Archive for the ‘கம்பராமாயணம்’ Category

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-21-30- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 22, 2021

பாங்கி நெறி அருமை கூறித் தலை மகனை வரவு விலக்குதல் –

சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் தளிர் மெல்லடித் தண்
மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு நீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறி நினை தோறும் துணுக்கு எனுமால்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை மலை யவனே. 21–

மலை யவனே-மலைக்கு உரியவனே
சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் -குறிஞ்சி நிலத்து சோலையிலே
தளிர் மெல்லடித் தண் மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு -கண்ணுக்கு இனிய பற்களையும் –
குறிஞ்சி என்னும் பண் போல் இனிய சொற்களையும் புன் சிரிப்பையும் யுடைய தலைவியின் முகத்தைப் பார்க்க
நீ முடுகும்–நீ விரைந்து வருவதாகிய
சூரல் குறிஞ்சி நெறி -பிரப்பங்காடு மிக மலை வழியை
நினை தோறும் துணுக்கு எனுமால்-நினைக்கும் தோறும் திடுக்கிட்டு அஞ்சுவதாய் இருக்கும்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை –ஆதலால் ஆழ்வார் மேல் ஆணை -இனி நீ இங்கனம் வர வேண்டா –

பகல் குறி -இரவுக் குறி -ஏகாந்தத்தில் தலைமகனை சந்தித்தல்
ஆறு பார்த்து உற்ற அச்சக் கிளவி -அகத்துறை
இதன் பயன் -வெளிப்படையாக வந்து மணம் புரிய வற்புறுத்தல்
குறிஞ்சி -மலையும் மலை சார்ந்த இடமும்-புணர்ச்சிக்கு உரிய இடம்

தமோ குண பிரசுரராய்
சம்சார மார்க்கத்தில் இருந்து மேற்பட்ட இடத்தில்
ஆழ்வார் பக்கல் பக்தி செய்து ஒழுகுகிற பாகவதர்களை நோக்கி
அன்பர்கள் இக்களவு ஒழுக்கைத்தை விட்டு
பிரபத்தி மார்க்கத்தில் நின்று அந வரத பாவனை செய்வதை வறுபுறுத்துவது இதன் ஸ்வா பதேசம் –
ஸ்ரீ வைஷ்ணவர்களை கிளவித் தலைமகனாக கொள்ளுதல் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மாயப்பிரான் அடியார் குழாம் உடன் கூடுவது என்று கொலோ -போல் –

————-

மலை யாரமும் கடல் ஆரமும் பன் மா மணி குயின்ற
விலை யாரமும் விரவுந் திரு நாடனை வேலை சுட்ட
சிலையார் அமுதின் அடி சட கோபனைச் சென்று இறைஞ்சும்
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே. 22-

மலை யாரமும் -பொதிய மலையில் உண்டாகிற சந்தன மரமும்
கடல் ஆரமும் –கடலில் தோன்றுகிற முத்துக்களும் -பூழியர் கோன் தென்னாடு முத்துடைத்து அன்றோ
பன் மா மணி குயின்ற விலை யாரமும் -ரத்தினங்கள் பதிக்கப்பட்ட விலை மிக்க ஹாரங்களும்
விரவுந் திரு நாடனை –பொருந்திய சிறந்த பாண்டி வள நாட்டில் திரு அவதரித்தவரும்
வேலை சுட்ட சிலையார் அமுதின் அடி சட கோபனைச் –சமுத்திரத்தை ஆக்நேய அஸ்த்ரத்தால் வேகச் செய்த
சாரங்க பாணியின் திருவடி நிலைகளான ஆழ்வாரை
சென்று இறைஞ்சும்–போய் வணங்குகிற
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே- தலையை யுடைய அவரே எம்மை அடிமை கொள்ளும் தவச் செல்வர் ஆவார்
ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் போல்வார்
கற்றார் பரவும் ராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் எவர் அவர் எம்மை
நின்று ஆளும் பெரியவரே -ராமானுஜ நூற்றந்தாதி பாசுரத்தை ஒட்டியே இப்பாசுரம் –

————-

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்
வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் எழில் குருகூர்
நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும்
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே. 23-

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் -இந்திராதி தேவர்கள் எங்கள் ஸ்வர்க்க லோகம் வருவாய்
என்று வேண்டும்படி மேம்பட்ட பதவி கிடைப்பதானாலும்
பூந்தொழுவின் வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் –செருக்கு கொண்ட -ராஜஸ குணம் மிக்க
எருதுகளை அடக்கி நப்பின்னைப் பிராட்டியை அடைந்த திருமாலது ஸ்ரீ வைகுண்டமே பெறினும்
எழில் குருகூர் நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும் -எப்பொழுதும் திருவாய் மொழி யாகிய
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே–அமுதத்தை பருகி களித்துத் திரியும் பேறே எனக்கு சித்திக்க வேண்டும் –
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே

———-

சித்தர்க்கும் வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறை துறந்தோர் கட்கும் தொண்டு செய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்குமே யன்றி பண்டு சென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித் தொகையே. 24-

சடகோபன் மொழித் தொகையே.
சித்தர்க்கும் -அணிமா மஹிமா இத்யாதி யோக சித்திக்களைப் பெற்றவருக்கும்
வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் -வேதாந்தம் அறிந்தவர்களுக்கும்
செய்தவர்க்கும்-தவம் செய்தவர்களுக்கும்
சுத்தர்க்கும் -மனம் மொழி மெய்-த்ரிகுண ஆர்ஜவம் உள்ளோருக்கும்
மற்றைத் துறை துறந்தோர் கட்கும் -இல்லறம் கடந்து சந்யாச ஆஸ்ரமம் கொண்டவர்களுக்கும்
தொண்டு செய்யும் பத்தர்க்கும் -பகவத் பாகவத சேஷ பூதர்களாய் அடிமை செய்வார்களுக்கும்
ஞானப் பகவர்க்குமே யன்றி –தத்வ ஞானம் யுடைய பெரியோர்கட்க்கும் அல்லாமல்
ஞானம் பலம் வீர்யம் ஐஸ்வர்யம் சக்தி தேஜஸ்ஸூக்கள் உடைய பகவர்
பண்டு சென்ற முத்தர்க்கும் இன்னமுதம் –முக்தர்களுக்கும் இன்னமுதம் போல் இனிய சுவை விளைப்பதாம்

——–

தொகை உளவாய பணுவற் கெல்லாம் துறை தோறும் தொட்டால்
பகை யுளவாம் மற்றும் பற்றுளவாம் பழ நான் மறையின்
வகை யுள வாகிய வாதுளவாம் வந்த வந்திடத்தே
மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே. 25-

தொகை உளவாய பணுவற் கெல்லாம் -தொகுதியாக உள்ள மற்ற சமய நூல்களுக்கு எல்லாம்
துறை தோறும் தொட்டால்-இடம் தோறும் ஊன்றி நோக்கினால் -அவற்றில் உள்ள பொருள்களை எல்லாம் ஆராய்ச்சி செய்தால்
பகை யுளவாம் -முன்னுக்கு பின் வருத்தமாகவும் -வேத விருத்தமாகவும் உள்ளனவாம்
மற்றும் -மேலும் இது அன்றியும்
பற்றுளவாம் பழ நான் மறையின் வகை யுள வாகிய வாதுளவாம் -வேத விருத்தமான உள்ள சொற் போர்களும் உண்டாகும்
வந்த வந்திடத்தே மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே- இங்கேயோ எதிர் வாதம் ஒன்றுமே இல்லாமல்
விசேஷ அர்த்தங்கள் பார்த்த பார்த்த இடங்களில் அமைந்து இருக்கும்

————-

விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் மெய் உற வந்து
அழுப்பாது ஒழிமின் அரு வினைகாள் உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன் வந்தின்று நின்றான் இள நாகு சங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம் குருகூர் எம் குலக் கொழுந்தே 26-

அரு வினைகாள்
இள நாகு சங்கம் கொழுப்பாய் மருதம் சுலாம்-இளமையான பெண் சங்குகள் உடன் ஆண் சங்குகள் மருத நிலத்திலே திரியப் பெற்ற
கொழுப்பாய் மருதம்-கொழு பாய் மருதம் -கலப்பைக்காறு உழுது பாயப்பெற்ற வயல்கள் என்றுமாம்
குருகூர் எம் குலக் கொழுந்தே –பிரபன்ன ஜன கூடஸ்தரே
தொண்டக் குலத்தின் பேருக்கு காரணமானவர் ஆதாலால் கொழுந்து என்கிறார்
எம் குலக் கொழுந்து இராமானுசர் என்பதற்கு வியாக்கியான ஸ்ரீ ஸூ க்திகள்
வ்ருஷமாய் பலிக்கைக்கும்
கொடியாய்ப் படர்ந்து பலிக்கைக்கும் மூலமான கொழுந்து ஆகையால்
எம் குலத்துக்கு எல்லாம் மூலமானவர் என்றபடி

அன்றிக்கே
எம் குலம் அடங்கலும் ஒரு வேராய் -அதுக்கு எம்பெருமானார் கொழுந்தாய்க் கொண்டு
வேருக்கு வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே
எங்கள் குலத்துக்கு ஒரு குறை வந்தால் முற்படத் தம்முடைய திரு முகம் வாடி இருக்குமவர் என்றுமாம் –
உம்மை அப்புறத்தே இழுப்பான் ஒருவன் வந்து -உங்களை இழுத்து அப்புறத்திலே எறிய வல்ல ஒருவராய் எழுந்து அருளி
ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியில் இருந்து ஆட்டைப் பற்றி புலி இழுப்பது போல் இழுக்க வல்லவராய் வந்து
இன்று நின்றான்-இப்பொழுது எமது திரு உள்ளத்திலே நின்று அருளினார்
விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் -இனி மேல் எம்மை பிறவித் துன்பத்தில் விழுத்த வல்லவர் எவரும் இல்லை
ஆகவே
மெய் உற வந்து அழுப்பா தொழியின் -எமது உடம்பில் பொருந்த வந்து வருத்தாமல் நீங்கிப் போகுகங்கள்
மெய்யாக அழுப்பாது ஒழிமின் -என்றுமாம் –

பெற்றம் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்று இல்லை கண்டீர் நடமின் -என்றும்

திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் வருமாறு என் நம் மேல் வினை -என்றும்

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன் —
ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரை கிடக்கும் உள்ளத்து எனக்கு -என்றும்

இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன் ஆறு வினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -என்றும்
உள்ள அருளிச் செயல்கள் இங்கே அனுசந்தேயம் –

———-

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு தோழி இரங்குதல் –

கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் விறல் மாறனென்றால்
அழும் தோள் தளரும் மனமுருகும் குருகூர் அறையில்
எழுந்து ஓடவுங் கருத் துண்டு கெட்டேன் இவ் இளங் கொடிக்கே. 27-

இந்த மெல் இயலாள்
கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் –மகிழ மரத்தினது கொளுத்தும் இலையும் அரும்பும்
உட்பட எல்லாவற்றையும் தனக்கு கொண்டு தர வேண்டுவாள்
கொய்ம் மகிழ்க் கீழ் விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் –மலர் கொய்வதற்கு உரிய மகிழ மரத்தின் கீழ் உதிர்ந்து –
காற்றின் விசையால் எப்புறத்தும் ஓடுவதான சருகு ஒன்றை யாயினும் பெற்றாள் இல்லை
விறல் மாறனென்றால்-பெருமை யுடைய மாறன் என்று தலைமகன் பெயரைச் சொன்னால் தலை மகன் பெயரைச் சொன்னால்
அழும் -ஆற்றாமையால் அழுவாள்
தோள் தளரும் –தோள்கள் தளரப் பெறுவாள்
மனமுருகும் -நெஞ்சு உருகப் பெறுவாள்
குருகூர் அறையில் –அவரது அவதார ஸ்தலப் பெயரைச் சொன்னால்
இவ் இளங் கொடிக்கே எழுந்து ஓடவுங் கருத் துண்டு – இவளுக்கு எழுந்து இருந்து இங்கு இருந்து
அவ்விடத்துக்கு ஓடிச் செல்லவும் எண்ணம் உண்டாகிறது
கெட்டேன்

பாட்டுடைத் தலைவனே கிளவித் தலை மகன்

தெய்வத் தண் அம் துழாய்த் தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும்
கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -என்றும்
சீரார் இதழ் பொழில் மாலிருஞ்சோலையில் செல்வர் செங்கண் போரார் தாள் புனை தழை தொடுத்த
நாரார் இதாகில் பிழைப்பு அரிதாம் எங்கள் நன்னுதற்கே -என்றும்
உள்ள அருளிச் செயல்கள் அனுசந்தேயம் –

கம்ப நாட்டாழ்வார் ஆழ்வார் திருவடிகளில் சேர்ந்து இருக்கப் பெறாது வருந்தும் நிலையில்
அவருடன் நேராகவாவது இடையிட்டாவது சம்பந்தம் பெற்ற பொருள் யாதாயினும் ஒன்றை
அவருடைய பிரசாதமாகப் பெற்று ஆறி இருக்கக் கருதி வேண்டுதலையும்
அங்கனம் ஒன்றும் அவருக்கு கிடைத்திடாமையும்
ஆழ்வாருடைய திரு நாமத்தைச் சொல்லும் போது எல்லாம் பக்தி பரவசராய்
அழுது உடல் சோர்ந்து மனம் தளர்தலையும்
அவரது திவ்ய தேசத்துக்கு விரைந்து செல்ல விரும்புதலையும்
அன்பர்கள் பாராட்டி
இனி இவருக்கு என்னாகுமோ என்று இரங்கிக் கூறுதல்
இதற்கு ஸ்வாப தேசம் –

———

கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் இனிக் கொடுங் கூற்றினுக்கோ
அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் ஆரணத்தின்
படி எடுத்துக் கொண்ட மாறன் என்றால் பதுமக் கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர் தாள் என் முடி எனவே. 28-

ஆரணத்தின் படி எடுத்துக் கொண்ட -வேதம் போலவே சாரமான அர்த்தங்களைத் தேர்ந்து எடுத்துக் கொண்டு
அருளிச் செய்த –வேதம் தமிழ் செய்த மாறன் அன்றோ
மாறன் என்றால் -மாறன் என்னும் திரு நாமம் உடையவர் என்று யார் சொன்னாலும்
அவரைக் குறித்து
பதுமக் கரங்கள் முடி எடுத்துக் கொண்ட -தாமரை போன்ற தமது கைகளைக் குவித்து அஞ்சலி பந்தத்தை
தமது சிரஸில் மேல் கொள்ளும் தன்மையரான
அந்தணர் தாள் -ஸ்ரீ வைஷ்ணவர் திருவடிகள்
என் முடி -எனது சிரஸ்ஸின் மேல் கொள்ளப் படுபவனவாம்
எனவே. -என்று சொல்லி
கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் -பாகவதருக்கு வழித் தொண்டன் யான் என்று வெளியிடுமாறு
விருதுக் கொடி பிடித்துக் கொண்டு நின்றேன்
இனிக் -இவ்வாறு ஆழ்வார் அடியார் அடியார்குத் தொண்டனான பின்பு
கொடுங் கூற்றினுக்கோ அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் -யமனுக்கு என் பக்கல்
ஒரு காலடியாவது எடுத்து வைத்து வருதல் கூடுமோ

———–

என் முடியா தெனக்கி யாதே அரியது இராவணன் தன்
பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான் பொருநைந் துறைவன்
தன் முடியால் அவன் தாள் இணைக் கீழ் எப் பொருளும் தழீஇச்
சொல் முடியால் அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே. 29–

இராவணன் தன் பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான்– தலைகளைத் துணித்து அவற்றைக் கொண்டே
ஆழ்ந்த கடலை நிரம்பி விட்ட ஸ்ரீ கோதண்ட பாணி அடியவராக
பிரமன் வரத்தால் மீண்டும் மீண்டும் தலை முளைக்கச் செய்ததே இதற்காக அன்றோ
பொருநைந் துறைவன் -ஆழ்வார்
அவன் தாள் இணைக் கீழ்–ஸ்ரீ யபதியின் திருவடி இணைக்கீழ்
தன் முடியால் -தனது சென்னியால் வணங்கி
சொல் முடியால்-திருவாய் மொழி சேர்க்கையால்
எப் பொருளும் தழீஇச்-முமுஷுவுக்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும் –
அர்த்த பஞ்சகங்களையும் -ஒருங்கு தொகுத்து
அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே.–பா மாலையை சூட்டி அருளி சமர்ப்பிக்க
இப்படிப்பட்ட ஆழ்வாருக்கு அடிமைப்பட்ட பின்பு
என் முடியா தெனக்கி -எனக்கு அசாத்தியமாக இருப்பது யாது -ஒன்றுமே இல்லையே
யாதே அரியது -எனக்கு சிரமம் பட்டு சாதிக்க வேண்டியது தான் ஏது -ஒன்றுமே இல்லையே –
வேண்டிய நற் பயன்கள் எல்லாம் தவறாமல் எளிதில் கை கூடும் அன்றோ –

———–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி
நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தே னென்னை நல் வினையாம்
காட்டில் புகுத விட்டு உய்யக் கொள் மாறன் கழல் பற்றிப் போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை மறை மெய் எனிலே. 30–

சூட்டில்-நெல் போர் களிலே
குருகு -மருத நிலத்துப் பறவைகள்
உறங்கும் -நிர்ப்பரமாக இனிது உறங்கப் பெற்ற
குருகூர் தொழுதேன் —ஆழ்வார் திரு நகரியை சேவிக்கப் பெற்றேன்
வழுதி நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தேன் –இங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கைங்கர்யங்களும் செய்யப் பெற்றேன்
மறை மெய் எனிலே.–வேதங்கள் ஸத்யமாகுமானால்
மெய் -யதார்த்த பிரமாணம்
என்னை நல் வினையாம் காட்டில் புகுத விட்டு –என்னை நற் செயகைகள் ஆகிற தவ வனத்தில் செல்ல விட்டு
நல் வினை -பிரபத்தி மார்க்கம்
சரணாகதி சாஸ்திரமான ஸ்ரீ கம்ப ராமாயணம் சாதிக்கச் செய்தவரும் ஆழ்வாரே என்கிறார்
உய்யக் கொள் -யான் ஈடேறுமாறு என்னை ஆள் கொண்டு அருளுகிற
மாறன் கழல் பற்றிப் போய் -ஆழ்வார் திருவடிகளை சரண் புக்க பின்பு
மாறன் கழல் பற்றி குருகூர் தொழுதேன் ஆளும் செய்தென்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை -ஸ்ரீ வைகுண்டம் சேர்வதற்கு பிரதிபந்தகம் ஏதேனும் உண்டோ
இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று வீடும் தருமே –

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-11-20- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 21, 2021

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள் களெல்லாம் விழுமாக் கமலம்
சேற்றில் பொதிய வீழ்க்கும் குரு கூரர் செஞ் சொற் பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு நுவல்கிலவே. 11-

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள் வேற்றில்–ஓதி உணர அரியதாகவும்
அநந்த சிறந்த பலவகைப்பட்ட வேதங்கள்
நஹி நிந்தா நியாயத்தால் வேதங்களைப் பழித்தார்
செஞ் சொற் பதிகம் நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு ஒரு ஆத்மாவுக்கு ஹித அம்சத்துக்கு
ஒரு பாட்டே அமையும்படி யாயிற்று இவர் பாடி அருளியது -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –

————-

இயல் இடம் கூறல்

இலவே இதழுளவே முல்லை யுள்ளி யம்பும் மொழியும்
சிலவே அவை செழுந் தேனொக்குமே தமிழ்ச் செஞ் சொற்களால்
பல வேதமும் மொழிந்தான் குரு கூர்ப் பதுமத்து இரண்டு
சல வேல்களும் உளவே யது காண் என் தனி யுயிரே. 12-

தமிழ்ச் செஞ் சொற்களால் பல வேதமும் மொழிந்தான்
குரு கூர்ப் பதுமத்து இதழ் இலவே -தாமரை மலரில் இதழ்கள் இலவ மலரே போலும் -திருவாய் இதழ்களைச் சொன்னவாறு
அவ்விதழ்களின் உள்ளே
முல்லை யுளவே -முல்லை அரும்புகள் உள்ளனவே -வெண்ணிற பற்களைச் சொன்னவாறு
உள் இயம்பும் மொழியும் சிலவே -அவற்றுள் பேசப்படும் பேச்சுக்களும் சிலவே
உண்டு
அவை செழுந் தேனொக்குமே -அந்த சின் மொழிகள் தாம் சுவை மிக்க தேனே போலும்
மற்றும் அந்தத் தாமரை மலரில்
இரண்டு சல வேல்களும் உளவே -அசைகின்ற இரண்டு வேலாயுதங்களும் உள்ளன
யது காண் என் தனி யுயிரே–இவை அனைத்தும் யுடைய அந்த உருவம் தான் எனது உயிர் போன்ற காதலி என்று நீ உணர்வாய் –

இயற்கைப் புணர்ச்சி -தெய்வப் புணர்ச்சி -முன்னுறு புணர்ச்சி
இயல் இடம் கூறல் துறை
கலந்து பிரிந்து மீண்டும் கலக்க வரும் தலைமகன் பாலகனுக்கு –
என்னால் காணப்பட்ட வடிவுக்கு இயலிவை இடம் இது -என்று கூறுதல்

முல்லை பதுமம் வேல் –உருவக உயர்வு நவிற்சியால் உபமேயத்தின் மேல் நின்றன –

ஆழ்வாருடைய திரு முக மண்டல திவ்ய ஸுந்தர்யத்தையும்
கூரிய ஞான விகாஸத்தையும்
திருவாய் மலரின் செவ்வியையும்
அதன் அகத்தே விளங்கும் ஸூத்தமான தந்த பங்க்தியையும்
தீம் சொற்களையும்
கண்டு ஈடுபட்ட பாகவதர் உசாவியா அன்பர்களுக்கு எடுத்துக் கூறுவதே இதுக்கு ஸ்வா பதேசம் –

————–

உயிர் உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள
செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும் திருடித் திருடித்
தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சட கோபன் சந்தோடு
அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே. 13

திருடித் திருடித் தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சடகோபன் –திருவடி நிலையான ஆழ்வார் –
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் அன்றோ
சந்தோடு அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை –பரிமளத்தால் சந்தனத்தையும்
இனிமையால் சக்கரையையும் -தோற்கச் செய்யும் தாமிரபரணி
அம் தமிழே.உயிர் உருக்கும் -பக்திப் பெருக்கால் உயிரை உருகச் செய்யும்
புக்கு உணர்வு உருக்கும் -உடலினுள் புக்கு அகத்தின் உறுப்பான மனத்தை ஆனந்த அதிசயத்தால் கரையச் செய்யும்
உடலத்தினு ள்ள செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும்
குற்றமே புருஷ வடிவம் கொண்ட தேக சம்பந்தத்தால் காம க்ரோதாதிகளைப் போக்கும் –

——–

அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகுங் குருகூர் வந்த பண்ணவனே. 14

தமிழார் கவியின்–ஆர் தமிழ் கவியின் -இலக்கணம் நிரம்பிய தமிழ் பாடல்கள் –சீர் கேடு இன்றி ஒழுகுதல் -போலே
பந்தம் விழா ஒழுகும் –முறை தவறாமல் நித்ய நைமித்திக உத்ஸவங்கள் நடக்கப் பெற்ற
குருகூர் வந்த பண்ணவனே–பெரியவர்
அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை–அநந்த சாகைகள் கொண்ட வேத ஆழ்ந்த அருமையான -சார அர்த்தத்தை
செந் தமிழாகத் திருத்திலனேல் -திவ்ய பிரபந்தங்களை அருளிச் செய்து இரா விடில்
நிலைத் தேவர்களும் தந்தம் விழாவும் அழகும் என்னாம் –ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஸ்ரீ கோயில் உத்ஸவங்களும்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யும் என்னாகி முடியும் –

அறியக் கற்று வல்லார் வைஷ்ணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே –

மண்ணாடின சக்ய ஜலம் தோதவத்தி சங்கணி துறையிலே துகில் வண்ணத் தெண்ணீராய்
அந்தஸ் ஸ்தத்தத்தை காட்டுமா போலே
அல்ப ஸ்ருதர் கலக்கின சுருதி நன் ஞானத் துறை சேர்ந்து
தெளி உற்று ஆழ் பொருளை அறிவித்தது–ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -71-

(ஸஹ்யம் -மேற்குத் தொடர்ச்சி மலை / தோதவத்தித் துறை -திருவரங்கத்தில் திருக் காவேரித்துறை –
தோதவத்திகளின் துறை -தூயதாகத் தோய்த்து உணர்த்தின வஸ்திரங்களை யுடையவர்கள் -/
சங்கணி துறை -ஆழ்வார் திருநகரியில் தாமிரபரணி நீர்த்துறை /அந்தஸ்தத்தை -உள்ளே கிடைக்கும் பொருளை-
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிக்கின்றோமே –ஸ்ரீ தேசிகன் –
திருவாய் மொழி செப்பலுற்றால் அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே -ஸ்ரீ கம்பநாட்டாழ்வார்- )
( தூயானை தூய மறையானை –பிரமேயம் பிரமாணம் சாம்யம் -உபய லிங்கம்-அகில
ஹேய பிரத்ய நீகம் -கல்யாணை கதா -அப்பருஷேயத்வம் நித்யம் இரண்டும் இதுக்கும் –
ஸமஸ்த சப்த மூலத்வாத்-வாஸ்ய வாசக சம்பந்தம் -ஜகத் காரணத்வம்/
பிரமேயம் கண்ணன் இரு தாய் தந்தை -ஈன்ற முதல் தாய் சடகோபன் வளர்த்த தாய் ராமானுஜன் )

மேகம் பருகின சமுத்ராம்பு போலே
நூற் கடல் சொல் இவர் வாயான வாய்த் திருந்தின வாறே
சர்வதா சர்வோப ஜீவ்யம் ஆமே –சூரணை -72-
( ஸ்ரீ லஷ்மீ நாதாக்ய சிந்து -சடரி பு ஜலத-ப்ராப்த காருண்ய நீரம் மேகம் பருகின சமுத்ராம்பு )

————

பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித் தலை வேந்தன் மலர் உகுத்த
சுண்ணப் படர் படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே. 15-

இயலோடு இசையின் வண்ணப் படைக்கும் -இயல் இசை துறைகளான சேனைகளுக்கு
தனித் தலை வேந்தன்–ஒப்பற்ற தலைமை பூண்ட அதிபதி –
மலர் உகுத்த சுண்ணப் படர் -பூக்கள் சிந்திய மகரப்பொடிகள் பரவப் பெற்ற
படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே.–மருத நிலத்தூராகிய திருக்குருகூரிலே திரு அவதரித்த ஆழ்வாரது சொல் கடல்
பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் –நூதனமாகச் செய்யப்பட வேதங்களும் உண்டோ என்று பலராலும் கருதப் படுமாறு
சொல் திகழச் செய்தான் -திவ்ய பிரபந்தங்களை அருளிச் செய்து தமிழ் சொற்களை அருளினார்
எங்களைப் பணி கொள் என்று அன்றோ தமிழ் சொற்கள் ஆழ்வாருக்கு கைங்கர்யம் செய்யப் பாரித்தன
சொல் இகழச் செய்தான் -பகவத் விஷயங்களை அருளிச் செய்து
விஷயாந்தரங்களை இகழப் பண்ணி அருளினான் –என்றும் உரைப்பார்

——–

கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான் களித்தார்
குடலைக் கலக்கும் குளிர் சங்கினான் குறையா மறையின்
திடலைக் கலக்கித் திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே. 16-

களித்தார் குடலைக் கலக்கும் –செருக்கிய பகைவருடைய குடலை அச்சத்தால் கலங்கச் செய்கின்ற
குளிர் சங்கினான்-குளிர்ந்த ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் உடைய திருமால்
கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான்
அதே போலே
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே–பிறப்பு ஒழித்து அடிமை கொண்டு அருளினை ஆழ்வார்
குறையா மறையின் திடலைக் கலக்கித் -ஏறுவதற்கு அரிய வேதமாகிய மேட்டை அளவின்மையை ஒழித்து அளவுடைமையாக்கி
திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்–தொண்டர்க்கு அமுது ஈந்து அருளினார்
மலை மேட்டிலே தேன் கூடுகள் இருக்கும் அன்றோ
எடுத்துக்காட்டு உவமை அணி

——–

நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் பிறவி யெனும்
நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே. 17–

நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்-அவர்கள் கழித்த சேஷத்தை விரும்பி
ஆழ்வார் அடியார்கள் சேஷம் உண்டு இருந்தேன் ஆகில் உய்ந்து இருப்பேனே –
வாய்க்கும் குருகைத் திரு வீதி எச்சிலை வாடி யுண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய் அந்த நாயோடு இந்தப்
பேய்க்கும் அளித்தால் பழுதோ பெருமாள் மகுடம்
சாய்க்கும் படிக்குக் கவி சொல்லும் ஞானக் கடலே –
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் -பல இடங்களிலும் ஓய்வின்றி அலைந்து திரியும்
இழிந்த பிறப்பை யுடையனான என்னை
பிறவி யெனும் நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்–
இப்பத்தும் பிறப்பு எனும் நோய் அறுக்கும் என்னும் படி உமது திருவாய் மொழிப் பிரபந்தத்தை
நோக்கும் படி பண்ணி அருளிய உனக்கு
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே-தாஸனான அடியேன்
முன்பு செய்த ஸூஹ்ருதம் யாதோ –

———–

சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத்து இருக்கை
சேதிக்குமே ஒன்று சிந்திக்குமே யதனைத் தெரியப்
போதிக்குமே எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச் சொல் எனவே. 18–

எங்கோன் தமிழ்ச் சொல் எனவே.–ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்கள் போலவே
உங்கள் வேதம் பர தத்துவத்தைச் சாதிக்குமே –பர ப்ரஹ்மத்தை நிலை நிறுத்தி சாதிக்குமோ
சமயத் திருக்கை சேதிக்குமே –புற பாஹ்ய குத்ருஷ்டிகள் மதங்களை சேதித்து ஒழிக்குமோ
ஒன்று சிந்திக்குமே -யாதானும் ஒரு விஷயத்தை ஆய்ந்து ஓய்ந்து உணர மட்டுமோ
யதனைத் தெரியப் போதிக்குமே -அத்தைப் பிறருக்கு விளங்க உணர்த்த மாட்டுமோ
எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே -எவ்விடத்தும் சிறந்து யாவருக்கும் பொதுப்பட நிற்கும் உண்மையான விஷயத்தையும்
அதற்கு மாறான பொய்யான விஷயத்தையும் பகுத்து ஆராய மட்டுமோ –
மாட்டாது என்றவாறு

————-

சொல் என்கெனோ முழு வேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கெனோ மறை நேர் நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக் கனி யென்கெனோ புகல
வல் என்கெனோ குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே. 19-

குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே–ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்களை
திருவடிகளில் சாத்தப்படும் பூ மாலை போல பா மாலை அன்றோ
அடி சூட்டலாகும் அந்தாமமே
சொல் என்கெனோ -எல்லா இலக்கணங்களும் அமைந்த சொல் என்பேனோ –
எம்பெருமானுடைய புகழ் என்பேனோ என்றுமாம்
முழு வேதச் சுருக்கென்கெனோ -வேத முழுவதுக்கும் சார ஸங்க்ரஹம் என்பேனோ
எவர்க்கும் நெல் என்கெனோ -அனைவருக்கு ஜீவன உபாயமான நெல் என்பேனோ
தேக யாத்திரைக்கு நெல் போலே ஆத்ம யாத்திரைக்கு ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்கள் அன்றோ
உண்ணும் நீர் என்கெனோ -இன்றியமையாத தீர்த்தம் என்பேனோ
மறை நேர் நிறுக்கும் கல் என்கெனோ –தராசுத் தட்டில் வேதத்துக்கு சமமாக வைக்கும் கல் என்பேனோ
முதிர் ஞானக் கனி யென்கெனோ -முதிர்ந்த தத்வ ஞானப் பழம் என்பேனோ
புகல வல் என்கெனோ -அதன் திறத்தை உள்ளபடி எடுத்துச் சொல்ல வல்லமை எனக்கு உளதோ என்பேனோ
பலபடியாக விகல்பித்துச் சொல்லும் படி அன்றோ ஆழ்வாரது பிரபாவம் –

———

செல யுணர்த்திச் செவிலியைத் தேற்றுதல்

மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சி யம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே. 20-

மாலைக் குழலியும் –தலை மகளும் -கூந்தல் அழகால் தலைமகனை வஸீ கரித்தவள்
வில்லியும் -ஸ்ரீ கோதண்ட பாணியான தலைமகனும்
ஆகிய இருவரும்
மாறனை வாழ்த்தலர்போம் பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் –ஆழ்வாரை வாழ்த்தாதவர்கள் செல்லும்
பாலை நிலமாகிய கொடும் சுரத்தை இன்றைப் பகலிலேயே கடந்து சென்று
ஆழ்வாரை வாழ்த்தாதவர்கள் மறுமைப் பயனே அன்றி இம்மைப் பயன்களையும் இழப்பார்களே
கடந்து ஏகி-கடத்தற்கு அரியனவாக இருந்தும் எளிதில் கடந்தனர் என்றவாறு
பணை மருதத்து-விளை நிலமாகிய மருத நிலத்திலே
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை -கரும்பை ஆட்டும் ஆலையின் நரேல் என்று ஒலிக்கிற ஓசைக்கு
அஞ்சி -பயந்து -பூனையின் குரல் என்று அஞ்சுமாம் -மயக்க அணி தொக்கி நிற்கும்
யம்பொன் சாலைக் கிளி உறங்காத் -கிளிகள் நித்ரை கொள்ளாத
திரு நாட்டிடம் சார்வார்களே–சிறந்த பாண்டி வள நாட்டின் எல்லையில் சேர்வார்கள் –

திருவடி இணைகளை தமது சென்னியில் பொருத்தி
அந்த ப்ரணாமத்தால் அவனை வஸீ கரித்து
தம்மைப் போன்ற அடியார்கள் இடரைத் தீர்த்து ரக்ஷணத்துக்காக ஸ்ரீ கோதண்டம் எப்போதும்
திருக்கையில் ஏந்தி உள்ள எம்பெருமானை தர்சித்து
அவரைப்பிரிந்து தரிக்க மாட்டாதவராய் அவரைப்பின் தொடர்ந்து
ஸம்ஸாரத்தை தத்வ ஞானத்தால் கடந்து நிரதிசய அந்தமில் பேரின்பம் தரும் ஸ்ரீ வைகுண்டம் அடைவார் என்று
இவரது வை லக்ஷண்யம் கண்ட உலகத்தார்
அவர் பக்கலில் பரிவையுடைய ஞானியருக்குக் கூறுவதே இதற்க்கு ஸ்வா பதேசம் –

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-1-10- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 21, 2021

ஸ்ரீ இராமாயணம் இயற்றிய ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் எழுதிய ஒன்பது நூல்களுள் ஸ்ரீ சடகோபர் அந்தாதியும் ஒன்றாகும்.
சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.
இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்.
இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.
இவரது வேறு நூல்கள் ஸ்ரீ ஏரெழுபது, ஸ்ரீ சரசுவதி அந்தாதி, ஸ்ரீ திருக்கை வழக்கம் முதலியவை.

சிறப்புப் பாயிரம்-அபியுக்தர் ஒருவர் அருளிச் செய்த தனியன் இது
அடுத்த மூன்று செய்யுள் களும் அப்படியே –

தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
நாவில் சிறந்த மாறற்குத் தக்க நன் நா வலவன்
பூவில் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.

தெய்வங்களில் சிறந்தவன் ஸ்ரீ திருமால்!
அவனுக்குத் தக்க தெய்வீகமான கவிஞன் பலவிதமான பா வகைகளை ஸ்ரீ திருவாய்மொழியில்
சிறப்பாக அமைத்த பண்டிதனான ஸ்ரீ நம்மாழ்வாரே!
நா வண்மையில் சிறந்த அந்த ஸ்ரீ மாறன் சடகோபன் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தக்க நா வண்மை கொண்டவன்
தாமரைப் பூவில் அமர்ந்த பிரமனை ஒத்த ஸ்ரீ கம்ப நாட்டாழ்வானே!

ஏகாரம் இரண்டும் பிரிநிலையோடு தேற்றம்
முன் இரண்டு அடிகள் உபமானம்
பின் இரண்டு அடிகள் உபமேயம்
எடுத்துக்காட்டு உவமை அணி

மதுரகவி ஆழ்வார் அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹத்தை எழுந்து அருளிப் பண்ணி
வேதம் தமிழ் செய்த மாறன் வந்தார்
திருமாலுக்கு உரிய தெய்வப் புலவர் வந்தார்
அளவிலா ஞானத்து ஆரியர் வந்தார்
விருதுகளைக் கூறி திருச்சின்னம் முழங்கி –
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திரு நாமம்
திண்ணம் நாரணமே -சங்கப் பலகை ஏற்றியதும்

சேமம் குருகையோ செய்ய திருப்பாற் கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோ
தாமம் துளவமோ வகுளமோ தோள் இரண்டோ நான்கும் உளவோ
பெருமான் உனக்கு –என்றும்

ஈ ஆடுவதோ கருடற்கு எதிரே இரவிக்கு எதிர் மின்மினி ஆடுவதோ
நாய் ஆடுவதோ உறுமிப் புலி முன் நரி கேசரி முன் நடையாடுவதோ
பேய் ஆடுவதோ அழகு ஊர்வசிக்கு முன் பெருமான் வகுளா பரணன் நன்னருள் கூர்ந்து
ஓவாது உரை யாயிர மா மறையின் ஒரு சொல் பெறுமோ உலகில் கவியே – –என்றும்

ஸ்ரீ ராம பக்தியில் சிறந்த ஸ்ரீ பரதாழ்வான் போல் ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார்
வாழ்வார் -நில உலகில் சிறந்த புகழுடன் வாழ்வார் என்றுமாம் –

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன் அடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே.–தற் சிறப்புப் பாசுரம்-
என்றபடி
இவருக்கும் ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் உடன் ஒரு புடை ஒற்றுமை உண்டே

—–

ஆரணத்தின் சிர மீது உறை சோதியை ஆந்தமிழால்
பாரணம் செய்தவனைக் குருக்ஷரனைப் பற்பல வா
நாரணனாம் என ஏத்திக் தொழக் கவி நல்கு கொடைக்
காரணனைக் கம்பனை நினைவாம் உள் களிப்புறவே.

வேதாந்தத்தின் விழுப் பொருளின் மேல் விளக்கு -பெரியாழ்வார்
பற்பல வா -ஆழ்வாரைச் சிறப்பித்தும் -திருவாய் மொழியைச் சிறப்பித்தும் -அத்தைக் கற்றோரைச் சிறப்பித்தும் –
தலைவன் கூற்றாகச் சிறப்பித்தும் -தலைவி கூற்றாகச் சிறப்பித்தும் -தாய் கூற்றாகச் சிறப்பித்தும் –
தோழி கூற்றாகச் சிறப்பித்தும் -பிற வகைகளாகச் சிறப்பித்தும் இப்படி பல படி களால்

நாரணனாம் என–பாத்ம புராணம் ஆழ்வாரை பகவத் அம்சம்
திருக்குறுங்குடி நம்பியே ஆழ்வாராக திரு அவதரித்து அருளினார் அன்றோ –
நாராயணா அடியேனாடும் தமிழ் வேத பாராயணா சடகோபா –ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

அணவுபவன் -என்றது அணன்-என்று விகாரப்பட்டு நின்றது

அந்தணர் -அந்தத்தை அணவுபவர் -நச்சினார்க்கு இனியர்

கொடைக் கார் அணன்-மேகம் போல் பிரதியுபகாரம் கருதாது அளிக்கும் ஞான வண்மை
கொடைக்குக் காரணமானவன் -செய்பவன் என்றுமாம்

———–

‘நம் சட கோபனைப் பாடினையோ?’ என்று நம் பெருமாள்
விஞ்சிய ஆதரத்தால் கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த
செஞ்சொல் அந்தாதி கலித் துறை நூறும் தெரியும் வண்ணம்
நெஞ்சு அடியேற்கு அருள் வேதம் தமிழ் செய்த நின்மலனே

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் நம் பெருமாள் நம் ஆழ்வார் –இத்யாதி உபதேச ரத்ன மாலை பாசுர
வியாக்யானத்தில் இந்த தனியனை மேற்கோள் காட்டி உள்ளார்

———–

நாதன் அரங்கன் நயந்துரை என்ன நல் கம்பன் உன் தன்
பாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே
ஓதும் படி யெனக்கு உள்ளம் தனை யருள் ஓதரிய
வேதம் தமிழ் செய்த மெய்ப் பொருளே இது என் விண்ணப்பமே.

ஆழ்வார் ஸ்ரீ பகவத் அம்சமே யாதலால் அவரை மெய்ப்பொருள் என்று விளித்தார்

சொல்லின் தொகை கொண்டு உனது அடிப் போதுக்குத் தொண்டு செய்யும்
நல்லன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் என் தன் நாவின் உள்ளே
அல்லும் பகலும் அமரும்படி நல்கு அறு சமயம் வெல்லும் பரம
இராமானுசர் இது என் விண்ணப்பமே –தனியன் பாசுரத்தோடு ஒக்கும் இதுவும் –

———–

தற் சிறப்புப் பாசுரம்

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன் அடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே.

——-

நூல்

வேதத்தின் முன் செல்க மெய் யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணம் கடந்த
போதக் கடல் எங்கள் தென் குரு கூர்ப் புனிதன் கவி ஓர்
பாதத்தின் முன் செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே.– 1-

தொல்லை மூலம் -ஆதி மூலம்
வேதம் -மங்கள பதத்துடன் உபக்ரமிக்கிறார் –

ஆழ்வாரின் ஒவ்வொரு பாசுரத்தில் ஒவ்வொரு அடியும் திவ்ய ஸ்வரூப வைலக்ஷண்யத்தை
ஐயம் திரிபுற காட்டி அருளுவதால் -கடந்து செல்ல மாட்டாமல் அதனுள் அடங்கி நிற்பானே –

திவ்ய ஞானத்தின் வரம்பின்மையையே குணம் கடந்த போதம் -என்கிறார்

எண்ணிலா காட்சி -அநந்த ஞானம் என்றபடி
குணம் கடந்த -ஒவ்வொரு குணத்திற்க்கும் ஸீமா -எல்லை அன்றோ அவனது –
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் போலே

குணங்கள் தந்த -சாம்யா பத்தி அருளுவதைச் சொன்னவாறும்
புனிதன் கவி ஓர் பாதம் -உயர்வற உயர் நலம் உடையவன்-என்பர் ஒரு சாரார் –
பர ப்ரஹ்ம ஸ்வரூபம் அடங்கி இருப்பதால் –

கடந்த ஞானியர் கடவுளர் காண் கலாக் கழலிணை சிவப்பேறத் தொடர்ந்த நான்மறை பின் செலப்
பன்னகத்துவசன் மா நகர்த் தூது நடந்தவன் -என்றும்

உரலும் வேதமும் தொடர -என்றும்

சுரர் உடனே முனிவர்களும் ஸ்ருதி நான்கும் தேடுகின்ற பதம் சிவப்பத் திரு நாடு பெறத் தூது செல்ல -என்றும்
உள்ள வில்லி புத்தூரார் பாரதம்

கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் –திரு மழிசைப் பிரான்

ஓதி ஓதி உணரும் தோறும் உணர்ச்சி உதவும் வேதம் வேதியர் விரிஞ்சன் முதலோர் தெரிகிலா
ஆதி தேவர் அவர் எம் அறிவினுக்கு அறிவரோ -ஸ்ரீ கம்ப இராமாயணத்திலும் ஸ்ரீ கம்பர்

————–

சுடர் இரண்டே பண்டு மூன்றாயின துகள் தீர்ந்துலகத்து
இடர் இரண்டாய் வரும் பேர் இருள் சீப்பன எம் பிறப்பை
அடர் இரண்டாம் மலர்த்தாள் உடையான் குருகைக் கரசன்
படர் இருங் கீர்த்திப் பிரான் திருவாய் மொழிப் பாவொடுமே. 2-

முன்பு ஸூர்ய குல சந்த்ர குல -சுடர்கள்-இரண்டு நமது பிறவித் துன்பங்களைத் தீர்க்கும்
இரண்டு தாமரைத் திருவடிகள்
திருவாய் மொழி அருளிச் செய்த பின்பு மூன்றாயினவே

பல்லாயிரம் இருள் கீறிய பகலோன் என ஒளி வரும் வில்லாளன் -ராம திவாகரன்
அச்யுத பானு
பண்டு -த்ரேதா யுகம்-த்வாபர யுகம்
பின்பு கலியுகம் – -43-நாள் ஆவிர்பவித்தார் அன்றோ -வகுள பூஷண பாஸ்கரர் –

இப் பத்து அறு வினை நீறு செய்யுமே
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்று இருப்பாரே
இப் பத்தால் வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே
இப் பத்தும் கண்டு பாட வல்லார் வினை போமே

அச்சம் தருவதால் வினையை இருள் என்கிறார் இதில்
இடர் இரண்டு -புண்ய பாப வினைகள்

முதல் இரண்டு சுடர்களுக்கும் விசேஷணம் இல்லாமலும்
திருவாய் மொழி சுடருக்கு மட்டும் –
துகள் தீர்ந்துலகத்து-இடர் இரண்டாய் வரும் பேர் இருள் சீப்பன-என்பதால்

ஆதித்ய ராம திவாகர அச்யுத பானுக்களுக்கு
போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-ஆச்சார்ய ஹிருதயம்–83-

(வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-ஆதித்யனுக்கு போகாத உள்ளிருள் நீங்கி
ராம திவாகரனுக்கு சோஷியாத பிறவிக் கடல் வற்றி
அச்யுத பானுக்கு விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது )

———

பா வொடுக்கும் நுண் இசை ஒடுக்கும் பலவும் பறையும்
நா வொடுக்கும் நல் அறி வொடுக்கும் மற்றும் நாட்டப் பட்ட
தே வொடுக்கும் பர வாதச் செரு ஒடுக்கும் குருகூர்ப்
பூ வொடுக்கும் அமுதத் திரு வாயிரம் போந்தனவே. 3–

குருகூர்ப் பூ வொடுக்கும் –ஆழ்வாரது திருவாய் மலரின் உள்ளே -எம்பெருமானால் நிறைத்து வைக்கப் பட்ட
அமுதத் திரு வாயிரம் போந்தனவே.–ஆயிரம் திருவாய் மொழிகளும் வெளிப்பட்டன

பா வொடுக்கும் -இயல் தமிழ் இலக்கணங்களை தம்முள் அடக்கிக் கொண்டு உள்ளன
நுண் இசை ஒடுக்கும் -இசைத் தமிழ் இலக்கணங்களை தம்முள் அடக்கிக் கொண்டு உள்ளன
பலவும் பறையும் நா வொடுக்கும் -பல விஷயங்களைப் பேசும் நாடகத் தமிழ் இலக்கணங்களை தம்முள் அடக்கிக் கொண்டு உள்ளன
நல் அறி வொடுக்கும் -நல்ல அறிவுகளை தம்முள் அடக்கிக் கொண்டு உள்ளன
மற்றும் நாட்டப் பட்டதே வொடுக்கும் -மற்றும் பேசி நாட்டப்பட்ட தெய்வங்களை எல்லாம் ஒடுங்கச் செய்வன
பர வாதச் செரு ஒடுக்கும் -அந்நிய மதஸ்தரின் வாதப் போர்களை அடங்கச் செய்து விடுவன -பராங்குசர் திருவாய் அமுத மொழிகள் அன்றோ –

பா ஒடுக்கும் -இயல் பா இலக்கணங்கள்

எழுத்துப் பதிமூன்று இரண்டு அசை சீர் முப்பது ஏழு தளை ஐந்து
இழுக்கில் ஆதி தொடை நாற்பத்து மூன்று ஐந்து பா இனம் மூன்று
ஒழுக்கிய வண்ணங்கள் நூறு ஒன்பது ஒண் பொருள் கோள் இரு மூ
வழக்கில் விகாரம் வனப்பு எட்டு யாப்புள் வகுத்தனவே

நுண் இசை ஒடுக்கும்
குறிஞ்சி -செருந்தி -இந்தளம் -கொல்லி -காமரம் -தக்கேசி -பஞ்சமம் -கைசிகம் –
காந்தாரம் -பாலை -யாழ் -முதலிய பண்களைத் தன்னுள் ஒடுக்கும்
பண்ணில் பன்னிரு நாமப்பாட்டு போல் –

ஆச்சார்ய ஹ்ருதயம் -சூரணை –69-

ஆக இப்படி இப் பிரபந்தத்தை வேத சமம் என்பது
தத் வேத உபப்ருஹ்மண சமம் என்பதாகா நின்றீர் ..
அவை இரண்டுக்கும் ,தத் அனுரூபமாய் இருப்பன சில அலங்காரங்கள் உண்டு இறே –
தத்ருச அலங்காரங்கள் இதுக்கும் உண்டோ- என்ன—
சம்ஸ்க்ருதமான வற்றுக்கு தத் அனுகுனமான அலங்காரங்கள் பலவும் உண்டானாப் போலே
த்ராவிடமான இதுக்கும் ஏதத் அனுகுனமான அலங்காரங்கள் பலவும் உண்டு என்கிறார் .

உதாத்தாதி பத க்ரம ஜடா
வாக்ய பஞ்சாதி பாத வ்ருத்த
ப்ரஸ்ன காண்ட அஷ்டக அத்யாய அம்ச
பர்வ ஆதி அலங்காரங்கள் போல்
எழுத்து அசை சீர் பந்தம் அடி
தொடை நிரை நிரை யோசை தளை இனம்
யாப்பு பாத்துறை பண் இசை தாளம்
பத்து நூறாயிரம்
முதலான செய்கோலம்
இதுக்கும் உண்டு-

அதாவது-
உதாத்யாதி என்கிற இடத்தில் -ஆதி -சப்தத்தால் அனுதாத்த ஸ்வரித பிரசயங்களை சொல்லுகிறது . .
(உதாத்தம்-ஒலியை சமமாக வைத்து அத்யயனம் -அநுத்தாதம் -ஒலியைப் படுத்து அத்யயனம் –
ஸ்வரிதம் -ஒலியை எடுத்து வைத்து அத்யயனம் /பிரசயம்- முதலில் ஓசையை எடுத்துக் கூறி –
மற்றப் பதங்களையும் அதுக்கு சமமாக வைத்து அத்யயனம் )
இந்த உதாத்தாதி ஸ்வர விசேஷங்களும் ,க்ரம ஜடா கனம் பஞ்சாதிகளும் ( ஜடை ஒரு சொல்லை மாற்றி மாற்றி
இரண்டு முறை சொல்லுதல்/கனம் மூன்று முறை சொல்லுதல் / பஞ்சாதி -50 – சொற்கள் கொண்டது – )
ப்ரஸ்ன அஷ்டகங்களும் ,( ஒத்து இயல் போன்ற சிறு பகுதி ப்ரச்னம் என்றும் எட்டு ப்ரச்னங்கள் கொண்டதை அஷ்டகம் )
வேதா சாதாரணம்-(வேதத்துக்கே உரியவை ) .
அம்ச பர்வாதிகள் உப ப்ரஹ்மண சாதாரணம் ..
பர்வாதி என்கிற இடத்தில்
ஆதி சப்தத்தால் ,ஸ்கந்தாதிகளை சொல்லுகிறது ..

பத வாக்ய பாத வ்ருத்த காண்ட அத்யாயங்கள் உபய சாதாரணம் .(பதம் -ஆதி / விருத்தம் -செய்யுள் )
ஸ்ரீ ராமாயணத்தில் ,பிரதான பரிசேதனங்களிலும் காண்ட அவ்யஹாரம் உண்டு இறே ..
கௌஷீதகி முதலான உபநிஷத்களில் ,அத்யாயம் என்கிற பரிசேத வ்யவஹாரம் கண்டு கொள்வது ..
ஆக இப்படி வேதத்துக்கும் தத் உபப்ருஹ்மணங்களுக்கும் உண்டான அலங்காரங்களைச் சொல்லி ,
அப்படியே இதுக்கும் உண்டான அலங்காரங்களைச் சொல்லுகிறது மேல் —

எழுத்து இத்யாதி –எழுத்தாவது -குற்றெழுத்து ,நெட்டெழுத்து ,முதலான பதின் மூன்று எழுத்தும் ..
(குறிலும்- நெடிலும் -உயிரும் குற்றியலுகரம் -குற்றியலிகரம் -ஐகாரக் குறுக்கமும் -ஆய்தமும் -மெய்யும் –
வல்லினமும் -மெல்லினமும் -இடையினமும் -உயிர்மெய்யும் -அளபெடையும் -ஆக -13-) இவை அசைக்கு உறுப்பாக நிற்கும்

அசையாவது -நேரசை ,நிரை அசை இரண்டையும்
(குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறில் நெடிலே நெறியே வரினும் நிறைந்து ஒற்றடுப்பினும் நேரும் நிறையுமாம் )

சீராவது -ஆசிரிய உரிசீர் நான்கும் (நேர் நேர்- நிரை நேர்- நேர் நிரை-நிரை நிரை -என்பன ஆசிரிய உரிச்சீர்
தே மாங்காய் புளி மாங்காய் பூவிளங்காய் கருவிளங்காய் )
வெண்பா உரிச்சீர் நான்கும் ,(நேர் நேர் நேர் -நிரை நேர் நேர் -நேர் நிரை நேர் -நிரை நிரை நேர் நான்கும் வெண்பா உரிச்சீராம்
தே மாங்கனி புளி மாங்கனி பூவிளங்கனி கருவிளங்கனி)
வஞ்சி உரிச்சீர் நான்கும் ,(நேர் நேர் நிரை -நிரை நேர் நிரை -நேர் நிரை நிரை -நிரை நிரை நிரை -நான்கும் வஞ்சி உரிச்சீராம் )
பொதுச்சீர் பதினாறும் ,
ஓர் அசைச் சீர் இரண்டும் –ஆக முப்பது சீரும்-
(பொதுச் சீர் -மேல் கூறிய ஈரசைச் சிர் நான்கின் இறுதியிலும் -நேர் நேர் -நேர் நிரை -நிரை நேர் -என்னும் ஈர் அசைச் சீர்கள்
நான்கினையும் தனித்தனியே தந்து உறழ்ந்தால் பொதுச் சீர் -16-/நேர் நிரை இரண்டும் ஓர் அசைச் சீர் )

பந்தம் எனிலும் ,தளை எனிலும் ஒக்கும் என்று தமிழர் சொல்லுகையாலே
பந்தமும் தளையும் ஒன்றாகையால் ,இங்கே பந்தம் என்றும் ,
மேலே தளை என்றும் ,சொல்லும் அளவில் ,புனருக்தம் ஆகையாலே
இரண்டத்து ஓன்று வர்ஜிக்க-( நீக்க -) வேண்டும்

அடியாவது –
குறள் அடி ,சிந்தடி முதலான அடி ஐந்தும்(குறள் அடி- சிந்தடி – அளவடி -நெடிலடி -கழி நெடிலடி –
(குறள் இரு சீரடி -சிந்து முச்சீரடி -நேரடி நாலொரு சீர் -ஐந்து சீர் நெடிலடி -ஐந்து சீருக்கு
மேற்பட்ட சீர்களையுடைய அடிகள் எல்லாம் கழி நெடிலடி )

தொடையாவது
மோனை, இயைபு ,எதுகை, முரண் ,அளபெடை என்கிற ஐந்திலும்
அடி மோனை முதலாக ஓர் ஒன்றிலே எவ்வெட்டு தொடையாக நாற்பதும் ,
அந்தாதி தொடை ,இரட்டை தொடை ,செந்தொடை என்கிற மூன்றுமாக
ஆக நாற்பத்து மூன்று தொடையும் .

(எழுவாய் எழுத்து ஒன்றின் மோனை இறுதி இயைபு -இரண்டாம் வழுவா எழுத்து ஒன்றின் மாதே எதுகை
மறுதலைத்த மொழியான் வரினும் முரண் -அடிதோறும் முதன் மொழிக் கண் அழியா தளபெடுத்து ஒன்றுவதாகும் அளபெடையே –
அந்த முதலா தொடுப்ப தந்தாதி -அடி முழுதும் வந்த மொழியே வருவது இரட்டை -வரன் முறையான் முந்திய மோனை
முதலா முழுவதும் ஒவ்வாது விட்டால் செந்தொடை நாமம் பெறும் -நறு மென் குழல் தே மொழியே )

நிரை நிரை யாவது
நேர் நிரை நிரை ,நிரை நிரை நிரை முதலானவை ..(இத்தால் பொருள்கோளை சொன்னபடி -நிரனிறை சுண்ணம்
அடிமறி மொழி மாற்று அவை நான்கு என்ப மொழி புனர் இயல்பே )

ஓசையாவது –
செப்பலோசை ,அகவலோசை ,முதலான நாலு ஓசையும் ( வெண்பாவுக்கு உரியது செப்பலோசை -அகவலோசை
ஆசிரியப்பாவுக்கு -துள்ளலோசை கலிப்பாவுக்கு -தூங்கலோசை வஞ்சிப்பாவுக்கு )

தளை யாவது
நேர் ஓன்று ஆசிரிய தளை ,நிரை ஓன்று ஆசிரிய தளை-இயல் சீர் வெண்டளை-வெண் சீர் வெண்டளை -கலித்தளை –
ஒன்றிய வஞ்சித்தளை -ஒன்றாத வஞ்சித்தளை -முதலான ஏழு தளையும்

இனமாவது
தாழிசை துறை விருத்தம் -என்கிற பாக்கள் இனம் மூன்றும் ,,

யாப்பாவது பிரபந்த ரூபமாய் இருக்கை ( தொகுத்தல் விரித்தல் தோகைவிரி மொழி பெயர்ப்பு எனத்தகு நூல் யாப்பு ஈர் இரண்டு என்ப )

பாவாவது -வெண்பா ,ஆசிரியப்பா ,(கலிப்பா வஞ்சிப்பா )முதலான நான்கு பாக்கள்

துறை என்கிற இதுவும் இனத்தின் வகையில் ஒன்றாகையாலே
புனருக்தமாம் –அர்த்தாந்தரம் உண்டாகில் கண்டு கொள்வது – (நாற்பெரு பண்ணும் இருபத்தொரு திறனும் ஆகிய இவை
எல்லாம் செந்துறை என்பது – மேற்புறமும் பதினோராடலும் என்ற இவை எல்லாம் வெண்டுறை யாகும் –
செந்துறை பாடற்கு ஏற்கும்-ஒலி குறித்தற்றே என்பதால் -/
வெண்டுறை ஆடற்கு ஏற்பது -கூத்தின் மேற்றே என்பதால்-யாப்பு அருங்கல விருத்தி )

பண் ஆவது –
முதிர்ந்த குறிஞ்சி ,நட்ட பாஷை ,நட்டராகம்
செந்திரி -பியந்தை – இந்தளம் முதலானவை

இசையாவது –ஸ்வர ஸ்தானம்
குரல் ,துத்தம் ,கைக்கிளை -உழை இளி விளரி தாரம் -என்கிற பேரால் சொல்லப் படுகிற
நிஷாத ரிஷப ,காந்தார ,ஷட்ஜ மத்யம தைவத பஞ்சமங்கள் ஆகிற ஏழு இசையும்
(இளி குரல் துத்தம் நான்கு மாத்திரை விளரி கைக்கிளை மூன்றே யாகும் தாரம் உழை இரண்டாகத் தகுமே )

தாளமாவது
கஜகர்ணச் சோராகதி மகரத்வஜ தாளக லஷ்மீ கீர்த்தி பாணி பாதவ் கௌரீ பஞ்சாநநஸ்ததா சதுராம்நாய தாளச்ச
தாளோயம் கருடத்வஜ சங்கீத ஸாஸ்த்ர வித்வத்பிரேதா தாளா ப்ரகீர்த்திதா — )
கஜகர்ணம் – சோரகதிர் -மகரத்வஜ -லஷ்மி கீர்த்தி- பாணி -பாதவ்
கௌரி -பஞ்சானனம் – , சதுராம் நாயம் .கருடத்வஜம்
சங்கீத சாஸ்த்ர வித்வத்பி ரேதே தாளா பிரகீர்திதா -என்கிற படியே
கஜகர்ணம் ,சோரகதி , மகரத்வஜம் முதலான தாளங்கள் ..
ஆதி – ரூபகம்- சாபு -ஜம்பை -ஏகம் -மட்டியம் -துருவம் -அட -போன்றவை தாள வேறுபாடுகள் –

பத்தாவது அம்ச பர்வாதிகளில் அவாந்தர பரிச்சேதங்களான
அத்யாயாதிகள் போலே நூற்றினுடைய அவாந்தர பரிச்சேதங்களாய்
இப் பத்தும்-9-4-11- -இவை பத்தும்-5-5-11- -என்று சொல்லப் படுகிற திரு வாய் மொழிகள் . ,
நூறாவது –
பிரதான பரிச்சேதங்களான அம்ச பர்வ காண்டாதிகள் போலே
நூறே சொன்ன -9-4-11-
பத்து நூறு–6-7-11-
என்னும் படி ..நூறு நூறு பாட்டாய் இருந்துள்ள பிரதான பரிச்சேதங்கள் .
ஆயிரமாவது
சதுர் விம்சத் சஹஸ்ராணி ஸ்லோகானாம் –பாலகாண்டம் –4-2-என்னுமா போலே இருந்துள்ள மகா பரிச்சேதம்

முதலான என்கையாலே
முதல் இட்டு மூன்று பத்து உத்தர கண்ட விவரணமாய்
நடு இட்ட மூன்று பத்தும் பூர்வ கண்ட விவரணமாய்
மேல் இட்டு மூன்று பத்தும் அதுக்கு உபயோகியான அர்த்த பிரதி பாதகமாய்
மேலில் பத்து பல அவாப்தி கதனமாய் இருக்கையாலே உண்டான விபாக விசேஷங்களும் விவஷிதங்கள் என்று தோற்றுகிறது
( பிரதம ஷட்கம் கர்ம ஞான யோகம் /மத்யம ஷட்கம் பக்தி யோகம்/ சரம ஷட்கம் பூர்வ ஷட்க சேஷம்-ஸ்ரீ கீதையில் போலே )

முதலான செய் கோலம் இதுக்கும் உண்டு -என்றது
செய் கோலத்து ஆயிரம் -4–1 -11-என்று கவிக்கு சொல்லுகிற அலங்காரங்களால்
குறை வற்ற ஆயிரம் என்கையாலே ,ஏவமாதிகளான சர்வ அலங்காரங்களும் இதுக்கு உண்டு என்கை .

இயலுக்கும் இசைக்கும் பொதுவாக நடுவாக நாடகம் -நா -எனப்பட்டது

நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே
வணங்கும் துறைகள் பலபலவாக்கி –நின் மூர்த்தி பரவி வைத்தாய்
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் நாயகன் அவனே
பொலிந்து நின்ற பிரான் கண்டீர்
குருகூர் பூ -ஸ்வயம் பூ -பிரமன் -ஆத்ம பூ மன்மதன் அக்னி பூ முருகன் -போல்
பூ ஆகு பெயரால் வாயைக் குறிக்கும்
நித்யம் செய்யா மொழி -இதுவும் இவர் நாவால் வெளிப்படுத்தி அருளினான்
திரு நா வீறுடையான் அன்றோ

———–

தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தரும நிறை
கனமாம் சிலர்க்கு அதற்கு ஆரணமாஞ் சிலர்க்கு ஆரணத்தின்
இனமாம் சிலர்க்கு அதற்கு எல்லையுமாம் தொல்லை ஏர் வகுள
வன மாலை எம்பெருமான் குருகூர் மன்னன் வாய் மொழியே. 4-

தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத்
தரும நிறை கனமாம் சிலர்க்கு –தர்மம் நிறைந்த சிறந்த காம புருஷார்த்தமாம் –
சீரிய நல் காமம் –கண்ணனுக்கே ஆமது காமம் என்பதால் கனக்க இருக்குமே
அதற்கு ஆரணமாஞ் சிலர்க்கு -அந்த காம புருஷார்த்தத்துக்கு உரிய வேதமுமாம்
காம -சாஸ்திரம் நாயகி பாவத்தில் தூது விடுதல் மடலூர்தல்
ஆரணத்தின் இனமாம் சிலர்க்கு -வேத வர்க்கமுமாம் -நான்கு பிரபந்தங்களும் நான்கு வேத சாரம் அன்றோ
அதற்கு எல்லையுமாம் -அதற்கு எல்லையான வேதாந்தமுமாம்

அந்த அந்த அதிகாரிகளுக்கு ஏற்ப -அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே போல்
திருவாய் மொழி அத்யாபகர்களுக்கு எங்கும் சிறப்பே
தீதில் அந்தாதி –இசையோடும் வல்லார் ஆதுமோர் தீதிலாராகி இங்கும் எங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே

———–

மொழி பல ஆயின செப்பம் பிறந்தது முத்தி யெய்தும்
வழி பல வாய விட்டொன்றா அது வழுவா நரகக்
குழி பல ஆயின பாழ் பட்டது குளிர் நீர்ப் பொருநை
சுழி பல வாய் ஒழுகுங் குருகூர் எந்தை தோன்றலினே–5-

குளிர் நீர்ப் பொருநை சுழி பல வாய் ஒழுகுங் குருகூர் எந்தை தோன்றலினே-நீர்ச் சுழிகள் -நிறைந்த பொருநல் -ஆவிர்பவித்ததால்
மொழி பல ஆயின செப்பம் பிறந்தது -பல பாஷைகளில் செவ்வி -செந்தமிழ் ஒன்றுக்கே –
முத்தி யெய்தும் வழி பல வாய விட்டொன்றா யது -பல வழிகளில் முக்தி அடைய ஒன்றாகவே நின்று
வழுவா நரகக் குழி பல ஆயின பாழ் பட்டது -தவறாத நரகக் குழிகள் பலவும் பாழாயினவே –

பிரபன்ன ஜன கூடஸ்தர் அன்றோ
நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றோ
நமன் தம் தமர் தலைகள் மேல்–நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை கண்டாய்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை

——–

தோன்றா உபநிடதப் பொருள் தோன்றல் உற்றார் தமக்கும்
சான்றாம் இவை என்ற போது மற்றென் பல காலும் தம்மின்
மூன்றா யினவும் நினைந்து ஆரணத்தின் மும்மைத் தமிழை
ஈன்றான் குருகைப் பிரான் எம்பிரான் தன் இசைக் கவியே. 6-

பல காலும் தம்மின் மூன்றா யினவும் நினைந்து –பல இடங்களிலும்
ஒருங்கு கூறப்பட்டு -தம்முள் சேர்ந்து இருந்துள்ள தத்வம் ஹிதம் புருஷார்த்தம் மூன்றையும்
யாவரும் அறிய வேண்டும் என்று திரு உள்ளத்தில் கொண்டு -அவற்றை வெளியிட்டு
தத்வ த்ரயார்த்தம் -ரஹஸ்ய த்ரயார்த்தம் என்றுமாம்
ஆரணத்தின் மும்மைத் தமிழை ஈன்றான் -வேத சாரமான இயல் இசை நாடக ரூபமான முத்தமிழில்
குருகைப் பிரான் எம்பிரான் தன் இசைக் கவியே.
தோன்றா உபநிடதப் பொருள் தோன்ற லுற்றார் தமக்கும்–ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஸ்ரீ மன் நாதமுனிகள் –
போல்வாருக்கு அருளிச் செய்தார்
சான்றாம் இவை என்ற போது மற்றென் -இவற்றின் வை லக்ஷண்யத்துக்கு வேறே என்ன சாட்சி வேண்டும்

கண்ணன் அல்லால் தெய்வம் அல்ல
அத் தெய்வ நாயகன் தானே போல்வன அனுசந்தேயம் –

———-

கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான் சட கோபன் குமரி கொண்கன்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே. 7-

கவிப்பா அமுத இசையின் கறியோடு -பாசுர அமுத உணவுடன் பண்ணிசைகள் கறி வர்க்கத்துடனே
கண்ணன் உண்ணக் குவிப்பான் குருகைப் பிரான் சட கோபன் -திருமால் அமுது செய்து அருளும்படி பரிமாறுபவரும்
குமரி கொண்கன்–குமரி ஆற்றுக்குத் தலைவர்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி-கவிகளுக்கு எல்லாம் தலைவர் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள் பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே. –நிலத்தேவர்-ஸ்ரீ வைஷ்ணவர்கள் காதுகளில்
குருமுகமாகச் சென்று மனத்திலே புகுந்து தித்திக்குமே
செவிக்கு இனிய -சிந்தைக்கு இனிய-வாய்க்கு இனிய –

மறைப் பாற் கடலைத் திரு நாவின் மந்திரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தித் தமிழ் ஆயிரத்தின் சுவை யமுதம்
கறைப் பாம்பணைப் பள்ளியான் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றிச் சன்மம் விடாய்க்கு நிழல் இல்லையே –

———–

தித்திக்கும் மூலத் தெளி யமுதே யுண்டு தெய்வ மென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம் பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய் குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே. 8-

குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே.
தித்திக்கும் மூலத் தெளி யமுதே -பழைய அமிர்தம் மாத்திரம் அன்று
உண்டு தெய்வ மென்பார் பத்திக்கு மூலம்-தெய்வம் உண்டு மென்பார் பத்திக்கு மூலம்–ஆஸ்திகர்களுடைய பக்திக்கு காரணமுமாம்
பனுவற்கு மூலம் -மற்றத் திவ்ய பிரபந்தங்களும் மூலம் -முதல் நூல் -அங்கி -அங்க -உப அங்க பாவம் உண்டே
பவம் அறுப்பார் முத்திக்கு மூலம் -முமுஷுக்களுக்கு முத்தி சாதனமும்
முளரிக்கை வாணகை மொய் குழலார் அத்திக்கு மூலம் -மால் பால் மனம் வைத்து மங்கையர் தோள் கைவிடக் காரணமுமாகுமே

மூலம் -பல பொருளில் வந்து சொல் பொருள் பின் வரு நிலை அணி –

——-

ஆயிரம் மா மறைக்கும் அலங்காரம் அருந் தமிழ்க்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்கு எல்லாம்
தாய் இரு நாற் றிசைக்குத் தனித் தீபந் தண்ணங் குருகூர்ச்
சேயிரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே. 9-

தண்ணங் குருகூர்ச் சேய் -குமாரரும்
இரு மா மரபும் செவ்வியான் -அன்னையாய் அத்தனாய் -தாய் தந்தை இரண்டு வம்சங்களிலும் ஸ்ரேஷ்டமானவரும்
செய்த செய்யுட்களே.ஆயிரம் மா மறைக்கும் அலங்காரம் -வேதங்களுக்கே அலங்காரமானவை
அருந் தமிழ்க்குப்பாயிரம் -இனிய சுவையினால் தமிழ் மொழிக்கே முகவுரையாகவும்
நாற் கவிக்குப் படிச் சந்தம் -நாலு வகைக் கவிகளுக்கும் மாதிரியாயும்
பனுவற்கு எல்லாம் தாய் -எல்லா நூல்களுக்கும் தாயாகவும்
இரு நாற் றிசைக்குத் தனித் தீபம் -எட்டுத் திக்குகளுக்கும் ஒப்பற்ற விலக்காகாவும் விளங்குமே

ஆசு கவி
மூச்சு விடும் முன்னே முந்நூறும் நானூறும் ஆச் என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ
இம் என்னும் முன்னே ஏழு நூறும் எண்ணூறும் அம் என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ
எழுந்த ஞாயிறு விழுவதன் முன்னே கவி பாடினது ஏழு நூறே
நிமிஷக் கவிராயர் -விரைவாகப் பாடும் கவி

மதுர கவி -சொற்களிலும் பொருள்களிலும் மதுரமான இனிமையான கவி –
ஆதி தொடங்கி அந்தம் வரையில் செவிக்கு இனிய செஞ்சொல்லாய் இருக்குமே

சித்ர கவி -உயர்வற -மயர்வற -அயர்வற -பிரணவ மகா மந்த்ரார்த்தம் -இதுக்கு ஒரு எடுத்துக்காட்டு

விஸ்தார கவி –பகவத் விஷயம் ஒன்றையே உபாய உபேய -தத்வ த்ரய -ரஹஸ்ய த்ரய –
அர்த்த பஞ்சக அர்த்தங்களை அருளிச் செய்து அவற்றையே விஸ்தாரமாக ஆயிரமாக அருளிச் செய்து அருளினார் அன்றோ –

திருவழுதி வள நாடர் –
அவர் திருக்குமாரர் -அறம் தாங்கியார் –
அவர் திருக்குமாரர்-சக்ரபாணியார் –
அவர் திருக்குமாரர்-அச்சுதர் –
அவர் திருக்குமாரர்-செந்தாமரைக் கண்ணர்
அவர் திருக்குமாரர்-செங்கண்ணர்
அவர் திருக்குமாரர்-பொற் காரியார்
இவருக்கும் உடைய நங்கையாருக்கும் -நம் மாறன் –

திரு வள்ளுவர் – -ஒவ்வையார்–இடைக்காதர்- -சம்வாதம்

குறு முனிவன் முத்தமிழும் -என் குறளும் -நங்கை சிறு முனிவன் வாய் மொழியின் சேய் –திருவள்ளுவர்

ஐம் பொருளும் நால் பொருளும் முப்பாலில் பெய்து அமைத்த செம்பொருளைத்
தண் குருகூர்ச் சேய் மொழியது என்பர் சிலர் யான் இவ்வுலகில்
தாய் மொழியது என்பேன் தகைந்து –ஒவ்வையார்

சேய் மொழியோ தாய் மொழியோ ஷேப்பில் இரண்டும் ஓன்று
அவ்வாய் மொழியை யாரும் மறை என்ப
வாய் மொழி போல் ஆய் மொழிகள் சால உள எனினும்
அம்மொழியின் சாய் மொழி என்பேன் யான் தகைந்து –இடைக்காதர்

———

செய் ஓடு அருவிக் குருகைப் பிரான் திரு மாலை நங்கள்
கை ஓர் கனி எனக் காட்டித் தந்தான் கழற்கே கமலம்
பொய்யோம் அவன் புகழ் ஏத்திப் பிதற்றிப் பித்தாய்ந் திரியோம்
ஐயோ அறிதும் என்றே உபகாரத்தின் ஆற்றலையே. 10-

செய் ஓடு அருவி -வயல்களில் விரைந்து பாய்கின்ற நீர்ப்பெருக்கை யுடைய
கை ஓர் கனி எனக் காட்டித் தந்தான் -கையில் கனி எனக் கண்ணனைக் காட்டித் தந்தாலும்
கமலம் பொய்யோம் -தாமரை மலர்களை இட்டு அர்ச்சிக்கின்றோம் அல்லோம்

குரும் ப்ரகாசயேன் நித்யம்
நேசனைக் காணா இடத்தே நெஞ்சார துதித்தால் -ஆசானை எவ்விடத்தும் அப்படியே
எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே
அரங்கன் அடியார்களாகிய அவருக்கே பித்தராமவர் பித்தர் அல்லர்கள் மற்றையோர் முற்றும் பித்தரே
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் உலகினில் மிக்கதே –

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 20, 2021

ஸ்ரீ இராமாயணம் இயற்றிய ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் எழுதிய ஒன்பது நூல்களுள் ஸ்ரீ சடகோபர் அந்தாதியும் ஒன்றாகும்.
சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார்.
இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்.
இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.
இவரது வேறு நூல்கள் ஸ்ரீ ஏரெழுபது, ஸ்ரீ சரசுவதி அந்தாதி, ஸ்ரீ திருக்கை வழக்கம் முதலியவை.

—————

சிறப்புப் பாயிரம்

தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
நாவில் சிறந்த மாறற்குத் தக்க நன் நாவலவன்
பூவில் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.

தெய்வங்களில் சிறந்தவன் ஸ்ரீ திருமால்!
அவனுக்குத் தக்க தெய்வீகமான கவிஞன் பலவிதமான பா வகைகளை ஸ்ரீ திருவாய்மொழியில்
சிறப்பாக அமைத்த பண்டிதனான ஸ்ரீ நம்மாழ்வாரே!
நாவண்மையில் சிறந்த அந்த ஸ்ரீ மாறன் சடகோபன் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தக்க நாவண்மை கொண்டவன்
தாமரைப் பூவில் அமர்ந்த பிரமனை ஒத்த ஸ்ரீ கம்ப நாட்டாழ்வானே!

—————-

ஆரணத்தின் சிரமீது உறை சோதியை ஆந்தமிழால்
பாரணம் செய்தவனைக் குருக்ஷரனைப் பற்பல வா
நாரணனாம் என ஏத்திக் தொழக் கவி நல்கு கொடைக்
காரணனைக் கம்பனை நினைவாம் உள் களிப்புறவே.

‘நம் சட கோபனைப் பாடினையோ?’ என்று நம் பெருமாள்
விஞ்சிய ஆதரத்தால் கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த
செஞ்சொல் அந்தாதி கலித்துறை நூறும் தெரியும் வண்ணம்
நெஞ்சு அடியேற்கு அருள் வேதம் தமிழ் செய்த நின்மலனே.

——————–

நாதன் அரங்கன் நயந்துரை என்ன நல் கம்பன் உன் தன்
பாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே
ஓதும் படி யெனக்கு உள்ளத்தனை யருள் ஓதரிய
வேதம் தமிழ் செய்த மெய்ப் பொருளே இது என் விண்ணப்பமே.

————–

தற்சிறப்புப் பாசுரம்

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன் அடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே.

————–

நூல்

வேதத்தின் முன் செல்க மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணம் கடந்த
போதக் கடல் எங்கள் தென் குரு கூர்ப் புனிதன் கவி ஓர்
பாதத்தின் முன் செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே. 1-

————

சுடர் இரண்டே பண்டு மூன்றாயின துகள் தீர்ந்துலகத்து
இடர் இரண்டாய் வரும் பேர் இருள் சீப்பன எம் பிறப்பை
அடர் இரண்டாம் மலர்த் தாள் உடையான் குருகைக் கரசன்
படர் இருங் கீர்த்திப் பிரான் திருவாய் மொழிப் பாவொடுமே. 2-

———

பா வொடுக்கும் நுண் இசை ஒடுக்கும் பலவும் பறையும்
நா வொடுக்கும் நல் அறி வொடுக்கும் மற்றும் நாட்டப் பட்ட
தே வொடுக்கும் பர வாதச் செரு ஒடுக்கும் குருகூர்ப்
பூ வொடுக்கும் அமுதத் திரு வாயிரம் போந்தனவே. 3-

———

தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தரும நிறை
கனமாம் சிலர்க்கு அதற்கு ஆரணமாஞ் சிலர்க்கு ஆரணத்தின்
இனமாம் சிலர்க்கு அதற்கு எல்லையுமாம் தொல்லை ஏர் வகுள
வன மாலை எம்பெருமான் குருகூர் மன்னன் வாய் மொழியே. 4-

———–

மொழி பல ஆயின செப்பம் பிறந்தது முத்தி யெய்தும்
வழி பல வாய விட்டொன்றா அது வழுவா நரகக்
குழி பல ஆயின பாழ் பட்டது குளிர் நீர்ப் பொருநை
சுழி பல வாய் ஒழுகுங் குருகூர் எந்தை தோன்றலினே. 5-

———–

தோன்றா உபநிடதப் பொருள் தோன்றல் உற்றார் தமக்கும்
சான்றாம் இவை என்ற போது மற்றென் பல காலும் தம்மின்
மூன்றா யினவும் நினைந்து ஆரணத்தின் மும்மைத் தமிழை
ஈன்றான் குருகைப் பிரான் எம்பிரான் தன் இசைக் கவியே. 6-

———–

கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான் சட கோபன் குமரி கொண்கன்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே. 7-

———

தித்திக்கும் மூலத் தெளி யமுதே யுண்டு தெய்வ மென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம் பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய் குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே. 8-

———-

ஆயிரம் மா மறைக்கும் அலங்காரம் அருந் தமிழ்க்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்கு எல்லாம்
தாய் இரு நாற் றிசைக்குத் தனித் தீபந் தண்ணங் குருகூர்ச்
சேயிரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே. 9–

———

செய் ஓடு அருவிக் குருகைப் பிரான் திரு மாலை நங்கள்
கை ஓர் கனி எனக் காட்டித் தந்தான் கழற்கே கமலம்
பொய்யோம் அவன் புகழ் ஏத்திப் பிதற்றிப் பித்தாய்ந் திரியோம்
ஐயோ அறிதும் என்றே உபகாரத்தின் ஆற்றலையே. 10–

———-

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள் களெல்லாம் விழுமாக் கமலம்
சேற்றில் பொதிய வீழ்க்கும் குரு கூரர் செஞ் சொற் பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு நுவல்கிலவே. 11-

———

இயல் இடம் கூறல்

இலவே இதழுளவே முல்லை யுள்ளி யம்பும் மொழியும்
சிலவே அவை செழுந் தேனொக்குமே தமிழ்ச் செஞ் சொற்களால்
பல வேதமும் மொழிந்தான் குரு கூர்ப் பதுமத்து இரண்டு
சல வேல்களும் உளவே யது காண் என் தனி யுயிரே. 12-

———

உயிர் உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள
செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும் திருடித் திருடித்
தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சட கோபன் சந்தோடு
அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே. 13-

———

அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகுங் குருகூர் வந்த பண்ணவனே. 14-

———

பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித் தலை வேந்தன் மலர் உகுத்த
சுண்ணப் படர் படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே. 15–

———-

கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான் களித்தார்
குடலைக் கலக்கும் குளிர் சங்கினான் குறையா மறையின்
திடலைக் கலக்கித் திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே. 16–

————

நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் பிறவி யெனும்
நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே. 17-

———-

சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத்து இருக்கை
சேதிக்குமே ஒன்று சிந்திக்குமே யதனைத் தெரியப்
போதிக்குமே எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச் சொல் எனவே. 18–

————-

சொல் என்கெனோ முழு வேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கெனோ மறை நேர் நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக் கனி யென்கெனோ புகல
வல் என்கெனோ குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே. 19-

———–

செல யுணர்த்திச் செவிலியைத் தேற்றுதல்

மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சி யம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே. 20-

————

பாங்கி நெறி அருமை கூறித் தலை மகனை வரவு விலக்குதல் –

சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் தளிர் மெல்லடித் தண்
மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு நீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறி நினை தோறும் துணுக்கு எனுமால்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை மலை யவனே. 21-

———–

மலை யாரமும் கடல் ஆரமும் பன் மா மணி குயின்ற
விலை யாரமும் விரவுந் திரு நாடனை வேலை சுட்ட
சிலையார் அமுதின் அடி சட கோபனைச் சென்று இறைஞ்சும்
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே. 22–

————

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்
வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் எழில் குருகூர்
நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும்
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே. 23-

———–

சித்தர்க்கும் வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறை துறந்தோர் கட்கும் தொண்டு செய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்குமே யன்றி பண்டு சென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித் தொகையே. 24–

———–

தொகை உளவாய பணுவற் கெல்லாம் துறை தோறும் தொட்டால்
பகை யுளவாம் மற்றும் பற்றுளவாம் பழ நான் மறையின்
வகை யுள வாகிய வாதுளவாம் வந்த வந்திடத்தே
மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே. 25-

———–

விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் மெய் உற வந்து
அழுப்பாது ஒழிமின் அரு வினைகாள் உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன் வந்தின்று நின்றான் இள நாகு சங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம் குருகூர் எம் குலக் கொழுந்தே 26-

————

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு தோழி இரங்குதல்

கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் விறல் மாறனென்றால்
அழும் தோள் தளரும் மனமுருகும் குருகூர் அறையில்
எழுந்து ஓடவுங் கருத் துண்டு கெட்டேன் இவ் இளங் கொடிக்கே. 27–

————

கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் இனிக் கொடுங் கூற்றினுக்கோ
அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் ஆரணத்தின்
படி எடுத்துக் கொண்ட மாறன் என்றால் பதுமக் கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர் தாள் என் முடி எனவே. 28–

———–

என் முடியா தெனக்கி யாதே அரியது இராவணன் தன்
பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான் பொருநைந் துறைவன்
தன் முடியால் அவன் தாள் இணைக் கீழ் எப் பொருளும் தழீஇச்
சொல் முடியால் அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே. 29–

———–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி
நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தே னென்னை நல் வினையாம்
காட்டில் புகுத விட்டு உய்யக் கொள் மாறன் கழல் பற்றிப் போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை மறை மெய் எனிலே. 30–

————

மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறு படுத்து
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறு வினையைக்
கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக் கரசன் புலமை
செய் மெய்யன் தனக்கே தனித் தாளன்பு செய்த பின்னே. 31-

————-

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரி யல்ல மாட்டா மறை மதுரக் குருகூர்
அய்யன் கவி யல்லவேல் பிறவிக் கடலாழ்வது அல்லால்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் இவ் வுயிர்களுக்கே. 32–

————-

உயிர்த் தாரையில் புக்கு உறு குறும்பாம் ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகை வந்தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர் தாரைகள் பொடிக்கும் கண்ணீர் மல்கும் மா மறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே. 33–

————–

அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்
வந்தவர்க்கோ மறம் வாதியர்க்கோ மதுரக் குழை சேர்
சுந்தரத் தோளனுக்கோ அவன் தெண்டர்கட்கோ சுடர் தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே. 34–

———-

சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே. 35–

————

பாங்கி வெறி விலக்கிச் செவிலியருக்கு அறத்தொடு நிற்றல்

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் புகுந்தார் எவர் என்று
அவரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று இறைவர்
மூவரையோ குரு கூரரையோ சொல்லும் முந்துறவே. 36–

————-

துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே. 37–

————-

மடலூரத் துணிந்த தலை மகளின் வழி ஒழுகித் தோழி இரங்குதல் –

கை தலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ சென்று அவ்வூர் அறிய
வைதலைத்து ஏசுதுமோ குருகூர் என்னும் ஆறு அறியாப்
பைதலைக் கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே. 38–

———–

பண்ணும் தமிழும் தவம் செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன மகிழ் மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே. 39–

———-

காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடை நாள்
ஆலத்திலே துயின்றோர் கொண்டவை யிரண்டா யமைந்த
கோலத்திலே முளைத்துக் கொழுந் தோடிக் குணங்கடந்த
மூலத்திலே செல்ல மூட்டிய ஞானத்து எம் மூர்த்தியையே. 40–

———–

மூர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற
வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம் மறைப் பொருளே. 41–

———–

பொருள் வயிற் பிரியும் தலைவனுக்குத் தோழி தலைவியின் ஆற்றாமை கூறுதல்

பொருளைச் சுவை யென்று போவ தெங்கே குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே. 42–

———

மருங்கு அணைதல் –

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகை வஞ்சி
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே. 43–

———

கன வாயினவும் துரியமும் ஆயவையும் கடந்து
மன வாசகங்களை வீசிய மாறனை மா மறையை
வினவா துணர்ந்த விரகனை வெவ் வினையைத் தொலைத்த
சின வாரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே. 44–

———–

சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு வேதம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயம் ஆயிரம் பெய் துளவத்
தாரார் முடியாயிரம் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
ஆரா அமுதம் கவி ஆயிரம் அவ் வரியினுக்கே. 45–

————

தோழி இரங்கல் –

அரிவளை பொன் மகிழ் ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறை செறுத்து
வரி வளையும் அன்னமும் தம்மிலே வழக்காட வலம்
புரிவளை யூடறுக்கும் குருகூர் எம் புரவலனே. 46–

————

தலைவி கடலை நோக்கித் தேர் வழி தூரல் என்றல் –

புரை துடைத்துப் பெரும் பொய்யும் துடைத்துப் பிறர் புகலும்
உரை துடைத் தங்குள்ள வூச றுடைத் தெம் முறு பிறவித்
துரை துடைத் தாட் கொண்ட தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை
கடை துடைக்குங் கடலே துடையேல் அன்பர் கால் சுவடே. 47–

—————

செவிலித்தாய் நல் தாய்க்கு இருவர் காதலும் உரைத்தல் –

சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து சங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க் கொலை யானை நங்காய்
இவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே. 48–

————-

இருளாய்ப் பரந்த உலகங்ககளை விளக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான் பொது நிற்றலின் மற்றது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே. 49–

————

அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது செய்தாரை யில்லா
நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும் எண்ணா தென்னை வீடு பெறுத்தினையே. 50–

————–

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே பிறர் பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினை கொடுப் போய்
எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏற விட்டான்
குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து ஆண்ட குருகை மன்னே. 51–

———–

குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மை யுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப் பார்க்கும் இயற்கை யவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே. 52–

———–

தலைவன் பிரிந்த நிலையில் ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்

அன்றாத அன்றிலையும் அன்று வித்து என்னை அன்னையுடன்
பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் பிழைக் கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ் வினையை
வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே. 53–

———

வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறத் தகும் செந் தமிழ்ப் புலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமுதே எறி நீர்ப் பொருநை
ஆறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே. 54–

————

பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே புலமைக் கொருவர்
உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ உயற் நாற் கவியும்
பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் பெருந் தண் குருகூர்
தென்னை யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே. 55–

———-

மகட் பாற் காஞ்சி -நின் மகளை எனக்குத் தருக என்ற அரசனிடம் மாறுபடுவது

மணித்தார் அரசன் தன் ஓலையைத் தூதுவன் வாய் வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீ வினையைத்
துணித்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப் பொருளைப்
பணித்தான் பணி யன்றெனில் கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே. 56–

———–

பாவைத் திருவாய் மொழிப் பழத்தைப் பசும் கற்பகத்தின்
பூவைப் பொரு கடல் போதா அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பணித்த எம் கோவை யல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ மற்றை நாவலரே. 57–

————-

நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூர்ப் புலவன்
கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் எங்கும் போய்க் கெழுமிக்
கூவலந் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே. 58–

————

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன் தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம் கொண்டார் குமரித் துறைவர்
மழைத்தார் தடக் கைகளால் என்னை வானின் வரம்பிடை நின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே. 59–

————–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தே னதன்றித்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் தண் குருகூர்
நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் இனி நாட் குறித்துக்
கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே. 60–

————

தலைவனைப் பிரிந்த தலைவி தென்றலுக்கு வருந்தி இரங்குதல் –

கூறப் படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படா வினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாது கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே. 61–

————-

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீ வினையை
நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை நிறை குருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே. 62–

————-

உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் தோண்டச் சுரத்தலினே. 63–

————

சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல் குதிப்பத்
திரக்கும் கழை நெடுந் தாளில் தொடுத்த செந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம் படுமினே. 64–

————-

பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் பைந் தாள் குவளை
யோடும் கறங்கும் குருகைப் பிரான் இச் சுழல் பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே. 65–

————-

விஸ்லேஷத்தில் மாலைப் பொழுதுக்கும் இருளுக்கும் தலைவியின் ஆற்றாத துயர் கண்டு தோழி இரங்கல்

விட வந்தகார வெம் பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அட வந்த காலன் கொலோ அறியேன் இன்று இவ் வந்தி வந்து
பட அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே. 66–

—————

உடன் போக்கில் தலைவன் தலைவிக்குத் தன் நகர் அணிமை கூறல் –

பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே. 67–

————-

பிரிவாற்றாது வருந்தும் தலைவி கார் கண்டு கலங்குதல் –

தடம் பணைத் தண் பொருநைக் குருகூரர் தகை வகுள
வடம் பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் மற்றை மாலை யெல்லாம்
உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த
விடம் பணைக் கொண்டனவே பனி தோய்ந்திடு மேகங்களே. 68–

—————-

பொருள் வயில் பிரிந்து சென்று மீளும் தலைமகன் முகிலொடு கூறல் –

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது மெய்யன் குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளி பரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங்குகவே. 69–

————

மதங்கு -மதங்கம் — மதங்கியார் -மண்டலம் சுற்றுதல் –

தொடங்கு கின்றாள் நடம் சொல்லு கின்றேன் குருகூரர் தொழா
மடங்கு கின்றாள் மண்டலம் சுற்றி யாடுகின்றாள் மதங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால் பின்னைப் போக ஒண்ணாது உம் பதிகளுக்கே. 70–

————-

பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே. 71–

————-

பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்கு வல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன் உயிர் கட்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே. 72–

————

கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே
முற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்து கொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம் நிதம் மாறனெம்மை
விற்றும் விலை கொள்ளவும் உரியான் கவி வெள்ளத்தையே. 73–

————–

தலைவியின் கண் அழகு கண்டு வியந்த தலைவன் கூறுதல்

வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண் மதி மேல்
கள்ளம் பரந்தனவோ முயல் நீக்கிக் கவிக் கரசன்
தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் செம் முகத்தே
முள்ளம் பரந்தனவோ கண்களோ ஒன்றும் ஓர்கிலமே. 74–

————–

ஓரும் தகைமைக்கு உரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சட கோபன் தடம் பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்கு அறும் சிந்தை செவ்வே நிற்கும் தீங்கு அறுமே. 75–

————–

அறு வகையாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே
பெறு வகை ஆறெனச் செய்த பிரான் குருகூர்ப் பிறந்த
சிறு வகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே. 76–

———-

தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் வினையேன் இவ் வெறும் பிறவி
ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணி நீர்ப்
பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே. 77–

———–

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே. 78–

———–

குற்றேவலும் செய்தும் மெய் கண்டு கை கொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன் என் போல் எவர் பேறு பெற்றார் பின்னையே பிறந்து
வெற்றேவலின் நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய் யுணர்ந்தார்
எற்றே குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே. 79–

———–

தலை மகளைத் தலை மகன் கண்ணுற்று இஃது ஒரு வியப்பு என்றால் –
ஒரு தலைக் காமம்-கைக்கிளைத் திணையின் முதலான காட்சி என்னும் துறை இது

இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்து எம்மை யிப் பிறவி
மயலைத் துடைத்த பிரான் குருகூர் மதியைக் கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத்தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக் கொள் சாளரத்தூடு கதவிட்டதே.–80–

————

இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல் பாய் குரு கூரர் குணங்களுக்கே. 81–

————

குணம் வேண்டுமே நற் குலம் வேண்டுமே யக்குலத் தொழுக் காம்
பிணம் வேண்டுமே செல்வப் பேய் வேண்டுமே பெருந் தண் வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மா மணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைத் தொழுமே. 82–

————-

தொழும் பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும் பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி யென் நாத்
தழும்பாக்கவும் வல்ல கோ சட கோபன் தயா பரனே. 83–

———–

நல் தாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்

பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண் பனிக்கும்
கரம் தலைக் கொள்ளும் உள்ளும் உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனை மகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போது நங்காய் உன் மகள் கருத்தே. 84–

————-

தலைவனை நோக்கித் தோழி தலை மகளை உடன் கொண்டு போகச் சொல்லுதல் –

கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒரு மணம் தீரும் தின மயல் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற்கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே. 85–

———–

கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் இனி மேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும் போகம் விளைகின்றதே. 86–

————–

பகல் குறியில் தலைமகனுடன் தலை மகளைச் சேர்த்து வைத்த தோழி
பின்பு தலைவன் சிறைப்புறமாக அவன் செவிப்படுமாறு தினையோடே வெறுத்து வரைவு கடாதல்

விளையா தொழிய மருந்தும் உண்டே எம் விளை தினையின்
கிளையாக் கிளர விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளை யாசழியத் தடுத்துத் தென் பாலை வழி தடுத்துக்
களை ஆசறத் தடுத் தாண்டான் குருகையின் காப் புனமே. 87–

———–

தலைவன் வரும் புனல் கண்டு வருந்துதல் –

புனல் பாழ் படுத்துப் புகழ் பாழ் படுத்தல்லால் புகுந்தென்
மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே வழுவா நரகத்
தினம் பாழ் படுத்த பிரான் சட கோபன் இன்னாக் கலியின்
சினம் பாழ் படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே. 88–

———-

பிரிவு ஆற்றாத தலைவி அன்றிலின் குரல் கேட்டு அயர்தல்–

தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினை ஒன்றிய அன்றிலுக்கு இடம் காட்ட விரிதலைய
பனை யன்றியும் உளதோ தமியேற்குப் பழம் பகையே. 89–

————

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வையமுய்யத்
தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் சூழ் பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே. 90–

————

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு பாங்கி இரங்குதல்

பருகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவை கண்ணீர்
உருகின்ற தென்று உயிர் ஓய்கின்றதால் உலகு ஏழுமுய்யத்
தொகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன் மேலும் காதல் தருமவரே. 91–

————-

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யம்
இருமையும் தீர்ந்த பிரான் சட கோபன் தன் இன்னருளே. 92–

————–

இருளுக்கு ஆற்றாத தலைவியைக் குறித்துத் தோழி இரங்குதல் –

அருளில் சில மகிழா யிழைக்கு ஈவர் கொல் அந்தி வந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. 93–

————-

அவரே அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரே கை யுற்று என் பணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் நம்பி மாறனைப் போல்
எவரே திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே. 94–

—————

தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம்ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவம் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. 95–

————

தலைவன் தலைவியின் நோக்கினாலாய வருத்தம் கூறுதல்

உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த் துலகைத்
தொண்டாட்டிய வந்து தோன்றிய தோன்றல் துறைக் குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட்டிய கண்கள் போல் செய்யுமோ கயல் தீங்குகளே. 96–

———–

பிரிவு ஆற்றாது வருந்தும் தலைவி இரங்கல் –

தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள் நல்கார் இந்த நுண் பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே. 97–

————

இதுவும் அது

வல்லம் புலி முக வாயில் கரும்பின் மறு பிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு கட்டிச்
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது தாயென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே. 98–

———–

எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் புகழ் மெய்ப் புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை
வழுதி நன்னாடன் திருவாய் மொழி எம் மனத்தனவே. 99–

—————-

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள்விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள். 100–

——–

மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுர கவிப் பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் யுரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -/ ஸ்ரீ ஒட்டக் கூத்தர்–ஸ்ரீ உத்தர காண்டம்-

February 7, 2021

கம்பர் ஆறுகாண்டத்தைப் படைத்தார். அதன் பின் நிகழும் நிகழ்வுகளை ஒட்டக் கூத்தர் பதினேழு படலங்களில் நிறைவு செய்துள்ளார்.
இவ்விரண்டும் இணைந்த நிலையில், இராமனின் மாண்புகள் நிறைவுறுகின்றன.
ஒரு காப்பியத்தோடு இன்னொரு காப்பியம் ஒன்றி இணைந்த நிலையில் தண்டியாரின் காப்பிய இலக்கணம் நிறைவுறுகிறது.
ஆதலால் இவ்விரு நூல்களை இரட்டை இராமாயணக் காப்பியங்கள் எனலாம்.

ஸ்ரீ சீதை மீண்டும் வனவாசம் சென்றது மிகவும் விவாதிக்கப்பட்ட ஒரு வரலாறாகும்.
முதலில் ஒட்டக்கூத்தரின் சொற்களில் காண்போம்:

வாளணி விசயன் பத்திரன் தந்தவக்கிரன்
காளியன் முதலோர் சொற் பரிகாசக் கதைகள் கேட்டினிது கொண்டாடி (பாடல் 724 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

ஆங்கவரிவ்வாறு உரைத்திடக் கேட்ட அரசர் கோன் அவர்களை நோக்கி
நாங்கள் இந்நகரில் நாட்டினில் பிறக்கும் நன்மையுந் தீமையுங் கேட்டுத்
தீங்கவை அகற்றிச் சிறந்தன செய்ததும் செய்யும் இவ்விரண்டும் நீர் கேட்ட
நீங்கள் ஒன்றுக்கும் கூசலீர் என்ன நின் பல கேட்டி என்றுரைப்பார் (பாடல் 729 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

மன்னவன் ராமன் மானபங்கத்தை மனத்தினால் நினைக்கிலன் வானோர்க்
கின்னல் செய்தொழுகும் இராவணன் கொடுபோய் இடைவிடாது ஈராறு திங்கள்
நன்கெடு நகரில் தனிச்சிறை வைத்த தையலைத் தாரமாய்க் கொண்டு
பின்னையும் வாழ்க்கை பேரிழுக்கு என்று பேசுவர் பெரு நிலத்தோர் (பாடல் 728 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

ஓதநீர் வேலையுலகு உளோர் இல்லது உளது எனில் உள்ளது ஆம் உள்ளது
யாதொரு பொருளை இல்லையென்று உரைக்கில் இல்லையாம் ஈது உலகியற்கை
ஆதலால் அவளை அருந்தவத்தோர்கள் ஆசிரமத்து அயல் விடுத்தும்
ஈது நான் துணிந்த காரியம் இனி வேறு எண்ணுவதொரு பொருளில்லை (பாடல் 732 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

ராமனின் நம்பிக்கைக்குரிய படை வீரரான விசயன், தந்தவக்கிரன், காளியன் ஆகியோர் கூறிய
நாட்டு நடப்பு பற்றிய சுவையான நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழ்ந்த ராமன்
”நீங்கள் நல்லதும் கெட்டதுமானவற்றைப் பார்த்துச் சொல்லுவதில் தள்ள வேண்டியவற்றைத் தள்ளி மீதியைச் சொன்னீர்கள்.
நடப்பு எதுவோ அதைக் கூசாமற் கூறுவீராக” என்றான்.

பிறகு அவர்கள் “ராமன் மானக்கேட்டான ஒரு விஷயத்தை நினைக்கவும் மாட்டார்.
வானவர்களுக்குத் தீங்கிழைத்த ராவணனின் சிறையில் பன்னிரண்டு மாதம் இருந்தவளை
மனைவியாக வாழ்க்கை நடத்துவது பேரிழுக்கே” என மக்கள் பேசுகின்றனர் என்றார்கள்.

கடலால் சூழப்பட்ட உலகில் வாழும் மக்கள் மனதில் என்ன இருக்கிறதோ அதுவே உண்மை.
அவர்கள் இது இல்லை என்று கூறினால் இருக்காது என்று பொருள். இதுவே உலக இயற்கை.
எனவே அவளைத் தவம் புரியும் முனிவர்களது ஆசிரமத்துக்கு அருகே விடுவோம்.
இதுவே என் தீர்க்கமான முடிவு. இதில் மாற்றமில்லை.

இதைத் தொடர்ந்து லட்சுமணன் வால்மீகி ஆசிரமம் அருகே சீதையை விடும் போது கூறுகிறான்.

நன்னெறி நகரும் நாடும் கடந்து போய் அடவி நன்னித்
தன்னுயிர் தன்னை விட்டுத் தடம் புகழ் கொண்ட ஐயன்
இன்னுயிர்த் தோழனாய் வெழில் கொள் வான்மீகி வைகும்
பங்கை சாலையின் பாற் பாவையை விடுதி என்றான்

என்றவனியம்ப அண்ணல் ஏவலை மறுக்க அஞ்சி
இன்றுனைக் கொன்று போந்தேன் என்றிவை இளையோன் சொல்ல
கன்றிய கனலினூடு காய்ந்த நாராசம் சீதை
தன் துணைச் செவியில் ஏறத் தரணியில் தளர்ந்து வீழ்ந்தாள் (பாடல் 752, 753 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

நன்னெறியில் வாழும் நாட்டின் மன்னரான தசரதன் நகர் நாடும் தாண்டிப் புகழ் பெற்றவர்.
அவது உயிர்த் தோழரான வால்மீகியின் ஆசிரமத்திற்கு அருகே அவளை விடுக என்றான்.

அண்ணல் ராமனின் ஏவலை மறுக்க அஞ்சி இன்று உன்னைக் கொண்டு வந்தேன் என்று
லட்சுமணன் கூறியது பழுக்கக் காய்ச்சிய இரும்பு செவியில் நுழைந்தது போல மனத் துயருற்றுத் தரையில் வீழ்ந்தாள்.

வால்மீகி ராமாயணத்தில்
பௌராபவாதஹ சுமஹா(ம்) ஸ்த்தா ஜன்பதஸ்ய ச
வர்த்ததே மயி பீபத்ஸா மே மர்மாணி க்ருந்ததி (பாடல் 3, ஸர்க்கம் 45 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

தற்சமயம் பொது மக்களிடையே என்னைப் பற்றியும் சீதையைப் பற்றியும் மிகவும் தவறான அபிப்ராயம் பரவி உள்ளது.
என் மீது அவர்கள் வெறுப்புற்றிருக்கிறார்கள். அவர்களது வெறுப்பு என் இதயத்தைப் பிளக்கிறது.

அப்யஹம் ஜீவிதம் ஜஹா(ன்) யுஷ்மான் வா புஷர்விபாஹா
அபவாத பயாத் பீதஹ கிம் புனர்ஜங்காத்மஜம் (பாடல் 14, ஸர்க்கம் 45 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

(ராமன் தன் சகோதரர்களைப் பார்த்துச் சொல்வது) மனிதருள் உயர்ந்த என் உறவுகளே !
மக்களின் நிந்தனைக்கு அஞ்சி என் உயிரையும் உங்களையும் கூடத் தியாகம் செய்யத் தயார்.
சீதையைத் தியாகம் செய்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல.

கங்கா வாஸ்து பரே பாரே வால்மீகேஸ்து மவாத்மனஹ
ஆஷ்ரமோ திவ்யாஸ்ன்ஷஸ்தம்ஸாதிரமார்ஷிதஹ
தத்ரைதாம் விஜனே தேஷே விஸ்ருஜ்ய ரகுநந்தன
சீக்ரமாகச்ச சௌமித்ரே குருஷ்ய வசனம் மம
தஸ்மாத் த்வாம் க்ச்ச சௌமித்ரே நாத்ர கார்யோ விசாரணா
அப்ரீதர்ஹி பரா மஹ்யம் த்வயைதத் ப்ரதிவாரிதே–(பாடல் 17,18,19,20 ஸர்க்கம் 45 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

பொருள்: கங்கையின் அந்தக் கரையில் மகாத்மா வால்மீகி முனிவரின் திவ்ய ஆசிரமம் உள்ளது.
நீ சீதையை அந்த ஆசிரமத்தின் அருகில் விட்டு விடு. சீதை விஷயத்தில் நீ வேறு எந்த விஷயத்தையும் என்னிடம் கூறாதே

எனவே லட்சுமணா ! நீ இப்போது போ. இவ்விஷயத்தில் எதையும் யோசிக்காதே.
நீ எனது இந்த முடிவில் தடை ஏற்படுத்தினால் எனக்கு மிகவும் கஷ்டம்.

ஸாத்வம் த்யத்வா நிருபதினா நிர்தோஷா மம சன்னிதௌ
பௌராபவாத்பீதேன க்ராஹாம் தேவி ந தேஅன்யதா
அஷ்ரமாந்தேஹு ச் மயா த்ய்க்த்வ்யா த்வம் பவிஷ்யஸி
ராக்ஞஹ ஷாஸ்ன்மாதாய ததைவ சில தௌர்வாதம் (பாடல் 13,14 ஸர்க்கம் 47 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

நீங்கள் என் முன்னே குற்றமற்றவராய் நிரூபித்துள்ளீர்கள். இருந்தாலும் மக்களின் அபவாத்திற்குப் பயந்து
மகாராஜா தங்களைத் துறந்து விட்டார். நான் அவரின் ஆணையாகவும் அதுவே தங்களின் விருப்பம் என்றும்
நினைத்துத் தங்களை ஆசிரமத்துக்கு அருகே விட்டு விடுவேன்.

லக்ஷ்மணஸ்ய வசஹ ஸ்ருத்வா தாருணம் ஜனகாத்மஜா
பரம் விவிதமாகம்ய வைதேஹி நிப பாத ஹ (பாடல் 1, ஸர்க்கம் 48 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

லட்சுமணனின் இந்தக் கடுமையான் சொற்களைக் கேட்ட சனகன் மகள் சீதை மனமுடைந்தாள்.
மூர்ச்சையுற்று தரையில் விழுந்தாள்.
மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி என்பதே ராமனின் தீர்க்கமான முடிவாயிருந்தது.
இதன் மூலம் மக்களுக்கு வழிகாட்டுவதை, மறுமலர்ச்சியை மாற்றங்களை முன்னெடுத்துச் செல்வதை
மக்கள் பின்பற்றும் ஆன்மீகவாதிகளிடம் சிந்தனையாளர்களிடமிருந்தே மன்னன் எதிர்பார்க்கிறான். இது ராமனின் தரப்பு.

பிறகு வால்மீகி என்னும் முனிவரின் பராமரிப்பில் மகன்களை வளர்த்து அம்மகன்கள் அசுவமேத யாகத்தின் போது
வந்த குதிரையைப் கைப்பற்றி சித்தப்பாக்களுடன் சண்டையிட இறுதியில்
அப்பாவை நோக்கி அம்பு எய்யும் முன் சீதை வந்து தடுக்கிறாள்.
மறுபடி அயோத்தி வந்த அவளைத் தன் தூய்மையை நிரூபிக்கும் படி ராமன் ஆணையிட பூமித்தாயின் மடியில் ஐக்கியமாகிறாள்.

ஒட்டக்கூத்தரின் பாடல்களில் :

வால்மீகி முனிவரை நோக்கி ராமன் கூறுவான்:
முனிவ நீ அறுளிய மொழியை வானவர்
அனைவரும் யானும் முன்னறிவம் ஆயினும்
கனைகடல் உலகு உளோர் காணல் வேண்டும் என்று
இனையன இராகவன் எடுத்து இயம்பினான் (பாடல் 1257 உத்தர காண்டம் ஒட்டக் கூத்தர் படைப்பு)

‘முனிவரே ! தாங்கள் கூறுவதை நானும் வானோரும் ஏற்கனவே நன்கு அறிவோம்.
ஆயினும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகிலுள்ள மக்கள் சீதையின் கற்பின் சிறப்பை அறிய வேண்டும்.

விசைப் பாசத்தை அறுத்த முனி வேள்வி காத்து மிதிலை புகுந்து
எனக்கா ஈசன் வில்லிறுத்து அன்று எனக்கைப் பிடித்த எழிலாரும்
புனக்காயம் பூ நிறத்தானையன்று ம்ற்றொரு பூ மனலான்
மனத்தால் வாக்கால் நினையேனேல் வழிதா எனக்கு மண்மகளே–(பாடல் 1264 உத்தர காண்டம் ஒட்டக் கூத்தர் படைப்பு)

பாசம் நீக்கிய பற்றற்ற விசுவாமித்திரரின் வேள்வியைக் காத்துப் பிறகு வில்லை ஒடித்து என்னைக் கைப் பிடித்த
ராமனை அன்றி வேறு ஒரு மன்னனை நான் மனதாலோ வாக்காலோ நினையாதும் சொல்லாதும்
இருந்தது உண்மை என்றால் மண்மகளே எனக்குப் பிளந்து வழி விடு.

சேணுலாவிய தலமடந்தை சீதை தன்
பூணுலாவிய புலம் பொருந்தப் புல்லுறுஇ
வாள் நிலாவிய கதிர் வழங்கல் செல்கலாக்
கீணிலைப் படலமும் கிழியப் போயினாள்

நகைகளால் அலங்கரிக்கப்பட்ட சீதையின் தோள்களைப் பற்றி தேவ லோகத்திலிருந்து வந்தவளான
பூமாதேவி சூரியனின் ஒளிகூட நுழைய முடியாத பூமியைப் பிளந்து உள்ளே சென்று மறைந்தாள்.

வால்மீகி ராமாயணத்தில்
ஷீவஹ ப்ரபாதே து ஷபர்த் மைதிலி ஜனகாத்மஜா
கரோது பரிஷன் மத்யே ஷோதனர்த்தே மமைவ ச (பாடல் 6 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

நாளை காலை மிதிலை மன்னரின் மகள் நிறைந்த சபையில் வந்து எனது களங்கத்தைப் போக்கும் சபதம் செய்வாராக.

யனன தத் சத்யமுக்தம் மே வேம்தி ராமாத் பரம் ந ச
ததா மே மாதவி தேவி விவ்ரம் தாதுர்மஹதி (பாடல் 16 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

தஸ்மின்ஸ்து தரணி தேவி பாஹூப்யாம் க்ருஹ்ய மைதிலீம்
ஸ்வாகதேனாபி நந்த்யைநாமாசனே கோபவேஷயத் (பாடல் 19 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

சிம்மாசனத்துடன் பூமாதேவி அழகிய வடிவுடன் வந்தாள். அவள் மிதிலாகுமாரி சீதையைத் தனது இரு கரங்களால்
எடுத்து மடியில் வைத்து வரவேற்கும் விதமாக அவளை வணங்கி சிம்மாசனத்தின் மீது அமர்த்தினாள்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஒட்டக் கூத்தர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஒப்பாய்வு – பால காண்டம்-முனைவர் ஸ்ரீ அ.அ. மணவாளன், பேராசிரியர்–

January 10, 2021

ஒப்பாய்வு பெறும் பால காண்டப் பகுதிகள்

கீழ்வரும் பொருட்கூறுகளின் அடிப்படையில் பால காண்டங்களைப் பற்றிய இவ் ஒப்பியலாய்வு நிகழ்த்தப் பெறுகிறது.

காண்ட அமைப்பு, காப்பிய நோக்கம், காப்பியத் தொடக்கம், நாட்டு
நகர வருணனைகள், இராமனின் பிறப்பு, தாடகை வதம், அகலிகை
சாப நீக்கம், சீதையின் பிறப்பும் திருமணமும், பரசுராமர் எதிர்ப்பு.

காண்ட அமைப்பு

பால காண்டம் 77 சருக்கங்கள், 2355 சுலோகங்கள். முதல் நான்கு
சருக்கங்கள் (220 சுலோகங்கள்) பதிகம் போல அமைந்தது. வான்மீகி
நாரதரைக் கண்டு இராமர் வரலாறு அறிதல், பிரம்ம தேவர்
வான்மீகியின் இராமாயண முயற்சியை ஆசீர்வதித்தல், வான்மீகி
நிட்டையில் அமர்ந்து இராமாயண வரலாறு முழுவதையும்
ஞானக்கண்ணால் கண்டு உணர்ந்து காவியத்தை இயற்றி முடித்தல், குச
லவர்கள் இருவரும் அக்காவியத்தை இனிமையாகப் பாடுவது கேட்டு
இராமபிரான் அவர்களைத் தம் அவைக்கு அழைத்து
அக்காவியத்தைப் பாடுமாறு வேண்ட அவ்விருவரும் பாடத்
தொடங்குதல் ஆகிய செய்திகளைத் தருகின்றன. ஏறக் குறையப்
பாயிரம் போன்ற பணியினை இச் சருக்கங்கள் செய்கின்றன. ஐந்தாம்
சருக்கம் தொடங்கி எழுபத்தேழாம் சருக்கம் முடிய 76 சருக்கங்களா
யமைத்து 2135 சுலோகங்களை உடையதாக வான்மீகியின்
பாலகாண்டம் விளங்குகிறது.
கம்பராமாயணம், சென்னைக் கம்பன் கழகப் பதிப்பின்படி,
பாலகாண்டம் பாயிரம் தவிர்த்து 23 படலங்களையும் 1312
விருத்தங்களையும் உடையதாக விளங்குகிறது. வை. மு. கோ.,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஆழ்வார் திருநகரி, கலாட்சேத்ரா
போன்ற பதிப்புகள் படல எண்ணிக்கையிலும், பாடல்
எண்ணிக்கையிலும், படலப் பெயர்களிலும் வேறுபடுவதைக் காணலாம்.

தெலுகு இராமாயணங்களான ரங்க நாத ராமாயணம், பாஸ்கர
ராமாயணம், மொல்ல ராமாயணம் மூன்றிலும் காண்ட உட்பிரிவுகள்
இல்லை. குமார வான்மீகியின் தொரவெ இராமாயணம்
காண்டந்தோறும் சந்தி என்னும் உட்பிரிவை உடையதாக
விளங்குகிறது. மலையாள இராமாயணங்களில் காண்டப் பிரிவுகள்
உண்டு.

துளசி இராமாயணத்தின் பாலகாண்டம் 361 ஈரடிப் பாக்களையும்
(தோகா) ஒவ்வொரு ஈரடிப் பாவிற்குப் பின்னர் நான்கு நான்கு
நாலடிப் பாக்களையும் (சௌபாயி) உடையதாக விளங்குகிறது. சிற்சில
இடங்களில் ஒரே எண்ணின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட ஈரடிப்
பாக்களும் (29. அ. ஆ. இ), நான்கிற்கும் மேற்பட்ட நாலடிப்
பாக்களும் (327), சில இடங்களில் நாலடிப் பாவிற்கும் ஈரடிப்
பாவிற்கும் இடையில் இயைபுத்தொடை அமைந்த நாலடிச் சந்தப்
பாடல்களும் 326), விரவிக் காணப்படுகின்றன. காண்டப் பிரிவு தவிர,
படலம், சருக்கம் போன்ற உட்பிரிவுகள் உடையதாகத் துளசியின்
காப்பியம் அமையவில்லை.

பல்வேறு இராமாயண நூல்களை நோக்குமிடத்து வான்மீகத்தைப்
பின்பற்றிய இராமாயணங்கள் எல்லாம் காண்டப் பிரிவுகளில் வான்மீகி
இராமாயணத்தை ஒத்து அமைகின்றன என்றும், காண்டத்தின்
உட்பிரிவுகளைப் பொறுத்தவரையில் தத்தம் இலக்கிய மரபிற்கேற்பப்
படலம், சருக்கம், சந்தி போன்ற உட்பிரிவுகளைக் கொண்டு
அமைகின்றன என்றும், சில உட்பிரிவுகளே இல்லாமல் பாடல்
எண்களை மட்டும் கொண்டு அமைந்துள்ளன என்றும் அறிகிறோம்.

துளசி இராமாயணத்தின் அமைப்பைப் பொறுத்த வரையில், 361
ஈரடிப் பாடல்களையும் அவற்றிற்குரிய நாலடிப் பாடல்களையும்
உடையதாகக் காணுகிறோம். பாலகாண்டத்தின் முதல் 43 ஈரடிப்
பாடல்களை வாழ்த்து, அவையடக்கம் ஆகியவற்றைக் கொண்ட
பாயிரப் பகுதியாக விளங்குகிறது. சிவன், சக்தி இருவரின் விவாதம்,
தக்கன் வேள்வி அழிவு, சிவன் – சக்தி திருமணம், மன்மதன் அழிவு,
இராமனின் அவதாரத்திற்குரிய காரணங்கள்,
நாரதன் வரவு – மனு, சதரூபன் ஆகியோர் தவமும் வரமும்,
பிரதாப பானுவின் வரலாறு, இராவணனின் பிறப்பும், தவமும், வரமும்,
கொடுமையும், பூமி தேவியின் முறையீடு, திருமால் அவதாரம் எடுக்க
இசைதல் எனப் பல செய்திகள் 44 முதல் 187 வரையிலான
ஈரடிப்பாக்களில் பேசப்படுகின்றன. 188 முதல் 361 வரையிலான
எஞ்சியுள்ள (காண்டத்தில்பாதிக்கும் குறைவான) 174 ஈரடியில்
இராமனின் பிறப்பு முதலான பாலகாண்டச் செய்திகள்
பேசப்படுகின்றன. இடைக்காலன் புராணங்களின் செல்வாக்கையும்,
பிற்கால வழிபாட்டு, பிரச்சார பக்தி இயக்கத்தின் தாக்கத்தையும் துளசி
ராமாயணம் தெற்றென விளக்குகிறது,

பால காண்டத்தைப் பொறுத்த வரையில், வான்மீகி கம்பன், துளசி,
பாஸ்கரர், நரஹரி ஆகிய கவிஞர்கள் தம் காண்டப் பொருளை
எவ்வாறு அமைத்து உள்ளனர் என்பதை அடுத்த பக்கத்தில் உள்ள
அட்டவணை விளக்குகிறது.

காப்பிய நோக்கம்

குறிக்கோள் மனிதன் ஒருவனைப் படைத்துக் காட்டுவதை வான்மீகி
இராமாயணம் நோக்காக உடையது.

பாகவத புராணம், நரசிம்ம புராணம், அத்யாத்ம ராமாயணம்,
அற்புத ராமாயணம், வசிஷ்ட ராமாயணம் ஆகியன இராமனைத்
திருமாலின் அவதாரமாகக் கருதி அவன் தீயவர்களை அடக்கி
நல்லவர்களைக் காப்பதற்காக மேற்கொண்ட அவதாரச் செயல்களை
விளக்கி, ஆன்மீக உணர்வுகளை ஊட்டுவதை நோக்கமாகக்
கொண்டுள்ளன. மானுடக் காப்பியம் என்னும் நிலையில் இருந்து
விலகிப் புராணப் பாங்கு உடையனவாக இவை இயற்றப் பெற்றுள்ளன.

தசரத ஜாதகம், தசரத கதனம் என்னும் பௌத்த நூல்களும்,
விமலசூரியின் பௌம சரிதம், இரவிசேனரின் பத்மபுராணம்,
குணபத்ரனின் உத்தரபுராணம், கன்னட பம்ப ராமாயணம் ஆகிய
சமண நூல்களும் தத்தம் சமயப் பேருண்மைகளைக்
கடைப்பிடித்தொழுகும் குறிக்கோள் பாத்திரமாக இராமனைப்
படைத்துக் காட்டுகின்றன. பாடு பொருளில் வான்மீகியின் மூலக்
கதையிலிருந்தும், பாகவத புராணம் முதலான வடமொழி இராமாயணக்
கதைகளிலிருந்தும் இவை பெரிதும் வேறுபடுகின்றன. காப்பிய
மாந்தர்களின் பெயர்களை மட்டும் மாற்றாமல், காப்பிய நோக்கம்,
கதை நிகழ்ச்சிகள், காப்பிய மாந்தர்களின் தோற்றம், காப்பிய

வால்மீகி -77 -சர்க்கம் -2355 ஸ்லோகங்கள் –
கம்பர் -21 படலங்கள் -1312-பாடல்கள்

தெலுகு மொழியின் முதல் இராமாயணக் காப்பியமாகிய ரங்கநாத
இராமாயணம் நீண்ட வாழ்த்துப் பகுதியைக் கொண்டுள்ளது. சரஸ்வதி,
கணபதி முதலான பல கடவுளர்களையும் வான்மீகி முனிவரையும் தம்
காப்பிய வெற்றிக்காக வணங்கும் பாங்கு காணப்பெறுகிறது.
இதனையடுத்துத் தோன்றிய பாஸ்கர இராமாயணமும் மொல்ல
இராமாயணமும் இவ்வாறே பன்முக வாழ்த்தை உடையனவாக இயற்றப்
பெற்றுள்ளன. கன்னட முதல் இராமாயணக் காப்பியமாகிய
பம்பராமயணததில் அருகக் கடவுள் வணக்கம் காப்பிய நிறைவுக்கு
ஆசிவேண்டும் பான்மையில் அமைந்துள்ளது. இதனையடுத்துத்
தோன்றிய குமாரவான்மீகியின் தொரவெ இராமாயணத்தின் முதற்
சந்தி (படலம்) முழுவதும் பன்முகக் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளது.
பெருவழக்காக வழங்கும் மலையாள இராமாயனங்களில் இராம
பணிக்கரின் கன்னச இராமாயனமும், எழுத்தச்சனின் அத்யாத்ம ராமா

யணமும் குறிப்பிடத்தக்கவை. இவை இரண்டுமே பிரம்மா, கணபதி,
சரஸ்வதி, சிவன் முதலான கடவுளர்களையும், வான்மீகி முதலான
முனிவர்களையும், பிராமணர், குருமார், ஆசிரியர் போன்ற
சான்றோர்களையும் வணங்கித் துதிக்கும் நீண்ட வாழ்த்துப்
பகுதிகளைக் கொண்டுள்ளன. துளசிதாசர் தம் வாழ்த்துப் பகுதியில்
வாணி, விநாயகர், பவானி, சங்கரன், தம் ஆசிரியர், வான்மீகி,
அனுமன், சீதை, இராமன் ஆகியோர்க்கு வணக்கம் செலுத்துகிறார்.
தாம் இராமாயணத்தை இயற்றிய காரணத்தைக் கூறிய பிறகு மீண்டும்
கணேசர், விஷ்ணு, சிவன், தம் ஆசிரியர், அந்தணர், துறவியர்,
சான்றோர் ஆகியோரை வணங்குகிறார். சான்றோர்க்கு மட்டுமன்றித்
தீயோர்க்கும் வாழ்த்தில் இடம் தந்தவர் காப்பிய உலகில் துளசிதாசர்
ஒருவர்தான் போலும். பிறர் துன்பம் கண்டு மகிழ்ந்தும், பிறர்
ஆக்கம் கண்டு பொறாது பொருமி வருந்தியும் பிறர்க்கு கேடு
சூழ்வதில் இன்பம் காணும் தீயோரைத் தம் இரு கையெடுத்து
வணங்குவதாகக் கூறுகிறார். எனவேதான், கடவுளர், அரக்கர்,
பாம்புகள், பறவைகள், கந்தர்வர், கின்னரர், பேய்க்கணம் எனப்
பல்வேறுபட்டவர்களையும் துளசிதாசர் வாழ்த்துகிறார்.

மேற்கண்ட காப்பியங்களின் வாழ்த்துப் பகுதிகளைத் தொகுத்து
நோக்குமிடத்துக் கீழ்க்காணும் செய்திகள் புலனாகின்றன.

ஆதிகாவிய கவிஞராகிய வான்மீகி இராமனின் சரிதத்தைக்
கூறப்புகுந்தாரே தவிர, கடவுள் வாழ்த்தாக எந்தக் இறைவனையும்
வணங்கவில்லை. தலைமுறைகள் பலவாக மாறி வந்தபோது வான்மீகி
இராமாயணத்தை ஓதியவர்கள் தத்தம் மரபுக்கேற்பப் பல
தெய்வங்களை வணங்கும் வாழ்த்துச் சுலோகங்களை எழுதி
வைத்துள்ளமையைப் பிற்கால ஏடுகள் காட்டுகின்றன. எனினும், அவை
நூலுள் இடம் பெறாமல் முற்சேர்க்கையாகக் காணப்படுகின்றன.
வடபுல, தென்புலமாகிய இருவழக்கு (Northern Recension and
Southern Recensuion) ஏடுகளிலும் இத்தன்மை கணப்படுகிறது.

கம்பன் காப்பியத்தில் முதற் பாடலில் பரம்பொருள் வணக்கம்
சொல்லப்படுகிறது. பிற காண்ட முகப்புகளில் காணப்பெறும்
பாடல்களுள் மூன்று பரம்பொருளையும், இரண்டு இராமனையும்
வாழ்த்துவனவாக உள்ளன. அதனாலும், ஏற்புடைக் கடவுளாதலாலும்
கம்பனின் கடவுள் வாழ்த்தைத் திருமால் வாழ்த்தாகக் கொள்வோரும்
உளர். பாடலைப் பொறுத்தவரை பொதுவில் பரம்பொருளின்
தன்மையைப் பகர்வதாக மட்டுமே தோன்றுகிறது. சேக்கிழாரின்
பாயிரத்தில் வரும் வாழ்த்தை நோக்கினால்இவ்வேறுபாடு இனிது புலனாகும். பக்தி இயக்கத்தின் பண்பாட்டு
விளைச்சலாக இடைக்கால இலக்கியங்கள் தமிழில் பெருகிய காலத்தே
தலைமுறை மாற மாறக் கம்பனைக் கற்றவர்களும்
பெயர்த்தெழுதியவர்களும் தத்தம் அநுபவம், ஆர்வம், சார்பு
போன்றவற்றின் விளைவாக நம்மாழ்வார், கலைமகள், அயன், அரன்,
விநாயகர் போன்ற பிற கடவுளர் பற்றியும், இராமன், சீதை, அனுமன்
போன்ற இராமாயணப் பாத்திரங்கள் பற்றியும் வாழ்த்துப் பாடல்களைக்
கம்பன் கவியெனவே தோன்றுமாறு யாத்து நூலின் பாயிரப் பகுதியிலே
சேர்த்திருக்கலாம் எனவும் தோன்றுகிறது. இவற்றைக் கம்பன் கழகப்
பதிப்பு மிகைப்பாடல்களாகக் காட்டுகிறது.

தெலுகு இராமாயணங்கள் கி. பி. 13ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர்த்
தோன்றியவை. ஒப்பாய்வுக்கு மேற்கொள்ளப்பெற்ற மூன்று இராமாயண
நூல்களும் கோதாவரி, கிருஷ்ணாவின் சமவெளிப் பகுதகளில்
இயற்றப்பெற்றவை. தமிழ்ச் சோழ அரச குடும்பத்தோடு பல
நூற்றாண்டுகளாகப் பல வழிகளில் தொடர்புடையவை இப்பகுதிகள்
என்பது நினைவிற் கொள்ளத்தக்கது. பக்தி இலக்கிய மரபு
இப்பகுதிகளின் வழியாக வடபுல இலக்கியங்கட்கு எட்டியது. எனவே,
சைவ, வைணவ, புராண மரபுகளுக்கு உட்பட்ட பல்வேறு
கடவுளர்களின் வாழ்த்தைத் தெலுகு இராமாயணக் கவிஞர்களே
இயற்றியுள்ளனர். ஆதலின் நூலின் பகுதியாகவ இவை
அமைந்துள்ளன எனக் கொள்ள நேர்கிறது.

விமலசூரியின் பௌம சரிதமாகிய ஜைன ராமாயணத்தைப்
பின்பற்றி எழுந்த கன்னட பம்ப ராமாயணம் அருகக் கடவுள்
வாழ்த்தை மட்டும் பெற்றுள்ளது. பிற கடவுளர் வாழ்த்து காணப்
பெறவில்லை. இதற்கு மிகவும் பிற்பட்டுத் தோன்றியது தொரவெ
இராமாயணம். பக்தி இலக்கியப் பண்பாடு மேல்தட்டு மக்களோடு
அமையாமல் சாதாரண, கல்வியறிவு முழுமைபெறும் வாய்ப்பற்ற
பொதுமக்களிடையே சமயச் சொற்பொழிவுகள் கூட்டு வழிபாடு
(பஜனை) என்னும் வடிவில் பரவியிருந்த காலத்தே இது தோன்றியது.
எனவே, இதன் வாழ்த்துப் பகுதியில் மும்மூர்த்திகள், தேவகணங்கள்,
விநாயகர், சரஸ்வதி முதலாய தெய்வங்கள், வான்மீகி முதலான
முந்தைய கவிஞர்கள், சான்றோர்கள், சமயத் தலைவர்கள் எனப்பல
வேறுபட்ட தலைமைகளைத் தொழும் பன்முக வாழ்த்தினைத்
தொரவெ இராமாயணத்தில் காண்கிறோம்.

மலையாள இராமாயணங்களும் இதே காலகட்டத்திற்கு
உரியவையாதலின் மேற்காட்டியவாறே பன்முக வாழ்த்தினைக்
கொண்டுள்ளன.

—————————-

தசரத ஜாதகம், தசரத கதனம் என்னும் பௌத்த
இராமாயணங்களும், விமல சூரியின் பௌம சரிதம், சங்கதாசரின்
வாசுதேவ ஹிண்டி, இரவிசேனரின் பத்ம புராணம் ஆகிய ஜைன
ராமாயணங்களும் வான்மீகியைப் பின்பற்றி எழுதப்பெற்றன அல்ல.
கதையின் அடிச்சட்டகம் வான்மீகியின் காப்பியத்தோடு
ஒத்திருப்பினும், அவதாரக் கோட்பாட்டை இவை ஏற்காமல், இராமனை
ஒரு குறிக்கோள் மனிதனாகத் தத்தம் மதக்கோட்பாட்டிற்கேற்ப
படைத்துக் காட்டுகின்றன. கதைகள், பாத்திரப் பெயர்கள், பாத்திரப்
பிறப்புகள், போர்முடிபுகள் எனப் பல கூறுகளில் இவை
வான்மீகத்திலிருந்து பெரிதும் மாறுபட்ட பாடுபொருளை
உடையனவாய் விளங்குகின்றன.

———-

மொல்ல ராமாயண ஆசிரியராகிய அம்மையார்,
‘இராமர் எனக்குக் கூறியவாறே நான் இந்த இராமாயணத்தைப் பாடியுள்ளேன். எனவே, இம்மை மறுமைப்
பயன்களை அடையும் சாதனமாகிய இப்புண்ணிய சரிதத்தில்
காணப்படும் குறைகளைக் கவிஞர் பெருமக்கள் எண்ணிப்
பார்க்கலாகாது’ என்று கூறும் பகுதி அவையடக்கமாக அமைகிறது.

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.-

ஸ்ரீ கம்ப ராமாயணத்தில் முக்கிய பாடல்களின் தொகுப்பு–

January 10, 2021

ஸ்ரீ கடவுள் வாழ்த்து –

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. -1)

(உளஆக்கல் – படைத்தல்; பெறுத்தல் – காப்பாற்றுதல்; அலகு இலா – அளவில்லாத)
எல்லா உலகங்களையம் தானே தனது சங்கல்பத்தால் படைப்பதையும், நிலைத்திருக்குமாறு காப்பதையும்,
அழிப்பதையும், என்றும் முடிவுறாத அளவில்லாத அழகிய விளையாட்டாக உடையவர்.
அவரே தலைவர். அப்படிப்பட்ட பரமனையே நாங்கள் சரணடைகிறோம்.

—-

காவியம் பிறந்த களம்-

நடையில் நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்ததே. (2)-

(பேர் – புகழ்மிக்க; தொடை – செய்யுள்; தோம் அறு – குற்றமற்ற; மாக்கதை – மகத்தான கதை)
நல்வழியில் நின்று உயர்ந்த நாயகனின் தோற்றமாக நிகழ்ந்தது புகழ்மிக்க இராமாவதாரம்.
அந்த மகத்தான கதையைக் கூறும் செய்யுள்கள் நிறைந்த குற்றமற்ற சிறந்த இந்தக் காவியம்,
வள்ளல் சடையனின் திருவெண்ணெய் நல்லூரில் இயற்றப்பட்டது
(காவியம் முழுவதும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தனது பெயரை எங்கும் கூறவில்லை.
தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலின் பெயரை மட்டுமே தொடக்கத்திலும் வெகுசில இடங்களிலும் கூறுகிறார்).

———-

கோசல நாட்டு வளம்-

வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்,
தீம் கவி, செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்;
ஆங்கு, அவன் புகழ்ந்த நாட்டை, அன்பு எனும் நறவம் மாந்தி,
மூங்கையான் பேசல் உற்றான் என்ன, யான் மொழியல் உற்றேன். (3)-

(வாங்க அரும் – எடுக்க முடியாத; பாதம் – அடிகள்; வகுத்த – இயற்றிய; தீம் கவி – அமுதமயமான கவி;
நறவம் – மது; மாந்தி – பருகி; மூங்கையான் – ஊமை; மொழியல் – பேசுதல்)
ஒரு சொல்லைக் கூட எடுத்து விட முடியாதபடி, நான்கு அடிகள் கொண்ட (இருபத்து நான்காயிரம்) சுலோகங்களால்
இராமாயணத்தை இயற்றினான் வான்மீகி முனிவன். தேவர்களும் தம் செவிகளே வாயாகப் பருகும்படி
இனிமையான அமுதமயமான கவிதைகளைச் செய்தான். தனது ஆதி காவியத்தில் அந்த முனிவன்
புகழ்ந்துரைத்த (கோசல) நாட்டை, அன்பு என்னும் மதுவைப் பருகி,
ஊமையே பேசத் தொடங்கி விட்டான் என்றது போல நான் பேசலானேன்.

———-

திருமால் தேவர்களுக்கு வரம் தருதல்-

‘மசரதம் அனையவர் வரமும் வாழ்வும், ஓர்
நிசரத கணைகளால் நீறு செய்ய, யாம்
கசரத துரகம் ஆள் கடல் கொள் காவலன்
தசரதன் மதலையாய் வருதும் தாரணி. (4)-

(மசரதம் – கானல் நீர்; நிசரத – குறிதவறாத; நீறு செய்ய – சாம்பலாக்க;
கச ரத துரகம் – யானை தேர் குதிரை; மதலை – மகன்; தாரணி – உலகம்).
“கானல் நீரைப் போன்ற அரக்கர்களுடைய வரங்களின் பலத்தையும் வாழ்வையும், குறிதவறாத அம்புகளால்
சாம்பலாக்கி அழிப்பதற்காக, யானை தேர் குதிரை காலாள் என்னும் கடல் போன்ற நான்கு சேனைகளையுடைய
வேந்தன் தசரதனுக்கு மகனாக, நானே உலகத்தில் வந்து அவதரிக்கிறேன்”.

———–

கோசலை இராமனைப் பெறுதல்-

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்
கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்
திரு உறப் பயந்தனள் திறம் கொள் கோசலை. (5)-

(ஒருபகல் – ஒரு காலத்தில்; உதரத்துள் – வயிற்றில்; அருமறை – வேதம்;
உணர்வு அரும் – தெரிந்து கொள்ள இயலாத; அஞ்சனம் – மை;
திருஉற – மங்கலம் நிறைந்திட, பயந்தனள் – பெற்றாள்)
ஒரு காலத்திலே, பிரளயத்தின்போது, எல்லா உலகங்களையும் தனது வயிற்றிலே அடக்கியவன்,
அரிய வேதங்களாலும் தெரிந்து கொள்ள இயலாதவன் அந்தப் பரம்பொருள். மை போன்றும்,
கருமேகம் போன்றும் அழகுடைய சோதி வடிவாய்த் திகழ்பவன். அவனை, உலகம் எங்கும் மங்கலம் நிறைந்திட,
தெய்வத்திறம் கொண்ட கோசலை தன் வயிற்றில் பெற்றெடுத்தாள்.

———

இராம லக்குமணர் வேள்வி காத்தல்-

எண்ணுதற்கு ஆக்க அரிது; இரண்டு மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற இமையில் காத்தனர். (6)-

நினைத்துப் பார்ப்பதற்கும் செய்வதற்கும் மிக அரிய செயல் இது! விசுவாமித்திர முனிவர் தேவர்களின்
பொருட்டுச் செய்த வேள்வியை, நல்லாட்சி செய்து காக்கும் மன்னனான தசரதனுடைய மைந்தர்களான
இராம இலக்குவர்கள், கண்விழியைக் காக்கும் இமைபோல, ஆறு நாட்கள் வரை காப்பாற்றினர்.

———–

விசுவாமித்திரன் இராமனைப் புகழ்தல்

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்றோர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மைவண்ணத்து அரக்கி போரில், மழைவண்ணத்து அண்ணலே! உன்
கைவண்ணம் அங்கு கண்டேன்; கால்வண்ணம் இங்கு கண்டேன். (7)-

(உய்வண்ணம் – உய்யும் வழி; மழை – மேகம்; அண்ணல் – இராமன்)
“இவ்வாறு அகலிகையின் வரலாறு முற்காலத்தில் நிகழ்ந்தது. இனிமேல் (நீ அவதரித்த பின்பு)
இந்த உலகத்து உயிர்களெல்லாம், கடைத்தேறும் வழியே அல்லாமல், அதற்கு மாறாக,
துன்பத்தின் வழியை அடைதல் கூடுமோ? மேகம் போன்ற கரிய திருமேனியுடைய இராமனே!
அங்கு வனத்தில் மை போன்று கரிய நிறம் கொண்ட தாடகை என்னும் அரக்கியோடு செய்த போரில்,
உன் கைவண்ணம் (வில்லினது ஆற்றல்) பார்த்தேன். இங்கு, கால்வண்ணம்
(அகலிகைக்கு சாபவிமோசனம் அருளிய திருவடியின் பெருமையை) பார்க்கிறேன்”.

—————

இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொள்ளுதல்-

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். (8)

(நலத்தினாள் – அழகுடையவள்; இனையள் – இவ்வாறு; நின்றுழி – நின்றபொழுது)
மனத்தால் எண்ணுவதற்கும் அரிய அழகுடைய சீதை, இவ்வாறு (கன்னிமாடத்தில்) நின்றபொழுது,
ஒருவர் கண்களோடு மற்றொருவர் கண்கள் கவர்ந்து பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று உண்ணவும்,
இருவரது சிந்தையும் நிலையழிந்து போய், ஒன்றுடன் ஒன்று கூடின.
இராமன் சீதையைப் பார்த்தான். அவளும் இராமனைப் பார்த்தாள்.

—————

இராமன் கையில் சிவ தனுசு என்னும் பெரிய வில் உடைதல்-

தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில்
மடுத்ததும், நாண் நுதி வைத்ததும், நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார். (9)-

(தாளில் – பாதத்தில்; மடுத்ததும் – மிதித்ததையும்; நுதி – முனை; நோக்கார் – பார்க்கவில்லை;
கடுப்பினில் – வேகத்தால்; அறிந்திலர் – அறியவில்லை; இற்றது – முறிந்தது)
சபையோர் யாவரும் கண் கொட்டுவதைக் கூட தவிர்த்து, இமைக்காதபடி, நிகழ்வதைப் பார்த்து நின்றனர்.
இராமன் தன் திருவடியால் அந்த வில்லின் முனையை மிதித்ததையும், அதை வளைத்து மற்ற முனையில்
நாண் ஏற்றியதையும், அந்தச் செயல் நிகழ்ந்த வேகத்தால் அவர்களால் காண முடியவில்லை.
மனத்தாலும் இன்னது தான் நிகழ்ந்தது என்று அவர்களால் அறிய முடியவில்லை.
இராமன் தன் கையால் வில்லை எடுத்ததைக் கண்டார்கள்.
அடுத்த கணம் அந்த வில் முறிந்து விழுந்த பேரொலியைக் கேட்டார்கள்!

————-

இராமன் சீதை மணக்கோலம்-

மன்றலின் வந்து மணத் தவிசு ஏறி
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து
இன் துணை அன்னமும் எய்தி இருந்தார்
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார். (10)

(மன்றல் – நல்வாசம்; தவிசு – ஆசனம்; வென்றி – வெற்றி; ஆர்வத்து – அன்புகொண்ட; எய்தி – நெருக்கமாக)
நறுமணப் பொருள்களின் நல்வாசத்தோடு வந்து, திருமணத்துக்குரிய ஆசனங்களில் ஏறி, பெருமைக் குணங்களை
உடைய வெற்றிவீரனான இராமனும், அவன்மீது பேரன்பு கொண்டவளாய், அவனுக்கு இனிய துணையாக ஆகவுள்ள
அன்னம் போன்ற சீதையும் நெருக்கமாக வீற்றிருந்தார்கள். ஒன்றோடு ஒன்று இணைந்த போகத்தையும்
(பேரின்ப வாழ்வு) யோகத்தையும் (யோக நெறி) போல இருந்தார்கள்.

————-

அயோத்தியா காண்டம்
இராமன் முடிசூடுவான் என்று கேட்ட மக்களின் மகிழ்ச்சி-

‘பாவமும் அருந் துயரும் வேர் பறியும்’ என்பார்;
‘பூவலயம் இன்று தனி அன்று; பொது’ என்பார்;
‘தேவர் பகை உள்ளன இவ் வள்ளல் தெறும்’ என்பார்;
‘ஏவல் செயும் மன்னர் தவம் யாவது கொல்?’ என்பார். (11)

(பூவலயம் – பூமி; தெறும் – அழிப்பான்; யாவது கொல் – எப்படிப் பட்டதோ)
இவன் ஆட்சி செய்தால் தீவினைகளும் பெரிய துன்பங்களும் வேரோடு அழியும் என்பார் சிலர்.
இனிமேல் இந்தப் பூமி சிலருக்கு மட்டுமே தனியுரிமை அல்ல, எல்லார்க்கும் பொதுவானதாகும் என்பார் சிலர்
(இராமன் ஆளும்போது தாங்களே ஆளுவதாகக் கருதினர்). தேவர்களுக்குப் பகையான அரக்கர் கூட்டங்களை
வள்ளல் இராமன் அழிப்பான் என்பார் சிலர். இவனுக்குப் பணிபுரியும் அரசர்கள் அந்த பாக்கியத்தைப் பெற
எப்பேர்ப்பட்ட தவம் செய்தார்களோ என்பார் சிலர்.

——————–

கைகேயி ‘மன்னன் ஆணை இது’ என்று கூறுதல்-

‘ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்,
தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அரும் தவம் மேற்கொண்டு
பூழி வெங்கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி
ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன்’ என்றாள். (12)-

(ஆழி – கடல்; தாழ் இருஞ்சடைகள் – தொங்குகின்ற பெரிய சடைகள்; பூழி – புழுதி;
வெங்கானம் – கொடிய கானகம்; நண்ணி – சென்று)
கடல் சூழ்ந்த இந்த உலகம் முழுவதையும் பரதனே முடிசூடி ஆட்சி செய்வான். நீ நாட்டை விட்டுப் போய்,
சடாமுடி தாங்கி, செய்வதற்கரிய தவத்தை ஏற்று, புழுதி நிறைந்த கொடிய காட்டை அடைந்து,
புண்ணியத் தீர்த்தங்களில் நீராடி, பதினான்கு ஆண்டுகள் கழித்த பின்பு திரும்பி வரவேண்டும்
என்று அரசன் கூறினான் – இவ்வாறு கைகேயி சொன்னாள்.

————–

கைகேயி சொற்கேட்ட இராமன் நிலை-

இப்பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கில்
ஒப்பதே முன்பு பின்பு; அவ்வாசகம் உணரக் கேட்ட
அப்பொழுது, அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா! (13)

(எம்மனோரால் – எம்மைப் போன்றவர்களால்; செவ்வி – அழகு)
இப்பொழுது எம்மைப் போன்றவர்களால் சொல்லுவதற்கு எளிதோ? யாரும் சொல்லித் தீராத நற்குணங்களையுடைய
இராமனுடைய திருமுகத்தின் அழகைப் பார்த்தால், அது கைகேயி சொன்னதைக் கேட்பதற்கு முன்பும்,
கேட்ட பின்பும் ஒன்று போலவே, செந்தாமரை போலவே இருந்தது.
ஆனால், அந்தச் சொற்களைத் தெரியும்படி கேட்ட அந்த சமயத்தில், மலர்ந்த செந்தாமரையை வென்று விட்டது!

——————-

சீற்றம் கொண்ட இலக்குவனுக்கு இராமன் உரைத்தது-

‘நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான். (14)

(நறும்புனல் – நல்ல நீர்; அற்றே – அது போல; பதி – தலைவன், தந்தை; பயந்து – பெற்று;
புரந்தாள் – வளர்த்தாள்; மைந்த – மகனே; வெகுண்டது – கோபித்தது)
மகனே! என்றும் நீரோடும் நதியில் ஒரு சில காலங்களில் நல்ல நீர் இல்லாமல் வற்றிப் போவது,
அந்த நதியின் குற்றம் அன்று. அது போல, (என்னை வனவாசம் போகச் சொன்னது) நம் தந்தையின் குற்றம் அன்று.
(அப்படி வரம் வாங்கியது) நம்மைப் பெற்றுக் காப்பாற்றி வளர்த்த கைகேயியின் அறிவின் குற்றம் அன்று.
அவள் மகன் பரதனது குற்றமும் அன்று. இது விதியால் (நமது ஊழ்வினையால்) விளைந்த குற்றம்.
இந்தச் செயலுக்கு இவர்களை எல்லாம் காரணமாக்கி நீ கோபித்தது ஏன்?’ என்றான் (அன்பு மிகுதியால், தம்பியை மகனே என்றது).

————-

சீதை நானும் உடன் வருவேன் எனல்-

‘பரிவு இகந்த மனத்து ஒரு பற்றிலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு நின்
பிரிவினும் சுடுமோ பெருங்காடு?’ என்றாள். (15)

(இகந்த – இல்லாத; ஒருவுகின்றனை – விட்டுச்செல்கிறாய்; ஊழி – பிரளயம்; அருக்கன் – சூரியன்;
யாண்டையது – எங்குள்ளது; ஈண்டு – இங்கு)
பரிவில்லாத மனத்துடன், ஒரு சிறு பற்று கூட இல்லாமல், என்னை விட்டுவிட்டுச் செல்வேன் என்கிறாய்.
பிரளய காலத்துச் சூரியன் போல எரியும் இடம் எங்குள்ளது?
(காட்டிலே வெப்பம் இப்படி இருக்கும் என்று இராமன் முன்பு கூறியதைச் சுட்டுகிறாள்).
உன் பிரிவைக் காட்டிலும் அந்தப் பெரிய காடு சுடுமோ? என்றாள்.

—————

இராமன் காடு செல்வது கேட்ட மாந்தர் நிலை-

கிள்ளையொடு பூவை அழுத; கிளர் மாடத்து
உள் உறையும் பூசை அழுத; உரு அறியாப்
பிள்ளை அழுத; பெரியோரை என் சொல்ல?
வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால். (16)

(கிள்ளை – கிளி; பூவை – நாகணவாய்; பூசை – பூனை; மாற்றத்தால் – சொல்லால்)
இராமன் வனவாசம் செல்வான் என்று சொல்லிய சொல்லால், கிளியும், நாகணவாய்ப் பறவையும் (மைனா) அழுதன.
மாளிகையின் மாடங்களுக்கு உள்ளே இருந்த வீட்டுப் பூனைகள் அழுதன. வடிவத்தைப் பார்த்து அறிய மாட்டாத
சிறு குழந்தைகள் கூட அழுதன. பெரியோர்கள் அழுததைப் பற்றி என்னவென்று சொல்வது?

——————-

இராமன், சீதை, இலக்குவன் மூவரும் வனத்துக்குள் போதல்-

தையல் தன் கற்பும், தன் தகவும், தம்பியும்,
மை அறு கருணையும், உணர்வும், வாய்மையும்,
செய்ய தன் வில்லுமே சேமம் ஆகக் கொண்டு,
ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே. (17)

(தையல் – பெண், சீதை; தகவு – மேன்மை; மை – குற்றம்; உணர்வு – ஞானம்; செய்ய – நிமிர்ந்த;
சேமம் – பாதுகாப்பு; அல்லின் நாப்பண் – நள்ளிரவில்)
சீதையின் கற்பும், தனது மேன்மைப் பண்பும், தம்பியாகிய இலக்குவனும், குற்றமற்ற கருணையும்,
ஞானமும், சத்தியமும், நிமிர்ந்த தனது வில்லும் ஆகிய இவற்றையே பாதுகாவலாகக் கொண்டு
நள்ளிரவில் அந்தக் காட்டு வழியிலே ஐயன் இராமன் சென்றான்.

—————–

குகனின் ஓடத்தில் ஏறி கங்கையைக் கடத்தல்-

‘விடு, நனி கடிது’ என்றான்; மெய் உயிர் அனையானும்,
முடுகினன் நெடு நாவாய், முரி திரை நெடு நீர்வாய்;
கடிதினின், மட அன்னக் கதிஅது செல, நின்றார்
இடர் உற, மறையோரும் எரி உறு மெழுகு ஆனார். (18)

(கடிது – வேகமாக; முடுகினன் – செலுத்தினான்; நாவாய் – ஓடம்; முரி திரை – அலையடிக்கின்ற; நீர்வாய் – நீரோட்டத்தில்)
‘வேகமாக விடு’ என்று இராமன் கூற, அவனிடத்து உடம்பும் உயிரும் போன்ற நட்பை உடைய குகன்,
அலையடிக்கின்ற நீண்ட நீரோட்டத்தில் பெரிய ஓடத்தை விரைந்து செலுத்தினான். அந்த ஓடம் இளம் அன்னப்பறவை
நீரில் நீந்துவது போலச் சென்றது. கரையிலே நின்றவர்கள் பெரும் துன்பமடைந்தார்கள்.
மறையவர்கள் நெருப்பில் பட்ட மெழுகைப் போல மனம் உருகி இரங்கினார்கள்.

———————-

இராமன் வனம் சென்றது அறிந்த தசரதன் உடனே உயிர்விடுதல்-

நாயகன் பின்னும் தன் தேர்ப் பாகனை நோக்கி, ‘நம்பி
சேயனோ? அணியனோ? ‘என்று உரைத்தலும், தேர் வலானும்,
‘வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும்
போயினன் ‘என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான். (19)

(தேர்ப்பாகன் – தேரோட்டி; நம்பி – இராமன்; சேயனோ – தொலைவில் உள்ளானோ; அணியனோ – அருகில் உள்ளானோ;
தேர் வலான் – சாரதி; வேய் – மூங்கில்; கானம் – கானகம்; மிதிலைப் பொன்- மைதிலி, சீதை; போழ்தத்தே – பொழுதிலே)
தசரதன் மீண்டும் தன் தேர்ப்பாகனாகிய சுமந்திரனைப் பார்த்து, “இராமன் தொலைவில் உள்ளானா அண்மையில் உள்ளானா?”
என்று கேட்டான். “இராமன் இலக்குவனும் மைதிலியும் உடன்வர மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்துள்ள காட்டுக்கு போய்விட்டான்”
என்று அவன் கூறிய அப்பொழுதே தசரதன் உயிர் நீத்தான்.

————–

பரதன் படையுடன் வருவதைத் தொலைவில் கண்டு குகன் உரைத்த வீர உரைகள்-

அஞ்சன வண்ணன், என் ஆருயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசெய்திய மன்னரும் வந்தாரே !
செஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன, செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், நாய்க்குகன் என்று எனை ஓதாரோ? (20)

(அஞ்சனம் – மை; செஞ்சரம் – சிவந்த அம்பு; உஞ்சு – உய்ந்து, தப்பித்து)
மை போலும் கரிய திருமேனி அழகன், என் ஆருயிர் நாயகன் இராமன் அரசு ஆளாதபடி, சூழ்ச்சியால் அந்த
அரசாட்சியைக் கைப்பற்றி அடைந்த மன்னர் பரதர் இதோ வருகிறார்! தீ உமிழும் எனது சிவந்த அம்புகள்
இவர்கள் மேல் செல்லாமல் போய்விடுமோ? இவர்கள் (என் அம்புக்குத் தப்பிப்) பிழைத்து
(இராமன் இருக்கும் இடத்துக்குப்) போய்விட்டால் ‘நாய்க்குகன்’ என்று உலகத்தவர்கள்
என்னைப் பற்றி சொல்லாமல் இருப்பார்களா?

———————-

பரதனின் தவக் கோலம் கண்டு குகன் மனம் உருகுதல்-

வற்கலையின் உடையானை, மாசடைந்த மெய்யானை,
நற் கலை இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை,
கல் கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்;
வில் கையினின்று இடை வீழ, விம்முற்று, நின்று ஒழிந்தான். (21)

(வற்கலை – மரவுரி; மெய்யானை – உடல் கொண்டவனை; மதி – சந்திரன்)
(அருகில் வர வர), மரவுரி ஆடையை உடுத்தி, புழுதி படிந்த உடம்புடன், நல்ல கலைகளில்லாத சந்திரன்
போல ஒளியிழந்த முகத்துடன், கல்லையும் கனியச் செய்யுமளவு துயரத்துடன் கூடிய பரதனை குகன் பார்த்தான்.
கையிலிருந்த வில் தானே சோர்ந்து கீழே விழ, துன்பத்தால் கலக்கமுற்று ஒரு செயலும் இன்றி நின்றவாறே இருந்தான்.

——————–

பரதன் இராமன் திருவடிகளை முடிமேல் சூடிச் செல்லுதல்-

அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்,
முடித்தலம் இவை என, முறையின் சூடினான்;
படித்தலத்து இறைஞ்சினன், பரதன் போயினான் –
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான். (22)

(அடித்தலம் – பாதுகை; முடித்தலம் – திருமுடி, கிரீடம்; படித்தலத்து – மண்ணில்; பொடித்தலம் – புழுதி;
பொலம்கொள் – பொன்மயமான)
இராமனின் இரண்டு பாதுகைகளையும், அழுத கண்களோடு, எனக்குத் திருமுடிகள் இவையே என்று பரதன்
முறையாகத் தலைமேல் சூடிக்கொண்டான். பின்னர், புழுதி படிந்து விளங்குகிற பொன்மயமான
திருமேனியுடைய பரதன், மண்ணில் விழுந்து வணங்கி, மீண்டும் (அயோத்திக்குச்) சென்றான்.

——————

சாப விமோசனம் பெற்ற விராதன் என்ற அரக்கன் இராமனைத் துதித்தல்-

ஆரணிய காண்டம்

தாய் தன்னை அறியாத கன்று இல்லை; தன் கன்றை
ஆயும் அறியும்; உலகின் தாய் ஆகின், ஐய!
நீ அறிதி எப்பொருளும்; அவை உன்னை நிலை அறியா;
மாயை இது என்கொலோ? வாராதே வர வல்லாய். (23)

(அடியார்க்கு) வருதற்கு அரியவர் போலிருந்து மிக எளியவர்போல் வரும் வல்லமை உடையவனே!
தன் தாயைத் தெரிந்து கொள்ளாத கன்று இல்லை. அதுபோல் தாயும் தன் கன்றை அறிந்து கொள்ளும்.
ஐயா! எல்லா உலகங்களுக்கும் தாய் ஆனதால் எல்லாப் பொருள்களையும் நீ அறிகிறாய்.
ஆனால் அப்பொருள்கள் உன் தன்மையை அறிவதில்லை. இது என்ன மாயமோ?

————–

தண்டகாரண்யத்து முனிவர்கள் அரக்கரால் ஏற்படும் அல்லலைச் சொல்லுதல்-

‘உருளுடை நேமியால் உலகை ஓம்பிய
பொருளுடை மன்னவன் புதல்வ! போக்கிலா
இருளுடை வைகலெம்; இரவி தோன்றினாய்;
அருளுடை வீர! நின் அபயம் யாம்’ என்றார். (24)

(உருளுடை – சுற்றிச் செல்லும்; நேமி – சக்கரம்; வைகல் – நாட்கள்)
எங்கும் சுற்றிச் செல்லும் ஆணைச் சக்கரத்தால் உலகம் முழுவதையும் காத்த தசரதனின் புதல்வனே,
நீக்கமுடியாத துன்பமாம் இருள் கொண்ட நாட்களை உடையவர்களாயிருக்கிறோம்.
கதிரவன் போல நீ வந்து எழுந்தருளினாய். அருளுடைய வீரனே, உனக்கு நாங்கள் அடைக்கலம் என்று (அம்முனிவர்கள்) கூறினர்.

————————–

இராமன் முனிவர்களுக்கு அபயம் அளித்துக் கூறுதல்-

‘ஆவுக்கு ஆயினும் அந்தணர்க்கு ஆயினும்,
யாவர்க்கு ஆயினும் எளியவர்க்கு ஆயினும்,
சாவப் பெற்றவரே, தகை வான் உறை
தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவார். (25)

(ஆ – பசு; தகை வான் – பெருமை மிக்க விண்ணுலகம்)
“பசுக்களைக் காப்பதற்கானாலும், தவம் உடைய அந்தணர்களைக் காப்பதற்கானாலும், ஏழைகளைக் காப்பதற்கானாலும்,
எவர்களைக் காப்பதற்கானாலும், உதவி செய்து, அதனால் இறக்கப் பெற்றவர்களே விண்ணுலகில் வாழும்
தேவர்களும் தொழுது வணங்கக் கூடிய தேவர்களாவர்”.

—————

அகத்திய முனிவரை சந்தித்து ஆசி பெறுதல்-

நின்றவனை, வந்த நெடியோன் அடி பணிந்தான்;
அன்று, அவனும் அன்பொடு தழீஇ, அழுத கண்ணால்,
‘நன்று வரவு’ என்று, பல நல் உரை பகர்ந்தான்-
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான். (26)

(நெடியோன் – திருமாலாகிய இராமன்; தழீஇ – தழுவிக் கொண்டு; பகர்ந்தான் – கூறினான்; இயம்பி – கூறி; இசை – புகழ்)
அங்ஙனம் நின்ற அகத்தியரை, அங்கே வந்த இராமன் அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினான்.
அப்பொழுது, எக்காலத்தும் உள்ளதாகிய இனிய தமிழின் இலக்கணங்களைக் கூறிப் புகழ் பெற்ற அகத்திய முனிவரும்,
இன்பக் கண்ணீர் விட்டவராய் அன்பினால் தழுவிக் கொண்டு, ‘நல்வரவு’ என்று பல நல்லுரைகளை இனிதாகச் சொன்னார்.

—————–

மூக்கை இழந்த சூர்ப்பணகை கரனிடம் புலம்புதல்-

‘கண்டு நோக்கரும் காரிகையாள் தனைக்
கொண்டு போவன் இலங்கையர் கோக்கு எனா
விண்டு மேல் விழுந்தேனை, வெகுண்டு அவர்
துண்டம் ஆக்கினர் மூக்கு‘ எனச் சொல்லினாள். (27)

(காரிகையாள் – பெண்; கோக்கு – அரசனுக்கு; விண்டு – பாய்ந்து)

எங்கும் காண இயலாத அழகுடைய அப்பெண்ணை (சீதையை), இலங்கையில் வாழும் அரக்கர்க்கு
அரசனான இராவணனுக்காக எடுத்துக் கொண்டு போவேன் என்று சொல்லி, அவள் மேல் பாயக் கிளம்பிய என்னை,
அந்த இராமலக்குவர்கள் சினந்து, என் மூக்கை அறுத்தார்கள் என்று கூறினாள்.

—————

மாரீசன் இராவணனுக்கு புத்திமதி கூறுதல்-

நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார், நடை அல்லா
வாரம் கொண்டார், மற்று ஒருவற்காய் மனை வாழும்
தாரம் கொண்டார் என்று இவர் தம்மைத் தருமம் தான்
ஈரும் கண்டாய்! கண்டகர் உய்ந்தார் எவர்? ஐயா! (28)

(நாரம் – அன்பு; வாரம் – வரி; தாரம் – மனைவி; ஈரும் – அழிக்கும்; கண்டகர் – கொடியவர்)
“தம் மீது அன்பு பூண்டவர்களின் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டவர்கள், நீதி நெறிக்குப் பொருந்தாத
வரிப் பொருளைக் குடிமக்களை வருத்திப் பெற்றவர்கள், பிறர் ஒருவருக்கு உரிமையாய் அவர் இல்லத்திலே வாழும்
மனைவியை வசப்படுத்திக் கொண்டவர்கள் எனப்படும் இவர்களை தருமமே சின்னா பின்னமாக்கி அழித்து விடும்
என்று நீ அறிவாய். ஐயா, கொடியவர்கள் எவர் தப்பிப் பிழைத்துள்ளார்?’

——————–

இராமனும் சீதையும் மாயமானைப் பார்த்தல்-

நோக்கிய மானை நோக்கி, நுதி உடை மதியின் ஒன்றும்
தூக்கிலன், ‘நன்று இது ‘என்றான்; அதன் பொருள் சொல்லல் ஆகும்;
சேக்கையின் அரவு நீங்கிப் பிறந்தது, தேவர் செய்த
பாக்கியம் உடைமை அன்றோ! அன்னது பழுது போமோ? (29)-

(நுதி – கூர்மை; தூக்கிலன் – சீர்தூக்கிப் பார்க்கவில்லை; சேக்கையின் அரவு – பாம்புப் படுக்கை)
எதிரில் விழித்து நின்ற மாயமானைக் கண்டபின், இராமன் கூரிய அறிவின் துணை கொண்டு எதனையும்
சீர்தூக்கிப் பார்க்கவில்லை. “மான் மிக அழகியது” என்று தானும் கூறினான். அதன் பொருளைச் சொல்லவும் ஆகுமோ?
அரவணைத் துயிலில் இருந்து நீங்கி மண்ணுலகில் வந்து பிறந்தது தேவர்கள் ஆற்றிய புண்ணியம் அல்லவா?
அப் புண்ணியம் வீணாகிப் போகுமோ?

————-

இராமன் அம்பினால் மாய மாரீசன் கதறி வீழ்ந்து மடிதல்-

நெட்டு இலைச் சரம் வஞ்சனை நெஞ்சு உறப்
பட்டது; அப்பொழுதே பகு வாயினால்
அட்ட திக்கினும் அப்புறமும் புக
விட்டு அழைத்து ஒரு குன்று என வீழ்ந்தனன். (30)-

நெடிய இலை வடிவம் கொண்ட இராமனின் அம்பு வஞ்சகம் நிரம்பிய (மாரீசன்) நெஞ்சில் சென்று தாக்கியது.
அந்தக் கணமே, பிளவுபட்ட வாயினால் எட்டுத் திசைகளிலும் அதற்கு அப்பாலும் (சீதா லட்சுமணா என்று) கூவி
மலை விழுவது போல (தன் இயற்கை வடிவம் கொண்டு) வீழ்ந்தான்.

————

சீதையைத் தேடிவரும் இராமலக்குவரிடம் வீழ்ந்து கிடக்கும் ஜடாயு கூறுதல்-

“வடுக்கண், வார் கூந்தலாளை, இராவணன் மண்ணினோடும்
எடுத்தனன் ஏகுவானை, எதிர்ந்து, எனது ஆற்றல் கொண்டு
தடுத்தனென், ஆவது எல்லாம்; தவத்து, அரன் தந்த வாளால்
படுத்தனன்; இங்கு வீழ்ந்தேன்; இது இன்று பட்டது ‘‘ என்றான். (31)-

(வார் – நீண்ட; ஏகுவானை – செல்பவனை; அரன் – சிவபெருமான்; படுத்தனன் – வெட்டி வீழ்த்தினான்)
“மாவடுப் பிளந்தது போன்ற அழகிய கண்களையும், நீண்ட கூந்தலையும் உடைய சீதையை இராவணன் நிலத்தோடு
எடுத்துக் கொண்டு செல்லும் போது, அவனை எதிர்த்து, எனது ஆற்றலின் துணை கொண்டு,
ஆன மட்டும் தடுக்க முனைந்து போர் செய்தேன். இறுதியில் அவன் தவ வலிமை கருதிச் சிவபெருமான்
அவனுக்கு அளித்திருந்த வாளினால் என்னை வெட்டி வீழ்த்தினான். இங்கே விழுந்து விட்டேன்.
இன்று இவ்வாறு நிகழ்ந்தது” என்று (சடாயு) கூறினான்.

—————

இராமன் நீர்க்கடன் செய்ய, ஜடாயு மோட்சம் அடைதல்-

மீட்டு இனி உரைப்பது என்னே? விரிஞ்சனே முதல மேல், கீழ்,
காட்டிய உயிர்கள் எல்லாம் அருந்தின களித்த போலாம்;
பூட்டிய கைகளால், அப் புள்ளினுக்கு அரசைக் கொள்க என்று,
ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே! (32)–

(மீட்டு – இனிமேல்; விரிஞ்சனே – பிரம்மனே; பூட்டிய – இணைத்த; புள்ளினுக்கு அரசு – பறவைகளின் அரசனாகிய ஜடாயு;
ஊட்டிய – உண்ணக் கொடுத்த; ஐயன் – திருமால்)
இனிமேல் வேறு என்ன சொல்ல வேண்டும்? பிரமனை முதலாகக் கொண்டு உயர்ந்தவை தாழ்ந்தவை என்று
எடுத்துக் காட்டப் பட்ட எல்லா உயிரினங்களும் (இராமன் சடாயுவுக்குக் கொடுத்த நீர்க்கடனை) அருந்தி மகிழ்ந்தவை போலாயின.
அந்தப் பறவைகளுக்கு அரசனாகிய ஜடாயுவைக் கருதி ‘ஏற்றுக் கொள்க’ என்று கூறி, தன் கைகளை இணைத்து
இராமன் சமர்ப்பித்த அந்த நல்ல நீர், அனைத்து உயிர்களுக்கும் இறைவனாகிய திருமால் (தானே) உட்கொண்ட நீரைப் போன்றதாயிற்று.

——————

இராமனால் வதைபெற்று சாப விமோசனம் அடைந்த கபந்தன் துதி செய்தல்-

ஈன்றவனோ எப்பொருளும்? எல்லைதீர் நல் அறத்தின்
சான்றவனோ? தேவர் தவத்தின் தனிப்பயனோ?
மூன்று கவடாய் முளைத்து எழுந்த மூலமோ?
தோன்றி, அருவினையேன் சாபத் துயர் துடைத்தாய்! (33)-

(சான்றவனோ – சாட்சியோ; கவடு – கிளை, பிரிவு)
எல்லாப் பொருள்களையும் படைத்தவன் நீதானோ? முடிவில்லாத நல்ல அறத்துக்குச் சாட்சியாக இருப்பவன் நீதானோ?
தேவர்கள் மேற்கொண்ட தவத்தின் ஒப்பற்ற பயனாக இருப்பவன் நீதானோ? (பிரமன், திருமால், சிவன் என்ற)
மூன்று பிரிவாகக் கிளைத்து எழுந்த மூலப் பரம்பொருள் நீதானோ? நான் இருக்குமிடத்துக்கே நின் எளிமையால்
வந்து காட்சியளித்து, போக்குதற்கு அரிய வினையுடைய என் சாபத்தின் துன்பத்தைத் தீர்த்து விட்டாய்.

————

கிட்கிந்தா காண்டம்-
அனுமன் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளல்-

‘மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி, நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன். (34)-

(மஞ்சு – மேகம், நளிர் இரும் – குளிர்மிக்க; தேம்பா – வாடாத; கஞ்சம் – தாமரை; செய்ய – சிவந்த)
“நீலமேகம் போலத் திரண்டு அமைந்த அழகிய மேனியனே! காணும் பெண்கள் யாவர்க்கும் நஞ்சு என்று
சொல்லத் தக்கதாகி, குளிர்மிக்க பனியிலும் வாடாத தாமரை மலர்கள் போன்று சிவந்த கண்களை உடையவனே!
நான் வாயுதேவனுக்கு அஞ்சனா தேவியின் வயிற்றில் பிறந்தேன். என் பெயர் அனுமன்”.

————-

இராமனைக் கண்டு சுக்கிரீவன் வியத்தல்-

தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவராம் தேவர் அன்றே,
மாறி, இப் பிறப்பில் வந்தார் மானுடர் ஆகி மன்னோ;
ஆறுகொள் சடிலத்தானும், அயனும் என்று இவர்கள் ஆதி
வேறு உள குழுவை எல்லாம், மானுடம் வென்றது ‘என்றே. (35)

(ஆறு – கங்கை; சடிலத்தான் – சடைமுடியன்; அயன் – பிரமன்)
“தேவர்களுக்கு எல்லாம் கடவுளாகிய தேவதேவனே, (திருமாலே) தம் உருவம் மாறி, இந்தப் பிறவியை எடுத்து,
மானிடர் ஆகி வந்திருக்கிறார். அதனால், கங்கையைச் சடையில் கொண்ட சிவபிரானும், பிரமனும் என்று
இவர்கள் முதலாக வெவ்வேறாக உள்ள தேவர் கூட்டத்தையெல்லாம் மனித குலம் வென்றுவிட்டது அல்லவா?” என்று தெளிந்தான்.

—————–

சுக்கீரவன் வாலியால் தனக்கு நேர்ந்த துன்பம் கூறி சரண் புகுதல்-

‘முரண் உடைத் தடக்கை ஓச்சி, முன்னவன், பின் வந்தேனை,
இருள் நிலைப் புறத்தின் காறும், உலகு எங்கும் தொடர, இக் குன்று
அரண் உடைத்தாக உய்ந்தேன்; ஆர் உயிர் துறக்கலாற்றேன்,
சரண் உனைப் புகுந்தேன்; என்னைத் தாங்குதல் தருமம் ‘என்றான். (36)-

(முரண் உடை – வலிமையுடைய; தடக்கை – பெரிய கை; ஓச்சி – ஓங்கி; காறும் – வரையிலும்;
அரண் – பாதுகாப்பு; உய்ந்தேன் – பிழைத்தேன்)
வலிமையுடைய பெரிய கையை ஓங்கிக் கொண்டு, என் அண்ணன் வாலி, அவனது உடன்பிறந்த தம்பியாகிய
என்னை இருட்டுக்கு இருப்பிடமாகிய இவ்வுலகத்திற்கு அப்புறம் வரையிலும், உலகெங்கும் பின்தொடர்ந்து துரத்த,
இம்மலையையே பாதுகாப்பாகக் கொண்டு உயிர் பிழைத்தேன். உயிரை விடுவதற்கும் முடியாதவனாகிய நான்,
உன்னைச் சரணடைந்தேன். என்னைக் காப்பாற்றுதல் உனக்குரிய தருமம் என்றான்.

——————

இராமன் சுக்கிரீவனிடம் நட்புப் பூண்டு அபயம் அளித்தல்-

‘மற்று, இனி உரைப்பது என்னே? வானிடை மண்ணில் உன்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும், உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன் கிளை எனது; என் காதல்
சுற்றம், உன் சுற்றம்; நீ என் இன் உயிர்த் துணைவன் ‘என்றான். (37)

(செற்றவர் – வருத்தியவர்; கிளை – உறவு, சுற்றம்)
சுக்கிரீவனே! மேலும் இனிச் சொல்ல என்ன இருக்கிறது? விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உன்னை வருத்தியவர்
என்னை வருத்தியவராவர். தீயவராகவே இருந்தாலும் உன்னோடு நட்புக் கொண்டவர்கள் எனக்கும் நண்பராவர்.
உன் உறவினர் எனது உறவினராவர். என் அன்புள்ள சுற்றத்தினர் உனக்கும் சுற்றத்தினராவர்.
நீ எனது இனிய உயிர் போன்ற நண்பன்’ என்றான்.

—————–

வாலி தன் மீது பட்ட அம்பில் இராம நாமத்தைப் பார்த்தல்-

மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை, ‘இராமன் ‘என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களின் தெரியக் கண்டான். (38)

(மும்மை சால் – மூன்றாகப் பொருந்திய; தமர்க்கு – தம்மவர்களுக்கு; நல்கும் – அளிக்கும்;
பதத்தை – சொல்லை; இம்மை – இப்பிறவி; செம்மை – சிறப்பு)
மூன்று என்னும் தொகை பொருந்திய உலகங்கள் யாவற்றிற்கும் (வானம், பூமி, பாதாளம்) ஆதாரமாக உள்ள மந்திரத்தை,
தன்னை வழிபடும் அடியார்களுக்கு முழுவதுமாகத் தன்னையே அளிக்கும் ஒப்பற்ற சிறப்பு மிக்க சொல்லை,
இந்தப் பிறவியிலேயே எழுவகைப் பிறப்புக்களாகிய நோய் வராமல் தடுக்கும் மருந்தை,
இராமன் என்ற சிறப்புப் பொருந்திய திருநாமத்தை தன் கண்களினால் (அந்த அம்பில்) தெளிவாகப் பார்த்தான்.

——————-

வாலி இராமன் மீது குற்றம் சாட்டுதல்-

‘வீரம் அன்று; விதி அன்று; மெய்ம்மையின்
வாரம் அன்று; நின் மண்ணினுக்கு என் உடல்
பாரம் அன்று; பகை அன்று; பண்பு ஒழிந்து
ஈரம் அன்று இது; என் செய்தவாறு நீ? (39)-

இராமா! (நீ செய்த இச்செயல்) வீரம் அன்று. விதிமுறைக்கு ஒத்ததும் அன்று. உண்மையைச் சார்ந்ததும் அன்று.
உனக்கு உரிய இப்பூமிக்கு என் உடல், சுமையும் அன்று. உனக்கு நான் பகைவனும் அல்லன். (அங்ஙனமிருக்க),
நீ உன் பெருமைக் குணம் நீங்கப் பெற்று இரக்கம் இல்லாமல் இச்செயலைச் செய்தது எதற்காக?

——————

இராமன் வாலிக்கு விடையிறுத்து அறநெறியின் தன்மை கூறுதல்-

‘இனையது ஆதலின் எக்குலத்து யாவர்க்கும்
வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்;
அனைய தன்மை அறிந்தும் அழித்தனை
மனையின் மாட்சி ‘என்றான் மனு நீதியான். (40)-

(இனையது – இத்தன்மையது; வினையினால் – செயல்களால்; அனைய – அப்படிப்பட்ட)
“(நான் இதுவரை கூறியபடி) உண்மை இத்தன்மையது ஆதலால், எந்தக் குலத்தில் பிறந்தவராயினும்,
அவர்கள் எல்லோர்க்கும், மேன்மையும் கீழ்மையும் அவரவர் செய்யும் செயல்களாலேயே வரும்.
(வானர குலத்தில் பிறந்திருந்தாலும், உனது பெரும் அறிவால்) அதை நீ நன்கு உணர்ந்திருந்தும்,
பிறன் மனைவியின் கற்பு மாண்பினை அழித்தாய்” என்று உரைத்தான், மனு நீதியில் தவறாதவனாகிய இராமன்.

—————

பிழையுணர்ந்த வாலி இராமாவதார தத்துவத்தை சுக்கிரீவனுக்கு உணர்த்துதல்-

‘மறைகளும், முனிவர் யாரும், மலர் மிசை அயனும், மற்றைத்
துறைகளின் முடிவும், சொல்லும் துணிபொருள், தனி வில் தாங்கி,
அறை கழல் இராமன் ஆகி, அற நெறி நிறுத்த வந்தது;
இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி; எண்ணம் மிக்கோய்! (41)

(துறைகளின் – சாத்திரங்களின்; அறைகழல் – ஒலிக்கின்ற கழல் [கழல் என்பது ஆடவர் காலில் அணிவது];
இறை – சிறிதும்; சங்கை – சந்தேகம்)

வேதங்களும், எல்லா முனிவர்களும், தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனும், மற்ற சாத்திரங்களின் முடிபுகளும்
தேர்ந்து சொல்லுகின்ற பரம்பொருள், (பகைவரைத்) தண்டிக்கும் வில்லை ஏந்திக் கொண்டு, ஒலிக்கின்ற கழலணிந்த இராமனாக,
உலகில் அறநெறியை நிலை நிறுத்துவதற்காக அவதரித்துள்ளது. ஆலோசனையில் சிறந்தவனே!
இந்த உண்மையை ஒரு சிறிதும் சந்தேகம் இல்லாமல் மனத்தில் கொள்வாய்.

————-

அங்கதனை இராமன் ஏற்றுக் கொள்ள வாலி பரமபதம் அடைதல்-

தன் அடி தாழ்தலோடும் தாமரைத் தடங்கணானும்,
பொன் உடை வாளை நீட்டி, ‘நீ இது பொறுத்தி ‘என்றான்;
என்னலும், உலகம் ஏழும் ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான். (42)

(தாழ்தலோடும் – வணங்கியதும்)
(அங்கதன்) தன் திருவடிகளில் விழுந்து வணங்கிய அளவில் தாமரைக் கண்ணனாகிய இராமன்
(அவனை அடைக்கலமாகக் கொண்டதற்கு அறிகுறியாக) தனது அழகிய உடைவாளை நீட்டி,
‘நீ இதனை ஏற்றுக் கொள்வாய்’ எனப் பணித்தான்; ஏழுலகங்களும் இராமனைத் துதித்தன.
வாலி தனது பூத உடலை விட்டு, இறந்து, வானுலகிற்கும் அப்பாற்பட்டதான உயர்ந்த மோட்சத்தை அடைந்தான்.

—————

சுந்தர காண்டம்-கடவுள் வாழ்த்து-

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப்பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால்? அவர், என்பர் – கைவில் ஏந்தி,
இலங்கையில் பொருதார்; அன்றே, மறைகளுக்கு இறுதி யாவார்! (43)

(அலங்கல் – மாலை; அரவு – பாம்பு; விகாரப்பாட்டின் – வேறுபாடுகளின்; வீக்கம் – தோற்றம்; பொருதார் – போர் செய்தார்)
பூ மாலையில் (காணும்போது மதிமயக்கத்தால் உண்டாகும்) பொய்ப் பாம்பின் தோற்றம் மறைவது போல,
ஒன்றோடொன்று ஊடுருவிக் கலந்த ஐந்து பூதங்களும் வேறு வேறு விதமாக அமைந்த பிரபஞ்சத்தின் பன்மைத் தோற்றம்
எவரைத் தரிசித்தால் மறைந்து போகுமோ, அவரன்றோ கையில் வில்லேந்தி இலங்கையில் போர் செய்தார் ! – என்று
வேதத்தின் எல்லை நிலமாக இருக்கின்ற ஞானிகள் கூறுவர் (உயர்ந்த ஞான நிலையில், வேறுவேறாகத் தோன்றும்
பிரபஞ்சத்தின் மாயைத் தோற்றம் மறைந்து பிரம்மம் ஒன்றே சத்தியம் என்னும் உணர்வு ஏற்படும்.
இந்த வேதாந்த தத்துவக் கருத்தையே இப்பாடலில் கம்பர் அழகுறக் கூறுகிறார்).

———–

அசோகவனத்தில் சீதையின் நிலை-

வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள்;
கல் மருங்கு எழுந்து, என்றும் ஓர் துளிவரக் காணா
நல்மருந்து போல், நலன் அற உணங்கிய நங்கை
மென் மருங்குல்போல் வேறுள அங்கமும் மெலிந்தாள். (44)

(மருங்குல் – இடை; வாள் அரக்கியர் – கொடிய அரக்கியர்கள்; மருங்கு – பக்கத்திலே; உணங்கிய – வாடிய)
பருத்த இடையை உடைய கொடிய அரக்கியர்கள் துன்புறுத்த, சீதை அசோக வனத்தில் இருந்தாள்.
கற்பாறைக்குப் பக்கத்திலே தோன்றி வளர்ந்து, எக்காலத்திலும் ஒரு நீர்த்துளி கூட வருவதை அறியாத
உயர்ந்த மூலிகையைப் போல, உடலும் உள்ளமும் அற்றுப்போக வாடிய பிராட்டி, மெல்லிய இடையைப் போல,
மற்றைய அங்கங்களும் இளைத்து விடும்படி துயருற்று இருந்தாள்.

————

தன்னை ஏற்குமாறு மன்றாடிய இராவணனிடம் சீதை துரும்பை முன்வைத்துக் கடிந்து பேசுதல்-

மல்லொடு திரள்தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம்
‘கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம் கற்பின்மேல் கண்டது உண்டோ?
இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு ஏய்வன அல்ல, வெய்ய
சொல்; இது தெரியக் கேட்டி! துரும்பு! ‘எனக் கனன்று சொன்னாள். (45)

(மல் அடு – மல்லர்களை அழிக்கும்; இல் – நற்குடிப் பிறப்பு; ஏய்வன – ஏற்றவை; வெய்ய – கொடுமையான; கேட்டி – கேள்)
மல்லர்களை அழிக்கும் திரண்ட தோள்களையுடைய வஞ்சகனான இராவணனின் உள்ளம் வேறுபாடு
அடையும்படி சீதை சினந்து பேசினாள் – “ஏ துரும்பே! கல்போன்று உறுதிகொண்ட மகளிர் மனம்,
கற்பைவிடச் சிறந்ததாக வேறு ஒன்றை மதித்தது உண்டா? (உன்னுடைய பசப்பு வார்த்தைகள்)
நற்குடிப் பெண்களுக்கு (நினைப்பதற்கும்) ஏற்க முடியாத கொடுஞ்சொற்கள் ஆகும். உள்ளம் உணர இவ்வார்த்தைகளைக் கேள்”.

————–

இராமன் தூதனாக வந்து ஆறுதல் தந்த அனுமனை சீதை வாழ்த்துதல்-

‘மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூதாய்ச்
செம்மையால் உயிர் தந்தாய்க்குச் செயல் என்னால் எளியது உண்டே?
அம்மை ஆய் அப்பன் ஆய அத்தனே! அருளின் வாழ்வே!
இம்மையே மறுமை தானும் நல்கினை இசையோடு ‘என்றாள். (46)

(மும்மை – மூன்று; அத்தனே – தெய்வமே; நல்கினை – கொடுத்தாய்; இசையோடு – புகழோடு)
மூன்று உலகங்களையும் படைத்த முன்னோன் ஆகிய பிரம்மதேவனுக்கும் தந்தையாகிய இராமபிரானின் தூதுவனாய் வந்து,
நிறைவு பெற்ற பண்பினாலே எனக்கு உயிரை வழங்கினாய். (சிறையிலிருக்கும்) என்னால் உனக்குச் செய்வதற்கு
எளிமையான உதவியும் உள்ளதா? அம்மையும் அப்பனும் தெய்வமும் போன்றவனே! அருளுக்கு வாழ்வைத் தருபவனே!
நீ இப் பிறப்பிலேயே மறுமை வாழ்வையும் புகழுடன் வழங்கினாய் என்று பிராட்டி கூறினாள்.

————–

கடலைக் கடந்து வந்தது எப்படி என்று வியப்புடன் கேட்ட சீதைக்கு அனுமன் கூறிய பணிவு மொழி

அண்ணல் பெரியோன், அடி வணங்கி, அறிய உரைப்பான்: ‘அருந்ததியே!
வண்ணக் கடலின் இடைக் கிடந்த மணலின் பலரால், வானரத்தின்
எண்ணற்கு அரிய படைத்தலைவர், இராமற்கு அடியார்; யான் அவர்தம்
பண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன்; ஏவக்கடவ பணிசெய்வேன் (47)-

(வண்ணக் கடல் – அழகிய கடல்; பண்ணைக்கு ஒருவன் – வேலைக்காரர் கூட்டத்தில் ஒருவன்)
பெரியோனாகிய அனுமன், சீதைப் பிராட்டியின் திருவடிகளிலே வணங்கிக் கூறினான் –
“அருந்ததி போன்ற பெருமையுடைய அன்னையே! அளவிட முடியாத வானரப்படைத் தலைவர்கள் இராமபிரானின் அடியார்கள்.
அவர்கள் இந்த அழகிய கடலிலே கிடக்கின்ற மணலினும் பலராவர். அவர்களுடைய கூட்டத்துக்கு ஒரு வேலைக்காரன்
என்ற அளவில் நான் இங்கு வந்தேன். ஏவும் பணியையும் கூவும் பணியையும் செய்யும் ஒரு சாதாரணத் தொண்டன் நான்”.

—————–

சீதை அனுமனிடம் கூறியது-

அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன். (48)-

(அல்லல் – துன்பம்; மாக்கள் – விலங்குகள்; ஆற்றற்கு – ஆற்றலுக்கு; மாசு – களங்கம்; வீசினேன் – விலக்கினேன்)
(இந்த நகரமே எலும்பு மலையாகப் போகும்) துன்பம் விலங்கு போன்ற அரக்கர்கள் வாழும் இலங்கையுடன் நின்று விடுமா?
(அறத்தின்) வரம்பைக் கடந்து போகும் எல்லா உலகங்களையும், என்னுடைய சொல்லினாலேயே சுட்டெரித்து விடுவேன்.
அவ்வாறு செய்வது தூயவனாகிய இராமனின் வில்லினுடைய வலிமைக்கு களங்கம் உண்டாக்கும் என்று
கருதியே அப்படிச் செய்யாமல் இருக்கிறேன்.

————-

சீதை இராமனுக்குத் தெரிவிக்குமாறு அனுமனிடம் கூறியது-

வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்
‘இந்த இப் பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் ‘என்ற செவ் வரம்
தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்! (49)

(வைகல்வாய் – உடன் உறையும் காலத்தில்; வார்த்தை – செய்தி; சாற்றுவாய் – சொல்லுவாய்)
(மிதிலைக்கு) வந்து என்னைக் கைப்பிடித்து மணம் செய்து உடன் உறைகின்ற காலத்தில், இந்தப் பிறவியில்
இரண்டாவது பெண்ணை மனத்தாலும் தீ்ண்ட மாட்டேன் என்ற செம்மையான வரத்தை உறுதிமொழியாகத்
தந்த செய்தியை இராமன் திருச்செவியில் சொல்வாயாக.

————–

சீதையைப் பிரிந்து இராமன் படும் துயரத்தை அனுமன் கூறுதல்-

மத்துறு தயிர் என வந்து சென்று, இடை
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்து, நின் பிரிவினில் பிறந்த வேதனை,
எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ? (50)

(தத்துறும் – தத்தளிக்கும்; தள்ளுறும் – வீழ்த்தும்; எண்ணும் ஈட்டவோ – அளவிடும் தன்மை உள்ளனவோ)
மத்தால் கடையப்படும் தயிர் போல, உடலுக்குள் வந்தும் வெளியே சென்றும் தத்தளிக்கிறது அவனது உயிர்.
அந்த உயிருடனே, ஐந்து புலன்களையும் வீழ்த்துகின்ற பித்து நிலையும், நின் பிரிவாலே தோன்றிய
வேதனையும் எவ்வளவு? அதை அளவிட்டுச் சொல்ல முடியுமோ?

————–

சீதை அடையாளமாகத் தனது சூடாமணியைத் தருதல்-

‘சூடையின் மணி கண்மணி ஒப்பது தொல்நாள்
ஆடையின்கண் இருந்தது பேர் அடையாளம்
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை! நல்லோய்!
கோடி! ‘என்று கொடுத்தனள் மெய்ப்புகழ் கொண்டாள். (51)

(சூடையின் மணி – சூடாமணி, நெற்றிச்சுட்டி; தொல்நாள் – நீண்ட நாட்களாக; நல்கினை – வழங்கினாய்;
நல்லோய் – சிறந்தவனே; கோடி – எடுத்துக் கொள்)
“சிறந்தவனே! கடல் தாண்டி நாடி வந்து, (போவதற்கிருந்த) என் இன்னுயிரை வழங்கினாய்.
என் கண்மணி போன்ற இந்தச் சூடாமணி, நீண்ட நாட்களாக என்னுடைய ஆடையில் பொதிந்து வைக்கப் பெற்றது.
எனது அன்பின் பேரடையாளமாக இதை இராமனுக்கு எடுத்துச் செல்வாய்” என்று கூறி உண்மையான
புகழைக் கொண்ட சீதை சூடாமணியை அனுமனிடம் வழங்கினாள்.

———–

அனுமன் வாலில் தீமூட்ட, இலங்கை முழுவதும் தீப்பற்றி எறிதல்-

நீல் நிற நிருதர், யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க,
பால் வரு பசியன், அன்பான் மாருதி வாலைப் பற்றி,
ஆலம் உண்டவன், அன்று ஊட்ட, உலகு எலாம் அழிவின் உண்ணும்,
காலமே என்ன, மன்னோ கனலியும் கடிதின் உண்டான். (52)

(நீல்நிற – கருநிற; நிருதர் – அரக்கர்; யாண்டும் – எங்கும்; பால்வரு பசியன் – மிகுந்த பசியுடையவன்;
ஆலம் – நஞ்சு; கனலி – அக்கினி; கடிதின் – வேகமாக)
கருநிறத்து அரக்கர்கள் நெய் சொரிந்து செய்யும் யாகங்களை எங்கும் செய்ய விடாமல் நீக்கி விட்டதனால்,
அக்கினி தேவன் மிக்க பசி உடையவனாக இருந்தான். அன்று, மாருதியின் வாலை அன்புடன் தனக்கு
ஆதாரமாகப் பற்றிக் கொண்டு, நஞ்சை உண்ட சிவபெருமானின் ஏவலால், ஊழி (பிரளயம்) முடிவில்
உலகம் முழுவதையும் எரிக்கின்ற காலத்தைப் போல, இலங்கை நகரை விரைவாக உண்டு எரித்து அழித்தான்.

—————

திரும்பி வந்த அனுமன் இராமனிடம் கண்டேன் சீதையை என்று கூறுதல்-

‘கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்’ என்று, அனுமன் பன்னுவான்; (53)

(அணி – ஆபரணம்; தெண் திரை – தெளிந்த, சுருண்ட; அண்டர் – தேவர்கள்; துறத்தி – நீக்கிவிடு;
பண்டு உள- முன்புள்ள; பன்னுவான் – கூறுவான்)
“கண்டேன்! கற்பிற்கு ஒரு ஆபரணம் போன்ற சீதையை, தெளிந்த சுருண்ட அலைகளுடன் கூடிய
கடல் சூழ்ந்த இலங்கை என்ற தென்திசை நகரத்தில்,
என் கண்களாலேயே கண்டேன். தேவர்களின் நாயகனே! இனிமேல், உனது சந்தேகத்தையும்,
இதுவரை பட்ட துன்பங்களையும் நீக்கிவிடு” என்று அனுமன் மேலும் விரித்துக் கூறலானான்.

——————

இராமனின் கணையாழி கண்டு சீதை உயிர்பெற்று வந்ததை அனுமன் கூறுதல்

‘அறிவுறத் தெரியச் சொன்ன, பேர் அடையாளம் யாவும்,
செறிவுற நோக்கி, நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை
முறிவு அற எண்ணி, வண்ண மோதிரம் காட்ட, கண்டாள்;
இறுதியின் உயிர்தந்து ஈயும் மருந்து ஒத்தது, அனையது – எந்தாய் ! (54)

(திருக்கம் – மாறுபாடு; இன்மை – இல்லாமை; முறிவு அற – குழப்பமின்றி)
“எம் தலைவனே! பிராட்டி அறியும்படி அடியேன் தெளிவாகச் சொன்ன
அடையாளங்களை எல்லாம் பொருத்தமாகப் பார்த்து, அடியேன் மனத்தில் குழப்பம் ஏதும் இல்லை என்பதை
நன்றாக யோசித்து, அழகிய (உனது) மோதிரத்தை நான் காட்ட, பார்த்தாள். அந்த மோதிரம், முடிவுக் காலத்திலும்
உயிர் போகாதபடி நிலை நிறுத்திக் காக்கின்ற சஞ்சீவினி என்ற மருந்தைப் போன்று அவளுக்கு
ஆறுதலும் நம்பிக்கையும் அளித்தது” என்று அனுமன் கூறினான்.

———–

யுத்த காண்டம்-

சரணடைந்த வீடணனை ஏற்றுக் கொள்வதே அறம் என இராமன் கூறுதல்

இடைந்தவர்க்கு, “அபயம் யாம் “ என்று இரந்தவர்க்கு, எறிநீர் வேலை
கடைந்தவர்க்கு, ஆகி, ஆலம் உண்டவற் கண்டிலீரோ?
உடைந்தவர்க்கு உதவான் ஆயின், உள்ளது ஒன்று ஈயான் ஆயின்,
அடைந்தவர்க்கு அருளான் ஆயின், அறம் என் ஆம்? ஆண்மை என் ஆம்? (55)

(இடைந்தவர்க்கு – ஓடி வந்தவர்க்கு; இரந்தவர்க்கு – கெஞ்சியவர்க்கு; எறீநீர் வேலை – அலைபாயும் கடல்;
ஆலம் – நஞ்சு; கண்டிலீரோ – கண்டதில்லையா; ஈயான் – தரமாட்டான்)

அலைபாயும் பாற் கடலைக் கடைந்த போது தோன்றிய நஞ்சுக்கு அஞ்சி ஓடி வந்தவர்களும், நாங்கள் உனக்கு
அடைக்கலம் என்று கெஞ்சியவர்களும் ஆன தேவாசுரர்களுக்காக, அந்த நஞ்சைத் தான் உண்டு,
அவர்களைக் காத்த சிவபிரானை நீங்கள் கண்டதில்லையா? தோல்வியால் சிதைந்து உடைந்தவர்களுக்கு
உதவவில்லை என்றால், தன்னிடம் உள்ள பொருளைக் கேட்டு வந்தவர்களுக்குத் தரவில்லை என்றால்,
அடைக்கலம் என்று வந்தவர்களுக்குக் கருணை காட்டி அருள் செய்யவில்லை என்றால்,
அறத்தால் என்ன பயன்? ஆண்மையால் என்ன பயன்?

————

வீடணனோடு சேர்த்து தனக்கு ஏழு சகோதரர்கள் என இராமன் கூறுதல்-

‘குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின், குன்று சூழ்வான்
மகனொடும், அறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகல் அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை.’ (56)

(ஆனேம் – ஆனோம்; எம்முழை – எம்மிடத்தில்; அகன் அமர் காதல் – நெஞ்சம் நிறைந்த அன்பு; நுந்தை – உனது தந்தை)
குகனுடன் சேர்த்து நாங்கள் ஐந்து பேர் சகோதரர்கள் ஆனோம். இது முன்பு நிகழ்ந்தது. அதன் பின்னர்,
மேருமலையைச் சுற்றிவரும் சூரியனது மகனான சுக்கிரீவனுடன் சகோதரர் ஆறுபேர் ஆனோம்.
உள்ளத்திலே நிறைந்த அன்பு கொண்டு எங்களிடம் வந்த விபீஷணா, உன்னுடன் சேர்த்து சகோதரர்கள் ஏழுபேர் ஆயினோம்.
எவரும் புகுதற்கரிய கானக வாழ்க்கையை எனக்குத் தந்து, உனது தந்தை தசரதன் புதல்வர்களால் நிறைவு பெற்றுவிட்டான்!

————-

வானரர்கள் கடலில் சேது (அணை) கட்டுதல்-

மலை சுமந்து வருவன வானரம்,
நிலையில் நின்றன, செல்ல நிலம் பெறா –
அலை நெடுங் கடல் அன்றியும், ஆண்டுத் தம்
தலையின்மேலும் ஒர் சேது தருவ போன்ம். (57)

(நிலம் பெறா – இடமில்லாததால்; தருவ – அமைத்தது; போன்ம் – போல)
அணை கட்டுவதற்காக மலைகளைச் சுமந்து கொண்டு வரும் வானரங்கள், (வானரக் கூட்டத்தின் மிகுதியினால்)
செல்லுதற்கு அங்கு இடம் இல்லாமையால் மலைகளைச் சுமந்து கொண்டு அசையாமல் நின்ற தோற்றம்,
அலைகள் வீசும் பெரிய கடலில் மட்டுமல்லாது, தங்கள் தலைகளின் மீதும் ஒரு சேது அமைத்தது போலக் காணப் பட்டது.

—————

போருக்கு முன் இராமனின் தூதனாகச் சென்ற அங்கதன் இராவணனிடம் கூறுதல்-

‘பூத நாயகன், நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன், அப் பூமேல்
சீதை நாயகன், வேறு உள்ள தெய்வ நாயகன், நீ செப்பும்
வேத நாயகன், மேல் நின்ற விதிக்கு நாயகன் தான் விட்ட
தூதன் யான்; பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன் ‘என்றான். (58)

“(என் தலைவனாகிய இராமபிரான்) ஐம்பூதங்களுக்கும் தலைவன். (அந்த ஐம்பூதங்களுக்குள், நீ வாழ்கிற)
கடல் சூழ்ந்த இம் மண்ணுலகிற்கும் தலைவன். அழகிய தாமரை மலர்மேல் வாழும் சீதையின் நாயகன்.
வேறே உள்ள தெய்வங்களுக்கும் அவன் நாயகன். நீ ஓதும் அந்த வேதங்களுக்கும் அவனே தலைவன்.
இனிமேல் நீ பட உள்ள விதியின் விளைவுகட்கும் அவனே தான் தலைவன்.
இத்தகையவன் உனக்கு அனுப்பியுள்ள தூதன் நான். அவன் உன்னிடம் உரைக்கச் சொன்னதைக்
கூறிவிட்டுப் போக இங்கே வந்தேன்” என்றான்.

—————

முதற்போரில் அனைத்தையும் இழந்து நின்ற இராவணனை இராமன் விடுவித்தல்-

‘ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா ‘என நல்கினன் – நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். (59)

(மாருதம் – பெருங்காற்று; பூளை – பூளைப்பூ; கமுகு – பாக்கு மரம்)
அரக்கரை ஆள்கின்ற ஐயா, உனக்குத் துணையாக அமைந்த படைகள் அனைத்தும் பெருங்காற்றால் தாக்கப்பட்ட
பூளைப் பூக்களைப் போல சிதைந்து போனதைக் கண்டாய். இன்று போய்ப் போருக்கு நாளை வா என்று
(இராவணனுக்கு) அருள் புரிந்து விடுத்தான் – (யார் என்னில்) மிகவும் இளைய கமுக மரத்தின்மீது
வாளை மீன்கள் தாவிப் பாயும் (நிலம், நீர்வளம் மிக்க) கோசல நாட்டுக்கு உரிய வள்ளலாகிய இராமபிரான்.

—————-

கும்பகர்ணன் சாகும் தறுவாயில் இராமனை வேண்டுதல்-

நீதியால் வந்ததொரு நெடுந்தரும நெறியல்லால்
சாதியால் வந்த சிறு நெறி அறியான், என் தம்பி;
ஆதியாய்! உனை அடைந்தான்; அரசர் உருக்கொண்டு அமைந்த
வேதியா! இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன். (60)

“நீதிமுறைப்படி வந்த சிறந்த தரும நெறி அல்லாது, சாதிப் பிறப்பினால் உண்டான சிறு நெறியை
அறியாதவன் என் தம்பி விபீஷணன். அதனால் தான் உன்னை அடைக்கலமாக அடைந்தான்.
முழு முதலே! உலகில் அரசர் வடிவு கொண்டு வந்தவனே! வேதங்களால் புகழப் படுகின்றவனே!
மீண்டும் அவனை உனக்கு அடைக்கலப் பொருளாகக் கொண்டு நீ காக்க வேண்டும் என்று நான் வேண்டுகின்றேன்”.

————–

கருடனின் வருகையால் நாக பாசத்திலிருந்து இராம லக்குமணர் விடுபட்டவுடன், கருடன் இராமனைத் துதித்தல்-

சொல் ஒன்று உரைத்தி; பொருள் ஆதி; தூய மறையும் துறந்து, திரிவாய்;
வில் ஒன்று எடுத்தி; சரம் ஒன்று எடுத்தி; மிளிர் சங்கம் அங்கை உடையாய்;
கொல் என்று உரைத்தி; கொலையுண்டு நிற்றி; கொடியாய்! உன் மாயை அறியேன்;
அல் என்று நிற்றி; பகல் ஆதி – ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? (61)-

(உரைத்தி – சொல்லப் படுகிறாய்; ஆதி – ஆகிறாய்; துறந்து – கடந்து; சரம் – அம்பு; சங்கம் – சங்கு;
அங்கை – அழகிய கை; நிற்றி – நிற்கிறாய். அல் – இருள், இரவு; அதிரேக மாயை – மிகுந்த மாயை)

(நாதவடிவான) சொற்களாகவும், அவற்றின் பொருளாகவும் நீயே இருக்கின்றாய். தூய்மையான வேதங்களையும்
கடந்து விளங்குகிறாய். (அறத்தை நிலை நிறுத்துதற்காக) வில்லையும் அம்பையும் எடுத்திருக்கிறாய்.
அழகிய கைகளில் ஒளி பொருந்திய சங்கை (பாஞ்சசன்னியம்) ஏந்தியவனும் நீயே. (தீயவர்க்குப் பகைவனாய் இருந்து)
கொல்லுக என்று சொல்லுகிறாய். (நீயே பகைவராய் இருந்து) கொல்லப்பட்டுக் கிடக்கிறாய்.
(இவ்வாறு) கொடிய முரண்கள் கொண்ட பரம்பொருளே! உனது மாயச் செயல்களை எவ்வகையிலும்
என்னால் அறிய முடியவில்லை. இரவாகவும், பகலாகவும் நீயே தோன்றுகின்றாய்.
மிகுந்த இந்த மாயச் செயலை யார் தான் அறிவார்கள்?

———–

வானில் மருத்து மலையை எடுத்துச் செல்லும் அனுமனை சிவனும் பார்வதியும் வாழ்த்துதல்-

‘என், இவன் எழுந்த தன்மை? ‘ என்று, உலகு ஈன்றாள் கேட்ப
‘மன்னவன் இராமன் தூதன் மருந்தின் மேல் வந்தான்; வஞ்சர்
தென் நகர் இலங்கைத் தீமை தீர்வது திண்ணம்; சேர்ந்து,
நல் நுதல்! நாமும் வெம்போர் காணுதும், நாளை ‘என்றான். (62)

“இவன் வான்வழி எழுந்து செல்வதற்கு யாது காரணம்?” என்று உலகத்தை ஈன்ற உமையவள் கேட்க,
“மன்னவன் இராமனின் தூதனாகிய அனுமன் இவன். மருந்தைக் கொண்டு போக வந்திருக்கின்றான்.
தென் இலங்கையின் வஞ்சக அரக்கரால் உளதாகிய தீமை இனித் தீர்வது திண்ணம். அழகிய நெற்றியுடையவளே!
நாளை நாமும் (தேவர்களுடன் சேர்ந்து வானிலிருந்து) கொடிய போரைக் காண்போம்” என்று (சிவபிரான்) கூறினான்.

——————

இறுதிப் போரில் இராமன் அம்பினால் இராவணன் வீழ்ந்து மடிதல்-

முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும், முதல்வன் முன்நாள்,
‘எக்கோடி யாராலும் வெலப்படாய் ‘ எனக்கொடுத்த வரமும், ஏனைத்
திக்கோடும் உலகு அனைத்தும் செருக் கடந்த புய வலியும், தின்று, மார்பில்
புக்கு ஓடி உயிர்பருகி, புறம் போயிற்று, இராகவன்தன் புனித வாளி. (63)-

(எக்கோடி – எந்த வரிசையிலும்; திக்கோடும் – திசைகளோடும்; புயவலி – தோள் ஆற்றல்;
புக்கு – புகுந்து; புறம் – வெளியே; வாளி – அம்பு)
(இராவணனுடைய) மூன்று கோடி ஆயுளையும், முயன்று பெற்றிருந்த பெரிய தவப் பயனையும்,
பிரமன் முற்காலத்தில் ‘(முப்பத்து முக்கோடி தேவர்களில்) எந்த வரிசையைச் சேர்ந்தோர் ஆனாலும்
அவர்களால் நீ வெல்லப்பட மாட்டாய்’ என்று தந்த வரத்தையும், மற்றும் திசைகளையும், உலகங்கள்
எவற்றையும் போரால் வென்ற தோள் ஆற்றலையும் உண்டு விட்டு, (இராவணனுடைய) மார்பில் நுழைந்து,
உடல் எங்கும் சுழன்று ஓடி, உயிரைப் பருகிவிட்டு வெளியே சென்றது இராகவன் செலுத்திய
புனிதம் நிறைந்த அம்பு (பிரம்மாத்திரம்)!

———–

சிறையிலிருந்து மீண்டு வரும் சீதையை இராமன் காணுதல்-

கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,
பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை
தற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை,
அற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான். (64)

(காப்பினை – வாழ்விடத்தை; பொற்பு – அழகு; போலியை – போன்றவளை; அற்பின் – அன்பினால்)
கற்பு என்னும் குணநலத்துக்கு அரசாகவும், பெண்மைக் குணங்களுக்கு வாழ்விடமாகவும்,
அழகிற்கு அழகாகவும் விளங்குகின்றவளை, (தனது மற்றும் தன் நாயகனது) புகழை இவ்வுலகில் வாழும்படி
நிலை நிறுத்திய தேவியை, தனி நாயகனாகிய தன்னைப் பிரிந்து உயிர்களுக்கு நல்லருள் செய்யும்
தருமம் போன்ற சீதையை, அந்தத் தலைவனாகிய இராமனும், அன்பினால் நன்றாகப் பார்த்தான்.

———-

தீக்குளித்து வந்த சீதையை வானில் தோன்றி தேவர்களும் தசரதனும் வாழ்த்துதல்

“பொன்னைத் தீயிடைப் பெய்தல் அப்பொன்னுடைத் தூய்மை
தன்னைக் காட்டுதற்கு” என்பது மனக்கொளல் தகுதி;
உன்னைக் காட்டினன், ‘கற்பினுக்கு அரசி‘ என்று, “உலகில்
பின்னைக் காட்டுவது அரியது“ என்று எண்ணி இப்பெரியோன். (65)

பொன்னை நெருப்பில் போடுவது பொன்னைச் சொக்கத் தங்கம் என உலகிற்குக் காண்பிப்பதற்காகத் தான்
என்று மனத்தில் நினைத்தலே தகுதி. (அதுபோல) குணங்களால் உயர்ந்த இந்த இராமன்,
உலகத்தில் (இச்சமயம் தவறினால்) பிறகு தெளிவித்தல் இயலாது என்று கருதியே
உன்னை ‘கற்பிற் சிறந்தவள்’ என்று (இந் நிகழ்ச்சியால்) தெளிவித்தான்.

—————

அயோத்தியில் இராமன் திருமுடி சூடிய காட்சி (பட்டாபிஷேகம்)

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச,
விரைசெறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மௌலி. (66)

அரியணையை அனுமன் காத்து நிற்க, அங்கதன் உடை வாளை ஏந்தி நிற்க,
பரதன் வெண் கொற்றக் குடையைப் பரதன் பிடித்து நிற்க, இலக்குவன் சத்துருக்கன் இருவரும் கவரி வீச,
மணம் கமழும் கூந்தலை உடைய சீதை பெருமிதமாய் விளங்க, சடையனின் கால் வழியின் முன்னோராக
உள்ளோர் எடுத்துக் கொடுக்கப் பெற்றுக் கொண்டு, வசிட்ட முனிவனே மகுடத்தை சூட்டினான்.
(தன்னை ஆதரித்த திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளலை, நன்றி மறவாமல்,
ஆயிரம் பாடல்களுக்கு ஒரு முறை பத்து இடங்களில் கம்பர் குறிப்பிடுகின்றார். அதில் முக்கியமானது இது).

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இராமகாதை நுவலப்படும் பிற நூல்கள்

January 9, 2021

ஸ்ரீ இராமகாதை நுவலப்படும் பிற சமஸ்கிருத நூல்கள்

1.ஸ்ரீ மகாபாரதம் : (நான்கிடங்களில்)

ஆரணிய பருவம் 147:28-38; 252-275
துரோண பருவம் 59:1-31
சாந்தி பருவம் 22;51-62
ஏறக்குறைய 700 பாடல்களில் இராமகாதை குறிக்கப்படுகிறது.

2.ஸ்ரீ புராணங்கள் : (முதன்மையானவை)

1. விஷ்ணு புராணம் (கி.பி. 4) ( IV, 4,5)
2. பிரும்மானந்த புராணம் (கி.பி. 4) (2. 21)
3. வாயு புராணம் (கி.பி. 5) ( II.26) விஷ்ணு புராணம் போன்றது.
4. பாகவத புராணம் (கி.பி. 6) (IX 10-11) இங்குதான் சீதை
திருமகளின்அவதாரம் என்னும் செய்தி முதலில் கூறப்படுகிறது.
5. கூர்ம புராணம் (கி.பி. 7) (.19: 1; II 34)
6. அக்கினி புராணம் (கி.பி. 8-9) (.5-12) வான்மீகியின் சுருக்கம்
7. நாரதர் புராணம் (கி.பி. 10) (1. 79; II.75) வான்மீகியின் சுருக்கம்.
8. பிரம்ம புராணம் – அரிவம்சத்தின் சுருக்கம்.
9. கருட புராணம் (கி.பி. 10) பெரும்பான்மையும் பிற்கால
இடைச்செருகல்கள்
10. ஸ்கந்த புராணம் (கி.பி. 8க்குப் பின்) (II : 30) சிற்சில செய்திகள்
11. பத்ம புராணம் (கி.பி. 12-15) (116 படலம், உத்தர 24, 43,44)

1. தர்மோத்ர புராணம் (கி.பி. 7)
2. நரசிம்ம புராணம் (கி.பி. 4-5) (இயல் 47-52)
3. தேவி பாகவதம் (கி.பி. 10-11) ( III 28-30)
4. பிரகதர்ம, சௌரபுராணம் (கி.பி. 950-1050) (இயல் : 30)

இவையெல்லாம் தத்தம் சமயக் கருத்துக்களை விளக்க இராம காதையைப் பயன்படுத்துகின்றன.

மேற்கண்ட புராணங்கள் தவிர வான்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சில முழு
ஸ்ரீ இராமாயண நூல்களும் வடமொழியில் காணப்படுகின்றன.

1. யோக வசிஷ்ட (அ) வசிஷ்ட இராமாயணம் (கி.பி. 8 (அ) 12)
2. அத்யாத்ம இராமாயணம் (கி.பி. 13 இராமசர்மர்)
3. அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்டது)
4. ஆனந்த இராமாயணம் (கி.பி. 15) வால்மீகி பெயரால் வழங்குகிறது.

இவையேயன்றி இன்னும் பல்வேறு சிறுசிறு ஸ்ரீ இராமாயண நூல்கள் வடமொழியில் கி. பி 19ஆம் நூற்றாண்டு
வரையில் தோன்றியுள்ளன.-
ஸ்ரீ காளிதாசரின் ஸ்ரீ இரகுவம்சம் முதலான பல இலக்கியங்கள் ஸ்ரீ இராமசரிதையைப்
பாடுபொருளாகப் பேசுவதையும் காண்கிறோம்.
இவற்றுள் பெரும்புகழ் வாய்ந்தன:

1. காளிதாசர் : இரகுவம்சம் (கி. பி. 4)
2. பிரவர்சேனர் : இராவணவகோ (அ) சேதுபந்தா
(கி. பி. 550-600)
3. பட்டி : இராவணவதா (கி. பி. 500-650)
4. குமாரதாசர் : ஜானகி ஹரணா (கி. பி. 8)
5. அபிநந்தர் : இராமசரிதை (கி. பி. 9)
6. க்ஷேமேந்திரர் : (a)இராமயண மஞ்சரி (கி. பி. 11).
: (b)தசாவதார சரிதை
7. சாகல்ய மல்லர் : உதார ராகவர் (கி. பி. 12)
8. சகர கவி : ஜானகி பரிணயம் (கி. பி. 17)
9. அத்வைத கவி : இராமலிங்காம்ருதம் (கி. பி. 17)
10. மோகனஸ்வாமி : இராம ரகசியம் (அ) இராம சரிதை (கி. பி. 1608)

ஸ்ரீ இராமகாதை நாடக வடிவிலும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை
பல நூல்களாக வெளி வந்துள்ளன.
பாசர், பவபூதி, ஜெயதேவர் முதலான நாடகாசிரியர்கள் இதில் அடங்குவர்.

பௌத்த இராமாயணங்கள்

1. தசரத ஜாதகம் (பாலி, கி. மு. 5)
2. அனமகம் ஜாதகம் (பாலி, கி. மு. 5)
3. தசரத கதனம் (பாலி, கி. மு. 5)

ஜைன இராமாயணங்கள்

1. விமல சூரி : பௌம சரிதம் (பிராக்ருதம், கி. பி. 4)
2. சங்க தாசர் : வாசுதேவ ஹிண்டி (பிராக்ருதம், கி. பி. 5)
3. இரவி சேனர் : பத்ம புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 6)
4. குணபத்ரர் : உத்தர புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 10)
5. சுயம்பு தேவர் : பௌம சரிதம் (அபப்பிரம்சம், கி. பி. 9)
6. சீலங்கர் : சௌபன்ன மகா புருஷ சரிதம்
(பிராக்ருதம், கி. பி.868)
7. பத்ரேசுவரர் : ககாவலி (பிராக்ருதம், கி. பி. 11)

தமிழ்
கம்பன் : கம்பராமாயணம் (கி. பி. 9)

தெலுகு
1. கோன புத்தா ரெட்டி : ரங்கநாத ராமாயணம் (கி. பி. 13)
2. பாஸ்கரன் மற்றும் மூவர் : பாஸ்கர ராமாயணம் (கி. பி. 13)
3. ஆதுகூரி மொல்ல : மொல்ல ராமாயணம் (கி. பி. 15)

கன்னடம்
1. அபிநவ பம்பா என்னும் -நாக சந்திரர் : பம்ப ராமாயணம் (கி. பி. 11)
2. குமார வான்மீகி என்னும- நரகரி : தொரவெ ராமாயணம் (கி. பி. 16)

மலையாளம்
1. கன்னச இராம பணிக்கர் : கன்னச ராமாயணம் (கி. பி. 14)
2. துஞ்சத்த எழுத்தச்சன் : அத்யாத்ம ராமாயணம் (கி. பி. 16)

இந்தி
1. கோஸ்வாமி துளசிதாஸ் : துளசி ராமாயணம் (கி. பி. 1574)
2. கேசவ தாஸ் : இராம சந்திரிகா (கி. பி. 16)

அசாமி
மாதவ் கந்தவி : அசாமி ராமாயணம் (கி. பி. 14)

வங்காளம்
கிருத்திவாசன் : வங்காள ராமாயணம் (கி. பி. 15)

ஒரியா
பலராமதாஸ் : ஒரியா ராமயணம் (கி. பி. 16)

மராத்தி
ஏக நாதர் : பாவார்த ராமாயணம் (கி. பி. 16)

நாட்டுப்புற இலக்கியங்கள்
தமிழ், மைதிலி, போஜ்புரி, வ்ரஜ், இந்தி, மற்றும் சில வடநாட்டு
மக்களிலக்கியப் பாடல்கள்.

——————–

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் தவிர; சமஸ்கிருதத்திலேயே அதை அடியொற்றி காலப் போக்கில் மேலும்
பல ராமாயணங்கள் உருவாயின. அவை முறையே…

அத்யாத்ம ராமாயணம்
வசிஷ்ட ராமாயணம் (யோக வசிஸ்டா)
லகு யோக வசிஸ்டா
ஆனந்த ராமாயணம்
அகஸ்திய ராமாயணம்
அத்புத ராமாயணம்

ஸ்ரீ மகாபாரதத்தில் வன பர்வத்தில் ‘ராமோக்யான பர்வ’ எனும் பெயரிலும்
ஸ்ரீ பாகவத புராணத்தில் ‘9 வது ஸ்கந்தத்திலும்’ ராம கதை இடம்பெறுகிறது.
இவை தவிர ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும், அக்னி புராணத்திலும் கூட
ஸ்ரீ ராமகதையைப் பற்றி சுருக்கமாக விவரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஸ்ரீ துளசிதாசரின் ராமசரிதமானஸ். இது எழுதப்பட்ட காலம் 16 ஆம் நூற்றாண்டு.
மராத்தியில் 16 ஆம் நூற்றாண்டில் பவர்த்த ராமாயண எனும் பெயரில் மற்றொரு ராமாயணத்தை ஏக்நாத் இயற்றினார்
அஸ்ஸாமில் 15 ஆம் நூற்றாண்டில் மாதவ கந்தலி என்பவர் இயற்றிய கதா ராமாயணம் அல்லது
v கோதா ராமாயணம் எனும் ராமகதை புழக்கத்தில் இருக்கிறது.
வங்காளத்தில் 15 ஆம் நூற்றாண்டில் கிரித்திபாஸ் என்பவரால் இயற்றப்பட்ட
கிரித்திவாசி ராமாயணம் புழக்கத்தில் இருக்கிறது.
ஒதிஷாவில், ஒரிய தண்டி ராமாயணம் அல்லது ஜகமோகன் ராமாயணம் என்ற பெயரில் பலராம்தாஸ் என்பவர்
இயற்றிய ஸ்ரீ ராமாயணக் கதை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து புழக்கத்தில் இருக்கிறது.

ஆந்திராவில் புத்தா ரெட்டி என்பவரால் இயற்றப்பட்ட ஸ்ரீரங்கநாத ராமாயணமு மற்றும்
கவிஞர் மொல்ல என்பவரால் இயற்றப்பட்ட மொல்ல ராமாயணமு எனும் இரண்டு விதமான
v ராமாயணங்கள் புழக்கத்தில் உள்ளன.
கர்நாடகத்தில் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குமுதெண்டு ராமாயணம்
(ஜைன பின்புலம் கொண்டு எழுதப்பட்ட ராமாயணம்) 16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட
குமரா வால்மீகி தொரவ ராமாயணம் மற்றும் 13 ஆம் நூற்றாண்டிலேயே நாகசந்திரா என்பவரால் இயற்றப்பட்ட
ராமசந்திர சரித புராணா எனும் முன்று விதமான ராமாயணங்கள் புழங்கி வருகின்றன.
தவிரவும்–கன்னடத்தில் முத்தண்ணா எனும் லக்‌ஷ்மிநாராயணா 1895 ல் இயற்றிய உரைநடை இலக்கியமான
அல்புத ராமாயணமும் 1898 ல் வெளிவந்த ராமஸ்வதேமும் பிரசித்தி பெற்றவை.

தமிழ்நாட்டில் ஸ்ரீ வால்மீகி ராமாயணத்திற்கு அடுத்தபடியாக மிகவும் புகழ்மிக்க ஸ்ரீ ராம கதையாக
கருதப்படுவது 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் ஸ்ரீ கம்பர் இயற்றிய ‘ஸ்ரீ கம்பராமாயணம்’.
கேரளாவில் 16 ஆம் நூற்றாண்டில் துஞ்சத்து எழுத்தச்சன் இயற்றிய ‘அத்யாத்ம ராமாயண கிளிப்பாட்டு
மிகப் பிரபலமான ராமகதையாகக் கருதப்படுகிறது.

நேபாளத்தில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பானு பக்த ஆச்சார்யா என்பவர் இயற்றிய
பானுபக்த ராமாயணமும், 20 ஆம் நூற்றாண்டில் சித்திதாஸ் மஹஜூ இயற்றிய சித்தி ராமாயணமும் பிரசித்தி பெற்றவை.
கோவாவில் 15 ஆம் நூற்றாண்டில் கர்தலிபுரா எனுமிடத்தில் வாழ்ந்த கிருஷ்ணதாச ஷாமா என்பவரால்
கொங்கணியில் இயற்றப்பட்ட ராமாயணமு எனும் ராமகதையின் கைப்பிரதிகள்
போர்ச்சுகலில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உருது மொழியில் 17 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட போத்தி ராமாயணம் பிரபலமானது.

இவை தவிர, சம்பு ராமாயணம், ஆனந்த ராமாயணம், மந்தர ராமாயணம், கிர்தர் ராமாயணம், ஸ்ரீராமாயண மங்கேரி,
ஸ்ரீரங்கநாத் ராமாயணம், பாஸ்கர ராமாயணம், சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கால் இயற்றப்பட்ட
கோவிந்த ராமாயணம் மற்றும் ராதே சியாம் ராமாயணம் எனும் ராமாயணங்களும் கூட இந்தியாவில் அந்தந்த
பிரதேசத்து மக்களால் நன்கு அறியப்பட்ட ராமாயணங்களாகத் திகழ்கின்றன.

கம்போடியாவில் ரீம்கர்
தாய்லாந்தில் ராமாகீய்ன்
லாவோஸில் பிர லாக் பிர லாம்
பர்மாவில் யம ஸாட்டாவ்
மலேசியாவில் ஹிகாயத் செரி ராமா
இந்தோனேசியா மற்றும் ஜாவாவில் காகவின் ராமாயணம்.
பிலிப்பைன்ஸில் ராஜா மகாந்திரி என்ற பெயரிலும் ராமாயணக் கதை சொல்லப்படுகிறது.
இரானில் ’தாஸ்தன் இ ராம் ஓ சீதா (Dastan-e-Ram O Sita)
ஸ்ரீலங்காவில் ஜானகிஹரன் (Janakiharan)
ஜப்பானில் ராமேயன்னா அல்லது ராமன்ஸோ (Ramaenna or Ramaensho)
சீனா, திபெத் யுன்னான் (தென்மேற்கு சீனா) வில் Langka Sip Hor (thai lu language)

———-

கெமர் மொழியில் உள்ள ரீம்கெர்,
தாய் மொழியில் உள்ள ராமகியென்,
லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம்,
மலாய் மொழியின் இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவியவை ஆகும்.

——–

இராமாயணம் என்னும் பெயர் இராமன், அயனம் என்னும் சொற்களின் கூட்டாகும்.
அயனம் என்னும் சொல் சமசுக்கிருதத்தில் பயணம் என்னும் பொருளுடையது.
இதனால், இராமாயணம் என்பது இராமனின் பயணம் என்னும் பொருள் குறிக்கிறது.

இலங்கையின் மையப் பகுதியில், நுவரெலியா என்னும் நகருக்கு அண்மையில் உள்ள
சீதா எலிய என அழைக்கப்படும் இடமே சீதையைச் சிறைவைத்த அசோகவனம் என்கின்றனர்.

——–

ஸ்ரீ இராமகீர்த்தி அல்லது தாய்லாந்து இராமாயணம் (இராமாக்கியென், Ramakien,) என்பது
தாய்லாந்து நாட்டின் தேசிய காப்பியம் ஆகும். இது வால்மீகி இராமாயணத்தை மூலமாகக் கொண்டது.
இதன் தொலைந்து போன மூலப்பகுதிகள் 1767ஆம் ஆண்டு நடந்த ஆயுத்தியாவின் அழிவில்
சிதைந்து போன பின்னர், 1797ஆம் ஆண்டு தாய்லாந்து மன்னனான முதலாம் இராமாவின் இதனை எழுதினார்.
இக்காப்பியத்தின் மூலம் தாய்லாந்தில் கொன் என வழங்கப்படும் முகமூடி நாடகத்திற்காக இயற்றப்பட்டது எனவும் கூறுவர்.
இரண்டாம் இராமாவின் ஆட்சியில், அந்நாட்டவர்களின் கலை, இலக்கியம் என அனைத்திலும் வேரூன்றியது.

இக்காப்பியத்தின் மூலம் ஸ்ரீ வால்மீகி ராமாயணமாக இருந்த போதிலும் இதன் நடைத்தன்மை, போர் வர்ணனை,
ஆடைகள், இதில் கூறப்படும் நில அமைப்புகள், இயற்கை காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவை
தாய்லாந்து பண்பாட்டுக்கு ஏற்ப மீளுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

பொருளடக்கம்
பாத்திர அமைப்பு தொகு
இதன் பாத்திர அமைப்புகள் வால்மீகி ராமாயணத்துடன் ஒத்து வந்த போதிலும்
இதன் பாத்திர பெயர்கள் தாய் மொழிக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுளது.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கம்ப ராமாயணம்-முன்னுரை ஸ்ரீ பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன்–

January 9, 2021

ஸ்ரீ பால காண்டம் கடவுள் வாழ்த்துக்கள்–

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.–1-

——–

பாலகாண்டம் பாயிரம் என்ற பொதுத்தன்மையுடைய பகுதி போக,
ஆற்றுப்படலத்தில் தொடங்கிப் பரசுராமப்படலம் ஈறாக 23 படலங்களாக வகுக்கப்பெற்றுள்ளது.

ஆற்றுப் படலம், நாட்டுப் படலம், நகரப் படலம், அரசியற் படலம் என்பன ஒரு தொகுதி.

இதனை அடுத்துத் திரு அவதாரப் படலம், கையடைப் படலம், தாடகை வதைப் படலம்,
வேள்விப் படலம், அகலிகைப் படலம், மிதிலைக் காட்சிப் படலம் என்பன ஒரு தொகுதி.

இறுதியாக எதிர்கொள் படலம், கோலங்காண் படலம், கடிமணப் படலம், பரசுராமப் படலம் என்பன ஒரு தொகுதி.

இப்படி மூன்று தொகுதிகளாகப் பிரித்த பின்னர் எஞ்சுவன நான்காவதாக உள்ள தொகுதியாகும்.
அது சந்திர சயிலப் படலம், வரைக்காட்சிப் படலம், பூக்கொய் படலம், நீர் விளையாட்டுப் படலம்,
உண்டாட்டுப் படலம் ஆகியன.

———

சோழ சாம்ராஜ்யம் நானூறு ஆண்டுகள் வாழ்ந்து ஒருவாறு மடிகின்ற காலத்தில் தோன்றியவர்
(12ஆம் நூற்றாண்டின் கடைப் பகுதி) சேக்கிழார் ஆவார்.

ஆக, சோழ சாம்ராஜ்யத்தின் தொடக்கத்தில் கம்பனும், அதன் வீழ்ச்சியில் சேக்கிழாரும்
இரண்டு பெருங்காப்பியங்களை ஆக்கித் தந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கடவுள் இங்கு வந்து பிறந்தான் என்று கூறாமல், கடவுளே இங்குப் பிறக்க விரும்பினான் என்று கூறும்
வகையில் நாட்டு, நகரச் சிறப்பை ஒப்பற்றதாக ஆக்கிக் காட்டுகிறான்.

பிறந்தான், வளர்ந்தான், வசிட்டனிடத்திலே கல்வி கற்றான். அப்படிக் கல்வி கற்கும்போதே அவன்
மேட்டுக்குடி மகனாக – அரச மகனாக வாழவில்லை என்பதையும் பொதுமக்களோடு நெருங்கிய
தொடர்பு உள்ளவனாக வாழ்ந்தான் என்பதையும் ஒரு பாடலில் வைத்துக் காட்டுகிறான்.
தெருவில் வருகின்றவர்களையெல்லாம் சந்தித்து
‘எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன்
முதிர் தரு கருணையின் முக மலர் ஒளிரா
எது வினை இடர் இலை இனிது நும் மனையும்
மதி தரு குமரரும் வலியர் கொல்’ எனவே (கம்பன், 311) உசாவுவான்.
இப் பாடலில் பொதுமக்களோடு எப்படி இரண்டறக் கலந்து பழகுகிறான் என்பதைக் கவிச்சக்ரவர்த்தி
வைத்துக் காட்டுவது ஏனைய இலக்கியங்களில் காணாத புதுமையாகும்.

———-

பால காண்டம் 77 சருக்கங்கள், 2355 சுலோகங்கள்-

வான்மீகி நாரதரைப் பார்த்துக் கேட்கும் அறியா வினா சிந்திக்கத்தக்கது.
இந்த உலகத்தில் இப்போது இருப்பவர்களில் நற்பண்புகளை உடையவனாக இருப்பவன் எவன்?
வீரியமுடையவனாகவும்,அறங்களை அறிந்தவானாகவும், நன்றியுள்ளவனாகவும், எப்போதும் உண்மையே பேசுபவனாகவும்,
விரதத்தில் உறுதியுடையவனாகவும் இருப்பவன் எவன்? (1. 1-2)
நல்லொழுக்கமும், எல்லா உயிர்களிடத்தும் அன்புள்ளமும்,பல்கலை அறிவும், பல்வகையாற்றலும் எப்போதும் அன்பொழுகும்
இன்முகமும் உரையவன் எவன்? (1. 1-3)
தைரியமுடையவனும், கோபத்தைத் தன்வசப்படுத்தினவனும் ஒளியுமிழும், உடலையுடையவனும்,அழுக்காறு அற்றவனும், போரில்
உருத்தெழுந்தபோது தேவர்களாலும் அஞ்சத் தக்கவனும் எவன்? (1.1-4)
இதனை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில்,இத்தகைய ஒருவனை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை
என்னுள்ளே அடங்காது மிகுந்து எழுகிறது. இத்தகைய மானுடனை அறியும் தகுதி தங்களுக்கே உண்டென அறிவேன். (1. 1-5)

வான்மீகியின் ஆசையின் ஆழத்தை உணர்ந்த நாரதர் பெரிதும் மகிழ்ந்து,“முனிவரே உம்மாலே கூறப்பட்ட நற்குணங்கள்
ஒருவரிடத்தேயே கிடைப்பதற்கரியன. ஆலோசிக்குமிடத்து, இக்குவாகு மரபில் தோன்றி ஸ்ரீராமர் என்று மக்களால் அழைக்கப்பட்டவர் தான்
இவ் எல்லாப் பண்புகளையும் ஒருங்கே உடையவர்” என்று கூறி இராம காதையைச் சுருங்க உரைக்கிறார்.
வான்மீகி தாம் கற்பித்துக் கொண்ட நற்பண்புகளும், நல்லொழுக்கங்களும் உடைய மானுடனாக
இராமன் என்னும் பெயருடைய அரசன் ஒருவன் இருப்பது அறிந்து, அவன் வாழ்க்கைக் கூறுகளை நாரதர் கூறக்கேட்டு
அவற்றை அடிப்படையாகக் கொண்டு தம் காப்பியத்தை இயற்றினார்.
மானுட வாழ்க்கையில் வான்மீகி காண விரும்பிய குறிக்கோட் பண்புகள்,
அவற்றைத் தாங்கிய ஒருவனை அறிந்து கொள்ளவேண்டும் என்னும் வான்மீகியின் ஆழமான ஆசை
இந்த இருவகை அம்சங்களும் கம்பன் காப்பியத்தில் இடையறாது இழையோடக் காண்கிறோம்.

கம்ப ராமாயணத்தில் அவையடக்கமாக ஆறு பாடல்கள் அமைந்துள்ளன.

———–

நான்கு பிள்ளைகளைப் பெற்றான் தசரதன் என்றாலும் இராமனைத் தவிர, ஏனைய மூன்று பிள்ளைகளை அவன்
நினைவில் கொண்டிருப்பதாகவே தெரியவில்லை. பால காண்டத்திலேயே இந்தக் குறிப்பை வைத்துக் காட்டுகிறான் கம்பன்.
பிள்ளைகளைக் கேட்க வந்த விஸ்வாமித்திரன்.

“நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி” (324)
என்றுதான் கூறினானே தவிர, ‘இராமன்’ என்று பெயரிட்டுச் சொல்லவில்லை.
‘கரிய செம்மல்’என்றால் பரதனும் கரிய செம்மல்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.அப்படியிருக்க ‘கரிய செம்மல்’என்று
விஸ்வாமித்திரன் கூறியவுடன், இராமனைத் தான் தசரதன் நினைத்தானே தவிர, பரதனைப் பற்றி நினைத்ததாகவே தெரியவில்லை.

“மைந்தனை அலாது உயிர் வேறு இலாத மன்னன்” (1514) என்று அயோத்தியா காண்டத்தில் கம்பன் இதனை நினைவூட்டுவான்.
“போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான்”(1898) என்று கம்பன் முடிப்பான்.
இராமன் கானம் போய்விட்டான் என்று சொன்னவுடனேயே தசரதனுடைய ஆவி பிரிந்துவிட்டது என்று பேசுகிறான்.
வசிட்டனை நோக்கி,
“சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன் மன்னனே ஆவான் வரும்
அப் பரதன் தனையும் மகன் என்று உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு” (1654)
என்று தசரதன் கூறிவிட்ட காரணத்தால் இறுதியாக நீர்க்கடன் செய்வதற்குக்கூட, பரதனுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
தசரதனுக்கு நீர்க்கடன் செய்ய பரதனுக்கு வாய்ப்பில்லை என்றுகூறுவதைக் காட்டிலும்,
பரதன் கையினால் நீர்க்கடன் பெறுகின்ற வாய்ப்பை தசரதன் இழந்துவிட்டான் என்று கூறுவது முற்றிலும் பொருத்தமாகும்.

பாக்கியம் புரிந்திலாப் பரதன்தன்னை பண்டு
ஆக்கிய பொலங் கழல் அரசன், ஆணையால்
தேக்கு உயர் கல் அதர் கடிது சேணிடைப்
போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால்” (1465)

‘ஏன் பரதனைப் பாட்டன் வீட்டிற்கு அனுப்பினான் தசரதன் என்பது எனக்கு இப்போது புரிந்துவிட்டது.
இராமனுடைய பட்டாபிஷேகம் பற்றிப் பேசுகின்ற நேரத்தில் பரதன் இங்கிருந்தால் அது பிரச்சனைக்கு இடமாகும்
என்று கருதித்தான் கேகய நாட்டிற்கு அனுப்பினான் என்று சூழ்ச்சிக்காரியாகிய கூனி பேசுகிறாள்.

“அரசரில் பிறந்து,பின் அரசரில் வளர்ந்து அரசரில் புகுந்து, பேர் அரசி” (1467)யாக இருக்கின்ற கைகேயியின்
மனத்தைக் கேவலம் ஒரு பணிப் பெண் மாற்றிவிட்டாள் என்றுசொல்வதை, கம்பனும்கூட ஏற்றுக்கொள்வதாகத்
தெரியவில்லை. ‘மந்தரை துணைக் காரணமாக இருந்தாள்
“அரக்கர் பாவமும்,அல்லவர் இயற்றிய அறமும் துரக்க, நல் அருள் துறந்தனள் தூ மொழி மடமான்.”(1484)என்பதாக

ஆக கைகேயியின் மனம் திரிந்தது என்றால் அது கேவலம் கூனியினுடைய சூழ்ச்சியால் அன்று. அரக்கருடைய பாவமும்,
அல்லவர்களுடைய தவமும் சேர்ந்து கைகேயியின் மனத்தை மாற்றின என்று சொல்லுகின்ற முறையில்
கைகேயினுடைய பாத்திரப் படைப்பை மிக உயர்த்தி விடுகின்றான் கம்பநாடன்.

இராமன் எப்படி ஸ்திரிப்ரக்ஞனாக அமைக்கப் படுகின்றானோ அதுபோல் ஒரு ஸ்திதப்ரக்ஞ மனோ நிலையுடையவளாகக்
கைகேயியும் படைக்கப் பட்டிருக்கின்றாளோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
நன்மை எது, தீமை எது என்பதை நன்கு அறிந்துகொண்டாள் கைகேயி.
இந்த மாபெரும் தியாகத்தில் தன்னைச் சூடமாக ஆக்கி எரித்துக் கொண்டு கணவனைக் காப்பாற்றுகின்றாள்
என்று நினைக்கத் தோன்றுகிறது.
“அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல்
இன்றுகாறும் என் இதயத்தினிடை நின்றது. என்னைக்கொன்று
நீங்கலது. இப்பொழுது அகன்றது உன் குலப்பூண்
மன்றல் ஆகம் ஆம் காந்தமா மணி இன்று வாங்க” (10068) என்று சொல்லி, ‘நீ வரத்தைக் கேள்’ என்று சொல்லுகின்றான்.
அப்போது இராமன் கேட்கின்றவரம் வியப்பை உண்டாக்குவதாக அமைகின்றது.
‘ஐயா,”தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும், மகனும் தாயும் தம்பியும் ஆம் வரம் தருக” (10079) என்று கேட்கின்றான்.
தெய்வத்தைப் போல, தன்னுடைய நலத்தைக் கருதாமல், பிறருக்காகவே மாபெரும் காரியத்தைச் செய்தவள்
கைகேயி என்பதை இராகவன் உணர்ந்த காரணத்தால் தான் “என் தெய்வம்”-என்று பேசுகின்றான்.

மூல நூலில் அமைந்துள்ள முறையை விட்டுவிட்டுப் புதிய முறையில் கன்யாசுல்கத்தை ஓரளவு மறைத்து, அதே
நேரத்தில் கைகேயியை ஒரு மாபெரும் தியாகியாக, ஸ்த்தப்ரக்ஞையாக, கடமையை நிறைவேற்றுவதற்காகப்
பழி பாவங்களை ஏற்றுக் கொள்ளுகின்ற ஒரு பாத்திரமாக அமைத்து விடுகின்றான் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன்.

கன்யா சுல்க நிகழ்ச்சியைத் தசரதன், கைகேயி என்ற இருவர் மட்டும் அறிந்ததோடு அல்லாமல் இராகவனும் அறிந்திருந்தான்
என்பதைச் சந்தர்ப்பம் வரும் போது அவன் கூற்றாகவே வைத்துப் பேச வைக்கின்றான்
கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன். மூல நூலாகிய வால்மீகத்தில் இந்நிகழ்ச்சி இராமனும் பரதனும் காட்டில் சந்திக்கின்ற காலத்தில்
பரதனிடம் இராமனே கூறுவதாக அமைந்துள்ளது.
பரதன் கூட அதை ஓரளவு அறிந்திருந்தான் என்பதையும் அந்தப் பாடலின் மூலமே தெரிவிக்கின்றான்.

வரன் நில் உந்தை சொல் மரபினால் உடைத் தரணி நின்னது என்று இயைந்த தன்மையால்
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால் அரசு நின்னதே ஆள்க (கம்பன் 2485) என அந்தப் பாடலில் சொல்கிறான்
இராகவன். ‘நீ பிறந்து விட்டதனாலே இந்த ராஜ்யம் உன்னுடையது ஆகிறது’ என்று இராகவன் பேசுகிறான் என்றால் என்ன பொருள்.?
கன்யா சுல்கக் கதையை வேறு முகமாக, வேறு விதமாக இங்கே புகுத்துகிறான் கவிச்சக்கரவர்த்தி.
அதை நன்கு அறிந்திருந்தவனாகிய இராகவன் பேசுகின்றான்.
“பரதா, நீ பிறவாமல் இருந்திருந்தால் இந்த ராஜ்யம் எனக்கு உரியதாக இருந்திருக்கலாம்.ஆனால், கைகேயியின் வயிற்றில்
நீ பிறந்துவிட்ட காரணத்தால் இந்தப் பூமி உனக்குச் சொந்தமாகஆகிவிட்டது. அதனை நீயே ஆள்வாயக’
என்று இராகவன் கூறியதாக மிக அற்புதமான முறையில் அந்தக் கதையை மறுபடியும் நினைவூட்டுகிறான் கவிச்சக்கரவர்த்தி

இராகவன் சொன்னதை ஏற்றுக்கொள்கிறான் பரதன். அது தான் ஆச்சரியம்.
முன்னர் வந்து உதித்து உலகம் மூன்றிலும் நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார் என்னது ஆகில் யான்
இன்று தந்தனென் மன்ன! போந்து நீ மகுடம் சூடு (2486). இராகவன் சொன்னதை ஏற்றுக்கொண்டு,
“நான் அரசன்தான். இப்போது நான் ஆணையிடுகின்றேன். நீ போய் ராஜ்யத்தை ஆள்வாயாக” என்று பரதன் கூறும்போது
இராமன், பரதன் ஆகிய இருவருமே இந்தக் கன்யா சுல்கக் கதையை ஏற்றுக்கொண்டு அதற்கு வழி செய்கின்றார்கள்
என்பதை அறிய முடிகின்றது.

எனவே,கைகேயி கூறிய கடுஞ்சொற்கள் எல்லாம் மேலோட்டமாகப் பார்ப்பதற்குக் கடுஞ்சொல்லாக அமைந்தனவே தவிர,
உண்மையில் அவை மாபெரும் தியாகத்தை அடிப்படையாகக் கொண்ட ‘தூமொழிகள்’ என்பதை
“தூ மொழி மடமான்” (1484) என்ற சொல்லின் மூலம் பெற வைத்துவிடுகின்றான்.

————

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன்னருள் சுரந்து,
‘மாழை மான் மடநோக்கி உன் தோழி; உம்பி எம்பி’ என்று ஒழிந்திலை உகந்து,
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி, என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட,
ஆழி வண்ண! நின் அடியினை அடைந்தேன் அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே! (நாலாயிரம் 1418)
என்ற ஆழ்வாரின் பாசுரத்தை மனத்தில் வைத்துக்கொண்டு, பிராட்டியை குகனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறான் இராகவன் என்ற
ஒரு நிகழ்ச்சியை உண்டாக்கி, படகிலே சென்ற போது சீதையைக் காட்டி
‘இவர் உன் கொழுந்தி’, எனவும், இலக்குவனைக் காட்டி ‘இவன் உன்தம்பி,’ எனவும் இராமன் அறிமுகம் செய்து
வைப்பதாக ஒரு நிகழ்ச்சியைக் கம்பன் படைக்கிறான்.
“இளவல் உன் இளையான் இந் நன்னுதலவள் நின் கேள்” (1994) என்பதாக பிராட்டியை அறிமுகம் செய்து
இந்த நிகழ்ச்சியைப் பின்னர் கேள்விப்பட்டவனாகிய பரதனும் கூட,
“இன் துணைவன் இராகவனுக்கு; இலக்குவற்கும்,இளையவற்கும், எனக்கும் மூத்தான்” (2367) என்று
குகனைக் கோசலைக்கு அறிமுகம்

தன்னுடைய எல்லையில் நின்று தான் உண்ணுகின்றதை இறைவனுக்குப் படைப்பது போல
அவன் கையிலே கொண்டு வருகின்றான்.
“தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திருவுளம்?” (1966) என்று பேசுகின்றான் குகன்.
‘நான் கொண்டு வந்திருக்கிறேன். உன்னுடைய விருப்பம் எதுவோ அதன் படி செய்வாயாக’ என்று
அந்த உரிமையை இராகவனுக்கே கொடுக்கிறான்.ஏனையோர் அதனைப் பார்த்து முகம் சுளிக்கிறார்கள்.
இராகவனைப் பொறுத்த மட்டில் அதைமுழு அன்பின் வடிவாக வந்ததாக ஏற்றுக் கொள்கிறான்.
சர்க்கரையால் செய்யப்பட்ட மிளகாய் எப்படி உறைக்காமல் இனிக்குமோ அதுபோல
“நீ கொண்டு வந்த இந்தத் தேனும் மீனும் அன்பு என்ற ஒன்றினாலே முற்றிலும் சமைக்கப்பட்டுவிட்டது.” ஆகவே,
“பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்” (1967)
யாக குண்டத்தில் சொரியப்படுகின்ற அவிஸ் மிக உயர்ந்ததாகும் என்று இராகவன் பேசும் போது
குகனுடைய அன்பை பரிபூரணமாக அறிந்து ஏற்றுக் கொண்டவனாகிறான்.

தன்னைக் காண வருகின்ற பரதனைத் தூரத்தில் இருந்து பார்த்த போது, பரதன் அணிந்திருக்கிறதவக் கோலத்தையும்,
அவன் முகத்தில் தேங்கியிருக்கின்ற துக்கத்தையும் பார்த்த போதே

“நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான், அயல். நின்றான் தம்பியையும் ஒக்கின்றான்” (2332)
“எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு” (2332) என்று பேசுகின்றான்.
“ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா!”(2337)

———-

ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா! முன் உவந்து உறையும்
அப்பு உறையுள் துறந்து, அடியேன்,அருந்த தவத்தால் அணுகுதலால்,
இப்பிறவிக் கடல் கடந்தேன்; இனிப் பிறவேன்; இருவினையும்
துப்பு உறழும் நீர்த்த சுடர்த் திருவடியால், துடைத்தாய் நீ.” (2576) என்ற பாடலால் விராதன் விளக்குகிறான்.

எவ்வித நெறிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் இழிபிறவி எய்தினும் இறைவனின் இணையடிகளை மறவாத மனம் ஒன்று
மாத்திரம் இருப்பின் அவர்கட்கும் வீடுபேறு உண்டு என்பது இந்நாட்டின் பழைய கொள்கை ஆகும்.
தமிழர் கண்ட பக்தி மார்க்கத்திற்கு எடுத்துக்காட்டுகளாகக் குகனையும், விராதனையும் கவிஞன் எடுத்துக் கூறுகிறான்-

இந்திரன் வேண்டுகிற அதே நேரத்தில் சரபங்கனுடைய ஆசிரமத்தின் வெளியே இராம இலக்குவர்கள் நிற்கின்றனர்.
அதனைத் தன் ஞானத்தால் உணர்ந்து சரபங்கன் “எனக்கு வரவேண்டிய வீடுபேற்றை அளிப்பவன் வெளியே நிற்கின்றான்.
நீ தர வேண்டிய பதங்கள் எனக்குத் தேவையில்லை” என்று பேசுகிறான். அதே நேரத்தில், வீடுபேற்றின்
இலக்கணத்தைக் கீழ்வரும் பாடலில் அற்புதமாக எடுத்து விளக்குகிறான்.

“சில காலை இலா, நிலையோ திரியா,
குறுகா, நெடுகா, குணம் வேறுபடா,
உறு கால கிளர் பூதம் எலாம் உகினும்
மறுகா, நெறி எய்துவென்; – வான் உடையாய்;” (2606)
சரபங்கன் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்த இந்திரன் இராமனை இன்னான் என்று அறிந்துகொண்டு 2610 முதல் 2617 வரை உள்ள எட்டுப்
பாடல்களில் பரம்பொருளின் தன்மையைப் பேசுகிறான். ஆயிரம் யாகங்கள் செய்து இந்திரப் பெரும் பதத்தில் இருக்கும் அவனும்
விராதனைப் போலவே முரண்பாட்டில் முழுமுதலைக் காண்கிறான். அவ்வெட்டுப் பாடல்களுள் ஈடு இணையற்று விளங்குவது.

“மேவாதவர் இல்லை, மேவினரும் இல்லை; வெளியோடு இருள் இல்லை, மேல் கீழும் இல்லை;
மூவாதமை இல்லை, மூத்தமையும் இல்லை; முதல் இடையோடு ஈறு இல்லை, முன்னொடு பின் இல்லை;
தேவா! இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால், சிலை ஏந்தி வந்து, எம்மைச் சேவடிகள் நோவ,
காவாது ஒழியின், பழி பெரிதோ? அன்றே; கருங் கடலில் கண்வளராய்! கைம்மாறும் உண்டோ?” (2614) என்ற பாடலாகும்.

இவ்விரு படலங்களிலும் நம்மை வியக்க வைக்கும் செய்தியும் உண்டு. அரக்க வடிவிலிருந்து திருவடி சம்பந்தம் பெற்ற விராதன் வீடுபேற்றை
அடைகிறான். முழு ஞானியாகிய சரபங்கனோ வீடு பேற்றின் இலக்கணத்தை மிக அற்புதமாக 2606 ஆம் பாடலில் கூறி இந்திர பதத்தையும் பிரம
லோகத்தையும் உதறி விட்டு இராமனைத் தரிசித்து வீடுபேற்றை அடைகிறான்.
இவர்கள் இருவரை மட்டுமல்லாமல் இந்திரனும் இராமனைத் தரிசிக்கிறான். இவர்களைப் போலவே அவனும் இறை இலக்கணத்தைப் பேசுகிறான்
என்றாலும், தான் பெற்ற இந்திரப் பதத்தை உதறிவிட்டு வீடு பேற்றை அடைய அவன் விரும்பவில்லை.

கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன் இந்த இரண்டு படலங்களில் உபநிடதங்களைச் சாறாக பிழிந்து இந்நாட்டுக் கடவுட் கொள்கையையும்
அதனுடன் குழைத்து ஏறத்தாழ 24 பாடல்களில் தந்துவிடுகிறான்.
அம்மட்டோடு இல்லாமல் குற்றமே குணமா வாழ்ந்த விராதன், மாபெரும் ஞானியின் வாழ்க்கை வாழ்ந்த சரபங்கன் ஆகிய இருவரும்
வீடுபேற்றைப் பெரிதென மதித்துப் பெறுதலையும், தேவர்கோன் ஆகிய இந்திரன் இவர்களோடு ஒப்பிடுகையில்
சிறியவனாக ஆகிவிடுதலையும் குறிப்பால் உணர்த்துகிறான்.

“…. யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும்அல்ல; நின்பால்
அருளும், அன்பும், அறனும், மூன்றும்- உருள் இணர்க் கடம்பின் ஒளி தாரோயே! (பரிபாடல் 5 77-80)

அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னைத் துன்னித் துன்னி, வழிபடுவதன் பயம்
இன்னும் இன்னும் அவை ஆகுக- தொன்முதிர் மரபின் நின் புகழினும் பலவே! (பரிபாடல் 14 29-32)

செரு வேல் தானைச் செல்வ! நின் அடி உறை,உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்குப்,
பிரியாது இருக்க-எம் சுற்றமொடு உடனே! (பரிபாடல் 18 54-56)

பரிபாடலில் காணப்படும் இவ்வரிகளில் இத்தமிழரின் பக்தி வழியில் பொன், பொருள், போகம், இந்திரப் பெரும்பதம்
ஆகிய எவற்றுக்கும் இடமில்லை என்பது நன்கு வெளிப்படும். இக் கொள்கைகள் நாளாவட்டத்தில் வளர்ந்து,

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரகம் யான் வேண்டேன்” (நாலா. 678)

“கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் (நாலா. 681)

“வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம் கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்” (நாலா. 683)

மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும் மைத்து ஆய’ (5884)

——–

கிட்கிந்தைப் படலம் பம்பை வாவிப் படலத்தில் தொடங்கி மயேந்திரப் படலம் முடியப் பதினாறு படலங்களைக் கொண்டுள்ளது

அவ் இடத்து, இராமன், நீ அழைத்து, வாலி ஆனது ஓர்
வெவ் விடத்தின் வந்துபோர் விளைக்கும் ஏல்வை, வேறு நின்று
எவ்விடத் துணிந்து அமைந்தது; என் கருத்து இது’ என்றான்;
தெவ் அடக்கும் வென்றியானும், ‘நன்று இது’ என்று சிந்தியா. (3944)

இப்பாடலில், இரண்டு, மூன்றாம் அடிகளில் வரும் ‘வேறுநின்று ஏ விடத் துணிந்தது என் கருத்து இது’ என்ற பகுதி
வாலி வதையின் அடித்தளத்தை நன்கு விளக்கப் பயன்படும்.
சுக்கிரீவனைப் பார்த்து, ‘வாலியை வலியச் சென்று போருக்கு அழைப்பாயாக’ என்று கூறுகின்ற அதே நேரத்தில், தான்
எவ்வாறு போர் செய்து வாலியைக் கொல்ல வேண்டும் என்ற திட்டத்தையும் (Strategy) இராமன் வகுத்துக் கொண்டான்.
‘மறைந்து நின்று தான் அம்பு எய்யப் போகிறேன் (ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு) நான் கண்ட முடிபாகும் இது’ வென்று பேசுகிறான்.
‘வேறு, நின்று’ என்ற சொற்கள் மறைவாக நின்று என்பதையும்
‘ஏ (அம்பை) விடத் துணிந்தது’ (எய்ய முடிவு செய்து விட்டேன்) என்ற சொற்கள் நீண்ட சிந்தனைக்குப் பிறகு
இராகவன் கொண்ட முடிவு என்பதையும் காட்டும்.
இவ்வழியைத் தவிர வேறு வழியில் வாலியைக் கொல்ல இயலாது. வாலி இறந்தால் ஒழிய இராவண வதம் தடையின்றி
நடைபெற இயலாது. எனவே, இம்முடிவுக்கு இராகவன் வருகிறான்.

வாலியோ இராமனுடைய வரலாற்றை மிக நன்றாக அறிந்திருந்தான். இராகவனுடைய பண்புநலன்களைத்
துல்லியமாக எடை போட்டு அறிந்திருந்தான் என்பதை (3965 முதல் 3969 வரை) ஐந்து பாடல்களில் விரிவாகக் கூறுகிறான்.
அம்பைநிறுத்தி ஓரளவு வெளியே இழுத்து அதில் பொறிக்கப்பட்ட
‘செம்மைசேர்நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்’. ‘கண்களில் கண்டான்’
கண்ணுற்றான் வாலி, நீலக் கார்முகில் கமலம் பூத்து
மண் உற்று, வரிவில் ஏந்தி, வருவதே போலும் (4016)
ஸ்பரிஸ தீட்சை,நயன தீட்சை, திருவடி தீட்சை என்று பலவகை உபதேசம்
ஏவுகூர் வாளியால் எய்து, நாய் அடியனேன்
ஆவி போம் வேலைவாய், அறிவு தந்து அருளினாய் (4063) என்று கூறுகிறான்.
மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ! –(4063)
மறைகளும் முனிவர் யாரும், மலர்மிசை அயனும், மற்றைத்
துறைகளின் முடிவும், சொல்லும் துணி பொருள், துணி வில் தூக்கி,
அறைகழல் இராமன் ஆகி, அறநெறி நிறுத்த வந்தது;
இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி; எண்ணம் மிக்கோய். (4073)
ஒவிய உருவ! நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்,
பூ இயல் நறவம் மாந்தி, புந்தி வேறு உற்றபோழ்தில்,
தீவினை இயற்றுமேனும், எம்பிமேல் சீறி, என்மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான். (4068)
தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலும், செய்கை (4020-4)

இராமகாதை முழுவதிலும் இலக்குவன், பரதன், கவந்தன், சவரி, வாலி, அனுமன், வீடணன், சரபங்கன் ஆகிய அனைவரும்
இராமனை யாரென்று அறிந்திருந்ததாகக் கவிஞன் பாடுகிறான்.

அனுமன். இவன் ‘கல்லாத கலையும் வேதக் கடலுமே இல்லை’ (3768) என்றும்
‘உலகுக்கெல்லாம் ஆணி’ (3769) என்றும்,
‘நாட்படா மறைகளாலும், நவைபடா ஞானத்தாலும், கோட்படாப் பதமே ஐய! குரக்கு உருக் கொண்டது’ (3783) என்றும்
இராமனால் வருணிக்கப்படும் பாத்திரம் ஆவான்.
கோட்படாப்பதம் என்று இராமபிரானால் வருணிக்கப்படுதலின் இப்பாத்திரம் யான், எனது என்று செருக்கறுத்த பாத்திரமேயாவான்.

சிந்தனைக்கு உரிய பொருள் ஒன்றை இழந்து தேடுகின்றனர் (3756) –
தருமத்தின் வடிவான இவர்கள் அருமருந்தனைய ஒன்றை இழந்து தேடுகின்றனர் (3757)-
சினத்தை வென்றவர்கள் – கருணையில் கடல் அணையர் – இதமான பண்பு உடையவர்கள் இவர் –
இந்திரன் அஞ்சும் வலிமையுடையவர் மன்மதனையும் வெல்லும் அழகுடையவர் (3758) –
புலி முதலிய கொடிய விலங்குகளும் மயில் முதலிய பறவைகளும் இவர்கள்மாட்டு அன்பு செய்து உருகுகின்றன -(3760 – 61)
நெருப்பைக் கக்கும் கற்கள் இவர்கள் பாதம் பட்டவுடன் மலர்கள் போன்று மென்மை அடைகின்றன. (3762) என்றெல்லாம் கணிக்கிறான்.
துன்பினைத் துடைத்து, மாயத் தொல்வினை தன்னை நீக்கி,
தென்புலத்து அன்றி மீளா நெறி உய்க்கும் தேவரோ தாம்?
என்பு எனக்கு உருகுகின்றது; இவர்கின்றது அளவு இல் காதல்;
அன்பினுக்கு அவதி இல்லை; அடைவு என்கொல்? அறிதல் தேற்றேன்-(3763)

‘சங்குசக்கரக் குறி உள, தடக்கையில் , தாளில்;
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை;
செங் கண் விற்கரத்து இராமன், அத் திரு நெடுமாலே; இங்குஉதித்தனன், (3859)

தொண்டன் பரம்பொருளையும் பரம்பொருள் தொண்டனையும் இனங்கண்டுகொள்கிற மாபெரும் நிகழ்ச்சி,

சுந்தர காண்டம்,கடல் தாவு படலத்தில் தொடங்கித் திருவடி தொழுத படலத்தில் முடிகின்றது
‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர்’ (10) – பிறவியாகிய ஆழியைக் கடப்பவர் இறைவன் அடி சேர்வர்-
பிறவிக் கடலைத் தாண்டினால் கிடைப்பது திருவடி என்ற கருத்து இங்கே புதைந்துள்ளமை அறி்யப்பெற வேண்டும்.
மயேந்திர மலையில் அனுமன் முதலியோர் ஒன்று கூடிய பொழுது இராம நாமத்தின் மகிமையைச் சம்பாதி கூறினான்.
‘எல்லீரும்அவ் இராம நாமமே சொல்லீர்;சொல்ல, எனக்கு ஓர் சோர்வு இலா நல் ஈரப் பயன் நண்ணும்’ (4695) என்று சம்பாதி கூறவும்.

‘அரவணைத்துயிலின் நீங்கிய தேவனே அவன்; இவள் கமலச் செல்வியே’ (5134)
பிராட்டியிடம் அவன் கண்டிராத ஓர் அழகைத் தொண்டனாகிய அனுமன் காணுகிறான்.
‘தவம் செய்த தவமாம் தையலின் அழகை இராகவன் “காண நோற்றிலன் கமலக் கண்களால்” (5141) என்று அனுமனே பேசுகிறான்.

அனுமன் பிராட்டியின் உயிரைக் காத்தான். இப் பேருபகாரத்தை நினைந்து அவனுக்கு நன்றி பாராட்டும் முறையில் அந்தத் தாய்,
“உயிர் தந்தாய் உத்தம” (5297) என்றும்
“அம்மை ஆய், அப்பன் ஆய அத்தனே அருளின் வாழ்வே” (5298) என்றும்
“பாழிய பணைத் தோள் வீர துணையிலேன் பரிவு தீர்த்த வாழிய வள்ளலே” (5299) என்றும் நன்றி பாராட்டிவிட்டு,
தாய் மகனை ஆசீர்வதிக்கும் முறையில்,
“உலகம் ஏழும் ஏழும் வீவுற்ற ஞான்றும், இன்று என இருத்தி” (5299) என்று ஆசி வழங்கினாள்.

“அடியேன் தோள்மிசை கடிது ஏறு”(5354)

“அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
எல்லை நீத்தஉலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன் (5362) என்று வீறு தோன்றப் பேசுகிறாள்.

“திருமாலோ,இந்திரனோ, சிவபெருமானோ, நான்முகனோ, ஆதிசேடனோ, இவர்களுள் யார் நீ (5874)
எமனோ, முருகனோ, திக் பாலகரோ யார் நீ (5975)
வேள்வியில் வந்த பூதமோ, நான்முகன் அனுப்பிய தெய்வமோ (5876) யார் நீ?” என்ற வினாக்களை இராவணன்
தொடுப்பதிலிருந்து இராவணண் எந்த அளவுக்கு மாறியுள்ளான் என்பதை அறிய முடிகிறது.
புன்தொழில் குரங்கு என்று எண்ணி நகையாடினவனைக் கிங்கிரர் முதல் அக்ககுமாரன்வரை அழிந்தோர் பட்டியல்
மனமாற்றம் கொள்ளச் செய்தது உண்மை தான்.

இத்தனைவினாக்களுக்கும் விடை கூற வல்ல அனுமன் தான் யார் என்பதை (5878 – 5885) எட்டுப் பாடல்களில் விடை கூறுகிறான்
கடவுள் என்ற தமிழ்ச் சொல்லேகூடத் தம்முள் முரண்பாட்டைக் கொண்டதாகும்.
“கட” என்ற பகுதி வாக்கு. மனோலயம் கடந்தது என்பதைக் குறிக்கும்.
“உள்” என்ற விகுதி இவை அனைத்தின் உள்ளேயும் ஊடுருவி நிற்கும் என்பதைக் குறிக்கும்.
எட்டுப் பாடல்களில் சொல்லிய பாடல்கள் உபநிடத வாக்கியங்கள்போல் மிகச் சுருக்கமாக அமைந்துள்ளன.
இதை விரிவாகப் பாடவே இரணியன் வதைப் படலத்தைத் தானே புதிதாகச் சேர்த்துக் கொண்டான்-
இங்கு அனுமன், இராவணன் என்ற இருவரிடையே உள்ள உரையாடல்.
அங்கு இரணியன், பிரகலாதன் என்ற இருவரிடையே உள்ள உரையாடல்.

இப் பாடல்கள் இரண்டு வகையில் மெய்ப் பொருளை உணர்த்துகின்றன.
உபநிடதம் நேதி என்று சொல்வது போல,
‘இவனில்லை, இவனில்லை’ என்று எதிர்மறை முகத்தாலும், ‘இவன் தான்’ என்று உடன்பாட்டு முகத்தாலும்
நிறுவ முயல்கிறான் கம்பன். மூலப்பொருளின் இயல்பை எதிர்மறை முகத்தால் கூறப் போகும் அனுமன் கீழ்வருமாறு கூறுகிறான்:

தேவரும் பிறரும் அல்லன்; திசைக் களிறு அல்லன்; திக்கின்
காவலர் அல்லன்; ஈசன் கைலை அம் கிரியும் அல்லன்;
மூவரும் அல்லன்; மற்றை முனிவரும் அல்லன்;— (5881)
அனுமன், “சொல்லிய அனைவரும் அல்லன் அப் புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலேன்” (5878) என்று குறிப்பிடுகிறான்.
உடன்பாட்டு முகமாக அமைந்திருத்தல் காண்டற்குரியன.

அனையவன் யார் ? என,அறிதியாதியேல்,
முனைவரும், அமரரும்,மூவர் தேவரும்,
எனையவர் எனையவர் யாவர், யாவையும்,
நினைவு அரும் இரு வினை முடிக்க, நின்றுளோன் (5879)

காரணம் கேட்டி ஆயின், கடை இலா மறையின் கண்ணும்
ஆரணம் காட்ட மாட்டா,அறிவினுக்கு அறிவும், அன்னோன்;
போர் அணங்கு இடங்கர்கவ்வ, பொது நின்று “முதலே” என்ற
வாரணம் காக்க வந்தான் அமரரைக் காக்க வந்தான் (5883)
‘இறப்ப உயர்ந்ததாகிய இப் பொருள் சாதாரண விலங்காகிய யானை ஒன்று தன் காலை முதலை
கவ்விக் கொண்ட பொழுது ‘ஆதிமூலமே’ என்று அழைக்கவும் ஓடோடி வந்தது’என்று கூறி முடிக்கிறான்.

மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய
காலமும் கணக்கும் நீத்த காரணன் – கை வில் ஏந்தி
சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான் (5883)

அறம் தலை நிறுத்தி,வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித்
திறம் தெரிந்து,உலகம் பூணச் செந் நெறி செலுத்தி, தீயோர்
இறந்து உக நூறி,தக்கோர் இடர் துடைத்து, ஏக, ஈண்டுப்
பிறந்தனன் தன் பொன்- பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் (5885)

அஞ்சலை அரக்க ! பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே
வெஞ்சின வாலி மீளான்; வாலும் போய் விளிந்தது அன்றே
‘அஞ்சனமேனியான் தன் அடுகணை ஒன்றால் மாழ்கி, துஞ்சினன்(5888)

எய்தினன் அனுமனும்; எய்தி, ஏந்தல் தன்
மொய் கழல் தொழுகிலன்; முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன், கையினன்,
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி, வாழ்த்தினான் (6028)

இராமன் திருவடிகளைத் தொழ வில்லை என்று பாடலின் இரண்டாவது அடி குறிக்கிறது. இராமன் எதிரே நின்றும்
அவன் திருவடிகளை ஒருவன் தொழ வில்லை என்றால் அது தவறன்றோ என்று நினைக்கத் தோன்றும்.
அந்த நினைப்புத் தேவை யில்லை
புருஷகார பூதை’ என்று போற்றிச்சொல்லப்படும் தாயின் திருவடிகளை அனுமன் வணங்கினான்.எனவே,
இராமன் திருவடிகளை வணங்காததால் பிழை ஒன்றும் இல்லை என்ற விளக்கத்தைத் தருகிறான் கவிஞன்.

மூல நூலாகிய வான்மீகத்தில் சீதையை இராவணன் எடுத்துச் சென்ற முறை வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது.
அது தமிழ் மரபுக்கு ஒத்து வராது என்பதால் பர்ணசாலையோடு எடுத்துச் சென்றான் என்று கம்பன் மாற்றி விட்டான்
இராகவன், அனுமன் வாய் திறந்து பேசாமல் இருக்கும்பொழுது (1) வண்டு உறை ஓதியும் (சீதை) நன்றாக உள்ளாள்.
(2) இவன் அவளை உறுதியாகப்பார்த்துவிட்டான். (3) அவள் கற்பும் நன்று என்றமூன்று செய்திகளைக்
குறிப்பில் குறிப்பு உணரும் இராகவன் புரிந்து கொண்டான்.

அமைதி அடைந்து அசைபோடு்ம் மனநிலையிலுள்ள இராமனுக்கு 6031 முதல் 6051 வரை உள்ள இருபது பாடல்களில் அங்கு நிகழ்ந்தவற்றை
விரிவாகக் கூறுகிறான்

“சோலை அங்கு அதனி்ல் உம்பி புல்லினால் தொடுத்த தூய சாலையில் இருந்தாள் (6037),
“மண்ணொடும் கொண்டு போனான் – வான் உயர் கற்பினாள் தன் புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான்” (6036),
தீண்டிலன் என்னும் செய்கை…. வாய்மையால் உணர்தி மன்னோ” (6039).
அனுமன் பிராட்டியின் கூற்றாக வைத்து இராமன் சற்றும் தாமதியாமல் போருக்கு எழ வேண்டுமென்ற கருத்தைப்
புரிந்து கொள்ளுமாறு அவன் கூறும் இருபது பாடல்களில் 20-ஆவது பாடலில் கூறுகின்றான், அனுமன்.
“தி்ங்கள் ஒன்றுஇருப்பென் இன்னே; திரு உளம் தீர்ந்த பின்னை,
மங்குவென் உயிரோடு”என்று, உன் மலரடி சென்னி வைத்தாள்–(6051)

சிறையிருந்தாள் ஏற்றம் கூறியது சுந்தர காண்டம் என்பர். அந்த ஏற்றத்தைப் பிறர் அறியச் செய்தவன் யார்?
அனுமன் இல்லையானால், சிறை இருந்தாள் ஏற்றத்தைப் பரம் பொருளைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்க முடியாது.
எனவே, அனுமன் பெருமையைக் கூற வந்த கவிஞன்,
செவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன் –(4966) என்று கூறுவது வெற்றுரை யன்று.
சுந்தர காண்டத்தை முடித்த பிறகு கம்பன் பாடலைச் சற்று மாற்றிச் செவிக்குத் தேன் எனச் சீதையின் புகழைத் திருத்தும்
கவிக்கு நாயகன் என்று சொல்லலாம் போல் இருக்கிறது. சிறை யிருந்தாள் ஏற்றத்தைக் கூறுவதா?
அவ் ஏற்றத்தை நாம் அறியுமாறு செய்த அனுமனைப் புகழ்வதா? தெரியவில்லை. ஆனால் ஒன்று கூறலாம் போல் தோன்றுகிறது.
பரம் பொருளின் துணையாகிய பிராட்டி சிறையிருந்ததிலோ, இராவணன் கொட்டத்தை அடக்கித் தன்னைப்
பன்முறை வீழ்ந்து வணங்குமாறு செய்ததோ வியப்பிற்குரிய தன்று.காரணம்,
அவள் பரம்பொருளின் ஒரு கூறு. தன் பெருமை தான் அறியாப் பரம் பொருளின், பிராட்டியின் பெருமையை எடுத்துக் கூற
ஒரு தொண்டன் வேண்டும்.கல்வி, கேள்வி, ஞானம், எடுத்துச் சொல்லும் ஆற்றல் (சொல்வன்மை) – இவற்றை முற்றிலுமாகப் பெற்ற
ஒருவனே, இராகவன், பிராட்டி இருவர் புகழினையும் திருத்த முடியும்.
திருத்துதல் என்ற சொல்லுக்குப் பக்குவமாகத் தயாரித்து வைப்பது என்பது பொருளாகும்.
“சமையலுக்குக் காய்கறிகளைத் திருத்தியாய் விட்டதா?” என்று இன்றும் வழங்கும் சொற்றொடர் இப்பொருளை விளக்கும்-

கவிஞன் தரும் அடைமொழி வைரம் பதித்த பொன் போல் அப்பாத்திரத்தை விளக்கப் பயன்படுகிறது.
கல்லாத கலையும்வேதக் கடலுமே இல்லை (3768)
வன் திறல்மாருதி (3928)
வன் துணை வயிரத் திண் தோள் மாருதி (4328)
கூற்றும் உட்கவாழ்வா(ன்) (4806)
அரி உருவான ஆண்தகை (5871)
நூற் பெருங்கடல் நுனித்துணர் கேள்வியான் (5040)
செறி பெருங்கேள்வியான் (6447)
நேர் இலாஅறிவன் (6447)
நவை படா ஞானமே,கோட் படாப் பதமே (குரக்கு உரு) (3783)
தருமத்தின் தனிமை தீர்ப்பான் (3181)
அறத்துக்கு ஆங்கொரு துணை யென நின்ற அனுமன் (5803)
செவ்வழி உள்ளத்தான் (3764)
கோது இல்சிந்தை அனுமன் (4294)
அழுங்கா மனத்து அண்ணல் (4791)
நீதி வல்லோன்(4478)
பழி இல்லான்(4923)
மெய்ம்மை தொடர்ந்தோன் (5422)
தொண்டு’என்ற ஒரு சொல்லின் முழு வடிவு ஆக அனுமன் படைக்கப்படுகிறான். தொண்டனிடத்து அகப்பட்டுக்கொள்ளும்
பரம் பொருள் கூட அவனை விட்டு நீங்காதவனாகிறான்.
உலக இலக்கியங்களில் தொண்டு என்ற ஒரு பண்புக்கு இத்தகைய ஒரு மா பெரும் வடிவம் கொடுத்த
கவிஞர்கள் கம்பன் தவிர யாரும் இலர் என்பது கண் கூடு.

——–

கம்பனுடைய இராமகாதைப் பாடல்கள் மிகைப் பாடல்களை நீக்கிப் பார்த்தால்
மொத்தம் உள்ளது, சென்னைக் கம்பன் கழகம் பதிப்பின்படி 10368 ஆகும்.
இதில் முதல் ஐந்து காண்டங்களின் பாடல் தொகை 6058 ஆகும்.
யுத்த காண்டம் மட்டும் 4310 ஆகும் என்றாலும், ஆரண்ய காண்டத்தில் வரும் கரன்வதை 192 பாடல்களும்,
சுந்தர காண்டத்தில் வரும் கிங்கரர்வதை முதல் பாசப் படலம் முடிய உள்ள பாடல்கள் 316 ஆகும்.
இவற்றையும் யுத்த காண்ட எண்ணிக்கையோடு சேர்த்தால், போர் பற்றிக் கூறும் பாடல்கள் மொத்தம்
4310+192+316=4818 பாடல்கள் ஆகும்.

யுத்த காண்டத்தில் கடல் காண் படலம் முதல், விடை கொடுத்த படலம் ஈறாக,39 படலங்கள் உள்ளன.
முடி சூட்டு படலம், விடை கொடுத்த படலம் போக எஞ்சிய 37ம்
போரும், போர்த் தொடர்புடைய செய்திகளும் கொண்டவை ஆகும்-

அங்கதனைத் தூது அனுப்ப வேண்டும் என்று இராமன் சொன்னபொழுது வலுவான காரணங்கள் பலவற்றைக் காட்டி,
அச்செயல் கூடாது என இலக்குவன் மறுக்கிறான். சிறந்தது போரே என்றான் இலக்குவன்;
சேவகன் முறுவல் செய்து விடை கூறுகிறான்:
“அயர்திதிலென்; முடிவும் அஃதே; ஆயினும், அறிஞர் ஆய்ந்த
நயத்துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல் நன்றோ?
புயத்துறை வலியரேனும், பொறையொடும் பொருந்தி வாழ்தல்
சயத்துறை; அறனும் அஃதே’ என்று இவை சமையச் சொன்னான்” -(6981)-

வடக்கு வாயிலின் வழியே நின்ற இலக்குவன் நாணொலி செய்தான்.
‘ஒரு மனிதன் இப்படி நாண் ஒலி செய்ய முடியுமா?’ என்று வியக்கிறான் இராவணன்.
வீரன் தம்பி கூற்றின் வெம்புருவம் அன்னசிலை நெடுங்குரலும் கேளா,
ஏற்றினன் மகுடம், இவன் ‘என்னே இவன் ! ஒரு மனிசன்’ என்னா–(7159)
இலக்குவன் நாணொலி கேட்டுத் தன் மகுடத்தையே ஒரு முறை தூக்கி வைத்துக் கொண்டான் போலும்.
இது இலக்குவனுக்குச் செய்த வீர வணக்கம் போலும்.
இந்திரசித்தனைக் கொல்வது மிக முக்கியமானது என்றாலும், அதற்காக நான்முகன் படையை ஏவி உலகுக்கு
ஊறு விளைவிக்க இலக்குவன் விரும்பவில்லை என்பதை இந்திர சித்தனே ஒப்புக் கொள்கிறான்.
இதுவே அறப்போர் எனப்படும். இத்துணை நுணுக்கங்களுடன் போரைப் பற்றி 9ம் நூற்றாண்டிலேயே பாடிய
கவிஞன் தீர்க்கதரிசி என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

திவ்வியப் பிரபந்தம், உபநிடதங்கள் என்பவற்றில் துளையமாடியவன் கம்பன்,
பிரபந்தங்கள் வளர்த்த பக்தி நெறிக்கு இடம் தராமல், இறைவன், உயிர்கள்,உலகம் என்ற மூன்றையும் வேறுபடுத்திக்
காணாமல், பிரம்மம் ஒன்று தவிர ஏனைய அனைத்தும் மித்தை என்று கூறும் அத்வைதம் தமிழர்களை ஓரளவு
கவரலாயிற்று. அந்த உபநிடதங்களை வைத்துக்கொண்டே, பக்தி இயக்கத்திற்கு வழிகாண முற்பட்டான் கம்பநாடன்.
‘இது சரியா?’ என்ற வினா எழலாம். முக்கியமான பத்து உபநிடதங்களை வைத்துக் கொண்டு தான் பிரம்மம் ஒன்றே
உண்மை என்று பேசுகிறார் சங்கரர்.
அதே உபநிடதங்களை வைத்துக் கொண்டு தான் முப் பொருள் பற்றிப் பேசுகிறார் இராமானுஜர்.
எனவே, ஒன்றுக்கொன்று மாறுபட்ட கொள்கைகளை நிறுவ அதே உபநிடதங்களைப் பயன்படுத்தலாம் என்பது தெளிவாகிறது.
இந்த நுணுக்கத்தைத்தான் கம்பன் பயன்படுத்துகிறான்.

தான் சொல்லும் இக் கருத்துக்கள், உபநிடதங்களில் காணப்படுபவையே என்பதை,
“அளவையான் அளப்ப அரிது; அறிவின் அப் புறத்து உளவை ஆய் உபநிடதங்கள் ஓதுவ (இர.வதை 62)
என்ற அடிகள் மூலம் கவிஞனே பேசுகிறான்.

இரணியன் வதைப் படலத்தில் உள்ள 74,75,76, ஆம் பாடல்கள் சாந்தோக்கியம், முண்டகம் ஆகிய உபநிடதங்களின் சாரமாக –
ஏறத்தாழ அதே உவமைகளை எடுத்துப் பேசுவனவாக அமைந்துள்ளன.
“காலமும் கருவியும்” என்று தொடங்கும் பாடல் “ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான்” என்று முடிகிறது
இந்த அடி சாந்தோக்கிய உபநிடதத்தில் ஆறாவது அத்தியாயத்தின் பன்னிரண்டாவது கண்டத்தில் உள்ள 1,2,3 பாடல்களின் பிழிவாகும்.

முண்டக உபநிடதத்தின் மூன்றாவது முண்டகத்தின்,இரண்டாவது கண்டத்தில் உள்ள எட்டாவது பாடலில் வரும்
கடல், ஆறு நீர் என்பவற்றை எடுத்துக்கொண்டு ஒரு சிறிது மாற்றிக் கம்பன், இப்படலத்தின் 77 வது பாடலில்
“வேலையும் திரையும் போல் வேறுபாடு இலான்” என்று பாடுகிறான்.
76வது பாடலில் உள்ள “தூமமும் கனலும் போல் தொடர்ந்த தோற்றத்தான்” என்ற கருத்து முண்டக உபநிடதத்திலும்,
கீதையிலும் சில மாறுபாடுகளுடன் பேசப்படுகிறது.

நாராயணன், எங்கும் யாவற்றிலும் நிறைந்து உள்ள விராட் ஸ்வரூபத்தின் ஒரு பகுதியே ஆகும்.
அதுவே முழுப்பொருள் என்று நினைத்து விடாதே. அவன் இல்லை என்று பேசும் நீயும்,உன்னை அவ்வாறு
பேசச் செய்யும் உன்னுள் இருப்பவனும் அந்த நாராயணனின் ஒரு பகுதியே ஆகும் என்று சொல்லவந்த பிரகலாதன்,
‘நீ சொன்ன சொல்லிலும் உளன்’ என்று கூறுவது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.
இல்லை என்ற சொல்லிலும், இன்மைப் பொருள் தரும் சொல்லிலும் அவனே உள்ளான் என்ற கருத்து ஆழ்ந்து
சிந்திக்கத் தக்கது. “உளன் எனில் உளன் அவன்” (திவ்வியப்பிரபந்தம் – 2683) என்று தொடங்கும்
நம்மாழ்வார் பாடலின் 2வது அடி ‘இலன் எனின் இலன் அவன்’ எனும் இதே கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம்.

இரணியனுக்கு ஈடு சொல்ல முடியாத ஆணவம் தலை தூக்கி நின்றது என்பதைக் கம்பன் எடுத்துக் காட்டுகிறான்.
இத்தகைய ஓர் ஆணவம் அவனிடை வளர்வதற்கு அவனுடைய கல்வியும் ஒரு காரணமாகும்.
வேதங்களை நன்கு கற்றதனால் இந்த ஆணவம் தலைக்கேறியது. அதன் பயனாக, ‘அனைத்தும் அவன்’
என்ற நினைவு போக, ‘அனைத்தும் நான்’ என்ற அகங்காரம் வலுவடைந்தது.
அவன் கற்ற அதே வேதங்களைக் கற்ற பிரகலாதனுக்கு,’அனைத்தும் அவனே’ என்ற உறுதிப்பாடு வலுப் பெற்றது.
அறிவின் அடித்தளத்தில் பக்தி இருந்தால் ‘அனைத்தும் அவன்’ என்ற எண்ணம் தோன்றுகிறது. பிரகலாதன் நிலை இதுவாகும்.
எனவே, அத்வைதமும், உபநிடதங்களும் பக்தி இயக்கத்தை அழுத்திவிட்டு மேலே வர முயன்ற 9ம் நூற்றாண்டில்,
தமிழர்கள் கண்ட பக்தி இயக்கத்திற்குத் தலைமை இடம் தருவதற்காகவே இரணியன் வதைப் படலத்தைக் கவிஞன்
பொருத்தினான் என்பதனை அறியலாம்.
வான்மீகம் உட்பட எந்த இராமாயணத்திலும் காணப்படாத இப் பகுதியைக் கவிஞன் புகுத்துவதற்கு இதுவே
காரணமாக இருந்தது போலும்.
இவ்வாறு கொள்ளாமல்,தேரழுந்தூரில் உள்ள திருமால் கோவிலில் காணப் பெறும் ஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமியே
கம்பன் இதனைப் பாடக் காரணமாயிற்று என்று கூறுவோரும் உளர்.
திவ்வியப் பிரபந்தத்தில் முக் குளித்த கம்பனுக்கு, ஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமியே அவதாரம், பிரகலாதன் கதை என்பவை மிக
நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.

கரு நிறத்தோர் பால் வெளித்து வைகுதல் அரிது’ என, அவர்
உருமேவி, ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான்.(4970)
என்று பாடுவதால், வீடணனைப் பொறுத்தவரை, இலங்கையில் வாழ்ந்தாலும், இராவணன் தம்பியாக இருந்தாலும் அவன் வாழ்க்கை
முற்றிலும் மாறுபட்டதாகவே இருந்தது என்பதைக் குறிக்கிறான்.
வெண்ணிறமுடைய தருமம் தன் உண்மையான வடிவுடன் இலங்கையில் வாழ முடியாது என்பதால் கரு நிறம் பூண்டு வாழ்ந்தது என்று பேசுவதன்
மூலம் வீடணனுடைய உண்மைச் சொரூபத்தைக் கவிஞன் நமக்குக் காட்டுகிறான்.
நிந்தனை நறவமும், நெறி இல் ஊன்களும்
தந்தன கண்டிலேன், தரும தானமும்
வந்தனை நீதியும், பிறவும், மாண்பு அமைந்து
அந்தணர் மனை எனப் பொலிந்ததாம் அரோ (6461)
அந்தணர் இல்லம் எனப் பொலிகின்ற ஒரு வீட்டில், ஒளிந்து வாழ்கின்ற தருமமாக வீடணன் இருக்கின்றான் என்பதனை அறிய முடிகின்றது.

இலங்கை வாழ்க்கையோடு ஒட்டாத வாழ்க்கை வாழ்கின்ற வீடணன் காட்டில் உறைகின்ற தவசிகளைப் போல வாழ்ந்து வருகிறான்.
இங்ஙனம் வாழ்கின்ற ஒருவன் கொழு கொம்பு கிடைக்காமல் காற்றில் அலைப்புண்டு தள்ளாடும் கொடி போன்றவன் ஆவான்.
அக் கொடிக்குப் பக்கத்தில் ஒரு கொழு கொம்பு கிடைக்கும் பொழுது ‘அது எத்தகைய மரம், அதைப் பற்றிப் படருவது
நலமோ’ என்று கொடி சிந்திப்பதில்லை.
அதே போல ஒளிந்து வாழ்கின்ற இந்தத் தருமம் சந்தர்ப்பம் வந்தபொழுது இருந்த இடத்தை விட்டுப் பெயர்ந்து விடுகிறது.
அதுவும் அவனாகப் பெயர வில்லை.
“விழிஎதிர் நிற்றியேல் விளிதி” (6372) என்று இராவணன் கூறிய பிறகே வீடணன் இலங்கை விட்டுப் புறப்பட்டான்.
புறப்பட்டு வானிடை நின்று, மறுபடியும் அண்ணனுக்கு ஓர் இறுதி எச்சரிக்கை செய்துவிட்டு,
‘என் பிழை பொறுத்தி’ (6376) என்று கூறிவிட்டுப் பெயர்கிறான்.

தீயனே ஆயினும் இராவணன் பால் அன்பு கொண்ட வீடணன் அந்த இராவணன்’
இந்திரப் பெரும்பதம் இழக்கின்றான்’ (6143) என்றும்,
‘புத்திரர்,குருக்கள், பொருஇல் கேண்மையர், மித்திரர்,
அடைந்துளோர், மெலியர், வன்மையோர் இத்தனை பேரையும் (6375) அழிக்கத் துணிந்தான் என்றும்
நினைந்து எல்லையற்ற வருத்தம் அடைகிறான்

விளைவினை அறியும் மேன்மை வீடணன், என்றும் வீயா
அளவு அறு பெருமைச்செல்வம் அளித்தனை ஆயின், ஐய!
களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர,
இளையவற் கவித்த மோலி என்னையும் கவித்தி’ என்றான்–(6506)–
திருவடி தீட்சை செய்யப் பெற்ற வீடணன் புதுப் பிறவி எடுத்து விட்டான்

கும்பகர்ணன் தொடக்கத்திலேயே “நான்முகன் மரபில் வந்தவனாகிய நீ
தீயினை விரும்பி மடியில் கட்டிக்கொண்டாய். இதன் விளைவு என்னவாகும் என்று சிந்திக்கவில்லை (6118)
மற்றொருவன் வீட்டில் வாழும் தவக் கோலம் கொண்ட பெண் மணியைக் கண்டு,ஒரு சிறிதும் இரக்கம் காட்டாமல்
நீதி நூல்கள் கூறுபவற்றை மறந்து சிறையில் அடைத்தாயோ, எந்த வினாடி இச் செயலைச் செய்தாயோ, அந்த வினாடியே
அரக்கர் புகழ் மாயத் தொடங்கி விட்டது.

மனிதர்,விலங்கு பெண் எவரேனும் ஒருவர் கூட அவனைக் கொல்ல முடியும் என்பதை விளக்கமாக எடுத்துக் காட்டி,
இப்பொழுது அந்த மூன்றுமே ஒன்றாகச் சேர்ந்துள்ளது என்பதையும் கூறுகிறான்.
மனிதரின் பிரதிநிதியாக இராமனும், விலங்கின் பிரதிநிதியாக அனுமனும், பெண்ணின் பிரதிநிதியாகச் சீதையும்
இப்பொழுது ஒன்றாகச் சேர்ந்து அவனை எதிர்ப்பதால் இறுதி நிச்சயம் என்று எடுத்துக் காட்டுகிறான்.
உயிரச்சம் கொண்டவனுக்கு மேலும் அச்சத்தை விளைவிக்கவே இம் முறையைக் கையாளுகின்றான் வீடணன்

சாரமற்ற தன் வாழ்க்கைக்கு மரணமே சிறந்த பரிசு, அதுவும் இராமன் போன்ற ஒருவன் கையால்
இறப்பது புகழுடைய செயலே என்கிறான் கும்பன்.
போர்க்களத்தில் வீடணனைச் சந்தித்த கும்பன், “புலையுறு மரணமெய்தல் எனக்கு அது புகழதேயால்” எனக் கூறிவிடுகிறான்.
அண்ணன் பொருட்டாகத் தன் அழிவை இரு கரம் நீட்டி வரவேற்கத் துணிந்து விட்டான்

இந்திரசித்தன், இலக்குவன் ஆற்றலை மனம் திறந்து பாராட்டுகிறான்.
அந்நரன்; அல்லன் ஆகின், நாரணன் அனையன்;அன்றேல்,
பின், அரன், பிரமன் என்பார்ப் பேசுக; பிறந்து வாழும்
மன்னர் நம்பதியின் வந்து, வரிசிலை பிடித்த கல்வி
இந்நரன்தன்னோடு ஒப்பார் யார் உளர், ஒருவர்?’ என்றான்.–8121-

போர்க்களத்தில் உண்மையில் இராமன் யார் என்பதை இராவணன் அறிய முடிகிறது.
“சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்: திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய்வரம் எல்லாம் அடுகன்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?’ என்றான். –9837-

“யாரேனும் தான் ஆகுக! யான் என் தனி ஆண்மை
பேரேன்; நின்றே வென்றி முடிப்பென்; புகழ் பெற்றேன்;
நேரே செல்லும் கொல்லும் எனில் தான் நிமிர்வென்றி,
வேரே நிற்கும்; மீள்கிலேன்’ என்னா, விடலுற்றான்.-9838–ஆணவத்தின் சொரூபமாகக் காட்சி அளிக்கின்றான்.

———-

திருமுடிசூட்டு படலத்தில் முடிசூட்டலைக் கூறும் கவிஞன் பாடியுள்ள அரியணை அனுமன் தாங்க என்ற பாடல்
அனைவரும் அறிந்த ஒன்றாகும். இப்பாடலின் தனிச் சிறப்பு என்னவென்றால்,
முடிசூட்டப்பட்டவன் பெயரைக் குறிக்காமலேயே ‘வசிட்டனே புனைந்தான், மௌலி’ என்று முடிக்கிறான் கவிஞன்.
முடிசூட்டப்பட்டவனைச் சுற்றி நிற்பவர்கள் வரிசையாகக் கூறப் பெறுகிறார்கள்.
அரியணை அனுமன் தாங்கினான்; பரதன் வெண்குடை கவித்தான்; இருவரும் (இலக்குவ, சத்ருக்கனர்) கவரி
வீசினர். அங்கதன் உடைவாள் ஏந்தினான்; இவர்களுக்கு இப்பணி வழங்கப்பட்டதன் நுணுக்கத்தைக் காண்டல் வேண்டும்.
அகங்கார, மமகாரங்கள் அறவே செற்று இராம பக்தி சாம்ராஜ்ஜியத்தில் மூழ்கித் தங்களையே இழந்தவர்கள் அனுமன், பரதன் என்ற
இருவருமாவர். அதிலும் பக்தியோடு தொண்டும் கலந்த முழுவடிவம் அனுமன். அவன் அரியணைத் தாங்கினான் என்றால்
இராமன் ஆட்சி என்பது தொண்டு என்ற அடித்தளத்தின் மேல் அமைந்துள்ளது என்று அறிய முடியும்.
தன்னலமற்ற பக்தியில் திளைத்தாலும் ஆயிரம் இராமர்கட்குச் சமமானவன் என்று மற்று ஓர் அன்பே வடிவான குகனால்
சான்றிதழ் தரப்பெற்றவன் பரதன் என்றாலும் தலைவன் பணி தலை நின்றவனாய் பதினான்கு ஆண்டுகள் ஆட்சி புரிவது
தன் கடமை என்று அறிந்தவுடன் விருப்பு, வெறுப்பற்ற சமநிலையில் நின்று ஆட்சி புரிந்தவன்
ஆதலால், அன்போடு கூடிய கடமை உணர்ச்சிக்கு பரதன் எடுத்துக்காட்டாவான். எனவே அவன் குடை கவிக்கிறான்
என்றால், இராமராஜ்ஜியம் தொண்டு என்ற அஸ்திவாரத்தில் மேலும் விருப்பு வெறுப்பற்ற கடமை என்ற குடையின் கீழும்
அமைந்திருத்தலைக் கவிஞன் உருவகமாகப் பேசுகிறான்.
இவை இரண்டிற்கும் அடுத்தபடியாக அன்போடு கலந்த தொண்டின் வடிவமாகிய இலக்குவன் ஒருபுறம் கவரி வீசுகிறான்.
அன்பின் வடிவான சத்ருக்கனன் மற்றொரு பக்கம் கவரி வீசுகிறான்.
எனவே இராமன் என்ற அறத்தின் மூர்த்தி மேலும்,கீழும்,பக்கங்களிலும் அன்பு, கடமை,தொண்டு என்பவற்றால்
சூழப்பட்டுள்ள ஓர் உருவகத்தை இந்த ஒரு பாடலில் கவிஞன் தந்து விடுகிறான்

———

இராகவன் அனுமனை நோக்கி,
“மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி,
‘ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த
பேர் உதவிக்கு யான் செய் செயல்பிறிது இல்லை:பைம்பூண்
போர் உதவிய திண்தோளாய்! பொருந்துறப் புல்லுக!’என்றான்.(10351)
இப்பாடலில் உள்ள புதுமையையும், நுணுக்கத்தையும் சிந்திக்க வேண்டும்.
தழுவினவர் ஆளுமை மிக்கவர் என்றும் தழுவப்பட்டவர் ஒருபடி குறைந்தவர் என்றும் கருதுவது இயல்பு.
இராமன் அனுமனைத் தழுவி யிருந்தால் மிகச் சிறப்புடைய செயல் மரபுக்கு ஒத்ததாகும்.
ஆனால், “அனுமனே! நீ என்னைப் பொருந்துறப்புல்லுக!” என்று பேசுகிறான் கோசல நாடுடை வள்ளல்.
தொண்டின் பரிணாமமாக விளங்கும் அனுமனைப் பார்த்து, நீ என்னைப் புல்லுக என்று இராகவன் கூறும்பொழுது,
தன்னைவிடத் தன் நாமத்தையே ஜெபிக்கும் அகங்கார, மமகாரங்களற்ற தொண்டனாகிய அனுமனை ஒருபடி உயர்த்தி விடுகிறான்.
இராகவன் பரம்பொருள் ஆதலின், தொண்டனை, பக்தனை என்னைப் புல்லுக என்று சொல்லும் பொழுது
ஒரு தொண்டனின் பிடியில் பரம்பொருள் அகப்பட்டுக் கொள்ளுகிறான். குறியீட்டு முறையில் சொல்வதானால்,
பக்தனின் இருதயத்துக்குள்,பரம்பொருள் புகுந்துவிட்டான் என்பதையே இது குறிக்கிறது.

—————————————————————-—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண நூல்கள்–

January 8, 2021

ஸ்ரீ இராமாயண நூல்கள்

ஸ்ரீ வான்மீகியின் காப்பியம் எழுந்த பின்னர் வடமொழி முதலான இருபதுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில்
ஸ்ரீ இராமாயணம் காப்பிய வடிவம் பெற்று வழங்கி வருகிறது-

சமஸ்கிருதம்
1.ஸ்ரீ வான்மீகி இராமாயணம்

ஸ்ரீ இராமகாதை நுவலப்படும் பிற சமஸ்கிருத நூல்கள்
1.ஸ்ரீ மகாபாரதம் : (நான்கிடங்களில்)
ஆரணிய பருவம் 147:28-38; 252-275
துரோண பருவம் 59:1-31
சாந்தி பருவம் 22;51-62
ஏறக்குறைய 700 பாடல்களில் இராமகாதை குறிக்கப்படுகிறது.

2. புராணங்கள் : (முதன்மையானவை)
1.ஸ்ரீ விஷ்ணு புராணம் (கி.பி. 4) ( IV, 4,5)
2.ஸ்ரீ பிரும்மானந்த புராணம் (கி.பி. 4) (2. 21)
3.ஸ்ரீ வாயு புராணம் (கி.பி. 5) ( II.26) விஷ்ணு புராணம் போன்றது.
4.ஸ்ரீ பாகவத புராணம் (கி.பி. 6) (IX 10-11) இங்கு தான் சீதை திருமகளின் அவதாரம் என்னும் செய்தி முதலில் கூறப்படுகிறது.
5.ஸ்ரீ கூர்ம புராணம் (கி.பி. 7) (.19: 1; II 34)
6.ஸ்ரீ அக்கினி புராணம் (கி.பி. 8-9) (.5-12) வான்மீகியின் சுருக்கம்
7.ஸ்ரீ நாரதர் புராணம் (கி.பி. 10) (1. 79; II.75) வான்மீகியின் சுருக்கம்.
8.ஸ்ரீ பிரம்ம புராணம் – அரிவம்சத்தின் சுருக்கம்.
9.ஸ்ரீ கருட புராணம் (கி.பி. 10) பெரும்பான்மையும் பிற்கால இடைச்செருகல்கள்
10.ஸ்ரீ ஸ்கந்த புராணம் (கி.பி. 8க்குப் பின்) (II : 30) சிற்சில செய்திகள்
11.ஸ்ரீ பத்ம புராணம் (கி.பி. 12-15) (116 படலம், உத்தர 24, 43,44)

சிறியன
1.ஸ்ரீ தர்மோத்ர புராணம் (கி.பி. 7)
2.ஸ்ரீ நரசிம்ம புராணம் (கி.பி. 4-5) (இயல் 47-52)
3.ஸ்ரீ தேவி பாகவதம் (கி.பி. 10-11) ( III 28-30)
4.ஸ்ரீ பிரகதர்ம, சௌரபுராணம் (கி.பி. 950-1050) (இயல் : 30)

மேற்கண்ட புராணங்கள் தவிர வான்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சில
முழு ஸ்ரீ இராமாயண நூல்களும் வடமொழியில் காணப் படுகின்றன.
1.ஸ்ரீ யோக வசிஷ்ட (அ) வசிஷ்ட இராமாயணம் (கி.பி. 8 (அ) 12)
2.ஸ்ரீ அத்யாத்ம இராமாயணம் (கி.பி. 13 இராமசர்மர்)
3.ஸ்ரீ அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்டது)
4.ஸ்ரீ ஆனந்த இராமாயணம் (கி.பி. 15) வால்மீகி பெயரால் வழங்குகிறது.

இவையேயன்றி இன்னும் பல்வேறு சிறுசிறு ஸ்ரீ இராமாயண நூல்கள்
வடமொழியில் கி. பி 19ஆம் நூற்றாண்டு வரையில் தோன்றியுள்ளன.
இவற்றுள் பெரும்புகழ் வாய்ந்தன:
1.ஸ்ரீ காளிதாசர் : ஸ்ரீ இரகுவம்சம் (கி. பி. 4)
2.ஸ்ரீ பிரவர்சேனர் : ஸ்ரீ இராவணவகோ (அ) சேதுபந்தா (கி. பி. 550-600)
3.ஸ்ரீ பட்டி : ஸ்ரீ இராவணவதா (கி. பி. 500-650)
4.ஸ்ரீ குமாரதாசர் : ஸ்ரீ ஜானகி ஹரணா (கி. பி. 8)
5.ஸ்ரீ அபிநந்தர் : ஸ்ரீ இராமசரிதை (கி. பி. 9)
6.ஸ்ரீ க்ஷேமேந்திரர் : (a)ஸ்ரீ இராமயண மஞ்சரி (கி. பி. 11).: (b)ஸ்ரீ தசாவதார சரிதை
7.ஸ்ரீ சாகல்ய மல்லர் : ஸ்ரீ உதார ராகவர் (கி. பி. 12)
8.ஸ்ரீ சகர கவி : ஸ்ரீ ஜானகி பரிணயம் (கி. பி. 17)
9.ஸ்ரீ அத்வைத கவி : ஸ்ரீ இராமலிங்காம்ருதம் (கி. பி. 17)
10.ஸ்ரீ மோகனஸ்வாமி : ஸ்ரீ இராம ரகசியம் (அ)ஸ்ரீ இராம சரிதை)(கி. பி. 1608)

ஸ்ரீ இராமகாதை நாடக வடிவிலும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை
பல நூல்களாக வெளி வந்துள்ளன. ஸ்ரீ பாசர், ஸ்ரீ பவபூதி, ஸ்ரீ ஜெயதேவர் முதலான நாடகாசிரியர்கள் இதில் அடங்குவர்.

பௌத்த இராமாயணங்கள்
1. தசரத ஜாதகம் (பாலி, கி. மு. 5)
2. அனமகம் ஜாதகம் (பாலி, கி. மு. 5)
3. தசரத கதனம் (பாலி, கி. மு. 5)

ஜைன இராமாயணங்கள்
1. விமல சூரி : பௌம சரிதம் (பிராக்ருதம், கி. பி. 4)
2. சங்க தாசர் : வாசுதேவ ஹிண்டி (பிராக்ருதம், கி. பி. 5)
3. இரவி சேனர் : பத்ம புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 6)
4. குணபத்ரர் : உத்தர புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 10)
5. சுயம்பு தேவர் : பௌம சரிதம் (அபப்பிரம்சம், கி. பி. 9)
6. சீலங்கர் : சௌபன்ன மகா புருஷ சரிதம் (பிராக்ருதம், கி. பி.868)
7. பத்ரேசுவரர் : ககாவலி (பிராக்ருதம், கி. பி. 11)

தமிழ்
ஸ்ரீ கம்பன் : ஸ்ரீ கம்பராமாயணம் (கி. பி. 9)

தெலுகு
1.ஸ்ரீ கோன புத்தா ரெட்டி : ஸ்ரீ ரங்கநாத ராமாயணம் (கி. பி. 13)
2.ஸ்ரீ பாஸ்கரன் மற்றும் மூவர் : ஸ்ரீ பாஸ்கர ராமாயணம் (கி. பி. 13)
3.ஸ்ரீ ஆதுகூரி மொல்ல : ஸ்ரீ மொல்ல ராமாயணம் (கி. பி. 15)

கன்னடம்
1. ஸ்ரீ அபிநவ பம்பா என்னும் ஸ்ரீ நாக சந்திரர் : ஸ்ரீ பம்ப ராமாயணம் (கி. பி. 11)
2. ஸ்ரீ குமார வான்மீகி என்னும் ஸ்ரீ நரகரி : தொரவெ ராமாயணம் (கி. பி. 16)

மலையாளம்
1. ஸ்ரீ கன்னச இராம பணிக்கர் : ஸ்ரீ கன்னச ராமாயணம் (கி. பி. 14)
2. ஸ்ரீ துஞ்சத்த எழுத்தச்சன் : ஸ்ரீ அத்யாத்ம ராமாயணம் (கி. பி. 16)

இந்தி
1.ஸ்ரீ கோஸ்வாமி துளசிதாஸ் : ஸ்ரீ துளசி ராமாயணம் (கி. பி. 1574)
2.ஸ்ரீ கேசவ தாஸ் : ஸ்ரீ இராம சந்திரிகா (கி. பி. 16)

அசாமி
ஸ்ரீ மாதவ் கந்தவி : ஸ்ரீ அசாமி ராமாயணம் (கி. பி. 14)

வங்காளம்
ஸ்ரீ கிருத்திவாசன் : ஸ்ரீ வங்காள ராமாயணம் (கி. பி. 15)

ஒரியா
ஸ்ரீ பலராமதாஸ் : ஸ்ரீ ஒரியா ராமயணம் (கி. பி. 16)

மராத்தி
ஸ்ரீ ஏக நாதர் :ஸ்ரீ பாவார்த ராமாயணம் (கி. பி. 16)

நாட்டுப்புற இலக்கியங்கள்
தமிழ், மைதிலி, போஜ்புரி, வ்ரஜ், இந்தி, மற்றும் சில வடநாட்டு மக்களிலக்கியப் பாடல்கள்.

———-

தெலுகு இராமாயணங்களான ரங்க நாத ராமாயணம், பாஸ்கர ராமாயணம், மொல்ல ராமாயணம்
மூன்றிலும் காண்ட உட்பிரிவுகள் இல்லை.
குமார வான்மீகியின் தொரவெ இராமாயணம் காண்டந்தோறும் சந்தி என்னும் உட்பிரிவை உடையதாக விளங்குகிறது.
மலையாள இராமாயணங்களில் காண்டப் பிரிவுகள் உண்டு.
துளசி இராமாயணத்தில் காண்டப் பிரிவு தவிர, படலம், சருக்கம் போன்ற உட்பிரிவுகள் உடையதாகத் துளசியின்
காப்பியம் அமையவில்லை.

தெலுகு மொழியின் முதல் பெண் காப்பியக் கவிஞராகிய ஆதுகூரி மொல்ல, மறுமைப் பயனாகிய முக்தியை அடையும் நோக்குடன்
மொல்ல இராமாயணத்தைப் படைத்ததாகக் கூறுகிறார். மேலும், இவர் தாமே இக்காப்பியத்தைப் படைக்க முனையவில்லை என்றும்,
ஸ்ரீராமரே தம் கதையைக் கூறி எழுதுமாறு கட்டளையிடத் தாம் எழுதியதாகவும் கூறுகிறார்.

—————————————————————-—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-