ஒரு அதிகாரிக்கு த்வய மொழிய மந்திரமில்லை. மிதுநமொழிய வஸ்து வில்லை. மிதுந கைங்கர்ய மொழியப் புருஷார்த்த மில்லை -ஆசார்ய அபிமான மொழிய மோக்ஷோபாயமில்லை. பாகவத அபசார மொழிய மோக்ஷ விரோதி யில்லை என்பது எம்பெருமானாரது வைதிகக் கொள்கைகள். பாகவத அபசாரம் பன்னிரண்டு வகைப்படும். அவை யாவன: முறையே ஜன்ம நிரூபணம் (உயர்ந்த ஜன்மம் என்ற செருக்கு] சரீர நிரூபணம்(புருஷ, ஸ்திரி விலங்கு, பறவை] என்ற பாகுபாடு; பாவநிரூபணம் (பாலன், விருத்தன்) என்ற பாகுபாடு, ஆஸ்ரம நிரூபணம் (பிரம்மச்சாரி, ஸந்யாசி போன்ற பாகுபாடு) அவயவ நிரூபணம் (நொண்டி, முடம் என்ற பாகுபாடு) ஆலஸ்ய நிரூபணம் (விண்ணப்பஞ் செய்வார் என்ற பாகுபாடு) வாஸ நிரூபணம்(கோயில், திருமலை, பெருமாள் கோயிலில் வாழ்பவர் என்றபாகுபாடு) பந்து நிரூபணம் (சொந்தம், உறவு அல்ல என்ற பாகுபாடு, பிரகாஸ நிரூபணம் (ஆசார்யர்களையும்-கைங்கர்யர்களையும் சமமாகக் கருதுதல், பிரகார நிரூபணம் (நந்தவன கைங்கர்யம் செய்யும் தொண்டர்களைக் கேவலமாக நினைத்தல்) வர்த்தக நிரூபணம், தோஷ நிரூபணம் எனக் கொண்டனர். பகவத் அபசாரத்தை விடப் பாகவத, அபசாரம் மிகக் கொடுமையானது. பாகவத அபசாரம் ஒன்று செய்தால் அது பலவாகப் பெருகும். இவற்றைத் தாம் பண்ணுவது கூடாது என்பதோடன்றித் தன் மதிப்புக்குரிய ஆச்சார்யனே பண்ணினாலும், ஆச்சார்யன் செய்யும் வரம்பு மீறிய செயல்களைச் சிஷ்யன் ரஹஸ்யத்தில் உணர்த்த வேண்டும் என்கிற படி ஆச்சார்யனும் பாகவத அபசாரம் செய்யாதிருக்கும்படி எடுத்துச் சொல்ல வேண்டும்.-வைஷ்ணவர்கள் ஒருவருக்கொருவர் அபசாரம் செய்தால் அவர்களை நல்ல முறையில் கெஞ்சி விலக்க வேண்டும். அவர்கள் தனிமையில் செய்த குற்றங்களை வெளிப்படுத்தக்கூடாது பிரகிருதி வாசனையால் குற்றம் செய்து மன்னிப்புக் கேட்டவர்களை வெளிப்படுத்துதல் பாகவத அபசாரமாகும்.-எம்பெருமானார் தீர்த்தமாடி சேவித்தெழுந்து வருகிறவர்;பிள்ளை உறங்காவில்லிதாசர் கையைப்பிடித்து வருவதற்குக் காரணம் கேட்க, பிராமண குலத்தில் பிறந்தவர்களுக்கு, நாம் உயர்ந்த குலத்தில் பிறந்தும் அடிமை செய்கிறோமே என்ற வருத்தமும் தயக்கமும் வரும். ஆனால் பிறருக்குக் கைங்கர்யம் செய்யவே பிறந்த சூத்திர வர்ணத்தவருக்கு, அந்த வருத்தம், தயக்கம் ஏற்படாது. உள்ளத்தால். பரிசுத்தமான அவருடைய ஸ்பரிசம் தமக்கும் வர்ணாஸ்ரம அபிமானத்தைப் போக்கி பரிசுத்தி யளிக்கிறது என்றார் இராமானுஜர்.
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகள் –
பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா தஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம் யஹம்-முதலியாண்டானின் தனியன்
ஜாகரூக தநுஷ்பாணிம் பாணௌ கட்கஸமந்விதம் ராமானுஜ ஸ்பர்சவேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாசகம் பாகிநேயத்வயயுதம் பாஷ்யகார பரம்வஹம் ரங்கேச மங்களகரம் தநுர் தாஸம் அஹம் பஜே-பிள்ளை உறங்காவில்லி தாஸரின் தனியன் :
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் விஷயமாக
ஸ்ரீ முதலியாண்டானுக்கு பணித்த பத்து வார்த்தைகள் –
ஸ்ரீ முதலியாண்டான் உள்ளம் விம்மிப் புறம் பொசிந்து ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்திலே தண்டன் இட்டு நமக்கும் நம் முதலிகளுக்கும் உள்ள தன்னேற்றம் அருளிச் செய்ய வேணும் என்ன –
ஸ்ரீ உடையவரும்
நாமே உமக்கு சொல்ல வேணும் என்று இருப்பதொரு அர்த்தத்தை நீர் தாமே கேட்டீரே என்று ப்ரீதராய்
சகல வேத சாஸ்திரங்களிலும் இதிஹாச புராணங்களிலும் உள்ளதைப் பொறுக்கிச் சேர்த்து
நம் ஆழ்வார்கள் அருளிச் செயல்களிலும் சொல்லப்பட்ட குஹ்யமாய் இருப்பதொரு அர்த்தத்தை
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு இப் பத்து வார்த்தைகளால் அருளிச் செய்கிறார் –
இதில் முதல் வார்த்தை –
நமக்கும் நம் முதலிகளுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில்
பூணூல் சாத்திய நமக்கும் சாத்தாத தாசர் போன்றவர்களுக்கும் உள்ள வாசி –
நாம் (ஆச்சார்யர்கள்)நாடு பரிக்ரஹிகைக்காகச் செய்வுதோம் –
அவர்கள் நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணி இருப்பர்கள் -திருவாய்மொழி -10-6-2–
( உலகைத் திருத்துவதற்காக நாம் உழல வேண்டும் -அவர்களுக்கு இக் கடமை இல்லையே -நாராயணனுக்குக்கே எப்பொழுதும் பற்றியே இருக்கும் பெருமை அவர்களுக்கு உண்டே)
(வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-அஹங்கார மமகார வச்யரோடு தொற்றற்ற படி கண்டாயே –உண்டியே உடையே என உகந்து ஓடும் இம் மண்டலத்தாரோடு –பெருமாள் திருமொழி -3-4-தொற்று அற பெற்றபடி கண்டாயே –
யானே என் தனதே -2-9-9-என்று யான்-எனது -என்னும் செருக்குகளுக்கு வசப் பட்டவர்களாய்-இருப்பவர்களோடு சம்பந்தம் அறப் பெற்றோம் –-ஒ ஒ உலகினது இயல்பே -திருவாசிரியம் -6-இவை என்ன உலகு இயற்கை -4-9-1- கொடு உலகம் காட்டேல் -4-9-7-என்னப் பண்ணினபடி கண்டாயே –உங்களோடு எங்களிடை இல்லை -8-2-7- என்று கழிந்தவரே அன்றோ – –நாரணனை நண்ணினமே--நிருபாதிக சர்வ ரக்ஷகனைக் கிட்டப் பெற்றோம் -நிருபாதிக சர்வ பந்துவைக் கிட்டப் பெற்றோம் -ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்களை விட்ட அளவேயோ-ஒரு காரணமே இல்லாமல் பந்துவாக இருக்கும் சர்வேஸ்வரனை பற்றவும் பெற்றோம் –விட்டவர்கள் தம்மை வேறு ஒரு தன்மையாலே பற்றுகிறார் காணும் –ஆகாராந்தரம் -நார சப்தத்துக்குள் உண்டே -இதனாலே தானே உபதேசிக்கிறார் –
முக்தனுக்கு இவை எல்லாம் சர்வேஸ்வரன் உடைமைப் பொருள் -என்னும் தன்மையாலே உத்தேச்யம் ஆகின்ற அன்றோ இவைதாம்-தானே ஆக்கி உண்டு களித்தல் தவிர்ந்து-தந்தையோடு ஒன்றாக உண்டு களித்து ஜீவிப்பாரைப் போலே காணும் –படுக்கைக்கு கீழே மிகப் பெரிய நிதி கிடக்க-புறங்கால் வீங்கி சாவாரைப் போலே அன்றோ- நாராயணனாக -அந்தர்யாமியாக -இருக்கச் செய்தேயும் நண்ணாமல் இருந்த படி–கேட்டாயே மட நெஞ்சே-பவ்யமான நெஞ்சே கேட்டாயே –என்று உபகார ஸ்ம்ருதி தொடராக கூறிக் கொள்ளுகிறார் – சப்ததோஸ்மி – திமிர் கொண்டால் போல் நிற்குமே –பெற்ற பேற்றின் கனத்தை நினைத்து-வகாதது வகுத்தது என்று திமிர்த்து இருக்கிறாயோ-இதனை அனுபவியா நின்றாயோ –
இரண்டாம் வார்த்தை –
திருப்பதிகளுக்கும் கோயில் திருமலை பெருமாள் கோயிலுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில்
நாம் தெப்பக் கையரைப் போலே இரண்டையும் விடோம்
அவர்கள் சாரஞ்ஞராய்க் கொண்டு விட்டத்தில் இருப்பாரைப் போலே முதல் அடியிலே நிற்பர்கள்
பிரதான ஷேத்ரம் ஒன்றில் வாழ்ந்து நிர் பரராய் இல்லாமல் –
மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் -இராமானுச நூற்றந்தாதி -60-புக்கு நிற்போம் —
(வைகுந்தன் என்பதோர் தோணியை-நாச்சியார் -5–4– சம்சார நிஸ்தாரமாகப் பற்றி
தத் ஞான சக்தியாதி அனுசந்தானத்தாலும் ஸ்வ பாரதந்த்ர்யாதி அனுசந்தானத்தாலும்
நிர் பரர் ஆகையாலே இரண்டு கையும் விடுமா போலே ஸ்வ யத்ன ரூப உபாசனாதியையும்
தத் சாத்திய பகவத் கிருபையையும் அவலம்பிக்கையை விட்டு கேவல பகவத் கிருபையே உத்தாரகம் என்று அத்யவசித்து கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ -திருவாய் -6–9–9 -என்றும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–திருவாய் -1–2–9-என்று சொல்லுகிற படியே பகவத் பிராப்தி ஆகிய கரையை குறுகைக்கு ஈடான கால சிந்தனை பண்ணா நிற்பார்கள் என்கை-)
(உணர்ந்த மெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய்மொழியின்
மணந் தரும் இன்னிசை மன்னும் இடந் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணந்திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக் கொழுந்தே.–60-ஆத்ம குண ஔஜ்ஜ்வல்ய யுக்தராய் -ஆத்மகுணங்கள் தன்னை சர்வ விஷயமாகஉபகரித்து அருளும் பரம ஔ தாரராய் -எங்கள் குலத்துக்கு தலைவரான எம்பெருமானார்-ஞாதவ்யார்தங்களை அடங்க அறிந்து இருந்தும் -யதா ஞான யுக்தரானவர்கள் கூட்டுரவு தோறும் –திரு வாய் மொழியினுடைய பரிமளிதமாய் விலஷணமான இசை நிரந்தரமாக நடக்கும் ஸ்த்தலங்கள் தோறும் –பெரிய பிராட்டியாராலே நித்ய வாசம் பண்ணப்பட்ட அழகிய திரு மார்வில் உடையவன் உகந்தருளி-வர்த்திக்கும் திருப்பதிகள் தோறும் –-அவ்வவற்றை அனுபவிக்கையில் உண்டான ஆசையாலே புக்கு அவற்றிலே ஆழம் கால் பட்டு-நில்லா நிற்பர்-இது அவருடைய பக்தி வைபவம் இருக்கும் படி-)=எம்பெருமானார் உடைய ஞான வைபவத்தை பேசின அநந்தரம் -அவருடைய பக்தி வைபவத்தை தாமே அனுசந்தித்து -ஏவம் பூத குண ஔஜ்ஜ்வலராய் இந்த பிரேமத்தை எல்லாருக்கும் உபகரிக்கும்-பரம ஔதாரரான எம்பெருமானார் எம் குலக் கொழுந்து என்கிறார்-எம்பெருமானார் தாம் கொழுந்தாய் கொண்டு -வேருக்கு வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே -எங்கள் குலத்துக்கு ஒரு குறை வந்தால் முற்பட தம்முடைய முகம் வாடி இருக்குமவர்-பொருந்தும் பதி -எனவே பொருந்தாத பதியும் உண்டு என்று தோற்றுகிறது-அந்த பொருந்தா பதியே .-பரம பதம்–அவன் மேவி உறை கோயில் -என்னும் இடத்தில் –அவன் பரம பதத்தில் உள் வெதுப்போடே போலே காணும் இருப்பது .சம்சாரிகள் படுகிற கிலேசத்தை அனுசந்தித்து -இவை என் படுகின்றனவோ என்கிற திரு உள்ளத்தில் வெதுப்போடே யாயிற்று அங்கு இருப்பது -4 10-2 — – என்னும் ஈட்டு ஸ்ரீ ஸூக்தி
ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -என்றும் த்யக்த்வா வைகுண்ட முத்தமம் -என்னும் பரம-பதத்தில் வைராக்கியம் பிறந்து -அதனை விட்டு திருப்பதிகளிலே உகந்து அருளி பொருந்தி உள்ளமைக்கு-ஹேது-மலராள் புணர்ந்த பொன் மார்பினன் ஆனதால் .திவ்யதம்பதிகள் இங்கேயே-இமயத்து பரம பதத்தை துறந்து மறந்து ஒழிந்தனர்-என்க-திருமங்கை ஆழ்வாரைப் போலே –தான் உகந்த திருப்பதிகள் தொறும் மண்டி அனுபவிக்க புக்கு நிற்பவர்-எம்பெருமானார் இனி இவற்றில் புகாத போது கால் பாவி நிற்க மாட்டாது -புகுந்து பின்னர் தரித்து கால் பாவி நிற்கிறார்
மூன்றாம் வார்த்தை –
ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில்
நாம் கலக்கங்களும் தேற்றமுமாய்-திருவாய்மொழி -6-3-2- போருவுதோம்
அவர்கள் கலக்கம் இல்லா நற்றவர்களாய் —
கலக்கமிலா நல்தவ முனிவர் -திருவாய்மொழி -8-3-10-என்னும் பெருமை உடையவர்களாய்
பல்லாண்டு கூறி இருப்பர்கள் –
(திருப்பல்லாண்டு 3/11)பல்லாண்டு கூறுதுமே பல்லாண்டு கூறுவனே என்று மங்களாசாசன பரராய் இருப்பர்கள் –
கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-பரிச்சின்ன ஸூகம் -ப்ரத்யக்ஷ சித்தம் அன்றிக்கே -சாஸ்திர ஸித்தமாய்-அபரிச்சின்னமான ஸூகத்திலே இறே தமக்கு அந்வயம்-அதற்கு எதிர்த்தட்டான துக்கம்-அஞ்ஞானங்கள் -ஞானம் –இதர விஷயங்களைப் பெறாமையால் வரும் கலக்கமும், அவற்றைப் பெற்றால் வரும் தேற்றமும்.-கோபமும் அருளும்.-கோபம் -பிரசாதம் -உஷ்ணத்தை பண்ணும் அக்னியும் -சீதா ஸ்வ பாவமான நிழலும்
கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10–தங்கள் ஞானத்துக்கு விஷயங்களால் கலக்கம் இன்றிக்கே மஹா தபஸ் ஸூ க்களை யுடைய மனன சீலரான சனகாதிகள்-முக்தர் –முதலிலே சம்சார ஸ்பர்ஸ கந்தம் இல்லாத நித்ய ஸூரிகள்-துளக்கம் -சலனம் -அதாவது ஞானக் குறைவு -அது இல்லாத நித்ய ஸூரிகள்
ஆழ்வார்கள் எல்லோரையும் போல் அல்லர் பெரிய ஆழ்வார்-சூரணை-250-அவர்களுக்கு இது காதா சித்தம் –இவர்க்கு இது நித்யம் –சூரணை -251-அவர்களுடைய ஆழம்கால் தானே இவருக்கு மேடாய் இருக்கும் –சூரணை -252-அவர்களுக்கு உபய சேஷத்வத்தையும் அழித்து
ஸ்வரூபத்தை குமிழ் நீருண்ணப் பண்ணும் அது -விருத்திக்கும் ஹேதுவாய் ஸ்வரூபத்தை கரை ஏற்றும் –சூரணை -253-1-பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –2-பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –3-அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலேயே வயிறு எரிவது4-பிராப்தி பலமும் இதுவே எனபது –5-அநிமிஷரை பார்த்து -உறகல் உறகல் – என்பதாய் கொண்டு -இது தானே -யாத்ரையாய் நடக்கும் -சூரணை -254-)
நாலாம் வார்த்தை
அந்தரத்துக்கும் -(கரைக்கும் )-கடலுக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில் –
நாம் சம்சாரம் ஆகிற கடலிலும் மழையிலும் பெரும் காற்றிலும்
அவற்றின் உடைய லாபச் சேதங்களாலும் சோக ஹர்ஷங்களைப் பண்ணா நிற்புதோம் –
ஆவாரார் துணை என்று அலைநீர் கடலுள் அழுந்தும் நாவாய் -திருவாய்மொழி -5-1-9- போலே –
அவர்கள் இரண்டிலும் தளர்தல் அதன் அருகும் சாரார் -இரண்டாம் திருவந்தாதி-45-என்றும்
தரு துயரம் தடாயேல் -பெருமாள் திருமொழி -5-1-என்கிறபடியே நிற்பர்கள்—
ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–இத்தசையில் நமக்கு துணையாவார் யார் என்று-ஷூ பிதமான கடலுக்கு உள்ளே அழுந்துகிற நாவாய் போலே சம்சார ஆர்ணவத்திலே நான் நின்று துளங்க-நாவாய் என்று அதில் நிற்கிறவர்களை சொல்கிறது -மாஞ்சா க்ரோசந்தி இத்யாதி -கேவலம் நாவாயைச் சொன்ன போது கரையிலே நின்றார் இதுக்கு துணை யாவார் யார் என்கிறார்கள் ஆகக் கடவது -அப்போது தனக்கு ஓடுகிற தசையை உணர மாட்டாத அளவைச் சொல்லுகிறது -நாவாய் (-பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் -சூர்ணிகை -180-)–ஆவாரார் துணை -என்கை யாவது -வ்ருஷடீ பிரதீஷாத் சாலையை என்றால் போலே யாகக் கடவது –நடுங்குகை யாவது -அசைந்து வருகை -இந்த நடுக்கத்தில் அவன் செய்வது என் என்ன-அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடும் -அவ்வடிவுக்கு சேர்ந்த திவ்ய ஆயுதங்களோடும் ஆழ்வார்களை சேர்த்துக் கொண்டால் போலே என்னையும் சேர்த்துக் கொண்டான் -என்று ஆளவந்தார் நிர்வாஹம்- எம்பெருமானார் –கூராழி வெண் சங்கு ஏந்தி –வாராய் என்று இவர் உகந்த படி வந்தான் என்று அருளிச் செய்வார் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானமே யாகிலும் பூ வேளைக் காரரைப் போலே ஆழ்வார்களை ஒழிய காண மாட்டார்
உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-தரித்ரர் அர்த்தம் உண்டானவாறே மாதா பிதாக்களையும் ஆச்சார்யர்களையும் அவமானம் பண்ணுவர்கள் -இவர்கள் இப்படி செய்யார்கள்-தன்னுடைய பூர்வ அவஸ்தையை அறியாதே நடுவே நாலு நாள் இது உண்டானதுவே அடியாக மாதா பிதாக்களையும் ஆச்சார்யனையும் அவமானம் பண்ணுவது –உத்க்ருஷ்ட ஜன்மங்களை அவமானம் பண்ணுவது – பர லோக கதை சொன்னார் யுண்டாகில் சிரிப்பதுமாய் திரியும் ஆய்த்து –சர்வேஸ்வரனைப் பற்றி இருக்குமவர்கள் இப்படி இருப்பது ஓன்று யுண்டாகில் அத்தை ஒன்றாக மதித்து இராமையாலே அது உண்டு என்னும் இடம் தோற்றி இரார்கள் -இல்லை என்று தளரார் என்னாதே-உண்டு இல்லை என்று தளரார் என்றது என் என்னில் நித்ய தரித்திரன் சோகம் அறியான் –ஒரு நாள் உண்டாய் அது இல்லை யானவாறே பாவியேன் பண்டு சுகமே ஜீவித்தோம் இப்போது இடி படா நின்றோம் என்று மிகவும் தளர்த்திக்கு உடலாம் என்று –உண்டு இல்லை என்று தளரார் – என்று சொல்லுகிறது-ஒரு நாள் யுண்டாய் இல்லை யானவாறே பாவியேன் பண்டு ஸூகமே ஜீவித்தோம் இப்போது மிடிபடா நின்றோம் -என்றுமிகவும் தளர்த்திக்கு யுடலாமே –-அர்த்தார்த்தி யானால் கிடையா விடில் சோகம் இல்லை -ஆர்த்தனுக்கு இறே சோகம் உள்ளது –பகவத் விஷயத்தில் பேறும் பிரிவும் அனர்த்தமாம் 0பகவத் விஷயத்தில் பிரிவும் உத்தேச்யமோ என்னில் –அழு நீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ -திரு விருத்தம் -2-என்னக் கடவது இறே
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் -வாரி ஸ்ரவதி சோகஜம் –சுந்தர -33-4-சம்சாரியில் காட்டில் ஜ்ஞானவானுக்கு வாசி விச்லேஷத்தில் துவட்சி யன்றோ-இத்தை அன்றோ உண்ணும் சோறில் முற்கூறும் துவளில் மா மணியும் சொல்லுகிறது –-முன்னம் நோற்ற விதி கொலோ முகில் வண்ணன் மாயம் கொலோ -திருவாய் -6-5-7- நான் பண்ணின ஸூஹ்ருதமோ-அவன் தன்னுடைய கிருபையோ – நிர்குண பரமாத்மா சௌ தேஹம் தே வ்யாப்ய திஷ்டதி -பீமசேனன் அனுமன் உடலில் துவட்சி கண்டு சொன்னான் இறே – இத்யாதிகளால் பிரிவும் உத்தேச்யம்-இன்னம் இவ்வளவே அன்றிக்கே –அதனருகும் சாரார் –-இப்படிப் பட்ட ஜீவனத்தை இழந்தோம் என்னும் தளர்த்தி இல்லாத ஜ்ஞானவானுக்கும்-அவ் விழவாலே வருவதொரு அனுதாபம் யுண்டாய் இருக்கும் இறே-அங்கனே வருவதோர் அனுதாபமும் இன்றிக்கே இருப்பார்கள் இவர்கள் – அத்தை ஒரு வஸ்துவாக புத்தி பண்ணும் அன்று இறே அத்தை இழந்ததாலே வருவதோர் அனுதாபத்தை யுடையராய் இருப்பது-ஸ்திரம் என்று நினைத்து பின்னை அஸ்திரம் என்று இருக்கும் அவர்கள் அன்றே –-ஸ்திரமானது அஸ்திரமாய்த்து என்னில் அன்றோ சோகம் உள்ளது-என் தான் இவடினுடைய லாப அலாபங்களில் நாட்டார்க்கு வரக் கடவதான சோக ஹர்ஷங்கள் இவர்களுக்கு இன்றிக்கே இருப்பான் என் என்னில் இவர்கள் பற்றி இருக்கும் விஷயத்துக்கு அவை இரண்டும் இல்லை
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -5-1-நீயே தருகிற துக்கத்தை நீயே மாற்றாயாகில்-தன்னாலே தனக்கு விரோதி வந்தது என்றும்-தானே சாதன -அனுஷ்டானத்தாலே அது போக்கிக் கொள்வான் என்றும்-சாஸ்திரங்கள் சொல்லிக் கிடக்கச் செய்தே-இவர் அவனே துயர் தந்தான் என்பான் என் என்னில் பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணி இருப்பார் ஒருவர் ஆகையாலே சொல்லுகிறார் –தானே கர்மம் பண்ணினவன் தானே சாதன அனுஷ்டானம் பண்ணித் தவிர்த்துக் கொள்ளுகிறான் என்று நம்மைப் பழியிட்டு தள்ள நினைத்தான் ஆகிலும் நானும் தன்னைக் குறித்து பரதந்த்ரன் –நான் செய்த கர்மமும் பரதந்த்ரம் –நான் பண்ணும் சாதன அனுஷ்டானத்துக்கு பலபிரதன் ஆகையாலே அதுவும் தன்னைக் குறித்து பரதந்த்ரம் ஆகையாலே –தரு துயரம் -என்கிறார் –ஸ்ரீ முதலிகள் எல்லாரும் கூட ஸ்ரீ பெரிய திரு மண்டபத்துக்கு கீழாக இருந்து ரகஸ்யார்த்தங்கள் விசாரித்து எழுந்து இருப்பார்களாய்த்து- ஒரு நாள் நித்ய சம்சாரியாய்ப் போந்தவனுக்கு ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி பிறக்கைக்கு அடி என் என்று விசாரிக்கச் செய்தே – யாத்ருச்சிக ஸூஹ்ருதம் என்ன -அஜ்ஞ்ஞாத ஸூஹ்ருதம் என்னப் பிறந்தது –அவ்வளவிலே ஸ்ரீ கிடாம்பி பெருமாள் இருந்தவன் நமக்கு ஸ்ரீ பகவத் சமாஸ்ரயணம் போலே
ஸ்ரீ ஸூக்ருத தேவர் என்று ஒருவர் உண்டோ ஆஸ்ரயணீயன் என்றான் –
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் ஸூஹ்ருதம் என்று சொல்லுகிற நீர் தாம் நினைத்து எத்தைக் காண் என்றார் —அதாவது-ஒன்றை ஆராயப் புக்கால் அதுக்கு அவ்வருகு வேறு ஓன்று இன்றி இருப்பது இறே -அடியாவது –யாதொன்று பல பிரதமானது இறே உபாயமாவது -அல்லது நடுவே அநேக அவஸ்தை பிறந்தால் அவற்றின் அளவில் பர்யவசியாது இறே-இளைப்பாறுவது இதிலே சென்று இறே -நடுவு இளைப்பாறாது இறே -தரு துயரம் -என்னலாம் -இறே -தடாயேல் – நீ விளைத்த துக்கம் நீயே போக்காயாகில் –
மம மாயா துரத்யயா -என்றும் –மா மேவயே ப்ரபத்யந்தே மாயா மேதான் தரந்திதே -என்றும் –நம்முடைய மாயை ஒருவரால் கடக்க ஒண்ணாது காண் என்றும் –இது கடக்க வேண்டி இருப்பவன் நம்மைப் பற்றி கழித்துக் கொள்வான் என்றும்-நீயே சொல்லி வைக்கையாலே நீயே துயர் தந்தாய் என்னும் படி தோற்றப் படுகிறது இறே –துக்கத்தை விளைப்பான் ஒருவனும் போக்குவான் ஒருவனுமாய் அன்று இறே இருப்பது –-பண்ணினவன் தானே போக்கும் இத்தனை இறே-ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் –ஒரு -குருவி பிணைத்த பிணையல் ஒருவரால் அவிழ்க்க ஒண்ணுகிறது இல்லை-ஒரு சர்வ சக்தி பிணைத்த பிணையை எலி எலும்பனான இவன் அவிழ்க்க என்று ஒரு கார்யம் இல்லை இறே –அவன் தன்னையே கால் கட்டி போக்கும் அத்தனை இறே -என்றார்-
ஐந்தாம் வார்த்தை –
அணுவுக்கும் மஹா மேருவுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில் –
நாம் சம்பந்தமும் -குடி கோத்ரமும் ஸூத்ரமுமாகப் பண்ணுவுதோம் –
அவர்கள் சம்பந்த ஜ்ஞான அனுஷ்டானமே குடி கோத்ர ஸூத்ரம் என்று இருப்பர்கள்
நாம் பண்டைக் குலம் ப்ராஹ்மாண்யம் பற்றி நின்று குடி கோத்ரம் ஸூத்ரம் என்றும் —
அவர்கள் தொண்டக் குலம் -ஜீவ பர சம்பந்த ஜ்ஞானம் ஒன்றே என்று இருப்பர்கள்—
(விப்ரருக்கு கோத்ர சரண சூத்ர கூடஸ்த்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள்
பிரபன்ன ஜன கூடஸ்த்தர் பராங்குச பரகால யதி வராதிகள் .-சூரணை -36-)
ஆறாம் வார்த்தை –
கரும்புக்கும் (கல்)கண்டுக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில் –
நாம் வேதம் ஆகிற கரும்பைக் கடித்து -(மறையாய நால் வேதம் -சக்கை கலந்த கரும்பு )
பல்லு முறிவுதோம் –
அவர்கள் சாரத் த்வயம் ஆகிற கண்டைக் கடித்து இன்புருவர்கள் —
(அறக் கற்கை அரிது என்று இறே-வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியில்-முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும் ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும் தேனும் பாலும் அமுதமாக வெடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-சூரணை-16-)
ஏழாம் வார்த்தை
மண்ணுக்கும் விண்ணுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில்
நாம் -மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா -திருவாய்மொழி -7-1-6- என்றும்
அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் -பெரிய திருமொழி -7-7-1- என்றும் –
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ-திருவாய்மொழி -6-9-9- என்றும் –
திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன் -பெரிய திருமொழி -7-7-9- என்றும் –
பயப்பட்டு கலங்கா நிற்புதோம்
விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6-தம் நிலமான சம்சாரத்திலே–சம்சாரிகளுக்கும் அவ்வருகாய் இருக்கிற என்னைப் பெற்றால் இந்திரியங்கள் அளவுடையாரையும் அகப்படுத்த வல்லவை -அவை அகப்படுத்த வேண்டாதே மேல் விழுமவன் நான் -ஆனால் எல்லாம் படுத்தவோ-
திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடர் ஆழி வல்லானே உலகுண்ட வொருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை என்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-1-ரஷகனான உன்னில் காட்டிலும் பாதக வர்க்கம் அணித்தாய் நின்று நலியா நின்றன –
உண்ணிலாவிய -என்னுமா போலே ஒருவர் இருவர் இன்றிக்கே சேதன சமாதியாலே நலியா நின்றுள்ள ஐந்து இந்திரியங்கள் என் பக்கலில் வந்து புகுந்து என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்குகிறன இல்லை –என்னுடைய விஷயத்தை காட்டு -என்னுடைய விஷயத்தைக் காட்டு -என்று இவை தனித் தனியே அலைத்து நெருக்க அவற்றுக்கு அஞ்சி வந்து சர்வ ஸ்வாமியான உன்னுடைய திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-நெஞ்சு கலங்கும் படி-பஞ்ச இந்திரியங்களும் விஷயங்களில் மூட்டி நலியும் படியான -ஐவர் -என்று சேதன சமாதியாலே சொல்லுகிறது -நலிவின் மிகுதியால்-பகவத் விஷயத்தை இழப்பிக்க வேண்டுவதுண்டாய்-தன் பக்கல் அனுபாவ்யம் ஒன்றும் இன்றிக்கே இருக்கும் ஷூத்ர ஸூகத்தை அந்தமில் பேரின்பத்துக்கு இட்டுப் பிறந்து வைத்து சப்தாதிகள் நடையாடுகிற தேசத்திலே இருக்கும் படி பாபத்தை பண்ணின என்னை -வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் -என்றவர் இறே இங்கனம் சொல்லுகிறார்-பைதல் கைசு -நோய் முக்கைசு -என்று தம் அளவன்றிக்கே பலவாய் இருக்கை-ரக்ஷகனான நீ காட்டி முடிக்கப் பார்க்கிறாயோ -சப் தாதி விஷயங்களின் உடைய தர்சன மாத்திரத்திலே முடியும்படி யாயிற்று இவர் பகவத் குணங்களிலே நைந்த படி -நாம் காணாவிடில் முடியும்படியான விஷயங்கள் இவருக்கு காணில் முடியும்படி யாயிற்று
கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட் கொடியாய் நெடு மாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9-அப் படுக்கையிலே சாய்வது இருவரோடு சேர்த்தியோடு யாயிற்று-இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன்-ஐயோ ஐயோ என்று அநந்ய கதியான என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்-கிருபை பண்ணுகைக்கு வந்து நிற்கிற இடம் இது அன்றோ –நான் அவரை பொறுக்க மாட்டேன்-நீரே போக்கும் விரகு பார்க்கலாகாதோ
கிருபை ஒன்றே நான் அறிவேன் என்கிறார்
அவர்கள் இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் -திருவாய்மொழி -8-10-4- என்றும் –
வான் உயர் இன்பம் எய்தில் என் நரகமே எய்தில் என் -திருவாய்மொழி -8-1-9 -என்றும் –
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -கண்ணி நுண் -11 -என்றும்
செய்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள -பெரியாழ்வார் திருமொழி -3-7-9- என்றும்
சொல்லுகிறபடியே நித்ய விபூதியில் இருப்பவர்களைப் போலே கலக்கமும் பயமும் இல்லாமல் இருப்பர்கள்–
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோ லத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய் புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் வழி பட்டு ஓட அருளிலே–8-10-4–பாகவத கைங்கர்யத்துக்கு வர்த்தகமான பகவத் அனுபவம் பூர்ணமாக கிடைப்பது பரம பதத்தில் யன்றோ என்ன -அவ்வனுபவம் அவன் பிரசாதத்தாலே இங்கேயே கிடைக்குமாகில் இங்கேயே வர்த்தித்தால் சேதம் என் என்கிறார் என்றுமாம் –அங்குத்தை அனுபவத்துக்கும் அவன் பிரசாதமே இறே ஹேது -இங்கேயே கிடைக்குமாகில் சேதம் என் -என்கை -தண்ணிதானது என்-மநோ வாக் காயங்கள் அவன் திருவடிகளிலே நிரந்தரமாக அடிமை செய்யும் படி -அவன் பிரசாதத்தை பெறில் –பாகவத ப்ரிய ரூபமான -பகவத் கைங்கர்யத்தை -அவன் பிரசாதத்தாலே -இங்கே பெறில் -அதுவே புருஷார்த்தம் -என்கை –
யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-இச் சேஷத்வ ஞானத்தோடு திரு நாட்டிலே போய் நிரதிசய ஆனந்தத்தை பெற்று இருக்கில் என் -உயர் இன்பம் -நிரதிசய ஆனந்தம் –ஸூ கத்துக்கும் சேஷத்வ ஞானத்துக்கும் எதிர்தலையான சம்சாரத்திலே இருக்கில் என் –சேஷ வஸ்து வானால் சேஷியினுடைய எல்லைக்கு உள்ளே -அவன் செய்தபடி செய்கிறான் -என்று இருக்குமது ஒழிய அவனை நிர்பந்திக்கக் கடவன் அல்லன் என்பதோர் அர்த்தமும் உண்டு-எனினும் உடையவன் வைத்த இடத்தில் கிடக்கும் அத்தனை அன்றோ என்று ஓர் அர்த்த தத்வம் உண்டு-இந்த உண்மை இப்படி இருந்தாலும் —இந்த சம்சாரம் உனக்கு புறம்பு என்கிற ஆகாரத்தால்-தன்மையால் அன்றிக்கே-நான் உனக்கு அத்யந்த சேஷமாய் இருப்பவன் என்கிற தெளிவு பிறக்க பிறக்க-சேஷத்வ ஞானம் உண்டான பின்பு–சேஷமாய் இருக்கும் பொருள்–சேஷி செய்தபடி கண்டு
அவன் எல்லைக்குள் கிடக்கும் இத்தனை அன்றோ–நம்மை நிர்பந்திக்கக் கடவதோ-
என்பதே அன்றோ தேவர்க்கு நினைவு-உனக்கு இது நினைவு ஆனாலும் இந்த சம்சாரத்தில் இருப்பை நான் மிகவும் அஞ்சா நின்றேன்-அடிமை என்கிற எண்ணத்துக்கு விரோதி ஆகையாலே–சேஷத்வ பிரதிபத்தியே குலையும் படி அன்றோ இங்கு உள்ளது –
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–இது கற்றாருக்கு வாசஸ் ஸ்தானம் ககலங்கா பெரு நகரான பரமபதம் – இது வ்யாஹத பாஷணமாய் இருந்ததீ-ஆழ்வாரை ப்ராப்யமாகச் சொன்னால் திரு நகரியே ப்ராப்ய தேசமாக வேண்டாவோ என்னில் திரு நகரியிலே பொலிந்து நின்ற பிரான் ஆணையும் ஆழ்வார் ஆணையும் கூடச் செல்லுவது
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ என்கிறபடியே ஆழ்வார் ஆணை ஒன்றுமே யாய்த்து அங்குச் செல்லுவது – சேதனனுக்கு ப்ராதி கூல்யத்தில் நின்றும் நிவ்ருத்தன் ஆனேன் என்று தோற்றும் போது ஈஸ்வரன் பக்கல் ஸ்நேஹித்து இருக்க விடுக்கும்
ஈஸ்வரன் பக்கல் ஸ்நேஹித்து இருக்கை யாவது அவன் அடியார் அளவும் ஸ்நேஹித்து இருக்கை-அவர்கள் எல்லாருக்கும் ப்ரியம் செய்கையாவது ஜ்ஞான ப்ரதன் பக்கலிலே ஸ்நேஹித்து இருக்கை இறே-ஆகையாலே திரு நாட்டை ப்ராப்யமாகச் சொல்லிற்று
அதவா நம்புவார் இருந்த இடமே வைகுந்தம் என்னவுமாம்-திரு நாடு என்றும் லீலா விபூதி என்றும் விபாகம் இல்லையோ வென்ன நம்பி திருவழுதி வள நாடு தாசர் வார்த்தை -கூரத் தாழ்வான் மகன் பிறந்த பின்பு இடைச் சுவர் தள்ளி ஒரு போகியாய்த்துக் காண் -என்று பணித்தான் –
கைத் தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்து வைத்து கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த் தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள
மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே – 3-7-9-செய்த் தலையிலே விளைந்த நாற்று உடையவன் வேண்டினபடி விநியோகம் கொள்ளுமா போலே இவளையும் அவன் வேண்டினபடி செய்து கொள்ள-கழுத்தே கட்டளையாக நீரை பருகையாலே கறுத்து பெருத்து இருந்துள்ள மேகம் போலே இருக்கிற வடிவை உடையவன் பக்கலிலே இவள் வளரும்படியாக நீங்களே சேர்த்து விடும் கோள்-என்று இப்படி பந்துக்கள் சொன்னார்கள் என்கிற இத்தனையும் இவ் விடத்தில் அபிப்ரேதம் –அதுக்கடி-தாயுரை செய்ததனை–(3-7-11) -என்று திரு மொழி முழுவதம் தாயார் வார்த்தை என்று நியமிக்கையாலே –
எட்டாம் வார்த்தை –
இரவுக்கும் பகலுக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில்
நாம் வேதம் ஆகிற அந்த காரத்திலே தடுமாறா நிற்புதோம் –
அவர்கள் பேர் ஆயிரமும் ஓதின -பெரிய திருமொழி -1-5-10-விளக்கு ஒளியாலே
மாதவன் தன் துணையா நடந்து -மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய
கீதையின் செம்மைப் பொருள் -இராமானுச நூற்றந்தாதி -68–வழியே நடப்பர்கள் —
தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே –1-5-10-லோகத்தில் அறிவு உடையாராய் இருப்பார் –நித்ய சூரிகள் உடைய நல் நாடு உண்டு -பரம பதம்
அத்தை ஆள்மின்கள் வானகம் -என்கிறபடியே தாங்கள் இட்ட வழக்காம் படி நடத்த –ஆயிரம் திரு நாமங்களையும் வாயாலே சொல்லப் பாருங்கோள் –அங்கன் இன்றிக்கே
இவற்றையே அடைவு கெட சொல்லப் பாருங்கோள்-திரு நாமம் சொல்லுங்கோள்-இல்லையே வேதம் சொல்லுங்கோள் சுருதி–இங்கு திரு மொழி -வேதம் தமிழ் செய்த மாறன் -அங்கம் அன்றோ
ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68- –சாரத்திய வ்ருத்தாந்தாலே தன்னுடைய ஆஸ்ரித பார தந்த்ர்யத்தை-ஜகத் பிரசித்தம் ஆக்கின ஆச்சர்ய பூதன் –ரதியான அர்ஜுனன் கையில் வில்லையும் பொகட்டு சோகாவிஷ்டனாய்–சிஷ்ய ஸ்தேஹம் சாதிமாம் த்வாம் பிரபன்னம் –கீதை -7-2 – -என்கிற-அக்காலத்திலே பாண்டவர்களுடையதாய் தன்னுடைய திருவடிகளோட்டை ஸ்பர்சத்தாலே திவ்யமாய் இருந்துள்ள திருத் தேர்த்தட்டிலே -நின்று அருளிச் செய்த -ஸ்ரீ கீதையினுடைய ஸ்வ ரசமான அர்த்தத்தை -ஸூவ்யக்தமாம் படி -தேரிலே அர்ஜுனைக விஷயமாக அவன் அருளிச் செய்தால் போல் அன்றிக்கே –-பாரிலே சர்வ விஷயமாக அருளிச் செய்த எம்பெருமானாரை ஆஸ்ரயித்து இருக்கும் விலஷணரானவர்கள் உடைய கல்யாண குணங்களிலே இவ்வருகு ஒன்றில் கால் தாழாதே சென்று என்னாத்மாவும் மனசும் அத்தை விடில் முடியும் என்னும்படி ப்ரவணமாய் விட்டது .
சொல்லுமளவில் யார் தான் எனக்கு இன்று சத்ருசர்
ஒன்பதாம் வார்த்தை –
ரத்னத்துக்கும் பாஷாணத்துக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில் –
நாம் மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே -திரு நெடும் தாண்டகம் -4- என்று
அந்தி தோறும் மந்திரத்தை சொல்லா நிற்புதோம்(இங்கு மந்திரத்தால் என்றும் திருமந்த்ரத்தையே ஆழ்வார் அருளிச் செய்தால் காயத்ரி மந்த்ரத்தைத் சொல்லி நிற்பதற்குப் பிரமாணம்)
அவர்கள் பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும் அந்தியாலாம் பயன் எங்கன் -முதல் திருவந்தாதி -33-என்று
(காயத்ரி ஜெபத்தில் ஈடுபடாமல் )மந்திர ரத்னம் த்வயத்தைச் சிந்திப்பர்கள் —
இந்த்ரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை யிரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித் திசை நான்குமாய் திங்கள் நாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா அந்தணனை அந்தி மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே–4-கீழ் உக்தமான இவ் வஸ்து வேத சிரஸ்சிலே குஹ்யமாய் இருக்கும் -என்கிறார் –ப்ராஹ்மனர்க்கு தனம் வேதம் இறே-பிரமாண முகத்தாலே இறே -பிரமேய பூதனான ஈஸ்வரனை தனம் என்று அறிவது –மந்த்ரம் -என்று–பிரதிபாத்யமும் அங்கேயாய்-பிரதிபாதகமும் அங்கேயாய்
இருக்கிறபடி ஈஸ்வரனுக்கு திரு நாமமாக ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமாவில் சொல்லிற்றே-1-ஜகத் காரண பூதனை –-2-சர்வாந்தராமியாய் –-3-துர் ஜ்ஜேயனாய் –-4-தத் கத தோஷை ரசம் அஸ்பர்ஷ்டனாய் இருக்கிறவனை அனுபவிப்புதியாகில்-அவ் விஷயத்தை அனுபவிக்கும் இடத்தில் -வேதாந்த முகத்தாலே யாதல் –இதிஹாச புராணத்தாலே யாதல் -அனுபவிக்கப் பாராதே நான் இழிந்த துறையில் அனுபவிக்கப் பார் –திரு மந்த்ரத்திலே அனுபவிக்கப் பார் –திரு மந்தரத்தால் அனுபவிக்குமா போலே ஸூகரமாய் இராது இறே – சர்வம் அஷ்டாஷராந்தஸ்தம் –என்கிறபடியே –சர்வார்தங்களையும் திரளச் சொல்லும் மந்த்ரம் இறே –மறவாது வாழ்தியேல் –விஸ்மரியாதே அனுபவிப்புதியேல்-பகவத் அனுபவத்துக்கு விஸ்ம்ர்தி ஹேது விஷயாந்தர ஸ்பர்சம் ஆகையாலே-விஷயாந்தரம் கலசாதபடி அனுபவி -என்கிறாரோ -என்னில் –அது இவர்க்குச் சேராது –சரம தசையில் சாஷாத் கரித்து அனுபவிக்கிறவர் ஆகையாலே-இனி இவர்க்கு விஸ்ம்ர்தி ஹேது என் என்னில் –
தாபத் த்ரய ஆஸ்ரயமான தேக சம்பந்ததோடே இருக்கையாலே தேகத்தைப் பாரார் –
பூர்வ வ்ருத்தத்தைப் பாரார் – விஷய வைலஷண்யத்தைப் பாரார் – தந் நிவ்ருத்திக்கும் அபிமத சித்திக்கும் உறுப்பாக ஈஸ்வரனை உபாயமாக அனுசந்திப்பதொரு அனுசந்தானம் உண்டு –அது பகவத் அனுபவத்துக்கு விஸ்ம்ர்தி ஹேதுவாகக் கடவது-ஆகையாலே பூர்வார்தத்தில் இழியாதே அனுபவிக்கப் பார்–இவர் தாம் த்வய நிஷ்டர் அன்றோ-இங்கனே சொல்லுவான் என் என்னில்-அடியிலே ஒருக்கால் ஈஸ்வரன் கையில் நம் கார்யத்தை சமர்ப்பித்து விட்டோம் ஆகில்-இனி ஸ்வ உஜ்ஜீவனதுக்கு சிந்திக்கை யாவது பிறர் கார்யத்தில் இழிகை இறே –பிறர் கார்யம் -ஈஸ்வரன் கார்யம்
ஸ்வ ரஷணத்தோடு ஜகத் வியாபாரத்தோடு வாசி இல்லை இறே பிராப்தி இல்லாமைக்கு-வாழ்தியேல் –அவனுடைய பரத்வத்திலும் சாதனத்திலும் இழியாதே – போக்யதையில் இழிந்து அனுபவிப்புதி யாகில் –-வாழ்ச்சி உன்னதே இறே-நானும் உனக்கு சஹகாரியாம் இத்தனை இறே –வாழ்தியேல் -என்று தமக்கு கரணமான மனசை சேதன சமாதியாலே கர்த்தாவாகப் பேசுகிறார் இறே –மன பிரதானம் தோற்ற –யாவதாயுஷம் பகவத் அனுபவத்துக்கு பரிகாரம் இதுவாகையாலே -தத் சாபேஷனாய் இறே முமுஷூ இருப்பது –என்றும் வாழலாம் –நித்ய ஸூரிகள் நடுவே இருந்து -யாவதாத்மபாவி வாழலாம் –எங்கும் ஒக்க அனுபவம் இறே இவனுக்கு உள்ளது வைஷ்ணவன் ஆகிறான் ராஜ குமாரன் இறே- மட நெஞ்சமே-எனக்கு பவ்யமான நெஞ்சே-விஷய ப்ராவண்ய நிவ்ருத்தி வேளையோடு
உஜ்ஜீவன வேளையோடு போக வேளையோடு வாசி அற என் பின்னே ஒழுகும் படி எனக்கு விதேகமாகப் பெற்றேனே என்று திரு உள்ளத்தைக் கொண்டாடுகிறார் – நெஞ்சமே நல்லை நல்லை -என்னுமா போலே –
நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி யுரு வெண்ணும்
அந்தியா லாம் பயன் அங்கு என் -33–சத்தையையும் வெளிச் சிறப்பையும் பண்ணிக் கொடுக்கக் கடவனவனுடைய திரு நாமத்தையே புத்தியாலே அனுசந்தியாதே-அவன் குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ஸ்வா பாவிக சம்பந்தத்தை அனுசந்தித்து அவனை உகப்பியாதே இடக்கை பத்துருக் கொண்டு வாயாலே சொல்லுகிற இத்தால்
அவ்விடத்தில் பிரயோஜனமாய்த் தலைக் கட்டுவது ஏதோ-நெஞ்சு விஷயாதிகளைப் பற்றிக் கிடக்க வாயாலே சொல்லுவது கையாலே எண்ணுவதாகிற இவ்விருத்திகளால் என்ன கார்யம் உண்டு-எம்பெருமானை அகலுகையே பலித்ததாய் விடுமத்தனை-சந்த்யையாலே
எல்லா அனுஷ்டானங்களையும் நினைக்கிறது –
பத்தாம் வார்த்தை –
பதி வ்ரதைக்கும் பர நாரிக்கும்(ஆபாச ப்ரதீதி -சந்தேகப்பட இடமுண்டு) உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில் –
நாம் ஆக்நேயாதி களுக்கு சேஷமாய் இருப்புதோம் -(வைதிக கர்மங்களைப்
பற்றி இருப்போம்)
அவர்கள் அவனுக்கே சேஷம் என்று -அவனை ஒழிந்தவர்களுக்கு சேஷம் அன்று என்று
அறுதி இட்டு இருப்பர்கள் –
இது இருவருக்கும் உள்ள தன்னேற்றம்
இந்தத் தன்னேற்றம் தான்
1-பெருமாள் பக்கலிலும் (-ரிஷிகள் விட குகப் பெருமாள் வானர முதலிகள் விபீஷண ஆழ்வான் போல்வார் இடமும்)
2-நம்பெருமாள் பக்கலிலும் -(லோக சாரங்கர் விட திருப் பாண் பெருமாள் இடமும்)
3-அப்பன் பக்கலிலும் -(தொண்டை மான் சக்ரவர்த்தி விட்டு குறும்பு அறுத்த நம்பி இடமும்)
4-பெரிய நம்பி பக்கலிலும் -(மாறனேர் நம்பிக்கு ப்ரஹ்ம ரதம் ஏற்றி அருளினது மூலம்) காணலாம்
இதின் ஏற்றம் தான் நமக்கும் உமக்கும் பெரியோர்களுக்கும் நித்ய அநுசந்தானம்
என்று ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்தார்
ஸ்ரீ முதலியாண்டானும் -அடியேன் இத்தனை காலமும் அபசாரம் பண்ணிப் போந்தேன்
இனிச் செய்ய அடுப்பது என் -என்று விண்ணப்பம் செய்ய –
சரணாகதனான முமுஷுவுக்கு இப் பத்து வார்த்தையும் நெஞ்சிலே பட்ட வன்று
திருவடிகள் ஸித்திக்கும் என்று ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்தார் –
இந்தத் தன்னேற்றங்களை பெருமாள் பக்கமும், நம்பெருமாள் பக்கமும் பெரிய நம்பியிடத்தும் காணலாம். எம்பெருமானாருக்கு ஒரு நிர்ப்பந்தம் உண்டு. பிறருடைய துர்க்கதியைக் கண்டால் திருஉள்ளத்தில் இரங்கி அருளிச் செய்வது த்வயத்தை. அடியார்,தொண்டர் போன்ற பிரபந்ந ஜனங்களுக்குக் கூடஸ்தர் என்று பெயர். ஆகவே நம்மாழ்வார், மங்கை மன்னன் தொடக்கமான ஆழ்வார்களும் எம்பெருமானார் முதலான ஆச்சார்யர்களும் உபதேச அனுஷ்டானங்களினாலே பிரபத்தி மார்க்கத்தைத் தலைப்பெறுத்தி வளர்த்தவர்களாகையாலே பிரபந்த ஜன கூடஸ்தர் என்று அழைக்கப்பட்டனர்.வாமனாவ தாரத்திலே தன்னுடைமையைப் பெறுவதற்குத் தான் அர்த்தியானாற்போலே, அர்த்தியாய் நின்று பாஷ்யகாரர் பக்கலிலே வேதாந்தார்த்தம் கேட்டு சிஷ்யனாய், நாமும் நம் இராமானுசனை உடையோம் என் கையாலே, ஸ்ரீ வைஷ்ணவ நம்பி என்று திருநாமமாய் வாமனாதார அம்சமாகப் புராண ஸித்தராய் இருக்கிற நம்பியுடைய திருப்பதி என்று காட்டவே திருக்குறுங்குடி என்னாதே வைஷ்ணவ வாமநம் என்றது.
எம்பெருமானாரது அந்திம தசையிலே, எங்களுக்குத் தஞ்சமாய் இருப்பதொன்றை அருள வேண்டும் என்று முதலிகள் கேட்கவே ‘எல்லோரும் பாஷ்யத்தலே வாஸநை பண்ணுகையே நமக்குப் பிரியம். அது இயலாதவர்கள் நத்தவனம் அமைத்துத் திருப்படித் தாமம் (துளஸிபுஷ்பம்) பறித்துத் திருமாலை எடுக்கையும் பிரியமாய் இருக்கும். அது எல்லோராலும் செய்ய முடியாததால் ‘த்வயம்’ மந்திரத்தை ஜபித்து, ஸ்மரித்து அதையே விசுவாசியாய் இருப்பது மிகவும் பிரியமாய் இருக்கும் என்றார்.விஷ்ணுவானவர் அனைவருக்கும் சேஷியாய் இருப்பவர்.நற்குணங்களுக்கு இருப்பிடமான நம்மாழ்வார் அவருடைய திருமேனியாவார். கைங்கர்யச் செல்வம் நிறைந்த எம்பெருமானார் அந்த நம்மாழ்வாருடைய திருவடித் தாமரை யணையாய் விளங்குகிறார். அந்த எம்பெருமானாரிடத்திலேயே ஆச்சார்ய ஸப்தம் நிறை பொருளாய் இருக்கிறது. அவருடைய அபிமானமே ஆத்ம ஜீவனத்தை விரும்பும் எல்லாச் சேதனர்களுக்கும் ஸம்ஸாரக் கடலிலிருந்து கரையேறும் உபாயமாகும். அவரது குணானுசந்தானமே போது போக்குக்கு விஷயம். அவருக்கு முன்னும் பின்னும் உள்ளமற்ற ஆச்சார்யர்களுக்கு உபகாரத்வம் உண்டே ஒழிய உத்தாரகத்வம் கிடையாது. அவர்கள் எல்லோரும் அவ்வெதிராசனால் சத்தைப் பெற்றவர்கள். ஆகவே அவ்வெம்பெருமானாருடைய திருவடிகளையே ஸம்ஸாரம் அடியோடு நீங்குவதற்கு ஆஸ்ரயிக்க வேண்டும் என்று நம் ஜீயர், வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்கூறுவர். ஸோமாஸி ஆண்டான் வடுக நம்பி போன்ற பலரும் இக் கருத்தையே அருளியுள்ளார்கள்.“ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம்யதி ராஜோ ஜகத் குரு’என்று கணியனூர் சிறியாச்சான் சத்தியம் பண்ணினார்.-இராமானுஜாச்சாரியரிடம் காணும் முக மலர்த்தி, அர்ச்சாவதாரத்தில் விளைவதால்; குளிரக் கடாக்ஷித்தல், வாய் திறந்து பேசுதல், வாரி அணைத்தல், போன்ற பேறுகள், அவரோடு ஓரே காலத்தில் வாழ்ந்த முதலியாண்டான், கூரத்தாழ்வான், அவரது குமாரர் பட்டர், எம்பார், திருக் குருகைப் பிரான் பிள்ளான் முதலானோருக்கு,எல்லை யற்றதும், நினைத்தற் கரியதுமான ஆஸ்ரித வாத்சல்யம், செளலப்யம் முதலியன உள்ளங்கை நெல்லிக்கனி போல நேரில் காணலாமாமிருந்தது. எம்பெருமானாருக்கு முற் காலத்தில் இருந்த மணக்கால் நம்பி, உய்யக் கொண்டார், ஆளவந்தார். நாதமுனி முதலியோருக்கு அம்முக மலர்த்தி அப்ரதஷணமாகவே இருந்தது.முதலிகள் ஆழ்வானிடம் எம்பெருமானார் ஆளவந்தார் இருவரில் யாருக்குச் சிறப்புண்டு என்று வினவிய பொழுது, ஆளவந்தார் எம்பெருமானாருக்கு ஆச்சார்யார் ஆன போதிலும் அவருடைய கிருபா கடாக்ஷ்த்தாலேயே எம்பெருமானார் உய்வு பெற்றவரானாலும், ஆளவந்தாருக்கே சிறப்பு இருந்த போதிலும், ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்கள் கூறும் என்ற கிருபாமாத்ர பிரசந்நாச்சார்யாத்வம், காரேய் கருணை இராமானுசரிடத்திலேயே நிலை நிற்கையாலே இவர்க்கே சிறப்பு என்றார் ஆழ்வான்.யதிராஜரது நித்ய கர்மங்கள் உடையவர் பெருமாளுடைய ஸ்ரீகார்யம் ஆராய்ந்து கொண்டு பகலில் ஸ்ரீபாஷ்யம் காலட்சேபம் செய்து இரவில் திருப்பள்ளியேறினால், திருவாய்மொழி சேவித்த படியே கண் வளர்ந்தருளுவார்.இரவில் உறங்காவில்லிதாஸர், ஸ்ரீ குண தாஸர் போன்ற இராமானுஜ வேளைக்காரர் இவருக்குக் காவலாயிருப்பர். காலையில் அவரை வைணவ முதலிகள் இராமனுஜ சுப்ரபாதம் ஓதி துயிலெழுப்புவார்கள். உடையவர் கண் விழித்த பின், பிரபந்தப் பாடல்களை அனுசந்தித்துப் பின்பு நீராடுவார். திருவீதியிலுள்ள ஆசார்ய புருஷர்கள் வணங்கி நிற்க காவேரியிலிருந்து மடத்துக்கு எழுந்தருளுவார். எல்லாத் திவ்ய தேசத்துப் பெருமான்களுடைய பவித்திரங்களைத் திருமுடியிலும், கழுத்திலும் சாத்திக் கொண்டு திருப் பல்லாண்டு, திருப் பள்ளி யெழுச்சி, திருப் பாவை, ஸ்ரீ ஸ்தோத்ர தனியன்களை அனுசந்தித்துக் கொண்டு திருமண் காப்பணிந்து தியானத்தில் ஈடுபடுவார். பின்னர் பேரருளாளன் தொடங்கி அழகிய மணவாளனை மங்களாசாசனம் செய்ய கோவிலுக்குச் செல்வார். நம் பெருமாளுக்கு ஸகல கைங்கர்யங்களும் காலாகாலங்களில் நடக்கும்படி பத்துக்கொத்தலுள்ளவர்களுக்கும் கட்டளை இட்ட பின் கோயிலிலிருந்து மடத்திற்கு வந்து பேரருளாளர் திருவராதனம் பூர்த்தி செய்து தளிகை மாறிய பின் சிஷ்யர்களுக்குத் தீர்த்தப் பிரசாதம் வழங்கிய பின் தாமும் ஸ்ரீவைஷ்ணவர்களும் (பிரஸாதப்படுதல்) உணவு உட்கொள்ளுவர்.அதன் பின்னர் ஆளவந்தாரை நினைத்துத் தியானம் செய்த பின் பட்டரையும், ஸ்ரீராமப்பிள்ளையையும் கொண்டு இராமாயணம் படிக்கச் சொல்லிக் கேட்பார். சாயங்காலம் காயத்ரி ஜபம் செய்து
அனுஷ்டானங்களை முடித்தபின் பேரருளாளன் முன்பு பல்லாண்டு முதலியனவற்றைச் சிஷ்யர்களை சேவிக்கச் சொல்லுவார். பின்னர் அழகிய மணவாளனைச் சென்று சேவித்து கோயில் முழவதும் திருவிளக்கேற்றி ஸந்நிதியில் பொன் குத்து விளக்கிலே தெய்விளக்கேற்றி, மலர்மாலைகள் சாத்தி இளநீர் அமுது செய்வித்தருளுவார்.இரவிலும் பகலைப் போலவே திருவாராதனம் நடத்துவித்து திருவரங்கச் செல்வரை எழுந்தருளுவித்து நடைப் பலிகளை நடத்தி யாகசாலை ஹோமங்களை நடத்தச் செய்வார்.பள்ளி கொள்ளுமிடத்தில் செல்வரை எழுந்தருளச்செய்து சம்பா அமுது செய்வித்து தன்வந்திரி வம்சத்தவர் தயாரித்த கஷாயமும் அமுது செய்வித்து, ஸ்ரீரங்கநாயகியார், கோவிலையும் அலங்கரிப்பித்து என் திருமகள் சேர் மார்பனானை’ சேர்த்தியிலே எழுந்தருளப்பண்ணி, பலவிதமான சுகந்தங்களைச் சாத்துவித்து வெள்ளிக் கிடாரங்களிலே பாற்குழம்பு சேர்த்து ௮முது செய்வித்து அரம்பையர்கள் தாலாட்ட யாழ் குழல் வீணை வாசிக்க பெருமாள் பள்ளி கொண்டருளும்படி செய்து சங்குசக்கரத்தாழ்வார்களை பள்ளியறைக்குக் காவலடைத்து ஸ்ரீநிதி இருக்கும் இடத்தற்கு திருக் காப்புச் சேர்ப்பித்து புறப்படுவார். மடத்தில் பேரருளாளர்க்கும் எல்லாம் செய்து தாமும் பள்ளி கொள்வார்
இன்னமுத மூட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் – பொன்னஞ்
சிலைசேர் நுதலியர் வேள் சேரலர் கோன், எங்கள்
குலசேகரனென்றே கூறு -எம்பெருமானார் அருளிய பெருமாள் திருமொழித் தனியன்
வாழிபரகாலன் வாழிகலிகன்றி
வாழிகுறையலூர் வாழ்வேந்தன் – வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங் கொள், மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல் -எம்பெருமானார் அருளிய பெரிய திருமொழித் தனியன்
முந்துற்றநெஞ்சே முயற்றித் தரித்துரைத்து வந்தித்து வாயார வாழ்த்தியே – சந்த
முருகூரும் சோலை சூழ் மொய்பூம் – பொருதல் குருகூரன் மாறன் பேர்கூறு -எம்பெருமானார் அருளிய பெரிய திருவந்தாதி தனியன்
சீரார் திருவெழு கூற்றிருக்கை யென்னும் செந்தமிழால்
ஆராவமுதன் குடந்தைப் பிரான் றனடியிணைக்கீழ்
ஏரார் மறைப் பொருளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே
‘சேராமர்சொன்ன வருள்மாரிபாதம் துணை நமக்கே. -திருவெழு கூற்றிருக்கை தனியன்
“அழுக்கென்றிவையறிந்தேன் அம்பொன் அரங்கா
ஒழித்தருள்வாய் உள்ளில் வினையை பழிப்பிலா
என்னாரியர்க்காக எம்பெருமானர்க்காக
உன்னாருட்காக உற்று’ -விளாஞ்சோலைப்பிள்ளை அருளிச் செய்தது
சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி.
திருவரையிற் சாத்திய செந்துவராடை வாழி.
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி.
இலங்கிய முந் நூல் வாழி இணைத் தோள்கள் வாழி.
சோராத துய்ய செய முகச்சோதி வாழி.
தூ முறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி.
ஈராறு திருநாம மணிந்த எழில் வாழி.
இனி திருப்போடெழில் ஞான முத்திரை வாழியவே.
அறு சமயச் செடி யதனை யடி யறுத்தான் வாழியவே.
அடர்ந்து வரும் குதிட்டிகளை யறத் துறந்தான் வாழியவே.
செறு கலியச் சிநிதுமறத் தீரத்து விட்டான் வாழியவே.
தென்னரங்கர் செல்வ முற்றும் திருத்தி வைத்தான் வாழியவே.
மறையதனில் பொருளனைத்தும் வாய் மொழிந்தான் வாழியவே.
மாறனுரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியவே.
அறம் மிகு நற் பெரும்புதூர் அவதரித்தான் வாழியவே.அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியவே.
சங்கர பாற்கர யாதவ பாட்டப் பிரபாகர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவரென்று சதுமறை வாழ்ந்திடுநாள்
வெங்கலி யிங்கினி வீறு நமக்கிலை யென்று மிகத் தளர்நாள்
மேதினி நஞ்சுமையாறு மெனத் துயர்விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்று முவந்திடுநாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சிமானிளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே
அத்தகிரி யருளாளரடி பணிந்தோன் வாழியவே.
அருட்கச்சி நம்பியுரை யாறு பெற்றோன் வாழியவே.
பக்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டோன் வாழியவே.
பதின்மர் கலையுட். பொருளைப் பரிந்து கற்றோன் வாழியவே.
சுத்த மகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியவே.
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியவே.
சித்திரையில் லாதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியவே.
சீர் பெரும்புதூர் முனிவன் திருவடிகள் வாழியவே.
எண்டிசை யெண்இளையாழ்வார் எதிராசன் வாழியவே.
எழுபத்து நால்வர்க்கெண்ணான் குரைத்தான் வாழியவே.
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தான் வாழியவே.
பரகால னடிஇணையைப் பரவுமவன் வாழியவே.
தண்டமிழ்நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியவே.
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியவே.
தெண்டிரைசூழ் பூதூரெம்பெருமானார் வாழியவே.
சித்திரையிற் செய்ய திருவாதிரையோன் வாழியவே.
—————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply