ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -100-நல்லார் நவில் குருகூர் நகரான் -முனியே நான்முகன் -10-10-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

அவன் சேற்றில் கால் வைத்து இடந்து எடுப்பதை அனுசந்திக்கவே நாம் சம்சார சேற்றில் உழல வேண்டாமே-நானும் பிறந்து நீயும் பிறக்க வேண்டுமோ -கீதாச்சார்யன்-ஆழ்வார் தாமாக அருளிச் செய்கிறார் இதில் பொய் நிலம் -பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல்–பொல்லா பிரகிருதி
அருமையான-அரிய – பிரகிருதி-வினை பிரகிருதி -கர்மங்களுக்கு காரணம்-மாய பிரகிருதி –வன் ப்ரக்ருதி -ஈஸ்வரனால் மட்டுமே போக்க முடியும் சேற்று அள்ளல் ப்ரக்ருதி –முனியே நான்முகன் -10-10-இதன் விவரணம்சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ -பிரகிருதி விவரணம் அங்கு

அவதாரிகை –நீர் பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தை உடையீருமாய் – இப்படி அறுதி இட்டு காண்கைக்கு ஈடான-நன்மையை உடையீருமாய் இருக்கையாலே நீர் இப் பேறு பெற்றீர் –உம்மைப் போலே ஜ்ஞானம்-இன்றிக்கே பாக்ய ஹீனருமாய் பிற்பாடருமான சம்சாரிகள் செய்வது என் என்ன –அவர்களுக்கு என் தன்னை ஜ்ஞானமில்லையே யாகிலும் – நான் சொன்ன இப் பாசுர மாத்ரத்தையே- சொல்ல அவர்களும் எல்லாம் நான் பெற்ற பேறு பெறுவார்கள் -என்கிறார் –-நூல் பயன்

இப்படி ஸர்வேஸ்வரன் திருச் செவி படும்படி-கேட்டு அருளாய் -தத் விஷயத்திலும் ததீய விஷயத்திலும்
தமக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தையும் தத் விஸ்லேஷ ஹேதுவான தேச வாஸாதிகளால் உண்டான உத்வேக யோகத்தையும் வெளியிட்டு இம் முகத்தாலே தம்முடைய விருத்த கீர்த்தனம் பண்ணின இப்பிரபந்தத்தில் அபி யுக்தரானவர்களுக்குப் பலம் தாம் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று அபேக்ஷித்த ஸம்ஸார நிவ்ருத்தி என்று அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-இப்பாட்டில் பிரபந்தம் கற்றாருடைய பேறு சொல்லுகிறது
பகவத ப்ரஸாத லப்த்த ஞானத்தை யுடையீருமாய்-இப்படி அறுதியிட்டுக் காண்கைக்கு ஈடான சக்தியை யுடையீருமாய் இருக்கையாலே நீர் இப்பேறு பெற்றீர்-உம்மைப் போலே ஞானம் இன்றிக்கே பாக்ய ஹீனராய்ப் பிற்பாடருமான ஸம்ஸாரிகள் செய்வது என் என்ன-அவர்களுக்கு என்னத்தனை ஞானம் இல்லையே யாகிலும் நான் சொன்ன இப்பாசுர மாத்ரத்தைச் சொல்ல வல்லாரும் எல்லாம் நான் பெற்ற பேறு பெறுவார்கள் என்கிறார்

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே
– – 100-

நல்லார்–நல்ல குணங்களையும் நல்ல காரியங்களையுமுடையரான மஹான்கள்
நவில்–புகழ்ந்து கூறப்  பெற்ற
குருகூர் நகரான்–திருக்குருகூரென்னும் திருப்பதியில் திருவவதரித்தவரும்.
திருமால்–லக்ஷ்மீபதியான எம்பெருமானது
திருபேர்–திருநாமங்களை
நல்லார்–பயின்றவரான அடியார்களுடைய
அடி–திருவடிகளாகிற
கண்ணி–பூமாலையை
சூடிய–தமது முடிக்கு அணியாகக் கொண்டவருமான
மாறன்–நம்மாழ்வார்
விண்ணப்பம் செய்த–(பகவத் ஸந்நிதாநத்திலே) விஜ்ஞாபநஞ்செய்த
சொல் ஆர் தொடையல்–சொற்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை வடிவமான
இ நூறும்–இந்த நூறு பாசுரங்களையும்
வல்லார்–கற்று வல்லவர்கள்
பிறப்பு ஆம்–ஸம்ஸாரத்திற்குக் காரணமும் காரியமுமாகிய
பொல்லா அருவினை–ஆத்மாவை கெடுக்க வல்ல  கொடியவையாய் போக்க முடியாதவையான  அரியதான ஊழ்வினைகளாகிற
மாயம் வல் சேறு அள்ளல்–ருசி வாசனைகளை பிறப்பித்து வஞ்சிக்குமதான  கொடிய சேற்றின் அடர்த்தியை யுடைய
பொய் நிலத்து–பொய்யாகிய பிரகிருதி மண்டலத்தில்
அழுந்தார்–அழுந்த மாட்டார்கள் (முக்தராகப் பெறுபவர்கள் என்றவாறு.-

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து -நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து
 –100–கீழ் சூழ் விசும்பு அணி முகிலிலே ஸ்ரீ பரம பதத்திலே புக்கு நிரதிசய ஆனந்த உக்தராய் நித்ய ஸூரிகள் திரளிலே இருக்கிறாராக-தம்மை அனுசந்தித்த இது
ஜ்ஞான அனுசந்தானம் மாத்ரமாய் பாஹ்ய சம்ச்லேஷ யோக்கியம் அல்லாமையாலே-மேரு சிகரத்திலே ஸூ கோத்ரமாக இருந்தவன் பேர் ஆழமான பள்ளத்திலே தலை கீழாக தள்ளுண்டு-விழுந்து நோவு படுமா போலே-அனந்த கிலேச பாஜனமான சம்சாரத்தில்-தாம் இருக்கிற படியைக் கண்டு
ஸ்ரீ ஈஸ்வரனுக்கு பண்டு போலே ஒரு குணாவிஷ்காராதிகளால் பரிஹரிக்க ஒண்ணாத படி ஆற்றாமை தலை எடுத்து ஒரு தூத ப்ரேஷாணாதிகளால் இட்டு நீட்டுகையும் இன்றிக்கே தாமே அவன் முகத்தைப் பார்த்து தம்மால் இது பரிஹரித்துக் கொள்ளப் போகாது இருக்கிறபடியும்
சாதநாந்தரங்களை அனுஷ்டித்தாலும் அவன் கை பார்த்து இருக்க வேண்டி இருக்கும் படியையும் சொல்லிக் கொண்டு ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆணை இட்டு-தடுத்தும்-வளைத்தும் அவனைப் பெற வேண்டும்படியான பரம பக்தி தலை எடுத்து நிர்க்குணர் உடைய ஹிருதயங்களும் கூட இரங்கும் படியாகவும் அவனுக்கும் தம் கார்யம் செய்து அல்லது ஸ்ரீ திரு நாட்டிலே குடி இருப்பு அரிதாம்படியாகவும்
பெரும் மிடறு செய்து கூப்பிட்டு பெரிய ஆர்த்தியோடே திருவடிகளிலே சரணம் புக
ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட இவர் அபேஷித்த படியே ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து தோற்றி கால் கட்டான பிரகிருதி சம்பந்தத்தையும் அறுத்து ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் நித்ய சூரிகளோடே ஒரு கோவை யாக்கி-நித்ய கைங்கர்யம் கொண்டருள-
அத்தாலே-தாம் நிரஸ்த பிரதிபந்தகராய் பிராப்த சமஸ்த மநோ ரதரான படியை-சொல்லித் தலைக் கட்டுகிற முனிய நான் முகனே யில் அர்த்தத்தை முனி மாறன் இத்யாதியாலே அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்
சாஷாத் கரித்த பரம பிராப்திக்கு தலை மிசையாய் வந்து-தாள்களைப் பூண்டு-போகாமல் தடுத்து திரு வாணை இட்டு-கூசம் செய்யாதே-செய்திப் பிழை யற்று-கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும் பழி-புறம்பு போனால் வரும் இழவு உண்டிட்ட முற்றீம்பு-அன்பு வளர்ந்த அடி யுரம்-உயிர் உறவு முதல் அளவு துரக் கைகளாலே-பெறா வாணை அல்லவாக்கின-பேரவா-குளப்படியாம்படி-கடல் போன்ற ஆதாரத்தோடு சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை-வெளியிடுகிறார் பத்தாம் பத்தில் -என்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிச் செய்தார் –கண்டு களிப்பளவும் -பரஞ்ஞான கர்ப்ப பரபக்தி–இருந்தமை -என்றது பூர்ண பரஞ்ஞானம்–முடிந்த அவா என்றது பரமபக்திஇவை ஞான தர்சன பிராப்தி அவஸ்தைகள் -என்று இந்த பரபக்தியாதி பேதத்தையும் அருளிச் செய்தார் —ஏவம்விதமான பரமபக்தியாலே-பரிபக்வராய்-பலத்தோடு சேர்ந்தார் -என்கிற ஸ்ரீ திருவாய்மொழியில் அர்த்தத்தை-இப்பிரபந்தத்தில்-இப்பாட்டாலே சேகரித்து அருளினார் ஆயிற்று —

நல்லார் நவில் –லோகத்தில் சத்துக்கள் அடைய -ஆழ்வார் ஆழ்வார் -என்னா நிற்கும் இத்தனை –ராமோ ராமோ ராம -இதிவத் -(ராமோத்வைதம் போல் ஆழ்வார் ஒருவரே இங்கு பேசப்படுகிறார் ) சர்வதாபி கதஸ் சத்பி –பெருமாள் சிரமம் செய்து விட்டு ஒரு-நிழலிலே இருந்த அளவிலே – பர சம்ருத்யை  ஏக பிரயோஜனாந்தர வர்கள் அதுக்கு உறுப்பான-கற்கைக்காக படு காடு கிடப்பர்கள் –-சமுத்திர இவ சிந்துபி -இப்படி கிடக்கிறது -இவர் குறை-நிரம்புக்கைக்கோ என்னில் –-பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புக்கைக்கு அன்றிக்கே ஆறுகள் வந்து புகுருகிறது –-நடுவு தரிப்பு இல்லாமை இத்தனை இறே –திரு மால் இத்யாதி--அவர்கள் அடைய ஆழ்வார் என்னா நிற்க செய்தே –இவர் தாம் –-பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர் —என்னை யாளும் பரமரே –என்கிறார் –-திருமால் திருப்பேர் வல்லார் அடிக்  கண்ணி சூடியதைப் பற்றி -பெரும் பேறு பெற்றீர் -என்கிறார் –-ஸ்ரீ ய பதி உடைய திரு நாமங்களைச் சொல்லுகைக்கு அதிகாரம் உடையவர்கள் உடைய- திருவடிகள் ஆகிற மாலையை சூடுகையே நிரூபகமாக உடைய ஆழ்வார் –விண்ணப்பம் செய்த – அடியேன் செய்யும் விண்ணப்பமே -என்று தொடங்கி – விண்ணப்பம் செய்து-தலைக் கட்டின வார்த்தை யாயிற்று –

சொல்லார் தொடையல் –ஆப்த வாக்கியம் என்று ஆதரிக்க வேண்டா –பாட்யே கேயே ச மதுரம் -என்கிறபடியே-இதில் சாரஸ்யத்துக்கும்  ஆக ஆதரிக்க வேணும் –இந்நூறும் –மகா பாரதம் போலே பரந்து இருத்தல் –-பிரணவம் போலே சுருங்கி இருத்தல் -செய்யாதே –-நூறு பாட்டாய் –ஜ்ஞாதவ்யாம்சம் அடைய உண்டாய் இருக்கை –வல்லார் அழுந்தார் –பலத்தை முற்பட சொல்லுகிறார் -(த்ருஷ்டா ஸீதா -கண்டேன் என்று முற்படச் சொன்னது போல் -வீடுமின் முற்றவும் முதலில் சொன்னது போலவும் )

எதில் அழுந்தார் என்கிறது என்னில் –1-பிறப்பாம் பொல்லா –ஜன்மமாகிற பொல்லா –ஜ்ஞாநானந்த லஷணமாய் –ஈஸ்வர சேஷமாய் இருக்கிற-ஆத்ம வஸ்து –அதுக்கு அநு ரூபம் அன்று இறே -அசித் சம்சர்க்கம் –2-அரு வினை –கர்ம பரம்பரையாலே மேன்மேல் என அது தன்னை வர்த்திப்பித்து
பூண் கட்டுமதாய் இருக்கை –3-மாய –ருசி வாசனைகளைப் பிறப்பிப்பதாய்–4-வன் சேறு –தோய்ந்தார் பின்பு கரை கழுவ வேண்டும்படியாய் இருக்கை-5-அள்ளல் –கால் இட்டால் கீழே சுரிக்கும்படியாய் இருக்கை–6-பொய் நிலம் –அது தான் கீழ் தரை இன்றிக்கே இருக்கை –இப்படி இருக்கிற சம்சாரத்தில் அழுந்தார்கள் –பொல்லாததுமாய்-அருவினையாய் –  மாயமுமாய் -பொய் நிலமுமாய் இருக்கிற
பிறப்பாகிற வன் சேற்று அள்ளலில் அழுந்தார் – என்று அந்வயம்–ஞான பிரானை அல்லால்  இல்லை நான் கண்ட நல்லதுவே -என்று அருளிய ஞான தேசிகர் -ஆழ்வாரை அல்லால் தொழா மதுரகவி பிரக்ருதிகள்  –-அனந்தன் மேல் கிடந்த புண்ணியனை பாகவத பர்யந்தமாக பற்றுகை — ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியாலே இத்தை அருளி – ஆவிர்பூத ஸ்வ ஸ்வரூபராய் வாழும் பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்

கருமம் ஒழிந்து பிறப்பு அற்று முக்தி பெறுவார் என்று பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார்
குருகூர் திவ்ய தேச மகிமையால் ஆழ்வார் தாம் பெற்ற பேறு என்கிறார்
திரு மால் திருப்பேர்-வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன்-பாகவத பக்தி நிஷ்டை –
பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை திருவாய் மொழிகளில் வெளியிட்டு அருளியது போல
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த-என்று உபசம்ஹரித்து –-அடியேன் செய்யும் விண்ணப்பம் என்று தொடங்கியது போலே மஹா பாரதம் போலே பரந்து இருத்தல் -பிரணவம் போலே சுருங்கி இருத்தல் -செய்யாதே நூறு பாட்டாய் ஞாதவ்ய அம்சம் அடைய உண்டாய் இருக்கை-

மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே -மஹா விவேகிகளையும் முழுக வைக்கும்-எம்பெருமானும் வந்து பிறந்தால் மயக்கி இழுக்கும் சம்சாரம் அன்றோ-பிரபந்தம் முழுவதுமே சம்சார நிவ்ருத்தியை விண்ணப்பம் செய்த வாறு-நல்லார் நவில் -விசேஷணம் ஆழ்வாருக்கும் திருக் குருகூருக்கும் -ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர் சடகோபன் -என்கிற பிரபாவம் அன்றோ-சம்சாரிகள் உண்டியே உடையே என்று உகந்து இருக்க – ஆழ்வாரோ உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்பதாலே மாறன் –இப்பிரபந்தம் கற்றார் பெறும் யுரைத்து தலைக்கட்டுகிறது இப்பாசுரம் ஆகவே இது நூற்பயன்.-ஞான மனுட்டானமிவை நன்றாகவேயுடையரான ஆசார்யரைச் சரணமாக வடைந்து அவரது ஸம்பந்தமூலமாக எம்பெருமானை யநுபவிக்கிற மதுரகவிகள் போல்வாரான நல்லவர்களால் புகழ்ந்து கூறப்பெற்ற இக்குருகூரென்று ப்ரஸித்தமான திருநகரியில் திருவவதரித்துவரும் பகவதபாகவத விஷயத்தில் பக்தி மிகுந்தவருமான ஆழ்வராலே விண்ணப்பஞ் செய்யப்பட்டதாய், எம்பெருமானும் பிறரும் தலைமேற் கொண்டு ஆதரிக்கத் தக்க இனிய பாமாலை யாகிய இத்திவ்யப்பிரபந்தத்தைக் கற்று வல்லவர்கள் அரும்மொழியப் பிறப்பற்று முக்தி பெறுவரென்று பயனுரைக்கப்பட்டதாயிற்று.–குருகூர்க்கு ‘நல்லார்நவில்’ என்ற விக்ஷேணமிடட்தனால், அப்படிப்பட்ட திவ்ய தேசத்தில் பிறந்ததனால்தான் தமக்கு இப்படிப்பட்ட பக்திப் பெருகாதல் உண்டாயிற்று என்பதாகத் தொணிக்கும். இப்படி லோக விலக்ஷணராண ஆழ்வார்
திருவலதரிக்கப் பெற்ற திருநகரியை நல்லவரர் நவிலச் சொல்ல வேணுமோ?-திருவாய் மொழியில் * பயிலுஞ்சுடரொளி! நெடுமற்கடிமை முதலிய திருப்பதிககளில் ஆழ்வாருடைய பாகவத பக்தி நிஷ்டை
மிக விளங்குதலால் ‘திருமால் திருப்பேர் வல்லாறடிக் கண்ணி சூடிய’ என்று தமக்கு இட்டுக்கொண்ட விக்ஷேணம் மிகப் பொருத்தம்.-முதற் பாசுரத்தில் ‘அடியேன் செய்யும் விண்ணப்பமே’ என்று உபக்ரமித்ததற்கு ஏற்ப இங்கு மாறன் விண்ணப்பஞ்செய்த’ என்று உப்ஸம்ஹரிக்கப்பட்டமை காண்க.-இந்நூறும் என்ற விடத்து நம்பிள்ளையீடு காண்மின்:-“மஹாபாரதம்போலே பரந்திருந்தல், ப்ரவம்போல சுருங்கியிருந்தல் செய்யாதே-நூறுபாட்டாய் ஜ்ஞாதவ்யாம்சமடைய உண்டாயிருக்கை.” மஹா விவேகிகளும் ஆழ்ந்தால் கால் வாங்க வொண்ணாதபடி-முழுகுவிக்குந் தன்மை யுடையதான ஸம்ஸாரத்தை மாய வன் சேற்றள்ளற் பொய்ந் நிலம்’ என்றது மிகப் பொருந்தும்.
பராத்பனான எம்பெருமானும் இதிலே வந்து பிறந்தால் அவனையும் மயங்கி யிழுக்கும் வன்சேற்றை.
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கு மழுக்குடம்புமிந்நின்ற நீர்மை இனியாமுறமை அடியேன் செய்யும் விண்ணப்பம்’ என்று தொடங்கி விண்ணப்பஞ்செய்த இந்நூறும் வல்லார் அழுந்தார் பொய்நிலத்து’ என்று முடித்ததனால் இப்பிரபந்தம் முழுவதும் விரோதியைப் போக்கித் தர வேணுமென்று ஆழ்வார் தமது வருத்தத்தை –ஸம்ஸார நிவ்ருத்தி. யபேக்ஷையை – விண்ணப்பஞ் செய்தவாறாம்.–நம்பிள்ளையும் பெரியவாச்சான் பிள்ளையும் இட்டருளின வியாக்கியானங்களில் ‘நல்லார் நவில்’ என்றதற்கு – லோகத்தி ஸத்துக்களடைய ஆழ்வாராழ்வார் என்னுமத்தனை’ என்றருளிச் செய்திருக்கக் காண்கையாலே ‘நல்லார் நவில்’ என்பது குருகூர்க்கு விசேஷணமன்றியே குருகூர் நகரான ஆழ்வார்க்கு விக்ஷேணமாய் கொள்ள்பபட்டதாகத் தெரிகின்றது. நல்லவர்களாலே புகழப்படட் நம்மாழ்வார் என்கை (திருமால் திருப்பேர்வல்லா ரடிக்கண்ணி சூடிய மாறன்’ என்று நைச்சியந் தோற்றப் பேசிக் கொள்ளுகிற ஆழ்வார் நம்மைப் பற்றி ‘நல்லார் நவில்’ என்று சிறப்பாக விஷேணமிட்டுக் கொள்வாரென்று சங்கிக்க இடமுண்டெனினும் ஆழ்வாருடைய ஒப்புயர்வற்ற பிரபாவத்தை (ஸத்துக்களால் அநவரதம் புகழ்ந்து கூறப்படுந்தன்மையை)க் கண்டறியும் ஆசரர்யர்கள்
இங்ஙனே வியாக்கியானித்தல் பொருந்தத் தட்டில்லை ‘ஏற்கும் பெரும்புகழ் வண் குருகூர்ச்சடகோபன்’ என்று ஆழ்வார் தாமும் மெய்மறந்து அருளிச் செய்யும்படியாகயிறே ப்ரபாவந்தானிருப்பதுமாறன் = உண்டியே உடையே உகந்தோடு மூலகத்தாருடைய இயற்கைக்கு மாறுபட்டு-உண்ணுஞ் சோறு பருகுவீர்த் தின்னும் வெற்றிலையு மெல்லால் கண்ணன்” என்றிருந்ததனால் ஆழ்வார் மாறனென்று திருநாமம் பெற்றார் என்க-

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்-நல்லார் ஆகிறார் ஆச்சார்ய விஷயத்திலே சேஷத்வ ரக்ஷகத்வாதிகளை ஏறிட்டு ஈஸ்வரனை தத் ஸம்பந்த த்வாரா அனுபவித்துப் போரும் மதுரகவிகள் போல்வார்-அவர்களாலே நவிலப்பட்ட-ஸ்துதிக்கப்பட்ட -திருக்குருகூர் என்று
திரு நாமமான திரு நகரி யுடையவர்–திரு மால் திருப் பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன்
ஸ்ரீ யபதிக்கு வாசகமான மூல மந்த்ர த்வயங்களில் அர்த்த அபி யுக்தரான பரம பாகவதருடைய திருவடிகள் ஆகிற பூம் கொத்தை சிரஸா வஹித்துப் போருகிற ஆழ்வார்–இத்தால் –ஸஹோ வாஸ வ்யாஸ பாராசர்ய -யஜுர் என்றும்-வால்மீகிர் பகவான் ருஷி -பால -4-1- என்றும் சொல்லுமா போலே
விலக்ஷண பரிக்ரஹத்தையும் ஜென்ம தேச பூர்த்தியையும்-வல்லார் அடிக்கண்ணி சூடிய என்று ஞானாதிக்யமும் சொல்லுகையாலே பிரபந்த கர்த்தாவான ஆழ்வாருடைய ஆப்த தமத்வம் தோற்றிற்றுவிண்ணப்பம் செய்த-என்று பாரதந்தர்யத்தாலே ஸ்வரூப ஞானம் ப்ரகாசிக்கையாலே பிரம விப்ர லம்பாதி தோஷ ராஹித்யம் தோற்றிற்று —சொல்லார் தொடையில் என்று ஸப்த சந்தர்ப்பத்தை மாலாகாரம் ஆக்குகையாலே இது கர்த்தவ்ய புத்த்யா செய்தது அன்று –கைங்கர்ய புத்த்யா செய்தது என்றபடிஇந்நூறும்-என்று இப்பாட்டுக்கள் நூறும் தனித்தனியே மாலா ரூபமாய் பகவத் விஷயத்துக்கு சிரஸா வாஹ்யமாயும் ஹ்ருத்த்ய மாயும் இருக்கிற படி உகப்புக்கு விஷயம் என்றதாயிற்று –வல்லார்
இப்பாட்டு நூற்றினுடையவும் பாவ கர்ப்பமான அர்த்தத்தை அனுசந்திக்க வல்லவர்கள்–அழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே ––நிலத்து – அழுந்தார்
பிறப்பாலே உண்டாகக் கடவதாய் துக்க ஹேதுவாய் இருக்கிற கடக்க அரிய கர்மத்தை யுடைத்தாய்
அறிந்தாலும் கால் வாங்க ஒண்ணாத படியான ஆச்சர்யத்தை யுடைத்தான புத்ர தாராதி சங்கம் ஆகிற சிக்கென்ற சேற்றையும் கொண்டு முழுக்கும்படியான நரகம் ஆகிற அள்ளலை யுடைத்தாய் அஸத்ய ஸப்த வாஸ்யமான ப்ரக்ருதி மண்டலத்தில் அழுந்தார்கள்–பொய்ந் நிலத்தில் அழுந்தாரே
என்று ஏகாரம் தேற்றம் ஆகவுமாம்-பொய்ந் நிலத்தே என்று ஈற்று அசையாகவுமாம்-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-நல்லார் நவில் –லோகத்தில் சத்துக்கள் அடைய ஆழ்வார் ஆழ்வார் என்னும் அத்தனை-ராமோ ராமோ ராம -யுத்த -131-101-இதிவத்-ஸர்வதா பிகத ஸத்பி -பாலா -1-16-
பெருமாள் ஸ்ரமம் செய்து விட்டு ஒரு நிழலிலே இருந்த அளவிலே பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனரானவர்கள்–தங்களுக்கு உறுப்பானவை கற்கைக்காக வந்து படுகாடு கிடப்பர்கள்
ஸமுத்ர இவ ஸிந்துபி-இப்படிக் கிடக்கிறது இவர் குறை நிரப்புகைக்கோ என்னில் பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புகைக்கு அன்று இறே ஆறுகள் வந்து புகுருகிறது-நடுவு தரிப்பில்லாமை இத்தனை இறே-பேராளன் பேரோதும் பெரியோர் -பெரிய திரு -7-4-4-என்னுமா போலே இவர்களை நல்லார் என்னும் இத்தனை ஒழியப் பாசுரம் இடப் போகாது-இவர்கள் பேச்சுகளும் தலை மிக்கு இருக்கும்திருமால் இத்யாதி-அவர்கள் அடைய ஆழ்வார் ஆழ்வார் என்னா நிற்கச் செய்தே
இவர் தாம் பயிலும் திருவுடையார் யாவரேலும் கண்டீர் –எம்மை ஆளும் பரமர் –3-7-1- என்னா நிற்பார்-ஸ்ரீ யபதியினுடைய திரு நாமங்களை சொல்லுகைக்கு அதிகாரம் உள்ளவர்களுடைய
திருவடிகளாகிற மாலையைச் சூடுகிற இத்தையே நிரூபகமாக யுடைய ஆழ்வார்-விண்ணப்பம் செய்த
அடியேன் செய்யும் விண்ணப்பமே -திருவிருத்தம் -1-என்று தொடங்கி விண்ணப்பம் செய்த வார்த்தை யாயிற்று–சொல்லார் தொடையல் ஆப்த வாக்கியம் என்று ஆதரிக்க வேண்டா-பாட்யே கேயே சதுரம் -பாலா -4-8- என்று இருக்கிற இதில் ஸாரஸ்யத்துக்காக ஆதரிக்க வேண்டும்–இந் நூறும்-பாரதம் போலே பரந்து இருத்தல் -ப்ரணவம் போலே சுருங்கி இருத்தல் செய்யாதே- நூறு பாட்டாய் ஞாதவ்ய அம்சம் அடைய உண்டாய் இருக்கை–வல்லார் அழுந்தார்-பலத்தை முற்படச் சொல்லுகிறார்–அது எங்கே என்னில்-பிறப்பாம்-ஜென்மம் ஆகிற–பொல்லா-ஞான ஆனந்த லக்ஷணமாய்-ஈஸ்வர சேஷமாய் இருக்கிற ஆத்ம வஸ்துவுக்கு அனுரூபம் அன்று இறே அசித் ஸம் சர்க்கம் –

தாத்பர்யம்--மதுரகவி போல்வார் -ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே என்று அருளிச் செய்த ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியால் போக்கிக் கொள்ள வேண்டும்-நம்மாழ்வார் தானே ஒரே உபாயம் என்று இவர் வார்த்தையால் சொல்ல வைக்க தற்புகழ்ச்சி இல்லை யதார்த்த கதனம் தானே
மீண்டும் பிறக்க மாட்டோம்-சம்சாரம் கடந்து உஜ்ஜீவிப்போம் என்று அருளிச் செய்கிறார்
விலக்ஷணர் வர்த்திக்கும் திருக்குருகூர்-ஜென்ம வைலக்ஷண்யம் அவர்கள் புகழும் கல்யாண குணங்களை யுடையவர் ஸ்ரீ யபதி நாமம் சொல்லும் பக்தர்களில் அக்ர கண்யர் சேஷத்வ பாரதந்தர்யம் ஆத்ம குணங்கள் மிக்கவர் இனிய சப்த சந்தர்ப்பம் -ஞாதவ்ய சகல ப்ரகாசகமாய் உள்ள
இந்தப் பிரபந்தம் அனுசந்திக்க வல்லார் ஆழ்வாரது கடாக்ஷ பூதராகி-ருசி வாசனா ஜனகமாய் இருக்குமே -அடைந்தாரை அழுந்தப் பண்ணும்-பரிணாம சாலியாய்-ஜென்மம் ஜரை மரணம் இத்யாதி ஆத்ம ஸ்வரூப திரோதாகம் -சம்சாரம் -கர்மங்கள் காரணம் – இவற்றைக் கடந்து தத்வ ஞானம் யதார்த்தம் அறிந்து ஸ்வ ஸ்வரூபம் ஆவிர்பாவம் பெற்று இயற்கைத் தன்மை பெறுவது போல்-
புதிதாக ஊட்ட வேண்டாமே ஞான மயமான ஆத்ம ஸ்வரூபம் -பெற்று வாழ்வார்கள்
என்கிறார் –

10-10-முனியே நான்முகனே முக்கண் அப்பா -ப்ரவேஸம்-

பரமபதத்திலே புக்கு-அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை -என்கிறபடியே
எல்லை இல்லாத ஆனந்தத்தை உடையராய்-
அத் திரளிலே இருந்த இருப்பு நினைக்கக் கூடிய ஞானமே மாத்ரமாய்-
புறம்பே கண்டு அனுபவிப்பதற்கு தகுதி இன்றிக்கே இருந்தது –அதற்கு மேலே-
இல்லை கண்டீர் இன்பம் -9-1-6–என்றும்
பிறப்பாம் பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலம் -திரு விருத்தம் -100-என்றும்
தாம் பிறருக்கு உபதேசிக்கிற இவ் உலகத்திலே சரீரத்தோடு கட்டுப் பட்டவராய்-
இருக்கிற படியையும் கண்டார் –
கண்டு -மேருவின் உச்சியில் துக்கம் இல்லாதவனாய்-மேலான சுகத்தை உடையவனாய் இருக்கிறான் ஒருவன்-
பல பல துக்கங்களை உடையதாய்-தாண்ட முடியாததாய்-பேர் ஆழமாய்-
ஓர் இடத்திலும் நிலை இன்றிக்கே இருக்கும்படியான பாதாளத்திலே-
விழுந்து நோவு படுமாறு போலே துக்கம் கொண்டவர் ஆனார் –

அதற்கு மேலே
பண்டு அவன் தமக்கு கை வந்த படியையும் -என்னை உயிர் வேறு அன்றி ஒன்றாக –
தன்னைப் பெறுகைக்கு உபாயம் தானே அல்லது வேறு இன்றிக்கே இருக்கிற படியையும்-
ஆவிக்கு ஒரு பற்றுக் கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் –
தன் தலையிலே ஒரு உபாயத்தை ஏறிட்டுக் கொண்டு ஒழுகுமவனுக்கும் -மேவித் தொழும் பிரமன் சிவன் –
தன் கை பார்த்து இருக்க வேண்டும் படி-
எல்லா பொருள்களையும் காப்பாற்றுகின்றவனாய்-இருக்கும் படியையும் நினைந்து-
அக்கணத்தில் பெறாமையாலே-
இப்படி இருக்கிறவன் நம்மை இங்கனே நோவு பட விட்டு வைப்பதே என்று-மிகவும் துக்கம் கொண்டவர் ஆனார்-

அங்கனம் துக்கம் கொண்டவர் -தாய் தந்தையர்கள் முன்னே இருக்க பசியாலும் தாகத்தாலும்-
நோவு படுகிற சிறு குழவியானது துன்பத்தின் மிகுதியாலே தாய் பேரைச் சொல்லிக் கூப்பிடுமாறு போலே-
வள வேழ் உலகின் -என்ற திருவாய் மொழியில் கூறிய தன்மையை உடைய தாம்-
தம் தன்மையை நினைக்க ஆற்றல் இல்லாதவராய் –
தூதர் மூளவும் அறிவிக்கவும் இயலாதவராய்-
அவனே எதிரே நின்று பிராட்டி ஆணை இட்டு தலக்கு -நாணம் -அற்றுச் சொல்லும்படியான ஆற்றாமையோடு-
இரக்கம் இல்லாதவர் உடைய மனங்களும் இரங்கும்படியாக-
அவனுக்கு தம்மைக் காப்பாற்றி அல்லது பரம பதத்தில் இருப்பு அரிதாம் படியாகவும்-
காற்றுத் தீயிலே அகப்பட்டாரைப் போலே துயர ஒலியோடு பெரு மிடறு செய்து கூப்பிட்டு-

தே யத்யமானா பதிதா சவிரா ந நத்யமானா பயசல்யவித்யா
சாகா ம்ருகா ராவணா சாயகர்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்தம் -50-45
வானரங்கள் ராவணனுடைய அம்பால் துன்பம் உற்றவனாய் ஓடின
புகலிடமான ராமனை சரணம் அடைந்தன -என்கிறபடியே
தரிக்க மாட்டாமையாலே அவன் திருவடிகளிலே சரணம் புக்கார்

இவர் சரணம் புக
அவன் அருள்கடல் ஆகையாலே-இவரை இப்படி நோவுபட இட்டு வைத்தோமே அன்றோ -என்று
இவரைக் காட்டிலும் தாம் நொந்து
கோலத் திரு மாகளோடு உன்னைக் கூடாதே –
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து –
பிராட்டிமாரோடே பெரிய திருவடி மேலே இவர் விரும்பியபடியே எல்லாவற்றாலும் நிறைந்தவனாய் வந்து தோற்றி
இவருடைய சரீர சம்பந்தத்தையும் அறுத்து
அடியார்கள் குழாம களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப் பட்ட படியே
அத்திரளிலே புகப் பெற்று-
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்றும்
அவா அற்று வீடு பெற்ற -என்றும்
இவர் தாமே சொல்லலாம்படி இவர் விடாயும் தீர
இவர் விடாய்க்கு அவ்வருகான தன்னுடைய விடாயும் தீரும் படி கலந்து அருளினான் -என்கிறார்-

இப் பிரபந்தத்துக்கு தலைவன் சர்வேஸ்வரன் -பிரமேயம் –
இப்பிரபந்தம் -அவாவில் அந்தாதி -பிரமாணம்
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் கவி பாடினார் -பிரமாதா
இனி இவருடைய அவதாரம் தான்-சர்வேஸ்வரனுடைய அவதாரத்தைப் போன்று
சாதுக்களின் உடைய புண்ணியத்தின் பலம்
பிரமேய பிரமான பிரமாதா வைலஷணயத்தையும்
இவர் அவதார வைலஷணயத்தையும்
அருளிச் செய்கிறார் –

ஷேமுசி பக்தி ரூபா -பக்தி ரூபாபன்ன -மதி நலம் -பக்தி பூமா என்றுமாம் –
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்க-ஆதி லீலே-
உலகம் யாவையும் -தாம் உளவாக்கலுக்கும் நிலை பெறுத்தலும் நீங்கலும் நீங்கலா -அலகிலா விளையாட்டுடை அண்ணல் அவன் –

பத்தாம் திருவாய் மொழியில் கீழ் -அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய் தேச விசேஷத்திலே புக்குத்
திரு மா மணி மண்டபத்திலே ஏறி ஸூரி பரிஷத்திலே அந்தர்பவித்து நிரதிசய ஆனந்த யுக்தனாய்க் கொண்டு
முக்தன் இருக்கும் இருப்பை அபரோஷிக்க –
பர ஞானத்தால் இது தம்முடைய பேறாக சாஷாத் கரித்து அனுபவித்தவர் -அந்த சமாதி குலைந்தவாறே –
முன்பு இருந்த சம்சாரத்தை தரிசித்து -கொடு உலகம் காட்டேலே -என்று தாம் அஞ்சி இருந்த சம்சாரத்தைத் தரிசித்து
மிகவும் ஆர்த்தராய் அபரோக்ஷ ஸித்தமான இப்பேற்றை பெற்று அல்லது தரிக்க மாட்டாத படி
பரமபக்தி ரூபமான நிரவதிக அபி நிவேசம் பிறந்து
இவ்வளவும் நம்மைப் புகுர நிறுத்தினவன் தானே முழுக்க நிர்வஹிப்பானாக ஏறிட்டுக் கொண்டு
பெரிய திருவடி திருத் தோளிலே ஸந்நிஹிதனாய்த் தம் தலையிலே திருவடிகளை வைத்து
பல பிரதானத்திலே அதி த்வரிதானாம் படியை அனுசந்தித்து
அவ்வனுசந்தான பாவநத்வத்தாலே அபரோக்ஷ சித்தனான சர்வேஸ்வரனுடைய உபகாரமான
போக்ய விக்ரஹத்தையும்
ஸ்ரீ மஹா லஷ்மீ வல்லபத்வத்தையும்
சர்வ காரணத்வத்தையும்
ஸமஸ்த வாஸ்து பிரகார யோகத்தையும்
அதிசயித போக்யத்வத்தையும்
அத்யந்த பிரணயித்வத்தையும்
ஆஸ்ரித ரக்ஷகத்வத்தையும்
சர்வ அந்தராத்மவத்தையும்
ஸமஸ்த பிரதானத்வத்தையும்
பரிபூர்ண போக பிரதத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய சந்நிதியில் தம்முடைய
ஆர்த்தியும் அபி நிவேச அதிசயமும் தோற்றும்படி அவனுடைய உபகாரகத்வாதிகளைச் சொல்லி
மறுக்க ஒண்ணாத படி பிராட்டி திருவாணை இட்டு-
சர்வ பிரகார ரக்ஷகனான நீ எனக்குப் பூர்ண அனுபவத்தைத் தர வேணும் -என்று மிகவும் கூப்பிட
அவனும் இவருடைய வரவுக்கு ஈடாக குண விக்ரஹ விபூதி பரிபூர்ணனாய்க் கொண்டு பிராட்டியோடும் கூட
ஏக ரஸமாம்படி ஸம்ஸ்லேஷித்த பிரகாரத்தை அனுசந்தித்து
இனி இந்தப் பேற்றுக்குத் தட்டில்லை என்று நிஷ்கர்ஷித்து தாம் அவாப்த ஸமஸ்த பலரான படியைப் பேசி முடித்து அருளுகிறார் –

முனியே  நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

நிர்ஹேதுகமாக-உன்னுடைய வனப்பு முதலானவற்றையும் காட்டி-உன்னை ஒழிய செல்லாதபடி என்னைச் செய்து பொறுக்கக் கூடாததான இவ் உலகத்தில் என்னை வைத்து நீ சென்று பண்டு போலே ஒரு குணத்தை அனுபவிப்பிக்க- விட ஒண்ணாது-என்கிறார்-

முனியே-பஹுஸ்யாம் என்று மஹதாதி விசேஷாந்தமான ஜகத் ஸ்ருஷ்ட்டியைப் பண்ணுவதான மாநஸமான சங்கல்பத்தை யுடையையாய் இருந்துள்ள சர்வாதிகனே –தஜ்ஜலான்அவனே படைக்கப் படுகிறான் -அவனே படைக்கிறான் -அவனே பாதுகாக்கின்றான் அழிக்கின்றான்-அவனே பாதுகாக்கப் படுகின்றான்ஸ்தூல சூஷ்ம சேதன அசேதன விசிஷ்டம் -ப்ரஹ்மம் – விசேஷணம் மாறி விசேஷ்யம் ஒன்றாக இதம் சர்வம்-கரண களேபர விதுரமாய் அசித் கல்பமாய் – ஸோஸ்ய நஸா பன்னமாய்-சதேவ -என்று தன்னைச் சொல்லும் செயலாலே சொல்லும்படி ஸூஷ்ம அவஸ்தையை -பஜித்துக் கிடக்கிற அன்று –ச ஏகாகீ நரமேத -என்கிறபடி இவற்றினுடைய நோவை அனுசந்திக்கிற இருப்பைச் சொல்லுகிறது-சர்வேஸ்வரனும் தானும் இவற்றைப் பிரிந்து அசித்தைப் போன்ற தன்மை உடன் இருந்தான் என்பதை சொல்கிறது-முனிதல் கோபித்தல் – -என்றுமாம் —எனக்கு ருசியைப் பிறப்பிக்கைக்காக நாம ரூபங்களை உன் பேறாகத் தந்து பண்ணின கிருஷி பலித்து உன்னால் அல்லது செல்லாமையை உண்டாக்கிக் கொண்டு நீ கை விடப் பார்த்தாயா –என்றுமாம் –முனியே-அம்மே -என்பாரைப் போலே-ஆசைப்பட்ட எனக்கு இன்று உதவல் ஆகாதோ -நீ நினைக்கும் அன்றோ உதவல் ஆவது- நான் நினைக்கும் அன்று உதவல் ஆகாதோ -உன்னை ஒழிய ஒரு புகல் இல்லாதவருக்கு உதவுமவன் அன்றோ-

நான்முகனே-என்கிற இது -விசேஷமான சதுர்முகன் அளவிலே பர்யவசிக்கிறது அன்று -அவனுக்கு அந்தர்யாமியான அவன் அளவும் செல்லுகிறது-சேதனன் ஸ்வ சரீரத்தைக் கொண்டு தன் நினைவாலே கமன கமன ஆகமனாதி சேஷ்டிதங்களைப் பண்ணுமா போலே -ஸ்வ சரீர பூதனான சதுர்முகனைக் கொண்டு ஸ்வ சங்கல்பத்தாலே தேவாதி சதுர்முக ஸ்ருஷ்டியைப் பண்ணுகிறான் -ஸர்வேஸ்வரனே-இதனால் இவன் நினைத்த அன்று ஏதேனும் கொண்டு கார்யம் கொள்ள வல்லவன் -என்பதனைத் தெரிவித்த படி –
இருந்து படைக்கும் ஆசனத்தைப் போன்றவன் பிரமன் –
 அசேதன பொருள்களான மகத்த முதலான தத்வங்களைக் கொண்டு படைத்ததோடு- அறிவுள்ளவனான பிரமனைக் கொண்டு படைத்ததோடு வேறு பாடு இல்லை அவனுக்கு –சேதன பொருள்கள் -அசேதனப் பொருள்கள் என்று தம்மில் தாம் வேற்றுமை உண்டாகிலும்–அவனைக் குறிக்க பரதந்த்ரம் ஆகும் இடத்தில் இரண்டும் ஒக்கும் –ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய –

அழிக்கின்றவனையும் அழிக்கின்ற சர்வேஸ்வரனுக்கு சரீரமாய் இருக்கிற சிவன் உடைய
முக்கண் -என்ற பெயராலே -அவனில் வேறாய் -அவனுக்கு அந்தராத்மாவாய் இருக்கும் எம்பெருமானையே விளிக்கிறது –அப்பா – என்கிற சொல் உபகாரத்தைக் காட்டுகிறது-படைத்தலைக் காட்டிலும் அழித்தல் உபகாரமே அன்றோ – நான்கு நாள்கள் கழித்து படைத்தாலும் ஆத்மா கிடக்கும்–சடக்கென அழிக்கா விட்டால் ஆத்மாவை இழக்க வேண்டும்படி தீம்பிலே ஆயிற்று கை வளர்வது –

ஏகோஹவை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்ம ந ஈசான நேமே தயாவா ப்ருத்வி-ந நஷத்ராணி ந ஆப ந அக்னி ந சோம ந சூர்யஸ்- ஏகாகி நரமேதி -தஸ்ய த்யானாத்தஸ்ய தஸ்ய ஏகாகத்யா ந சேந்த்ரியாணி — அனபுனரேவ நாராயணஸ் அத்யம் காமம் மனஸா த்யாலீத-தஸ்ய த்யாநாத் தஸ்தஸ்ய லலாடாத் ஸ்வேத அபதத் தா இமா ஆப தத் ஹிரண்மயம் அண்டம் அவ்வத் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜாயதே-என்ற மகா உபநிஷத் வாக்யத்தை நினைப்பூட்டுதல் செய்கிறது – முனியே நான் முகனே முக் கண் அப்பா -என்கிற இந்த விளி வாக்கியம்-ஏக த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா சம்ஹாரக ததா-அத்யஷஸ் சானுமந்தாச குணமாயா சமாவ்ருத -ஜிதந்தா-நீ ஒருவனே உலகத்தை படைக்கிறவனும்-அப்படியே உலகத்தை அழிக்கின்றவனும் ஆகின்றாய் -என்றபடி-சிருஷ்டி ஸ்திதி அந்தகரனீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகம்-ஸ சம்ஜ்ஞானம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தனா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-23–படைத்தல் காத்தல் அழித்தலைச் செய்கிற-பிரமன் விஷ்ணு சிவன் என்ற பெயர்களை- பகவானான அந்த ஜனார்த்தனனே அடைகிறான் –

கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே-தாமரை பூத்தது ஒரு மாணிக்கம் புன் முறுவல் செய்தாப் போலே ஆயிற்று வடிவு இருப்பது–இதுவும் ஒரு வியாவ்ருத்தி இருக்கிற படி-பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே தான் இட்சுவாகு குலத்தாரோடும் யது குலத்தாரோடும் ஒத்த தரத்தனாய் கொண்டு திரு அவதாரம் செய்தாப் போலே-ஆதி தேவனாய் -விஷ்ணு -என்னும் திருப் பெயரை உடையவனாய்-தனது உருவத்தினாலேயே திரு அவதாரம் செய்து காப்பாற்றும் படியைச் சொல்லி விளிக்கிறது- நான் முகனே முக்கண் அப்பா –என்கிற இடத்தில் கண்களை செம்பளித்துக் கொண்டு போய் விசேடியத்திலே இளைப்பாறினார்–இங்கு விசேஷணமே தம் குறிக்கோள் ஆனபடியைச் சொல்கிறது -காத்தலானது தானே தண்ணளி செய்து செய்ய வேண்டுவது ஓன்று ஆகையாலே வேறு ஆள் இட ஒண்ணாது
ஆள் இட்டாலும் வேறு சிலரால் காப்பாற்ற ஒண்ணாது–-என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே –என்று-ஆழ்வார்கள் திரு மேனிக்கு அப்பால் போக அறியார்கள்–முறுவலும் கண்ணுமாய் இருபத்தொரு மாணிக்க மலை போலே யாய்த்து வடிவு இருப்பது -முறுவலையும் தப்பினாரையும் -அகப்படுத்த வற்றான கண் –

முனியே என்று சமஷ்டி ஸ்ருஷ்டியையும் –நான் முகனே என்று வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டியையும் –முக்கண் அப்பா சம்ஹாரத்தையும் –கரு மாணிக்கமே -பாலனத்தையும் அருளிச் செய்தார்
என் கள்வா-நான் அறியாமே இவ் வழகைக் காட்டி வஞ்சித்து என்னை அடிமை கொண்டவனே-சர்வேஸ்வரனுக்கும் தனது பொருளை களவு கொண்டு கொள்ளும் படிக்கு ஈடாக அன்றோ-இவனுடைய –என்னின் -உரம் இருப்பது–பண்டே உன் தொண்டாம் பழ உயிரை என்னது என்று-கொண்டேனைக் கள்வன் என்று கூறாதே -திவ்ய கவி -உன்னதமான ஆத்ம வஸ்துவை அபஹரித்துக் கொண்டு இருக்கிற என்னை விஷயீ கரிப்பதே –நான் அபஹரிக்கைக்கு அடி -கர்மம் -நீ அபஹரிக்கைக்கு அடி வடிவு அழகு –உடையவன் உடைமை பெற்றாலும் அபகாரம் என்னும் படி யாய்த்து ஸ்வாதந்தர்யம் வயிரம் பற்றின படி -நிர்ஹேதுகமாக உன் வடிவு அழகைக் காட்டி என்னை விஷயீ கரித்தவனே -என்று ஆழ்வான் நிர்வாஹம் 

தனியேன் ஆர் உயிரே –என் இசைவு இன்றிக்கே என்னை அங்கீ கரித்த அளவேயோ –
உன் சுவட்டினை அறிவித்து-பிரிந்தாலும் முடியாதபடி குணங்களின் தோற்றரவாலே உளேன் ஆம்படி செய்தவனே-இவ் உலக மக்களோடு பொருந்தாமையும்-பரமபதத்திலே புகப் பெறாமையும்-நோக்கித்- தனியேன் -என்கிறார் –உன்னைப் பிரிந்து பொருந்தாத இவ் உலகத்தில் இருக்கின்ற எனக்கு உயிருக்கு காரணமாய் உள்ளவனே 

இனி–சம்சாரத்தின் தண்மையை அறிந்த அளவன்றிக்கே முக்த ப்ராப்த தேசத்தையும் சாஷாத் கரிப்பித்து -உன் சுவட்டை அறிவித்த பின்பு –இனி ஒரு குண ஆவிஷ் காரத்தாலே பெற்றேனாகப் பண்ணி என்னை வஞ்சியாதே கொள்-இது 19 வைத்து இனி -3 தடவை 17 தடவை -இன்னும் ஒரு இனி தான் உண்டு –இனிப் பண்டு போலே உன்னுடைய குண சேஷ்டிதாதிகளை என் நெஞ்சிலே காட்டி வஞ்சித்து என்னை ஒன்றும் மறப்பிக்க ஒண்ணாது –இனி மெய்யே வந்து கலந்து அருள வேணும் -என்று கொண்டு தம்முடைய அபேக்ஷிதம் செய்து அல்லது எம்பெருமானுக்குத் திரு நாட்டிலும் கூட இருக்க ஒண்ணாத தொருபடி
பெரிய ஆர்த்தியோடே பெரும் கூப்பீடாகக் கூப்பிடுகிறார் –
நான் போகல் ஒட்டேன் -நானே அறிவேன் -என்ற கை பறியாலே பறித்த அறிவு அன்றிக்கே நீயே காட்டக் காணப் பெற்ற நான் விஸ்லேஷிக்க ஓட்டேன் —போகல் ஒட்டேன் –வரும் போது உன் ஸ்வா தந்த்ர்யத்தால் வரலாம் அத்தனை -அல்லது-போம் போது உன் கார்யம் உன்னதோ – இவர்க்கு இப்படி சொல்லல் ஆகிறது -சர்வஞ்ஞன் அறிய தமக்கு உண்டான விரைவாலேயும்- விரும்பிய அளவில் இவர் கார்யம் செய்யப் பெறாத பிற்பாட்டுக்கு-
ப்ரசீநந்து பவந்த மீ ஹ்ரீ ஏஷா ஹி மமதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபச்தேயை உபஸ்தித -ஆரண்ய -10-9- நான் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட அந்தணர்களால்-நான் அடையப் பட்டேன் என்னும் இது எனக்கு- மிகவும் நாணமாய் இருக்கிறது -நீங்கள் என்னுடைய தவறினைப் பொறுத்து அருள வேண்டும் -என்று- நாணம் கொள்ளுபவன் ஆகையாலும் அன்றோ –

ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–உன்னை அறிவதற்கு முன்பு த்யாஜ்யமான விஷயங்களைக் காட்டி அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் -உன்னை அறிந்த பின்பு குணங்களை ஆவிஷ் கரித்து அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் –என்னையே -அங்கன் செய்ய வேண்டுகிறது என் என்ன –ஏஹி பஸ்ய சரீராணி -என்கிறபடியே விரஹம் தின்று சேஷித்த உடம்பைக் காட்டுகிறார் –அங்கு சரீர மாத்ரம் -அவர்களுக்கு-இவருக்கு ஆத்மாவின் நாசம் அன்றோ –

——————-

மாயம்  செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

அவனுக்கும் மறுக்க ஒண்ணாத படி-பெரிய பிராட்டியார் திரு ஆணை இடுகிறார் – உன் திரு –நித்யைவ ஏஷா ஜகத்மாதா விஷ்ணோ ஸ்ரீ அநபாயிநீ-யதா சர்வகதா விஷ்ணு ததைவ இயம் த்வ்ஜோத்தம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17-விஷ்ணுவுக்கும் செல்வமாய் இருப்பவள் -என்கிறபடியே–உலகத்துக்கு எல்லாம் செல்வம் அவன் -அவனுக்கும் செல்வம் இவள் –
அன்றிக்கே
விஷ்ணுவுடைய திரு -என்றபடி-உன்னுடைய செல்வம் -என்னுதல்-
திருவுக்கும் திருவாகிய செல்வா -பெரிய திருமொழி -7-7-1-என்றும்-
ஸ்ரிய ஸ்ரீயம் பக்த ஜனைக ஜீவிதம்-சமர்த்ததம் ஆபத்சகம் அர்த்தி கல்பகம் -ஸ்தோத்ர ரத்னம் -45
தாம் ஸ்ரீ இதி த்வத் உபசம்ஸ்ரயநாத நிராஹூ-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -29
திருமகளாலே சர்வேஸ்வரன் தெய்வத் தன்மையை அடைகிறான் –
யாவர் ஒருவனுக்கு அந்த ஜனக ராஜன் குலத்தில் பிறந்த பிராட்டி மனைவியாய் இருக்கின்றாளோ-அவருடைய ஆற்றல் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது -என்கிறபடியே-
ஆதாரப் பிரதானமாய் இருத்தல்-ஆதேயப் பிரதானமாய் இருத்தல் –
ஆதேயத்துக்கு ஆதாரத்தை ஒழிய உளதாம் தன்மையும் இல்லை-
நிரூப்யத்துக்கு நிரூபகத்தை ஒழிய ஸ்வரூபத்தின் நிலை இல்லை –
ஒன்றை ஓன்று ஒழியில் ஸ்வரூபம் நிலை பெறுதல் இல்லை –

தன் ஆகத் திரு மங்கை தங்கிய திரு மார்வன் -நாச்சியார் திருமொழி -8-4-
தான் உளன் ஆகைக்காக -தன் சத்தை பெறுகைக்காக-நித்ய யுவதியான பெரிய பிராட்டியார் நித்ய வாசம் செய்யும்-வீறு உடைய திரு மார்பு –
சிரஞ்ஜீவதி வைதேஹி யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணா-யுத்தம் -66-10-பிராட்டியைப் பிரிந்தால் ஒரு கண நேரமும் உய்யேன் என்கிறபடியே –ஸ்ரத்தாயா -லஷ்மயா -தேவத்வம் ஈஸ்வரத்வம்-அடைகிறான் -ஆதார பிரதான்யம் -சர்வ ஆதாரம் ஈஸ்வரன் -பரிமளம் புஷ்ப்பம் இடமும்– ஒளி ரத்னம் -ஆதேயம் பிரதான்யம் -இங்கு மட்டும் சமப் பிரதான்யம் -என்றவாறு – -தன்னாகத்து திருமங்கை தங்கிய சீர் மார்பன் —ஆதார நிரூபக பிரதான்யம் இரண்டும் சொல்லிஆகத்து திருமங்கை -அவளுக்கு பிரதான்யம் -தங்கிய சீர் மார்பன் -அவனுக்கு பிரதான்யம் –-மற்றையோர்க்கு எல்லாம் உன்னுடைய ஆணை-உனக்கு நீ உகந்தார் இடும் ஆணை-அத்தனை அன்றோ –நின் ஆணை -திரு ஆணை-என்று இருவரையும் ஓக்கச் சொல்லவுமாம் -மயாச ஸீதயா சைவ சப்தோ அஸி ரகு நந்தன -என்கிறபடியே –

மார்வத்து மாலை –-கேவலம் செல்வமாய் இருக்கை அன்றிக்கே-திரு மார்புக்கு அலங்காரமாய் இருக்கை –-மார்புக்கு அலங்காரம் அவள்-அவளுக்கு அலங்காரம் மார்பு –நங்கை-வடிவு ஒழிய-மற்றை ஸ்வரூபம் குண விபூதிகளும் -அவளாலே என்கை-திருவாளனுக்கு திரு இல்லாதவர் ஒப்பு ஆகார் அன்றோ –வாசம் செய் பூங்குழலாள் –
நாற்றத்துக்கும் நாற்றம் கொடுக்கும் குழல்–சர்வகந்த -என்பவனுக்கும் நாற்றம் கொடுக்கும் குழல்–சர்வ கந்த -என்னும் ஏற்றம் அவனுக்கு இத் தலையாலே காணும் அவனுக்கு வந்தது-ஸ்ரத்தாயா அதேவ அஸ்னுதே தேவன் ஆனான் என்பர் ரஸோக்தியால் –

திரு ஆணை நின் ஆணை கண்டாய் – திருவினுடைய ஆணை காண் – என் கார்யம் செய்து அல்லது இட்ட அடி பேர ஒண்ணாதபடி உனக்கு இட்ட ஆணை –எல்லார்க்கும் அறப் பெரியவன் ஆகையாலே மற்றையோர்க்கு எல்லாம் உன்னுடைய ஆணை- உனக்கு நீ உகந்தார் இடும் ஆணை அத்தனை அன்றோ –

மாதரம் ரஷ கைகேயீம் மா ரோஷம் குரு தாம் ப்ரதி-மயா ச சீதாயாசைல சப்த அஸி ரகுநந்தன -அயோத்யா 118-27–ஒ பரதனே தாயான கைகேயியைக் காப்பாற்று-அவள் இடம் கோபம் வையாதே–மயா ச சீதாயா-என் மேலும் சீதை மேலும் ஆணை -என்ற பெருமாள் போலே-இங்கேயும்-பெரிய பிராட்டியார் ஆணை-நின் ஆணை -காண் -என்கிறார்

உமக்கு பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆனால் தலைவன் செய்த படி கண்டு இருக்கும் அத்தனை காணும் -என்ன–அடியவன் உளனாய் கண்டு இருக்க வேண்டுமே -உயிர் வேறு இன்றி -என்று–தம்முடைய இல்லாமையை விவரிக்கிறது மேல் இரண்டு அடிகளாலும்-மேலில் பாட்டுக்களாலும்-பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆனால் வேறு நிற்றலும் வேறாகத் தோன்றலும் உண்டோ -என்கிறார்–கண்கள் சிவந்து -2 1/2 பாட்டுக்கள் -பரமாத்மா ஸ்வரூபம் -மேலே 7 1/2 பாட்டுக்கள் ஜீவாத்மா ஸ்வரூபம் பிரித்தால் போலே-இங்கும் மேலே 8 1/2 பாசுரங்கள் -என்றவாறு –

நேசம் செய்து –-பெரிய பிராட்டியார் பக்கலிலும் செய்யாத அன்பை என் பக்கலிலே செய்து –
நான் அன்பு செலுத்த இருந்தாயோ-என் விடாய்க்கு அடி உன் விடாய் அன்றோ-ஈஸ்வரஸ்ய அஸ்ய ஸுஹார்த்தம் முதல் படி அன்றோ –

உன்னோடு என்னை –உன்னை அறிந்தாயோ-என்னை அறிந்தாயோ –-உயிர் வேறின்றி ஒன்றாகவே – உயிர் வேறுபாடு இல்லாதபடி அன்றோ என்னை அங்கீ கரித்தது-உன்னது என்னதாவியுமஎன்னது உன்னதாவியும் -4-3-9-என்னும்படி-என்னைப் பிரித்துக் காண ஒண்ணாதபடி அன்றோ நீ தலையாலே சுமந்தது–தலை தடுமாறாக செயல் புரிந்தது -கலவிக் காலத்தில் என் ஸ்வரூபம் நீ இட்ட வழக்காயும் உன் ஸ்வரூபம் நான் இட்ட வழக்காயும் படி அன்றோ -நீ செய்த செயல் – தலை தடுமாறி பரிமாறினாய் –தட்டு மாறின சீலம் திருக் காட்கரை அப்பன் –சூரியன் பிரபை என்று பிரித்து சொல்லும் படி அங்கு –இங்கு உயிர் வேறு இன்றி -விசத தமமாகப் பண்ணி -அன்றோ கலந்து –

கூசம் செய்யாது கொண்டாய் –சர்வஞ்ஞனான நீயும் வாசி வைத்துக் கலக்க அறிந்திலை-என் பக்கல் உள்ள தாழ்மையைப் பாராதே அங்கீ கரித்தாய் – முதலிலே என்னுடைய முன்னைய செயல்களைப் பாராதே மதி நலம் அருளினாய்–பின்பு -வளவேழ் உலகில் -நான் தாழ்ந்தவன் என்று அகல-என்னை என் வழியில் விடாதே–உன் செல்லாமையும் காட்டிச் சேர்த்துக் கொண்டாய்-இப்படி அன்று நீ செய்திலை யாகில் இன்று வருந்த வேண்டா ஆயிற்று –

1-சாஸ்த்ரங்களால் அறிவிக்கும் அளவு போராது-
2-குணங்களை அனுபவிக்கும் அளவாலே போராது-
3-உட் கண்ணால் காணலும் போராது –
4-உன்னைக் கிட்டி அனுபவிக்கும் படி செய்ய வேண்டும் –
வர வேண்டும் கூவ வேண்டும் -நடை அழகைக் காண வேண்டும் -மிடற்று ஓசையை கேட்க வேண்டும் -கைங்கர்யம் கொள்ள வேண்டும் –
அந்தோ –தன்னை ஒழியச் செல்லாமையை-தானே விளைத்து-கூப்பிட வந்து முகம் காட்டாது ஒழிவதே-

—————

கூவிக்  கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

கூவிக் கொள்ளும் அளவும் போராது-வந்து கூவிக் கொள்ள வேண்டும் -என்பார் –
வந்து -என்கிறார் –ஆற்றாமை மிக்காலும் நான் வந்து கிட்டுகை முறைமை அன்று-
உனக்கு தாழ்ச்சியுமாம் -என்கிறார் –எழுதும் என்னும் இது மிகை -9-8-9- என்பவனுக்கு-
நாம் செல்லுதல் என்னும் அது பொறுக்க முடியாதது -என்னும் இடம் சொல்ல வேண்டாவே அன்றோ–வருகை -அவனுக்கே உரியதாய் இருக்கிறபடி-அந்தோ – உனக்கு நிறம் அன்று என்று நான் சொல்ல வேண்டுவதே –

என் பொல்லாக் கருமாணிக்கமே--நீ அழைத்த போது கண்டு இருக்கல் ஆயிற்றே- நீ நீ அன்றிக்கே இருந்தாய் ஆகில்-க்ரமத்தில் அழைக்க நினைத்தாய் ஆகில் -அழகைக் காட்டி -உனக்கே உரியவன் ஆகும்படி செய்தது என்-ஸ்வரூபத்தை பார்த்து ஆறி இருக்க வேண்டாமோ -என்னில்அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேண்டுமே–ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் – பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி–கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ-வேரை அறுத்து படர் என்றால் படருமோ என்றபடி –என் உயிர் பிழைப்பதற்கு காரணமாய் இருப்பது ஓன்று உன்னை ஒழிய வேறு ஓன்று காண்கின்றிலேன் –ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு -என்று சொல்லாதவர்களுக்கும்-உதவுமவன் அன்றோ நீ –சொல்ல அறியாமையாலே-பிரமன் முதலாயினோர்கள் சொல்லார்கள் –-நித்ய ஸூரிகள் யான் எனது என்ற பற்று இல்லாதவர்கள் ஆகையாலும்- புதிதாக சொல்ல வேண்டாமையாலும் சொல்லார்கள்-

உம்பர் அந்த அதுவே –அவர்களுக்கும் மேலான நித்ய ஸூரிகட்கும்-அப்படிப் பட்ட-உபய லிங்க விசிஷ்டனாய் -எளிதில் அடையத் தக்க பொருளாக இருப்பவனே-ஸூ பாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன் –சதா பஸ்யந்தி ஸூரய -பிரமாண பிரசித்தியைச் சொல்லுகிறார்-அயர்வறும் அமரர்களுக்கு பரம ப்ராப்யன் ஆனவனே –அது -என்று-நித்ய ஸூரிகளோடு- பிரமன் முதலாயினர்களோடு- வேறுபாடு அற நிர்வாஹகனாய் இருக்கிற-
நீ வந்து என்னைக் கூவிக் கொள்ளாய் –

இப் பாட்டால் -கீழும் மேலும் சொல்லுகிற சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தனம் காரிய காரண பாவம் என்னுமத்தை அருளிச் செய்தார் யாய்த்து – சர்வம் கல்விதம் ப்ரஹ்ம —

—————

உம்பர்  அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

 ஒவ் ஒரு இடத்திலும் -சேர்த்து-ஆர்த்தி மிக கூப்பிடுகிறார்-பொறுப்பை நிர்வகிக்கத்த பின்பு -ஓர் ஒன்றே ரஷிக்க ஹேதுவான பின்பு அநாதரிப்பது —உம்பர் அம் தண் பாழேயோ –-மஹான் முதலிய காரணங்களுக்கு எல்லாம் காரியம் ஆகையாலே மேலாய் –-தன்னுடைய ஒரு கூற்றாலே கார்ய வர்க்கத்தை பிறப்பிக்க வற்றான ஆற்றலை உடைத்தாய்–வியக்கத் தக்க பரிணாமத்தை உடையதாய்- ஆத்மாக்களுக்கு போகத்தையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளலாம்-நிலமாய் இருந்துள்ள மூல பிரக்ருதிக்கு நிர்வாஹகன் ஆனவனே-உம்பர் அம் தண் பாழ் -என்கிற இதனால்-ஆத்மாக்களுக்கு சரீரமாய் -அவ் வழியாலே ஈஸ்வரனுக்கு சரீரம் ஆகை அன்றிக்கே யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிர்த்வி சரீரம் – ஆத்மாக்களுக்கு வேறு பட்டதான அசேதனப் பொருள்களுக்கும்-அவனை ஒழிய நிர்வாஹகர் இல்லை என்பதனை தெரிவித்த படி–

பாழேயோ -என்கிற இதனால் சுத்த பேதம் கொள்ளுகிற மீமாம்சகரையும்–-ஸ்வரூபத்தால் தாதாத்மியம் கொள்ளுகிற மாயாவாதிகளையும் அழிக்கிறது –நுட்பமான சித் அசித்துக்களை சரீரமாக உடையவன் காரணம் ஆகையாலே-காரணனாய் உள்ள நிலை சொல்லிற்று–இதனால் விசேஷணத்துக்கு முதன்மை சொல்லும் நியாய வைசேடிக மதங்களும்–விசேஷணதுக்கு பொய்மை கூறும் மாயாவாதி மதங்களும்-ஆழ்வாருக்கு உடன்பாடு அன்று -என்றதாயிற்று
நீயேயோ -என்கிற இதனால்–ஆத்மாவை ஒழிய சரீரத்துக்கு நிலை இல்லாதது போலே-
ஈஸ்வரனை ஒழிய ஆத்மாவுக்கு நிலை இல்லை என்றது ஆயிற்று –

ஆடையின் வெண்மை -படஸ்ய ஸுக்லயம் -வெண் தன்மை –நிஷ்கர்ஷகம்-வெண் ஆடை -அநிஷ்கர்ஷகம்-வை வைஷிகா நிஷ்கர்ஷகம்-சுக்ல பட -வெண் ஆடை சொல்லாமல் ஆடையின் வெளுப்பு-நியதி –நிஷ்கர்ஷகம்-கந்தம் பிருத்வி மண்ணில் மணம்-தர்மத்தை மட்டும் சொல்லும் தர்மியை சொல்லாதே

பிரகாரி பிரகார சம்பந்தம் -காரிய காரண சம்பந்தம் -நீயே பாழ்–சர்வம் கல் இதம் ப்ரஹ்மம் –
நீ ஆத்மா தத் தவம் அ ஸி
 –அதனுள் மீசை நீயே யோ-ஜகத் வியதிரிக்த விஷயங்களில் -நிஷ்கர்ஷம் தர்மம் தர்மம் சொல்லும் தர்மியை சொல்லாதே – பூவின் மணம் -மணத்தை தானே குறிக்கும் பூவைக் குறிக்காதேபகவத் விஷயத்தில் நிஷ்கர்ஷமான சொல்லும் அவனையே குறிக்கும் –நீ பிரகிருதி பாழ் சொல்லலாம் -என்றவாறு –-பிரகிருதி சப்தம் அவன் அளவில் பர்யவசிக்கும் –சர்வ சப்த வாச்யத்வம் –என் உடம்பு நாம் சொல்ல வேண்டும் -அவன் நானே உடம்பு -சொல்லலாம்-சரீர ஆத்ம பாவத்தால் – ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் காரணம் -என்றவாறு –
நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்மம் -அத்வைதிகள் –
விசேஷண பிரதான்யம் சொல்லும் வைசேஷிகர் –
நீ என்பதற்கு தானே ஆழ்வார் பிரதான்யம் என்கிறார் –
பொய் இல்லை -விசேஷணம் உண்டு என்கிறார் -ஆகையால் இரண்டு மதங்களையும் கண்டனம் பண்ணி அருளுகிறார் –

அம்பரம் நற் சோதி –ஆகாசமும் சிறப்புடைத்தான ஒளியும்–இவை இரண்டும் மற்றைய பூதங்களுக்கும் உப லஷணம்-அதனுள் பிரமன் அரன் நீ –-பஞ்சீக்ருதமான ஐம் பெரும் பூதங்களால் உண்டான-அண்டங்களிலே வசிக்கிற பிரமன் சிவன் முதலாயினார்களும்-நீ இட்ட வழக்கு -என்கிறது –-உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ 
தேவர்களையும் மற்றும் உள்ளாரையும் படைத்த முனியாய்-பிரசித்தமாய் இருப்பவனும் நீ-
பிரமன் அரன் நீ -என்ற ஒற்றுமை தன்மை-கார்ய காரண தன்மை அடியாய் வந்தது-
பரம் பொருளின் இடத்தும் உண்டானவை-அவனால் அழிக்கப் படுகின்றவை -காக்கப் படுகின்றன–ஆதலால் காணப் படுகின்றன இவை எல்லாம் ப்ரஹ்மம் அல்லவா -என்னுமாறு போலே–எல்லா பொருள்களையும் கர்மங்கட்கு தகுதியாக படைப்பதற்கு-
அவர்கள் செய்த முன் கர்மங்களை நினைக்கும் அவன் -முனி ஆகிறான்-ஸ்தூலமான சித்தியும் அசித்தையும் சரீரமாக உடையவன் என்பதனாலே-காரியமாம் தன்மை சொல்லிற்று ஆயிற்று – சதேவ ஏக மேவ அத்விதீயம் நீயே தான் காரணமும் காரியமும் -சாந்தோக்யம் தமிழ் செய்த மாறன் –

எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே – என் கார்யத்தை நீயே செய்வதாக ஏறிட்டுக்கொண்டு-அதனை விட்டு-அசேதனப் பொருளை பொகடுமாறு போலே பொகட்டாய்-என்னுதல்-
அன்றிக்கே –
எல்லாவற்றையும் நிர்வஹிக்கிற நீ-என் ஒருவனையும் என் கார்யம் செய்வேனாகப் பார்த்து-
உன் பக்கல் நின்றும் போர விட்டு விரும்பாமல் இருந்தாய் -என்னுதல்-

என்னை--உன்னால் அல்லது செல்லாத என்னை–போர விட்டாய்–அவன் பக்கலில் நின்றும் பிரி கதிர் பட்டு போந்தாராய் இருக்கிறபடி-குணம் நடையாடாத தேசத்திலே தள்ளினாய் -என்கிறார்-

———-

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே 
–10-10-5-

நீ –படைப்பே தொடங்கி-இவ்வளவும் வரப் புகுர நிறுத்தின நீ -என்றது-
ஞானத்தாலும் ஆற்றலாலும் நிறைவுற்று இருக்கிற நீ -என்னுதல் என்றது-
ஆள் பார்த்து உழி தரும் நீ -நான்முகன் அந்தாதி -60-
எதிர் சூழல் புக்கு திரியும் நீ -2-7-6-என்றபடி

பேற்றினைப் பெறுவது இறைவனாலே–அறிவு இல்லாத கர்மங்களின் கூட்டத்தால் அன்று – என்னும் இடம் தோற்றுகைக்காக –எத்தைக் கொண்டு என்னாதே -ஆரைக் கொண்டு -என்கிறார் – ப்ரஹ்மம் தானே பல பிரதன் -அசேதன கிரியா கலபரங்கள் இல்லையே –என்னது என்கைக்கு ஒரு கர்ணாதிகள் இல்லை-நான் என்கைக்கு ஒரு ஸ்வ தந்த்ரனான கர்த்தா இல்லை-இது வேறு உண்டோ என்று கருத்து –-ஆரைக் கொண்டு எத்தை என்கிற இரு உக்தியாலே விஷண்ணராகிறார்–

தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரைஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –நெருப்பினால் நன்கு காய்ச்சப் பட்ட இரும்பு-காய்ச்சல் தீர நீரை முற்றும் உண்ணுமாறு போலே என் ஆத்மாவை முற்றும் உண்ணுவதற்காக- எனக்கு உன்னுடைய எல்லை இல்லாத இனிமையைக் காட்டி-என்னை அடிமைப் படுத்தினாய் –
என் விடாய் தீரக் கலந்தாய் -என்று இருந்தேன்-உன் விடாய் தீரவாய் இருந்ததே அன்றோ -என்றது உனக்காக அன்றோ உன்னைக் காட்டிற்று -என்றபடி-
அன்றிக்கே
உயிரை என்ற இரண்டாம் வேற்றுமையை முதல் வேற்றுமையாகக் கொண்டு-
என் ஆர் உயிர் ஆனது உன்னை ஆரப் பருக -என்னவுமாம்-
அப்போது காய்ந்த இரும்பு அக் காய்ச்சல் தீரும்படி-நீரைப் பருகுமாறு போலே- என் ஆர் உயிர் ஆனது என் தாபம் எல்லாம் தீரும்படி- உன்னை அனுபவிக்க எனக்கு பண்டு எல்லை இல்லாத-இனியன் ஆனவனே -என்றுமாம் –

————-

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ
–10-10-6-

எனக்கு ஆரா அமுதமாய் -தேவ ஜாதியினுடைய உப்புச் சாறு அன்றிக்கே –சதா ஸேவ்யமுமாய்-நித்ய ஸூரிகள் எல்லாரும் கூட அனுபவிக்கும் உன்னை -சம்சாரியான எனக்குத் தந்தாய் –எனது ஆவியை –-என்னுடையது என்னுமதுவே காரணமாக- காதலியின் அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே-என் உடம்பை விரும்பினாய் –இன்னுயிரை –பகவான் உடைய அபிப்ராயத்தாலே–தவதவ நாறுகிற படி –தவ -பாரதந்த்ர்யம்-மற்றொரு தவ -உரிச் சொல்
அன்றிக்கே-செவ்வாய் கிழமை மங்கள வாரம் என்னுமா போலே –சரீரத்தோடு சேர்ந்து இருக்கையாலே தண்ணிது -என்று சொல்கிறார்

இனி உண்டு ஒழியாய்–நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் துணை செய்தது உண்டோ –திருவிருத்தம் தொடங்கி அனுபவித்தாயே –உன் கார்யத்துக்கு உன்னை வேண்டிக் கொள்ள வேண்டுமோ-இவருடைய அமுதத்துக்கு அனுபவிக்கும் தன்மை உண்டு காணும் –போக்த்ருத்வம் உண்டே –

ஈஸ்வரனுக்கு நிருபாதிக போக்த்ருத்வமும்-சேதனனுக்கு போக்யத்வமும் இறே ஸ்வாபாவிகம் –-அதனுடைய அனுபவ ஜெனித ப்ரீதியாலே வருகிற பர்யவாசநம் இ றே சேதன போக்த்ருத்வம் -ஈஸ்வர போக்யத்வமும்-ஆகை இறே ஸ்வரூபத்தை நிர்த்தேசித்து இவனுடைய போக்யத்வத்தையும் ஈஸ்வரனுடைய போக்த்ருத்வத்தையும் சொல்லி
சைதன்ய ப்ரயுக்தமான பர்யவசாநத்தாலே சேதன போக்த்ருத்வத்தையும் ஸ்ருதி சொல்லி முடித்தது-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத என்று –

இவ்வாத்மாவையும்-இதனுடைய சரீரத்தையும் விரும்புகை உனக்குச் சேருமோ-
நீ உகந்தாருக்குச் சேருமோ –

புண்டரீகக் கண்-அக்காயா தாமரை பூத்துக் கனியப் பழுத்தால் போலே ஆயிற்று–திரு மேனியும் திருக் கண்களும் திருப் பவளமும் -இருப்பது-பிராட்டி விரும்பும் துறைகள் அல்லவோ இவை-

உனக்கு ஏற்கும் கோலம் -என்று-அவ் அழகினை இங்கே ஏறிடுகிறார் -நியாயாதிதேசம் –
அதிதேசம் -ஏறிடுதல்-ஸ்வரூப அதிதேசம் இல்லை இங்கு -முற்றுவமை இல்லை-
நியாய அதிதேசம் -அது போன்று இது -சிறப்புடைத்து –காயம் பூ பொருந்தாதே ஹிரண்ய வர்ணை அன்றோ -அதனால் பெருமை பொருந்தும் -அவனைப் போன்ற அழகு உடையவள் என்றபடி —

கோலம் மலர்ப் பாவைக்கு அன்பா -என் அன்பேயோ--அவள் பக்கல் அன்புடையவன் -என்று தோற்றி இரா நின்றது- தம் பக்கல் -அன்பு என்றும் -அது உடையவன் என்றும்-தெரிக்க போகிறது இல்லை – ஞானத்தை உடையவனை ஞானம் என்ற சொல்லால் கூறுவது போன்று- தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -சாரீரக மீமாம்சை-2-2-20-

————-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ
 –10-10-7-

இறுதி இனி -வராஹ அவதாரம் சொல்லி நிகமிக்கிறார்ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -திரு விருத்தத்திலும் -நிகமித்தார்

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ –பிராட்டி பக்கல் உள்ள அன்பின் மிகுதியாலே-அந்த அன்பே காரணமாக அவளால் அங்கீ கரிக்கப் பட்ட- என் பக்கலிலே மிக்க அன்புள்ளவன் ஆனவனே–ரிஷிகளை ரக்ஷித்து அன்றோ பிராட்டியால் ஆலிங்கனம் பெற்றார் பெருமாள்
பட்டர் தம்முடைய அந்திம தசையில் அருளிச் செய்த வார்த்தை-
பெரிய பிராட்டியார்க்கு அன்பன் ஆகையாலே-அவளால் அங்கீ கரிக்கப் பட்ட நமக்கும் அன்பனாம் என்று-இப்பாட்டினை-நம்முடையார் த்வயத்தின் அர்த்தத்தோடு அனுசந்திப்பார்கள் -என்பது -என்று ஜீயருக்கு அருளிச் செய்தார் – திரு மால் என்னை ஆளும் மால் -10-7-5-என்னும்படியே- தம்முடைய அன்புக்கு அடி சொல்லுகிறார் –அந்தப்புரத்தைச் சார்ந்தவன் அன்றோ –என் அன்புக்கு அடி இல்லையோ –
திருவுக்கு பரிகரமான என்னிடமும் மால் -மால் நடுவில் -திரு என்னை இரண்டு பக்கமும் –
திரு மால் இடம் பேசி இருவருமாக என்னை ஆள்வார்கள் -கைங்கர்யம் கொள்ளுவார்கள் -என்றபடி –

கோல வராகம் – மாசு உடம்பில் நீர் வாரா நின்ற நிலை அன்றோ-இவருக்கு ஆலத்தி வழிக்க விஷயம் ஆயிற்று-அவன் அழிவுக்கு இட்ட வடிவிற்கே அன்றோ இவர் ஆலத்தி வழிக்கிறது-
மாசுடம்பின் நீர் வாரா மானமிலா பன்றி இவர் கண்ணுக்கு கோலா வராஹம் -ஆலத்தி எடுக்கும் படி –பிரணயித்துவுக்கு நமஸ்காரமாகுமே அலங்கரித்து வந்தால் -தாம் தாமான படியில் வரக் கூடாதே -ராஸிக்யம் பூர்த்தி –

உன்னைப் பெற்று இனி போக்குவனோ –ஸ்ரீ பூமிப் பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-என்னை பெறுகைக்கு செய்து-
என்னைக் கிட்டப் பெற்ற பின்பு-உன்னைப் போக விடுவேனோ–நீ செய்த செயலின் பலத்தால் சேர்ந்த நான்-கைப்பட்ட செல்வத்தை விடத் தக்கவனோ-

————–

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயாப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ
-10-10-8–

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை –ஓர் அச்சு இல்லாக் காசாய் போகிற்றாகில் போகிறது-என்று இருக்கிறேனோ- அன்றிக்கே-உன்னை நீ அறியாயோ -என்னுதல்
மிக மிகத் தாழ்ந்தவனாய் இருந்த எனக்கு-மிகவும் தாரகனான உன்னைப் பெற்று வைத்து-
இனி நான் உன்னை விடுவேனோ-உன்னை என் தனிப் பேர் உயிரை  –வரில் போகடேன் -கெடில் தேடேன் -என்று-இருக்கிற ஆத்மாவின் அளவேயோ–உன்னை நீ அறியாயோ–உலகங்கட்க்கு எல்லாம் ஓர் உயிரேயோ -8-1-5-என்கிறபடியே- எல்லா ஆத்மாக்களுக்கும் ஆத்மாவான உன்னை ––என் தனிப் பேர் உயிரை -என்றது தம்மில் வேறுபாடு –கைவல்யத்தில் இருந்து மாறுபாடு –உயிராய்– நல்வினை தீ வினைகளைச் செய்கிற ஆத்மாவுக்கு-நிர்வாஹகனாய்- அந்த இரு வினைகளைச் செய்கிறவன் தான் உனக்கு உரியவன் அன்றாகில் அன்றோ உன்னை விடலாவது –அனுஷ்டாதாவும் உன் ஆதீனம் —அனுஷ்டாதா கர்மம் கர்ம பலன்கள் -பிரகிருதி த்யாஜ்யம் ஆகிய சம்சாரம் உன்னை ஒழிய வேறு இல்லையே –

முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-
நீ வியாபியாது இடம் உண்டாகில் அன்றோ விடுவது -வியாப்பியங்கள் அறியாத படி அன்றோ நின்றாய்
கண்ணுக்கு விஷயம் ஆனாய் ஆகில் பிழையேனோ -மறைந்து அன்றோ உள்ளாய்
அல்லாதாருக்கு வெளியிடாமல் இருந்து என் முதல் தனி வித்து –
அறிவித்து அருளி -பிரதம ஸூ ஹ்ருத் நீ அன்றோ –
நான் ஓர் அடி விட நின்றேன் ஆகில் ஆறி இருப்பேன் –

————-

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ
–10-10-9-

எங்கும் வந்து முகம் காட்டலாம்படி- உலகத்தை உருவமாகக் கொண்டு இருக்கும்-இருப்பைக் காட்டித் தந்தோம் அன்றோ -என்ன- அது உகந்தார்க்கும் உகவாதார்க்கும் பொதுவாய் இருந்தது- வேறு உருவம் இல்லையாகில் அன்றோ-அதுவே அமையும்-என்று ஆறி இருக்கலாவது- பரம பதத்தில் வேறுபாட்டோடு கூடியதாய்-எல்லாம் நிறைந்ததாய் இருக்கும் இருப்பை-காண வேண்டும் –என்கிறார் –

முதல் -நிமித்த காரணம்-
தனி -துணைக் காரணம்-
வித்து -முதல் காரணம்-

முதல் தனி உன்னை –முதன்மை பெற்றவனாய்-ஒப்பற்றவனாய்-குணம் விபூதி முதலியவற்றால் நிறைந்து இருக்கின்ற நீயான உன்னை–தனி -சஹகாரி வேண்டாதவன் – ஸூய ரக்ஷணம் – அவனது உணவை பறித்தால் போலே –எனை நாள் வந்து கூடுவன் நான் –என்று வந்து கூடுவேன்--அவன் கொடுத்த ஞானத்தாலே ஸ்வரூபத்தை-உணர்ந்தாருக்கு-
தன்னை பிராட்டிமாரோடே சேர்ந்து பேசலாம் படியாய் இருக்கையால் –வந்து கூடுவேன் – -என்கிறார்–நான் -பரம பதத்தில் சுவடு அறிந்த நான் -என்றது–உனக்கு உரியதான விக்ரகத்தை காண ஆசைப் பட்ட நான் -என்றபடி-

முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உரு வாழ் பாழ் ஆய் –முதல்-முதன்மை பெற்றதாய்-தனி-உபமானம் இல்லாததாய்-அங்கும் இங்குமான மகத்து முதலான தத்வங்கள்-முழுவதிலும் எங்கும் ஒக்கப் பரந்து- ஆத்மாக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும்-விளைக்கும் விலை நிலமாக-இருக்கிற மூலப் பகுதிக்கு ஆத்மா ஆனவனே-

நடுவில் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருள-மீண்டும் அவதாரிகையும்-வியாக்யானமும் அருளுகிறார் –மூன்று ஸ்ரீ யபதி படி -ஆரம்பத்திலும் இங்கே போலே பலர் வர மீண்டும் அருளிச் செய்தால் போலே -இங்கும் வந்தார்கள் சாத்துமுறை அன்று —
முதல் தனி வித்தேயோ –
முதல் -நிமித்த காரணம்-
தனி -துணைக் காரணம்-
வித்து -முதல் காரணம்-

முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம் –-மூ உலகு என்கையாலே- கிருதகம்- அக்ருதகம்-கிருதகாகிருதகம் – என்று-மூன்று வகைப்பட்ட அண்டத்தைச் சொல்லுகிறது-
கல்பாந்தக காலத்தில் அழிவதும் அழியாததும் -அழிந்தும் அழியாமலும் இருப்பதும் –மகர் லோகம் -நெருப்பால் கதுவப் படும் -மேலே போவார்களாம் –

இத் துணையும் லீலா விபூதியோடு கூடி இருக்கிற இருப்பை சொல்லிற்று –
நித்ய ஸூரிகளுக்கு இனியனாய் இருக்கும் வடிவு அழகினை-கண்டு அனுபவிக்க வேண்டும் என்கிறார் மேல்-
உன்னை-
பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கும் நிலையைச் சொல்லுகிறது-
உன்னை என்ற அளவில் பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கும் நிலையைக் காட்டுமோ என்னில் –காட்டும்-
ஒண் தொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்க கண்ட சதிர் -4-9-10-என்கிறபடியே-
அவனையும் அவளையும் சொல்லவே பரமபதமும் அடங்கிற்றே அன்றோ–
ஸ்ரீ தேவி பூமா தேவி நடுவில் நின்ற நிலையை அன்றோ இந்த பதிகத்தில் சொல்லிக் கொண்டே வருகிறார் –
உன்னை-முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ –8-1-1-என்று ஐயுறும்படி இருக்கும் திரு முடியும்-
மாயன் குழல் –7-7-9-என்னும்படியான திருக் குழலும்-
கோளிளைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்-
கோளிளைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்-
கோளிளை யாவுடைய கொழும் சோதி வட்டம் கொல் -7-7-8-என்னும்படியான-அழகிய திருமுகமும்-
நாய்ச்சிமார் உடைய திருக் கரங்களின் ஆபரணங்களால் அடையாளம் செய்யப் பட்டதாய்-கனக வளையா முத்ரா – கமுகினுடைய இளம் கழுத்தையும் சங்கையும் ஒத்ததாய் இருந்துள்ள திருக் கழுத்தும்-
கற்பகம் கா அன்ன நற் பல தோள்களும் -6-5-8-
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாக -என்றும் அனுபவித்துக் கொண்டு-
இருக்கச் செய்தேயும் அகலகில்லேன் -என்று அவள் பிச்சேற்றும் படி -லஷ்மீ லலித க்ருஹம் -கௌஸ்துப ஸ்வஸ்தி தீபம் —
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பும் -1-8-10-
உள்ளத்துள் நின்று நிலாவுகின்றதே -அமலனாதி பிரான் -4–என்கிறபடியே
நித்யர் முக்தர் இவர்கள் உடைய உள்ளங்களிலே அழகு செண்டு ஏறுகிற -வையாளி கண்டு அருளும் –திரு உதர பந்தமும்-
வனப்பாகிற வாரிதி இத்தலப் பட்டு சுளித்தால் போல் இருக்கிற திரு உந்தியும்-தாமோதரத்வம் பிரதம தர விபூஷணம் —
ஒரு அடை மொழி இட வேண்டாதே -அல்குலும் -5-5-8- என்னும்படி இருக்கிற அல்குலும் -சிற்றிடையும்-
மாலைக் காலத்தில் தோன்றுகிற செந் நிறத்தாலே அழகு பெற்ற ஆகாசம் போலே இருக்க-
திரு அரை பூத்தால் போல் இருக்கிற –அந்தி போல் நிறத்தாடையும் –
வாழை மரம் முதலானவற்றைப் போன்ற கம்பீரமான திருத் தொடைகளும்-
தாமரை நாளம் போலே -பிராட்டி மார் தீண்டுவதால் மயிர் செறித்து-முட்களோடு கூடிய திருக் கணைக் கால்களும்-
சங்கு-சக்கரம் கற்பகம் கொடிதாமரை அங்குஜம் வஜ்ரம் ஆகிய-அடையாளம் பண்ணப் பட்டதாய் – நாய்ச்சிமாரும் கூட கூசித் தொட வேண்டும்படி மெல்லடியாக –
தேனே மலரும் -என்கிறபடி எல்லை இல்லாத இனியவான திருவடிகளையும் உடையையாய்-
ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து அருளுகிற உன்னை –

எனை நாள் வந்து கூடுவன்-என்று வந்து கிட்டக் கடவேன்–மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே பிராட்டிமாரைப் போன்று பேசலாய் இருக்கிறபடி–நான்-அவ் வடிவு அழகினைக் காண ஆசைப் பட்ட நான்-

முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ்  பாழ் ஆய் – முதன்மை பெற்றதாய்-உபமானம் இல்லாததாய்-அங்கும் இங்குமான மகத் தத்துவங்கள் முழுவதிலும் பரந்து-
மக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான-கருநிலமாய் உள்ள மூலப் பகுதிக்கு ஆத்மாவாய்- ஆய் -சரீர ஆத்மா காரண கார்ய நிபந்தமான சாமா நாதி கரண்யம் –

முதல்-மூலப் பகுதியை நோக்க -தான் முதன்மை பெற்றதாய்-நியமிக்க கூடியதாய்- தனி-உபமானம் இல்லாததாய்–சூழ்ந்து- மூலப் பகுதியிலும் மூலப் பகுதியால் ஆன பொருள்களிலும் பரந்து –-அகன்று ஆழ்ந்து உயர்ந்த –பரந்து இருக்கும் இடத்தில்-ஞானத்தாலே பத்து திக்குகளிலும் பரந்த-முடுவிலீயோ –அளவிட்டு அறிய முடியாததான-ஆத்மா தத்வத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே-முடிவு -என்பது அழிவினைக் குறிப்பதாகக் கொண்டு–சரீரத்தை போன்று அழிந்து போவது அன்றிக்கே-என்றும் உள்ளதான ஆத்ம தத்துவம் -என்னவுமாம் –

முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்-முழு உலகு ஆதிக்கு எல்லாம் முதல் தனி வித்தாய்-முதல் தனிச் சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலியாய்-இருக்கிற முதல் தனி உன்னைக் கண்டேன்- பரம பதத்தில் நித்ய ஸூரிகளுக்கு இனியனாய் இருக்கிற-உன்னை எனை நாள் வந்து கூடுவேன் நான்-

காரண கார்யங்கள் ஆன இரண்டு நிலைகளை உடைய-சித்துக்கும் அசித்துக்கும் நிர்வாஹகனாய்-இருக்கிற இருப்பைக் காட்டி அனுபவிப்பித்த இவ்வளவும் போராது-யுன்னை யுன்னை--உனக்கே உரிய விக்ரகத்தை உடையவனாய்-பரம பதத்தில் இருக்கும் இருப்பைக் கண்டு-அனுபவிக்க வேண்டும் -என்றதாயிற்று-

———–

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே
–10-10-10-

இவர் வேண்டிக் கொண்ட படியே- எல்லா வற்றாலும் நிறைந்தவனாய் கொண்டு வந்து கலந்து அருளக் கண்டு- அளவிட முடியாததான மூலப் பகுதி தத்வத்தாலும்-ஆத்ம தத்வத்தாலும்- உன்னுடைய நினைவின் உருவமான ஞானத்திலும்-பெரியதான என் விடாய் எல்லாம் தீர-வந்து -என்னோடு -கலந்தாய்- என்னுடைய விருப்பமும் ஒருபடி முடியப் பெற்றது-என்கிறார் – இனி இல்லை -என்னும்படி என்னை விடாய்ப்பித்து-அதற்கு அவ்வருகான விடாயை உடையனாய்க் கொண்டு-என்னோடு வந்து கலந்து- உன்னுடைய விடாயும் ஒரு படி நீங்கியதே -என்கிறார்–துயர் ஆறு சுடர் அடி -அறுக்கும் அறும் சுடர் அடி -இரண்டு நிர்வாகம் போலே –ஆழ்வார் விடாயைத் தீர்த்து அவன் விடாயும் தீர பெற்றான் என்று நிகமிக்கிறார் ––ஈஸ்வரனை ஒழிய ப்ருதக் ஸ்திதி இல்லையே
அப்ரஹ்மாத்மக தத்வம் இல்லையே -அதனால் இவற்றை சொல்கிறார் அவனையே சொல்லலாம் படி –

மக்களுக்கு புருஷார்த்தத்தை விளைத்துக் கொள்ளலாம் நிலமான-மூலப் பகுதிக்கு ஆத்மா ஆனவனே –அதற்குள்ளும் பரந்து-அதனைக் காட்டிலும் பெரியதாய்-அதனை ஏவுகின்றது ஆகையாலே மேலாய்- விகாரம் முதலானவைகள் இல்லாமையாலே சிறந்ததாய்-
மலர்ந்த ஒளி உருவமான ஆத்மா வஸ்துவுக்கும்-ஆத்மா ஆனவனே –
பேறு பெறுகிற இப்பொழுது-மூலப் பிரக்ருதியையும் ஆத்மாவையும் சொல்லுகிறது-
கீதையில் ஆத்மாவை -சர்வ கதம் -வெல்வேறு ஜீவாத்மாக்கள் -மூலம் வியாப்தி -என்றபடி –
தம்முடைய காதல் பெரியவற்றிலும் பெரியது என்கைக்காக –
அவற்றுக்கும் ஈஸ்வரனை ஒழிய-தோன்றுதல் நிலைத்தல் இல்லாமையாலே அவ்வளவும் சொல்லுகிறது –சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ – சுடர் இன்ப ஞானமேயோ -ஞானத்துக்கு இருப்பிடம் ஆனவனே-
சுடர் -சங்கல்ப ரூபமான -தடை இல்லாததால் சுடர் என்கிறார்-
அவை இரண்டினையும் தன்னுள் அடக்கிக் கொண்டு-அவற்றுக்கு நிர்வாஹகனான-நினைவின் உருவகமாய்- சுகத்தின் உருவமான ஞானத்தை உடையவனே என்று-நினைவின் உருவமான ஞானத்தினைச் சொல்லுதல்-
அன்றிக்கே
சுடர் ஞான இன்பமேயோ என்று-ஒளி உருவனும் -இன்பத்தின் உருவனும் ஆனவனே -என்று எம்பெருமானைச் சொல்லுதல் – அனுகூல ஞானமே ஆனந்தம் –

சூழ்ந்து – மேலே கூறிய மூன்று தத்துவங்களையும்-விளாக்குலை கொண்டு –அதனில் பெரிய –அவை குளப்படியாம் படி பெரிதான –-என் அவா –என்னுடைய காதலை-அறச் சூழ்ந்தாயே- அதனிலும் பெரிய உன் காதலைக் காட்டி வந்து கலந்தாயே –என்னுடைய கூப்பீடும் ஒருபடி ஒவும்படி பண்ணிற்றே-
பரதனை மடியில் ஏற்றுக் கொண்டு மகிச்சி உற்றவராய் தழுவினார் -என்கிறபடியே-மீண்டு புகுந்து- ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து-உச்சியை மோந்து உகந்து-அணைத்தால் போலே -ஆயிற்று- இவருடைய விடாய் கெடும்படி கலந்தது –
அற வஸ்து அல்பம் -என்கிறார் அபாவம் என்கிறார் இல்லை -சங்கல்பம் தடுக்க முடியாத ஞானம் –-அனுகூலமானதால் ஆனந்தம் –ஆஸ்ரயம் ஞானமேயோ-ஞானத்துக்கு ஆஸ்ரயம் ஞாதா என்றவாறு –மேரு மலை மேல் கீழே உள்ள கடுகு பார்த்து அல்பம் என்னுமா போலே -அல்பத்தவம் என்றவாறு –ஓ அதிசயம் ஒவ் ஒரு இடத்திலும் அடி தோறும் ஹ்ருஷ்டர் ஆகிறார் -பேர் ஆனந்தம் பெற்றார் 

————-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–
10-10-11-

நிகமத்தில்-அகில ஹேய பிரத்யநீகனாய்-கல்யாண குண ஏக நாதனாய்-
ஞான ஆனந்தஙகளே வடிவு உடையவனாய்-உயர்வற உயர்நலம் உடையவனாய்-
வனப்பு முதலாயின வற்றுடன் திவ்ய மங்கள விக்ரகத்தை உடையவனாய்-
அளவிறந்த திவ்ய ஆபரணங்களை உடையவனாய்-
திருமகள் மணமகள் ஆய்மகள் மூவருக்கும் நாயகனாய்-
அஸ்தானே பயசங்கை செய்யும் நித்யசூரிகள் -திரு வநந்த ஆழ்வான் -பெரிய திருவடி
எப்பொழுதும் அடிமை செய்யும் திருவடித் தாமரைகளை உடையவனாய்-
ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருப்பவனாய்-சர்வேஸ்வரனாய்-
தன்னாலே ஏவப்படும் பரமன் முதலாயினவர்கட்கும் அந்தராத்மாவாய்-
தன்னைக் காண வேண்டும் என்று விடாய் கொண்டு அடைகின்ற அடியவர்கள் விடாய்-தீரக் கலக்கும் தன்மையான எம்பெருமானைக் காண வேண்டும் என்று கூப்பிட்டு-
அவனைப் பெற்று துக்கம் அற்றவராய்-எல்லா தடைகளும் நீங்கினவராய்-
ஆழ்வாரின் பக்தியின் தூண்டுதலால் பிறந்த-ஆயிரம் திருவாய் மொழியும்-அவற்றில் வைத்துக் கொண்டு- மேலே கூறிய படி அன்றிக்கே பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படி-
பரமபக்தியால் பிறந்த அந்தாதியான-இத் திருவாய்மொழி வல்லார்-
சம்சாரத்தில் பிறந்து வைத்தே-அயர்வறும் அமரர்களோடு ஒப்பர்
-என்கிறார்-

அவா அறச் சூழ் அரியை – விரும்பியவற்றை எல்லாம் அருளும் சர்வேஸ்வரனை –தம்முடைய காதல் கெட வந்து கலந்த படியாலே- ஒரு அடைவு கொடாதே அது தன்னையே சொல்கிறார் –-அவா அறச் சூழுகையாவது– தன்னைக் காண வேண்டும் என்னும் விடாய் உள்ள-அடியவர்களின் விடாயை தீர கலக்கை –

அயனை அரனை அலற்றி--தன்னுடைய ஏவல் ஆள்களான பிரமன் சிவனுக்கும் அந்தராத்மாவானவனை–அயனை அரனை -என்கிற சாமாநாதி கரண்யத்தால்-
பிரமன் சிவன் போல்வார் ஈஸ்வரர் ஆவார்களோ என்னும் மக்கள் கொள்ளும் ஐயத்தை அறுக்கிறார்–அவர்களுடைய ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் சர்வேஸ்வரன் அதீனமாய்- இருப்பதாலே அவர்களுக்கு பாரதந்த்ர்யமே ஸ்வரூபம் –தலைவர்களாய் இருக்கும் தன்மை அவர்கள் செயல்கள் காரணமாக வந்த இத்தனை –
இச் சாமாநாதி கரண்யத்தை அறியும் தன்மை இன்றியே எளியராய் இருப்பார்-அறியத் தகும் முறையிலே கூறப்படும் வகைகளும் உண்டு-அவை
அயனை அரனை அவா அற்று-அரியை அலற்றி-வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -ஒரு வகை –
அயனை அரனை அவா அறச்-சூழ் அரியை அலற்றி-வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் –மற்று ஒரு வகை-

அலற்றி அவா அற்று வீடு பெற்று –-கூப்பிட்டு அவனைப் பெற்று எல்லா தடைகளும் நீங்கியவர்-ஆகையாலே துக்கம் இல்லாத ஆழ்வார் அருளிச் செய்த-

அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரம் –-பக்தியின் தூண்டுதலாலே பிறந்த ஆயிரம்-
இவருடைய அவா -மைத்ரேய பகவான் ஸ்தானத்திலே நிற்கிறது ஆயிற்று –
ஸ்ரீ பராசர பகவான் ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளியது மைத்ரேய பகவான் தூண்டுதல் போலே –அன்றிக்கே-அவா உபாத்தியாராக நடத்த -நடந்த ஆயிரம் –என்னுதல்-
ஆழ்வாருக்கு பிறகு நூறாயிரம் கவிகள் பேரும் உண்டானார்கள்- அவர்கள் கவிகளோடு கடல் ஓசையோடு வாசி அற்று-அவற்றை விட்டு இவற்றைப் பற்றுகைக்கு அடி-
இவருடைய காதல் பெருக்கு வழிந்து புறப்பட்ட சொல் ஆகை அன்றோ –-பக்தர்களுக்கு ஹிதமாக-பராங்குசர் அருளிச் செய்தவை –

முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து-தரிக்க ஒண்ணாத படியான-பரம பக்தியால் பிறந்த தாயிற்று-இத் திருவாய்மொழி-இந்த அவாவிற்கு உதவிற்றிலன் ஆகில்-ஈஸ்வரனுக்கு சைதன்யம் இன்றிக்கே ஒழியும் –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழிக்கு முன்பு-பர பக்தியாலே சென்றது –
சூழ் விசும்பு அணி முகில் -என்ற திருவாய் மொழி -பர ஞானத்தால் சென்றது
இத் திருவாய்மொழி -பரம பக்தியாலே –

பகவானுடைய திருவருள் பாதியும்-தாங்கள் பாதியுமாக சொல்லுமவர்களுக்கு-
சரீரத்தின் முடிவிலே இப் பரபத்தி முதலானவைகள் உண்டாகும்-
இவர் அடியிலே மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே-எழுந்து அருளி இருக்கும் போதே உண்டாயின –கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகின்ற பக்தியினுடைய இடத்திலே–சர்வேஸ்வரனுடைய திருவருள் நிற்க – அது அடியாக பிறந்த-பரபக்தி பர ஞான பரம பக்திகள் அன்றோ இவரது –

அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –இதனை அறிந்தவர்கள்-இவ் உலகத்தில் பிறந்து வைத்தே-நித்ய சூரிகளோடு ஒப்பர் –பிறந்தே உயர்ந்தார் –சர்வேஸ்வரனுடைய அவதாரம் போன்றதாம்-இவர்களுடைய பிறப்பும் –பிறக்க பிறக்க அவனுக்கு உதகர்ஷம் உண்டானாப் போலே -அனுக்ரஹ நிபந்தனம் சர்வேஸ்வரன் அவதாரம் —

பக்தி பூர்வகமாக பிறந்த பிரபந்தம் -பரமபக்தி அளவும் –வேதத்துக்கும் பரிக்ரகம் கிடைத்ததே ஆழ்வார் வாயனவாய் ஆனதால்-பொற்குடம் ஆனதே சர்வரும் அனுபவிக்கும் படி –

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading