ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது—
அவதாரிகை –
இவ் வாழ்வார் பக்கலிலே பிரபந்தங்கள் அவதீர்ணங்கள் ஆகிற இடத்து
ஈஸ்வரன் ஸ்வ ஸங்கல்பத்தாலே —வாஸூ தேவாதி சதுர் வ்யூஹத்தைப் பண்ணினால் போலேயும்
வேதங்கள் ருகாதி பேதத்தாலே சதுர்த்தாக வ்யக்தமானால் போலேயும்
இவையும் திரு விருத்தம் திரு வாசிரியம் பெரிய திருவந்தாதி திருவாய் மொழி-என்று நாலு வகையாகப் பிரதிபாதிக்கப் பட்டன –திரு விருத்தம் -திரு-ஸ்ரீ –மேன்மையான விருத்தம் -மேன்மையுடைய விருத்தம் –விருத்தம் –அன்பு மிக்க செய்திகள் – திருமகளின் செய்திகள்
சர்வேஸ்வரன் தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபவங்களையும் நித்ய விபூதி யோகத்தையும்
லீலா விபூதி யோகத்தையும் காட்டிக் கொடுக்க
கண்டு
அநந்தரம்
அங்குள்ளார் ஞானத்த்தையும் வ்ருத்தத்தையும் அங்கு இருக்கும் இருப்பையும் கண்டு
அதுக்கு எதிர் தட்டான சம்சாரத்திலே அவ்வனுபவத்துக்கு விரோதியான பிரகிருதி சம்பந்தத்தோடு தாம் இருக்கும் இருப்பையும் அனுசந்தித்து இவ்வனுபவ விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று அபேஷிக்கிறார் –
எம்பெருமானை சாஷாத்கரித்த ஆழ்வார்-த்வத் பகவத் விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து அருள வேணும் என்று- தம்முடைய அபி லஷிதத்தை விஞ்ஞாபிக்கிறார் –பொய் நின்ற ஞானம் தொடங்கி–வல்லார் அழுந்தார் பிறப்பாம் பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலத்தே -என்று –பிரகிருதி சம்பந்த நிவ்ருத்தியே பலமாக அருளிச் செய்து தலைக் காட்டுகிறார் ––எனவே இப்பிரபந்தம் முமுஷுத்வத்தையும் முக்திவத்தையும் உண்டாக்குவதற்கு ஏற்ற திவ்ய பிரபந்தம்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான திருமாலால் மயர்வற மதி நலம் பெறும்படி அருளப் பட்ட நம்மாழ்வார் தம்முடைய அனுபவ பரிவாஹங்களான பிரபந்தங்கள் நாலில் முதல் பிரபந்தமாய்
இவர் தம் வ்ருத்தாந்தங்களை முன்னிடுகையாலே-திரு விருத்தம் என்ற பேர் பெற்ற பிரபந்தத்தில்
முதல் பாட்டில்-பூர்வ உபகார ஸ்ம்ருதியை முன்னிட்டுக் கொண்டு உத்தர உபகார அபேக்ஷையிலே உபக்ரமிக்கிறார் –(உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –-இனி ஒன்னும் மாயம் செய்யேல் )
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–
பொய் நின்ற ஞானமும் –
அநாத்மநி ஆத்ம புத்தி -அஹங்காரம்–அந்யதா ஞானம்–பிரகிருதி ப்ராக்ருதங்களைப் பற்றிய ஞானம்
தேகத்துடன் -அனுபந்தி -சம்பந்தி -புத்ராதிகள் பற்றிய ஞானம்-ஸ்வர்க்காதிகள் -ஆத்ம அனுபவம் என்று தப்பாக புரிதலும்-அஸ் வேஸ்ய புத்தியையும் –பொய்யான விஷயங்களைப் பற்றி நிற்கையாலே
நஸ்வரம் விஷயமாகக் கொண்ட அறிவு -எப்பொழுதும் மாறும் அசேதனத்தைப் பற்றிய ஞானம்
த்யாஜ்யம் என்று அறிய வேண்டும்–அநித்யமானதை நித்யம் என்றும்-அபோக்ய மானதை போக்யம் என்றும் -அஸ்திரமானதை ஸ்திரம் என்றும் -அல்பமானதை நிறைவாக என்றும்–நாஸ்தி -என்றால் அஸ்தி யாக இருந்து நாஸ்தி ஆவது-தத்வ தர்சிகள் நிர்ணயம் அசத்துக்கு பாவம் வராது -சத்துக்கு அபாவம் வராது இப்படி யதார்த்த -ஒருபடிப்பட உள்ளதால் –உத்பத்தி விநாசாதி யோகத்தாலே அஸத்ய ஸப்த வாஸ்யமான அசேதன விஷயத்தில் ஆத்ம ஞானமும்
ஸ்வரூப அந்யதா ஞானம் -விபரீத ஞானம் -தேஹாத்ம அபிமானம்-ஸ்வ பாவ அந்யதா ஞானம் -அந்யதா ஞானம் -பரதந்த்ரனான தன்னை ஸ்வ தந்த்ரனாக நினைக்கை-உத்தேசியத்தை ஒழிந்த அர்த்த ஞானங்கள் அனைத்தும் அஞ்ஞானம்-
காண்கின்ற ப்ரக்ருதி பொய் என்னலாமோ என்னில்
சூன்யவாதியைப் போலேயாய் என்கிறது அன்று-மாயாவாதி போலே துச்சம் என்கிறது அன்று
ஆத்மாவைப் போலே ஒருபடிப் பட்டு இராமையாலே-ஆத்மா ஏக ரூபமாய் இருக்கும் இறே
அநாத்மன்யாத்மா புத்தியையும் -சொல்லுகிறது – ஜடமாய் இருக்கும் தனக்கு ஞானமும் பாரீர்-பரிணாமம் இல்லாத ஆத்மா பரமாத்மா பற்றிய ஞானமே ஸத்யம் -அதுவே அஸ்தி -ஷட் பாவ விகாரம்-அஸ்தி பிறக்கிறது மாறுதல் வளர்ந்து தேய்ந்து முடிதல்–சம்சார பிரக்ருதியைப் பொய் என்கிறது –
நின்ற
இது தான் என்றும் ஒக்க நிலை நின்ற படி -அழுந்தின படி –
ஞானமும்
ஜடமாய் இருப்பதுக்கு தனக்கு – ஞானம் என்பது பாரீர் -இதுக்கு ஞானம் என்ற பெயரா
தேஹாத்ம அபிமானம் அஞ்ஞானம் தானே–
பொல்லா ஒழுக்கும்
ஞான கார்யமான விருத்தம் அனுஷ்டானம் உண்டாகில்–ஞானம் இல்லையாகில் நல்ல அனுஷ்டானமும் இருக்காதே–அஹம் சர்வம் கரிஷ்யாமி–குருஷ்வமாம் அநு சரம் என்று இருக்கும் ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தம் இன்றியே கண்டது அடைய அஹம் என்று இருக்கை-பொய் நின்ற ஞான அனுகுணமான பர த்ரவ்ய அபஹாராதி சாரித்ரமும் -(துராசாரங்கள் என்றபடி )
அழுக்கு உடம்பும் –
இதுக்கு எல்லாம் அடியான ஹேயமான சரீரமும்–மகா பாரதம் எல்லாம் கூளமும் பலாப்பிசினும் போலே
பிரகிருதி புருஷ விவேகம் பண்ண மாட்டிற்று இல்லை-இவர் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே மூன்று பதத்தாலே பிரகிருதி புருஷ விவேகம் பண்ணி அருளினார்
இந் நின்ற நீர்மை –
இப்படி நிலை நின்ற ஸ்வபாவம் -உதிரக் கூறை காட்டுகிறார் -என்று அம்மாள்–ஏஹீ பஸ்ய சரீராணி -ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ருஷிகள் பெருமாளுக்கு ராஷசர் தின்ற உடம்பை காட்டினால் போலே-
பிரகிருதி தின்ற ஆத்மாவைக் காட்டுகிறார் -ஆளவந்தார்-ஆழ்வார் பிறர் படியை காட்டுகிறார்-அம்மாள் நிர்வாஹம்-தம் படியைக் காட்டுகிறார் -ஆளவந்தார் நிர்வாஹம்—இது ஒரு வெட்டு -பொய் நின்ற ஞானம்-இது ஒரு வெட்டு – பொல்லா ஒழுக்கம் இது ஒரு வெட்டு -அழுக்கு உடம்பு–ஆச்சார்யன் உபதேசத்துக்கும் கேளாதே பிரமாணங்களாலும் பேதிக்க ஒண்ணாதே இதுவே ஸ்வரூபம் என்னலாம் படி இருக்கை–தேவரீர் திருவடிகளுக்கு இட்டுப் பிறந்த இஜ் ஜன்மம் தப்பாமே பட்டேன் இது என்று கருத்து –இவற்றிலே நிலை நின்று போந்த வாஸனா ருசிகள் ஆகிற ஸ்வ பாவ விசேஷத்தை
(நின்ற நீர்மை விட்டுப் பிரியாத ஸ்வ பாவங்கள் )-அநாதி காலம் பரம புருஷார்த்தத்தை இழந்து சம்சாரத்தில் அகப்பட்டுக் கிடந்த இதில் அநு தாபம் தோற்றும் படி(நீர்மை )
இனி –
ஈஸ்வரனும் ஒரு முழம் கை தண்ணீரும் என்று இருந்த காலம் அன்றியே உன்னால் அல்லது செல்லாது என்று இருந்த பின்பு குறைவாளனாய் தேவரீர் திருவடிகளிலே வந்த பின்பு–நிர்ஹேதுக கடாக்ஷ மூலமான ஞான லாபத்தை உடையரான பின்பு-உன் அங்கீ கார பலத்தை உடையரான நாங்கள் அணுகாத படி
யாம் உறாமை –
பரா அநர்த்தம் நெஞ்சிலே படுகையாலே-நாட்டுக்காக தாம் மன்றாடுகிறார்–நாங்கள் ஸ்பர்சியாத படி –
சம்சாரிகள் உடைய வ்யசனம் தம்மது ஆகையாலே -யாம் -என்கிறார்-ஆத்மனி பஹூ வசனம் வா – உறாமை
சாஸ்திர பலம் பிரயோகத்ரி -என்கிற படியே பலம் பெறுவார் அன்றோ அதுக்கு கிருஷி பண்ணுவார்-
நம்மைக் கிட்டுகைக்கு வழிகள் கண்டு வைத்தோம் ஆகில் அவற்றின் படியே வந்து கிட்டுகிறீர்-என்ன-சர்வஞ்ஞனுமாய் சர்வ சக்தியாய் இருக்கிற நான் இவற்றைச் செய்து வருகிறேன்-உன்னுடைய அவதாரத்துக்கு பிரயோஜனம் சொல் என்கிறார் – நீயோ நானோ உபாய அனுஷ்டாம் பண்ணுவது சொல்லு–அவதார பிரயோஜனம் சாது பரித்ராணாம் துஷ்ட நிக்ரஹம் தர்ம ஸம் ஸ்தாபனம் மூன்றுக்கும் அல்லவே ஸித்த உபாயம் ஆகவதர்க்கே அன்றோ நீர் அவதரித்தீர்–
உயிர் அளிப்பான் –உயிர்-பிராட்டிமார் திருவடி திரு வநந்த ஆழ்வான் -என்று வ்யாவர்த்தித்ததோ
யோக்யதை அயோக்யதை பாராதே- சகல ஆத்மாக்களையும் சம்ரஷணம் பண்ணும் அதே பிரயோஜனமாகை –சால பல நாள் உகந்து உயிர்கள் காப்பான் அன்றோ கோலத் திரு மகளுடன் பிறந்தாய்–உலகத்தோர் -யோக்யதை யோக்யதை பாராமல் ஸம் ரக்ஷணமே பிரயோஜனமாக-உனக்கு அநந்யார்ஹ சேஷமாய் வைத்து –அசத் கல்பமாய்க் கிடந்த ஆத்ம ஸ்வரூபத்தை – தாச பூதோஹம் -என்கிறபடியை நித்தியமாக அனுபவிக்கப பண்ணுவான்
அளிப்பான்-எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா –சிலர் அபேஷித்தது உண்டோ – உன் கிருபை இறே தான் சொல்லும் போதும் பஹூநிம்(கீதை ) என்றான் இறே-யோனியுமாய்-ஆய்
அவதாரத்தில் மெய்ப்பாடு காட்டுகிறது
பிறந்தாய்
ஆத்மாநாம் மானுஷ்யம் மன்யம்–அஹம் வோ பாந்தவ–தூணிலே தோன்றினால் போலே ஆதல்
ஆனைக்கு உதவினால் போலே ஆதல் -அன்றிக்கே ஸதஸ துவாதச மாச-நாட்டில் பிறந்து படாதன பட்டு
பன்னிரண்டு மாசம் கர்ப்ப வாசம் இருந்து – பன்னிரு திங்கள் மணி வயிறு வாய்த்தவனே–அகர்ம வச்யனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து உன் கேவல கிருபையாலே
கர்ம வச்யர் பிறக்கும் பிறவிகளிலே ஆத்மானம் மானுஷம் மன்யே -என்றபடி அதுக்கு அவ்வருகு அறியாதானாய்க் கொண்டு எல்லா யோநிகளிலும் வந்து பிறந்து அருளினவனே-
இமையோர் தலைவா –
இப்படி பிறந்தவன் குறைவாளனாய் இன்றிக்கே-அமரர்கள் அதிபதி-சூட்டு நன் மாலைப்படி ஒரு நாடாக தனக்கு என்று இருப்பவன் கிடீர் அசங்குசித ஜ்ஞானரையும் துடிப்பித்துக் கொண்டு நிர்வாஹகனாய் இருக்கிறபடி –சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே – கர்ம வசத்தால் நாங்கள் இழந்து கிடக்க நித்ய ஸூரிகள் நித்ய அனுபவம் பண்ணும்படி சர்வ சமனான சர்வ ஸ்வாமி யானவனே –
(கர்மத்தால் இழந்த எங்களுக்கு கிருபையால் அவற்றைப் போக்கி அருள வேண்டும் )
மெய்-
இது எத்தனை குளிக்கு நிற்கும் – கிட்டினவாறே மடி எற்ப்பர்கள் என்ன –மெய் -என்கிறார்
விஞ்ஞாபனம் இதம் சத்யம் பொய் நின்ற ஞானம் தொடங்கி மங்க வொட்டு உன் மா மாயை (10-7-10)-என்னும் அளவும் செல்ல–என்னுடைய விஞ்ஞாபனம் இதம் சத்யம் -என்கிறார்-
நின்று கேட்டருளாய் –
கேட்கை தான் உத்தேச்யமாய் இருக்கிறது – அறிவித்தால் இத்தலைக்கு செய்ய வேண்டுவது இல்லாமை ருசியை அறிவிக்கையை வேண்டுவது-ஆசை உடையார்க்கு எல்லாம் –எம்பெருமான் பேரா நிற்கப் புக இத்தை நின்று கேட்டு அருள வேணும் என்னுடைய சர்வ துக்கமும் போம் -என்று கருத்து –மெய் நின்று சரீரத்தில் இருந்து கேட்டு அருளாய் நான் செய்யும் விண்ணப்பம் மெய் என்றுமாம் -உன் திருவடிகளிலே நிருபாதிக சேஷத்வத்தையே ஸ்வரூபமாக யுடைய நான் செய்கிற மெய்யான விண்ணப்பத்தை ஜகத் வியாபாரத்தில் பரபரப்பு அற்று நின்று கேட்டு அருள வேணும்–சரீரத்தில் நின்று என்றுமாம் -கேட்டு அருளாய்-என்று கேட்கை தானே அருள் என்று கருத்து –உன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹத்துடன் சேவை சாதித்து அருள வேணும் என்றுமாம் – திரௌபதிக்கு வராமல் புடவை சுரந்தது போலே ஆகாதே-அவா அறச் சூழ்ந்தாய் -என்னும்படி நான் அவா அற்று வீடு பெறும் அளவும் அந்நிய பரனாகாதே அபி முகனாய்க் கொண்டு கேட்டு அருளாய் (உகந்து திருச்செவி சாய்த்து அருள வேணும் மலக்கு நா வுடைய ஆழ்வார் அருளிச் செய்ய தென்னா தென்னா என்னப் பண்ணுமே மயங்கி இல்லாமல் கேட்டு அருள வேணும் )அப்போது நீ அவதரித்தது எல்லாம் ச பிரயோஜனமாம் படி
உன் அவதார விக்ரஹத்தோடே-ஒரு நாள் காண வாராய் -என்று இருக்கிற எனக்கு பிரகாசித்து நின்று-அடியேன் உள்ளான் உடல் உள்ளான் (8-8-2 )என்னும்படி என் அழுக்கு உடம்புக்குள்ளே ஜூகுப்ஸை பண்ணாதே அண்ணியனாய் நின்று
அடியேன் செய்யும் விண்ணப்பமே –
வாக்ய பேதம் பிறக்கிறதோ -என்று –நீர் ஆர் -என்றான்-அடியேன் -என்கிறார் இவருடைய நான் -இருக்கிறபடி – (அடிச்சியோம் அடியேன் என்றே எப்பொழுதும் இவர் )நான் என்றாகில் இறே –
சொன்ன வார்த்தை -என்பது அடியேன் -என்கையாலே – செய்யும் விண்ணப்பம் -என்கிறார்-அடியேன் உடைய விஞ்ஞாபனம்-இவருடைய உக்தியிலே இவருடைய மெய்ப்பாடு அறியலாம் என்று எம்பெருமான் கேட்டருள அடியேன் -என்று தம்முடைய ஸ்வரூபத்தை விண்ணப்பம் செய்கிறார்-செய்யும் –இவ் வபேஷைக்கு மேல் இல்லை –
யாம் உறாமை-என்று பன்மையாய் இருக்க-அடியேன்-என்று ஒருமையாலே ஈஸ்வரனுக்கு விஞ்ஞாபிப்பார் தாம் ஒருவருமாய் பல லாபம் சம்பந்தி சம்பந்தி பரம்பரைக்கும் ஒக்கும் என்று கருத்து –
பொய் நின்ற ஞானம் இந்நின்ற நீர்மை -என்கையாலே -விரோதி சொல்லிற்று
என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்கையாலே -உபாயம் சொல்லிற்று
இமையோர் தலைவா -என்கையாலே பிராப்யம் சொல்லிற்று
அடியேன் -என்கையாலே பிராப்தாவைச் சொல்லிற்று
செய்யும் விண்ணப்பம் -என்கையாலே பிராப்தி பலம் கைங்கர்யம் என்று சொல்லிற்று ––இப் பாட்டில்
விரோதி நிவ்ருத்தியையும் அவதார ஸுலப்யத்தாலே -உபாய பாவத்தையும் நித்ய ஸூரி ஸேவ்யமான -ப்ராப்யத்தையும் அடியேன் -என்று ஸ்வரூபத்தையும் மெய்ந்நின்று கேட்டு அருளாய் -என்று பல அபேக்ஷையும் பண்ணுகையாலே அர்த்த பஞ்சகம் ஸூசிதமாயிற்று –அர்த்த பஞ்சகம்-தத்வ த்ரயம் ரஹஸ்ய த்ரயம் அனைத்தும் இதிலே உண்டே
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களை பொய் என்பதால் ஆத்மா மெய் என்றும்
ஞானம் என்பதால் ஞாத்ரு ஜேயத்வமும்
ஒழுக்கு என்பதால் கர்த்ருத்வமும்
உடம்பு என்பதால் சரீரத்வமும் தோன்றுமே
இப் பாட்டில்
1-சுத்த அசுத்த ரூபங்களான அசித்துக்களுடைய பேதமும்
2-சித் அசித் பேதமும்
3-பத்த முமுஷு முக்த நித்ய விபாகத்தை உடையரான ஜீவர்களுடைய அன்யோன்ய பேதமும்
4-ஜீவ ஈஸ்வர பேதமும்
5-ஈஸ்வர ஐக்யமும்(தலைவா ஒருவனே )
6-ஞான ஞாத்ரு பேதமும்
7-சத் அசத் ஞான பேதமும்
8-சத் அசத் அனுஷ்டான பேதமும்
9-சித்த ஸாத்ய உபாய பேதமும்
10-பர அவர புருஷார்த்த பேதமும்
கிடக்கிறபடி-யதாஸ்தானம் சப்தமாகவும் அர்த்தமாகவும் அனுசந்திப்பது-ஆகையாலே மேல் அருளிச் செய்யுமது எல்லாம் இதன் விஸ்தாரம் ஆகிறது –
3-3-ஒழிவு இல் காலம் எல்லாம்-பிரவேசம் –
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடு உயிர்’ என்று அவனைக் கிட்டித் தம்முடைய சொரூபம் பெற்றவாறே, சொரூபத்திற்குத் தகுதியான அடிமை பெறவேணும் என்று பாரிக்கிறார் இத்திருவாய்மொழியில்.
பிரகிருதி சம்பந்தத்தால் வந்த கரண சங்கோசத்தை அநுசந்தித்து நினைத்த வகைகளெல்லாம் பரிமாறப் பெறாமையாலே நொந்து,‘அவன் முதலிலே இதனைத் தவிர்த்துத் தன்னை யனுபவித்தற்கு உறுப்பாகப் பல உபாயங்களைப் பார்த்து வைத்தான்;அவற்றிற்குத் தப்பினேன்; அவதாரங்களுக்குத் தப்பினேன்; உயிருக்குள் உயிராயிருக்கும் தன்மைக்குத் தப்பினேன்; இப்படி அவன் பார்த்து வைத்த வழிகள் அடைய தப்பின யான், இனிக் கிட்டி அனுபவித்தல் என்று ஒரு பொருள் உண்டோ? இழந்தேனேயன்றோ!’ என்று ஆசையற்றவராய் முடியப் புக,
‘வாரீர் ஆழ்வீர்! நாம் உமக்காக அன்றோ திருமலையில் வந்து நிற்கிறது? உம்மை இவ்வுடம்போடே அனுபவிக்கைக்காக இங்கே வந்து நின்றோமே! நீர் அங்குச் சென்று காணக்கூடிய காட்சியை நாம் இங்கே வந்து காட்டினோமே! இனித் தான் , உம்முடைய இவ்வுடம்பு நம்முடைய அனுபவத்துக்கு விரோதியு மன்று காணும்; நீர் தாம் கரண சங்கோச அனுசந்தானத்தாலே நோவு படுகிறீராகில், முதலிலே இது இல்லாதாரும் நம்மை யனுபவிக்கும்போது படும் பாடு இது காணும்;-அவர்களும் வந்து அனுபவிக்கிற இடங்காணும் இத்திருமலை; ஆன பின்னர், நீரும் இவ் வுடம்போடே நினைத்த அடிமைகளெல்லாம் செய்யும்,’ என்று தான் திருமலையிலே வந்து நிற்கிற நிலையைக் காட்டிச் சமாதானம் பண்ண, ஸமாஹிதராய் -சமாதானத்தை யடைந்தவராய், அடிமை செய்யப் பாரிக்கிறார்.
‘யாங்ஙனம்?’ எனில், தர்மி ஒன்றே ஆகையாலே, விஷயம் எங்கும் ஒக்கப் பூர்ணமான பின்பு,
ஒரு தேச விசேஷத்திலே சென்றால் செய்யக் கூடிய அடிமை களெல்லாம் இந் நிலத்திலே செய்யலாம்படிக்குத் தகுதியாகக் குறையற்றிருந்ததாகில், நமக்கும் இவ்வுடம்பு விரோதியாதலின்றி அடிமை செய்கைக்குப் பாங்காயிருந்ததேயாகில், இனித்தான் அங்குப் போனாலும் –சோஸ்னுதே சர்வான் காமான் -அவன் கல்யாண குணங்களனைத்தையும் முற்றறிவினனான அவனோடு அனுபவிக்கிறான்,’ என்கிறபடியே, குண அனுபவமன்றோ பண்ணுகிறது?
அந்தச் சௌலப்யம் முதலிய நற்குணங்கள் தாம்-ஸ்பஷ்டமாக விளங்கிக் காணப்படுவதும் இங்கே யாகில்,-இனி அங்குள்ளாரும் வந்து அடிமை செய்வதும் இங்கேயாகில், நாமும் அங்கே சென்று புக்கு அடிமை செய்வோம்,’ என்று கொண்டு, பசியுமிருந்து கையிலே சோறும் உண்டாயிருக்குமவன், நீரும் நிழலும் கண்டால் உண்ணப் பாரிக்குமாறு போன்று,-இவரும் அடிமை செய்யப் பாரிக்கிறார்.
‘பாரிக்கிறது என்? அடிமை செய்யவொண்ணாதோ?’ எனின்,
இவ் விஷயத்தில் அடிமை செய்ய ஒருப்படுவார்க்கெல்லாம் உள்ளது ஒன்றாயிற்று முன்பே பாரித்துக் கொண்டு இழியுமது;-அஹம் சர்வம் கரிஷ்யாமி –‘நான் எல்லாக் காலத்திலும் எல்லா அடிமைகளும் செய்வேன்,’ என்பதன்றோ இளைய பெருமாள் படி?-போஜன பரனாய் இருக்குமவன் -உணவையே முக்கியமாகக் கொண்ட ஒருவன், ஊண் அத்தியாயம் படிக்குமாறு போன்று இருப்பது ஒன்றாயிற்று இவருடைய கைங்கரிய மநோ ரதம்.
இவர் சேஷத்வ விரோதியான தேஹ சம்பந்தாதிகளை நிவர்த்திப்பிக்க வேணும் என்று அபேக்ஷிக்க -நிவ்ருத்த விரோதிகரைக் கொள்ளும் –சேஷ வ்ருத்தியைக் கொள்ளுகைக்கு அன்றோ நாம் சந்நிஹிதராயிற்று என்று பெரிய திருமலையில் நிற்கிற நிலையை பிரகாசிப்பித்த ஈஸ்வரனுக்கு
சர்வ பிரகார சேஷ விருத்தியும் பண்ணுகையே சேஷ பூதனுக்கு ஸ்வரூபம் என்று அறுதியிட்டு அதிலே உத்யோகத்தைப் பண்ணுவதாக –
1–கைங்கர்ய பிரதிசம்பந்தியினுடைய சர்வாதிக சேஷித்வத்தையும்
2–சேஷியினுடைய குண விக்ரஹாதி வைலக்ஷண்யத்தையும்
3–சர்வ பிரகார விலஷணனுடைய ஸூரி சேவ்யத்வத்தையும்
4-இப்படி சர்வாதிகனுடைய சீலாதிசயத்தையும்
5–ஸீலவானுடைய போக்யதையையும்
6–போகார்த்தமான ஆஸ்ரயண சவ்கர்யத்தையும்
7–அவன் நிற்கிற திருமலை தானே பரம சாம்யப்ரதம் என்னும் இடத்தையும்
8–அது தன்னை அனுபவிக்கவே பிரதிபந்தகம் ஸ்வயமேவ நிவ்ருத்தமாம் என்னுமத்தையும்
9–அந்த தேச ஸம்பந்தத்தாலே தேசிகனான ஈஸ்வரனும் அநிஷ்ட நிவர்த்தகனானான் என்னுமத்தையும்
10–அவன் தேசமான திருமலை தானே பரம ப்ராப்யம் என்னும் இடத்தையும்
அருளிச் செய்து –ஏவம் வித தேச வர்த்தியான ஈஸ்வரன் பக்கல் கைங்கர்யமே ஸ்வரூப அனுரூப புருஷார்த்தம் என்று உத்யுக்தராகிறார் –
முதற் பாட்டில், திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எல்லாத் தேசத்திலும் எல்லாக் காலத்திலும் எல்லா நிலைகளிலும் எத்தகைய அடிமைகளும் செய்ய வேணும் என்று விரும்பினார்;
இரண்டாம் பாட்டில், ‘அது ஒரு தேச விசேடத்திலே போனால் பெறுமதன்றோ?’ என்ன,
‘அங்குள்ளாரும் இங்கே வந்து அடிமை செய்கிற தேசமன்றோ? நமக்கு இங்கே பெறத் தட்டில்லை,’ என்றார்;
மூன்றாம் பாட்டில், ‘நிறைவாளர்க்குத் தன்னைக் கொடுத்தவன் குறைவாளர்க்குத் தன்னைச் தரச் சொல்ல வேண்டுமோ?’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘அவர்களுக்குத் தன்னைக் கொடுத்தான் என்றது ஓர் ஏற்றமோ, எனக்குங்கூடத் தன்னைத் தந்தவனுக்கு?’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘எனக்குத் தன்னைத் தந்தான் என்றது ஓரேற்றமோ, என்னிலும் தண்ணியாரைத் தேடிக் கிடையாமல் நிற்கிறவனுக்கு?’ என்றார்;
ஆறாம் பாட்டில், ‘இவ் வடிமையிலே இழிய, விரோதிகளும் தன்னடையே போம்’ என்றார்-
ஏழாம் பாட்டில், ‘இக் கைங்கரியத்தைத் திருமலை யாழ்வார் தாமே நமக்குத் தருவர்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘அத் திருமலையாழ்வார் தாமே நம் விரோதிகளைப் போக்கித் தம்மையும் தருவர்,’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘திருமலை யாழ்வார் எல்லாம் வேண்டுமோ நமக்குப் பேற்றினைத் தருகைக்கு? அவருடைய சம்பந்தமுடையார் அமையும்,’ என்றார்;
பத்தாம் பாட்டில், ‘சேஷிக்கு உத்தேஸ்யமாகையாலே அடியர் ஆனார் எல்லாரும் திருமலை யாழ்வாரை அடைமின்,’ என்றார்;
முடிவில், பலம் சொல்லித் தலைக்கட்டினார்.
——-
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-
கழிந்த காலத்தில் இழவு நெஞ்சிற்படாதபடி மறப்பிக்கையே யன்றோ உள்ளது?-உடனாய் –
காலமெல்லாம் வேண்டினதைப் போன்று, தேச-அனுபந்தமும் – சம்பந்தமும் அபேக்ஷிதமாயிருக்கிறது காணும் இவர்க்கு.-இளைய பெருமாள் படை வீட்டிலும் அடிமை செய்து வன வாசத்திலும் அடிமை செய்தால் போலே.-மன்னி – சர்வேஸ்வரனும் பிராட்டியுமாய்த் திரையை வளைத்துக் கொண்டிருந்தாலும், படிக்கம் குத்து விளக்குப் போலே அவ்வளவிலும் நின்று அந்தரங்கமான வ்ருத்திகளை – அடிமைகளைச் செய்ய வேண்டும்.-ஆழ்வார் திருவரங்கப்பெருமாளரையர் இத்திருவாய்மொழி பாடப் புக்கால், ‘ஒழிவில் காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம்’ என்று இங்ஙனே நெடும்போது எல்லாம் பாடி, மேல் போக மாட்டாமல், அவ்வளவிலே தலைக் கட்டிப் போவாராம்.வழுவிலா அடிமை செய்ய வேண்டும் –அடிமையில் ஒன்றும் ஒருவர்க்கும் கூறு கொடுக்க வொண்ணாதாயிற்று.-எல்லா அடிமைகளும் நானே செய்ய வேண்டும்-ஓரடிமை குறையிலும் உண்டது உருக் காட்டாது இவருக்கு–அநுஷ்டான பர்யந்தமாக வேணும்,’ என்பார், ‘செய்ய’ என்கிறார்.-கைங்கரிய மநோ ரதமே பிடித்து இவர்க்கு உத்தேஸ்யமாயிருக்கிறது ஆதலின், ‘செய்ய வேண்டும்’ என்கிறார்.நாம் –தம் திருவுள்ளத்தையும் கூட்டி ‘நாம்’ என்கிறாராதல்;-அன்றி, கேசவன் தமர்க்குப் பின்பு இவர் தாம் தனியரல்லாமையாலே திருவுள்ளம் போலே யிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக்கொண்டு, ‘நாம்’ என்கிறாராதல்.-அவன் தனக்குக் கலவிருக்கையான கலங்காப் பெரு நகரத்தை விட்டு இவ்வளவும் வர வந்து திருமலையிலே நின்று, தன் அநுஷ்டானத்தாலே தெரிவிக்கிறானன்றோ தன் பாரிப்பை–திருவேங்கடத்து எழில் கொள் சோதி –‘அடிமை கொள்ளுகைக்குப் பாங்கான நிலம் இது,’ என்று அவன் வந்து வசிக்கிற தேசம்.-எழில் கொள் சோதி-அசன்னிஹிதனே -தூரத்திலுள்ளவனே-யாகிலும், மேல் விழ வேண்டும்படி வடிவழகு இருத்தலின், ‘எழில் கொள் சோதி’ என்கிறார்.
வானார் சோதியையும்-நீலாழிச் சோதியையும்-வ்யாவர்த்தித்து -வேறுபடுத்திக் காட்டும் பொருட்டு ‘வேங்கடத்து எழில் கொள் சோதி’ என்கிறார்.
வானார் சோதி, பகல் விளக்குப்பட்டிருக்கும்:-நீலாழிச் சோதி கடல்கொண்டு கிடக்கும்;
வேங்கடத்து எழில்கொள் சோதி, குன்றத்து இட்ட விளக்காயிருக்கும்;
‘வேங்கடமேய விளக்கே’யன்றோ? அந்நிலத்தின் தன்மையாலே அழகு நிறம் பெற்றபடி.
தெழி குரல் அருவி – கம்பீரமான ஒலியையுடைத்தான அருவிகளையுடைய. திருஅருவியின் ஒலியும் கூடக் கொள்ளத் தக்கதாயிருக்கிறது இவர்க்கு, அந்நிலத்திலுள்ளதொன்றாகையாலே. இந்த ஒலி, இவர்க்குக் ‘கைங்கரிய ருசியுடையார் அடிமை செய்ய வாருங்கோள்’ என்றாற்போலே இருக்கிறது.
எந்தை –விரூபனே -அழகில்லாதவனே-யாயினும் விடவொண்ணாதபடியிருக்கும் –
பிராப்தி -சம்பந்தத்தைத் தெரிவிக்கிறார்.-இனி, ‘சௌலப்யத்தாலும் அழகாலும் தம்மைத் தோற்பித்த படியைத் தெரிவிக்கிறார்’ எனலுமாம்.-தந்தை தந்தைக்கு –-பரம சேஷி –
எல்லார்க்கும் முதல்வன்
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்னுமிதனால், சதுர்த்தியில் -நான்காம் வேற்றுமையின் பிரார்த்தனையைச் சொல்லுகிறது;
‘நாம்’ என்னுமிதனால், -பிரணவ ப்ரதிபாத்யமான -பிரணவத்தாற்சொல்லப்படுகின்ற இவ்வாத்துமாவினுடைய சொரூபத்தைச் சொல்லுகிறது;
தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கு’ என்றதனால், நாராயண பதத்தின் பொருளை அருளிச்செய்கிறார்;
சௌலப்யமும் வடிவழகும் ஸ்வாமித்துவமும் எல்லாம் – நாராயண பதத்திற்குப் பொருள்.
பிராப்த விஷயத்தில் செய்யும் கைங்கரியமே பிராப்யமாகும்.
(‘பிராப்த விஷயத்தில் கைங்கரியமிறே ரசிப்பது’ (முமுக்ஷூப்படி, 173.)பிராப்தவிஷயம் – வகுத்த விஷயம். பிராப்யம் – பலம்.
ஆக, ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற திருமந்திரத்தில் ‘ஓம் நாராயணாய’ என்ற பதங்களின் பொருள் இப்பாசுரத்தில் சொல்லப்பட்டன;
இங்குச் சொல்லப்படாத ‘நம’ பதத்தின் பொருளை ‘வேங்கடங்கள்’ என்ற பாசுரத்தில் அருளிச்செய்வர்.)
—————
எந்தை தந்தை தந்தைதந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.–3-3-2-
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை –-‘அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கடியார் அடியார் தம் மடியார் அடியோங்களே’ என்கிறபடியே, ஸ்வ -ஆத்ம- ஸ்வரூபத்தை நிரூபிக்கப் புக்கால், அத் தலையே பிடித்து இவ் வளவும் வர நிரூபிக்குமாறு போலே யாயிற்று,பர ஸ்வரூபத்தை நிரூபிக்கப் புக்காலும் இத் தலையே பிடித்து அவ்வளவும் செல்ல நிரூபிக்கும்படி.-தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம்
கானமும் வானரமுமான இவற்றுக்கு முகங் கொடுத்துக் கொண்டு நிற்கிற சௌசீல்ய குணத்தை அநுசந்தித்து-நைந்தவர்களாய்ப் பின்னர் க்ரமத்தில் -முறைப்படி -பரிமாற அருச்சிக்க -மாட்டாது அடைவு கெட்டுச் சிந்தா நிற்பர்கள்.-இங்குள்ளார் அங்கே சென்று மேன்மையைக் கண்டு-அநந்யார்ஹர் – அவனுக்கே அடிமைப் படுமாறு போன்று,அங்குள்ளார் இங்கே வந்து அந் நீர்மை கண்டு ஈடுபடும்படி.
இங்கு, ‘ஆளியும் கோளரியும் பொன் மணியும் முத்தமும் பூமரமும்’ ஆனவற்றுக்குத் தன்னைக் கொடுத்துக் கொண்டு நிற்கையாலே புகழ்க்கு முடிவு இல்லை யாதலின், ‘அந்தமில் புகழ்’ என்கிறது.-ஆக,ஸமஸ்த கல்யாண குணாத் மகோ அசவ் ‘ஈஸ்வரன் சமஸ்தமான கல்யாண குணங்களையும் இயல்பாகவே வுடையவன்,’ என்றபடி.-இதனால், ஸ்ரீவைகுண்டத்தில் புகழ்க்கு முடிவு உண்டு போலும்!’ என்றவாறு.
கார் எழில் – ஸ்யாமளமான வடிவு அழகு -நிர்க் குணன் -குணமில்லாதவன் ஆனாலும் விட வொண்ணாத படியாயிற்று வடிவழகு-அண்ணல் –வடிவழகு இல்லை யானாலும், விட வொண்ணாதபடி யாயிற்றுச் சம்பந்தம் -பிராப்தி -இருப்பது.
———-
அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க்கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த்திரு வேங்கடத்து
எண் இல் தொல்புகழ் வானவர் ஈசனே. –3-3-3-
வானவர் ஈசனே–குணங்களை அனுபவிப்பித்து நித்ய ஸூரிகளை யுடைய ஸத்தையை நோக்கிக் கொண்டு செல்லுகிறவன். என்றது,-‘கண்ணழிவற்ற ருசி யுடையாரைத் தன்னை யனுபவிப்பிக்கும்’ என்கை.-நிரபேஷ மானவர்களுக்குத் தன்னைக் கொடுத்துக் கொண்டிருக்கிறவன், சாபேஷரான நமக்குத் தரச் சொல்ல வேண்டுமோ?’மாயன் –ஸுந்தர்ய- அழகு சீலம் முதலியவைகளால் -ஆச்சர்ய பூதன் -ஆச்சரியங்களை,யுடையவன்.‘அவற்றில் ஓர் அம்மான் பொடி சொல்லிக் காணீர்,’ என்ன, சொல்லுகிறார் மேல்:
அணி கொள் செந்தாமரைக் கண்ணன் – ‘இக் கண்ணழகு உடையவனுக்கு வேறொரு ஒப்பனை வேண்டா,’ என்னும்படி யிருப்பதாய்,-தனக்குத்தானே ஆபரணமாய், -விகாசம் மலர்த்தி செவ்வி குளிர்த்தி நாற்றங்களாலே தாமரையை ஒரு வகைக்கு ஒப்பாம்படி சொல்லலாயிருக்கிற கண்ணழகையுடையவன்.-இது, முதலுறவு செய்யுங் கண்களைச் சொல்லுகிறது.-செங்கனி வாய் – அந் நோக்குத் தப்பினார்க்கும் தப்ப வொண்ணாதபடி யிருக்கிற -ஸ்மிதம் -புன்முறுவலைச் சொல்லுகிறது. –-ஸ்மிதமே- முறுவலாலேயாயிற்று இவரை எழுதிக்கொண்டது.-கரு மாணிக்கம் – அந்த ஸ்மிதத்திலே -முறுவலிலே அகப்பட்டாரை மீளாதபடி ஆழங்காற்படுத்தும் வடிவழகைச் சொல்லுகிறது.
‘அணிகொள் செந்தாமரைக் கண்ணன்’ என்றதனோடு,-‘செங்கனிவாய்’ என்றதனோடு,
‘கருமாணிக்கம்’ என்றதனோடு,-‘தெண்ணிறை நீர்ச்சுனை’ என்றதனோடு-வேற்றுமையற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு, அதுவும் அந்நிலத்தில் உள்ளதொன்றாகையாலே.
——————-
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-
ஸ்ரீவைகுண்ட நாதனுக்கு ஏற்றம் சொல்லுகிறேனாக மயங்கினேன்;
கானமும் வானரமும் வேடுமானார் ஓலக்கம் கொடுக்க நிற்கிறவனுக்கு நித்ய ஸூரிகள் ஓலக்கம் கொடுக்க நிற்கிறது ஓர் ஏற்றமோ?-முடி சூடி அரசு செலுத்தும் நிலை, திருவேங்கடத்தில்; தட்டியில் இருக்கும்-நிலை, பரமபதத்தில். தட்டி – சிறைக்கூடம்.திருவேங்கடத்தானுக்கு ஏற்றஞ்சொல்லலாவது யாங்ஙனம்?’ எனின்,
‘‘நீசனேன் நிறைவொன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ என்னவேண்டும்;
அமர்யாத ந்ருபசு-என்னுமா போலே-‘இது ஆளவந்தார் அருளிச்செய்ததேயாகிலும், நான் என் வாயால் இப்பாசுரம் சொல்லமாட்டேன்,’ என்பராம் அனந்தாழ்வான்.
(அழகர், கிடாம்பியாச்சானை அருள்பாடிட்டு, ‘நீ ஒன்று சொல்’ என்ன, ‘அபராத ஸஹஸ்ர பாஜனம்’ என்று தொடங்கி ‘அகதிம்’ என்ன, நம் இராமாநுஜனையுடையையாயிருந்து வைத்து, அகதி என்னப் பெறாய்’ என்று அருளிச்செய்தாராம்)
ஆக, ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்றதனால்,- அநாத்ம- ஆத்மாவிற்குத் தகுதியில்லாத குணங்களே என் பக்கல் உள்ளன; ஆத்ம குணங்கள் ஒன்றுமில்லை என்பதனைத் தெரிவித்தபடி.
‘என் தண்மையும் நிறைவு இல்லாமையுமன்றோ நான் இவ்வார்த்தை-ஈசன் வானவர்க்கு என்பன் – சொல்லிற்று என்கிறார்’ என்பராம் பிள்ளை திருநறையூர் அரையர்.
வானவர்க்கு ஈசன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதி –நித்யஸூரிகளுக்கு ஈசனாயிருந்தான்; என் பக்கலிலே பற்றை-சங்கத்தை – வைத்தான்.
அவர்களுக்கு-சத்தை – இருப்பு உண்டாகைக்காக அவர்களோடே கலந்தான்:
தன்-சத்தை – இருப்பைப் பெறுகைக்காக என்னோடே வந்து கலந்தான்;
பிராதம்யத்துக்கும் பழிக்கும் செங்கல் சீரைக்கும் ஜீவனம் வைப்பாரைப் போன்று அவர்கள் பக்கல்; நெஞ்சும் உடம்பும் தந்தது எனக்கு’ என்கிறார்.
இனி,என்கண் பாசம் வைத்த’ என்பதற்கு, தன் பக்கலிலே சங்கம் உண்டாம்படி -பண்ணினான் -‘
என்னிடத்தில்-ஸ்வ விஷய பாசத்தை – தன் சம்பந்தமான அன்பை உண்டாக்கினான்’ என்று பொருள் கூறுவாருமுளர்.
இனி,அஹ்ருதயமாக இருக்கச் செய்தே – மனத்தொடு படாமலிருக்கவும் மனசுக்காகக் கலந்தானாயிருத்தலன்றி, ச ஹ்ருதயமாக -மனம் முன்னாகக் கலந்தானென்னுமிடத்தை வடிவிற்பிறந்த புகர் காட்டாநின்றதாதலின், ‘சுடர்ச்சோதி’ என்றும்,
கலந்த பின்னர்-உஜ்வலனாய் முன்பில்லாத புகரெல்லாம் வடிவிலே உண்டாயிராநின்றதாதலின், ‘பரஞ்சுடர்’ என்றும் அருளிச்செய்கிறார் -‘பிராட்டியோடே கலந்தாற் போலே பேரொளிப் பிழம்பாய் இராநின்றான்’ என்றபடி.-
————-
சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ,
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5-
எனக்குத் தன்னைத் தந்தான்’ என்கிற இதுதான் ஓர் ஏற்றமோ, என்னிலும் தாழ நின்றாரைத் தேடிப் பெறாதே -தேடித் கொண்டே நித்ய வாசம் செய்கிறவனுக்கு–?’ என்கிறார் இப் பாசுரத்தில்.-எல்லா உலகும் தொழும்-ஆதி மூர்த்தி-மிகத் தாழ்ந்தவரான தாம் தொழுத போதே எல்லா உலகங்களும் தொழுதமை விழுக்காட்டாலே பெறுதும்;-எல்லா உலகுந் தொழும்’ என்று அடைகின்ற பொருள்களைக் கூறி, ‘ஆதிமூர்த்தி’ என்று அடையக் கூடிய பொருளை அருளிச் செய்தார்.-காரண வஸ்துவே உபாஸ்யம்- ஸ்ருதி-நம்பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர் மடத்திலே எழுந்தருளியிருக்கச்செய்தே, ‘ஈஸ்வர பரத்துவத்தை அநுசந்திக்கையாவது,-ஜகத் காரணத்துவத்தை அநுசந்திக்கை’என்றருளிச்செய்தாராம்,
ஆச்சான் பிள்ளை, நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டரை ‘பகவத் குணங்களையெல்லாம் சேர அனுபவிக்கலாந்துறை யாது?’ என்று கேட்டருள,‘ஜகத் காரணத்துவத்தை அநுசந்திக்கவே எல்லாக் குணங்களையும் அநுசந்தித்ததாம்’ என்றருளிச்செய்தாராம்.
வேதியர் முழு வேதத்து அமுதத்தை-அந்தணர் மாடு -தனம் –ஸ்வரூபத்தில் இனிமை-ரச மயமாய் இருக்கிறது-குணத்தில் இனிமை.-வேதைஸ்ஸ சர்வைர் அஹம் ஏவ வித்ய -என்கிறபடியே வேதைக சமதி கம்யனாய்-பரம போக்யனானவனை –-தீது இல் சீர்த் திருவேங்கடத்தானை –
குற்றமற்ற குணங்களையுடையவனை. சீருக்குத் தீதாவது, அடைகின்ற அடியார்களுடைய குணாகுண நிரூபணம் பண்ணுகை. என்றது,–அங்கீகரிக்குமிடத்தில், ‘இன்னார் ஆவர், இன்னார் ஆகார்’ என்று ஆராயும் குற்றமின்றியிருத்தல்’ என்றபடி.
1-ஈசன் வானவர்க்கு –
2-என் கண் பாசம் –
3-எல்லா உலகுந்தொழும்-
4-தீதில் சீர்–அவசர ப்ரதீஷனாய் நிற்கிறான் -ஒன்றை விட ஒன்றுக்கு ஏற்றமே –
ஷத்ரியன் -திருவேங்கடமுடையான் ரஷ்ய வர்க்கம் கிடைக்குமா என்று பார்த்து நிற்கிறான்
ஸ்ரீ வைகுண்ட நாதனும் – தேடி இங்கே வந்ததால்- ஷத்ரியன் -நாமும் கைங்கர்யங்கள் தேடி தேடி ஷத்ரியன் ஆவோம் –
—————–
வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6—
மேல், திருமந்திரத்தின் பொருளை அருளிச்செய்தார்; அங்கு அருளிச்செய்யாததான ‘நம:’ பதத்தின் பொருளை இப்பாசுரத்தில் தாங்கள் தங்களுக்கு நன்று என்று இருந்த அடிமைகளை செய்ய அமையும் –.கைங்கர்யத்திலே ஈடுபடவே -கர்மங்கள் எல்லாம் தன்னடையே நசிக்கும் –கைங்கர்யம் செய்து கொண்டே குணானுபவமும் பண்ண வேண்டும் -என்றபடி –வேங் கடங்கள்-கடம் என்று கடனாய் ருண த்ரயத்தை சொல்லுகிறது-மெய் மேல்வினை முற்றவும்,- தேஹ உபாதிகமான கர்மங்களும் அடங்க நசிக்கும் –என்று ஆளவந்தார் –உத்தர பூர்வாகங்கள் நசிக்கும் இது மெய் -என்று எம்பெருமானார்-வேங்கடத்து உறைவார்க்கு – சதுர்த்தியில் பிரார்த்தனையைச் சொல்கிறது-நம –-தனக்காய் இருக்கும் இருப்பை கழிக்கிறது
‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்கிற-அதிகாரியைக் குறித்துச் சொல்லுகையாலே. அதிகாரி வைலக்ஷண்யமும் –வ்ருத்தியின் -செய்கையின் வைலக்ஷண்யமும் தோன்றும்படி –-‘தாங்கள் தங்கட்கு’ என இங்ஙனே ஊன்றிச் சொல்லுமாம் அனந்தாழ்வான்.
அது சுமந்தார்கட்கு – பெறுகிற பேற்றின் கனத்தையும் இவனுடைய முயற்சியின் சிறுமையையும் பார்த்து, ‘இப்பேற்றுக்கு இவன் இம்மலையைச் சுமவானோ?’ என்பாரைப் போன்று-‘அது சுமந்தார்கட்கு’ என்கிறார்.- இது, பெறுகிற பேற்றின் கனத்தையும் பகவானுடைய திருவருளையும் அறிந்திருக்கிற இவர் தம் கருத்தாலே சொல்லுகிறாராதல்;
இவன் பக்கலுள்ளதைக் கனக்க நினைத்திருக்கும் இறைவன் கருத்தாலே சொல்லுகிறாராதல்.-நிர்ஹேதுக கிருபாவான் அன்றோ -நம சொல்லவும் வேண்டுமோ-
———-
சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும்திரு வேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும்தடங் குன்றமே.–3-3-7-
‘ஒரு கருமுகை மாலையேயாகிலும் இதைக் கண்டருளக்கடவனே! சாத்தி யருளக்கடவனே! நம்மை விசேட கடாக்ஷம் பண்ணியருளக்கடவனே!’-என்றிருக்கிற இவர்கள் அன்பின் மிகுதியாலே கனத்துத் தோன்றுகிறதாதலின், ‘சுமந்து’ என்கிறார். பக்த்யா பிரயச்சதி –
சாது ராமானுஜாச்சார்யர் ஜீயர் ஸ்வாமிகள் -நமக்காக ஆழ்வார் அருளிச் செய்தார் -என்பாராம்-இன்றும் ஜீயர் ஏகாங்கி -பொட்டு சுமந்து போகிறார்கள் -அகோராத்ரி கைங்கர்யம் செய்து கொண்டே இருக்கிறார்கள்-
இனி, அன்புடையவன் இட்டதாகையாலே சர்வேசுவரன் தனக்குக் கனத்துத் தோன்றுமாதலின், ‘சுமந்து’ என்கிறார் என்னுதல்.-ஸ்ரீ புருஷோத்தமமுடையானுக்கு அரசகுமாரன் செண்பகப் பூக்கொண்டு அணிந்தபடியை நினைப்பது.‘துயரறு சுடரடி தொழுது எழு’ என்கிற தமது வாசனை அவர்களுக்கும் உண்டு என்று இருக்கிறாராதலின் ‘நமன்று எழும்’ என்கிறார்.
தம்மையேயொக்க அருள் செய்வர்,-ஸ்வேன ரூபேண -ஸ்வரூப ஆவிர்பாவம் –-சொரூபத்திற்குத் தக்கதான மோக்ஷத்தைத் தரும்–திருமலைதானே தன்னோடு ஒத்த பேற்றைப் பண்ணித் தரும்,’ என்னுதல்; என்றது,-‘திருமலையாழ்வார்தாம் திருவேங்கடமுடையானைத் தம் திருமுடியிலே எழுந்தருளுவித்துக்கொண்டன்றோ இருப்பது?-அப்படியே ‘நின் செம் மா பாத பற்புத் தலை சேர்த்து’ என்று இவர் வேண்டிக்கொண்ட பேற்றைத் திருமலையாழ்வார் தாமே தந்தருளுவர்,’ என்றபடியாம்-கு மூன்று வகையாகப் பொருள் அருளிச் செய்கிறார்.-
————-
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.–3-3-8-
கீழே இஷ்ட பிராப்தி சொல்லி இங்கே அநிஷ்ட நிவ்ருத்தி சொல்லிற்று-ஏந்திக் காத்தவன்’ என்றும், ‘தொழ ஓயும்’ என்றும் முடிக்க. ‘ஒன்றுமே’ என்பதில் ஏகாரம் பிரிநிலை.-சேஷிக்கு உத்தேச்யம் -சேஷ பூதனுக்கும் உத்தேச்யம் என்றவாறு –ஏந்தி -அநாயாசேன -இன்றும் ஏந்திக் கொண்டு சேவை சாதித்து -கோவர்த்தன கிரிதாரானாக-இதனால், துக்கத்தைப் போக்கும் சாதனம் மலையே என்பதனைத் தெரிவித்தவாறு.-ஒன்றுமே தொழ – ‘ஒன்றையுமே வணங்க. உள்ளே எழுந்தருளி யிருக்கிறவன் தானும் வேண்டா,
திருமலையாழ்வார் தாமே அமையும்,’ என்பார், ‘ஒன்றுமே’ என்கிறார். -ஸ்ரீ சைலமே ரஷகம் என்றவாறு –
நம் வினை ஓயும் – ‘பெற வேண்டும் பேற்றினைப் பெற்றிலோம்’ என்கிற துக்கத்தைப் போக்கும்’ என்னுதல்;
‘வேங்கடங்கள்’ என்னும் பாசுரத்திற்கூறிய, அடிமை செய்வதற்குத் தடையாக உள்ளனவற்றைப் போக்கும் என்னுதல்.
———
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9-
விரோதியான பாவங்களைப் போக்கி வீடு பேற்றினைத் தருவதற்குத் திருமலை யாழ்வாரெல்லாம் வேண்டுமோ?-திருமலை யாழ்வாரில் ஒரு பகுதி அமையாதோ?’ என்கிறார் இப்பாசுரத்தில்.-‘ஒரு பகுதி’ என்றது, திருவேங்கடமுடையானை;- ‘வட மா மலையுச்சியை’ -7-10-3-என்பர் திருமங்கை மன்னன்.-சரம பர்வதத்திலே இன்னும் நிற்கிறார் -கோல் விழுக்காட்டாலே இவனாக அமைந்தது -என்கிறார் –முதலடியில், ‘ஓயும் மூப்புப் பிறப்பு இறப்பு’ என்றவர், மீண்டும், ‘பிணி வீயுமாறு செய்வான்’ என்பதற்குக் கருத்து என்?’ என்னில்,-‘இவனுடைய இங்குத்தை துக்கத்தைப் போக்குகைக்காக’ என்கை;
அவன் கால் காண, ‘மூப்புப் பிறப்பு இறப்பு’ என்கிற இவையெல்லாம் அழியும்’-திருமேனியில் கால் பகுதியைக் காண -நாலு பகுதியும் போகும் -மூப்பு -இறப்பு -பிறப்பு -பிணி இவை எல்லாம் போகுமே-வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கு –-இவை இரண்டும் உடலுக்கும் உபலக்ஷணமாய், ‘திருவடிகளை மனம் வாக்குக் காயங்களாலே அநுசந்திப்பார்கட்கு’ என்றபடி.
வாயுள் வைக்கையாவது, ‘ஓவாது உரைக்கு முரை’-முதல் திருவந்தாதி -95- என்கிறபடியே உரைத்தல்.
மனத்துள் வைக்கையாவது, மறவாதிருத்தல். இப்படி -கரணங்களுக்கு-உறுப்புகட்கு -அடைத்த காரியங்களைக் கொள்ளவே,-சொரூபத்திற்கு விரோதியாய் வந்தேறியானவை தாமாகவே போம்.
————
வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–3-3-10-
தேவி சுமித்திரை.-ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் -கைங்கர்யமே என்பதை காட்டி அருளுகிறாள் ஸ்ரீ சுமித்ரா தேவி –-‘அப்படியே, இவ்வாத்துமாவையும் இங்கு வைத்தது திருமலைக்குப் போகைக்காக ஆயிற்று,’பைத்த பாம்பு அணையான் திருவேங்கடம் – தன்னுடைய பரிசத்தாலே விரித்த படங்களையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய சர்வேசுவரன் அப் படுக்கையைக் காட்டிலும் விரும்பி வசிக்கின்ற தேசம். இனி, ‘பைத்த பாம்பு அணையாம் திருவேங்கடம்’ என்னுதல்;-திருமலையாழ்வார் தம்மைத் திருவனந்தாழ்வானாகவும் சொல்லப்படும்.
———-
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழிற் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.–3-3-11-
திருவேங்கடமுடையானை யன்றோ பாடிற்று இத்திருவாய்மொழியில்? மண்தாவிய ஈசனைப் பாடிற்று என்றல் யாங்ஙனம்?’ எனின்,
’கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே, விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய, அண்டா!’-பெரிய திரு மொழி -1-10-4- என்றும்,
’மண் அளந்த இணைத் தாமரைகள்’ என்றும், ‘உலகம் அளந்த பொன்னடியேயடைந்து உய்ந்து’ -5-8-9-என்றும் ஆழ்வார்கள் அருளிச்செய்வர்கள்;எல்லாரையும் கிரமத்திலே திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ளுகைக்காக நிற்கிற நிலையாலும்,
கிரமத்திலே–அடி வைத்த கணக்கிலே -அடியார்களைப் படிப்படியாக -என்றுமாம் –
வரையாமல் கானமும் வானரமுமான இவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற படியாலும் திருவேங்கடமுடையானை ஸ்ரீவாமனனாகச் சொல்லப்படும்.-இருந்ததே குடியாக எல்லாரும் பிரீதியோடே புகழ்வார்கள்,’ என்பார், ‘ஞாலம் புகழ வாழ்வர்’ என்கிறார்.
ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி
வழு விலா வாட் செய்ய மாலுக்கு -எழு சிகர
வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன்
பூங்கழலை நெஞ்சே புகழ்———-23-
இத்தால் –
ஒழிவில் காலம் எல்லாம் -என்கிற முதல் பாட்டின் அர்த்தத்தை
அருளிச் செய்த படி
மேல்
சிந்து பூ மகிழும் -என்று காயிக கைங்கர்யத்தையும்
தெண்ணிறைச் சுனை நீர் திருவேங்கடம் –எண்ணில்-என்று மானசமான அடிமையையும்
ஈசன் வானவர்க்கு என்பன் –என்று -வாசிகமான அடிமையையும் என்று சொல்லி
வேங்கடத்து உறைவார்க்கு நம -ஸ்வ போக்த்ருத்வ புத்தி நிவ்ருத்தி சொல்லி
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் -என்று
அத்தக் கைங்கர்யத்தை திருமலை ஆழ்வாரே தந்து அருளுவார் -என்றும்
திரு வேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே -என்று
அந்த கைங்கர்ய விரோதி நிவ்ருதியையும் திருமலை ஆழ்வாரே பண்ணி அருளுவர் என்றும்
இப்படி முதல் பாட்டின் அர்த்தத்தை விவரித்து அருளின இவைகளும் இவர்க்கு விவஷிதம் –
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply