Archive for September, 2025

ஸ்ரீ பாஞ்சராத்ரம்–ஸ்ரீ முரளீ பட்டர் ஸ்வாமிகள்-ஸ்ரீ பாஞ்சராத்ர-ஸ்ரீ வைகாநஸ ஆகமங்களும் வேறுபாடுகளும்–

September 17, 2025

கமப்யாத்யம் குரும் வந்தே கமலா க்ருஹ மேதிநம்
ப்ரவக்தா சந்தஸாம் வக்தா பாஞ்சராத்ரஸ்ய யஸ் ஸ்வயம்
-புராணம் வேதம் வேதாந்தம் சாங்க்யம் யோகம் ஸாஸ்திரங்கள் அனைத்தும் இதம் எதிரில் இரவாகின்றன
பஞ்சாயுத அம்சமான ஒவ்பகாயனர் சாண்டில்யர் பரத்வாஜர் கௌசிகர் மௌஞ்யாயனர் -ஐவருக்கும் ஐந்தும் தினங்களில் தானே உபதேசித்து அருளினார் –
ஆகமம் பரதம் சில்பம் வைத்தியம் ஜ்யோதிஷ மேவ ச
பஞ்ச சாஸ்த்ராணி ஸம் யோகாத் பாஞ்சராத்ரம் இதி ஸ்ம்ருதம்

ஸூ ரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ ப்ரஸந்ந வதந ஈஷணம்
க்ருத்வா ஆத்மந ப்ரீதிகரிம் ஸூவர்ண ரஜதாதிபி
தாம் அர்ச்சயேத் தாம் பிரணமேத்தாம் விசிந்தயேத்
விசத்ய பாஸ்த தோஷஸ்து தாமேவ ப்ரஸ்ம ரூபிணாம்
–ஸுநகபகவான்

108 ஸம்ஹிதைகள் கொண்டதும் பாஞ்சராத்ர ஆகமம் -இவற்றுள் ரத்ன த்ரயம் -சாஸ்வத பவ்ஷ்கர ஐயாக்ய ஸம்ஹிதைகளால் திருநாராயண புரம் திருவரங்கம் காஞ்சிபுரம் இவற்றில் திரு ஆராதனம்-திருவேங்கடமுடையான் வைகாநஸ ஆகமத்தினால் திருவாராதனம் கண்டு அருளுகிறான்

த்வாம் பாஞ்ச ராத்ரிகந யேந ப்ருதக் விதேந வைகாநஸேந ச பதா நியதாதிகாரா
சம்ஜ்ஞா விசேஷ நியமேன சமர்ச்ச யந்த ப்ரீத்யா நயந்தி பலவந்தி திநாநி தன்யா
-சரணாகதி தீபிகா–32–வெவ்வேறு வகைப் பட்ட பாஞ்ச ராத்ர மார்க்கத்தாலும் வைகானச மார்க்கத்தாலும் அதிகார நியதி யுள்ளவர்கள் வாஸூ தேவாதி சம்ஜ்ஞா விசேஷ நியமத்தோடு உன்னை பக்தியோடு திருவாராதனம் செய்து ஸூ க்ருதிகளாய்க் காலத்தை சபலமாகக் கழிக்கிறார்கள்–

பாஞ்சராத்ர மரபில் இருந்து உருவான ஆகமநூல்களை பாஞ்சராத்ர ஆகமம் என ஒற்றை நூல்தொகையாக பிற்காலத்தில் ஒருங்கிணைத்தனர். பாஞ்சராத்ர ஆகம முறை இன்றைய வைணவத்தின் முதன்மையான வழிபாட்டு நெறிமுறைத் தொகுதியாக நீடிக்கிறது.-பாஞ்சராத்ர என்ற சொல் கிருஷ்ண யஜூர் வேதத்தின் தைத்திரீய சம்ஹிதையில்( 7.1.10 என்ற வரிகளில்) உள்ளது. வேதச்சொல் தெளிவுறும் பொருட்டு ஒரு முனிவர் பாஞ்சராத்ரம் என்னும் சடங்கைச் செய்ததை அது குறிப்பிடுகிறது.-சதபதபிராமணம் (13.6) பாஞ்சராத்ரச் சடங்கின் முதன்மைத்தெய்வம் நாராயணன் என்று குறிப்பிடுகிறது. மகாபாரதத்தின் நாராயணியப் பகுதி (மகாபாரதம் சாந்திபர்வத்தில் உள்ள நாராயணன் புகழ்பாடும் பகுதி.) ஏழு ரிஷிகளைக் குறிக்கிறது, அவர்கள் வேதச்சடங்காகிய பாஞ்சராத்ரத்தைச் செய்தனர் எனக் கூறுகிறது. ஆனால் இப்பகுதி பின்னாளில் சேர்க்கப்பட்டது என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.

பாஞ்சராத்ரம் என்னும் சொல்லுக்கு நேர்ப் பொருள் ஐந்து இரவுகள். இச் சொல் பலவாறாக விளக்கப்படுகிறது.-வைணவ ஆகம நூல்களில் ஒன்றாகிய நாரதீய சம்ஹிதையில் தத்துவம், முக்தி, பக்தி, யோகம், வைசாயிகம் என்னும் ஐந்து அறிவு நிலைகளைப் பற்றிப் பேசுவதனால் இப் பெயர் என்று சொல்லப்படுகிறது-வைணவ ஆகம நூலான ஈஸ்வர சம்ஹிதையில் இந்த ஆகமம் சாண்டில்யர், ஔபாக்யானர், மஞ்சியாயனர், கௌரிகர், பாரத்வாஜர் ஆகிய ஐந்து முனிவர்களுக்குச் சொல்லப்பட்டதனால் இப்பெயர் அமைந்தது எனப்படுகிறது ஸ்ரீபிரசன்ன சம்ஹிதை விஷ்ணுவின் பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை என்னும் ஐந்து நிலைகளை இந் நூல்கள் பேசுவதனால் இப்பெயர் எனச் சொல்கிறது-நாராயணன் ஐந்து இரவுகளிலாகச் செய்த பெருவேள்வியின்படி இப்பிரபஞ்சமாகத் தான் மாறினார் என்ற தொன்மம் சாண்டில்ய சூத்திரங்களில் உள்ளது. நாராயணன் என்னும் முனிவரை அது குறிப்பிடுகிறது என்று ஒரு தரப்பு உண்டு-

செங்கட் காரி கருங்கண் வெள்ளை பொன்கட் பச்சை பைங்கண் மாஅல்””
(மூன்றாம் பரிபாடல்: 81-82)-செங்கட் காரி – சிவந்த கண்களை யுடைய வாசுதேவன், கருங்கண் வெள்ளை – கரிய கண்களை யுடைய சங்கருடணன், பச்சை – பிரத்யும்னன், பைங்கண் மால் – பசிய உடம்பினையுடைய அநிருத்தன் என்று பொருள் கொள்கின்றனர்-

இது அருவமான தத்துவத் தெய்வம் உருவம் கொண்ட வழிபாட்டுத்தெய்வங்களாக ஆவதற்கான தத்துவ அடிப்படையையும், அழகியல் அடிப்படையையும், சடங்கு முறைகளையும் வகுத்தளிக்கிறது.-வழிபாடு, ஆலய அமைப்பு ஆகியவற்றைச் சொல்லும் நூல்கள் ஆகமம் எனப்படுகின்றன. இன்று புழக்கத்திலுள்ள வைணவ ஆகமங்கள் வைகானஸம், பாஞ்சராத்ரம் என இரண்டு. பிற ஆகமங்கள் இருந்திருக்கலாம், அவை இப்போது கிடைப்பதில்லை. பாஞ்சராத்ர மரபு பின்னர் பாஞ்சராத்ர ஆகமம் ஆக மாறியது.வைகானஸ ஆகமமே தொன்மையானது என்று கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் ஆலயத்தில் வைகானஸ ஆகமம் பின்பற்றப்பட்டதாகவும், ராமானுஜர் அதை பாஞ்சராத்ர முறைக்கு மாற்றியதாகவும் வைணவர்களால் கூறப்படுகிறது.

பாஞ்சராத்ர ஆகமத்தின் சம்ஹிதைகள் 108. இவற்றில் சாத்வதம், பௌஷ்கரம், ஜெயாக்யம் ஆகிய மூன்றும் தொன்மையானவை, முக்கியமானவை. இவை ரத்ன த்ரயம் (மும்மணிகள்) எனப்படுகின்றன. இவையே பிற்கால ஆகம சம்ஹிதைகளுக்கு அடிப்படையானவை-பௌஷ்கர சம்ஹிதையின் விரிவாக்கமாக பாரமேஸ்வர சம்ஹிதை உருவானது. அதிலிருந்து ஈஸ்வர சம்ஹிதை உருவானது. ஜெயாக்ய சம்ஹிதையில் இருந்து பாத்ம சம்ஹிதை உருவானது. இன்று ஜெயாக்ய சம்ஹிதையின் அடிப்படையிலேயே வைணவ ஆலயங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் பௌஷ்கர சம்ஹிதையின் மாறுபாடான பரமேஸ்வர சம்ஹிதை பின்பற்றப்படுகிறது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் ஜெயாக்ய சம்ஹிதை பின்பற்றப்படுகிறது.
மேல்க்கோட்டை செல்வநாராயண சுவாமி கோவிலில் ஈஸ்வர சம்ஹிதை பின்பற்றப்படுகிறது.
திருவெள்ளறையில் உள்ள புண்டரிகாக்ஷ சுவாமி கோயிலில் பத்ம சம்ஹிதை பின்பற்றப்படுகிறது.
கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி பெருமாள் கோயிலில் ஸ்ரீபிரஸ்ன சம்ஹிதை பின்பற்றப்படுகிறது.
கௌடிய வைஷ்ணவர்கள் பிரம்ம சம்ஹிதையையும் நாரதிய சம்ஹிதையையும் பின்பற்றுகிறார்கள்.
கேரளத்தில் திருவல்லா ஸ்ரீவல்லபா கோவில் துர்வாச சம்ஹிதை மற்றும் அஹிர்புத்னிய சம்ஹிதையை பின்பற்றுகிறது.
பாஞ்சராத்ர ஆகமத்தின் நூல்கள் சம்ஹிதைகள் அல்லது தந்திரங்கள் எனப்படுகின்றன. அவை கீழ்க்கண்ட பிரிவுகளில் நெறிகளை வகுப்பின்றன.
ஆலயவழிபாடு
பிராசாத (ஆலயம்)
பிரதிமா (சிலை)
பிரதிஷ்டா (சிலைநிறுவுதல்)
பூஜா (வழிபாடு)
பிராயச்சித்தம் (பிழையீடு)
உத்ஸவம் (விழா)
ஆசாரம் (நெறி)
மந்திரம் (மந்திரங்கள்)
யந்திரம் (மந்திரம் ஓதப்பட்ட பொருட்கள்)
தீக்ஷை (நோன்பு)
தனிநபர் கைக்கொள்ளவேண்டிய நெறிகளை பாஞ்சராத்ர ஆகம முறை பஞ்சகால பிரகிரியைகள் என வகுக்கிறது
அபிகமனா (காலைநேரத் தூய்மைநெறிகள்)
உபதானா (வழிபாட்டுமுறைகள்)
இஜ்ய- (நோன்புகள்)
ஸ்வாத்யாயம் (மெய்யியல் கல்வி)
யோகம் (தியானம் போன்றவை)
தாப சம்ஸ்காரம்: தோள்பட்டையில் சூட்டுக்கோலால் சுட்டு விஷ்ணுவின் சங்குசக்கர முத்திரைகொண்ட பாதங்களை தழும்பாக்கிக்கொள்ளுதல்
புண்ட்ர சம்ஸ்காரம்: திருமாலின் பன்னிரண்டு திருப்பெயர்களைச் சொல்லி, உடலில் நெற்றி, தோள், புயம், மார்பு, நடு வயிறு போன்ற பன்னிரு இடங்களில் திருமண் அணிதல்.
நாம சம்ஸ்காரம்: திருமால் மற்றும் வைணவ ஆசாரியார்களின் பெயர்களைச் சூட்டிக்கொள்ளுதல்
மந்திர சம்ஸ்காரம்: வைணவ ஆசிரியர்களிடமிருந்து தியானத்துக்கான மந்திரங்களைப் பெற்றுக்கொள்ளுதல்/
யாக சம்ஸ்காரம்: வேள்விகள், பூசைகளை கற்றுக்கொள்ளுதல்

ஸ்ரீபாஞ்சராத்ரம்

நமஸ் ஸகல கல்யாண தாயிணே சக்ரபாணயே
விஷயார்ணவ மக்நாநாம் சமுத்தரண ஹேதவே!
நமஸ் சாண்டில்ய குரவே சனகாயன நமோ நம:
ஔபகாயண சாண்டில்ய பாரத்வாஜஸ்ச கௌசிக:
மௌஜ்யாயநஸ்ச பஞ்சைதே பாஞ்சராத்ர ப்ரவர்த்தகா:
தீக்ஷாச்சார்ய: ஜகத் ப்ரக்ஞா: திசந்து ஞானமத்புதம்

இது ஸ்ரீரங்கதிவ்ய க்ஷேத்திரத்திலே நம்பெருமாளின் அர்ச்சகர்கள் அநுதினமும் அநுசந்திக்கும் ஸ்ரீபாஞ்சராத்ர தியான ஸ்லோகம்.

என்ன சொல்லி துதிக்கின்றது இந்த ஸ்லோகம்..?

உன்னை ஆராதிக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும், ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர்
ஆகிய ஐந்து ரிஷிகளுக்கும் போதித்து அவர்களை பாஞ்சராத்ர ப்ரவர்த்தகளாகவும், இந்த ஜகத்திற்கே பிரகாசம் அளிக்கக் கூடியவர்களாக்கி,
அத்புதமான ஞானத்தினை அவர்களுக்கு அருளிய சகலவிதமான கல்யாண குணங்களையும் உடைய,
சக்கரத்தினை கையில் தரித்துள்ள ஸ்ரீமந் நாராயணனை வணங்குகின்றேன்.
சாண்டில்ய மகரிஷியினையும், சனகரையும் வணங்குகின்றேன்!

இந்த ஸ்லோகத்தில் “சக்ரபாணயே“ என்று துதிப்பதற்கு என்ன காரணம்..? யார் இந்த ஐந்து ரிஷிகளும்..?
ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர் ஆகிய இந்த ஐந்து ரிஷிகளுமே பஞ்சாயுதங்களின் அம்சம்!
இதில பிரதானமானது ஸ்ரீசுதர்ஸனர்!.
இந்த ஐந்து ரிஷிகளுக்கும் ஐந்து ராத்ரிகளில் பகவான் தனித்தனியே தன்னை ஆராதிக்கும் முறையை கற்பித்தான்.
ஐந்து ராத்ரிகளில் இது உபதேசிக்கப்பட்டமையால் இது பாஞ்சராத்ரம் என்றழைக்கப்படுகின்றது.

விஹகேந்திர ஸம்ஹிதை என்றவொரு க்ரந்தமானது, அனந்தன், கருடன், விஷ்வக்ஸேனர், பிரம்மா, சிவன் ஆகிய
ஐவருக்கும் முறையே ஐந்து ராத்ரிகளில் உபதேசித்தார், என்கிறது.

பாரத்வாஜ ஸம்ஹிதை என்கின்ற க்ரந்தமானது வேறொரு விதமாக பாஞ்சராத்ரத்தினை கூறுகின்றது.

நாம் இங்கு ஸ்ரீரங்கத்தில் எது பிரமாணமாக உள்ளதோ, ஸ்ரீரங்கத்தில் வழக்கத்தில் உள்ள தியான ஸ்லோகத்திலுள்ளபடி எடுத்துக் கொள்வோம்.

“ராத்ரி” என்றால் “இருள்” இந்த இருள் அறியாமையைக் குறிக்கும்.

“பாஞ்ச” என்றால் சூரியன் என்ற ஒரு பொருளுண்டு.

இந்த சூரியன் அறியாமையாகிய இருளை விரட்டவந்தபடியால் “பாஞ்சராத்ரம்”.

எது அறியாமை..?

எது முக்யமாக அறியப்பட வேண்டுமோ அதனை அறியாதது அறியாமை..!

எது முக்யமாக அடையப்பட வேண்டுமோ அதனை விடுத்து மற்றவற்றையெல்லாம் அடைதல், அடைய ஆசைப்படுதல் அறியாமை..!

பாஞ்சராத்ரம் சொல்கின்றது..

“யஸ்மின்யுக்தம் வாஸூதேவனே சாக்ஷாத்
ஞானம் யோக: கர்ம பக்தி: விபுக்தி:
ஏதத் ஞாத்வா ப்ரம்மபூதோ மஹாந்த:
தத்வத் சாஸ்த்ரம் பாஞ்சராத்ரம் ப்ரபத்யே..”

”பரம்பொருள் சாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணனே.
நாம் ஞானத்தினாலோ, யோகத்தினாலோ, கர்மங்களினாலோ அடையப்பட வேண்டியவன் இவனே“ என்கின்றது.

மற்றுமோர் தெய்வமுண்டோ? மதியிலா மானிடங்காள்*
உற்றபோதன்றி நீங்கள் ஒருவனென்று உணரமாட்டீர்*
அற்றம் மேல் ஒன்று அறியீர் அவனல்லால் தெய்வமில்லை*
கற்றினம் மேய்ந்த எந்தை கழலிணை பணிமின்நீரே !

பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் கூட எளியவனாய் இருக்கும் இந்த கண்ணனின், நம்பெருமாளின் பொற்பாதங்களை பணிமின்!
இவனைத் தவிர ”நானே ஈஸ்வரன்” என்று சொல்லிகொண்டிருக்கும் தெய்வங்கள் பல உண்டானாலும்,
இவனல்லால் வேறு தெய்வமில்லை..! இந்த பரமபருஷனிடத்து, அபயமளித்துக் காக்கும் எளியவனிடத்து அன்பில்லாது
மதிகெட்டு நிற்கும் மானிடர்காள்! உற்ற போது வரும்வரை இவனை நீங்கள் உணரமாட்டீர்கள்!
ஸர்வேஸ்வரனான இவன் ஒருவனால் மட்டுமே நமக்காக அவதரித்து, தம் நிலை தாழநின்று தன்னைப் பற்றினார்காக
தன்னோடு ஒத்த போகத்தினைத் தர காத்திருப்பவன்!.

———-

“ஸ்வேத த்வீபம்” என்பது திருப்பாற்கடலுக்கருகில் உள்ள ஒரு “வெள்ளைத் தீவு”.
பெரிய பெருமாளுக்கு நித்ய திருவாராதனம் செய்யும் அர்ச்சகர்கள் இங்கிருந்து வந்தவர்கள் என்பது
நம்மில் பலரும் அறியாத ரகசியம். அரங்கனை ஆராதிக்கும் இவர்கள் ஆழ்வாருக்கு ஒப்பானவர்கள் என்பது இங்கு கவனிக்கத் தக்கது.

——-

பாஞ்சராத்ரமானது “ஏகாயன வேதம்” என்றும் அழைக்கப் பெறுகின்றது.
“சாந்தோக்ய உபநிஷத்“ என்று ஒரு உபநிஷத். இதில் நாரதரும் சனகரும் இருவரும் தம்தம் கருத்துக்களை
பகிர்ந்து கொள்ளும் ஒரு பகுதி
இதில் “ருக்வேதம் பகவோத்யேபி, யஜூர் வேதம், சாமவேதம், ஹ்யதர்வணம், வாகோவாக்யம், ஏகாயனம்…“என்று
பாஞ்சராத்ரத்தினை ஏகாயனம் என்று குறிப்பிட்டு ஒரு சொற்றொடர் வருகின்றது.
இதன் மூலம் நாரதர் பேசுவதாக வரும் ”சாந்தோக்ய உபநிஷத்“ தின் காலத்திற்கு பலகாலம் முன்பே உள்ள
பாஞ்சராத்ரத்தின் அருமையினை தெரிந்து கொள்ளலாம்.
(இந்த பாஞ்சராத்ர ஆகமத்தினை பகவான் ப்ரஹ்மாவிற்கு உபதேசித்து பிரம்மாவினால் நாரதருக்கு உபதேசிக்கப்பட்டு
பின்னர் நாரதர் ஐந்து ரிஷிகளிடத்தும் உபதேசித்தாகவும் ஒரு கருத்துண்டு..!)

——–

நிகமம் என்பது நான்கு வேதங்கள், வேத ஸம்ஹிதைகள், உபநிஷத்துக்கள்,
உபவேதங்கள் (தனுர் வேதம், ஆயுர் வேதம் முதலானவைகள்) ,
ஜோதிடம், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிஹாசங்கள் முதலானவைகள். இவைகளனைத்தும் நிகமம் என்றழைக்கப்படும்.

ஆகம ரஹஸ்யம் என்னும் க்ரந்தத்தில்,

”ஆகதம் சிவ்வக்த்ரேப்யோ, கதஞ்சவ கிரிராஜாஷ்ருதௌ! மதம் ஸ்ரீவாஸூதேவஸ்ய தஸமாத் ஆகம உச்சேய்தே!“

– வாசுதேவரை பற்றி பேசும் ஆகமங்கள், சிவன் சொல்ல பார்வதி கேட்டதாக பேசபடுகிறது.

ஸ்ரீவாசஸ்பதி மிஸ்ரா என்பவர்,

ஆகச்சந்தி புத்திமாரோஹந்தி யஸ்மாத் அப்யுதயநி: ஷ்ரேயஸோபாயா: ஸ ஆகம:”

இந்த ஆகமங்கள் மூலமாக ஒருவன் மோட்ஷத்திற்கான உபாயாத்தை அறிந்து கொள்கிறான்.

வராஹி தந்தரம் என்னும் க்ரந்தம் ஆகமத்தினை ஏழு தலைப்புகளாகப் பிரிக்கின்றது.

1. படைத்தல்: இந்த தலைப்பில் படைத்தல் மற்றும் காத்தல் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது.

2. அழித்தல்: இந்த தலைப்பில் அழித்தல் பற்றி விரிவாக கூறப்பட்டு உள்ளது.

3. வழிபாடு : இந்த தலைப்பில் வழிபடுதல் முறைகள் பற்றி விளக்கப்பட்டு உள்ளது.

4. தெய்வீக காரியங்கள் : பகவத் ஆராதனமாக செய்யும் கைங்கர்யங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

5. புரஸ்சரண் : மந்திரங்கள் மற்றும் அதனை உச்சரிக்கும் முறைகள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

6. வினை : அந்தணர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள ஆறு தொழில்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

7. தியானம் : நான்கு வகை தியானங்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

எல்லா ஆகமங்களும் மேற்ச் சொன்ன வரையரைக்கு உட்பட்டு இல்லாத போதிலும், பொதுவாக ஆகமம் என்பது
வழிபாட்டு வகைகளையும் அதன் முறைகளையும் எடுத்துரைக்கும் நூலாகவே கொள்ளப்படுகிறது.
ஆனால், ஸ்ரீபாஞ்சராத்ரம் இந்த ஏழு வரையரைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. இது ஒரு தனி சிறப்பு.

——-

அர்ச்சை நிலைக்குக் கைங்கர்யம் செய்தல்–ஸ்ரீரகஸ்யத்ரய ஸாரம்-

மூலம் – அப்போது,
நித்யஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ ஸந்நிதிம் வ்ரஜேத் என்றும்,
யதா ஸாஸாமுத்ரமம்ப: அப்தை: ஸ்ப்ருஷ்டமேத்யுபோக்யதாம் ததைவ ஹி மநுஷ்யாணாம் பக்தை: ஸம்பாவிதோ ஹரி: என்றும்
சொல்லுகிறபடியே ஓர் அதிகாரி விசேஷத்துக்காக ஸாந்நித்யாதிகளைப் பண்ணிப் பரமைகாந்தியான தன்னையுகந்து வந்து
அர்ச்சாவதாரம் பண்ணியிருக்கிற எம்பெருமான் பக்கலிலே
ஸர்வாதிசாயி ஷாட்குண்யம் ஸம்ஸ்திதம் மந்த்ர பிம்பயோ: என்கிற பூர்த்தியையும்,
ஆபீடாந்மௌலி பர்யந்தம் பச்யத: புருஷோத்தமம் பாதகாந்யாசு நச்யந்தி கிம் புநஸ்தூபபாதகம் என்கிற பாவநதமத்வத்தையும்,
ஸந்தர்சநாதகஸ்மாச்ச பும்ஸாம் ஸம்பூட சேதஸாம் குவாஸநா குபுத்திச்ச குதர்க்க நிசயச்ச ய:
குஹேதுச்ச குபாவச்ச நாஸ்திகத்வம் லயம் வ்ரஜேத் என்கிறபடியே
ப்ரத்யக்ஷாதி ப்ரமாணத்ரயத்திலும் ஹேதுபலபாவத்தாலே வரும் மதிமயக்குகளெல்லாவற்றுக்கும் மருந்தாய் இருக்கிற படியையும்,
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் என்றும்,
“தமருகந்தது எவ்வுருவம்” என்கிற பாட்டிலும் சொல்லுகிறபடியே அவாங்மனஸாபரிச்சேத்யமான ஆச்ரித பாரதந்த்ர்யத்தையும்,
“கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா” என்கிற ஆகர்ஷகத்தையும் அநுஸந்தித்து,

ஸதீவ ப்ரியபர்த்தாரம் ஜநநீவ ஸ்தநந்தயம்
ஆசார்யம் சிஷ்யவந்மித்ரம் மித்ரவல்லாலயேத்திரம்
ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்வேந குருத்வேந ச ஸர்வதா
பித்ருத்வேந ததா பாவ்யோ மாத்ருத்வேந ச மாதவ:
யதா யுவாநம் ராஜாநம் யதா ச மதஹஸ்திநம்
யதா ப்ரியாதிதம் யோக்யம் பகவந்தம் ததா அர்ச்சயேத்
யதா ச புத்த்ரம் தயிதம் ததைவோபசரேத்திரம்–என்கிறபடியே
அவ்வோ ஸம்பந்தவர்க்க பரத்வ ஸௌலப்யாதிகளுக்கு அநுரூபமான வ்ருத்தியைப் பண்ணவும்.

பௌஷ்கர ஸம்ஹிதை –
நித்யஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ ஸந்நிதிம் வ்ரஜேத் –
எப்போதும் நிலையாக உள்ள ஸர்வேச்வரனின் திருமேனி குறித்தும்,
அவன் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவன் என்பது குறித்தும்
யார் மனதில் உள்ளதோ அவன் அருகில் ஸர்வேச்வரன் எப்போதும் வருவான் – என்றும்,

பௌஷ்கர ஸம்ஹிதை –
யதா ஸாஸாமுத்ரமம்ப: அப்தை: ஸ்ப்ருஷ்டமேத்யுபோக்யதாம் ததைவ ஹி மநுஷ்யாணாம் பக்தை: ஸம்பாவிதோ ஹரி: –
கடலில் உள்ள நீரைப் பருகிய மேகங்களால் மழையாகப் பொழியப்பட்ட பின்னர்,
அந்தக் கடல்நீரே அனைவராலும் பருகும்படியாக உள்ளது;
இது போன்று எம்பெருமான் அர்ச்சையாக நின்ற பின்னர் அனைவராலும் கைங்கர்யம் செய்து,
அனுபவிக்கும்படியாக உள்ளான் – என்றும் கூறியது காண்க.

விஷ்வக்ஸேந ஸம்ஹிதை –
ஸர்வாதிசாயி ஷாட்குண்யம் ஸம்ஸ்திதம் மந்த்ர பிம்பயோ: –
மந்த்ரங்களில் காணப்படும் எம்பெருமானின் ஞானம் உள்ளிட்ட ஆறு குணங்களானவை அர்ச்சையாக உள்ள
அவனது வடிவத்தில் காணப்படுகின்றன – என்பதன் மூலம் பூர்ணமாக உள்ளது கூறப்பட்டது.

சாண்டில்ய ஸம்ஹிதை (2-89) –
ஆபீடாந்மௌலி பர்யந்தம் பச்யத: புருஷோத்தமம் பாதகாந்யாசு நச்யந்தி கிம் புநஸ்தூபபாதகம் –
அர்ச்சையாக நிற்கின்ற புருஷோத்தமின் ரூபத்தை திருவடிப்பீடம் தொடங்கி திருமுடிவரை காண்பவனின்
அனைத்துப் பாவங்களும் உடனே அழிந்துவிடும், இப்படி உள்ளபோது சிறு பாவங்கள் குறித்துக் கூறவேண்டுமா –
என்பதன் மூலம் அவனது அர்ச்சை ரூபமானது அனைத்து பாவங்களையும் நீக்கவல்லது என்பதை அறியலாம்.

பௌஷ்கர ஸம்ஹிதை (1-31-32) –
ஸந்தர்சநாதகஸ்மாச்ச பும்ஸாம் ஸம்பூட சேதஸாம் குவாஸநா குபுத்திச்ச குதர்க்க நிசயச்ச ய:
குஹேதுச்ச குபாவச்ச நாஸ்திகத்வம் லயம் வ்ரஜேத் – மதிமயக்கம் கொண்டவர்கள் அர்ச்சையாக நிற்கும்
எம்பெருமானின் ரூபத்தைத் தற்செயலாக வணங்கினாலும் அவர்களது தீயவாஸனை, வஞ்சனைகளின் தொகுப்பு,
தீய காரணம், தீய எண்ணங்கள் மற்றும் நாஸ்திகத்தன்மை ஆகியவை அழிந்துவிடும் – என்றது.
இப்படியாக அறிவு தடுமாற்றம் என்னும் நோய்க்கு ஏற்ற மருந்தாக அர்ச்சாரூபம் உள்ளது.

மனம் மற்றும் வாக்கால் அளவிட இயலாதபடி உள்ள எம்பெருமான், தனது அடியார்களின் பொருட்டு,
அவர்களுக்காகத் தன்னையும் கொடுத்தபடி நிற்கும் நிலையை எண்ணி த்யானித்தல் வேண்டும்.
இதனை – கீதை (4-11) –
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் – என்னை அடைய விரும்புகிறவர்கள் எந்த வடிவில்
என்னை அமைக்கின்றனரோ, அந்த வடிவிலேயே நான் என்னை அவர்களுக்குக் காண்பிக்கிறேன் – என்றும்,

முதல் திருவந்தாதி (44) – தமருகந்தது எவ்வுருவம் – அடியார்கள் அந்த உருவத்தை விரும்புகின்றனரோ – என்றும்
கூறியது காண்க. மேலும்

அமலனாதிபிரானில் (10) – கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா – என்னும்படியாக அவனது அர்ச்சா ரூபத்தில்
உள்ள ஈர்ப்பை அனுபவிக்க வேண்டும். அடுத்து அவனது எளிமை மற்றும் எஜமானத் தன்மை
ஆகியவற்றுக்கு ஏற்றபடி கைங்கர்யம் செய்தல் வேண்டும்.

கீழே உள்ள பல வரிகள் காண்க:

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-37) –
ஸதீவ ப்ரியபர்த்தாரம் ஜநநீவ ஸ்தநந்தயம் ஆசார்யம் சிஷ்யவந்மித்ரம் மித்ரவல்லாலயேத்திரம் –
உண்மையான மனைவி தனது கணவனையும், பெற்ற தாய் தனது குழந்தையையும், சிஷ்யன் தனது ஆசானையும்,
நண்பன் தனது நண்பனையும் உபசரிப்பது போன்று ஸர்வேச்வரனை உபசரிக்க வேண்டும்.

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-38) –
ஸ்வாமித்வேந ஸுஹ்ருத்வேந குருத்வேந ச ஸர்வதா பித்ருத்வேந ததா பாவ்யோ மாத்ருத்வேந ச மாதவ: –
மஹாலக்ஷ்மியைத் தரித்த எம்பெருமானை எப்போதும் எஜமானன், நண்பன், ஆசார்யன், தந்தை, தாய்
என எண்ணியபடி இருத்தல் வேண்டும்.

• சாண்டில்ய ஸம்ஹிதை (4-31) –
யதா யுவாநம் ராஜாநம் யதா ச மதஹஸ்திநம் யதா ப்ரியாதிதம் யோக்யம் பகவந்தம் ததா அர்ச்சயேத் –
இளவரசன் மற்றும் மதம் கொண்ட யானை ஆகியவர்களை எவ்விதம் பயந்து உபசரிப்போமோ,
அது போன்று எம்பெருமானை உபசரிக்க வேண்டும். இதே போன்று வீட்டிற்கு வந்த விருந்தினரை
மகிழ்வுடன் உபசரிப்பது போன்று எம்பெருமானை உபசரிக்க வேண்டும்.

• யதா ச புத்த்ரம் தயிதம் ததைவோபசரேத்திரம் –
தனக்குப் பிரியமான குழந்தையைக் கொண்டாடுவது போன்று எம்பெருமானைக் கொண்டாட வேண்டும்.

ஸர்வசக்தி படைத்த அவன் சக்தியேயில்லாத ஒரு குழந்தை போல மாறி அர்ச்சகரை எதிர் பார்த்திருப்பது தான்!.

ததிச்சயா ஹோதேஜா புங்கத்தே வை பக்தவத்ஸல
ஸ்நானம் பாநம்ததா யாத்ராம் குருதே வை ஜகத்பதி:
ஸ்வதந்த்ரஸ் ஸஜகந்நாதோ ப்யஸ்வதந்த்ரோயதாததா
ஸர்வசக்தி: ஜகத் தாதாப்ய சக்த இவசேஷ்டதே-விஷ்வக்ஸேன ஸம்ஹிதை-

ஸ்வதந்தர ஸஜகந்நாதோ – ஸர்வ சுதந்திரம் பெற்றவனாயிருக்கும் இந்த ஜகத்திற்கே அதிபதியான ஜகந்நாதன் –

ப்யஸ்வதந்த்ரோயதாததா – ஸ்வதந்தரம் இல்லாதவன் எப்படியிருப்பானோ அம்மாதிரியாக மாறி

த்திச்சயா ஹோதேஜா புங்கத்தே வை பக்தவத்ஸல – அடியார்களது குற்றங்களை பொருட்படுத்ததாது அந்த
பரம்பொருள் தன்னை ஆஸ்ரயித்தவர்களின் விருப்பப்படி உண்கின்றான்!

ஸ்நானம் பானம்த்தா யாத்ராம் குருதே ஜகத்பதி: – தன்னை ஆராதிப்பவர்களுடைய விருப்பத்தின்படி நீராடலையும்,
நீர் பருகுதலையும், புறப்பாடு(யாத்ரை) கண்டுருளுதலையும் செய்கின்றான்!

ஸர்வசக்தி: ஜகத் தாதாப்யசக்த இவசேஷ்டதே – எல்லா சக்திகளையும் அடைந்தவனாயிருந்தும்,
சக்தியில்லாதவனைப் போன்று நடிக்கின்றான்!

தான் நினைப்பதற்கு அரியவனாயிருப்பின் தன்னுடைய சொத்து தன்னை விட்டு விலகிவிடுமோ என்ற அச்சத்தினாலேயே,
நம்மை தடுத்து ஆட்கொள்ள அந்த அரியவனாகிய ஹரி எளியவனாய் அர்ச்சையில் தாமே வந்து அகப்பட்டு கொள்கின்றான்!

ஆழ்வார் சொல்கின்றார், ”இந்த அர்ச்சாவதாரத்தினை நான் ரஸித்து பருக வேண்டிய அமுதமாக இருக்க,
அதற்கு மாறாக இவன் என்னை முழுவதுமாய் பருகிவிட்டானே“ என்கிறார்.

தன்னழகைக் காட்டி நம்மை ஆட்கொள்ளத்தானே அவன் அர்ச்சையாய் அவதரிக்கின்றான்!

தானேயாகி நிறைந்து எல்லாவுலகும் உயிரும் தானேயாய் *
தானேயானென்பானாகித் தன்னைத்தானே துதித்து* எனக்கு
தேனே பாலே கன்னலேயமுதே திருமாலிருஞ்சோலை *
கோனேயாகி நின்றொழிந்தான் என்னைமுற்றும் உயிருண்டே!-திருவாய்மொழி 10-7-2

“ வாரிக்கொண்டு ன்னை விழுங்குவான் காணில்“ என்று *
ஆர்வுற்ற என்னை யொழிய – என்னில் முன்னம் பாரித்து * தான் என்னை முற்றப் பருகினான் *
காரொக்கும் காட்கரை யப்பன் – கடியனே -திருவாய்மொழி 9-6-10

———

பாஞ்சராத்ர ஆகமங்கள் பல உள்ளன. அவற்றில் பிரதானமாக எடுத்துக்கொள்ளப்பட்டது மூன்று ஆகமங்கள் ஆகும். அவைகள்
ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் ஆகியவையாம். இவைகள் “ரத்னத்ரயம்“ என்றழைக்கப்படுகின்றது.

இந்த மூன்றுக்கும் உப ப்ரஹ்மணங்களாக, அதாவது விவரணமாக
ஸாத்வதத்த்திற்கு -ஈஸ்வர ஸம்ஹிதையும்,
பௌஷ்கரத்திற்கு – பாரமேஸ்வர ஸம்ஹிதையும்,
ஜயாக்யத்திற்கு – பாத்ம ஸம்ஹிதையும் உள்ளன.

இம்மூன்றும் மூன்று முக்கிய திவ்யதேசத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றது.
மேல்கோட்டையில் ஈஸ்வர ஸம்ஹிதையும், ஸ்ரீரங்கத்தில் பாரமேஸ்வரமும், காஞ்சியில் பாத்மமும் அனுஷ்டானத்தில் உள்ளன.

நாம் இனி இங்கு ஸ்ரீரங்கத்தில் அனுஷ்டானத்திலுள்ள பாரமேஸ்வர ஸம்ஹிதையிலிருந்து முக்யமானவற்றைக் காண்போம்.!

பாரமேஸ்வர ஸம்ஹிதையின் முதல் ஸ்லோகமே
“நமஸ் ஸகல கல்யாண தாயிநே சக்ரபாணயே
விஷயார்ணவ மக்நாநாம் சமுத்தரணஹேதவே”
என்று தொடங்குகிறது
.
”ஸகல கல்யாண தாயிநே” என்றால் என்ன..? “ஸகல கல்யாண குணங்களும் நிரம்பிய“ என்று பொருள்!

”திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும், வைத்தஞ்சல் என்ற கையும், கவித்த முடியும், முகமும் முறுவலும்,
ஆஸந பத்மத்திலே யழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்” (முமுக்‌ஷுப்படி-142).
குற்றங்கண்டு வெருவாமைக்கு வாத்ஸல்யம் – கார்யஞ்செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம் –
ஸ்வாமித்வம் கொண்டு அகலாமைக்கு ஸௌசீல்யம் – கண்டு பற்றுகைக்கு ஸௌலப்யம் –
விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுக்கைக்கு ஜ்ஞான சக்திகள்” (முமுக்‌ஷுப்படி-138).
இவையெல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம்”

——–

தோதாத்ரி மலை…! தற்போது வானமாமலை என்றழைக்கப்படும் மிக உன்னதமான க்ஷேத்திரம்.!
இங்கு தேவர்களும் கந்தர்வர்களும் இங்குள்ள பெருமாளை அனு தினமும் ஸேவித்தவாறு இருக்கின்றார்கள்.
பல புண்ய தீர்த்தங்கள் இந்த புனிதமான இடத்தினுள் உள்ளது. அனைத்து வகை ஜாதிபுஷ்பங்களும் பூத்து குலுங்குகின்றது.
பலவிதமான ஆஸ்ரமங்கள் அமையப் பெற்றது, அதில் பல தப ஸ்ரேஷ்டர்கள் வசித்து வருகின்றார்கள்.
வேதம் மற்றும் வேதாந்தாத்தில் நாட்டமுடைய அறிஞர்களும், தவத்தில் நாட்டமுடைய முனிவர்களும், சாங்க்ய சித்தாந்தத்தில்
(இது கபில மஹரிஷி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சித்தாந்தம்) சிறந்தவர்களும், யோக சித்தாந்தாத்தில்
(இது பதஞ்சலி மஹரிஷி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு மார்க்கம்) ஈடுபட்டுள்ளவர்களும்,
இதிஹாஸ புராணங்களில் வல்லுனர்களும், தர்ம சிந்தனையுடையோர்களும் நிரம்பி வழிந்துள்ள ஒரு
அற்புதமான க்ஷேத்திரம்! தேவரிஷிகள் மற்றும் ராஜரிஷிகளும் அங்கு காணப்படுகின்றனர்.
மந்த்ர சித்தியடைந்த மஹான்கள் பலர் உள்ளனர்!

”தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலநகர் * ஏற வீற்றிருந்தாய்!
உன்னை எங்கெய்த கூவுவனே”-திருவாய்மொழி 5-7-4

இத்தகைய பலரது இருப்பினால் “இருப்பிடம் வைகுந்தம்” ஆன இந்த புண்யமான மலையினில் பிரும்மாவினுடைய
புத்ரர் ஆன “சனகர்“ என்பவர் பரம்பொருளை அடைய விரும்பி கடுமையான தபஸ் செய்கின்றார்!

ஒரிரு வருடங்கள் அல்ல..! நூறு வருடங்கள் காம க்ரோதங்கள், இந்திரியங்களை அடக்கி அந்த
பரம்பொருளான பகவானைக் குறித்த கோரத்தவம்..!

இவ்வளவு புனிதமான அதிர்வலைகள் கூடிய ஒரு புண்யமான இடத்தில் சிந்தை கலையாமல்
சிரீவரமங்கையில் தவமிருந்தும் பகவான் அவருக்குக் காட்சி தரவில்லை!

அந்த தபஸ்ரேஷ்டர் தவித்துப் போனார்..! சோகம் அவரைத் தொற்றிக் கொண்டது..!
தீடிரென்று அவர் தபஸ் செய்த இடமே பிரகாசமானது..!
அந்த புருஷோத்தமன், சாதாரண பக்தன் தவித்தாலே பொறுக்காத அந்த பக்தவத்ஸலன், அசரீரியாய் அந்த
சனகரிடத்து பேச ஆரம்பித்தான்..!

நூறு வருடங்கள் கடுமையான தபஸ்ஸின் பயனோ, அல்லது ஒரு சில நிமிடங்கள் பகவானைக் காணாது
சனகர் தவித்த தவிப்பு, சோகம் முதலானவற்றால் ஏற்பட்ட பரிவோ, ஸ்ரீவாஸூதேவன் அவரிடத்து பேச ஆரம்பித்தார்.

”ஹே! தவ உத்தமரே! உனக்கு மங்களம் உண்டாகட்டும்!
இதே மலையில் மற்றொரு இடத்தில் சாண்டில்யர் என்னும் ஒரு மஹாதபஸ்வி உள்ளார். நீ உடனடியாக அவரை ஆஸ்ரயிப்பாயாக!
உண்மையான பகவத் தர்மத்தை, இம்மையிலும், மறுமையிலும் செம்மை தரும் வழியினை,
என்னை அடையும் மார்க்கத்தினை அவர் உனக்கு உபதேசிப்பார்“ என்று ஆசீர்வதித்தது அந்த அசரீரி!

சனகர் அந்த தோதாத்ரி மலையில் சாண்டில்யரைத் தேடி வலம் வரலானார். ஒரிடத்தில் அழகிய தாமரைத் தடாகத்தினைக் கண்டார்.
ஒவ்வொரு ருதுக்களிலும் மட்டும் பூக்கும் புஷ்பங்கள் அங்கு ஒரு சேர பூத்து குலுங்குவதை கண்ணுற்றார்.
பல தபஸ்விகள் அந்த இடத்தில் நிஷ்டையில் ஆழ்ந்திருந்தனர். மஹா தேஜஸ்வியாய் அவர்களில் நாயகனாய்
சாண்டில்யர் விளங்கக் கண்டார். அவரைப் பணிந்து வீழ்ந்து வணங்கினார்.

சனகரை பார்த்தவுடனேயே சாண்டில்யர் உணர்ந்து விட்டார். சனகரை ஆசீர்வதித்தார். ”தபோ சிரேஷ்டா!
உண்மையான பகவத் தர்மத்தை நாடி நீ இங்கு வந்துள்ளாய்! நான் பல ஆண்டுகள் இதனைப் பெற கடுமையான தவம் செய்தேன்!
அப்போது அச்சுதன் தோன்றி எனக்கு வேதங்களை உபதேசித்தான். இந்த வேதங்கள் அனைத்துமே எம்பெருமானே பரம்பொருள்
என்று சில பாகங்களில் மட்டுமே சொல்லி பெரும்பாலான இடங்களில் இதர தெய்வங்களையும்
போற்றுவதாகயுள்ளது. ஆகவே எனக்கு இந்த வேத அறிவு நிறைவுத் தரவில்லை.

“யஸ்து சர்வ பரோதர்ம: யஸ்மான் நாஸ்தி மஹத்தர:
வாஸூதேவஹை நிஷ்டைஸ்து தேவாதாந்திர வர்ஜித:
தத்திஞ்ஞாஸ்ச்சா பலவதி ததாத் வாவி ரபூந் மம
ததோத்ர பர்வத ஸ்ரேஷ்டே தபஸ்த்தத்வம் மஹோத்தமம்
அநேகாணி சஹஸ்ராணாம் வர்ஷணாம் தபோஸோன் தத:
த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதௌ கலியுகஸ்யச
சாக்ஷாத் சங்கர்ஷணாத் வ்யக்தாத் ப்ராப்தயேஷ மஹத்தர:
ஏஷ ஏகாயனோ வேத: ப்ரக்யாத சாத்வதோ விதி:
துர்விக்ஞயோ துஷ்கரஷ்ச ப்ரதிபுத்யேர் நிஷ்வ்யதே
மோக்ஷாயனாய வைபந்தா: ஏத தன்யோ ந வித்யதே“

”எது உண்மையான பரம பகவத் தர்மம்? பொய்யான அறிவு விடுத்து எது உண்மையான ஞானம்?
இதர தெய்வங்களை நாடாது பரம்பொருளான வாஸூதேவனை மடடும் அடையச் செய்யும் மார்க்கம் எது?
இது குறித்து இந்த உன்னதமான மலையிலே நான் மேலும் பல ஆயிரம் வருடங்கள் தவம் செய்தேன்!
இந்த தவத்தின் பயனாக சாக்ஷாத் சங்கர்ஷணனே என் முன் தோன்றி “ஏகாயன வேதம்” என்றழைக்கப்படும்
இந்த பாஞ்சராத்ரத்தினை எனக்கு உபதேசித்தான். இது பகவானை அடையவேண்டும் என்ற
ஒரே சிந்தையுள்ளவர்களுக்கு மட்டுமே உபதேசிக்க வேண்டும்!
துர்சிந்தனையுள்ளவர்களுக்கும், வேறு தெய்வங்களை நாடுபவர்களுக்கும் உபதேசிக்கவே கூடாது!.
மோக்ஷத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் மிகச் சிறந்த உபாயம், வித்யை இதுதான்..” என்று கூறுகின்றார்

சாண்டில்யர் தொடர்கின்றார் “இந்த பாஞ்சராத்ரமானது
வேதமாகிய மரத்திற்கு வேர் போன்றது..! எம்பெருமான் ஒருவனைப் பற்றிச் சொல்வதையே குறிக்கோளாய் கொண்டது.!
சந்தேகமேயில்லாதபடி எம்பெருமானைப் பற்றித் தெள்ளத் தெளிவாகச் சொல்லி அஞ்ஞானமாகிய இருட்டினை
அகற்றக் கூடியது, இந்த உயர்ந்த பகவத் சாஸ்திரம்..! “

இதனை பகவான் வைஸ்வமனுவிற்கு உபதேசித்துள்ளான். ஸ்வேத த்வீபத்தில் (திருப்பாற்கடலினை ஒட்டியுள்ள கரையோரம்.!)
நாரதருக்கு உபதேசிக்கப்பட்டது. நாரதருடன் கூட
ஸநத் சுஜாதர், ஸனந்தனர், ஸனத்குமாரர், கபிலர் முதலிய மஹாஞானிகள் இதனை அத்யயனம் செய்து வந்தனர்.

மரீசி, அத்ரி, அங்கீரஸர், புலஸ்யர், புலஹர், க்ரது, வஸிஷ்டர் மற்றும் ஸ்வாயம்புவ மனு ஆகிய
எட்டு மஹரிஷிகளும் இந்த பாஞ்சராத்ரத்தில் கூறியுள்ளபடி பகவானை வழிப்பட்டனர்.

இந்த அற்புதமான சாஸ்திரமானது அவ்வளவு எளிதில் கிட்டியதில்லை. பல ஆயிரக்கணக்கான தவத்தின் பயனாய் எனக்குக் கிடைத்தது.
பல லக்ஷக்கணக்கான ஸ்லோகங்களைக் கொண்டது.
இதனைப் பிரித்து ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் என பல ஸம்ஹிதைகளாகச் செய்தனர்.

மனு முதலானவர்கள் “மனு ஸ்மிரிதி“ பண்ணினார்கள்.
இதுவே எல்லா சாஸ்திரங்களுக்கும் ஆதாரம்..!
இதில் தர்மார்த்த காம மோக்ஷங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன..!
அஸ்வமேதம் முதலான யாகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.!
எம்பெருமானுக்கே உண்டான பல அரிய மந்த்ரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன..!
“உபரி சரஸ்“ என்ற வசுக்களின் அரசன் ஸவர்க்கத்தினை அடைய அஸ்வமேதம் முதலாக யாகங்களை
இதில் கூறியபடி அனுஷ்டித்து அடைந்தான்.!
இதனை நான், சுமந்து, ஜெய்மினி, ப்ருகு, ஓளபகாயநர் மற்றும் மௌஜ்யாயனர் ஆகியோருக்குச் சொல்லிக் கொடுத்துள்ளேன்..!

லோகத்திற்கு நன்மையைச் செய்யும் பொருட்டு, பத்ரிகாஸ்ரமத்தில். ஸ்ரீமந் நாராயணன், இதில் சொல்லப்பட்டுள்ள
மூலமந்திரத்தினை, நரனுக்கு உபதேசம் செய்துள்ளார்.

க்ருத யுகத்தில் இந்த தர்மமானது எல்லாராலும் ஒரே மனதாக அனுஷ்டிக்கப்பட்டு எல்லோரும் உயர்ந்த கதியினையடைந்தனர்.
த்ரேதா யுகத்தில் மக்கள் பல ஆசைகளைக் கொண்டவர்களாய் மாறி சில தேவதாந்திர வழிபாட்டில்
(எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனைத் தவிர்த்து இதர தெய்வ வழிபாடு.) ஈடுபாடு காட்டினர்.
அப்போது இந்த உயர்ந்த பகவத் தர்மமானது மறையத் தொடங்கியது. பகவான் யார் உண்மையான தாபத்துடன் உள்ளனரோ,
யார் உரிய யோக்யதாம்சங்களுடன் விளங்குகின்றனரோ அவர்களுக்கு மட்டுமே இந்த பகவத் தர்மத்தினை வெளிப்படுத்தினான்..!
அப்படிப்பட்ட எம்பெருமானிடமிருந்து நானும் இதனை கடும் தவத்தின் பயனாய் கைவரப் பெற்றேன்.
இதைத் தவிர இரண்டு விதமான ஞானம், 13 விதமான கர்மாக்கள், 12 விதமான வித்யை ஆகியவனவும் அடையப்பெற்றேன்
(இதில் சாண்டில்யர் குறிப்பிட்டுள்ள ஞானங்கள், கர்மாக்கள் மற்றும் வித்யைகள் எவை எவை யென்று இந்த
பாரமேஸ்வர ஸம்ஹிதைக்கான வியாக்யனம் ஏதும் கிடைக்காதப்படியினால் அறிய முடியவில்லை..!)” என்று சொல்லி
சனகரிடத்து இந்த பாஞ்சராத்ரமாகிய ஏகாயன வேதத்தினை உபதேசிக்கின்றார். பல ஆண்டுகள் உபதேசம் ஆகின்றது.

முடிவில் சனகர், சாண்டில்யரிடத்து கேட்கின்றார், ”தேவரீருடைய பரம அனுக்கிரஹத்தினால் மோக்ஷத்தினைத் தரக்கூடிய
இந்த உயர்ந்த தர்மமானது அடியேனால் அறியப்பட்டது. தபஸ்விகளான நமக்கே பல லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்ட
இந்த தர்மத்தினை அறிய பல ஆண்டுகள் ஆகும் போது, பாவம்..! இந்த ஸம்சாரிகள் எவ்விதம் அறிவது..?
எப்படிக் கடைத்தேறுவது..? என்று, நமக்காக பரிவுடன் வினவுகின்றார் !

சாண்டில்யர் சனகரிடத்து கூறுகின்றார், “உம்மைப் போலவேதான் நானும் சங்கர்ஷணரிடத்து சாமானிய மக்களும்
கடைத்தேற வேண்டி இந்த ஏகாயனசாகையினை எளிமையாகத் தரக் கோரினேன்.
அதற்கு சங்கர்ஷணரும் இரங்கி, இந்த லக்ஷம் ஸ்லோகம் கொண்ட ஏகாயனசாகையிலிருந்து 16000 ஸ்லோகம்
மட்டிலும் கொண்ட மிகச் சிறந்ததான இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதையினை எனக்கு அருளினார்.
இதனை திருப்பாற்கடலில் திருமாலிடமிருந்து நாரத மஹரிஷியும் கேட்டறிந்துள்ளார்..“ என்று கூறி
ஸ்ரீபாரமேஸ்வர ஸம்ஹிதையினை சனகருக்கு உபதேசிக்கின்றார் சாண்டில்யர்!

இதில் எம்பெருமானின் திவ்யாத்ம ஸ்வரூபங்களும், கல்யாண குணங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதை, ஞான காண்டம், க்ரியா காண்டம் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஞான காண்டத்தில் எம்பெருமானின் ஆறு குணங்கள்,
திவ்யமங்கள விக்ரஹம் சிறப்பு, விபவ அவதாரம்,
லக்ஷ்மி, புஷ்டி (ஸ்ரீதேவி, பூதேவி) இருவரின் சிறப்பு,
திவ்யாயுதங்கள், கருடன் முதலான நித்யசூரிகள், பரமபதம், வ்யூக மூர்த்திகள், அவர்களது ஸ்தானங்கள்,
பரமபதத்தில் உள்ள சாலைகள், அதன் அழகு மற்றும் அளவுகள், ஜீவாத்மா ஸ்வரூபம், முக்தன் – பத்தன்,
முக்திக்குண்டான மார்க்கம், பகவத் மந்த்ரங்கள், முத்ரைகள், யோகங்கள் முதலானவைகள்
விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்கிறார் சாண்டில்யர்.

நம்முடைய துரதிர்ஷ்டம் – இந்த பல அரிய சூக்குமமான விஷயங்கள் கொண்ட, 8000 ஸ்லோகங்கள் கொண்ட,
இந்த ஞானகாண்டம், இதனுடைய முதல் அத்யாயத்தினைத் தவிர இதர பாகங்கள் கிடைக்கவேயில்லை..!

சுமார் 200 வருடங்களுக்கு முன் ஸ்ரீநாராயண சூரி என்பவர் இந்த பாரமேஸ்வர ஸம்ஹிதைக்கு வியாக்யானம் செய்துள்ளார்.
அவருக்கே இந்த ஞான காண்டம் கிடைக்கவில்லை என்கிறார். ஆக 200 வருடங்களுக்கு முன்பே இதனுடைய
ஞான காண்டம் மறைந்து விட்டது (ஸ்ரீநாராயண சூரியின் வியாக்யானம் எவரிடமாவது உள்ளதா..? என்று தெரியவில்லை..!)
1953ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீ உ.வே. கோவிந்தாச்சாரியார் என்னும் மஹா பண்டிதரின் கடும் உழைப்பின் பயனாய்
நாம் இன்று இப்போது நாம் படிக்கும் “க்ரியா காண்டம்“ கிடைத்துள்ளது.

—-

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
இரண்டாம் அத்யாயம்
ஸ்நான விதி

பகவானை ஆராதனம் செய்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை நியமங்களை
இந்த இரண்டாம் அத்யாயத்தில் விவரிக்கின்றார் ஸ்ரீசாண்டில்ய மஹரிஷி..!

ஆராதகன் பிரம்ம முஹூர்த்தத்தில் (அதிகாலை -சூரியன் உதிக்கும் முன்பு) எழவேண்டும்.
படுக்கும் போதும், எழும் போதும்

“ஓம் நமோ வாஸூதேவாய நம: சங்கர்ஷணாய தே (ச)|
ப்ரத்யும்னாய நமஸ்தேஸ்து – அனிருத்தாய தே நம: ||–என்றும்

“நமோ நம: கேசவாய, நமோ நாராயணாய ச
மாதவாய நமஸ்ச்சைவ, கோவிந்தாய நமஸ்தத:
விஷ்ணவே த நமஸ்குர்யாத் நமஸ்தே மதுசூதன
நமஸ் த்ரிவிக்ரமாயத, வாமனாய நமஸ்தத:
ஸ்ரீதராய நமஸ்ச்சாத, ரிஷிகேசாய ஓம் நம:
நமஸ்தே பத்மநாபாய, நமோ தமோதராய ச” என்று
மேலே சொல்லப்பட்ட பகவானின் 16 நாமாக்களையும் (முதல் ஸ்லோகத்தில் நான்கு நாமாக்கள் – இரண்டாவது ஸ்லோகத்தில் 12 நாமாக்கள்)
மற்றும் எம்பெருமானின் தச அவதாரங்களின் நாமாக்களையும், சொல்லியபடியே படுக்க வேண்டும் – எழ வேண்டும்.

இந்த நாமாக்களை மனதிற்குள்ளே சொல்லக் கூடாது.
உரத்த குரலில் சந்துஷ்டியுடன் சொல்ல வேண்டும்.
கீர்த்தனையைப் போல உரத்து பாடவும் செய்யலாம்.
(இவ்வாறு சொல்வதால் நாம் மட்டுமின்றி அருகில் இருப்பவரும் இந்த பகவானின் நாமாக்களைக் கேட்பார்கள் –
அவர்கள் மனதிலும் பதியும் அல்லவா…?)

படுக்கையிலிருந்து எழும் போது, “ஹரி.., ஹரி…,“ என்று சொல்லியபடியே எழ வேண்டும்.

அவ்வாறு எழும் போது, “நம: க்ஷிதிதராய“ என்று சொல்லிக் கொண்டு முதலில் இடது காலை பூமியில் பதித்து எழுதல் வேண்டும்..“

இதன் பிறகு “சௌச ப்ரகாரம்“ (மலங்கழித்தல், சுத்தம் செய்தல்) சொல்கின்றார். இதனை விவரணமாக எழுதுதல் என்பதும் கடினம் –
கடைப்பிடித்தல் என்பது ஏறத்தாழ தற்கால சூழ்நிலைக்கு இயலாத ஒன்று – அந்த காலத்தில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்துள்ள
ஒரு காலகட்டத்தில் இதனையெல்லாம் கடைப்பிடித்து வாழ்ந்துள்ளனர் நம் பெரியோர்கள். ஒரு சிறிய உதாரணம் சொல்கின்றேன்.
மலத்தினை நேரடியாக பூமியின் மீது கழித்தல் கூடாது என்கின்றார்.
புற்செடிகளைப் பிடுங்கி பூமி மீது பரப்பி அதன் மீது கழிக்கச் சொல்கிறார்..

—–

எந்த நதியானது சமுத்திரத்தில் சென்று கலக்கின்றதோ அந்த நதி மிகச் சிறந்த புண்ய நதியாம்!
இதில் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பிரவாகம் எடுத்து ஓடும் நதி மிகமிகச் சிறந்த புண்ய நதியாம்!
இவற்றில் எந்த பக்கத்து நதிக்கரை நித்ய அனுஷ்டானம் பண்ணுவதற்கு ஏற்றது..?
கிழக்கு நோக்கி ஓடும் நதிகளின் தென்கரை வடக்குக் கரையினைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தது.
வடக்கு நோக்கி ஓடும் நதிகளுக்குக் கிழக்குக் கரை நல்லது!
இதில் ஒவ்வொன்றைக் காட்டிலும் சிறந்தவற்றில் 10 மடங்கு பலன் அதிகமாம்!
நம் பூர்வாச்சார்யர்களை நாம் தற்சமயம் நினைவு கூறுவோம்..!

ஸ்ரீரங்கத்தில் ஓடும் இரு நதிகளுமே வடக்கிலிருந்து கிழக்கு நோக்கித்தான் பாய்கின்றது. அதில் நம் பூர்வாச்சார்யர்கள்
அனைவருமே கொள்ளிடக்கரையின் தென்கரையில் தற்சமயம் சிதிலமடைந்து காணாமலே போய்விட்ட
ஆதிகேசவ பெருமாள் சன்னிதியினைச் சுற்றியுள்ள (மணவாள மாமுனிகள் திருவரசு இருந்த இடம்.!)
சதுர்வேதி மங்கலத்தில் அன்றாட அனுஷ்டானங்களுக்கு ஏதுவாக வசித்து வந்துள்ளார்கள்!
அவர்கள் எவ்வளவு தெளிவான வாழ்க்கை வந்துள்ளனர் என்பதினை நினைக்கும்போது மனம் பூரிப்படைகின்றது..!

———-

தியான ஸ்நானம்
மேற்கூறியவாறு செய்து முடித்தவுடன் ஆகாயத்தில் மந்த்ரமூர்த்தியாய் இருக்கும் ஸ்ரீமந் புண்டரீகாக்ஷனை
“ஓம் புண்டரீகாக்ஷாய நம:” என்று தியானித்து தேஜோமயமான அவனது திருவடிகளில் இருந்து தீர்த்தம் பெருகி
நமது சிரஸ்ஸின் பிரும்மரந்தரத்தின் வழியே நமது சரீரத்தினுள் அந்த புண்ணிய தீர்த்தம் விழுவதாக மனதினால் பூரணமாக தியானிக்கவும்.
இது தீர்த்த ஸ்நானம், மந்த்ர ஸ்நானத்தினைக் காட்டிலும் மிக மிக உயர்ந்தது. ஒரே ஒரு விஷயம் நம் மனம் ஒருநிலைப்பட்டு,
வேறெந்த சிந்தனையுமில்லாது ஆத்மார்த்தமாக செயல்படுதல் மிக முக்கியம்.

திவ்ய ஸ்நானம்
சூர்யனின் கிரணங்களோடு கூடிய மழையில் ஸநானம் செய்வது.

பஸ்ம ஸ்நானம்
கோமயம், ஸமித்துக்களால் எரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட தூய வெண்மையான பஸ்மத்தில், நெற்றி முதலான அங்கங்களில்
அந்தந்த ஸ்தானத்திற்குரிய மந்திரங்களைச் சொல்லி ஊர்த்வ புண்டரமாக இட்டுக் கொள்ளுதல்.
(சாண்டில்யரின் காலத்தில் நாம் இப்போது இட்டுக் கொள்ளும் திருமண் என்பது வழக்கத்தில் இல்லை..!)

வாயவ்ய ஸ்நானம் அல்லது கோதூளி ஸ்நானம்
கோமாதா செல்லும் போது அதன் குளம்பிலிருந்து கிளம்பும் கோதூளிகள்(மண் துகள்கள்) நம் சரீரத்தில் படுவது.

பார்த்திவ ஸ்நானம்
உயர்ந்த மலையுச்சி, புண்ணிய க்ஷேத்திரங்கள் முதலான இடங்களில் பெறப்பட்ட வெண்மையான மண்ணினால்
கேசவாதி நாமங்களைச் சொல்லி நம் அங்கங்களில் ஊர்த்வபுண்டரமாக இட்டுக் கொள்ளுதல்.
இது அனைத்து பாவங்களையும் போக்கக் கூடியது.

இந்த ஏழு விதமான ஸ்நானங்களில் ஏதாவது ஒன்றை அவஸ்யம் செய்யவேண்டும்.

——

ஸ்ரீ பாரமேஸ்வர ஸம்ஹிதை
மூன்றாம் அத்யாயம்
ஸமாதிவ்யாக்யானம்

ஊர்தவ புண்டரம் இட்டு கொள்ள உதவும் மண் எங்கிருந்து எடுக்கலாம்…..?

கீழ்கண்ட இடங்களிலிருந்து சேகரித்துக்கொள்ளலாம்..!

1) புண்ய க்ஷேத்திரம்
2) மலையுச்சி
3) நதிக் கரை
4) சமுத்திரக் கரை
5) புற்று
6) துளசிச் செடி அடிப்பாகத்திலுள்ள மண்

மண் எந்த நிறத்தில் எல்லாம் இருக்கலாம்..?

1) சிகப்பு
2) மஞ்சள்
3) கருப்பு
4) வெண்மை – ஆகிய நிறங்களில் இருக்கலாம்.

எந்தெந்த நிறத்திற்கு என்ன பலன்கள்..?

1) சிகப்பு :: அனைவரையும் வசப்படுத்த விரும்புபவன்
2) மஞ்சள் :: தனத்தை அடைய விரும்புபவன்
3) கருப்பு :: மன அமைதி அடைய விரும்புபவன்
4) வெண்மை :: மோக்ஷத்தினை விரும்புபவன்

இந்த ஊர்த்வபுண்டரமானது எந்த வடிவினில் இருக்க வேண்டும்..?

1) திரியில் பிரகாசிக்கக்கூடிய தீபம் போன்றோ..
2) மூங்கில் இலை போன்றோ..
3) தாமரை மொட்டு போன்றோ..
4) அல்லி மொட்டு போன்றோ
5) மீன் அல்லது ஆமைப் போன்றோ..
6) சங்கு போன்றோ…

மேற்கூறிய ஆறு அம்சங்களில் ஏதேனும் ஒன்று போன்று தரித்துக் கொள்ள வேண்டும்.

———

நான்கு பட்சமாக ஊர்த்வ புண்டரம் இட்டுக் கொள்வோமேயானால்

நெற்றியில் – ஸ்ரீவாஸூதேவனையும்,
ஹ்ருதயத்தில் – ஸ்ரீசங்கர்ஷணனையும்
வலதுதோள் – ஸ்ரீப்ரத்யும்னனையும்
இடது தோளில் – ஸ்ரீ அநிருத்தனையும்

தியானித்தவண்ணம் இட்டுக் கொள்ளவேணும்.

12 பட்சத்தில்

நெற்றி – கேசவன்
உதரம் – நாராயணன்
ஹ்ருதயம் – மாதவன்
கண்டம் – கோவிந்தன்
வலதுபக்க உதரம் – விஷ்ணு
வலது தோள் – மதுசூதனன்
வலது கழுத்து – த்ரிவிக்ரமன்
இடது உதரம் – வாமனன்
இடது தோள் – ஸ்ரீதரன்
இடது கழுத்து – ரிஷிகேசன்
பின்புறம் பிருஷ்டபாகத்திற்கு மேல் – பத்மநாபன்
கழுத்து பின்புறம் – தாமேதரன்.
சிரஸ்ஸின் மேல் – ஸ்ரீவாஸூதேவன்
(இது சம்ஹிதையில் சொல்லப்படவில்லை ஆனால் சிலர் அனுஷ்டானத்தில் தற்சமயம் உள்ளது).

யக்ஞம், தானம், தபஸ், ஹோமம், போஜனம், பித்ரு கர்மாக்கள் இவையனைத்தும் ஊர்த்வபுண்டரம் இன்றி
செய்வோமாயின் பலனற்றதாகிவிடும். ஆகையினால் அனைத்து சித்தியையும் கொடுக்கக்கூடியதான
ஊர்த்வ புண்டரத்தினைச் சிரத்தையுடன் தரிக்கவேண்டும்.

ஊர்த்வபுண்டரங்கள் தரித்து அனுஷ்டானங்கள் முடிந்தவுடன் இரண்டு கைகளிலும் மோதிரவிரலில் பவித்ரம் தரித்துக் கொள்ளவேண்டும்.
(தற்சமயம் எல்லா அர்ச்சகர்களும் ஒரு கையில் (வலது கை) மட்டும் பவித்ரம் தரித்துக் கொள்கின்றனர்.
ஒருசிலர் தங்கத்தினிலான பவித்ரமோதிரம் மட்டும் தரித்துக்கொள்கின்றனர்.
மேல்கோட்டை திருநாராயணபுரத்தில் மட்டுமே இன்று வரை அர்ச்சகர்கள் இரு கைகளிலும் பவித்ரம் தரித்துத்
திருவாரதனம் முதலானவற்றைச் செய்து வருகின்றார்கள்). பவித்ரம் அணியாமல் பெருமாளுக்குச் செய்யப்பட்ட
ஸ்நானம், நைவேத்யம், அர்ச்சனம், நாம் செய்யக்கூடிய தானம், ஜபம், ஹோமம், பித்ருதர்ப்பணம் இவையெல்லாம் பயனற்றது.
ஆகையினால் இக்காலங்களில் அவசியம் பவித்ரம் தரித்துக் கொள்ள வேண்டும்.

———-

திருபள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சியின் போது துதிப் பாடகர்களலோ அல்லது அங்கு குழுமியுள்ள பாகவதர்களோ
“ஜய ஜய” என்று ஒருமித்த உரத்தக் குரலில் கோஷமிடவேண்டும்.

சங்கநாதம் ஒலிக்க வேண்டும்.

சுப்ரபாத (ப்ரபோத) சுலோகங்களைச் சொல்லி எம்பெருமானை பள்ளியெழுப்ப வேணும்.

த்வாரம் அருகே சென்று தசதிக்பந்தனம்
(8 திக்குகள்+ஆகாயம்+பூமி) செய்து தர்ஜனி விரலால்(ஆட்காட்டி விரல்) அவகுண்டனம் செய்து,
கவச மந்திரத்தினை உச்சரித்தவாறு, கருடன் முதலிய பரிவாரத்தோடு கூடிய ஏம்பெருமானை ப்ரணவம்,
நமஸ்ஸூக்களாலே புஷ்பங்களைக் கொண்டு “ஸமஸ்த பரிவாராய அச்சுதாய நமோ நம:“ என்று துதிக்க வேண்டும்.

பிறகு யதாக்ரமம் ‘வாஸ்து புருஷன்’ தொடங்கி அர்ச்சிக்க வேண்டும்.

ந்யாஸங்களோடோ அல்லது ந்யாஸங்கள் இல்லாமலோ, மூலமந்திரத்தினைச் சொல்லி, மூன்று தடவை “தாளத்ரயம்“ செய்யவேண்டும்.

மூல மந்திரத்தினை உச்சரித்தவாறு திருக்கதவுகளைத் திறக்கவேண்டும்.

——-

நாடிகளைப் பற்றி விரிவாக கூறுகின்றார் சாண்டில்ய மஹரிஷி..!

இந்த நாடிகள் அனைத்திற்கும் உற்பத்தி ஸ்தானம் “கந்த நாடி“ என்றும்

(கந்தம் = ஹ்ருதயம்..? ). நமது தேஹம் முழுவதும் 14000 நாடிகள் வியாபித்துள்ளன என்றும் தெரிவிக்கின்றார்.

இதில் மேலே போகக்கூடிய நாடிகள் “ஆக்நேய“ நாடிகளாகும்.

கீழே போகக்கூடிய நாடிகள் “ சௌம்ய“ நாடிகளாகும்.

குறுக்கே போகக்கூடிய நாடிகள் “சௌம்யாக்நேய“ நாடிகளாகும்.

இந்த 14000 நாடிகளில் மிக முக்யமானவை 10 நாடிகளாகும்.

அவைகள்

(1) இடா (2) பிங்களா (3) மேலே செல்லக்கூடிய “சுழும்னா“

(4) காந்தாரி (5) ஹஸ்திஜிஹ்வா (6) பூஷா (7) யஸஸ்வினி

(8) அலம்புஸா (9) குஹூ (10) கோசினி.

இந்த நாடிகள் நமது தேஹத்தில் எங்கெங்கு உள்ளன..?

“சுழும்னா” என்கிற மத்ய நாடி கந்தபாகத்திலிருந்து மேல்நோக்கிச் செல்கின்றது.

இந்த “சுழும்னா“ நாடியின் இடது புறம் “இடா“ என்கிற நாடியும்
வலது புறம் “பிங்களா“ என்ற நாடியும் நமது மூக்குவரை வியாபித்துள்ளது.
இந்த “சுழும்னா“ நாடிக்கு முன்புறம் “காந்தாரி” என்கிற நாடி நமது இடது கண் வரையிலும்
”ஹஸ்திஜிஹ்வா” என்னும் நாடி வலது கண் வரையிலும் வியாபித்துள்ளது. கந்த பாகத்திலிருந்து மேல் நோக்கிய வண்ணம்

இரு காதுகள் வரை ’பூஷா“ மற்றும் “யஸஸ்வினி” ஆகிய இரு நாடிகளும் உள்ளன.
கந்தபாகத்திலிருந்து, பாதம் வரை உள்ளது “அலம்புஸா“ என்கிற நாடி. இரகஸ்ய பிரதேசம் வரை உள்ளது “குஹூ“ நாடி.

கால் கட்டைவிரலில் “கோசினி“ என்னும் நாடி உள்ளது.

இந்த நாடிகளின் நிறங்கள்…

இடா – வெள்ளை

பிங்களா – சிகப்பு

காந்தாரி – மஞ்சள்

ஹஸ்திஜிஹ்வா – கருப்பு

பூஷா – கருமஞ்சள்

யஸஸ்வினி – பச்சை

அலம்புஸா – சிகப்பரக்கு (Redish Brown)

குஹூ – இளஞ் சிகப்பு

கோசினி – கருப்பு

இவைகள் பிரதானமாக விளங்கும் 10 நாடிகளாம்.

இந்த 10 நாடிகளிலும் விளங்கும் 10 வாயுக்கள்.

இடா – பிராணன்

பிங்களா – அபானன்

அலம்புஸா – சமானன்

குஹூ – வ்யானன்

சுழும்னா – உதானன்

பிங்களா – நாகன்

பூஷா – கூர்மன்

யஸஸ்வினி – க்ருகரன்

ஹஸ்திஜிஹ்வா – தேவதத்தன்

கோசினி – தனஜ்ஜயன்

இந்த வாயுக்களின் நிறம்

பிராணன், நாகன் – பவள நிறம்

கூர்மன், அபானன் – இந்திர கோபன்

சமானன், க்ருகரன் – ஆகாய நிறம்

தேவதத்தன், உதானன் – தாமரை மகரந்த நிறம்

தனஜ்ஜயன், வ்யானன் – கடல்நுரை போன்ற நிறம்.

இவ்வளவு விவரங்களையும் தெளிவாகச் சொல்லிவிட்டு “ப்ராணயாம“த்தினைப் பற்றி விளக்குகின்றார் சாண்டில்ய மஹரிஷி.

———

ப்ராணயாமம் என்பது சுவாசத்தினைக் கட்டுப்படுத்துவது.

சுவாசம் என்பது மூன்று செயல்பாடுகள் உடையது.

வெளிக்காற்றின் உபயோகத்தோடு மூக்கினால் காற்றை உள்ளே இழுத்துக் கொள்வது – இது “நிஷ்வாஸம்“ எனப்படும்.

உள்ளேயிருக்கும் காற்றினை வெளியேற்றுதல் “ உச்வாஸம்“ எனப்படும்.

இதன் இரண்டிற்கும் நடுவே சிறிது நேரம் மூச்சுக்காற்றை நிலைநிறுத்துதல் “ஸ்தம்பனம்“ எனப்படும்.

இதில் நிஷ்வாஸம் – “ரேசகம்“ என்றும்
உச்வாஸம் – “பூரகம்“ என்றும்
ஸ்தம்பனம் “கும்பகம்“ என்றும் அழைக்கப்படுகின்றது.

இதில் “ரேசகம் “ – அதமம் என்றும்,
“பூரகம்“ – மத்திமம்“ என்றும்
“ஸ்தம்பனம்“ – உத்தமம் என்றும் சொல்கின்றார் சாண்டில்யர்.

(இது இப்போது விஞ்ஞானப்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேகவேகமாக சுவாசத்தினை
உள்ளிழுத்தலும் வெளியேற்றுதலும் ஆயுளைக் குறைக்கும் என்றும் எவ்வளவுக்கெவ்வளவு உள்ளிழுத்த மூச்சுக்காற்றினை நிறுத்தி
நிதானமாக சுவாசிக்கின்றோமோ ஆயுள் விருத்தி என்பதனை யோகம் கற்பிக்கின்றவர்களும்,
ஆழ்நிலை தியான பயிற்சியாளர்களும் வலியுறுத்துகின்றனர்.
நமது ஆயுளானது நாம் விடும் சுவாசித்தினைக் கொண்டே கணக்கிடப்படுகின்றது.)

சரி..! எந்தளவு காற்றினை உள்வாங்கலாம்.., அடக்கலாம்.., வெளியிடலாம்..?

இது தெரிந்து கொள்வதற்கு ஒரு கால அளவு உள்ளது. அது “மாத்திரை“ எனப்படும்.

இதனை எப்படி கணக்கிடுவது…?

உங்களது முழங்காலைச் சுற்றி வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இன்றி நிதானமாக
உங்கள் கைவிரல்களால் ஒரு சொடுக்குப்போடும் காலத்தின் அளவே ஒரு மாத்திரையாகும்.

இப்போது சுவாசத்திற்கு வருவோம்.

ரேசகம் – 12 மாத்திரை அளவு
பூரகம் – 24 மாத்திரை அளவு
கும்பகம் – 36 மாத்திரை அளவு.

இந்த கணக்கின்றி வெறுமனே காற்றினை உள்வாங்கி வெளியிடுவதற்கு “ரேசகம்“ அதாவது “அதமம்“ என்றே பெயர்.

பிராணனை அடக்க விரும்புவன் இந்த மாத்திரைகளை நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும்.
மாத்திரைகள் மாறினாலோ அல்லது குறைந்தாலோ அது பயன் தராது. அது அதமம்.

ரேசகம் செய்யும்போது வலதுகை விரல்களாலே இடது நாசிகா துவாரத்தினை மூடிக்கொண்டு நாபிதேசத்தில்
இருக்கக்கூடிய “ஸ்ரீமந் நாராயணனை“ மூலமந்திரத்தினால் தியானம் செய்தவண்ணம் குறிப்பிட்ட மாத்திரையளவு காற்றினை உள்வாங்கவேண்டும்.

இந்த ப்ராணயாமம் இரு வகைப்படும்.
அவை (1) அகர்ப்பம் (2) சுகர்ப்பம்.

ஜபம் மற்றும் தியானம் ஆகிய ஏதும் இல்லாது செய்யும் ப்ராணயாமம்
“அகர்ப்பம்“ – இவைகளை உடையது “சுகர்ப்பம்“.

அகர்ப்ப ப்ராணயாமத்தினைக் காட்டிலும் “சுகர்ப்ப“ ப்ராணயாமம் நூறு மடங்கு உயர்ந்தது.

:பூத சுத்தி ::

“கந்த சக்த“யினை “ரேசக“த்தினாலே வெளியகற்றிய பின்பு
சமுத்திரம், நதிஈ ஓடை இவைப் போன்ற நீர்நிலைகள் எவைகள் உள்ளனவோ,
இவைகளைப் “பிறைச் சந்திரன்“ போன்ற உருவத்தினை உடையதாயும், தாமரைக் கொடி உடையதாயும்,
நமது சரீரத்திற்கு வெளியே மனதினால தியானித்து பின்பு “பூரக“த்தினாலே மெதுவாக நம்முடைய தேகத்தினுள் நிரப்பவேண்டியது.

அடித்தொடைப் பாகம் முதல் முழங்கால் வரை அந்த ஜலத்தினால் வியாபிக்கப்பட்டதாய் “கும்பக“த்தினால் தியானிக்கவும்.

இதன் நடுவே வாருண மந்திரத்தினால் தியானிக்க வேண்டியது.
இம்மந்திரத்தினாலே ஜலமயமான அனைத்து பதார்த்தங்களும் லயமடைந்ததாக தியானிக்கவும்.

பிறகு ஜலமயமான அனைத்து விபவங்களையும், ரச சக்தியினாலேயும்,
அந்த ரச சக்தியினை அக்னியினாலேயும் “ரேசக“த்தினால் நுழைக்க வேண்டியது.

இங்கு அக்னியுடைய உருவத்தினை விவரிக்கின்றார் சாண்டில்யர்.

அக்னியானது திரிகோண வடிவம் – மின்னல், சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், ரத்னங்கள், தாதுக்கள்
மற்றும் ஒளி கொண்ட அனைத்து வஸ்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டது.
மேலும் தானே பிரகாசிக்கக்கூடிய சரீரம் உடையவர்களும், சரீரமில்லாதவர்களுமான ஆகாயத்தில் சஞ்சரிப்பவர்களுடன்,
மங்கள ஸ்வரூபியான தேவதைகளுடன் கூடிய இந்த அக்னியைத் தியானிக்க வேண்டியது.

பின்பு, அக்னி மந்திரத்தினைக் கூறி அந்த அக்னி மண்டலத்தினுள் இருக்கக்கூடிய எம்பெருமானைத் தியானிக்கவும்.
இந்த அக்னி விபவத்தினை “பூரக“த்தினால் நாபியிலிருந்து அடித்தொடை வரை வியாபித்ததாய் தியானிக்கவும்.

பிறகு அனைத்து ஒளிமயமான வஸ்துக்களை தியானிக்கவும்.
பிறகு அக்னி தத்வமானது “ரூப சக்தி“யில் லயமடைந்ததாக தியானிக்கவும்.
இந்த “ரூப சக்தி“ ஞானமயமானது. பிறகு இந்த ரூபசக்தியை வாயுவிலே ரேசகத்தினாலே வெளியேற்ற வேண்டியது.

பிறகு வெளியே இருக்கக்கூடிய வாயுதத்துவத்தினைத் தியானிக்கவும்.
இந்த வாயுவானது பலவிதமான கந்தங்களோடு கூடியது.

பிறகு வாயுமந்த்ரத்தினை உச்சரித்து இந்த வாயுவின் சொரூபத்தினைத் தியானிக்கவும்.
பிறகு பூரகத்தினால் கழுத்திலிருந்து நாபி வரை இந்த வாயுவினால் வியாபிக்கப்பட்டதாய் நினைக்கவும்.
பிறகு இந்த வாயு தத்துவத்தினை “ஸபர்ச“ சக்தியிலே லயமடைந்ததாய் தியானிக்கவும்.
இந்த ”ஸ்பர்ஸ” சக்தியினை ஆகாய மண்டலத்தில் சேர்க்க வேண்டும்.
பிறகு வெளியே அனைத்து சப்தங்கள் கொண்டதும், நிறமற்றதும்,
பல உருவமற்ற, உடலற்ற சித்தர்களாலே நிரம்பியதுமான ஆகாயத்தினை அதற்குரிய மந்திரத்தினைக் கூறி தியானிக்கவும்.
பிறகு பூரகம் மூலமாக இந்த ஆகாயத்தினாலே கழுத்திலிருந்து ப்ரும்மரந்த்ரம் வரை வியாபிக்கப் பட்டதாய் நினைக்க வேண்டியது.
பின்பு தந்மந்த்ரமாகவே மாறிய அந்த ஆகாய தத்துவத்தை கும்பகத்தினாலே தியானிக்க வேண்டியது.
இந்த மந்த்ரமாக மாறிய ஆகாய தத்துவத்தினை பிறகு சப்த சக்தியாக மாறுவதாக தியானிக்கவும்.
பிறகு சப்த சக்தியை ப்ரும்மரந்தரத்தின் வழியே வெளிக் கிளம்பி, மற்ற நான்கு சக்திகளோடும் சேருகின்றதாக தியானிக்கவும்.

———

ஸ்ரீ பாஞ்சராத்ர-ஸ்ரீ வைகாநஸ ஆகமங்களும் வேறுபாடுகளும்–

ஸ்ரீ வைகானஸ ஆகமம் என்பது ஸ்ரீ பகவச் சாஸ்திரமாகும்.
ஸ்ரீ விகநஸ முநிவரால் சொல்லப்பட்டதால் ஸ்ரீ வைகானஸ சூத்திரம் என்று அழைக்கப்படுகின்றது.
ஸ்ரீ விகனஸரின் ஸம்பந்தமுற்றோர் ஸ்ரீ வைகானஸர் என்று அழைக்கப்படுவர்.
இவர் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் மாநஸ புத்திரர். இவருக்கு ஸ்ரீ மஹாவிஷ்ணு ஸ்ரீவைகானஸ சாஸ்திரத்தை உபதேசித்தார்.

ஸ்ரீ வைகானசர்கள் பிற்புரிமையால் வரும் சமூகத்தைச் சேர்ந்துள்ளனர். யாவரும் அந்தணர்கள்.
இவர்கள் ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையில் சம்பந்தப்படாதவர்கள்.
அவர்கள் இராமாநுஜரையோ, நம்மாழ்வாரையோ தம் குல குருவாக ஏற்றுக்கொள்ளவில்லை.
அதனால் திவ்யப் பிரபந்தங்களை அவர்கள் அத்யயனம் செய்வதில்லை.
ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யர்களின் தனியன்களை அநுஸந்திப்பதும் இல்லை.
பஞ்ச ஸம்ஸ்காரம் எனும் வைஷ்ணவ தீiக்ஷயை இவர்கள் பெறுவதில்லை.
அத்தகைய தீiக்ஷயை இவர்கள் கர்ப்ப வாசத்தின்போதே மந்திர ஸம்ஸ்காரத்தால் பெற்றுவிடுகிறார்கள்.

இவர்கள் கொள்கை லக்ஷ;மி விசிஷ்டாத்வைதம் என்று குறிப்பிடப்படுகிறது.
இராமாநுஜ ஸம்ப்ரதாயக் கோட்பாடுகளைக் கொண்டாடுகிறார்கள்.
ஆனால் பிராட்டியை ஈச்வர கோடியில் சேர்க்கிறார்கள்.
கைவல்யமும் மோக்ஷமே என்று கருதுகின்றனர்.

ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் என்றால் ஐந்து இரவுகள் என்று பொருள்.
ஸத்ர யாகம் ஒன்றில் ஐந்து இரவுகளில் எம்பெருமானை வழிபடும் விதம் உபதேசிக்கப்பட்டதால்
இப்பெயர் ஏற்பட்டதாக சதபத ப்ராஹ்மணத்தில் கூறப்பட்டுள்ளது.
இராத்திரியின் குணங்களான மஹாபூதம், தன்மாத்திரை, அஹங்காரம், புத்தி, அவ்யக்தம் என்ற
ஐந்தின் காரணமாக இப்பெயர் ஏற்பட்டதாக பரம ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது.
சாங்கியம், பௌத்தம், ஆர்ஹதம், காபாலம், பாசுபதம் ஆகிய பஞ்ச சாஸ்திரங்களும் இருளடைந்து போகும்படி செய்ததால்
பாஞ்சராத்ரம் என்று பெயர் வந்ததாக பாத்ம தந்திரம் என்னும் நூல் கூறுகிறது.
ப்ரஹ்மம், முக்தி, போகம், யோகம், ப்ரபஞ்சம் என்ற ஐந்தை அடையும் வழிகளைக் கூறுவதால்
இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.
ஆனால் பரம்பொருளின் ஐந்து நிலைகளான பர, வ்யூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை எனும்
நிலைகளைப் பற்றிக் கூறுவதால் இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.
அதிலும் வ்யூஹத்தின் நிலையை விளக்குவன பாஞ்சராத்ர ஆகமங்கள் என அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்துள்ளார்.

ஸ்ரீ பாஞ்சராத்ர ஸம் ஹிதைகள் :-
பாஞ்சராத்ர ஸம்ஹிதை சில்ப சாஸ்த்ரம், வாஸ்த்து சாஸ்த்ரம், பல்வேறு தெய்வங்களின் உருவ வர்ணனை,
அவர்களின் ஆயுதங்கள், பிம்பங்களின் அளவுகள், ஆராதனை முறை, அண்டங்களின் சிருஷ்டி க்ரமம்,
யோகம் அதாவது கடவுளை நெருங்குவதற்கான வழிகளை விவரித்தல் ஆகியவை அடங்கியது.
இவையனைத்தும்
ஜ்ஞானம் (ச்ருஷ்டி முதலியன),
யோகம் (கடவுளை அடையும் வழி),
கிரியா (ஆலய – பிம்ப நிர்மாணங்கள்),
சரியா (பூஜை செய்யும் முறை) என்ற நான்கு தலைப்புகளில் அடங்கும்.

ஸ்ரீ பாஞ்சராத்ர ஸம் ஹிதைகள் 108 என்று பொதுவாகக் கருதப்பட்டாலும், அனைத்தும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் என்று மூன்று ஸம்ஹிதைகளும் பகவானால் சொல்லப் பட்டதால் ரத்ன த்ரயம் என்றும்,
மூல ஸம்ஹிதைகள் என்றும் சொல்லப்படுகிறது.
பௌஷ்கரத்தின் விரிவை பாரமேச்வர ஸம்ஹிதையும்,
ஸாத்வத்தின் விரிவை ஈச்வர ஸம்ஹிதையும்,
ஜயாக்யத்தின் விரிவை பாத்ம ஸம்ஹிதையும் தெரிவிக்கிறது.
இவற்றுள் ஜயாக்யம் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.

மேலும்
1. அஹிர் புத்ந்ய ஸம்ஹிதை
2.ஈச்வர ஸம்ஹிதை
3. ஜயாக்ய ஸம்ஹிதை
4. பாத்ம ஸம்ஹிதை
5. பாரமேச்வர ஸம்ஹிதை
6.லக்ஷ;மீ தந்த்ரம்
7. விஷ்வக்ஸேந ஸம்ஹிதை
8. ஸ்ரீப்ரச்ன ஸம்ஹிதை
9. ஸாத்வ ஸம்ஹிதை முதலிய ஸம்ஹிதைகளும் உள்ளன.

ஸ்ரீ பாஞ்சராத்ர – ஸ்ரீ வைகானஸ ஆகமங்களின் வேறுபாடுகள்

1. வைகானஸ ஆகம விதிகளின்படி வைகானஸ ப்ராம்மணர்களே கருவறையிலுள்ள
இறைவனுடைய திருமேனியை தீண்ட உரிமை பெறுகிறார்கள்.

2. வைகானஸ அர்ச்சகர்கள் திருவிலச்சினை என்ற பஞ்ச ஸம்ஸ்கார தீiக்ஷ பெறுவதில்லை.

3. குரு பரம்பரையில் ஸம்பந்தப்படாதவர்கள். ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களின் தனியன்களை அநுஸந்திப்பதில்லை.

4. வழிபாட்டு முறையில் மந்திரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

5. பலி பீடத்தின் பின்னால் கொடி மரம் இருக்கும்

6. விஷ்ணு, புருஷன், சத்யன், அச்யுதன், அநிருத்தன் முதலியோர்களை வழிபடுகின்றனர்.

மற்றும் கோயில் அமைப்புக்களிலும்
திருவாராதன முறையிலும்,
மூர்த்தியின் அமைப்பிலும் ,
நூப தீபங்கள் சமர்ப்பிப்பதிலும் வைகானஸ, பாஞ்சராத்ர ஆகமங்கள் வேறுபடுகின்றன.

————

நிர்மமே சார முத்யர்த்த ஸ்வயம் விஷ்ணு ரஸ அனுகூலம்
தத் பர வ்யூஹ விபவ ஸ்வபாவாதி நிரூபணம்
பாஞ்சராத் வயம் தந்த்ரம் மோக்ஷ ஏக பல லக்ஷணம்
ஸூ தர்சனாஹ்வயோ யோசவ் சங்கல்போ வைஷ்ணவா பரா
ஸ ஸ்வயம் பிபிதே தேந பஞ்சத பஞ்ச வக்த்ராக –அஹிர்புத்ய ஸம்ஹிதா ஸ்லோகம்

ஸூரி ஸூஹ்ருத் பாகவதா ஸாத்வத பஞ்ச கால வித்
ஏகாந்திகா தன்மயச் ச பாஞ்ச ராத்ரிக இத்யபி
ஏவமாதி ப்ராக்யாபி ஆக்யேய கமலாசன –ஸ்ரீ பத்ம ஸம்ஹிதா ஸ்லோகம் || (2-87)” -பாகவதருக்கு பர்யாய சப்தங்கள்

பஞ்ச கால வியவஸ்தியை வேங்கடேச விபாசித
ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஸித்தாந்த வியவஸ்தேயம் சமர்த்தித – ஸ்ரீ பாஞ்சராத்ர ரஷா ஸ்லோகம் –

இதம் மஹா உபநிஷதம் சதுர் வேத சமான விதம்
சாங்க்ய யோக க்ரதான்தேந பஞ்ச ராத்ர அனு சப்தித்தம் –(ஸ்ரீ மஹா பாரதம் 339,112).

ராத்ரா – கதி -மார்க்கம்
ராத்ரம் ச ஞான வசனம் ஞான பஞ்ச விதம் ஸ்மர்தம்
தேநேதம் பாஞ்ச ராத்ரம் ஹி ப்ரவதந்தி மனிஷினா
தத்வம் –முக்த பிரதம் –பக்தி பிரதம் -யோகம் -வைஷயிகம் -விஷயாந்தர போகம் என்றவாறு

புராணம் வேத வேதாந்தம் ததா சாங்க்ய யோக ஜம்
பஞ்ச பிரகாரம் விஞ்ஞானம் யத்ர ராத்யேதேபிஜஜ || -பவ்ஷ்கர ஸம்ஹிதை

பாஞ்சராத்ரம் – ஏகாயான சாகை -சாந்தோக்ய சாரம் -என்பர் தேசிகர் தத்வ முக்த கலாபத்தில்

—————–——————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முரளீ பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கீதா தத்வ உபதேசமும் -ஸ்ரீ ஆழ்வார்கள் -தத்வ தர்சன- ஸ்ரீ ஸூக்திகளும்-ஸ்ரீ அருளிச் செயல்களும் -ஸ்ரீ துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கும்–

September 16, 2025

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
அன்று ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞானமில் –நான்முகன் திருவந்தாதி-71–

(எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு –ஆஸ்ரிதர்க்கு பவ்யனாய் அணியனாயும்-
அநாஸ்ரிதர் எட்ட ஒண்ணாத படி மிகவும் பெரியனாய்க் கொண்டு-நின்ற இரண்டு படியையும் காட்டுகிறது –கிருஷ்ணனுமாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு அதிபதியுமாய் நிற்கும் பெருமையை யுடையானவன் –அன்று அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அப்யசியார்-மெய்யான ஞானம் இல்லாதாராய் –உலகத்திலேதிலராய்-லோகத்தில் அந்யராய் ஒரு நன்மைகளை யுடையார் அன்றிக்கே என்றுமாம்)

மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை நின்மலமாக வைத்த ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது
தத்வ விவேக
நித்யத்வாநித்யத்வ
நியந்த்ருத்வ
சௌலப்ய
சாம்ய
அஹங்கார இந்திரிய தோஷ பல
மன பிராதான்ய
கரண நியமன
ஸூஹ்ருதி பேத
தேவாஸூர விபாக
விபூதி யோக
விஸ்வரூப தர்சன
சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே
அன்றோதிய கீதா சமம் என்னும்
..சூரணை -189-

மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை நின்மலமாக வைத்தவ ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே
 –1-5-2-

நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய்
தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய்.-‘மேல்  மனம் செய் ஞானம்’ என்று  சங்கல்ப ரூப ஞானத்தை அருளிச் செய்வதனால்-காரியமாக வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து -‘ஸதேவ’ என்று கூறும்படி இருந்த அன்று,புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன் ஆயின்-தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும்,வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத் தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும்,இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு;அதனை அருளிச் செய்கிறார்.

முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை
ஸ்வ கார்யத்தைப் பிறப்பிக்கும் போது தான் முதல் அழியாத படியான மநோ வியாபார ரூப சங்கல்ப ஞானத்தை யுடைய உன் வைலஷண்யம்-ஆனால் சங்கல்பமோ ஜகத் காரணம் -சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் அன்றோ -என்னில்-ஆனாலும் காரணமாம் போது சங்கல்ப பூர்வகமாக வேணும்-சங்கல்ப விசிஷ்டன் காரணம் ஆனாலும் பஹூச்யாம் என்கிற சங்கல்ப ப்ராதான்யத்தாலே சொல்லுகிறது

அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே
.–3-10-8-

எல்லை இல் ஞானத்தன் – மன்ஸவீ என்னுமா போலே ப்ரணய தாரையில் அவளுக்கு ஆனைக்கு குதிரை வைக்க வல்ல ஞானாதிக்யத்தை உடையவன்-மற்றை எல்லார்க்கும், விஷயங்களினுடைய சேர்க்கை ஞானக் கேட்டினையும் வலிமைக் குறைவினையும்
உருவத்தில் அழகு இன்மையினையும் செய்விக்கும்; பிராட்டியினுடைய சம்பந்தம் அவற்றுக்கு எதிர்த்தட்டாய் இருக்கும்

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே
–10-10-10-

சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-அவை இரண்டையும் வியாபித்து அவற்றுக்கு நிர்வாஹகமாய் சங்கல்ப ரூபமான ஞானத்தை யுடையவன் என்று சங்கல்ப ரூப ஞானத்தைச் சொல்லுதல் –சுடர் ஞான இன்பம் என்று பகவத் ஸ்வரூபத்தை சொல்லுதல் –ஒளி உருவனும் -இன்பத்தின் உருவனும் ஆனவனே -என்று எம்பெருமானைச் சொல்லுதல் –
அனுகூல ஞானமே ஆனந்தம் –

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே
.–4-7-7-

பரிபூர்ண ஞானத்தையே ஸ்வரூபகமாக உடைய உன்னை விசதமாக அனுபவித்து-குற்றம் அறும்படியாக நினைத்து.-

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே

ஞானம் ப்ரேமம் பக்தி கொடுத்து அதுக்கும் மேலே -நமக்காக -ஸ்திதே மனஸி -வராஹ சரம ஸ்லோகம் இத்யாதியாலே-உத்தாரக ஹேதுவான ஞானத்தை உபதேசித்த ஸ்வாமியை ஒழிய இல்லை-நான் அறுதியிட்டு நல்ல அர்த்தம் என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்தார் ஆயிற்று-

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே
.–4-10-9-

உளம் கொள் ஞானம் -மானஸ ஞானம் -ஞானம் உதித்து பாஹ்ய இந்த்ரியங்களாலே-பாஹ்ய விஷயங்களை க்ரஹிப்பதற்கு முன்பே மானஸ ஞானத்துக்கு இவ் ஊரை விஷயம் ஆக்குங்கோள்

அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திரர் அவதரணம் க்ருதம்
–5-

தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும், உண்டான தர்மத்தில் அதர்ம புத்தியாலே, கலங்கி நிற்பவனாய், சரணமடைந்தவனான, அர்ஜுனனைக் குறித்து,
கீதா சாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.-காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

உற்றாமையோடே உற்றேன் ஆக்காது ஒழிந்தது நாடு திருந்த ––சூரணை-229 –தன்னுடைய சிருஷ்டி அவதாராதிகளாலும் திருந்தாத ஜகத்து –இவருடைய உபதேசத்தால் –-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே –என்னும்படி திருந்துகைக்காகவும் —

அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.
–4-8-6-

சேதன பேதத்தோ பாதி போறும் இறே உபாய பேதமும் -கர்ம யோகம் முதலாக பிரபத்தி பர்யந்தமாக சகல உபாயங்களையும் வ்யக்தமாக உபதேசித்த படி கர்ம ஞான பக்திகள் -அவதார ரஹஸ்யம் புருஷோத்தம வித்யை -ஸ்வரூப யாதாம்யம் -விரோதி நிவ்ருத்திக்கு பிரபத்தி -ஆத்ம பிராப்திக்கு பிராப்தி -பகவல்லாபத்துக்கு பிரபத்தி -இவற்றை அடங்க விசத்தமாக அருளிச் செய்த-அத்விதீயமான ஸ்வரூபத்தை யுடையவன் –
ஞானாதிகன் சொன்னது இறே பிரமாணம் ஆவது -எல்லாருடைய ஞானத்துக்கும் அடியான ஞான பூர்த்தியை யுடையவன் –

————

1-தத்வ விவேக

ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா—
ந சைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத பரம்
—৷৷2.12৷৷

சர்வேஸ்வரனான நான் முக்காலத்தில் எப்போதும் இல்லாமல் இருந்தேன் என்பது இல்லை –எப்போதும் நான் உள்ளவனே யாவேன்-நீயும் எப்போதும் இல்லாமல் இருந்தாய் என்பதும் இல்லை -நீயும் எப்போதும் உள்ளவனே யாவாய்-இவ்வரசர்களும் எப்போதும் இல்லாமல் இருந்தார்கள் என்பதும் இல்லை -இவ்வரசர்களும் எப்போதும் உள்ளவர்களே-நாம் அனைவரும் இதற்கு மேல் உள்ள காலத்திலும் இருக்க மாட்டோம் என்பது இல்லவே இல்லை –நான் அனைவரும் எப்போதும் இருக்கவே போகிறோம் –

தேஹிநோஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா—
ததா தேஹாந்தர ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி—
৷৷2.13৷৷

இந்த உடலில் இருக்கும் ஆத்மாவுக்கு இளமையும் வாலிபமும் கிழத்தனமும் எப்படி ஏற்படுகின்றனவோ அப்படியே இந்த உடலை விட்ட வுடன் மற்றொரு உடலை அடைவதும் ஏற்பட்டே தீரும் –அறிவாளியாய் இருப்பவன் இவ்விஷயத்தில் கலங்குவது இல்லை -தீரர் சோகப் பட மாட்டார்

அடியேன்  உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம் படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன் உணர்விலும்பர் ஒருவனே–8-8-2-

அடியேன் உள்ளான்-என்னுள்ளான் -என்ன வேண்டும் இடத்திலே அடியேன் உள்ளான் என்றது -அடியேன் என்கிறது -அஹம் சப்த பர்யாயம் ஆகையால் -ஞானாநந்தங்களிலும் அந்தரங்கம் பகவத் சேஷத்வம் -என்கை –-உடல் உள்ளான்-சேதனனுக்கு -திவ்யாத்ம ஸ்வரூபத்திலும் திவ்ய மங்கள விக்ரஹமே உத்தேச்யமாய் இருக்குமா போலே -ஆஸ்ரிதன் ஸ்வரூபத்தில் காட்டிலும் இவன் தேஹத்தை யாயிற்று ஈஸ்வரன் விரும்பி இருப்பது -செருக்கர் அபிமத விஷயத்தில் அழுக்கு உகக்குமா போலே – இத்தால் ஜீவ பர பேதமும் -ஜீவர்களுக்கு பரஸ்பர பேதமும் -சேஷ சேஷித்வ சம்பந்தமும் -அபரமார்த்தம் -என்றும் -ஒவ் பாதிகம் என்றும் சொல்லுகிற பக்ஷங்கள் அர்த்தாத ப்ரதி ஷிப்தங்கள் -ஆழ்வானுக்கு திருக் கோட்டியூர் நம்பி -அடியேன் உள்ளான் என்னப் பெற்ற படி என் -என்று பணித்தார் –

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே
–8-8-5-

தேஹ இந்திரிய மன பிராணாதி களில் காட்டில் -அந்நியமாய் -இவை அழியும் அன்றும் அழியாதே ஏக ரூபமாய் -இவற்றுக்கு நியாந்தாவுமாய் விலக்ஷணமுமான ஆத்மாவை

—————-

2-நித்யத்வாநித்யத்வ

ஹந்தா சேந்மந்யதே ஹந்து் ஹதஷ் சேந்மந்யதே ஹதம் –
உபௌ தௌ ந விஜாநீதோ நாய் ஹந்தி ந ஹந்யதே ৷৷
1.2.19 ৷৷

இது எந்த விதமான செயலையும் செய்வதில்லை, அனுபவிக்கப்படும் பொருளாகவும் இருப்பதில்லை.-கொலைகாரன் நான் கொலை செய்கிறேன் என்று நினைப்பதும், கொலை செய்யப்படுபவன் நான் கொலை செய்யப்படுகின்றேன் என்று நினைப்பது அவர்களது அறியாமையை குறிக்கின்றது. உண்மையில் அவர்கள் ஆத்மாவை அறியவில்லை, இது அழிக்கபடுவதுமில்லை, அழிவதுமில்லை.

ந ஜாயதே ம்ரியதே வா கதாசித்—நாயம் பூத்வா பவிதா வா ந பூய–
அஜோ நித்ய ஸாஸ்வதோயம் புராணோ–ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே
—৷৷2.20৷৷

ஆத்மா ஒரு போதும் உண்டாவதும் இல்லை -அழிவதும் இல்லை – இவ் வாத்மா கல்பத்தின் தொடக்கத்தில் உண்டாகி மறுபடியும் கல்பத்தின் முடிவில் அழிவான் என்பதும் இல்லை –
இவன் உத்பத்தி அற்றவன் –அழிவற்றவன் –பரிணாமம் அற்றவன் –பழையவனாயினும் புதியவனாய் இருப்பவன் –எனவே உடல் அழிக்கப்படும் போதும் இவ் வாத்மா அழிக்கப் படுவது இல்லை -விகாரங்கள் -சரீரத்துக்கு – வெட்டப்படுவது இல்லை -பிறப்பு இறப்பு இல்லை -ஏற்படுவதும் அழிவதும் இல்லை –

வாஸாம் ஸி ஜீர்ணாநி யதா விஹாய–நவாநி கருஹ்ணாதி நரோபராணி.—
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி –அந்யாநி ஸம் யாதி நவாநி தேஹீ
—৷৷2.22৷৷

மனிதன் எப்படிக் கிழிந்த துணிகளைக் கை விட்டு வேறு புதிய துணிகளைக் கைக் கொள்ளுகிறானோ அப்படியே ஆத்மாவானவன் கட்டுக் குலைந்த உடல்களைக் கை விட்டு வேறு புதிய உடல்களை நன்றாக அடைகிறான் – அடுத்த சரீரம் -சட்டை மாத்திக் கொள்வது போல் -தர்ம யுத்தம் -பிராணன் போனால் ஸ்வர்க்கம் தானே – நல்ல சரீரம் தான் கிட்டும் –

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே –
1-2-2-

உயிர் என்கிற ஏக வசனத்துக்கும் ஆக்கைகள் என்கிற பஹூ வசனத்துக்கும் கருத்து -ஓர் ஆத்மாவே கர்ம அனுகுணமாக-அநேக தேஹங்களிலே நலிவுபடும் என்று தோற்றுகைக்காக–திறந்து கிடந்த வாயில்கள் தோறும் நுழைந்து திரியும் பொருள் போன்று, ஓர் உயிரே பல சரீரங்களை எடுத்தலின்,-‘உயிர் யாக்கைகள்’ என்கிறார்.மின்னுக்கு உள்ள நிலையும் இல்லை-அது தோற்றி நசிக்கும் இது கர்ப்பத்தில் நசிக்கும் தோற்றின போதே மாயக் கடவதாய் இருப்பதொரு வ்யவஸ்தை உண்டு அதுக்கு இது சில நாள் இருக்கிலும் இருக்கும் -அஸ்திரம் என்று ஹிதத்தில் ப்ரவர்த்திக்க ஒட்டாது -ஸ்திரம் என்று விச்வசிக்கப் பண்ணி நசிக்கும் –

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே
 –1-2-4-

இல்லது என்று துச்சத்வம் இத்யாத்வங்களை சொல்லுகிறது அன்று -நச்வரதையைச் சொல்லுகிறது-உள்ளது என்று அஸ்தித்வ மாத்ரத்தை சொல்லுகிறது அன்று -நித்யதையைச் சொல்லுகிறது

————
3-நியந்த்ருத்வ

பூமிராபோநலோ வாயுகம் மநோ புத்திரேவ ச.–
அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா৷৷—-7.4৷৷

நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்னும் ஐம்பூதங்களும் மனம் முதலிய இந்திரியங்களும் மஹான் அஹங்காரமும் ஆகிய எட்டு விதமாகப் பிரிந்து இருக்கும் பிரகிருதி என்னுடையதே யாகும் என்று அறிவாயாக -இவை அனைத்தும் என் சரீரமே –

அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்.–
ஜீவ பூதாம் மஹா பாஹோ யயேதம் தார்யதே ஜகத்৷৷–7.5৷৷

தடக் கையனே இந்த அசேதன பிரகிருதி தாழ்ந்தது -இதைக் காட்டிலும் மிக வேறுபட்டதாய் –
ஜீவன் என்று பெயர் பெற்றதாய் -முன் கூறிய அசேதன ப்ரக்ருதியைக் காட்டிலும் மேலானதாக ப்ரக்ருதியை என்னுடையது என்று அறிவாயாக 

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநம் ச–
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–৷৷15.15৷৷

நான் எல்லா ஜீவர்களுடையவும் ஹ்ருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன்-அனைவருடைய நினைவும் வஸ்து நிர்ணயமும் மறதியும் என்னிடமிருந்தே உண்டாகின்றன
எல்லா வேதங்களாலும் நானே அறியப் படுகிறேன் –வேத விதிகளின் பலனை அளிப்பவனும் வேதத்தை அறிந்தவனுக்கு நானே

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே
–1-1-7-

சேதன அசேதனங்கள் உடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருதிகள் பகவத் அதீநைகள் என்று சாமா நாதி கரண்யத்தாலும் வையாதி கரண்யத்தாலும் சொல்லிற்று அந்த சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தனம் ஜகத் ஈஸ்வரர்கள் உடைய சரீராத்மா பாவ சம்பந்தம் என்கிறது – ஜகத்தினுடைய ஸ்வரூபாதிகள் பகவத் அதீனங்கள் ஆகையாலே இந்த ஜகத்து அவனுக்கு சரீரம் என்று சொல்லிற்று-ஸர்வேஷாம் ஆத்மாவாய் -இவற்றை நியமிக்குமிடத்தில் இந்தச் சரீரத்துக்கு இவ்வாத்துமா தாரகனாய் நியாமகனாய், சேஷியாய் இருக்குமாறு போன்று  யஸ்யாத்மா சரீரம் –யஸ்ய ப்ருத்வீ சரீரம் -(‘எவனுக்கு இவ்வுலகம் சரீரமாக இருக்கின்றது?’ எவனுக்கு இவ்வாத்துமாக்கள் சரீரமாய் இருக்கின்றன?’ )என்கிறபடியே, தான் இரண்டற்கும் தாரகனாய், நியாமகனாய், சேஷியாய் நின்று நடத்திக் கொண்டு போரும்

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –
1-1-10-

பரந்து குளிர்ந்த கடலில் ஜல பரமாணுக்கள் தோறும் -சதுர்தச புவநாத்மகமான அண்ட அவகாசத்திலே ஒரு ஏகாகி வர்த்திக்குமா போலே அசங்குசிதமாக வியாபித்து இருக்கும்-பூத கார்யங்களில் அதி ஷூத்ரமான சரீர சரீரிகளிலும் உண்டான வியாப்தி சொல்லுகிறது –அதி ஷூத்ர சரீரங்களிலும்-தத் அந்தர்வர்த்திகளாய் ஸ்வயம் பிரகாசமான ஆத்மாக்கள் தோறும்-அன்யைரத்ருஷ்டனாய்-இப்படி சமஸ்த வஸ்துக்களிலும் வியாபித்து இருக்கும்-இவற்றை எல்லாவற்றையும் தன் திரு வயிற்றிலே வைத்து உபகரித்தவன்-இப்படி த்ருட பிரமாண சித்தன்-இப்படி எல்லாவற்றையும் தன் திரு வயிற்றிலே வைத்து உபகரித்தவன் கிடீர் பரமாணுக்கள் தோறும் வியாபித்து இருக்கிறான்

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே
 –1-1-6-

சகல சேதன அசேதனங்களுடைய சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும்-தத் அதீநைகள்-நிவ்ருத்தி தத் அதீநை யாவது என்-ஏறிட்ட கட்டி விழும் போது ஒரு நியாமகர் வேணுமோ என்னில் -வேணும் – ஸ்வர்க்கத்தின் நின்றும் விழுகிற த்ரிசங்குவுக்குத் தன்னால் முடிய விழ ஒண்ணாமை யாலே-அநேக பிரகாரன் ஆகையாலே ஒரு பிரகாரத்தையே சொல்லி இது இப்படி என்று ஒரு நாளும் பரிச்சேதிக்க அரியவர்-என்றும் ஒக்க இப்படி அபரிச்சேத்யதை ஸ்வ பாவராய் இருக்கை-இப்படி ஸூ த்ருட பிரமாண சித்தர்-எம் என்று தமக்கு இவ்வர்த்தம் பிரகாசிக்கையாலே ஸ்வ லாபத்தைச் சொல்கிறது 

———–
4-சௌலப்ய

சஷூர் விஷயத்தை யாதல் -அத்தோடு சத்ருசத்தை யாதல் யாயிற்று பஜிக்கலாவது –அதீந்த்ரியனான சர்வேஸ்வரனை அதி ஷூத்ரரான எங்களுக்குப் பஜிக்கப் போமோ – என்னில் சாஸ்த்ரங்களில் -சமஸ்த கல்யாண குணாத் மகன் –சர்வாதிகன் -பரம போக்யன் -பரம உதாரன் -என்று கேட்ட மாத்ரத்திலே ருசி பிறந்தவர்களுக்கு கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி க்ருபாதி குணங்களை பிரேரிக்க அஜகத் ஸ்வபாவனாய்க் கொண்டு சங்கல்ப்பத்தாலே அப்ராக்ருத திவ்ய தேஹத்தை இதர சஜாதீயமாக்கிக் கொண்டு சாது பரித்ராண துஷ்க்ருத் விநாச அர்த்தமாக ராம கிருஷ்ணாதி ரூபத்தாலே அவதரித்து ஸூலபனாம் ஆகையாலே ஆஸ்ரயிக்கைக்கு ஒரு தட்டு இல்லை -ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
 –1-3-1-

பெறற்கு அரிய ஸ்வாமிகள்-ஸ்ரீ யபதி என்கை இறே சர்வாதிகத்வத்துக்கு லஷணம்-இந்த மேன்மையும் நீர்மையும் தமக்கு பிரகாசித்து இருக்கிற படி –அவாப்த சமஸ்த காமன் தனக்கு ஒரு குறை யுண்டாய் -அது நேர் கொடு நேர் கிடையாமையாலே -களவிலே இழிந்து
அது தலைக் கட்டப் பெறாதே வாயது கையதாக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலை-உரல் மூச்சு விடிலும் தான் மூச்சு விடாதே அசிதவ்யாவ்ருத்தனாய் இருந்த படி –-எதிர் சூழல் புக்கு -என்றும் -என்னில் முன்னம் பாரித்து-சேதனர்களுடைய அத்வேஷ மாத்திரமே தேடித் திரிபவன் -சுக்ரீவம் நாதம் இச்சதி –கிம் கார்யம் ஸீதாயா மம -என்று இருக்குமவன்-ஆஸ்ரிதற்கு ஸர்வ ஸூலபனாய்-இன்னார் தூது என நின்று சாரத்யாதி இழி தொழில்கள் செய்து நின்றவனே பரத்வம் தோன்ற விஸ்வரூபம் காட்டி அருளினவன் –

—————
5-சாம்ய

ஸமோஹம் ஸர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய–
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் —৷৷9.29৷৷

நான் பலவகைப் பட்டு இருக்கும் ஜீவ ராசிகள் விஷயத்திலும் -என்னை ஆஸ்ரயிக்கும் விஷயத்தில் சமமாய் இருப்பவன்-எனக்குத் தாழ்ந்தவன் என்னும் காரணத்தால் ஆஸ்ரயிக்கத் தகாதவன் எவனும் இல்லை-எவர்களோயெனில் -என்னிடம் பக்தியையே பலனாகக் கொண்டு அன்பு செய்கிறார்களோ என்னிடத்தில் அவர்கள் வாழ்கிறார்கள் –
அவர்கள் இடத்தில் நானும் வாழ்கிறேன் -என்னிலும் உயர்ந்தவர்கள் இடத்தில் போல் பரிமாறுகிறேன்-தேவ மனுஷ திரியக் ஜங்கமங்கள் சர்வருக்கும் சமம் -யாரையும் த்வேஷிக்காதவன் –

பற்றிலன் யீசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –
1-2-6-

பற்று -உண்டு சங்கம் –அத்தை வாசஸ் ஸ்தானமாக யுடையவன் –பற்று இலான்
பற்றிலே உள்ளான் -என்னவுமாம் -சங்க ஸ்வ பாவன் -என்றபடி -ஈஸ்வரனும்
ஈஸ்வரத்வத்தை தவிர்க்க ஒண்ணாமை யாலே கிடக்கும் அத்தனை இஸ் சங்கம் குணம் ஆகைக்காகக் கிடக்கிறது பயப்படுகைக்கு உடல் அன்று-ஆஸ்ரயணீத்வே சர்வ சமானாய் இருக்கை-நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகன் ஆனவன் நித்ய சம்சாரிகளான நம்மை அங்கீ கரிக்குமோ என்னில் இன்று ஆஸ்ரயித்த நாம் ஒரு தலையானால் நித்ய ஆஸ்ரிதர் பக்கல் சங்கத்தை விட்டு நம்மையே தாரகாதிகளாக நினைத்து இருப்பான் ஒருவன் –நித்ய ஆஸ்ரிதரை யுடையனாய் இருந்தானே யாகிலும் இன்று ஆஸ்ரயித்த நாம் ஒரு தலையானால் அவர்கள் பக்கல் சங்கத்தை யுடையவன் அல்லன்–நாமே தனக்கு தாரகாதிகளாக நினைத்து இருக்கும்-நீயும் அவன் பக்கலிலே சங்க ஸ்வ பாவனாய்-அவனுடைய முற்றிலும் அடங்கு – எல்லா சேஷ வ்ருத்தியிலும் அந்வயி-நீயும் புறம்புள்ள சங்கத்தைத் தவிர்த்து – நாசகரமான நித்ய சம்சாரத்தில் சங்கத்தை விட்டு என்கிறது
அவன் தனக்கு நித்ய போக்யமான நித்ய விபூதியில் சங்கத்தை யன்றோ விடுகிறது-அவனாகிற எல்லாவற்றிலும் அடங்கு – அவனே தாரகாதிகளும் சர்வவித பந்துவும் எல்லாவுமாகப் பற்று- மாதா மிதா ப்ராதா —-வா ஸூ தேவஸ் சர்வம் – உண்ணும் சோறு பருகும் நீர்-சேலேய் கண்ணியர்-

—————-

6-அஹங்கார இந்திரிய தோஷ பல-(அஹங்கார தோஷ)-(இந்திரிய பல)

ப்ரக்ருதே க்ரியமாணாநி குணை கர்மாணி ஸர்வஸ-
அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே
—৷৷3.27৷৷

தேகமே ஆத்மா எனும் அஹங்காரத்தால் மறைக்கப்பட்ட ஆத்ம ஸ்வரூபத்தை உடையவன்
பிரக்ருதியைச் சேர்ந்த சத்வ ரஜஸ் தமஸ்ஸூக்களாகிற குணங்களால் பல வகைகளில் செய்யப்படும் கர்மங்களைக் குறித்து -நானே செய்கிறேன் -என்று மயங்குகிறான் 

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே
–1-2-3-

அனர்த்த கரமான அஹங்கார மமகாரங்களை-நான் என்னது -என்னும் அர்த்தத்தை பிறர்க்கு உபதேசிக்கப் புக்கால் -நீங்கள் என்றும் உங்களது என்றும் இறே சொல்லுவது-அதாகிறது -அனாத்மயாத்மா புத்தியும் அஸ்வே ஸ்வ த்வய புத்தியும்-நான் என்னது — என்னில் நா வேம் இறே-இவற்றை சவாசனமாகப் போக்கி-இவை நேராக விடும் போது பகவத் விஷயத்தைப் பற்றி விட வேணும்-அவனைப் பற்றும் போது இவற்றை விட்டு அல்லது பற்ற ஒண்ணாது

யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித.–
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந—৷৷2.60৷৷

குந்தீ புத்திரனே அறிவாளியாயும் -ஆத்மாவைக் காண்பதற்கு முயற்சி செய்பவனாயும் இருந்த போதிலும் மனிதனுடைய வலிமையான இந்திரியங்கள் நெஞ்சை வலிந்து இழுக்கின்றன-இந்திரியங்கள் அடக்கி ஆத்ம தர்சனம் -என்கிறான் — பிரத்யனம் செய்தாலும் — இந்திரியங்கள் பலமானவை -மனசை பலாத்காரமாக இழுக்கும் –

விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.
–7-1-6-

அயர்வறும் அமரர்கள் அதிபதிக்கு அவர்களோடே கூட அடிமை செய்ய ருசி உடையாரையும் விஷயங்களில் மூட்டி நலியும் இந்திரியங்கள் இவை -விரக்தனான விச்வாமித்ரனையும் கைங்கர்ய ருசி உடைய மஹாராஜரையும் கூட நலிந்து இறே -ஞானத்தால் மேம்பட்டவனான விசுவாமித்திரன் அகப்பட ஒரு விஷயத்தின் காற்கடையிலே கிடந்தான் அன்றோ?
பெருமாளுக்குப் பரிவரன மஹாராஜர், பெருமாளை மின்னுக்கும் இடிக்கும் இரையாக நான்கு மாதங்கள் விட்டுவைத்து இந்திரியங்களுக்குப் பரவசப்பட்டவராய் அல்வழி என்று நினைத்திலர் அன்றோ? 

—————-

7-மன பிராதான்ய

சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்—-
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸு துஷ்கரம்
–৷৷6.34৷৷

மனமானது இயல்வாகவே நிலை நில்லாததாகவும் – வலிமை உடையதாகவும் -அதனாலே ப்ரமாதி-கலங்க வைப்பதாகவும் -விபரீத விஷயங்களில் இழுப்பதில் உறுதியானதாகவும் உள்ளது-அதை அடக்குவது புயல் காற்றை அடக்குவது போலே மிகவும் அரிதாய் செய்ய இயலாதாகவே நான் நினைக்கிறேன்

ஸ்ரீ பகவாநுவாச–
அஸம்ஸயம் மஹா பாஹோ மநோ துர் நிக்ரஹம் சலம் —
அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே
—৷৷6.35৷৷

பகவான் கூறினார் -நீண்ட கைகளை உடையவனே -மனம் அடக்க அரிது – அலை பாய்வது என்பதில் ஐயம் இல்லை -குந்தீ புத்திரனே – அதனைப் பயிற்சியினாலும் வைராக்யத்தாலும் கட்டுப்படுத்தலாம் –

என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே
–5-1-4-

பரமை காந்திகளே போலே -உன்னை விட்டு என்ன பிரயோஜனத்தை கொள்வன்-என்று சொல்லா நின்று வைத்து-வலிய களவாவது -சோரேணாத் மாப ஹாரிணா-என்கிறபடியே பகவத் சேஷமான ஆத்மவஸ்துவை அபஹரிக்கை-த்ரவ்யங்களில் தலையான வஸ்து -ஆத்மவஸ்து -உடையவன் சர்வாதிகன் -அகவாய் இப்படி இருக்கையாலே யுக்தி மாத்ரமான ஆனு கூல்யம் கொண்டு என் விரோதியைப் போக்க ஷமன் அல்லேன் என்கிறார்-உன் வடிவைக் காட்டி மனசை உன் பக்கலிலே சேர்த்து கொள்ள வேணும் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரியான வடிவே வேண்டாவோ விஷயங்களில் துவக்கு அறுக்கைக்கும்உன் பக்கல் பிரவணம் ஆக்குகைக்கும் –இதுக்கு அடி பிரகிருதி சம்பந்தம் -என்று அனுசந்தித்து -இந்த விரோதியை போக்குகைக்கு சாதன அனுஷ்டானம் பண்ண -உன் பக்கல் உண்டான பிரேம அதிசயத்தாலே நான் மாட்டு கிறிலேன்–இப்படி நீ என்றால் உடை குலைப் படாத படி உன்பக்கலிலே நெருங்கும் படி சேர்த்து-நீயே இத்தை அறுத்து தந்து அருள வேணும் 

————–

8-கரண நியமன

தாநி ஸர்வாணி ஸம் யம்ய யுக்த ஆஸீத மத்பர–
வஸே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
—-৷৷2.61৷৷

எல்லா இந்த்ரியங்களையும் அடக்கி என்னிடமே ஈடுபட்டவனாய் மனத்தில் ஒருமைப் பாட்டுடன் வாழக் கடவன் –எவனுக்கு இந்திரியங்கள் வசப் பட்டுள்ளனவோ அவனுக்கு அறிவு நிலை நிற்கிறது அன்றோ –குறுக்கு வழியை சொல்லி – இந்திரியங்களை கொண்டு திரு மேனியில் வைத்து -ஸூ பாஸ்ரயம் -தானே அடங்கும் –

தத்ரைகாக்ரம் மந க்ருத்வா யதசித் தேந்த்ரிய க்ரிய—-
உபவிஸ் யாஸநே யுஞ்ஜ்யாத் யோகம் ஆத்ம விஸூத்தயே–
৷৷6.12৷৷

பரிசுத்தமான இடத்தில் தனக்கு -மரம் முதலியவற்றால் செய்யப் பெற்று -நிலையாய் இருப்பதாய் – மிக உயர்ந்ததாய் இராததாய் -மிகத் தாழ்ந்ததாயும் இராததாய் -தர்ப்பம் மான் தோல் பட்டுத்துணி ஆகியவற்றால் மேல் மேலே விரிக்கப் பெற்றதான ஆசனத்தை உறுதியாக நிலை நிறுத்தி அவ் வாசனத்தில் உட்கார்ந்து மனத்தை ஒரு முகப்படுத்தி சித்த கிரியைகளையும் இந்திரிய கிரியைகளையும் பட்டி மேயாதபடி அடக்கியவனாய் – சம்சார பந்தம் நீங்குவதற்காக ஆத்ம தர்சனத்தைச் செய்யக் கடவன் –

ஸர்வ த்வாராணி ஸம் யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச.–
மூர்த் ந்யாதா யாத்மந ப்ராணமாஸ்திதோ -யோக தாரணாம்—৷৷8.12৷৷

ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந் மாம் அநு ஸ்மரந்.–
யம் ப்ரயாதி த்யஜந் தேஹம் ஸ யாதி பரமாம் கதிம்—৷৷8.13৷৷

அறிவு வெளிப்படும் த்வாரங்களாய் இருக்கும் எல்லா ஞான இந்த்ரியங்களையும் -தமது தொழிலைச் செய்யாத படி –அடக்கி -மனத்தை ஹ்ருதய கமலத்தில் இருக்கும் அக்ஷர புருஷனான என் இடத்திலே அசையாத நிலையை அடைந்தவனாய் -ப்ரஹ்மம் ஆகிற எனக்கு வாசகமான பிரணவம் ஆகிற முக்கிய அக்ஷரத்தை சொல்ல நிற்பவனாய் -அதற்குப் பொருளான என்னை அநுஸந்தியா நிற்பவனாய் – தன்னுடைய பிராண வாயுவை தனது தலையிலே -தலையில் இருக்கும் ஸூஷ்ம்நா நாடி -வழியாகப் பிரவேசிக்கச் செய்து -சரீரத்தை விடுகின்றவன் எவனோ அவன் சம்சாரத்திற்கு திரும்பி வருதல் இல்லாத
ப்ராப்யமான ப்ரக்ருதி வியுக்தமான தன் ஆத்ம ஸ்வரூபத்தை அடைகிறான் –

உள்ளம் உரை செயல் உள்ள விம்மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே –1-2-8-

சந்நிஹதங்களும் விதேயங்களுமான இம்மூன்றையும் இவற்றுக்கு அவ்வருகே ஓன்று தேட வேண்டா -இவையே அமையும்-ஈச்வராய நிவேதிதும் -என்று நிரூபித்தால் பகவத் விஷயத்தில் சமர்ப்பிக்கைக்காக வாய் இருக்கும்-அவற்றுக்கு உண்டான பாஹ்ய விஷய ப்ராவண்யத்தைத் தவிர்த்து-வகுத்த விஷயத்தில் இவற்றையும் கொண்டு புக்கு அடிமை செய்யப் பார்-

———–
9-ஸூஹ்ருதி பேத

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா ஸுக்ருதிநோர்ஜுந.–
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப৷৷—7.16৷৷

பரத குலத்து உதித்தவர்களில் தலைவனான அர்ஜுனன் -செல்வம் இழந்து வருந்துபவனும் –புதிதாகச் செல்வத்தைப் பெற விரும்புவனும் -ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்க விரும்புவனும் –(அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்.–
ஜீவ பூதாம் மஹா பாஹோ யயேதம் தார்யதே ஜகத்৷৷–7.5৷৷-தடக் கையனே இந்த அசேதன பிரகிருதி தாழ்ந்தது -இதைக் காட்டிலும் மிக வேறுபட்டதாய் –ஜீவன் என்று பெயர் பெற்றதாய் -முன் கூறிய அசேதன ப்ரக்ருதியைக் காட்டிலும் மேலானதாக
ப்ரக்ருதியை என்னுடையது என்று அறிவாயாக –)ஸ்வரூப ஞானம் உடையவனுமாகிய புண்ய சாலிகளான நாலு வகைப்பட்ட ஜனங்கள் என்னை உபாசிக்கிறார்கள்

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.
–4-1-1-

ராஜ்யத்தை இழந்து -பிக்ஷை ஒழிய ஜீவனம் இன்றிக்கே பகலில் புறப்பட லஜ்ஜித்து இருளிலே புறப்பட்டால் இருள் செறிவு போலே கிடந்த நாய்களின் வாயிலே காலை இடுகையாலே அவற்றால் கவ்வப்பட்ட காலை உடையவர்-முன்பு ஸார்வ பவ்மன் என்று சொல்லுமதுவும் போய் நாய் கவர்ந்த காளான் என்று நிரூபகமாய் –முன்பு ராஜாக்களுக்கு ராஜ்யம் வழங்கும் –இன்று பிக்ஷை தனக்குத் தேட்டமாய் இருக்கும் –முன்பு ராஜாக்கள் ரத்நாதிகளை பச்சையாகக் கொண்டு வந்தால் அநாதரித்து இருக்குமவனுக்கு பிக்ஷை திட்டமான படி முன்பு ராஜாக்கள் கொண்டு வந்த பச்சையை ஆள் இட்டு இ றே வாங்குவது
இப்போது இவன் அபேக்ஷையே போக்கி இடுவார் இல்லை ராஜ்ய ஸ்ரீ இங்கனே யானபின்பு-ஸ்ரீயபதியை ஆஸ்ரயிங்கோள்-ரக்ஷகன் என்கிற ப்ரபத்தியே அமையும் -ப்ரபத்திக்கும் இதுவே அர்த்தம் என்கிறார் நினைவோடு வ்யாப்தமாயிற்று உஜ்ஜீவனம் இருப்பது
அனர்த்தம் எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே எல்லாரையும் அபேக்ஷிக்கிறார் –

குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும், ஆங்கு அவனை இல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.
–4-1-8-

பலத்தில் நோக்கம் இல்லாதவனாய்த் தான தர்மங்களைச்செய்து எம்பெருமானையே பலமாகப் பற்றாமல், பலத்தில் நோக்கம் உள்ளவனாய்த் தான தர்மங்களைச் செய்து சுவர்க்கம் முதலான உலகங்களை விரும்பினால் அவை நிலை நில்லா,’

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.
–4-1-10-

ஐஸ்வர்யம் நிலை நில்லாது ஆகில் நிலை நின்ற புருஷார்த்தமான கைவல்யத்தை பற்றுகிறோம் என்ன – கைவல்ய புருஷார்த்தம் துஸ் சாதம் என்றும் -அது தான் அபுருஷார்த்தம் என்றும் ப்ரதிபாதிக்கிறார் –

திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-
செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ. –4-1-2-
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–4-1-3-
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ.–4-1-4-
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.–4-1-5-
கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–4-1-6-
கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.–4-1-7-
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–4-1-8-
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. –4-1-9-
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-
இவை பத்தும்அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-

————-

10-தேவாஸூர விபாக-

தம்போ தர்போபி மாநஸ்ச க்ரோத பாருஷ்யமேவ ச–
அஜ்ஞாநம் சாபி ஜாதஸ்ய பார்த்த ஸம்பதமாஸுரீம்--৷৷16.4৷

குந்தீ புத்திரனே -பகவத் ஆஜ்ஜையை மீறி நடக்கும் அசுரர்க்கு உரிய செல்வத்தை உடையவனுக்கு-தார்மிகன் என்னும் புகழைப் பெற்ற தர்மத்தை அனுஷ்டிப்பது – சப்தாதி விஷயங்களை அனுபவிப்பதால் உண்டாகும் செருக்கு –அதிகமான கர்வம் –இனி யார் உளர் மாறு -இல்லை எனக்கு எதிர் -போன்றவை மானம் உத்தேச்யம் – பிறரைத் துன்புறுத்தும் சினம்- நல்லோர்களை வெறுப்படையச் செய்யும் கடுமை -(அங்கே தலை இருப்பதே கருமம் கண்டாய் என்பது உபாதேயம் தானே )தத்வ விஷயத்திலும் செய்யத்தக்கது அல்லது தகாதது விஷயத்திலும் அறிவின்மை -ஆகிய இக்குணங்கள் அமைகின்றன –

த்வௌ பூத ஸர்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸுர ஏவ ச–
தைவோ விஸ்தரஸ ப்ரோக்த ஆஸுரம் பார்த்த மே ஸ்ருணு--৷৷16.6৷৷

குந்தீ புத்திரனே இந்த கர்ம லோகத்தில் ஜீவ ராசிகளின் உத்பத்தி தேவர்க்கு உரியது -அஸூரர்க்கு உரியது என்று இருவகைப்பட்டது -தேவர்க்கு உரிய ஆசாரம் விரிவாகச் சொல்லப்பட்டது –அஸூ ரர்க்கு உரிய ஆசாரத்தை என்னிடம் இருந்து கேட்பாயாக
பகவத் ஆணை படி நடப்பவர் தேவர்கள் -மீறுபவர்கள் அசுரர்கள் -தன்மை பற்றி சொல்கிறேன் –

வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே
.–6-3-8-

தேவ ஜாதிக்கு தன்னை அழிய மாறி ரக்ஷிக்கும் புகலாய்-தத் பிரதி கூலர்க்கு -வெங்கூற்றம் –அந்தகன் தண்ணீர் என்னும் படியான கூற்றமாய்-தன் பாதச் சாயையிலே அநந்ய பிரயோஜனரை வைத்தும் -அல்லாதாரை பஹிஷ்கரித்தும் –தக்ஷிணா திக் க்ருதா யேன சரண்யா புண்ய கர்மணா -என்கிறபடியே தெற்குத் திக்குக்கு சரணமான-எனக்கு புகலானவன்–எனக்கு பவ்யனானவன்-என்னை அடிமை கொண்டு போகிறவன் -எனக்கு உபகாரகன் –

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே
–10-7-5-

விபரீதஸ்ததா அ ஸூ ர -என்கிறபடியே விபரீதரான அஸூ ரர்கள் இஸ் ஸம்ருத்தி பொறுக்க மாட்டாமையாலே முடியவும் –கிட்டக் கடவோம் அல்லோம் -என்று இருக்கும் அஸூர வர்க்கம் —விஷ்ணு பக்தி பரோ தேவ -என்கிறபடியே அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்கள் -இதுவே ஜீவனமாக சம்ருத்தமாகவும் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றார் இறே

———

11-விபூதி யோக

ஸ்ரீ பகவாநுவாச
ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யாஹ் யாத்ம விபூதய–(விபூதிர் ஆத்மநஸ் ஸூபா )
ப்ராதாந்யத குரு ஸ்ரேஷ்ட நாஸ்த் யந்தோ விஸ்தரஸ்ய மே–—৷৷10.19৷৷

குரு குலத் தலைவனே -என்னுடைய மங்களமான செல்வங்களைக் குறிப்பாகச் சிறப்புடையவற்றை உனக்குச் சொல்லுகிறேன் கேளாய் -எனது செல்வங்களின் விரிவுக்கு முடிவு இல்லை ப்ராதான்யமான -முக்கியமானவற்றை சொல்கிறேன் -அனைத்தையும் சொல்லி விவரிக்க முடியாதே — ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் -சங்கல்பத்தாலே செய்து அருளி அனைவரையும் நியமித்து -அன்றோ இருப்பவன் –

ஆதித்யாநா மஹம் விஷ்ணுர் ஜ்யோதிஷாம் ரவி ரம்ஸூமாந்.—–
மரீசிர் மருதா மஸ்மி நக்ஷத்ராணா மஹம் ஸஸீ-–৷৷10.21৷৷

துவாதச ஆதித்யர்களுக்குள் சிறந்தவனாக விஷ்ணு என்னும் பெயருடைய ஆதித்யன் நானே –தேஜோ பதார்த்தகளுக்குள் கிரணங்களை யுடைய ஸூர்யனாகிற ஜோதி நானே
49-மருத்துக்களுக்குள் உயர்ந்த மருத்தான மரீசியாக நான்-மரீசி ரிஷி வேறே –
நக்ஷத்திரங்களுக்குத் தலைவனான சந்திரன் நானே

வேதாநாம் ஸாமவேதோஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ—
இந்த்ரியாணாம் மநஷ்சாஸ்மி பூதாநாமஸ்மி சேதநா—-৷৷10.22৷৷

வேதங்களுக்கும் சிறந்ததாக சாம வேதம் ஆகிறேன்-தேவைதைகளுக்குள் தலை சிறந்தவனாக இந்திரன் ஆகிறேன்-

யத்யத் விபூதி மத் ஸத்த்வம் ஸ்ரீ மதூர் ஜிதமேவ வா.—
தத்ததே வாவகச்ச த்வம் மம தேஜோம் ஸ ஸம் பவம்--৷৷10.41৷৷

எந்த எந்த ஜீவராசி தன்னால் நியமிக்கப்படும் செல்வங்களை உடையதாய் உள்ளதோ -ஒளி உடையதாய் உள்ளதோ மங்களமான கார்யங்களைத் தொடங்குவதில் -சோர்வடையாமல் -ஊற்றமுடையதாய் விளங்குகிறதோ(மூன்று விசேஷணங்கள் ) அந்த அந்த ஜீவராசியை அளப்பரிய சக்தி யுள்ள என்னுடைய-தேஜோம்ऽஸ- நியமன சக்தியின்(பராபிபவன சாமர்த்தியம் -ஸ்வரூப குணம் ) ஒரு பகுதியினால் உண்டானது என்றே அறிவாயாக–பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் –உபய விபூதிக்கும் செங்கோலுடைய எம்பெருமான் அன்றோ

அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந.—
விஷ்டப்யாஹ மிதம் க்ருத்ஸ்நம் ஏகாம் ஸேந ஸ்திதோ ஜகத்-—৷৷10.42৷৷

அன்றிக்கே அர்ஜுனா பலவிதமாகச் சொல்லப்பட்ட இந்த ஞானத்தினால் உனக்கு என்ன பயன் நான் இவ்வுலகு முழுவதையும் என் சக்தியின் ஒரு சிறு பகுதியால் தரித்து நிற்கிறேன்
அதி அல்ப ஏக தேச சங்கல்ப சக்தியால் -ஸமஸ்த வஸ்துக்களையும் -வஹிக்கிறேன்—

புகழும் நல் ஒருவன் என்கோ!-(3-4)பிரவேசம்-தாம் முன்பு பிரார்த்தித்த அடிமை கொள்ளுகைக்காக எம்பெருமான் தன்னுடைய சர்வாத்ம பாவத்தை காட்டி அருளக் கண்டு பகவத் குணங்களோ பாதி விபூதியும் ததீயத்வ ஆகாரேண உத்தேச்யம் ஆகையால் பூதங்களையும் பவ்திகங்களையும்அசாதாரண விக்ரகத்தையும் மாணிக்யாதி ஸ்ப்ருஹணீய பதார்த்தங்களையும் -போக்யமான ரஸ்யமான பதார்த்தங்களையும் செவிக்கு இனிய காநாதி சப்த ராசிகளையும் மோஷாதி புருஷார்த்தங்களையும் ஜகத்துக்கு பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளையும் ஜகத்துக்கு எல்லாம் காரணமான ப்ரக்ருதி புருஷர்களை விபூதியாக உடையனாய் அந்த சரீர பூதமான விபூதியில் ஆத்ம தயா வியாபித்து ததகத தோஷை ரசம்ஸ்ப்ருஷ்டனான மாத்திரம் அன்றிக்கே ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள எம்பெருமானை -இவனுக்கு தகுதியாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து பகவத் குண அனுசந்தானம் பண்ணினால்-கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் என்னும் கணக்கால் காயிகமான அடிமையில் ஷமர் இல்லாமையாலும் கோவை வாயாளில் படியே எம்பெருமான் இவர் தாம் பேசின பேச்சை எல்லா அடிமையுமாக கொள்ளுவான் ஒருவன் ஆகையாலும் விபூதி வாசகமான சப்தம் விபூதி முகத்தால் அவனுக்கு பிரதிபாதகம் ஆகையாலும் விபூதி விஷயமான சப்தத்தோடு நாராயணாதி நாமங்களோடு வாசி அற்று இருக்கிற படியால் அவற்றைச் சொல்லும் சொல்லாலே சர்வ சப்தங்களாலும் அவனைச் சொல்லி –வாசகமான அடிமையில் பிரவ்ருத்தர் ஆகிறார் –அவனுடைய சர்வ பிரகார விசிஷ்டத்வத்தையும் அனுசந்தித்து
1-பூத பவ்திகாத்மக சகல பிரகாரத்வத்தையும்
2-பூத கார்ய விசேஷ பிரகாரத்வத்தையும்
3-அசாதாரண விக்ரஹ யோகத்தையும்
4-ரத்நாதி வி லக்ஷண பதார்த்த பிரகாரத்வத்தையும்
5-சரசமான போக்ய வஸ்து பிரகாரத்வத்தையும்
6-வேத வைதிக ரூபமான காந பர்யந்த சப்த ராசி பிரகாரத்வத்தையும்
7-போக மோக்ஷ ரூபமான புருஷார்த்த பிரகாரத்வத்தையும்
8-லோக பிரதானரான ப்ரஹ்மாதி சரீரகத்வத்தையும்
9-இப்படி ஸமஸ்த சேதன அசேதன பிரகாரத்வத்தையும்
10-தத் கத தோஷைர சம்ஸ்ப்ருஷ்டத்வத்தையும் அனுசந்தித்து
பிரகார வாசக சப்தங்களாலே பிரகாரியான தன்னைச் சொல்லும்படியான அவிநா பாவத்தை பிரகாசிப்பிக்கையாலே அவனுக்கு பிரகார தயா சேஷ பூதராய் இருக்கிற இவர்
பிரகார வாசக சப்தங்களும் அசாதாரண திவ்ய நாமங்களோ பாதி அங்குத்தைக்கு வாசகமாகையாலே தத் தத் சப்தங்களாலே தம்முடைய ஸ்வரூப அனுரூபமான வாசிக கைங்கர்யம் பண்ணுகிறார் –

6-3-நல்குரவும் செல்வும் -ப்ரவேஸம்--நாம் சேராத வற்றை எல்லாம் சேர்த்து ஆள வல்லோம் காணும் -என்று தன் விருத்த விபூதி கத்வத்தைக் காட்டக் கண்டு –முன்பு பிரிவாலே வந்த அவசாதத்துக்கு உதவிற்றிலன் -என்று வெறுத்தவர் -சர்வ கதனாய்-தத்கத தோஷ ரசம் ஸ்ப்ருஷ்டனாய் ஸமஸ்த கல்யாண குணாத்மகனான இவனே நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் மற்றும் உள்ள சர்வ வித பந்துவும் என்று அவன் பெருமையை அனுபவித்து ப்ரீதராய் கொண்டு பேசுகிறார்-நித்ய சம்சாரியாய் போனவன்றும் மயர்வற மதி நலத்தை நிர்ஹேதுகமாக அருளி என்னை பொருந்த வீட்டுக் கொண்டான்-வள வேழ் உலகில் அயோக்யதையை அனுசந்தித்து -அகலப் புக-தன் நீர்மையைக் காட்டி சேர்த்துக் கொண்டான்-இப்போது பிரணய ரோஷத்தாலே அகன்று முடிய புக -தன்னுடைய சர்வ சக்தி யோகத்தாலே சேர விட்டுக் கொண்டான்-அவை போல் அன்று இ றே பிரணய ரோஷம் -அகல ஒண்ணாதே அணுக ஒண்ணாதே இருப்பது ஓன்று இ றே -இத்தால் சொல்லிற்று ஆயிற்று–அகன்று முடிந்து போவோம் என்பாரையும் உடையவன் முடிய விட்டுக் கொடான்-என்கிறது –முதல் திருவாய் மொழியிலே பரத்வத்தை அனுசந்தித்து -பத்துடை அடியவரிலே ஸுலப்யத்தை அனுசந்தித்தார் –இங்கு மின்னிடை மடவாரிலே ஸுலப்யத்தை அனுசந்தித்து இது திருவாய் மொழியிலே பரத்வத்தை அனுசந்திக்கிறார்- இப்படி கண் அழிவு அற்ற மேன்மையும் நீர்மையும் உள்ளது இவனுக்கே என்று அனுசந்தித்து ப்ரீதி பிரகர்ஷத்தாலே பேசுகிறார் இப்படி விமுகரான தம்மை அபி முகராம் படி பண்ணிக் கொண்ட விருத்த ஆகார பிரசாங்கத்தாலே பரஸ்பர விருத்தமான பதார்த்தங்களைத் தனக்கு விபூதியாக படிப்பித்துக் கொண்டு நிற்க வல்ல ஈஸ்வரனுடைய அகடி கடநா சக்தியை அப ரோஷித்துஅதுக்கு அடியான ஸர்வ வ்யாபகத்வத்தையும்
இதர விசஜாதீயதையையும்
உஜ்ஜ்வல கீர்த்தித்தவத்தையும்
அதிசயித கிருபா யோகத்தையும்
லீலா விபூதி நிர்வாஹகத்வத்தையும்
ஆஸ்ரித அநு பாவ்யமான உஜ்ஜ்வல்யத்தையும்
ஸர்வ லோக சரண்யத்வத்தையும்
ஆஸ்ரித பவ்யத்தையையும்
நிருபம உபகாரகத்வத்தையும்
அசாதாரண ரக்ஷகத்வத்தையும்
அநு சந்தித்து -இவ்வோ ஆகாரங்களாலே அகடி தங்களை கடிப்பிக்க வல்லவன் –
நித்ய சம்சாரிகளான நம்மையும் நித்ய ஸூரி களோடு சேர்க்க வல்லவன் என்று
அவனுடைய பல பிரதத்வ சக்தியை அநு சந்தித்து தாம் கண்டபடியே உபதேசித்து அருளுகிறார்-

7-8-மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்-ப்ரவேஸம்-தமக்கு அவனால் அல்லாது செல்லாத படியும் அவனுக்கு தம் ஆர்த்தி தீர்க்க சக்தி யுண்டாய் இருக்கச் செய் தேயும் தம் அபேக்ஷிதம் செய்யாமைக்கு அடி தம்மை இங்கே வைத்து தான் நினைத்த கார்யம் தலைக் கட்டுவானாக நினைத்தது என்றும் அறியாதே எனக்கு இத்தோடு பொருந்தாமை யுண்டாய் உன்னை ஒழியச் செல்லாமை யுண்டாய் இருக்க -முடியும் விரகு இன்றியிலே உன்னைப் பெற்று தரிக்கவும் பெறாதே இங்கே வைத்த ஆச்சர்யம் இருந்த படி என் என்ன -அவனும் ஒன்றைக் கேட்க ஒன்றை பரிஹரிப்பாரை போலே-இவ்வளவோ என் படி -என்று தன் விசித்திர விபூதி த்வத்தை காட்டி அருளக் கண்டு -இது விஸ்மயமாய் இருந்ததீ -இது இருந்த படி என் -என்று யமுனைக் கரையிலே -ஜெகதே தன்மஹாச்சர்யம் ரூபம் யஸ்ய மஹாத்மன தேனாச்சார்ய வரேணாஹம் பவதா கிருஷ்ண சங்கத -என்று அக்ரூரன் ஆச்சர்யப் பட்டால் போலே -இவரும் அவனுடைய ஜகதாகாரதையை அனுசந்தித்து விஸ்மிதர் ஆகிறார் –கீழ் உருவு வெளிப்பாடான பிரகாசம் நடக்கச் செய்தே அனுபவம் பெறாதபடி நிரோதித்து ஆர்த்தியை அதிசயிப்பித்த வைசித்ரியம் கண்டவர் இந்த விசித்திர சக்தி யோகத்துக்கு ஹேது வானவனுடைய
ஆச்சர்யமாயுள்ள அர்த்தித்தவ ரூபத்தையும்
அபிமத சித்தியால் வந்த ஆதிக்யத்தையும்
அம்மேன்மை கிடக்கச் செய்தே உண்டான ஆஸ்ரித பவ்யதையையும்
உத்துங்க பவ்யதைகள் இரண்டுக்கும் ஸூ சகமான புண்டரீகாக்ஷத்வத்தையும்
அநந்ய ப்ரயோஜனர்க்கு அதிசயித போக்யனாம் படியையும்
சித்த பிராமகமான சேஷ்டிதாதிகளையும்
கர்மாத்யனுரூபமான துக்க ஜனகத்வத்தையும்
அதிசயித ஞானர்க்கும் அபோதகனார்ஹத்தையையும்
துரவபோதகத்வ ஹேதுவான ஸும்ஷ்ம்ய அதிசயத்தையும்
ஸூ த்ருட பிராமண ஸித்தமான ஸூஷ்மசித் அசித் பிரகாரத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனான நீ ஒன்றுக்கு ஓன்று ஒவ்வாத விசித்திர ஆகாரமான ஜகத்தை விபூதியாகக் கொண்டு நிற்கிற ஆச்சர்ய சக்தி யோகம் இருந்தபடி என் என்று புத்தி ஸந்நிஹிதனான ஈஸ்வரனுக்கு விண்ணப்பம் செய்து தம்முடைய விரோதி நிவ்ருத்தியில் பணி இல்லாமை நினைத்து ஸந்துஷ்டாராகிறார் –

புகழும் நல் ஒருவனில் சம்சயம் -நல்குரவிலே விருத்த விபூதி-மாயா வாமனன் ஆச்சார்ய விபூதி ஆகாரம்

————-

12-விஸ்வரூப தர்சன

ஸ்ரீ பகவாநுவாச-
பஸ்ய மே பார்த்த ரூபாணி ஸதஸோத ஸஹஸ்ரஸ–
நாநா விதாநி திவ்யாநி நாநா வர்ணா க்ருதீநி ச–৷৷11.5৷৷

ஸ்ரீ பகவான் கூறினான் -குந்தீ புத்திரனே -என்னுடைய எங்கும் உள்ள உருவங்களைக் காண்பாய் – மேலும் நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் இருப்பவையாய் பலவகைப் பட்டவையாய் ஆச்சர்யமானவையாய் பல நிறங்களையும் ஆகாரங்களை உடையவையான சரீரங்களையும் காண்பாய் -பார் -பஸ்ய –உடனே -பார்க்கும் படி ஆக்குகிறேன் என்றபடி –

அர்ஜுந உவாச-
பஸ்யாமி தேவாம்ஸ் தவ தேவ தேஹே–ஸர்வாம்ஸ் ததா பூத விஸேஷ ஸங்காந்.–
ப்ரஹ்மாணமீஸம் கமலாஸ நஸ்தம்-ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச தீப்தாந்-–৷৷11.15৷৷

அர்ஜுனன் கூறினான் -தேவனே உனது தேகத்தில் எல்லா தேவர்களையும் காண்கிறேன் –
அவ் வண்ணமே எல்லா பிராணி வகைகளின் கூட்டங்களையும் -பிரமனையும் – உந்தித் தாமரையில் வீற்று இருக்கும் பிரமனுக்கு அடங்கி நிற்கும் சிவனையும் எல்லா ரிஷிகளையும் ஒளி வீசும் பாம்புகளையும் காண்கிறேன் –

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்! ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.
–6-9-1-

ஜகதாகாரனாய் இருக்கிற படியை காட்டித் தந்தோம் இறே-என்ன அது போராது -அசாதாரணமாய் இருக்கிற வடிவைக் காண வேணும்-நீராய் நிலனாய் என்கிற அசித் பதார்த்தத்தோடு -சிவனாய் அயனாய் -என்கிற ஈஸ்வர அபிமானிகளோடு வாசி அற்று இருக்கிற தாயிற்று ஈஸ்வர பாரதந்தர்யம் -இப்படி ஜகதா காரதையைக் காட்டி தன்தோமேயென்ன-அது போராது -அசாதாரண விக்ரஹத்தை காட்ட வேணும் என்கிறார்-நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயன் ஆனாய்’என்று, இவர் தமக்கு ஈஸ்வர வியாபாரம் அடங்கலும் மனை அடைவே எண்ணுவாரைப் போலே மிக்க பிரகாசமாய் இருக்கிறபடி.-பரகத ஸ்வீகார நிஷ்டன் -வாராய் என்கிறார் –கீழ் தூது விடுகிறவற்றுக்கு அங்குப் போனால் சொல்லும் வார்த்தையாக இவள் சொன்ன பாசுரத்தால் வந்த-ஆர்த்த நாதத்தாலே ஸ்தாவர ஜங்கமாத்மகமான ஜகத்தெல்லாம் உருகா நிற்கையாலே தம்முடைய தசையை அறிவிக்கைக்கு ஷமர் இல்லை என்று பார்த்து தம்முடைய ஆர்த்த த்வனியாலே அழைத்துக் கொள்வாராக நினைக்க
தம்முடைய ஜகதாகாரத்தையைக் காட்டி யருளி -நீர் என் செய்யக் கூப்பிடுகிறீர் -என்று அருளிச் செய்ய ஜகத் சரீரியாய் இருக்கிற இந்த ஞான லாபத்தால் போராது -உன்னுடைய அசாதாரண விக்ரஹத்தை எனக்கு காட்டி அருள வேணும் என்று வைஸ்வரூப்யத்தைக் கண்ட அர்ஜுனன் -சதுர் புஜமாய் பிரசன்னமான வடிவைக் காண வேணும் என்று அர்த்தித்தால் போலே விடாய் எல்லாம் கெட சங்க சக்ராதி பூஷிதமான அப்ராக்ருதமான வடிவோடே தோற்றி அருள வேணும் என்று பெரிய ஆர்த்தியோடே பரமபதத்தில் இருப்பும் நிலை குலைந்து வந்து முகம் காட்ட வேண்டும் படி கூப்பிடுகிறார் – என்னுடைய ஆர்த்த த்வனியாலே உன்னுடைய உபய விபூதியும் அழியப் புகா நின்றது -என்னுடைய ரக்ஷணத்துக்காக வந்திலையாகிலும் உன்னுடைய விபூதி ரக்ஷணத்துக்காக வாகிலும் வர வேணும் என்று கூப்பிடுகிறார்

————–

13-சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே

மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷

என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக – அதிலும் என்னிடம் மிகவும் ப்ரீதி உடையவனாக ஆவாயாக அதிலும் என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக -யஜ தேவ பூஜா -என்னை வணங்குவாயாக என்னையே மேலான ஆஸ்ரயமாகக் கொண்டவனாய் இவ் வண்ணமாக நெஞ்சைப் பழக்குவதன் மூலம் என்னையே அடைவாயாக

৷மந் மநா பவ -மயி ஸர்வேஷ்வரே (சர்வேஸ்வரேஸ்வர-ஸ்வா பாவிக ஸர்வ நியந்தா-நும் தெய்வமாகியும் நின்றான் -நாயகன் அவனே கண்டு கொண்மின் )நிகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாநே ஸர்வஜ்ஞே ஸத்ய ஸஂகல்பே (நம் குற்றங்களை அறிந்து போக்கி நம்மை தனது தாளிணைக் கீழ் இருத்த வேண்டியவை-காலம் அறிந்து பஹுஸ்யாம் ப்ரஜாயேய ஆவோம் என்று சங்கல்பித்து )நிகில ஜகதேக காரணே (த்ரிவித காரணமாய் இருப்பதாலேயே இவனையே உபாஸிக்க வேண்டும் -காரணந்து த்யேய -ஒன்றே போதும் இருந்தாலும் மற்றவையும் உனக்கு சொல்வது விஸ்வாஸம் ஏற்படுத்தவே )பரஸ்மிந் ப்ரஹ்மணி (ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்- மிகுநரை இலனே-சத் ப்ரஹ்மம் ஆத்மா ஜோதி போன்ற பொதுச் சப்தங்கள் நாராயணன் இடமே பர்யவசிக்கும் -நாராயணனே பரம் ப்ரஹ்மம் பரம் தத்வம் பர ஜோதி ஆத்மா நாராயண பரம் )புருஷோத்தமே(ஸகல இதர விலக்ஷணன் இவனது பரத்வத்தை எல்லா வேதங்களிலும் உள்ள புருஷ ஸூக்தம் கோஷிக்கும் )

(இதுவரை ஸ்வரூப விளக்கம் -இனி ரூபம் திவ்ய மங்கள விக்ரஹ குணங்கள் விவரணம்–ஐயப்பாடு அறுத்து ஆதாரம் பெறுக வைக்கும் அழகன் )

புண்டரீக தல  அமலாய தேக்ஷணே ஸ்வச்ச (குற்றமற்ற )நீல ஜீமூத ஸஂகாஷே ( மின்னும் மா மழை தவழும் மேக முகில் வண்ணன்-ஆஹ்லாத கரம் )யுகபத் உதித திநகர ஸஹஸ்ர ஸதரிஷ தேஜஸி- (நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி ) லாவண்ய (சமுதாய சோபை -வைஷ்ணவ வாமனத்தில் பூர்ணம் லாவண்யம் -சவுந்தர்யம் நாகை அழகியர் அச்சோ ஒருவர் அழகிய வா -பரபாக பர ஸ்ரீ )அம்ருத மஹோததௌ உதார பீவர சதுர் பாஹௌ (நான்கு புருஷார்த்தங்களையும் அளிக்கும் கற்பகக் கா என நற் பெரும் தோள்கள்-மல்லாண்ட திண் தோள்கள் -அலம் புரிந்த நெடும் தடக்கை )

இனி ஒப்பனை அழகு விவரணம்
அத் யுஜ்ஜவல பீதாம்பரே (அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே )அமல கிரீட மகர குண்டல ஹார கேயூர கடகாதி பூஷிதே,

இனி கல்யாண குண விவரணம்

அபார காருண்ய ஸௌஷீல்ய ஸௌந்தர்ய மாதுர்ய காம்பீர் யௌதார்ய வாத்ஸல்ய ஜலதௌ அநாலோசித விஷேஷ அஷேஷ லோக ஷரண்யே ஸர்வ ஸ்வாமிநி தைல தாராவத் அவிச்சேதேந நிவிஷ்ட மநா பவ.–தத் ஏவ விஷிநஷ்டி — மத் பக்தஃ அத்யர்த மத் ப்ரியத்வேந யுக்தோ மந் மநோ பவ இத்யர்தஃ.புநஃ அபி விஷிநஷ்டி — மத் யாஜீ அநவதிக அதிஷய ப்ரிய மத் அநுபவ காரித மத் யஜந பரோ பவ-.யஜநஂ நாம பரி பூர்ண அஷேஷ வரித்திஃ? ஔபசாரிக ஸாஂஸ்பர்ஷிக அப்யவஹாரிகாதி ஸகல போக ப்ரதாந ரூபோ ஹி யாகஃ.–யதா மதநுபவ ஜநித நிரவதிக அதிஷய ப்ரீதிகாரித மத் யஜந பரோ பவஸி ததா மந்மநா பவ இத் யுக்தஂ பவதி.(இத்தால் சொல்லிற்றாயிற்று) மத் அனுபவ ஜெனித நிரவதிக அதிசய ப்ரீதி காரித கைங்கர்யம் )புநஃ அபி தத் ஏவ விஷிநஷ்டி — மாஂ நமஸ்குரு? அநவதிக அதிஷய ப்ரிய மதநுபவகாரித அத்யர்த ப்ரிய அஷேஷ ஷேஷ வரித்தௌ அபர்யவஸ்யந் மயி அந்தராத்மநி அதி மாத்ர ப்ரஹ்வீ  பாவ வ்யஸாயஂ குரு.–மத் பராயணஃ அஹம் ஏவ பரம் அயநஂ யஸ்ய அஸௌ மத் பராயணஃ? –மயா விநா ஆத்ம தாரண அஸஂபாவநயா மதாஷ்ரய இத்யர்தஃ.–ஏவம் ஆத்மாநஂ யுக்த்வா மத் பராயணஃ த்வம் ஏவம் அநவதிக அதிஷய ப்ரீத்யா மதநுபவ ஸமர்தஂ மநஃ ப்ராப்ய மாம் ஏவ ஏஷ்யஸி. ஆத்ம ஷப்தோ ஹி அத்ர மநோ விஷயஃ.ஏவஂ ரூபேண மநஸா மாஂ த்யாத்வா மாம் அநுபூய மாம் இஷ்டவா மாஂ நமஸ்கரித்ய மத் பராயணோ மாம் ஏவ ப்ராப்ஸ்யஸி இத்யர்தஃ.-

(இனி இந்த அத்யாய சுருக்கம் அருளிச் செய்கிறான் )தத் ஏவஂ லௌகிகாநி ஷரீர தாரணார்தாநி வைதிகாநி ச நித்ய நைமித்திகாநி கர்மாணி மத் ப்ரீதயே மச் சேஷதைக ரஸோ மயா ஏவ காரித இதி குர்வந் ஸததஂ மத் கீர்தந யஜந நமஸ்காராதிகாந் ப்ரீத்யா குர்வாணோ மந் நியாம்யஂ நிகில ஜகத் மச் சேஷதைக ரஸம் இதி ச அநு ஸஂததாநஃ? அத்யர்த ப்ரிய மத் குண கணஂ ச அநுஸஂதாய அஹரஹஃ (நாள் தோறும் )உக்த லக்ஷணம் இதம் உபாஸநம் உபாததாநோ மாம் ஏவ ப்ராப்ஸ்யஸி.

65. மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே

உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக. என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.

வேதாந்தேஷு — ‘வேதாஹமேதஂ புருஷஂ மஹாந்தம் ஆதித்ய வர்ணஂ தமஸஃ பரஸ்தாத்.’ (ஷ்வே0 உ0 3.8)‘தமேவஂ வித்வாநமரித இஹ பவதி.”நாந்யஃ பந்தா வித்யதேயநாய’ (ஷ்வே0 உ0 3.8)இத்யாதிஷு விஹிதஂ வேதந த்யாந உபாஸநாதி (ஆதி- நிதித்யாஸன )ஷப்த வாச்யஂ தர்ஷந ஸமாநாகாரஂ ஸ்மரிதி ஸஂஸந்தாநம் அத்யர்த ப்ரியம் இஹ’மந்மநா பவ’ இதி விதீயதே.மத் பக்தஃ அத்யர்தஂ மத் ப்ரியஃ அத்யர்த மத் ப்ரியத்வேந
ச நிரதிஷய ப்ரியாஂ ஸ்மரிதி ஸஂததிஂ குருஷ்வ இத்யர்தஃ. மத் யாஜீ தத்ராபி மத் பக்த இதி அநுஷஜ்யதே.யஜநஂ பூஜநம்? அத்யர்த ப்ரிய மத் ஆராதந பரோ பவ. ஆராதநஂ ஹி பரிபூர்ண ஷேஷ வரித்திஃ.

மாஂ நமஸ்குரு நமோ நமநஂ மயி அதி மாத்ர ப்ரஹ்வீ பாவம் அத்யர்த ப்ரியஂ குரு இத்யர்தஃ. ஏவஂ வர்தமாநோ மாம் ஏவ ஏஷ்யஸி இதி ஏதத் ஸத்யஂ தே ப்ரதி ஜாநே தவ ப்ரதிஜ்ஞாஂ கரோமி? ந உபச்சந்த மாத்ரஂ யதஃ த்வஂ ப்ரியஃ அஸி மே’ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத் யர்தமஹஂ ஸ ச மம ப்ரியஃ’ (கீதா 7.17) இதி பூர்வம் ஏவ உக்தம். யஸ்ய மயி அதி மாத்ர ப்ரீதிஃ வர்ததே மம அபி தஸ்மிந் அதி மாத்ர ப்ரீதிஃ பவதி(என்னதுன்ன ஆவியில் -அறிவார் உயிரானாய் -அவன் மதம் தோன்றும்-மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்வம் வளத்தின் களத்திலே பூரிக்கும் )இதி தத் வியோகம் அஸஹ மாநஃ அஹஂ தஂ மாஂ ப்ராபயாமி? அதஃ ஸத்யம் ஏவ ப்ரதிஜ்ஞாதஂ மாம் ஏவ ஏஷ்யஸி இதி.

(அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் ஸத்ய பராக்ரமம் -அறிந்தேன் அவனை நான் -வேத்யம் -இது ஒன்றே உபாயம் வெறும் அறிவு மட்டும் போதாதே –மனனம் த்யானம் அவிச்சின்ன தைலதாராவத்  நிதித்யாஸனம் மூலமே மானஸ ப்ரத்யக்ஷம் -தர்சன சமானாகாரம் -நினைவின் தொடர்ச்சியே தர்சனம் -ஸ்ரோதவ்ய மந்தவ்ய இவை எல்லாம் ராக பிராப்தி இடைவிடாமல் சிந்திப்பதே விதி ஸ்ம்ருதி சந்தானம் நினைவு எதில் தொடர்கிறது அதுவே -நினைவின் தொடர்ச்சியே அவனைக் காட்டிக் கொடுக்கிறது மனன் உணர் அவை இலன் -மனசாது விசுத்தேனே –அறிய முடியாதவன் என்றே அறியலாம் -நின் புகழின் வைகும் சிந்தை -என்றதே இது நீ அருளும் வைகுந்தத்தை விட இதுவே இனிது -சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -புகுந்தத்தின் பின் வணங்கும்  என் சிந்தனைக்கு இனியாய்-மத் பக்த வேட்க்கை மீதூறி -நின் கண் வேட்க்கை எழுவிப்பேன் -)

(மத் பக்தோ மந்மநா பவ –மத் பக்தோ மத் யாஜீ –மத் பக்தோமாம் நமஸ்குரு.-பக்தியே ஒரே உபாயம் -அன்புடனே அனைத்தும் செய்ய வேண்டும் -பக்தி செய்ய அதே பத பிரயோகம் –இங்கு பக்தி அன்பு அத்வேஷ மாத்திரம் -பத்துடை அடியவர்க்கு எளியவன்)

தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா.–
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே৷৷—7.14৷৷

என்னுடையதான இந்த முக் குண மயமான ப்ரக்ருதி -தேவனான என்னால் படைக்கப் பட்டதாகையாலே –
எவராலும் தம் முயற்சியால் மட்டும் -கடக்க அரிதாக உள்ளது –
எவர்கள் என்னை சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்

தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விஸிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞாநிந அத்யர்தம்  அஹம்  ஸ ச மம ப்ரிய৷—7.17৷৷

அந்த நால்வருக்குள் என்னோடு எப்போதும் சேர்ந்து இருப்பவனாய் -என் ஒருவன் இடமே ஈடுபாட்டை உடையவனாய் இருப்பவனான நான் ஞானிக்கு சொல்ல ஒண்ணாத அளவுக்கு இனியவன் -அவனும் எனக்கு இனியவன்

பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப-–৷৷11.54৷৷

எதிரிகளைத் தவிக்கச் செய்யும் அர்ஜுனா நீ என்னை எப்படிக் கண்டு இருக்கிறாயோ அவ்வண்ணம் உள்ளபடி நான் வேதங்களைக் கொண்டும் காண முடியாதவன் – தவத்தைக் கொண்டும் காண முடியாதவன் – தானத்தைக் கொண்டும் காண முடியாதவன் – யாகத்தைக் கொண்டும் காண முடியாதவன் – நான் ஸ்வயம் பிரயோஜன பக்தியாலேயே இவ்வண்ணமாக உள்ளபடி சாஸ்த்ரங்களால் அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் கூடியவன்

தமேவ ஸரணம் கச்ச ஸர்வ பாவேந பாரத–
தத் ப்ரஸாதாத் பராம் ஸாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஸாஸ்வதம்--৷৷18.62৷৷

அர்ஜுனனே-அனைவரையும் நியமிக்கும் பரத குலத்தில் உதித்தவனே -அந்தப் பரமாத்மாவையே எல்லா வகையாலும் பின்பற்றுவாய் – அவனுடைய அருளாலே நிலையான மோக்ஷ ஸ்தானமான பரமபதத்தை அடைவாய் –

இதி தே ஜ்ஞாநமாக்யாதம் குஹ்யாத் குஹ்ய தரம் மயா–
விம்ருஸ்யை தத ஸேஷேண யதேச்சஸி ததா குரு–৷৷18.63৷৷

இவ்வண்ணமாக ரஹஸ்யங்கள் எல்லாவற்றைக் காட்டிலும் சிறந்த ரஹஸ்யமான மோக்ஷத்திற்கு உறுப்பான அறிவு உனக்கு என்னாலே சொல்லப்பட்டது – இதை முழுவதும் ஆராய்ந்து -உன் தகுதிக்கு ஏற்றவாறு எதை விரும்புகிறாயோ அதை அனுஷ்டிப்பாயாக –

ஸ்ரீ பகவான் உவாச —
இதம் து தே குஹ்ய தமம் பிரவக்ஷ்யாமி அநஸூயவே
ஞானம் விஞ்ஞான ஸஹிதம் யஞ் ஞாத்வ மோக்ஷயஸே அஸூபாத் –9-1-

ஸ்ரீ பகவான் சொல்கிறான் -எதை அறிந்து என்னை அடைவதற்குத் தடையான புண்ய பாபங்கள் அனைத்தின் இருந்தும் விடுபடுவாயோ இந்த அதி ரஹஸ்யமான உபாசன ரூபமான அறிவை அவ்வுபாசனத்தின் வகைகளைப் பற்றிய அறிவோடு கூட என் விஷயத்தில் பொறாமை அற்ற உனக்கு நான் கூறுகிறேன் ஞான பக்தி அனுஷ்டான ரூபமான உபாசனம் மூலமே -அஸூபாத்–பிரதிபந்தகங்களை போக்கி அவனை அடையலாம் என்றவாறு –

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷

எல்லா சாதனங்களையும் நன்கு விட்டு என் ஒருவனையே உபாயமாக அனுசந்திப்பாய்
நான் உன்னை எல்லாப் பாபங்களில் நின்றும் விடுக்கிறேன் -சோகப்படாதே

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5-

இப்படி ஆஸ்ரயணீயன் ஸூலபனான பின்பு ஆஸ்ரயிக்கும் வழி என் -என்ன அவன்ஸ்ரீ கீதையில் அருளிச் செய்து வைத்த பக்தி மார்க்கத்தாலே ஆஸ்ரயிங்கோள் என்கிறார்-வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே –வணக்குடை -என்கிறது தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று –பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல் இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல்புற நெறிகளை கட்டு இதுக்கு விரோதியான சப்தாதி விஷயங்களில் போகிற வழி யாகிற களையைக் கடிந்து பறித்து இத்தை நெறி என்பான் என் என்னில் இருந்ததே குடியாகப் போகிற மஹாதபம் ஆகையாலே -துர்மார்க்கம் என்னக் கடவது இறே –உணக்கு மின்பசை யறபறித்தாலும் கிடந்திடத்தே கிடக்குமாகில் பருவம் செய்யும் இறே அதுக்காக சவாசனமாக விடுங்கோள் -இது செய்வது என் கொண்டு என்னில்அவனுடைய யுணர்வு கொண்டு உணர்ந்தேதத் உக்த ஜ்ஞானம் -தத் விஷய ஜ்ஞானம் என்னுதல் –அவனை விஷயீ கரித்த ஜ்ஞானத்தைக் கொண்டு -விலஷண விஷயத்திலே நெஞ்சை வைத்து -இவற்றின் தோஷத்தை தர்சித்து விடுங்கோள்-அவனை சரணம் புக்கு இவற்றை சவாசனமாக விடுங்கோள் எனவுமாம்தானி சர்வாணி சம்யம்ய -மாம் ஏவ ப்ரபத்யந்தே -சரம ஸ்லோகத்தின் படியே –

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.
–5-2-9-

ஞான விதி பிழையாமே-வேதங்களில் பிரதிபாதிக்கிற பக்தி மார்க்கம் தப்பாமே –ஞானம் என்று ஞான விசேஷமான பக்தியைச் சொல்லுகிறது – பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து-பூவோடு கூடின புகையையும் -ஸமாராதன த்ரவ்யங்களையும் மிகுத்து –மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–அநந்ய பிரயோஜனராய் தொழும் கைங்கர்ய நிஷ்டரும் – பகவரும் -அதுக்கு ஷமர் அன்றிக்கே குண அனுபவம் பண்ணும் குண நிஷ்ட்ருமாய்க் கொண்டு லோகம் அடங்க சம்ருத்தம் ஆயிற்று – கிடந்த இடத்தே கிடந்து குண அனுபவம் பண்ணும் ஸ்ரீ பரத ஆழ்வானையும்-தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும் போலே இருக்குமவர்கள் –

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே
–9-1-7-

இதுக்கு அதிகாரிகள் சம்சாரத்திலே -இவ்வர்த்தத்துக்கு அண்ணியார் பரமபதத்தில் உள்ளார்கள் ஆகிலும் உபதேசத்துக்கு அதிகாரிகள் சம்சாரிகள் என்கை –-இது அதிக்ருதா அதிகாரம் அன்று -சர்வாதிகாரம் –-ஆயாசிக்க வேண்டா -சிற்றுதல் -சிதறுதலாய் -பரக்க வேண்டா என்கை –யுக்தி நிரபேஷமாக சிந்தா மாத்திரமே அமையும் கிடி கோள் –கற்பது ஒரு கால் –வாழ்ச்சி நித்தியமாய் இருக்கும்-வாழ்தல் கிடீர் இவ்வாத்மாவுக்கு யுக்தம் -அல்லாதவை எல்லாம் அப்ராப்தம் என்கை –

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-

பக்தி உக்தராய் சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டி ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள்-ஆஸ்ரயணீயத்துக்கு கால நியதி இல்லை -என்கிறது -ஆதி நடுவந்திவாய் -என்கிறபடியே சர்வ காலத்துக்கும் உப லக்ஷணம் –சர்வ புஷ்ப்பங்களுக்கும் உப லக்ஷணம் -நீங்கள் விரும்பின பிராகிருத த்ரவ்யமே அமையும் என்கை -திகாரிகளும் முன்புத்தை நீங்களே யமையும் -சர்வ லோகங்களையும் வயிற்றிலே வைத்து ஒரு பவனான ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளினவன் -உங்கள் விரோதி நிரசனங்கள் துர்க்கடன்களே யாகிலும் கடிப்பிக்க வல்லன் என்கை —அவன் இணை அடிகளையே இறைஞ்சுமின் –

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-

ஜென்மத்தாலும் வ்ருத்தத்தாலும் ஞானத்தாலும் குறைய நின்றாரே யாகிலும் -தன் திருவடிகளை உபாயமாகப் பற்றினார்க்கு எல்லாம் ரக்ஷகனாம் -கீழ் மூன்று பாட்டாலும் சொன்ன பக்தி யோகம் அதிக்ருதாதிகாரம்-இதில் சொன்ன பிரபத்தி -சர்வாதிகாரம் -என்கிறது –தன் பக்கல் ந்யஸ்த பரனானவன்று தொடங்கி -இவனை ஒழிய தனக்கு செல்லாது இருக்கச் செய்தே -இவனுடைய ருசியை வர்த்தித்து -சரீர அவசானத்திலே பரம பதத்தை கொடுத்த மஹா உபகாரகன் -தன் அழகைக் காட்டி அத்தாலே இவற்றுக்கு ருசி பிறக்கும் அளவும் அவசர பிரதீஷனாய் இருக்கும் படியைச் சொல்கிறது-தனக்கு அசத்தி இல்லை -இவனுக்கு கர்த்தவ்யம் இல்லை -இவன் ருசியைக் கடாக்ஷித்து இருக்கிற அத்தனை-தனக்கு ஸ்நேஹிகள் ஆனவர்கள் பக்கல் அதி பிரவணானாம் –அன்பாகுமே–அன்புடையன் என்று பிரிக்க ஒண்ணாத படி அன்பு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை –

ச அங்க பக்தி –பிரபத்தி -ஆதிகள் -அவதார ரஹஸ்யம் -புருஷோத்தம வித்யை -நாராயணனுக்குக்கே எளியவன் போக்யன் இத்யாதிகள்

ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந
—৷৷4.9৷৷

அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும் மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான் –

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி.–
ததஹம் பக்த் யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந—৷৷9.26৷৷

எவன் ஒருவன் இலையையோ பூவையோ பழத்தையோ நீரையோ எனக்கு அன்புடன் சமர்ப்பிக்கிறானோ – பரிசுத்தமான நெஞ்சுடைய அவனுடைய அத்தகைய அன்பால் இடைப்பட்ட அப் பொருளை நான் உண்கிறேன்

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே
–1-3-11-

சிறையில் இருந்த ராஜகுமாரன் தலையிலே அபிஷேகத்தை வைத்து பின்னை சிறையை வெட்டி விடுவாரைப் போலே நித்ய ஸூரிகள் வரிசையைக் கொடுத்து பின்னை சம்சார அஞ்சிறையை கழிக்கும் ஈஸ்வரன் ஆதி வாஹிகரோடு விரஜையில் சென்று ஸூஷ்ம சரீர விதூ நனம் பெறுவார்-

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே
–1-6-1-

ஈசனை –இவன் இடுவதில் குறையுள்ளது தன் குறையாம் படி இருக்கிற சம்பந்தத்தைச் சொல்லுகிறது -எம்பெருமான் பரிபூர்ணன் ஆகையாலே-ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத் தக்கவன்-நல் நீர் – -ஏலாதி ஸம்ஸ்காரமும் இன்றிக்கே -ஏலம் முதலிய வாசனைப் பொருள்கள் கலப்பு இன்றி இருத்தல், ‘-கேவலம் தண்ணீரும் அமையும்-அகிற்புகை, கருமுகைப்பூ என்று விசேடித்துச் சொல்லாமையாலே ஏதேனும் புகையும், ஏதேனும் பூவும் அமையும்-இவ்விடத்தில், பட்டர் செதுகை யிட்டுப் புகைக்க அமையும்; கண்ட காலி இடவும் அமையும்,’ என்று அருளிச் செய்வர்-ஸ்ரீ பட்டர் –இங்ஙனம் அருளிச் செய்தவாறே,ந கண்டகாரிகா புஷ்பம் தேவாய விநிவேதயேத் –இறைவனுக்குக் கண்டங்கத்தரிப் பூவை அருச்சித்தல் கூடாது என்று சாஸ்த்திரங்கள் விதிக்கின்றனவே!’ என்று ஸ்ரீ நஞ்சீயர் கேட்க,அவனுக்கு ஆகாது என்கிறது அன்று; பறிக்கிற அடியார் கையில் முள்பாயும் என்பதற்காகத் தவிர்த்தன காணும்! ‘கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்’ என்று இறைவனுக்கே உரிய திருத் துழாயோடு -விசஜாதீயங்களை -அதற்கு வேறுபட்ட பூக்களையும் ஒரு சேர எடுத்துத் ஸ்ரீ திருமங்கை மன்னன் அருளிச் செய்கிறது கண்டீரே!இதனால், இறைவன் பொருளில் ஏற்றத் தாழ்வு -த்ரவ்ய தாரதம்யம் -பார்ப்பது இன்று என்பது விளங்குமே!

——————

மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை நின்மலமாக வைத்த ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது
தத்வ விவேக
நித்யத்வாநித்யத்வ
நியந்த்ருத்வ
சௌலப்ய
சாம்ய
அஹங்கார இந்திரிய தோஷ பல
மன பிராதான்ய
கரண நியமன
ஸூஹ்ருதி பேத
தேவாஸூர விபாக
விபூதி யோக
விஸ்வரூப தர்சன
சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே
அன்றோதிய கீதா சமம் என்னும்
..சூரணை -189-

——

மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை —எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் –முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை–திருவாய் -1-5-2-என்றும் –எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கர்மங்களும் செய் –திருவாய் -3-10-8- -என்றும் சொல்லுகிறபடி சர்வ காரணமாய் –அபரிசேத்யமான சங்கல்ப ரூப ஞானத்தை உடையவனாய் –சூழ்ந்த அதனில் பெரிய சுடர் ஞான இன்பம் –திருவாய் -10-10-10-–என்கிறபடியே பிரகிருதி புருஷ தத்வங்கள் இரண்டும் தன்னுள்ளே ஆகும் படி வியாபித்து –தான் அபரிசேத்யமாய் – உஜ்ஜ்வலமாய் -ஞான ஆனந்த லஷணமாய் இருக்கிற –ஸ்வரூபத்தை உடைய சர்வேஸ்வரனை –நின்மலமாக வைத்தவர் –எனது ஆவி உள்ளே நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து -திருவாய் -4-7-7-என்று பரிபூர்ண ஞான ஸ்வரூபனான உன்னை என் நெஞ்சுக்குள்ளே விசதமாக அனுபவித்து –என்னும் படி சாஷாத் கரித்த இவ் ஆழ்வார் –.

ஞானப் பிரானை ஞானத்து வைம்மின் என்ற இது —
இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா வர்க்கும்
எரி திரை வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த –ஞானப் பிரானை
அல்லால் இல்லை நான் கண்ட நல்லது
-திருவிருத்தம் -99-என்று பிரளய ஆர்ணவ மக்னையான பூமியை -மகா வராஹமாக -உத்தரித்த -ஞான சக்திகளையும் –
ஸ்வாமித்வ பிராப்தியும் உடையவனாய் -ஸ்லோக த்வய முகத்தாலே சரமோ உபாயத்தை
வெளியிடுகையாலே -ஞான உபகாரனுமாய் இருப்பவனை – ஒழிய -சர்வருக்கும்
உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பது ஒன்றும் இல்லை –இது நான் அறுதி இட்ட விலஷணமான அர்த்தம் –என்று பிரதம பிரபந்தத்தில் அருளிச் செய்த விஷயத்தை உபாயகமாகப் பற்றச் சொல்லுகிற அளவில் –

திரு குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைமின் உம்மை உய்யக் கொண்டு போகுறில்–திருவாய் -4-10-0-என்று உஜ்ஜீவிக்க வேண்டி இருந்தீர்களாகில் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசத்தை உங்கள் மானஸ ஜ்ஞானத்துக்கு விஷயம் ஆக்குங்கோள் என்று சம்சாரிகளை குறித்து உபதேசித்த இப் பிரபந்தம் –

தர்ம சம்ஸ்தாபன அர்த்தமாக அவதரித்து அருளின ஸ்ரீ கிருஷ்ணன் –அஸ்தான ஸ்நேஹ காருண்யா தர்ம அதர்மதியா குலம் பார்த்தம் பிரபன்ன முத்திஸ்ய சாஸ்திர அவதரணம் க்ருதம்–ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –5–என்கிறபடியே –அஸ்தானத்தே உண்டான – பந்து ஸ்நேஹ காருண்யங்களாலும் – ஸ்வ தர்மத்தில் அதர்ம புத்தியாலும் கலங்கி –நயோத்ஸ்யாமி–ஸ்ரீ கீதை -2-6- -என்று யுத்த அநிவ்ருத்தனாய் –யச்ஸ்ரேயஸ் ஸ்யான் நிச்சிதம ப்ரூஹி தன்மே சிஷ்யத் தேஹம் சாதிமாம் த்வம் பிரபன்னம்–ஸ்ரீ கீதை –2 7-என்ற அர்ஜுனனைத் தெளிவித்து யுத்தே பிரவர்த்தன் ஆக்குகைக்கு வியாஜமாக –அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய–திருவாய் -4-8-6- -என்கிறபடியே லோகத்துக்கு உஜ்ஜீவன சாஸ்த்ரமாம் படி எல்லாப் பொருளும் விரித்த ஸ்ரீ கீதையில் –

1 ,2 ,3 தத்வ விவேக –பிரதமத்தில் –தேக ஆத்மா அபிமான கார்யமான பந்து சிநேகத்தையும் –வத பீதியையும் மாற்றுகைக்காக தத்வ ஞானத்தை உபதேசிக்கத் தொடங்கின அளவிலே –நத்வே வாஹம் ஜாது நாசம் நத்வம் நேமே ஜநாதிபா –நசைவ நபவிஷ்யாம சர்வே வயமத பரம் –ஸ்ரீ கீதை -2-12–என்று சர்வேஸ்வரனான தன்னோபாதி சகல ஆத்மாக்களும் நித்யர் என்று அருளிச் செய்கிற வழியிலே –ஜீவ பர பேதம்–ஜீவர்களுக்கு பரஸ்பர பேதம் -ஆகிய இவற்றை தர்சிப்பித்து –தேஹி நோஸ்மின் யதா தேக கௌமாரம் யௌவனம் ஜரா ததா தேஹாந்தர ப்ராப்தி தீரஸ் தத்ர நமுஹ்யதி -2-13-– இத்யாதியாலே –பிரகிருதி ஆத்மா விவேகத்தையும் சொல்லுகையாலே தத்வங்களினுடைய விவேகத்தையும் —

4 -நித்யத்வ அநித்யத்வ —அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாஸ் சரீரிணஅநாசினோ ப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத -2-18-என்றும்-நஜாயதே ம்ரியதேவா கதாசித் நாயம் பூத்வா பவிதா வாநபூயஸ் அஜோ நித்யஸ் சாஸ்வதோயம் புராணோ நஹன்யதே ஹன்யமானே சரீரே –2-20 -என்றும் ,வாசாம்ஸி ஜீர்ணா நியதா விஹாயா நவாணி க்ருஹணாதி நரோபராணி ததா சரீராணி விஹாய ஜீர்ணான் யன்யாமி சம்யாதி நவாணி தேஹி –2-22-இத்யாதிகளாலே ஆத்ம நித்யத்வ தேக அநித்யங்களையும்-

5 -நியந்த்ருத்வபூமிராபோ நலோ வாயு கம்மனோ புத்தி ரேவச –அஹங்கார இதீயம் மே பின்னா பிரகிருதி ரஷ்டதா அபரே யமித ஸ்த்வன்யாம் பிரகிருதி வித்தி மே பராம் –ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் -7-4-5-என்கிற படியே-சேதன அசேதன சரீரியாய் –-சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதி ஜ்ஞாந மபோஹநஞ்ச -15-15-என்றும் –ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹ்ருத்தேசேர் ஜூன திஷ்டதி
ப்ராமயன் சர்வ பூதானி யந்த்ராரூடானி மாயயா
-18-61- -என்றும் சொல்லுகிறபடி சர்வ ஜன ஹ்ருதிஸ்த்தனாய் -நின்று –சர்வ பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் பண்ணுவிக்கை யாகிற ஈஸ்வரனுடைய நியந்தருத்வத்தையும்

6 -சௌலப்ய –தஸ்யாஹம் ஸூலப பார்த்த நித்ய யுக்தஸ்ய யோகின –என்றும்-பரித்ராணாய சாதூனாம் ,விநாசாய துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே-4-8- -என்றும் பக்திமான்கள் நிமித்தவாகவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான அவன் சௌலப்யத்வத்தையும் ..

7 -சாம்ய –சமோஹம் சர்வ பூதேஷு நமே த்வேஷ் யோஸ்தி நப்ரிய–9 -29-என்று அவனுடைய ஆஸ்ரத்யநீயத்வே சர்வ சாம்யத்தையும்

8 -அஹங்கார தோஷ -அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே-3-27 -என்று அஹங்கார தோஷத்தையும் –

9 –இந்திரிய பல–யததோஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித இந்திரியாணி ப்ரமாதீனி ஹரந்தி பிரசபம் மன -2-60-என்று இந்திரிய பிராபல்யத்தையும்-

10 -மன ப்ராதன்ய –சஞ்சலம் ஹி மன க்ருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம் தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோ ரிவ ஸூ துஷ்கரம்-6-34-என்றும் –அசம்சயம் மஹாபாஹோ மனோ துர் நிக்ரஹம் சலம் அப்யாசேனது கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே-6-35- -என்றும் மற்ற இந்திரியங்களில் வைத்துக் கொண்டு மனசின் உடைய பிரதான்யத்தையும்

11 -கரண நியமன –தானி சர்வாணி சம்யம்ய யுக்த ஆசீத மத்பரவசே ஹி யச்யேந்த்ரியாணி தஸ்ய பிரஜ்ஞா ப்ரதிஷ்டிதா -2-61- -என்றும் –சர்வத்வாராணி சம்யம்ய மனோ ஹ்ருதி நிருத்த்யச – 8-12- என்றும் கரண நியமனத்தையும் —

12 -ஸூஹ்ருதி பேத –சதுர்விதா பஜந்தே மாம் ஜனாஸ் ஸூக்ருதி நோர்ஜுன ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூராரர்தாத்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப-7-16- -என்று ஸூஹ்ருதிகளுடைய பேதத்தையும் –

13 –தேவாசுர விபாக –தவௌ பூத சர்கவ் லோகேஸ்மின் தைவ ஆஸூர ஏவச-16-6-என்றும் தைவீ சம்பத் விமோஷாய நிபாந்தயா ஸூரி மதா 16-4–என்று தேவாசுர விபாகத்தையும்

14 –விபூதி யோக –ஹந்ததே கத யிஷ்யாமி விபூதி ராத மநஸ் ஸூப பிராதான்யதஸ் குரு ஸ்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே –10-9-என்றும் ஆதித்யா நாமஹம் விஷ்ணு ஜ்யோதிஷாம் ரவிரம்சுமான்-10-21- –இத்யாதியால் விபூதி யோகத்தையும்

15 -விஸ்வரூப தர்சன –பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹ சர்வாம் ஸ்ததா பூத விசேஷ சங்கான் ப்ரஹ்மாணம் ஈசம் கமலா சனஸ்தம் ருஷீம்ஸ் ச சர்வான் உரகாம்ச திவ்யான் 11-15-இத்யாதியாலே-விஸ்வரூப தர்சனத்தையும்

16 -சாங்க பக்தி –மன்மனா பவ மத் பக்தோ மத் யாஜி மாம் நமஸ்குரு மாமே வைஷ்யசி யுக்த்வைவ மாத்மானம் மத்பராயணா -9-24–என்று அங்க சஹிதையான பக்தியையும்-

17 -18 -பிரபத்தி த்வை இத்யாதி –தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்தயா மாமே வயே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -7-14-என்றும் தமேவ சரணம் கச்ச சர்வ பாவேன பாரத–18-62- -என்று அங்கத்வேனவும் சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச -18-66- –ஸ்வதந்த்ரவேனும் -இரண்டு படியாகவும் பிரபத்து உபதேசம் பண்ணினால் போலேயும்

இவரும்–1-2 -3–ஜீவ பர பேதமும்-ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் –பிரகிருதி -ஆத்மா விவேகம்-ஆகிற தத்வ விவேகத்தையும் —-அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -8-8-2-என்கிற இடத்தில் சப்தமாகவும் -ஆர்த்தமாகவும்-ஜீவ பர பேதமும்,ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் ,சென்று சென்று பரம் பரமாய்-8-8-5- -என்று ஆத்மாவுக்கு தேக விலஷணத்தைச் சொல்லுகையாலே பிரகிருதி -ஆத்மா விவேகம் ஆகிற தத்வ விவேகத்தையும் —

4 — நித்யத்வ -அநித்யத்வங்களையும் மின்னின் நிலையிலே மன் உயிர் ஆக்கைகள்-1-2-2- -என்றும் –உள்ளதும் இல்லதும் -1-2-8–என்றும் –சித் அசித் தத்வங்களின் நித்யத்வ -அநித்யத்வங்களையும்-

5–நியந்தருத்வத்தையும்-உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து-1-1-7- -என்றும் –-கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்து -1-1-19–என்றும்-சேதன அசேதன சரீரியாய் நின்றனர்-1-1-6- -இத்யாதிப் படியே அவற்றின் சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஸ்வ ஆதீனம் ஆகும் படி இருக்கிறவனுடைய நியந்தருத்வத்தையும்-

6 –அவனுடைய சௌலப்யத்தையும் பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–என்றும் –பல பிறப்பாய் எளிவரும் இயல்வினன் -1-3-2- -என்றும் ஆசா லேசம் உடையாரை பற்றவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான அவனுடைய சௌலப்யத்தையும்-

7 -சாம்யத்தையும் -பற்றிலன் ஈசன் முற்றவும் நின்றனன் –1-2-6–என்று அவனுடைய ஆஸ்ரணியத்வே சாம்யத்தையும்-(போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும் மாற்றே மாற்றல் இலையே நினக்கு மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும் வேற்றுமை இன்றது போற்றுநர்ப் பெறினே–பரிபாடல் -4-51/54-)

8 –அஹங்கார தோஷத்தையும் நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -1-2-3–என்று சம்சார ஹேது அதுவே சொல்லுகையாலே –அஹங்கார தோஷத்தையும்-

9 –இந்திரிய பலத்தையும்-விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம் புலன்-7-1-6- -என்று இந்திரிய பலத்தையும்-

10 –மனோ பிரதான்யத்தையும் மனத்தை வலித்து –5-1-4-என்று மனோ நியமத்தின் சொல்லுகையாலே மனோ பிரதான்யத்தையும்-

11 -கரண நியமனத்தையும் உள்ளம் உரை செயல் உள்ள விம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து -1-2-8–என்று கரண நியமனத்தையும்-

12 –ஸூஹ்ருதி பேதத்தையும் –பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்-4-1-1– -என்கையாலே ஆர்த்தனான பிரஷ்டை ஐஸ்வர்ய காமன்-இறுகல் இறப்பு-4-1-10– என்னும் -என்கையாலே ஜிஜ்ஞாசுவான கேவலன்குணம் கோள் நிறை புகழ் மன்னர் -4-1-8–இத்யாதியாலே அர்த்தார்த்தியான அபூர்வ ஐஸ்வர்ய காமன் –திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மின்-4-1-1- -என்கையாலே ஜ்ஞாநியாகிற பகவத் சரணார்த்தி -என்கிற ஸூஹ்ருதி பேதத்தையும் –

13 –தேவ அசுர விபாகத்தையும் அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் –5-2-5–என்றும் ,நண்ணா அசுரர் –நல்ல அமரர் -10-7-5–என்று தேவ அசுர விபாகத்தையும்

14 –விபூதி யோகத்தையும் புகழு நல் ஒருவன் -3-4-1–என்றும் –நல் குரவும்-6-3-1- -என்றும் – மாயா வாமனன்-7-8-1- -என்றும் –இவைகளில் விபூதி யோகத்தையும் –

15 –விஸ்வரூப தர்சனத்தையும் –நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் -6-9-1–என்று விஸ்வரூப தர்சனத்தையும் –

16 –சாங்க பக்தியையும் வணக்குடை தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு உணக்குமின் பசையற-1-3-5-என்றும் –மேவித் தொழுது உய்மினீர்கள் வேதப் புனித விருக்கை நாவில் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமை-5-2-9-என்றும் –மாலை நண்ணி –காலை மாலை –கமல மலர் இட்டு-தொழுது எழுமினோ -9-10-1–என்றும் -சாங்க பக்தியையும்

17 –18 –இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே-அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து -1-3-5–என்று-அவன் அருளி செய்த பிரபத்தி ரூப ஞானத்தை சகாயமாக கொண்டு அத்தை அறிந்து என்கையாலே – பக்தி அங்கத் வேனவும் – மற்று ஓன்று இல்லை-9-1-7–என்றும் – சரணமாகும் -9-10-5-என்கிற வற்றால்-ஸ்வதந்திர வேனேவும் –
இரண்டு வகையான பிரபத்தியும்
உபதேசிக்கையாலே

ஏதத் பிரதி பாத்யர்த்த சாம்யத்தைக் கொண்டு மாயோன் அன்று ஓதிய வாக்கு–நான்முகன் –71 -என்கிற ஸ்ரீ கீதை உடன் ஒக்க சொல்லப் படும் என்கை ..

பிரபத்தி த்வை இத்யாதிகளாலே -என்கிற இடத்தில்-ஆதி -சப்தத்தாலே –ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாமேதி சோர்ஜுனா–4-9-என்றார் போலே இவை பத்தும் வல்லார் அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறை-1-3-11- -என்று சொன்ன அவதார ரஹச்ய வைபவம் –பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி –ததஹம் பக்த்வுபஹ்ருத மஸ்நாமி பிரயதாத்மன –9-26– என்றார் போலே –பிரிவகை இன்றி நன்னீர் தூயப் புரிவதுவும் புகை பூ-1-6-1–என்று சொன்ன அவன் ஸ்வ ஆராதத்தை முதலாக கீழ் அனுக்தங்களையும் –தேக ஆத்மா அபிமானிகளை க்ரமத்திலே பிராப்ய சாதனங்களின் எல்லையில் மூட்டுகையும் –சாத்யோ உபாயங்களில் பரந்து சித்தோ உபாயத்தை மறைத்து உபதேசிக்கும் இடத்தில் வைபவம் தோற்ற வெளி இடுகையுமான வற்றையும் நினைக்கிறது .

———————————-

அது தத்வ உபதேசம்-இது தத்வ தர்சி வசனம்-சூரணை -190-

அந்த ஸ்ரீ கீதை பிரபந்தம் –தத்வம் ஜிஜ்ஞா சமா நாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை தத்வமேகோ மஹாயோகீ ஹரிர் நாராயண பர –பாரதம் -சாந்தி பர்வம் -347-83-என்கிறபடியே –தத்வ பூதனான சர்வேஸ்வரன் தானே உபதேசித்தது ..

இப் பிரபந்தம் –தத் வித்தி ப்ரனிபாதேன பரி பிரச் நேன சேவையா உபதேஷ்யந்தி தே ஞானம் ஞானிநஸ் தத்வ தர்சின –4-34-என்று ஜ்ஞான உபதேசத்துக்கு ஆப்த தமராக அவன் தான் அருளிச் செய்த தத்வ தர்சிகளில் தலைவரான ஆழ்வார் வசனம் என்கை ..

(தத் வித்தி ப்ரணி பாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா.—
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்த்வ தர்ஸிந
—৷৷4.34৷৷நன்கு வணங்குவதாலும்-நன்கு கேட்பதாலும் -கைங்கர்யத்தினாலும் -அந்த ஆத்ம ஞானத்தை ஞானிகள் இடம் அறிவாயாக – ஆத்ம ஸ்வரூபத்தை சாஷாத் கரித்த ஞானிகள் உனக்கு ஆத்மாவைப் பற்றிய அறிவை உபதேசிப்பர் –)

இத்தால் சொல்லிற்று ஆய்த்து -அஹம் க்ருதஸ்னஸ்ய ஜகத பிரபவ பிரளயஸ் ததா மத்த பரதரம் நாந்யத் கிஞ்சி தஸ்தி தனஞ்சய –7-6-என்றும் மா மேகம் சரணம் வ்ரஜ –18-66-என்றும் இப்படி ஸ்வ வைபவத்தை ஸ்யமேவ அருளிச் செய்கையாலே ஸ்வ பிரசமசை போலே இருக்கையாலே -அது மந்த மதிகளுக்கு விஸ்வசநீயம் ஆகாது ..

(ஏதத் யோநீநி பூதாநி ஸர்வாணீ த்யுப தாரய.–
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத ப்ரபவ ப்ரலயஸ் ததா৷৷—-7.6৷৷)-இந்த சேதன அசேதன சமஷ்ட்டியைக் காரணமாகக் கொண்ட பிரமன் முதலாக புல் ஈறாக உள்ள எல்லாப் பொருள்களும் என்னுடையவையே என்று அறிவாயாக – அப்படி இருக்கும் போது நான் இந்த எல்லா உலகிற்கும் உத்பத்தி ஸ்தானமாகவும் லய ஸ்தானமாகவும்சேஷியாகவும் இருக்கிறேன்)

(ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷)எல்லா சாதனங்களையும் நன்கு விட்டு என் ஒருவனையே உபாயமாக அனுசந்திப்பாய்
நான் உன்னை எல்லாப் பாபங்களில் நின்றும் விடுக்கிறேன் -சோகப்படாதே)

சுத்த சத்வ ஜ்ஞானரான இவர் மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -2-2-1-என்றும் –கறுத்த மனம் ஒன்றும் வேண்டா -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -5-2-7–என்றும் –கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்மினோ -9-1-10–என்று இப்படி மத்யஸ்தமாக நின்று தத் வைபவத்தை உபதேசிக்கையாலே ,இது மந்த மதிகளுக்கும் விஸ்வ நீயமாய் இருக்கும் என்கிற ஆதிக்யம் –

(திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே
–2-2-1-)பூம் அந்தரிஷாதிகளை பிரிகதிர் படாமே தரம் பாராதே ஒரு காலே திரு வயிற்றிலே வைத்து ரஷித்த-நம் -என்று அத்தை நமக்கு பிரகாசிப்பித்தவன்-கண் –த்ருஷ்ட்டி -நிர்வாஹகன் – களை கண் -என்று நிர்வாஹகரை சொல்லக் கடவது இறே-அல்லது இல்லையோர் கண்ணே-வேறு ஒரு த்ருஷ்ட்டி இல்லை -அர்த்தம் இன்றிக்கே -பீலிக் கண் -மாலைக் கண் -என்னுமா போலே-யுக்தி மாத்ரமாக இருப்பது ஓன்று இல்லை-கண்ணன் கண் -என்றது அன்வயத்தாலே-அல்லது இல்லையோர் கண் – என்றது வியதி ரேகத்தாலே-இல்லையோர் கண் -இது திண்ணம் )

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-இதர தேவதைகள் பக்கல் பரத்வ புத்தி யாகிற தண்ணிய நெஞ்சு ஒன்றும் உங்களுக்கு வேண்டா -கிருஷ்ணனை ஒழிய ஆஸ்ரயணீயர் இல்லை – அவனுக்கு பிரகார பூதராய் கொண்டு உளராம் அத்தனை-தேவதா ஆராதனம் -என்று தோற்றுகிற நித்ய நைமித்திக கர்மம் எல்லாம் இவர்கள் அவனுக்கு சரீர பூதர் ஆனவர்கள் -அந்தராத்மா சர்வேஸ்வரன் -என்று புத்தி பண்ணி தத் சமாராதன புத்தயா பண்ணுங்கோள் -தன் திருவடிகளை பிடித்தார்க்கு தானே பலம் கொடுக்கக் கடவனாய் இருக்கும் இறே அவன் )

(கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே
–9-1-10-)கிருஷ்ணனை ஒழிய வேறு சரணம் ஆவார் இல்லை என்னும் இவ்வர்த்தத்தை ஸ்தாபிக்கைக்காகவும் -அதுக்கு உறுப்பாக பூ பாரத்தை போக்கி அருளுகைக்கும் ஸ்ரீ மதுரையிலே வந்து திருவவதாரம் பண்ணினான் -உங்களுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் சேஷியாயும் ஸூலபனானாயும் உள்ள அவன் திருவடிகளிலே சேஷத்வேன த்ருடமாக சமர்ப்பியுங்கோள் -அவனது நம்மதோ என்று விசாரிக்க வேண்டா -உங்களோடு உங்கள் உடைமையோடு வாசி யற அவனுக்கே சேஷம்-அதாவா-உங்களுக்கு சாத்யமானவை எல்லாம் சாதித்து தருவான் அவன் ஒழிய வேறு இல்லை -சமிதை பாதி சாவித்ரி பாதி யாய் உங்கள் தலையிலும் சிறிது கிடக்கிறது அன்று -அவனே நிரபேஷ உபாயம் -என்றுமாம் –)

—————

அது ஐவரை வெல்வித்துப் பதிற்றைந்திரட்டி படச் சொன்னது-இது நாடாக தோற்றோம் என்று ஐ ஐந்து முடிப்பான் சொன்னது –அதாவது -அந்த பிரபந்தம்-அன்று ஐவரை வெல்வித்த–திருவாய் -4-6-1-என்கிறபடியே –த்ரௌபத்யா சகிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் –பாரதம் ஆரண்ய –192-56- -என்று-ராஜ்ய ஆ காங்க்ஷிகளாய் சரணம் புக்கு நிற்கிற பாண்டவர்களையும் –ந காங்க்ஷே விஷயம் க்ருஷ்ணே –ஸ்ரீ கீதை -1–32 – என்ற அர்ஜுனனை –கரிஷ்யே வசனம் தவ–ஸ்ரீ கீதை -18-73- -என்னப் பண்ணி யுத்தத்திலே மூட்டி -விஜயீகளாக்கி-பதிற்றைந்திரட்டி படை வேந்தர் பட -பெரிய திருமொழி -2-4-4-என்கிறபடியே -அவர்களுக்கு பிரதி பஷ பூதரான துர்யோனாதிகள் நூற்றுவரையும் முடிக்கைக்காக சொன்னது ..

(ந காங்க்ஷே விஜயம் கிருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச.–
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா—
৷৷1.32৷৷)கண்ணா போரில் வெற்றியையோ -அரசையோ -சுகங்களையோ -நான் விரும்ப வில்லை-கோவிந்தன் எங்களுக்கு அரசினால் என்ன பயன் –போகங்களினாலோ உயிருடன் இருப்பதனாலோ என்ன பயன்-கோவிந்த -சப்தம் -கன்றுகளுக்கு ரக்ஷகனாய் இருந்து வைத்து -பந்துக்களுக்குத் தீமை செய்ய தூண்டவோ)

(அர்ஜுந உவாச-
நஷ்டோ மோஹ ஸ்ம்ருதிர் லப்தா த்வத் ப்ரஸாதாந் மயாச்யுத–
ஸ்திதோஸ்மி கத ஸந்தேஹ கரிஷ்யே வசநம் தவ–৷৷18.73৷৷அர்ஜுனன் கூறினான் -அச்யுதனே-உன் அருளால் என்னுடைய விபரீத ஞானம் அழிந்தது – உண்மை அறிவு என்னாலே அடையப் பெற்றது-ஐயம் நீங்கப் பெற்றவனாய் -உண்மை உணரப் பெற்று
நிலை நின்றவன் ஆகிறேன் -போர் புரிய வேண்டும் என்று கூறிய உன் வார்த்தைப் படி செய்கிறேன் – மோகம் போனது -தேஹாத்ம அபிமானம் -யுத்தம் பண்ணினால் மோக்ஷம் கிடைக்காது மோகம் போனது –ஆத்மா தான் எல்லாம் பக்தி யோகம் அறிந்தேன்
உன் பிரசாதத்தால் பெற்றேன் -சிஷித்து அருளினாய் -சங்கைகள் எல்லாம் தீர்ந்தேன்
உன் வாக்கியம் கேட்டு காண்டீபம் எடுக்கிறேன் -இதற்ககு தானே இவ்வளவும் அருளினான் )

(தாங்காத தோர் ஆளரியாய் அவுணன் தனை வீட முனிந்தவனால் அமரும்
பூம் கோதையர் பொங்கெரி மூழ்க விளைத்தது வன்றியும் வென்றி கொள் வாளமரில்
பாங்காக முனைவரொடு அன்பளவிப் பதிற்றைந்தி ரட்டிப்படை வேந்தர் பட
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்குகிடம்
மா மலையாவது நீர் மலையே–2-4-4-)வென்றி கொண்டு அல்லது மீளக் கடவது அல்லாத மதிப்புடைய பூசலிலே-தான்  ஸ்வாமியான முறை தோற்ற இருக்குமாகில் அவர்களோடும்-ஐவரோடும் – பொருந்த ஒண்ணாது இறே- அதுக்காக தன்னைத் தாழ விட்டு-அவர்களோடு உறவு பண்ணி கலந்து –அற்றைக்கு நூறு ராஜாக்களை வெற்றி கொண்டு அல்லது மீளாத பூசலிலே த்ரௌபதி உடைய ஸ்த்ரீத்வத்தை பரிஹரித்தவனுக்கு –மா மலையாவது நீர் மலையே –)

இந்த பிரபந்தம் –தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7—என்று வகுத்த சேஷி பக்கலிலே எல்லோரும் அபஹ்ருத சித்தராய் போம்படியாக –முடிப்பான் சொன்ன ஆயிரம் –திருவாய் -8-7-11–என்கிற படியே அதுக்கு விரோதியாய் இருந்துள்ள –பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் -திருவாய் -10-7 10–இத்யாதியால் சொன்ன சதுர் விம்சதி தத்வாத் மகமான அசித்திலும் –ஞான ஆனந்த லஷணமாய் கொண்டு ஸ்வ போக்யதையாலே தன் பக்கலிலே கால் தாழ்த்தப் பண்ணும் ஆத்மாவிலும் உண்டான சங்கத்தை முடிப்பதாக சொன்னது என்கை ..

(தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-)அல்லோம் என்றாரையும் விட மாட்டாத வத்சலனுக்கு -ப்ராப்த விஷயத்தில் வாத்சல்யாதிகளால் இழந்தோம்

(சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும்
தன் கண்கள் சிவந்தே–8-7-11-)சம்சார சம்பந்தத்தை அறுக்க அருளிச் செய்த ஆயிரத்திலும் இப்பத்து-ஜென்ம சம்பந்தம் அறும்படி இப்பத்தும் தன் கண்கள் சிவந்து நோக்கும் -அதாகிறது ஜென்மத்துக்கும் இப்பத்தும் த்ருஷ்ட்டி விஷம் என்கை -ஜென்மத்துக்கும் இப்பத்துக்கும் சஹா நவஸ்த்தான லக்ஷண விரோதம் உண்டு என்கை –)

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-சேதனனை விக்ருதனாம் படி பண்ணும் சப் தாதி விஷயங்கள் ஐந்தும் –வறை நாற்றத்தைக் காட்டி அகப்படுத்துமா போலே சப் தாதிகளிலே மூட்டுகிற ஸ்ரோத்ராதிகள் ஐந்தும்–கர்ம இந்திரியங்கள் ஐந்தும்-பிருதிவ்யாதி பூதங்கள் ஐந்தும் —-இஸ் சம்சாரத்திலே இருக்கிற -இவ்வாத்மாவைத் தொற்றி இருக்கிற மூல பிரகிருதி என்ன -மஹான் அஹங்கார மனஸ் ஸூ க்கள் என்ன -இவை யாகிற உன்னுடைய மஹா மாயையை மங்க வொட்டு என்று அந்வயம் –)

இத்தால் மோஷ சாஸ்திரமே ஆகிலும் உதிக்கிற போது அன்யார்த்தமாக உதித்த குறை உண்டு அதுக்கு –மோஷார்தமாகவே உதித்த ஏற்றம் உண்டு இதுக்கு என்றது ஆய்த்து ..

—————————————–

உபக்கிரம உப சம்கார பிரகிரியையால் வந்த வைபவம் சொல்கிறது இதில் அங்கு நம்பி சரண் என்று தொடங்கி முடிவில் அப்ரியம் என்றது-இங்கு பரமே என்று இழிந்து பொலிக என்று உகந்தது-..-சூரணை -192 ..-அதாவது-அந்த பிரபந்த்ததில் உபதேசம் தொடங்குகிற போது –நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயற்காகி–பெரியாழ்வார் திருமொழி –1-9-4-என்கிறபடியே ,சிஷ்யஸ் தேஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம்–ஸ்ரீ கீதை –2-7-என்று அர்ஜுனனுடைய அனுவர்தனம் கண்டு – ப்ரீதி யோடே உபக்ரமித்துநூனமச்ரத் ததாநோசி துர்மே தாச்சாசி பாண்டவ அபுத்த்யா அன்ன ஜாநீஷே தன்மே ஸூமஹத் அப்ரியம் –ஸ்ரீ அநு கீதை –(அர்ஜுனா நிச்சயம் சிரத்தை இல்லாதவனாய் இருக்கிறாய்-கெட்ட புத்தியையும் யுடையவனாய் இருக்கிறாய் –இக்காரணத்தால் அறிவின்மையால் அறியவில்லையோ அது எனக்குப் பெரிதும் விருப்பம் இல்லாதது ஆகும் )- என்று அவன் பக்கல் அனவதானம் காண்கையாலே அப்ரியத்தோடே தலைக் கட்டிற்று

(நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று
தாழ்ந்த தனஞ்சயருக்காகி
தரணியில்
வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண் தேர்
ஊர்ந்தவன் என்னை புறம் புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம் புல்குவான் -1-9 4- நாந்தகம் என்னும் பேரை உடைத்தான -திருக்குற்றுடை வாளை- ஆஸ்ரித ரஷணத்தில் விளம்ப அசஹதையாலே -சர்வ காலமும் பூ ஏந்தினால் போல் – திருக் கையில் தரித்து கொண்டு -ரஷிக்கைக்கு ஈடான குணங்களால் -பூர்ணனாய் இருக்கிற நீ ரஷகனாக வேணும் என்று –பிரபதனம் செய்த அர்ஜுன பஷ பாதியாய்-பூமியில் உள்ள ராஜாக்கள் எல்லாரும் அர்ஜுனன் அளவில் பஷ பாதத்தையும் தேரை நடத்துகிற சாமர்த்தியத்தையும் கண்டு –
நாம்  இனி ஜீவிக்கை எனபது ஓன்று உண்டோ – என்று நெஞ்சு உளுக்கும்படியாக-அர்ஜுனனுடைய அழகியதாய் –திண்ணியதான தேரை சாரதியாய் நின்று நடத்தினவன் –
என்னைப் புறம் புல்குவான் –இப்படி  துர் வர்க்கத்தை நிரசிக்கையாலே -பூ பாரத்தை போக்குகைக்காக அவதரித்து அருள வேணும் என்று -அபேஷித்த தேவர்களுக்கு நிர்வாகன் ஆனவனே – என்னைப் புறம் புல்குவான் )

(கார்பண்ய தோஷோபஹத ஸ்வபாவம் ப்ருச்சாமி த்வாம் தர்ம ஸம் மூடசேதா
யச்ச்ரேய ஸ்யாந் நிஸ்சதம் ப்ரூஹி தந்மே ஷிஷ்யஸ்தேஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபந்நம்
—৷৷2.7৷৷)மந வலிமை இன்மையாகிற தோஷத்தால் அழிக்கப்பட்ட தைரியத்தை உடையனாய் –
தர்ம விஷயத்தில் மயங்கின நெஞ்சை உடையனாய் -நான் -உன்னைக் கேட்கிறேன் –
இவ்விஷயத்தில் எது உறுதியாக நன்மை பயக்குமோ-அதை எனக்குக் கூறுவாயாக –
நான் உனக்கு சிஷ்யன் ஆகிறேன் –உன்னைச் சரணம் அடைந்த என்னைத் தெளிவிப்பாயாக)

இப் பிர பந்தத்தில் விமுகரைக் குறித்து கிருபையாலே உபதேசிக்கையாலே –உபதேச உபக்ரமத்தில் ஏ பாவம் பரமே ஏழுலகும் ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் –திருவாய் -2-2-3- -என்று அப்ரிதியோடே உபக்ரமித்து -அவ் உபதேசம் கேட்டு ஜகத்தாக திருந்துகையாலே -இப்படி திருந்தினவர்களைக் கண்டு –பொலிக பொலிக பொலிக –திருவாய் -5-2-1- -என்று மங்களாசாசனம் பண்ணி –உகந்து பணி செய்தேன்–திருவாய் -10-8-10- -என்னும் படி ப்ரீதியோடே தலைக் கட்டிற்று என்கை -இத்தால் அர்ஜுனன் யுத்தே பிரவ்ருதனான மாத்ரம் ஒழிய சித்த தர்ம பர்யந்தம் உபதேசித்த பலம் சித்திக்கப் பெறாமையாலே உபதேசம் ச பிரயோஜனம் ஆய்த்து இல்லை அங்கு –அது ச பிரயோஜனம் ஆய்த்தது இங்கே என்றது ஆய்த்து-

(ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே
–2-2-2-இவனுடைய பரத்வம் சாத்யமாய் -சாதிக்க வேண்டுவதே -என்ன பாபமோ என்கிறார் – என்றது என்றபடி -விஷயத்தை அதிசய ஸூ சகம் –சகல சேதனருடைய பாபங்களையும் தன் கிருபையால்போக்கி ரக்ஷிப்பார் யார் –ரக்ஷிப்பார் இன்னார் என்னாதே ஆர் என்கிறது பிரதிவாதிகளும் இசையை வேண்டும்படியான பிராமண சித்தி-தலை அறுப்புண்டும் தலையை அறுத்து பாதகியாயும்
நின்ற இவர்களை ஈஸ்வரன் என்னவோ கர்ம வஸ்யரை ஈஸ்வரராக சொல்ல ஒண்ணாது இறே)

——————————————-

பிரதி பாத்ய அர்த்த கௌரவத்தால் வந்த வைபவம் சொல்கிறது இதில் –

அதில் சித்த தர்ம விதி -இதில் விதி அனுஷ்டானங்கள் -சூரணை -193

அதாவது-அந்த கீதையில் –மா மேகம் சரணம் விரஜ –ஸ்ரீ கீதை –18-66–என்ற சித்த தர்மம் மாத்ரமே உள்ளது -இந்த பிரபந்தத்தில் –திரு நாரணன் தாள் காலம்பெற சிந்தித்து உய்மினோ-திருவாய் -4-1-1 -என்ற விதியும்அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்-6-10-10 -என்ற அனுஷ்டானமும்-இரண்டும் காணலாம் என்கை -இத்தால் விதி மாத்ரம் பிரதி பாதகமான அதில் விதி அனுஷ்டானங்கள் இரண்டையும் பிரதி பாதிக்கும் இதுக்கு ஏற்றம் உண்டு என்றது ஆய்த்து ..

(ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷எல்லா சாதனங்களையும் நன்கு விட்டு என் ஒருவனையே உபாயமாக அனுசந்திப்பாய் நான் உன்னை எல்லாப் பாபங்களில் நின்றும் விடுக்கிறேன் -சோகப்படாதே)

(ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-)ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளை அடைந்து உய்வு பெற்றுப் போருங்கோள்,’-தலையாகப் பிரார்த்திக்கப்பட்ட திருவடிகளை‘அடி சூடும் அரசு’ என்னக் கடவது அன்றோ-அடி உற்றால் வாழலாம் அடி அற்றால் வாடலாம் –ஆதலால், அடியைப் பேணி நோக்கி உய்ந்து போருங்கள்.
உபாயமாகவும் ப்ராப்யமாகவும் உய்ம்மினோ –உஜ்ஜீவித்து ஆனந்தம் அடைவோம் –

(அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-)“அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தம்முடைய சேஷத்வத்தையும் ஆகிஞ்சந்யத்தையும் உருவச் சொல்லிக் கொடு போந்தார். இனித்தான், வெறுமையும், ஸ்வரூபமும், என்னும் இரண்டும் சரணாகதிக்குப் பரிகரங்கள் ஆதலின், அவற்றை இங்கேயும் அருளிச் செய்கிறார்;-அமர்ந்து புகுந்தேனே –-“முமுக்ஷுவான நான் சரணம் அடைகிறேன்” என்னுமாறு போலே-ஒருவன் பிரபத்தியை ஒரு முறையே செய்ய வேண்டும்” என்கையாலே,இறந்த காலமாகச் சொன்னார்-புகுந்தேன்’ என்கிற இது, ஒரு போக்கு வரத்து உண்டாய் அன்று; அவனுடைய சர்வ ஜகத் காரணத்வத்தையும் ஸர்வாத்ம பாவத்தையும் ஸர்வ ரக்ஷகத்வத்தையும் அறிந்து,‘அவனே உபாயம்’ என்று அறுதியிட்டிருக்கிற அத்யவசாய ஞானத்தைச் சொல்லுகிறது.“கதிவாசக சப்தங்கள் – புத்தி வாசங்கள்-முதல் முதலிலே, “துயர் அறு சுடர் அடிதொழுது எழு” என்று” திருவுள்ளத்தைக் குறித்து அருளிச்செய்து,
தாம் பற்றுகிற இடத்தில் “உனபாதம் கூடுமாறு கூறாய்” என்றும், “உன்னடிசேர்வண்ணம் அருளாய்” என்றும், உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே!” என்றும், “பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய்” என்றும், “உனபாதம் சேர்வது அடியேன் எந்நாள்” என்றும், “எந்நாள் உன்னடிக்கள் அடியேன் மேவுவதே?” என்றும்,“நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேன்” என்றும், “அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையும்” என்றும்,“உன்னடிகீழ் அமர்ந்து புகுந்தேன்” என்றும் இவர் அடிவிடாமல் அநுசந்தித்தபடி கண்டதே!

——————————————–

இனி அந்த ஸ்ரீ கீதை தனக்கு உத்கர்ஷமும் இவர் அங்கீகாரத்தாலே என்கிறது இதில் ..

பகவன் ஞான விதி பணிவகை என்று இவர் அங்கீகாரத்தாலே அதுக்கு உத்கர்ஷம்-சூரணை -194- –

அதாவது அந்தமில் ஆதி யம் பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று –திருவாய் -1-3-5–என்றும் –ஞான விதி பிழையாமை –திருவாய் -5-2-9–என்றும் –பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் கமல மலர் பாதம் –திருவாய் -10-4-9–என்றும் பரம வைதிகரான இவர் அத்தை பிரமாணமாகக் கொள்ளுகையாலே ஆய்த்து அந்த ஸ்ரீ கீதைக்கு உத்கர்ஷம் உண்டாய்த்து என்கை –

புத்த முனியாயும் -கபில முனியாயும் சொன்ன பௌத்த சாஸ்திரமும் -சாங்க்ய சாஸ்திரமும் –அவன் தான் அருளிச் செய்ததாய் இருக்கச் செய்தே -வைதிக பரிக்ரகம் இல்லாமை இறே
அப்ரமாணம் ஆய்த்து –இதி மோஹன வர்ஷ்மணா த்வயாபி க்ரதிதம் பாஹ்ய மதம் த்ருணாய மந்யே –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -(இப்படி பிறரை மயங்கச் செய்கின்ற தேவரீராலேயே செய்யப்பட வேதங்களுக்குப் புறம்பான மதங்களை புல்லுக்குச் சமமாக நினைக்கிறேன் )-என்று பகவத் யுக்தமே யாகிலும் வேத விருத்தமானது வைதிகர் அங்கீகரியார்களே-வேதா விரோதித்வம் பிரகாசிப்பது வைதிக பரிகிரகத்தாலே இறே -ஆகையால் அதுக்கு உத்கர்ஷம் இவர் அங்கீகாரத்தால் என்ன குறை இல்லை ..

இத்தால் அதுக்கு உத்கர்ஷம் இவர் பரிக்ரகம் கொண்டு சொல்ல வேணும் -இவர் வாக்கில் பிறந்த இதுக்கு அதுவும் வேண்டாம் என்று இவ் வழியாலும் ஓர் ஆதிக்யம் சொல்லிற்று ஆய்த்து ..-ஆக ஸ்ரீ கீதை யிலும் இதுக்கு உண்டான ஆதிக்ய ஹேதுக்கள் எல்லாம் சொல்லிற்று ஆய்த்து ..

(பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5-)தனக்கு முடிவு இன்றிக்கே -எல்லார்க்கும் காரண பூதனாய் இருக்கும் ஹேய ப்ரத்ய நீகமான ஜ்ஞானாதி குண பூர்ணனாய் இருக்கை-இத்தால் -உதாரனாய் -பிராப்தனாய் -ஆப்தனாய் இருந்தவன் வார்த்தை யாகையாலே விச்வாச நீயம் என்கை -வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே வணக்குடை -என்கிறது தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று – பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல்
இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல்)

(மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-)பக்தியினாலே தூண்டப்பட்டுச் செய்கின்ற காரியங்களில் ஒன்றும் தப்பாமல். ஞானம்’ என்கிறது, ஞான விசேஷமான பக்தியை

(கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-)நமக்காக இன்று அன்றிக்கே சர்வாதிகன் சர்வ சாதாரணமாக அன்று அருளிச் செய்த பாசுரத்தில் படியே -மாமேகம் சரணம் வ்ரஜ –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று இறே பாசுரம் –

———————————————–

ஸ்ரீ அருளிச் செயல்களும் -ஸ்ரீ துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கும்–

பெரியாழ்வார் திருமொழி —
தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது போருய்த்து வந்து புகுந்தவர் மண்ணாளப்
பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேருய்த்த கைகளால் சப்பாணி -தேவகி சிங்கமே சப்பாணி -1-6-6-

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து –அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ அச்சோ -1-8-3-

கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டு இருந்துன்னை நோக்கும்
சுழலைப் பெரிதுடைத் துச்சோதனனை அழல விழித்தானே அச்சோ வச்சோ ஆழி யங்கையனே அச்சோ வச்சோ –1-8-5-

போர் ஓக்கப் பண்ணி இப் பூமிப பொறை தீர்ப்பான் தேர் ஓக்க வூர்ந்தாய் செழும் தார் விசயற்காய்
நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயர்க்காகி தரணியில்
வேந்தர்களுட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான் –உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான் -1-9-4-

மெச்சூது சங்கமிடத்தான் நல்வேயூதி பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னார்க்காய்
பத்தூர் பெறாதன்று பாரதம் கை செய்த அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் -2-1-1-

மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன்
சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற செங்கண் அலவலை வந்தப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் -2-1-2-

ஒன்றே யுரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் துன்று முடியான் துரியோதனன் பக்கல்
சென்று அங்குப் பாரதம் கை எறிந்தானுக்கு கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா கடல் நிற வண்ணற்கோர் கோல் கொண்டு வா -2-6-4-

சீரொன்று தூதாய்த் துரி யோதனன் பக்கல் ஊர் ஓன்று வேண்டிப் பெறாத வுரோடத்தால்
பார் ஒன்றிப் பாரதம் கை செய்து பார்த்ததற்குத் தேர் ஒன்றை யூர்ந்தாற்கோர் கோல் கொண்டு வா
தேவ பிரானுக்கோர் கோல் கொண்டு வா –2-6-5-

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா -3-3-5-

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து —அஞ்சன வண்ணனைப் பாடிப் பற யசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற -3-9-5-

மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை –தென் திருமாலிருஞ்சோலையே -4-2-7-

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை –தொல்லை மாலிருஞ்சோலையதே -4-3-6-

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய் அரசினை யவிய அரசினை யருளும்–கண்டம் என்னும் கடி நகரே -4-7-8-

மருமகன் தன் சன்னதியை உயிர் மீட்டு மைத்துனன் மார் உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்தானூர் –புனல் அரங்கம் என்பதுவே –4-8-3-

மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி உத்தரை தன் சிறுவனையும்
உய்யக் கொண்ட உயிராளன் யுறையும் கோயில் –திருவரங்கமே –4-9-6-

—————————————————

நாச்சியார் திருமொழி
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சாரங்கவில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ –9-9-

செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர்
தம்மை யுகப்பாரைத் தாமுகப்பார் என்னும் சொல் தம்மிடையே பொய்யானால் சாதிப்பாரினியே —11-10-

—————————————————-

திருச்சந்த விருத்தம்
பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாகி நின்று கொன்று வென்றி சேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையமைவர் பாலதாம் சீர் மிகுத்த நின்னலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே –89-

—————————————–

பெரிய திருமொழி
பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர் கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் –திருவேங்கடம் அடை நெஞ்சே -1-8-4-

முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து -அவனே
பின் ஓர் தூது ஆதி மன்னார்க்காகி பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே –2-2-3-

விற் பெரு விழாவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னை புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-1-

இன் துணைப் பதுமத்து அலர் மகள் தனக்கும் இன்பன் நற் புவி தனக்கு இறைவன்
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-5-

அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசர்க்கு இளையவன் அணியிழையைச் சென்று
எந்தமக்கு உரிமை செய்யெனைத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-6-

பாரேறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதியங்கி பார்த்தன் செல்வத் தேரேறு சாரதியாய் எதிர்ந்தார்
சேனை செருக்களத்துத் திறல் அழிய செற்றான் தன்னை –திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே -2-10-8-

வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினால் விசயனுக்காய் மணித் தேர் கொள் கைத் தலத்து எந்தை பெம்மானிடம் –திருவயிந்தரபுரமே -3-1-9-

ஏது அவன் தொல் பிறப்பு இளையவன் வளையூதி மன்னர் தூதுவனாய் அவனூர் சொல்லுவீர்கள் சொலீர் அறியேன் –புனலாலி புகுவர் கொலோ -3-7-4-

மல்லரையட்டு மாளக் கஞ்சனை மலைத்து கொன்று பல்லரசு அவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய் –-காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-6-

மூத்தவற்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி மாத்தமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஓசித்தாய் —காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-7-

கரையார் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி–புள்ளம் பூதங்குடி தானே –5-1-8-

வாம்பரியுக மன்னர் தம் உயிர் செய் ஐவர்கட்க்கு அரசளித்த காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப
நின் காதலை அருள் எனக்கு –திரு வெள்ளறை நின்றானே –5-3-4-

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும் ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே -6-2-4-

நீ திருவாய் மலர்ந்து அருளின
சரம ஸ்லோகத்தைப் பற்றினேன் -நீ பணித்த அருள்
ஒள வாளுருவி -சரம ஸ்லோகம் ஒள் வாள்
ஐம்புலன்கள் இடர் -வினைத் தூற்றை வேர் அறுத்தேன்
ஒள் வாளுருவி வினைத் தூற்றை வேர் அறுத்தேன் -ஆச்சார்ய ஹிருதயம்-

வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம் விள்ள சிந்துக்கோன் விழ ஊர்ந்த விமலனூர் –நறையூர் –6-5-8-

பாரையூரும் பாரம் தீர பார்த்தன் தன் தேரையூரும் தேவ தேவன் சேருமூர் –நறையூரே –6-5-9-

மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி குடையா வரை யொன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-7-

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-8-

மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் பண்ணின் மேல் வந்த படையெல்லாம் பாரதத்து
விண்ணின் மீதேறி விசயன் தேரூர்ந்தானை நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே –6-8-8-

உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவரக்காய்ச் சென்று இரங்கி யூர்நது அவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை -7-3-4-

பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாள பாரதத்துத் தேரில் பாகனா யூர்ந்த தேவ தேவன் ஊர் போலும் –அழுந்தூரே-7-5-2-

கயம் கொள் புண் தலைக் களிறுந்து வெந்திறல் கழல் மன்னர் பெரும் போரில் மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் –8-5-4-

துவரிக்கனி வாய் நில மங்கை துயர் தீர்ந்துய்ய பாரதத்துள் இவரித்தரசர் தடுமாற
இருள் நாள் பிறந்த அம்மானை –கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-9-

அரவ நீள் கொடியோன் அவையில் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்குப் பெரிய மா மேனி
அண்ட மூடுருவப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் –திருக் கண்ணங்குடியில் நின்றானே –9-1-8-

பன்னிய பாரம் பார்மகட்க்கு ஒழியப் பாரத மா பெரும் போரில் மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர்
மைத்துனருக்கு உய்த்த மா மாயன் —திருக் கண்ணங்குடியில் நின்றானே –9-1-9-

பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்து ஒரு தேர் முன் நின்று காத்தவன் தன்னை –திரு மால் இருஞ்சோலை நின்ற மூர்த்தியை -9-9-8-

செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டு அவர் செல்லும் அரு வழி வானம் அதர் படக் கண்டா ஆண்மை கொலோ -10-9-5-

அன்று பாரதத்து ஐவர் தூதனாய் சென்ற மாயனைச் செங்கண் மாலினை மன்றிலார் புகழ் மங்கை வாட் கலிகன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே –11-1-10-

மன்னிலங்கு பாரதத்து தேரூர்ந்து —தேவர்க்கு இது கண்ணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே –11-3-1-

கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் ஆகிலும் ஓத நீர் வையகம் முன்னுண்டு உமிழ்ந்தான் சாழலே–11-5-6-

பார் மன்னர் படை தொட்டு வெஞ்சமத்து தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் ஆகிலும் தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே –11-5-7-

——————————————————-

திரு நெடும் தாண்டகம் –
ஓர் தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாள யூர்ந்த வரை யுருவின் மா களிற்றைத் தோழீ –இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே -28-

—————————————————–

முதல் திருவந்தாதி
மயங்க வலம் புரி வாய் வைத்து வானத்து இயங்கும் எறி கதிரோன் தன்னை –
முயங்கமருள் தேராழியால் மறைத்தது என் நீ திருமாலே போராழிக் கையால் பொருது –8-

வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த வூர் –37-

குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
இன்று முதலாக வென்னெஞ்சே -என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு ——–41-

———————————————

இரண்டாம் திருவந்தாதி
திரிந்தது வெஞ்சமத்து தேர் கடவி அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு -15–

————————————————

மூன்றாம் திருவந்தாதி
அடைந்தது அரவணை மேல் ஐவர்க்காய் அன்று மிடைந்தது பாரத வெம்போர் உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே வாள் எயிற்றுப் பீய்ச்சி பாலுண்ட பிரான் –28-

——————————————-

நான்முகன் திருவந்தாதி
நிலை மன்னும் என்நெஞ்சம் அந்நான்று தேவர் தலை மன்னர் தாமே மாற்றாக
பல மன்னர் போர் மாள வெங்கதிரோன் மாயப் பொழில் மறைய தேராழியால் மறைத்தாரால் -16-

நிகழ்ந்தாய் பால் பொன் பசுபுக் கார் வண்ணம் நான்கும் இகழ்ந்தாய் இருவரையும் வீய புகழ்ந்தாய்
சினப் போர்ச்சுசேதனைச் சேனாபதியாய் மனப்போர் முடிக்கும் வகை –24-

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
அன்று ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞானமில் –71–

—————————————————

பெரிய திரு மடல்
மன்னர் பெரும் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய் தன்னை இகழ்ந்து உரைப்பத் தான் முன நாள் சென்றதுவும் -141/142-

————————————————————————–

திருவாய்மொழி-

பஜியுங்கோள் ‘வழிபாடு செய்மின் என்று பன்முறையுங் கூறுகின்றீர்;
பஜன உபாயம் -வழிபாடு செய்யும் வழியினை அருளிச் செய்யீர்,’ என்ன,
‘இன்று நான் உபதேசிக்க வேண்டுமோ?
அவன் தான் ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த பத்தி மார்க்கத்தாலே அவனை அடைமின்,’ என்கிறார்.

பிணக்கற அறு வகைச் சமயமும் நெறி உள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதி யம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறி களை கட்டு
உணக்குமின் பசை அற அவனுடை யுணர்வு கொண்டு உணர்ந்தே–1-3-5-

அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து –
அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு உணர்ந்து;
அதாவது, ‘பத்தி மார்க்கத்தைக் கொண்டு உணர்ந்து’ என்றபடி.
இனி,தத் யுக்த – அவன் அருளிச் செய்த ஞானத்தைக் கொண்டு உணர்ந்து;
அதாவது, ‘அவன் அருளிச் செய்த ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் படியைப் பற்றி நின்று’ என்னுதலுமாம்-

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளங் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்விற் சென்று அறுவர் தம் பிறவி அஞ் சிறையே–1-3-11-

த்யக்த்வா தேகம் புநர் ஜென்ம நைதி மா மேதி-( அருச்சுனா என்னுடைய அவதாரத்தையும் செயல்களையும்
தெய்வத்தன்மை பொருந்தியவை என்று எவன் ஒருவன் உண்மையாக அறிகிறானோ,அவன் இச் சரீரத்தை விட்டால்
பின் வேறு சரீரத்தை அடையான்; என்னையே அடைகிறான்,’ )என்று ஸ்ரீகீதையிற்கூறியது போன்று,
இவரும் அவதாரத்தின் எளிமையினைக் கூறுகின்ற இப் பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள்
‘அறுவர் தம் பிறவி அஞ்சிறையே’ என்கிறார்.

தீர்த்தான் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தியவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –1-8-5-

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இரு நிலத்தவித்த வெந்தாய்
பொல்லா வாக்கையின் புணர் வினை யறுக்கலறா சொல்லாய் யானுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே -2-2-3-

நீர்மையில் நூற்றுவர் வீய ஐவருக்கு அருள் செய்து நின்று பார்மல்கு சேனையவித்த பரஞ்சுடரை நினைந்தாடி
நீர்மல்கு கண்ணினாராகி நெஞ்சம் குழைந்து நையாதே ஊன் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்க்கு என் செய்வாரே -2-5-7-

அடியோங்கு நூற்றுவர் வீய அன்று ஐவருக்கு அருள் செய்த நெடியோனை -2-7-11-

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தனை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே–4-5-5-

போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாய போர்த் தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே -4-6-1-

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப் போர் பண்ணி நீறு செய்த வெந்தாய் –சிரீ வர மங்கல நகர் ஏறி வீற்று இருந்தாய் –5-7-4-

பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத் திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும் -5-10-1-

மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஒரு பாரத மா பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ் பட நூற்றிட்டுப் போய்
விண் மிசைத் தான தாமமே புக மேவிய சோதி தன் தாள் நண்ணி நான் வாங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே -6-4-10-

மாயம் அறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ -தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்
தேசம் அறிய வோர் சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை யறிந்துமே –-7-5-10-

வார்த்தை யறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்து பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே -7-5-11-

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா –உன்னை எங்கே காண்கேனே –8-5-10-

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் -9-1-10-

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினையாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக பண்டே பரமன் பணித்த பணி வகையே -10-4-9-

வாட்டாற்றான் மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படை தொட்டான் நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-

————————————————————

இராமானுச நூற்றந்தாதி

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்க்காய் அன்று பாரதப் போர் முடிய பரி நெடும் தேர் விடுங்கோனை முழுதுணர்ந்த
அடியர்க்கமுதம் இராமானுசன் என்னை யால வந்து இப்படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே–51-

சரணம் அடைந்த தருமனுக்கா பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை யுமக்கு
என்று இராமானுசன் உயிர்கட்க்கு அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இவ்வார் உயிருக்கே–67-

ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர் சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே -68-

———————————————————–

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ரஹஸ்ய விவேகம்-ஸ்ரீ வரவரகுருவரர்‌ ஸ்வாமிகள்-

September 14, 2025

இந்த ரஹஸ்ய விவேகம்‌ அருளிச்செய்தவர்‌ – ஸ்ரீமணவாள மாமுனிகள்‌ நியமித்தருளின அஷ்டதிக்‌ கஜங்களி லொருவராய்‌, ”தேவராஜகுரு”‘ என்னும்‌ திருநாமத்தை யுடை.யரான எறும்பி அப்பாவின்‌ திருப் பேரனாகிற தேவராஜகுரு, வரருடைய திருக் குமாரராகிய வரவரகுருவரர்‌. இவர்க்கு *’ஆசார்ய ரத்நம்‌”” என்னும்‌ மற்றொரு திருநாமமுண்டென்று பூர்வர்கள்‌ பணிக்கும்படி. இந்தத்‌ திருநாமம்‌ இவர்க்கு ‘வழங்கி வருவதற்குக்‌ காரணம்‌ – இவர்‌ ஆசார்ய ரத்நம்‌: என்னுமொரு க்‌ரந்தம்‌ அருளிச் செய்தமையே. இவருடைய வம்ஸ பரம்பரையினடைவு இருக்கும்படி என்னென்னில்‌ எறுப்பி அப்பாவின்‌ திருக் குமார்‌ யஜ்ஞ நாராயண குரு அவர்‌ தனியன்‌
தேவராஜார்ய தநயம்‌ தயா வாத்ஸல்ய ஸாகரம்‌।
ப்ரஜ்ஞா நிதி,ம்‌ ப்ரபத்‌,யேஹம்‌ யஜ்ஞ நாராயணம்‌ குரும்‌!!

இவருடைய குமாரர்‌ தேவராஜகுரு. அவர்‌ தனியன்‌- தே,வராஜகுரோ! பெளத்ரம்‌ திவ்ய போதம்‌ தயாநிதிம்‌। வாத்ஸல்ய வாரிதி,ம்‌ வாத்ஸ்யம்‌ வந்தே தேவேஸ தேஸிகம் -இவர்‌ குமாரர்‌ வரவரகுருவரர்‌. அவர்‌ தனியன்
வாத்ஸ்ய ஸ்ரீ தேவ ராஜார்ய தநயம் விநய உஜ்ஜ்வலம்
வாத்ஸல்யாதி குணாவாஸம்‌ வந்தே வரவரம்‌ குரும்‌ ‘

இவர்‌ அருளிச் செய்த கிரந்தங்கள்‌ –அஷ்டஸ்லோகீ ஸம்ஸ்க்ருத வ்யாக்யா, பகவத் கீதா வ்யாக்யா, ரஹஸ்ய விவேகம் ஆச்சார்ய ரத்னம்

அஷ்டாதஸ பேத விசாரா பர நாமதேய: ரஹஸ்ய விவேக:உபோத்காதம்
ஜயதி ஸகல வித்‌யாரங்க பூமிர் குருர்மே குண கண மணி ஸிந்து,: வத்ஸ வம்ஸாம்புதீந்து,!!
ஸுரபதி குருஸூநு: ஸ்ரீநிவாஸார்ய பாத, ப்ரவண விமல சித்தோ ரம்ய ஜாமாத்ரு நாமா

தர்கேஷ்வேகே விதக்‌தா ; பணிபதி பணிதெள ப்ரெளடதா நாஸ்தி தேஷாம்‌, ஸப்‌த ஞாநம்‌ ந தர்க்கே ந தது பய விதோ பாதி மீமாம்ஸி தாதீ,!।
மீமாம்ஸா பார த்‌ருஸ்வா ஸடரிபுவசஸாம்‌. ஸ்யாத்‌ ஸ்வரூபாநபி ஜ்ஜோ
யஸ்மிந் நாஸ்தே ஸமஸ்தம்‌ ஸதி ஸது குஸலம்‌ ரம்ய ஜாமாத்ரு ஸுூரி

அமோகாம்‌ ஸம்ஸ்ரிதாஸ் ஸந்த: ஸாத்விகா மோக்ஷ ஸித்‌தயே|
உபாத்‌வம்‌ ஸெளம்ய ஜாமாத்ரு தேஸிகாஷ்டாக்ஷரீம்‌ ஸக்ருத்‌ ||.

ரஹஸ்ய த்ரய வாக்யார்த்த,மணீநாம்‌ மலஸோத,நம்‌ |
ப்ராசா மாசார்ய வர்யாணாம்‌ க்ரியதே ஸூக்தி கங்குயா ||

உபாய ஸ்ரீ விப்‌வீ ஸரண வசஸ ஸாதநமிதி
ந கைவல்யம்‌ முக்தி: புநரபி பர ப்ராப்தி கதநம்‌ |
ததாண்டாந்தர்பாவ ப்ரமிதி வசநம்‌ கேவலகதே
பரபத்தேர் தெவ்ர்பல்யம்‌ த்விதி கதிசந த்‌ராக கதயந்

ஸக்தாநாம்‌ பக்தி யோக ப்ரபதந விஷய: ஸக்தி ஹீநாதிகார:
ப்ரத்யே கோபாயதா ந ப்ரதி நியமவதாம்‌. கர்ம யோகாதி காநாம்‌ |
ஸாத்‌யோபாயேந ஸித்‌தம்‌ பவதி விஸத்‌ருஸம்‌ ப்ராப்யமந்யேந சாந்யத்‌
த்யாகஸ் ஸித்‌தாநுவாத,? ப்ரணவ விரஹதோ அஷ்டாக்ஷரத்வம்‌ மநோர்ஹி !

ஸ்ருஷ்ட்யாதெள நைவ ஸக்தி ஸ்புடமபி மஹதாம்‌ நித்ய முக்தாதி காநாம்‌.
தோஷா த்‌ருஷ்டிஸ்து வாத்ஸல்யமபி து பர துக்கோத் த்‌ருதீச்சா தயேதி

நோபாய ஸ்ரீந விப்‌வீ ந ஸரணவசஸ ஸாதநத்வே ப்ரமாணம்‌
கைவல்யம்‌ முக்திரஸ்மாந் ந பரம புருஷ ப்ராப்தி ரூர்த்‌வம்‌ ப்ரக்ருத்யா?. |
ப்ராபல்யம்‌ ஹி ப்ரபத்தே: பஜந விதிரசவ் புத்‌தி தெளார்பல்ய மூலோ
ந்யாஸ: ஸர்வாதிகார: ததிதர ஸரணாநி அஸ்வ தந்த்ராணி நைவ ||

அகாரத்திலே ஆர்த்தமான ஸ்ரீ ஸம்பந்தம்‌ லஷ்ம்யா. ஸஹ-இத்யாதி, வசநாநுரோதேந உபாயத்வே நைவ ஆக வேண்‌டுகையாலும்‌, த்‌வயத்தில்‌ ஸ்ரீமானுக்குச்‌ சொல்லுகிற உபாயத்வம்‌ விஸேஷண பூதையான பிராட்டிக்கும்‌ துல்யமாகையாலும்‌- ஸ்ரீக்கு உபாயத்வமே என்னில்‌ ,லக்ஷ்ம்யாஸஹ* இத்யாதி, வசநத்தில்‌ விஸேஷணத்வா ப்ரதாந ரக்ஷகத்வ வாசியான திருதீயையாலே. கடகத்வேதைவ அந்வயமென்னுமிடம்‌ ஸித்‌தமாகையாலும்‌ , வசநாந்தரத்திலும்‌ , நாந்யதா லக்ஷணம்‌ பவேத்‌ என்று இங்கே ஸங்கிதமான உபாயத்வம்‌ நிஷித்‌தமாகையாலும்‌ , த்‌வயத்தில்‌ விஸேஷணத்வ ப்ரயுக்தமான உபாயத்வம்‌ சொல்லில்‌ , நார பத,வாச்‌யங்களாய்‌ , கார்யோபயோகிகளாய்‌ , ஆஸ்ரயண ஸெளகர்யாபாதகங்களான வாத்ஸல்யாதி குணங்களுக்கும்‌ விஸேஷணத்வ ப்ரயுக்தமான உபாயத்வம்‌ ப்ரஸங்கிக்கையாலே அது கூடாமையாலும்‌ ஸ்ரீக்குப் புருஷகாரத்வமே அஸாதாரணம் என்றதாயிற்று –

பத்னிக்கு பதி ஸ்வரூப அநு ரூப்ய அவஸ்யம் பாவத்தாலும் –யதோ ஸர்வ கதோ விஷ்ணு: இத்யாதி வசநத்தாலும்‌ ஸ்ரீக்கு விபுத்வம்‌ கொள்ள வேணுமென்னில்‌ ஸேஷத்வ யவஸ்யம் பாவத்தாலே விஸ்வபதித்வாதிகள்‌ வாராதாப் போலே மகார வாஸ்யையான. இவளுக்கு விபுத்வம்‌ வாராமையாலும்‌, *யதா ஸர்வ கதோ விஷ்ணு: இத்யாத்‌,யுக்த ஸர்வகதத்வம்‌ , *விஷ்ணோர் தேஹாநுரூபாம்‌* இத்யாதியாலே தேஹ ப்ரயுக்தமாகச் சொல்லுகையாலும்‌. விபுத்வம்‌ கூடாது –

நமஸ்ஸிலே ஸாத்‌யோபாயங்களான பக்தி ப்ரபத்திகளுக்கு. ஸாத்யங்களுமாய் விஸத்ருஸங்களுமாய் அந்யங்களுமான பக்தி ப்ரபத்தியாதிகளுடைய பரித்யாக அங்கமாக ஸித்தமுமாய் ஸாஸ்த்ர அஸத்‌ருஸமுமாய்‌ , அநந்யமுமான தன்னையே உபாயமாக ஸ்லீகரி என்று விதிக்கையாலும்‌, இவற்றுக்கு ப்ரஸதநோபாயத்வம்‌. நமஸ்ஸிலே நிஷித்தம்

ஸர்வ கர்ம விநிர்மோக்ஷத்தில்‌ முக்தி பேதம்‌ கூடாமையாலே கைவல்யம்‌ மோஷமன்று . ஆகையாலே , பரம பத ப்ராப்‌தியும்‌, பின்பு மகார வாஸ்யனான பரக்ருதி வியுக்தாத்மாவினுடைய அநுபவமான கைவல்யமும்‌ அண்டத்துக்குள்ளே யென்னில்‌, இவ்‌ விடத்தில்‌ ஸர்வ கர்‌ம விநிர்மோஷமாவது நித்யமான ஆத்மாநுபவத்துக்கு ப்ரதி பந்தகமான அசித் ப்ராப்தி ஹேது பூத ஸர்வ கர்மங்‌களினுடையவும்‌ விநிர்மோக்ஷமே அவனுக்கு அபேஷிதமாகையாலே கைவல்யம்‌ மோஷமாய்‌ ஸ்வோத்‌தேஸ்ய பல ஸாதந பூத கர்ம ஷயம்‌ அவனுக்கு விவஷிதமல்லாமையாலே அது நஸியாமையாலே மோக்ஷ பேதமும்‌ ப்ராமாணிகமாய்க் கூடுகையாலும்‌ , நித்யமாகையாலே புந;பர ப்ராப்தி கூடாமையாலும்‌ அவனுக்கு ஸ்வ வ்யதிரிக்த தத்வ ப்ராப்த்யபாவத்தாலே,,விரஜா பரம வ்யோம்‌ நோ: இத்யாத்‌,யுக்த ஸ்தாநமே ஸ்தாநமாகவும்‌ ப்ரக்ருதி வியுக்‌தாத்ம வாசியான மகாரத்திலே ஸித்‌தமாகையால்‌ அவை மூன்றும்‌ கூடாது.

ப்ரபத்தி தெளர்பல்யமும்‌ அதின்‌ ஸக்திரஹிதாதி காரத்வமும்‌, பக்திக்கு ஸக்தாதிகாரத்வமும்‌ ஸர்வ தர்ம பரித்யாக அங்ககதத்‌ விதாநத்தாலே கூடாது-

ஸாத்ய உபாயேந ஸித்தம் பவதீ த்யாதி த்ரயமும் ஸாஸ்த்ர ஸித்‌தமென்னில்‌ , ஸாத்‌யமுமாய்‌ விஸத்‌ருஸமுமாய்‌, அந்யமுமான ஸர்வ தர்ம பரித்யாக பூர்வகமாக ஸித்தமாய்‌, ஸத்‌ருஸமுமாய்‌ , அநந்யமுமான தன்னை உபாயமாக ஸ்லீகரி என்று விதிக்கையாலே கூடாது –

த்யாஜ்யமாகில்‌ , ஸாத்‌யோபாய விதி, வ்யர்த்தமாகையாலே “த்யாக, ஸித்‌த அநுவாத,”‘ என்கையும்‌ தத்‌,விதி, அந்யார்த்தமாகையாலே ல்யப்பாலே அபாஸ்தம்

ப்ரணவ மந்தரா அஷ்டாக்ஷரத்வமும்‌ ஓமித்யேகாக்ஷரம்‌ இத்யாதி,ஸ்ருதி ஸித்‌தையான அஷ்டாஷர ஸங்க்‌யையை யுடைத்தான திருமந்த்ரத்தாலே நிரஸ்தம்

ஐகத் வ்யாபார வர்ஜம்‌ என்கையாலும்‌ , ஸர்வ ஸராரத்வம்‌. கூடாமையாலும்‌, முக்தருக்கு ஸ்ருஷ்ட்யாதியில்‌ ஸக்தியில்‌லை என்றும்‌, ஐகத்‌ வ்யாபார வர்ஜம்‌ என்றது ஈஸ்வர நியோகமில்லா தவர்களுக்கே யாகையாலே, அதுண்டானவர்களுக்கு ஸர்வ ஸரீரத்வ மொழியவே ஸ்ரஷ்ட்ருத்வம்‌ காண்கையாலும்‌ ஸர்வ வித கைங்கர்ய வாசியான சதுர்த்தியாலே தள்ளுண்டது –

பக்தாநாமாகஸ் ஸ்வ விஜ்ஞாதா என்கையாலே தோஷ தர்ஸித்வமே வாத்ஸல்யம்‌ என்னுமதுவும்‌ ஸமந்வயாதிகரணத்தில்‌, ஸ்ருத ப்ரகாஸிகையிலே “வாத்ஸல்யம்‌ நாம தோஷேஷ்வபி குணத்வ புத்‌தி- என்றும்‌, ஸ்தலாந்தரத்திலும்‌: தோஷ போக்‌யத்வமேயாகச் சொல்லுகையாலும்‌ தத்‌ வாசியான நார ஸப்‌தத்தாலே நிரஸ்தம்-

பாதுகோத்தருதீச்சா”‘ “பர துக்க நிராசிகீர்ஷா-தயை”‘ என்றதும்‌, “தயா நாம – ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க, அஸஹிஷ்ணுதா” என்று ஸ்ருத ப்ரகாஸிகையிலே பர துக்க அஸஹத்வமாகச் சொன்ன தயையே நார ஸப்‌த வாச்யமாகையாலே அத்தாலே தள்ளுண்டது

கர்ம யோகாதிகளுக்கு ப்ரத்யேகோபாயத்வமும் கூடப்‌ பதினெட்டும்‌ அடைவே விவரிக்கப்படுகிறது

————-

ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே த்ரயோவிம்ஸாதிகாரத்திலே “லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேஸ தேவ்யா காருண்ய ரூபயா। ரக்ஷ௧ ஸர்வ ஸித்‌தாந்தே வேதாந்தேஷு ச கீயதே என்கிறபடியே ஸ பத்நீகனாய்க் கொண்டு ஸர்வ ரக்ஷண யஜ்ஞ தீஷிதனான ஸர்வேஸ்வரனுக்கு ஸ்ரீமச் சப்‌,த,த்திலே சொல்லுகிற பத்நீ ஸம்பந்தத்தில்‌ வரும்‌ கலக்கங்களுக்கு, திங் மாத்ரத்தாலே பரிஹாரம்‌ காட்டுகிறோம்‌. சிலர்‌ த்வயத்தில்‌. பூர்வ கண்டத்தில்‌ ஸ்ரீமச் சப்‌தம்‌ உப லஷண பரமென்றும்‌, உத்தர கண்டடத்தில்‌ ஸ்ரீமச் சப்‌தம்‌ விஷேஷண பரமென்றும்‌ பிரியச் சொன்னார்கள் –இவ்விடத்தில் ஸப்தம் ஏக ரூபமாய் இருக்க ஸ்வாரஸ்யத்துக்கு பாதகமன்றிக்கே யிருக்க, “ஸ்வரூபம்‌: ஸ்வாதந்த்ர்யம்‌ இத்யாதிகளில்‌ ப்ரஸித்‌தமான கூடஸ்த ஸம்ப்ரதாய விருத்‌தமாகப் பண்ணுகிற இவ் விபாகம்‌ அநுப பந்நம் -அநந்ய உபாயத்வ விருத்தமான உபாயத்‌,வித்வ ப்ரஸங்கம் இவ்விடத்தில் பாதகமானாலோ என்னில் அநந்ய ப்ரயோஜனத்வ விருத்தமான ப்ராப்யத் வித்வ ப்ரஸங்கத்தாலே உத்தர கண்டத்திலும்‌ விஸேஷணத்வம்‌ தவிர ப்ரஸங்கிக்கும்‌. ஆனால்‌ இரண்டிடத்திலும்‌ உப லக்ஷண மானாலோ வென்னில்‌- குண விக்‌ரஹ வ்யாபார விஸேஷணங்களும்‌ இரண்டிடத்திலும்‌ உப லக்ஷணமாக ப்ரஸங்‌கிக்கும்‌. உப யுக்தங்களாகையாலே அவை விஸேஷணங்கள்‌ என்னில்‌, இதுவும்‌ பூர்வோத்தர கண்டங்களில்‌ பத்நீ ஸம்பந்தத்திலும்‌ துல்யம்‌. உபயோக விஸேஷங்கள்‌ தத் தத்‌ வஸ்துக்களுக்கு அநுரூபமான படியிலே ப்ரமாண ஸம்ப்ரதாயங்களாலே கண்டு கொள்வது. வஸ்த்வநு ரூபமாயிறே. விநியோக மிருப்பது. உபாயோபேய பரமான வாக்யத்‌வயத்திலும்‌ ஸ்ருதமான இவ் விஸேஷணத்தினுடைய உபயோக ப்ரகாரத்தை வேரி மாறாத பூமேலிருப்பான்‌. வினை தீர்க்குமே என்றும்‌, *நின் திருவருளும்‌ பங்கயத்தாள் திருவருளும்‌ கொண்டு நின் கோயிஸ்‌ சீய்த்து” என்றும்‌ நம்மாழ்வார்‌ அருளிச் செய்தார்‌.

அலமேஷா பரித்ராதும்‌. ராக்ஷஸ்வோ மஹதோ பயாத் -என்றும் “அலமேஷா பரித்ராதும்‌ ராகவாத்‌ ராக்ஷஸீகணம்‌ -என்றும் ஸ்ரீ வால்மீகி பகவான் ஆதிகாவ்யத்திலே நிபந்தித்தான்
ஸம்ஸாரார்ணவதாரிணீம்‌” என்று ஹிரண்ய கர்ப்ப காஸ்யபாதிகளும் சொன்னார்கள் -வாஸ பரம் ப்ரார்த்தயிதா ப்ரபத்‌யேந் நியத ஸ்ரியம்‌* சவ்நக பகவான்‌ விதித்தான்-“ஆத்ம வித்யா ச தேவி த்வம் விமுக்தி பலதாயிநீ –என்று புலஸ்த்ய வஸிஷ்ட வர ப்ரஸாத லப்த பரதேவதா பாரமார்த்ய ஞானமுடைய ஸ்ரீ பராசர ப்ரஹ்ம ருஷி அருளிச் செய்தான் –விமுக்தி பலதாயிநீ –என்கிற இது ஆத்ம வித்யா விசேஷணமாகிலும் தத் ஸாமாநாதி கரண்யத்தாலே அது இவளுடைய விபூதியாயிற்று -ஸ்ரீ யபதிதானும்-யாமாவம்ப்‌ய ஸுகே நேமம்‌ துஸ்தரம்‌ தரிகுணோததி,ம்‌। நிஸ்தரந்தய சிரேணைவ வ்யக்த த்யாந பராயணா; என்று ஸ்ரீஸாத்வதத்திலே ஸ்ரீயபதி ரூப த்‌யாநத்திலே அருளிச் செய்தான் – தத்பரங்களான ஸாஸ்த்ரங்கள்‌ நிற்க இம் மத்‌ய ஸாஸ்த்ரங்கள்‌ அதிப்ரபலங்கள்-ஆளவந்தாரும்‌.*ஜகதஸமஸ்தம்‌ யத பாங்க ஸம்ஸிரயம்‌? என்றும்‌, *ஸ்ரேயோ ந ஹ்யரவிந்த லோசந மநஃகாந்தா-. ப்ரஸாதாத்‌ருதே ஸம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத்‌ வஸூ ந்ருணாம்‌ ஸம்பாவ்யதே கர்ஹிசித்‌* என்றும்‌ அருளிச்செய்தார்‌-ஸ்ரீ பராஷ்யகாரரும்‌ – ஸ்ரீவைகுண்ட கத்யத்திலே, ஸேஷஸேஷாநாதி, ஸர்வம்‌ பரிஜநம்‌ பகவதஸ் தத்ததவஸ்தோசித பரிசர்யா யாமாஜ்ஞாபயந்தயா என்று பகவத்‌ கைங்கர்ய ரூப பரம புருஷார்த்த,ம்‌ இவள்‌ நியோகத்தின் படியே நடத்த வேணுமென்று அருளிச்செய்தார்-கூரத்தாழ்வானும் –ஸ்வஸ்தி ஸ்ரீரதிஸதாத சேஷ ஜகதாம் -ஸர்க்கோப ஸர்க்க ஸ்திதீ: ஸ்வர்க்கம்‌ துர்க்கதிமாபவர்க்கிக பதம்‌ ஸர்வம்‌ ச குர்வந்‌ ஹரி ய்ஸ்யா வீக்ஷ்ய முகம்‌: ததிங்கித பராதீநோ விதத்தே அகிலம்‌ க்ரீடேயம்‌ கலு நாந்ய தாஸ்ய ரஸதா ஸ்யாதை கரஸ் யாத்தயா” என்று ஸங்க்‌ரஹித்த அர்த்தத்தை *தேவி த்வந் மஹிமாவதிர்‌ ந ஹரிணா நாபி த்வயா ஜ்ஞாயதே” என்று தொடங்கி விஸ்தரித்தார்

பட்டரும்‌, “ஐ்ஸ்வரய மக்ஷர கதிம்‌ பரமம்‌ பதம்‌ வா கஸ்மைசிதஞ்ஜலிபரம்‌ வஹதே விதீர்ய -அஸ்மை ந கிஞ்சிதுசிதம்‌ க்ருதமித்ய தாம்பத்வம்‌ லஜ்‌ஜஸே கதய கோய முதாரபவ.* என்று ஸ்ருதியில்‌ உதார ஸப்‌தத்துக்கு வ்யாக்‌யாநம்‌ பண்ணினார்‌ இத்யாதியாலும்‌-இப்படி மத்‌யஸ்த த்ருஷ்டியாலே ப்ராமாணிகார்த்தங்கள்‌ தோற்றச் செய்தே பற்றினது விடாதொழியில்‌, த்ருட பூர்வ ஸ்ருதோ மூர்க்கோ தர்மாணா மவிஸாரத,। வ்ருத்‌தாந ப்ருச்சந்‌ ஸந்தேஹாந்‌ அந்த ஸ்வ ப்‌ரமிவர்ச்சதி – அந்யதா மந்த புத்‌தீநாம்‌. ப்ரதிபாதி துராத்மநாம்‌. | குதர்க்க(வ்யால தஷ்டாநாம்‌), ஜ்ஞாநதுஷ்டாநாம்‌ விப்‌ராந் தேந்த்‌ரிய வா(ஜி)திநாம்‌ என்கிற தஸையாம்‌- ஆகையால்‌ ஸித்‌தோபாய ஸப்‌த வாஸ்ய விமர்ஸத்தில்‌ நாநயோர் வித்‌யதே பரம்‌ இத்யாதியாலும்‌, ஸப்த விம்ஸாதிகாரத்திலே, வக்ஷ்ம்யா ஸஹ … கீயதே ‘இத்யாதிகளிற்படியே ஸபத்நீக ஸித்‌தனாயிருக்கையாலே இங்கே ப்ரமாண ஸித்‌தோபயோக விஸேஷமான பத்நீ ஸம்பந்தம்‌ ஆர்த்தம்‌. இப்படி ஸந்நியோக சிஷ்ட ந்யாயத்‌தாலே எம்பெருமானைச்‌ சொன்ன விடமெங்கும்‌ பிராட்டியையும்‌ சொல்லிற்றாம்‌’ என்றும்‌, அஷ்டாவிம்ஸாதிகாரத்திலே, “நாராயணன்‌ ஸரண்யனாம் போது லக்ஷ்மீ விஸிஷ்டனா யிருக்குமென்கைக்காக பூர்வகண்டத்தில்‌ ஸ்ரீமச் சப்‌தம்‌‘ என்றும்‌, ‘சரணா விதி நிர்தேஸ பத்நீ வைஸிஷ்ட்ய பாதக -இதி மந்தைரிதும்‌ ப்ரோக்தம்‌ ஸ்ரீமச் சப்த நிரோததா! ஸப்‌த ஸ்வ ரஸத ப்ராப்தம்‌ வைஸிஷ்ட்யம்‌ பரமம்‌ ஸ்ருதம்‌ | விஸேஷ்ய சரண த்வித்வம்‌ ந ஹி பதிது மர்ஹதி !! சரணாநிதி வக்தவ்யமிதி யச்ச ப்ரஸஞ்ஜிதம்‌ | க்‌ரந்தஜ்ஞைர பஹாஸ்யம்‌ தத்‌ பதி ப்ராதாந்யதோ அந்வயாத்‌ – ந ஸம்ராஜி ஸ பத்நீ கே. ஸத்‌,விதீயோக்தி ஸாஹஸம்‌ | ததாத்ரேத்ய பராம்ருஸ்ய தர்ஸிதம்‌ குரு ஸாஹஸம்‌’ இத்யாதியாலும்‌ இப்படியே உபாய ஸ்ரீ , என்று ஸாதிக்கப்பட்டது –

இதி பூர்வ பக்ஷக்‌ரந்த.

அத, ஸித்தாந்த–நோபாய-ஸ்ரீ;
ஸ்ரீவசந பூஷண வ்யாக்‌யாநத்திலே – “புருஷகாரமென்றும்‌, உபாயமெண்றும்‌ இவற்றை நிரூபகமாக அருளிச் செய்தது. – பிராட்டிக்கு புருஷகாரத்வமும்‌, ஈஸ்வரனுக்கு உபாயத்வமும்‌ அஸாதரணம் என்று தோற்றுகைக்காக-இது தன்னை –மத் ப்ராப்திம்‌ ப்ரதி ஐந்தூநாம்‌ ஸம்ஸாரே பததாமத। லக்ஷ்மி புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி,। மமாபி ச மதம்‌ ஹ்யேதத்‌ நாநயதா லக்ஷணம்‌ பவேத்‌ன்றும்‌, “அதம்‌ மத் ப்ராப்தயுபாயோ வை ஸாக்ஷாத்‌ வக்ஷ்மீ பதி: ஸ்வயம்‌ | வக்ஷ்மீ, புருஷகாரேண வல்லப. ப்ராப்தி யோகிநீ | ஏதஸ்யாஸ் ச விஸேஷோயம்‌ நிகமாந்தேஷு ஸப்த்‌யதே? என்றும்‌. “ஆகிஞ்சந்யைகரணா கேசித்‌ பாக்‌யாதிகா; புந மத் பதாம்போருஹ த்‌வந்வம்‌ ப்ரபத்ய ப்ரீதா மாநஸா வக்ஷ்மீம்‌ புருஷகாரேண வ்ருத வந்தோ வராநந। மத் க்ஷமாம்‌ ப்ராப்ய ஸேநேஸ ப்ராப்யம்‌ ப்ராபகமேவ மாம்‌! வப்த்வா க்ருதார்த்தா ப்ராப்ஸ்யந்தி மாமேவ அநந்ய மாநஸா:*. எண்றும்‌ பகவஸ் ஸாஸ்த்ரத்திலே. தானே அருளிச் செய்தானிறே” என்றும்‌, “உபாயத்வமும்‌, *கருஷ்ணம்‌ தர்மம்‌ ஸநாதநம்‌‘ என்று ஸநாதந தர்மமாகச்‌ சொல்லப்படுகிற அவனுக்கே ஸ்வதஸ் ஸித்‌தமாய்‌, ததீஃயருக்கும்‌ ததா ஸத்தியடியாக வருகிறதிறே யுள்ளது. ஆகையாலே பிராட்டிக்கு, புருஷகாரத்வமும்‌ ஈஸ்வரனுக்கு, உபாயத்வமும்‌ நிரூபகமாகத்‌ தட்டில்லை – இவ்வர்த்தத்தை. வெளியிடுகைக்காக வாயிற்று இவரிப்படி அருளிச்‌ செய்தது” என்றும்‌. “இப்படி புருஷகார ஸாபேஷமென்னில்‌ உபாயத்தினுடைய நைரபேஷ்ப ஹாநி வாராதோ என்கிற ஸங்கையிலே அருளிச் செய்கிறார்மேல்‌ உபாயமென்று. தொடங்கி–அதாவது – ஸஹாயாந்தர ஸம்ஸர்க்க அஸஹமான ஸித்‌தோபாயம்‌ ஸரண வரண ஸ்வரூப ஸ்வீகாரத்திஸ்‌ ஸ்வீகர்த்தாவான புருஷனையும்‌ ஸ்வீகரிப்பிக்கும்‌ புருஷகாரத்‌தையும்‌ அபேஷித்திருக்கும்‌- ஸ்வீக்ருதனான தான்‌ இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட ப்ராப்தி பண்ணுகையாகிற கார்ய காலத்தில்‌ புருஷனும்‌ புருஷகாரமுமாகிற உபயத்தையும்‌ அபேஷியாதே தானே செய்து தலைக்கட்டும் என்கை –

கார்ய காலத்தில்‌ ஸஹகாரி ஸாபேஷத்வமுண்டாகிலிறே உபாயத்தினுடைய நைரபேக்ஷ்யத்துக்கு. ஹாநி வருவதென்று கருத்து” என்றும்‌, ரஹஸ்ய த்ரய வ்யாக்‌யாநத்தில் அகாரார்த்த விவரணத்தில்‌, “வக்ஷ்ம்யா. ஸஹ… கீயதே என்கிறபடியே ரக்ஷகனான ஈஸ்வரன்‌. சேதநரை ரக்ஷிக்கும்‌ தஸையில் இவர்களுடைய அபராதங்களைக்‌ கண்டாதல்‌, தன் ஸ்வாதந்த்ர் யத்தாலே யாதல்‌ உபேஷியாமற் செய்கைக்குறுப்பான க்ருபையை ஜநிப்பிக்கும்‌. புருஷகார பூதையான பிராட்டி ஸந்திதி அவஸ்யாபேக்ஷித-மாகையாலே, ரக்ஷகனானவனைச்‌ சொல்லுகிற இவ் வகாரத்‌திலே லக்ஷ்மீ ஸம்பந்தம்‌ அநு ஸந்தேயமென்கை’ என்றும்‌ த்வயத்தில்‌ பூர்வகண்டத்தில்‌ ஸ்ரீமத் பதார்த்த விவரணத்தில்‌, ‘இப்போதிவளேச்‌ சொல்லுகிறது புருஷகாரமாக” என்கையாவே உபாய வஸ்து விஸேஷணமா யிருக்கிற ஆகாரத்தை யிட்டு இவளுக்கு உபாயத்வத்தில்‌, அந்வயம்‌ சொல்லும்‌ பக்ஷம்‌ நிரஸ்தம்‌’ என்றும்‌ சரணாவிதி பதார்த்த விவரணத்தில்‌ த்வி வசநம்‌ இரண்டுக்கு மேல்‌ மற்றொன்று புகுர ஸஹியாமையாவே ஸஹாயாந்தர நிரபேக்ஷமான உபாய பூர்த்தியையும்‌ சொல்லுகிறது என்கை’ என்றும்‌, “அவனுபாயமாமிடத்தில்‌ ஸஹாயாந்தரங்களை ஸஹியாமையாலே தான்‌ உபாய பாவத்தில்‌ அந்வயமின்றிக்கே புருஷகாரமாயிருக்கும்‌ என்றும்‌. ‘பெரிய ஜீயர் அருளிச் செய்தார் –

பரந்த ரஹஸ்யத்தில்‌ (த்‌வய ப்ரகரணே மதுபர்த்த விசாரே), ஸ்ரீமந் நாராயண சரணெள என்று உபாய தயா வக்ஷ்யமாணனான நாராயணனுக்கு விஷேஷணமாக ஸ்ரீமத்தையைச்‌ சொல்வா தின்றால் நாராயண ஸப்‌தத்திற் சொல்லப்‌ புகுகிற குண விஸேஷங்கள்‌ விஸேஷணத்வேந உபாய ஸரீரத்திலே அந்விதமாகிறவோபாதி இவளும்‌ உபாய அவயவமாக ப்ராப்தையுமாய்‌ மாதா பிதாக்களிருவரும்‌ சேர விருந்து ப்ரஜா ஸம் ரஷணம்‌ பண்ணுகை ப்ராப்தமுமாய்‌ அதுக்கு மேலே *வேரி மாறாத பூமேலிருப்பாள்‌ வினை தீர்க்குமே என்று உபாய க்ருத்யமான விரோதி நிவர்த்தகத்வம்‌ இவ் வர்த்தத்திலே நிஷ்டரான நம்மாழ்வார்‌ திருவுள்ளத்தாலுமுண்டாய்‌ ப்ரதேஸாந்தரங்களில்‌, இவளை புருஷகாரமாக நினைத்துச் சொல்லுகிறார்களென்கிறவையும்‌ உபாய பாவத்திலே அந்வயிப்பிக்க யோக்‌யமுமாய்‌ அதுக்கு மேலே, *அரி ப்ராணாந்‌ பரித்யஜ்ய ரஷிதவ்ய* என்று மேலே அநுஷ்டிடக்கப் புகுகிற ப்ரபத்தி தானே புருஷகார க்ருத்யத்தைச்‌ செய்ய வற்றாகையாலும்‌, மாட்டாதாகில்‌ இவள்‌ ஸ்வாதந்த்ர்யத்தை யாற்றிச் சேரவிட உபாயபூதனானவிவன்‌ ரஷிக்க வமைந்திருக்க உபாயாந்விதமான இவனுடைய ப்ரபத்த்யநுஷ்டாநம்‌ நிஷ்பலமாம் படியுமாயிருக்க இவளுக்கு உபாய ஸரீரத்தில்‌ அந்வயமில்லை – புருஷகார பாவத்திலே என்று ஒதுக்கித்‌ தருவாரார்‌ என்னில்‌ விஸேஷணத்வ முண்டே யாகிலும்‌ விஸேஷணகதமான குணங்களோபாதி உபாயோபயோகித்வம்‌. இவளுக்கு இல்லாமையாலும்‌ ஸமாஸ்ரயணைகாந்தமான ஸெளஸீல்யாதி குணோதய விரோதியான ஸ்வாதந்த்ரயத்தை புருஷகார பூதையான இவளாற்றினாலும்‌ அவன் கார்யம்‌. செய்யும் போதைக்கு “ரக்ஷ்யாபேஷாம்‌ ப்ரதீக்ஷ்தே* என்கிறபடியே உபாய ப்ரார்த்தநா ரூபமான ப்ரபத்தி வேண்டுகையாலும்‌, *வினை தீர்க்கும்‌” என்கிறவிடம்‌ *களைவாய்‌ துன்பம்‌ களையாதொழிவாய்‌ களை கண்‌ மற்றிலேன் * என்கிறவருடைய உக்தி யாகையாலே இத் திருவாய்மொழி அநுஸந்தித்தவர் பக்கல்‌ இவளுக்குண்டான ஆதராதிஸய ப்ரகாஸகமாகையாலும்‌ இவளுக்கு புருஷகார பாவத்திலே நோக்காகக் கடவது-

இவளுக்கு உபாய பாவத்தில் அந்வயமுண்டாகில் சாதன பூதமான கர்மஜ்ஞாநாதிகளுக்கு “பலமத;* “ஸப்ரிதோ அலம்‌ பலாய* என்று ஆராதந ப்ரீதனான ஈஸ்வரன் முகத்தாலே இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹார ரூபமான பல ஸித்‌தி இவனாலேயாதல்‌, அங்ஙனன்றியிலே பல ப்ரதிபாதந ஹேதுவான ஜ்ஞாந ஸக்த்யாதிகளுக்கு உத்பாதிகையாதாலாக வேண்டும் -தான் பல ப்ரஸாதிகையாகில் –யஸ் ஸர்வஜ்ஞஸ் : ஸர்வவித்‌*, *பராஸ்ய ஸக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச *, *தேஜோ பலைஸ்வர்ய மஹாவபோத, ஸூ வீர்ய ஸக்த்யாதி குணைகராஸி , என்று ஸ்ருதி ஸ்ம்ருதிகளில்‌ ஈஸ்வரனுக்குச் சொல்லுகிற ஜ்ஞாந ஸக்த்யாதி குண விஸேஷங்களின்றியிலே யொழிய வேணும்‌-உண்டாகிலிவனளை யொழியவே ஈஸ்வரன் தானே கார்ய கரண க்ஷமனே. அக் குணங்களை உத்பாதிக்கிறாளாகில்‌ குணங்களுக்கு ஸ்வாபாவிகத்வ மின்றியிலே யொழியும்‌. ஸெளஸீல்யாதிகளோபாதி திரோஹித மானவற்றை ப்ரகாஸிப்பிக்கிறாளென்னில்‌, ஐகத் ஸ்ருஷ்டி ஸம்ஹாராதிகளிலே இடைவிடாமல்‌ விநியோகம்‌ கொண்டு போருகிற ஜ்ஞாந ஸக்தயாதிகளுக்கு ஸெளஸீல்யாதி திரோதாயகமான ஸ்வாதந்தர்யத்தோபாதி ஒரு திரோதாநமில்லையே- உண்டாகில்‌ ஸ்ருஷ்ட்யாதிகள்‌ நடவா தொழிய வேணும்‌- ஸர்வதா அந்விதையாகில்‌ ஸ்வ விரோதி நிவ்ருத்தியில்‌, தத் தஸ்ய ஸத்ருஸம்‌ பவேத்‌ என்று இருக்கக் கூடாதே.. குண விஸேஷங்களே அமைகை யன்றோ-“ஆஸம்ஸேயம்‌ ஹரி ஸ்ரேஷ்ட, க்ஷிப்ரம்‌ மாம்‌ ப்ராப்ஸ்யதே பதி! அந்தராத்மா ச மே ஸூத்த தஸ்மிம்ஸ் ச பஹவோ குணா என்று தன் பக்கல் அநந்வோபாயத்வமும்‌ அவன் பக்கல் குண” விஸேஷங்களுமே பல ஸித்‌திக்கு மபேஷிதமாகத்தான் அறுதியிட்டு வைத்தது-நாம்‌ உபாயமாக யாதொரு வஸ்துவை ஸ்வீகரிக்கிறோம்‌, அவ் வஸ்துவுக்கு இவள்‌ ஸ்வரூப நிரூபிகை யாகையாவே ப்ரணவத்தில்‌ ப்ரதம பதத்திற் போலே *யத்‌யபி ஸச் சித்த. “என்கிற குண ஸித்‌தி ந்யாயத்தாலே அவர்ஜநீயமாய்‌ அந்வயியாதோ வென்னில்‌, ஸ்வரூப நிரூபகத்வேந அவர்ஜநீய ஸம்பந்தம்‌ உண்டே யாகிலும்‌ உபாய தஸையைக்‌ கொண்டு கொள்வதொரு ப்ரயோஜந மில்லாமையாலே ஸ்வரூப நிரூபகங்களான ஜ்ஞாநாநந்தகங்களோபாதியும்‌. குமரிருந்து போமித்தனை-இவற்றுக்கு ப்ரயோஜந மின்றிக்கே யொழிகைக்கு ஹேது அவனுடைய நைரபேஷ்யமாகில்‌, சில குண விஸேஷங்கள்‌ உபாயதயா அந்வயிக்கிறபடி என் என்னில்‌, இவை கார்யோபயோகி யாகையாலும்‌, குணத்வேந அப்ருதக் புத்‌தி ப்ரவ்ருத்திக மாகையாலும்‌ குணி குண த்‌வாரா கார்யம்‌ செய்கை நைரபேக்ஷயத்துக்குக்‌ கொத்தை யல்லாமையாலும்‌ அவற்றுக்குத்‌ தட்டில்லை

இவள்‌ கார்யாநுபயுக்தை யாகையாலும்‌ த்ரவ்யத்வேந ப்ருதக்‌ புத்‌தி ப்ரவ்ருத்தி யோக்‌யதை யுண்டாகையாலும்‌ அத்தாலே உபாய நைரபேக்ஷ்யத்துக்குக் கொத்தையா யறுகையாலும்‌ உபாய பாவத்தில்‌ அந்வயமில்லை-ஆகையால்‌. ஸேக்ஷித்வ தஸையிலும்‌ ப்ராப்யத்வ தஸையிலும்‌ ஒரு மிதுநமே ஆக வேண்டினவோபாதி உபாய தஸையிலே ஸ்வேதர ஸகலாஸஹாயாஸஹ மாயிருக்கையாலே இவளுக்கு உபாய பாவத்தில்‌ அந்வயமின்றியிலே புருஷகார பாவத்திலே யாகக்கடவது– என்றும்‌, கதய த்ரய வ்யாக்‌யாநத்திலே ‘ஸ்ரீவல்லப, – இவ் வாலப்‌யம்‌ புருஷகார பாவத்துக்கும்‌ ப்ராப்யதைக்கும்‌ உறுப்பாயிறே யிருப்பது‘ என்றும்‌.” ஸ்ரீமந்‌- இப்படி யிருக்கிற உன்னையுங் கூட அசிர்த்து, புருஷகார பூதையான பிராட்டியைப்‌ பார்த்து ரஷிக்க வேணும்‌” என்றும்‌, ‘ஸ்ரீமதே* என்கிற விடத்தில்‌ ஸ்வரூபாநு பந்தியான லக்ஷ்மீ ஸம்பந்த மநுஸந்தேயம்‌-இத்தால்‌ புருஷகாரபாவம்‌ சொல்லிற்று என்றும்‌, ஸ்ரீமந்‌– பூர்வ வ்ருத்தம்‌. பாராதே விஷயீகரிக்கும்படி அருகே யிருந்து சேர்ப்பாருமுண்டு” என்றும்‌ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் –

சரம ரஹஸ்ய த்ரயத்தில் –இப்பதத்தில் த்வி வசனம் ஸ த்விதீயம் இவ் வுபாயம்‌’ என்கிற ஸாஹஸ வசநத்தைத் தள்ளுகிறது.. அவனுமவளும் கூட உபாயமென்னில்‌, சரணங்கள்‌ இரண்டு என்ன வொண்ணாது, நாலென்ன வேணும்‌. இவ்விருவரும்‌. ஸமப்ரதாநரென்னில்‌, அவளும்‌ தனியே உபாயமாய்‌ அவனும்‌ தனியே உபாயமாய்‌ விஸிஷ்டம்‌ உபாயமென்னும்‌ வார்த்தையோடு விரோதிக்குமாகையாலே, அவளுக்கு, புருஷகார பாவமும்‌ அவனுக்கு உபாய பாவமும்‌ வ்யவஸ்த்திமாயே யிருக்கும்‌‘ என்று நயினாராச்சான் பிள்ளை அருளிச்‌ செய்தார்‌. ரஹஸ்யாம்ருதத்திலே “இவளுடைய உபாய பாவத்தை ஸகல ப்ரமாணங்களும்‌ சொல்லிற்றே யாகிலும் வக்ஷ்மீ விஸிஷ்டம்‌ உபாயம் என்னுமனவில்‌ விஸேஷ்யமான ஈஸ்வராம்ஸத்திலே ப்ராதாந்யமும்‌ விஸேஷணமான இவள்‌ பக்கலிலே அப்ராதாந்யமுமாகக் கடவது-அதாவது புருஷோத்தமத்வத்தாலே வந்த ஸ்வாதந்த்ரியத்தாலே அநிஷ்ட நிவ்ருத்தியும்‌ இஷ்ட ப்ராப்தியும்‌ பண்ணிக் கொடுப்பான் – ஈஸ்வரனேயாய்‌, இது கண்டு தானுகந்து அவனைப் பின் செல்லுகை – தனக்கு ஸ்வரூபமா யிருக்கை-ஆன பின்பு தனித்து இருவரும்‌ உபாயமாகச்‌ சொல்லுகிற விடங்கள்‌ பகவானுக்கு அபிமதையாய்‌ அநுரூபை யாயிருக்கிற ப்ராதாந்யத்தாலே இவள்‌ சொல்விற்றை அவன்‌ செய்யுமென்கிற நி்ஸ்சய நிபந்தநமாகக்‌ கடவது-ஆகையால்‌. உபாய விஸேஷணமான விக்‌ரஹாதிகளில்‌ ஸூபாஸ்ரயத்வத்திலே விக்‌ரஹத்துக்கு அந்வயமாகிறாப் போலேயும்‌ அக் குணங்களில்‌ வாத்ஸல்யாதிகளுக்கு. ஆஸ்ரயணீயத்வத்திலும்‌, ஜ்ஞாந சக்த்யாதிகளுக்கு கார்ய கரத்வத்திலும்‌ அந்வயமாகிறாப் போலவும்‌ குணங்களுக்குத்‌ தனித் தனியே கார்ய பேதமுண்டானாப் போலவும்‌ லக்ஷ்மிக்கு புருஷகார பாவத்திலே அந்வயமென்று நிஷ்கர்க்ஷிக்கப் பட்டதாயிற்று” என்று வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌ அருளிச் செய்தார்‌

தத்வ பூஷணத்திலே ‘காரண வஸ்துவே உபாஸ்யமுமாய்‌ ஸரண்யமுமாகையாலே இவளுக்கு உபாய பாவத்தில் அந்வயமில்லை. இவளுக்கு உபாய பாவமுண்டாக ப்ரமாணங்களுண்டே என்னில்‌ – அது ஸரண்யனுடைய இச்சாநுவிதாயித்வமாகக் கடவது’ என்றும்‌. “மேலே ப்ரதம பதாந்தமான த்வி வசநத்தாலே நிர்விக்ரஹவாதிகளை நிரஸிக்கிறது-அநந்தர பதத்தாலே உபாயத்‌வித்வாதிகளை நிரஸிக்கிறது. என்று நடுவில் திருவீதிப் பிள்ளை நிர்வஹிப்பர்‌” என்றும்‌, ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே ‘சரணெள’ என்று த்‌வி வசந ப்ரயோகம்‌ பண்ணுவான் என் என்னில்‌ ஏக வசந ப்ரயோகம் பண்ணினால்‌ ஜாத்யேக வசநமாகக்‌ கொண்டு லக்ஷ்மீ விஸிஷ்டோபாயத்தைக்‌ காட்டுகையாலேஅதை வ்யாவர்த்திக்கைக்காக த்வி வசந ப்ரயோகம்‌” என்றும்‌- ‘வக்ஷ்மீ குண விக்‌ரஹங்கள்‌ விஸேஷணமாய்‌- அவன் விஸேஷ்யமாகையாலே விஸேஷ்யாம்ஸ பூதனானவனுக்கே ப்ராதாந்யேந கார்ய கரத்வம்‌-விஸேஷணாம்‌ஸமான இவற்றுக்கு ததநுவிதாயித்வ மாத்ரமே யாயிருக்கு மாகையால்‌-விக்‌ரஹத்துக்கு ஸுபாஸ்ரவத்வம்‌ வாத்ஸல்யாதி களுக்கு ஆஸ்ரயண சவ்கர்யாபாதகத்வம்‌-ஜ்ஞாந ஸக்த்யாதிகளுக்கு ஆஸ்ரித கார்‌யாபாதகத்வம்‌ இந்த குணங்களுக்குத்‌ தனித்தனியே கார்ய பேதம் எப்படி அப்படியே வக்ஷ்மீ புருஷகாரத்வம்‌ நியதமாகவே யிருக்கும்‌ என்றும்‌, ஸ்ரீ மாலாதி பவம்ஸ மவ்க்திகமணி கண்டீரவோ வாதிநாம்‌ நாம்நா யாமுந தேஸிக கவிவர பாதஞ்ஜலே பண்டித. என்று சொல்லப்பட்டவராய்‌, அழுகருக்கு புரோஹிதராய்‌ வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌ பாதத்திவலவரான யாமுநாசார்யர்‌ அருளிச் செய்தார்‌- இத்தால்‌ ப்ரமாண ஸித்‌தமு மின்றியிலே பகவதபிமதமுமின்றியிலே ஸம்ப்ரதாய ஸித்‌தமுமின்றியிலே ஆசார்ய ருசி பரித்யக்தமான இந்த உபாயத்வம்‌ பரித்யாஜ்யம்‌ ப்ரமாண ஸித்‌தமுமாய்‌ பகவதபிமதமுமாய்‌, ஸம்ப்ரதாய ஸித்‌தமுமாய்‌ ஆசார்ய ருசி பரிக்‌ருஹீதமு மாயிருக்கிற புருஷகாரத்வமே ப்ராமாணிகருக்கு பரிக்‌ராஹ்ய மென்றதாயிற்று-

இதி ரஹஸ்ய விவேகே ப்ரதம விவேக ஸமாப்தம்

————

அத, பூர்வபக்ஷி- ஸ்ரீர் விப்வீ

சதுஸ் ஸ்லோக் யதிகாரே –ஏவம் கில தே வதந்தி யதா விபு ஸ்வபாவஸ்ய ஈஸ்வரஸ்ய அகடிதகடநா ஸாமர்த்‌யாத்‌ அணுத்வம்‌-ததா அணு ஸ்வபாவாயா ஏவ தஸ்யா விபுத்வமிதி தத்ர த்ருஷ்டாந்தஸ் தாவத யுக்த உபாத்‌யவச்சேத மாத்ரேண ஹி அணுத்வம்‌ ஈஸ்வரே அங்கீ க்ரியதே ந து ஸ்வரூபத யதிசாகடிதகடநா ஸக்தயா அத்ர விருத்‌த த்வய ஸம்பவ ததா ஸர்வாத்‌வைத பேதாபேத பஷாப்யாம் கிமபராத்தம்‌-என்றும்‌-ந ச ஸர்வகதாதி ஸப்‌தாநாம்‌. ஸார்வத்ரிகாவதார ஸர்‌வ ஸேஷித்வாதி ப்‌ரதிபாதகத்வம்‌ கல்ப்யம்‌- யதா ஸ்ருத ஸ்வீகாரே விரோதாபாவாத்‌ நாபி! முக்தவத்‌ தர்ம பூத ஜ்ஞாந த்‌வாரா வயாப்தி கல்பநம்‌ யுக்தம்‌ தத்‌வத்‌ பாதக ஸ்ருத்யாத்‌ய பாவாத-விபுத்வயாஸம்பவே இஹ பாதக இதி சேந் ந – கால தத்வே நித்ய முக்தேஸ்வராணாம்‌-தர்ம பூத ஜ்ஞாநே ச விபுத்வ ஸ்வீகாராத்‌ என்றும்‌. அதோ ஜீவத்வேப்யஸ்யா ஸ்வரூப விபுத்வேந பதி ஸ்வரூபாநுரூப்யமிதி” என்றும்‌, ஸப்த விம்ஸாதிகாரத்திலே “வ்யாப்தனுக்கு ப்ரதி வஸ்து பூரணத்வமாவது ஓரொரு உபாத்‌ய வச்சிந்ந ப்ரதேஸமே ஸர்வத்தையும்‌ நிர்வஹிக்க வல்ல ஸக்தியை யுடைத்தா யிருக்கை யல்லது வஸ்து தோறும்‌. ஸ்வரூப ஸமாப்தி யன்று. இது கொள்ளில்‌ பஹிர்‌ வ்யாப்திக்கு விருத்‌தமாம்‌. இத்தை அகடிதகடநா ஸக்தியால்‌ நிர்வஹிக்கில்‌ விருத்‌த ஸமுச்சயம்‌ கொள்ளும்‌ பர மதங்களிற் படியாம்‌‘ என்றும்‌ ஸ்ரீக்கு விபுத்வம்‌ ஸாதிதமாயிற்று-

இதி பூர்வ பக்ஷ க்ரந்த

அத ஸித்தாந்த -ஸ்ரீர் ந விப்‌வீ

ஸ்ரீக்கு விபுத்வம்‌ கிடையாது– எங்ஙனே யென்னில்‌ ஈஸ்வரன்‌ அணுக்கள்‌ தோறும்‌. பரி ஸமாப்ய வர்த்திக்‌மென்னுமிடம்‌ கூடாதாகில்‌ பரி ஸமாப்ய வ்ருத்தியைச்‌ சொல்லுகிற அந்தர்யாமி ப்‌ராஹ்மண ஸுபாலோபநிஷத்‌ ப்ரப்‌ருதி ஸகல ப்ரமாண விரோதம்‌ ஸம்பவிக்கும்‌- திருவாய்மொழி முதல்‌ திருவாய்மொழி எழாம்‌ பாட்டின்‌ ஈட்டிலே. ‘”அவை யவை தொறும்‌” – அவ்வோ பதார்த்‌தங்கள்‌ தோறும்‌ அவற்றிலே வ்யாபிக்கு மிடத்திலே பல தூணுக்காக ஒருத்திரம்‌ கிடந்தாப் போலே யன்றிக்கே ஜாதி வ்யக்தி தோறும்‌ பரிஸமாப்ய வர்த்திக்குமாப் போலே எல்லாவற்றிலும்‌ தனித் தனியே குறைவற வ்யாபித்து-நிற்கும்‌ என்றும்‌, “(எங்கும்‌ பரந்து) அந்தர்‌ பஹிஸ்ச வ்யாபித்து- இதில்‌ ப்ரமாணமென்னென்னில்‌. (உளன் சுடர் மிகு சுருதியுள்‌) அபெளருஷேயமாய்‌ நித்ய நிர்தோஷமா யிருக்கிற வேதத்தாலே ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கும்‌” என்றும்‌, பத்தாம்‌ பாட்டில்‌ “இப்படி வ்யாபித்து, நின்றால்‌ அசித் ஸம் ஸர்க்கத்தாலே சேதநனுக்கொரு ஸங்கோசம்‌ பிறவா நின்றதிறே. அப்படியே இவனுக்கு மிவற்றோட்டை ஸம் ஸர்க்கத்தாலே ஸங்கோசம்‌ பிறக்குமோ வென்னில்‌- அது செய்யாது, அஸங்குசிதமாக வ்யாபித்து நிற்குமென்று வ்யாப்தி ஸெவ்கர்யத்தை யருளிச் செய்கிறார்‌ (பரந்த தண்‌ பரவை) இத்யாதி–பரந்து குளிர்ந்திருந்துள்ள. கடலில்‌-ஜல பரமாணுக்கள் தோறும்‌ வ்யாபித்திருக்கும்‌ நீர்ச் செறிவாலே திரண்டு தோற்றுகிற வித்தனை யிறே; பரமாணு ஸங்காதமிறே- “ஜ்யாயா நந்தரிக்ஷாத்‌* என்கிற வஸ்து, ஜல பரமாணுக்களிலே வ்யாபியா நின்றால்‌ அல்பாவகாஸமாய்‌ நெருக்குப் பட்டிருக்குமோ வென்னில்‌ பரந்த அண்டம்‌-இது எனவாயிற்று வ்யாபித்திருப்பது-ஓரண்டத்தைச்‌ சமைத்து அதிலே ஓர்‌ ஏகாகியை ஸவத்தாப் போலே இருக்கும்‌- இப்படி ஜல பரமாணுக்களிலே வ்யாபித்து, விடுமத்தனையோ என்னில்‌ எண்றும்‌ * (இடந் திகழ்‌ பொருடொறும்‌) – அவ்வ ஸரீரங்களிலே ஜ்ஞாநாநந்த லக்ஷணமாய்க் கொண்டு மிளிருகிற ஆத்மாக்கள் தோறும்‌, (எங்கும்‌ பரந்துளன் ) சேதநன்‌ ஸரீரத்திலே வ்யாபிக்கும்‌ போது அதில்‌ ஏக தேஸத்திலே நின்று ஜ்ஞாநத்தாலே எங்கும்‌ வ்யாபிக்கக் கடவனாயிருக்கும்‌. இவன் அங்கனன்றிக்கே ஸ்வரூபத்தாலே எங்கும்‌ வ்யாபித்திருக்கும்‌-விபுத்வத்தை அவனுக்குச் சொல்லி அணுத்வத்தை. இவனுக்குச் சொல்லி இதுக்குள்ளே அவன் குறைவற வ்யாபித்திருக்கும் என்றால்‌, அது கூடுமோ வென்னில்‌, (இவை யுண்ட கரனே) சிறுவடிவைக் கொண்டு பெரிய வற்றை யெல்லாம்‌ தன் வயிற்றிலே வைத்தால்‌ தயிருண்ட பொன் வயிறிவ்வேழுலகு முண்டு மிடமுடைத்தால்‌ என்கிறபடியே – பின்னேயும்‌ அவ் வயிறே இடமுடைத்தாம்படி இருக்க வல்ல ஸர்வ ஸக்தி – சிறிய வற்றிலே குறைவற இருக்க மாட்டானோ என்கிறார்‌. இப்படி ஸூ த்‌ருட ப்ரமாண ஸித்‌தனென்று மயர்வற மதிநலமருளப் பெற்று, ஸகல ப்ரமாண ப்ரமேயங்களை ஸாக்ஷாத்கரித்த ஆழ்வார்‌ (பரந்த வண்டமிதென – இடந் திகழ்‌ பொருடொறும்‌ எங்கும்‌ கரந்து பரந்துளன் ) என்று ஸாப்‌தமாக அருளிச் செய்ததை நம்பிள்ளை முதலானோர்‌ விவரிக்கையாலே ஆழ்வார்கள்‌ திவ்ய ஸுக்திகளோடும்‌, ஆசார்ய திவ்ய ஸூக்திகளோடும்‌ விரோதமாம்‌

அணோரணியாந்‌ மஹதோ மஹியாந்‌ என்று அணியஸ்த்வ-. மஹீயஸ்த்வங்களைச்‌ சொல்வி அந்தர்பஹிஸ் ச தத் ஸர்வம்‌. வ்யாப்ய… என்று அணுவுக்குள்ளிலும்‌ விபுவுக்குப்‌ புறம்பும்‌ வ்யாபிக்குமென்று சொல்லி, இப்படிக் கூடுமோவென்று ஸ்ருதி தானே ஸங்கித்து பராஸ்ய ஸக்திரவிவிதைவ ஸ்ரூயதே என்று அகடிகடநா ஸாமர்த்‌யத்தைச்‌ சொல்லி பரிஹரித்ததிறே. ஆகையாலே பரம மஹானாயிருக்கிறவனுக்கும்‌ அணுவுக்குள்ளே அந்தர் வ்யாப்தி கொள்ள வேணும்‌. திருவாய்மொழி ஈட்டில்‌ முடியானேயில்‌ “கொள்வன்‌: நான் : மாவலி” என்கிற பாட்டிவே, *எஞ்ஞான்று பொருந்துவன் -என்கிற அடியிலே. “ஸரவாத்மாக்களுக்கும்‌ ஸேஷத்வம்‌. அவிஸிஷ்டமாய்‌ இருக்கச் செய்தே பத்‌தரும்‌ முக்தரும்‌. நித்யரும்‌ என்கிற பிரிவோபாதி மஹிஷிகளும்‌; “அநந்யா”. என்கிற பிராட்டியின்‌ வார்த்தை எல்லார்க்கும்‌ சொல்லவாம்படியிறே ஸ்வரூபத்தை உணர்ந்தாரிருப்பது. ஈஸ்வரனுக்கும்‌ பிராட்டிமார்க்கும்‌ பேதம்‌ சொல்லுகிற. ப்ரமாணங்களெல்லம் அல்லாதாரோபாதி பிரிவுண்டென்னுமிடம்‌ சொல்லுகிறன. ஜக்யம்‌ சொல்லுகிற விடமெல்லாம்‌ பாரதந்தர்ய காஷ்டையைப் பற்றச்‌ சொல்லுகிறனவென்று. ப்ராஸங்கி,கமாக ஒருருவிவே அருளிச் செய்தார்‌! என்று. வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை அருளிச் செய்தார்-

தத்வங்கள்‌ மூன்றே யாகையாலும்‌. ஈஸ்வர கோடியிலே கூடினால்‌ ஈஸ்வர த்‌வித்வம்‌ வருகையாலும்‌ சேதநகோட்யந்‌தர் பூதையாகையாலே. அணு ஸ்வரூபையா யிருக்கு மிப்‌பிராட்டி ஸ்வரூப நிரூபக தர்மமாய்க் கொண்டு ஈஸ்வரன் இருந்தவிடமெங்கும்‌. *ஈஸ்வரீம்‌? என்று ஸ்ருதையாந அகடிதகடநா ஸக்தியாலே வ்யாபிக்கத்‌ தட்டில்லை. “பர்த்தாவினுடைய படுக்கையையும்‌ ப்ரஜையினுடைய தொட்டிலையும்‌ விடாதே யிருக்கும்‌ மாதாவைப் போலே ப்ரதம சரம பதங்களை விடாதே யிருக்குமிருப்பு‘ என்றும்‌, ‘நாரங்களாவன ” என்று தொடங்கி, ‘பெரிய பிராட்டியார்‌ தொடக்கமான” என்றும்‌ பிள்ளை வோகாசார்யர்‌ அருளிச் செய்தார்‌. இதன்‌ வயாக்‌யாநத்திலே ‘ஈஸ்வர சேதந வாசகங்களான அகார மகாரங்களிரண்டிலும்‌ இவளுக்குண்டான அநவரதாந்‌வயத்தை ஸத்‌ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார்‌’ என்றும் “பெரிய பிராட்டியார்‌ தொடக்கமான நாய்ச்சிமாராவார்‌. *ஏவம் பூத பூமி நீளா நாயக!*,”தேவி!! த்வாமநுநீளயா ஸஹ மஹீதேவ்யஸ் ஸஹஸ்ரம்‌ ததா என்கிறபடியே ப்ரதாந மஹிஷியான பெரிய பிராட்டியார் முதல்‌ தத் ஸமானைகளாண பூமி நீளைகளும்‌ மற்றும்‌ அநேகராகச்‌ சொல்லப் படுகிற நாய்ச்சிமாரும்‌ என்றும்‌, “ ‘ஸஷ்மீ ப்ரப்‌ருதி மஹிஷீ வர்க்கங்களும்‌’ என்றிறே ஆச்சான் பிள்ளை அருளிச்‌ செய்தது” என்றும்‌ பெரிய ஜீயர்‌ அருளிச் செய்தார்‌-

பரந்த ரஹஸ்யத்திலே ஸ்ரீயபதி. என்கிறபடியே பிராட்டி பகவத் ஸ்வரூப நிரூபிகை யாகையாலே, “யத்‌யபி ஸச்சித்தோ ந நிரபுக்ண தைவதம்‌ குண கணம்‌ மநஸா அநுதாவேத்‌ ததாப் யந்தர் குண கணாமேவ தேவதாம்‌ பஜதே தத்ராபி! ஸகுணைவ தேவதா ப்ராப்யதே’ என்கிற குண ஸித்‌தி நியாயத்தாலே ஸக்ஷ்மீ ஸம்பந்தமும்‌ ஆர்த்தமாக இவ் விடத்திலே சொல்லிற்றாயிற்று –அணுரப்யாத்மா” என்று ஆத்ம ஸாமாந்ய ப்ரயுக்தமாம்‌ இவளுக்கு வரும்‌ அணுத்வமும்‌, யதா ஸர்வகதோ விஷ்ணு ததைவேயம்‌ த்விஜோத்தம” இதயாதிகளிலே சொல்லுகிறபடியே ஈஸ்வரனோபாதி இவளுக்குண்டான ஸர்‌வ வ்யாபகத்வமும்‌ தன்னில்‌ விருத்‌தமாய்‌ ஏகாஸ்ரயஸ்தமாகக்‌ கூடாமையாலே இரண்டும்‌ கூடுகைக்காக “அநுபபத்‌யமாநார்த்த தர்ஸநாதுபபாத கார்த்தாந்தர கல்பநம்‌ அர்த்தாபத்தி–என்கிற அர்த்தாபத்தியின் படியே அபரிச்சேத்‌யமான ஸ்வரூப வைபவத்தை யுடையனான ஸர்வேஸ்‌வரன் அத்யந்த ஸுஷ்மங்களான பதார்த்தங்களிலே பண்ணும்‌ அவ்வவ வ்யாப்திக்கு ஒரு ஸக்தி விஸேஷேத்தைக் கொள்ளுமோபாதி. இவளும்‌ ஒரு ஸக்தி விஸேஷத்தாலே வ்யக்த்யாஸ்ரயமான ஜாதி போலே ஈஸ்வரன்‌ வ்யாபித்த விடமெல்லாம்‌ ல்யாபிக்கக்‌ கடவளாகையாலே ஈல்வர ஸ்வரூப நிரூபிகை என்னுமிடம்‌ ஸம் ப்ரதிபந்தம்‌-வ்யக்திக்கும்‌ ஜாதிக்கும்‌ உண்டான ஸம்பந்தம்‌ போலே ஈல்வரனுக்கும்‌ பிராட்டிக்குமுண்டாண ஸம்பந்தமும்‌-அதில்‌ ஜாதியாகிறது – வ்யக்தி ஸ்வரூபத்தைப் பற்றிக்‌ கடக்க நிற்க வற்றாய்‌ அதில்வாதவன்று தானில்லை யென்னலாம்‌ படியுமாய்‌ வ்யக்தியுள்ள விடமெங்கும்‌ வ்யாபிக்கவும்‌ கடவதாய்‌, ஸ்வாஸ்ரயத்துக்கு இதர வ்யவச்சேதகமு மாயிருக்கும்‌. வ்யக்தி யாகிறது – ஜாதிக்கு ஆஸ்ரயமாய்‌ ஜாதியோடே வ்யாப்தமுமாய்‌ ஜாதி வ்யவச்சேத்‌யமுமாய்‌ ஜாதிக்கு விஸேஷ்யமுமாயிருக்கும்‌. அதில்‌ ஜாதி போலே பிராட்டியும்‌, *அநந்யா ராகவேணாஹம்‌ பாஸ்கரேண ப்ரபா யதா *, *அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா – என்றும்‌. *நித்யைவைஷா ஐகந் மாதா விஷ்ணோ ஸ்ரீர் அநபாயிநீ* என்றும்‌ சொல்லுகிறபடியே ஆதித்யனுடைய ப்ரபை போலே பிரியில்‌ ஸ்திதை யாகாதபடி ஈஸ்வரனை ஆல்ரயமாகா வுடையளாய்‌, யதா ஸர்வகதோ விஷ்ணு ததை வேயம்‌ த்விஜோத்தம த்வயா ச விஷ்ணுநா சாம்ப, ஜகத் வ்யாப்தம்‌ சராசரம்‌ என்கிறபடியே ஈஸ்வரனுள்ள விடமெல்லாம்‌ வ்யாப்தையுமாய்‌, *ஸ்ரீ யபதி; – நித்ய ஸ்ரீ ” என்கிறபடியே பகவத் ஸ்வரூபத்தினுடைய இதர வ்யவச்சிந்ந புத்தி ஹேது பூதையாய்‌ *விஷ்ணு பத்நீ” என்கிறபடியே பகவச் சேஷ பூதையுமாயிருக்கும்‌-அவனும்‌ வ்யக்தி போலே இவளுக்கு ஆஸ்ரயமாய்‌, இவளோடே வ்யாப்தனுமாய்‌, இவளைக் கொண்டு அறிய வேண்டுமவனுமாய்‌, இவளுக்கு ஸேஷியுமாயிருக்கும்

இனி ஜாதி நிரூப்யமான கட வ்யக்தியைச் சொன்ன போதே நிரூபகமான ஜாதியும்‌ தன்னடையே அந்விதமாமாப் போலே இப்பதமும்‌ நிரூப்யனான ஈஸ்வரனைச்‌ சொன்ன போதே நிரூபக பூதையான பிராட்டியையும்‌. சொல்விற்றாய் விடும்‌- என்றும்‌-கத்ய வ்யாக்‌யாநத்திலே. (வி-ப -வ) *அர்த்தோர் விஷ்ணுரியம்‌ வாணீ-என்று அர்த்தாம்ஸம்‌ அவனதாய் லஸப்தாம்சம் இவளதாயிருக்கை –பும்நாமா பகவாந்‌ ஹரி ஸ்த்ரீநாம்‌ நீ லக்ஷ்மீ:. என்கிறபடியே புல்விங்க பதார்த்தம்‌ அவனதாய்‌ ஸ்த்ரீ லிங்க பதார்த்தம்‌ இவளதாயிருக்கை என்றும்‌, சென்னியோங்கு வ்யாக்யாநத்திலே – (சதிரா) தன்னடியார்‌ – ஒரு மிதுநம்‌ ஸேஷியாணால்‌ தம்மடியாரென்ன வேண்டாவோ வென்னிவ்‌, அடியாரென்கிறதுக்குள்ளே அடிமையில்‌, அந்தர்‌ பாவம்‌ தனக்குண்டாகையாலே யென்னுதல்‌, இத்தால்‌- நார கோடி கடிதை என்கை’ என்றும்‌, பரந்த ரஹஸ்யத்திலே ‘நார ஸப்‌தார்த்த விவரணத்திலே லக்ஷ்மீ ப்ரப்‌ருதி மஹிஷீ வர்க்கங்களும்‌ என்று பிராட்டி நார கோடி கடிதையாகையாவே இப் பதத்தில்‌ லக்ஷ்மீ ஸம்பந்த மநு-ஸந்தேயம்‌” என்றும்‌ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் –

தத்வ ஸங்கரஹத்திலே ‘ஏவமாதமநாமணுத்வே கத,மயம்‌. வ்யவஹார; யதா ஸர்வ கதோ விஷ்ணுஸ் ததைவேயம்‌ த்விஜோத்தம இதி ஸரிய। அத்ராஹு. – நேயமாத்மாந்தர் பூதேதி கதமித மநந்தர் பாவ வசநம்‌ போக்யாந்தர்‌ பாவாத் ஈஸ்வராந்தர் பாவாத்‌ கோடி த்ரயாதி ரேகாத்‌வா? நாத்ய- ஜ்ஞாத்ருத்வ விரோதாத்‌ (ஜ்ஞாத்வாஜ்ஞாத்வ விரோதாத்‌ இதி தால கோஸஸ்த பாட). ந த்விதீய, ஈஸ்வரத்வஸ்ய த்வி நிஷ்டத்வா ஸம்பவாத்‌ தயோ, ஸ்வாஜ்ஞா வ்யாகாதத்வேநா நீஸ்வரத்வா பத்தே। அத எவ ஸ்ரூயதே – “ஈஸதே தேவ ஏக .” இதி । நேயமேவ ஸ தத் பத்நீத்வேந நிர்தேஸாத்‌। ந ச இயமேகைவ த்விதா அவஸ்திதேதி யுக்தம்‌ வக்தும்‌ ஏகத்வே ப்ரமாணா பாவேந தத் கல்பநாநுபபத்தே! ந ச *அர்த்தோ வா ஏஷ ஆத்மநோ யத் பத்நீ இதி ஸாதாரண வசநாத்‌ அத்ராப்யேகத்வ ஸித்‌தி-
ஸூக துக்காதி வ்யவஸ்தா லஷணாத்‌ ஆத்ம பேத ஹேதோ ஸ்ருதே: ஸ்துதித்வா வஸாயாத்‌ | யத்‌ யஸ்தி ஏக தயா நிர்தேஸ க்வசித்‌ ஸோபி அவிநாபாவ நிபந்தந தயா அவகந்தவ்ய “ஏகைவ வர்த்ததே பிந்நா ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீதிதே- இதி ப்‌ராஹ்ம புராணே தர்ஸநாத்‌– யதா ஜ்யோத்ஸ்நா,. ஜ்யோத்ஸ்நாவதோ பிந்நாபி அவிநாபூதா வர்த்ததே இத்யர்த்த,.। அநேந காரணாந்தர் பாவோப்ய பாஸ்த,. ஈஸ்வரத் வவத்‌ தஸ்யாபி த்வி நிஷ்டத்வா ஸம்பவாத்‌. | ஐகஜ் ஜந்மாதி காரணத்வம்‌ ஆஸ்யாந்தரேபி பவேத்‌ | ப்ரஹ்ம. வக்ஷண தயா ந நிர்தேஸ்யத்வம்‌ ஸ்யாத்‌ [நிரதேஷ்டவ்யம்‌ ஸ்யாத்‌ இதி தாள கோஸஸ்த பாட.)லக்ஷணஸ்ய அஸாதாரண தர்மத்வாத்‌ | நிர்த்திஸ்யதே ச “ஜந்மாத்‌யஸ்ய யத்‌ இதி | கிஞ்ச குத்ரேயம்‌ அநு விஸதி? ந தாவது பாதாநே, தஸ்ய *ஸதேவ ஏகமேவ” இத்யேகத்வா வதாரணாத்‌। க்வசித்‌ அநு ப்ரவேஸோபி ஏகத்வா விரோதீதி சேத்‌ – ந தயோரநு ப்ரவேஸா பாவே ஜகதுபாதாநத்வம்‌ ந நிர்வஹதி ப்ரஹ்மண அபரிணாமித்வாத்‌ பரிஸூத்‌தத்வாச்ச
நசைவமத்ர தர்மி க்‌ராஹகத்வாத்‌ அந்வய வ்யதிரேகாப்‌யாம்‌ அநுபபத்தே: வசந பாவாத்‌ வா கஸ்யசித்‌ காரணத்வம்‌ அப்‌யுப கந்தவ்யம்‌ | ந சதுஷ்டய மப்யத்ரேதி கதமியம்‌ காரண தயா ஸ்வீக்ரியதே! ஸ்வரூபாந்தர் பாவாத்‌ அவர்‌ஜநீய: தத் ஸந்நிதி ரிதிசேத்‌ – ஸத்யம்‌, அவர்‌ஜநீய தயைவ ஸந்திதி ரஸ்யா ந து காரணதயா, ததாத்வே ப்ரமாணா பாவாத்‌ । நாபி நிமித்தே அந்தர்பவதி அத்‌விதீய பத ப்ரகோபாத்‌ ஸத்ய ஸங்கஸ்பஸ்ய தஸ்ய ஈஸ்வரஸ்ய ஸஹாயாந பேக்ஷத்வாச்ச। அநேந உபாயாந்‌தர் பாவோப்யு பருத்‌த,!। தஸ்ய மாமேகம்‌ இத்யே கத்வ நிரதேஸாத்‌ அமோக ஸங்கல்பதயா ஸஹாயாந பேஷத்வாச்ச। ந நு – ஸ்ரீமத ஏவ தஸ்ய உபாயத்வம்‌ உபதிஸ் யத இதி சேத்‌ ந – தத்ர சரண யோரேவ ஸரணதயா அவஸீய மாநத்வாத்‌ ததாபி தயோரேவ **சரணஸ்ய (சரணாநாம்‌.- இத பாடாந்தரம்‌.] ததாவஸாய இதி சேத்‌ ந- சரணாவிதி த்வித்வ விரோதத்‌! அதோ விஸேஷண தயா நிர்திஷ்டாயா விநியோகாந்தர மந்வேஷ்டவ்யமிதி। ந த்ருதீய ப்ரமாணா பாவாத்‌ | ந நு கோடி த்ரயாநத்தர் பாவ ஹேதுவத்‌ ஆத்ம ஜாத்ய நந்தர் பாவாஹேது வ்யாபகத்வேஸ்வரத்வயோ ; பகவதீவ அஸ்யா அபி விதயமாநத்வாத் நாத்ம ஜாத்யந்தர்பூதா தாப்‌யாமேவ ஹி. புருஷாந்யத்வம்‌ உத்தம புருஷஸ் யோபதிஷ்டம்‌ | “உத்தம; புருஷஸ்த்வந்ய பரமாத்மேத் யுதஹ்ருத। யோ லோக த்ரய. மாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர: | இயமபி ததா வ்யபதிஸ்யதே, யதா ஸர்வகதோ விஷ்ணு ததைவேயம்‌ த்விஜோத்தம “ஈஸ்வரீம்‌ ஸர்வ பூதாதாம்‌” இத்யாதி-ஷ் விதி சேத்‌ ந-ப்ரதமஸ்து ஸ்வரூபாஸித்‌தோ ஹேது: தைஸ் தைஸ் சரீர விஸேஷை, ஸர்வத்ர ஸந்நிதேரேவ ஸர்வ கதார்த்த த்வேந விவக்ஷி தத்வாத் | ததாத்வம்‌ ச ப்ரஸ்ந ப்ரதி வசநோ பபாதந ப்ரகாரை ரேவா வதார்யதே | ததாஹி பூர்வத்ர -: *தே வெளவ் தாத்ரு விதா தாரெள ப்‌ருகோக் யாதிரஸூயத। ஸ்ரியம்‌ ச தேவதேவஸ்ய பத்நீம்‌ நாராயணஸ்ய ச இதி! ஸ்ரிய க்யாத்யாம்‌-ப்‌ருகு பத்ந்யாம்‌ பராஸரோக்த்யா உத்பத்திம்‌ உபஸ்ருதய மைத்ரேய ப்ருச்சதி – ஷீரோதாத்‌ ஸ்ரீ. ஸமுத் பந்நா ஸ்ரூதே அம்ருத மந்தநே | ப்‌ருகோ க்யாத்யாம்‌ ஸமுத்பந்நேத்யே ததாஹ கதம்‌ பவாந் இதி। ந ச ஏகஸ்யா அநேகத்ர உத்பத்தி விரோததியா அயம் ப்ரஸ்ந தஸ்ய காலாதி பேதேந ஸம்பவாத்‌ மஹதாம்‌ யுகபத் ஸம்பவச்ச, *தத் தத் கல்பாந்த வ்ருத்தாந்த மதி க்ருத்ய மஹர்ஷிபி,.। தாநி தாநி ப்ரணீதாநி வித்‌வாநத்ர ந முஹ்யதி இத்யத்ர பரிஹ்ருதத்வாச்ச। அதோயமேவ ப்ரஸ்நார்த்த நித்யதயா நிகில ஜகஜ்‌ ஜநநீத்வேந பகவதா நிரபாயதயா ச ப்ரதி, தாயா கத மயமுபதேஸ ததாத்வே நித்யத்வாத்‌ யநுபபத்தேரிதி | அயமேவ யுக்த உத்தராநுகுண்யாத்‌ | தஸ்யோத்தரம்‌ – “நித்யைவைஷா ஐகந் மாதா விஷ்ணோ: ஸ்ரீர் அநபாயிநீ । யத ஸர்வ கதோ விஷ்ணு: ததைவேயம்‌ த்விஜோத்தம இதி ! தஸ்யாயமர்த்த ந நிதயத்வாதேர்‌ ஜந்மநோ விரோத உபயோர் விஷ்ணெள ஸஹ ஸந்தர்ஸநாத்‌ யதா விஷ்ணு நித்யத்வாதி குணகஸ்ஸந் ஸர்வ ஜகத் த்ராணாய ஸர்வேஷு தேஸ காலாதி விஸேஷேஷு கத தைஸ்தை ஸரீரை ஸந்நிஹித ஏவம்‌ இயம்பி நிதயா நிகில ஜகஜ் ஜநநீ – நிரபாயா ஸதீ தைஸ்தை: ததநுரூபைஸ் ஸரீரை: ஸர்வத்ர ஸந்நிஹிதேதி நாநுபபத்திரிதி அஸ்யாய மேவார்த்தோ யுக்த-அர்த்தோ விஷ்ணுர் இயம்‌ வாணீ* இத் யுபக்ரம்ய அத்‌யாய ஸேஷேண “பகவத்‌, விக்‌ரஹ விஸேஷைஸ் ததநுகுணை ஏததீயை விக்ரஹைஸ் ச ஐகத் வ்யாப்தி ப்ரகாரோப பாதநாத்‌। அந்யதா ஸர்‌வ கதத்வ நிர்‌தேஸ்ய ஸ்வரூப வ்யாப்தி பரத்வே உபயோ ஸர்வத்ர வ்யாப்த் யுபபாதநாத்‌ புல்லிங்ககா பதரர்த்தா பகவத் ரூபம்‌ ஸ்த்ரீ லிங்ககா பதார்த்த லக்ஷ்மி” ஸ்வரூபமிதி விபாகோ நோபபத்‌யதே

ஏவ முத்தரத்ராப் யுபபாதிதம்‌அம்ஸைர் யதா ஐகத் ஸ்வாமீ தேவதேவோ ஜநார்தந।। அவதாராந்‌ கரோத்யேஷா ததா ஸ்ரீஸ்தத் ஸஹாயிீ நீ | புநஸ் ச பத்‌மா ஸம்பூதா ஆதி த்யோபூத் யத்ர ஹரி யதா து பர்கவோ ராம; ததா பூத்‌ தரணி த்வியம்‌ ராகவத்வே அபவத் ஸீதா ருக்மிணீ க்ருஷ்ண ஐந்மநி | அந்யேஷு ச அவதாரேஷு விஷ்ணோரேஷா அநபாயிநீ ॥ தேவத்வே தேவதேஹேயம்‌ மநுஷ்யத்வே ச மாநுஷீ। விஷ்ணோர் தேஹாநு ரூபாம்‌ வை கரோத்யேஷா ஆத்மநஸ்‌ தநும்‌ ॥ அநயைவ திஸா “த்வயா ச விஷ்ணுநா சாம்ப ஜகத்‌ வ்யாப்தம்‌ சராசரம்‌” இத்யாதி கமபி நேயம்‌. “ஸெம்யாஸெளாம்யைர்‌ ஐகத்‌ ரூபை த்வயை தத்தேவி பூரிதம்‌* இதி. தத்ரைவ விவ்ருதத்வாத்‌ ஏவமுப பாதநாத்‌ உபயோஸ் ஸரீர விஸேக்ஷைர் வ்யாப்தி ரித் யவதீர்யதே! தேஷு ஸர்வேஷு ஸரீரேஷு ஸெபரி ப்ரமுகவத்‌ குண த்‌வாரா வ்யாப்திரித்‌ யுபபத்தே ந கட குட ப்ரபாதாநுகார। ஸூத்ரிதம்‌ சைதத்‌- “குணாத்‌வா அவலோகவத்‌ இதி | யஸ் ச த்‌விதீயோ ஹேது ஸோப்ய ப்ரஸித்‌த ஸ்வேதர ஸகல பதார்த்தே ஸ்வரத்வஸ்யைவ புருஷாந்யத்வ ஸாதகத்வாத்‌ அந்யதா கதிபயேஸ்வரத்வ மாத்ரேண புருஷாந் யத்வே ஸர்வேஷாம்‌ பும்ஸாம்‌ ஈஸ்வரத்வாபத்தே। ந ஹி ஸ்வ ஸரீர மாத்ரஸ்யாப்ய நீஸ்வர; கஸ்சித்‌ அஸ்தி’ இத்யாதி யும்‌, “ஸாந்தா நந்தேத்யாதி ஸ்லோகோக்தம்‌ ச என்றும்‌, ஏதத்‌ வ்யாக்யாநத்திலே “திவ்யாத்ம ஸ்வரூபத்திலுங் காட்டில்‌ ப்ரிய தரமாயிருக்கக் கடவதாய்‌ மூர்த்தம்‌ ப்‌ரஹ்ம என்னும்‌ பெயரை யுடைத்தான

திவ்ய மங்கள விக்‌ரஹம்‌ தொடக்கமான அவனுடைய நாநா விக்‌ரஹங்களடைய அவனுக்கு அநுரூபமான அவ்வவ விக்‌ரஹங்களாலே ஸர்வ காலமும்‌ ஆலிங்கநம்‌ பண்ணி நிற்குமென்றும்‌ சொல்லப்பட்டது” என்றும்‌, “அர்த்தோ விஷ்ணுரியம்‌ வாணீ” என்று தொடங்கி. அத்‌யாய ஸேஷத்தாலே இவருடைய விக்‌ரஹ விஸேஷத்‌தாலும்‌ ஐகத் வ்யாப்தி ப்ரகாரத்தைச் சொல்லி உபபாதிக்கையாலும்‌- ஸர்வ ஸப்‌தத்துக்கு விக்‌ரஹ வ்யாப்தியே அர்த்தம் என்னக் குறையில்லை- அங்ஙன் அன்றிக்கே, ஸ்வரூப வ்யாப்தியைச்‌ சொல்லுகிறதாகில்‌ –தேவ திர்யங் மநுஷ்யேஷு புந் நாமா பகவாந்‌ ஹரி! ஸ்த்ரீ நாம்நீ லக்ஷ்மீர் மைத்ரேய நாந யோர்‌ விதயதே பரம்‌” புல்லிங்க ஸப்‌த வாஸ்யமானவை பகவத் ரூபம்‌, ஸ்த்ரீ லிங்க ஸப்‌தமானவை ஸக்ஷ்மீ ஸ்வரூபமென்று பிரித்துச் சொல்வக் கூடாது என்றும்‌ – ‘இவ்வோ அர்த்தங்களை, ப்ரமாண ஸித்‌தமுமன்றியிலே ஸம்ப்ரதாய ஸித்‌தமுமன்றியிலே, ஸத்தாவத்துமன்றியிலே யிருக்க யாவர்‌ சிலர்‌ ரஹஸ்ய ரூபேண உபதேஸித்து ஜகத்தை மோஹிப்பிக்‌கிறார்கள்‌ அவர்கள்‌ ஸகல சிதசித்‌ வஸ்து விலக்ஷணைமாய்‌, நிகில ஜகதேக காரணமாய்‌ நிரஸ்த ஸமஸ்த ஸமாப்‌யதிக வஸ்து ஜாதமாய்‌, நாராயண ஸப்த வாஸ்யமான பர ப்ரஹ்மமே. ஸகல வேதாந்த வேத்‌யமென்று ப்‌ரஹ்ம மீமாம்ஸா ஸுூத்ர ந்யாயத்தாலே அறுதி யிடுமவர்களாய்‌, வேதவிதக்‌ரேஸரருடைய நினைவைப்‌ பின் சென்றிருக்கக் கடவ நம்மாசாரயர்களாலே அங்கீகரிக்கப் படார்கள் என்றிட்டு நம்மாலேயும் ஆதரிக்கப்படார் என்றும்‌ நயினாராச்சான்‌ பிள்ளை அருளிச் செய்தார்‌-ரஹஸ்யாம்ருதத்திலே “வக்ஷ்மீ விஸிஷ்டமாய்க்‌ கொண்டு ல்யாபிக்குமென்கிற பக்ஷம்‌ ஸ்ரீ விஷ்ணு புராணத்திற்‌ சொல்லுகிற ஸ்வ விபூதி பேதத்தாலே யாதல்‌, ஸ்லரூப நிரூபகத்வ நிபந்தநமான அப்ருதக்‌ பாவத்தாலே யாமித்தனை யல்லது ஈஸ்வரன்‌ ஸ்வரூபத்தோபாதி ஸ்வரூபத்தினுடைய பரம மஹத்வத்தாலாக மாட்டாது-அப்படியாமாகில் ஈஸ்வர. த்வித்வாதிகளாகிற தோஷங்களுண்டாம்‌. இவளுடைய பத்நீத்வ ஸ்ருதியோடும்‌ ஈஸ்வரனுடைய ஏகத்வ ஸ்ருதியோடும்‌ விரோதிக்குமாகையாலே ஸ்ரிய:பதித்வ நிரூமான ஸ்வரூபமே வ்யாபகமென்றதாயிற்று! என்று வாதி, கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌ அருளிச் செய்தார்‌. ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே – ‘அதிஸயகரியான லக்ஷ்மிக்கும்‌ வஸ்து ஸம்ஸ்தந ரூப ஜாத்யாதி போலே நிரூபகத்வ நிபந்தநமான ஸ்வரூபாந்தர் பாவமுண்டாகையாலே’ என்று வாதி. கண்டீரவரான யாமுநாசார்யர்‌ அருளிச் செய்தார்‌-அத்‌வைத பேதாபேத பக்ஷங்களில்‌ விருத்‌த ஸமுச்சய நிபந்தநமான ஈஸ்வரனுடைய அகடிதகடநா ஸக்தியைக்‌ கொள்ளாமையாலே அது அஸத் ப்ரதிபந்தி- ‘அதோ ஜீவத்வேப்‌யஸ்யா ஸ்வரூப விபுத்வேந பதி ஸ்வரூபாநுரூப்யமிதி”-என்றதும் வாலாக்ர ஸத பாகஸ்ய ஸததா கல்பிதஸ்ய பாகோ ஜீவ–‘த்ரஸரேணு ப்ரமாணாஸ்தே” இத்யாதி ஸ்ருதி விருத்‌தம்‌. ஜீவத்வ ப்ரயுக்தமாண அணுத்வம்‌ அவர்ஜநீயமாகையாலும்‌, இவளுடைய விபுத்வ ப்ரமாணங்கள்‌ அந்யதா ஸித்‌தங்களாகையாலும்‌, ‘வ்யாப்தனுக்கு ப்ரதி வஸ்து பூர்ணத்வமாவது- ஓரொரு உபாத்‌யவச்சிந்ந ப்ரதேஸமே ஸர்வத்தையும்‌ நிர்வஹிக்க வல்ல ஸக்தியை யுடைத்தாயிருக்கை என்று கல்பிக்கைக்கும்‌ கல்பகமிவ்லை., ஜாதி வ்யக்தி தோறும்‌ பூரணமாக வ்யாபிக்கக காணாமையாலே இவளுக்கிது கொள்ளில்‌ பஹிர் வ்யாப்திக்கு விரோத பரஸங்கமில்லை. இதை அகடிதகடநா ஸக்தியால்‌ நிர்வஹிக்கில்‌ விருத்‌த ஸமுச்சயம்‌ கொள்ளும்‌ பர பக்ஷத்தின் படியாகாதாப் போவவும்‌ வேதம்‌ ப்ரமாணம் என்கிற விடத்தில்‌ ஈஸ்வர ப்‌ரணீதமின்றியிலே அபெளருஷேயத்வாதி பேதமுண்டாகையாலும்‌, தேஹாதிரிக்தன்‌ ஆத்மா என்கிற விடத்தில்‌ பகவச் சேஷத்வாதி பேதமுண்டாகையாலும்‌., பர பக்ஷத்தின் படியாகா என்னில்‌ ஈஸ்வரனுடைய அந்தர்‌” வ்யாப்தி பஹிர் வயாப்திகளில்‌ அகடிதகடநா ஸக்தியாலே பர பக்ஷத்தின்‌படி ஆகாதென்று கைக் கொள்ளுவது ..

இதி ரஹஸ்ய விவேகே ஸ்ரீவிபுத்வ கண்டநம்‌ நாம-த்வதீயோ விவேக ஸமாப்தம்

—————

அத, பூர்வபக்ஷி ஸரண வசஸ. ஸாதநமிதி.

ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே இருபத்து மூன்றாமதி,காரத்திவே -: ஸித்‌த உபாயத்தைப் பற்றி வரும்‌ கலக்கங்களும்‌, அவற்றின்‌ பரிஹாரங்களும்‌ சொல்லுகிறோம்‌ :அநாதி,காலம்‌ அநாதரித்த. ஈல்வரன்‌ இன்று ஒருத்தனை ஆதரிக்கிறது தன்‌ ஸ்வாதந்தர்ய-. மாத்ரத்தாவே யன்றோ? இங்ஙன் அன்றாகில்‌, “இன்றென்னைப்‌ பொருளாக்கித்‌ தன்னை என்னுள்‌ வைத்தான்‌ அன்று என்னைப்‌ புறம்‌ போகப் புணர்த்தது என் செய்வான்‌” என்று ஆழ்வார்‌ விண்ணப்பம்‌ செய்ய ஸர்வேஸ்வரன்‌ “சூழ் விசம்பணி முகில்‌ தூரியம்‌ முழக்கின* இதொழிய வேறொரு உத்தரம்‌. அருளிச் செய்தானா ? ஆகையால்‌ நாமொரு உபாயாநுஷ்டாநம்‌ பண்ணுகை என்னென்பது, “நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை * என்கிறபடியே “அருள்‌ புரிந்த சிந்தை யடியார் மேல்‌ வைத்தவன்‌ தானே ரஷித்த போது, காணுமத்தனை யன்றோ’ என்று சிலர்‌ கலங்குவர்கள்‌, இவர்களைத்‌ தெளிவிக்கும்படி, – ஈஸ்வரன்‌ ஸவதத்த்ரனே யாகிலும்‌, வைஷம்ய நைர்க்‌ருண்யமாகிற தோஷங்கள்‌ தனக்குத் தட்டாமைக்காக இவன் பக்கலிலே ஒரு வ்யாஜத்தை யுண்டாக்கி அத்தை அவலம்பித்துத் தான்‌ ரக்ஷிக்கும்‌- இவ் வர்த்த,த்தை, “திருமா லிருஞ்சோலை மலை யென்றேன் என்ன திருமால் வந்து என்‌ நெஞ்சு நிறையப் புகுந்தான்‌* என்று ஆழ்வார்‌ அருளிச் செய்தார்‌… இப்படியானால்‌, “இன்றைன்னைப்‌ பொருளாக்கி” என்கிற பாட்டுக்கும்‌ இதுக்கும்‌ மூலமான வசநங்களுக்கும்‌ நிர்‌வாஹமேதென்னில்‌ – அது சொல்லுகிறோம்‌. – ஈஸ்வரனுக்கு ஸஹஜங்களான ஸ்வாதந்த்ரய காருணயங்களினுடைய ப்ராதாந்யத்தாலே இவற்றுக்கு வ்யாஜ பூதங்களான விஸேஷ காரணங்களை அநாதரித்துப் பண்டென்னைப்‌ பராங்முகளாக்குகைக்கும்‌, இவற்றுக்கு வயாஜ பூதங்களான விஸேஷ காரணங்‌களை ஆதரித்து இன்றென்னை அபிமுகனாக்குகைக்கும்‌ உன்‌ ஸ்வாதத்த்ர்யமும்‌ கிருபையுமொழிய வேறொரு ப்ரதாந காரணம்‌ கண்டிலேன்

எனக்குக்‌ காட்டாதே ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான நீ கண்டதுண்டாகில்‌ அருளிச் செய்ய வேணுமென்ன, ஈஸ்வரன்‌ நிருத்தரனா யிருக்கிற விருப்பாலே ஸ்வாதந்தர்ய க்ருபைகளினுடைய ப்ராதாந்யத்தை நாட்டுக்கு வெளியிடுகிறார்‌. இத்தால்‌. இச் சேதநனை லிவோபகரண மாக்குகைக்கு ப்ரதாந காரணம்‌ ஈஸ்வர ஸ்வாதந்த்ரயம்‌- இதுக்கு ஸஹகாரி காரணம்‌ ப்ரவாஹாநாதியான ஸ்வாஜ்ஞாதிவங்கநம்‌. இவனை போக உபகரணமாக்குகைக்கு ப்ரதாந காரணம்‌ ஈஸ்வரனுடைய ஸ்வாபாவிக் காருண்யம்‌. இதுக்கு ப்ரதிபந்தகமான ஈஸ்வர நிக்‌ரஹத்தை ஸமிப்பித்துக் கொண்டு ஸஹகாரி காரணமென்று பேர்‌ பெற்றது – இவனுடைய ஸாுக்ருத விஸேஷ த்வாரா க்ருபை யடியாக வந்த வஸீ கரண விஷேஷங்கள் என்று ஈஸ்வரனுடைய ஸ்வபாவத்தையும்‌, வைஷம்ய நைர்‌ க்ருண்யங்க ளில்லாமையையும்‌, பந்த மோக்ஷாதி வ்யவஸ்தையையும்‌ ப்ரமாண ப்ரதி நியதமானபடியே அனுஸந்தித்து. ஸ்வதந்த்ரனுடைய க்ருபையிலே யூன்றிப்‌ போர வடுக்கும்‌. என்று கருத்து’ என்றும்‌, நாவாமதிகாரத்திலே –முக்தராவார்‌. – ஸாஸ்த்ர சோதிதங்களான உபாய விஸேஷங்களால் வுண்டான பகவத் ப்ரஸாதத்தாலே அத்யந்த நிவ்ருத்த ஸம்ஸாரராய்‌‘ என்றும்‌, ‘ப்ரதாந விரோதிக்குச்‌ செய்யும்‌ பரிஹாரத்தை, தஸ்ய ச வஸீ கரணம்‌ தச் சரணாகதி ரேவ என்று கட வவ்லியில்‌ வஸீ கார்ய பரம்பரையை வகுத்த விடத்தில்‌ பாஷ்யகாரர்‌ அருளிச் செய்தார்‌” என்றும்‌, இருபத்து மூன்றாம்‌ அதிகாரத்திலே “க்ருபா விஸிஷ்டனாண ஈஸ்வரன் *கருஷ்ணம்‌ தர்மம்‌ ஸநாதநம்‌-என்கிறபடியே ஸித்‌த உபாயம்‌-இவனுக்கு ப்ரஸாதநங்களான பக்தி ப்ரபத்திகள்‌ ஸாத்‌யோபாயங்கள்‌-ஓரதிகாரி விஸேஷத்துக்கு கர்த்தவ்யமாக *மாமேகம்‌ மரம்‌ வ்ரஜ*என்று விதிக்கப்படுகிற ப்ரபத்தியை அதிகாரி விஸேஷணம் என்று சிலர்‌ சொன்ன விடம்‌ அதிகாரி விஸேஷணத்துக்‌குச் சொல்லும்‌ லக்ஷணத்தோடு சேராமையாலே அதிவாதம்‌-இங்ஙனல்வாத போது, ஈஸ்வரன்‌ உபாயமாய்‌ நிற்க உபாஸநாதி ஸாஸ்த்ரார்த்தங்களும்‌ அதிகாரி விஸேஷணங்களாம்‌. ஆகையாலே ப்ரபத்தியுங்கூட உபாயமன்று என்று சிலர்‌ அதிவாதம்‌ பண்ணுகிறதும்‌ ஸித்‌த உபாயத்தினுடைய ப்ராதாந்யமடியாக வித்தனை-அது ப்ரதாநமான படி ப்ரஸாதநங்களாலே ப்ரதிபந்தகமான நிக்‌ரஹம்‌ ஸமித்தால்‌ ஸ்வாபாவிகாநு பவத்துக்கு ப்ரயோஜக மாகையாலே’ என்றும்‌, ‘ஸித்‌தோபாயம்‌ ப்ரதாநமே யாகிலும்‌ தத்‌ வஸீகரணார்த்தமான ஸாத்‌வோபாயாநுஷ்டாநத்துக்கு *இன்றென்னை” இத்யாதி பூர்வாசார்ய வாக்ய விரோதம்‌ இல்லை என்றும்‌, “இப்படி ஈஸ்வர ஸ்வாதந்த்ர்‌ய ஸஹஜ காருண்யங்களடியாக வரும்‌ கலக்கங்களுக்குப்‌ பரிஹாரம்‌. சொன்னோம்‌. ஸம்பந்த விஸேஷமடியாக வரும்‌ கவக்கத்துக்கு பரிஹாரம்‌ சொல்லுகிறோம்‌” என்றும்‌ “இவை யெல்லாம்‌ ஸ்வரூபத்துக்குப் பொருந்துமோ என்று சிலர்‌ ஸித்‌தோபாய முகத்தாலே ஸாத்‌யோபாய ஸரீரத்தை அழிக்கப் பார்ப்பர்‌கள்‌, அவர்களை விலக்கும்படி பரமர்ஷிகளும்‌ ஸ்ரீ பாஷ்யகாராதிகளும்‌, விஸ்வாஸ பூர்‌வக ப்ரார்த்தநாத்மநிஷே பாதிகளைத் தாங்களும்‌ அநுஷ்டித்து இதுக்கு ஸாஸ்த்ரங்களை மூதலிப்பித்துக் கொண்டு உபதேஸ பரம்பரையும்‌ நடத்திப்‌ போருகையாலே ஸேஷித்வாதி ஸம்பந்த,ம்‌. நித்யமே யாகிலும்‌ கர்மவான்‌௧ளான ஜீவர்கள் விஷயத்தில்‌ ஈஸ்வரன் ஒரு ஸாத்‌யோபாய விஸேஷத்தை முன்னிட்டல்வது ரஷியான்‌ என்று ஸாஸ்த்ரம்‌ சொல்லுகையாலே ஸாஸ்த்ர நிஷ்டருக்கு பரிக்‌ரஹிக்க வேணும்‌’ என்றும்‌, ‘தன்னை ஈஸ்வரன் ரஷிக்கும் போது ஸம்பந்தத்தோடு கூட விலக்காமையே வேண்டுவதென்னில்‌, அதுவும்‌ அநுபபந்நம்‌’ என்றும்‌-இருபத்தேழாமதிகாரத்தில்‌ ஸாத்‌யோபாய விஸேஷத்தாலே வஸீகார்யமுமாய்‌ ப்ராப்யமுமா யிருக்கிற ஸித்‌தோபாயம்‌” என்றும்‌-புருஷார்த்தத்துக்கு ஸாதநமாக ஸாஸ்த்ர விஹிதமான ஸாத்‌யோபாயமும்‌ பர ந்யாஸ பர்யந்தமாக அகிஞ்சநனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியைச் சொல்லுகிற நமஸ்ஸிலே ஆர்த்தமாக அனுஸந்தேயம்‌” என்றும்‌, ‘உபாய ப்ரகாரம்‌ வஸீ கரண விஸேஷம்‌’ என்றும்‌, “அகிஞ்சநனான அதிகாரிக்கு யதாவிதி ரக்ஷாபேஷாபூர்வக பரந்யாஸத்தை யொழிய வேறொன்றால் அபேஷை யில்லாத ஸித்‌தோபாயத்தை –மாமேகம்‌ என்று காட்டி அதினாலே வஸீகரணார்த்தமான ஸாத்‌யோபாயத்தை ஸரணம்‌ வ்ரஜ- என்று விதியாலே காட்டுகிறது. இப்படி விதிக்கிற ப்ரபத்தி ரூப வித்யைக்கு ஸரண்ய ப்ரஸாதநமாசோதி தத்வத்தாலே வருகிற உபாயத்வமும்‌ பக்தியோடு துல்யம்‌’ என்றும்‌, இருபத்தொன்பதாமதிகாரத்திலே என்னுணர்வினுள்ளே யிருத்தினோண்‌. அதுவுமவனதின்னருளே என்றும்‌, “இசைவித்தென்னை உன்‌ தாளிணைக் கீழிருத்துமம்மானே * என்றும்‌ சொல்லுகிறபடியே உபாய பூதனான அவன் இசைவிக்கச் செய்கிற வ்யாஜ மாத்ரத்தை அவனோடொக்க உபாயமாக எண்ணுகை உசிதமன்றென்று ஏக ஸப்‌த தாத்பர்யம்‌- இப்படி ஸித்‌தோபாயத்தைப் பற்ற ஸாத்‌யோபாயம்‌ வ்யாஜ மாத்ரமாய்‌ ப்ரதாநமின்றிக்கே நிற்கிற நிலையைப் பற்ற ஸம்பந்த ஜஞாந மாத்ரம்‌, ஸித்‌தோபாய ப்ரதிபத்தி மாத்ரம்‌, அநிவாரண மாத்ரம்‌, அநுமதி மாத்ரம்‌, அசித் வ்யாவ்ருத்தி மாத்ரம்‌, சைதந்ய க்ருத்யம்‌, சித்த ஸமாதாநம்‌, அதிகாரி விஸேஷணம்‌’ என்று இப் புடைகளிலே அதிவாதம்‌ பண்ணினார்கள்‌. இவ்வந்ய பரோக்தியைக்‌ கொண்டு இவை தானே அர்த்தம் என்றும் அறுதியிட ஒண்ணாது –இவை எல்லாம் சரணம் வ்ரஜ -என்கிற விதிக்கு விருத்தங்களாம்-அதி ப்ரஸங்காதி தோஷங்களுமுண்டு-அதெங்கனே என்னில்‌, ஸம்பந்த ஜஞாந மாத்ர மென்றாலும்‌, ஸித்‌தோபாய ப்ரதிபத்தி மாத்ரமென்றாலும்‌, அது வாக்ய மாத்ர ஜந்யமாகில்‌ விதி விஷயமாக மாட்டாது. அவிதேய ஜ்ஞாநத்தாலே மோக்ஷமென்பாருக்கு உபாஸநாதி விதி விரோதம்‌ பாஷ்‌யாதி ஸித்‌தம்‌-தத்வஜ்ஞாந முடையவருக்குப்‌ பின்பு கர்த்தவ்யமாண ஜஞாநாந்தரமாகில்‌ ப்ரபத்தியினுடைய விதி லக்ஷண அநுஷ்டந வாக்யங்கள்‌ சொல்லுகிறபடியே இதன் ஸ்வரூப மங்கீ கரிக்க வேணும்‌. ஸித்‌தோபாய ஸ்வீகாரமென்ற பாசுரத்துக்கும்‌ – ஸித்‌தோபாயத்தை யறிந்து அது தனக்கு. கார்ய கரமாம்படி பண்ணுகிற விதி ப்ராப்த ப்ராரத்தநா பூர்வக பர ந்யாஸ ரூபாதிகாரி க்ருத்யத்திலேயிறே தாத்பர்யம்‌. அநிவாரண மாத்ரமென்றது விலக்காத மாத்ரமானால்‌ ரக்ஷகனான ஈஸ்வரனை இவன் முன்பு ப்ரபலனாய்‌ விலக்கினானாகில்‌ ஈஸ்வரனுடைய ஈஸ்வரத்வம்‌ ஸங்குசிதமாம்‌.

அபராதத்தாலே நிக்ரஹத்தை உண்டாக்கி விலக்கினானாகில்‌ இவன்‌ பண்ணுகிற ப்ரபத்தி ப்ரஸாதநமே யாக வேணும்‌. ஸ்வ ரக்ஷணார்த்த வ்யாபாரத்தாலே விலக்கினானென்னில் நிர் வ்யாபாரமான ஸுஷுப்தி ப்ரளயாத்‌ யவஸ்தைகளிலும்‌, வ்யாபரிக்க. யோக்‌யனா யிருக்கிற ஜாக்‌ரத்‌ தஸையிலும்‌ விலக்காதே யிருக்கும் போதும்‌ ஈஸ்வரன் மோக்ஷப்ரதாநம்‌. பண்ண ப்ரஸங்கிக்கும்‌. அநுமதி மாத்ரமென்றால் அது உபாஸகனுக்கும்‌ துல்யம்‌- அசித்‌,வ்யாவ்ருத்தி மாத்ரம்‌ ப்ரதிகூல தஸையிலு முண்டாகையாலே இவ்வளவே ரக்ஷணீ யதைக்கு உறுப்பாகாது-சைதந்ய க்ருத்யமென்னால் உபாஸநாதிகளும்‌ மற்றுமுள்ள சேதந வ்ருத்திகளும் எல்லாம்‌ சைதந்ய க்ருத்யமாகையாலே இதுக்கொரு வாசி சொல்விற்றாகாது. சேதநனுக்குத் தானே வருமதென்று விவக்ஷிக்கில்‌ உபதேஸாதிகள் வேண்டாதொழியும்‌. பலாநுப வுக்தா சித்த ஸமாதாந மாத்ரமே யென்னில்‌, தந்தாம்‌ ருஸ்யநு ரூபமாக ப்ரதி புருஷம்‌ வேறுபடும்‌. “வ்ரஜ? என்று விதேயமாய்‌ பல தத் காமநாதிகளன்றிக்கே யிருக்கிற வித்தை அதிகாரி வி்ஸேஷணமென்ன வொண்ணாது. கர்த்தவ்யமாக விதிக்கிற ப்ரபத்தி தனக்கே. இப்படி ஏதேனுமொரு கண்ணழிவு பண்ணில்‌, உபாஸநாதிகளையும்‌. இப்படிக் கண்ணழிக்கலாம்‌. அப்போதும்‌ இம்‌ முகங்களாலே உபாஸநாதிகளிற் காட்டில்‌ ப்ரபத்திக்கு வ்யாவ்ருத்தி சொல்ல நினைத்தது தலைக் கட்டாது. ஸ்வ விஷய ஸ்வீகார விஸிஷ்டமாய்க் கொண்டு பல ப்ரதமாகா நிற்கச் செய்தே இஸ் ஸித்தோபாயம்‌ ஸ்வீகாரத்தாலும்‌ நிரபேஷமென்று புத்தி பண்ண வேணுமென்னில்‌ இது த்ருஷ்டி விதி போலே ஆரோபிதமாதல்‌ ஸ்வ வசந விருத்‌தமாதலாம்‌. ஆகையால்‌ ஈஸ்வரன்‌ ப்ரஸாத நீயனாய்‌ ப்ரதாநமான ஸித்‌தோபாயம்‌ பக்தி ப்ரபத்திகளிரண்டும்‌ ப்ரஸாதநங்களாய்க் கொண்டு ப்ரதாந மல்லாத ஸாத்‌யோபாயங்கள்‌ “இவை யிரண்டத்தொன்றிலே யதாதிகாரம்‌ நிலையாகக்‌ கடவது‘ என்றும்‌, “இப்படி பக்தயாதிகள் போலே ஸரணாகதி தர்மமும்‌ கர்த்தவ்யமாக விதிக்கப்படுகையாலே. “தன்னால் வரூம்‌ நன்மை விலைப் பால் போலே, ஈஸ்வரனால் வரும்‌ நன்மை முலைப் பால் போலே என்கிற பிள்ளான் வார்த்தைக்கு பக்தி ப்ரபத்த்யாதிகளெல்லாம்‌ அவனால் வருகிறதென்று நினைக்க வேணுமென்று தன்னுடைய பராதீந கர்த்ருத்வத்திலே தாத்பர்யம் –

அந்ய விஸ்வாஸ ஸித்‌த்‌யர்த்தவம்‌ பக்த் யுபாய விதிம்‌ வதந்। ஸர்வ ஸாஸ்த்ரேஷ்வ விஸ்வாஸம்‌ ஆதத்தே முக பேதத:!! மத்‌யோபஹத பாத்ரஸ்த, தீர்த்த, த்ருஷ்டாந்த வர்ணநம்‌ | அஹங்காராந்வயே து ஸ்யாத்‌ ப்ரபத்தாவபி பக்திவத்‌ ஆகையால்‌ “ப்ரஸீத மத்‌ வ்ருத்த மசிந்தயித்வா- இத்யாதிகள்‌ முன்பு தான்‌ பண்ணின ப்ரபத்திக்கு ஷமை கொள்ளுகிற படி யென்று சிலர்‌ சொல்லுமதுவும்‌ அஹங்கார ஸ்பர்ஸாதி ஸங்கையைப் பற்றவா மத்தனை யல்லது யதா ஸாஸ்த்ர மநுஷ்‌டித்த ப்ரபத்தி அபராதமாய்‌ அதுக்கு க்ஷமை கொள்ளுகிற படியன்று -அப்படியாகில்‌ பிதாமஹம்‌ நாதமுநிம்‌ விலோக்ய ப்ரஸீத- என்கிற பூர்வாசார்ய புரஸ்காராதிகளும்‌ தான்‌ செய்கிறதாகையாவே அதுக்கு க்ஷமை கொள்ள வேண்டி அநவஸ்தையாம்‌-இது ஸ்வ பர நிர்வாஹமாகில்‌ அது போலவே முன்பு பண்ணின ப்ரபதநமும்‌ ஸ்வ பர நிர்வாஹமென்னலாம்‌. இங்குச் சொல்லும்‌ குதர்க்கங்களாலே பூர்வர்கள்‌ பண்ணின ப்ரபத்தியும்‌ அபராதமா யறுகையாலே பூர்வர்களை முன்னிடவு மொண்ணா தொழியும்‌’ என்றும்‌, “புத ப்ரபதநம்‌ வேண்டாவென்கையும்‌ பர பக்ஷமாம்‌ இவ்‌ விடத்திலே சிலர்‌ – வ்ரஜ இத்யாதி விதிகளை அந்ய பரங்களாக்கி யோந்யதா ஸந்த மாத் மாநம்‌ அநுயதா ப்ரதி பத்‌யதே! கிம்தேந ந க்ருதம்‌ பாபம்‌ சோரேண ஆத்ம அபஹாரிணா –யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்தவைஷ ஹ்ருதி ஸ்தித தேந சேத விவாதஸ்தே மா கங்காம்‌ மாகுரூந்‌ கம “ஆத்ம தாஸ்யம்‌ ஹரே ஸ்வாம்யம்‌ ஸ்வபாவம்‌ ச ஸதா ஸ்மர* இத்யாதிகளில்‌ தாத்பர்ய கதிகளையும்‌ பராமர்ஸியாதே. இவற்றைக் கொண்டு ஸாஸ்த்ர ஜந்ய ஸம்பந்த ஞாநமொழிய வேறு முமுஷுவுக்கு அநுஷ்டேயமாய்‌ இருப்பதொரு உபாயமில்லை என்பார்கள்‌. இது பக்தி ப்ரபத்த் யாதி விதி ஸ்வாரஸ்ய விருத்தம்‌” என்றும்‌, “இங்கனல்லாத போது. புந ப்ரபத்தி விதாயக ஸாஸ்த்ரமும்‌ அப்படிகளுக்கு ஸிஷ்டாநுஷ்டாநமும்‌ பூர்வ ஸம்ப்ரதாயமும்‌ விரோதிக்கும்‌” என்றும்‌, இருபத்து நாலாமதிகாரத்திலே “உபாஸநாதிகள்‌. ஸ்வரூப விருத்‌தங்களென்று சிலர்‌ சொல்லுவர்கள்‌. இதுவும்‌ ப்ரபத்தியை ஸ்துதிக்கைக்காக அதிவாதம் பண்ணினார்களா மித்தனை -எங்கனே யென்ணில்‌ நித்யமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு இவை நாஸகங்களாய்க் கொண்டு. ஸ்வரூப விருத்‌தங்களென்ன வொண்ணாது’ என்றும்‌, “மோக்ஷ ப்ரதிகூவங்களான ராகாத்‌ யுபாதிகளாலே வந்த காம்ய நிஷித்‌தங்கள் போலே பந்தகங்களல்லாமையாலும்‌ மோக்ஷார்த்தி தனக்கே விதிக்கையாலும்‌ உபாஸநாதிகளுக்கு ஸாஸ்த்ர முகத்தாலே அநர்த்தா வஹத்வ ரூபமான ஸ்வரூப விரோதம்‌ சொல்ல வொண்ணாது- ஆகையால்‌ ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்ற உபாஸநாதிகளுக்கு நாஸகத்வ அஸம்பாவிதத்வா நர்த்தா வஹத்வங்களில்லாமையாலே ஒரு, படியாலும்‌ ஸ்வரூப விரோத ப்ரஸங்கமில்லை! என்றும்‌, “உபாஸநாதிகள்‌ அஹங்காராதி கர்ப்பங்கள் என்னுமிடம்‌ ஸாஸ்த்ரமிசையா திருக்கச்‌ செய்தே ஆரோபித்தார்களத்தனை” என்றும்‌, ‘அபிசாராதிகளை விதித்த கட்டளையிலே ஸாஸ்த்ர ப்ரரோசநாதிகளில்‌ அபி ஸந்தியாலே அதிகார விஸேஷத்திலே உபாஸநாதிகளை விதித்ததத்தனை யன்றோ! முமுஷு வுக்கு ப்ராப்ய ப்ராபகங்கள்‌ ஏகமாகையாலே ப்ராப்யாநுரூபமான உபாயம்‌ ஸர்வேஸ்வரன் ஓருவனுமே யாகையாலன்றோ-அத பாதக பீதஸ்த்வம்‌ ஸர்வ பாவேந பாரத । விமுக்தாந்ய ஸமாரம்போ நாராயண பரோ பவ” என்று தர்ம தேவதை தன்‌ புத்ரனுக்கு உபாஸநாதிகளை ப்ராப்ய விரோதிகளென்று நினைத்து நிந்தித்ததென்னில்‌ அதுவும்‌ அத்யந்தாநுபபந்தம்‌-என்றும்‌, “அத பாதக பீதஸ்த்வம்‌ என்கிற விடத்திலும்‌ ‘பாதக ஸப்‌தத்தாலே உபாஸநாதிகளை நிந்திக்கிற (நினைக்கிற )தென்கைக்கும்‌ ப்ரமாணமில்லை- ஆகையால் முமுஷுவுக்கு விஹிதங்களாகையாலே பக்தி ப்ரபத்திகஎிரண்டும்‌ யதாதிகாரம்‌ பரிக்‌,ராஹ்யங்கள்‌- என்றும்‌, “இவை “அகிஞ்சநோ அநந்யகதி-என்றிருக்குமதிகாரிக்கு ஸ்வாதிகார விருத்‌தங்களென்ன ப்ராப்தம்‌- இவ்வதிகார விரோத மறியாதே உபாஸநாதி களிலே ப்ரவர்த்திக்குமவனைப் பற்ற -நரஸ்ய புத்தி தெவ்ர்பல்யாத்‌ உபாயாந்தர மிஷ்யதே* என்றதும்‌’ என்றும்‌, “இப்படி இவ் வுபாயத்தின் அதிகாரத்திலும்‌ ஸ்வரூபத்திலும்‌ வரும்‌ கலக்கங்கள்‌ ஸமிப்பித்தோம்‌. இனி மேல்‌ பரிகரங்களில்‌ வரும்‌ வ்யாமோஹம் சமிப்பிக்கிறோம் -இவ்வுபாயத்துக்கு ஆனுகூல்ய சங்கல்பாதிகள் வேணுமோ?’ ‘ஆர்த்தோ வா யதி வா த்ருப்த- என்றும்‌, மித்ர பாவேந ஸம்ப்ராப்தம்‌ ந த்யஜேயம்‌ கதஞ்சந | தோஷோ யத்‌யபி தஸ்ய ஸ்யாத்‌ என்றும்‌,. யதி, வா ராவணஸ் ஸ்வயம்‌ என்றும்‌ சொல்லுகிற ரிபூணா மபி வத்ஸலனான ஸரண்யண்‌ ஸரணாகதனுடைய தோஷங்களைப் பார்க்குமோ? “அநாலோசித விஸேஷ அசேஷ லோக ஸரண்ய என்றன்றோ பூர்வர்கள்‌ பாசுரம்‌, ஆகையாலிவை ஸம்பாவித ஸ்வபாவங்களாமித்தனை யன்று அன்றோ வென்று சிவர்‌ சொல்லுவர்கள்‌. இதுக்கு ப்ரபத்த யுத்தர காலத்தில்‌ ஆநுகூல்யாதிகள்‌ அநுவர்த்தியாதொழியிலும்‌, ப்ரதி ஸமாதநம்‌ பிறந்து ப்ரபத்தி பலமும்‌ குறைவற்றிருக்கு மென்கையிலே தாத்பர்யம்‌ கொள்ளலாம்‌. இங்ஙனல்லாத போது ஷட்‌ விதா ஸரணாகதி என்றும்‌, ந்யாஸ பஞ்சாங்க ஸம்யுத என்றும் “ஸ்வாங்கை,, பஞ்சபி,ராவ்ருதாம்‌ என்றும்‌, அங்காங்கிகளை விபஸித்‌துச்‌ சொல்லுகிற பல ப்ரமாணங்களுக்கும்‌ விருத்தம்‌ என்றும்‌, இருபத்தெட்டாமதிகாரத்திலே -ஸ்ரீமானான நாராயணன்‌ திருவடிகளிலே அங்க,பஞ்சக ஸம்பந்நமான ஆத்ம ரஷா பர ஸமர்ப்பணம்‌ பண்ணுகிறேனென்று த்‌வயத்தின்‌ திரண்ட பொருள்‌-இங்கன் அல்லாத போது பக்தி ரூப மோக்ஷோபாயங்களை விதிக்கிற ஸாஸ்த்ரங்கள் எல்லாம்‌ அத்யந்த வ்யாகுலங்களாம்‌’ என்றும்‌ சொல்லப் பட்டது.

இதி பூர்வ பக்ஷ

அத, ஸித்தாந்த.-ந ஸரண வசஸ ஸாதநத்வே ப்ரமாணம்‌.

ப்ரபத்திக்கு உபாயத்வத்தில்‌ ப்ரமாணமில்லை (உபாயமென்கை ப்ரமாண விருத்‌தமாம்‌.) எங்ஙனே யென்னில்‌-இன்றென்னைப்‌ பொருளாக்கி” என்கிற பாட்டுக்கு – அநாதி காலம்‌ ஈஸ்வரன்‌ சேதநனை க்ருபை பண்ணாமைக்கு ப்ரதாந ஹேது ஈஸ்வர ஸ்வாதந்தர்ய மென்றும்‌, அப்ரதாந ஹேது ஆஜ்ஞாதிலங்கநமென்றும்‌ இவன்‌ கருபை பண்ணுகைக்கு அப்ரதாந ஹேது ப்ரபத்தி என்றும்‌ தாத்பர்யம்‌ கல்பிக்கைக்கு ப்ரமாணாமில்லை – ப்ரத்யுத – நிர் ஹேதுகத்வமே இதுக்கு தாத்பரிய மென்கைக்கு ப்ரமாணங்களுமுண்டு-ஸ்வ கர்மபி ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே ப்‌ராம்யமாணே” என்கையாலும்‌“முன் செய்த முழு வினையால்‌, யானே யென்னை யறிய கிலாதே என்று ஆழ்வார்‌ தாமே அருளிச் செய்கையாலும்‌ அநாதி காலமிழவுக்கடி கர்மம்‌-ஜீவே துக்காகுலே விஷ்ணோ க்ருபா காப் யுப ஜாயதே, *விதி வாய்க்கின்று காப்பாரார்‌? *நாஸெள புருஷகாரேண* புருஷகாரமும்‌ மிகையாம்படி யிறே யவன் படி. *செய்தாரேல்‌ நன்று செய்தாரென்னு மவனிறே.
(ந சாப்யந்யேந ஹேதுதா)
உபாயாந்தரத்தாலன்று (கேவலம்‌ ஸ்வேச்சயா) அப்ரதாந ஹேதுவுமில்லை- (ஏவ) இப்படியே- இதில்‌ ஸம்ஸய லேசமுமில்லை (அஹம்‌ ப்ரேஷே ), *அஸங்கல்பித மப்யஸ்ய ப்ரேரணம்‌. யத் க்ருதம்‌ மயா! விஷ்ண்வாய தநதீ பஸ்ய தஸ்யை தத்‌ புஜ்யதே பலம்‌”, மாதவனென்றதே கொண்டு”, “என்னுள்‌ புகுந்திருந்து, *திருமாலிருஞ்சோலை மலை யென்றேனென்ன திருமால்‌. வந்தென்னெஞ்சு நிறையப் புகுந்தான்‌” இத்யாதிப்படியே வைஷம்ய நைர்க்‌ருண்ய பரி ஹாரார்த்தமாக யாத்ருச்சிக ப்ராஸங்கிக ஸுக்ருத விஸேஷங்களை கல்பித்து கடாக்ஷிப்பன் (கஞ்சித்‌) அதிகாரி நியமமில்லை (கதாசந) கால நியமமில்லை- என்றித்யாதிப்படியே ப்ரமாணங்க ளுண்டாகையாலே – இன்று பேற்றுக்கடி க்ருபையே யாகையால்‌ இதுக்கு வஸீகர உபாயம்‌ ஸாதகமன்று’ என்றித்யாதியும்‌, ஸைவ தஸ்யாப வஸீகரணம்‌ பவதி” என்று சரணாகதியை தச்சேஷதா ப்ரதிபத்தி யென்று அதிகாரி விஸேஷணமாக ஸ்ருத ப்ரகாஸிகையிலே பட்டர்‌ விவரித்தருளினார் –

பாஷ்யகாரரும்‌ பாஷ்யத்திலே பக்தியை, “ஸ்வாஜ்ஞாதி வ்ருத்தி வ்யவஸாய நிவ்ருத்தி மாதரேண * இதயாதியாலே அதிகாரி விஸேஷணமாக அருளிச் செய்தார்‌-ஆகையால்‌ ஆழ்வார்‌ திவ்ய ஸூக்தி விரோதமும்‌ பாஷ்யகாரர்‌ திவ்ய ஸூக்தி விரோதமும்‌ ஸ்ருத ப்ரகாஸிகா பட்டர் திவ்ய ஸூக்தி விரோதமும்‌ வஸீகரணோபாயம்‌ ஆர்த்தமாகக்‌ கல்பிக்கிற விடமெங்கும்‌ துர்வாரம்‌. ஸமந்வயாதிகரணத்திலே ஸ்ருத ப்ரகாஸிகையிவே பட்டர்‌ ஸேக்ஷஸேஷி பாவ ஸ்வரூபோபாஸநாத்மக ஜ்ஞாநத்தாலே சேதநேஸ்வரர்கள்‌ ஸங்கதராகிறதற்கு த்ருஷ்டாந்தமாக நாவுபெ,ள ஸங்கச்சேதே என்று பூர்வம்‌ அவிஜ்ஞாத ஸம்பந்தராயிருக்கிற ராஜ புத்ரர்கள்‌ ஸம்பந்த ஞாநாநந்தரம்‌ ஸங்கதராவர்கள் என்று அருளிச் செய்கையாலே ஸம்பந்த ஜ்ஞாநமே போருமென்‌கிறத்தை ப்ரகாஸிப்பித்தருளினார்‌- ரிஷிகளுடைய தாத்பர்யஜ்ஞரான பாஷ்யகாரர்‌ கத்யத்திலே ப்ரபத்தி பண்ணினதுக்கு. க்ஷாமணம்‌ பண்ணி யருளினார்‌ என்றும்‌. பிள்ளை முதலானார்‌ வ்யாக்‌யாநம்‌ பண்ணி யருளினார்கள்‌.
(ஸ்வ ரக்ஷணே ஸ்வாந்வய நிவ்ருத்தியைச்‌ சொல்லுகிற நமஸ்ஸிவே ஸ்வ ரக்ஷணார்த்தமான ஸாத்‌யோயாயத்தை ஆர்த்தமாகச் சொல்லுகை அஸங்கதம்‌. அகிஞ்சநனான அதிகாரிக்கு பர ந்யாஸத்தை யொழிய வேறு ஓன்று அபேஷை யில்லாத ஸித்‌தோபாயத்தை மாமேகம்‌ எண்று காட்டி. அவனுடைய வஸிகரணார்த்தமான ஸாத்‌யோபாயத்தை. ஸரணம்‌ வ்ரஜ என்று விதிக்கையாலே காட்டுகிறதென்கையும்‌, ‘ஏக ஸப்‌த ஸ்வாரஸ்ய விருத்‌தம்‌-பாஷ்யகாரரும்‌. பதினெட்டு பர்யாயம்‌ திருக்கோட்டியூர்‌ நும்பி பக்கலிலே எழுந்தருளி மாஸோபவாஸம்‌ பண்ணி சூழரவு கொண்டு பெற்ற அர்த்தத்துக்கு விருத்‌த மாகையாலே ஸம்ப்ரதாய விருத்தம்‌.

ஸரணம்‌ வ்ரஜ என்று சோதிதத்வத்தால்‌ வருகிற அதினுடைய உபாயத்வம்‌*ஏக -ஸப்‌தத்தாலே அபோதிதம்‌. “என் உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே -என்கிறவிடத்தில்‌ – இருத்துகையும்‌, “இசைவித்தென்னை . என்கிற விசைவுமே அவனுடைய அருளின்‌ கார்யமாகையாலே அவ்வருளூக்கு அப்ரதாநமாகவும்‌ காரணமன்றிறே. பாஷ்யகாரர்‌ திருவாய் மொழியைக் கொண்டு ஸூத்ர வாக்யங்கள்‌ ஒருங்க விடுவரே- அப்படிப்பட்டவர்‌ “ஆறெனக்கு நின் பாதமே”, *கழல்களவையே சரணாக”, “நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்‌”, அடிக் கீழமர்ந்து புகுந்தேனே என்கிற வித்யாதி ஆழ்வார் பாசுரத்துக்கு விருத்‌தமாக ப்ரபத்தியை அப்ரதாந வஸீகரணோபாயமாகவும்‌ திருவுள்ளம்‌ பற்றாரிறே-அப்படிப் பட்டவர்‌ வஸீகரணேபாயமென்றால்‌ அதுக்குக்‌ கருத்து குத்‌ருஷ்டிகளுக்கு ரஹஸ்யோபாயத்தை வெளியிட வொண்ணாமையிறே. உபாஸநாத்மக ஜ்ஞாநத்தை பாஷ்யத்‌திலே அருளிச் செய்ததுக்குக் கருத்து அதுவே- கத்ய வ்யாக்யாநத்திலே ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார்‌. பாஷ்யகாரர்‌ தாம்‌ ஸ்வீகாரத்தில்‌ அநுபாயத்வமாகிற ஏக சப்த தாத்பர்யத்தை அருமைப்பட்டிறே பெற்றது.ஆகையால்‌ அதுவே யிறே இவருக்குத்‌ திருவுள்ளம்‌. அப்படிப்பட்ட எம்பெருமானார்‌ திருவுள்ளத்துக்கு விருத்‌தமாக ஏகஸப்த தாத்பர்ய கல்பநம்‌ அத்யந்த ஸாஹஸ கார்‌யமாமத்தனை – ஸித்‌தோபாய ப்ரதிபத்தி மாத்ரம்‌, அநுமதிமாத்ரம்‌, அசித்‌ வ்யாவ்ருத்தி மாத்ரம்‌, சைதந்ய கார்யம்‌, சித்த ஸமாதாநார்த்தம்‌, அதிகாரி விஸேக்ஷணம்‌’ என்கை அதிவாதமாகிறதும்‌, (இல்விடம்‌ தாள கோஸத்தில்‌ சிதிலமையிருப்பதால்‌. ஸூத்த பங்க்தி காண வில்லை ) ஏஷ து. வா அதிவததி யஸ்ஸத்யேந அதிவததி என்றாலும்‌ விஹிதமான அதிவாதமிறே. ஆகையால்‌ இவை தானே அர்த்தமென்று அறுதியிடவேணும்‌- இவை யெல்லாம்‌ “மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ என்கிற விதிக்கு அத்யந்தம்‌ அநுகூலங்களிறே. ப்ரமாண விருத்‌தங்களான அர்த்தங்களுக்கே யிறே அதி ப்ரஸங்காதி தோஷங்கள்‌ உள்ளது. ஸம்பந்த ஜ்ஞாநமும்‌, ஸித்‌தோபாய ப்ரதிபத்தியும்‌ ஆசார்யோபதிஷ்டமான திருமந்த்ர ரூப வாக்ய ஜந்ய ஜ்ஞாந மாத்ரமுமாகலாம்‌-தத்வஜ்ஞானமுடையவ னுக்குப்‌ பின்பு “ப்ரபத்‌யே* என்கிற வர்த்தமாந நிர்தேசத்‌தாலே ஸதாநுஸந்தேயமான ஜ்ஞாநமுமாகலாம்‌ “இது உபாயமன்று, ஈஸ்வரனே உபாயம்‌’ என்பாருக்கு உபாஸநாதி வித்யாநுகூல்யமும்‌, அதினுடைய அதிகாரி விஸேஷணத்வ ப்ரதிபாதநமும்‌ பாஷ்யாதியில்‌ ஸித்‌தம்‌. ப்ரபத்தியினுடைய – மாமேகம்‌ ஸரணம்‌ வ்ரஜ, “ப்ரார்த்தநா மதி ஸரணாகதி.*, *ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ப்ரபத்தி. , சரணெள ஸரணம்‌ ப்ரபத்‌யே என்கிற விதி லக்ஷண அனுஷ்டான வாக்யங்கள்‌ சொல்லுகிறபடியே அதிகாரி விஸேஷணமாக அங்கீகரிக்க வேணும்‌.ஸித்தோபாய ஸ்வீகாரமென்ற பாசுரத்துக்கும்‌ அதிகாரி க்ருத்யத்திலே தாத்பர்யமென்ற அம்ஸம் ப்ராமாணிகம்‌- அதிரிக்தம்‌ அப்ராமாணிகம்‌-விலக்காத மாத்ரமானாலும்‌ அநாதி காலம்‌ ஆஜ்ஞாதி வ்ருத்தி வ்யவஸாயத்தாலே விலக்கென்று பண்ணுகிற தந் நிவ்ருத்தி ரூப ப்ரபத்தி அதிகாரி ஸம்பத்தியைக் காட்டுகிற வழியாலே ப்ரஸாதநமாகலாம்‌-அநாதி காலம்‌ ஸ்வ ரக்ஷணார்‌த்த வ்யாபாரத்தாவே விலக்கினானே யாகிலும்‌ இப்போது ‘பகவத்‌ ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி’ என்று அறிந்து தந் நிவ்ருத்தியாலே உண்டாகிற விவக்காமை ஸூ ஷுப்த்‌யாத்‌ யவஸ்த்தைகளில்‌ இல்லையிறே-ஆகையால்‌ அவவவஸ்த்தையில்‌ மோக்ஷம்‌ வர வேணுமென்கை அஸங்கதம்‌-அநுமதி மாத்ரமென்றாலும்‌ அது உபாஸநத்துக்குத்‌ துல்யமென்கை இஷ்டம்‌. புத்‌தி தெவ்ர்பல்ய நிபந்தநமான சோதிதத்வத்தால்‌ வருகிற உபாயத்வம்‌ கழியுமே“அஸ்தி ப்‌ரஹ்மேதி சேத்‌ வேத ஸந்தமேநம்‌* என்கிற அசித்‌ வ்யாவ்ருத்தி யில்வையே ப்ராதிகூல்யதஸையில்‌. ஆகையால்‌ அசித்‌ வயாவ்ருத்தியே ரக்ஷணியதைக்குப் போரும்‌. சைதந்ய க்ருத்யமென்னாலும்‌. இவ் விடத்தில்‌ சைதந்யம்‌ ஸ்வரூப யாதாத்ம்ய விஷயமாகையாலே “அஜ்ஞாநமதோந்ய துக்தம்‌” என்கிற படியே ஸ்வரூப விஷயமாண உபாஸநாதிகளும்‌ புத்தி தெவ்ர்பல்ய நிபந்தநமாகையாலே இதுக்கு நெடுவாசி சொல்லிற்றாம்‌. ஸாமாந்யேந சேதநனுக்குத்‌ தானே வருமென்று அநுக்தோபாலம்பம்‌. சித்த ஸமாதாநம்‌ என்றது தந்தாம்‌ ரூச்யநுரூபமாக பலம்‌ பேதிக்கிலும்‌ அவ்வோ

பலாநுகுண ரஷணம்‌ இனிப் பண்ணுமென்றும்‌ சித்த ஸமாதாநம்‌ ப்ராபத்தாக்களில்‌ வேறுபடாது. ப்ரபத்தி ப்ரார்த்தநா ரூபமாய்‌, காமணையிலே அந்தர்பவிக்கையாலே அதிகாரி விஸேஷணமென்னத் தட்டில்லை. இவ்வதிகாரிக்கு அத்‌வேஷம்‌ தொடங்கி கைங்கர்ய பர்யந்தம்‌ பல பரம்பரை யாகையாலும்‌ அநந்யார்ஹ ஸேக்ஷத்வ ஜ்ஞாநமும்‌ பலமாகையாலும்‌ பகவத்‌ காமநா கார்யமாகையாலும்‌ அதிகாரி விசேஷணம் என்னலாம்‌- பகவத ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவருத்தி ரூபமான உபாஸநத்துக்கு தந் நிவ்ருத்தி ரூபத்வம்‌ துரவசம்‌ -ஆகையால்‌ நெடு வாசி சொல்லிற்றாம்‌-ஸித்‌தோபாயம்‌ இவன்‌ ஸ்விகரிக்கும்‌ தஸையில்‌ இவனுக் கதிகாரார்த்தமாக தத் ஸாபேஷமொழிய கார்ய காலத்தில்‌ தந் நிரபேஷமாகையாலே ஸ்வீகார நிரபேஷமென்னும்‌ நினைவு ஆரோபமன்று-ஸ்வ வசந விருத்‌தமுமன்று- அப்ரதாந ஹேது வல்லாமையாலே அவையிரண்டத் தொன்றிலாக வுமொண்ணாது -எம்‌பெருமானார்க்கு அபிமத விஷயமாய்‌ அவர்‌ பக்கவிலே. பழுக்கக் கேட்டு தந் நிஷ்டரான திருக் குருகைப் பிரான் பிள்ளான்‌ திவ்ய ஸூக்திக்கு முக்ய பாதை இல்லாதிருக்க அமுக்ய தாத்பர்‌ய கல்பநமந்யாய்யமென்று – பக்தி அநுபாயமென்றால்‌ பக்தி ஸாஸ்த்ரத்தில்‌ அவிஸ்வாஸம்‌ வருமென்று தத் பரிஹாரார்த்தமாக “நராணாம்‌ புத்தி தெர்‌பல்யாதுபாயாந்தர மிஷ்யதே- என்கிறபடியே ஸ்வரூப விஸ்வாஸத்துக்கே ஸாஸ்த்ர விஸ்வாஸம்‌ கார்ய மாகையாலே ஒரு ஸாஸ்த்ரத்திலும்‌ அவிஸ்வாஸம்‌ வாராது-மத்‌யோபஹதபாத்ரஸ்த தீர்த்த த்‌ருஷ்டாந்த வர்ணநம்‌ ப்ரபத்தியிலும்‌ வருமென்றதுவும்‌ வஸீகரண உபாயம்‌ என்ற பக்ஷத்தில்‌ வருமென்கையாலே இஷ்டம்‌. “மத்‌ வ்ருத்தமசிந்தயித்வா” என்று ஸ்வ பூர்வ வ்ருத்தத்தை நினைத்து இப்படியிறே ப்ரபத்தி பண்ணுகிறான் என்று ஸ்வாமி திரு வுள்ளத்திலே கலக்கத்தை எண்ணி அதுக்கு க்ஷமை. கொள்ளுகிறதென்று தோற்றா நிற்க-அல்லாத அஹங்காார ஸங்கையைக் கல்பித்து தந் நிபந்தநம் என்கை பரமாசார்யர்‌ திருவுள்ளக் கலக்கத்துக்கு ஹேதுவாம்‌-ஆசார்ய புரஸ்காரத்தாலே ப்ரபதந கர்த்தா தாமன்றிக்கே -ஆசார்யனாகையாலே அவ்விடத்தில்‌ அநவஸ்தையில்லை பாங்கலராகிலும்‌ செயல்‌ நன்றாகத் திருத்திப் பணி கொள்‌ ளுமாசார்யன்‌ திருவுள்ளம்‌ பூர்வ வ்ருத்தததை யெண்ணிக்‌ கலங்காமையாலே அவ் விடத்திலும்‌ அநவஸ்தையில்‌லை அதுவுமவனதின்னருளே* என்கிறபடி யன்‌றிக்கே ஆசார்யனாகையாலே- அவன் ப்ரஸாத கார்யமாந ப்ரபத்தியை அவனுக்கு ப்ரஸாதநம் என்னுமிடத்திலே ஆத்மாஸ்ரயமும்‌, அந்யோந்யாஸ்ரயமும்‌, அநவஸ்தையும்‌ வரும்‌. எங்கனே என்னில்‌ ஸாத்‌யோபாயம்‌ தன்னை யுண்டாக்குகிற ஸித்‌தோபாயத்தை வஸீகரிக்கும் போது தானுண்டாகையாலே ஆத்மாஸ்ரயம்‌. ஸாத்‌யோபாயம்‌ வஸீகரணத்தை அபேஷிக்கையாலும்‌ வஸீகரணம்‌ ஸாத்‌யோபாயத்தை அபேஷிக்கையாலும்‌ அந்யோந்யாஸ்ரயம்‌ ஸாத்‌யோபாயமுண்டாயே யிதுக்கு வஸீமகரணத்வம் உண்டாக வேணும்‌- ஸாத்‌யோபாய ஜநகத்வம்‌ ஸித்‌தோபாயத்துக்கு உணடாயே ஸாத்‌யோபாயம்‌ ஸித்‌திக்க வேணுமென்று ஸங்க்ரஹம் – இப்போது ஸாத்‌யோபாயமுண்டாகை அவனருளாலே. அந்த வருள்‌ அதுக்கு முந்தின அருளாலே என்று அநவஸ்தையாம்‌. பிஜாங்குர நியாயத்தாலே அநவஸ்தை தோஷாய அன்றென்னில்‌ மேல்‌ வஸீகரண பரம்பரைக்கு ஸாத்‌யோபாய ப்‌ரதாந பரம்‌பரையே பலமாய்‌ அநிர்மோக்ஷம்‌ ப்ரஸங்கிக்கும்‌.

ப்ரதம ப்ரபத்திக்கு ஷாமணம்‌ பண்ணுகிறவர்களுக்கு புந ப்ரபதநம்‌ வேண்டா வென்றது ஸ்வ பஷமோழிய பரபஷமானபடி எங்ஙனே? தான்‌ ஸ்வதந்த்ரனாய்‌ ஈஸ்வரனை வஸீகரித்தால்‌ ஸ்வாதந்த்ர்‌யமாக ஆத்மாபஹாரம்‌ வருமென்று அது வாராமைக்காக அவனோட்டை அவிவாதமே போரும்‌- உனக்குமவனுக்குமுண்டாண ஸ்வாபாவிக ஸம்பந்தத்தை எப்போதும்‌ நினை யென்று சொல்லுகிற. “யோந்யதா ஸந்தம்‌”, யமோ வைவஸ்வதோ ராஜா- “ஆத்ம தாஸ்யம்‌ ஹரே ஸ்வாம்யம்‌* இத்யாதி ப்ரமாணங்களுக்கு விருத்தமான தாதபர்யகதி கல்பநம்‌ ஆசார்யாநுஷ்‌டாந ஸம் ப்ரதாயங்களுக்கு விருத்‌தமாம்‌- “ஸக்ருதேவ ப்ரபந்நாய”, “ஸக்ருதேவ ஹி ஸாஸ்த்ரார்த்த,, “ஸக்ருத்‌ க்ருதோஞ்ஜலி.” இத்யாதி ப்ரமாணாநுகுணமாக ப்ராயஸ்சித்திரியம்‌ ஸாத்ர யத்புந ஸரணம்‌ வ்ரஜேத்‌” ன்கிற விதுக்கு தாத்பர்யம்‌ கொள்ளாதே புந ப்ரபதநமாமென்கையும்‌ ஸிஷ்டாநுஷ்டாந ஸம்ப்‌ரதாய விருத்‌தம்‌- ஆநுகூல்ய ஸங்கல்பாதிகளையும்‌. அங்கம் என்கையும்‌ ஸம்பாவித ஸ்வபாவங்கள் என்கிறத்தை ப்ரபத்த் யுத்தர காலம்‌ அநுவர்த்தியாது ஓழியிலும்‌ பலம்‌ குறைவற்றிருக்கும் என்கையும்‌ அங்க பஞ்சக ஸம்பந்நமான ஆத்ம ஸமர்ப்பணம்‌ பண்ணுகிற தென்று த்வயத்தில்‌ திரண்ட பொருள்‌ என்கையும்‌, ‘இங்ஙன் அல்லாத போது பக்தி ப்ரபத்தி ரூபோபாயங்களை விதிக்கிற ஸாஸ்த்ரங்களொல்லாம்‌ அத்யந்த வ்யாகுலங்களாம்‌ என்கையும்‌- “அஹமஸம்யபராதநாமாலயோகிஞ்சநோதித்வமேவோபாய பூதோ மே பவேதி ப்ரார்த்தநாமதி। ஸரணாகதி ரித்யுக்தா ஸா தேவேஸ்மித்‌ ப்ரயுஜ்யதாம்‌ என்கிற லக்ஷண வாக்ய விருத்‌தம்‌- அவதாரணத்தாலே அவனை யொழிந்த தொன்றுக்கும்‌ உபாயத்வமில்‌லே யென்று கழிக்கையாலே அங்கத்வம்‌ சொல்லுகிற வசநங்களுக்கும்‌ ஸம்பாவித ஸ்வபாவ(த்வ)த்திலே தாத்பர்யமாககக் கடவது-ஸகலாத்மாக்களுக்கும்‌ அநந்ய ஸரணத்வ ப்ரதிபாதகமான நமஸ்ஸுதானே ‘உபாஸநாதிகள்‌ அநந்ய ஸரணத்வத்துக்கு விருத்தங்கள் என்கைக்கும்‌ ப்ரமாண மாயிருக்க, ப்ரமாணமில்லை யென்றும்‌ அத்தை ஸ்துதி யென்றும்‌ அதிவாத மென்றும்‌, அவற்றுக்கு ஸ்வரூப விரோதம்‌ சொல்ல வொண்ணாது என்றும்‌ “த்‌வ்யக்ஷரஸ்து பவேத்‌ மருத்யு; தீர்யக்ஷரம்‌ ப்ரஹ்மணா பதம்‌ | மமேதி த்வ்யக்ஷரோ ம்ருத்யு ந மமேதி ச ஸாஸ்வதம்‌ என்கிறபடியே அநந்யார்ஹ ஸேஷத்வ அநந்ய ஸரணத்வ அநந்ய போக்‌யத்வ ஸ்வரூப நாஸகத்வமுண்‌டாயிருக்க அவற்றுக்கு ஸ்வரூப விரோத ப்ரஸங்கமில்லை யென்றும்‌ ஏகாந்தீ து விநிஸ் சித்ய தேவதா விஷயாந்தரை பக்த்யுபாயம்‌ ஸமம்‌ க்ருஷ்ண ப்ராப்தவ் க்ருஷ்ணைக ஸாதந- என்றும்‌ தேவதாந்தர ஸப்‌தாதி பக்தி க்ருஷ்ணாக்‌ய ஹேதுஷு | ஸாம்ய க்ருத்‌ பரமைகாந்தீ ஹரெவ் ஸ்வாமீதி புத்திமாந் என்றும்‌ வஸீகரண உபாயமென்று பக்திகளை தேவதாந்தர விஷயங்களோடு ஓக்க ஸ்வரூப நாஸகங்களாக ஸாஸ்த்ரம்‌ சொல்லா நிற்க ஒரு படியாலும் ஸ்வரூப விரோதி பிரசங்கமில்லை என்றும் –

அஹங்கார கர்ப்பம் என்று ஆரோபித்தார்கள் என்றும் “அத, பாதக பீதஸ்த்வம்‌” என்கிற இடத்தில்‌ பாதக ஸப்‌தத்தாலே உபாஸநாதிகளை நினைக்கிறதென்கைக்கும்‌ தர்ம புத்ரனுக்கும்‌ தர்மாநுஷ்டாநம்‌ ஒழிய வேறு பாதகமில்லாமையே உபபந்ந மாயிருக்க, அநுபபந்நமென்றும்‌ “ஸர்வே பாப்மாநோதோ நிவர்த்தந்தே”, “ஸர்வே பாப்மாநா ப்ரதூயந்தே, “ஸர்வ பாபேப்‌யோ மோக்ஷயிஷ்யாமி என்று ஸ்ருதி ஸ்ம்ருதிகள்‌ புண்யத்தையும்‌ ‘பாப’ஸப்‌தத்‌தாலே சொல்லா நிற்க, அப்படிச் சொல்லவுமில்லை யென்றும்‌- இவற்றுக்கு அநந்ய ஸரணத்வ ஸ்வரூப விரோதித்வம்‌ ஸர்வாத்ம ஸாதரணமாயிருக்க அத்தைச் சிலரிடத்திவே யொதுக்கி, அவர்களதிகாரத்துக்கு விருத்‌தமென்றும்‌ ப்ரமாண விருத்‌தர்த்‌தங்களைச்‌ சொல்லுகை அதி ஸாஹஸம்‌. வலிதா சரிதே-அஸங்கல்பிதமப்யஸ்ய ப்ரேரணம்‌ யத் க்ருதம்‌ மயா | விஷ்ண்வாய தநதீ பஸ்ய தஸ்யைதத்‌ புஜ்யதே பலம்‌. ॥ ததோ ஜாதி ஸ்ம்ருதி ஜந்ம மாநுஷ்யம்‌ ஸோபநம்‌ வபு ॥ வஸ்ய பதிர்மே ஸர்வாஸாம்‌ கிம்புந ; தீபதாயிநாம்‌ – இத்யாதி…
ஸூவ்ரதோ பாக்‌யாநே – *ஸ்ருணு தஸ்ய மஹா ப்ராஜ்ஜே !: நிமித்தம் கத தோ மம । யேந த்வம்‌ ப்‌ராஹ்மணஸ் யாஸ்ய குலே ஜாதா மஹாத்மந.” என்று தொடங்கி இஜ் ஜந்ம ஹேது புறத் திண்ணையிலே வைஷ்ணவன்‌ வந்து இருந்தானென்று, சொல்லிற்று. காருடே ஸ்ரீரங்க, மாஹாத்ம்யே – *பத்ரே த்வயா ஸுஷ்டு க்ருதம்‌ ந கிஞ்சிதிஹ வித்‌யதே । இதோ: த்வாதஸ ,ஜந்மாந்தே த்வாம்‌ கஸ்சித் ஸித்‌த ஆவிஸத்‌ விஷ்ணு பக்தோ நிவாஸார்த்தம்‌ ராத்ர்யாம்‌ து தவ வேஸ்மநி | தத் ஸந்நிதாந ப்ரபவ தவ ஸாது ஸமாகம ஸா ஹி வை ப்‌ரஹ்மவிதுஷீ ஸ்ரீமத்‌ ரங்கமுபாஸ்ரிதா॥ தத்ர தீர்த்தோதகம்‌ ஸ்ரீமத ஸ்வத்தம்‌ நாம ஸம்ஸ்ரிதா | தர்ம ஜ்ஞாதர்ம பரமா யஸ்யாஸ்தே ஸங்கமோபவத்‌–இத்யாதி “நிர்ஹேதுக கடாக்ஷேணே மதீயேந மஹாமதே | ஆசார்ய விஷயீ காராத்‌ ப்ராப்நுவந்தி பராம்‌ கதிம்‌ ம சித பரம சில்லாபே ப்ரபத்திரபி நோபதி | விபர்யயே து நைவாஸ்ய ப்ரதிஷேதாய பாதகம்‌”, *நமனும்‌ முற்கலனும்‌ பேச நரகில்‌ நின்றார்கள் கேட்க நரகமே சுவர்க்கமாகும்‌ நாமங்களுடைய நம்பி-அவனதூர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்தனிய மாந்தர் கவலயுட்படுகின்‌றார் என்று அதனுக்கே கவல்கின்றேனே”(அருளினன்‌).! 1.1) நிர்ஹேதுகமாக அருளிக்‌கொண்டு நிற்கக் கண்ட வித்தணை- எனக்கு அருளினன்‌ என்னாதொழிந்தது – பகவத்‌ விஷயீகாரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்திருக்கையாலே -அருளினன் -இத்தலை அர்த்திக்க அன்றிக்கே முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே அருளிக் கொண்டு நிற்கக் கண்ட வித்தனை என்றும் -“தாது. ப்ரஸாதாத்‌ மஹிமாருமீலம்‌” எண்கிற. படியே நிரஹேதுகமாக அருளிக்கொண்டு நிற்கக்கண்ட வித்தனை என்றும்‌, (உடையானிடை]) (1-2-1) அவனுடையவனாய்‌ உங்கள்‌ ஸத்தையை நோக்கிக் கொண்டு போரா நிற்க,, நீங்களும்‌, ‘நான்‌, என்னது! என்று அகலப் பாராதே உங்களை அவன்‌ பக்கலிலே ஸமர்ப்‌பிக்கப் பாருங்கோள்‌-அவன் உடையவனான பின்பு அவனோடு அவிவாதமே உங்களூக்கு ‘வேண்டுவது’ என்றும்‌, “தேந சேத விவாதஸ்தே – உடையவனா யிருக்கிறவனோடே உனக்கு அவிவாதம்‌ உண்டாகில்‌ இத்தால்‌ பேறு என்‌ என்பாயோ? “மா கங்காம்‌ மா குரூந்‌ கம. – ஒரு தீர்த்தம்‌ தேடிப் போதல்‌ புண்ய ஷேத்ரம்‌ தேடிப்‌ போதல்‌ செய்ய வேண்டா- அஹங்கார மமகாரங்கள்‌ கிடக்க ப்ராயஸ்சித்தம்‌ பண்ணுகை யாவது -நிஷித்‌த த்ரவ்யத்தை உள்ளே வைத்து மெழுகூட்டினவோபாதியிறே உடையவனுக்கும்‌ உடைமைக்கும்‌. தக்கபடியிறே ப்ராயஸ்சித்தமும்‌- உடையவன்‌ ஸர்வேஸ்வரன்‌., த்‌ரவ்யங்களில்‌ ப்ரதாந த்‌ரவ்யமான ஆத்ம த்‌ரவ்யத்தையிறே அபஹரித்தது. அபஹரித்த த்ரவ்யத்தைப்‌ பொகட்டு ப்ராயஸ்சித்தம்‌ பண்ண வேணுமே. பொகடுகிற த்‌ரவ்யம்‌ தானாகையாலே ப்ராயஸ்சித்தம்‌ பண்ணுகைக்கு வேறு அதிகாரமுமில்லையே- ஆகையால்‌ நீங்களும்‌ உடையவன் பக்கலிலே விடு செய்மினே-வீடு – ஸமர்ப்பிக்கை– அதாகிறது – இசைகை’ என்றும்‌ ‘(வெறிதே அருள்‌ செய்வர்‌) நிர்ஹேதுகமாக கிருபை பண்ணுவர்‌-ஆருக்கென்னில்

(செய்வார்கட்கு) “யமேவைஷ வ்ருணுதே” என்று தாம்‌ விஷயீகரிக்க நினைத்தார்க்கு-தாந்தாம்‌ ஒன்று செய்வார்க்‌கென்னில, ‘வெறிதே’ என்னக் கூடாதிறே- ஆனாலுமொரு ஹேது வேண்டாவோ அருளுக்கென்னில்‌- உகப்பாயிற்று ஹேது- *ப்ரியதம ஏவ ஹி வரணீயோ பவதி” என்னக் கடவதிறே- ருசி யுண்டானாலும்‌ இவன் சேதநனான வாசிக்கு சைதந்ய ப்ரயுக்தமான ஸ்வபா வமாகக்‌ கொள்ளுமித்தனே யல்லது பேற்றுக்கு ஸாதநமாகச்‌ சொல்ல ஓண்ணாதிறே என்றும்‌, ‘ ‘மதி-அநுமதி! என்றாக்கி அநுமதி மாத்ரத்தாலே’ என்பர்‌ பட்டர்‌. அதாவது ‘அவன் புகுகிற விடத்தில் விலக்கிற்றிலன்‌ என்கை’ என்றும்‌, (வைத்தேன்‌. மதியாலே எனதுள்ளத்தகத்தே) – அநுமதியாலே என் நெஞ்சினுள்ளே வைத்தேன்‌-ஓர்‌ அநுமதி மாத்ரத்துக்கு இத்தனை பலமுண்டாவதே- (எய்த்தே ஒழிவேனல்லேன் ) – இனிப்‌ பிறந்து கலேஸிக்கக் கடவேனல்லேன்‌” என்றும்‌, முதற்பாட்டிஸ்‌, யாத்‌ருச்சிகமாகக்‌ திருமலையைச்‌ சொல்லுங் காட்டில் நிரபேஷனான தான் பிராட்டியோடே கூட வந்து என்னுள்ளே புகுந்தருளின னென்கிறார்‌(திருமாவிருஞ்சோலைமலை இத்யாதி) முன்பு அநாதி காலம்‌ ஈஸ்வரனுக்குத்தம்‌ பக்கல்‌ பேரிட்டுக்‌ கொள்ளலாவ தின்றிக்கே யிருக்க இப்போது அவனுக்குப்‌ பேரிட்டுக் கொள்ளுகைக் கடியானது இன்னதென்கிறார்‌. ஓரோ தேசங்களில்‌ மலைகளைச் சொல்லா நின்றால்‌ ஓரோ விஸேஷங்களை யிட்டுச்‌ சொல்லக்‌ கடவதாயிருக்குமிறே- அப்படியே திருமாலிருஞ்சோலைமலை என்றேன்‌. (என்ன) மநஸ் ஸஹகாரமுமில்‌லை கிடீர்‌ – உக்தி மாத்ரமே என்‌ பக்கலுள்ளது- இவன்‌ ஸேஷ பூதனாயிருந்‌தானாகில்‌, உபாய பாவம்‌ நம் பக்கலிலே யாயிருந்ததாகில்‌ இவனுடைய பேறு நம்‌ பேறாயிருந்ததாகில்‌, சேதந வாசிக்கு உக்தி மாத்ர முண்டாய்த்தாகில்‌, இதுக்கவ்வருகு, கொண்டு கார்யமென்‌?’ என்றிருக்குமவனிறே-இது தான்‌. ஒரு மலையிறே -அவனுக்கு உக்தியை இல்லை என்ன வொண்ணாதே. இதுக்கடி ஆராயுமவனல்லனே- ராவணன்‌ தம்பிக்கு. மித்ர பாவமே யமையும்‌ என்னுமவன் இதுக்கு, அவ்வருகொன்று வேணுமென்றிரானிறே-மலைகளினுடைய சாமான்யம் கிடக்க இவ்விசேஷத்தைச் சொல்லிற்று இதிலுண்டான ஆதராதிஸமன்றோ என்‌றிரா நின்றானாய்த்து அவன் – ஆக. இவர்க்கொன்றில்லை என்னவுமாய்‌, அவனுக்கு இது ஒன்றுண்டு என்னவுமாம்படி யிருக்கறதிறே இது தானே(திருமால்‌) அஹ்ருதயமாகச்‌ சொன்னது தன்னை ஸஹ்ருதயமாக்கிக் கொடுப்பாருமருகே யுண்டு என்கிறார்‌. (வந்து) ‘அவன்‌ வருவதே என்றிவர்‌ விஸ்மயப்படா நிற்க, ‘பிபாஸை வர்த்தித்தவன்‌ தண்ணீரிருந்த விடத்தே வருமத்தனே யன்றோ’ என்றாயத்து அவன் வார்த்தை-க்ருபணராயிருப்பார்‌ ஸ்லாக்யரிருந்த விடத்தே வருமித்தனை யன்றோ என்றிரா நின்றான்‌-எல்லார்க்கு அதிகம்யனானவனுக்கு நான்‌ அபிகம்யனானேன் *ஸோப்‌ய கச்சத்‌ ஸபரீம்‌* என்னுமா போலே (என் நெஞ்சம்‌) அந்த உக்தி ஸஹ்ருதமான என் நெஞ்சிலே (நிறையப்‌ புகுந்தான்‌) விஷயாந்தரங்களுக்கு அவகாஸ மில்லாதபடி புகுந்தான்‌- அத்ரிபகவானாஸ்ரமத்திலே ‘நான்‌ ராமன் , இவள்‌ மைதிலி, இவன்‌ லக்ஷ்மணன்‌” என்று நமஸ்கரித்து நின்றாப் போலே, அக் காட்டில்‌ பாழடையத் தீரும்படி புக்காப் போலே என் நெஞ்சில்‌ பாழ்‌ தீரப் புகுந்தான்‌” என்றும்‌ (இன்றென்னைப்‌. பொருளாக்கி) அஸத் கல்பனான என்னை இன்று ஒரு வஸ்துவாம்படி பண்ணி ‘பொருளல்லாத வென்னை’ என்றாரிறே. (தன்னை) ஸத்துக்களுக்கு(ம்‌) அஸத்துக்களுக்கும்‌ – என்று விகித புஸ்தக பாடம்‌) ஸப்ருஹணீயனான தன்னை. (என்னுள்‌ வைத்தான்‌) தன்னைப் பிறர்க்கு அவகாஸ மில்லாதபடி முற்றூட்டாக என்னுள்ளே கொடு வந்து வைத்தான் – (அன்று) அவன்‌ விஸேஷ கடாக்ஷம்‌ பெறுவதற்கு முன்புள்ள நாளை வெல்லாவற்றையும்‌ சொல்லுகிறார்‌. இன்றென்கிறது மயர்வற மதி நலம்‌ அருளப் பெற்றவதுக்குப்‌ பின்புண்டான காலத்தை (என்னைப் புறம்‌ போகப் புணர்த்ததென்‌ செய்வான்‌?) பரதந்த்ரனான என்னைப்‌ புறம்பு போகப்‌ பண்ணிற்று என் செய்கைக்காக? பாஹ்யனாகப் பண்ணுகை யாகிறது- உபேஷிக்கை… இழந்த நாளிழந்தது மவனாலே பெற்ற வின்று பெற்றதுமவனாலே ‘ என்றிருக்கிறார்‌. பரதந்த்ர வஸ்து செல்ல நிற்க வற்றோ, வர நிற்க வற்றோ. (குன்றித்யாதி.,) இப்படி-மதிப்பனானவன் மலைகளைச்‌ சேர வைத்தாப் போலே விளங்கா நின்றுளள மாடங்கள்‌ சூழ்ந்த திருப்பேரான்‌., (ஒன்று எனக்கு அருள் செய்ய) முன்பு கை விட்டதுக்கு ஹேது சொல்வவுமாம்‌, இன்று என்னை விஷயீகரித்ததுக்கு ஹேது சொல்லவுமாம்‌. (உணரத்தலுற்றேனே) இதுக்கு ஒரு மறு மாற்றம்‌ அருளிச் செய்ய வேணு மென்று திரு வுள்ளத்திலே படும்படி விண்ணப்பம்‌ செய்ய வேண்டி யிரா நின்றேன்‌. ‘இது நாம்‌ சொல்ல வேணுமோ? நீரே அறியிரோ’ என்றான் ‘அடியேன் அறியேன்‌, ஸர்வஜ்ஞரான தேவர்‌ அருளிச்‌ செய்யவேணும்‌’ என்றார்‌. ‘ஆனால்‌ நாம்‌ உம்முடைய நெஞ்சிலே புக்கிருககிற இடத்தில்‌ ஸம்வதித்திருந்தீர் அத்தாலே காணும்‌’ என்றான் – ‘ஓம்‌, அது தானுண்டோ யான் ஓட்டி என்னுள் இருத்துவம்‌ ‘ என்றார்‌. ‘அதில்லே யாகிலும்‌ புகுந்த பின்பு, நம்மை ஆதரித்தீரே’ என்றான்‌. ‘மருவித் தொழும்‌ மனமே தந்தாய்‌ என்று அதுவும்‌ தேவர்‌ செய்த வித்தனை’ என்ரார்‌. ‘ஓங் காணும்‌, அதில்லை யாகிலும்‌ நம்மோடு ஓக்க விஷயாந்தரங்களையும்‌ விரும்பாதே யிருந்தீரே என்றான் – “என்னைத்‌ தீமனங்கெடுத்தாய்‌* என்று அதுவும்‌ தேவரே யன்றோ ‘ என்றார்‌. ‘இவை யொன்றுமில்லை யாகிலும்‌ நாம்‌ தந்த மதிநலத்தை வளர்த்துக் கொண்டு போந்தீரே’ என்றான்‌. “காதல் கடல்‌ புரைய விளைவித்த காரமர்‌ மேனி என்று அதுவும்‌ தேவரீரே யன்றோ’ என்றான் – இப்படியிவர்‌ முடியத்‌ துடர்ந்தவாறே பெருங்கடல்‌ மண்டினாரைப் போலே. போக்கற்றான் – ‘இதுக்கு ஈஸ்வரன்‌ சொன்ந உத்தரமென் என்று ஜீயர்‌ பட்டரைக் கேட்க “இவர்‌ தலையிலே ஒரு பழியை யேறிட்டு நெடுநாள் இழந்த நாம்‌ சொல்வதன்‌” என்று லஜ்ஜாவிஷ்டனாய்க் காலாலே தரையைக் கீறி நிற்கும் அத்தனை போக்கி வேறு உத்தரம் உண்டோ -என்று அருளிச் செய்தார் -அதாவது- ‘முன்பு ருசி யில்லாமையாலே’ என்ன மாட்டான் – “இப்போது ஸாதநாநுஷ்டாநம்‌ பண்ணுகையாலே’ என்ன மாட்டான் – ஆனால்‌ பின்னை ஈஸ்வரனுக்கு வைஷம்ய நைர்‌க்ருண்யாதிகள் வருதல்‌, ஸர்வ முக்தி ப்‌ரஸங்கம்‌ வருதல் செய்யாதோ வென்னில்‌ அது செய்யாது- அடியிலே அத்‌வேஷமும் இச்சையும்‌ பிறக்கைக்குத்‌ தான்‌ கிருஷி பண்ணி -அது-பக்வமாமளவும்‌ பார்த்திருக்கையாலே அவன் கேட்டதுக்கு ஒரு மறு மாற்றம்‌ சொல்லக் காணாமையாலே ‘அறிந்தோம்‌. இதுக்கு ஹேது – இ௩்ஙனே யாக வேணும்‌’ எண்று பார்த்தார்‌. ‘தன்னுடைய ஸ்பர்ஸம்‌ ப்ரதி கூலமாகை தவிர்ந்து விலக்காத ஸமயம்‌ பார்த்திருந்தானாதல்‌ தன்னை யொழிந்த வற்றில்‌ ஸாதந புத்‌தி தவிருமளவும்‌ பார்த்திருந்தானாதவாக வடுக்குமென்று பார்த்தார்‌-ஆனாலிது தன்னை அவன் உத்தரமாக அருளிச் செய்யா தொழிவான் என்னென்னில்‌, ‘சைதந்ய ப்ரயுக்தமாய்‌ வருகிற அத்‌வேஷத்தை ஸாதநமென்ன மாட்டானே-உபாய பாவம்‌ தன் தலையிலே யாய்த்தே, நெடு நாள்‌ இவர் தலையிலே பழி யிட்டிழந்திருந்த நாம்‌ எத்தைச்‌ சொல்லுவது! என்று பேசாதே இருந்தான் – ‘*ஹ்ரீரேஷாஹி மமாதுலா * என்று பிற்பாட்டுக்கு வஜ்ஜித்து நிற்குமவனிறே .-இவர்தாமெடுத்து வைத்து வார்த்தை சொல்லும்‌படியாய்த்து அவன் நிலை சைதந்ய ப்ரயுக்தமாண ருசி தான் ஸ்வரூபாதிரேகியன்றிறே’ என்றும்‌, சார்வே தவ நெறிக்கு – ஒன்பதாம்‌. பாட்டிலே. “ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு” என்கிறபடியே அநேக கால ஸாத்‌யமான பக்தியாலே லபிக்கப்படுமவனை கேவலம்‌ அவன் ப்ரஸாதத்தாலே காணப் பெற்றேன் – என்கிறார்‌. “கண்டேன்‌ கமல மலர்ப்பாதம்‌ காண்டலுமே விண்டே வொழிந்த” என்றும்‌, “(அவன தருளால்‌) அவனுடைய ப்ரஸாதத்தாலே-ப்ராப்யமவனே என்கிற நிபந்தநத்தோபாதி ப்ராபகமுமவன் ப்ரஸாதமேயா யிருக்கிறபடி.(உறல்‌ பொருட்டு) ப்ராபிக்கையின்‌ பொருட்டு, ப்ராப்ய ப்ராபகுமவனே யாகில் நீர் இதில் அந்வயித்த அம்சம் ஏதென்ன -என் உணர்வினுள்ளே இருத்தினேன் -அவனை என்னுடைய ஞானத்துக்கு விஷயமாக்கினேன் -“வைத்தேன்‌. மதியால்‌” என்றது தானிறே. இச்சித்தேனென்கை – இச்சை தான்‌ ஸ்வாதீநுமோ வென்னில்‌, (அதுவும்‌ அவனதின்னருளே) அந்த இச்சை தான் பிறந்தது அவன் ப்ரஸாதத்தாலே ‘ என்றும்‌ ஈட்டில் -பிள்ளை யருளிச் செய்தருளினார்‌.ஆறு எனக்கு நின்‌ பாதமே சரணாகத்‌ தந்தொழிந்தாய்‌* என்றும்‌, “களைவாய்‌ துன்பம்‌ களையாதொழிவாய்‌ களை கண்‌ மற்றிலேன் ” என்றும்‌., நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண் நமக்கென்று நாடொறுமேக சிந்தையனாய்‌ என்றும்‌, அடிக்கீழமர்‌ந்து புகுந்தேனே என்றும்‌, கழல் களவையே சரணாகக்‌ கொண்ட குருகூர்ச்‌ சடகோபன் அருளிச் செய்தார்

தஸ்ய ச வஸீகரணாம்‌ தச்சரணாகதிரேவ* என்று ஸ்ரீ பாஷ்யகாரர்‌ அருளிச் செய்தது-அவ்விடத்தில்‌ ஸ்ருத ப்‌ரகாசிகையில்
“கதம்‌ ஸர்வ ஸ்மாத் பரஸ்ய அநீஸ்வரேண ஸம்ஸாரிணா । வஸீ கர்த்தும்‌ ஸக்யத்வம்‌ ஸக்யஸ்சே(ஞ்சே)த்‌ தத் ப்ரகாரோஃபி க்வசித்‌ ஸ்ரூயேத | ந ச ஸ்ரூயதே। *யச்சேத்‌ வாங்மநஸீ ப்ராஜ்ஞ இத்யாதவ் தஸ்ய வஸீகார்யத்வ ஸ்ரவணம்‌ தர்ஸ யிஷ்யதே | இத்யுக்த வஸீ கரண ப்ரகார ப்ரதிபாதக“தத்‌,யச்‌சேத்‌ ஸாந்த ஆத்மநி ” இதி ஸ்ருதி வ்யாக்யாநே *தத்‌,யச்சேத்‌ ஸாந்த ஆத்மநீதி ஸாந்தே ஸ்வத ஊர்மி ஷட்க ப்ரதிபடே மஹத ஆத்மநோ ஜீவஸ்ய நியமம்‌ நாம தத் சேஷதா ப்ரதிபத்தி। ஸைவ தஸ்யாபி வஸீகரணம்‌ பவதி’ என்று பட்டராலே அதிகாரி விஸேஷணமாண ஸேஷத்வஜ்ஞாந கார்யமாக வ்யாக்‌யாதமாயத்திறே. “ரசநாநுபபத்தே: இத்யாத்‌,யதிகரணத்திலே வ்யதிரேகோ அநவஸ்திதே. என்கிற ஸூத்ர பாஷ்யத்திலே ‘ஸ்வ ஸாஸநாதி வ்ருத்‌தி வ்யவஸாய நிவ்ருத்தி மாத்ரேணே அநாத்‌ யநந்த கல்போபசித துர்விஷஹா ரந்தாபராதா நங்கீகாரேண நிரதிஸய ஸுக- ஸம்வ்ருத்‌தயே ஸ்வயமேவ ப்ரயததே | யதோக்தம்‌-தேஷாம்‌ ஸதத யுக்தாநாம்‌ பஜதாம்‌ ப்ரீதி பூர்வகம்‌ | ததாமி புத்‌தி யோகம்‌ தம்‌ யேந மாம்‌ உபயாந்தி தே, “தேஷாமேவாநு கம்பார்த்தம்‌ அஹமஜ்ஞாநஜம்‌ தம। நாஸயாம் யாத்மபபாவ ஸ்த ஜ்ஞாநதீ பேந பாஸ்வதா * இதி’ என்று பகவதஜ்ஞாதிலங்கந புத்தி நிவ்ருத்தி ஸ்தாநத்திவே ப்ரீதி பூர்வக பஜநத்‌தையும்‌ பாஷ்யகாரர்‌ அருளிச் செய்தார்‌. ‘வாக்யாந்வயாத்‌’ இத்யத்ர ச ‘அதோத்ர பரமாத்மைவ அம்ருதத் வோபாயதயா ‘த்ரஷ்டவய.’ இத்யாதி நா உச்யதே’ என்று பகவானே உபாயமென்று பாஷ்யகாரர் முக்தகண்டமாக அருளிச்‌ செய்தார்‌. பர மதஸ் ஸேதூந்மாந இத்யாத்‌ யதிகரணத்தில்‌உபபத்தஸ் சன்கிற ஸூத்ர பாஷ்யத்திலே-‘ப்ராப்யஸ்ய ‘பரம புருஷஸ்ய ஸ்வ ப்ராப்தவ் ஸ்வஸ்யைவ உபாயத்வோப பத்தே

*நாயமாத்மா ப்ரவசநேந லப்‌ய: ந மேதயா ந பஹுநா ஸ்ருதேந யமேவைஷ வ்ருணுதே தேந லப்‌ய தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌” இத்யநந்யோபாயத்வ ஸ்ரவணாத்‌’ என்றும்‌, ஸ்ருத ப்ரகாஸிகையிலே ‘அநந்யோபாயத்வ ஸ்ரவணாத்‌ – ப்ராப்யஸ்யைவ உபாயத்வ ஸ்ரவணாதி த்யர்த்த,. *விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌* இதி அநேந ப்ராபகத்வம்‌ ப்ராப்யத்வம்‌ ச கம்யதே’ என்றும்‌, “பவமத உபபத்தே,* என்கிற விடத்தில்‌ “உபாஸீநாநாம்‌ பரஸ்மா தேவாஸ்மாத்‌ புருஷாத் தத் ப்ராப்தி ரூபம்‌ அபவர்க்காக்யம்‌ பலமிதி ஸம்ப்ரதி ப்‌ரூதே’ என்றும்‌, ‘உபபத்தே ஸ்வ ஹி ஸர்வஜ்ஞ ஸர்வஸக்தி மஹோதார யாக தாந ஹோமாதிபிர் உபாஸநேந ச ஆராதித ஐஹிகாமுஷ்மிக போக ஜாதம்‌ ஸ்வ ஸ்வரூ பாவாப்தி ரூபமபவர்க்கம்‌ ச தாதுமீஷ்டே நஹ்ய சேதநம்‌ கர்ம க்ஷணத்‌வம்ஸி காலாந்தர பாவி பல ஸாதநம்‌ பவிதுமர்ஹதி’ என்றும்‌-ஸ்ருதத்வாச்ச* என்கிற ஸூத்ர பாஷ்யத்திலே ‘*ஸ. வா ஏஷ மஹாநஜ ஆத்மா அந்நாதோ வஸுதாந, ஷி ஹ்யேவ ஆநந்தயாதி * இதி பேகோபவர்க்க ரூபம்‌ பலம்‌ அயமேவ ததாதீதி ஹி ஸ்ரூயதே‘ என்றும்‌, ‘ஸித்‌த தர்மமே மோக்ஷ ஸாதநம்‌ ஸாத்‌ய தர்மம்‌ தத் ஸமாராதநம்‌’ என்றும்‌ ப்ரகாஸிப்பிக்கப் பட்டது. அருளாளப் பெருமாளெம்பெருமானார்‌ – ப்ரமேய ஸாரத்திலே – கருமத்தால்‌ ஞாநத்தால் காணும்‌ வகை யுண்டே* என்று தொடங்கி நாலு பாட்டாலே நமஸ் ஸப்‌தார்த்தமான அநந்ய ஸரணத்வத்தை அருளிச் செய்கிறார்‌. (நமஸ் ஸுப்த்தார்த்தம்‌ – அநந்ய ஸரணத்வமிறே). “நாலாம் பாட்டு – ஸேஷி யானவன் திருவடிகளை – அத் திருவடிகள் தானே தருகை யொழிய உபாயாந்தரங்களால் காண விரகுண்டோ? என்கிறார்‌’ என்றும்‌, “அஞ்சாம்‌ பாட்டு ஸித்‌தோபாயத்தின்‌ படியைக் கண்டாவ்‌ உபாயாந்தரங்களை ஸவாஸநமாக விட்டு அது தன்னிலும் தன்னுடைய ஸ்வீகாரத்தில்‌ உபாய புத்‌தி யற்‌றுத் தன்‌ வெறுமையை அநுஸந்தித்திருக்குமது – ஸர்வேஸ்வரனுடைய க்ருபாபலமென்கிறார்‌-என்றும்‌.’ஏழாம்‌ பாட்டு- “குறையேதுமில்லா தார்கு என்றுமிறை யேதுமில்வாத யாம்‌’ என்று அருளிச் செய்த ப்ரஸங்கத்திவே- இப்படி யிரண்டு தலைக்கும்‌ உள்ள இல்லாமையை அநுஸந்தித்து ஸேஷியான வனை ஐயித்திருப்‌பாரில்லை. அதொருவருக்கு ஸித்‌திக்குமதோ ? என்கிறார்‌” என்றும்‌ தத்‌ வ்யாக்‌யாநத்திலே ஜீயர்‌ அருளிச் செய்தருளினார் –

தன்னால் வரும்‌ நன்மை விலைப்பால்‌ போலே அவனால்‌ வரும்‌ நன்மை முலைப்பால் போலே- என்று ஸ்வகத ஸ்வீகாரத்தினுடைய ஹேயதையையும்‌, பரகத ஸ்வீகாரத்தினுடைய ஸ்லாக்யதையையும்‌ பரம ரஹஸ்யத்திலே. ராத்ரி பர்த்தாவோடு ஸம்ஸ்லேஷித்து விடிந்தவாறே கூலிதர வேணுமென்னுமா போலே பக்தியை உபாயமாக்கிக் கொள்‌ளுகை-உபேய விஷயத்தில்‌ எம்பெருமானாலேயே எம்பெருமானைப்‌. பெறுமித்தனை போக்கி தந்தம்‌ நன்மை கொண்டு பெற நினையார்‌ ஸ்வரூப ஜ்ஞநாமுடையார்‌’ என்றும்‌ திருக் குருகைப்‌ பிரான் பிள்ளான்‌ அருளிச் செய்தார்‌- பட்டர்‌ – ரஹஸ்ய த்ரய விவரணமான அஷ்டஸ்லோகியில்‌ கர்த்தும்‌ த்யக்துமபி ப்ரபத்துமநலம்‌* என்று ப்ரபத்தி பண்‌ணுகைக்கும்‌ யோக்யதை யில்லாமையை அருளிச்‌ செய்தார்‌ (எம்‌பெருமான் படியை அனுசந்தித்து ) கத்ய வியாக்யானத்திலே -அநந்தரம் கீழ் சரணம் புக்க அதுக்கு ஷாமணம்‌ பண்ணுகிறார்‌-ஷாமணம்‌ பண்ணுகிறது ஆருடைய ஹ்ருதயத்தாலே யென்னில்‌- ஸ்வ ஹ்ருதயத்‌தாலே-அதென்னென்னில்‌, அநாதி காலம்‌ அபராதத்தைப்‌ பண்ணிக் கூடு பூரித்தவன்‌ இன்றாக. ஆபி முக்யம்‌ பண்ணினானே யாகிலும்‌, *ரிபூணமபி வத்ஸல :, “யதி வா ராவண ஸ்வயம்‌” என்றிருக்குமீஸ்வரனுடைய படியைப்‌: பார்த்தால்‌ கைக் கொள்ளுகைக்கு ஒரு குறையுமில்லை-பதி வ்ரதையானவள் நெடுநாள்‌ வ்யபிசரித்து பின்பு பர்த்தா. வானவன் பழியா(ள )னென்கிற விதுவே ஆலம்பநமாக வந்தென்ணை ரக்ஷிக்க வேணுமென்று முன்னே நின்றால்‌ வருகை தானே அபராதம்‌- அதுக்கு மேலே என்னை ரக்ஷிக்க வேணுமென்கை யாவது அபராதத்துக்கு மேல் எல்லையாய் ஸ்த்ரீத்வ ஹாதியுமாயிருக்குமிறே-அப்படியே இவனும்‌ அநந்யார்ஹ ஸேஷ பூதனுமாயிருந்து வைத்து கனக்க அபராதத்தைப் பண்ணிப் போந்து இன்று வந்து ஸரணம்‌ புகுருகையாவது அபராததுக்கு மேல் எல்லையாய் சேஷத்வ ஹாநியுமா யிருக்கக் கடவதிறே- ஆனால்‌ ஸரணம் புகுருகை அபராதமானால்‌ அது பண்ணுவான்‌ என் என்னில்‌,, *த்வமேவ ஸரணம்‌ கத:” என்று புறம்பு புகலில்லாமையாலே- ஸரணம் புகவும்‌ வேணும்‌- பூர்வ வ்ருத்தத்தைப் பாரா பண்ணின இதுவும்‌ அபராதமென்று பய ஹேதுவாகையாலே க்ஷாமணம்‌ பண்ணவும்‌ வேணும்‌ என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார்‌. “உபாயத்தில்‌ அஹங்காரமாவது, – ஸ்வகத ஸ்வீகாரத்தில்‌ உபாய புத்தியை த்யஜித்து பரகத ஸ்வீகாரத்துக்கு விஷய பூதனாகை என்று இவர் தாமே (வார்த்தா மாலையில்‌) அருளிச் செய்தார்‌.
“ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்தாசார்யனாலே மோக்ஷமோ? கிருபா மாத்ர ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷமோ?’ என்றிங்ஙனே ப்ரஸங்கமாக, முதலியாண்டான்‌ – ‘ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசாரயனாலே ‘ என்ன ஆழ்வான்‌ ‘க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யனாலே ‘ என்ன, ஆண்டான்‌. – “குற்றமின்‌றிக் குணம்‌ பெருக்கிக்‌ குருக்களுக்கு அநுகூவராய்‌ என்று பெரியாழ்வார்‌ அருளிச் செய்கையாலே ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாலே யாக வேணும்‌-என்ன அவ்வளவிலே ஆழ்வான்‌ ‘அங்கனன்று, “பயனன்றாகிலும்‌ பாங்கல்ல ராகிலும்‌ செயல்‌ நன்றாகத்‌ திருத்திப் பணி கொள்வான்‌-குயில் நின்றார்‌ பொழில் சூழ்‌ குருகூர்‌ நம்பி? என்று ஸ்ரீமதுரகவி யாழ்வார்‌ அருளிச் செய்கையாலே அவருடைய அடிப் பாட்டிலே யிருக்கிற நமக்கெல்லாருக்கும்‌ ஸ்வாநுவ்ருத்தி கூடாமையாலே கிருபா மாத்ரத்திலே மோக்ஷம்‌ என்று அருளிச் செய்தார்‌- அன்று ஆண்டானும்‌. ‘அப்படியாக வேணும்‌’ என்று போர ப்ரீதராய்‌ அருளினார்‌ என்று வார்த்தா மாலாதிகளிலே. ப்ரஸித்‌தமிறே-

இயமிஹ மதிரஸ் மதுஜ் ஜீவிநீ வரத தவ கலு ப்ரஸாதா த்ருதே ஸரணமிதி வசோபி மே நோதியாத்‌ என்றும்‌, “ஏவம்‌ ஸதா ஸகல ஜந்மஸு ஸாபராதம்‌ ஷாம் யஸ்யஹோ ததபி ஸந்தி விராம மாத்ராத்‌” என்றும்‌ ஆழ்வான்‌ அருளிச்‌ செய்தாரிறே-சரம ஸ்லோக வ்யாக்‌யாந ப்ரவேஸத்திலே “இதில் வர்த்தம்‌ கேட்கைக்காக விறே எம்பெருமானார்‌ பதினெட்டு பர்யாயம்‌ திருக்கோட்டியூர் நம்பி பக்கலில்‌ எழுந்தருளிற்று-நம்பி தாமும்‌ இதிலர்த்தத்தினுடைய கெளரவத்தையும்‌ இதுக்கு அதிகாரிகளில்லாமையையும்‌ பார்த்திறே இவருடைய ஆஸ்திக்யாதர பரீக்ஷார்த்தமாகவும்‌ பலகால் நடந்து துவளப் பண்ணி சூளரவு கொண்டு மாஸோபவாஸம்‌ கொண்டு அருமைப் படுத்தி யருளிச் செய்தருளிற்று-நிஷ்க்ருஷ்ட தத்வ நிஷ்டனாய்‌ பரமாத்மநி ரக்தனாய்‌ அபரமாத்மதி வைராக்‌யமுடையவனாய்‌, ப்ரமாண பரதந்த்ரனாய்‌ பகவத்‌ வைபவம்‌ ஸ்ருதமானால்‌.அது. உபபத்ந மென்னும் படியான விஸ்ரம்ப பாஹுள்யமுடையனாய்‌ ஆஸ்திகாக்ரேஸரனா யிருப்பானொருவ னுண்டாகில்‌, அவன் இந்த ஸ்லோகார்த்த ஸ்ரவணாநுஷ்டாநத்துக்கு அதிகாரி யாகையாலே அதிகாரி துர்லபத்வத்தாலும்‌, அர்த்த கெளரவத்தாலு மித்தை வெளியிடாதே மறைத்துக் கொண்டு. போந்தார்கள்‌ எம்பெருமானார்க்கு முன்புள்ளார்‌. ஸம்ஸாரிகள்‌ துர்கதி கண்டு பொறுக்க மாட்டாதபடி க்ருபை புரண்டிருக்கையாலே அர்த்தத்தின்‌ சீர்மை யாராதே அநர்த்தத்தையே பார்த்து வெளியிட்டருளினார்‌ எம்பெருமானார்‌-என்று பெரிய ஜீயர்‌ அருளிச் செய்தார்‌.

திருவிருத்தத்திலே – ஈனச்சொல்‌ என்கிற பாட்டிண்‌ வ்யாக்‌யாநத்திலே “(ஞானப்பிரானை யல்லாலில்லை) அவனை யொழிந்த தானும்‌ பரிக்ரஹிக்கிற உபாயங்களும்‌. அடையக் கழுத்துக் கட்டி யென்கை. ஒருவிசை திருக்கோட்டியூர்‌ நம்பி திருநாளுக்கெழுந்தருளின ஸமயத்திலே இவ்வர்த்தத்தை அருளிச் செய்வதாக ஒரு ஏகாந்த ஸ்தலத்திலே எழுந்தருளி எம்பெருமானாரையும் கூடக்‌ கொண்டு புக்காராய்‌, திருப்பணி செய்வானொருவன் உறங்கிக்‌ குறட்டை விடா நிற்க, அவனைக் கண்டு ‘அநர்த்தப் பட்டோம்‌” எண்று அவ்விசை தவிர்ந்து மற்ற விசை அருளிச் செய்யக் கேட்டருளி எம்பெருமானார்‌ ஆழ்வான் அகத்திலே அமுது செய்து இருக்கிற வளவிலே உச்சி வெய்யிவிலே தண்டையும்‌ கொண்டு வந்து புகுந்து நம்பி. – ‘இவ்வரத்தத்தை ஒருவர்க்கும்‌ சொல்லாதே கொள்‌’ என்று, அருளிச் செய்தார்‌. உணக்குச் சொல்வாதிருக்க மாட்டுகிறிலேன் இறே என்று ஸஹகாரி நைரபேஷ்யத்தை அருளிச்‌ செய்தாரிறே- இனி பல போக்தாவான தன்‌ ஸ்வரூபமும்‌ தான்‌ பரிக்‌ரஹித்த உபாயமுமே யிறே ஸஹகாரி யாயுள்ளது. அத்தைத் தவிர்க்கிறது-( நான் கண்ட) கைப்பறியாகப்‌ பறித்த புண்ய பாபங்கள்‌ கலந்திருக்கையாலே புண்யம்‌. தலை யெடுத்த போதாக வெளிச் செறித்து அல்லாத போது கலங்கிக்‌ கிடக்கிற ஜ்ஞாநத்தைக் கொண்டு பிறரை ப்‌ரமிப்‌பக்கைக்காகச்‌ சொல்லுகிற விப்ரலம்பக வாக்யமன்றியே பகவத் ப்ரஸாத லப்‌தமான ஞாநத்தை யுடையேனாய்‌, அவ்வெளிச்செறிப்புக்கே சொன்ன அர்த்தம்‌ இது தான்‌ பிறர்க்குச் சொல்ல வேணுமென்று சொல்லிற்றுமல்ல- ஹர்ஷத்துக்குப் போக்கு விட்டுச் சொன்ன வார்த்தை என்கிறார்‌” என்று நம்பிள்ளை அருளிச் செய்தார்‌.
முமுஷுப்படியில்‌ த்‌வய ப்ரகரணத்திலே, “உபாயமவனாகையாலும்‌ இவை நேரே உபாயமல்லாமையாலும்‌’என்கிற ஸுூத்ர வ்யாக்‌யாநத்திலே, “அதாவது – பல ஸித்‌தி்க்கு உபாயம்‌ பற்றப்படுகிற ஈஸ்வரனாகையாலும்‌ கரண த்ரயத்தாலுமுண்டான பற்று தல்களாண இவை ஆபாத ப்ரதீதியில்‌ உபாயம் போல் தோற்றிக் கழியுண்டு போமதொழிய ஸாக்ஷாதுபாயம்‌ அல்லாமையாலும்‌’ என்றும்‌ சரம ஸ்லோக வ்யாக்‌யாநத்திலே – வரணத்திலே ஸாதநதா ராஹித்யத்தையும்‌, மூலத்திலே – (ஏகம்‌) இந்த ‘ஏக ஸப்‌தம்‌ ஸ்தாந ப்ரமாணத்தாலே அவதாரணார்த்தத்தைக்‌ காட்டுகிறது’ என்று தொடங்கி – “உபாய பாவத்தில்‌ அந்தர்பவியாது’ என்னுமளவும்‌ மற்றும்‌ இதின் வ்யாக்யாநத்திலே “உய்யக் கொண்டார்‌ என்று தொடங்கி மேலெல்லாம்‌, மூல வ்யாக்‌யாநங்களிரண்டிலும்‌ ஸ்ரீவசந பூஷண தத்‌ வ்யாக்‌யாநங்களிலே, “இது தன்னைப்‌ பார்த்தால்‌! என்று தொடங்கி, – “ப்ராப்தாவும்‌ ப்ராபகனும்‌ ப்ராப்திக்கு. உகப்பானுமவனே” என்னுமளவாக – உபாயாந்தர ஸ்வீகாரங்களினுடைய ஸ்வரூப விரோதித்வ அநு பாயத்வாதிகளையும்‌ “ப்ரதி கூலராகிறார்‌’ என்று தொடங்கி “இங்கு ஸ்வ ப்ரயோஜமென்கிறது ஆஸ்ரயண தோஷ ஜந்யமானத்தை என்னுமளவாக உபாயாந்தர நிஷ்டரும்‌ வரண ரூப ப்ரபத்தியை உபாயம் என்றால் வரும்‌ அவத்‌யத்தையும்‌ அதின்‌ அங்க நைரபேக்ஷயத்தையும்‌ ஆநு கூல்ய ஸங்கல்பாதி களினுடைய ஸம்பாவித ஸ்வபாவத்வத்தையும்‌, ஸஹ வாஸ நிவ்ருத்திக்கு அவிஷயமாகச்‌ சொன்ன ப்ரதிகூல அந்தர் கதமென்னுமிடத்தையும்‌, “இழவுக்கடி கர்மம்‌, பேற்றுக்கடி க்ருபை” என்றும்‌. ‘த்ரிபாத்‌வியூதியிலே ‘ என்று தொடங்கி, ‘நிவர்த்ய ஜ்ஞாநம்‌ பய ஹேது- நிவர்த்தக ஜஞாநம்‌ அபயஹேது’ என்னுமளவாக, மூல வ்யாக்‌யாநங்களிரண்டிலும்‌. நிர்ஹேதுக விஷயீ காரத்தையும்‌ தனி சரமத்திலே ‘(ஏகம்‌) நஞ்சீயர் இதுக்கு அவதாரணத்தைச்‌ சொல்லுகிறதென்று அருளிச் செய்வர்‌-எங்ஙனே யென்னில்‌ த்வமேவோபாய பூதோ மே பவ என்றும்‌, “தமேவ ஸரணம்‌ கச்ச,” என்றும்‌, *மாமேவ யே ப்ரபத்‌யந்தே” என்றும்‌, *தமேவ சாத்‌யம்‌ புருஷம்‌ ப்ரபத்‌யே * என்றும்‌- ஸ்தாந ப்ரமாண ஸித்‌தமாகையாலே– ஆனால்‌ இவ்வவதாரணத்துக்கு வ்யாவர்த்யமாவது ஏதென்றால்‌ கீழே உபாயாந்தரங்களை த்யாஜ்யங்களாகச்‌ சொல்லுகையாலே அவற்றை வ்யாவர்த்திக்கிற தென்ன வொண்ணாது- “மாம்‌” என்று அஸாதாரணாகாரத்தைக்‌ கீழே சொல்லுகையாலே தேவதாந்தரம்‌ வ்யாவர்த்ய மென்ன வொண்ணாது-பின்னையேதாவதென்றால்‌- இனி இங்குள்ளது ஸ்வீகார்யமும்‌, ஸ்வீகாரமும்‌, ஸ்வீகர்த்தாவுமாக வேணுமிறே. அதில்‌ ஸ்வீகார்யன் உப௱யமாய்‌ நின்றால்‌, இனி யுள்ளது ஸ்வீகாரமும்‌ ஸ்வீகர்த்தாவுமிறே. அந்த ஸ்விகர்த்தாவோபாதி ஸ்வீகாரமும்‌ உபாயத்தில் புகாதென்கிறது. ஆவதென் *உபாயோபேயத்வே ததி ஹி தவ தத்வம்‌ நது குணெள” என்கிறபடியே, உபாயத்வம்‌. நித்யமே யாகிலும்‌ இவனுடைய ஸ்விகாராநந்தரமாக வன்றோ உபாயமாகிறது. *யதநந்தரம்‌ யத்‌ பவதி, தத்தஸ்ய காரணம்‌” என்கிறபடியே இந்த ஸ்வீகாராநந்தரமாக வல்வது. ஈஸ்வரனுடைய உபாய பாவம்‌ ஸித்‌தியாமையாலே இது உபாயமாதல்‌ ஸஹகாரி(யா)யாதவாக வேண்டாவோவென்னில்‌, “மாமேகம்‌ ஸரணம்‌ வ்ரஜ* என்று, உபாய ஸ்வீகாரமாகச்‌ சொல்லுகையாலே ஸாஷாதுபாயத்வமில்லை -இனி ஸஹகரிக்கையாவது – உத் பத்தியிலே ஸஹகரித்தல்‌ பல ப்ரதாநத்திலே ஸஹகரித்தலாய்த்து-பக்த்யுபாயம்‌ கர்ம ஜ்ஞாந ஸாத்‌யமாகையாலே உத்பத்தியிலே சேதந ஸாபேக்ஷம்‌, அசேதந மாகையாலே பல ப்ரதாநத்தில் ஈஸ்வர ஸாபேக்ஷம்‌ இவ்வுபாயம்‌ ஸித்‌த வஸ்துவுமாய்‌, ந்ருபாதிக ஸர்‌வ ஸுஹ்ருத்துமா யிருக்கையாலே உத்பத்தி நிரபேக்ஷம்‌- ஸர்வ ஸக்த்வாதி குண விஸிஷ்டமாகையாலே பல ப்ரதாநத்தில்‌ நிரபேஷம்‌-ஆனால்‌ ‘ய(த்ய)த்ஸாங்கம்‌ த(த்த)த் ஸாதநம்‌’ என்கிறபடியே உபாயம்‌ ஸங்கமாயன்றோ இருக்க வேணும்‌. இவ்வுபாயம்‌ ஸித்‌தமா யிருக்கிறபடி யென்‌ என்னில்‌ உபாயமாகிவ்‌ ஸாங்கமாயிருக்கு வேணுமென்கிற நிர்பந்தமில்லை. அவை ஸாத்‌யமுமாய்‌ அத்ய ஸாபேஷமுமா யிருக்கையாலே ஸாங்கமாக வேண்டிற்றித்தனை-இவ் வுபாயம்‌ ஸித்‌தமுமாய்‌ அந்ய நிரபேக்ஷமுமா யிருக்கையாலே நிரங்கமுமாயிருக்கும்‌-ஆனால்‌ உபாயாந்தரங்களுக்கும்‌ உபாயத்வ வ்யபதேஸமும்‌ பண்ணுகிறது – பல ப்ரதங்களான தேவதைகளுக்கு ப்ரஸாதகங்களான முகத்தாலே யன்றோ? அவ்வோபாதி இவ் வுபாயமும்‌ ஈஸ்வர ப்ரஸாதகமானாலோ வென்னில்‌ தேவதைகளில்‌ சேதநருக்கு பூர்வமே பலத்தைக் கொடுப்பதாக நினைவின்றிக்கே யிருக்கச்‌ செய்தே இச் சேதநருடைய க்ரியை யாய்த்து அவர்கள்‌ ப்ரஸாதத்தை ஜநிப்பிக்கிறது- ஈஸ்வர விஷயத்தில்‌ வந்தால் , ஸர்வாத்மாக்களுக்கும்‌ ஸ்வரூபாவிர்பாவத்தை யுண்டாக்குவதாக. பூர்வமேவ சிந்தித்து அவஸர ப்ரதீக்ஷனாய்ப்‌ போருகையாலே அவனுக்கு ப்ரஸாத ஐநகமாகச்‌ செய்ய வேண்டுவதொன்றில்லை- உண்டென்றிருக்கையாகிறது தன்‌ ஸ்வரூப பாரதந்தரயத்தையுமழித்து அவனுடைய ரக்ஷகத்வத்தையும்‌ ஸோபாதிகமாக்குகிறான் இத்தனை ” என்று பிள்ளை லோகாசார்யர்‌ அருளிச்‌ செய்தருளினார்‌.

இதி ஸித்தாந்த.

பூர்வபக்ஷாந்தரம்‌.

ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே இருபத்தைந்தாமதிகாரத்தில்‌. “இப்படி த்‌வயத்தில்‌ த்‌விதீயாந்த பதங்களாலே ப்ரகாஸிதமான ஸித்‌தோபாய விஷயமாகவும்‌, ஆக்யாத பதத்தாலே சொல்லப் பட்ட ஸாத்‌யோபாய விஷயமாகவும்‌ பிறக்கும்‌ வ்யாகுலங்களை ஸமிப்பி(க்க வேணும்‌)க்கிறோம்‌’ என்றும்‌ “ந சூத்‌ரா பகவத்‌ ப,க்தாஃ விப்ரா பாகவதா; ஸ்ம்ருதாப ஸர்வ வர்ணேஷு தே ஸூத்‌ரா: யேஹ்ய பக்தா ஜநார்தநே என்று பகவத்‌ பக்தியாகிற குண விஸேஷ ஸத ஸத்‌ பாவங்களாலே அபக்ருஷ்ட ஜாதீயரை உத்க்ருஷ்ட ஜாதி வாசக ஸப்‌தத்தாலே சொல்லியுமிருந்தது. இதடியாக பகவத பக்தரெல்லாரும்‌ ஏக ஜாதீயர் அன்றோ வென்று சில ம்ருது ப்ரஜ்ஞர்‌ நினைப்பார்கள்‌-‘இங்ஙனே யாகில்‌ பாகவத ப்‌ராஹ்மணன்‌ இன்ன படியே வர்த்திப்பான் பாகவத ஸூத்ரன்‌ இன்னபடியே வர்த்திப்பான் என்று ஆசார நியமங்கள்‌ சொல்லும்‌ ஸர்வ ஸாஸ்த்ரங்களும்‌ விரோதிக்கும்‌. கேவல ப்‌ராஹ்மணனுக்கும்‌ கேவல ஸூத்‌ரனுக்குமுள்ள எல்லை பாகவத ப்‌ராஹ்மணனுக்கும்‌ பாகவத ஸூத்‌ரனுக்கும்‌ கொள்ள வேணுமென்றும்‌, இவரை ஸமர் என்கிற ஸாஸ்த்ரங்களும்‌ பரம புருஷார்த்த ஸாம்யாதிகளாலே. என்றும்‌ கிடாம்பி அப்புள்ளார்‌ அருளிச் செய்தார்‌ என்றும்‌, “ஜாதி பேதியாது. திருஸுரபியானாலும்‌ கோத்வம்‌ கழியாதிறே’ என்றும்‌, ‘ஸ்ரீ விதுரரும்‌ ஸ்வ ஜாத்யநுரூபமாக விவாஹாதிகளைப்‌ பண்ணினார்‌-“புக்த வத்ஸு த்‌விஜாக்ர்‌யேஷு நிஷண்ண பரமாஸநே | விதுராந்நாநி புபுஜே ஸூசீநி குணவந்தி ச ‘ என்றித்தைக் கேட்டு துர்யோதநன் “பீஷ்மாத்‌ரோணா வதி க்ரம்ய மாம் சைவ மதுஸூதந கிமர்த்தம்‌ புண்டரீகாக்ஷ புக்தம்‌ வ்ருஷவ போஜநம்‌” என்று கேட்க, “த்‌விஷதந்நம்‌ நைவ போஜூயேத் பாண்டவான் த்விஷஸே ராஜந் மம ப்ராணா ஹி பண்டவா – என்று, உத்தரமருளிச் செய்கையாலே ஸ்ரீ விதுரருக்கு துர்யோதனன் சொன்ன ஜாதி விஸேஷத்தை பகவான்‌ இசைந்தானாயிறறு- ஆனால் ப்‌ராஹ்மணர்க்கும்‌ க்ஷத்திரியர்க்கும்‌ ஸூத்‌ரனுடைய பக்வாந்நத்தை புஜிக்கை நிஷித்‌தமன்றோ வென்னில்‌, “ஆர்யாதிஷ்டிதா வா ஸூத்‌ரா. (அந்ந ) ஸம்ஸ்கர்த்தார ஸ்யுட்-என்று ஆபஸ்தம்பாதிகள் சொவ்லுகிறபடியே யுகாந்தரங்களிவ்‌ ஆர்‌ய பரதந்தரரான குணவச்‌-ஸூத்‌ரர்கள்‌ ஆர்யர்க்கு அந்ந ஸம்ஸ்காரம்‌ பண்ண அநு ஜ்ஞாதராகையாலே அவ்விடத்தில்‌ நிஷேதமில்வை. இது ஸூசிஸ்து ப்ரயதோ பூத்வா விதுரோந்நமுபாஹரத்‌-என்று ஸ்ரீ விதுரருடைய குண விஸேஷங்கள்‌ சொல்லுகையாலே ஸூசிதம்‌. *ப்ரஹ்ம வித்தான இவர்‌ யோக ப்ரபாவத்தாலே தேஹ ந்யாஸம்‌ பண்ணின பின்பு ப்ராப்தனான தர்ம புத்ரன்‌ செய்த ஸம்ஸ்கார விஸேஷம்‌ தூஷ்ணீம்‌ அனுஷ்டிதமாதல்‌ வ்யக்தி விஸேஷ நியதமாதலாமித்தன- அது கொண்டு வ்யக்தயந்தரங்களில்‌ ந்யாய ஸஞ்சாரம் பண்ண வொண்ணாது என்றும்‌, “மோஹந ஸாஸ்த்ரங்களிற் சொன்ன ஜாத் யுத்‌தாராதிகளை ப்ராமாணிகர்‌ நினைக்கலாகாது-சருவ்யத்யாஸாதிகளான சில விஸேஷ நிதானங்களாவே வருகிற விஸ்வாமித்ராதிகளுடைய நிலை வேறு சிலர்க்குக் கூடுமென்கை வசந விருத்‌தம்‌- விதுராதிகளிலும்‌ உத்கருஷ்ட ப்ரபாவரான ஆழ்வார்களுடைய வ்ருத்தாந்த விஸேஷங்களை நம்மனுஷ்டாநத்துக்குத் த்ருஷ்டாந்தமாக்கலாகாது- அவர்கள்‌ வ்ருத்தாந்தங்களையும்‌ ஆராய்ந்தால்‌, ஸ்வ ஜாதி நியமத்தைக்‌ கடந்தமை யில்லை- என்றும்‌, “இப்படி யானாலும் வித்‌யா மந்தராதி களுடைய க்ரஹணம்‌ ப்‌ராஹ்மணாதி விஷயத்திலேயாக வேணுமென்னுமிடம்‌ “ஸூத்‌ர யோநாவஹம்‌ ஜாதோ நாதோந்யத்‌ வக்து முத்ஸஹே! என்ற ஸ்ரீ விதுர வாக்யத்தாலே ஸித்‌தம்‌-துவாதார தர்ம வ்யாதாதிகளும்‌ ஸந்தேஹம்‌ கேட்கவந்த ப்‌ராஹ்மணரைத்‌ தாங்கள்‌ ஸம்பாவித்து தீர்த்த யாத்ரையிலே வழி திகைத்தாரை வழியிலே சேர்த்த மாத்ரம்‌ அவர்களைத்‌ தெளிவித்து விட்டார்களா மத்தனை யல்லது – முக்யமான ஆசார்ய கர்மம் பண்ணினார்களன்று- இப் ப்ரகாரங்கள்‌ அவ்வோ இதிஹாஸங்களிலே கண்டு கொள்வது. *பக்திரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சேபி வர்த்ததே | தஸ்மை தேயம்‌ ததோ க்ராஹ்யம்‌ ஸ ச பூஜ்யோ யதாஹ்யஹம்‌* என்றதுவும்‌, கந்யா ப்ரதாந பரமன்று, ஜ்ஞாந ப்ரதாந பரமென்று வ்யாக்யாநம்‌ பண்ணினார்கள்‌. “பூஜ்ய என்கிற ஸப்‌தமும்‌ ஸாதாரணமாகையாலே பாகவதத்வம்‌ உண்டானால்‌ ஸர்வரும்‌ ஸாஸ்த்ரம்‌ சொன்ன மட்டுக்களிலே ஆதரணீயர்‌” என்றும்‌. “அதோ ஜாதேர் நிக்ருஷ்டாயா ஸர்வஸ்யா வா விநா ஸத | ஸாஜாத்யம்‌ விஷ்ணு பக்தாநாமிதி மந்தமிதம்‌: வச என்றும்‌, ‘ஸாரீர குண விஸேஷமடியாக வ்யவஸ்திதங்களான ஸரீர ஜாதி விஸேஷங்கள்‌ உத்பத்தி ஸித்‌தங்களாய்‌ மரணாந்தமாக ஸ்திரங்களாயிருக்கும்‌’ என்றும்‌ போனகம்‌. செய்த சேடம்‌ தருவரேல்‌ புனிதமன்றே” என்றதுவும் குரு விஷயமாம் அத்தனை – என்றும் -இதில் சேஷ ஸப்தம் அன்ன சேஷ கிம் க்ரியதாம் இஷ்டைஸ் ஸஹ புஜ்யதாம் இத்யாதிகளில்‌ ந்யாயத்தாலே பாண்டஸ்த விஷயமானால் விரோதமில்லை -என்றும்‌, இருபத்தொன்பதாமதிகாரத்திலே “மாத்ருபி பித்ருபி ஸ்சைவ பதிபிர் தேவரைஸ்ததா | பூஜ்யா பூஷயித வ்யாஸ்ச பஹு கல்யாண மீப்ஸுபி ப ஜாமயோ (ஜ்ஞாநி நாம்‌) யாநி கேஹாநி ஸபந்த்ய ப்ரதி பூஜிதா! தாநி கருத்யா ஹதாநீவ விநஸ்யந்தி ஸமந்தத; !! ஏவமாதிஷு பூஜோக்தி! யதவ் சித்யாத்‌ நியம்யதே | பக்த ம்லேச்‌சாதி பூஜோக்தி ஏவமேவ நியம்யதாம்‌’ என்றும்‌ சொல்லப்பட்டது-

இத்ய வாந்தர பூர்வ பக்ஷ க்‌ரந்த,

அத ஸித்தாந்த-

ஜாதி போகாதென்கிறது ஸாஸ்தர விருத்தமாகையாலே அயுக்‌தம்‌. எங்ஙனே யென்னில்‌, அபக்ருஷ்ட ஜாதீயரை பாகவத்‌ ஸத்‌ரரென்றும்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ஜந்ம நிரூபணம்‌ பண்ணுகையும்‌ பகவத்‌ பக்தரெல்லாரும்‌ ஏக ஜாதீயரன்றோ வென்று நினைக்கிறவர்களை ம்ருது ப்ரஞ்ஞர் என்கையும்அவர்களுக்கும் கலக்கங்கள் உண்டு என்று சொல்லுகையும் அநகத்வ விநிக்‌ரஹமுமாய்‌ அவர்கள்‌ பரமாசார்யர்களாகையாலே ஆசார்யாபசாரமுமாம்‌-ஏக ஜாதீயரானாலும்‌ ஆசார நியமங்களைச் சொல்லும்‌ ஸாஸ்த்ர விரோத ப்ரஸங்கமுமில்லை- வர்ணாஸ்ரமாதிகளிலே அவதரித்த பாகவதரெல்‌லார்க்கும்‌ பண்டைக் குலத்தைத்‌ தவிர்ந்து தொண்டக் குலமொன்றே யாயிருந்தாலும்‌- *நீசனேன் நிறைவொன்றுமிலேன் என்கிறபடியே, ‘அடியேன்‌ பாணண்‌ அடியேண்‌ பாணன்‌’ என்று ஸ்ரீலோக ஸாரங்க, மஹா முநிகளுக்குத்‌ திருப்பாணாழ்வார்‌ விலங்கி யோடுகையாலும்‌ திருமழிசை யாழ்வார்‌ ‘க்ருஷ்ணாநாம்‌ வ்ரீஹீணாம்‌ நகநிர்பிந்நம்‌” என்கிற ஸ்ருதியை உச்சரியாமையாலும்‌, பண்டைக் குலம்‌ தவிரந்து தொண்டக் குலமானது ஸாஸ்த்ர த்‌ருஷ்டிகளூக்‌கொழிய மாம்ஸ சஷுஸ்ஸுக்களுக்குத் தோற்றாமையாலும்‌ “லோக ஸங்க்‌ரஹமேவாபி ஸம்பஸ்யந் கர்த்து மர்ஹஸி’ என்று தர்ம ஸம்ஸ்தாபநம்‌ பண்ணப் பிறந்தவன்‌ தான் லோக ஸங்க்ரஹார்த்தமாக விதிக்கையாலும்‌ “அவிப்வவாய தர்மாணாம்‌ பாவநாய குலஸ்ய ச இத்யாதி-அநபேஷா5பி தாம்‌ ப்ரதி । உபாயத்வ க்‌ரஹம்‌ தத்ர வர்ஜயேந்மநஸா ஸாதீ ப்ரியாய மம விஷ்ணோஸ் ச தேவதேவஸ்ய ஸார்ங்கிண | மநீஷீ வைதி காசாரம்‌ மநஸாபி ந லங்கயேத்‌! ஏவம்‌ விலங்கயந்‌ மர்த்யோ மர்யாதாம்‌ வேத நிர்மிதாம்‌ ப்ரியோபி ந ப்ரியோ மே அசவ் மதாஜ்ஞாவ் யதிவர்த்தநாத்‌- என்றும்‌ பிராட்டி விதித்தருளுகையாலும்‌- ஸ்ரீவசந பூஷண வ்யாக்யாநத்திலே – ‘வர்ணாஸ்ரமாசாரத்தை அநிஷ்ட கோடியாகச்‌ சொல்லப் பார்க்கில் ஸர்வேஸ்வரனும்‌ பிராட்டியும்‌ அருளிச் செய்த வசநங்களோடும்‌ பூர்வாசார்ய வசநாநுஷ்டாநங்களோடும்‌ விரோதிக்குமிறே. என்று பெரிய ஜீயர்‌ அருளிச் செய்கையாலும்‌, ஜாதி போமென்கிறத்‌தில் ஸாஸ்த்ர விரோத ப்ரஸங்கமில்லை யிறே- பண்டைக் குலத்தைத்‌ தவிர்ந்து தொண்டக் குலமாவது – ஆழ்வார்களும்‌ ஆசார்யர்‌களும்‌ அருளிச் செய்தார்கள்‌-கேவல ப்‌ராஹ்மணனுக்கும்‌- கேவல ஸூத்‌ரனுக்கும்‌ உள்ள எல்லை அவர்கள்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களான பின்பு கொள்ள வேணுமென்கை -காய அன்ன ஸ்தல ஸூத்தி பண்ணின வ்ருத்த ஆசார விருத்தம் -(இதன் அர்த்தம் ஸித்தாந்தத்தின் முடிவிலே ஸ்பஷ்டமாகும்‌] *மாத்ரு யோநி பரீக்ஷயாஸ் துல்யமாஹார் மநீஷிண | அரச்சாவதாரோபாதாநம்‌ வைஷ்ணவோத்பத்தி சிந்தநம்‌” ஜாதி போகாது என்கிற விடம்‌ விஸ்வா மித்ர வீத ஹவ்யாதி களிடத்திவே பாதிதம்‌ “பகுவத்‌ பக்தா ந ஸூத்‌ரா- என்னுமா போலே- ‘தேவஸுரபி நகவ் என்று ப்ரமாண மில்லாமையாலே அது, த்ருஷ்டாந்தமன்று-‘கிமர்த்த)ம்‌ புண்டரிகாக்ஷ। மாம்‌ சைவாதி க்ரம்ய வ்ருஷவ போஜநம்‌ புக்தம்‌’ என்று கேட்க- த்விஷதந்நம்‌ ந போக்தவ்யம்‌’ என்று உத்தரம்‌ அருளிச்‌ செய்கையாலே நீ என்‌ உயிர் நிலையிலே த்வேஷிக்கையாலே- யோ விஷ்ணும்‌ ஸததம்‌ த்வேஷ்டிதம்‌ வித்‌யா தந்த்ய ரேதஸம்‌” என்கிறபடியே”நீ அந்தயரேதஸ்ஸாகையாலே உன்னை பரித்யஜித்தோம்‌’ என்றும்‌ “பாகவதா விப்ரா: என்கிறபடியே ஸ்ரீவிதுரர்‌ விப்ரர்‌ ஆகையாலே அவருடைய அந்நத்தை புஜித்தோமென்றும்‌ தாத்பர்யம்‌ ஸுசிதம்‌- ஆகையால்‌ துரியோதநன்‌ சொன்ன ஜாதி விஸேஷத்தை “பகவத் பக்தா ந ஸூத்ர- என்று நிராகரித்தானாய்த்து
தர்ம புத்ரர்‌ விதுரர்க்குப்‌ பண்ணின ப்‌ரஹ்ம மேதத்தை தூஷ்ணிம் அனுஷ்டிதம் என்கை -லோக வைலக்ஷணோ நாம பவிஷ்யத்யஸ்‌ய பார்த்திவ யதி, தர்ம மவாப்தோ அஸெள’ என்கிற வசந விருத்தம்‌- வ்யக்தி விஸேஷ நியதமென்று கல்பிக்கைக்கு கல்பகமில்லை. மோஹந ஸாஸ்த்ராதிகளில்‌ சொன்னதன்றே. “ந ஸத்ரா பகவத்‌ பக்தா- இத்யாத்‌ யுக்த ஜாத் யுத்‌தாராதிகளில்‌ விஸ்வாமித்ரனுடைய விப்ரத்வம்‌ சருவ்யத்யாஸாதி நிதாநமாகில்‌ அந்த விப்ரத்வம்‌ தபஸ்‌ஸூக்கு பூர்வமே வர வேணும்‌-தபஸ்ஸாலே வந்தாலும்‌ ப்‌ராஹ்மணாநுக்‌ரஹ மூலகமிறே- வீதஹவ்‌ யாதிகளூக்கும்‌ பரத்‌வாஜாத்‌,யநுக்ரஹாதிகளாலே வந்ததென்று அநுஸாஸநாதி களிலே சொல்லா நின்றதிறே “யத்‌ய தாசரதி ஸ்ரேஷ்ட தத்ததே வேதரே ஐநா- என்கிறபடியே ஆழ்வார்களுடைய அநுஷ்டாநத்தை நம்‌ அநுஷ்டாநத்துக்கு தருஷ்டாந்தமாக்கலாம்‌-அவர்கள் அநுஷ்டாநத்தை ஆராய்ந்தால்‌ பண்டைக் குலத்தைத் தவிர்ந்தாலும் லோக
த்‌ருஷ்ட் யநு குணமாக அநுஷ்டாநம்‌ நைச்ய நியந்தநமாக உண்டாயிருக்கும்‌- அது கொண்டு அவர்களுக்கும்‌ பண்டைக் குலம்‌ தவிர வில்லை- என்று நினைக்கை மஹா பாகவதாபசாரம்‌- வித்‌யாமந்த்ராதி க்ரஹணமும்‌ ப்‌ராஹ்மணாதி நியம விஷயமென்கையும்‌ “ததோ க்ராஹ்யம்‌”, “ததுக்தி மாத்ரம்‌ மந்த்ராக்ரயம்‌”, கொடுமின்‌ கொள்மின்‌” இத்யாதிகளோடு விரோதிக்கும்‌… ஸூத்‌ரயோநவ் – இத்யாதி நைச்யாநுஸந்தாநமென்று கொள்ள வேணும்‌- ஆசார்யத்வமும்‌ தர்ம ஸந்தேஹமும்‌ ஸமிப்பிக்கை தானேயிறே- ஆகையால்‌ விஷ்ணு பக்தர்க்கெல்லாம்‌ பண்டைக் குலம்‌ போய்த் தொண்டக்‌ குலமென்று பெரியாழ்வார்‌ அருளாளப் பெருமாளெம்‌பெருமானார்‌ முதலானோர்‌ அருளிச் செய்தார்கள்‌. ‘அதுவும்‌ மந்த வசநமிறே என்கை அவர்கள்‌ பக்கல்‌ அபசாரமாம்‌-ஸரீர ஜாதி விஸேஷங்கள்‌ உத்பத்தி ஸித்‌தங்களாய்‌ மரணாந்தமாக ஸதிரமா யிருக்க வேணும்‌’ என்றதும்‌ ஆழ்வாராசார்‌களின்‌ திவ்ய ஸுக்திகளோடும்‌ ஸ்ருதி ஸ்ம்ருத்யாகளோடும்‌ விரோதிக்கும்‌-போனகம் செய்த சேடம் தருவரேல்‌ புனிதம்‌* என்றது குரு விஷயம் என்றாலும் நாராயண ஏக நிஷ்டர் எல்லாரும் குறு துல்யராகையாலே -ததுச்சிஷ்டம்‌ ஸூ பாவநம்‌- என்கிறபடியே பரகத ஸ்வீ கார நிஷ்டரெல்லாரும்‌ விஷயமென்றபடி -பாண்டஸ்த விஷயமானால்‌ விரோதமில்‌ல’ என்கிறது- ‘கலத்ததுண்டு” என்கிறத்தோடு விரோதிக்கும்‌- ‘பக்த ம்லேச்சாதி பூஜோக்தி ரேவமேவ நியம்யதே’ என்று சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர்‌களை ஸ ச பூஜ்யத என்கிறதும்‌- மணவாட்டிப் பெண்களை “பூஜ்யா என்ற மாத்ரம்‌’ என்கையும்‌ *யதாஹ்யஹம்‌” என்கிறத்தோடு விரோதிக்கும்‌-
திருப் பல்லாண்டு வ்யாக்‌யாநத்திலே ‘(பண்டைக் குலத்தைத்‌, தவிர்ந்து) ப்ரயோஜநாந்தர பரர்‌ அநந்ய ப்ரயோஜநரான பின்பு முன்புத்தை நிலை பண்டைக் குலமாய்த் தோன்றின படி. லங்கையில் நின்று கால் வாங்கின போதே ராவணனை: “நிஸாசரன்‌’ என்றானே ஸ்ரீ விபீஷண ஆழ்வான்‌-‘ராக்ஷஸாநாம்‌. பலா பலம்‌‘ என்றாரிறே பெருமாள் தாமும்‌- க்ஷத்ரியனாயிருக்கச் செய்தே தபோ பலத்தால் ப்ராஹ்மண உத்தமனாய் அத்யயனம் பண்ணுவிக்கவும் யஜிப்பிக்குவும்‌ கடவனானானிறே. விஸ்வாமித்ரன்‌” என்று நம்பிள்ளை அருளிச்‌ செய்தார் –

ஸ்ருத ப்ரகாஸிகையிலே, தேவதாதிகரணத்திலே. “பஸ்சாத்‌. விஸ்வாமித்ர ப்ரப்‌ருதீநாம்‌ ச ப்‌ராஹ்மண்யாத்‌ய பாவா ப்ரஸங்காத் என்று விஸ்வாமித்ராதிகளுடைய ப்‌ராஹ்மண்யாதிகளை ஐந்ம ப்ரப்‌ருதி யன்றியே பின்பு வந்ததாக, அருளிச்‌ செய்தார்‌- ‘ஏதேந ஸர்வே வ்யாக்யாதா இத்யத்ர ‘தபோ வி்ஸேஷாத்‌ வரண விபோகோஸ்தி’ என்று அருளிச் செய்தார்‌-
ஜ்ஞாந ஸார வ்யாக்‌யாநத்திலே. “குடியும்‌. குலமுமெல்லாம்‌ கோகநகை கேளவனடியார்க்கு” (குடி) – க்ராமம்‌(குலம்‌) கோத்ரம்‌ (எல்லாம்‌) என்றது மற்றும்‌ நிரூபகமாய்ப் போருமவை பல வுண்டாகையாலே- அவை யாவன சரண: ஸூத்ராதிகள் (கோகநகை கேளவனடியார்க்கு அவனடியே யாகும்‌) அதாவது – முன்பு ஓளபாதிகமாக நிரூபகமாய்ப்‌ போந்த குடியும்‌ குலமுமெல்லாம்‌ போய்‌ ஸேஷியானவன் திருவடிகளில்‌ ஸம்பந்தமே நிரூபகமாய்‌ அத்தை விட்டு வ்யபதேஸிக்கும் படியாய் விடுமென்கை-இதுக்கு த்‌ருஷ்‌டாந்த மருளிச் செய்கிறார் மேல்‌ – (படியின் மேல் ) என்று தொடங்கி – பூமியின்‌ மேலுண்டான ஐல ஸம்ருத்‌தியடைய நதிகளின்‌ நாமமும்‌ வர்ணமுமெல்லாம்‌ ஸமுத்‌ரத்தை. ப்ரவேஸிக்கவே பின்பு காண வொண்ணாதபடி போமா போலே என்கை- “ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ நைவ க்ராம குலாதிபி- நத்‌யாஸ்‌ தஸ்யைவ நாமாதி ப்ரவிஷ்டாயா யதார்ணவம்‌ | ஸர்வாத்மநா ப்ரபந்நஸ்ய விஷ்ணு மேகாந்திநஸ் ததா என்னக் கடவதிறே-
ஸ்ரீவசந பூஷணத்திலே – ‘க்ஷத்ரியனான விஸ்வாமித்ரன் ப்‌ரஹ்மர்ஷியானான் ” என்கிற ஸூத்ர வ்யாக்‌யாநத்திலே-“இப்படி இதிஹாஸாதிகளாலே பாகவத வைபவம்‌ சொல்லப்‌ பட்டதே யாகிலும்‌.*ந ஸூத்‌ரா பகவத்‌ பக்தா விப்ரா பாகவதா ஸ்ம்ருதா -ஸ விப்ரேந்த்ரோ முநி ஸ்ரீமான் ஸயதிஸ் ஸ ச பண்டித- என்று சொன்ன விப்ரத்வாதிகள்‌ அர்த்தவாதமாமித்தனை யல்லது அபக்ருஷ்ட ஜந்மாவானவன்‌ அந்த ஸரீரந் தன்னிலே உத்க்ருஷ்டனாகக் கூடுமோ வென்ன-கூடுமென்னுமிடத்துக்கு உதரஹரண தயா அருளிச் செய்கிறார்‌ – க்ஷ்த்ரியனான என்று தொடங்கி- அதாவது – க்ஷத்ரிய குலோத்‌பவனான விஸ்வாமித்ரன் – அஜ் ஜந்மத்திலே தான் பண்ணின தபோ விஸேஷமடியாக வஸிஷ்ட வாக்யத்தாலே க்ஷத்ரியத்வம்‌ பின்னாட்டதபடி ப்‌ரஹ்ம ருஷியாய் விட்டானிறே-ஆகையாலே அத்யந்தாபக்ருஷ்ட குலோத்‌பவரானாலும்‌ அந்த ஸரீரந்தன்னோடே அநவதிக ஸக்திக பகவத் ஸம்பந்த ரூப ஸம்ஸ்கார விஸேஷத்தாலே அத்யந்தோத்க்ருஷ்ட குல ஜாநுவர்த்தநீயராம்படி உத்க்ருஷ்‌ட தமராகக்‌ குறையில்லை என்கை- அல்ப ஸக்‌திக வஸிஷ்‌ட வாக்யம்‌ செய்த படி கண்டால் ஸர்வ முக்திக ஸம்பந்த விஸேஷம்‌ என் செய்யமாட்டாது’ என்றும்‌, ஆசார்ய ஹ்ருதய வ்யாக்‌யாநத்திலே – பாகவத வைபவத்தைப் பல உதாஹரணங்களாலும்‌ ப்ரகாசிப்பியா நின்று கொண்டு, ‘இவ்வாகாரங்கள றிந்தாருக்கிறே ஐந்மத்தில்‌ உத்கர்ஷாபகர்ஷம்‌ தெரிவது என்கிறார்‌ மேலொரு சூர்ணையாலே

85–ம்லேச்சனும்‌ பக்தனானால்‌ சதுர்வேதிகள்‌ அநுவர்த்திக்க அறிவு கொடுத்து, குல தைவத்தோ டொக்கப்‌ பூஜை கொண்டு பாவந தீர்த்த, ப்ரஸாதனாம்‌ என்கிற திருமுகப் படியும்‌, விஸ்வாமித்ர -விஷ்ணுசித்த -துளஸீ ப்‌ருத்யரோடே உள் கலந்து தொழு குலமானவன்‌ நிலையார்‌ பாடலாலே ப்‌ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும்‌, கீழ் மகன்‌ தலை மகனுக்கு ஸம ஸஹாவாய்த்‌ தம்பிக்கு முன் பிறந்து வேலும்‌ வில்லுங் கொண்டு பின் பிறந்தாரைச் சோதித்துத்‌ தமையனுக்கு இளையோன்‌ ஸத்‌ பாவம்‌ சொல்லும்படி ஏக குலமானமையும்‌, தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய ஸம்யக் -ஸகுண-ஸஹ போஜநமும்‌, ஒரு பிறவியிலே இரு பிறவியானா ரிருவர்க்கு தர்ம ஸூநு ஸ்வாமிகள்‌ அக்‌ர பூஜை கொடுத்தமையும்‌, ஐவரில்‌ நால்வரில்‌ மூவரில்‌ முற்பட்டவர்கள்‌ ஸந்தேஹியாமல்‌ ஸஹஜரோடே புரோடாஸமமாகச்‌ செய்த புத்ர க்ருத்யமும்‌, புஷ்ப த்யாக போக மண்டபங்‌களில்‌ பணிப் பூவும்‌ ஆல வட்டமும்‌ வீணையுங் கையுமான அந்தரங்கரை முடி மன்னவனும்‌ வைதிகோத்தமரும்‌ மஹா முனியும்‌ அநுவர்த்தித்த க்ரமமும்‌, யாக,அநுயாக உத்தர விதிகளில்‌ காய அந்ந ஸ்தல ஸூத்‌தி பண்ணின வ்ருத்‌தாசாரமும்‌ அறிவார்க்கிறே ஜந்ம உத்கர்ஷ அபகர்‌ஷங்கள்‌ தெரிவது.

சதுர் வேதிகள் அனுவர்திக்க அறிவு கொடுத்து –
அதாவது –
ச விப்ரேந்தரோ முனி ஸ்ரீமான் ச யதிஸ் ச பண்டித தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் -என்றும் –
பழுது இலா ஒழுகலாற்று பல சதுப் பேதிமார்கள் இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் – கொடுமின் கொள்மின் -திருமாலை -42-என்றும் சொல்லுகிற படியே –
சர்வோத்க்ருஷ்டனாய் -உத்க்ருஷ்ட வர்ணரான சதுர்வேதிகள்
அபிஜன அத்யபிமான தூஷிதமான ஸ்வ ஸ்வரூப சுத்யர்தமாக -அனுவர்த்திக்கைக்கு விஷயமாய் –
அவர்களுக்கு ஞான அபேஷை உண்டாகில் ஞான பிரதானம் பண்ணி-

குல தெய்வத்தோடு ஒக்க பூஜை கொண்டு –
அதாவது –
ச ச பூஜ்யோ யதாஹ்யஹம் -என்றும்
நின்னோடு ஒக்க வழி பட அருளினாய் -போல் மதிள் திருவரங்கத்தானே -திருமாலை -42-என்கிற படியே-
மம நாதம் -மம குலதைவதம்–கத்யத்ரயம் –என்று குல தெய்வமாக சொல்லப் படுகிற சர்வேஸ்வரனோடு ஒக்க –
( யாவர்க்கும் தொழு குலமாம் இராமன் -கம்பர் – குகப்படலம் -68-)
கடல் மல்லைத் தல சயனம் ஆர் என்னும் நெஞ்சுடையார் -அவர்கள் எங்கள் குல தெய்வமே –பெரிய திருமொழி -2-6-4-என்கிற படியே
குல தெய்வமாய் அவர்களை பூஜை கொண்டு-

பாவன தீர்த்த பிரசாதனாம் என்கிற திரு முகப் படியும் –
அதாவது –
தத் பாதாம்பு அதுலம் தீர்த்தம் தத் உச்சிஷ்டம் ஸு பாவனம் -என்று
அவன் திருவடிகளை விளக்கின ஜலம் அனுபமமான தீர்த்தம் –
அவன் அமுது செய்த சேஷம் பரம பாவனம் என்கையாலே –
அஹங்கார மதிரா பாந மத்தரான அசுத்தரும் இந்த தீர்த்த பிரசாத அன்வயத்தாலே – சுத்த ஸ்வரூபராம் படி
பாவன தீர்த்த பிரசதனனாம் என்று அருளிச் செய்த பகவத் உக்தியான திரு முகமும் –
அதன் படி எடுப்பான ஆழ்வார் பாசுரமும் ..
(வானுளார் அறியலாகா வானவா என்பராகில் -தேனுலாம் துளப மாலைச் சென்னியாய் என்பராகில்
ஊனமாயினகள் செய்யும் ஊன காரகர்களேலும் போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே –)

விஸ்வாமித்ர விஷ்ணுசித்த துளஸீ ப்ருத்யரோடே உள் கலந்து தொழு குலமானவன்
அதாவது –
அபர ராத்ரியிலே சென்று பாடி -நம்பியை திரு பள்ளி உணர்த்துகையாலே –
கௌசல்யா ஸுப்ரஜா ராமா பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நரசார் தூலே கர்த்தவ்யம் தைவமாஹ்நிவம் –பால -23-2—என்றும் ,
அரவணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாயே –பெரியாழ்வார் -2-2-1 -என்றும் ,
அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -திருப்பள்ளி எழுச்சி -என்று திரு பள்ளி உணர்த்தின
விஸ்வாமித்திரன் ,பெரியாழ்வார் ,துளபத் தொண்டாய தொண்டர் அடி பொடி ஆழ்வார்
ஆகிற இவர்களோடு ச கோத்ரியாய்–
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் -என்கிற படியே –
பகவத் சேஷத்வ ஞான பூர்வகமாக -அநந்ய பிரயோஜன வ்ருத்தியிலே -அன்விதனாய் உள் கலந்து –
(நம்பியைத் திருப்பள்ளி உணர்த்துகையாலே மூவருடன் ஒரு சேர எண்ணப்பட்டு )
வலம் தங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் –திருவாய் -3-7-9–என்கிறபடியே
ஒப்பும்மைப் பெற்று எம் தொழு குலம் -திருவாய் -3-7-8-என்று விசேஜ்ஞர் ஆதரிக்கும் ஏற்றத்தை அடைந்த
ஜன்ம சித்த நைச்யனான பாகவதன் –(நம்பாடுவான் )

நிலையார் பாடலாலே ப்ராஹ்மண வேள்வி குறை முடித்தமையும் –
அதாவது –
சரக குலோத்பவனான சோம சர்மா வாகிற பிராமணன் உபக்ரமித்த யாகத்யை யதாக்ரமம் அனுஷ்டியாமையாலும் –
அது சமாமிப்பதுக்கு முன்னே மரிக்கையாலும் -பிரம ரஷசாய் பிறந்து திரியா நிற்க செய்தே –
த்வம் வை கீதப் ப்ரவானே நிஸ்தார யிதுமர்ஹசி
ஏவ முக்த்வாத ,சண்டாளம் ராஷசஸ் சரணம் கத -என்கிற படியே
நீ உன்னுடைய கீத பிரபாவத்தாலே என்னை இவ் ஆபத்தில் நின்றும் கரை ஏற்ற வேணும் என்று சரணம் புக –
யன் மயா பஸ்சிமம் கீதம் ஸ்வரம் கைசிக முத்தமம் –
பலேன தஸ்ய பத்ரம் தே மோஷ இஷ்யதி கில்பிஷாத் –கௌசிக மஹாத்ம்யம்
(உயர்ந்த ஸ்வரம் கௌசிகம் பலத்தால் உன்னை இந்தப் பாபத்தில் இருந்து விடுக்கிறேன் )என்று
நம்பி சந்நிதியில் பின்பு பாடின – நிலையார் பாடலான கைசிக பண்ணாலே –
ஏவம் தத்ர வரம் க்ருஹ்ய ராஷசோ ப்ரஹ்ம சம்ஜ்ஞத
யக்ஜா சாபாத் விநிர் முக்த சோமசர்மா மகாயச -கௌசிக மஹாத்ம்யம் –என்னும் படியாக
வைகல்ய தோஷத்தால் வந்த ராஷசத் வத்தைப் போக்கி உஜ்ஜீவிப்பிக்கையாலே –
அந்த ப்ராஹ்மணன் உடைய யாகத்தில் குறையை தலைக் கட்டின படியும்

கீழ் மகன் தலை மகனுக்கு சக சகாவாய் –
அதாவது –
நிஷாத வம்ச ஜராகையாலே-(வேடர் குலத்தில் பிறந்தவர் ஆகையால்) –
ஏழை ஏதலன் கீழ் மகன் –பெரிய திருமொழி -5-8-1–என்னும் படி ,
ஜன்ம வ்ருத்த ஞானங்களால் தண்ணியரான ஸ்ரீ குஹப் பெருமாள்-
(தலை மகனுக்கு )அயோத்தியர் கோமான் ஆகையாலே அவை-ஜன்ம வ்ருத்த ஞானங்களால் எல்லாத்தாலும்
உத்க்ருஷ்டனாய் இருக்கும் அளவு அன்றிக்கே –
தர்ம ஐக்யத்தாலே -( ஆதி யம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவன் ஆகையால் )
வானோர் தலை மகனாய் -7-2-10–இருக்கிற சக்கரவர்த்தி திரு மகனுக்கு
உகந்து தோழன் நீ –பெரிய திருமொழி -5-8-1-என்கையாலே சமனான சஹாவாய்-
(ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ தோழன் மங்கை கொழுந்தி
எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி மயங்குவான் –கம்ப நாட்டாழ்வார் )-

தம்பிக்கு முன் பிறந்து –
அதாவது –
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி என்று ஒழிந்திலை –பெரிய திருமொழி -5-8-1-
என்கையாலே -இவர் தம்பியான இளைய பெருமாளுக்கு முன் பிறந்தவராய்-

வேலும் வில்லும் கொண்டு பின் பிறந்தாரை சோதித்து –
அதாவது –
இப்படி தம்மை அங்கீகரித்த அன்று இராத்திரி பெருமாள் பள்ளி கொண்டு அருளா நிற்க –
அவருடைய சௌகுமார்ய அனுசந்தாநத்தால் உண்டான பரிவாலே கண் உறக்கம் அற்று ,
கையும் வில்லுமாய் காத்துக் கொண்டு நிற்கிற இளைய பெருமாளை அதி சங்கை பண்ணி –
கூர் அணிந்த வேல் வலவன்–பெரியாழ்வார் -3-10-4- -என்றும்
ததஸ்த் வஹஞ்ச உத்தம பாண சாப த்ருத் ஸ்திதோபவம்
தத்ர ச யஸ்ய லஷ்மண –அயோத்யா –87-23-–
( இளைய பெருமாள் ஸ்ரீ குகப்பெருமாளை அதி சங்கை பண்ண
இருவரையும் அதி சங்கை பண்ணி ஸ்ரீ குகப் பெருமாள் பரிக்ரகம் பெருமாளை நோக்கிற்று இறே-
ஒரு நாள் முகத்தில் விழித்தவர்களை வடிவழக்கு படுத்தும் பாடாயிற்று இது –ஸ்ரீ வசன பூஷணம் )
(மாலைவாய் நியமம் செய்து மரபுளி இயற்றி வைகல் வேலை வாயமிர் தன்னாளும் வீரனும் விரித்த நாணல்
மாலை வாய்ப் பாரின் பாயல் வைகினன் – வரி வில் ஏந்திக் காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான்
தும்பியின் குழாத்தின் சுற்றம் சுற்றத்தன் தொடுத்த வில்லன் வெம்பி வெந்து அழியா நின்ற நெஞ்சினன் விழித்த கண்ணன்
தம்பி நின்றானை நோக்கித் தலைமகன் தனிமை நோக்கி அம்பியின் தலைவன் கண்ணீர்
அருவி சோர் குன்றின் நின்றான் -கம்ப நாட்டாழ்வார் ) என்றும் சொல்லுகிற படியே சாயுதராய் கொண்டு
இவர் மேல் கண்ணாய் நின்று அவர் நினைவு சோதித்து-

தமையனுக்கு இளையோன் சத்பாவம் சொல்லும் படி ஏக குலம் ஆனமையும் –
அதாவது-
ஆச சஷேத சத்பாவம் லஷ்மணஸ்ய மகாத்மான
பரதாயா அப்ரேமயாயா குஹோ கஹன கோசர -அயோத்யா -86-1–என்கிற படியே
ஸ்ரீ ராம விரக கிலிஷ்டனாய் – சித்ர கூடத்து ஏறப் போவதாக வந்த தமையனான
ஸ்ரீ பரதாழ்வானுக்கு தம்பியான ஸ்ரீ இளைய பெருமாள் உடைய –
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த – பால -18-27–என்றும் –
பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே –ஆரண்ய -15-7–என்றும் -சொல்லுகிற படியே
ஸ்ரீ பெருமாள் பக்கல் பிரேம பாரதந்த்ர்யங்களே நிரூபகமாம் படி இருக்கையாகிற சத்தையோடே ,
( ஸத்பாவம் -பிரேம பாரதந்தர்யங்களே சத்தையாம்படி ) வ்யாப்தமான ஸ்வாபத்தை சொல்லும் படி இஷ்வாகு வம்சயரோடு
ஏக குலம் ஆனபடியும் –

தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய
சம்யக் சகுன சஹ போஜனமும்
அதாவது –
முன்னோர் தூது வானரத்தின் வாய் மொழிந்து -பெரிய திருமொழி -2-2-3-என்று ஸ்ரீ பிராட்டிக்கு தூது வாக்யத்தை
ஸ்ரீ திருவடி வாயிலே சொல்லி விட்ட ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன்
சபர்யா பூஜி தஸ் சம்யக் ராமோ தசரதாத்மஜா–பால-1-57- -என்கிற படி
ஸ்ரீ சபரி கையால் பண்ணின சம்யக் போஜனமும் ,
(ஆண்டவள் அன்பின் ஏத்தி யழுதிழி அருவிக் கண்ணன் மாண்டது என் மாயப்பாசம் வந்தது வரம்பில் காலம்
பூண்ட மாதவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள் வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து செய்திருந்த வேலை –கம்ப நாட்டாழ்வார் )

குடை மன்னரிடை நடந்த தூதா-பெரிய திருமொழி -6-2-9- -என்னும் படி -ஸ்ரீ பாண்டவர்களுக்கு தூது போன
ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ பீஷ்ம ஸ்ரீ துரோணாதி க்ருஹங்களை விட்டு –ஆதியால் துரியோதனன் க்ருஹம்
விதுரான்னானி புபுஜே சுசீனி குணவந்தி ச பாரதம் -உத்யோக பர்வம் – என்கிறபடியே-ச காரம் பாவனத்வமும் போக்யத்வமும்
பாவனத்வ போக்யத்வங்கள் கண்டு உகந்து ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே
பண்ணின சகுண போஜனமும் ,

தூது வந்த குரங்கு -பெரிய திருமொழி -10-2-6–என்கிற ஸ்ரீ திருவடி -த்ருஷ்டா சீதா -பால-1-78- என்ற ப்ரீதியாலே
( கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால் )
உபகாராய சுக்ரீவோ ராஜ்ய காங்ஷி விபீஷண-நிஷ்காரணாய ஹனுமான் தத் துல்யம் சஹ போஜனம் –பாத்மோத்தர புராணம் –
என்று திரு உள்ளம் பற்றி -கோதில் வாய்மையினானோடு உடனே உண்பன் நான் –பெரிய திருமொழி -5-8-2-
என்று ஸ்ரீ பெருமாளோடு பண்ணின சஹ போஜனமும் .

ஒரு பிறவியிலே -இத்யாதி -அதாவது –
யது குலத்திலே பிறந்து -கோப குலத்தில் சஜாதீயத்வேன வளருகையாலே
ஒரு பிறவியிலே இரு பிறவியான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஸ்ரீ தர்ம புத்ரர் தம்முடைய
யாகத்திலே அகர பூஜை கொடுத்தமையும் –

ருஷி புத்ரராய் பிறந்து -போய் மற்றோர் இடத்திலே -தஜ் ஜாதீயராய் வளருகையாலே
ஒரு பிறவியில் இரு பிறவியான திரு மழிசைப் பிரானுக்கு ஸ்ரீ பெரும் புலியூர் அடிகள்
தம்முடைய யாகத்தில் அக்ர பூஜை கொடுத்தமையும்-

ஐவரில் இத்யாதி -அதாவது –
பாண்டவர்கள் ஐவரில் பிரதானரான ஸ்ரீ தர்ம புத்ரர் ஸ்ரீ விதுரருக்கு
ஞானாதிக்யத்தையும் -அசரீரீ வாக்யத்தையும் கொண்டு சந்தேகியாமல் செய்த புத்ர க்ருத்யமும் –

ஸ்ரீ தசரதாத்மஜர் நால்வரில் பிரதானரான ஸ்ரீ பெருமாள்-
சௌமித்ரே ஹரே காஷ்டானி நிர்மதிஷ்யாமி பாவகம்
க்ருத்ரராஜம் திதஷாமி மத்க்ருதே நிதனம் கதம் –ஆரண்ய -68-27- என்று
சகஜரான ஸ்ரீ இளைய பெருமாளும் கூட நிற்க செய்தே அவர் கையிலும் காட்டாமல் –
ஏவமுக்த்வா சிதாம் தீப்தாமாரோப்ய பதகேச்வரம் –
ததாஹா ராமோ தர்மாத்மா ஸ்வ பந்துமிவ துக்கித –ஆரண்ய -68-31-என்கிற படியே
ஸ்ரீ பெரிய உடையாருக்கு செய்த புத்ர க்ருத்யமும் –

(இந்தநம் எனைய என்னக் காரகில் ஈட்டத்தோடும் சந்தனம் குவித்து வேண்டும் தருப்பையும் திருத்திப் பூவும்
சிந்தினன் மணலின் வேதி தீர் தர இயற்றித் தெண்ணீர் தந்தனன் தாதை தன்னைத் தடக்கையால் எடுத்துச் சார்வான்
ஏந்தினன் இருகை தன்னால் ஏற்றினன் ஈமம் தன் மேல் சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல்
காந்தெரி கஜலமூட்டிக் கடன்முறை கடவா வண்ணம் நேர்ந்தனன் நிரம்பு நன்னூல் மந்த்ர நெறியின் வல்லான் –கம்ப நாட்டாழ்வார் )

ஸ்ரீ பெரிய நம்பி ,ஸ்ரீ திரு கோட்டியூர் நம்பி ,ஸ்ரீ பெரிய திரு மலை நம்பி -என்று சக ப்ரஹ்மச்சாரிகளாய்க் கொண்டு
ஸ்ரீ ஆளவந்தார் திரு அடியிலே சேவிக்கையாலும் -ஸ்ரீ உடையவருக்கு ஆச்சார்யர்கள் ஆகையாலும் –
பிரசித்தரான ஸ்ரீ நம்பிகள் மூவரிலும் -பிரதானரான ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ மாறனேர் நம்பிக்கு –
புரோடாசத்தை நாய்க்கு இடாதே கொள்ளும் -என்று அவர் அருளிச் செய்து போந்த படி
புரோடாசமாக நினைத்து செய்த புத்ர க்ருத்யமும்-

புஷ்ப த்யாக இத்யாதி -அதாவது
சிந்து பூ மகிழும் திருவேம்கடம்-திருவாய் -3-3-2-என்கிறபடியே புஷ்ப மண்டபமான ஸ்ரீ திரு மலையிலே
பணிப்பூவும் கையுமாய் திரு உள்ளம் அறிந்து பரிமாறுகையாலே ஸ்ரீ திரு வேங்கடம் உடையானுக்கு
அந்தரங்கரான ஸ்ரீ குரும்பறுத்த நம்பியை-
துளங்கு நீண் முடி அரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் –பெரிய திருமொழி -5-8-9–என்கிற
அபிஷிக்த ஷத்ரியாக்யரான ஸ்ரீ தொண்டை மான் சக்கரவர்த்தி அனுவர்தித்த க்ரமும் –

வேகவத் உத்தரே தீரே புண்ய கோட்யாம் ஹரிஸ் ஸ்வயம்
வரதஸ் சர்வ பூதானாம் அத்யாபி பரித்ருச்யதே –ஸ்ரீ காஞ்சீ மஹாத்ம்யம் -என்கிற படியே
த்யாக மண்டபமான ஸ்ரீ பெருமாள் கோவிலிலே திரு ஆல வட்டமும் கையுமாய்
பெருமாளுக்கு அந்தரங்கராய் நின்ற ஸ்ரீ திரு கச்சி நம்பியை
வைதிகோதமரான உடையவர் அனுவர்தித்த க்ரமமும்-

தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடி வருட பள்ளி கொள்ளும்–பெருமாள்–1-1–என்கிற படியே
போக மண்டபமான ஸ்ரீ கோவிலில் வீணையும் கையுமாய் பெருமாளுக்கு அந்தரங்கராய்
வர்த்தித்த ஸ்ரீ திரு பாண் ஆழ்வாரை ஸ்ரீ லோக சாரங்க முனிவர் அனுவர்தித்த க்ரமும் –

யாக அனுயாக உத்தர வீதிகளில் காய அன்ன ஸ்தல சுத்தி பண்ணின வ்ருத்தாசாரமும்-
அதாவது –
யஜ தேவ பூஜாயாம் -என்கையாலே யாக சப்த வாச்யமான திரு ஆராதனத்திலே
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் ஸ்பர்சத்தாலே காய சுத்தி பண்ணிய ஸ்ரீ உடையவரும்

பகவத் ஆராதன அநந்தரம் தத் சமாப்தி ரூபேண பண்ணப் படும் அது ஆகையாலே –
அனுயாக சப்த வாச்யமான பிரசாத ஸ்வீகாரத்தில் -ஸ்ரீ பிள்ளை ஏறு திரு உடையார் தாசர்
கர ஸ்பர்சத்தாலே -அன்ன சுத்தி பண்ணின ஸ்ரீ நம் பிள்ளையும் –

உத்தர வீதி குடி புகுகிற போது ஸ்ரீ பிள்ளை வானமாமலை தாசர் சஞ்சரணத்தாலே ஸ்தல சுத்தி
பண்ணின ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டரும்

ஆகிய ஞான வ்ருத்தர்களுடைய ஆசாரமும் -அறிவார்க்கு இறே ஜன்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது –
அதாவது –
இப்படி கீழ் சொன்ன இவை எல்லாம் அறிவார்க்கு இறே
இன்ன ஜன்மம் உத்க்ருஷ்டம் -இன்ன ஜன்மம் அபக்ருஷ்டம் -என்று
ஜென்மத்தினுடைய உத்கர்ஷமும்
அபகர்ஷமும் தோன்றுவது என்ற படி ..

இத்தால் ஜென்மாத் யபக்ருஷ்டர் பகவத் பக்தர்கள் ஆனார்கள் ஆகில் –
உத்க்ருஷ்ட வர்ணரால் அனுவர்த நீயராய் –
அவர்களுக்கு ஞான பிரதராய் –
ஸ்ரீ ஈஸ்வரனோபாதி அவர்களுக்கு பூஜ்யராய் –
ஸ்வ தீர்த்த பிரசாதங்களாலே சர்வரையும் சுத்தர் ஆக்குமவர்களாம் படியும்
பாப மக்னரான உத்க்ருஷ்ட வர்ணருக்கும் ஸ்வ சம்பந்தத்தாலே உத்தராகராம் படியையும் ,
அவர்கள் அளவில் ஸ்ரீ பகவத் ததீயர்கள் உடைய ஆதார அனுவர்த்த பிரகாரங்களையும் –
அவர்களுடைய ஸ்பர்சமே பரம பாவனத்வம் என்னும் அத்தையும் –

பிரமேய பூதனான ஸ்ரீ ஈஸ்வரனுடையவும்
பிரமாத்ரு பூதரான ஸ்ரீ ததீயர் உடையவும்
வசன அனுஷ்டானங்களாலே -மந்த மதிகளும் அறியும் படி பிரகாசிப்பித்தார் ஆய்த்து ..என்றும்‌ பெரிய ஜீயர்‌ அருளிச் செய்தருளினர்‌.

(ஸ்ரீ வசன பூஷணத்தில் -226-தொடங்கி-239-வரை உள்ள சூத்திரங்களையும் அவற்றின் வியாக்யானத்தையும் போலே இங்கும் )

அஜ்ஞர்‌ ப்‌ரமிக்கிற வர்ணாஸ்ரம வித்யா வ்ருத்தங்களை, கர்த்தப ஐந்மம்‌ ஸ்வபசாதமம்‌, ஸில்பநைபுணம்‌, பஸ்மாஹுதி, ஸவ விதவாலங்காரமென்று கழிப்பர்கள்‌’ என்றும்‌, “ஒரு ராஜா தன்னை மறை முனிவன் ஆக்கினவன் நீசனாக்குவித்த ராஜாவை வாரே உறுப்பாக யஜிப்பித்து ஸ்வர்க்க மேற்றின போதே தெரியும்‌: என்றும்‌, “ஸர்‌வ வர்ண ஸூத்‌ரத்வம்‌ காடுவாழ்‌ சாதியில்‌ கடல் வண்ணண் வேடம்‌ தென்‌னுரையில்‌ ஹரி கீர்த்தி ஸ்வ பசரில்‌ பத்திபாசநமுமறிவார்‌ ஆராரமரரென்ன வேற அறியாதார்‌ சாதி யந்தணர்களேலும்‌ தகர விழுவர்‌’ என்றும்‌ பிள்ளை லோகாசார்யர்‌ திருத் தம்பியாரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்‌ அருளிச்‌ செய்தார்‌-தத் தத் ஸூத்ர வயாக்யாநங்களிலே பெரிய ஜீயரும்‌ விஸகரித்தருளினார்‌-விஷ்ணு சித்தனுக்குப்‌ போலே பண்டைக்‌ குலத்தைத் தவிர்ந்து தொண்டக் குலமான படியும்‌, ஆசாரய விஷ்ணுவத் பூஜ்யத்வ பாவநத்வாதி க்யாதிகளும்‌ விஸ்வாமித்ர விப்ரத்வ தபோ மூலத்வமும்‌ ப்ராமாணிகமென்று நம்மாசார்யர்கள்‌ ஏக கண்டமாக ஸ்தாபித்தருளினார்கள்‌-“விஸ்வம்‌ க்ராந்தம்‌ வாஸுதேவம்‌ விஜாநந்‌ விப்ரோ விப்ரத்வம்‌ கச்சதே தத்வ தர்ஸீ* இத்யாதி ஸ்ருதிகளுமுண்டு.

இதி ஸித்தாந்தம்

——————-

அத பூர்வ பக்ஷ -ந கைவல்யம் முக்தி

ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே சரம ஸ்லோக அதிகாரத்திலே -ஸர்வ பாப நிவ்ருத்தி கைவல்யத்துக்கும் பகவத் பிராப்திக்கும் பொதுவன்றோ என்கை மந்த சோத்யம் -எங்ஙனே யென்னில்‌, ஸர்வ பாபம்‌ கழிந்ததாகில்‌ ஸ்வத ப்ராப்தமான பகவதநுபவத்தை யிழந்து கிடக்கைக்குக்‌ காரணம்‌ இல்லை – அப்போது பகவதநுபவ ரஹிதமான ஆத்மாநுபவ மாத்ரம்‌ கடியாது. ஆகையால்‌ அவ் வவஸ்தையில் ஐஸ்வர்யமும்‌ ஜரா மரணாதி துக்கங்களும்‌ வருகைக் கீடான கர்மங்கள்‌ கழிந்து பரிபூரண பகவதநுபவத்துக்கு ப்ரதிபந்தகமான கர்மம்‌ கழியாதே கிடக்கிற வளவிலே, *யம்‌ லப்‌த்வா சா பரம்‌ லாபம்‌ மந்யதே நாதி கம்‌ தத– என்னும்‌ படி இருப்பதொரு ஸ்வாத்மாநுப வாநந்த விஸேஷம்‌ —ஆத்மார்த்தீ சேத்‌ த்ரயோப்யேதே தத் கைவல்யஸ்ய. ஸாதகா- என்று சொல்லுகிறபடியே தனக்கு ஸக்யமாயிருப்பதொரு உபாய விஸேஷத்தாலே ஸித்‌தித்தால் இவ்வநுபவத்தை அசிதநுபவத்தோடும்‌ பகவதநுபவத்தோடும்‌ துவக்கு இல்லாதபடியாலே கைவல்யமென்று. ப்ராப்தியில்‌ கைவல்ய ஸப்‌தம்‌ ஸர்வோபாதி நிவ்ருத்தியை நினைக்கிறது. ஆத்ம மாத்ராநுபவ விஷயமாக, ‘ஸ்வாத்மாநு பூதிரிதி யாகில முக்திருக்தா’. இத்யாதி களில்‌ பரயுக்தமான ‘முக்தி’ஸப்‌தமும்‌ *விகதேச்சாப யக்ரோதோ யஸ் ஸதா முக்த ஏவ ஸ- இத்யாதிகளிற் போலே நிர்வாஹ்யம்‌. ‘ஜரா மரண மோக்ஷாய’ என்றதுவும்‌ தேவர்களுடைய அமரத்வ வ்யபதேஸம்‌ போலே ஆபேஷிகம்‌. க்ரமேண முக்தி பர்யந்தமாம்‌ விஷயத்தைப்‌ பற்றச்‌ சொல்லுகிற தாகவுமாம்‌-இப்படி விபவ வ்யூஹ ஸாலோக்யாதி மாத்ரத்தில்‌ ‘முக்தி’ஸப்‌தபமும்‌ நிர்வாஹ்யம்‌-வோகேஷு விஷ்ணோர்‌ நிவஸந்தி கேசித்‌ ஸமீபம் ருச்சந்தி ச கேசி தந்யே | அந்யே து ரூபம்‌ ஸத்‌ருஸம்‌ பஜந்தே ஸாயுஜ்ய மந்யே ஸ து மோக்ஷ உக்த. என்று நியமிக்கப்‌ பட்டதிறே. இதில்‌ சொன்ண ஸாயுஜ்யம்‌ பரமபதத்திலே. சென்றவனுடைய போக ஸாம்யம்‌. கேவலாத்மாநுபவம்‌ நித்யமன்று என்னுமிடமும்‌, ஸாக்ஷாத் மோக்ஷமன்று என்னுமிடமும்‌ “சதுர்விதா மம ஜநா; பக்தா. ஏவ ஹி தே ஸ்ரூதா! தேஷாமேகாந்தி நம ஸ்ரேஷ்டா தே சைவா நந்யதேவதா:। அஹமேவ கதிஸ் தேஷாம்‌ நிராஸீ கர்ம காரிணாம்‌ । யே து ஸிஷ்டாஸ் த்ரயோ பக்தா பல காமா ஹி தே மதா ஸர்வே ஸ்யவந தர்மாண ப்ரதி புத்தஸ்து மோக்ஷபாக்‌” என்கிற வசநத்தாவே ஸித்‌தம் -முச்யேதா அர்த்தஸ் ததா ரோகாத்‌. ஸ்ருத்வே மாமாதித கதாம்‌. ॥ ஜிஜ்ஞாஸுர் லபதே பக்திம்‌ பக்தோ பக்த கதிம்‌ லபேத் என்கையாலே ஸ்ரீகீதையில்‌ “ஜிஜ்ஞாஸு* என்கிற ஆத்மா நிஷ்டனும்‌ க்ரமேண ஜ்ஞாநியாமென்று உக்தமாயிற்று- மன்னுறில்‌” என்று பகவதநுபவத்தை நித்யம் என்கையாலும்‌ இதுக்கு வ்யவச்சேத்‌யமாகச்‌ சொல்லும்‌ ஆத்ம மாத்ராநுபவம்‌ நித்யமன்று என்னுமிடம்‌ வ்யஞ்‌ஜிதம்‌-இதுக்கு “இறுதிகூடா* இத்யாதிகளில்‌ நாஸமில்லை என்கிற பாசுரமும்‌ சாதுர் மாஸ்யாதி கர்ம பல விஸேஷங்களில்‌ அக்ஷய்யத்வோக்தி போலே -எனை வூழி” என்கிற அதி சிரகால ஸ்தாயித்வாபிப்ராயம்‌ என்னும்‌- கீதா தாத்பர்ய சந்த்‌ரிகையிலே, எழாமத்‌யாயத்திலே, ‘(கேவலாத்ம ந்யபர்யவஸ் யந்நிதி) நகரம்‌ ப்ரவி விஷோரத்‌ வகஸ்ய சாயா தருமூல ஸ்வாபவத்‌ ஆத்மாநுபவ விலம்ப இதி பாவ- அத்ர ஜிஜ்ஞாஸோர் வக்தவ்யம்‌ ஸர்வம்‌ அஷ்டமே பிரபஞ்ச யிஷ்யாம-என்றும்‌, அஷ்டமத்திலும்‌ – நித்ய ஸ இத்யநேந, ஆத்மாநுபவாதி பலாந்தர வ்யவதாந நைரபேக்ஷ்யம்‌ விவக்ஷிதமித்யாஹ’ என்றும்‌,-அக்ஷர யதாத்ம்ய நிஷ்டா நாம் து ஸ்வ ஸ்வரூப மேவ பூர்வம் போக்யம் வஸ்வாதி பத ப்ராப்தி பூர்வக ப்‌ரஹ்ம ப்ராப்தி ஸாதந மது வித்‌யாதி ந்யாயாத்‌ அந்ததோ ப்‌ரஹ்ம ப்ராப்தி ஈத்‌ருஸ பர்வ க்ரம ப்ரதி நியமல்ஸ ப்ராசீநா பேக்ஷயா ருசி பேதாத்‌ ஸ ச ப்ராசீந கர்ம விஸேஷாத்‌ “சதுர்விதா பஜந்தே மாம்‌- இதி ப்ராகேவ தர்ஸித என்றும்‌ ‘ஆத்ம மாத்ராநுப வஸுகஸ்ய அஸ்தி ரத்வாதேவ ச்யவநதர்‌ மத்வமுச்யதே’ என்றும்‌, “அவ்யவஹித மோக்ஷ பாக்த்வம்‌ ப்ரதி புத்‌த ஸ்யோச்யதே”என்றும்‌, “ப்‌ரஹ்ம காயநிஷேவண ஸங்காத்‌ முக்தஸ்ய தேவ யாநேந மார்க்கேண பரமாகாஸக மநமுச்யதே தத்‌வதிஹாபி-ஸ்வாத்மாநுபவ ஸ்தாநாத்‌ ப்ரச்யுதஸ்ய பரம வ்யோமாதி ரோஹஸ்யாத்‌ । அர்ச்சிராதி கதிஸ்சாஸ்ய அவாந்தர பாவாநுபவாத்‌ பஸ்சாத்‌ வா கதிமத்‌யே வா தக்ஷிணாயந ம்ருதஸ்ய சந்த்‌ர மஸ ஸாயுஜ்யவத் விஸ்ரம
மாத்ரரூபோயம்‌ அவாந்தர பலாநுபவ இத்யுப யதாபி ந விரோத,” என்றும்‌, ‘ஸ்மரந்திச ஸ்வாத்மாநுப வஸ்தாநம்‌. முக்தி ஸ்தாநாதர்வாசீநம்‌. ‘யோகிநாமம்ருதம்‌ ஸ்தாநம்‌ ஸ்வாத்ம ஸந்தோஷ காரிணாம்‌’ இதி” என்றும்‌, “ஸர்வ தர்மாம்ம்ச ஸந்தயஜ்ய ஸர்வ காமாம்ஸ்ச ஸாக்ஷராந்‌. | லோக விக்ராந்த சரணென சரணம்‌ தேவ்ரஜம்‌ விபோ ॥. (இதி). *கைவல்யம்‌ பகவந்தம்‌ச மந்த்ரோயம்‌ ஸாத யிஷ்யதி இத்யாதி -ஷ்வபி கைவல்ய சப்தேன ஆத்ம மாத்ர அனுபவ ஸூகம் ததபேஷிபி ப்ராப்யமுச்யதே | ஏதச்ச அந்தராய கோடி நிவிஷ்டத்வாத்‌ ஆதித ஸாவதாநா ஜ்ஞாநிந: பரிஹரந்தி । கேசித்து – ப்‌ரஹ்மாநுபவ வைமுக்‌யேந நித்யம்‌ ஆத்மாநுப ஸூகமிச்சந்தி ந தத்ர பாஷ்யகாராதி ஸம்ப்ரதாயம்‌ ப்ரமாணம்‌ யுக்திம்‌ வா பஸ்யாம நிஸ்ஸேஷா கர்மக்ஷயே ஸ்வாபாவிக ரூபாவிர்பாவேந ப்‌ரஹ்மாநுபூவாவஸ்யம்பவாத்‌, கர்ம ஸேஷயோகே து ஸம்ஸார ப்ரஸங்காச்ச ஜரா மரணாதி ஹேது பூத ஸர்வ கர்ம விநாஸாத்‌ அஸம்ஸார: | தாவந் மாத்ரேண ச முக்தத் வவ்யபதேஸ | ப்‌ரஹ்மாநுபவ ப்ரதிபந்தக கர்‌மணஸ்து அவிநாஸாத்‌ ததநுபவாபாவ இதி சேத்‌ – அஸத்வேவமேதத்‌ கர்ம: பரஸ்தாதபி ந நங்க்ஷய தீத்யத்ர ந நியாமகமஸ் தீத்யேஷா திக் ” என்றும்‌ சொல்லப் பட்டது.

இதி பூர்வபக்ஷ க்ரந்த

அத, ஸித்‌தாந்த- கைவல்யம்‌ முக்தி!

‘ஸர்வ பாப நிவ்ருத்தி கைவல்யத்துக்கும்‌ பகவத் ப்ராப்திக்‌கும்‌ பொதுவன்றோ வென்கை -மந்தசோத்பயம்‌’ என்கையே மந்த சோத்‌யமாமத்தனை- எங்ஙனே என்னில் பாபமாவது அநிஷ்டாவஹமிறே. கேவலனுக்கு அநிஷ்டாவஹம்‌ ஈஸ்வராத்‌ யநுபவ ஹேதுக்கள்‌. அதடையக் கழிந்தால் பகவதநுபவத்துக்கு ஹேது வில்லை. பகவதநுபவம்‌ ஸ்வத ப்ராப்தமானாலும்‌ ப்ரதிபந்தக நிவ்ருத்தி ஹேது ஜன்யமிறே
பரத்யுத விரோதியான பரமாத்ம ஸரீராத்மாநுபவ ஹேதுவும்‌ கிடக்கையாலே அந்த ஆத்ம மாத்ராநுபவ மொழிய பகவதநுபவ ப்ரஸங்கமும்‌ கடியாது. அந்த ஆத்ம மாத்ராநுபவ ஹேதுவும்‌- “பராபி த்யாநாத்‌” இத்யாதி ஸூத்ரோக்தமான உபாஸநாநுகுண பல ஸாதக பகவத் ஸங்கல்பம்‌- அது பின்னை ‘தேஹ யோகாத்‌ வா ஸோபி’ என்கிறபடியே- தேஹாதி மூலமாகில்‌ மோக்ஷமின்றியிலே யொழியுமென்னில்‌ ஆத்மாநுபவ விரோதி ஸகல கர்‌மங்களும்‌ அதடியான ப்ரக்ருதி ஸம்பந்தமும்‌ கழிகையாலே இத்தை மோக்ஷமென்னத் தட்டில்லை – இது பக்தி ப்ரபத்தி ரூப புண்ய ப்ரபந்ந பகவதநுபவ ஸ்வார்த்த தத் கைங்கர்‌யங்களுக்கும்‌ ஒக்கும்‌-அவற்றுக்கு ஸ்வ ஸ்வரூப ஸாதநமொழிந்த ஸ்வ ஸ்வ விரோதி ஸகல கர்‌ம க்ஷயமுண்டே யென்னில்‌ அது ஆத்மாநுபவத்துக்கும்‌ ஒக்கும்‌-ஆத்மாநுபவம்‌ ஸ்வத ப்ராப்தமன்றே யென்னில்‌ பகவதநுபவ ஸ்வார்த்த தத்‌ கைங்கர்யங்களும்‌ அஹங்கார கர்ப்ப மமகாரமாகையாலே கிங்கரனுக்கு ஸ்வத ப்ராப்தமன்று-தெளிவிசும்பாகையாலே அவையும்‌ கழியுமென்னில்‌ அதுவும்‌ ஆத்மாநுபவத்துக்குமொக்கும்‌. ஆத்மாநுபவம்‌ கழிக்கிறது – அங்குத்தை பகவதநுபு பூஷயா உபாஸநத்தாலே என்னில்‌ பகவதநுபவ கைங்கர்யங்களில்‌ ஸ்வார்த்தத்வத்தைக்‌ கழிக்கிறபடி என்ன வேணும்‌. அங்கவற்றில்‌ ஸ்வார்‌த்தத்வத்தைக்‌ கழிக்கிறது ப்ராயஸ்சித்த புருஷகார ஜந்ய பகவத்‌ கிருபையாலே என்னில்‌ ஆத்மாநுப,வைஸ்வர்‌ய காமனைகளுமத்தாலே கழிய வேணும்‌. “ஸ சாநந்த்யாய கல்பதே ஸர்வம்‌ ஹ பஸ்ய பஸ்யதி சாயா வா ஸத்வ மநுகச்சேத்‌ கிங்கரா மம தே நித்யம்‌” இத்யாத்‌ யுக்தமான ஆவிர்பாவ ஸமத்‌ருஷ்டித்வ பாரதந்த்ர்‌ய கைங்கர்யங்களும்‌ பகவத்‌ க்ருபையாலே ஐஸ்வர்ய கைவல்யார்த்திகளுக்கும்‌ வர வேணும்‌. தத் க்ரது ந்யாயத்தாலே அவை அவர்களுக்கு வாராதே என்னில்‌ அது உபாயாந்தர நிஷ்ட ஸ்வ ப்ரயோஜந பரர்க்குமொக்கும்‌. ஆனால்‌ பகவதநுபவ ஸ்வார்த்த கைங்கர்யங்கள்‌ மோக்ஷமென்னில்‌, ஆத்மாநுபவமும்‌, “ஆத்மாநுபூதிரிதி யாகில முக்திருக்தா, ஐரா மரண மோக்ஷாய” என்கிற வசநங்களை அந்யதாகரிக்கக் கூடாது

ஸா லோக்யாதிகளில் முக்தி ஸப்தமும் ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானங்களில் “சதுர்விதமான மோக்ஷம்‌’ என்றும்‌,’ஸாலோக்ய ஸாமீப்ய ஸாரூப்ய ஸாயுஜ்யங்களொன்கிற நாலு வகைப்பட்ட மோக்ஷம்‌’ என்றும்‌, எம்மா விட்டினீட்டிலே “[இத்தோடு (எம்மா வீட்டுத் திறமும்‌ செப்பம்‌) ஒரு தமிழன்‌ எம்மா வீட்டு விகல்பம்‌ செவ்வியவாம்‌- என்றான்‌- அந்த பஷத்திலே என்கிற சுட்டு முன் பங்க்தியையும்‌ கூட்டிக் கொள்ளக் கடவது;] வீட்டு விகல்பமாவது – ஸாலோக்ய ஸாரூப்ய ஸாமீப்ய ஸாயுஜ்யமென்‌கிறவை- செவ்வியவாகை யாவது – ஸாலோக்யாதிகளெல்லாம்‌ இம்‌ மோக்ஷத்திலே யுண்டாகை! என்றும்‌, பரமபதத்திலே நாலு உண்டாக. நிர்வஹிக்கையாலே அதுவே முக்‌யமென்று நிர்வாஹ்யம்‌. யே து ஸிஷ்டாஸ் த்ரயோ பக்தா பவகாமா ஹி தே மதா. | ஸர்வே சயவந தர்மாண ப்ரதிபுத்‌தஸ்து, மோக்ஷ பாக்‌ என்கிற விடத்திலே சயவநத்துக்கு பல காமனையை ஹேதுவாகச்‌ சொல்லுகையாவே “பலார்த்தீ,. ந மே பக்த ஸ வை வணிக” என்கிறபடியே அநந்ய போக்‌யத்வ ஸ்வரூப ஹாநியே ‘சயவந ஸப்‌தார்த்தம்‌. இங்கனறிக்கே தாங்கள்‌ அநுபவிக்கிற பல ப்ரச்யுதி யாகில்‌, ஸவகீய பல காமனையாலே வந்த பகவதநுபவ ஸ்வார்த்த கைங்கர்யங்களும்‌ அநித்யமாக வேணும்‌. பகவான்‌ நித்யனாகையாலே அவை நித்யம்‌. ஆத்மாவும்‌ நித்யனாகையாவே ததநுபவும்‌ நித்யமாம்‌. ஆகையால்‌ ஸ்வ பல காமனையால்‌ வந்த ஸ்வார்த்த பகவத் கைங்கர்ய காமர்க்கும் –ஆத்மாநுபவ காமர்க்கும் ஐஸ்வர்ய காமர்க்கும் ஏக ரூபமாக ஸ்வரூப பிரஸ்யுதியே ஸ்யவன சப்தார்த்தமாகக் கடவது -இதில் நித்ய பாலார்த்திகளுக்கு ஸ்வரூப ஹானி நித்யம் அநித்ய பாலார்த்திகளுக்கு அநித்யம் என்றதாயிற்று -நித்ய பலங்களை நித்ய ஸம்ஸாரமாக நினைத்திறே ஸா யுஜ்யத்துக்கு அது இல்லாமையைப்பற்ற ஸ து மோக்ஷ உக்த என்றதும்‌பிரதி புத்தஸ்து மோக்ஷ பாக் என்றதும் ‘ஜ்ஞாநியே அத்தைப்‌ பெறுவான்‌” என்றதும்‌– ஆகையாவே ஜரா மரண மோக்ஷமுண்டாகையைப்‌ பற்ற கைவல்யத்தை மோக்ஷ மென்னத் தட்டில்லையே

“முச்யேதார்த்த: ததாரோகாத்‌* இத்யாதி ஸ்லோகத்தில்‌, ‘ஆர்த்த ஸப்‌தம்‌. நஷ்டைஸ்வர்ய காமனைச் சொல்லாதே, “ஆரோக்யம்‌ பாஸ்கரோதிச்சேத்‌* என்கிற ஆரோக்‌ய காமானைச்‌ சொன்னாப் போலே அந்த ஸ்லோகத்தில்‌ ஜிஜ்ஞாஸுவைச்‌ சொல்லுகையாலே ஸ்ரீகீதையில்‌ ‘ஜிஜ்ஞாஸு என்கிற ஆத்மநிஷ்டன்‌ க்ரமேண ஜ்ஞாநியாம் என்னவில்லை. மன்னுறில்‌, “இறுதி கூடா* என்கிற விடங்களில்‌ பண்ணுகிற விஸ்வாமித்ர ஸ்ருஷ்டியும்‌ அவ் விடங்களில்‌ பூர்வர்கள்‌ பண்ணி யருளின வ்யாகயாநங்களுக்கு விருத்‌தமாம்‌. நகரத்துக்குப் போம்‌ வழிப் போக்கர்‌ மரத்தடியிலே உறங்கினாப் போலே ஆதமாநுபவ விளம்பமென்று கல்பிக்கைக்குக்‌ கல்பகமில்லை. மது வித்‌யா ந்யாயம்‌ அந்யாயயம்‌- எங்ஙனே என்னில்‌- மது வித்‌யையில்‌ கார்ய காரணேபயாவஸ்த ப்‌ரஹ்மோபாஸந மாகையாலே கல்பாந்தரத்திலே அநித்யமான தேசத்திலே அநித்யமான வஸ்வாதி ப்ராப்தியாய்‌, அநித்யமான கார்யாவஸ்த ப்‌ரஹ்மத்தை அநுபவிக்கலாம்‌. நித்யமான பரமபதத்தில்‌ அநுபவிக்கக் கூடாது. ததநந்தரத்திலே காரணாவஸ்தமாய்‌ விஸேஷ்யமான பரப்‌ரஹ்மத்தை நித்யமான பரம பதத்திலே நித்யனான தாணன் அநுபவிக்கிலுமாம்‌. விஸேஷணமான ஆதித்யன்‌ அநித்யனாகையாலே ததநுபவம்‌ பரமபதத்தில்‌ கூடாது. ஆகையால்‌, அங்கு. அப்படியாகலாம்‌-

பஞ்சாக்‌நி வித்‌யையில்‌, ப்ரக்ருதி வியுக்த ப்‌ரஹ்மாத்மக ஸ்வாத்மோபாஸந மாகையாலே, நித்யாத்மாநுபவம்‌ அநித்ய தேச காலங்களில்‌ கூடாது, ப்ரக்ருதி வியுக்தாத்மாநுபவம்‌ ப்ரக்ருதி மண்டலத்தில்‌ கூடாது. ஆகையால்‌ மது. வித்யா ந்யாயம்‌ அந்யாயமென்னக் குறையில்லை – ஈத்‌ரூஸ கிரமேண இச்சையும்‌ பூர்வமில்லை – ‘ஜிஜ்ஞாஸு, – ப்ரக்ருதி வியுக்தாத்ம ஸ்வரூபாவாப்தீச்சு,.” என்றிறே பாஷ்யம்‌. ப்ரக்ருதி வியுக்தாத்ம ஸ்வரூபாவாப்தி – மண்டலத்தில்‌ கூடாதிறே (இவ்விடத்தில்‌ சில ப்ரதிகளில்‌ பங்க்தி. ஸ்கலிதமாயும்‌ முன்னும்‌ பின்னுமாயும்‌ காண்கிறது,-கோஸாந்தர ஸஹாயத்தினால்‌ ஸோதித்துக் கொள்க] ஸூஹ்ருதமும் மூலமாயிறே சொல்லப்பட்டது -ஆகையால் பர்வ க்ரம நியம கல்பநம் மூல கிரந்த பாதிதம்‌. அர்ச்சிராதிகதியில்‌ விளம்ப கல்பநமும்‌, ப்ரக்ருதி மண்டலத்தில்‌ ஸ்தாந கல்பநமும்‌ “விரஜா பரமவ்யோம்நோரந்தரா கேவலம்‌ ஸ்ம்ருதம்‌* இத்யாதி ப்ரமாண விருத்‌தம்‌- த்ருஷ்டாந்த கல்பநங்களும்‌ வ்யர்த்தம்‌. “ஸர்வ காமாம் ஸ் ச ஸாக்ஷராந் | கைவல்யம்‌ பகவந்தம்‌ ச * இத்யாதிகளில்‌. அக்ஷர கைவல்ய ஸப்‌தங்களும்‌ ஜிஜ்ஞாஸு விஷயம்‌ [இவ் விடத்தில்‌ தாளபத்ரகோளம்‌ ஸிதில மாயிருப்பதால்‌ ஸூத்‌த பங்க்தி கோஸலாந்தரங்களில்‌ காண்க ) அவ்யக்தோக்ஷர இத்யுக்த யேத்வாக்ஷரம நிர்தேஸ்யம்‌’, ‘கேவலாத்மந்ய பர்‌யவஸ்யந்‌, அத, கைவல்யார்த்தி,நாம்‌‘ இத்யாதி ப்ரயோகாத்‌ ப்‌ரஹ்மாநுப,ப்ரதிபந்தக கர்மண ஸத்வாத்‌, ஆத்மாநுபவம்‌ நஸியாதென்‌கிறதற்கு நியாமகம்‌, யத் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்‌ தாம பரமம்‌ மம, தச்சாபுநரா வ்ருத்தி லஷணம்‌” இத்யாதி- கைவல்யம்‌ முக்தி யென்றும்‌ நித்யமென்றும்‌ ஆழ்வார்கள்‌ முதலான ஆசார்யர்களும்‌ அருளிச் செய்தார்கள்‌. எங்ஙனே என்னில்‌, “(உற்றது வீடுயிர்‌) ஆத்மா மோக்ஷத்தை ப்ராபித்தது-அது நித்யமாய்‌ ஜ்ஞாநா நந்த லக்ஷணமா யிருக்கையாலே’ என்றும்‌, இறுகலிறப்பு* என்றும்‌, *ஞாநிக்கும்‌ – ஸங்கோசத்தை மோக்ஷமென்று சொல்லுகிற ஆத்மஞ்ஞருக்கும் என்றும் (6-9-10)குறுகா நீளா -ஸ்வத குறுகையும் நீளுகையும் இன்றிக்கே இருக்கை -(எனையூழி இத்யாதி )காலோபாதியால்‌ வரும்‌ ஸங்கோச விகாஸங்கள் இன்றிக்கே யிருக்கை (அளவிவினபம்‌ சேர்ந்தாலும்‌) இங்ஙனே யிருக்கையாலே முடிவின்‌றிக்கே யிருக்கிற ஆத்மாநுபவ ஸுகத்தை பிராபித்தாலும் (பெரும் துன்பம் வேரற நீக்கி!) ஜந்மம்‌ போனால்‌ அநந்தரம்‌ வரக்கடவதான ‘கைவல்யமாகிற மஹா துக்கத்தை ஸவாஸநமாகப்‌ போக்கிக்‌ கீழ் நின்ற நிலை தான்‌ நன்று என்னும்படியிறே இதன்‌ தண்மை- அதுக்குப்‌ பின்பொரு ஸரீர பரிக்‌ரஹம்‌ பண்ணி யாகிலும்‌ பகவத் ஸமாஸ்ரயணம்‌ பண்ண யோக்‌யதை உண்டிறே…

இது நித்யமாயிருப்பதொன்றன்றோ என்று ஆத்ம லாபத்துக்காக வந்து உபாஸிக்கிற கேவவர்‌ வந்து தோற்ற அவர்களை ஷேபிக்கிறார்‌ – (சரணமாகிய வித்யாதி..)” என்றும்‌, “(திருத்தாள் வணங்கி) பாவியேனுக்கு பகவத்‌ விஷய மில்லாமையாலே ஆத்ம ப்ராப்தி அபுருஷார்த்தம்‌, ஜஸ்வர்யம் போலே அஸ்திரமல்லாமையாலே நிலை நின்ற அபுருஷார்த்தமென்கை’ என்றும்‌, ‘(யாதுமில்லை இத்‌யாதி) ‘இவ்வாத்மாநுபவ ஸூகத்துக்கு மேற்பட்டிருப்ப தொன்றில்லை என்று அவ் வருகே பகவதநுபவ ஸூகமுண்டே யாகிலும்‌. அத்தையே புத்தி பண்ணிக்‌ காது பெருக்கப் புக்கவன் அத்தைப்‌ பல காலும்‌ அறுத்து வைத்து முன்புத்தை யோக்யத்‌தையும்‌. கூடக் கெடுக்குமா போலே-பகவத் ஸமாஸ்ரணத்துக்கு யோக்‌யமான ஸம்ஸாரத்திலே ஸப்‌தாதி விஷயங்களை அநுபவித்திருக்கு மத்தையும்‌ இழக்கும்‌” என்றும்‌, (திருவாய்மொழி -8-8-6-) (அதுவே வீடு) “அற்றது பற்றெனில்‌ உற்றது வீடுயிர்‌’ என்று ப்ராக்ருதங்களில்‌ தொற்றற்றவாறே ஆத்ம ப்‌ராப்தி லஷண மோக்ஷமா யிருக்கும்‌- அதுக்கென்னச்‌ செய்ய வேண்டுவதில்லை (வீடாமே) அவனுக்கு ப்ரகாரமாக ஆத்ம வஸ்துவை. அநுஸந்தித்து அவ் வழியாலே இது தன்னை ப்ராப்யமாக விறே இவர் தாம்‌ நினைத்திருப்பது. அவ்வளவு போக மாட்டாதே இதின்‌ நன்மையைக் கண்டு இவ்வளவிலே கால் தாழ்வார்க்கும்‌. போந்திருந்ததீ என்கிறார்‌ என்றும்‌, (8-8-7) “(அதுவே வீடு) கீழ்ச் சொன்னவதுவே ஆத்ம ப்ராப்தி லக்ஷண மோக்ஷமாகிறது- (வீடு பேற்றின்பந்தானுமது) அம் மோக்ஷத்தை ப்ராபித்தால்‌ வரும்‌ ஸூகமும் அதுவே (அதுவே வீடு) கீழ்ச்‌ சொன்ன ஆத்ம ப்ராப்தியே மோக்ஷம்‌(வீடு பேற்றின்பந்‌தானுமது) மோக்ஷ ஸித்‌தியில்‌ வரும்‌ ஸுகமும்‌ அந்த ஆத்மாநுபவம்‌’ என்றும்‌ திருப் பல்லாண்டு வயாக்‌யானத்தில் – “கைவல்யார்த்திகளை அழைக்கிறார்‌. அவர்கள்‌. உபாஸித்துத் தலைக் கட்டப் புகுகிற மோக்ஷம் தான் அநர்த்தம் என்று தோற்றி யிருந்ததிவர்க்கு. அம் மோக்ஷம்‌ ப்ரத்யா ஸந்நமா யிருக்கையாலே அத்தைத் தவிர்த்து இங்கே வாருங்கோள்‌ என்கிறார்‌. அநந்தரம்‌ ஸ்வ ஸ்வரூபாவாப்தி மோக்ஷமாகையாலே அவ் வருகு போக்கில்லை – இவ்வருகு வரவில்லை வறுத்த பயறு முளைக்கிற யோக்‌யதையையும்‌ கூடக் கெடுக்கிறதிறே.-ஜரா மரண மோஷாயா -என்று பிரக்ருதி வியுக்தாத்ம அனுபவத்தை புருஷார்த்தமாக அனுபவித்து மோக்ஷமாக. நினைத்திருப்பது’ என்றும்‌, “ஆத்ம ப்ராப்தி உத்க்ருஷ்டமென்னும்‌ நினைவாலே அழைக்கிறார்‌ அல்லர்‌- அந்த மோக்ஷத்தை இவர்‌ அநர்த்தமென்று இருக்கையாலே அந்த மோக்ஷத்தை ப்ராபித்தால்‌ மீள வொண்ணாமையாலும்‌ ஐஸ்வர்ய காமனுக்குக்‌ காலாந்தரத்திலே யாகிலும்‌ பகவத் ஸம்பந்தம்‌ பண்ண யோக்‌யதை உண்டாகையாலும்‌ இவனுக்கு அந்த யோக்‌யதையும்‌ அழிகையாலே துர்க்கதியைக் கண்டு முற்பட அழைக்கிறார்‌” என்றும்‌, பெரிய திருமொழி (8-2-8) “தொண்டெல்லாம்‌* என்கிற பாட்டின்‌ வயாக்யாநத்திலே (நின்னடியே தொழுது!) என்று உன்னை யன்றே யிவன்‌ தொழுதது – திருக்கண்ணபுரத்தை யிறே. யதோ உபாஸநமன்றோ பலம்‌- ஜஸ்வர்யார்த்‌திகள் ஐஸ்வர்ய விஸிஷ்டனை இறே பற்றுவது -ஆத்ம ப்ராப்தி காமன் ஸூத்‌தி விஸிஷ்டனையிறே பற்றுவது-இவளும்‌. இவ்வூரை ஆசைப் பட்டவளாகையாலே. ஊரைத் தொழுகிறாள்‌- யத்‌ விஸிஷ்ட வஸ்துவைப் பற்றினால்‌ தத்‌ விஸிஷ்ட வ-ஸ்துவே யிறே ப்ராப்யம்‌’ என்றும்‌, நாச்சியார்‌ திருமொழி! வ்யாக்யாநத்தில்‌, (5-11) – ‘(நமோ நாராயணைய என்பாரே) ‘நமோ நாராயணய வென்று பல்லாண்டும்‌ பரமாத்மாவைச் சூழ்ந்திருந்தேத்துவர்‌ பல்லாண்டு’ என்றிறே தமப்பனார் வார்த்தை– இக் குடிக்காக வுள்ளதோர்‌ ஆசையிறேயிது-அதுவே பலமாகப் பெறுவரென்று நல்லாண்டென்று நவின்று, பல்லாண்டென்றுரைப்பார்‌- நமோ நாராயணாய வென்று பல்லாண்டு மேத்துவரிறே. தத்‌ க்ரது ந்யாயத்தாலே பேறாகையாலே காதாசித்கமாகை தவிருகையே உள்ளது -ப்ராப்ய பூமியிலே புக்கிருந்து இப் பாசுரம்‌ சொல்லி அநுபவிக்கப் பெறுவர்‌” என்றும்‌, மற்றும்‌. பல விடங்களிலும்‌ பெரியவாச்சான் பிள்ளை அருளிச்‌ செய்தார்‌.

கீழ்‌ “சமயங்கள்‌ கண்டானவை காப்பான்‌* என்கிற விடத்தில்‌, கர்ப்பிதமான ஸம்ஸாராபத்‌,ரக்ஷகத்வத்தை விவரிக்கிறார்‌ – (4-திருவந்தாதி-88) (உயிர் கொண்டு உடலொழிய வித்யாதி) ஆத்மா ஸரீரத்தைப் பொகட்டு ப்ராணனைக் கொண்டு யம படராலே ப்ரேரிதனாய்ப் போம்‌ போது ஆஸ்ரிதரானவர்களை ஆளிட்டந்தி தொழாதே தானே விரைந்து சென்று அவர்கள்‌ தர்ஸநத்தால் வந்த அறிவு கேடு முதவான ‘துரிதமென்று பேர் பெற்றவை யெல்லா வற்றையும்‌ போக்கும்‌ ஸ்வபாவனா னவனுடைய குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான திரு நாமங்களை ப்ரீதி பரவஸராய்க்‌ கொண்டு சொல்லி இவர் ஸ்வ ரக்ஷணத்துக் குடலாகச் செய்யக்‌ கடவதொரு ப்ரவருத்தி யில்லாதபடி ஸ்வருப பாரதந்த்ரயத்தை அநுஸந்தித்து எம்பருமானே நிர்வாஹகனென்று அவன் தலையிலே ஸர்வ பரத்தையும்‌ பொகட்டு தத் குண அநுபவம்‌ பண்ணி வாழுமவர்களே பழுதற வாழுமவர்கள்‌-அந்ய ஸா பேஷமாகையாலே அதி ஷூத்‌ரமாய்‌ ப்ரதி புருஷம்‌ தத் தத் ருசி அனுகுணமாக வியவஸ்திதமாய் துக்க ஹேதுவான அஹங்கார மமகார கர்ப்பமாகையாலே பந்தகமுமாய் இருக்கிற கர்மாத்‌,யுபாய விஸேஷங்களைப் பற்றி நிற்கிறவர்களுடைய வாழ்வாமாகில்‌ நிஷ் ப்ரயோஜநமாயிருக்கும்‌- அந்வய வ்யதிரேகங்களாலே இவற்றுக்கு உபாயத்வம்‌ முதவிலே யில்லை யென்று உள்ள படி உணர்ந்திருக்கும்‌. ஜ்ஞாநிநாமக்‌ரேஸரராகையாலே (பந்தனையார்‌ வாழ்வேல் பழுது) என்று அவற்றிலொரு சரக்கற அருளிச் செய்கிறார்‌’ என்று பெரிய ஜீயர் ஸ்ரீ பாதத்தில்‌ பிள்ளை அருளிச் செய்தார்‌. அர்த்தபஞ்சகத்தில்‌, ‘கேவவனாவான்‌. – தனி யிடத்திலே’ என்று தொடங்கி, ஆத்மாநுபவ மாத்ரத்தையே புருஷார்த்‌தமாக அநுபவித்து பின்பு ஸம்ஸார ஸம்பந்தமும்‌ பகவத் ப்ராப்தியுமற்று யாவதாத்மபாவி அஸரீரியாய்க் கொண்டு திரிவான் ஓருவன்‌‘ என்று பிள்ளை லோகாசார்யர்‌ அருளிச்‌ செய்தார் –

இதி ஸித்‌தாந்தம்

அத, பூர்வபக்ஷ-: புநரபி பர ப்ராப்தி கதநம்‌.

ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே, இருபத்தொன்பதாமதிகாரத்திலே. -பஞ்சாக்‌நி வித்யாதிகளில் சொன்ன ப்‌ரஹ்மாத்மக ஸ்வாத்மாநுபவம்‌ பண்ணுவார்க்கு பாஷ்யாதிகளிலே அர்ச்சிராதிகதியும்‌ ப்‌ரஹ்ம ப்ராப்தியும்‌ சொல்லப் பட்டது- ஆகையால்‌ இப் பஞ்சாக்‌நி வித்யா நிஷ்டர்க்கு ஆத்ம மாத்ராநுபவ ரூபமான அவாந்தர பலம்‌ வந்தாலும் மது வித்‌யா ந்யாயத்தாலே ப்‌ரஹ்ம ப்ராப்தி பர்யந்தமாய்‌ விடும்‌ என்றும்‌. –ஜிஜ்ஞாஸுர் லபதே பக்திம்‌- என்கையாலே ஸ்ரீ கீதையில் ‘ஜிஜ்ஞாஸு: என்கிற ஆத்ம நிஷ்டனும்‌ கிரமேண ஜ்ஞாநியாமென்று உக்தமாயிற்று’ என்றும்‌ கீதா தாத்பர்ய சந்த்‌ரிகையில்‌, ‘ஆத்ம யாதாம்ய நிஷ்டாநாம்‌’ என்று தொடங்கி, ‘அந்ததோ ப்‌ரஹ்ம ப்ராப்த- ஈத்‌ருஸ பர்வ க்ரம ப்ரதி நியமம்ச ப்ராசீநாபேஷயா ருசி பேதாத்‌‘ என்றும்‌. “ஸ்வாத்மாநுபவ-. ஸ்தாநாத்‌ ப்ரச்யுதஸ்ய பரம வ்யோமாதி ரோஹஸ்யாத்‌। அர்ச்சிராதிகதிஸ் ச அவாந்தர பலாநுபவாத் பஸ்சாத்‌, வா. கதி மத்‌யே வா அவாந்தர பலாநுபவ.” என்றும்‌. சொல்லப் பட்டது.

இதி பூர்வ பக்ஷ க்ரந்த.

அத, ஸித்‌தாந்த. அஸ்மாந் ந பரம புருஷ ப்ராப்தி:

பஞ்சாக்னி வித்யா நிஷ்டனுக்கு பாஷ்யாதி களிலே அர்ச்சிராதிகதியும்‌, ப்‌ரகக்ருதி வியுக்த ப்‌ரஹ்மாத்மக ஸ்வாத்ம ப்ராப்தியும்‌ பாஷ்யகாரர்‌ அருளிச் செய்கையாலே அர்ச்சிராதி கதிக்கு பூர்வமும்‌ கதிமத்‌யத்திலும்‌ ப்ரக்ருதி வியுக்த ப்ரஹ்மாத்மக ஸ்வாத்ம ப்ராப்தி யில்லை யாகையாலே ஆத்மாநுபவ அந்தத்தில்‌. ப்‌ரஹ்ம ப்ராப்தி என்கை கூடாது. ‘கைவல்யம்‌ முக்தி! என்கிற விடத்தில்‌, மது வித்‌யையில் நித்யா நித்யோபாஸந மாகையாலும்‌ பர்வ க்ரம நியமம்‌ கூடும்‌, இங்கு நித்யோபாஸநமாகையாலே பர்வ க்ரம நியமாபேஷை அவனுக்கு இல்லாமையை, ‘ஜிஜ்ஞாஸு- ப்ரக்ருதி வியுக்தாத்‌ம ஸ்வரூபாவாப்தீச்சு,.’ என்று பாஷ்யகாரர்‌ அருளிச் செய்கையாலும்‌ அது கூடாதென்று சொல்லப்பட்டது. “ஜிஜ்ஞாஸாுர் லபதே பக்திம்‌* என்கிற ஜிஜ்ஞாஸுவும்‌, ‘முச்யேதார்த்த ததராரோகாத்‌‘ என்று சொல்லப்பட்ட (ஆர்த்தன் ) ப்‌ரஷ்டைஸ்வர்ய காமனன்றிக்கே, “ஆரோக்யம்‌ பாஸ்கராதிச்‌சேத் என்று சொல்லப்பட்ட ரோகார்த்தன் ஆகிறாப் போலே. கைவல்யார்த்தி யன்றிக்கே, ஈஸ்வராத்‌ ஜஞாநமந் விச்சேத் ! என்கிற விடத்திற் சொன்ன ஜ்ஞாநாந் வேஷியே. ‘பக்தி்ஸ் ச ஞாந விஸேஷ என்கிறபடியே பக்தியும்‌ ஜ்ஞாந விஸேஷமிறே. ஆகையாலே, ஆர்த்தோ ஜிஜ்ஞாஸு என்று சொல்வப்பட்ட ஜிஜ்ஞாஸு க்ரமேண ஜ்ஞாநி யாவான் என்றும்‌ சொன்னோம்‌- யாவதாத்ம பாவி ஸ்வாத்மாநு பவமே பண்ணுமிடத்துக்கு ஆழ்வார்கள்‌ முதலான ஆசார்யர்கள்‌ திவ்ய ஸுக்திகளும்‌ காட்டினோம்‌.

இதி ஸித்தாந்தம்

———————–

அத, பூர்வபக்ஷம் -தத் அண்டாந்தர் பாவ ப்ரமிதி வசநம்‌ கேவல கதே.

ரஹஸ்ய த்ரய ஸாரத்திவே இருபத்தொன் பதாமதிகாரத்திலே, “யோகிநாமம்ருதம்‌ ஸ்தாநம்‌ என்று இவ் வாத்மாநுபவ ஸ்தாந விஸேஷமும்‌ சொல்லப் பட்டது. இஸ்தாந விஸேஷம்‌ பரமபதமன்று என்னுமிடம்‌ இப்ரகரணந் தன்னிலே, “ஏகாந்தி-நஸ் ஸதா ப்‌ரஹ்ம த்‌யாயிநோ யோகிநோ ஹி யே தேஷாம்‌ தத் பரமம்‌ ஸ்தாநம்‌ யத்‌வை பஸ்யந்தி ஸூரயட்-என்று பகவத் ப்ராப்தி காமனான பரமைகாந்திக்கு ஸூரி த்‌ருஸ்யமாண ஸ்தாநாந்தரம்‌ சொல்லுகையாலே ஸித்‌தம்‌’ என்றும்‌ தாத்பர்ய சந்த்‌ரிகையிலே,’ஸமரந்தி ச ஸ்வாத்மாநுப ஸ்தாநம்‌ முக்தஸ்தாநா தர்வாசீநம்‌”யோகி நாமம்ருதம்‌ ஸ்தாநம்‌ ஸ்வாத்ம ஸந்தோஷ காரிணாம்‌ இதி என்றும்‌ சொல்லப்பட்டது
இதி பூரவபக்ஷ க்ரந்த,.

அத, ஸித்தாந்த–ஊர்த்வம்‌ ப்ரக்ருத்யா

ஆத்மானுபவ காமஸ்து பகவதோ போக்யத்வம் பரித்யஜ்ய ஸ்வாத்மாநுப ப்ரதிபந்தக ப்ரக்ருதி வித்‌வம்ஸநோபயோகி தயா பாவநத்வ மாத்ரம்‌ அநுஸந்தாய தேநைவ நிரஸ்த ஸமஸ்த ப்‌ரதிபந்தக பரமபத ப்ரவேஸ பூர்வகம்‌ ஆத்மகதா திஸயிதாநுகூல்ய விஸேஷம்‌ உபாஸநாநுகுணம்‌ அநுபவந்‌ அநாக்ராத பகவத்‌ போக்‌யதாநுப வர்த்ததே! அத கைவவ்யார்த்தி ந ப்ரக்ருதி வியுக்தாத்ம ஸ்வரூபாநுபவ ப்ரக்ருதி மண்டலாதிக்ர மண மந்தரேண ந கடதே இதி தஸ்யாநுபவ ஸ்தாநம்‌ பரமபதமிதி கம்யதே | தேஸ விஸேஷ ப்ரவேஸே ஸத்யபி ஆவிர்பூதாஸங்குசித ஞ்ஞாந தயா பகவத் ஸ்வரூப ஸாக்ஷாத்காரே ஸத்யபி உபாஸநாநுகுணம்‌ ஸர்வேஸ்வர ஸ்வ போக்யத்வ விஷயம்‌ ஜ்ஞாநம்‌ ஸங்கோசயதி | உபாஸநாநுரூப பல ப்ரஸாதக பகவத்‌ ஸங்கல்ப ஏவாத்ர ஸங்கோசக! யதப்யுக்கம்‌ ‘அநந்ய ப்ரயோஜநைக லப்‌யதே ஸ விஸேஷ ப்ரவேஸ ப்ரயோஜநாந்தர நிஷ்டஸ்வ கதமுபபத்‌யதே இதி – ததப்ய வ்ருத்‌தம்‌ | விரஜோத்தரணாநந்தரம்‌ பரமாகாஸ ஸப்‌த வாஸ்யே திவ்ய ஜநபத திவ்ய நகர வ்யதிரிக்த ப்ரதேஸே கேவலாநாம்‌ அவ. ஸ்தாநம்‌ ந து திவ்ய ஜந பத திவ்ய நகர ப்ரவேஸ இத்யப்‌யுபகமாத்‌ | ப்ரக்ருதி மண்டலா தூரீத்‌வம்‌ ஸ்ரீ வைகுண்ட தர்வாக்‌ பரமாகாஸ ஸப்‌த வாச்யே தேஸ விஸேஷே கேவலாநாம்‌ அநுபவ ஸ்தாநமிதி ப்ரதிபாதிதம்‌ பவதி | பாத்‌மே புராணேப்யேதத்‌ ஸ்பஷ்டமுக்தம் பவதி | *விரஜா பரமவ்யோம்நோ ரந்தரா கேவவம்‌ ஸ்ம்ருதம்‌ | தத்ஸ்தாந முப போக்தவ்யா மவ்யக்தம்‌ ப்‌ரஹ்ம ஸேவிபி,.” இதி | *முக்தாநாம்‌ பரமா கதி.” இத்யேதத்‌ வ்யாக்‌யாநாவஸரே ஸ்ரீ பராஸர பட்டர் மிஸ்ரைரபி ஏவமுக்தம்‌ – ‘பரமேதி விஸேஷணேந -முக்தாநா மேவ கேஷாஞ்சித் அர்வாசீநா கதிர் கம்யதே க்ருஹ்யதே ச நிர்முக்த ஜரா மரணாத்‌மக கைவல்ய லஷணா “ஜரா மரண மோக்ஷாய மாமாஸ்ரித்ய யதந்தி யே* இதி. ஸம்ஸார பரமபதயோர் மத்‌யே தேஷாம்‌ ஸ்தாநம்‌ ச யோகிநாம்‌ அம்ருதம்‌ ஸ்தாநம்‌ ஸ்வாத்ம ஸந்தோஷ காரிணாம்‌* இதி’ இதி அர்ச்சிராதி,மார்க்க கமந மப்யஸ்ய கேவலஸ் யாஸ்தி, | ஸ்ரீ பகவத்‌ கீதா பாஷ்யே பகவாந் பாஷ்யகாரோபி ஏவமாஹ ‘அத, ஆத்ம யாதாத்ம்ய வித பரம புருஷ நிஷ்டஸ்ய ஸாதாரணீம்‌ அர்ச்சிராதி காம்‌ கதிமாஹ – தவயோரப் யர்‌ச்‌சிராதி கதி ‘ஸரூயதே’ இத்யாதி,நா (‘ஸ்ருதெவ் ஸ்ருத்யா இத்யாதி நா’ என்று ஒரு ஸ்ரீ கோஸத்தில்‌ காண்கிறது ]. “தத்ய இத்தம் விதுயே சேமேரண்யே ஸ்ரத்‌தா தப இத்யுபாஸதே தேர்ச்சிஷமபி ஸம்ப வந்தி” இதி ஹி ஸ்ருதி *ப்ராஜா பத்யம்‌ க்ருஹஸ்தாநாம்‌ ப்‌ராஹ்மம்‌ ஸந்யாஸிநாம்‌ ஸ்ம்ருதம்‌. [ந்யாஸிநாம்‌ ப்‌ரஹ்ம ஸம்ஜ்ஜிதம்‌ – பார – இதி கேவலாஸ்ரம தர்மாநுவர்த்திநாம்‌ ஜஸ்வர்யார்த்திநாம்‌ ப்ரப்ய தயா ப்‌ரஹ்ம லோக பர்யந்தாநபிதாய, “யோகி நாமம்ருதம்‌ ஸ்தாநம்‌ ஸ்வாத்ம ஸந்தோஷ காரிணாம்‌” இத்யாதி சதுர்முககாதி ஸ்தாந வ்யாவ்ருத்தம்‌ ஸுஸ்திரம்‌ ஸ்தாநம்‌ கைவல்யார்த்திநாம்‌ ப்ராப்ய தயா ப்ரதிபாத்‌ய அநந்தரம்‌, ஏகாந்திந ஸதா ப்‌ரஹ்ம த்‌யாயிநோ யோகிநோ ஹி யே தேஷாம்‌ தத்‌ பரமம்‌ ஸ்தாநம்‌ யத்‌ வை பஸ்யந்தி ஸூரய-இதி பகவச் சரணார்த்திநாம்‌ நித்ய ஸூரி நிஷேவணீயம்‌ ஸ்ரீ வைகுண்டாதி ஸப்‌த வாச்யம்‌ பரமம்‌ ஸ்தாநம்‌ ப்ராப்ய தயா பகவதா பராஸரேண ஹி உக்தம்‌- என்று கைவல்ய தத் ஸ்தாநாதிகளை ப்ரமாண உபபத்திகளாலே நம்முடைய நயினார்‌ நிரணயித்தருளினார்‌-

இதி ஸித்‌தாந்த:

———-

அத, பூர்வ பக்ஷ- ப்ரபத்தேர் தெவ்ர் பல்யம்‌.

(இந்த உக்தி – ஸாப்‌தமாதல்‌ ஆர்த்த மாதாவாகக் கடவது-ஸாப்‌தமான போது வல்லவர்கள்‌ இருக்கற விடம்‌ பார்த்துக்‌ கண்ட விடங்களிலே ஸங்க்ரஹித்துக் கொள்வது.)
“இதி பூர்வபக்ஷ க்ரந்த-

அத- ஸித்‌தாந்த ப்ராபல்யம்‌ ஹி ப்ரபத்தே

இப்போது பிரதிபத்திக்கு தவ்ர்பல்யம் துஸ் ஸகத்வ ஸ்வரூப விரோதித்வ. விலம்ப்‌ய பல ப்ரதத்வ அதி க்ருதாதிகாரத்வாதி தோஷங்களில்லாமையாலே அவற்றால் தவர்பல்யம் சொல்ல வொண்ணாது- ப்ரகாராந்தரேண தெளர்‌பல்யம்‌ சொல்லுமதுவும்‌- “தஸ்மாத்‌ ந்யாஸ மேஷாம் தபஸாம் அதிரிக்தமாஹு -என்கிற ஸ்ருதி வ்ருத்தம் -ஸக்தாநாம் பக்தியோக ப்ரபதந விஷய ஸக்தி ஹீந அதிகாரி -என்கையாலே ஆர்த்தமாக ப்ரபத்திக்கு தவ்ர்பல்ய முக்தமென்ற பக்ஷத்திலும் பக்தி ப்ரபத்திகளுடைய சக்தாஸக்தாதிகாரத்வ நிராகரணத்தாலே அதுவும் நிராக்ருதம் -ஆகையால் பிரபத்திக்கு தவ்ர் பல்யம் ஒருபடியாலும் சொல்ல ஒண்ணாது ஸரணாகதி கத்ய வ்யாக்‌யாநாவதாரிகையில்‌- “ஆனால்‌ இவ் வுபாயம்‌ வேதாந்த ஸித்‌தமன்றோ வென்னில்‌, யாஜ்ஜிகீயமான உபநிஷத்திலே “ஸத்யம்‌ தபோ தம ஸம தாநம்‌ தர்ம ப்ரஜநநம்‌ அக்நய அக்நி ஹோத்ரம்‌ யஜ்ஜோ மாநஸம்‌* என்று ஒன்றுக்கொன்று உத்க்ருஷ்டமாகச்‌ சொல்லிப்‌ போந்து எல்லாவற்றுக்கும்‌ மேலாக “தஸ்மாத்‌ ந்யாஸமேஷாம்‌ தபஸாம்‌ அதிரிக்தமாஹு- என்று ‘தபஸ்‌ஸுகளில்‌ வைத்துக் கொண்டு அதிரிக்தமாண தபஸ்ஸூ ப்ரபத்தி என்று இதினுடைய உத்கர்ஷம்‌ சொல்லிற்று- அதுக்கு மேலே “தர்மஜ்ஞ ஸமய; ப்ரமாணம்‌ வேதாஸ் ச” என்று ப்ரபல ப்ரமாணமான ஆசார்ய ருசி பரி க்ரூஹீதத்வாமாகிற ஏற்றமும்‌ இதுக்கு உண்டு. ‘வேதாஸ் ச ‘ என்று வேதமும்‌ அப்ரதாந ப்ரமாணமாம்படி யிறே வைதிக பரிக்‌ரஹத்தின்‌ ப்ராமாண்யாதி ஸயமிருப்பது. அளவுடையராயிருப்பாரக்கு இதுவே போருமாயிற்று ப்ராமாணயத்துக்கு-

இது தான் அளவில்லாதார்க்கு வேதாந்த ஸித்தமுமாய் யிருக்கும்‌. ஆக இப்படி வேதாந்த ஸித்‌தமுமாய்‌- ஸ்வரூப ப்ராப்தமுமாய் ஆச்சார்ய ருசி பரிக்ரூஹிதமுமாய்‌, சரண்ய ஹ்ருதய அநு சாரியுமாய் இருக்கையாலே அதிலும் இதுவே அநுஷ்டேயம் என்னுமிடத்தைத் தம்மை விஸ்வஸித்திருக்‌கும்‌ ஸாத்விகர்‌ இழக்க வொண்ணாதென்று பார்த்துத் தாமும்‌ பெரிய பெருமாளும்‌ அறிந்ததாக அநுஸந்தித்தவிடம்‌ அமைந்திருக்க, தம்முடைய பரம க்ருபையாலே கத்ய ரூபேண வெளியிடுகிறார்‌ என்றும்‌. ‘வேதாந்தங்களிலே மஹா பதமாகச்‌ சொல்லுகிற பக்தியைக்‌ காட்டிஸ்‌ இப்ரபத்திக்கு ஏற்றமென்னென்னில்‌, அது அதி க்ருதாதிகாரமுமாய்‌, விளம்ப்‌ய பல ப்ரதமுமாய்‌, ப்ரமாத ஸம்பாவனை யுள்ளதுமாய்‌, ஸாத்‌யமுமாய்‌, ஸவரூப அநநுரூபமுமாய்‌ ப்ராப்யத்‌துக்கு விஸத்‌ருஸ முமாயிருக்கும்‌. இதுவோ வென்றால்‌ இதுக்கு எதிர்த்தட்டாம்படி ஸர்வாதிகாரமுமாய்‌, ஸூகரமுமாய்‌, அவிளம்ப்‌ய பல ப்ரதமுமாய்‌, ப்ரமாத ஸம்பாவனையுமின்‌றிக்கே ஸித்‌தமுமாய்‌, ப்ராப்யத்துக்கு ஸத்‌ருஸ முமாயிருக்‌கும்‌ என்றும்‌ பெரியவாச்சான்‌ பிள்ளை அருளிச்‌ செய்தார்‌-

இதி ஸித்தாந்த –

அத, பூர்வபக்ஷ –ஸக்தாநாம்‌ பக்தி யோக ப்ரபதந விஷய। ஸக்தி ஹிநாதி,கார:

ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே இருபத்தொன்பதாமதிகாரத்திலே-வ்யாஸாதிகள்‌ அதிகாரி புருஷர்களாகையாலே விளம்ப. க்ஷமருமாய்‌, உபாயாந்தர ஸக்தருமா யிருப்பார்களாகையால்‌ உபாஸநத்தில்‌ இழிந்தார்களல்லது ஜ்ஞாந மாந்த்‌யமாதல் ,
விஸ்வாஸ மாந்த்யமாதல் உண்டாய் யிழிந்தார்களன்று-
என்றும்‌- இருபத்து நாலாமதிகாரத்திலே- ஆதுராதிகளுக்கு அவகாஹநாதிகள் போலே ஆகிஞ்சன்ய அநந்யகதி என்றிருக்கும்‌ அதிகாரிக்கு ஸ்வாதிகார விருத்‌தங்களென்ன ப்ராப்தம்‌. இவ்வதிகார விரோதமறியாதே, உபாஸநாதிகளில்‌ பரவர்த்திக்குமவனைப் பற்ற,”நரஸ்ய புத்தி தவ்ர்பால்யாத் உபாயாந்தர மிஷ்யதே –என்றது ஆகையால்‌ இவ் வுபாஸநாதிகளும்‌ அதிகாரயந்தரத்துக்கு யதாதிகாரம்‌ அநு குணங்கள்‌ அபிசாராதிகளை விதித்த கட்டளை யிலே ஸாஸ்த்ர ப்ரரோசநாதிகளில்‌ அபிஸந்தியாலே அதிகாரி விஸேஷேத்திலே உபாஸதநாதிகளை விதித்ததத்தனை யன்றோ’ என்றும்‌, ‘ ‘நரஸ்ய புத்‌தி தெவ்ர்பல்யா துபாயாந்தர மிஷ்யதே’ என்றுமிப்படி அதிகாரத்தில்‌ வரும்‌. கலக்கங்களை ஸமிப்பித்தோம்‌-என்றும்‌, (29-அ) “உபாயாந்தரத்தில்‌ ஸக்தி யில்லாத போது அகிஞ்சனனாய் ப்ரபத்திக்கு அதிகாரியாய்‌” என்றும்‌-அல்லாத போது உபாய விதாயக ஸாஸ்த்ரங்கள்‌ நிரர்த்தகங்களாம்‌-‘உபாயாந்தரத்தில்‌ அநுஷ்டாந ஸக்தி யில்வாதார்க்கும்‌” என்றும்‌, ‘உபாயாந்தரங்களிலஸ்‌. ஐ்ஞாநாபாவத்தாலே யாதல்‌- ஜஞாந முண்டாயிருக்க ஸக்த்யபாவத்தாலே யாதல்‌- ஸோகித்த அதிகாரியைப் பற்ற அவ் வுபாயங்களொன்றிலும்‌ நீ அலைய வேண்டா, அவை ‘தனித்தனியே தரும்‌ பலங்கள்‌ உனக்கெல்லாம்‌ ப்ரபத்தி வஸீக்ருதனான நான் ஓருவனுமே அமையுமென்று சொல்விற்‌றாயிற்று’ என்றும்‌, (24ம்‌ அதிகாரத்தில்‌) “அவற்றுக்கு. ஸாமர்த்‌ய மில்லாமை யாலாதல்‌ விளம்ப க்ஷமனல்லாமை யாலாதல்‌ இப் ரபத்தியை ஸ்வதந்த்ரோபாயமாகப் பற்றினவனை *செய்த வேள்வியன்‌” என்றும்‌, *க்ருதக்ருத்யன் ” என்றும்‌, உபாஸநாதிகளில்‌ ஸமர்த்தனல்வாதவனுக்கு ப்ரபத்தியை விதித்தாலும்‌ இப் ப்ரபத்தி தானே அவை கொடுக்கும்‌ பலத்தையும்‌ அவை தன்னையும்‌ கொடுக்க வற்றாம்‌ அகிஞ்சநனுக்கு உத்தாரகமாய்‌ அவனபேஷித்த காவத்திலே பலாவிநபாவத்தையும்‌ உடைத்தா யிருக்கையாலே அதிக-ப்ரபாவமா யிருக்கும்‌’ என்றும்‌ சொல்லப்பட்டது-

இதி பூர்வ பக்ஷ க்ரந்த-

அத, ஸித்‌தாந்த –பஜந விதி,ரஸெவ் புத்தி தவ்ர்பல்ய மூல; ந்யாஸ ஸர்வாதிகார:

வ்யாஸாதிகள்‌ உபாஸநத்திவிழிந்தது புத்தி தவ்ர்‌ பல்யத்தாலே என்னுமிடமும் பிராமாணிகம் -ஸகல ஆத்மாக்களுக்கும்‌ ஸேஷத்வ பாரதந்த்ர்ய ரூப ஸ்வாதிகார விருத்‌தமாகையாலே (அகிஞ்சநோநந்யகதி.) என்றிருக்குமதிகாரிக்கே அவிருத்‌தம் என்கை யுக்தம்‌- ஸகலாத்மாக்களுக்கும் வேஷத்வ பாரதந்தர்ய ரூப ஸ்வரூப விருத்‌தமென்றும்‌ அறிந்திறே நராணாம்‌” என்று சேதந ஸாமாந்ய வாசி ஸப்‌தத்தாலே உத்‌தேஸித்து “புத்‌தி தெவ்ர்பல்யா துபாயாந்தர மிஷ்யதே” என்று உபாஸகனுக்கு புத்தி தெளர்‌பல்யத்தை ஹேதுவாக விதித்தது. ஆகையால்‌ அகிஞ்சந வ்யதிரிக்தாதிகாரிக்கு அநு குணம் என்ன வொண்ணாது-‘கலக்கங்கள் ஸமிப்பித்தோம்‌’ என்கிறதும்‌ ஸ்வ வசந வ்யாஹதம்‌- வ்யாஸாதிகள் உபாயாந்தர நிஷ்டரானது ஜ்ஞாந மாந்த்‌யாதி மூலம் என்னுமிடத்தை ஆழ்வார்‌களும்‌. ஆசார்யர்களும்‌ அருளிச் செய்தார்கள்‌. “ஓராயிரம்‌ என்கிற திருவாய்மொழியில்‌ மூன்றாம்‌ பாட்டிலே – (அறிந்தனரெல்லாம்‌) மற்றுடம் அறிந்தாராயிருக்கிற பராசர வ்யாஸ வால்மீகி ப்ரப்‌ருதி ருஷிகளும்‌- (அரியை வணங்கி) ஸர்வ துக்க நிவர்த்தகரை வணங்கி – ஆஸ்ரயித்து, (அறிந்தனர்‌ நோய்களறுக்கும்‌ மருந்தே) ஸம்ஸார துரித பேஷஜம் என்னும் இவ்வளவே வறிந்தார்கள் – “ஸம்ஸார ஸர்ப்ப ஸந்தஷ்ட நஷ்டா. சேஷ்டைக பேஷஜம்‌”அவனுடைய போக்யதையில் இழிந்திலர்கள்‌- அவனுடைய நிரபேக்ஷேபாய பாவத்தில்‌ இழிந்திலர்கள்‌” என்றும்‌. கண்ணி நுண் சிறுத் தாம்பு வ்யாக்‌யாந ப்ரவேஸத்திலே த்ரை குண்ய விஷயா வேத்‌ என்கிற வேத மர்யாதையிலே நின்றார்கள்‌ ருஷிகள்‌ என்று தொடங்கி இத்தை உபபாதித்துக் கொண்டு போய்‌, “இந்த ருஷிகளிற் காட்டில்‌ ஆழ்வார்களுக்கு நெடு வாசி யுண்டு’ என்றும்‌,
ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யாநத்திலே(முனிவரை இத்யாதி.) (முனிவரை இடுக்கியும்‌ முந் நீர் வண்ணனாயும்‌ வெளியிட்ட ஸாஸ்த்ர தாத்பர்யங்களுக்கு விஸிஷ்ட நிஷ்க்ருஷ்ட வேஷங்கள் விஷயம் -1-17- அதாவது – *இருள்கள் கடியும்‌ முனிவர்‌” என்கிற. ஸ்மர்த்தாக்களான வ்யாஸாதி ருஷிகளை..யிட்டு வெளியிட்ட சாஸ்தரத்துக்கு சேதனருடைய தேக விசிஷ்ட வேஷம் விஷயம்-ஸ்ரீ பதரி ஹாஸ்ரமத்திலே ஸ்வேன ரூபேண நின்று வெளி இட்ட சாஸ்திர தாத் பர்யமான திரு மந்த்ரத்துக்கு சேதனருடைய நிஷ்க்ருஷ்ட வேஷம் விஷயம் என்கை என்றும்
சாஸ்திரிகள் தெப்பக் கரையரை போலே இரண்டையும் இடுக்கி பிறவிக் கடலை நீந்த சாரஜ்ஞர் விட்டத்தில் இருப்பாரைப் போலே இரு கையும் விட்டு கரை குறுகும் காலம் எண்ணுவார்கள்-சூரணை1–19-ஆறு நீஞ்சுவார் தெப்பத்தை ஒரு கையிலே இடுக்கி தாங்களும் ஒரு கை துழாவுமா போலே-ஸ்வ யத்னமும் தத் சாத்திய பகவத் கிருபையும் ஆகிய உபயத்தையும் அவலம்பித்து கொண்டு -பிறவி கடல் நீந்துவார்க்கே -திருவாய் -2-8-1–என்கிற படியே சம்சார சாகரத்தை கடக்க தேட-ஸ்வ யத்ன நிஷேத பூர்வகமாக ஆத்மாவின் பகவத் ஏக உபாயத்தை பிரதி பாதிக்கிற சாஸ்திர சாரமான திரு மந்த்ரஜ்ஞர் ஆனவர்கள் ஓடம் ஏறினவர்கள் தீரகமனார்தமான ஸ்வ யத்னத்தையும் தெப்பத்தையும் கை விட்டு -கரை குறுவது எப்போது -என்று பார்த்து கொண்டு அதன் விட்டத்திலே இருக்குமா போலே-சம்சார ஆர்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம் விஷ்ணு போதம் விநாநாந்யத் கிஞ்சித் அஸ்தி பாராயணம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம்-என்கிற படியே-அக்கரையும் இக்கரையும் ஊடுருவ நின்று சம்சார சமுத்ரத்தை கடத்தும்-வைகுந்தன் என்பதோர் தோணியை-நாச்சியார் -5–4– சம்சார நிஸ்தாரமாகப் பற்றி-தத் ஞான சக்தியாதி அனுசந்தானத்தாலும் ஸ்வ பாரதந்த்ர்யாதி அனுசந்தானத்தாலும் நிர் பரர் ஆகையாலே இரண்டு கையும் விடுமா போலே-ஸ்வ யத்ன ரூப உபாசனாதியையும்-தத் சாத்திய பகவத் கிருபையையும்-அவலம்பிக்கையை விட்டு கேவல பகவத் கிருபையே உத்தாரகம் என்று அத்யவசித்து-கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ -திருவாய் -6–9–9 -என்றும்-ஆக்கை விடும் பொழுது எண்ணே–திருவாய் -1–2–9-என்று சொல்லுகிற படியே பகவத் பிராப்தி ஆகிய கரையை குறுகைக்கு ஈடான கால சிந்தனை பண்ணா நிற்பார்கள் என்கை-என்றும்
இவை-ஸ்வரூபத்தை உணர்ந்து உணர்ந்து உணரவும் உணர்வைப் பெற ஊர மிக உணரவும் உண்டாம்-சூரணை-1-20-இத்தால் இவர்கள் உடைய ஸ்வரூப ஜ்ஞான ஆகார தார தம்யமே-கீழ் சொன்ன ஆகாரங்கள் இவர்களுக்கு உண்டாகுகைக்கு ஹேது என்றது ஆயிற்று-என்றும்

முளைத்து எழுந்த ஸூர்ய துல்ய யாதாத்ம்ய சரமம் விதியில் காணும் பிரதம மத்யம தசைகளை பகல் விளக்கும் மின்மினியும் ஆக்கும்-சூரணை -23 –ஆழ்வார்கள் பகவத் ப்ரஸாதத்தாலே பெற்ற பாரதந்தர்ய போக்யதைகள்‌ ஸூர்ய துல்ய யாதாத்ம்ய சரமமாகிறன -ருஷிகள் ஸாஸ்த்ரத்தாலே பெற்ற ஸேக்ஷத்வ போக்த்ருத்வங்கள்‌ (விதியிற் காணும்‌) ப்ரதம மத்‌யம தஸைகள் ஆகிறன-மண்டினாரும் மற்றையாரும் ஆஸ்ரயம்- சூரணை -28 –அதாவது-கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டினார்-திருக் குறும் தாண்டகம் -19–என்று உகந்து அருளின நிலங்களிலே அத்ய அபிநிவிஷ்டராய் இருக்கிற பிர பின்னர் கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயம்-விளக்கினை விதியின் காண்பார் மெய்மையைக் காண்கிற்பாரே -திருக் குறும் தாண்டகம்-18–என்று கீழில் பாட்டில் சொன்ன மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே -திருக் குறும் தாண்டகம் -19—மற்றையரான–உபாசகர் கர்மத்துக்கு ஆஸ்ரயம் என்கை-என்றும் -மேலே பல ஸூத்ர வ்யாக்‌யாநங்களிலும்‌ பரக்க அருளிச் செய்தார்‌. திருநெடுந்தாண்டகத்திலே, *கல் எடுத்து” என்கிற பாட்டின் வ்யாக்யாநத்திலே ‘அஸக்தாதிகாரமிது, ஸக்தாதிகாரம்‌. ஸாதநாந்தரங்கள்‌ என்கிற வார்த்தை நம்‌ ஆசார்யர்கள்‌ கோஷ்டியிலே புகுரக் கடவதன்‌றியே யிறே யிருப்பது’ என்று பெரியவாச்சான் பிள்ளை நிஷ்கர்ஷித்தருளினார்‌.
பிள்ளை லோகாசார்யரும்‌ முழுக்ஷுப்படியிலே “கொண்டிப்‌ பசுவுக்குத்‌ தடி கட்டி விடுவாரைப் போலே அஹங்கார மமகாரங்களால்‌ வந்த களிப்பற்று ஸ்வரூப ஜ்ஞாநம்‌ பிறக்கைக்காக‘. என்று அருளிச் செய்தார்‌- பெரிய ஜீயர்‌ இதின் வ்யாக்யாநத்திலே ஆப்தனான வேத புருஷன் உபாயாந்தரங்களை விதித்தது பட்டி தின்று திரிகிற பசுவுக்கு வசப்படுகைக்கு என்றித்யாதி அருளிச் செய்தருளினர்‌-ஸ்ரீ வசந பூஷணத்திலே “வேதாந்தங்கள்‌ உபாயமாக, விதிக்கிறபடியென்‌? என்னில்‌- ஓளஷத ஸேவை பண்ணாதவர்களுக்கு அபிமத வஸ்துக்களிலே அத்தைக் கலசி இடுவாரைப் போலே ஈஸ்வரனைக் கலந்து விதிக்கிறதித்தனை – இத்தை ப்ரவரத்திப்பித்தது பர ஹிம்ஸையை, நிவர்த்திப்‌பிக்கைக்காக- இது தான் பூர்வ விஹித ஹிம்ஸை போலே விதி நிஷேதங்களிரண்டுக்கும்‌ குறை யில்லை. அத்தை ஸாஸ்த்ர விஸ்வாஸத்துக்காக விதித்தது. இத்தை ஸ்வரூப விஸ்வாஸத்துக்காக விதித்தது. அது தோல் புரையே போம்‌. இது, மர்ம ஸ்பர்ஸி ” என்று அருளிச் செய்தார்‌. ஆகையால்‌ ‘பக்தி ஸக்தாதிகாரம்‌, ப்ரபத்தி ஸக்தி ஹீநாதிகாரம்‌’ என்ன வொண்ணாது எண்றதாயிற்று-

இதி ஸத்தாந்தம்

———–

அத, பூர்வ பக்ஷ-ப்ரத்யேகோபாயதா ந ப்ரதி நியமவதாம்‌ கர்ம யோகாதிகாநாம்‌.

ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே – இருபத்தொன்பதாமதிகாரத்‌திலே “ஸர்வ தர்மாந்‌ பஹுவசநத்தாலே – ஸ பரிகரங்களாய்‌ நாநா ப்ரகாரங்களான உபாஸநங்களை யெல்லாம்‌ சொல்லுகையிலே தாத்பர்யம்‌.-புருஷோத்தமத்வ ஜ்ஞாநம்‌ ஸர்வ வித்‌யைகளுக்கும்‌ உபகாரகமான தத்த்வ ஜ்ஞாந மாத்ரமாகவும்‌, அவதார ரஹஸ்ய சிந்தநம்‌ அநுஷ்டிக்‌கிற உபாஸநாதிகளுடைய ஸீக்ர நிஷ்பத்தி ஹேதுவாகவும்‌ தேஸ வாஸாதிகள் உபாய விரோதி பாப க்ஷய ஹேதுக்களாய்க்‌ கொண்டு உபாய நிஷ்பாதகங்களாகவும்‌ ஸ்ரீகீதா பாஷ்யாதிகளிலே ஸமர்த்திககையாலே, இவற்றை ஸாக்ஷாந்‌ மோஷோபாயங்களாக்கி அங்கி பஹுத்வ விஷயமாந பஹு வசநத்தாலே விவக்ஷிக்கிறதென்கை யுசிதமன்று. நாநா ஸப்‌தாதி பேதாத்‌ என்கிறபடியே இவை யொழியவும்‌ ஸத்‌ வித்‌யா தஹர வித்‌யாதி பேதத்தாலே அங்கி பஹுத்வம்‌ கிடக்கையால்‌ இப்பஹு வசநம்‌ ஸார்த்தம்‌’ என்று சொல்லப் பட்டது.

இதி பூர்வபக்ஷி க்ரந்த-

அத, ஸித்‌தாந்த ததிதர ஸரணாந் யஸ்வ தந்த்ராணி நைவ

ஞான பக்த் யந்விதம்‌ கர்ம ஜநகாதிஷு த்ருஸ்யதே -கர்ம பக்த் யந்விதம்‌ ஜஞாநம்‌ ப்ராயேண பரதாதி ஷு கர்ம ஜ்ஞாநாந்விதா பக்தி ப்ரஹ்லாத ப்ரமுகாஸ்ரயா* என்று கர்மாதிகள்‌ ஸ்வதந்த்ரங்களாக ஸாஸ்த்ரோக்தங்களாகையாலும்‌, புருஷோத்தமத்வ ஜ்ஞாநாதிகள் ஸர்வ வித்‌யாஸாதாரணங்களானாலும்‌ ப்ரபத்தி போலே ஸ்வதந்த்ரமாகக்‌ குறையில்லாமையாலும்‌ இவற்றை ப்ரதாந மோக்ஷ ஸாதநமாக்கி பஹு வசநார்த்தமாகச்‌ சொல்லுகை உசித க்ரமம்‌. ஆகையிறே- ஸரணாகதி கத்‌ய வ்யாக்‌யாநத்திலே ‘(ஸர்வ தர்மாம்ஸ் ச ) ‘தர்மி ஸப்‌தத்தாலே உபாய ரூபமான கர்ம யோகாதிகளைச்‌ சொல்லுகிறது” என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார்‌. ரஹஸ்யாம்ருதத்திலே ‘தர்மாந்‌ என்கிற பஹு வசநம்‌ கர்‌ம ஜ்ஞாந பக்தி ரூபத்தாலே- அவைதான்‌ மூன்று வகையாய்ப்‌ பவவாயிருக்குமென்கிறது. இவை மூன்றும்‌ தன்னில்‌ தான் ஸஹகாரிகளாய்க் கொண்டு தனித்தனியே புருஷார்த்தத்‌துக்கு ஸாதநமாயிருக்கும்‌. எங்ஙனே கண்டதென்னில்‌, ஜ்ஞாந பக்திகளோடே கூடின கர்மம்‌ ஐநகாதிகள்‌ பக்சகலிலும்‌, கர்ம பக்திகளோடே கூடின ஜ்ஞாநம்‌ ஆதி பரதாதிகள் பக்கலிலும்‌ கர்ம ஜ்ஞாநங்களோடே கூடின பக்தி ப்ரஹ்லாதாதிகள் பக்கலிலும்‌ காணப்பட்டது. அவ்வோ க்ரியைகளை ப்ரதாநமாக அநுஷ்டிக்கிற கர்த்தாக்களுடைய பேதத்தாலே மூன்றாகச் சொல்லப்பட்டது. ஆகையாலே யிறே பகவச் ஸாஸ்த்ரத்தில்‌ கர்மாத் யுபாயங்கள்‌ மூன்று, என்றும்‌; ப்ரபத்தி சதுர்த்தோபாயமென்றும்‌ சொல்லப்‌ படுகிறது.” என்று வாதி கேஸரி அழகிய மணவாளச் சீயர்‌ அருளிச் செய்தார்‌.
முழுஷுப்படி சரம ல்லோக ப்ரகரண வ்யாகயாநத்திலே, இனி மேல்‌ பஹுவசநார்த்தத்தை அருளிச் செய்கிறார்‌” என்று தொடங்கிப் பெரிய ஜீயர் அருளிச் செய்தவற்றையும்‌ கண்டு கொள்வது-

——————

இதி ஸித்தாந்த-

அத, பூர்வபக்ஷ-: ஸாத்‌யோபாயேந ஸித்தம் பவதி –

ரஹஸ்ய த்ரய ஸாரத்திவே-இருபத்து மூன்றாமதிகாரத்திலே”க்ருபா விஸிஷ்டனான ஈஸ்வரன் – க்ருஷ்ணம்‌ தர்மம்‌ ஸநாதநம்‌ என்கிறபடியே சித்தோபாயம் – இவனுக்கு ப்ரஸாதகங்களான பக்தி ப்ரபத்திகள்‌ ஸாத்‌யோபாயங்கள்‌” என்றும்‌, ரஹுஸ்ய ரத்நாவளீ ஹ்ருதயத்திலே ‘மோக்ஷோ-: பாயமான ஸாத்‌யோபாயம்‌ பக்தி யென்றும்‌ ப்ரபத்தி என்றும்‌ இரண்டுபடியாயிருக்கும்‌’ என்றும்‌ சொல்லப்‌ பட்டது. ஜ்ஞாந த்‌ரவ்யமும்‌ இதினுடைய ஸர்வ விஷய விகாஸத்துக்கு ஸ்வரூப யோக்‌யதா ரூபையான ஸக்தியும்‌. நித்யங்களாகையாவே அவற்றில்‌ ஆவிர்பாவ ஸப்‌தம்‌ முக்யமென்கிற உக்தியாலே மோக்ஷமும்‌ என்றதாய்த்து.. [இந்த பங்கதிக்கு ஆகரம்‌ காண வில்வலை )

இதி பூர்வபக்ஷ க்‌ரந்த:

அத, ஸித்‌தாந்த: ஸாத்‌,யோபாயேந ஸித்‌தம்‌ ந பவதி

ஆசார்ய ஹ்ருதயத்திலே “மற்றொன்று கண்ணணல்லாஸ்‌. என்கிற வைகல்‌ வாழ்தலான ஸித்‌தோபாயம்‌’ என்று, அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌ அருளிச் செய்தார்‌. தத்‌ வ்யாக்யாநத்திலே – ‘*குற்றமில்‌ சீர்‌ கற்று வைகல்‌வாழ்தல் என்கிற யாவதாத்ம பாவியான குண அனுபவத்துக்கு உடவான ஸித்‌தோபாயத்தை’ என்றும்‌, **யாதுமில்லை மிக்கதனில் ” என்று தொடங்கி இவனை ஓழிய வேறு ஓன்றை ‘ரக்ஷகம்‌’ என்று பற்றினவர்கள்‌ பண்டு நின்ற நிலையும்‌ கெட்டு அநரத்தப் பட்டுப் போவர்கள்‌’ என்றும்‌ அருளிச்செய்தார்‌ பெரிய ஜீயர்‌-
நான்‌முகன் திருவந்தாதியிலே. திருமழிசைப் பிரான் “செயல்‌ தீரச்‌ சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்‌ சிறு சமயம் பந்தனையார்‌ வாழ்வேஸல் பழுது” என்று ஸ்வ ரக்ஷணத்துக்கு உடலாகச்‌ ‘செய்யக் கடவதொரு ப்ரவ்ருத்தி யில்லாதபடி ஸ்வரூப பாரதந்த்ர்யத்தை அநு ஸந்தித்து எம்பெருமானே நிரவாஹகன் என்று அவன் தலையிலே ஸர்வ பரத்தையும்‌ பொகட்டு தத் குணநுபவம்‌ பண்ணி வாழுமவர்களே பழுதற வாழுமவர்கள் அந்ய ஸாபேஷமாகையாலே. அதி ஷூத்‌ரமாய்‌ ப்ரதி புருஷம்‌ தத்தத்‌ ருச்யநு குணமாக வ்யவஸ்திதமாய்‌ துக்க ஹேதுவான அஹங்கார மமகார கர்ப்பமாகையாலே பந்தகமாயிருக்கிற கர்மாத்‌ யுபாய விஸேஷங்களைப் பற்றி நிறகிறவர்களுடைய வாழ்வாமாகில்‌ நிஷ் ப்ரயோஜநமாயிருக்கும்‌ என்று அருளிச் செய்கையாலே ஸாத்‌யோ பாயத்தாலே ஸித்‌த ப்ராப்தியிவ்லை என்றதாய்த்து

இதி ஸித்‌தாந்த:

———-

அத, பூர்வபஷ-

விஸத்‌ருஸம்‌ ப்ராய்யமென்கிறதுவும்‌. பூர்வபக்ஷ் க்‌ரந்தத்‌திலே ஸாப்‌தமாக வுண்டானால்‌ அவ்விடங்களிலே கண்டு. கொள்வது. “ஸாத்‌யோபாயேந ஸித்‌தம்‌ பவதி‘ என்கிறத்‌தாவே அது ஆர்த்தமாகில்‌, தந் நிராகரணத்தாவே இதுவும்‌ நிராக்ருதமென்று கொள்வது.

இதி பூர்வ பக்ஷ க்ரந்த,.

அத, ஸித்‌தாந்த: ஸத்‌ருஸம் ப்ராப்யம்‌.

ஸ்ரீ வசந பூஷணத்திலே ரத்நத்துக்குப்‌ பலகறை போலேயும்‌ ராஜ்யத்துக்கு எலுமிச்சம்பழம்‌ போவேயும்‌ பலத்துக்கு, ஸத்‌ருஸம் அன்று‘ என்று பிள்லை லோகாசார்யர் அருளிச்‌ செய்தார்‌. பெரிய ஜீயரும்‌ அதின்‌ வ்யாக் யாநத்திலே “பரமோதாரனான ஈஸ்வரன் இவன் பக்கல்‌ பக்தி மாத்ரமே பற்றாசாக பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷத்தைக் கொடுத்‌தாலம்‌ பலத்துக்கு இது ஸத்‌ருஸ ஸாதநமன்று என்கை என்று அருளிச் செய்தார்‌. கத்ய வ்யாக்‌யாநத்திலே ‘பக்தி ப்ராப்யத்துக்கு விஸத்‌ருஸமாயிருக்கும்‌. இது அதுக்கு எதிர்த்தட்டாம்படி ப்ராப்யத்துக்கு ஸத்‌ருஸமமாயிருக்கும்‌’ என்று ஆச்சான் பிளளை அருளிச்‌ செய்தார்‌-

இதி ஸித்தாந்த.

———-

அத, பூர்வபஷ- அந்யேந சாந்யத்‌.

இதுவும் பூர்வ பக்ஷ க்ரந்தங்களிலே ஸாப்தமாய் உண்டான விடங்களிவே கண்டு கொள்வது. “ஸாத்‌யோபாயேந ஸித்‌தம்‌ பவதி’ என்கிறத்தாலே ஆர்த்தமாகில்‌, தந் நிராகரணத்‌தாலே ஏதந் நிராகரணமும்‌ ஸித்‌தம்‌-

இதி பூர்வபக்ஷ க்ரந்த.

அத, ஸித்‌தாந்த- அந்யேந நாந்யத்‌

அவன் திருவடிகளுக்கு அவன்‌ திருவடிகளே உபாயமென்று நம்மாழ்வார்‌ அருளிச் செய்தார்‌. “அஃதே உய்யப் புகுமாறு” என்றும்‌, “திருநாரணன் தாள் காலம்‌ பெறச் சிந்தித்து உய்ம்மினோ” என்றும்‌ அருளிச் செய்தாரிறே. “நான் சொன்னதுவே உஜ்ஜீவிக்கைக்கு உபாயமும்‌ உபேயமும்‌ என்று தத்‌ வ்யாக்‌யாதாக்களும்‌ அருளிச் செய்தார்கள்‌-
முழுஷுப்படியில்‌ த்வய ப்ரகரணத்திலே “சரணவ் ஸரணம்‌” என்கையாலே ப்ராப்யம் தானே ப்ராபகம்‌ என்கிறது‘ என்று பிள்ளை லோகாசார்யர்‌ அருளிச் செய்தார்‌. இந்த பக்ஷத்துக்கு பூர்வாசார்யர்களுடைய ஸ்ரீஸூக்திகள்‌ அபரிமிதங்களென்று விவேகிகள்‌ கண்டு கொள்வது
இதி ஸித்தாந்த-

———

அத பூர்வபக்ஷ தியாக, ஸித்‌த அநுவாத

ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே சரம ஸ்லோகாதிகாரத்திலே- “இவ்வநுவாதத்துக்கு அதிகாரி விஸேஷத்தைக் காட்டுகையே ப்ரயோஜநம்‌- அதில்‌, ‘பரி’ என்கிற உபஸர்க்கம்‌ அதிகார பவ்ஷ்கல்யத்தை விவக்ஷிக்கிறது.” *அநிதயம ஸூகம்‌ லோகமிமம்‌ ப்ராப்ய பஜஸ்வ. மாம்‌-என்கிற விடத்தில்‌ ‘ப்ராப்ய’ என்கிறது விதி யன்றிக்கே. ‘ப்ராப்ய வர்த்தமாநஸ் த்வம்‌’ என்று வ்யாகயாதமானாப் போலே இங்கு ‘பரித்யஜ்ய ஸ்திதஸ்த்வம்‌’ என்று விவக்ஷிதமாகக்‌ கடவது- இப்படி அர்த்தாந்தரங்களிலும்‌ ப்ரயோகம்‌ உண்டாகையாலே –த்வா-ஸ்ருதி மாத்ரத்தைக் கொண்டு த்யாகம்‌ அங்கமென்ன வொண்ணாது- என்றும்‌ “இங்கனன்றிக்கே கர்ம யோகம்‌ ஜ்ஞாந யோகம்‌, பக்தி யோகம்‌- என்கிற தர்மங்களினுடைய ஸ்வரூப த்யாகம்‌ ப்ரபத்திக்கு அங்கமென்னும்‌ பக்ஷத்தில்‌, ப்ரபத்தி ஸர்வாதிகாரமன்றிக்கே ஒழியும்‌- தர்மாநுஷ்டாந ஸக்தனுக்கு இறே அவற்றினுடைய தியாகத்தை விதிக்க வேண்டுவது- இது பஹு ப்ரமாண ஸித்‌தமான கார்ப்பண்யமாகிற அங்கத்‌துக்கும்‌ *புகலொன்‌றில்லா வடியேன் *, *குலங்களாய, குளித்து மூன்று” “ந தர்ம நிஷ்டோஸ்மி இத்யாதிகளிலே ப்ரஸித்‌தமான அகிஞ்சன அதிகாரம் என்கிற ஸம்ப்ரதாயத்துக்கும்‌ விருத்‌தமாம்‌- ஈஸ்வரனைப் பற்ற அத்யந்த பரதந்த்ரதையாவே உபாயாந்தரங்களுக்கு க்ஷேத்ரஜ்ஞன் நித்ய அஸக்தன் என்று காட்டி இவனுக்கு அவற்றினுடைய த்யாகத்தை விதிக்கிறதென்னுமது ஸர்வ ஸாஸ்த்ர ஸ்வ வசந ஸ்வ ப்‌ரக்ருத்யாதி விரோதத்தாலே அத்யந்த பரிஹாஸ்யம்‌-அப்போது துல்ய ந்யாயதையாலே “வ்ரஜ* என்கை தானும்‌ கடியாது- உபாயாந்தரங்களுக்கு ஜீவாத்மா நித்ய அஸக்தன் என்கை தங்களுக்கு அநிஷ்டமான அநுவாத பக்ஷத்துக்கு ஸ்திரீகரணம்‌ பண்ணினபடியாமத்தனை – என்றும்‌ சொல்லப்பட்டது –

இதி பூர்வபக்ஷ க்ரந்த-

அத, ஸித்‌தாந்த: தியாகஸ் சாங்கம்‌’ ப்ரபத்தே-

முமுஷுப்படியிலே,( பரித் யஜ்ய) த்யாகமாவது-உக்தோபாயங்களை அநுஸந்தித்து ஸூக்திகையிவே ரஜக புத்தி பண்ணுவாரைப்‌ போலேயும்‌ விபரீத திஸாகமநம்‌ பண்ணுவாரைப் போலேயும்‌ அநுபாயங்களிலே உபாய புத்தி பண்ணினோம்‌ என்கிற புத்தி விஸேஷத்தோடே த்யஜிக்கை- பரி என்கிற உப ஸர்க்கத்தாலே பாதகாதிகளை விடுமா போலே ருசி வாஸனைகளோடும் கூட மறுவவிடாதபடி விட வேணுமென்கிறது. ‘ல்யப்‌’பாலே ஸ்நாத்வா புஜ்ஜீத என்னுமா போலே உபாயாந்தரங்களை விட்டே பற்ற வேணும்‌ என்கிறது என்றும்‌- தனி சரமத்திலே த்யஜ்ய என்கிற ‘லயப்‌பாலே *ஸ்நாத்வா புஞ்ஜீத” என்கிறபடியே உபாய ஸ்வீகாரத்துக்கு உபாயாந்தர த்யாகத்தினுடைய அங்கத்வம்‌ சொல்லுகிறது. யாகத்திலே இழியுமவனுக்கு தத்‌ வ்யதிரிக்த ஸர்வ தர்ம த்யாகம்‌ அங்கமாகிறாப் போலே இதுவும்‌ ஆத்ம த்யாகமாகையாலே தத் வ்யதிரிக்த ஸர்வ தர்ம த்யாகம்‌ அங்கமாகக்‌ கடவதென்றும்‌ முன்பே சொல்லிற்று-இத்தால்‌ ஸாஸ்த்ர வையர்த்‌யமும்‌ பரிஹரிக்கப்பட்டது- விட்டே பற்ற வேணுமாகில்‌ ஸர்வாதிகாரத்வ பங்கம்‌ வாராதோ வென்னில் அஸக்தனுமாய்‌ அயோக்யனுமானவன்‌ ஸ்வரூப ஞான வைஸத்யத்தாலே விட்டுப் பற்றக் கடவன் அல்லாதவர்களும்‌: உக்த லக்ஷணத்தாலே அஸக்தராயிருக்குமத்தன போக்கி ஸர்வத்திலும்‌ அஸக்தரா யிருப்பா ரொருத்தருமில்லையே அவர்களும்‌ விக்‌ந விளம்பாதி பயமுடையராகில்‌ யதா யோக்யம்‌ விட்டுப் பற்றக் கடவர்கள்‌-ஆகையாலே ஸர்வாதிகாரத்வ பங்கம்‌ வாராது- இப்படிக் கொள்ளாதே ஸர்வோபாய ஸூந்யனுக்கு இது உபாயமென்னும்‌ பக்ஷத்‌தில்‌ ஸர்வோபாய ஸூந்யராயிருப்பார் ஓருத்தரும்‌ இல்லை யாகையாலே அந்த பக்ஷத்துக்கும்‌ இந்த தூஷணம்‌ வருமாகையாலே த்யாகம்‌ அங்கமென்கிறவிது உபபந்தம்‌ என்றும்‌ பிள்ளை வோகாசார்யர்‌ அருளிச் செய்தார்‌

ரஹஸ்ய த்ரயத்திலே இவ் விடத்திற் பரிஹாரம்‌ சொல்ல ப்படுகிறது. விளம்பா க்ஷமனான புருஷனுக்கு சிர கால ஸாத்‌யமான உபாயங்களில்‌ துஷ்கரத்வாதி யடியான ஸ்வத பரி த்யாகமும்‌ உபாய ஸூந்யத்வமடியான ஸோகோதயமும்‌ கூடும்‌. அதின்‌ விரோதியைப் பார்த்தாலும்‌ அநாகதமான அநந்த காலத்திலும்‌ ஸந்தாரோபாயம்‌ காணவரிதென்று உபாயாந்தர துஷ்கரத்வத்தை நச்சி கத்‌யத்திலே பாஷ்யகாரர்‌ அருளிச் செய்தார்‌-இப்படி ஸ்வதஸ் ஸித்‌த த்யாகம்‌ ஸம்பவிக்கிலும்‌ இங்கு சொல்லுகிறபடி த்யாகம்‌ அதுவன்று- அதாவது இவ் விஷயத்தில்‌ விதிக்கப்படுகிற ப்ரபதநத்தினுடைய ஸ்வரூபம்‌ உபாயாந்தர ஸம்ஸர்க்கத்தை ஸஹியாது என்னுமிடம்‌ வசந பலத்தாலே கொள்ள வேணும்‌- அந்த உபாயாந்தர ஸம்ஸர்க்க அஸஹத்வமாகிற உபாய ஸ்வரூபம்‌ இவ் விடத்தில்‌ வேறொரு ப்ரமாணத்தாலே காண வொண்ணாமையாலே ஸாஸ்த்ர விதியை அபேஷித்திருக்கும்‌- இத்தாலேயிறே ‘ஸர்வ’ஸப்‌தத்துக்கு அர்த்தபூர்த்தி அல்லாத போது நிரவஸேஷ த்யாகம்‌ ஸித்‌தியாதே- தானே உபாயங்களை துஷ்கரமென்று விட்டவணுக்கு ஸக்யாம்ஸம்‌ அநுவர்த்தித்‌தால்‌ விரோதமில்லை –
ரஹஸ்யாம்ருதத்திலே, “இன்னமும்‌ அநுவாத பக்ஷத்திலே த்யாகம்‌ துஷ்கரத்வமடியாகவாகை ராஜஸமாய்க் கொண்டு ஜ்ஞாந கார்யமல்லாமையால்‌ நிஷ் ப்ரயோஜநமாம்‌- அதாவது காய க்லேஸ பயத்தாலே கர்மத்தை துக்க கரமென்று, ஸ்வரூபேண விட்டவன் ராஜஸ த்யாகம்‌ பண்ணினாகையாலே த்யாக பலமான கஷாய பாக மநோநைர்‌மல்ய ஐ்ஞாநோத்பத்த் யபிவ்ருத்‌திகளைப் பெறான் என்று தியாகத்தை வித்‌யோபதேஸத்திலே ஸரண்யண் தானே அருளிச் செய்தான் -அந்த ந்யாயத்தாலே இந்த அதிகாரிகளுக்கும்‌ துஷ்கரம்‌ என்று விடுமளவில்‌ நிரவஸேஷ த்யாகம்‌ கூடாமையாலே- தியாக பலமான ஆகிஞ்சன்யம் ஸித்தியாது-விதேய பக்ஷத்தில்‌ த்யாகம்‌ ஸாஸ்த்ரமாகையாலும்‌ ஸாத்விகமாகையாலும்‌, ஜ்ஞாந கார்யமே யாயிருக்கும்‌’ என்றும்‌- ஆகையால்‌ ஸர்வோபாய ஸம்ஸர்க்க அஸஹமாந ப்ரபதந ஸ்வரூபம்‌ விதேயமாகையாலே இவ் விடத்தில்‌ ஸர்வ தர்ம த்யாகத்‌தினுடைய விதேயத்வம்‌ மிகவும்‌ உபபந்நம்‌’ என்று வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌ அருளிச் செய்தார்‌. “சிலர் , ‘இங்கு த்யாகத்தை விதிக்கிறதன்று அநுவதிக்கிறது’ என்பர்கள்‌. அதுக்கு ஸப்‌த ஸ்வாரஸ்ய மில்லாமையாலே தர்ம த்யாக விஸிஷ்டமான ஸரணாகதியை விதிக்கிறதென்று ஆழ்வான்‌ பணிக்கும்‌- எண்று சரம ரஹஸ்யத்திலே நயினாராச்சான் பிள்ளை அருளிச் செய்தார்‌.

இதி ஸித்‌தாந்த

———-

அத பூர்வ பக்ஷ ப்ரணவ விரஹத: அஷ்டாக்ஷரத்வம்‌ மநோஸ் ச

ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே மூல மந்த்ராதிகாரத்திலே ந ஸ்வர ப்ரணவோங்காநி நாப்யந்யவித யஸ்ததா ஸ்த்ரீணாம்ஸ் ச ஸூத்ர ஜாதீநாம்‌ மந்த்ர மாத்ரோக்திரிஷ்யதே- என்கிறபடியே ப்ரணவ மொழிந்த போது, “தத்ரோத்தராயணஸ்யாதி பிந்துமாந்‌ விஷ்ணு ரந்தத. | பீஜ மஷ்டாக்ஷரஸ்ய ஸ்யாத்தேநாஷ்டாக்ஷரதா பவேத்‌” என்கிற ப்ரக்ரியையாலே எட்டெழுத்தும்‌ அநுஸந்தேயமாக விதிக்கப்பட்டது’ என்று, சொல்லப் பட்டது-

இதி பூர்வபக்ஷ க்ரந்த

அத ஸித்தாந்தம் -பிரணவ விரஹத அஷ்டாக்ஷரத்வம் மநோஸ் ச

இதினுடைய அஷ்டாக்ஷரத்வம்‌ சொல்லுகிற விடத்தில்‌, ஓமித்வேகாக்ஷரம்‌ என்று ப்ரணவத்தை ஓரக்ஷரமாகவும்‌, “நம இதி த்‌வே அக்ஷரே” என்று நமஸ்ஸூ இரண்டு அக்ஷரமாகவும்‌, “நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி* என்று. நாராயண பத,த்தை அஞ்சக்ஷரமாகவும்‌ ஸ்ருதி சொஸ்லுகையாலே ஸமஸ்தமான நாராயண பதத்தில்‌ நார பதத்‌தைப் பிரித்து ஷடஷரமாக்க ப்ரணவத்தை யொழிய அஷடாக்ஷரத்வம்‌ சொல்லுமவர்களுடைய பக்ஷம்‌ அவைதிகமாகையாலே அநாதரணியமாகக் கடவது’ என்று முழமுஷுப்‌படி வ்யாக் யாநத்திலே பெரிய ஜீயர்‌ அருளிச் செய்தார்‌.
*நஸ்வர ப்ரணவோங்காநி * இத்யாதிகள்‌-நாரதீ யாஷ்‌டாக்ஷர ப்‌ரஹ்ம வித்‌யையிலே ஜப ப்ரஸ்தாவபடித மாகையாலே ஸ்த்ரீ ஸூத்‌ராதிகளுக்கு ப்ரணவாதிகார நிஷேதம்‌- ஜப விஷயமாமத்தனை யென்று தத்வஜ்ஞர்‌ தெளிந்து கொள்வர்கள்‌. ஆகையால்‌ ‘விரோதாதிகரண ந்யாயத்தாலே ஸ்ருதி விருத்‌த ஸ்ம்ருதி அப்ரமாணமாகையாலே அநாதாரணீயம்‌’ என்று நிர்வஹித்து “ந ஸ்வர.” இத்யாதி வசநத்‌துக்கு கதி கல்பிப்பதும்‌ அவிவக்ஷிதமென்று கொள்வது -[ரஹஸ்ய த்ரய ஜீவாது முதலிய ரஹஸ்ய க்ரந்தங்களில்‌ இப்படி கதி கல்பிக்கப்பட்டது காண்க)
இதி ஸித்தாந்த,

அத, பூர்வ பக்ஷ. ஸருஷ்ட்யாதவ நைவ ஸக்தி ஸ்புட மதி மஹதாம்‌ நித்ய முக்தாதி காநாம்

ஸ்தோத்ர பாஷ்யத்திலே [ஸ்தோந்ர ரத்நே த்வத் ஆஸ்ரிதாதாம்‌ ஐகதுத்ப ஸ்திதி . இத்யாதி–விம்ஸ ஸ்லோக பாஷ்யே – ஏவம்‌. முக்தாநாம்‌-ஜகத் வ்யாபாரே ஸக்திரஸ்தி, தத் ப்ராப்திர்‌ நாஸ்தீதி பக்ஷோபி ந விசாரார்ஹ ந ஹி முக்தாநாம்‌
ஸர்வ ஸரீரத்வம்‌ அஸ்ருதத்வாத்‌, அநுபபத்தேஸ் ச। தத பாவே கதம்‌, பஹுஸ்யாம்‌
” இதி ஸங்கல்ப ஸக்தி, ததாவித ஸக்தி ஸாலிந தத,ப்ராப்திஸ் சாத்ர துர்வசா ததைவ நித்யாநாமபி | உக்தம்‌ ஹி பாஷ்யே அநந்த பத வ்யாக்யாநே ‘ஸாதிஸய ஸ்வரூப ஸ்வகுணா ; நித்யா வ்யாவ்ருத்தா:’ இதி அத யதோக்த ஏவார்த்த ‘ஜகத் ஸ்ருஷ்ட்யாதி பார அஸ்மிந்‌ ஸமர்ப்பித இதி கேஷாஞ்சித்‌ வயாக்‌யாநம்‌ து. பகவததீந தத் ப்ரபாவாதிஸய ப்ரஸம் ஸார்த்தம்‌ | ஏகஸ்‌யைவ ஹி ஸர்வ ஸரீரிண “பஹுஸ்யாம்‌ இதி ஸங்கல்ப க்ஷமத்வமிதி ப்ராகேவ ஸ்தாபிதம்‌। அத எவ ஹி “ஸ்ரீமதி விஷ்வக்ஸேநே ந்யஸ்த ஸமஸ்தாத்மைஸ்வர்யம்‌* இதி ஸ்ரீவைகுண்ட கத்‌யோக்திரபி , பக்தாநாம்‌ ஸ்வாமிநோ வா விக்ந ப்ரஸமநே பரிஜன நியோகாதவ் ச யோஜநீயா! விஷ்வக்ஸேந மந்த்ரே து *விஸ்வம்‌ ஸ்ருஜ இதி பதம்‌ முக்தவத் ப்ரபூத ஸ்ருஷ்டி மாத்ர விஷய பரம் விசேஷ்ய பூத பரமாத்ம பரம்‌ வா நேதவ்யம்‌‘ என்று சொல்லப் பட்டது.

இதி பூர்வபக்ஷ் க்ரந்த,.

அத, ஸித்‌தாந்த ஸ்ருஷ்ட்யாதெவ் சாஸ்தி ஸக்தி) ப்ரபு நியமநதோ நித்ய முக்தாதிகாநாம்‌.

விஷ்வக்ஸேந மந்த்ரத்திலே ,*விஸ்வம்‌ ஸ்ருஜே * என்று இவருக்கு ஸ்ரஷ்ட்ருத்வம் கண்டோக்தம் –ஸங்கல்ப மாத்ரா வக்லுப்த ஜகஜ் ஜென்ம ஸ்திதி த்வம்ஸாதிகே ஸ்ரீமதி விஷ்வக்‌ஸேந ந்யஸ்த ஸமஸ்தாத்மைஸ்வர்யம்‌” என்று ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே பாஷ்யகாரர்‌ அருளிச் செய்தார்‌- ஆகையாலே ‘நித்ய முக்தாதிகளுக்கு ஸ்ருஷ்ட்யாதியில்‌ ஸக்தி யில்லை என்கை- எம்பெருமானார்‌ திவ்ய ஸூக்திக்கு அத்யந்த விருத்‌தமாகையாலே எம்பெருமானார்‌ தர்ஸநஸ்தராலே அத்யந்த பரிஹாஸ்ய மாயிருக்கும்‌- “தம்முடைய ஸங்கல்பத்‌தாலே ஐகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைப் பண்ணக்‌ கடவ ஸேனை முதலியார்‌ தொடக்கமான திவ்ய புருஷர்களும் வரிசையிலே ஸேவித்திருக்க’ என்கிறபடியே ஸ்ரீய பதியான ஸர்வேஸ்வரன் தானே தன்னுடைய உபய விபூதியையும்‌ அன்ன புகழ்‌ முடும்பை யண்ணலுகாசிரியருக்கு ஸாக்ஷாத் கரிப்பிக்க அப்படியே விஸத விஸததர விஸத தமமாக உபய விபூதியையும்‌ யதாவஸ்தித ஸ்வரூப ஸ்வபாவமாக ஸாக்ஷாத் கரித்த ப்ரகாரத்துக்குப்‌ பாசுரமிட்டருளின அர்ச்சிராதியிலும்‌ “இதில்‌ நித்யராவார்‌ ஒரு நாளும்‌ ஸம்ஸார ஸம்பந்தமாகிற அவத்‌யமின்றிக்கே. நிரவத்‌யராய்‌ -வானிளவரசு வைகுந்தக்‌. குட்டன்‌ வாசுதேவன்‌- என்கிற வைகுண்ட நாதனுக்கு விண்ணாட்டவர்‌ மூதுவர்‌: என்கிறபடியே பட்டம்‌ கட்டுகைக்கு உரியராம்படி மூப்பரான மந்த்ரிகளாய்‌ ஈஸ்வர நியோகாத்‌ ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைப்‌ பண்ணவும்‌ ஸக்தராய்‌’ என்றும்‌, ஸ்தோத்ர ரத்நத்தில்‌,”த்வத் ஆஸ்ரிதாநாம்‌“என்கிற ஸ்லோக வ்யாக்‌யாநத்‌தில்‌ தேவரை தூர நின்று ஆஸ்ரயிக்கிற ப்‌ரஹ்மாதிகள்‌ ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கர்மங்களை உபதேஸ க்ரமத்தாலே பெற்று ஸம்ஸார விமோசநத்தைப் பண்ண ஸக்தராண பின்பு, அநந்யப்ரயோஜநராய் ஆஸ்ரயிக்குமவர்கள்‌ அவற்றைச்‌. செய்யப்‌ பார்த்தால்‌ லீலையாகா நின்றது- முக்தர்‌ தேவரோடே லீலா ரஸம்‌ அநுபவிக்கும்போது ஸங்கல்பத்தாலே ஜாத்யாதிகளை ஸ்ருஷ்டித்திறே அநுபவிப்பது. “ஸங்கல்பாதேவ தச்ச்‌ருதே.* *ஸங்கல்பாதேவாஸ்ய பிதரஸ் முக்த்திஷ்‌டந்தே” ஜகத் ஸ்ருஷ்ட்யாதி ப்ராப்தி யில்லாமைபோக்கி ஸக்தி யில்லாமையாலே தவறுகிறாரல்வர்‌’ என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தருளினார்‌-
ப்‌ரஹ்மாதிகளுடைய ஏக தேஸ ஸ்ரஷ்ட்ருத்வாதி ஸக்தி ஈஸ்வராதீனை யாகிறாப் போவே நித்ய முக்தருடைய ஸகல ஐகத் ஸ்ருஷ்ட்யாதி ஸக்தியும்‌ ஈஸ்வராதீனை யிறே- ஆகையால்‌. நித்யமுக்தர்களுக்கு ஸ்ருஷ்ட்யாதியில்‌ ஸக்தி உண்டென்‌னுமிடம்‌ உபபந்நம்‌-

இதி ஸித்தாந்தம்

அத பூர்வ பக்ஷ -தோஷா த்‌ருஷ்டிஸ்து வாத்ஸல்யம்‌-

ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே த்வயாதிகாரத்திலே, “இவற்றில்‌ வாத்ஸல்யமாவது. – தோஷே யத்‌யபி தஸ்ய ஸ்யாத்‌” என்கிறபடியே ஆஸ்ரிதருடைய தோஷம்‌ பாராதே அங்கீகரிகைக்கீடான இரக்கம்‌” என்றும்‌, ரஹஸ்ய ரஷையில்‌, ப்ருது கத்‌யாதிகாரத்திலே, “வாத்ஸல்யம்‌ – ஸரணகத வத்ஸல ‘ இத்யாத்‌யபிப்ரேதா ஸ்வ ரக்ஷணீ யதயாபி மதேஷு தோஷதிரஸ்காரிணீ ப்ரீதி தோஷாணமபி குணத்வேந தர்ஸநம்‌’ இதி து அதிவாத,! என்றும்‌ சொல்லப்பட்டது.

இதி பூரவ பஷ க்ரந்த,.

அத, ஸித்‌தாந்த-தோஷேஷு இச்சைவ வாத்ஸல்யம்‌.

“வாத்ஸல்யம்‌ நாம தோஷேஷ்வபி குணத்வ புத்‌தி யதா மாதுர்வத்ஸே’ என்று ஸமந்வயாதிகரண பாஷ்ய ஸ்ருத ப்ரகாஸிகையிலும்‌, ‘வாத்ஸல்யம்‌ நாம தோஷேபி குணத்வ புத்தி யதா ஸத்‌ய ப்ரஸூதாயா தேநோர் வத்ஸே ‘ என்று ஸரணாகதி கத்‌ய ஸ்ருத ப்ரகாஸிகையிலும்‌ வேத வ்யாஸ பட்டர்‌ அருளிச் செய்தார்‌-
ஞான ஸாரத்திலே, “அற்றமுரைக்கில் வடைந்தவர் பாலம்புயை கோன் குற்றமுணர்ந்திகமும்‌ கொள்கையனோ- எற்றே தன் கன்றினுடம்பின்‌ வழுவன்றோ காதலிப்பது அன்றதனை ஈன்றுகந்த வா’ (25-பா) என்று அருளாளப்‌ பெருமாளெம்‌பெருமானார்‌ அருளிச் செய்தார்‌-(இது ப்ரஷிப்தம் ] (அதற்கு. “ப்ரபந்நாந் மாதவஸ் ஸர்வாந்‌ தோஷேண பரிக்ருஹயதே | அத்யஜாதம்‌ யதா வத்ஸம்‌. தோஷேண ஸஹ வத்ஸலா(பரிக்ருஹ்யதே -பரிக்ருஹ்ணா நீத்யர்த்த ஆர்ஷத்வான் ந தோஷ என்று பவ் ராணிக ப்ரமாணம் சேர்த்தருளினார் பெரிய ஜீயர் )-குன்றனைய குற்றம்‌ செயினும்‌ குணம்‌ கொள்ளும்‌” *செய்தாரேல் நன்று செய்தார் *செய்த குற்றம்‌ நற்றமாகவே கொள் ஞால நாதனே – என்றித்யாதி ஆழ்வார்களும்‌ அருளிச் செய்தார்கள் – தோஷம்‌ போக்யமாகில் (தோஷம்‌)புத்‌தி பூர்வகமாகச் செய்ய வேண்டி வாராதோ வென்னில்‌ வாராது – *உண்ணிலாவிய வைவரால்‌ குமை தீற்றி , *பல நீ காட்டிப் படுப்பாயோ”, *ஐவரறுத்துத்‌ தின்றிட வஞ்சி நின்னடைந்தேன்‌” இத்யாதிகளிலே ஜ்ஞாநி களுக்கு தோஷம்‌ பயாவஹமாகச்‌ சொல்லுகையாலே புத்‌தி பூர்வகமாகச் செய்யானென்னுமிடம்‌ (‘செய்ய வேண்டா என்னுமிடம்‌! – (க) பாடம்‌] ஸித்தம்‌-தனி சரமத்திலே “வாத்ஸல்யமாவது – ஸத்‌யோஜாதமான வத்ஸத்தின் பக்கல்‌ தேநுவுக்கு உண்டாண காமம்‌, அதாவது – சுவடு பட்ட தரையிலே புல் தின்னாத பசு அன்றீன்ற கன்றின்‌ தோஷத்தை தோஷமெண்று கருதாதே தனக்கு போக்யமாகக்‌ கொன்ளுமா போலே, ஆஸ்ரிதருடைய தோஷத்தைத்‌ தன் பேறாகப்‌ போக்கித்‌ தன் கல்யாண குணங்களாலே தரிப்பிக்கை! என்று பிள்ளை லோகாசார்யர்‌ அருளிச் செய்தருளினார்‌-

இதி ஸித்‌தாந்த-

———–

அத பூர்வபக்ஷ- பர துக்கத்‌ த்‌ருதீச்சா தயா.

ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே த்வயாதிகாரத்திலே, ‘பரம காருணிகத்வமாவது – ஸவார்த்த, நிரபேக்ஷையான பர துக்க நிராகரணேச்சை.! என்றும்‌, ரஹஸ்ய ரஷையில் – ப்ருது கத்யாதிகாரத்திலே.’காருணிகத்வம்‌ – அநுத்திஷ்ட ஸ்வ ப்ரயோஜநாந்தர பர துக்க நிராகரணேச்சா | பர துக்க துக்கித்வாதிகம்‌ து ந லக்ஷணம்‌ அவ்யாப்தே அதி வ்யாப்தேஸ் ச । ஸர்வ ப்ரஸாஸிது, ஸாபராத நிக்‌ரஹஸ்யாபி ஸாஸ்த்ர ஸித்‌ததவாத் ததநுரோதேந காருண்யம்‌ நியந்தவ்யம்‌” என்றும்‌ சொல்லப் பட்டது.

இதி பூர்வபக்ஷ க்ரந்த-

அத, ஸித்‌தாந்த-பர துக்க அஸஹத்வம்‌ -தயா

ஸ்ரீ பாஷ்யத்திலே பல விடங்களிலும்‌ தயா ஹி நாம ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க அஸஹிஷ்ணுதா’ என்று பாஷ்யகாரர்‌ அருளிச் செய்தார்‌- திருவாய்மொழி உயர்வற உயர்நலத்தின்‌ ஈட்டிலே துயரறு சுடரடி என்று எம்பெருமானார்‌ அருளிச் செய்யும்படி வ்யஸநேஷு மநுஷ்யாணாம்‌. ப்‌ருஸம்‌ பவதி துக்கித- என்றால்‌ துக்க நிவ்ருத்தியும்‌ அவனதாயிருக்குமிறே- இவர்‌ துயரற தான்‌ துயர்‌ தீர்ந்தானாயிருக்கை- இத்தால்‌ இவர்‌ மயர்வற அவன் துயரற்றபடி” என்றும்‌, ‘(அவன் மேவி யுறை கோயில்‌) அவன் பரம பதத்தில்‌ உள் வெதுப்போடே போலே காணுமிருப்பது- ஸம்‌ஸாரிகள்‌ படுகிற கிலேசத்தை அநுஸந்தித்து இவை என்படுகிறனவோ’ என்கிற திருவுள்ளத்தில்‌ வெதுப்‌போடே யாயிற்று அங்கிருப்பது. “நோபஜநம்‌ ஸ்மரந்‌ என்று கொண்டு இங்குத்தை துக்கத்தை நினையாது ஓழிய வேண்டுவது பண்டு துக்கியாயிருந்து ஸம்ஸாரத்தில் நின்றும்‌ போனவனுக்கிறே. இங்குத்தை துக்கத்தை நினைக்குமாகில்‌, அநுபவிக்கிற ஸுகத்துக்குக் கண்ணழிவாகாதோ என்னும்‌ கண்ணழிவில்லை யிறே அவனுக்கு- ‘பரமபதத்திலும்‌ ஸம்ஸாரிகள்‌ படுகிற கிலேஸத்தை அநுஸந்தித்துத்‌ திருவுள்ளத்தில்‌ வெ(து)றுப்போடே யாயிற்று எழுந்தருளி யிருப்பது’ என்று பட்டர்‌ அருளிச்‌ செய்ய ஆச்சானும்‌ பிள்ளை யாழ்வானும்‌ இத்தைக் கேட்டு-‘பரம பதத்திலே ஆநந்த நிர்ப்பரனா யிருக்கிற விருப்பிலே திரு உள்ளத்திலே ஒரு வியசனத்தோடே இருந்தான் என்கை
உசிதமோ? என்றார்கள்‌ என்று பண்டிதர்‌ என்கிறவர்‌ வந்து விண்ணப்பம்‌ செய்ய “வ்யஸநேஷு மநுஷ்யாணாம்‌ ப்‌ரூஸம்‌. பவதி துக்கித.” என்றது குண ப்ரகரணத்திலேயோ, துக்க ப்ரகரணத்திலேயோ’ [ தோஷ ப்ரகரணத்திலேயோ’ என்றபடி) என்று கேட்க மாட்டிற்றிலீரோ? இது குணமாகில்‌ குணம்‌ என்று பேர் பெற்றவற்றில்‌ அங்கில்லாததொன்றுண்டோ” என்று அருளிச் செய்தார்‌ *ஸமஸ்த கல்யாண குணாத்மகோ அஸவ் * என்னக் கடவதிறே. தன்னிச்சை யொழிய கர்ம நிபந்தநமாக வருமவை யில்லை. என்னுமத்தனை போக்கி அநுக்‌ரஹ கார்‌யமாய்‌ வருமவை யில்‌லை என்னில்‌-முதலிலே ‘சேதநனன்றிக்கே ஒழியுமிறே ‘ஸ ஏகாகீ ந ரமேத என்றது – நித்ய விபூதியும்‌ குணங்களும்‌ உண்டா யிருக்கச்‌ செய்தே யிறே” என்றும்‌ நம்பிள்ளை அருளிச் செய்தருளினார்‌-
ஸ்ரீ ஸஹஸ்ரநாமத்திலே -விகர்த்ரு- நாம பாஷ்யம்‌ அருளிச் செய்யா நின்ற பட்டர்‌ ஸ்வார்த்த ஹர்ஷ ஸோக அந்ய பாவேபி பரார்த்த தத்‌ ப்ரஸக்திரதோஷ | அந்யதா பரதுக்க துக்கித்வாதயோ குணா கதம் அஸ்ப ஸ்புட- என்று வ்யக்தமாக அருளிர் செய்து போந்தாரிற ஸ்ரீ வேத வ்யாஸ பட்டரும்‌- தயா ஹி ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க அஹிஷ்ணுதா என்று ஜிஜ்ஞாஸ அதிகர ஸ்ருத ப்ரகாஸிகையிலும்‌ காருண்யம்‌. – ஸ்வார்த்தா ந பேஷயா பர துக்க அஸஹிஷ்ணுதா” என்று சரணாகத ஸ்ருத ப்ரகாஸிகையிலும்‌ அருளிச் செய்தார் – *ஆவாவென்றருள்‌ செய்தான்‌” என்றும்‌, ”அடியோர்க்காவாவென்னாய் என்றும்‌, “ஆவா வடிபணிவனென்‌று அருளாய் ? என்றும்‌. *அடியேர்க்‌காவாவென்றிரங்கி* என்றும்‌, “ஆவாலென்நடியேத்கிறை இரங்காப்‌* ன்றும்‌. அப்போ வப்போ வென்று க்ருபை பண்ணி யென்றும்‌- க்ருபை யாகிறது- பர துக்க அஸஹிஷ்ணுத்வமென்றும்‌ , “மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள்‌ ஸ்பஷ்டமாக அருளிச் செய்தார்கள்‌-தத்வ த்ரயத்திலே – ஈஸ்வர ப்ரகரணத்திலே, “க்ருபை துக்கிகளுக்கு ‘ என்கிற விடத்தில்‌ வ்யாக்‌நதத்தில் -கிருபையாவது -பர துக்க அஸஹிஷ்ணுத்வமாகையாலே -ஆவாரார் துணை என்று அவ நீர் கடலுள் அழுந்தும்‌ நாவாய் போல்‌ பிறவிக்கடலுள் நின்று துளங்குகை முதலான துக்க முடையவர்களுக்கு உறுப்பாமிருக்குமென்கை என்று பெரிய ஜீயர்‌ அருளிச் செய்தார்‌.
ஆகையால்‌ நம்மாழ்வார்‌ முதலான ஆழ்வார்‌களும்‌, எம்பெருமானார்‌ முதலான ஆசார்யர்களும்‌ ஒரு மிடறாக அருளிச் செய்தருளின ஸுக்திகளுக்கு விருத்‌தமாக அர்த்த கல்பநம்‌ அத்யந்தாநுப பந்நம்‌-
இப்படிப் பிள்ளை லோகாசார்யர்‌ பெரிய ஜீயர்‌ முதலான நம்‌ ஆசார்யர்கள்‌ அருளிச் செய்த அர்த்த விஸேஷங்களுக்கே ப்ரமாணோபபத்தியில்‌ ஸம்ப்ரதாயமுண்டாகையாலே இதுவே ப்ராமாணிகருக்கு உபாதேய மென்றதாயிற்று-

அழகிய மணவாள நயினார்‌ அருளிச் செய்த ரஹஸ்ய விவேகம்‌ முற்றிற்று.

அவன் பக்கலிலே நிஷிபத பரராயிருககின்ற நீங்கள் நாலவரிருவர் இங்கிருககிற நாலு நாளும்‌ த்யாஜ்யமான அர்த்த காமங்களைப் பறறி “சீறு பாறு? என்னாதே நம்‌ பெரிய குழாத்திலே போயப் புகுமளவும ஒரு மிடறாய் அநுபவிக்கப் பாருங்கோள் –பூர்வர் ஸ்ரீ ஸூக்தி ரத்னம்
எம்பெருமானார் திருவடி சம்பந்தம் பெற்ற பாக்யவான்கள் வம்சத்தில் பிறந்து வைத்து-ஞான அனுஷ்டானங்களை ஒழிந்தாலும் அவர்கள் ஸம்பந்தமே பேற்றுக்கு உபாயமாகிறாப் போலே அவை யுண்டானாலும் இழவுக்கு ௮வர்கள் பககல் அபசாரமே போதும” ஸ்ரீவசந பூஷண ஸ்ரீ ஸூக்தி –
எம்பெருமானாருடைய திருவடி ஸம்பத்திகளிலே, கூரத்தாழவான் எம்பார் பட்டர் நஞ்சீயர் நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளை பிள்ளை லோகாசாரியர் திருவாய் மொழிப் பிள்ளை மணவாள மா முனிகள் என்கிற ஒரு ஆசார்ய பரம்பரையும் –
திருக் குருகைப் பிரான் பிள்ளான் , கிடாம்பியாச்சான் , எங்களாழவான் , நடாதூரம்மாள் , கிடாம்பியப்புள்ளார் , வேதாந்த தேசிகன் என்கிற ஒரு ஆசார்ய பரம் பரையும் ஏற்பட்டு இரணடு வகுப்பிலுமுள்ள ஆசாயர்களும் உபய வேதாந்த ப்ரவர்த்தங்களாய அற்புதமான ஸ்ரீ ஸூக்தி ரத்னங்களாலே இவ் விபூதியை இருள் தருமா ஞாலமென்று பேச வொண்ணாத படி ஆக்கி யருளினவர்கள்-பிராசீனமாயும் அதே சமயம் குண புஷ்கலமாயும் இருக்கும் நம் ராமானுஜ தரிசனத்துக்கு எதுவுமே நிகரில்லையே

யதி ஷமாப்ருத் த்ருஷ்டம் மதம் இஹ நவீ நம் ததபி கிம் –
தத் பராக் ஏவ அந்யத் வத ததபி கிம் வர்ண நிகேஷ
நிசாம் யந்தாம் யத்வா நிஜமத திரஸ்கார விகமாத்
நிரா தங்கா டங்க த்ரமிட குஹதேவ பரப்ருதய –57

ஓ, ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் சமீபத்தியது என்பதில் நீங்கள் திருப்தி அடைகிறீர்கள்.
எல்லாம் சரி. எந்த பிரச்சினையும் இல்லை. அப்படியே இருக்கட்டும். என்றால் என்ன?
அப்படியானால், அதற்கு முன்னரே ஏதோ ஒரு மதம் இருந்திருக்க வேண்டும் என்று
நீங்கள் சுட்டிக் காட்டலாம். இது எதை நிறுவுகிறது-பூர்வர்கள் ஸித்தாந்தம் என்னும் ஸ்வா ரஸ்யம் ராமானுஜ தர்சன ஸித்தாந்தத்தை உரைத்துப் பார்த்தால் அகப்படும் -அநாதி மதமே யன்றி நவீநமதமன்று என்பது தெற்றென விளங்கும்-என்றவாறு-ஒழிக்க ஒழியாத ஸம்பந்த ஞான மாத்ரமே மமககு மேலான நன்மைகளுக்கு எல்லை அஃது உணடானால் நாம் எம் பெருமானோடு விவாதப் பட மாடடோம் – எவ்விதப் பணி விடைகளும் நாம் செய்தோமாவோம்

யமோ வைவஸவதோ ராஜா யஸ தவைஷ ஹருதி ஸதித; தேந சேத விவாதஸ தே மா கககாம மா குரூ ந கம ‘ மநு -8-92-ஸர்வ நியாமகன் -தண்டதரன் -ஸூர்ய வம்சத்தன் -ஆதித்ய மண்டல மத்யவர்த்தி-ஸமஸ்தருக்கும் இனியவன் -உள்ளத்திலே உறைபவன் -இதை உணர்வது சேஷத்வ கைங்கர்யம் செய்தால் கங்கை நீராட்டமோ தீர்த்த யாத்திரையும் வேண்டாமே-அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே –1-2-7-இந்த ஐஸ்வரியம் எல்லாம் நமக்கு வகுத்த சேஷியானவனுடைய ஐஸ்வரியம் என்று அனுசந்திக்கவே – நினைத்தால் தானும் அதுவாக அந்வயிக்கலாம் இறே -சேரலாமே!-ஆன பின்னர், சம்பந்த ஞானமே வேண்டுவது என்கிறார்.

ஒரு வணிகன் தன் மனைவி கருவுற்று இருக்குங்காலத்தில்-அர்த்த ஆர்ஜனம் – பொருள் தேடும் விருப்பினால் வெளி நாடு சென்றான்; அவளும் கரு உயிர்த்தாள்; மகனும் தக்க வயது அடைந்து தனக்கும் தகப்பனாருடைய வாணிகமே தொழிலாக மகனும் பொருள் தேடப் போனான். இருவரும் தத்தமக்கு வேண்டிய சரக்குப் பிடித்துக்கொண்டு வந்து ஒரு பந்தலில் தங்கினார்கள்; அஃது, அவ்விருவருக்கும் இடம் போதாமையால் அம்பு அறுத்து எய்ய வேண்டும்படி விவாதம் உண்டான சமயத்தில், இருவரையும், அறிவான் ஒருவன் வந்து,‘இவன் உன் தமப்பன்; நீ இவன் மகன்,’ என்று அறிவித்ததால்,கீழ் இழந்த நாள்களுக்குச் சோகித்து, இருவர் சரக்கும் ஒன்றாய்,அவன் -ரக்ஷகனாய் -காப்பாற்றுகின்றவனாய் இவன் -ரஷ்யமாய் -காப்பாற்றப்படும் பொருளாய் அந்வயிக்கலாம் அன்றோ-கலந்துவிடுவார்கள் அன்றோ? அது போன்று,

உன்னுமின் -ஸ்மரணம் -சேர்மினே -ஸங்கமம் -புல்கு -பஜநம் -பற்று -கைப்பிடிக்க அத்யாவசாயம் -அடங்கு -சேஷ வ்ருத்திகள் செய்து -ஒடுங்கு -ஸாயுஜ்யம் –இவையே பரபக்தி பரஞான பரமபக்தி -காதல் அன்பு வேட்க்கை அவா -சங்க காம அநுராக ஸ்நேஹ உதயவஸாதி தசைகள்-பகவத் தாஸ்யமே ஆத்மாவுக்கு நிரூபகம்‌ என்று உணர்ந்த பெரியோர்‌ வர்ணாஸ்ரம வித்யா விருத்தங்களை கர்தபஜந்மம்‌, ஸ்வவவாதமம்‌, சில்பநைணம்‌, பஸ்மாஹுதி, ஸவவிதவாலங்கார மென்று கழிப்பர்கள்‌. ஆத்ம ஸ்வரூபத்தை அறியாதவர்‌ ப்ராம் மண்யா ஷிப்ரயுக்தம்‌ குலம்‌ உச்ராயம்‌ என்றுப்ரமிப்பர்கள்‌, தோல் புரையே போமதுவான இதன்‌ உண்மையை அஜ்ஞர்கள்‌ எங்ஙனம்‌ அறிவர்‌?-நன்பொருள்‌ என்கிறது ஆத்மாவை-தாஸ்ய வைலக்ஷண்யத்தை யுடையனாகையாலே- பகவச் சேஷத்வமாவது பகவத்தளவில்‌ நில்லாகே சேஷத்வ காஷ்டையில்‌ நிற்கக் கடவ ஆத்ம வஸ்‌துவைக் கிடீர்‌ நானபஹரித்தது- என்று நம்பினேன் பிறர் நன்பொருள் -ஆக நன்மக்கள்‌ என்கிறது ஆத்ம கத சேஷத்வ அனுரூபமான ப்ரபதனத்‌தில் இழிந்தவர் என்கிறது

குழந்தைகள் போல்‌ தனக்கென்றொரு பிரவிருத்தி யின்‌றிக்கே மாசில்லாதாரா யிருக்குமவர்கள்‌ ப்ரபந்கர்‌ என்றதாயிற்று, இது கொண்டே ப்ரபந்ர்குலத்தை-மாசில்குடி என்று ஆழ்வாரும்‌ அருளிச்செய்தார்‌. மாசாவன அகங்கார மமகாரங்கள்‌ ,
கஹந்தே நாஹந்தே விஹரண பதம்‌‘ என்று அகங்காரத்தை ப்ரபந்நர்கள்‌ “வானோ மறி கடலோ மாருதமே” என்கிற கணக்‌கிலே விரட்டி யடி.ப்பவர்கள்‌- ஆகையாலிறே மாசில்‌ குடியாயிற்று ப்ரபந்ந குலம்‌-ப்ரபந்நன்‌ தலைக்கு மேலேயும்‌ தளிர் புரையும்‌ தண்மை திருவடிகளுக்கு இயற்கையாம்‌, லாலித புத்ரர்களுக்கு அபராத பயம்‌ இல்லை யென்பது வெள்ளிடை மலை

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வரவரகுருவரர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

அறியாததும் அறிந்ததும் -அறிவு பற்றி ஸ்ரீ அருளிச் செயல்களும் வியாக்யானம் ஸ்ரீ ஸூக்திகளும்-

September 4, 2025

இன்னார் என்று அறியேன் (10-10-9-)என்றவரே அறிந்தேன் நான் (11-3-3-)என்கிறார்

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன்
—10-10-9-

சாரங்க பாணியின் படியையும் ஆராவமுத ஆழ்வாரையும் அனுபவித்து அவர்களுடைய போக்யதை நெஞ்சில் ஊறி முன்னே வந்தால் போல் இவளுக்குப் பட மனுஷ்யத்தவே பரத்வம் இவருக்கு அடையாளம் என்று சொல்லிக் கூப்பிடுகிறாள் ஆழியும் சார்ங்கமும் சேர்ந்து அனுபவம் இதில் –சக்ர பாணி சாரங்க பாணி -சேர்ந்தே புறப்பாடு இங்கு -தேவனோ மனுஷ்யனோ அறிகிறிலேன்-தேவத்வ ஸூ சகமான திரு ஆழியையும்
மனுஷ்யத் வைகாந்தமாய் ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய   -ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே-அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம் – இன்னார் என்று அறியேன் –

அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே  –11-3-3-

நெருங்க கலந்த போதாக – இன்னார் என்று அறியேன் -என்னிலும் -என்னும் –
காதாசித்கமாக சம்ஸ்லேஷித்த போது- ஸ்வா பாவிக சேஷித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் -அறிவேன் என்னிலும் -என்னும் –(இன்னார் என்று அறியேன் என்றவர் அன்னே இவரை அறிவன் என்கிறாரே –நீர்மை காணப்போகாதே -எத்திறம் என்று மோஹிக்கப் பண்ணுமே )தாம் ஹித ப்ரவர்த்தராய் இருக்கும் இருப்பைக் காட்டி
நெஞ்சை நெகிழ்ந்து அது பலிக்கும் அளவானவாறே ஸ்ப்ருஹணீயமான வளையை அபேஷித்து கால் வாங்கப் போகாமே த்வார ஹிருதயத்திலே வந்து புகுந்து
நித்தியமான ஆத்ம வஸ்துவையும் தமக்காக்கிக் கொள்வாரைப் போலே இரா நின்றார் –இவர் மநோ ரதம் நமக்கு நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை –உடைமை நாம் இட்ட வழக்கானதற்குப் பின்னே உடையவரும் நாம் இட்ட வழக்கு அன்றோ -என்று இருக்க மாட்டுகிறிலர்-

இவரை அறிவேன் என்ற படி எங்கனே -என்ன – ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய த்ரவ்யம் ஒழிய
தமக்கு தாரகம் இல்லையாம் படி யிருக்கிறவரை எங்கனே நாம் அறியோம் -என்னும் படி தான் –

அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய்  மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே—11-3-4-

அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு–ஸ்வ யத்னத்தாலே அறிய இழிந்தவர்கள் –
யதோ வாசோ நிவர்த்தந்தே – யஸ்யாமதம் தஸ்யமதம் -என்னும் காட்டில்
அவன் காட்டின வழியே அறிய இழிந்த நமக்கு அறியப் போகாது யென்று சொல்லலாமே –

வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்றோர் நெஞ்சு அறியான் அடியேனுடைச்
சிந்தையாய் வந்து தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் இது சிக்கெனப் பெற்றேன்
கொந்துலாம் பொழில் சூழக் குடந்தைத்  தலைக் கோவினைக் குட மாடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம் பிரானை எத்தால் மறக்கேனே –7-3-3-

பிரதம ஸ்வீகாரத்துக்கு முன்பு தாம் இட்டது ஒரு பச்சை உண்டாய் அதுக்கு உபகரித்தான் ஆகில் இறே இந்நாள் என்னல் ஆவது – அங்கன் ஓன்று இல்லாமையாலே-பிரதம ஸ்வீகாரத்தை -வந்த நாள் -என்னும் இத்தனை யாய்த்து சொல்லல் ஆவது –ஆவா சந்த்வஹ மிச்சாமி -என்கிறபடியே என்னுடைய ஹிருதயத்தை தனக்கு இடமாக்கிக் கொண்டான் –
(நீர் காட்டும் இடத்தில் குடிசை கட்டி வாழ பெருமாள் ரிஷிகள் இடம் பிரார்த்தித்து போல் )-திருவடி -திரு வநந்த வாழ்வான் தொடக்க மானவர் பக்கலிலும் போவானாய் இருக்கிறிலன்-
அனந்தன்  பாலும்  கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து -பெரியாழ்வார் -5-4-8–என்றும்
இட வகைகள் இகழ்ந்திட்டு -பெரியாழ்வார் –5-4-10–என்றும்
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் என்று ஒழிந்தன கொல்-என்றும்
சொல்லுகிறபடியே-இவர் உடைய திரு உள்ளம் ஒழிய வேறு ஓர் இடம் உண்டாக நினைத்து இருக்கிறிலன் – பின்னை அவ்வோ இடங்களிலே இவன் இல்லையோ என்னில்
சௌபரி பல வடிவு கொண்டு   அனுபவித்தால் போலே இதுக்கு அவ்வருகு இல்லை என்னலாம் படி அவன் முகம் கொடுத்துக் கொண்டு இருந்த படி
(இளம் கோயில் கை விடேல் என்று இவர்கள் பிரார்த்திக்கும்படி )

வண்டமரும் வன மாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-9-

முதல் நாள் கண்டால் ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் ஆக முன்பே கண்டறியும் முகமாய் இருந்ததீ   – எவ் ஊரில் தான் கண்டது -என்னும்படி இருக்கும் –சிர பரிசயம் பிறந்தால் பின்பு -முன்பு ஓர் இடத்திலும் இவனைக் கண்டு அறியோம் – என்னும்படியாய் இருக்கும் – நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி-பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -( வர்த்தமான பிரயோகம் ) எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ – இப்படியாக வேண்டாவோ -என்று ஜீயர் -(நஞ்சீயர்)

வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் யிதுவே யமையாதோ
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா வுன்னை   என்றும் மறவாமை பெற்றேனே —8-9-5-

நித்ய ஸூரிகள் இடம் போவதற்கு நினைக்காமல் -போகாமல் என்னாமல் போக அறியாமல் –அந்தாமத்து அன்பு செய்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தாய்-இதுக்கு மேற்பட நீ பண்ணக் கடவதொரு உபகாரம் உண்டோ –நான் இருந்த இடம் தேடி நீயே வந்தாய் –இவன் வந்திடுவான் எனக்கு என்றும் இராத என் ஹிருதயத்திலே நீயே வந்து புகுந்த பின்பு –என் ஸ்வாமி யானவனே –ஸ்வாமி ஆனபடியால் சொத்தை விடமாட்டாமல் வந்து புகுந்தாய்
புகுந்த பின்பு அடியேனுக்கு நீயே எந்தாய் என்ற ஞானத்தையும் அளித்து அருளினாய்

அறிந்துஅறிந்து தேறித்தேறி யான் எனது ஆவியுள்ளே – நாலாயி:3303/1

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-

பரத்வம் என்ன -பஜ நீயத்வம் என்ன -ஸுலப்யம் என்ன -அபராத சஹத்வம் என்ன -இவ்வடைவிலே ஞானம் பிறக்க பிறக்க அந்தக்கரணமும் க்ரமத்தாலே தெளிந்து-முதல் திருவாய்மொழியிலே பரத்துவத்தை நினைந்தார், அது விஷயமானவாறே பிறப்பது ஒரு தெளிவு உண்டே அன்றோ? அந்தத் தெளிவும்; பின்பு, ‘வணங்கத்தக்கவன்’ என்று அருளிச்செய்தார், அதனாலே பிறந்த ஒரு தெளிவும்; பின்பு ‘சுலபன்’ என்று கூறினார், ‘அங்ஙனம் கூறியதால் பிறந்ததொரு தெளிவும்; பின்பு, ‘குற்றங்களைப் பொறுப்பவன்’ என்று கூறினார், அதனாலே பிறந்தது ஒரு தெளிவும் இப்படிக் கிரமத்திலே அன்றோ திருவாய்மொழி முடிய நடந்தது? இவையெல்லாம் மானச அனுபவங்களே அன்றோ?

அறிந்து அறிந்து தேறித்தேறி’ என்றதனை அர்த்த பஞ்சக பரமாக்கி வேறும் ஒரு கருத்து அருளிச் செய்கிறார், ‘
‘பரம்பொருளின் சொரூபத்தை அறிந்து தேறி, அந்தப் பரம்பொருளின் யாதாத்மியத்தை யறிந்து தேறி’ என்றபடி
இப்படியே, மற்றை நாலுக்கும் கண்டு கொள்க. யாதாத்மியம் – அதனுடைய முடிவின் எல்லை;அதனுடைய உண்மை நிலை.
நீ மயர்வு அற மதிநலம் அருளுகையாலே,
மிக்க இறைநிலை,
மனன் உணர்வு அளவு இலன், பொறி உணர்வு அவையிலன், எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன், மிகுநரை இலன்,
உணர் முழுநலம், இனன்’-. திருவாய். 1. 1 : 2.- என்று அறிய,
அதனாலே பிறப்பது ஒரு தெளிவும், அந்தப் பரமாத்தும சொரூபத்தினுடைய யாதாத்மியம்,
‘அது நமது விதி வகையே,’ -. திருவாய். 10. 6 : 1.-
‘நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள்கடல் வண்ணன்’-. திருவாய். 3. 6 : 9.- என்கிறபடியே,
அர்ச்சாவதார பரியந்தமான அடியார்கட்குப் பரதந்திரப்பட்டவனாய் இருத்தல் என்று அறிய, அதனாலே பிறப்பது ஒரு தெளிவும்;
உயிர்நிலை,
‘சென்று சென்று பரம்பரமாய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று, நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய்
ஞானம் கடந்திருக்கும்’ . திருவாய். 8. 8 : 5.என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும், அதனுடைய யாதாத்மியம்,
‘சிறுமாமனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய, நறு மா விரை நாண்மலர் அடிக்கீழ்ப் புகுதல் உறுமோ?’-6. திருவாய். 8. 10 : 3. என்றும்,
‘தம்மடியார் அடியோங்களே’ -. திருவாய். 3. 7 : 10.-என்றும் ‘அடியார்கட்கு அடிமையாய் இருத்தல் எல்லையாய் இருக்கும்’ என்று அறிய,
அதனாலே பிறந்ததொரு தெளிவும்;
தக்க நெறியின் சொரூபம்,
‘நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு’ -5-10-11-என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்;
அதனுடைய யாதாத்மியம், அறிவின் காரியமாய் அதிகாரி விசேஷணமான பிரபத்தியையும் உபாயமாகக்
கொள்ளப் பொறாதது என்று அறிய, அதனாலே பிறந்ததொரு தெளிவும்;
பல சொரூபம்
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்கை’ -3-3-1-என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்;
அதனுடைய யாதாத்மியம், ‘உன்றன் திருவுள்ளம் இடர் கெடுந்தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்’ -10-3-9-என்று அறிய,
அதனாலே பிறப்பதொரு தெளிவும்;
விரோதி சொரூபம்,
‘யானே என்றனதே என்று இருக்கை’-2-9-9- என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்; அதனுடைய யாதாத்மியம்,
‘கைங்கரியத்தில் அகங்காரத்தை உட்கொண்டதான மமகாரம்’ என்று அறிய, அதனாலே பிறப்பது ஒரு தெளிவும் என்று பொருள் கூறலுமாம்.

ஆக, பரம்பொருளின் சொரூபத்தை அறிதலாலது, சித்து அசித்து இவற்றைக்காட்டிலும் வேறுபட்டிருப்பது என்று அறிதல்;
பரம்பொருளின் யாதாத்மியத்தை அறிதலாவது, ஆஸ்ரிதபாரதந்திரியம் என்று அறிதல்.
ஜீவாத்துமாவின் சொரூபத்தை அறிதலாவது, ஞான ஆனந்தங்கள் தொடக்கமானவை என்று அறிதல்;
ஜீவாத்துமாவின் யாதாத்மியத்தை அறிதலாவது, அவன் அடியார்கட்கு அடிமைப்பட்டிருத்தல் என்று அறிதல்.
உபாயத்தின் சொரூபத்தை அறிதலாவது, அவனே மோக்ஷத்திற்குச் சாதனமாக இருப்பவன் என்று அறிதல்;
உபாயத்தின் யாதாத்மியத்தை அறிதலாவது, இவன் செய்யும் பிரபத்தியையும் சாதனமாகப் பொறாது தானே சாதனமாக இருப்பவன் என்று அறிதல்;
பலத்தின் சொரூபத்தை அறிதலாவது, கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறிதல்;
பலத்தின் யாதாத்மியத்தை அறிதலாவது, தனக்கும் அவனுக்கும் பொதுவாக இல்லாமல், அவனுக்காகவே செய்தல் என்று அறிதல்;
விரோதி சொரூபத்தை அறிதலாவது, அகங்கார மமகாரங்கள் என்று அறிதல்;
விரோதி யாதாத்மியத்தை அறிதலாவது, கைங்கரியத்தில் அகங்கார மமகாரங்கள் என்று அறிதல் எனக் கொள்க.

மேலை வானவரும் அறியார் இனி எம் பரமே – நாலாயி:3465/2

ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன்மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம்பரமே?
வேலி னேர்தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.–6-2-4-

உன்னுடைய கிரித்ருமங்கள் ஆக்கனான ப்ரஹ்மாதிகள் அன்றிக்கே -நித்ய ஸூ ரிகளும் அறியார்கள் -சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்திக் கொடு நிற்கச் செய்தே ஈட்டிய வெண்ணெய் தொடு உன்னைப் போருமவன் அல்லையோ-அது தன்னையும் விட்டு அன்றோ அடல் ஆயர் தம் கொம்பினுக்குக் கோட்டிடை ஆடினான். -பழையாரை விடுகை உனக்கு பழையதாய் போருவது ஓன்று அன்றோ –நவப் பிரியைகளை விரும்புவாரைப் போலே காணும்.-நித்ய ஸூரிகள் – -பழையார் -நவ பிரியை -இன்று ஈன்ற கன்று – ஆழ்வார் -மின்னிடை மடவார் என்றுமாம்-

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ண த்தால் குரு கூர்ச் சடகோபன் அறிந்து உரை த்த

ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.–7-8-11-

ஒருவராலும் ஒரு வகையாலும் உள்ள அளவு இது என்று அறிய ஒண்ணாத படி இருக்கிற சர்வேஸ்வரனை இறே கவி பாடிற்று -யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று ஸ்வரூப ரூப குண விபூதிகளில் ஒரு வகையும் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –அவனை உள்ளபடி அறிந்து அங்குத்தைக்கு சத்ருசமாக அருளிச் செய்தார் யாயிற்று இவர் –விஷயம் அபரிச்சின்னமாய் இருக்கச் செய்தேயும் -மயர்வற மதி நலம் அருளினன்- என்று அவன் தானே கொடுத்த ஞானம் ஆகையால் உள்ள படியை அறிந்து அருளிச் செய்தார் –ஸ்வ யத்னத்தாலே காணப் பார்க்கில் இறே அறிகை யில் அருமை உள்ளது-அறிந்து உரைத்த’ என்கிறார்; என்றது,‘அவன் மயர்வற மதிநலம் அருள ஆயிற்று இவர் பேசிற்று. தன் முயற்சியால் அறியப் பார்க்கில் அன்றோ அரிது?’ என்றது, அவன் கொடுத்த அறிவு கொண்டு அறிவார்க்குக் குறை இல்லை அன்றோ? ‘நெறி வாசல் தானேயாய் நின்றனை ஐந்து. பொறி வாசல் போர்க் கதவம் சாத்தி அறிவானாம்’ நான்முகன் திருவந்தாதி.-என்று
ஆக்ஷேபிப்பது, தம் முயற்சியாலே அறியப் பார்ப்பாரை அன்றோ?

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-

ப்ரஹ்ம ருத்ர இந்த்ரர்களுடைய ஸ்வரூப ஸ் திதி ப்ரவ்ருத்திகள் அவன் இட்ட வழக்கு -ச ப்ரஹ்ம ச சிவஸ் சேந்த்ர –ஸ்ருஷ்ட்டி ஸ்தித்யந்த-இத்யாதி என்கிற பிராமண ப்ரசித்தியால் சொல்லுகிறார் –-பிரதானரோடு அபிரதானரோடு வாசி யற சேதன அசேதனங்களும் அவன் அதீனமே–ஸ அஷர பரம ஸ்வராட் – அவனே உயர்ந்தவனும்-விகாரம் இல்லாதவனும்-கர்மங்கட்கு வசப் படாதவனான முக்தன் -என்றபடியே பிரதானரோடு-பிரதானம் இல்லாதாரோடு-வேற்றுமை இல்லாதபடி சேதன அசேதன பொருள்கள் எல்லாம் அவன் வசப் பட்டவை யாம் –ப்ரஹ்மாதிகள் -ஈஸ்வரோஹம் -என்று இருக்கையும் -அவர்களை ஆஸ்ரயிப்பாருமாய் செல்லா நிற்க நீர் அவனே என்றது என் கொண்டு என்னில் -மயர்வற மதிநலம் அருள பெற்றதால் அறிந்தேன் -என்கை-இரண்டு பாசுரங்களாலும் திரு மந்தரத்தையும் அதன் பொருளையும் அருளிச் செய்தாராய் நின்றார் –

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே
-9-3-3-நாலாயி:3805

அறிதற்கு அரிய பொருள்களை அறிந்தனவாய் இருக்கிற வேதங்கள் ஆகிற சாஸ்திரங்கள் –அன்றிக்கே-அறிந்தனவாய் இருக்கிற வேதங்களில் அறிதற்கு அரிய பொருள்களை அறுதி இட்டு தரும் ப்ரஹ்ம சூத்ரம் இதிகாசம் புராணங்கள் -முதலானவைகள் -என்னுதல் –அறிதற்கு அரியன்-என்னும் இவ்வளவே அறிந்தனவாகக் கொள்ள அமையும் –
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ-(என்றும்)ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி குத்ஸ ஸ நேதி தைத்ரியம் -என்றும் -யஸ்யா மதம் தஸ்ய மதம் அவிஜ்ஞாதம் விஜா நதாம்-கௌஷீதகி (என்றும்) வேத வாக்குகள் அறிய முடியாமல் எந்த ஆனந்த குணத்தின் நின்றும்மீண்டனவோ அறியப் படாதது என்று இருப்பவன் எவனோ அவனுக்கு அறியப் பட்டது அறிந்தேன் என்று இருப்பார்க்கு அறியப்படாதது என்னும் இவ்வளவே அறிந்தது –மற்றைய வற்றை அறிந்தாராய் இருக்கின்ற பராசரர் வியாசர் வால்மீகி முதலான இருடிகளும் –எல்லா துக்கங்களையும் போக்கு கின்றவனை அடைந்து நோய்கள் அறுக்கும் மருந்து அறிந்தனர்
சம்சாரா சர்ப்பே சந்தஷ்ட நஷ்ட சேஷ்ட ஏக பேஷஜம்-க்ருஷ்ணேதி வைஷ்ணவம் மந்த்ரம் ஸ்ருதவா முக்தோபவேத் நர – சம்சாரம் ஆகிற பாம்பினால் கடிக்கப் பட்டவர்களாய்
செயல் அற்று இருக்கும் மக்கள் கிருஷ்ணன் என்ற மந்த்ரத்தை கேட்ட உடன்
விடுபட்டவர்கள் -ஆகிறார்கள் -என்கிறபடியே பிறவித் துன்பத்துக்கு மருந்து -என்னும் இவ்வளவே அறிந்தார்கள் -அவனுடைய இனிமையில் இழிந்திலர் கள்
அன்றிக்கே-வேறு ஒன்றையும் விரும்பாத அவனுடைய உபாய பாவத்தில் இழிந்திலர்கள்-வேதங்களும் வேத வித்துக்களும் போலே அன்றிக்கே தன்னை எனக்கு பூரணமாக அறியும் படி எனக்கு அருள் பண்ணினான்

—————————————————————

நாடும் நகரமும் நன்கு அறிய நமோநாராயணாய என்று – நாலாயி:4/3

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடும் மனம் உடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடு நரகமும் நன்கு அறிய நமோ நாராயணா என்று
பாடு மனமுடைப் பத்தர் உள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே -4-

நாடு -என்று அவிசேஷஜ்ஞரை சொல்லுகிறது –-நகரம் -என்று விசேஷஜ்ஞரை சொல்லுகிறது – ராஜாவுக்கு ப்ரத்யா சந்னர் இ றே நகரஸ்தர் -நாட்டார் தூரஸ்தர் இ றே -ஆகையாலே அருளிச் செய்கிறார்
நன்கறிய –நன்றாக அறிய –-பகவத் ப்ரத்யா சத்தியாலே அவிசேஷஜ்ஞர் விடும்படியாகவும் -அது தானே ஹேதுவாக-விசேஷஜ்ஞர் பரிக்கிரஹிக்கும் படியாகவும் –
நன்கறிய –
இந் நன்மையை அறிய என்றுமாம்

———————————

தக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே – நாலாயி:57/3

சக்கரக் கையன் தடம் கண்ணால் மலர விழித்து
ஒக்கலை மேல் இருந்து உன்னையே சுட்டிக் காட்டும் காண்
தக்கது அறுதியேல்  சந்திரா சலம் செய்யாதே
மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய் -1 4-4 –

உனக்குத் தகுதியானது அறிதி யாகில் –எல்லாருக்கும் ஆஹ்லாத கரனாய் இருக்கும் நீ- இவனுக்கு வெறுப்பு செய்யாதே-

ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய் – நாலாயி:69/3

மொய் செறிவு காயா மலர் நிறவா! கரு முகில் போல் உருவா! கானகம் மா மடுவில் காளியன் உச்சியிலே
தூய நடம் பயிலும் சுந்தர என் சிறுவா! துங்க மதக் கரியின் கொம்பு பறித்தவனே!
ஆயம் அறிந்து பொருவான் எதிர் வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய்
ஆய! எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – 1-5-6-

மல்ல யுத்தம்  செய்யும் வகை அறிந்து-உனக்கு ஒரு அபாயமும் இல்லாதபடி-இன்னும் வருவார் உண்டோ -என்று கம்பீரமாய் சஞ்சரித்த-மல் பொரும் கூறு அறிந்த பொரு வதாக எதிர்த்து வந்த மல்லரை வியாபரிக்கைக்கு இடம் இல்லாமல் -நிரசித்த-இன்னம் வருவார் உண்டோ என்று மனோ ஹர மான இடை வெளி இல்லாமல் அபாயம் இல்லாமல் என்றுமாம்
அவர்களே தங்களில் மாய்ந்து போம்படி என்றுமாம் –

அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே
சட்டி தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் – நாலாயி:79/2,3

புட்டியில் சேறும் புழுதியும் கொண்டு வந்து
அட்டி யமுக்கி யகம் புக்கறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண்
பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி பத்ம நாபா கொட்டாய் சப்பாணி -1 6-5 –

ஓடிப் போய் உள்ளே புக்கு – வைத்த நான் அறியாதபடி – சட்டிகளிலே தோய்த்து வைத்த தயிரையும் – தடாக்களிலே சேர்த்து வைத்த வெண்ணெயையும் அமுது செய்யா நிற்கும் –

மக்கள் உலகினில் பெய்து அறியா மணி குழவி உருவின் – நாலாயி:93/3

பக்கம் கரும் சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்து அனைய
அக்கு வடம் இழிந்து ஏறி தாழ அணி அல்குல் புடை பெயர
மக்கள் உலகினில் பெய்து அறியா மணிக் குழவின் உருவின்
தக்க மா மணி வண்ணன் வாசு தேவன் தளர் நடை நடவானோ -1 7-8 —

லோகத்தில் மனுஷ்யர் -பெற்று அறியாத அழகிய குழவி வடிவை உடைய –தகுதியான -நீல ரத்னம் போன்ற -நிறத்தை உடையனான ஸ்ரீ வாசுதேவர் திருமகன் தளர் நடை நடவானோ –

என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னை வண்ணமே கொண்டு அளவாய் என்ன – நாலாயி:104/1,2

என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியானே அச்சோ அச்சோ வேம்கட வாணனே அச்சோ அச்சோ -1-8-8- –

திருக் கையில் உதகம் விழுந்த அநந்தரம்-திருவடிகளை வளர்த்து அளக்கப் புக்கவாறே –
இத்தைக் கண்ட மகாபலி புத்ரனான -நமுசி ஓடி வந்து – இது என் -என்று வளருகிற திருவடிகளை தகைய –நீ தகைகிறது என் -நான் உதகம் ஏற்றது அளந்து கொள்ள வேண்டாவோ -என்ன –நீ க்ரித்ரிமம் என்பான் என் -என்னுடைய பிரமச்சரிய வேஷத்தையும் -அர்த்திவத்தையும் -கண்டு உன்னுடைய பிதா -உதக தானம் பண்ணிப் போந்தது பொய்யோ -என்ன –என்னுடைய பிதாவானவன் உன்னுடைய வஞ்சகத்தில் அகப்பட்டு உன்னுடையபடி ஒன்றும் அறிந்திலேன் -என்ன –

இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை – நாலாயி:129/2

ஆன் நிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட – நாலாயி:182/1,2

ஆநிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட
பானையில் பாலைப் பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்பத்
தேனில் இனிய பிரானே செண்பகப் பூ சூட்ட வாராய் -2 7-1 – 

உன் வாசி அறியாதே -தனக்கு மேய்ச்சல் உள்ள இடம் தேடி ஓடா நிற்கும்
பசு நிரையை மேய்ப்பைக்காக ஸூகுமாரனான நீ போகா நின்றாய்-நீ (சேதனர்கள் அனைவரும் )உன்னை பெறுதற்கு அரிய மருந்து ஆவது அறிகிறது இல்லை
இங்கு உள்ளார்களுக்கு -நோய்கள் அறுக்கும் மருந்தாய்
அங்கு உள்ளார்க்கு -போக மகிழ்ச்சிக்கு மருந்தாய் -இறே இவன் தான் இருப்பது

ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய் – நாலாயி:189/3

சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும்  வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சி பூ சூட்ட வாராய் 2-7- 8-

சத்ரு நிரசனம் -ஆஸ்ரித ரஷணம் ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றில் புகுந்தால்
மேல் விளைவது அறியும் உபகாரகன் ஆனவனே

உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய் – நாலாயி:198/3

அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே-223-232/(3-1)

அவனுடைய பருவத்தின் இளமையையும் – அதுக்கு அநுரூபம் அல்லாதபடியான  அதிமாநுஷ சேஷ்டிதங்களையும் கண்டு – அவனை -தன்னுடைய பிள்ளை -என்று நினைந்து இருக்கை தவிர்ந்து –அநியாம்யனாய் அப்ரதிஹத லீலா ரச பரனான சர்வேஸ்வரன் -என்று அனுசந்தித்து – அவனைக் குறித்து அவை தன்னைச் சொல்லி – உனக்கு அம்மம் தர அஞ்சுவன் -என்று பல காலும் பேசின பாசுரத்தை –தத் அவஸ்தா பன்னராய் கொண்டு – தாமும் அப்படியே பேசி –அந்த ரசத்தை அனுபவிக்கிறார் இத் திருமொழியில் –

முன்பு எல்லாம் என் பிள்ளையாகவும் -நான் தருகிற அம்மம் முதலானவை-உனக்கு தாரகாதிகளாகவும்  நினைத்து இருந்தேன் -உன் படிகள் அதி மானுஷ்யங்கள் ஆகையால்
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் -என்கிறபடியே இவன் நம்மோடு சஜாதீயனும் அல்லன் நாம் கொடுக்கிறவை இவனுக்கு தாரகாதிகளும் அல்ல என்று நன்று அறிந்து கொண்டேன் –இவன் நம்மோடு சஜாதீயன் அல்லன் -வ்யாவர்த்தன் என்று
உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன் –-என் மகன் அன்று -என்றும் – எல்லார்க்கும் ஸ்வாமி -என்றும் –உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன்-உன்னை அதி லோகமான வுக்தி சேஷ்டிதங்களை உடையவன் என்று அறிந்து கொண்டேன் –இந்த அதி மானுஷ சேஷ்டிதத்தை உடைய பெரியோனே -உன்னை மனுஷ்ய ஜாதி அல்லன் -என்று அறிந்து கொண்டேன்-இப்படி தீம்பனானவனே-உன்னை நன்றாக அறிந்து கொண்டேன் –பருவம் இதுவே இருக்க -செய்கிற செயல்கள் இது வாகையாலே உன்னை நாட்டார் படி இல்லை -என்று அறிந்து கொண்டேன் –

அந்தம் ஒன்று இல்லாத ஆய பிள்ளை அறிந்தறிந்து இ வீதி போதுமாகில் – நாலாயி:259/3

சிந்தூரம் இலங்க தன் திரு நெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக் குழலும்
அந்தரம் முழவத் தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் -வளை கோல் வீச
அந்தம் ஒன்றில்லாத ஆய்ப் பிள்ளை அறிந்து அறிந்து இவ்வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து பவள வாய் முறுவலும் காண்போம் தோழி 3-4-6- –

ஒப்பனை அழகும் -வருகிற அலங்காரமும் – லீலா வியாபாரமும் -ஒர் ஒன்றே
எத்தனை யேனும் அளவுடையாராலும் எல்லை காண ஒண்ணாத இடைப் பிள்ளை-தன்னை ஒழிய எனக்கு செல்லாமையும் – என்னை ஒழிய தனக்கு செல்லும்படியான தீம்புகளையும் அறிந்தால் –இத் தெருவில் வரக்கூடாது – இவற்றை அறிந்து வைத்தும் இத் தெருவே வந்தானாகில்

மூழை உப்பு அறியாது என்னும் மூதுரையும் இலளே – நாலாயி:289/4

ஏழை பேதையர் பாலகன் வந்து என் பெண் மகளை எள்கித்
தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்
ஆழியான் என்னும் ஆழம் மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி
மூழை  உப்பு அறியாதது என்னும் மூதுரையும் இலளே – 3-7- 4-

இவள் படி பார்த்தால் – முகந்து பரிமாறுகிற மூழை யானது தான் முகக்கிற பதார்த்தத்தின் ரசம் அறியாது என்னும் அந்த மூதுரையும் தன் பக்கல் இல்லாதவள் -கிடீர்-அதாவது –
தாங்கள் கலந்து பரிமாறுகிற விஷயத்தின் ரசம் அறியாதாரை – உப்பறியா மூழையாய் – என்று லோகம் சொல்லும் பழ மொழிக்கும் யோக்யதை இல்லாதவள் காணும் இவள்-

நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல் – நாலாயி:290/1

நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல்
சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள்
கேடு வேண்டுகின்றனர் பலருளர் கேசவ னோடிவளைப்
பாடு காவல் இடுமின் என்று என்று பார் தடுமாறினதே -3-7-5 –

தானும் தன்னை அணைந்த பந்து வர்க்கமும் அறிந்த அளவாக அவன் பக்கலிலே பிரவணையாய்- அகம் விட்டு புறப்படாமல் இருக்கை அன்றிக்கே –திரு ஆய்ப்பாடி சூழ்ந்த நாடும் –திரு ஆய்ப்பாடி யான ஊர் தானும் –இருந்ததே குடியாக அறியும்படி -க்ரஹத்தை விட்டு புறம்பே போய்-சம்ஸ்லேஷத்தால் பிசகின திருத் துழாய் மாலையை சூடிக் கொண்டு –நாராயணன் என்னும் திரு நாமத்தை உடைய ஸ்ரீ கிருஷ்ணன்(ஏஷ நாராயண ஸ்ரீ மான் –ஆகதோ மதுராம் புரிம் –கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் என்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே )வியாபாரிக்கும் இடம் பல உண்டாகையாலே அவன் போம் இடமெல்லாம் –அவனைக் காண்கைக்காக ஆராய்ந்து திரியா நின்றாள் –அதாவது –
பசு மேய்க்கை –  பெண்களோடு கலக்கை –விளையாடுகை -தொடக்கமான வற்றுக்கு
அவன் வியாபாரிக்கும் இடங்கள் எங்கும் தேடித் திரியா நின்றாள்

தமரும் பிறரும் அறிய தாமோதரற்கு என்று சாற்றி – நாலாயி:299/2

குமரி மணம் செய்து கொண்டு கோலம் செய்து இல்லத்து இருத்தித்
தமரும் பிறரும் அறியத் தாமோதரற்கு என்று சாற்றி
அமரர் பதி உடைத் தேவி யரசாணியை வழி பட்டு
துமிலம் எழ பறை கொட்டி தோரணம் நாட்டிடும் கொலோ -3- 8-3 –

பந்துக்களும் மற்றும் உள்ளாறும் அறியும்படி தாமோதரனுக்கு இவளைக் கொடுக்க புகா நின்றோம் -என்று பிரசித்தமாக்கி தாமோதரன் -என்றது – மாதாவானவள் கட்டின கட்டு அவிழ்த்துக் கொள்ள சக்தன் அன்றிக்கே அவள் நியமனம் தப்பாமல் இருந்த நீர்மையை உடையவன்

நாடும் நகரும் அறிய நல்லது ஓர் கண்ணாலம் செய்து – நாலாயி:302/3

வேடர் மறக் குலம் போலே வேண்டிற்று செய்து என் மகளை
கூடிய கூட்டமே யாகக் கொண்டு குடி வாழும் கொலோ
நாடு நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து
சாடிறப் பாய்ந்த பெருமான் தக்கவா கைப்  பற்றும் கொலோ – 3-8-6-

இரண்டு குடிக்கும் பழி வாராதபடி திரு ஆய்ப்பாடி சூழ்ந்த நாடும் – திரு ஆய்ப்பாடி ஆகிய நகரமும் அறியும் படியாக – இதுக்கு முன்பு இப்படி இல்லை -என்னும்படி விலஷணமாய்
அத்வீதியமான கல்யாணத்தை செய்து – ஜாதி உசிதமான தர்மத்துக்கு தகுதியாக பாணி க்ரஹணம் செய்யுமோ

நெறிந்த குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடிச் சனகன் சிலையிறுத்து நினைக் கொணர்ந்த
தறிந்து அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச்
செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம் –3-10-1-

இயம் ஸீதா மமஸூதா ஸஹ தர்ம சரீதவ-ப்ரதீச்ச சைநாம் -பத்ரந்தே – பாணிம் க்ருஹணீஷ்வ பாணிநா (பால)-என்கிறபடியே இவளைக் கைக் கொண்டு அருள வேணும் என்று சமர்ப்பிக்க-தேவரீரை பாணி கிரஹணம் பண்ணிக் கொண்டு போந்த சேதியை அறிந்து-இருப்பத் தொரு படி கால் துஷ்ட ஷத்ரியரான ராஜாக்கள் ஆகிற களையை நிரசித்தவனாய் – ஒருவரால் செய்ய ஒண்ணாத தபஸ்ஸை யுடையனாய் இருந்துள்ள பரசுராமன்(பெருமாள் முதலோர் )திரு அயோத்யைக்கு எழுந்து அருளா நிற்கச் செய்தே
இடை வழியிலே -என் வில் வழி கண்டு போ -என்று வந்து தகைய

நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு – நாலாயி:386/1

நாடும் நகரும் அறிய நாடு மானிடப் பேர் இட்டு 
கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்காதே
சாடிறப் பாய்ந்த  தலைவா தாமோதரா என்று 
நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4- 6-6 –

நாட்டில் உள்ளாரோடு நகரத்தில் உள்ளாரோடு வாசியற எல்லாரும் – இவன் அசாதாரணன் -என்று அறியும் படி சூத்திர மனுஷ்யர் பேர் இட்டு  அவர்களோடு கூடி -அவர்கள் பக்கலிலே கால் தாழ்ந்து- அவர்கள் விழுந்த  குழியில் விழுந்து ஒளி மழுங்கி – தவறி வர்த்தியாதே 

ஒற்றை விடையனும் நான் முகனும்  உன்னை அறியா பெருமையோனே-நாலாயி:426/1

ஒற்றை விடையனும் நான் முகனும்  உன்னை அறியா பெருமையோனே
முற்ற உலகு எல்லாம் நீயேயாகி மூன்று எழுத்தாய முதல்வனேயோ
அற்றது வாழ் நாள் இவருக்கு என்று எண்ணி யஞ்ச நமன் தமர் பற்றலுற்ற
வற்றைக்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவணை பள்ளியானே -4 -10-4 –

நுண் உணர்வில் நீலார் கண்டத்தானும் (6-10-10 )-என்கிறபடியே –ப்ரஹ்ம பாவனை தலை எடுத்த போது –அல்லாதாரைப் போல் அன்றிக்கே -தத்தவத்தை யதாவாக தர்சிக்க வல்ல –
ஸூஷ்ம ஞானத்தை உடையனான அத்வதீய ரிஷப வாகனனும் –யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ச்ச ப்ரஹினோதி தஸ்மை – (ஸ்வேதாஸ்வர ) என்கிறபடியே-அவ்யவதானேன திரு நாபி கமலத்திலே பிறந்து – பிதாவான தேவரீர் தம்மால் கொடுக்கப் பட்ட நாலு வேதங்களை உடையவனாய் – அமரர்க்கும் அறிவு இயந்து -என்கிறபடியே-இவ்வருகு உள்ளார்க்கு எல்லாம் ஞான பிரதனுமாய் இருக்கும் ஏற்றத்தை உடைய சதுர் முகனும்-சர்வ காரண பூதனாய்- சர்வ ரஷகனாய் – சர்வ சேஷியாய் – சர்வ சரீரியாய் -இருக்கும் உன்னை உள்ளபடி அறிய ஒண்ணாது இருக்கும் பெருமையை உடையவனே –

நான் ஏதும் உன் மாயம் ஒன்றும் அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புக என்று மோதும் போது அங்கு உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்
வானேய் வானவர் தங்கள் ஈசா மதுரைப் பிறந்த மா மாயனே என்
ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10- 8-

அதீத அநாகதங்களில் ஒன்றும் அறியாத நான்-(அதீத அநாகதங்கள் -முன்பு போன கர்மங்கள் -மேல் வரும் கர்மங்கள் ) சர்வ சக்தியான உன்னுடைய மாயைகளில் ஏதொன்றும் அறியேன் –இப்போது இவர் -உன் மாயம் -என்கிறது –போமிடத்து உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை -என்று சொன்னது போலே இருக்குமவற்றை இறே –அதாவது –கர்ம அனுகுணமாக இச் சேதனர் விஷயத்தில் அவன் பண்ணி வைக்கும் வஞ்சனங்கள் அநேகம் இறே –அவை தான் அவன் தான் அறியும் அத்தனை ஒழிய –எதிர்  தலைக்கு தெரியாதபடி இறே இருப்பது –அத்தைப் பற்ற அருளிச் செய்கிறார் –

குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வந்து  என்னைப் பற்றும் போது
அன்று அங்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவிணைப் பள்ளியானே -4-10-9 –

சர்வ காரணமாய் – விலஷண தேஜோ ரூபமான உன்னுடைய விக்ரகத்தை மறந்து அறியேன் -என்னுதல்(முந்நீர் ஞாலம் –முகில் வண்ணன் என்பதாலே – ச விக்ரஹனாயக் கொண்டு ஸ்ருஷ்டிக்கிறான் -என்றதாயிற்று ஆதியான உன்னுடைய ஜோதி என்றுமாம்
திருமேனிக்கும் சர்வ காரணத்வம் உண்டு என்றவாறு )

நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த – நாலாயி:430/1

அன்று முதல் இன்று அறுதியா ஆதி அம் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வலிந்து என்னை பற்றும்-போது – நாலாயி:431/2,3

நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று – நாலாயி:433/2

வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன்
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும் என் நாவி னுக்காற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே -5-1- 1-

ரசம் அறிந்தார்க்கு -சர்வ ரசனான உன்னை அல்லால் அறியாது –
(ரசம் சுவை என்றும் –ரஸோவைக -சர்வரஸ ஸர்வ கந்தனான அவனும் என்றுமாம் )-அத்தால் வரும் குற்றமும் உம்மதன்றோ -என்ன –-அது விஷய தோஷம் – அகலகில்லேன் -என்றது -மார்வின் குற்றமானால் போலே –

உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோநாரணா என்பன் – நாலாயி:435/3

ஒருத்தரும் இ பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை – நாலாயி:458/2

எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றோடு நாளை என்றே
யித்தனை காலமும் போய்க் கிறி பட்டேன் இனி உன்னைப் போகல் ஒட்டேன்
மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்
சித்த நின் பாலது அறிதி அன்றே திரு மால் இரும் சோலை எந்தாய் -5- 3-8 –

மெய்ம்மை பெரு வார்த்தை கேட்டும் கேளாதானாய் போனான் அவன் கேட்டு விச்வசித்து இருந்தேன் நான் அன்றோ -என்ன-உம்முடைய விசுவாசத்தை நாம் அறியும் படி  என் -என்ன –-அறிதி அன்றே –சர்வஞ்ஞனான நீ தானே அறியாயோ-விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனான உனக்கு தெரியாதோ –விட்டு சித்தன் தன் மனம்உன்னுடைய வ்யாப்தி விபூதி அளவிலே(குணங்களோடு வியாபிக்கிறார் என்னும் போது குணத்தில் வியாபித்தால் ஆத்ம ஆஸ்ரய தோஷம் வருமே )என்னுடைய மநோ வ்யாப்தி உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளிலே –அரவத் தமளி

அறிவை என்னும் அமுத ஆறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே – நாலாயி:464/4

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும்  பாவக்காடு தீக்கொளீஇ  வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 –

அமுதம் -ஜலம்- ஞானம் அம்ர்தமாகிற ஆறு பெருகி   வாய் அளவாய் தலைக்கு மேல் போகா நின்றது -அதனில் பெரிய என் அவா -என்றபடி-நீ என்னைக் கை கொண்ட -என்றது –
என் தலை மிசையாய் வந்திட்டு இனி நான் போகல் ஓட்டேன் நாம்மாழ்வார் -என்றபடி-அநு கூல ஞானம் ஆகிற பெருக்காறு-சேதன கதமாக வந்த ஞானம் ஆகில் இறே பின்பு வற்றி வருவது சஹ்யம் பற்றி வருகிற ஆறு இறே திரு மலை இறே சஹ்யம்-வர்ஷிக்கிறது ஒரு காள மேகம் இறே-(ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம் )

அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:485/8

கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்

பெண்கள் எல்லாரும் வந்து உன் வாசலிலே அழைக்கிறமை ஊராக அறிய வேணும் என்று இருந்தாய் ஆகில் எல்லாரும் அறிந்தது –பர ஸம்ருத்தியே ஏக பிரயோஜனம் ஆகையால்
பாலைகளாய் இருப்பாரும் உணர்ந்து வர வேணும் என்று இருக்கிறாயாகில் – அது எல்லாம் செய்தற்றது –நாங்கள் உன் வாசலில் வந்து எழுப்பவும் நீ சிறிது போதும் உணராது ஒழியவும் – இத்தால் வந்த மதிப்பு எல்லாரும் அறிய வேணும் என்று இருந்தாயாகில் –
அது எல்லாரும் அறிந்தது

வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக – நாலாயி:488/3,4

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக

ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-

நங்கைமீர் என்று உறவற்ற சொல்லாலே வெட்டிமை சொல்ல வல்லை என்னும் இடம்
நாங்கள் இன்றாக அறிகிறோமோ – பண்டே அறியோமோ –எங்கள் திறத்தே குற்றமாம் படி வார்த்தை சொல்ல வல்லை-என்னும் இடம் இன்றே யல்ல அறிகிறது -எத்தனை காலமுண்டு உன்னோடே பழகுகிறது –

எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த – நாலாயி:490/4,5

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்

கிருஷ்ணனைப் பெற்றுத் தந்த-எங்களுக்கு ஸ்வாமிநி ஆனவளே-எம்பெருமான் நந்த கோபாலா என்று ஸ்ரீ நந்த கோபரைச் சொல்லக் கடவதானால்- எம்பெருமாட்டி என்பது இவளை இறே-அந்த மிதுனத்தில் சொல்லுகிறது எல்லாம் இங்கே சொல்லுகிறார்கள் -ஸ்ரீ பூமி வல்லபன் ஆகையால் பிரதான மஹிஷிகளும் கும்பிடும் படி அன்றோ உன்னுடைய ஏற்றம் இருப்பது –ஸ்ரீ நந்த கோபரைப் போல் அன்றியே சஜாதீயை யாகையாலே நோயும் அறியுமவளே – ஹித காமரான ஸ்ரீ நந்த கோபர் எழுந்து இருக்கச் செய்தேயும்
பிரிய காமையாய் இருக்கிற நீ கிடக்கக் கடவையோ –சஜாதீயை யாகையாலே
வியதிரேகத்தில் தங்கள் நோவு அறியும் என்கிறார்கள்-நீ அறிந்தால் எங்களுக்கு ஒரு குறை உண்டோ -என்கை-அவள் சம்வதத்தாலே உள்ளே புக்கு-கிருஷ்ணனை எழுப்புகிறார்கள் –இவள் அறிய அமையும் -பின்னை தங்களுக்கு ஒரு குறை இல்லை என்று இருக்கிறார்கள் –
ஸ்ரீ நந்த கோபரை -எழுந்திராய் என்றும் இவளை அறிவுறாய் என்றும் சொல்லுகையாலே
இவள் நெஞ்சில் உணர்த்தி உண்டானால் நமக்கு அவனைப் பெறலாவது என்று குவாலாக உணர்த்துகிறார்கள் – அவளுடைய சம்வதம் கொண்டு உள்ளே புக்கு கிருஷ்ணனை எழுப்புகிறார்கள்-கிருஷ்ணனுக்கும் பெண்களுக்கும் உள்ள சேர்த்திக்கு உகக்குமவள் அன்றோ -நீ

ஆற்ற படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் – நாலாயி:494/3,4

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்-

ஸ்ரீ நந்தகோபர்க்கு சம்பத்து ஸ்வயம் ஆர்ஜிதம் ஆகையால் தான் தோன்றியாய் இருக்கும் –
இவர் பிறந்து படைத்தது ஆகையால் அடியுடைய ஐஸ்வர்யம் –பரம பதம் போலேயும்
நாராயணத்வம் போலேயும் ஸ்வதஸ் சித்தம் அன்று இறே-கோப குலமும் கோபாலத்வமும்-
நந்தன் பெற்ற ஆனாயனுக்கு அல்லது சித்தியாதே-சர்வஞ்ஞனானவனை உணர்த்த வேண்டி இறே உள்ளுச் செல்லுகிறது – கைப்பட்ட பெண்களை சரக்கிலே வாங்கி
கைப் படாதவர்களைக் கைப் படுத்துகைக்காக உண்டான உபாய அந்ய பரதையாலே
எழுப்புகிறார்கள்-ஐஸ்வர்ய செருக்கால் ஆர்த்தவ த்வனி செவிப்பட்டது இல்லை யாகிலும்
உன் பிறவியை புத்தி பண்ணி எங்களுக்காக உணராய்-பரம பதத்தில் வந்தோமோ –
வசிஷ்டாதிகள் நியமிக்கும் வாசலிலே வந்தோமோ-இவனுக்கு உணர்த்தி யுண்டானாலும் பலத்தில் விளம்பம் இல்லை – வ்யபிசாரமும் இல்லை என்று இருக்கிறார்கள்-அறியாத போது இறே இத்தலைக்கு இழவும் வியசனமும் –அறிவித்தால் கார்யம் செய்யாத போது இழவும் அவத்யமும் அவனதாம் அத்தனை இறே-அறிவுடையார் கார்யம் ஒரு பரம சேதனன் கையது இறே

சீரிய சிங்கம் அறிவுற்று தீ விழித்து – நாலாயி:496/2

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா வுன்
கோயில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்

உறக்கத்திலும் சூத்திர மிருகங்கள் மண் உண்ணும்படி-வீர ஸ்ரீ யை உடைத்தாய் இருக்கை –
ஸ்மாரகமாய் இருக்கை –உறங்கா நிற்கச் செய்தே கிட்ட மாட்டாதே-ஷூத்ர மிருகங்கள் கண்ட காட்சியில் மண் உண்ணும் படி வீர ஸ்ரீ யை யுடைத்தான ஸிம்ஹம்-நர ஸிம்ஹம் போலே கலந்து கட்டியாய் சீர்மை கெட்டு இராதே சிற்றாயர் சிங்கத்துக்கு(பெரியாழ்வார் – 3-சீரிய சிங்கம் என்றதோடு – அறிவுற்று என்றதோடு – தீ விழித்து -என்றதோடு – வாசி அற
இவை எல்லாம் போக்யமாய் இருக்கிறபடி –அறிவுற்றுத் –பூ அலர்ந்தாப் போலே காலம் உணர்த்த உணருகை –சம்சாரிகள் காலம் உணர்த்த உணருவர்கள்-இவன் ஆஸ்ரிதர் ஆர்த்தி உணர்த்த உணரும் –சம்சாரி உறங்கும் போது தமோ அபி பூதனாய் -உணர்ந்தால் பராக் அர்த்த அனுபவமாய் இருக்கும்-இவன் உறக்கம் வ்யதிரேகத்தில் ஆற்றாதார் வருமளவும்(ஜகத் சிந்தனை -யோக நித்திரை -உறங்குவான் போல் யோகு செய்து –

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை – நாலாயி:501/6

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்

அறிவொன்றும் இல்லாத –இப்போது இல்லை யாகில் விடுங்கோள்- விதுராதிகளைப் போலே ஜன்மாந்தர சூக்ருதத்தால் பிறந்த ஞானம் தான் உண்டோ -என்னில் அதுவும் இல்லை –ஒன்றும் – பகவத் ஞானத்துக்கு அடியான ஆத்ம ஞானமும் இல்லை –
தத் சாத்யமான பக்தியும் இல்லை -என்கை – பக்தி இல்லை -என்கிறது -பக்தி யாவது ஞான விசேஷம் ஆகையாலே – இவர்கள் அலமாப்பு பக்தி அன்றோ வென்னில் – அது ஸ்வரூபம் ஆகையாலே -உபாயமாக நினையார்கள்-ஆக-இத்தால் கர்ம ஞான பக்திகள் இல்லை என்கை – ந தர்மோஷ்டமி ந பக்திமான்-நோன்ற நோன்பிலேன்-குளித்து மூன்று அனலை ஓம்பும் -இத்யாதி – இவை அன்றோ அறிவுடையோர் வார்த்தை=அவர்களோடு ஒத்து இருக்கிறார்களோ -என்ன –அறிவொன்றும் இல்லாத –என்கிறார்கள் -எங்களை அப்படியோ நினைத்து இருக்கிறது – நீ நினைத்து இருக்கிற ஞானத்தில் பிரசங்கத்தில் பிரதி ஷேதமும் இல்லை காண்-1-அறிவில்லை-2-அறிவு ஓன்று இல்லை-3-அறிவு ஒன்றும் இல்லை-1-கர்ம யோகத்தில் உண்டான –2-ஆத்ம யாதாம்யா ஞானம் இல்லை –-3-பக்தி யாகிறது ஞான விசேஷம் ஆகையால் அந்த ஆத்ம ஞானம் அடியாகயுன் பக்கல் ஞானம் பிறந்து நீ உத்தேச்யன் என்று புத்தி பண்ணி உன் பக்கலிலே யுண்டான அனவரத பாவன ரூபமாய் வரும் பக்தி ரூபா பன்ன ஞானம் இல்லை –(கர்மாதிகள் இல்லை என்ற சொற்களே சொல்ல அறியாமல் இவ்வாறே சொல்லும்படி அன்றோ எங்கள் அறிவு)

அறியாத -இத்யாதி-கீழ் தாங்கள் நெருக்கின அதுக்கு ஷாமணம் பண்ணுகிறார்கள் –-அறியாத அநவதாநத்தாலே வந்த அஞ்ஞானம் –பிள்ளைகள் -பால்யத்தாலே வந்த அஞ்ஞானம் –

யாதும் ஒன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன் – நாலாயி:520/2

பேத நன்கறிவார்களோடு இவை பேசினால் பெரிதின் சுவை
யாதும் ஓன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன்
ஒதமா கடல் வண்ணா உன் மணவாட்டிமாரோடு சூழறும்
சேதுபந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே——2-7-

சில வார்த்தைகளைச் சொல்லுகிறான் –சொல்லப் புக்க வார்த்தையினுடைய பலன் -வேறு ஒன்றினுடைய பலத்தைப் பலிப்பதாக சொல்லத் தொடங்கினான் -இரு பொருள் பட –
நீ சொல்லுகிற வற்றினுடைய கருத்து அறிவாரோடே சொன்னால் அன்றோ உனக்கு இத்தால் பிரயோஜனம் உள்ளது எங்களோடு சொன்னால் என்ன பிரயோஜனம் உண்டு –
வார்த்தை வாசி அறிவாரோடே சொன்னால் அன்றோ உனக்கு பிரயோஜனம் உள்ளது –
அவர்கள் ஒன்றுக்கு பத்தாக மர்மத்தில் சொல்லுவார்களே – அது உனக்கு மிகவும் இனிதாய் இருக்கும் இறே தண்ணீர் -என்றால் தண்ணீரே கொண்டு வரும்படி பாலைகளாய் இருக்கிற எங்களை நெருக்கினால் உனக்கு என்ன பலம் உண்டு –

கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல்வண்ணனே – நாலாயி:521/4

வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்ட மாவிளையோடு வோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்
தொட்டுதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்
கட்டியும் கைத்தாலின்னாமை அறிதியே கடல் வண்ணனே–2-8-

கருப்புக் கட்டியே யானாலும் நெஞ்சு கைத்தால் இன்னது என்னும் இடம் அறிதியே –கடல் வண்ணனே –-கடல் வண்ணன் -என்கிற இவ் விசேஷணம் இட்டதுக்கு கருத்து – கண்டு விடுமதுக்கு மேற்பட செய்யலாவது இல்லை-ஒரு கை அள்ளி முகத்தைக் கழுவுதல் -குடித்தல் -செய்ய ஒண்ணாதே கடலில் நீர் – அப்படியே யன்றோ நீ 

குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடை கூறை பணியாய் – நாலாயி:527/4

பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்தாடும் சுனையில்
அரக்க நில்லாக் கண்ண நீர்கள் அலமருகின்றனவா பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே
குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய்—-3-4-

நீ மரம் ஏற வல்லாருக்கு முதலி என்னும் இடம் நாங்கள் அறிந்தோம் காண்-
அன்றிக்கே-காபேயமாக சிலவற்றைச் செய்யத் தொடங்கினான் –-குரக்கு அரசு ஆவது அறிந்தோம் –என்கிறார்கள் ஆதல் – கையிலே பர்யட்டங்களை குருந்திலே பொகட்டு-
நம்மை அலையாதே நீங்களே ஏறி வாங்கிக் கொள்ளுங்கோள் -என்றான் –குரக்கு அரசு ஆவது அறிந்தோம்-மரம் ஏறு வார்க்கு நிர்வாஹகர் ஆனாரோ தருவார்-ஏற மாட்டாதாரோ தருவார் -எங்களாலே முடியுமோ -என்றார்கள் –எம்பெருமானே உபாயம் ஆவது ஒழிய
சேதனனுடைய முயற்சி உபாயம் அன்று -ஸ்வாபதேசார்த்தம் –

அன்பு உடையாரை பிரிவுறு நோயது நீயும் அறிதி குயிலே – நாலாயி:548/3

என்புருகி இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4-

பிரிவாற்றாமையாலே படுகிற வியசனம் நீ அறியாமை இல்லை இறே –-சேர இருக்கச் செய்தே நீயும் அறிதி என்னும் படி எங்கனே என்னில்-சம்ஸ்லேஷம் ஆகில்-விஸ்லேஷாந்தமாக அல்லது இராது என்று இருக்குமவள் ஆகையாலே சொல்லுகிறாள் –
தனக்குத் துன்பக் கடலை விளைத்தான் இறே அவன்-தன்னோடு கலந்த போது பொன் போலே திகழ்கிற வடிவும் தானுமாக நின்ற நிலை-பிரிந்த போதும் அவன் இருக்கும் படி தான் அறியாளே

நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டிய கச்சங்கம் நானும் அவனும் அறிதும்
தேம் கனி மாம் பொழில் செம் தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை – நாலாயி:552/2,3

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தமுடையன்
நாங்கள் எம்மில் இருந்தொட்டிய கச் சங்கம் நானும் அவனும் அறிதும்
தேன்கனி மாம் பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்று யாகில் அவனை நான் செய்வன காணே–5-8-

பிறருக்கு தெரிவது ஓன்று இல்லை காண் எங்கள் நிலை – அதாகிறது -இன்றியமையாமை –ஒருவரை ஒழிய ஒருவர் உளோம் ஆகிறோம் -என்று எங்களில் நாங்கள் பண்ணி வைக்கும் சமயம்-நானும் அவனும் அறியும் அத்தனை அது நிர்வஹிக்கை உனக்கு பரமாய் இருக்கச் செய்தே ஆறி இரா நின்றாய்-கச்சங்கம் –பிரதிஜ்ஞ்ஞை -வ்யவஸ்தை-இருவருமான போது-நான் உன்னை ஒழிய ஜீவியேன்–நான் உன்னை ஒழிய ஜீவியேன் -என்று இறே இருவருக்கும் வார்த்தை தூதர்க்கு உட்படச் சொல்லக் கடவ –ந ஜீவேயம் ஷணம் அபி – ஊர்த்த்வம் மாசாந்த ஜீவிஷ்யே – அவர்கள் சேர இருந்தால் சொல்லாது இருப்பாரோ –

தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன் என்றும் இ காவில் இருந்திருந்து என்னை ததைத்தாதே நீயும் குயிலே – நாலாயி:554/2,3

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்பு-தன்னை – நாலாயி:617/1

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்12-1-

வேறாய் இருந்தீர்கட்கு -என்னுதல் –-மற்று –உரைப்பது எல்லாம் -என்று மேலே கொடு போய்-அந்வயித்தல்-ஏக தேச வாசமே போராது காணும் கோள்- எனக்கு ஓடுகிற தசை அறிகைக்கு-இருந்தீர்கட்கு– நான் இருந்த தேசத்திலே நீங்களும் இருந்தி கோள் என்னா-
எனக்கு ஓடுகிற தசை உங்களால் என்னை அறியப் போகாதே –

நாணி இனி ஓர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் – நாலாயி:618/1

நாணி யினியோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க யுறுதிர் ஆகில்
மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்–12-2-

ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது அம்மனைமீர் துழதி படாதே – நாலாயி:621/1

ஆர்க்கும் என் நோய் இது அறியல் ஆகாது அம்மனைமீர் துழிதிப் படாதே
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைக் கண்ட யோகம் தடவத் தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–12-5-

இந் நோவு விளைத்தவனுக்கும் இவ்வளவு என்று பரிச்சேதிக்க ஒண்ணாது இது மிக்க பெரும் தெய்வம் இசைப்பின்றி நீர் அணங்காடும்-இளம் தெய்வம் அன்று இது -திருவாய் -4-6-2- என்னக் கடவது இறே –யஸ்யா மதம் தஸ்ய மதம் –கேன -2-3-என்றதுக்குள்ளே புக்கான் இறே அவனும்-தாம் தம் பெருமை அறியார் -பெரிய திரு மொழி -5-2-1- – தன்னைப் பரிச்சேதித்தால் இறே என் நோயைப் பரிச்சேதிக்கலாவது

நாணி நான் என்னுடைய ஸ்த்ரீத்வத்தை நோக்குகிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு -சத்தை கிடக்கில் இறே லஜ்ஜை நோக்குவது -சத்தை அழியா நிற்கச் செய்தே நோக்குவது ஒரு லஜ்ஜை உண்டோ தர்மியை அனுபந்தித்தித்றே லஜ்ஜை இருப்பது-தர்மி லோபம் பிறக்கும் அளவானால் இனி நோக்குகை என்ற ஒரு பொருள் உண்டோ- இனி -இவள் தான் ஆம் அளவும் நோக்கிப் பார்த்தாள் போலே காணும் –

பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக – நாலாயி:627/3

கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புற நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் என்னை வாட்டம் தணிய வீசீரே–13-1-

உங்கள் இரண்டு தலைக்கும் ஒத்த உகப்புக்கு நாங்கள் சில யத்னம் பண்ணும் படி இருந்ததோ -என்ன உகப்பு ஒத்தாலும் ஆணும் பெண்ணும் என்கிற வாசி இல்லையோ –
முலை எழுந்தார் படி மோவாய் எழுந்தார்க்குத் தெரியாது இறே -என்று பட்டர் –அருளிச் செய்தாராக பிரசித்தம் இறே சாந்தீபிநி சிஷ்யனை இறே -பிறர் மிடி -அறியான் என்கிறது பிராப்ய த்வரையால்-பெருமாள் —துஷ்கரம் க்ருதவான் ஹீ நோ யத நயா பிரபு -சுந்தர -15-53-என்கிறபடியே பிரிந்த போது கண்ணன் பெருமானாய் இருந்தான் -என்றபடி 

தருமம் அறியா குறும்பனை தன் கை சார்ங்கம் அதுவே போல் – நாலாயி:642/1

தருமம் அறியா குறும்பனைத் தன் கைச் சார்ங்கமதுவே போல்
புருவம் வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே
வுருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே -14-6-

ஆன்ரு சம்சயம் இருக்கும் படி முதலிலே வ்யுத்புத்தி பண்ணி அறியான் –ஆன்ரு சம்சயம் பரோ தர்மஸ் த்வத்த ஏவ மயா ஸ்ருத -சுந்தர -38-41–நீர் வரவிட்ட ஆளின் வாயிலே கேட்ட வார்த்தை அன்றே –அதுக்கு முன்னம் தம்முடைய வாயாலே அருளிச் செய்ய என் செவியாலே கேட்ட தன்றோ-இருவருமாகக் கலந்து ஓடம் ஏற்றிக் கூலி கொள்ளும் அளவிலே –நீர் விரும்பி இருப்பது என் -என்று கேட்க –பிறர் நோவு படக் கண்டால் பொறுக்க மாட்டோம் -அதுவே காண் நாம் விரும்பி இருப்பது -என்றார்-இருவரும் ஒன்றை நினைத்துக் கிடக்கிறார்கள்-இக் கலவிக்கு பிரிவு வரில் செய்வது என் -என்று கேட்டாள் அவள் – நம்மைப் பிரிந்து நோவு பட விடோம் காண் நாம் -என்று அருளிச் செய்தாரானார் அவர் –இரக்கமே சிறந்த குணம் என்று -மயா ஸ்ருத -என்னால் கேட்க்கப் பட்டது – இது ஸ்ரவண மாத்ரமாய் போம் அத்தனையோ-அனுஷ்டான பர்யந்தமாகப் போகக் கடவது அன்றோ -என்று கேளீர் 

கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செலவு அறியேன் தேன் ஆர் பூம் சோலை திருவேங்கட மலை மேல் – நாலாயி:683/2,3

கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல் – நாலாயி:689/2

கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல
விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவ கோட்டம்மா! நீ
கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே— 5-2-

இவ்வருகு அவன் பண்ணும் அபகாரங்களை காற்கடைக் கொண்டு சம்பந்தத்தில் முதல் அடியிலே நினைத்து இருக்குமவளைப் போலே-அக்னிக்கு அந்தர்யாமியான ஸ்ரீ சர்வேஸ்வரனை சாஷியாக கொண்டவனை அல்லது அறியாதவளைப் போலே-கொண்டானை யல்லால் யறியா -என்கையாலே -பாதி வ்ரத்யம் சொல்லிற்று -குலமகள் -என்கையாலே ஆபி ஜாத்யம் சொல்லிற்று

மார்வு தழுவுதற்கு ஆசையின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யை கேட்டு – நாலாயி:698/2

ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர் எனை பலர் உள்ள இவ் ஊரில் உன் தன்
மார்வு தழு வதற்கு ஆசை இன்மை அறிந்து அறிந்தே உன் தன் பொய்யை கேட்டு
கூர் மழை போல் பனி கூதல் எய்தி கூசி நடுங்கி யமுனை ஆற்றில்
வார் மணல் குன்றில் புலர நின்றேன் வாசுதேவா ! வுன் தன வரவு பார்த்தே— 6-1-

அநேகம் பெண்கள் உள்ள ஊருமாய் -நீயும் சர்வ சாதாரணனுமானால் – உன் மார்வை யாசைப் படக் கடவதன்று என்று அறிந்து வைத்து-உன் ஸ்வரூபத்தை உணர ஒட்டாது இறே-உன் வார்த்தை –நீ யல்லது புகல் உண்டோ –உன்னை யல்லது நான் அறிவேனோ – என்று தாழ்ச்சி தோன்ற நீ சொல்லும் வார்த்தையைக் கேட்டு –

அந்த அந்த ஆகுலம் அமரரே அறிவரே – நாலாயி:821/4

குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள்
பந்தமான தேவர்கள் பரந்து வானகமுற
வந்த வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
அந்தவந்த வாகுல மமரேரே யறிவரே –70-

ருத்ரன் கொன்றையும் தும்பையும் ஜடையும் குலைய கேட்டுப் போன பாரவச்யமும்
போக்கற்றவாறே கலங்கி க்ர்ஷ்ணனுடைய முகம் பெறுகைக்கு ஸ்தோத்ரம் பண்ணின பாரவச்யமும்-பாரவச்யம் சமாயாதஸ் சூலி ஜ்ர்ம்பித தேஜஸா பாஞ்ச ஜன்யச்ய யகோ ஷேண சாரங்க விஷ்ப் பூர் ஜி தே ந ச -என்றும் க்ர்ஷ்ண க்ர்ஷ்ண மஹா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம் பரிசம் பரமாத்மாந ம நா தி நிதநம் ஹரிம் -என்னக் கடவது இறே-ஆக இப்படி இரண்டு வகைப்பட்ட ஆகுலத்துக்கும் கெட்டுப் போன தேவர்களே சாஷி
நான் இன்று சொல்ல வேண்டி இருந்ததோ –

அறிந்துஅறிந்து வாமனன் அடி இணை வணங்கினால் – நாலாயி:825/1

அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –74-

தன்னுடைய உடைமையை லபிக்கைகாக தான் அர்த்தியாய் வந்தவன் திருவடிகளை –
ப்ராப்யமும் ப்ராபகமும் அதுவே -என்று அத்யவசித்து -அத்திருவடிகளில்-ந்யஸ்தபரன் ஆதல் –வாமனன் அடி இணை -என்று -வரையாதே எல்லார் தலையிலும் திருவடிகளை
வைக்கையாலே -சர்வ சுலபன் ஆனவன் திருவடிகளை-அறிந்து அறிந்து -என்று
சாஸ்திர ஸ்ரவணத்தாலும் -ஆசார்ய உபதேசத்தாலும் 

அன்பு உறைக்க வைத்த நாள் அறிந்தனன்-கொல் ஆழியான் – நாலாயி:835/2

பின் பிறக்க வைத்தனன் கொல் அன்றி நின்று தன் கழற்கு
அன்புறைக்க வைத்த நாள் அறிந்தனன் கொல் யாழியான்
தன் திறத்தோர் அன்பிலா வறிவிலாத நாயினேன்
என்திறத்தில் என் கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே -84-

விச்சேதம் இல்லாதபடி தன் திருவடிகளிலே அன்பை உறைக்க வைத்து -பரம பக்தி உக்தனாக -ஒரு தேச விசேஷத்தில் அனுபவத்தை அனுபவிக்கும் நாள் எனக்கு உண்டாகும்படி நினைத்து இருக்கிறானோ ––சர்வாதிகனான தன்னிடையாட்டத்து –அவன் ஸ்வரூப ரூப குண விபூதிகளிலே ப்ரேம கந்தம் இன்றிக்கே –அதுக்கடியான ஜ்ஞான லேசமும் இன்றிக்கே ஹேயனான நான் –ப்ரேம கந்தம் இன்றிக்கே -அது இல்லை என்கிற அறிவும் இல்லாத நான் –

மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே – நாலாயி:836/3

நச்சராவணைக் கிடந்த நாத பாத போதினில்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம்
மெய்த்தன் வல்லை யாதலால் அறிந்தனன் நின் மாயமே
உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே –85-

ஒருத்தனை கேள்வி கொண்டு கார்யம் வேண்டாதபடி வஸ்துவை -வஸ்த்வந்தரம்
ஆக்க வல்ல சக்தியை உடையை யாகையாலே உன்னை ஸ்வ தந்த்ரன் என்று
அறிந்து கொண்டேன் –

புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும்-போது அறிய மாட்டீர் – நாலாயி:877/2

மறஞ்சுவர் மதிள் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறஞ்சுவர் ஓட்டை மாடம் புரளும் போது அறிய மாட்டீர்
அறஞ்சுவர் ஆகி நின்ற வரங்க னார்க்கு ஆட்செய்யாதே
புறஞ்சுவர் கோலம் செய்து புட் கவ்வக் கிடக்கின்றீரே

புருஷார்த்த உபயோகியாக ஈஸ்வரன் தந்த சரீரத்தைக் கொண்டு விஷயாந்தர பிராவண்யம் ஆக்குகையாலே –புறஞ்சுவர் -என்கிறது இத்தைக் கொண்டு ஆத்மாவுக்கு ஒரு நன்மை தேடினான் ஆகில் அது தானே உத்தேச்யமாம் இறே-அப்பொழுது விழுந்தது இப்பொழுது விழுந்தது -என்னும்படி அஸ்த்ரிமாய் இருக்கையாலே சொல்லுகிறார் –ஓட்டை மாடம்
ஓடும் பூட்டும் கொண்டு சமாதானம் பண்ணி நிற்க வேண்டும்படி இருக்கை-மாடம் -என்கிறது
சம்சாரிகள் அபிப்ராயத்தாலே-(ஓட்டை மாடம் என்றும் இச் சரீரத்திற்கே நாமாந்தரம் போலும்.) நீர் ஹிதம் சொல்லுகிறது இப்போது அன்றே க்ரமத்தில் செய்கிறோம் -என்ன
புரளும் போது அறிய மாட்டீர் – ஜீவிக்கும் காலம் இன்னளவு என்று அறிய மாட்டி கோள்-கெடுவிகாள்–மரணம் அன்றோ தோள் தீண்டியாக வந்து நிற்கிறது – க்ரமத்தில் செய்கிறோம் என்று ஆறி இருக்கலாமோ –

அற்றம் மேல் ஒன்று அறியீர் அவன் அல்லால் தெய்வம் இல்லை – நாலாயி:880/3

மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்
உற்ற போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றமேல் ஓன்று அறியீர் அவனை அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை  பணிமின் நீரே-9-

அற்றம் -மறை பொருள்-அறியாமைக்கு அடி ஆயிதான விருத்திக்கு மேல்பட
தாத்பர்ய விருத்தி யறிகிலி கோள் –
வசஸாம் வாச்ய முத்தமம் -என்றும்
வேதைச சர்வை ரஹமேவ வேத்ய -என்றும்
நாராயண பரா வேதா -என்றும் -சொல்லக் கடவது இறே-அவனை ஒழிந்த தேவதை களுடைய சத்பாவத்தை இல்லை என்கிறார் அல்லர் ஈஸ்வரனுக்கு பிரகாரமாய்க் கொண்டு அத் தேவதை களும் உளார் ஆஸ்ரயணீயர் அல்லர் என்கிறார்

ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியல் ஆவானும் அல்லன் – நாலாயி:893/2

பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஓன்று உணரலாகாது
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியலாவான் அவனும் அல்லன்
மாசற்றார் மனத்து உளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்-22-

ஆசு -குற்றம்-இனி இத்தை விஷய விபாகம் பண்ணிக் கொள்ளும் இத்தனை
அதாகிறது-உபாய விஷயமாக வரும் குற்றம் –அதாகிறது1-பாரதந்த்ர்யத்துக்கு சேராதவை –
2-அஹங்கார கர்ப்பமான அசேதன கிரியா கலேபங்களை சாதனமாக நினைத்து இருக்கை –இதர உபாயங்கள் பல பிரதமாம் இடத்தில் அவனுடைய அனுக்ரஹம் பார்த்து இருக்க வேணும் –தான் உபாயமாம் இடத்தில் சஹாயாந்தர அபேஷை இல்லை –இதர உபாயங்களை விட்டு தன்னையே உபாயமாகப் பற்றினார்க்கு அல்லது – தன்னை உள்ளபடி அறியலாய் இருப்பான் ஒருவனும் அல்லன் –

உம்பரால் அறியல் ஆகா ஒளியுளார் ஆனைக்கு ஆகி – நாலாயி:899/1

உம்பரால் அறியலாகா யொளி உளார் ஆனைக்காகிச்
செம் புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார்
நம்பர மாயதுண்டே நாய்களோம் சிறுமை யோரா
எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே-28-

ப்ரஹ்மாதிகளால் அறிய ஒண்ணாத ஒளி உண்டு -ஸ்ரீ வைகுண்டம் அத்தை வாசஸ் ஸ்தானமாக வுடையவர் –அதயதத பரோ திவோ ஜ்யோதிர்த் தீப்யதே -என்றும் அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மகாத்மான -என்றும் -சொல்லக் கடவது இறே-ஜ்ஞானாதிகர் ஆனாலும்-ஈஸ்வரோஹம் -என்று இருப்பார்க்கு பரம பதம் நிலம் அன்றே
பிராபிக்கை முடியாமையே யன்று-அறியவும் முடியாது என்கை –

மார்க்கம் ஒன்று அறியமாட்டா மனிசரில் துரிசனாய – நாலாயி:903/3

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள்
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய

மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே-32-

உன்னைப் பெறுகைக்கு உறுப்பாக நீர் உபதேசித்து வைத்த மார்க்கம் உண்டு -வழி -அதாகிறது -உபாயம் –அவை யாகிறன – கர்ம யோகம் –தத் சாத்தியமான ஜ்ஞான யோகம்-உபய சாத்யமான பக்தி யோகம்-அவதார ரஹஸ்யம்-புருஷோத்தம வித்யை-அனுக்தமான திரு நாம சங்கீர்த்தனம் புண்ய ஷேத்திர வாஸம் இப்படி சேதன பேதத்தோபாதி போரும் இறே உபாய பேதமும் – இவற்றில் ஒன்றை அனுஷ்டிக்க மாட்டாமை அன்றிக்கே ஒன்றையும் கூட அறிய மாட்டாதவன் ஆய்த்து –

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று – நாலாயி:905/3

உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக்
கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே-34-

நினைவுக்கு வாய்த் தலையைப் பற்றி இருக்கையாலே அனுசந்திப்பார் அனுசந்திக்கும் எல்லாவற்றையும் கூட இருந்து அறுதி என்று –ஏகோ ஹமஸ் மீதி சமன்ய சேத்வம் -இத்யாதி
சர்வஞ்ஞனாய் –சர்வ நியந்தாவாய் இருக்கிற நீ உடனே இருக்கவா-நான் இவ்வமணக் கூத்து எல்லாம் ஆடிற்று -என்கிறார் –

ஆம் பரிசு அறிந்துகொண்டு ஐம்புலன் அகத்து அடக்கி – நாலாயி:909/2

மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம் பரிசறிந்து கொண்டு ஐம் புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே

மெய் -எனபது ஆத்மாவைக் காட்டுமோ -என்னில் —சத்யஞ்சா ந்ர்தஞ்ச சத்ய மவபவத் -என்கிற ஸ்ருதி சாயையால் அருளிச் செய்கிறார் – சத்ய சப்தம் அசத்திய வ்யாவர்த்தியை சொல்லுகிறது அன்று-ஆத்ம ஸ்வரூபத்தின் நித்யதையைச் சொல்லுகிறது –மெய்ம்மை -என்று முழுச் சொல்லாய் – பிரத்யக் விஷயத்தைச் சொல்லுகிறது – கைம்மை பொய்ம்மை -என்னுமா போலே-தேகமே ஆத்மா என்று இருக்கும் லோகாயதிகன் அளவன்றிக்கே –
தேகாதிரிக்தமாய் ஸூயமாய் இருக்கும் ஆத்மா என்னும் மீமாம்சகன் அளவன்றிக்கே
ஜ்ஞானம் ஆகந்துகம் -என்னும் வைசேஷிகன் அளவன்றிக்கே –
1-ஸுவயம் பிரகாசனாய்-2-நித்யனாய்-3-ஜ்ஞான குணகனாய்-4-அணு வாய்
5-ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷமாய்-6-அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாக உணருகை –அதாவது ஆத்மாவை உள்ளபடி உணருகை –பிரக்ருது ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் -என்று அறிந்து-மேலும் ஆத்மாவை உள்ளபடி உணர்ந்தால் – பின்னையும் ஆம் பரிசு ஆவது –கைங்கர்யமே யாய்த்து –-ஆம் பரிசு வர்த்திக்கும் படியை அறிந்து –-ஆத்மா அபிமான ரூபமாக வாய்த்து வ்ருத்தி ஹேதுக்கள் தான் இருப்பது –1-தன்னை திர்யக்காக அபிமானித்த போது -தர்ண சமூஹம் ஆய்த்து வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –
2-மனுஷ்யோஹம் -என்று அபிமானித்த போது-அன்னம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –
3-தேவோஹம் -என்று அபிமானித்த போது -அம்ருதம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –
4-தாசோஹம் -என்ற போது -கைங்கர்யமே வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –பிரகிருதி பிராக்ருதங்களில் சங்கோசம் போய்-ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தால் சஹஜ கைங்கர்யமே இறே வ்ருத்தி ஹேதுவாவது –அறிந்து கொண்டு – நிதி எடுத்துக் கொண்டு -என்னுமா போலே பிரகிருதி பிராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற ஜ்ஞானமும் – ஆத்மா பகவத் பரதந்த்ரன் என்கிற ஜ்ஞானமும் பிராப்யம் கைங்கர்யம் என்கிற ஜ்ஞானமும்
இறே சேதனனுக்கு வேண்டுவது –விடுவிக்கையும் பற்றுவிக்கையும் உபாய பூதனான ஈஸ்வரன் கார்யம் இறே –மேம் பொருள் மெய்ம்மை ஆம் பரிசு என்கிற இவை அவ்வவோ பதார்த்தங்களுக்கு வாசகம் அன்றிக்கே இருக்க தத் தத் ஸ்வ பாவ வாசியான சப்தங்களால் மறைத்து அருளிச் செய்கிறார் – அர்த்த கௌரவத்தாலே –

வானுளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில் – நாலாயி:912/1

வானுளார் அறியலாகா வானவா என்பாராகில்
தேனுளாம் துளப மாலைச் சென்னியா என்பராகில்
ஊன மாயினகள் செய்யும் ஊன காரகர்கள்  ஏனும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே –

பிரஹ்மாதிகளால் துர்ஜ்ஞேயமான பரமபதத்தில் நித்ய வாசம் பண்ணுபவனே-ஆகா -என்கிறது-சண்டாளன் அக்னி ஹோத்தரத்திலே ஆகாது என்னுமா போலே நிஷேதத்தை சொல்லிற்று ஆகவுமாம்-பரணிலே உயர இருந்தால் பரமபத நிலையனை அறியலாமோ –
மனுஷ்யர்களில் காட்டில் வ்யாவ்ர்த்தி உண்டே -அது கொண்டு அங்கே செல்லலாமா –அகிஞ்சன அநந்ய கதி – என்று இருப்பார் அறியும் அத்தை-ஈஸ்வரோஹம் – என்று இருப்பார்க்கு அறியலாமோ –ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியல் ஆவனும் அல்லன் -என்னக் கடவது இறே-நீஞ்ச வல்லவனோடு நீந்த மாட்டாதவனோடு வாசி அற கடலை நீந்த ஒண்ணாதாப் போலே சக்தனோடு அசக்தனோடு வாசி இன்றிக்கே அசாத்தியம் ஆய்த்து பகவத் வைபவம் இருப்பது – அநந்ய சாத்யே -என்னக் கடவது இறே –அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தனாய் – ஸூத்த சத்வமயமான விக்ரகத்தை உடையவனாய் இருக்கிறவனுடைய பெருமையைப் பார்த்தாலும் அவனே உபாயம் ஆக வேண்டும்-குண த்ரய வச்யனான இவன் சிறுமையைப் பார்த்தாலும் அவனே உபாயம் ஆகவேணும் – ஸ்வ ரஷணத்தில் பிராப்தி இல்லாத ஸ்வரூபத்தை அனுசந்தித்தாலும் அவனே உபாயமாக வேணும் 

கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு – நாலாயி:931/3

தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி – நாலாயி:938/3

எண் திசையும் அறிய இயம்புகேன் – நாலாயி:943/3

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7–

விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு வாசி அற எல்லாரும் அறியச் சொல்லுகிறேன் –
இவ்வுபகாரம் நிரவதிகம் ஆனாப் போலே திக்குகளும் நிரவதிகமாகப் பெற்றிலோம்
இது என்னளவிலே பர்யவசிப்பதே என்கிறார் –தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் ஆழ்வாரோட்டை வாசனையால் சொல்லுகிறார் –ஸ்வ ரஷணத்திலே தத் பரராய் இருப்பாரும் தேவ தாந்த்ரங்கள் ரஷகர் என்று இருப்பாருமான கோஷ்டிகளிலே சென்று-ஆழ்வாருடைய கிருபையை வெளியிடக் கடவேன் எண் திசையும் என்று -பத்து திக்குகளுக்கும் உப லஷணம் மேல் ஏற மாட்டாமாலும் கீழ் இழிய மாட்டாமலும் எண் திசையும் என்கிறார் -ஆழ்வாருடைய அருள் உண்டாகையாலே அத பத்யமில்லை-ஆழ்வார் போனால் அல்லது போகாதவர் ஆகையாலே மேல் ஏற மாட்டார் அறிய இயம்புகேன்-நாடு நகரமும் நன்கு அறிய -என்னுமா போலே எல்லாரும் அறியும் படியாக இயம்புகேன்
ஆழ்வாருடைய கிருபா பிரபாவத்தையும் அது தம்மளவிலே பலித்த படியையும் தம்முடைய பாபம் போனபடியையும் தமக்கு அபிமத லாபம் உண்டானபடியையும் இவையாய் இருந்தது இவர் இயம்புகிறது

இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னது ஓர் தன்மை என்று உணரீர் – நாலாயி:954/1

இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னதோர் தன்மை என்று உணரீர்
கற்பகம் புலவர் களை கண் என்று உலகில் கண்டவா தொண்டரைப் பாடும்
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடைந்தையே தொழுமின்
நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின் நாராயணா என்னும் நாமம் –7–

அவர்கள் கார்ஹஸ்யத்தில் நின்ற நிலை அறியிகோள் –-அவர்கள் ஜன்மம் அறியிகோள்-பண்டு தரித்ரனாய் கிலேசப்பட்டு போந்தான் ஒருவன் இப்போது ஜீவிக்க புக்கால் இது இவன் அளவு அன்றிகே இருந்தது -இது வேறு ஒருவன் அடியாக வேணும் -என்று அறிய மாட்டாதே ஸ்ரீயபதியைப் போலே- பிறப்பே பிடித்து ஸ்ரீ மானாக போந்தானாக நினைத்து இருப்புதி கோள் –அன்றிக்கே இவர் அவர் என்னீர்  -ஒரே சொல்லாய் -ஒருவர் வாசியும் அறியீர் என்னவுமாம்

அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய் ஆயிரம் நாமம் சொல்லி – நாலாயி:970/3

உறிகள் போல் மெய் நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி
நெறியை நோக்கி கண் சுழன்று நின்று நடுங்கா முன்
அறிதியாகில் நெஞ்சம் அன்பாய் யாயிர நாமம் சொல்லி
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே—1-3-3-

ஜ்ஞான ப்ரசுர த்வாரம் ஆகையாலே அவன் பக்கலில் அன்பை உடையையாய் சிலவற்றை சொல்லி மீள வேண்டாதபடி பாங்கான அளவிலே ஆயிரம் திரு நாமங்களையும் சொல்லி –பரிமளத்தை வகுத்தாப் போலே இருக்கிற வண்டுகள்-முக்தர் சாம கானம் பண்ணுமா போலே அனுபவத்துக்கு போக்கு விட்டு பாடுகிறன வாயிற்று –

அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே – நாலாயி:977/4

வண்டு தண்  தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே -1-3-10-

ஸ்ரீ பரம பதம் அல்லது அவர்க்கு ஆட்சி அறியோம் என்னுதல்
அன்றிக்கே நீள் விசும்பு என்கிறது ஸ்ரீ பரம பதமாய்-அது அல்லால் மற்று ஓர் அண்டம் அவர்க்கு ஆட்சியாக அறியோம் என்னுதல் –-ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில் இவர் அருளிச் செய்த தோஷம் ப்ரத்யஷித்து அநுபவியா நின்றோம்-அவ்வோபாதி ஸ்ரீ பகவத் விஷயமாக இவர் அருளிச் செய்ததும் மெய்யாக இருக்கும் இறே –-ஆன பின்பு இவர் விடச் சொன்னவற்றை விட்டு இவர் பற்றச் சொன்னவற்றை பற்றுகை இறே சேதனராய் இருப்பார்க்கு செய்ய அடுப்பது-

என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன் குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா – நாலாயி:1030/2,3

மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே – நாலாயி:1036/2

ஆயன் அடி அல்லது மற்று அறியேனே – நாலாயி:1045/4

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண்டரளங்கள்
வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே—1-10-8-

நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன் என்னும் இடத்துக்கு ஸூஸகம் இறே இது –இதர நிர பேஷனான அவன் அநந்ய கதியாய் கொண்டு என் பக்கலில் வந்து புகுர ஸா பேஷனான நான் அவனை விட்டுப் போவேனோ –

இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1074/4

பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7–

ஈஸ்வர ஆஞ்ஞை நடை யாடாத தேசம் ஆயிற்று – பீஷோ தேதி -தைத்ரியம் -என்றது அவ்விடத்தை ஒழிய யாயிற்று-(ராவணனுக்கு அஞ்சிய ஸூர்யன் ராவணாந்தகனுக்கு அஞ்சுவது சொல்ல வேண்டுமோ- பகதர்கள் பாகவதர்கள் ஆணை நடமாடும் இடம் )

அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால் – நாலாயி:1108/2

திவளும் வெண் மதி போல் திரு முகத் தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்

குவளை யங்கண்ணி கொல்லி யம் பாவை சொல்லு  நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இட வெந்தை யெந்தை பிரானே–2-7-1-

அவள் மார்விலே இருக்கிறது அறியாமை பற்றினாள்என்ன ஒண்ணாதே –
அவள் இருக்கிற இருப்பு தனக்கு பற்றுகைக்கு பற்றாசு என்று பற்றினவளை-அறிந்தும் -உம்மைத் தொகை -விஸ்லேஷ பயம் அறிந்தும் அதி சங்கையே விசேஷம் -நிலைக்குமா நித்ய அநபாயினியும் நித்ய அதி சங்கை பண்ணி இருக்க-அவளோடு-சாம்யம் கொண்ட இவளும் துணுக் துணுக் என்ன ஆசை
அன்றிக்கே-பிராட்டிக்கு கடகர் இல்லை -இவளுக்கு அவள் இருப்பதால் பயப்பட வேண்டாம் அதி சங்கையும் பண்ண வேண்டாம்

அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இ அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு – நாலாயி:1116/2,3

அஞ்ச அதன் மருப்பு ஒன்று வாங்கும் ஆயர்-கொல் மாயம் அறியமாட்டேன்
வெம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து – நாலாயி:1121/2,3

மஞ்சுயர் மா மணிக்குன்றம் ஏந்தி மா மழை காத்து ஒரு மாயவானை
அஞ்ச அதன் மருப்பன்று வாங்கும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன்

வெஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து
அஞ்சுடர் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-4-

இதுக்கு முன் பயம் வுயுத்புத்தி பண்ணி அறியாதது பயப்பட-அதினுடைய கொம்பை குப்பைக் கீரை பிடுங்குமா போலே அநாயாசேன வாங்கும்-ஆனை வாசி அறியாமையாலே
பலித்துக் கொண்டு நின்றது இத்தனை-அவனுடைய ஆச்ரயமான செயல்கள் எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை-

——————————–

எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்து இழையார் – நாலாயி:1123/1

எங்கனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறைவும் எல்லாம் தம் மனவாகப் புகுந்து தாமும்
பொங்கு கருங்கடல் பூவை காயா போதவிழ் நீலம் புனைந்த மேகம்
அங்கனம் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே-2-8-6-

ஆபாத ப்ரதீதம் மாதரம் அன்றிக்கே நம்முடைய இயற்றி எல்லாம் கொண்டு
இவரை உள்ள அளவு எல்லாம் அறிய வேணும் என்று பார்த்தால் (அறிந்து அறிந்து தேறி தேறி ) ஒன்றும் அறியப் போகிறது இல்லை -அட்டபுயகரத்தேன் என்றாரே–நீ அறிகைக்காக வந்து நிற்கிறவன் அன்றோ நான் என்றார்-உனக்கு பற்றுக்கோடாக இருக்கவே இப்படி சேவை

நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம் நான் இவர் தம்மை அறியமாட்டேன்
அஞ்சுவன் மற்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1126/3,4

தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு
நஞ்சமுடைத்திவர் நோக்கும் நோக்கம் நான் இவர் தம்மை அறிய மாட்டேன்
அஞ்சுவன் மற்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-9-

இவர் பார்க்கிற பார்வை விபாகத்தில் நம்மை முடிக்கும் போலே இரா நின்றது சொன்ன வார்த்தையை கிரயம் செலுத்துவாரைப் போலே இரா நின்றார் – அது ஒரு உக்தி மாதரம் ஆகாமே அத்தை அர்த்த க்ரியா காரியாக்கி நினைக்கிறார் போலே இரா நின்றது –இவர் ரஷகராய் இருக்கிறாரோ- நம்மை முடித்தே விட இருக்கிறாரோ – அறிகிறிலேன்

பணி அறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே – நாலாயி:1199/4

கூர் வாய சிறு குருகே குறிப்பு அறிந்து கூறாயே – நாலாயி:1200/4

நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நெடுமால் தன்
தாராய  நறும் துளவம் பெருந்தகையேற்கு அருளானே
சீராரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் சூழும்
கூர் வாய சிறு குருகே குறிப்பறிந்து கூறாயே–3-6-3-

அவன் கருத்து அறிந்து வந்து எனக்கு சொல்லுதல் என்னுதல் –
நான் ஆற்றாமையாலே கண்ணாஞ் சுழலை இட்டு சொன்னவற்றை எல்லாம்
அங்குச் சொல்லாதே -அவன் தரிக்கும்படி அளவு அறிந்து வார்த்தை சொல் என்றுமாம் –
மிகச் சொல்லில் அவனைக் கிடையாது-கூர்வாய சிறு குருகு ஆச்சார்யர் உபதேசம்-அவன் நைராச்யத்தை அறிந்து வந்து சொல் என்றதுக்கு கருத்து யாது என் என்னில் –
நம் தசையை அறிவித்தால் நமக்கு அத்தலை வேணும் -என்றான் ஆகில்-நம் ஆற்றாமை பாராதே யாகிலும் நாம் ஜீவித்துக் கிடக்க நமக்கு அத்தலை வேண்டா -என்றான் ஆகில் –
நாம் முடிந்து பிழைக்கும் படி —

ஆன் ஆயற்கு என் உறு நோய் அறிய சென்று உரையாயே – நாலாயி:1201/4

தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர்
மீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ
தேன் வாய வரி வண்டே திருவாலி நகராளும்
ஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே–3-6-4-

கள்வன்-கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து – நாலாயி:1208/1

தூதுவன் ஆயவன் ஊர் சொல்வீர்கள் சொலீர் அறியேன் மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் – நாலாயி:1211/2,3

திரு ஆய்ப்பாடியிலே சம்பத்தோடே திரு ஆலியில் சம்பத்தையும் அடைப்பாக்கினால்
பின்னை அவனுக்கு நொந்தாரை ஐயோ என்ன அவசரம் உண்டோ-என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே – அறியாமை வாராது ஒழிந்தான் இத்தனை-நீ போய் அவன் அறியும் படி போய் சொல்லு (சர்வஞ்ஞன் சர்வ அந்தர்யாமி யந்த்ரா ரூடாநீ -இருந்தும் என் நோய் அறியாமை இருந்தால் ) அன்றிக்கே அறியச் சென்று உரை –உன்னடையிலே தளர்த்தியிலே இத்தலை ஆற்றாமை அடைய அவன் அறிந்து நாவிலும் பல்லிலும் நீர் அற்று உடம்பு வெளுக்கும்படி சென்று சொல் என்றுமாம் —

தேசம் அறிய உமக்கே ஆளாய் திரிகின்றோமுக்கு – நாலாயி:1331/2

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காயாய்த்து அடியோர்க்குத்
தேசம் அறிய வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான்
வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே —4-9-4-

பாவியோம் விழுக்காடு அறியப் பெற்றிலோம் இப்படி விளைவது அறிந்தோம்  ஆகில்
நீரும் நாங்களும் அறிந்தது அறிவாக ஸ்நேஹித்து விடலாய்த்தே லோகம் அடங்க இருந்ததே குடியாக அறியும் படி-வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்- இன்னமும் வேறு ஒரு ரஷகன் உண்டாய் அவன் வாசலிலே சென்று தான் தன் கார்யம் குறையும் தலைக் கட்டிக் கொள்கிறான் என்று தான் ஆறி இருக்கிறீரோ (அகாரத்துக்கே மகாரம் அநந்யார்ஹன் என்று உகாரத்தால் சொல்லிக் கொடுத்தீரே )

சொல்லாது ஒழியகில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார் – நாலாயி:1333/1எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே – நாலாயி:1333/4

சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே
—4-9-6-

விரஹ அஸஹிஷணத்வம் உடைய நன்மை ஸஹிஷணத்வம் உடைய தீமை அறிவீர்-சேஷி சந்நிதியில் சேஷ பூதன் பரிமாறும் முறையில் பரிமாற ஷமன் ஆகிறிலேன்-சேஷி செய்த படி கண்டு இருக்கைக்கு மேற்பட சேஷ பூதன் நிர்பந்திக்கக் கடவன் அன்று இறே
இப்படி இருக்க மாட்டு கிறிலேன்-அறிந்தவற்றைச் சொல்லில்-முறை செய்யக் கடவது அல்லாதாகப் பார்த்த பின்பு இனி அதுக்கு ஈடாக பிரதிபன்னங்களைச் சொல்லில்—-தேவரை ஒழியச் செல்லாதார் பிரகிருதியும் அறிவீர்–தேவரை ஒழியவும் ஜீவித்து இருப்பார் பிரகிருதியும் அறிவீர்-நமக்கு இவ் உலகத்து எல்லாம் அறிவீர் ––சர்வஞ்ஞனையும் அஞ்ஞன் ஆக்க வேண்டும்படி காணும் இவருடைய பிரகிருதி மார்த்தவம்

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மை பணி அறியா வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே – நாலாயி:1334/1,2

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள வெம்மைப் பணி யறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே

காட்டீர் ஆனீர் நுந்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே —4-9-7-

சேஷத்வத்தை இப்போது உம்மாலே உண்டாக்குதல் ஒழித்தல் செய்ய ஒண்ணாதே
(திருமாலே நானும் உமக்கு பழ அடியேன் ) இதனுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை பண்ணுவித்துக் கொள்ள மாட்டீர் ஆனீர்  –உம்மை ஒழியச் செல்லாத ஸ்வபாவத்தை உடைய எங்களை உம்முடைய திருவடிகளில் அடிமைச் சுவட்டை அறிவித்து
பொகட்டீர் –

அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான் என்னை ஆள் உடையான் – நாலாயி:1348/1

அறிவது அரியான் அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான்
குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்
நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார்  மஞ்ஞை நடமாடப்
பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-1-

ஸ்வ யத்னத்தாலே அறியப் பார்ப்பாருக்கு அப்பால் பட்டவன்-என்றும் ஒக்க அறிய அரியதாம் படி இருக்கும் ஸ்வ பாவன்-அகில ஜகத் ஸ்வாமி அஸ்மின் ஸ்வாமி -உடையான் வேறே ஆளுடையான் வேறே -அடியேன் இடம் கைங்கர்யம் பெற்றுக் கொண்டவன் –

தாம் தம் பெருமை அறியார் தூது – நாலாயி:1358/1

தாந்தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்காய வேந்தரூர் போல்
காந்தள் விரல் மென்கலை நன் மடவார்
கூந்தல் கமழும் கூடலூரே  –5-2-1-

ஸ்வதஸ் சர்வஞ்ஞராய் இருந்தாரே யாகிலும் யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -( முண்டகம் ஸ்வரூபம் ஸ்வ பாவங்களை அறிந்தவர் -) பராஸ்ய சக்திர்  விவிதைவ ஸ்வாபாவி கீ ஜ்ஞான பல கிரியா ச -( ஸ்வேதாஸ்வரம் )-என்று ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஓதா நின்றனவே யாகிலும்-ஆஸ்ரிதராய் இருப்பவர் தம்மை அனுபவித்து ஆஸ்ரிதர்க்காக தாழ நிற்கும் இதுவும் ஒரு நீர்மையே என்று ஆழங்கால் படுமது ஒழிய தம்மால் அறியப் போகாது –

மாயை ஆரும் அறியா வகையான் இடம் என்பரால் – நாலாயி:1386/2

சேயன் என்றும் மிகப் பெரியன் நுண் நேர்மையினாய விம்
மாயையை யாரும் யறியா வகையான் இடம் என்பரால்
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார் புனல் காவிரி
ஆய பொன் மா மதிள் சூழ்ந்த அழகார் தென்னரங்கமே—5-4-9-

தூரஸ்தனாய் சர்வேஸ்வரனாய் இருக்கும் இருப்பு ஸூஷ்மத்வத்தில் அதி ஸூஷ்மமான பதார்த்தங்கள் எங்கும் புக்கு வியாபித்து தரித்துக் கொடு நிற்கை யாகிற இந்த ஆச்சர்ய சக்தி யோகம் –எத்தனை ஏலும் அளவுடையராலும் ஒரு நாளும் அறிய ஒண்ணாத படி
இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் –

ஆன் ஆயன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1390/4

மானாய மென்னோக்கி வாள் நெடுங்கண் கண்ணீர் மல்கும் வளையும் சோரும்
தேனாய நறுந்துழாய் அலங்கலின் திறம் பேசி  யுறங்காள் காண்மின்
கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற
ஆனாயன் என் மகளைச் செய்தனகள் அம்மனைகீர் அறிகிலேனே–5-5-3-

பசுக்களை மேய்க்கும் அவனோ தான்-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹா-என்கிற பகவத் உத்கர்ஷத்தை சிறிது அறியலாம்-ப்ரணய தாரையில் அவன் செய்து நிற்கிற இவை என்னால் ஒன்றும் அறியப் போகிறன வில்லை   – அறிகிறிலேனே-கீழ் சொன்னவை ஒரு திங் மாத்ரம் இத்தனை என்னால் அறியப் போகாது – திங் மாத்ரம்-திக்கு ஏக தேசம் அல்பம் என்றபடி

நாள்மலராள் நாயகனாய் நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி – நாலாயி:1392/3

பூண் முலை மேல் சாந்தணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள்
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நாண் மலராள் நாயகனாய் நாம் அறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆண் மகனாய்  என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே —5-5-5-

அனுசந்தேய பதார்த்தம் இன்னது என்று லோக யாத்ரையில் ஒன்றும் அனுசந்திக்கிறிலள்-அதில் மனஸ் சஹகாரமும் வேண்டுகிறது இல்லை-(ஏக தேசமும் -பெருமானையும் லோக யாத்திரையும் எண்ண மாட்டாள் ஆனால் திருவரங்கம் -மனஸ் ஸஹகாரம் வேண்டாதபடி வாயே கேட்க்கும் மனோ பூர்வ வாக் உத்தரம் நிலை கடந்து மனாஸ் அவன் இடம் போனதே

ஸ்ரீ யபதி என்று ஒருத்தியை இட்டு அன்றோ தம்மை வ்யபதேசிப்பது (தன்னைப் படுத்தின -அவன் ஸ்ரீ யபதித்தவம் வெறுப்பாக தாத்பர்யம் இப்படி படுத்தினால் அவள் முகம் கொடுப்பாளோ என்றபடி இவனது ஸ்வரூப நிரூபகமே அவளாலே தான் )-நாம்  அறிய இது ஒரு பழங்கிணறு காண வர வேணுமோ இவ்விசை இருந்தபடி எல்லாரும் அறியாமோ (தூறு வார வேண்டுமோ ஸ்ரீ பூமி நீளா தேவிமார் உடன் அமர் காதல் மகளிர் ஆஷேபமே இல்லையே)

அறவாளன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1395/4

உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்று ஆல்
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால்
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன் என் மகளைச்   செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே—-5-5-8-

நித்ய ஸூரிகள் தன் ஆன்ரு சம்சயத்தைக் கொண்டாட அவர்களுக்கு ஓலக்கம் கொடுக்குமவன் –-என் மகளைச்   செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே – இவள் அளவில் அவன் பண்ணின ஆன்ரு சம்சய பிரவ்ருத்திகள் என்னால் பேசி முடிக்கப் போகாது  –ஆன்ரு சம்சய பிரவ்ருத்திகள்-விபரீத லக்ஷணையால் இவள் தீர்க்க சிந்தயந்தி அன்றோ

அந்தோ வந்து என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1396/4

பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன் வாரானோ  என்று என்றே வளையும் சோரும்
சந்தோகன் பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி
அந்தோ என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே —5-5-9-

ஒரு சர்வஞ்ஞன் அஞ்ஞன் செய்வதைச் செய்தால்-இதுக்கு மேல் என்னால் போக்கடி தேடப் போமோ-வந்து – இவள் தன் திறத்து படாது இருக்க தானே வந்து இப்படி பண்ணி தானே உபேஷிப்பதே முன் தீமை செய்வானும் தானேயாய் உபேஷிப்பானும் தானே யாவதே –
(பரம பக்தியை அன்றோ தீமை என்கிறாள் இத் தசை இருப்பதால் )

ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறிதுயில் அலை கடல் நடுவே – நாலாயி:1413/3

ஆயிரம் குன்றம் சென்றது தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள்
ஆயிரம் துணிய அடல் மழுப்பற்றி   மற்று அவன் அகல் விசும்பு அணைய
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலைகடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-6-

அவனாலே  பீடிதரான தேவர்கள் அடங்கலும் அநந்தரம் திரு நாமங்கள் ஆயிரமும் சொல்லி ஆஸ்ரயிக்க யோக நித்ரையை ஸ்வ சந்நிதானத்தாலே கழித்து திரை மோதா நின்றுள்ள கடலின் நடுவே

கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்க கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து உன் – நாலாயி:1420/3

கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே–5-8-3-

முதலை ஆனையின் காலை அன்றோ பற்றிற்று-புண் படுகிறது திரு உள்ளம் இறே
ஒரு வைஷ்ணவனுக்கு வந்த ஆபத்து தனக்கு வந்ததாக நினையாத அன்று வைஷ்ணத்வம் இல்லை என்று இருக்க அடுக்கும் – புத்ராதிகளுக்கு வந்த விரோதம் தனக்கு வந்ததாக நினையாத போது தேஹாபிமானத்துக்கு கொத்தையாமா போலே  –தேஹமாதல் இந்த்ரியமாதல் அன்றிக்கே பிராண ஸ்தானம் அகப்பட மலங்க-சச நித்யம் பிரசாந்தாத்மா -என்கையாலே ஆஸ்ரயத்தில் இன்றிக்கே-க்ரோதமாஹாரயத் -என்கிறபடியே கார்ய காலத்தில் ஏறிட்டுக் கொண்ட சீற்றம் தத இத்யாதி கோபச்ய வசமே யிவான்-சரீரம் புண் பட்டால் சரீரி பேசாது இரானே வந்தேறியான தேக சம்பந்தத்தைப் பற்றி சேதனன் பின்னே போமா போலே இவன் கர்மம் இட்ட வழக்கமா போலே-அவன் அனுக்ரஹம் இட்ட வழக்காய்-அதன் பின்னே போகா நிற்கும்   –தரித்ரனானவன் தநிகனை அடையுமா போலே
சீற்றம் உண்டு என்று ஆய்த்து இவர் பற்றுகிறது – ஆஸ்ரயிப்பாருக்கு உறுப்பான  குணங்கள் இறே சௌலப்யாதிகள் விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இறே சீற்றம்   

நெஞ்சில் கொண்டு நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து
வெம் சொலாளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன உள அதற்கு அடியேன் – நாலாயி:1421/2,3

நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணாய்
நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து
வெஞ்சொல் ஆளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன யுளவதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-4-

இத்தனை  தண்ணியனாய் இருக்கிறவனுக்கு நாம் அல்லது வேறு புகல் இடம் இல்லை
என்று நெஞ்சில் கொண்டு –-அதிகார பூர்த்தியும் சரணாகதி பூர்த்தியும் அன்றே பல ப்ரதம் ஆவது-சரண்யன் உடைய நினைவே இறே-இங்கன் அல்லாத அன்று -ஸ்ரீ பரத ஆழ்வான் பிரபத்தியும் பலிக்க வேணுமே –பெரிய திருவடி கையிலே காட்டிக் கொடுத்து-அவனை இட்டு ரஷிப்பித்தாய்- ஈஸ்வர ஹிருதயத்துக்கு ஒரு பிரியம் இறே இது-ந ஷமாமி-நத்யஜேயம்-என்கிற இவ்விரண்டும் சேர விட வேணுமே இவனுக்கு-அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து –உணர்ந்து நோக்கும்படி பண்ணி

வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம் – நாலாயி:1426/3

துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழு உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-9-

அவனுக்கு திரு மந்த்ரத்தை உபதேசித்து ததீய சேஷத்வத்தை உண்டாக்கின படி
குறும்பறுத்த நம்பி யோடு சேர்த்து விட்ட படியைச் சொல்லுகிறது
(பணிப்பூவும் -முடி மன்னவன் -அனுவர்த்தித்தானே -நாயனார் )-பதி வ்ரதையோடு உண்டான ஏகாந்தத்தில் அனுபவத்தை திரளிலே வெளியிடுவாரைப் போலே தானும் நானும் அறிய அனுபவித்த இத்தை இங்கன் வெளியிடுவதே-திருவேங்கடமுடையான் அலவலை யாகாதே என்கிறார் இறே –(அலவலை–பஹு ஜல்பம் ஓட்டை வாய் உளறுவது )

அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி-தன்னுள் – நாலாயி:1435/1

அம் பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள்
கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும்
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே—5-9-8-

ஓர் இடைச் சேரி மாதரம் அன்றிக்கே ஸ்லாக்கியமான ஏழு லோகங்களும் அறிய
திரு வாய்ப்பாடியிலே வஞ்சிக் கொம்பு போலே இருக்கிற வடிவை உடைய
நப்பின்னை பிராட்டி உடைய ஒப்பனையோடே சேருகைக்காக ருஷபங்கள் ஏழையும் நிரசித்தான்  –

அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால் – நாலாயி:1446/2,3

வங்க மலி பௌவ மது மா முகட்டின் உச்சி புக மிக்க பெரு நீர்
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால்

நங்கள் பெருமான் உறையும் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-9-

அவனுடைய வார்த்தையை சிரசா வஹிக்கக் கடவ சேஷ பூதர் ஆனவர்கள் பிரளய ஆபத்துக்கு ஹேதுவான கர்மம் அனுபவியார்கள்

அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி – நாலாயி:1461/2

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும்  ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே —6-2-4-

அறிந்தேன் -பிறிந்தேன் -செறிந்தேன் –மூன்று வினைச் சொற்களால் சித்தாந்தம்
சரம ஸ்லோக வார்த்தை எப்பொழுதும் உண்டே -இருள் நீங்கிய பின்பு அறிவது போல் அறிந்து செறிந்தேன்-ஜ்ஞானம் பிறக்கைக்கு ஒரு காலமும்-த்யஜிகைக்கு ஒரு காலமும் வேண்டுகிறது இல்லை –இவ்வருக்கு உண்டான பந்துக்கள் நமக்கு உபகாரகர் அல்லர்கள்
இனி இவ்வளவுக்கு தஞ்சமாவார் ஆர் -என்று நெஞ்சிலே பட்டவாறே-என்னையே தஞ்சமாக நினைத்து இரு -என்று அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு இறே அது இப்போது வாரா உதவிற்று-நீயோ புத்ராதிகளோ ரக்ஷகம் என்கிற சம்சயம் தீர்ந்தேன்-சத்ருக்களை தமது வாள் வீசும் ஆழ்வார்-இப்பொழுது இவர் பெற்ற வாள்-ஐயத்தை வெட்டும் வாள்

தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே – நாலாயி:1473/4

அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும் – நாலாயி:1561/3

சிறியாய் ஓர் பிள்ளையுமாய் யுலகு உண்டு ஓர் ஆலிலை மேல்
உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது தான்
அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும்
நறைவாரும் பொழில் சூழ்  நறையூர் நின்ற நம்பீயோ–7-2-4-

அறியாது இருந்தறியேன்-தெரிந்து கொள்ளாத நாள்களும் உண்டே -அத்தையும் காட்டி அருள இரண்டு எதிர் மறை சொற்கள் இதில்-சேராச் சேர்த்தியாக என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து அவ் வாலந்தளிர் அளவன்றிக்கே பரம பதம் போலே இடம் பெற இருந்து என்னை உனக்காக்கிக் கொண்ட இம் மகோ உபகாரத்தை அறியாதே
நான் க்ருத்க்னனாய் இருக்கிறேன் அல்லேன் – அவ்விடை யாட்டமும் அறிந்தே இருக்கிறேன் –

வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடை – நாலாயி:1570/1

வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்றோர் நெஞ்சு அறியான் அடியேனுடைச்
சிந்தையாய் வந்து தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் இது சிக்கெனப் பெற்றேன்
கொந்துலாம் பொழில் சூழக் குடந்தைத்  தலைக் கோவினைக் குட மாடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம் பிரானை எத்தால் மறக்கேனே –7-3-3-

பிரதம ஸ்வீகாரத்துக்கு முன்பு தாம் இட்டது ஒரு பச்சை உண்டாய் அதுக்கு உபகரித்தான் ஆகில் இறே இந்நாள் என்னல் ஆவது – அங்கன் ஓன்று இல்லாமையாலே-பிரதம ஸ்வீகாரத்தை -வந்த நாள் -என்னும் இத்தனை யாய்த்து சொல்லல் ஆவது –ஆவா சந்த்வஹ மிச்சாமி -என்கிறபடியே என்னுடைய ஹிருதயத்தை தனக்கு இடமாக்கிக் கொண்டான் –
(நீர் காட்டும் இடத்தில் குடிசை கட்டி வாழ பெருமாள் ரிஷிகள் இடம் பிரார்த்தித்து போல் )-திருவடி -திரு வநந்த வாழ்வான் தொடக்க மானவர் பக்கலிலும் போவானாய் இருக்கிறிலன்-
அனந்தன்  பாலும்  கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து -பெரியாழ்வார் -5-4-8–என்றும்
இட வகைகள் இகழ்ந்திட்டு -பெரியாழ்வார் –5-4-10–என்றும்
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் என்று ஒழிந்தன கொல்-என்றும்
சொல்லுகிறபடியே-இவர் உடைய திரு உள்ளம் ஒழிய வேறு ஓர் இடம் உண்டாக நினைத்து இருக்கிறிலன் – பின்னை அவ்வோ இடங்களிலே இவன் இல்லையோ என்னில்
சௌபரி பல வடிவு கொண்டு   அனுபவித்தால் போலே இதுக்கு அவ்வருகு இல்லை என்னலாம் படி அவன் முகம் கொடுத்துக் கொண்டு இருந்த படி
(இளம் கோயில் கை விடேல் என்று இவர்கள் பிரார்த்திக்கும்படி )

ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம் என் அன்பு தானே – நாலாயி:1584/4

பை விரியும் வரி யரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்
மை விரியும் மணி வரை போல் மாயவனே என்று என்றும் வண்டார் நீலம்
செய் விரியும் தண் சேறை எம்பெருமான்  திருவடியைச் சிந்தித்தேற்கு என்
ஐ யறிவும் கொண்டானுக்கு  ஆளானார்க்கு ஆளாம் என் அன்பு தானே -7-4-7

ஸ்ரமஹரமான திருச்  சேறையிலே நிற்கிற நாயனார் உடைய ஸ்லாக்கியமான வடிவு அழகை அனுசந்தித்தேற்கு  –ஸ்ரோத்ராதிகள் ஐந்தாலும் உண்டான வெளிச் சிறப்பை தன் பக்கலிலே ஆக்கிக் கொண்டான் – அது தனக்குத் தான் விஷயம் ஆனான் -என்றபடி –ஐ அறிவும் கொண்டானுக்கு ஆளான அளவிலே நிற்கிறது இல்லை – அவனுக்கு ஆளானார் அளவிலே ஆளாகா நின்றது என் அன்பானது –

அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1609/4

ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1610/4

கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை கருமம் ஆவதும் என்தனக்கு அறிந்தேன்
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1612/3,4

விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து
பண்டானுய்ய வோர் மால் வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே
கண்டேன் நான் கலி யுகத்ததன் தன்மைக் கரும மாவதும் என் தனக்கு அறிந்தேன்
அண்டா நின்னடியன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே-
7-7-5-

இக் கலியுகத்தின் யுடைய ஸ்வ பாவத்தை நான் அழகியதாகக் கண்டேன் –
உன் பக்கலிலே வைமுக்யத்தை யுண்டாக்கி –பின்பு விஷய ப்ராவண்யத்தையும் பிறப்பித்து
முடிக்கும் -சம்சார ஸ்வ பாவத்தை நான் அழகிதாக அறிந்தேன் –எனக்கு ஹிதமாவதும் உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமதுவே என்று அறிந்தேன் –ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கும்
இடையருக்கும் பசுக்களுக்கும் உதவியது போல் பிற்பாடாருக்கும் உதவவே இங்கு வந்து நிற்கிறது —

ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1613/4

தீ வாய் நாகஅணையில் துயில்வானே திருமாலே இனி செய்வது ஒன்று அறியேன்
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1616/3,4

உறையும் இறை அடி அல்லது ஒன்று இறையும் அறியேனே – நாலாயி:1630/4

பறையும் வினை தொழுது உய்மின் நீர் பணியும் சிறு தொண்டீர்
அறையும் புனல் ஒரு பால் வயல் ஒரு பால் பொழில் ஒரு பால்
சிறை வண்டினம் அறையும் சிறு புலியூர்ச் சல சயனத்
துறையும் மிறையடி யல்லது ஓன்று இறையும் அறியேனே
–7-9-3-

சிறு புலியீர் சல சயனத்தில் நித்ய வாஸம் பண்ணுகிற சர்வேஸ்வரன் உடைய
திருவடிகளை ஒழிய வேர் ஒன்றை த்யாஜ்யதயா வாகிலும் அறிவது ஓன்று இல்லை –

ஆன் ஆயனது அடி அல்லது ஒன்று அறியேன் அடியேனே – நாலாயி:1631/4

தாயோ உனது அடியார் மனத்தாயோ அறியேனே – நாலாயி:1634/4

சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும்
மாயா வெனக்கு உரையாய் இது மறை நான்கினுளாயோ
தீ யோம்புகை  மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ வுன தடியார் மனத்தாயோ வறியேனே—
7-9-7-

உன் திருவடிகளில் அசாதாரணராய்  இருப்பார் ஹிருதயங்களில் உள்ளாயோ –
அடியேன் அறிகிறேன் இல்லை – எனக்கு இது தெரிய அருளிச் செய்ய வேணும் –இத்தால் சொல்லிற்று ஆயத்து –சௌபரி பல வடிவு கொண்டால் போலே இவ்வோ இடங்கள் தோறும்
இனி அவ்வருகு இல்லை என்னும்படி குறைவற வர்த்திக்கிற படியைக் காட்டிக் கொடுத்தான்

பண்டு இவரை கண்டு அறிவது எ ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால் – நாலாயி:1656/3

வண்டமரும் வன மாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-9-

முதல் நாள் கண்டால் ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் ஆக முன்பே கண்டறியும் முகமாய் இருந்ததீ   – எவ் ஊரில் தான் கண்டது -என்னும்படி இருக்கும் –சிர பரிசயம் பிறந்தால் பின்பு -முன்பு ஓர் இடத்திலும் இவனைக் கண்டு அறியோம் – என்னும்படியாய் இருக்கும் – நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி-பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -( வர்த்தமான பிரயோகம் ) எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ – இப்படியாக வேண்டாவோ -என்று ஜீயர் -(நஞ்சீயர்)

தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஒன்று அறியேனே – நாலாயி:1689/4

மாரி மாக்கடல்  வளை வணர்க்கு இளையவன் வரை புரை திரு மார்பில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்த தோர் துணை   காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே –8-5-2-

ஆஸ்வாச கரனான ஆதித்யனும் போனான் – தனக்கு சஞ்சரிக்கைக்கு ஸ்தலம் இல்லாமை போனானோ -அவன் போனாலும் அவன் சஞ்சரிக்கும் ரத சந்நிதி உண்டாகில் நான் ஜீவியேனோ-அவன் சந்நிதி கொண்டு இறே திக் விபாகம் பண்ணுவது
அவையும் போய் மறைந்தன –புறம்பு உள்ளார் ஒருவரும் இல்லை யாயிற்று –
அகவாய் குடி போயிற்று – நாயகனோ வந்து அணைகிறிலன்- இனி எத்தைச் செய்வது –

கரிய நாழிகை ஊழியின் பெரியன கழியும் ஆறு அறியேனே – நாலாயி:1693/4

முரியும் வெண்டிரை முது கயம் தீப்பட முழங்கு அழல் ஏறி அம்பின்
வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன்
எரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணை நெடுங்கண்  துயிலா
கரிய நாழிகை  ஊழியில் பெரியன கழியுமாறு அறியேனே
 —8-5-6-

லோக த்ருஷ்டியான தான் கண் உறங்கினால் என் கண் உறங்க ஆகாதோ
(த்யுமணி -ஆகாசம் உலகம் இவற்றுக்கு கண் ஸூரியன் )தனக்கு அநபிமதமான ராத்திரி கறுத்து இருக்கையாலே அதுக்கு அவயவமான நாழிகையும் கறுத்து இருக்குமோ -என்கிறாள்-அன்றிக்கே கரிய-கொடிதான நாழிகை என்னவுமாம்-அன்றிக்கே அந்த சந்த்யா காலமானது –-கரிய நாழிகை -அந்தி  காலம் –இது ஒரு கால் கால் வாங்கிற்றாம்படி அறிகிறிலேன்-பண்டு சில கல்பங்கள் கழியும்படி கேட்டிருந்தோம்  – இந் நாழிகை கால் வாங்கவும் காண் கிறிலோம்  –

விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஒன்று அறியேனே – நாலாயி:1694/4

கலங்க மாக் கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரை யாகம்
மலங்க வெஞ்சமத்து அடு சரம் துரந்த எம்மடிகளும் வாரானால்
இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி யடும் ஆயன்
விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஓன்று அறியேனே —8-5-7-

நான் முடியவே அவனைக் கிடையாது –அவன் போகவே அவனால் நோக்கப் படும் விபூதி த்வயமும் இல்லையாம்-ஆன பின்பு இது எவ்வளவாய் தலைக் கட்டும் என்று அறியேன் –

தழுவும் நள்ளிருள் தனிமையின் கடியது ஓர் கொடு வினை அறியேனே – நாலாயி:1695/4

முழுது இவ்வையகம்   முறை கெட மறைதலும்  முனிவனும் முனி வெய்த
மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய மைந்தனும் வாரானால்
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய  பேடையை யடங்க வஞ்சிறைக் கோலித்
தழுவு நள்ளிருள் தனிமையில் கடியதோர் கொடு வினை அறியேனே —8-5-8-

பிரிந்து தனி இருக்கிற இருப்பில் காட்டிலும் கொடியதோர் கடு வினை அறியேனே –
அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிறபடியே அனுபவித்து அல்லது நசியாத படி க்ரூரமாய் இருப்பதொரு பாபம் உண்டாக அறிகிறிலேன் –

ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை அறிந்து முன் உரைசெய்த – நாலாயி:1697/2

வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த
கார் கொள் பூம் பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார்
ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே  —8-5-10-

பிராப்த யௌவனைளான திரு வாய்ப்பாடியிலே பெண்கள் கிருஷ்ணன் திருவடிகளை ஆசைப் பட்டு கிட்டாமையாலே –அபிநிவேசம்  கரை புரண்டு கூப்பிட்ட கூப்பீடை புத்தி பண்ணி-அவ் வவஸ்தை பிறந்து கூப்பிட்ட  

எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ – நாலாயி:1732/2

வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் யிதுவே யமையாதோ
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா வுன்னை   என்றும் மறவாமை பெற்றேனே —8-9-5-

நித்ய ஸூரிகள் இடம் போவதற்கு நினைக்காமல் -போகாமல் என்னாமல் போக அறியாமல் –அந்தாமத்து அன்பு செய்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தாய்-இதுக்கு மேற்பட நீ பண்ணக் கடவதொரு உபகாரம் உண்டோ –நான் இருந்த இடம் தேடி நீயே வந்தாய் –இவன் வந்திடுவான் எனக்கு என்றும் இராத என் ஹிருதயத்திலே நீயே வந்து புகுந்த பின்பு –என் ஸ்வாமி யானவனே –ஸ்வாமி ஆனபடியால் சொத்தை விடமாட்டாமல் வந்து புகுந்தாய்
புகுந்த பின்பு அடியேனுக்கு நீயே எந்தாய் என்ற ஞானத்தையும் அளித்து அருளினாய்

அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே – நாலாயி:1747/4

கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை
கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி யவர்க்கு அது அறிந்தோமே —8-10-10-

இவற்றை நிதியாக கொண்டு பாடும் அடியார்களுக்கு கால தத்வம் உள்ளதனையும்
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே பரமபதம் ஆட்சியாகக் கடவது –சர்வேஸ்வரன் என் பக்கல் பண்ணின ஓரம் இருந்தபட(ஒர வஞ்சனை பார பக்ஷம் -ஆஸ்ரித வ்யாமோஹன் )
கண்டேனுக்கு-இத்தை அப்யசித்தவர்களுக்கும் அவ்வளவு சென்று அல்லது பர்யவசிக்க ஒண்ணாது என்னும் இடத்தை அழகியதாக அறிந்தோம் 

தஞ்சு உடையாளர்-கொல் யான் அறியேன் தாமரை கண்கள் இருந்த ஆறு – நாலாயி:1763/2

பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன்
பணியும் என் நெஞ்சம் இது என்-கொல் தோழீ பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – நாலாயி:1764/1,2

மண்டி ஓர் ஆலிலை பள்ளிகொள்ளும் மாயர்-கொல் மாயம் அறியமாட்டேன்
கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர் கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும் – நாலாயி:1766/2,3

எண்டிசையும் எறி நீர்க் கடலும் ஏழுலகும் உடனே விழுங்கி
மண்டியோர்  ஆலிலைப் பள்ளி கொள்ளும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன்
கொண்டல் நன்மால் வரையேயும் ஒப்பர் கொங்கலர் தாமரைக் கண்ணும் வாயும்
அண்டத்தமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகிய வா —-9-2-9-

மௌக்த்யத்தாலே ஒருவராலும் எழுப்ப ஒண்ணாத படி ஒரு பவனான ஆலந்தளிரிலே    பள்ளி கொள்கிற ஆச்சர்ய  பூதன் என்று தோற்றும்படி இரா நின்றார் – கண்டவாறே இவருடைய அகடிதகட நா சாமர்த்தியம் எனக்குத் தோற்றா நின்றது –
(நீசனான என்னையும் சேர்ந்ததே மிகப் பெரிய அகடிதகட நா சாமர்த்தியம் )

செவ்வி அறியாது நிற்கும்-கொல் நித்திலங்கள் – நாலாயி:1780/2

வவ்வித் துழாயதன் மேல் சென்ற தனி நெஞ்சம்
செவ்வியறியாது நிற்கும் கொல்
நித்திலங்கள்
பவ்வத் திரை யுலவு புல்லாணி கை தொழுதேன்
தெய்வச் சிலையார்க்கு என் சிந்தை நோய் செப்புமினே–9-4-3-

நாயகன் பிரிந்து போகிற போது தோளில் இட்டதொரு மாலையிலே ஒரு தலையைப் பிடித்து கொடு போய்த்ததாயிற்று – நெஞ்சு அவன் பக்கத்தில் அணுக்கத்தைக் கொண்டு
இத்தலையை உதறிப் போன படி –நம்மாள் அங்கே நின்றதாகில்-ஆசை அற்று வந்தால் அன்றோ-நமக்கு முடியல் ஆவது என்று இருக்கிறாள் -என்று இருக்கிறதோ – நிற்குங் கொல் -நிற்குமோ -என்றபடி –

நல்லரவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை – நாலாயி:1793/2

எல்லியும் நன் பகலும் இருந்தே ஏசிலும் ஏசுக வேந்திழையார்
நல்லரவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை
வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி வண்ணரை நாம் மறவோம்
கொல்லை வளரிள முல்லை புல்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமினே –9-5-6-

அவர்கள் விலஷணைகள் அன்றோ – ஆபரணங்களை சுமந்து கொண்டு இருக்க வல்லவர்கள் என சொல்லாதார் –நம் இடையாட்டம் அவர்கள் அறியும் அன்று இறே –
அவர்கள் இடையாட்டம் நாம் அறிவது –

ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு ஆடும் அதனை அறியமாட்டேன்
கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் – நாலாயி:1794/3,4

செங்கண் நெடிய கரிய மேனித் தேவர் ஒருவர் இங்கே புகுந்து என
அங்கம் மெலிய வளை கழல ஆது கொலோ வென்று சொன்ன பின்னை
ஐங்கணை வில்லி தன்னாண்மை என்னோடு ஆடுமதனை யறிய மாட்டேன்
கொங்கலர் தண் பனை சூழ் புறவில் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின்
–9-5-7-

அவன் பிரிவை உணர்த்தினான் –காமன் சர வர்ஷமாக வர்ஷிக்கத் தொடங்கினான்
வீர பத்னி என்று பாராதே நலியா நின்றான்-அவன் கை விட்டமை அறிந்தான் ஆகுமே  –

கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் – நாலாயி:1795/4

கேவலம் அன்று கடலின் ஓசை கேண்மின்கள் ஆயன் கை யாம்பல் வந்து என
ஆவி யளவும் அணைந்து நிற்கும் அன்றியும்  ஐந்து கணை தெரிந்து இட்டு
ஏவலம் காட்டி யிவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன்
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்—9-5-8-

பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணாம்-என்கிற படியே தன்னோடு ஒத்த பருவத்து பிள்ளைகளை மநோஹாரி சேஷ்டிதங்களாலேஎழுதிக் கொண்டு  இருக்குமவன் ஆயிற்று –
வன்னெஞ்சர் படுகிற பாடு இதுவானால் அபலைகளுக்கு சொல்ல வேண்டாம் இறே –அவன் திரு உள்ளக் குறிப்பறிந்து யென்னை அங்கே கொடு போய் பொகடப் பாருங்கோள்
அவன் வேணும் என்று இருந்தான் ஆகில் அங்கே கொடு போய்ப் பொகடுவது
வேண்டாம் என்று இருந்தான் ஆகில் இங்கே கிடந்தது முடிந்து போக –

போர்ப்பது ஓர் பொன் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை – நாலாயி:1796/2

சித்தம் மங்கையர்-பால் வைத்து கெட்டான் செய்வது ஒன்று அறியா அடியோங்கள் – நாலாயி:1859/2

பத்து நீண் முடியும் அவற்றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம்
சித்தம் மங்கையர் பால் வைத்துக் கெட்டான் செய்வதொன்று அறியா வடியோங்கள்
ஒத்த தோள் இரண்டும்  ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்
அத்த யெம்பெருமான் எம்மைக் கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-2-

வாக்யம் உக்தம்  தசாநன-என்கிறபடியே உனக்கு அவர் காலிலே விழ பத்துத் தலை உண்டு
அஞ்சலி பண்ணுகைக்கு இருபது கைகள் உண்டு அவரைச் சரணம் புக வல்லையே -என்றான் இறே விபீஷண ஆழ்வான் பத்துத் தலையையும் -வலியையும் -பெருமையும் உடையனாய் இருபது தோளையும் உடையனானவன் விஷய பிரவணனாய் தன் சம்பத்தை அழித்தான் – செய்வதொன்று அறியா வடியோங்கள்-ரஷகனானவன் போகையாலே-செய்வது அறியாத நாங்கள் – அறிவு கேடரான நாங்கள் –

யாயும் பிறரும் அறியாத யாமத்து – நாலாயி:1895/1

யாயும் பிறரும் அறியாத யாமத்து
மாயா வலவைப்  பெண் வந்து முலை தர
பேய் என்று அவளைப் பிடித்து உயிரை உண்ட
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி —10-5-8-

பெற்ற தாயும் மற்று உள்ளவாள் ஒருவரும் இவர்கள் ஒருவரும் அறியாத நடுச்  சாமத்திலே –

அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை – நாலாயி:1928/2

மல்லே பொருத திரள் தோள் மணவாளீர்
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தைச்
சொல்லாது ஒழியீர் சொன்ன போதினால் வாரீர்
எல்லே இது என் இது என் இது என்னோ–10-8-7-

இரவு கலக்கிற போதே நினைவு ஒன்றும் -செயல் ஒன்றுமாய் -இருந்தது என்னும் இடம் அறிந்தோம் –உம்மை நீர் அறிந்தால்-காலத்தைக் குறித்தோ போவது-எங்களை அறிந்தால் -சொன்ன போதிலே வர வேண்டாவோ-உறவு முறையாரைப் போலே நீர் கவிழ்ந்து இருக்கிறது என் – இங்கே வாரீர் –உம்மை நீர் அறிய வேண்டாவோ – எங்களை அறிய வேண்டாவோ –

அன்று நடுங்க ஆநிரை காத்த ஆண்மை-கொலோ அறியேன் நான் – நாலாயி:1933/2

அரு வழி வானம் அதர்பட கண்ட ஆண்மை-கொலோ அறியேன் நான் – நாலாயி:1936/2

செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டவர் செல்லும்
அரு வழி வான  மதர் படக் கண்ட ஆண்மை கொலோ வறியேன் நான்
திரு மொழி எங்கள் தே மலர்க் கோதை சீர்மையை நினைந்திலை யந்தோ
பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் எனப் பேசுகின்றாயே –10-9-5-

ஆயுதம் எடுக்க ஒட்டாமே அத் தேரின் மிடுக்கையே கொண்டு
(சித்திரத்தேர் வலவன் அன்றோ ) கேவலம் போக வரிய வீர ஸ்வர்க்கத்துக்கு போவார் இல்லாமையாலே புல் எழுந்து கிடந்தவற்றை பெரு வழியாம்படி கண்ட ஆண் பிள்ளைத் தனைத்தை நினைத்தோ செய்தது –

இன்னார் என்று அறியேன் – நாலாயி:1950/4

என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே – நாலாயி:1974/4

அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே  –11-3-3-

அவர் நம்மை அகப்படுத்த ஏற்கவே கோலினார் நாம் அறிந்திலோம் இத்தனை காண் –தாம் ஹித ப்ரவர்த்தராய் இருக்கும் இருப்பைக் காட்டி நெஞ்சை நெகிழ்ந்து அது பலிக்கும் அளவானவாறே ஸ்ப்ருஹணீயமான வளையை அபேஷித்து கால் வாங்கப் போகாமே
த்வார ஹிருதயத்திலே வந்து புகுந்து நித்தியமான ஆத்ம வஸ்துவையும் தமக்காக்கிக் கொள்வாரைப் போலே இரா நின்றார் –இவர் மநோ ரதம் நமக்கு நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை –உடைமை நாம் இட்ட வழக்கானதற்குப் பின்னே உடையவரும் நாம் இட்ட வழக்கு அன்றோ -என்று இருக்க மாட்டுகிறிலர்-

அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய்  மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே—11-3-4-

ஸ்வ யத்னத்தாலே அறிய இழிந்தவர்கள் – யதோ வாசோ நிவர்த்தந்தே –
யஸ்யாமதம் தஸ்யமதம் -என்னும் காட்டில் அவன் காட்டின வழியே அறிய இழிந்த நமக்கு
அறியப் போகாது யென்று சொல்லலாமே –பரிமள பிரசுரமாய் இருந்துள்ள பொழிலாலே சூழப் பட்டு விஸ்மயநீயமாய் இருக்கிற திருக் குடந்தையிலே வந்து சாய்ந்து அருளி –இவன் இது களவு கண்டான் -யென்று சொல்ல ஒண்ணாத படி மௌக்த்யத்தை உடையனாய் –
பொய்யடி இட்டு போய்ப் புக்கு –உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுது செய்து ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தை புஜிக்கப் பெற்றோம் யென்று ஹ்ருஷ்டரானவரை அறியோம் யென்று உரைக்கலாமே எனக்கு

முன் உலகங்கள் ஏழும் இருள் மண்டி உண்ண முதலோடு வீடும் அறியாது
என் இது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய – நாலாயி:1989/1,2

முன்னுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு  வீடும் அறியாது
என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய
பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்த்து இவ் வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவது நம்மை யாளும் அரசே –11-4-8-

இருள் மண்டி யுண்ண முதலோடு  வீடும் அறியாது-அஞ்ஞான அந்தகாரம் -உள் இருளும் வெளி இருளும் வந்ததும் விடுவதும் அறியாத காலத்தில் -முன்பு ஒரு காலத்தில் சர்வ லோகங்களும்(ஸூர்ய லோகத்துக்கு மேல் உள்ள ஏழு லோகங்களும் ) அஞ்ஞான அவ்ருத்தங்களாக துடங்கிற்று இது விடுகிறது இது என்று அறியாதே அஸ்த்தானே நமக்கு வந்ததிது என்னோ  என்று லோகத்துக்கு வெளிச் சிறப்பைப் பண்ணும் தேவதைகளும் அகப்பட அறிவு கெட –

அறியாதார்க்கு ஆன் ஆயன் ஆகி போய் ஆய்ப்பாடி – நாலாயி:1995/1

அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தான் காணேடீ
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
எறி நீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே  —11-5-4-

மனுஷ்யத்வே பரத்வம் அறியாதார்க்கு தயிரை வருந்திக் கடைந்து உறியிலே  சேமித்து வைத்த அன்று கடைந்த வெண்ணெயை உண்டு உகந்தான் –சம்சாரிக்கு பகவல் லாபம் போலே அவனுக்கு இது – இவ் வயிற்றுக்கு கடல் சூழ்ந்த லோகம் அடையப் போராது காண் –

எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் – நாலாயி:2003/3

நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீதோடி நிமிர்ந்த காலம்
மல்லாண்ட தடக் கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்தன்று
எல்லாரும் அறியாரோ வெம்பெருமான் உண்டு உமிழ்ந்த வெச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே யவன் அருளே யுலகாவது அறியீர்களே —11-6-2-

மல்லாண்ட தடக் கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்தன்று- மிடுக்கை உடைத்தான திண் தோள் ஆகிற பெரிய கையாலே பஹிரண்டங்களையும் அகப்படுத்தின காலம்-சர்வேஸ்வரன் பிரளயம் சென்று அடராத படி தன் திருக் கையாலே பரம பதத்தை
தன் கைக் கீழே இட்டுக் கொண்டு நின்ற காலம் -என்னவுமாம் –இவ்வர்த்தம் அறியாதார் உண்டோ –இவனுக்கு புறம்பாய் இருப்பது ஒன்றைப் பற்றி இவனைக் கை விட்டி கோளோ-லோகத்தின் உடைய சத்தை அவனுடைய பிரசாதா யத்தம் என்னும் இடம் அறியீர்களோ –(பத்து மாதம் தாய் வயிற்றில் இருந்து நாட்டார் சொல்வதால் தாய் என்று பிரதிபத்தி பண்ணுகிறீர்கள்-அவன் திரு வயிற்றில் நெடும் காலம் இருந்தும் அறியாதே இழந்து போகிறீர்கள் அவாந்தரா ப்ரளயத்தையும் மஹா ப்ரளயத்தையும்
அருளிச் செய்து ரஷித்த படியை அருளிச் செய்கிறார் இத்தால்

யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன – நாலாயி:2011/2

தேவரையும் அசுரர்களையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
கா வளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை கற்று வல்லார்
பூ வளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே  —11-6-10-

இப் பாட்டுக்கு இடையே பொருள்-திரண்டு பரந்த சோலைகள் உடைய திரு மங்கைக்கு நிர்வாஹகர் அறிந்து உரைத்தார் –-இடையே பொருள் -த்வயத்தின் க்ரமத்திலே பல ஸ்ருதி அருளுகிறார் – (திரு மகளால் அருள் பெற்று பிராட்டியாலே பேறு -த்வயார்த்தம்
இடை -த்வயம்-இப்பாட்டுக்கு வியாக்யானத்துக்கு அவகாசம் காணாமல் இடம் இல்லாமல்
இடையே -த்வயம் -அர்த்தம் என்று அருளிச் செய்து நிகமிக்கிறார் )-சூழ் புனல் குடந்தையே தொழுது என் நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் -என்றும்
குடந்தையே தொழுமின் என்றும் – உபக்ரமித்து –தண் குடந்தை பாடி ஆடீர்களே என்று உபதேசித்துத் தலைக் கட்டுகிறார் –

அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்று அறிகிலேனே – நாலாயி:2041/4

சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீ வினையேன்
பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்
முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே–10-

அழகுக்கு தோற்று -என் ஆயன் -என்கிறார் –நீர் சித்தமும் செவ்வை நில்லாது என்பது-
தீ வினையேன் -என்பதே கிடந்தது-என் இப்படிப் படுகிறீர் –இத்தை விட்டு வேறு ஒன்றோடு போது போக்கினாலோ என்ன –உன் திருவடிகளில் கைங்கர்யம் ஒழிய வேறு ஓன்று அறியேன் –மறந்தேன் உன்னை முன்னம் -என்றது போக்கி-ஏது செய்தால் மறக்கேன் -என்னும்படி பண்ணி வைத்த பின்பு வேறு ஒன்றை அறிய விரகு உண்டோ –

(மறந்தேன் உன்னை முன்னம்*  மறந்த மதி இல் மனத்தால்  இறந்தேன் எத்தனையும்  அதனால் இடும்பைக் குழியில்* பிறந்தே எய்த்து ஒழிந்தேன்*  பெருமான்! திரு மார்பா!  சிறந்தேன் நின் அடிக்கே  திருவிண்ணகர் மேயவனே)(ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின் பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம் போது நாளும் கமழும்  பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-

அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை அந்தணர்-மாட்டு அந்தி வைத்த – நாலாயி:2055/3

இந்த்ரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை யிரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித் திசை நான்குமாய் திங்கள் நாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா அந்தணனை அந்தி மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே

ஸ்ருஷ்டமான சகல பதார்த்தங்களுக்கும் அறிய ஒண்ணாது இருக்கை – யமாத்மா ந வேத -என்று யாவன் ஒருவனை ஆத்மா அறியான் – அவன் அந்தரனான -அந்தராத்மா -என்னக் கடவது இறே -(உம்மைத்தொகை -அறிவால் சிறப்புற்ற இவர்களாலும் என்றபடி ) அது தோற்ற துர்ஞ்ஞேயன் -என்கிறார் –

நெஞ்சு உருகி கண் பனிப்ப நிற்கும் சோரும் நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள் – நாலாயி:2063/1

நெஞ்சு உருகி கண் பனிப்ப நிற்கும் சோரும்
நெடிது உயிர்க்கும்  உண்டு அறியாள் உறக்கம் பேணாள்

நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பி என்னும்
வம்பார் பூம் வயலாலி மைந்தா! என்னும்
அம்சிறைய புட் கொடியே ஆடும் பாடும்
அணி அரங்கம் ஆடுதுமோ? தோழி என்னும்
என் சிறகின் கீழ் அடங்கா பெண்ணைப் பெற்றேன்
இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ! பாவமே–12-

என் கார்யத்தில் இவள் நின்ற நிலை -உண்ணாது உறங்காது– இவள் ஊனும்  உறக்கமே தாயின் உத்தேசம்–தன் ஜீவனம் தேடி போனாள் என் ஜீவனம் பறித்து போனாள்-திண்ணம் இவள் புகும் ஊர் -பராங்குச -உண்ணும் சோறு–எல்லாம் கண்ணன்  என்கையால் –
உண்டு அறியாள்- மறந்தாள்–சேர்ந்து இருந்தால் அவன் திரு நாமமே –

பேய் அளவு கண்ட பெருமான் அறிகிலேன் நீ அளவு கண்ட நெறி – நாலாயி:2084/3,4

பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –சூருருவின்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீயளவு கண்ட நெறி
———3–

நீ நின்ற நிலைக்கு மேலே மாறி ஓர் அடி இடுகைக்கு இடம் காணாமையாலே நீயும் இவற்றை அளந்து கொண்டாய் என்று சொல்லுகிற இது நான் அறிகிறிலேன்-என் தான் உமக்கு அறியப் போகாது ஒழிவான் என் என்னில்  – சூருருவின் பேயளவு கண்ட பெருமான்– இது வன்றோ உன்னை அளவுபடுத்தி அறியப் புகுவார் படும்பாடு -என்கிறார் ஒருவராலே அளவிட்டு அறியலாயோ நீ இருக்கிறது –பேயாகப் பரிச்சேதித்த -அதாவது முடிக்கை –அவன் தன்னை பரிச்சேதித்து முடிப்பதாக வந்த அது தன்னைப் பரிச்சேதித்து முடித்து விட்டான் ஆயிற்று-நீ சிலரைப் பரிச்சேதிக்கும் போது வருத்தம் இல்லை-உன்னைப் பரிச்சேதிப்பார் முடிந்தே போம் இத்தனை –அறிகிலேன் -நீ யளவு கண்ட நெறி –நீ நினைத்து இருக்கிற பிரகாரம் ஏதோ ஓன்று நான் அறிகிறிலேன் உணராது ஒழியப் பண்ணுகிறாயோ -உணரப் பண்ணுகிறாயோ-நீ செய்த ஒரோ செயலை என்னால் பரிச்சேதிக்கப் போகிறது இல்லை -என்னவுமாம்-மகாபலியாலே பூமியை அளந்து-உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டால் போலே-என்னையும் உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டு – பூதனையைப் போக்கினால் போலே என்னுடைய விரோதியைப் போக்கி என்னை விஷயீகரித்த படி அறிகிறிலேன் -என்னவுமாம் –

பொறி வாசல் போர் கதவம் சாத்தி அறிவானாம்
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த – நாலாயி:2085/2,3

அவரவர் தாம்தாம் அறிந்தவாறு ஏத்தி – நாலாயி:2095/1

அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று சுவர் மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி யுருவே முதல் –14-

ரஜஸ் தமஸ்ஸூக்களால் அபிபூதராய் பின்ன ருசிகள் ஆகையாலே –அவர் அவர் -என்று
அநாதரித்துச் சொல்லுகிறார் –தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி –கர்மம் அடியாக வந்த ருசியும்
அதுக்கீடான ஜ்ஞானமுமாய் இறே இருப்பது –சாஸ்திரத்தின் பின் செல்லார்களே
ஆகையாலே தாம் தாம் அறிந்த பிரகாரங்களாலே ஸ்தோத்ரம் பண்ணி –

———-
அடை ஆழி நெஞ்சே அறி – நாலாயி:2102/4–முதல் திருவந்தாதி -21-

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசை யளந்த செங்கண் மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி –21-திரு வடி முதுகிலே ஏந்தித் தரிக்க வல்லவனும் திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே சாய வல்லவனும்–சர்வேஸ்வரன் -ஆகிறான்–இப்படிப் பட்டவன் திருவடிகளைக் கிட்டி மகா பலியைப் போலே கழஞ்சு மண்ணைக் கொடுத்து விடாதே-உன்னைக் கொடு

அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன் – நாலாயி:2103/1

அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்
பொறி கொள் சிறை யவண  மூர்த்தாயை வெறி கமழும்
காம்பேய் மென் தோளி கடை வெண்ணெய் யுண்டாயைத்
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு —22-

இது ஜகத் பிரசித்தம் அன்றோ நான் சொல்லுகிறேன் என்று இருக்க வேண்டா
சிஸூ பாலனும் கூட அறியானோ –நாநா வர்ணமான சிறகை யுடையனான பெரிய திருவடியை நடத்தும்-ஸ்வ பாவனான யுன்னை –நிரபேஷரை நியமிக்கப் பிறந்தவன் நீ யன்றோ –

நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே பூ மேய – நாலாயி:2126/2

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய

மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு —45-

ப்ரஹ்ம ருத்ராதிகள் இவனை அறிந்ததாகப் போமோ இவர்களால் அறியப் போகாமைக்கு
மேன்மையோடு நீர்மையோடு வாசி இல்லை –அதுக்கு மேலே –அதிசய ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளும் மதி கெட்டுக் கிடக்க நாமே அவனை அறியப் புகுகிறோம்-அங்கன் அன்றிக்கே அது கிடக்க நாம் ஆகில் அவனை அறிவுதோம் -என்றுமாம் – அவன் தானே காட்டக் கண்ட நமக்குக் காண வரிதோ-அவர்களுக்குக் காண ஒண்ணாமைக்கு அடி தம் தம் நெஞ்சு தம்தாமுக்கு விதேயம் அல்லாமை –விதேயமாகப் பெற்ற எனக்கு ஒரு குறைவுண்டோ –சர்வேஸ்வரன் உடைய திரு நாபீ கமலத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையனாய்த் தபஸ் ஸாலே பெரியனாய் உள்ள ப்ரஹ்மாவின் காலில் விழுந்த ராவணானவன் இவன் பக்கலிலே தனக்கு வேண்டின வரம் எல்லாம் கொள்ளா நிற்க அவ்வளவிலே ஒரு பாலகனாய் கொண்டு அந்த ப்ரஹ்மாவின் மடியிலே இருந்து கெடுவாய் உனக்கு இது கார்யம் அன்று கிடாய் -என்னும் இடத்தைத் தன் திருவடிகளாலே கீறிக் காட்டி அந்தர்த்தானம் பண்ணினான் ஆய்த்து-இவன் அறுப்புண்ணப் புகுகிற தலைகள்-இவற்றைப் பூண் கட்டிக்  கொடுப்புதியாகில் உனக்கு  குடி இருப்பும் இழவு கிடாய் -என்னும்
இவற்றை தெரிவித்தான் ஆய்த்து – பாதமத்தால் எண்ணினான் பண்பு – எனக்கு போக்யமான திருவடிகளைக் கொண்டு கிடீர் கீறிக் காட்டிற்று-தனக்கும் கூட ஹிதம் அறியாதே சூழ்த்துக் கொள்ளப் புக்கவனோ சர்வேஸ்வரன் உடைய குணங்களை அறியப் புகுகிறான் –

ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவு_அணை மேல் – நாலாயி:2136/3

அவன் தமர் எவ் வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட் பட்டார் பேர் —
—-55-

அந்த சர்வேஸ்வரனுக்கு அனுகூலராய்ப் போரும் ஆஸ்ரிதர் ஆனவர்கள் அக்ருத்ய கரண க்ருத்ய அகரண ரூபமான எந்த தொழிலை யுடையார் ஆனார்கள் ஆகிலும் -எங்களுக்கு ஸ்வாமியான அந்த சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்த மஹா புருஷர்கள் இறே என்று அவர்களைக் கொண்டாடி தங்களைக் கொண்டு கடக்கப் போம் அத்தனை ஒழிய
திரு அரவு அணையில் வர்த்திக்கக் கடவனாய் -இடைத் தனத்தில் தனக்கு ஓத்தார் இல்லை என்னும் படி அதில் பிரதானனான கிருஷ்ணனுக்கு அடிமை புக்கிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை –தங்கள் அளவன்றிக்கே தங்கள் பேரும் கூட நாட்டார் கார்யம் ஆராய்கைக்கு ஆளாய் இருக்கிற யமனுக்கு அந்தரங்க படராய் இருக்கிறவர்களால் ஆராயப்பட்டு அறியார் கிடீர் –

பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது ஓர் ஆழி சூழ்ந்த உலகு – நாலாயி:2141/3,4

சரணா மறை பயந்த தாமரை யானோடு
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு
— முதல் திருவந்தாதி-60–

ரஷணத்துக்குப் பரிகரமான திரு வாழியைக் கையிலே உடையவனான
உபகாரகனை யல்லது –கடல் சூழ்ந்த பூமியானது வேறு அறியாது
சிறியாரோடு பெரியாரோடு வாசியறத் தம்தாமுடைய ரஷணம் தாம் தாம் அறியார்கள்
லோகம் எல்லாம் இப்படி அவனே என்று இரர்களோ என்னில்-உலகம் எனபது உயர்ந்தோர் மாட்டே -என்று அறிவுடையாரை இட்டு இறே லோகத்தைச் சொல்லுவது-அப்படியே யாகில்
ஓராழி சூழ்ந்த வுலகு –என்று கொண்டு கடலுக்கு உட்பட்ட பூமியைச் சொல்லுகையாலே
விலஷணர் தலையிலே ஒதுங்க ஒண்ணாது-ஆன பின்பு அவனை ஒழிய இவை வேறு ஒன்றை அறியாது-இத்தால் அவனே அறிந்து ரஷிக்கும் அத்தனை -என்றபடி-சம்சாரம் வளர்க்கைக்கு உபாயம் அறிவார்கள் அத்தனை மோஷத்துக்கு எம்பெருமானே வேணும்-மூடோயம் நாபி ஜா நாதி – ஆப்பான் ஜீயரைக் கேட்க பட்டருக்கு விண்ணப்பம் செய்ய
பட்டர் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-ந அஹம் ப்ரகாஶ: ஸர்வஸ்ய யோக₃மாயா ஸமாவ்ருத: ।மூடோ₄யம் நாபி₄ஜாநாதி லோகோ மாம் அஜம் அவ்யயம் ॥ –25-மனித உருக் கொண்டு இருக்கை யாகிற மாயையால் மறைக்கப் பட்ட நான் -உலகில் பலருக்கு –
பரமாத்மாவாக பிரகாசிப்பது இல்லை –

அறிதியே பாம்புஅணையினான் புள் – நாலாயி:2166/1
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில் – நாலாயி:2166/2

படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே
கூறாய் வடிவில்
பொறி யைந்து முள்ளடக்கிப்   போதொடு நீரேந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ –85-

அவனுடைய பிராகாரங்களைக் கண்டு அறிதியே-அவனுடைய திரு மேனியைக் கண்டு அறிதியே படி -என்று-திரு மேனிக்கு பேர்-இந்த பிரகார விசேஷமாய்ப் புகும் இறே திருமேனி –பாம்பணையினான் கண்டு அறிதியே-புட்கொடி கண்டு அறிதியே-அவன் திருவநந்த ஆழ்வானுக்கு உடம்பு கொடுத்து இருக்கும் படி கண்டு அறிதியே-த்வஜம் முன்னாக அவன் வந்து தோற்றும் தோற்றரவு கண்டு அறிதியே –

நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு – நாலாயி:2168/4

இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் கனி சாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —87–

ஜம்பூத் வீபமானது விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளை அழகிதாக அறிந்தது –
அதாகிறது –திருக் கோவலூரோடு சூழ்ந்த பூமியை விட்டு அவ்வருகே போவோம் என்று இரார்கள் போலே ஏக தேச வாசத்தால் வந்த சம்பந்தமே அமையும் இறே ரஷிக்கைக்கு –
பவத் விஷய வாஸின- திருக் கோவலூர் உப லஷணம்-உகந்து அருளின தேசங்கள் அடைய நினைக்கிறது –ஆழ்வார்களும் அருளிச் செயல்களும் நடையாடின இடமே நாட்டுக்கு உடல் என்று இருக்கிறார் –

யார் ஓத வல்லார் அறிந்து – நாலாயி:2186/4

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து–5–

கடலோதம் போலே இருந்து உள்ள திருமேனியை உடையனாய் வளர்ந்தவனே –
வ்யாமோஹத்தை உடையவனே-உன்னுடைய சௌலப்யத்தை அறிந்து-சிலராலே ஆஸ்ரயிக்க போமோ-இப்படி நீர்மையே வடிவான உன்னுடைய திருவடிகளின் பெருமையை என்னைப் போல் அறிவு கலங்கியவர்கள் பேசலாம் ஒழிய அது இல்லாதவர்களால் இவ்வளவு என்று அளவிட்டுப் பேச முடியுமோ என்றுமாம்-த்வே இதஸ்ய க்ரமேண ஸ்வர் த்ருசோ அபிக்யாய மர்த்யோ புரண்யதி
த்ருதீய மஸ்ய நகிரா ததர்ஷதி வயஸ்சந பத யந்தஸ் பதத்ரிண -ருக் அஷ்டகம் -2-2-25-

பரமபதத்தைக் காண்பவனான விஷ்ணுவினுடைய இரண்டு அடி வைப்புக்களையே மனிதன் நன்கு அறிந்து பஜிக்கிறான்
இந்த விஷ்ணுவின் மூன்றாவது அடி வைப்பை ஒரு போதும் அறிய வல்லன் அல்லன்
அந்த ஆகாசத்தில் எங்கும் வீசும் வாயுக்களும் பறக்கும் பறவைகளும் அறிய வல்லன வல்ல-பரோ மாத்ராய தன்வா வ்ருதாந ந தே மஹித்வ மன்வஸ் நுவந்தி
உபதே வித்ம ரஜஸீ ப்ருதிவ்யா விஷ்ணோ தேவ த்வம் பரமஸ்ய வித்ஸே –ருக் அஷ்டகம் -5-5-24-ஓங்கு உலகு அளந்த உத்தமனே -நீ மிகப் பெரியவன் -உனது பெருமையை அளவிட்டு அனுபவிக்க – அறிய வல்லார் யாருமே இல்லையே-பூமியில் இருந்து தொடங்கிய உன்னுடைய இரண்டு பாத ஸ்தானங்களை அறிகிறோம்-அதற்கு மேற்பட்ட மூன்றாவது அடி வைப்பை நீயே அறிகிறாய்-என்கிற ஸ்ருதி சாயையில் மூன்றாவது அடி வைப்பை எவராலும் அறிய முடியாது என்கிறார் 

அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்-6-

சப்தாதிகள் த்யாஜ்யம் என்று அறிந்து-விஷயங்களில் நின்றும் இந்த்ரியங்களை மீட்டு
பிரத்யக்காக்கி-கடையற பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே -திருவாய் -8-2-8-செவ்விப் பூ கொண்டு-அபிநிவேசம் நெருங்கின மனசை உடையராய்-நாம் சேஷம் -அவன் ஸ்வாமி என்னுமிடத்தை அறிந்து-அவனுடைய திரு நாமங்களை சொல்லி
ஏத்துகிற பாக்யவான்கள்-

தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும்
மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வன திடரை – நாலாயி:2197/1,2

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை -வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று—–16-

ஸ்வ த்வாத்மா நி சஞ்சதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்-என்னும்படி விசதமாக அறியான் ஏலும்-அறிந்து அனுஷ்டான பர்யந்தமாக செய்து -அவனைப் பெற ருசி ஒன்றே போதும் -முயல வேண்டா -பரகத ஸ்வீ காரத்தின் சிறப்பைத் தெளிவிக்கும் பாசுரம் இது –
ஸ்வத்வ மாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -உடைமையாய் இருக்கை ஜீவாத்மாவின் இடமும் உடையவனாய் இருக்கை பரமாத்மாவிடமும் உள்ளன –
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்பாவஞ்ச ஸதா ஸ்மர –ஆத்மாவின் தாசத்தன்மையும் ஹரியின் ஸ்வாமித் தன்மையும் இயற்க்கை என்பதை எப்போதும் அறிவாயாக
அவனே நெஞ்சமே நீள் நகராகக் கொண்டு வாழ அபிநிவேசத்துடன் வந்து அடையும் போது
திருவாணை இட்டுத் தடுக்காமல் பொருந்து இருக்கும் படி இடம் கொடுக்க வேண்டுமே –
யத்ய தாசாரதி ஸ்ரேஷ்ட தத் ததே வேத ரோஜந -3-21–அறிவாளர்கள் அனுஷ்டிப்பதை அறிவில் குறைந்தவனும் பின்பற்றி அனுஷ்டிக்கிறான்-இவனுடைய விலக்காமையையும் ருசியையும் கொண்டு விரோதியைப் போக்கித் தன்னையே தந்து அருளுபவர் அவன்
ருசி மாத்திரம் -திருமலை நம்பி நிர்வாஹம்-ருசியையும் உண்டாக்கிக் தன்னைத் தந்து அருளுபவன் -ஆழ்வான் நிர்வாஹம்-என் உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே -எல்லாமே அவனாலே

அறியாரும் தாம் அறியார் ஆவர் அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று – நாலாயி:2217/2,3

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் -அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36–

தேவதாந்த்ரங்களிலும் விஷயாந்தரங்களிலும் நன்மை தீமை பற்றிய அறிவு இல்லாமல் இருப்பவர் இடம் நமக்கு சம்பந்தம் வேண்டாமே-நெஞ்சே நீ பெரியார் கோடியிலே இரு
பேராளன் பேரோதும் பெரியோரை -என்னும்படி ஒருவனோ என்கிறது-மாஸூச -என்னும்படியே-சிறியராயும் அறியாதாராயும் இல்லாமல்-பெரியவராயும் அறிந்தவனாயுமே இரு என்று உபதேசிக்கிறார்)

தமக்கு என்றும் சார்வம் அறிந்து நமக்கு என்றும் – நாலாயி:2219/2

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கென்றும் சார்வம் அறிந்து –நமக்கென்றும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து—38–

கழஞ்சு பொன் உண்டு என்று அறிந்து சர்வேஸ்வரனைப் பற்றி நிர்ப் பரராய் இருப்பாரைப் போலே இராதே-தமக்கு நித்தியமான ஆஸ்ரயம் என்று அறிந்து-நமக்கு என்றும் அனுபாவ்யம் ஸ்ரீயபதி என்னும் நெஞ்சைப் படைத்தது அம் மிதுனத்துக்கு வாசகமான
சப்தத்தை சொல்லுகை வாக் இந்த்ரியத்துக்கு ஒத்து ஆவது-

ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் ஓத்து அதனை – நாலாயி:2220/2

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39–

எல்லாத்துக்கும் பிரகாரியாய் இருந்துள்ளவனுடைய திரு நாமத்தை யேத்துகை-சாங்க அத்யயனத்தைப் பண்ணி-வேதைஸ் ச சர்வை ரஹமேவ வேத்ய -என்கிறபடியே வல்லீர்கள் ஆகில் அறியுங்கோள்-அப்படி அறிய மாட்டிகோள் ஆகில்-ஒத்தினுடைய சங்கரஹம்
லஷ்மி பதியினுடைய திரு நாமத்தை சொல்லுகை-அவன் பிரசாதம் அடியாக பிறந்த ஞானம் உடையார் சொன்னத்தை அர்த்தம் என்று இருங்கோள் –

ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத – நாலாயி:2221/3

சுருக்காக வாங்கிச் சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்—-40–

அர்த்த சுகம் சுகம் உத்தேச்யத்தை அறியாதபடி அனர்த்தத்தைப் பண்ணும் சர்வேஸ்வரனுடைய திருவடிகளை அறிந்து இருக்கச் செய்தே அறிந்ததாக ஒட்டாத போகத்தால்-பொல்லாது என்று இருக்கச் செய்தே கை விடப் போகாத அர்த்த சுகத்தால் பிரயோஜனம் இல்லை

நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியனார் அது அறிவார் –மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி —52

ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய் நீல மேகத்திலே மின்னற் போலே பிராட்டியை திரு மார்பிலே உடையவனாய்-அவளோட்டை கலவியாலே ஆன்ரு சம்சய பிரதானனான் ஆன படியை யார் அறிவார்-யார் அறிவார் -என்பதை ஒவ்வொன்றிலும் சேர்த்து அந்வயம்-அவனது கருணையின் பெருமை யார் அறியார்-அவளால் தான் இது என்பதை என்பதை யார் அறிவார்-மிதுனத்தில் அழகை யார் அறிவார்-ராவணனோ பாதியும் வதத்துக்கு யோக்யனாய் இருக்கச் செய்தேயும் இவன் பக்கலிலே ஔதார்ய குணம் கிடந்தது என்று
மன்வந்தரம் பூர்ண மபேத சத்ரு -என்னும்படியே மேல் இந்திர பதம் செலுத்துவதாக வைத்தவனுடைய ஆன்ரு சம்சயத்தை யார் அறிவார்-

அறியாது இளம் கிரி என்று எண்ணி பிரியாது – நாலாயி:2234/2

நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிகள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–

ஆஸ்ரயித்தவர்கள் உடைய முன்னின்று பின் தாழ்ந்த குழல் கற்றையை அறியாதே
ஒரு சிறுமலை என்று எண்ணி மூச்சு விடுதல் உடம்பாடுதல் செய்யாமையாலே
இன்ன மலை என்று அறியாமையாலே பூக்களை உடைத்தான கொடிகள் தங்குகிற
பொரா நின்ற புனலை உடைத்தாய் இருந்துள்ள மலை என்கிற திருவேங்கடமே நாம் ஆசைப்படும் மலை ஸ்தாவர பிரதிஷ்டராய் இருந்து த்யாநிக்கிறவர்கள் –

ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர் – நாலாயி:2241/3

ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் -ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று–60-

(ஓர் -ஒப்பற்றது ஆஸ்ரித பாரதந்த்ரத்தால் அத்விதீயம் )எல்லார்க்கும் சத்தை அவனே என்று அறிந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள்பூமியை முறை குலையாமல் காப்பார்

பேறு ஒன்றும் முன் அறியேன் பெற்று அறியேன் பேதைமையால் – நாலாயி:2243/1

போது அறிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த – நாலாயி:2253/1

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-

ப்ரஹ்மே முஹூர்த்தே உத்தாய -என்று சத்வோத்தர காலம் அறிந்து-குரங்குகள் பூஞ்சுனையிலே புக்கு அதில் செவ்விப் பூவை அரிந்து கொண்டு ஏத்தா நின்றது

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை – நாலாயி:2268/1

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை
-அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

இன்றாக அறிகிறேனோ – இப்போது அறியத் தொடங்கினேன் அல்லேன் – பண்டே அவனுடைய பிரசாதம் யுடையேன் –இம் மஹா ப்ருதிவியை ஒருவர் இரக்க அன்றியே தானே சென்று அளந்த திருவடியை –அவன் அளக்கிற இடத்திலே பூமி சென்றதோ –பூமி கிடந்த இடம் எல்லாம் தான் சென்று அளந்தான் அத்தனை அன்றோ –பண்டே சாதன அனுஷ்டானத்துக்கு யோக்யதையும் இல்லாத அன்று –கர்ப்ப ஸ்தானத்திலே கிடக்கச் செய்த கண்டேன் –அனுபவத்துக்குப் போக்கு வீடாகக் கை தொழுகை முதலான அடிமைத் தொழிலும் அன்வயிக்கப் பெற்றேன் -திருக் கோட்டியூரிலே நின்று என்னுடைய கர்ப்ப ஸ்தானத்தில் தய நீயதை கண்டு விஷயீ கரித்தது -ஸ்ரீ வைகுண்டத்தில் மேன்மை மாத்திரம் கண்டேனோ -முதல் காட்ஷியிலே   பூரணமாகக் கண்டேன் –அறியாக் காலத்துள்ளே -அடிமைக் கண் அன்பு செய்வித்து -திருவாய் -2-3-3-கர்ப்ப பூதாஸ் தபோத நா -ஆரண்ய -1-21-
ஜாயமா நம் ஹி புருஷம் யம் பச்யேத் மது ஸூதந சாத்விகஸ் சாது விஜ்ஞேய ச வை மோஷார்த்த சிந்தக -பார -சாந்தி -358-73-

திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை – நாலாயி:2269/1

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-

தானே நூறு பண்ணப் பண்ணின சம்சாரத்தை நீக்கிச் செல்லுமவர்களுக்கு நித்ய ஸூரிகள் உடைய அரணை உடைத்தாய் இருந்துள்ள கலங்கா பெரு நகரத்தில் கதவு திறம்பிற்று
என்னும் இடம் அறிந்தேன் – தானே சம்சாரத்தை நீக்க இவனுக்கு காலம் போராது
பாபம் பண்ணின காலம் அநாதி ஆகையாலே திறம்பிற்று இனி அறிந்தேன் -என்று அந்வயம்-நடந்தே தீரும் என்பதால் திறம்பிற்று இறந்த கால பத பிரயோகம்-மாம் ஏகம் என்ற கண்ணனைக் காட்டிலும் விஞ்சி நிற்கும் ஸுசீல்யன்-

நூல் கடலான் நுண் அறிவினான் – நாலாயி:2292/4

நன்கோது நால்  வேதத் துள்ளான் நற விரியும்
பொங்கோதருவிப் புனல் வண்ணன்   -சங்கோதப்
பாற்கடலோன் பாம்பணையின் மேலான் பயின்று  உரைப்பார்
நூற் கடலான் நுண்ணறிவினான் —மூன்றாம் திருவந்தாதி-11-

வேதத்திலே மிகவும் வாசனை யுடையாராய் உள்ளவர்கள் உடையஸ்மிருதி இதிஹாச புராணங்களாலே பிரதிபாத்யனாய் உள்ளான்-ஆதரமாக உரைக்குமவர்களாலே இதிஹாஸ் புராணங்களாலே பிரதிபாதிக்கப் படுமவன் -கூரிய அறிவாலே அறியப் படுமவனாய் உள்ளான் –ஸ்வ யத்னத்தாலே அறிவார்க்கு துர்ஜ்ஞேயன் -என்றுமாம் –

இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவு உடைய – நாலாயி:2337/2

நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறை யுருவம் யாம் அறியோம் எண்ணில் –நிறைவுடைய
நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
பூ மங்கை கேள்வன் பொலிவு ——-56-

இறையினுடைய வடிவானது வெளுப்பு சிவப்பு பசுமை கருமை என்று எண்ணில் நாம் அறியோம்-இறையினுடைய திரு நிறமானது வெளுத்து இருக்கும் சிவந்து இருக்கும்
கருத்து இருக்கும் பச்சென்று இருக்கும் என்று கொண்டு ஆராயும் இடத்தில் நம்மால் ஏக தேசமும் அறியப் போகாது-பக்தியால் பேசிக் கொண்டு நிற்கில் நிற்கும் இத்தனை –இது தான் நம்முடைய ஞான வைகல்யத்தாலே வந்தது ஓன்று அன்று –

வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரைவாய் – நாலாயி:2340/1

வாழும் வகை யறிந்தேன் மை போல் நெடு வரை வாய்த்
தாழும் அருவி போல் தார் கிடப்ப -சூழும்
திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்
பெருமான் அடி சேரப் பெற்று ——59-

அழகும் சம்பந்தமும் பிராப்தியும் புருஷகாரமும் இருக்க இங்கேயே வாழ்ச்சி உண்டே-
திருவேங்கடத்தானையும் திரிவிக்ரமனையும் சொன்னவாறு

அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை – நாலாயி:2382/3

ஆரும் அறியார் அவன் பெருமை ஓரும் – நாலாயி:2383/2

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை –ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –-நான்முகன் திருவந்தாதி2-

நிரூபித்தால் ஈஸ்வரன் ஒருவனே என்று சொல்லா நிற்பார்கள் –
எத்தனையேனும் அளவுடையாரும் அவன் பெருமையை யுள்ளபடி அறியார்கள் –
ஆராயப் புக்கால் அர்த்தத்தின் உடைய நிர்ணயமும் இதுவே –
ஏழு ஏழு  படி இங்கனே தபஸ் ஸூ பண்ணினாருக்கும்
எம்பெருமான் பிரசாதத்தால் அல்லது பல பர்யந்தமாய் முடியாது-

அரு பொருளை யான் அறிந்த ஆறு – நாலாயி:2384/4

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு –3-

ஜகத்தை பிரளய காலத்திலே வயிற்றிலே வைத்துக் கொண்டு வட தளத்திலே கண் வளர்ந்து அருளின படியையும்-அறிய வல்லார் -இல்லை -சம்சாரத்திலே திருவவதாரம் பண்ணிக் கோயில்களிலே யுகந்தருளி இருப்பதும் செய்து ஏகார்ணவத்தில் கண் வளர்ந்து  அருளின பரம காரணனை நான் அறிந்த படி –

————–
அரு நான்கும் ஆனாய் அறி – நாலாயி:2386/4

தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே -உகத்தில்
ஒரு நான்று நீ உயர்த்தி யுள் வாங்கி நீயே
அரு நான்கும் ஆனாய் அறி–5-

தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராத் மகமான ஆத்மாக்களுக்கு நிர்வாஹகனானவனே-இத்தை புத்தி பண்ணு

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர் – நாலாயி:2387/1

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப் பட்டார் செப்பில் -வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே யாதலால் இன்று –6-

சமணர் என்றும் அறியார்

வீடு ஆக்கும் பெற்றி அறியாது மெய் வருத்தி – நாலாயி:2394/1

வீடாக்கும் பெற்றி யறியாது மெய் வருத்திக்
கூடாக்கி நின்று உண்டு கொண்டு உழல்வீர் -வீடாக்கும்
மெய்ப்பொருள் தான் வேத முதல் பொருள் தான் விண்ண
வர்க்கும் நற்பொருள் தான் நாராயணன்-நான்முகன் திருவந்தாதி -13-

மோஷத்தை வருவிக்க வல்ல விரகு அறியாதே உடம்பை வருத்தப் பண்ணி கூடாம்படி முடித்து துக்கப் படுகிற உங்களுக்கு மோஷத்தை தருவிக்கும் மெய்யான உபாயமும்
வேதை க சமதி கம்யனுமாய்-அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்- பிராப்யனுமாய் இருக்கிறானும் சர்வேஸ்வரன்-நற்பொருள் ப்ராப்யம்-மெய்ப்பொருள் பிராப்பகம்
பெற்றி பிரகாரம்

மாற்றமும் சாரா வகை அறிந்தேன் ஆற்றம் – நாலாயி:2431/2

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் –ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே இருக்க எனக்கு சர்வ விரோதங்களும் போகைக்கு ஒரு குறையில்லை -என்கிறார் –எப்போதும் எம்பெருமானை அனுசந்திக்கையாலே எனக்கு ஒரு துக்கமும் வாராது என்கிறார் -திருக் கபிஸ்தலத்திலே காவேரி தீரத்திலே கண் வளர்ந்து அருளுகிற அனுக்ரஹ சீலனான கிருஷ்ணன் யுடைய உக்தியான உத்தம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடந்தது – திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்ய பூதனான அவனுடைய திருநாமங்கள் -என்றுமாம் -எனக்கு மிருத்யு பயம் இல்லாமைக்கும்
கொடிய பாபங்கள் என்னை விடுகைக்கும் அனர்த்த பிரசங்கம் இல்லாமைக்கும் காரணம் அறிந்தேன் –

உன்னை பிறர் அறியார் என் மதிக்கு – நாலாயி:2432/3

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –51-

பகவத் ஏக போகனான என்னோடு ஒப்பார் ஒருவரும் இல்லை-எம்பெருமானும் தன் ஐச்வர்யத்துக்கு தானே ஒப்பாம் இத்தனை யல்லது ஜ்ஞானத்துக்கு என்னோடு ஒவ்வான் -தன்னிலத்தில் நின்ற காயம் பூப் போல நிரதிசய போக்யமான திரு நிறத்தை யுடைய வுன்னை வேறு அறிவார் இல்லை –உன்னை அறிந்த என்னுடைய மதிக்குப் பரமபதமும் விலையாகாது

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை – நாலாயி:2451/3

தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்-70-

சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து இரு நிலத்தைச் சென்று ஆங்கு அடிப்படுத்த பிள்ளை யானவன்-பிரளயம்  கொண்ட பூமியை இடந்து  எடுக்கைக்காக-நீருக்கும் சே ற்றுக்கும் இறாயாத-அத்விதீயமான ஸ்ரீ வராஹமாய் பூமியைத் திரு எயிற்றிலே தரித்தது-நான் ஒருவனும் இன்றாக அறிகிறேன் அல்லேன்-இது சர்வ லோக பிரசித்தமாய் இருப்பது ஓன்று-இதம் விஷ்ணோர் விசக்ரமே-த்ரீணி பதா விசக்ரமே-விசக்ரமே பிருத்வீ மேஷா ஏதாம் ஷேத்ராய விஷ்ணு-த்ரிர் தேவ ப்ருதிவீ மிதி ப்ரவிஷ்ணு விஷ்ணோர் நுகம் –விசக்ரமாணஸ் த்ரே தாருகாய உபே தே வித்ம ரஜஸீ ப்ருதிவ்யா விஷ்ணோ தேவ த்வம் பரமஸ்ய வித்ஸே
ஸம் நோ விஷ்ணு ருருக்ரம விஷ்ணு க்ராந்தே வஸூ ந்தரே உத்த்ருதா அஸி வராஹேண கிருஷ்ணேந -என்ற வேத கோஷங்கள் உண்டே )

தற்பு என்னை தான் அறியானேலும் தடம் கடலை – நாலாயி:2458/1

தற்பென்னைத் தான் அறியா னேலும் தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல் வண்ணன் -எற் கொண்ட
வெவ்வினையும் நீங்கா விலங்கா மனம் வைத்தான்
எவ்வினையும் மாய்மால் கண்டு-77-

என்னுடைய தோஷத்தை உள்ளபடி நான் அறியேன் ஆகிலும்-பிராட்டி பக்கல் யுண்டான வ்யாமோஹ அதிசயத்தாலே பெரிதான கடலைக் கல்லைக் கொண்டு தூர்ப்பதும் செய்து
ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் 

பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம் – நாலாயி:2470/1

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

எல்லாப் புருஷார்த்தங்களிலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -பழுத் போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –அது எங்கனே என்னில்-போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு   திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய
திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு ஆஸ்ரயித்து வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து
பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

சர்வேஸ்வரன் என்னும் இடம் இப்போது அறிந்தேன் -என்கிறார் –சர்வ ஸ்மாத் பரன் எம்பெருமானே என்று பத்ராலம்பனம் பண்ணத் தொடங்கினாப் போலே  முடிக்கிறார்-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தெய்வம் நீயே என்னும் இடம் இப்போது அறிந்தேன்-என்னுடைய நாதனான யுன்னை –அவர்களுக்கு நிர்வாஹகனான மாத்ரம் அன்றிக்கே உன்னுடைய அளவெல்லாம் இப்போது அறிந்தேன்-சர்வ காரணமும் நீயே-பிறர் வாழ்வும்-வாழ்வாகிற நல்ல கிரியையும் உடையையாய்-சகல பதார்த்தங்களை யுடையையாய் -இருக்கிறாயும் நீயே –மஹா உபநிஷத் பிரக்ரியையாலே-ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமான சகல பிரபஞ்சத்துக்கும் காரண பூதனான நாராயணனே  சர்வ ஸ்மாத் பரன் என்று பிரதமத்தில் பிரதிஜ்ஞை பண்ணி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரஹ்மணங்களாலும் அனந்யதா சித்தமான ஸ்ரீ யபதித்வாதி சின்னங்களாலும் நெடுக உபபாதித்துக் கொண்டு போந்து- அடியில் பண்ணின பிரதிஜ்ஞ அநு குணமாக அவனுடைய பரத்வத்தை தலைக் கட்டுகிறார் –

காலம்-கொலோ அறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே – நாலாயி:2484/4

பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும் – நாலாயி:2485/2,3

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —8–

ஹர்ஷ ஹேதுக்கள் எல்லாம் நிற்க நெஞ்சு தடுமாறுவது-அஞ்சலி பண்ணுவது
பாத உப ஸங்க்ரஹணம் பண்ணுவதாகத் தொடங்கினான்-அதைக் கண்டு -நீர் தாம் இப்போது எங்கு இருந்து தான் இவை எல்லாம் செய்கிறது தான் -என்னுமே இவள்
பிறருக்கு சேஷ பூதராய் இருப்பாருக்குப் போக்கு உண்டோ-பிரியேன் பிரியில் தரியேன் -என்றால் போலே சொல்லத் தொடங்குமே இவன்-தாத்ருசமான சேஷ்டிதங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே-இத்தால் சொல்லிற்று ஆயிற்று-நித்ய அனுபவம் ஆனாலும் பிரிவுக்கு சம்பாவனை இல்லை என்றாலும்-பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் என்பார்

அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த – நாலாயி:2492/2

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15-

ஓர் ஆனை இங்கனே போந்ததோ என்று சொல்ல ,மனோ ரதித்து  கொண்டு,வந்த இவன்
இவர்களை கண்டு கலங்கி ,-உண்ணப் புக்கு வாயை மறப்பாரை போல,இக் கண்களை கயலோ என்கிறான்..-முக்தர் சம்சார யாத்திரையை நினையாதார் போல ,
இவனும் இவர்கள் கண்களை கண்ட பின் , வேறு ஒன்றை நினைக்க அறியாது இருந்த  படி..இது இவனுடைய மற்று ஒன்றைக் காணாவே-தன்னையும் அறியாதே விஷயத்தையும் அறியாது இருப்பார்கள் என்று சொல்லுமா போல,-(முதல் வார்த்தை கயலோ நும் கண்கள்-இரண்டாம் வார்த்தை களிறு வினவி-மூன்றாம் நிலை ஸ்தப்த்தோஸி -பேச முடியாத நிலை-தானும் உள்ளான படி இதற்க்கு இணங்காதார் எல்லாரையும் அயலார் என்கிறாள் —பகவத் விஷயத்தில் இத்தனை துவரை இல்லாதவரை அயலார் என்கிறாள் -அவர்களில் தனக்கு உண்டான வ்யாவர்த்தி சொல்கிறது(தாத்பர்யத்தால் இவர்கள் அவனுக்கே அற்று அநன்யார்ஹை என்கிறார்கள் )அறியிலும்-அறியக் கூடாது என்று இருக்கிறாள்-இவள் விரஹம் தான் அவகாகித்த பின்பும் வாய் புகு நீரும் நில நீருமாய் இருக்கிற படியாய் இருக்கையாலே அவகாகியாதார்க்கும் ,அறியலாமோ என்று இருக்கிறாள் .-பண்டு இவரை  கண்டு அறிவது எவ் ஊரில் என்னா –இன்னார் என்று அறியேன் என்பாரை போலேகிட்டின போது சம்சயமாய் ,உள் புக்கவாறே அறியாமையாலே நிர்ணயமாய் இருக்கிறபடி–பாஷிக  தோஷம் பரிகரிக்க வேணும்  இறே-

பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற்பாலதுவே – நாலாயி:2511/4

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை – நாலாயி:2518/1

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே–41-

எல்லாக் காலத்திலும் புல்லிமை செய்து நலிந்து போருகிற இந்த வாடை கண்டு அறியோம்-இப்படிப்பட்ட வாடையினுடைய வெம்மையானது-ஒரு பிரகாரத்தாலும் வெம்மையினுடைய ஸ்வரூபம் அறிதி யிடவாய் இருக்கிறது இல்லை அதுக்கடியான ஸூ சகமும் அறிகிறிலோம்

கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம் காள_வண்ண – நாலாயி:2526/2

அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன் – நாலாயி:2533/3

வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்
உயலிடம் பெற்று உய்ந்தும் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே -56 –

தென்றலுக்கு இடையுமவள் தென்றல் வரவுக்கு உகந்து உரைத்தமையாலே நாயகன் வரவு சொன்னாள் என்று அறிந்து-தோழி அசல் அறியில் செய்வது என் -என்று துணுக்கு என்ன அயல் இடத்து ஒருவரும் அறிந்தார் இல்லை என்கிறார்

வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையை – நாலாயி:2551/2

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – – -74 –திரைப்பாயல் பாட பேதம்

ஸ்ரீ மத்தாய் அதிசய ஸூசகமான திருக்கண்கள் உறங்கியும்-அவ்வுறக்கம் தமஸ் கார்யம் அல்லாமையாலே அத்தோடே ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணியும்-ரக்ஷணீயமான ஜகத்துக்கு பிரளய ஆபத்து வந்தவாறே திரு வயிற்றிலே வைத்து நோக்கியும்

தளரின்-கொலோ அறியேன் உய்யல் ஆவது இ தையலுக்கே – நாலாயி:2560/4

கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து – நாலாயி:2578/11

செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எறி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூ வுலகு அளந்த சேவடியோயே –1–

ஸ்வ சந்நிதானத்தாலே அலை எறிகிற கடலிலே-அறிவே வடிவாக உடைத்தாய் இருந்துள்ள நித்திரையில் பொருந்தி –அல்லாதார்க்கு முதல் தன்னிலே ஓன்று தோன்றாதே நெஞ்சு இருண்டு இருக்கும்–சஷுராதி கரணங்களாலே பதார்த்த தர்சனம் பண்ணிப் போது போக்குவார்கள்-அக்கண் தன்னையும் செம்பளித்தால் உள்ளொடு புறமோடு வாசியற இருண்டு இருக்கும்-இவன் தான் திருக்கண் செம்பளித்தால் பிரகாசம் உள்ளே இறைத்து இருக்கும் அத்தனை –-ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணுதல் – த்யேய வஸ்து தனக்கு புறம்பு இல்லாமையால் ஸ்வ அனுசந்தானம் பண்ணுதல் –திருவானந்தாழ்வான் மேல் சாய்ந்து அருளினால் இருக்கும் படி –

கடவுள் நிற்ப புடை பல தான் அறி-தெய்வம் பேணுதல் தனாது – நாலாயி:2583/4,5
ஒ! ஒ! உலகினது இயலவே ஈன்றோள் இருக்க
மணை நீர் ஆட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப புடை பல தானறி
தெய்வம் பேணுதல்
தனாது
புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா
பல் மா மாயத்து அழுந்து மா நளிர்ந்தே –6–

பிராமண ப்ரஸித்தமாய் இருப்பது ஓன்று அன்றே -ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும் மிக்கு இருக்கிற தான் அறியும் தெய்வத்தை யாயிற்றுப் பற்றுகிறது-அவை தனக்கு என்ன ஒரு உத்கர்ஷம் இல்லாமையால் -மொட்டைத் தலையனை-பனி இரும் குழலன் -(குளிர்ந்தும் பரந்தும் இருக்கிற மயிரை யுடையவன் )-என்று கவி பாடுவாரைப் போலே ஆஸ்ரயிக்கிற இவனுக்கே பரமாயிற்று

முறி மேனி காட்டுதியோ மேல் நாள் அறியோமை என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈது உரையாய் – நாலாயி:2590/2,3

நெறி காட்டி நீக்குதியோ நின் பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய்
கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என் படோம் யாம் —6-

பழையதாக அறியாதே போருகிற என்னை-ஒருத்தனுக்கு திங் மோஹம் பிறந்தால்
வழி அறியுமாவன் நீயேயோ என்னக் கடவதோ-வழி காட்டி விடக் கடவனோ
பதஸ் ஸ்கலிதம் (நல்ல மார்க்கத்தில் இருந்து நழுவும்படி ) என்னும்படி இறே
என்னுடைய அவஸ்தை-மந் மநா பவ -(9-34/-18-65 )என்னப் பார்த்தாயோ
மாம் ஏகம் சரணம் வ்ரஜ (18-68)–என்னப் பார்த்தாயோ-

தேம்பு ஊண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீவினை ஆம் – நாலாயி:2598/3

சாயல் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
தேம் பூண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்
பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி–14-

நிறத்தால் கரியனாய் யுள்ளவனை-ஆழ வநுபவிக்க அறியாராய்
(பிள்ளைத் தனத்தை கண்டு ஈடுபடாமல் வஞ்சித்தாள் என்னுதல் )
ஸர்வேஸ்வரன் என்று உள்ளபடி அறியாராய் என்றுமாம்-பூதனை மணிச்சியாய் வஞ்சித்தாள் அன்றே-பேயாகையாலே வஞ்சித்தாள் அத்தனை இறே
உன்னைப் பார்த்தால் பூதனை நித்ய ஸூரிகளோடே ஒக்கும் இறே

ஆத்மா தேயும் படிக்கு ஈடாக சப்தாதிகளை புஜித்து(வெட்டவும் நினைக்கவும் முடியாது -அநர்த்தத்தை-ஸ்வரூப நாசம் அடையுமே ) அதனுடைய விபாகத்தை அறிந்து அறிந்து
அநர்த்தத்தைப் பலிக்கக் -(பலிப்பிக்க) கடவதாய் இருக்கிற பாம்பில் வாயிலே கை நீட்டுவாரைப் போலே இருக்கிற நீ பூதனைக்கு யார் உனக்கு அண்ணியளோ பூதனை

சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து – நாலாயி:2600/4

சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா -மார்பாரப்
புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –16-

நீ இப்படி எளியையாய் அது இருக்கைக்கு அடி சூழ்ந்து சொல்லு -புத்தி பண்ணி அருளிச் செய்ய வேணும்-ஸர்வேஸ்வரனும் தன்னுடைய அவதாரத்தைப் போய் புக்கால் ஜென்ம கர்ம ச மே திவ்யம் –என்னும் அத்தனை-வேதமும் பேசப் புக்கால் தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -என்னும் – சூழ்ந்து -விசாரித்து

சொல்லில் குறை இல்லை சூது அறியா நெஞ்சமே – நாலாயி:2603/1

சொல்லில் குறை யில்லை சூதறியா நெஞ்சமே
எல்லிப் பகல் என்னாது எப்போதும் –தொல்லைக் கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
காத்தானைக் காண்டு நீ காண் –19-

பகவத் விஷயத்தைப் பேசப் புக்கால் பேச்சில் குறையில்லை-பேசி முடியாது-எத்தனை பேசினாலும் விஷயத்தைப் பரிச் சேதிக்கப் போதாது என்றபடி (பேசினார் பிறவி நீத்தார் பேருளார் பெருமை பேசி யதோ வாசோ நிவர்த்தந்தே )பகவத் விஷயம் நன்று என்றும்
விஷய ப்ராவண்யம் அநர்த்தம் என்றும் விடவும் பற்றவும் அறியாத நெஞ்சமே சூது -விரகு
(விடுவித்துப் பற்றுவிக்கும் அவனே உபாயம் எவற்றை விட்டோம் எவற்றைப் பற்றினோம் என்று அறியாத நெஞ்சமே )

அறிகிலமால் நீ அளந்த அன்று – நாலாயி:2611/4

அடியால் படி கடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று -பெரிய திருவந்தாதி—27-

இப்போது உனக்கு ஓடுகிற ஹர்ஷம்-முத் -வடசொல் -ஹர்ஷமே –திருவடிகளில் கீழே பூமியை இட்டுக் கொண்ட ஹர்ஷமோ-திரு முடியாலே ஆகாச அவகாசத்தை எல்லாம் வியாபித்த ஹர்ஷமோ-செறி கழல் -என்கையாலே-திருவடிகளிலே முத்து உண்டாகையாலும்-நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய் —என்கையாலே
திரு முடியிலே முத்து உண்டாகையாலும்-அடியிலே படியை அளந்தன முத்துக்களோ
முடியாலே விசும்பை அளந்தன முத்துக்களோ-உள்ளீடான முத்து ப்ரகாசமாதல் –
சாத்தின முத்தாதல்

அழகும் அறிவோமாய் வல்வினையை தீர்ப்பான் – நாலாயி:2615/1

அழகும் அறிவோமாய் வல் வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடி தாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடங்கடலை மேயார் தமக்கு– பெரிய திருவந்தாதி31-(வல் வினையும் தீர்ப்பான் -பாட பேதம் )

புதுப்புடைவை அழுக்குக் கழற்றுமா போலே எலி எலும்பான -அல்ப சக்திகரான -நாம் கர்மத்தாலே நம்முடைய பாபத்தைப் போக்குகை அன்றிக்கே ஸர்வேஸ்வரனைக் கொண்டு நம் பாபத்தைப் போக்கும் அழகை யுடையோமாய் ஸர்வேஸ்வரனுக்கு சாயை போலவும் -பாதுகை -பாத ரேகை போலவும் ஆனோம்(அடி தாறு -பாதுகை யாதல் -பாத ரேகை யாதல்
பாதுகை யானது எப்படி என்ன அருளிச் செய்கிறார்-இரண்டுமே திருவடிக்கு அளவாகவே தானே இருக்கும் )அடி தாறு -அடிக்கு அளவாய் இருக்குமது

யாதானும் ஒன்று அறியில் தன் உகக்கில் என்-கொலோ – நாலாயி:2617/1

யாதானும் நேர்ந்து யாதானும் ஓன்று அறியில் தன் உகக்கில் என் கொலோ
யாதானும் நேர்ந்து அணுகா வாறு தான் -யாதானும்
தேறுமா செய்யா வசுரர்களை நேமியால்
பாறு பாறாக்கினான் பால்–33-

ஏதேனும் ஒரு பதார்த்தத்தை அறியில்-ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு என்னும்படியே ஏதேனும் ஒன்றினுடைய ஞானத்துக்கும் அவனை முன்னிட்டு அறிய வேண்டுகையாலே அவனை அறிந்ததாய் விடும் –-இதம் என்று புரோ நிட்ட -(நிஷ்ட முன் நிற்கும் )பதார்த்தங்களில் ஒன்றை அறியும் போதும் ஸர்வ ஸப்த வாஸ்யனானவன் ஆகையால் இத்தை அறியும் ஞானம் அவன் அளவிலும் போம் என்றபடி

ஆம் ஆறு அறிவுடையார் ஆவது அரிது அன்றே – நாலாயி:2621/1

ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
நாமே யது வுடையோம் நன்னெஞ்சே –பூ மேய
மது கரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம்
அது கரமே அன்பால் அமை —37-

வழியான அறிவுடையார் யாவது அரிது அன்றே-யுக்தமான அறிவுடையாராகை கிடையாது
ஆமாறு -ஆறு -வழி-நாமே யதுவுடையோம்-நாம் நல்ல அறிவுடையோம்(ஆறு எனக்கு நின் பாதமே சரணாகதி தந்து ஒழிந்தாய் )

அறி கண்டாய் சொன்னேன் அது – நாலாயி:2650/4
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை -ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது–66-

பரிமளம் திரண்ட திருத் துழாயை யுடையனுமாய்-வேதங்களாலேயே ப்ரதிபாத்யனுமானவனை-நெஞ்சே-அறி கண்டாய்-சொன்னேன் உனக்கு அத்தை-1-விரோதி நிரஸனம் பண்ணுவானுமாய்-2-போக்யனுமாய்-3-வகுத்தவனுமானவனை-அறி என்று சொன்னேன்-இது சிலருக்குச் சொல்லுமது அன்று-இத்தைப் புத்தி பண்ணு

அறியும் தன்மையை முக்கண் நால் தோள் – நாலாயி:2672/19—-ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை – நாலாயி:2672/28
-ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த – நாலாயி:2672/45

சந்தரனைப் போலே தர்ச நீயமாய் குளிர்ந்த திரு முகத்தை யுடைத்தாய் இருக்கிற-
ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் – பூ தொட்டால் போலே இருக்கிற மிருதுவான திருக் கைகளாலே பூ தொட்டால் போலே இருக்கிற மிருதுவான திருக் கைகளாலே-திருவடிகளை வருட – ஜகத் ரஷண ரூபமான யோக நித்ரையிலே ஒருப்பட்டு இருந்தாய்-எனக்குப் புருஷகாரம் இல்லாமே இழக்கிறேனோ

தன்னுடைய ஸ்பர்சத்தாலே விரிக்கப் பட்ட பணங்களை யுடைய -திரு வநந்த வாழ்வான் உடைய உஸ்வாச நிஸ்வாசங்களாலே தூங்கு தொட்டிலைப் போலே-ஆகிற படுக்கையில் ஜகத் ரஷணத்துக்காக உணர்ந்து கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலே சர்வேஸ்வரன் ஆனவனே

ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார் – நாலாயி:2681/3

தங்களை அழியாது இருக்கச் செய்தே மூதறிவாட்டிகள் ஆனவர்கள் சொல்லுகிறார்கள்-இந்த்ரன் படிகள் இருக்கும்படி என் -என்று ஒருத்தி ஒருத்தியை கேட்க-தொண்ணூற்று எட்டு இந்த்ராதிகளை சேவித்தேன்-இந்த்ரன் படி கேட்கிறாய் -வேணுமாகில் சொல்கிறேன் -என்றாள் இறே-அப்படியே பழையராய் நோய்களையும் அறிந்து நோய்க்கு நிதானமும் அறிந்து பரிஹாரமும் பண்ணுவித்து போரும் மூதறி வாட்டிகள் சொல்லுகிறார்கள் –

ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான் – நாலாயி:2684/3

ஸ்வ யத்னத்தாலே காணப் புக்கு –யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்ட வேதம் போல் அன்றியே-அவன் காட்டின வெளிச் செறிப்பாலே அவனைக் கண்ட நான் அறிந்தேன் –

கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறிய கூறுகேனோ – நாலாயி:2684/4

அறிந்தாள் ஆகில் இவள் ஆர் என்று தலைக் கட்ட புகுகிறாள் என்று சொல்லி
எல்லாரும் ஒக்க தன்னை கூர்க்க பார்த்துக் கொண்டு நின்றவர்களை சம்போதிக்கிறாள்-இவளுடைய நோய்க்கு தேவதாந்தரங்களின் காலிலே விழும்படி கலங்கி இருக்கும்
நீங்களும் கூட அறியும்படி வார்த்தை சொல்லவோ –

சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் – நாலாயி:2698/2

ஊராது ஒழியேன் உலகு அறிய ஒண் நுதலீர்
சீரார் முலைத் தடங்கள் சேரளவும் –பாரெல்லாம்
அன்று ஓங்கி நின்று அளந்தான் நின்ற திரு நறையூர்
மன்று ஓங்க ஊர்வன் மடல்-

என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில் – நாலாயி:2718/5

இன்னதோர் காலத்திலே ஏவம் வித ஸ்வ பாவராய் இருப்பார் இப்பேறு பெற்றார்கள் என்று சொல்லக் கேட்டு அறிவது இல்லை – மோஷத்து ஏறப்  போனார்கள் என்று சாஸ்த்ரங்களிலே
ஸூ கோ முக்தோ வாம தேவோ முக்த -என்று சொல்லக் கேட்டு இருக்கும் இத்தனை –
நான் கண்டேன் நான் போனேன் என்பார் இல்லை-ஆஸ்திக்யத்தாலே சில சொல்லும் இத்தனை  –ஆரேனும் ஒருவர் இப் புருஷார்த்தத்தைப் பெற்றார் என்று கேட்டு அறிவது இல்லை –பிரமாணங்கள் சொல்லக் கேட்கும் அத்தனை –
ஸூ கோ முக்தோ  வாமதேவோ முக்த -என்று வசனங்களைப் படிக்கும் இத்தனை அல்லது-கண்டு போந்தார் உண்டாகச் சொல்லுவார் இல்லை – இன்னார் பெற்றார் என்று சொல்லக் கேட்டு அறிவது இல்லை – ஸூ க வாம தேவாதிகள் முக்தர் என்று சொல்லா நின்றதே
கேட்டு அறியத் தட்டென் என் என்னில் -நான் போனேன் இன்னபடி அனுபவித்தேன் என்று அங்குத்தை  யாவர் படியைக்-கண்டு வந்தார் சொல்லக் கேட்டு அறிவது இல்லை –

அன்னதே பேசும் அறிவு_இல் சிறு மனத்து ஆங்கு – நாலாயி:2720/2

அன்னதே பேசும் அறிவில் சிறு மனத்து ஆங்கு அன்னவரைக் கற்ப்பிப்போம் யாமே அது நிற்க ——18

தந்தாமுக்கு என்ன ஒரு விவேகம் இல்லாத அறிவு கேடர்-இப்போது அறிவில்லை யாகிலும் மேல் அறிவு உண்டாகைக்கு ஈடான நெஞ்சில் அகலமும் இல்லை-அவ் அவஸ்தா பன்னர் ஆனவர்களை கற்பிக்கை நமக்கு பரமாவதே – கையிலே மடலை எடுத்துக் கொண்டு-இரண்டு அருகு உள்ளாறும் மலைக்க பெரிய திரு நாளில் போலே உலாவித் திரியலாய் இருக்க-அவ்வறிவு கேடரை அறிவிக்கை நமக்கு பரமாவதே –

தென் உரையில் கேட்டு அறிவது உண்டு – நாலாயி:2732/4

அபிமதம் எல்லாம் பெற்று அல்லது மீளாத படியான மடலூரக் கடவர் அல்லர் என்று கொண்டு இங்கனே சொல்லிக் கொண்டு போருவதொரு நிரர்த்தக சப்தம் உண்டு –அப்படிப் பட்ட அது தன்னை நாங்கள் இகழ்ந்த மிலேச்ச ஜாதிகளிலே அப்பாஷையிலே கேட்டுப் போருவது உண்டு அத்தை  அபிமத விஷயத்தைப் பெற்று அல்லது தரியாத நாம்
அனுஷ்டேயமாகத் தேறோம் –

முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே சூழ் கடலுள் – நாலாயி:2746/3

ந காம தந்த்ரே தவ புத்தி ரஸ்தி -என்று காமதந்த்ரம், அறிந்திலிகோள்  ஆகில் தவிருகிறிகோள்  – பாபம் போகைக்கு பாவனம் என்றாகிலும் மஹா பாரதம் கேட்டு அறியீர்களோ –

அன்ன திருவுருவம் நின்றது அறியாதே என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் – நாலாயி:2756/4,5

மின்னாய் இளவேய்   இரண்டாய்    இணைச் செப்பாய் முன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலம் இரண்டாய் ——79 அன்ன திருவுருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் ———–80

மௌக்த்யத்தாலும் மதமதப்பாலும் இரண்டு கெண்டை போலே யாயிற்று திருக் கண்கள்-அப்படிப் பட்டது என்னுமத்தை யன்றி இவ் வழகுக்கு தக்க வாசகம் இல்லை-அறிவு கெட்டு-
அறியாமையனபடி எங்கனே என்னில் பருப்பருத்தன சில பேசி முடியப் பேச மாட்டாமையாலே பிரித்துப் பேசும் போது பேசலாம்-இருவரும் கூடி நின்றால் பேச முடியாது
கண்ணுக்கும் மனசுக்கும் அளக்க ஒண்ணாத விஷயம் ஆகையாலும் -கண்டாரைக் குமிழ் நீரூட்டும் விஷயம் ஆகையாலும் அறியாதே -என்றுமாம் –நெஞ்சாவது அறிவு இட்டு வைக்கும் கலம்-

மன்னும் மருந்து அறிவீர் இல்லையே மால் விடையின் – நாலாயி:2760/4

முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்
மன்னு மருந்து அறிவீர்   இல்லையே -மால் விடையின்  ———92

போக உபகரணம் ஆனால் இருவரும் கூடச் சுமக்கை அன்றிக்கே எனக்கே  தலைச் சுமை யாகில் எங்கனே தரிக்கும்   படி –இவை யுன்டாகை தவிராவாகில் முதுகிலே யானால் ஆகாதோ முன்னே இருந்து காணக் காணச் செவ்வி யழிய வேணுமோ
வயோ அச்யா ஹயாதி வர்த்ததே -யுத்த -5-5–என்னுமா போலே –தப்பாத மருந்து –அறிவார் இல்லையோ-இது பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று நம் பிள்ளை அருளிச் செய்வர் -ஜகத்திலே ஓர்-ஆந்தராளிகனைக்-கடகரைக் – கிடையாதோ  -என்று
இவ்வருக்கு உண்டான பேறுகள் அல்பமாய் அஸ்த்ரமாய் இருக்கையாலே
பரிஹாரங்களும் அவ்வளவேயாய் இருக்கும் இ றே-இது அங்கன் இன்றிக்கே யாவதாத்மபாவியான  பேறாகையாலே பரிகாரமும் நிலை நின்ற பரிஹாரமாய் இருக்கும் இறே –மருந்து அறிவீர் இல்லையே என்ற வாயோடு -உண்டு உண்டு -என்றால் போலே இருக்க

தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர் – நாலாயி:2768/1

தன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் ——–107
மன்னும் குறளுருவின் மாணியாய் மாவலி தன்
பொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து போர் வேந்தர் —–108

ஈஸ்வர அபிமானிகளுக்கு கார்யம் செய்தானே யாகிலும் தன்னுடைய ஐஸ்வர்யமான மேன்மையில் ஒன்றும் குறையாமல் செய்தது இறே அது – இது அங்கன் இன்றிக்கே -தன்னுடைய ஸ்வ பாவத்தை தவிர்ந்து கார்யம் செய்த நீர்மை இறே-அந்நீர்மையும் அழிய விறே புகுகிறது-அதுக்கு மேலே -கண்டவர்கள் இவன் முன்பு உள்ள ஜன்மங்களிலும் இப்படி உளனாய்ப் போந்தவன் ஒருவன் என்னும்படியாக-கோசஹச்ர  ப்ரதாதாரம் -என்னும் நிலை ஒருவர்க்கும் தெரியாத படி –பிராட்டிமார்க்கும் அகப்பட இவன் இப்படி இரப்பாளனாய்ப் போந்தான் அத்தனையோ -என்னுபடியாக-சர்வராலும் அபிகம்யனான தான் போய்ப் புக்கு

தன்னை பிறர் அறியா தத்துவத்தை முத்தினை – நாலாயி:2775/2

தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை அன்னத்தை மீனை யரியை யருமறையை——-121

சௌலப்யத்தாலே தாழ நிற்க -சிசூபாலாதிகள் அறியாதே வையும்படியாய் இருக்காய்-
பரம் பாவ மஜா நந்த அவஜா நந்தி மாம் மூடா -ஸ்ரீ கீதை -9-11-ஸ்ரமஹரமாயிருக்கிறவனை –

என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான் – நாலாயி:2784/4

தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் – நாலாயி:2785/4

உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான் – நாலாயி:2790/1

உன்னி யுலவா யுலகறிய ஊர்வன் நான் முன்னி முளைத்து எழுந்து ஓங்கி யொளி பரந்த—–148 மன்னிய பூம் பெண்ணை மடல் –

நினைத்து முடிய மாட்டா (வாசாம கோசரம்)அப்படிப்பட்ட சேஷ்டிதங்களை யெல்லாம் உலகத்தாரறியும்படி பிரகரப்படுத்திக் கொண்டு-பரகால நாயகியாகிய நான்-முன்னே முளைத்து எழுந்து வளர்ந்து விளங்குகின்ற சிறந்த அழகிய பனைமடலைக்கொண்டு மடலூரக்கடவேன்.

உள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே – நாலாயி:2792/4

கள்ளார் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத வன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஓன்று அறியேன் எனக்குற்ற பேர் இயல்வே – 2-

தாம் மகானுபவராய் இருந்து வைத்தும் -என்போலாம் மந்த மதிகளோடே -புரையறக் கலந்து
பரிமாறின சீல குணம் ஒன்றிலே ஈடுபட்டு -அது ஒழிய வேறு ஒன்றிலும் போக மாட்டாது-என்ன ஆசார்யம்-இப்படி ப்ரவணனாய் ஆகுகைக்கு விரகு ஒன்றும் அறிகிலேன்-பகு ஜன்மங்கள் தன்னில் தபோ ஜ்ஞான சமாதிகளை பண்ண வேண்டி இருக்க -அங்கன் இன்றிக்கே சொல்லுவோம் அவன் நாமங்களே -என்று அத்யாவாஸ்யம் மாத்ரம் பண்ணின படி –எனக்கு –உற்ற -சித்தித்த பேர் இயல்வே -சமஸ்த உபாயங்களை காட்டிலும் -பெரியதாய் விலஷணமான உபாய விசேஷம் – ஓன்று அறியேன் – எத்தாலே இந்த சொல் சேர்த்தி லபித்தது –நான் ஒன்றும் அறிகிலேன் – முந்துற்ற நெஞ்சே -நீ அறிந்தே ஆகில் சொல்லிக் காண்-நிர்ஹேதுகமாக சித்தித்த ஒன்றாய் ஆய்த்து-இயல்வு -விரகு –

அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே – நாலாயி:2809/4

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-

இவ் அர்த்தத்தை விச்தீர்னையான இந்த ப்ர்திவியில் உள்ள சேதனருக்கு அஞ்ஞான ஜ்ஞாபனம் பண்ணுகைக்கு நின்று அருளின -இவ் அர்த்தத்தை மகா பிருத்வியில் உள்ளோர் எல்லாரும் அறியும் படி நின்று அருளின-அடியேனுக்கு அபர்யாப்த்தாம்ர்தம் -நிரதிசய போக்யர் –

ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை அல்லலுக்கு – நாலாயி:2815/2

காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ என்னை யுத்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 – 

தெளிந்தவர் தான் யார் –நித்ய விபூதியில் இருந்தவர்கள் ஆகில் -சதா பச்யந்தி -என்றும் -விப்ராச -என்றும் -ஜாக்ர்வாசா -என்றும் –சர்வஜ்ஞம் உடையவர் ஆகையாலே -அறியக் கேட்டவர்கள் இத்தனை –யாநிசா சர்வ பூதாநாம் தஸ்யா ஜாகர்த்தி சமயமி – என்னும்படி அஜ்ஞானத்தை விளைப்பிக்கும் பூலோகத்தில் இருந்தவர் தெரிகிலர்-என்றபடி –

பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதைமையே – நாலாயி:2847/4

மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்கா ளுற்றவரே தனக்குற்றவராய்க் கொள்ளும் உத்தமனை நற்றவர் போற்றும் இராமானுசனை யின் நானிலத்தே பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதமையே -57- 

எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு முன்பு அநாதி காலமே தொடங்கி ஆவிர்பூதமாய் இருக்கிற என்னுடைய -தேகாத்ம –  பிரமமும்-ஸ்வ ஸ்வா தந்த்ர்யா பிரமமும்-அந்ய சேஷத்வ பிரமமும் -அநுபாய உபாயத்வ பிரமமும் -எங்கே சென்றது கண்டிலேன் –அஞ்ஞானமானது மனசுக்கு தோற்றுகிறது இல்லை –பிரத்யட்ஷமாக காணப்படுகிறது இல்லை -பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணாதே -கண்ட ஒன்றிலே மேல் விழுந்து மண்டிகைக்கு உறுப்பான அஞ்ஞானம் வாசனையோடு போய்த்து என்றபடி

சோதியை நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர் – நாலாயி:2875/2

ஓதிய வேதத்தின் உட் பொருளாய் அதன் உச்சி மிக்க சோதியை நாதன் என வறியாது உழல்கின்ற தொண்டர் பேதைமை தீர்த்த விராமானுசனைத் தொழும் பெரியோர் பாத மல்லால் என்தன் ஆர் உயிர்க்கு   யாதொன்றும் பற்று இல்லையே – – 85- 

வேதைஸ் ச சர்வை ரஹ மேவ வேத்ய –என்றும் -வேத வேத்யே பரே பும்சி -என்றும் -வேதே ராமாயனே புண்யே  -என்றும்-ஆதவ் மத்யே ததான் தேச விஷ்ணுஸ் சர்வத்ர கீயதே -என்றும் – உளன் சுடர் மிகு சுருதியுள் -என்றும் -ஸ்ருதி ஸ்ரசி விதீப்தே-என்றும் சொல்லுகிறபடியே- வேத சிரச்சுகளால் கட்டடங்க பிரதி பாத்யனாய் -ஜ்யோதிஷாம் ஜ்யோதி -தேஜசாம் ராசிமூர்ஜிதம் –-என்கிறபடியே நிரவதிகமாக பிரகாசிக்கிற சர்வேஸ்வரனை -பதிம் விச்வச்ய -என்கிறபடியே -நமக்கு பிராப்த சேஷி என்று அறிய மாட்டாதே 

தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து
தன்னை உற்றாரை இராமாநுசன் குணம் சாற்றிடுமே – நாலாயி:2887/3,4

தன்னை வுற்றாட் செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை வுற்றாட் செய்ய என்னை வுற்றானின்று தன் தகவால்
தன்னை வுற்றாரன்றித் தன்மை வுற்றாரில்லை என்றறிந்து
தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே
– – -97 –

தம்மை ஆஸ்ரயித்து இருக்குமவர்களை காட்டில் – ஸ்வ சம்பந்த சம்பந்திகள் விஷயத்தில் கிருபை- அதிசயித்து செல்ல வேண்டும்படியாய் இருக்கும் -ஆகையால் இறே –
த்வத் தாஸ தாஸ கண ந சரமாவதவ் யஸ் ஸ்வத்தா-சதைகரசதா விரதாமமாஸ்து -என்று ஸ்ரீ ஜீயரும் பிராரத்து அருளினார் இறே – இப்படிப் பட்ட ஸ்வபாவத்தை அறிந்து ஆஸ்ரயித்தார் உடைய-தத்ராபி துர்லபம் மன்யே வைகுண்டே ப்ரிய தர்சனம் -என்னுமா போலே இது-தான் துர்லபம் –விஷய ப்ரவணனுக்கு அத்தை விட்டு ஸ்ரீ பகவத் விஷயத்திலே வருகைக்கு உள்ள அருமை போல்-அன்றிக்கே – பிரதம பர்வதத்தை விட்டு -சரம பர்வதத்திலே வருகைக்கு உள்ள வருமை -என்றும் சொல்லுகிறபடியே மேட்டுமடையான இவ் அத்யாவச்யத்தை உடையவர் ஒருவரும் இல்லை என்று அறிந்து –இல்லை என்று திரு உள்ளம் பற்றி -என்றபடி –

அவரவர் தமதமது அறிவு அறி வகை வகை – நாலாயி:2903/1

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-

அவரவர்-சத்வாதி குண பேதத்தால் வந்த பிரகிருதி பேதத்தைச் சொல்லுகிறது–தமதமது குண பேதத்தால் வந்த பல பதத்தைச் சொல்லுகிறது-அறிவறி
அதுக்கு அடியான ஜ்ஞான பதத்தைச் சொல்லுகிறது-வகைவகை-மார்க்க பேதங்களாலே
அவரவர்-அவ்வோ பல பிரதானத்துக்கு சக்தராக ஸ்வீகரித்த தேவதைகளை இறையவர் என
அவர் அவர்களே தம்தாமுக்கு ஸ்வாமிகள் என்று-வடி யடைவார்கள் ஆஸ்ரயிப்பவர்கள்
அடி அடைவார்கள் -என்று ஸ்வ கோஷ்டி பிரசத்தியாலே அருளிச் செய்கிறார்

புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே – நாலாயி:2906/3,4

ருத்ரனுக்கு அந்தர்யாமியாய் கொண்டு திரிபுர தஹனம் பண்ணி
பிரம்மாவுக்கு அந்தர்யாமியாய் நின்று வைதிக ஜ்ஞானத்தை தேவர்களுக்கு உபதேசித்து
இயந்து -ஈந்து -அறிவையீந்து -என்றபடி-அன்றிக்கே – வியத்தில் – கடத்தலும், கொடுத்தலும் ஆகையாலே, அறிவைக் கொடுத்து என்னவுமாம்.-யோ ப்ராஹ்மணம் விதாதா பூர்வம் -(‘நாராயணன் உலகங்களை எல்லாம் படைப்பதற்கு முன்னர்ப், பிரமனை முதலில் படைத்தான்;-அப்பிரமனுக்கு வேதங்களைக் கற்பித்தான்

அமைவு உடை நாரணன் மாயையை அறிபவர் யாரே – நாலாயி:2923/4

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே
–1-3-3-

சகல சேதன அசேதனங்களையும் தனக்கு பிரகாரமாக யுடைய தான் தன்னுடைய விபூதியிலே ஒரு பிரகாரத்துக்கு தான் பிரகாரமாய் -அவர்களுக்கு நியாம்யனாய் இருக்க ஆச்சர்யம் ஒருவர்க்கும் நிலமோ
பிதா புத்ரேண பித்ருமான் யோநியோ நௌ நாவேத வின்மநுதே தம் ப்ருஹந்தம் -இத்யாதி
நித்ய ஸூரிகள் அனுபவத்திலே அந்ய பரர் ஆகையாலே அறிய மாட்டார்கள்
ப்ரஹ்மாதிகள் துர்மாநத்தாலே அறிய மாட்டார்கள்
சம்சாரிகள் விஷய பிரவணராய் அறியார்கள்
இவர் போல்வார் -எத்திறம் -என்று மோஹித்து கிடப்பார்கள்-

ஒன்று என பல என அறிவு_அரும் வடிவினுள் நின்ற – நாலாயி:2927/1

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே –-1-3-7-

ஏகாத்ம பிரகாரம் என்றும் -அநேகாத்மாதிஷ்டிதம் என்றும் -ஒருவன் பிரதானன் என்றும் தனித்தனியே பிரதானர் என்றும்-மூர்த்தி த்ரயமும் ஏகாத்ம அதிஷ்டதமோ–அநேக ஆத்ம அதிஷ்டிதாமோ-அநேக ஆத்ம அதிஷ்டிதமானால் அவர்களில் பிரதானன் எவன் என்று அறிய ஒண்ணாத ஸ்வ பாவத்தை யுடையராய் நின்ற-மூவர் முதல்வராய் மூவர்க்கும் மூன்று சரீரம் உண்டாய்த் தோற்றுகையாலே, மூன்று சரீரத்திலும் ஒருவனே- அதிஷ்டித்துக் கொண்டு – நிலை பெற்று நிற்கிறானோ, அன்றி, மூன்றிலும் மூன்று சேதனர் நிலை பெற்று நிற்கின்றார்களோ?’ என்று அறிய அரிய வடிவுகளை யுடையராய் நிற்கிற.-இனி,ஏகாத்ம அதிஷ்டிதமோ – ‘ஓர் ஆத்துமாவின் நிலை பேறோ,-அநேகாத்மா அதிஷ்டிதமோ – பல ஆத்துமாக்களின் நிலை பேறோ? என்று அறிய அரிதான தன்மையினை யுடையராய் நின்ற என்னுதல்.

சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால் – நாலாயி:2945/3

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே –1-5-3-

ஜ்ஞாநாதிகரரான ப்ரஹ்மாதிகள் உடைய ஜ்ஞானத்துக்கும் கோசரம் அல்லாதான்
யன்நாயம் பகவான் ப்ரஹ்ம ஜ்ஞாநாதி புருஷோத்தமம்-அவ்யவதாநேந- நேரே தன் பக்கல் பிறந்து, தான் ஓதுவிக்க ஓதி, அவற்றாலே ஞானத்தில் குறைவு அற்று
இருக்கிற பிரமன் முதலானவர்களுடைய ஞானத்துக்கும் அப்பாற்பட்டவனாய் இருப்பான்.

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானை 1-5-7- நாலாயி:2949/1

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7-

இப்போது அடியேன் என்கிறது அடிமைக்கு இசைந்து அன்று ஜ்ஞானா நந்தகளோபாதி நிரூபகமாக சேஷத்வத்தை பிரதிபத்தி பண்ணி இருக்கையாலே அஹம் என்கிறவோ பாதி -அடியேன் -என்கிறார் சிறிய ஞானத்தன் அல்ப ஜ்ஞானத்தை யுடையவன் அறிதலார்க்கும் அரியானை ஜ்ஞானாதிகரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் அறிய அரியவனை ஷூத்ர விஷயங்களையும் பரிச்சேதிக்க மாட்டாதவன் நான் –அவன் அதிகராலும் அபரிச்சேத்யன் ஸ்வ தஸ் சர்வஜ்ஞனான தனக்கும் அறியப் போகாது -தனக்கும் தன் தன்மை அரியான் இறேபர்வத பரமாணுக்களுக்கு உண்டான சேர்த்தி போலே இறே –

அ தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்து – நாலாயி:3032/3

சஹி வித்யாஸ் தம் ஜநயதி -என்கிறபடியே ஆச்சார்யனாய்-ஏதத் விரதம் மம –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னுமவன் இறே-ஆசாரியனாய் இருந்து விரிந்த ஞானத்தையும் எனக்கு உண்டாகச் செய்து –சரீரமேவ மாதா பிதரவ் ஜநயத -ச ஹி வித்யா தஸ்தம் ஜனயதி தச் ஸ்ரேஷ்டம் ஜென்ம-இச்சரீரத்தை உண்டாக்கிய தாய் தந்தையர்களைக் காட்டிலும்,
ஞானத்தைத் தந்து உயர் பிறவி அடையச் செய்த ஆசாரியன் சிறந்தவனாதலின்,
தாய் தந்தையர்கட்குப்பின் ஆசாரியனை அருளிச் செய்கிறார்.-

அறியா காலத்துள்ளே அடிமை-கண் அன்பு செய்வித்து – நாலாயி:3033/1-அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் – நாலாயி:3033/2
அறியாமை குறளாய் நிலம் மாவலி மூவடி என்று – நாலாயி:3033/3
அறியாமை வஞ்சித்தாய் எனது ஆவியுள் கலந்தே – நாலாயி:3033/4

பால்யாத் பரப்பிருதி ஸூஸ் நிக்த ‘இராமபிரான் பக்கல் இலக்குமணர் இளமைப்பருவம் தொடங்கி எப்பொழுதும் நேசத்துடன் இருந்தார்,’ என்கிறபடியே, -அறிவு நடையாடாத பருவத்திலே —அறிவின்மையினை உண்டு பண்ணுகிற பிரகிருதியில் சேர்ந்தவனாயிருக்கிற – அசித் ஸம்ஸ்ருஷ்டனாய் இருக்கிற -அடியேனை வைத்தாய்.-இது எங்கே சிறைப்பட்டாலும் நல்லது; நம்முடைய பொருள் அன்றோ? என்று இருக்கிறான் இறைவன் என்பார்,‘அடியேனை’ என்கிறார். -தம்மை அறியாமை வஞ்சித்ததற்கு -நிதர்சனம் -எடுத்துக்காட்டு ஒன்று அருளிச் செய்கிறார் மேல்:
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூ வடி என்று –
நெஞ்சு அறியாதபடி காரியம் செய்வாரைப் போன்று, திருமார்வில் இருக்கிற நாய்ச்சியாருங்கூட அறியாதவாறு வாமன வேடத்தை மேற்கொண்டு, 
‘கொள்வன் நான் மாவலி மூவடி தா என்ற கள்வனே’ என்கிறபடியே,
‘நிலம் மாவலி மூவடி’ என்ற-அன்வித பாஷாணம் இல்லாத – பொருத்தம் அற்ற வார்த்தைகளைக் கூறி; பண்டும் இரந்து பழக்கம் உண்டாகில் அன்றோ பொருத்தம் உள்ள வார்த்தைகளைக் கூறுவது?-சுக்கிரன் முதலியோர் ‘இவன் சர்வேஸ்வரன்; தேவ காரியம் செய்ய வந்தான்;-உன் செல்வம் அனைத்தையும் அபகரிக்க வந்தான்,’ என்றால், அவர்கள் வார்த்தைகள் செவிப்படாதவாறு உன் பேச்சாலே அவனை அறிவு கெடுத்து வஞ்சித்தாய்.-அப்படியே, எனது ஆவியுள் கலந்து – நான் இருக்குமிடத்தளவும் வந்து என்னோடே கலந்து,-
அத்யந்தம் அந்நிய பரனான ‘மிகவும் பராக்காய் இருக்கிற ஆத்துமாவிலே புகுந்து
உன் குணத்தாலும் செயலாலும் வசீகரித்தாய்,’ என்பதாம்.-‘அறியாமையிற் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று அறியாமை வஞ்சித்தது போன்று, எனது ஆவியுள் கலந்து, அறியா மா மாயத்து அடியேனை, அறியாக் காலத்துள் அடிமைக்கண் அன்பு செய்வித்து வைத்தாய்,’ என்று அந்வயம் –

பட்ட போது எழு போது அறியாள் விரை – நாலாயி:3050/1

உதித்ததும் அஸ்தமித்ததும் அறிகிறிலள்-இவள் அறிவதும் ஏதேனும் உண்டோ?’ என்னில்,-‘இது ஒரு பரிமளமே; இது ஒரு தேனே; இது ஒரு பூவே; இது ஒரு குளிர்ததியே’ என்று,திருத்துழாய் விஷயமாக ஒரு கோடியைச் சொல்லும்.-ஆக, ‘உம்முடைய பேரும் தாரும் ஒழிய அறியாள்’ என்கிறாள்.

பக்கம் நோக்கு அறியான் என் பைம் தாமரை_கண்ணனே – நாலாயி:3065/4

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே
–2-6-2-

பிராட்டி பின்னே வந்து அணைத்தாலும் விலங்கப் பார்க்கிறிலன் –‘ஆழ்வார் பக்கல் இறைவனுக்கு உண்டான-அதிமாத்ர ப்ராவண்யத்தை – அளவு கடந்த காதலைத் தவிர்க்க வேண்டும்’ என்று நாய்ச்சிமார் விரும்பி வார்த்தைகள் கூறினும் அவர்கள் பக்கல் கண் வைக்க மாட்டுகின்றிலன்.-இங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்த வார்த்தை-நானும் தானுமாக அனுபவியாநின்றால், பெரிய பிராட்டியார் அன்பு நிறைந்த வார்த்தைகளைக் கூறினும் அவள் முகங்கூடப் பாராத சர்வேஸ்வரன், என் கழுத்தை அமுக்கி நாலு மூன்று தரம அங்கே எட்டிப் பார்த்தான்; இப்படி அவன் பார்க்கும் போது சொட்டைக் குடியிலே சிலர் வந்தார் உண்டாகவேண்டும் என்று இருந்தேன் காணும்,’
என்று அருளிச்செய்தார்.

தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து – நாலாயி:3084/

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-

ஜ்ஞான பிரகாச த்வாராமிகில் -நெஞ்சே வணங்கு -ஜ்ஞான இந்த்ரியங்களுக்கும் அறிவுக்கும் வாய்த்தலையான ஏற்றம் உனக்கு உண்டாகில் உபகாரகன் ஆனவன் திருவடிகளிலே விழப் பார் –திண்ணம் அறி-இத்தை ஒலக்க வார்த்தை என்று இராதே த்ருடமாகப் புத்தி பண்ணு-அறிந்து அறிகை தானே போரும் பிரயோஜனம் -அதுக்கு மேலே
மருடி யேலும் விடேல் கண்டாய்-உனக்கு ஒரு பிச்சு உண்டு இ றே-அவன் வைலஷண்யத்தைப் பாரா வருவது – நாம் இவ்விஷயத்தை தூஷிக்கை யாவது என்-என்று அயோக்ய அனுசந்தானத்தாலே அகலப் பார்ப்பது ஓன்று உண்டு -அத்தைத் தவிரப் பார் கிடாய் –

ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு என்றே தொழும் அவர்கள் – நாலாயி:3086/2ஆமோ தரம் அறிய எம்மானை என் ஆழிவண்ணனையே – நாலாயி:3086/4

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே –2-7-12-

ப்ரஹ்மாதிகள் சொல்லுவது-அவன் ஆஸ்ரித பரதந்த்ரனாய் நிற்கிற நிலையை அறியப் போமோ-சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் என்கிறபடியே த்ரிவித காரணமும் தானேயாய் இருக்கிற இருப்பை அறியப் போமோ-உண்டாக்கி விடுகை யன்றிக்கே ஆபத் சகனாய் நிற்கும் நிலையை அறியப் போமோ –ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு என்னா நிற்பார்கள்-தாங்கள் எல்லாம் அறிந்தார்களாக நினைத்து தொழுமவர்கள்-யஸ்ய மதம் அமதம் -யஸ்ய அமதம் தஸ்ய மதம் -அப்பால் பட்டவன் என்றே சொல்ல முடியும் – ஆமோ தரம் அறிய ஒருவற்கு என்றே தொழும்வராய் -தாமோதரன் உருவாகிய சர்வேஸ்வரனுக்கு சரீரவத் விதேயரான சிவர்க்கும் திசை முகர்க்கும் தரமறிய யாமோ-அல்லாதாரில் காட்டில் தாங்கள் அறிந்தார்களாக அபிமானித்து இருக்கிறவர்களாலே தான் அறியப்போமோ –குளப்படியில் கடலை மடுத்தால் போலே தான் குண ஆர்ணவமாய் இருக்கிற இருப்பை எனக்கு அறிவித்தவனை –இப்படி அவன் தானே காட்டக் கண்ட நான் கண்டால் போலே காண்பார்க்கு காணலாம் அத்தனை அல்லது – ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போமோ –தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள் தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் எம்மானை என்னாழி வணனையே தரமறிய ஆமோ –என்று அந்வயம் –

யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் – நாலாயி:3107/1,2

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-

ஆத்மா ஸ்வரூபம் அறியாமல் -யாதாம்ய ஞானம் இல்லாமையாலே-ஸ்வ தந்த்ரன் -என்னை ஒழிந்தவை என்னுடைமை என்றும் அடியேன் உனக்கு -இவை எல்லாம் உனது என்று இல்லாமல்-இருந்தேன் -முடிந்தேன் -சொல்லாமல் -இன்னும் இருக்கிறேன் -ஆத்மா அழியாதே -ஆத்மா நித்யத்வமும் -அனர்த்தமாம் படி ஆனதே-

இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே – நாலாயி:3130/4

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும்
இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே –3-1-10-

நீ ஸ்வாமி என்று அறிந்து ஏத்த அத்தாலே சர்வேஸ்வரனாய் இருக்கும் இது விஸ்மயமோ
உன்னாலே ஸ்ருஜ்யரான ப்ரஹ்மாதிகள் உன்னை ஸ்தோத்ரம் பண்ண நீ இருக்கும் இருப்பு உனக்கு அவத்யம் அன்றோ -ஜடை கழற்றாதே சாதக வேஷத்தோடு இருக்கச் செய்தே கலா மாத்ரமான சந்த்ரனைத் தரித்துக் கொண்டு சுப பிரதானனாய் இருக்கிற ருத்ரனும்
அவனுக்கும் கூட ஜனகனான சதுர்முகனும்-இவர்களோடு ஒக்க எண்ணலாம் படி இருக்கிற இந்த்ரனும் நீ ஸ்வாமியான முறை அறிந்து ஏத்த -அத்தாலே என்னுடைய வ்யாவ்ருத்தி தோற்ற இருந்தாய் என்றால் இது உனக்கு விஸ்மயமோ –
ஒருவன் ஒரு குழமணனைப் -மரப்பாச்சி பொம்மை -பண்ணி -அதன் கழுத்திலே காக்கைப் பொன்னித் தொற்றி -அதன் தலையிலே காலை வைத்து-இது என்னை வணங்கிற்று என்று இறுமாந்து இருக்குமா போலே நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி -திருவாய்மொழி -7-5-4-என்கிறபடியே உன்னாலே மனையப் பட்ட பிரம்மாவும் அவனாலே ஸ்ருஷ்டரான இவர்களும் உன்னை ஏத்த அத்தாலே இறுமாந்து இருந்தால் என்றால் இது உனக்கு ஏற்றமோ -ஹாச்யமாய்த் தலைக்கட்டும் அத்தனை அன்றோ-

கூவும் ஆறு அறியமாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ – நாலாயி:3155/1

கூவுமாறு அறிய மாட்டேன், குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ! விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ! ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ண னையே.–3-4-2-

பக்தி பாரவசியத்தாலே-பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டேன் என்னுதல் –
இயத்தா ராஹித்யத்தாலே சொல்ல மாட்டேன் என்னுதல் அல்லது அர்த்தங்களில் அவிசதமாய் இருப்பது ஓன்று உண்டாய் சொல்லுகிறார் அல்லர்-பாசுரமிட்டு அழைக்கும்படி அறிகின்றிலேன். அர்த்தங்களில் அறியக் கூடாதது ஒன்று உண்டாய்ச் சொல்லுகிறாரல்லர்;
பகவானுடைய திருவருளால் வந்த வெளிச்சிறப்பால் அர்த்தங்கள் அடைய அறியக் கூடியவாயிராநின்றன. ‘பின்னை என்னை?’ எனின், பத்தியினாலே பரவசப்பட்டுப் பேசமாட்டுகின்றிலேன் என்கிறார்.-கூவ கூவ நீ போதியேல் -பெரியாழ்வார் –
அன்றி, ‘இவ்வளவு என்று சொல்லத்தக்க அளவு கடந்திருக்கையால் பேச மாட்டுகின்றிலேன் என்கிறார்,’ என்னுதல்.

எண்ணும் ஆறு அறியமாட்டேன் யாவையும் எவரும் தானே – நாலாயி:3162/4

கண்ணனை மாயன் றன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன் யாவையும் எவரும் தானே.–3-4-9-

இவன் படிகளுக்கு என்னால் பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது-யாவையும் எவரும் தானே.– சேதன அசேதனங்கள் உடையான் என்று பிரயோஜகத்தை சொல்லலாம் அத்தனை

அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால் அருவு ஆகி நிற்கும் – நாலாயி:3229/2

தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரைக்
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.–3-10-10-

அளவுபட்ட இந்திரியங்கள் -பரிச்சின்ன விஷய க்ராஹங்கள் இறே -அவற்றுக்கு அறிய ஒண்ணாத படி அவிஷயமாக நிற்கும்-உழக்காலே கடலை முகக்க ஒண்னாதது போன்று, அளவிற்கு உட்பட்ட பொருள்களை அறியும் இந்திரியங்களாலே அளவிற்கு உட்படாத பரம்பொருளை அறிய முடியாது அன்றோ? ஆதலால், ‘ஐம்புலன்கள் அறியா வகையால்’ என்கிறார்.-அருவாகி நிற்கும் – அவற்றால் அறிய ஒண்ணாதபடி உருவம் இல்லாதபடி நிற்பான்.

தெய்வ உருவில் சிறு_மான் செய்கின்றது ஒன்று அறியேனே – நாலாயி:3265/4

பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2-

சத்ருசமாகவும் சம்பந்தியாகவும் உள்ள பதார்த்தங்களை அவனாக அனுசந்திக்க நித்ய ஸூரிகள் வடிவு போலே இவள் வடிவும் அப்ராக்ருதமாய் இருக்கிறபடி-
சிறுமான்-அவர்களைக் காட்டில் இவளுக்கு வாசி –பருவத்தாலே இளையளாய் முக்தையாய் இருக்கும் –அவர்கள் பிரதம ஜாயே புராணா-என்னும் படி இறே இருப்பது
செய்கின்றது ஒன்று அறியேனே.– இவள் தொடங்குகிறது எது-தலைக் காட்டுகிறது எது -என்று ஒன்றும் தெரிகிறது இல்லை –

அறியும் செம் தீயை தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் – நாலாயி:3266/1

அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–4-4-3-

தாஹகம் என்று அறிந்து போருமத்தை தழுவா நின்றாள்-மந்த்ர யவ்ஷாதிகளாலே பிரதிபந்தக சக்தி தான் உண்டாயத் தழுவுகிறாள் அன்றே-தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம் -என்று ஒளி உடைமையை பார்த்து தழுவா நின்றாள் – பொரு நீர்க் கடல் தீப்பட்டு எங்கும் திகழும் எரியோடு செல்வது ஒப்ப -என்னுமா போலே-மாணிக்கப் படி சாத்தி வந்து தன்னோடே அணைவதாக நிற்கிறானாக கொண்டு தழுவா நின்றாள் –ரத்னாங்கி சாத்திக் கொண்டு வந்தான் இவளை அணைக்க வந்தான்-

ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினையாட்டியேன் பெற்ற – நாலாயி:3268/3

கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–4-4-5-

ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே – நாலாயி:3278/4

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-

எனக்கு அந்தராத்மா பூதனாய் தாரகனானவன் -தனக்கு சரீரமான என்னுடைய ஆத்மாவை
ஸ்துதிப்பித்து உகப்பித்து விரும்புகிற பிரகாரம்-நான் பரிச்சேதித்து அறிய மாட்டு கிறிலேன்
அறிவும் ஆழங்கால் படுகைக்கு உறுப்பாயிற்று -என்று கருத்து –விபுவான தான் அணு பரிமானனான என்னைத் தன்னோடு ஒத்த ஆனந்தத்தை உடையேனாம் படி பண்ணினான்
ஏஷ ஹ் யேவா நந்தயாதி –வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் -என்னப் பண்ணினான் –சர்வ சரீரியானவன் ஸ்வ சரீரத்தில் ஒன்றைப் பெறப்பேறாகத் தலையால் சுமப்பதே-உபகாரத்தில் குமிழ் நீர் உண்ணும் அத்தனை போக்கி பாசுரம் இட்டுச் சொல்லப் போமோ-உபகார ஸ்ம்ருதியும் அவனது என்னவுமாம்–வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன்’ என்றும் சொல்லுகிறபடியே, -தன்னோடு ஒத்த ஆனந்தத்தை உடையனாம் படி பண்ணி அதுக்கே மேலே என் பக்கல் பண்ணுகிற விசேஷ கடாக்ஷம் என்னால் பாசுரம் இடப போமோ -என்கிறார்

நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே – நாலாயி:3302/4

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே.–4-7-6-

பிரியாதே எங்கும் வியாபித்து நின்றாய்-இப்படி ஸந்நிஹிதனாய் வைத்து செய்யாது ஒழி கிறது செய்ய நினையாமை என்று மிகவும் அறிந்து வைத்தே ஆசைப்படுகிறது மதிகேடு இறே-இதன் பாதுகாவலுக்குச் சம்பந்தம் உடையன் ஆவது,-நிதானமறிந்து பரிஹரித்தற்கு முற்றறிவினன் ஆவது,-தொடங்கினது முடிக்க வல்ல எல்லா ஆற்றலையுமுடையன் ஆவது,
‘ஐயோ!’ என்று இரங்குகைக்கு நீர்மையுடையன் ஆவது,-எப்பொழுதும் உடனிருத்தலை யுடையனாவது;-இப்படியிருக்க, ‘இவன் முகங்காட்டாதொழிகிறது, செய்ய நினையாமையே அன்றோ?’ என்று இருக்க மாட்டாதொழிகிறது என் அறிவு கேடாமித்தனையே அன்றோ?நான் சம்பந்தம் உள்ளவனாய் நீ சம்பந்தம் இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை;
நான் முற்றறிவினனாய் நீ அறிவு இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான் எல்லா ஆற்றலையும் உடையவனாய்-நீ ஆற்றல் இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான் எங்கும் பரந்திருப்பவனாய் நீ அணுவாய் இருக்கிறாய் அல்லை; இத்தலை நோவு பட விட்டு அருள் அற்றவனாய் இருக்கிறாய் அல்லை; ‘உடையவனாய் வைத்து உடைமை நோவுபட விட்டிருக்கிறது செய்ய நினையாமையே அன்றோ?’ என்று ஆறி இருக்க மாட்டாதொழிகிறது என் அறிவு கேடாமித்தனை அன்றோ?’ என்னுதல்.-1-நாராயணா -பிராப்தம் உண்டு
2-ஞான மூர்த்தி -சர்வஜ்ஞ்ஞன்-3-துப்பன் -சர்வசக்தன்-4-ஞாலம் உண்டாய் -இரக்க ஸ்வபாவம்-5-நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் -சதா சந்நிஹிதன்-அவி நீதம் நிர் லஜ்ஜம் நீர் தயம் பரம புருஷம் -ஆளவந்தார் -ஸ்தோத்ர ரத்னம் -இந்த பாசுரம் அடியாக அருளிச்ச செய்தது

அறிந்துஅறிந்து தேறித்தேறி யான் எனது ஆவியுள்ளே – நாலாயி:3303/1

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-

பரத்வம் என்ன -பஜ நீயத்வம் என்ன -ஸுலப்யம் என்ன -அபராத சஹத்வம் என்ன -இவ்வடைவிலே ஞானம் பிறக்க பிறக்க அந்தக்கரணமும் க்ரமத்தாலே தெளிந்து-முதல் திருவாய்மொழியிலே பரத்துவத்தை நினைந்தார், அது விஷயமானவாறே பிறப்பது ஒரு தெளிவு உண்டே அன்றோ? அந்தத் தெளிவும்; பின்பு, ‘வணங்கத்தக்கவன்’ என்று அருளிச்செய்தார், அதனாலே பிறந்த ஒரு தெளிவும்; பின்பு ‘சுலபன்’ என்று கூறினார், ‘அங்ஙனம் கூறியதால் பிறந்ததொரு தெளிவும்; பின்பு, ‘குற்றங்களைப் பொறுப்பவன்’ என்று கூறினார், அதனாலே பிறந்தது ஒரு தெளிவும் இப்படிக் கிரமத்திலே அன்றோ திருவாய்மொழி முடிய நடந்தது? இவையெல்லாம் மானச அனுபவங்களே அன்றோ?

அறிந்து அறிந்து தேறித்தேறி’ என்றதனை அர்த்த பஞ்சக பரமாக்கி வேறும் ஒரு கருத்து அருளிச் செய்கிறார், ‘
‘பரம்பொருளின் சொரூபத்தை அறிந்து தேறி, அந்தப் பரம்பொருளின் யாதாத்மியத்தை யறிந்து தேறி’ என்றபடி
இப்படியே, மற்றை நாலுக்கும் கண்டு கொள்க. யாதாத்மியம் – அதனுடைய முடிவின் எல்லை;அதனுடைய உண்மை நிலை.
நீ மயர்வு அற மதிநலம் அருளுகையாலே,
மிக்க இறைநிலை,
மனன் உணர்வு அளவு இலன், பொறி உணர்வு அவையிலன், எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன், மிகுநரை இலன்,
உணர் முழுநலம், இனன்’-. திருவாய். 1. 1 : 2.- என்று அறிய,
அதனாலே பிறப்பது ஒரு தெளிவும், அந்தப் பரமாத்தும சொரூபத்தினுடைய யாதாத்மியம்,
‘அது நமது விதி வகையே,’ -. திருவாய். 10. 6 : 1.-
‘நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள்கடல் வண்ணன்’-. திருவாய். 3. 6 : 9.- என்கிறபடியே,
அர்ச்சாவதார பரியந்தமான அடியார்கட்குப் பரதந்திரப்பட்டவனாய் இருத்தல் என்று அறிய, அதனாலே பிறப்பது ஒரு தெளிவும்;
உயிர்நிலை,
‘சென்று சென்று பரம்பரமாய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று, நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய்
ஞானம் கடந்திருக்கும்’ . திருவாய். 8. 8 : 5.என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும், அதனுடைய யாதாத்மியம்,
‘சிறுமாமனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய, நறு மா விரை நாண்மலர் அடிக்கீழ்ப் புகுதல் உறுமோ?’-6. திருவாய். 8. 10 : 3. என்றும்,
‘தம்மடியார் அடியோங்களே’ -. திருவாய். 3. 7 : 10.-என்றும் ‘அடியார்கட்கு அடிமையாய் இருத்தல் எல்லையாய் இருக்கும்’ என்று அறிய,
அதனாலே பிறந்ததொரு தெளிவும்;
தக்க நெறியின் சொரூபம்,
‘நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு’ -5-10-11-என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்;
அதனுடைய யாதாத்மியம், அறிவின் காரியமாய் அதிகாரி விசேஷணமான பிரபத்தியையும் உபாயமாகக்
கொள்ளப் பொறாதது என்று அறிய, அதனாலே பிறந்ததொரு தெளிவும்;
பல சொரூபம்
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்கை’ -3-3-1-என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்;
அதனுடைய யாதாத்மியம், ‘உன்றன் திருவுள்ளம் இடர் கெடுந்தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்’ -10-3-9-என்று அறிய,
அதனாலே பிறப்பதொரு தெளிவும்;
விரோதி சொரூபம்,
‘யானே என்றனதே என்று இருக்கை’-2-9-9- என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்; அதனுடைய யாதாத்மியம்,
‘கைங்கரியத்தில் அகங்காரத்தை உட்கொண்டதான மமகாரம்’ என்று அறிய, அதனாலே பிறப்பது ஒரு தெளிவும் என்று பொருள் கூறலுமாம்.

ஆக, பரம்பொருளின் சொரூபத்தை அறிதலாலது, சித்து அசித்து இவற்றைக்காட்டிலும் வேறுபட்டிருப்பது என்று அறிதல்;
பரம்பொருளின் யாதாத்மியத்தை அறிதலாவது, ஆஸ்ரிதபாரதந்திரியம் என்று அறிதல்.
ஜீவாத்துமாவின் சொரூபத்தை அறிதலாவது, ஞான ஆனந்தங்கள் தொடக்கமானவை என்று அறிதல்;
ஜீவாத்துமாவின் யாதாத்மியத்தை அறிதலாவது, அவன் அடியார்கட்கு அடிமைப்பட்டிருத்தல் என்று அறிதல்.
உபாயத்தின் சொரூபத்தை அறிதலாவது, அவனே மோக்ஷத்திற்குச் சாதனமாக இருப்பவன் என்று அறிதல்;
உபாயத்தின் யாதாத்மியத்தை அறிதலாவது, இவன் செய்யும் பிரபத்தியையும் சாதனமாகப் பொறாது தானே சாதனமாக இருப்பவன் என்று அறிதல்;
பலத்தின் சொரூபத்தை அறிதலாவது, கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறிதல்;
பலத்தின் யாதாத்மியத்தை அறிதலாவது, தனக்கும் அவனுக்கும் பொதுவாக இல்லாமல், அவனுக்காகவே செய்தல் என்று அறிதல்;
விரோதி சொரூபத்தை அறிதலாவது, அகங்கார மமகாரங்கள் என்று அறிதல்;
விரோதி யாதாத்மியத்தை அறிதலாவது, கைங்கரியத்தில் அகங்கார மமகாரங்கள் என்று அறிதல் எனக் கொள்க.

அளி மிக்கான் கவராத அறிவினால் குறைவு இலமே – நாலாயி:3312/4

தளிர்நிறத்தால் குறையில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள் காரணமாக் கிளர்அரக்கன் நகர்எரித்த
களிமலர்த் துழாய்அலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.
-4-8-5-

பிராட்டியைப் பிரிப்பது, இளையபெருமாளை அகற்றுவதாய், பின்னர், ‘அவதாரத்துக்குக் காலமாயிற்று’ என்று தேவ காரியத்திலே ஒருப்படுவித்துக் கிளப்ப வேண்டும்படியன்றோ இங்கேவேரூன்றினபடி?’ என்றவாறு. கவராத அறிவினால் குறை இலம் -அப்படிப்பட்டவன் விரும்பாத அறிவினால் காரியம் உடையோம் அல்லோம். 1பிராட்டியுடைய இரண்டாம் பிரிவிற்கு அடியான வனவாச ஞானம் போலே இருக்கிற இந்த அறிவால் என்ன பிரயோஜனம் உண்டு? 2பிரிவோடே சேரும்படியாய் அன்றோ அது இருப்பது? 

அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி – நாலாயி:3313/1,2

அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6-

பகவத் விஷயத்தில் அறிவு கொண்டு ஒரு கார்யம் இன்றிக்கே இருக்கை –
அன்ன பா நாதிகள்-பெறா விடில் செல்லாதாய் இருக்கும் அறிவு ஒன்றிலுமாயிற்று நிரபேஷராய் இ றே இருப்பது-இந்த பூமிப பரப்பில் உள்ளாரில் அறிவில் குறை பட்டு இருப்பார் இல்லை –கல்லில் துளை யுண்டாக்கினால் போலே சம்சாரிகள் அறியும் படி –
நெறி எல்லாம் எடுத்து உரைத்த-சேதன பேதத்தோ பாதி போறும் இ றே உபாய பேதமும் -கர்ம யோகம் முதலாக பிரபத்தி பர்யந்தமாக சகல உபாயங்களையும் வ்யக்தமாக உபதேசித்த படி-கர்ம ஞான பகுதிகள் -அவதார ரஹஸ்யம் புருஷோத்தம வித்யை -ஸ்வரூப யாதாம்யம் -விரோதி நிவ்ருத்திக்கு பிரபத்தி -ஆத்மாபிராப்திக்கு பிராப்தி -பகவல்லாபத்துக்கு பிரபத்தி -இவற்றை அடங்க விசத்தமாக அருளிச் செய்த-கர்மயோகத்தை உபதேசிக்க, அவன் ‘இந்திரியங்களை அடக்குதல் அரிது,’ என்ன, ‘ஆகில், என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று
கர்மத்தை அநுஷ்டித்தாரைச் சொல்லி, அங்ஙனம் சொல்லு முகத்தாலே அவதார ரஹஸ்யத்தை உபதேசித்து,
பின்னர் ஞானயோகத்தை உபதேசித்து, ‘ஞானத்தின் தெளிவிற்கு உறுப்பாக என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று பின்பு
பத்தியோகத்தை உபதேசித்து, அங்கு ‘விரோதியாகிய பாபங்கள் அழிவதற்கும் பத்தி அதிகரிப்பதற்குமாக என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று,
பின்னர், ‘எந்த இறைவனிடத்திலிருந்து சமுசாரத்தின் சம்பந்தமானது நீண்ட காலமாகப் பரவி இருக்கிறதோ, அந்தச் சர்வேசுவரனையே அடைக்கலமாக அடைவாய்,’ என்றும், ‘சத்யசங்கல்பம் முதலான குணங்களோடு கூடின என்னையே எவர்கள் சரணம் அடைகின்றார்களோ,’ என்றும் அவற்றுக்கு உறுப்பாகப் பிரபத்தியை விதித்து, அவ்வழியாலே சொரூப ஞானத்தைப் பிறப்பித்து, என்னுடைய இந்த மாயைதானே மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் என்னும் இந்த எட்டு வகையாகப் பிரிந்திருக்கிறது,’ என்று தொடங்கி, ‘ஜீவசொரூபமானதும் எனக்கு வயப்பட்டது ஆனதுமான பிரகிருதியைச் சிரேஷ்டம் என்று அறி,’ என்கிறபடியே, அறிவுடைப்பொருள்களும் அறிவில் பொருள்களும் தனக்குச் சரீரம் என்று கூறி, அவ்வழியாலே ஒருவன் தன் பேற்றுக்கு உபாயமாக ஒன்றனைச் செய்வதற்குத் தனக்குத் தகுதியின்றிக்கே இருக்கிறபடியைக் காட்டி, இவைதாம் செய்து தலைக்கட்டப்போகாது,’ என்று சொல்லும்படி இதன் அருமையை அவன் நெஞ்சிற்படுத்தி, அவன்தான் அறிந்து கேட்டவற்றிற்குப் பரிஹாரம் சொல்லி, அவன் அறியாதே கேட்க மாட்டாதவற்றையும் தானே அறிவித்து, பிரபத்தி மார்க்கம் முடிவாக உபதேசித்தபடியைச் சொல்லுகிறது.

ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவுஅணையாய் அம்மானே – நாலாயி:3320/3

சாமாறும் கெடுமாறும் தமர்உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்துஅலற்றும் இவைஎன்ன உலகியற்கை?
ஆமாறுஒன்று அறியேன்நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.–4-9-2-

சம்பந்தம் ஒத்து இருக்க அவர்களுக்கு அப்படிப்பட்ட வேண்டிற்று சரீர சம்பந்தத்தால் யன்றோ எனக்கும் அது கிடந்த பின்பு நானும் எதுக்கு கூப்பிடப் புகுகிறேன் என்று அறியா நின்றேனோ இவர்கள் உஜ்ஜீவிக்கும் உபாயம் அறிகிறி லேன்-நீ எனக்குச் செய்து தந்த வாசி, நான் இவர்களுக்குச் செய்து கொடுக்கும் விரகு ஏதோ என்று அறிகிலேன் என்கிறார்,

அறப்பொருளை அறிந்து ஓரார் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3324/2

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
றப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-

தர்ம தத்துவத்தை ரக்ஷகமாக அறிந்து அதனுடைய நிரூபணத்தை பண்ணையார்கள்
ஓரார்-தேகத்திற்கு வேறுபட்டதாய் இருப்பது ஒரு ஆத்தும வஸ்து உண்டு;
நாம் இப்போது செய்கிறவை அதிலே வந்தவாறே தட்டுப்படும்,’ என்று தர்மத்தின் உண்மையை அறிந்து. ஓரார் – அதனுடைய தன்மையிலே முதலிலே இழியார்கள். -பர ஹிம்சையில் நின்றும் நீங்கார்கள்-என்றுமாம் ஓர்தல் -ஒருவதலாய்–நீங்குதலாய் -அதில் நின்றும் நிவ்ருத்தராகார் -அர்த்த புருஷார்த்தத்திலே மிகவும் பிரவணராய் வேறு ஒன்றை ஆராயார் என்றுமாம் -பொருளை -சொத்தை -அற அறிந்து -நன்றாக அறிந்து என்று கொண்டு – செல்வமாகிய புருஷார்த்தம் ஒன்றையுமே அற விரும்பி.- நன்மை தீமைகளை ஆராய்ந்து பாரார்’– இது ஒரு லோக யாத்திரையை பண்ணி வைக்கும் படியே

ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடு-மினே – நாலாயி:3335/4

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-
மம மாயா துரத்யயா -என்கிறபடியே தான் அகற்ற நினைத்தாரை தன் பக்கல் பிரக்ருதியை இட்டு வஞ்சித்து வைத்த படி கிடி கோள்-அத்தை அறிந்து மாயா தரண உபாயமான ப்ரபத்தியைப் பண்ணி சம்சாரத்தை தப்ப பாருங்கோள்-மாமேவயே பிரபத்யந்தே -என்கிறபடியே அவனையே கால் கட்டி அவனை வெல்லப் பாருங்கோள் -இது அவனுடைய மாயம்,’ என்னுமதனை அறிந்து.-சத்ய சங்கல்பம் முதலான குணங்களையுடைய என்னையே எவர்கள் சரணம் அடைகின்றார்களோ, அவர்கள் இந்த மாயையினைத் தாண்டுகிறார்கள்,’ என்கிறபடியே, மாயையினைத் தாண்டுதற்கு உபாயமான பிரபத்தியையும் தானே அருளிச் செய்து வைத்தான்; அதனை அறிந்து, அவ் வழியாலே அவனைப் பற்றி, இந்த மாயையினைத் தப்பப் பாருங்கோள். என்றது, ‘இது அவன் செய்து வைத்ததான பின்பு, அவனை வெல்ல வேண்டில், அவனோடு பிரிய நின்று வெல்லப் பாராமல், அவனையே காற்கட்டி இதனைத் தப்பப் பாருங்கோள்,’ என்றபடி.

மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே – நாலாயி:3376/4

நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3-

அபிமதர் வாரா விட்டால் முடிகை இறே பிரியம் அதுக்கு விரகு அறிகிறிலன்-இவன் வாராமை அறிந்தால் இனி முடிந்து போதல் அன்றோ சுகம், முடியும் விரகு அறிகின்றிலேன். -காலோ ஹி துரதிக்ரம -என்றாள் இறே பிராட்டி-அவன் வாராமைக்கு அடியான பாபத்தை பண்ணினேன் -முடியவும் அரிதான பாபத்தை பண்ணினேன் -பாபம் மரண ஹேது வன்றிக்கே ஜீவிக்கைக்கு ஹேது வாய் இருக்குமது யாகாதே -ஜீவிக்கை தேட்டமான போது அரிதாம் -முடிகையும் தேட்டமான போது அரிதாம் -அநிஷ்டாவஹம் பாபம் இத்தனை இறே-புண்யம் தானே ஜீவன ஹேது -இங்கு பாபம் செய்து ஜீவிக்கிறேனே என்கிறாள் -விநாசத்துக்கு ஹேதுவான – பாபம் -அநிஷ்டம் நடத்திக் கொடுக்குமே -இவளுக்கு அநிஷ்டம் ஜீவனம் –அசஹ்யம் இப் பொழுதுமுடிகையும் ஜீவிக்கையும் ஸ்வ அதீனம் இல்லாத ஜன்மத்தே பிறந்தேன் -எல்லா வளவிலும் அவனை நோக்க வேண்டும் ஜென்மம் இறே — முடியும் போது ஆண் பிள்ளையுமாய் ஸ்வ தந்திரனுமான சக்ரவர்த்தி போல்வார் வேணும் ஆகாதே –

அறிய கற்று வல்லார் வைட்டவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே – நாலாயி:3395/4

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.–5-5-11-

நாம் பெறுதல் இழத்தல் செய்கிறோம், தம் முயற்சியால் சாதித்துக் கொள்ளப் படுவது அன்றிக்கே ஒழியப் பெற்றோமே முன்னம். வஸ்து தான் உண்டானால் நினைத்த போது பெற்று அநுபவிக்கலாமே அன்றோ. இவர்கள்- தாய் மார்கள் -பின்னைத் தங்கள் முயற்சியாலே அறியுமவர்களோ? என்னில்,ஆக வேணுமே அன்றோ, ‘மீட்கலாம்’ என்று இருந்த போதே, தங்கள் தங்களாலே அறியவுமாம்’ என்று இருந்தார்களாக வேணுமே அன்றோ.

இதனைக் கற்று அறிய வல்லவர்.-அறியக் கற்கையாவது, ஸ்ரீ வைகுண்டத்தில் நித்திய சூரிகள் நடுவே இருக்கிற இருப்பைக் காட்டிலும், திருக் குறுங்குடியில் நிற்கிற நிலையிலே குணாதிக்யம் உள்ளது என்னுமிடத்தை அறிந்து கற்க வல்லவர்கள். வஸ்துவுக்குக் குணத்தாலே அன்றோ உயர்வு; அந்தக் குணாதிக்யம்-சௌலப்யாதிகள் எங்கே உண்டு, அங்கே அன்றோ ஏற்றம்.-மரு பூமியான சம்சாரத்தில் இருக்கச் செய்தே நித்திய சூரிகளோடு ஒக்கச் சொல்லலாம் படி ஆவர்கள் உகந்தருளின நிலங்களில் வாசி அறியுமவர்கள்.

அருள்செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே – நாலாயி:3409/4

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-

சி ரீ வர மங்கல நகரில் உள்ளார் அர்த்திக்க அன்றிக்கே அவர்கள் பக்கல் தண்ணளி யாலே வந்து இருந்தவன் -என்னை அடிமை கொள்ளுகைக்காக அங்கே வந்து இருந்தாய் என்றுமாம் —தன் பேறாக அவன் நினைக்க -இவரும் தன் பேறாக என்னை அடிமை கொள்ள அங்கு வந்து இருந்தாய் -கைங்கர்யத்து அளவும் வர புகுர நிறுத்தினோம் -அதுக்கு அவிச்சேதம் யுண்டான போது நம் சந்நிதி வேணும் என்று அங்கே இருந்தாய்-இவ்வளவு உபகரித்ததுக்கு நான் ஒரு பிரதியுபகாரம் பண்ணினேனாக அறிகிறி லேன்-பிராங்நியாயத்தாலே மேல் உள்ளதும் நீயே செய்யும் அத்தனை என்கை –நீ இவ்வளவாக செய்த உபகார பரம்பரைகளுக்கு நான் ஒன்றும் செய்ததாக அறியேன் -பண்ணுவதற்கு ஏதும் இல்லை-ஏதும் இல்லை முன்னும் பின்னும் -குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய் போலே காரணமாகவும் ஏதும் பண்ண வில்லை பிரதியுபகாரமாகவும் ஏதும் பண்ண வில்லை முன்பு உபகரித்ததுக்கு ஹேது என் பக்கல் கிஞ்சித் உள்ளது என்று சொல்ல முடியாதே ஆகவே நீயும் மேலும் நிர்ஹேதுகமாக அருள வேண்டும்-ஹேது இல்லை -ஆனால் -வாங்கிக் கொள்ள நீர் இருந்தீரே -என்றும் சொல்ல முடியாதே வஸ்துவாகவே நான் இல்லையே -நீர் தான் வஸ்து ஆக்கி அருளினீர் மேல் உள்ளவற்றையும் நீயே செய்து அருள வேண்டும் என்கிறார்

அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை நன்கு அறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் – நாலாயி:3414/

யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரி ஏறே – நாலாயி:3423/4

சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6-

அனுபவிப்பாருடைய சர்வ இந்திரியங்களுக்கும் போக்யமாய் இருக்கிற படி -மிடற்றோசை கர்ம அனுகுணமாக போது செய்யும் -அத்தை வ்யாவர்த்திக்கிறது-ரசனைக்கு போக்யமாய் இருக்கிற படி-ஞானத்துக்கு பிரயோஜனமான விஷயம் -மனஸூக்கு போக்யமாய் இருக்கிற படி-கண்ணுக்கு முகக்கொள்ள ஒண்ணாத போக்யதையை யுடையவனே
இங்குள்ளாருக்கும் அங்குள்ளாருக்கும் உன்னை அனுபவிக்கக் கொடுத்து நிரதிசய போக்ய பூதனாய் இருக்க -நான் இந்திரியங்களுக்கு இரையிட்டு எத்தனை காலம் அகன்று இருக்கக் கட வேன் –

போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ நின் செய்ய – நாலாயி:3464/1

போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை, நம்பீ! நின்செய்ய
வாயிருங் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள்;
வேயிருந் தடந்தோளினார் இத் திருவருள்பெறுவார் எவர்கொல்,
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?–6-2-3-

உன் பொய்யில் பழகின எங்கள் பக்கல் உன் பொய் விலை செல்லாது -இங்கு நின்றும் போய்-உன் பொய் அறியாதவர்கள் கோஷ்ட்டியில் இருந்து சொல்லு –நினைவு ஒன்றும் செலவு ஒன்றுமான உன்னை அறியாதே பிரமிக்கைக்கு பஞ்ச லக்ஷம் குடியில் பெண்கள் உண்டே-. உன் பொய்யை ‘மெய்’ என்று இருக்கும் அவர்களுக்கு
அன்றோ இவை எல்லாம் சொல்லுவது? “பொய் கேட்டிருந்தேன்” என்று இருப்பாரும் உளர் அன்றோ.

கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் திண் சக்கர – நாலாயி:3466/1

கழறேல் நம்பி! உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண்சக்கர
நிழறு தொல்படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.–6-2-5-

முதலிகள் என்னா -அபிபவித்து வார்த்தை சொல்லாதே கொள்ளும் -நெஞ்சில் மறமுடையார் சொல்லுமது வார்த்தை என்று -உங்களை ஒழிய சாக்ஷி உண்டோ –என்ன –உன் கிரித்திரிமம் உபய விபூதியும் நன்கு அறியும் – தானும் அவனுமானால் உபய விபூதியும் தன் பக்ஷத்தில் நிற்கும் என்று இருக்கிறாள் ஆதல் -வாயும் திரை யுகளில் படியே எல்லாரும் தன்னைப் போலே இழவாளர் என்று இருக்கிறாள் ஆதல் –சேஷி ஒருவன் ஆனால் சேஷமான பொருள்கள் எல்லாம் ஒரு மிடறாய் இருக்கும் அன்றோ;
ஒருவனுக்குப் பல அடிமை உண்டானால் தங்களுக்குள் எல்லாரும் கிருத சங்கேதர்களாய் ஒத்திருப்பர்கள் அன்றோ. மண்ணிலுள்ளாரும் விண்ணிலுள்ளாரும் அழகிதாக அறிவர்கள்.
விசேஷஜ்ஞரோடு விசேஷஜ்ஞர் அல்லாதாரோடு வாசி அற அறிவர்கள்.
‘இவ் விடையாட்டம் இரண்டும் அறியாதாரையோ சான்றாகச் சொல்லுவது?
அறிவினால் குறையில்லாத அகல் ஞாலம் அன்றோ இது!’-திருவாய். 4. 8 : 6.-என்றான்.
‘விண்ணும் நன்கு அறியும்’ என்கிறார்கள்.இது எல்லாம் வேண்டா -நான் பொய்யன் என்னும் இடத்துக்கு ஒரு சாக்ஷி காட்டிக் காண் என்ன

மேலை வானவரும் அறியார் இனி எம் பரமே – நாலாயி:3465/2

ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன்மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம்பரமே?
வேலி னேர்தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.–6-2-4-

உன்னுடைய கிரித்ருமங்கள் ஆக்கனான ப்ரஹ்மாதிகள் அன்றிக்கே -நித்ய ஸூ ரிகளும் அறியார்கள் -சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்திக் கொடு நிற்கச் செய்தே ஈட்டிய வெண்ணெய் தொடு உன்னைப் போருமவன் அல்லையோ-அது தன்னையும் விட்டு அன்றோ அடல் ஆயர் தம் கொம்பினுக்குக் கோட்டிடை ஆடினான். -பழையாரை விடுகை உனக்கு பழையதாய் போருவது ஓன்று அன்றோ –நவப் பிரியைகளை விரும்புவாரைப் போலே காணும்.-நித்ய ஸூரிகள் – -பழையார் -நவ பிரியை -இன்று ஈன்ற கன்று – ஆழ்வார் -மின்னிடை மடவார் என்றுமாம்

அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே – நாலாயி:3545/4

உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்
உலகுக் கேஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து
அலகில் பொலிந்த திசைபத் தாய அருவேயோ!
அலகில் பொலிந்த அறிவி லேனுக்கு அருளாயே.–6-9-7-

சேதனர்க்கு தொகை உண்டாகிலும் என் அறிவுகேட்டுக்கு எண்ணில்லை-என்னளவு இதான பின்பு நீயே கிருபை பண்ணி அருளும் அத்தனை அன்றோ -அறிவை உண்டாக்கி -அத்தை பக்வமாக்கி -அதன் பலமான உன்னையும் தந்து அருள வேணும் –பகவானுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை அளவிடினும் தம் அறிவு கேடு எண்ணப் போகாது என்கிறார்.
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் வார்த்தை அன்றோ.–ஆகிஞ்சன்ய புத்தியை அறிவில்லை என்கிறார் –ஆகிஞ்சன்யம் இல்லை என்ற உடன் -அருளத் தட்டு என் -தயைக்கு உத்தம பாத்திரம் நான் தான்-

பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே – நாலாயி:3546/4

அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8-

உன்னைக் கிட்ட முதல் இல்லாத எனக்கு அருளாய் -அறிவு இல்லை யாகில் அருளக் கடவதோ என்ன -சர்வஞ்ஞரான நித்ய ஸூ ரிகளுக்கு கிருபை பண்ணவோ -தளர்ந்த இடம் அன்றோ கிருபைக்கு விஷயம் -பொய் நின்ற ஞானத்தை உடைய எனக்கு ஞானப் பிரானான நீ கிருபை பண்ணி அருளாய்-உன்னை உள்ளபடி அறிவார்க்கு தாரகனாகை உனக்கு ஏற்றமோ -பத்தராவி என்கிறபடியே அறிவார்க்கு உயிராம் அவன் என்னுதல் -ஞானீத்வாத் மைவ -என்கிறபடியே அறிவாரை உயிராக யுடையவன் என்னுதல்-அநந்ய கதியாய் உன்கை பார்த்து இருக்கிற நான் -நெஞ்சு கலங்கும்படியாக-அநாதி காலம் இழந்தது போராதோ-உன் சுவடு அறிந்த பின்பும் உனக்கு அசலாகவோ -அறிவிலேன் என்றாலும் -அருளாய் என்றாலும் கெடுக்கும் இத்தனையோ -புத்தி நாஸாத் ப்ரணச்யதி -விஷய ப்ராவண்யம் என்றும் விநாசம் என்றும் பர்யாயம் இ றே

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் – நாலாயி:3572/1

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

உறங்கக் கடவ இரவோடு -உறங்காமைக்கு கண்ட பகலொடு வாசி அற நித்திரை என்பது ஓன்று அறிகிறிலள் -கண் துயிலாள் என்னாதே அறியாள் என்கிறது நித்திரையை அறிந்து விரோதி என்று கை விட்ட இளைய பெருமாளின் வாசி சொல்கிறது -இளைய பெருமாளுக்கு முன்பு இல்லை யாகிலும் ஜென்மத்தில் மெய்ப்பாட்டாலே பற்றி விட வேண்டிற்று -இவளுக்கு-பிரணயி நிகள் பகல் உறங்குவர்கள் -இப்படி உபய வ்யாவ்ருத்தமாய் இரவும் பகலும் உறங்காதபடி ஆனாள்-அநித்ரஸ் சததம் ராம -என்கிற உம்முடைய படியை இவள் உடையாள் ஆனாள்-கலவியில் அவன் உறங்க ஒட்டான்; பிரிவில் விரஹ நோய் உறங்க ஒட்டாது;-ஆகையாலே, இவளுக்கு இரண்டு படியாலும் உறக்கம் இல்லாமையாலே
‘கண் துயில் கொள்ளாள்’ என்னாமல்,-‘கண் துயில் அறியாள்’ என்கிறாள்.-‘இவள் கலந்த அன்று உறங்கினாலும், இவள் இப்போது படுகிற நோயினை அனுபவித்த
திருத் தாயார்க்கு அது ஒன்றாகத் தோற்றாதே!’ என்றது,
‘இந்த நோய்க்குப் பூர்வாங்கமாய் வந்தது ஒன்றாகையாலே அதனை ஒன்றாக நினைக்கின்றிலள்’ என்றபடி. பூர்வ ரெங்கம் -ஒத்திகை போலே -பாவி நர்த்தன ஸூசக பூர்வ பாவி – பொம்மலாட்டம் போலே –-என்றும் சிறைக் கூடத்திலே பிறந்து வளர்ந்தாரைப் போலே பிரிந்த நாள்களில் இழவே காணும் இவள் நெஞ்சிலே பட்டுக் கிடக்கிறது.உறக்கம் ஒக்க இருக்கச் செய்தே‘கைங்கரிய விரோதி’ என்று கை விட்டவரைக் காட்டிலும் இவளுக்கு உண்டான வாசியைத் தெரிவிப்பாள், ‘அறியாள்’என்கிறாள்.-முன்பு இல்லை யாகிலும் இப் பிறவியில் மெய்ப்பாட்டால் பற்றி விட வேண்டிற்று.-ஆதி சேஷன் நித்ய ஸூரிகளில் தலைவர் – அநிமிஷர் அதனால் முன்பு நித்திரை இல்லை யாகிலும் – இந்த லஷ்மண ஜென்மத்தில் மெய்ப்பாடு -மனுஷ்ய ஜென்மத்தில் பிறந்து 24 வருஷம் தூங்க வேண்டும் –
மனுஷ்ய கிங்கரர் என்று காட்ட -என்ற படி

முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும் மூ_உலகு ஆளியே என்னும் – நாலாயி:3581/1

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10-

இவள் தனக்கு ஒரு முடிவு காண்கிறிலேன் என்னா நின்றாள் –பெண் பிள்ளை வார்த்தையைத் திருத் தாயார் அநுபாஷிக்கையாலே, ‘இவள் – தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன்’ என்னா நின்றாள் என்கிறாள்.‘இந்தத் துக்கக் கடலைக் கரை காணும் விரகு அறிகிலேன்’ என்னுதல் -அன்றிக்கே, ‘ முடிந்து பிழைக்கும் விரகு அறிகிலேன்’ என்னுதல்.

தாள்-பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே – நாலாயி:3607/4

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே .–7-5-3-

சர்வ ஸ்வாமி யுடைய பாத பார்ஸ்வத்தை பிரா பித்த -இத்தை இ றே -சாயுஜ்ய தோ அபூ -என்கிறது -சாயுஜ்யம் ப்ரதி பன்னாயே-சிசுபாலன் -சாஸ்திரங்களில் சொன்ன அதிகாரி களில் ஒருத்தன் அல்லன் -விஷய வை லக்ஷண்யத்தாலே பெற்றவன் -வைது நின்னை வல்லவா பழித்தார்க்கும்- பேருளான் பெருமை பேசி ஏசினார்-–ஈஸ்வரனுடைய ஸ்வ பாவத்தை அறிந்தவர்கள் பக்கலிலே செவி தாழ்த்து வைத்தும் -இஸ் ஸ்வ பாவத்தை அறிந்து வைத்தும் –இத்தால் சொல்லிற்று ஆயிற்று -ப்ராதிகூல்யமே யாத்ரையாய் இருந்தவனுக்கு -தன்னால் அல்லது செல்லாமை யுடையார் பெரும் பேற்றைக் கொடுத்தான் என்றது ஆயிற்று–மேலெழ ஆராய்ந்து பார்த்தால், சில காரணங்கள் சொல்லலாம்;
இதற்கு இனி ஒரு காரணம் தேடிச் சொல்லுகையாவது, அவன் கிருபைக்கு ஒரு கொத்தை சொல்லுகை யன்றோ? இந்தக் குண ஞானமுடையாரை அறிந்து வைத்தும் கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றுக் கேட்பரோ?

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3608/1

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?
பன்மைப் படர்பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.–7-5-4-

-தத்துவ ஸ் திதியை உள்ளபடி அறியுமாவார்கள் –தன்மை -உண்மை -காரணந்து த்யேய–ஜன்மாத் யஸ்யத -என்று உபாசன வாக்கியங்களையும் காரண வாக்கியங்களையும் அறியுமவர்கள் -ஜகத் காரணம் இன்னது என்று அறிந்து -அதுவே உபாஸ்யம் -என்று அறியுமவர்கள்-அந்த காரண வஸ்துவுக்கு ஆளாமது ஒழிய வேறு சிலர்க்கு ஆளாகக் கடவரோ -இவனுக்கே ஆளாக வேண்டுகிறது என் என்னில் -இது அடங்க அழிந்து கிடக்க தன்னை ஆஸ்ரயிக்கைக்கு கரணங்களை கொடுத்தவனை ஒழிய புறம்பே சிலரை பற்றவோஇதனுடைய படைப்பு அவனுக்காகக் கண்டது என்று இருக்குமவர்கள்’ என்றபடி;-‘அவனுடைய கைங்கரியத்துக்கு உடலாகப் படைக்கப்பட்டது’ என்றபடி-கரண களேபரங்களைக் கொடுத்தது தனக்கு அடிமை செய்கைக்கு அன்றோ?

செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரியுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே.-7-5-8-

மஹா விஷ்ணும் -என்கிற படியே அவன் உடம்பு குளப்படியாம் படி பெரிய வடிவைக் கொண்டு -மல்லல் -பெருமை –மல்லரி உரு என்று -லஷ்மீ நரஸிம்ஹம் -என்றுமாம் -திருவோடு புணர்ந்த ஸிம்ஹம் என்று ஒரு தமிழன் சொல்லி வைத்தான் –நரம் கலந்த சிங்கமாய் கண்ட திருவன் -மல்லல் என்று செல்வமாய், அதனால், இலட்சுமி நரசிம்மமாய்’ என்னலுமாம்; ‘நாராயணனே நரசிங்கன்’ அமரேஸ்வர்யான நீ சத்தி’ எனப்படுகின்றதே அன்றோ? நாராயணோ ந்ருஹிம்ஹஸ்து ஸக்திஸ்த்வம் அமரேஸ்வரி’-இங்கு, ‘ஸக்தி’ என்றது, பிராட்டியை. அவளை ஒழிந்திருப்பது ஒரு போதும் இல்லை அன்றோ?–வரபல புஜ பலங்களாலே திண்ணிதான உடம்பை பெரிய சீற்றத்தோடே சென்று அநாயாசேன கிழித்து பொ கட்ட ஆச்சர்யத்தை அனுசந்தித்தும் -செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?-சிறுக்கனுடைய சூளுறுவு செய்த அக் காலத்திலே தோற்றி,
இரணியனுடைய உடலை இரு பிளவு ஆக்கின இவ் வாச்சரியமான செயலை அறிந்தும்.-ஒருவன் புருஷகாரமாகக் கொடு வர அவனைக் காப்பாற்றியது ஒரு குணமோ,
தமப்பன் பகையாக, உத்தம அங்கம் -முகம் ஒரு வடிவம் திருமேனி ஒரு வடிவுமாகக் கொண்டு பாதுகாத்த குணத்துக்கு?’ என்கிறார்.-பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றனாய் வளர்த்து’ பெரிய திருமொழி.8. 9 : 7.- என்கிறபடியே வந்து பாதுகாத்த குணம் அன்றோ

மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமோ
.–7-5-9-

அத்யாச்சர்யமான அவனுடைய ஆஸ்ரித பவ்யதையை அறியுமவர்கள்-மேன்மையை கரை காணிலும் கரை காண ஒண்ணாத பவ்யதையை உடையவர்க்கு-அவனுக்கு அல்லது ஆளாவாரோ -சர்வாதிகன் தன்னளவில் வர தாழ்ந்தால்-புறம்பே போகக் கடவதோ -அவன் தன் ஸ்வரூபத்தை அழிய மாறினால் -தன் ஸ்வரூபத்தில் குறைய நிற்கக் கடவதோ -அவனுடைய செயல்கள் முழுதும் தன்னை அடைந்தவர்களின் பொருட்டாய் ஆச்சரியமாய் இருக்கும் என்று அறியுமவர்கள்-அடியவர்கட்குப் பரதந்திரப்பட்டவனுக்கு அன்றி ஆள் ஆவரோ?

சர்வாதிகன் தாழ்ந்த செயலை செய்யா நின்றால்-அப்ரஸித்தமாக செய்யிலுமாம் இ றே -அங்கனம் அன்றிக்கே சர்வ லோக சாஷிகமாக இச் செயலை அனுசந்தித்தார் எல்லாரும் நிர்ப்பரராய் இருக்கலாம் படி இ றே செய்தது -பார்த்தம் ரதின மாத்மா நஞ்ச சாரதிம் சர்வ லோக சாஷிகம் சகார-அருச்சுனன் ரதியாகவும் தான் சாரதியாகவும் எல்லா உலகத்திலுள்ளவர் கண்களுக்கு இலக்கானான்’ என்னும்படியே-உலகத்தில் ஸ்வாதந்திரியமும் பாரதந்திரியமும் முறை மாறின இடத்திலும் ரஹஸ்யத்திலே அன்றோ அவை நடப்பன?கணவனும் மனைவியும் காலைப் பிடிப்பதும் ரஹஸ்யத்திலே அன்றோ?-இப்படி இருக்கச் செய்தே அன்றோ உலகப் பிரசித்தமாம்படி தன்னைத் தாழ விட்டது?

தன் க்ருஹத்திலே புக கொண்டு சிறை செய்யத் தேடும் துரியோதனாதிகள் போல்வார் இருக்கிற தேசத்தை விட்டு எல்லாரும் ஓக்க பரியும் தேசத்திலே நிரபாயமாக எழுந்து அருளின படியை பேசின பிராமண ஸ்ரேஷ்டமான மஹா பாரதத்தை அறிந்து வைத்தும் -மாயவற்கு ஆளன்றி ஆவரோ?–க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா –தன் மேலே அம்பு மழையாகப் பெய்கிற இத் தண்ணிய பூமியினின்றும் தன் வரவுக்கு எதிர் கொள்வார்
இருந்த இடத்தே போய்ப் புக்கான் என்கிற பெரிய வார்த்தையை அறிந்தும்.
‘நீண்ட கண்களை யுடைய கண்ண பிரான் பூமியினுடைய பாரத்தைப் போக்கி உலகத்தை எல்லாம் மோஹிக்கச் செய்து மேலான தம் இருப்பிடத்தை அடைந்தார்’ என்கிறபடியே,
துரியோதனாதியர்கள் இல்லாத இடத்தே போய்ப் புகப் பெற்றது அன்றோ?

ஏழையர் ஆவி உண்ணும் இணை கூற்றம்-கொலோ அறியேன் ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்-கொலோ அறியேன் – நாலாயி:3627/1,2 சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் – நாலாயி:3627/2,3

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்

சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-

ஒவ்வொரு விஷயத்திலே விருப்பத்தைச் செய்து, அவை பெறா விடில் தரிக்க மாட்டாத பலம் இல்லாத பெண்களுடைய பிராணன்களை முடிக்கிற கூற்றுகள் இரண்டோ?ஒரு மிருத்யுவால் முடிக்க ஒண்ணாது என்று இரண்டு மிருத்யு க்ருத சங்கேதிகளாய் வந்தால் போலே யாயிற்று இருக்கிறது-சபலைகளையே நலிய வேணும் என்னும் நிர்பந்தம் இல்லையே -பும்ஸாம் த்ருஷ்டா சித்த அபஹாரியும் இறே–தன் கண் அழகு தான் அறிகின்றிலனே!-தன்னையும் நலிந்ததாகில் வாரானோ?-கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியானோ?பெண் பிறந்தாரை நலியுமவை தானேயோ -‘‘அறியேன்’ என்பான் என்?
‘கூற்றம்’ என்று அறுதியிட்டாலோ?’ என்னில், கூற்றுவர் இருவர் கிருத சங்கேதராய் வந்தாலும் அபலைகளையே நலிய வேண்டும் நிர்ப்பந்தமில்லையே!
‘ஆடவர்களுடைய கண்ணையும் மனத்தினையும் கவர்கின்றவர்’ அன்றோ?
அதனாலே ‘அறியேன்’என்று சொல்லுகிறது-உபகார சீலனான கிருஷ்ணனுடைய கடல் போலே இருந்துள்ள திருக் கண்கள் என்னுதல் –கடல் போலே சிரமஹரமான நிறத்தை யுடையவனுடைய திருக் கண்கள் என்னுதல் -கையிலே திரு வாழி யை யுடையவனுடைய திருக் கண்கள் என்னுதல் –உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண் -என்று இறே இவள் பிரதிபத்தி இருப்பது -பூதராக்கும் நெடும் நோக்கு சிரமணி சபரி விதுரர் ரிஷி பத்நிகள்-நெடு நோக்கு கொள்ளும் பத்ம விலாசன்-தாமரைக் கண்களால் நோக்காய் -செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ-விஷ்ணோர் கடாக்ஷம் -அல்வழக்கை ஒழித்து படிப்படியாக -அனைத்தையும் பண்ணுமே திருக் கண்கள்–முதல் உறவு பண்ணினவை தானே இறே இப்போது பாதகமாய் இருக்கிறது –ஒன்றை நிர்ணயிக்க மாட்டாமையாலே அறியேன் என்கிறாள்

மாட்டு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனது ஆவியுள்ளே – நாலாயி:3628/2,3

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனதாவி யுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–7-7-2-

இஸ் ஸம்சயத்தை அறுத்து தர வல்லி கோள் ஆகில் பிரயோஜனம் உண்டு -கண்ணின் பாடே உன்னசம் என்கிறபடியே உயர்ந்த -கடலின் அருகே அது ஊற்றாக வளர்வது ஒரு கொடி போலே -அதன் நீர்மையாலே வளர்ந்ததொரு கற்பகக் கொடியோ -ஒழுகு நீண்டு இருக்கையாலே கொடி என்னவுமாய் -ச்ரத்தை யாலே கொழுந்து என்னவுமாய் இரா நின்றது -ஸர்வதா சாம்யத்தாலே இன்னது என்று நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை

கோலம் திரள் பவள கொழும் துண்டம்-கொலோ அறியேன் நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டைவாய் – நாலாயி:3629/2,3

வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினைகொல்?
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோஅறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–7-7-3-

அழகினுடைய திரளான பவளத்தின் ச்ரத்தை உடைய முறியோ -முறி என்கிறது முறிந்த போதை அகவாயில் நெய்ப்புத் தோற்றி இருக்கை-அழகு திரண்டிருந்துள்ள பவளத்தினுடைய அன்பினை யுடைத்தான முறியோ? அறிகிலேன். புழுதி புடைத்திராமைக்கு ‘முறியோ’ என்கிறது; முறித்த வாயானது ஒளி உண்டாய் நெய்த்திருக்கும் அன்றோ?-நிர்ணயிக்க மாட்டு கிறி லேன்

ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் எனக்கு உய்வு இடமே – நாலாயி:3631/4

ன்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே.–7-7-5-

தோன்றி மாயாதே நித்தியமாய் நின்று விளங்கா நிற்பதாய் சிவந்த சுடரை ஈனா நின்ற வெள்ளை மின்னோ -அசிராம்சு -என்னா நிற்பார்கள் இத்தை -என்னை நலிகைக்கு உறுப்பாக நித்யத்வத்தை ஏறட்டுக் கொண்டது -திரு முத்தின் நிரை திரு வதரத்தில் பழுப்பை ஈனுகிறாப் போலே யாயிற்று சேர்த்தி அழகு இருப்பது-அங்கனம் இன்றியே என் பிராணனை முடிக்கிற திரு முத்து நிரை தானேயோ அறிகிறிலேன்-இவை நலியாதபடி ஒதுங்கலாவது ஓர் இடமும் கான்கிறிலேன் -என்னுதல் -அழகுகளில்-உஜ்ஜீவன ஹேது என்று ஒதுங்கலாவது ஒன்றும் கான்கிறிலேன் என்னுதல் -அழகு ஆகில் பாதகமாய் அல்லது இருக்கிறது இல்லை –

காண்-மின்கள் அன்னையர்காள் என்று காட்டும் வகை அறியேன் நாள் மன்னு வெண் திங்கள் கொல் நயந்தார்கட்கு நச்சு இலை-கொல் – நாலாயி:3633/1,2

காண்மின்கள் அன்னையார்காள்! என்று காட்டும் வகை அறியேன்!
நாண் மன்னு வெண்திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல்
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?
கோண் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே.–7-7-7-

தாய்மாரான நீங்கள் காணுங்கோள் என்று வைத்து காட்டும் பிரகாரம் அறியேன் -என் கைக்கு பிடி தருதல் -உங்களுக்கு உருவு வெளிப்பாடு உண்டாதல் செய்யில் இறே காட்ட விரகு உள்ளது -புருஷர்களுக்கு காட்டில் இறே பருவம் நிரம்பினானுங்களுக்கு காட்டலாவது

கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர் கழறா நிற்றிரே – நாலாயி:3635/4

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை – நாலாயி:3648/1 ஆம் வண்ணத்தால் குருகூர் சடகோபன் அறிந்து உரைத்த – நாலாயி:3648/2

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ண த்தால் குரு கூர்ச் சடகோபன் அறிந்து உரை த்த

ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.–7-8-11-

ஒருவராலும் ஒரு வகையாலும் உள்ள அளவு இது என்று அறிய ஒண்ணாத படி இருக்கிற சர்வேஸ்வரனை இறே கவி பாடிற்று -யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று ஸ்வரூப ரூப குண விபூதிகளில் ஒரு வகையும் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –அவனை உள்ளபடி அறிந்து அங்குத்தைக்கு சத்ருசமாக அருளிச் செய்தார் யாயிற்று இவர் –விஷயம் அபரிச்சின்னமாய் இருக்கச் செய்தேயும் -மயர்வற மதி நலம் அருளினன்- என்று அவன் தானே கொடுத்த ஞானம் ஆகையால் உள்ள படியை அறிந்து அருளிச் செய்தார் –ஸ்வ யத்னத்தாலே காணப் பார்க்கில் இறே அறிகை யில் அருமை உள்ளது-அறிந்து உரைத்த’ என்கிறார்; என்றது,‘அவன் மயர்வற மதிநலம் அருள ஆயிற்று இவர் பேசிற்று. தன் முயற்சியால் அறியப் பார்க்கில் அன்றோ அரிது?’ என்றது, அவன் கொடுத்த அறிவு கொண்டு அறிவார்க்குக் குறை இல்லை அன்றோ? ‘நெறி வாசல் தானேயாய் நின்றனை ஐந்து. பொறி வாசல் போர்க் கதவம் சாத்தி அறிவானாம்’ நான்முகன் திருவந்தாதி.-என்று
ஆக்ஷேபிப்பது, தம் முயற்சியாலே அறியப் பார்ப்பாரை அன்றோ?

சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லா தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வ தான் அறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை – நாலாயி:3669/1,2

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10-

திருவாறன் விளை ஒழிய வேறு ஒன்றில் ப்ராப்ய புத்தி இல்லை என்னும் இடம் சர்வேஸ்வரன் அறியும் -நெஞ்சானது பரம பதம் என்று பேச்சு தன்னையும்-ப்ரசங்கமும் -நினையாதது சர்வேஸ்வரன் அறியும். தன்மை – சுபாவம்.-பரம பதம் என்ற பெயர் சொல்லுதலுங்கூடத் தமக்கு விருப்பமின்மையின், ‘மற்று ஒன்று’ என்கிறார்.-‘இது தான் ஒரு வார்த்தை மாத்திரமேயாய் உம்முடைய நெஞ்சு பரம பதத்தை விரும்பினாலோ?’ என்ன,
‘அதனை. என் நினைவிற்கு வாய்த் தலையிலே-மூலம் – இருக்கிற சர்வேஸ்வரனைக் கேட்டுக் கொள்வது’ என்று இங்ஙனே அருளிச் செய்வர் சீயர்.
அன்றிக்கே,
‘நீர் திருவாறன்விளையை பிராப்பியம் என்று இருக்கிறீர்; ஈஸ்வரன் ஸ்வதந்திரன் அல்லனோ?-அவன் பரம பதத்தைத் தரிலோ?’ என்ன,
‘அவன் முற்றறிவினன் அல்லனோ? அறியானோ?’ என்கிறார் என்று பிள்ளான் பணிப்பர்;
புருஷார்த்தத்தைக் கொடுப்பவன் அல்லனோ? புருஷன் விரும்பியதனை யன்றோ கொடுப்பது?

வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே – நாலாயி:3678/4

மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8-

பரமபதத்தை விட்டு திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்து என்னுடைய ரக்ஷணத்துக்கு முற்பாடானாய் இருக்கிற உனக்கு நான் ஒரு கிஞ்சித்காரம் பண்ணினேனாக ஒரு விரகு அறிகிறி லேன் –உமக்கு மநோ வாக் காயங்கள் உண்டு -அவற்றுக்கு ஆஸ்ரயமான நீர் உண்டு -வணங்கத் தட்டு என் என்ன-அவற்றினுடைய ஸத்பாவமே அமையுமோ -அவை ஸ்வ அதீனமாக வேண்டாவோ -மநோ வாக் காயங்களினுடைய சத்தை நீ இட்ட வழக்கு அன்றோ –எனக்கு ஆய் இருப்பது ஒரு நெஞ்சும் வாக்கும் செய்கையும்- எனக்கு ஆய் இருப்பது ஒரு நானும் உண்டாக வேண்டுமே –எல்லாம் நீ இட்ட வழக்காய் அன்றோ இருக்கின்றன-
வணங்க வேண்டும் என்ற நினைவு உண்டு- வணங்கும் வகை அறிகின்றிலேன் –

ஞாலம் அறிய பழி சுமந்தேன் நல் நுதலீர் இனி நாணி தான் என் – நாலாயி:3684/2

காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் ! இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான் எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3-

யாம் மடலூர்ந்தும் என்று அன்று தொடங்கி பழி சுமந்து போருகிறேன் அன்றோ -இன்றோ நான் பழி சுமந்தது- நாடும் இரைக்கவே-திருவாய்மொழி -5-3-10-என்ற அன்றே பழி சுமந்திலேனோ-

எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி – நாலாயி:3693/2

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-

உன்னை இனைய என்று -சர்வ சேஷியான உன்னை இப்படிப்பட்டவன் என்று -நிரதிசய ஸுகுமார்ய யுக்தன் என்று -இவர் திரு உள்ளத்திலே அவன் ஸுகுமார்யமே உறைத்தாயிற்று இருப்பது -கருமுகை மாலையைப் போலே இறே இவர் நினைத்து இருப்பது-அறியாதே –பரிவதற்கு அறியாமைக்கு -அனுகூலரான தேவர்களோடு -பிரதிகூலரான அஸூரர்களோடு-இரண்டும் கலசின மனுஷ்யரோடு -வாசியில்லை -அவனைப் பரிய -கண்டவர்கள் எல்லாரும் என்று -இருக்கிறார் யாயிற்று இவர்-பிரதிகூலர் பரிய யோக்யதை உண்டோ என்னில்-யோக்யதை உள்ள தேவர்கள் பரியாதது போலே-இவர்களும் பரிய வில்லை -என்று அருளிச் செய்கிறார் – பரிந்த அசுர ராக்ஷஸர்கள் உண்டே பிரகலாதன் விபீஷண ஆழ்வான் போல்வார் உண்டே

பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசி என் – நாலாயி:3701/2

திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கருமா மேனியன் என்பன் காதல் கலக்கவே-8-3-9-

சர்வேஸ்வரனான உன்னுடைய ஸுகுமார்யத்தை-யார் அறிகிறவர்-அந்நிய பரராய் இருக்கிறவர்கள் உன் ஸுகுமார்யத்தை அறிவார்களா –அநந்ய பரரானால் தான் தேவருடைய ஸுகுமார்யம் சிலருக்கு அறிய நிலமோ–சொல்லி என்ன பிரயோஜனம் உண்டு -அவர்களை பரிவர் ஆக்கவோ -உன் ஸுகுமார்யத்தை பரிச்சின்னம் ஆக்கவோ –

அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே – நாலாயி:3707/4

பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப் பேருருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என்னம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ் திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான் அடி இணைய யல்லதோர் அரணே-8-4-4-

திருச்சிற்றாரில் உள்ளார் சர்வேஸ்வரன் என்று அறியும்படியாக -மாஞ்சா க்ரோசந்தி வத் -ஆத்மாநாம் மாநுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்-யோஹம் யஸ்ய யதாஸ் சாஹம் பகவான் தத் ப்ரவீது மே-யுத்த -120-11-என்றும் – ந அஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தானவ-அஹம்வோ பாந்தவோ ஜாதோ ந ஏதத் சிந்த்யம் இத அந்யதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-12–என்றும் -நான் என்னை மனிதனாகவே நினைக்கின்றேன் -என்றும்
உங்களுக்கு உறவினனாகவே பிறந்து இருக்கிறேன் -என்றும் மறைக்க வேண்டாத படி பத்தும் பத்தாக நின்ற என் ஸ்வாமி –பத்து அவதானங்கள் பத்து பாசுரங்களில் அருளிச் செய்யும் படி அருளினான் –அவன் திருவடிகள் அல்லது ஒரு பாதுகாவல் இல்லை –
அடி இணை அல்லது ஓர் அரண் பிறிது இல்லை எனக்கு —

புகழுமாறு அறியேன் பொருந்து மூஉலகும் படைப்பொடு கெடுப்பு காப்பவனே – நாலாயி:3711/4

திகழ வென் சிந்தையுள் இருந்தானைச் செழு நிலைத் தேவர் நான்மறையோர்
திசை கை கூப்பி ஏத்தும் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை
புகர்கொள் வானவர்கள் புகலிடம் தன்னை அசுரர் வன்கையர் வெங்கூற்றை
புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும் படைப்பொடு கெடுப்புக் காப்பவனே–8-4-8-

அவனுக்கு ஒரு குறையில்லை -என் குறை தீர புகழ்வது ஒரு பிரகாரம் அறிகிறி லேன் -புகழாது ஒழியவும் மாட்டுகிறி லேன் -ஆனால் செய்ய அடுப்பது என் என்னில் -தனக்கு விதேயமான சர்வ ஜகத்தின் யுடையவும் ஸ்ருஷ்ட்யாதிகளை பண்ணுமவன் என்று திரளச் சொல்லும் அத்தனை -பிரித்து வகையிட்டுச் சொல்லப் புக்கால் சொல்லி முடிக்கப் போகாது -பிரயோஜகத்தில் சொல்லும் அத்தனை –தென் அரங்கன் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே என்று திரள செல்வத்தைச் சொல்லுமா போலே – விபூதி அத்யாயம் அருளிச் செய்தால் போலே – ஏ பாவம் பரமே -தலையில் கை வைத்து -சொல்ல முடியாமல் சங்க்ரஹமாக அருளிச் செய்தானே

தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே – நாலாயி:3738/4

இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2-

பெரிய தாளுடைய களிற்றுக்கு அருளின சர்வேஸ்வரன் -வடிவில் கனமும்-நோவில் பாடாற்ற ஒண்ணாமைக்கு உடல் என்கை –பெருமான் —தான் தரும் -அருள் -தான் –தரும் அருள் -தந்த அருள் -தரும் என்கிற இது காலத்ரயத்திலும் சொல்லலாய் இருக்கையாலே -ஆஸ்ரிதற்குச் செய்தது தமக்குச் செய்ததாக இ றே இவர் நினைத்து இருப்பது –ஆதலின் -கொடுத்த என்னாது -தரும் -என்கிறார்––எனக்கு உதவின பின்பு நான் அத்தை ஒன்றாக நினைத்து இரேன் -ஆனை நோவு பட்டத்து ஆயிரம் சம்வத்சரம் /அகப்பட்ட பொய்கை பரிச்சின்னம் /முதலை ஓன்று-எனக்கு காலம் அநாதி -/அகப்பட்டது சம்சார ஆர்ணவத்திலே /முதலை ஐந்து –-இத்தை மீட்டுக் கொண்ட மஹா குணத்துக்கு அது ஒரு குணமாயற்றதோ -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பண்ணின அருளை இட்டு புறம்புள்ளார் பக்கலில் பண்ணின அருளை வ்யாவர்த்தித்தார்-தமக்கு பண்ணின அருளை இட்டு அது தன்னை வ்யாவர்த்திக்கிறார் –

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் – நாலாயி:3739/1

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-

என்னுடைய இந்திரிய வஸ்யத்தையை தவிர்த்த இது தன்னையும் நான் ஒன்றாக நினைத்து இருக்கிறிலேன் –எத்தைப் பற்ற -என்னில்-அவன் என்னுடைய ஹ்ருதயத்தில் அஞ்ஞானாதிகள் எல்லாம் போம்படி -தன் குறைவு தீர்ந்தானாய் -பெறாப் பேறு பெற்றானாய்–அத்தாலே வந்த வேறுபாடு தோற்ற இருந்தான் –இனி எனக்கு வேறு ஓன்று தோற்றுமோ-என்னுடைய மனத்திலே புகுந்து எழுந்து அருளி இருக்கிற இருப்பு ஒழிய
வீற்றிருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல இருக்கும் இருப்பும்
தனக்கு ஒரு ஐஸ்வர்யமாக நினைத்து இருக்குமோ என்று பார்த்தால் அதுவும் ஒரு சரக்காக நினைத்து இருக்கின்றிலன் எம்பெருமான் –என்று எம்பெருமானார் அருளிச் செய்வர் –
இதுவே -சர்வேஸ்வரனின் காதலின் பெருக்கைக் கூறும் -இடத்துக்கு பொருந்துவது –

அ வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே – நாலாயி:3743/4

செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–8-7-7-

அவ்விடம் அன்றி -ஸ்மிதம் பண்ணிக் கொண்டு இருந்த இருப்பு அல்லது –காந்த ஸ்மிதா-என்று ஸ்வரூபத்தை சொல்லி ஜாத ஹாஸா-என்றது இ றே -அப்போதைய ஹர்ஷத்தால் உண்டான விக்ருதி என்னும் இடம் தோற்ற –முகமும் முறுவலும் -ஸ்வரூபம் -அன்று வந்த கன்றை கண்டு சிரிப்பதுக்கும் வாசி உண்டே –மற்று உண்டான அருளை நான் அறியேன் -இதுவே அமையும் -மற்று ஒன்றும் வேண்டா என்கை –

அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் – நாலாயி:3744/1

அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8–

வேறு ஒரு அருள் அறியேன் –அவன் தம்மோடு வந்து கலக்கைக்கு அடி-அவனுடைய திருவருள் காரணம்-என்கிறார்-என்னை அடிமை கொள்ளுகிற உபகாரகர் ஆனவர் –நிர்ஹேதுகமாக திருவருள் செய்வர் –எவனைப் பரம்பொருள் விரும்புகிறானோ –
யமே வைஷ வ்ருணுதே -கடவல்லி உபநிஷத் -2-என்கிறபடியே-தான் அங்கீகரிக்க நினைத்தார்க்கு-ஈஸ்வரனுடைய உகப்பே ஆயிற்றுக் காரணம் – விரும்பப் படுவான் அன்றோ பற்றப் படுவான் -ஆகிறான் என்னக் கடவது அன்றோ –ஹேது அவன் உகப்பு -ஆசை அதிகாரி யோக்யதை –-அத்தனை அல்லது-பேற்றுக்கு சாதனமாக சொல்ல ஒண்ணாதே அன்றோ –அவன் இதுவரை மூவுலகுக்கும் அவ்வருகாகா நினைத்திரா நின்றான்-இவர் தம்மை மூவுலகுக்கும் இவ்வருகாக நினைத்திரா நின்றார்-

அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே – நாலாயி:3804/4

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-

ப்ரஹ்ம ருத்ர இந்த்ரர்களுடைய ஸ்வரூப ஸ் திதி ப்ரவ்ருத்திகள் அவன் இட்ட வழக்கு -ச ப்ரஹ்ம ச சிவஸ் சேந்த்ர –ஸ்ருஷ்ட்டி ஸ்தித்யந்த-இத்யாதி என்கிற பிராமண ப்ரசித்தியால் சொல்லுகிறார் –-பிரதானரோடு அபிரதானரோடு வாசி யற சேதன அசேதனங்களும் அவன் அதீனமே–ஸ அஷர பரம ஸ்வராட் – அவனே உயர்ந்தவனும்-விகாரம் இல்லாதவனும்-கர்மங்கட்கு வசப் படாதவனான முக்தன் -என்றபடியே பிரதானரோடு-பிரதானம் இல்லாதாரோடு-வேற்றுமை இல்லாதபடி சேதன அசேதன பொருள்கள் எல்லாம் அவன் வசப் பட்டவை யாம் –ப்ரஹ்மாதிகள் -ஈஸ்வரோஹம் -என்று இருக்கையும் -அவர்களை ஆஸ்ரயிப்பாருமாய் செல்லா நிற்க நீர் அவனே என்றது என் கொண்டு என்னில் -மயர்வற மதிநலம் அருள பெற்றதால் அறிந்தேன் -என்கை-இரண்டு பாசுரங்களாலும் திரு மந்தரத்தையும் அதன் பொருளையும் அருளிச் செய்தாராய் நின்றார் –

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே
-9-3-3-நாலாயி:3805

அறிதற்கு அரிய பொருள்களை அறிந்தனவாய் இருக்கிற வேதங்கள் ஆகிற சாஸ்திரங்கள் –அன்றிக்கே-அறிந்தனவாய் இருக்கிற வேதங்களில் அறிதற்கு அரிய பொருள்களை அறுதி இட்டு தரும் ப்ரஹ்ம சூத்ரம் இதிகாசம் புராணங்கள் -முதலானவைகள் -என்னுதல் –அறிதற்கு அரியன்-என்னும் இவ்வளவே அறிந்தனவாகக் கொள்ள அமையும் –
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ-(என்றும்)ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி குத்ஸ ஸ நேதி தைத்ரியம் -என்றும் -யஸ்யா மதம் தஸ்ய மதம் அவிஜ்ஞாதம் விஜா நதாம்-கௌஷீதகி (என்றும்) வேத வாக்குகள் அறிய முடியாமல் எந்த ஆனந்த குணத்தின் நின்றும்மீண்டனவோ அறியப் படாதது என்று இருப்பவன் எவனோ அவனுக்கு அறியப் பட்டது அறிந்தேன் என்று இருப்பார்க்கு அறியப்படாதது என்னும் இவ்வளவே அறிந்தது –மற்றைய வற்றை அறிந்தாராய் இருக்கின்ற பராசரர் வியாசர் வால்மீகி முதலான இருடிகளும் –எல்லா துக்கங்களையும் போக்கு கின்றவனை அடைந்து நோய்கள் அறுக்கும் மருந்து அறிந்தனர்
சம்சாரா சர்ப்பே சந்தஷ்ட நஷ்ட சேஷ்ட ஏக பேஷஜம்-க்ருஷ்ணேதி வைஷ்ணவம் மந்த்ரம் ஸ்ருதவா முக்தோபவேத் நர – சம்சாரம் ஆகிற பாம்பினால் கடிக்கப் பட்டவர்களாய்
செயல் அற்று இருக்கும் மக்கள் கிருஷ்ணன் என்ற மந்த்ரத்தை கேட்ட உடன்
விடுபட்டவர்கள் -ஆகிறார்கள் -என்கிறபடியே பிறவித் துன்பத்துக்கு மருந்து -என்னும் இவ்வளவே அறிந்தார்கள் -அவனுடைய இனிமையில் இழிந்திலர் கள்
அன்றிக்கே-வேறு ஒன்றையும் விரும்பாத அவனுடைய உபாய பாவத்தில் இழிந்திலர்கள்-வேதங்களும் வேத வித்துக்களும் போலே அன்றிக்கே தன்னை எனக்கு பூரணமாக அறியும் படி எனக்கு அருள் பண்ணினான்

தழுவுமாறு அறியேன் உன தாள்களே – நாலாயி:3811/4

தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுது மென்னுமிது மிகை யாதலில்
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே–9-3-9-

உன் திருவடிகளை அணையும் விரகு அறிகிறி லேன் -பல ஹானியாலே முதலிலே கிட்டுகை அரிது -கிட்டினாலும் சீலாதிக்யதையை அனுசந்தித்து ஒரு பிரவ்ருத்தி பண்ண ஷமன் ஆகிறிலேன் – இப்பாட்டால் அயோக்கிய அனுசந்தானம் பண்ணுகிறார் என்பாரும் உண்டு -கண்கள் சிவந்ததின் பின் அது இல்லை -அவனுடைய உபாய பாவத்தை அனுசந்தித்து இத்தலையால் ஓன்று செய்கையை மிகையாய் இருக்கிறபடி சொல்லுகிறார் -என்பாரும் உண்டு -இவை பக்ஷம் அன்று –

அறிவது அரிய அரியாய அம்மானே – நாலாயி:3817/4

உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4-

தேவா நாம் தானவா நாஞ்ச -என்று சம்பந்தம் ஒத்து இருக்க தேவ தானவர்களுக்கும் என்றும் ஓக்க அறிய ஒண்ணாத நரஸிம்ஹமான ஸர்வேஸ்வரனே -ஆஸ்ரித ஸுலப்யத்தோடு சர்வேஸ்வரத்தோடு வாசி அற அவர்களுக்கு அறிய அரியவன் என்கை -இத்தால் ப்ரஹ்லாதனுக்கு எளிமையான கோடியிலே ஆகிறேனோ -தேவதைகளுக்கு அரியை யாகிற கோடியிலே ஆகிறேனோ என்று அஞ்சா நின்றேன் -தேவாசுர விபாகம் பண்ணின சமனந்தரம் நாம் எக்கோடியிலே ஆகிறோமோ என்று அர்ஜுனன் அஞ்சினால் போலே அஞ்சா நின்றேன் –

கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன் – நாலாயி:3838/4

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3-

என்னோட்டை கலவியாலே கடலை முழுகப் பருகின காள மேகம் போலே யாயத்து அவன் வடிவில் செவ்வி இருப்பது -தூ நீர் முகில் போல் தோன்றாயே -என்று இவர் ஆசைப் பட்ட படியே தோற்றி -அனுபவிப்பித்து பேர நின்ற பின்பு அத்தலையில் செவ்வி இருந்த படி –முகப்பிலே ஒன்றாய் -முடிவிலே ஒன்றான செயல்கள் தெரிகிறதில்லை -அடிமை கொள்ள வென்று புகுந்து அச் செயலை தானே செய்கிற நிலை எனக்கு ஒன்றும் தெரிகிறதில்லை–சர்வாதிகன் இப்படித் தாழ பரிமாறுகை கூடாது -நான் பிரமித்தேனோ –சம்ச்லேஷத்திலும் மருள் தானீதோ-என்றவர் இறே –

அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க – நாலாயி:3839/1

அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே–9-6-4-

உகப்பாலே செய்தானோ -இவ்வஸ்துவை அழிக்கச் செய்தானோ -அறிகிறிலேன் –தன் சங்கல்பத்தைப் பற்றி -சகல லோகங்களும் நிற்க -சகல அபாஸ்ரயவன் கிடீர் என்னைத் தனக்கு அபாஸ்ரயமாக நினைத்தான் –-சேஷியான முறை -தப்பாமே அவற்றின் நடுவே நிற்கும் தானும் -என் ஒருவன் பக்கலிலும் கிடீர் முறை கெடப் பரிமாறுகிறது –என்னை ஒழிந்தார் விஷயத்தில் உபகாரகன் கிடீர் என்னை அழிக்கிறான் -எதிரிகளை அம்பால் அழிக்கும் -என்னை குணத்தால் அழித்தான் -மத்தியஸ்தராக வேணுமாகாதே ரக்ஷிக்கும் போதைக்கு -அம்பு பட்ட புண்ணுக்கு மருந்து இட்டு ஆற்றலாம் -குணத்தால் வந்த புண்ணுக்கு பரிஹாரம் இல்லை –தான் தலைவனான முறை தப்பாமல் எல்லாரோடும் கலக்கிறவன்-மிகச் சிறியேனான என் பக்கல் செய்த காதல்-எனக்கு அறிய நிலம் அன்று –என்கிறார்

அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே – நாலாயி:3860/4

எவைகோல் அணுகப் பெறும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-

திரு நாவாயிலே பேரோலக்கமாய் இருக்க அத் திரளிலே சென்று கூடப் பெறும் நாள் என்று என்று அறிகிறிலேன்-அடியார்கள்  குழாங்களை–உடன் கூடுவது என்று கொலோ–என்று இருக்குமவராகையாலே அந்நாளை யாசைப்படுகிறார் –

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும் – நாலாயி:3861/1

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-

பெறக் கடவ நாள் என்று என்று அறிகிறிலேன் -என்னுதல் / பிரிந்து இருக்கக் கடவ நாள் எத்தனை என்று அறிகிறிலேன் என்னுதல் -ஒரு பிரயோஜனத்தைக் கொள்ளக் கிட்டினவனாய்-ஆறி இருக்கிறேனோ-அடிமைப் பணியினுடைய வாசனையின் இனிமை-அறியாதவனாய் ஆறி இருக்கிறேனோ –நித்ய ஸூரிகள் செய்யும்-உயிர் உள்ள வரையிலும் செய்யப் படும் அடிமையிலே அன்றோ நானும் அதிகரித்தது

தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறிய சொன்னோம் – நாலாயி:3904/3

ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-10-2-3-

இப்படி உபய விபூதியையும் நிர்வஹிக்கிறவன் ஸ்ருஷ்டமான ஜகத்தினுடைய ரக்ஷணார்த்தமாக தன் செல்லாமையாலே வந்து கண் வளர்ந்து அருளுகிற நிரதிசய போக்யமான திருவனந்த புரத்தை-ந ச புனராவர்த்ததே-என்கிறபடியே மீட்சி இல்லாத ருசியோடே போய்ப் புகுவுதி கோள் ஆகில் -துக்கங்களும் துக்க ஹேதுக்களான பாபங்களும் போம் –அனுபவித்து கை வந்த நாங்கள் -ஒருத்தருக்கும் தெரியாத ரகஸ்யத்தை வியக்தமாக அறியும் படி சொன்னோம் -இது யுண்டாய்க் கழிந்தார் வார்த்தை யாகையாலே ஆப்தம் -என்கை -பிரதிபத்தி பண்ணாதார் இழக்கும் அத்தனை -துக்க நிவ்ருத்திக்கு தேச ப்ராப்தியே அமையும் –குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்கள் ஆயிரத்திலும் ஒரு திரு நாமத்தைச் சொல்லி அனுபவியுங்கோள்-

திண்ணம் நாம் அறிய சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து – நாலாயி:3906/3

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-

வியக்தமாக -மதிநலம் அருள பெற்ற நாம் -தேஹாத்ம அபிமானிகளான -நீங்கள் அறியும் படி உங்கள் அநர்த்தத்தைப் பார்த்துச் சொன்னோம் –

நடமினோ நமர்கள் உள்ளீர் நாம் உமக்கு அறிய சொன்னோம் – நாலாயி:3909/4

கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–10-2-8

என்னோடு குடல் துவக்கு உடையார் அடைய நடவுங்கோள்-வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற கரியான் கழல் காணக் கருதும் கருத்தே -என்று சபலரான நாம் -ஏகம் துக்கம் ஸூகஞ்ச நவ் -என்னும் படி இருக்கிற உங்களுக்கு நெஞ்சிலே படச் சொன்னோம் –

நாம் உமக்கு அறிய சொன்ன நாள்களும் நணிய ஆன – நாலாயி:3910/1

நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9-

நாளேல் அறியேன் –என்றும் -மரணமானால் என்றும் -நாம் உங்களுக்குச் சொன்ன காலம் அணித்தாய்த்து -தஸ்மிந் நஸ்தமிதே பீஷ் மே-என்று அவன் தான் சொன்ன வார்த்தையை இவர் சொல்லுகிறார் –

நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் – நாலாயி:3957/3

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1-

சரீரத்தோடு ஆத்மாவோடு வாசியற புகுத்தி தன் பேறாக அவகாஹியா நின்றான் -முறை அத்தலை இத்தலையாய் என்னை சிரஸா வஹியா நின்றான் –கலவிக்கு தேசிகரான பிராட்டி திருவனந்த ஆழ்வான் முதலானோர்க்கும் அபூமியாம் படி யாய்த்து என்னோடு கலந்து –இப்படிப் பட்ட காதலோடு கூடிய செயல்களில் நிற்பார் அவர்களே அன்றோ –-ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது -என்றார் இறே

ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான் – நாலாயி:3992/2

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

அதி லோகமான வடிவு அழகைக் காட்டி -என்னை ஈடுபடுத்தினவனே -துளையாத மாணிக்கம் -அநுபபுக்தமான மாணிக்கம் என்னுதல் -நாட்டு ஒப்பான அழகு இன்றியே விசஜாதீயமாய் இருக்கையாலே -பொல்லா -என்கிறது என்னுதல் -த்ருஷ்ட்டி தோஷ பரிஹாரமாக -என்னுதல் -வி லக்ஷண விஷயம் ஆனாலும் ஸ்வரூபத்தைப் பார்த்து ஆறி இருக்க வேண்டாவோ என்ன-அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேணுமே -என்னஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு நான் அறிகிறிலேன்-பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி-
கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ-வேரை அறுத்து படர் என்றால் படருமோ என்றபடி –என் உயிர் பிழைப்பதற்கு காரணமாய் இருப்பது ஓன்று உன்னை ஒழிய வேறு ஓன்று காண்கின்றிலேன் –நச சீதா த்வயா ஹீனா நசாஹமபி ராகவ-முஹூர்த்தமபி ஜீவாவ ஜலான் மத்ச்யாயிவ உத்ருதௌ -அயோத்யா -53-31-நீருள எனின் உள மீனும் நிலமும்-பாருள எனின் உள யாவும் பார்ப்பு தன் தாருள தது உளாய் நானும் சீதையும்-ஆர் உளர் எனின் உளேம் அழகு வாய் என்றான் 

————————————————————————-————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வாராதிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-இரண்டாம் அத்யாயம் – முதல் பாதம் -ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

September 1, 2025

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

————————-

அவிரோத அத்யாயம் -பர ப்ரஹ்மமே நிகில ஜகத் ஏக காரணம் -இந்தப் பொருளோடு எந்த முரண்பாடும் இல்லை என்றும் இதில் நிரூபணம் -எந்த விதித்தாலும் அசைக்க முடியாதது-ஸர்வ பிரகார துர் தர்ஷணம் –

முதல் பாதமும் முதல் அதிகரணமும் ஸ்ம்ருதி என்றே பெயர் -முதல் ஸூத்திரமும் ஸ்ம்ருதி என்றே தொடங்கும் –

——-

2.1.1 ஸ்ம்ருத்யதி₄கரணம்-இரண்டாம் அத்யாயத்தின் அறிமுகம்

இரண்டாம் அத்யாயத்தின் அறிமுகம்
ப்ரஹ்ம ஸூத்ரங்களில் முதல் அத்யாயமான ஸமந்வய அத்யாயத்தில், உபநிஷத்துக்களில் ஜகத்காரணத்ணதப் பற்றிப் பேசும் வாக்கியங்கள் அனைத்துமே சேதனம் மற்றும் அசேதனப் பொருள்களைக் காட்டிலும் வேறுபட்டாவராய், தோஷங்கள் அற்றவராய், எண்ணிறந்த கல்யாண குணங்கணை உடையவரான பரமாத்மாவிடம் தான் பொருந்துகின்றன என்று நிரூபித்தார் வேத வ்யாஸர். இனி, அந்த முடிவில் ஏற்படக் கூடிய அனைத்து விதமான ஆஷேபங்களுக்கும் ஸமாதானம் கூறி, இம் முடிவு அசைக்கப்பட முடியாதது என்று நிரூபிக்கிறார் இரண்டாம் அத்யாயத்தில்.
முதல் அத்யாயத்தில் வேத வாக்கியங்களின் அடிப்படையில் ஆராய்ச்சி செய்யப்பட்டது. இந்த இரண்டாம் அதிகரணத்தில் அநேகமாக யுக்திகளில் அடிப்படையிவேயே ஆராய்ச்சி செய்யப்படுகிறது.
இந்த இரண்டாம் அத்யாயத்தில் நான்கு பாதங்கள் உள்ளன –

1-ஸ்ம்ருதி பாதம் – இம் முடிவு ஸ்ம்ருதிகளுக்கு முரண் பட்டதான படியால் தவறா என்று ஆராய்தல்
2–தர்க பாதம் – பல மதத்தவர்கள் செய்யும் தர்கங்களுக்கு பதில் அளித்தல்
3-வியத் பாதம் – ஆகாசம் முதோனவை கூடப் பரமாத்மாவால் படைக்கப் படுகின்றன என்று நிரூபித்தல்
4-ப்ராண பாதம் – ப்ராணன் எனப்படும் இந்த்ரியங்களும் பரமாத்மாவால் படைக்கப்படுகின்றன என நிரூபித்தல்
.

ஸ்ம்ருதி பாதத்தின் அறிமுகம்
முதல் அத்யாயத்தில் வேத வாக்கியங்கணை ஆராய்ந்து ’பரமாத்மா ஜகத்காரணம்’ என்று முடிவு செய்யப்பட்டது.-இம்முடிவு ஸ்ம்ருதிகளுக்கு முரண்பட்டதாக உள்ளபடியால் இதி தவறானது என்று பூர்வ பக்ஷிகள்(சாங்க்ய தந்த்ரம் ) இந்தப் பாதத்தில் ஆஷேபம் சேய்கிறார்கள். அதற்கு பதில் சொல்கிறார் வேத வ்யாஸர்.
இங்கு ஒரு ஸந்தேஹம் எழும் – வேதம் என்பது தான் தானே ப்ரமாணம் ஆகும். ஸ்ம்ருதிகள் என்பவை வேதத்தைத் தழுவி இயற்றப் பட்டவை யானபடியால், அவை நேரடியான ப்ரமாணங்கள் அல்ல . ஒரு ஸ்ம்ருதி வாக்யத்தைப் பார்த்தும், இதற்கு மூலமாக ஒரு வேத வாக்யம் இருக்க வேண்டும் என்று அநுமானம் செய்து, அதற்குப் பின் தான் அந்தச் செயலைச் செய்யமுடியும். எனவே , வேதம் என்பதை விட ஒருபடி குறைந்தது தான் ஸ்ம்ருதி.
எனவே வேதத்துக்கும் ஸ்ம்ருதிக்கும் முரண்பாடு இருந்தால், வேதம் சொன்னபடியே செய்ய வேண்டும்- ஸ்ம்ருதி வாக்யத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று மஹர்ஷி ஜைமிநி தன்னுடைய கர்ம மீமாம்ஸா ஸாஸ்த்ரத்தில் நிரூபித்துள்ளார். (ஓவதும்பரி -யூப ஸ்தம்பத்தை மரத்தைத் தொட்டுக் கொண்டு பாட ஸ்ருதி சொல்ல –மரத்தை முழுவதும் துணியால் மூட -ஸ்ம்ருதி சொல்ல -இவ்வாறு முரண்பட்டு இருந்தால் இந்த ஸ்ம்ருதியை ப்ரமாணமாகக் கொள்ள வேண்டாம் என்கிறார் ஜைமினி -)அப்படி இருக்கும் போது, வேதத்தை ஆராய்ந்து எடுக்கபட்ட இம்முடிவை எப்படி ஸ்ம்ருதியோடு முரண்படுகிறது என்ற அடிப்படையில் தவறென்று கூற முடியும்?இதற்கு பதில் கூறுகிறார் பூர்வ பக்ஷீ – வேத வாக்யத்தின் பொருள் தெளிவாக இருந்தால், அதற்கு முரண்பட்ட ஸ்ம்ருதி வாக்கியங்களைப் புறக்கணிக்கலாம் . ஆனால் வேதாந்தத்தில் ஜகத் காரணம் யார் என்று ஸ்பஷ்டமாக சொல்லப்படவில்லை -குழப்பமே ஏற்படுகிறது. அப்படி குழப்பம் இருக்கும் போது, கற்றுணர்ந்த ஜ்ஞாநிகளான ருஷிகள் இயற்றின ஸ்ம்ருதிகளைக் கொண்டு தான் வேதத்தின் பொருளையே முடிவு செய்ய முடியும். எனவே ,இங்கு ஸ்ம்ருதியில் என்ன சொல்லப்படுகிறதோ அதற்கு முரண் படாமல் தான் வேதத்தில் பொருள் கொள்ள வேண்டும். எனவே ஸ்ம்ருதிகளைக் கொண்டு கேள்வி எழுப்புவது பொருத்தமானதே .

இதுவரை சர்வ வேதாந்தங்களும் அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண கதான ஸ்வரூப ஸ்ரீ யபதியான பரம புருஷன் ஸ்ரீ மன் நாராயணன் என்று அவனுடைய பரத்வத்தை வெளிப்படுத்தி காரணத்வம் நிரூபிக்கப் பட்டது-அது எந்தப் பிரமாணத்தாலும் பாதிக்கத் தக்கது அன்று என்று அபாத்யத்வம் என்ற அம்சம் இரண்டாம் அத்யாயத்தால் நிரூபிக்கப் படுகிறது –

இதில் முதல் இரண்டு பாதங்களில் காரண பூதமான பர ப்ரஹ்மம் பற்றி பூர்வ பக்ஷங்களால் கூறப்படும் பாதகங்கள் பரிஹரிக்கப் படுகின்றன-பின்னுள்ள இரண்டு பாதங்களில் (வியத்பாதம் -பிராண பாதம் )கார்யத்வத்தை ஹேது வாகக் கொண்டு வரும் விரோதத்தை வேதாந்த வாக்யங்களுக்கு பரஸ்பரம் முரண்பாட்டை நீக்குவதன் மூலம் பரிஹரிக்கிறார் என்று சங்கதி-முதல் அத்தியாயத்தின் முடிவில் இரண்டு வகையான சாங்க்யர் நிரசனம் ஆனதால் இங்கு முதலில் இங்கு சாங்க்யன் வேதாந்த விரோதத்தைச் சொல்கிறான் -அடுத்தபடி யோக வாதீ என்று இங்கு அதிகரண சங்கதி

ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகரண ஸாராவலியில் இந்த அத்யாயத்தைப் பற்றிச் சொல்கிறார் –
பாத₃ த்₃வந்த்₃வம் த்₃விதீயே பரிஹரதி பரே காரணே பா₃ஹ்ய பீடா₃ம்
கார்ய த்₃வாரேண பாதா₃ந்தர யுக₃லம் உதே₃தி ஆந்தர ஷோப₄ சாந்த்யை

“பரமாத்மாவே உலகனைத்துக்கும் காரணம்” என்பது முதல் அத்யாயத்தின் பொருள். அதில் முதல் பகுதியைத் தாக்கி, ”பரமாத்மா ஜகத் காரணம் அல்ல ” என்பவர்களை முதல் இரண்டு பாதங்களாலே இங்கு நிரஸிக்கிறார். அதில் இரண்டாவது பகுதியைத் தாக்கி,
“உலகில் அனைத்துக்கும் அவர் காரணம் அல்ல ” என்பவர்களின் வாதங்களை கடைசி இரண்டு பாதங்களாலே கண்டிக்கிறார்.

2.1.1 ஸ்ம்ருத்யதி₄கரணம்-எந்த ஸ்ம்ருதியைத் தேர்ந்தெடுப்பபது?

ஸாங்க்ய ஸ்ம்ருதியில் பெருமைகள்
2-1-1-ஸ்ம்ருத்யதிகரணம் – ஸங்கதி – முதல் அத்யாயத்தில் வேதாந்த வாக்கியங்களை ஆராய்ந்து’பரமாத்மாவே ஜகத் காரணம்’ என்று முடிவு செய்யப்பபட்டது. அந்த முடிவு ஸ்ம்ருதிகளுக்கு முரணாக இருக்கிற படியால் தவறானது, ஸாங்க்ய ஸ்ம்ருதி முதலானவற்றில் சொன்னபடி தான் வேதத்தின் பொருளை முடிவு செய்ய வேண்டும் என்று பூர்வ பக்ஷீ ஆஷேபம் செய்கிறார்.
பூர்வ பக்ஷம் – பூர்வபக்ஷீ தன் வாதத்தை இவ்வாறு முன் வைக்கிறார் –
1-வேதத்தில் ஒரு விஷயம் தெளிவாகச் சொல்லப்பபட்டிருந்தால், அதற்கு முரணாக இருக்கும் ஸ்ம்ருதி தான் தவறு என்று சொல்லி விடலாம்- ஸ்ம்ருதியை விட ஸ்ருதி என்ற வேதம் உயர்ந்ததான படியால். ஆனால் ஜகத் காரணம் யார் என்பது வேதாந்தத்திலேயே தெளிவாக இல்லை . அதனால், சிறந்த ஜ்ஞாநிகளால் இயற்றப்பபட்ட ஸ்ம்ருதிகளைக் கொண்டு, அதில் சொல்லப்பபட்ட படிக்கு தான் வேதாந்தத்திற்குப் பொருள் கொள்ள வேண்டும்.

2-கபிலர் என்கிற ரிஷி மிகச் சிறந்த ஜ்ஞாநி, வேதத்திலேயே (्ருஷிம் ப்ரஸூதம்
கபிலம்)
என்று ரிஷியாகக் (தீர்க்க தரிசனம் உடையவராக) கொண்டாடப்பபட்டுள்ளார்.
3-அவர் எழுதிய ஸாங்க்ய ஸ்ம்ருதி வேதத்தில் சொல்லப்பபட்ட பல விதமான கர்மங்களை ஏற்கிறபடியால் இது பௌத்தர்கள் முதலாவனாரின் நூல் போல் முற்றிலும் வேதத்திற்குப் புறம்பானது அல்ல, நெருக்கமானது தான்.
4-இந்த ஸ்ம்ருதி வேறு எதையோ பற்றிப் பேச வந்தது அல்ல, ஜீவாத்மாவின் பெருமை ஸம்ஸாரத்தின் கொடுமை ஸம்ஸாரத்தின் காரணம், முக்திக்கான வழி என்கிற ஆன்மிக தத்துவங்களைச் தொல்வதே இதன் குறிக்கோள்.

ஸ்ம்ருதிகளுக்குள் முரண்பாடு
5-அந்த ஸாங்க்ய ஸ்ம்ருதியில் ப்ரதானம் (மூல ப்ரக்ருதி) என்கிற அசேதனப் பொருள் தான் ஜகத் காரணம் என்று சொல்லப் பபட்டுள்ளது. எனவே நீங்கள் சொன்னது போல் ’பரமாத்மா தான் ஜகத் காரணம்’ என்று வேதம் சொல்லி யிருந்தால், ஸாங்க்ய ஸ்ம்ருதி முழுவதுமே தவறானது மற்றும் வீணானது என்று ஆகி விடும். இதற்கு அநவகாச தோஷம் என்று பெயர். ஒரு ரிஷியின் நூலுக்கு அந்த தோஷத்தை ஏற்க முடியாது. எனவே ஸாங்க்ய ஸ்ம்ருதியில் சொன்னபடிக்கு ப்ரதானம் ஜகத் காரணம் என்று தான் வேதமும் சொல்கிறது என்று ஏற்க வேண்டும். (அவகாசம் -இடம் / ஸ அவகாசம்-ஒருவர் படுக்கலாம் இருவர் இருக்கலாம் மூவர் நிற்கலாம் –அநவகாசம் -இடமில்லாமை வீண் -)
6-கேள்வி மநு, பராஸரர், பகவான் கண்ணன், வ்யாஸர், ஆபஸ்தம்பர் முதலானவர்கள் எழுதிய மற்ற ஸ்ம்ருதிகளில் எல்லாம் பரமாத்மா ஜகத் காரணம் என்று சொல்லப் பபட்டுள்ளதே ? ஸாங்க்ய ஸ்ம்ருதியைப் பின்பற்றி ப்ரதானம் ஜகத் காரணம் என்று கொண்டால், மேற் சொன்ன இந்த ஸ்ம்ருதிகள் எல்லாம் தவறாக ஆகி விடாதா?
பதில் – உண்மை தான், ஆனால் அப்போதும் அந்த ஸ்ம்ருதிகளுக்கு அநவகாஸ தோஷம் ஏற்படாது,-அதாவது முழுவதுமாகத் தவறாகவவோ வீணாகவோ ஆகாது. ஏன் என்னில், அந்த ஸ்ம்ருதிகளில் சொல்லப்பபட்ட தர்ம கார்யங்கள், ஆசாரம், அநுஷ்டானம் முதலானவை அப்போதும் சரியாகத் தான் இருக்கும், ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் பகுதி மட்டும் தான் தவறாக ஆகும். அது பெரிய குற்றம் அல்ல, ஏற்றுக் கொள்ளலாம்.
ஆகவே , ஸாங்க்ய ஸ்ம்ருதிக்கு அநவகாஸ தோஷம் (முழுவதும் வீணாகப் போதல்) தவிர்க்கப்பபட வேண்டும் என்பதற்காக, அதில் சொல்லப்பபட்ட ஜகத் காரணத்தைத் தான் வேதமும் சொல்கிறது என்று ஏற்க வேண்டும். எனவே நீங்கள் முதல் அத்யாயத்தில் அடைந்த முடிவு தவறானது.

வ்யாஸரின் ஸித்தாந்தம்
இந்த பூர்வபஷத்திற்கு இரண்டு ஸூத்ரங்களால் வ்யாஸர் பதில் அளிக்கிறார்.
முதல் ஸூத்ரத்தால் இதுவரை பூர்வபக்ஷி தொன்ன வாதத்தைக் கூறி, அது தவறு என்பதற்கான காரணத்தைக் கூறுகிறார்-
1-ஸ்ம்ருதி அநவகாச தோ₃ஷ ப்ரஸங்கா₃த் இதி சேத் ந அந்ய ஸ்ம்ருதி அநவகாச தோ₃ஷ ப்ரஸங்கா₃த்
ஸ்ம்ருதி –
கபிலாசார்யர் இயற்றிய ஸாங்க்ய ஸ்ம்ருதிக்கு
அநவகாஸ தோ₃ஷ – அநவகாஸ தோஷம் (முற்றிலுமாக தவறாகவும் வீணாகவும் போதல்)
ப்ரஸங்கா₃த் – ஏற்பட்டு விடம் என்கிறபடியால் (பரமாத்மா ஜகத் காரணம் என்று தொன்னது தவறு)
இதி சேத் ந – என்று நீங்கள் கூறினால் அது தவறு
அந்ய ஸ்ம்ருதி – மநு, பராஸரர், பகவான் கண்ணன் முதலானவர்கள் இயற்றிய மற்ற ஸ்ம்ருதிகளுக்கு
அநவகாச தோ₃ஷ – அநவகாஸ தோஷம் (முற்றிலும் தவறாகவும் வீணாகவும் போதல்)
ப்ரஸங்கா₃த் – ஏற்பட்டு விடும் என்கிறபடியால்.
மற்ற பல ஸ்ம்ருதிகள் பரமாத்மா ஒருவரே ஜகத் காரணம் என்று ஸ்பஷ்டமாகச் சொல்கின்றன –

மநு ஸ்ம்ருதி – (ஆஸீதி₃த₃ம் தமோ பூ₄தம் ஸோ அபி₄த்₄யாய ஸரீராத் ஸ்வாத் ஸிஸ்ருஷு : விவிதா₄: ப்ரஜா:) – இந்த உலகனைத்தும் இல்லாத போது (ப்ரளயத்தில்) பரமாத்மா ஸங்கல்பம் செய்து கொண்டு தன் உடலிலிருந்து உந்த உலகத்தைப் படைத்தார்)
பகவத் கீதை – (அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜக₃த: ப்ரப₄வ: ப்ரலய: ததா₂) – நான் தான் இந்த உலகத்திற்குக் காரணமாகவும், இவ் வுலகம் லயம் (அழிவு) அடையும் இடமாகவும் உள்வைன்
விஷ்ணு புராணம் – (விஷ்ணோ : ஸகாஸாத் உத்₃பூ₄தம் ஜகத் தத்ரைவ ச ஸ்தி₂தம்| ஸ்தி₂தி ஸம்யம கர்தா அஸௌ ஜக₃த: அஸ்ய ஜக₃த் ச ஸ:) – இந்த உலகம் விஷ்ணுவிடமிருந்து உண்டாயிற்று, அவரிடமே தான் நிலை பெற்று நிற்கிறது, அவரே இதை ஸம்ஹாரமும் செய்பவர்,அவரே தான் இவ் வுலகில் ஒவ்வொரு பொருளுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்து இயக்குகிறார்.

கபிலரும் மற்ற ஸ்ம்ருதி ஆசிரியர்களும்
பூர்வ பக்ஷி கூறின யுக்திகளுக்கு எல்லாம் வேத வ்யாஸர் இவ்வாறு பதில் கூறுகிறார் –
1-கபிலர் வேதத்திலேயே ரிஷி கொண்டாடப் பட்டிருந்தாலும், அவர் தவறே செய்யாதவர் என்று வேதம் கூறவில்லை .-ஆனால் மநு, வ்யாஸர், பராஸரர் முதலான ஸ்ம்ருதி ஆசிரியர்கள் என்ன சொன்னாலும் அது நமக்கு மருந்து, அவர்கள் பேசியதெல்லாம் உண்மை என்று வேதம் சொல்கிறது – “யத்₃வை கிஞ்ச மநு: அவத₃த் தத் பே₄ஷஜம்”
2-பரமாத்மாவே ஜகத் காரணம் என்று சொல்லும் ஸ்ம்ருதிகள் பல இருக்கின்றன, ப்ரதானமே ஜகத் காரணம் என்று சொல்லும் ஸாங்க்ய ஸ்ம்ருதி ஒன்று தான். எனவே பல ஸ்ம்ருதிகள் சேர்ந்து ஒன்றை பாதிப்பதே பொருத்தமானது.
3-வேதத்தை யுக்திகள் (Logic) கொண்டு ஆராய்ந்தால் எந்தப் பொருள் தெரிகிறதோ (பரமாத்மாவே ஜகத் காரணம் என்று), அதைப் பின் தொடர்ந்து உள்ளன மநு முதலானவர்களின் ஸ்ம்ருதிகள். ஆனால் ஸாங்க்ய ஸ்ம்ருதி அந்த யுக்திகளுக் கெல்லாம் முரணாக உள்ளது. யுக்திகளுக்கு முரணாக இல்லாத நூல் தான் உயர்ந்ததாகும்.
4- கேள்வி – ’பரமாத்மா ஜகத் காரணம்’ என்று கொண்டால் ஸாங்க்ய ஸ்ம்ருதி முழுவதும் வீணாகி விடும் (அநவகாஸ தோஷம்). ஆனால் ’ப்ரதானம் ஜகத் காரணம்’ என்று கொண்டால் மநு முதலானவர்களின் ஸ்ம்ருதிகள் முழுவதும் வீணாகாது, ஏன் எனில் அவற்றில் சொல்லப்பபட்ட ஆசாரம், அநுஷ்டானம் முதலானவை அப்போதும் சரியாகத் தான்
இருக்கும். எனவே , எந்த நூலும் முழுவதும் வீணாகாமல் இருக்க ’ப்ரதானம் ஜகத் காரணம்’ என்றே ஏற்க வேண்டும்.
பதில் – ’ப்ரதானம் ஜகத் காரணம்’ என்று கொண்டால் மநு முதலானவர்களின் ஸ்ம்ருதிகள் முழுவதும் வீணாகப் போய்விடும். ஏன் எனில் அவர்கள் அனைவருமே பரமாத்மா ஜகத் காரணம் என்று சொல்லி, அவரை வழி பட்டு, ஆராதனம் செய்து, மகிழ்விப்பபதற்கான வழிகள் தான் இந்த தர்ம கார்யங்கள், ஆசாரம், அநுஷ்டானம் எல்லாம் என்று
கூறியுள்ளனர். பரமாத்மா என்றே ஒருவர் கிடையாது என்றால், அந்தக் கார்யங்களும் வீணாகத்தானே போகும்? அவை அத்தனை ஸ்ம்ருதிகளுக்கும் அநவகாஸ தோஷம் வந்து விடும். அதை ஒரு நாளும் ஏற்க முடியாது. எனவே , பல ஸ்ம்ருதிகளைக் காப்பதற்காக, ஒரே ஒரு ஸாங்க்ய ஸ்ம்ருதி மட்டும் தவறு என்று ஏற்பதே சரியான முடிவு ஆகும்.
5-ஸாங்க்ய ஸ்ம்ருதியும் முழுவதுமாகத் தவறு என்று நாங்கள் சொல்லவில்லை . அதில் சொல்லப்பபட்ட ஸ்ருஷ்டி முறை , அசேதனப் பொருள்களின் பண்புகள், ஜீவாத்மாவின் பெருமைகள் அணனத்தும் சரியே . ஜகத் காரணம் யார் என்பது மட்டும் தான் அந்த ஸ்ம்ருதியில் தவறாகச் சொல்லப்பபட்டுள்ளது.

ப்ரஹ்மமும் கர்மமும்
பல ஸ்ம்ருதிகள் நாம் தெய்யும் கர்மங்கள் எல்லாம் பரமாத்மாவுக்கு ஆராதனம் (வழிபாடு) என்கின்றன –
பகவத் கீதை -யத: ப்ரவ்ருத்தி: பூ₄தாநாம் யேந ஸர்வமித₃ம் ததம் | ஸ்வ கர்மணா தம் அப்₄யர்ச்ய ஸித்₃தி₄ம் விந்த₃தி மாநவ: ||-“யாரால் இந்த உலகம் அனைத்தும் இயங்குகிறதோ யார் உலகிலுள்ள எல்லாப் பொருள்களுக்கும் வ்யாபித்து உள்ளாரோ , அந்த பரமாத்மாவைத் தன்னுடைய கர்மங்களால் வழிபட்டு மனிதன் நற்கதி அடைகிறான்”
விஷ்ணு புராணம் –யை : ஸ்வ கர்மபரை : நாத₂ நரை : ஆராதி₄தோ ப₄வாந் | தே தரந்தி அகி₂லாம் ஏதாம் மாயாம் ஆத்ம விமுக்ததய ||“தங்கள் கர்மங்களை விடாமல் செய்வதன் மூலம் யாரெல்லாம் உன்னை ஆராதிக்கிறார்களோ அவர்கள் இந்த விசித்ரமான ஸம்ஸாரம் முழுவதையும் கடந்து மோக்ஷம் அடைகிறார்கள்”-எனவே பரமாத்மா இல்லை என்று கூறினால், இந்தக் கர்மங்களும் வீணாகப் போய்விடும். எனவே பரமாத்மா
ஜகத்காரணம் என்று நாம் முதல் அத்யாயத்தில் எடுத்த முடிவு சரியானது தான். அதற்கு முரணாக இருக்கும் ஸாங்க்ய ஸ்ம்ருதி மட்டும் அந்த விஷயத்தில் தவறு
என்று தான் கொள்ள வேண்டும்.
2-இதரேஷாம் ச அநுபலப்₃தே ₄: – “மற்றவர்களுக்கு அப்படித் தோற்றாத படியாலும்”
கேள்வி – கபிலர் த்யானம் தெய்து தன்னுடைய யோக சக்தியால் இந்தக் கருத்தைக் கண்டிருப்பபார். எனவே இது உண்மையாகத் தானே இருக்க வேண்டும்?
பதில் – அப்பபடி இது உண்மையாக இருப்பின், மநு ஆபஸ்தம்பர், பராஸரர் முதலான மற்ற யோகிகளும் இதே தத்துவத்தைக் கண்டு உபதேஸம் செய்திருக்க வேண்டும். அப்பபடி அவர்கள் செய்யவில்லை -நேர் முரணான தத்துவத்தைக் காட்டுகிறார்கள். எனவே , வேதத்துக்கும் ஜ்ஞாநிகளின் உபதேஸங்களுக்கும் முரணாக உள்ள தத்துவங்களை கபிலர் மயக்கத்தால் தவறாகக் கூறி விட்டார் என்றே கொள்ள வேண்டும்.
ஆகவே , முதல் அத்யாயத்தில் நாம் அடைந்த முடிவுக்கு எந்த முரண்பாடும் இல்லை . பரமாத்மாவே ஜகத் காரணம் என்ற முடிவு வலிமையாகவே நிற்கிறது.

——–

2-1-2-யோக₃ப்ரத்யுக்த்யதி₄கரணம்-ஹிரண்ய கர்பர் தவறு செய்ய முடியுமா?

ஏன் தனி அதிகரணம்?
(
கீழ் அதிகரணத்தில் சொன்னவற்றில் அதிக சங்கை -தோன்ற -கீழ் பரமாத்மாவையே ஒப்புக் கொள்ளாமல் -இங்கு யோக மதத்தில் ஒத்துக் கொண்டு த்யான இத்யாதிகள் இருப்பதால் அதிக்கப்படி ஸந்தேஹம் வரும் -கீழ் கபிலர் ரிஷி -இங்கு நான்முகன் -சர்வ வேதாந்தம் பிரதிவர்த்தகத்துக்கு அதிகாரியான ஹிரண்ய கர்ப்பர் -)

2-1-2-யோக₃ப்ரத்யுக்த் திகரணம்
– ஸங்கதி – முன் அதிகரணத்தில் ஸாங்க்ய ஸ்ம்ருதி வேதாந்தத்தோடும் மற்ற ஸ்ம்ருதிகளோடும் மிகவும் முரண்படுகிறபடியால் அதைப் பின்பற்றி வேதாந்தத்தின் பொருளை முடிவு செய்ய இயலாது என்று நிரூபித்தார் வ்யாஸர்.
அதற்கு மேல் கேள்வி எழுகிறது – சரி, ஸாங்க்ய ஸ்ம்ருதி மிகுந்த முரண்பாடுகளை உடையது. ஆனால் ஹிரண்ய கர்பர் எனப்படும் நான்முகக்கடவுளால் பரப்பப்பட்ட யோக ஸ்ம்ருதி வேதாந்தத்தோடு நெருக்கமான கருத்துகளையே போதிக்கிறது. அதைக் கொண்டு வேதாந்தத்தின் பொருளை புரிந்து கொள்ளலாமே ?
பூர்வ பக்ஷம் – – வேதாந்தத்தில் சொல்வது போல் யோக ஸ்ம்ருதியும் பரமாத்மா இருக்கிறார் என்று ஏற்கிறது.-த்யானம் (யோகம்) தான் முக்திக்கான வழி என்று ஏற்கிறது. மேலும் நான்முகன் தான் உலகில் மிகச் சிறந்த ஜ்ஞாநியாய், அந்த ஜ்ஞாநத்தைப் பரப்பும் பொருப்பிலும் இருக்கிறார். எனவே அவர் சொன்ன யோக ஸ்ம்ருதி சரியாகத் தான் இருக்கும். அதைப் பின்பற்றி தான் வேதாந்தத்துக்குப் பொருள் கூற வேண்டும்.
ஸித்தாந்தம் – இதற்கு ஒரே ஸூத்ரத்தால் பதில் அளிக்கிறார் வ்யாஸர் இந்த அதிகரணத்தில்.
1-ஏதேந யோக₃: ப்ரத்யுக்த: – “இத்தால் யோக ஸ்ம்ருதியும் மறுக்கப்பட்டது”
பல கருத்துகளில் யோக ஸ்ம்ருதி வேதாந்தத்தோடு ஒத்துப் போனாலும் முக்கியமான வேறுபாடுகள் உள்ளன – பரமாத்மாவை அந்தர்யாமியாகக் கொள்ளாத ப்ரதானம் தான் ஜகத்துக்கு உபாதான காரணம் என்கிறார்கள் பரமாத்மா உலகத்துக்கு நிமித்த காரணம் மட்டும் தான் (குடத்துக்குக் குயவன் போல்), உபாதான காரணம் (குடத்துக்கு மண் போல்) அல்ல என்கிறார்கள். த்யானத்தை ஏற்றாலும் த்யானிக்கப்பட வேண்டிய ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் தவறாக வருணிக்கிறார்கள் – ஜீவாத்மாவுக்கும் அந்தர்யாமி பரமாத்மா என்று ஏற்க வில்லை , பரமாத்மா உலகின் உபாதான காரணம் என்று ஏற்க வில்லை . எனவே இந்த த்யானமும் வேதாந்தத்தில் சொல்லப்பட்ட த்யானம் அல்ல-

நான்முகனும் ஸம்ஸாரி தான்
நான்முகன் உலகத்தில் மிகச் சிறந்த ஜ்ஞாநியாக இருந்தாலும் கூட, அவரும் நம்மைப்போல் பாப புண்யங்களுக்குக் கட்டுப்பட்டு, ஸத்த்வம்-ரஜஸ்-தமஸ் என்ற முக் குணங்களால் பாதிக்கப்படும் ஒரு ஸம்ஸாரி தான். எனவே அவரும் ரஜோ குணமோ தமோ குணமோ அதிகமாக இருக்கும்போது அறிவின்மையால் வேதாந்த்ததுக்கு முரண்பட்ட தவறான கருத்துகளை யோக ஸ்ம்ருதியில் கூறினார்.
நான்முகக் கடவுள் தான் புராணங்களை யெல்லாம் உபதேசித்தார் என்று நாம் அறிவோம்-அதைப் பற்றி மத்ஸ்ய புராணத்தில் கூறும் போது இவ்வாறு சொல்லப் படுகிறது –
அக்₃நே : சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு தி₃வாகரே | ராஜஸேஷு ச மாஹாத்ம்யம் அதி₄கம் ப்₃ரஹ்மண : ஸ்ம்ருதம்| ஸாத்த்விகேஷு அதி₄கம் தத் விஷ்ணோ : மாஹாத்ம்யம் உத்தமம் ||
“தமோ குணம் அதிகமாக இருக்கும் போது நான்முகன் கூறிய புராணங்களில் அக்நி முதலான தேவதைகளின் பெருமை சொல்லப் பட்டிருக்கும், ரஜோ குணம் அதிகமான போது சொன்ன புராணங்களில் தன்னுடைய பெருமையைப் பாடுவார், ஸத்த்வ குணம் அதிகமான போது உயர்ந்ததான விஷ்ணுவின் மஹிமயைப் பாடுவார்”
எனவே நான்முகனுக்கும் ரஜோ மற்றும் தமோ குணங்களால் கலக்கமும் அறிவின்மையும் வரக் கூடும். எனவே அவர் சொன்ன ஸ்ம்ருதியாகவே இருந்தாலும் அது வேதத்தோடு
முரண்பட்டால் அந்த விஷயங்களில் தவறானது தான்.

ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகரண ஸாராவளி என்ற நூலில் இந்த அதிகரணத்தின் பொருளைச் சுருக்கமாகக் கூறுகிறார் –
வேதாந் பூர்வம் விதாதா அலபத பகவத: ஸர்வ வித்த்யா நியுக்த:
வாகீஶஶ் ஸேஷ தஸ்மாத் தடுதித விஹதே : கம்பநம் வேத மூர்த்ந: |
மைவம் தஸ்யாபி வேதாபஹ்ருதி முக விபத்த் தர்ஶநாத் ஷேத்ரி பாவாத்
ப்ராந்த்யாதிஃ ஸம்பவேதிதி அகதிக விஷயே பூர்வவந் நிர்வஹாம: ॥

நான்முகக் கடவுள் ஆதியில் பகவானிடமிருந்து வேதங்களையும் எல்லா வித்யைகளையும் பெற்றார். அவரே தான் அந்த வித்யைகளைப் பரப்பும் பொருப்பையும் உடையவர். ஸரஸ்வதீ தேவிக்குக் கணவனானபடியால் வாகீசன் என்று அழைக்கப் படுகிறார். இப்படி எத்தனையோ பெருமைகள் இருந்தாலும், அவரும் அஸுரர்களிடத்தில் வேதங்களைப் பரிகொடுத்துத் தவித்தார் என்பது போன்ற பல கதைகளை நாம் புராணங்களில் காண்கிறபடியால் அவரும் ஒரு ஷேத்ரஜ்ஞன் (ஜீவாத்மா) என்பதால், பிழை , மயக்கம், குழப்பம் ஆகியவை அவரிடம் நிகழக் கூடும் என்பதே தெளிவாகிறது.-ஆகவே , வேறு வழி இல்லாத சூழலில் இந்த யோக ஸ்ம்ருதியும் ஸாங்க்ய ஸ்ம்ருதி போல் சில இடங்களில் தவறானது என்று தான் முடிவு செய்ய வேண்டும்.

————

2-1-3-விலக்ஷணத்வாதிகரணம் – எந்த ஸ்ம்ருதி தர்க்கத்தின் படி உள்ளது?

(இதுவும் மேல் வரும்-ஆரம்பணாதி கரணம் —2-1-6- நம் சித்தாந்தத்தின் முக்கிய கருத்துக்கள் கொண்டவை ஆகும்-ஒன்பது ஸூத்ரங்கள் கொண்ட அதிகரணம்-முதல் மூன்றும் பூர்வபக்ஷ ஸூத்ரங்கள் )

காரண -காரியங்களின் ஒற்றுமை –விலக்ஷணத்வாதிகரணம் – ஸங்கதி – வேதத்தின் பொருளை முடிவு செய்யும் போது மநு ஸ்ம்ருதி முதலானவற்றைத் தான் பின்பற்ற வேண்டும், ஸாங்க்ய ஸ்ம்ருதியை அல்ல என்று கூறப்பட்டது. அதற்கு மேல்
ஆஷேபம் எழுகிறது – மனு முதலானவர்களின் ஸ்ம்ருதி தர்க்கத்துக்குப் புறம்பாக உள்ள படியால், அவற்றைப் பின்பற்றக் கூடாது, தர்க்கத்தை அநுஸரித்து இருக்கும் ஸாங்க்ய ஸ்ம்ருதியைக் கொண்டு தான் வேதத்தின் பொருளை முடிவு செய்ய வேண்டும். எனவே ப்ரதானம் தான் ஜகத் காரணம், பரமாத்மா அல்ல.
பூர்வ பக்ஷம் – முதல் இரண்டு ஸூத்ரங்களால் பூர்வ பக்ஷம் சொல்லப்படுகிறது. அவர்கள் கூறுவதாவது –
1–ந விலக்ஷணத்வாத் அஸ்ய ததா₂த்வம் ச சப்₃தா₃த்
– (முதல் அத்யாயத்தில் ’இவ்வுலகம் பரமாத்மா விடமிருந்து உண்டாகிறது’ என்று கூறியது) ஒவ்வாது – தவறானது
அஸ்ய – புலன்களால் அியயப்படும் (சேதனர்கள் மற்றும் அசேதனங்கள் அடங்கிய) இந்த உலகத்தின்
விலக்ஷணத்வாத் – வேறுபாட்டால்
ததா₂த்வம் – அந்த வேறுபாடு
சப்₃தா₃த் ச – சப்தம் எனப்படும் வேதத்தாலும் அறியப் படுகிறது
பரமாத்மா – ப்ரஹ்மம் என்ற ஓரு பொருளை ஏற்பவர்கள் அவர் ஜ்ஞாநமுடையவர் (சேதனன்), குற்றங்களற்றவர், அனைவரையும் இயக்கக் கூடியவர், ஆநந்தம் மட்டுமே உடையவர். ஆனால் புலன்களால் நாம் அறியக்கூடிய இந்த உலகம் அறிவற்றது (அசேதனம்), தூய்மை யற்றது, மற்ற ஓருவரால் இயக்கப்படுவது மற்றும் துக்கத்தை உடையது.-எனவே அவற்றின் வேறுபாடு ஸ்பஷ்டமாக உள்ளது. வேதத்திலும் உலகுக்கு இந்தத் தன்மைகள் சொல்லப் பட்டுள்ளபடியால் வேதத்திலிருந்தும் இந்த வேறுபாட்டை அறியலாம்.
எந்தப் பொருள் எந்தப் பொருளிலிருந்து உண்டாகிறதோ , அது அதைப் போல் தான் இருக்கும், வேறுபட்டு இருக்காது, என்று உலகத்தில் மோதிரம், குடம் முதலான பொருள்களில் நாம் பார்க்கிறோம். இந்த உலகமோ ப்ரஹத்தை விட முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. எனவே இது ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகவில்லை .
அசேதனமாய், முக்குணம் உடையதான ப்ரக்ருதியிலிருந்து தோன்றியது என்று சொல்லும் ஸாங்க்ய ஸ்ம்ருதியே சரி –

(மனிதனுக்கு பல் முளைக்கிறது முடி வளருகிறது -உண்டாகும் பொருள் போல் அல்லவே இவை -வேறுபாடுகள் காண்கிறோம் என்றால் -இவை உடம்பில் இருந்து தானே ஆத்மாவில் இருந்து அல்லவே -உடலும் அறிவற்றது -இவையும் அறிவற்றவை -இதே போல் என்பர் –
ஆத்மா ஆழ்ந்து உறக்கத்தில் ஞானம் இல்லையே -அதே போல் கல்லுக்கும் கொள்ளலாம் என்றால் எப்போதுமே இதுக்கு வெளிப்படாதே -)

கல்லுக்கும் மண்ணுக்கும் சைதன்யம் உண்டா?
இதற்கு மேல் ஒரு ஆஷேபம் அவர்களைக் குறித்து எழுப்பப்படுகிறது. அதற்கான விடை பூர்வ பக்ஷிகளால் இரண்டாவது ஸூத்ரத்தில் கூறப்படுகிறது.
ஆஷேபம் – பரமாத்மா சேதனன் (ஜ்ஞாநம் உடையவர்), உலகமோ அசேதனம், அதனால் வேறுபாடு உள்ளது ,-எனவே உலகம் பரமாத்மா விடமிருந்து உண்டாக வில்லை என்று கூறுகிறீர்களே . உலகப் பொருள்கள் அனைத்துக்கும் கூட ஜ்ஞாநம் உள்ளது என்று ஒப்புக் கொண்டால் என்ன? அப்போது பரமாத்மா வுக்கும் உலகுக்கும் ஒற்றுமை வந்து விடுகிற படியால் அவரிடமிருந்து உலகம் உண்டாயிற்று என்று சொல்லலாமே-

வேதத்திலேயே “ப்ருதி₂வீ அவத₃த்” (பூமி கூறியது), “ஆப: வா அகாமயத” (ஜலம் ஆசைப்பட்டது) என்றெல்லாம் கூறப்படுகிற படியால் பூமி, ஜலம் முதலானவற்றுக்கும் ஜ்ஞாநம் உள்ளதாகத் தெரிகிறது. புராணங்களிலும்கூட மலைகள், நதிகள், கடல் முதலானணவ அறிவுடைய பொருள்களாக வருணிக்கப்படுகின்றன. எனவே உலகத்தில் அனைத்துப் பொருள்களுக்குமே ஜ்ஞாநம் உள்ளது என்று ஏற்றுக் கொள்ளலாமே ?

ஸமாதானம் –2-அபி₄மாநி வ்யபேத₃சஸ் து விஸேஷ-அநுக₃திப்₄யாம்
அபி₄மாநி வ்யபதேத₃சஸ் து
– பூமி முதலானவற்றுக்கு உரிய அபி₄மாநி தெய்வங்களன்றோ சொல்லப் படுகிறார்கள்
விஸேஷ-அநுக₃திப்₄யாம் – விஸேஷத்தாலும் அநுக₃தியாலும்
விஸேஷம் – அடை மொழி இடுவது. இவ் விடங்களிலெல்லாம் பூமி, ஜலம், புலன்கள் முதலானவற்றைக் குறிப்பிடும் போது ’தே₃வ:’ என்ற அடை மொழி பயன்படுத்தப் படுவதால், இச் சொற்கள் பூமி ஜலம் முதலான அசேதனங்களைக் குறிக்கவில்லை , அவற்றுக்குள் இருக்கும் அபி₄மானியான ஜீவாத்மாவைக் குறிக்கின்றன.
அநு க₃தி – அநு ப்ரவேஸம் (உள்ளே புகுவது). வேதமே அக்₃நி, வருணன் முதலான ஒவ்வொரு தெய்வமும் கண், வாக்கு முதலான புலன்களுக்குள் நுழைவதைப் பற்றிச் சொல்கிற படியாலும் இங்கு சொல்லப்படுபவர்கள் சேதனர்கள்தான் என்று நாம் அறியலாம்.-எனவே உலகம் பரமாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டு தான் உள்ளது. எனவே இவ் வுலகம் பரமாத்மா விடமிருந்து உண்டாகி யிருக்க முடியாது என்பதே பூர்வபக்ஷத்தின் சுருக்கம்

வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்
ஸித்தாந்த ஸூத்ரம் – (3) த்₃ருஸ்யதே து –
“காணப்படுகிறது அன்றோ ”
உலகத்தில் ஒரு காரணப் பொருளிலிருந்து அதைக்காட்டிலும் வேறுபட்ட பொருள்கள் உண்டாவதையும் காண்கிறோம். கோமயத்திலிருந்து சில கிருமிகளும், தேனடையிலிருந்து சில புழுக்களும் உண்டானாலும், அவை கோமயம் மற்றும் தேனடையை விட வேறுபட்டு தான் காணப்படுகின்றன. எனவே பூர்வபக்ஷீ சொன்ன தர்க்கம் தவறானது. எனவே வேறுபட்டிருந்தாலும் உலகம் பரமாத்மா விடமிருந்து உண்டாக முடியும்.

இங்கு ஒரு ஆஷேபம் எழுகிறது – காரணமும் காரியமும் வேறுபட்டும் இருக்கலாம் என்று வ்யாஸர் சொன்னதை , காரணமும் காரியமும் வெவ்வேறு பொருள்கள் என்று சொன்னதாகத் தவறாகப் புரிந்து கொண்டு ஒருவர் கேட்கிறார் – காரணமும் காரியமும் வேறுபட்டு இருக்கலாம் என்றால், காரணப் பொருள் வேறு காரியப் பொருள் வேறு என்று ஆகிறது. எனவே முன்பு இல்லாத குடம் என்ற பொருள் புதிதாக உண்டாகிறது என்று சொல்ல வேண்டும். அப்போது அஸத் கார்ய வாதத்தை ஏற்றுக் கொண்டதாகிவிடுமே – என்று. இதற்கு விடை –

4-அஸதி₃தி சேத் ந ப்ரதிஷேத₄ மாத்ரத்வாத்
அஸத்
– அஸத்திலிருந்து (இன்மையிலிருந்து) உலகம் உண்டாகிறது என்று ஆகிவிடுமே
தி சேத் ந – என்று நீங்கள் கூறினால். அது தவறு.
ப்ரதிஷேத₄ மாத்ரத்வாத் – முன் ஸூத்ரத்தில் ’காரணமும் காரியமும் வேறுபட்டு இருக்க முடியாது’ என்று பூர்வபக்ஷீ சொன்னணத மட்டும் எதிர்த்துச் சொன்னோமே தவிற , காரணம் வேறு பொருள் காரியம் வேறு பொருள் என்று கூற வில்லை. ஸத் கார்ய வாதம் அதாவது, இருக்கும் பொருளிலிருந்து தான் மற்றொரு பொருள் தோன்றுகிறது, அதாவது காரணப் பொருளே தான் காரியப் பொருளாக மாறுகிறது என்று தான் கூறுகிறோம். எனவே
இந்த தோஷம் எங்கள் மதத்தில் கிடையாது.
-இவ்வாறு பூர்வ பக்ஷத்திற்கு பதில் உரைத்து, மேலும் பல யுக்திகளை வ்யாஸர் காட்டுகிறார்-

(நையாயிகர் அஸத் கார்ய வாதிகள் -அவஸ்தா வேறுபாடு தானே -மண் குடம் மடங்கு தூள்கள் போல் -முழுவதுமாக இருக்க வேண்டாமே -வேறுபாடு மாத்திரமே வேற்றுப் பொருள் அல்லவே -ப்ரதிஷேதம் மட்டுமே சொன்னேன் -என்றவாறு -)

தர்க்கம் மட்டும் போதாது-ப்ரஹ்மத்துக்கு தோஷங்கள் வந்துவிடாதா?
விலக்ஷணத்வாதி கரணத்தின் முதல் இரண்டு ஸூத்திரங்களாலே பூர்வ பக்ஷம் சொல்லப்பட்டது. அதற்கு தன்னுடைய பதிலை வேதவியாஸர் அடுத்த இரண்டு ஸூத்திரங்களாலே காட்டினார். தற்போது ஐந்தாவது ஸூத்திரத்தில் பூர்வ பக்ஷிகள்
ஒரு ஆஷேபத்தை எழுப்புகிறார்கள்.

5- அபீதவ் தத்₃வத் ப்ரஸங்கா₃த் அஸமஞ்ஜஸம்
அபீதவ்
– சிருஷ்டி, பிரளயம், முதலானவற்றில் (பிரஹ்மமே தான் உலகமாக மாறுகிறது என்றால்)
தத்₃வத் ப்ரஸங்கா₃த் – அந்த பிரஹ்மத்துக்கு குற்றங்கள் வந்து விடும் என்கிறபடியால்
அஸமஞ்ஜஸம் – வேதாந்த வாக்கியங்கள் பொருந்தாது–ஒரு தங்கக் கட்டியைக் கொண்டு மோதிரம் செய்யும் பொழுது, அதில் செப்பு கலந்து விடுகிற படியால், அந்த ஸ்வரணத்துக்கு குறை ஏற்படுகிறது. அதே போல், பிரஹ்மமே உலகமாக மாறுகிறது என்றால், உலகத்தில் எந்த எந்த குற்றங்கள் இருக்கின்றனவோ , அவை யெல்லாம் ப்ரஹ்மத்துக்கே ஏற்பட்டு விடும். அதனால், ப்ரஹ்மம் ஞானமுடையது,தூய்மையானது, என்று சொன்ன தெல்லாம் மாறிப் போய், ப்ரஹ்மமும் அசேதனமாக, ப்ரஹ்மமே குற்றமுடையவராக,ப்ரஹ்மமே துக்கப் படுபவராக ஆகி விடுவார். அப்படிக் கொண்டால், வேதாந்த வாக்கியங்கள் எல்லாம் முரண்பட்ட அர்த்தங்களைச் சொல்லுகிறபடியாலே , பொருந்தாவையாக ஆகி விடுகின்றன.
அதனால் பிரதானம் என்கிற மூலப் ப்ரக்ருதியைத் தான் ஜகத் காரணமாகக் கொள்ள வேண்டும் என்பது பூர்வ பக்ஷியின் அபிப்பிராயம்.

(தத்₃வத் ப்ரஸங்கா₃த் -அதைப் போல் என்றும் அதை யுடைய என்றும் இரண்டும் பொருந்தும்-ஸ்வர்ணம் போல் ப்ரஹ்மத்துக்கும் குற்றம் வரும்-ஜகத்து போல் ப்ரஹ்மத்துக்கும் குற்றம் வரும்-குற்றமுடையதாகும் என்றபடி-நான் பாலகனாக ஆனேன் -நான் ஆத்மா அணு -மாறாமல் இருக்கும் -உடலுடன் சேர்ந்ததால் -வரும் மாறுபாடுகள் -குழந்தையின் வடிவாக இருந்த நான் இப்பொழுது -உருவ வேறுபாடு சரீரத்துக்குத்தானே -ஆனால் நான் ஆனேன் சொல்கிறோம் – )

இந்த இடத்தில் நாம் ஒரு சமாதானம் சொல்ல முடியும். ப்ரஹ்மம் உலகமாக மாறுகிறது என்று சொல்லும் பொழுது, நேரடியாக பரமாத்மா என்பவர் மாறுகிறார் என்று நாங்கள் சொல்லவில்லை , ப்ரஹ்மம் என்பது உலகத்திலிருக்கும் சேதனர்கள் அசேதனங்கள் அனைத்தையுமே தனக்கு சரீரமாக, அதாவது உடலாகக் கொண்டது. அப்படி சேதனங்கள்,அசேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மம், உலகாக மாறுகிறது என்று சொன்னால், மாற்றம் என்பது அந்த சேதனர்களுக்கும் அசேதனங்களுக்கும் ஏற்படுமே தவிர, உள்ளே இருக்கும் அந்தர்யாமியான பரமாத்மாவுக்கு ஏற்படாதே என்று நாம் சொல்ல முடியும். ஆனால், இதற்கும் பூர்வ பக்ஷிகள் விடை கொடுக்கிறார்கள் – ப்ரஹ்மத்துக்கு -உடல், சரீரம், என்றே ஒன்று இருக்க முடியாது என்று –

சரீர ஆத்ம பாவம்
சரீரம் என்றால் என்ன என்று பூர்வ பக்ஷிகள் இந்த இடத்தில் தெரிவிக்கிறார்கள், கர்மத்தின் பயனான சுக துக்கங்களை அனுபவிப்பதற்காக ஏற்பட்டதாய், இந்திரியங்களை உடையதாய், ஐந்து விதமான பிராண வாயுக்களாலே தாங்கப் படுவதாய்,ஐம் பூதங்களின் சேர்க்கையால் உண்டாக்கப்பட்டதாய் இருக்கும் பொருள் சரீரம் என்று கூறுகிறார்கள்.
இதன் படி பார்த்தோ மென்றால், பரமாத்மாவுக்கு கர்மங்களின் விளைவான சுக துக்கங்களும் கிடையாது. அவருக்கு இந்திரியங்களும் கிடையாது. அவருடைய சரீரம் பிராணனாலும் தரிக்கப்படுவதில்லை . அவருடைய திருமேனி ஐம் பூதங்களால் ஆக்கப்பட்டதல்ல.அப்ராக்ருதமானது என்றும் ஸித்தாந்திகள் சொல்லுகிறபடியால், பரமாத்மாவுக்கு சரீரமே இருக்க முடியாது என்று தேறுகிறது.-அதனால், நேரடியாக ப்ரஹ்மமே உலகமாக மாறுகிறார் என்று தான் சொல்ல வேண்டி வரும். அப்படிச் சொன்னால், உலகத்துப் பொருட்களுக்கு இருக்கும் குற்றங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கும் வந்து விடும் – என்று பூர்வ பக்ஷிகள் ஆஷேபம் செய்கிறார்கள்.

(சரீரம் கர்மம் அனுபவிக்க காரணம் -இந்திரியங்கள் உடையது-ஐம்பூதங்களால் ஆக்கப்பட்டு -ப்ராணனால் தாங்கப்பட்டு இருக்கும்-அவருக்கு இந்த்ரியங்களே கிடையாது -அப்ராக்ருதம் -பஞ்ச உபநிஷத் மயம் -அபிராணன் ஸ்ருதி சொல்லும் அன்றோ -இந்த நான்குமே பரமாத்மாவுக்குப் பொருந்தாது -உலகம் அனைத்துமே சரீரம் என்று சொல்வது தவறு -என்பர் பூர்வ பஷி)

இதற்கு வேத வியாஸர் அடுத்த ஸூத்திரத்திலே விடை அளிக்கிறார்.
6- ந து த்₃ருஷ்டாந் பா₄வாத்
– பொருந்தாமை என்று சொன்னது தவறு, எடுத்துக் காட்டு இருக்கிறபடியால்-ஒரே பொருள் இரண்டு நிலைகளை அடைந்தாலும், அதில் ஒரு பகுதியின் குணங்களோ தோஷங்களோ மற்றொரு பகுதியை அடையாது என்பதற்கு உலகத்திலே எடுத்துக் காட்டு இருக்கிறது. ஒரு ஜீவாத்மா ஒரு காலத்தில் குழந்தையின் உடலோடு இருக்கிறார். அவரே வயதாகும் போது இளைஞனின் உடலை உடையவராக ஆகிறார். இவ்விடத்தில் மாற்றம் என்பது உடலுக்குத் தான் இருக்கிறது, ஆத்மாவுக்கு உருவத்தில் எந்த மாற்றமும் ஏற்படுவது இல்லை . உடலின் தன்மைகள் ஆத்மாவுக்கு வராது, ஆத்மாவின்
தன்மைகள் உடலுக்கு வராது.
ஆனால் நாம் “நான் இளைஞனாக ஆனேன்” என்று தானே கூறுகிறோம்.

அதே போல், “சேதனங்கள் அசேதனங்கள் அனைத்தையும் உடலாகக் கொண்ட பரமாத்மா உலகமாக மாறுகிறார்” என்று சொல்லும் போதும், மாற்றம் என்பது உடலாக இருக்கும் சேதன அசேதனங்களுக்கு மட்டும் தான். பரமாத்மாவுக்கு அல்ல. தோஷங்கள்
எல்லாம் அந்த சேதன அசேதனங்களில் தான் இருக்கும். பரமாத்மாவிடம் ஏற்படாது. பரமாத்மாவுக்கு இருக்கும் ஏற்றங்கள், அவரிடம் தான் இருக்கும். உடலான சேதன அசேதனங்களிடம் வந்து விடாது
.-ப்ரஹ்மத்துக்கு சேதன அசேதனங்கள் அனைத்தும் உடலாக உள்ளன என்பது வேதத்தில் பல இடங்களில் காட்டப்பட்டுள்ளது. எனவே
அதற்கும் பொருந்தும் ஒரு இலக்கணத்தைத் தான் நாம் சரீரத்திற்குக் கொடுக்க வேண்டும். அதாவது – “யஸ்ய சேதநஸ்ய யத் த்₃ரவ்யம் ஸர்வாத்மநா ஸ்வார்த்வத₂ நியந்தும் தா₄ரயிதும் சக்யம் தச் சே₂ஷதைக ஸ்வரூபம் தத் தஸ்ய சரீரம்”, அதாவது, “எந்த ஒரு சேதனனுக்கு எந்த ஒரு த்ரவ்யம் எல்லா காலத்திலும் தனக்காக இயக்கப் படுவதற்கும் தாங்கப் படுவதற்கும் தகுதி உடையதாய் இருக்கிறதோ , அவன் நன்மைக்காகவே இருக்கிறதோ , அந்த த்ரவ்யம் அந்த சேதனனுக்கு உடல் ஆகும்

(சக்யம் -தகுதி உடையது என்கிற விசேஷணம் சேர்த்து லக்ஷணம் -சில சமயம் கைகளைத் தூக்க முடியாமல் போகலாமே -பூர்வ பஷி சொல்லிய லக்ஷணத்தில் பல தவறுகள் -முக்தனுக்கு சரீரம் கர்மம் அடியாக இல்லை -இந்த்ரியங்கள் பிராணன் செடி கோடிகளுக்கு இல்லை-பூத சங்காதமும் அல்லவே -ஆகவே நம் ஸித்தாந்த சரீர லக்ஷணமே மிகவும் பொருந்தும் –)

யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மனா -ஸ்வார்த்தே -நியந்தும் –தாரயிதும்–சக்யம் –  சேஷைதக ஸ்வரூபஞ்ச-தத் தஸ்ய சரீரம் –சரீர லஷணம்-யஸ்ய சேதனச்ய யத் த்ரவ்யம் -சஷ்டி யந்தம் —முதல் சட்டம் -எவனுக்கு ஆறாவது வேற்றுமை – ந கடத்வாதி போலே இல்லாமல்-பிரத்யோகம் எதிர் பார்க்கும் மனைவி -கணவன் இரண்டும் பிரதியோகம் எதிர் பார்க்கும்-சைதன்யம் உள்ளவனுக்கு தானே சரீரமாக இருக்கலாம்-இரண்டாவது சட்டம் –த்ரவ்யமாக இருக்க வேணும் -கிரியைகள் ஜாதி போலே இல்லை  கோத்சவம் -பச்சை -நடக்கிறான் -ஜாதி  குணம் கிரியை   போலே இல்லை-மூன்றாவது சர்வாத்மனா-எப்பொழுதும் ஸ்வார்த்தே— தன் பொருட்டே-நாலாவது –சர்வாத்மனா நியந்தும் –நியமிக்கத் தகுதி உள்ளதாக-ஐந்தாவது –சர்வாத்மனா தாரயிதும்-சக்யமோ -யோக்யதை கொண்டதாய்-ஆறாவது தச் சேஷைதக ஸ்வரூ பஞ்ச-தத் தஸ்ய சரீரம் –ஒருத்தனுக்காக இருப்பதே சரீரம் –

ஸாங்க்ய மதத்தில் உள்ள தோஷம்
7- ஸ்வ பக்ஷ தோ₃ஷாத் ச –
“ தன்னுடைய பக்ஷத்தில் உள்ள தோஷங்களாலும்”
இது வரை ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்கின்ற நம்முடைய பக்ஷத்தில் தோஷம் இல்லை என்று காட்டப்பட்டது. இனி, பூர்வ பக்ஷத்தில் தோஷங்கள் உள்ளபடியாலும், பிரதானம் ஜகத்காரணம் என்று ஏற்க முடியாது என்று வேத வியாஸர் காட்டுகிறார்.
ஸாங்க்ய மதத்தில் ப்ரக்ருதி, ஜீவாத்மா என்று இரண்டு பொருட்கள் உண்டு. அந்த ஜீவாத்மா ஞானமுடையவர்,-ஆனால் எந்த கர்மங்களிலும் ஈடுபட மாட்டார். ப்ரக்ருதி தான் உலகத்தை படைக்கிறது, ஆனால் தானாக படைப்பதில்லை . ஜீவாத்மாவின் தொடர்பாலே ப்ரக்ருதி படைக்கிறது, என்று சொல்லுகிறார்கள்.
இவ்விடத்தில் வேத வியாஸர் ஒரு கேள்வியைக் கேட்கிறார் – ப்ரக்ருதிக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பாலே ஸ்ருஷ்டி ஏற்படுகிறது, என்று சொல்லுகிறீர்களே , அந்தத் தொடர்பு எத்தகையது ?என்று. அந்த இரண்டு பொருட்களும் இருப்பதனாலேயே அவற்றுக்குத் தொடர்பு இருக்கிறது, என்று சொன்னால், அந்தத் தொடர்பு என்றைக்குமே அழியப் போவதில்லை . அதனால், ஜீவாத்மாவுக்கு என்றுமே மோக்ஷம் என்பது கிடைக்காமலேயே போய் விடும்.
அந்தத் தொடர்பு என்பது உண்டாக்கப்பட்ட ஒரு பொருள் என்று சொன்னோமே என்றால், அதுவும் ப்ரக்ருதி யிலிருந்து படைக்கப்பட்ட ஒன்று என்று சொல்ல வேண்டும். அப்போது, அந்யோன்ய ஆஸ்ரயம் என்கிற ஒரு குற்றம் ஏற்படும். ஜீவாத்மாவின் தொடர்பு ஏற்பட்டால், ப்ரக்ருதி படைக்கும். படைப்பு நடந்தால் தான் அவர்களுக்குள் தொடர்பே ஏற்படும் என்று ஒன்றுக்கு ஒன்று எதிர்பார்த்துஇருக்கிறபடி யாலே , இந்த பக்ஷமும் பொருந்தாது.
அதனால், பிரதானம் ஜகத்காரணம் என்று சொல்லும் பக்ஷத்தில் தோஷம் இருக்கிறபடியால், ப்ரஹ்மம் ஜகத்காரணம் என்று தான் ஏற்க வேண்டும் என்று இந்த ஸூத்திரத்தின் பொருள்.

தர்க்கமா வேதமா?
8-தர்க்க அப்ரதிஷ்டா₂நாத் அபி
– “ தர்க்கம் நிலை பெறாத படியாலும்”
மேலும், ஒரு தோஷம். ஸாங்க்யர்களின் பக்ஷத்தில் சொல்லப் படுகிறது – அவர்களுடைய பக்ஷம் தர்க்கம், அதாவது-யுக்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது. தர்க்கம் என்பது என்றைக்குமே நிலை பெறாது – ஒரு முடிவுக்கு வரவே முடியாது. பௌத்தர்கள், ஜைனர்கள், நியாய மதத்தைச் சேர்ந்தவர்கள், யோக மதத்தைச் சேர்ந்தவர்கள்,ஸாங்க்யர்கள் என்று இவர்கள் எல்லாம் ஒருவருக்கொருவர் பல தோஷங்களைச் சொல்லிக் கொள்ளுகிற படியால், அவை அனைத்துமே யுக்திகளின் அடிப்படையில் இருக்கிறபடியால், எது சரியான பக்ஷம் என்று முடிவு செய்யவே முடியாது.

ஆனால், ஸித்தாந்தத்தில் ஸ்ருதி என்கிற வேதத்தை அடிப்படையாகக் கொண்டு, ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று சொல்லுகிறபடியால், நிலை பெறாமை என்கிற தோஷம் ஸித்தாந்தத்தில் ஏற்படாது.
9- அந்யதா ₂ அநுமேயம் இதி சேத் ஏவமபி அநிர்மோக்ஷப்ரஸங்க₃:
அந்யதா ₂ அநுமேயம்
– எதிரிகளின் யுக்திகளை உடைத்து, பிரதானமே ஜகத்காரணம் என்று ஊகிக்கலாமே
இதி சேத் – என்று சொன்னால்
ஏவமபி அநிர்மோக்ஷ ப்ரஸங்க₃: – அப்போதும் நிலை பெறாமை என்கிற தோஷத்திலிருந்து விடுபட முடியாது
பிற்காலத்தில் நம்மை விட புத்தி சாலியாக ஒருவர் வந்து நாம் சொன்ன யுக்திகளையும் முறியடிக்கக் கூடும் என்கிறபடியால், அப்போதும் தர்க்கம் என்பது நிலை பெற்று விட்டது என்று கூறவே முடியாது. அதனால், புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் வேதம் என்கிற ஸாஸ்திரத்தைத் தான் பிரமாணமாகக் கொள்ள வேண்டும். அதை புரிந்து கொள்வதற்கு, தெளிவுபடுத்திக் கொள்வதற்கு, தர்க்கம் பயன்படலாமே தவிர, தர்க்கத்தை
மட்டும் கொண்டு ஒரு விஷயத்தை அறிந்து கொள்வதென்பது முடிவுக்கே வராத ஒரு முயற்சி ஆகும்(வேத ஸாஸ்த்ர அவிரோத தர்க்கங்கள் மட்டுமே உபாதேயம் -மநு ஸ்ம்ருதி ).
ஆகையால், ஸாங்க்ய ஸ்மிருதி, வேதத்துக்கு முரண்பட்டதாக இருக்கிறபடியால், அதில் சொன்னபடி வேதத்தின் பொருளை முடிவு செய்வது தவறாகும். மனு முதலானவர்களின் ஸ்மிருதிகளைக் கொண்டு தான் வேதத்தின் பொருளை முடிவு செய்ய வேண்டும். அவையும் பரமாத்மாவே ஜகத்காரணம் என்று தான் சொல்லுகின்றனர். அதனால்,
முதலத்தியாயத்தில் நாம் எடுத்த முடிவில் எந்த முரண்பாடும் இல்லை என்பது இந்த அதிகரணத்தின் பொருள்.

———–

2-1-4-சிஷ்டாபரிக்₃ரஹாதி₄கரணம்-ஒற்றுமையிலும் வேற்றுமை

மீதமுள்ள மதங்களுக்கும் விடை
விலக்ஷணத்வாதிகரணத்தில் ப்ரதானமே ஜகத் காரணம் என்று சொல்லக்கூடிய ஸாங்க்யர்களின் பக்ஷம் மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த அதிகரணத்தில் அதே நியாயத்தாலே , அதே யுக்திகளாலே வேதத்துக்கு புறம்பான மற்ற ஸ்மிருதிகள் மற்றும் மதங்களையும் மறுக்கிறார் வேத வ்யாஸர்.
இந்த அதிகரணத்தில் ஒரே ஒரு ஸூத்ரம் தான் உள்ளது
1-ஏதேந சிஷ்டாபரிக்₃ரஹா: அபி வ்யாக்₂யாதா :
ஏதேந –
இத்தாலே என்று பொருள். அதாவது, வேதத்தால் ஏற்கப்படாத கருத்துகளைச் சொல்லக் கூடிய ஸாங்க்ய ஸ்மிருதியை மறுத்ததனாலேயே
சிஷ்ட அபரிக்ரஹா: – சிஷ்டம் என்றால் மீதமிருப்பவை என்று பொருள். அபரிக்ரஹா: என்றால் வேதத்தாலே பரிக்ரஹம் செய்யப்படாதவை , வேதத்தாலே ஏற்கப்படாதவை என்று பொருள். ஆகையால், சிஷ்டாபரிக்ரஹா: என்றால் வேதத்தால் ஏற்கப்படாத மீதமுள்ள ஸ்மிருதிகள், அதாவது அவற்றில் சொல்லப்பட்ட பக்ஷங்கள் என்று பொருள்.
அபி – அந்த பக்ஷங்களும் கூட
வ்யாக்யாதா : – அவையும் விவரிக்கப்பட்டன, அவையும் பதிலளிக்கப்பட்டன, அதாவது, அவையும் மறுக்கப்பட்டன. தர்க்கத்தை ஆலோசித்துப் பார்த்தாலும், ஸாங்க்யர்கள் சொல்லும் தர்க்கம் வேதத்துக்குப் புறம்பாக உள்ளது. மனு முதலானவர்கள் சொல்லும் தர்க்கம் தான் வேதத்தை அனுசரித்து இருக்கிறது. அதனால், வேதத்தை அனுசரித்த தர்க்கத்ணத அனுசரித்து இருக்கும் மனு முதலானவர்களின் ஸ்மிருதிகளைக் கொண்டு தான் வேதத்தின் பொருளை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கடந்த அதிகரணத்தில் எந்த யுக்திகளை யெல்லாம் கொண்டு சொன்னோமோ , அதே யுக்திகளாலே வேதத்துக்குப் புறம்பான மற்ற ஸ்மிருதிகளையும் மறுக்கப்பட்டன என்று இந்த ஸூத்ரத்தின் பொருள்.

ஏன் தனி அதிகரணம்?
இங்கு ஒரு கேள்வி –
அதே யுக்திகளைக் கொண்டு தான் மற்ற ஸ்ம்ருதிகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்றால், அதற்கு ஏன் தனி அதிகரணம் அமைக்க வேண்டும்?
பதில் – கடந்த அதிகரணத்தில் இல்லாத ஒரு அதிகமான கேள்விக்கான பதில் இந்த அதிகரணத்திலே சொல்லப்படுகிறது. ஸாங்க்யர்கள் தர்க்கத்தின் அடிப்படையில் தங்கள் பக்ஷத்தை முன் வைக்கிறார்கள். தர்க்கம் என்பது நிலை பெறாதது. அதில் பலவிதமான வாதங்கள், பல யுக்திகள் முன்னும் பின்னும் சொல்லப்படலாமே தவிர, முடிவை அடைய முடியாது. அதனால், தர்க்கத்தை மட்டும் கொண்டு ஒரு பக்ஷத்தை முடிவு செய்ய இயலாது என்று தெரிவித்தார் வ்யாஸர்.
மேல் கேள்வி – பரமாணுக்கள் தான் ஜகத்துக்குக் காரணம் என்று கணாதருடைய வைசேஷிக மதம், கௌதமருடைய நியாய மதம், ஜைனர்களுடைய மதம், பௌத்தர்களுடைய மதம் என்று பல மதங்களிலே ஏற்கிறார்கள், ஆகையால்,
தர்கம் நிலை பெறாதது என்று சொல்ல முடியாது. அதனால் பரமாத்மா ஜகத்காரணம் அல்ல – என்று.
விடை
(1) தர்க்கம் எப்போது வேண்டுமானாலும் பிற்காலத்தில் மற்று ஓருவராலே தகர்க்கப் படலாம். அதனால், தர்க்கம் நிலை பெற்றுவிட்டது என்று எப்போதுமே சொல்ல முடியாது. இது ஒரு பதில்.
2-பரமாணு தான் ஜகத் காரணம் என்று இவர்கள் அனைவரும் ஏற்றாலும், அந்த பரமாணு எத்தகையது என்பதிலேயே இவர்களுக்கு ஒத்த கருத்து கிடையாது.வைசேஷிக மதத்தில் நியாய மதத்தில் பரமாணுக்கள் உண்மையான பொருட்கள் என்று சொல்லுவார்கள்.
பௌத்தர்களோ பரமாணுக்களே பொய் என்று சொல்லுவார்கள். பௌத்தர்களுக்குள்ளேயே சிலர் ஞானமே வடிவானது பரமாணு என்று தெரிவிக்கிறார்கள். சிலர் ஞான வடிவானது அல்ல என்று பௌத்தர்கள் பரமாணுக்கள் ஒரு வினாடி தான் இருக்கும் என்கிறார்கள், மற்ற மதத்தவர்களோ பரமாணுக்கள் அழியாதவை என்கிறார்கள். இப்படி பரமாணுவின் இயற்கையைப் பற்றியே பலவிதமான முரண்பாடுகள் இந்த மதங்களுக்குள்ளே இருக்கின்றன–ஆகையால் முதலத்தியாயத்தில் என்ன முடிவுக்கு வந்தோமோ – பரமாத்மாவே ஜகத் காரணம் என்று -அதற்கு அவிரோதம் அதாவது எந்த முரண்பாடும் இல்லை , ஸாங்க்ய ஸ்மிருதியைக் கொண்டு எப்படி முரண்பாடு இல்ளையோ , அதைப் போலவே மற்ற ஸ்மிருதிகளைக் கொண்டும் முரண்பாடு இல்லை என்று இந்த அதிகரணத்தாலே வேத வ்யாஸர் நிரூபித்தார்.

——————-

2-1-5-போ₄க்த்ராபத்த்யதி₄கரணம்-உடல் இருந்தாலே துன்பமா?

அதிகரணத்தின் பின்புலம்
ஸங்கதி
– முன் அதிகரணத்தில் ”ந து திருஷ்டாந்த பாவாத்” என்கிற ஸூத்திரத்தில், உடலில் குழந்தைப் பருவம் இளமைப் பருவம் முதலான மாற்றங்கள் இருந்தாலும், அந்த தன்மைகள் எதுவும் உள்ளுக்குள் இருக்கும் ஜீவாத்மாவைப் பாதிக்காதது போல், சேதனாசேதனங்கள் அனைத்தையும் உடலாகக் கொண்ட ப்ரஹ்மமே உலகத்தை படைக்கிறபடியால், மாற்றங்கள் குற்றங்கள் இவை யெல்லாம் உடலாக இருக்கும் சேதனங்களுக்கும் அசேதனர்களுக்கும்
உண்டே தவிர, அந்தர்யாமியான பரமாத்மாவுக்கு வராது; அதனால், ஸ்வபாவ விபாகம் உண்டு, அதாவது அவரவர்களுடைய தன்மைகள் வகுக்கப்பட்டுத் தான் இருக்கும். பரமாத்மாவுக்கு அசேதனத்தின் தன்மைகள் வராது. ஜீவாத்மாவுக்கு பரமாத்மாவின் தன்மைகள் வராது. எந்த இடத்திலும் தன்மைகள் கலந்து விடாது என்று வேத வ்யாஸர்
நிரூபித்தார்.

அதைத் தொடர்ந்து ஒரு ஆஷேபம் எழுகிறது – சேதனங்கள் அசேதனர்கள் அனைத்துமே ப்ரஹ்மத்துக்கு சரீரம் என்றுசொன்னால், சரீரம் இருப்பதாலேயே அந்த பரமாத்மாவுக்கு இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டி வருமே ? ஜீவாத்மாவுக்கு உடல் இருந்தால், இன்ப துன்பங்கள் ஏற்படுகின்றன. அதனால், பரமாத்மாவுக்கும் சரீரம் இருப்பதாலேயே இன்பம் துன்பம் இவை யெல்லாம் வந்துவிடுமே . அப்படி வந்தால், பரமாத்மாவின் தன்மை இன்பம்
மட்டுமே . துன்பம் என்பது ஜீவாத்மாவுக்கு மட்டும் தான் என்று வரை யறுத்துச் சொல்ல இயலாது. ஸ்வபாவங்கள் எல்லாம் வகுத்து இருக்காது, கலந்துவிடும். அதனால், உலகை உடலாகக் கொண்ட பரமாத்மா ஜகத் காரணமாகவே இருக்க முடியாது – என்று. அதற்கு இந்த அதிகரணத்தில் வேத வ்யாஸர் பதில் கூறுகிறார்.

“ஸம்போ₄க ப்ராப்தி: இதி சேத் ந வைசேஷ்யாத்” (1.2.8) என்ற ஸூத்ரத்தில், பரமாத்மா உபாஸகர்களுடைய ஹ்ருதயத்துக்குள் இருப்பதாலேயே இன்ப துன்பங்கணள அநுபவிக்கத் தேவையில்லை , கர்மத்தால் வராமல் க்ருபையால் வந்திருக்கிற படியால் என்று சொல்லப்பட்டது. அடுத்து “ந து த்₃ருஷ்டாந்த பா₄வாத்” (2.1.9) என்ற ஸூத்ரத்தில், உடலுக்கு ஏற்படும் இளமை , முதுமை முதலான தோஷங்கள் ஆத்மாவுக்கு ஏற்படாதது போல், உலகமே பரமாத்மாவுக்கு உடலாக இருந்தாலும் சேதனாசேதனங்களுக்கு உள்ள குற்றங்கள் பரமாத்மாவுக்கு எற்படாது என்று சொல்லப்பட்டது. இந்த அதிகரணத்தில் உடல் இருப்பதாலேயே பரமாத்மாவுக்கு துன்பம் ஏற்பட்டு விடாது என்று நிரூபிக்கப் படுகிறது-

பூர்வ பக்ஷியின் வாதம்
இந்த அதிகரணத்தில் ஒரே ஒரு ஸூத்திரம் தான் உள்ளது.
1-போ ₄க்த்ரா பத்தே : அவிபா₄க₃: சேத் ஸ்யாத் லோகவத்
போ₄க்த்ரா பத்தே : அவி பா₄க₃:
– இது பூர்வ பக்ஷியினுடைய வாதம்.
சேத் – இவ்வாறு நீ சொன்னாய் என்றால் .
ஸ்யாத் லோகவத் -இது வேத வியாஸருடைய பதில். இப்படி மூன்று பகுதிகளாக இந்த ஸூத்திரத்தை பிரித்துக் கொள்வோம்.
பூர்வ பக்ஷம் -சேதனங்கள் அசேதனங்கள் அனைத்துமே பரமாத்மாவின் சரீரம் தான் என்று சொன்னால், பரமாத்மாவுக்கும் இன்ப துன்பங்களை அனுபவித்தல் என்கிற தன்மை வந்து விடும்.-உலகத்தில் ஒரு ஜீவனுக்கு உடல் இருந்தால், உடலில் உள்ள குழந்தைத் தன்மை , இளமைத் தன்மை முதலானவை அந்த ஜீவாத்மாவுக்கு ஏற்படா விட்டாலும், அந்த சரீரத்தில் இருக்கக் கூடிய வாதம், பித்தம், கபம் முதலான தாதுக்களின் ஏற்றத் தாழ்வுகளாவே அந்த ஜீவாத்மாவுக்கு இன்பங்களும், துன்பங்களும் ஏற்படுகின்றன. அவற்றைத் தவிர்க்க முடியாது என்று பார்க்கிறோம். அதே போல், பரமாத்மாவுக்கும் உடல் இருக்கிறது என்றால், அவருக்கும் துன்பம் வந்து விடும்.

வேதத்திலும் –ந ஹ வை ஸ சரீரஸ்ய ஸத: ப்ரியாப்ரியயோ : அபஹதிரஸ்தி-
அதாவது “சரீரத்தோடு கூடியிருக்கும் ஒரு ஜீவனை இன்ப துன்பங்கள் ஒரு நாளும் விட்டுப் போகாது. சரீரத்தையே ஒழித்து அசரீரியாக ஒருவன் இருந்தால் தான் இன்ப துன்பங்களைத் தாண்டி இருக்க முடியும்” என்று கூறப்பட்டுள்ளது.
ஆகவே , உலகத்திலும் சரி, வேதத்திலும் சரி, உடல் இருந்தாலே துன்பம் உண்டு என்று நாம் காண்கிற படியால், இந்த உலகமே பரமாத்மாவுக்கு உடல் என்று நீங்கள் சொல்லுகிறபடியால், பரமாத்மாவுக்கும் துன்பம் வந்து விடும்.
போகம் என்றால், இன்ப துன்பங்களின் அனுபவம். போக்தா என்றால், அந்த இன்ப துன்பங்களை அனுபவிப்பவர் என்று பொருள்.
போ₄க்த்ரா பத்தி: – பரமாத்மாவுக்கும் சரீரம் உண்டு என்றால், அவரும் இன்ப துன்பங்கணள அனுபவிக்க வேண்டி வரும் என்று பொருள்.
அவி பா₄க₃: – ஆகவே , பரமாத்மாவுக்கும் இன்ப துன்பங்கள் உண்டு என்றால், அவருக்கு ஜீவனின் தன்மை வந்து விட்டது. ஜீவனின் தன்மை இது, பரமாத்மாவின் தன்மை இது என்று பிரித்து வைக்க இயலாது.
அதனால், பரமாத்மாவுக்கு உடல் இருக்கிறது என்று சொல்ல முடியாது. உடல் இல்லாமலேயே பரமாத்மா உலகமாக மாறுகிறார் என்று சொன்னால், பரமாத்மாவுக்கே பல குற்றங்கள், அபுருஷார்த்தங்கள் ஏற்பட்டு விடும். அதனால், இரண்டு பக்கங்களிலும் சிரமம் இருக்கிறபடியால், பரமாத்மா ஜகத் காரணம் அல்ல , பிரதானம் தான்.

வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்
சேத் –
“இவ்வாறு கூறினால்” என்று பூர்வ பக்ஷியின் வாதத்தை வ்யாஸர் நினைவூட்டிக் கொள்கிறார்
ஸ்யாத் – “இருக்கட்டும்” – “ஸ்வபா₄வ விபா₄க₃ம் -அதாவது தன்மைகளின் பாகுபாடு இருக்கட்டும்”
பரமாத்மாவுக்கு உலகமனைத்தும் உடலாக உள்ளது என்று கொண்டாலும் சித், அசித், ஈஸ்வரன் ஆகியோரின் தன்மைகளில் கலப்பு (அவிபா₄க₃ம் – வரை யறை இல்லாமை ) ஏற்படாது, பாகுபாடு இருக்கும் என்று கூறுகிறார்.-சரீரம் இருந்தாலே துன்பங்களைத் தவிர்க்க முடியாது என்று பூர்வ பக்ஷி கூறி யிருந்தார். அதில், வேத வியாஸர்
வேறுபடுகிறார். பொதுவாக, உடல் இருந்தாலே துன்பம் உண்டு என்று கூற முடியாது; பாவம் புண்ணியம் என்கிற கர்மத்தின் காரணமாக ஏற்பட்ட உடல் இருந்தால், துன்பங்கள் கண்டிப்பாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும் என்பது வியாஸருடைய கருத்து.
ஏனென்றால், ஒரு ஜீவாத்மாவுக்கு முக்தி அடைந்த பிறகும் கூட, வைகுந்தத்தில் உடல் இருக்கிறது என்று உபநிஷத்துக்கள் சொல்லுகின்றன. “ஸ ஏகதா பவதி, த்ருதா பவதி” என்று பல உடல்களை ஜீவாத்மா முக்தி நிலையில் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. முக்தி அடைந்த ஜீவாத்மாவுக்கு துன்பங்கள் கண்டிப்பாக வர முடியாது. -அதனால், கர்மத்தால் ஏற்பட்ட உடல் இருந்தால், துன்பம் ஏற்படும் என்று தான் கொள்ள வேண்டும்.
ஆகையால், இந்த உலகமனைத்தும் பரமாத்மாவுக்கு சரீரமாக இருந்தாலும், அவர் அபஹத பாப்மா என்று சொல்லப் படுகிறபடியால், கர்மங்களை அற்றவர். அதனால் அவருக்கு சரீரம் இருந்தாலும் துன்பம் ஏற்படாது என்பது வேத வியாஸருடைய சமாதானம்.

லோகவத் – “உலகத்தில் இருப்பது போல்”. அரசனும் பொது மக்களும் கொசுக்கள் அதிகமாக உள்ள இடத்தில் இருந்தாலும், அரசன் தன் தொண்டர்களால் சாமரத்தால் விசிரப் படுவதால்,கொசுக்களால் கடிக்கப் படாமல் இருக்கிறார், ஆனால் பொதுமக்கள் கடிக்கப் படுகிறார்கள். உடல் இருப்பதாலேயே இருவரும் கடிக்கப்பட வேண்டும் என்பதல்ல -அதே போல். பரமாத்மாவுக்கும் சரீரம் இருந்தாலும் அவருக்கு ’அபஹத பாப்மத்வம்’ (கர்மங்களற்றிருத்தல்) என்கிற சிறந்த சக்தி உள்ளபடியால் அவருக்கு எந்தத் துன்பமும் ஏற்படாது.
ஆக சேதனாசேதனங்கள் அனைத்தையும் தனக்கும் உடலாகக் கொண்டிருந்தாலும், அவருக்கு எந்த தோஷங்களும் வராது என்கிறபடியால் சேதனாசேதநங்களை சரீரமாகக் கோண்ட ப்ரஹ்மமே ஜகத்காரணம் ஆவார்.

(இதே போல் பரமாத்மாவுக்கு -ஸர்வ லோகேஸ்வரன் -அபஹதபாப்மாத்வம் -ஸர்வசக்தி இவையே விசிறி -எத்தனை சரீரங்களும் இருந்தாலும் துன்பம் படமாட்டார்)

(கீழேயும் இதே போல் பார்த்தோம் -அது அந்தர்யாமி விஷயம் –(1-2-8) ஸம்போ₄க₃ ப்ராப்தி: இதி சேத் ந வைசேஷ்யாத்” – இதில் பூர்வ பக்ஷியின் கேள்வியும் வ்யாஸரின் பதிலும் உள்ளன.
ஸம்போ₄க₃ப்ராப்தி: – இது பூர்வ பக்ஷியின் கேள்வி. ஸம்போகம் என்றால் உலகத்தில் ஏற்படும் ஸுகம் மற்றும் துக்கத்தின் அநுபவம். ப்ராப்தி என்றால் அடைவது. பூர்வ பக்ஷீ கேட்கிறார் – ஒரு ஜீவாத்மா உடலுக்குள் இருக்கிறபடியால் உலகத்தில் ஸுகம் மற்றும் துக்கங்களை அநுபவிக்கிறார் என்று நாம் பார்க்கிறோம். அதே போல் பரமாத்மாவும் இந்த உடலுக்குள் இருக்கிறார் என்றால், அவரும் ஸம்ஸாரத்தில் ஏற்படும் ஸுகம் மற்றும் துக்கத்தின் அநுபவத்தாய் அடைய நேரிடுமே ?
இதி ந சேத் – “இவ்வோறு கூறினால் அது தவறு” – வ்யாஸர் இதற்கு பதில் கூறுகிறார்.
வைசேஷ்யாத் – “(காரணத்தில் இருக்கும்) சிறப்பால்” – அதாவது – “ஒரு ஜீவாத்மா உடலில் இருப்பதற்கான காரணத்துக்கும் பரமாத்மா இவ்வுடலில் இருப்பதற்கான காரணத்துக்கும் சிறப்பு (வேறுபாடு) இருக்கிறபடியால்”.
உடலுக்குள் இருப்பது மட்டுமே ஸுகம் மற்றும் துக்கத்துக்குக் காரணம் ஆகாது. எந்த காரணத்தால் ஒருவர் அந்த உடலுக்குள் இருக்கிறார் என்று ஆராய வேண்டும்.
ஜீவாத்மோ ஓர் உடலை அடாய்வதற்குக் காரணம், தான் முன் ஜன்மங்களில் செய்த பாபம் மற்றும் புண்ணியம் என்னும் கர்மம் தான். அதனால் அந்த உடல் அவருக்கு ஸுகம் மற்றும் துக்கத்தைத் தருகிறது.
பரமாத்மாவோ தன்னுணடய கருணையால் இந்த உடலுக்குள் இருக்கிறாரே தவிற, கர்மத்தால் அல்ல. எனவே அவருக்கு எந்த ஒரு ஸுகமோ துக்கமோ இதனால் ஏற்படாது.
இதை உபநிஷத்தே அழகான ஒரு உவமையைக் கொண்டு சொல்கிறது –
த்₃வோ ஸுபர்ணோ ஸயுஜா ஸகா₂யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிசஸ்வ ஜாத |
தயோ: அந்ய: பிப்பலம் ஸ்வாது₃ அத்தி அநச்நன் அந்ய: அபி₄சாகசீதி||

இந்த உடல் என்ற ஒரு மரத்தில் ஜீவாத்மா என்றும் பரமாத்மா என்றும் இரண்டு பறைவகள் உள்ளன. அந்த மரத்தில் பழங்கள் உள்ளன. அவைதான் கர்மத்தின் காரணமாக ஏற்படும் ஸுக துக்கங்கள். ஜீவாத்மா அந்த பழத்தை உண்கிறது. பரமாத்மா என்ற மற்ற ஓரு பறவை அதை உண்ணாமல் ஒளியோடு திகழ்கிறது.

————-

2-1-6-ஆரம்ப₄ணாதி₄கரணம்-மண்ணும் குடமும் வெவ்வேறு பொருள்களா?

காரணமும் காரியமும் வெவ்வேறு என்ற பூர்வ பக்ஷம்-2-1-6-ஆரம்ப₄ணாதி₄கரணம் – ஸங்கதி முன்பு -2-1-4- விலக்ஷணத்வாதிகரணத்தில் “அஸத் இதி சேத் ந பிரதிஷேத்
மாத்ரத்வாத்”
என்ற நான்காவது ஸூத்திரத்தில் “காரணமும் காரியமும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டிருக்கலாம்;-ஆனால் காரணமும் காரியமும் வெவ்வேறு பொருட்கள் அல்ல. அதனால் இல்லாத ஒரு பொருள் புதிதாக உண்டாகிறது என்று சொல்லும் அஸத் கார்ய வாதத்தை நாங்கள் ஏற்கவில்லை . ஸத் கார்ய வாதம் தான் வேதாந்தம் ஒப்புக் கொள்வது” என்று வேத வியாஸர் கூறி யிருந்தார். இந்தப் பின் புலத்தில்,

பூர்வ பக்ஷம் – இங்கு பூர்வ பக்ஷிகள் ந்யாய மதத்தைச் சேர்ந்தவர்கள், காரணப் பொருளைக் காட்டிலும் உண்டாக்கப்படும் காரியப் பொருள் வேறுபட்டது தான், ஒரே பொருள் காரணமாகவும் காரியமாகவும் இருக்க முடியாது என்று வாதிடுகிறார்கள். அதற்கு அவர்கள் காட்டும் யுக்திகள் –
1–விலக்ஷண புத்தி போதகத்வாத் -அறிவு வேறுபாடு – குடமும், மண்ணும் வெவ்வேறு ஜ்ஞானங்களை நமக்கு ஏற்படுத்துகின்றன.
2- சப்த பேதக -சொல் வேறுபாடு – குடம், துணி என்பது போல் மண் குடம் என்ற இரு சொற்களால் குறிக்கப்படுபவையும் வேறு தான்.
3-காரிய பேதக -பயன் வேறுபாடு – குடத்தைக் கொண்டு தண்ணீரை சுமந்து வர முடியும், மண்ணைக் கொண்டு செய்ய முடியாது.
4-கால வேறுபாடு – குடம் இல்லாத காலத்திலும் மண் இருப்பதைப் பார்க்கிறோம். அதனால் அவை வெவ்வேறு தான்.
5-வடிவ வேறுபாடு – மண் என்பது பொடியாகவோ , கட்டியாகவோ இருக்கும். குடத்துக்கு வாயும் வயிறுமான வடிவம்.
6-பரிமாண வேறுபாடு -அளவில் வேறுபாடு. தனித்தனி நூல்களின் அளவை விட துணியினுடைய அளவு அதிகமானது.
7-பாவ அபாவ முரண்பாடு – மண் இருக்கும் போதே குடம் அழிந்து விட்டது என்று சொல்லுகிறோம். அதனால் ஒரே பொருள் இருக்கிறது என்றும் அழிந்து விட்டது என்றும் சொல்லப்பட முடியாத படியால் அவை வெவ்வேறு தான்.
8-எண்ணிக்கையில் வேறுபாடு – நூல்கள் பல, ஆனால் காரியமான துணி ஒன்று தான்.
9-காரக வியாபாரங்கள் பயனில்லாமல் போகும் – குடம் புதிதாக உண்டாக்கப்பட வில்லை என்றால் குடத்தை உண்டாக்குவதற்கான செயல்கள் வீணாகத்தான் போய் விடும்.
10-நித்ய அநித்ய பாகுபாடு இல்லாமை – இது நித்தியமான பொருள், இது அநித்தியமான உண்டாகி அழியக் கூடிய பொருள் என்கிற வேறுபாடே சொல்ல முடியாது, எல்லாப் பொருள்களுமே எப்போதும் இருப்பதால்.

ஸாங்க்ய மதத்தில் உள்ள தவறுகள்
ஸாங்க்யர்களின் பதில் – இந்த வாதத்துக்கு ஸாங்க்ய மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு விதமாக ஸத் கார்ய வாதத்தை பின் பற்றி பதில் அளிக்கிறார்கள். அவர்கள் சொல்வது அபி₄வ்யக்தி வாதம் என்று அழைக்கப்படுகிறது,
(உண்டாகுவது -வேறு -வெளிப்படுவது வேறு தானே -சூர்யன் கிழக்கு உதிக்கிறார் பிறக்கிறார் என்றும் சொல்ல மாட்டோம் -தோற்றம் -எள்ளுக்குள் எண்ணெய் போல்-) குடம் என்கிற காரியம் புதிதாக உண்டாக்கப் படுவதில்லை , ஆனால் அதற்கு அபிவியக்தி (தோற்றம்) என்று ஒன்று உண்டு. அந்த தோற்றம் ஏற்பட வேண்டுமென்றால், அதற்கு அந்தக் குயவன் சில செயல்களைச் செய்ய வேண்டும். -அதனால் நாம் செயல்கள் செய்வது வீணாகிவிடுமே என்று முன் சொன்ன கேள்வி வராது. எந்தப் பொருட்கள்
எப்போதும் தோற்றுகின்றனவோ , அவை நித்யமான பொருட்கள், அவ்வப்போது வெளிப்படுபவை அநித்யமான பொருட்கள் என்று பாகுபாடையும் சொல்லி விடலாம்.

இதற்கு நியாய மதத்தைச் சேர்ந்த பூர்வ பக்ஷிகளின் கண்டனம் – ஒரு குடம் அபி வியக்தி (தோற்றம்) அடைகிறது என்று சொல்லுகிறீர்களே , அந்தத் தோற்றத்துக்கு தோற்றம் உண்டா? தோற்றம் கிடையாதா? அல்லது புதிதாக உண்டாகிறதா?
1-தோற்றத்திற்குத் தோற்றம் உண்டு என்று சொன்னால், அந்தத் தோற்றத்திற்கு இன்னுமொரு தோற்றம், அதற்கு மற்ற ஓரு தோற்றம் என்று இது முடிவே இல்லாமல் ஏற்க வேண்டி வரும். இது ’அநவஸ்தா₂’ என்ற தோஷமாகும்.
2-குடத்தினுடைய தோற்றமானது தோற்றமே இல்லாதது என்று சொன்னால், அப்போது குடம் என்பது எப்போதுமே தோற்றிக் கொண்டு இருக்க வேண்டும்.
3-குடத்தினுடைய தோற்றம் என்பது புதிதாக உண்டாக்கப் படுகிறது என்று சொன்னால், அஸத் கார்ய வாதத்தை ஏற்றுக் கொண்டதாக ஆகி விடும், அதற்கு பதிலாக குடமே புதிதாக உண்டாகிறது என்றே ஏற்றுக் கொண்டு விடலாம்.
மேலும், அபிவியக்தி என்கிற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய செயல்கள் ஏன் குறிப்பிட்ட ஒரு பொருளைத் தான் தோற்றமடைய வைக்கின்றன என்று உங்களால் சொல்ல முடியாது. ஒரு விளக்கு ஏற்றப்பட்டால், தனக்கு அருகில் இருக்கும் குடம், துணி, மரம் முதலான எல்லாப் பொருள்களையுமே தோற்றமளிக்க வைக்கும். அதே போல், மண்ணில் குடம், தட்டு, சுவர் என்று பல பொருட்கள் உள்ளபடியால், குயவன் செய்யும் செயல்களாலே ஏன் குடம் தான்
உண்டாகிறது? சுவரோ , தட்டோ உண்டாகவில்லை ? இந்தக் கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை .
அதனால் காரணமும் காரியமும் வெவ்வேறாகத் தான் இருக்க வேண்டும். நீங்கள் விலக்ஷணத்வாதிகரணத்தில் காரணமும் காரியமும் ஒன்று தான், ஆனால் வெவ்வேறு தன்மைகளோடு இருக்கின்றன என்று சொன்னது பொருந்தாது

உபநிஷத் தெளிவாகக் கூறும் ஸத் கார்ய வாதம்-ஸித்தாந்தம் – பூர்வ பக்ஷிகளின் இந்த வாதத்ணத 6 ஸூத்ரங்களால் இந்த அதிகரணத்தில் முறியடிக்கிறார்.
1- தத₃நந்யத்வம் ஆரம்ப₄ண சப்₃தா₃தி₃ப்₄ய:
தத₃நந்யத்வம் –
(இந்த ஜகத்) அந்த ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு பொருள் அல்ல
ஆரம்ப₄ண சப்₃தா₃தி₃ப்₄ய: – ’ஆரம்ப₄ணம்’ என்ற சொல்லைத் தொடக்கமாகக் கொண்ட வாக்கியங்களால்.(பஞ்சமி பஹு வசனம் )-

சாந்தோக்ய உபநிஷத்தில் 6ஆம் அத்யாயத்தில் ’ஸத்₃வித்₃யா
’ உபதேஸத்தில் ’ ஆரம்ப₄ணம்’ என்ற சொல் தொடங்கி பல வாக்கியங்கள் இடம் பெற்றுள்ளன.
அவற்றை ஆராய்ந்தால் காரணமும் காரியமும் ஒன்றென்று தெரிகிறது.
உத்தாலகர் என்ற தந்தை , தன் மகனான ஸ்வேத கேதுவைப் பார்த்துக் கேட்கிறார் – “
உததம் ஆதே₃ சம் அப்ராக்ஷ்ய: யேந அச்ருதம் ச்ருதம் ப₄வதி” அதாவது – “எந்த ஒரு பொருளை அறிந்தால், உலகத்தில் அனைத்துப் பொருள்களையும் அறிந்ததாக ஆகுமோ , அந்த ப்ரஹ்மத்தைப் பற்றி உன் ஆசாரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாயா? என்று.
எப்படி ஓரு பொருளை அறிந்தால், அனைத்தையும் அறிந்ததாகும் என்று புரியாமல், மகன் கேட்க, அதற்கு தந்தை ஒரு எடுத்துக் காட்டைக் கூறுகிறார் – “
யதா₂ ஸோம்ய ஏகேந மிருத் பிண்டே ₃ந ஸர்வம் ம்ருண் மயம் விஜ்ஞாதம் ஸ்யாத்” என்று. “எப்படி ஒரு மண் கட்டியை அறிந்து கொண்டால், அதிலிருந்து உண்டாகக் கூடிய குடம், தட்டு, சுவர், முதலான எல்லாப் பொருட்களையும் ஒரு விதத்தில் அறிந்ததாக ஆகுமோ , அதே போல் இந்த ப்ரஹ்மத்தை அறிந்தால், உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும்” என்று தந்தை கூறினார்.

நிலைகள் வேறு, பொருள்கள் வேறல்ல
அப்போது மண்ணும் குடமும் வெவ்வேறு பொருட்கள் கிடையாதா? மண்ணை அறிந்தால் எப்படி குடம் முதலானவற்றை அறிந்ததாக ஆகும்? என்கிற சந்தேகம் மகனுக்கு எழ , அதற்கு பதில் கூறுகிறார்,
“வாசா ஆரம்ப₄ணம் விகார: நாமதே₄யம் ம்ருத்திகா இத்யேவ ஸத்யம்” என்று. “மண்
என்ற ஒரே பொருள் தான், வெவ்வேறு விதமான பயன்பாடுகளுக்காக வெவ்வேறு பெயர்களையும் வெவ்வேறு வடிவங்களையும் அடைகிறது. குடம், தட்டு, முதலான காரியப் பொருள்களும் கூட மண் என்று தான் பிற்பாடும் அறியப் படுகின்றன. அதனால் அவை அனைத்துமே மண் தான். தனி பொருள் அல்ல” என்று இதற்குப் பொருள்.

அடுத்து, மற்றுமொரு வாக்யம் – “ஸதே₃வ ஸோம்ய இதம் அக்₃ரே ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்”.
இத₃ம்-
நீ கண் முன்னால் பார்க்கக் கூடிய ஜகத்து அனைத்துமே
அக்₃ரே – ஸ்ருஷ்டிக்கு முன்னால் ப்ரளய காலத்தில்
ஸதே₃வ ஆஸீத் ஸத்தாகவே இருந்தது அதாவது ப்ரஹ்மமாகவே இருந்தது.
இதனாலும் உலகமும் ப்ரஹ்மமும் ஒன்று தான் என்று தெரிகிறது.
அதற்குப் பின் ப்ரஹ்மம் இந்த உலகத்தை ஸ்ருஷ்டிக்கும் போது எடுக்கக் கூடிய ஸங்கல்பம் காட்டப் படுகிறது – “
ப₃ஹு ஸ்யாம், ப்ரஜாயேய” என்று. அதாவது, -“நான் பலவாக ஆகக் கடவேன்” என்று ப்ரஹ்மம் எண்ணுகிறது. இதனாலும் ஒன்றான ப்ரஹ்மமும் பலவான உலகப் பொருட்களும் ஒன்று தான் என்று தெரிந்து கொள்கிறோம்.
இந்த வாக்கியங்கள் எல்லாம் தெளிவாக ஸத் கார்ய வாதத்தை போதித்து, பெயர் வடிவம் பயன் அளவு முதலான வேறுபாடுகள் அப்பொருளின் நிலை மாறுகிற படியால் தான் என்று கூறுகின்றன

2-1-6-ஆரம்ப₄ணாதி₄கரணம்-ஒரே பொருளுக்குத்தான் வெவ்வேறு நிலைகள்-அவஸ்தா பேதங்கள்

பூர்வபக்ஷியின் கேள்வி-பூர்வபக்ஷி, மண் முதலான காரணப் பொருள்களும் குடம் முதலான
கார்யப் பொருள்களும் ஒன்றாக இருக்க முடியாது என்று பத்து காரணங்களைச் சொல்லி வாதிட்டார். -அதற்கு வேத வியாஸர், முதல் ஸூத்ரத்தாலே உபநிஷத்துக்களே எப்படி ஸத் கார்ய வாதத்தைக் காட்டுகின்றன என்று சொல்லி, அதன் மூலம் ப்ரஹ்மமும் இந்த ஜகத்தும் வேறல்ல , ஒரே பொருள் தான் என்று நிரூபித்தார். தற்போது அதற்கு மேல் சில சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார்.
இங்கு பூர்வபக்ஷீ ஒரு கேள்வியை எழுப்புகிறார் – சொல் மாறுபடுதல், வடிவம் மாறுபடுதல், அளவு மாறுபடுதல், ஜ்ஞானம் மாறுபடுதல் முதலானவை சில இடங்களில் ஒரே பொருளுக்கு பல நிலைகள் ஏற்படும் போதும் காணப்படுகின்றன, வெவ்வேறு பொருள்களுக்கு இடையிலும் காணப்படுகின்றன. -அதாவது, ஒரே உடல், சிறிதாக இருக்கும் போது இது குழந்தை -பாலகன் என்று அழைக்கப்படுகிறது-வயதான பிறகு இளைஞன் – வயோதிகன் என்று அழைக்கப்படுகிறது. உடல் ஒன்று தான், நிலைகள் தான் மாறுகின்றன. அதனாலேயே சொல், வடிவம், ஜ்ஞானம், அளவு முதலானவை மாறி விடுகின்றன.-அதே போல், துணி, குடம் என்று இரண்டு வெவ்வேறு பொருள்களை எடுத்துக் கொண்டாலும், சொல், ஜ்ஞானம், வடிவம், அளவு, இவை முதலானவை மாறி விடுகின்றன. -ஒரு காரணத்திலிருந்து கார்யப் பொருள் உண்டாகும் பொழுது, இந்த இரண்டு விதத்தில் எதை நாம் ஏற்க வேண்டும் என்று கேள்வி. அதற்கு வேத வியாஸர், இரண்டாவது ஸூத்ரத்தில் பதில் கூறுகிறார்.

வ்யாஸரின் பதில்
2-பா₄வே ச உபலப்₃தே ₄:
– “இருக்கும் போதே கூட அறியப்படுகிறபடியால்”
எது இருக்கும் போது எது அறியப்படுகிறது? குடம், மோதிரம், துணி, முதலான கார்யப் பொருள்கள் இருக்கும் போதே , அந்தப் பொருள்களைப் பார்த்து, இது மண், இது தங்கம், இது பஞ்சு, என்று அதனதன் காரணப் பொருளும் அறியப் படுகிறது. இதற்கு பிரத்யபிஜ்ஞா என்று பெயர் சொல்வார்கள்.-முதலில், மண்ணைப் பார்த்து விட்டு, பிறகு குடத்தைப் பார்க்கும் போது, இந்தக் குடம் அந்த மண் தான் என்கிற ஜ்ஞானம் ஏற்படுகிறது. இதற்கு பிரத்யபிஜ்ஞா என்று பெயர். அப்படிப்பட்ட பிரத்யபிஜ்ஞா என்பது, குடத்தையும் துணியையும் பார்க்கும்போது ஏற்படுவது கிடையாது. அதனால் அங்கு பொருளே வேறுபடுகிறது என்று ஏற்றுக் கொள்வோம் -மண் & குடம், தங்கம் & மோதிரம், பஞ்சு & துணி – இவற்றுக்கு இடையில் இந்தப் பிரத்யபிஜ்ஞா என்பது இருக்கிற படியால், மண்ணைக் காட்டிலும் குடம் வேறல்ல – பஞ்சைக் காட்டிலும் துணி வேறல்ல-தங்கத்தைக் காட்டிலும் மோதிரம் வேறல்ல என்று தான் ஏற்க வேண்டும் – என்பது இந்த ஸூத்ரத்தின் பொருள்.

(ப்ரத்யபிஞ்ஞா-recognition)

மூன்றாவது ஸூத்ரத்தால், மற்றும் ஒரு காரணத்தைக் காட்டுகிறார் –
3–ஸத்வாச்ச அபரஸ்ய
–”(காரணமாக) மற்ற ஓன்றினுடைய (கார்யத்தினுடைய) இருப்பாலும்”
உலகத்தில் கார்யப் பொருள்களைப் பற்றிப் பேசும் போது, அவற்றை காரணப் பொருள்களாகவே பேசுகிறோம்.-காலையில் குயவன் வீட்டில் மண் குவியலைப் பார்த்து விட்டுச் சென்றவன், திரும்பவும் மதியம் வந்து பார்க்கும் போது, பல குடங்களைக் காண்கிறான். உடனடியாக, “இந்தக் குடங்கள் அனைத்தும் காலையில் மண்
கட்டியாகவே இருந்தன” என்று கூறுகிறான். ஆகவே , குடங்கள் தான் முன் காலத்தில் மண் கட்டியாக இருந்தன என்று தெரிகிறது. அதனால் கார்யம், காரணமாக முன்னால் இருந்தது என்று தான் உலகத்தில் நாம் சொல்கிறோம்.
வேதமும் இதே போலே , “ஸதேவ ஸோம்ய இதம் அக்ரே ஆஸீத்” – இந்த உலகமனைத்தும் முன்னால் ப்ரஹ்மமாகவே இருந்தது என்று சொல்கிறது. ஆகையால், குடம் மண்ணைக் காட்டிலும் வேறு பொருள் அல்லாதது போல், இந்த உலகமும் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு பொருள் அல்ல என்று நாம் அறியலாம்.

ஸத் அஸத் என்பதன் பொருள்
4-அஸத்₃வ்யபதே₃சாத் நேதி சேத் ந த₄ர்மாந்தரேண, வாக்ய சேஷாத் யுக்தே : சப்₃தா₃ந்தராச்ச
அஸத்₃வ்யபதே₃சாத் ந
– இது பூர்வ பக்ஷியின் வாதம். வேதம் ஸ்ருஷ்டியைப் பற்றி உபதேசிக்கும் போது ’அஸத்₃வா இத₃ம் அக்₃ரே ஆஸீத்’ அதாவது ’இந்த உலகனைத்தும் ஸ்ருஷ்டிக்கு முன்னால் அஸத்தாகவே இருந்தது’ என்று கூறுகிற படியால், முன்னால் இல்லாத உலகம் தான் உண்டாக்கப் படுகிறது என்று அஸத் கார்ய வாதமே சரியானது.
இதி சேத் ந – இவ்வாறு நீ கூறினால், அது தவறு
தா₄ர்மாந்தரேண– வேறு ஓரு தர்மத்தை (பண்பை ) வைத்து (உலகத்தை அஸத் என்று சொல்கிறபடியால்)“உலகம் அஸத்தாக இருந்தது” என்ற விடத்தில் அஸத் என்ற சொல் முயல் கொம்பு, ஆகாசத் தாமரை போல் இல்லாத வஸ்துவைக் குறிக்கவில்லை . உலகம் இப்போது எந்தப் பண்புகளோடு உள்ளதோ அதற்கு முரண்பட்ட பண்புகளோடு ப்ரளய காலத்தில் இருந்தபடியால், அஸத் அதாவது இது மாதிரி இல்லாதது எனப்படுகிறது. -எப்படி இப்படிப்பட்ட பொருளை அறிந்து கொள்ளலாம் எனில் –
1- வாக்யசேஷாத் – “மிச்சமிருக்கும் வாக்கியத்தால்”. உபநிஷத்தில் அவ்விடத்திலேயே
(தத₃ஸதே₃வ ஸந் மந: அகுருத ஸ்யாமிதி) அதாவது-’அந்த அஸத் என்ற பொருள் எண்ணியது’ என்று உள்ளதால்,-இங்கு சொல்லப்பட்டது ஒரு இருக்கும் பொருள் தான், இல்லாத பொருள் எப்படி ஸங்கல்பம் செய்ய முடியும்?
2-யுக்தே :
– “யுக்தியால்”. யுக்திகளால் ஆராய்ந்தாலும் ஸத்த்வம் (இருத்தல்) என்பதும் அஸத்த்வம் (இல்லாமை ) என்பதும் –இருக்கும் ஒரு பொருளின் பண்புகள் என்று தான் தோற்றுகிறது. மண்ணானது குடத்தின் வடிவத்தோடு இருந்தால்“குடம் இருக்கிறது” என்கிறோம். வேறு வடிவத்தோடு இருந்தால் “குடம் இல்லை ” என்கிறோம்.
3-சப்₃தா₃ந்தராச்ச – (தத்₃தே₄த₃ம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத், தந் நாம ரூபாப்₄யாம் வ்யாக்ரியதே ) என்று ’அஸத்’ என்ற சொல்லை ’அவ்யக்ருதம்’ அதாவது ’பெயராலும் உருவத்தாலும் வேறுபடாதது’ என்று வேறொரு சொல்லால் வேதமே விவரிக்கிறது.
எனவே , இப்போது இருப்பது போல் வெவ்வேறு பெயர்களோடும் உருவங்களோடும் ஜகத் ப்ரளய காலத்தில் இருப்பதில்லை என்பதால் அஸத் என்று அழைக்கப்படுகிறது

(பஹுஸ்யாம் ப்ரஜாயேய – ஸூஷ்ம அசித் சித் விஸிஷ்ட ப்ரஹ்மம் ஸங்கல்பித்தது -பலவாகி நாம ரூபங்களைக் கொண்ட அனைத்துமாகி ஸ்தூல அசித் சித் விஸிஷ்ட ப்ரஹ்மமானது –
பாவாந்தர அபாவ பாவம் -இல்லாமையே இல்லை -துணி அழிந்து கந்தலாகும் -இல்லை என்றாலே வேறான வடிவில் உள்ளது -வாயும் வயிறுமான வடிவமான குடம் உடைந்து குடம் இல்லையாகி மண் துகளாகியது —அஸத் -பொருள் அல்லாத அடியேனை பொருளாக்கி அடிமை கொண்டாயே -)

(இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னில் வைத்தான் -பொருளல்லாத என்னை பொருளாக்கி அடிமையும் கொண்டான் -சேஷத்வ பரதந்த்ர ஸ்வரூப ஞானம் -மதிநலம் அருளி கைங்கர்யமும் கொண்டு அருளினான் -என்றபடி)

உலக எடுத்துக் காட்டுகள்
காரணப் பொருள் கார்யப் பொருளைக் காட்டிலும் வேறல்ல என்பதற்கு இரண்டு
எடுத்துக் காட்டுகளை வ்யாஸர் கூறுகிறார், அடுத்த இரண்டு ஸூத்ரங்களாலே –
5-பட வத் ச – “துணியைப் போலவும்”
உலகில் எப்படி நூல்களே ஒரு விதமான சேர்க்கையை அடையும் போது ’துணி’ என்ற வேறொரு பெயரையும் , உடுத்தப் படுதல் என்ற புதிதான பயன்பாட்டை யும் அடைகின்றனவோ , அதைப் போல் தான் ப்ரஹ்மமே இந்த உலகமாக மாறுகிறது.
6- யதா ₂ ச ப்ராணாதி₃: – “எப்படி ப்ராணன் முதலானவையோ ”
எப்படி உலகில் ஒரே ஒரு வாயுவானது சரீரத்துக்குள் நுழைந்து செயல்படும் போது, ப்ராண அபான வ்யான உதா₃ன ஸமான என்ற வெவ்வேறு பெயர்களையும், அதற்குரிய வெவ்வேறு செயல்பாடுகளையும் அடைகிறதோ , அதைப் போல் ப்ரஹ்மமும் இந்த உலகமாக மாறி வெவ்வேறு பெயர்கள் உருவங்களையும் செயல்பாடுகளையும் அடைகிறார்.
ஆகையால், ஸத் கார்ய வாதம் தான் வேதத்தில் ஏற்கப்பட்டுள்ளது. எனவே காரணப் பொருளும் காரியப் பொருளும் ஒன்று தான். அவற்றுக்குத் தன்மைகளில் தான் வேறுபாடுகள் இருக்க முடியும்.-அப்படித் தான் ப்ரஹ்மம் இந்த உலகுக்குக் காரணமாக இருக்கிறார்

—————

2.1.7 இதர வ்யபதேசாதி₄கரணம்-ப்ரஹ்மம் தனக்கே துக்கம் தேடிக்கொள்வாரா?

அதிகரணத்தின் பின்புலம்
2-1-7-இதர வ்யபதே₃சாதி₄கரணம் – ஸங்கதி –
முன் அதிகரணங்களில் ஜகத்து ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு அல்ல; அந்த ப்ரஹ்மமே தான் இந்த உலகமாக மாறி இருக்கிறது; அதனால் உலகத்துக்கு ப்ரஹ்மமே காரணம் என்று நிரூபிக்கப்பட்டது. உலகம் என்று சொன்னால், அதில் அசேதனப் பொருள்களும், சேதனர்களான ஜீவாத்மாக்களும் அடங்குவர்கள். அந்த இரண்டுக்குள், ஜீவாத்மாவை எடுத்துக் கொண்டு, ஜீவாத்மா என்பவர் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு அல்ல என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டால், அந்த ப்ரஹ்மத்துக்கே பல தோஷங்கள் வந்து விடுகின்றன.அதனால், அந்த ப்ரஹ்மம் உலகத்தை படைத்த ஜகத் காரணமாக இருக்க முடியாது என்று ஆஷேபம் எழுகிறது. அதற்கான விடையை வேதவியாசர் இந்த அதிகரணத்தில் வழங்குகிறார்.

பூர்வ பக்ஷம் – இந்த அதிகரணத்தின் முதல் ஸூத்திரம் பூர்வபக்ஷிகளின் வாதத்தைக் காட்டுகிறது.
1-இதர வ்யபதே₃சாத் ஹிதா கரணாதி₃ தோ₃ஷ ப்ரஸக்தி:
இதரன்
என்றால் மற்ற ஓருவன். அதாவது இந்த இடத்தில் ஜீவாத்மா.
வ்யபதேசம்-என்றால் சொல்லுவது-குறிப்பிடுவது.
“இதர வியபதேசாத்” என்றால் “ஜீவாத்மா ப்ரஹ்மமாகவே குறிப்பிடப் படுகிற படியால்” என்று பொருள். “தத் த்வம் அஸி ”, “அயம் ஆத்மா ப்ரஹ்ம”, “அஹம் ப்ரஹ்மாஸ்மி” முதலான பல வாக்கியங்களில், உபநிஷத்துக்களில் ஜீவாத்மா ப்ரஹ்மமாகவே குறிக்கப்படுகிறார்.
ஹிதம் என்றால் நன்மை , கரணம் என்றால் செய்வது, அகரணம் என்றால் செய்யாதது. ஹித அகரணம் என்றால் தனக்கான நன்மையைச் செய்யாமல் இருத்தல். இது ஒரு
தோஷம்.
அதே போல் தனக்குத்தானே தீமையைத் தேடிக் கொள்ளுதல் என்பது மற்ற ஓரு தோஷம்.-இவை யெல்லாம் ப்ரஹ்மத்துக்கு ஏற்பட்டு விடும் என்கிறார் பூர்வபஷி

(ஹித கரணமும் செய்யாமல் அஹித கரணங்களையே செய்து கொண்டு -நன்மைகளைச் செய்யாமல் தீமைகளையே செய்து கொள்ளும் தோஷங்கள் வரும் என்றவாறு)

பூர்வ பக்ஷியின் கேள்வி
ஜீவனும் ப்ரஹ்மமும் வேறல்ல என்று கொண்டால், எப்போதும் பாபங்கள் அற்றவராய், துக்கமே இல்லாதவராய், முழுமையான ஜ்ஞானம் சக்தி முதலானவற்றை உடையவரான ப்ரஹ்மம் தானே உலகத்தை ஸ்ருஷ்டிக்கும் போது, பாபங்களை உடையவராய், குறைந்த ஜ்ஞானத்தையும் சக்தியையும் கொண்டவராய், பல துக்கங்களை அனுபவிக்கும் ஜீவாத்மாவாக ஆகிறார் என்று சொல்ல வேண்டும். ஆகையால் தனக்கு தீமையைக் கொடுக்கும் செயலைத் தானே செய்கிறார் என்று ஆகி விடும்.
தனக்கு எது நன்மையோ , அப்படிப்பட்ட உலகத்தைப் படைத்துக் கொள்ளாமல், தனக்கே தீமை கொடுக்கும்படிக்கு படைத்துக் கொள்ளுகிறார் என்பதாலே ப்ரஹ்மத்துக்கு தோஷங்கள் வரும்.
அந்த ப்ரஹ்மம் அறியாமல் இப்படிச் செய்துவிட்டார் என்று சொல்ல முடியாது. அவர் அனைத்தையும் அறியக்கூடிய ஸர்வஜ்ஞன் ஆனபடியால். அவருக்கு சக்தி இல்லாத படியால், இன்ப மயமான உலகத்தைப் படைக்க முடியாமல் இப்படி உலகத்தை படைத்து விட்டார் என்று சொல்ல முடியாது, தன்னுடைய சங்கல்பத்தாலேயே அனைத்தையும் நடத்தும் வல்லமை படைத்தவரான படியால்,
யாருடைய வற்புறுத்தலாலோ , இப்படிச் செய்து விட்டார் என்று சொல்ல முடியாது, யாருக்கும் அடி பணியத் தெவை யில்லாத ஸ்வதந்த்ரமானவர் ஆனபடியால்.
அதனால் ப்ரஹ்மம் தானாக ஆசைப்பட்டு, யோசித்து, தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி, ஒரு உலகத்தைப் படைக்கும் போது, தனக்கே தீமையைக் கொடுக்கும்படி அந்த உலகத்தைப் படைப்பது என்பது பொருந்தாது. அதனால், ப்ரஹ்மம் ஜகத் காரணமாக இருக்க முடியாது என்பது ஆஷேபம்.

ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறு தான்
ஸித்தாந்தம் – 2—₄அதிகம் து பே₄த₃நிர்தே₃சாத்
– “வேறு அன்றோ , வேறாகச் சொல்கிறபடியால்”-உலகத்தில் இன்ப துன்பங்களை அநுபவிக்கும் ஜீவாத்மாவைக் காட்டிலும் ப்ரஹ்மம் வேறாகவே கூறப்படுகிறது –

யஸ்ய ஆத்மா சரீரம் ய: ஆத்மாநம் அந்தர: யமயதி – “இந்த ஜீவாத்மாவே
ப்ரஹ்மத்துக்கு உடல், இந்த ஜீவாத்மாவை ப்ரஹ்மம் தான் உள்ளிருந்து இயக்குகிறார்.
ப்ருத₂கா₃த்மாநம் ப்ரேரிதாரம் ச மத்த்வா ஜுஷ்ட: தத: தேந அம்ருதத்வம்
ஏதி –
ஆத்மாவையும் அவரை இயக்கும் பரமாத்மாவையும் வேறாகத் தெரிந்து கொள்பவன் அந்த பரமாத்மாவின் அருளுக்கு இலக்காகி முக்தியை அடைகிறான்
ஸ காரணம் கரணாதி₄பாதி₄ப: (கரண அதிபதிக்கு அதிபதி )- ப்ரஹ்மமே காரணம், புலன்களை இயக்கும் ஜீவாத்மாவை இயக்குபவர் அவரே
த்₃வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா₂யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே |
தயோ : அந்ய: பிப்பலம் ஸ்வாது₃ அத்தி அநச்நன் அந்ய: அபி₄சாகசீதி ||

ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இந்த உடல் என்னும் ஒரே மரத்தில் இருக்கும் இரண்டு பறவைகள். அதில் ஜீவாத்மா கர்மங்களின் பயனான இன்ப துன்பங்கள் என்னும் பழத்தை உண்டு, துவண்டு போகிறான், பரமாத்மா அப்பழத்தை உண்ணாமல் ஒளி விஞ்சி இருக்கிறார்.
ஜ்ஞாஜ்ஞௌ த்₃வௌ அஜௌ ஈசநீஸை – “ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஜ்ஞாநமுடையவர்கள், நித்யமானவர்கள், அவர்களில் ஒருவர் இயக்குபவராக உள்ளார், மற்ற ஓருத்தர் இயக்கப்படுகிறார்”
ப்ரதா₄ந ஷேத்ரஜ்ஞபதி: கு₃ணேச: – ப்ரதாநம் என்ற அசேதனப் பொருளுக்கும், ஜ்ஷேத்ரஜ்ஞர்கள் எனப்படும் ஜீவாத்மாக்களுக்கும்
நித்யோ நித்யானாம் சேதந: சேதநாநாம் ஏகோ ப₃ஹூனாம் யோ வித₃தா₄தி காமாந் – நித்யமாய் ஜ்ஞாநமுடையவரான ஒரே பரமாத்மா நித்யர்களாய் ஜ்ஞாநமுடையவர்களான
கணக்கில்லாத ஜீவாத்மாக்களுக்கு அவர்கள் ஆசைப்படும் பயன்களை யெல்லாம் வழங்குகிறார்.

உலகம் என்றாலே ப்ரஹ்மம் தான்
அடுத்த ஸூத்ரத்தால் ஒரு எடுத்துக்காட்டைக் கொண்டு
3-அச்மாதி₃வச்ச தத₃நுபபத்தி: –
“கல் முதலானவற்றைப் போலவும் அது (ஐக்யம்) பொருந்தாது”
எப்படி ஜ்ஞாநமற்றதாய், எப்போ தும் உருவத்தால் மாறிக்கொண்டே இருக்கும் அசேதநப் பொருளுக்கு ஜ்ஞாநம் உடையவராய், என்றும் மாறாத பரமாத்மாவோடு ஐக்யம் (ஒரே பொருளாய் இருத்தல்) பொருந்தாதோ , அதே போல் கர்மத்துக்கு வசப்பட்டு, பல விதமான துக்கங்களை அநுபவிக்கும் ஜீவாத்மாவுக்கும் கர்மத்துக்கு அப்பாற் பட்டவராய், துக்கமே இல்லாதவரான பரமாத்மாவவாடு ஐக்யம் (ஒரே பொருளாய் இருத்தல்) என்பது பொருந்தாது,
கேள்வி – பிறகு “தத் த்வம் அஸி” (அந்த பரமாத்மா தான் நீயாக இருக்கிறாய்), “அஹம் ப்₃ரஹ்மாஸ்மி” (நானே ப்ரஹ்மமாய் இருக்கிறேன்) என்று வேதாந்தம் எப்படிக் கூறுகிறது?
பதில் – அது அனைத்துமே சரீர-ஆத்ம-பா₄வத்தால் (உடல் ஆத்மா என்ற தொடர்பால்) பொருந்தும்.-உலகில் நாய், மனிதன் என்று உடலைக் குறிக்கும் சொற்கள் அதற்குள் இருக்கும் ஆத்மா வரை குறிப்பதைக் காண்கிறோம். அதே போல் ப்ரஹ்மத்துக்கு சேதனாசேதனங்கள் அனைத்துமே உடலாக இருக்கிற படியால் “தத் த்வம் அஸி” என்பதற்கு “ஜகத்தை ஸ்ருஷ்டித்த அந்த பரமாத்மா தான் உனக்குள் அந்தர்யாமியாக இருப்பவர்” என்று தான் பொருள், ஜீவனும் பரனும் ஒன்று என்றல்ல.
ஆக இவ்வாறு ஸூக்ஷ்மமான (பெயர் உருவ வேறுபாடுகள் அற்ற) சேதனாசேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மம் தான் ஸ்தூ₂லமான (பெயர் உருவ வேறுபாடுகளைக் கொண்ட) சேதனாசேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மத்தை (அதாவது ஜகத்தை ) படைக்கிறது.

——————-

2-1-8-உபஸம்ஹார த₃ர்சநாதி₄கரணம்–கருவிகளே இல்லாமல் ப்ரஹ்மம் படைக்க முடியுமா?

அதிகரணத்தின் பின்புலம்
2-1-8-உபஸம்ஹாரத₃ர்சநாதி₄கரணம் –ஸங்கதி –
முன் அதிகரணங்களில், சேதனாசேதனங்கள் அனைத்தையும் தனக்கு சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மம் தான் இந்த உலகத்துக்கு உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கிறது. என்று நிரூபிக்கப்பட்டது. அதற்கு மேல், சஹகாரி காரணம் என்று வேறு ஒன்றை எதிர்பார்க்காமலேயே ப்ரஹ்மம் இந்த ஜகத்தைப் படைக்கிறது என்று இந்த அதிகரணத்தில் வேதவியாசர் நிரூபிக்கிறார்.

பூர்வ பக்ஷம் – உபநிஷத்துக்களில் ஸ்ருஷ்டியைப் பற்றி உபதேசிக்கும் வாக்கியங்களைப் பார்ப்போம்.
(ததை ₃க்ஷத ப₃ஹு ஸ்யாம் ப்ரஜாயேய) அதாவது “அந்த ப்ரஹ்மம் ஸங்கல்பம்
செய்தது, நான் பலவாக ஆகக் கடவேன் என்று”.
(ஸோ காமயத) அதாவது “அந்த ப்ரஹ்மம் ஆசைப்பட்டது”.
(ஸ தபோ தப்யத ஸ தபஸ்தப்த்வா இத₃ம் ஸர்வம் அஸ்ருஜத)-அதாவது “அந்த ப்ரஹ்மம் ஸங்கல்பித்துக் கொண்டு இவ்வுலகத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களையும் ஸ்ருஷ்டித்தார்.
இப்படி ஸங்கல்பத்தின் மூலம் மட்டுமே ப்ரஹ்மம் உலகத்தைப் படைக்கிறார் என்று
சொல்லப்பட்டுள்ளது. இது பொருந்தாது. ஏன் என்றால், உலகத்தில் எந்த ஒரு படைப்பாளியும் ஒரு பொருளை உண்டாக்குவதற்குச் சில கருவிகளைச் சேகரித்து, அவற்றைப் பயன்படுத்தித் தான் ஆக வேண்டும் என்று காண்கிறோம். ஸங்கல்பத்தால் மட்டும் உலகத்தில் யாரும் எந்தக் கார்யத்தையும் ஏற்படுத்துவதில்லை -அதனால், ப்ரஹ்மத்துக்கும் இது பொருந்தாது என்கிறார் பூர்வ பக்ஷீ

பூர்வ பக்ஷியின் வாதம்
ஸந்தேகம்
– உலகத்தில் இருக்கும் ஜீவாத்மாக்கள் எல்லாம் அளவுபட்ட சக்தியை உடையவர்கள். அதனால், ஒரு குடத்தையோ , துணியையோ , ஆபரணத்தையோ உண்டாக்குவதற்கு சக்கரம், தரி, கருவிகள் முதலானவை தேவைப்படுகின்றன. ஆனால், ப்ரஹ்மமோ சர்வ சக்தி, அதாவது, எல்லை யில்லாத உயர்ந்த சக்தியை உடையது என்று
உபநிஷத்துக்கள் சொல்லுகிறபடியால், அவர் கருவிகளை எதிர்பார்க்காமலேயே படைக்கிறார் என்று ஒப்புக்கொண்டால் என்ன? சக்தி இல்லாதவர்கள் கருவிகளை எதிர்பார்க்கிறார்கள். சக்தி இருக்கும் ப்ரஹ்மம் கருவியை எதிர்பார்ப்பதில்லை
என்று கொள்வோமே ?
பூர்வ பக்ஷியின் பதில் – கருவிகளின் தேவை என்பதும், கருவிகள் தேவைப்படாமை என்பதும் சக்தி இல்லாததையும், சக்தி இருப்பதையும் பொறுத்து வருபவை அல்ல. யாருக்கு ஒரு பொருளை உண்டாக்கும் சக்தி இல்லையோ , அவர்களிடத்தில் அதற்கான கருவிகளைக் கொடுத்தாலும், அவர்களால் அப் பொருளை உண்டாக்க இயலாது. யாருக்கு
ஒரு பொருளை உண்டாக்கும் சக்தி உள்ளதோ , அவரும் கருவிகள் இல்லாமல் அந்தப் பொருளை உண்டாக்க விட முடியாது. கருவிகளைக் கொடுத்தால், அவற்றைப் பயன்படுத்தித் தான் அப் பொருளை உண்டாக்க வேண்டும். அதனால், சக்தி இருந்தாலும் இல்லா விட்டாலும், உபகரணங்களைச் சேகரித்தல், பயன்படுத்துதல் என்பது இன்றியமையாதது.-சரி, ப்ரஹ்மத்துக்கு எந்தக் கருவிகளும் இல்லை என்று எப்படித் தெரிந்து கொள்ளுகிறோம் என்றால், அதையும் வேதாந்தமே சொல்லுகிறது
(्ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்) அதாவது “ஸ்ருஷ்டிக்கு முன்னால் இந்த உலகமனைத்தும் ப்ரஹ்மமாகவே இருந்தது. அந்த ஒரே ஒரு
பொருள் தான் இருந்தது. வேறு எதுவும் இல்ணல.
(ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்₃ரம்ஹா ந ஈசான: நேமே த்₃யாவா ப்ரிதிவீ ந நக்ஷத்ராணி) அதாவது “ப்ரளய காலத்தில் நாராயணன் ஒருவர் தான் இருந்தார். மற்ற தெய்வங்களும் கிடையாது. உலகங்களும் கிடையாது. எந்தப் பொருள்களும் கிடையாது” என்றும் உபநிஷத் கூறுகிறது. அதனால், ஸ்ருஷ்டிக்கு முன்னால் கருவிகள் எதுவுமே உலகத்தில் இல்லாத படியால், அந்தக் கருவிகளைப் பயன்படுத்தி ப்ரஹ்மம் இந்த உலகத்தைப் படைத்திருக்க முடியாது. அதனால், ப்ரஹ்மம் கருவிகள் இல்லாதபடியால், ஜகத்காரணமாக ஆக முடியாது என்பது பூர்வ பக்ஷியினுடைய வாதம்.

கருவிகள் இல்லாமலேயே உண்டக்கலாம்
ஸித்தாந்தம் –
இதற்கு இரண்டு ஸூத்ரங்களால் வேதவியாசர் பதில் அளிக்கிறார்.
1-உப ஸம்ஹார த₃ர்சநாத் ந இதி சேத் ந க்ஷீரவத்ஹி
முதல் பகுதியாலே பூர்வ பக்ஷத்தைச் சொல்லி, மேல் பகுதியால் அதற்கு வேத வியாசர் விடை அளிக்கிறார்.
உப ஸம்ஹார த₃ர்சநாத் – இது பூர்வ பக்ஷியின் வாதம். உப ஸம்ஹாரம் என்றால் சேகரித்தல். தர்சனம் என்றால் காண்பது. உப ஸம்ஹார தர்சனம் என்றால் “உலகத்தில் ஒரு படைப்பாளி ஒரு பொருளை உண்டாக்குவதற்குக் கருவிகளைச் சேகரிப்பதை நாம் பார்க்கிற படியால்” என்று பொருள்.
ந – ஆகையால், நீங்கள் ப்ரஹ்மம் ஜகத்காரணம் என்று சொன்னது பொருந்தாது என்று பூர்வ பக்ஷீ வாதிடுகிறார்.
இதி சேத் ந – இது வேத வியாசரின் பதிலின் துவக்கம். “இவ்வாறு நீங்கள் கூறினால், அது தவறு” என்கிறார்.
க்ஷீரவத் ஹி– “பாலைப் போல் அன்றோ ”. ஒரு பொருளை உண்டாக்கும் சக்தி இருந்தாலும், வேறு சில கருவிகளைப் பயன் படுத்தினால் தான் ஒரு காரியத்தை ஒருவரால் உண்டாக்க முடியும் என்கிற நியமம் தவறானது என்கிறார் வ்யாஸர்.
பாலானது தானாகவே எந்த கருவியையும் பயன்படுத்தாமல் தயிரை உண்டாக்குகிறது. தண்ணீரானது எந்தக் கருவியையும் பயன்படுத்தாமல் கெட்டிப்பட்டு பனிக் கட்டியாக ஆகிறது. அதனால், பாலுக்கும் ஜலத்துக்கும் தயிரையோ , பனிக்கட்டியையோ உண்டாக்க எப்படி எந்தக் கருவிகளும் தேவையில்லையோ , அதே போல் ப்ரஹ்மமும் எந்தக் கருவிகளையும் பயன்படுத்தாமல் உலகத்தைப் படைப்பது பொருந்தும் என்கிறார் வேதவியாசர்.
“ஹி” என்கிற சொல் “இந்த அர்த்தம் மிகவும் ப்ரஸித்தமானது” என்று காட்டுகிறது. அதனால், பூர்வ பக்ஷியின் கேள்வி மிகவும் வலுவற்றது என்று வேத வியாசர் காட்டுகிறார்.
ஸந்தேகம் – பாலைத் தயிராக மாற்றுவதற்கு நாம் அதில் சிறிதளவு தயிரைச் சேர்க்கிறோமே ? பிறகு கருவிகள் தேவையில்லை என்று எப்படி கூற முடியும் என்று.
பதில் – தயிரைச் சேர்க்கா விட்டாலும், காலப் போக்கில் பால் திரிந்து போய் மாறத் தான் போகிறது. அந்த மாற்றத்தை வேகமாக்க மற்றும் ஒரு குறிப்பிட்ட சுவையை உண்டாக்குவதற்காகத் தான் பாலில் சிறிதளவு தயிரைச் சேர்க்கிறோம்.
தண்ணீரும் இயற்கையாகவே பனிக் கட்டியாக மாறிவிடும், சூரிய கிரணங்கள் அல்லது வெப்பம் இருந்தால், அது தடுக்கப்படுகிறது, அவ்வளவு தான்.

வேதத்திலிருந்து ஓர் எடுத்துக்காட்டு
ப்ரஹ்மம் என்ற பொருள் நாம் உலகத்தில் காணக்கூடியது அல்ல. வேதத்தைக் கொண்டு மட்டுமே அறியக் கூடியது. அதனால் அந்த ப்ரஹ்மத்தைப் புரிய வைக்க உலக எடுத்துக் காட்டை விட, வேதத்திலிருந்து எடுத்துக்காட்டு இருந்தால் மேலும் எளிமையாக இருக்கும் என்பதால் அடித்த ஸூத்ரத்தில் வேதவ்யாஸர் அதைக் காட்டுகிறார்.
2–தே₃வாதி₃வத₃பி லோகே – “(தங்கள்) உலகத்தில் தே₃வர்கள்
முதலானவர்களைப் போலவும்”
தேவர்கள் தங்கள் தங்கள் உலகங்களில் தங்களுக்குத் தேவையான பொருள்களைத் தாங்களே ஸங்கல்பத்தால் படைத்துக் கொள்கிறார்கள் என்று வேதம் கூறுகிறது. அதை எப்படி ஏற்கிறோமோ , அதே போல் ப்ரஹ்மமும் எந்தக் கருவிகளும் இல்லாமல், தன்னுடைய ஜ்ஞாநம் சக்தி முதலானவற்றை மட்டுமே கொண்டு உலகைப் படைக்கிறார் என்றும் வேதம் சொல்கிறபடியால், அதையும் அதே போல் ஏற்க வேண்டும்.
இவ்வாறு, ப்ரஹ்மம் எந்த ஸஹகாரி (உதவி) காரணத்தையும் எதிர்ப்பார்ப்பதில்லை என்று
நிரூபித்து, இந்த உலகத்துக்கு ப்ரஹ்மமே தான் உபாதாந காரணம் (மூலப் பொருள்), நிமித்த காரணம் (படைப்பாளி) மற்றும் ஸஹகாரி காரணம் (உதவிக் காரணம்) என்று வேதவ்யாஸர் நிரூபித்துள்ளார்.

எனவே , முதல் அத்யாயத்தில் அடையப்பட்ட “ப்ரஹ்மமே உலகமனைத்துக்கும் காரணம்” என்ற முடிவு சரியானதே , அதில் எந்த முரண்பாடுகளும் இல்லை என்று காட்டப்பட்டுள்ளது-

————

(ஸம்யக் ந்யாய கலாபேன மஹதா பாரதேன ச உபப்ருஹ்ம்ஹித வேதாய நமோ வ்யாஸாய விஷ்ணவே ||இது ஶ்ருதப்ரகாஶிகையில் ஸ்வாமி ஸுதர்சன ஸூரியினால் அனுக்ரஹிக்கப்பட்ட ஶ்லோகமாகும்-நன்றாகச் செய்யப்பட்ட ந்யாய கலாபத்தினாலும் (ப்ரஹ்ம மீமாம்ஸையினாலும்),பெரியதான (அல்லது) வைபவத்தையுடையதான பாரத்தினாலும், யாவர் விஷ்ணுவினுடைய ஆவேசாவதாரமான வேதவ்யாஸ பகவான், வேதத்திற்க்கு உபப்ருஹ்மணங்களைச் செய்தாரோ அவரின் பொருட்டு நம: என்பது இந்த ஶ்லோகத்தின் அர்த்தம்.-உபப்ருஹ்மணங்கள் உதவி கொண்டு வேதார்த்தங்கள் நிஶ்சயிக்கப்படாத பொழுது, அவை சரியாக இருப்பதில்லைஎன்பது * இதிஹாஸபுராணப்யாம் வேதம் ஸமுமபப்ருஹ்மயேத் * என்ற ப்ரமாண வசனத்தினால் தோற்றும்.)

2-1-9-க்ருத்ஸ்ந ப்ரஸக்த்யதி₄கரணம்-வேதத்தால் மட்டுமே அறியப் படும் பொருளுக்கு யுக்திகள் பொருந்தாது

அதிகரணத்தின் பின்புலம-2-1-9-க்ருத்ஸ்ந ப்ரஸக்த்யதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில், கருவிகளை எதிர்பார்க்காமல் உலகத்தை ப்ரஹ்மம் படைக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக பால் சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு ஆஷேபம் எழுகிறது – ப்ரஹ்மம் பாலைப் போன்றவர் என்றால்,பாலுக்கு அவயவங்கள் (பகுதிகள்) இருப்பது போல் ப்ரஹ்மத்துக்கும் பகுதிகள் உண்டா என்று. அதற்கு இவ்வதிகரணத்தில் பதில் கூறப்படுகிறது.
பூர்வ பக்ஷம்
– முதல் ஸூத்திரத்தாலே பூர்வ பக்ஷிகளின் வாதம் காட்டப்படுகிறது.
1-க்ருத்ஸ்ந ப்ரஸக்தி: நிரவயவத்வ சப்த₃கோபோ வோ
வேதத்தில் “ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்”முதலான வாக்கியங்களில் ஸ்ருஷ்டிக்கு முன்னால் ப்ரஹ்மம் என்ற ஒரே ஒரு பொருள் தான் இருந்தது; அதுதான் உலகத்துக்கு காரணம். -அப்போது எந்த பாகுபாடுகளும் பகுதிகளும் இருக்கவில்லை என்று சொல்கிறது.
பிறகு அந்த ப்ரஹ்மமே “நான் பலவாக ஆகக் கடவேன்” என்று ஸங்கல்பம் எடுத்துக் கொண்டு உலகமாக மாறுகிறது, அதாவது சேதனர்கள், அசேதனங்கள் என்கிற அனைத்தையும் படைக்கிறது என்றும் கூறுகிறது.
ப்ரஹ்மத்துக்கு பகுதிகள் இல்லை , அந்த ப்ரஹ்மம் உலகமாக மாறுகிறது என்று சொன்னால், அப்போது ப்ரஹ்மம் முழுவதுமாகவே உலகமாக மாறி விட்டது என்று ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படி என்றால், -இப்போது உலகம் இருக்கும் போது ப்ரஹ்மமே இல்லை என்று ஆகி விடும்.
க்ருத்ஸ்ந -முழுவதுமாக
ப்ரஸக்தி: மாறிவிடும் நிலை ஏற்படும்
அப்படி அல்ல; ஸ்ருஷ்டிக்கு முன்னாலும் காரணப் பொருளில் பகுதிகள் இருந்தன என்று சொன்னோம் என்றால், அப்போது வேதத்தில் எந்தெந்த வாக்கியங்கள் எல்லாம் “காரணப் பொருளான ப்ரஹ்மம் அவயவங்கள் அற்றது” என்று சொல்லுகின்றனவோ , அந்த வாக்கியங்கள் எல்லாம் கோபித்துக் கொள்ளும். -அதாவது அவை யெல்லாம் தவறாக ஆகி விடும்.-நிரவயவத்வ ப்ரஹ்மத்துக்குப் பகுதிகள் இல்லை என்று சொல்லும்
சப்த₃ வேதத்துக்கு
கோப: கோபமேற்படும்

பூர்வ பக்ஷியின் வாதங்கள்
அதனால் ப்ரஹ்மத்துக்கு அவயவங்கள் உண்டு என்றும் சொல்ல முடியாது; அவயவங்கள் இல்லாமலேயே உலகத்தைப் படைக்கிறது என்றால், முழுவதுமாக உலகமாக மாறி விட்டது என்று ஆகி விடும். அதனால் இப்படி இரண்டு வழிகளிலும் தோஷம் இருக்கிறபடியால், ப்ரஹ்மம் உலகத்துக்கு காரணமாகவே இருக்க முடியாது என்பது பூர்வ பஷம்.
இங்கு நாம் சொல்லலாம் – ப்ரஹ்மம் என்கிற பால் தனியான பரமாத்மாவை மட்டும் குறிக்க வில்லை ;-ஸூக்ஷ்மமாக, அதாவது, பெயர் வேறுபாடுகள் உருவ வேறுபாடுகள் இல்லாத, சேதனாசேதனங்களை சரீரமாகக் கொண்ட பரமாத்மா தான் இந்த இடத்தில் காரணப் பொருளாக சொல்லப்படுகிறது. அதனால் அந்தர் யாமியான பரமாத்மாவுக்கு அவயவங்கள் கிடையாது; ஆனால் உடலாக இருக்கும் சேதனாசேதனங்களுக்கு அவயவங்கள் உண்டு. அவை தான் உலகமாக மாறுகின்றன; பிறகு இந்தக் கேள்வி எப்படி பொருந்தும்? என்று
அதற்கும் பூர்வ பக்ஷி பதில் கூறுகிறார் –
அப்படிச் சொன்னாலும், இந்த தோஷம் வரும். ஒரு உடலுக்குள் இருக்கும் ஆத்மா, அந்த உடல் வேறு ஒரு நிலையை அடையும் போது, அந்த ஆத்மாவும் ஒரு நிலையை அடைகிறார். ஒரு குழந்தை இளைஞனாக மாறுகிறார் என்றால், அந்த ஆத்மா முழுவதுமாகவுமே இளைஞன் என்று தான் சொல்லப்பட வேண்டும். அதே போல், ப்ரஹ்மத்துக்கு பகுதிகள் கிடையாது; அவருடைய உடலான சேதனாசேதனங்கள் தான் உலகமாக மாறுகின்றன, அதனால் ப்ரஹ்மமே உலகமாக ஆகிறார் என்று சொன்னால், அப்போது ப்ரஹ்மம் ஒன்று மாடாக மாறி இருக்க வேண்டும். அல்லது சிங்கமாக மாறி இருக்க வேண்டும். அல்லது மனிதனாக மாறி இருக்க வேண்டும். இவை அனைத்துமாகவும் ஒரே காலத்தில் ப்ரஹ்மம் மாற முடியாது. ஒரு சரீரத்தை உடையவராக ப்ரஹ்மம் கொள்ளப்பட்டால், மற்ற சரீரங்களுக்குள் ப்ரஹ்மம் இல்லை என்று ஆகி விடும். அதனால் எப்படிப் பார்த்தாலும், ப்ரஹ்மம் உலகத்தை படைத்திருக்க முடியாது என்பது அவர்களுடைய வாதம்.

வேதத்தை மட்டுமே கொண்டு புரிந்து கொள்ள வேண்டும்
ஸித்தாந்தம் – (2) ச்ருதே : து சப்த₃ மூலத்வாத்
து
– அப்படியல்ல, அவயவங்கள் அற்ற ப்ரஹ்மம் உலகைப் படைப்பதில் எந்த முரண்பாடும் இல்லை
ச்ருதே : – அவயவங்கள் இல்லை , உலகத்துக்குக் காரணம் என்று இரண்டையும் வேதம் சொல்கிற படியால்
கேள்வி – உலகத்தில் நாம் பார்க்கும் நியதிகளை மீறி, வேதம் ஒரு விஷயத்தை உபதேசிக்க முடியுமா?-உலகத்தில் ஒருவர் “நெருப்பால் துணியை நனைக்க வேண்டும்” என்று சொன்னால், உடனடியாக “இது தவறான வாக்கியம்” என்று கூறி விடுகிறோம். ஏனென்றால், நெருப்பைக் கொண்டு எதையும் நனைக்க முடியாது-கொளுத்தத்தான் முடியும் என்று நாம் பார்த்திருக்கிறோம். அதே போல், அவயவங்கள் இல்லாத பொருள், பலவாக மாற முடியாது என்று உலகத்தில் நாம் காண்கிற படியால், அதற்கு முரண்பட்டு, அவயவங்கள் இல்லாமலேயே ப்ரஹ்மம் பலவாக மாறுகிறார் என்று வேதம் எப்படி உபதேசிக்க முடியும்?
அதற்கான பதில் – சப்த₃ மூலத்வாத் – இந்த ப்ரஹ்மம் என்கிற ஜகத் காரணப் பொருள், வேதத்தால் மட்டுமே அறியப்படும் பொருளாகும். உலகத்தில் நாம் பார்த்த பொருளைப் பற்றி ஒருவர் சொல்லும் போது, உலக நியதிகளுக்கு முரண்பட்டு கூற முடியாது. ஆனால், ப்ரஹ்மம் என்பவரோ , உலகத்தில் எந்த ப்ரமாணத்தாலும் அறியப் படாதவர். வேதத்தால் மட்டுமே அறியப் படுபவர்.-அதனால், உலகத்தின் நியதிகளை அவரிடம் பொருத்திப் பார்க்க முடியாது. வேதம் எப்படி எல்லாம் அவருடைய தன்மை களை கூறுகிறதோ , அப்படி எல்லாம் ஏற்கத் தான் வேண்டும் என்பது வேத வ்யாஸருடைய ஸித்தாந்தம்.
3-ஆத்மநி ச ஏவம் விசித்ரா : ச ஹி– “ஆத்மாவிலும் இப்படி; பல விதம் அன்றோ ”
ஒரு பொருளில் காணப்படும் தன்மை தான் மற்றவற்றிலும் இருக்க வேண்டும் என்று கூறினால், உலகத்தில் அசேதனப் பொருட்கள் அறிவற்றதாகவும், அழியக் கூடியதாகவும் இருக்கிறபடியால், ஜீவாத்மாவும் அப்படியே இருக்க வேண்டும் என்று ஆகி விடும். அதனால், உலகத்தில் அந்தந்தப் பொருள் ப்ரமாணங்களால் எப்படி அறியப் படுகிறதோ , அந்தந்த தனித் தன்மைகளோடு உள்ளது என்று ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

(சாங்க்யர்களும் ஆத்மாவுக்கு ஞானம் உண்டு என்கிறார்கள் அன்றோ -காண்கிற அசேதனப் பொருள்களின் தன்மையைப் பார்த்து காணமுடியாத சேதனத்துக்குக் கொள்ள முடியாது அன்றோ -மேலும் விசித்திரமான அசேதனப் பொருள்களையும் காண்கிறோம் –பாவ ஸ்வபாவ வைஷம்யம் காண்கிறோம் அன்றோ -அதே போல் ப்ரஹ்மத்துக்கும் கொள்ள வேண்டும் -வேதம் சொல்லுமடியே ஏற்றுக் கொள்ள வேண்டும் -)

பூர்வ பஷத்தில் உள்ள குறைபாடுகள்
4–ஸ்வ பக்ஷ தோ₃ஷாத் ச –
“தன் பக்ஷத்தில் இருக்கும் தோ₃ஷத்தாலும்”
இதுவரை ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்று சொல்லும் நம்முடைய பஷத்தில் எந்த தோஷமும் இல்லை என்று காட்டினார் வியாஸர். இப்போது ப்ரதானமே ஜகத் காரணம் என்று சொல்லும் பூர்வ பக்ஷிகளின் மதத்தில் தான் தோஷம் உள்ளது என்று காட்டுகிறார்.
பூர்வ பக்ஷி சொல்வது – ப்ரதானமே ஜகத் காரணம் என்று. ப்ரதானம் என்பது வேதத்தால் மட்டுமே அறியப்படும் பொருள் அல்ல. அனுமானத்தால் அறியப்படும் பொருள். அதனால், உலகத்தில் நாம் காணும் நியதிகளுக்கு அப்பாற்பட்டது என்றும் சொல்ல முடியாது. அந்த நியதிகளுக்கு உட்பட்டுத் தான் ஆக வேண்டும்.
ஜகத்தை உண்டாக்கக் கூடிய மூல ப்ரகிருதிக்கு அவயவங்கள் உண்டா கிடையாதா ? என்று கேள்வி.
அவயவங்கள் கிடையாது என்று சொன்னால், அந்த மூல ப்ரகிருதி யிலிருந்து எப்படி பலவிதமான பொருட்கள் உண்டாக முடியும்? என்கிற கேள்வி வந்து விடும்.
பகுதிகள் உண்டு, ஸத்த்வம், ரஜஸ், தமஸ் என்கிற மூன்று பொருட்களும் சேர்ந்து தான் மூல ப்ரகிருதியை உண்டாக்குகின்றன என்று சொன்னால், பல தோஷங்கள் வரும்-
(1) ப்ரதானம் ஜகத்காரணம் என்று நீங்கள் சொல்வதே தவறு. அந்த ப்ரதானமே மூன்று பொருட்களில் இருந்து உண்டானதான படியால்.
(2) மொத்தம் 24 அசேதனப் பொருட்கள் உலகத்தில் உள்ளன என்று நீங்கள் சொல்லுவது தவறு; ஸத்த்வம், ரஜஸ், தமஸ் என்று மூன்று அதிகமான பொருட்கணை ஏற்க வேண்டிய படியால்,
(3) அந்த ஸத்த்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்றுக்கும் அவயவங்கள் உண்டா கிடையாதா என்று இதே போல் கேள்வி எழுந்து விடும். ஸத்த்வம், ரஜஸ், தமஸ் சேர்ந்து ப்ரகிருதியை உண்டாக்க வில்லை .—அவற்றின் சேர்க்கையே ப்ரகிருதி என்றால் -அவயவங்கள் இல்லாத பொருட்கள் எப்படி சேர முடியும்? இரண்டு பொருட்கள் சேரும் போது, சேர்ந்த பகுதி சேராத பகுதி என்று இருக்கும். பகுதிகளே இல்லாத இம் மூன்றும் சேர்ந்து ப்ரகிருதியாக ஆக முடியாது.
அதனால், எந்த விதத்திலும் ப்ரதானம் ஜகத் காரணம் என்று சொல்லுவது பொருந்தாது.

(நம் சித்தாந்தத்தில் ஸத்வம் ரஜஸ் தமஸ் இவை பண்புகள் குணங்கள் -சாங்க்யரில் ஒருவர் இவற்றை த்ரவ்யம் என்பர் -)

கற்பனை செய்யமுடியாத சக்தி உடையவர்
மூன்றாவது ஸூத்ரத்தில், வேதம் சொல்கிறபடியால் அவயவங்கள் அற்றவராக இருந்தாலும் ப்ரஹ்மம் உலகத்தைப் படைக்கிறது என்று ஏற்க வேண்டும் என்று கூறினார் வ்யாஸர். இப்போது அதற்கான பொருத்தத்தைக் காட்டுகிறார் –
5– ஸர்வோபேதா ச தத்₃த₃ர்சநாத் – “எல்லா சக்திகளோடும் கூடியவர்; அவ்வாறு காணப்படுவதால்”
பரமாத்மாவைப் பற்றிச் சொல்லும் வேதங்கள் (பரா அஸ்ய சக்தி: விவிதை ₄வ ச்ரூயதே -ஸ்வ பாவிக ஞான பல க்ரியதா ச )-அதாவது -“இந்த பரம் பொருளான பரமாத்மாவின் சக்தி மிக வுயர்ந்தது, பலவிதமானது” என்று கூறுகிறது.
“ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப:” அதாவது தன் எண்ணத்தால் மட்டுமே அனைத்துக் காரியங்களையும் நடத்தும் வல்லமை படைத்தவர் பரமாத்மா என்றும் வேதம் கூறுகிறது.-அதனால், அவயவங்கள் அற்றவராய் இருந்தாலும் பலவிதமான பொருள்களை அவரால் உண்டாக்க முடியும்.
(சேராச் சேர்க்கை -அகடிகடநா ஸாமர்த்யம் -நரஸிம்ஹ மூர்த்தி ) 6-விகரணத்வாத் ् ந இதி சேத் தது₃க்தம்
ந – ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று சொல்வது தவறு, பொருந்தாது
விகரணத்வாத் – உடல், கை கால் முதலான கருவிகள் ப்ரஹ்மத்துக்கு இல்லாதபடியால்
இதி சேத் – என்று நீங்கள் கூறினால் அது தவறானது
தது₃க்தம் – அதற்கு பதில் முன்னமே சொல்லப்பட்டது (வேதத்தில் சொல்வதால் ஏற்க வேண்டும் என்று)
உப ஸம்ஹார தர்சனாதிகரணத்தில் சக்கரம், தரி முதலான கருவிகளைக் கொண்டே குயவன் நெசவாளி முதலானவர்கள் பொருள்களை உண்டாக்குகிற படியால், ப்ரஹ்மத்துக்கும் அதைப்போல் வெளிக் கருவிகள் வேண்டுமே என்ற கேள்விக்கு பதிலளித்தார்- இப்போது, உடல் கை கால்கள் முதலான கருவிகளாவது வேண்டாமா என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார்.
வேதத்தில் (அபாணி பாத₃: ஜவந: க்₃ரஹீதா| பச்யதி அசஷுஸ் : ஸ ச்ர்ணோதி அகர்ண–ஸ்வேதாஸ்வர 🙂 அதாவது
“பரமாத்மாவுக்குக் கால் இல்லா விட்டாலும் வேகமாகச் செல்வார், கை இல்லாமலும்
எடுப்பார், கண் இல்லாமலும் பார்ப்பார், காது இல்லாமலும் கேட்பார்” என்று சொல்கிறபடியால், பரமாத்மா உடல் கை கால் முதலான கருவிகள் இல்லாமலேயே உலகத்தைப் படைக்க இயலும் என்று தெரிகிறது.
அதனால், ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று சொன்னதில் எந்த முரண்பாடும் இல்லை —

————

2-1-10-ப்ரயோஜநவத்த்வாதி₄கரணம்-ஸ்ருஷ்டியின் குறிக்கோள்

பயனில்லாத செயலைச் செய்யலாமா?
2-1-10-ப்ரயோஜநவத்த்வோதி₄கரணம் – ஸங்கதி –
இந்த பாதத்தில் இதுவரை ப்ரஹ்மம் ஜகத் காரணமாக இருக்க முடியாது -என்று பலவிதமான ஆஷேபங்களுக்கு ஸமாதானத்தை வேத வியாஸர் அளித்தார். தற்போது மற்றும் ஒரு முனையில் பூர்வ பக்ஷி ஆஷேபிக்கிறார் – ப்ரஹ்மம் ஜகத்காரணம் அல்ல, ஏனென்றால் இப்படிப்பட்ட உலகத்தை படைப்பதால் ப்ரஹ்மத்துக்கு எந்த பிரயோஜனமும் அதாவது பயனும் கிடையாது என்று.
பூர்வ பக்ஷம் – இந்த அதிகரணத்தின் முதல் ஸூத்திரம் பூர்வபஷத்தை காட்டுகிறது.
1- ந ப்ர யோஜநவத்த்வாத்
– “கிடையாது, ப்ரயோஜனமுடையதானபடியால்”
– கிடையாது. அதாவது ப்ரஹ்மம் ஜகத்துக்கு காரணம் என்று சொன்னது தவறு – பொருந்தாது
ப்ரயோஜனவத்த்வாத் – இப்படி விசித்திரமான பல வகைப் பட்ட பொருள்களை உடைய ஜகத்தைப் படைக்கும் செயல் கண்டிப்பாக பயனுடையதாக இருக்க வேண்டும். ஆனால் ஈஸ்வரனுக்கு இப்படிப்பட்ட ஸ்ருஷ்டியால் எந்த ப்ரயோஜனமும் இல்லை . அதனால் அந்த பரமாத்மா ஜகத் காரணமாக இருக்க முடியாது. -சிந்தித்து செயல்படக் கூடிய ஒருவர் ஒரு செயலில் ஈடுபடுகிறார் என்றால் அதற்கு இரண்டு விதமான பயன்கள் தான் இருக்க முடியும் – (1) தன்னலம் (ஸ்வார்த்த₂தை ) அல்லது (2) பிறர் நலம் ( பரார்த்த₂தை ).
1-(ஜகத்தைப் படைத்தல் தன்னலத்துக்காக என்று சொல்ல முடியாது, ஏனென்றால் ப்ரஹ்மம் உபநிஷத்துக்களில் “அவாப்த ஸமஸ்த காமன்” அதாவது “எல்லா ஆசைகளும் நிரம்பியவர், எல்லாப் பொருள்களையுமே உடையவர், அவர் இனி அடைய வேண்டிய ஒரு பயனே கிடையாது” என்று சொல்லுகின்றன.
2-ப்ரளய காலத்தில் ஜீவாத்மாக்கள் உடல் இல்லாமல் செயல்பாடு இல்லாமல் கிடக்கிறார்களோ என்று பார்த்து அவர்களிடத்தில் கருணையால் பிறர் நலத்துக்காக ப்ரஹ்மம் உலகத்தை படைக்கிறது என்றும் சொல்ல முடியாது. இந்த உலகில் கர்ப்பவாஸம் பிறப்பு மூப்பு மரணம் நரகம் முதலான பல நிலைகளில் பலவிதமான முடிவில்லாத துன்பங்களை ஒவ்வொரு ஜீவாத்மாவும் அனுபவிக்கிறார். கருணையால் படைக்கும் ப்ரஹ்மம், இப்படிப்பட்ட ஜகத்தைப் படைத்திருக்கக் கூடாது. -्கருணையால் படைக்கும் கடவுள் இன்பத்தை மட்டுமே கொடுக்கும் வகையில் தான் உலகத்தைப் படைத்திருக்க வேண்டும். ஆகையால் தன் நலனோ பிறர் நலனோ இல்லாதபடியால், ப்ரஹ்மம் ஜகத் காரணமாக இருக்க இயலாது.

பகவானின் ஒப்பற்ற லீலை
ஸித்தோந்தம் – 2-(லோகவத் ्து லீலா கைவல்யம்
– “உலகில் போல்; விளையாட்டு மட்டுமே
பரமாத்மா அவாப்த ஸமஸ்த காமனாக இருந்தாலும், அவர் செய்யும் ஸ்ருஷ்டி யானது லீலையான படியால், பிரயோஜனம் உடையது தான் என்று கூறுகிறார் வேதவியாஸர்.
லீலா என்றால் விளையாட்டு. அதாவது, ஒரு செயலைச் செய்யும் போது, அந்த க்ஷணத்தில் உண்டாகும் ஒரு அனுபவம்-ஆனந்தம் எதுவோ , அதற்காக மட்டும் செய்யப்படும் செயல் விளையாட்டு – லீலா ஆகும்.
லீலா கைவல்யம் என்றால் லீலை மட்டுமே என்று பொருள். மட்டுமே என்று சொல்வதற்கு ஒரு கருத்து உள்ளது – உலகத்தில் வேட்டை யாடுதல், பணம் வைத்து சூதாடுதல், பந்து முதலான பொருள்களை வைத்து விளையாடுதல்,-இவை அனைத்துமே விளையாட்டுகள். ஆனால், வேட்டையிலோ , சூதாட்டத்திலோ , அந்தக் காலத்திலும் ஒரு இன்பம்
ஏற்படுகிறது, பிற்காலத்திலும் சில பயன்கள் கிடைக்கின்றன- பந்துகளை வைத்து விளையாடுவது என்பது அக் காலத்தில் ஏற்படும் இன்பத்துக்காக மட்டுமே செய்யப்படும் விளையாட்டு. பகவான் செய்யும் ஸ்ருஷ்டியானது இரண்டாவது வகையைச் சேர்ந்தது. இதைக் குறிப்பிடத் தான் கைவல்யம் என்கிற சொல்லை வேத வியாஸர் இடுகிறார்.
லோகவத் – உலகத்தில் அனைத்தும் பெற்ற ஒரு பேரரசரும் கூட பந்து முதலானவற்றை வைத்து விளையாடுவது போல்.
பராசர மஹரிஷி – “கிரீட₃தோ பா₃லகஸ்யேவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய” – விளையாடும் குழந்தையில் செயல் போன்ற பகவானின் பணடப்புச் செயலைப் பார்” என்று பராசரர் கூறுகிறார்.
வ்யாஸர் – “மோத₃தே ப₄க₃வான் பூ₄தை : பா₃ல: கிரீட₃னகைரிவ” – ஒரு குழந்தை விளையாட்டுப் பொருள்களைக் கொண்டு இன்பம் அடைவது போல், பிரஹ்மம் இந்த உலகப் பொருள்களைக் கொண்டு விளையாடி மகிழ்கிறார்
ஆண்டாள் – “வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்”.
நம்மாழ்வார் – “மன்பல் உயிர்களும் ஆகும் பல மாய மயக்குக்களால் இன்புறும் இவ் விளையாட் டுடையான்”
கம்பர் – “உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்… அலகிலா விளையாட் டுடையார் அவர் தலைவர்”
கேள்வி 1-
எளிமையாகச் செய்யப்படும் செயல் தானே விளையாட்டாக ஆகும்? மிகவும் கஷ்டப்பட்டு இப்பேர்ப்பட்ட உலகத்தை பகவான் படைக்கிறார் என்றால், அது எப்படி லீலை யாகும் என்று?
பதில் 1: பகவான் ஸங்கல்பத்தால் மட்டுமே படைக்கிறார், ஸ்ரமப்பட்டு அல்ல. அதனால் இது லீலையாக ஆகலாம்

ஸ்ருஷ்டியின் உண்மை யான ப்ரயோஜனம்
கேள்வி 2 –
அவருடைய விளையாட்டு இன்பத்துக்காக நம்மைப் போன்ற கோடிக்கணக்கான ஜீவாத்மாக்கள் பல விதமான துன்பங்களை அனுபவிப்பது சரியா?
பதில் 2: பகவான் செய்யும் ஸ்ருஷ்டியின் உண்மையான பயனை வேதங்களும் ஆழ்வார்களும் வெளியிட்டுள்ளார்கள்.
நம்மாழ்வார் பாடுகிறார் – “சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் என்று எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான்”, அதாவது, “இப்போது இல்லா விட்டாலும், பிற்காலத்தில் ஏதோ ஒரு சமயத்திலாவது இந்த ஸம்ஸாரத்தின் கொடிய தன்மையைப் புரிந்து கொண்டு ஜன்ம-மரணச் சுழலில் இருந்து விடுபட்டு ஒரு ஜீவாத்மா தன்னை வந்து வைகுந்தத்தில் அடைவான் என்கிற ஆசையால் தான் பகவான் இவ் வுலகத்தை மறுபடியும் மறுபடியும் உற்சாகம் குறையாமல் படைக்கிறார்” என்று. அதனால் பகவான் படைப்பதன் பிரயோஜனம் ஜீவாத்மாக்கள் முக்தி அடைவது தான்.
கேள்வி 3 – பிறகு இவ் விடத்தில் லீலா கைவல்யம் லீலை மட்டுமே பிரயோஜனம் என்று வேதவியாஸர் ஏன் கூறினார்?
பதில் 3 – உலகத்தில் வாழும் ஜீவாத்மாக்களால் பகவானுக்கு இரண்டு விதமான இன்பங்கள் (ரஸங்கள்) ஏற்படுகின்றன. -ஒரு பொருள் எப்படி பயன்பட வேண்டுமோ , அப்படி பயன்பட்டு நமக்கு இன்பத்தை அளித்தால், அதற்கு போக ரஸம் என்று பெயர். ஒரு பொருள், அதன் உண்மைத் தன்மை புரிந்து கொள்ளப் படாமல், தவறாக பயன்படுத்தப் பட்டு, அப்போதும் நமக்கு ஒரு இன்பத்தை அளித்தால், அதற்கு லீலா ரஸம் என்று பெயர்.
ஒரு குழந்தை ஒரு கைபேசியை எடுத்து, சரியாக ஒருவரை அழைத்துப் பேசினால், வியந்து போகிறோம்- போக ரஸத்தை அனுபவிக்கிறோம். அதே குழந்தை கைபேசியை என்னதென்று புரிந்து கொள்ளாமல், வாயில் வைத்து கடித்ததென்றால், அப்போதும் லீலா ரஸத்தைப் பெற்று இன்பப்படுகிறோம். இதே போல் தான் பகவானுக்கும்.
ப்ரஹ்லாதன், த்ருவன், ஆழ்வார்கள் முதலான உயர்ந்த ஜீவாத்மாக்கள், ஜீவாத்மாவின் உண்மைத் தன்மையை சரியாக புரிந்து கொண்டு, பகவானுக்குத் தொண்டு செய்கிறார்கள். அதனால் பகவான் போக ரஸத்தை அனுபவிக்கிறார். -நம்மைப் போன்ற அறிவிலிகளான பலரும் ஆத்மாவின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளாமல், உலக இன்பங்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதைப் பார்த்தும் பகவான் லீலா ரஸத்தை அடைந்து, மகிழ்கிறார்.-இப்படி இரண்டு ரஸங்களும் அவருக்கு கிடைத்தாலும், அநேகமாக 99% அவருக்கு கிடைப்பது லீலா ரஸம் தானே . -அதனால் தான் ’பிராசுர்யம்’ அதாவது ’மிகுதியைக் ’ கருதி, வியாஸர் “ஸ்ருஷ்டி லீலா ரஸத்துக்காகவே ” என்று கூறுகிறார்.

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-

இதுக்கு பிரயோஜனம் கேவல லீலை -தத்வ த்ரயம்–ஸூர்ணிகை -162-

சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி ஓன்று ஒன்றி யுலகம் படைத்தான் -என்றும் உய்ய வுலகு படைத்து -என்றும் விசித்ரா தேக சம்பத்தி ரீச்வராய நிவேதிதம் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி சம்யுதா -விஷ்ணு தத்வம் -என்றும்
மாயன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை —ராமானுஜ நூற்றந்தாதி -என்றும்
அசித் அவிசேஷிதாந பிரளய ஸீ ம நி சமசரத கரண களேபரைர் கடயிதும் தயமான மநா -என்றும் சேதனர் உடைய உஜ்ஜீவனம் பிரயோஜனமாக ஜகத் சிருஷ்டி பண்ணினான்
என்று சொல்லுகிற இவ் வசனங்களுக்கு வையர்த்யம் வாராதோ -என்னில் வாராது –
எங்கனே என்னில் –-உபய பிரயோஜனமும் உண்டாய் இருக்கச் செய்தேயும் லீலையே பிரயோஜனம் என்ற இது ப்ராசுர்யத்தைப் பற்றச் சொன்ன இத்தனை யாகையாலே
ரூப பிரகார பரிணாம கருதவ்ய வசத்தம விச்வம் விபர்யசிம் அன்யதசசச கர்த்தும்
ஷாமயன் ஸ்வ பாவ நியமம் கிமுதீ ஷசே த்வம் ஸ்வதந த்ரயம் ஐஸ்வர்யம் அபர்யநுயோஜய மாஹூ–
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் –என்கிறபடியே நினைத்த படி செய்ய வல்ல சக்திமான் ஆகையாலே சகல ஆத்மாக்களையும் யுகபதேவ -சக காலத்திலேயே – முக்தராக்க வல்லனாய் இருக்கச் செய்தேயும் ஸ்வா தீன ஸ்வரூப ஸ்தித்யாதிகரான ஆத்மாக்களை
கர்மத்தை வ்யாஜி கரித்து கை கழிய விட்டு சாஸ்திர மரியாதையிலே வரவர அங்கீ கரிப்பன் என்று இருக்கிறது -லீலா ரச இச்சையாலே
இறே-லீலா விபூதி என்று இ றே இது தனக்கு நிரூபகம்-ஆகையால் இவ்விபூதியில் லீலையே ப்ரசுர பிரயோஜனமாகச் சொல்லுகையாலே
ஸூத்திர காராதிகள் எல்லாரும் சிருஷ்டி பிரயோஜனம் லீலையாகச் சொல்லுகையாலே
இவரும் -கேவல லீலை -என்று அருளிச் செய்தார் ஆயிற்று
––ஸூர்ணிகை -162)-

குற்றமற்ற படைப்பாளி பகவான்
3- வைஷம்ய -நைர்க்₄ருண்யே ந ஸா பேக்ஷத்வாத் ததா ₂ஹி த₃ர்சயதி
வைஷம்ய நைர்க்₄ருண்ய ந –
பகவானுக்கு வைஷம்யம் நைர்க்₄ருண்யம் என்ற தோஷங்கள் கிடையாது
வைஷம்யம் – பஷ பாதம் – ஒரு தலைப் பஷமாக இருத்தல். பகவான் உலகத்தில் தேவர்கள் மனிதர்கள் விலங்குகள் தாவரங்கள் என்று பல விதமான பொருள்களை ஏற்றத் தாழ்வுகளோடு படைப்பதால் அவர் தன்னிச்சையாக சிலரை உயர்ந்தவராகவும் சிலரைத் தாழ்ந்தவராகவும் படாய்க்கிறார் என்கிற தோஷம்.
நைர்க்₄ருண்யம் – பல விதமான துக்கங்களை இவ் வுலகத்தில் படைப்பதால் கருணை யற்றவர் என்ற தோஷம்.-இவை இரண்டும் பரமாத்மாவுக்குக் கிடையாது என்கிரார் வ்யாஸர்.
ஸா பேக்ஷத்வாத் – படைக்கப்படும் ஜீவாத்மாக்களின் பாப-புண்யங்களை எதிர்பார்த்தே படைக்கிற படியால். படைப்புக்குப் பொதுவாக பகவான் காரணமாக இருந்தாலும், அந்தந்த ஜீவாத்மாவின் முன் வினைகளுக்கு ஏற்பத்தான் அந்தந்த ஜீவாத்மாவுக்குப் பிறவிகளைக் கொடுக்கிற படியால் அவருக்கு எந்த தோஷமும் வராது.
ததா ₂ஹி த₃ர்சயதி – அவ்வாறன்றோ வேதம் காட்டுகிறது
வேதம் – “ (ஸாது₄காரீ ஸாது₄: ப₄வதி, பாபகாரீ பாப: ப₄வதி) அதாவது’நல்லது செய்தவன் நல்ல பிறவியைப் பெறுகிறான், பாபம் செய்தவன் தீய பிறவியைப் பெறுகிறான்’.
பராசர மஹரிஷி – (நிமித்த மாத்ரம் ஏவாஸௌ ஸ்ருஜ்யாநாம் ஸர்க₃கர்மணி | ப்ரதா₄ந காரணீ பூ₄தா: யதோ வை ஸ்ருஜ்ய சக்தய: ||) அதாவது-“உலகத்தில் ஜீவராசிகளைப் படைப்பதில் பகவான் இரண்டாம் பஷக் காரணமாக (பொதுக் காரணமாக) இருக்கிறார்; ஏனென்றால் அந்தந்த ஜீவாத்மாவின் கர்மங்கள் (பாப புண்யங்கள்) தன் முதன்மையாக காரணமாக (சிறப்புக் காரணமாக) உள்ளன.”
ஒரு நிலத்தில் பல விதமான பயிர்களையோ மரங்களையோ வளர்க்கும் போது, பூமி நீர் முதலானவை பொதுக் காரணங்கள். அந்தந்த விதை தான் அந்தந்த மரத்திற்குச் சிறப்புக் காரணம் ஆகும். ஏன் மாமரம் வந்தது, பனை மரம் வரவில்லை என்று பூமியையோ நீரையோ கேட்டுப் ப்ரயோஜனமில்லை , விதை தான் அதற்குக் காரணம். -அது போல் ஸ்ரிஷ்டிக்குப் பொதுவாக பகவான் காரணமானாலும், ஏற்றத் தாழ்வுகளுக்கு அவர் காரணமல்ல, நம் கர்மங்களே காரணம். அதனால் அவருக்கு வைஷம்யமோ நைர்க்₄ருண்யமோ கிடையாது.

கர்மங்கள் எப்போதுமே இருக்கின்றனவா?
கீழ்ச் சொன்ன அர்த்தத்தில் பூர்வ பஷி ஓர் ஆஷேபத்தை எழுப்புகிறார். அதற்கான பதில் அடுத்த ஸூத்ரத்தில் –
4-ந கர்ம அவி பா₄கா₃த் இதி சேத் ந அநாதி₃த்வாத் உபபத்₃ யதே ச அபி உபலப்₄ யதே ச
ந கர்ம
– “கர்மம் அல்ல”அதாவது ஸ்ருஷ்டியில் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஜீவாத்மாக்களின் கர்மங்கள் காரணமல்ல
அவி பா₄கா₃த் – “தனித்து இல்லாத படியால்”, அதாவது ஸ்ருஷ்டிக்கு முன்னால் ப்ரளயத்தின் போது “ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத்” அதாவது“ப்ரஹ்மம் மட்டுமே அப்போது இருந்தது, வேறெதுவும் இல்லை ” என்று வேதம் சொல்வதால் ஜீவாத்மாக்களே இருக்க வில்லை . அப்படி யென்றால், அவர்களின் கர்மங்கள் மட்டும் எப்படி இருக்கும்?
இதி சேத் ந – “இவ்வாறு கூறினால் அது தவறு” என்று வ்யாஸர் மறுக்கிறார்.
அநாதி₃த்வாத் – “ஜீவாத்மாக்கள் அநாதியான படியால்” – ஜீவாத்மாக்கள் எப்போதுமே இருக்கிற படியால்
அபி ச உபபத்₃ தே – “அநாதியான போதும் தனித்து இல்லாமை பொருந்துகிறது” – ஜீவாத்மாக்கள் அநாதி யானவர்கள் என்று கொண்டாலும் “ப்ரஹ்மம் மட்டுமே ப்ரளய காலத்தில் இருந்தது” என்று வேதம் சொல்வது பொருந்தும், -ஏனெனில் ப்ரலயத்தின் போது ஜீவாத்மாக்கள் அனைவருமே ப்ரஹ்மத்திடமிருந்து பிரித்து அறிய முடியாதபடி ஒன்றாக
ஒட்டிக் கொண்டிருப்பார்கள். ஸ்ருஷ்டியின் போது தான் தனித் தனி உடல்களாய்ப் பெற்று தனித்து அறியப் படுகிறார்கள்.
உபலப்₄ யதே ச – “காணப்படுகிறதும் கூட” – வேதமே ஜீவாத்மாக்கள் எப்போதும் இருக்கிறார்கள் என்று கூறுகிறது.
“ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித்”– “ஜ்ஞாந முடையவரான ஆத்மா உண்டாவதும் கிடையாது, அழிவதும் கிடையாது”
கேள்வி – ஜீவாத்மாக்கள் எப்போதுமே இருந்திருந்தாலும், அவர்களுக்கு எப்போதுமே கர்மங்கள் இருந்தனவா?
பதில் – “ஸூர்ய சந்த்₃ர மஸௌ தா₄தா யதா₂பூர்வம் அகல்பயத்” அதாவது “ஒவ்வொரு முறையும் முன்னிருந்தது போலவே உலகத்தை பகவான் படைக்கிைறார்” என்று வேதம் சொல்வதால், ஸ்ருஷ்டி என்பது எப்போதுமே நடந்து கொண்டே இருக்கிறது என்று தெரிகிறது. அப்படி யென்றால், ஜீவாத்மாக்கள் எப்போதுமே பிறந்து கொண்டு தான் இருக்க வேண்டும், அப்படி யென்றால் அவர்களுக்குக் கண்டிப்பாகக் கர்மங்களும் எப்போதுமே இருக்கத் தான் வேண்டும்.
ஆகவே , ஜீவாத்மாவுக்கோ அவரது கர்மங்களுக்கோ தொடக்கம் என்பதே கிடையாது. நாம் மோக்ஷம் அடையும் போது கர்மங்களுக்கு முடிவு மட்டும் உண்டு . கர்மங்களை அடி யொற்றியே பகவான் ஏற்றத் தாழ்வுகளை உலகில் படைக்கிறார்.

பாதத்தின் சுருக்கம்
5-ஸர்வத₄ர்மோப்பத்தே : ச
– “எல்லா பண்புகளும் பொருந்துகிறபடி யாலும்”
உபநிஷத்துக்களில் ஜகத் காரணப் பொருளுக்குச் சில பண்புகள் சொல்லப் பட்டுள்ளன. ப்ரதானம் அல்லது பரமாணு தான் ஜகத்காரணம் என்று கொண்டால், அந்தப் பண்புகள் எதுவுமே அவற்றுக்கு போருந்துவதில்லை . ஆனால் பரமாத்மாவே ஜகத்காரணம் என்று கொண்டால், அப் பண்புகள் அனைத்துமே அவரிடம் பொருந்துகின்றன.
எனவே , சேதனாசேதனங்களை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மம் தான் ஜகத்காரணம் என்பதில் எந்த முரண்பாடும் இல்லை

ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகரண ஸாராவலியில் இந்தப் பாதத்தைச் சுருக்கமாகக் காட்டுகிறார் –
(1) ஸாங்க்₂ய ஸ்ம்ருத்யா விரோதா₄த்
(2) விதி₄மதவிஹதே :
(3) கார்ய வைரூப்யத: அஸ்மிந்
(4) ஏகார்த₂ அநேக தந்த்ரோதி₃த விஹததயா
(5) தே₃ஹபோ₄க₃ வியுக்த்யா |
(6) கார்யோ பாதா₃ந பே₄தா₃த்
(7) ஸ்வஹிதவிஹதித:
(8) காரகஸ் தோமஹாநே :
(9) க்ருத்ஸ்நாம்சாத்₃யூஹபா₃தா₄த்
(10) க்ருதிவிப₂லதயாபி உத்தி₂தம் ப்ரத்ய வித்₄யத் ||

1-ஸ்ம்ருத் யதி₄கரணம் – ஸாங்க்₂ய ஸ்ம்ருதியோடு முரண் பட்டாலும் ஸ்ம்ருதி தான் தவறானது, வேதம் அல்ல.
2-யோக₃ப்ரத்யுக்த் தி₄கரணம் – நான்முகனே கூறி யிருந்தாலும் வேதத்தோடு முரண்பட்டால் தவறானதே .
3-விலக்ஷணத்வாதி₄கரணம் – காரணமும் காரியமும் ஒரே தன்மை களோடு இருக்க வேண்டும் என்கிற தேவை யில்லை .
4-சிஷ்டா பரிக்₃ரஹாதி₄கரணம் – பல மதங்கள் பரமாணுவே ஜகத் காரண மென்று கூறினாலும் வேதம் சொல்வதே சரி

5-போ₄க்த்ரா பத்த் யதி₄கரணம் – சேதனா சேதனங்களை உடலாகக் கொண்டாலும் ப்ரஹ்மத்துக்கு இன்ப துன்பமில்லை

6-ஆரம்ப₄ணாதி₄கரணம் – காரணப் பொருளும் காரியப் பொருளும் ஒன்றென்பதால் ப்ரஹ்மமே இந்த உலகமாகும்

7-இதர வ்யபதே ₃சாதி₄கரணம் – ப்ரஹ்மத்தை விட ஜீவாத்மா வேறானபடியால் ப்ரஹ்மம் தனக்குத் தீமை தேடவில்லை .

8-உபஸம்ஹார த₃ர்சநாதி₄கரணம் – கருவிகள் எதையும் எதிர்பார்க்காமலேயே ப்ரஹ்மம் உலகைப் படைக்க முடியும்.

9-க்ருத்ஸ்ந ப்ரஸக்த் யதி₄கரணம் – அவயங்களே இல்லா விட்டாலும் ப்ரஹ்மம் தான் ஜகத் காரணம், வேதம் சொல்வதால்.

10-ப்ரயோஜநவத்த்வாதி₄கரணம் – ப்ரஹ்மம் உலகைப் படைப்பது விளையாட்டாக,லீலா ரஸத்துக்காகவே

    ——————————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-