Archive for the ‘தனியன் வ்யாக்யானம்’ Category

ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த ஸ்ரீ திருப்பதிக் கோவை –

December 21, 2021

ஓங்கும் திருவரங்கர் தாம் உகந்த ஒண் பதிகள்
மூங்கில் குடி யமுதன் முத்தமிழால் -நீங்காத
அன்பர் தமர் வாழ அருள் செய்த அந்தணர் கோன்
தன் பதுமத் தாளே சரண் –தனியன்

——

பங்கயத்தோன் இக்குவாகுக்குப் பண்டு அளிப்பப்
பொங்கும் அயோத்திப் புரிசை நகர் –தங்கிச் –1-
சில நாள் இனிது அமர்ந்து தென்னிலங்கைக் கோமான்
குலம் வாழக் கொண்டு ஏகும் வேலை -நவ மார்ந்த –2-
சென்னி வளவன் வள நாட்டுத் தெய்வ நதிப்
பொன்னி நடுவு புளினத்துப் -பன்னரிய –3-
இந்து மடுக்கரைக்கே இன்பமுற வைத்து அருளிச்
சாந்தி செய்யக் கருதிச் சாருங்கால் –முந்து(முந்தி) –4-
மருவார் பொழில் குருகை மாறன் முதலானோர்
திருவாய் மொழிச் (மலர்ச் )சுருதிச் செய்யுட்க்கு உருகா –5–
யிரங்கா என விரங்கா யான் இவனோ வைகல்
வரம் தா என விசைய மாற்றிப் –பரந்தாமன் –6–

(செய்யுள் குருகா அரங்கர் அவன் பாங்காய் இனி அவணே வைக
வரந்தா என இசைய மற்றப் பரந்தாமன் – பாட பேதம் )

கோழி மயிலுடனே கோள் அரவின் மீது ஏறி
யூழி பயிலும் உயோகு துயில் – வாழி –7-
திருவரங்கம் கோயில் திரு வாழ் உறந்தை
தரு வலரும் பூஞ்சோலைத் தஞ்சை –அருள் கலந்த –8-
அன்பில் கரம்பனூர் அம் பொன் மதிள் வெள்ளறை
தென் புள்ளம் பூதங்குடி திருப்பேர் அன்பால் –9–
அரும் தவம் சேர் ஆதனூர் ஆதி அழுந்தூர்
திருந்து சிறு புலியூர் சேறை பொருந்து –10-

தலைச்சங்க நாண் மதியம் தண்டடங்கள் எங்கும்
குலைத்தெங்கு சூழ் தென் (தண்) குடந்தை நலத்த புகழ்க் -11-
கண்டியூர் விண்ணகரம் கண்ணபுரம் கோயில்
எண்டிசையும் ஏத்தும் எழில் ஆலி தெள் திரை சூழ் -12–
நாகை திரு நறையூர் நந்திபுர விண்ணகரம்
ஈகை மறவாத இந்தளூர் யோக மணிச் (மலிச் )–13–
சித்ர கூடம் காழிச் சீ ராம விண்ணகரம்
கொத்தலரும் பூஞ்சோலைக் கூடலூர் முத்தி தரும் –14–
கண்ணங்குடி கண்ண மங்கை கவித்தலம் (மே )
திண்ணம் திரு வெள்ளியங்குடி (யே ) எண்ணரிய -15–

நாங்கூர் மணி மாடக்கோயில் நவையறு சீர்ப்
பூங் காவளம்பாடி வண் புருடை தேங்கு புனல்ச் (புகழ்ச்)–16-
செம் பொன் செய் கோயில் திருத்தெற்றி யம்பலம் மே
வம்புந்தும் வைகுந்த விண்ணகரம் உம்பர் –17-
அரிமேய விண்ணகரம் அம் பொன் மணிக்கூடம்
பரன் மேவிய பார்த்தன் பள்ளி தரு மாய்கை (திரு முட்டம் )–18–
(விள்ளும் )வெல்லும் திருத்தேவைனார் தொகை வெள்ளக் குளம் (மே )
வள்ளல் வழுதி வள நாட்டில் (நாட்டுத் )தெய்வத் (செல்வத் )–19–
திருமாலிருஞ்சோலை தென் கோட்டி மெய்யம்
தருவாரும் புல்லாணி தண் கால் திரு மோகூர் –20-

கூடல் அணி வில்லி புத்தூர் (கோதில் )கோலத் திருக் குருகூர்
தோடார் தொலை வில்லி மங்கலம் (மே ) மாடலருஞ் –21–
சீ வர மங்கைப்பதி தென் திருப்பேர் (சீ ) வைகுந்தம்
பூவில் அயன் ஏத்தும் புளிங்குடி (யே) நாவில் –22-
வளர்ந்த புகழ் சேர் வர குண மங்கை
குளந்தை குறுங்குடி தென் கோளூர் -விளங்கு –23-
மலை நாட்டு அநந்த புரம் வண் பரிசாரம் சொற்
கலை நாட்டு(க்)ங் காட்கரை தென் மூழி சிலை நாட்டும் – 24–
தென் குட்ட (நாட்டில் ) நாட்டுத் திருப்புலியூர் செங்குன்றூர்
பொன் குட்ட வாவிப் புகழ் நாவாய் அன்புற்ற –25-

வல்ல வாழ் மன்னு திரு வண் வண்டூர் வாட்டாறு
வில்லி வாழும் புரிசை வித்துவக்கோடு அல்லல் –26-
அறுக்கும் கடித்தானம் ஆறன் விளை சீர்
பொறுக்கும் புகழ்த் தொண்டை நாட்டில் எறிக்கும் –27-

அயிந்திர புரம் கோவலூர் அம் பொன் மதிள் கச்சி
வியன் திரு அத்தியூர் வெக்கா குயின்ற –28-
பரமேச விண்ணகரம் பாடகம் மாடத்
திரண் மேய சீர்த் திருத் தண்கா உரன் மேய –29-

(அயிந்திர புரம் கோவல் அத்தியூர் வெக்கா
துயின்ற பரமே சுர வூர் இயஞ்சேரும் -28
பாடாக மாடகத்தின் பாவை மகிழ்ந்து உறையும்
ஏடலரும் தாமரைகள் எந்நாளும் மாடலரும்-29 )

நீரகம் வேளுக்கை நிலாத் திங்கள் தண்டம் (மே ) சொற்
காரகம் கார்வானம் கள்வனூர் ஊரகமே –30-
மட்டவிழும் சோலை சூழ் எவ்வுள் மறை பயிலும் (பரவும் )
அட்டபுய கர மா மாதி நகர் சிட்டர் தொழ –31-
நின்றவூர் புட் குழி நீடு திரு நீர் மலை
என்றும் அழகார் திருவிட வெந்தை துன்று –32–

கடன்மல்லை யம் பொற் கடிகைச் சிலம்பு (கதிர் இனம் சேரும் )
(தடமார் )திடமாம் திருவல்லிக் கேணி வட வெல்லை–33–
வேங்கடம் சாளக்கிராமம் வியன் புரசை (வியன் சேர் )
நாங்காணி சேர் நயிமி (நாங்கை நமி ) சாரணியம் தெங்கு (புனல் )புகழ்க் –34-
கங்கைக் கரை கண்டம் சீர் பத்ரியாச்சிரமம்
சிங்க வேள் குன்றம் திருப்பிரிதி பொங்கு புகழ் –35-

வைகுந்தம் பாற் கடல் மா நீர் அயோத்தி நகர்
பொய் குன்றச் செய் (குன்று சீர் ) மதுரைப் பொன்னகரம் மொய் (மெய் )குன்றா –36-
அண்டர் திருவாய்ப்பாடி ஆழ் கடல் சூழ் வண்டுவரை
தொண்டர் குழாம் சூழும் இந்தத் தொல் பதிகள் கண்டும் –37-

தொழுதும் வலம் செய்தும் சொல்லித் துதித்தும்
முழுதும் உணர்ந்தும் முறையே எழுது கலை –38-
ஓதியும் வேதம் உரைத்தும் உலகு அறியத்
தாதின் அடிமை தலை நின்றும் வேத –39-
நிழலே சரணம் என நினைந்து வாழ்வார்
கழலே நமக்கு கதி –40–

(தொழுது வலம் செய்து சொல்லித் துதித்து
முழுது உணர்ந்தோர் கூறு முறையே எழுது-38-
கலை ஓதி வேதம் உரைத்துக் கனிந்தும்
உலகு அறிய நாம் அடியோம் என்று தலை நின்று –39-
வாழ நினைவீர்கள் வம்மினோ வம்மின் நம்
மாழ்வார் சரண் இணை நினைவீராம்–40- )

மின்னு திகிரி வலவன் விசும்பு எங்கும்
பன்னு திருப்பதிகள் வா வெல்லாம் துன்னு கலை
கற்றார்கள் தொண்டர் கழல் கமலம் கால் பணியப்
பெற்றார் பெறாதார் பிறப்பு

———-

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- திரு நூற்று எட்டு திருப்பதி அந்தாதி

ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
யோர் பதின் மூன்றா மலை நாடு ஓரிரண்டாம் சீர் நடு நா
டாறோடீ ரெட்டுத் தொண்டை யவ்வட நாடாறிரண்டு
கூறு திரு நாடு ஒன்றாகக் கொள்–6-

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்
பொற் பாதம் என் தலை மேல் பூ –109-

பதின்மர் உரைத்த பதி ஒரு நூற்று எட்டும்
துதி செய்ய அந்தாதி சொன்னான் அதிக
குணவாள பட்டர் இரு கோகனத் தாள் சேர்
மணவாள தாசன் வகுத்து

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த – ஸ்ரீ ஞான சாரம்–ஸ்ரீ பிரமேய சாரம் -தனியன் வியாக்யானம் -ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள்

December 19, 2021

கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே!
ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம்!!

கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் (அவதரித்தவரும்) தோன்றியவரும்,
துறவிகளுக்குத் தலைவரான ஸ்ரீராமாநுஜரைத் தஞ்சம் புகுந்தவரும்,
தமது ஞான ஸார, ப்ரமேய ஸார நூல்களில் ஆசார்ய பெருமை பேசியவருமான
அருளாள மாமுனியைப் பற்றுகின்றேன்.

——–

ராமாநுஜார்ய ஸச் சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் !
சதுர்த் தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே !!

ராமாநுஜாச்சார்யருக்கு நல்ல சீடரும் வேதம் முதலிய அனைத்து சாஸ்த்ரங்களில் வல்லுநரும்,
நான்காவது நிலையான துறவறத்தை மேற்கொண்டவருமான அருளாள மாமுனியை வணங்குகிறேன்.

(ராமாநுஜார்ய ஸச் சிஷ்யம்)
யக்ஞ மூர்த்தி என்னும் பூர்வாசார பெயருடன் முன்னைய நிலையில்
எம்பெருமானாரோடு பதினெட்டு நாட்கள் நடத்திய வேதாந்த விசாரத்தில் தர்க்கம் செய்து
எம்பெருமானாரைச் சோர்வுறச் செய்கையில்,
பேரருளாளரான அத்திகிரி வரதராஜப் பெருமாள் கனவில் தோன்றி,
“எம்பெருமானாரே! நீர் சோர்வுற வேண்டா, உமக்குத் திறமையுடைய ஒரு நற்சீடனை உண்டாக்கிக் கொடுத்தோம்.
அவனை வெல்வீராக” என்று உரைத்த குருபரம்பரைத் தொடர்களை இங்கு நினைவு கூர்க.

(வேத சாஸ்திரார்த்த ஸம்பதம்) –
உடையவரோடு பதினெட்டு நாட்கள் தர்க்கம் பண்ணின திறமையாலும் ஞானஸார ப்ரமேயஸார நூல்களில்
வேதம் முதலிய சாஸ்திரங்களிலிருந்து சாரமான கருத்துக்களை அழகிய வெண் பாக்களினால்
எடுத்துரைத்தமையாலும், இவரது சாஸ்திர புலமை நன்கு விளங்கும்.

(தேவராஜ முனிம்) –
தேவராஜனான பேரருளாளனுடைய திருவருளால் எம்பெருமானாருக்கு சீடரான பெருமையும்,
ஞான, பக்தி, வைராக்யங்களில் ராமாநுஜ முனிக்கு நிகராக விளங்கிய சிறப்பும் பற்றி
“அருளாள முனி” என்று திருநாமம் பெற்றமையும் உணரப்படுகிறது.

————-

சுருளார் கருங்குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் – சொன்ன
பொருள் ஞான ஸாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கொளிசேர்
அருளாள மாமுனியம் பொற்கழல்கள் அடைந்த பின்னே.

நான்கு வேதங்களிலிருந்து உட்பொதிந்த ஆழ் பொருள்களையும், திருமந்திரத்தின் மெய்ப் பொருள்களையும்
ஞான ஸார ப்ரமேய ஸாரம் என்னும் நூல்களைக் கொண்டு அறிவைப் புகட்டியவரும்,
ஞானச் சுடர் விளக்காய் விளங்குபவரும், அருளாள மாமுனி என்னும் திருநாமம் உடையவருமான ஆசார்யருடைய,
அழகியதும், அனைவருக்கும் அடையத் தகுந்ததுமான அவரது திருவடிகளை அடைந்த பிறகு,
ஊழ் வினைகள் அழிவதற்கான வழியை அறிந்து கொண்டேன்.
ஊழ் வினையால் அறிவில் மயக்கம் ஏற்படுகிறது. அவ்வறிவு மயக்கத்தால் பெண்வழிச் சேரலில் துவழ்ச்சி ஏற்படுகிறது.
அத் துவழ்ச்சிக் காரணமாக அவர்களது சுருண்ட கருங்கூந்தலிலும் வேல் போன்ற பார்வையிலும் மனம் நெகிழ்கிறது.
அருளாள மாமுனிகளின் திருவடிகளை அடைந்த பிறகு காமம் முதலிய
இக் குற்றங்களிலிருந்து நீங்குவதற்கு வழி அறிந்து கொண்டேன் என்பது கருத்து.

அருளாளப் பெருமாள் எம்பெருமானாராகிற ஆசார்யருடைய திருவடிகளைப் பற்றின பிறகு
அவர் அருளிச் செய்த ஞான ஸார ப்ரமேய ஸார ப்ரபந்தங்களால் அறிவுக்குத் தெளிவு பிறந்தது.
அதனால் பெண்களின் அழகிய கூந்தலிலும் வேல் போன்ற விழியிலும்
மனம் நெகிழும் தீய வினைகளை அழிக்கும் வழிகளை அறியப் பெற்றேன் என்று கருத்து.

பெண்ணாசையைச் சொன்ன இதில் மற்றும் உண்டான கோபம், உலோபம், மோகம், மதம், பொறாமை
முதலிய குற்றங்களும் அடங்கும்.
“காமம், வெகுளி, மயக்கம் இம் மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய்” என்ற திருக்குறளின் சொல்படி
மனிதப் பண்பாட்டை அழிக்கும் குற்றங்கள் ஆசார்ய கடாக்ஷத்தால் தீரும் என்பது பாடலின் அருங்கிய கருத்து.
இதனால் இவ்வாசிரியருடைய பெருமை கூறப்பட்டது.

————

நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீள் நிலத்தில்
பாங்காக நல்ல பிரமேய சாரம் பரிந்தளிக்கும்
பூங்காவனம் பொழில் சூழ் புடை வாழும் புதுப் புளி மண்
ஆங்காரம் அற்ற அருளாள மாமுனி யம்பதமே

பதவுரை

நீள்நிலத்தீர் – மிகப் பெரிய உலகத்தில் வாழ்கின்ற மக்களே
பாங்காக – பயனுடயதாக
நல்ல – ஆன்ம நலத்தைத் தரவல்ல
பிரமேசாரம் – திருமந்திரத்தின் சுருக்கத்தை
பரிந்து – அருள் கூர்ந்து
அளிக்கும் – அருளிச் செய்யும்
பூங்கா – அழகான பூஞ்சோலைகளும்
வளம் பொழில் – செழிப்பான தோப்புக்களும்
சூழ் புடை – நாற்புறமும் சூழ்ந்துள்ள
புதுப் புளி – புதுப் புளி என்னும் இடத்தில்
மன் – புலவர் (தலைவராக)
வாழும் – வாழ்ந்தவரும்
ஆங்காரமற்ற – செருக்குச் சிறிதும் இல்லாதவருமான
அருளாள மா முனி – அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்னும் திருநாமமுடைய ஆசார்யரின்
அம்பதமே – அழகிய திருவடிகளையே
என்றும் – எப்பொழுதும்
நீங்காமல் – பிரியாமல்
நினைத்து – எண்ணிக் கொண்டு
தொழுமின்கள் – வணங்குவீராக

நீள்நிலத்தீர்! அருளாளமாமுனி அம்பதமே என்றும் தொழுமின்கள்! என்று கொண்டு கூட்டுக.
“என்றும்” என்ற சொல்லை
“நீங்காமல்” என்றும்
“நினைத்து” என்றும்
இரண்டு இடங்களிலும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.

அதாவது
“என்றும் நீங்காமல்” என்றும் என்றும் நினைத்து” என்றும் கூட்டுக.

பொருளை அறிவதற்கு அளவு கோலாயிருப்பது பிரமாணம் அதனால் அறியப்படும் பொருளுக்குப்
பிரமேயம் என்று பெயர்.
அதனுடைய சுருக்கு சாரம். அது பிரமேய சாரம் எனப்படும்.

பிரமாணம் – அளக்கும் கருவி
பிரமேயம் – அளக்கப்பட்ட பொருள்
ஸாரம் – சுருக்கம்
மானம், மேயம் – சாரம் என்பர்

அதாவது பிரமாணம் திரும்ந்திரம்.
அதனுடைய பொருள் பிரமேயம்.
அப்பொருளின் சுருக்கம் பிரமேய சாரம் என்பதாம்.
நல்ல மறை என்பது போல நல்ல பிரமேய சாரம்
அதாவது குறை சொல்ல முடியாத நூல் என்பதாம்.

பாங்காக:
கற்போர் மனம் கொள்ளும்படியாக அதாவது எளிமையாக என்று பொருள்.
ஆகவே இந் நூலில் பத்துப் பாடல்களால் திருமந்திரப் பொருளைச் சுருக்கமாகச் சொல்லப் படுகிறது.
அதனால் இதற்கு பிரமேய சாரம் என்று பெயர்.

பரிந்தளிக்கும்:
அனைத்து உயிர்களும் சேமத்தை அடைய வேண்டும் என்ற கருணையினால் அதனை நூலாக்கிக் கொடுக்கும்
ஓராண் வழியாக உபதேசித்து வந்ததை பாருலகில் ஆசையுடயோர்கெல்லாம் தெரியும் வண்ணம்
நூலாக்கிக் கொடுக்கும் என்பதாம்.

அருளாள மாமுனி: என்பதால்
அனைத்து உயிகளிடத்தைலும் அருளே கொண்டவர் என்றும்,
அது முனிவர்களுக்கு அல்லாது ஏனையோர்க்கு அமையாது.
ஆதலால் “மா முனி” என்றும் அம் முனிவருக்குரிய உயரிய பண்பு.
யான் எனது என்னும் செருக்கு அறுதலே என்பது “ஆங்காரம் அற்ற” என்ற அடைமொழியுடன் சிறப்பிக்கப்பட்டது.
அத்தகைய ஆசார்யருடைய திருவடிகளையே தொழுமின்கள்.வணங்குவீராக.
வணங்கும் பொழுது அத் திருவடியை மனதில் நினைத்துக் கொன்டே தொழுவீர்களாக.
அத்துடன் நிழலும் உருவும் போல் பிரியாமல் பணிவீர்.

(அம்பதம்) என்ற இடத்தில்
இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கு நின்றது.
ஐயும் கண்ணும் அல்லா பொருள் வையின் மெய் உருபு தொகா -இறுதியான என்ற
தொல்காப்பிய சொல் இலக்கணம் காண்க.

அம்பதத்தை: “அம்” என்றால் அழகு.
பதத்திற்கு அழகாவது தன்னடியில் பணியும் சீடர்களைக் கைவிடாதது.
“ஏ” பிரிநிலை”ஏ”காரம் அவரது திருவடியையே தொழுமின் என்றதால் அதுவே போதும்.
மற்ற இறைவன் திருவடி தொழ வேண்டா என்பதாம்.
இறைவனும் முனியும் ஒன்றானதால்.

புதுப் புளி: என்பது அவர் வாழ்ந்த தலம் இடம்.

மன்: வேத சாஸ்திர விற்பன்னர்கள் பலருக்குத் தலைமையாய் இருந்தவர் என்பது பொருள்.
புதுப் புளி என்ற அத்தலம் பூஞ்சோலைகளாலும் பல மரங்களும் அடர்ந்த தோப்புக்களாலும் சூழப்பட்ட
செழிப்பான இடம் என்றவாறு.
இதனால் அறிவு வளர்ச்சி ஒழுக்கநெறி முதலியவற்றிற்கு ஏற்புடயதான இடம் என்பது புலனாகிறது.

புடை: பக்கம். நாற்புறமும் என்று பொருள்.

பெரிய இவ்வுலகத்தில் வாழும் மக்களே! உயர் வீடு பேறு அடையத்தக்க திருமந்திரப் பொருளை
மிக்க கருணையோடு எளிய தமிழில் “பிரமேய சாரம்” என்னும் இந்நூலில் சுருங்க கூறியவரும்
பூஞ்சோலைகளும் தோப்புக்களும் நாற்புறமும் சூழ்ந்து அழகாயுள்ள புதுப் புளி என்னும் இடத்தில் வாழும்
அறிஞர்களுக்குத் தலைவரும் செருக்கு மில்லாதவருமான அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
திருவடியையே எப்பொழுதும் நெஞ்சில் நினைந்து வணங்குவீராக. என்ற கருத்து.

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–ஸ்ரீ வேதாந்த தீப–மங்கள ஸ்லோகங்கள்–

November 29, 2021

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

————–

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ் யாஸ்பதமிதி I
ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய-ஆளவந்தார்- நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ச்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

—————-

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

———–

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் –
காரணம் ஏவ -உபாசனம் –
சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –

ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ–8 விசேஷணங்கள் –

1-ஸ்ரீ யகாந்தன் –
ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –
அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –காந்தஸ்தே புருஷோத்தம –
ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு –
இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் –
அப்ரமேயம் –ஜனகாத்மஜா

2–அநந்த-அளவற்ற –
தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – –
விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே

3-வர குண கணகை ஆஸ்பதம் வபுகு –
இருப்பிடம் -திவ்ய விக்ரஹம்
வபுகு –ஸ்ரேஷ்டமான –
யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –

4-ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் –
அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்

5-பரம கம் பதக -பரம ஆகாசம் –
தெளி விசும்பு -இருப்பிடம்

6- வாங்க மனஸ்-யோகோ அபூவுகி –பிறர்களுக்கு அறிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்

7-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான்
அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –

8- ஆதி புருஷ மனஸ்
புருஷன் -ஜகத் காரண பூதன் –
அந்தர்யாமி –
புரி சேதைகி புருஷன் –

தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம்
திருவடித் தாமரைகளில் -சததம் பற்றுடையவையாக –

மே மனஸ் பவது -அடையட்டும் –
இதுவே பரம புருஷார்த்தம் –

————–

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய

பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –

தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து

ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்

ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –

ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது

அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –

ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –

இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –

ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்

யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –

க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –

இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –

லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-

ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்

வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –

ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –

குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்

அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

———————————

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

ஸ்வாமி இந்த முதல் ஸ்துதியில் வேதங்களின் உள்ளுறைப் பொருளான விஷ்ணுவுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.

கண்ணன் எம்பெருமானும் கீதையில் இதை, “ஸர்வை: வேதை: அஹமேவ வேத்ய:”
(எல்லா வேதங்களினாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன்) என்று தெரியப்படுத்தினான்.

வேதங்கள் அனைத்தின் உள்ளுறைப் பொருளாக விஷ்ணு விளங்குவதால் ஸ்வாமி தொடங்கும் போதே
அவனுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.

இதன் மூலமாகத் தம் சிஷ்யர்களையும் இதை ஸேவிப்பவர்களையும் விஷ்ணு பகவானுக்குத் தங்களை
ஸமர்ப்பித்துக்கொள்ள வழி வகுக்கிறார்.

சிஷ்யர்களை வழிப்படுத்தும்போதே வேத ஸாரத்தையும் அறிவுறுத்தினாராகிறார்.

விஷ்ணு பகவான் மூன்று வகைகளில் உருவகப் படுத்தப் பட்டிருக்கிறார்:

(i)அசேஷ சித்-அசித்-வஸ்து-சேஷிணே

அவனே ஒன்று விடாது எல்லாப் பொருள்களுக்கும் அதிபதி.
அவன் ஆதிபத்யத்தில் உணர்வுள்ளன உணர்வற்றன யாவும் அடங்குவன.
சித் அசித்-அறிவுள்ளன அறிவற்றன யாவும் அடங்குவன.

அசேஷ பதம் சித்திலும் அசித்திலும் அந்வயிக்கும் –

நம் அனுபவத்தில் நாம் உணர்வுள்ளன/உணர்வற்றன யாவும் சில தொடர்புகளாலும் நெறிமுறைகளாலும்
கட்டுப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம்.

அவை ஒன்றுக்கொன்று ஸ்வதந்த்ரமாயும் இல்லை.
அவற்றின் அவ்வப்போதைய நிலை சில நெறிகளுக்குட்பட்டே அமைகின்றன.
அவை யாவுமே ஓர் உயர் கோட்பாட்டுக்குட்பட்டே இயங்குகின்றன.

அவை “சேஷ பூதர்”, அதாவது கட்டுப்பட்டவர்கள் என அறியப்படுகின்றன.

இவ்வாறின்றி, தன்னிச்சையாய் ஸ்வதந்த்ரனாய் இருப்பவன் சேஷி எனப்படுகிறான்.

இப் பதம் லீலா விபூதி நாயகத்வத்தைக் காட்டும்-
விசிஷ்டாத்வைத சித்தாந்தம் சுருக்கமாக இங்கே அருளிச் செய்கிறார் —

அசேஷ சித் -ஜீவன் ஒருவன் அல்ல பலர் என்றதாயிற்று

வஸ்து-ஜகத் மித்யை பொய்யானது இல்லை மெய் என்றதாயிற்று

ஜீவாத்மா தன் சரீரத்தை தனது வசமாக்கிக் கொள்வது போலே அனைத்துக்கும் ஜீவனாகிய ப்ரஹ்மம்
அசேஷ சித்துக்களை அசித்துக்களையும் தனது வசமாக்கிக் கொள்கிறான்

ஜகத் ப்ரஹ்மமே என்றதும் சரீராத்மா சம்பந்தம் அடியாகவே ஒழிய
ஐக்கியம் சொல்வது அல்ல என்றதும் ஆயிற்று

இத்தால் ப்ரஹ்மம் வேறு சேதன அசேதனங்கள் அடங்கிய ஜகத் வேறு என்றதாயிற்று –

ii) சேஷ சாயினே

அவன் ஆதிசேஷனாகிற திவ்ய நாகத்தின் மீது சாய்ந்துள்ளான்.

ஸம்ஸார பந்தங்களிலிருந்து நித்யமாக விடுவிக்கப் பட்டிருப்பதால் நித்யஸூரி அல்லது ஸர்வகால முநி எனப்படுகிறான்.

இதனால் எம்பெருமானின் ஆதிபத்யம் என்பது ஒரு உண்மையான உறவு என்பது ஆதிசேஷன் போன்ற
நித்யஸூரிகளால் நமக்குத் தெரிகிறது.

ஞானம் பிறந்த தசையில் எம்பெருமானுக்கு நாம் சேஷ பூதர்கள் எனும் உணர்வுண்டு என்பதும் தெரிகிறது.

இதுவே சேஷ -சேஷி ஸம்பந்தம்.

இது நித்ய விபூதி யோகத்வத்தை சொல்லும்-

நித்ய முக்த பத்னி பரிஜனாதிகளுக்கும் இது உப லக்ஷணம்

முதல் குறிப்பால் ஸ்வாமி எல்லாவற்றுக்கும் விஷ்ணுவுக்கும் உடையவன்-அடிமை என்றார்.
இரண்டாவது குறிப்பால் ஸம்பந்த ஞானம் பெற்றவனே முக்தனாகக் கடவன் என்கிறார்.

ஆனால் ஒருவனுக்கு அடிமைப் பட்டிருப்பது துக்கமான விஷயமன்றோ?
ஆகில், இந்தத் துக்கத்தைத் தவிர்க்க ஒவ்வொருவனும் இந்த ஞானப் ப்ராப்தியைத் தள்ளிப் போட விரும்புவானன்றோ?

இதற்கு விடையாவது,
இவ்வுறவு உண்மையானது என்பதால் ஒவ்வொருவரும் உணராமல் போனாலும் இவ்வுறவிலிருந்து தப்ப முடியாது.
மேலும் எம்பெருமானின் ஆளுகைக்குட்பட்டிருப்பது அளவற்ற இன்பமே ஆதலால் துன்பம் இல்லை என்பதே.
இதையே ஸ்வாமி மூன்றாவது குறிப்பில் விளக்குகிறார்.

[iii] நிர்மலானந்த-கல்யாண-நிதி:-நிர்மலன் -அனந்தன் -கல்யாண நிதி

விஷ்ணு பகவான் தூய முடிவற்ற மங்கள ஸ்வரூபி. அவன் தன்னிகரற்றவன்.
நித்ய ஸூரிகளும் அவனாலேயே ஆனந்தம் அனுபவிக்கின்றனர்.

உணர்வுள்ளவை யாவும் சம்சார சம்பந்தத்தினால் தூய்மை இழக்கின்றன.
ஆனால் அவன் எப்போதும் தூயோனாயுள்ளான்.
அவனவதாரங்கள் தூயன, தெய்வீகமானவை. அவன் விடுபட்டவன், மற்றவர்களை விடுவிக்கவும் வல்லவன்.
ஆகவே நாம் அவனைச் சரண் புகுதலும், மோக்ஷம் பெறுதலும் நியாயமே .

நிர்மலன் அவன் குற்றமற்றவன்,
அனந்தன் -அபரிச்சேத்யன் -தேச கால வஸ்து த்ரிவித பரிச்சேத ரஹிதன் –
கல்யாண நிதி -நற்குண ஸமுத்ரம், அழகின் முழு உரு,

ஆகவே விஷ்ணு அநுபவம் ஆனந்தம் தருவது.

அவன் ஸ்வாமித்வம் நமக்கு ஸுக ரூபமானது.
ஞானிகளும் முக்தரும் நித்தியரும் இந்த ஆனந்தத்தை அனுபவிதத்திருப்பவர்கள்.

ஸம்சார ஸம்பந்தம் தாற்காலிகம், துன்பம் நிறைந்தது.

விஷ்ணு ஸம்பந்தம் நித்யமானது, இன்பமயமானது.

அகிலஹேய ப்ரத்ய நீகத்வமும் கல்யாண குணாத்மகாத்வமுமே ப்ரஹ்மத்துக்கு உபய லிங்கங்கள் –

அவனது எல்லையற்ற மங்கலத்தன்மை அவனது பூர்ணத்வத்தைக் காட்டுகிறது.
அவன் ஸ்வாமித்வத்திலும் கூட அபூர்ணனல்லன்.
அவனது இந்த பூர்ணத்வமே நமக்கு நம் விடுதலையை, மோக்ஷத்தை உறுதி செய்கிறது.

அவனே விஷ்ணு பகவான். அவன் தூரஸ்தனல்லன்.
அவன் எல்லாவற்றிலும் நிறைந்துள்ளான் என்பதே அச் சொல்லின் பொருளுமாகும்.

எல்லாவற்றிலும் நிறைந்திருந்தும் அவன் அவற்றால் மாசடைவதில்லை.

சூர்யனின் கதிர்கள் போல் அவன் அப்பழுக்கின்றித் திகழ்கின்றான்.
சூர்யனின் கதிர்கள் சேற்றின் மேல் படிந்தாலும் அவை அழுக்கடைவதில்லை அன்றோ!

நாம் விஷ்ணுவைச் சரண் அடைகின்றோம்.
நம
கீழே ப்ராப்யமான ப்ரஹ்மத்தை விவரித்து அருளி
இனி பிராபகம்- இதுவே ப்ரஹ்மத்தை அடையும் உபாயம் -என்கிறார்

கேவலம் நமஸ்காரத்தை சொன்னது அன்று இது –
பக்தி பிரபத்தி பர்யந்தம் நமஸ் அர்த்தம் கொள்ள வேண்டும்

ஆக இத்தால் ஸ்வ சித்தாந்த சுறுக்கங்களை அருளிச் செய்தார் ஆயிற்று

—————–

பரம் ப்ரஹ்மை வாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோ பாத்யா லீடம் விவசம் அசுபஸ்யாஸ் பதமிதி I
ஸ்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய நமஸ்கார ரூபம்-

இந்த ஸ்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.

அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் பொருளைப் புரிந்து கொள்வதில் இருந்த குழப்பங்களை நீக்குவதில்
அவரது பெரும்பங்கு இதில் வற்புறுத்தப் படுகிறது.
வேதங்களின் நிலைப்பாட்டை விளக்க
ஸ்ரீ யாமுநாசார்யர் ஸித்தித்ரயம் மற்றும் ஆகமப் ப்ராமாண்யம் போன்ற க்ரந்தங்களை சாதித்தருளினார்.

இந்த ஸ்லோகத்தில் எம்பெருமானார் தம் காலத்தில் இருந்த
மூன்று ப்ரதான வேதாந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.
இம் மூன்று கோட்பாடுகளையும் ஏற்பதில் உள்ள பெரும் ப்ரச்சினைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக, மாற்றுக் கோட்பாடுகளைப் பற்றிய ஒரு சிறு விமர்சத்தை நமக்கு வைக்கிறார்.

சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மதங்களை நிரசித்தும்
தம்மை ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அருளிய
ஸ்ரீ ஆளவந்தாரை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் இதில்

(i) பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி

ப்ரஹ்மம் நிர்விசேஷ சின் மாத்திரம் -ஞான மயம் -ஸ்வயம் பிரகாசம் -மற்றவை அனைத்தும் மித்யா –
அந்த ப்ரஹ்மமே மாயையால் அஞ்ஞானத்தால் ஜகத்தாகத் தோற்றம் அளித்து
ஜென்ம ஜரா மரணாதி துக்கங்களை அடைகிறது என்பர் அத்வைதிகள்

அத்வைதத்தில் பர ப்ரஹ்மமே குழம்பியுள்ளது, ஸம்ஸாரத்தில் அந்வயிக்கிறது.

“பரம்” எனும் சொல் எல்லா வகையிலும் மேன்மையைக் குறிக்கும்.
வேதங்களில் ப்ரஹ்மத்தின் மேன்மை விளக்கப் படுகிறது.

ப்ரஹ்மம் எல்லா மங்களங்களாலும் நிறைந்தது, ஒரு குறையுமற்றது.
ஆகவே தான் அது ப்ரஹ்மம் எனப்படுகிறது,
அறியப்பட வேண்டியது என ஓதப்படுகிறது.
தன்னை உபாசிப்போர் குறைகளைப் போக்கி,
அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறது.

அத்வைதத்தில் இரு முரண்பாடுகள் உள்ளன –
(i) எல்லா வகையிலும் மேன்மையுற்ற ப்ரஹ்மமே அஞ்ஞானத்தில் மூழ்குமாயின் அதை
ப்ரஹ்மம் என்றழைக்க அதன் மேன்மை தான் யாது?
(ii) எல்லாரையும் உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய ப்ரஹ்மம் சோகிக்குமாயின் அதை உய்விப்பார் யார்?

”ஏவ” எனும் சொல் இந்த முரண்பாடுகளை வலியுறுத்துகிறது.
எப்பொழுதும் தனக்குத் தானே பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ப்ரஹ்மத்துக்கு தன்னை அறியாமையாகிய
அவித்யை எப்படி சம்பவிக்கும் -என்கிற விரோதமும்
ப்ரஹ்மமே சம்சாரம் அடைந்தால் மோக்ஷம் பெற வேதாந்த ஸ்ரவணாதிகள்
செய்ய வேண்டி இருக்கும் விரோதமும் உண்டாகுமே

தனக்கு ஏற்படும் அஞ்ஞானத்தினால் ப்ரஹ்மம் மாயையில் சிக்குண்கிறது
(ப்ரம பரிகதம்) இம்மாயையே பார்வையில் வேறுபாட்டை விளைக்கிறது.

அத்வைதத்தில் ப்ரஹ்மம் ஒன்றே உணர்வுள்ளதாக ஒப்புக் கொள்ளப் படுவதால் வேறுபாடு பற்றிய
உணர்வு பூர்வமான அநுபவம் மட்டுமே இருக்க முடியும்.

ப்ரஹ்மம் மாயையை அனுபவிப்பதில்லை,
பிற யாவும் அனுபவிக்கின்றன என அத்வைதியால் வாதாட இயலாது.
ப்ரஹ்மம் தவிர்த்த ஏனைய யாவும் மாயையின் பாற்பட்டனவே.

மாயையினால் உண்டான ஒன்று மாயையை அனுபவிப்பது என்பது முரண்பாடாகும்.

முதலில் தான் ஸ்ருஷ்டித்த மாயையின் விளைவு தன் மாயையைத் தானே உருவாக்க முடியாது.
மாயையின் பொருள்களை அநுபவிக்க வேண்டுமாயின் அம்மாயை முன்பே இருக்க வேண்டும்.
ஆகவே, ப்ரஹ்மம் தானே அதை முதலில் அநுபவித்தாக வேண்டும்.

(ii) தத் பரோபாத்யாலீடம் விவசம்

ப்ரஹ்மன் மாற்றம் விளைப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது.

இது பாஸ்கராசார்யரின் கொள்கையை விளக்குகிறது.
தான் மட்டுமே ஸத்யமாயுள்ள ப்ரஹ்மத்தை மாயை-அவித்யை எவ்வாறோ குழப்புகிறது
என்பதை நிலை நிறுத்துவதில் உள்ள ஸ்ரமங்களை பாஸ்கரர் உணர்ந்திருந்தார்.

“பர” என்றதால்
இயல்வுகள் யாவும் தனிப்பட்டவை, உண்மையானவை என்பதும் பெறப்படுகிறது.
இவ் வியல்புகள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை.
இவற்றால் தளை யுண்டு ப்ரஹ்மம் கர்ம சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது.

மேலும் இவ் விளக்கத்தில், மேம்பட்ட ஒரு ப்ரஹ்மம் தானே கட்டுண்பதும்
துக்கத்தில் உழல்வதுமான முரண்பாடும் உள்ளது.

(iii) அசுபஸ் யாஸ் பதம் = ப்ரஹ்மம் அசுபங்களின் இருப்பிடமாகிறது

இது யாதவ ப்ரகாசரின் கொள்கையை விளக்குகிறது.

யாதவ ப்ரகாசர் ப்ரஹ்மமே அறிவுள்ளன-அறிவற்றன இரண்டுமாகவும் பிரிந்திருப்பதாகவும்,
ஆகவே அசுபங்களின் இடமாய் இருப்பதாகவும் கருதினார்.

அறிவற்றனவின் அசுபத்தன்மை அவை எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதாலும்,
நிலை நில்லாமையாலும் ஏற்படுகிறது.

அறிவுள்ளனவற்றின் அசுபத் தன்மை அவை கர்ம ஸாகரத்தில் மாட்டிக் கொள்வதாலும்
அவ்வினைகளால் துன்புறுவதாலும் ஏற்படுகிறது.

வேதங்களில் சொல்லப்படும் ப்ரஹ்மம்
“ஸ்வேதர-ஸமஸ்த-வஸ்து-விலக்ஷண”மாய் , அதாவது
மற்றெல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டும்,
அவற்றின் அசுபங்கள்/அமங்கலங்கள் யாதொன்றும் இல்லாமலும் இருக்கிறது.

ஆனால், யாதவப்ரகாசரின் யோஜனையில், வேதக் கோட்பாட்டுக்கு விருத்தமாக,
ப்ரஹ்மமே அமங்கலங்களின் இருப்பிடமாய் உள்ளது.

”பரம் ப்ரஹ்மைவ” எனும் சொற்கள் இம்மூன்று கோட்பாடுகளுக்குமே பொருந்தும்.
அதாவது
எல்லாப் பொருள்களுக்கும் மேலானதும்
எல்லா வகைகளிலும் மேம்பட்டதும்
ஆனந்த ஸ்வரூபமானதும்
குறைகளே அற்றதும்
எல்லாவகைகளிலும் மங்கலமானதும் பரிசுத்தமானதும் ஆன ஒன்றை
சங்கரர், பாஸ்கரர், யாதவப்ரகாசர் மூவருமே
அஞ்ஞானம், அமங்கலங்கள், துக்கம் இவற்றால் உழல்வதாகக் கருதுகிறார்கள்.

(iv) ச்ருதி ந்யாயா பேதம் ஜகதி விததம் மோஹநம் இதம் தம:

ப்ரஹ்மத்தை பூர்ணம் என்றும், பூர்ணமன்று என்றும் இவ் விளக்கங்களால் அறிந்து கொள்வது
தவறான அறிவும், அறியாமையும் ஆகும்.

“இதம் தம:” என்றது இதையே.
இத்தகைய புரிந்து கொள்ளல் தர்க்க நெறிகளுக்கு முரணானது.
வேதங்களைப் புரிந்து கொள்ள உதவும் நியாய சாஸ்த்ரத்துக்கு முரணானது ஆகும்.

கேள்வி: இவை யாவும் தவறான புரிந்து கொள்ளல், வேதங்களுக்கு விரோதமானவை,
வேதங்களின் அங்கங்களான நெறிகளுக்கு முரணானவை….எனில், இவற்றை விமர்சிப்பான் என்?

விடை: ஏனென்றால், அவைகளும், “ஜகதி விததம்” உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன,
பலரும் இக் கொள்கைகளால் மயங்கியும் கிளர்ச்சியுற்றும் உள்ளனர்.

அவ்வாறே இருக்கட்டுமே.
இக்கருத்துகள் தவறானவை, மறைகளின் கருத்துக்கு முரணானவை, தமக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவை
பலராலும் பின்பற்றப் படுபவை…..இருக்கட்டுமே!
நாம் ஏன் அவற்றை விமர்சிக்க வேண்டும்?

விடை: ஏனெனில் இப் பாதைகளைப் பின்பற்றினால் பற்றுவோர் வழி தவறிப் போவர்.
இக் கருத்துகள் “மோஹநம்” = மதி மயக்குபவை.
ஆகவே, அறியாமை இருள் விமர்சிக்கத் தக்கதே.

இப்படிச் சொல்லி, ஆசிரியர் இவ் விமர்சத்தைத் தாம் செய்ய மேற்கொண்ட பின்னணியை விளக்கி யருளுகிறார்.

வேதங்களுக்குத் தவறான விளக்கங்களை ஸ்வாமி தம் கருணையினால் மறுத்துரைக்கிறார்.

ஞானம் பெற்றவர் பெறாதோருக்கு அறிவுறுத்தி நெறிப் படுத்துவது கடமையாகும்.

ஆகிலும் ஸ்வாமி இதைத் தம் ஆசார்யரான
ஆளவந்தார் மேல் ஏறிட்டு ஸாதிக்கிறார்:

(v) யே நா பாஸ்தம் ஸ ஹி விஜயதே யாமுன முநி:
இச் சொன்ன அறியாமை இருளை நீக்கும் யாமுன முநி வென்று நிற்பாராக!

தர்க்க விரோதமானதும் சாஸ்த்ர விரோதமானதுமான கோட்பாடுகளை மறுத்து ஒழிப்பதில் தம்
ஆசார்ய அருள் பெரும் பணியினை நினைவு கூறுகிறார்.

தம் ஆசார்யருக்கு இவ்விஷயத்தில் ஜய கோஷம் இடுகிறார்.

வேதார்த்த ஸங்க்ரஹத்தின் மூலம் யாமுநாசார்யரின் வெற்றியை ஸ்வாமி நிரந்தரமாக்கியுள்ளார் என்ன வேண்டும்.

தம் குருவின் திருவுள்ளத்தை சீடர் இக் க்ரந்தம் முழுக்கத் தெளிவாக அர்த்த புஷ்டி யுள்ளதாக்கி யுள்ளார்.

————————

வேதங்களும் அவற்றின் இறுதியான வேதாந்தமும்
உலகம் யாவும் நன்றாய் இருக்க அவச்யமான ஒழுக்க நெறியைப் போதிக்கின்றன.

இதன் மூலம், ஸ்வாமி அனைத்து வேதங்களின் நோக்கமே முழு சமுதாயத்தின் மங்களமே என அறுதியிடுகிறார்.
வேதாந்தத்தைக் கற்பதன் மூலம் ஒரு சரியான பொருளைப புரிந்து கொள்ள முடியும்.

வேதாந்தத்தைப் பல்வேறு வழிகளில் புரிந்து கொள்ள முடியும் என்பதை ஸ்வாமி மறுக்கிறார்.

ஒரு தனிப்பட்ட ஆத்மா, பரமாத்மா இரண்டுமே துல்யமாகப் புரிந்து கொள்ளப் படவேண்டும்.
அதன்பின், ஆத்மா, பரமாத்மா இரண்டைப் பற்றிய அறிவோடு
ஒவ்வொருவரும் தந்தமக்குள்ள ஸமூஹ நிலை,
வகுப்புக்கேற்ப மனோபாவத்தோடு செயல் முறையில் ஈடுபட வேண்டும்.
இந்தச் செயல்பாடே பக்திக்கு வழி வகுக்கும்.

உலகம் முழுதுக்கும் மங்கள ஹேதுவானதால்
வேதாந்தம் மக்களை முற்றும் துறத்தல் போன்ற தீவிர துறவு நிலைகளை
ஏற்கச் சொல்வதாக நினைக்கவில்லை.

ப்ரத்யக்ஷ வாழ்வுக்கு ஒரு அர்த்தமும் இலக்குமுண்டு என்பதை மறக்கலாகாது.
ஒரு துறவிகூட, உலகியலில் உள்ள பிறர் வாழ்வோடு இயையாமல் இருக்க முடியாது.

சங்கரர் போன்றோர் உலகியல் ஜீவனத்துக்கு ஒரு ப்ரத்யக்ஷ வாழ் முறையும்,
ஆத்மோஜ்ஜீவனத்துக்கு பந்தங்கள் அறுபட்ட இன்னொரு முறையையும் இருவேறு வாழ்வுகளாகக் கண்டனர்.

இதில் முன்னது தாழ்ந்த நிலை,
பின்னது உயரிய நிலை என்று அபிப்ராயம்.

அசேஷ ஜகத் –நான்கு வித புருஷார்த்தங்களையும் –
ஒன்றில் பற்று கொண்ட பலவகைப்பட்ட அதிகாரிகளும் –

ஹித அநு சாசன -ஹிதத்தை தெளிவாகவும் விவரமாகவும் சொல்லும் வேதங்கள்
முக் குணத்தவர்களுக்கும் வேதம் உபதேசிக்கும் –

ஸ்வாமி வாழ்க்கையை இப்படி இரு கோடுகள் போட்டுப் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை.

மாறாக, ப்ரத்யக்ஷ உலகியல் வாழ்வும், உஜ்ஜீவனம் தேடும் ஆன்மீக வாழ்வும் ஒன்றெனக் கருதினார்

பந்தங்களினின்று விடுபட ப்ரத்யக்ஷ வாழ்வை அவஸ்யம் விடவேண்டும் என்று அவர் கருதவில்லை.
மாறாக,
இவ்வாழ்க்கையை வாழ்ந்தபடியே நம் லக்ஷ்யத்துக்குச் செயல்பட வேண்டும்.

ஒரு வேதாந்திக்கும் ஒரு ஞானமற்றவனுக்கும் உள்ள வேறுபாடு, மனத்தளவில் ஆனதே.

ஒரு வேதாந்தி ஆத்மா பரமாத்மா இரண்டையும் புரிந்து கொண்டு செயல்படுகிறார்,

ஒரு ஸாமான்யர் வெறும் உணர்ச்சிகள், ஆசைகள், குழப்பத்தோடு செயல்படுகிறார்.

ஆத்மா பரமாத்மாவைப் பற்றிய தெளிந்த சிந்தையோடு
தார்மீகமாக இலக்கில் வாழ்க்கையை நடத்துபவர்க்கு தெய்வீகக் காதல்,

பக்தி தானே ஏற்பட்டு அவரை எம்பெருமானிடம் அழைத்துச் செல்கிறது.
பக்தியே வேதாந்தத்தின் இறுதிச் செய்தி.

அபிசாராதி யாகங்களைச் செய்து நாளடைவில் புத்தி மாறி
சாத்விகர்கள் ஆவரே

இவ்வாறு சகல ஜனங்களுக்கும் வேதம் வாத்சல்யம் காட்டி ஸ்ருதி –
அழிவற்ற நித்ய அபவ்ருஷேயத்வத்தால் -சுடர் மிகு ஸ்ருதி –

ஸ்ருதி நிகரம் -வேத சமூகம் -சிரஸீ – வேதாந்தம் –
அயமர்த்த சமதி கத –சொல்ல இருக்கும் பொருள் நன்கு அறியப் படுகிறது –

இவை ஜீவ பரமாத்ம யாதாம்ய ஞான பூர்வக –
சேஷி சேஷ சம்பந்த ஞானமும்
சகலமும் ப்ரஹ்ம சரீரம் –
அவன் உள்ளே புகுந்து நியமிக்கிறார் என்ற ஞானமும் வருமே –

வர்ணாஸ்ரம தர்ம இதி கர்தவ்யதாக –
யாதாம்யா ஞானத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும்

வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் கொண்டு -உபாசனம் –
த்யான அர்ச்சன ப்ரணாமங்கள் -செய்து ப்ரஹ்ம பிராப்தி அடைய உபதேசிக்கும் –

கர்ம அனுஷ்டானம் ப்ரஹ்ம உபாசன இச்சையைப் பிறப்பிக்கும் –

கர்ம யோகம் ஒன்றாலேயே –
ஞான யோகம் ஒன்றாலேயே –
ப்ரஹ்ம பிராப்தி என்பது ஸ்ரீ பாஷ்யகாரர் பக்ஷம் இல்லையே

நாம் செய்யும் கர்ம யோகம் பகவத் ஆராதனம் ஆகும் –
அதனால் ரஜஸ் தமஸ் அழிந்து சத்வம் வளர்ந்து பக்தி பிறந்து
பக்தி யோகமாக வளர்ந்து மோக்ஷ சாதனம் ஆகுமே –

எம்பெருமானின் திருவடித் தாமரைகளில் வைக்கும் உறுதியான அன்பே பக்தி.
இதுவே த்யானம், தொழுகை, ஸ்மரணம், கீர்த்தனம் என வெவ்வேறு நிலை அடைகிறது.

ஸ்வாமியின் திருவுளத்தில் அறியப்படாத ஒன்றின்மேல் அறிவுணர்வின்றிச் செய்வது பக்தி அன்று.

ஞானியர் சிலர் பக்தி ஞானம் இரண்டும் வெவ்வேறு பாதைகள் போலக் காட்டினர்.

சிலர் தம் ப்ரத்யக்ஷ அநுபவத்திலிருந்து பக்தியைவிட ஞாநமே உயர்ந்தது என்றும் கருதுவர்.

ஆனால் ஸ்வாமிக்கு பக்தி ஞானம் இரண்டும் ஒன்றே.
ஞானமே பக்தியாக முதிர்கிறது,
அன்பே மேலும் அறிந்துகொள்ள உதவுகிறது.
ஆழ்ந்த அன்பு முதிர்ந்து தளைகளிலிருந்து விடுவித்து எம்பெருமானுடன் பிணைக்கிறது.

எம்பெருமானின் இணையடித் தாமரைகளை அடைவிக்கும் மங்களமே
வேதாந்தம் சொல்லித்தரும் பாடம்.

பரம புருஷ சரண யுகள -“இணை யடித் தாமரைகள்” என்பதால்
ஸ்வாமி ஆத்மா எம்பெருமானுக்கு சேஷப்பட்டவன் என உணர்த்துகிறார்.

எத் தடையுமின்றி எல்லா வகையிலும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வதே பந்தத்திலிருந்து விடுதலை.
அன்பின் மகிழ்ச்சி கைங்கர்யத்தில் உள்ளது.
உகப்பைத் தருவது ஒன்றே நோக்காய்,
பிரதிபலன் எதிர்பாராமல் பிறர் மகிழ்ச்சிக்காகவே செய்யப்படும் பணியே கைங்கர்யம்.

ஈஸ்வரானுபவமானது
அவனுக்கு அவன் உகக்கக் கைங்கர்யம் செய்யும் அவா மிகுதலே.
கைங்கர்யம் என்பது கட்டாயத்தின் பேரிலன்று,

ஈஸ்வரானுபவத்தினாலே தானே கிளர்ந்தெழும் அவா.

இக்கருத்துகளின் மூலம் ஸ்வாமி செயல்பாடு ஆன்மிகம் இரண்டையும் வெகு எளிதாகப் பிணைக்கிறார்.
ஒருவரின் செயல்பாடு அவரது ஞானம், அநுபவம் இரண்டினாலேயே அமைகிறது

ஒருவரின் ஞானம் பிழையற வளர்க்கப்பட்டால்,
அவரது அநுபவமும் முழுக்க ஈச்வராநுபவமாயின் செயல்பாட்டுக்கு அஞ்சவோ அதைத் தள்ளவோ வேண்டா.

ஆகவே ஸ்வாமியின் திருவுள்ளப்படி பந்த ஜீவனத்தில் செயல்பாடோ அல்லது மோக்ஷமோ
இரண்டிலுமே (கைங்கர்யமாகிற) செயல்பாடு இருக்கவே செய்கிறது.
கர்மம் இல்லாமல் இல்லை, செயல் இன்றி இருப்பதுமில்லை.

அத்யர்த்த ப்ரிய-பூர்வக த்யான அர்ச்சன பிரணாமாதிகள் -ஆதி சப்தம் -திரு நாம சங்கீர்த்தனம் -யஜனம் –
இவை அனைத்தும் பிரதிபந்தகங்களையும் போக்க வல்லவை –
தத் பிராப்தி பலம் -இவற்றுக்கு உண்டே

இந்த ஆரம்ப வாக்யங்களால் ஸ்வாமி ஆத்மா, இறைவன், பந்தம், மோக்ஷம், அன்பு, ஞானம், கர்மம் (செயல்பாடு), கைங்கர்யம்
ஆகிய யாவற்றையும் ஒரு கோப்புக்குள் கொணர்ந்து அவை ஒன்றுக்கொன்று
இயல்பாகத் தொடர்புடையவை என்பதை அழகாகக் காட்டுகிறார்.

ஆத்மாக்கள் சரீர பயத்தில் உள்ளன. தேவர், மனிதர், என்பன போன்ற உயிர் வாழிகளாய் சரீரத்தில் அவை படும் துயர்களால்
சரீரத்தை ஆத்மா என்று மயங்கியுள்ளன.
இம்மயக்கமே எல்லாத் துன்பத்துக்கும் காரணம்.

சரீரத்தை ஆத்மா என்று மயங்குவதே சரீரம் எடுக்கவும் துயரப்படவும் ஹேது. துயரத்தால் பயம்.

வேதாந்த வாக்யங்கள் இவ் வச்சத்தைப் போக்குவதிலேயே உத்பத்தி ஆகின்றன.

அவை ஆத்மாவின் உண்மை சாரம்,
இறைவனின் உண்மை நிலை,
ஈச்வரனை வணங்கும் வகை,
ப்ரஹ்மத்தை உணர்வதின் பேரின்பம் இவற்றை அறிவுறுத்தி இவ்வச்சத்தைப் போக்குகின்றன.

அஸ்ய ஜீவாத்மா –பரமாத்மாவுக்கு சரீர பூதன் -சேஷ பூதன் -அவனில் வேறு பட்டவன் –
இத்தால் ஐக்கியம் மறுக்கப் படுகிறது

அநாதி அவித்யா சஞ்சித -என்று
அவித்யை அடியாகவே சரீரம் –

கர்ம ப்ரவாஹ ஹேதுக-ப்ரஹ்மாதி ஸூர நர ஸ்தாவராத்மக சதுர்வித தேக பிரவேச க்ருத –
தத் தத் ஆத்ம அபிமான ஜெனித அவர்ஜனீய பவ பய வித்வம்ஸனாய –
விலக்க முடியாத சம்சார பயத்தைப் போக்க
தேக வ்யதிரிக்த ஆத்ம ஸ்வரூப -ஞான ஆனந்த லக்ஷணம் -ஸ்வ பாவம் –
அநந்யார்ஹ சேஷ பூதன்-என்பதை அறிந்து
தத் அந்தர்யாமி பரமாத்ம ஸ்வரூப -சர்வ சேஷி -ஸ்வ பாவம் -ஆஸ்ரித ஸூலபன் -சரணாகத வத்சலன் -என்பதையும் அறிந்து
தத் உபாசன -தத் பல பூத -ஆத்ம ஸ்வரூப ஆவிர்பாக பூர்வக
அனவதிக அதிசய ஆனந்த ப்ரஹ்ம அனுபவ ஞாபநே–அநு சாஸந -சப்தமும் ஞாபநே-சப்தமும் ஒன்றே –

ஸ்வாமி தொடங்கும் போதே
வேதாந்தத்தின் நோக்கம் ஸர்வ ஜன சுகம் என்பதை விளக்கினார்.

வேதாந்தம் ஆத்ம ஞானத்தைப் போதித்து
சரீர பயத்தையும் துயரத்தையும் நீக்குகிறது.

துயரத்தை மறுப்பது மட்டுமன்று,
பேரின்பத்தை அநுபவிப்பதும் வேதாந்தத்தின் பயனாகும்.

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சுருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜர் நியமித்து அருளிய -74-சிம்ஹாசனாதிபதிகள்–/ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய அஷ்ட திக் கஜங்கள் —

November 29, 2021

ஸ்ரீ ராமானுஜர் நியமித்து அருளிய -74-சிம்ஹாசனாதிபதிகள்–

1–ஸ்ரீ சொட்டை நம்பி -ஸ்ரீ ஆளவந்தார் உடைய திருக்குமாரர் –இவரது திருக்குமாரர் ஸ்ரீ என்னாச்சான்-அவரது திருக்குமாரர் ஸ்ரீ பிள்ளை அப்பன்
2–ஸ்ரீ புண்டரீகர் -ஸ்ரீ பெரிய நம்பி திருக்குமாரர்
3–ஸ்ரீ தெற்கு ஆழ்வான் -ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி திருக்குமாரர்
4–ஸ்ரீ ஸூந்தரத் தோளுடையான்-ஸ்ரீ திருமாலை ஆண்டான் திருக்குமாரர்
5–ஸ்ரீ ராமானுஜன் -ஸ்ரீ பெரிய திருமலை நம்பி யுடைய திருக்குமாரர்- ஸ்ரீ திருமலை நம்பி என்ற இவரது திருக்குமாரரும்

6–ஸ்ரீ கூரத்தாழ்வான்-அவரது திருக்குமாரர் -ஸ்ரீ பராசர பட்டர் -ஸ்ரீ ஸ்ரீ ராம பட்டர்
7–ஸ்ரீ முதலியாண்டான் -அவரது திருக்குமாரர் -ஸ்ரீ கந்தாடை ஆண்டான்
8–ஸ்ரீ நடுவில் ஆழ்வான்
9–ஸ்ரீ கோ மடத்து ஆழ்வான்
10–ஸ்ரீ திருக் கோவலூர் ஆழ்வான்

11–ஸ்ரீ திரு மோகூர் ஆழ்வான்
12–ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்
13–ஸ்ரீ நடாதூர் ஆழ்வான்
14–ஸ்ரீ எங்கள் ஆழ்வான்
15–ஸ்ரீ அனந்தாழ்வான்

16–ஸ்ரீ மிளகு ஆழ்வான்
17–ஸ்ரீ நெய்யுண்டாழ்வான்
18–ஸ்ரீ சேட்டலூர் சிறிய ஆழ்வான்
19–ஸ்ரீ வேதாந்தி ஆழ்வான்
20–ஸ்ரீ கோயில் ஆழ்வான்

21–ஸ்ரீ உங்கள் ஆழ்வான்
22–ஸ்ரீ ஆரண புரத்து ஆழ்வான்
23 –ஸ்ரீ எம்பார்
24–ஸ்ரீ கிடாம்பி ஆச்சான்
25–ஸ்ரீ கணியனூர் சிறிய ஆச்சான்

26–ஸ்ரீ ஈச்ச்சம்படி ஆச்சான்
27–ஸ்ரீ கொங்கில் ஆச்சான்
28–ஸ்ரீ ஈச்சம்படி ஜீயர்
29–ஸ்ரீ திருமலை நல்லான்
30–ஸ்ரீ சட்டாம்பள்ளி ஜீயர்

31–ஸ்ரீ திரு வெள்ளறை ஜீயர்
32–ஸ்ரீ ஆட் கொண்ட வல்லி ஜீயர்
33–ஸ்ரீ திரு நகரி பிள்ளான்
34–ஸ்ரீ காராஞ்சி சோமாஜியார்
35–ஸ்ரீ அலங்கார வேங்கடவர்

36–ஸ்ரீ நம்பி கருந்தேவர்
37-ஸ்ரீ சிறு புள்ளி தேவராஜா பட்டர்
38–ஸ்ரீ பிள்ளி உறாந்தை உடையார்
39–ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்
40–ஸ்ரீ பெரிய கோவில் வள்ளலார்

41–ஸ்ரீ திருக் கண்ணபுரத்து அரையர்
42–ஸ்ரீ ஆசூரிப் பெருமாள்
43–ஸ்ரீ முனிப் பெருமாள்
44–ஸ்ரீ அம்மங்கிப் பெருமாள்
45–ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான்

46–ஸ்ரீ மாற்று ஓன்று இல்லா மாருதி சிறியாண்டான்
47–ஸ்ரீ சோமாசியாண்டான்
48–ஸ்ரீ ஜீயர் ஆண்டான்
49–ஸ்ரீ ஈஸ்வர் ஆண்டான்
50–ஸ்ரீ ஈயுண்ணிப் பிள்ளை ஆண்டான்

51–ஸ்ரீ பெரியாண்டான்
52–ஸ்ரீ சிறியாண்டான்
53–ஸ்ரீ குறிஞ்சியூர் சிறியாண்டான்
54–ஸ்ரீ அம்மங்கி ஆண்டான்
55–ஸ்ரீ ஆளவந்தார் ஆண்டான்

56–ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
57–ஸ்ரீ தொண்டனூர் நம்பி
58–ஸ்ரீ மருதூர் நம்பி
59–ஸ்ரீ மழுவூர் நம்பி
60–ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பி

61–ஸ்ரீ குருவை நம்பி
62–ஸ்ரீ முடும்பை நம்பி
63–ஸ்ரீ வடுக நம்பி
64–ஸ்ரீ வங்கீபுரத்து நம்பி
65–ஸ்ரீ பராங்குச நம்பி

66–ஸ்ரீ அம்மங்கி அம்மாள்
67–ஸ்ரீ பருத்திக் கொல்லை அம்மாள்
68–ஸ்ரீ உக்கலம் அம்மாள்
69–ஸ்ரீ சொட்டை அம்மாள்
70–ஸ்ரீ முடும்பை அம்மாள்

71–ஸ்ரீ கொமாண்டூர்ப் பிள்ளை
72–ஸ்ரீ கொமாண்டூர் இளையவல்லி
73–ஸ்ரீ கிடாம்பி பெருமாள்
74–ஸ்ரீ காட்டுப் பிள்ளான் –

———————

1-ஸ்ரீ சொட்டை நம்பி தனியன்
மகரே சைகபாத்யேச யாமுநாச்சார்ய நந்தநம்
கூர நாதோ குரோ ஸிஷ்யம் ஸேவே ஸூப குணார்ணவம் –

தாய் பூரட்டாதி திரு அவதாரம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் சிஷ்யர்
ஸ்ரீ ஆளவந்தார் திருக்குமாரார்
இவற்றால் தனக்கு ஸ்ரீ பரமபதம் நிச்சயம் -அங்கு சென்றாலும் ஸ்ரீ வைகுண்ட நாதன் திரு முகம்
ஸ்ரீ நம்பெருமாள் திரு முகம் போல் குளிர்ந்து இரா விடில் அண்டச் சுவரை முறித்துக் கொண்டு இங்கே திரும்புவேன் என்றாராம்
ஸ்ரீ பராசர பட்டர் போல் இவரும் இவ்வாறு அருளிச் செய்தார் என்பர் –
இவருடைய திருக்குமாரர் -ஸ்ரீ என்னாச்சன் -இவர் திருக்குமாரர் ஸ்ரீ பிள்ளை அப்பன்

——-

2-ஸ்ரீ புண்டரீகர்
இவரை ஸ்ரீ பெரியநம்பி திருக்குமாரர் -ஸ்ரீ அத்துழாயின் திரு சகோதரர் –
ஆடி உத்தராடம் திரு அவதாரம் -ஸ்ரீ ராமானுஜர் சிஷ்யர்

இவர் தனியன் –
ஸூசவ் மாஸ் யுத்தரா ஷாட ஜாதம் பூர்ண குரோஸ் ஸூதாம்
யதி ராஜாங்க்ரி ஸத் பக்தம் புண்டரீகாக்ஷம் ஆஸ்ரயே –

இவர் ஸஹவாஸ தோஷத்தால் போகக்கூடாது இடம் போக
ஸ்ரீ உடையவர் நீர் நம்மை விட்டாலும் நான் விட்டேன் என்று தாமே அங்கு சென்று திருத்திப் பணி கொண்டார்

————–

3-ஸ்ரீ தெற்கு ஆழ்வான்
ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி உடைய திருக்குமாரர் –காஸ்யப கோத்ரம் -ஆடி திருவோணம் திரு அவதாரம்
ஸ்ரீ தேவகிப் பிராட்டியின் திரு சகோதரர்

கர்கடே ஸ்ரவணே ஜாதம் ராமானுஜ பத ஆஸ்ரிதம்
காஸ்ய பாந்வய ஸம் பூதம் நாராயண குரும் பஜே

இவருக்கு அவ்வளவு ஆசாரம் கிடையாது -இவருக்கு ஸ்ரீ கோளரி ஆழ்வான் நண்பர் இருந்தார்
நாம் குளிப்பதால் பாபங்கள் போகாது -ஸ்ரீ சிங்கப்பிரானின் ஸ்ரீ சக்ராயுதத்தால் மட்டுமே
பிரதிபந்தங்கள் போகும் என்ற வார்த்தை கேட்டு ஸ்ரீ பட்டர் மகிழ்ந்தார்

———————

4-ஸ்ரீ ஸூந்தரத் தோளுடையான்

ஸ்ரீ திருமாலை ஆண்டான் உடைய திருக்குமாரர்
இவருக்கு ஸ்ரீ பெரியாண்டான் என்ற திரு நாமமும் உண்டாம்
காஸ்யப கோத்ரம்
சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்ரம் திரு அவதாரம்
திருமாலிருஞ்சோலை ஸ்ரீ அழகர் திருக்கோயில் புரோகிதர்

இவர் தனியன்
மாலா தார குரோ புத்ரம் ஸுந்தர்ய புஜ தேசிகம்
ராமாநுஜார்ய ஸத் ஸிஷ்யம் வந்தே வர கருணா நிதிம்

இவருடைய மூதாதையர்களில் ஒருவர் -கண்ணுக்கு இனியான் -திருமாலிருஞ்சோலை அழகரை
ரக்ஷணம் பண்ணியதால் இந்த வம்சத்துக்கு ஆண்டான் பட்டப்பெயர் வந்தது
இவர் திரு சகோதரர் சிறியாண்டான்
இவர் வம்சத்தில் வந்த ஸ்ரீ யமுனாச்சார்யர் -ஸ்ரீ ப்ரமேய ரத்னம் கிரந்தம் சாதித்து அருளி உள்ளார்
இவர் ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரின் சிஷ்யர்
யோக சாஸ்திரத்தில் மேதாவி –

————-

5-ஸ்ரீ பிள்ளைத் திருமலை நம்பி
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி உடைய திருக்குமாரர்
வைகாசி விசாகம் திரு அவதாரம்
இவருக்கு ஸ்ரீ ராமானுஜன் என்ற திரு சகோதரரும் உண்டு

தனியன்
வ்ருஷே விசாக ஸம் பூதம் ராமானுஜ பத ஆஸ்ரிதம்
ஸ்ரீ சைல பூர்ண ஸத் புத்ரம் ஸ்ரீ சைலார்யம் அஹம் பஜே

இவருடைய சகோதரியின் கணவர் -ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானாரின் திருக்குமாரர் ஸ்ரீ அலங்கார வேங்கடவர்
இவரும் -74- சிம்ஹாசனாதிபதிகளில் ஒருவர் -வரிசை -35-
இவருடைய மருமகன் புகழ் பெற்ற -ஸ்ரீ விஞ்சிமூர் தாத்தாசாரியார் –

———-

6-ஸ்ரீ நடுவில் ஆழ்வான்

தனியன்
யேந ப்ரோல்ல சதே நித்யம் கார்க்ய வம்ஸ மஹாம் புதி
மந் மஹே தம் ஸதா ஸித்தே மத்யமார்யம் கலா நிதிம்

ஸ்ரீ கண்ணபிரான் யது குல புரோகிதர் கர்க்கர் வம்சம்
ஸ்ரீ திருநாராயண புரத்தில் ஸ்ரீ உடையவர் உடன் இருந்தவர்
அங்கே ஸ்ரீ வங்கி புரத்து ஆச்சிக்கு ஸ்ரீ சொட்டை அம்மாளுக்கு ஸ்ரீ பாஷ்யம் சாதித்தவர்
அவர்களுக்கு ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருக்க உபதேசித்தவர்

எம்பெருமானார் உடைய சரம தசையில் இவர் திருவரங்கம் எழுந்து அருளினார்
தம்மை ஆஸ்ரயித்த
மாறு ஒன்றில்லா மாருதிச் சிறியாண்டான்
அரண புரத்து ஆழ்வான்
ஆஸூரிப் பெருமாள்
முனிப் பெருமாள்
அம்மங்கிப் பெருமாள்
முதலானோரை இவரை ஆஸ்ரயிக்கச் செய்தவர்
இவர்கள் யாவருமே 74 ஸிம்ஹாஸனாதி பத்திகளில் ஒருவராக நியமிக்கப் பட்டனர்

ஸ்ரீ மா முனிகளின் அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான ஸ்ரீ பரவஸ்து பட்டர் ஜீயர் இவர் வம்சமே
இவருடைய வம்ஸ பரம்பரை
நடுவில் ஆழ்வான்
ஆழ்வான்
வைத்த மா நிதி
அழகிய மணவாளர்
வரதாச்சார்யர்
வேங்கடத்து உறைவார்
சடகோபாச்சார்யர்
போரேற்று நாயனார்
கோவிந்தாச்சார்யார்
கிருஷ்ணமாச்சார்யார்
ராமானுஜாச்சார்யார்
கோவிந்த தாஸர் அப்பர் என்ற பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் –

பரவஸ்து பட்டர் பிரான் ஜீயருக்கு பூர்வாஸ்ரம வம்சம்
அண்ணன் பரவஸ்து அழகிய மணவாளர்
பரவஸ்து நாயனார்
சடகோபாச்சார்யர்
வரதாச்சார்யர் -இவரே பிள்ளை லோகம் ஜீயரானார் –

———–

ஸ்ரீ நடுவில் ஆழ்வான்

யேந ப்ரோல்ல சதே நித்யம் கார்க்ய வம்ச மஹாம் புதி
மன் மஹே தம் ஸதா ஸித்தே மத்யமார்யம் கலா நிதிம் –தனியன் –

இவர் கண்ணன் -யது வம்ச புரோஹிதரான கர்கர் வம்சத்தவர்
மேல்கோட்டையில் ஸ்ரீ உடையவர் எழுந்து அருளின காலத்தில் உடனே இருந்த ஸ்வாமி
இவர் ஸ்ரீ பாஷ்யம் சாதித்த காலத்தில் ஸ்ரீ வங்கி புரத்து ஆச்சியும் ஸ்ரீ சொட்டை அம்மாளும் கேட்டு
அற்புதமாக இருந்தது என்றார்களாம்
இவர்கள் இடம் எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள் என்று அருளிச் செய்தார்
ஸ்ரீ மா முனிகளின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவரான பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் இவர் வம்சத்தவர்
எம்பெருமானார் உடைய சரம தசையில் இவர் ஸ்ரீ திருவரங்கம் எழுந்து அருளினார்

எம்பெருமானார் தன்னை ஆஸ்ரயித்த
ஸ்ரீ மாருதி ஆண்டான்
ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான்
ஸ்ரீ அரண புரத்து ஆழ்வான்
ஸ்ரீ ஆ ஸூரிப் பெருமாள்
ஸ்ரீ முனிப் பெருமாள்
ஸ்ரீ அம்மங்கிப் பெருமாள் -முதலானவரை இவரை ஆஸ்ரயிக்கச் செய்தார்
இவர்கள் அனைவரும் -74- ஸிம்ஹாஸனாபதிகள்

இவர் வம்ச பரம்பரை
ஸ்ரீ நடுவில் ஆழ்வான்
ஸ்ரீ ஆழ்வான்
ஸ்ரீ வைத்த மா நிதி
ஸ்ரீ அழகிய மணவாளர் –
ஸ்ரீ வரதாச்சார்யர்
ஸ்ரீ வேங்கடத்து உறைவார்
ஸ்ரீ சடகோபாச்சார்யார்
ஸ்ரீ போர் ஏற்று நாயனார்
ஸ்ரீ கோவிந்தாச்சார்யார்
ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யார்
ஸ்ரீ ராமானுஜாச்சார்யார்
ஸ்ரீ கோவிந்த தாஸப்பர் என்னும் ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்

பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் திருப் பேரானார் பிள்ளை லோகம் ஜீயர் –

————————————————-

7-ஸ்ரீ கோமடத்து ஆழ்வான்
இவர் ஸ்ரீ கோமடத்து பிள்ளான் என்றும் அழைக்கப் படுவார்
இவருடைய சிஷ்யர் காக்கைப்பாடி ஆச்சான் பிள்ளை
இவருடைய வம்சத்தில் தான் ஸ்ரீ மணவாள மா முனிகள் அவதாரம்
ஸ்ரீ மா முனிகளின் திருத்தகப்பனார் -திரு நாவீறுடைய தாஸர் அண்ணர்
ஸ்ரீ மா முனிகளின் பூர்வாஸ்ரம திருப்பேரானார் -ஸ்ரீ ஜீயர் நாயனார் –
ஸ்ரீ கோயில் அண்ணனுடைய அஷ்டதிக் கஜங்களில் ஒருவர் –

—————

8-ஸ்ரீ பிள்ளைப் பிள்ளான் ஆழ்வான்
இவர் ஸ்ரீ கூரத்தாழ்வானுடைய சிஷ்யர்
பாகவதர்களைக் கடுமையாகப் பேசி அபசாரப்பட்டு –
ஸ்ரீ கூரத்தாழ்வான் தானே தானம் கேட்டு திருத்திப் பணி கொள்ளப் பட்டவர்
வீரசுந்தர ப்ரஹ்மராயர் இவர் திருமாளிகையை பிடிக்கவே தான் ஸ்ரீ பட்டர் திருக்கோஷ்டியூர் எழுந்து அருளி
நமக்கு திருப்பாவை தனியன் கிடைக்கப் பெற்றோம் –
புள்ளும் சிலம்பின் -காலை வேளையில் பறவைகளின் ஒலி நமக்கு மிகவும் உத்தேச்யம் என்பார்
குழந்தை தாய்ப்பால் பருகி அவள் முகம் நோக்குவது போல்
திருவடிகளை முன்னிட்டு திரு மேனி கல்யாண குணங்களில் ஈடுபடுவோம் என்பார்

————–

9-ஸ்ரீ நடாதூர் ஆழ்வான்

தனியன்
யஸ்மின் பதம் யதி வரஸ்ய முகாத் ப்ரேணதுர் நிஷ் க்ராம
தேவ நிததே நிகமாந்த பாஷ்யம்
தஸ்யைவ தம் பகவத் ப்ரிய பாகி நேயம் வந்தே
குரும் வரத விஷ்ணு பதாபிதானம்

ஐவரும் ஸ்ரீ ராமானுஜரின் திரு மருமகன்
ஸ்ரீ வத்ஸ கோத்ரம் -திருக்காஞ்சியில் திருவவதாரம் -வரத விஷ்ணு என்றும் திரு நாமம்
ஸ்ரீ பாஷ்ய ஸிம்ஹாஸனபதி-என்று ஸ்ரீ பாஷ்யகாரரால் பட்டம் சூட்டி அருளப்பட்டராவர்
திரு வெள்ளறை எங்கள் ஆழ்வான் இவருடைய சிஷ்யர்
நடாதூர் அம்மாள் எனப்படும் வாத்ஸ்ய வரதாச்சார்யர் இவருடைய திருப்பேரானார்
இவர் மாந யாதாத்ம்ய நிர்ணயம் -என்னும் கிரந்தம் அருளி உள்ளார்
திரு வெள்ளறையில் இவரது அர்ச்சா திருமேனி உள்ளது –

———-

10-ஸ்ரீ எங்கள் ஆழ்வான்
ஸ்ரீ விஷ்ணு சித்த பத பங்கஜ சங்க மாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத பரேண
நோ சேத் மமாபி யதி சேகர பாரதீ நாம் பாவா கதம் பவிது மர்ஹதி வாக் விதேயா

சீராரும் வெள்ளறையில் சிறந்து உதித்தோன் வாழியே
சித்திரை ரோஹிணி நாள் சிறக்க வந்தோன் வாழியே
பார் புகழும் எதிராஜர் பதம் பணிந்தோன் வாழியே
பங்கயச் செல்வியின் பதங்கள் பணியுமவன் வாழியே
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திரு அருளோன் வாழியே
தீதிலா பாடியத்தைத் தேர்ந்து உரைப்போன் வாழியே
தரணியில் விஷ்ணு மதம் தழைக்க வந்தோன் வாழியே
தண்ணளியோன் எங்கள் ஆழ்வான் தாளிணைகள் வாழியே

ஸ்ரீ விஷ்ணு புராணத்துக்கு ஸ்ரீ விஷ்ணு சித்தீயம் வியாக்யானம் அருளியவர் –
ஸ்ரீ நஞ்சீயர் ஆயர் தீவு இவர் கனவில் நாவல் பழம் கேட்ட ஐதிக்யம்
திரு நாராயண புரத்தில் இருந்தும் திரு வரங்கம் வந்த ஸ்ரீ பாஷ்ய காரருக்கு ஸ்ரீ பாஷ்யம்
எழுத உஸாத் துணையாக இருந்தவர் –
அதனாலேயே எங்கள் ஆழ்வான் என்று பெயர் இடப் பெற்றவர்
ஸ்ரீ பாஷ்யகாரரை விட 80 வயசு சிறியவர்
ப்ரமேய ஸங்க்ரஹம்
சங்கதி மாலா
கத்ய வியாக்யானம் எழுதியவர்
இவர் திருக்குமாரத்தி செங்கமல நாச்சியார்
இவர் மாப்பிள்ளை வரதாச்சார்யர் –

———–

11-ஸ்ரீ மிளகு ஆழ்வான்
வித்வத் பரிக்ஷைக்கு இவரை நீர் வைஷ்ணவர் ஆதாலால் நுழைய முடியாது என்ன-
ஸ்ரீ வைஷ்ணவர் என்று சொன்னதாலேயே கொண்டாடினவர்
வித்வான் ஆகையால் ஸ்ரீ முதலியாண்டானை வாதத்துக்கு அழைத்து தோற்று அவரை தோளில் சுமந்தவர்
ஸ்ரீ முதலியாண்டான் இவரை ஸ்ரீ உடையவர் இடம் கூட்டிச் சென்று ஆஸ்ரயிக்க வைத்தார்
திருவானைக்கா சென்று பகவத் வைபவம் பேசி திருத்திப் பணி கொள்வேன் என்று சொல்ல
அப்படி திருந்தினவர்கள் உண்டோ என்ன
நான் அனைவரையும் ஸ்ரீ மன் நாராயண சம்பந்திகளாகவே நினைக்கிறேன்
ப்ரக்ருதி சம்பந்திகள் அல்ல -அப்ருதக் ப்ரஹ்ம வஸ்துக்கள் இல்லையே என்பாராம் –

————————-

12-உக்கல் ஆழ்வான்
இவர் ஸ்ரீ ராமானுஜர் மடத்தில் பிரசாத கலம் எடுக்கும் கைங்கர்யம் பெற்றவர்

————-

13-ஸ்ரீ கணியனூர் சிறியாச்சான்
இவர் ஸ்ரீ வங்கி புரத்து நம்பி சிஷ்யர் -போசள நாட்டில் இருந்து வந்தவர்
பசும் புல்லைக் கூட மிதிக்காத சாது
இட்டீரிட்டு விளையாடும் -வார்த்தையை ரசிப்பவர் –
கன்றுகள் உடன் விளையாடும் கண்ணன் மேல் மிகவும் பரவசப் பட்டவர்
சிறந்த அனுஷ்டானம் கொண்டவர் -உடம்பில் தழும்பு வரும் படி தொழுபவர்
மேனி சிறுத்து பெரிய ஞானம் கொண்ட சிறு மா மனுஷர் என்று ஸ்ரீ கூரத்தாழ்வானால் புகழப் பெற்றவர்
சத்யம் சத்யம் புனர் சத்யம் யதிராஜோ ஜகத் குரோ
ச ஏவ சர்வ லோகா நாம் உத்தர்த்தா ந சம்சய -இவர் சொன்னதாகவும் சொல்வர்
ராமபிரான் தூது போக வில்லையே எதனால் என்று பட்டர் இடம் கேட்டவர் –
அனுப்புவார் இல்லையே -க்ஷத்ரியர் ஆகையால்
மன்மதனையும் சுப்ரமண்யனையயும் ராமனுக்கு அழகுக்கு ஒப்பாக சொல்லி ருஷி கரி பூசுகிறார்
என்று பட்டர் வாயால் கேட்கப் பெற்றவர்

—————

14-ஆட் கொண்ட வில்லி ஜீயர்

ஞான வைராக்ய சம்பந்தம் ராமானுஜ பாதாஸ்ரிதம்
சதுர்த்த ஆஸ்ரம சம்பந்தம் சம்ய மீந்த்ரம் நமாம் யஹம் –

சித்திரை திருவாதிரை இவர் திரு அவதாரம்
ஸ்ரீ எம்பெருமானார் நியமனத்தால் ஸ்ரீ முதலி ஆண்டான் திருக்குமாரர் ஸ்ரீ கந்தாடை ஆண்டான்
இவரை ஆஸ்ரயித்தார்
இவர் நஞ்சீயரை வணங்கி தனக்கு பகவத் விஷயத்தில் உண்மையான ருசி இல்லை என்றும்
பாகவதர்களைக் கண்டால் என்று மகிழ்ச்சி ஏற்படுகிறதோ அன்று தான் பகவத் ருசி ஏற்படுகிறது
என்று அர்த்தம் என்றும் தெரிவித்தார் –

———————-

15- ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்

ஸிம்ஹே ம்ருக ஸ்ரோத் பூதம் ராமானுஜ பாதாஸ்ரிதம்
த்ராவிடாம் நாய தத்வஞ்ஞம் குருகாதிபம் ஆஸ்ரயே –

த்ராவிட ஸாரஞ்ஞம் ராமானுஜ பாதாஸ்ரிதம்
ஸூ தியம் குருகேசார்யம் நமாமி சிரஸான் வஹம்

ஆவணி மிருக சீர்ஷம் திரு அவதாரம்
இவர் ஸ்ரீ பெரிய திருமலையின் திருக்குமாரர்
ஸ்ரீ ராமானுஜரின் அபிமான புத்திரர்
பிள்ளான் என்ற இவருக்கு திருக் குருகைப் பிரான் பிள்ளான் என்று ஸ்ரீ உடையவரே
திரு நாமம் சாத்தி அருளினார்

திருக்கோட்டியூர் நம்பிக்கும் திருக்குருகைப் பிரான் என்ற திரு நாமமும் உண்டே
இவர் சிறு புத்தூரில் எழுந்து அருளி சோமாசி ஆண்டான் இவர் இடம் மூன்று முறை
ஸ்ரீ பாஷ்யம் சாதித்து அருளினார்

அவர் இவர் இடம் தனக்குத் தஞ்சமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் என்று
கேட்ட பொழுது இவர் நீர் பாட்டம் பிரபாகரம் மீமாம்ஸை இவை அனைத்துக்கும் கர்த்தா
பாஷ்யம் வாசித்தோம் என்று மேன்மை அடித்து இராதே எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்
என்று அருளிச் செய்தார்

ராமானுஜர் ஆணைப்படியே ஆறாயிரப்படி சாதித்து அருளி உள்ளார்
இவர் இடம் ஸ்ரீ எங்கள் ஆழ்வான் அருளிச் செயல்கள் அர்த்தம் கேட்டு அருளினார்
இவரே ஸ்ரீ ராமானுஜருக்கு சரம கைங்கர்யம் செய்து அருளினார்
இவர் கொங்கில் நாட்டுக்கு எழுந்து அருளும் பொழுது ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசார்யன் திரு நாமத்தைச்
சொல்லாமல் எம்பெருமான் திரு நாமத்தைச் சொல்ல அங்கு இருந்து வெளி ஏறினார்
வளர்த்ததனால் பயன் பெற்றேன் என்று ஸ்ரீ உடையவர் கொண்டாடும் படி இருந்தவர்
இவருடைய இறுதிக் காலத்தில் -கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்று
சொல்லக் கேட்ட நஞ்சீயர் அழத் தொடங்க
அப்போது இவர் சீயரே நீர் கிடந்து அழுகிறது என் -அங்கு போய் பெறுகிற பேறு
இதிலும் தண்ணிது என்று தோற்றி இருந்ததோ என்று அருளிச் செய்தாராம்

———————————-

16- ஸ்ரீ திருக் கண்ண புரத்து எச்சான்
செறு வரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்து -பாசுரம் அருளிச் செய்ய
உடனே ஒரு நொடியிலே விரோதிகளை அழித்து விடுவேன் என்று எம்பெருமானும் சொன்னாராம்

——–

17- ஸ்ரீ அம்மங்கிப் பெருமான்
இவர் ஸ்ரீ ராமானுஜருக்கு பால் அமுது காய்ச்சித் தரும் கைங்கர்யம் –

———————-

18- ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான்
இவர் ஸ்ரீ ராமானுஜருக்கு திருக்கை சொம்பு பிடிக்கும் கைங்கர்யம்

—————-

19- ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான்

ஞாதும் கூர குலாதிபம் க்ருமி களாத் ப்ராப்தா பதம் ப்ரேஷிதே
ஸ்ரீ ராமா வர ஜேந கோஸல பாதாத் த்ருஷ்ட்வா ததீ யாம் ஸ்திதம்
ஸம் ப்ரதாஸ் த்வரயா புராந்தக புராத் கல்யாண வாபீ தடே
யோ அசவ் மாருதி ரித்ய ஸம் சத வயம் தஸ்மை நமஸ் குர்மஹே

இவர் மடத்துக்கு அமுது படி -கனி அமுது -பால் -நெய் முதலியவை வாங்க ஏற்பாடு செய்யும்
கைங்கர்யம் செய்து வந்தார்
இவரையும் சிறிய ஆண்டானையும் அம்மங்கி அம்மாளையும் ஸ்ரீ ரெங்கத்துக்கு அனுப்ப
இவர் அங்கே சென்று ஸ்ரீ பெரிய நம்பி திரு நாட்டுக்கு எழுந்து அருளியதையும்
ஸ்ரீ கூரத்தாழ்வான் கண் இழந்ததையும் ஸ்ரீ உடையவருக்குத் தெரிவித்தார்

———————-

20-ஸ்ரீ சோமாசி ஆண்டான்

நவ்மி லஷ்மண யோகீந்த்ர பாத சேனவக தாரகம்
ஸ்ரீ ராம க்ரது நாதார்யம் ஸ்ரீ பாஷ்ய அம்ருத சாகரம் –

சித்திரை திருவாதிரை திரு அவதாரம்
இயல் பெயர் -ராம மிஸ்ரர்
அவதார ஸ்தலம்: காராஞ்சி
ஸோம யாகம் செய்து சோமாசி ஆண்டான் பெயர்

எம்பெருமானாரே சரணம் -இவர் சொல்வது போல் யாராலும் இனிமையாக சொல்ல முடியாதே
கண்ண புரம் -திருமங்கை ஆழ்வார் –அழகிய மணவாளன் -பட்டர் –
திருத் தொலை வில்லி மங்கலம் -நம்மாழ்வார் -சொல்லுவது போலே அன்று இதுவும்
திரு நாராயண செல்வப்பிள்ளைக்கு அந்தரங்கர் -பாட்டுப்பாடி மகிழ்விப்பவர்

பாடினத்துக்கு ஆடினேன் -மோக்ஷம் ராமானுஜரை விஸ்வசித்துப் பற்றினால் உண்டாகும் என்று
அருளிச் செய்ய பற்றினார்
இவர் வம்சத்தவர்களே ஸ்ரீ ரெங்க வாக்ய பஞ்சாங்கம் மிராசு பெற்றவர்கள் –
ஸ்ரீ பாஷ்ய விவரணம்
ஸ்ரீ குரு குணா வளி-(எம்பெருமானார் பெருமை பேசுவது),
ஸ்ரீ ஷடர்த்த ஸம்க்ஷேபம் ஆகிய கிரந்தங்களை அருளிச் செய்துள்ளார் –

க்ருபாமாத்ர ப்ரசன்னாசார்யர்களின் பெருமையை விளக்கும் ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை இவரது
குரு குணாவளி ச்லோகம் ஒன்றை உதாஹரிக்கிறார்.

யஸ்ஸாபராதாந் ஸ்வபதப்ரபந்நாந் ஸ்வகீயகாருண்ய குணேந பாதி |
ஸ ஏவ முக்யோ குருரப்ரமேயஸ் ததைவ ஸத்பி: பரிகீர்த்யதேஹி ||

ஆசார்யன் தன்னுடைய பெருங்கருணையால், தன்னிடய் சரணடைந்த சிஷ்யனை ரக்ஷித்து உஜ்ஜீவிக்கிறான் –
அந்த ஆசார்யனே முக்யமானவன். இவ்விஷயம் ஆப்த தமர்களால் காட்டப்பட்டுள்ளது.

சரமோபாய நிர்ணயத்தில் ஸ்ரீ எம்பெருமானார் இவர்க்குச் செய்த பெருங்கருணை விளக்கப் படுகிறது.

எம்பெருமானாரிடம் காலக்ஷேபம் கேட்டு அவரோடிருந்த ஸ்ரீ சோமாசியாண்டான், சிறிது காலம் தம் ஊரான காராஞ்சி வந்து,
திருமணம் ஆகி, பின் மனைவி வற்புறுத்தலால் மீண்டும் ஸ்ரீ எம்பெருமானாரிடம் சென்று சேர இயலாது கிராமத்திலேயே இருக்க,
தம் வழிபாட்டுக்கு ஒரு ஸ்ரீ எம்பெருமானார் விக்ரஹம் செய்விக்க, அவ்விக்ரஹம் சிற்பி முயன்றும் சரிவராமல் போக,
சிற்பியிடம் அந்த விக்ரஹத்தை அழித்து வேறு விக்ரஹம் செய்யுமாறு கூறுகிறார்.

அன்று இரவு அவர் கனவில் ஸ்வாமி வந்து,
”ஆண்டான், நீர் எங்கிருப்பினும் நம் நினைவுண்டதாகில் கவலை வேண்டாவே.
நீர் ஏன் நம்மை இப்படித் துன்புறுத்துகிறீர்? நம்மிடம் விச்வாஸம் இல்லையெனில்
இவ்விக்ரஹத்தால் மட்டும் என்ன பயன்”என வினவ,

விழித்தெழுந்த ஆண்டான் விக்ரஹத்தைப் பாதுகாப்பாய் வைத்துவிட்டு, மனைவியைத் துறந்து, ஸ்ரீரங்கம் வந்து
ஸ்ரீ எம்பெருமானார் திருவடியில் வந்து அழுதபடி விழுந்தார்.
ஸ்ரீ எம்பெருமானார் என்ன நடந்தது என்று வினவ, ஆண்டான் நடந்ததை விவரித்தார்.
ஸ்ரீ உடையவரும் சிரித்து, “உம்முடைய மனைவியிடத்தில் உமக்கு இருந்த பற்றை விலக்கவே இதைச் செய்தோம்.
நீர் நம்மை விட்டாலும், நாம் உம்மை விடமாட்டோம். நீர் எங்கிருந்தாலும், நம்முடைய அபிமானம் உள்ளதால்
உம்முடைய பேற்றுக்கு ஒரு குறையும் இல்லை. நம்மிடம் எல்லாக் கவலைகளையும் விட்டு
இனி நீர் சுகமாய் இருக்கலாம்” என்று அருளினார் –
இவ்வாறு நம் பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்வர்.

ஸ்ரீ வார்த்தா மாலையிலும் ஸ்ரீ சோமாசியாண்டான் விஷயமான சில ஐதிஹ்யங்களுண்டு:

126 – ஸ்ரீ சோமாசியாண்டான் ப்ரபன்னருக்கு எம்பெருமானே உபாயம், பக்தியோ ப்ரபத்தியோ அன்று என்று நிலை நாட்டுகிறார்.
பகவான் நம்மைக் கைகொள்ள, நம்மைக் காத்துக்கொள்வதில் நம்முடைய முயற்சியை நாம் கைவிட வேண்டும்.
பக்தியோ ப்ரபத்தியோ உண்மையான உபாயம் அன்று. நாம் சரணடையும் எம்பெருமானே உயர்ந்த பலத்தை அளிப்பதால்,
அவனே உண்மையான உபாயம்.
279 – ஸ்ரீ சோமாசி யாண்டானை விட வயதில் குறைந்த ஆனால் ஞானம் அனுஷ்டான மிக்க அப்பிள்ளை என்ற ஸ்ரீவைஷ்ணவர்,
ஆண்டானிடம்,”ஸ்வாமி! தேவரீர் வயதிலும், ஆசாரத்திலும் சிறந்தவர்; ஸ்ரீபாஷ்யம் பகவத் விஷயாதி அதிகாரி;
இருந்தாலும், பாகவத அபசாரம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்கு உம் வேஷ்டியில் ஒரு முடிச்சு முடித்துக்கொள்ளும்!” என்று கூறினாராம்,
பாகவதாபசாரம் மிகக் கொடிது என்பதே விஷயம் – எத்தனை பெரியவராக இருந்தாலும், அபசாரங்களை விலக்க வேண்டியதின்
முக்கியத்துவத்தை அப்பிள்ளை இங்கு எடுத்துரைத்தார்.
304 – ஸ்ரீ வைஷ்ணவன் விஷய சுகத்தில் ஆசை கொள்ளக் கூடாது என்கிறார் ஆண்டான். ஏனெனில்:
ஜீவாத்மா முற்றிலும் பெருமாளை நம்பியுள்ளது என்பதாலும்
நம் லக்ஷ்யம் பெருமாளை அடைவதொன்றே, வேறல்ல என்பதாலும்
எம்பெருமானுக்கு நமக்குமுள்ள சம்பந்தமே உண்மை, வேறல்ல என்பதாலும்
எம்பெருமான், அவன் சம்பந்தம் மட்டுமே சாஸ்வதம், மற்றவை நிலையற்றவை என்பதாலும் விஷய சுகம் தள்ளுபடி.
375 – ஓர் இடையன் பால் திருடியதற்காகத் தண்டிக்கப் பட்டான் என்று கேட்ட ஆண்டான் மூர்ச்சை ஆனாராம்!
கண்ணன் எம்பெருமான் யசோதையால் தண்டிக்கப்பட்டதை நினைவு படுத்தியதால் அவ்வளவு உணர்ச்சி வசப்பட்டாராம்.

———————————————

21- ஸ்ரீ சிறியாண்டான்
இவர் ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதி சிறியாண்டான் உடன் ஸ்ரீ ரெங்கம் வந்து
செய்தி திரு நாராயண புரத்தில் அருளிச் செய்தவர்

————–

22-ஸ்ரீ தொண்டனூர் நம்பி –
ஸ்ரீ தொண்டனூரில் பாகவத கைங்கர்யமே நிரூபகமாகக் கொண்டவர் –
ஸ்ரீ திருக் கோட்டியூரில் செல்வ நம்பியைப் போலவே
சைவப்பண்டாரம் ஒருவன் ஸ்ரீ மதே ராமாநுஜாய நம -சொல்லி -இவர் பிச்சை அளிக்க –
மற்றவர் குறை சொல்ல -இவர் திரு நாம வைபவம் எடுத்து விளக்க
பின்பு அவன் ஸ்ரீ வைஷ்ணவன் ஆனானாம்

இவர் ஸ்ரீ அனந்தாழ்வான் உடன் ஸ்ரீ ரெங்கம் செல்ல இவர்களை ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானார் இடம் ஆஸ்ரயிக்கப் பண்ணி அருளினார்
இவர் ஸ்ரீ ராமானுஜர் இடம் விண்ணப்பித்து விட்டல தேச ராஜன் மக்களது பிசாச பீடையைப்
போக்குவித்து அருளினார் –

—————-

23- ஸ்ரீ மருதூர் நம்பி
இவர் ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ அனந்தாழ்வான் உடன் ஸ்ரீ ரெங்கம் செல்ல இவர்களை ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானார் இடம் ஆஸ்ரயிக்கப் பண்ணி அருளினார்

————-

24- ஸ்ரீ மழுவூர் நம்பி

இவர் ஸ்ரீ மருதூர் நம்பி ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ அனந்தாழ்வான் உடன்
ஸ்ரீ ரெங்கம் செல்ல இவர்களை ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானார் இடம் ஆஸ்ரயிக்கப் பண்ணி அருளினார்

—————–

25- ஸ்ரீ முடும்பை நம்பி

ஸ்ரீ ராமானுஜ சம்ய தீந்த்ர சரணம் ஸ்ரீ வத்ஸ சிஹ்ன ப்ரியம்
சேவ அஹம் வரதார்ய நாம கமமும் ஸூ க்த்யா ப்ரிஸித்தம் முதா
பால்யாத் பரி பூர்ண போத சடஜித் காதா ராகோஜ்ஜ்வலம்
வாத்ஸ்யம் பூர்ண முதாரம் ஆஸ்ரித நிதிம் வாத்சல்ய ரத்நாகரம் –

ஸ்ரீ ராமானுஜ யோகீந்த்ர பத பங்கஜ ஷட் பதம்
முடும்பை பூர்ண மநகம் வந்தே வரதஸம் கஞகம்

ஸ்ரீ வத்ஸ கோத்ரம்
ஸ்ரீ காஞ்சீ புரம் அருகில் ஸ்ரீ முடும்பையில் திரு அவதாரம்
இயல் பெயர் -ஸ்ரீ வரதாச்சார்யர்
ஸ்ரீ ராமானுஜர் உடைய சகோதரி கணவர்
இவர் திருக் குமாரர் -ஸ்ரீ ராமானுஜ நம்பி
அவர் திருக்குமாரர் -ஸ்ரீ முடும்பை ஆண்டான் -என்னும் ஸ்ரீ தாசாரதி
இவர் முடும்பையில் இருந்து ஸ்ரீ ரெங்கம் குடி பெயர்ந்தார்
இவர் வம்சம்
ஸ்ரீ தாசரதி
ஸ்ரீ தேவப் பெருமாள் என்னும் ஸ்ரீ வரதார்யர்
ஸ்ரீ இளையாழ்வார் என்னும் ஸ்ரீ லஷ்மண ஆச்சார்யர்

இவருக்கு இரண்டு திருக்குமாரர்கள்
ஒருவர் ஸ்ரீ கிருஷ்ண பாத குரு என்னும் ஸ்ரீ வடக்குத் திரு வீதிப்பிள்ளை –
அவருக்கு ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரும் ஸ்ரீ நாயனாரும் திருக்குமாரர்கள்
மற்ற ஒருவர் ஸ்ரீ வரதாச்சார்யர்
இவருக்கு திருக்குமாரர் ஸ்ரீ ராமானுஜ குரு
அவருக்குத் திரு குமாரர் ஸ்ரீ அழகப்பயங்கார்
அவருக்கு திருக்குமாரர் தேவராஜ குரு என்னும் பேர் அருளாலே ஸ்வாமி
அவர் திருக்குமாரர் ஸ்ரீ ராமானுஜம் பிள்ளை -இவர் மாமுனிகள் சிஷ்யர் -வான மா மலை ஜீயரின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவர்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ ஆழ்வார் திரு நகரி ஸ்ரீ ஆதி நாதன் ஸ்வாமி
ஆழ்வார் திரு நகரியில் கீழத் திரு மாளிகை மேலத் திரு மாளிகை வடக்குத் திருமாளிகை என்று இவர் வம்சம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணாவும் ஸ்ரீ முடும்பை வம்சமே

————-

26-ஸ்ரீ வடுக நம்பி

ஸைத் ரேத் வஸ்வநி ஸஞ்ஜாதம் ஸம்ஸார ஆர்ணவ தாரகம்
ராமாநுஜார்ய ஸத் ஸிஷ்யம் ஆந்த்ர பூர்ணம் அஹம் பஜே

ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம்
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே

திருநக்ஷத்ரம்: சித்திரை அஸ்வினி-1047-
அவதார ஸ்தலம்: சாளக்ராமம், கர்நாடகா
ஆசார்யன்: ஸ்ரீ எம்பெருமானார்-பால் அமுது கைங்கர்யம்
இவருடைய திரு மடியிலே திரு முடியை வைத்து ஸ்ரீ எம்பெருமானார் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்
ஸ்ரீ பரமபத ப்ராப்தி ஸ்தலம்: சாளக்ராமம்

கிரந்தங்கள்: ஸ்ரீ யதிராஜ வைபவம்,
ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்,
ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தர சத நாமாவளி

ஸ்ரீ எம்பெருமானார் திருநாராயணபுரம் எழுந்தருளிய போது அங்குள்ள மிதிலாபுரி சாளக்கிராமம் சென்று,
ஸ்ரீ முதலியாண்டானை அங்கிருந்த தீர்த்தத்தில் திருவடி நனைக்கச் சொல்லவும், பின்னர் அதில்
நீராடிய உள்ளூரார் அனைவரும் ஸ்வாமியின் சிஷ்யர்களாக மாறினர். அவர்களில் ஒருவர் ஸ்ரீ ஆந்த்ர பூர்ணர் எனும் வடுக நம்பி.
இவர் ஸ்ரீ எம்பெருமானாரிடம் பூண்ட ஆசார்ய பக்தி அளப்பரியது, ஈடற்றது.
ஸ்ரீ எம்பெருமானார் இவர்க்கு சகல சாரார்த்தங்களும் போதித்தருளினார்.
அதனாலும் இவர் ஆசார்ய ப்ரதிபத்தி பள்ளமடை ஆயிற்றது.

ஸ்ரீ வடுக நம்பி ஆசார்ய நிஷ்டையில் ஊறியிருந்தார்.
தினமும் இவர் ஸ்ரீ எம்பெருமானார் திருவடி நிலைகளுக்கே திருவாராதனம் செய்வர்.
ஒரு நாள் ஸ்வாமி யாத்திரை கிளம்புகையில் அவரது திருவாராதன எம்பெருமான்களோடு, தாம் பூசித்து வந்த
ஆசார்யன் திருவடி நிலைகளையும் மூட்டை கட்ட, அது கண்டு துணுக்குற்ற ஸ்ரீ எம்பெருமானார், “நம்பீ! என் செய்தீர்!” என்று
கடிந்த போது, இவர், “ஸ்வாமி! உம் திருவாராதனப் பெருமாளைவிட நம் திருவாராதனப் பெருமாள் குறைவிலரே” என்றாராம்.

ஸ்ரீ எம்பெருமானார் பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்யப் போகும்போதெல்லாம் நம்பியும் உடன் எழுந்தருளி,
அவர் பெருமாளின் அழகை அனுபவிக்கும்போது இவர் ஸ்வாமியையே நோக்கியிருக்க, அவர் இவரைப் பெருமாளின்
திருக்கண் அழகைப் பாரீர் என்ன, நம்பி, ஆசார்யன் திருவுள்ளம் குளிர,
“என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!”
(அதாவது, என்னுடைய ஸ்வாமியான தேவரீரைக் (எம்பெருமானாரை) கண்ட கண்கள் எம்பெருமானையே கூட காணாது)
என்று ஸ்ரீ திருப்பாணாழ்வார் திருவாக்கைக் கூறினாராம்.

ஸ்ரீ வடுக நம்பி எப்போதும் எம்பெருமானார் அமுது செய்த மிச்சில் ப்ரஸாதத்தையே ஸ்வீகரித்து அமுது செய்தபின்,
கைகளை அலம்பாமல் தம் தலையில் துடைத்துக் கொள்வார், பிரசாதம் உட்கொண்டபின் கையை அலம்பிச் சுத்தம்
செய்யக் கூடாதென்பதால். ஒரு நாள், இது கண்டு துணுக்குற்ற ஸ்ரீ எம்பெருமானார் கேள்வி எழுப்பவே,
ஸ்ரீ நம்பி தம் கைகளை அலம்பினார். பிற்றைநாள் பெருமாள் பிரசாதம் தாம் உட்கொண்ட மிகுதியை
ஸ்வாமி தர வாங்கி உண்ட நம்பி கைகளை அலம்ப எம்பெருமானார் வியப்புற்று வினவ,
“தேவரீர் நேற்று உபதேசித்தபடியே அடியேன் செய்தேன்” என்றாராம்.
அதைக் கேட்ட ஸ்ரீஎம்பெருமானார், ”உம்மிடம் நாம் தோற்றோம்!” என்றார்.

ஒரு முறை ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ எம்பெருமானாருக்கு, திருமடைப்பள்ளியில் பால் அமுது காய்ச்சிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது ஸ்ரீ நம்பெருமாள் திருவீதியில் புறப்பாடாக மடத்து வாசலில் எழுந்தருள,
ஸ்ரீ எம்பெருமானார் வெளியே சென்று சேவித்து, ஸ்ரீ வடுக நம்பியை வெளியே வருமாறு கூப்பிட்டார்.
அப்பொழுது, நம்பியோ, வெளியே வராமல், உள்ளிருந்தபடியே “அடியேன் உம் பெருமாளைக் காண வெளியே வந்தேன் என்றால்,
என் பெருமாளின் பால் பொங்கிவிடும், ஆதலால் அடியேன் வெளியே வர முடியாது” என்று கூறும்படியான ஆசார்ய நிஷ்டையுடன் திகழ்ந்தார்.

நம்பிகளின் அவைஷ்ணவ உறவினர் சிலர் வந்து, தங்கிச் சென்றதும், நம்பிகள் எல்லாப் பாத்திரங்களையும் எடுத்து வீசிவிட்டு,
ஸ்ரீ முதலியாண்டான் திருமாளிகையின் பின்புறத்தில் வைத்திருந்த பழைய உபயோகித்த பாத்திரங்களைப் பயன்படுத்த எடுத்துக் கொண்டார்.
ஆசார்யர்கள் சம்பந்தம் நம்மை எல்லா வகையிலும் சுத்தி செய்யும் என இப்படி அனுஷ்டித்து விளக்கினார்.

ஸ்ரீ எம்பெருமானார் திருவனந்தபுரம் சேவிக்கச் சென்றபோது அங்கு ஆகம முறையைச் சீர்திருத்தத் திருவுள்ளம் பற்றினார்.
ஆனால் எம்பெருமான் திருவுள்ளம் வேறுமாதிரி இருந்ததால், அவன் அவரை இரவோடிரவாக உறங்குகையில்
ஸ்ரீ திருக்குறுங்குடி சேர்ப்பித்து விட்டான். விடிவோரை திருக்கண் மலர்ந்த ஸ்வாமி நீராடித் திருமண் காப்புத் தரிக்க
இன்னும் ஸ்ரீ திருவனந்தபுரத்திலேயே இருந்த நம்பியை “வடுகா!” என்றழைக்க,
ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பியே வடுக நம்பி போல் வந்து திருமண் காப்பு தந்தருளினார்.
பின்னர் ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பியையும் தம் சிஷ்யனாய் ஏற்றார்.

ஸ்ரீ எம்பெருமானார் திருநாடலங்கரித்தபின் வடுக நம்பி மீண்டும் சாளக்கிராமம் வந்து ஸ்ரீ எம்பெருமானார் க்ரந்தங்களைக்
காலக்ஷேபம் செய்தும், தன் சிஷ்யர்களுக்கு ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்ற உபதேசம் செய்து கொண்டும்,
எப்பொழுதும் ஸ்ரீ எம்பெருமானாருக்குத் திருவாராதனம் செய்தும், வேறு ஒரு ஸ்ரீ பாத தீர்த்தமும் ஏற்காமல்
ஆசார்ய நிஷ்டையோடே ஸ்ரீ எம்பெருமானார் திருவடியைச் சென்று அடைந்தார்.

ஸ்ரீ வடுக நம்பியின் வைபவம் வ்யாக்யானங்களிலும் ஐதிஹ்யங்களிலும் காணக் கிடைக்கிறது. அவற்றில் சில:

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி 4.3.1 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம்.
இப்பதிகம் “நாவகாரியம்” – சொல்லக்கூடாத சொற்களைச் சொல்லுதல்.
வடுக நம்பி அருகே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திருமந்திரம் ஓதவும், நம்பி, ”இது நாவகாரியம்” என்று வெறுத்து அகன்றாராம்.
ஏனெனில் திருமந்திரம் ஓதுமுன் குருபரம்பரையை ஒத வேண்டும், பிறகே திருமந்திரம் ஒத வேண்டும் என்பது முறை,
பிள்ளை லோகாசார்யரும் ஸ்ரீ வசன பூஷணம் 274வது ஸூத்ரத்தில், “ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும்” என்று அருளினார்.

பெரியாழ்வார் திருமொழி 4.4.7 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம், வடுக நம்பி திருநாடு எய்தினார் என்று
ஒரு ஸ்ரீவைஷ்ணவர் தகவல் கூறவும், அவர் ஆசார்ய நிஷ்டர் ஆகையால் அவர் ஆசார்யர் திருவடி அடைந்தார் என்று
கூற வேண்டும் என்று அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருத்தி யருளினாராம்.

ஸ்ரீ வடுக நம்பி யதிராஜ வைபவம் என்றோர் அழகிய நூல் சாதித்துள்ளார்.
அதில் எம்பெருமானாரோடு 700 சன்யாசிகளும், 12000 ஸ்ரீ வைஷ்ணவர்களும், கணக்கற்ற ஸ்ரீ வைஷ்ணவிகளும் இருந்தனர் என்கிறார்.
தம் மாணிக்க மாலையில், பெரியவாச்சான் பிள்ளை, ஆசார்ய பதவி தனிச் சிறப்புள்ளது,
அது ஸ்ரீ எம்பெருமானார் ஒருவருக்கே பொருந்தும் என வடுக நம்பி கூற்று என்கிறார்.

பிள்ளை லோகாசார்யர், ஸ்ரீ வசன பூஷணம் 411வது ஸூத்ரத்தில்
“வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர்” என்று சாதிக்கிறார். இதை மாமுனிகள் விளக்குகையில்,
மதுரகவிகள் முற்றிலும் ஆழ்வாரையே பற்றினாப் போலே நம்பி எம்பெருமானாரையே பற்றினார்,
ஆண்டானும் ஆழ்வானும் எம்பெருமான் எம்பெருமானார் இருவரையும் பற்றி இருந்தார்கள் என்கிறார்.

இறுதியாக, ஆர்த்தி ப்ரபந்தம் 11ஆம் பாசுரத்தில் மாமுனிகள் எம்பெருமானாரிடம் தம்மையும் அவரையே பற்றியிருந்த
ஸ்ரீ வடுக நம்பிகளைப் போலே ரக்ஷித்தருள வேணும் என்று இறைஞ்சுகிறார்.
ஸ்ரீ வடுக நம்பி எம்பெருமானாரிடம் கொண்டிருந்த அளவற்ற ஈடுபாட்டினால், ஸ்ரீ எம்பெருமானைத் தனியாக வணங்கவில்லை.
ஆசார்யனை நாம் வழிபடும்போது, இயற்கையாகவே அவ்வாசார்யன் அண்டி இருக்கும் எம்பெருமானையும் வழிபட்டதாக ஆகி விடும்.
ஆனால், எம்பெருமானை மட்டும் வழிபட்டால், ஆசார்யனை வணங்கியதாக ஆகாது என நம் பூர்வர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர்.
ஆகையால் ஆசார்யனையே எல்லாமாகக் கொண்டு இருப்பதே நம் ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான கொள்கை.
இந்த அம்சம் வடுக நம்பியிடம் அழகாகப் பொருந்தியுள்ளது என்கிறார் மாமுனிகள்.

இவ்வாறாக பாகவத நிஷ்டையை ஆசார்ய பக்தியால் அனுஷ்டித்த வடுக நம்பி திருவடிகளே நமக்குப் புகல்.

——————-

27- ஸ்ரீ வங்கி புரத்து நம்பி

பாரத்வாஜ குல உத்பூதம் லஷ்மணார்ய பத ஆஸ்ரிதம்
வந்தே வங்கீ புராதீஸம் ஸம்பூர்ணார்யம் கிருபா நிதிம்

இவர் ஸ்ரீ திருவாய் மொழியின் சாரம் அர்த்த பஞ்சகம் என்று அருளிச் செய்வர்
பிராட்டியின் பதியாய் இருப்பதே எம்பெருமானுக்குப் பெருமை –
ஸ்ரீ வைஷ்ணவ மதத்தின் பெருமையும் அதுவே என்று அடித்து அருளிச் செய்வர்
ஸ்ரீ எம்பெருமானே ஸ்ரீ நம்மாழ்வாராக அவதரித்தார் என்பாராம் –

ஸ்ரீ மணக்கால் நம்பி சிஷ்யரான ஸ்ரீ வங்கி புரத்து ஆய்ச்சியின் திருக்குமாரர் –
ஸ்ரீ சிறியாத்தான் இவரது சிஷ்யர் –

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேத –நாக பர்யங்க உத்ஸ்ருஜ்ய —
ஆகதோ மதுராம் புரீம்
சர்வ நியாந்தா
ஸ்ரீ கிருஷ்ணனாய் பிறந்து
நியாம்யனாய் இருந்த வ்ருத்தாந்தம் – பெரிய திருமொழி -6-7-4-
ஸ்ரீ வங்கி புரத்து நம்பி பல காலம்
திரு வாராதன க்ரமம் அருளிச் செய்ய வேணும் என்று போருமாய்
அவசர ஹானியாலே அருளிச் செய்யாமலே போந்தாராய்
திருமலையிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
ஸ்ரீ ஆழ்வானுக்கும் நம்பி ஸ்ரீ ஹனுமந்தத் தாசருக்கும் அது தன்னை அருளிச் செய்தாராய்
சமைக்கிற அளவிலே நம்பி தோற்ற
திரு உள்ளம் துணுக் என்று அஞ்சி அப்போது அருளிச் செய்த வார்த்தை –
என்றும் உள்ள இஸ் சம்சயம் தீரப் பெற்றோம் ஆகிறது
நியாமகன் நியாம்யங்களிலே சிலர்க்கு அஞ்சிக் கட்டுண்டு அடி உண்டு
அழுது நின்றான் என்றால் இது கூடுமோ என்று இருந்தோம் –
இரண்டு இழவுக்கும் நம்முடைய ஹிருதயம் அஞ்சி
நொந்தபடியால் அதுவும் கூடும் -என்று –

ஸ்ரீ நம் பெருமாள் வீதி உலாக்கில் பால் உண்பீர் பழம் உண்பீர் என்று இடையர்கள் –
விஜயீ பவ -இவர் சொல்ல ஸ்ரீ முதலியாண்டான்
முரட்டு சம்ஸ்க்ருத குறை சொல்லி அவர்கள் அவர்களே நாம் நாம் தான் என்று
ஆய்ச்சிகளின் பக்தியை மெச்சி அருளிச் செய்தாராம்

நமக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது –உன்னை அருள் புரிய வேண்டும் என்ற
க்ஷத்ர பந்துவின் வார்த்தை -என்று எம்பெருமானார் சொல்ல
உன்னை வணங்கத் தெரியாத எனக்கு கிருபை செய்து எனக்கு அருள் புரிய வேண்டும் என்ற
காளியன் வார்த்தை என்றாராம்
இவர் நிர்ஹேதுக கிருபையின் பெருமையை விளக்க இந்த சம்வாதம்

———————–

28-ஸ்ரீ பராங்குச நம்பி

கோவிந்த ராஜான் வயஜோ மநீஷீ பரங்குசோ யாமுனவை மநஸ்யம்
அபாசகார பிரசபம் த்ருதீயம் விராஜதே வ்ருத்த மணி ப்ரதீப –

இவர் ஸ்ரீ எம்பாருடைய தம்பியான சிறிய கோவிந்த பட்டரின் திருக்குமாரர்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்ரீ புத்தருடைய சிஷ்யர்
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ எம்பாரிடம் ஸ்ரீ நம்மாழ்வார் திரு நாமத்தைச் சாத்தகி சொல்ல இந்த திரு நாமம் –
தமிழில் வல்லவர்
ஸ்ரீ கூரத்தாழ்வான் இவரை பாலேய் தமிழர் என்பாராம் –

————

29- ஸ்ரீ அம்மங்கி அம்மாள்
இவர் ஒரு சமயம் ஸ்ரீ நம்பிள்ளையின் நோய் தீர ஒரு மந்திரிக்கப்பட்ட யந்திரத்தை அவர்
கையில் வைக்க முற்பட அவர் அத்தை ஏற்க மறுத்தார்
இவர் ஸ்ரீ மழுவூர் நம்பி ஸ்ரீ மருதூர் நம்பி ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ அனந்தாழ்வான் உடன்
ஸ்ரீ ரெங்கம் சென்று வந்தார் –

இவர் நீதிப்பாடல்கள் பாடி மகிழ்விப்பாராம் –
இவரது சரம தசையில் ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ நம்பிள்ளை அறிய வந்து அவர் படுகிற கிலேசங்களைக் கண்டு
இங்குத்தை ஆச்சார்ய சேவைகளும்
பகவத் குணங்களைக் கொண்டு போது போக்கின படிகள் எல்லாம் கிடக்க
அல்லாதாரைப் போலே இப்படி பட வேண்டுவதே -என்ன –
நீயாள வளை யாள மாட்டோமே -ஸ்ரீ பெரிய திரு மொழி -3-6-9–என்றவாறே
பகவத் பரிக்ரஹம் ஆனால் கிலேசப் பட்டே போம் இத்தனை காணும் -என்றார்
புறப்பட்ட பின்பு ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பிள்ளையை பார்த்து முடிகிற இவ்வளவிலேயும் இவ்வார்த்தை சொல்லுகிறது
விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே என்று அருளிச் செய்தார்-

——————–

30- ஸ்ரீ பருத்திக் கொல்லை அம்மாள்

ஸ்ரீ உடையவர் திருமலைக்கு எழுந்து அருளும் போது ஸ்ரீ திருக்கோவலூர் சென்று அங்கு இருந்து
ஸ்ரீ காஞ்சி புரம் நோக்கி நடக்க அதில் இரண்டு வழிகள் பிரிய -அங்குள்ள இடையர்கள்
ஓன்று ராஜஸரான எச்சான் இடத்துக்குப் போகும் வழி என்றும் –
மற்ற ஓன்று சாத்விகரான இவர் இடத்துக்குப் போகும் வழி என்று சொல்ல
அதன் வழி இவர் இடத்துக்கு வந்தவர் -அங்கு அவர் இல்லாமல் அவர் தேவிமார் சரியான புடவை இல்லாமல்
வெளியே வர முடியாமல் இருக்க அறிந்த ஸ்ரீ உடையவர் தனது உத்தரீயத்தை எடுத்து எறிய –
அத்தைக் கட்டிக் கொண்டு வந்து வணங்க அவரைத் தளிகை பண்ணும்படி சொல்ல
பண்ணி முடித்ததும் அவள் கணவர் வந்து தண்டம் சமர்ப்பித்து ஸ்ரீ பாத தீர்த்தம் ஸ்வீ கரித்து
அனைவரும் அமுது செய்தார்கள்
இவர் தேவிக்கு தீங்கு நினைத்த வைசியன் ஒருவனை ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாத தீர்த்தம் சாதித்து
இவர் திருத்திப் பணி கொண்டார் –

—————————

31- ஸ்ரீ உக்கல் அம்மாள் ஸ்வாமி
ஸ்ரீ உடையவருக்கு திரு ஆல வட்ட கைங்கர்யம் செய்தவர்

———–

32- ஸ்ரீ சொட்டை அம்மார் ஸ்வாமி
இவர் ஸ்ரீ திரு நாராயண புரத்தில் ஸ்ரீ உடையவர் ஸந்நிதியில்
ஸ்ரீ நடுவில் ஆழ்வான் இடம் ஸ்ரீ வங்கி புரத்து ஆச்சி உடன் ஸ்ரீ பாஷ்யம் கேட்டவர்
அவர் இவர்களை ஆசீர்வதித்து ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று
இருங்கோள் -என்று அருளிச் செய்தார் –

————-

33-ஸ்ரீ கிடாம்பிப் பெருமாள் ஸ்வாமி
இவர் ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் உடன் சேர்ந்து திரு மடப்பள்ளி கைங்கர்யம் செய்தவர்
ஸ்ரீ பாஷ்யம் முடித்த பின்பு ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாஷ்ய கோசத்துடன் ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் உடன்
காஷ்மீர் சென்று சாரதா பீடத்தில் வைத்து அங்கீ காரம் பெறச் செய்தார்

————————–

34-ஸ்ரீ ஈச்சம் பாடி ஆச்சான் ஸ்வாமி

ஸ்ரீ ஈச்சம்பாடி ஸ்ரீ திரு மலைக்கு அருகில் உள்ளது
இவர் திருத் தகப்பனார் -ஸ்ரீ சுந்தர தேசிகர் என்ற ஸ்ரீ அழகப் பிரான் –
திருத்தாயார் -ஸ்ரீ திருமலை நம்பியின் திருக்குமாரத்தில்
இருவரும் ஸ்ரீ ஆளவந்தார் நியமனப்படி திருமலையில் கைங்கர்யம் செய்து கொண்டு இருந்தார்கள்
ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ திருமலைக்கு எழுந்து அருளிய போது அவருக்கு ஸ்ரீ சுந்தர தேசிகர்
ஸ்ரீ தாப நீய உபநிஷத்தையும் ஸ்ரீ நரஸிம்ஹ நிமந்த்ரத்தையும் உபதேசித்தார்
அவருக்கு 1026 தை மாசம் ஹஸ்தம் இவர் பிறக்க
ஆச்சான் ஸ்ரீ நிவாஸாசார்யார்-என்ற பெயர் சாற்றி அருளினார்
இவர் ஸ்ரீ ராமானுஜரை ஆஸ்ரயித்து தர்சன ப்ரவர்த்தனம் செய்து அருளினார் –

ஏராரும் தை யத்தம் இங்கு உதித்தான் வாழியே
சுந்தரேசன் திரு மகனாய் துலங்குமவன் வாழியே
பார் புகழும் யதி ராஜன் பதம் பணிவோன் வாழியே
சீராரும் வேங்கடத்தில் திகழுமவன் வாழியே
பார் மகிழும் பாடியத்தை பகருமவன் வாழியே
உத்தமமாம் குலமதனில் தொல் புகழோன் வாழியே
தொண்டர் குழாம் கண்டு உகக்கும் தொல் புகழோன் வாழியே
நல் ஈச்சம்பாடி வாழ் நம் ஆச்சான் வாழியே

——————

35- ஸ்ரீ ஈச்சம் பாடி ஜீயர் ஸ்வாமி

இவர் ஸ்ரீ ஈச்சம் பாடி ஆச்சானின் இளைய சகோதரர்
இவர் 1030 ஆனி திருவோணம் திரு அவதாரம்
ஸ்ரீ வேங்கடேசன் திரு நாமம் இயல் பெயர்
ஐவரும் ஸ்ரீ ராமானுஜரை ஆஸ்ரயித்து தரிசன பிரவர்தனம் செய்து கொண்டு இருந்தார்
அவர் இடமே சந்யாச ஆஸ்ரமம் ஸ்வீ காரம் பெற்று ஸ்ரீ ஈச்சம் பாடி ஜீயர் ஆனார்

ஆனி தனில் ஓணத்தில் அவதரித்தான் வாழியே
வேங்கடத்தைப் பாதியாக விரும்புமவன் வாழியே
பூவார்ந்த கழல்களையே போற்றுமவன் வாழியே
பதின்மர் கலை உட் பொருளை பகருமவன் வாழியே
அநவரதம் அரி யுருவன் அடி தொழுவோன் வாழியே
எப்பொழுதும் யதி பதியை ஏத்துமவன் வாழியே
முக்தி தரும் முந்நூலும் முக்கோலும் வாழியே
எழில் ஈச்சம் பாடி உறை ஜீயர் தாள் வாழியே –

————

36–ஸ்ரீ காராஞ்சி சோமயாஜியார் ஸ்வாமி

இவர் ஸ்ரீ உடையவரை ஆஸ்ரயித்தவர்
ஸ்ரீ உடையவர் இருக்கும் இடம் சென்று கைங்கர்யம் செய்ய இவர் மனைவி இடம் தராததால்
ஸ்ரீ உடையவர் விக்ரஹம் பண்ணி பூஜை செய்ய விரும்பினார்
விக்ரகம் சரிவர அமையாததால் அதை அழித்து வேறே ஒரு விக்ரஹம் பண்ணினார்
ஒரு நாள் இரவில் ஸ்ரீ உடையவர் ஸ்வப்னத்தில் தோன்றி ஏன் இப்படி செய்கிறீர் -என்று கேட்டார்
கண் விழித்து நேரே ஸ்ரீ ரெங்கம் புறப்பட்டுச் சென்று ஸ்ரீ உடையவராய் தண்டம் சமர்ப்பித்து நடந்தத்தைச் சொன்னார்
ஸ்ரீ உடையவர் முறுவல் செய்து அபயம் அளித்து இவருடைய கவலைகளைத் தீர்த்தார்

——————-

37-ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள் ஸ்வாமி

இவருக்கு ஆஸூரித் தேவர் -ஆஸூரி புண்டரீகாக்ஷர் -என்ற திரு நாமங்கள் உண்டு
ஹாரித கோத்ரம்
ஸ்ரீ நடுவில் ஆழ்வானுடைய சிஷ்யர்
ஸ்ரீ திரு நாராயண புரம் இருந்து தர்சன நிர்வாஹம் செய்து வந்தார்
இவரது திருவம்சத்தில் திரு அவதரித்தவர் ஸ்ரீ ஆய் ஜெகந்நாதாச்சார்யார் -என்ற பிரசித்தி பெற்ற வர் –

—————-

38- ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் ஸ்வாமி

ராமானுஜ பதாம் போஜ யுகளீ யஸ்ய தீமத
ப்ராப்யம் ச ப்ராபகம் வந்தே ப்ரணதார்த்தி ஹரம் குரும்

ஆஸ்திகா அக்ரேசரம் வந்தே பரிவ்ராட் குரு பாஸகம்
யாசிதம் குரு கேசேந ப்ரணதார்த்தி ஹரம் குரும்

சித்திரை ஹஸ்தம்
ஆத்ரேய கோத்ரம்
தளிகைக் கைங்கர்யம் -திருக் கோட்டியூர் நம்பி நியமனம் பிரசித்தம்
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் உடைய அத்தை கணவர்
ஸ்ரீ திரு விருத்தத்துக்கு தனியன் சாதித்து உள்ளார்

அபராத ஸஹஸ்ர பாஜநம் –அகதிம் -சொல்ல அழகர் நீ ராமானுஜன் அடியவராக இருக்க
அகதி சொல்லக் கூடாதே என்று அருளிச் செய்த விருத்தாந்தம் –
தீர்த்தம் சாதிக்க -பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -பாசுரம் சொல்லி
கிருதஜ்ஜை தெரிவித்துக் கொண்டாரே
பட்டர் இடம் தாழ்ந்து பரிமாற்ற -வயசில் மூத்த ராமானுஜர் அடியாராய் இருக்க இவ்வாறு செய்வது என் என்று கேட்க
நம்முடைய அடங்கலும் நம்மை நினைத்து இருக்குமா போல் பட்டரை நினைத்து இருக்க –
எம்பெருமானார் அருளிச் செய்தது உண்டே என்றாராம்
ஸ்ரீ பாஷ்ய கோசம் இவரையே காஷ்மீருக்கு சென்று சரஸ்வதி தேவி பாஷ்யகாரர் பட்டம் சாதித்த விருத்தாந்தம்
இவருக்கு வேதாந்த உதயனன் என்ற விருதை ஸ்ரீ உடையவர் வழங்கினார்
நியாய சாஸ்திரத்தில் உதயனன் பிரபல வித்வானாய் இருந்தார்

இவர் திருக்குமாரர் ஸ்ரீ கிடாம்பி ராமானுஜாச்சார்யார்
அவர் திருக்குமாரர் ஸ்ரீ கிடாம்பி ரங்க ராஜாச்சார்யார்
அவர் திருக்குமாரர் ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளார்
அவர் திரு சகோதரி ஸ்ரீ தோத்தாத்ரி அம்மையார்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ வேதாந்த தேசிகன்
இவர் வம்சமே ஸ்ரீ சிங்கப் பெருமாள் ஸ்வாமியும்
அவருடைய ஸ்வீ கார புத்ரருமான காரப்பங்காடு வேங்கடாச்சார்யார் ஸ்வாமிகள் –1906-1971-

———-

39-ஸ்ரீ அலங்கார வேங்கடவர் ஸ்வாமி

ஸ்ரீ மத் தயாபால முநேஸ் த நூஜம் தத் பாத ஸேவாதி கத ப்ரபோதம்
ஸ்ரீ மத் யதீந்த்ர அங்க்ரி நிவிஷ்ட சித்தம் ஸ்ரீ கௌசிகம் வேங்கட ஸூரி மீடே

ஸ்ரீ ராமானுஜ பாத பத்ம யுகளம் ஸம்ஸ்ருத்ய ஸத் கோஷ்டிஷு
ப்ரேம்ண அலங்க்ருத வேங்கடேச குரு இத்யாக்யாம் பராம் ப்ராப்தவான்

யோ அசவ் கௌசிக தேசிகோ குண நிதி ஸ்ரீ விஞ்ச புர்யாம் ஸ்தி தஸ்
தத் பாதாப்ஜ யுகம் நமாமி ஸததம் ஸம்ஸார சந்தாரகம்

ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானா உடைய திருக்குமாரர்
கௌசிக கோத்ரம்
மார்கழி திருவாதிரை
இவர் ஸ்ரீ பெரிய திருமலை நம்பி திருப்புதல்வியை மணந்தார்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ விஞ்சிமூர் தாத்தாச்சாரியார்

திரு மருவும் விஞ்சை நகர் செழிக்க வந்தோன் வாழியே
ஸ்ரீ பாஷ்யகார் அடி சேர்ந்து உய்ந்தோன் வாழியே
அருளாள மா முனிவன் அருள் மைந்தன் வாழியே
அரு மறை நூல் மாறன் உரை ஆய்ந்து உரைப்போன் வாழியே
மருளில் திருமலை நம்பி மணவாளன் வாழியே
மார்கழியில் ஆதிரை நாள் மகிழ்ந்து உதித்தோன் வாழியே
திருவரங்கர் தாளிணை யின் தம் பகர்வோன் வாழியே
திரு வேங்கட ஆசிரியன் திருவடிகள் வாழியே

————-

40-ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமி-

கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ர ஆஸ்ரிதம் ஆஸ்ரயே
ஞானப் பரமேய சார அபி வக்தாரம் வரதம் முனிம்

ஞான பக்த்யாத்த வைராக்யம் ராமானுஜ பத ஆஸ்ரிதம்
பஞ்சம உபாய ஸம்பந்தம் சம்ய மீந்த்ரம் நமாம் யஹம்

தயா பாலந தேவாய ஞான சாரா ப்ரதாயி நே
ப்ரமேய சாரம் தததே நமோஸ்து ப்ரேம ஸாலி நே

யஜ்ஞ மூர்த்தியாய் இருந்து -18 நாள் வாதம் -செய்து –
திரு ஆராதனை கைங்கர்யம்
ஞான சாரம் ப்ரேம சாரம்
தம் மடத்தை இடித்த விருத்தாந்தம்
ஸ்ரீ உடையவர் தம்மை ஆஸ்ரயிக்க வந்த
ஸ்ரீ அனந்தாழ்வான்
ஸ்ரீ எச்சான்
ஸ்ரீ தொண்டனூர் நம்பி
ஸ்ரீ மருதூர் நம்பி
ஸ்ரீ மழுவூர் நம்பி –ஆகியவர்களை இவர் இடம் ஆஸ்ரயிக்கச் செய்தார்

ஸ்ரீ வடுக நம்பி திரு நாட்டுக்கு எழுந்து அருளியதாக சொல்ல -அப்படிச் சொல்லக் கூடாது
ஸ்ரீ உடையவர் திருவடி சேர்ந்தார் என்று சொல்ல வேண்டும் என்றார் –
இவர் சரம காலத்தில் ஸ்ரீ கூரத்தாழ்வானும் ஸ்ரீ உறங்கா வில்லி தாஸரும் எழுந்து அருள
ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு விரும்பியவருக்கு ஸ்ரீ பரமபதம் சாதிக்க சக்தி இருந்தும் தான் இப்படி
கஷ்டப்பட வைக்கிறார் என்று எண்ணி தான் சீக்கிரம் ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகள் சேர வேணும் என்று பிரார்த்தித்தார் –
சிறு மா மானிடராய் -8-10-3-மேனி சிறுத்து கீர்த்தி பெருத்து இருந்த
ஸ்ரீஅருளாளப் பெருமாள் எம்பெருமானாரைப் போல் என்று காட்டியது –

திரு வாழும் தென்னரங்கம் சிறக்க வந்தோன் வாழியே
தென் அருளாளன் அன்பால் திருந்தினான் வாழியே
தரு வாழும் எதிராசன் தாள் அடைந்தோன் வாழியே
தமிழ் ஞான ப்ரமேய சாரம் தமர்க்கு உரைப்போன் வாழியே
தெருளாரு மதுரகவி நிலை தெளிந்தோன் வாழியே
தேசு பொலி மடம் தன்னை சிதைத்திட்டோன் வாழியே
அருளாள மா முனியாம் ஆரியன் தாள் வாழியே
அருள் கார்த்திகைப் பரணியோன் அனைத்தூழி வாழியே –

————–

41-ஸ்ரீ குமாண்டூர் இளைய வல்லி ஸ்வாமி

ஸ்ரீ கௌசிக அந்வய மஹாம் பூதி பூர்ண சந்த்ரம்
ஸ்ரீ பாஷ்ய கார ஜநநீ ஸஹஜா தூ நூ ஜம்
ஸ்ரீ சைல பூர்ண பத பங்கஜ சக்த சித்தம்
ஸ்ரீ பால தன்வி குரு வர்யம் அஹம் பஜாமி

ஸ்ரீ யதீந்த்ர மாத்ஷ்வ ஸ்ரீய ப்ரதி தார்ய பதே ஸ்திதஸ்
மூல பத கௌசிகா நாம் தம் வந்தே பால தந்விதம்

சித்திரை ரேவதி நஷத்ரம் திரு அவதாரம்
கௌசிக கோத்ரம்
ஸ்ரீ ராமானுஜர் உடைய சிறிய திருத் தாயாருடைய திருக் குமாரர்
ஸ்ரீ பெரிய திருமலை நம்பியின் மருமகன்
ஸ்ரீ பால தந்வி -வட மொழி திரு நாமம்
இவர் வம்சம்
ஸ்ரீ பால தந்வி –சித்திரை ரேவதி
ஸ்ரீ திரு விக்ரம குரு
ஸ்ரீ ராமானுஜ குரு
ஸ்ரீ வரத்தார்ய குரு –கும்ப மூலம்
ஸ்ரீ வரம் தரும் பெருமாள் அப்பை -ஆவணி அவிட்டம் -இவர் ஸ்ரீ மா முனி சிஷ்யர்

————————————

ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வைபவம்

ஸ்ரீ திருவரங்கத்தில் இருந்து ஸ்ரீ அழகிய மணவாளனும்
ஸ்ரீ ஆழ்வார் திரு நகரியில் இருந்து ஸ்ரீ நம்மாழ்வாரும் -கலாபத்துக்கு பிறகு -1323- தம் தம்
ஸ்தானங்களை விட்டு கோழிக்கோடு முந்திரிப்பூ காடு வழியாக கர்நாடக -திருக் கணாம்பி -என்னும் ஊரில் எழுந்து அருளினார்கள்
கலாபத்துக்கு பின்பு ஸ்ரீ திருக் குருகூர் புனர் நிர்மாணம் பண்ணி அருளினார்
ஸ்ரீ திருமலை ஆழ்வார் என்னும் ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை

நம ஸ்ரீ சைல நாதாய குந்தீ நகர ஜன்மனே ப்ரஸாத லப்த
பரம ப்ராப்ய கைங்கர்ய சாலி நே

சீர் உற்ற செஞ்சொல் திருவாய் மொழிப்பிள்ளை செம்முகமும் தார் உற்ற மார்பும் தளிரேய் பதங்களும் தன் மனத்து
பூரித்து வாழும் மணவாள மா முனிகள் பொன்னடிகள் பாரில் தரித்து அடியேன் பற்றினனே –ஸ்ரீ கந்தாடை அண்ணன்

ஸ்ரீ பகவத் விஷய உபதேச மார்க்கம் தமக்கு திருவாய் மொழிப்பிள்ளை பேர் அருளாலே வந்த படியை
தமக்கு உள்ள பேர் அன்பாலே பாசுரம் இட்டு அருளுகிறார் மா முனிகளும்

திரு அருள் மால் சேனை முதலி சடகோபன் நாத முனி சீர் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி சென்றான் ஆளவந்தார்
குரு மாலாதரர் குருகைப் பிராற்கு அன்பாம் எதிராசர் கோவிந்தர் கூரேசர் பட்டர் வேதாந்த முனி
இரு கண்ணற்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடு அளித்ததற்கு ஏய்ந்த மாதவர் பத்ம நாதர் இவர் அருளாளர்
திருவடி ஊன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே – –

1301-1406-இவர் விபவ வருஷம் வைகாசி விசாகத்தில் பூர்வ சிகை ஸ்ரீ வைஷ்ணவ குலத்தில் திரு அவதாரம் –
மதுரைக்கு அருகில் குந்தீ -இப்பொழுது மருவி கொந்தகை என்று அழைக்கப் படுகிறது –

திரு நாமங்கள்
ஸ்ரீ சைலேசர்
திருமலை ஆழ்வார்
திருவாய் மொழிப்பிள்ளை
காடு வெட்டி ஐயன்
சடகோப தாசர்
ஸ்ரீ நாத முனிகள் சிஷ்யர் உய்யக் கொண்டார் வம்சத்தவர் என்பர்

திருத்தாயார் சாத்விகை அம்மையார்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் இடம் பஞ்ச சம்ஸ்காரம்
பாண்டிய ராஜ புரோகிதர் -பின்பு ராஜாவாகவும் ஆனவர்
பிள்ளை லோகாச்சார்யார் ஜோதிஷ் குடியில் அழகிய மணவாளரை பாது காத்து
அருளும் பொழுது இவருக்கு 40 திரு நக்ஷத்ரம்

பிள்ளை லோகாச்சார்யார் திருமலை ஆழ்வாரை அனுவர்த்தித்து
ஸ்ரீ கூர குலோத்தமை தாசரை ரஹஸ்யார்த்தங்களை ப்ரசாதிக்கும் படியாகவும்
திருக் கண்ணங்குடி பிள்ளைக்கும் திருப் புட் குழி ஜீயருக்கும் திருவுவாய் மொழிப் பொருளை உபதேசிக்கும் படியாகவும்
மற்றும் உள்ள மூவாயிரம் வியாக்கியானங்களை உபதேசிக்கும் படி நாலூர்ப்பிள்ளைக்கும்
ஸ்ரீ வசன பூஷண சாரார்த்தமான ஸப்த காதை முதலான அர்த்த விசேஷங்களை
விளாஞ்சோலைப் பிள்ளைக்கும் நியமித்து அருளினார் –

கூர குலோத்தமை தாசர் திருவடிகளே சரணம் என்று அநவரதம் சொல்லக் கேட்டு
ராஜ மஹிஷி இவருக்கு அரசுப் இருந்து ஒய்வு வழங்கி விட்டார்

கூர குலோத்தம தாசர் திரு வரசு சிக்கில் கிடாரத்தில் உள்ளது
இங்கு திருவாய் மொழிப்பிள்ளை தங்கி இருந்த திரு மாளிகை சேஷமும் இன்றும் உள்ளது
குந்தீ -கொந்தகையில் வீற்று இருந்த திருக்கோலத்துடனும் செங்கோலுடனும் சேவை சாதித்து அருளுகிறார்

நம்மாழ்வாரை முந்திரிப்பூ பள்ளத்தாக்கில் இருந்து எழுந்து அருளப்பண்ணி –
அங்கேயே பரமபதம் அடைந்த தோழப்பர் திருக்குமாரர் -அப்பன் பிள்ளைக்கு -ஆறுதல் கூறி
ஆழ்வார் உம்மை புத்ரராக கொண்டார் -இன்றும் ஆழ்வார் தோழப்பர் -அருளப்பாடு -உண்டே

நம்மாழ்வாரை திருக்கணாம்பி எழுந்து அருளப்பண்ணி -இருந்த கோயிலிலே மேலே கருட பக்ஷி கூடு கட்டி இருந்தது
ஆழ்வாரை சேவிக்க திருவனந்த புரம் திருவட்டாறு திருவண் பரிசாரம் திருவல்லவாழ் திவ்ய தேச நம்பூதிரிகள் போத்திமார்கள் வந்து
உதய காலத்தில் திரு மஞ்சனம் செய்து அருளி
தத்யோந்நம் நெய் தோசைப்படி பாகு கூட்டின கட்டிப்பொரி -பால் கஞ்சிக் கடாரம் அமுது செய்து அருளி
மத்தியானம் நாயக அலங்காரம் -சம்பா அவசரம் திருப்பணியாரங்கள் –
சாயங்காலம் திருவாராதனம் கண்டு அருளி
அஸ்தமன சமயத்தில் உப்புச் சாத்தமுது -சம்பா -தோசைப்படி -பொரி அமுது செய்து அருளி
பிற்பாடு அத்தாளமுது செய்து அருளி
இராக்காலமாய் ஸ்ரீ பலிதுடி -திரு உற்ற சாதம் -அரவணை -சுக்கு கஷாயம் அமுது செய்து அருளி
போத்திமார் திட்டம் பண்ணி நடத்திப் போந்தார் –

பேர் அருளாளர் நியமனம் அடியாக கச்சி மா நகரில் ஆச்சான் பிள்ளை திரு மலை ஆழ்வாருக்கு
ஈடும் நாலாயிர பொருள்களையும் சாதித்து அருளினார்

காடு வெட்டி நாடாக்கி -நல்லார் பலர் வாழ் குருகூர் என்னும்படி குடியேறி திருக் கணாம்பியில் இருந்து
திருநகரிக்கு எழுந்து அருளப்பண்ணி -குருகூர் சடகோபன் என்னும்படி
உறங்கா புளி நிழலிலே ஏறி அருளப் பண்ணி சேவித்து நின்றார்

நம்மாழ்வார் சடகோப தாசர் -திருநாமம் யதார்த்தமாம் படி பிரசாதித்து அருளினார்
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே -என்னும் படியும்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய் -என்னும் படியும்
புகழ் வண் குருகையும் பொற் கோபுரமும் புரிசை சூழ் கழனி
தண் பொருனை மன் ஆழ்வார் மறைத் தமிழ் ஆயிரமும் திகழும் படி செய்த
ஸ்ரீ சைலேசர் என்னும் படி கைங்கர்யமே நிரூபகமாக இருந்தார்

1371-விஜய நகர மன்னர் வீர கம்பண்ணர் -செஞ்சி மன்னன் கோபணார்யன் –
விஜய நகர் படைத்தலைவன் சாளுவ மங்கி ஆகியோரின் பெரு முயற்சியால்
நம்பெருமாள் பரிதாபி ஆண்டு வைகாசி -17- நாள் திருவரங்கத்துக்கு எழுந்து அருள
அருணோதயம் போல் 1370 சாதாரண வருஷம் ஐப்பசி திரு மூலம் -மா முனிகள் திரு அவதாரம்

திருவாய் மொழிப்பிள்ளை உடைய திரு ஆராதனப் பெருமாள் -இன வாயர் கொழுந்து –

இவர் சிஷ்யர்கள்
பெரிய ஜீயர்
நம்மாழ்வார் கோயில் எம்பெருமானார் ஜீயர்
எம்பெருமானார் கோயில் சடகோபர் ஜீயர்
தத்வேச ஜீயர்
இவர் 105 திரு நக்ஷத்ரம் எழுந்து அருளி இருந்தார்
திரு அத்யயனம் வைகாசி கிருஷ்ண அஷ்டமி

————

ஸ்ரீ மா முனிகளின் வைபவம்

ஸ்ரீ கோ மடத்து ஆழ்வான் -7 th ஸிம்ஹாஸனாதி பதி
ஸ்ரீ கோ மடத்துப் பிள்ளான் என்றும் அழைக்கப் படுவார்
இவர் சிஷ்யர் காக்கைப் பாடி ஆச்சான் பிள்ளை -மூன்று தட்வை ஸ்ரீ பாஷ்யம் கேட்டாராம்
இவரது வம்சமே ஸ்ரீ திகழக் கிடந்தான் திரு நா வீறுடைய தாஸர் அண்ணர் –
ஸ்ரீ மா முனிகளின் திருத் தகப்பனார் –
ஸ்ரீ மா முனிகளின் திருப் பேரனார் ஸ்ரீ ஜீயர் நாயனார் –
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் உடைய அஷ்ட திக் கஜங்களில் ஒருவர் –

ஜகத் ரஷா பரோ அநந்தோ ஜனிஷ்யத்த பரோ முனி ததஸ்ரஸ் யாஸ் ஸதாச்சாரா சாத்விகாஸ் தத்வ தர்சன —
தேவப் பெருமாள் கந்தாடை தொழப்பர் ஸ்வப்னத்தில் மா முனிகள் அவதாரம் பற்றிய ஸ்ரீ ஸூக்தி

கிடாம்பி ஆச்சான் சிஷ்யர் கிடாம்பி நாயனார் இடம் ஸ்ரீ பாஷ்யம் கற்றார் -திருவாய் மொழிப் பிள்ளை ஆணைப் படி –
ஒரு தடவை கால ஷேபம் செய்து அருளிச் செயல்களில் மட்டுமே பொழுது போக்காகக் கொண்டார் –
செல்வ நாயனார் -ஐகள் அப்பா -இருவரும் கிடாம்பி நாயனார் உடன் கால ஷேபம்
ஆதி சேஷன் உருவம் கண்டார்கள்

யதோத்தகாரி சந்நிதியில் வியாக்யான முத்திரை உடன் இன்றும் சேவை உண்டே

பிரணவம்
ஆழ்வார் -அகாரம்
எம்பெருமானார் -உடையவர் –
ஜீயர் -மணவாள மா முனிகள் -மகாரம்

மன்னிய சீர் மாறன் கலையை உணவாகப் பெற்றோம் -திருவாய் மொழி ஜீயர் எண்ணலாமே
கிடாம்பி ஆச்சான் -ஸ்ரீ பாஷ்யம் சாதித்தவர் -ஈடு அனுசந்தானம் செய்து கொண்டே இருக்கும் ஜீயர் -என்று உண்டே

இயல் பெயர் -அழகிய மணவாள பெருமாள் நாயனார்-
திருத் தகப்பனார் -திரு நா வீறுடைய பிரான் தாதர் அண்ணர் –
அவதார வருஷம் -சாதாரண வருஷம் -துலா மாதம் –26- நாள் – in AD 1370.–திரு மூலம் -கௌண்டிந்ய கோத்ரம் –
சிக்கில் கடாரம் திரு அவதாரம் இருந்தாலும் ஆழ்வார் திரு நகரியிலே வளர்ந்து கற்றார் –
திருக்கல்யாணம் –15 திரு நக்ஷத்திரத்தில் –1386 AD (February)-க்ரோதன ஸம்வத்சரம் –மகர மாசம் –
சந்யாச ஆஸ்ரமம் –விஜய நாம சம்வத்சரம் –1415-AD -(APRIL ) -பெரிய திரு மண்டபத்தில் -ஸ்ரீ சடகோப முனி ஜீயரால் –

திருக்குமாரர் -எம் ஐயன் ராமானுஜன்
அவர் உடைய திருக் குமாரரர்கள் -ஜீயர் நாயனார் -வேதப்பிரான் பட்டர் ஸ்ரீ ஜீயர் நாயனார்-
24 th வம்சத்தவர் -ஸ்ரீ கோமடம் எதிராஜ சம்பத் குமாராச்சார்யர் –
இப்பொழுது ஸ்ரீ ரெங்கம் மா முனி சந்நிதி கைங்கர்யம்
இவர் திருத் தகப்பனார் -ஸ்ரீ கோமடம் சடகோபாச்சார்யர்

1443-ஆனி மூலம்
ஸ்ரீமான் வகுள தர ஸாஸ்த்ர பாவம் ஸ்ரீ சைலே பத்ர் -எறும்பி அப்பா
அப்புள்ளார் -சம்பிரதாய சந்திரிகை -ஆனந்த வருஷம் முன் நாள் திங்கள் பவுர்ணமி மூலம் -ப்ரமாதித வருஷம்
12-JUNE -1433-மாலை
அரங்கர் தாமே வந்து தனியன் செய்து தலைக் காட்டினார்
பானு வாரம் –
கூட இருந்த ஸ்வாமிகள் பட்டோலை
மாப்பிள்ளை -மணவாளப்பிள்ளை ஜா மாதா
ரம்ய -அழகிய
சந்யாச ஆஸ்ரமம் பின்பு அழகிய மணவாள மா முனி ஜீயர்
ஸ்ரீ சைலேச -திருமலை ஆழ்வார் -திருவாய் மொழிப் பிள்ளை
முனிம் -ஐந்தாவது பெருமை தனியனில்
தனியன் -மற்ற ஸ்தோத்ரங்களில் இருந்து எடுத்தவை
சுக்ரீவன் சைலேச தயா பாத்திரம் -நாதம் இச்சதி -சரணம் கத
மதங்க முனிவர்

தவம் புரிந்து உயர்ந்த மா முனி -வால்மீகி
வான் தமிழ் மா முனி -அகஸ்தியர்
சாந்தீபன் அடி பணிந்து அடி பட்டு மனம் வருந்தி
ஆர்ணவம் -லவ ஆர்ணவம்
தன்னை உற்றாரை அன்றி தன்மை உற்றாரை -யதீந்த்ரர் திருவடி விட யதீந்த்ர பிரவணர் திருவடி

அஸ்மத் ஆச்சார்யர் -கூரத்தாழ்வான் -லஷ்மீ நாத சமாரம்பாம் -நாத யமுனா மத்யமாம்
அஸ்மத் குரு சமாரம்பாம் யதி சேகர மத்யமாம் -லஷ்மீ வல்லன பர்யந்தாம் -குரு பரம்பரை -சொல்லி ஆழ்வார்
இதுக்கு முன்பு சொல்லி
இது வந்த பின்பு இத்தை சொல்வது -க்ரமம் பெரிய பெருமாளே ஏற்பாடு
ஒருவரைச் சொல்லி பின்பு குரு பரம்பரை -எல்லா ஆச்சார்யர்களையும் காட்டும் தனியன்

அனைவருக்கும் அன்வயித்து அர்த்தம் சொல்லலாம் படி பொதுவான
ஸ்ரீ சைலேசர் தயா பாத்திரம்
திருமலை -ஸ்ரீ சைலம் -ஈசன் -தயைக்கு பாத்திரம் நம்மாழ்வார் –
ஸ்ரீ நம் பெருமாள் இங்கே தங்கி -ஸ்ரீ ரெங்க மண்டபம் -22-வருஷங்கள்
1371 திரும்பி -பரிதாபி வருஷம்
1370 மா முனிகள் அவதாரம் -பின்பே வர தைர்யம்

ஸ்ரீ சைலத்தை தனக்கு பாத்திர பூதமாகி –
தீ ஞானம்
பக்தி -அவனுக்கு உண்டோ -ஸ்நேஹ பூர்வ அநு த்யானம்
பகவத் பக்தி -நமக்கு -பக்தர்கள் இடத்தில் -பக்த வத்சலன் அன்றோ
யதீந்த்ரர் இடம் ப்ராவண்யம் -அறிவோம் -அரையர் மூலம் கூட்டி வந்து –
யதீந்த்ர ப்ராவண்யம் தன்னிடம் கொண்டவர்
ரம்யா ஜாமாதரம் -இவனுக்கும் பொருந்தும்
சந்யாச ஆஸ்ரமம் பின்பு அழகிய மணவாளன் இயல் பெயரை மாற்ற வேண்டாம் —
சடகோப ஜீயர் ஆசைப் பட்டார் என்று -முன்புள்ள திரு நாமமே வைத்து நடத்தும்
மா முனி -மட்டும் சேர்த்து
ஆச்சார்யர் திரு நாமம் பின்பு சிஷ்யன் வகுக்க வேண்டும் -மாற்ற வேண்டாமே என்பதால் இப்படி
மனன சீலன் -முனியே இவனே
பிராட்டிக்கும்
அகலகில்லேன் -பாத்ர பூதை
எம்பெருமானார் இடம் ஈடுபாடு -வித்யாசல வேடன் வேடுவிச்சி
அவருக்கும் இவள் இடம் ப்ராவண்யம்
ரம்யா ஜா மாதாவை எப்பொழுதும் த்யானம்

சேனை முதலியார்
வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும்
எம்பெருமானார் இவரே தேசிகன் -சப்ததி
பிரம்பு -த்ரி தண்டம்

நம்மாழ்வாருக்கும் பொருந்தும்
மாரி மாறாத –
த்வய சாரம் -பூர்வ உத்தர திரு வேங்கடம் விஷயம்
இருவருக்கும் ஈடுபாடு வாசா மகோசரம்
மதி நலம் -தீ பக்தி
பவிஷ்யதாச்சார்யர்
அவர் ப்ராவண்யம் இவர் இடமே
மாறன் அடி பணிந்து
பராங்குச பாத பத்மம்
இப்படி அனைவருக்கும் பொருந்தும்

திரு முடி சம்பந்தம் திருவடி சம்பந்தம் -அனைவருக்கும் யதீந்த்ர ப்ராவண்யம்
எம்பெருமானாருக்கு ஆளவந்தார் மீதும் அவருக்கு இவர் மீதும் ப்ராவண்யம் உண்டே
அனைத்து ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகள் அறிந்தவர் இவர் ஒருவரே –
ஆளவந்தாருக்கு ஸ்ரீ பாஷ்யம் தெரியாதே
சகல பூர்வாச்சார்ய ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிற சாகர சந்த்ரன் அன்றோ இவர் –
தனி ஒருவர் இல்லை
முன்னவர் தாம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம் —
embodiment of all

தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு –தான் -நண்ணார் அவர்கள்
அன்பு தன் பால் -என்று தன் -அவரைச் சொல்லி
தன் குரு -மா முனிகள் தானே
ஐந்து கார்யம் சிஷ்யன் ஆச்சார்யருக்கு செய்ய வேண்டும்
தனியன் சமர்ப்பித்து
திரு நாமம் வகித்து
சொத்தை சமர்ப்பித்து -ஆதி சேஷனையே கொடுத்து அருளி -ஆச்சார்ய சம்பாவனை -சேஷ பீடம்
திரு நக்ஷத்ரம் -தீர்த்தம் கொண்டாடி
நேர் சிஷ்யர்கள் தானே திரு அத்யயனம் –
வேறே எவருக்கும் இல்லாமல் -மாசி சுக்ல பக்ஷம் துவாதசி இன்றும்
எம்பெருமானாருக்கு எம்பார் பண்ணி பின்பு அவர்க்கு பின்பு பண்ணுவார் இல்லை
என்றும் இறவாத எந்தை அன்றோ இவர் சிஷ்யர்
உச்சிக்கால பூஜை அப்புறம்
சுருள் அமுது கண்டு அருள மாட்டான் இன்றும் –
குரு பிரகாசம் -எங்கும் ஓலை அனுப்பி ஏற்பாடு –

இந்த ஒன்றை அனுசந்தித்தால் அனைவரையும் அனுசந்திப்பதாக இருப்பதால்
வைதிகம் விதி பிரேரிதம் இல்லாமல் எங்கும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்
தாமரை உடன் இருக்கும் தவளை அறியாத ஏற்றம் வண்டு உணரும்
தெய்வ வண்டு காட்டக் கண்டு அனுபவிப்போம்

———————

மூலம் –19 நக்ஷத்ரம் -ஆச்சார்யர் வரிசைகளில் –19–
எம்பெருமானார் -திருப்பாவை ஜீயர் -ஆச்சார்யர் வரிசைகளில் -9-
திருவாய் மொழிப் பிள்ளை -ஆச்சார்யர் வரிசைகளில்-18-

தென் திசை இலங்கை நோக்கி -இலக்காக நோக்கி -ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்
எழுந்து அருளிய ஆழ்வார் திரு நகரியையே நோக்கி -ரக்ஷண அர்த்தமாக –
இவர் அவர்களுக்கு ரக்ஷணம் -அவர்கள் இவனுக்கு ரக்ஷணம்

நான்கு யானைகள் வட பாலானாய் -அவனுக்கு -ஆச்சார்யருக்கு இரட்டை சம்பாவனை -அஷ்ட திக் கஜங்கள்

11 பட்டம் -12 பட்டம் மா முனிகள் அலங்கரித்த 1428-சீலக வருஷம் -ஸுவ்மய வருஷம் சாதாரண –
மூன்று வருஷம் -58–61-திரு -சாதாரண -நடுவில் -ஷஷ்ட்டி அப்த பூர்த்தி அங்கு
திருவேங்கட ராமானுஜ ஜீயர் சின்ன ஜீயர் –
இவரே பெரிய ஜீயராகி அவர் சிஷ்யர் சின்ன ஜீயர்
பெரிய சின்ன சேஷ வாகனங்கள் எம்பெருமானார் பெரிய ஜீயர் அடிமை ஸ்மாரகம்
திருவாய் மொழி நூற்று அந்தாதி ஸ்பஷ்டமாக திருவேங்கடம் பிராட்டி பெருமாள் நினைவாக –மா முனிகளின் ஈடுபாடு –

பத்து ஒற்றுமைகள் -ஸ்ரீ பராங்குச முனிக்கும் நம் மா முனிகளுக்கும் –

1-ஸ்ரீ சைலேசர் தயா பாத்திரம் -திருமலையான் கருணையில் மூழ்கி
த்வயம் பூர்வ உத்தர வாக்யார்த்தம் இங்கேயே
எங்கும் திருவேங்கடத்தான் சந்நிதி ஆழ்வார் திருநகரியை சூழ்ந்து
கண்ணாவான் -வேங்கட வெற்பனே முதலில் திவ்ய தேசம்
மலை மேல் தான் நின்று என் மனத்துள் நின்றானை
பக்கம் நோக்கு அறியாமல் பராங்குசன் மேல் ஒருங்கே கடாக்ஷம்
2-மயர்வற மதி நலம் அருள பெற்றவர்கள் இருவரும்
என் மனனே அப்புறம் -இங்கு யாருக்கு அருளினான் -அருளி சத்தை பெற்றதால்
மா முனிகள் -தீ பக்த்யாதி குண அர்ணவம் -ஆதி -சரம பர்வம் -நிஷ்டையில் முழுவதும் –
திவ்ய தேசம் திரு அவதரித்த நாள்களையும் காட்டி அருளி உபதேச ரத்ன மாலையில் –
3-திருக் குருகூரில் அவன் அருளால் தோன்றி -தானே யான் என்னும் படி –
வரகுண பாண்டியன் -இசை -ஹேம நாத பாகவதர் -பாடி -சம்பாவனை -பாண்டிய நாட்டையே கொடுக்கும் படி -வாய் வார்த்தை –
குடி மகன் பேச்சு வேறே -சிம்காசன பேச்சு வேறே -எனக்கு நிகராக உன் நாட்டு பாடகர் பாடினால் கொடுக்க
பாண பத்ரர் -மீனாட்சி பக்தி -இசைத்தமிழே -சாதாரி பண்ணில் -பந்து வராளி –
விறகு வெட்டுபவராக -பாண பத்ரர் சிஷ்யராக கொள்ளாத நான் –
அகஸ்திய முனிவர் -வண் தமிழ் மா முனி -குறுங்குடி நம்பி இடம் -போக –
விஷ்வக்ஸேனராக நம் ஆழ்வார் தென் பாண்டி சீமையிலே -திரு விளையாடல் புராணம் –
பண் தரு மாறன் பசும் தமிழ் -சாம வேதம் -இன்னிசை பாடித் திரிவேனே
ஆதியிலே அரவசரை –மா முனிகளும் இவரால்
புக்ககம் இருந்து பிறந்தகம் போவதாக மா முனிகளே சொல்லிக் கொள்கிறார்
4-ஸ்ரேஷ்ட முனி இருவரும்
நாத யமுன ராமானுஜ முனிகள் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் அதுவே பொழுது போக்காகப் பெற்றோம் என்று
தானே சொல்லும் படி -மா முனி -முன்னோர் ஸ்ரீ ஸூ க்திகள் அனைத்தும் இவர் இடமே
5-யதீந்த்ர ப்ரவணர்கள் -பொலிக பொலிக -உடையவருக்கு நண்பராகி
அகில புவன -ஜென்ம -ஸ்தேம பங்காதி லீலைகளில் பொழுது போக்கு -இதுவே உலகம் என்று-இருந்த ஆழ்வார்
இது கொண்டு சூத்திரங்களை ஒருங்க விடுவார்
செயல் நன்றாக திருத்திப் பணி கொள்ள -ரக்ஷ ஏக தீக்ஷை
அவனோ தீர்ந்த அடியாரை
உயர்ந்த ஸ்ரீ நிவாஸன் -கைங்கர்ய ஸ்ரீ யைப் பெற்றவர்
பக்தி ரூபா பன்ன ஞானம் இவர் இடம் பெறவே ஸ்ரீ பாஷ்யம் மங்களா சாசனம்
வண்ணான் பிள்ளைகளை கூப்பிட்ட ஐ திக்யம் –
கஷ்டப்பட்டால் அவன் மோக்ஷம் இஷ்டப்பட்டால் மோக்ஷம் -ராமானுஜர் –
அதிகாரம் இருந்தால் அரங்கர் இரங்குவார்-நம் ஐயன் ராமானுஜன் இவர் திருக்குமாரர்
6-வாக்கு வன்மை -வேதம் தமிழ் செய்த மாறன் -விசத வாக் சிரோமணி
உளன் எனில் உளன் -இலன் எனில் அவ்வருவம் அவன் உருவம்
god is no where- god is now here
7-வேதம் விளக்கிய சாம்யம் – பஞ்சகம் -தமிழ் வேத நான்முகன் நம்மாழ்வார் -தானான -தலைவி தோழி தாய் –
உடல் மீசை உயிர் எங்கும் பரந்துளன் -யஸ்ய ஆத்ம சரீரம் -உடல் -நியாந்தா -ஆனால் அறியாமல் –
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் –
அந்த தமிழ் வேதத்தை மூ உள்ள காளியே -காளி க்கு மங்களா சாசனம் தப்பாக –
முப்பத்தாயிர பெருக்கர் -ஈடு சதா அனுசந்தானம் -நூற்று அந்தாதி –
2000 நாக்குகள் -1000 வாய்கள் -ஆற்றில் கரைத்த புளி ஆகாமல்
8-ரஹஸ்யார்த்த விளக்கம் -த்வயார்த்தம் தீர்க்க சரணாகதி
நாலாம் பத்து -முழுவதும் ஸ்ரீ மன் நாராயண சரணவ் ஐந்தாம் பத்து சரணம் -ஆறாம் பத்து பிரபத்யே –
ஸ்ரீ மதே -செல்வ நாராயணன் -முதல் பத்து -நாராயணாயா -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே –
நம -மூன்றாம் பத்து வழு இலா அடிமை -ததீய சேஷத்வம் பயிலும் சுடர் ஒளி
9-பெரியவர் -பூமா -பஹு -மா -வார்த்தை பேச்சு மனஸ் உறுதி புத்தி த்யானம் விஞ்ஞானம் உடல் வலிமை
உணவு தண்ணீர் ஒளி ஆகாசம் நினைவு ஆற்றல் ஆர்வம் ஆத்மா -இப்படி ஒன்றுக்கு மேல் ஓன்று பூம வித்யை
நம்பெருமாளுக்கும் ஆச்சார்ய -பெருமை -ஆதி சேஷன் ஆசனம்
10-ஸச் சிஷ்யர் கூடவே
மதுர கவி நாதமுனிகள் உடன் ஆழ்வார்
இவரோ அஷ்ட திக் கஜங்கள்

—- —————

அகஸ்தியர் விசுவாமித்திரர் மந்த்ர உபதேசம் -அவர்களுக்கும் மா முனி சப்தம் அருளிச் செயல்களில் உண்டே
அதே போல் இவரும் உபதேசித்ததால் மா முனி
நாயனார் -நாயனார் ஆச்சான் பிள்ளை -இவ்வாறு வேறு படுத்தி
வடக்கு திரு வீதிப்பிள்ளை திருக்குமாரரும் பெரியவாச்சான் பிள்ளை திருக்குமாரரும்
இவருக்கு மட்டுமே அதே திரு நாமம்
ஆகவே சந்யாச ஆஸ்ரமம் ஏற்றுக் கொண்ட பொழுது திரு நாமம் மாற்ற வேண்டாம் என்று அரங்கன் நியமனம்
ஆச்சார்யர் திரு நாமம் சிஷ்யர் கொள்ள வேண்டுமே
இவரை ஆச்சார்யராக கொள்ள நினைப்பதால் -அந்த திருநாமம் வஹிக்க வேண்டுமே
மணவாள மா முனி தானே வர வர மா முனி
வரன் -மாப்பிள்ளை மணவாள பிள்ளை சுருக்கி
மணவாள பெண் மாட்டுப்பெண்
வர ஸ்ரேஷ்டம்

——————

ஸ்ரீ மா முனிகள் அஷ்ட திக் கஜங்கள் –

1-ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயர்
2-ஸ்ரீ திரு வேங்கடம் ஜீயர்
3-ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் –இவர் ஸ்ரீ நடுவில் ஆழ்வான் வம்சம்
4-ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் -இவர் ஸ்ரீ முதலி ஆண்டான் வாசம்
5-ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா -இவர் ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம்
6-ஸ்ரீ எறும்பி அப்பா -இவரும் ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம்
7-ஸ்ரீ அப்பிள்ளார்
8-ஸ்ரீ அப்பிள்ளை

——————

ஸ்ரீ ஒன்றான வானமாமலை ஜீயர் வைபவம்

1. ‘பொன்னடிக்கால் ஜீயர்’ என்று பெயர் பெற்ற ஒன்றான வானமாமலை ஜீயர்
அவதார திருநக்ஷத்ரம் புரட்டாசி மாதம் புனர்பூச நக்ஷத்ர
2. ஸ்ரீமணவாளமாமுனிகள் நியமித்தருளிய அஷ்டதிக்கஜங்களில் முதன்மையானவர்.
3. பிரம்மசாரியாய் இருந்தபோதே ஸந்யாச ஆச்ரமத்தை ஏற்றார்.
4. அழகிய வரதர் என்பது இவருடைய பூர்வாச்ரம திருநாமமாகும்.
5. ஸ்ரீமணவாளமாமுனிகளின் நியமனத்தின் பேரில் வடநாட்டு யாத்திரை செய்து,
தோதாத்திரி ராமானுஜ ஸிம்மாஸனத்தை நிறுவி, மஹந்துக்களை நியமித்து
விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்தை வளர்த்தவர்.
6. வடநாட்டில் ஆச்ரயித்த மஹான்களில் ஸ்ரீஸ்வாமி ராமானந்தர் முக்கியமானவர்.
7. திருப்பதியிலிருந்து ஸ்ரீவரமங்கை நாச்சியாரை எழுந்தருளப் பண்ணி ஸ்ரீ தெய்வநாயகப் பெருமானுக்கு
விவாஹம் செய்வித்து ஜனகரைப் போலவும், பெரியாழ்வாரைப் போலவும்
எம்பெருமானுக்கு மாமனாராக இருக்கும் பெருமை பெற்றவர்.
8. திருப்பாவைக்கு ஸ்வாபதேச வ்யாக்யானம்.
நாச்சியார் திருமொழிக்கு அமைந்துள்ள கோலச் சுரிசங்கை தனியன் ஆகியவை இவர் இயற்றியவையாகும்.
9. ஸ்ரீமணவாளமாமுனிகளின் ப்ரதான சிஷ்யர்கள்.
1) ஸ்ரீவானமாமலை ராமானுஜ ஜீயர்.
2) திருவேங்கட ஜீயர்.
3) பட்டர்பிரான் ஜீயர்.
4) கந்தாடை அண்ணன்
5) எறும்பியப்பா
6) பிரதிவாதி பயங்கரம் அண்ணன்.
7) அப்புள்ளார்
8) அப்பிள்ளை ஆகியோர் ஆவர்.
10. இதை எளிதாக நினைவாற் கொள்வதற்காக,
“பாராரு மங்கை திருவேங்கடமுனி பட்டர்பிரான்
ஆராமம் சூழ் கோயில் கந்தாடையண்ணன் எறும்பியப்பா
ஏராருமப்பிள்ளை அப்பிள்ளார் வாதிபயங்கரரென்
பேரார்ந்த திக்கயஞ்சூழ் வரயோகியைச் சிந்தியுமே”.
என்ற பாடலை அனுஸந்திப்பதன் மூலம் அஷ்டதிக் கஜங்களின் திருநாமங்களை நினைவில் கொள்ளலாம்.
11. வானமாமலையிலே உயர்குடியிலே தோன்றி மிகுந்த வைராக்ய சீலராக நின்று உலக வாழ்வு என்றால்
திருமணம் செய்து கொண்டு வாழ்வதுதானா? அனைவருக்கும் உதவுமாறு உலக வாழ்வைத் துறந்து வாழமுடியாதா?
என்ற எண்ணத்துடன் வானமாமலைப் பெருமாளை ஆச்ரயித்து துறவறத்தை மேற்கொண்டவர் இவர்.
12. ஸ்ரீ மணவாளமாமுனிகளின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு அவருடைய நிழல் போல் வாழ்ந்து
மாமுனியின் அனைத்து கைங்கர்யத்திலும் பங்கு கொண்டார்.
13. இவர் சிஷ்யரான பின்பு தான் ஸ்ரீமணவாளமாமுனிக்கு சிஷ்யர்கள் பெருகினராம்.
ஏன் அரங்கநாதனே சிஷ்யனாகி விட்டானே!! அதனால் இவர் திருவடி பொன்னடி எனப்பட்டது.
14. பெருமாள் திருவடி-ஸ்ரீசடகோபம் (சடாரி)
நம்மாழ்வார் திருவடி-உடையவர்,
உடையவர் திருவடி-முதலியாண்டான்,
மணவாளமாமுனி திருவடி- பொன்னடியாம் செங்கமலம் என்று அழைக்கப்படுகின்றன.
15. ஒன்றான வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் அஷ்டதிக்கஜங்கள்.
1. அப்பாச்சியாரண்ணா.
2. போரேற்று நயினார்
3. சுத்த ஸத்வம் அண்ணா
4. ராமாநுஜம் பிள்ளை
5. சண்டமாருதம் மஹாசாரியர்
6. திருக்கோட்டியூரையன்
7. பள்ளக்கால் சித்தர்
8. ஞானக்கண் ஆத்தான் ஆகியோர்.
16.வானமாமலை மடத்து ஜீயர்கள் , வானமாமலைப் பெருமாளுக்கு பல திவ்யதேசங்களிலும் கைங்கர்யங்கள் செய்து வருகின்றனர்.
17. ஸ்ரீவானமாமலை மடத்தின் கிளைகள் (வட நாட்டில் தோத்தாத்திரி மடம் என்றழைக்கப்படும்) இந்தியாவெங்கும்
அமைந்துள்ளன. லட்சணக்கணக்கான சிஷ்யர்களைக் கொண்டது இந்த மடம்.
18. ஸ்ரீசைலேச தயாபாத்ரம் என்று தொடங்கும் தனியனை நம்பெருமாள் அருளிச் செய்திட அதுகண்டு மகிழ்ந்த
ஒன்றான வானமாமலை ஜீயர்
“இரண்டு முலைக் காம்பிலும் மாறாதே பெருகுகிற பாலை ஆராவமுதமாகக் பருகுவார் நாமே யன்றோ?” என்று அருளிச் செய்தார்.
19. பொன்னடிக்கால் ஜீயரை ஸ்ரீவானமாமலைக்கு காரிய நிமித்தமாய் அனுப்பி வைப்பதற்காகத் திருவுள்ளம் கொண்டு
நம்பெருமாள் கோயில் கொண்டிருக்கும், பூபாலராயனிலே எழுந்தருளியிருந்த அரங்க நகரப்பனை
ஸ்ரீவானமாமலை ஜீயர் திருக் கரங்களில் எழுந்தருளப் பண்ணிக் கொடுத்தார் ஸ்ரீமணவாளமாமுனிகள்.
20. ஒன்றான வானமாமலை ஜீயரும் மங்கள வாத்தியங்களுடனே அரங்க நகரப்பனை கோயிலாழ்வாரிலே எழுந்தருளப்பண்ணி ஆராதித்து வந்தார்.
21. இன்றும் ஸ்ரீவானமாமலை மடத்தில் ஆராத்யப்பெருமாளாய் அரங்கநகரப்பன் எழுந்தருளியிருப்பதை அனைவரும் ஸேவித்து மகிழலாம்.
22. ஸ்ரீமணவாளமாமுனிகள் பரமபதித்தபோது வடநாட்டு யாத்திரை நிமித்தமாக எழுந்தருளியிருந்த
ஸ்ரீவானமாமலை ஜீயர் உடனிருக்கவில்லை. இதனால் பல நாட்கள் துயருற்றிருந்தார் வானமாமலை ஜீயர்.
23. திருவரங்கத்தில் கீழைச் சித்திரை வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீவானமாமலை மடம். ***

——————————

ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயரின் அஷ்ட திக் கஜங்கள்

1-ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா -இவர் ஸ்ரீ முதலி யாண்டான் வம்சம்
2-ஸ்ரீ போர் ஏற்று நாயனார் -இவரும் ஸ்ரீ முதலி யாண்டான் வம்சம்
3-ஸ்ரீ சுத்த சத்வம் அண்ணா -இவர் ஸ்ரீ இளைய வல்லி வம்சம்
4-ஸ்ரீ ராமானுஜம் பிள்ளை -இவர் ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம்
5-ஸ்ரீ சண்ட மாருதம் மஹாச்சார்யார் -இவர் ஸ்ரீ இளைய வள்ளி வம்சம்
6-ஸ்ரீ ஞானக் கண் ஆத்தான் -இவர் முடும்பை நம்பி வம்சம்
7-ஸ்ரீ திருக் கோட்டியூர் அரையர்
8-ஸ்ரீ பள்ளக் கால் சித்தர்

———-

2-ஸ்ரீ திருவேங்கட ராமானுஜ ஜீயர்

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பத பங்கே ருஹாஸ்ரிதம்
ஸ்ரீ வேங்கட ரகூத்தம்ஸ ஸோதரம் மநைவை முனிம்

ஸ்ரீ ராமானுஜர் ஸ்தாபித்த மட முதல் பட்ட ஜீயர் ஸ்ரீ அப்பன் சடகோப ராமானுஜ ஜீயர் –1119-1173-
ஸ்ரீ மா முனிகள் –12 th பட்டம் -1428-1431-
அதன் பின்பே ஸ்ரீ பெரிய கேள்வி ஜீயர் -ஸ்ரீ சின்ன ஜீயர் கள் எழுந்து அருளி உள்ளார்கள்

————–

3-ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத சேவ ஏக தாரகம்
பட்ட நாத முனிம் வந்தே வாத்ஸல்யாதி குண ஆர்ணவம்

வ்ருஸ்சிகே ஸ்திதி பே ஜாதம் பர வஸ் த்வம்ஸ பூஷணம்
வர யோகி பதாதாரம் பட்ட நாதம் முனிம் பஜே

வர யோகி பதாதாரம் பர வஸ் த்வம்ஸ பூஷணம்
பட்ட நாதம் முனிம் வந்தே தீ பக்த்யாதி குண ஆர்ணவம்

வ்ருஸ்சிகே ஸ்திதி பே ஜாதம் வர யோகி பதாஸ்ரிதம்
கார்க்ய வம்ஸ ஸமுத் பூதம் பட்ட நாத முனிம் பஜே

ஸ்ரீ நடுவில் ஆழ்வான் வம்சம்
கார்த்திகை புனர்பூசம் திரு அவதாரம்
திருத் தகப்பனார் -ஸ்ரீ ராமானுஜாச்சார்யார்
இயல் பெயர் -ஸ்ரீ கோவிந்த தாஸர் அப்பன்
இவருக்கு ஸ்ரீ மா முனிகள் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாளைத் திரு ஆராதனத்துக்குக் கொடுத்து அருளிச் செய்தார்
இவர் ஒரு திருவாடிப் பூரத்தில் சூடிக் கொடுத்து அருளிய நாச்சியார் பிரசாதம் கொண்டு வந்து சமர்ப்பிக்க
ஸ்ரீ மா முனிகள் இவருக்கு ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் தாசர் -என்ற திரு நாமம் இட்டு அருளினார்
இவர் பின்பு ஸ்ரீ மா முனிகள் இடமே சந்யாச ஆஸ்ரமம் பெற்று
ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்-என்று திரு நாமம் இடப் பெற்றவர்

இவர் அந்திம உபாய நிஷ்டை -பிரபந்தம் அருளிச் செய்துள்ளார்

இவர் வம்ச பரம்பரை
ஸ்ரீ கோவிந்த தாசர் அப்பன் -ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்
ஸ்ரீ பரவஸ்து நாயனார்
ஸ்ரீ சட கோபாச்சார்யார்
ஸ்ரீ வரதாச்சார்யார் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் -1525- சித்திரை திருவோணம்
ஸ்ரீ ஸ்தல சயனத் துறைவார் வம்சத்தார் இன்றும் ஸ்ரீ திருவல்லிக் கேணியில் அத்யாபகராக உள்ளார்

இன்னுலகில் கச்சி தனில் வந்து உதித்தோன் வாழியே
எழில் கார்த்திப் புனர் பூசித்து இங்கு உற்றான் வாழியே
மன்னு மறைத் தண் தமிழை மகிழ்ந்து உரைத்தான் வாழியே
மணவாள யோகி மலர்த்தாள் பணிவோன் வாழியே
பன்னு சிச்சன் அனுஷ்டானம் அறிவித்தோன் வாழியே
பாரில் அட்ட திக் கயத்தில் பேர் பெற்றான் வாழியே
சொன்ன நெறி மதுர கவி போலுமவன் வாழியே
தூய்மை மிகு பட்டர் பிரான் துணை அடிகள் வாழியே

—————–

4-ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன்

சகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ர உத்பவா நாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பதாஸ்ரயம்
வரத நாராயண மத் குரும் ஸம்ஸ்ரயே

1389-புரட்டாசி பூரட்டாதி -திரு அவதாரம்
திருத் தகப்பனார் ஸ்ரீ தேவராஜ தோழப்பர்
இவருக்கு 7 சகோதரர்கள்
இயல் பெயர் ஸ்ரீ வரத நாராயண குரு
இவருடைய பால்யத்திலே திருத் தகப்பனார் ஸ்ரீ பரமபதம் ஆச்சார்யர் திருவடி அடைய
ஸ்ரீ கோயில் மரியாதை கிடைக்காமல் போனது
ஸ்ரீ ராமானுஜர் ஸ்வப்னத்தில் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்க த் தெரிவித்து அருளினார்
1371-ஸ்ரீ நம் பெருமாள் ஸ்ரீ கோயிலுக்குத் திரும்பினாலும் 1415 வரை ஸ்ரீ கோயில் மரியாதைகள்
இவர் வம்சத்துக்கு கிடைக்க வில்லை
ஸ்ரீ மா முனிகளே பின்பு ஏற்பாடு செய்து அருளினார்
ஸ்ரீ அழகிய ஸிம்ஹர் திரு ஆராதனப் பெருமாளையும் தந்து அருளினார்
கீழ் உத்தர வீதி 16 கால் மண்டபத்தையும் இவருக்கு மடமாகக் கொடுத்து அருளினார்

ஸ்ரீ மா முனிகளின் நியமனப்படி இவருடைய சிற்றண்ணர் குமாரர் அப்பாச்சியார் அண்ணா –
தமையனார் போர் ஏற்று நாயனாரையும் ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயர் இடம் ஆஸ்ரயிக்கச் செய்தார்
ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா – ஸ்ரீ காஞ்சி புர கோயில் நிர்வாகம் செய்து வந்தார்

இவரே ஸ்ரீ உத்தம நம்பியையும்
ஸ்ரீ அப்பிள்ளார்
ஸ்ரீ அப்பிள்ளை
ஸ்ரீ எறும்பி அப்பா -ஆகியோரையும் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்கச் செய்தார்

இவர் ஸ்ரீ மா முனிகள் விஷயமான கண்ணி நுண் சிறுத்தாம்பு
ஸ்ரீ வர வர முனி அஷ்டகம்
ஸ்ரீ ராமாநுஜார்யா திவ்யாஜ்ஞா –நூல்களையும்
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை தனியனையும் அருளிச் செய்துள்ளார்
இவருக்கு ஸ்ரீ பகவத் சம்பந்தாச்சார்யார் -என்னும் விருது ஸ்ரீ மா முனிகள் தந்து அருளினார்
ஸ்ரீ நம் பெருமாள் இவருக்கு ஜீயர் அண்ணன் -என்று அருளப்பாடிட்டார் –
ஸ்ரீ காஞ்சி பேர் அருளாளர் இவருக்கு ஸ்வாமி அண்ணன் -என்று அருளப்பாடிட்டார்
ஸ்ரீ மா முனிகள் சரம தசையில் இவர் கையாலேயே தளிகை சமைக்கச் செய்து விரும்பி அமுது செய்து மகிழ்ந்தாராம்

இவர் வம்சத்தின் பெருமையால் ஸ்ரீ மா முனிகள் இவர் வம்சத்தாரை கீழ் உள்ள 7 கோத்ர த்துக்குள்ளேயே
சம்பந்தம் செய்து கொள்ள அறிவுறுத்தி அருளினாராம்
1-ஸ்ரீ முதலியாண்டாம் வம்சம் -வாதூல கோத்ரம்
2-ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம் -ஸ்ரீ வத்ச கோத்ரம்
3-ஸ்ரீ முடும்பை அம்மாள் வம்சம் -கௌண்டின்ய கோத்ரம்
4-ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள் வம்சம் -ஹரிதா கோத்ரம்
5-ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் வம்சம் -ஆத்ரேய கோத்ரம்
6-ஸ்ரீ குமாண்டூர் இளைய வல்லி வம்சம் -கௌசிக கோத்ரம்
7-ஸ்ரீ வங்கி புரத்து நம்பி வம்சம் -பரத்வாஜ கோத்ரம்

ஸ்ரீ கோயில் அண்ணனின் அஷ்ட திக் கஜங்கள்

1-ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் –இவர் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -இவரது திருத் தம்பியார்
2-ஸ்ரீ திருக் கோபுரத்து நாயனார் -இவரும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -ஸ்ரீ அழகிய சிங்கர் திருத்தம்பியார்
3-ஸ்ரீ கந்தாடை நாயன் -இவரும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -இவரது திருக் குமாரர் –1408-மார்கழி உத்திரட்டாதி
4-ஸ்ரீ சுத்த சத்வம் அண்ணன் -இவர் ஸ்ரீ இளைய வல்லி வம்சம் -இவரது திரு மருமகன்
5-ஸ்ரீ திருவாழி ஆழ்வார் பிள்ளை -இவரும் ஸ்ரீ இளைய வல்லி வம்சம் –
6-ஸ்ரீ ஜீயர் நாயனார் -ஸ்ரீ கோமடத்தாழ்வான் வம்சம் -ஸ்ரீ மா முனிகள் திருப்பேரானார்
7-ஸ்ரீ ஆண்ட பெருமாள் நாயனார் -ஸ்ரீ குமாண்டூர் ஆச்சான் பிள்ளை திருப்பேரானார்
8-ஸ்ரீ ஐயன் அப்பா –

ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் வம்ச ஸ்ரீ குன்னத்து ஐயன் இவர் இடத்திலும்
இவர் குமாரர் பேரர்கள் இடத்திலும் அன்பு பூண்டு பல கைங்கர்யங்களைச் செய்தாராம்

இவர் விபவ வருஷம் -1448- சித்திரை மாதம் கிருஷ்ண பக்ஷ த்ருதீயை அன்று
ஸ்ரீ ஆச்சார்யர் திருவடிகளை அடைந்தார் –

தேன் அமரு மலர் முளரித் திருத் தாள்கள் வாழியே
திருச் சேலை இடை வாழி திரு நாபி வாழியே
தானமரு மலர்க்கண்கள் தனி யுதரம் மார்பம்
தங்கு தொங்கும் உப வீதம் தடந்தோள்கள் வாழியே
மானபரன் மணவாள மா முனி சீர் பேசும்
மலர்ப் பவளம் வாய் வாழி மணி முறுவல் வாழியே
ஆனனமுந் திரு நாம மணி நுதலும் வாழியே
அருள் வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

————–

5-ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமி

கர்கடே புஷ்ய சஞ்சாத் வாதி பீகரம் ஆஸ்ரயே
வேதாந்தா சார்யா ஸத் சிஷ்யம் வர யோகி பதாஸ்ரிதம்

வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ருய மிந கருண ஏக பாத்ரம்
வத்ஸ அந்வயம் அநவத்யா குணை ருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம்

முடும்பை வம்சம்
1361-ஆடி -பூசம் -ஸ்ரீ காஞ்சியில் திரு அவதாரம்
ஸ்ரீ வத்ஸ கோத்ரம்
இயல் பெயர் ஸ்ரீ ஹஸ்தி கிரி நாதர் அண்ணா
திருத்தகப்பனார் -ஸ்ரீ அனந்தாச்சார்யார்
திருத்தாயார் -ஸ்ரீ ஆண்டாள்
ஸ்ரீ தேசிகன் திருக்குமாரர் ஸ்ரீ நயன வரதாச்சார்யர் இடம் ஸ்ரீ பாஷ்யம் கற்றார்
க்ருஹஸ்தாஸ்ரமம் ஸ்வீ கரித்து –திருமஞ்சனத்துக்கு சாலைக் கிணறு தீர்த்த கைங்கர்யம்
கைங்கர்யம் செய்து வந்தார்
நரஸிம்ஹ மிஸ்ரன் மாயாவதி இவற்குருவான ஸ்ரீ நாயந வரதாச்சார்யரை வாதத்துக்கு அழைக்க
அவர் இவரை அனுப்ப வென்றதால் பிரதிவாதி பயங்கரர் விருது பெற்றார்

இவருக்கு
ஸ்ரீ ஸ்ரீ நிவாசார்யார்
ஸ்ரீ அநந்தாச்சார்யார்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் -மூன்று திருக்குமாரர்கள்
ஆந்திர ராஜா வீர நரஸிம்ஹ ராயன் -இவரது சிஷ்யன்
ஸ்ரீ திருமலையில் ஸ்ரீ ஆகாச கங்கையில் இருந்து திரு மஞ்சன தீர்த்த கைங்கர்யம் செய்து வர
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ மா முனிகள் பிரபாவம் பேச அத்தைக் கேட்டு ஏலக்காய் இத்யாதிகள் சேர்க்க மறக்க
ஸ்ரீ திருவேங்கடமுடையானோ அர்ச்சக முகேந இன்று தீர்த்தம் மிக்க மணத்துடன் இருந்தது என்று அருளிச் செய்ய
ஸ்ரீ மா முனிகளின் பிரபாவம் கேட்டதாலே நடந்த விசேஷம் என்று தெரிந்து மகிழ்ந்து
ஸ்ரீ ரெங்கம் சென்று ஆஸ்ரயிக்க ஆசை கொண்டார் –

ஸ்ரீ ராமானுஜருக்கு ஸ்ரீ கூரத்தாழ்வானைப் போலவே ஸ்ரீ மா முனிகளுக்கு இவர் உஸாத் துணையாக இருந்தார் –
ஸ்ரீ மா முனிகள் உடன் ஸ்ரீ திருமலைக்கு எழுந்து அருளி ஸூ ப்ரபாதம் -ஸ்தோத்ரம் -பிரபத்தி -மங்களா சாசனம்
அருளிச் செய்யும் படி செய்து நித்ய அநுஸந்தான ஏற்பாடு செய்ய வைத்து அருளினார் –
ஸ்ரீ ரெங்கம் திரும்பி சிஷ்யர்களுக்கு ஸ்ரீ பாஷ்ய கால ஷேபம் சாதிக்கும் படி செய்து அருளி ஸ்ரீ அண்ணாவை
ஸ்ரீ பாஷ்ய சிம்ஹாசனத்தில் அபிஷேகம் செய்து ஸ்ரீ பாஷ்யாச்சார்யர் என்ற பட்டமும் வழங்கி அருளினார் –
ஸ்ரீ மா முனிகள் திரு நாட்டுக்கு எழுந்து அருளின பின்னர் ஸ்ரீ திருமலைக்கு எழுந்து அருளி
கைங்கர்யம் செய்து கொண்டு ஸ்ரீ பரவஸ்து ஸ்ரீ நிவாஸாச்சார்யார் போல்வாருக்கு
ஸாஸ்த்ர அதி வர்த்தனங்கள் செய்து அருளினார் –

இவர் அருளிச் செய்த நூல்கள்
ஸ்ரீ பாஷ்யம் -ஸ்ரீ பாகவதம் -ஸ்ரீ ஸூ பால உபநிஷத் -ஸ்ரீ அஷ்ட ஸ்லோஹீ –
ஸ்ரீ யதிராஜ விம்சதி -இவற்றுக்கு வியாக்யானங்களும்
ஸ்ரீ வர வர முனி சதகம்
ஸ்ரீ வர வர முனி ஸூ ப்ரபாதம்
ஸ்ரீ 108 திவ்ய தேச ஸூ ப்ரபாதம் -ஸ்தோத்ரம் -பிரபத்தி -மங்களம்
ஸ்ரீ ராமானுஜ ஸூ ப்ரபாதம்
ஸ்ரீ ரெங்க ராஜ ஸூ ப்ரபாதம்
ஸ்ரீ கிருஷ்ண மங்களம்
ஸ்ரீ பிரபத்தி யோக காரிகை
ஸ்ரீ ப்ரசார்ய சப்ததி ரத்ன மாலை
ஸ்ரீ நித்ய ஆராதனை விதி
ஸ்ரீ விஜய த்வஜம்
ஸ்ரீ ஜீயர் வாழித் திரு நாமம்
ஸ்ரீ இருபது வார்த்தை
ஸ்ரீ பெரிய ஜீயர் பாதாதி கேசாந்த மாலை
ஸ்ரீ வ்ருத்தி ஸ்தவம் –ஆகியவை –

92 வருஷங்கள் வாழ்ந்து -1453-பங்குனி சுக்ல பக்ஷ நவமி புஷ்ய நக்ஷத்திரத்தில்
ஸ்ரீ திருநாடு எழுந்து அருளினார் –

————

6-ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள்

துலா ரேவதி ஸம்பூதம் வர யோகி பதாஸ்ரிதம்
ஸர்வ வேதாந்த ஸம் பூர்ணம் அப்பாசார்யம் அஹம் பஜே

ஸ்ரீ வத்ஸ கோத்ரம் -ஸ்ரீ முடும்பை வம்சம் -ஐப்பசி ரேவதி –
ஸ்ரீ சோளிங்கர் அருகில் சித்தூர் சாலையில் எறும்பியில் திரு அவதாரம்
திருத்தகப்பனார் -ஸ்ரீ பெரிய சரண்யாச்சார்யர் -ஐயை -என்றும் ஸ்ரீ ரெங்கராஜர் என்றும் திரு நாமங்கள்
இயல் பெயர்-ஸ்ரீ தேவ ராஜர்
திரு ஆராதனப் பெருமாள் -ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் -இவர் சங்கல்பித்த படியே
ஸ்ரீ கோயில் அண்ணன் மூலம் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயித்தார்

அருளிச் செய்த நூல்கள்
ஸ்ரீ பூர்வ தினசரி
ஸ்ரீ உத்தர தினசரி
ஸ்ரீ சைலேச அஷ்டகம்
ஸ்ரீ வர வர முனி சதகம்
மேலும் 10 கிரந்தங்கள்
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை -மன்னுயிர் காள் இங்கே -பாசுரமும் இவர் அருளிச் செய்ததே

———————-

7- ஸ்ரீ அப்பிள்ளார்
இயல் பெயர் -ஸ்ரீ ராமானுஜன்
ஸ்ரீ ஸம்ப்ராய சந்திரிகை -11-பாடல்கள் உள்ள கிரந்தம் அருளிச் செய்துள்ளார்
இவர் வம்சத்தார் இன்றும் ஸ்ரீ காட்டு மன்னார் கோயிலில் தீர்த்தகாரர்கள் –
ஸ்ரீ நாதமுனி சந்நிதி கைங்கர்யம் செய்து கொண்டு உள்ளார்கள்
ஸ்ரீ மா முனிகள் திருக்கைச் செம்பை உருக்கி இவரால் செய்யப்பட ஸ்ரீ மா முனிகள் அர்ச்சா விக்ரஹம்
இன்றும் ஸ்ரீ ரெங்கம் பல்லவ ராயன் மடத்தில் உள்ள ஸ்ரீ மா முனிகளின் சந்நிதியில்
திரு ஆராதனம் செய்யப் பட்டு வருகிறது –

————————-

8- ஸ்ரீ அப்பிள்ளை
இயல் பெயர் -ஸ்ரீ ப்ரணதார்த்தி ஹரர்
இவர் ஐந்து ஸ்ரீ திருவந்தாதிகளுக்கும்
ஸ்ரீ எதிராஜ விம்சதிக்கும் உரை சாதித்து உள்ளார்
பத்து ஸ்ரீ ஆழ்வார்களும் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் மேலும்
மூன்று பாடல்களுடன் 15 பாடல்களுடன் வாழித் திரு நாமங்கள் அருளிச் செய்துள்ளார்
ஸ்ரீ மா முனிகளைப் பற்றிய செய்ய தாமரைத் தாளிணை வாழியே -என்ற
பாசுரமும் இவர் அருளிச் செய்ததே –

—————-———————————————

என் மூலம் அஸ்வயுஜம் அஸ்யாவதார மூலம் காந்தோ பயந்த்ருயமினா கருணைக ஸிந்தோ
அசிதஸத்சு கணிதஸ்ய மாம் அபி சதாம் மூலம் ததேவ ஜகத் உபயதயைக மூலம்
யதாவதாரண மூலம் முக்தி மூலம் ப்ரஜாநாம் சடாரிபு முனி த்ருஷ்டா ஆம்னாய சாம்ராஜ்ய மூலம்
கலி கலுஷா சமூலோன் மூலாநே மூலமிந்தே ச பவது வரயோகி ந சமஸ்தர்தா மூலம்

மாற்று அற்ற செம்பொன் மணவாள மா முனிவன் வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம்

ஸ்ரீ சடாரி குரோர் திவ்ய ஸ்ரீ பாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீ மத் யதீந்திர பிரவணம் ஸ்ரீ லோகாச்சார்ய முனிம் பஜே

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம்

ஸ்ரீ மத் ரெங்கம் ஜெயது பரமார்த்த தர்ம தேஜோ நிதானம்
பூமா தஸ்மின் பவதி குசலி ஹோ பிபோ மா ஸஹாய
திவ்யார்த் தஸ்மை திசத்து விபவத் தேசிகோ தேசிகானாம்
காலே காலே வர வர முனி கல்பயன் மங்களானி

மாசற்ற செம்பொன் மணவாள மா முனிவன் வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே

திரு மூலமே நமக்கு மூலம்
பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ ?
பூம் கமழும் தாதர் மகிழ் மார்பன் தான் இவனோ ?
தூத்தூர வந்த நெடுமாலோ
மணவாள மா முனி எந்தை இம் மூவரிலும் யார் ?–ஸ்வாமி ஆய் அருளியது

திரு மண் பெட்டி சொம்பு – இரண்டு திரு மேனி -வீற்று இருந்த திரு மேனிதிரு அரங்கம்
நின்று இருந்த திரு மேனி ஆழ்வார் திரு நகரி

பல்லவராய மண்டபம்-ஸ்வாமி மண வாளமா முனிகள் சந்நிதி ஸ்ரீ ரெங்கம்
திரு பரியட்டம் திரு மாலை சாத்துபடி
பொன் அடியாம் செம் கமலம்-மா முனிகள் திரு அடி பிரசாதம்
ரகஸ்யம் விளைந்த மண் இன்றும் சேவிக்கலாம் கால ஷேப கூடத்தில்
தொட்டி பிரசாதம்-தயிர் சாதம் உப்பு இன்றி

சேற்றுக்கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்ப
போற்றித் தொலும் நல்ல அந்தணர் வாழ்வு இப் பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே

கிருபயா பரயாச ரங்கராட் மஹிமானம் மஹதாம் பிரகாசயன்
லுலுபே ஸ்வயம் ஏவ சேதஸா வரயோகி ப்ரவரச்ய சிஷ்யதாம் -ஸ்ரீ சைல அஷ்டகம்

முப்பத்தொன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை வளர் பக்க நாலா நாளில் செல்வ மிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளை செப்பும் என்று
வல்லி யுறை மணவாளர் அரங்கர் நங்கண் மணவாள மா முனிக்கு வழங்கினாரே –அப்பிள்ளார் -சம்பிரதாய சந்த்ரிகை

தெருளுடைய வ்யாக்கியை ஐந்தி னோடும் கூடி -சம்ப்ரதாய சந்திரிகை -9-

ஸ்ருதி பிரக்ரியை
ஸ்ரீ பாஞ்சராத்ர பிரக்ரியை
ஸ்ரீ இராமாயண பிரக்ரியை
ஸ்ரீ மகா பாரத பிரக்ரியை
ஸ்ரீ விஷ்ணு புராண பிரக்ரியை
ஸ்ரீ மகா பாகவத பிரக்ரியை
ஸ்ரீ பாஷ்ய பிரக்ரியை
ஸ்ரீ கீதா பாஷ்ய பிரக்ரியை
ஸ்ரீ ஸ்ருத பிரகாசா பிரக்ரியை
பதார்த்தம் -வாக்யார்த்தம் -மகா வாக்யார்த்தம் -சமபிவ்யாஹார்த்தம் -த்வயனர்த்தம் –
அர்த்த ரசம் பாவ ரசம் ஒண்பொருள் உட்பொருள்

போத மணவாள மா முனி ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள் -அரையர் கொண்டாட்டம்

ஆனி மாசம் திரு மூல நஷத்ரம் பௌர்ணமி திதி ஞாயிற்றுக் கிழமை
ஆனந்த வருடத்திலே கீழ்மை யாண்டில் அழகான வருடத்தில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய பௌர்ணமியின் நாளிட்டுப் பொருந்தி
ஆனந்தமயமான மண்டபத்தில் அழகாக மணவாளர் ஈடு சாத்த —
வைத்தே வானவரும் நீரிட்ட வழக்கே என்ன மணவாள மா முனிகள் களித்திட்டாரே –

தேசம் திகழும் திருவாய் மொழிப் பிள்ளை
மாசில் திருமலை ஆழ்வார் என்னை -நேசத்தால்
எப்படியே எண்ணி நின்பால் சேர்த்தார் எதிராசர்
அப்படியே நீ செய்து அருள் —ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் —12-

ஆசிலாத மணவாள மா முனி யண்ணல் பூமியுறு வைப்பசியில் திரு மூலம்
தேச நாளது வந்தருள் செய்த நம் திருவாய் மொழிப்பிள்ளை தான்
ஈசனாகி எழுபத்து மூவாண்டு எவ் வுயிர்களையும் வுய்வித்து வாழ்ந்தனன்
மாசி மால் பக்கத் துவாதசி மா மணி மண்டபத்து எய்தினான் வாழியே-

குருநாதன் எங்கள் மணவாள யோகி குணக் கடலைப்
பல நாளும் மண்டிப் பருகிக் கழித்து இந்தப் பாரின் உள்ளே
உலகாரியன் முனி மேகம் இந்நாள் என்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே –

” செய்ய தாமரைத் தாளினை வாழியே ,சேலை வாழி திருநாபி வாழியே
துய்ய மார்பும் புரிநூலும் வாழியே சுந்தரத் திரு தோளினைவாழியே
கையுமேந்திய முக்கோலும் வாழியே கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யில்லாத மணவாள மாமுனி புந்தி வாழி புகழ் வாழி வாழியே”

ஸ்ரீ மத் ரெங்கம் ஜெயது
பரமம் தாமம் தேஜோ நிதானம்
பூமா தஸ்மிந் பூ மா சஹாயா குஸலீ பவது
திவ்யம் தஸ்மை ஜகது விபவம் வர வர முனி தேசிகோ தேசிகா நாம் மங்களானி கல்பயன்
ரெங்க தேசிகன் பெரிய பெருமாள் லஷ்மீ நாதன் -மா முனிகளோ தேசிகோ தேசிகா நாம்-

திருமாலவன் கவி நம்மாழ்வார்
நம்மாழ்வார் கவி மதுரகவி
அமுதனார் ராமானுஜர் கவி
எறும்பி அப்பா வர வர முனி கவி -ஷட் பதமாக -தேவராஜம் –
காட்டில் இருந்தாலும் -வண்டு போல் அல்லவே மண்டூகம் தாமரை அருகில் இருந்தாலும்
வண்டே கமல மது உண்ணும்
அண்டே பழகி இருந்தாலும் தவளை இதன் ஏற்றம் அறியாதே –
திவ்ய ஞானம் -ம முனிகள் திருவடிகளைப் பற்றுவதையே காட்டி அருளினார்

மூலம் சடரிபி முக ஸூ க்தி விவேசனாயா
கூலம் காவேரி கரையில் –
மம ஆலம்பநஸ்ய -பற்றுக்கோடு
ஜன்மஸ்ய மூலம்
சதுலம்-அளவோடு கூடியது -அர்த்தம் இல்லை -துலா மாச மூலம் அர்த்தம்
அதுலஸ்ய சித்தம் -அளவில்லாதது
சதுலம்
துங்கம் ரெங்கம் ஜெயது
பூமா ரமா மணி பூஷணம் ஜெயது
வரத குரு (கோயில் அண்ணன் ) சஹா சுப அநுவர்த்த ஸ்ரீ மன் ராமானுஜ ஏவ ஜெயது

“ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாது மில் குரவர் தாம் வாழி” .
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தன் தமிழ் நூல் வாழ
கடல் சூழ்ந்த மண் உலகம் வாழ
மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஆழ்வார்கள் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அருளிச் செயல் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
தாழ்வாது மில் குரவர் தாம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அடியார்கள் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அரங்க நகர் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஆழ்வார்கள் வாழ அருளிச் செயல் வாழ வேண்டும்
அருளிச் செயல் வாழ தாழ்வாது மில் குரவர் தாம் வாழ வேண்டும்
தாழ்வாது மில் குரவர் தாம் வாழ அடியார்கள் வாழ வேண்டும்
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ வேண்டும்
அரங்க நகர் வாழ சடகோபன் தண் தமிழ் நூல் வாழ வேண்டும்
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ வேண்டும்
கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ மணவாள மா முனியே
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இருக்க வேண்டுமே

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய சீர் நித்ய மங்களம் –

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகங்கள்–

November 28, 2021

ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-

இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .

இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயுர் வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

1- ஸ்ரீ நிவாஸனுக்கு லோகங்களைப் படைத்தல் காத்தல் அழித்தல் விளையாட்டு போல் எளிதானவை
2-சிந்தனை எப்போதும் அடியார்களை ஸம் ரக்ஷணம் செய்வது மட்டுமே
3- வேதாந்தங்களில் இரத்தினம் போல் ஒளிவிடும் ப்ரஹ்மம் அவனே
4- மென்மையான அவனிடம் எனக்கு பக்தி ரூபாபன்ன ஞானம் உண்டாக அவன் அருளட்டும்

———-

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

அகில புவன ஜன்ம ச்தேம பங்காதி லீலே-உத்பத்தி ஸ்திதி விநாசம் -லீலையாக
அகில புவன -அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்
மணல் தூள்கள் கணக்கிட முடியாதது போலே -நட்ஷத்ரங்கள் உண்டே-அண்ட கடாகம் – பல உண்டே
எல்லா புவனங்களுக்கும்
லீலை -லோக வஸ்து லீலா கைவல்யம்
கிம் காரணம் –
சு கமயம் துக்க மயம்-நமக்காக செய்கிறானா – அவாப்த சமஸ்த காமன் -தனக்காக செய்கிறானா –
வியாச மகரிஷி லீலா வஸ்து கைவல்யம்
லீலா ஸுயம் பிரயோஜனம் –க்ரீடா லீலா ஸுயம் பிரயோஜன வியாபாரம்
குழந்தைகள் பொம்மை வைத்து விளையாடுவது போலே
பகவத் சாஷாத்காரம் அடைந்தால் தான் அறிவோம்
மம ப்ரஹ்மணி ஷேமுசி பக்தி பூர்வா பவது-ஸங்க்ரஹமாக அனைத்தையும் அருளுகிறார்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே –ஜகத் காரணத்வம் –உயர்வற உயர் நலம் உடையவன் -அர்த்த விசேஷம்
விநத -மதி நலம் அர்த்தம் -பக்தியால் சத்தை பெற்றமை
மதிநலம் எனக்கு அருளினன் இல்லாததால் முன்பு சத்தை இல்லாமையையை தெரிவித்து அருளினார்
பக்தி வந்த பின்பு என் மனனே என்று சத்தை வந்தமையை வெளியிட்டு அருளினார்
விவித பூத வ்ராத -சம்பந்த சம்பந்திகளுக்கும் பலம் உண்டு என்று அருளிச் செய்கிறார்
பொய் நின்ற –யாம் -என்றும் -கேசவன் தமர் –எமர் -என்றும் அருளிச் செய்தது போல் இங்கும்
ரக்ஷைக தீஷே -துயர் அறு சுடர் அடி -அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தி
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூப -பிரார்த்தித்தே பெற வேண்டும் என்று காட்டி அருளுகிறார்
ப்ரார்த்த நீயம் என்பதை ஆவ்ருத்தி ரஸ க்ருத -ஸூத்ரம்
ஜிஜ்ஞாஸா -இச்சிக்க வேண்டும்
நிதித்யாஸி தவ்ய-ஸ்ருதி அர்த்தம்

———–

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே
விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே
ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய யத:” என்பதும்,
அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது என்பதும் தெளிவு.

இவற்றில். ஸ்தேம எனும் சொல் பாதுகாத்தல், தொடர்ந்து வைத்திருத்தல் இரண்டையும் குறிக்கும்.
இதில் எம்பெருமானின் இயல்வாகிய லோக ரக்ஷணம் அடங்கும்.
இப்படி ரக்ஷணம் பற்றி ஏற்கெனவே தெரிவித்த ஸ்ரீ ஸ்வாமி மீண்டும்,
விநத-விவித-பூத-வ்ராத ரக்ஷைக -தீக்ஷே” என்கிறார்
ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீநிவாசனின் முதல் குறிக்கோள் தன் அடியார் அனைவரையும் ரக்ஷிப்பதே.

ஸ்ரீ ஆழ்வார் திருவாய்மொழி 1-3-2ல் “எளி வரும் இயல்வினன்” பாசுரத்தில்
ஸ்ரீ எம்பெருமானின் குணாநுபவம் செய்கிறார். அவனது அளவற்ற அப்ராக்ருத கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்.
மீண்டும் அவனது மோஷ ப்ரதத்வம் எனும் எக் காலத்தும் வீடு பேறளிக்கும் மஹா குணத்தை
வீடாந் தெளிதரு நிலைமை அது ஒழிவிலன்” என்கிறார்.
முன்பே சொன்ன குணங்களோடு இதுவும் சேராதோ மீண்டும் சொல்வானென் என்று கேட்டதற்கு நம் பூர்வர்கள்,
மோஷ ப்ரதத்வம் ஸ்ரீ எம்பெருமானின் மிகத் தனித்ததொரு குண விசேஷம் என்பதால் இது புனருக்தியன்று என்றனர்.

அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார்.
ஸ்ரீ ஸ்வாமி தேசிகனும் த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியில் திருவாய்மொழியின் பிரதம நோக்கு மோக்ஷ ப்ரதத்வமென்று சாதிக்கிறார்.
ஆகவே மோக்ஷப் ப்ரதத்வம் தனியே அனுபவித்தற்குரிய ஒரு குணாதிசயம் என்று தேறுகிறது.
இதிலிருந்து, “விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று
மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது.

ஸ்ரீபாஷ்ய பங்தியில் ஸ்ரீ ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,
“ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.

பக்தி -சாத்திய -சாதனா -இரண்டும் உண்டே-நான்கு விசேஷணங்கள்-ப்ரஹ்மணி
ஸ்ரீநிவாசே -நான்கு விசேஷணங்களோடு கூடிய பிரஹ்மம் ஸ்ரீநிவாஸன் என்று பேசி
தனக்கு பக்தி ரூபாபன்ன ஞானத்தை பிரசாதிக்க வேண்டும் என்று இதிலே பிரார்த்திக்கிறார்.

வ்யாவர்த்திகம் இதர பின்ன -காட்ட விசேஷணங்கள் வேண்டுமே –
அகில புவந ஜன்ம ஸ்தேம பங் காதி லீலே
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலை பெருத்தலும் நீக்கலா அலகிலா விளையாட்டுடையார் என்று
ஆதி சப்தத்தால் மோக்ஷ பிரதன் பிரஹ்மமாகிற அந்த ஸ்ரீநிவாசன் என்பதை சேர்த்துச் சொல்கிறார்.

சமன்வயா அத்யாயம் -முதலில் –
அவிரோதயா அத்யாயம் -இரண்டாவது –
சாரார்தம் இந்த பாதம் காட்டுமே –

வினத-விவித- பூத-வ்ராத- ரக்ஷைக-தீக்ஷே

இந்த கூட்டுச்சொல்லின் நேர்பட்ட பொருள்தான் என்ன?
வினத=சமர்ப்பிக்கப்பட்ட
விவித=வெவ்வேறுபட்ட
பூத=உயிர் வாழிகள்-ஆத்மாக்கள்
வ்ராத=குழுக்கள்
ரக்ஷைக தீக்ஷா=இவற்றின் ரக்ஷணம் ஒன்றே குறிக்கோளாய் உள்ளவன்

பசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்

ஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால்
அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரம பதம் அடைகிறது.

இவ் வர்த்தத்தை ஸ்ரீ ஆழ்வார்கள் “பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11),
எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே” போன்ற பல இடங்களில் உணர்த்தியுள்ளனர்.

வினத விவித பூத வ்ராத ரஷகைத தீஷே
பூதம் -ஸ்தாவர ஜங்கமம்
வினத -நமஸ்காரம் சரணம்
விவித -அநேக விதங்கள் உண்டே

அபய பிரதான சாரம் –சரணகத வத்சலன் சரம ச்லோகார்த்தங்கள்
சுர நர திர்யக் ஸ்தாவர ரக்ஷண பிரதீக்ஷேனாய் உத்தியோகித்திருப்பவன் அவன்.
1.ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் – அஹம் ஸ்மராமி மத் பக்தம் –நயாமி பரமாமி கதம்
2.ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் – ந த்யஜேயம்
3.ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் – மோக்ஷ யிஷ்யாமி
என்று தன்னைத் துதிப்பவர்களை கைவிடாமல் கரையேற்றுகிறேன் என்பதான ரக்ஷண தீக்ஷை அவனுடையது.
சாதனா பல அத்யாய சாரம்
மேதா விலாசம் -இத்தால் அறியலாம் பிரதிபை யும் அறியலாம்

ஸ்ருதி ஸ்ரசி விவீப்தே
வேதாந்தம் -வேத சித்தாந்தம் -ஸ்ருதி ஸிரசி-
வேத ஸிரோ பாகமான உபநிஷத்துக்களில் போரப் பொலிகின்றவன் அவன் என்பதும்
வேதம் அனைத்தும் பூர்வ பாகம் -பிரதான்யம் இல்லை சிலர் சொல்வார்கள் –
பிரமாணம் அதிலும் காட்டி ஸ்ரீ பாஷ்யம் அருளுகிறார்
வேதார்த்த சங்கரகம் வேதாந்தாரார்த்த சங்கரகம் பெயர் வைக்க வில்லை –
உபநிஷத் தனி வியாக்யானம் ராமானுஜர் செய்து அருள வில்லை
வேதார்த்த சங்க்ரகம் இதையும் சொல்லி அருளி –
தாத்பர்யம் முழுவதும் இதிலே அருளி இருக்கிறார் –
பிரஸ்தான த்ரயம் -அத்வைதிகள் கீதா உபநிஷத்-மூன்றும் சேர்ந்தே ஒரே பிரஸ்தானம்
கீதை ப்ரஹ்ம சூத்ரம் உபநிஷத் மூன்றும் ஒன்றே

ஸ்ரீநிவாச

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரங்களில் எங்குமே ப்ரஹ்ம லக்ஷ்மீ சம்பந்தம் குறிப்பிடப்படக் காணோம்.
ஆகிலும் ஸ்ரீ எம்பெருமானார் நூல் சுருக்கமே போலத் தோற்றும் முதல் ச்லோகத்திலேயே ஸ்ரீ எம்பெருமானை ஸ்ரீ நிவாசன் என்றார்.
இது ஸ்ரீ ஆழ்வார்கள் எல்லார்க்கும் மிக்கோனான எம்பெருமானை ஸ்ரீரிய:பதி என்றே கண்டதாலும்,
திரு இல்லாத் தேவரைத் தேரேன்மின் தேவு என்றதாலுமே ஆகும்.

பக்தி ரூபா சேமுஷீ பவது

ஞானியர்க்கு இது ஒரு விசித்திரமான ப்ரார்த்தனை.
ஸ்ரீனிவாசனைப் பற்றிய என் ஞானம் வளர்வதாக என்றோ
ஸ்ரீனிவாசனிடம் நான் பக்தியோடு இருப்பேனாக என்றோ கூறாது,
ஸ்ரீநிவாசனிடம் என் உணர்வு பக்தி ஆகக் கடவது என்று அருளுகிறார்.

ஸ்ரீ ஆழ்வாரின் “மதிநலம்” எனும் சொல்லின் நேர் மொழியாக்கமே எம்பெருமானாரின் “சேமுஷீ” .
அமரகோசம் நூலின்படி மதி சேமுஷீ இரண்டும் ஒரே பொருள் தரும் சொற்களாகும். நலம் என்பது பக்தி.
ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமான் தமக்குச் செய்த அருளால் ஞானம் பிறந்து அதனால் பக்தி பிறந்தது,
பக்தி என்பது ஸ்ரீ எம்பெருமானைப் பற்றிய ஞானம் என்கிறார்.
ஸ்ரீ ஆழ்வார் காட்டிய நெறியை ஸ்ரீ எம்பெருமானார் நன்கு பின்பற்றினார்.
அவர் உலகுக்கு ஒளிவழி காட்டினார், அவருக்கு வழிகாட்டினார் ஆழ்வார்.

எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:
உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸங்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குண கண
யவனவன்=புருஷோத்தமன்

தீப்தே -தீபம் காட்டும்-சாஸ்திர யோநித்வாத் – வேதைக சர்வைஸ்தி-அவனைக் காட்டும் பிரகாசிக்கும்
பிரகாசம் அவன்-நமக்கு உபநிஷத் காட்டுமே
விதீப்தே
ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே -ஸ்ரியபதித்வம்
ப்ரஹ்மணி– யௌகிகா ரூடிக அர்த்தம் -ஸ்ரீநிவாசன் திருமலை பெருமாளே குறிக்கும்
பிரஹ்மணி! ஸ்ரீநிவாஸே – அவனே ஸ்ரீநிவாஸ பர பிரஹ்மம் என்று
1. ஸ்ரீயப் பதித்தவம்;
2. ஸ்ருஷ்டி ஸ்திதி லயகாரகத்வம் ;
3. ஸர்வாத்ம ஸம்ரக்ஷகத்வம் ;
4. பிரஹ்மணத்வம்
இத்யாதி விசேஷண விசிஷ்ட பிரஹ்மம் ஸ்ரீநிவாஸன் என்பதாக தொடக்கத்தேலேயே
குணாஸ்ரய உபய லிங்க விசேஷ விசிஷ்ய பிரஹ்ம தத்வத்தை பிரதி பாதித்து
அத்வைதிகளின் மிடற்றைப் பிடிக்கிறார் ஸ்வாமி.
ஐஸ்வர்யம் -உபய விபூதி நாதன் –

பரஸ்மின் –
உத்தேச விதய பாவம் -வார்த்தை மாற்றி
கரும்பு சாறு போலே –
ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே பரஸ்மின் -மூன்றையும் வைத்தே நிறைய விஷயங்கள்-பரம் ப்ரஹ்மா

பகவான்
ராமானுஜர் போதாயனர் -வால்மீகி பகவான்
பரஸ்மின் ஒருவனே
விசிஷ்டாத்வைதம் காட்டும் இந்த பாதம் –
ஐந்து விசேஷணங்கள் ஸ்ரீனிவாச பரஸ்மின் இரண்டையும் சேர்த்து-பக்தி ரூபாபன்ன ஞானம் கொடுக்கட்டும் என்று அருளுகிறார்

ஷேமுசி பவது – ஞானம் உண்டாகட்டும்
ஞானான் மோஷா உபநிஷத்
தமேவா வித்வான் அமிருதோ பவதி
ஞான மார்க்கம் -பக்தி மார்க்கம்
அவ்யக்த மார்க்கம் -நேதி நேதி மார்க்கம்
இது இல்லை இது சொல்லி சொல்லி -அவ்யக்த மார்க்கம் ஞான மார்க்கம்
பக்தி வ்யக்த மார்க்கம் -கீதை -அவ்யக்த மார்க்கம் துக்கம் விளைக்கும் –
பக்தி ரூபமான ஞானம் –
அவ்யக்த மார்க்கம் சாங்க்ய மார்க்கம்
பக்தி யோகம் யோகம் மார்க்கம் -யோக சாஸ்திரம்
பக்தி ரூபா ஷேமுசி -உண்டாகட்டும் -மம பவது

அத்வைதிம் -moniyisam -இல்லை நான்- dualisam
நிர் விசேஷ அத்வைதிம்
ச விசேஷ அத்வைதம் -விசிஷ்டாத்வைதம் பெயர் அப்புறம் வந்தது
வடுக நம்பி அஷ்டோத்ரா நாமாவளி -செய்யும் பொழுது -விசிஷ்டாத்வைத பாரக
நிர் விசேஷ ப்ரஹ்மம்-வஸ்து அத்வைதி
விசேஷம் சகிதம் ப்ரஹ்மம்
குண -விக்ரக- விபூதையக-
குணம் உள்ளதால் ஸ்தோத்ரம் செய்கிறோம்
ஸ்தோத்ரம் -குணி நிஷ்டா குண அதிதானம் –
குணி இடம் உள்ள குணங்களை சொல்வதே ஸ்தோத்ரம்
விக்ரகம் -ஆகாரம் உண்டே
விராகாரம் பர ப்ரஹ்மம் அத்வைதி
அதை இல்லை என்று நாம் சொல்ல வில்லை –
நிரகாரம் மட்டும் இல்லை -ஆகாரமும் உண்டு -நம் அபிப்ராயம்
த்யானம் தைல தாராவது அபிச்சின்ன ஸ்ம்ருதி சந்ததி -விக்ரகம் வேண்டுமே இதுக்கு
ஆலம்பனம் -அர்ச்சை -த்யானத்துக்கு-ஆலம்பனம் –
விபூதி -பூதிர் ஐஸ்வர் யம்-உபய விபூதி நாதன் –
மேலே highly evolved வைகுண்டம் – பிராமாணிகம் இவையும்

அத்வைதி எல்லாம் மித்யை
பாதோச்ய -திரிபாதி –
வைகுண்ட கத்யம் -தர்சனம் -பெற்று அருளி –
ஸ்தவ்ய ஸ்தவ பிரிய -ஸ்தோத்ரம் பண்ண – சேர்த்தி உள்ளதை காட்ட வியாஜ்யம்
என் கோயில் வலம் வந்தாய் –
தன்னுடைய அம்சம் தன்னிடம் சேர்ந்தால் மகிழ்வான்
அசித் அவிசிஷ்டா ஜந்து -பிரளயம் -dormant stage உபாசனம் செய்ய முடியாதே
ஜாத நிர்வேதம் கொண்டானாம்
கரண களேபரங்கள் கொடுத்து அருளி —

சித் அசித் -சரீரம் விசிஷ்டம் ப்ரஹ்ம ஏக மேவ அத்வதீயம் –
தத்வ த்ரயம் சித் அசித் ஈஸ்வர –
ஏக மேவ தத்வம்-ஸ்வதந்திர தத்வம் ஒன்றே விரோதம் இல்லையே இரண்டுக்கும்

அத்வைத பரமான மஹா வாக்கியங்கள் :

1. தத்வமஸி – சாந்தோக்கியம் .
2. அஹம் பிரஹ்மாஸ்மி – பிரஹதாரண்யம் .
3. பிரக்ஞானம் பிரஹ்ம .
4. அயமாத்மா பிரஹ்ம – மாண்டூக்யம்

விசிஷ்டாத்வைத பரமான வாக்கியம் :
1. போக்தா போக்யம் பிரேரிதாரம் ச மத்வா ஸர்வம் பிரோக்தம் திரிவிதம் பிரஹ்ம எதது – ஸ்வேதாஸ்வேத உபநிஷத்.

தத்வ த்ரயம் சொல்லும் போக்தா போக்யம் ப்ரேரிதா-ப்ரஹ்மமே மூன்று விதமாக

மங்கள ஸ்லோகம் -இவற்றை விவரிக்கிறதே
தடைகளை நீக்கி –நமஸ்கிரிய-வஸ்து நிர்த்தேசம் – ஆசீர் ரூபா மங்களம்-பக்தி ரூபாபன்ன ஞானம் பவதி –

அதா -சப்தம் ஓம்காரம் போலே முக்கியம்
சூத்திர கிரந்தங்கள் எல்லாம் அதா -சப்தத்தால் ஆரம்பிக்கும்
மங்களார்த்தம் -இதுவும்
நிகில சகல அகில பர்யாய-அகாரோ வாசுதேவச்தோ வாக்கியம்-அகாரம் -சப்தங்களுக்கு மூலம்
சகல -விட அகில -அனைத்தையும் குறிக்கும்
ஆதி -சப்தம் –மோஷ பிரதானம்-ஜென்மாதி சூத்ரம் விவரம் அப்புறம் வரும்
வினத -நமஸ்காரம் விசேஷண பிரபத்தி
விவித பூத -beings -நான்கு – தேவ மனுஷ்ய ஸ்தாவர ஜங்கம-சமூகம் – வ்யாஜ்யமாக சரணாகதி
ரஷைகத தீஷை -காக்கும் இயல்பினான் கண்ணன்
பிரகிருதி அம்சம் புருஷ அம்சம் இரண்டும் பிரதானம்
இடது வலது பக்கம்
பரமாத்மா -ஆண் –
ஸ்வாமித்வ சேஷத்வ -பும்சத்வம்
ஸ்திரீ ஸ்தானம் இதர சர்வம்
புருஷ சப்தம்
புருஷோத்தோம உத்தமன் பாகவதம்

ஸ ஏவ ஸ்ருஜ்யஸ் ஸ ச சர்க்க கர்த்தா -ஸ்ருஷ்டி ப்பவனும்-ஸ்ருஷ்டிக்கப் படுபவனும் அவனே
விசிஷ்டாத்வைதம்
விசிஷ்டஸ்ய அத்வைதம் -சேதன அசேதனங்கள் -சரீரம் -ஸூஷ்ம -ஸ்தூல -அவஸ்தைகளிலும்
பஹுஸ் யாம் ப்ரஜா யேவ
மத்தஸ் சர்வம்
அஹம் சர்வம்
மாநா தீநா மேய ஸித்தி
வேதாத் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி ந தைவம் கேஸவாத் பரம்

வேத வேத்ய பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத ப்ரா சேதஸா தா ஸீத் ஸாஷாத் ராமாயணாத் மநா
உளன் சுடர் மிகு ஸ்ருதியுள்

காரணத்வம்
அபாத்யத்வம்
உபாயத்வம்
உபேயத்வம்
நான்கையும் நான்கு அத்யாயங்களால் சாரீரிக மீமாம்ஸை சொல்லுமே

நலம் உடையவன் -காரணத்வத்துக்கு அஷிப்தங்களான கல்யாண குணங்கள்
உயர்வற -அபாத்யத்வம் -வருத்தம் அற்ற உயர்வு -லீலையாக அனைத்தும் செய்து அருளுபவர் -லோகவது லீலா கைவல்யம்
மயர்வு -ஜீவ ஸம்ஸார தோஷம்
மதி நலம் -பக்தி -உபாயம் மூன்றாம் அத்யாய கருத்து
அருளினான் -உப பத்தே -ஸித்த உபாயம்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -அர்ச்சிராதி கதிகள் ஸூசகம்
துயர் அறு -உத்தர பூர்வா கயோ –ஸூ த்ர அர்த்தம் அவித்யா நிவ்ருத்தி

சுடர் அடி தொழு -சம்பத்ய ஆவிர்பாவம் –

தே ந விநா த்ருணம் பிந சலதி –அவன் அன்றி ஒரு துரும்பும் அசையாது –
கர்த்தா காரயிதா ச ஸஹ -அவனே எல்லாம் செய்கிறவன் -செய்விக்கிறவன் –

——————————————————–——

அதே மங்கள ச்லோகம்
ஸ்ரீ நம்மாழ்வாரையும் எப்படிக் குறிக்கிறது என்பதைப் பார்ப்போம்.

அகில-புவன -ஜந்ம -ஸ்தேம -பங்காதி -லீலே

அகில புவன ஸ்தேம பங்காதியாய் இருப்பவன் ஸ்ரீ எம்பெருமான்.
தேன ஸஹ லீலா யஸ்ய” இந்த ஸ்ரீஎம்பெருமானோடு அவனாகிய லீலையை விளையாடுபவர் ஸ்ரீ ஆழ்வார்.
ஆகவே அகில புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலா எனும் அடைமொழி ஸ்ரீ ஆழ்வாரைக் குறிக்கிறது.

ஸ்ரீ எம்பெருமானுடனான விளையாட்டை ஸ்ரீ ஆழ்வாரே பாடுகிறார்
”என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ” என்றும்,
விளையாடப் போதுமின் என்னப் போந்தமை” என்றும்.

இந்தச் சொற்களின் தேர்வு இன்னொரு விளக்கத்துக்கும் ஹேதுவாகிறது –
புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலா அகிலம் யஸ்ய. புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலையே இவ்வண்ட சிருஷ்டியின் ப்ரதான காரணம்,
அதாவது ஸ்ரீ எம்பெருமான். இவன் யாருக்கு இப்படி எல்லாமாய் இருக்கிறான் எனில், ஸ்ரீ ஆழ்வாருக்கே.
ஏன் எனில் அவர் ஒருவரே “உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்றார்.
நமக்கு உயிர் பிழைக்கச் சில, வளர்ச்சி பெறச்சில, இன்பம் அனுபவிக்கச் சில எனப் பொருள்கள் தேவை.
ஆனால் ஸ்ரீ ஆழ்வாருக்கு ஸ்ரீ கிருஷ்ணனே இம் மூன்றுமாய் உள்ளான்.

விநத-விவித-பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே

இவ்வெல்லாவற்றையும் காப்பவன் எம்பெருமானே. ஆயினும் பக்தன் நோக்கில் ஸ்ரீ எம்பெருமான் பூரணமாகத் தேவைப்படுவதில்லை.
ஸ்தனன்ஜயப் ப்ரஜைக்கு அதன் பசி தீரப் பால் கிடைப்பதால் அதன் நோக்கு தாயின் ஸ்தனத்திற்போலே
ஸ்ரீ எம்பெருமானை வணங்கும் அடியானுக்கு அவன் திருவடியிலேயே கைங்கர்யம் பற்றி நோக்கு.

ஸ்ரீ எம்பெருமானின் திருவடி நிலைகளே ஸந்நிதிகளில் ஸ்ரீ சடாரி அல்லது ஸ்ரீ சடகோபம் என ஆழ்வார் பேராலேயே வழங்கப் பெறுகிறது.
ஆகவே ஸ்ரீ ஆழ்வாருக்கும் ஸ்ரீ எம்பெருமான் திருவடிக்கும் வேறுபாடில்லை.
ரக்ஷை வேண்டும் அடியாருக்குத் திருவடிகளாகிய ஸ்ரீ ஆழ்வாரே கிடைக்கிறார்.

ஸ்ருதி சிரஸ்ஸாவது வேதாந்தம். ஸ்ருதி சிரஸி விதீப்தே எனில் வேதாந்தத்தில் நன்கு உணர்ந்தவர்,
வேதாந்தம் ஸ்ரீ எம்பெருமானை அறியவே என்று உணர்ந்தவர் ஸ்ரீ ஆழ்வார். ஆகவே இச்சொற்றோடரும் அவர்க்கு இசையும்.

வேதமே ஆழ்வாரை, “தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ரவாக்ம்ஸஸ் ஸமிந்ததே” விப்ரா எனும் சொல் ஆழ்வாருக்கே பொருந்தும்.
“ந ஸூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதா ஸ்ம்ருதா” என்றபடி அடியானாக உள்ள ஒருவர் மாய மயக்குகளில் சிக்கி உழல மாட்டார்.
“பண ஸ்துதௌ” என்பதால் விபன்யவோ என்பதற்கு எம்பெருமான் திருக் குணங்களைப் பாடுபவர் என்றதால்
அவ்வகையிலும் ஈடு இணையற்ற பாசுரங்கள் பாடிய ஆழ்வாரையே குறிக்கும்.
“தேவிற் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்”.
ஜாக்ர வாக்ம் ஸ” என்பது எப்போதும் விழிப்புணர்ச்சியோடிருப்பது. எம்பெருமானையன்றி வேறொன்றும் பாராது,
அவனையன்றி மற்றொன்று உணராது நினையாது அவனையே அனுபவித்திருக்குமவரான
ஆழ்வாரே இச்சொற்றொடருக்கு இலக்கும் இலக்கியமும். தானே ஸத்தையாயும் எப்பொருளாயும் இருந்து ஒளிரும்
எம்பெருமான் விஷயமாகவன்றோ ஆழ்வார்
“கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே” என்று பாடினார்?
இவ்வேத வாக்யத்துள்ள “வி” என்பதை ஸ்ரீபாஷ்யச்லோக இறுதிச்சொல்லான ஸமிந்ததேவிலுள்ள “ஸம்” காட்டுகிறது.

ப்ரஹ்மணி

எல்லா விதத்திலும் பெரியது எனக்காட்டும் “ப்ரு” எனும் சொல்லின் அடியாக வந்த சொல் ப்ரஹ்மம்.
பரப்ரஹ்மமே அவரிடம் கட்டுண்டுள்ளதென்பதே ஆழ்வாரின் பெருமை.
பெரிய திருவந்தாதியில் ஆழ்வார் இதனை,
“யான் பெரியன், நீ பெரியை என்பதனை யார் அறிவார்” என்று காட்டுகிறார்.
ஆகவே ப்ரஹ்மம் என்பதன் சரியான பரியாயம் பெரியன்.

ஸ்ரீநிவாஸே

இதெல்லாம் சரி….ஆனால், ஸ்ரீநிவாசே என்பதை ஆழ்வார் பரமாக நிர்வஹிக்க முடியாது,
ஏனெனில் ஆழ்வார்க்கு ச்ரிய:பதித்வம் இல்லையே எனலாம்.

ச்ரிய:பதித்வம் எம்பெருமானின் ஏகதேசமான உரிமைதான், எனினும் ஆழ்வார் ஸ்ரீ நிவாசனே
மேலும் சம்பிரதாயத்தில் ஸ்ரீநிவாசர்கள் பலர் உளர்.

லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பன்ன – லக்ஷ்மணன் லக்ஷ்மியை உடையவன்,

ஸ து நாக வர ஸ்ரீமான் – கஜேந்த்ரனும் ஸ்ரீமான்,

அந்தரிக்ஷ கத ஸ்ரீமான் – விபீஷணன் நடு வானில் நின்றவன் ஸ்ரீமான் ஆனான்.

இவ்வொவ்வோரிடத்திலும் ஸ்ரீ அல்லது லக்ஷ்மி என்பது வெவ்வேறு பொருள் தருவதாகும்.
லக்ஷ்மணனுக்கு ஸ்ரீ கைங்கர்யம்,
கஜேந்திரனுக்கு ஸ்ரீ அவன் கைம்மலரை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க விரும்பிய மனத்தூய்மை,
விபீஷணனுக்கு ஸ்ரீ அவன் மனதில் துயரம் இருப்பினும் எல்லா செல்வமும் விட்டுப் பெருமாளை சரண் புக்கது.

ஆழ்வார் விஷயமாகவோ எனில் வ்யாக்யாதாக்கள் அவரிடம் ஸ்ரீ இருப்பது போக அவரே ஸ்ரீ, பிராட்டி என்றார்கள்.
ஆழ்வார் முன் சொன்ன பிரபன்னாதிகாரிகளின் ஒவ்வொரு குணமும் நிரம்பப் பெற்றதால் ஸ்ரீநிவாசர்,
தாமே பிராட்டி போலானதாலும் ஸ்ரீநிவாசர் என்று எண்ணத்தகும்.

இவ்வாறாக, எம்பெருமானார் எம்பெருமானை அனுபவிக்கு முகமாக இச்லோகத்தால் ஆழ்வாரை அனுபவித்தார் என்பது தெளிவு.
ஆழ்வார் ப்ரபாவம் ஸ்ரீ பாஷ்யம் முதலில் தொடங்கி, இறுதி வரை, ஆம் கடைசி ஸூத்ர பாஷ்யம் வரை செல்கிறது.

ஸ்ரீ பாஷ்யம் விவரிக்கும் கடைசி ஸூத்ரம் “அநாவ்ருத்தி அநாவ்ருத்திஸ் சப்தாத்” என்பது.
இதில் அநாவ்ருத்தி சொல்லின் பொருளாவது, விடுபட்ட ஜீவாத்மா மீண்டும் இம்மாயாவுலகுக்கு வருவதில்லை என்பது.

திரும்ப வராததற்குக் காரணம், சப்தாத், அதாவது இவ்வாறு வேதம் சொல்வதால்.
வேதம், “ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே” என்கிறது:விடுபட்ட ஜீவாத்மா மீண்டும் இவ்வுலகுக்கு வருவதில்லை.

பரம சேதனன் சேதனனைக் காதலோடு ஆரத்தழுவும் நிலை.
ஜீவனின் நிலையைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் வெறும் ஆதாரமாய் இருக்கும் நிலையன்றி,
பரம சேதனன் சேதனனை அடையப் பல வடிவுகளும் முயற்சிகளும் ஏற்கிறான்.
அவன் ஆரா அன்புள்ள காதலன், ஒருபோதும் கைவிடாத காதல் கொண்டவன்.
“ஸ ச மம ப்ரிய:” என்று சொல்பவன். ஜீவன் என் அன்புக்குரியவன் எனும் இதைப் பொருளில்லாமல் சொல்வானா?

ஆழ்வார் அநுபவத்தை முன்னாகக் கொண்டு ஸ்வாமி,
“ந ச பரமபுருஷ ஸத்ய ஸங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஞாநிநாம் லப்த்வா கதாசித் ஆவர்தயிஷ்யதி”.

நழுவாத ஸங்கல்பங்கொண்ட பரமபுருஷன் தனக்கு மிகப்ரியமான மயர்வறப்பெற்ற சேதனனை மிக்க பரிச்ரமத்துடன்
அடைந்தபின் விடுவானா? கிருஷ்ணனை வெண்ணெய் திரும்பத் தா எனில் தருவானோ?

சேதனனை அடைந்து அநுபவிப்பதில் எம்பெருமானுக்குள்ள ஆசையை ஆழ்வார்,
“என்னை முன்னம் பாரித்துத் தானென்னை முற்றப் பருகினான்” என்கிறார், அவன் என்னை முழுதுமாக அநுபவித்தான்.
இந்தக் காதலை வார்த்தைகளால் விளக்கமுடியாது, உணரவே முடியும்.
இவ்வாறான திருத்தவொண்ணாத காதல் நோயாளன் பெற்ற சேதனனைத் திரும்பவிடுவனோ!

ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யத்தை ஒரு பேருரையாய் நிகமிக்கிறார் –
”வாசுதேவஸ் ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு துர்லப:” எனும் கண்ணன் எம்பெருமானின் தன்னை விட்டு விலகும்
சேதனனைப் பற்றிய நிர்வேத ப்ரகடணத்தை உதாஹரிக்கிறார்.
ஸ்ரீ எம்பெருமான் உத்தராயணத்தில் கிளம்பிச் சென்றபின் ஸ்ரீ ஆழ்வார் தக்ஷிணாயனத்தில்
“உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” எனக்
கண்ணனே எனக்கு எல்லாமும் எனச் சொல்லிப் போந்தார்.
ஸ்ரீ கண்ணனின் திருப்பவளம் உதிர்த்த சொற்களே ஸ்ரீ ஆழ்வார் பாசுரமாக வந்தன.

——————-

ஆசீர்வாதம் -நிர்தேச ரூபம் -நமஸ்கார ரூபம் -மூன்றாலும் அருளிச் செய்கிறார்
அ இதி பகவதோ நாராயணஸ்யா பிரதமாபிதானம்
அகாரம் பிரயுஞ்ஞாநேன கின்நாம மங்களம் ந க்ருதம்
அகாரத்தோ விஷ்ணு ஜகத் உதய ரஷாப்ளய க்ருத்-பட்டர்
ப்ரபத்யே பிரணவாகாரம் பாஷ்யம் –

அகில புவன -அகாரமும்
உக்தம் -அத்யாயம் 3 பாதம்
சர்வம் சமஞ்ஜசம் – முடிவில் மகாரமும் அருளி உள்ளார்
ஆதி -மோஷ பிரதானம் -தனியாகவே அருளுவதால்
ஜகத் உத்பத்தி ஸ்திதி பிராணாச சம்சார விமோச நாதாய -போலேயும்
ஜகத் ஜன்ம ஸ்திதி த்வம்ச மகா நந்தைக ஹேதவே-போலேயும்
உத்பவ ஸ்திதி பிரளய சம்சார நிவர்த்த நைக ஹேது பூத -வேதார்த்த சந்க்ரகம் -போலேயும்
ஆதி -அந்த பிரவேச நியமனாதிகள் –
இதை ஸ்ரீ பாஷ்ய காரரே
ஜகத் உத்பத்தி ஸ்திதி சம்ஹார அந்த பிரவேச நியமனாதி லீலம் -என்று விவரித்து அருளிச் செய்கிறார்-

லீலா சப்தம் பரி பூரணன்
அப்ரமேய அநியோஜ்யச்ச யத்ர காமகாமோ வசீ மோததே பகவான் பூதை பால க்ரீட நகை இவ -மகா பாரதம்
லீலா நாம ஸுவயம் பிரயோஜனதயா அபிமத அநாயாச வியாபார
பஹுஸ்யாம் -உபாதான காரணத்வம்
லீலை -நிமித்த காரணத்வம்
விநத -விசேஷண நதா
வ்ராத -சமுதாயம் சமுகம் கூட்டம்
ஏக தீஷா-த்ருட வ்ரதம் -ரஷகம் -அநிஷ்ட நிவ்ருத்தம் இஷ்ட பிராப்தம்

முதல் அத்யாயம் -சமன்வய அத்யாயம் -இரண்டாவது அதிகரணம் -ஜன்மாத்யதிகரணம் -ஜன்ம ஸ்தேம பங்க –
லீலை -அவிரோதாத்யாயம்
முதல் பாதம் கடைசி அதிகரணம் -பிரயோஜனவத்வாதிகரணம் -லோகவத்து லீலா கைவல்யம் -ஸூத்ரம்
மூன்றாம் அத்யாயம் சாதனாத்யாயம் -விநத பதத்தால் ஸூசிப்பிக்கிறார்
ரஷா பதம் -கைங்கர்ய சாம்ராஜ்யம் அருளுவதை -நான்காம் அத்யாய சுருக்கம் அருளுகிறார்
ஜகத் காரண த்வ மோஷ பிரதத்வங்கள் -சத்ர சாமரங்கள் போலே பர ப்ரஹ்மத்துக்கு அசாதாரண சின்னங்கள்
ஸ்ருதி ஸிரசி -பிரமாணம் காட்டி அருளி
விதீப்தே -விசேஷண தீப்தத்வம் -பூர்வ பாகம் தேவாதி ரூபமாகவும் -ஸுவயம் நிரதிசய ஆனந்த மயன்
ப்ரஹ்மணி -சத் ப்ரஹ்மாதி சப்தங்களை குறிக்கும்
ஸ்ரீநிவாசே -விசேஷ பதம் -நாராயண ஆதி சப்தங்களை குறிக்கும்

பரஸ்மின் –பராதிகரணம் -3-2-7-சர்வ உத்க்ருஷ்டன்
உபய லிங்காதி கரணத்தில்
ந ஸ்தானதோபி பரஸ்ய உபய லிங்கம் சர்வத்ரஹி -3-2-11
ஸே மு ஷீ -உபாய ஸ்வரூபம் -சாமான்ய சப்தம்
பக்தி ரூபா -விசேஷ சப்தம்
பக்த்யா து அநந்யயா சக்ய
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்வேன பிரவேஷ்டும் ச பரந்தப
பர பக்திக்கு காரண பூதமாயும்
ஜ்ஞான தர்சனாதிகளுக்கு சாதனமான பக்தியும்
மம
அஹம் அஸ்மி அபராதானாம் ஆலயம் -ஸ்வாத்மானம்
பவது உண்டாகட்டும்

————————————————————————————————————————

இரண்டாவது மங்கள ச்லோஹம்-

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||

1-உபநிஷத் ஆகிய சமுத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது
2- ஸம்ஸார அக்னியால் தாக்கப்பட்ட பிரானாகிய பராமாதவிடம் இருந்து பிரிந்து வசிக்கும் ஜீவாத்மாக்களை உஜ்ஜீவிப்பது
3-பலவிதமான அறிவுத் தடுமாற்றங்களால் அகன்று சென்றது
4-பாதாரயனாரின் ஸ்ரீ ஸூக்திகளால் அருகில் கொண்ட வரப்பட்டன
5- இந்த அம்ருதத்தை அறிவுள்ளவர்கள் அன்றாடம் பருக்கட்டு

பாராசார்யா வசஸ்துதாம்-வியாசர் -அமிருத ரூபமான வாக்கு-மரணம் ஜனனம் இல்லாத -அபாவம் தானே மோஷம்
பிபந்வஹம்-பிபந்து குடிக்க வேண்டும்-விசேஷணங்கள் மேலே சொல்லி

ஸ் பகவத் ராமானுஜர் வேதாந்த ஸங்க்ரஹம் -முதலில் திருவேம்கடமுடையான் சந்நிதியில் அருளி
யஸ் ஸ்ரீ சைல- இஷ்ட தேவதா-அவர் அங்கீகாரம் பெற்று இத்தை அருளி –அதன் அனுவர்த்தி ஸ்ரீ பாஷ்யம் –
பாதாராயண -பராசரர் புத்ரர் – பூமியில் உள்ள எல்லாரும் இந்த அம்ர்தத்தை பானம் செய்யட்டும்
பிபந்து -ஆசீர்வாதம் செய்கிறார் – மோஷம் கிடைக்க இவர் வார்த்தை –
உபநிஷத் -ஷீர சமுத்ரம் -மதனம் -செய்து கிடைத்த அமிர்தம்
சம்சார அக்னி விதீபனம் விபகத பிராண ஆத்மா சஞ்சீவினி -தாபம் த்ரயம் –
ஆதி பௌதிகம் -தாபம் –பிராணிகள் மூலம்
ஆதி தெய்விக -தாபம் -பூகம்பம் வெள்ளம் போன்றவை
ஆத்யாமிகம் -மனஸ் சரீரம் புத்தி மூலம்
சஞ்சீவி பிராணன் மீண்டு கொடுத்தது போலே

பூர்வாச்சார்யர் நன்றாக ரஷணம் செய்து கொடுத்து அருளி –
பகுமதி -வெவ்வேற -தான் தோன்றியான வியாக்யானம் வ்யாயாத தூரஸ்தயாம்
ஸ்வேன-நிஜ -ஸ்வா-நான் அடியேன் -போலே
அஹம் மயா-கர்மணி பிரயோகம்-வினயத்துடன் சொல்லி அருளி ஐந்து விசேஷணங்கள் -அருளி –
இரண்டு ஸ்லோகங்கள் –பகவான் ஸ்மரணம்–ஆச்சார்யர் ஸ்மரணம்
நாஸ்திகர் கூட குருக்களுக்கு செய்வார்களே–பகவானுக்கு முதலில்
பூர்வர்களுக்கு -பாராசரர் வசஸ்ததாம் பூர்வாச்சார்யா சு ரஷிதம் அடுத்து அருளி –

கிரந்த வைலஷண்யம்
வியாசர் சொல்லாமல் பாராசரர் -ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளி ஸ்ரீ பராசர மக ரிஹி புத்திரன்
ஸ்ரீ ஆளவந்தார் -மூன்று விரல்கள்
ஸ்ரீ வியாசர் ஸ்ரீ பராசரர் பெருமை அனைவர்க்கும் அறிய
உபநிஷத் -பிரதானம் ஆரண்ய -ஷீர-ஆனந்தம் -சமுத்ரம் அந்தம் தெரியாதே
வேதாக அநந்த சாகரம்-அதில் இருந்து எடுக்கப் பட்ட
சுமனதாக -சாராசாரங்கள் அறிந்தவர்கள் –
பௌமாகா-பூமியில் உள்ளவர்கள் எல்லாரும்
அனுபந்த -நான்கு விதம் -சதுஷ்டயம் –
விஷயம் -முதலில் தெரிந்து கொண்டு –
பிரயோஜனம் -அடுத்து -மந்த புத்தி உள்ளவர் கூட பிரயோஜனம் இன்றி செய்ய மாட்டார்கள்
நிஷ் பலமான கார்யம் செய்யக் கூடாதே
க்ரீடா -ஜல தாரை -சாமான்யமான கார்யத்தில் இறங்க கூடாது சான்றோர்கள்
அதிகாரி -மூன்றாவது –கர்ம ஜன்ம -யாரை உத்தேசித்து –
சம்பந்தம் -பிரதிபாத்ய -இதை எழுத தகுதி உண்டா
யோக சாஸ்திரம் பதஞ்சலி முதலில் செய்து அருளி –
பகவத் ஆஞ்ஞையால் செய்து அருளினார் ஸ்ரீ பாஷ்யம் –
கியாதி லாப பூஜைக்காக செய்து அருள வில்லையே –

விஷயம் பாராசர -அம்ருத ரூபமான வார்த்தை
பிரயோஜனம் சம்சார அக்னி –சஞ்சீவினி-உபாய உபேயம் அவனே அறிந்து மோஷம் பெற
அதிகாரி –
பௌமாகா அனைவரும் -சுமனச -நல்ல மனஸ் உள்ளவர்கள்
பிரமாணிக -ஆசை கொண்டு – துர்புத்தி இன்றி -உள்ளவர்கள்-சாராசார விவேகிகள் –

பாராசர்யா வச ஸூதாம்
உபநிஷத் துக்தாபிதி மத் யோத்த்ருதாம்
சம்சாராக்நி விதீபந வ்யபகத ப்ராணா த்ம சஞ்ஜீவநீம்
பூர்வாச்சார்ய ஸூ ரஷிதாம்
பஹூ மதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாம் து நிஜா ஷரை
ஸூ மநசோ பௌமா
பிபந்து அந்வஹம்

ஸ்துதி ரூப குரு உபாசநாதி மங்களா சாரமும் அர்த்தாத் செய்யப் பட்டு அருளுகிறார்
ஆச்சார்ய சம்பந்தம் பகவத் கடாஷத்தால் அல்லது சித்தியாதே என்பதால் முதலில் பகவானை உபாசித்தார்
1-ஈஸ்வரஸ்ய சௌஹார்த்தம்
2-யத்ருச்சா ஸூ க்ருதம் ததா
3-விஷ்ணோ கடாஷம்
4-அத்வேஷம்
5-அபிமுக்யம் ச
6-சாத்விகை சம்பாஷணம்
ஷடே தாநி-ஆசார்ய பிராப்தி ஹேதவ-
யஸ்ய தேவே பராபக்தி யதா தேவே ததா குரௌ-

பாராசர்யர்-வியாசர்-பராசரர் புத்ரர் -சஹோவாச வியாச பாராசர்ய-ஸ்ருதி பிரசித்தம்
பாதாராயணர் என்கிற திரு நாமமும் உண்டே
பாராசர மக ரிஷி -சத்யவதி –
ஸூத்ரம்-என்றாலே ப்ரஹ்ம ஸூத்ரம் ஒன்றையே குறிக்கும் பெருமை உண்டே –

வச ஸூ தாம்
வச -சப்தம் அதன் அர்த்தம் குறிக்கும்
ஸூ தா -சப்தம் போக்யமாய்-

உபநிஷத் துக்தாபிதி மத் யோத்த்ருதாம்
உபநிஷத் –
ப்ரஹ்ம விஷயத்வம் சத்வாரகமானது
பகவான் இடத்தில் நெருங்கி வர்த்திப்பதால் உபநிஷத்
விகர்தா கஹநோ குஹ-சகஸ்ரநாமம் -கஹந சப்தம் –
துக்த –
ஷீரம்-சாரமானது
அப்தி –
சமுத்ரம் போல அனந்தங்கள் உபநிஷத் என்கிறார்
மத்யே
முக்யார்த்தம் -சார தமம்
உத்த்ருத –
ஆழமான
ப்ரஹ்மபரம்

சம்சாராக்நி விதீபந வ்யபகத ப்ராணா த்ம சஞ்ஜீவநீம்
சம்சார –
ஜென்மாதி ப்ரவாஹங்கள்
புண்ய பாப கர்மாக்கள்
சம்சார ஏவ அக்நி-
தாப த்ரய ரூபம் -சம்சாரம்
விதீபநம்-
விவிதம் தீபநம்-தாப த்ரயம் மூன்றிலும் சாரீரம் மானசம் வாசிகம் பலவகை பட்டு இருக்குமே

வ்யபகத
வி அப கத -விசேஷதோ அபகத-வ்யாவ்ருத்ததயா துர்தர்ச -தூரத்தில் உள்ளவன் –

பிராண சப்தம் -பரமாத்மாவை குறிக்கும்
பிராண பிராணி நாம் பிராண ஹேது பரமாத்மா
பிராணஸ்ய பிராணா

அப -ஜ்ஞான தர்சன பிராப்திகளில் ஒன்றையும் லபிக்காமல் அலாபமும் பலவிதமாக இருக்கும் என்றது ஆய்த்து-

சஞ்சீவனம்
ஜீவனம்
கர்ம வாசனை ருசி பிரகிருதி சம்பந்தளோடு போக்கி
கைவல்யமும் இன்றி
மோஷம் அருளி உஜ்ஜீவிக்க செய்பவன்

இத்தால் தர்ம பூத ஞான சங்கோசம் நிவ்ருத்தியை சொல்லிற்று

பூர்வா சார்ய ஸூ ரஷிதாம்
ஓராண் வழியாக -சத் சம்ப்ரதாயமாக –
உபதேசித்து
ரஷித்து
மேலும் கிரந்தங்கள் சாதித்து அருளி –

பஹூ மதி வ்யாகாத தூரஸ்திதாம்
முரண்பட்ட வெவ்வேற மதியால்

ஆநீதாம்
இந்த ப்ரஹ்ம ஸூத்தரத்துக்கு தம் கிரந்தம் விஷயம் என்கிறார் –

நிஷா ஷரை –
ஸூ த்ர அஷரை
மித்யா வாதிகள் அஷரத்துக்கு பொருந்தாத அர்த்தம் பண்ண
ஸூ த்ர அஷரங்களுக்கு பொருந்திய அர்த்தம் அருளப் பட்டது-

ஸூ மனச பௌமா
சாத்விக குணம் நிறைந்த பிராமணர்கள்
நிஷா ஷரம் வேத அஷரம்
திவம் ஸூ பர்ணோ கத்வா சோம மாஹரத் –ஸூபர்ணன் கருத்மான் சோமத்தை கொண்டு வந்தான்
ஸ்ரீ பாஷ்யகாரர் தம்மை ஸூபர்ணனாக -தம் இஷ்டம் சித்திக்க கருதி
ஆஞ்சநேயர் சமுத்ரம் தாண்ட ஸூபர்ணம் இவ ச ஆத்மானம் மேனே ச கபி குஞ்சர -தம்மை நினைத்தது போலே
கருத்மான் உடைய க்ருத்யத்தை ஆரோபணம் பண்ணி
நிஷா ஷரங்களால் அம்ருதத்தை கொடு வந்து அருளினார்

———

ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் –
ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே

இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல்
ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார்.

———–

ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் |
ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே,
அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து
உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.
அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தரமீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி
திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது
கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.
இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார்
ஆசார்ய ஹ்ருதயத்திலே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

-——————————————————————————–——————————————————————————–——————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரா திவ்ய ஹார சுருக்க விளக்கம் /ஸ்ரீ குரு பரம்பரை தனியன்கள் / ஓராண் வழி ஆசார்ய பரம்பரையில் வாராத ஆசார்யர்கள் தனியன்கள் /ஸ்ரீ மாமுனிகளின் அஷ்ட திக் கஜங்கள் தனியன்கள்–/ஸ்ரீ வாழித் திருநாமப் பாசுரங்கள் —

October 30, 2021

நமது ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரையானது
நவ ரத்ன ஹாரம் -எம்பெருமானார் நடுநாயகம் -முன்னும் பின்னும் நவ ஆச்சார்யர்கள் உண்டே

ஸ்ரீ பெரிய பெருமாள் , ஸ்ரீ பெரிய பிராட்டியார் தொடங்கி ஸ்ரீ.ஸேனை முதலியார் முதற்கொண்டு
ஸ்வாமி ஸ்ரீ. மணவாள மாமுனிகள் ஈறாக முற்றுப் பெரும். அவர்கள் க்ரமப்படி :-

பெரிய பெருமாள்
பெரிய பிராட்டியார்
விஷ்வக்ஸேனர் / ஸேனை முதலியார்
நம்மாழ்வார்
நாதமுனிகள்
உய்யக்கொண்டார்
மணக்கால் நம்பி
ஆளவந்தார்
பெரிய நம்பி
ராமாநுஜர்
எம்பார்
பட்டர்
நஞ்சீயர்
நம்பிள்ளை
வடக்குத் திருவீதிப் பிள்ளை
பிள்ளைலோகாச்சாரியார்
திருவாய்மொழிப் பிள்ளை
மணவாள மாமுனிகள்.

நவ கிரந்தங்கள் -உபநிஷத் ப்ரஹ்ம ஸூத்ரம் ஸம் ரக்ஷணம் -ஸ்ரீ பாஷ்ய காரர்
18 கிரந்தங்கள் -அருளிச் செயல்-ரஹஸ்ய கிரந்தங்கள் ஸம் ரக்ஷணம் -ஸ்ரீ மா முனிகள்
சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம் என்று மற்ற பூர்வர்கள் அருளுக்கு இலக்கு
இவருக்கு-மா முனிகளுக்கு சீர் அருள்
மன்னிய சீர் மாறன் காலை உணவாவாகப் பெற்றோம்
முன்னவராம் குரவர் மொழி உள்ளப்பெற்றோம்
முன்னவர் கிரந்தங்களை வாசித்தும் சொல்லியும் அர்த்த விசேஷங்களை எழுதியும் இருந்ததால்
இவரைக் கொண்டே ஈடு வியாக்யானம் கேட்டு அருளினான்
அம்புயர் கோன் தன் குருவின்-மா முலைகளின் – தாள் இணையில் அன்பு செய்யாமல்
தன்னிடம் செய்தாலும் விண்ணாடு அளிக்க மாட்டானே

—————————–

ஸ்ரீ நாத முனிகள் ( 824-924 AD )
உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்) ( 826-931AD )
மணக்கால் நம்பி (ராமமிச்ரர்) ( 832-937 AD )
ஆளவந்தார் (யாமுனாசர்யர்) ( 916-1041 AD )
கூரத்தாழ்வான் (1009-1133AD)
உடையவர் (ஸ்ரீ ராமாநுஜர்) (1017-1137 AD)
முதலி ஆண்டான் (1027-1132)
எம்பார் (1021-1140)
திருக்குருகைப் பிரான் பிள்ளான் (1026-1131 AD )
அனந்தாழ்வான் ( 1055-1205 AD)
கிடாம்பி ஆச்சான் (1057-1157AD )
பராசர பட்டர் ( b 1074 AD )
எங்கள் ஆழ்வான் (விஷ்ணு சித்தர்) (1106-1206 AD)
நஞ்சீயர் (1113-1208 AD)
நம்பிள்ளை (வரதாசார்யர்) (1147– 1252AD)
நடாதூர் அம்மாள்(வாத்ஸ்ய வரதர்) (1165-1275 AD )
பெரியவாச்சான் பிள்ளை (க்ருஷ்ண ஸூரி) (1167-1262 AD)
வடக்குத் திருவீதிப் பிள்ளை (க்ருஷ்ணபாத:) ( 1167-1264 AD )
பிள்ளை லோகாசார்யர் (1205-1311 AD)
வேதாந்த தேசிகன் ( வேங்கடநாதன்) (1268 – 1369 AD)
திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீசைலேசர்) (1290-1410 AD)
ஸ்வாமி மணவாள மாமுனிகள் (1370-1443 AD)

——

அகலகில்லேன் இறையுமென்ற”
ஆழ்ந்த பர தத்துவத்தை
இப்புவனம் உய்வதற்காய்
ஈந்திட்ட எம் குருக்காள்‚
உண்மை உறைப்பதற்காய்
ஊணுறக்கம் ஒழிந்திட்டீர்
எம்மையும் போன்றதொரு
ஏதிலனும் பயன்பெறவே
ஐயன்மீர் வந்துதித்தீர்‚
ஒழிவில் காலமெல்லாம்
ஓயாமல் உமதுபுகழ்
ஓதும் வண்ணமதாய்
அ‡(ஹ)ம் அருள்வீரே‚

நாதன் வகுத்தளித்தான்
நல்லாள் நங்கையிடம்
நங்கை ஈன்றாளே
நற்சேனை நாதனிடம்

நற்சேனை நாதனவன்
நம்மாழ்வார் திரமீந்தான்
நம்மாழ்வார் தாமீந்தார்
நாதமுனி கரங்களிலே‚

நாதமுனிசீடரதை உய்யக்கொண்டாரே
நாதமுனி பேரர் யாமுனராமவர்க்கு
நடுவில்வந்தவராம் மணற்கால்நம்பியும்தான்
நயமாயதைச் சேர்த்தார் ஆளவந்தாரவற்கே‚

ஆளவந்தாரதனை ‘ஆம்முதல்வனு”க்கீயும்படி
ஆளவந்தார் சீடர் பெரியநம்பிவசம்மீந்தார்
ஆளவந்தார் சீடர் அளித்த பொக்கிஷத்தை
ஆளவந்தாரவரே எம்பெருமானானாரே‚

எம்பெருமானாரின் இட்டவழக்காக
எம்பாரும் இயல்பாக இங்கேவந்துதித்தார்
எம்பாரின் சீடரிலே ஏற்றமிகு பட்டரவர்
எளிதில் வேதாந்தியை நஞ்ஜீயராக்கினரே‚

நஞ்ஜீயர் நம்மதத்தில் நன்கு கற்றறிந்த
நல்ல உரைகளெல்லாம் நம்பிள்ளைக்கீந்தாரே
நம்பிள்ளை நவின்றதனை நல்லோலை தனிலிட்டு
நமக்காயளித்தவரே வட திருவீதிப்பிள்ளை‚‚

இன்னம் வந்ததொரு
இணையில்லா குருக்களவர்
இன்னமுதத் திருவடிகள்
இறைஞ்சி இருமனமே‚

——-

உடையவருக்கு மடைப்பள்ளி கைங்கர்யம் செய்துவந்த கிடாம்பி ஆச்சான் என்ற
ஆத்ரேய ராமாநுஜரின் வம்சத்தில் தோன்றிய கிடாம்பி அப்புள்ளாரின் மருகர் ஸ்வாமி தேசிகன்;
அவரிடமே பயின்றவர்.

ஸ்வாமி தேசிகனின் முதன்மைச் சீடர்கள் அவர்தம் திருக்குமாரரான வரதாசார்யரும், ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயரும்;
குமார வரதாசார்யர் ( 1316-1401AD )
ப்ரம்ஹதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் ( 1286-1386 AD ) -பரகால மடம் இவரால் நிறுவப்பட்டது.

என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம்புக்கி
யானடைவே அவர்குருக்கள் நிரைவணங்கிப்
பின்னருளால் பெரும்பூதுர் வந்தவள்ளல்
பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனை நாதன்
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே.- தேசிகப் பிரபந்தம்

——————–

ஸ்ரீ குரு பரம்பரை தனியன்கள் —

ஸ்ரீ பெரிய பெருமாள் (பங்குனி ரேவதி)
ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயம் ஆச்ரயே |
சிந்தாமணிம் இவோத்வாந்தம் உத்ஸங்கே அநந்தபோகிந: ||

ஸ்வயம் ப்ரகாசமானவனும், ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரின் திருமார்பில் ஒளிரும் அணிகலன் போன்றவனும்,
ஸ்ரீ ஆதிசேஷன் உமிழ்ந்த மணி போல் ஜ்வலிப்பவனுமான ஸ்ரீரங்க விராமனான
ஸ்ரீரங்கநாதனை அடியேன் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ பெரிய பிராட்டியார் (பங்குனி உத்தரம்)
நம: ஸ்ரீரங்க நாயக்யை யத் ப்ரோ விப்ரம பேதத: |
ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்நோந்நதம் இதம் ஜகத் ||

எவளது புருவ நெறிப்பு ஜீவர்களின் நிலையைப் பாமரன் என்றோ பண்டிதன் என்றோ,
செல்வன் என்றோ தரித்ரன் என்றோ நிர்ணயிக்கிறதோ அந்த ஸ்ரீ ரங்க நாச்சியாரை வணங்குகிறேன்.

ஸ்ரீ சேனை முதலியார் (ஐப்பசி பூராடம்)
ஸ்ரீ ரங்க சந்த்ரமஸம் இந்திரயா விஹர்தும்
விந்யஸ்ய விச்வசித சிந்நயநாதிகாரம் |
யோ நிர்வஹத்ய நிஸமங்குளி முத்ரயைவ
ஸேநாந்யம் அந்ய விமுகாஸ் தமஸி ச்ரியாம ||

ஸ்ரீ ரங்க சந்த்ரர்களாகிய ஸ்ரீ பெரியபெருமாள் ஸ்ரீ பெரிய பிராட்டியார் லீலைகளைச் செய்து போர,
ஸ்ரீ எம்பெருமான் அனுமதித்த தம் திருவிரல் அசைவினாலேயே உயிர் உள்ளன மற்றும் உயிர் அல்லன அனைத்தையும்
நடத்தும் ஸ்ரீ விஷ்வக்சேனர் திருவடிகளையே ஒரே புகலாகப் பற்றுகிறோம்.

ஸ்ரீ நம்மாழ்வார் (வைகாசி விசாகம்)
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த பெருஞ்செல்வம்
எல்லாமும் ஆனவருமான ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

ஸ்ரீமந் நாதமுனிகள் (ஆனி அனுஷம்)
நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே |
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே ||

எப்போதும் பகவத் த்யானத்தில் ஆழ்ந்து பக்திக்கு கடலானவரும், அளப்பரிய ஞானம் நினைப்பரிய வைராக்யம்
ஆகியன பெற்றவருமான ஸ்ரீமந் நாதமுனிகளை வணங்குகிறேன்.

ஸ்ரீ உய்யக் கொண்டார் (சித்திரை கார்த்திகை)
நம: பங்கஜ நேத்ராய நாத: ஸ்ரீ பாத பங்கஜே |
ந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத் குல நாதாய தீமதே ||

ஸ்ரீமந் நாதமுனிகள் திருவடிகளில் தம் ஸர்வ பாரமும் விட்டுச் சரணடைந்த நம் குல நாதரான
ஸ்ரீ புண்டரீகாக்ஷரை வணங்குகிறேன்.

ஸ்ரீ மணக்கால் நம்பி (மாசி மகம்)
அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம் அலர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண |
ய: க்ரீதவான் ஆஸ்தித யௌவராஜ்யம் நமாமிதம் ராமமேய ஸத்வம் ||

பட்டத்து இளவரசாகிய ஸ்ரீ யாமுனாசார்யரைத் தூதுவளை தந்து மிக எளிதாகத் திருத்திப் பணிகொண்ட
ஸ்ரீராம மிச்ரர் எனும் அளவிலா ஸாத்விகோத்தமரை வணங்குகிறேன்.

ஸ்ரீ ஆளவந்தார் (ஆடி உத்தராடம்)
யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ: |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் ||

அசத்தாய்க் கிடந்த எனக்கு ஆத்மாவைக் காட்டி, சத்தை தந்து எல்லா அஞ்ஞானங்களையும் த்வம்சம் செய்து
என்னை ஒரு பொருளாக உளவாக்கிய ஸ்ரீ யாமுனாசார்யரின் திருவடிகளை த்யாநிக்கிறேன்.

ஸ்ரீ பெரிய நம்பி (மார்கழி கேட்டை)
கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா |
பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||

எப்போதும் கமலாபதியான ஸ்ரீமந் நாராயணனின் கல்யாண குணக் கடலில் ஆழ்ந்துள்ள
நிறைவுள்ள ஸ்ரீ மஹா பூர்ணரை வணங்குகிறேன்.

ஸ்ரீ எம்பெருமானார் (சித்திரை திருவாதிரை)
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

ஸ்ரீ அச்யுதனின் திருவடியில் பக்தியால் மற்றெல்லாவற்றையும் புல்லாக மதித்துத் தள்ளியவரும்,
அடியேன் குருவும், கருணைக் கடலே போல் வடிவெடுத்தவரும் ஆகிய ஸ்ரீ பகவத் ராமானுசரை அடி பணிகிறேன்.

ஸ்ரீ எம்பார் (தை புனர்வஸு)
ராமானுஜ பதச் சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ |
ததா யத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விச்ரமஸ்தலீ ||

ஸ்ரீ ராமானுஜரின் திருவடித் தாமரை நிழல்போல் பிரியாதவரும், அடியேன் துயர்களை நீக்கி
இளைப்பாற்றும் நிழலுமான ஸ்ரீ கோவிந்தப் பெருமாளின் புகழ் ஓங்குக.

ஸ்ரீ பட்டர் (வைகாசி அனுஷம்)
ஸ்ரீ பராஸர பட்டார்ய ஸ்ரீரங்கேச புரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமான் ச்ரேயஸே மேஸ்து பூயஸே ||

கைங்கர்ய ஸ்ரீ நிறைந்த புகழாளர், ஸ்ரீ ரங்கேசனின் புரோகிதர், ஸ்ரீவத்சாங்கர் ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருக்குமாரர்
ஸ்ரீ பராசர பட்டர் திருவருளால் அடியேனுக்கு சகல மங்களமும் ஆகுக.

ஸ்ரீ நஞ்சீயர் (பங்குனி உத்தரம்)
நமோ வேதாந்த வேத்யாய ஜகந் மங்கள ஹேதவே
யஸ்ய வாகாம்ருதாஸார பூரிதம் புவந த்ரயம்

மூவுலகுக்கும் மங்களம் சேர வேதாந்த சாரமான தம் அமுத வாக்குகளைப் பொழியும் வேதாந்தி
ஸ்ரீ நஞ்சீயரை வணங்குகிறேன்.

ஸ்ரீ நம்பிள்ளை (கார்த்திகை கார்த்திகை)
வேதாந்த வேத்ய அம்ருத வாரிராசேர்
வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம் |
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவைரி தாஸம் ||

நீர் நிறைந்த மேகம் போல் வேதாந்த ஞானம் செறிந்த ஸ்ரீ நஞ்சீயர் திருவாக்குகளைத் தம் கருணையால்
வேத வேதாந்தப் பொருள்களைச் சுவைப்படக் கூறும் பெருங்கருணையாளரான
ஸ்ரீ கலிவைரி தாசர் திருவடிகளைப் பற்றுகிறேன்.

ஸ்ரீ வடக்குத் திருவீதி பிள்ளை (ஆனி ஸ்வாதி)
ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா |
யத் ப்ரஸாதப் ப்ரபாவேந ஸர்வ ஸித்திரபூந்மம ||

ஸ்ரீ நம்பிள்ளையின் திருவடித் தாமரைகளில் அடியவரான ஸ்ரீ க்ருஷ்ணர் வடக்குத் திருவீதிப் பிள்ளை
திருவருளால் சகல ஸாரார்த்தமும் அறியப் பெறுகிறேன். இப்படிப்பட்ட ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளையின்
திருவடிகளை எப்பொழுதும் வணங்குகிறேன்.

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் (ஐப்பசி திருவோணம்)
லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம: ||

ஸ்ரீ க்ருஷ்ணபாதர் ஆகிய ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை திருக்குமாரர், ஸம்ஸாரமாகிய பாம்புக் கடியிலிருந்து
ஜீவர்களுக்கு விடுதலை தரும் மருந்தான ஸ்ரீ பிள்ளை உலகாசிரியரை வணங்குகிறேன்.

ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை (வைகாசி விசாகம்)
நம ஸ்ரீசைலநாதாய குந்தீ நகர ஜந்மநே |
ப்ரஸாதலப்த பரம ப்ராப்ய கைங்கர்யஸாலிநே ||

ஸ்ரீ குந்தீ நகரில் அவதரித்தவர், ஆசார்ய கடாக்ஷத்தால் பரம ஸ்லாக்யமான கைங்கர்ய ஸ்ரீயை அடைந்தவரான
ஸ்ரீ திருமலை ஆழ்வார் என்கிற ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடியை வணங்குகிறேன்.

ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகள் (ஐப்பசித் திருமூலம்)
ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||

ஸ்ரீ திருமலை ஆழ்வார் கருணைக்குப் பாத்திரரும், ஞானம் பக்தி முதலிய குணங்கள் கடல் போல் நிரம்பியவரும்
ஸ்ரீ யதீந்த்ரர் ஸ்ரீ ராமாநுசரை எப்போதும் அனுசரித்திருப்பவருமான ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.

——–

ஓராண் வழி ஆசார்ய பரம்பரையில் வாராத ஆசார்யர்களும் (மேலும் பலர் உள்ளனர்):

ஸ்ரீ காவலப்பன் (தை விசாகம்)
நாதமௌநி பதாஸக்தம் ஜ்ஞானயோகாதி ஸம்பதம் |
குருகாதிப யோகீந்த்ரம் நமாமி சிரஸா ஸதா ||

ஸ்ரீ நாதமுனிகள் திருவடித் தாமரைகளில் மிக்க பக்தி கொண்டவர், ஞான யோக பக்தி யோகங்களில் நிறை செல்வர்,
யோகிகளில் சிறந்தவரான ஸ்ரீ குருகைக் காவலப்பன் திருவடித் தாமரைகளில் எப்போதும் வணங்குகிறேன்

ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் (வைகாசி கேட்டை)
ஸ்ரீராமமிச்ர பத பங்கஜ ஸஞ்சரீகம் ஸ்ரீயாமுனார்ய வர புத்ரம் அஹம் குணாப்யம் |
ஸ்ரீரங்கராஜ கருணா பரிணாம தத்தம் ஸ்ரீபாஷ்யகார சரணம் வரரங்கமீடே ||

ஸ்ரீ யாமுனாசார்யர் திருக்குமாரர், ஸாத்விக குணபூர்ணர், ஸ்ரீ மணக்கால் நம்பிகளின் திருவடித் தாமரைகளில்
வண்டு போன்றவர், ஸ்ரீ பாஷ்யகாரரைத் தம் சிஷ்யராகப் பெற்றவரான ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரைப் போற்றுகிறேன்.

ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி (வைகாசி ரோஹிணி )
ஸ்ரீவல்லப பதாம்போஜ தீபக்த்யம்ருத ஸாகரம் |
ஸ்ரீமத்கோஷ்டீபுரீபூர்ணம் தேசிகேந்த்ரம் பஜாமஹே ||

ஸ்ரீ மஹாலக்ஷ்மி நாதன் நாராயணன் திருவடிகளில் ஞானாம்ருத பக்தி அம்ருதக் கடல் போன்றவர்,
ஆசார்யர்களில் சிரேஷ்டரான ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் சரண் அடைகிறோம்.

ஸ்ரீ பெரிய திருமலை நம்பி (வைகாசி ஸ்வாதி)
பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேசபலப்ரதாய |
ஸ்ரீபாஷ்யகாரோத்தம தேசிகாய ஸ்ரீசைலபூர்ணாய நமோ நம: ஸ்தாத் ||

ஸ்ரீ திருமலை யப்பனாலேயே தன் தகப்பனாராகக் கொண்டாடப்பட்டவர், அதனால் அவன் மகனாகிய
சதுர்முக பிதாமஹனுக்கே பிதாமஹரானவர், ஸ்ரீ பாஷ்யகாரருக்கு ஸ்ரீமத் வாலமீகி ராமாயணம் உபதேசித்த
உத்தம தேசிகரான ஸ்ரீ திருமலை நம்பிகளை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

ஸ்ரீ திருமாலை ஆண்டான் (மாசி மகம்)
ராமாநுஜ முநீந்த்ராய த்ராமிடீ ஸம்ஹிதார்த்ததம் |
மாலாதர குரும் வந்தே வாவதூகம் விபஸ்சிதம் ||

த்ராவிட வேதமான ஸ்ரீ திருவாய்மொழியைத் தம் வாக்கு வன்மையால் ஸ்ரீ ராமானுஜ முனிவர்க்கு உபதேசித்தவரான
மஹா மேதாவி ஸ்ரீ திருமாலை ஆண்டான் எனும் ஸ்ரீமாலாதரரைப் பூசிக்கிறேன்.

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் (மாசி ம்ருகசீர்ஷம்)
தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சி பூர்ணம் உத்தமம் |
ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம் ||

ஸ்ரீ தேவராஜனின் கருணைக்குப் பாத்ரபூதர், உத்தமரான ஸ்ரீ காஞ்சிபூர்ணர்,
ஸ்ரீ ராமானுசரால் மிகவும் போற்றப் பட்டவர்,
ஸ்ரீ வைஷ்ணவர்களால் சூழப்பட்ட திருக்கச்சி நம்பிகளை வணங்குகிறேன்.

ஸ்ரீ மாறனேரி நம்பி (ஆனி ஆயில்யம்)
யாமுநாசார்ய ஸச்சிஷ்யம் ரங்கஸ்தலநிவாஸிநம் |
ஜ்ஞாநபக்த்யாதிஜலதிம் மாறனேரிகுரும் பஜே ||

ஸ்ரீ யாமுனாசார்யரின் ப்ரிய சிஷ்யர், ஸ்ரீரங்கம் பெரியகோயில் நித்ய வாசி,
ஞான பக்திக் கடல் ஆகிய ஸ்ரீ மாறனேரி நம்பியை பஜிக்கிறேன்.

ஸ்ரீ கூரத்தாழ்வான் (தை ஹஸ்தம்)
ஸ்ரீவத்ஸ சிந்ந மிச்ரேப்யோ நம உக்திம தீமஹே: |
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்: ||

ஸ்ரீ நாராயண பரத்வமாகிய மங்கல நாண் பூண்டவள் வேத மாதா எனத் தம் ஸ்தோத்ரங்களால்
காட்டி யருளிய ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு நம் வணக்கங்கள்.

ஸ்ரீ முதலியாண்டான் (சித்திரை புனர்வஸு )
பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா |
தஸ்ய தாஸரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம் ||

ஸ்ரீ தாசரதி என்று திருநாமம் உள்ளவர், ஸ்ரீ எம்பெருமானாரின் திருவடி நிலைகளாகப் போற்றப் பெறுபவர்,
ஸ்ரீ முதலியாண்டானின் திருவடிகளைத் தலையால் தாங்குகிறேன்.

ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் (கார்த்திகை பரணி)
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் வேதசாஸ்த்ரார்த்த ஸம்பதம் |
சதுர்த்தாச்ரம ஸம்பந்நம் தேவராஜ முநிம் பஜே ||

ஸ்ரீ எம்பெருமானாரின் ப்ரிய ஸிஷ்யர், வேதங்கள் சாஸ்த்ரங்களை உட்பொருளுணர்ந்து கற்றவர்,
ஸந்யாஸாச்ரமம் மேற்கொண்டவர் ஆகிய ஸ்ரீ தேவராஜ முனிவர் எனும்
ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை அடியேன் சரண் புகுகிறேன்.

ஸ்ரீ கோயில் கோமாண்டூர் இளையவில்லி ஆச்சான் (சித்திரை ஆயில்யம்)
ஸ்ரீ கௌசிகாந்வய மஹாம்புதி பூர்ணசந்த்ரம்
ஸ்ரீ பாஷ்யகார ஜநநீ ஸஹஜா தநுஜம் |
ஸ்ரீசைலபூர்ண பத பங்கஜ சக்த சித்தம்
ஸ்ரீபாலதந்வி குருவர்யம் அஹம் பஜாமி ||

கௌசிக குல சமுத்ரத்துப் பூர்ண சந்திரன் போன்றவர், ஸ்ரீ பாஷ்யகாரரின் திருத்தாயாரின் ஸஹோதரி குமாரர்,
ஸ்ரீ சைலபூர்ணரின் திருவடிகளில் ஆழ்ந்த பக்தர் ஆகிய பால தன்வி மஹா குருவை வணங்குகிறேன்.

ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் (சித்திரை ஹஸ்தம்)
ராமானுஜ பதாம்போஜயுகளீ யஸ்ய தீமத: |
ப்ராப்யம் ச ப்ராபகம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும் ||

மஹாமேதாவி, தம் ஆசாரயர் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று உறுதியானவர்
ஆகிய ஸ்ரீ ப்ரணதார்த்திஹர குரு ஸ்ரீ கிடாம்பி ஆச்சானைத் தொழுகிறேன்.

ஸ்ரீ வடுக நம்பி (சித்திரை அஸ்வினி)
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம் |
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே ||

ஸ்ரீ ராமானுஜரின் சச்சிஷ்யர், சாளக்ராமத்தில் வசிப்பவர், ஆசார்ய நிஷ்டையாகிய பஞ்சமாபாயத்தில்
நிலை நின்றவர் ஆகிய ஸ்ரீ சாலக்ராமாசார்யர் ஸ்ரீ வடுக நம்பியைத் தொழுகிறேன்.

ஸ்ரீ வங்கிபுரத்து நம்பி
பாரத்வாஜ குலோத்பூதம் லக்ஷ்மணார்ய பதாச்ரிதம் |
வந்தே வங்கிபுராதீஸம் ஸம்பூர்ணாயம் க்ருபாநிதிம் ||

ஸ்ரீ பாரத்வாஜ குலத்திலகர், ஸ்ரீ எம்பெருமானார் திருவடியில் ஆச்ரயித்தவர்,
ஸ்ரீ வங்கிபுரத் தலைவர் க்ருபா நிதியாகிய ஸ்ரீ வங்கிபுரத்து நம்பியைத் தொழுகிறேன்.

ஸ்ரீ சோமாசியாண்டான் (சித்திரை திருவாதிரை)
நௌமி லக்ஷ்மண யோகீந்த்ர பாதஸேவைக தாரகம் |
ஸ்ரீராமக்ரதுநாதார்யம் ஸ்ரீபாஷ்யாம்ருத ஸாகரம் ||

ஸ்ரீ எம்பெருமானார்க்குக் குற்றேவல்கள் பெருங்களிப்போடு செய்தவர், ஸ்ரீபாஷ்ய அமுதக் கடல் என்னலாம்படி
அதைக் கற்றறிந்தவர், ஸ்ரீ ராமர் எனும் திரு நாமம் பூண்ட ஸ்ரீ சோமாசி ஆண்டானைத் தொழுகிறேன்.

ஸ்ரீ பிள்ளை உறங்கா வில்லி தாசர் (மாசி ஆயில்யம்)
ஜாகரூக தநுஷ்பாணிம் பாணௌ கட்கஸமந்விதம்
ராமானுஜஸ்பர்சவேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாசகம் |
பாகிநேயத்வயயுதம் பாஷ்யகார பரம்வஹம்
ரங்கேசமங்களகரம் தநுர்தாஸம் அஹம் பஜே ||

எப்போதும் உறங்காத விழிப்புள்ள ஸ்ரீ உறங்காவில்லி தாசர், ஒருகையில் வில்லும் மற்றொன்றில் கத்தியும் ஏந்தி
ஸ்ரீ நம்பெருமாளைக் காப்பவர், ஸ்ரீ ராமாநுசர்க்கு ஸ்பர்சவேதி, ரஹஸ்ய புருஷார்த்தங்களைத் தம் வாழ்வில்
வெளிப்படுத்தியவர், இரு மருமகன்களை உடையவர், ஸ்ரீ எம்பெருமானார் மடத்தை நடத்தியவர், நித்தியமாக
ஸ்ரீ பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்தவருடைய திருவடிகளை புகலாக அடைகிறேன்.

ஸ்ரீ திருக்குருகைப் பிரான் பிள்ளான் (ஐப்பசி புனர்வஸு )
த்ராவிடாகம ஸாரக்யம் ராமாநுஜ பதாச்ரிதம் |
ஸுதியம் குருகேசார்யம் நமாமி சிரஸாந்ஹவம் ||

த்ராவிட வேதத்தின் உட்பொருள் நன்கு உணர்ந்தவர், ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகலில் சரணம் புக்கவர்,
மஹா மேதாவியான ஸ்ரீ குருகேசாசார்யரை தினமும் தொழுகிறேன்.

ஸ்ரீ எங்களாழ்வான் (சித்திரை ரோஹிணி)
ஸ்ரீவிஷ்ணுசித்த பத பங்கஜ ஸம்ச்ரயாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண |
நோசேந் மமாபி யதிஸேகரபாரதீனாம் பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: ||

ஸ்ரீ விஷ்ணு சித்தரை அடைந்திருக்க அடியேன் மனம் விரும்புகிறது. அவர் திருவடிகளைத் தவிர வேறு எது பயனுள்ளது?
அவர் திருவடிகளைச் சார்ந்திரேனாகில் அடியேன் எவ்வாறு ஸ்ரீ எம்பெருமானார் அருளிய திவ்யார்த்தங்களைக் கற்றிருக்க முடியும்?

ஸ்ரீ அநந்தாழ்வான் (சித்திரை சித்திரை)
அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||

அனைத்துக் கல்யாண குணங்களின் இருப்பிடம், அஞ்ஞான இருளை ஒழிப்பவர்,
தம்மைச் சரண் புக்கோர்க்கு ஒப்பிலா அரண் ஆகிய ஸ்ரீ அநந்தாழ்வானை வணங்குகிறேன்.

ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் (பங்குனி ஹஸ்தம்)
ஸ்ரீரங்கே மீநஹஸ்தே ச ஜாதம் ரங்கார்யநந்தநம் |
ராமாநுஜபதாஸ்கந்தம் ரங்கநாதகுரும் பஜே ||

கைங்கார்யருக்குப் புதல்வராகப் பங்குனி ஹஸ்தத்தில் அவதரித்த, ஸ்ரீ ராமானுஜரின் திருவடி பக்தர்,
ஸ்ரீ ரங்கநாதர் எனும் திருநாமம் கொண்ட ஸ்ரீ திருவரங்கத்து அமுதத்தனாரிடம் புகல் அடைகிறேன்.

ஸ்ரீ நடாதூரம்மாள் (சித்திரை சித்திரை)
வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம் |
பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீவயதி மாமபி ||

அடியேனுக்கு ஸ்ரீ பாஷ்யத் தேன் அமுது ஊட்டிய ஸ்ரீவத்ஸ குல திலகர்
ஸ்ரீ நடாதூர் அம்மாள் எனும் ஸ்ரீ வரதாசார்யரை வணங்குகிறேன்.

ஸ்ரீ வேத வ்யாஸ பட்டர்(வைகாசி அனுஷம்)
பௌத்ரம் ஸ்ரீராமமிச்ரஸ்ய ஸ்ரீவத்ஸாங்கஸ்ய நந்தநம்
ராமஸூரிம் பஜே பட்டபராசரவராநுஜம்

ஸ்ரீ ராம மிச்ரர் (ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருத்தகப்பனார், கூரத்து ஆழ்வார்) திருப்பேரனாரும்,
ஸ்ரீ ஆழ்வானின் திருக்குமாரரும், ஸ்ரீ பராசர பட்டரின் இளைய சஹோதரருமான ஸ்ரீ ராமப் பிள்ளை எனும்
ஸ்ரீ வேத வ்யாஸ பட்டரை அடியேனுக்குப் புகலாக அடைகிறேன்.

ஸ்ரீ கூரநாராயண ஜீயர் (மார்கழி கேட்டை)
ஸ்ரீபராசரபட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்கபாலகம்
நாராயணமுநிம் வந்தே ஜ்ஞாநாதிகுணஸாகரம்

ஸ்ரீ பராசர பட்டர் சிஷ்யரும், ஸ்ரீ ரங்கத்தின் பாது காவலரும் ஞான, பக்திக்கடலுமான
ஸ்ரீ நாராயண முனியைத் தொழுகிறேன்..

ஸ்ரீ ச்ருத ப்ரகாசிகா பட்டர்
யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந தர்சிதா: |
வரம் ஸுதர்சநார்யம் தம் வந்தே கூர குலாதிபம் ||

எவரது ஸ்ரீ ச்ருதப்ரகாசிகா வ்யாக்யானத்தில் ஸ்ரீ யதிராஜரின் ஸ்ரீ பாஷ்யம் நன்கு விளக்கப் பட்டுள்ளதோ,
அந்த ஸ்ரீ கூர குலத்தோன்றல், மஹா ஞானி ஸ்ரீ சுதர்சனாசார்யரை வணங்குகிறேன்.

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)
ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே |
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா ||

ஸ்ரீ யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் ஸ்ரீ எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ
அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.

ஈயுண்ணி மாதவப் பெருமாள் (கார்த்திகை பரணி)
லோகாசார்ய பதாம்போஜ ஸம்ச்ரயம் கருணாம்புதிம் |
வேதாந்த த்வய ஸம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே ||

ஸ்ரீ நம்பிள்ளை லோகாசார்யர் திருவடிகளில் சரண் புக்கவரும், கருணா சாகரரும் ஸம்ஸ்க்ருத த்ராவிட (உபய)
வேதாந்தங்களில் கரை கண்டவருமான ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாளை சரண் அடைகிறேன்.

ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் (ஸ்வாதி)
மாதவாசார்ய ஸத்புத்ரம் தத்பாதகமலாச்ரிதம் |
வாத்ஸல்யாதி குணைர் யுக்தம் பத்மநாப குரும் பஜே ||

ஸ்ரீ மாதவாசார்யர் ஸத்புத்ரர், அவரது சிஷ்யர், வாத்சல்யாதி கல்யாண குணக் கடல் ஆகிய
ஸ்ரீ ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளை சரண் அடைகிறேன்.

நாலூர்ப் பிள்ளை (பூசம்)
சதுர்க்ராம குலோத்பூதம் த்ராவிட ப்ரஹ்ம வேதிநம் |
யஜ்ஞார்ய வம்சதிலகம் ஸ்ரீவராஹமஹம் பஜே ||

ஸ்ரீ கூரத்தாழ்வான் சிஷ்யர் நாலூரான் வம்சத்தவர், ஸ்ரீ எம்பெருமானார் சிஷ்யரான ஸ்ரீ எச்சான் வம்சத் திலகர்,
திராவிட வேத பாரங்கதர் ஆகிய ஸ்ரீ வராஹர் எனும் ஸ்ரீ நாலூர்ப் பிள்ளையை வணங்குகிறேன்.

நாலூர் ஆச்சான் பிள்ளை (மார்கழி பரணி)
நமோஸ்து தேவராஜாய சதுர்க்ராம நிவாஸிநே |
ராமானுஜார்ய தாஸஸ்ய ஸுதாய குணசாலிநே ||

ஸ்ரீ நாலூர்ப் பிள்ளை எனும் ஸ்ரீ ராமாநுஜாசார்யர் குமாரர், சதுர்க்ராமம் எனும் நாளூரில் வசிப்பவர்
ஸ்ரீ தேவராஜ குரு ஆகிய மஹா குணசாலி ஸ்ரீ நாலூர் ஆச்சான் பிள்ளையைத் தொழுகிறேன்.

ஸ்ரீ நடுவில் திருவீதி பிள்ளை பட்டர் (ஐப்பசி அவிட்டம்)
லோகாசார்ய பதாஸக்தம் மத்யவீதி நிவாஸிநம் |
ஸ்ரீவத்ஸசிஹ்நவம்சாப்திஸோமம் பட்டார்யமாச்ரயே ||

ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளில் ஆழ்ந்த பக்தர், ஸ்ரீரங்கம் நடுவில் திருவீதியில் வாழ்ந்தவர்,
ஸ்ரீ கூரத்தாழ்வானின் வம்சத்துக்கு முழு நிலவு போன்றவரான
ஸ்ரீ நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரைச் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் (ஐப்பசி சதயம்)
ஜ்ஞாந வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸுந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத் குரும் பஜே ||

திராவிட வேதமாகிய ஸ்ரீ திருவாய்மொழியை விளக்கியவர், ஞானமும் வைராக்யமும் மிக்கவரான
எனது ஆசார்யர் ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயரைத் தொழுகிறேன்.

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (மார்கழி அவிட்டம்)
த்ராவிடாம்நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் |
ரம்யஜாமாத்ருதேவேந தர்சிதம் க்ருஷ்ணஸூநுநா ||

குருபரம்பராகதமான த்ராவிடவேதம் ஸ்ரீ திருவாய்மொழியின் பொருளை நமக்கு நன்கு உரைத்தருளியவர்
ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ வடக்குத் திருவீதி பிள்ளையின் குமாரர் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)
ச்ருத்யர்த்தஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்
பத்மோல்லஸத் பகவதங்க்ரி புராணபந்தும் |
ஜ்ஞாநாதிராஜம் அபயப்ரதராஜ ஸூநும்
அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி ||

ச்ருதிப் பொருளை அமுதமாய்ப் பொழிபவர், ஸ்ம்ருதிப் பொருளைத் தாமரையை அலர்த்தும்
கதிரவன் போல் விளங்கச் செய்பவர், ஸ்ரீ எம்பெருமானின் தாமரைத் திருவடிகளில் பழவடியார், ஞானப் பேரரசர்,
அபயப்ரத ராஜர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையின் திருக்குமாரரான என் ஆசார்யர் பரம காருணிகர்
ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் (ஆனி ஸ்வாதி)
ஸுந்தரஜாமாத்ருமுநே: ப்ரபத்யே சரணாம்புஜம் |
ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து ஸந்தாரபோதகம் ||

சம்சாரக் கடலில் மூழ்கும் மக்களுக்கு நல்ல படகாகும் ஸ்ரீ அழகிய மணவாள முனியின்
திருவடித் தாமரைகளை பணிகிறேன்.

ஸ்ரீ கூர குலோத்தம தாசர் (ஐப்பசி திருவாதிரை)
லோகாசார்ய க்ருபாபாத்ரம் கௌண்டிந்ய குல பூஷணம் |
ஸமஸ்தாத்ம குணாவாஸம் வந்தே கூர குலோத்தமம் ||

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் பரிபூர்ண க்ருபைக்குப் பாத்ரர், கௌண்டிந்ய குலத்தின் அணிகலன்,
ஸகல குண ஸம்பன்னரான ஸ்ரீ கூர குலோத்தம தாஸரைத் தொழுகிறேன்.

ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை (ஐப்பசி உத்தரட்டாதி)
துலாஹிர்புத்ந்யஸம்பூதம் ஸ்ரீலோகார்ய பதாச்ரிதம் |
ஸப்தகாதா ப்ரவக்தாரம் நாராயணமஹம் பஜே ||

ஐப்பசி உத்தரட்டாதியில் அவதரித்தவர், ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரைச் சரண் புக்கவர்,
ஸ்ரீவசன பூஷண சாரமான சப்த காதையை அருளிச் செய்தவரான
ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ வேதாந்தாசார்யர் (புரட்டாசி திருவோணம்)
ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

எதிர்க்கும் கவிகளுக்கும் தார்க்கிகர்க்கும் வெல்ல ஒண்ணாத சிங்கம், வேதாந்த ஞானக் கடலான
ஸ்ரீமான் வேங்கட நாதார்யரை எப்போதும் என் இதயத்தில் எழுந்தருளப் பண்ணுகிறேன்.

ஸ்ரீ திருநாராயண புரத்து ஆய் ஜநன்யாசார்யர் (ஐப்பசி பூராடம்)
ஆசார்ய ஹ்ருதயஸ்யார்த்தா: ஸகலா யேந தர்சிதா: |
ஸ்ரீஸாநுதாஸம் அமலம் தேவராஜம் தமாச்ரயே ||

ஸ்ரீசானு தாஸர் என்றும் தேவராஜர் என்றும் புகழ் மிக்கவர், களங்கமற்றவர், ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதய பொருளை
விரித்துரைத்தவர் ஸ்ரீ ஆய் ஜனந்யாசார்யர் திருவடிகளைப் புகலாய் அடைகிறேன்.

—————————-

ஸ்ரீ மாமுனிகளின் அஷ்ட திக் கஜங்கள்

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி புனர்வஸு)
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா |
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே ||

ஸ்ரீ மாமுனிகளை எப்போதும் ஆஸ்ச்ரயித்தவரும், அவர் திருவடி ரேகைகள் போன்றவரும்,
அவரையே தம் சத்தையாகக் கொண்டவருமான ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரைப் போற்றுகிறேன்.

ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் (கார்த்திகை புனர்வஸு)
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத ஸேவைக தாரகம் |
பட்டநாத முநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||

ஸ்ரீ மாமுனிகள் திருவடித் தாமரைகளையே எப்போதும் புருஷார்த்தமாக உடையவர், சகல குணங்களும் நிறைந்தவர்,
வாத்சல்யம் மிக்கவரான ஸ்ரீ பட்டநாத முனிவரை வணங்குகிறேன்.

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் (புரட்டாசி பூரட்டாதி)
ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம் |
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பாதாச்ரயம்
வரத நாராயணம் மத் குரும் ஸம்ச்ரயே ||

சகல வேதாந்த தாத்பர்யங்களைக் கற்ற அறிவுக் கடல், புகழ் மிக்க வாதூல கோத்ரர், ஸ்ரீ மணவாள மாமுனிகளின்
திருவடிகளில் சரண் புக்கவரான ஸ்ரீ வரத நாராயண குரு எனும் ஸ்ரீ கோயில் அண்ணனை நான் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் (ஆடி பூசம்)
வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்தபோதம்
காந்தோபயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம் |
வத்ஸாந்வவாயமநவத்ய குணைருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் ||

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கடாக்ஷத்தால் விரிந்து விகஸித்த ஞானமுள்ளவர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் கருணைக்குப்
பூர்ண பாத்ரர் ஸ்ரீவத்ச குல விளக்கு, கல்யாண குணசாலியான ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணனை பக்தியோடு பஜிக்கிறேன்.

ஸ்ரீ எறும்பி அப்பா (ஐப்பசி ரேவதி)
ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||

ஸ்ரீ மாமுனிகளின் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர், நம்மை ஞானம் தந்து காக்கும்
மங்கள ஸ்வபாவருமான ஸ்ரீ தேவராஜ குரு என்கிற ஸ்ரீ எறும்பி அப்பாவை வணங்குகிறேன்.

ஸ்ரீ அப்பிள்ளை
காந்தோபயந்த்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
வத்ஸாந்வயபவம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும் ||

ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவடித் தாமரைகளில் வண்டு போன்ற, ஸ்ரீவத்ச குல திலகர்
ஸ்ரீ ப்ரணதார்த்திஹர குரு என்கிற ஸ்ரீ அப்பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ அப்பிள்ளார்
காந்தோபயந்த்ரு யோகீந்த்ர ஸர்வ கைங்கர்யதூர்வஹம் |
ததேக தைவதம் ஸௌம்யம் ராமாநுஜ குரும் பஜே ||

ஸ்ரீ மாமுனிகள் ஒருவரையே தம் தேவனாகக் கருதி அவருக்கே எல்லாப் பணிவிடைகள் செய்த
ஸ்ரீ ராமானுஜ குரு என்கிற ஸ்ரீ அப்பிள்ளாரை வணங்குகிறேன்.

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் (புரட்டாசி மகம்)
வரதகுரு சரணம் வரவரமுநிவர்ய கநக்ருபா பாத்ரம் |
ப்ரவரகுண ரத்ந ஜலதிம் ப்ரணமாமி ஸ்ரீநிவாஸ குருவர்யம் ||

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் திருவடிகளையே பற்றினவரும், ஸ்ரீ மாமுனிகள் கருணையைப் பெற்றவரும்
குண ரத்நக் கடலுமான ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் என்கிற ஸ்ரீனிவாச குருவை வணங்குகிறேன்.

ஸ்ரீபெரும்புதூர் ஆதி யதிராஜ ஜீயர்(ஐப்பசிப்பூசம்)
ஸ்ரீமத் ராமாநுஜாங்க்ரி ப்ரவண வரமுநே: பாதுகம் ஜாதப்ருங்கம்
ஸ்ரீமத் வாநாத்ரி ராமாநுஜ கணகுரு ஸத்வைபவ ஸ்தோத்ர தீக்ஷம் |
வாதூல ஸ்ரீநிவாஸார்ய சரணசரணம் தத் க்ருபா லப்த பாஷ்யம்
வந்தே ப்ராஜ்ஞம் யதீந்த்ரம் வரவரதகுரோ: ப்ராப்த பக்தாம்ருதார்த்தம் ||

ஸ்ரீ மாமுனிகள் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர்,
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரை போற்றிக் கொண்டே இருந்தவர்,
ஸ்ரீ வாதூல ஸ்ரீநிவாஸாசார்யரிடம் ஸ்ரீ பாஷ்யம் பயின்றவரான ஸ்ரீ பெரும்பூதூர் யதிராஜ ஜீயரை வணங்குகிறேன்.

ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா (ஆவணி ஹஸ்தம்)
ஸ்ரீமத் வாநமஹாசைல ராமாநுஜ முநிப்ரியம் |
வாதூல வரதாசார்யம் வந்தே வாத்ஸல்ய ஸாகரம் ||

ஸ்ரீ வானமாமலை ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் ப்ரியத்துக்குரியவர், வாத்சல்யக் கடல் போன்றவர்,
ஸ்ரீ வாதூல வரதாசார்யர் என்கிற ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணாவை வணங்குகிறேன்.

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் (சித்திரை திருவோணம்)
ஸ்ரீசடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம் |
ஸ்ரீமத்யதீந்த்ரப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முநிம் பஜே ||

ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளில் வண்டு போன்றவர், ஸ்ரீ மாமுனிகளிடம் பரம பக்தர்,
ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் திவ்ய கிரந்தம் அருளிச் செய்தவர்,
ஸ்ரீ லோகார்ய முனி என்கிற ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயரை வணங்குகிறேன்..

ஸ்ரீ திருமழிசை அண்ணா அப்பங்கார் (ஆனி அவிட்டம்)
ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம்
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம்

ஸ்ரீ வாதூல நரசிம்மச்சார்யர் குமாரர், அவரடி பணிந்தவர், அவர் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர்,
அவரிடமும் ஸ்ரீ ரங்கராஜாசார்யரிடமும் ஸ்ரீ பாஷ்யம் பயின்றவர், ஸ்ரீ வாதூல வீரராகவர் என்றும்
ஸ்ரீ அண்ணா அப்பங்கார் என்றும் பிரசித்தி பெற்ற ரகுவராயரை வணங்குகிறேன்.
.
ஸ்ரீ அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் (ஆவணி ரோஹிணி)
ஸ்ரீவாதூல ரமாப்ரவாள ருசிர ஸ்ரக்ஸைந்ய நாதாம்சஜ
ஸ்ரீகுர்வீந்த்ரம் மஹார்ய லப்த நிஜஸத் ஸத்தம் ச்ருதா பீஷ்டதம்
ஸ்ரீராமாநுஜ முக்ய தேசிகலஸத் கைங்கர்ய ஸம்ஸ்தாபகம்
ஸ்ரீமத்வேங்கடலக்ஷ்மணார்ய யமிநம் தம்ஸத்குணம் பாவயே

ஸ்ரீ வாதூல குலாசார்யர்களில் நல்முத்துப் போன்றவர், ஸ்ரீ சேனை முதலியார் அம்சர்,
அண்டி வந்தோர் விரும்பியதைத் தந்தவர், திருவாதிரை உத்சவம் போன்றவற்றில்
கட்டிய கைங்கர்யம் போன்றவற்றை ஏற்படுத்தியவர், ஸ்ரீமத் வேங்கட லக்ஷ்மணார்ய யதி என்கிற
ஸ்ரீ எம்பார் ஜீயர் திருவடிகளை வணங்குகிறேன்.

——————

ஸ்ரீ பெரிய பெருமாள் :-

ப்ரம்ம லோகத்தில், ப்ரம்மாவால் ஆராதிக்கப்பட்டு பின் அவர் மூலமாக இக்ஷ்வாகு குலத்தினருக்கு வழங்கப்பட்டு,
அக்குலத்தில் தோன்றிய பலராலும் காலம் காலமாக ஆராதிக்கப்பட்டு வந்தார் பெரிய பெருமாள்.
அக் குலத்தில் உதித்த தசரத சக்ரவர்த்தியினாலும்,
பின் எம்பெருமான் தானே அவதரித்த ஸ்ரீ ராமரும் அவரை வழிபட்டுவந்தார்கள்.
இந் நிலையில் இலங்கையில் போர் முடிந்து ஸ்ரீ ராமரும் அயோத்திக்கு எழுந்தருளி பட்டாபிஷேகம் கண்டருளினார்.
பட்டாபிஷேக வைபவத்திற்கு வந்திருந்த விபீஷணன், அங்கு எழுந்து அருளப்பட்ட இருக்கும் பெரிய பெருமாளைப் பார்த்து,
மிக ஆனந்தித்து தன்னிடம் அவரைக் கொடுத்தருளும்படி ராமரிடம் வேண்டினான்.
ஸ்ரீ ராமரும் உகந்து பெரிய பெருமாளை அவருக்கு அளித்து, பெருமாளுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்வது பற்றி எடுத்துக் கூறினார்.

பெரிய பெருமாளுடன் அயோத்தியிலிருந்து புறப்பட்ட விபீஷணன் , இலங்கைக்குத் திரும்பும் வழியில் சாயரக்ஷை நேரத்தில்
மாலை சந்தியா வந்தனம் பண்ண வேண்டி, ஸ்ரீரங்கம் காவிரிக்கரையில் பெருமாளை ஏழப் பண்ணினான்.
நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு மீண்டும் இலங்கைக்குக் கிளம்பும் வேளையில்,
அவனால் பெருமாளை அவ்விடத்திலிருந்து எழுந்தருளப் பண்ண முடியவில்லை.
எவ்வளவு முயற்சி செய்தும் முடியாத காரணத்தால் , எம்பெருமான் திருவுள்ளம் ஸ்ரீரங்கத்திலேயே இருக்க விரும்புகிறது
என்பதனை அறிந்து கொண்டு பெருமாளை அவ்விடத்திலேயே இருத்திவிட்டு அவன் இலங்கைக்கு சென்று விட்டான்.
அன்று முதல் பெரிய பெருமாள் யுகம் யுகங்களாக அங்கேயே பள்ளி கொண்டு,
பக்தர்களுக்கு பரவசமிக்க காட்சி கொடுத்துக் கொண்டும், அருள் பாலித்துக் கொண்டும் வருகிறார்.

பெரிய பெருமாள் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளின நாளன்று நக்ஷத்திரம் ரேவதி.

————

பெரிய பிராட்டியார் :-

சமுத்திர ராஜனுக்கும் , காவிரித்தாய்க்கும் மகளாகப் பங்குனி மாதம் உத்திரம் நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.
பெரிய பெருமாளின் பத்தினியான பெரிய பிராட்டியாரான ஸ்ரீரங்க நாச்சியார்.
தன் தனிச் சன்னதி பிராகாரங்களை விட்டு வெளியில் வராத பத்தினித் தாயான இவர் மிகக் கருணை மிகுந்தவர்.
இவரின் கருணை சொல்லி மாளாது. ஸேவித்து அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் தாயாரின் கருணைத் தன்மை.
தன்னை நம்பி வரும் பக்தர்களைக் காப்பதில் இவருக்கு இணையில்லை.
தாயாரை ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கும் ஒவ்வொரு சமயமும் உடலும் உள்ளமும் சிலிர்க்கும்.

————–

ஸேனை முதலியார் : –

விக்ஷ்வக்ஸேனர் என அழைக்கப்பெரும் ஸேனை முதலியார், ஐப்பசி மாதம் பூராட நக்ஷத்திரத்திலே அவதரித்தவர்.
எப்படி ஒரு அரசனுக்கு தளபதி என்று ஒருவர் இருப்பாரோ அதைப் போல பெருமாளுக்கு தளபதியாக இருப்பவர் இவர்.
கூர்ம புராணத்தில் இவர் பெருமாளின் ஒரு அம்சமே என்று கூறப்பட்டுள்ளது.
மஹாவிஷ்ணுவைப் போலவே நான்கு கைகளுடனும், சங்கு, சக்கரம், கதை, தாமரையுடன் காட்சியளிப்பார்.
இவரின் மறு அவதாரமாக நம்மாழ்வார் கருதப்படுகிறார். ஸ்ரீ வைகுண்டத்தில் எம்பெருமானின் வாயில் காப்பானாக இருக்கிறார்.

அர்ச்சாவதார ரூபியாக எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்களின் ப்ரம்மோற்சவங்களின் போது
அங்குரார்ப்பணத்தன்று விக்ஷ்வக்ஸேனர் மாட வீதிகளில் புறப்பாடு கண்டருளி, நகர சோதனை செய்கிறார்.
இதன் மூலம் இவர் எம்பெருமான் தளபதியாக கருதப்படுவது நமக்கு புலப்படுகின்றது.

முற்காலங்களில் திருநக்ஷத்திர தொடக்கம் இவர் அவதரித்த பூராட நக்ஷத்திரத்தில் தொடங்கி ,
குருபரம்பரையின் ஈடாக இருக்கும் ஸ்வாமி மணவாள மாமுனிகள் அவதார நக்ஷத்திரமான மூலத்துடன்
முடிவடைவதாக முன்னோர் கூறுவர்.
பிறகு தான் இது மாறி அஸ்வினி நக்ஷத்திரத்தில் தொடங்கி
ரேவதி நக்ஷத்திரத்தில் முடிவு பெருவதாகவும்
அதுதான் இப்பொழுதைய வழக்கமாகவும் தொடருகிறது.

—————-

நம்மாழ்வார் : –

நம்மாழ்வார் , ஆழ்வார்களின் தலைவராகப் போற்றப் படுகின்றார்.
திருநகரி நகரத்தில் உடைய நங்கைக்கும் காரிமாறனுக்கும் புத்திரனாக வைகாசி மாதம் விசாக நக்ஷத்திரத்தில் அவதரித்த இவர் ,
விக்ஷ்வக்ஸேனரின் மறு அவதாரம். இவரின் லக்னம் ஸ்ரீ ராமரின் ஜென்ம லக்னமான கடகம்.

நம்மாழ்வார் அவதரிப்பதற்கு முன்பு வரை திருநகரி என்று அழைக்கப்பட்ட இவ்வூர்,
ஆழ்வாரின் அவதாரத்திற்குப் பின் ஆழ்வார் திருநகரி என்று அழைக்கப்படுவது ஆழ்வாரின் மகிமையை பறைசாற்றுவதாக உள்ளது.
ஸ்வாமி நம்மாழ்வார் அவதரிப்பதற்கு முன்னமே திருநகரியில் புளிய மரமாக அனந்தாழ்வான் அவதரித்தார்.

நம்மாழ்வார் பிறந்த பொழுது அழவும் இன்றி, பால் பருகவும் இல்லாமல் அசைவற்று ஒரு பிண்டம் போல் இருந்தார்.
திருக்குருகூர் ஆதிப்பிரானிடம் இவர் பெற்றோர்கள் வேண்ட, ஸ்வாமி தானே மெள்ள தவழ்ந்து ஆதிப்பிரான் ஸன்னதியில் உள்ள ,
அனந்தாழ்வான் புளிய மரமாக அவதரித்த மரத்தின் அடியில் உள்ள ஒரு பொந்துக்குள், பத்மாஸனத்தில் அமர்ந்து கொண்டார்.
இவ்வாறாக சுமார் 16 ஆண்டுகள் இவ்விடத்திலே ஆழ்வார் வாசம் செய்தார்.

இவர் காலத்திலே வாழ்ந்த ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அவர்கள் வட தேஸத்திலே இருந்த பொழுது,
தெற்கிலிருந்து வானத்தில் ஒரு ஒளி வட்டம் தென்பட அதனைத் தொடர்ந்து அவர் தெற்கு நோக்கி வந்து,
திருநகரியிலே புளிய மரத்தடியில் இருக்கும் நம்மாழ்வாரைக் காண்கிறார். கண்கள் மூடிய நிலையில் இருந்த ஆழ்வாரைக் கண்டதும்,
அவர் பெரிய ஞானியாக இருப்பார் என்ற எண்ணத்துடன், ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து
நம்மாழ்வார் அருகில் “தொப்பென்று ” போடுகிறார்.
சப்தத்தை கேட்ட ஆழ்வார் சற்றே கண் திறந்து மதுரகவிகளைப் பார்க்கிறார்.
நம்மாழ்வாரின் கண்களிலே ஒரு தேஜஸுடன் ஒளி வீசுவதைக் கண்டு, மதுரகவிகள்,
ஆழ்வாரிடம் “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் , எத்தை தின்று எங்கே கிடக்கும்” என்று கேட்க,
ஸ்வாமி நம்மாழ்வாரும் முதன் முதலாக தன் திருவாயிலிருந்து அவர் கேட்ட கேள்விக்கு பதிலாக
” அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும் ” என்று அருளுகிறார்.
மதுரகவி ஆழ்வாரும், தான் முன்னமே நினைத்தபடி நம்மாழ்வார் பெரிய ஞானியாக இருப்பதை உணர்ந்து ,
அவரிடம் தன்னை அவர்தம் சிஷ்யராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்ட, ஆழ்வாரும் அதற்கு சம்மதிக்கிறார்.
அன்று முதல் மதுரகவி ஆழ்வார் தனக்கு நம்மாழ்வாரை தெய்வமாக வரிந்து அவரைத் தவிர ” தேவு மற்று அறியாதவராக ” இருந்தார்.

வட மொழியில் அமைந்த நான்கு வேதங்களையும் தமிழ் படுத்த வேண்டி, அவற்றைத் தான் சொல்லச் சொல்ல,
அதனை ஏடுபடுத்த மதுரகவி ஆழ்வாரை பணிக்கிறார். அதன்படி முதல் முதலாக நம்மாழ்வாரின் ஈரச் சொல்
வார்த்தையாக அருளப்பெற்ற முதல் பாசுரம் ” பொய் நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கும் ” என்று தொடங்கும்
திருவிருத்த பாசுரங்களாக நூறு பாசுரங்களை அருளிச் செய்தார்.
பின் ஆழ்வார் திருவாசிரியத்தின் ஏழு பாசுரங்களையும், என்பத்தேழு பாசுரங்களுடன் கூடிய பெரிய திருவந்தாதியையும்,
முற்றாக ஆயிரத்து நூற்று இரண்டு பாசுரங்களுடன் திருவாய் மொழியையும் அருளிச் செய்து
இவ்வுலகோர் உய்ய வழி அமைத்துக் கொடுத்தார்.

ஆழ்வாரின் கடைசி பாசுரமான ” அவா அறச் சூழ் * அரியை அயனை அரனை அலற்றி ” பாசுரத்தை முடிக்கும் பொழுது,
எம்பெருமான் அவருக்குக் காட்சி அருளி, தன்னுடன் வைகுண்டத்திற்குச் அழைத்துச் சென்றார்.

நம்மாழ்வார் தனது பாசுரங்களில் 36 திவ்ய தேஸ எம்பெருமான்களை மங்களா ஸாஸனம் செய்துள்ளார்.
இத் திவ்ய தேஸ எம்பெருமான்கள் அனைவரும் இவர் அமர்ந்திருந்த புளிய மரத்தடிக்கே வந்து
இவரிடம் தங்களைப் பற்றிய பாசுரங்களை பெற்றுச் சென்றனர்.

இப்படியாக உலகமும், உலகோர்களும் உய்ய வழிகாட்டிய ஆழ்வார்களின் தலைவரான இவருக்கு
ஒரு சிறிய வருத்தமும் உண்டு என்று பெரியோர் கூறுவர். அதாவது ஸ்வாமி நம்மாழ்வார் அவதரித்தது கலியுகம் பிறந்து
சரியாக 43 வது நாளன்று. இன்னும் சிறிது காலத்திற்கு முன்பே – 43 நாள்களுக்கு முன்பாவது – அவதரித்திருந்தால்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்து வாழ்ந்த யுகத்திலே தாமும் பிறந்திருக்கலாம் என்றும்,
ஆனால் அது முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் கண்ணன் பால் மிகுந்த ஈடுபாடு கொண்ட
அவருக்கு உண்டு என்று கூறுவர் பூருவாச்சாரியர்கள்.

நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம் இன்று உலகோர்களால் ஸேவிக்கப் படுவதற்குக் காரணமும் இவரே.
ஆம். நாதமுனிகள் இவரிடம்” திருவாய்மொழி ” ப்ரபந்த பாசுரங்களை அருள வேண்டும் போது,
ஆழ்வார் நாதமுனிகளிடம் மற்ற ஆழ்வார்களும் அருளிச்செய்த திவ்யப் ப்ரபந்த பாசுரங்களையும் கொடுத்து அருளினார்.

————

நாதமுனிகள் :-

ஆனி மாதம் அனுஷ நக்ஷத்திரத்தில் இன்று காட்டுமன்னார் கோயில் என்று அழைக்கப் படும்
அன்றைய வீர நாராயணபுரத்திலே அவதரித்தார். நாதமுனிகளும் இவர் திருத் தகப்பனார் ஈஸ்வர பட்டரும்
வீரநாராயணபுரத்திலே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மன்னாருக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்துகொண்டு வந்தனர்.
சில ஆண்டுகள் கழித்து இவர்கள் குடும்பத்தாருடன் திவ்ய ஸ்தல யாத்திரையாக வட நாடு சென்றனர்.
அவ்வமயம் அவர்கள் வாரணாசி, பூரி, அஹோபிலம், திருமலை, திருக்கோவலூர், திருவரங்கம் முதலிய
திவ்ய ஸ்தலங்களையும் ஸேவித்துவிட்டு, வீரநாராயணபுரம் திரும்பினர்.

ஒரு நாள் ஸ்ரீ மன்னார் ஸன்னதியில், திருநாராயணபுரத்திலே இருந்து வந்திருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள்
சிலர் கோஷ்டியாக ” ஆராவமுதே அடியேன் உடலம் நின் பால் அன்பாயே ” என்ற திருவாய்மொழி பாசுரங்களை
ஸேவித்துக் கொண்டிருப்பதை கண்டும் , கேட்டும் மகிழ்ந்தனர்.
பிறகு அக் கோஷ்டியார் அப் பாசுரங்களின் கடைசி பாசுரத்தை ஸேவிக்கும் பொழுது அதில் வரும்
” ஆயிரத்துள் இப்பத்தும் ” என்ற வரியைக் கேட்டு, மற்ற ஆயிரம் பாசுரங்களையும் ஸேவிக்கும்படி வேண்டினர்.
ஆனால் அக்கோஷ்டியார் தங்களுக்கு இந்தப் பதினோறு பாசுரங்கள் மட்டுமே தெரியும் என்று கூறி,
மேலும் தகவல்கள் வேண்டுமென்றால் ஸ்வாமி சடகோபன் அவதரித்த திருக்குறுகூரிலே சென்று அதுபற்றி விசாரிக்கக் கூறினர்.

நாதமுனிகளும் திருக்குறுகூர் சென்று அங்கு இருந்தவர்களை விசாரித்தபோது அவர்கள்,
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரின் சிஷ்ய வம்சத்திலே வந்த பராங்குசதாஸரை பார்க்கும்படி சொல்ல, நாதமுனிகளும் அவரைப் பார்த்தார்.
பராங்குசதாஸரிடம் , தான் மன்னார் ஸன்னதியில் கேட்ட பாசுரங்களைப் பற்றிக் கூறி,
ஆழ்வாரின் மேலும் ஆயிரம் பாசுரங்களைப் பற்றி வினவினார்.
பராங்குசதாஸரும், நாதமுனிகளுக்கு மதுரகவி ஆழ்வார் அருளிச்செய்த பாசுரங்களான ” கண்ணினுன் சிறுத்தாம்பு ”
பாசுரங்களைச் சொல்லி , ஸ்ரீ நம்மாழ்வார் வாசம் செய்த ஆதினாதன் ஸன்னதியிலே உள்ள
புளிய மரத்தடிக்கு சென்று அங்கே அவற்றை அனுஸந்திக்கச் சொன்னார்.

நாதமுனிகளும் நேராக புளியமரத்தடிக்கு வந்து, அங்கிருந்தபடியே ” கண்ணினுன் சிறுத்தாம்பு ” பதிகத்தின்
பதினோறு பாசுரங்களையும் மிகுந்த பக்தியுடன் பன்னிரண்டாயிரம் முறை ஸேவிக்க,
அப்பொழுது அவருக்கு ஸ்ரீ நம்மாழ்வாராகிய ஸ்ரீ சடகோபன் காட்சியளித்து, அவர் எதற்காக வந்திருக்கிறார் என்று கேட்க
நாதமுனிகளும் தான் வந்திருக்கும் காரணத்தைக் கூறி, ஆழ்வார் அருளிச் செய்துள்ள ஆயிரம் பாசுரங்களையும் கொடுத்தருள வேண்டினார்.
அப்பொழுது ஸ்ரீ நம்மாழ்வார் , தான் அருளிச்செய்த ப்ரபந்தங்களோடு, மற்றைய ஆழ்வார்கள் அனைவரும் அருளிச்செய்த
அனைத்துப் ப்ரபந்தங்களையும் பரிபூரணமாக அவரிடம் சொல்லி அருளினார்.

பின்னர் வீரநாராயணபுரம் திரும்பி, தான் அறிந்து கொண்ட ப்ரபந்தங்களை தம் மருமக்களான
கீழையகத்தாழ்வானையும், மேலயகத்தாழ்வானையும், திருக்கண்ணமங்கையாண்டானையும் அழைத்து அவர்களிடம்
இயல், இசையுடன் பாடி அருள அவர்களுடன் ஆழ்வார்களின் அனைத்து அருளிச் செயல்களும் பிரசித்தமாயின.
இன்றும் அரையர் ஸேவைகள் அபிநயத்துடன் திருவரங்கம் உட்பட சில திவ்யதேஸங்களில் ஸேவிக்கப்படுகின்றன.

ஒருநாள் அப்பிரதேஸத்து அரசன் வேட்டையாடிவிட்டு திரும்பும் பொழுது, நாதமுனிகளை ஸேவித்து ஆசி பெற்றுக் கொண்டு போனான்.
அங்கே சிறிது நேரத்தில் நாதமுனிகளின் திருமாளிகையிலிருந்து ஒரு பெண் வந்து, அவரிடம் தெண்டனிட்டு,
அவர் அகத்திற்கு சற்று நேரத்திற்கு முன்பு இரண்டு வில்லாளர்களும், ஒரு அழகிய ஸ்த்ரியும், ஒரு குரங்கும் வந்திருந்தனர் என்றும்,
அவர்கள் நாதமுனிகள் அகத்தில் எழுந்தருளியுள்ளாரா என்று வினவியதாகவும், பிறகு அவர் அங்கு இல்லை என்றவுடன் சென்றுவிட்டதாகவும்,
அவர்களை தேவரீர் வழியில் கண்டீர்களா என்று கேட்க, நாதமுனிகள் ஆச்சரியப்பட்டு அவ்வாறு வந்தவர்கள்
பெருமாளும் , பிராட்டியும், இளைய பெருமாளும் மற்றும் ஆஞ்சனேயரும்தான் என்று அறிந்து கொண்டு,
அவர்கள் சென்ற திசையிலேயே தாமும் சென்றார். வழியில் எதிரில் வந்தோரிடம் எல்லாம் அவர்களைப் பற்றி விசாரிக்க,
எல்லோரும் தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறினர். இதனால் மனம் மிகவும் ஏங்கி வழியிலேயே விழுந்து மோகித்தார்.

—————–

உய்யக்கொண்டார் : –

புண்டரிகாக்ஷன் என்ற பெயர் கொண்ட உய்யக்கொண்டார், சித்திரை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தில்
திருவெள்ளரையிலே அவதரித்தவர். ஆண்டாள் என்ற நங்கையை மணந்து கொண்ட இவருக்கு
இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். நாதமுனிகளின் முக்கிய பத்து சிஷ்யர்களில் ப்ரதானமான இவர்,
திவ்யப் ப்ரபந்தம் முதலியவைகளை அவரிடம் கற்றார்.

ஒரு சமயம் நாதமுனிகள் இவரிடம் யோக ஸாஸ்த்திரத்தைக் கற்றுக் கொள்ளும்படி தெரிவித்தபொழுது,
ஆச்சாரியனின் க்ருபை உணர்ந்து ” பிணம் கிடக்க மணம் புணரலாமோ ” என்று வினவினார்.
அதாவது இப் பூவுலகிலே சம்ஸாரிகள் இறையுண்மை அறியாமல் உழன்று நடை பிணமாக தவிக்கும் போது,
தன்னுடைய நன்மைக்காக தான் மட்டும் எப்படி ” யோக ஸாஸ்திரம் ” கற்றுக் கொள்வது என்றும், அது தர்மமும் ஆகாது என்றும் கூறினார்.
உய்யக்கொண்டாரின் இந்த பதிலைக் கேட்ட நாதமுனிகள் மிகுந்த உவகை கொண்டு, உலகம் உய்யவும்,
லோக க்ஷேமத்திற்காகவும் வைணவ ஸாஸ்திரங்களை எங்கும் பரப்பவும் என்று கூறினார்.

சில காலம் கழித்து உய்யக்கொண்டாரின் திருமேனி தளர்வடைந்து, பின் திருநாட்டுக்கு எழுந்தருளும் நேரம் வந்தது.
அவர் தம் ஸிஷ்யரான மணக்கால் நம்பியையும் மற்ற ஸிஷ்யர்களையும் அழைத்து, மணக்கால் நம்பியே
நம் வைணவ தர்மத்தை உலகம் எங்கும் பரப்ப வழி செய்வார் என்று கூறி, நாதமுனிகள் முன்னம் தம்மிடம் அளித்திருந்த
பவிஷ்யதாசார்யர் விக்ரஹத்தை, அவரிடம் அளித்து ஒரு விவரத்தைக் கூறினார்.
பிற்காலத்தில் நாதமுனிகளின் புதல்வராகிய ஈஸ்வரமுனிக்கு ஒரு புதல்வன் பிறப்பார் என்றும்,
அவருக்கு ” யமுனைத்துறைவன் ” என்று பெயரிட்டு, அவர் மூலம் ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும்,
தர்ஸன ஸாஸ்திரங்களையும் வளர்க்கவும் என்று கூறிவிட்டு, நாதமுனிகளின் திருவடிகளைத் த்யானித்துக் கொண்டே
திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

————

மணக்கால் நம்பி : –

மணக்கால் நம்பி மாசி மாதம், மக நக்ஷத்திரத்தில் , ஸ்ரீரங்கத்துகு அருகிலே அமைந்துள்ள மணக்கால் என்னும்
சிறிய கிராமத்திலே அவதரித்தவர். இவருடைய இயற் பெயர் ராம மிஸ்ரர்.

உய்யக் கொண்டாரின் முதன்மை சிஷ்யரான இவர், அவருக்குப் பின் ஆச்சார்ய ஸ்தானத்தை ஏற்று,
வைஷ்ணவதர்மத்தை பிரச்சாரம் பண்ணினார். இளமைக் காலத்திலேயே தர்ம பத்தினியை இழந்த இவர்,
தன் ஆச்சாரியரான உய்யக் கொண்டாரின் திருமாளிகையிலேயே இருந்து , திருமாளிகை கைங்கர்யங்களை செய்து கொண்டிருந்தார்.
ஒரு நாள் உய்யக் கொண்டாரின் இரு மகள்களும், நதியில் நீராடிவிட்டு திரும்புகையில், வழியில்
ஒரு குறுகலான வாய்க்காலில் சேறு படிந்துள்ளதைக் கண்ட அப் பெண்கள், வாய்க்காலைக் கடக்காமல் தயங்கி நின்றனர்.
அப்பொழுது மணக்கால் நம்பி சற்றென்று அவ் வாய்க்காலில் உள்ள சேற்றின் மீது குறுக்கே படுத்துக் கொண்டு,
தம் மீது அவர்களை நடந்து போக வேண்டினார். பின்னர் இதனை அறிந்த உய்யக் கொண்டார்
அவ்வாறு செய்யலாமா என்று கேட்க, ஆச்சாரியன் பணிவிடையே தனக்கு பாக்கியமும், போக்கியமும் என்று பதிலளித்து,
தன் ஆச்சாரிய அபிமானத்தை வெளிப்படுத்தினார்.

காலம் செல்லச் செல்ல இவரின் திருமேனியும் தளர்வடைந்து போக, நாதமுனிகள் இவருடைய ஸ்வப்னத்தில் தோன்றி,
தான் மணக்கால் நம்பியிடம் அளித்து, பின் இவரிடம் அளிக்கப் பெற்ற
” பவிஷ்யாதாசார்யரின் ” விக்ரஹத்தை ஆளவந்தாரிடம் ஒப்படைக்கச் சொன்னார்.
மேலும் அவரை ஸ்ரீ ராமாநுஜரின் அவதாரத்தை எதிர் நோக்கி, அவரை நேரில் கண்டு,
ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தை அவர் மூலம் வளர்க்க ஏற்பாடு செய்யும்படியும் உரைத்தார்.

பின்னர் மணக்கால் நம்பி, ஆளவந்தாரிடம் தான் ஸ்வப்னத்தில் கேட்ட விஷயத்தை சொல்லி,
கோயிலை நன்றாக பேணிக் காத்து, தீர்க்காயுசுடன் இருப்பாய் என்று ஆசிர்வதித்து,
தம் ஆச்சார்யர் உய்யக் கொண்டார் அவர்களின் திருவடிகளை த்யானித்து பரமபதம் அடைந்தார்.

—————

ஸ்ரீ ஆளவந்தார் : –

நாதமுனிகளின் குமாரர் ஈசுவரமுனிகளின் திருப்புதல்வனாக ஆடி மாதம், உத்தராட நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.
இச் சுபசெய்தியை மணக்கால் நம்பிக்கு தெரிவிக்க அவரும்,
வீரநாராயணபுரம் வந்து மிக்க மகிழ்ச்சியுடன் அக் குழந்தைக்கு ” யமுனைத்துறைவன் ” என்று பெயர் சூட்டினார்.

யமுனைத்துறைவன் அவருடைய ஆறாம் வயதில் குருகுல வாஸம் செய்து எல்லா ஸாஸ்திரங்களையும் கற்று
மிகச் சிறந்த வல்லுனராக விளங்கலானார். இச் சமயத்தில் அரச சபையில் ” ஆக்கியாழ்வான் ” என்ற
எல்லா ஸாஸ்திரங்களையும் நன்கு கற்ற ஒரு வித்வான் மிகுந்த கர்வத்துடனும், இறுமாப்புடனும் விளங்கினான்.
தன்னை வெல்ல ஒருவரும் இல்லை என்ற கர்வத்தில் இருந்த ஆக்கியாழ்வான், அரசனிடம் சொல்லி தன்னுடன்
வாதப் போர் செய்ய யாராவது வருகிறீர்களா என்று முறசறையச் சொன்னான். அரசரும் அவ்வாறே ஒப்புக்கொள்ள,
இதனைக் கேள்விப்பட்ட யுமுனைத்துறைவன் தான் அவனிடம் வாதம் செய்து அவனுடைய கர்வத்தை அடக்கத் தயார் என்று கூறினான்.
ஆச்சரியப்பட்ட அரசன் அவ்வாறு ஆக்கியாழ்வானை வாதப் போரில் வென்றால்
தன் நாட்டின் சரிபாதியை யமுனைதுறைவனுக்கு தருவதாக வாக்களித்தார்.

யமுனைத்துறைவனுக்கும், ஆக்கியாழ்வானுக்கும் தொடர்ந்து நடந்த வாதப் போரில் யமுனைத்துறைவன் வெற்றி பெற,
ஆக்கியாழ்வானும் தன் தோல்வியை ஒப்புக் கொண்டான். இதனால் மிகுந்த மகிழ்ச்சியுற்ற அரசனும்,
தான் வாக்களித்தபடியே தனது ராஜ்ஜியத்தின் பாதியை பகிர்ந்து யமுனைத்துறைவனுக்கு கொடுத்தார்.
ராஜ்ஜியத்தை ஆளவந்தவராகையால் , யமுனைத்துறைவன் அன்று முதல் ” ஆளவந்தார் ” என்று அழைக்கப்படலானார்.

ராஜ்ஜியத்தை ஆளவந்த ஆளவந்தாரும், ராஜ்ஜிய பரிபாலனத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்க ,
வைஷ்ணவ ஸாஸ்திரங்களையும், அருளிச் செயல் அருமைகளையும் அவர் வளர்க்க வேண்டி இருப்பதை மறந்த நிலையில்
அதனை அவருக்கு உணர்த்த விரும்பினார் மணக்கால் நம்பி. ஆளவந்தாருக்கு தூதுவளை கீரை மிகவும் விருப்பமான ஒன்று.
எனவே ஆளவந்தாரின் உணவுக்காக தினசரி தூதுவளை கீரையை , மணக்கால் நம்பி அனுப்பி வரலானார்.
திடீரென்று சில காலத்திற்கு பிறகு அக் கீரையை அனுப்புவதை நிறுத்திவிட்டார்.
தான் அருந்தும் உணவில் தூதுவளை கீரை இல்லாததைக் கண்ட ஆளவந்தார், பரிசாகரிடம் அதுபற்றி வினவ,
அவரும் ஒரு வயோதிக வைஷ்ணவர் தான் தினமும் தூதுவளை கீரையை சமைக்க கொண்டுவருவார் என்றும்,
ஆனல் சில நாட்களாக அவர் வரவில்லை என்று கூறி, அதனால் தான் சமையலில் அக்கீரையை சேர்க்கவில்லை என்றும் கூறினார்.
தூதுவளை கீரை இல்லாத உணவினை உண்ண ஆளவந்தாருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
அதனால் பரிசாரகரை அழைத்து, அந்த வயோதிக வைஷ்ணவர் மீண்டும் வந்தால் தன்னிடம் அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.
சில நாட்களில் மீண்டும் தூதுவளை கீரையுடன் வந்த மணக்கால் நம்பி அவர்களை , ஆளவந்தாரிடம் அந்தப் பரிசாரகன் அழைத்துச் சென்றான்.

மணக்கால் நம்பியை கண்ட ஆளவந்தார் , அவரிடம் அவரின் திருநாமம் மற்றும் அவர் எங்கிருந்து வருவதாகக் கேட்க,
அவரும் தான் மணக்கால் என்ற ஊரில் பிறந்தவராகையால் தனக்கு மணக்கால் நம்பி என்ற பெயரும்,
தான் ஆளவந்தாரின் பாட்டனாரான நாதமுனிகள் சம்பாதித்த செல்வங்களை அவரிடம் ஒப்படைக்க வந்திருப்பதாகவும் கூறினார்.
ஆளவந்தாரும் அச் செல்வம் எப்பேற்பட்டது என்று வினவ , மணக்கால் நம்பியும் அச் செல்வமானது காலத்தால் அழியாதது ,
இரு நதிகளுக்கு இடையேயும் , ஏழு ப்ராகாரங்களுக்கு நடுவிலும், ஒரு பாம்பினால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று பதிலுரைத்தார்.
ஆளவந்தாரும் அச் செல்வத்தைப் பெற தனது படை பரிவாரங்களுடன் புறப்படத் தயாரானார்.
ஆனால் மணக்கால் நம்பி, அவரிடம், அவர் மட்டுமே தனியாக வர வேண்டும் என்று தெரிவிக்க,
ஆளவந்தாரும் அதற்கு உடன்பட்டு அவருடன் புறப்பட்டு திருவரங்கம் வந்தடைந்தார்.

திருவரங்கம் பெரிய கோவிலுனுள்ளே சென்ற ஆளவந்தார் அங்கு பாம்பணையிலே ஸயனித்திருக்கும் பெரிய பெருமாளைக் கண்டு,
மிக்க ஆனந்தித்து , அங்கேயே மணக்கால் நம்பியின் திருவடிகளிலே விழுந்து வணங்கி அவருடைய சிஷ்யரும் ஆனார்.
அதன் பின் மணக்கால் நம்பியின் உபதேசத்தின்படி, ஆளவந்தார் அரங்கனின் அந்தரங்கராகி,
திவ்யப் பிரபந்த ஸேவைகளையும், காலக்ஷேபங்களையும் செவ்வனே நடத்திக் கொண்டு,
நாதமுனிகள், மணக்கால் நம்பியின் மூலம் அளித்த ” பவிஷ்யதாச்சாரியர் ” விக்ரஹத்தையும் ஆராதித்து வரலானார்.

ஒரு சமயம் காஞ்சிபுரம் வந்த ஆளவந்தார், திருக்கச்சி நம்பிகளை நலம் விசாரித்து விட்டு , பேரருளாளனை ஸேவிக்க,
தேவப் பெருமாள் திருக் கோயிலுக்கு எழுந்தருளினார். அவ்வமயம் அங்கே யாதவப் பிரகாசர் தம்முடைய ஸிஷ்யர்களுடன் வந்திருந்தார்.
பெருமாளை ஸேவித்துவிட்டு, ப்ராகாரத்திலே வரும்பொழுது, அக் கோஷ்டியினரைக் கண்ட ஆளவந்தார்,
அக் கோஷ்டியிலே வருபவர்களில் இளையாழ்வார் யார் என்று திருக்கச்சி நம்பிகளிடம் கேட்க,
அவரும் சிவந்த முகத்துடனும், நெடியவராய், முழங்கால் அளவு நீண்ட கைகளை உடையவருமாக இருப்பவரே அவர் என்று கூற ,
அவரைப் பார்த்த மாத்திரத்திலே சந்தோஷத்துடன் தன் மனத்திற்குள்ளே ” ஆ முதல்வன் இவன் ” என்று கூறிக் கொண்டார்.
மனதிற்குள்ளேயே அவரை ஆசிர்வதித்தார்.

ஆளவந்தாருக்கு ஒரு சமயம் உடலிலே ” பிளவை ” நோய் ஏற்பட்டது.
அதன் காரணமாக அவரால் அரங்கனுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்ய முடியாமலும்,
தினமும் காலக்ஷேபங்கள் நடத்த முடியாமலும் மிகவும் கஷ்டப்பட்டார். பெருமாள் கைங்கர்யம் பண்ண முடியவில்லையே என்று கலங்க,
அப்பொழுது அசரீரியாக ஒரு குரல் ” உமது கோஷ்டியிலே யாரேனும் இந்த நோயை வாங்கிக் கொள்வார்களா என்று பாருமே” என்று சொன்னது.
ஆளவந்தாரும் மறுநாள் தனது காலக்ஷேப கோஷ்டியினரிடம் , யாரேனும் சில காலத்திற்கு
தன் பிளவை நோயை வாங்கிக் கொள்ள முடியுமா என்று கேட்டார். ஆளவந்தாரின் காலக்ஷேப கோஷ்டியிலே
பல இனத்தவரும் இருந்தனர். அவ்வாறு இருந்தவர்களில் அக்காலங்களிலே தீண்டத்தகாத இனத்தவராகக் கருதப்பட்ட
இனத்தைச் சேர்ந்த ” மாறனேர் நம்பி ” என்பவரும் இருந்தார். மற்றையவர்கள் எல்லாம் ஆளவந்தார் கேட்டதற்கு
பதில் அளிக்க முடியாமல் திகைத்து தயங்கி நிற்க, அச் சமயம் மாறனேர் நம்பி சற்றும் தயங்காமல்
ஆளவந்தாரின் பிளவை நோயை, தான் பகவத் ப்ரஸாதமாக ஏற்றுக் கொள்வதாகக் கூறி,
உவந்து அந் நோயை அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். பிறகு ஆளவந்தாரிடம், அவரின் நோயை பெற்றுக் கொள்வதால் ,
அவரின் உடல் உபாதைகள் நீங்கி, பகவத் கைங்கர்யங்களை செவ்வனே மேற்கொள்ள முடியுமென்பதால்,
அது தனக்கு பாக்கியமே என்றும் கூறினார்.
இப்படியாக தனக்கு ஒரு பாகவதன் இருக்கிறான் என்று கண்டு, உள்ளம் பூரிப்படைந்தார்.
மாறனேர் நம்பியின் ஆச்சார்ய பக்தியைக் கண்டு வியந்து கொண்டிருந்த தன் ஸிஷ்யரான பெரிய நம்பியிடம்,
ஆளவந்தார், தம்மைப் போலவே மாறனேர் நம்பியையும் நினைத்துக் கொண்டு,
அவருக்கு சகல சிறப்புகளையும் செய்யும் என்று கட்டளையிட்டார்.

பிளவை நோய் நீங்கிய ஆளவந்தார் முன்பு போலவே பகவானுக்கு கைங்கர்யங்கள் செய்து கொண்டும்,
காலக்ஷேபங்கள் நடத்திக் கொண்டுமிருந்தார். பின் சிறிது காலத்தில் அவரின் உடல் தளர்வுற்ற நிலையில்,
தான் தினமும் ஆராதித்து வந்த “பவிஷ்யாதாச்சார்யர் ” விக்ரஹத்தை திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் கொடுத்து,
இந்த மூர்த்திதான் அந்த இளையாழ்வார் என்று அருளினார். இதன் பின் பத்மாஸனம் இட்டுக் கொண்டு,
தம்முடைய ஆச்சார்யரான மணக்கால் நம்பியின் திருவடி அருகிலே அமர்ந்து கொண்டு,
கபாலம் விரிந்து வழிவிட , திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

——————–

பெரிய நம்பி :-

பெரிய நம்பி, மார்கழி மாதம் கேட்டை நக்ஷத்திரத்தில் , திருவரங்கத்திலே அவதரித்தவர் ஆவார்.
இவரது குமாரர் திருநாமம் புண்டரிகாக்ஷர், புதல்வி அத்துழாய். ஆளவந்தாரின் அடியார்களில்
பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருவரங்கப் பெருமாள் அரயர்,
திருமாலையாண்டான், திருக்கச்சி நம்பி ஆகிய ஆறு பேருமே மிகச் சிறந்தவர்கள்.
ஸ்வாமி எம்பெருமானாரின் உயர்வுக்கு முக்கிய காரணகர்த்தர்கள். இவர்களில் முதலாவதாக இருப்பவர் பெரிய நம்பி.

ஸ்வாமி இராமாநுஜருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்தவர் பெரிய நம்பிகள். ஆளவந்தாரின் அரிய பெருமைகளை
இராமாநுஜருக்கு சொல்லியவர். ஆளவந்தார் உடல் நலம் குன்றியிருந்தபொழுது, அவரை தரிசிக்க இராமாநுஜரைக்
காஞ்சியிலிருந்து அழைத்து வந்து கொண்டிருக்கும் போதே ஆளவந்தார் பரமபதித்து விட்டார்.
இது தெரிந்தவுடன் பெரிய நம்பிகள் மிகுந்த துயரமும், ஏமாற்றமும் அடைந்தார்.

ஒரு நாள் அத்துழாய் , அதிகாலையில் தீர்த்தமாட நதிக்குச் செல்லும் போது, துணைக்கு தன்னுடன் வரும்படி தன் மாமியாரை அழைத்தார்.
ஆனால் அவரோ ” உன் சீதன வெள்ளாட்டியை துணைக்கு அழைத்துக் கொண்டு போ ” என்று சொல்ல,
அத்துழாய் பெரிய நம்பியிடம் சென்று மாமியார் சொன்னதை வருத்தத்துடன் கூற,
அவர் இதனை உடையவரிடம் கேட்குமாறு சொல்லியனுப்பினார். அத்துழாயும் உடையவரை சந்தித்து
தன் தந்தையிடம் சொன்னதையும் அதனை அவர் உடையவரிடம் சொல்லும்படி கூறியதையும் சொல்ல,
உடையவரும் , முதலியாண்டானை அழைத்து, அத்துழாய்க்கு துணையாக ” சீதன வெள்ளாட்டியாகச் ” செல்லுமாறு பணித்தார்.

பெரிய நம்பியின் காலத்திலே சோழ தேஸத்தை ஆண்டு கொண்டிருந்தவன், அதி தீவிர சைவனான கிருமி கண்ட சோழன்.
இவன் நாலூரான் என்பவனின் தூண்டுதலால், சைவ சமயத்தை சாராத பலரிடமும்,
சிவனுக்கு மேம்பட்ட தெய்வம் எதுவும் இல்லை என்று மிரட்டி, கையொப்பம் பெற்று வருமாறு தனது வீரர்களுக்கு உத்தரவிட்டிருந்தான்.
அவ்வாறு கையொப்பம் பெற இராமாநுஜரையும் பணிக்க விரும்பினான்.இதனை அறிந்து கொண்ட கூரத்தாழ்வான்,
இராமானுஜருக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்துடன், தான் இராமாநுஜரைப் போல
காவி வஸ்திரம் அணிந்து கொண்டு, தன்னுடன் பெரிய நம்பியையும் அழைத்துக் கொண்டு, அரண்மனைக்குச் சென்றார்.
அரசனின் ஆணைக்கு இணங்கி, கையொப்பமிட மறுத்த கூரத்தாழ்வான், பெரிய நம்பி இருவரின் கண்களையும் பிடுங்க ஆணையிட,
ஆனால் கூரத்தாழ்வான் தம் கண்களை தாமே பிடுங்கிக் கொள்ள,
பெரிய நம்பியின் கண்கள் மட்டும் பிடுங்கப் பட்டன. வயது முதிர்ச்சியின் காரணமாக வேதனை தாளமாட்டாமல்
பெரிய நம்பிகள் கீழே சாய்ந்து அவ்விடத்திலிருந்தே திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

—————–

ஸ்வாமி இராமாநுஜர் :-

ஸ்ரீ பெரும்பூதூரைச் சேர்ந்த கேசவசோமாயாஜி என்பவருக்கும், பெரிய திருமலை நம்பியின் மூத்த சகோதரியுமான காந்திமதிக்கும் புத்திரனாக ,
சித்திரை மாதம், திருவாதிரை நக்ஷத்திரத்திலே அவதரித்தார். இளம் வயதிலேயே குருவிடம், குரு உபதேஸங்களையும்,
வேத சாஸ்திரங்களையும் ஐயம் திரிபுற கற்று, எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அவரின் 16 வது வயதிலே தஞ்சமாம்பாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

காஞ்சி ஸ்ரீ.தேவராஜ ஸ்வாமிக்கு நித்ய ஆலவட்ட கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருந்த திருக்கச்சி நம்பிகள்,
தினமும் பூவிருந்தவல்லியிலிருந்து, காஞ்சிபுரத்திற்கு, ஸ்ரீபெரும்பூதூர் வழியாகச் சென்று வந்து கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட இராமாநுஜருக்கு, திருக்கச்சிநம்பிகள் மீது மிகுந்த பற்றும்,
பக்தியும் ஏற்பட்டது. ஒரு நாள் திருக்கச்சி நம்பிகளை அடி பணிந்து, தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்று,
அவரை நன்கு உபசரித்து அனுப்பினார். இவ்வாறாக தினமும் அவர்கள் நட்பு வளர்ந்து கொண்டு வந்தது.
இராமாநுஜரின் முகப் பொலிவு, அறிவு, ஆழ்ந்த ஞானம், அதீத பண்பு முதலியன திருக்கச்சி நம்பிகளை மிகவும் கவர்ந்து,
அவரிடம் இவருக்கு ஒரு தெய்வீகப் பற்று ஏற்பட்டது. மிகப் பல ஆன்மீக விஷயங்களை இருவரும் அளவளாவி வந்தனர்.

யாதவப் பிரகாசர் என்னும் வித்வானிடம், இராமாநுஜரும், அவர் சிற்றன்னையின் மகனுமான கோவிந்தனும்
அத்வைத வேதாந்த பாடங்களை கற்று வந்தனர். மிகவும் சிரத்தையுடன் பாடங்களைக் கற்று வந்த இராமாநுஜர் ,
தனக்குத் தோன்றும் பல விஷயங்கள் பற்றி யாதவப் பிரகாசரிடம் எதிர் கேள்விகள் கேட்க,
இதனைக் கண்டு மகிழ்ச்சியடைய வேண்டிய யாதவப் பிரகாசர், அதற்குப் பதிலாக அவரிடம் பகைமை எண்ணம் கொள்ளலானார்.
அதன் காரணமாக இராமாநுஜரை வஞ்சனையால் மாய்த்துவிட முடிவு செய்தார்.
இதனை முன்னிட்டு தன்னுடைய சீடர்கள் பலருடன் இராமாநுஜரையும் அழைத்துக் கொண்டு, காசி யாத்திரை புறப்பட்டார்.
அங்கு இராமாநுஜர் தனிமையில் இருக்கும் பொழுது அவரைக் கொல்ல சதி செய்தார். இதனை அறிந்து கொண்ட கோவிந்தர்,
இராமாநுஜரிடம் விவரமாக எடுத்துக் கூறி, அங்கிருந்து அவரைத் தப்பி ஓடும்படி வேண்டிக் கொண்டார்.
அங்கிருந்து தப்பி வெளியேறிய இராமாநுஜர், காஞ்சி பேரருளாளன் க்ருபையால், வழி காட்டப்பட்டு காஞ்சி நகரை வந்தடைந்தார்.
காஞ்சிபுரத்திலே இருந்து கொண்டு, அங்குள்ள சாலைக் கிணற்றில் தீர்த்தம் எடுத்து,
தேவப் பெருமாளுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டு வந்தார்.

பின் இவரை ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஆளவந்தாரிடம் அழைத்துச் செல்வதற்காக காஞ்சி வந்திருந்த பெரிய நம்பியுடன்,
இவரும் ஸ்ரீரங்கம் நோக்கிப் புறப்பட்டார். ஸ்ரீரங்கத்தை நெருங்கும் தருவாயில், ஆளவந்தார் பரமபதித்து விட்ட செய்தியினைக் கேள்விப் பட்டு,
ஆளவந்தாருடன் தனக்கு அளவளாவ கொடுத்து வைக்கவில்லையே என்று மிக்க துயரமுற்று கதறினார்.
ஓரளவிற்கு மனதை தேற்றிக் கொண்டு, அவரின் திருமேனியையாவது தரிசிக்கலாம் என்ற எண்ணத்துடன்
அவரின் பூத உடல் இருந்த இடம் வந்தடைந்தார். ஆளவந்தாரின் திருமேனியை காணும் போது,
அவரின் ஒரு கையில் மூன்று விரல்கள் மடக்கப்பட்டு இருந்த நிலையைக் கண்டு, அவரின் திருவுள்ளப் படி நிறைவேறாத
அவர் தம் மூன்று விருப்பங்களினால் தான் அவரின் மூன்று விரல்களும் மடங்கிய நிலையில் இருப்பதை உணர்ந்து கொண்டு,
அதனைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் வினவ அவர்களும் ஆளவந்தாரின் மூன்று விருப்பங்களையும் கூறினர். அவை :-

ஸம்பிரதாயத்திற்கு, வியாஸரும் , பராசர பட்டரும் ஆற்றியுள்ள கைங்கர்யத்திற்கு, உபகாரமாக அவர்களின் பெயர்களை
வருங்காலத்தில் பிறக்கப் போகும் பிள்ளைகளுக்கு சூட்ட வேண்டும்.

ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செயலான திருவாய் மொழிக்கு நல்ல உரை எழுதப்பட வேண்டும்.

வியாசரின் ப்ரம்மஸூத்ரத்திற்கு ஒரு பாஷ்யம் இயற்றப் பட வேண்டும்.

ஆளவந்தாரின் மேற்படியான விருப்பங்களை தான் நிறைவேற்றி வைப்பதாக இராமாநுஜர் சபதமெடுக்க,
உடனேயே ஆளவந்தாரின் மடங்கிய மூன்று விரல்களும் விரிந்தன.

இராமாநுஜருக்கு ஆறு ஆச்சாரியர்கள். அவர்களில் பெரிய நம்பிகளிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டார்.
பெரிய திருமலை நம்பியிடம் ( அவரின் மாமாவும் ஆவார் ) இராமாயணம், திருக்கோஷ்டியுர் நம்பியிடம் திருமந்த்ரார்த்தம்,
திருமாலையாண்டானிடம் திருவாய் மொழி, திருவரங்கப் பெருமாள் அரையரிடம் ( இவர் ஆளவந்தாரின் பேரன் )
அருளிச் செயலின் மற்ற மூன்று ஆயிரங்கள், இயல், கலை,
திருக்கச்சி நம்பிகளிடம் தேவப் பெருமாளின் ஆறு வார்த்தை அர்த்தம் ஆகியவைகளை கற்றுக் கொண்டார்.

திருக்கச்சி நம்பிகளிடம் மிகுந்த ஈடுபாடும் அன்பும் கொண்ட இராமாநுஜர் ஒரு நாள்,
அவரை தன் அகத்திற்கு விருந்துண்ண அழைத்திருந்தார். அவர் புசித்த பின் பாகவத சேஷம் உண்ண வேண்டும் என்பது இவர் விருப்பம்.
திருக்கச்சி நம்பிகள் இல்லத்திற்கு வந்த சமயம் , இராமாநுஜர் வெளியில் சென்று இருந்தார்.
ஆனால் வேறு பகவத் விஷயம் காரணமாக, அவசரமாக செல்ல வேண்டியிருந்ததால்,
இராமநுஜர் வரும் வரை காத்திருக்காமல் தனக்கு, அமுது சாதிக்க தஞ்சமாம்பாளை வேண்ட,
அவரும், நம்பியை அமரச் செய்து அங்கு அவருக்கு உணவிட்டு, அவர் சென்ற பின் ,
மீதமிருந்த அன்னங்களை வெளியில் எறிந்துவிட்டு, இல்லம் முழுவதும் சுத்தி செய்து, கழுவி,
இராமாநுஜருக்காக மீண்டும் சமைத்துக் கொண்டிருந்தார்.

இல்லம் திரும்பிய இராமாநுஜர் நடந்தவைகளை கேள்விப்பட்டு, தம் மனையாள் நடந்து கொண்ட விதம் பற்றியும்,
தமக்கு பாகவத சேஷம் கிடைக்கவில்லையே என்றும் மிகுந்த வருத்தமுற்றார். பின் திருக்கச்சி நம்பிகளை சந்தித்து
அவர் பாதம் பணிந்து மன்னிக்க வேண்டினார். இது போலவே பிறிதொரு சமயம்,
பெரிய நம்பிகளின் மனிவியுடன் கிணற்றில் நீர் எடுக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டு, தம் குலத்தை விட
பெரிய நம்பியின் மனைவியின் குலம் தாழ்ந்தது என்று தஞ்சமாம்பாள் கூறினார்.
இதனால் மன உளைச்சலடைந்த பெரிய நம்பியின் மனைவி நடந்த சம்பவங்களை அவரிடம் தனிமையில் கூற,
பெரிய நம்பியும் இதனைக் கேள்விப்பட்டால் இராமாநுஜரின் மனம் மிகுந்த வருத்தமடையும் என்று எண்ணி
அவரிடம் சொல்லிக் கொள்ளாமல், மனைவியுடன் ஸ்ரீரங்கம் திரும்பி விட்டார். இவர்களை காணாது தவித்த
இராமநுஜர் பின் தம் மனைவியின் மூலம் நடந்தவைகளைக் கேள்வியுற்று, ஆச்சார்யருக்கு நேர்ந்த அபசாரத்தினால்
மிகுந்த மன வேதனை அடைந்து இல்லறத்தைத் துறந்து துறவறம் மேற்கொள்ள முடிவெடுத்தார்.

தாம் துறவறம் மேற்கொள்ளப் போவதை திருக்கச்சி நம்பிகளிடம் சொல்லி, காஞ்சி தேவப் பெருமாள் கோயில்
திருக்குளத்திலே தீர்த்தமாடி, தேவப் பெருமாள் துணையுடன், ஆளவந்தாரை ஆச்சார்யராக மனதில் நினைத்துக் கொண்டு,
காஷாயம் தரித்தும், திரிதண்டத்தை கையில் பிடித்துக் கொண்டும் ஸன்யாஸத்தை ஏற்றுக் கொண்டார்.
அவருடன் எப்பொழுதும் அவரது சீடர்களாக அவரின் சகோதரி கமலாம்பாளின் புதல்வரான முதலியாண்டானும், கூரத்தாழ்வானும் இருந்தனர்.
இராமாநுஜரின் திரிதண்டமாக முதலியாண்டானையும், பவித்திரமாக கூரத்தாழ்வனையும் முன்னோர்கள் கூறுவர்.

ஆளவந்தாரின் மறைவிற்குப் பிறகு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் மூலத் தூணாகிய திருவரங்கத்தில் ,
சம்பிரதாயத்தை நிர்வகிக்கக் கூடியவர் இல்லாத காரணத்தினால், பெரிய நம்பிகளும், திருவரங்கப் பெருமாள் அரையர்
முதலானோர் இராமாநுஜரை திருவரங்கம் அழைத்து வர பெரு முயற்சிசெய்தனர். பெரிய நம்பிகள்,
பண் இசையில் திவ்யப் பிரபந்தத்தை இசைக்க வல்ல திருவரங்கப் பெருமாள் அரையரை காஞ்சிக்கு அனுப்பி
எப்பாடு பட்டாகிலும் இராமாநுஜரை திருவரங்கம் அழைத்துவர வேண்டினார்.
அரையரும் காஞ்சி தேவப் பெருமாள் ஸன்னதியில் பன்னுடன் திவ்யப் ப்ரபந்தத்தை இசைக்க ,
உள்ளம் மகிழ்வுற்ற காஞ்சி எம்பெருமான் அவருக்கு வரமளிக்க, அவ் வரத்தின் மூலம் பேரருளாளனின் ஒப்புதலுடன்
இராமாநுஜரை திருவரங்கத்திற்கு அழைத்து வந்தார்.
அவருடன் அவர் சீடர்களான முதலியாண்டான் மற்றும் கூரத்தாழ்வானும் திருவரங்கம் வந்தனர்.

திருவரங்கம் வந்து சேர்ந்த இராமாநுஜர் பெரிய பெருமாள் கோயில் கைங்கர்யத்தை ஏற்றுக் கொண்டு,
பல நிர்வாக சீர்திருத்தங்களை நடைமுறை படுத்தினார். இன் நடைமுறைகளே
ஸ்ரீரங்கம் திருக் கோயிலில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

திருக்கோஷ்டியூர் நம்பிகளிடத்திலே திருமந்திரத்தையும் அதன் விசேஷார்த்தங்களையும் அறிந்து வர வேண்டி,
இராமாநுஜர் பதினெட்டு தடவைகள் திருவரங்கத்திலே இருந்து திருக்கோஷ்டியூர் சென்று வந்தார்.
ஒவ்வொரு முறையும் மனம் தளராமல் சென்று, பதினெட்டாவது முறை சென்ற போது முற்றாக மந்த்ரார்த்தங்களை கற்றுக் கொண்டார் –
இவற்றை முதலியாண்டான், கூரத்தாழ்வான் தவிர வேறு எவரிடமும் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன்.

மந்த்ரார்த்த உபதேஸங்களை கற்றுக் கொண்டு திரும்பிய இராமாநுஜரின் மனம் வேறு விதமாக சிந்தித்தது.
தாம் பட்ட கஷ்டம் இனி யாருக்குமே வேண்டாம் என்றும், மறுபிறவி வேண்டாமென்று ஆச்சாரியனை அனுகும் மக்களுக்கும்,
தாம் கற்றுக் கொண்ட திருமந்திரத்தை மற்ற எளியவர்களுக்கும் கூறினால்
அதன் பயனாக எல்லா மக்களுக்கும் நல்வழி அருள் கிடைக்குமே என்று சிந்தித்தார்.
திருக்கோஷ்டியூர் மக்களுக்கெல்லாம் தம் எண்ணத்தை கூறி, ஆன்ம நலம் வேண்டுபவர் எல்லோரையும்
திருக்கோயிலுக்கு திரண்டு வரச் சொன்னார். அவர்களிடத்திலே திருமந்திரத்தையும், மந்த்ரார்த்தங்களையும் உபதேசித்தார்.

இந் நிகழ்வினைக் கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பி, மிகுந்த கோபமுற்று, ஆச்சாரிய நிபந்தனையை மீறியவனுக்கு
நரகம் தான் கிடைக்குமென்று இராமாநுஜரிடம் கூற, அவரும் ஆச்சாரிய நிபந்தனைகளை மீறி எளிய மக்களுக்கு உபதேசித்ததின் மூலம்
அவர்களின் ஆன்மாக்கள் நலம் உய்ந்து, மிக்க பயனடைவார்கள் என்றும்,
இதன் காரணமாகவே, தான் அவர்களுக்கு உபதேஸம் அருளியதாகவும், இதனால் தான் நரகம் போக நேரிட்டாலும்
தனக்கு மகிழ்ச்சியே என்றும் பதிலுரைத்தார். இராமாநுஜரின் இந்த பதிலால் தனக்கு இப்படி ஒரு கருணை உள்ளம் உள்ள ஒருவர்
சீடனாக அமைந்தது கண்டு மகிழ்வுற்று, அவரை வாரி அனைத்து ஆசிர்வதித்தார்.

ஆளவந்தாருக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி, கூரத்தாழ்வான் உதவியுடன் ஸ்ரீ பாஷ்யத்தை பட்டோலைப் படுத்தினார்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு உரை எழுத திருக்குருகைப்பிரான் பிள்ளையைப் பணித்தார்.
ஸ்ரீரங்கனாதனின் அருளால் கூரத்தாழ்வானுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒருத்தருக்கு பராசர பட்டர் என்றும்,
மற்றொருவருக்கு வேத வியாஸ பட்டர் என்றும் திருநாமமிட்டு மூன்று வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார்.

இச் சமயத்திலே சோழ மன்னனான கிருமி கண்ட சோழன், சிவனுக்கு மேல் தெய்வமில்லை என்று இராமாநுஜரிடம்
கையொப்பம் பெற அவரை அரசபைக்கு அழைத்து வர ஆள் அனுப்பினார்.
ஆனால் கூரத்தாழ்வான், இராமாநுஜரைப் போல் காவி வஸ்திரம் தரித்துக் கொண்டு அரசவை செல்ல,
இராமாநுஜரோ , கூரத்தாழ்வானின் வெள்ளையுடையுடன் அங்கிருந்து தப்பி, மைசூர் சென்றடந்தார்.
அந் நாட்டை ஆண்டு கொண்டிருந்த பிட்டி தேவன் என்பவனின் மகளின் தீராத நோயைக் குணப்படுத்தி
அவனை ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை தொடர வைத்தார். பின்னர் தில்லி சுல்தானின்
மகளிடம் இருந்த திருநாராயணபுரத்து இராமப் பிரியனின் விக்ரஹத்தைப் பெற வேண்டி தில்லி சென்றார்.
சுல்தானால் களவாடப்பட்ட , பல விக்கிரஹங்களில் ஒன்றாக அங்கிருந்த
திருநாராயணபுரத்து இராமப் பிரயனும் அங்கிருந்தார். சுல்தானும் எந்த விரஹம் இராமப் பிரியன் என்று தெரியாது என்று கூறி,
உம்மால் முடிந்தால் அவ் விக்ரஹத்தை கண்டுபிடித்து எடுத்துச் செல்லலாம் என்றான். உடனே இராமாநுஜரும் அங்கிருந்தபடியே
” வாரும் செல்வப் பிள்ளாய் ” என்று அழைக்க, இராமப் பிரியனின் திரு விக்ரஹம் தானே நேராக இராமாநுஜரிடம் நகர்ந்து வர,
அவரையும் பெற்றுக் கொண்டு திருநாராயணபுரம் வந்தார். அன்று முதல்
இராமப் பிரியன் ” செல்வப் பிள்ளை ” என்றே அழைக்கப்படலானார்.
மைசூர் ராஜ்ஜியத்திலே தங்கியிருந்த பொழுது, தொண்டனூர் ஏரியைக் கட்டி நிர்மாணித்தார்.

இராமாநுஜருக்கு ஆயிரக் கணக்கில் சிஸ்யர்கள் குவிந்தனர். ஆங்காங்கேயுள்ள திவ்ய தேஸங்களின் நிர்வாகப் பொருப்பை
அங்குள்ள தம் சிஸ்யர்களிடம் அளித்து ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரயதாயம் தழைதோங்கச் செய்ய 74 ஸிம்மாசனாதியதிகளை நியமித்தார்.
இன்று நம் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரயதாயம் இவ்வளவு எழுச்சியுடன் இருப்பதற்கு ஸ்வாமி இராமாநுஜரே காரணமாவார்.

இவ்வாறாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்துவிட்டு, தம்முடைய 120 வயதில் வைகுந்த பதவியை அடைந்தார்.

ஸ்வாமி எம்பெருமானாரைப் பற்றி குறிப்பிடும்போது இங்கு
முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது.
ஸ்வாமி எம்பெருமானார் ஸன்யாஸ்ரமத்தை ஏற்றுக் கொள்ளும் பொழுது அவர், முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும்
மட்டும் துறக்கவில்லை என்று கூறி ஸன்யாசத்தை ஏற்றுக் கொண்டார்.
குருபரம்பரை ப்ரபாவம் கூறுவதாவது- ஸ்வாமி எம்பெருமானார் முதலியாண்டானை த்ரிதண்டமாகவும்,
கூரத்தாழ்வானை பவித்திரமாகவும் கருதினார் என்பதாகும். அந்தளவிற்கு யதிராஜருடன் ஐக்கியமானவர்கள் இவ்விருவரும்.

————-

எம்பார் :-

தை மாதம் புனர்வசு நக்ஷத்திரத்தில், த்யுதிமதி அம்மையாருக்கும், கமல நயன பட்டருக்கும் திருக்குமாரராக
அவதரித்தவர் எம்பார் அவர்கள். இவர் ஸ்வாமி இராமானுஜரின் தாய் வழி சிற்றன்னையின் திருமகனாவார்.
இவருடைய மாமா பெரிய திருமலை நம்பி இவருக்கு ” கோவிந்த பட்டர் ” என்று திருநாமம் சூட்டினார்.
இவருடைய உபனயனமும், விவாஹமும் இவர் பிறந்த ஊரான மதுரமங்கலத்தில் நடைபெற்றது.
இராமாநுஜர் , யாதவப் பிரகாசரிடம் வேதங்களைக் கற்றுக் கொள்வதை கேள்விப்பட்ட கோவிந்த பட்டர் ,
தாமும் அவருடன் சேர்ந்து வேதம் கற்றுக் கொள்ளச் சென்றார். அது முதல் அவருடன் இணை பிரியாமல் இருந்தார்.

இராமாநுஜருக்கு, அவர் குருவான யாதவப் பிரகாசரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக,
காசிக்குச் செல்லும் வழியில் அவரைக் கொல்ல சதி செய்த குருவின் சதிச் செயலை அறிந்து,
அவரிடமிருந்து இராமாநுஜரைக் காத்து, காஞ்ச்சிக்கு அனுப்பியதும் இவரே. ஒரு சம்யம் காசியில்,
கங்கை நதியில் குளித்துக் கொண்டிருக்கும் போது, இவர் கையில் ஒரு சிவலிங்கம் ஒட்டிக் கொண்டுவிட்டது.
இதனால் சிவ பக்தி ஏற்பட்டு அதன் காரணமாக காளஹஸ்தி சென்று அங்கு சிவனை வழிபடலானார்.
இவரை ” உள்ளங்கை குளிர்ந்த நாயானார் ” என்று பலர் அழைத்தனர்.

இராமாநுஜர் ஸன்னியாஸம் மேற்கொண்டு, ஸ்ரீரங்கத்தில் தங்கி இருந்த பொழுது,
கோவிந்த பட்டர் சிவ பக்தரானதைக் கேள்விப் பட்டு , மிக வருந்தி, அவரை மீண்டும் வைஷ்ணவத்திற்கு
திருப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதற்குப் பொருத்தமானவர் தங்கள் இருவருக்கும் மாமாவாகிய
பெரிய திருமலை நம்பி தான் என்று முடிவு செய்து அவருடன் மேலும் சில வைஷ்ணவர்களையும் காளஹஸ்திக்கு அனுப்பினார்.
கோவிந்த பட்டரைத் திருத்துவதற்கு பெரும் முயற்சியினை மேற்கொண்டார் பெரிய திருமலை நம்பி.
இவ்வாறு இரு முறைகள் முயன்று தோல்வியுற்ற நம்பிகள் மூன்றாம் முறையாக நம்மாழ்வாரின் திருவாய் மொழி
இரண்டாம் பத்தின், இரண்டாம் திருமொழியான
“திண்ணன் வீடு ” திருமொழியின் ” தேவும் எப்பொருளும் படைக்க * பூவில் நான்முகனைப் படைத்த
* தேவன் எம்பெருமானுக்கல்லால் * பூவும் பூசனையும் தகுமே * என்ற நான்காம் பாசுரத்தினை மீண்டும், மீண்டும்
கோவிந்த பட்டரின் செவியில் விழும்படி சொல்லிக் கொண்டிருக்க, அவரும் ” தகாது , தகாது ” என்று கூறிக்கொண்டே
பெரிய திருமலை நம்பியின் திருவடியில் விழுந்தார். பிறகு பெரிய திருமலை நம்பியும் , கோவிந்த பட்டரை ஆசிர்வதித்து,
அவரை திருமலைக்கு அழைத்துச் சென்று, வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பற்றி பயிற்சி அளித்தார்.

பெரிய திருமலை நம்பியின் இராமாயண காலக்ஷேபத்தைக் கேட்க வந்திருந்த இராமாநுஜர்,
காலக்ஷேபம் முடிந்து புறப்படத் தயாரான பொழுது, அவருக்கு தாம் ஒன்றும் கொடுக்க வில்லையே என்று அவர் கூற,
அதற்கு இராமாநுஜர், தமக்கு கோவிந்த பட்டரை தந்தருள வேண்டும் என்று ப்ரார்திக்க,
அவர் விருப்பத்தை அப்படியே நிறைவேற்றினார் பெரிய திருமலை நம்பி அவர்கள்.

ஞான பக்தி, வைராக்கியத்துடன் இராமாநுஜரிடம் அதீத ஈடுபாடு கொண்ட, கோவிந்த பட்டர் சன்யாஸம் மேற்கொண்டு
எம்பார் என்ற திருநாமம் பெற்று, பின்னர் இராமாநுஜரின் அர்த்த விஷேஷங்களையும், தர்சனத்தையும் நிர்வகித்து
வாழ்ந்தருள வேண்டும் என்று மங்களா ஸாஸனம் செய்து பட்டர் திருக்கைகளில் காட்டிக் கொடுத்து,
இராமாநுஜரின் திருவடிகளை தியானித்துக் கொண்டு திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

——————-

பட்டர் :-

பெரிய பெருமாளின் அருள் பிரசாதமாக , கூரத்தாழ்வானுக்கும், ஆண்டாளுக்கும் திருமகனாக
வைகாசி மாதம் அனுஷ நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் பட்டர்.
இவர் பிறந்த பன்னிரண்டாம் நாள், குழந்தையைப் பார்ப்பதற்காக இராமாநுஜரும், எம்பாரும் வந்தனர்.
அச் சமயம் எம்பார், திருமந்திரத்தை சொல்லிக் கொண்டே, குழந்தையை எடுத்து இராமாநுஜரிடம் கொடுக்க,
அவரும் ” நீரே இக் குழந்தைக்கு ஆச்சாரியனாக இரும் ” என்று சொல்லி, ஆளவந்தாருக்கு வாக்கு கொடுத்தபடி,
குழந்தைக்கு “பராசர பட்டர் ” என்னும் திருநாமத்தை சூட்டினார்.
ஸ்ரீரங்கனாதன் ஸன்னதியில், திருமணத் தூண் அருகில் தொட்டிலிட்டு, பெருமாளும், பிராட்டியுமாக குழந்தையை வளர்த்தனர்.

பட்டர் அவரது ஐந்து வயதில், வீதியில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது,
ஒரு பெரிய வித்வான் பல்லக்கில் வந்து கொண்டிருந்தார்.
கூட வந்த கட்டியக்காரன் “ஸர்வக்ஞர் ” ( எல்லாம் அறிந்தவர் என்று பொருள் ) வருகிறார் என்று
கட்டியம் கூறியதைக் கேட்ட பட்டர் , அவர் ஒரு பெரிய அஹங்காரராய் இருப்பார் என்று எண்ணி,
அவருடைய அகந்தையை அகற்ற எண்ணம் கொண்டார். தன் கையில் ஒரு கைப்பிடி மண்னை எடுத்துக் கொண்டு,
அந்த வித்வானிடம், தன் கையில் எவ்வளவு மண் இருக்கிறது என்று வினவ, பதில் சொல்ல முடியாமல் அந்த ஸர்வக்ஞன் முழித்தான்.
உடனே பட்டர் தன் கையில் இருப்பது ஒரு கைப்பிடி மண் என்று கூற, அந்த வித்வான் அஹங்காரம் அழிந்து தலை குனிந்து நின்றார்.

பட்டருக்கு உரிய பருவத்தில் உபநயனம் செய்துவைத்து, பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர் அவர் பெற்றோர்.
கேட்ட மாத்திரத்திலேயே தான் கற்றதை மனதில் பதிய வைத்துக் கொள்ளூம் ஆற்றல்
அவருக்கு இருப்பதைக் கண்டு எல்லோரும் வியந்தனர். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய நூல்களையும்,
ஆழ்வார்களின் ஈரச் சொல் பாசுரங்களையும், இதிகாச புராணங்களையும், மற்றைய தத்துவ நூல்களையும் கற்றார்.

ஒரு கைசிக துவாதசி அன்று, பட்டர் மிக அழகாக கைசிக புராணம்
வாசித்த நேர்த்தியைக் கேட்டு மகிழ்ந்த பெரிய பெருமாள் இவரிடம்
” பட்டரே உமக்கு பரம பதம் தந்தோம் ” என்று அருளினார்.
பட்டரும் மிகுந்த ஆனந்தத்துடன் இல்லம் திரும்பி, தம் தாயாரை தெண்டம் ஸமர்ப்பிக்க,
அவரும் ” நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் ” என்று வாழ்த்த, பட்டரும் ” அம்மா, அடியேன் வேண்டியது ஈதே ” என்று கூறினார்.
பிறகு பட்டர் திருநெடுந்தாண்டகம் உபன்யாசம் செய்ய தொடங்கி, விளக்கியருளும் போது,
பெரியாழ்வார் திருமொழியின் ஐந்தாம் பத்தின் நான்காம் திருமொழியின்
ஒரு பாசுரமான ” பறவியேறு பரம புருடா * நீ என்னைக் கைக் கொண்ட பின் * பிறவி என்னும் கடலும் வற்றி * பெரும் பதமாகின்றதால் ”
பாசுரத்தை அனுஸந்தித்து, இரு கரம் கூப்பிக் கொண்டிருக்கும் போதே திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

————-

நஞ்சீயர் :-

திருநாராயணபுரத்தில் பங்குனி மாதம், உத்திர நக்ஷத்திரத்தில் அவதரித்த நஞ்சீயரின் இயற்பெயர் மாதவாச்சாரியார்.
வேதங்களில் கரைகண்டவரான வல்லவராக இருந்ததினால் இவர் வேதாந்தி என்றும் அழைக்கப்பட்டார்.

ஒரு அந்தணர் பெரும் வேதாந்தியாகத் திகழ்ந்த மாதவாச்சாரியாரை, பட்டரின் பெருமைகளை சொல்லி
அவரிடம் ஈடுபாடு கொள்ளும்படி வேண்ட, இவருக்கும் பட்டரை நேரில் காண ஆவல் எழுந்தது.
பட்டர் திருநாராயணபுரம் ஏள்ளியிருந்த பொழுது, பரிவாரங்களுடன் வேதாந்தி மணி பல்லக்கில் சென்று கொண்டிருந்தார்.
மற்ற பிற அந்தணர்கள் உணவு பறிமாறும் இடத்திற்குச் செல்ல, பட்டர் ஒரு எளிய அந்தனர் போல் ,
மாதவாச்சாரியார் இருந்த இடத்திற்கு வந்தார்.

இவரைக் கண்ட வேதாந்தி ” எதற்கு இங்கு வந்தீர் ” என்று வினவ,
” பிட்சைக்கு வந்தேன் ” என்று பட்டர் பதிலுரைக்க, அதற்கு வேதாந்தி ” உணவு பறிமாறும் இடத்திற்கு போவதுதானே ” என்று சொன்னார்.
ஆனால் பட்டரோ, தான் தர்க்க பிட்சைக்குத்தான் அங்கு வந்திருப்பதாகக் கூறினார்.
இவர் யாரென்று ஊகித்த வேதாந்தி, பட்டரிடம் ” நீர்தான் பட்டரோ ? ” என்று கேட்க, அவரும் ” ஆம் ” என்று சொல்ல,
இருவருக்கும் வாதம் நடந்தது. முடிவில் பட்டர் வேதாந்தியை வெற்றி கொள்ள, அவரும் ” விஷிஷ்டாத்வைத மதமே”
உயர்ந்தது என்பதனை ஒப்புக் கொண்டு, பட்டர் திருவடிகளில் சரணம் அடைந்தார்.
பட்டர் அவருக்கு ” பஞ்ச ஸமஸ்காரம் ” செய்து வைத்தார்.

பின்னாளில் வேதாந்தியாகிய , மாதவாச்சாரியார் துறவறம் பூண்டு, அத் துறவறக் கோலத்துடனே ஸ்ரீரங்கம் வந்து,
பட்டரின் திருவடியை சரணமடைந்தார்.
பட்டரும் , அவரை வாரி அணைத்துக் கொண்டு, அவருக்கு ” நஞ்சீயர் ” என்று திருநாமம் சூட்டினார்.
பட்டரிடம் அளவற்ற பக்தியும், பேரன்பும் கொண்டிருந்தார். ஸ்ரீரங்கத்திலே நூறு முறை திருவாய்மொழி காலக்ஷேபம் செய்துள்ளார்.
நஞ்சீயர் காலக்ஷேபங்களைக் கேட்ட, நம்பிள்ளை, பிற்காலத்தில், தாம் காலக்ஷேபம் செய்யும் போது,
நஞ்சீயரின் குண நல விஷேங்களை பூரிப்போடு கூறுவாராம்.

நஞ்சீயர் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அவர் மிகவும் விரும்பிய,
திருமங்கை ஆழ்வாரின் ” தூவிரிய மலருழக்கி ” பதிகத்தை அரையர் ஸேவிக்க,
அப்பாசுரத்தின் பொருளில் ஈடுபட்டு பரமபதம் அடைந்தார்.

————–

நம்பிள்ளை :-

திருமங்கை ஆழ்வாரின் அவதார மாதமும், நக்ஷத்திரமுமான, கார்த்திகை மாதம் , கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்
நம்பிள்ளை. இவரின் இயற்பெயர் வரதர். பட்டருடைய வியாக்யானங்களை தம் மனதில் ஆழமாகப் பதித்துக் கொண்டிருந்தார்.
நஞ்சீயர் திருவாய்மொழிக்கு, உரை எழுதிக்கொண்டிருந்தார்.
அதனை ஏடு படுத்த அழகான கையெழுத்துடன் எழுதக் கூடியவரை தேடிக் கொண்டிருக்கும் போது,
அவருக்கு அப்பொழுது அறிமுகமானவர் வரதர். நஞ்சீயருக்கு,வரதரின் கையெழுத்து பிடித்துப் போக அவரைத் தம் சீடராக்கிக்
கொண்டார். திருவாய்மொழி உரையை, வரதருக்குக் கற்றுக் கொடுத்து, தான் எழுதி வைத்திருந்த
ஓலைச் சுவடிக் கட்டையையும் வரதரிடம் கொடுத்து அதனை அவரின் கைவண்ணத்தில் ஏடுபடுத்திக் கொண்டுவரும்படி சொல்லி அனுப்பினார்.

வரதர் சுவடிகள் அடங்கிய கட்டையை எடுத்துக் கொண்டு, காவிரி ஆற்றினைக் கடந்து அக்கரையை அடைய ஆற்றில் இறங்கினார்.
அப்பொழுது திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட, நன்கு நீந்த வல்லவரான வரதர்,
ஓலைக் கட்டையை தம் திருமுடியில் கட்டிக் கொண்டு நீந்தினார்.
ஆனால் வெள்ளப் பெருக்கின் ஓட்டத்தில் அவருடைய திருமுடியில் கட்டப்பட்டிருந்த அவ்வோலை கட்டைகள்,
ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மிக்க துயரமுற்ற வரதர், புலம்பியபடியே கரையை கடந்து மறு பக்கம் வந்தார்.
பிறகு தம் மனதைத் தேற்றிக் கொண்டு, ஆச்சாரியனிடம் தாம் கற்று, தம் மனதில் நிறுத்திக் கொண்டதை நினைவில் கொண்டு,
எம்பெருமானின் அருளினை வேண்டி, தாமே அவ்வுரைகளை எழுதி முடித்து அதனை நஞ்சீயரிடம் கொண்டு ஸேர்ப்பித்தார்.
இதனைப் படித்துப் பார்த்த நஞ்சீயர் தாம் கற்றுக் கொடுத்ததை விட மிகச் சிறப்பாக திருவாய்மொழி உரை இருப்பதைக் கண்டு,
மிகவும் பரவசப்பட்டு, மனம் குளிர்ந்து வரதரைப் பாராட்டினார். வரதரும் நடந்த சம்பவங்களை நஞ்சீயரிடம்
கூற, மிகப் பூரிப்புடன் ” நீர் நம்பிள்ளையோ ” என்று ஆரத் தழுவிக் கொண்டார்.

திருவரங்கத்தையே தனது இருப்பிடமாகக் கொண்டு, காலக்ஷேபங்கள் செய்து வந்த நம்பிள்ளை கோஷ்டியில் இடம் பெற்றிருந்த,
கூரத்தாழ்வானின் பேரனான நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர், திருவாய்மொழிக்கு நம்பிள்ளையின் விளக்க உரை கேட்டதைக் கொண்டு,
அதனை சுவடி படுத்திக் கொண்டு, ஆச்சாரியனிடம் சென்று காட்டினார். ஆனால் நம்பிள்ளையோ, தம்மிடம் இசைவு பெறாததாலும்,
அவர் எழுதிய உரையானது மிகவும் விஸ்தாரமாக இருந்ததாலும், ஆழ்பொருளை சரியான முறையில் தெரிவிக்காததாலும்,
கோபம் கொண்டு அச் சுவடிகளை கரையானுக்கு இரையாக்கிவிடுகிறார்.

திருவரங்கத்தில், நம் பெருமாள் ஸன்னதியில் நடக்கும் இவரின் காலக்ஷேப பேருரைகளைக் கேட்க ,
பெருமளவில் அலை மோதும் பக்தர்கள் கூட்டத்தைக் கண்டு ” இது நம்பெருமாள் கோஷ்டியோ, நம்பிள்ளை கோஷ்டியோ ” என்று
அக்காலத்தில் மக்கள் வியப்பார்களாம்.
இவருக்கு உலகாச்சாரியர் என்ற பட்டப் பெயரும் உண்டு. 95 ஆண்டுகள் வாழ்ந்து பரமபதமடைந்தார் நம்பிள்ளை.

—————–

வடக்குத் திருவீதிப் பிள்ளை :-

வடக்குத் திருவீதிப் பிள்ளை , ஸ்ரீரங்கத்தில் ஆனி மாதம், சுவாதி நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.
நம்பிள்ளையின் சிஷ்யர்களில் பிரபலமானவர்.

நம்பிள்ளையின் திருவாய்மொழி வியாக்யான காலக்ஷேப கோஷ்டியில் ஈடுபாடு கொண்டு,
அங்கு விவரிக்கப்பட்டவற்றை குறித்துக் கொள்ள விழைந்தார்.
நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரின் பிரயத்தனத்தின் மேல் நம்பிள்ளைக்கு ஏற்பட்ட கோபத்தினை மனதில் இருத்திக் கொண்டு,
நம்பிள்ளையின் காலக்ஷேப வியாக்யானங்களை முழுவதுமாக குறிப்பெடுத்துக் கொள்வார்.
அவ்வாறு குறிப்பெடுத்துக் கொண்டதை ஓலைச் சுவடியில் எழுதி, தம் திருமாளிகையில் கோவிலாழ்வார் ஸன்னதியில்
சேர்த்து வைத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் நம்பிள்ளையை தமது திருமாளைகைக்கு அமுது செய்விக்க விரும்பி ப்ரார்த்தித்தார்.

அவரும் ஒப்புக் கொண்டு ஒருநாள் திருமாளைகைக்கு எழுந்தருளி, அங்கு அன்று தாமே பெருமாளுக்கு திருவாராதனம் செய்வதாகக் கூறி,
கோவிலாழ்வார் கதவுகளைத் திறந்தார். உள்ளே இருந்த சுவடிகளைக் கண்டு அவற்றை எடுத்து வாசித்துப் பார்த்தார்.
தம்முடைய வியாக்யானங்களே அவை என்றுணர்ந்து, அவை மிகச் சிறப்பாக குறிப்பெடுக்கப்பட்டதைக் கண்டு திருப்தியுற்று,
” பிள்ளாய் இது என்ன செயல்? ” என்று வினவ, வடக்குத் திருவீதிப் பிள்ளையும் தாம் மறக்காமல் இருப்பதற்காகத் தான்
இவற்றை ஏடு படுத்தி வைத்திருப்பதாகச் சொன்னார்.

அலங்காரம் செய்யப்பட்ட யானை மிக கம்பீரமாக நடப்பதைப் போல, இந்தக் குறிப்புகள் இருப்பதாகக் கூறி,
வடக்குத் திருவீதிப் பிள்ளையை நன்றாக கடாக்ஷித்தார்.அந்த ஏடுகளை தாமே வைத்துக் கொள்வதாகக் கூறி, தம்முடன் எடுத்துச் சென்றார்.
பின்னர் அந்த ஈட்டை ஈயுண்ணி மாதவர்க்குக் கொடுத்தார். அவர் பின் அதனை தம் மகனான பத்மனாபனிடம் கொடுத்தார்.
பத்மனாபன் அதனை நாலூர் பிள்ளைக்குக் கொடுக்க, அவர் தம் மகனான நாலூராச்சான் பிள்ளைக்கு கொடுக்க,
பின் அவர் தம் சிஷ்யர்களான திருவாய்மொழிப் பிள்ளை, திருநாராயணபுரம் ஆய் என்கிற ஜனனாச்சாரியர், இளம்பிலிசை பிள்ளை மூவருக்கும் கொடுத்தார்.
திருவாய்மொழிப் பிள்ளை அதனை மணவாள மாமுனிக்குக் கொடுக்க, அவர் அதனை நம்பெருமாள் முன்பு பிரகடனப்படுத்தினார்.

வடக்குத் திருவீதிப் பிள்ளை, நம்பிள்ளையின் காலஷேபங்களிலே மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தமையால், இல்லறத்திலே
நாட்டமில்லாதவராக இருந்தார். இதனால் பிள்ளையின் தாயார் அம்மி கவலையடைந்து, நம்பிள்ளையிடம் தெரிவிக்க,
அவரும் பிள்ளையை அழைத்து தக்க வகையில் உபதேசித்தார். ஆச்சார்ய உபதேசத்தைப் பெற்ற வடக்குத் திருவீதிப் பிள்ளை,
திருமணம் செய்து கொண்டு, இல்லற வாழ்க்கை நடத்தி, இரண்டு ஆண் புத்திரர்களைப் பெற்றார்.
தம் ஆச்சாரியரான நம்பிள்ளையின் பட்டப் பெயரான உலகாச்சாரியர் என்று தம் ஒரு மகனுக்கு பெயரிட்டார்.
அவர்தான் பிள்ளைலோகாச்சாரியர் ஆவர். துலுக்கர்களின் படை எடுப்பின் போது நம்பெருமாளைக் காக்க வேண்டி,
அவரை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு ஜ்யோதிஷ்குடிக்கு சென்றார்.
மற்றொரு புதல்வனுக்கு அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்று திருநாமம் சூட்டினார்.
இவர் தான் ” ஆச்சார்ய ஹ்ருதயம் ” என்னும் மாபெரும் நூலை எழுதியவர்.
பிள்ளைலோகாச்சாரியர் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்று இரு மாபெரும் புதல்வர்களை
ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரயதாயத்திற்கு அளித்த வடக்குத் திருவீதிப் பிள்ளை 106 ஆண்டுகள் வாழ்ந்து பின் பரமபதம் அடைந்தார்.

—————–

பிள்ளைலோகாச்சாரியார் :-

ஐப்பசி மாதம் திருவோணம் நக்ஷத்திரத்தில், வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கும், ஸ்ரீ ரங்க நாச்சியார் என்பருக்கும் புத்திரராக,
ஸ்ரீரங்கத்தில் அவதரித்தார். நம்பிள்ளையின் பட்டப் பெயரான ” லோகாச்சாரியன் ” என்கிற பெயரோடு,
” பிள்ளை ” என்கிற அடைமொழியையும் சேர்த்து இவருக்கு ” பிள்ளை லோகாச்சாரியன் ”
என்று பெயரிட்டு அழைத்தனர். இவர் தம் தகப்பனாரிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டு, நைஷ்டிக பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.
தகப்பனாரிடம் திருவாய் மொழி மற்றும் இதர பிரபந்தங்கள், ஈடு முதலான வ்யாக்யானங்கள், ஸ்ரீ பாஷ்யம்
ஆகியவற்றைக் கற்றுக் கொண்டு, பரந்த ஞானம் பெற்றார். சம்பிரதாய ரஹஸ்யங்கள் பற்றி காலஷேபங்கள் செய்து வந்தார்.

பிள்ளைலோகாச்சாரியார் , தம் சிஷ்யர்களை அழைத்துக் கொண்டு, ஸ்ரீரங்கத்திலே உள்ள காட்டு அழகிய ஸிங்கர் திருக்கோயில்
ஸன்னதியில் ரஹஸ்யார்த்தங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். மணப்பாக்கத்து நம்பி என்று ஒருவர்.
இவர் ஸ்வப்னத்திலே, காஞ்சி தேவப் பெருமாள் தோன்றி, விஷேஷார்தங்களை அருளிச் செய்து,
மேலும் இவரை ஸ்ரீரங்கத்தில் காட்டழகிய ஸிங்கர் ஸன்னதிக்கு வரச் சொல்லி அங்கே மேற்கொண்டு
இவ்வர்த்தங்களை விரிவாகச் சொல்வதாகச் சொன்னார்.

மணப்பாக்கத்து நம்பியும் காட்டழகிய ஸிங்கர் ஸன்னதிக்கு வந்த பொழுது, அங்கே பிள்ளைலோகாச்சாய்யாரின்
விஷேஷார்த்த காலஷேபத்தில் கலந்து கொண்டார். பிள்ளைலோகாச்சாரியார் அருளிய அர்த்தங்கள்,
காஞ்சி பேரருளாளன் அருளிச் செய்த அர்த்தங்களாகவே இருந்ததைக் கண்டு இவர்,
பிள்ளைலோகாச்சாய்யரிடம் சென்று ” அவரோ நீர் ? ” என்று ஆச்சரியத்துடன் சொல்லி, அவர்தம் திருவடிகளை சரணடைந்தார்.
பின்னர் பிள்ளைலோகாச்சாரியார் அவரை தம் சிஷ்யராக்கிக் கொண்டார்.

பிள்ளைலோகாச்சாரியார் , நம்பெருமாளுக்கு ஆற்றிய ஸேவை அளப்பறியது.
ஒரு சமயம் தில்லி பாதுஷாவான அலாவுதீன் கில்ஜி என்பவன் தன் தளபதியான மாலிக்காபூர் என்பவனை அழைத்து,
தமிழகத்தின் மீது படையெடுத்து, இங்கு திருக்கோயில்களில் உள்ள பொன்னையும், பொருள்களயும், களவாடி வரும்படி ஆனையிட,
அதன் பொருட்டு, வழியில் உள்ள பல சைவ , வைணவ திருத்தலங்களில் கொள்ளையடித்துக் கொண்டு,
ஸ்ரீரங்கத்தை நோக்கி அவன் படை பரிவாரங்களுடன் புறப்பட்டான்.

இதனை அறிந்து கொண்ட பிள்ளைலோகாச்சாரியார் இவர்களிடமிருந்து அரங்கனைக் காக்க விழைந்தார்.
பெரிய பெருமாள் ஸயனித்திருக்கும் ஸன்னதியை கற்சுவர் கொண்டு மூடிவிட்டு, நம்பெருமாளையும் அவர்
திருவாபரணங்களையும் ஒரு பல்லக்கில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு, பல ஸ்ரீவைஷ்ணவர்களுடன் தெற்கு நோக்கி புறப்பட்டார்.
திருமாலிருஞ்சோலை, திருமோகூர் திவ்ய தேஸங்களுக்கு அருகிலே உள்ள ஜ்யோதிஷ்குடி என்னும் ஊரில்,
ஒரு மலை அடிவாரத்திலே , பெருமாளை எழுந்தருளப் பண்ணி, அங்கிருந்தபடியே அவருக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்து கொண்டு வந்தார்.
வயோதிக்கத்தின் காரணமாக நோவு சாற்றி, உடல் தளர்ந்த நிலையில், நம்பெருமாளைக் காக்க தம் சிஷ்யர்களிடம் அறிவுறுத்தி,
தம் 105 ஆம் வயதில் நம்பெருமாளை தியானித்துக் கொண்டே ஆச்சாரியன் திருவடி சேர்ந்தார்.

—————–

திருவாய்மொழிப் பிள்ளை :-

திருமலை ஆழ்வார் என்னும் இயற்பெயருடைய திருவாய்மொழிப் பிள்ளை, நம்மாழ்வாரின் அவதார மாதமான வைகாசி மாதத்தில்,
அவரின் அவதார நஷத்திரமான விசாக நஷத்திரத்தில் அவதரித்தார். அவரின் இளம் வயதிலேயே பிள்ளைலோகாச்சாரியரின் சிஷ்யராகி,
அவரிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டார். பாண்டிய மன்னனுக்கு ப்ரோஹிதராகவும் , பிரதான அமைச்சராகவும் இருந்து
அரசு பணி ஆற்றிக் கொண்டிருந்தார். எதிர்பாரா விதமாக பாண்டிய மன்னன் அகால மரணமடைய,
அரசனின் மகன் மிகவும் இளம் வயதினராக இருந்த காரணத்தால், ராணியார், திருமலை ஆழ்வாரை
ராஜப் பிரதிநிதியாக நியமித்தார். இவரும் மிக்க புகழுடனும், பாராட்டுகளும் பெற்று, ராஜ்யத்தை நல்லபடியாக பரிபாலனம் செய்து வந்தார்.

இந்த சமயத்தில் தான், பிள்ளைலோகாச்சாரியார், நம்பெருமாளை, துலுக்கர்களிடமிருந்து காப்பாற்றும் பொருட்டு,
அவருடன் ஜ்யோதிஷ்குடி எழுந்தருளியிருந்தார். அவர், தம் சிஷ்யர்களை அழைத்து, அவர்களை திருமலையாழ்வாருக்கு,
ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாய விஷயங்களை கற்பித்து, அவரை தர்ஸன ப்ரவர்த்தகராக ஆக்க வேண்டும் என்று பணித்தார்.
சிஷ்யர்களும் ஆச்சாரியன் ஆக்ஞைப்படி, திருமலை ஆழ்வாருக்கு, ஸத்விஷயங்களைக் கற்பித்து,
அவரை ஸம்பிரதாய விஷயங்களில் ஈடுபட வைத்தனர்.

நம்பெருமாளை பாதுகாப்பு கருதி, ஜ்யோதிஷ்குடியிலிருந்து மேலும் தெற்கு நோக்கி, மலையாள தேஸத்திலுள்ள கோழிக்கோடு
நகரத்திற்கு பிள்ளைலோகாச்சாரியரின் சிஷ்யர்கள் எழுந்தருளப் பண்ணியிருந்தனர். நம்பெருமாளைப் போலவே, பாதுகாப்புக் கருதி,
திருக்குருகூரிலிருந்து நம்மாழ்வாரையும் அங்கிருந்த பக்தர்கள்,
கோழிக்கோட்டிற்கு எழுந்தருளப் பண்ணியிருந்தனர். இவ்விருவரும் தேனைகிடம்பை என்ற ஊரிலே சிறிது காலம் எழுந்தருளியிருந்து,
பின் நம் பெருமாள், திருநாராயணபுரம் எழுந்தருள, நம்மாழ்வார், முந்திரிப்பு என்னும் ஊருக்கு எழுந்தருளப்பட்டார்.
அவ்வூரில் நிலவிய திருடர்கள் பயம் காரணமாக, ஆழ்வார் ஒரு பெட்டகத்தில் எழுந்தருளப்பட்டு,
அப்பெட்டகத்தை இரும்புச் சங்கிலியால் பிணைத்து , ஒரு மலைச்சரிவின் அடியில் பாதுகாக்கப்பட்டிருந்தார்.

துலுக்கர்கள் பயம் நீங்கிய நிலையில், நம்மாழ்வாரை மீண்டும் திருக்குறுகூருக்கு எழுந்தருளப் பண்ண விரும்பிய பக்தர்கள்,
மலைச் சரிவிலிருந்து, ஆழ்வாரை எழுந்தருளப்பண்ண உதவி வேண்டி, மதுரையில் ராஜப் பிரதிநிதியாக இருந்த
திருமலை ஆழ்வாரை, தோழப்பர் என்னும் அடியவர் மூலம் நாடினர். திருமலை ஆழ்வாரும் ,
கொச்சி அரசருக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டி ஒரு கடிதம் கொடுக்க, அதனை தோழப்பர் கொச்சி அரசரிடம் சென்று சமர்ப்பித்தார்.
பின் அவர் மூலம் உதவிகள் பெறப்பட்டு, நம்மாழ்வாரை மீண்டும் இரும்பு சங்கிலி கொண்டு மலை சரிவிலிருந்து மேலே கொண்டுவர முயன்றனர்.
அப்பொழுது தோழப்பர் இரும்புக் கம்பிகளுடன் மலைச் சரிவில் இறங்கி, நம்மாழ்வாரை மேலே எழுந்தருளப் பண்ணினார்.
மீண்டும் கீழே இறக்கப் பட்ட அதே இரும்புக் கம்பியை பற்றி மேலே வர,
தோழப்பர் முயற்சிக்கையில் கம்பி அறுந்து விழ , அங்கேயே அவர் உயிர் நீத்தார்.

திருமலை ஆழ்வார் ராஜ்ய பரிபாலனங்களை தகுதியானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, ஸம்பிரதாய விஷயங்களில் ஈடுபடலானார்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழி மீது அதீத ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்ததால்,
இவர் திருவாய்மொழிப் பிள்ளை என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார். இவர் ஆழ்வார் திருநகரியில் இருந்த பொழுது,
திகழக்கிடந்தார் திருநாவீறுடைய தாஸரண்ணருக்கும், ஸ்ரீரங்க நாச்சியாருக்கும் பிறந்த குமாரரான
அழகிய மணவாளனை சிஷ்யராக்கிக் கொண்டார். அழகிய மணவாளனாகிய இவர் தான் ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரதாயம்,
இன்றும் தழைத்தோங்கி இருப்பதற்குக் காரணகர்த்தரான ஸ்வாமி மணவாள மாமுனிகள் ஆவார்.

திருவாய் மொழிப் பிள்ளை திருமேனி நோய் வாய்ப்பட்டு, சிரம திசையில் இருந்த பொழுது,
எம்பெருமானார் தர்ஸனத்தை காத்து, மென் மேலும் வளர்க்கப் போகிறவர் யார் என்று வினவ,
உடனே அழகிய மணவாளன் தாம் அதற்குத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
உடனே ஸமஸ்கிருத சாஸ்திரங்களிலே ஸ்ரீ பாஷ்யத்தைக் கேட்டும், திருவாய்மொழி முதலான அருளிச்செயல்களிலே
அநவரதம் ஈடுபடுத்திக் கொண்டும், பூர்வர்களைப் போலே பெருமாளுக்கு,
மங்களா ஸாஸன கைங்கர்யபரராய் இருந்து கொண்டும், கோயிலிலே நித்ய வாசராய் எழுந்தருளியிரும் என்று
அழகிய மணவாளனை, திருவாய்மொழிப் பிள்ளை உபதேசித்து, ஆசிர்வதித்தார்.
பிறகு தம் சிஷ்யர்களை அழைத்து, அழகிய மணவாளன் ஒரு அவதார விஷேஷமானவன் என்று
ஆராதித்து வாருங்கள் என்று தெரிவித்து, தமது 120 வது வயதில் திருநாட்டிற்கு எழுந்தருளினார்.

————–

மணவாள மாமுனிகள் :-

ஐப்பசி மாதம் , மூல நக்ஷத்திரத்தில் ஆழ்வார் திருநகரியிலே,
திகழக்கிடந்தார் திருநாவீருடைய தாஸரண்ணருக்கும், ஸ்ரீரங்க நாச்சியாருக்கும் திருமகனாக அவதரித்தார் மணவாள மாமுனிகள்.
இவர் தம் இயற் பெயர் அழகிய மணவாளப் பெருமாள் என்பதாகும்.

சிறுவயதிலேயே சௌளம், உபநயனம் நடந்தேறியது. தம் திருத்தகப்பானாரிடத்திலே, அருளிச் செயல்களையும்,
வேத சாஸ்திரங்களையும் கற்றுக் கொண்டார். திருவாய்மொழிப் பிள்ளை தமக்குப் பின் எம்பெருமானார் தர்ஸனத்தை காத்து,
வளர்க்கப் போகிறவர் யாரென்று வினவ, அழகிய மணவாளப் பெருமாள்” அடியேன் அதற்குத் தயார் ” என்று கூறினார்.
திருவாய்மொழிப் பிள்ளையும் இவருக்கு அருளிச் செயல்களையும் மேலும் தத்துவார்த்தங்களையும் கற்பித்தார்.
திருவாய்மொழிப் பிள்ளை, இவரின் அருமை, பெருமைகளை தம் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டு இவரை
ஸ்ரீரங்கம் சென்று அங்கு அழகிய மணவாளனுக்கு கைங்கர்யம் செய்யப் பணித்தார்.
ஸ்வாமி இராமாநுஜரின் மறு அவதாரமே, அழகிய மணவாளப் பெருமாள் எனபதனையும் உணர்ந்து,
அவரின் அவதார மகிமையை போற்றிக் காத்து, அவருக்கு துணை நிற்கவும் தம் எல்லா சிஷ்யர்களையும் பணித்தார்.

அழகிய மணவாளப் பெருமாளை உடையவர் ஸன்னதி கைங்கர்யத்தில் ஈடுபடுத்தினார் திருவாய்மொழிப் பிள்ளை.
உடையவர் பெயரில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டதால் இவருக்கு” யதீந்த்ரப்ரவனர் ” என்றும் திருநாமமிட்டார்.
எம்பெருமானார், பிள்ளைலோகாச்சார்யார் இவர்களின் வைபவங்களை நினைத்துக் கொண்டும்,
அவர்கள் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு ஆற்றிய அளப்பரிய செயல்களை வியந்து கொண்டும்,
அவர்கள் எழுந்தருளியிருந்த இடங்களைக் கண்டும் பரம திருப்தி அடைந்தார்.

பிள்ளைலோகாச்சாரியாரின் திருமாளிகை வாசலில் கீழே விழுந்து வணங்கி,மண் புழுதியிலே புரண்டு “இது ரகசியம் விளைவித்த மண்”
என்று பெருமையுடன் மனம் மகிழ்வார். சிதிலம் அடைந்த ஓலைச் சுவடிகளை மீண்டும் ஏடுபடுத்தினார்.
இவருக்கு பிறந்த மகனுக்கு” ராமாநுஜப் பிள்ளை ” என்று ஆச்சாரியரின் ஆக்ஞைப்படி பெயரிட்டார்.
பின்னர் இவர் இல்லற வாழ்க்கையை விடுத்து, துறவற வாழ்க்கையான சன்யாசத்தை மேற்கொண்டார்.
பெரிய மங்களா ஸாஸனம் செய்து, பல்லவராயன் மடத்திற்கு எழுந்தருளினார். அதுவே அவருடைய ஆஸ்தான மணபம் ஆயிற்று.
அது முதற் கொண்டு அழகிய மணவாளப் பெருமாள், மணவாள மாமுனிகள் என்று அழைக்கப்படலானார்.

மாமுனிகளின் பெருமையும் அவரின் வளர்ச்சியையும் பிடிக்காத சிலர், அவர் எழுந்தருளியிருந்த மடத்திற்கு
நடு நிசியில் தீ வைத்து, மடத்தை எரித்தனர். மாமுனிகள் ” திருவநந்தாழ்வான் ” வடிவம் கொண்டு,
திருமால் அடியார்களின் பக்கம் வந்து சேர்ந்தார். தீயிட்டுக் கொளுத்தியவர்களுக்கு, அரசன் தண்டனை அளித்த போது,
மாமுனிகள் கருணை உள்ளத்துடன் மனமுவந்து அவர்களை மன்னித்து அருளினார்.

காஞ்சிபுரம், திருப்புட்குழி, திருக்கடிகை, எறும்பி, எம்பெருமான்களை ஸேவித்துக் கொண்டு
திருப்பதி, திருமலை எம்பெருமான்களை மங்களா ஸாஸனம் செய்தார்.
அங்கு அரசனின் உத்தரவு பெற்று ஒரு ஜீயரை நியமித்தார்.
அவரே எம்பெருமானார் ஜீயர் என்றும் சின்ன ஜீயர் என்றும் அழைக்கபடுபவர் ஆவார்.

திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரப் படிக்கு மேற்கோள்களின் திரட்டு, உபதேஸ ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி,
யதிராஜ விம்ஸதி, ஆர்த்தி ப்ரபந்தம், தேவராஜ மங்களம், கோபால விம்சதி உட்பட பன்னிரண்டு நூல்கள் இயற்றினார்.
மேலும் ஸ்ரீவசனபூஷணம், மும்முஷூப்படி, ஆசார்ய ஹ்ருதயம் உட்பட எட்டு ரஹஸ்ய க்ரந்தங்களுக்கு வ்யாக்யானங்கள் அருளினார்.
இவை தவிர மேலும் பல நூலகளையும், உரைகளையும் அருளிச்செய்தார்.

தென்னாட்டு திவ்ய தேஸங்கள் அனைத்தையும் ஸேவித்துக் கொண்ட ஸ்வாமி மணவாள மாமுனிகளுக்கு,
வட நாட்டு திவய தேஸங்களை ஸேவிக்க இயலவில்லையே என்று வருந்தினார்.
அப்பொழுது ராமாநுஜ தாஸர் என்பவர், தாம் வடநாட்டு திவ்ய தேஸங்களுக்கு சென்று, அங்கு மாமுனிகளின் திருநாமத்தை ஓதி,
எம்பெருமான்களையும் ஸேவித்து, திருத்துழாய் பிரசாதத்தை அவரிடம் ஸமர்ப்பிப்பதாகக் கூறி, அவரின் சம்மதத்தைப் பெற்றார்.
ராமாநுஜரும் அவ்வண்ணமே பத்ரி, பிருந்தாவனம், அயோத்தி, ஹரித்வார், புஷ்கரம் உட்பட பல திவ்ய தேஸங்களையும் ஸேவித்துக் கொண்டு,
கங்கை, யமுனை, சரயு நதிகளில் தீர்த்தமாடி, அபய ஹஸ்தம், திருத்துழாய் பிரசாதங்களுடன் திரும்பி வந்து மாமுனிகளிடம் ஸமர்ப்பித்தார்.
மணவாள மாமுனிகளும் அப்பிரஸாதங்களைப் பெற்றுக் கொண்டு வட நாட்டு திவ்ய தேஸங்களை ஸேவித்த உணர்வை அடைந்தார்.

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை பரப்பவும், அருளிச் செயல்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கவும் ,
மிகவும் ப்ரஸித்தி பெற்ற வேத விற்பன்னர்களைக் கொண்டு , அஷ்டதிக்கஜங்களை நியமித்தார்.
அவர்கள் வானமாமலை ஜீயர், பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ராமாநுஜ ஜீயர், கோவிலண்ணன்,
பிரதிவாதி பயங்கரம் அண்ணா, எறும்பியப்பா, அப்பிள்ளை மற்றும் அப்பிள்ளார் ஆவர்.

கால வெள்ளத்தில் திருமேனியில் நோவு கண்டு, அரங்கனுக்கு நேரில் சென்று கைங்கர்யங்கள் செய்ய முடியவில்லையே என்றும்,
மேலும் பெருமாளையும் நேரில் ஸேவிக்க இயலவில்லையே என்றும் வருத்தமுற்றார்.
ஒரு நாள் அரங்கன் வீதி உலா வரும் பொழுது நேரில் கண்ணாரக் கண்டு ,சேவித்து மிகுந்த ஆனந்தமடைந்தார்.
74 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்து எம்பெருமானார் தர்ஸனத்தை நிலைநிறுத்தி, கைங்கர்யங்கள் சிறப்பாக நடைபெற
ஏற்பாடுகள் செய்வித்து, ஆழ்வார், ஆச்சார்யர்களின் அருளிச் செயல்களை மக்களிடையே பரப்பினார்.

இப்படியாக ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை தலைமேற் கொண்டு செவ்வனே நியமனப்படுத்திய ஸ்வாமி மணவாள மாமுனிகள்,
மாசி மாதம், க்ருஷ்ணபக்ஷ துவாதசியன்று, எம்பெருமானார், பிள்ளைலோகாச்சாரியார், திருவாய்மொழிப் பிள்ளை, இவர்களின்
திருவடிகளை நினைத்து கொண்டே திருநாட்டிற்கு எழுந்தருளினார்.

இன்றும், என்றும் நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் தழைத்தோங்கி
வளரச் செய்த நம் ஸ்வாமியை ” மணவாள மாமுனியே இன்னும் ஒரு நூற்றாண்டிரும் ” என்று வேண்டிக் கொள்கிறோமே —

—————

ஸ்ரீ வாழித் திருநாமப் பாசுரங்கள் —

ஸ்ரீ பெரிய பெருமாள் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ரேவதி (சித்திரை மாதம்)

திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியே
செய்யவிடைத் தாய்மகளார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில் வீற்றிருக்கும் இமையவர்கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலை எய்தினான் வாழியே
அரிய தயரதன் மகனாய் அவதரித்தான் வாழியே
அந்தரியாமித்துமும் ஆயினான் வாழியே
பெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே
பெரியபெருமாள் எங்கள் பிரானடிகள் வாழியே

ஸ்ரீ பெரிய பிராட்டியார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: உத்திரம் (பங்குனி மாதம்)

பங்கயப் பூவில் பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்திரநாள் பார்உதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலதமென வந்தசெல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்கள் எழில் சேனைமன்னர்க்கு இதம்உரைத்தாள் வாழியே
இருபத்தஞ்சுட்பொருள் மால்இயம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியே
சீரங்கநாயகியார் திருவடிகள் வாழியே

ஸ்ரீ சேனை முதலியார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: பூராடம் (ஐப்பசி)
ஓங்குதுலாப் பூராடத்து உதித்தசெல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்திரவதி உறைமார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கு இதமுரைத்தான் வாழியே
எழிற்பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்து மூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

ஸ்ரீ நம்மாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: விசாகம் (வைகாசி)

ஆன திருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே
ஆசிரியம் ஏழுபாட்டும் அளித்தபிரான் வாழியே
ஈனமற அந்தாதி எண்பத்துஏழு ஈந்தான் வாழியே
இலகு திருவாய்மொழி ஆயிரத்தொரு நூற்றிரண்டு உரைத்தான் வாழியே
வானணியும் மாமாடக் குருகை மன்னன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
சேனையர்கோன் அவதாரம் செய்த வள்ளல் வாழியே
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: சித்திரை (சித்திரை)

சித்திரையில் சித்திரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
திருக்கோளூர் அவதரித்த செல்வனார் வாழியே
உத்தர கங்காதீரத் துயர் தவத்தோன் வாழியே
ஒளிகதிரோன் தெற்குஉதிக்க உகந்து வந்தோன் வாழியே
பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே
பராங்குசனே பரன்என்று பற்றினான் வாழியே
மத்திமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே

ஸ்ரீ பொய்கையாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: திருவோணம் (ஐப்பசி)

செய்யதுலாவோணத்தில் செகத்துதித்தான் வாழியே
திருக்கச்சி மாநகரம் செழிக்க வந்தோன் வாழியே
வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே
வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே
வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கை முனி வடிவழகும் பொற்பதமும் வாழியே
பொன்முடியும் திருமுகமும் பூதலத்தில் வாழியே

ஸ்ரீ பூதத்தாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: அவிட்டம் (ஐப்பசி)

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே
நல்ல திருக்கடல்மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தை திரி யிட்டபிரான் வாழியே
எழில் ஞானச் சுடர்விளக்கை ஏற்றினான் வாழியே
பொன்புரையும் திருவரங்கர் புகழ்உரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே

ஸ்ரீ பேயாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: சதயம் (ஐப்பசி)

திருக்கண்டேன்என நூறும் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் சனித்தவள்ளல் வாழியே
மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே
மலர்க்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே
நெருக்கிடவே இடைகழியில் நின்ற செல்வன் வாழியே
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில்வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணை இப்பெருநிலத்தில் வாழியே

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: மகம் (தை)

அன்புடன் அந்தாதி தொண்ணுற்றாறு உரைத்தான் வாழியே
அழகாரும் திருமழிசை அமர்ந்த பிரான் வாழியே
இன்பமிகு தையில் மகத்து இங்குஉதித்தான் வாழியே
எழிற் சந்தவிருத்தம் நூற்றிருபது ஈந்தான் வாழியே
முன்புகத்தில் வந்துதித்த முனிவர்கோன் வாழியே
முழுப்பொன்னிப் பெருக்கெதிர் செல்முதிர் கவியோன் வாழியே
நன்புவியில் நாலாயிரத்து எழுநூறிருந்தான் வாழியே
நங்கள் பத்திசாரர் இருநற்பதங்கள் வாழியே

ஸ்ரீ குலசேராழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: புனர்பூசம் (மாசி)

அஞ்சனமா மலைப்பிறவி ஆதரித்தோன் வாழியே
அணியரங்கர் மணத்தூணை அடைந்துய்ந்தோன் வாழியே
வஞ்சிநகரம் தன்னில் வாழவந்தோன் வாழியே
மாசிதன்னில் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
அஞ்சலெனக் குடப்பாம்பில் அங்கையிடடான் வாழியே
அநவரதம் ராமகதை அருளுமவன் வாழியே
செஞ்சொல்மொழி நூற்றஞ்சும் செப்பினான் வாழியே
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

ஸ்ரீ பெரியாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ஸ்வாதி (ஆனி)

நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்று பத்தொன்றும் நமக்கு உரைத்தான் வாழியே
சொல்லரிய வானிதனில் சோதி வந்தான் வாழியே
தொடை சூடிக்கொடுத்தவள் தன் தொழும்அப்பன் வாழியே
செல்வநம்பி தனைப்போலச் சிறப்புற்றான் வாழியே
சென்று கிழியறுத்து மால் தெய்வம்என்றான் வாழியே
வில்லிபுத்தூர் நகரத்தை விளங்க வைத்தான் வாழியே
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே

ஸ்ரீ ஆண்டாள் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: பூரம் (ஆடி)

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவைநகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே

ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: கேட்டை (மார்கழி)

மண்டங்குடியதனில் வாழ வந்தோன் வாழியே
மார்கழியில் கேட்டை நாள் வந்துதித்தோன் வாழியே
தெண்டிரைசூழ் அரங்கரையே தெய்வமென்றான் வாழியே
திருமாலை ஒன்பதஞ்சும் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சி பத்துரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவிதனைப்பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப்பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே

ஸ்ரீ திருப்பாணாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ரோகிணி (கார்த்திகை)

உம்பர் தொழும் மெய்ஞானத்து உறையூரான் வாழியே
உரோகிணி நாள் கார்த்திகையில் உதித்த வள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனிதோளில் வந்தபிரான் வாழியே
மலர்க்கண்ணை வேறொன்றில் வையாதான் வாழியே
அம்புவியில் மதிளரங்கர் அகம்புகுந்தான் வாழியே
அமலனாதிபிரான் பத்தும் அருளினான் வாழியே
செம்பொனடி முடியளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: கார்த்திகை (கார்த்திகை)

கலந்த திருக்கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே
காசினியில் குறையலூர்க் காவலோன் வாழியே
நலந்திகழ் ஆயிரத்தெண்பத்து நாலுரைத்தான் வாழியே
நாலைந்தும் ஆறைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே
இலங்கெழு கூற்றிருக்கை இருமடல் ஈந்தான் வாழியே
இம்மூன்றில் இருநூற்றிருபத்துஏழிந்தான் வாழியே
வலந்திகழும் குமுதவல்லி மணவாளன் வாழியே
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே

சித்திரையில் கார்த்திகை – ஸ்ரீ உய்யக்கொண்டாரின் திரு அவதார திருநக்ஷத்ரம்

ஸ்ரீ புண்டரீகாக்ஷர் என்னும் ஸ்ரீ உய்யக்கொண்டார் -திருக்குருகூர்

ஸ்ரீ உய்யக்கொண்டாரின் வாழித்திருநாமம்–
“வாலவெய்யோன்தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பி தொழு‌ம் மலர்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீர் உரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மால்அரங்க மணவாளர் வளம் உரைப்போன் வாழியே
வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே”

ஸ்ரீ எம்பெருமானார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: திருவாதிரை (சித்திரை மாதம்)

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறு பெற்றோன் வாழியே
புத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திடடான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறன்அடி தொழுதுஉய்ந்தோன் வாழியே
தொல் பெரியநம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்கவந்தோன் வாழியே
சீர்பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் ணிளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வர்க்குஎண்ணான்கு உரைத்தான் வாழியே
பண்டைமறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
தண்டமிழ்நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே
தெண்டிரைசூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே

ஸ்ரீ கூரத்தாழ்வான் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ஹஸ்தம் (தை மாதம் )

சீராரும் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே
தென்னரங்கர் சீரருளைச் சேருமவன் வாழியே
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே
நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே
ஏராரும் தையில் அத்தத்து இங்கு வந்தான் வாழியே
எழில் கூரத்தாழ்வான்தன் இணையடிகள் வாழியே

ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ஹஸ்தம் (பங்குனி)

எந்தாதை கூரேசர் இணையடியோன் வாழியே
எழில் மூங்கில் குடிவிளங்க இங்குவந்தோன் வாழியே
நந்தாமல் எதிராசர் நலம்புகழ்வோன் வாழியே
நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே
பைந்தாம அரங்கர்பதம் பற்றினான் வாழியே
பங்குனியில் அத்தநாள் பாருதித்தோன் வாழியே
அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே
அணியரங்கத் தமுதனார் அடியிணைகள் வாழியே
ஸ்ரீ வடுகநம்பி வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: அஸ்வினி (சித்திரை மாதம்)

ஏராரும் சித்திரையில் அசுவதீ வந்தான் வாழியே
எழில் சாளக்கிராம நகரத்தில் அவதரித்தான் வாழியே
சரம பர்வ நிஷ்டையில் ஊன்றினான் வாழியே
எம்பெருமானாரே தெய்வம் என்று அனுஷ்டித்தான் வாழியே
அனவரதம் ஆசார்ய கைங்கர்யமே பொழுது போக்கும் என்றான் வாழியே
ஆசார்யனை அல்லாது வேறு தெய்வம் அறியான் வாழியே
ஸ்வாசார்யர் அஷ்டோத்தர சத நாமங்களை அருளினான் வாழியே
ஸ்ரீராமானுஜர் வைபவமே நிரந்தரம் அநுஸந்தித்தான் வாழியே
ஆசார்ய பாத தீர்த்தமே பரம போக்யம் என்று எண்ணினான் வாழியே
ஸ்ரீ வடுஹ நம்பி திருவடிகள் வாழி வாழி வாழியே

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ரோகிணி (ஆவணி)

தண்மை சிங்கம் ரோகிணிநாள் தழைக்க வந்தோன் வாழியே
தாரணியில் சங்கநல்லூர் தானுடையோன் வாழியே
புன்மை தவிர் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே
பூதூர் எதிராசர் தாள் புகழுமவன் வாழியே
மண்புகழ் சேர் சடகோபர் வளமுரைப்போன் வாழியே
மறைநாலின் பொருள் தன்னைப் பகுத்து உரைப்போன் வாழியே
அன்புடன் உலகாரியர்தம் அடியிணையோன் வாழியே
அபயப்ரதராசர் தாள் அனவரதம் வாழியே

ஸ்ரீ பெரியதிருமலை நம்பி வாழித்திருநாமம்
திருநக்ஷத்ரம்: ஸ்வாதி (வைகாசி)

வைகாசிச் சோதிநாள் வந்துதித்தான் வாழியே
வண் திருவேங்கடமுடையான் வரபுத்திரன் வாழியே
அய்யன் ஸ்ரீ ஆளவந்தார் அடிதொழுவோன் வாழியே
அனவரதம் மலைகுனியர்க்கு அடிமை செய்வோன் வாழியே
மெய்யன் இராமானுசாரியன் விரும்புமவன் வாழியே
மிக்க திருமலையார்க்கெல்லாம் மேலாவான் வாழியே
செய்யதமிழ் வேதத்தின் சிறப்புஅறிந்தோன் வாழியே
திருமலை நம்பிகள் உபயதிருவடிகள் வாழியே

ஸ்ரீ வடக்குத்திருவீதிப்பிள்ளை வாழித்திருநாமம்
திருநக்ஷத்ரம்: ஸ்வாதி (ஆனி மாதம்)

ஆனிதனில் சோதிநாள் அவதரித்தான் வாழியே
ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்துரைத்தோன் வாழியே
தான்உகந்த நம்பிள்ளை தாள் தொழுவோன் வாழியே
சடகோபன் தமிழ்க்கீடு சாற்றினான் வாழியே
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
நல்ல உலகாரியனை நமக்குஅளித்தான் வாழியே
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே
எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே

ஸ்ரீ கூர குலோத்தம தாஸர் வாழித்திருநாமம்
திருநக்ஷத்ரம் : திருவாதிரை (ஐப்பசி)

சந்தமும் ஆழ்வார்கள் தமிழ் வளர்த்தோன் வாழியே
தாரணியில் சிறுநல்லூர் தானுடையோன் வாழியே
எந்தை உலகாரியனை இறைஞ்சுமவன் வாழியே
உலகுதுலா வாதிரையில் இங்கு உதித்தான் வாழியே
இந்த உலகத்தோர்க்கு இதமுறைத்தோன் வாழியே
எழில்வசன பூடணத்துக்கு இனிமை செய்தான் வாழியே
குந்திநகர்ச் சிந்தை கொண்ட செல்வனார் வாழியே
கூரகுலோத்தம தாசர் குரைகழல் வாழியே

ஸ்ரீ மணவாளமாமுனிகள் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: திருமூலம் (ஐப்பசி)
இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்து அவதரித்தான் வாழியே
அரவரசப் பெருஞ்சோதி அனந்தன்என்றும் வாழியே
இப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்த வந்தோன் வாழியே
ஏராரும் எதிராசர் எனஉதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடம் முக்கோல் தரித்தான் வாழியே
மூதரிய மணவாள மாமுனிவன் வாழியே

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸமேத ஸ்ரீ பெரிய பெருமாள் பொது நின்ற பொன்னம் கழலே சரணம்
ஸ்ரீ பத்மாவதித் தாயார் ஸமேத ஸ்ரீ வேங்கடேஸ்வரர் பூவார் கழல்களே சரணம்
ஸ்ரீ பெரும் தேவித் தாயார் ஸமேத ஸ்ரீ பேர் அருளாளன் துயர் அறு சுடர் அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ ஞான சாரம்–தனியன்கள்-/பாசுரங்கள் 1-10—ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் விரிவுரை — –

August 29, 2021

கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே!
ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம்!!

கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் (அவதரித்தவரும்) தோன்றியவரும்,
துறவிகளுக்குத் தலைவரான ஸ்ரீராமாநுஜரைத் தஞ்சம் புகுந்தவரும்,
தமது ஞானஸார, ப்ரமேயஸார நூல்களில் ஆசார்ய பெருமை பேசியவருமான
அருளாள மாமுனியைப் பற்றுகின்றேன்.

ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் !
சதுர்த்தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே !!

ராமாநுஜாச்சார்யருக்கு நல்ல சீடரும் வேதம் முதலிய அனைத்து சாஸ்த்ரங்களில் வல்லுநரும்,
நான்காவது நிலையான துறவறத்தை மேற்கொண்டவருமான அருளாள மாமுனியை வணங்குகிறேன்.

(ராமாநுஜார்ய ஸச் சிஷ்யம்)
யக்ஞ மூர்த்தி என்னும் பூர்வாசார பெயருடன் முன்னைய நிலையில்
எம்பெருமானாரோடு பதினெட்டு நாட்கள் நடத்திய வேதாந்த விசாரத்தில் தர்க்கம் செய்து
எம்பெருமானாரைச் சோர்வுறச் செய்கையில்,
பேரருளாளரான அத்திகிரி வரதராஜப் பெருமாள் கனவில் தோன்றி,
“எம்பெருமானாரே! நீர் சோர்வுற வேண்டா, உமக்குத் திறமையுடைய ஒரு நற்சீடனை உண்டாக்கிக் கொடுத்தோம்.
அவனை வெல்வீராக” என்று உரைத்த குருபரம்பரைத் தொடர்களை இங்கு நினைவு கூர்க.

(வேத சாஸ்திரார்த்த ஸம்பதம்) –
உடையவரோடு பதினெட்டு நாட்கள் தர்க்கம் பண்ணின திறமையாலும் ஞானஸார ப்ரமேயஸார நூல்களில்
வேதம் முதலிய சாஸ்திரங்களிலிருந்து சாரமான கருத்துக்களை அழகிய வெண் பாக்களினால்
எடுத்துரைத்தமையாலும், இவரது சாஸ்திர புலமை நன்கு விளங்கும்.

(தேவராஜ முனிம்) –
தேவராஜனான பேரருளாளனுடைய திருவருளால் எம்பெருமானாருக்கு சீடரான பெருமையும்,
ஞான, பக்தி, வைராக்யங்களில் ராமாநுஜ முனிக்கு நிகராக விளங்கிய சிறப்பும் பற்றி
“அருளாள முனி” என்று திருநாமம் பெற்றமையும் உணரப்படுகிறது.

————-

சுருளார் கருங்குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் – சொன்ன
பொருள் ஞான ஸாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கொளிசேர்
அருளாள மாமுனியம் பொற்கழல்கள் அடைந்த பின்னே.

நான்கு வேதங்களிலிருந்து உட்பொதிந்த ஆழ் பொருள்களையும், திருமந்திரத்தின் மெய்ப்பொருள்களையும்
ஞானஸார ப்ரமேயஸாரம் என்னும் நூல்களைக் கொண்டு அறிவைப் புகட்டியவரும்,
ஞானச் சுடர் விளக்காய் விளங்குபவரும், அருளாள மாமுனி என்னும் திருநாமம் உடையவருமான ஆசார்யருடைய,
அழகியதும், அனைவருக்கும் அடையத் தகுந்ததுமான அவரது திருவடிகளை அடைந்த பிறகு,
ஊழ் வினைகள் அழிவதற்கான வழியை அறிந்து கொண்டேன்.
ஊழ் வினையால் அறிவில் மயக்கம் ஏற்படுகிறது. அவ்வறிவு மயக்கத்தால் பெண்வழிச் சேரலில் துவழ்ச்சி ஏற்படுகிறது.
அத் துவழ்ச்சிக் காரணமாக அவர்களது சுருண்ட கருங்கூந்தலிலும் வேல் போன்ற பார்வையிலும் மனம் நெகிழ்கிறது.
அருளாள மாமுனிகளின் திருவடிகளை அடைந்த பிறகு காமம் முதலிய
இக் குற்றங்களிலிருந்து நீங்குவதற்கு வழி அறிந்து கொண்டேன் என்பது கருத்து.

அருளாளப் பெருமாள் எம்பெருமானாராகிற ஆசார்யருடைய திருவடிகளைப் பற்றின பிறகு
அவர் அருளிச் செய்த ஞான ஸார ப்ரமேய ஸார ப்ரபந்தங்களால் அறிவுக்குத் தெளிவு பிறந்தது.
அதனால் பெண்களின் அழகிய கூந்தலிலும் வேல் போன்ற விழியிலும்
மனம் நெகிழும் தீய வினைகளை அழிக்கும் வழிகளை அறியப் பெற்றேன் என்று கருத்து.

பெண்ணாசையைச் சொன்ன இதில் மற்றும் உண்டான கோபம், உலோபம், மோகம், மதம், பொறாமை
முதலிய குற்றங்களும் அடங்கும்.
“காமம், வெகுளி, மயக்கம் இம்மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய்” என்ற திருக்குறளின் சொல்படி
மனிதப் பண்பாட்டை அழிக்கும் குற்றங்கள் ஆசார்ய கடாக்ஷத்தால் தீரும் என்பது பாடலின் அருங்கிய கருத்து.
இதனால் இவ்வாசிரியருடைய பெருமை கூறப்பட்டது.

————

முதல் பாட்டின் முகவுரை

ஆன்மாவுக்குப் பேரின்பம் கொடுப்பது வீடுபேறு ஆகும்.
அதை அடைவதற்கு (1) திருமந்திரம் (2) த்வயம் (3) சரம ச்லோகம் என்று மூன்று மந்திரங்களின்
உண்மைப் பொருளை குருவின் மூலம் தெரிந்து கொள்ள வேணும்.
இம்மூன்று மந்திரங்களுக்கும் “இரகசியம்” என்று பெயர்.
இதைத் தெரிந்து கொள்ள வேணும் என்ற அவாவுடையோர்க்கு அன்றி ஏனையோர்க்குச் சொல்லலாகாது என்று மரபு உண்டு.
இவ்வாறு மறைத்து வைப்பதால் இதற்கு இரகசியம் என்று பெயர் இடப்பட்டது.
இம்மூன்று மந்திரங்களும் அனைத்து வேதாந்தக் கருத்துக்களின் முடிவாய்த் திகழ்வன.
மேலும் இம்மூன்றும் பரம்பொருளின் உண்மை, பரம்பொருளை அடைவதற்கு வழி, பரம்பொருளை அனுபவித்து நுகரும் பேரின்பம்
ஆகிய இவற்றின் உண்மைகளை உள்ளது உள்ளபடி சொல்லக்கூடியன.
இம்மூன்று மந்திரங்களும் பிறவிப் பெருங்கடலில் உழலும் ஆன்மாக்கள் கரைசேர்வதற்காக
(துன்பத்திலிருந்து விடுபடுவதற்காக) பகவானால் சொல்லப்பட்டவை ஆகும்.

“திருமந்திரம்” பதரிகாச்ரமத்தில் பகவான் தானே நாராயணனான ஆசார்யனாயும் நரனாகிற சீடனுமாயுமிருந்து வெளிப்படுத்தியது.
“துவய மந்திரம்” ஸ்ரீவைகுண்டத்தில் பெரிய பிராட்டியாருக்கு பகவானால் உபதேசிக்கப்பட்டது.
“சரம சுலோகம்” மஹாபாரத யுத்தத்தில் அர்ஜுனனுடைய தேர்த்தட்டிலிருந்து கொண்டு அவனைக் குறித்து சொன்ன
பகவத் கீதையின் இறுதியில் கண்ணபிரானால் சொல்லப்பட்டது.
இம்மூன்று மந்திரங்களும் குருபரம்பரை வழிவழியாக உபதேசத்தாலே சொல்லப்பட்டு வருவன.
செம்பொருள் கண்டவர்களில் முன்னோடிகளும் நம்முடைய முன்னோர்களுமான ஆசார்யர்களுக்கு இவையே மேலான
செல்வமாய் விளங்குவன மற்றும் அவர்களுக்கு நாடோறும் மனனம் செய்வதற்கு உரியனவாயும் இருப்பன.

இத்தகைய பெருமையுடையனவாய் விளங்குவன இம்மூன்று மந்திரங்களும்.
இவற்றுள் முதல் மந்திரமாய் விளங்குவது திருமந்திரம். இதற்கு “முதல் ரகசியம்” என்று பெயர்.
இது மூன்று பதங்களைக் கொண்டது. அவை “ஒம்” என்றும் “நம:” என்றும் “நாராயணாய” என்றும் சொல்லப்படும்.
இந்த மூன்று பதங்களில் முதல் பதமான “ஒம்” என்ற ப்ரணவத்தின் கருத்தை நடுப்பதமான “நம:” என்ற பதமும்
“நாராயணாய” என்ற பதமும் தெளிவு படுத்துவனவாகும்.
அதாவது “ஒம்” என்பது சுருக்கமாகப் பொருளைச் சொல்வது
“நம:” என்பதும் “நாராயணாய” என்பதும் அதனை விளக்கமாகச் சொல்வனவாகும்.

இங்ஙனம் திருமந்திரத்திலுள்ள நடுப்பதமான “நம:” பதத்தின் கருத்தையும் “நாராயணாய” என்ற கடைசி பதத்தின் கருத்தையும்
த்வய மந்திரத்தில் முறையே முதற்பகுதியும், பிற்பகுதியும் விளக்குவனவாகும்.
முதற்பகுதி, பிற்பகுதி என்ற இத்தகைய இரண்டு பகுதிகளைக் கொண்ட த்வய மந்திரம் மந்திரங்களுக்குள் சிறந்ததான
“மந்திர ரத்தினம்” என்று போற்றப்படும். அதன் முதற்பகுதியில் பகவானை அடைக்கலம் புகும் முறைகள் சொல்லப்படுகின்றன.
அதாவது பகவானுடைய திருவடிகளில் அடைக்கலம் புகும் போது எல்லா பற்றுதல்களையும்
தடம் தெரியாமல் விட்டே பற்றவேண்டும் என்றும், அவ்வாறு பகவானுடைய திருவடிகளைப் பற்றுதலையும்
ஒரு பற்றுக் கோடாகக் கருதாமல் அவன் பாதமே தஞ்சமென்ற உறுதிப்பாட்டில் இருக்கவேண்டும் என்றும் குறிக்கிறது.
பிற்பகுதியில் மேற்கூறியவாறு உறுதி பூண்டுள்ள அடியவர்க்குப் பயன் பிராட்டியும் பெருமாளும் கூடின
இருவருமான சேர்த்தியில் தொண்டு செய்வதேயாகும் என்பதாம்.

இது இராமாயணத்தில் சீதையும் இராமனுமான இருவருடைய சேர்த்தியில் இளைய பெருமாள்
தொண்டு செய்து வாழ்ந்தது போன்றதாகும்.
இத்தகைய (பேறு) ஊழ்வினையினால் வரும் அனைத்துத் தடைகளும் (பாபங்களும்) தடம் தெரியாமல் நீங்கிய பிறகே கை கூடுவதாகும்.
இவ்வாறான த்வய மந்திரத்தின் முதற்பகுதியும், பிற்பகுதியும் ஆகிய இரண்டு பகுதிகளின் கருத்துக்களையும்
“சரம சுலோகம்” எனப்படும் மூன்றாவதான மந்திரம் விளக்கமாக எடுத்துரைக்கிறது.
ஆகவே மூன்றாவதான சரம சுலோக மந்திரம் த்வய மந்திரத்திற்குச் சார்புடையதாய் நிற்கிறது.
ஆக இம்மூன்று மந்திரங்களிலும் த்வய மந்திரமே முக்கியமாக நம்முடைய முன்னோர்களான ஆசார்யர்களால் எண்ணப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்பு மிக்க த்வய மந்திரத்தின் முதற்பகுதியால் சொல்லப்படுவது என்ன?
பகவானுடைய திருவடிகளில் அடைக்கலம் புகுவது. அது இரண்டு வகையாகும்.
“இப்பொழுதே வீடு பேறு அடைய வேண்டும்” என்னும் வேகத்தில் அடைக்கலம் புகுவது ஒன்று.
மற்றொன்று “உன் திருவடிகளில் அடைக்கலம் புகுகின்றேன். நீ எப்பொழுது வீடு பேறு அளிக்கிறாயோ
அப்பொழுது கொடுப்பாயாக” என்று அடைக்கலம் புகுவது.
இவ்விரண்டினுள் மிக விரைவில் வீடு பேறு அடைய வேண்டும் என்ற நோக்குடன் செய்யும் அடைக்கலமே சிறப்புற்றதாகவும்
மற்றது சிறப்பற்றதாகவும் கருதப்படும்.

இங்குக் கூறிய மிக விரைவுடன் செய்யும் அடைக்கலத்தின் இலக்கணங்கள்
ஞானசாரமாகிற இந்நூலில் முதல் பாடலான “ஊன உடற் சிறை” என்னும் பாடலில் சொல்லப்படுகின்றன.

“ஊன உடல் சிறை நீத்து ஒண் கமலை கேள்வனடித்
தேன் நுகரும் ஆசைமிகு சிந்தையராய்த் – தானே
பழுத்தால் விழும் கனி போல் பற்றற்று வீழும்
விழுக்காடே தான் அருளும் வீடு”

பதவுரை :-

ஊன – மாமிச மயமான
உடல் – சரீரமாகிற
சிறை – சிறைச் சாலையை
நீத்து – துறந்து (விட்டு நீங்கி)
ஒண் கமலை கேள்வன் – அழகிய தாமரைப் பூவை இருப்பிடமாகவுடைய லக்ஷ்மீ தேவியின் மணாளனான பகவானுடைய
அடித் தேன– திருவடிகளின் இனிமையை
நுகரும் – துய்க்கும் (அனுபவிக்கும்)
ஆசை மிகு சிந்தையராய் – ஆசை மிகுந்த மனதை உடையவராய்
பழுத்தால் – பழுத்துக் கனிந்தால்
தானே விழும் – தானே விழுகின்ற
கனி போல் – பழம் போல்
பற்றற்று – ஒட்டுதல் அற்று
வீழும் – சரணாகதி செய்யும்
விழுக்காடு தானே– அச்சரணாகதியே
வீடு அருளும்– வீடு பேற்றைக் கொடுக்கும்

உடல், மாமிசமயமானது. அது சதை, நரம்பு, எலும்பு, மஜ்ஜை, விஷ்டை, மூத்திரம் முதலிய
உட் குற்றங்கள் பலவும் நிரம்பியதொன்று. இதை “புண்ணாராக்கை” என்று கூறுவர்.
ஈயின் சிறகளவு தோல் உரித்தாலும் ஈ, எறும்பு, காகம் முதலிய ஜந்துக்கள் மொய்த்துக் கொள்ளும்.
(நாலடியார் துறவறவியல் – தூய்தன்மை – முதல் பாடல்).
உடல் உட்புறத்தை வெளிப்புறமாக்கினால் காக்கையை விரட்டுவதே காலமெல்லாம் பணியாக யிருக்கும்.

இவ்வாறு மிகவும் அருவருக்கத் தக்கதாயுள்ள இச்சரீரத்தின் குற்றங்களை உணர்பவர்களுக்கு
“நான்” என்று சொல்லப்படும் ஆன்மாவாகிற தான் இதனுள் இருக்கும் இருப்பு
(அதாவது உண்டு, உடுத்து வாழ்ந்து வருவது) சிறையில் அடைபட்டவன் போன்று கருதப்படுவதாகும்.

சட்டிக்குள் வைக்கப்பட்ட மாணிக்கத்தின் ஒளி உள்ளேயே அடங்கியிருப்பது போல
உடலுக்குள் அகப்பட்ட ஆத்மாவின் ஞான குணங்கள் அதற்குள்ளேயே சுருங்கிக் கிடக்கின்றன.
அதாவது ஆன்மா, உடலில் மறைந்து இருக்கிறது.
இதுவே ஆன்மாவுக்கு இறைவன் கொடுத்த சிறை தண்டனை என்று உணரலாம்.
இதனை சிறையாக உணராமல் இன்பமாக உணர்வது மூடர் செயலாகும்.
ஆகவே உடலின் உண்மைத் தன்மையை உணரும் அறிவுடையார் (ஞானிகள்) உலக வாழ்வை அருவருத்து
அதிலிருந்து விடுபடுவதற்கு முயலுவர்.
அவ்வாறு உடற்சிறையிலிருந்து விடுபடுவதற்கு முயலும் அறிவுடையார் (ஞானிகள்)
இறைவனிடம் சரணாகதி செய்வது தவிர வேறு வழியைக் காணமாட்டார்கள்.
இச்சிறையிலிருந்து ஆன்மாவை விடுவிப்பதும் இறைவனே என்ற உண்மையை கீதையில் பகவான் அருளிச் செய்துள்ளான்.
ஆன்மாவுக்குச் சரீரம் எற்பட்டது ஆன்மா செய்த வினைப்பயனால் ஆகும்.
அவ்வினையைச் சரணாகதி நெறியினாலன்றி வேறொன்றினால் கடக்க முடியாது.
“என் காலைக்கட்டி சரணாகதி பண்ணினால் நான் அச்சிறையிலிருந்து (ஆன்மாவை) விடுவிக்கிறேன்” என்று பகவான் கூறியுள்ளான்.

ஒரு குருவி பிணைத்த கூட்டை நம்மால் பிரிக்க முடிவதில்லை.
வினைப்பயனால் சர்வ சக்தியுடைய இறைவன் பிணைத்து வைத்த இவ்வுடலாகிற கூட்டை
நம்மால் பிரிக்க முடியுமா? என்று கூறியுள்ளார்.
சிறையில் அடைபட்ட செல்வந்தனுக்கு வெளியில் வந்து சுக போகங்களை அனுபவிப்பதைக் காட்டிலும்
சிறையிலிருந்து விடுபடுவதே முக்கியமாகும்.
அதுபோல ஆன்மா, சரீரச் சிறையிலிருந்து விடுபடுவதே அவசியமானது. சிறை என்பது மிகவும் இழிந்ததல்லவா?
ஆகவே உடல் சிறையிலிருந்து தப்புவதற்கு சரணாகதி ஒன்றே வழியாகும்.

அவ்வாறு சரணாகதி செய்யும் போது த்வய மந்திரத்தில் சொல்லியபடி பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு
பகவான் திருவடிகளில் சரணாகதி பண்ணவேண்டும்.
அவன் திருவடிகளில் சரணாகதி பண்ணுவது தேனைச் சுவைப்பது போன்று மிக இனிமையாக இருக்கும்.
அவ்வினிமையை அனுபவித்தவர்களின் மனம், மிக்க விருப்புடன் அதிலேயே தோய்ந்திருக்கும்.
குழந்தை தாய்ப்பாலை சுவைப்பதற்கு எப்படி ஆர்வமுடன் இருக்குமோ,
அது போல சரணாகதி செய்பவன் இறைவன் திருவடித் தேனை நுகருவதில் ஆர்வமோடு இருப்பான்.
அவ்வார்வத்தினால் அவன் திருவடியைப் பற்றும் போது தான் முன்பு பற்றிக் கொண்டிருந்த உலகப் பற்றுக்களை அறவே விட்டு விடுவான்.
அப்பற்றுதல்களும் தாமே இவனை விட்டு விலகி விடும் என்பது இப்பாடலின் கருத்து.
இது எது போன்றது என்றால் மரத்தில் கனிந்த பழம் காம்பை விட்டுத் தானே கீழே விழுவது போன்றாய்
எல்லாப் பற்றுதல்களும் தானே விட்டுப் போகும்படி பகவான் திருவடிகளில் வீழ்வது சரணாகதியாகும்.
இச்சரணாகதி மிகவும் விரைவுடன் செய்யப்பட்டால் உடனே பகவானுக்கு இரக்கம் எற்பட்டு அவனுக்கு வீடுபேறு அளிப்பான்.
அவசரமில்லாமல் சரணாகதி செய்தாலும், இச்சரீரம் கழிந்தவுடன் வீடு பேறு அளிப்பான்.

ஆகவே, சரீர வாழ்வை சிறை என்று உணர்ந்து அதிலிருந்து தப்ப விரும்புபவன் பகவான் திருவடியை அனுபவிக்கும்
ஆசையுடையவனாய் பிராட்டி பரிந்துரையுடன் வெளிவுலகப் பற்றுக்களை அறவே விட்டு இறைவன் திருவடிகளில்
சரணாகதி பண்ணினால் அச்சரணாகதிக்கு இரங்கி இறைவன் உடனே வீடளிப்பான்.
ஆகவே, பரபரப்புடன் பண்ணும் சரணாகதி உடனே மோட்சம் தரும் என்பது இப்பாட்டின் கருத்து.

வீடு பேறு என்பது பிறவிக்கடலை கடந்து பகவானாகிற கரையை அடைதலாகும்.
“அக்கரையென்னும் அணர்த்தக் கடலுள் அழுந்தி இக்கரையேறி இளைத்திருந்தேன்”
(பெரியாழ்வார் திருமொழி – 5ம் பத்து – 3ம் திருமொழி – 7ம் பாசுரம்) என்றார் பெரியாழ்வார்.

இவ்விடத்தில் ஒரு வேதாந்த விசாரம் செய்யப்படுகிறது.
சரணாகதியே மோட்சம் தரும் என்ற கருத்தைச் சொன்னால் பகவானே மோட்சம் தருபவன் என்ற சித்தாந்தத்தோடு முரண்படாதா?
மேலும், சரணாகதி என்ற ஞானமில்லாத செயலுக்கு, மோட்சம் தரும் ஆற்றலுண்டு என்று சொல்வதும் உண்மைக்கு மாறாகாதா?
என்ற வினாக்கள் எழுகின்றன. இதன் பதில் வருமாறு:-

பக்தன் செய்யும் சரணாகதியோ, பக்தியோ தவமோ நோன்புகளோ எதுவாகயிருந்தாலும்
அவை அவனை மோட்சத்திற்குத் தகுதியுடையவனாக மட்டும் ஆக்கும் அவையே தவிர, மோட்சத்தைத் தரமாட்டா.
இத்தகைய சரணாகதிக்கு இரங்கி பகவான் தான் மோட்சம் தருவான் என்பது உண்மை.
இதை, சாஸ்திரம் “அதிகாரி விசேஷணம்” என்று கூறும்.

இதற்கு உதாரணம் – மேடான இடத்தை ஆழப்படுத்தி ஏரி கட்டுகிறார்கள்.
மழை பெய்யும் போது ஏரியில் தண்ணீர் நிரம்புகிறது. ஏரி கட்டுவது மழை பெய்வதற்குக் காரணமாகாது.
ஆனால், மழை பெய்யும் போது ஏரி இருந்தால்தான் மழை நீர் தேங்கும்.
அது போல ஆன்மாக்களிடத்திலுள்ள சரணாகதி முதலிய எந்த புண்ணியமும் பகவான் அருள் செய்வதற்குக் காரணமாகமாட்டா.
பகவானுடைய அருள் எந்த காரணத்தையும் எதிர்பாராமல் இயற்கையாக தானே வருவது.
அந்த அருள் தானாக வரும் போது அதை எற்றுக் கொள்ள ஆத்மாக்கள் தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும்.
அந்தத் தகுதியுடைமையே “சரணாகதி” என்றும் “பக்தி” என்றும் நோன்பு புண்ணியங்கள் என்றும் சொல்லப்படுகின்றன.
இப்படித் தகுதியுடைமையைக் காரணம் என்று சொல்ல முடியாது.

“வனத்திடரை எரி ஆம் வண்ணம் இயற்றும் இதுவல்லால் மாரி யார் பெய்கிற்பார்? மற்று என்று
பூதத்தாழ்வார் இதைத் தெளிவுபடுத்தினார்.
ஆகவே, “இவை சரணாகதி பெறுவதற்குரிய தகுதியைத்தான் உண்டு பண்ணும்; பகவான் தானே வீடு தருவான்”
என்ற உண்மைகள் இங்கு கிடைக்கின்றன.
மாம்சமயமான சரீரத்தில் வாழ்வதைச் சிறையில் இருப்பதாகக் கருதி விடுதலையடைய மனம் துடிதுடிக்க வேணும்.
லக்ஷ்மீ நாயகனான பகவான் திருவடிகளின் சுவையை அனுபவிக்க ஆசைப்பட்டு அவன் திருவடிகளில் விழுவதே சரணாகதி ஆகும்.
அது கனிந்த பழம் காம்பிலிருந்து விழுவது போல சகல பற்றுதல்களையும் விட்டுச் செய்யப்படுவதாகும்.

மோட்சத்தை அடைவதற்கு சரீரம் விரோதியாகும்.
அவ்விரோதியை அழிப்பதற்கு பகவான் திருவடிகளில் பண்ணும் சரணாகதியே ஆயுதமாகும்.
இதற்கு விளக்கமாக ராமாயணத்தில் பரதனும் , விபீஷணனும் இராமன் திருவடிகளில் சரணாகதி செய்த கதையைக் காணலாம்.
பரதன் தன் தாயினால் துன்பம் அடைந்தவன். விபீஷணன் தன் அண்ணனால் துன்பம் அடைந்தவன்.
இருவரும் தங்கள் துன்ப நிலையைத் தாங்க மாட்டாதவர்களாய் உள்ளனர்.

“தொழுது உயர் கையினன், துவண்ட மேனியன்,
அழுது அழி கண்ணினன், ‘அவலம் ஈது’ என
எழுதிய படிவம் ஒத்து எய்துவான்
‘பரதனும் தொழுது தோன்றினான்’ மலரடி வந்து வீழ்ந்தனன்”–(கம்பராமாயணம் – அயோத்திய காண்டம் – திருவடி சூட்டு படலம் – 49)

இது பரதனின் சரணாகதி இதுவே “அதிகாரி விசேஷணம்” எனப்படும்.
இதுவே பகவான் அருளுவதற்கு உரிய தகுதியாகும்.

“கரங்கள் மீச் சுமந்து செல்லும் கதிர் மணி முடியன், கல்லும்
மரங்களும் உருக நோக்கும் காதலன், கருணை வள்ளல்
இரங்கினன் நோக்கும் தோலும், இருநிலத்து இறைஞ்சுகின்றான்
வரங்களின் வாரி அன்னதாள் இணை வந்து வீழ்ந்தான்”–(கம்பராமாயணம் – யுத்த காண்டம் – விபீஷணன் அடைக்கலப் படலம் – 137)

இதுவே விபீஷணன் நிலை.

இவை இரண்டு நிலைகளும் ஆன்மா உடற்சிறை வேதனையிலிருந்து விடுபடுவதால்
பகவான் திருவடிகளில் சரணாகதி பண்ணுவதற்கு ஒப்பாகும்.
பரதனுக்கு கைகேயியினால் வந்த துன்பம், விபீஷணனுக்கு இராவணனால் வந்த துன்பம்,
ஆன்மாவுக்கு உடற்சிறையினால் வந்த துன்பம்
எத்துன்பமாக இருந்தாலும் துன்பம் தீருவதற்கு வழி பகவான் திருவடிகளில் பண்ணும் சரணாகதியே.
மேலே சொன்ன பரதனும், விபீஷணனும் துன்பத்தை உடனடியாகத் தீர்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் சரணாகதி செய்துள்ளார்கள்.
அவ்வாறே இவ்வான்மாவும் உடனடியாக உடற்சிறைத் துன்பத்திலிருந்து விடுபடத் துடிதுடிப்புடன் சரணாகதி செய்கிறான்.
“உண்டு கொல் உயிர்? ” என ஒடுங்கினான் உருக் கண்டனன்,
நின்றனன் – கண்ணன் கண் எனும் புண்டரீகம் பொழி புனல் –
அவன் சடாமண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே.

“அயாவுயிர்த்து, அழுகணீர் அருவி மார்பிடை
உயர்வுற, திருவுளம் உருக, புல்லினான்
நியாயம் அத்தனைக்கும் ஒர் நிலை ஆயினன்
தயா முதல் அறத்தினைத் தழீ இயது என்னவே”–(கம்பராமாயணம் – அயோத்தியா காண்டம் – திருவடி சூட்டு படலம் – 55)

இது பரதனிடம் ராமன் காட்டிய இரக்கம்.

இனி விபீடணனிடம் காட்டிய இரக்கம் காணலாம்..!

“குகனொடும் ஐவர் ஆனோம் முன்பு பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம், எம் முழை அன்பு வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனோம்
புகல் அருங்கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் – நுந்தை”–(கம்பராமாயணம் – யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப் படலம் – 143)

“திருவடி முடியின் சூடி, செங்கதிர் உச்சி சேர்ந்த
அருவரை என்ன, நின்ற அரக்கர்தம் அரசை நோக்கி
இருவரும் உவகை கூர்ந்தார், யாவரும் இன்பம் உற்றார்,
பொரு அரும் அமரர் வாழ்த்தி, பூமழை பொழிவதானார்”–(கம்பராமாயணம் – யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப் படலம் – 145)

“தேடுவார் தேடநின்ற சேவடி, தானும் தேடி
நாடுவான் அன்று கண்ட நான்முகன் கழீ இய நல்நீர்
ஆடுவார் பாவம் ஐந்தும் நீங்கி, மேல் அமரர் ஆவார்,
சூடுவார் எய்தும் தம்மை சொல்வார் யாவர்? சொல்லீர்”–(கம்பராமாயணம் – யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப் படலம் – 150)

இவ்வாறே வேதனையுடன் “சரணாகதி பண்ணும் ஆன்மாக்களிடம் பகவான் இரங்கி அருள் செய்வான்” என்பது கருத்து.
இதை “இரக்கம் உபாயம், இனிமை உபேயம்” என்று சுருங்கச் சொன்னார்கள் ஆசார்யர்கள்.

மேலே கூறின பரத, விபீஷண சரணாகதிகளில் விபீஷண சரணாகதி பலித்ததாகவும்
பரத சரணாகதி பலிக்காததாகவும் தெரிகிறது.
“பரதனுக்கு நன்மைதானே தீமையாயிற்று” என்ற வாக்கியமும் காணலாம்.
ஆகவே தான் சரணாகதி முதலிய சாதனங்கள் எல்லாம் அதிகாரி விசேஷணமாகச் சொல்லப்படுவதன்றி
சாதனமாகச் சொல்லப்படுவதில்லை.
சரணாகதி வீடு தரும் என்றது கால தாமதமின்றி வீடு அளிக்கும் என்பதைப்பற்றிச் சொன்னது.
அதற்கு வீடு அளிக்கும் சக்தி கிடையாது.
இவ்வாறு சரணாகதியைப் பற்றிய பல உண்மைகளை இப்பாடல் உரையில்
மணவாள மாமுனிகள் விளக்கி யிருக்கிறார் என்பதை இங்கு உணர வேணும்.

————-

நரகும் சுவர்க்கமும் நாண்மலரள் கோனைப்
பிரிவும் பிரியாமையுமாய்த் – துரிசற்றுச்
சாதகம்போல் நாதன் தனதருளே பார்த்திருத்தல்
கோதிலடியார் குணம்–2-

நாண் மலராள் கோனை – திருவின் மணாளனை (திருமாலை)
பிரிவு – பிரிந்திருப்பது
நரகம் – துன்பமுமாய்
பிரியாமை – கூடி யிருப்பது
சுவர்க்கமுமாய் – இன்பமுமாய்
துரிசற்று – குற்றமற்று
சாதகம் போல் – சாதகப் பறவை போல (மழையையே எதிர்பார்த்திருக்கும்)
நாதன் தனது – பகவானுடைய
அருள் – கருணையையே
பார்த்திருத்தல் – எதிர்பார்த்திருத்தல்
கோதிலடியார் – குற்றமற்ற அடியார்களது
குணம் – இயல்பாகும்

நரகும் சுவர்க்கமும் என்ற சொற்கள் துன்பத்தையும் இன்பத்தையும் குறிக்கின்றன.
“துன்பமும் இன்பமும்” என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தில்
“இன்பமில் வெந்நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்” என்ற இடத்திற்கு உணரச் செய்கையில்
“சுக துக்கங்கள்” என்று உணர சொல்லப்பட்டிருக்கிறது.
ஆகவே நரகு என்றால் துன்பம் என்றும் சுவர்க்கம் என்றால் இன்பம் என்றும் பொருள் கொள்ள வேண்டும்.

பரபக்தியுடையவர்களுக்கு எது துக்கம்? எது சுகம்? என்பதை மேல் தொடர் விவரிக்கிறது.
நாண்மலராள் கோன் (பெரிய பிராட்டியாருக்குத் தலைவன்) அவனைப் பிரிதல் துன்பம் என்றும்
பிரியாமை (அவனோடு கூடியிருத்தல்) இன்பம் என்றும் சொல்வர்.

பரபக்தி என்றால் பிரிவில் ஆற்றமாட்டாமை, கூடிடில் ஆற்றாயிருத்தல். இதற்கு உதாரணம் பின்வருமாறு.

ஸ்ரீராமாயணத்தில் பெருமாள் (இராமன்) காட்டிற்கு எழுந்தருளும்போது பிராட்டி நானும் கூட வருவேன் என்று சொல்ல
அதற்குப் பெருமாள் நகர வாசத்திற்கும் வன வாசத்திற்குமுண்டான வேறுபாடுகளை எடுத்துரைத்து
அதனால் காட்டிற்கு உடன் வருவது துன்பம் என்றும், அரண்மனையில் இருப்பது இன்பம் என்றும் அருளிச் செய்தார்.

அதைக் கேட்ட பிராட்டி, “இன்ப துன்பங்கள் நீர் சொல்வது போல் அல்ல;
ஒவ்வொருவருக்கும் வேறு வேறாய் இருக்கும் உம்மோடு கூடியிருப்பது எதுவோ அதுவே சுகம்;
உம்மைப் பிரிந்து அரண்மனையில் இருப்பது துன்பமாகும்;
இந்த உண்மை உமக்குத் தெரியாமல் போனாலும் என்னிடம் கேட்டு அறிவீராக;
தமக்குத் தெரியாததைப் பிறரிடம் கேட்டு அறிந்து கொள்ள வேணும்; அது தவறில்லையே;
உம்மைப் போலே நாம் அளந்து அன்பு செய்யவில்லை. நான் உம்மிடம் கொண்டுள்ள அன்பு அளவு கடந்ததாகும்” என்று சொன்னாள்.

இதற்கு இராமன் “நம்மைக் காட்டிலும் உனக்கு அன்பு மலை போல் இருப்பதாய்ச் சொன்னாயே.
இதற்கு நம்மை என்ன செய்யச் சொல்கிறாய்?” என்றான்.
அதற்கு பிராட்டி “நான் முன்னே போகின்றேன். நீர் எனக்குப் பின்னாலே வரப்பாரும்” என்று கூறினாள்.
இது பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்.

இங்கு ஒரு வேதாந்த விசாரம்.
சீதை, இராமனைப் பார்த்து உம்முடன் கூடியிருந்தால் சுகம் என்றும்
உம்மைவிட்டுப் பிரிந்தால் துக்கம் என்றும் கூறினாள்.
இது அவள் அளவுக்குப் பொருத்தமாகயிருக்கும்.
இதே வார்த்தையை ஜீவாத்மா பரமாத்மாவைப் பார்த்துச் சொல்வது முறையற்றது.
பிராட்டி பகவானையே இன்பமாகக் கொண்டிருப்பவள்.
ஜீவாத்மாக்களோ பகவானையும் பிராட்டியையும் சேர்த்து இன்பமாகக் கொண்டிருப்பவர்கள்.

அதனால் பிராட்டிக்கு “ஏகாயணை” என்றும்,
ஜீவாத்மாக்கள் “மிதுனாயர்கள்” என்றும் சொல்லப் பட்டிருக்கிறார்கள்.
ஏகாயணை பகவானொருவனையே இன்பமாகக் கொண்டிருப்பவள்.
ஜீவாத்மாக்கள் மிதுனாயனர் என்று சொல்லப்படுவதால் பகவானையும் பிராட்டியையும் சேர்த்து
இருவரையும் இன்பமாகக் கொண்டிருப்பவர்கள்.
பிராட்டிக்கும் ஜீவாத்மாக்களுக்கும் உண்டான வேறுபாட்டை இவ்வாறு பிரித்து அறிய வேணும்.

“நாண் மலராள் கோனைப் பிரிவும் பிரியாமையுமாய்” –
பிராட்டியோடு கூடிய பகவானைப் பிரிதலும், பிராட்டியோடு கூடின பகவானைப் பிரியாமையும்
துன்பமும் இன்பமும் என்று சொல்லப்படுகிறது.
இளையபெருமாள் ராமனைப் பார்த்து “சீதை எப்படி உன்னைப் பிரிந்தால் வாழ மாட்டாளோ
அது போல நானும் உன்னைப் பிரிந்தால் வாழமாட்டேன்” என்று தன்னைப் பிராட்டிக்குச் சமமாகக் கூறிக் கொண்டுள்ளார்.
இங்கு பிரிவுத் துயர் பொறுக்க மாட்டாமைக்கு மட்டும் இருவரும் சமம் என்று கருத்தாகும்.

அவ்வாறன்றி ராமனை மட்டும் பற்றி நிற்கும் சீதையைப் போல் என்று பொருள் கொள்ளலாகாது.
இளைய பெருமாளுக்குப் பிராட்டியும் பெருமாளும் சேர்ந்திருக்கும் நிலையே இன்பமாகக் கொள்ள வேணும்.
ஆகவே தான் காட்டுக்குப் புறப்படும் பொழுது
“நீயும் சீதையும் மலை தாழ்வரைகளில் உலாவும் பொழுதும், உறங்கும் பொழுதும், விழித்திருக்கும் பொழுதும்
உங்கள் இருவருக்கும் நான் எல்லா அடிமைகளும் செய்ய வேணும். அதற்காகவே என்னை அழைத்துச் செல்லவேணும்” என்று
இலக்குவன் கூறியுள்ளதால் பகவான், பிராட்டி இருவருக்கும் சேர்த்து செய்யும் அடிமையே ஆன்மாக்கள் எல்லோருக்கும் உரிமையாகும்.

துரிசற்று – துரிசு – குற்றம். அற்று – அது இல்லாமல் அதாவது
பகவானையும் பிராட்டியையும் பிரிந்தால் துன்புற்றும் அவர்களைக் கூடினால் இன்புற்றும் அமைந்த பக்தி உண்டானால்
அதை (தகுதியுடைமையாக) அதிகாரி விசேஷணமாகக் கொள்ள வேணும்.
அதாவது
சாப்பிடுவதற்கு பசி எப்படி அவசியமோ அது போல பகவானை அனுபவிப்பதற்கு பக்தி வேணும்.
இந்த பக்தி சாதனமாக ஆகாது. பக்தியை உபாசகர்கள் சாதனமாகக் கொள்ளுகிறார்கள்.
சரணாகதர்கள் சாதனமாகக் கொள்ளமாட்டார்கள். சாதனமாகக் கொண்டால் அது குற்றமாகும்.
இங்கு துரிசற்று என்பதால் பக்தியை சாதனமாகக் கொள்ளும் குற்றம் இல்லாதவர்கள் என்று பொருள்.

“சாதகம் போல் நாதன் தனதருளே பார்த்திருப்பர்” – அதாவது
மழை நீரை யல்லது பருகாத சாதகப் பறவை விடாயினால் நாக்கு ஒட்டினாலும் மழை நீரையே பார்த்திருக்கும்.
அது போல இவ்வாத்மாவுக்கு வகுக்கப்பட்ட பகவானுடைய அருளையே அவனை அடைவதற்குச் சாதனமாக அறுதி யிட்டு
அவ் வருளையே பார்த்திருத்தல் குற்றமற்ற அடியார் குணம் “துணியேனினி நின்னருளல்லது நின்னருளே புரிந்திருந்தேன்” என்ற
ஆழ்வார் பாசுரங்களாலும் இக்கருத்தைக் காணலாம்.

“கோதிலடியார்குணம்” – அடியார் என்பதற்கு
வேறுவேறு பயன்களிலும், வேறுவேறு சாதனங்களிலும் தொடர்பு கொண்டிருக்கும் குற்றமில்லாதவர் என்று பொருள்.
தங்களுடைய அடிமை இலக்கணத்திற்கேற்ப பகவானையே ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்போனும் அவனே.
அடைய வேண்டியவன் ப்ராப்தா அடைய வழியாய் இருப்பவன் ப்ராபகன்.
அடைந்த பிறகு இவ்வாத்மாவுக்கு பகவானே வகுக்கப்பட்ட தலைவன் என்பது உண்மை.

ஆகையால் இப் பாட்டில் முன்னடியால் “பயன் பகவானே” என்ற கருத்தும்
பின்னடியால் “சாதனமும் பகவான்” என்ற கருத்தும் தோன்றச் சொல்லப் பட்டுள்ளது.
இப்படியிருப்பதே கோதிலடியார் குணம் என்று உணர வேண்டும்.

————

இதில் பரபக்தியின் பழுத்த நிலையான பரமபக்தி பேசப்படுகிறது.
அதாவது பிரிந்தால் ஆற்றமாட்டாமல் உயிர் பிரிதல் அளவுக்கு மீறிய பக்தி மிஞ்சி போகுதல்.
இதை உதாரணத்துடன் கூறுகிறார்.

“ஆனை யிடர் கடிந்த ஆழி அங்கை அம்புயத்தாள்
கோனை விடில் நீரில் குதித்தெழுந்த மீன் எனவே
ஆக்கை முடியும்படி பிறத்தல் அன்னவன்தாள்
நீக்க மில்லா அன்பர் நிலை”–3-

பதவுரை:

ஆனை கஜேந்திராழ்வானுடைய
இடர் முதலையினால் உண்டான துன்பத்தை
கடிந்த போக்கின
ஆழி அங்கை சுதர்சனம் என்னும் சக்கரத்தை அழகிய கையிலேந்திய
அம்புயத்தாள் கோனை லக்ஷ்மீ நாயகனை
விடில் பிரியில்
நீரில் தண்ணீரிலிருந்து
குதித்தெழுந்த துள்ளிக் குதித்துப் பிரிந்த
மீனெனவே மீன் போல
ஆக்கை முடியும்படி பிறத்தல் உடல் அழியும்படி நிலை உண்டாதல்
அன்னவன்தாள் அத் திருவின் மணாளனது திருவடிகளை
நீக்கமில்லா பிரிய மாட்டாதது
அன்பர் நிலை அன்புடையார் நிலையாகும்.
கீழ்ச்சொன்னதில் “பிரிவில் ஆற்றாமை, கூடில் ஆற்றுதல்” என்ற பர பக்தியின் நிலை பேசப்பட்டது.

புராணங்களிலும் ஆழ்வார் பாசுரங்களிலும் அடிக்கடி பேசப்படுவது கஜேந்திராழ்வான் சரிதம்.
கஜேந்திரனாகிற யானை பகவான் திருவடிகளில் தாமரைப் பூவை சமர்ப்பிப்பதற்காகத் தாமரைக் குளத்தில் இறங்கி
பூவைப் பறித்துக் கரையேறியது. அப்பொழுது நெடுநாளாக தன் சாபத்தைப் போக்கும் யானையை எதிர்பார்த்திருந்த
முதலை யானையின் காலைக் கவ்வியது. யானை கரைக்கு இழுக்க முதலை நீருக்கு இழுக்க தேவ வருஷத்தில் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தன.
முதலைக்கு நீர் தன்னிடமாதலாலும் பலமானதாலும் தனது விருப்பம் நிறைவேறியதால் பலம் வளர்கையாலும்
யானையை நீருக்குள்ளே இழுத்தது. யானைக்கு நீர் நிலை வேற்றிடமாகையாலும் விருப்பம் நிறைவேறாததாலும்
பலம் சிறிது சிறிதாகக் குறைந்து துதிக்கை முழுகும்படியான நிலை ஏற்பட்டதாலும்,
இனி இதுக்கு மேல் துன்பம் இல்லை என்னும்படியான ஆபத்தை அடைந்த நிலையில்

“பக்தர்களின் விரோதியை அழிக்கும் இயல்புடைய இறைவனே (சர்வேஸ்வரனே) நமக்கு “ரட்சகன்” என்று எண்ணி
“நாராயணாவோ மணிவண்ணா நாகணையாய் வாராய் என் ஆனிடரை நீக்காய்” என்று கூப்பிட்ட உடனே
பகவான் ஒடோடி வந்து கஜேந்திராழ்வானுடைய துக்கத்தைப் போக்கினான்.
யானைக்கு துக்கமாவது முதலையின் வாயிலே அகப்படுகையாலே தன் சரீரம் அழிகிறது என்றல்ல.
கையில் எடுத்த பூவை அதன் அழகு அழியாமல் பகவான் திருவடிகளிலே சமர்ப்பிக்க முடியவில்லையே என்பதுவே துக்கம்.
அத்தகைய துக்கத்தை கஜேந்திரன் நோவுபடுகிற சமயத்திலே சென்று அவனுக்கு முகம் காட்டி
அவன் துக்கத்தைப் போக்கினான் என்பது புராணக் கதை. இது இங்கு “யானையிடர் கடிந்த” என்ற தொடரால் கூறப்பட்டது.

ஆழியங்கை – “திருவாழியை அழகிய கையிலேயுடைய” என்று பொருள்.
கஜேந்திரனைக் காக்கச் சென்ற போது அவன் விரோதியான முதலையின் தலை துணிப்பதற்கு
கையிலே திருவாழியை ஏந்திக் கொண்டு அப்பொழுது சென்றான் என்பது குறிப்பு.

“மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்த்
தொழுங் காதற் களிறளிப்பான் புள்ளுர்ந்து தோன்றினையே” என்று நம்மாழ்வாரும் இதைக் குறிப்பிட்டார்.

யானை இடர்கடிய சக்கரத்துடன் சென்றது – தெளிவு.
கஜேந்திரனைக் காக்க வருகின்ற வேகத்தில் கையில் இருக்கும் திருவாழியைக் கூடி அறியவில்லை போலும்,
அறிந்திருந்தால் இருந்த இடத்திலேயிருந்த சக்கரத்தை ஏவிக் காரியம் கொள்ளலாம் அல்லவா? என்று ஒரு பொருள்.
கையில் திருவாழியை அறிந்திருந்தே அப்படிச் செய்யாமல் ஒடோடி வந்து முதலையின் தலையைத் துணித்தான் என்பது மற்றொரு பொருள்.
காரணம், கஜேந்திரன் பக்தியுடன் அவனை அழைத்துத் தொழும் காதற் களிறு என்று இதனை ஆழ்வார் அருளினார்.
அதனால் கஜேந்திரன் பகவானுடைய கையும் திருவாழியுமான அழகு காண ஆசைப்பட்டிருக்கிறவன் கையில்
பறித்த தாமரைப் பூவை பகவான் திருவடிகளில் சமர்ப்பிக்க ஆசைப்பட்டிருக்கிறவன்.
ஆகையால் அவன் இருக்கும் இடம் சென்று அவன் துக்கத்தைத் தீர்க்க வேண்டிய அவசியத்தினால்,
இருந்த இடத்திலேயே காரியம் கொள்ளாமல் தாமரை குளத்திற்குச் சென்றான்.
இதனால் “தன்னைக் காண ஆசைப்படும் பக்தர்களுக்கு ஆசைப்பட்டபடி முகம் காட்டுவான்” என்பது உட்கருத்து.
இக்கருத்து பேயார் “குட்டத்துக் கோன் முதலை துஞ்சக் குறித் தெறிந்த சக்கரத்தான்” என்றார்.

அம்புயத்தாள் கோனை:-
தாமரையைப் பிறப்பிடமாகக் கொண்ட பெரிய பிராட்டியாருக்கு நாயகனானவனை என்று இதன் பொருள்.
இதுவும் கருத்துடை தொடர். பாற்கடலில் பெருமாள் பள்ளி கொண்டிருக்க மண்மகளும், ஆய்மகளும் திருவடிகள் பிடிக்க,
திருமகளைத் திருமார்பிலே அணைத்துக் கொண்டு பள்ளி கொண்டருளா நிற்க,
அப்பொழுது கஜேந்திரன் கூப்பிட்ட அக்கூப்பீடு பகவான் திருச் செவிப்பட்டது.
அப்போது திருவடி பிடித்தவர்களின் கைகளிலிருந்து திருவடிகளை மெதுவாக இழுத்துக் கொண்டு படுக்கையிலிருந்தும்
சடக்கென எழுந்திருந்து திருக்கண்களையும் மலர விழித்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு திருமகளை அணைத்துக் கொண்டிருந்த
திருமார்பை அவ்விடத்திலிருந்து பக்குவமாக வாங்கி அதன் பிறகே அனைவரும் வியக்கும்படி,
கருடவாகனத்தில் ஏறி மிக வேகத்தோடே எழுந்தருளி ஸ்ரீகஜேந்திராழ்வான் துன்பத்தைப் போக்கினான் என்று புராணம் கூறுகிறது.

அதைப்பற்ற “அம்புயத்தாள் கோன்” என்ற கருத்து கூறப்பட்டது.
மேலும், அரசன் தன் மக்களை நல்லமுறையில் காப்பானானால் அதைக் கண்டு மகிழும் தாயைப் போல,
இறைவன் பக்தர்களை இடுக்கண் களைந்து காத்தால் அதைக் கண்டு களிப்பவள் பிராட்டியான தாயல்லவா?
அதனாலும் “அம்புயத்தாள் கோன்” என்று கூறப்பட்டது.

இதனால் “தன்னை அடைக்கலம் புகுந்தவருடைய ஆபத்து காலங்களில் அவர் இருப்பிடம் சென்று அவருக்கு உதவி காக்குமவன்” என்றும்,
அவர்களைக் காப்பது அவர்களுக்கு செய்த செயலாகக் கருதாமல் தனக்குச் செய்து கொண்ட காரியமாகக் கருதுவான் என்றும்
அத் தகையவன் பெரிய பிராட்டியாருக்குக் கணவனாவான் என்றும் பகவானுடைய இயல்புகள் கூறப்பட்டன.

விடில்:-
தன் பக்தரிடம் இப்படி அன்புடையவனாக இருக்கிறவனைப் பிரிய நேரிட்டால்;

நீரில் குதித்தெழுந்த மீனெனவே:-
நீரிலிருந்து குதித்துக் கிளர்ந்து அந்நீரைப் பிரிந்த மீன்போல;

ஆக்கை முடியும்படி பிறத்தல்:-
சரீரம் அழியும்படியான நிலை உண்டாகும்.
கலவியில் இன்பமும், பிரிவில் துயரமும் பரபக்தியின் இலக்கணம்.
அதைக் காட்டிலும் சிறப்பு பரபக்திக்கு உண்டு.
அதாவது பிரிந்தால் உயிர் போய்விடும் நிலை. இதுவே இதுக்குச் சிறப்பு.
இதை நீரை விட்டுப் பிரிந்த மீன் போல என்று உதாரணத்தோடு கூறினாராயிற்று.

அன்னவன்:-
கீழ் “அம்புயத்தாள் கோன்” என்று சொல்லப்பட்ட இறைவனை ‘அன்னவன்’ என்ற சொல்லால் இங்கே குறிப்பிடுகிறார்.
இங்கு ‘அன்னவன்’ என்றது
அப்படிப்பட்டவன் என்று பொருள்.
அல்லது
மீனுக்கு நீர்போல இவ்வான்மாவுக்கு தாரகனாயிருப்பவன் என்னவுமாம்.

தாள் நீக்க மில்லா அன்பர் நிலை –
அவன் திருவடிகளைப் பிரியப் பொறுக்கமாட்டாத அன்பு.
இப்படியிருந்துள்ள அளவு கடந்த அன்புடையவர்களது இயல்பு
அவனைப் பிரியில் நீரிலிருந்து பிரிந்த மீன் போல உயிர் போகும் நிலை உண்டாகும்.
இது பரம பக்தியின் நிலை என்பதை இப்பாடல் விளக்குகிறது.

————–

கீழ்ச்சொன்ன மூன்று பாடல்களிலும் சொல்லப்பட்ட சுருக்கமான கருத்து.
ஊன உடல் முதல் பாட்டில் –
துவய மந்திரத்தில் முதற்பகுதியில் சரணாகதியினுடைய சிறப்புத்தன்மை சொல்லப்பட்டது.
சரணாகதி செய்வதற்குக் காரணம் பிறவித் துன்பம் தாங்கமாட்டாமை.

அத்துன்பம் தாங்க மாட்டாத நிலை பரபக்தியின் அடிப்படையில் உண்டாகும் என்ற கருத்தை
“நரகும் சுவர்க்கமும்” என்ற இரண்டாம் பாட்டிலும்,

அதையும் காட்டிலும் பிரிவில் உயிரே போகும் நிலையான பரமபக்தியின் நிலை “ஆனையிடர் கடிந்த” 3வது பாட்டிலும் கூறப்பட்டன.

இனி த்வய மந்திரத்தின் பிற்பகுதியால் கூறப்படுகிற லட்சியத்தின் எல்லையான கைங்கர்யத்தின் சீர்மையை அறிந்து
வேறு பயன்களின் (தொடர்புகளை) ஆசாபாசங்களை அறவே விட்டு
ஆன்மாவின் அடிமை இலக்கணத்திற்கு ஏற்புடைய தொண்டுகளில் உறுதி பூண்டவர்களுடைய
சிறப்புத் தன்மை
இந்த நான்காம் பாடலில் கூறப்படுகிறது.

“மற்றொன்றை எண்ணாதே மாதவனுக்கு ஆட்செயலே
உற்றது இது என்று உளம் தெளிந்து – பெற்ற
பெரும் பேற்றின் மேலுளதோ பேர் என்று இருப்பார்
அரும் பேறு வானத்தவர்க்கு”–4–

பதவுரை:

மற்றொன்றை -செல்வம் முதலிய வேறு வேறு பயன்களை
எண்ணாதே -லட்சியமாகக் கருதாமல்
மாதவனுக்கு -திருமாலுக்கு
ஆட்செயலே -அடிமை செய்வதில்
இது உற்றது -இதுவே அடிமைக்கு ஏற்றது
என்று -என்று முடிவு செய்து
உளம் தெளிந்து -இதயம் தெளிவுற்று
பெற்ற பெரும் பேற்றின் மேல் -அடையப் பெற்ற இப் பெரும் பயனுக்கு மேல்
பேர் உளதோ -வேறு ஒரு பயன் உண்டோ
என்றிருப்பார் -என்று உறுதி கொண்டிருப்பார்
வானத்தவர்க்கு -வைகுந்தத்தில் இருக்கும் நித்ய முக்தர்களுக்கு
அரும் பேறு -பெறுதர்கரிய பயனாவார்

மற்றொன்றை எண்ணாதே:-
அதாவது கைங்கர்யம் என்பது பகவான் திருவுள்ளத்திற்கு உகப்பானது செய்தல்.
இதுவே ஒருவன் அடைய வேண்டிய லட்சியத்தின் எல்லை. இதுக்கு மேல் எதுவுமில்லை.
அத்தகைய கைங்கர்யத்திற்குப் புறம்பானது ஒன்றை லட்சியமாகக் கருதாமல் என்பது இதன் பொருள்.
புறம்பான லட்சியமாவது,
இவ்வுலக இன்பமும் சொர்க்கமும் முதலிய பரலோக இன்பமும் ஆன்மானுபவமாகிற கைவல்ய மோட்ச அனுபவமும்,
இம்மூன்றும் கைங்கர்யத்திற்குப் புறம்பானவை.

“ஆன்மானுபவம்” என்பது தன்னைத் தானே அனுபவித்தல் ஆகும். அதாவது ஆன்மா உடல் தொடர்பின்றியிருத்தலாம்.
ஆன்மாவின் தன்மை இயல்பாக இன்ப வடிவாயிருப்பது. ஆகவே எந்த உடல் தொடர்பும் இல்லாமல் இருந்தால்
அது தன் தன்மையான இன்பமே வடிவாயிருக்கும். அதுவே மோட்சம் என்று சிலர் கூறுவர்.
அது பகவத் கைங்கர்யத்தை பயனாகக் கொள்ளும் கொள்கைக்கு வேறுபட்டதாகையால் “மற்றொன்று” என்று கூறப்பட்டது.

இவற்றின் பெயர் சொல்வதும் விரும்பாமையால் மற்றொன்று என்று மறைத்துச் சொல்லப்பட்டது.
“விரும்பாதே” என்று கூறாமல் “எண்ணாதே” என்று கூறியது.
நினைத்தால் அன்றோ விரும்புவது. அவ்வாறே ஒரு பொருளாக நினையாததால் “எண்ணாதே” என்று சொல்லப்பட்டது.
இவ்வாறன்றி இவ்வுலக இன்பத்தையும் பரலோக இன்பத்தையும் ஆன்மா அனுபவத்தையும் விரும்புபவர்கள்
பகவத் கைங்கர்யத்தின் சுவையறியாதவர்களாக ஆவர்.
பகவத் கைங்கர்யத்தின் சுவையை அறிந்தவர்களுக்கு மற்றையவை உப்பு நீரைக் குடிப்பது போல்
சுவையற்றதாயும் கீழ்த்தரமாயு மன்றோ யிருப்பவை.

மாதவனுக்கு ஆட்செயல்:- என்பதாலே
அவர்கள் இருவருக்கும் செய்யும் அடிமையே ஒருவரால் பெற வேண்டியது என்ற இலட்சியத்தின் எல்லை என்று சொல்லப்படுகிறது.
இக்கருத்து த்வய மந்திரத்தின் பிற்கூற்றில் முதல் பதமான “ஸ்ரீமதே” என்ற பதத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
திருமந்திரத்தில் (ஒம் நமோ நாராயணாய) மூன்றாவது பதமான நாராயணாய என்ற பதத்திலும்
அடியார் செய்யும் கைங்கர்யத்தை ஏற்றுக்கொள்பவர் பிராட்டியும் பெருமாளுமான இருவரும் என்பது மறைத்துச் சொல்லப்பட்டது.

மறைத்துச் சொன்ன அதைத் த்வய மந்திரம் விளக்குகிறது.
“இதிலே திருமந்திரத்தில் சொன்ன ப்ராப்யத்தை விசதமாக அநுஸந்தித்திருக்கிறது” என்று
பிள்ளை லோகாச்சாரியார் அருளிச் செய்ததை இங்கு மேற்கோளாகக் காணலாம்.
“பகவத் கைங்கர்யமே ஒருவன் பெற வேண்டிய லட்சியம்” என்பது திருமந்திரத்திலும்
த்வய மந்திரத்திலும் சொல்லப்படுகையாலே தெளிவாகும்.

“ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்” என்று கூறினார் அன்றோ ஆழ்வார்.

உளம் தெளிந்து:-
மேற்கூறிய ஆன்மா பெறும் பயனாக கைங்கர்யத்தில் மனம் தெளிவடைந்து
அதாவது
வேறு வேறு பயன்களை விரும்புவதற்குக் காரணமான “யான்” “எனது” என்ற இரண்டு குற்றங்களைக் களைய வேண்டும்.
செய்யும் தொண்டுகள் அவன் உகப்புக்காகவே அமைய வேண்டும்.
இக்கருத்துக்களை ‘தனக்கே ஆக எனைக் கொள்ளுமீதே’ என்று நம்மாழ்வாரும்
‘உமக்கே நாம் ஆட்செய்வோம்’ என்று ஸ்ரீஆண்டாளும் அருளிச் செய்த பாசுரங்கள் கூறுகின்றன.
கைங்கர்யமே ஆத்மாவிற்கு மேலான பயன் என்று சொல்வதற்குத் தக்கபடி இதயம் தெளிவடைந்து செய்ய வேண்டும்.
இதனால் த்வய மந்திரத்தின் பின் கூற்றில் இறுதிப்பதமான நமப் பதத்தின் பொருள் சொல்லப்பட்டது.

பெற்ற பெரும் பேற்றின் மேலுளதோ பேரென்றிருப்பார் –
அதாவது
இக் கைங்கர்யமாகிற பெரும் பயன் கிடைத்தால் ‘இதைக் காட்டிலும் மேலான ஒரு பயன் இல்லை என்று
கைங்கர்ய்மாகிற பயனையே மேலான பயனாக எண்ணியிருக்குமவர்கள் என்கை.
“பரமபதம்” என்கிற இடம் என்றைக்கும் அழியாமல் ஒரே மாதிரியாக இருப்பது. சுத்த சத்வமயமானது.
ஞான ஆனந்தங்களுக்கு உற்பத்தி நிலம். அதனால் கைங்கர்யமாகிற பயன் தடையில்லாமல் செய்வதற்கு ஏற்றது.
இக்காரணங்களால் அதை ஞானிகள் விரும்புகிறார்கள்.
ஆகையால் கைங்கர்யத்திற்கு மேல் வேறு பயன் உண்டோ என்று சொல்வதில் எவ்வித தடையுமில்லை.
இத்தகைய உயர்ந்த கைங்கர்யத்தில் உறுதியாகயிருக்கும் ‘அவர்கள்’ என்று பொருள்.

அரும்பேறு வானத்தவர்க்கு –
கீழ்ச்சொன்ன அடியவர்கள் இயல்பாகவே தங்களை இறைவனுக்கு அடியவராக எண்ணியிருப்பவர்.
பகவத் கைங்கர்யத்திலேயே எப்பொழுதும் ஊன்றியிருப்பவர். பகவானையே பேரின்பமாகக் கொண்டிருப்பவர்.
இத்தகையவர் இவ்வுலகத்தில் காண அரியராக இருப்பார்.
இவர்கள் பரமபதம் சென்றால் அங்குள்ள நித்ய ஸூரிகள் முதலானார்களுக்கும் கிடைத்தற்கரிய
பொருளாகக் கொண்டாடுவதற்கு உரியவர்கள் ஆவார்.
இதனால் எப்பொழுதும் ஆரா அமுதமான பகவானையே அனுபவித்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு
அப் பகவத் விஷயத்தை அனுபவிப்பதைக் காட்டிலும் இவர்களுடைய அனுபவம் பெறாப் பேறாக நினைத்து
அனுபவிக்கப்படுவார்கள் என்பது கருத்து.

—————-

த்வய மந்திரத்தில் முதற்கூற்றினால் சொல்லப்படுகிற அர்த்தம் பகவானுடைய திருவடிகளையே பற்றுவதாகும்.
இதற்கு ‘ஸித்தோபாய வரணம்’ என்று பெயர்.
‘ஸித்தோபாயம்’ என்றால் எப்பொழுதும் தயாராக இருக்கும் உபாயம் என்று பொருள்.
பகவான் எப்பொழுதும் தயாராக இருப்பதால் அவனுக்கு ஸித்தோபாயம் என்று பொருள்.
இத்தகைய எம்பெருமானை “நீயே உபாயமாக இருக்க வேண்டும்” என்று வேண்டிக் கொள்கிற போது
வேறு எந்த உபாயத்திலும் தொடர்பு கொள்ளலாகாது.
ஏதாவது உபாயங்களில் தொடர்புகள் இருந்தால் அத்தொடர்புகளை முற்றிலும் விட்டு விட்டே பற்ற வேணும்.
இதனால் எம்பெருமானை உபாயமாகப் பற்றுமவனுக்கு மற்ற உபாயங்களை
அறவே விட்டு விட்டுப் பற்ற வேண்டும் என்கிற நியதி ஏற்படுகிறது.

அதனால் மற்ற உபாயங்களை விடுவது முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது.
இவ்விஷயங்கள் கீதையின் சரமஸ்லோகத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
சரமஸ்லோகத்தை நன்றாக அறிந்து எம்பெருமான் திருவடிகளைப் பற்றும் போது
வேறு எந்த உபாயங்களிலும் ஈடுபாடு வராது.
தன்னுடைய அடிமைத் தன்மைக்கேற்ப தன்னுடைய எல்லாப் பொறுப்புக்களையும் அவனிடத்திலேயே ஒப்படைத்து
நிம்மதியாயிருப்பார்.
“நம்முடைய சகல க்ஷேமங்களுக்கும் எம்பெருமானே பொறுப்பாய் இருப்பவன்.
அதில் நமக்கு எவ்விதத் தொடர்புமில்லை” என்ற உண்மையை எண்ணிக் கொண்டு நிம்மதியாய் இருக்கும்
அவர்கள் நிலையை எண்ணித் தாமும் அவர்களில் ஒருவராகத் தம்மை நினைத்துத்
தம் நிலையைத் தாமே கூறுகிறார் இந்தப் பாடலில்.

தீர்த்த முயன்றாடுவதும் செய்தவங்கள் செய்வனவும்
பார்த்தனை முன் காத்த பிரான் பார்ப்பதன் முன் – சீர்த்துவரை
மன்னன் அடியோ மென்னும் வாழ்வு நமக்கீந்ததற்பின்
என்ன குறை வேண்டு மினி”–5-

பதவுரை:

முன் – மாபாரதப் போரில் (பார்த்தனை) மனம் கலங்கின அர்ஜுனனை
காத்தபிரான் – கீதோபதேசத்தால் மனம் தெளிவித்து காத்தருளி உதவி செய்த கண்ணபிரான்
பார்ப்பதன் முன் – திருக் கண்களால் நோக்குவதற்கு முன்பு
தீர்த்தம் – புண்ணிய நதிகளான கங்கை முதலிய தீர்த்தங்களில் (பாபம் கழிவதற்காக)
முயன்று – முயற்சிகள் செய்து
ஆடுவதும் – முழுகிக் குளிப்பதுவும்
செய்தவங்கள் – உடல் வருந்தச் செய்யும் நோன்புகளும்
செய்வனவும் – மற்றும் செய்யும் புண்ணியங்களும்
சீர்த்துவரை – சீர்மை மிகுந்த துவராபதிக்கு மன்னன் இறைவனான கண்ணன்
நமக்கு – அவனுடைய அடியவர்களான நமக்கு
அடியோம் என்னும் வாழ்வு – அடிமைத் தன்மையாகிற நற்செல்வத்தை
ஈந்ததற்பின் – அருளின பின்பு
இனி – இனி வரும் காலமெல்லாம்
வேண்டும் குறை என்ன – சாதனங்கள் பற்றியும் பலன்கள் பற்றியும் குறைபட வேணுமோ?
(எதைப் பற்றியும் குறைபட வேண்டாம் என்பதாம்)

தீர்த்தம் முயன்று ஆடுவதும் –
கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான புண்ணிய தீர்த்தங்களிலே பாபத்தைக் கழிப்பதற்காகப்
பெரிய முயற்சியோடே குடைந்து நீராடுவதும் அதாவது உடம்பு முழுவதும் நனையும்படி
நீரில் முழுகுதல் (தீர்த்தங்கள் புண்ணிய ஜலங்கள்)

செய்தவங்கள் செய்வனவும் – ஊன்வாட உண்ணாது…
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நின்றும் வீழ்கனியும், ஊழ் இலையும் என்னும்
இவையே நுகர்ந்து உடலம் தான் வருந்தி என்பது முதலான ஆழ்வார்கள் பாசுரங்களில் சொல்லுகிறபடி
உடலை வருந்துவதற்காகச் செய்யப்படும் நோன்புகள் பலவற்றைச் செய்வனவும்.
இங்குச் சொல்கிற தவங்கள் என்னும் பன்மையினால் தானம், யாகம் முதலிய புண்ணியங்களும் அடங்கும்.

பார்த்தனை முன் காத்தபிரான் பார்ப்பதன் முன் –
அதாவது
அர்ஜுனனுக்கு கண்ணபிரான் பகவத் கீதயில் கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் முதலான
வேறு வேறு உபாயங்களையெல்லாம் உபதேசித்தான்.
அவற்றை எல்லாம் கேட்ட அர்ஜுனன் அவற்றை செயலாற்றுவதில் உண்டாகும் அருமையையும்
எம்பெருமானுக்கு ஆன்மா அடிமையாய் இருத்தலால் அடிமையாய் இருப்பவன் ஒரு உபாயத்தைச் செய்வதற்கு
உரிமையில்லாதவனாக இருப்பதையும் எண்ணிப் பார்த்து, கண்ணன் சொன்ன கர்ம, ஞான, பக்தியாகிற
இவ் வுபாயங்களை நாம் எப்படிக் கடைப்பிடிப்பது என்று எண்ணி துன்பப்பட்ட அர்ஜுனனைப் பார்த்து கண்ணன் இவ்வாறு சொன்னான்.

“அர்ஜுனா, கீழே நான் உபதேசித்த கர்மயோக, ஞானயோக, பக்தியோகமாகிற உபாயங்கள் ஒன்றையும் நீ செய்ய வேண்டாம்.
நான் சொன்ன அவற்றை அறவே விட்டுவிடு. அவற்றை நெஞ்சாலும் நினையாதே. நான் நற்குணக் கடலாயிருப்பவன்.
அடியவர்க்கு எளியவன். அடியவர் பிழை பாராதவன் பிழை பொறுப்பவன். நுண்ணறிவுடையவன்.
மிக்க ஆற்றல் உடையவன். பலம் உடையவன். இவ்வாறான குணங்கள் பலவுமுடைய என்னையே நீ உபாயமாகப் பற்றுவாயாக.
என்னைப் பற்றும் போது “கண்ணன் நம்மிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டான். அவனுக்கு எதையும் கொடுக்க வேண்டாம்,
என்று என்னைப் பரிபூர்ணனாக நினைத்துப் பற்றவேண்டும்.”

இவ்வாறு என்னைப் பற்றினால் அறிவு, ஆற்றல் முதலிய குணங்களையுடைய முழுமுதற் கடவுளாகிற நான்
உன்னுடைய அறியாமை, சோர்வு, திறலின்மை முதலிய குணங்களை எண்ணுவேன்.
என்னிடத்தில் உன்னுடைய அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்த நிலையும் எண்ணுவேன்.
“இந்த நிலையில் இருக்கும் உன்னை ஒருபொழுதும் நான் கைவிட மாட்டேன்.”
என்னை அடைவதற்குத் தடையாக என்னென்ன பாபங்கள் உன்னிடத்தில் இருக்கின்றனவோ
அந்தந்த பாவங்களிலிருந்தும் உன்னை நான் விடுவிப்பேன். ஆகையினால் நீ கவலைப்பட வேண்டாம்” என்று
அர்ஜுனனுக்கு உபதேசித்து அவனுடைய சோகத்தைத் தீர்த்து அவனைக் காத்தருளினான்.

இத்தகைய பேருபகாரம் செய்த பகவானுடைய அருள் கண் நோக்கம் பெறுவதற்கு முன்பு என்று
(இவ்வாறு கூறிய அதனால் கண்ணன் சொன்ன வார்த்தையின் அர்த்தம் நெஞ்சில் படுவதற்கு முன்பு என்றவாறு).

சீர்த்துவரை மன்னன் –
“பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரையென்னுமதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர்” என்கிறபடி
வேறு ஒருவர்க்கு அன்றி தனக்கே உரியராய்த் தன்னை அன்றி வேறு உபாயத்திலோ
வேறு பலன்களிலோ தொடர்பு இல்லாதவராய் இருக்கும் தன் மனைவியர்க்கு
மணாளனாய்க் கொண்டு ஸ்ரீமத் துவாரகாபுரிக்கு தலைவனாயிருக்கிறவன்” என்று பொருள்.

அடியோம் என்னும் வாழ்வு –
மேற்படி அவனுக்கு நாம் அடிமைப்பட்டவர் என்றறிந்து ‘தன்னைக் காத்துக் கொள்வதற்காகத் தன் முயற்சியில்
ஈடுபடாமலிருக்கும் அதாவது அவனையே எதிர்நோக்கி இருக்கும் நற்செல்வத்தை நமக்குக் கொடுத்துவிட்ட பிறகு என்பது இதன் பொருள்.

இத்தொடரில் அடியோம் என்று கூறியதால்
ஆன்மா ஞான ஆனந்த குணங்களுக்கு இருப்பிடமாயிருந்தாலும் அவற்றைக் காட்டிலும் அடிமைத் தன்மையே
அதற்கு உண்மை இலக்கணமாகத் தெரிய வருகிறது. ஆன்மாவுக்கு இதுவே முக்கிய அடையாளமாகும்.

‘வாழ்வு’ என்பதால்
இவ்வடிமைத் தன்மையை அறியும்போது தன் முயற்சி ஒழிதல், தன் நலம் ஒழிதல் முதலிய நற்பண்புகள் உண்டாகின்றன.
இவையே ஆன்மாவுக்குரிய செல்வமான வாழ்வு என்பதாம்.

நமக்கு ஈந்ததற்பின் –
எப்பொழுதும் இவ்வடிமைத் தன்மை ஆன்மாவுக்கு இருந்தாலும் அதை இழந்திருந்த என்று பொருள்.
ஈந்ததற்பின் என்றது –
இவ்வுண்மை அறிவு உண்டானதும் அவனருளாலே என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறு அவன் நமக்கு அடிமைச் செல்வமாகிற இந்நல்வாழ்வைக் கொடுத்து விட்ட பிறகு.

என்ன குறைவேண்டுமினி –
அதாவது,
இனிமேல் வரும் காலங்களில் உபாயத்தைப் பற்றியோ எந்தக் குறையும் படவேண்டியதில்லை.
இதனால் பகவான் ‘கவலைப்படாதே’ என்று அர்ஜுனனைப் பார்த்துச் சொன்னதில் நாமும் நம் காரியங்களில்
எந்த பிரச்சினைகளும் இல்லாமல் பொறுப்பு ஏதுமில்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்று பொருள் சொல்லப்பட்டது.

————-

பகவானை அடைவதற்கு வழியாகக் கர்ம யோக, ஞான யோக, பக்தி யோகாதிகள் சாஸ்திரங்களிலே
சொல்லப்பட்டிருந்தாலும் அவையெல்லாம் நடைமுறையில் செயல்படுத்த முடியாதவை என்றும்,
ஆத்மாவின் அடிமை இலக்கணத்திற்கு முரணானவை என்றும்,
குற்றங்களைச் சொல்லிப் பல ஆதாரங்களைக் கொண்டு புறக்கணிக்கப்பட்டதால் இனி அவை தொடர வாய்ப்பில்லை ஆகிவிட்டது.
ஆத்மாவின் க்ஷேமத்திற்கு மேலே சொன்ன குற்றங்கள் அற்றுப் போன நிலையே பெரும் பேறாகும்.
ஆயினும் நீண்ட காலம் (பல பிறப்புக்களில்) ஐம்புலன் அனுபவங்களில் பழகிப்போந்த ஆத்மாவுக்கு,
சாஸ்திரங்கள் குற்றம் என்று கடிந்து பேசின செல்வத்தைக் கண்டால், அதன்மேல் ஆசை செல்லாதிருக்குமோ?
செல்வத்தின் கவர்ச்சி நெஞ்சை கலங்கப் பண்ணாதோ? என்னும் சாதாரண மானிடருடைய நிலையில்
இத்தகைய கேள்வி எழுந்தால் அதற்குத் தக்க பதில் இப்பாடல் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.

அதாவது, பகவானுக்குத் தொண்டு செய்து அதன் சுவையை அறிந்தவர்கள்,
செல்வத்துக்கு எல்லையான ப்ரம்மபதம் கிடைத்தாலும் அதை ஒரு பொருளாக விரும்பார்;
அற்பப் பொருளால் நெஞ்சு கலங்கமாட்டார்கள் என்று விடையளிக்கிறார்.
இதற்கு உதாரணம் ஸ்ரீராமாயணத்தில் சரபங்க முனிவரது வரலாற்றைக் காணலாம்.

ஸ்ரீராமபிரான் தண்டக வனத்தில் சரபங்க முனிவரது தவக்குடிலுக்குச் சென்றான்.
அப்பொழுது இந்திரன், முனிவரோடு உரையாடிக் கொண்டிருந்தான்.
அவன் சென்ற பிறகு ராமபிரான் முனிவரை அணுகி வந்தனை புரிந்து நிற்கையில் முனிவன் கூறினான்.
தமது ஞானக்கண்ணால் ஸ்ரீராமபிரானைப் பார்த்து ‘ஆழியில் அரிதுயிலவன்’ என மகிழ்ந்து
“இந்திரன் அருளினன் இறுதி செய் பகலா வந்தனன். மருவுதி மலர் அயன் உலகம் தந்தனென்”
“என் உரவோய்! அந்தமில் உயர்பதம் அடைதலை முயல்வேன்” என்று கூறினான்.

அதாவது, ப்ரம்மதேவன் முனிவனைத் தன் உலகத்திற்கு இந்திரனை அனுப்பி அழைத்துவரச்
சொன்னதாகவும் சரபங்க முனிவன், அவ்வுலகத்திற்கு நான் வரமாட்டேன் என்று சொன்னதாகவும்,
“நீ இவண் வருகுதி எனும் நினைவு உடையேன். இனி ஒரு வினை இலை:- விறலோய்!” என்று கூறி
இராமனைப் பார்த்துக் கொண்டே அந்தமில் உயர் பதமான பரம பதத்தை அடைந்தான் என்னும் வரலாறு கூறப்படுகிறது.

இத்தகைய சரபங்க முனிவன் பிரம்மபதத்தை ஒரு பொருளாக மதிக்காமல் இறை இன்பத்தையே கூறுவதால்,
உண்மையை உணர்ந்த ஞானிகளைச் செல்வம் கலங்கப் பண்ணாது என்பது கண்கூடு.
இப்பாடல் மூலம் இவ்வுண்மை உணர்த்தப்படுகிறது.

“புண்டரிகை கேள்வன் அடியார் அப் பூமிசையோன்
அண்டமொரு பொருள் ஆதரியார் – மண்டி
மலங்க ஒரு மீன் புரண்ட மாத்திரத்தால் ஆர்த்துக்
கலங்கிடுமோ முந்நீர்க் கடல்”–6-

பதவுரை:-

புண்டரிகை -தாமரையில் பிறந்த லக்ஷ்மீ தேவிக்கு
கேள்வன் -மணவாளனான ஸ்ரீ ய::பதியின்
அடியார்-தொண்டராயிருப்பவர்கள்
அப்பூமிசையோன் -தாமரை மலரில் பகவானுடைய அழகிய கொப்பூழ் பிறந்த பிரமனின்
அண்டம் பதினான்கு =உலகங்கள் கூடின அண்டத்தை
ஒரு பொருளா -ஒரு சரக்காக
ஆதரியார் -மதிக்க மாட்டார்கள்
ஒரு மீன் =ஒரு மீனானது
மண்டி -தன் ஆற்றல் எல்லாவற்றோடும் நெருங்கி
மலங்க –நிலை குலைந்து கலங்கும்படி
புரண்ட மாத்திரத்தால் =இடப்புறமாக வலப்புறமாக புரளுவதால்
முந்நீர்க்கடல் -மூன்று வகையான நீர் சேர்ந்த கடலானது
ஆர்த்து =நிலை குலைந்து பேர் ஒலி செய்து
கலங்கிடுமோ -கலக்கத்தை அடையுமோ? அடையாது

“பண்டை நாளாலே நின்றிருவருளும் பங்கயத்தாள் திருவருளுங் கொண்டு” என்று நம்மாழ்வார் கூறினார்.
பகவான் பிராட்டி இவ்விருவருடையவும் சிறப்பான அருள் நோக்கினால், பண்டை வினைகளிலிருந்து திருந்தி
அதாவது
“யானே என்னை அறியகிலாதே, யானே எனதனதே என்றிருந்தேன், யானே நீ என் உடைமையும் நீயே” என்று பேசும்படி ஆனார்.
இத்தகையவர்கள் பகவானுக்கு அடிமையாய் இருக்கும் தன்மையையே தங்களுக்குச் சின்னமாகக் (முத்திரையாகக்) கொண்டு
அவனுகந்த பணியைச் செய்வது ஒன்றிலேயே திளைத்திருப்பார்கள்.

(அப்பூமிசையோன் அண்டம் ஒரு பொருளா ஆதரியார்). செல்வத்துக்குக் கடைசி எல்லையாக நூல்களில் சொல்லப்படுவது
பிரமபதம் நான்முகக் கடவுளுக்கிருக்கை. அப்பிரமன் திருமாலின் கொப்பூழ்த்தாமரையில் பிறந்தவன்
அவனுடைய மகிழ்ச்சிக்கு காரணமாயும் பதினான்கு அடுக்குகள் கொண்டதுமான
இப்பிரமாண்டத்தை அடியார்கள் ஒரு பொருளாக மதிக்க மாட்டார்கள் என்பதாம்.

உடலுக்கும் உயிருக்கும் வேறுபாடு காணாமல் உடலையே உயிராக எண்ணும் அறிவிலிகளுக்கும்
இவ்வான்மா பகவானுக்கு அடிமையாய் இருக்கும் என்பது அறியாமல்,
தான் என்றும், தனது என்றும் தன்னை சுதந்திரமாக நினைத்திருக்கும் மூடர்களுக்குமே செல்வம் இன்பகரமாய்
அடைய வேண்டிய குறிக்கோளாயிருக்கும்.

பகவானுக்கு அடிமையாயிருக்கும் சுவையை அறிந்தவர்களுக்குச் செல்வம் சுவையற்றதாய் அருவருக்கத் தக்கதாய் இருக்கும்.
ஆகையால் அச்செல்வத்தை இறைவன் அடியார்கள் ஆதரிப்பார்களோ? ஆதரிக்க மாட்டார்கள் என்றவாறு.

இவ்வாறு சொல்லலாமா? செல்வத்தினுடைய கவர்ச்சி மிகு எழுச்சி, தன்னை ஆசைப்படும்படி
எத்தகையவராக இருந்தாலும் அவர்கள் நெஞ்சை கலங்கப் பண்ணாதோ? என்ற இவ்வினாவிற்கு

“மண்டி மலங்க ஒரு மீன் புரண்ட மாத்திரத்தால் ஆர்த்துக் கலங்கிடுமோ முந்நீர்க்கடல்” என்று பதில் சொல்கிறார்.
இதன் பொருள் –
ஒரு மீனானது தன் வலிமை எல்லாவற்றோடும் கூடித் தள்ளிக் கொண்டு நிலை குலைத்துக் கலங்கும்படி
இடம் – வலமாகப் புரண்ட மாத்திரத்தால் கடல் கலங்குமோ? என்பதாம்.

கடலுக்கு “முந்நீர்” என்று பெயர்.
ஆற்று நீர், ஊற்று நீர், மழைநீர் என்ற இம்மூன்றும் சேர்வதால் கடலுக்கு முந்நீர் என்று பெயர்.
மீனுடைய புரட்சியால் கடல் கலங்கினாலன்றோ
செல்வத்தின் எழுச்சி கண்டால் இறை அன்பர்களின் பற்றற்ற மனம் கலங்குவதாகும்.
ஆகவே, எத்தகைய பெருஞ்செல்வத்திற்கும் இறைவனடியார்கள் மனம் கலங்கமாட்டார்கள் என்பது பொருள்.

————-

அடிமைச் சுவை அறிந்தவர்கள் செல்வத்துக்கு எல்லையான பிரம்ம பதத்தையும் விரும்பார்கள் என்று கீழ்ச் சொல்லப்பட்டது.
இதில் இறைவனது அழகிலே தோற்ற அவனுக்கு அடிமையானவர்கள் வேறு விஷயங்களை ஆதரிக்க மாட்டார்களென்று கூறப்படுகிறது.

“தோளார் சுடர்த்திகிரி சங்குடைய சுந்தரனுக்
காளானார் மற்றொன்றில் அன்புசெய்யார் – மீளாப்
பொருவரிய விண்ணாட்டில் போகம் நுகர்வார்க்கு
நரகன்றோ இந்திரன் தன் நாடு”–7-

பதவுரை:

தோளார் -திருத்தோள்களோடே சேர்ந்துள்ள
சுடர்த்திகிரி-ஒளியுடைய சக்கரத்தையும்
சங்குடைய சுந்தரனுக்கு-சங்கையும் அழகையும் உடையவனுக்கு
ஆளானார்-அடிமையானவர்கள்
மற்றொன்றில் -அவனைத் தவிர வேறு ஒரு பொருளில்
அன்பு செய்யார் -பற்றுச் செய்ய மாட்டார்கள்
மீளா -திரும்பவும் வராததும்
பொருவரிய -உவமை இல்லாததுமான
விண்ணாட்டில் -மாக வைகுந்தம் என்று சொல்லப்படும் வைகுந்தத்தில்
போகம் –பேரின்பத்தை
நுகர்வார்க்கு –துய்ப்பவர்க்கு
இந்திரன் தன் நாடு -இந்திரனுக்குரிய சுவர்க்கமும்
நரகன்றோ =துன்பமயமாகும் அன்றோ

“தோளார் சுடர்த்திகிரி சங்குடைய சுந்தரனுக்கு”
திருத்தோள்களோடு சேர்ந்திருந்துள்ள ஒளிமயமான திருவாழியையும் அழகிய சங்கத்தையும் ஏந்தியிருப்பதாலே
உண்டான அழகனுக்கு என்று பொருள்.
“மனைப்பாற் பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பமெல்லாம் துறந்தார் தொழுதாரத் தோள்” என்ற பூதத்தார்

பாடலில் இறைவனின் தோள்களைக் கண்களால் ஆரத் தொழுபவர்கள்,
இவ்வுலகில் அனுபவிக்கும் சிற்றின்பத்தையெல்லாம் துறந்து விடுவார்கள் என்று கூறினார்.

ஸ்ரீராமாயணத்தில், இராமபிரானது தோள் அழகைக் கண்டவர்கள் வேறு எதையும் காணவில்லை (காண விரும்பவில்லை)
“தோள் கண்டார் தோளே கண்டார்” என்றும்,
“ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்” என்றும் விசுவாமித்திரர் வாயிலாகவும் கம்பர் கூறுகிறார்.

நம்மாழ்வாரும் ‘தோளுமோர் நான்குடைக் காளமேகத்தை அன்றி மற்றொன்று இலம்’ என்றார்.

திருமாலின் திருவழகுக்கு கண் எச்சில் வராமல் ஆரத்தி எடுக்க வேணும்.
அத்தகைய அழகைக் கண்டவர்களின் உலகப் பற்றுதல்கள் அனைத்தையும் அறுக்க வல்லதான திருத்தோள்கள் என்றும்
“அணியார் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர் காண்மின்” என்றார் ஆழ்வார்.
திருவாழியும் ஏந்து கையால் வந்த அழகு கூடினால் அழகு இரட்டித்திருக்கும் என்று
சங்கு சக்கரம் ஏந்தின தோள் அழகை வருணித்தார்.

ஆளானார் –
இவ்வாறு இருந்துள்ள அழகை உடையவனுக்கு அவ்வழகுக்குத் தோற்று அடிமையானவர்கள் என்று பொருள்.
இறைவனுக்கு அடிமையாயிருத்தல் இரண்டு வகையாகச் சொல்லப்படுகிறது.
ஒன்று அவனுடைய தலைமைக்கு அடிமையாதல்
மற்றொன்று அவன் குணத்துக்கு அடிமையாதல்.

புண்டரீக கேள்வனடியார் – என்றவிடத்து
தலைமைக்கு அடிமை என்று சொல்லப்பட்டது.
‘சுந்தரனுக்கு ஆளானார்’ என்ற இவ்விடத்தில்
அழகாகிற குணத்திற்கு அடிமையாதல் சொல்லப்படுகிறது.
ஆகவே, இரண்டு வகையான வழிகளாலும் அடியவர்களைத் தோற்கடித்து ‘அடியேன்’ என்று எழுதிக் கொடுக்கும்படி
செய்யும் பகவானின் அழகிய பெருமை இருப்பதால்
இங்கு இப்பொழுது அழகுக்குத் தோற்று அடிமையானவர்களைச் சொல்கிறது.

மற்றொன்றில் அன்பு செய்யார் –
அதாவது
“ஆன்மாவின் இயல்புக்கும் பகவானின் குணங்களுக்கும் அடிமையானவர்கள், அவற்றிற்கு வேறாயிருக்கும்
இவ்வுலக விஷயங்கள் ஒன்றிலும் பற்றுக் கொள்ள மாட்டார்கள்.”
பரமபதமாகிற திருநாடு சுத்த சத்வ குணமயமானவை.
அதனால் இவை ப்ராக்ருதம் என்றும் அவை அப்ராக்ருதம் என்றும் சொல்லப்படும்.
இங்குள்ள பொருள்களெல்லாம் கணந்தோறும் மாறுபட்டுக் கொண்டிருக்கும்
அங்குள்ள பொருள்கள் என்றைக்கும் ஒரு படியாகவே இருக்கும்.
மற்றும் அங்குள்ள பொருள்கள் மனதைக் கவருவதாக இருக்கும்.
இவ்வாறாக, இவ்வுலகப் பொருள்களின் தாழ்வுகளையும் அவ்வுலகப் பொருள்களின் உயர்வுகளையும் ஆராய்ந்து அறிந்து
அந்தமில் இன்பத்து அழிவில் வீடு என்று கூறப்படுகிற அப்பரமபதமாகிற அப்பேரின்பத்திற்குத் தோற்றிருக்கும் அவர்கள்
இவ்வுலகப் பொருள்களை விரும்புவார்களோ? மாட்டார்கள்.
காரணம், இவ்வுலகப் பொருள்கள் மேலுக்குக் கவரிச்சியாயிருந்து உள்ளுக்குக் குற்றமுடையதாயிருக்கும்,
அருவருக்கத் தகுந்ததாயும் இருக்கும். ஆகவே இதை விரும்பமாட்டார்கள் என்றவாறு.

இவ்வுலக விஷயங்கள் குற்றமுடையதாயும் அருவரூக்கத் தகுந்ததாயும் இருந்தாலும்
சுவர்க்கம் முதலிய ஏனைய மேலுலகங்களிலுள்ள உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பொருள்களும் சிறப்பாகப் பேசப்படுகின்றனவே
அவற்றைக் கண்டால் அந்த சுவர்க்கம் முதலிய இடங்களில் பற்றுச் செய்யாதோ என்று கேள்வி எழுந்தால்
அதற்குத் தகுந்த பதில் சொல்லப்படுகிறது மேல் தொடரால்.

“மீளாப் பொருவரிய விண்ணாட்டில் போகம் நுகர்வார்க்கு” என்று தொடங்கி
அதாவது
வீடுபேறு என்பது “அழிவில் வீடு” என்று கூறப்படுகிறது.
மறுபிறவி இல்லாதது முக்குணங்களுக்கு அப்பாற்பட்டுத் தூய சத்வ மயமானது. அளவு கடந்த ஒளிமயமானது.
தனக்கு உவமையில்லாதது. மேலான வானம் என்று புனைந்து பாராட்டப் பெற்றது.
இத்தகைய திருநாட்டில் இன்பத்தை நுகர வேண்டும் என்று அவா உடையவர்களுக்கு என்று பொருள்.

நரகன்றோ இந்திரன்தன் நாடு –
அதாவது
கீழே சொல்லப்பட்ட சுவர்க்கம் முதலிய உலகங்கள் புண்ணியத்தால் அடையப்படுவது.
புண்ணியம் கழிந்தவாறே அங்கிருந்து தலைகீழாக இம்மண்ணுலகில் விழும்படி இருப்பது.
சுவர்க்கத்திற்கு ஒப்பான மற்றும் பலபல லோகங்களையும் உடையதாய் வினைவயப்பட்ட இந்திரன் முதலிய
தேவர்களின் அனுபவங்களுக்கு இடமாய் உள்ளன.
இத்தகைய சுவர்க்கம் முதலிய உலகங்கள் நரகத்திற்கு ஒப்பாகும் அல்லவா?
ஆகவே அடுக்கடுக்காக உள்ள பதினான்கு உலகங்கள் கூடிய இவ்வண்டம்
பரமபதத்தில் வாழ்வாருக்கு துன்பத்திற்கிடமான நரகமேயாகும் என்பதாம்.

———–

வேறு பயன் ஒன்றையும் விரும்பாமல் பகவத் அனுபவ கைங்கர்யத்தையே பெரும் பயனாகக் கொண்டு
பகவானிடம் மிக்க அன்புடையவர்கள் அடிமை செய்யும் போது முறை தவறிச் செய்தாலும்
அதைப் பகவான் மிகவும் களிப்புடன் தலையால் தாங்குவான் என்று சொல்லப்படுகிறது.
கீதையில் தன் பக்தன் பக்தியோடு கொடுக்கும் இலை, பூ, பழம், நீர் ஆகிய அனைத்தையும்
நான் அன்போடு அருந்துகிறேன் என்று கூறுகிறான். இதில் இலை, பூ சேர்க்கப்பட்டுள்ளன.
பக்தன் அன்பினால் கொடுப்பதால் அது எதுவாயினும் அதை அருந்துவதாகச் சொல்வதால்
கொடுக்கிற பொருளைப் பார்க்காமல் அவன் நெஞ்சில் அன்பையே பார்த்து ஏற்கிறான் என்பதை உணரலாம்.
இக்கருத்து இப்பாடலில் கூறப்படுகிறது.

“முற்றப் புவனம் எல்லாம் உண்ட முகில் வண்ணன்
கற்றைத் துழாய் சேர் கழலன்றி – மற்றொன்றை
இச்சியா அன்பர் தனக்கு எங்ஙனே செய்திடினும்
உச்சியால் ஏற்கும் உகந்து”–8-

பதவுரை:

புவனமெல்லாம் -எல்லா உலகங்களையும்
முற்ற உண்ட -ஒன்று விடாமல் அனைத்தையும் விழுங்கித் தன் வயிற்றில் வைத்துக் கொண்ட
முகில் வண்ணன் -மேகம் போன்ற திருமேனியை உடைய இறைவனின்
கற்றைத் துழாய்சேர் -தழைக்கின்ற திருத்துழாய் சேர்ந்துள்ள
கழலன்றி -திருவடிகளைத் தவிர
மற்றொன்றை -வேறு ஒரு பயனையும்
இச்சியா அன்பர் -விரும்பாத பக்தர்கள்
தனக்கு –இறைவனான தனக்கு
எங்ஙனே செய்திடினும் -அடிமைகளை எப்படிச் செய்தாலும்
உகந்து -மிகவும் மகிழ்ந்து
உச்சியால் ஏற்கும் -தலையால் ஏற்றுக் கொள்வான்

“முற்றப் புவனம் எல்லாம் உண்ட முகில்வண்ணன்” –
அழிவு காலத்தில் அழிபடாமல் அனைத்து உலகங்களையும் ஒன்று விடாமல் தனது வயிற்றிலே வைத்துக் காக்கிறவன்
என்று கதை சொல்லப்படுகிறது.
இவ்வாறு உலகங்களைக் காத்தது பிறர்க்குச் செய்ததாக இல்லாமல் தன் பயனாகச் செய்பவன் என்ற கருத்தை
அவனது நீருண்ட காளமேகம் போன்ற வடிவின் நிறத்தைப் பார்த்தாலே தெரியும்.
மேகமும் பிறர்க்காகவேயிருப்பது.
பகவானும் பக்தர்களுக்காகவே இருக்கிறவன் என்ற குறிப்புப் பொருள் இங்குப் புலனாகிறது.

இப்போது இதைச் சொல்கிறது.
‘தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான்’ என்ற பாசுரத்தில் சொன்னபடி
ஆபத்து காலத்தில் உலகங்களையும் அவையறியாதிருக்க, தானறிந்த உறவையே காரணமாகக் கொண்டு
தன் வயிற்றிலே வைத்து ரட்சித்தது தனக்கு லாபம் என்னும் கருத்தை தன் வடிவிலே தெரியும்படி இருந்தான்
என்று விளக்கம் சொல்லப்படுகிறது.
இதனால் வேறு பயன் ஒன்றையும் விரும்பாமல் தன்னிடம் மிக அன்புடையவர்கள் தன்னிடத்தில் செய்யும்
தொண்டுகளை ஆதரவுடன் ஏற்றுக் கொள்வான் என்னும் கருத்து குறிப்பால் உணரப்படுகிறது.

கற்றைத் துழாய் சேர் கழலன்றி –
இதில் பகவானுடைய திருவடிகளின் இனிமை சொல்லப்படுகிறது.
‘பூமியில் வளரும் திருத்துழாயைக் காட்டிலும் அவன் திருமேனியில் சாத்தப்பட்ட திருத்துழாய்
திருமேனியின் தொடர்பினால் தழை விடுகிறது. அத்தகைய தழைத்திருந்துள்ள திருத்துழாயோடே சேர்ந்திருந்துள்ள
திருவடிகளைத் தவிர என்பது பொருள்.
இக்கூற்றால் அவன் திருவடிகளில் உள்ள அலங்காரத்திற்கும் அழகுக்கும் சிறப்பு அறியப்படுகிறது

மற்றொன்றை இச்சியா அன்பர் –
இப்படியான மிக இனிமை பொருந்திய அவன் திருவடிகளை யொழிய
வேறு ஒரு பயனையும் விரும்பாத மிக்க அன்புடையவர்கள் என்பது இதன் பொருள்.

உலகில் பெரும்பாலும் பகவானை விரும்பாமல் அவனிடம் வேறு வேறு பயன்களைப் பெறுவதற்காக
அவனுக்கு ஏதோ உபசாரம் செய்வது போல செய்வார்கள். இது உலக இயல்பு.

இவ்வாறு இல்லாமல் ஸ்ரீஆண்டாள் அருளியபடி
“உனக்கு உகந்த நூறு தடா அக்கார வடிசலும் நூறு தடாவில் வெண்ணையும் சமர்ப்பிக்கிறேன்.
இதை நீ ஏற்றுக் கொண்டால் நூறை ஆயிரமாகப் பெருக்கிக் கொடுப்பதோடு நானும் உனக்கு ஆட்செய்வேன்” என்றாள்.
இது அவன் ஏற்றுக் கொண்டதற்குப் பலனாக சொல்லப்பட்டது.
அது போல பக்தர்கள் செய்யும் தொண்டினை அவன் ஏற்றுக் கொண்டால் மேலும் ஒன்றுக்கு மேல் பலவாகத்
தொண்டுகளே செய்வது பகவத் பக்தர்களின் இயல்பு.
இத் தகையவர்களுக்குப் பயன் கருதாமல் செய்யும் பண்புடையாளார் என்று பெயர்.

தனக்கு எங்ஙனே செய்திடினும் –
மேற்கூறிய அடியார்கள் தனக்கு அடிமை செய்யும் போது
அன்பில் வயப்பட்டு
முறையாகவோ
முறை தவறியோ
தொண்டுகளை எப்படிச் செய்தாலும்.

உச்சியால் ஏற்கும் உகந்து –
மிகவும் மகிழ்ச்சியுடன் தலையாலே ஏற்பான் என்பது பொருள்.

எங்ஙனே செய்திடினும் – உச்சியால் ஏற்கும் என்பதன் பொருள்.
பக்தன் காலாலே தூக்கி எறிந்ததையும் அவன் தலையாலே ஏற்பான் என்பதாம்.
உதாரணம் பெரியாழ்வார். (கண்ணனுக்காக) பெருமாளுக்காகத் தொகுத்து வைத்த மாலையை
ஸ்ரீஆண்டாள் தன் தலையில் சூட்டி அழகு பார்த்தாள்.
அம்மாலையில் ஸ்ரீஆண்டாள் தலையில் சிக்கிய கேசம் பின்னியிருப்பதைப் பார்த்த ஆழ்வார்
வெளியில் தூக்கி எறிந்து வேறு மாலையைக் கட்டிக் கொண்டு சென்றார்.
பெருமாள், ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்து எறியப்பட்ட அம்மாலைதான் தனக்கு வேணும் என்று கேட்டு வாங்கிக் கொண்டான்.
இன்றும் ஸ்ரீஆண்டாள் சூடின மாலையைப் பெருமாள் தலையால் சுமப்பதைக் காணலாம்.
இவ்வாறான பல உதாரணங்கள் காணலாம்.

—————–

பகவானிடம் வேறு பயன் எதையும் விரும்பாமல் அடிமை செய்தலையே விரும்பியிருக்கும்
அடியாரிடத்தில் அவனுக்குண்டான ஈடுபாட்டைக் கீழ்ப் பாடலில் கூறினார்.

இதில் கீழ்ச் சொன்ன ஈடுபாட்டைக் காட்டிலும் இன்னமும் அதிகமான ஈடுபாட்டைச் சொல்கிறார்.
இதில் பகவான்தான் பக்தர்களின் நெஞ்சைச் சோதனை செய்து அதைத் தனக்கு இருப்பிடமாகக் கொள்கிறான்.

அவ்வாறு நெஞ்சில் சோதனை செய்தாவது,
“இந்த நெஞ்சு நம்மை மட்டுமே நினைக்கிறதா?
நம்மிடம் ஏதாவது வேறு பயனை விரும்பி நம்மை நினைக்கிறதா?
எந்தப் பயனையும் நினைக்காமல் நம்மையே நினைக்கிறதா?” என்று ஆராய்ந்து பார்த்து
வேறு பயன் எதையும் விரும்பாமல் அவனை நினைப்பதுவே பயனாக எந்த நெஞ்சம் இருக்கிறதோ
அந்த நெஞ்சமே அவன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இடமாகும் என்ற கருத்து இங்கு சொல்லப்படுகிறது.

“ஆசில் அருளால் அனைத்து உலகும் காத்தளிக்கும்
வாச மலராள் மணவாளன் – தேசு பொலி
விண்ணாட்டில் சால விரும்புமே வேறொன்றை
யெண்ணாதார் நெஞ்சத் திருப்பு”–9-

பதவுரை:

ஆசில் -குற்றமில்லாத
அருளால் -கருணையினால்
அனைத்து உலகும் -எல்லா உலகத்தையும்
காத்து -இரட்சித்து
அளிக்கும் –விருப்பங்களைக் கொடுக்கும்
வாச மலராள் மணவாளன் -தாமரையில் பிறந்த பிராட்டிக்கு நாயகனான பகவான்
தேசு பொலி -ஒளி மயமான
விண்ணாட்டில் -ஸ்ரீவைகுண்டத்தைக் காட்டிலும்
வேறு ஒன்றை எண்ணாதார் -தன்னையொழிய வேறு எதையும் நினைக்காதவர்களுடைய
நெஞ்சத்து -இதயத்தில்
இருப்பு -குடியிருப்பை
சால -மிகவும்
விரும்பும் -ஆதரிக்கும்

அருளுக்குக் குற்றமாவது என் எனில்?
ஒரு காரணத்தைப் பற்றி அருள் செய்தால் அவ்வருள் குற்றமாகும்.
அருளுக்கு இலக்கணம் கூற வந்த பரிமேலழகர்,
அருளாவது – தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை என்று கூறினார்.
இது துறவறத்திற்கு அடிப்படைப் பண்பாகக் கூறப்பட்டது.

அருளைப் பற்றி இவ்வாறு அறியும்போது இதோடு தொடர்புடைய அன்பைப் பற்றியும் அறிய வேண்டியதொன்றாகும்.
அதாவது மனைவி, மக்கள் முதலிய தொடர்புடையாரிடத்தில் செலுத்தும் அன்பு காதல் என்று விளக்கப்பட்டுள்ளது.
ஆகவே அதற்கு அருள் வேறுபட்டது.
தொடர்பு முதலிய எவ்விதக் காரணமும் இல்லாமல் அனைத்து உயிர்களிடத்தும் கருணை தான்
பகவானுக்கும் பகவத் பக்தர்களுக்குமே உள்ள பண்பு என்று உணர வேணும்.

அனைத்துலகும் –
எல்லா உலகத்தையும்
பூமிக்கு மேலே ஏழு உலகங்களும் பூமிக்கு கீழே ஏழு உலகங்களுமாக மொத்தம் பதினான்கு உலகங்கள் என்று சொல்லப்பட்டுள்ளன.
இந்த பதினான்கிற்கும் சேர்த்து அண்டம் என்று பெயர்.
பூமிக்கு மேல் உள்ள ஏழு உலகங்களாவன:-
பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம், ஜனேலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்பன.
பூமிக்கு கீழ் உள்ள உலகங்களாவன:-
அதலம், விதலம், சுதலம், ரசாதலம், தலாதலம், மகாதலம், பாதாளம் என்பன.
ஆகவே இவை அனைத்துலகும் எனப்பட்டன.

ஒரு காரணத்தைப் பற்றி அருள் செய்வதானால் அவ்வருளில் ஏற்றத் தாழ்வுகள் காணப்படும்.
பகவானுடைய அருள் எந்தக் காரணத்தைப் பற்றியும் நல்லவர் தீயவர் என்று பாகுபாடு பண்ணாமல்
எல்லோருக்கும் பொதுவாக இருப்பதால் ஆசிலருள் எனப்பட்டது.

இங்குச் சொல்லப்பட்ட உலகு என்ற சொல்
மக்களைக் குறிக்கும்.

காத்தளிக்கும் –
பக்தர்களுக்கு வேண்டாதவற்றைப் போக்கியும் வேண்டின விருப்பத்தைக் கொடுப்பதும் காத்தல் எனப்படும்.
இவ்விரண்டுமே இறைவனுடைய காக்கும் செயலாகும்.
வ்யாதி தீர்த்தல் ஒரு நன்மை.
அதுபோல வேண்டாததைக் கழித்தும் விரும்பியதைக் கொடுத்தலும் காத்தல் ஆகும்.
“காத்து” “அளிக்கும்” என்ற இரண்டு சொல்லும் ஒரே கருத்தைக் கூறுவதால் இவ்வாறு கூறப்பட்டது.

வாசமலராள் மணவாளன் –
“வேரி மாறாத பூமேலிருப்பாள்” என்று நம்மாழ்வார் அருளிச் செய்தபடி
தாமரையின் அழகு மாறாமையால் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கும் பெருமை உடையதும்
நறுமணம் அலை வீசுகின்றதுமான தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய பெரிய பிராட்டியார் என்று பொருள்.

அவளுக்குக் கணவனாகயிருப்பவன் என்று
வாசமலராள் மணவாளன் என்று எம்பெருமான் சிறப்பிக்கப்பட்டான்.

பெரிய பிராட்டியாருக்கு மணவாளன், “காத்தளிக்கும்” என்று கூறுவதால்
இறைவன் உலகங்களைக் காப்பதற்குப் பிராட்டியோடு கூடியிருந்து காக்கின்றான் என்றும்,
காக்கும் தொழிலில் பிராட்டிக்கும் முக்கிய பங்கு உண்டு என்றும் சொல்லும் வேதாந்தக் கருத்து இங்கு உணர்த்தப்படுகிறது.

மேலும் காத்தலுக்கு அடிப்படையான கருணை குணத்தைப் பிராட்டி
பகவானிடத்தில் தூண்டுகிறாள் என்றும்
அவ்வாறு இறைவன் உலக மக்களிடம் கருணை காட்டிக் காப்பதைக் கண்டு
மகிழ்தலும் பிராட்டியுடைய காரியமாகும் என்றும் அறியவேணும்.

இவ்வாறு பிராட்டியோடு கூடி நின்று ஆன்மாக்களைக் காப்பதில் பகவான் பண்ணின முயற்சி பயன் தரும்போது
அதாவது
இறைவனுடைய முயற்சிக்கு இலக்காகும் ஆன்மா சீர் திருந்தி (பண்டை வினைகளைப் பற்றோடு அறுத்து)
இறைவனைத் தவிர வேறு பயன்களை விரும்பாதவர்களாய்த் தூயனராகின்றார்கள்.
அத்தகைய தூய இதயத்தில் இறைவன் பண்ணும் அரவணைப்பின் சிறப்பு மேல் தொடரால் கூறப்படுகிறது.

தேசுபொலி விண்ணாட்டில் –
தேசுபொலி விண்ணாடு – பரமபதம், வைகுண்டம் என்று அழைக்கப்படுகிற அந்தமில் பேரின்பத்து அழிவில் வீடு என்பதாம்.
இது பெரிய பிராட்டியாரோடும் நித்ய சூரிகளோடும் பகவான் பேரின்பமாக எழுந்தருளியிருக்கிற இடம்.
இத்தகைய இன்பமிகு இடத்தைக் காட்டிலும்,

சால விரும்புமே –
மிகவும் உகந்திருக்கும் என்றவாறு.
ஏகாரம் ஈற்றசை இவ்வளவு ஆதரித்து நிற்கின்ற இடம் எது என்றால்
அது கூறப்படுகிறது மேல் தொடரால்.

வேறு ஒன்றை எண்ணாதார் நெஞ்சத்திருப்பு –
உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் என்று ஆழ்வார் இருந்தார்.
அவருக்குக் கண்ணனைத் தவிர வேறு பயன் எதுவும் தேவையில்லை.
அது போல, எல்லாப் பயன்களும் பகவானே என்று நினைத்து
வேறுபயன் எதையும் உள்ளத்தால் உள்ளலும் செய்யாமல் யார் இருக்கிறார்களோ
அவர்களுடைய இதயத்தில் இருக்கும் இருப்பு பரமபதத்தைக் காட்டிலும் மிக இன்பமாக இருக்கும் என்பது கருத்து.

—————

பகவானைத் தவிர வேறு பயன் எதையும் விரும்பாதார் உள்ளத்தில் இருந்தாலும்
அவ்விருப்பு அவனுக்குத் துன்பத்தைத் தருவதால் வெறுப்பாயிருக்கும் என்பதை இதில் அருளிச் செய்கிறார்.

பரமபதத்தைக் காட்டில் மிகவும் ஆதரவோடு இருப்பான் என்று கீழே சொன்னதற்கு மாறாக
இப்பாட்டில் வேறு வேறு பயன்களை விரும்புவாரது இதயங்களில் இருந்தாலும் அவ்விருப்பு
பகவானுக்கு துன்பத்தைத் தருவதால் பொறுக்க மாட்டாமல் இருக்கும் என்ற கருத்து இதில் கூறப்படுகிறது.

“நாளும் உலகை நலிகின்ற வாளரக்கன்
தோளும் முடியும் துணித்தவன்தன் – தாளில்
பொருந்தாதார் உள்ளத்துப் பூமடந்தை கேள்வன்
இருந்தாலும் முள் மேல் இருப்பு”–10-

பதவுரை:

நாளும் -நாள்தோறும்
உலகை -உலகத்தை எல்லாம்
நலிகின்ற -துன்புறுத்துகின்ற
வாளரக்கன் -வாளைத் தனக்குப் பக்கபலமாகக் கொண்ட இராவணனுடைய
தோளும் -இருபது தோள்களும்
முடியும் -பத்துத் தலைகளையும்
துணித்தவன் -அறுத்துத் தள்ளினவனான
பூ மடந்தை கேள்வன் தன் -திருமகள் நாயகனான இராமபிரானுடைய
தாளில் -திருவடிகளில்
பொருந்தாதார் -பற்றாதவர்களுடைய
உள்ளத்தில் -இதயத்தில்
இருந்தாலும் -கொள்கை அளவில் இருந்தாலும் அவ்விருப்பு
முள்மேலிருப்பு -முள் நுனியில் இருப்பது போன்றதாகும்

நாளும் உலகை நலிகின்ற –
ஏதோ ஒரு நாளில் அல்லாமல் தினந்தோறும் துன்புறுத்துகின்ற
அதிலும்
யாரோ ஒருவர் இருவர் என்றில்லாமல் உலகத்தார் அனைவரையும் துன்புறுத்துகின்ற,
துன்புறுத்துவதிலும்
சற்றும் இடையீடில்லாமல் ஒயாமல் துன்புறுத்துகின்ற என்று பொருள்.

வாளரக்கன் –
வாள் ஆயுதத்தையுடைய அரக்கன் இராவணன்.
சிவனை வழிபட்டு அவனிடம் பெற்றுக் கொண்ட வாளாயுதம்.
அதைத் தனக்குப் படைபலமாக பிடித்துக் கொண்டிருக்கும் அரக்கனான இராவணன் கூற்றாக
“சங்கரன் கொடுத்த வாளும்” என்ற கம்பன் கூறியது எண்ணற்குரியது.

தோளும் முடியும் துணித்தவன் –
இருபது தோள்களையும் பத்துத் தலைகளையும் அறுத்தவன்.
“நீள்கடல் சூழிலங்கைக்கோன் தோள்கள் தலை துணி செய்தான். தாள்கள் தலையில் வணங்கி,
நாள் கடலைக் கழிமினே” என்றார் நம்மாழ்வார்.
இதன் பொருளாவது: அவனைக் கொல்லும் போது “அகப்பட்டவன் அகப்பட்டான்”
தப்பி ஒடிப் போகாமல் கொன்றுவிடுவோம்” என்று எண்ணாமல் முதலில் அவனது இருபது தோள்களையும் அறுத்துத் தள்ளி.

“தான் போலு மென்றெழுந்தான் தரணியாளன்
அது கண்டு தரித்திருப்பானரக்கர் தங்கள்
கோன் போலும் என்றெழுந்தான் குன்ற மன்ன
இருபது தோளுடன் துணிந்த வொருவன் கண்டீர்”–(பெரிய திருமொழி-4-4-6)

“தலைகள் பத்தையும் வெட்டித் தள்ளி பொழுது போக
விளையாடினாற் போல கொன்றவன்
சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னன்
சிரங்கள் பத்தறுத்து திர்த்த செல்வர் மன்னு பொன்னிடம்”–(திருச்சந்தவிருத்தம் – 802)

பூ மடந்தை கேள்வன் –
தாமரை மலரில் வசிப்பவளாயும்
மாறாத யௌவனத்தை உடையவருமான பெரிய பிராட்டியாருக்குக் கணவனானவன்.

கீழ்ச்சொன்ன இராவணனை அழித்தற்குக் காரணம் நாட்டை நலிந்தது மட்டுமன்றி
பிராட்டியைப் பெருமாளிடமிருந்து பிரித்த செயலுமே முக்கிய காரணமாகும் –

“சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரிந்த கொடுமையிற் கடு விசையரக்கன்
எரிவிழித்திலங்க மணிமுடி பொடி செய்து இலங்கை பாழ்படுப்பதற் கெண்ணி”–(பெரிய திருமொழி-5-5-7)

என்ற பாசுரத்தில் இராவணன் அழிவதற்கு முக்கிய காரணம் பெருமாளிடத்திலிருந்து பிராட்டியைப் பிரித்தது தான் காரணம்
என்று திருமங்கை ஆழ்வாரும் அருளிச் செய்திருக்கிறார்.
இவ்வாறு பிராட்டியும் தானுமாக இன்பமிக்க எழுந்தருளியிருக்குமவன்.

தன் தாளில் பொருந்தாதார் உள்ளத்தில் –
தன் திருவடிகளைப் பற்றி நிற்கும் போதே வேறு பயன்களில் மனதைப் பறிகொடுத்து தன் திருவடிகளில்
பொருத்தமற்றிருக்கும் பொய்யர்களுடைய உள்ளத்தில்.

‘பொருந்தாதார்’ என்ற சொல்,
தன் திருவடிகளைப் பற்றி நிற்கும் போதே என்ற பொருளைக் குறிப்பாக உணர்த்துகிறது.
வேறு பயன்களில் மனதைப் பறிகொடுத்தவர்கள் மனம் திருவடியில் பொருந்தி இருக்க முடியாதல்லவா!

இருந்தாலும் – என்ற சொல்லால்
வேறு பயன்களை விரும்புவார் மனதில் இருக்க மாட்டான் என்ற பொருள் குறிப்பாக உரைக்கிடக்கிறது.
தன்னிடம் வேறு பயனைக் கருதித் தன்னை வழிபடும் போலி பக்தருடைய வற்புறுத்தலுக்காக
அவர்கள் மனதில் இருந்தாலும் என்று பொருள்.

முள்மேல் இருப்பு –
முள் நுனியில் இருப்பது போன்றது.
அதாவது
பகவானுக்குத் துன்பம் தரக் கூடியதாகும் என்பதாம்.

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகளின் தனியன் விசேஷங்கள் —

August 23, 2021

கலியுகம் என்பது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 3069ம் வருஷத்திலிருந்து ஆரம்பம் என்பதை நினைவில் வைத்து,
கலியுகம் என்று சொல்லும்போதெல்லாம் அவரவர்கள் உசிதப்படி ஆங்கில ஆண்டைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

——–

ஸ்ரீ இராமாநுஜர்

திருக் குருகைப் பிரான் பிள்ளான்-இவருக்கு ” குருகேசர் ” என்றும் திருநாமம்.
இவர் பெரிய நம்பிகளுடைய இரண்டாவது குமாரர்
ஸ்ரீ உடையவர் நியமனப்படி, திருவாய் மொழிக்கு ” திருவாறாயிரப்படி ” என்று வ்யாக்யானம் செய்து,
உடையவரால் மிகவும் உகக்கப்பட்டு, “பகவத் விஷயம் ” என்று இன்றளவும் கொண்டாடப் படுகிறது.

இவருக்குப் பிறகு —-ஸ்ரீ விஷ்ணு சித்தர் என்கிற ”எங்களாழ்வான் ”
இவர் , திருவெள்ளறையில் அவதரித்தவர்

பிறகு….நடாதூர் அம்மாள்

பிறகு நம்பிள்ளை

அடுத்து, அப்புள்ளார்

அவருக்கு அடுத்து, ஸ்வாமி வேதாந்த தேசிகன் —–தூப்புல் திவ்ய தேசத்தில் அவதாரம் .

———–

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய : கவிதார்க்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி ||

தனியனின் அர்த்தம்–மிகச் சுருக்கமாக—
கருவிலே திருவுடையவரான ,திருவேங்கடவனின் மறு அவதாரமான
வேதங்கள், சாஸ்த்ரங்கள் முதலியவற்றில் மிகவும் வல்லுநரான ,
வாதப் போர் செய்வதில் ஸிம்ஹமான ,வேதாந்த ஆசார்யரான ஸ்வாமி தேசிகன்
எங்களுடைய ஹ்ருதயத்தில் எப்போதும்,எப்போதும் வஸிப்பாராக —
எங்கள் ஹ்ருதயங்களை இருப்பிடமாகக் கொள்வாராக—

இது கலி சகாப்தம் 4431ல் சுக்ல வருஷம் சித்திரை மாதம் ,புனர்வஸு நக்ஷத்ரத்தில் அருளப்பட்டது என்பர். .
ஸ்வாமி தேசிகனின் திருக்குமாரர் வரதாசார்யர் என்கிற நயினாசார்யர் அருளியது.
நள வருஷம் ஆவணி மாத ரோஹிணி நக்ஷத்ரத்தில் அவதாரம்.

ஸ்ரீ நயினாசார்யர் அருளிய நூல்கள்–
1-ஸ்வாமி தேசிகனின் ”அதிகரண ஸாராவளி” க்கு ”அதிகரண சிந்தாமணி ”
என்கிற வ்யாக்யானம்
2-தேசிக மங்களம்
3-ப்ரார்த்தநாஷ்டகம்
4-ப்ரபத்தி
5-விக்ரஹத்யாநம்
6-திநசர்யை
7-பிள்ளையந்தாதி மற்றும் பல நூல்கள்.

இவருக்குப் பத்து சிஷ்யர்கள்.
ஜய வருஷம் பங்குனி மாதம் க்ருஷ்ணபக்ஷ ஸப்தமியில் பரமபத ப்ராப்தி.

———-

ராமாநுஜ தயா பாத்ரம் ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||

கலியுகம் பிறந்து, 4440 ம் ஆண்டில் பஹூதான்ய வருஷம்….(இப்போது கலியுகம் 5117ம் வருஷம்—– ஆங்கிலம் 2017 )
இந்தத் தனியனை, ஆவணி மாஸ ஹஸ்த நக்ஷத்ரத்தில் அநுக்ரஹித்தவர் ஸ்ரீபேரருளாள ஜீயர்.
இவர் இந்தத் திருநாமத்துடன்,
பிறகு, ப்ரஹ்ம தந்த்ர ஸ்வதந்தரர் என்று ஸ்வாமி தேசிகனாலே பஹூ மானிக்கப்பட்டு,
ஸ்ரீ பரகால மடத்தை மைசூரில் ஸ்தாபித்து, ஸ்வாமி தேசிகன் ஆராதித்து, பிறகு அநுக்ரஹித்துக் கொடுத்த
ஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவனை ஆராத்ய தெய்வமாகப் பெற்று, அநேகமாயிரம் சிஷ்ய வர்க்கங்களுடன் அடுத்தடுத்த
ஆசார்ய பரம்பரையுடன் அங்கங்கு மடத்தின் கிளைகளை நிறுவி, பராமரித்து, தேசிக ஸம்ப்ரதாயத்தைப் பரப்பி வரும்
ஸ்ரீ பரகால மடத்தின் முதல் ஜீயர்.

ஸ்வாமியின் ,ப்ரபந்தார்த்த நிர்வாகத்தில் ஈடுபட்டு யாதவாத்ரியில்—மேல்கோட்டையில், இத் தனியன் ஸமர்ப்பிக்கப்பட்டது
என்று குரு பரம்பரையில் கூறப்பட்டது.
ஸ்ரீ ஸ்வாமியின் எழுபதாவது திரு நக்ஷத்ரத்தில் இது ஸமர்ப்பிக்கப்பட்டது என்று தேறுகிறது

ஸ்வாமி தேசிகன், “ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய :——-” என்கிற தனியன், நம்முடைய பெருமையைச் சொல்கிறது.
” ராமாநுஜ தயாபாத்ரம் —-” என்கிற இந்தத் தனியன், நமக்கு ஏற்பட்டுள்ள சதாசார்ய கடாக்ஷப் பெருமையைச் சொல்கிறது …..
என்று சந்தோஷப்பட்டு,
” ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: …..” என்கிற தனியன் ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபத்தின்போது அநுஸந்திக்கும் படியும்
” ராமாநுஜ தயா பாத்ரம் …” என்கிற இந்தத் தனியன் “பகவத் விஷய ” காலக்ஷேபத்தின்போது அநுஸந்திக்கும்படியும்
நியமித்தார்.

———-

ராமாநுஜ தயா பாத்ரம் ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||

ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்த ப்ரவர்த்தகர்—-ஸ்ரீ ராமாநுஜ ஸித்தாந்தம் என்று பெருமையுடன் சொல்லப்படும்,
ஸித்தாந்தத்துக்கு அதிபதி, ஸாக்ஷாத் பரம ஆசார்யன் –ஸ்ரீ உடையவர்
—இவருடைய தயை –கருணைக்கு–பாத்ரம் —பாத்ரமானவர் –இலக்கானவர்
ஸ்ரீராமாநுஜரின் கருணைக்குப் பாத்ரமானவர்–இந்த ஸ்ரீ ராமானுஜர், நமது விசிஷ்டாத்வைத தர்ஸன ஸ்தாபகர்.
இவருடைய தயைக்கு இலக்கானவர்-

இன்னொரு அர்த்தம்——-

இராமாநுஜர் என்பது, ஸ்வாமி தேசிகனின் ஆசார்யன் ஸ்ரீ அப்புள்ளாரைக் குறிக்கிறது என்பர் .
இவருக்கு “ராமாநுஜப் பிள்ளான்” என்றும் திருநாமம் உண்டு.——கிடாம்பி ராமாநுஜாசார்யர் என்றும் திருநாமம்.

இவருடைய தனியன் :–
நமோ ராமாநுஜார்யாய வேதாந்தார்த்த ப்ரதாயிநே |
ஆத்ரேய பத்மநாபார்ய ஸூதாய குணசாலிநே ||

இவருடைய சகோதரி தான், தோதாரம்மா —-ஸ்வாமி தேசிகனின் தாயார்.
தனது மாமாவிடம், மருமானான ஸ்வாமி தேசிகன்,
சப்தம் ,தர்க்கம், மீமாம்ஸம் முதலிய ஸாமாந்ய சாஸ்த்ரங்களைக் க்ரஹித்தார் .
ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யம், பகவத் விஷயம், முதலான வேதாந்த க்ரந்தங்களையும்
விசேஷ அர்த்தங்களுடன் உபதேசிக்கக் கேட்டார்.

அப்புள்ளார், வைநதேய மந்த்ரத்தை உபதேசித்தார்.

தனது திருமேனியில் நோவு சாத்திக்கொண்டிருந்தபோது, தனக்கு ஸ்ரீ நடாதூர் அம்மாள் மூலமாகக் கிடைத்த ,
தான் ஆராதனம் செய்துவந்த ஸ்ரீ உடையவர் பாதுகைகளையும் கொடுத்தார்.
ஸ்வாமி தேசிகன் அவைகளைப் பக்தியுடன் பெற்று, தன்னுடைய திருவாராதனத்தில், சேர்த்துக் கொண்டார்.

ஸ்வாமி தேசிகன் மங்களத்தில் ,…..
ராமாநுஜார்யாத் ஆத்ரேயாத் மாதுலாத் ஸகலா: கலா : |
அவாப விம்ஸத்யப்தே ய :தஸ்மை ப்ராக்ஞாய மங்களம் ||–என்று மங்களா சாஸனம்—- ஸ்தோத்ரம் சொல்கிறோம்.

ராமாநுஜ தயா பாத்ர வ்யாக்யானத்தில்,
” ராமாநுஜ சப்தத்தாலே, ராமாநுஜ அப்புள்ளார் முகமாய், இதி
எதிராஜ மாகானஸ எதிவரனார் மடப்பள்ளி வந்த மணம் என்னும் இத்யாதியாலும்,
உடையவருடைய கடாக்ஷபரீவாஹமாக வந்து ஸர்வார்த்தங்களும் நிரம்பின “என்று உள்ளது .
இதனாலும், அப்புள்ளார் என்கிற ஆசார்யரின் தயைக்குப் பாத்ரமானவர் என்றும் அர்த்தம் சொல்வர்.

———

எப்படி, தயைக்குப் பாத்ரமாகிறார் என்றால்,
1. அவருடைய திருவுள்ளத்தை நிறை வேற்றுவது —அதன்மூலமாகக் கருணைக்குப் பாத்ரம்
2. அவர் விட்டுச் சென்ற ,ஸம்ப்ரதாய விஷயங்களை நிறை வேற்றுவது —அதன் மூலமாகக் கருணைக்குப் பாத்ரம
இந்த இரண்டுமே, ஸ்வாமி தேசிகனிடம் இருந்தன.
ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்து ப்ரவர்த்திப்பித்தல் —ஸ்ரீ பாஷ்யகாரர் உகந்த கைங்கர்யம்.
இன்னொன்று—திவ்ய ப்ரபந்த ஸம்ரக்ஷணம்—ஸ்ரீ உடையவர் உகந்த இந்தக் கைங்கர்யங்களை தாமும் செய்து,
தானே ப்ரபந்தங்களை அருளி, திவ்ய ப்ரபந்த ரக்ஷணம் செய்தார்.

———–

3. “ராமாநுஜ ” என்பது, இளைய பெருமாளைக் குறிக்கும்.
“லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்த : ” என்கிறார், வால்மீகி.
பெருமாளாகிய ஸ்ரீ ராமனையே காப்பாற்றியவர் லக்ஷ்மணன்
அத்தகைய இளைய பெருமாளின் அருள் கருணைக்குப் பாத்ரமானவர், ஸ்வாமி தேசிகன்.

———–

4. ராம அநுஜ தயா பாத்ரம் —-
பரதனுக்கும், ராமாநுஜன் என்கிற திருநாமம் உண்டு.
“ராமாநுஜம் லக்ஷ்மண பூர்வஜஞ்ச ……..
”இந்த ராமாநுஜனான பரதன், பதினான்கு ஆண்டுகள், ராமனின் பாதுகைகளை ஆராதித்தவர்.
ஸ்வாமி தேசிகன், பாதுகைகளுக்காகவே ,“சஹஸ்ரம் “—பாதுகா சஹஸ்ரம் –பாடியவர்.
ஆக , ராம அநுஜ தயா பாத்ரம்.

———

5. சத்ருக்னனும் ராமனுக்கு, அநுஜன். பரதனை , ராமனுக்கு அனுஜன் என்று பார்த்தோம்.
அந்தப் பரதனுக்கும் அநுஜன் சத்ருக்னன்.இவன் பரம பாகவதன். நித்ய சத்ருக்களை வென்றவன்
“ராமாநுஜ —சத்ருக்ன தயா பாத்ரம் “என்று சொல்வார்.

————-

6. “ராமாநுஜ ” என்பது ஸ்ரீ க்ருஷ்ணனைக் குறிக்கும்.
ராமாவதாரத்துக்குப் பிந்தைய அவதாரம்.—-க்ருஷ்ணாவதாரம் .
ஆக , க்ருஷ்ணனும் —ராமாநுஜன்
ராமாநுஜ தயா பாத்ரம்—-க்ருஷ்ணனுடைய கருணைக்குப் பாத்ரமானவர், ஸ்வாமி தேசிகன்.
யாதவாப்யுதயம் ஒன்று போதும்; கோபால விம்சதி ஒன்று போதும்

ஸ்வாமி தேசிகன், திருவேங்கட முடையானையும், தேவப் பெருமாளையும் அரங்கனையும்—-கண்ணனாகவே கண்டவர்.

—————-

வைஷ்ணவ சித்தாந்த ஸ்தாபகரான , ஸ்ரீ ராமாநுஜரின் திருநாமத்துடன் தொடங்கும் தனியன்,
ஸ்வாமி தேசிகனுக்கு மட்டிலுமே உண்டு என்பது ஒரு ஏற்றம்.
ராமாநுஜ சித்தாந்தத்தை த் தன்னுடைய க்ரந்தங்களால் ஆழமாக வேரூன்றச் செய்து,
ஆல் போல் தழைக்கச் செய்தவர் ஸ்வாமி தேசிகன்.
ராமாநுஜ தர்சனத்துக்கு –ரக்ஷை கட்டியவர்—–. ஐந்து ரக்ஷைகள் —ரக்ஷை—காப்பு.

1. ஸ்ரீ ஆளவந்தாரின் “கீதார்த்த ஸங்க்ரஹம்”என்கிற க்ரந்தத்துக்கு ,ஸ்ரீ உடையவர், “கீதா பாஷ்யம்” செய்தார்.
இரண்டையும் சேர்த்து, ” கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷை ” செய்தார்.
2. “கத்யத்ரயத்து”க்கு ரஹஸ்ய ரக்ஷை செய்தார்.
3. சரணாகதி சித்தாந்தத்தை ஸ்தாபிக்க, “நிக்ஷேப ரக்ஷை” செய்தார்.
4. ஸ்ரீ பாஞ்சராத்ரம் பரஸ்பர முரண்பாடுகளாலே மறைந்துவிடுமோ என்கிற நிலையில் இருந்ததை மாற்றி,
“ஸ்ரீ பாஞ்சராத்ர ரக்ஷை ” செய்தார்.
5. அநுஷ்டானங்கள், நலிவு அடையாதபடி, பொலிவு அடைய, “ஸச்சரித்த ரக்ஷை ” செய்தார்.

இப்படி ஐந்து ரக்ஷைகளை, ராமாநுஜ சித்தாந்தத்துக்குக் கட்டி, ராமாநுஜ சித்தாந்தத்தை ,நிலை நிறுத்தியவர் .

ஆதலால், ராமாநுஜ தயாபாத்ரம்.
ஸ்ரீ இராமாநுஜர் பெருமையை, உலகுக்குக் பறை சாற்றியவர், ஸ்வாமி தேசிகனைப் போல வேறு ஆசார்யன் இல்லை.
“யதிராஜ ஸப்ததி ” ஒன்றே போதும்,இதைச் சொல்ல!
ராமாநுஜர் பெருமையை இப்படி உலகறியச் செய்ததால் “ராமாநுஜ தயா பாத்ரம்”

இராமாநுச நூற்றந்தாதியை, நாலாயிர திவ்யப் ப்ரபந்தத்தோடு சேர்த்து, அநுசந்தானம் செய்வித்து,
இன்றளவும் வழங்கும்படியாகச் செய்தவர், ஸ்வாமி தேசிகன், ஆதலால், இவர், ராமாநுஜ தயா பாத்ரம்.

———-

இன்னொன்று……
ரமந்த இதி ராமா :தேஷாம் —–அதாவது, ஆழ்வார்களின் அநுஜ:—ராமாநுஜர் —-உடையவர்.
ஸ்வாமி தேசிகன், ஆழ்வார்களின் ப்ரபந்தங்களைக் காத்து, வளர்த்து, உடையவருக்கு உகப்பாக இருப்பதால்,
ராமாநுஜ தயா பாத்ரம்.

ஸ்வாமி தேசிகன் ,” ப்ரபந்த ஸாரம் ” என்று அருளி இருக்கிறார். இதற்குத் தனியனே,
ராமாநுஜ தயா பாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||
இந்தப் ப்ரபந்த ஸாரத்தில், பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார்,
நம்மாழ்வார், மதுரகவிகள், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், கோதைப் பிராட்டியான ஸ்ரீ ஆண்டாள்,
தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார் ….என்கிற 12 ஆழ்வார்களையும் சொல்லி,
அவர்கள் அவதரித்த நாள், ஊர், திருநாமங்கள், திருமொழிகள், அவற்றுள் பாட்டின் வகையான இலக்கம், மற்றுமெல்லாம் சொல்லி,
14 வது பாசுரமாக, ஸ்ரீ உடையவர்—ராமாநுஜரைப் பற்றி,

தேசம் எலாம் உகந்திடவே பெரும்பூதூரில் , சித்திரையில் ஆதிரை நாள் வந்து தோன்றி
காசினி மேல் வாதியரை வென்று, அரங்கர் , கதியாக வாழ்ந்து அருளும் எதிராசா, முன்
பூசுரர் கோன் திருவரங்கத் தமுதனார் ,உன் , பொன் அடி மேல் அந்தாதி ஆகப் போற்றிப்
பேசிய நல் கலித் துறை நூற்றெட்டுப் பாட்டும் பிழை அறவே எனக்கு அருள் செய் பேணி நீயே ——————-என்கிறார்.

தேசம் எல்லாம் போற்றும் ஸ்ரீ பெரும்பூதூரில், சித்திரை மாதம், திருவாதிரை நக்ஷத்ரத்தில்,
அவதரித்து, இவ்வுலகில் குதர்க்க வாதம் செய்பவர்களை வென்று,
அரங்கனே—-பெரிய பெருமாளே– கதி என்று வாழ்ந்து, அருளும்—அருள்புரிந்து கொண்டிருக்கிற—
இப்போதும் , அருள் புரிந்து கொண்டிருக்கிற —யதிராஜா—–யதீச்வரர்களுக்கு எல்லாம் ராஜனே—- என்கிறார்.

இப்படி, எதிராசரான ஸ்ரீ ராமாநுஜரையும் , ஆழ்வார்களோடு, ப்ரபந்த கோஷ்டியில் சேர்த்தவர் ,
ஸ்வாமி தேசிகன்—-ஆதலாலும், இவர், ராமாநுஜ தயா பாத்ரம்.

வையகமெண் பொய்கை பூதம் பேயாழ்வார் , மழிசையர் கோன் மகிழ் மாறன் மதுர கவிகள்
பொய்யில் புகழ் கோழியர் கோன் விட்டு சித்தன் , பூங்கோதை தொண்டரடிப் பொடி பாணாழ்வார்
ஐயன் அருள் கலியன் எதிராசர் தம்மோடு, ஆறிருவர் ஓரொருவர் அவர் தாம் செய்த
துய்ய தமிழ் இருபத்து நான்கிற் பாட்டின், தொகை நாலாயிரமும் அடியோங்கள் வாழ்வே –ஆழ்வார்களின் கோஷ்டிப் பாசுரம் …..

ஆறிருவர் —பன்னிரண்டு ஆழ்வார்கள்…..அவர்களோடு, ஓரொருவர் –ஒரே ஒருவர் —எதிராசர் தம்மோடு—-
ஆறு இருவர்களும், ஒரே ஒருவரும் சேர்கிறார்கள். அதன் பலன், பாட்டின் தொகை, நாலாயிரமும்—“உம் ” என்பது முக்கியம்.
அடியோங்கள் வாழ்வே—–பன்னிரு ஆழ்வார்களுக்கும் எதிராசருக்கும் அடியவர்களான ,எங்களுடைய வாழ்வே —
உய்வதே—-உய்து அவனடி அடைவதே வாழ்வு—-வாழ்வு.— வாழ்வதன் பயன் என்கிறார். ஸ்வாமி தேசிகன்
இவர், ராமாநுஜ தயா பாத்ரம்.

————

இன்னொன்று—–“ராமா” —என்றால், கோதைப் பிராட்டியைக் குறிக்கும்
“அநுஜ” என்றால், கோதைக்குப் பின்னால் தோன்றிய வள்ளல்—உடையவர்.
அந்த உடையவரின் கருணைக்குப் பாத்ரமானவர் ,ஸ்வாமி தேசிகன்—

———-

மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்து உறை மார்பினன் ,தாள்
தூமலர் சூடிய தொல் அருள் மாறன் துணை அடிக்கீழ்
வாழ்வை உகக்கும் இராமாநுச முனி வண்மை போற்றும்
சீர்மையன் எங்கள் தூப்புல் பிள்ளை பாதம் என் சென்னியதே .
இராமாநுசனின் வண்மையைப் போற்றும், சீர்மையன்— என்று ஸ்ரீ நயினாசார்யர் பிள்ளை அந்தாதியில் சொல்கிறார்.

எங்கள் தூப்புல் பிள்ளை—ஸ்வாமி தேசிகனின் திருவடிகள்—
என் சென்னியதே—-என் தலைமேல் இருக்கிறது–என்று, ஸ்ரீ நயினாசார்யர் ,பாசுரமிடுகிறார் .
இராமாநுச முனி வண்மை போற்றும் சீர்மையன்—ஆதலால், ராமாநுஜ தயா பாத்ரம்.

————-

ஜ்ஞான வைராக்ய பூஷணம்——–

பூஷணம், என்றால் ஆபரணம் . ஸ்வாமி தேசிகனுக்கு, எது ஆபரணம் என்றால் ,ஜ்நானமும் , வைராக்யமும்
ஜ்ஞானப் பிரான்—-ஸ்ரீ வராஹப் பெருமான
ஜ்ஞாநானந்த மயன்—-ஸ்ரீ ஹயக்ரீவன

1. ஸ்ரீ வராஹப் பெருமான் ,பூமிப் பிராட்டிக்கு, வராஹ சரம ஸ்லோகம் சொல்ல,
பூமிப்பிராட்டி, கோதையாக அவதரித்து வராஹ, சரம ஸ்லோகத்தை ,
” திருப்பாவை ” பாசுரங்களாக , நம்மைப் போன்ற ஜீவாத்மாக்கள், உஜ்ஜீவிக் அநுக்ரஹித்தாள் .
ஸ்ரீ உடையவர், ஸ்ரீ ஆண்டாளின் பாசுரங்களில் உருகி, “திருப்பாவை ஜீயரா”க ஆனார்.
இவை எல்லாவற்றையும் சேர்த்து, சிந்தித்து , ஸ்வாமி தேசிகன், “கோதா ஸ்துதி ” அருளினார்.
இந்த ஸ்துதி மூலமாக, ஞானப் பிரானையே வயப் படுத்தினார்.

கோபாயே தநிஸம் ஜகந்தி குஹநா போத்ரீ பவித்ரீ க்ருத –
ப்ரஹ்மாண்ட : ப்ரளயோர்மி கோஷ குருபிர் கோணா ரவைர் குர்குரை
யத்தம் ஷ்ட்ராங்குர கோடி காட கடநா நிஷ்கம்ப நித்ய ஸ்திதி :
ப்ரஹ்ம ஸ்தம்ப ஸௌதஸௌ பகவதீ முஸ்தேவ விஸ் வர் பரா ||–ஸ்வாமி தேசிகன் , தான் அருளிய ” தசாவதார ஸ்தோத்” ரம்

அதாவது…..
பகவான், மஹா வராஹமாக அவதரித்து, கடல்களின் ஓசையை விட
பெரிய உறுமல்களால், உலகங்களை உய்வித்து தம்முடைய இரு அழகிய பற்களினால்,
மூழ்கிய பூமியைத் தூக்கி நிலை நிறுத்தினார்.
இது, பற்களிடையே சிக்கிய கோரைக்கிழங்கு போலக் காட்சி அளித்தது.

மேலும், ப்ரஹ் மாதி, ஸ்தாவர ,பிராணிகள், மற்ற எல்லாவற்றையும்– ஈன்றது.
அத்தகைய வராஹப் பெருமான் லோகத்தை ரட்சிக்க வேண்டும் …….
.( இந்த ச்லோகம் –நவ க்ரஹங்களில் ராகு , க்ரஹப் ப்ரீதிக்கு ஏற்றது என்றும் சொல்வர் )

2. வைனதேய மந்த்ரத்தைப் பலமுறை ஆவ்ருத்தி செய்து, ஸ்ரீ கருடன் ப்ரஸன்னமாகி,
ஸ்ரீ ஹயக்ரீவரை விக்ரஹ ரூபமாகக் கொடுத்து ஆராதிக்கச் சொல்ல,

ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகா க்ருதிம
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹ–என்று தொடங்கி, ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் அருளினார்.

ஸ்ரீ ஹயக்ரீவனின் பரிபூர்ண கடாக்ஷத்தால், எல்லா வித்யைகளும் , போட்டி போட்டுக் கொண்டு,
ஸ்வாமி தேசிகனிடம் வந்து ப்ரார்த்தித்த போது,
ஸ்வாமி தேசிகன், ஞானமும், வைராக்யமும், சம்பந்தப்பட்ட வித்யைகளை மட்டில் பிரார்த்தித்து,
மீதி வித்யைகளை ,எப்போதெல்லாம் ப்ரார்த்தனை செய்யப்படுகிறதோ,
அப்போது வந்து அநுக்ரஹிக்க வேண்டினார்.

ஜ்ஞான பூஷணம் —- இதற்கு அவர் அருளிய க்ரந்தங்கள் ஒன்றா இரண்டா ? பலப் பல !
32 ரஹஸ்ய க்ரந்தங்கள்—-யாவும் ஜ்ஞானத்தின் சிகரங்கள்–
32 ஸ்தோத்ரங்கள் , 24 ப்ரபந்தங்கள் , 24 அநுஷ்டான சாஸ்திரங்கள் , 8 காவ்யங்கள் ,
1 பகவத் விஷயம் —
ஆக மொத்தம் 121

இவைகள் மாத்ரமல்ல, ஸ்வாமி தேசிகன் காலக்ஷேபங்கள் ஸாதித்த பாங்கு,
சிஷ்யர்களுக்கு ஏற்பட்ட சாஸ்த்ர சந்தேக நிவ்ருத்தி —–இப்படிப் பல ,
ஸ்வாமி தேசிகன் ஜ்ஞான பூஷணம் என்பதைச் சொல்கிறது.

———

இனி, வைராக்ய பூஷணம் —-
ஸ்வாமி தேசிகன் க்ரஹஸ்தாஸ்ரமத்தில், தினந்தோறும் , உஞ்ச வ்ருத்தி செய்து, உஞ்ச வ்ருத்தியில் கிடைக்கும்
அமுந்த்ரியை (அரிசி) பத்நியிடம் கொடுத்து, அந்த அரிசியைத் தளிகை செய்து,
திருவாராதனத்தில் தளிகை அமுது பண்ணுவிப்பது வழக்கம்.

இப்படி, ஒரு சமயம், ஸ்வாமி தேசிகன் உஞ்சவ்ருத்தி எடுக்கும்போது,
ஒரு தனிகரின் (பணக்காரர் ) பத்னி, ஸ்வாமி தேசிகனின் ஆசார்ய விலக்ஷண , பரம காருண்ய , பரம தேஜஸ்ஸால் ஈர்க்கப்பட்டு,
அன்றைய தினத்தில், அரிசியுடன் கூட சில தங்கக் காசுகளையும் சேர்த்து , உஞ்சவ்ருத்தி பாத்ரத்தில் சேர்த்து விட்டாள் .
ஸ்வாமி தேசிகன் இதைக் கவனிக்கவில்லை.
க்ருஹத்துக்கு வந்தார்——அரிசியை ஸஹதர்மிணியிடம் கொடுத்துவிட்டு, இவருடைய நித்யஅநுஷ்டானத்தைத்தொடங்கி விட்டார்.
ஸ்வாமியின் பத்னி, அரிசியை முறத்தில் சேர்த்து, அதை சோதிப்பது வழக்கம்.
அதாவது—சுத்தம் செய்வது—ஏதாவது கல் மண் போன்றவை இருப்பின் அதை நீக்குவது—
அப்படி சோதிக்கும் போது, இந்தப் பொற் காசுகளைப் பார்த்தாள் .
இவை என்னவென்று தெரியாமல், ஸ்வாமி தேசிகனிடம் வந்து,
“ஸ்வாமி இன்றைய உஞ்சவ்ருத்தியில் .., அரிசியுடன்கூட, ஏதோ பளபளவென்று மின்னுகிறதே …இது என்ன….? ” என்று கேட்டாள
ஸ்வாமி தேசிகன் முறத்தைப் பார்த்தார் ;அரிசியுடன்கூடப் பொற்காசுகளையும் பார்த்தார்;
“இதுபளபளவென்று இருப்பதாலேயே இது ஒரு புழு…விஷப் புழு….தூர வீசி எறிந்துவிடு…..” என்றார்.
பத்னியும் அப்படியே செய்தாள் .
வைராக்ய பூஷணத்துக்கு இது ஒரு உதாரணம்.

————–

இன்னொரு உதாரணம்—
“வித்யாரண்யர் ” என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
அக்காலத்திய விஜய நகர சாம்ராஜ்யத்தில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர்.
இவரும், ஸ்வாமி தேசிகனும் சஹாக்கள் ( நண்பர்கள்)
வித்யைகளைப் பயிலும் போது ஆசார்யனிடம் இருவரும், , சிஷ்யர்கள்

அதாவது சஹ மாணவர்கள். வித்யைகளை எல்லாம் கற்றுத் தேறி, இருவரும் பிரிந்தார்கள்.
வித்யாரண்யர், விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரச குமாரியை ” ப்ரஹ்ம ராக்ஷஸ் ”பீடித்து இருந்த போது,
அரசனின் வேண்டுகோளின்படி, ப்ரஹ்ம ராக்ஷஸ்ஸை விரட்டி, ராஜகுமாரியைக் காப்பாற்றினார்.
அது முதல், ராஜ சபையில அத்யக்ஷர் . ஆஸ்தான வித்வான் ஆனார்.
செல்வச் செழிப்பு; அதிகாரம்; ஏகப்பட்ட மரியாதைகள் —-இப்படி வாழ்ந்து வந்தார்.
ஸ்வாமி தேசிகன், வைராக்ய பூஷணமாக இருப்பதும், ராமாநுஜ தர்ஸனத்தைப்
பரப்பி வருவதும், தேசமெங்கும் பரவியது. வித்யாரண்யரும் இதைக் கேள்விப்பட்டார்

தன்னுடைய சஹா ,தன்னை விடவும் ஞானத்தில் முதிர்ந்தவர், ஆசார்ய விலக்ஷணர்
இப்படி, உஞ்சவ்ருத்தி எடுத்துக் கொண்டு, வறுமையில் இருக்கும்போது,
தான் மாத்ரம் செல்வத்தில் புரளுவது சரியல்ல என்று எண்ணினார்.

அவரையும் விஜயநகர சாம்ராஜ்ய வித்வானாக ஆக்கினால், அவரது வறுமை அகன்று விடும் என்று தீர்மானித்தார்.
உடனே ஒரு தூதுவரைக் கூப்பிட்டார், ஒரு பத்ரிகையை . எழுதி, தூதரிடம் கொடுத்து ,ஸ்வாமி தேசிகனிடம் அனுப்பினார்.

அதிகப் ப்ரஸித்தி பெற்ற தூப்புல் குலத் திலகமே —–அடியேன் மூலமாக, தேவரீரின் புகழையும், கீர்த்தியையும் ,
விஜயநகர மஹாராஜா கேள்விப்பட்டு,சந்தோஷப்பட்டார்; அதுமுதல், தேவரீரை ஸேவிக்க ஆசைப்பட்டு,
தேவரீரையே த்யாநித்துக் கொண்டு இருக்கிறார்;
தேவரீரைத் தன்னுடைய தனத்தால் ஆதரித்து,தேவரீருடைய முகார விந்தத்திலிருந்து வரும் வாக் அம்ருதத்தில் மூழ்கித்
திளைக்க விரும்புகிறார்; தேவரீர், சிஷ்யவர்க்கங்களுடன் இங்கு விஜயநகரத்துக்கு—ஹம்பி நகருக்கு, எழுந்தருளி,
தேவரீரின் ஆதரவு பெற்ற அடியேனையும், சந்தோஷிக்கச் செய்யவேண்டும–என்று எழுதினார்.

இந்தப் பத்ரிகையைப் படித்த, ஸ்வாமி தேசிகன்,
க்ஷோணீ கோண சதாம்ச பாலந கலா துர்வார கர்வாந
க்ஷூப்யத் க்ஷூத்ர நரேந்த்ர சாடு சநா தந்யாந்ந மந்யா மஹே |
தேவம் ஸேவிதுமேவ நிஸ்சி நு மஹே யோஸௌ தயாஜ : புர
தாநா முஷ்டி முசே குசேல முநயே தத்தேஸ்ம வித்தே சதாம் ||–என்று பதில் ஸ்லோகம் எழுதி அனுப்பினார

அதாவது—-
இந்தப் பூமண்டலம் மிகப் பெரியது; இதில் ஏதோ ஒரு மூலையில், “ஏக தேசம்” என்று சொல்லிஅரசர்கள், ஆண்டுகொண்டு இருக்கிறார்கள் .
அவர்களை, அடியேன் துதிக்க விரும்பவில்லை. அரசர்களைத துதித்து, அதனால் வரும் தனமும் ஒரு பொருட்டாக அடியேனின் மனத்தில் படவில்லை.
பகவானைத் த்யானம் செய்கிறோம். அவரே எல்லாப் பலன்களையும், கொடுக்க வல்லமை படைத்தவர்
குசேலருக்குக் குபேர. சம்பத்தைக் கண்ணன் கொடுக்க, நாம் அறிந்திருக்கிறோம் அல்லவா !
அவன் பகவான்—-கொள்ளக் குறைவிலன்; வேண்டிற்றெல்லாம் தரும் கோதில் மணிவண்ணன
ஸ்ரீ நம்மாழ்வார் அருள்கிறார் —
சேரும் கொடை புகழ் எல்லையிலானை ,ஓராயிரம
பேரும் உடைய பிரானையல்லால், மற்றும் யான்கிலேன

வித்யாரண்யருக்கு இந்தப் பதில் போய்ச் சேர்ந்தது.
அவர் வருத்தப்பட்டார்.சிலகாலம் கழிந்தது. வித்யாரண்யரால் வெறுமனே இருக்க முடியவில்லை.
இன்னொரு பத்ரிகை எழுதி, தூதுவன் மூலமாக அனுப்பினார்.

அதையும் படித்தார், ஸ்வாமி தேசிகன்.
உடனே இந்தப் பத்ரிகைக்கும்பதில் எழுதினார்.
அதுதான் “வைராக்ய பஞ்சகம் ”

1-ஸிலம் கிமநலம் பவே தநல மௌதரம் பாதிதும
பய : ப்ரஸ்ருதி பூரகம் கிமு ந தாரகம் ஸாரஸம் |
அயத்ந மலமல்லகம் பதி படச்சரம் கச்சரம
பஜந்தி விபுதா : முத ஹ்ய ஹஹ குக்ஷித : குக்ஷித : ||

2. ஜ்வலது ஜலதி க்ரோட கிரீடத் க்ருபீட பவ ப்ரப
ப்ரதி பட படு ஜ்வாலா மாலா குலோ ஜடரா நல : |
த்ருணமபி வயம்ஸாயம் ஸம்புல்ல மல்லி மதல்லிக
பரிமள முசாவாசா யாசா மஹே ந மஹீச் வராந் ||

3. துரீச்வா த்வார பஹிர் விதர்த்திகா துராஸி காயை ரசிதோய மஞ்ஜலி |
யதஞ்ஜநாப ம் நிரபாய மஸ்தி மே தனஞ்ஜய ஸ்யந்தந பூஷணம் தநம் ||

4. சரீர பத நாவதி ப்ரபு நிஷேவணா பாதநாத
அபிந்தந தநஞ்ஜய ப்ரசமதம் தநம் தந்தநம் |
தனஞ்ஜய விவர்தநம் தந முதூட கோவர்த்தநம
ஸூ ஸா தந ம பாதநம் ஸூமநஸாம் ஸமாராதநம் ||

5. நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சித் நமயா கிஞ்சி தார்ஜிதம
அஸ்திமே ஹஸ்தி சைலாக்ரே வஸ்து பைதா மஹம் தநம் ||

1-ஒருவனுக்கு, உயிர் வாழ்வதற்கு உணவு, தாகத்துக்குத் தண்ணீர், மானத்தை மறைக்க வஸ்த்ரம் போதும்.
இதற்காக, ராஜாவை அணுகி, இருக்கவேண்டும் என்பதில்லை.
வயல்களில் சிந்தி இருக்கும் நெல்மணிகள்—-உணவுக்குப் போதுமானது.
ஆறு,குளம்,குட்டை இவைகளில் உள்ள தண்ணீர் தாகத்துக்குப் போதுமானது.
வீதிகளில் சிதறிப் போடப்பட்டிருக்கும் கந்தைத் துணிகள் , மானத்தை மறைக்கப் போதுமானது .
இப்படி, இவை எல்லாம் சுலபமாகக் கிடைக்கக் கூடியதாய் இருக்க,
அரசனை அண்டி , அவனை ஸ்தோத்ரம் செய்து, / துதிகள் பாடி அவனிடம் யாசிக்கிறார்களே… பரிதாபம் !

2.ஸமுத்ரத்தில் , “வடவாக்னி ” என்கிற நெருப்பைப் போல ,
வயிற்றில் “ஜாடராக்னி ” வ்ருத்தியாகி பசி, தாகம் என்று கஷ்டப்பட்டாலும், சாயங்கால வேளையில், பூத்துத் தானாக மலர்கிறதே —
வாசனையுள்ள மல்லிகைப்பூ அந்த வாசனையை —– உடைய நமது வாக்கினால்,ஒருபோதும் அரசனை யாசிக்க மாட்டோம் .

3, அர்ஜுனனின் ரதத்தை அலங்கரித்த மைவண்ணன் கண்ணனின் தனம் நமக்கு இருக்கிறது. இந்தத் தனம் குறைவே இல்லாதது.
ஆதலால், துஷ்ட அரசர்களின் வாசலில் போய் தனத்துக்காக, துக்கத்துடன் காத்திருக்கும் நிலை நமக்கு வேண்டாம்–
ஹரியைத் துதித்து, உடனே கிடைக்கும் தனம் உபயோகமானது. சனகாதி முனிவர்களாலும், த்யானம் செய்ய இயலாத பகவானின் தனம்
எப்போது, எப்படிக் கிடைக்கும் என்று சிலருக்குத் தோன்றும். எண்ணலாம் ; அதற்குப் பதில் சொல்கிறேன், கேளும்—

4. ராஜாக்களை அண்டிப் பெறுகிற தனம், நிரந்தரமானதல்ல; தற்காலிகமாகப் பசி தாகத்தைப் போக்கும்;
நம்முடைய மரண பர்யந்தம் அவர்கள் கொடுக்கும் ஸ்வல்ப த்ரவ்யத்துக்காக அவர்கள் தயவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பெரிய கஷ்டத்தை,
அந்த அல்ப தனம் ஏற்படுத்தும். ஆதலால், அந்தத் தனம் உபயோகமில்லாதது;
நம்மால் ஆச்ரயிக்கப்பட்ட பகவான் என்கிற தனம், அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசித்து, மேன்மையை உண்டாக்கியது.
ஜாடராக்னியை மங்கச் செய்தது; தனவானின் தனம் அவனுக்குப் போஷகமாக இருக்கும்;
ஆனால், கோவர்த்தன கிரியைத் தூக்கி, கோக்களையும், கோபாலகர் களையும் காப்பாற்றியது,
பகவானாகிய தனம்; மேலும், தன்னை யார் ஆச்ரயிக்கிறார்களோ —
தேவர்கள் வித்வான்கள் என்று இவர்களையெல்லாம் சந்தோஷப்படுத்தக் கூடியது.
ஆதலால், பகவான்தான் உயர்ந்த தனம்;

5. சுயார்ஜிதமோ, பிதுரார்ஜிதமோ அதன்மூலம் தனம் இருந்தால்,
அரசர்களை இவ்விதம் அலக்ஷியமாகப் பேசலாம்;
ஒன்றுமில்லாத உஞ்சிவ்ருத்தி செய்பவன், இப்படிப் பேசுதல் கூடாது என்று, நினைக்க வேண்டாம்;
ஹஸ்தி கிரியில், எழுந்தருளி இருக்கும் தேவப் பெருமாள் என்கிற தனம்
என்னிடம் இருக்கிறது; நாம் சம்பாதித்ததோ தகப்பனார் சம்பாதித்ததோ ஒன்றுமில்லை;
ஆனால், நம் பிதாமஹர் (ப்ரஹ் மா) சம்பாதித்த தனம் ஒன்று இருக்கிறது;
அத்திகிரியில் இருக்கிறது; அதை ஒருவராலும் அபகரிக்க முடியாது;
ப்ரஹ்மாவின் யாகத்தில் அவதரித்த தேவாதி ராஜனே, தேவப் பெருமாளே, நமக்குப் பெரிய தனம்

———–

ஸ்ரீமத் வேங்கட நாதார்யம், வந்தே வேதாந்த தேசிகம் —–

ஸ்ரீமத்—-ஸ்ரீமதே —–
ஸ்ரீமதே, என்றால்,
ஆசார்யன் செய்ய வேண்டுவதாகச் சொல்லப்படுவது நான்கு—
-1. அத்யயனம் 2.அத்யாபனம் 3. ப்ரவசனம் 4.க்ரந்த லேகநம்—-இப்படிப்பட்ட ஆசார்யன்.
“சிஷ்ய வத்ஸலன் ” ஆகிறார்.

இந்த ஆசார்யன், உபதேசம் செய்து சிஷ்யர்களை ரக்ஷிக்கிறார் ;
இது ரக்ஷணம் . க்ரந்தம் மூலமாக, ரக்ஷிப்பது,” ஸூரக்ஷணம் “.
அதனால் தான், உபதேசம் மாத்ரமல்லாமல், க்ரந்தங்களையும் அருளிச் செய்த ஆசார்யர்களை,
” ஸ்ரீமதே வேதாந்த குருவே நம : ” ,
” ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ” என்று பக்தியுடன் அநுஸந்திக்கிறோம் .

ஸ்வாமி தேசிகன், உபதேசம் மாத்ரமல்ல, முன்னேயே சொன்னதைப் போல,
குதர்க்க வாதங்களை அழித்து, ஸத்ஸம்ப்ரதாயத்தை நிலைநாட்ட, வளர்க்க,
அனேக அருமையான க்ரந்தங்களைப் பொக்கிஷமாக அருளி இருக்கிறார்.
——–

வேங்கடநாதார்யம்—-

திருவேங்கட முடையானின், மறு அவதாரமே—ஸ்வாமி தேசிகன்.
” வேங்கடசாவதாரோயம் தத் கண்டாம் ஸோதவா பவேத் ” என்கிறோம்.
“அர்ச்சையாய் நின்ற இடத்தில், ஆச்ரயணத்துக்கு உறுப்பான, ஸௌலப்ய சௌசீல்யாதி குணங்களைக் காட்ட முடியாமல்,
அதையே காரணமாகக் கொண்டு,உதாசீனர்களாயும், சத்ருபூதர்களாயும், நிற்கிற சேதனர்களைத் திருத்திப் பணிகொள்ள ,
பூர்வோக்தமான குண விசேஷங்களையும் கொண்டு,
” ஸ்ரீமத் வேங்கடநாத தேசிக ரூபேண” ,
எல்லாக் கல்யாண குணங்களையும், ப்ரகாசிப்பித்துக் கொண்டு ,ஆசார்ய ரூபராய் அவதரித்து, நின்றபடியைச் சொல்லிற்று. ……..

உடையவருக்குப் பிறகு, சுமார் 200 ஆண்டுகள் கழித்து, ஸ்வாமி தேசிகனின் அவதாரம்.
இந்த இடைப்பட்ட காலத்தில், இந்த ஸம்ப்ரதாயத்துக்கு நலிவு ஏற்பட்டிருக்க வேண்டும்..

வேதே ஸஜ்ஜாதகேதே முநிஜனவசனே ப்ராப்த நித்யாவ மானே |
ஸங்கீர்ணே ஸர்வ வர்ணே ஸதி ததனுகுணே நிஷ்ப்ரமாணே புராணே ||
மாயாவாதே ஸமோதே கலிகலுஷ வசாச் சூன்ய வாதே அவிவாதே |
தர்மத்ராணாய யோதி பூத்ஸஜயதி பகவான் விஷ்ணு கண்டாவதார : ||–ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் , ஸப்ததிரத்ன மாலிகாவில்,
.

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது, தென்குருகை வள்ளல்
வாட்டமிலா வண்தமிழ் மறை வாழ்ந்தது–மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன் இயல்பு கண்டே.
என்று ஸ்ரீ உடையவரைப் பற்றிச் சொன்னார்.–திருவரங்கத் தமுதனார்,-இராமாநுச நூற்றந்தாதியில்,

ச்லோகத்துக்கும்,பாசுரத்துக்கும் என்ன ஒற்றுமை பாருங்கள் !

ஸ்வாமி தேசிகன் அவதரித்ததால், அழிந்த வேதங்கள் வளர்ந்தன;
புறக்கணிக்கப்பட்ட புராணங்கள் புத்துயிர் பெற்றன;
வர்ணாஸ்ரம தர்மங்கள் பழைய நிலைக்கு வந்தன;
பௌத்தம் போன்ற அவைதிக மதங்கள் ஒதுக்கப்பட்டன;–இப்படி அந்த ஸ்தோத்ரம் சொல்கிறது.

————–

” வேங்கடசா வதாரோயம் தத் கண்டாம் ஸோதவாபவேத் …..”—
திருப்பதி திருவேங்கட முடையானே , வேங்கடநாதனாக அவதரித்தான் .

————

இனி—–“-வந்தே வேதாந்த தேசிகம் ”

வேதாந்த தேசிகபதே விநிவேஸ்ய பாலம்
தேவோ தயா ஸதகமேத தவாத யந்மாம் |
வைஹாரிகேண விதிநா ஸமயே க்ருஹீதம்
வீணா விசேஷமிவ வேங்கட சைலநாத ||–ஸ்வாமி “தயா சதக”த்தில் 104 வது ஸ்லோகத்தில் அருள்கிறார்.

அலகிலா விளையாட்டுடைய திருவேங்கட முடையான், மிகுந்த மகிழ்ச்சியோடு, சிறியனான என்னை
வேதாந்த தேசிக பீடத்தில் அமர்த்தி, கைகளில் மகர யாழை எடுத்துப் பாடச் செய்வதைப் போல,
இந்த “தயா சதகம்” என்கிற ஸ்தோத்ரத்தை, அடியேனைக் கொண்டு துதிக்கச் செய்தான் …..என்று ஸ்வாமி தேசிகனே , சொல்கிறார்.

இதைப் பிற்பாடு, திருவரங்கன், “வேதாந்தாசார்யன்” என்று அடியேனுக்குச் சூட்டினான்.
திருமலையில் உற்பத்தியானது, திருவரங்கத்தில் அரங்கேறி விட்டது. அரங்கம் என்றால் “ஸபை” தானே.

வந்தே வேதாந்த தேசிகம்
நம்முடைய நிலையை உணர்ந்து, ஸ்வாமி தேசிகனின் பரிவாஹத்துக்கு —
-தேஜஸ், புகழ், பெருமைக்கு எதிரிட மாட்டாதே வணங்கி “வந்தே..” என்று பலகாலம் சொல்லி,
வேதாந்த பதத்தாலே, உபய வேதாந்தத்தைச் சொல்லி,
தேசிக பதத்தாலே ஆசார்ய நிரூபணமாயிற்று…..

கண்ணானது, நாம் செல்லும் மார்க்கத்தை, நமக்குக் காட்டி, நாம் தவறான வழியில் சென்று படுகுழியில் விழாமல் இருக்க,
நல்ல மார்க்கத்தை —தர்ஸனம் செய்விக்கிறதோ—-காண்பிக்கிறதோ —-அதைப்போல, ராமாநுஜ ஸித்தாந்தம்
நம்முடைய வாழ்நாளில், நாம் நல்ல கதியை அடைய ,தேசிக தர்ஸனமாகக் கிடைக்கிறது. இவர்தான் தேசிகன் —

வந்தே வேதாந்த தேசிகம்.
ஸம்ஸாரத்தில் உழலுபவர்கள் க்ஷர புருஷர்கள். …….
அவர்களை, அக்ஷர புருஷர்களாக —முக்தர்களாக– மாற்றும்
ராமாநுஜ தயா பாத்ரமான ஸ்வாமி தேசிகன்,
ஜ்ஞான வைராக்ய பூஷணமான ஸ்வாமி தேசிகன்,
கணக்கில்லாத உபதேசம், காலக்ஷேபம் மாத்ரமல்ல –கணக்கில்லாத க்ரந்தங்களை அருளிய ஸ்ரீமத் வேதாந்த தேசிகன்,
திருவேங்கட முடையானே , திருவவதாரம் செய்து வேங்கடனாதனாக ஆன ஸ்வாமி தேசிகன்,
புகழ், பெருமை, தேஜஸ் என்று பற்பல குண ஆச்சர்யங்களால் “வந்தே” என்று, விழுந்து, விழுந்து வணங்கும்படி பண்ணும் ஸ்வாமி தேசிகன்,
உபய வேதாந்தங்களுக்கும் விளக்காக ஆகிய ஸ்வாமி தேசிகன் ஆசார்யர் களுக்கும் ஆசார்யனாக ஆனார்.
இன்னும், தனக்குப் பிந்தைய எல்லா ஆசார்யர் களுக்கும் ஆசார்யன் —அதாவது—தேசிகன

வந்தே வேதாந்த தேசிகம்—
ராமாநுஜ தயா பாத்ரம், ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||

ராமானுஜ தயா பாத்ரம்—-ஸர்வ ஆசார்ய கடாக்ஷ சம்பத்து ——-என்றும்
ஜ்ஞான வைராக்ய பூஷணம்–கல்யாண குணங்கள் —–என்றும்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்—அவதார வைபவம்—–என்றும்
வந்தே வேதாந்த தேசிகம்—உபய வேதாந்த ஸ்தாபன ப்ரவர்த்தனம்—-என்றும
மிக ஆச்சர்யமாக பூர்வாசார்யர்கள் அருளுவர்.

கோயில், திருமலை, பெருமாள் கோயில், மேல்கோட்டை என்கிற நான்கு திவ்ய தேசங்களையும், ஸந்த்யா வந்தன
காலங்களில் மூன்று வேளையும் சேவிக்கிறோம்;
அதாவது—-

ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம்
ஸ்ரீ ஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீசம் நமாமி சிரஸா யது சைல தீபம

இந்த ஸ்லோகத்தில் , கருணைக்கடல், காளமேகம், பாரிஜாதம், தீபம் என்று குறிப்பிட்டுச் சொல்கிறோம்
ராமாநுஜ தயா பாத்ரம்—-மேல் கோட்டையைக் குறிக்கலாம் ( திருநாராயணபுரம் )
இந்தத் தனியன் அவதரித்ததே அங்கு தானே என்பார்.
நம் இராமாநுச வைபவம், இங்கு உலகப் பிரஸித்தம்.

ஜ்ஞான வைராக்ய பூஷணம்—கச்சிநகரைக்குறிக்கலாம் ( காஞ்சீபுரம் )
ஸ்வாமியின் திவ்ய தேசம் மாத்ரமல்ல, வைராக்ய பஞ்சகம் போன்ற
பற்பல ஸ்ரீ சூக்திகள் அவதரித்த இடமல்லவா —என்பார்.

ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்— திருப்பதியைக் குறிக்கலாம்;
ஸ்வாமி தேசிகன் திருவேங்கடமுடையானின் அவதாரமல்லவா —என்பார்

வேதாந்த தேசிகம்—-திருவரங்கத்தைக் குறிக்கலாம்;
பெரிய பெருமாள் ஸ்ரீ ரங்கநாதன் , ஸ்வாமிக்கு ,அருளப்பாடிட்டு அனுக்ரஹித்த திருநாமமல்லவா —என்பார்.
இவற்றை இப்படியும் பெரியோர்கள், அனுசந்திப்பர்;—

வேதாந்த தேசிகம்—-ஸ்ரீ ரங்கம் பெரிய கோவில்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் —- திருவேங்கடம்
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—-திருக்கச்சி பெருமாள் கோவில் –ஸ்ரீ ஹஸ்தி சைலம்
ராமாநுஜ தயா பாத்ரம் வந்தே—-யாதவாத்ரி கோவில் –யதி சைல தீபம

ராமாநுஜ தயா பாத்ரம் ——வந்தே
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—-வந்தே
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்—–வந்தே
வேதாந்த தேசிகம்——வந்தே–என்றும் , புகழ்ந்து உரைப்பர்.

ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்——-விசேஷ்யம்
மற்ற மூன்றும்—-விசேஷணம் —
அதாவது,
பிறரிடமிருந்து பிரித்துக் காட்டும் .
பிறருக்கு இவை சேராது.

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : —————இந்தத் தனியன் திருமந்த்ரத்துக்குச் சமம் என்றும்,
ராமாநுஜ தயா பாத்ரம் ——————-இந்தத் தனியன் த்வயத்துக்கு ஒப்பாகும் என்றும்
சீரொன்று தூப்புல் ——–இந்தத் தனியன் சரம ச்லோகத்துக்குச் சமம் என்றும் சொல்வார்.

——–

ஸ்ரீ மந் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜம் |
விச்வா மித்ர குலோத் பூதம் வரதார்ய மஹம் பஜே ||(ஸ்ரீ நயினாசார்யருக்கான தனியன் )

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழிக்கு ஆறு தனியன்கள் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் —

May 22, 2021

1-ஸ்ரீ நாதமுனிகள் அருளிச் செய்த தனியன் —

பக்தாம்ருதம் விஸ்வ ஜன அநு மோதனம் ஸர்வார்த்ததம் ஸ்ரீ சடகோப வாங் மயம்
ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமாகமம் நமாம் யஹம் திராவிட வேத சாஹரம் –

பக்தாம்ருதம்
பத்தராகக் கூடும் –3-6-11-
தொண்டர்க்கு அமுது –9-4-9-என்றபடி

விஸ்வ ஜன அநு மோதனம்
பார் பரவின் கவி –7-9-4-
அடியார்க்கு இன்ப மாரி –4-5-10—என்கிறதைச் சொன்ன படி

ஸர்வார்த்ததம்
எல்லாப் பொருளும் விரித்தானை –4-5-5-என்னும்படி
ஸகல அர்த்த ப்ரதமமாய் இருக்கை –

மிக்க இறை நிலை –என்று தொடங்கி
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் –என்கிறபடி
அறிய வேண்டிய அர்த்தம் எல்லாவற்றையும் அறிவிப்பிக்கும் என்கிறபடி –

ஸ்ரீ சடகோப வாங் மயம்
குருகூர் சடகோபன் சொல் –1-1-11-என்றபடி

ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமாகமம்
ஸஹஸ்ர சாகை -சாம விதமாய்
தத் சாரம் -சாந்தோக்ய உபநிஷத்தாய் –
அதின் சாரம் உத்கீதம் -என்றதாய்
அத்தை யாயிற்று இப்படிப் பாடி அருளிற்று என்றபடி –

வேத அரும் பெருமான் நூல்களை –9-3-3-
வண் தமிழ் நூலாக்கின –4-5-10-படி

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபன் இறே –

நமாம் யஹம் திராவிட வேத சாஹரம்
அளவியன்ற அந்தாதி ஆயிரத்தை –1-4-11-
பத்தர் பரவும் –1-5-11-படி சொல்லிற்று –

——

கடலையும் சடகோபன் சொல்லையும் சமமாகச் சொல்லுகிறது –

பக்தாம்ருதம்

விண்ணவர் அமுது உண –பெரிய -6-1-2-என்னும்படி
விண்ணின் மீது அமரர் கட்காய -பெரியாழ்வார் –3-4-10-
தேவ போக்யமான அம்ருதத்தை உடைத்தாய் இருக்கும் அது

இது பாலோடு அமுது அன்ன ஆயிரம் –8-6-11-என்னும்படி
அவனித் தேவரான -8-4-10-
பூ ஸூரர்க்குப் போக்யமான அம்ருதமாய்
ஆரா வமுதத்தை -2-5-5- உடைத்தாய் இருக்கும் –

விஸ்வ ஜன அநு மோதனம்
ஸர்வ ஜன அபிமத ப்ரதமம் ஆகையாலும்
தர்ச நீயமாகையாலும்
ஸமுத்ரம் சர்வ ஜன சந்தோஷ வேஷத்தை யுடைத்தாய் இருக்கும் –

இதுவும் முதல் பத்தர் வானவர் என் அம்மான் பார் பரவ –ஆச்சார்ய ஹ்ருதயம் –187-என்னும்படி
சேஸ்வர விபூதி போக்யமாய் இருக்கும் –

ஸ்ரீ சடகோப வாங் மயம்
அதில் அம்பஸ்ஸூ அகஸ்த்ய வாங் மயமாய் இருக்கும்
இதில் சந்தஸ்ஸூ ஸ்ரீ சடகோப வாங் மயமாய் இருக்கும்
திரு வாய் மொழி இறே

ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமாகமம்
அது ஸர்வ ஸாகா ஸாரமான சந்தந ஸாகா சமாகத்தை சமீபத்தில் உடைத்தாய் இருக்கும் –
இது ஸர்வ வேதா ஸாரமான உபநிஷத்துக்கள் திரட்சியாய் இருக்கும் –

நமாம் யஹம் திராவிட வேத சாஹரம்
அந்த சாஹரம்
அஞ்சலிக்கு பிராங் முக க்ருத்வா -என்னும் படி
அசரண்யனுக்கு சரண்யமாய் இருக்கும்
வண் தமிழ் நூல்களான இது -4-5-10-சடகோபன் பாட்டு என்றவாறே
நாடு அடைய கை எடுக்கும்படியாய் இருக்கும் –
நமாம் யஹம் -என்று நாடு எல்லாம் அனுசந்திக்கக் கடவர்கள் இறே

——–

வந்தே ராமாயண ஆர்ணவம் -என்னுமா போலே

ஸ்லோக ஜால ஜலாகீர்ணம் சர்க்க கல்லோல சங்குலம்
காண்ட க்ராஹா மஹா மீநம் வந்தே ராமாயண ஆர்ணவம்

அங்கே சதுர் விம்ச ஸஹஸ்ரம்
இங்கே சீர்த் தொடை ஆயிரம் -6-7-11-
தீர்த்தங்களாய் இருக்கும் -7-2-11-

அங்கு ஐநூறு சர்க்கம்
இங்கு பத்து நூறு -6-7-11-என்னும்படி இருக்கும்

அங்கு ஷட் காண்டமாய் இருக்கும்
இங்கே ஷட் பதார்த்த ப்ரதிபாதகமாய் பத்துப் பத்தாய் இருக்கும்

அது ராமாயண ஆர்ணவம்
இது திராவிட வேத சாகரம்

அது ரகு வம்ச சரிதமாய் இருக்கும்
இது முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரமாய் இருக்கும் –7-2-11-

அது வால்மீகிர் பகவான் ருஷி என்னும்படி வால்மீகி ப்ரோக்தம்
இது குருகூர்ச் சடகோபன் சொல்லாய் –9-6-11-இருக்கும் –

அது மஹா பாதக நாஸினமாய் இருக்கும்
இதுவும் அருவினை நீறு செய்யுமதாய் இருக்கும் —3-5-11-

அது ஸம்ஸாரம் ஸ விஹாய கச்சதி புமான் விஷ்ணோ பதம் ஸாஸ்வதம் -என்று பலமாய் இருக்கும்
இதுவும் -வானின் மீதி ஏற்றி அருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே –8-4-11- என்று
திருவடியே அடைவிக்கும் -4-9-11-

————-

2-ஸ்ரீ ஈஸ்வர முனிகள் அருளிச் செய்த தனியன்

ஆழ்வார் திருவடிகளை
அவர் சம்பந்தம் உடைய நாட்டோடும் ஊரோடும் ஆற்றோடும் வாசி அற எல்லாவற்றையும் சேர்த்து
ப்ரஸன்னமான மனஸே -அனுசந்தித்துப் போரு -என்கிறது –

வைகுந்தச் செல்வனார் –நான்முகன் –75-சேவடி யோபாதி
வைகுண்ட வானாடும் -பெரிய திரு –68-
இறந்தால் தங்குமூரான –பெரிய –10-2-10-
கண்ணன் விண்ணூரும் –திரு விருத்தம் -47-
அமுத விரசை ஆறும் -ஆர்த்தி –20-
உத்தேச்யமாம் போலே இங்கும் இவை உத்தேச்யம் ஆகிற படி –

திரு வழுதி நாடு என்றும் தென் குருகூர் என்றும் மருவினிய வண் பொருநல் என்றும்
அரு மறைகள் அந்தாதி செய்தான் அடி இணையே எப்பொழுதும் சிந்தியாய் நெஞ்சே தெளிந்து —

இத்தால் ஆழ்வார் திருவடிகளைச் படி சொல்கிறது –
கவள யானைக் கொம்பு ஓசித்த கண்ணன் என்றும் -என்று தொடங்கி —
பார்த்தன் பள்ளி பாடுவாளே –பெரிய –4-8-1-என்னுமா போலே

திரு வழுதி நாடு என்றும்
வாய்த்த வழுதி வள நாடன் -5-6-11- என்று
நிரூபகமாக இறே அது தான் இருப்பது –
அவர் ஸம்பந்தத்தால் அவரோ பாதி அதுவும் அனுசந்தேயமாய் இருக்கும் ஆகையால் திருவடிகள் நாட்டோடே நடக்கிறது –

தென் குருகூர் என்றும்
குருகூர் நகரான் -திரு விரு -100–என்று அவர் இருக்கும் ஊர் ஆகையாலே அதுவும் அப்படியேயாய் இருக்கை –

மருவினிய வண் பொருநல் என்றும்
மருவ இனிதான வண் பொருநல் -என்றபடி –
பொருநல் சங்கணித் துறைவன் –10-3-11- இறே
இதுவும் இவர் இறங்கும் துறை
அவர் திருவடிகளும் இறங்கும் துறை
நல் ஞானத் துறை -திரு விரு –93-
வண் சடகோபனைப் போலே இதுவும் வண்மை யுடைத்தாய் இருக்கும் –

ஸவித்ரீ முக்தாநாம்
இப்படி விலக்ஷணமான
நாடும்
நகரும்
துறையும்
என்று அனுசந்தித்து

அரு மறைகள் அந்தாதி செய்தான் அடி இணையே எப்பொழுதும் சிந்தியாய் நெஞ்சே தெளிந்து —
அதாவது
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச்
சிந்தையுள்ளே சிந்தித்துப் போரு -என்கை

குரு பாதாம் புஜத் த்யாயேத் -என்கிறபடியே
திருவடிகளையே சிந்தித்துப் போரு –
மற்று ஒன்றிலே மருளாதே தெளிந்து அவ்வடியை அனுசந்திக்கப் பார் –

அன்றிக்கே
வேதத்திலே -வைகுண்ட புவன லோகம் -என்று நாட்டையும்
யோ வைதாம் ப்ரஹ்மணோ வேத அம்ருதே நாவ்ருதாம் புரீம் -என்று
அம்ருத வாஹினியான விரஜை ஆற்றிலே ஆவ்ருதமான வைகுண்ட நகரத்தையும்

விஷ்ணோ பத பரமே மத்வ உத்ஸ-என்றும்
தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
அவன் திருவடிகளையும் உபநிஷத்துக்கள் ஓதினால் போலே

அந்த அருமறையின் தாத்பர்யமான அர்ச்சாவதாரமான ஆதிப்பிரானதான திரு வழுதித் திரு நாட்டையும்

திருக்குருகூர் அதனுள் நின்ற ஆதிப்பிரான் –4-10-1-என்னும்படி அவன் வர்த்திக்கிற ஊரையும்

ஊருக்கு வடக்கான வண் பொருநல் ஆற்றையும்

அங்கே நிற்கும் ஆதிப்பிரானுடைய நீள் கழலையும் –1-9-11-இறே -திருவாய் மொழியில் சொல்லிற்று

இது மற்றை உகந்து அருளின நிலங்களில்
ஆற்றுத் துறைக்கும்
ஊருக்கும்
நாட்டுக்கும் உப லக்ஷணம் —

குட்ட நாடு -என்று இறே நாட்டையும் அருளிச் செய்து போருவது
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர்-என்றும்
தண் புனல் சூழ் திருவரங்கத்து உள்ளாய் -என்றும் –
ஊரையும் ஆற்றையும் அருளிச் செய்தது –

இப்படி யாயிற்று
திவ்ய தேச
திவ்ய நகர
திவ்ய நதிகளின் வைபவத்தையும் -திருவாய் மொழி முகேன தர்சிப்பித்தது –

ஆக மூர்த்தியில் பண்ணின தமிழனா படி –ஆச்சார்ய ஹ்ருதயம் –

திரு நாமப் பாட்டுக்கள் தோறும் தமக்கு நிரூபகமாகவும்
ஊரையும்-நாட்டையும் –ஆற்றையும் -பாடுகையாலே -அது தான்
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருளாக அருளிச் செய்கையாலே அத்தைப் பற்ற —
திரு வழுதி நாடு என்றும் தென் குருகூர் என்றும் மருவினிய வண் பொருநல் என்றும்
அரு மறைகள் அந்தாதி செய்தான்–என்று இங்கனே சொல்லுகிறது ஆகவுமாம் –

திரு வழுதி நாடு என்றும் -சிந்தியா என்னுதல் –
திரு வழுதி நாடு என்றும்-அரு மறைகள் அந்தாதி செய்தான் -என்னுதல்
ததீய வைபவம் இறே வேத தாத்பர்யம் அறுவது –

இப்படி வேதத்தைத் த்ராவிடமாகச் செய்த திராவிட உபநிஷத் ஆச்சார்யருடைய
அங்கரி யுகங்களை –
தெளிவுற்ற சிந்தையர் -7-5-11-
தெளிந்த என் சிந்தை –9-2-4-என்னுமா போலே
உபாய உபேயம் என்று தெளிந்து
மனஸே ஸந்ததம் ஸ்மரித்துப் போரு -என்று ஆழ்வார் திருவடிகளே அனுசந்தேயமாகச் சொல்லிற்று —

——-

3-ஸ்ரீ சொட்டை நம்பிகள் அருளிச் செய்த தனியன் –

இதில் ஆழ்வார் திருவடிகளே
ப்ராபகமும் ப்ராப்யமுமாகிற படியை
அந்வய
வ்யதிரேகங்கள்
இரண்டாலும் தர்சிப்பிக்கிறது

மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரை அல்லாது இறைஞ்சேன்
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று –

மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரை அல்லாது இறைஞ்சேன்
மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணுகை யாவது
திருக்குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைம்மின் –4-10-9-
திருக்குருகூர் அதனைப் பாடி யாடிப் பரவிச் சென்மின்கள் –4-10-2-என்று
ஆழ்வார் உபதேசம் கேட்ட படியே
மனஸ்ஸாலே நினைத்தும்
வாயாலே சொல்லியும்
போருகை —
பேணுகை -விரும்புகை –

யத்தி மனஸா த்யாயதி தத் வாஸா வததி -என்னக் கடவது இறே –
இப்படி ஆழ்வார் சம்பந்தம் உடைய தேசத்திலே விருப்பம் உடையவர்களை அடைய பஜித்தேன் –
ஆழ்வார் சம்பந்த சம்பந்திகளை ஒழிய அந்நியரை ஆதரித்துப் பஜியேன்

வண் குருகூர் பேணும் இனத்தாரை
நல்லார் நவில் குருகூர் –திரு விருத்தம் –100- இறே

இனத்தார்
ஸமூஹமாய் உள்ளவர்கள்
அன்றிக்கே
ஸஜாதீயர் -என்னவுமாம்
இத்தால்
குருகூர் சடகோபன் பாட்டான திருவாய் மொழியிலே அந்வயம் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸமூஹத்தை -என்றபடி –
குழாம் கொள் திருக்குருகூர் இறே –2-3-11-

இத்தால்
திருவாய் மொழியில் அதி பிரவணர் ஆனவர்களை ஒழிய அந்நியரை ஆதரியேன் என்றதாயிற்று –

இப்படி அந்நியரை அநாதரிக்கைக்கு அடியுடைமை சொல்லுகிறது –
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் -என்று –
தனம் மதீயம் தவ பாத பங்கஜம் -என்கிறபடியே
ஆழ்வார் திருவடிகளைப் பற்றின நமக்கு –
விபூதிஸ் ஸர்வம் -என்னும் படி
தனத்தாலும் ஏதும் குறைவிலேன்-ஒன்றும் குறை உடையேன் அல்லேன் –

எந்தை சடகோபன்
அன்னையாய் அத்தனாய் -கண்ணி -4-
மாதா பிதா –என்னும்படி
எனக்கு ஜனகரான ஆழ்வார் –

பாதங்கள்
ப்ராப்த சேஷியானவர் திருவடிகள் –

யாமுடைய பற்று –
தச் சேஷ பூதரான நம்முடைய பற்று –
தகையார் சரணம் தமர்கட்க்கு ஓர் பற்று –10-4-10—
யாமுடைய பற்று இதுவாயிற்று –

———-

4-ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்தது —

இனி சடகோபன் பாதங்கள் -என்றத்தை
விவரியா நின்று கொண்டு
திருவாய் மொழி ஹ்ருத் கதமாம் படி
ஆழ்வாருக்கு பரதந்த்ரரான உடையவர் திருவடிகளைத் தொழா நின்றேன் -என்கிறது –

ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமாநுச முனி தன் வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன்
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத வுள்ளம் பெற –

ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமாநுச முனி தன்
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் -3-9-11-என்னுமா போலே
அங்குத்தைக்கு அனுரூபமாய்ப் பொருந்தி இருக்கிற பெரிய புகழை யுடைய
எம்பெருமானார் தம்முடைய

வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன்
ஒன்றுக்கு ஓன்று பொருந்தி இருப்பதாய் மலர் போன்ற திருவடிகளை பிரணதி பண்ணா நின்றேன் –
ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே என்கிறபடியே
ப்ராப்ய புத்த்யா வர்த்தமானமாய்ச் செல்லுகிறது –

இப்படி வணங்குகிறது எதுக்காக என்னில்
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத வுள்ளம் பெற –

ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன்
ஆய் கொண்ட சீர் -3-9-9- என்றும்
ஆய பெரும் புகழ் –3-9-8- என்றும் சொல்லுகிறபடி
ஆயப்படும் -வி லக்ஷணமாய் நிரவதிகமான கல்யாண குணங்களால் -பூர்ணரான ஆழ்வாருடையதாய்
அதி ஸூ லபமான திராவிட வேதத்தைத் தரிக்கும் படி நிஸ் ஸலமான மனஸ்ஸைப் பெற

அன்றிக்கே
ஆய்ந்த பெரும் சீர் என்று –
செந்தமிழ் வேதத்துக்கு விசேஷணம் ஆகவுமாம் –
சீர்த் தொடை ஆயிரம் –1-2-11- இறே
இந்தப் பிரபந்த தாரண அர்த்தமாக
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன்

தீ மனம் கெடுத்து —2-7-8-
மருவித் தொழும் மனத்தை –2-7-7- ஆச்சார்யன் தர வேணும் இறே —
ஆகையால்
தங்கு மனம் நீ எனக்குத் தா –பெரிய திருமொழி தனியன் -என்னும்படி
பேராத வுள்ளம் பெற -என்று
எம்பெருமானாரைப் பிரார்த்திக்கிறது –

அதாவது
இவர் தான் –
மாறன் அடி பணிந்து உய்ந்தவராய்
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை –இராமா -46- என்றும்
தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னைத் தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த ராமானுஜன் -இராமா –29-என்றும்
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாக யுடையராய் –இராமா –64-
திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் இருக்குமவராய் –இரா –60-
உறு பெரும் செல்வமும் மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் என்று அறிதர நிற்குமவர் ஆகையாலும் –இராமா -19-
அவர் திருவடிகள் ராமானுஜர் ஆகையால் –
இவரை அர்த்திக்கிறது –

மற்றை ஆழ்வார் திவ்ய பிரபந்தங்களை அங்க உப அங்கமாக உடைய இவருடைய திராவிட வேதமான திவ்ய பிரபந்தம் ஒழிய
தத் இதர கிரந்தங்களில் சபலமான மனஸ்ஸூ சலியாமல்
இது ஒன்றிலுமே உற்று நிலை நிற்க வேணும் என்று அவரை அர்த்திக்கிறது -என்கை —

————

5- ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த தனியன்

இனி இதில்
திருவாய் மொழியினுடைய உத்பாதகரையும்
வர்த்தமானரையும் -சொல்லுகிறது

வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால்
வளர்த்த இதத்தாய் இராமானுசன்

வான் திகழும் சோலை -ஆவது
ஆகாசத்திலே திகழ்கிற பிரகாசிக்கிற சோலை என்றபடி –
வ்ருஷ ஷண்ட மிதோ பாதி –
வான் ஏந்து சோலை
சோலை அணி –திருவரங்கம் இறே –

மதிள் அரங்கர்
திண் கொடி மதிள் சூழ் -திருமாலை –14-
மதிள் திருவரங்கம் –7-2-3-
அதுவும்
வானை யுந்து மதிளாய் இருக்காய் –திருமாலை -9-10-4-

வான் திகழும் சோலை
உயர்ந்த சோலையையும் மதிளையும் யுடைய கோயிலிலே நிரூபகமான பெரிய பெருமாளுடைய –
ஸ்லாக்யமான கல்யாண குண விஷயமாய் விஸ்திருதமாயிற்று ஆயிரம் திருவாய் மொழியும்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரம் –7-2-11-என்னக் கடவது இறே

அது தான்
சீர்த் தொடை ஆயிரம் –1-2-11- என்று சீர் கலந்த சொல்லாய் இறே இருப்பது –
நலமுடையவன் –1-1-1-
ஈறில வண் புகழ் நாரணன் -1-2-10-என்று உபக்ரமித்து
வாழ் புகழ் நாரணன் –10-9-1-என்று இறே தலைக்கட்டி அருளினார் –

பெரிய பெருமாள் தான் நலம் திகழ் நாரணன் –பெருமாள் –10-11- இறே –
நாராயண பரம் ப்ரஹ்ம
நாராயணா பரா வேதா –என்னக் கடவது இறே —
அத்தாலே -மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்-என்கிறது –

இனித்தான்
திருவாய் மொழி பத்துப் பத்தாலும் ப்ரதிபாதிக்கிற
1-பரபரன் –1-1-8- என்கிற பரத்வமும்

2-சோராத எப்பொருட்க்கும் ஆதி -2-1-11-என்கிற காரணத்வமும்

3-முழுதுமாய் முழுதியன்றாய் –3-1-8-என்கிற வியாபகத்வமும்

4-மறுகல் ஈசன் –4-1-10- என்கிற நியந்த்ருத்வமும்

5-ஆவா என்று அருள் செய்து -5-1-6- என்கிற காருணிகத்வமும்

6-ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் –6-1-10-என்றும்
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரண் –6-3-7-என்றும் –
சொல்லுகிற சரண்யத்வமும்

7-எண்ணிலாப் பெரு மாயன் –7-1-1- என்கிற சக்தி மதத்வமும்

8-தேவிமார் ஆராவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் –8-1-1- என்கிற ஸத்ய காமத்வமும்

9-எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் –9-1-1-என்கிற ஆபத் ஸகத்வமும்

10-சுரி குழல் கமலக் கட் கனிவாய்க் காள மேகம் –10-1-1-என்ற ஆர்த்தி ஹரத்வமும்

ஆகிற அதில் பத்து அர்த்தமும்
பெரிய பெருமாளைப் பிரதிபாதிக்கிற
கங்குலும் பகலிலும் –7-2- காணலாய் இருக்கும் –

1- வடிவுடை வானோர் தலைவனே -7-2-10-என்று பரத்வமும்

2-முன் செய்து இவ்வுலகம் -7-2-2- என்றும்
விண்ணோர் முதல் -7-2-6- என்றும்
காரணத்வமும்

3-கட்கிலி–7-2-3- என்றும்
என்னுடை ஆவி -7-2-9-என்றும் வியாபகத்வமும்

4- பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் –7-2-7–என்றும்
கால சக்கரத்தாய்–7-2-5- –என்றும்
மூ உலகாளி –7-2-10- என்றும்
நியந்த்ருத்வமும்

5- இவள் திறத்து அருளாய் –7-2-6–என்று காருணிகத்வமும்

6-பற்றிலார் பற்ற நின்றானே -7-2-7- என்று சரண்யத்வமும்

7- அலை கடல் கடைந்த ஆரமுதே –7-2-5- என்று சக்தி மத்வமும்

8-என் திருமகள் சேர் மார்பனே –என்றும்
நில மகள் கேள்வனே –என்றும்
ஆய் மகள் அன்பனே –7-2-9- என்றும்
சக்தியால் நித்யமாகக் கற்பித்த பத்நீ பரிஜா நாதிகளை யுடைய ஸத்ய காமத்வமும்

9- இவ்வுலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் -7-2-2- என்று ஆபத் ஸஹத்வமும்

10- முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் –7-2-11- என்று ஆர்த்தி ஹரத்வமும் அருளிச் செய்தார் இறே –

ஆக -எல்லாவற்றாலும் –
மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -என்னத் தட்டு இல்லை இறே

ஆழ்வார்களில் நம்மாழ்வார் அதிகரானால் போலே
எம்பெருமான்களில் நம் பெருமாள் அதிகாரய் இறே இருப்பது
அத்தைப் பற்றவும் சொல்லிற்று –

இப்படிப் பெரிய பெருமாள் விஷயமாகவே ப்ரதிபாதித்த திருவாய் மொழியை
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்
நெடும் காலம் நோற்றுப் பெற்ற முந்தின மாதா ஆழ்வார்
வண் தமிழ் நூற்க நோற்றேன் —4-5-10–என்றார் இறே

வருந்திப் பெற்ற பிள்ளையை வளர்த்து எடுக்கும் மாதாவைப் போலே திருவாய் மொழியை வளர்த்த இதத்தாய் –
வர்த்திப்பித்த மாதா -எம்பெருமானார் ஆயிற்று
ஞானக் கலையான -1-9-8- திரு வாய் மொழிக்கு ஜென்ம பூமி ஆழ்வார் -தத் வர்த்தகர் எம்பெருமானார் –
இப்படி யாயிற்று ஞான சந்தானம் வளர்த்தியோடே நடந்து செல்வது –

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து –பெரிய –8-9-7-என்னுமா போலே

மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் ஆவது –
ஈன்ற தாய் பெற்றுப் பொகட்டுப் போனால் வளர்க்கும் தாய் தன் மிடுக்காலே காத்து நோக்குமா போலே ஆயிற்று –
இவரும் அத்தைக் காத்து வளர்த்த படியும் –
தேவகி பெற்ற யுருவு கரிய ஒளி மணி வண்ணனை –பெரிய –1-3-17–
வளர்க்கும் தாயான யசோதை தன் மிடுக்காலே எடுத்து –
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன் –பெரியாழ்வார் –2-9-6-என்றும்
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தே நின்று –2-9-8-
போதர் கண்டாய் –2-9-6-
தாய் சொல் கொள்வது தன்மம் கண்டாய் –2-9-8-என்று
குற்றம் சொல்லுமவர்களையும் தன் சொல்லாலே வாய்ப் புடை புடைத்து தன் வசமாக்கி
தீய புஞ்சிக் கஞ்சன் –2-2-5-என்று கருத்தைக் குலைத்து
காப்பாரும் இல்லை -2-3-1—என்று இரந்து
அசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறு பிள்ளை –1-3-12-என்னும்படி
நிறம் பெற வளர்த்து ப்ரமேய சாரத்தை வர்த்திப்பால் போலே
பிரமாண ஸாரத்தை வர்த்திப்பித்த பிரகாரமும் –

அது எங்கனே என்னில் —
இங்கும் ஆழ்வார் அவதரித்து
அவா அற்று வீடு பெற்று எழுந்து அருளின –10-10-11- பின்பு
பாஹ்ய குத்ருஷ்டிகளால்
பாஷா கானமான திருவாய் மொழி அபி பூதமாய் வருகிற படியைக் கண்டு
ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூ க்திகளாலே அத்தை நிரோதித்து-அத்தை இதுக்குக் காவலான வேலியாகக் கற்பித்துத்
திருவாய் மொழியைத் தன் கை வசம் ஆக்கி
திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கொண்டு இதன் அர்த்தத்தை வெளியிடுவித்து வர்த்திப்பித்துக் கொண்டு போந்தார் இறே –
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்னும்படியான அடியார் ஆகையால் –
ஆண்டவன் இட்ட பயிரை வர்த்திப்பிக்க வேணும் இறே அடியானுக்கு —

—————

6- இதுவும் ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த தனியன்

ஸ்ரீ பதிஸ் சேதனஸ் யாஸ்ய ஹேதுத்வேந ஸமாஸ்ரித
அநிஷ்ட ஹானிம் இஷ்டஸ்ய ப்ராப்திஞ்ச குருதே ஸ்வயம் –என்று
சகல வேத ஸங்க்ரஹமான திரு பத த்ரயத்தாலும் ப்ரதிபாதிக்கப் படுகிற அர்த்த பஞ்சகத்தை
திருமாலால் அருளப்பட்ட சடகோபன் –8-8-11-என்னும்படி
ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரனாலே
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார் அருளிச் செய்த திருமாலவன் கவியான –திரு விருத்தம் –48-
திருவாய் மொழி பிரபந்தம் ப்ரதிபாதித்த பிரகாரத்தை இத் தனியனிலே சொல்லித் தலைக் கட்டுகிறது –

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கி இயலும்
ஊழ் வினையும் வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழின் இசை வேதத்து இயல் —

மிக்க இறை நிலை–யாவது
இறை நிலை உணர்வு அரிது -1-2-6-என்னும் படியான சர்வ ஸ்மாத் பரத்வம்
தம் ஈஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதா நாம் பரமஞ்ச தைவதம்
நாராயண பரஞ்சோதி
தத்வம் நாராயண பர
மனிசர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவாவோ –8-1-5-
தேவ தேவனே -3-6-2-
பரஞ்சோதி நீ பரமாய் –2-1-3-
மிகுஞ்சோதி -2-2-5-
முழுதுண்ட பரபரன் –1-1-8-
வானோர் இறை –1-5-1-
கழி பெரும் தெய்வம் –திரு விருத்தம் –20-
பெரும் தெய்வம் -4-6-2-
பெரிய அப்பனை பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை –8-1-11-
திருவுடை அடிகள் -1-3-8-
திரு மகளார் தனிக் கேள்வன் பெருமையுடைய பிரானார் –1-6-9-
திரு மா மகள் கேள்வா தேவா –6-10-4-
என்றும் சொல்லப்படுகிற சர்வ ஸ்மாத் பரனை ஆயிற்று -மிக்க இறை என்கிறது –

திரு மங்கை நின்று அருளும் தெய்வம் -ராமா -57-
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்–முதல் -64 –
திருவில்லாத் தேவரை தேறேன்மின் தேவு -நான்முகன் -53-
என்னக் கடவது இறே
இது வாயிற்று பர ஸ்வரூபம் –

இறை நிலையாவது
ஸுலப்யத்துக்கு அவ்வருகு இல்லாதபடி முடிந்த நிலமான ஆஸ்ரய பரதந்த்ரத்தோடே நிற்கிற
அர்ச்சாவதாரம் என்கை –
அத்தை ஆயிற்று
எளிவரும் இயல்வினன் –1-3-2- இத்யாதியில் சொன்னது –
இது இறே ஈஸ்வர ஸ்வரூப யாதாத்ம்யம் –

மெய்யாம் உயிர் நிலை–யாவது
உருவியந்த இந்நிலைமை –1-2-6-
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் –1-2-10-
உணர்வைப் பெற ஊர்ந்து–8-8-3-
நின்ற ஒன்றை –8-8-4-
உயிர் வீடு உடையான் –1-2-1- என்றும்
ப்ரக்ருதே பரனாய்
ஞான ஆனந்த ஸ்வரூபனாய்
ஞான குணகனாய்
நித்யனாய்
ஈஸ்வரனுக்கு சரீரவத் பரதந்த்ரனான படியைச் சொல்லுகிறது

மெய்யாம் உயிர் என்கையாலே
ஸத்யஞ்ச–என்றும்
உள்ளதும் -1-2-4- -என்றும் –
மெய்ம்மையை —திருமாலை –38-என்றும் –
சொல்லுகையாலே ப்ரக்ருதி ஸ்வபா வத்திலும் காட்டில் ஆத்ய ஸ்வரூப நித்யத்வம் சொல்லிற்று –

அன்றிக்கே
மெய்யாம் உயிர் நிலை -என்கையாலே
யஸ்ய ஆத்மா சரீரம் -என்கிறபடி
உள்ளவதன் உரு –சரீர சரீரி பாவம் சொல்லிற்று ஆகவுமாம்

உயிர் நிலை யாவது
மெய்ம்மையை மிக உணர்ந்து —திருமாலை –38-
என்கிறபடியே
தம் அடியார் அடியோங்கள் –3-7-10-என்றும்
தொண்டன் சடகோபன் –7-1-11-என்றும்
சிறு மா மானிசராய் என்னை ஆண்டார் -8-10-3- என்றும் –
ததீய பர்யந்தமான நிலை —
இது இறே ஸ்வ ஸ்வரூப யாதாத்ம்யம் –

தக்க நெறி–யாவது
அத்யந்த பரதந்த்ர ஸ்வரூபத்துக்கு அனுரூபமான உபாயம்
அல்லாதது
தகாத நெறியாய் இறே இருப்பது –
நெறி காட்டி நீக்குதியோ –பெரிய திரு –6-என்னக் கடவது இறே –
நீ யம்மா காட்டும் நெறி –பெரிய திரு –5-
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் –9-1-10-

சரீர ரக்ஷணம் சரீரிக்கே பரம் இறே
மாஸூச
என்னுடம்பில் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ -என்று இறே அவன் வார்த்தை

எம்மை ஆளும் பரமா –3-7-1- என்று
ததீய சேஷத்வம் ஸ்வரூபம் ஆனால்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பர் –3-7-7-என்றவர்களே உபாயமாகவும் வேணும் இறே –
தக்க நெறி
ததீய உபாயமாகவுமாம் –
உபாய யாதாத்ம்யம் இதுவே இறே –

தடையாகித் தொக்கி இயலும் ஊழ் வினை–யாவது
விரோதியாய்த் திரண்டு வர்த்திக்கிற ப்ராரப்த கர்மம் -என்கை –
முன் செய்த முழு வினை –1-4-2-
பாரமாய பழ வினை –அமல –4-என்னக் கடவது இறே

ஊழ்மை –பழமை
வினை -கர்மம்

பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் –திரு விருத்தம் –1-
அவித்யா கர்மா வாஸனா ருசி ப்ரக்ருதி சம்பந்தம்
பகவத் ஸ்வரூப திரோதாநகரி இறே தேகம்

விரோதி ஸ்வரூப யாதாத்ம்யம்
அஹங்கார –மமகாரங்கள்
யானே என்னை அறிய கிலாத யானே என் தனதே என்று இருந்தேன் –2-9-9-
நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்த்து –1-2-3-
பீஜம் ஏதத் த்விதா ஸ்திதம்
முன்னமே –திரு விருத்தம் –95-
என்னும்படி அநாதியாய்ப் போருவது –

இது தான் அனுகூலர் பக்கல் அநாதாரத்தைப் பிறப்பிக்குமதாய் இருக்கும் –
அது தான் தேஹ ஆத்ம பிரம மூலமாகையாலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் திறத்தில்
ஜென்ம நிரூபணத்தில் மூட்டி -அநர்த்தத்திலே பர்யவசிக்கும் –
அதிலே ஓன்று அவர்கள் பக்கல் ஜென்ம நிரூபணம் –ஸ்ரீ வசன பூஷணம் –195-என்றார் இறே –
மன் பக்கல் சேவிப்பார்க்கு அன்பு செய்வார் சென்ம நிரூபணமும் ஆவிக்கு நேரே அழுக்கு -ஸப்த காதை –5-
என்று ஆயிற்று அதன் குரூரம் இருப்பது –
அமரவோரங்கம் இத்யாதி –திருமாலை

வாழ் வினை-யாவது
வாழ்வை -என்றபடி –
வாழ் வினை -என்று முழுச் சொல்
வாழ்வாவது
நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சியைப் பெற்று –3-2-4-
வாழ்வு எய்தி ஞாலம் புகழ வாழ்வர் –3-3-11-என்றபடி –

தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –2-9-4-
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் -10-3-8-
என்று அவன் உகந்த படியே செய்து ஆனந்திக்கை –

அன்றிக்கே
அவன் அடியார் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே -என்கிறபடியே
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை —10-9-11-
என்றும் சொல்லுகிற பரம ப்ராப்யம் ஆகவுமாம் –
இதுவே இறே ப்ராப்யத்தின் எல்லை நிலம் –

ஓதும் குருகையர் கோன் யாழின் இசை வேதத்து இயல் —
இந்த அர்த்த பஞ்சகத்தையும் ஓதுகையாவது –
ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் –இத்யாதியில்
முந யஸ்ய மஹாத்மநோ வேத வேதார்த்த வேதிந வதந்தி –என்கிறபடியே —
சடகோப முனியான இவர் ஸ்ரீ ஸூக்தியும்

இமையோர் அதிபதி அடியேன் மனனே பொய் மயர்வு பிறந்து அருளினன் விண்ணப்பம்
தொழுது எழு என்று பஞ்சகத்தையும் இறே அடியிலே யாயிற்று சொல்லிற்று –ஆச்சார்ய ஹ்ருதயம் –212–

உயர் திண் அணை ஓன்று
பயில் ஏறு கண் கரு
வீடு சொன்னால் ஒரு கொண்ட
நோற்ற நாலும்
எம்மா ஒழிவில் நெடு வேய் –என்கிற
இருபதிலே விசதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே அஞ்சையும் என்று இறே
ஆச்சார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூ க்திகள் –

குருகையர் கோன் யாழின் இசை வேதம் ஆவது –
ஸம்ஸ்க்ருத வேதம் போலே தான் தோன்றி இன்றிக்கே
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபன் -என்னும்படி
ஆழ்வாராலே அருளிச் செய்யப்பட அதிசயத்தை உடையதாய் —
யாழின் இசையே –5-3-6- என்று
கான ஸ்வரூபியான ஸர்வேஸ்வரனை ப்ரதிபாதிக்கையாலே
பண்ணார் பாடல் –10-7-5-
பண்புரை இசை கொள் வேதம் –ஆச்சார்ய ஹ்ருதயம் –50-
என்னலாம் படி
பண் கொள் ஆயிரம் –3-6-11-
என்று சாம வேதம் போலே சரசமாய் இருக்கை –

இதனுடைய வேத சாம்யம் எல்லாம் ஆச்சார்ய ஹ்ருதயத்தில் விசதமாக அருளிச் செய்துள்ளார் —
அதிலே கண்டு கொள்வது –

விண் மீது இருப்பாய் –6-9-5–என்கிற பாட்டிலே பர ஸ்வரூபம் காணலாம் –

ஆத்ம ஸ்வரூபம் -அடியார்ந்த வையத்திலே –3-7-10-காணலாம்

உபாய ஸ்வரூபம்–உழலையிலே -5-8-11- காணலாம் —

விரோதி ஸ்வரூபம் –அகற்ற நீ வைத்த –5-6-8- என்கிறதிலே காணலாம்

பலம் -உற்றேனிலே —-10-8-10-உணரலாம்

அர்த்த பஞ்சக ஞானத்தாலே இறே
அந்தமில் பேர் இன்பத்து இன்புறுகையும் -என்று அறுதி இட்டு அருளிற்று –

எண் பெருக்கு அந்நலத்திலும் –1-2-10-
எனக்கே ஆட் செய் –2-9-4-
ஒழிவில் காலம் –3-3-1-
வேங்கடங்கள் –3-3-6-
சீலமில்லா –4-7-1-
களைவாய் –5-9-8-
ஞாலத்தூடே –6-9-3-
என்கிற பாட்டுக்களிலும் —

திரு மந்த்ரத்திலும் காணலாய் இருக்கும் —
அகாரத்தாலும்
மகாரத்தாலும்
ரக்ஷகனையும் ரஷ்யத்தையும் சொல்லி

சதுர்த்தியாலும்
உகாரத்தாலும்
ரக்ஷண ஹேதுவான பிராப்தியும் பலத்தையும் சொல்லுகிறது –

ச விபக்தி கதமான நாராயண பதத்திலே
சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளிலே கைங்கர்யத்தைச் சொல்லுகையாலே
திருமந்திரம் –அர்த்த பஞ்சக ப்ரதிபாதகம் என்னும் இடம் ஸ்பஷ்டம் இறே

ஆகையாலே திருவாய் மொழியிலே பிரதிபாதிக்கிற அர்த்தம் எல்லாம் அர்த்த பஞ்சக ப்ரதிபாதகமான
திருமந்த்ரார்த்தம் என்னத் தட்டு இல்லை

ஸ்ரீ பதி ஸ சேதனஸ் யாஸ்ய –பன்னீராயிரப்படி பிரவேசம்
என்கிற ஸ்லோகத்தில் அருளிச் செய்த அர்த்த பஞ்சகமும்
இதில் இரண்டு பத்தாலே ஒரோர் அர்த்தம் ப்ரதிபாதிக்கப் படுகிறது -என்று
திருவாய் மொழியின் பிரவேசத்தில் ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்தார் இறே

திலதம் உலகுக்கான திரு வேங்கடத்தானை
அலகில் புகழ் அந்தாதி ஆயிரமும் -உலகில்
உரைத்தான் சடகோபன் உத்தமர்கள் நெஞ்சில்
விரித்தான் பெரும் பூதூர் வேந்து

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாதமுனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ தயா பாத்ரம் – ஸ்ரீ தேசிகனின் வைபவத்தின் வைபவம்-ஸ்ரீ உ.வே அனந்த பத்மநாபாசாரியார் ஸ்வாமி–

February 2, 2021

ஸ்ரீ ராமானுஜ தயா பாத்ரம் – ஸ்ரீ தேசிகனின் வைபவத்தின் வைபவம்
ஸ்வாமி ஸ்ரீ தேசிகனின் வைபவத்தை நாம் அறிந்திடவும், அதனை பகிர்ந்திடவும் முயற்சித்தல், எளிதான செயல் அன்று.
ஸ்வாமியின் வைபவத்தின் வைபவம் அத்தகையதாகும்.
ஸ்வாமி பாதுகா ஸஹஸ்ரத்தில், பாதுகையின் ப்ரபாவத்தை கூறும் பொழுது,
“ஆகாயம் முழுதும் காகிதமாக கொண்டு, ஏழு ஸமுத்ரங்களை மையாக கொண்டு, 1000 தலைகள் மற்றும் கண்கள்
கொண்ட அந்த பரந்தாமனே வந்து எழுதினால், ஒரு வேளை எழுத முடியுமோ என்னவோ” என்று சாதிக்கின்றார்.

நிச் சேஷம் அம்பர தலம் யதி பத்ரிகா ஸ்யாத்
ஸப்த அர்ணவீ யதி ஸமேத்ய மஷீ பவித்ரீ
வக்தா ஸஹஸ்ர வதந: புருஷ ஸ்வயம் சேத்
லிக்யதே ரங்க பதி பாதுகயோ: ப்ரபாவ:—-3-2-

நிச் சேஷம் -மொத்தமாக -மிச்சம் இல்லாமல்
அம்பர தலம் -ஆகாயமே
யதி பத்ரிகா ஸ்யாத்–ஒரு வேளை காகிதமாக ஆனால்
ஸப்த அர்ணவீ -ஏழு சமுத்ரங்களும்
யதி ஸமேத்ய மஷீ பவித்ரீ-ஒரு வேளை ஓன்று கூடி மையாக ஆனால் -தேசிகர் காலத்திலேயே மை இருந்துள்ளதே
வக்தா -சொல்பவர்
ஸஹஸ்ர வதந: புருஷ ஸ்வயம் சேத்-ஸஹஸ்ர சீர்ஷ புருஷனான ரெங்கநாதனே தானே சொல்லி -dictate -செய்தால் –
தோள்கள் ஆயிரத்தாய் –தாள்கள் ஆயிரத்தாய் -ஸர்வஞ்ஞன் -ஸர்வசக்தன் -என்றவாறு -பெரியவாய கண்கள் –
ஸ்வயம் சேத்-தனது பாதுகை பெருமையை தானே சொல்ல மாட்டானே -ஒரு கால் சொன்னால்
லிக்யதே ரங்க பதி பாதுகயோ: ப்ரபாவ:–ஸ்ரீ பாதுகா தேவியின் பெருமையை கொஞ்சமாவது எழுதலாம் –
அடியேன் எவ்வாறு பெருமையைச் சொல்ல முடியும் -நைச்ய அனுசந்தானம் –

இது பாதுகைக்கு மட்டும் இன்றி, பாதுகா சேவகராம் ஸ்வாமி தேசிகனுக்கும் உபலக்ஷணம்.
ஸ்வாமியின் பெருமையின் ப்ரபாவமும் அப்படியே ஆகும்.

ஸ்வாமி தேசிகன், பல க்ரந்தங்களை, பல மொழிகளில் அருளியுள்ளார். தேசிகனின் ப்ரபாவத்தையும், க்ரந்தங்களையும்
அறிந்து கொள்ள நம் ஆயுள் போதாது. ஆயினும் தேசிகனின் ஒரு பாசுரம் பயின்றாலே, அது நமக்கு
பரமபதத்திற்கு சோபானமாக(அதாவது படியாக) அமையும். இதையே,
“ஓர் ஒன்று தானே அமையாதோ, தாரணியில் வாழ்வோருக்கு வானேற போமளவும் வாழ்வு” என்று
ஸ்வாமி தேசிகனின் தனியனிலும் அறிகிறோம், போற்றி துதிக்கின்றோம்.

தேசிக அடியாரின் ரஹஸ்ய த்ரயம்:
நம் ஸம்ப்ரதாயத்தில், தத்வ த்ரயம், ரஹஸ்ய த்ரயம் போன்ற விஷயங்களை காணலாம்.
தேசிகனின் அடியார்கள் அறிய வேண்டிய மூன்று விஷயம் என்ன என்றால் அது
தேசிகனின் மூன்று தனியன்களே ஆகும்.

அவையாவன,
1. ஸ்ரீ நயினாராசார்யர் அருளிச் செய்த தனியன்:
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்கிககேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

2. ஸ்ரீ ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஸ்வாமி அருளிச் செய்த தனியன்:
ராமானுஜ தயாபாத்ரம் ஜ்ஞாந வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேசிகம் ||

3. பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்த தனியன்:
சீர் ஒன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழமொழியுள் – ஓர் ஒன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு.

ராமானுஜ தயா பாத்ரம் தனியன் அவதாரம்:
ஒரு சமயம் ஸ்வாமி தேசிகன், தன் குமாரர் வரதாசார்யர், ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ரர் மற்றும் சிஷ்யர்கள் சூழ,
திருநாராயணபுரம் /மேல்கோட்டை எழுந்தருளினார்.
அங்கு, ஸ்வாமியின் திருக்குமாரர் பகவத் விஷய” காலக்ஷேபம் சொல்லத் தொடங்கினார்.
ப்ரஹ்ம தந்த்ர ஸ்வதந்த்ரர், தேசிகனின் அனுமதியைப் பெற்று, காலக்ஷேப கோஷ்டியில் அமர்ந்து
ஸ்வாமியின் திருக்குமாரர் பற்றிய கீழ்கண்ட தனியனை அனுஸந்தித்தார்.

ஸ்ரீ மந் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜம் |
விச்வா மித்ர குலோத் பூதம் வரதார்யமஹம் பஜே ||

பிறகு, தர்சனப்ரவர்த்தகர் ஸ்ரீ உடையவரின் பரிபூர்ண கடாக்ஷத்துக்கும்,தாய் மாமாவான ஸ்ரீ அப்புள்ளாரின்
பரிபூர்ண கடாக்ஷத்துக்கும் பாத்ரரான ஸ்வாமி தேசிகன் விஷயமாக,

ராமானுஜ தயா பாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||
என்கிற தனியனை அனுஸந்தித்து,
பிறகு குரு பரம்பரையைச் சொல்லி,
பகவத் விஷய காலக்ஷேபத்தைக் கேட்கத் தொடங்கினார்.

இதனை அறிந்த ஸ்வாமி தேசிகன்,
“ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய” என்கிற தனியன், தன்னுடைய பெருமையைச் சொல்கிறது.
”ராமானுஜ தயாபாத்ரம்….” என்கிற தனியன்,
தனக்கு ஏற்பட்டுள்ள சதாசார்ய கடாக்ஷப் பெருமையைச் சொல்கிறது என்று சந்தோஷப்பட்டார்.

பின்னர் ”ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய:” என்கிற தனியன் ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபத்தின் போது அநுஸந்திக்கும் படியும்
”ராமானுஜ தயா பாத்ரம்” என்கிற தனியன் “பகவத் விஷய” காலக்ஷேபத்தின்போது அநுஸந்திக்கும்படியும் நியமித்தார்.

இவ்வாறு பஹுதான்ய வருடம், ஆவணி ஹஸ்தம் நன்னாளில் ராமானுஜ தயா பாத்ரம் தனியன் அவதாரம்.
பின்னர் ஸ்ரீரங்கநாதனின் நியமனத்தின் படி தமிழ் பிரபந்தங்களை ஸேவிக்கும் முன்
இந்த தனியனை அநுஸந்திக்கும் முறை பின்பற்றப்படுகிறது.

ஆசார்ய தனியனின் தனிப் பெருமை:
கருணையினால் ஜ்ஞானத்தை அளித்து, நாம் நற்கதி அடைய வழி வகுக்கும் ஆசார்யனுக்கு,
சிஷ்யன் கைமாறு செய்ய முடியுமா என்றால், முடியாது. அப்படி இருக்க, சிஷ்யன் ஆசார்யன் மேல் கொண்டுள்ள
பக்தியை எப்படி வெளிப்படுத்துவது என்பதற்கு பூர்வர்கள் நான்குவித விஷயங்களை கூறியுள்ளனர்.

அவையாவன,
1. ஆசார்யன் பெருமை புலனாகும் படியாக அவரை பற்றிய ச்லோகம் எழுதி,அவரிடம் ஸமர்ப்பித்து,
அவரின் அனுமதியின் பெயரில் அவரை பற்றிய துதி பாடல்களை பாடுவது.
2. விரலை வெட்டி ஆசார்யனுக்கு காணிக்கையாக ஸமர்பிப்பது.
3. மார்பில் ஆசார்யன் பெயரை பச்சை குத்திக் கொள்வது.
4. ஆசார்யன் திருவடி என்று நம்மை ஆசார்யனின் தாஸனாக அறிமுகம் செய்து கொள்வது.

இதனையே ஸ்ரீவைஷ்ணவ அடியார்களாகிய நாம் “அடியேன் ராமானுஜ தாஸன்” என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறோம்.
இதில் நம் ஆசார்யர்கள் ஸாத்வீகமான முறையையே நாம் பின்பற்ற உபதேசித்தனர்.
சிஷ்யர்கள் ஆசார்யனுக்கு தனியன் ஸமர்ப்பித்தல், அவரின் பெருமையையும் குணங்களையும் போற்றும் தனியனை
நித்யம் அனுஸந்தானம் செய்தல், நம் ஆசார்யர்கள் உகந்த அனுஷ்டானங்கள் ஆகும்.
இதையொட்டியே ஸ்வாமி தேசிகனின் ப்ரதான சிஷ்யர் ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர், ஸ்வாமி தேசிகனின் மேல் இருந்த
அபரிமிதமான ஆசார்ய பக்தியினால் அருளியது ”ராமானுஜ தயா பாத்ரம்” என்னும் தனியன் ஆகும்.

ராமானுஜ தயா:
“ராமானுஜ தயா” – இந்த பதத்தின் அர்த்தத்தை நாம் அறிந்தோம் என்றால் அனைத்தையும் அறிந்தவர் ஆகின்றோம்.
ராமானுஜரின் தயைக்கு பாத்திரமான தேசிகன்
ராமானுஜரின் தயைக்கு, கருணைக்கு பாத்ரமானவர் என்பது முதல் விளக்கம்.

ஸ்வாமி தேசிகனின் திருக் குமாரர் —குமார வரதாசார்யர் —-தன்னுடைய பிள்ளை அந்தாதியில்,
மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்து உறை மார்பினன் ,தாள்
தூமலர் சூடிய தொல் அருள் மாறன் துணை அடிக் கீழ்
வாழ்வை உகக்கும் இராமாநுச முனி வண்மை போற்றும்
சீர்மையன் எங்கள் தூப்புல் பிள்ளை பாதம் என் சென்னியதே .
ராமானுஜரின் வண்மையைப் போற்றும், சீர்மையன்—என்று ஸ்ரீ நயினாசார்யர் சொல்கிறார்.

எங்கள் தூப்புல் பிள்ளை—ஸ்வாமி தேசிகனின் திருவடிகள்—என் சென்னியதே—-என் தலைமேல் இருக்கிறது–என்று,
ஸ்ரீ நயினாசார்யர்,பாசுரமிடுகிறார். இராமாநுசமுனி வண்மை போற்றும் சீர்மையன்—ஆதலால்,
ராமானுஜ தயா பாத்ரர். அதுமட்டுமல்ல ராமானுஜரின் மறுஅவதாரம் அன்றோ நம் ஸ்வாமி தேசிகன்.

நான்கு பிரதானமான திவ்ய தேசங்கள்:

ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம்
ஸ்ரீ ஹஸ்திஸைல சிகரோஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீசம் நமாமி சிரஸா யதுசைல தீபம்

என திருவரங்கம், திருமலை,திருக்கச்சி, திருயாதவகிரி ஆகிய
நான்கு பிரதானமான திவ்ய தேசங்களை வணங்குகிறோம்.
இந்த திவ்ய தேசங்களுக்கும் ராமானுஜ சப்தத்திற்கும் உள்ள தொடர்பை விரிவாக காணலாம்.

ஸ்ரீரங்கநாதனின் தயைக்கு பாத்திரமான தேசிகன்:
பூலோக வைகுண்ட க்ஷேத்திரம் “ஸ்ரீரங்கத்தில்” பெரிய பெருமாளாக, ப்ராணாவகார விமானத்தின் கீழ்,
பள்ளி கொண்டுள்ளான் ஸ்ரீரங்கநாதன். ரங்கநாதனுக்கு ராமானுஜன் என்னும் பெயர் உண்டு.
அன்மொழித்தொகையின் படி “எவனுக்கு ராமன் இளையவனோ அவன் ராமானுஜன்”.
ராமனுக்கு முன்னரே திரு அயோத்தியில் எழுந்தருளிய பெருமாள் ஸ்ரீரங்கநாதன்.
ப்ரம்ம தேவன் இஷ்வாகு குலத்திற்கு தனமாக அளித்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன்.
“தோலாத தனி வீரன் தொழுத கோவில்” – ராமன் ரங்கநாதனை ஆராதித்து இருக்கிறான்.
பெருமாளாம் ராமன் ஆராதித்த ஸ்ரீரங்கநாதன் பெரிய பெருமாள் என போற்றப் பெற்றார்.
ராமன் பின்னர், விபீஷணனிடம் குலா தனமாக அளிக்க, விபீஷணன் இலங்கை செல்லும் வழியில் காவேரியின் மணல்
திட்டில் நித்ய வாசம் செய்ய ஆரம்பித்தவன் ஸ்ரீரங்கநாதர்.
“அம்புயத்தோன் அயோத்தி மன்னருக்கு அளித்த கோவில்” என்று ஸ்வாமி தேசிகன் ஸ்ரீரங்கத்தை பற்றி அருளியுள்ளார்.
ஆகையால் ஸ்ரீரங்கநாதன் என்னும் ராமானுஜனின் தயைக்கு பாத்திரமான ஸ்வாமி தேசிகன்.
ரங்கநாதனின் தயையினால் வேதாந்தாசார்யன் / வேதாந்த தேசிகன் என்ற பிருதம் பெற்றதாக ஸ்வாமி தேசிகனே சாதித்துள்ளார்.
உபய வேதாந்தங்களுக்கும் ஆசார்யனாக ஸ்வாமி தேசிகன் திகழ்ந்தார்.
ஸ்ரீரங்கநாதன் என்னும் ராமானுஜனின் தயைக்கு பாத்திரரானார் ஸ்வாமி தேசிகன்.

திருமலையப்பனின் தயைக்கு பாத்திரமான தேசிகன்:
ஸ்ரீநிவாசன் வாஸம் செய்யும் திருவேங்கட மாமலை அடுத்த திவ்ய தேசமாகும்.
அந்த ஸ்ரீனிவாசனே தேசிகனாக பிறந்தார். ஸ்ரீனிவாசனின் அனுகிரஹமே தேசிகனின் பிறப்பிற்கு காரணம்.
மங்களத்தை வளர்க்கக்கூடிய புரட்டாசி மாதத்தில், விஷ்ணு நக்ஷத்திரத்தில் அதாவது ச்ரவண நக்ஷத்திரத்தில்,
ஸ்ரீனிவாசனின் தீர்த்தவாரி சுப தினத்தில் அனந்தசூரிக்கும், தோதாரம்பைக்கும் ஸ்வாமி தேசிகன் மகனாக அவதாரம் செய்தார்.
பெருமாளே ஆசார்யனாக பிறந்தான்.

குழந்தை இல்லாத தம்பதியினர் அனந்தசூரி மற்றும் தோதாரம்பை, குழந்தை வேண்டி திருமலைக்கு யாத்திரையாக சென்றனர்.
கனவில் திருமலையப்பனின் மணியினை தோதாரம்பை முழுங்குவதாக தம்பதியினர் ஸ்வப்னம் கண்டனர்.
மறுநாள் கோவிலில் மணியை காணாமல் ஒரே பரபரப்பாக இருந்தது. கோவில் ஜீயர் தோதாரம்பையை காட்டி,
அவள் கர்ப்பத்தில் திருமணியின் அவதாரமாக பிள்ளை பிறக்கப் போவதை கூறினார்.
தேசிகன் அவ்வாறே திருமணியின் அவதாரமாக, தோதாரம்பையின் கர்ப்பத்தில்,
ராமனை போல் பன்னிரெண்டு மாதம் இருந்து அவதாரம் செய்தார்.
ஸ்வாமி தேசிகன் ஸங்கல்ப சூர்யோதயத்தில் தன்னை அனைவரும் திருமணியின் அவதாரமாக போற்றியதை
தன் சொற்களினாலேயே அருளுகிறார்.

திருவாராதன சமயத்தில் தேவர்களை ஆவாஹனம் செய்யவும், அசுரர்களை விரட்டவும், திருமணி அடிக்கப்படுகிறது.
ராமானுஜ ஸம்ப்ரதாயத்திற்கு விரோதமாக பொருள் சொல்லுபவர்கள் அலறி, பயந்து செல்லும் வகையில்
திருமணியின் அவதாரமாகவே பிறந்து, அவர்களை வென்றார் நம் ஸ்வாமி தேசிகன்.
“திருமலை மால் திருமணியாய் சிறக்க வந்தோன்” நம்தேசிகன்.

ஸாக்ஷாத் திருமலையப்பன் அவதாரமோ, இல்லை ஒரு வேளை திருமலையப்பனின் திருமணியின் அவதாரமோ,
இல்லை ஒரு வேளை யதிராஜரின் அம்சமோஎன போற்றப்பட்டவர் நம் ஸ்வாமி தேசிகன்.
அப்படிப்பட்ட ஆச்சர்யமான அவதாரம் நம் ஆசார்யன் அவதாரம்.

பிள்ளை அந்தாதியில்,
அன்றிவ் வுலகினை யாக்கி யரும்பொரு ணூல்விரித்து
நின்றுதன் னீள் புகழ் வேங்கட மாமலை மேவி யும்பின்
வென்றிப் புகழ்த் திரு வேங்கட னாத னெனுங்குருவாய் நின்று
னிகழ்ந்து மண் மேனின்ற னோய் கட விர்த்தனனே.

உலகினை ச்ருஷ்டி செய்து, வேதங்களையும் கொடுத்து எம்பெருமான் ஏழு மலையின் மேல் சென்று அமர்ந்து கொண்டான்.
ஏன் என்றால், விவசாயி தான் பயிரிட்ட பூமியை ரக்ஷிக்க வயலுக்கு நடுவில் ஒரு பரணை கட்டி அமர்ந்து கொண்டு காப்பான்.
அது போல் ஸ்ரீநிவாசன் உலகத்தில் சரணாகதி என்னும் பயிரை நட்டு, அதன் விளைச்சலுக்கு உயர்ந்த திருமலையில் அமர்ந்து கொண்டு,
கண்ணும் கருத்துமாக ரக்ஷித்து வருகிறான். ஒரு வேளை ஆடு மாடுகள் கூட்டமாக பயிரை மேய வந்தால்,
அருகில் உள்ள தன் பசங்களை உடனேயே அவைகளைவிரட்ட சொல்வது போல்,
ஆசார்யர்களை அவதாரம் செய்விக்கிறான் பகவான். வேங்கடநாதன் என்னும் குருவாக அவதரித்தான் ஸ்ரீநிவாசன்.
திருமலையப்பன் என்னும் ராமானுஜனே வேங்கடநாதன் என்னும் குருவாய் அவதரித்தான்.

யசோதை வகுள மாளிகையாக பிறந்தாள்,
கண்ணன் திருவேங்கடமுடையானாக பிறந்தான்.
பலராமனின் அனுஜனான கண்ணனே அதாவது ராமானுஜனே, திருவேங்கடமுடையான்.
அந்த திருவேங்கடமுடையானின் கருணையை தயா சதகம் என்னும் நூறு ச்லோகங்களினாலே பாடியதால்
திருவேங்கடமுடையானின் தயைக்கு பாத்திரமானார் நம் தேசிகன்.
இப்படி ஸ்ரீநிவாஸனின் பரிபூரண கருணைக்கு இலக்கானவர் தேசிகன்.

திருக்கச்சி வரதனின் தயைக்கு பாத்திரமான தேசிகன்
காஞ்சி தேவப்பெருமாள் திருவடியில் பிறந்தவர் தேசிகன். வரதனுக்கு ராமானுஜன் என்னும் பெயர் உண்டு. இது ஒரு ஸ்வாரஸ்யம்.
அனுஜ சப்தத்திற்கு “அனுகாரம்” பண்ணுதல் என்று அர்த்தம். ஒருத்தர் செய்வதை போலச் செய்கை செய்வது அனுகாரம் எனப்படும்.
அப்புள்ளார் தேசிகனின் ஆசார்யன், அவரின் மாதுலர் தாய் மாமா ஆவார்.
“யதி வரனார் மடப்பள்ளியில் வந்த மணம் எங்கள் வார்த்தையில் மன்னியதே” என்று கூறுவது மரபு.
நம் தேசிக ஸம்ப்ரதாயம் மாதுலர் வழி வந்த ஸம்ப்ரதாயமாகும்.
காள மேக தேசிகாத் – வாதி ஹம்ஸ அம்புஜ ஆசார்ய என அழைக்கப்படும் அப்புள்ளாரிடம் அனைத்தையும் கற்றார் நம் தேசிகன்.
தேசிகன் “அப்புள்ளார் ஒரு கிளியை பழக்கினாப் போலே அடியேனை பழக்கி வைத்தார்” என்கிறார்.

அப்புள்ளார், வால்மீகி இராமாயணத்தில் ப்ரணவம் நடந்து சென்றதை இந்த ச்லோகம் மூலம் விளக்கினார்.
अग्रतः प्रययौ रामस्सीता मध्ये सुमध्यमा।
पृष्ठतस्तु धनुष्पाणिर्लक्ष्मणोऽनुजगाम ह।।3.11.1।।
பெருமாள் என்பவன் mobile கற்பக வ்ருக்ஷம். நாம் இருக்கும் இடம் தேடி வந்து அருள் புரிபவன்.
அகார வாச்யனான ராமன், உகார வாச்யகமாக பிராட்டியும், மகாரமாக லக்ஷ்மணனும் நடந்து செல்வதை
ப்ரணவத்தின் விளக்கம் தரும் வகையில் தேசிகனுக்கு விளக்கினார் அப்புள்ளார்.மகாரம் 25வது தத்துவமான ஜீவனை குறிக்கும்.
ராமன், ஸீதை மற்றும் லக்ஷ்மணன் மூவரும் ப்ரணவத்தின் வடிவை விளக்கும் வகையில் நடந்து சென்றனர்.
இவ்வாறு ப்ரணவத்தின் அர்த்த விசேஷத்தை அப்புள்ளார் தேசிகனுக்கு விளக்கினார்.

ராமானுஜர் விந்திய மலையில் வழி தெரியாமல் தவித்த பொழுது, வரதனும் பெருந்தேவியும் வேடுவன் வேடுவச்சியாக வந்து
காப்பாற்றி காஞ்சி வரை அழைத்து வந்தனர். அடியேனின், மேகத்தின் தாகம் என்னும் நூலில் இந்த அனுபவத்தை விரிவாக படிக்கலாம்.
அப்பொழுது அந்த இரவில் வேடுவன் வரதன் வில்லோடு, அவனை தொடர்ந்து வேடுவச்சி பெருந்தேவி, பின்னர் ராமானுஜர்
மூவரும் நடந்து சென்றனர். அன்று ராமன், சீதை, லக்ஷ்மணன் ப்ரணவத்தின் வடிவாக
நடந்து சென்றதை போல் இவர்கள் நடந்து சென்றனர். அன்று ராமன் கொடுத்தது அனுபவம்
இன்று வரதன் காட்டியது அனுஷ்டானம்.

ஸ்வாமி தேசிகன் யதிராஜ சப்ததியில்,சாலைக் கிணறு வ்ருத்தாந்தத்தை பற்றி கூறும் பொழுது,
वन्दे तं यमिनां धुरन्धरमहं मानान्धकारद्रुहा पन्थानं परिपन्थिनां निजदृशा रुन्धानमिन्धानया ।
दत्तं येन दयासुधाम्बुनिधिना पीत्वा विशुद्धं पयः काले नः करिशैलकृष्णजलदः काङ्क्षाधिकं वर्षति ॥
இன்றும் தேவப்பெருமாளுக்கு முதல் தீர்த்தம் சாலைக்கிணற்றிலிருந்து தான் எடுத்து வரப்படுகிறது.
வரதன் என்னும் காள மேகம், நாம் கேட்பதை காட்டிலும் அதிகமாக வருஷிக்க என்ன காரணம்?
மேகமானது ஒரு முறை மழை பொழிந்து விட்டால் காலியாகி விடும். அந்த மேகத்தில் மழைக்கு பின்னர் நீர் இருக்காது.
வரதன் முக்தி மழை பொழியும் முகில் வண்ணனாக இருக்க காரணம் என்னவென்றால்,
தினமும் சாலைக்கிணற்றிலிருந்து ஸமர்ப்பிக்கப்படும் தீர்த்தத்தை பருகிக் கொண்டு இருப்பதினால்.
விபவத்தில் அனுபவத்தையும், வரதனாக அர்ச்சையில் அனுஷ்டானத்தையும் பெருமாள் காட்டுகிறான்.
முதலில் அநந்தனாக, பின்னர் லக்ஷ்மணனாக, அடுத்து பலராமனாக அவதாரம் செய்தவரே,
கலியுகத்தில் ராமானுஜராக அவதாரம் செய்தார்.
இராமாயணத்தில் நடந்த வ்ருத்தாந்தத்தை, வரதன் அனுஷ்டித்து (அனுகாரம் ) செய்து காட்டியதால்,
வரதன் ராமானுஜன். வரதனாம் ராமானுஜனின் கருணைக்கு இலக்கானவர் தேசிகன்.

பத்தி முதலாமவற்றுள் பதி எனக்கு கூடாமல்
எத்திசையும் ஒழன்றோடி இளைத்து விழும் காகம் போல்
முத்தி தரும் னகரேழில் முக்கியமாம் கச்சி தன்னில்
அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் னான் புகுந்தேனே–என கச்சி வரதனின் திருவடியில் சரணாகதி செய்தவர் நம் தேசிகன்.

“வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடகிளியை கை கூப்பி வணங்கினாள்” –
பரகால நாயகியான திருமங்கைஆழ்வார் கிளிக்கு பேச சொல்லிக் கொடுக்கிறாள்.
தான் பழக்கிய கிளி அழகாக பாட ஆரம்பித்தவுடன், சந்தோஷமடைந்த பரகால நாயகி,
அந்த மடப்பம் பொருந்திய கிளியை பார்த்து கை கூப்பினாள். வரதன் வளர்த்த கிளி தேசிகன்.

“திக்கு எட்டும் புகழ் ஸ்ரீபாஷ்யத்தை தெளிய உரைத்திடு நாள்” – தேசிகன் திக் எட்டும் ஸ்ரீபாஷ்யத்தை உரைத்திடச் செய்தார்.
அந்த தேசிகனை பார்த்தவுடன், தான் வளர்த்த கிளி என்று பெருமை கொள்கிறான் வரதன்.
தேசிகனின் திருநட்சத்திரம் புரட்டாசி சரவணத்தன்று, தன் குடை, சாமரம், வாத்தியங்கள், பல்லாக்கு,
அனந்த கொத்து கைங்கர்யபரர்கள் என அனைத்தையும் தேசிகனுக்கு அனுப்பி
தன் குழந்தை “வரதா வரதா” என்று வரதன் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறான்.

ஸகல பரிவாரங்களுடன் தன் குழந்தை தேசிகன் வருவதை பார்த்து வரதன் சந்தோஷப்படுகிறான்.
அன்று பெரியாழ்வர் பவனி வருவதைக் காண பெருமாள் வந்தான், இன்று தேசிகனைக் காண, அனுபவிக்க வரதன் வருகிறான்.
தேசிகன் பிறந்தது வரதன் திருவடியில், பின்னர் ஸித்தாந்த ஸ்தாபனம் செய்தது அரங்கன் திருவடியில்.
இதனாலேயே நான்கு திவ்ய தேசங்களில் கைங்கர்யம் இனிதே நடைபெற வேண்டும் என்று வரதனையே தேசிகன் ப்ரார்த்திக்கிறார்.
வரதனின் பரிபூரண கடாக்ஷத்திற்கு பாத்திரபூதர் ஸ்வாமி தேசிகன்.

திருயாதவகிரி சம்பத் குமாரனின் தயைக்கு பாத்திரமான தேசிகன்
சம்பத்குமாரன் ( செல்லப்பிள்ளை) யதிராஜரின் இளவல். ராஜா ராமானுஜர், சம்பத்குமாரன் இளையராஜா ஆவார்.
இந்த பெருமாளுக்கு ராமப்ரியன் என்று திருநாமம். இஷ்வாகு குல தனமான ஸ்ரீரங்கநாதனை, விபீஷணன்
எழுந்தருளப் பண்ணிக்கொண்டு சென்றவுடன், ராமன் தான் ஆராதனம் செய்ய மீண்டும் ஒரு பெருமாளை எழுந்தருளப் பண்ணினார்.
ராமனால் ஆராதிக்கப்பட்டு, ராமனுக்கு மிகவும் பிரியமான பெருமாள் என்பதால் ராமப்ரியன் என்று திருநாமம்.
ராமனுக்கு அடுத்து வந்தவன் ராமப்ரியன், ராமனுக்கு அனுஜன் ஆகையால் ராமப்ரியன் ராமானுஜன்.
பின்னர் கிருஷ்ணனால் யாதவகிரியில் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாள் இவரே.

ராமனின் பேத்தி கனகமாலினி (கனகாங்கி) என்று பெயர். யது வம்சத்து யதுத்தமனுக்கு கல்யாணம் செய்து கொடுத்தான் குசன்.
குசன் பெண் விட்டு சீதனமாக ராமப்ரியனை ஆராதனம் செய்ய அளித்தான். இப்படி யது வம்சத்தில் ஆராதிக்க பட்ட பெருமாளை,
பலராமன் தீர்த்த யாத்திரை சென்ற போது, யாதவ கிரியில் மூலவர் திருநாராயணன் திரு உருவமும் ராமப்ரியன் திரு உருவமும்
ஒன்றாக இருப்பதைக் கண்டு, கண்ணன் அனுமதியுடன் ராமப்ரியனை திருநாராயணபுரத்தில் ப்ரதிஷ்டை செய்தார்கள்.

ராமனுக்கு பிறகு அவதாரம் செய்ததினால் ராமப்ரியன் ராமானுஜன். யதிராஜனான ராமானுஜர் ராமன் என்றால்,
யுவராஜாவான சம்பத்குமாரன் ராமானுஜன். ராமப்ரியனின் க்ருப்பைக்கு பாத்திர பூதர் தேசிகன்.
இந்த ராமானுஜ தயா பாத்ரம் தனியன் அவதாரம் மேல்கோட்டையில் , சம்பத் குமாரன் ஸந்நிதியில் தான் ஏற்பட்டது.
ராமப்ரியனாம் சம்பத்குமாரின் தயைக்கு பாத்திரமானவர் தேசிகன்.

இவ்வாறு திருவரங்கம், திருமலை,திருக்கச்சி, திருயாதவகிரி ஆகிய நான்கு பிரதானமான திவ்ய தேசங்களின்
எம்பெருமான்களின் கருணைக்கு ஸ்வாமி தேசிகன் பாத்திரபூதர் ஆவார்.
இதை மேலும்நன்கு விவரித்து அனுபவித்தால் தேவநாதனின் பூரண கருணைக்கு முழு வடிவம் நம் ஸ்வாமி என்பதும் நன்கு புரியும்.

ராமானுஜ தயா
இவர்கள் மட்டுமின்றி தசாவதார எம்பெருமான், ஸ்ரீ தேவி, பூ தேவி , மற்றும் நீளா தேவி, விச்வக்சேனர்,
லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன்,நம்மாழ்வார், ஆளவந்தார் மற்றும் பூர்வாசார்யர்கள், ராமானுஜர்,
நடாதூர் அம்மாள், அப்புள்ளார் (ராமானுஜப்பிள்ளான், கிடாம்பி ராமாநுஜாசார்யர்) ஆகியோர் தயைக்கும் தேசிகன் பாத்திரமானவர்.

தேசிகனின் திருவடிகளை சரணம் என்றும் பற்றி, அனைத்து ஆழ்வார், ஆசார்யர்கள், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன்,
ஸ்ரீ தேவி, பூ தேவி, மற்றும் நீளா தேவி, எம்பெருமான் ஆகியோரின் கருணையை நாமும் பெற்றிடலாம்.

ஸ்வாமி தேசிகனின் 750வது திருநக்ஷத்திர மஹோத்சவத்தில், திருவஹீந்திரபுரம் ஸ்ரீ வேத பரிபாலன சபா வெளியிடும் மலரில்,
அடியேனுக்கு லேகன கைங்கர்யம் கிடைத்தது தேசிகனின் அனுகிரஹமே.
இந்த வாய்ப்பை அளித்த மகான்களுக்கு, அடியேனின் தன்யவாதங்கள் ஸமர்ப்பணம் செய்கிறேன்.

தேசிகன் அல்லால் தெய்வம் இல்லை.
தேசிகன் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வாத்ஸ்ய ஸ்ரீ க்ருஷ்ணமார்ய மஹாதேசிகனின் அந்தேவாசி
முகுந்தகிரி ஸ்ரீ உ.வே அனந்த பத்மநாபாசாரியார் ஸ்வாமி

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே அனந்த பத்மநாபாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .