ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
அவதாரிகை –-பக்தி பாரவச்யத்தாலே யாதல் –அயோக்யா அனுசந்தானத்திலே யாதல் –ஏதேனும் ஒரு படி-கண் அழிவு சொல்லிக் கை வாங்காதே –தன் பக்கலிலே பிராவண்ய அதிசயத்தை உடையேனாய் –
இதர விஷயங்களிலே அருசியையும் உடையேனாய் –பண்ணின மகோ உபகாரத்தை அனுசந்தித்து –
அவன் திருவடிகளிலே விழுகிறேன் என்கிறார் –இவ்விடத்தில் ஜீயர் குறியாக அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு –திருக் கோட்டியூரிலே பட்டர் எழுந்து அருளி இருக்கச் செய்தே –அங்கே ராமானுஜ தாசர் என்கிற ஸ்ரீ வைஷ்ணவர் –அடியேனுக்கு திரு விருத்தம் அருளிச் செய்ய வேணும் என்ன பெருமாளைப் பிரிந்த சோகத்தாலே நான்-ஒன்றுக்கும் ஷமண் அல்ல –ஜீயரே நீரே அருளிச் செய்யும் என்ன –ஜீயரும் அருளிச் செய்து கொடு போக்கு நிற்கச்-செய்தே –வளவன் பல்லவதரையர் -என்று திருக் கோட்டியூர் நம்பி-ஸ்ரீ பாதத்தை உடையார் ஒருவர் அனுசந்தித்து கொடு போந்தராய் – அவர் இப்பாட்டு-அளவிலே வந்தவாறே -கண்ணும் கண்ணநீருமாய் -புளகித காத்ரராய் -இருக்க –
இத்தைக் கண்டு — பாட்டுகளில் வார்த்தை சொல்லுவது -இனி பிரசங்கித்த மாத்ரத்திலே வித்தர் ஆனீரே என்ன –நம்பி எனக்கு ஹிதம் அருளிச் செய்த அனந்தரத்திலே- எம்பெருமான்-திரு முன்பே இப் பாட்டை நாள் தோறும் விண்ணப்பம் செய் -என்று அருளிச் செய்தார் – அத்தை-இப்போது ஸ்மரித்தேன் என்ன –அவர் இதிலே ஏதேனும் அருளிச் செய்யும் வார்த்தைகளை நினைத்து-இருப்பது உண்டோ -என்ன –அது எனக்கு போகாது –இப் பாசுர மாத்ரத்தை நினைத்து இருப்பேன் -என்றாராம் –
நம்பி ஆதரித்த பாட்டாகாதே என்று ஐந்தாறு நாழிகை போது இத்தையே கொண்டாடி அருளிச் செய்தார்
ஊரா மிலைக்கக் குருட்டா மிலைக்கும் என்று கண்டவர்கள் சொன்ன பாசுரத்தைச் சொன்னேன் இத்தனை என்கிறீர்-கதாநுகதிகை யன்றி உமக்குத் தஞ்சமாக பகவத் விஷயத்தில் நீர் செய்த அம்சம் ஏது என்ன–அநாதியான சரீர ஸம்பந்தத்தாலே விஸ்லேஷித்துப் போகாத படி என்னை அங்கீ கரித்து அருள வேணும் என்று நிருபாதிக பந்துவான ஸ்ரீ யபதியை ஆஸ்ரயித்து இருப்பன் என்று தம்முடைய பிரபத்தி நிஷ்டையை அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–அவதாரிகை–முமுஷுக்களான சிலர் சம்சரண நிவர்த்தகன் படியையும்எந்தக் கிரமத்தால் நாம் எத்தைச் செய்ய அவன் தன் நிவர்த்தகனாமது அத்தையும்
நமக்கு அவனோடு உண்டான சம்பந்தத்தையும் அருளிச் செய்யீர் என்ன தாம் தத்வித ஜனதாதா பத்ம்யதா பன்னராய் நான் செய்யுமது இதுவே என்று நம்மையும் இதில் அந்வயிப்பிக்க ஸித்த ஸாத்ய உபாயங்களை க்ரமத்தால் அருளிச் செய்கிறார் இதில் –
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95 ––தலைவி அறத்தோடு நிற்கத் துணிதல் –
உயிர்–உயிரானது
முன்னமே–நெடுநாளாகவே
மூது ஆவியில்–பழமையான (பலவகைப்) பிறப்புகளுள்-ஸூஷ்ம சரீரம்
யாது ஆனும் ஓர் ஆக்கையில்–யாதாயினும் ஒரு சரீரத்தில்
புக்கு–பிரவேசித்து
அங்கு அவ்வுடம்பில்–ஆப்புண்டும்-பிராரப்த கர்மத்தால் அதிலே உழன்று -பந்தத்தில் –
கட்டுப்பட்டு நின்றும்–ஆப்பு அவிழ்ந்தும்
(அங்கு நின்று) தொடர்ச்சி நீங்கியும் தடுமாறும்–நிலைமாறி அலையும் தன்மையுடையது ;
அதனால்–ஆதலால்-வாசனையால் -பதிவினால் –
யாது ஆனும் பற்றி–எந்த விதத்தினாலாவது
நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்–(எம்பெருமானை விட்டு) விலகும்படியான கோட்பாட்டை நன்றாக விடுவிக்கக் கடவனான–கைவல்யமும் வீடே -நல் வீடு இல்லையே -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் வேண்டுமே
மாதாவினை–தாய் போன்றவனும்-ப்ரியபரனுமாய் –
பிதுவை–தந்தை போன்றவனுமான-ஹித பரனுமாய் –
திருமாலை–ஸ்ரீமந்நாராயணனை
வணங்குவேன்–கரணமடைந்திருப்பேன்.
திருமால் தன்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு
அரு மாயத்து அன்று அகல்விப்பான் என் -பெருமால் நீ
இன்று என்பால் செய்வான் என் என்ன இடருற்று நின்றான்
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து —98-முதலிலே அத்வேஷத்தைப் பிறப்பித்து-ஆபிமுக்யத்தை யுண்டாக்கி-ஆஸ்ரயண ருசியை விளைத்து தானே யுபாயமாய்-தன் திருவடிகளிலே பிரேமத்தையும்-பரம பக்தி பர்யந்தமாக முற்றுவித்து தன்னால் அல்லாது செல்லாதபடி பண்ணி நாம் சொன்னபடியே செய்வானாக சமைந்து நம்மை இவன் இப்படி தலையாலே-சுமவா நின்றதுக்கு அடி ஏது என்று அவனைக் கேட்க – அவன் நிருத்தரனாய்-கவிழ் தலை இட்டு நிற்க-இது நிர்ஹேதுகமாகாதே -என்று ப்ரீதராய்-தம்மை அவன் அங்கீ கரித்த படியையும் அங்கீகார ஹேதுவானவன் கிருபாதி குணங்களையும்-அனுசந்தித்துது ஒரு நிர்ஹேதுக விஷயீகாரம் இருந்தபடியே-என்று வித்தராகிற திரு மால் இரும் சோலை மலை யில் அர்த்தத்தை திருமால் தம்பால் -இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் -இது நிர்ஹேதுகமாகாதே -என்று அவன் விஷயீ காரத்திலே விக்ருதராய் அத்தாலே வந்த சம்ருத்தமான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வாரை – அந்த யசஸ் ஸோபாதியாகத் தானும் சூழ்ந்து -இடருற்று நின்றான்-ஸ்ரீ சர்வஞ்ஞனும் நிருத்தனாய் நிற்பதே -என்று இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது –
யாதேனும் ஓர் ஆக்கையில் புக்கு –ஏதேனும் ஒரு சரீரத்தில் பிரவேசித்து –அது தண்ணிய ஸூ கர-ஜன்மாவில் (ஸூ கர -பன்றியாய் )ஜனித்தாலும் –மம அயம் தேக -என்று அதிலேயே அபிமானித்து –
அங்கே-உண்டானவத்றோடு சில சம்பந்த விசேஷங்களும் –அவை தன்னை விட மாட்டாமையாலேயாய்-போரா நிற்கும் ஆயிற்று –ஆக்கை -என்கையாலே-உபசயாத்மகம் என்று தோற்றுகிறது-(தேகம் வளர்ந்து -சரீரம் தேய்ந்து )புக்கு –சேதனனுக்கு அசித் சம்சர்க்கம் ஸ்வதா உள்ளது ஓன்று அன்று –-கர்ம நிபந்தனம் என்கை –அங்கு ஆப்புண்டும் –-கர்ம வாசனையாய்- ருசி வாசனையாய் -அதிலே பத்தனாய் இருக்கும் –இது தண்ணிது என்று ஆசார்ய உபதேசாதிகளாலும் –சாஸ்திர வாசனையாலும் – பிரத்யஷத்தாலும்-அறியா நிற்கச் செய்தே –இத்தை விடில் செய்வது என் என்று துணுக் துணுக் என்னா நிற்கும் –ஆப்புண்டும் –சிநேகத்தைப் பண்ணியும் –ஆப்பு அவிழ்ந்தும் –கர்மம் அடியாக வந்தது என்று அறியாதே –அவன் தான் இதிலே இலை அகலப் படுத்தா-நிற்கும் –கர்ம ஷயம் வந்தவாறே=அது தான் குலைந்து கொடு நிற்கும் இறே –மூதாவியில் –இத்தால் பழைமையை நினைக்கிறது-ஆவி -என்று பிராணனாய் –அசித் விசேஷமாய் பிராணனாய் இருக்கையாலே-இப்போது ஸூஷ்ம சரீரத்தை ஆவி என்கிறது –இது தன்னை பிரகிருதி கார்யம் என்பாரும் உண்டு –பிரகிருதி அம்சம் என்பாரும் உண்டு –இது தான் மோஷ தசை அளவும் அனுவர்த்திக்குமது —சேதனனுடைய கமந ஆகமநாதிகளுக்கும் உடலாய் இருக்கும் –தடுமாறும் –பஞ்சாக்னி வித்தையில் சொல்லுகிறபடியே மேகங்களில் புக்கு –
வர்ஷ முகத்தாலே-பூமியிலே பதித்து –அந்த முகத்தாலே புருஷன் பக்கலிலே அந்வயித்து –சுக்ல சோணித ரூபத்தாலே -ஸ்த்ரி பக்கலிலே-சங்க்ரமித்து – இப்படி தடுமாற்றமாய் இருப்பது –இச் சேதனனுக்கு புக்க புக்க இடம் எங்கும் தடு மாற்றமே உள்ளது –அத்தை தான் அறிந்த இடமும் அறியாத இடமுமாய் இருக்கும் –உயிர் –ஜ்ஞான ஆனந்த லஷணமாய்- நித்தியமான வஸ்து கிடீர் இப்படி படுகிறது –இப்படி தடுமாறி சம்ஸரிக்கிறது என்று தொடங்கி என்றால் –முன்னமே –அநாதியாய் போருகிறது ஆயிற்று –அதனால் –அந்த வாசனையே உபாத்யாயராக –முன்னமே யாகையாலே –யாதானும் பற்றி –பகவத் வ்யதிரிக்த விஷயம் ஆகையே வேண்டுவது –பற்றுவது ஏதேனும் ஒன்றாக-அமையும் –அவற்றில் குண தோஷங்கள் நிரூபிக்க வேண்டா –நீங்கும்-பகவத் விஷயம் இத்தனையே வேண்டுவது விடுகைக்கு விரதத்தை –நீ பற்றுகிற விஷயங்கள் அடைய ஸ தோஷமாய் இருக்கும் –
பகவத் விஷயமே கிடாய் நல்லது -என்று சிலர் உபதேசித்தாலும் –அது நன்றே ஆகிலும் –நான் அத்தை விடுகையிலே-சங்கல்பித்தேன் என்னும் –சர்வேஸ்வரன்-ஏதத் வ்ரதம் மம -என்று ரஷிக்கைக்கு வ்ரதம் கொண்டு இருக்குமா போலே யாயிற்று-இவன் அவனை விடுகைக்கு வ்ரதம் கொண்டு இருக்கும் படி –த்விதா பஜ்யேய மப்யேவம் ந ந மேயம் -என்கிறபடியே இரண்டாகப் பிளக்கிலும் தலை சாயேன்-என்று ஆயிற்று இருப்பது –நல் வீடு செய்யும் –இப்போது அந்நிலை தவிர்ந்து —இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று கால் கட்டி இத்தை விடுவித்து தர வேணும் -என்னப் பண்ணின — மம மாயா துரத்யயா மாமேவ யே ப்ரபத்யந்தே -என்கிறபடியே – நீ பிணைத்த பிணையை நீயே அவிழ்க்க வேணும் என்று அபேஷிக்க பண்ணின – தன் பக்கல் ருசி-முன்னாக இத்தை விடுவிக்க வேணும் என்னப் பண்ணின–மாதாவினைப் பிதுவை –சரீரத்துக்கு உத் பாதகராய் –சம்சார வர்த்தகராய் இறே யல்லாத மாதா பிதாக்கள் இருப்பது – இவன் அதில் நின்றும் விடுவித்து ரஷிக்குமவன் ஆயிற்று –இங்கன் இரண்டு ஆகாரமாய் சொல்ல வேண்டுவான் என் என்னில் –திருமாலை –ஸ்ரீ ய பதி யாகையாலே – பிதா மாதா ச மாதவ –என்னுமா போலே –வணங்குவனே –இதர விஷயங்களில் அருசியைப் பிறப்பித்து –தன் பக்கலில் பிராவண்யத்தைப் பிறப்பித்த -இவ் உபகாரத்துக்கு சத்ருசமாய் இருப்பதொரு பிரத்யு உபகாரம் நம்மால் பண்ண ஒண்ணாது இறே – அவனதான வஸ்துவை அவன் பக்கலில் சமர்ப்பிக்கும் அத்தனை இறே –அதுவும் அவனது இன்னருள்-இசைவித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்-(அவனதான வஸ்துவை -அவனது தான் என்று இசைவதே ஆத்ம சமர்ப்பணம்)
சகலவித பந்து -ஆப்த பந்து – -ஸ்ரீ யபதி-சரண் அடைந்து -பிரபத்தி அனுஷ்டானம் -உறுதி நிலையை வெளியிட்டு அருளுகிறார் –யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு-இயற்கை இல்லையே -கர்மா பயனாகவே என்பதால் புக்கு-அங்கு ஆப்புண்டும்-அங்கு அஹங்கார மமகாரங்கள் -அபிமானங்களை விடாமல் இருந்து –-மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே-ஆத்மாவுக்கு சம்சார சம்பந்தமும் அநாதி -எம்பெருமான் சம்பந்தமும் அநாதி -என்பது நூல் கொள்கை-இருந்தாலும் ஆழ்வார்கள் அசித் சம்பந்தம் விட நாராயண சம்பந்தமே பழையது என்பர் -முன்னமே-என்கிறார்-திருவாய்மொழியிலும்-சோர்ந்தே புகல் கொடாச் சுடரை யரக்கியை மூக்கரித்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே –என்பார்
ஏதன் நிமித்தம் முன்னமே முதல் முன்னமே யான அசித் அயன அநாதி சம்பந்தங்கள் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூ க்திகள் –ஒன்றன்பின் ஒன்றாக அநாதியாய் வருகிற சரீர ஸம்பந்தங்கள் காரணமாக- கழித்திடாமல் என்னை அங்கீகரித்தருள வேணுமென்று அடியேன் ஸகலவித பந்துவும் ஆபத்பந்துவுமான எம்பெருமானைச் சரணமடைந்திருப்பேனென்று தமது ப்ரபந்திமார்க்கா நுஷ்டாக வுறுதிநிலையை ஆழ்வார் இப்பாட்டால் வெளியிடுகிறார்.–ஆத்மாவானது அநாதிகாலமாகவே ஊழ்வினைக்கு ஏற்ப யாதாயினும் ஒரு டம்பினுட்புகுந்து அதில் விளைவிலங்காற் கட்டுப்பட்டிருக்கும்
அவ்வுடம்பின் தொடர்ச்சி நீங்கியும் ஸூக்ஷ்ம சரீரத்தில் நின்று ஸ்வர்க்க நாதங்களிற்புக்கு மீண்டு தடுமாற நிற்கும்;-இப்படி ஆத்மாவுக்கு சரீரத்தில் நின்று ஸ்வர்க்க நாங்களிற்புக்கு மீண்டு தடுமாற நிற்கும்; இப்படி ஆத்மாவுக்குச் சரீர ஸம்பந்தம் அநாதியாயிருத்தலால் ப்ராசீக கர்மவாஸநா வசத்தான் ஏதேனுமொரு பொருளினிடத்துப் பற்றச் செய்து எம்பெருமானை விட்டு விலகும்படியான கோட்பாட்டை முற்றும் வேரோடு அற நன்றாக விடுவித்துத் தன்னையே பற்றியிருக்குமாறு செய்விக்கவல்லவனாய், ப்ரியங்களை நடத்துவதில் தாய்போன்றவனாய், ஹிதங்களை நடத்துவதில் தந்தை போன்றவனாய்த்
திருமகள் கணவனான ஸ்ரீமந்நாராயணனைச் சரணமடைந்திருப்பேனென்கிறார். அநாதியாய் வருகிற ஸம்ஸாரத்திலே பற்றில்லையாம்படி சரணமடைந்தாருடைய வினைகளைப் போக்குவிக்கவல்ல எம்பிரானை யான் வணங்குவேனென்றாராயிற்று.–ஆத்மாவுக்கு தேஹஸம்பந்தமானது கரும வசத்தினாலாகிய செயற்கையேயன்றி இயற்கையன்று என்பது தோன்ற‘யாதானு மோராக்கையில் புக்கு” எனப்பட்டது. அங்கு ஆப்புண்ணுத லாவது- ஒவ்வொரு பிறப்பிலும் அஹங்கார மமகாரங்களாகிய அபிமானங்களை விடாமலிருப்பதாம். (மூதாவியில் தடுமாறுமுயிர் முன்னமே) ஆத்மாவுக்கு ஸம்ஸார ஸம்பந்தமும் அநாதி, -எம்பெருமானோடு உண்டான ஸம்பந்தமும் அகாதி என்பது ஓர் கொள்கை, இருந்தாலும் ஆத்மாவுக்கு அசிம்ஸம்பந்தத்தைவிட நாராயண ஸம்பந்தமே மிகப் பழையதென்னுமிடம் ஆழ்வாருளிச் செய்த ஆழ்வார்தாமே திருவாய்மொழியில்
‘சோர்ந்தே புகல்கொடாச் சுடரை யரக்கியை மூக்கீர்ந்தாயை, அடியேனடைந்தேன் முதல் முன்னமே’ என்றருளிச் செய்கிறார்; அசித் ஸம்பந்தத்தின் அநாதித்வத்தைத் தெரிவிக்கிற அப்பாசுரத்தில் ‘முதல் முன்னமே’ என்றதையும் குறிக்கொள்க.‘எதந்நிமித்தம் முன்னமே முதலமுன்னமேயான அசிதயநாநாதி ஸம்பந்தங்கள்” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸூக்தியும் ஸ்மரிப்பது.–‘யாக்கை’ ‘யாப்பு’ என்றுஞ் சொற்கள் ‘ஆக்கை’ ‘ஆப்பு’ என மருவி வந்துள்ளன. யாக்கையென்பதற்கு-(உயிரைக்) கட்டுப்படுத்துவதென்று காரணப்பொருள். முதுமை+ ஆவி,மூதாவி, ஆவியென்பது தாளியாகு பெயராய் உடம்பையுணர்த்திற்று.
உயிர் ஒரு ஸ்தூல சரீரத்தை விட்டு மற்றொரு ஸ்தூல சரீரத்திற் சாரும் பொழுதும் ஸ்வர்க்க நகரங்களுக்குச் செல்லும் பொழுதும் ஸூக்ஷ்ம சரீரம் முக்தி நிலையிலே உயிரை விட்டகலும். ஆத்மாவின் ஸ்தானத்தில் அரிசியையும், ஸ்தூல சரீரத்தின் ஸ்தானத்தில் உமியையும் ஸூக்ஷ்ம சரீரத்தின் ஸ்தானத்தில் தவிட்டையும் கொள்க.-அரிசியை விட்டு உமி நீங்குவது இரண்டு உலக்கைளினால் குத்துப்பட்டாதலால். அதுபோல ஜ்ஞாநாநுஷ்டநகங்களால் ஸ்தூல சரீரம் நீங்கும்;
தவிடு நீங்குவது தண்ணீரில் கழுவப்பட்டாதலால், அதுபோல விரஜாநதீஸ்நாநத்தால் ஸூக்ஷமவொட்டு நீங்குமென்று விவேதித்துக்ª காண்க.
இப்பாட்டுக்கும் கிளவித்துறை வகையில் பொருள் சொல்ல வேண்டில், தலைவி அறத்தொடு நிற்கத் துணிதல் இது. திருமாலாகிய தலைமகனைக் களவொழுக்கத்தாற் புணர்ந்து பிரிந்து வருந்துகிற (பராங்குச நாயகியாகிய) தலைமகள்‘இனி என்னுயிர் தரித்து நில்லாதாதலால் யான் விரைவில் இறந்து படுவேன்; அங்ஙனம் இறந்தொழிந்தேனாயினும் மறுபிறப்பில் இத் தலைவனையே கூடத் தோற்றத்து எழுவகைப் பிறப்பேன் என்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்கள்
உள்ளனவாதலால் அவற்றில் யான் மானிடமகளாகவே மீண்டும் பிறக்கிறேனென்பது என்ன நிச்சயம்?
ஆதலின் இப்பிறப்பிலேயே இத்தலைவனைப் பிரியாது கூடுமாறு என்னுயிர் இவ்வுடம்பை விட்டு நீங்கு முன்னமே யான் விரைந்து முயல்வேனாவேன்;-அதாவது நான் நாணத்தை விட்டு உடனே என் கருத்தைத் தோழிக்கு வெளிப்படையாகச் சொல்லி அவள் மூலமாக நற்றாய்க்கும்
அவள் மூலமாக தந்தைக்கும் அதனை வெளிப்படுதுதி அவர்கள் எவ்வாறாயினும் இவனையே எனக்கு விவாஹஞ் செய்து வைக்கும்படி செய்து கொள்ளுவேன்: அன்றியும் தோழிமூலமாகத் தலைமகனுக்கு எனது வருத்த மிகுதியைக் கூறி அவன் விரைவில் என்னை வரைந்து கொள்ளுமாறுஞ் செய்வேன் என்று பலவாறு ஆராய்ந்து தோழிக்குத் தன் அறத்தொடு நிற்கத் துணிந்தது இது எனக்கொள்க.–உயிரானது பழமையான பலவகைப் பிறப்புகளுள் யாதாயினும் ஒரு சரீரத்தில் பிரவேகித்து அவ்வுடம்பில் கட்டுப்பட்டு நின்றும் அங்கு நின்ற தொடர்ச்சி நீங்கியும் நிலைமாறி அலையுந்தன்மையுடையது; ஆதலால் எனது உயிர் இவ்வுடலை விட்டு நீங்குதற்கு முன்பகாவே எந்த விதத்தினாலாவது தலைமகன் னஎனைப் பிரிதலாகயி தவறா வொழுக்கத்தை நன்கு விடுவித்தற்கு
(நாயகனை என்னோடு கூட்டுதற்கு) ஏற்ற தாயையும் தந்தையையும் திருமாலாகிய எனது அத் தலைவனையும் வணங்கி வேண்டிக் கொள்வேன் என்று பதப்பொருள் காண்க.–நீங்கும் விரதத்தை நல்வீடு செய்தலாவது- பிரிவு இல்லாமல் வெளிப்படையாகக் கூடியிருக்கும்படி மணஞ்செய்வித்தல்
களவு வழியான புணர்ச்சியில் இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், இடர்தலைப்பாடு, பங்கியிற் கூட்டம், பகற்குறி, இரவுக்குறி, ஒருவழித்தணத்தல்,வரைபொருட் பிரிதல் என்ற ஒவ்வொரு வகையிலும் தவறாமற் பிரிவு நேர்தலால் அதனை ‘விரதம்’ என்னும் வடசொல் விரதமென்று கிடக்கிறது தவறாமல் ஏற்றுக்கொண்டு ஒழுகும் ஒழுக்கம் விரதமெனப்படும்.–“யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடு செய்யும்’ என்றதில் ‘யாதானும் பற்றி’ என்பது ‘வீடு செய்யும்’ என்பதில் அந்வயிக்கும்; ஏதாவதொரு காரணத்தைக் கொண்டு என்னை நாயகனோடு மணம்புரிக்கவல்ல மாதாவினைப்பிதுவை என்றவாறு.
ஒருவனைத் தம் மகளுக்கு மணஞ்செய்விப்பதற்கு அவனது கல்வி, செல்வம், குலம், ஒழுக்கம், அன்பு, வேண்டுகோள், ஆபரணங்கொடுத்தல் முதலாகப் பல காரணங்களுக்குள்ளனவாதலால் அவற்றுள் பொருத்தமான ஏதேனுமொரு காரணத்தைக் கொண்டு விவாஹஞ் செய்து வைக்க வேண்டுமென விரும்பியவாறு.-இனி ‘யாதாலும் பற்றி’ என்பதை ‘நீங்கும்’ என்பதிலும் அந்வயிக்கலாம். தலைவன் தலைவியை விட்டு நீங்குவதற்குப் பல காரணங்களுண்டு; பிறர் அறிந்துவிடுவார்களே யென்கிற பயம், ஊரவர் பழி தூற்றல், விவாஹத்துக்கு வேண்டிய பொருளீட்டி வருதல் முதலிய விசேஷ காரணங்கள் பலவற்றுள் ஏதேனுமொரு காரணம்பற்றி நீங்குகிற என்றவாறு.
யாதானும்-முன்பு பரிக்ரஹித்த சரீரத்துக்கு ஜாதி நியமம் இல்லை-ஆஸ்ரய நியமம் இல்லை
கர்ம அனுரூபமாக உப பன்னமானது -என்கை-ஓர் ஆக்கையில்-பந்தகமாம் இடத்தில் கர்மத்துக்கும் தான் வேண்டும்படி அத்விதீயமாய் இருக்கை–ஆக்கை என்று சரீரத்தைச் சொல்லுகையாலே பந்தகத்வமே ஸ்வரூபமாய் இருக்கும் என்கை--புக்கு-சரீர பிரவேசம் சேதனனுக்கு வந்தேறி என்கிறது-அங்கு ஆப்புண்டும்-அந்த சரீரத்திலே அஹம் அபிமாநாதிகளைப் பண்ணி-போக ஆயதநத் வாதிகளாலே ஸக்தனாயும்–ஆப்பு அவிழ்ந்தும்-இஸ் சங்கம் நடவா நிற்கச் செய்தே பந்தக கர்ம விச்சேதத்தாலே சரீர விஸ்லேஷம் பிறந்தும் –மூதாவியில் தடுமாறும்–இவனை விடாதே பழையதாய்ப் போருகையாலே முதிர்ந்து இருப்பதாய்-ப்ராணஸ் தேஜஸி -சாந்தோக்யம் என்று ப்ராண ஆஸ்ரயம் ஆகையாலே ஆவி என்று சொல்லப்படுவதான ஸூஷ்ம சரீரத்தில் நின்று ஸ்வர்க்க நரகங்களிலே யாத ஆயாதம் பண்ணித் தடுமாறா நிற்கும்—உயிர்-ஜீவனானது-முன்னமே –-இப் பிரக்ருதி ஸம்பந்தம் –அநாதி மாயயா ஸூப்த -மாண்டூக்ய காரிகா -என்கிறபடியே அநாதியாய் இருக்கும்-அதனால்-இப்படி இஸ் ஸம்ஸாரி சேதனனுக்கு சரீர ஸம்பந்தம் அநாதி ஆகையாலே–யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களிலே ஏதேனும் ஒன்றை அவலம்பித்து பகவத் விஷயத்தை விஸ்லேஷித்தே போரும்படியான இஸ் ஸம்ஸாரி சேதனனுடைய ஸங்கல்பத்தை-நல் வீடு செய்யும்-நன்றாக புந ப்ரரோஹம் பிறவாதபடி விடுவிக்கக் கடவனான–மாதாவினைப் பிதுவை-பிரிய பரனுமாய் ஹித பரனுமாய் உள்ளவனை–வத்சலனுமாய் ஸ்வாமியுமாய் யுள்ளவனை என்றுமாம்–திரு மாலை
அந்த வாத்சல்ய ஸ்வாமித்வங்களுக்கு ப்ரகாசகமான ஸ்ரீ யபதித்வத்தை யுடையவை-வாத்ஸாலும்மும் பந்தமும் தோற்றுவது புருஷகார பூதையான ஸ்ரீ லஷ்மீ ஸம்பந்தத்தாலே இறே-பிதா மாதா ச மாதவ -பாரதம் ஆரண்ய -189–மாத்ருத்வ பித்ருத்வங்கள் விஸிஷ்ட விஷயம் என்றுமாம்-அதாவது-ஸ்புரத்தா ஹேதுவான விசேஷண ப்ரதாந் யத்தாலே மாத்ருத்வமும்-சத்தா ஹேதுவான விசேஷ்ய ப்ரதாந் யத்தாலே பித்ருத்வமும் என்றபடி–வணங்குவனே –-ஏவம் பூத விஷயத்தை ஆஸ்ரயித்து இருப்பன் என்று தம்முடைய ஸ்வ பாவ கதநம் பண்ணுகிறார்–கால ஷேப அர்த்தமாகவும் பிரபதனம் ஒழிய ப்ரவ்ருத்தி இல்லை என்று அருளிச் செய்தார் ஆகவுமாம் –(வர்த்தமான பிரயோகம் வணங்கிக் கொண்டே இருக்க வேண்டுமே)
ஜீவ வர்க்கமானது அநாதியான ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலே யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு-அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும் மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே – ஆப்பு அவிழ்தவன் ஸ்வதித அஹங்கார மமகார னானவன்–அதுக்கும் மேலே மூதாவியில் உயிர் அநாதியாய்ப் பழையதாக ஓட்டின் ப்ராணாதி வாயு ஸம் சக்த ஸூஷ்ம சரீரத்தால் இந்த லியோக -லோகாந்தர -சஞ்சரண துக்க ஸூக அனுபவங்களால் அலைச்சல் படும் ஜீவ வர்க்கமானது எல்லாம்–முன்னமே-யாவதாத்ம உபக்ரமாயே-அதனால்-ஏவம்பூத சக்ர ப்ரவ்ருத்தி மூல காரணமான அநாதி ப்ரக்ருதி சம்பந்தத்தால்–யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்-அப்ராப்த விஷயங்களையும் கர்மங்களையும் அவலம்பித்து
ப்ராப்த விஷய கர்மங்களை விட்டுத் திரியும் விரதம்-நியம பூர்வ ப்ரவ்ருத்தியை விவேக நிர்வேத விரக்தி பீதிகள் உள்ளவரில்–நல் வீடு-நிச்சேஷமாக நிவர்த்திப்பிக்க வல்லளான–மாதாவினைப்
வேரி மாறாத பூ மேல் இருக்கிற-4-5-11-ஜகன் மாதாவை–வணங்குவனே –பகவத் வசீகரணத்துக்கு முன்பு புருஷகார வசீகரணத்தைச் செய்வேன்–தத் அநந்தரமே–பிதுவை திரு மாலை வணங்குவனே –
ஜகத் காரண பூதனான ஜகத் பிதாவை ஆத்ம வித்யா நிவர்த்தகையான தெருவில் மால் செய்யுமவனை
ஆத்ம ராஷா பர ஸமர்ப்பணத்தால் வசீகரிப்பேன் என்று முமுஷு ஜனங்களால் வசீகரிக்க வேண்டிய க்ரமத்தை தத்தாதாத்ம்யா புத்தியால் தாம் அனுஷ்டித்ததாக அருளிச் செய்தார் ஆயிற்று–இத்தால்
திருமாலே ஸித்த உபாயம் என்றும்-தத் வசீகரணமே ஸாத்ய உபாயம் என்றேனும் அருளிச் செய்து
தத் அனுஷ்டான கிரமத்தை அருளிச் செய்தார் –
தாத்பர்யம்–அயோக்யா அனுசந்தானத்தால் அகலப்பார்த்த இடத்திலும் கைவிடாமல் உலக விஷய வைராக்யம் விளைவித்து தனது பக்கம் பிராவண்யம் விளைவித்த பகவானுக்கு -ஸ்ரீயப்பதிக்கு
என்னால் செய்வது ஒன்றுமே இல்லை-ஆகையால் அவன் திருவடிகளில் வணங்குகிறேன்
ஜீவர்கள் தேவ மனுஷ்ய ஸூ கர-போன்ற ஏதாவது ஒரு ஜென்மம் எடுத்து அந்த ஜாதியில் அத்யந்த ப்ரீதி செய்து அழுந்திக் கிடந்தது பிராரப்த கர்மம் அழிந்த பின்பு ஸூஷ்ம சரீரம் எடுத்து மீண்டும் கர்மாதீனமாக ஒரு பிறவி எடுத்து தடுமாறி பிறவிச் சூழலில் உழன்று பகவத் விஷயம் நன்றியாக இருப்பது அறிந்தும் நான் பற்றின விஷயம் ச தோஷமாகிலும் அத்தை விடாமல் இருக்கும்
விரதத்தை மாற்றி உனது திருவடிகளில் பிராவண்யம் உண்டாக்கி ஜென்ம பிரவ்ருத்த -திருத்துழாய் அங்குரிக்கும் போதே பரிமளம் உண்டாய் இருப்பது போல் சஹஜ பக்தி உண்டாக்கி அருளின ஆப்த பந்துவான ஸ்ரீ யபதியை ஆஸ்ரயியா நின்றேன் என்று அருளிச் செய்கிறார் இதில்
10-8-திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன-ப்ரவேஸம்–
அருள் பெறுவார் -என்கிற திருவாய் மொழியிலே-தம்மைக் குறித்து சர்வேஸ்வரனுக்கு உண்டான பாரதந்த்ர்யத்தைப் பேசினார் –
அந்த பார தந்த்ர்யத்தை முடிய நடத்தினபடி சொன்னார் செஞ்சொல் கவிகாள் -என்ற திருவாய் மொழியிலே –
நீர் சொன்னபடி செய்யக் கடவோம் -என்று தலை துலுக்கினான் அன்றோ –
இவரைத் திரு மேனியோடு கொடு போவதாக தேங்கின தேக்கம் அன்றோ நடுவே உள்ள பாசுரங்கள் –
அது ஒழியக் கொடு போவதாக அற்ற அன்றே பதறத் தொடங்கினான்-
சிலரை ஆதி வாஹிக கர்த்தாக்களை வரவிட்டுக் கொடு போம்-
சிலரை பெரிய திருவடியை வரக் காட்டி கொடு போம் –
திருவடி திருத் தோளிலே வந்து தானே கொடு போகத் தக்கவர் அன்றோ -இவர்
மத் பக்தம் நயாமி பரமாம் கதிம்-என்னுடைய அடியவனை இறுதிக் காலத்திலேயே நானே நினைக்கிறேன் -கொண்டு போகிறேன் -என்கிறபடியே-
கள்வன் கொல் -பெரிய திருமொழி -8-7-1-என்ற திருவாய் மொழியில் பிராட்டியை ஆள் இட்டுக் கொண்டு போகும் அன்றே அன்றோ-
இவரையும் ஆள் இட்டுக் கொடு போவது-
நானிலம் வாய்க்கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்கா உது அம்பூந்
தேன் இளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே -திரு விருத்தம் -26-
மாலை நண்ணி சுருக்கமான பாசுரம் இது –
நானிலம் வாய்க்கொண்டு -நான்கு வித குறிஞ்சி முல்லை மதம் நெய்தல் -உண்ட பின்பு
நன்னீர் அறம் என்று கோது கொண்ட-வேனிலம் செல்வன் -ஆதித்யன் -சுவைத்து உமிழ் பாலை கடந்த பொன்னே
-நாயகியைக் கூப்பிட்டு -மீதி பாலை வானம் தாண்டி போக
தானே சோலை வானம் கூப்பிட்டு போக -சம்சாரம் பாலை வானம் தாண்டி
புணர்ந்து உடன் போக்கு துறை –
ஈஸ்வரன் வைஷ்ணவர் –
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்கா உது அம்பூந்-இது அது உது -தள்ளி இல்லை கிட்டவும் இல்லை திரு வெக்கா
கால் நிலம் தோய்ந்து -தேவர்கள் காலை வைத்து பற்ற
தேன் இளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே-எல்லா அவஸ்தைகளிலும் க்ஷேமம் –
இவ் உலக வாழ்க்கையாகிற பாலை நிலத்தைக் கழித்துப் போந்தோம்-
நச புன ஆவர்த்ததே -என்கிற தேசத்திலே புகுந்தோம்-என்று தானே சொல்லித் தேற்றிக் கொண்டே அன்றோ போவது –
முன்னம் ஏழ் புரவியார் இரவிகாய் வெயிலினால்
முத்தரும் பியகிலா முழு மதித் திரு முகத்து
அன்னமே இன்னமோர் காவதம் போது மேல்
அகலும் இப்பாலை அப்பால் அரைக் காவதம்
என்னை யான் உடையவன் துயில் அரா அமளியும்
இலகு பொற் கோயிலும் இந்துவின் பொய்கையும்
புன்னை வாய் நீழலும் புரிசையும் மதுகரப்
பூ விரித் துறையும் அக் காவிரித் துறையுமே -திருவரங்க கலம்பகம்-50-
ஆக
இப்படி தம்மை அவ்வருகே கொடு போகையிலே பதருகிறபடியை அருளிச் செய்தார்-
இவன் இப்படி நம் பக்கலிலே பதருகைக்கு அடி என் என்று பார்த்தார்-
தம்பக்கல் ஒன்றும் கண்டிலர் -என்றது –பலம் கண்டோம் சாதனம் கண்டிலம் –
முதலிலே தம்பக்கலிலே -அத்வேஷம் -வெருப்பின்மையும் பிறப்பித்து-
அது அடியாக -விசேஷ கடாக்ஷம் -விசேடமான திரு வருளைச் செய்து –
நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைம் தாமரைக் கண்ணன் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய்-வெருப்பின்மையும் பிறப்பித்து-
அமலங்களாக விழிக்கும்-விசேடமான திரு வருளைச் செய்து
மருவித் தொழும் மனமே தந்தாய்-தம்பக்கலிலே இச்சையும் பிறப்பித்து-
நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-தானே உபாயம் என்னும் புத்தியையும் பிறப்பித்து
விண்டே ஒழிந்தன வினையாயின வெல்லாம்-
நின் அலால் இலேன் காண்-தன்னால் அல்லது செல்லாமையைப் பிறப்பித்து-
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றேன்-தானே வந்து அவ்வருகு கொடு போவனாக விரைகிறபடியை
தம்பக்கலிலே இச்சையும் பிறப்பித்து-தானே உபாயம் என்னும் புத்தியையும் பிறப்பித்து-அசஹ்ய அபச்சாரத்திலே மிக்கராய்-
அசஹ்ய அபசாரம் ஆவது -நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயம் என்றால்-
அசஹமானனாய் இருக்கையும் ஆச்சார்ய அபச்சாரமும்-தத் பக்த அபச்சாரமும் -ஸ்ரீ வசன பூஷணம் -3-305-
இவர் தம்முடைய அபசாரங்கள் அனைத்தையும் பொறுத்து-ஐம்புல இன்பங்களில் ஆசை உடையவராய் போந்த தம்மை-
பல நீ காட்டிப் படுப்பாயோ -என்று தாமே சொல்லும்படி செய்து-
தன்னால் அல்லது செல்லாமையைப் பிறப்பித்து-தானே வந்து அவ்வருகு கொடு போவனாக விரைகிறபடியை நினைத்து –
இன்று இப்படி நம்மை விரும்புகிற இவன் -இன்று என்னைப் பொருளாக்கி –
பலகாலமாக நம்மை விட்டு ஆறி இருந்த படி எங்கனே-இன்று நம்மை விரும்புகைக்கு காரணம் என் -என்று பார்த்தார் –
தம் பக்கல் ஒரு காரணத்தையும் கண்டிலர்-
இப் பேறு – தாம் அடியாக வந்தது ஓன்று அல்லாமையாலே-தம் பக்கல் ஒரு வாசி கண்டிலர்-
முன்புத்தையில் காட்டிலும் இப்போது தமக்கு ஒரு ஏற்றம்-உண்டாக நினைத்து இருக்குமவர் அன்றே –
முன்பே தொடங்கி பல காலம் இவரைப்பெற வேண்டும் என்று இருக்கிறவன்-இப்போது இவர்க்கு ஒன்றனைச் செய்தானாக நினைத்து இரானே-
தாங்களும் அறியாதே சாஸ்திரமும் அறியாதே -ஈஸ்வரன் அறிந்த ஸூ ஹ்ருதம் –
ஊரைச் சொன்னாய் -மடி மாங்காய் இட்டு -தலையில் பொகட்டு ஒன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போவான் –
இனி -சர்வஞ்ஞன் ஆகிலும்-இதற்கு ஒரு போக்கு சொல்லுமாகில் அவனைக் கேட்போம் -என்று பார்த்து-
இன்று இப்படி இவனைத் தலையாலே தாங்கும் தேவரீர்-முன்பு பலகாலம் இதனைக் கை விட்டு இருப்பான் என்-
இப்போது இதனை விரும்புவான் என் -என்று கேட்டார்-
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே –உம் பக்கல் உண்டான வெறுப்பின்மை அடியாகச் செய்தோம் என்ன -மாட்டானே-
தான் அறிய அதுவும் தன்னாலே வந்தது ஆகையாலும்-
அது தான் பேற்றுக்கு ஈடான சாதனமாகப் போராமையாலும்-
இனி பாதுகாக்கின்றவனுக்கு பாது காக்கப் படும் பொருள்களை பல காலம் விட்டு இருந்த இதற்கு சொல்லலாவது ஓன்று இல்லையே
ஸ்வதந்த்ரம் அன்றோ இப்படி கெடுத்தது என்று -பிற்பாடன் ஆனதற்கு நாணம் உறுவதற்கு மேற்பட –
ஆகையால் சொல்லலாவது ஒரு மாற்றம் காணாமையாலே கவிழ்ந்து நின்று காலாலே தரையைக் கீறினான் –
ஊர்தல் உற்றேன் -ஒன்பதாவது பாசுரத்துக்கு இறைவன் பதில் இல்லை-
அடுத்து உற்றேன் உகந்து பணி செய்ய -தானே சமாதனம் அடைகிறார்-
ப்ராப்யாந்தகதம் இது வரை பண்ணியவை எல்லாம் –
அறம் கடந்தவர் செயல் இது என்று உலகு எலாம் ஆர்ப்ப
நிறம் கரிந்திட நிலம் விரல் கிளைத்திட நின்றான்
இறங்கு கண்ணினன் எல்லழீ முகத்தனன் தலையன்
வெறுங்கை நாற்றினன் விழுதுடை ஆய் அன்ன மெய்யன் – கம்பர் –
முதலிலே
உலகத்தை படைத்தல் முதலானவைகளைச் செய்து-தன் பக்கலில் இச்சையைப் பிறப்பிக்கைக்கு வழி இட்டு வைத்தான் –
அவ் வழியாலே இச்சையைப் பிறப்பித்தான் –
தன்னிடத்திலே உபாயத் தன்மையை எறட்டுக் கொண்டு-
பொய் நின்ற ஞானம் தொடங்கி-இவ்வளவாகத் தன் பக்கலிலே வர நிறுத்தினான் –
பர பக்தி தொடங்கி பரம பக்தி முடிய உள்ள நிலை விசேடங்களைப் பிறப்பித்தான் –
இதனை முன்பே செய்யா விட்டது என் -என்ன –இதற்கு சொல்லலாவது ஓன்று இல்லாமையாலே-
செயல் அற்றவனாய் நிற்கிறான் இத்தனை-என்று பார்த்து-
இப்படி-என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –
அவன்தம் பக்கல் செய்த அங்கீகாரத்தையும் –அதற்கு அடியான அவனுடைய கிருபை முதலான குணங்களையும் நினைந்து-
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றானை-
இது நிர் ஹேதுகமாக -ஒரு காரணம் இல்லாமலே-இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தாரே –
–அங்கீ கரிக்கும் அங்கீ காரம் இருக்கும் படியே -என்று
அதிலே ஆழம் கால் பட்டு -ஆச்சர்யத்தை உடையராய்-அமுதம் உண்டு களித்தேனே –உவகை மீதூர்ந்தவராக களிக்கிறார்-
அப்பால ரெங்கம் -கோயில் அடி -காவேரி தாயார் திருவடி வருட -கல்லணை அருகில்-
உபமன்யு துர்வாசர் சாபம்
ஸ்ரீ வைஷ்ணவ ததீயாராதனம் – நெய் சமர்ப்பித்த அப்பம் -அபி நிவேசத்துடன் குடத்தை கட்டிக் கொண்டு –
மேற்கு நோக்கி திரு கண் வளர்ந்து
ஸ்வாமித்வம் -அங்கீகரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெரு நகரிலே பேர் பெற்றது -சூர்ணிகை -186-
ஸ்வாமித்வம் -பெரு நகரிலே பேர் பெற்றது -திரு மங்கை ஆழ்வார் -பெரு நகர் -சப்தம்
பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெருநகர் அரவணை மேல் கருவரை வண்ணன் தென் பேர் கருதி நான் உய்ந்தவாறே -பெரிய திருமொழி 5-9-3-
-அங்கீ கரிக்க அவகாசம் -மோக்ஷம் கூட்டிப் போக -என்ற அர்த்தம் இல்லை -யாதிருச்சிகமாக -இசைவு பார்த்து -திருத்த சந்தர்ப்பம் பார்த்து மா முனிகள் –
-யுக்தி மாத்ரமாக -பாசுரம் அடி ஒற்றி -வியாஜ்யம் மாத்ரமாக -கொண்டு ஸ்வாமி தானே சொத்தை கொள்ள அவகாசம் பார்த்து இருக்க வேண்டும் –
மலைக் கட்டு பிரதேசம் -மாட விளக்கு -என்பதால் பேர் பெற்றது -ஹர்மீதளம்-
எட்டாம் திருவாய் மொழியில் -கீழே -தாம் அபேக்ஷித்தபடியிலே ஈஸ்வரன் கார்யம் செய்வதாக அறுதியிட்டு படியைக் கண்டு
இப்படி நம் பக்கல் வ்யாமோஹம் பண்ணுகைக்கும் –
நாம் அபேக்ஷித்த கார்யம் செய்யும்படி பரதந்த்ரன் ஆகைக்கும்-
நம் பக்கல் ஒரு ஹேதுவில்லை -நிர்ஹேதுகமாக நம்மை விஷயீ கரித்து
அருளினானாம் அத்தனை என்று அறுதியிட்டு -அதுக்கு அடியான அவனுடைய
யாதிருச்சிக அனுகூல்ய நிபந்தனமான பூர்ண அங்கீ காரத்தையும்
அங்கீகார ஸ்த்தைர்யத்தையும்
ஸூகமத்வ அதிசயத்தையும்
புருஷார்த்த பிரதத்வத்தையும்
பிராப்தி பிரதிபந்தக நிவர்த்தகத்வத்தையும்
போக ரஸ பிரதத்வத்தையும்
நித்ய அனுபாவ்யத்வத்தையும்
நிரவாதிக சர்வ பிரகார போக்யத்வத்தையும்
நிர்ஹேதுக உபகாரகத்வத்தையும்
நித்ய கைங்கர்ய பிரதி சம்பந்தித்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரன் நிருபாதிக பூர்ண விஷயீ காரத்தைப் பண்ணி
ஸமஸ்த விரோதியும் நிரஸ்தமாம்படி திருப்பேரிலே ஸந்நிஹிதனாய்
நிரதிசய ஆஹ்லாத காரமான அனுபவத்தைப் பிறப்பித்தான் –
இது ஒரு சீல அதிசயமே என்று மிகவும் ஹ்ருஷ்டராகிறார்-
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-
என்ன –மனத்தின் துணையும் இல்லை காண்-வார்த்தை மாத்ரமே என் பக்கலில் உள்ளது-
இவன் அடியவனாய் இருந்தான் ஆகில்-
உபாயம் ஆகும் தன்மை நம் பக்கலிலேயாய் இருந்ததாகில்-
இவனுடைய பேறு நம் பேறாக இருந்ததாகில்-
அறிவுடைய சேதனன் என்கிற வேறு பாட்டுக்கு -வார்த்தை மாத்ரம் உண்டாயிற்றாகில் –
இதற்கு அவ்வருகு கொண்டு கார்யம் என் -என்று இருக்குமவன் அன்றோ-
ராவணன் தம்பிக்கு மித்ர பாவமே அமையும் என்று இருக்கிறவன் -இவருக்கு உக்திக்கு அவ்வருகு ஓன்று வேணும் என்று இருக்குமோ –சேஷத்வம் ஸ்வரூபம் ஆகில் -உபாய பாவம் நம் தலையிலே கிடந்ததாகில் -அத்வேஷம் உண்டாகில் -நம் பேறாக விஷயீ கரிக்கைக்கு உக்திக்கு அவ்வருகு உண்டோ -என்று இரா நின்றான் அவன் –
வாயால் சொன்னதுக்கு அடி நெஞ்சில் உள்ளதா என்று பார்ப்பவன் அல்லன் –
கை விடும் பொழுது – தானே பார்ப்பான் -உளம் தொட்டு -பார்ப்பவன் –
இது தான் ஒரு மலை அன்றோ அவனுக்கு -என்ன ரசோக்தி –வார்த்தையை இல்லை என்ன ஒண்ணாது இறே அவனுக்கு-யுக்தியே பாரமாக நினைப்பவன் –நம வென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே –இதற்கு அடி ஆராயுமவன் அல்லனே-
ஆக –இவருக்கு ஓன்று இல்லை என்னவுமாய்-அவனக்கு இது ஓன்று உண்டு என்னவுமாம் படி-இருக்கிறது இது தானே-பலத்துக்கு சத்ருசமாக ஒன்றும் இல்லை என்று இவர் -அவன் யுக்தி என்றாலே மனசால் சொல்லி இருப்பான் என்று எண்ணுபவன் அன்றோ –
மனத்தோடு படாமல் சொன்னது தன்னை-மனத்தோடு பட்டதாக்கிக் கொடுப்பாரும் அருகே உண்டு என்பார் –திருமால் –என்கிறார் –
வந்து –அவன் வருவதே -என்று இவர் ஆச்சர்யப் படுவதாய் நிற்க-நீர் வேட்கை கொண்டவன்-
தண்ணீர் இருந்த இடத்தை வரும் அத்தனை அன்றோ என்றாயிற்று அவன் வார்த்தை-
என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –நிறைய -ஐம் புல இன்பங்களுக்கு இடம் இல்லாத படி புகுந்தான்-என் நெஞ்சிலே பாழ் தீரப் புகுந்தான் –எல்லாருக்கும் அடையப் படுபவனாக இருப்பவன் காண்-என்னை அடையத் தக்கவனாக கொள்ளுகிறான்-
இரண்டாம் அடியில்- திரு மால் என்றது -புருஷகாரத்தின் தன்மையைச் சொல்லிற்று-
நான்காம் அடியில் –திருமால் -என்றது -த்வயத்தில் பின் வாக்யத்தில் கூறப் பட்ட-திருமகள் சம்பந்தத்தை சொல்லுகிறது –
———-
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-
தான் சர்வேஸ்வரனாய் வைத்து-என்னோடு கலக்கப் பெறாமையாலே குறைவாளனானவன்-இன்று வந்து-நிர்ஹேதுகமாக என் மனத்தின் கண் புகுந்து-நிறைவாளன் ஆனான்-
பேரேன் என்று –பேரேன் -பேரேன் -என்னா நின்றான் ஆயிற்று
நீ போவுதியோ இருப்புதியோ -என்று கேட்பாரும் இன்றிக்கே-உதாசீனராக – இருக்கச் செய்தே-
இங்கு பிராட்டி தன் விஷயத்தில் -அகலகில்லேன் இறையும் -சொல்லும் வார்த்தையை-என் விஷயத்தில் சொல்லா நின்றான்-
நான் போகேன் போகேன் -என்று சூழ்த்துக் கொடா நின்றான் ஆயிற்று-தன்னை ஐயப் படுவாரும் இன்றிக்கே இருக்க-
அடங்கப் பிடித்தேனே –இப்படி அபி நிவிஷ்டனாய் இருக்கிறவனை பூர்ணன் ஆக்கினேன்-அவனுடைய நிறைந்த அங்கீகாரத்துக்கு பாத்ரம் ஆனேன் –
பிரளயத்தில் அகப்பட்ட உலகத்தை எடுக்கை யாவது-பின்னையும் இவ் உலக வாழ்வினைப் பூண் கட்டுகை அன்றோ-
பரம பதத்தளவும் செல்ல நடத்த பெறாமையாலே குறைப் பட்டு அன்றோ கிடப்பது –
நாம் எல்லாம் செய்தோம் என்று அவன் தெகுட்டும்படி செய்து கொண்டேன் –
அவன் என்னை அவ்வளவும் கொண்டு போம் படி நான் உடன் படுகையாலே-அவனுடைய பெரும் காதல் தீர்ந்ததாயிற்று-
—————
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-
பிடித்தேன் –தலை மேலே தாள் இணைகள் -10-6-6-என்று-அவன் திருவடிகளை தலை மேல் கொண்டு வந்து வைக்கையாலே
அவற்றை உரக்கப் பிடித்துக் -கெட்டியாக பிடித்துக்-கொண்டேன் –ஐம்புல இன்பங்களின் கால் கடையிலே துவண்டு போந்தவர்-அவன் திருவடிகளில் கிட்டிக் கொடு-நிற்கக் கண்ட இத்தனை-ஸ்வயம் பிரபா புலத்தில் புக்க முதலிகளைக் கண்ணைச் செம்பளிக்கச் சொல்லி அவன் கரையிலே ஏற விட்டால் போலேயும் -ஸ்ரீ மதுரையில் உறங்கினவர்கள் ஸ்ரீ மத் த்வாரகையிலே விழித்தால் போலேயும் இப்படி திருப்பேரான் அடி சேர்வது எனக்கு எளிது ஆவதே -என்று களிக்கிறார்-
பிறவி கெடுத்தேன் –பிறவியை மறுவல் இடாதபடி போக்கினேன் –ஸ்தூல சரீர விமோசனம்–மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை –மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை மடித்தேன் –சூஷ்ம சரீர விமோசனம் –
இவ் உலக வாழ்கையில் நிற்கைக்கு அடியான மாயை உண்டு -மூல பிரகிருதி-அதனைத் திரிய விடுவித்தேன்-நிவர்த்தம் ஆக்கினேன் –
சூஷ்ம சரீரத்தின் நாசம் சொன்னபடி –தொடருகிற பாம்பினைத் திரிய விடுவிப்பாரைப் போலே-
எம்பெருமானார் -உலாவி அருளுகிறவர் முடியப் போகாதே-நடுவே மீண்டு அருள-
எம்பார் கதவினை ஒருச்சரித்து-திருமால் இரும் சோலை ஆகாதே திரு உள்ளத்தில் ஓடுகிறது-என்ன-ஆம் அப்படியே -என்று அருளிச் செய்தார் –
————–
எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4-
எளிது ஆயினவாறு –அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் -கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து—- -இரண்டாம் திருவந்தாதி -22-பெறுதற்கு அரியனான பகவானை பெறுதலும் எளிதாகும் –எங்கே கண்டோம் -என்றால்
கரியது ஒரு வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தன்றே-தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து –அவன் தானே அரை குலையத் தலை குத்திய-மடுவின் கரையிலே விழ அன்றோ யானை பெற்றது –புண்டரீக மகரிஷி பெற்றார் -கைகளால் கடல் நீரை இரைக்கப் புக்கு-
அரியதான பகவல் லாபம் -சக்தி யோகம் -ஸூ ரக்ஷண அர்த்தமாக இவன் பண்ணும் பிரவர்திகளை மாற்றி-நம்மை பெறுக அவன் முயல்வானாக இருக்க –-எளிது ஆயினவாறு -என்று என் கண்கள் களிப்பக் – காண்பதற்கு அரிய விஷயம் இங்கனே எளிது ஆவதே என்று-காணக் கருதும் என் கண்ணே -9-4-1-என்கிறபடியே விடாய்த்த கண்கள் களிக்கும் படி –
தனக்கு திரு நாட்டுக்கு கொடுப்பானாய் இருக்கிற எம்பெருமானுடைய படியை -நீர்மையை –அனுசந்தித்து -இங்கனே எளிதாவதே -என்று என்னுடைய இந்த்ரியங்களோடே கூடக் களித்த மனசை யுடையேனாய்க் களியா நின்றேன்–கரணங்களும் களிக்க நானும் களியா நின்றேன் – -என்கிறார் -இப்படி திருப்பேரிலே தான் எழுந்து அருளி இருக்கிற இருப்பை எனக்கு காட்டித் தந்து அருளின இவன் இனித் திருநாட்டையும் தந்து அருளும் என்கிறார்–-களிது ஆகிய சிந்தையனாய்க் –களித்த மனத்தினை உடையனாய் -என்றது–நெடியானே என்று கிடக்கும் என் மனம் களிக்கப் பெற்றது-8-8-1- என்றபடி-
களிக்கின்றேன் –கூவியும் காணப் பெற்றேன் -8-8-7-என்று நானும்-களியா நின்றேன்-
உறுப்புகளும் தாமும் ஒக்க விடாய்த்தவர்-உறுப்புகளும் தாமும் ஒக்க களிக்கப் பெற்றார் –முடியானேயில் தாமும் தம்முடைய கரணங்களும் விடாய்த்த படி சொல்லிற்று -இங்கு தாமும் தம்முடைய கரணங்களும் களித்த படி சொல்லுகிறது-
————–
வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-
வானே தருவான் எனக்காய் –எனக்கு வானே தருவானாய் –இங்கே வைத்து கார்யம் கொள்ளும் அதனையும் தவிர்ந்தான் –இன்னம் ஒரு பிரபந்தம் இடுவித்துக் கொள்ளுகையும் தவிர்ந்தான்-
வானே -ஏவகாரம்-பிரமன் முதலாயினோர்கள் குடி இருப்பும்-இவருக்குத் தரம் அன்று -என்று அதனையும் தவிர்ந்தான்-எனக்காய்-இவ் உலகுள் உழன்று திரிகின்ற எனக்கு-நித்ய சூரிகள் இருப்பை தருவானாக –
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று –ஊனேய் குரம்பை இதனுள் -இன்று -புகுந்து -செஞ்சொல் கவியின் பிரமேயம் -–இவ் உடம்போடு உம்மைக் கொடு போக வேண்டும் -என்று-விளம்பித்தேன் ஆகில் இதனை ஒழியக் கொடு-போகப் பார்த்த பின்பு-ஆறி இருப்பேனோ -என்னா நின்றான்-ஆத்மாவுக்கு இருப்பிடமாய் இருக்கும் சரீரத்தில்-மேல் எழக் கலக்கை அன்றிக்கே-விடாயர் மடுவிலே புகுமாறு போலே புகா நின்றான் –
எனது உடலே அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே-ஒரு மா நொடியும் பிரியாதே இதனுள் புகுந்து நின்றான் –
தானே-கர்மங்களுக்கு கட்டுப் படாதவனான தானே –இவர் பல காலம் தேகத்தினை விரும்பி விட மாட்டாதே போந்தார்-இப்போது இவருக்கு தன் பக்கலில் ருசி பிறந்தவாறே-
இதனோடு தொற்று அல்லாத தானே-இதிலே வந்து புகுரா நின்றான் –
அவனைப் போலே முன்னடி தோற்றாது ஒழியில் அன்றோ இவர்-இச் சரீரத்தின் தண்மையைக் காணாது ஒழிவது-
இதன் தண்மையை நினைந்து –இதனுள் -என்கிறார் –காதல் கண்ணை மறைத்தது அவனுக்கு- இவர் மயர்வற மதி நலம் அருள பெற்றவர் அன்றோ
தானே-
புகுகிற போது தானே யாய்-பின்னர் நானும் அவன் செய்யும் கார்யத்துக்கு அனுகூலமாக இருந்தேனோ –
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே –தேன் மிக்க பொழிலை உடைத்தான-திருப் பேர் நகரை உடையவன் காண்-என்னுடைய சரீரத்திலே புகுந்து
கண நேரமும் விட மாட்டாதே ஒழிகிறான்-என்ன குறை உண்டாய் இப்படிப் பட்டான் –
——————–
திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6-
இன்று வந்து –இவ்வத்மாவுக்கு நேற்று ஒரு நினைவு இன்றிக்கே இருக்க-வந்து கொடு நிற்கக் கண்ட இத்தனை –
அமுதம் உண்டு களித்தேனே –விஷ உணவினை உண்டு நரகத்துக்குப் போகா நிற்க-
நடுவே நின்று களிக்கை அன்றிக்கே -அமுதம் உண்டு களித்தேனே —
அவனுடைய கொண்டாட்டம் ஆகிற அமுதத்தை உண்டு களித்தேனே –என்னுதல் –
ஒரு நாளைக்கு ஒரு நாள் அவனுக்கும் ஸ்ப்ருஹணீயனாய்-அவனுடைய குணங்கள் ஆகிற அமுதத்தை உண்டு களித்தேன்-என்னுதல்-களித்தேனே –
நாவல் இட்டு உழி தருகின்றோம் -என்கிறபடியே-செருக்காலே களிக்கிற களிப்பே அன்றோ இது-நமன் முதலானோர் தலைகளிலே அடி இட்டுக் களிக்கப் பெற்றேன்-ஷிபாமி என்று அவனுடைய அவன் உபேக்ஷைக்கு இலக்காகாதே -அவன் பஹு மானத்துக்கு இலக்கானால் -ப்ரீதி உள் அடங்காது இறே -தனக்கு வர்த்தித்து அருளலாம் கோயில்கள் -அநேகம் யுண்டாய் இருக்க -ஓர் இடம் இல்லாதாரைப் போலே -இருப்பேன் என்று பிரார்த்தித்திக் கொண்டு என்னுடைய ஹிருதயத்திலே நிர்ஹேதுகமாகப் புகுந்தான் என்று ப்ரீதர் ஆகிறார் –
————–
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-
தொண்டு உகளித்து –தொண்டாலே உகப்புத் தலை மண்டை இட்டு –
அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்-முடிவிலே -தொழும் சொல்லுப் பெற்றேன் -அனுபவ ப்ரீதி தலை மண்டையிட்டால் -அதன் மேலே நம என்று புத்தி பூர்வகமாக சொல்லும் சொல்லைப் பெற்றேன் -நம இத்யேவ வாதின -இறே -அதாவது ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய் மொழி பாடி அடிமை செய்யப் பெறுகை –
கண்டு களிப்ப –மெய் கொள்ளக் காண விரும்பும் என் கண்கள் என்று விடாய்த்த கண்கள் கண்டு களிக்கும் படியாக –
கண்ணுள் நின்று அகலானே –நான் போகச் சொல்லினும் கண் வட்டத்தில்-நின்றும் அகலுகின்றிலன்-
ஐம் புல இன்பங்களில் ஆசை உள்ளவர்கள் போகச் சொன்னாலும்-தூணைக் கட்டிக் கொண்டு போகாதவாறு போலே –
இப்படி அவனை அனுபவித்து களிக்கப் பெற்ற எனக்கு-மேல் ஒரு குறை உண்டோ –
———-
கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-
கண்ணுள் நின்று அகலான் –எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயம் ஆகா நின்றான் -என்றது –சதா பஸ்யந்தி -எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு-வேறு தனக்கு ஒரு உலகம் உண்டு என்று இருக்கின்றிலன் -என்றபடி –
கருத்தின் கண் பெரியன் –உபய விபூதி நாதனாய் இருத்தலால் வரும்-வேறு ஒன்றிலே நோக்கு உள்ளவனாய் இருத்தல் முழுதும் தீர்ந்து
இவரை அவ்வருகே கொண்டு போகையிலும் -ஆதி வாஹிகரை ஏவுகையிலும்-
வீடு திருத்த -தான் முற்பாடனாய்க் கொண்டு போகையிலும் -பாரியா நின்றான் –
அன்றிக்கே -நம் கார்யத்தில் இவன் விரைகிறபடி நம்மால் எண்ணி முடியும் அளவு அன்று -என்னுதல் -என்றது –இவ்வளவினன் -என்று எண்ண முடியாதவன் -என்றபடி –இது தான்- எவனுக்கு அறியப் படாதது -என்கிற –ஸ்வரூபத்தால் -பொது நோக்கால் அன்று -பின்னர் எதில் எண்ணில்-நம் கார்யத்தில் இங்கனே இருக்கும்--என் மனத்துப் புகுந்தான் -என்றதனோடு சேர வேண்டும் அன்றோ -கருத்தின் கண் பெரியன் -என்கிற இதுவும்
எண்ணில் நுண் பொருள் -தாம் தாமே எண்ண நினைப்பார்க்கு துர்க்க்ரஹமான வஸ்து -ஏழிசையின் சுவை தானே-எண்ணாமல் இருக்க ஒண்ணாத போக்யதையைச் சொல்லுகிறது -சப்த ஸ்வரங்கள் இறே பிரதானம் –
என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –சக்யா லோபயிதம் ந அஹம் ஐஸ்வர்யேண நநேநவா-அனன்யா ராகவேண அஹம் பாஸ்கரேண பிரபா யதா -சுந்தர -21-15- பிராட்டி போலே பிரிக்க ஒண்ணாதபடி புகுந்தான்–எனது ஆவியுள் கலந்த -8-8-4- என்னுமாறு போலே-
அறப் பெரியவன் ஆனவன் இப்படி நம் பக்கல் மேல் விழக் கூடுமோ -என்று தாமும் ஐயம் கொண்டார்- அதற்கு வேறு போக்கடி கண்டிலர்-திண்ணம்-சர்வேஸ்வரன் ஒரு சம்சாரி ஹிருதயத்திலே இப்படி மேல் விழக் கூடுமோ -என்று சங்கிக்க வேண்டாம் -இது த்ருடம் —திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே-இன்றே புகுந்தான் -செறிந்து புகுந்தான் -திண்ணம் புகுந்தான் – நிர்ஹேதுகமாக -நிச்சயமாக திரும்பிப் போகாத படி புகுந்தான் –
————-
இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-
இன்று என்னை அங்கீ கரிக்கைக்கும் முன்பு-என்னை பாராமுகம் செய்தமைக்கும் காரணம் என் என்று கேட்க வேண்டி இருந்தேன் –இது தனக்குத் தானே சிந்தித்தலில் நோக்கு –
அன்றிக்கே
சர்வேஸ்வரன் தன்னை பரமபததுக்கு கொடு போகையில்-விரைகிறபடியைக் கண்டு
இன்று என் அளவு அல்லாதபடி விரைகிற தேவர்-இதற்கு முன்பு பல காலம் விட்டு ஆறி இருந்தமை எங்கனே என்று அவனைக் கேட்கிறார் -என்னவுமாம் –
அன்றிக்கே
மூன்றாவது அவதாரிகை அதி சங்கையிலே நோக்கு – இப்படி விரைகிறமை மெய்யாகில் முன்பு விட்டு ஆறி இருக்கக் கூடாது -என்கிறார்-
ஓன்று எனக்கு அருள் செய்ய –முன்பு கை விட்டதற்கு காரணம் சொல்லவுமாம் –இன்று என்னை அங்கீகரித்ததற்கு காரணம் சொல்லவுமாம்- ஒன்று சொல்ல மற்றவற்றுக்கு விரோதிக்கும் -நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு ஹேது பிரஸ்னம் பண்ணில் சர்வஞ்னுக்கும் உத்தரம் இல்லையே –
இன்று என்னைப் பொருள் ஆக்கி –அசேதனத்தைப் போலே இருந்த என்னை-ஒரு பொருளாம் படி செய்து-பொருள் அல்லாத என்னை -5-7-8- என்றாரே” அன்றோ -தன்னை-
தன்னை –
பெரு மக்களால் விரும்பத் தக்கவனான தன்னை –
என்னுள் வைத்தான் –
பிறர்க்கு இடம் இல்லாதபடி தன்னை-முற்றூட்டாக என்னுள்ளே கொடு வந்து வைத்தான் –
அன்று –என்று அவன் திருவருளைப் பெறுவதற்கு-முன்புள்ள நாள்கள் எல்லாவற்றையும் சொல்கிறார் –
இன்று -என்கிறது-மயர்வற மதி நலம் அருளப் பெற்ற அதற்கு பின்புள்ள காலத்தை`–
உணர்த்தல் உற்றேன் என்ற இவரே
அடுத்த பாசுரத்தில் உற்றேன் உகந்து பணி செய்து -என்று சமாதானம் அடைகிறார்-
ஆகையால் அவன் விடை கூறாது ஒழிந்தது போதருதலால்-அது தன்னை விரித்து பேசுகிறார்
இது நாம் சொல்ல வேண்டுமோ -நீர் அறியீரோ -என்றான் –
அடியேன் அறியேன் -சர்வஞ்ஞனான நீயே அருள வேண்டும் -என்றார்
ஆனால் நாம் உம்முடைய நெஞ்சில் புகுந்த காலத்தில் உடன் பட்டு இருந்தீர் -அதனாலே காணும் -என்றான்
ஓம் அது தான் உண்டோ –யான் ஒட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் –1-7-7-என்றார்
அது இல்லை யாகிலும் புகுந்த பின்பு நம்மை விரும்பினீரே -என்றான்
மருவித் தொழும் மனமே தந்தாய் -2-7-7-என்கிறபடியே அதுவும் தேவர் செய்த இத்தனை -என்றார் –
ஓம் காணும் அது இல்லை யாகிலும் நம்மை விரும்பும் போது நம்மோடு கூட வேறு விஷயங்களை விரும்பாது இருந்தீரே -என்றான் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -2-7-8-என்கிறபடியே அதுவும் தேவரே அன்றோ செய்தது -என்றார் –
இவை ஓன்று இன்றே யாகிலும் நாம் தந்த மதி நலத்தை வளர்த்துப் போந்தீரே -என்றான்-
காதல் கடல் புரைய விளைவித்த கார் அமர் மேனிக் கண்ணன் -5-3-4-என்கிறபடியே-
அதுவும் தேவர் அன்றோ செய்தது -என்றார்
இப்படி இவர் முடியத் தொடர்ந்தவாறே-பெரும் கடல் மண்டினாரைப் போலே போக்கற்றான் –
இதற்கு ஈஸ்வரன் சொன்ன விடை தான் என்ன-என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க –
இவர் தலையிலே ஒரு பழியினை ஏறட்டு-பல காலம் இழந்து இருந்த நாம் சொல்லுவது என் -என்று நாணம் உற்றவனாய்-காலாலே தரையைக் கீறி நிற்கும் இத்தனை போக்கி-வேறு விடை உண்டோ என்று அருளிச் செய்தார்-
மாமியர் குழுவில் வந்தான் ஆம் என மைந்தன் நிற்ப -கம்பர் -தாரை முன்னால் இளைய பெருமாள் நிலை –
தாமரை வதனம் சாய்த்து, தனுநெடுந் தரையின் ஊன்றி,
மாமியர் குழுவின் வந்தான் ஆம் என, மைந்தன் நிற்ப,
பூமியில் அணங்கு அனார்தம் பொது இடைப் புகுந்து, பொன்தோள்
தூமன நெடுங்கண் தாரை, நடுங்குவாள், இனைய சொன்னாள்.
அதாவது -முன்பு ருசி இல்லாமையாலே -என்ன மாட்டான்-
இப்பொழுது சாதனங்களைச் செய்கையாலே -என்ன மாட்டான்-
ஆனால் பின்னை ஈஸ்வரனுக்கு உயர்வு தாழ்வுகளுடன்-படைத்தல் -அருள் அற்று இருத்தல் முதலிய குற்றங்கள் வருதல்-வைஷம்யம் நைர்கருண்யம் வருமே –
எல்லார்க்கும் மோஷத்தை கொடுக்க வேண்டி வருதல் செய்யாதோ என்னில் -அது செய்யாது-சர்வ முக்தி பிரசங்கம் வருமே –
அடியிலே வெறுப்பின்மையும்-இச்சையும் பிறப்பதற்கு தான் கிருஷி பண்ணி-அது பக்குவமாம் அளவும் பார்த்து இருப்பவன் ஆகையாலே –அதிகாரி விசேஷணம் -ருசி –
கேட்டதற்கு அவன் மறுமாற்றம் சொல்லக் காணாமையாலே-
அறிந்தோம் -இதற்கு காரணம் இங்கனே ஆக வேண்டும் என்று பார்த்தார்-
தன்னுடைய ரஷணம் வெறுப்பிற்கு விஷயமாகி தவிர்ந்து-விலக்காத சமயம் பார்த்திருந்தான் ஆதல்-
தன்னை ஒழிந்த வற்றில் சாதனா புத்தி தவிரும் அளவும் பார்த்து இருந்தான் ஆகில் ஆக அடுக்கும் -என்று பார்த்தார் –
ஆனால் இதனை அவன் உத்தரமாக அருளிச் செய்யாதது என் என்னில்-
அறிவு காரணமாக வருகிற வெறுப்பின்மையை சாதனம் என்ன மாட்டானே-
உபாயமாக இருக்கும் தன்மை தன் தலையிலே ஆயிற்று-
பல காலம் இவர் தலையிலே பழி இட்டு இருந்த நாம் எதனைச் சொல்லுவது-என்று பேசாதே இருந்தான் –
ப்ரசீதந்து பவந்த மே ஹ்ரீ ஏஷா ஹி மமாதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபஸ்தேயை உபஸ்தித -ஆரண்யம் -10-9- என்னால் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட-அந்தணர்களால் நான் அடையப் பட்டேன் என்பது எனக்கு-மிக்க நாணமாய் இருக்கிறது
என்கிறபடியே பிற்பாட்டுக்கு நாணமுற்று நிற்குமவன் அன்றோ-
இவர் தாம் -லஜ்ஜித்த அவனை -எடுத்து வைத்து வார்த்தை சொல்லும்படி ஆயிற்று அவன் நிலை-
அறிவு பற்றி வருகின்ற ருசி தான் ஸ்வரூபத்தின் வேறுபாடு ஆகாதே-
சைத்தன்ய பிரயுக்தமான ருசி -ஸ்வரூபத்துடன் சேர்ந்தது -உபாயம் ஸ்வரூபம் உடன் சேராதே -பற்ற வேண்டுமே –
நீர் பெற வேண்டிய பேற்றினை பெற்றீர் ஆகில் அதுவே அமையாதோ -என்ன-அதுவே அமையும் -என்கிறார்-
தேங்காய்க்கு இளநீர் புக்க வழி ஆராய்ந்தோ-விடாய்த்தவன் இள நீர் குடிப்பது-வரவாறு ஒன்றி இல்லை -வாழ்வு இனிதானதே என்றாரே –
பசியும் ருசியும் உபாயம் ஆகாதே -அனுபவத்துக்கு வேண்டிய அதிகாரி விசேஷணம் தானே-
————
உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-
இவர் கேட்ட இதற்கு காரணம் காணாமையாலே-விடை அளித்தால் அற்றவனாய்-உமக்கு மேல் செய்ய வேண்டுவது என் -என்ன- ப்ரீதி முன்னாக அடிமை செய்யப் பெற்றேன் இதுவே இன்னம் வேண்டுவது -என்கிறார்-கைங்கர்ய பிரதி சம்பந்தியான அவன் திருவடிகளில் அடிமை செய்வதும் -கைங்கர்யம் செய்வதும் பிராப்தம் –
அவன் தானே செய்தான் என்னுமன்று அவனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யமும் சர்வ முக்தியும் பிரசங்கியாதோ -என்னில் -இத்தலையில் ருசியை அபேக்ஷித்துச் செய்கையாலே அவனுக்கு அது தட்டாது -அது ஹேது வென்று ஈஸ்வரனுக்கு உத்தரம் ஆனாலோ என்னில் -அது உபாயமாக மாட்டாது -பல வ்யாப்தமானது இறே உபாயம் ஆவது –இந்த ருசி அதிகார ஸ்வரூபம் ஆகையால் தத் விசேஷணமாம் அத்தனை -உபாயம் சஹகாரி நிரபேஷம் ஆகையாலும் இந்த ருசி உபாயம் ஆக மாட்டாது –இது உபாயம் அல்லாமையாலே இவர்க்கு இல்லை என்ன-சர்வ முக்தி பிரசங்கம் நீங்குவதற்காக அவனுக்கு உண்டு என்னவுமாம் –
உகந்து பணி செய்ய உன பாதம் பெற்றேன் –ப்ரீதியினால் தூண்டப் பட்டவனாய்க் கொண்டு-திரு வாய் மொழி பாடி-உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன்-
உகந்து பணி செய்கை சாதனமாக-மேல் சாதனத்தால் அடையக் கூடிய பேற்றினைச் சொல்லுகிறது அன்று–இரண்டும் ஒரே காலத்திலே உள்ளன ஆகையாலே-
ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் –இது தானே மாறி மாறி உயிர் உள்ள அளவும் செல்லுகையே அன்றோ வேண்டுவது- மீண்டு வருகை இன்றி ஒழிகை யாவது -மீளாது ஒழிகை-சம்பந்தம் இல்லாததாக இருக்கிறதோ என்னில்-
எந்தாய் –இவ் வநுபவம் ஆத்மாவோடு கூடியது என்கிறது –ஸ்வரூப பிராப்தம் –
இத்தலைக்கு அடிமையும்-தேவர்க்கு ஏவும் தனமையை உடைய தலைமைத் தன்மையும் அன்றோ ஸ்வரூபம்–இவர் விரும்பிய போது அவனும் செய்கிறோம் என்ன-ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –
———–
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-
நல்லார் பலர் வாழ்-திருவாய் மொழி கேட்டு வாழும் -தொழுவதும் எழுவதும் ஒன்றே போலே
திருவாய் மொழி கேட்டு பாடுவதே வாழ்வே-நல்லார் நவில் குருகூர் -திரு விருத்தம் -100-திருச் சங்கணித் துறை சத்வ குணம் உள்ளார் சேரும் திரு நகரி –ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் அனைவரும் சேர்ந்து அருளிய குருகூர் அன்றோ
இத் திருவாய் மொழியினை கற்க வல்லவர்கள்-இட்ட வழக்கு பரம பதம் -என்கிறார் –
இவர்களும் உடையவர் போலே ஆவார்கள் என்றவாறு –வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே-பொன் சூழ் விசும்பு ஹிரண்மயமான விஷ்ணோ பரமம் பதம் -ஆளுவார்கள்-பாகவதர்கள் தாங்களே நிர்வாகராக நடத்துவது பரமபதம்
இவை பத்தும் வல்லார் தொண்டர் – இப்பத்தினை கற்க வல்லவர்கள்-செஞ்சொற் கவிகாள் 10-7-1- -என்கிறபடியே-வாக்காலே அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
ஆள்வது சூழ் பொன் விசும்பே--எல்லை இல்லாத தேஜோ மயமான பரம பதத்தை-ஆயிற்று ஆளுவது-இஷ்ட பிராப்தி – இத் திருவாய் மொழியைக் கற்றவர்கள் சென்றால்-
ஆண்மின்கள் வானகம் -10-9-8-என்று ஆயிற்று-அங்கு உள்ளார் சொல்லுவது-
ஆர்த்தி ஹரத்வம் -பத்தாம் பத்து – சக்தி பிராப்தி பூர்த்தி -முன் மூன்று பதிகங்களில்
திருப் பேர் –பேரில் மணாளனை ஒரு நாள் சுற்றம் கடைசியில் அங்கும் -திவ்ய தேச பதிகங்கள் முற்றும் இத்துடன் –
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply