள்-
ஒருக்கால் நம என்ன- கால தத்வம் உள்ளதனையும் நமோ நாராயணா என்று-சூழ்ந்திருந்து ஏத்துகை இறே பலம் –

பின்னை இத்திசைக்கு என்றும் பிணைக் கொடுக்கிலும் போக ஒட்டாரே –
நித்ய முக்தரை பிணை இடிலும் போக ஒட்டார்கள்-அதுக்கடி-
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் தேசம் ஆகையாலே-
அவன் தானும் -ஏற்றி வைத்து ஏணி வாங்கும் அவனிரே-
இத்தால் கர்மம் அடியாக மீட்சி இல்லை என்றபடி –

———–

ஆத்மா சமர்ப்பணம் பண்ணினார்க்கு யம வச்யதை இல்லை என்கிறார்-

சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன்
மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே – 4-5 -3-

பதவுரை

சோர்வினால்–களவு வழியாலே-புத்தி மறதியால்
பொருள் வைத்தது–(எங்கேனும் ஏதாவதொரு) பொருள் வைக்கப் பட்டிருக்குமாகில்
சொல்லு சொல் என்று–(அதைச்) செல்லு, சொல்லு என்று
சுற்றும் இருந்து–சூழ்ந்து கொண்டு
ஆர் வினவிலும்–எப்படிப்பட்ட அன்பர்கள் (வேட்ட இளையாள் ) கேட்டாலும்
வாய் திறவாதே–(அவர்களுக்கு மறு மாற்றம் சொல்லுகைக்கும்) வாயைத் திறக்க மாட்டாதபடி.
அந்தக் காலம்–மரண காலமானது
அடைவதன் மூலம்–வந்து கிட்டுவதற்கு முன்னே;
மார்வம் என்பது–‘ஹ்ருதயம்’ என்கிற
ஓர் கோயில்–ஒரு-அத்விதீயமான – ஸந்நிதியை
அமைத்து–ஏற்படுத்தி (அந்த ஸந்நிதியில்)
மாதவன் என்னும்–‘திருமால்’ என்கிற
தெய்வத்தை–தேவதையை
நாட்டி–எழுந்தருளப் பண்ணி (அத் தெய்வத்தைக் குறித்து)
ஆர்வம் மென்பது–பக்தி என்கிற
ஓர் பூ–ஒரு புஷ்பத்தை
இட வல்லார்க்கு–ஸமர்பிக்க வல்லவர்களுக்கு
அரவ தண்டத்தின்–யம படர்களால் வரும் துன்பத்தில் நின்றும்
உய்யலும் ஆம்–தப்பிப் பிழைக்கலாகும்–

சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்-
முன்பு இவன் கையில் கண்டவை அடைய -அட்டைகள் போல் சுவைப்பர் -என்கிறபடியே
இவன் கையில் உள்ளவை நிச் சேஷமாக வாங்கி கொள்ளுவார்கள் -இவர்களைக் காணாமல் வைத்தது உண்டாகில்

சொல்லு சொல்லு என்று –
ஒரு கால் சொன்னால் போல் ஒன்பதின் கால் சொல்லி –

சுற்றும் இருந்து –
இவன் ஒருத்தரை ஒருத்தர் அறியாமல் -கொடுக்கில் செய்வது என்-
என்று விடாதே சுற்றும் இருப்பர்கள்-

ஆத்ம பந்துக்கள் ஆகில் இறே-
திரு மாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் -என்பது –
துஞ்சும் போது அழைமின் -இத்யாதி

ஆர் வினவிலும் வாய் திறவாதே –
பகவத் பாகவத விஷயங்களையும் -ஆசார்யனையும் -பிரகிருதி பந்துக்களையும் –
மறைத்து வைத்த அர்த்தம் கொடுத்த வேட்ட இளையாள் வினவிலும் வாய் திறவாதே –

இவர்களுக்கும் இவளுக்கும் -இவனை இழக்க புகுகிறோம் என்ற பயம் அன்று –
இவன் வைத்த அர்த்தம் ஒருவரும் அறியாமல் மண் தின்று போகில் செய்வது என் -என்கிற பயம் –
இவ் அர்த்தத்தை நச்சி வரும் போதும் –
அக் காலத்திலே அவன் முகத்திலே விழிக்க வருகிறோமே -என்று இறே வருவது

அந்த காலம் அடைவதன் முன் –
சரம காலம் வருவதற்கு முன்னே

மார்வம் என்பதோர் கோவில் அமைத்து-
ஹ்ருதயம் என்று பிரசித்தமாய் -அத்விதீயமான ஸ்த்தானத்தை உண்டாக்கி –

மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி –
ஸ்ரீ யபதி -என்று பிரசித்தமாய் -அத்விதீயமான வஸ்துவை பிரதிஷ்டிப்பித்து –

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திரு மால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான் -என்று
இவர் அஹ்ருதயமாக சொன்னதை சஹ்ருதயமாக கொண்டு வந்து புகுந்தான் –
இவர் இப்போதே -அஹ்ருதயமாக சொன்னேன் -என்னவும் வல்லர்-
அதுக்கு முன்பு இவர் நெஞ்சில் இடம் அற புகுந்து கொள்ளும் கிடீர் என்று பிராட்டியும் கூடக் கொண்டு புகுந்தான் –

இவர் நெஞ்சு திருந்துவதற்கு முன்பு இறே -அல்லாத இடங்களில் நிற்பது –
நின்றது எந்தை ஊரகத்து -இத்யாதி-
உகந்து அருளின நிலங்களில் கண்டு அனுபவிக்குமா போலே
இவர் திரு உள்ளத்தில் இருப்பதும் கண்டு அனுபவிக்கலாம் படி இருக்கும் இவர்க்கு –
சல சயனத்து உள்ளும் எனது உள்ளத்து உள்ளும் உறைவாரை உள்ளீரே -என்னக் கடவது இறே –

வந்தாய் என் மனம் புகுந்தாய் -என்று இறே புகுந்தது –
வந்து வந்து என் மனத்து இருந்து -என்கிறபடியே இவர் இசையாமல் -தட்டின நாளைக்கு ஓர் அவதி இல்லை இறே
அடியார் மனத்தாயோ-
வெள்ளத்தான் வேம்கடத்தான் ஏலும் கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உளன் -என்று
உகந்து அருளின நிலங்களோடு ஒக்கும் -இறே இவர் திரு உள்ளமும் –

ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு –
(பக்தி என்னும் பூ
பக்தியையும் பூவையும் -இரண்டு நிர்வாகங்கள் )
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் -என்று
தேக பந்துக்களையும் -ஆத்ம பந்துக்களையும் மறைத்து வைத்த பொருளை இட்டு
கோவில் சமைத்து
திரு நந்தவனத்தையும் உண்டாக்கி
திருப் பள்ளித் தாமத்தையும்
தேடு என்று -இவனை அரிய தேவைகளை இடான் இறே –

நாடாத மலர் நாடி நாள் தோறும் நாரணன் தன் வாடாத மலர் அடிக் கீழ் வைக்க -இறே
இவனை அடியிலே-திருவடியிலே என்றும் -ஆதியிலே -என்றும் – சிருஷ்டித்தது –
இப்படி பூவோடு பூவை சேர்க்க வல்லார்க்கு –

அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே-
யம படரால் வரும் கிலேசம் –
அதாவது –
வெம் சொல் ஆளர்கள் நமன் தமர் அடியர் கொடிய செய்யன உள-என்னக் கடவது இறே –
நெடும் சொல்லால் மறுத்ததற்கு பலம் கடும் சொல் கேட்கை இறே-

உய்யலும் ஆமே-
ப்ராப்யத்திலும் இது (யம படரால் வரும் கிலேசம்) போகை இறே பிரதானம் -என்கிறார் –

———-

பிரணவ அர்த்தம் நெஞ்சில் பட்டவர்கள்-அடியார்கள் குழாங்கள் உடன் கூடுவர் -என்கிறார் –

மேல் எழுந்தது ஒரு வாயு கிளர்ந்து மேல் மிடற்றினை உள் எழ வாங்கி
காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறி கண் உறக்கம் அது ஆவது முன்
மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள் எழ வாங்கி
வேலை வண்ணனை மேவுதிர் ஆகில் விண்ணகத்தினில் மேவலும் ஆம் – 4-5-4-

பதவுரை

மேல் எழுந்தது ஓர் வாயு–ஊர்த்துவ ஸ்வாஸமானது
கிளர்ந்து–மேலெழுந்ததனால்
மேல் மிடறு–நெஞ்சானது
உள் எழ வாங்கி–கீழே இடிந்து விழப் பெற்று
காலும் கையும்–கால்களும் கைகளும்
விதிர் விதிர்த்து ஏறி–பதைபதைக்கப் பெற்று
கண் உறக்கம் அது ஆவதன் முன்னம்–தீர்க்க நித்திரையாகிய மரணம் ஸம்பவிப்பதற்கு முன்னே,
மூலமாகிய ஒற்றை எழுத்தை–(ஸகல வேதங்களுக்கும்) காரணமாகிய ‘ஓம்’ என்ற பிரணவத்தை
மூன்று மாத்திரைகள் உள் எழ வாங்கி–உச்சரிக்க வேண்டிய முறைப்படி உச்சரித்து
வேலை வண்ணனை–கடல் போன்ற நிறத்தை யுடையவனான எம்பெருமானை
மேவுதிர் ஆகில்–ஆஸ்ரயித்தீர்களாகில்
விண் அகத்தினில்–ஸ்ரீவைகுண்டத்தில்
மேவலும் ஆம்–அடியார்கள் குழாங்களை) உடன் கூடவும் பெறலாம்–

மேல் எழுந்தது ஒரு வாயு கிளர்ந்து –
மேல் மூச்சு எறிந்து –

மேல் மிடற்றினை உள் எழ வாங்கி –
நெஞ்சு கீழே இடிந்து விழுந்து

காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறி –
பிராண வாயு மேல் நோக்கின வாறே -காலும் கையும் பதை பதிக்க தொடங்கிற்று

கண் உறக்கம் அது ஆவது முன் –
தீர்க்க யாத்ரை கொள்வதற்கு முன்னே

மூலமாகிய ஒற்றை எழுத்தை -மூன்று மாத்திரை உள்ளே வாங்கி –
சகல வேதங்களுக்கும் காரணமான -திரு மந்த்ரத்தில் பிரதம பதத்தை -உச்சாரண க்ரமம் தப்பாமல் உச்சரித்து –

வேலை வண்ணனை மேவுதிர் ஆகில்-
ஸ்ரீ வைகுண்ட நாதனை கிட்ட வல்லி கோள் ஆகில்

விண்ணகத்தினில் மேவலும் ஆம் –
அடியார்கள் குழாங்கள் உடன் கூடலாம் -என்கிறார் –

————-

விரோதி நிரசன சீலனை ஏத்து வார்க்கு முன்பு கிலேசப் பட்டது போலே –
இனி போக வேண்டாம் என்கிறார் ( இந்த்ரியங்களே விரோதி )

மடி வழி வந்து நீர் புனல் சோர வாயில் அட்டிய கஞ்சியு மீண்டே
கடை வழி வாரக் கண்ட மடைப்ப கண்ணுறக்கம் ஆவது முன்
துடை வழி நும்மை நாய்கள் கவரா – சூலத்தால் உம்மை பாய்வதும் செய்யார்
இடை வழி யினீர் கூறையும் இழவீர் இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே – 4-5- 5-

பதவுரை

மடி புலன் வழி வந்து–லிங்கத்தின் வழியாக வந்து
நீர் சோர–மூத்திர நீர் பெருகவும்
வாயில்–வாயிலே
அட்டிய–பெய்த
கஞ்சியும்–பொரிக் கஞ்சியும்
கண்டம் அடைப்ப–கழுத்தை அடைக்கவும்
மீண்டும்–மறுபடியும்
கடை வழி–கடை வாய் வழியாலே
வார–(அந்தப் பொறிக் கஞ்சி வழியா நிற்கவும்
கண் உறக்கம் அது ஆவதன் முன்னம்
இருடீகேசன் என்று–(ஹ்ருஷீகேசன்’ என்ற (எம்பெருமான் திருநாமத்தைச் சொல்லி)
ஏத்த வல்லீர்–ஸ்தோத்திரம் பண்ண வல்லவர்களே!
நாய்கள்–(யம லோகத்திலுள்ள) செந்நாய்களானவை
உம்பை–உங்களை
கவரா–கவர மாட்டா;
(யம கிங்கரர்களும் )
உம்மை–உங்களை
சூலத்தால்–சூலாயுதத்தால்
பாய்வதும் செய்யார்–கத்தவும் மாட்டார்கள்;
நீர்–நீங்கள்
இடை வழியில்–நடு வழியில்
கூறையும்–வஸ்திரத்தையும்
இழவீர்–இழக்க மாட்டீர்கள்

மடி வழி வந்து நீர் புனல் சோர-
யம படரை கண்ட பயத்தால் -ஓர் இந்திரிய விசேஷத்தாலே ஜலம் பிரவஹிக்க

வாயில் அட்டிய கஞ்சியு மீண்டே கடை வழி வாரக் கண்ட மடைப்ப-
பொரிக் கஞ்சியை கொடுத்தால் -கண்டம் அடைக்கையாலே -உள்ளுப் புகாதே
மீண்டும் கடைவழியே வழியா நிற்கும்

கண்ணுறக்கம் ஆவது முன்
தீர்க்க நித்திரை கொள்ளுவதர்க்கு முன்

துடை வழி நும்மை நாய்கள் கவரா –
நாயினத்தொடும் திளைத்திட்டு ஓடியும் உழன்றும் -என்றதற்கு பலம்

சூலத்தால் உம்மை பாய்வதும் செய்யார்
உயிர்களைக் கொன்றேன் -என்று ஆயுதத்தாலே நலிந்ததுக்கு பலம்

இடை வழி யினீர் கூறையும் இழவீர் –
வழியில் நின்று சீரை உரிந்ததுக்கு பலம்

என்று என்று சொல்லி இறே அவர்கள் நலிவது –
இது தப்ப வேண்டி இருந்தீர்களோ ஆகில்

இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே –
இந்திரியங்களை நியமிக்க வல்லவன் என்று -ப்ரீதியோடே கூட
ஸ்தோத்ரம் பண்ணினால் இவை வாரா

யம வச்யதைக்கு அடி இந்திரிய வச்யதை இறே
இதுக்கு சாதனமாக இறே பர ஹிம்சாதிகள் பண்ணுவது
அத்தைக் குலைக்கும் அவன் -என்கிறார்

————

இப்பாட்டில் ஒருக்கால் உபாய வரணம் பண்ணினார்க்கு
சதா பச்யந்தி பண்ணலாம் -என்கிறார் –(ஓர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே)
(ரக்ஷகத்வம் போக்யத்வம் -திரு நாம வைபவம் அருளிச் செய்யும் பிரகாரணம் )

அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை
சங்கம் விட்டவர் கையை மறித்து பையவே தலை சாய்ப்பதன் முன்
வங்கம் விட்டு வுலவும் கடல் பள்ளி மாயனை மது சூதனை மார்பில் தங்க விட்டு வைத்து
ஆவதோர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே -4 -5-6 –

பதவுரை

அவை ஐந்தும்–பஞ்ச பிராணன்களும்
அங்கம் விட்டு–உடலை விட்டு
அகற்றி–அகன்று போக
மூக்கினில்–மூக்கில் (கையை வைத்து)
ஆவி சோதித்த பின்னை–‘பிராணன் இருக்கிறதா இல்லையா’ என்று சோதித்துப் பார்த்து, இல்லை யென்றிந்த பின்பு
சங்கம் விட்டு–(அவருடைய உயிரில்) ஆசையை விட்டு,
(அங்குள்ளாரை நோக்கி, இப்போதை நிலைமை என்? என்று வந்தவர்கள் கேட்க; (அவர்களுக்குப் பதிலாக)
கையை மறித்து–கையை விரித்துக் காட்டி
பைய–மெள்ள மெள்ள
தலை சாய்ப்பதன் முன்னம்–(தங்கள்) தலையைத் தொங்க விட்டுக் கொள்வதற்கு முன்னே,
வங்கம்–கப்பல்களானவை
விட்டு உலவும்–இடை விடாமல் திரியப் பெற்ற
கடல்–கடலில்
பள்ளி–பள்ளி கொள்பவனும்
மாயனை–ஆச்சரிய சக்தி யுத்தனும்
மது சூதனை–மதுவைக் கொன்றவனுமான எம்பெருமானை
மார்பில்–ஹ்ருதயத்தில்
தங்க விட்டு வைத்து–அமைத்து,
ஆவது ஓர் கருமம்–ஸ்வரூபத்துக்குச் சேர்ந்ததொரு (உபாய வரணமாகிற காரியத்தை)
சாதிப்பார்க்கு–ஸாதிக்குமவர்களுக்கு
என்றும்–எந்நாளும்
சாதிக்கலாம்–பலாநுபவம் பண்ணப் பெறலாம்.

அகன்று -என்னுமது அகற்றி என்று கிடக்கிறது
அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி-
பஞ்ச வ்ர்த்தி பிராணன் சரீரத்தை விட்டு அகன்று

ஆவி மூக்கினில் சோதித்த பின்னை –
இவனுக்கு பிராணன் இல்லை என்று அறிந்த பின்பு

சங்கம் விட்டு –
1-இனி இவன் பிழைக்கும் என்னும் ஆசையை விட்டு –
சங்கம் விட்டு -என்று
அன்றிக்கே –
2-சொல்லு சொல்லு என்று சுற்றும் இருக்கிற திரள் குலைந்தது -என்னுதல்
அன்றிக்கே –
3-இவன் பக்கல் சில கிடைக்கும் என்கிற ஆசையை விட்டு -என்னுதல்

அவர் கையை மறித்து-
அங்கு இருந்தவர்களை -அவன் செய்தது என் -என்று வந்தவர்கள் கேட்க –
கையை மறித்து

பையவே தலை சாய்ப்பதன் முன் –
மெள்ள இவன் அருகும் நின்று எழுந்து இருந்து விடப் போய் –
இவனை இழந்த இழவு தோற்ற -கவிழ்தலை இட்டு கிடப்பார்கள் ஆய்த்து

வங்கம் விட்டு வுலவும் கடல் பள்ளி மாயனை-
மரக்கலம் உலவா நின்றுள்ள -கடலில் கண் வளர்ந்து அருளுகிற -ஆச்சர்ய பூதனை –
அன்றிக்கே –
மாயனை -என்றது -ஞானமாய் –
தன் இச்சையால் கண் வளர்ந்து அருளுகிறவன்-என்றபடி
குரை கடல் மேல் அரவணை மேல் குலவரை போல் பள்ளி கொண்டு -என்னக் கடவது இறே

மது சூதனை-
மதுவை நிரசித்தால் போலே ஆஸ்ரித விரோதியைப் போக்குமவனே
வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவணை மேல் துள்ளு நீர் மெள்ள துயின்ற பெருமானே
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் (8-10 )-என்னக் கடவது இறே

மார்பில் தங்க விட்டு வைத்து –
தங்க விடுகை யாவது ஓர் இடத்திலே இருத்துகை

ஆவதோர் கருமம் –
ஸூகரமுமாய்
ப்ராப்தமுமான
ஆத்ம சமர்ப்பணம் –
நம வென்னலாம் கடமை (3-3 )-என்னக் கடவது இறே

சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே-
உபாயம் ஸக்ருத் கர்தவ்யம்
உபேயம் சதா ப்ராப்தவ்யம்
ஆவத்தனம் -என்று ஸக்ருத் சேவித்து இருக்கும் -என்று சதா

(ஸக்ருத்தும் சதாவும்
சாதிப்பாருக்கு ஆத்ம சமர்பணம் செய்பவர்
என்றும் சாதிக்கலாம் -நித்ய கைங்கர்யம்
கீழே 4-2-6 பாசுரம் பார்த்தோம் ஆபத்துக்கு நிதானம் -சேவித்து இருக்கும் வர்த்தமானம் பலம் கிட்டும் )

————

இப்பாட்டில் -விரோதி நிரசன சீலனை அனுசந்திப்ப நித்ய ஸூரிகள் கார்யத்துக்கும்
ஸ்ரீ வைகுண்ட நாதனோடு மன்றாடுவர்கள் என்கிறார் –

தென்னவன் தமர் செப்பமில்லாதார் சேவதக்குவார் போலப் புகுந்து
பின்னும் வன் கயிற்றில் பிணித் தெற்றிப் பின் முன்னாக விழுவதன் முன்
இன்னவன் இனையான் என்று சொல்லி எண்ணி உள்ளத்து இருளற நோக்கி
மன்னவன் மதுசூதனன் என்பார் வானகத்து மன்றாடிகள் தாமே – 4-5 -7-

பதவுரை

செப்பம் இலாதார்–ருஜுவான செய்கை இல்லாதவர்களான
தென்னவன்–தமர் யம கிங்கரர்கள்
சே அதக்குவார் போல–எருதுகளை அடக்கி ஓட்டுபவர்கள் போல
புகுந்து–வந்து,
பின்னும்–அதற்கு மேல்
வல் கயிற்றால்–வலிவுள்ள பாசங்களினால்
பிணித்து–கட்டி
எற்றி–அடித்து
பின் முன் ஆக–தலை கீழாக
இழுப்பதன் முன்னம்–(யம லோகத்துக்கு) இழுத்துக் கொண்டு போவதற்கு முன்னே
மன்னவன் (அந்தத் தென்னவனுக்கும்) மன்னவனான எம்பெருமான்
இன்னவன் இனையான் என்று சொல்லி–இப்படிப்பட்ட ஸ்வரூபத்தையுடையவன், இப்படிப் பட்ட ஸ்பாவத்தையுடையவன் என்று
(அவனுடைய ஸ்ரூப ஸ்வபாவங்களைச் சொல்லி-ஏகாந்த கல்யாண குணங்களை அனுசந்தித்து )
எண்ணி–(அவற்றை) நெஞ்சாலும் மநநம் பண்ணி
உள்ளத்து இருள் அற–ஹ்ருதயத்திலுள்ள (அஜ்ஞாநமாகிற) அந்தாரம் நீங்கும்படி
நோக்கி–(எம் பெருமானை) ஸாஷாத்கரித்து,
மதுசூதனன் என்பார்–(தேஹமுள்ளதனையும்) ‘மதுஸூதநனே’ என்று அவன் திரு நாமங்களையே சொல்லிக் கொண்டிருக்குமவர்கள்
வான் அகத்து–ஸ்ரீவைகுண்டத்திலே
மன்றாடிகள் தாம்–(எம்பெருமானோடே நித்ய ஸூரிகளின் கைங்கரியத்துக்காக) மன்றாடப் பெறுவர்கள்–

தென்னவன் தமர் –
தெற்கு திக்குக்கு கடவனான யமனுடைய சேஷ பூதர்

செப்பமில்லாதார் –
செவ்வை இல்லாதார்
கரண த்ரயமும் அடைவு கெட்டு இருக்கும் அவர்கள்

சேவதக்குவார் போலப் புகுந்து –
எருதுகள் தங்கள் வசப் படுக்கைக்கு -இவற்றின் செருக்கை குலைக்கும்
நீச ஜாதிகளைப் போலே புகுந்து துக்க அனுபவம் பண்ணுவிக்கை

பின்னும் வன் கயிற்றில் பிணித்து
சேவதக்குவார் அடக்கும் பிரகாரம் –
துக்க அனுபவத்துக்கு தங்கள் தர்சன மாத்ரமே அமைந்து இருக்க
பின்னையும் எம படர் -பாசங்களாலே -ஸூரியிலே வரிவாரைப் போலே வரிந்து

எற்றி –
நமன் தமர் செய்யும் வேதனை -என்கிறபடியே
எற்றி

பின் முன்னாக விழுவதன் முன் –
மூக்கும் முகமும் உதடும் பல்லும் தகரும்படி -முகம் கீழ்பட யமபுரத்தளவும் இழுப்பதற்கு முன்னே

இன்னவன் இனையான் என்று சொல்லி எண்ணி-
அவன் இன்னான் என்னும் அதுக்கு ஏகாந்தமான குணங்களை அனுசந்தித்து

உள்ளத்து இருளற நோக்கி
நெஞ்சில் அஞ்ஞான அந்தகாரம் போக பார்த்து

மன்னவன்
தென்னவனுக்கும் மன்னவன் ஆனவன்

மதுசூதனன் என்பார்-
ஆஸ்ரித விரோதிகளை போக்கும் அவன் என்று சொல்லுவார்கள்

வானகத்து மன்றாடிகள்
பரம பதத்தில் நித்ய ஸூரிகள் கார்யத்துக்கும் ஸ்ரீ வைகுண்ட நாதனோடே
மன்றாடுவார்கள் இவர்கள் இறே –

தாமே-
வேறு சஹகாரிகள் இல்லை –

———

மூன்று எழுத்தை உச்சரிப்பார் ஸ்ரீ கௌஸ்துபத்தோபாதி
அவனுக்கு ஆதரணீயர் என்கிறார்

கூடிக் கூடி உற்றார்கள் இருந்து குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து
பாடிப் பாடி யோர் பாடையில் இட்டு நரிப்படைக்கு ஒரு பாகுடம் போலே
கோடி மூடி எடுப்பதன் முன்னம் கௌதத்துவம் உடைக் கோவிந்தனோடு
கூடி யாடிய உள்ளத்தர் ஆனால் குறிப்பிடம் கடந்து உய்யலுமாமே-4 -5-8 —

பதவுரை

(மரணமான பின்பு)
உற்றார்கள்–பந்துக்களானவர்கள்
கூடி கூடி இருந்து–திரள் திரளாகக் கூடியிருந்து கொண்டு
குற்றம் நிற்க–(செத்தவன் செய்த) குற்றங்கள் (பல) கிடக்க (அவற்றை யெல்லாம் விட்டு விட்டு)
நற்றங்கள்–(சிறிது) நன்மையாகத் தோன்றும் படியான கூற்றை
பறைந்து–சொல்லி,
பாடிப் பாடி–(அழுகைப் பாட்டுக்களைப்) பலகால் பாடி
ஓர் பாடையில் இட்டு–ஒரு பாடையிலே படுக்க வைத்து
கோடி மூடி–வஸ்திரத்தை யிட்டு மூடி
நரிப் படைக்கு ஒரு பாகுடம் போல–நரிக் கூட்டத்துக்கு ஒரு பாகுக் குடத்தைப் பச்சையாகக் கொடுப்பதுபோல (இப் பிணத்தைப் கொடுக்கைக்காக,)
எடுப்பதன் முன்னம்–(சுடுகாட்டுக்குக் கொண்டு போவதாக) எடுப்பதற்கு முன்னே,
கௌத்துவம்–கௌஸ்துபத்தை
உடை–(திரு மார்பிலே) உடைய
கோவிந்தனோடு–சர்வ ஸூ லபனான எம்பெருமமான் பக்கலில்
கூடி ஆடிய–சேர்ந்து அவகாஹித்த
உள்ளத்தர் ஆனால்–நெஞ்சை யுடையவர்களாக ஆனால்,
குறிப்பு இடம்–அனுபவித்தே விநாசமாக்கும் யம லோகத்தை
கடந்து–(அதிக்ரமித்து,(பரம பதம் போய்ச் சேர்ந்து)
உய்யலும் ஆம்–உஜ்ஜீவிக்கப் பெறலாம்–

கூடிக் கூடி உற்றார்கள் இருந்து –
இவனுக்கு சரம காலம் வந்தவாறே -பந்துக்கள் எல்லாரும் திரண்டு திரள் திரளாக இருந்து

குற்ற நிற்க நற்றங்கள் பறைந்து-
இவன் பண்ணின பிரதி கூலங்கள் கிடக்க –
அல்ப அனுகூல்யங்கள் ஆனவற்றை சொல்லா நிற்பர்கள் –

மகா ராஜர் வாலி பட்ட அளவிலே அவன் முன்பு பண்ணின பிரதி கூல்யங்களை மறந்து
நான் முற்பட அகப்பட்ட போதே என்னைக் கொல்லலாய் இருக்க கொல்லாதே விட்டவனை இறே
நான் கொல்லுவித்தேன் -என்று அழுதான் இறே –
அத்தைக் கண்டு பெருமாளும் சோகித்தார் இறே

பெருமாள் ராவணன் -பூசல் தலையில் -யுத்த அரங்கத்தில் -நிராயுதனாய் நின்ற படியைக் கண்டு
கொல்லாதே -இன்று போய் நாளை வா -என்றார் இறே

ஸ்ரீ கிருஷ்ணன் கம்சனை நிரசித்த அநந்தரம்-அவன் ஸ்திரீகள் படும் க்லேசத்தை கண்டு –
நான் என்ன கார்யம் செய்தேன் -என்று வெறுத்தான் -இறே

இப்படி எல்லாருக்கும் கிருபை ஜனிக்கும் படி இறே
அத் தசை இருப்பது

பாடி பாடி –
இவர்கள் பிரலாபிக்கும் போது -ஒரு பிரபந்தம் பாடினால் போலே ஆய்த்து இருப்பது

யோர் பாடையில் இட்டு-
ஓர் ஆசந்தியிலே இவனை இட்டு

நரிப்படைக்கு ஒரு பாகுடம் போலே –
நரிப்படை -நரிக் கூட்டம்
பாகுடம் -பாகு குடம்

கோடி மூடி எடுப்பதன் முன்னம்-
கோடிப் புடைவை இட்டு மூடி எடுத்து என்னுதல்
அன்றிக்கே
ஆசந்தியை கோடித்து என்னுதல்
இப்படி செய்வதற்கு முன்னே

கௌத்துவம் உடைக் கோவிந்தனோடு –
இவ் ஆத்ம வர்க்கத்தை தரித்தது -நிரூபகமாய் உடையவன் -சர்வ ஸூலபன்-ஸ்ரீ கிருஷ்ணன் உடன்

கூடி யாடிய உள்ளத்தர் ஆனால்-
ஈஸ்வரனும் சேதனனும் ஓர் நினைவாய் -(சேஷ பூதன் என்று ஒத்துக் கொண்டு -தாஸோஹம் )
அவன் குணங்களில் அவஹாகித்த நெஞ்சை உடையரானால்

குறிப்பிடம் கடந்து-
அவஸ்ய மநுபோக்தவ்யம்-என்கிறபடியே அனுபவ விநாச்யமான தேசத்தைக் கடந்து

உய்யலுமாமே–
உயிரும் தருமனையே நோக்கும் (முதல் திருவந்தாதி)-என்கிற தேசத்து ஏறப் போக பெறுவார்கள் -என்கிறார்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் (4-9-11 )-என்னக் கடவது இறே

———–

இப்பாட்டில்
சர்வ வித பந்துவாக அவனைப் பற்றினால்
பின்னை யம வச்யதை இல்லை என்கிறார்

வாயோரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர் குழிக் கண்கள் மிழற்ற
தாயொரு பக்கம் தந்தை யொரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலத்த
தீ ஒரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண் மாலோடும் சிக்கென சுற்ற
மாயொருபக்க நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே -4- 5-9 –

பதவுரை

வாய்–வாயானது
ஒரு பக்கம் வாங்கி வலிப்ப–(வாயுவினாலே) ஒருக்கடுத்து வலிக்கவும்
வார்ந்த நீர்–பெருகா நின்ற நீரை யுடையதும்
குழி–உள்ளே இடிய இழிந்ததுமான
கண்கள்–கண்ணானது
மிழற்ற–அலமந்து நிற்கவும்,
ஒரு பக்கம்–ஒரு பக்கத்தில்
தந்தை–தகப்பானரும்
தாரமும்–மனைவியும் (இருந்து கொண்டு)
அலற்ற–கதறி அழவும்
ஒரு பக்கம்–மற்றொரு பக்கத்திலே
தீ–நெருப்பானது
சேர்வதன் முன்னம்–(மார்லில வந்து) சேர்வதற்கு முன்னே
செம் கண் மாலொடும்–புண்டரீகரக்ஷனான எம்பெருமானை
சிக்கன சுற்றம் ஆய்–நிருபாதிக பந்துவாகக் கொண்டு
ஒரு பக்கம்–சம்சார பந்து கலசாமல் -அவனொருவனிடத்திலேயே பக்ஷ பாதமாய்
நிற்க வல்லாருக்கு–நிலைத்து நிற்ப வல்லவர் களுக்கு
அரவ தண்டத்தில்–யம தண்டனையில் நின்றும்
உய்யலும் ஆம்–தப்பிப் பிழைக்கப் பெறலாம்–

வாயோருபக்கம் வாங்கி வலிப்ப-
வாத விகாரத்தாலே -வாயானது ஒருக்கடுத்து வலிக்க

வார்ந்த நீர் குழிக் கண்கள் மிழற்ற –
பந்துக்களை விட்டுப் போகிறேன் -என்று இவர்கள் பக்கல் சங்கத்தாலே சிநேகத்தால் அழுகிற அளவிலே –
யம படரைக் கண்டவாறே பயத்தின் கனத்தாலே -கண் உள்ளே இடிய இழிந்து அலமரா (அலமாவா ) நிற்கும்

தாயொரு பக்கம் -இத்யாதி –
தன்னை உண்டாக்கினவர்களும்-தான் உண்டாக்கினவர்களும் -ஓர் ஓர் அருகாக இருந்து கதற –
அநந்தரம் –

தீ ஒரு பக்கம் சேர்வதன் முன்னம் –
ஸம்ஸ்கரிப்பதற்கு முன்னே

செங்கண் மாலோடும் –
வாத்சல்யத்தையும் வ்யாமோகத்தையும் உடைய சர்வேஸ்வரனை

சிக்கென சுற்றமாய்-
நிருபாதிக -சர்வ வித பந்துவாக பற்ற வல்லாருமாய்

ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு –
சம்சாரிகளோடு உறவை கலசாதே அவனே யாக பற்றி நிற்க வல்லார்க்கு

அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே –
யம படரையும் -அவர்கள் குரூரமான தண்டங்களையும் தப்பி –
உஜ்ஜீவிக்கப் போகலாம்

மாதாவினை பிதுவை திருமாலை வணங்குவன் (திரு விருத்தம் )-என்றும்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நல் மக்களும் மேலாத் தாய் தந்தையரும் அவரே –என்றும்
பற்றுவாருக்கு உஜ்ஜீவித்து போகலாம் என்கிறார்

————-

நிகமத்தில் இத் திருமொழி அப்யசித்தவர்கள் ஸ்ரீ யபதி பக்கலிலே
ஸ்ரீ பெரியாழ்வார் பெற்ற வரிசைகளை பெறுவர்-என்கிறார் –

செத்துப் போவதோர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவ பிரான் மேல்
பத்தராய் இறந்தார் பெரும் பேற்றை பாழித் தோள் விட்டு சித்தன் புத்தூர் கோன்
சித்தம் நன்கு ஒருங்கி திருமாலை செய்த மாலை இவை பத்தும் வல்லார்
சித்தம் நன்கு ஒருங்கி திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர் தாமே -4- 5-10 –

பதவுரை

செத்துப் போவது ஓர் போது–இறந்து போகுங் காலத்திலே
செய்கைகள்–(கடுஞ்) செயல்களை
நினைத்து–நினைத்து
தேவ பிரான் மேல்–தேவ பிரான் பக்கலில்
பத்தர் ஆய்–அன்பு பூண்டவர்களாய் இருந்து
இறந்தார்–(பின்பு) இறந்தவர்கள்
பெறும் பேற்றை–அடையக் கூடிய பலன்களைக் குறித்து,
பாழி தோள்–(ஸம்ஸாரத்தை வென்ற) மிடுக்கை யுடைய தோள்களை யுடையவரும்
புத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
கோன்–தலைவருமான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
செய்யும்–(யம படர்களால்) செய்யப் படுகிற
சித்தம்–(தம்முடைய) நெஞ்சை
திருமாலை–திருமால் திறத்தில்
நன்கு–நன்றாக
ஒருங்கி–ஒருபடுத்தி
செய்த–அருளிச் செய்த
மாலை–சொல் மாலையாகிய
இவை பத்தும்–இப் பத்துப் பாட்டுகளையும்
வல்லவர்–ஓத வல்லவர்கள்,
சித்தம் நன்கு ஒருங்கி–(ஆழ்வார்க்குப் போல்) நெஞ்சு ஒருபடிப் படப் பெற்று
திருமால் மேல்–திருமால் பக்கலிலே
சென்ற–குடி கொண்ட
சிந்தை–மநஸ்ஸை
பெறுவர்–உடையராவர்–

செத்துப் போவதோர் போது- செய்யும் செய்கைகள்-நினைந்து-
சரீர அவசான சமயத்தில் -யம படர் செய்கைகளை நினைத்து

தேவ பிரான் மேல் -பத்தராய்
அயர்வறும் அமரர்கள் அதிபதி பக்கலிலே பிரேமத்தைப் பண்ணி

இறந்தார் பெரும் பேற்றை-
பின்பு இறந்தார் பெரும் பேற்றை

பாழித் தோள் விட்டு சித்தன் –
சம்சாரத்தை வென்ற மிடுக்கை உடைய -தோள்களை உடைய ஸ்ரீ ஆழ்வார்

புத்தூர் கோன்-
சரம காலத்தில் இவர்களைப் போலே பக்தி உண்டாகை அன்றிக்கே –
சதா மநோரதம் பண்ணும் நித்ய ஸூரிகளைப் போலே இருக்கிற ஸ்ரீ ஆழ்வாரை
ஸ்வாமியாக பற்றி இருக்கும் -ஸ்ரீ வில்லிபுத்தூரையும் உடையர் ஆனவர்

சித்தம் நன்கு ஒருங்கி திருமாலை செய்த மாலை இவை பத்தும் வல்லார் –
ஆசைவாய் சென்ற சிந்தையராகி -என்கிறபடியே
கரண த்ரயமும் –
புறம்பு போதல் -கலந்து இருத்தல் செய்யாதே
ஸ்ரீ யபதி விஷயமாக செய்த இப் பத்துப் பாட்டையும் அப்யசித்தவர்கள்

சித்த நன்கு ஒருங்கி திருமால் சென்ற சிந்தை பெறுவர் தாமே –
ஸ்ரீ ஆழ்வாரைப் போலே –
கரண த்ரயமும் ஒரு படிப்பட உடையராய்
ஸ்ரீ யபதி பக்கல் சென்ற மனசை உடையர் ஆவார்கள்

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-4–நா அகார்யம் சொல்லிலாதவர் நாள் தோறும்-

July 30, 2021

கீழே
கதிர் ஆயிரம் இரவிலே (4-1 )
சம தம தாதிகளை யுடையராய்
அவனைக் காண வேணும் என்னும் ஸ்நேஹம் யுடையீர்கள் ஆகில்
அவனைக் கண்டார் உளர் என்று காட்டின முமுஷுக்களை உத்தேச்யமாக அநு சந்தித்தார்

மேல் இரண்டு திருமொழியால்
அந்த முமுஷுக்களுக்கு உத்தேஸ்யராய்
சென்றால் குடையாம் -என்கிறபடியே
அழகரைத் தம் மடியில் வைத்து ரக்ஷிப்பாராய்
ஸூரிகளில் தலைவரான திரு அநந்தாழ்வானை அனுசந்தித்து

திரிதந்தாகிலும் -என்கிறபடியே
மாலிருஞ்சோலை என்னும் மலையை யுடைய மலை -என்று
அந்த திருமலையில் ஒரு கொடி முடியாய் நிற்கிற அழகரை அனுசந்தித்தாராய் நின்றார் கீழ்

இதில்
நாவகாரியம் (நா -அ காரியம் நாவுக்கு செய்யத் தகதாதது ) சொல்லாமல்
ஆச்சார்ய கிஞ்சித்க்கார பார தந்தர்யத்தோடே வர்த்திக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய திரிவித ப்ரவ்ருத்தியும்
அவர்களுடைய திரு உள்ளத்துக்கு ஈடாக லோக உபகார ப்ரவ்ருத்தியும்
சிஷ்ய புத்ராதிகளுடைய உஜ்ஜீவனத்துக்கும் ஈடாக கரிய கோலத் திரு உருவைக் காண்பாரையும்
இந் நேர் காணாதாரையும்
உத்தேஸ்ய பிரதிபத்தியும்
நிஷேத பிரதிபத்தியும்
சொல்லுகிறது –

(அன்பிலா மூடர்களை -சேவிக்காதவர்களை நிந்தித்தும்
சேவித்தவர்களை ஸ்லாக்கித்தும் பேசியும் )

————-

நா அகார்யம் சொல்லிலாதவர் நாள் தோறும் விருந்து ஒம்புவார்
தேவ கார்யம் செய்து வேதம் பயின்று வாழ் திருக் கோட்டியூர்
மூவர் காரியமும் திருத்தும் முதல்வனை சிந்தியாத அப்
பாவ காரிகளைப் படைத்தவன் எங்கனம் படைத்தான் கொலோ -4- 4-1 –

பதவுரை

நாவ காரியம்–நாவினாற் சொல்ல வொண்ணாத வற்றை
சொல்லில்லாதவர்–(ஒருநாளும்) சொல்லி யறியாத ஸ்ரீவைஷ்ணவர்கள்
நாள் தோறும்–நாடோறும்
விருந்து ஓம்புவார்–(ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு விருந்தளித்துக் கொண்டும்
தேவர் காரியம் செய்து–பகவதாராதநம் பண்ணிக் கொண்டும்
வேதம்–வேதங்களை
பயின்று–ஓதிக் கொண்டும்-வேதங்களால் சொல்லப்பட்ட பெருமாளை அனுசந்தித்திக் கொண்டும்
வாழ்–வாழுமிடாமன-வாழுமிடமான-நித்ய வாசம் செய்து கண்டு அனுபவிப்பதே வாழ்ச்சி
திருக்கோட்டியூர்–திருக் கோட்டியூரில் எழுந்தருளி யிருப்பவனும்,)
மூவர்–பிரமன், ருத்ரன், இந்திரன் என்ற மூவருடைய
காரியமும்–காரியங்களையும்-வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதிகளையும்
திருத்தும்–செய்து தலைக் கட்டுமவனும்.
முதல்வனை–(எல்லார்க்கும்) தலைவனுமான எம்பெருமானை
சிந்தியாத–நெஞ்சாலும் நினையாத
அ பாவ காரிகளை-அப்படிப்பட்ட (மிகவுங்கொடிய) பாவஞ்செய்த பிராணிகளை
படைத்தவன்–ஸ்ருஷ்டித்தவன்
எங்ஙனம்–எதுக்காக
படைத்தான் கொல் ஓ–ஸ்ருஷ்டித்தானோ! (அறியோம்)-மனம் தளர்ந்து பேசுகிறார்

நா அகார்யம்
நாவுக்கு அகார்யமாவது
1-சப்தங்கள் நாரத்து அளவு பர்யவசிக்கையும்
2-பொய் சொல்லுகையும்
3-பிறருக்கு கிலேச அவஹமான ஹேதுக்களைச் சொல்லுகையும்

நா வாயில் உண்டே –இத்யாதி
அல்லாத திரு நாமங்கள் இடையிலே இளைப்பாற வேண்டும்
கொங்கிலே திருக் குருகைப் பிரான் பிள்ளான் எழுந்து அருளி ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு மாளிகையிலே
விட்ட அளவிலே பிறந்த வார்த்தைகளை ஸ்மரிப்பது

அநந்தாழ்வான் சரம சமயத்திலே -பட்டர் உகக்கும் திரு நாமம் ஏது -என்று கேட்க
அழகிய மணவாளப் பெருமாள் -என்கிற திரு நாமம் என்று சொல்ல
இது பர்த்ரு நாம கிரஹணம் பண்ணுமா போலே இரா நின்றது
ஆகிலும் பட்டர் உகந்த திரு நாமம் அன்றோ என்று
இத் திரு நாமத்தைச் சொன்ன அநந்தரத்திலே திரு நாட்டுக்குப் போந்தான்

உடையவர் எழுந்து இருந்த காலத்திலே வடுக நம்பி அருகே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருளி
ஓம் நமோ நாராயணா என்று இத்தைச் சொல்ல
இத்தைக் கேட்ட வடுக நம்பி நாவை காரியம் என்று எழுந்து இருந்து கடக்கப் போனார்

ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் (உடைய )சரம சமயத்திலே உடையவர் எழுந்து அருளி –
இப்போது திரு உள்ளத்தில் அனுசந்தானம் ஏது -என்று கேட்க
பகவன் நாமங்களாய் இருப்பன அநேகம் திரு நாமங்கள் உண்டு -ஆயிருக்க திருவரங்கம் என்கிற
நாலைந்து திரு அக்ஷரமும் கோப்புண்ட படி என் -என்று நினைந்து இருந்தேன் காணும் என்று அருளிச் செய்ய
அத்தை ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் விரும்பிய திரு நாமம் என்று உடையவர் விரும்பி இருப்பர்

ஏதத் விரதம் மம -என்று ஈஸ்வர ஸங்கல்பம்
யாதானும் பற்றி நீங்கும் விரதம் -சம்சாரிகள் விரதம்
விரதம் கொண்டு ஏத்தும் என்று முமுஷுக்கள் விரதம்
முமுஷுக்களுக்குக் கூறாய் இறே அர்ச்சாவதாரம் இருப்பது –
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே -என்னக் கடவது இறே

எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே –என்று கழித்து
ஆர் எண்ணும் நெஞ்சு யுடையார் அவர் எம்மை ஆள்வார் –என்று அருளிச் செய்தார் இறே (கலியன் )

ஒழிவில் காலம் எல்லாம் அடிமையும் அபேக்ஷித்து (3-3 )
புகழு நல் ஒருவனிலே வாஸிகமான அடிமை செய்து (3-4 )
மொய்ம் மாம் பூம் பொழிலிலே -அடிமையை இழியாதாரை நிஷேதித்து (3-5 )
செய்ய தாமரைக் கண்ணனிலே -பகவத் ஞானத்தை உபதேசித்து (3-6)
பயிலும் சுடர் ஒளியிலே (3-7 )-பண்டே திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டு உகக்கிறார்

நாவ காரியம்
வாழ்த்துவர் பலராக -திருவாய் -3-7-1-
ஸ்ருஷ்டிக்குப் பிரயோஜனம் திரு நாமம் சொல்லுகை இறே

நாவ காரியம்
நாவுக்கு அகார்யமாவது
அஸத்யம் சொல்லுகிற நாக்காலே பகவத் விஷயத்தைச் சொல்லுகை

ஆவியை அரங்கமாலை எச்சில் வாயால் தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்த வாறே என்று
அயோக்கியன் திரு நாமம் சொல்லுகையும் பாப பலம் என்றார் இறே

திருவாகம் தீண்டிற்றுச் சென்று -என்று அவனைப் பார்க்கும் எத்தனையோ –
தன்னைப் பார்க்க வேண்டாவோ என்று திரு உள்ளத்தைக் கர்ஹிக்கிறார் இறே

கொடு மா வினையேன் -என்று
பொய்ந் நின்ற ஞானம் தொடங்கி -நெடுமாற்கு அடிமை அளவும் கர்ம பலம் என்று அனுசந்தித்தார் இறே

சொல்லிலாதவர்
இவை புகுந்து கழியாதவர்

நாள் தோறும் விருந்து ஒம்புவார்
நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ வைஷ்ணவர்களை அப்போது அமுது செய்ய எழுந்து அருளின
ஸ்ரீ வைஷ்ணவர்களைப் போலே ஆதரிப்பார்கள் –

தேவ கார்யம் செய்து
இவர்களுக்கு உகப்பாக பகவத் ஸமாராதனம் பண்ணிப் போருமவர்கள்
திரி தந்தாகிலும் -என்னக் கடவது இறே

வேதம் பயின்று வாழ்
பகவத் பாகவத கைங்கர்யத்துக்கு ஏகாந்தமான பிரதேசங்களை நெருங்க அனுசந்தித்து
வேத ப்ரதிபாத்ய வஸ்துவைக் கண்ணாலே கண்டு அனுபவிப்பவர்கள் –

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர் ஏத்தும் திறன் அறிமின் -என்னக் கடவது இறே

திருக் கோட்டியூர்
இவற்றை நினைத்து இறே இவர் தாம்
அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் அபிமான துங்கன் செல்வனைப் போலே
திரு மாலே நானும் உனக்குப் பழ அடியேன் -என்றது
இவரைப் போலே தம்மையும் அங்கீ கரிக்க வேணும் என்னும்படி இறே இவர்கள் ஏற்றம் –

மூவர் காரியமும் திருத்தும்
அவர்களுக்கு வந்த ஆபத்துக்களைப் பரிஹரிக்கும்
வேத அபஹார குரு பாதக–இத்யாதி
மஹாபலி போல்வார் கையிலே ராஜ்யத்தைப் பறி கொடுக்க -அத்தை மீட்டுக் கொடுக்குக்கையும்
இவை இறே மூவர் காரியமும் திருத்துகை யாவது

முதல்வனை
திருத்துகைக்கு அடி சம்பந்தம்

சிந்தியாத பாவ காரிகளைப்
துர்மானிகளாய் எதிரிட்டுப் போருகிற இவர்கள் தண்மை பாராதே இவர்கள் கார்யம் செய்த
உபகாரத்துக்குத் தோற்று அநுஸந்தியாத பாப கர்மாக்களை

படைத்தவன் எங்கனம் படைத்தான் கொலோ
என்ன ப்ரயோஜனத்துக்குப் படைத்தான் என்று அறிகிறி லோம் இறே

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே -என்று
ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்குமவன் இறே
சோம்பாது இப்பல் உருவை எல்லாம் படர்வித்த –என்னக் கடவது இறே

இப் பாட்டில்
பூர்வ வாக்யம் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் தொழில்
உத்தர வாக்யம் -ஈஸ்வரன் தொழில்
நாவ காரியம் சொல் இல்லாதவர் -என்று நிஷித்த நிவ்ருத்தி
நாடொறும் விருந்து ஓம்புவார் -என்று மாநஸம்
தேவ கார்யம் செய்து -என்று காயிகம்
வேதம் பயின்று வாழ் -என்று வாசிகம்

————

கீழில் பாட்டில் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய அநுகூல விருத்தியை அனுசந்திக்கிறார்

குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய்
செற்றம் ஓன்றும் இலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
துற்றி ஏழ் உலகு உண்ட தூ மணி வண்ணன் தன்னைத் தொழாதார்
பெற்ற தாயர் வயிற்றினை பெரு நோய் செய்வான் பிறந்தார்களே – 4-4- 2-

பதவுரை

குற்றம் இன்றி–ஒரு வகையான குற்றமுமில்லாமல்
குணம்–(சமம், தமம் முதலிய குணங்களை)
பெருக்கி–வளரச் செய்து கொண்டு
குருக்களுக்கு–(தம் தம்) ஆசாரியர்களுக்கு
அனுகூலர் ஆய்–(கைங்கரியம் பண்ணுவதற்குப்) பாங்காயிருப்பவர்களும்
செற்றம் ஒன்றும் இலாத–பொறாமை யென்பது சிறிதுமில்லாதவர்களும்
வண் கையினார்கள்–உதார கையை யுடையவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ்–வாழுமிடமான
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்)
ஏழ் உலகு–ஸப்த லோகங்களையும்
துற்றி–ஒரு கபளமாகத் திரட்டி
உண்ட–அமுது செய்தருளினவனும்
தூ–பழிப்பற்ற
மணி–நீல மணி போன்ற
வண்ணன் தன்னை–நிறத்தை யுடையவனுமான எம்பெருமானை
தொழாதவர்–வணங்காதவர்
பெற்ற (தங்களைப்) பெற்ற–
தாயர்–தாய்மாருமடய
வயிற்றினை–வயிற்றை
பெரு நோய் செய்வான்–மிகவும் கொடுமைப் படுத்தமைக்காக
பிறந்தார்கள்–பிறந்தார்–

குற்றம் இன்றி
குற்றமாவது
தோஷ
குண ஹாநிகள்
அதாவது
கீழில் பாட்டில் சொன்ன நாவ காரியம்

தோஷ குண ஹாநிகள் தான்
அதிகார அனுகுணமாக வேறு பட்டு இறே இருப்பது –

குண ஹாநி யாவது –
அதிகார அனுகுணமாக ஸாஸ்த்ர ஸித்தமான அர்த்தங்களிலே
ஸதாசார்ய நியமனம் உண்டானால் அது செய்யாது ஒழிகை

தோஷம் ஆவது –
இவ் வடைவிலே அவ் வாச்சார்யன் வேண்டா என்றதைச் செய்கை –

அவன் வேண்டா என்றவை தான்
த்யாஜ்யம் என்றும்
நிஷேதம் என்றும்
நிஷித்தம் -என்றும்
நிந்திதம் -என்றும் நாலு வகையாய் இருக்கும்

அதில்
த்யாஜ்யம் ஆவது
ஆச்சார்யன் ஓர் அவஸ்தையிலே செய் என்றத்தை ஓர் அவஸ்தையிலே தவிரச் செல்லுகை

நிஷேதம் ஆவது
வைதம் அல்லாதவற்றிலே அல்பஞ்ஞர் செய்யுமவற்றைக் கண்டு அவன் நிஷேதிக்கச் செய்தே செய்கை

நிஷித்தமாவது
தத் கத தோஷ மாத்ரமாய்
ஸ்நாந மாத்ரத்தாலே ஸூத்தமாகை

நிந்திதமாவது
சரீர அவசான ப்ராயச் சித்தமாய்
புத்தி பூர்வமான பர தார பரிக்ரஹாதிகள்

இப்படிக் குற்றம் தீர்ந்து இருப்பாரைக் கிடைக்குமோ என்னில்
ஆச்சார்யர் பர தந்த்ராவதற்கு முன்புள்ளவை ஆச்சார்யன் ஷமித்த போதே கழியும்
பின்பு அந்த அபிசந்தி விராமம் தன்னாலே செய்யான்
பூர்வமே யுண்டான அபிசந்தி வாஸனை பின்பு நலிந்தாலும் வாசிக கிரியா பர்யந்தமாகச் செய்யான்
(கூரத்தாழ்வான் பிள்ளை பிள்ளான் – மானஸ குற்றம் மட்டும் —
எம்பெருமானார் திருவடிகளே சரணம் சொல்லி விடச்சொல்லிய ஐதிக்யம் )
ச மர்யாதாதி வர்த்தனம் உண்டாய்த்தாகில் தன் அதிகாரத்தை நோக்க அவனுடைய க்ஷமையாலே கழியும் –
யத் ப்ரஹ்ம கல்பேத் யாதி
நாளும் நின்று அடும் நம் பழ வினை உடனே மாளும் -(1-3-8 )-இத்யாதி

இனி நிருபாதிக நிஷேதமாவது
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்க்கை (1-2-) யாகிற
தியாக பிரகார நிர்ணயம் இறே

தோஷ
குண ஹாநிகள் அற்று –

குணம் பெருக்கி
ஸ்வார்த்த நிரபேஷமாக
அவன் சொன்னத்தைச் செய்து
குணத்தை அபி விருத்தமாக்கி

குருக்களுக்கு அனுகூலராய்
குருக்கள் என்கிற பஹு வசனத்தாலே
ஸம்ஸார வர்த்தகரான குருக்கள் அளவிலும் பிரதி கூலியாமல்
லோக அபவாத பீதி பரிஹார அர்த்தமாகவும்
லோக ஸங்க்ரஹதயா கர்த்தவ்யமாகவும்
சிஷ்ய புத்ராதிகளுடைய உஜ்ஜீவன அர்த்தமாகவும்
பேணிக் கொண்டு போரவும் வேணும் இறே

பஹு வசனம் நிவர்த்திக ஆச்சார்யர்கள் அளவிலேயான போது
ஸ்வரூப அனுரூபமாகவும்
மங்கள அனுரூபமாகவும்
ஆரோஹ ரூபமாகவும்
அவரோஹ ரூபமாகவும்
வருகிற குரு பரம்பரா அநு வர்த்தநமாகக் கடவது

குருக்கள் என்ன ஆச்சார்யர்களைக் காட்டுமோ என்னில்
ஆச்சாரோ வேத சம்பன்ன -என்று எடுத்து
குருரித் யபி தீயதே -என்று பர்யாயம் ஆக்கிற்று

இது ஆத்மநி குருஷு பஹு வசனமாய்
மந்த்ர ப்ரதிபாத்யமான ஏக -வகுத்த -விஷயத்தில் ஆன போது
உஜ்ஜீவனமும்
பிரதிபத்தியும்
கிஞ்சித்காரமும்
நித்ய அர்ச்சனையும் சேரக் கிடைக்கும் இறே

அத்ர பரத்ர ச அபி (ஸ்தோத்ர ரத்னம் )
அம்புதத்தைப் பார்த்து இருப்பான் அற்று ( ஞான சாரம் )
அப் பொருள் தேடித் திரிவான் அற்று –
(ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே )

செற்றம் ஓன்று இலாத
செற்றமாவது -பொறாமை -அதாவது
பர ஸம்ருத்ய அஸஹத்வம்

ஒன்றும் இல்லாமையாவது
பர ஸம்ருத்தி தானே ஸ்வ ஸம்ருத்தியாய் இருக்கை

வண் கையினார்கள் வாழ்
வண்மை -ஒவ்தார்யம் –
அதாவது
செய்த அம்சத்தை நினைக்கை அன்றிக்கே
செய்யும் அம்சத்தில் பிரதிபத்தியாய்
பிரிய ஹிதங்கள் செய்யா நிற்கச் செய்தே ஒன்றுமே செய்திலோமே என்று கை மறித்து நிற்கை –

வாழ் –
இது தானே ஸாத்யமாய் இருக்கை

திருக் கோட்டியூர்
ஏவம் பிரகாரரானவர்கள் நித்ய வாஸம் செய்கிற திருக்கோட்டியூரிலே சந்நிஹிதனாய் இருக்கை –

துற்றி ஏழு உலகு உண்ட
துற்றாக முன் துற்றிய தொல் புகழோன் (பெரிய திருமொழி -7-1 )என்னுமா போலே
ஏழு லோகத்தையும் துற்றாக அமுது செய்த

தூ மணி வண்ணன் தன்னைத் தொழாதார்
உண்டார் மேனி கண்டால் தெரியும் இறே
தூயதான நீல ரத்னம் போலே இருக்கிற திருமேனியை யுடையவனை
கரிய கோலத் திரு வுருக் காண்பன் நான் -என்றால் போலே
ஆச்சார்ய ப்ரீதி நிபந்தனமாக இவ் வடைவிலே தொழாதவர் –

பெற்ற தாயர் வயிற்றினை பெரு நோய் செய்வான் பிறந்தார்களே
இவனைப் பெறுவதற்கு முன்பு பட்ட வியசனம் அல்பம் என்னும்படி காணும்
இவன் பிறந்து தொழுகைக்கு யோக்யனாய் இருக்கச் செய்தேயும் தொழாமையாலே இவளுக்கு வந்த வியசனம்

இவனைக் காணும் தோறும் காணும் தோறும் வயிற்று எரி மண்ட அடித்துக் கொள்ளும் படி
இவர்கள் அடியாக வரும் வியசனம் ஆகையாலே
பெரு நோய் செய்வான் பிறந்தார்களே -என்கிறார்

மா அஜ நிஷ்டே–இத்யாதி (பிறக்காதவனுக்கு சமம் )
பெரு நோய் -மீளாத வியாதி

தொழுவார்க்கு இத்தனை அடைவு வேணும் போலே காணும் –

—————–

தொழுவார்களுக்கும் தொழாதவர்களுக்கும் உள்ள நன்மை தீமைகளை அனுசந்தித்தார் கீழ்ப் பாட்டில்
இதில் திரு நாமங்களை எண்ண யோக்யராய் இருக்கச் செய்தே
எண்ணாதவர்களுடைய அநர்த்தம் கண்டு வெறுக்கிறார் –

வண்ண நன் மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும்
திண்ணை சூழ் திருக் கோட்டியூர் திருமாலவன் திரு நாமங்கள்
எண்ணக் கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ண கிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக் கவளம் உந்துகின்றார்களே -4-4-3 –

பதவுரை

நல் வண்ணம்–நல்ல நிறத்தை யுடைய
மணியும்–ரத்நங்களையும்
மரகதமும்–மரகதகங்களையும்
அழுத்தி–(ஒழுங்கு பட) இழைத்ததனால்
நிழல் எழும்–ஒளி விடா நின்றுள்ள
திண்ணை–திண்ணைகளாலே
சூழ்–சூழப் பெற்ற
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் எழுந்தருளி யிருக்கிற)
திருமால் அவன்–திரு மா மகள் கொழுநனுடைய
திரு நாமங்கள்–திரு நாமங்களை
எண்ண–(ஒன்று, இரண்டு என்று எண்ணுகைக்கா
கண்ட–படைக்கப் பட்ட
விரல்களால்–விரல்களாலே (அந்தத் திருநாமங்களை)
இறை பொழுதும்–க்ஷண காலமும்
எண்ண இலாது–எண்ண மாட்டாமல்
போய்–புறம்பே சென்று
உண்ணக் கண்ட–(சரீர போஷணார்த்தமாக) உண்ணா நின்ற
தம்–தங்களுடைய
நம் ஊத்தை வாய்க்கு–அசுத்தமான வாயிலே
கவளம்–சோற்றுத் திரள்களை
உந்துகின்றார்களே–(அவ் விரல்களினால்) தள்ளா நின்றார்களே!
(இதென்ன கொடுமை.!)-

வண்ண நன் மணியும் மரகதமும் மழுத்தி நிழல் எழும்
திண்ணை சூழ் திருக் கோட்டியூர் திருமாலவன் திரு நாமங்கள்
நன்றாக வர்ணத்தை யுடைத்தான ரத்னங்களும் அப்படிப்பட்ட மர கதமும்
அழுத்தி நிழல் எழும் படி கைப் பணி இட்டுத் திருத்தின சுவரிலே ரத்னங்கள் ப்ரதி பிம்பிக்கும் படி
மாடங்களுக்கு அலங்காரமான திண்ணைகளாலே சூழப்பட்ட திருக்கோட்டியூரிலே

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் -என்னுமா போலேயும்
திரு விழவில் மணி அணிந்த திண்ணை( 7-8 ) -என்னுமா போலேயும்
சொக்க நாராயணர் திரு நாள் தோறும் அலங்கரிப்பர்கள் இறே –
அங்கே நித்ய வாஸம் செய்கிற ஸ்ரீ மானான சொக்க நாராயணருடைய திரு நாமங்களை –

எண்ணக் கண்ட விரல்களால்
அசாதாரணமான திரு நாமங்களை அர்த்த ஸஹிதமாக
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு
ஒள்ளியான் உணர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் (9-10 )-என்று
ஆழ்வார் அனுசந்தித்த திரு நாம வி சேஷங்களை
வாஸ்யத்துக்கு வாசகமாகவும் –

மன்னு நாரணன் நம்பி -என்று
வாசகத்துக்கு வாஸ்யமாகவும்

தேனும் பாலும் என்னும் படி நிரதிசய போக்யமான திரு நாமங்களை எண்ணி ஜபித்து
ப்ரதிஜ்ஜை தலைக்கட்டி விடுகை அன்றிக்கே
பேரும் ஓர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான் -என்கையாலே
கால தத்வம் உள்ளதனையும் விரல் மடக்கி எண்ணா நின்றால்
எண்ணின இடமும் எண்ணும் இடமும் அஸங்க்யாதமாய் இருக்கை —

அவனுடைய ஆநந்தத்தை அப்ராப்ய மனஸா ஸஹ -என்னாமல் ஒரு நியாயத்தாலே அளவிட்டாலும்
ஆனந்தாவஹமான திரு நாமங்களை எங்கனே அளவிடலாவது –

நீராய் நிலனாய் என்கிற சாதாரண நாமங்களை உபேக்ஷித்து மீளலாம்
எப்பொழுதான அப் பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதான திரு நாமங்களை எண்ணி எண்ணி
துல்ய விகல்பம் செய்து அவன் தன்னை
முடிச் சோதிப் படியே அனுபவிக்குமா போலே அவன் ஸ்வரூப ரூப குணங்களுக்கு வாசகமான
திரு நாமங்களையும் அனுபவிக்கும் அத்தனை இறே

தலையும் கையும் வணங்கவும் அஞ்சலி பண்ணவும் கண்டது -என்னுமா போலே
விரல் கண்டதும் திரு நாமம் எண்ணுகைக்கு என்று இருக்கிறார்
கரண ஸ்வ பாவங்களைச் செய்யலாவது இல்லை இறே

இறைப் பொழுதும் எண்ண கிலாது போய்
அத்யல்ப காலமும் என்னாது ஒண்ண இருக்க ஒண்ணாத திரு நாமங்களை
அத்யல்ப காலமும் எண்ணவும் எண்ணாமல் போவதே

உண்ணக் கண்ட தம் மூத்தை வாய்க்கு கவளம் உந்துகின்றார்களே
போஜன நியதி பண்ணி அதிகார அனுகுணமாக உண்ணக் கண்ட வாயால் க்ரமத்தில் உண்ணாமல் –

ஷூத் அதிசய ஸுஷ்டவங்களாலே
கடமுண்டார் கல்லாதவர் -என்கிறபடி
ஊத்தைமாசேறும் படி ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின் எண்ணாத விரல்களால் கவளம் உந்துகிறது
பகவத் பாகவத ஆச்சார்ய விசேஷங்களுக்கு என் செய்வாராகத் தான்
உத்தமர்கட்க்கு என் செய்வார் -என்னக் கடவது இறே

பரமன் பவித்ரன் சீர் வாய் மடுத்துப் பருகிக் களித்தவர் தொண்டர்க்குச்
சொன்ன மாலை அமுது உண்ணக் கண்ட வாயால்
அது உண்ணாமல் ஊத்தைக் கவளம் உந்துவதே
தொண்டு பட்டுச் சொன்ன மாலை அமுது உண்கைக்குக் ஹேதுவாகத் தீர்த்த ப்ரஸாதங்களாலே
தேஹ தாரணம் செய்கை தானும் அரிதாவதே -என்று மிகவும் வெறுத்து அருளுகிறார் –

இத்தால்
பக்தி ரூபா பன்ன ஞான ப்ரகாச ரத்னமான
செல்வ நம்பி
திருக்கோட்டியூர் நம்பி போல்வார்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நிழல் கொடுத்துக் கொண்டு வர்த்திக்கும் தேசம் என்றதாய்த்து
செழு மா மணிகள் சேரும் -என்னுமா போலே –

———

இஷ்டப் பிராப்தி அறியாதாப் போலே
அநிஷ்ட நிவ்ருத்தியும் அறியாது ஒழிவதே என்கிறார் இப் பாட்டில் –

உரக மெல் அணையான் கையில் உறை சங்கம் போல் மட வன்னங்கள்
நிரை கணம் பரந்து ஏறும் செம்கமல வயல் திருக் கோட்டியூர்
நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிட சாதியர்
பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தன தான் கொலோ -4 4-4 –

பதவுரை

உரகம் மெல்–திருவனந்தாழ்வானை ஸுகுமாரமான
அணையான்–படுக்கையாக வுடைய எம்பெருமானது
கையில் உறை–திருக் கையில் உள்ள
சங்கம் போல்–ஸ்ரீ பாஞ்ச ஜந்யம் போல் (வெளுத்த)
மட அன்னங்கள்–மடப்பம் பொருந்திய ஹம்ஸங்களானவை
ஏறும்–ஏறி யிருக்கப் பெற்ற
செம் கமலம்–செந்தாமரை மலர்களை யுடைய
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்)
நரகம் நாசனை–(தன்னடியார்க்கு) நரக ப்ரவேசத்தை ஒழித்தருளுமவனமான எம்பெருமானை
நாவில் கொண்டு–நாவினால்
மானிட சாதியர்–மநுஷ்ய ஜாதியிற் பிறந்தவர்கள்
பருகும்–குடிக்கின்ற
நீரும்–தண்ணீரும்
உடுக்கும்–உடுத்துக் கொள்ளுகிற
கூறையும்–வஸ்திரமும்
பாவம் செய்தன தான் கொல் ஓ–பாவஞ்செய்தனவோ தான்!:-

உரக மெல் அணையான்
திருவனந்த ஆழ்வானை மிருதுவான படுக்கையாக யுடையவன்
சைத்திய மார்த்வ ஸுரப்யங்கள் ப்ரக்ருதியாய் இருக்கும் இறே -ஸர்ப்ப ஜாதிக்கு
ஆகையால் இறே திருவனந்த ஆழ்வான் தான் சேஷியான ஸர்வேஸ்வரனுடைய திருமேனியின்
மார்த்வ அனுகுணமாக இந்த வடிவைக் கொண்டு திருப்படுக்கையாய் இருக்கிறது
அங்குப் பள்ளி கொண்டு அருளுகிறவனுடைய திரு நாமம் உரக மெல்லணையான் என்று இறே
பரமபதம் திருப்பாற் கடல் விட அத்யந்த அபிமதம் இங்கே தானே

கையில் உறை சங்கம் போல்
கை வண்ணம் தாமரை -என்ற
திருக்கையிலே நித்ய வாஸம் செய்கிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே

மட வன்னங்கள் நிரை கணம் பரந்து ஏறும் செம்கமல வயல் திருக் கோட்டியூர்
நெல்லை மிகித்துக் கிளம்பின செந்தாமரை வயல்களிலே ஒன்றுக்கு ஓன்று பவ்யமான அன்னங்கள்
திரண்டு ஒழுங்கு பட நிறைந்து ஆமிஷார்த்தமாக நாநாவான வலைகளுக்குத் தப்பின ஜல சரங்களும் தப்பாத படி
பரந்தேறி ஜீவிக்கும் வயல்களை யுடைத்தான திருக் கோட்டியூரிலே பள்ளி கொண்டு அருளா நிற்கிற

நரக நாசனை
நரக நாசனை நாவில் கொண்டு அழைப்பாருக்கு
பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும்படி (திருமாலை ) பண்ணுகிற நரக நாசனை

நாவில் கொண்டு அழையாத மானிட சாதியர்
அஹ் ருதயமாகச் சொல்லுகிற கட படாதி ஸப்தம் போலாகிலும் நாவால் சொல்லி
அநிஷ்ட நிவ்ருத்தி பண்ணிக் கொண்டு வர்த்திக்க மாட்டாமல்
பெறுதற்கு அரிதான மனுஜ்ய ஜாதியில் பிறந்தவர்கள் –

பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தன தான் கொலோ
குடிக்கிற தண்ணீரும்
உடுக்கிற புடைவையும்
உடுக்கிறவன் தானும்
என்ன என்ன பாபங்களை செய்தானோ என்று வெறுத்து அருளுகிறார் –

குடிக்கிற தண்ணீருக்கும் உடுக்கும் கூறைக்கும் ஸாஸ்த்ர வஸ்யதை உண்டாகில் அன்றோ பாபம் வருவது
ஆயிருக்க ஸாஸ்த்ர வஸ்ய யோக்யனாய் இருக்கச் செய்தேயும்
அயோக்யனான பாபியோட்டை ஸ்பர்சம் சேதனம் அசேதனம் என்று பாராதே இறே

ஜலே ஜீவாஸ் ஸ்த்தலே ஜீவா -என்றும்
அனோர் அணீயான் -என்றும்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் -என்றும் சொல்லுகையாலே
அத்யந்தம் ஸூஷ்மமான விஸிஷ்ட ஜந்துக்கள் உண்டாக
வேதாந்தங்களை ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அருளிச் செய்கையாலே
பாப விமோசன அர்த்தமாக ஜாதமான அல்ப ஜந்துக்களை
பாப வர்த்தகன் ஸ்பர்சிக்கையாலே

இதுக்கு அடி
இவற்றுக்குப் பூர்வமேவ உண்டான பாபம் அத்தனை இறே

ஏத்த வல்லார் திரிதலால் தவமுடைத்துத் தரணி தானே (பெருமாள் திரு மொழி -10-5 ) என்று
நல்லவர்களால் அசேதனமான பூமிக்கு நன்மையைக் கற்பியா நின்றால்
இதுக்குச் சொல்ல வேண்டா இறே

குந்தோவா
ஊனேறு -இத்யாதிகளில்
பகவத் பாகவத ஸ்பர்சம் உள்ளவை ஞானாதிகருக்கும் பகவத் விவசர்க்கும்
உத்தேச்யமாகா நின்றால்
இதர ஸ்பர்சம் உள்ளவை சத்துக்களுக்கு
நிஷேத நிஷித்த நிந்திதங்கள் என்று மிகவும் தோன்றும் என்று கருத்து –

இத்தால்
ஸூரிகள் ஒரு புடைக்கு ஒப்பாம் படி (உரக மெல் அணையான் கையில் உறை சங்கம் போல்)
சார க்ராஹிகளாய் (மட வன்னங்கள்)-
ஸூத்த ஸ்வாபவரான முமுஷுக்கள்
சிஷ்ய ஆச்சார்ய முறைமை குன்றாமல் அஹம் அன்ன யோக்யராய் இருக்கச் செய்தேயும்
ஸுமநஸ்யம் விஞ்சினவர்கள் வசிக்கிற தேசத்தில் உண்டான குண விசேஷங்களைக் கண்டு
(அதிலே மக்நராய் விரும்பார்கள் என்றும் )
அதிலே மக்நரான ஸம்ஸாரிகளையும் போக்யமாக விரும்புவார்கள் என்று காட்டுகிறது
(அவன் இவர்கள் இடம் உகந்து இங்கு வாழ்வதாலேயே மாறுவார்கள் என்று விரும்புவார்கள் )
(நாமம் செல்லாதவார்களை -விரும்பார் -பாட பேதம் )

———–

ஊண் மாறி அடைக்கிறார்

ஆமையின் முதுகத்திடை குதி கொண்டு தூ மலர் சாடிப் போய்
தீமை செய்து இள வாளைகள் விளையாடு நீர்த் திருக் கோட்டியூர்
நேமி சேர் தடம் கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடை
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கி புல்லை திணிமினே -4 -4 -5-

பதவுரை

இள–இளமை பொருந்திய
வாளைகள்–‘வாளை’ என்னும் மீன்கள்
ஆமையின்–ஆமைகளினுடைய
முதுகத்திடை–முதுகின் மேல்
குதி கொண்டு–குதித்துக் கொண்டும்
தூ மலர்–நல்ல புஷ்பங்களை
சாடிப் போய்–உழக்கிக் கொண்டும்
தீமை செய்து–(க்ஷுத்ர ஜந்துக்களைக் கலக்கி ஒட்டுகையாகிற தீம்புகளைச் செய்து கொண்டும்
விளையாடு–விளையாடுமிடமான
நீர்–நீரை யுடைய
திருக் கோட்டியூர்– திருக்கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்)
நேமி–திருவாழி யாழ்வானோடு
சேர்–சேர்ந்திருக்கிற
தட–பெரிய
கையினானை–திருக் கையை யுடையனுமான எம்பெருமானை
(கீழ் பாஞ்ச ஜன்யம் இங்கு திரு ஆழி ஆழ்வான் )
நினைப்பு இலா–(ஒரு காலும்) நினையாத
வலி நெஞ்சு உடை–கடினமான நெஞ்சை உடையவர்களும்
பூமி பாரங்கள்–பூமிக்குச் சுமையாயிருப்பவர்களுமான பாவிகள்
உண்ணும்–உண்கிற
சோற்றினை–சோற்றை
வாங்கி–பிடுங்கி விட்டு, (எறிந்து)
புல்லை–(அறிவற்ற பசுக்களுக்கு உண்வான) புல்லைக் கொண்டு
திணிமின்–(அவர்கள் வயிற்றைத்) துற்று விடுங்கள்-
(ஞான ஹீனர் பசு பிராயர் -புல்லைத் தானே கொடுக்க வேண்டும் )

இள வாளைகள்
நாளால் இளைய வாளை என்கிற மத்ஸ்யங்கள்

ஆமையின் முதுகத் திடை குதி கொண்டு
ஆமையினுடைய நடு முதுகில் குதித்து அதில் நில்லாமல்

தூ மலர் சாடிப் போய்
போது அலர்ந்த செவ்வி தாமரையிலே இதழ் மடியும்படி
பின்னையும் குதித்துப் போய்

தீமை செய்து விளையாடு
தஜ்ஜாதியோடே தீமை செய்து விளையாடும்படியான

நீர்த் திருக் கோட்டியூர்
நீரை யுடைத்தான திருக்கோட்டியூரிலே நித்ய வாஸம் செய்வானாய்

நேமி சேர் தடம் கையினானை
திருவாழி பொருந்தப் பிடித்த பெரிய திருக்கையை யுடையவனை
அலம் புரிந்த நெடும் தடக்கையை யுடையவனை

நினைப்பிலா வலி நெஞ்சுடை பூமி பாரங்கள்
நினைப்பில்லாத அளவே அன்றிக்கே
நிபுண ஆச்சார்யர்கள் ஸதா த்யேய வஸ்து காண் -என்று அறிவித்தால்
ஓம் காண் எனக்கு நினைவுக்கு வேறே விஷயம் இல்லையோ -என்னும்படி
வலிதான நெஞ்சை யுடைய க்ருதக்நராய் பூமிக்குப் பாரமானவர்கள்
பூமி தான் ந பாரம் ஸப்த ஸாகரா -இவர்களே எனக்குப் பாரம் என்னும் இறே

இவர்கள்
உண்ணும் சோற்றினை வாங்கி புல்லை திணிமினே
உண்ணும் சோறு -மிக்க பசியோடு வாயில் இட்ட சோறு
அத்தை வாங்கி
மிருகங்கள் தின்கிற புல்லைத் திணியுங்கோள்-என்றது
இவன் தின்னேன் என்றாலும் திணியுங்கோள்-என்ற படி –

திணித்தாலும் இவன் மென்று இரக்க வேண்டாவோ என்னில்
உங்கள் பூர்வர்கள் இப்படி காண் போந்த படி என்று இவர்களை இசைவித்து
வாங்கின சோற்றை அந்த மிருகங்களுக்கு இடுங்கோள்
மிருகங்கள் இட்டவனை அறிந்து வச வர்த்தியாய் வருமே
இவர்கள் இட்டவனையும் அறியார்கள்
இடுகிற ஜீவன வாசியும் அறியார்கள்
வாசி அறிந்தவர்களைப் பார்த்து இறே திணியுங்கோள் என்கிறது

இத்தால்
தம் தாமுடைய கடாக்ஷ விசேஷங்களாலே தம் தாமுக்கு ஆஸன்ன வர்த்திகளான
சிஷ்ய புத்ராதிகளை உஜ்ஜீவிப்பிக்க வல்ல ஆச்சார்யர்கள்
தம் தாமுடைய நினைவாலே தூரஸ்தரான சிஷ்ய புத்ரர்களை உஜ்ஜீவிக்கும் படி வல்லரானவர்களையும்
ஸூமானாக்களையும் கூடி பிரிந்து இருக்கச் செய்தேயும் அவர்களுடைய நீர்மையை விஸ்வஸித்து
ஸன்மர்யாத அதிவர்த்தந நிஷ் ப்ரயோஜன வியாபார போகிகளான பிரகாரத்தைக் காட்டுகிறது –

(ஆச்சார்யர்கள் -(பெரிய வாளை )-கடாக்ஷத்தாலே அருகில் உள்ள -சிஷ்யர் புத்திரர் -(ஆமை )
தூரஸ்தர் -சிஷ்யர் புத்திரர் -மனசால் வாழ்த்தி -மலர்ந்து மணம் பரப்பும் தாமரை ஆச்சார்யர்கள் -ஸூ மநாக்கள்
ஷூத்ர ஐந்து -ஸன்மர்யாத அதிவர்த்தந வியாபாரம் நிஷ் ப்ரயோஜன வியாபாரம் -உள்ளவர்
இவர்களை ஓட்டுவதே போகம் ஆகிய விளையாட்டு )

———–

கீழ்ப்பாட்டில்
நினைப்பிலா வலி நெஞ்சுடை பூமி பாரங்கள்-என்று
அவைஷ்ணவர்கள் ஹேயதையைச் சொல்லிற்று
இதில்
ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ஏற்றம் சொல்லுகிறது –

பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று எத்துவாரகள் உழக்கிய
பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே – 4-4-6-

பதவுரை

பூதம் ஐந்தொடு–பஞ்ச பூதமாகிய சரீரத்தினாலும்
ஐந்து வேள்வி–பஞ்ச மஹா யஜ்ஞங்களினாலும்
ஐந்து புலன்கள்–(சப்தம் முதலிய) ஐந்து விஷயங்களினாலும்
(ஐந்து) பொறிகளால்
பஞ்சேந்திரியங்களினாலும் (ஸம்பவிக்கக்கூடிய)
ஏதம் ஒன்றும் இலாத–குற்றமொன்றுமில்லாதவர்களும்
வண் கையினார்கள்–உதாரணமான கைகளை யுடையவர்கள்
வாழ்–வாழ்விடமான
திருக்கோட்டியூர்–திருக்கோட்டியூரில் எழுந்தருளி யிருப்பவனும்)
நாதனை–(எமக்கு) ஸ்வாமியும்
நரசிங்கனை–நரஸிம்ஹ ஸ்வரூபியுமான எம்பெருமானை
நவின்று–அநுஸந்தித்து
ஏத்துவார்கள்–துதிக்குமவரான பாகவதர்கள்
உழக்கிய பாதத் துளி–திருவடிகளினால் மிதித்தருளின தூளினுடைய
படுதலால்–ஸம்பந்தத்தினால்
இ உலகம்–இந்த லோகமானது
பாக்கியம் செய்தது–பாக்யம் பண்ணினதாகக் கொள்ளப்படும்–

பூதம் ஐந்தோடு
மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம் புண்ணார் ஆக்கை
தத்வம் -இருபத்து நாலு
இதில் ஏழு பிரதானம்
இந்த ஏழிலும் ஐந்து பிரதானம்
இது எல்லா மதங்களுக்கும் ஒக்கும்

வேள்வி ஐந்து
பஞ்ச மஹா யஜ்ஞங்கள்

புலன்கள் ஐந்து
இந்திரியங்கள் ஐந்து

பொறிகள் ஐந்து
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி

ஏதம் ஒன்றும் இலாத
இவற்றோடு கூடி இருக்கச் செய்தே
தோஷம் இன்றிக்கே இருக்கை

பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால் ஏதம் ஒன்றும் இலாத
ஸத்வ ரஜஸ் தமஸூக்களோடே கலசி இறே ப்ரக்ருதி இருப்பது
ஸத்வத்துக்கு நிவ்ருத்தி குணம்
தமஸ்ஸூக்கு ப்ரவ்ருத்தி குணம்

முன்பு விஹிதத்தில் நிவ்ருத்தியும் நிஷித்ததில் ப்ரவ்ருத்தியுமாய்ப் போருமாகை இறே
அக்ருத்ய கரணத்திலும் க்ருத்ய அகரணம் க்ரூரம் ஆகிறது –
அக்ருத்ய கரணத்துக்கு
தேச தோஷத்தாலும் தேஹ தோஷத்தாலும் கூடும் என்று அனுக்ரஹத்துக்கு விஷயம் உண்டு
கீழ் தனக்கு அடைத்தது செய்யாத போது நிக்ரஹம் கனத்து இருக்கும்

நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்று
அநாத்ம குண பூர்த்தியையும்
ஆத்ம குண கந்தம் இல்லாமையையும் அருளிச் செய்தார் இறே

சத்வம் விஞ்சின போது மற்றை இரண்டும் சத்வத்தின் வழியே வரும்
அப்போது நிவ்ருத்தி நிஷித்ததிலும் பிரவ்ருத்தி விஹிதத்திலும் கிடக்கும்
அதாவது
தனக்கும் பிறர்க்குமாய்ப் போந்தவன் இரண்டுக்கும் பிராயச்சித்தம்
பகவத் பாகவத விஷயங்களிலே அந்வயிக்கும்

தனக்கு என்று இருக்கை -ஏதம்
ஈஸ்வரனுக்கு என்கை ஏதம் இன்றிக்கே இருக்கை
ஏதம் ஒன்றுமே இருக்கையாவது -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு என்று இருக்கை

வேதம் ஐந்து ஏதம் ஒன்றும் இல்லாத
ஸ்வர்க்காதி சாதனமாக அனுஷ்டிக்கை -ஏதம்
மோக்ஷ சாதனமாக அனுஷ்டிக்கை -ஏதம் இன்றிக்கே இருக்கை
பகவத் பாகவத ப்ரீதி என்று அனுஷ்டிக்கை -ஏதம் ஒன்றும் இன்றிக்கே இருக்கை யாவது –

புலன்கள் ஐந்து ஏதம் ஒன்றும் இலாத
இந்திரியங்களை இதர விஷயங்களில் மூட்டுகை ஏதம்
பகவத் விஷயத்தில் மூட்டுகை ஏதம் இன்றிக்கே இருக்கை
பாகவத விஷயத்தில் மூட்டுகை -ஏதம் ஒன்றும் இன்றிக்கே இருக்கை யாவது

பொறிகள் ஐந்தும் ஏதம் ஒன்றும் இலாத
ஸப்த ஸ்பர்ச ரூப ரஸங்களைத் தனக்கு என்று இருக்கை ஏதம்
இவற்றை பகவத் விஷயத்துக்கு என்று இருக்கை -ஏதம் இன்றிக்கே இருக்கை
பாகவத விஷயத்துக்கு என்று இருக்கை -ஏதம் ஒன்றும் இன்றிக்கே இருக்கை —

வண் கையினார்கள் வாழ்
வண்மை -ஒவ்தார்யம் –
அதாவது
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றை வாங்கி
அப்பதார்த்தங்கள் நசியாத படி வாங்குகையும்
இவற்றை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குக் கொடுக்கையும்

ஈஸ்வரனையும் உள்படப் பறித்து இறே பாகவத கைங்கர்யம் பண்ணிற்று திரு மங்கை ஆழ்வார்
அதற்கு உபாயமாக இறே ஈஸ்வரன் திரு மந்த்ரத்தை உபதேசித்தது

துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றைத் தான் துற்றியது எற்றனவும் -என்று
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இடாதே தான் உண்டான் என்று இறே ஆழ்வார் கர்ஹித்தது

பொதுவாக யுண்பதனைப் புக்கு நீ உண்டக்கால் சிதையாரோ உன்னோடு என்று
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானையும் உட்பட கர்ஹித்தார்கள் இறே பெண்கள்

அவ்வளவு அன்றிக்கே
சாதி கோட்டியுள் கொள்ளப் படுவார் என்கிறபடியே
தங்கள் திரளில் கூட்டாதே பாஞ்ச ஜன்யத்தை பத்ம நாபனோடே இறே கூட்டி விட்டது

அவதாரத்தில் உண்ட இழவு தீர இறே
அர்ச்சாவதாரத்தில் அமுது செய்தால் போலே குறையாமல் கொடுக்கிறது

வாழ்
கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் –

திருக் கோட்டியூர் நாதனை நரசிங்கனை நவின்று எத்துவாரகள் உழக்கிய
ஸ்ரீ வைகுண்ட நாதன்
ஸ்ரீ திருப்பாற் கடல் நாதன் -என்பதிலும்
திருக் கோட்டியூர் நாதன் -என்கை இறே ஏற்றம்

நாதனை -என்றது
சொக்க நாராயணரை

நரசிங்கனை-என்றது
தெற்கு ஆழ்வாரை

மார்வு இரண்டு கூறாகக் கீறிய கோளரியை வேறாக ஏத்தி இருப்பவர்கள் இறே இவர்கள்

ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானைத் திரு நாமம் சொல்ல ஓட்டேன் என்ற வாய் தகர்த்து இறே மார்பு இடந்தது –

பாத தூளி படுதலால்
அனுபவ ஜெனித ப்ரீதிக்குப் போக்கு விட்டு ஸஞ்சரிக்கிற
தூளி படுதலால்

இவ்வுலகம்
நினைப்பிலா வலி நெஞ்சுடைப் பூமிப் பாரங்கள் வர்த்திக்கிற லோகம்

பாக்கியம் செய்ததே
திரு உலகு அளந்த திருவடிகளில் தூளி பட்டது அன்று பாக்யம்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ பாத தூளி பட்டதே பாக்யம்
கல்லைப் பெண்ணாக்கி
சரீரத்தைப் பூண் கட்டிற்று அத்தனை இறே அவன் திருவடிகள்
கடல் வண்ணன் பூதங்கள் ஸ்ரீ பாத தூளி பட்டதால்
போயிற்று வல்லுயிர்ச் சாபம் -என்று ஸ்வரூபத்தைப் பற்றி வரும் விரோதிகளும் போம் இறே
பேர்த்த கர நான்குடையான் திருவடி படுவதிலும்
பேரோதும் தீர்த்த கரர் ஸ்ரீ பாதம் படுகை இறே பாக்யம் –

———–

குருந்தம் ஓன்று ஒசித்தானோடும் சென்று கூடி யாடி விழா செய்து
திருந்து நான் மறையோர் இராப் பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்
கரும் தட முகில் வண்ணனை கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள்
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ – 4-4-7-

பதவுரை

திருந்து–(எம்பெருமான் ஸ்வரூபங்களைப் பிழையறக் கூறுகையாகிற) திருத்தத்தை யுடைய
நால் மறையோர்–நான்கு வேதங்களையுமோதின ஸ்ரீவைஷ்ணவர்கள்
ஒன்று குருத்தம்–ஒரு குருத்த மரத்தை
ஒசித்தானோடும்–முறித்தருளின கண்ண பிரானை
சென்று கூடி–சென்று சேர்ந்து
ஆடி–(அவனுடைய குணங்களிலே) அவகாஹித்து
விழாச் செய்து–(விக்ரஹ ஸேவையாகிற) உத்ஸவத்தை அநுபவித்துக் கொண்டு
இரா பகல்–இரவும் பகலும்
ஏந்தி–மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு
வாழ்–வாழுமிடமான
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளியிருப்பவனும்,)
கருந்தட–கறுத்துப் பெருத்த
முகில்–மேகம் போன்ற
வண்ணனை–நிறத்தை யுடையனுமான எம்பெருமானைக் குறித்து
கடைக் கொண்டு–நைச்சியாநுஸந்தானத்துடன்
கை தொழும்–அஞ்ஜலி பண்ணா நின்றுள்ள
பக்தர்கள்–பக்தியை யுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள்
இருந்த–எழுந்தருளி யிருக்குமிடமான
ஊரில்–ஊரிலே
இருக்கும்–நித்ய வாஸம் பண்ணுகிற
மானிடர்–மநுஷ்யர்கள்
ஏதலங்கள்–எப்படிப்பட்ட பாவங்களை
செய்தார் கொல் ஓ-அனுஷ்டித்தார்களோ! (அறியேன்.)–

குருந்தம் ஓன்று
அத்விதீயமான குருந்தம் பூ முட்டாக்கு இட்டால் போலே இருக்கையாலே கிருஷ்ணன் விரும்பி இருக்கும்
பூம் குருந்து ஏறி இராதே -என்னக் கடவது இறே
இதிலே கிருஷ்ணன் வந்து ஏறக் கூடும் -பின்னை நலிகிறோம் -என்று இறே அஸூரன் பிரவேசித்தது

ஒசித்தானோடும் சென்று கூடி யாடி விழா செய்து
ஓசித்தான் -விரோதி நிரஸனம்
விரோதி நிரசன சீலனை சென்று கிட்டி –
இருவர் நினைவும் ஒன்றாய்
அவன் குணங்களில் அவகாஹித்து
அநந்தரம்
அவர்களுக்கு விக்ரஹ அனுபவத்தைக் கொடுக்கும்
அங்கும் ஸதா பஸ்யந்தி இறே

திருந்து நான் மறையோர்
வேதத்துக்குத் திருத்தமாவது
குண விக்ரஹ அனுபவத்துக்கு ஏகாந்தமான பிரதேசங்களில் சொல்லுகிறபடியே அனுஷ்டிக்கை

இராப் பகல் ஏத்தி
வேறே அந்ய பரதை இல்லாமையாலே இது மாறாதே நடக்கும்

வாழ்
அநந்ய ப்ரயோஜனர் ஆகையாலே
இது தானே பலமாய் இருக்கும்

திருக் கோட்டியூர்
அவர்கள் வர்த்திக்கிற தேசம்

கரும் தட முகில் வண்ணனை
கருத்துக் பெருத்து இருக்கிற
நீல முகில் போலே இருக்கிற திருமேனியை யுடையவனை

கடைக் கொண்டு கை தொழும்
1-தங்கள் நைச்யத்தையே முன்னிட்டுத் தொழுமவர்கள்
அன்றிக்கே
2-உத்க்ருஷ்டன் பக்கல் அபக்ருஷ்டன் செய்யும் தொழில் என்னவுமாம்
அன்றிக்கே
3-கடை என்று முடிவாய்
மேல் -விற்கவும் பெறுவார்கள் -என்கையாலும்
ததீய சேஷத்வமே தங்களுக்கு ஸ்வரூபம் என்று கண்டவர்களுக்கு உகப்பாக
பகவத் விஷயத்தைத் தொழுமவர் -என்னவுமாம்

பத்தர்கள்
வைதமாக அன்றியிலே
ராகமாகத் தொழுமவர்கள்

இருந்த ஊரில் இருக்கும் மானிடர்
மானிடர் என்கையாலே
மனுஷ்ய ஜன்மத்துக்குப் பிரயோஜனம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருந்த ஊரிலே இருக்கை
என்னும் இடத்தைக் காட்டுகிறது –
அங்குப் போகிறதும் -வானவர் நாடு -என்று இறே

சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் என்கையாலே
அவர்களில் இவர்களுக்கு வாசி உண்டானால் போலே
தேசத்துக்கும் அவதாரத்துக்கும் வாசி உண்டு

இருந்த ஊரில் இருக்கும் மானிடர் -என்கையாலே
அவர்கள் அல்லர் உத்தேஸ்யர்
அவர்கள் இருந்த தேசம்
வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் –
(சாண்டிலியை -கருடன் -சிறகு இழந்த வ்ருத்தாந்தம் -பாகவதர்கள் இருக்கும் இடமே ஸ்ரீ வைகுண்டம் )

ஆழ்வானுக்கு ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திருவடிச் சார்ந்தார் என்று விண்ணப்பம் செய்ய
பாகவத் கைங்கர்யமே யாத்ரையாகப் போந்தவரை அப்படிச் சொல்லலாகாது
திரு நாட்டுக்குப் போனார் என்று சொல்ல வேணும் காணும் என்று அருளிச் செய்தார்

ஸ்ரீ வைஷ்ணவர்களை நீராட -என்றும்
ஆச்சார்யனை -திரு மஞ்சனம் பண்ண -என்றும் சொல்லுகிறது
உத்தேஸ்ய தார தம்யத்தை இட்டு இறே

வடுக நம்பி திரு நாட்டுக்குப் போனார் என்று
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் அருளாள பெருமான் எம்பெருமானாருக்கு விண்ணப்பம் செய்ய
சிறிது போது மோஹித்துக் கிடந்தது
உணர்ந்து அருளி
அவரைப் பார்த்து -திரு நாட்டுக்குப் போந்தார் என்னலாகாது காணும்
உடையவர் ஸ்ரீ பாத்துக்குப் போந்தார் என்ன வேணும் காணும் என்று அருளிச் செய்தார்

(பகவத் திருவடி சேர்வது பிரதம நிஷ்டருக்கு –
திரு நாட்டுக்குப் போவது பாகவத நிஷ்டருக்கு –
உடையவர் திருவடி சார்ந்தார் இதுக்கும் மேற்படி
மூன்று நிலைகள் உண்டே )

ஸ்ரீ சபரியும் பெருமாள் திருவடிகளில் பிரார்த்தித்ததும் இதுவே இறே
(தமது பர்த்தா -மதங்கர் -ஆச்சார்யர்- திருவடி சேருவதைத் தானே பிரார்த்தித்தாள் )

ஆழ்வான் ஸம்ஸாரத்தில் ஆர்த்தியின் கனத்தாலே கலங்கிப் பெருமாள் திருவடிகளிலே
அடியேனைத் திரு நாடு ஏறப் போம்படி திரு உள்ளமாக வேணும் -என்று விண்ணப்பம் செய்ய
பெருமாளும் திரு உள்ளமாய்
பின்பு ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் திரு மாளிகையிலே புற வீடு விட்டு இருக்கிற அளவிலே

இத்தை உடையவர் கேட்டு அருளி
பஞ்சுக் கொட்டன் திரு வாசல் அளவாக எழுந்து அருளி -பெருமாளுக்கு விண்ணப்பம் செய்தால் செய்து அருளுவர்
நாம் அடியாகப் பெருமாள் இரண்டு வார்த்தை அருளிச் செய்தவராக ஒண்ணாது என்று
மீண்டும் ஆழ்வான் இருக்கும் இடத்தே எழுந்து அருளி
ஏன் ஆழ்வான் என்ன
அடியேன் மறந்தேன் -என்று விண்ணப்பம் செய்தான்
மறைக்கைக்கு அடி ஸம்ஸாரத்தில் ஆர்த்தியின் கனம்

எத் தவங்கள் செய்தார் கொலோ
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நாடாவுதீர் -இங்கோர்
பெண் பால் பொருளோ வெனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ -என்கிறபடியே
அவன் காவலுக்கு உள்ளே கிடக்கிறது தானே இறே தவமாவது –

நீர் நிலை நின்ற தவம் இது கொல் -என்று
பகவத் விஷயத்தைக் கிட்டுகைக்கு தவம் ஓன்று
பாகவத விஷயத்தை கிட்டுகைக்கு அநேகம் தபஸ்ஸூ வேணும் இறே

கொலோ
பகவத் விஷயத்தை கிட்டுகைக்குத் தபஸ் அறிவர்
பாகவத விஷயத்தைக் கிட்டும் தபஸ்ஸூக்கள் இறே இவர்க்கு அறியப் போகாது இருப்பது –

———–

ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருந்த ஊரில் பிரதிகூலர் மேலிடார்கள் என்கிறது இப் பாட்டில்

நளிர்ந்த சீலன் நயாசீலன் அபிமான துங்கனை நாள் தோறும்
தெளிந்த செல்வனை சேவகம் கொண்ட செம்கண் மால் திருக் கோட்டியூர்
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினில்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே -4- 4-8 –

பதவுரை

நளிர்ந்த சீலன்–குளிர்ந்த ஸ்வபாவத்தை யுடையவரும்
நயாசலன்–நீதிநெறி தவறாதவரும்-நய -நீதி /அசலன் -தவறாமல் மலை போல் நிலை நின்று –
அபிமான துங்கனை–இடைவிடாது எம்பெருமானை அநுபவிக்கையாலுண்டான) அஹங்காரத்தால் உயர்ந்தவரும்
நாள் தொறும் தெளிந்த செல்வனை–நாடோறும் தெளிந்து வரா நின்றுள்ள கைங்கர்ய ஸம்பத்தை யுடையவருமான செல்வ நம்பியை
சேவகம் கொண்ட–அடிமை கொண்டவனாய்
சேவகம் செய்த இல்லாமல் சேவகம் கொண்ட -கைங்கர்யம் கொள்ள வேண்டுமே அவன்
செம் கண் மால்–செந் தாமரைபோன்ற கண்களையுடையவனாய் (அடியார் பக்கல்) மோஹமுடையனாய்
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில்
குளிர்ந்து உறைகின்ற–திருவுள்ளமுகந்து எழும் தருளி யிருப்பவனான எம்பெருமானுடைய
கோவிந்தன் குணம் படுவார்–கல்யாண குணங்களைப் பாடுமவரான ஸ்ரீவைஷ்ணவர்கள்
உள்ள நாட்டினுள் விளைந்த தானியமும்–எழுந்தருளி யிருக்கிற நாட்டிலே விளைந்த தாந்யத்தையும்
இராக்கதர்–ராக்ஷஸர்கள்
மீது கொள்ள கிலார்கள்–அபஹரிக்க மாட்டார்கள்–

நளிர்ந்த சீலன் நயாசீலன் அபிமான துங்கனை நாள் தோறும் தெளிந்த செல்வனை சேவகம் கொண்ட செம்கண் மால் திருக் கோட்டியூர்
குளிர்ந்த சீலத்தை யுடைய செல்வ நம்பி
ஈஸ்வரன் சீலம் கொதித்து இருக்கும்

வாள் கொள் நீள் மழு வாளி யுன்னாகத்தான் -என்றும்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள் -என்றும்
துர்மானியான ருத்ரனும்
சாவாமைக்கு மருந்து தின்றும்
தேவ ஜாதியும் இறே இவனுக்கு அடிமை செய்வது

அக்கும் புலியினதளும் யுடையார் அவர் ஒருவர் பக்கம் நின்ற பண்பர் –என்றும்
தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும் சூழ் அரவும் பொன் நாணும் தோன்று மால் -என்றும்
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து தோற்றுகையாலே

ஏறாளும் இறையோனும் திசை மகனும் திரு மகளும் கூறாளும் தனி உடம்பன் -என்று
இவன் உடம்பு தேவதாந்தரமும் திருவிடையாட்டமுமாய் இறே இருப்பது
(தேவ -தானம் தேவதாந்த்ர சொத்து )
இப்படி இன்றியே
காணிலும் உருப்பொலார் செவிக்கு இனாத கீர்தியார் -என்று இறே இவன் இருப்பது

நய வென்றது
நீதியை
அங்கும் நீதி வானவர் -என்னக் கடவது இறே

அசலன் –
நீதிக்கு குலைதலிலாதவன்
சேஷ சேஷி பாவ சம்பந்தம்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயும் -என்கிற படி அடைவு பட்டு இறே அங்கு இருப்பது

இங்கும் அவை அடைவே -யானே என் தனதே -என்று அடைவு கெட்டு இருக்கும்
உக்ரசேனனை முடியை சூட்டி -ஆசனத்தில் உயர வைத்து –
தான் திருக் கையாலே வெண் சாமரம் இடும் இடம் இறே இவ்விடம்
விண்ணுளார் பெருமானை அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் -என்று
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவரும் அதிசங்கை பண்ண வேண்டும் இடம் இறே இது
இந்நிலத்திலே குறையாது இருக்கை
பாபம் மாண்டால் பண்ணும் கிருபை இறே பாபம் வந்தவாறே குலைவது
பாபம் கிடக்க பண்ணும் கிருபை ஆகையாலே குலையாது –

அபிமான துங்கன் –
என்னில் மிகு புகழார் யாவரே –
மாறுளதோ இம் மண்ணின் மிசையே –
யாவர் நிகர் அகல் வானத்தே –
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் -என்று
பகவத் அனுபவத்தால் வந்த செருக்கும் கர்வமும் இறே அபிமாநிக்கிறது

புவியும் இரு விசும்பும் நின் அகத்த -இது அன்றோ உன் படி –
நீயும்
சேதன அசேதனங்களை உன் வயிற்றில் வைத்த நீயும்
என் செவியின் வழி புகுந்து என் உள்ளாய் -என்று
தத்வ த்ரயத்தையும் -அணு பரிமாணனான என்னுடைய நெஞ்சுக்குள்ளே அடக்கின
நானோ நீயோ பெரியார் என்னும் இடத்தை –
உனக்கு பஷபாதியுமாய் -கை யாளுமாய் -கைப்பட்டவனோடே விசாரி
சிறியேனுடை சிந்தையுள் மூவுலகும் தன் நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தார் -என்னக் கடவது இறே

நளிர்ந்த சீலம் -என்று குணம்
நயா சலன் -என்று அனுஷ்டானம்
அபிமான துங்கன் -என்று இவற்றால்  வந்த செருக்குக்கு அடி ஞான கார்யம் என்கிறது
(அந்நிய சேஷம் கலசாமல் -ஞான பிரேம கார்யம் உடையவர் )

நாள் தோறும் தெளிந்த -என்று
இச் செருக்கோடே விபரீத செருக்கு ஒரு நாளும் கலசாது என்கிறது
கலக்கமிலா நல் தவ முனிவர் -என்று கலங்காது இருக்கை தான் அரிதாய் இருப்பது
தெளிவுற்று வீவின்றி நின்றவர் -என்கிற படியே இத் தெளிவு தான் குலையாது இருக்கை தன் ஏற்றமாய் இருப்பது –
அன்றிக்கே
நாள் தோறும் தெளிந்து வாரா நிற்கும் அவர்க்கு

செல்வனை –
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்றும்
அந்தரிஷா கதஸ் ஸ்ரீ மான் -என்றும்
சது நாகவரஸ் ஸ்ரீ மான் -என்றும் சொல்லுகிற மூன்று ஸ்ரீ யும் இவர்க்கும் உண்டே
(செல்வச் சிறுமீர்காள் -இதே வியாக்யானம் பெரிய வாச்சான் பிள்ளை )

லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்று பெருமாள் ராஜ்யத்தை இழந்தார்- இவர் கைங்கர்ய சாம்ராஜ்யத்தை பெற்றார் –
சுற்றம் எல்லாம் பின் தொடர -எல்லா அடிமையும் பெற்றார் –
சம்பன்ன -என்கையாலே பாகவத கைங்கர்ய பர்யந்தம் ஆகை இறே பூர்த்தி –

(காட்டில் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்தவர் பாகவத கைங்கர்யம் செய்தது எங்கே என்னில்
சுற்றம் எல்லாம் பின் தொடர -அனைவரும் செய்த கைங்கர்யம் செய்ததால்
அயோத்யா ஜனங்கள் -பாகவதர் திரு முகம் மலர்ந்தனவே
ஆகவே பெருமாள் விட்டுப்போன பாகவத கைங்கர்யமும் ஸித்தித்து )

பகவத் கைங்கர்யம் செய்தது தம்முடைய சத்தை பெருகைகாக –
அந்த சத்தையை அழிய மாறி இறே பாகவத கைங்கர்யம் பண்ணிற்று

(சக்ரவர்த்தி திரு மகன் முக உல்லாசம் அன்றோ இவருக்கு உத்தேச்யம் என்னில்
கங்கா அவதாரணாத் பூர்வம் செய்தது
அப்புறம் அஹம் ஏகோ -கௌசல்யா ரக்ஷணம் செய்ய போகச் சொல்லியும் –
ஜனங்கள் முக மலர்த்தி உத்தேச்யமாக பின்னாலேயே போனான்
சத்ருக்னனை அன்றோ பாகவத நிஷ்டை என்பர் என்னில்
இவர் பெருமாள் முக மலர்த்தி த்வாரா பாகவத கைங்கர்யம்
அவரோ நேராக பாகவத கைங்கர்யம் )

அந்தரிஷா கதஸ் ஸ்ரீ மான் -என்று –
பிராட்டியையும் பெருமாளையும் கண்ட அன்று (காணாமலேயே ) இறே இவர் படை வீடு விட்டு புறப்பட்டது
ஆகாசம் இறே இவருக்கு உள்ளது
இளைய பெருமாளும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும் படை வீட்டை விட்ட பின்பு அன்றே
ஸ்ரீ மான்களாய் ஆய்த்து –
பிராட்டி இலங்கைக்குள் எழுந்து அருளி இருக்கச் செய்தேயும்
சஹ வாச தோஷத்தாலே பிராட்டி கடாஷம் பெற்றது இல்லை –
இலங்கையை விட்டு கிளம்பின பின்பு இறே ஸ்ரீமான் -என்றது
(மானஸ கடாக்ஷம் மாத்திரம் -ஸ்ரீ வசன பூஷணத்தில் கடாக்ஷம் பெற்றான் என்றது கொள்ள வேண்டும் )

சது நாகவரஸ் ஸ்ரீ மான் -என்று ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் ஸுவ ரஷணத்தில்
ஸ்வ வியாபாரத்தை பொகட்ட பின்பு இறே ஸ்ரீ மான் ஆய்த்து
முதலை அல்ல விரோதி -அஹங்காரம்

இவற்றால் பலித்தது –
ப்ராப்யத்தை லபித்த படியும்
ப்ராப்தி விரோதி நிவர்த்தமான படியும் –
பிராபக விரோதி நிவர்தனமான படியும் -சொல்லிற்று

சேவகம் கொண்ட
இவன் செய்தான் என்றால் இவனுக்கு உகப்பாம்
கொண்ட -என்கையால்-ஈஸ்வரன் உகப்பன்-என்கிறது
சேவகம் கொண்ட ஸ்வரூபத்தை காட்டியோ என்னில் -அன்று –
கண் அழகை காட்டி -என்கிறது

செங்கண் மால் –
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண் மாலே -என்னக் கடவது இறே

திருக் கோட்டியூர் குளிர்ந்து உறைகின்ற
பரம பதத்திலே சம்சாரிகள் இழவிலே திரு உள்ளம் குடி போய் உள்ளுக் கொதித்து இருக்கும் –
அவ்விருப்பு நித்யமானாலும் -இருந்தாலும் முள் மேல் இருப்பு -என்னக் கடவது இறே
ப்ரீதியோடே பொருந்தி வர்த்திப்பது இங்கே இறே
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு –என்று காட்டுத் தீயில் அகப்பட்டவன்
தடாகத்தில் வந்து விழுமா போலே இறே வந்து விழுந்தது –
வெள்ளத்தின் உள்ளானும் வேம்கடத்து மேயானும் உள்ளத்தில் உள்ளான் -என்னக் கடவது இறே
பள்ளி கொள்ளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் -என்னக் கடவது இறே

கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் –
செங்கண் மால் -என்று வாத்சல்யம்
சேவகம் கொண்ட -என்று சௌசீல்யம்
கோவிந்தன் -என்று சௌலப்யம்
அவதாரம் பரத்வம் -என்னும் படி இறே அர்ச்சாவதார சௌலப்யம்

இதுக்கு ஏகாந்தமான குணங்களை சிநேகத்தோடு சொல்லுவார் உள்ள நாட்டினுள்
அவர்கள் அளவல்ல
அவர்கள் சம்பந்தம் உடையவர் அளவல்ல
அவர்கள் இருந்த ஊர் அளவல்ல –
அவ் வூரோடே சேர்ந்த நாட்டினுள் விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே –
தனக்கும் தம் பந்துக்களுக்கும் என்னல் இறே அவர்கள் கொள்ளுவது
பகவத் பாகவத விஷயங்களுக்கு என்றால் அவர்களுக்கு கொள்ள சக்தி இல்லை
புனத்தினைக் கிள்ளி புதுவவி காட்டி வுன்பொன் அடி வாழ்க -என்று இறே இவர்கள் இருப்பது –

அபிமான துங்கன் -என்று இவற்றால் வந்த செருக்குக்கு அடி ஞான கார்யம் என்கிறது

———-

இப் பாட்டில்
ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கண்டு பகவத் அனுபவம் பண்ணப் பெறாத இழவு தீரும் என்கிறார்

கொம்பினார் பொழில் வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4- 9-

பதவுரை

கொம்பின் ஆர்–கிளைகளாலே நெருங்கின
பொழில் வாய்–சோலைகளிலே
குயில் இனம்–குயில்களின் திரள்
கோவிந்தன்–கண்ண பிரானுடைய,
குணம்–சீர்மைகளை
பாடு–பாடா நிற்கப் பெற்றதும்,
சீர்–சிறந்த
செம் பொன் ஆர்–செம் பொன்னாலே சமைந்த
மதிள்–மதிள்களாலே
சூழ்–சூழப் பட்டதும்
செழு–செழுமை தங்கிய
கழனி உடை–கழனிகளை யுடையதுமான
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளியிருப்பவனும்).
நம்பனை–(ரக்ஷகன் என்று) விச்வஸிக்கக் கூடியவனும்
நரசிங்கனை–நரஹிம்ஹ ரூபியுமான ஸர்வேச்வரனை
நவின்று–அநுஸந்தித்து
ஏத்துவரர்களை–துதிக்கும் பாகவதர்களை
கண்டக்கால்–(யான்) ஸேவிக்கப் பெறுவேனாகில்
இவர் இவர்-“இந்த இந்த ஸ்ரீவைஷ்ணவர்கள்
எம்பிரான் தன்–எம்பெருமானுடைய
சின்னங்கள்–அடையாளமாயிருப்பவர்கள்”
என்று–என்று அநுஸந்தித்து
ஆசைகள்–நெடுநாளாய் பிறந்துள்ள ஆசைகளை
தீர்வன்–தலைக் கட்டிக் கொள்வேன்–

கொம்பினார் -இத்யாதி –
பனைகளால் நெருங்கின சோலை இடத்து குயில்கள்
குயில் ஆலும் வளர் பொழில் சூழ்

கோவிந்தன் குணம் பாடு-
குயில் இனங்கள் ஆனவை –
தாழ்ந்த குலத்திலே அவதரித்து தாழ்ந்த கார்யம் செய்வதே -என்று அவனுடைய
சௌலப்யத்தை அனுசந்தித்து -ப்ரீதிக்கு போக்கு விட்டு பாடா நிற்கும்
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லுவது –
சிலர் பயிற்று வித்தால் இறே –
அங்கன் இன்றிகே இவை தானே பாடா நிற்கும் –

நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்து நின்றும் துரப்பன் -என்னும்படி
இவை ஒழிந்த நாமாந்தரங்கள் சொல்லுவதில் இங்கு நின்று போக அமையும் என்னும் படி இறே இவற்றின் படி —

இன் அடிசிலொடு பாலமுது ஊட்டி எடுத்த என் கோலக் கிளியை
உன்னோடு தோழைமை கொள்ளுவன் குயிலே – என்று கைக்கூலி
பெற்றால் இறே கூவுவது –
இவை அப்படி அன்று –

சீர் செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர் —
ஸ்லாக்கியமாய் சிவந்த பொன்னால் அமைந்த மதிள்களால் சூழப் பட்டு -அழகிய
கழனிகளை உடைத்தான திருக் கோட்டியூர்

உள்ளு புக்கு அனுபவிக்க வேண்டாதபடி
கொம்புகளாலே ஆர்ந்த சோலையும்
குயில்கள் பாடுகையும்
சிவந்த பொன்னால் சமைந்த திரு மதிள்களும்
அழகிய கழனி கட்டளையும்
கண்டு அனுபவிக்க வேண்டும்படி நிரதிசய போக்யமாய் இருந்துள்ள தேசம்

நம்பனை
விச்வச நீயனை
நரசிங்கனை
விச்வாசத்துக்கு அடி இந்த அபதானம்
அடுத்ததோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவர் உமர் -என்னக் கடவது இறே
ஸ்ரீ பிரகலாதனுக்கு உதவினது சம்சாரிகள் விச்வசிக்கைக்கு உடல்
ஆழ்வாருக்கு உதவின இது இறே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு விச்வச நீயம்
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் -என்று
ஸ்ரீ பிரகலாத் ஆழ்வானுக்கு (இருந்த விசுவாசமும் )ஹிரண்யனையும் விச்வசிக்கைக்கு இறே தோன்றிற்று

எம்பார் அருளி செய்யும் வார்த்தை –
ஈஸ்வரனுக்கு மூன்று ஆபத்து வந்து கழிந்தது -என்று அருளி செய்வர் –
அதாவது
திரௌபதிக்கும்-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கும் -ஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்கும்
உதவிற்றிலன் ஆகில் -சம்சாரிகள் ஈச்வரத்வம் இல்லை என்று எழுத்து இடுவர்கள் இறே

ஆழ்வாரும் -எங்கனம் தேறுவர் தமர் -என்று தம்முடைய இழவிலும்
ஸ்ரீ வைஷ்ணவர்களின் அத்யாவசாயம் குலைகிறதோ -என்று இறே அஞ்சுகிறது –
பிழைக்கின்றது அருள் -என்று இறே அஞ்சுகிறது
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவன்-என்று தம்முடைய இழவுக்கு நோகை அன்றியிலே
ஈஸ்வரன் அருளுக்கு இறே இவர் நோவுவது

நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால் –
ப்ரீதிக்கு போக்கு விட்டு சொல்லுவார்களைக் கண்டக்கால் -கண் படைத்த பிரயோஜனம் பெறலாம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே -என்னக் கடவது இறே

எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று –
சின்னம் என்று -அவனுடைய அடையாளம் –
இவர்களைக் கண்டக்கால் -அவன் -சாத்விக சேவ்யன்-என்று தோன்றும் –
அவநீத ப்ர்த்யவர்க்கன் என்று இறே அவனை கழித்தது –
கூராழி வெண் சங்கு ஏந்தி வாராய் -என்று அவற்றோடு வாராத போது -போகாய் -என்று இறே இவர் இருப்பது
என் ஆவி சேர் அம்மானுக்கு அந்தாம வாண் முடி சங்காழி நூலாரமுள-என்னக் கடவது -இறே

ஆசைகள் தீர்வேனே-
ஆசைகள் -என்று
காண -என்றும்-கிட்ட -என்றும் –கூட இருக்க என்றும் இறே இவர்களுடைய ஆசைகள்
அவனைக் காண வேணும் -என்கிற ஆசைகள் தீரும் உகந்து அருளின நிலங்களை அனுபவித்தால்
அடியார்கள் குழாங்ளை உடன் கூடுவது என்று கொலோ -என்கிற இழவுகள் தீரும் இங்கே
ஸ்ரீ வைஷ்ணவ திரள்களைக் கண்டால்
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் -என்கிறபடியே கண்டவாறே ஆசைகள் தீரும் இறே –
ஈஸ்வரனைக் கண்டால் ஆசைகள் தீராது
இவர்களைக் கண்டால் ஆசை தீரும்

கடிவார் தண் அம் துளி கண்ணன் -இத்யாதி
அடியேன் வாய் மடுத்து பருகி களித்தேனே -என்று பூர்ண அனுபவம் பண்ணின பின்பு இறே
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -என்று பிரார்த்தித்து
தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே -என்று ஆசைகள் தீர்ந்தது
பயிலும் சுடர் ஒளி யிலே இறே
திரு நாவாய் அவையுள் புகலாவதோர் நாள் -என்று அத் திரள் இறே உத்தேச்யம்
ஒண விழவில் ஒலி அதிர பேணிவரு வேம்கடவா என்னுள்ளம் புகுந்தாய் -என்று
அவன் வரும் இடத்தில் அவர்களும் மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு கூட வந்து புகுவார்கள் –

—————

திருநாமம் சொல்லுவார்க்கு உண்டான பெருமை என்னால் அளவிடப் போகாது என்கிறார்

காசின் வாய்க்கரம் விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு
தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று
பேசுவார் அடியர்கள் எம் தம்மை விற்கவும் பெறுவார்களே – 4-4 -10-

பதவுரை

காசின் வாய்–ஒருகாசுக்கு
கரம்–ஒரு பிடி நெல்
விற்கிலும்–விற்கும்படியான துர்ப்பிக் ஷகாலத்திலும்
சோறு இட்டு–(அதிதிகளுக்கு) அன்னமளித்து
தேச வார்த்தை–புகழ்ச்சியான வார்த்தைகளை
படைக்கும்–ஸம்பாதித்துக் கொள்ளுமவரும்
வண் கையினார்கள்–உதாரமான கையை யுடையவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ்–வாழுமிடமான
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருக்கிற)
கேசவா–கேசவனே!
புருடோத்தமா–புருஷோத்தமனே!
கரவாது–(தமக்குள்ள பொருள்களை ) மறைத்திடாது
மாறு இலி–பதில் உபகாரத்தை எதிர் பாராமல்
கிளர் சோதியாய்–மிகுந்த தேஜஸ்ஸை யுடையவனே!
குறளா–வாமந வேஷம் பூண்ட எம்பெருமானே!
என்று–என்றிப்படி
பேசுவார்–(எம்பெருமான் திரு நாமங்களைப்) பேசுமவரான
அடியார்கள்–பாகவதர்கள்
எந்தம்மை–அடியோங்களை
விற்கவும் பெறுவார்கள்–(தம் இஷ்டப்படி) விற்றுக் கொள்ளவும் அதிகாரம் பெறுவார்கள்–

காசின் வாய்க்கரம் விற்கிலும் கரவாது
கழஞ்சு பொன்னுக்கு ஒரு பிடி நெல் விற்கும்படியான காலத்திலும்
தம் தாமுக்கு உள்ள பண்டங்களை ஒளியாமல்
மிடியர் தெளிய வெளியாக்கி

மாற்றிலி சோறிட்டு
ப்ரத்யுபகாரம் நச்சாமல்
லுப்தருக்கும்
மிடியர்க்கும்
பசியர்க்கும்
சோறிட்டு
துர்மானிகளுக்கு இரா மடம் கற்பித்து

தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
ஓவ்தார்ய தேஜஸ்ஸூம் கிருபையும் முதலான குணங்களும் எல்லாம் இவர்களுக்கேயோ யுள்ளது -என்னும்
வார்த்தை மிக யுண்டாம்படி யானாலும்
தங்கள் முன்பு செய்த ஒவ்தார்யங்களை நினையாமல்
செய்ய வேண்டுமவையே நினைக்கும் உதார குண பாவமே தங்களுக்கு வாழ்வாக நினைத்து இருக்கும்
அவர்கள் வர்த்திக்கிற திருக்கோட்டியூர்

கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று பேசுவார் அடியர்கள் –
கேசவா என்கிற அநேக திரு நாமங்களை
பக்தி பாரவஸ்யத்தாலேயும்
ப்ராப்தியாலேயும்
பேசுவார் யாவர் சிலருடைய அடியார்கள்

(புருடோத்தமா
புரு பஹு ஸூ நோதி -ததாதீதி -புருஷ தேஷு உத்தம வ்யுத்பத்தி )

எம் தம்மை விற்கவும் பெறுவார்களே-
அவர்களுக்கு கிரய விக்ரய அர்ஹர் நாங்கள் என்னப் பெறுவார்கள்
இது இறே பரம புருஷார்த்தப் பிராப்தி –

இத்தால்
ஷாம ஷோப வியாதி மிடிகளிலும் பகவத் பாகவத ஆச்சார்ய கைங்கர்யங்களே புருஷார்த்தமாக
லோபம் அறச் செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
நித்ய விபூதியில் உள்ளார் எல்லாரும் கொண்டாடும்படியான தேஜஸ்ஸை
இங்கே வர்த்திக்கச் செய்தே பெறுவர் என்கிறது –

—————

நிகமத்தில் இத் திரு மொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார்-

சீத நீர் புடை சூழ் செழும் கனி வுடைத் திருக் கோட்டியூர்
ஆதியான் அடியாரையும் அடிமை இன்றித் திரிவாரையும்
கோதில் பட்டர் பிரான் குளிர் புதுவை மன் விட்டு சித்தன் சொல்
ஏதமின்றி உரைப்பவர் இருடீகேசனுக்கு ஆளரே – 4-4 -11-

பதவுரை

சீதம் நீர்–குளிர்ந்த நீராலே
படை சூழ்–சுற்றும் சூழப் பெற்ற
செழு–செழுமை தங்கிய
கழனி உடை–கழனிகளை யுடைய
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருக்கிற)
ஆதியான்–எம்பெருமானுக்கு-ஜகத் காரண பூதனுக்கு –
அடியாரையும்–அடிமை செய்யும் பாகவதர்களையும்
அடிமை இன்றி–அடிமை செய்யாமல்
திரிவாரையும்–திரிகின்ற பாவிகளையும் குறித்து,
கோதில்–குற்றமற்றவரும்
பட்டர் பிரான்–அந்தணர்கட்குத் தலைவரும்
குளிர்–குளிர்ந்த
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
மண்–நிர்வாஹருமான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
சொல்–அருளிச் செய்த இப் பாசுரங்களை
ஏதும் இன்றி–பழுதில்லாதபடி
உரைப்பவர்–ஓதுமவர்கள்
இருடீகேசனுக்கு–எம்பெருமானுக்கு
ஆளர்–ஆட் செய்யப் பெறுவர்-

சீத நீர் புடை சூழ் செழும் கனி வுடைத் திருக் கோட்டியூர்
அகாதமாய்
வாத ஆதப ப்ரவேசத்தால் வரும் உஷ்ணம் இன்றியிலே
சைத்யமேயாய் இருக்கிற ஆற்று நீராலே சூழப்பட்ட ஜல ஸம்ருத்தி மாறாத வயல்களை யுடைத்தான
திருக்கோட்டியூரிலே நித்ய சந்நிஹிதனாய்

ஆதியான் அடியாரையும் அடிமை இன்றித் திரிவாரையும்
ஜகத் காரண வஸ்துவான சொக்க நாராயணர்க்கு
அடிமை செய்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பெருமையையும்
அடிமை இன்றியிலே நிலை திரிந்து அநர்த்தப் படுவாருடைய அநர்த்த பரம்பரைகளையும் அறிவிப்பதாக

கோதில் பட்டர் பிரான் குளிர் புதுவை மன் விட்டு சித்தன் சொல்
மங்களா ஸாஸனம் ஒழிந்த பிரதிபத்திகள் எல்லாம் கோதாய்
அவை இல்லாத மங்களா ஸாஸனம் ஒன்றுமே ஸாரமாக பிரதிபத்தி பண்ணி இருப்பாராய்
ப்ராஹ்மண உத்தமர்க்கு உபகாரகராய்
ஸோஹம் -ஸ அஹம்பாவத்தால் (ஸஹ அஹம் -தத் த்வம் அஸி )வந்த உஷ்ணம் தட்டாமல்
தாஸோஹத்தால் வந்த குளிர்ச்சி மாறாத திரு மாளிகைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
அருளிச் செய்த இப் பத்துப் பாட்டையும்

ஏதமின்றி உரைப்பவர்
இவருடைய அபிப்ராயம் ஒழிந்தவை எல்லாம் பொல்லாங்காக நினைத்து
உரைக்க வல்லவர்கள்

இருடீகேசனுக்கு ஆளரே
இந்திரியங்களை
சங்கல்பத்தாலும்
கிருபாதி குணங்களாலும்
ஸுந்தர்யத்தாலும்
ஸ்வ கரண நியமன சக்தியாலும்
ஆகந்துக ப்ரேராதிகளாலும்
நியமிக்க வல்ல சொக்க நாராயணர்க்கு
ஞான பக்தி வைராக்யங்களோடே
மங்களா ஸாஸன பர்யந்தமாக
அடிமை செய்யும் ஆளாகப் பெறுவர் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-3–உருப்பிணி நங்கை தன்னை மீட்பான்–

July 29, 2021

பிரவேசம்
இதுவும் கீழ்ப் போந்த ப்ரீதி பின்னாட்டிச்
சில உபமான விசேஷங்களோடே
அவதாரங்களில் உண்டான வியாபாரங்களை கூட்டி
அனுசந்திக்கிறார் –

——————

உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் துடர்ந்து ஓடிச் சென்ற
உருப்பனை ஒட்டிக் கொண்டு இட்டு இறைத்திட்ட வுறைப்பன் மலை
பொருப்பிடைக் கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு
விருப்போடு பொன் வழங்கும் வியன் மால் இரும் சோலை யதே -4 -3-1 –

பதவுரை

உருப்பிணி நங்கை தன்னை–ருக்மிணிப் பிராட்டியை
மீட்பான்–கண்ணனுடைய தேரில் நின்றும்) திருப்பிக் கொண்டு போவதற்காக
தொடர்ந்து–(அத் தேரைப்) பின் தொடர்ந்து கொண்டு
ஓடிச் சென்ற–ஓடி வந்த
உருப்பனை–உருப்பன் என்றவனை
ஓட்டிக் கொண்டு இட்டு–ஓட்டிப் பிடித்துக் கொண்டு (தேர்த் தட்டிலே) இருத்தி
உறைத்திட்ட–(அவனைப்) பரிபவப் படுத்தின
உறைப்பன் மலை–மிடுக்கை உடைய கண்ண பிரான் (எழுந்தருளு யிருக்கிற)மலையாவது
கொன்றை–கொன்றை மரங்களானவை
பொருப்பு இடை நின்று–மலையிலே நின்று
முறி–முறிந்து
பொன்–பொன் மயமான
ஆழியும்–மோதிரங்கள் போன்ற பூ நரம்புகளையும்
காசும்–(பொற்காசு)போன்ற பூ விதழ்களையும்
கொண்டு–வாரிக் கொண்டு
விருப்பொடு வழங்கும்–ஆதரத்துடனே (பிறர்க்குக்)கொடுப்பவை போன்றிருக்கப் பெற்ற
வியன்–ஆச்சரியமான
மாலிருஞ்சோலை அதே–அந்தத் திருமாலிருஞ்சோலையே யாம்–

(கொன்றைப் பூ சிவனுக்கு -இங்கு இருப்பதால் சைவர்கள் உபயோகப்படுத்தாமல்
வைஷ்ணவர்களும் உபயோகப்படுத்தாமல் வீணாக இருக்குமே
அவர்கள் திரு மலை இல்லை
இவர்கள் மலர் இல்லை -)

உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் துடர்ந்து ஓடிச் சென்ற உருப்பனை ஒட்டிக் கொண்டு இட்டு இறைத்திட்ட
ருக்மிணி நாய்ச்சியாரை கிருஷ்ணனாம் கொண்டு போவான்
சிஸூ பாலன் முதலிய ராஜாக்கள் அஸக்யம் என்று விட
ருக்மன் தானும் மீட்ப்பான் துடர்ந்து ஓடிச் செல்வான்
அவனை ஓட்டிப் பிடித்துக் கொண்டு தேர்த தட்டிலே இட்டுச் சிக்கென பரிபவித்திட்ட

வுறைப்பன் மலை
நாய்ச்சியாரை விடாமல் வ்யவசித்துக் கைக்கொண்டவன் மலை

பொருப்பிடைக் கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு விருப்போடு பொன் வழங்கும்
கொன்றைகள் பொருப்பிடை நின்று
பொன் முறி ஆழியும் காசும் கொண்டு
விருப்போடு வழங்கா நிற்கும்

வியன் மால் இரும் சோலை யதே
வியன் -வேறுபாடு

இங்கு வழங்கினாலும்
கைக் கொள்ளுவார் இல்லை
கைக் கொள்ளத் தகுதியானவரை இங்கு வர ஒட்டார்கள்

இத்தால்
தம் தாமுக்கு அடைத்த இடங்களிலே நில்லா விட்டால்
ஸுவ் மநஸ்யம் ஸ்ப்ருஹ அவஹமானாலும் நிஷ் ப்ரயோஜனம் என்று தோற்றுகிறது
இவ்வளவே அன்றிக்கே
நின்ற இடத்துக்கு அவத்யா வஹம் என்றும் தோற்றுகிறது
இது தான் எல்லாம் வேண்டுகிறது அங்கே தான் தோன்ற நிற்கில் இறே

இது தன்னை யிறே நிஷ் ப்ரயோஜனத்துக்கு நிதர்சனமாக
ஆழ்வார் திரு மகளார் பெரியாழ்வார் வயிற்றில் பிறக்கையாலும்
பிறந்தேன் நான் ஆகையாலும்
அநந்யார்ஹை யானாலும்
இரண்டு தலையும் உபேக்ஷிக்கும் படி நின்று தூங்கா நின்றேன் என்றதும்

(கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ –9-9-

தாமச புருஷர்கள் புகுரும் தேசம் அன்று –
சாத்விகர் இது கொண்டு கார்யம் கொள்ளார்கள்-
பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து பகவத் அர்ஹமான வஸ்து -இங்கனே இழந்து இருந்து கிலேசப் படுவதே –
கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -12-4- என்றும்
மானிடர்வர்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -1-5-
அவனால் ஏற்றுக் கொள்ளப் படாமல் சம்சாரிகளுக்கும் பயன்படாமல் வீணாக போவதே –)

இரண்டு தலையும் என்றது
அழகரையும் ஆழ்வாரையும் இறே
ஜனித்வாஹம்-(ஸ்தோத்ர ரத்னம் -61)-இத்யாதி

(ஜநித்வா அஹம் வம்ஸே மஹதி ஜகதி க்யாதய ஸ ஸாம்
ஸூசீ நாம் யுக்தா நாம் குண புருஷ தத்வ ஸ்திதி விதாம்
நிஸர்க்காத் ஏவ த்வச் சரண கமல ஏகாந்த மநஸாம்
அதோ அத பாபாத்மா ஸரணத! நிமஜ்ஜாமி தமஸி–61-

ஜநித்வா வம்ஸே மஹதி –சிறந்த குலத்திலே பிறந்து வைத்து
அதோ அத பாபாத்மா தமஸி–பாபிஷ்டனாய்க் கொண்டு இருள்மயமான மூதாவியிலே
அடி காண ஒண்ணாத கீழ் எல்லையில்
நிமஜ்ஜாமி–அழுந்திக் கொண்டே கிடக்கிறேன்)

அதே
உறைப்பன் மலை அதே -அதுவே –
திருமலை அதுவே (திருவாய் -2-10 )-என்பாரைப் போலே –

————–

கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும்
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி வண்ணன் மலை
நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியை
செஞ்சுடர் நா அளைக்கும் திரு மால் இரும் சோலை யதே -4 -3-2 –

பதவுரை

கஞ்சனும்–கம்ஸனும்
காளியனும்–காளிய நாகமும்
களிறும்–(குவலயாபீடமென்ற) யானையும்
மருதும்–இரட்டை மருத மரங்களும்
எருதும்–(அரிஷ்டாஸுரனாகிற) ரிஷபமும்
வஞ்சனையின்–(தந்தாமுடைய) வஞ்சனைகளாலே
மடிய–(தாம் தாம்) முடியும்படி
வளர்ந்த–(திருவாய்ப்பாடியில்) வளர்ந்தருளினவனும்
மணி வண்ணன் மலை–நீல மணி போன்ற நிறமுடையவனுமான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கும்) மலையாவது:
நஞ்சு–விஷத்தை
உமிழ்–உமிழா நின்றுள்ள
காகம்–(மலைப்) பாம்பானவை
நளிர்–குளிர்ந்த
மா மதியை–(மலைச் சிகரத்தின் மேல் தவழுகின்ற) பூர்ணச் சந்திரனை–(தமக்கு உணவாக நினைத்து)
எழுந்து–(படமெடுத்துக்) கிளர்ந்து
அணலி–கிட்டி
செம் சுடர்–சிவந்த தேஜஸ்ஸை யுடைய
நா–(தனது) நாக்கினால்
அளைக்கும்–(சந்திரனை) அளையா நிற்குமிடமான
திருமாலிருஞ்சோலை அதே–

கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி வண்ணன் மலை
விபரீத வர்க்கம் எல்லாம் தம் தாம் வஞ்சனைகளாலே
தாம் தாம் முடியும்படியாகத் திரு வாய்ப்பாடியிலே வளர்ந்தவன்
நீல ரத்னம் போன்ற திருமேனியோடே நித்ய வாஸம் செய்கிற திருமலை

நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியை செஞ்சுடர் நா அளைக்கும் திரு மால் இரும் சோலை யதே
மதி தவழ் குடுமியிலே நஞ்சு நக்கிப் பசித்துக் கிடக்கிற மாசுணப் பாம்புகள்
அம் மலையில் தவழுகிற குளிர்ந்த பூர்ண சந்த்ரனை அபிபவ ரூபேண
ஜாதி யுசித ஜீவனம் அன்றோ இது -என்று அதன் மேலே மிகவும் கிளம்பிச் சிவந்து பெரிதான நாக்காலே
வளைப்பதாகத் தேடா நின்றுள்ள திருமாலிருஞ்சோலை மணி வண்ணன் மலை
(ராகு கேது சந்திரனை பீடிக்கும் ஆகவே ஜாதி உசிதம் என்கிறார் )

இத்தால்
பர அநர்த்த வாக்மிகள் (நஞ்சு உமிழ் நாகம்)
பாகவத சேஷத்வ பர்யந்தமான அந்த திவ்ய தேஸம் வாஸம் தன்னாலே
அத்தை விட்டு அந்த தேஸத்திலே வர்த்திக்கிறவர்களுடைய
குளிர்ந்து தெளிந்த ஞானத்தைக் (நளிர் மா மதியை) கண்டு
இழந்த நாளைக்கு அநு தபித்து
மிகவும் ஊர்த்த கதியை பிராபித்து (எழுந்து அணவி)
பக்தி பாரவஸ்ய ப்ரார்தனையாலே கிரஹிக்கத் தேடுவார்கள் (செஞ்சுடர் நா அளைக்கும் )என்னும்
அர்த்த விசேஷங்கள் தோற்றுகிறது

பொய்யே யாகிலும் திவ்ய தேசங்களிலே வர்த்தித்தால்
ஒரு நாள் அல்லா ஒரு நாள் ஆகிலும்
உயர்ந்தவர்கள் அறிவைத்
தாழ்ந்தவர்கள் ஆசைப்படுவார்கள் என்னும் இடம் தோற்றுகிறது

உகந்து அருளின நிலங்களிலே பொய்யே யாகிலும் புக்குப் புறப்பட்டிரீர்
அந்திம தசையிலே கார்யகரமாம் -என்று
பூர்வாச்சார்யசர்கள் அருளிச் செய்வார்கள் என்று ஆச்சாம் பிள்ளை அருளிச் செய்வர்
அதாவது
துஞ்சும் போதும் (திருவாய் -1-10-4 )
இவ் விடத்திலே கணியனூர் சிறிய ஆச்சான் வார்த்தையை நினைப்பது
(நானே விட்டு விலகினாலும் நெஞ்சே நீ ஈடுபாட்டை விடாதே
திவ்ய தேச வாசம் விடாமல் இருக்க வேண்டும் என்னும் வார்த்தை )

விஷ வாக்காவது
த்ரிவித ப்ராவண்ய நிபந்தமான வார்த்தைகள் இறே –
(த்ரிவித ப்ராவண்ய-பிராதி கூல்யர் தேவதாந்த்ர பரர் விஷயாந்தர பரர் )

—————

மன்னு  நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர் தம்மை கவர்ந்த கடல் வண்ணன் மலை
புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று
பொன்னரி மாலைகள் சூழ் போகி மால் இரும் சோலை அதுவே – 4-3- 3-

பதவுரை

மன்னு–(தன்னை அழிவற்றவனாக நினைத்துப்) பொருந்திக் கிடந்த
நரகன் தன்னை நரகாஸுரனை
சூழ் போகி–கொல்லும் வகைகளை ஆராய்ந்து
வளைத்து–(அவனைத் தப்பிப்போக முடியாதபடி)வளைத்துக் கொண்டு
எறிந்து–(திரு வாழியாலே) நிரஸித்து
(அவனால் சிறையிலடைத்து வைக்கப்பட்டிருந்த)
கன்னி மகளிர் தம்மை–(பதினாறாயிரத் தொரு நூறு) கன்னிகளையும்
கவர்ந்த–தான் கொள்ளை கொண்ட
கடல் வண்ணன்–கடல் போன்ற நிறமுடையவனான கண்ண பிரான் (எழுந்தருளியிருக்கிற)
மலை–மலையாவது:
புன்னை–புன்னை மரங்களும்
செந்தியொடு–சுர புன்னை மரங்களும்
புனம் வேங்கையும்–புனத்திலுண்டாகிற வேங்கை மரங்களும்
கோங்கும்–கோங்கு மரங்களும்
நின்று–(புஷ்பங்களால் நிறைந்த ஒழுங்கு பட) நின்று
பொன்னரி மலைகள் சூழ்-(திருமலைக்குப்) பொன்னரி மாலைகள் சுற்றினாற் போலே யிருக்கப் பெற்ற
பொழில்–சோலைகளை யுடைய
மாலிருஞ்சோலை அதே

மன்னு  நரகன் தன்னை சூழ் போகி வளைத்து
விபரீதத்திலே நிலை நின்ற நரகாஸூரனை வளைத்து இளைப்பித்து

எறிந்து-கொன்று

சூழ் போகி-விசாரித்து

கன்னி மகளிர் தம்மை கவர்ந்த
பதினாறாயிரம் கன்யைகளையும் -அவர்கள் இஷ்டத்துக்கு ஈடாக நம்மை அமைத்து
பரிமாறக் கடவோம் -என்று
விசாரித்துக் கைக் கொண்ட

சூழ் போகி -என்று திரு நாமம் ஆகவுமாம்
(சூழ்ச்சி செய்து என்றும் சூழ்ச்சி செய்தவன் என்றும் )

கடல் வண்ணன் மலை
இவர்களை அங்கீ கரித்த பின்பு தன் நிறம் பெற்ற படி

புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று பொன்னரி மாலைகள் சூழ் போலி மால் இரும் சோலை அதுவே
ஸூ வர்ண ஸத்ருசமான புஷ்பங்களை ஒழுகும் படி
பொன்னரி மலை போலே தோற்றுவித்து நின்ற
பொழிலாலே சூழப்பட்ட
மாலிருஞ்சோலை -கடல் வண்ணன் மலை

இத்தால்
ஸூ மநாக்கள் பலரும் சேரும் தேஸம் என்கிறது –

————-

மாவலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த
காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை
கோவலர் கோவிந்தனை குற மாதர்கள் பண் குறிஞ்சி
பா வொலி பாடி நடம் பயில் மால் இரும் சோலை அதுவே – 4-3- 4-

பதவுரை

மா வலி தன்னுடைய–மஹாபலியினுடைய
மகன் வாணன்–புத்திரனாகிய பாணாஸுரனுடைய
மகள் இருந்த–மகளான உஷை இருந்து
காவலை–சிறைக் கூடத்தை
கட்டு அழித்த–அரனோடே அழித்தருளினவனும்
தனி காளை–ஒப்பற்ற யுவாவுமான கண்ணபிரான்
கருதும் மலை–விரும்புகிற மலையாவது;
கோவலர்–இடையர்களுக்கும்
கோவிந்தனை–கோவிந்தாபிஷேகம் பண்ணப் பெற்ற கண்ணபிரான் விஷயமாக
குற மாதர்கள்–குறத்திகளானவர்கள்
குறிஞ்சி மலர்–குறிஞ்சி ராகத்தோடு கூடின
பா–பாட்டுக்களை
ஒலி பாடி–இசை பெறப் பாடிக் கொண்டு (அப் பாட்டுக்குத் தகுதியான)
நடம் பயில்–கூத்தாடுமிடமான மாலிருஞ்சோலை அதே–

மாவலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த காவலைக் கட்டழித்த
மஹா பலி மகனான பாணனுடைய மகளான
உஷா இருந்த கந்யா க்ருஹத்திலே
காவலை
தன் பேரனை வ்யாஜீ கரித்து அழித்த

தனிக் காளை கருதும் மலை
அத்விதீயமான காளை
அதாவது
காமனைப் பெற்ற பின்பும் பரமபதத்தில் படியே பஞ்ச விம்சதி வார்ஷிகனாய் இருக்கை

கருதும் மலை
பரம பதத்திலும் காட்டில் மிகவும் அபி மானித்து நித்ய வாஸம் செய்கிற மலை –

கோவலர் கோவிந்தனை
கோ ரக்ஷணம் விதேயமாம் போது
ஜாதியிலே பிறக்க வேணுமே

குற மாதர்கள் பண்
இனக்குறவர் வாழி பாடா நின்றால்
இனமான குற மாதர்களும் அது தன்னையே பாடும் அத்தனை இறே
பல்லாண்டு ஒலி இறே அத் திருமலை தன்னில் உள்ளது

குறிஞ்சி பா வொலி பாடி நடம் பயில் மால் இரும் சோலை அதுவே
நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று என்னுமா போலே –

————–

பல பல நாழம் சொல்லி பழித்த சிசுபாலன் தன்னை
அலை வலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை
குலமலை கோலமலை குளிர் மா மலை கொற்ற மலை
நிலமலை நீண்டமலை திரு மால் இரும் சோலை யதே – 4-3 -5-

பதவுரை

பலபல நாழம்–பலபல குற்றங்களை
சொல்லி–சொல்லி
பழித்த–தூஷித்த
சிசு பாலன் தன்னை–சிசுபாலனுடைய
அலவலைமை–அற்பத் தனத்தை
தவிர்த்த–(சாம தசையில்) போக்கி யருளின
அழகன்–அழகை யுடையவனும்
சரம தசையில் அழகைக் காட்டி தன்னளவில் த்வேஷம் மாற்றி –
தான் என்றாலே நிந்திக்கும் அலவலைமை தவிர்தமை
அலங்காரன்–அலங்காரத்தை யுடையவனுமான கண்ண பிரான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை–மலையானது:
குலம் மலை–தொண்டர் குலத்துக்குத் தலையான மலையும்
கோலம் மலை–அழகை யுடைய மலையும்
குளிர் மா மலை–குளிர்ந்த பெரிய மலைகள்
கொற்றம் மலை–ஜயத்தை யுடைய மலையும்
நிலம் மலை–(நல்ல மரங்கள் முளைக்கும் பாங்கான) நிலத்தை யுடைய மலையும்
நீண்ட மலை–நீட்சியை யுடைய மலையுமான
திருமாலிருஞ்சோலை அதே–

பல பல நாழம் சொல்லி பழித்த
ஷீராப்தியிலே நினைத்த வாஸனை
ஹிரண்ய ராவண ஜென்மங்களில் நினைத்தவை கூசாமல் சொன்ன பாப ஆசார வாசனைகள்
இவன் தான் அவற்றோடு ஆக்கிக் கொள்ளும் அளவே அன்றிக்கே
அவ் வாசனை தானும் இவன் இஜ் ஜென்மத்தில் ஆர்ஜித்த பாப விசேஷங்களோடே
அவை தான் அல்பம் என்னும் படி இவை வந்து கூடின படி
இவை எல்லாத்தையும் நினைத்து இறே
பல பல நாழம் சொல்லி பழித்தது -என்றது

நாழ் -குற்றம்
பழித்தல் -ஸ்துதி நிந்தையானால் போலும் அன்று
நிந்தா ஸ்துதியும் அன்று
நிந்தையே

சிசு பாலன் தன்னை
அஸூர ஜென்மத்தில் பிறந்து செய்த பாபங்களை போல் அன்றியே
ராஜ ஜன்மத்திலே பிறந்து
த்ரிவித கரணங்களாலும் செய்த பாப விசேஷங்கள்

அலை வலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை
நாட்டை நலிகிற அலை வலை தனத்தை
விக்ரஹ ஸுந்தர்யத்தைக் காட்டித் தவிர்த்தான் அத்தனை அல்லது –

ஸாயுஜ்யம் கொடுத்தான் என்னும் போது
ஸங்கல்ப நிபந்தன நித்ய நைமித்திக வைகல்ய ப்ராயச்சித்தாதிகளும்
புரஸ் சரணாதிகளும்
காம்ய தர்மமான கர்ம ஞான பக்திகளும்
தியாக விஸிஷ்ட ஸ்வீ காரமான ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ப்ராதான்யங்களும்
மற்றும் ஸாஸ்த்ரங்களில் சொல்லுகிற சாதன ஸாத்யங்களும்
ஸிஷ்ய ஆச்சார்ய க்ரமங்களும்
குலைய வேண்டி வரும்

இப்படி துராசார பரனான இவனுக்கும் கூடக் கொடுத்தவன் ஸமாசார பரருக்குக்
கொடுக்கச் சொல்ல வேணுமோ என்னில்
அப்போது ஸமாசாரம் தான் உண்டாகாது
(கைமுதிக நியாயம் பார்க்காமல் உபமான நியாயம் பார்த்து இவனைப் போலவே ஆவார்கள் அன்றோ )
இவன் தனக்கு ஸாயுஜ்ய பிரார்த்தனையும் இல்லை –
(பிரார்த்தனை தானே புருஷார்த்தம் புருஷன் அர்த்திக்க வேண்டுமே )

ஆனால் தாட் பால் அடைந்தான் -என்கிறபடி என் என்னில்
இத் தன்மை அறிவாரை அறிந்தவர்கள் பக்கலிலே இந்த ரஹஸ்யம் கேட்ப்பார்கள்
கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ என்ற போதே இப் பேணுதல் தெரியும் இறே

வத கிமபத மாகஸ் தஸ்ய தி அஸ்தி ஷமாயா -என்றும்
தாட் பால் அடைந்த தன்மை அறிந்தவர் தாமே இறே இத்தை நிஷேதித்தார்

(ரகுவர யத பூ ஸ்தவம் தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய
ப்ரணத இதி தயாளூர் யச்ச சைத் யஸ்ய கிருஷ்ண
பிரதிப வமபராத்துர் முக்த சாயுஜ்யதோ அபூ
வத கிமபத மாகஸ் தஸ்ய தி அஸ்தி ஷமாயா-63-

ஹே ரகுவர –ராகு வம்சத்தில் ஸ்ரீ ராமனாக திரு அவதரித்தவனே
த்வம் -நீ
தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய-அப்படிப்பட்ட மஹா அபராதியான காகாஸூரனது விஷயத்திலே
ப்ரணத இதி-இக் காகம் நம்மை வணங்கிற்று என்பதையே கொண்டு
தயாளூர் யத் அபூ –தயை பண்ணினாய் இறே
ஷிபாமி -என்றும் ந ஷமாமி -என்றும் பண்ணி வைத்த பிரதிஜ்ஞை பழியாதே
தேவர் க்ருபா கார்யமே பலித்து விட்டது – பிராட்டி சந்நிதி யாகையால் இறே-

முக்த கிருஷ்ண-குற்றம் அறியாத கண்ண பிரானே
கிருஷ்ணனாகி என்றும் கிருஷ்ண என்று சம்போதானமாகவும் –
பிரதிபவம் அபராத்துர்–பிறவி தோறும் அபராதம் பண்ணின
சைதயஸ்ய–சிசுபாலனுக்கு – யது வம்ஸ பூதரில் காட்டில்
சேதி குலோத்பவன் என்று தன்னை உத்க்ருஷ்டனாக அபிமானித்து இருக்குமவன் –
சாயுஜ்யதோ அபூச சயத-சாயுஜ்யம் அளித்தவனாயும் ஆனாய் இறே
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை –திருவாய் -7-5-3-
தஸ்ய தே ஷமாயா-அப்படி எல்லாம் செய்தவனான உன்னுடைய பொறுமைக்கு
அபதம ஆகஸ் கிம் அஸ்தி -இலக்காகாத குற்றம் என்ன இருக்கிறது
வத –அருளிச் செய்ய வேணும்
உனக்குப் பொறுக்க முடியாதது உண்டோ
சர்வஜ்ஞரான தேவருக்கும் மறு மாற்றம் இல்லை
க்ஷமித்து அருளி விஷயீ கரிக்கும் இத்தனை -என்கை –)

ஆனால் இங்கனம் பேண வேண்டுவான் என் என்னில்
பிரதிகூல அனுகூலங்கள்
தத் சாதனங்கள்
பல ஸாதனம் அன்று என்று தோற்றுகைக்காக இறே

இவன் பெற்றான் என்றதும்
த்ரிவித கரண ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியால் வந்த ஸூக துக்கங்கள்
அந வரத கால ரஹிதமாகக் கொடுக்கை அவனுக்கு நினைவாகையாலே குறையில்லை
இத்தைப் பற்ற இறே அலவலைமை தவிர்த்த என்று அருளிச் செய்ததும்

இது நினைவாகில் அழகைக் காட்டுவான் என் என்னில்
வாராமல் போகிறவனை புஜிப்பித்து விட வேணுமே என்று
(திரி தந்தாகிலும் -கரிய திரு உருக் கோலம் காண்பித்தார் அங்கும்
அவ்வளவு உயர்ந்த மதுர கவி ஆழ்வாருக்கும் )

இவ் விடத்தே ஆண்டாள் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது –
(வீர ஸூந்த்ர ராயன் விஷயம் )
ஒருவனைக் குறித்து நிரன்வய விநாசம் பர வேத்யமாகச் சொல்லுகை அரிது போலே காணும்

அலங்காரன் மலை
முடிச்சோதிப் படியே

குலமலை
தொண்டக் குலத்துக்குத் தலை நின்ற மலை

கோலமலை
தொண்டக் குலத்தில் உள்ளாருக்குத் தர்ச நீயமான மலை

குளிர் மா மலை
அவனுக்கும் அவனுடையாருக்கும்
சென்றால் குடையாம் -என்கிறபடியே
ஸ்ரமஹர போக்யதையை மிகவும் விளைக்கும் மலை

கொற்ற மலை
அந்த போக்யதையாலே சம்சாரத்தில் எப் பேர்ப்பட்ட ருசிகளாலும் வருகிற
அபிமான போக்யதைகளை ஜெயிக்கலான மலை

நில மலை
மணிப்பாறையாய் இருக்கும் அளவு அன்றிக்கே
ஸூ ரிகளுக்கும் முமுஷுக்களுக்கும் புஷ்ப பல த்ருமாதிகளாய் முளைக்கவும்
முளைக்க வேணும் என்று பிரார்த்திக்கவும் யோக்யமான மலை

நீண்ட மலை
பரம பதத்துக்கும் சம்சாரத்துக்கும் இடை வெளி அற்று ஒரு கோவையாம் படியான மலை
இப்படி இருக்கிற திரு மாலிருஞ்சோலை

அலங்காரன் மலை
இம் மலை யுண்டாய் இருக்க
இவ் வழகு யுண்டாய் இருக்க

ஞான விகாசத்துக்கும்
இவ் வாத்மாவுக்கு ஞான அநு தய சங்கோச மாத்ரமே அன்றிக்கே –
லீலா ரஸ ஹேதுவான அநுகூல வியாபாரம் போலே பிரதிகூல வியாபாரங்களும்
அசக்தரானால் தத் விஷய ஸுந்தர்யமும் ததீய பாரதந்தர்யமும் கழற்றிக் கோக்க ஒண்ணாதாப் போலே
மங்களா ஸாஸனம் என்கிற அர்த்த விசேஷத்தையும் ஆச்சார்ய முகத்தாலே அறியலாய் இருக்க
நிரன்வய விநாசத்திலே அந்வயிப்பதே என்று வெறுக்கவும் இறே

வெறுக்கிறது என்
திருவடிகளில் கூட்டிப் பழைய ஷீராப்தியிலே விட்டான் என்னிலோ என்னில்
அங்குப் புகுந்தான் என்ற ஒரு பிரமாணம் உண்டாக நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்யவும் கேட்டிலோம்
அங்கு சாயுஜ்யமும் கூடாது
எஞ்சாப் பிறவி இடர் கெடுவான் தொடர நின்ற துஞ்சா முனிவர் இறே (திரு விருத்தம் -98 )

இவன் தான் முன்பு அங்கு இசைந்து போந்த ஸாத்ரவ தர்மம் இங்கு நடத்த மாட்டாதாப் போலே
அங்கும் உள்ளோரோடும் பழம் பகை நெஞ்சு பொருந்தி நடத்த மாட்டாமையாலே அங்கும் கூடாது
அவர்களும் இவன் தான் முன்பு பொருந்தி வர்த்தித்தான் ஒருவன் அல்லாமை அறிந்து இருக்கையாலே
அவர்களையும் இவனோடு கூட்டுகையும் அரிதாய் இருக்கும்

தேச விசேஷத்திலே (ஸாந்தானிக லோகம் ) கொண்டு போனான் என்றும் கேட்டிலோம்
அன்று சராசரங்களை வைகுந்தத்தகு ஏற்றினான் -என்று ஓன்று உண்டே
அந் நேரிலே கிருபையால் செய்தான் என்னில்
அவை ராம குண ஏக தாரகங்களாய் இருக்கையாலே கிருபையால் செய்யவும் கூடும்
வைகுண்ட நாம ஸ்தான விசேஷம் இக் கரையில் உண்டு என்னவுமாம் –

கிருபை தனக்கு விஷயமாம் போது
அவை தன்னைப் போலே ராம விரஹ வாட்டம் உண்டாக வேணும்
அவை தான் உண்டானாலும்
ஞானான் மோக்ஷம் என்கிற நேரும்
அபிமானமும்
மோக்ஷ பிரார்த்தனா ருசியும் வேணும்

அது தன்னையும் அவற்றுக்குத் தத் காலத்திலே யுண்டாக்கிக் செய்தாலோ என்னில்
அப்போது அவை ஆஸ்ரயத்தோடே சேராது
சேரும் காலத்து அனுக்ரஹத்தால் வந்த ஆகந்துக ப்ரேராதிகளும் பரஸ்பர விரோதம் தோற்றும்

சாஸ்திரங்களும் உண்டாகில் அவையும் ஒருங்க விட்டுக் கொடுக்க வல்ல ஞான அனுஷ்டானங்களை யுடைய
ஆச்சார்ய அபிமானமும் சேதன ருசியும் வேணும்
அது என்
பகவத் அபிமானமும் சேதன ருசியும் ஆனாலோ என்னில்
அப்போதும் இவ் வடைவு யுண்டாக்கினால் அல்லது ஆத்ம குணம் ஒருவராலும் பிறப்பிக்கப் போகாது

ஸ்வ தந்த்ரனுக்கு அரியது உண்டோ என்னில் ஸ்வ தந்த்ர்யம் இரண்டு ஆஸ்ரயத்தில் கிடவாது
பர தந்த்ரனாக்கி இவ் வடைவிலே கொண்டு போக வேணும்
ஸ்வா தந்தர்யம் தான் தோற்றித்துச் செய்வது இல்லை
கார்யப்பாடானவை செய்யும் போது பிறரை கேள்வி கேளாமல் செய்யும் அளவு இறே உள்ளது

கார்யப்பாடாக ஸ்வா தந்தர்யத்தாலே த்வீ பாந்தர வாஹிஸிகளை அங்கு நின்றும் கொண்டு போந்து
த்வீ பாந்த்ர நியாயம் பயிற்று விக்கிறவோபாதி
கொண்டு போய் நித்ய விபூதி நியாயத்தைப் பயிற்று விக்கிலோ என்னில்
அங்கு கொண்டு போன வைதிக புத்ரர்களுக்கு தேஹ பரிணாமமும் ஞான விகாஸமும் அற்று
பூர்வ பரிணாமத்தோடே மீளுகையால் அதுவும் கூடாது

பிராகிருத அப்ராக்ருதங்கள் சேராதாப் போலே பிராகிருத ஞான வாசனை அப்ராக்ருதத்தில் சேராது –
அர்ச்சிராதி மார்க்க சம்பாவனையும் கூடாது
ஆழ்வார் விசேஷித்து அருளிச் செய்த சூழ் விசும்பு அணி முகிலில் மார்க்க ஸம்பாவநா ஆதரத்வமும் கூடாது
அங்குள்ளார் எதிரே வந்து ஸம்பாவித்துக் கொடு போக அடியாரோடு இருக்கையும்
சூழ்ந்து இருந்து ஏத்துகையும் கூடாது –

அவன் தானும் இவனைத் தாட் பால் அடைவித்த விக்ரஹத்தை அங்குக் கொண்டு போய்த்திலன் இறே
அகடிதமான வட தள ஸாயித்வமும்
அனோர் அணீ யான் -கரந்து எங்கும் பரந்துளன் -என்கிற வியாப்தி ஸுகர்யமும்
ஸங்கல்ப ஸஹஸ்ர ஏக தேசமான ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகளும்
அவன் தன்னுடைய ஸ்வ ஸங்கல்ப பாரதந்த்ரயாதிகளும்
எல்லாம்
ஓரொரு நியாயங்களாலே கடிதமாக்கினாலும்
ஆத்ம குணங்களை விளைப்பிக்கை அவனாலும் அரிதாய் இறே இருப்பது

இங்குள்ளாரையும் அங்குள்ளாரையும்
பிராமயன் யந்த்ரா ரூட-
வானிலும் பெரியன வல்லன் -(1-10-3)–என்னும் அவையும்
பிராகிருத அப்ராக்ருத விஷய நிபந்தனமாக்கி பிரமிப்பிக்கவும் மயக்குவிக்கவும் வல்ல யோக்யதா ஸக்தி மாத்திரம் அல்லது
நிலை நிற்க பிரமிப்பிக்கையும் மயக்குவிக்கையும் அரிது
எளிதானாலும் ஸ்வரூப விரோதியும் ப்ராப்ய விரோதியுமாய் நிஷ் ப்ரயோஜனத்தோடே தலைக் கட்டும்
ஸ்வ தந்த்ரர் என்னா தம் தாம் அவயவங்களைத் தம் தாமே
ஞப்தி சக்திகளால் ஹிம்ஸித்திக் கொள்வாரும் உண்டோ

ஆகையால்
ஸ்ரீ யபதியாய்
ஸர்வஞ்ஞனாய்
ஸர்வ ஸக்தியாய்
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய்
அவாப்த ஸமஸ்த காமனாய்
ஹேய குண ரஹிதனாய்
ஸர்வ பிரகார நிரபேஷனாய்
ததீய ஸா பேஷனாய்
இருக்கிற ஸர்வேஸ்வரனுடைய

நிரங்குச ஸ்வா தந்தர்யமும்
நிருபாதிக கிருபையும்
முதலான குணங்கள் எல்லாம்
சேதனருடைய ஸா பராத ஸ்வா தந்தர்யத்தையும் ஒவ்பாதிக ப்ராவண்யத்தையும் மாற்றி
அத்யந்த பாரதந்தர்யத்தையும் நிருபாதிக சேஷத்வத்தையும் விளைப்பித்து
மங்களா ஸாஸனத்திலே மூட்டுகைக்காக
விரோதி நிரஸனம் செய்ய வேண்டுகையாலே

அயோக்கியரை நிரஸித்த மாத்திரமே அன்றிக்கே
சங்கோச ரூபமான தேஹ விமோசன மோக்ஷ ஸித்தியாய்
மீளாத படியான பிரதேசத்தில் இட்டு வைத்த பிரகாரத்தை இறே
அல வலைமை தவிர்த்த என்று அருளிச் செய்தது –

————–

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்
ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை
பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருகத்
தோண்டல் உடைய   மலை தொல்லை மால் இரும் சோலை அதுவே -4- 3-6 –

பதவுரை

பாண்டவர் தம்முடைய–பஞ்சபாண்டவர்களுடைய (மனைவியாகிய)
பாஞ்சாலி–த்ரௌபதியினுடைய
மறுக்கமெல்லாம்–மனக் குழப்பத்தை யெல்லாம்
ஆண்டு–(தன்) திருவுள்ளத்திற்கொண்டு,
அங்கு–(அவள் பரிபவப்பட்ட) அப்போது (அத் துன்பங்களை யெல்லாம்)
நூற்றுவர் தம்–(துரியோதநாதிகள்) தூற்றுவருடைய
பெண்டிர் மேல்–மனைவியர்களின் மேல்
வைத்த–சுமத்தின
அப்பன்–ஸ்வாமியான கண்ண பிரான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை–மலையானது :
பாண் தரு–பாட்டுக்குத் தகுதியான (ஜன்மத்தை யுடைய)
வண்டு இனங்கள்–வண்டு திரளானவை
பண்கள்–ராகங்களை
பாடி–பாடிக் கொண்டு
மது–தேனை
பருக–குடிப்பதற்குப் பாங்காக (ச் சோலைகள் வாடாமல் வளர)
தோண்டல்–ஊற்றுக்களை யுடைய மலையாகிய
தொல்லை மாலிருஞ் சோலை அதே–அநாதியான அந்த மாலிருஞ் சோலையேயாம்.

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்
இவர்களைப் பாண்டவர்கள் என்கையாலே
அவளையும் பாஞ்சாலி என்று
ஆபி ஜாத்யம் சொல்லுகிறது –

தம்முடைய -என்கையாலே
இவர்களுடைய அபிமானத்திலே அவள் ஒதுங்கி
புருஷணாம் அபாவேந ஸர்வா நார்யா பதி வ்ரதா -என்கிற
பட்டாங்கில் பார தந்தர்யமும் ஸஹ தர்ம சாரித்வமும் தோற்றுகிறது

மறுக்கம் எல்லாம்
துரியோத நாதிகள் ஸபா மத்யத்திலே கொடு போய் துஸ் ஸாதனன் பரிபவிக்க
அத்தாலே ஈடுபட்டு க்ருத்யக்ருத்ய விவேக ஸூன்யையாய்
நெஞ்சு மறுகி அந்த சபையில் இருந்தவர்கள் எல்லாரையும் தனித்தனி முறைமை சொல்லி
சரணம் புக்க அளவிலும்

இவன் சோற்றை யுண்டோமே -என்று வயிற்றைப் பார்ப்பார்
துரியோதனுடைய மாத்சர்யத்தைப் பார்ப்பார்
தர்ம புத்ரனுடைய தர்ம ஆபாச ப்ரதிஜ்ஜையைப் பார்ப்பார்
மற்றும் தம் தாம் கார்யம் போலே தோற்றுகிற அஞ்ஞான பிரகாசத்தை ஞானமாக நினைத்து நிலம் பார்ப்பாராய்

இவளை அபிஜாதை யானாள் ஒரு ஸ்த்ரீ என்றும்
பதி வ்ரதை -என்றும்
ஸஹ தர்ம ஸாரி -என்றும் பாராமல்
துஸ்ஸாதனன் நலிவதைப் பார்த்து இருக்க

இவளும் தன்னுடைய அகதித்வத்தை அனுசந்தித்து
சங்க சக்ர கதா பாணே –நீயும் என்னைப் போலவோ –
துவாரகா நிலயா -பெண் பிறந்தார் வருத்தம் அறிந்து ரஷித்த பிரகாரங்களை மிகையோ
அச்யுத -ஆஸ்ரிதர் தங்கள் நழுவிலும் கை விடான் என்கிறது -வடயஷ ப்ரசித்தியோ
கோவிந்த -ஸர்வஞ்ஞராய் ஸர்வ ஸக்தர்களையோ ரஷித்தது
புண்டரீகாக்ஷ –அக வாயில் கிருபை காணலாம் படியாய் யன்றோ திருக் கண்களில் விகாஸம் இருப்பது –
உனக்கும் ஏதேனும் ஸ்வப்னம் முதலான சங்கோசங்களும் உண்டோ என்றால் போலே சொல்லி
ரக்ஷமாம் சரணாம் கத -ரஷக அபேக்ஷை பண்ணின அளவிலும்

ருணம் ப்ரவ்ருத்தம் இவ -என்றால் போலே
சில கண் அழிவுகளோடே ஸ்ரீ கஜேந்த்ரனுடைய ரக்ஷக அபேக்ஷையை நினைத்து வந்தால் போலே
வந்து முகம் காட்ட ஒரு வழியும் காணாமல்

அவன் பட்ட மறுக்கம் அறியாதே
அவனும் இவர்களைப் போலே கை விட்டான் ஆகாதே என்று
இவள் நினைத்து முன்பு கேட்டு வைத்த சுருசுருப்பையும் காற்கடைக் கொண்டு
லஜ்ஜா நிபந்தனமான சக்தியால் வந்த அசக்தியையும்
அந்த லஜ்ஜையையும் மிடுக்கலோடே கை விட்ட அளவிலே
(இரு கையும் விட்டேனோ திரௌபதியைப் போலே )

எல்லா அவஸ்தையிலும் தியாக விசிஷ்ட ஸ்வீகாரம் ஆகையால்
கழித்து உடுத்தமை தோன்றாமல் உடுத்துக் கழித்தால் போலே நிற்கும்படி
திரு நாம பிரபாவம் உதவும்படியான
சங்கல்ப மாத்ரத்தாலே வஸ்திரம் மாளாமல்
மறுக்கம் எல்லாம் மாண்டு –(துச்சானாதிகளும் )மாண்டு இவளை மயிர் முடிப்பித்து
வதார் ஹரையும் கரிக் கட்டையையும் மன்னரும் பிள்ளையும் ஆக்கும் அளவாக நினைத்து இறே
எல்லா மாண்டு -என்கிறது

ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த
இவ்வளவிலும் பர்யவசியாமல் நூற்றுவர் தம் பெண்டிர் மேலே இம்மறுக்கம் எல்லாம்
வாங்கி வைத்தால் இறே இவள் மறுக்கம் மாண்டது என்னாலாவது

அன்றியே
இவள் மறுக்கம் எல்லாம் தான் ஏறிட்டுக் கொண்டு ருணம் ப்ரவ்ருத்தம் என்று தான் மறுகையாலே
வ்யாதி யுடையவனை வியாதியாளன் என்னுமா போல் இன்றிக்கே
தானே பூண்டு கொள்கையாலே ஆண்டு என்கிறது
அந்த ஆட்சி முடிவது அவர்கள் மேல் வைத்தால் இறே என்னவுமாம்

(நோய் உடையவன் நோயாளி போல் மறுக்கம் ஆளி ஆண்டு என்கிறது )

அன்றிக்கே
மாண்டு அங்கு என்றது
மாண் தங்கு என்று என்று பதமாய்
மாட்சிமை தகுகிற ஸ்த்ரீகள் என்னுதல் –

ஆண் தங்கு -என்று பதமாய்
ஆண்மை அமர்ந்த நூற்றுவர் என்னவுமாம்
யுத்த உன்முகராய் படுகையாலே ஆண்மை அமருகையும் குறை இல்லை இறே
அங்கு அங்கு வைத்த என்னவுமாம்

அப்பன் மலை
ஸ்வ ஸங்கல்பத்தாலே அந்யோன்ய தர்சனம் இன்றிக்கே இருக்கச் செய்து இறே இது எல்லாம் செய்தது
இது எல்லாம் திரு நாமம் தானே இறே செய்தது
இவ் வுபகாரம் எல்லாம் தோற்ற அப்பன் என்கிறார் –
திரு நாம பிரபாவம் தானே அவனையும் ஸ்வ ஸங்கல்ப பரதந்த்ரன் ஆக்கும் போலே காணும்
தூத்ய ஸாரத்யங்கள் பண்ணிற்றும் இவள் சொன்ன திரு நாமத்துக்காகவே என்னுதல்
திரு நாமம் சொன்ன இவள் தனக்காக என்னுதல் –

பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருகத்
பண்ணைப் பாண் என்று பண்ணிலே பாடத் தகுதியான வண்டினங்கள் என்னுதல்
திருப் பாண் ஆழ்வார் போல் பண்ணிலே பாடுபவர் போல் என்னுதல்

பருக என்றது
வர்த்தமானமாய்
பருகப் பருக ஊற்று மாறாதே செல்லும் நீர் நிலமாய்
பூக்களை யுடைத்தான சோலையே நிரூபகமான மலை

தோண்டல் உடைய   மலை தொல்லை மால் இரும் சோலை அதுவே
தோண்டல் உடைய-ஊற்று மாறாதே
இம் மலைக்குப் பழைமை யாவது
அநாதியான திருமலை ஆழ்வார் தாமே திருவனந்த ஆழ்வான் என்னும் இடம் தோற்றுகிறது –

———-

கீழ்
நந்தன் மதலை என்றத்தை அனுசந்தித்தார்
இதில்
காகுத்தனை என்றதை அனுசந்திக்கிறார் –

கனம் குழையாள் பொருட்டாகக் கணை பாரித்து அரக்கர் தங்கள்
இனம் கழு ஏற்றுவித்த எழில் தோள் எம் இராமன் மலை
கனம் கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம்
இனம் குழு ஆடும் மலை எழில் மால் இரும் சோலை யதே – 4-3- 7-

பதவுரை

கனம்–ஸ்வர்ண மயமான
குழையாள் பொருட்டா–காதணியை யுடையாளான
கணை–அம்புகளை
பாரித்து–பிரயோகித்து
அரக்கர்கள் இனம்–ராஷஸ குலத்தை
கழு ஏற்றுவித்து–சூலத்தின் மேல் ஏற்றின வனும்
எழில் தோள்?–அழகிய தோள்களை யுடையவனுமான
இராமன்–இராமபிரான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை–மலையான
கனம்–பொன்களை
கொழி–கொழித்துக் கொண்டு வருகின்ற
தெள் அருவி–தெளிந்த அருவிகளிலே
இனக்குழு–அறிஞர்கள் எல்லாம்–
அகல் ஞாலமெல்லாம்–விசாலமான பூமியிலுள்ளா ரெல்லாரும்
வந்து சூழ்ந்த–வந்து சூழ்ந்து கொண்டு
ஆடும்–நீராடப் பெற்ற
எழில்–அழகிய
மாலிருஞ் சோலையிலே அதே–

கனம் குழையாள் பொருட்டாகக்
கனம் குழை-காதுப் பணி
நாய்ச்சிமார் பெருமாள் திருக் கையில் அறு காழி திரு உள்ளம் பற்றி இருக்குமா போலே
பெருமாளும் நாய்ச்சியாருடைய கர்ண விபூஷணத்திலே மிகவும் திரு உள்ளம் பற்றி இருக்கும் போலே காணும்
அத்தை அவருக்கு நிரூபகமாக அருளிச் செய்கிறார்
இவள் பொருட்டாக

கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம்
நாள் தோறும் அம்புகள் எல்லாம் கோணி நிமிர்த்துப் பாரித்துப் பார்ப்பார் என்னுதல்
ராக்ஷசர் உடம்புகளிலே மந்த கதியாகப் பாரித்துப் பார்ப்பார் –
இனியாகிலும் அநு தபித்து மீளுவார்களோ என்னும் நசையாலே -என்னுதல்
கிள்ளிக் களைந்தானை -என்னக் கடவது இறே

கழு ஏற்றுவித்த
இதில் மீளாதார் உடம்புகளிலே கூர் வாய் அம்புகளைக் கழுக் கோலினம் இனமாக ஊடுறவ ஏற்றுவித்த
ஒரு கோல் அரக்கர் இனம் எல்லாம் நேர் நின்றவர்களை பட்டு உருவுகையாலே அம்புகளைக் கழு என்கிறது

அன்றியே
லங்கா த்வாரத்திலே நேர் நில்லாமல் பட்டவர்களை ஸ்ரீ வானர வீரர்கள் பெருமாள் கேள்வி கொள்ளாமல்
கழுவிலே வைத்து விநோதிக்கவும் கூடும் இறே கோபத்தாலே –
வாலியைப் பார்த்து இவ்வார்த்தை சொல்லுவிதியாகில் கண்ட இடம் எங்கும்
கழு மலை ஆக்குவேன் என்றார் இறே பெருமாள் –
அது இங்கு கூடாமல் இராது இறே

கழுகு என்று பாடமாய்த்தாகில் போரச் சேரும் இறே
அன்றிக்கே
தலைக் குறைத்தலாய் கழுகைக் காட்டும் இறே

எழில் தோள் எம் இராமன் மலை
ஸுர்யம் விளங்குகிற தோள்
நற் குலையை உபகரிக்கையாலே தேஜஸ்ஸூ விளங்குகிற தோள்
பாப கரணங்களைக் குலைக்கக் குலைக்கப் பூரித்த தோள்

எம் இராமன் மலை
அம்புக்கு விஷயமானவர்களை யுத்தத்திலே ரமிப்பிக்கையாலும்
கிருபாதி குணங்களுக்கு விஷயமானவர்களை அவ்வோர் அளவுக்கு ஈடாக ரமிப்பிக்கையாலும்
ராமன் -என்கிறது
இத் தோள் அழகைக் கண்டிருக்கச் செய்தேயும் புமான்கள் ஈடுபடாமல் இருப்பதே
பும்ஸாம் த்ருஷ்ட்டி ஸித்த அபஹாரிணாம்
(ஆடவர் பெண்மையை அளாவும் தோளிணாய் )

கனம் கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்து
பொன் கொழித்து வருகிற திருச் சிலம்பாறு என்னுதல்
அன்றியே
திருச் சோலைகள் அதி வ்ருஷ்டி அநா வ்ருஷ்டிகளாலே ஈடுபடாமல் கர்ஷகரைப் போலே
அம் மலை மேலே மேகங்கள் குடி இருந்து
அளவு பார்த்து மழை பொழிகையாலே
அருவி குதிக்கும் என்னுதல்

கனம்
பொன்னுக்கும் மேகத்துக்கும் பெயர்
இப்படி இருக்கிற திரு அருவியிலே

அகல் ஞாலம் எல்லாம் இனம் குழு ஆடும் மலை எழில் மால் இரும் சோலை யதே
ப்ரஹ்ம லோகம் பர்யந்தமாக யுள்ளார் எல்லாம் தம் தம்முடைய புத்ர பவுத்ராதிகளோடே வந்து
திரை சூழ்ந்து
பெருக்காறு ஆகையாலே தனி இழிய ஒண்ணாமையாலே
ஒருவரை ஒருவர் கை கோத்துக் கொண்டு திரள் திரளாகத்
தீர்த்தமாடுகிற அழகிய திருமாலிருஞ்சோலை மலை இராமன் மலை
இனம் குழும் ஆடும் எழில் திருமாலிருஞ்சோலை மலை இராமன் மலை –

————-

எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய
வரி சிலை வாயில் பெய்து வாய்கோட்டம் தவிர்த்து உகந்த
அரையன் அமரும் மலை யமரரோடு கோனும் சென்று
திரி சுடர் சூழு மலை திருமால் இரும் சோலை யதே – 4-3- 8-

பதவுரை

எரி–நெருப்பை
சிதறும்–சொரியா நின்றுள்ள
சரத்தால்–அம்புகளினால்
இலங்கையினை–இலங்கைக் காரனான ராவணனை
தன்னுடைய–தன்னுடைய
வரி சிலை வாயில் பெய்து–நீண்ட வில்லின் வாயிலே (அம்பிலே )புகுரச் செய்து
வாய் கோட்டம்–(அவனுடைய) வாக்கின் அநீதியை
தவிர்த்து–குலைத்து
உகந்த–(தான் வெற்றி பெற்றமையாலே) மகிழ்ந்தருளின
அரையன்–ஸ்வாமியான இராமபிரான்
அமரும்–எழுந்தருளி யிருக்கிற
மலை–மலையாவது:
அமரரொடு–தேவர்களோடு கூட
கோனும்–(அவர்களுக்கு) தலைவனான இந்திரனும்
திரி–(இரவும் பகலும்) திரியா நின்ற
சுடர்–சந்த்ர ஸூர்யர்களும்
சென்று–வந்து
சூழூம்–பிரதக்ஷிணம் பண்ணப் பெற்ற
திருமாலிருஞ்சோலை மலை அதே–

எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய வரி சிலை வாயில் பெய்து
தன்னுடைய வரி சிலை வாயில் பெய்து -சிதறும்-எரி சரத்தால் இலங்கையினை
தனக்கு அசாதாரணமாய்
அலங்கார வரியை யுடைத்தான சார்ங்க வில்
நாணிலே தொடுத்து
தொடுக்கும் போது ஒன்றாய்
விடும் போது பலவாய்
படும் போது நெருப்பாய் இறே பெருமாள் யுடைய திருச் சரங்கள் தான் இருப்பது

இலங்கையினை
இலங்கையில் உள்ள ராவண பக்ஷபாதிகளை
மஞ்சா க்ரோஸந்தி போலே

வாய் கோட்டம் தவிர்த்து உகந்த
செவ்வைக் கேடாகச் சொல்லுகிற வார்த்தைகளைத்
தவிர்த்து உகந்த
அதாவது
ந நமேயம் -என்றவை முதலானவை இறே

உகந்த அரையன் அமரும் மலை
இவர்களுடைய விபரீத கரணம் குலையப் பெற்றோம் -என்று
பிரியப்பட்ட ராஜா நித்ய வாஸம் செய்கிற திரு மலை

யமரரோடு கோனும் சென்று திரி சுடர் சூழு மலை திருமால் இரும் சோலை யதே
தேவர்களோடு இந்திரனும்
லோக உபகாரகமாக சஞ்சரிக்கிற சந்த்ராதித்யர்களும் தம் தாம் ப்ரயோஜனத்துக்காகச் சென்று
ப்ரதக்ஷிணமாக வருகிற திருமாலிருஞ்சோலை மலை
அது அரையன் அமரும் மலை

அன்றிக்கே
இலங்கையினை வரி சிலை சிதறும் எரி சர வாயில் வாய் கோட்டம் தவிர்த்து
உகந்த அரையன் அமரும் மலை -என்று அன்வயித்து
வில்லுக்கு வாய் அம்பு இறே
இலங்கையை பாம்பு நாக்காலே கிரசித்தது என்னுமா போலே
வில் அம்பாகிற வாயாலே க்ரஸித்து விட்ட பின்பு இறே வாய் கோட்டம் தவிர்த்தது
வாலியைக் கொன்ற அம்பு இலங்கையை விழுங்கிற்று என்னவுமாம்
ராவணன் பட்ட பின்பும் ஈரரசு தவிர்ந்து இல்லை இறே

இந்த்ரனோடு அமரர் என்னாதே -அமரரோடு கோன் என்றது
கர்ம நிபந்தமான ஸ்வ ஸ்வாதந்தர்யத்திலும்
நின்ற நின்ற அளவுகளிலே அந்ய சேஷத்வம் பிரபலம் என்கைக்காக இறே
கர்ம பலம் ஸித்தித்தாலும் அது புஜிக்கும் போதும் தேவ ப்ரஸாத அநு மதிகள் வேணும் இறே
அது இல்லாமையால் இறே ராவணன் எரி சரத்துக்கு இலக்காக வேண்டிற்றும்

வரம் கருதித் தன்னை வணங்காதவன் வன்மை யுரம் கருதி மூர்க்கத்தவனை (இரண்டாம் ) -என்றும்
பெரு வரங்கள் அவை பற்றிப் பிழக்குடைய விராவணன் -என்றும்
கல்லாதவர் இலங்கை -என்றும்
கட்டு அழித்து
கற்றவர் இலங்கை ஆக்கினான் இறே

ஒருவன் பக்கலிலே ஒன்றைப் பெற்றால் அது புஜிக்கும் தனையும் அது பெறும் போதும் போலே
அவனுடைய பிரசாத அனுமதிகள் வேண்டாவோ
தவசியைப் புகட்டி வாள் வாங்கி வந்தேன் என்னலாமோ
தேவா நாம் தானவாஞ்ச சாமான்யம் அதி தைவதம் என்கிறபடியே
இவ்வநு வர்த்தனத்தால் வருகிற ப்ரஸாத அனுமதிகளால் இறே தேவாஸூர ராக்ஷஸாதிகளுக்கும்
ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்யங்களும் அல்ப ஜீவிகையாய்ப் போரு வதும்
ஆர்க்கும் அத்யுத்கட பல ஸித்தி உண்டு இறே
இவை தான் எல்லாம் போராது இறே
அநந்யார்ஹ சேஷத்வம் பிறந்தால் இரே ஈரரசு தவிர்ந்து ஆவது
ஆகை இறே அரையன் அமரும் மலை என்கிறது –

——-

நாநாவான அவதாரங்களிலும்
நாநாவான அபதானங்களிலும்
உண்டான குண விசேஷங்களை அனுசந்திக்கிறார்

கோட்டு மண் கொண்டு இடந்து குடம் கையில் மண் கொண்டு அளந்து
மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடும் விமலன் மலை
ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடி இறை என்று
ஒட்டரும் தண் சிலம்பாறுடை திரு மால் இரும் சோலை யதே -4 -3-9 –

பதவுரை

மண்–ஹிரண்யாக்ஷனாலே பாயாகச் சுருட்டிக் கொண்டு போகப்பட்ட) பூமியை
(வராஹமாய் அவதரித்து)
இடந்து–(அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித்தெடுத்து
கோடு–(தனது) திரு எயிற்றிலே
கொண்டு–என்று கொண்டும்,
மண்–(மஹாபலியினால் தன் வசமாக்கிக் கொள்ளப்பட்ட) பூமியை
(வாமந ரூபியாய் அவதரித்து)
குடங் கையில்–அகங்கையில்
கொண்டு–(நீரேற்று) வாங்கிக் கொண்டு
அளந்து–அளந்தருளியும்
மீட்டும்–மறுபடியும் (அவாந்தர ப்ரளயத்திலே அந்தப் பூமி அழியப் புக.)
அது–அப் பூமியை
உண்டு–திரு வயிற்றில் வைத்து நோக்கி
(பின்பு பிரளயங் கழிந்தவாறே)
உமிழ்ந்து–(அதனை) வெளிப் படுத்தியும்
(இப்படிப்பட்ட ஆச்சரியச் செயல்களாலே)
விளையாடும்–விளையாடா நின்றுள்ள
விமலன்–நிர்மல ஸ்வரூபியான எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை–மலையாவது;
ஈட்டிய–(பெருகி வரும் போது) வாரிக் கொண்டு வரப் பெற்ற
பல் பொருள்கள்–பல தரப் பட்ட பொன், முத்து, அகில் முதலிய பொருள்கள்
எம் பிரானுக்கு–எம் பெருமானுக்கு
அடி இறை என்று–ஸ்ரீபாத காணிக்கை யென்று
ஒட்டரும்–(பெருகி) ஒடி வாரா நின்றுள்ள
தண்–குளிர்ந்த
சிலம்பாறு உடை–நூபுர கங்கையை யுடைய
திரு மாலிருஞ் சோலை அதே–

கோட்டு மண் கொண்டு இடந்து
பாதாள கதையான மஹா பிருத்வியை மஹா வராஹமாய் ஒட்டு விடுவித்து எடுத்து
ஸ்தானத்தே வைத்து
அதுக்கு மேலே

குடம் கையில் மண் கொண்டு அளந்து
கொடுத்து வளர்ந்த கையாலே வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து
உதக பூர்வமாக ஏற்றுக் கொண்டு
நமுசி பிரக்ருதிகளை நியாயத்தாலே சுற்றி எறிந்து த்ரிவிக்ரம வேஷத்தைப் பரிக்ரஹித்து
அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்தர்யம் போம் படி திருவடிகளைப் பரப்பி அளந்து கொண்டு

அந்ய சேஷத்வத நிவ்ருத்தியை முற்படச் சொல்லிற்று
கரை அருகே அழுந்துவாரைக் கைக் கொடுத்து ஏற விடுமா போலே
பிரதம அக்ஷரத்தில் சதுர்த்தி ஸ்தானத்திலே அணுக வந்தான் இவன் ஆகையாலே

(அந்நிய சேஷத்வம் நிவ்ருத்தி -லுப்த சதுர்த்தி உகார-அர்த்தம் -அவனுக்கே அடிமை
ஸ்வ ஸ்வாதந்தர்யம் நிவ்ருத்தி -நம -அர்த்தம் -நான் எனக்கு அல்லன் )

மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடும் விமலன் மலை
பின்னையும் அபதான ஸங்கல்பங்களாலே உண்டு உமிழ்ந்து லீலை கொண்டாட நிற்கச் செய்தேயும்
தத் கத தோஷம் தட்டாதவன்
இன்புறும் இவ் விளையாட்டு உடையான் ( திருவாய் )-என்னுமா போலே

ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடி இறை என்று ஒட்டரும் தண் சிலம்பாறுடை மால் இரும் சோலை யதே
பொன் முத்தும் அரி யுகிரும் புகழைக் கை மா கரிக்கோடும் -என்கிறவை
நாநா வர்ண ரத்னங்கள் -அகில் -சந்தனம் -என்றால் போலே சொல்லுகிற இவை எல்லாம்
பர்த்திரு க்ருஹத்துக்குப் போம் பெண் பிள்ளைகள் மாத்ரு க்ருஹத்திலே பர்தாவுக்கு என்று
தேடி வைத்தவை எல்லாம் கொண்டு
கடுக நடை இட்டுச் செல்லுமா போலே
மலையில் உள்ள பதார்த்தங்களை எல்லாம் பல காலும் கொண்டு வந்து திருச் சிலம்பாற்று தன்னிலே சேர்க்க
இவை எல்லாவற்றையும் மஹா உபகாரகராய் இருக்கிற அழகர் திருவடிகளில்
ஸ்வரூப அனுரூபமாகச் சேர்க்க வேணும் என்று
பெரிய குளிர்த்தியோடே தூங்கு ( கொட்டும் )அருவியாய் வாரா நின்றதீ என்று
தோற்றும்படியான திருச் சிலம்பாற்றை யுடைய
திருமாலிருஞ்சோலை யது விமலன் மலை

இத்தால்
அசல ப்ரதிஷ்டிதரான ஆழ்வார் பக்கலிலே உண்டான ஞான பக்தி வைராக்யங்கள் எல்லாவற்றையும்
அழகருக்கு அழகருக்கு என்று திரு உள்ளத்திலே சேர்த்து வைத்து
இவற்றை அங்கீ கரிக்க வேணும் என்று பிரார்த்தித்து
தூங்கு (தொங்கும் ) பொன் மாலைகளோடு விகல்பிக்கலாம் படி இருப்பவர் தோன்றா நின்றது என்னுதல்

இன்று வந்து இத்தனையும் அமுது செய்யப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்து
பின்னும் ஆள் செய்வன் (நாச்சியார் )-என்கிற அபி நிவேசம் தோன்ற நிற்பாருக்குப்
போலியாய் இரா நின்றதீ என்னுதல் –

————

ஷீராப்தி நாதனுக்கு அந்தத் திரு அணைப் படுக்கை வாய்ப்பிலும் காட்டிலும்
(புல்கும் அணையும் அங்கு )
நின்றால் மர வடியாம் என்கிறபடியே
இத் திருமலை மேல் நிலை அத்யந்த அபிமதம் என்று தோற்றுகிறது –

ஆயிரம் தோள் பரப்பி   முடி ஆயிரம் மின்னிலக
ஆயிரம் பைம் தலைய அநந்த சயனன் ஆளும் மலை
ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும்
ஆயிரம் பூம் பொழிலும் உடை மால் இரும் சோலை யதுவே -4-3 -10-

பதவுரை

ஆயிரம்–பலவாயிருந்துள்ள
தோள்–திருத் தோள்களை
பரப்பு–பரப்பிக் கொண்டும்.
முடி ஆயிரம்–ஆயிரந் திருமுடிகளும்
மின் இலக–(திருவபிஷேகத்திலுள்ள சத்தங்களினால்) மிகவும் விளங்கும்படியாகவும்
பை–பரந்த
ஆயிரம் தலைய–ஆயிரந்தலைகளை யுடைய
அனந்தன்–திருவந்தாழ்வான் மீது
சயனன்–பள்ளி கொண்டருளுமவனான எம்பெருமான்
ஆளும்–ஆளுகின்ற
மலை–மலையாவது,
ஆயிரம் ஆறுகளும்–பல நதிகளையும்
பல ஆயிரம் சுனைகளும்–அனேகமாயிரந் தடாகங்களையும்
ஆயிரம் பூம் பொழிலும் உடை– பல பூஞ்சோலைகளை யுமுடைய-

ஆயிரம் தோள் பரப்பி   முடி ஆயிரம் மின்னிலக
தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி (திருவாய்)-என்னுமா போலே
அநேகம் ஆயிரம் திருத் தோள்களையும் பரப்பி
அநேகம் ஆயிரம் திரு முடிகளை மின்னிலகப் பரப்பி
திரு அபிஷேகங்களில் உண்டான ரத்நாதி ப்ரபைகளாலே திரு அபிஷேகம் மிகவும் மின்னித் தோற்றும் இறே

ஆயிரம் பைம் தலைய அநந்த சயனன் ஆளும் மலை
அநேகம் ஆயிரம் ரத்னங்களால் விளங்கா நின்ற அநேகம் ஆயிரம் திரு முடிகளை யுடைய
திரு அநந்தாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிறவன்
ப்ராப்த அனுரூபமாக அத்யந்த அபிமானத்தோடே
நங்கள் குன்றம் கை விடான் (திருவாய்-10-7 )-என்கிறபடியே ஆளும் மலை

ஆயிரம் ஆறுகளும்
திருச் சிலம்பாறு என்னும் ப்ரஸித்தியை யுடைத்தான ஆறு
திரு நாராயணப் பொய்கையை நோக்குகைக்கு ஹேதுவாக திருச் சிலம்பில் தெறித்த திவலைகள்
அந்ய ஸ்பர்சம் அற்று மற்றும் உண்டான ஆயிரம் ஆறுகளும்

சுனைகள் பல ஆயிரமும்
மணம் கமழ் சாரல்
வந்து இழி சாரல்
நலம் திகழ் நாராயணன்
ஆராவமுது
என்றால் போலே திரு நாமங்களை யுடைத்தான அநேகம் ஆயிரம் திருச் சுனைகளும்

ஆயிரம் பூம் பொழிலும் உடை மால் இரும் சோலை யதுவே
இவ் வாறுகளில் தீர்த்தங்களினாலும்
இச் சுனைகளில் தீர்த்தங்களாலும் வளருகிற அநேகம் ஆயிரம் திருச் சோலை களையும்
யுடைத்தான திருமாலிருஞ்சோலை மலை

இத்தால்
அங்கே நித்ய வாஸம் செய்கிற திருமாலை ஆண்டான் போல்வாருடைய
நிர்வாஹ ப்ரவாஹங்களைக் காட்டுகிறது
ஆயிரம் ஆறுகளால்

அவை எல்லாம் ஓர் அர்த்தத்தில் சேர்ந்தமை தோற்றுகிறது
திருச் சிலம்பாறு என்று திரு நாமத்தை உடைத்தான ஆறு திரு நாராயண பொய்கையை நோக்குகையாலே

ஆறுகள் போலே திருச் சுனைகளும் ஸ்தாவர ஜாதியில் அவதரித்த ஸூரிகளுக்கு
தாரகாதிகளாய் நோக்கினமையும் காட்டுகிறது

———–

நிகமத்தில் இத் திருமொழி யாலே 
அழகருடைய வைபவத்தை தாம் பிரகாசிப்பித்தமையை அருளிச் செய்து –
இதற்க்கு வேறு ஒரு பலம் சொல்லாதே- இத்தை அறிகை தானே பலமாக தலைக் கட்டுகிறார்-

மால் இரும் சோலை என்னும் மலையை உடைய மலையை
நாலிரு மூர்த்தி தன்னை நால் வேத கடல் அமுதை
மேலிரும் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளின்
மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனவே -4 -3-11 –

பதவுரை

மாலிருஞ்சோலை என்னும்–திருமாலிருஞ்சோலை என்கிற
மலையை–திருமலையை
உடைய–(தனக்கு இருப்பிடமாக) உடையவனும்
மலையை–ஒரு மலை சாய்ந்தாற்போன்றுள்ளவனும்
நால் இரு மூர்த்தி தன்னை–திருவஷ்டாக்ஷர ஸ்வரூபி யானவனும்
நால் வேதம் கடல் அமுதை–நான்கு வேதங்களாகிய கடலில் ஸாரமான அம்ருதம் போன்றவனும்
மேல் இருங் கற்பகத்தை–(ஸ்வர்க்க லோகத்திலுள்ள கல்ப வ்ருக்ஷத் தினம்) மேற்பட்டதும் பெரிதுமான கல்ப வ்ருஷமாயிருப்பவனும்
வேதாந்தம்–வேதாந்தங்களிற் கூறப்படுகின்ற
விழுப் பொருளில்–சிறந்த அர்த்தங்களுள்
மேல் இருந்த–மேற்பட்ட அர்த்தமாயிருப்பவனும்
விளக்கை–தனக்குத் தானே விளங்குபவனுமான எம்பெருமானைக் குறித்து
நந்தா விளக்கே -அளத்ததற்கு அரியான்
ஸத்யம் ஞானம் அநந்தம்
திரு மூழிக் காலத்து விளக்கே
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
விரித்தன–அருளிச் செய்தவை இப் பாசுரங்கள்.–
அவனை அறிவதே பலன் –வேறே தேடிப் போக வேண்டாமே

மால் இரும் சோலை என்னும் மலையை உடைய மலையை
அழகருக்கு ஏற்றம் திருமலையை யுடையவர் என்று
ஈஸ்வரனை மலை என்கைக்கு அடி
போக்யதா வெள்ளமும்
நிலை குலையாமையும் —

நாலிரு மூர்த்தி தன்னை
அஷ்ட வஸூக்களுக்கு அந்தர்யாமி யானவனை

அன்றிக்கே
வாஸூ தேவ சங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்தரில்
இரு மூர்த்தி
பெரியவன் வாஸூ தேவன்

அன்றிக்கே
நாலிரு மூர்த்தி என்றது
திரு மந்திரத்தில் எட்டுத் திரு அஷரத்துக்கும் சரீரி என்றபடி

நால் வேத கடல் அமுதை
வேதத்தில் பிரயோஜன அம்சம் திரு மந்த்ரம்
மாதவன் பேர் சொல்வதே வேதத்தின் சுருக்கு (இரண்டாம் திருவந்தாதி )

மேலிரும் கற்பகத்தை
ஸ்வர்க்கத்தில் கற்பகத்திலும் வியாவ்ருத்தி சொல்கிறது
அந்தக் கல்பகம் தன்னை ஒழிந்தவற்றைக் கொடுக்கும் அத்தனை இறே
இந்தக் கல்பகம் அதிகாரியையும் உண்டாக்கி
தன்னையே கொடுக்கும்
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் ( இரண்டாம் திருவந்தாதி ) -என்னக் கடவது இறே

வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கை
அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்த்ரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் -( திரு நெடும் தாண்டகம் )
இத்தால் பிரணவத்தைச் சொல்லுகிறது

மேலிருந்த விளக்கை
வேதாந்தத்தில் ஸர்வ ஸ்மாத் பரன் என்று ப்ரகாசகன் ஆனவனை
அதாவது
அகாரார்த்தம் ஆனவனை

விட்டு சித்தன் விரித்தனவே
பகவத் ஸ்வரூப குணங்களிலே வியாபித்த திரு உள்ளத்தை யுடைய
ஆழ்வார் இப் பிரபந்தத்திலே வெளியிட்டு அருளினார்

இதுக்குப் பல ஸ்ருதி சொல்லாமைக்கு அடி இது தானே பலமாகை –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-2–அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை-

July 27, 2021

பிரவேசம்
கீழில் திருமொழியில்
அலையார் கடல் கரை வீற்று இருந்தானை அங்குத்தை கண்டார் உளர் -என்று

(கொலை யானை கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருது அழியச் 
சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் 
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப 
அலையார் கடல் கரை வீற்று இருந்தானை அங்குத்தை கண்டார் உளர் -4- 1-3 )

கொலை யானை கொம்பு பறித்த கிருஷ்ணனோடு கூட்டி அனுசந்திக்கையாலே

அவ் விரண்டு அவதாரத்தையும்
அவ்வோ காலத்தில் கண்டவர்கள் காட்டும் போது
அவை தேசாந்திர கதமாகையாலும்
காலாந்தர கதமாகையாலும்
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளிலும் ஸர்வருக்கும் உசிதமாக
பின்னானார் வணங்கும் இடத்திலே இறே
விபவத்திலே காண வேணும் என்றவர்களுக்கும் காட்டலாவது

விபவம் நிலை நிற்கும் இடத்திலே காட்ட வேணும் இறே
இது தான் அவ்வவ காலங்களிலும் உண்டு இறே
ஆனாலும் அது தானே இறே
பின்னானாருக்கும் வணங்கலாவதும் –

அது தன்னை அவனுக்கு அத்யந்த அபிமதையான
ஸ்ரீ பூமி நாய்ச்சியார் திரு முலைத் தடம் போலே விரும்புமதாய்
நங்கள் குன்றம் கை விடான் (10-7-4 -திருமாலிருஞ்சோலை திருவாய் மொழி )-என்கிறபடியே
நித்ய வாஸம் செய்யப்படுமதாய்
மாலிருஞ்சோலை என்னும் மலையை யுடைய மலை என்னும்படி
அவ் விருப்பு மாறாமல் அழகர்
ஸ்வரூப ரூப குண விபூதிகளோடே
மாலிருஞ்சோலை நம்பி (நாச்சியார் )-என்னும்படி
பிரகாசித்த இடத்திலே

அவரிலும் அத் திருமலை தன்னையே உத்தேச்யமாகக் காட்டி
மங்களா ஸாஸன பரரான தத் காலத்தில் உள்ளாருக்கு அநு பாவ்யமாய்
பிற்காலத்தில் உள்ளாருக்கு கிடையாததாய் இருக்கிற படியையும்
பின்னானார் வணங்கும் சோதி -என்கிறபடியே
அவதாரத்தில் பிற்பாடரானவர்களுக்கும் இழக்க வேண்டாதபடி
ஸர்வேஸ்வரன் அர்ச்சாவதாரமாய்க் கொண்டு உகந்து அருளினை நிலங்களிலே
அவனை அனுபவிக்கக் கோலி மங்களா ஸாஸன பர்யந்தமாக அனுசந்திக்கிறார்

உத்தேச்ய விஷயத்தைக் காண வேணும் என்று ஆச்சார்ய பரதந்த்ரனைக் கேட்டவர்களுக்கு
நீங்கள் கேட்கிறி கோளாகில்
நீங்கள் அபேக்ஷிக்கிற விஷயத்தை கண்டார் உளர் என்று
கண்டவர்களைக் காட்டினால்
அந்தக் கண்டவர்களை நீங்கள் கண்டால் போலே காட்ட வேணும் என்று அபேக்ஷித்தால்
அவர்கள் காட்டுவது
அர்ச்சாவதாரத்தை அநவரத காலமும் சிரஸா வகிக்கும் அவர்களை (திருமலையை ) இறே

இதில்
1-நாடுகிறவர்கள் யார்
2-நாடுதிரேல் என்கிறவர்கள் யார்
3-நாடும் விஷயம் தான் எது
4-அந்த விஷயத்தை நாடாமல் கண்டு பிரிந்து காண வேணும் என்று நாடுகிறவர்கள் யார் –என்னில்

1-நாடுமவர்கள் -சென்று பொருள் படைப்பான் கற்ற திண்மையை யுடையவர்கள்
(பாகவதர்களை விட்டு பகவானைத் தேடிப் போருகிறவர்கள் )
2-நாடுதிரேல் என்கிறவர்கள் – பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -கண்ணி நுண் சிறுத்தாம்பு –
முதலானவற்றில் நிலை நின்ற அத்ய அவசாய ஸ்ரீ யை யுடையவர்கள் –
3-நாடும் விஷயம் -ராம கிருஷ்ணாதி அவதாரங்கள்
4-இவ் விஷயத்தை நிலை நிற்கக் கண்டு உளராம்படி உளரானவர்கள் ஆழ்வார்கள்
(விபவம் ரிஷிகள் அர்ச்சை ஆழ்வார்கள் என்றவாறு )

மெய்மையே கண்டார் உளர் என்றும்
மருவுமிடம் நாடுதிரேல் என்றும் உண்டாகையாலே
நங்கள் குன்றத்தையும்
அத்தைக் கை விடாமல் இவனவன் -என்று
தேச கால நியமம் இன்றி நித்ய வாஸம் செய்கிற
முடிச் சோதியில்( திருமலையில் )அழகரையும் உத்தேச்யமாகப் பேசுகிறார் –

(அவன் இவன் என்று கூழேன்மின் குழம்பாதீர்
இவனா அவன் –
நெஞ்சினால் நினைப்போனான் அவன் நீள் கடல் வண்ணன்
சிறப்பான அர்ச்சாவதாரத்துக்கு அவன் ஒப்பாகுமா என்றவாறு)

———-

அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை
குலம் பாழ் படுத்து குல விளக்காய் நின்ற கோன் மலை
சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர் ஆடும் சீர்
சிலம்பாறு பாயும் தென் திரு மால் இரும் சோலையே -4 2-1 –

பதவுரை

தெய்வம் மகளிர்கள்–தேவ ஸ்திரீகள்
சிலம்பு ஆர்க்க (நமது) பாதச் சிலம்புகள் ஒலிக்கும் படி
வந்து (பூலோகத்தில்) வந்து
ஆடும் சீர்–நீராடும்படியான பெருமையை யுடைய
சிலம்பு ஆறு–நூபுர கங்கையானது
பாயும்–(இடைவிடாமல்) பெருகப் பெற்றுள்ள
தென் திருமாலிருஞ் சோலை–அழகிய திருமாலிருஞ் சோலையானது,
அலம்பா–பிராணிகளை அலையச் செய்தும்
வெருட்டா–பயப்படுத்தியும்
கொன்று–உயிர்க் கொலை செய்தும்
திரியும்–திரிந்து கொண்டிருந்த
அரக்கரை–ராக்ஷஸர்களை
குலம் பாழ் படுத்து–ஸ குடும்பமாகப் பாழாக்கி
குலம் விளக்கு ஆய் நின்றகோன்–(இக்ஷ்வாகு வம்சத்துக்கு விளக்காய் நின்ற பெருமான்
எழுந்தருளி யிருக்குமிடமான)
மலை–திருமலையாம்–

அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை
ஆரவாரித்து சீட்கை -விளைத்து -பிடித்து -அஞ்சப் பண்ணி
அஞ்சினாரைக் கொன்று
அதுவே யாத்ரையாய்த் திரியும் அரக்கரை
அதுக்கடி-ஜன்ம தோஷம்

குலம் பாழ் படுத்து
பாழாளாகப் படை பொருதானுக்கு
விபீஷணன் அவர்களுக்கு கூட்டு அன்று என்று -என்னும் இடம்
அதுக்கு ஸூசகம் -பெருமாள் இஷ்வாகு வம்சஜனாக நினைத்து வார்த்தை அருளிச் செய்தது –

குல விளக்காய் நின்ற கோன் மலை
ராவணன் திக் விஜயம் பண்ணின அன்று தொடங்கி இஷ் வாகு வம்சம் ஒளி மழுங்கிக் கிடந்தது
பெருமாள் திரு அவதரித்த பின்பு இறே குன்றத்து இட்ட விளக்காய்த்து

கோன் மலை
ஸர்வ ஸ்வாமி நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்
ஸர்வ ஸ்வாமித்வம் வீறு பெற்றது இங்கே இறே
(மூலவர் பரம ஸ்வாமி திரு நாமம் )

சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர் ஆடும்
முன்பு ராவணாதிகளுக்கு அஞ்சிச் சிலம்பு ஒழிந்தும்
பஞ்சடை -(பஞ்சை )இட்டும் வருகை தவிர்ந்து
குலம் பாழ் படுக்கையாலே ஸ்வர்க்கத்தில் அப்சரஸ்ஸூக்கள் சிலம்பார்க்க வருவர்கள்-

ஆடும்
ஸ்வர்க்கத்தில் இருப்புக்கு சாதனமாக
சாலில் நீர் மாண்டால் போலே
புண்யம் மாண்டால் தேடிக் கொள்ளும் தேசம்

சீர்
இது தானே இறே இதுக்கு ஏற்றம்
நிரூபகமும் இது தானே இறே இதுக்கு

சிலம்பாறு பாயும் தென் திரு மால் இரும் சோலையே
தென் என்று அழகாய்
மால் என்று பெருமை
இருமை என்றும் பெருமை
மிக்க பெருமை என்றபடி –

————–

ப்ரதிஜ்ஜையிலே
பல்லாண்டு பல்லாண்டு -என்றும்
பண் பல பாடி பல்லாண்டு இசைப்ப-(1-10 )-என்றும்
பல்லாண்டு கூறி வைத்தேன் (3-3 )-என்றும்
பல்லாண்டு ஒலி செல்லா நிற்கும்-(4-2-2 ) -என்றும்
அருளிச் செய்கையாலே இவர் திரு உள்ளத்துக்குப் பொருந்துவது
மங்களா சாஸனமே என்று தோன்றுகிறது இப் பாட்டால் –

வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை
பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை
எல்லாவிடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி
செல்லா நிற்கும் சீர் தென் திரு மால் இரும் சோலை மலையே -4 -2-2 –

பதவுரை

பல்லாண்டு ஒலி–மங்களசான கோஷமானது
எல்லா இடத்திலும்–எல்லா யிடங்களிலும்
எங்கும்–திருமலையின் பரப்பெங்கும்
பரந்து செல்லா நிற்கும் சீர்–பரவிச் செல்லும் படியான பெருமையை யுடைய
தென் திருமாலிருஞ்சோலை
வல் ஆளன்–வலிய ஆண்மையை யுடையவனும்
வாள்–(சிவனிடத்துப் பெற்ற) வாளை யுடையவனுமான
அரக்கன்–ராவணனுடைய
தோளும் முடியும்–தோள்களும், தலைகளும்
தங்கை–(அவனது) தங்கையாகிய சூர்ப்பணகையினது
பொல்லாத மூக்கும்–கொடிய மூக்கும்
போக்குவித்தான்–அறுப்புண்டு போம்படி பண்ணின எம்பெருமான்
பொருந்தும்–பொருந்தி எழுந்தருளி யிருக்குமிடமான
மலை–திருமலையாம்–

வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும்
ப்ரஹ்மா கொடுத்த வரத்தால் வந்த மிக்க ஆண்மையும்
ருத்ரன் கொடுத்த வாளையும் உடைய
(ப்ரஹ்மா நாள் கொடுக்க ருத்ரன் வாள் கொடுக்க )
அரக்கன் தோளும் முடியும்

தங்கை பொல்லாத மூக்கும்
அவன் தன்னைப் போலவே யதேஷ்ட சாரித்வத்தால் வந்த
பொல்லாங்கை யுடைய தங்கை யுடைய மூக்கும்

போக்குவித்தான்  பொருந்து மலை
இவளை அங்க ஹீனை யாக்கி
இவர்களால் லோகத்துக்கு வந்த விரோதத்தை நீக்கினவன்
நித்ய வாஸம் செய்கிற திருமலை

எல்லாவிடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி
செல்லா நிற்கும்
விஷய அனுரூபம் ஸ்வரூபம் என்பார் இடங்களிலும்
ஸ்வரூப அனுரூபமே புருஷார்த்தம் என்பார் இடங்களிலும்
(ஆட்க்கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் —
என்னை முற்றும் பருகினான் காட்கரை அப்பனே )
உபாசன ஆத்மக ஞானம் யுடையார் இடங்களிலும்
ரஷ்ய ரக்ஷக பாவம் மாறாடி
பல்லாண்டு ஒலி செல்லா நிற்கும்

பல்லாண்டு என்கிற மங்களா ஸாஸன ப்ரகாசிதருக்குப் பரதந்த்ரர் ஆனதும்
நித்ய விபூதியிலும் மிக வேண்டியது இங்கேயே யாகையாலே செல்லா நிற்கும்

சீர்
அம் மலை மேல் வர்த்திக்கிறவர்களும் -அம் மலை மேல் உண்டான பதார்த்தங்களைப் பக்வமாக்கி
அங்கே இருக்கிற திரு மலை ஆழ்வாரை
உன் பொன்னடி வாழ்க ( 5-3 )என்று அமுது செய்யப் பண்ணுவதும்
ஆஸ்ரிதர் ஸந்நிதி பண்ண வேணும் என்கிற இடத்திலே ஸந்நிதி பண்ணுமவர் இறே திருமலை ஆழ்வாரும்

அன்றிக்கே
உன் பொன்னடி வாழ்க -என்கிறது அழகர் ஆகவுமாம்
இருவருக்கும் உண்டு இறே மங்களா ஸாஸன பரரான ஆஸ்ரிதற்குப் பரதந்த்ராகை
இரண்டு இடத்திலும் உண்டு இறே பின்னும் ஆளும் செய்கை ( நாச்சியார் )
ஏவம் பிரகாரமான குணங்களையும்
திருமாலிருஞ்சோலை மலை என்கிற திரு நாமத்தையும் யுடையராய் இறே திருமலை ஆழ்வார் தாம் இருப்பது –

இனக் குறவர் பொன்னடி வாழ்க என்கிறது
எந்தாய் என்கிறதிலே ப்ரதான்யம்
இங்கே திருமாலிருஞ்சோலை என்கையாலே திருமலை ஆழ்வார் மேலே இறே ப்ராதான்யம்
அதுக்கு அடி –
அழகருக்கு சென்றால் குடையாம் என்கிறபடி
இஷ்ட விநியோக அர்ஹமாம் இருக்கை இறே

தென் என்று
திக் ஆதல்
அழகு ஆதல்
தென்ன என்கிற ஆளப்பம் ஆதல்

மாலும் இருமையும் பெருமையாய் -மிக்க பெருமை என்னுதல்
மாலினுடைய பெரிய சோலை என்னுதல்
மயல் மிகு பொழிலாய் (2-10) மாலுக்கு மாலை விளக்கும் என்னுதல் –

—————-

தக்கார் மிக்கார்களை சஞ்சலம் செய்யும் சலவரை
தெக்கா நெறியே  போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
எக்காலமும் சென்று சேவித்து இருக்கும் அடியரை
அக் கான் நெறியை மாற்றும் தண் மால் இரும் சோலையே – 4-2- 3-

பதவுரை

எக் காலமும்–எப்போதும்
சென்று–போய்
சேவித்திருக்கும்–திருவடி தொழா நின்றுள்ள
அடியரை–பாகவதர்களை
அக் கான் நெறியை மாற்றும்–அப்படிப்பட்ட (கொடுமையான) (பாவக்)காட்டு வழியில் நின்றும் விலக்கக் கடவதும்
தண்–தாப ஹரமுமான
மாலிருஞ்சோலை
தக்கார் –(க்ருபா விஷயத்தில்) எம்பெருமான் ஒத்தவர்களும்
மிக்கார்களை (க்ருபா விஷயத்தில்-அவனிலும்) மேற்பட்டவர்களுமாயுள்ள மஹாத்மாக்களை
சஞ்சலம் செய்யும்–அலைத்து வருந்தா நின்றுள்ள
சலவரை–க்ருத்ரிமப் பயல்களை
தெக்கு ஆம் நெறியே–தென் திசையிலுள்ள நரக மார்க்கத்திலே
போக்கு விக்கும்–போகும் படி பண்ணா நின்ற
செல்வன்–ச்ரிய பதியான எம்பெருமான் (எழுந்தருளி யிருக்குமிடமான)
பொன் மலை–அழகிய திருமலையாம்–

தக்கார்
ஈஸ்வரனோடு ஓக்க கிருபை ஒத்து இருக்குமவர்கள்
ஈஸ்வரனுக்குத் தகுதியானவர்கள்
அதாவது
நினைவு ஒன்றாய் இருக்கை
சர்வாத்மாக்களும் உஜ்ஜீவிக்க வேணும் என்கிற கிருபை ஒத்து இருக்கை

மிக்கார்களை
ஈஸ்வரனிலும் பிராட்டியிலும் கிருபை மிக்கு இருப்பவர்கள்
அதாவது
புருஷகாரமாவார் -கை விட்டவர்களைக் கொள்ளுமவர்கள் இறே
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான சடகோபன் என் நம்பியே -என்று
ஈஸ்வரனும் பிராட்டியும் செய்யும் காரியமும் செய்து
தாம் செய்யும் காரியமும் செய்கையாலே மிக்கார் என்கிறது
வருமையும் இம்மையும் நன்மை அளிக்கும் பிராக்கள் -என்று
இம்மைக்கும் மறுமைக்கும் ரஷிப்பவர்கள் இறே
ஈஸ்வரன் அருளிலும் இவர்கள் அருள் இறே நன்றாய் இருப்பது
நல்லருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்ல வாழ் -என்னக் கடவது இறே

சஞ்சலம் செய்யும் சலவரை
பகவத் விஷயத்திலே வைத்த நெஞ்சைக் கலங்கப் பண்ணும் க்ருத்ரிமரர்களை
ஸ்ரீ தண்டகாரண்ய வாசிகளான ரிஷிகள் பகவத் த்யானம் குலைந்து
ஏஹி பஸ்ய சரீராணி -என்று உடம்புக்கு மன்றாடும்படி ஆய்த்து இறே

சலவர்
அனுகூலரைப் போலே ப்ராதிகூல்யம் பண்ணுமவர்கள்

தெக்கா நெறியே  
நரகத்துக்குப் போம் வழியே

போக்குவிக்கும்
மீட்சியில்லை

செல்வன் பொன் மலை
இப்படிப் போம் படி பண்ணுகைக்கு ஹேது ஸ்ரீ யபதியாகையாலே
அசுரர்க்குத் தீங்கு இழைக்கும் திருமால் -என்னக் கடவது இறே
ராவணாதிகளைக் கொல்லுகைக்கு தபஸ்ஸூ பண்ணுபவன் இறே

பொன் மலை
ஸ்ரீ யபதி வர்த்திக்கிற ஸ்லாக்யமனான திரு மலை

எக்காலமும் சென்று சேவித்து இருக்கும் அடியரை
அநந்ய ப்ரயோஜனராய்
புறம்பு அந்நிய பரதை இல்லாமல் சேவித்து இருப்பவர்கள்
ப்ரயோஜனாந்தர பரர்க்கு இறே கால நியதி உள்ளது
இவர்களுக்கு கால நியதி இல்லை
அதுக்கடி
அடியார் ஆகையால்
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து
வைகல் தொழுவார் -என்னக் கடவது இறே

அக் கான் நெறியை மாற்றும்
அக் காட்டு வழியை மாற்றும்
பாவக் காடு இறே

தண் மால் இரும் சோலையே
அழகர் பிரதிகூலரைத் தெக்கா நெறியே போக்குவிப்பர்
திருமலை ஆழ்வார் அனுகூலரை அக் கான் நெறியை மாற்றுவிப்பர்
பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து ஆயன்
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் –என்னக் கடவது இறே

அழகரைப் பற்றுகையிலும்
அயன் மலை அடைவது -இறே கருமம் –

———–

ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர் தம்
கோனார்க்கு ஒழிய கோவர்த்தனத்துச்  செய்தான் மலை
வான் நாட்டில் நின்று மா மலர் கற்பகத்து ஒத்து இழி
தேனாறு பாயம் தென் திரு மால் இரும் சோலையே – 4 -2-4 –

பதவுரை

வான் நாட்டில்–ஸ்வர்க்க லோகத்திலுள்ள
மா மலர்–பெரிய பூக்களை யுடைய
கற்பகம்–கல்ப வ்ருக்ஷத்தினுடைய
தொத்தில் நின்று–பூங்கொத்தில் நின்றும்
இழி–பெருகா நின்ற
தேன்–தேனானது
ஆறு பாயும்–ஆறாய்க் கொண்டு ஓடா நிற்கிற
தென்–அழகை யுடைய திருமாலிருஞ்சோலை
ஆன் ஆயர்–பசுக்களுக்குத் தலைவரான இடையர்கள்
கூடி–ஒன்று சேர்ந்து
அமைத்து–(இந்திரனுக்காக) ஏற்படுத்தின
விழவை–ஸமாராதனையை
அமரர் தம் கோனார்க்கு ஒழிய–(அந்த) தேவேந்திரனுக்குச் சேர வொட்டாமல் தடுத்து
கோவர்த்தனத்து–கோவர்த்தன மலைக்குச் (சேரும் படி)
செய்தான் மலை–செய்தருளின கண்ண பிரானுடைய திருமலையாம்–

ஆனாயர் கூடி
பசு மேய்க்கும் இடையர் திரண்டு
ஆனான் ஆனாயன் (1-8-8 )-என்னக் கடவது இறே இவன் தன்னையும் –

அமைத்த விழவை
இடையர் கூடிச் செய்த உத்ஸவத்தை

இதில் உடன்படாதான் கிருஷ்ணன் ஒருவனும் இறே
அதுக்கடி
தான் பிறந்து இவர்கள் கொடாத போது உங்கள் அளவிலே அதிகரித்து
அசாதாரண விக்ரஹங்களிலே கைக் கொள்ளும் பதார்த்தங்களை
தேவத அந்த்ர்யாமி த்வாரா கைக் கொள்ளுகை திரு உள்ளத்துக்கு அஸஹ்யம் ஆகையால்

அமரர் தம் கோனார்க்கு ஒழிய
அமரர் என்று தேவ ஜாதி
கோனார் என்று இவர்களைக் கும்பீடு கொள்ளுகிறவர்
(கோனார் பூஜ்ய பஹு வசனம் )

ஒழிய
கிருஷ்ணர் நந்த கோபரை அழைத்து
பசுக்களுக்கு இந்த மலையிலே அன்றோ புல்லும் தண்ணீரும்
இது கோ வர்த்தகம் என்று பேராசைக்கு அடி கோவை வார்த்திப்பிக்கும் என்று அன்றோ
ஆன பின்பு அவனுக்கு இடத் தவிர்ந்து
இந்த மலைக்கு இடப் பாருங்கோள் என்று அருளிச் செய்ய

அவரும் அத்தைக் கேட்டு
இடையரை அழைத்து
இந்தச் சிறு பிள்ளைக்கு உள்ள அறிவும் நமக்கு இன்றிக்கே இருந்தது
இவன் சொன்னால் போலவே செய்யுங்கோள் -என்ன

அப்படியே செய்கிறோம் என்று
மலையின் முன்னே கொண்டு போய் குவித்தார்கள்

கோவர்த்தனத்துச்  செய்தான் மலை
அங்கு ஒரு பூத வடிவு கொண்டு (பெரிய திருமடல் )அமுது செய்து
இடையர்களுடன் கூடி நின்று
வேண்டும் வரங்களும் வேண்டிக் கொண்டவன் வர்த்திக்கிற தேசம்
(திருமாலிருஞ்சோலை திவ்ய தேச நித்ய வாஸம் வேண்டிக் கொண்டானோ )

வான் நாட்டில் நின்று மா மலர் கற்பகத்து ஒத்து இழி தேனாறு பாயம் தென் திரு மால் இரும் சோலையே
இந்திரன் கல் வர்ஷம் பொழிவித்த அபராததுக்கும்
என் நாதன் தேவிக்கு அன்று இன்பப் பூ ஈயாத அபராததுக்கும்
தோற்றுப் பணிப் பூ இடுகிறபடி

வானாடு -என்று ஸ்வர்க்கத்தில் பெரிய பூக்களை யுடைத்தான கற்பகத்தில்
பூங் கொத்துக்களின் தேன் ஆறாய்ப் பாயும் அழகிய பரப்பை யுடைத்தான திருமலை

தன சிஷ்யன் புறம்பு ஒருவரால் (பகவானால் கூட )திருந்தி வர்த்திக்கப் புக்கால்
ஆச்சார்யன் நினைக்கும் படி
யானே நீ என்னுடையும் நீயே என்று இருக்கிறவன் ஆகையாலே
தன் சமர்ப்பணத்தின் படிக் கைக் கொண்டான் என்று இருக்கக் கடவன்

அன்றிக்கே
நாம் தத் (பகவத்)விஷயத்தில் சேர்ந்ததுக்குப் பலம்
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்ற ஈஸ்வரன் நிலையை அறிந்து
சிஷ்யன் தானும் –
அடியார்க்கு என்னை ஆட்படுத்தாய் என்று பிரார்த்திக்குமவன் ஆகையால்
மூவர் நினைவாலும் வெறுப்பு இல்லை

தன் அசந்நிதியிலே புறம்பே திருந்தினானாகில்
திரு மதிள் திரு நந்தவனம் தான் குறையாக்கி விட்டு வைத்துப் போனால்
அத்தை வேறே ஒரு தார்மிகன் தலைக் கட்டினால் தான் வந்து அவனை உகக்குமா போலே
உகக்கக் கடவன்

திருத்த மாட்டாதவர்கள் பக்கலிலே போனால்
இவ் வாத்மாவை எம்பெருமான் நம்மோடே சேர்த்து எடுக்க நினைத்தான் என்று இருந்தோம்
இது இப்படித் தட்டுப் படுவதே -என்று
அவன் நாசத்துக்கு நோகக் கடவன் —

———-

ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன் தன்
ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை
கரு வாரணம் தன் பிடி துறந்து ஓடக் கடல் வண்ணன்
திரு ஆணை கூறத் திரியும் தண் மால் இரும் சோலையே – 4-2- 5-

பதவுரை

ஒரு வாரணம்–(ஸ்ரீகஜேந்திராழ்வானாகிற ஒரு யானையினிடத்து
பணி–கைங்கர்யத்தை
கொண்டவன்–ஸ்வீகரித்தருளினவனும்
கஞ்சன் தன்–கம்ஸனுடைய
ஒரு வாரணம்–(குவலயாபீடமென்ற) ஒரு யானையினுடைய
உயிர்–உயிரை
உண்டவன்–முடித்தவனுமான கண்ணபிரான்
சென்று–எழுந்தருளி
உறையும்–நித்ய வாஸம் பண்ணப் பெற்ற
மலை–மலையாவது:
கரு வாரணம்–கறுத்ததொரு யானை,
தன் பிடி–தன்னுடைய பேடை யானது
துறந்து ஓட–(பிரணய ரோஷத்தினால்) தன்னை விட்டிட்டு ஓடப்புக,
(அதுகண்ட அவ்வானையானது)
கடல் வண்ணன் திரு ஆணை கூற–“கடல் போன்ற நிறமுடைய அழகர் மேலாணை” என்று சொல்ல
திரியும்–(அப்பேடை யானது அவ்வாணைக்குக் கட்டுப்பட்டு அப்புறம் போக மாட்டாமல்) மீளா நின்றுள்ள
தண்–குளிர்ந்த
மாலிருஞ்சோலை–திருமாலிருஞ் சோலை மலையாம்–

ஒரு வாரணம்
ஞானமும் பக்தியும் விரக்தியும் பூர்ணமாக யுடைத்தாகையாலே
அத்விதீயமான ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை

பணி கொண்டவன்
பூவில் செவ்வி குலைவதற்கு முன்னே வந்து கைக் கொண்டவன்

பொய்கையில்
பணி கொண்டது தான் பரம பதத்திலேயோ என்னில்
அங்கு அன்று -பொய்கையிலே
இத்தால் தேஹ தோஷமும் பாரான் என்கிறது

உம்பரால் அறியலாகா ஒளி உளார் யானைக்காகி வந்தார்
நம் பரமாயதுண்டே நாய்களோம் சிறுமை ஓரா (திருமாலை -28)-என்றும்
ஒப்பிலேன் யாகிலும் நின்னடைந்தேன் நீ அருள் செய்தமையால் -(4-10-)-என்னக் கடவது இறே

திருக்கச்சி நம்பி அருளாள பெருமாள் எம்பெருமானார் திருவடிகளில் சென்று
தேவரீர் திரு உள்ளத்துக்கு உகந்ததொரு திரு நாமம் தந்து அருள வேணும் என்று
விண்ணப்பம் செய்த வனந்தரத்திலே
ஸ்ரீ கஜேந்திர தாஸன் என்று அழைக்கக் கடவோம் -என்று அருளிச் செய்தார்

கஞ்சன் தன் ஒரு வாரணம் உயிர் உண்டவன்
இங்கு ஒரு வாரணம் என்றது பாதகத்தில் உறைப்புத் தோற்ற
கஞ்சன் தன் ஒரு வாரணம்-என்கையாலே
ஆனைக்கு பாதகத்வம் ப்ரக்ருதியாய் இருக்கச் செய்தேயும்
ஒளஷதங்களை இட்டு மதம் உதிதமாம் படி பண்ணுவிக்கை

ஒன்றுக்குப் பிராண பிரதானம் பண்ணி
ஒன்றின் பிராணனை அபஹரித்தவன்

சென்று உறையும் மலை
ஆனுகூல்யமுடைய ஆனையை ரக்ஷித்து
ப்ராதிகூல்யம் பண்ணின ஆனையை நிரசித்தவன்
வர்த்திக்கிற தேசமாகையாலே
அனுகூலமான யானைகள் எல்லாம் சேர்ந்த தேசம்

கரு வாரணம் தன் பிடி துறந்து ஓடக்
கறுத்த யானையின் நிறத்தைக் கண்ட பிடி
நம்மை ஒழிய வேறே கலந்து பெற்ற நிறமாய் இருந்தது -என்று ப்ரணய ரோஷத்தாலே ஓட
தன்னை சன்னியசித்துப் போக
அநந்தரம் இது மீளுகைக்கு ஈடான உபாயங்களிலே இழிந்தது

அதாவது
பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன் நின்று இரு கண் இள மூங்கில் வாங்கி
அருகு இருந்த தேன் கலந்து நீட்டத் தொடங்கிற்று
அத்தை யுனக்கு வேண்டுவாருக்குக் கொடு என்று போகத் தொடங்கிற்று
இனி உபாயாந்தரம் பலித்தது இல்லை
இனி சரம உபாயத்தை அனுஷ்ட்டிப்போம் என்று பார்த்து

கடல் வண்ணன் திரு ஆணை கூறத் திரியும்
அழகர் ஸ்ரீ பாதமே போவாய் என்ன
அநந்தரத்திலே மீண்டது திரியும்

அன்றிக்கே
கடல் வண்ணன் என்று அழகர் திரு நாமமாய்
திரு ஆணை என்று பெரிய பிராட்டியார் ஆணை ஆகையாலே
நாய்ச்சியார் ஆணை போவாய் என்றது ஆகவுமாம்

இத்தால்
சிஷ்யன் ஆச்சார்யனை அநாதரித்துப் போக
புருஷகாரத்தின் ஆணையும் இட்டு
மீட்கக்
கூடுகிறான்

இத்தால்
சிஷ்யனைப் புகல் அறுக்க
அவன் தானே வந்து கூடின படி தோற்றுகிறது

தண் மால் இரும் சோலையே
அதிகாரிகள் நின்ற நின்ற அளவுக்கு ஈடாக விடாய்களை ஆற்றும் திருமலை
இதுக்குப் பிடி துறந்து ஓடுகை இறே ஆபத்து –

———-

ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரைச்
சாவத் தகர்த்த சாந்து அணி தோள் சதுரன் மலை
ஆவத்து தனம் என்று அமரர்களும் நன் முனிவரும்
சேவித்து இருக்கும் தென் திரு மால் இரும் சோலையே -4 -2-6 –

பதவுரை

ஏலிற்று–(கம்ஸன்) ஏவின காரியங்களை
செய்வான்–செய்து முடிப்பதற்காக
ஏன்று எதிர்த்து வந்த–துணிந்து எதிரிட்டுவந்த
மல்லரை–(சாணுரன் முதலிய) மல்லர்களை
சாவ தகர்த்து–முடியும்படியாக நோக்கினவனும்
சாந்து–(கூனி யிட்ட) சாந்தை
அணி–அணிந்து கொண்டுள்ள
தோள்–தோள்களை யுடையவனும்
சதுரன்–ஸமர்த்தனுமான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கிற)
மலை–மலையாவது:
அமரர்களும்–(பிரமன் முதலிய) தேவர்களும்
நல் முனிவரும்–ப்ரஹ்ம பாவனை மட்டும் உள்ள நல்ல (ஸனகர் முதலிய மஹர்ஷிகளும்)
ஆவத்து தனம் என்று–ஆபத்துக் காலத்துக்குத் துணையாயிருக்குமிடமென்று (நினைத்து)
சேவித்து இருக்கும்–ஸேவித்துக் கொண்டு இருக்குமிடமான தென் திருமாலிருஞ்சோலை–

ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரைச்
தோற்றால் தங்கள் பிராணனைக் தப்ப விரகு இல்லை
மீளில் இவன் கழி கத்தியாலே கழிக்குமதில் அவன் கையில் பட்டுப் போனால்
வீர ஸ்வர்க்கம் கிடைக்கும் என்று
படக் கடவதாக துணிந்து வந்த மல்லரை

சாவத் தகர்த்த
பசும் கலம் உடைத்தால் போலே கொன்றான் ஆய்த்து
விரோதி நிரஸனம் காய் வந்தபடி

சாந்து அணி தோள் சதுரன் மலை
தாம் காலும் கையும் உடலும் சேர்ந்து பொரா நிற்கச் செய்தே
சாந்து அழியாத சதிர்
அதுக்கடி
மஞ்சத்தில் பெண்கள் கூனி சாந்து சாத்தின போதே தங்கள் கண்களால் குறியிட்டு விட்டார்கள்
இக் குறி அழியாமல் பொருத சதுரன் மலை

அமரர்களும் நன் முனிவரும்
முனியவர்களும் யோகிகளும் –இத்யாதி

சேவித்து இருக்கும்
அடியரோடு இருந்தமை -என்னக் கடவது இறே

ஆவத்து தனம் என்று
உபாயத்துக்கு ஒரு கால் நினைக்க அமையும் இறே

சேவித்து இருக்கும்
பின்பு பலத்திலே இறே அந்வயம் –

——–

மலயத்வஜ சக்ரவர்தியாலும் ஸ்லாகிக்கப் பட்ட திருமலை என்கிறார் –

மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல்
முன்னங்கு நின்று  மோழை எழுவித்தவன் மலை
கொல் நவில் கூர் வேல் கோன் நெடு மாறன் தென் கூடல் கோன்
தென்னன் கொண்டாடும் தென் திரு மால் இரும் சோலையே -4 -2-7 –

பதவுரை

மன்னர்–(குரு தேசத்து) அரசர்கள்
மறுக–குடல் குழம்பும்படி
மைத்துணன் மார்க்கு–மைத்துனன்மாரான பாண்டவர்களுக்கு (த் துணையாகி)
ஒரு தேரின் மேல்–ஒரு தேரிலே
முன் அங்கு நின்று–முற் புறத்திலே நின்று கொண்டு
மோழை யெழுவித்தவன் மலை–(நீர் நரம்பில் விட்ட வாருணாஸ்த்ரத்தின் வழியே) கீழுண்டான நீரானது
குமிழி யெறிந்து கிளரும்படி பண்ணின கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கிற) மலையாவது
கொன்னவில்-கொலையையே தொழிலாக வுடைய
கூர்–கூர்மை பொருந்திய
வேல்–வேலை யுடையவனும்
கோன்–ராஜ நீதியை வழுவற நடத்துமவனும்
நெடு–பெருமை பொருந்தியவனும்
மாறன்–‘மாறன்‘ என்னும் பெயருடையவனும்
தென்–அழகிய
கூடல்–‘நான் மாடக் கூடல்‘ என்ற பெயரை யுடைய மதுரைக்கு
தென்னன்–பாண்டி நாட்டுத் தலைவனுமான மலயத்வஜ ராஜனாலே
கொண்டாடும்–கொண்டாடப் பெற்ற
தென் திருமாலிருஞ்சோலை–

மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று  மோழை எழுவித்தவன் மலை
ஒரு நாள் யுத்தத்தில் மைத்துனமாரான ராஜாக்கள் தண்ணீர் விடாயாலே
தாங்களும் தங்கள் பரிகரமுமாகத் தங்கள் படை நிலத்தில் தண்ணீர் இல்லாமையாலே
மிகவும் ஈடுபட்டு எதிர் தலை வாங்காமையாலே என் செய்வோம் என்கிற அளவிலே
அத்விதீயமான தேரின் மேலே ஸாரதியாய்
தாழ்ந்த தட்டிலே நின்று

நின்று
பாண்டவ பக்ஷ பாதம் தோன்ற நின்று

கிருஷ்ணா தேரை மீள விடு
பிராணன் உண்டாகில் நாளையும் யுத்தம் செய்து கொள்ளலாம்
என்னவும்
நின்று

அவனோடே வார்த்தை யாக்கி
வருணாஸ்திரத்தை இங்கனே தொடுத்து விடு –
தண்ணீரும் உண்டாம் காண்
அஞ்சாதே கொள் என்ன

அவனும் தொடுத்து எங்கே விட என்ன

பூமியில் நீர் நரம்பு அறிந்தவன் ஆகையாலே
இந்த நீர் நரம்பிலே என்ன

இவனும் அங்கே விட
அம்பு போன வழியே மோழை பட்டு மேலே மண்ணைக் கரைத்துக் கொண்டு
கிளம்பிப் படை நிலம் எல்லாம் வேண்டும் அளவிலே பரக்கும் படி
குமிழி எழப் பண்ணினவன் நித்ய வாஸம் செய்கிற மலை

மோழை-குமிழி -மேட்டு நீர்

கொல் நவில் கூர் வேல் கோன் நெடு மாறன் தென் கூடல் கோன்
கொலைக்குப் பரிகரம் என்னும் படியான கூரிய வேலை யுடையனாய்
தர்ம யுத்தமே செய்பவனாய்
தபஸ் பலத்தால் நித்ய கங்கா ஸ்நானம் செய்து வர வல்லவனாய்
பாண்டிய மண்டலத்துக்கு ராஜாவாய்
தெற்கு திக்கில் பிரதானனுமாய்
மதுரை என்கிற பேரை யுடைத்தான படை வீட்டுக்கு நிர்வாஹகனுமாய்

தென்னன்
தென் நாட்டை யுடையவன்
மேகத்தை விலங்கு இட்டான்
பூதத்தைப் பணி கொண்டான்
இந்திரன் தலையிலே வளை எறிந்தான்
வடிம்பு அலம்ப நின்றான் கடலிலே
மடியிலே கயல் இட்டான்
என்றால் போலே சொல்லக் கடவது பாண்டிய மண்டலத்தில் தர்ம ராஜாக்களை –
அவ்வளவும் அன்றிக்கே
மலயத்வஜன் என்கிற பேரை யுடையவனாய்
(இவர் மதுரை தேச அரசராக இருந்தார் என்றதால் இவற்றை அறிவார் அன்றோ )

அதாவது
அகஸ்தியன் வர்த்திக்கிற மலய பர்வதத்திலே சென்று
அகஸ்த்ய மகரிஷிக்கு முன்னே தர்மமே நடத்தக் கடவன் -என்று
மலய பர்வதத்தை எழுதிக் கொடி எடுத்தவன்

கங்கையிலே ஸ்நானம் செய்ய போகா நிற்க செய்தே -மதி தவழ் குடுமி அளவிலே சென்றவாறே –
தேர் வடக்கு ஓடாமல் நின்றதாய்-அவ்விடத்திலே தேரை நிறுத்தி –
இங்கே தீர்த்த விசேஷமும் -தேவதா சந்நிதியும் உண்டாக்க அடுக்கும் -என்று இறங்கி ஆராய்ந்து பார்த்த அளவில் –

அவ்விடத்தில் அழகர் சந்நிதி பண்ணி -இவ்வாற்றில் ஸ்நானம் செய்-என்ன

நாமம் கேட்டு ஸ்நானம் பண்ண வேண்டுகையாலே -இதுக்கு பேர் என்ன -என்று கேட்க –

முன்பே நம்மை பிரம்மா காலைக் கழுவுகிற காலத்திலே நம் சிலம்பிலே நீர் இதிலே தெறித்து –
சிலம்பாறு -என்று இதுக்கு பேர் ஆய்த்து -என்ன

அங்கே ஸ்நானம் செய்து –
கங்கா ஸ்நானம் தவிர்ந்து –
இங்கே ப்ரவணனாய் இருந்து
அழகருக்கு வேண்டும் அடிமைகளும் செய்தான் என்று ஒரு பிரசித்தி உண்டு இறே

அத்தை அருளிச் செய்தார் ஆய்த்து
அத்தைப் பற்ற தென்னன் கொண்டாடும் தென் திரு மால் இரும் சோலையே -என்கிறார்

பஞ்சவன் பவுழியன் சோழன் பார் மன்னர் தாம் பணிந்து ஏத்தும் வரன் (7-7)-என்பது
பல வேந்தர் வணங்கு கழல் பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரம் (2-10 )-என்பது
இவர்கள் உடன் கூட அநந்ய ப்ரயோஜனராய் -அநந்ய சாதனராய் இருக்கிற
தொண்டைமான் சக்கரவர்திகளையும் கொண்டாட நின்றார் இறே

இது இறே ஆழ்வார்கள் திரு உள்ளம் இருக்கிற படி
இதுக்கடி பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களில் ப்ரீதி அதிசயம் இறே

இது இறே நம் ஆச்சார்யர்களுக்கும் திரு உள்ளம்
மலயத்வஜ திக்யா தொ மாந வேந்த்ரோ மஹீ பதே —

————

குறுகாத மன்னரை கூடு கலக்கி வெம் கானிடை
சிறு கால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி
சிறுகாலை பாடும் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 -8-

பதவுரை

குறுகாத–திருமலையைக் கிட்டி அநுகூலாய் வாழலாமாயிருக்க, அது செய்யாமல் விலகுகின்ற
மன்னரை–அரசர்களுடைய
கூடு–இருப்பிடத்தை
கலக்கி–குலைத்து (அழித்து)
வெம்–தீஷணமான
கானிடை–காட்டிலே
சிறு கால் நெறியே சிறந்த வழியில்
போக்குவிக்கும்–(அவ் வரசர்களை) ஓட்டுகின்ற
செல்வன்–திருமால் (எழுந்தருளியிருக்கிற)
பொன் மலை–சிறந்த மலையை யுடையவன்
அறுகால்–ஆறு கால்களை யுடைய
வரி வண்டுகள்–அழகிய வண்டுகளானவை
ஆயிரம் நாமம் சொல்லி–(எம்பெருமானுடைய) ஸஹஸ்ர நாமங்களை ஆளாத்தி வைத்து
பாடும்? பாடுமிடமான
தென் திருமாலிருஞ்சோலை–

குறுகாத மன்னரை
திருமலையைக் கிட்டாத ராஜாக்களை

கூடு கலக்கி
இருப்பிடத்தைக் குலைத்து
இருப்பிடம் என்ற போதே
ராஜ அர்ஹமாய் இருந்தது என்று இறே நல்ல இடங்களை சொல்லுவது

வெம் கானிடை
நிலவனுக்கும் சஞ்சரிக்க ஒண்ணாத வழி

சிறு கால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
கெட்டப் போகும் போது பின் தொடர்கிறார்கள் என்னும் அச்சத்தால் போக்குவிக்கும்
உய்மின் திறை கொணர்ந்து என்று உலகு ஆண்டவர் (திருவாய் -4-1-2 )-இத்யாதி –

செல்வன் பொன் மலை
அதுக்கு அடி ஸ்ரீ யபதி யாகையாலே
அசுரர்க்கு தீங்கு இழைக்கும் திருமால்

பொன் மலை
ஸ்ரீ யபதி வர்த்திக்கிற ஸ்லாக்கியமான திரு மலை

அறு கால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி
குறுகாத ராஜாக்கள் த்யாஜ்யர் என்னும் இடமும்
திருமலை யோட்டை பந்தத்தாலே திர்யக்கு உபாதேயம் என்னும் இடத்தையும்
சேரச் சொல்லிற்று

அறு கால் வரி வண்டுகள்
அவற்றிலும் தேஹ குணம் இறே இவருக்கு உத்தேச்யம்

ஆயிர நாமம் சொல்லி சிறு காலை பாடும்
ஸத்வ உத்தர காலத்திலேயே எழுந்து இருந்து திருப்பள்ளி எழுச்சி பாடா நிற்கும்
காலை எழுந்து இருந்து கரிய குருவிக் கணங்கள் –சோலை மலைப்பெருமான் (நாச்சியார் )-என்னக் கடவது இறே

தென் திரு மால் இரும் சோலையே
அழகை யுடைத்தான திருமலை –

———–

குறுகாத மன்னர் அளவில் அழகர் தம்மால் வரும் நிக்ரஹம்
ஏறு திருவுடையான் -என்றும்
திரு விளையாடு திண் தோள் –என்னச் செய்தேயும்
அவுணர் இடைப் புக்கு
என்றானும் இரக்கம் இலாதவன்(பெரிய திருமொழி 2-4 )- என்கிறபடியே
வரும் என்று சொல்லிற்று கீழ்

இதில் அம் மலையில் வர்த்திக்கிற ஸ்ரீ வைஷ்ணவ பூதங்கள்
சென்று சென்று தேவர் (திருச்சந்த )
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு -என்கிறபடியே
குறுகாத அளவு அன்றிக்கே
அம் மலையில் வர்த்திக்கச் செய்தே
தாழ்ச்சியை மதித்துத் தீ வினை பெருக்கி
ஆய மாயவன் கோயில் வலம் செய்யாதே
வலம் செய்து வழக்கு என நினையாமல்
சூதும் களவும் செய்து
அவன் தந்த கரணங்களைக் கொண்டு வழி கெட நடந்து
அந்வய விநாஸ ரஹிதர் ஆனவர்களை
அந்வய விநாஸம் உண்டாக்குவதாக பாப கரணங்களைக் குலைத்து
அழகரை யுகப்பிக்கும் என்னும் பிரகார விசேஷங்களை சொல்லுகிறது இப் பாட்டால் –

சிந்தப் புடைத்து செங் குருதி கொண்டு பூதங்கள்
அந்திப் பலி கொடுத்து ஆவத் தனம் செய் அப்பன் மலை
இந்திர கோபங்கள் எம்பெருமான் கனி வாய் ஒப்பான்
சிந்தும் புறவின் தென் திரு மால் இரும் சோலையே – 4-2- 9-

பதவுரை

பூதங்கள்–ஸ்ரீ வைஷ்ணவ பூதங்களானவை
(தேக அபாஷணமே பண்ணிக் கொண்டு திரியும் நாஸ்திரிகர்களைக் கண்டால், அவர்களை)
சிந்தப் புடைத்து–(அவயங்கள்) சிதறும்படி அடித்துக் கொன்று
செம் குருதி கொண்டு–(அதனால் அவர்களுடலினின்று புறப்படுகிற) சிவந்த ரத்தத்தைக் கொண்டு
அந்தி–அந்திப் பொழுதிலே
பலி கொடுத்து–(எம்பெருமானுக்கு) ஆராதந ரூபமாக ஸமர்ப்பித்து
ஆபத்து தனம் செய்–ஆபத் காலத்துக்குத் துணையாமிடமென்று ஸேவிக்குமிடமும்
அப்பன்–ஸ்வாமி (எழுந்தருளியிருக்க மிடமுமான)
மலை–மலையாவது,
இந்திர கோபங்கள்–பட்டுப் பூச்சிகளானவை
எம் பெருமான்–அனைவர்க்கும் ஸ்வாமியான அழகருடைய
மூலவருக்கு பரம ஸ்வாமி என்றே திரு நாமம்
கனி வாய்–(கொவ்வைக்) கனி போன்ற திரு வதரத்திற்கு
ஒப்பான்–போலியாக
சிந்தும்–(கண்ட விடமெங்கும்) சிதறிப் பறக்கப் பெற்ற
புறவில்–தாழ்வரையை யுடைய
தென் திருமாலிருஞ்சோலை.–

சிந்தப் புடைத்து செங்குருதி கொண்டு பூதங்கள் அந்திப் பலி கொடுத்து ஆவத் தனம் செய் அப்பன் மலை
அவர்கள் தங்களுக்கு அடைத்த காலங்களிலே சஞ்சரிக்கும் போது
இவர்கள் எதிர் பட்டால் மூக்கும் வாயும் ரத்தம் கக்கும் படி சாக அடித்து
அந்தச் செங் குருதியோடே சவத்தைக் கொண்டு
கண்டா கரணனைப் போலே
இத்தைக் கொண்டு அருள வேணும் என்று பிரார்த்தித்துக் கொடுத்து

அந்த மலையில் வர்த்திக்கிற ஸ்ரீ வைஷ்ணவ பூதங்கள் ஆகையாலே
தம் தனக்கு அடைத்த சந்த்யா காலத்திலேயே கொடுத்து
பின்னையும் ஆளும் செய்வேன் -என்பாரைப் போலே
பின்னையும் செய்யும் என்கிறார் –

அன்றிக்கே
தம் தாமுடைய ஆபத்துக்கு அழியாத தனமாக
அழகர் தம்மையே நினைத்துக் கொடுக்கும் என்னவுமாம்
அப்போது இந்தக் கொடை
சாதனத்தில் அந்வயிக்கும் என்று தோற்றும் –

இவற்றுக்கு இப்படி அயோக்யரைத் தேடிக் கொல்லக் கிடைக்குமோ என்னில்
தங்களுக்கு அடைத்த காலத்தில் யோக்யரையும் பாராது யோக்ய காலம் பார்த்து புறப்படார்கள்
புறப்பட்டார்கள் ஆகில் அவன் தானே அகலும்
அந்தியம் போது அங்கு நில் என்றால் சங்கல்ப பாரதந்தர்யம் வரப் பண்ணுமே
படை வீடு காவலில் ஒடுக்கம் உறச் செறிந்தால் காவலாளர் எதிர்பட்டாரைக் கொல்லுகையும்
ராஜாக்களுக்குப் பிரியம் இறே
பகவத் கார்ய நிமித்தமாக பக்தி பாரவஸ்யத்தாலே காலம் பாராமல் புறப்பட்டார்கள் ஆகில்
இவர்களுக்குத் தோற்றாதே நிற்றல்
தோற்றம் பொறுப்பர்கள் ஆகில் பரீக்ஷித்து அநு வர்த்தித்தல் செய்யும் அத்தனை இறே

அப்பன் மலை
அவயவ பிரதானம் செய்தவன் நித்ய வாஸம் செய்கிற மலை

இந்திர கோபங்கள் எம்பெருமான் கனி வாய் ஒப்பான் சிந்தும் புறவின் தென் திரு மால் இரும் சோலையே
அம்மலை மேல் உண்டான சோலைகள் பூத்து உதிர்ந்தால் போல்
அழகர் திருப் பவளத்துக்கு ஒரு புடை ஒப்பான இந்த்ர கோபங்கள் சிந்தா நிற்குமாய்த்து
இப்படிப்பட்ட சோலைகளாலே சூழப்பட்ட தென் திரு மால் இரும் சோலையே

காலத்தை மதியாமல் புறப்பட்டாருக்கும் பாப கரணங்கள் குலைந்து பிழைக்கலாம் ஆகையால் அதுவே தேசம்
பாப கரணம் பகவத் கார்யமாகத் தம் தாம் காலங்களிலே குலைப்பார்க்கும் ( பூத கணங்களும் ) அதுவே தேசம்
காலம் அறிந்து புறப்படாமல் புறப்பட்டு வர்த்திப்பார்க்கும் ( கைங்கர்ய பரருக்கும் ) அதுவே தேசம்
சிந்தும் புறவிலே விளங்கா நின்ற தென் திரு மால் இரும் சோலையே

———-

எட்டுத் திசையும் எண் நிறந்த பெரும் தேவிமார்
விட்டு விளங்க வீற்று இருந்த விமலன் மலை
பட்டிப் பிடிகள் பகடு உறிஞ்சி சென்று மாலை வாய்த்
தெட்டித் திளைக்கும் தென் திரு மால்  இரும் சோலையே – 4-2 -10-

பதவுரை

எண்ணிறந்த-எண் இறந்த கணக்கிட முடியாதவர்களும்
பெரு–பெருமை பொருந்தியவர்களுமான
தேவிமார்–தேவியானவர்கள்
எட்டு திசையும்–எட்டுத் திக்குகளிலும்
விட்டு விளங்க–மிகவும் பிரகாசிக்க (அவர்கள் நடுவே)
வீற்றிருந்த–பெருமை தோற்ற எழுந்தருளி யிருந்த
விமலன் மலை–நிர்மலான கண்ணபிரான் (எழுந்தருளி யிருக்கிற) மலையானது;
பட்டி–வேண்டினபடி திரியும் மலையான
பிடிகள்–யானைப் பேடைகளானவை
மாலைவாய்–இரவிலே
பகடு–ஆண் யானை மேல்
உரிஞ்சி சென்று–ஸம்லேஷித்துப்போய்
தெட்டித் திளைக்கும்–அந்த ஸம்லேஷித்துப் போய் முற்றிக் களியா நிற்கும்–

எட்டுத் திசையும் எண் நிறந்த பெரும் தேவிமார் விட்டு விளங்க
ஸ்ரீ மத் துவாரகையில் ஒவ்வொரு திக்கில் தேவிமார்களைப் பரி கணிக்க
ஒண்ணாமையாய் இறே இருப்பது

இவர்கள் எல்லாரும் இன்னார் இன்னார் என்னும் ப்ரசித்தியோடே
ஒருவரால் ஒருவருக்கு தேஜஸ்ஸூ என்கிறதை விட்டு
கிருஷ்ணனோடு விளங்க என்னுதல்

இவர்கள் தான் எல்லாரையும் விட்டு என் ஒருத்தியோடும் விளங்கா நின்றான் என்னும் படியாதல்
ஸுபரியுடைய ஸ்திரீகளை பிதா (மாந்தாதா ) அழைத்து தனித்தனியே பர்தா உன்னளவில் எப்படி என்ன
எனக்குப் பிரியமாக வர்த்தித்திப் போரா நின்றான் -என்று எல்லாரும் இப்படி சொன்னார்கள் இறே

கல்லும் கனை கடலும் (பெரிய திருவந்தாதி) என்றும்
ஏ பாவம் – என்றும்
பக்கம் நோக்கு அறியான் -என்றும்

அன்றியே
எண்ணிறந்த எட்டுத் திசையும் -என்கையாலே
பஞ்சஸாத் கோடியில் திக்கு முடியாதே

அன்றியிலே
பதினாறாயிரமாவர் -என்ற பரிகணநை
அளவின்றிக்கே இருக்கை என்னுதல்

அவன் தன்னையும் நாலு இரண்டி பட்டினி கொள்ளும் காலத்தில்
மற்றும் சில ஸ்த்ரீகள் உண்டு என்று
பரிகணிக்க ஒண்ணாதபடி அவனை உகப்பிக்க வல்லவர்கள் என்னுதல்
(ஓன்று என்று விரல் எடுக்க ஒண்ணாது என்னுதல் )

வீற்று இருந்த விமலன் மலை
வேறுபாடு தோன்ற இருந்த விமலன்
ஒருவனுக்கு பகவத் ஸம்ருத்தி உண்டானால் அத்தால் வந்த ஸம்ருத்தி
ஆஸ்ரிதர் எல்லாருக்கும் வேணும் என்று இருந்த போது இறே
தனக்கு ஸ்ரீ வைஷ்ணத்வம் உண்டு என்று அறியலாவது

விமலன்
ஸ்வார்த்த பிரதிபத்தி இல்லாமையால்
விமலத்வமான வேறுபாடு தோன்ற இருந்தவன் என்கிறது
இப்படி இருக்கிறவன் நித்ய வாஸம் செய்கிற திருமலை

பட்டிப் பிடிகள் பகடு உறிஞ்சி
தனக்கு வஸ்தவ்யமான பூமியிலே மேய்ந்து வந்து கிடக்கிற பெண் யானை யானவைகள்
அருகு கிடக்கிற களிற்று யானைகளை உரோசி எழுப்பி
ஸ்பர்சித்து எழுப்பி என்றபடி

சென்று
அதன் இஷ்டத்துக்கு ஈடாக நெஞ்சு பொருந்தி சேர்ந்து

மாலை வாய்த் தெட்டித் திளைக்கும் தென் திரு மால்  இரும் சோலையே
இராக் காலத்திலே பிரணய ரோஷம் தலை எடுத்து
ஊடலும் கூடலுமாய் ஒன்றுக்கு ஓன்று இறாயத்து விளையாடுதல்
தீர்க்க ஸம்ஸ்லேஷம் தான் ஆதல்

தெட்டல் –
வாத்ஸாயயன முதிர்ச்சி போலே இருக்கை –

இத்தால்
ஆச்சார்யரானவன் சிஷ்யன் பக்கலிலே
சம தமாதிகளை யுண்டாக்கி
ஆத்ம குணத்தை விளைத்து
அவனுடைய பிரார்த்தனா அனுரூபமாக அவகாச பிரதானம் பண்ணி
ஸாஸ்த்ரங்களையும் ஒருங்க விட்டு
கைங்கர்யங்களையும் மிகவும் அங்கீ கரிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது –

——–

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலை கட்டுகிறார்-

மருதப் பொழில் அணி மால் இரும் சோலை மலை தன்னை
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே – 4-2 -11-

பதவுரை

மருதம் பொழில்–மருதஞ் சோலைகளை
அணி–அலங்காரமாக வுடைய
மாலிருஞ்சோலை மலை தன்னை–திருமாலிருஞ்சோலை மலையை
கருதி–விரும்பி
உறைகின்ற–(அதில்) எழுந்தருளி யிருக்கின்ற
கார் கடல் வண்ணன்–கருங்கடல் போன்ற நிறத்தை யுடைய
அம்மான் தன்னை–அழகப் பிரானாரை
விரதம் கொண்டு–மங்கள-மங்களா ஸாஸன – விரதமாகக் கொண்டு
ஏத்தும்–துதிக்குமாறும்
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவருமான
விட்டுசித்தன்–பெரியாழ்வார்.
சொல்–அருளிச் செய்த இவற்றை
கருதி–விரும்பி
உரைப்பவர்–ஓதுமவர்கள்
கண்ணன்–கண்ண பிரானுடைய
கழல் இணை–திருவடிகளை
காண்பர்கள்–ஸேவிக்கப் பெறுவார்கள்.–

மருதப் பொழில் அணி மால் இரும் சோலை மலை
கவிழ்ந்து முறிக்க வேண்டாத மரங்கள் ஆகையாலே
தழைத்து நிழல் கொடுக்கும் மருத மரப் பொழிலாலும்
மற்றும் நாநாவான புஷ்ப பல த்ருமங்களாலும்
அலங்க்ருதமான திருமலையை

தன்னை
தன்னுடைய போக்யதையாலே
நங்கள் குன்றம் கை விடான் -என்கிறபடி
அழகர் தம்மை வைத்த கண் வாங்கி நீங்க ஒட்டாது என்னும் இடம் தோற்றுகிறது

கருதி உறைகின்ற
நித்ய விபூதி இருப்பில் விருப்பத்திலும் காட்டில் மிகவும் விரும்பிக் கருதினது ஆகையாலே
நித்ய வாஸம் டேயும் என்று தோற்றுகிறது

கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை
கரும் கடல் வண்ணன் என்னுதல்
மேகம் போலேயும் ஸமுத்ரம் போலேயும் இருக்கிற திரு நிறத்தை யுடையவன் என்னுதல்

அம்மான் தன்னை
எனக்கு நிருபாதிக சேஷி யானவனை

விரதம் கொண்டு ஏத்தும்
ஸ்வரூப அனுரூபமான மங்களா ஸாஸனம் இறே இவருக்கு விரதம் ஆவது
எல்லாரும் யாதானும் பற்றி நீங்கும் விரதமும்
அவனைப் பற்றி அந்த விரதத்தை விடுத்திக் கொள்ளுகையும் இன்றிக்கே
தேய்த்துக் கிடக்க நான் ஓட்டேன் என்று
அவனுடைய ப்ரதிஜ்ஜா அனுரூப விரதத்தைக் குலைக்கும் படி இறே
இவருடைய மங்களா ஸாஸன ரூபமான விரதம் தான் இருப்பது –

வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே
திரு மாளிகைக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்தத்தை சா அபிப்ராயமாக
புத்தி பண்ணி அநுஸந்திக்குமவர்கள்
அத்யந்தம் ஸூலபனான கிருஷ்ணன் திருவடிகளை
சேவடி செவ்வி திருக்காப்பு -என்று காணப் பெறுவர்கள்
இது இறே வேதப் பயன் கொள்ள வல்ல பத்தி யாவது –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-1–கதிர் ஆயிரம் இரவி–

July 26, 2021

பிரவேசம்
ஆச்சார்யனானவன்
பகவத் வாக்யங்களாலும் (சரம ஸ்லோகம் )
மந்த்ர உபதேசத்தாலும் (ரஹஸ்ய த்ரயங்கள் )
ஸ்வரூப ஞான பர்யந்தமாக ருசி உத் பாதநம் செய்து
சேதனனை உகப்பித்து
(திருவடியும் இரண்டையும் செய்தார் அன்றோ –
பெருமாள் சொன்ன அடையாளங்களைச் சொல்லியும் கணை ஆழியும் கொடுத்து )

தத் த்வாரா ஈஸ்வரனையும் உகப்பித்த பிரகாரத்தை
திருவடி வ்யாஜத்தாலே
இரண்டு தலையையும் தனித்தனியே
பஸ்ய தேவி யங்குளீ யகம் -என்றும்
த்ருஷ்டா ஸீதா –என்றும்
உகப்பித்த பிரகாரத்தை அருளிச் செய்தாராய் நின்றார் கீழில் திரு மொழியில் (3-10 )

(திருமந்த்ரார்த்தம் மனசில் பட பட
த்வரை மிக்கு த்வயார்த்தம் அறிய அபி நிவேசம் ஏற்படுமே
இது தான் -தனித் தனியாக 3-10-
இதில் சேர்ந்த -4-1
பதிகம் ஆரம்பமே பட்டாபிஷேகம் இதில் )

இதில்
அங்கன் தனித் தனியே காணாமல்
இருவரையும் சேரக் காண வேணும் என்று தாம் விரும்பின பிரகாரத்தைத்
தமக்கு ஸ்நேஹிகளாய்
பகவத் வாக்யங்களாலும்
ஆச்சார்ய முகத்தாலும்
உபாய உபேயங்கள் அவனே என்று அறுதியிட்ட சேதனர்

(நாடுதிரேல் என்பாரும் கண்டார் உளர் என்பாரும் ஸ்நேஹிகள் தானே
தேடுதலும் ஸ்ரேஷ்டம்
கண்டவர் காட்டுவதும் அதே போல் தான் ஸ்ரேஷிடம் )

பிரதம பதத்தில் அர்த்த பலத்தாலே காண்கிற அளவே யன்றி
ஏகாயந அநீச தர்சனம் போல் அன்றிக்கே
ஸாப்தமாக மிதுன விஷயத்தைக் காணலாமோ என்று அபேக்ஷிக்க
(த்வயத்தில் )உத்தர பூர்வ வாக்யங்களை தர்சிப்பிக்க
தர்சித்துத் தெளிந்து இருக்கச் செய்தேயும்
அவ்வளவிலும் பர்யவசியாமல் அபி நிவேசம் மிக்கு

(பிரணவம் சம்பந்தம் நமஸ் உபாயம் நாராயணாயா உபேயம்
பிரதமம்- ஓம் -மிதுனம் காண ஆசை இருப்பவருக்கு அர்த்த பலத்தால் தான் தெரியும்
திரு மார்பில் விட்டு பிரிந்தால் தானே அக்ஷரம் விட்டு பிரிவது
சேனாபதி மிஸ்ரர் வாக்கியம்
ரஷிக்கும் பொழுது பிராட்டி வேணும் -எனவே சேர்த்தே என்று அர்த்தம் கொண்டே தர்சிக்கலாம் –
சப்தம் இல்லையே )

(பூர்வ உத்தர என்னாமல் உத்தர பூர்வ என்றது
உபேயம் தானே பிரதானம்
கருமுகை மாலையை சும்மாடு ஆக்குவது போல் உபேயமான அவனை உபாயமாக்கி
அவனை அடசிந்து நித்தியமாக அனுபவித்து
அனுபவ ஜனித்த ப்ரீதி கார்ய பகைங்கர்யம் செய்வோமே
ஆகவே முதலும் உத்தர வாக்கியம் காட்டி அருளுகிறார் )

மணக்கால் நம்பிகளை பெரிய முதலியார் இவ் விஷயத்தை ப்ரா மாணிகருக்கும்
ஸாஷாத் கரிக்கலாமோ -என்று கேட்டால் போலே
தர்சிப்பித்த ஆச்சார்யனைக் கேட்க

அவனும்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்பக் கண்ட சதிர் –பரத்வத்திலேயும் கண்டேன் -என்றும்

மலையால் அணை செய்து இலங்கை மலங்க ஓர் வாளி தொட்டானை நாங்கை நன்னடுவுள் செம் பொன் கோயிலினுள்ளே
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே -என்றும்

சந்தணி மென் முலை மலராள் தரணி மங்கை தாம் இருவர் அடி வருடும் தன்மையானை–
திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே –2-10-2- என்றும்

நீயும் திரு மகளும் நின்றாயால் (பொய்கையார் )-என்றும்

பரத்வ விபவங்களிலும் கட்கண்ணால் காண்கிற அளவு அன்றிக்கே
உட் கண் உணரும் அர்ச்சாவதாரங்களிலும்
மங்களா ஸாஸனமாக கண்டார் உளர் –
என்றதால் தாமும் அத்யந்த ப்ரீதராய் –

திருவாய்ப்பாடியிலே பெண்கள் நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று உந்தி பறந்து
குண அனுபவம் பண்ணினவர்கள் (நாடுதிரேல் கோஷ்டி இவர்கள் )
மற்றும் ஜன்மாந்தர ஸம்ஸ்கார உபாசன சித்தரானவர்கள்
ஒருவருக்கு ஒருவர் அபேக்ஷை உண்டாகில் கண்டார் உளர் என்னும் அந்யாப தேசத்தாலே
மநோ ரதித்து அருளிச் செய்து இனியராகிறார் –

———–

இவருடைய மநோ ரதம் தான் இருவரையும் சேர்த்து திரு அபிஷேகம்
திவ்ய ஆயுத ஆழ்வார்களோடே கிருஷ்ண அவதாரத்தையும் காண வேணும் என்றும்
மகர ஸிம்ஹ வராஹ அவதாரங்களிலும் இப்படிக் காண வேணும் என்றும்
தாம் விரும்பின பிரகாரம் தமக்கு ஸ்நேஹிகளாய் இருப்பார் அளவிலும் சென்றது கண்டு
ப்ரீதராய்

கீழ்ச் சொன்ன அந்யாபதேசத்தாலே
அவன் திரு மார்விலும்
பார்ஸ்வத்திலும்
கண்டார்கள் ஒரு தஸா விசேஷங்களிலே (விசேஷங்களே) –
என்று அனுசந்தித்து இனியராகிறார்

இப் பாட்டால்
பெருமாள் தாமும் பிராட்டியும் சேர எழுந்து அருளித் திரு அபிஷேகம் செய்து அருளி
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வுக்கு மங்களா ஸாஸனம் செய்கிறார் –

கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த  நீள் முடியன் 
எதிரில் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் 
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்   
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டார் உளர் – 4-1- 1-

பதவுரை

கதிர் ஆயிரம் இரவி-ஆயிரம் கதிர் -ஆயிரம் இரவி
கதிர்–(எண்ணிறந்த) கிரணங்களை யுடைய
ஆயிரம் இரவி–ஆயிரம் ஆதித்யர்கள்
எறித்தால் ஒத்த–ஜ்வலித்தாற் போல் (மிகவும் பளபளவா நின்றுள்ள)
நீள் முடியன்–நீண்ட திருவபிஷேகத்தை உடையவனுமான
இராமனை இருக்கும் இடம்-இராமன் இருக்கும் இடத்தை
இராமன்–இராமபிரான்
இருக்கும் இடம்–எழுந்தருளியிருக்குமிடத்தை
நாடுதிரேல்–தேடுகிறீர்களாகில்
(அவ் விடத்தை விட்டுச் செல்லுகிறேன்;)
அதிரும்–(கல கல் என்று) ஒலி செய்யா நின்றுள்ள
கழல்–வீரக் கழலையும்
பொரு தோள்–போர் செய்யப் பதைக்கிற தோள்களை யுமுடைய
இரணியன்–ஹிரண்யாஸுரனுடைய
ஆகம்–மார்பை
அரி ஆய்–நரஸிம்ஹ ருபியாய்க் கொண்டு
பிளந்து–கீண்டு
உதிரம் அளைந்து–(அதனாலுண்டான) ரத்தத்தை அளைந்த
கையோடு–கைகளோடு கூடி
இருந்தானை–(சீற்றந்தோற்ற) எழுந்தருளி யிருந்த நிலைமையில் (அவனை)
உள்ள ஆ உண்டார் உளர்–உள்ள அவனை ஸேவித்தவர்கள் இருக்கின்றனர்.

(உள்ள ஆ-உள்ள படி பிரகாரம் – யதார்த்த தத்வார்த்தம் –
யோ வேத்தி -தத்வ தகா கீதை -இங்கு உள்ள வா
இங்கு ராமன் நரசிம்ஹன் ஏக தர்மி அறிந்ததே உள்ள ஆ )

கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த  நீள் முடியன் 
ஸஹஸ்ர கிரணராய் இருக்கும் அநேகம் பால ஆதித்யர்களை உருக்கி வார்த்த ப்ரகாசமோ
என்று அனுசந்தித்து
அதுவும் போராமையாலே
நீள் முடி-என்கிறார் –

எதிரில் பெருமை இராமனை  
(எதிரில்- எதிரி இல்லாத– எதிர் இல்லாத ஒப்பு இல்லாத )
சத்ருக்கள் இல்லாத அளவே அன்றிக்கே
சா தர்ம்ய த்ருஷ்டாந்தமும்
ஏக தேச த்ருஷ்டாந்தமும்
வை தர்ம்ய த்ருஷ்டாந்தமும் –இல்லாதவனாய்
(இதன் படி –இதில் ஒரு அம்ச படி –இதன் படி இல்லாதவன் மூன்றுமே சொல்ல முடியாதே )

ஸமஸ்த கல்யாண குணங்களுக்கும் ஆஸ்ரய பூதனாய் இருக்கையாலே
சத்ரு மித்ர உதாசீநாத்மகமாய்
உட் காச்சலும் -புறம் பொசிவும் -எதிரூன்றலும்
ப்ரஹ்ம லோக பர்யந்தமாகக் காணலாய் இறே இருப்பது
அப்படி இருக்கிறவர்கள் எல்லாரும் ஒருவர் இருவர் ஒழிய நெஞ்சாலும் ரமிக்கும் படியாய் இறே
இராமன் என்கிற திரு நாமம் இருப்பது
ஒருவர் இருவரைப் பொறுத்த வூரிலே இருந்த தோஷமே இறே திரு அயோத்யைக்கு உள்ளது
அது தானும் ஸ்ரீ பரதாழ்வான் வந்து போய் வரும் அளவும் இறே உள்ளது

பின்னை ராவணாதிகளும் இல்லையோ என்னில்
தனுஷ்யாதி சாஸ்த்ரவான் -கையில் பிடித்த வில்லால் ரமிப்பித்தார் –
சத்யேந லோகாந் -அயோத்யா -12-27-எல்லாரையும் ஜெயத்தோடே ரமிப்பிக்க வேணும்
எல்லாத்துக்கும் அடி ஜிதேந்த்ரியத்வமும் ஒவ் தார்யமும் இறே
தீநாந்த நேந –ஸ்வ ஆஸ்ரயமான இந்த்ரியங்களும் ஒவ்வொரு தசைகளிலே
ஒவ்தார்ய அந்வேஷிகளாய் (வள்ளன்மையை எதிர்பார்த்து )இறே இருப்பது

பெருமாள் ஸுர்யத்துக்கு ராவணன் எதிர் போரான் என்கிற குறை தீர
ஹிரண்யனை ஓர் எதிருமாக்கி
அவனை ஜெயித்ததை ஸுர்யமாக்கி
தர்மி ஐக்யத்தாலே ஓர் எதிரியையும் பெற்று ஜெயித்தத்தையும் தம் பேறாக அனுசந்திக்கிறார்
(இந்த ராமன் குறை தீர்ந்ததும் இங்கு- கண்டார் உளர் என்று இப்படி முடிச்சு போடுகிறார் )

இருக்கும் இடம் நாடுதிரேல்
ஆஸ்ரித விரோதிகள் இருக்கும் இடம் சென்று அழியச் செய்தாலும்
மறுவலிடாமல் பரிஹாரம் செய்யும் அளவும்
அதுக்குத் தகுதியாகக் கொண்ட வேஷத்தோடே அங்கே இறே இருப்பது
அவ்விடம் விரும்பித் தேடு கிறி கோளாகில்

அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய் உதிரம் அளைந்த கையோடு இருந்தானை
ஷீராப்தியில் பர ஸம்ருத்ய அஸஹத்வம் குறு மிழிக் கொள்ளும்படியான
ப்ரஸன்ன வேஷம் குலைந்து வெளிப்பட்டு
லோகங்கள் எல்லாம் நடுங்கும்படி
திண் கழல் கால் -என்னும்படி
வீரக் கழல் இட்ட அதிர்த்தியும்
யுத்த கண்டூதியும் சமியாத தோள்களுமாய்
ஆஸ்ரித வர்க்கங்களை
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் அளவாகவும் நலிகையாலே இறே
அதுக்குத் தகுதியான நரஸிம்ஹமுமாய்
ஹிரண்யனுடைய வர பல புஜ பலங்களாலே ஊட்டியாக வளர்த்த சரீரத்தை

ஒரு ஸ்வர்ண கிரியை ஒரு ரஜத கிரி அநாயாசேந பிளந்தால் போலே பிளந்து
குட்லைப் பிடுங்கிக் குட்டமிட்டுக் கிளம்புகிற ருதிரத்தை அளைந்த கையோடே
மறுவலிட்டு ஆஸ்ரிதரை இன்னம் நலியுமோ என்று
ஒரு அநு கூலனை ஸ்தாபிக்கும் தனையும் இருந்தானை -என்னுதல்

சீற்றத்துக்கு எதிர் நிற்க மாட்டாமல் ப்ரஹ்ம ஈஸா நாதிகள் முதலான வானோர்
நெஞ்சு கலங்கிச் சிதறியோடி மீண்டு
நாத்தழும்ப ஏத்தும் படி அல்லி மாதர் புல்க லஷ்மீ நரஸிம்ஹம் என்னும் படி
சீற்றம் தணிந்து இருந்தவனை என்னுதல்

(நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்
நெல்லி மல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து அதர் வாய்ச்
சில்லி சில் லென்ற சொல் அறாத சிங்க வேள் குன்றமே—1-7-9-)

சீற்றம் தணிந்தாலும் உதிரம் அளைந்த கையோடே இறே இருப்பது –
இவளும் வீர மஹிஷி யாகையாலே
பர்தாரம்ப ரிஷஸ் வஜே –ஆரண்ய-30-37 -என்றால் போலே
வெருவின பூங்கோதை யாள் விரோதி போன பின்பு
துணுக்குத் தவிர்ந்து
ரத்த வெடியோடே புல்கும் இறே

உள்ளவா கண்டார் உளர்
ராமனை உள்ளவா கண்டார் உளர்
ராஜ குலத்திலே பிறந்த வாஸனையாலே ஆஸ்ரித விரோதி நிரசன அர்த்தமாக
அடுத்த வேஷம் என்று நிரசித்தான் என்று
உள்ளவர் கண்டார் உளர்
இவளோடே கூடினால் இறே வஸ்துவை உள்ளபடி காணலாவது
இது தானே இறே தர்மி ஐக்யமும் –

————

அவனை ஈஸ்வரன் என்று அறுதி இட்டால்
ஸ்ரீ பஞ்சாயுதங்களோடே காண வேணும் என்கிறார் –

நாந்தகம் சங்கு தண்டு நாண்  ஒலி சார்ங்கம்  திருச் சக்கரம் 
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் 
காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் ஜனக ராஜன் தன் வேள்வியில் கண்டார் உளர் -4- 1-2 –

பதவுரை

நாந்தகம்–ஸ்ரீ நந்தகம் என்னும் வாளையும்
சங்கு–ஸ்ரீபாஞ்ச ஐன்யத்தையும்
தண்டு–ஸ்ரீ கௌமோதகி என்னும் கதையையும்
நாண் ஒலி–நாண் கோஷத்தை யுடைய
சார்ங்கம்–ஸ்ரீசார்ங்க தநுஸ்ஸையும்
திரு சக்கரம்–ஸ்ரீ திருவாழி யாழ்வானையும்
ஏந்து பெருமை இராமன்–(திருக்கைகளில்) ஏந்தும் படியான பெருமையை யுடைய ஸ்ரீ இராம பிரான்
இருக்கும் இடம் நாடுதிரேல்–
காந்தன் முகிழ் விரல் சீதைக்கு ஆகி-செங்காந்தளம் பூ போன்ற விரல்களை யுடைய ஸ்ரீ பிராட்டிக்காக
வேந்தர் தலைவன்–ராஜாதி ராஜனான
சனகராசன் தன்–ஸ்ரீ ஜனக சக்கரவர்த்தியினுடைய
வேள்வியில்–யஜ்ஞ வாடத்திலே
சென்று–எழுந்தருளி
கடு சிலை–வலிய வில்லை
இறுக்க கண்டார் உளர்–முறிக்கக் கண்டவர்கள் இருக்கின்றனர்.-

நாந்தகம் சங்கு தண்டு நாண்  ஒலி சார்ங்கம்  திருச் சக்கரம் 
ஸ்ரீ பஞ்சாயுதங்களையும் சொல்லும் போது
இன்னது முதலாக எண்ண வேணும் என்கிற நிர்பந்தம் இல்லையே
எல்லாரும் ஏக மநாக்களாய் இருக்கையாலே ஒன்றைச் சொல்லும் போதே
எல்லாவற்றையும் சொல்லிற்றாம் இறே

சாரங்கம் என்னும் வில்லாண்டான் (பெரியாழ்வார் )-என்கையாலும்
சார்ங்கம் வளைய –நானும் அவனும் அறிதும் (நாச்சியார் )-என்கையாலும்
ஆழியொடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -கலியன் -என்பது
சேரச் சொல்லுவது ஆகையாலே
சார்ங்க பாணி -என்ற போதே எல்லாம் சொல்லலாம் இறே –

(ராமன் என்றாலே சார்ங்க பாணி தானே
இவை உண்டா என்ற
சங்கா நிவ்ருத்திக்கு இந்த வியாக்யானம்
இதே போல் -கதா தரன் -கயா ஸ்ரார்த்தம் கதா தர பூத்வா சொன்னாலும் பஞ்சாயுத தரன் தான்
கலப்பை மழு சொன்னாலும் இப்படியே )

ஏந்து பெருமை இராமனை
ஐந்தாலும் கொள்ளும் கார்யம் ஒன்றைக் கொண்டே கொள்ளுமாகையாலே
மற்றவை எல்லாம் அழகுக்கு ஏந்தினவையாய் இறே உள்ளது

அழகு தனக்கும் இவை மிகையாய்
ஆபரணஸ்ய யாபரணம் -அயோத்யா -3-27-
(ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள் அன்றோ)
பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணாம் –
என்னும் படி இறே அவன் பெருமை தான் இருப்பது

இராமனை
எல்லாரையும்
எல்லா பிரகாரத்தாலும் ரமிப்பிக்க வல்லவனை

இருக்கும் இடம் நாடுதிரேல் 
இந்த சவுந்தர்யாதிகளும்
ஸுர்யாதிகளும்
அவன் இருக்கும் இடத்திலே காண வேணும் என்று தேடுகிறி கோளாகில்

காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க
செங்காந்தள் முகிழ் போல் திரு விரல் -என்கையாலே
இவளுடைய திவ்ய அவயவங்களுக்கு எல்லாம் உப லக்ஷணமாய்
பருவத்தைக் காட்டுகையாலே அவனை அழைத்தமை காட்டுகிறது
(துல்ய சீல வயோ வ்ருத்தாம் –இத்யாதி )

சீதை -என்கையாலே
குடிப் பிறப்பு காட்டுகிறது
(கர்ப்ப வாஸம் இல்லாத ஏற்றம் )

ஆகிச் சென்று கடும் சிலை இறுத்து -என்கையாலே
கொடு வந்த விசுவாமித்ரனை வியாஜ்யம் என்னலாம் இறே

வேந்தர் தலைவன் ஜனக ராஜன் தன் வேள்வியில் கண்டார் உளர்
ராஜ தர்ம ஸ்ரேஷ்டன் ஆகையாலே
ராஜாக்களுக்கு எல்லாம் கர்த்தாவுமாய்
வம்ஸ வானுமாயுமாய் இருக்கிற
ஜனக ராஜனுடைய யஜ்ஞ சமீபத்திலே சென்று இருக்கக் கண்டார் உளர் என்னுதல்

(சீரத்வஜன் இவர் இயல் பெயர் நிமி வம்சம் -ஆறு ஜனகர்கள் உண்டே
தேகம் அற்ற விதேஹம் வைதேகி )

அன்றியே
இவர் ஆசைப்பட்டால் போலே
ஸூல்கமான சிலையை முறித்து
திருத் தமப்பனாரையும் திருத் தாயாரையும் அழைத்து
மற்றும் வேண்டுவாரையும் கூட்டிக் கொண்டு
அந்த ஸமீபத்திலே

இயம் ஸீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீதவ-என்று
வடிவு அழகு இது -குடிப் பிறப்பு இது -ஸஹ தர்ம சரியாக அங்கீ கரியும் என்று காட்டிக் கொடுத்து
சடங்குகளையும் தலைக் கட்டின பின்பு

பெருமாளையும் நாய்ச்சியாரையும் சேர வைத்து
தம்முடைய ஆசையால் ஒப்புப் பார்த்து
கண் அழகு விஞ்சல் (அஸி தேக்ஷிணா அன்றோ ) என்று இருக்கையாலே இறே
வேள்வியில் கண்டார் உளர் என்கிறது

இதில் இராமனை நாடுதிரேல் –வேள்வியில் கண்டார் உளர்- என்கிறதில் வேறுபாடு தோன்றாதாப் போலே இறே
முதல் பாசுரத்தில் –
இராமனை நாடுதிரேல் –உதிரம் அளைந்த கையோடு இருந்தானைக் கண்டார் உளர் என்றதும் –

————–

கிருஷ்ண அவதாரத்தோடு ராம அவதாரத்தைச் சேர்த்து அனுபவிக்கிறார் –

கொலை யானை கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருது அழியச் 
சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் 
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப 
அலையார் கடல் கரை வீற்று இருந்தானை அங்குத்தை கண்டார் உளர் -4- 1-3 –

பதவுரை

கொலை யானை–கொலை செய்வதையே இயல்பாக வுடைய (குவலய பீடமென்னும் யானையினுடைய
கொம்பு–தந்தங்களை
பறித்து–பறித்துக் கொண்டவனும்,
கூடலர்–(ஜந ஸ்தாதத்திலுள்ள ராக்ஷஸர்களாகிய) சத்துருக்களுடைய
சேனை–சேனையானது
அழிய–அழியும்படி
பொருது–போர் செய்தவனும்,
சிலையால்–வில்லாலே
மராமரம்–ஸப்த ஸால வ்ருக்ஷங்களை
மெய்த–எய்தவனுமான
தேவனை–எம்பிரானை
சிக்கன நாடுதிரேல்–த்ருடாத்யவஸாயத்தோடு தேடுகிறீர்களாகில்,
(அவனிருக்குமிடஞ் சொல்லுகிறேன்;)
குரங்கு இனம்–வாநர ஸேனையானது
தடவரை–பெரிய மலைகளை
தலையால்–(தமது) தலைகளினால்
தாங்கிக் கொண்டு சென்று–சுமந்து கொண்டு போய்
அடைப்ப–கடலின் நடுவே அணையாக) அடைக்க
அலை ஆர் கடல் கரை–அலை யெறிகிற கடற்கரையிலே
வீற்றிருந்தானை–எழுந்தருளி யிருந்த இராம பிரானை
அங்குத்தை–அந்த ஸந்நிவேசத்தில் கண்டார் உளர்-

கொலை யானை கொம்பு பறித்துக்
கொலையில் கடிதான குவலயாபீடத்தின் கொம்பை அநாயாசேந பிடுங்கி

கூடலர் சேனை பொருது அழியச்  சிலையால் மரா மரம் எய்த
ராவண முதலான ராக்ஷஸ சேனை எல்லாம் யுத்தத்தில் முடியும் படியாக திரு உள்ளத்திலே கோலி இறே
மஹா ராஜருடைய சங்கா நிவ்ருத்தி அர்த்தமாகச் சிலையால் மரா மரம் எய்தது –

தேவனைச்
இப்படிப் பட்ட த்யோதமாநாதி குண விசேஷங்களை யுடையவனை
(ஒளி கொண்ட குண விசேஷங்கள் )

சிக்கென நாடுதிரேல் 
அது ஒரு வ்யக்தி இது ஒரு வ்யக்தி என்று பிரித்துப் பிரதிபத்தி பண்ணாதே
தர்மி ஒன்றே என்று அத்யவசித்துக் காணும் அளவும்
சாபம் ஆநய -என்னாதே
அவன் இருந்த இடம் தேடு கிறி கோளாகில்

(திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமின் சீக்கிரமாக –
காலம் கழித்த இடம் உண்டோ என்ன
சமுத்திர ராஜன்
வில்லைக் கொண்டு வா அம்பு கொண்டு வா சொல்ல வைத்தான் )

தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப 
ஸ்ரீ வானர வீரர்கள் இடமுடைத்தான பர்வதங்களை பெருமாள் எழுந்து அருளும் போது
இந்த மலையின் மேலே திருவடிகள் படும் படி மேல் எழ வைத்து அடைப்பதாகத்
தம் தம்முடைய உத்தம அங்கங்களாலே தரித்துக் கொண்டு வந்து அடைப்ப

அலையார் கடல் கரை வீற்று இருந்தானை அங்குத்தை கண்டார் உளர்
இத்தை நாம் காலாலே மிதிப்போமாகில் இவை சாப உப ஹராமான கற்களாய்
ஸ்த்ரீ ரூபமாய் அடை படாதபடி எழுந்து இருக்குமாகில்
சுமந்து வந்து அடைத்தவர்களுக்கு அஸஹ்யமாம் என்று கரையிலே இருந்தான் என்னுதல்

அடைக்கிற முதலிகளுக்குப் பிரியமாக மலை பொகடக் கிளம்பின அலை நீர் தெறிக்கும் படி
ஆஸன்னமாக (ஸமீபமாக ) அரி குலம் பணி கொண்டு இருந்தான் என்னுதல்

இப்படி குரங்குகள் மலையை நூக்கா நிற்க அவற்றைப் பார்த்து
என் தான் முதலி களுக்கு இத்தனை மெத்தன
என் தான் பெருமாளுக்குப் பகல் அமுது அக் கரையிலேயாய் இருக்கும்
நீங்கள் இத்தைக் கல்லும் கறடுமாக்கி அத்யந்தம் மிருதுவான
ஸ்ரீ பாதங்கள் உறுத்தும் படி பண்ணாதே வாங்கி நில்லுங்கோள்
நாங்கள் குளித்துப் புரண்டு உடம்பில் தொங்கின நொய் மணல் கொண்டு
உங்களுக்கும் பெருமாளுக்கும் வழி யாக்கி தருகிறோம் என்ற
(பகவத் பாகவத கைங்கர்யம் செய்யப் பெற்றனவே )
அணில்கள் அத்யாவசாயத்தில் சலியாமையைக் கண்டு
அத்யந்தம் ப்ரீதராய் இவ் வாச்சர்யத்தைக் கண்டு
வேறுபாடு தோன்ற இருந்தவனை என்னுதல்

அங்குத்தை கண்டார் உளர்
வ்யாமோகத்தோடே ஆசையுடன் கண்டார் உளர்

சிலையால் மரா மரம் எய்த இடத்தில் கண்டார் உளர் என்று விபக்தியை மாறாடிச் சொல்லுதல்
கூடலர் சேனை பொருதழிய சங்கா நிவ்ருத்தி பிறப்பித்து அங்குத்தை மரா மரம் சிலையால் எய்த
தேவனைச் சிக்கென நாடுதிரேல் -என்றும்
அங்குத்தைக் கொலை யானை
அங்குத்தைக் கூடலர் சேனை என்றுமாம் –

———-

நப்பின்னை பிராட்டி விஷயமாகச் செய்த வியாபாரங்களை அனுசந்திக்கிறார் –

தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட 
மாயக் குழவி யதனை நாட உறில் வம்மின் சுவடு உரைக்கேன் 
ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல் விடை ஏழினையும் 
வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்மையே கண்டார் உளர் – 4-1- 4-

பதவுரை

பரந்த–எங்கும் பரவின
தோயம் நடுவு–ஜலத்தின் நடுவே
சூழலின்-உபாயத்தினால்
தொல்லை வடிவு கொண்ட–பழமையான (பெரிய) வடிவைச் சுருக்கிக் கொண்ட
மாயம் குழலி அதனை–அந்த ஆச்சர்யக் குட்டியை
நாடுதிறில்–தேட முயன்றீர்களாகில்
வம்மின்–(இங்கே) வாருங்கள்;
சுவடு உரைக்கேன்–(உங்களுக்கு) ஓரடையாளம் சொல்லுகின்றேன்;
ஆயர் மகள்–(ஸ்ரீகும்பர் என்னும்) ஆயருடைய பெண் பிள்ளையும்
மடம்–மடப்பம் என்ற குணத்தை உடையவளுமான
பின்னைக்கு ஆகி–நப்பின்னைப் பிராட்டிக்காக
அடல் விடை யேழினையும்–வலிய ரிஷபங்களேழும்
வீய–முடியும்படியாக
பொருது–(அவற்றோடு) போர் செய்து (அந்த ஆயாஸத்தாலே)
வியர்த்து நின்றானை–குறு வெயர்ப்பரும்பின வடிவுந்தானுமாய் நின்றவனை
மெய்யம்மையே–உண்மையாகவே கண்டார் உளர்-

தோயம் பரந்த நடுவு சூழலில்
பரந்த சமுத்திர மத்யே ஓர் இடத்திலே –
பரந்த தோய நடுவு சூழலில்

தொல்லை வடிவு கொண்ட 
பழைய வடிவைக் கொண்ட

தொல்லை வடிவு கொண்ட  மாயக் குழவி யதனை நாட உறில்
தொல்லை -பெருமை யாகவுமாம்
புதுமையில் பெருமை உண்டானாலும் சிறுமையாய் இறே தோற்றுவது –

பழைமை என்ற போதே
ஆத்ய நாதி என்றாமல் அநாதியைக் காட்டுகையாலே
ஆதி யம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வட தள ஸாயி -என்னுதல்
கிருஷ்ணன் என்னுதல்

பரந்த தோய நடுவு சூழலாவது
ஏழு த்வீபங்களில் நடுவு ஜம்பூத்வீபம்
சூழல் ஒன்பதாகக் கூறுதல்
இதில் வடமதுரை யாதல்
இதில் சிறைக்கூடமாதல்
இதிலே இறே கையும் திரு ஆழியும் தோன்ற அங்கு போலே
ஒப்பனை குன்றாமல் வந்து அவதரித்தது

மாயம்
கிருத்ரிம ஆச்சர்யம்
அந்த மாயம் தான் சிறைக் கூடத்தின் நின்று போந்த மாயமும்
திருவாய்ப்பாடியில் பிறந்து வளர்ந்த மாயமும்
எல்லாம் தோன்றுகையாலே மாயக் குழவி என்கிறது

தொல்லை -பெருமையாய்
வட தள சாயியைக் காட்டின போது
சிறுமை அளவிட ஒண்ணாத பெருமையாய் மாறித் தோற்றுகிறது என்னவுமாம்

அதனை
குழவி என்கையாலே அதனை என்கிறது

நாடுதிரேல்
தேடுகையில் அத்யவசிக்கல்

வம்மின்
வாருங்கோள்

சுவடு உரைக்கேன் 
அடியும் சுவடும் எளிதாகச் சொல்லுகிறேன்
திருவாய்ப்பாடியில் பெண்கள் திருக் குழலூத்தில் யமுனைக் கரையில் இவர்களை
மலக்கம் காண அவன் ஒளித்த போது
ஒருவரை ஒருவர் வினவுவது
ஒருவருக்கு ஒருவர் அவன் அடியும் சுவடும் காட்டுவது
வார் மணல் குன்றிலே அவன் வரவு பார்த்து நிற்பது ஆனார்கள் இறே

ருஷிகளும் -தாஸாம் ஆவீரபூத் -என்று
பெண்களை போலே காணும் அளவும் –
கல்யாண குணங்களுக்கு ஆஸ்ரயம் ஏதோ என்று தேடுவாரும்
தாம் தாம் அறிந்த அளவுகளைச் சொல்லுவாருமாய் இறே இருப்பது –
ஆனாலும் தாம் தாம் அனுகரித்தார்கள் இல்லை இறே

ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல் விடை ஏழினையும் 
வீயப் பொருது வியர்த்து நின்றானை
ஸ்ரீ கும்பர் திரு மகளாய்
மடப்பத்தை யுடையளான
நப்பின்னைப் பிராட்டிக்காகக் கொலை புரிந்து அஸூர மயமான ருஷபங்கள் ஏழையும் முடியும் படி
பொருத ஆயாஸத்தாலே ஸ்வேத ஜலம் தோன்ற நின்றவனை
அது இறே அவதாரத்தில் மெய்ப்பாடு

மெய்மையே கண்டார் உளர்
அவளோடே கூடின பின்பு இறே
வஸ்துவுக்கு சத்யத்வம் உள்ளது
ஸ்ரீ யபதித்தவம் நிரூபகம் ஆனால் போலே இறே இவளையும் நிரூபகமாகச் சொல்லுகிறதும்
பின்னை மணாளனை —

————–

ஸ்ரீ ருக்மிணிப் பிராட்டி விஷயீ காரத்தை அனுசந்திக்கிறார் –

நீர் ஏறு செஞ்சடை நீல கண்டனும் நான் முகனும் முறையால் 
சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற திரு மாலை நாடுதிரேல் 
வாரேறு கொங்கை உருப்பிணையை வலியப் பிடித்துக் கொண்டு 
தேர் ஏற்றிச் சேனை நடுவே போர் செய்ய சிக்கனக் கண்டார் உளர் – 4-1 -5-

பதவுரை

நீர்–(எம்பெருமானது ஸ்ரீபாத) தீர்த்தமானது
ஏறு–ஏறப் பெற்ற
செம் சடை–சிவந்த ஜடையையுடைய
நீல கண்டனும்–(விஷமுடையதனால்) கறுத்த மிடற்றை யுடையவனான சிவ பெருமானும்.
நான்முகனும்–சதுர் முக ப்ரஹ்மாவும்
முறையால்–(சேஷ சேஷி பாவமாகிற) முறையின்படி
சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற–சிறந்த சொற்களைக் கொண்டு துதிக்கும்படி அமைந்து நின்ற
திருமாலை–ச்ரிய : பதியாகிய எம்பெருமானை
நாடுதிரேல்–தேடுகிறீர்களாகில், (இதைக் கேளுங்கள்;)
வார் ஏறு–கச்சை அணிந்த
கொங்கை–முலைகளை யுடைய
உருப்பிணியை–ருக்மிணிப் பிராட்டியை
வலிய–பலாத்காரமாக பிடித்துக் கொண்டு
தேர் ஏற்றி–(தனது) திருத் தேரின் மேல் ஏற விட்டு
(அவ்வளவிலே சிசுபாலதிகளான பல அரசர்கள் எதிர்த்து வர)
சேனை நடுவு–(அவ்வரசர்களுடைய ஸேநா மத்யத்திலே)
போர் செய்ய-(அவ்வரசர்களோடு )யுத்தம் செய்ய
சிக்கென–திண்மையான (த்ருடமாக)
கண்டார் உளர்-

நீர் ஏறு செஞ்சடை நீல கண்டனும்
கங்கா தரன் -நீல கண்டன் -என்னும் ப்ரஸித்தியை யுடையவன்
சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன்–( திருச்சந்த ) என்னக் கடவது இறே

ப்ரஹ்ம பாவனை தலை எடுத்து ப்ரஹ்மா தீர்த்தம் கொண்டு ப்ரசாதிக்கிற போது
கர்ம பாவனை கழியாமையாலே
அநாதரம் தோன்றத் தலையிலே தெளிக்கையாலே
நீரேறு செஞ்சடை -என்கிறது
(ஸ்ரீ பாத தீர்த்தம் ஏறு செஞ்சடை சொல்ல வில்லை இதனாலே
ஒரு கால் நிற்ப -கலியன் -திருவடி மதிக்காமல் இருந்த லோகத்தார் அபிப்ராயத்தால் )

சென்னி மேல் ஏறக் கழுவினான் -(நான்முகன் )-என்னக் கடவது இறே
ஹ்ருதயத்தில் கருட தியானமும்
தலையிலே அம்ருத கலையுமாகையாலே விஷம் போக்கற்றுக் கட்டியாயிற்றே இறே
(திரு விருத்தம்)
நான் முகனும் முறையால்  சீர் ஏறு வாசகம் செய்ய
அயன் நான்கு நாவினாலும் தழும்பு எழ
கல்யாண குணங்கள் முறைமை தோன்ற மிகும்படி ஸ்தோத்ரம் செய்ய

நின்ற திரு மாலை
முறைமை ப்ரஹ்ம பாவனையாலே தீர்த்தம் ப்ரஸாதப்படுகையாலும்
சிரஸ்ஸாலே வஹித்த தீர்த்த பலத்தாலும்
இவர்கள் நெஞ்சிலே தாஸோஹத்வமும்
க்ருஹீதாம்சமான கல்யாண குணங்களும் மிக்குத் தோற்றும் இறே

நின்ற
நின்று கேட்டு அருளாய் (திரு விருத்தம்)-என்னப் போகிறார்கள் அன்றே
தம் தாம் பிரயோஜனத்துக்காக இறே ஸ்தோத்ரம் செய்வதும்

திருமாலை
பூர்வ வாக்யத்தில் பிரதம பதத்தில் நித்ய யோகத்தால் வந்த ஸ்ரீ பதித்வத்தை
ப்ரதீதி மாத்ரமாக எல்லாருக்கும் சொல்லலாம் இறே

நாடுதிரேல் 
உம் தாம் பரயோஜனத்துக்காக தேடு கிறி கோளாகில்

வாரேறு கொங்கை உருப்பிணையை வலியப் பிடித்துக் கொண்டு  –
கச்சுக்கு உள்ளே வளருகின்ற முலைகளை யுடையளாய் இருக்கிற ருக்ம ராஜன் மகளை
சிசுபாலனுக்கு என்று வாக் தத்த மநோ தத்தங்களாலே அறுதியிட்டு
கிரியா பர்யந்தம் ஆக்குவதற்கு முன்னே

இவள் பிரார்த்தனைக்கு ஈடாக
சங்க த்வனியும் காட்டி
பிராண பிரதிஷ்டையும் செய்து
கண்ணாலம் கோடித்து இருந்த ராஜாக்கள் நடுவே கன்னி தன்னைப் பொருந்தாமையோடே கைப் பிடிப்பான்
திண்ணார்ந்து இருந்தவன் அண்ணாந்து இருந்த இவளுடைய
மனப் பொருத்தமே பற்றாசாக வலிமையால் பிடித்துத்

தேர் ஏற்றிச் சேனை நடுவே போர் செய்ய சிக்கனக் கண்டார் உளர் –
தேரிலே ஏற்றுக் கொண்டு போய்
ஸிஸூ பால விஸிஷ்டாய -என்று
ஒரு ப்ராமாணிகராலும் சலிப்பிக்க ஒண்ணாத படி பாணி க்ரஹணம் செய்யவும் கண்டார் உளர் –

—————

இவ்வளவேயோ
இவன் ப்ரீதிக்கு விஷயமானார் அனைவரும் சூழ இருந்த பிரகாரத்தை அனுசந்திக்காரர்
(கீழே ஒரு ருக்மிணி பிராட்டி
இங்கு அஷ்ட மஹிஷிகளும் பதினாறாயிரம் தேவிமார்களும் )

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல் 
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை  
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 -1-6 – 

பதவுரை

பொல்லா வடிவு உடைபேய்ச்சி–மஹா கோரமான வடிவை யுடைய பூதனை யானவள்
அஞ்ச–மாளும்படியாக
புணர்முலை–தன்னில் தான் சேர்ந்திருள்ள (அவளது) முலையிலே
வாய் மடுக்க வல்லான்–(தனது) வாயை வைத்து உண்ண வல்லவனும்
மா மணிவண்ணன்–நீலமணி போன்ற நிறத்தை யுடையவனுமான எம்பெருமான்
மருவும் இடம்–பொருந்தி எழுந்தருளி யிருக்குமிடத்தை
நாடுதிரேல்–தேடுகிறீர்களாகில்
(இதைக் கேளுங்கள்:)
பௌவம் ஏறி துவரை–கடலலைகள் வீசப் பெற்றுள்ள ஸ்ரீத்வாரகையிலே
எல்லாரும் சூழ–தேவிமார் எல்லாரும் சுற்றுஞ் சூழ்ந்து கொண்டிருக்க,
பல் ஆயிரம் பெரு தேவிமாரொடு–(அந்தப்) பதினாறாயிரம் தேவிமாரோடு கூட
சிங்காசனத்து–ஸிம்ஹாஸநத்தில்
இருந்தானை–எழுந்தருளி யிருக்கும் போது கண்டார் உளர்-

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க வல்லானை
பேய் என்ற போதே பொல்லா வடிவும் அறியாமையும் தோற்றும் இறே
ஆயிருக்க பொல்லா வடிவு என்றது
தஜ் ஜாதிகளில் பொல்லா வடிவை யுடைய பேய்களும் அவற்றில் அறியாதவையும் –
(நியமிக்கும்- நீங்கும் )-நீக்கும் -படி இறே இவளுடைய வடிவும் அறியாமையும் இருப்பது

வரண்டு நார் நரம்பு எழக் கரிந்த வடிவும்
வஞ்ச மேவிய நெஞ்சில் அறியாமையும் இறே
இவளுக்கு ஸ்வா பாவிகம்
அக் காலம் எல்லாம் ஸூகமே பிராணனோடு திரிந்தாள் இறே

நல்ல வடிவு எடுத்து பிரசன்னையாய்ப் பெற்ற தாய் போல் வந்து தன் விசாரத்தாலே
நஞ்சு ஏற்றிக் கொடுத்த முலையில் வாசி அறிந்து வாய் மடுக்க வல்லானை

புணர் -விசாரம்
(புணர் -தன்னில் தான் சேர்ந்துள்ள முலை-மா முனிகள் )
பெரிய அபி நிவேசத்தோடே வாசி அறிந்து வாய் மடுக்க வல்லானை
தன் பிள்ளைத் தனத்தில் தூய்மை அறிந்து அறியாமை தோன்ற வாய் மறுக்க வல்லானை

மா மணி வண்ணனை
ப்ரசன்ன விரோதி போகப்பெற்ற வாறே
மஹார்க்கமான நீல ரத்னம் போலே திரு மேனி புகர்த்துத் தோன்றின படி
உண்ணா நஞ்சுண்டு உகந்தாயை (திருவாய் )-என்று
அந்ய சேஷத்வம் அறப் பெறில் நஞ்சாகில் என் செய்ய வேணும் என்று
பேய் முலை நஞ்சூணாக உண்டான் (பேயாழ்வார் )-என்கையாலே
உண்டார் மேனி கண்டார்க்குப் புகர்த்துத் தோன்றும் இறே

மருவும் இடம் நாடுதிரேல் 
பேய்ச்சியைப் போல் அன்றிக்கே
நீங்களும் அவனும் உஜ்ஜீவித்து உகக்கும்படி கூடும் இடம் தேடுதிரேல்

பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு
நரகாஸூர வத வ்யாஜத்தாலே வந்த பல்லாயிரம் பெரும் தேவிமார் என்கிறது

பவளம் எறி துவரை   எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர்
ஸ்ரம ஹரமாம் படி சமுத்ரமானது திரைக்கையாலே சேவிக்கிற ஸ்ரீ மத் த்வாரகையிலே
தேவிமார் எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தவனை
ஏகாசன பரிச்சேத்யனாய் இருந்து
எல்லாரையும் ஏகாசனத்தே இருந்தாரைப் போலே உகப்பித்த ஆச்சர்யத்தோடே கண்டார் உளர் –
(அபரிச்சேதயனாய் இருந்து வைத்து சாம்யாபத்தி அருளுபவர் என்றவாறு )

————

பார்த்த சாரதி யான பிரகாரத்தை அனுசந்திக்கிறார்

வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன் 
உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன் 
வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று 
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் – 4-1-7- –  

பதவுரை

வெள்ளை–வெண்மை நிறமுடையதும்
விளி–(அநுபவ கைங்கரியங்களில் ருசியுடையீர்! வாருங்கள் என்று, தன் த்வநியால்) அழைப்பது போன்றுள்ளதுமான
சங்கு–ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்
வெம் சுடர்–தீக்ஷ்ணமான ஜ்யோதிஸ்ஸை யுடைய
திருச் சக்கரம்–திருவாழி யாழ்வாளையும்
ஏந்து கையன்–தரியா நின்றுள்ள திருக்கைகளையுடைய எம்பெருமான்
உள்ள இடம்–எழுத்தருளி யிருக்குமிடத்தை
வினவில்–கேட்கிறீர்களாகில்
உமக்கு–(கேட்கிற) உங்களுக்கு
இறை சுவடு உரைக்கேன்–சிறிது அடையாளம் சொல்லுகிறேன்,
(இறைச் சுவடு-பகவத் அடையாளம் )
வம்மின்–வாருங்கள்;
வெள்ளைப் புரவி–வெள்ளைக் குதிரகைள் பூண்டிருப்பதும்
குரங்குகொடி–குரங்காகிற வெற்றிக் கொடியை உடையதுமான
தேர்மிசை–(அர்ஜுனனுடைய) தேரின் மேலே
முன்பு நின்று (ஸாரதியாய்) முன்னே நின்று
படை–ஸைந்யத்துக்கு
கள்ளம் துணை ஆகி-க்ருத்ரிமத் துணையாயிருந்து
பாரதம்–பாரத யுத்தத்தை
கை செய்ய–அணி வகுத்து நடத்தும் போது
கண்டார் உளர்-

வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன் 
வெளுத்த நிறத்தையும் ஓசையும் யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் ஆஸ்ரித விரோதிகளின் மேலே
நெருப்பு உமிழ்ந்து செல்லும்படியான திரு ஆழியை ஏந்துகிற திருக் கையும் யுடையவன்

உள்ள விடம் வினவில்
பார தந்தர்யம் தோற்ற
ஸ்வ தந்த்ரனாய் நிற்கிற இடம்
எங்கே காணலாம் என்று கேட்கிறி கோளாகில்

உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன் 
வம்மின்
வாருங்கோள்

உமக்கு சுவடு இறை உரைக்கேன் 
உங்களுக்கு காணலாவதொரு மாற்றம் சுருங்கச் சொல்லுகிறேன்

வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று 
ஸ்வேத அஸ்வ (பூட்டப்பட்ட )வாஹனனாய்
வானரத்தை வெற்றிக் கொடியாக யுடையவனுமான
விஜயன் தேரின் மேலே
அவனுக்கு சாரதியாய் முன்னே நின்று

கள்ளப் படை துணையாகி
(படைக்கு கள்ள துணை – மா முனிகள்
இங்கு படையே கள்ளம்)
கிருத்ரிதமான துரியோதன பரிகரத்துக்குப் பாப கரண விமோசன ஸஹ காரியாய் நின்று
த்ருதராஷ்ட்ராதிகள் ராஜ தர்மத்தை அறிந்து இருக்கச் செய்தேயும்
மமதையால் ஸோ ஹம்பாவம்( ஸ அஹம்பாவம் )நடத்துகையாலும்
ஆத்ம தர்மத்தில் அந்வயம் இல்லாமையாலும்
ஆத்மாத்மீயத்தை அபஹரிக்கையில் மேற்பட்ட களவு இல்லை இறே

இது தான் ப்ராயேண அர்ஜூனாதிகளுக்கும் உற்றுப் பார்த்தால் உண்டாயிற்றே இறே இருப்பது
அவன் ஜாநாமி தர்மம் என்றதில் காட்டில்
(தர்மம் தெரியும் ஆனால் பண்ண மாட்டேன் என்ற துரியோதனன் போல் தான் இவர்களும்
ஒரே வாசி கிருஷ்ண ஆஸ்ரயராக இருந்ததே )என்றதில் காட்டில்
இவனும் கீழ்ச் சொல்லிற்றுச் செய்யாது இருக்கச் செய்தே
நிஸ் சிதம் ப்ரூஹி -என்றதும் ஒரு வாசி இல்லை என்னும் இடம்
கிருஷ்ணன் தானே
அஸோச்யாந் அந்வ ஸோசஸ் த்வம்
சோகத்துக்கு விஷயம் அல்லாதவை -இதைப் பற்றி சோகியா நின்றாய்
ப்ரஜ்ஞா வாதம்ஸ் ச பாஷஸே –
முன்னே ராஜ தர்மத்தை அறிந்தால் போலே சில வார்த்தையும் சொல்லா நின்றாய்
கதாஸூந் அகதா ஸூம்ஸ் ச
கதாஸூவான (உயிரற்ற )சரீரம் எல்லாரும் நோக்கிலும் நில்லாது
அகதா ஸூவான வாத்மா எல்லாரும் அழிக்க நினைத்தாலும் அழிக்க ஒண்ணாது என்று
பிரித்து அறிந்த ஞாதாக்கள் சோகியார்கள் காண் என்று அருளிச் செய்தான் இறே

பாரதம் கை செய்யக் கண்டார் உளர்
பாரத சமரத்திலே பெரிய த்வரையோடே கையும் அணியும் வகுத்து
எல்லாச் சேனையும் இரு நிலத்தில் அவியச் செய்து நின்ற நிலை கண்டார் உளர்

ஆத்ம ஆத்மீய அபஹார க்ருத்ரிமம் இரண்டு தலைக்கும் உண்டாய் இருக்கச் செய்தேயும்
தர்ம அதர்ம தார தம்யத்தாலே இறே இங்கனம் செய்ய வேண்டிற்று
யுத்தத்துக்கு இசைந்த பின்பு இறே இரண்டு தரத்தாருக்கும் தான் துணை யாயிற்று
அவன் துணையாம் இடத்து ஸஹ காரி நிரபேஷமுமாய் இருக்கும் இறே –

———–

கீழ் கள்ளப் படை என்றத்தை வ்யக்தீ கரிக்கிறார் இப்பாட்டால் –

நாழிகை கூறிட்டு காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே 
நாழிகை போக படை பொருதவன் தேவகி தன் சிறுவனை நாடுதிரேல்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயந்திரன் தலையை 
பாழில் உருளப் படை பொருதவன் பக்கமே கண்டார் உளர் – 4-1- 8-

பதவுரை

நாழிகை (பகல் முப்பது) நாழிகைகளை
கூறி விட்டு–பங்கிட்டுக் கொண்டு
காத்து நின்ற–(ஜயத்ரதனைக்) காத்துக் கொண்டிருந்த
அரசர்கள் நம் முகப்பே–ராஜாக்கள் முன்னிலையில்
நாழிகை போக–(பகல் முப்பது) நாழிகையும் போயிற்றென்று தோற்றும் படியாக
படை–(தன்) ஆயுதமாகிய திருவாழி யாழ்வானைக் கொண்டு
பொருதவன்–(ஸூர்யனை) மறைத்தவனும்
தேவதி தன் சிறுவன்–தேவகிப் பிராட்டியின் பிள்ளையுமான கண்ண பிரான்
(உள்ள இடம்)–எழுந்தருளி யிருக்குமிடத்தை
வினவில்–கேட்கிறீர்களாகிய
(உரைக்கேன்) சொலலுகின்றேன்;
அன்று–(அப்படி அவ்வரசர்கள் காத்துக் கொண்டு நின்ற அன்றைக்கு)
ஆழி கொண்டு– திருவாழியினால்
இரவி–ஸூர்யனை
மறைப்ப–(தான்) மறைக்க,
(அதனால் பகல் கழிந்த்தாகத் தோற்றி வெளிப்பட)
சயத்திரதன்–ஜயத்ரனுடைய
தலை–தலையானது.
பாழில் உருள–பாழியிலே கிடந்துருளும்படி
படை பொறாதவன் பக்கமே–அம்பைச் செலுத்தின அர்ஜுநனருகில்
கண்டார் உளர்–(அவ் வெம்பெருமானைக்) கண்டாருண்டு–

நாழிகை கூறிட்டு காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே 
ஜயத்ரதனை ராஜாக்கள் எல்லாரும் தனித்தனியே நாழிகை கூறிட்டு காத்து நிற்க
அவர்கள் முன்னே

நாழிகை போக படை பொருதவன்  
பகல் நாழிகை சென்றது -என்று தோன்றும் படியாக

தேவகி தன் சிறுவன்
தேவகீ புத்ரன்

அன்று
அவனைக் குழிக்குள்ளே நிறுத்தின அன்று
அதுக்கடி அர்ஜுனன் ப்ரதிஜ்ஜை பண்ணுகையால் இறே

ஆழி கொண்டு இரவி மறைப்ப சயந்திரன் தலையை 
கருதும் இடம் அறிந்து பொரும் திருவாழி யைக் கொண்டு மறைத்த அளவிலே
அஸ்தமித்தது என்று குழியில் நின்றும் கரையிலே புருஷத்வயாக்ருதி தோன்ற நின்ற அளவிலே
இருள் பரப்பின திருவாழியை வாங்க
அந்த ஜயத்ரதன் தலையைத் தலை படைத்த பிரயோஜனம் பெறாமல்

பாழில் உருளப் படை பொருதவன் பக்கமே கண்டார் உளர்
பாழிலே கிடந்தது உருளும்படி படை பொருதவன் -என்னும்படி
படை பொறாத அர்ஜுனன் அருகே கண்டார் உளர் –

இனி ஆதித்யாதி தேஜஸ்ஸூக்கும் அவ் வருகான தேஜஸ்ஸை யுடைய திருவாழி ஆழ்வானாலே
ஆதித்ய தேஜஸ்ஸை மறைக்கும் படி என் என்னில்
திருவாழி ஆழ்வானுக்கு தேஜஸ்ஸாவது
அவன் திரு உள்ளத்துக்கு ஈடான வடிவு எடுக்கையும்
அந்த வடிவுக்குத் தகுதியான நிறத்தை சம்பாதிக்கையும் இறே

அவன் தனக்கும்
இருள் அன்ன மா மேனி அசாதாரணமாய் இருக்கச் செய்தேயும்
யுக வர்ண க்ரம அவதாரங்களிலே
(தத்தாத்ரேயர் ராமர் கிருஷ்ணர் -ப்ராஹ்மண க்ஷத்ரியர் வைஸ்யர் )
பாலின் நீர்மை செம் பொன் நீர்மை -என்பது
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் -என்பது
வெறும் புறத்தில்
நிறம் வெளிது செய்து பசிது கரிது -என்பது
தமர் உகந்தது எவ்வுருவம் -என்பதான

அவனோடே நித்ய ஸாரூப்ய சித்தனான அவனுக்கு
அவன் திரு உள்ளத்துக்கு ஈடாக வேண்டின நிறம் பரப்புகை அரிதோ
பிராகிருத தேஜஸ்ஸூ அப்ராக்ருத லோகத்தில் செல்லிலும்
அப்ராக்ருத தேஜஸ்ஸூ பிராகிருத லோகத்தில் வருகை அரிது இறே
அங்குள்ளாரும் இங்கு வந்தால் இங்குள்ள நிறம் மூன்றிலே (வெளிது செய்து கரிது )
அவன் திரு உள்ளத்துக்கு ஈடாக ஒன்றை எடுக்கும் அத்தனை இறே உள்ளது
இத்தால் ஞான சக்தியாதிகளுக்கு குறை வாராது இறே

அன்றியே
திருவாழி ஆழ்வானுடைய தேஜஸ்ஸூ மிகுதியால் இருண்டு தோன்றிற்று என்பாரும் உண்டு
சந்த்ர துல்யமான ஜல ராசியும் (கடலும் )இருண்டு தோன்றா நின்றது இறே
திமிர ஹரத்வமே இறே சந்திரனுக்கு உள்ளது

தேவகி தன் சிறுவனை நாடுதிரேல்
நாழிகை கூறிட்டு காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே 
நாழிகை போக
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயந்திரன் தலையை
பாழில் உருளப் படை பொருதவன்–என்னும்படி
படை பொருதவன் பக்கமே கண்டார் உளர்
என்று அன்வயம்

———

கீழில் பாட்டிலே
பாண்டவ பக்ஷ பாதியாய்
அவர்களுடைய ஆபத் விமோசகனான பிரகாரத்தை அனுசந்தித்தார்
இதில்
ஜகத்துக்கு எல்லாம் வந்த ஆபத்தை
அபேஷா நிரபேஷமாக ரஷித்த படியை அனுசந்திக்கிறார் –

மண்ணும் மலையும் மறி கடல்களும்  மற்றும் யாவும் எல்லாம் 
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை சிக்கென நாடுதிரேல்
எண்ணற்கு அரியதோர் ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் -4 -1-9 –

பதவுரை

மண்ணும்–பூமியையும்
மலையும்–மலைகளையும்
மறி–அலை யெறியா நின்றுள்ள
கடல்களும்–கடல்களையும்
மற்றும் யாவும் எல்லாம்–மற்றுமுண்டான எல்லாப் பொருள்களையும்
திண்ணம்–நிச்சயமாக
விழுங்கி–(ப்ரளயங் கொள்ளாதபடி) திரு வயிற்றிலே வைத்து நோக்கி
(பின்பு ப்ரளயங்கழிந்தவாறே)
உமிழ்ந்த–(அவற்றை வெளி…..காண) உமிழ்ந்து
தேவனை–எம்பெருமானை
சிக்கென–ஊற்றத்துடனே
நாடுதிரேல்–தேடுகிறீர்களாகில், (இதனைக் கேளுங்கள்.)
எண்ணற்கு அரியது–நினைக்க முடியாத (பெருமையையுடைய)
ஓர்–ஒப்பற்ற
ரேனமாகி அவதரித்து
புக்கு–ப்ரளய வெள்ளத்தில் புகுந்தது
இரு நிலம்–பெரிய பூமியை
இடந்து–அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்தெடுத்து
(அவ் வளவிலே பூமிப் பிராட்டி தன்னை வந்து அணைக்க,)
வண்ணம்–அழகியதும்
கரு–கறுத்ததுமான
குழல்–கூந்தலையுடைய
மாதரோடு (அந்த) பூமிப் பிராட்டியோடு
மணந்தானை–ஸமச்லேஷித் தருளினவனை கண்டார் உளர்–

மண்ணும் மலையும் மறி கடல்களும்  
எல்லாருக்கும் ஆதாரமான பூமியையும்
அந்த பூமிக்கு ஆணி அடித்தால் போல் இருக்கிற பர்வதங்களும்
இந்த பூமிக்கு ரக்ஷகமாய் சூழ்ந்து திரை மறியும் படியான சமுத்ரங்களும்

மற்றும் யாவும் எல்லாம் 
மற்றும் அநுக்தமான யஸ் ஸப்த வாஸ்யங்கள் எல்லாம்

திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை
தன் ஸங்கல்பத்தாலே இவற்றை எல்லாம் தன்னுள்ளே ஆக்கி
திண்ணம் -சங்கல்பம்
உமிழ்ந்த தேவனை
இவை வெளி நாடு காணும்படி உமிழ்ந்து ரஷித்த ரக்ஷகனை

சிக்கென நாடுதிரேல்
மேல் எழத் தேடி கண்டிலோம்
அவனுக்கு வேண்டாவாகில் எனக்கோ வேண்டுவது என்றால் போல் அநா தரியாதே
அவனைக் காணும் அளவும் மஹா விஸ்வாஸத்தோடே தேடு கோளாகில்

எண்ணற்கு அரியதோர் ஏனமாகி
ஈத்ருக்தயா இயத்தயா அளவிட ஒண்ணாத
அத்விதீயமான மஹா வராஹமாகி
மானமிலாப் பன்றி -என்னக் கடவது இறே
(அபிமானமும் உபமானமும் இல்லா )

இரு நிலம் புக்கு இடந்து
பாதாள கதையான மஹா பிருத்வியை உள்ளே புக்கு
அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்து எடுத்து
மண்ணும் தானத்தவே –என்கிறபடியே யதா ஸ்தானத்தில் வைத்து

வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர்
இதுக்கு அபிமானியாய்
நாட்டில் கருமை வெண்மையாம் படி கரு வண்ணக் குழலை யுடைய மாதரோடு
மணந்தானைக் கண்டார் உளர் –

——–

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

கரிய முகல் புரை மேனி மாயனை கண்ட சுவடு உரைத்து 
புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை 
திருவில் பொலி மறை வாணன் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும் 
பரவு மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வார்களே -4- 1-10 –

பதவுரை

கரியமுகிற் புரை மேனி–கரு மலர் போன்ற திருமேனி யுடையனும்
மாயனை–ஆச்சரிய செய்கைகளை யுடையனுமான கண்ண பிரானை
கண்ட சுவடு–ஸேவித்த அடையாளங்களை
உரைத்த–அருளிச் செய்த;
செந்நெல்–செந்நெற் பயிர்களானவை
ஓங்கி–(ஆகாசமளவும்) உயர்ந்து
புரவி முகம் செய்து–குதிரை முகம் போலத் தலை வணங்கி
விளை–விளையா நிற்கப் பெற்ற
கழனி–வயல்களை யுடைய
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தார்க்குத் தலைவரும்
திருவின்–(விஷ்ணு பக்தியாகிற) செல்வத்தினால்
பொலி–விளங்கா நின்றுள்ளவரும்
மறை வாணன்–வேதத்துக்கு நிர்வாஹகருமான
பட்டர் பிரான்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
மாலை பத்தும்–சொல் மாலையாகிற இப் பத்துப் பாட்டையும்
பரவும் மனம் உடை–அநுஸத்திக்கைக் கீடான மநஸ்ஸை யுடையவரும்
பக்தர் உள்ளார்–பக்தியை யுடையவருமா யிருப்பவர்கள்
பரமன்–பரம புருஷனுடைய
அடி–திருவடிகளை
சேர்வர்கள்–கிட்டப் பெறுவார்கள்–

கரிய முகல் புரை மேனி மாயனை
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே
ஸ்ரமஹரமான திருமேனியை யுடைய ஆச்சர்ய சக்தி யுக்தனை

கண்ட சுவடு உரைத்து 
சிக்கென நாடுவார்க்குக்
கண்ட அடையாளங்களை யுரைத்து
கண்டார் உளர் என்று கண்டவர்களைக் காட்டி
(பிடித்தார் பிடித்தாரைப் பிடித்து இருந்து பெரிய வானில் திகழ்வார்கள் )

அவன் தன்னைக் காண்கையிலும்
அவனைக் கண்டவர்களைக் காண்கை தானே உத்தேச்யம் என்று

புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை 
செந்நெலானவை மிகவும் வளர்ந்து கதிர்ச் செறிவாலே
குதிரை முகம் செய்து விளைகிற வயலையுடைய

திருவில் பொலி மறை வாணன் பட்டர் பிரான்
திரு மாளிகைக்கு நிர்வாஹகராய்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யிலே மிகுந்த மறையே வாழ்வாக யுடையராய்
ப்ராஹ்மண உத்தமருக்கும் வேதப் பயன் கொண்டு உபகாரகரான ஆழ்வார்

(திருவில் விசேஷணம் மறைக்கு இங்கு இவள் –
ஆழ்வாருக்கு அங்கு மா முனிகள் )

சொன்ன மாலை பத்தும்  பரவு மனம் உடை பத்தர் உள்ளார்
அருளிச் செய்த இம் மாலை பத்தும்
இவர் அபிமானத்திலே ஒதுங்குகை தானே புருஷார்த்தமாக
ஸ்தோத்ரம் செய்யும் நல்ல மனஸ்ஸோடு
ஸ்நேஹிகளாய் உள்ளவர்கள்

பரமன் அடி சேர்வார்களே
சர்வ ஸ்மாத் பரனானவனுடைய  திருவடிகளிலே சேரப் பெறுவர்
இங்கே இருந்து நாடுதிரேல் –கண்டார் உளர் -என்ன வேண்டாத தேசத்திலே போய்ச் சேரப் பெறுவர்

அன்றிக்கே
தேடின இந்த தேசம் தன்னிலே
விடாய்த்த இடத்திலே சில பரம தார்மிகராலே தண்ணீர் பெற்றால் போலே
கண்டார் காட்டக் காணப் பெறுவர் என்னவுமாம்

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.