இந்த ரஹஸ்ய விவேகம் அருளிச்செய்தவர் – ஸ்ரீமணவாள மாமுனிகள் நியமித்தருளின அஷ்டதிக் கஜங்களி லொருவராய், ”தேவராஜகுரு”‘ என்னும் திருநாமத்தை யுடை.யரான எறும்பி அப்பாவின் திருப் பேரனாகிற தேவராஜகுரு, வரருடைய திருக் குமாரராகிய வரவரகுருவரர். இவர்க்கு *’ஆசார்ய ரத்நம்”” என்னும் மற்றொரு திருநாமமுண்டென்று பூர்வர்கள் பணிக்கும்படி. இந்தத் திருநாமம் இவர்க்கு ‘வழங்கி வருவதற்குக் காரணம் – இவர் ஆசார்ய ரத்நம்: என்னுமொரு க்ரந்தம் அருளிச் செய்தமையே. இவருடைய வம்ஸ பரம்பரையினடைவு இருக்கும்படி என்னென்னில் எறுப்பி அப்பாவின் திருக் குமார் யஜ்ஞ நாராயண குரு அவர் தனியன்
தேவராஜார்ய தநயம் தயா வாத்ஸல்ய ஸாகரம்।
ப்ரஜ்ஞா நிதி,ம் ப்ரபத்,யேஹம் யஜ்ஞ நாராயணம் குரும்!!
இவருடைய குமாரர் தேவராஜகுரு. அவர் தனியன்- தே,வராஜகுரோ! பெளத்ரம் திவ்ய போதம் தயாநிதிம்। வாத்ஸல்ய வாரிதி,ம் வாத்ஸ்யம் வந்தே தேவேஸ தேஸிகம் -இவர் குமாரர் வரவரகுருவரர். அவர் தனியன்
வாத்ஸ்ய ஸ்ரீ தேவ ராஜார்ய தநயம் விநய உஜ்ஜ்வலம்
வாத்ஸல்யாதி குணாவாஸம் வந்தே வரவரம் குரும் ‘
இவர் அருளிச் செய்த கிரந்தங்கள் –அஷ்டஸ்லோகீ ஸம்ஸ்க்ருத வ்யாக்யா, பகவத் கீதா வ்யாக்யா, ரஹஸ்ய விவேகம் ஆச்சார்ய ரத்னம்
அஷ்டாதஸ பேத விசாரா பர நாமதேய: ரஹஸ்ய விவேக:உபோத்காதம்
ஜயதி ஸகல வித்யாரங்க பூமிர் குருர்மே குண கண மணி ஸிந்து,: வத்ஸ வம்ஸாம்புதீந்து,!!
ஸுரபதி குருஸூநு: ஸ்ரீநிவாஸார்ய பாத, ப்ரவண விமல சித்தோ ரம்ய ஜாமாத்ரு நாமா
தர்கேஷ்வேகே விதக்தா ; பணிபதி பணிதெள ப்ரெளடதா நாஸ்தி தேஷாம், ஸப்த ஞாநம் ந தர்க்கே ந தது பய விதோ பாதி மீமாம்ஸி தாதீ,!।
மீமாம்ஸா பார த்ருஸ்வா ஸடரிபுவசஸாம். ஸ்யாத் ஸ்வரூபாநபி ஜ்ஜோ
யஸ்மிந் நாஸ்தே ஸமஸ்தம் ஸதி ஸது குஸலம் ரம்ய ஜாமாத்ரு ஸுூரி
அமோகாம் ஸம்ஸ்ரிதாஸ் ஸந்த: ஸாத்விகா மோக்ஷ ஸித்தயே|
உபாத்வம் ஸெளம்ய ஜாமாத்ரு தேஸிகாஷ்டாக்ஷரீம் ஸக்ருத் ||.
ரஹஸ்ய த்ரய வாக்யார்த்த,மணீநாம் மலஸோத,நம் |
ப்ராசா மாசார்ய வர்யாணாம் க்ரியதே ஸூக்தி கங்குயா ||
உபாய ஸ்ரீ விப்வீ ஸரண வசஸ ஸாதநமிதி
ந கைவல்யம் முக்தி: புநரபி பர ப்ராப்தி கதநம் |
ததாண்டாந்தர்பாவ ப்ரமிதி வசநம் கேவலகதே
பரபத்தேர் தெவ்ர்பல்யம் த்விதி கதிசந த்ராக கதயந்–
ஸக்தாநாம் பக்தி யோக ப்ரபதந விஷய: ஸக்தி ஹீநாதிகார:
ப்ரத்யே கோபாயதா ந ப்ரதி நியமவதாம். கர்ம யோகாதி காநாம் |
ஸாத்யோபாயேந ஸித்தம் பவதி விஸத்ருஸம் ப்ராப்யமந்யேந சாந்யத்
த்யாகஸ் ஸித்தாநுவாத,? ப்ரணவ விரஹதோ அஷ்டாக்ஷரத்வம் மநோர்ஹி !
ஸ்ருஷ்ட்யாதெள நைவ ஸக்தி ஸ்புடமபி மஹதாம் நித்ய முக்தாதி காநாம்.
தோஷா த்ருஷ்டிஸ்து வாத்ஸல்யமபி து பர துக்கோத் த்ருதீச்சா தயேதி
நோபாய ஸ்ரீந விப்வீ ந ஸரணவசஸ ஸாதநத்வே ப்ரமாணம்
கைவல்யம் முக்திரஸ்மாந் ந பரம புருஷ ப்ராப்தி ரூர்த்வம் ப்ரக்ருத்யா?. |
ப்ராபல்யம் ஹி ப்ரபத்தே: பஜந விதிரசவ் புத்தி தெளார்பல்ய மூலோ
ந்யாஸ: ஸர்வாதிகார: ததிதர ஸரணாநி அஸ்வ தந்த்ராணி நைவ ||
அகாரத்திலே ஆர்த்தமான ஸ்ரீ ஸம்பந்தம் “லஷ்ம்யா. ஸஹ-இத்யாதி, வசநாநுரோதேந உபாயத்வே நைவ ஆக வேண்டுகையாலும், த்வயத்தில் ஸ்ரீமானுக்குச் சொல்லுகிற உபாயத்வம் விஸேஷண பூதையான பிராட்டிக்கும் துல்யமாகையாலும்- ஸ்ரீக்கு உபாயத்வமே என்னில் ,லக்ஷ்ம்யாஸஹ* இத்யாதி, வசநத்தில் விஸேஷணத்வா ப்ரதாந ரக்ஷகத்வ வாசியான திருதீயையாலே. கடகத்வேதைவ அந்வயமென்னுமிடம் ஸித்தமாகையாலும் , வசநாந்தரத்திலும் , நாந்யதா லக்ஷணம் பவேத் என்று இங்கே ஸங்கிதமான உபாயத்வம் நிஷித்தமாகையாலும் , த்வயத்தில் விஸேஷணத்வ ப்ரயுக்தமான உபாயத்வம் சொல்லில் , நார பத,வாச்யங்களாய் , கார்யோபயோகிகளாய் , ஆஸ்ரயண ஸெளகர்யாபாதகங்களான வாத்ஸல்யாதி குணங்களுக்கும் விஸேஷணத்வ ப்ரயுக்தமான உபாயத்வம் ப்ரஸங்கிக்கையாலே அது கூடாமையாலும் ஸ்ரீக்குப் புருஷகாரத்வமே அஸாதாரணம் என்றதாயிற்று –
பத்னிக்கு பதி ஸ்வரூப அநு ரூப்ய அவஸ்யம் பாவத்தாலும் –யதோ ஸர்வ கதோ விஷ்ணு: இத்யாதி வசநத்தாலும் ஸ்ரீக்கு விபுத்வம் கொள்ள வேணுமென்னில் ஸேஷத்வ யவஸ்யம் பாவத்தாலே விஸ்வபதித்வாதிகள் வாராதாப் போலே மகார வாஸ்யையான. இவளுக்கு விபுத்வம் வாராமையாலும், *யதா ஸர்வ கதோ விஷ்ணு: இத்யாத்,யுக்த ஸர்வகதத்வம் , *விஷ்ணோர் தேஹாநுரூபாம்* இத்யாதியாலே தேஹ ப்ரயுக்தமாகச் சொல்லுகையாலும். விபுத்வம் கூடாது –
நமஸ்ஸிலே ஸாத்யோபாயங்களான பக்தி ப்ரபத்திகளுக்கு. ஸாத்யங்களுமாய் விஸத்ருஸங்களுமாய் அந்யங்களுமான பக்தி ப்ரபத்தியாதிகளுடைய பரித்யாக அங்கமாக ஸித்தமுமாய் ஸாஸ்த்ர அஸத்ருஸமுமாய் , அநந்யமுமான தன்னையே உபாயமாக ஸ்லீகரி என்று விதிக்கையாலும், இவற்றுக்கு ப்ரஸதநோபாயத்வம். நமஸ்ஸிலே நிஷித்தம்
ஸர்வ கர்ம விநிர்மோக்ஷத்தில் முக்தி பேதம் கூடாமையாலே கைவல்யம் மோஷமன்று . ஆகையாலே , பரம பத ப்ராப்தியும், பின்பு மகார வாஸ்யனான பரக்ருதி வியுக்தாத்மாவினுடைய அநுபவமான கைவல்யமும் அண்டத்துக்குள்ளே யென்னில், இவ் விடத்தில் ஸர்வ கர்ம விநிர்மோஷமாவது நித்யமான ஆத்மாநுபவத்துக்கு ப்ரதி பந்தகமான அசித் ப்ராப்தி ஹேது பூத ஸர்வ கர்மங்களினுடையவும் விநிர்மோக்ஷமே அவனுக்கு அபேஷிதமாகையாலே கைவல்யம் மோஷமாய் ஸ்வோத்தேஸ்ய பல ஸாதந பூத கர்ம ஷயம் அவனுக்கு விவஷிதமல்லாமையாலே அது நஸியாமையாலே மோக்ஷ பேதமும் ப்ராமாணிகமாய்க் கூடுகையாலும் , நித்யமாகையாலே புந;பர ப்ராப்தி கூடாமையாலும் அவனுக்கு ஸ்வ வ்யதிரிக்த தத்வ ப்ராப்த்யபாவத்தாலே,,விரஜா பரம வ்யோம் நோ: இத்யாத்,யுக்த ஸ்தாநமே ஸ்தாநமாகவும் ப்ரக்ருதி வியுக்தாத்ம வாசியான மகாரத்திலே ஸித்தமாகையால் அவை மூன்றும் கூடாது.
ப்ரபத்தி தெளர்பல்யமும் அதின் ஸக்திரஹிதாதி காரத்வமும், பக்திக்கு ஸக்தாதிகாரத்வமும் ஸர்வ தர்ம பரித்யாக அங்ககதத் விதாநத்தாலே கூடாது-
ஸாத்ய உபாயேந ஸித்தம் பவதீ த்யாதி த்ரயமும் ஸாஸ்த்ர ஸித்தமென்னில் , ஸாத்யமுமாய் விஸத்ருஸமுமாய், அந்யமுமான ஸர்வ தர்ம பரித்யாக பூர்வகமாக ஸித்தமாய், ஸத்ருஸமுமாய் , அநந்யமுமான தன்னை உபாயமாக ஸ்லீகரி என்று விதிக்கையாலே கூடாது –
த்யாஜ்யமாகில் , ஸாத்யோபாய விதி, வ்யர்த்தமாகையாலே “த்யாக, ஸித்த அநுவாத,”‘ என்கையும் தத்,விதி, அந்யார்த்தமாகையாலே ல்யப்பாலே அபாஸ்தம்
ப்ரணவ மந்தரா அஷ்டாக்ஷரத்வமும் ஓமித்யேகாக்ஷரம் இத்யாதி,ஸ்ருதி ஸித்தையான அஷ்டாஷர ஸங்க்யையை யுடைத்தான திருமந்த்ரத்தாலே நிரஸ்தம்
ஐகத் வ்யாபார வர்ஜம் என்கையாலும் , ஸர்வ ஸராரத்வம். கூடாமையாலும், முக்தருக்கு ஸ்ருஷ்ட்யாதியில் ஸக்தியில்லை என்றும், ஐகத் வ்யாபார வர்ஜம் என்றது ஈஸ்வர நியோகமில்லா தவர்களுக்கே யாகையாலே, அதுண்டானவர்களுக்கு ஸர்வ ஸரீரத்வ மொழியவே ஸ்ரஷ்ட்ருத்வம் காண்கையாலும் ஸர்வ வித கைங்கர்ய வாசியான சதுர்த்தியாலே தள்ளுண்டது –
பக்தாநாமாகஸ் ஸ்வ விஜ்ஞாதா என்கையாலே தோஷ தர்ஸித்வமே வாத்ஸல்யம் என்னுமதுவும் ஸமந்வயாதிகரணத்தில், ஸ்ருத ப்ரகாஸிகையிலே “வாத்ஸல்யம் நாம தோஷேஷ்வபி குணத்வ புத்தி- என்றும், ஸ்தலாந்தரத்திலும்: தோஷ போக்யத்வமேயாகச் சொல்லுகையாலும் தத் வாசியான நார ஸப்தத்தாலே நிரஸ்தம்-
பாதுகோத்தருதீச்சா”‘ “பர துக்க நிராசிகீர்ஷா-தயை”‘ என்றதும், “தயா நாம – ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க, அஸஹிஷ்ணுதா” என்று ஸ்ருத ப்ரகாஸிகையிலே பர துக்க அஸஹத்வமாகச் சொன்ன தயையே நார ஸப்த வாச்யமாகையாலே அத்தாலே தள்ளுண்டது
கர்ம யோகாதிகளுக்கு ப்ரத்யேகோபாயத்வமும் கூடப் பதினெட்டும் அடைவே விவரிக்கப்படுகிறது
————-
ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே த்ரயோவிம்ஸாதிகாரத்திலே “லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேஸ தேவ்யா காருண்ய ரூபயா। ரக்ஷ௧ ஸர்வ ஸித்தாந்தே வேதாந்தேஷு ச கீயதே என்கிறபடியே ஸ பத்நீகனாய்க் கொண்டு ஸர்வ ரக்ஷண யஜ்ஞ தீஷிதனான ஸர்வேஸ்வரனுக்கு ஸ்ரீமச் சப்,த,த்திலே சொல்லுகிற பத்நீ ஸம்பந்தத்தில் வரும் கலக்கங்களுக்கு, திங் மாத்ரத்தாலே பரிஹாரம் காட்டுகிறோம். சிலர் த்வயத்தில். பூர்வ கண்டத்தில் ஸ்ரீமச் சப்தம் உப லஷண பரமென்றும், உத்தர கண்டடத்தில் ஸ்ரீமச் சப்தம் விஷேஷண பரமென்றும் பிரியச் சொன்னார்கள் –இவ்விடத்தில் ஸப்தம் ஏக ரூபமாய் இருக்க ஸ்வாரஸ்யத்துக்கு பாதகமன்றிக்கே யிருக்க, “ஸ்வரூபம்: ஸ்வாதந்த்ர்யம் இத்யாதிகளில் ப்ரஸித்தமான கூடஸ்த ஸம்ப்ரதாய விருத்தமாகப் பண்ணுகிற இவ் விபாகம் அநுப பந்நம் -அநந்ய உபாயத்வ விருத்தமான உபாயத்,வித்வ ப்ரஸங்கம் இவ்விடத்தில் பாதகமானாலோ என்னில் அநந்ய ப்ரயோஜனத்வ விருத்தமான ப்ராப்யத் வித்வ ப்ரஸங்கத்தாலே உத்தர கண்டத்திலும் விஸேஷணத்வம் தவிர ப்ரஸங்கிக்கும். ஆனால் இரண்டிடத்திலும் உப லக்ஷண மானாலோ வென்னில்- குண விக்ரஹ வ்யாபார விஸேஷணங்களும் இரண்டிடத்திலும் உப லக்ஷணமாக ப்ரஸங்கிக்கும். உப யுக்தங்களாகையாலே அவை விஸேஷணங்கள் என்னில், இதுவும் பூர்வோத்தர கண்டங்களில் பத்நீ ஸம்பந்தத்திலும் துல்யம். உபயோக விஸேஷங்கள் தத் தத் வஸ்துக்களுக்கு அநுரூபமான படியிலே ப்ரமாண ஸம்ப்ரதாயங்களாலே கண்டு கொள்வது. வஸ்த்வநு ரூபமாயிறே. விநியோக மிருப்பது. உபாயோபேய பரமான வாக்யத்வயத்திலும் ஸ்ருதமான இவ் விஸேஷணத்தினுடைய உபயோக ப்ரகாரத்தை வேரி மாறாத பூமேலிருப்பான். வினை தீர்க்குமே என்றும், *நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயிஸ் சீய்த்து” என்றும் நம்மாழ்வார் அருளிச் செய்தார்.
அலமேஷா பரித்ராதும். ராக்ஷஸ்வோ மஹதோ பயாத் -என்றும் “அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராக்ஷஸீகணம் -என்றும் ஸ்ரீ வால்மீகி பகவான் ஆதிகாவ்யத்திலே நிபந்தித்தான்
ஸம்ஸாரார்ணவதாரிணீம்” என்று ஹிரண்ய கர்ப்ப காஸ்யபாதிகளும் சொன்னார்கள் -வாஸ பரம் ப்ரார்த்தயிதா ப்ரபத்யேந் நியத ஸ்ரியம்* சவ்நக பகவான் விதித்தான்-“ஆத்ம வித்யா ச தேவி த்வம் விமுக்தி பலதாயிநீ –என்று புலஸ்த்ய வஸிஷ்ட வர ப்ரஸாத லப்த பரதேவதா பாரமார்த்ய ஞானமுடைய ஸ்ரீ பராசர ப்ரஹ்ம ருஷி அருளிச் செய்தான் –விமுக்தி பலதாயிநீ –என்கிற இது ஆத்ம வித்யா விசேஷணமாகிலும் தத் ஸாமாநாதி கரண்யத்தாலே அது இவளுடைய விபூதியாயிற்று -ஸ்ரீ யபதிதானும்-யாமாவம்ப்ய ஸுகே நேமம் துஸ்தரம் தரிகுணோததி,ம்। நிஸ்தரந்தய சிரேணைவ வ்யக்த த்யாந பராயணா; என்று ஸ்ரீஸாத்வதத்திலே ஸ்ரீயபதி ரூப த்யாநத்திலே அருளிச் செய்தான் – தத்பரங்களான ஸாஸ்த்ரங்கள் நிற்க இம் மத்ய ஸாஸ்த்ரங்கள் அதிப்ரபலங்கள்-ஆளவந்தாரும்.*ஜகதஸமஸ்தம் யத பாங்க ஸம்ஸிரயம்? என்றும், *ஸ்ரேயோ ந ஹ்யரவிந்த லோசந மநஃகாந்தா-. ப்ரஸாதாத்ருதே ஸம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத் வஸூ ந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்* என்றும் அருளிச்செய்தார்-ஸ்ரீ பராஷ்யகாரரும் – ஸ்ரீவைகுண்ட கத்யத்திலே, ஸேஷஸேஷாநாதி, ஸர்வம் பரிஜநம் பகவதஸ் தத்ததவஸ்தோசித பரிசர்யா யாமாஜ்ஞாபயந்தயா என்று பகவத் கைங்கர்ய ரூப பரம புருஷார்த்த,ம் இவள் நியோகத்தின் படியே நடத்த வேணுமென்று அருளிச்செய்தார்-கூரத்தாழ்வானும் –ஸ்வஸ்தி ஸ்ரீரதிஸதாத சேஷ ஜகதாம் -ஸர்க்கோப ஸர்க்க ஸ்திதீ: ஸ்வர்க்கம் துர்க்கதிமாபவர்க்கிக பதம் ஸர்வம் ச குர்வந் ஹரி ய்ஸ்யா வீக்ஷ்ய முகம்: ததிங்கித பராதீநோ விதத்தே அகிலம் க்ரீடேயம் கலு நாந்ய தாஸ்ய ரஸதா ஸ்யாதை கரஸ் யாத்தயா” என்று ஸங்க்ரஹித்த அர்த்தத்தை *தேவி த்வந் மஹிமாவதிர் ந ஹரிணா நாபி த்வயா ஜ்ஞாயதே” என்று தொடங்கி விஸ்தரித்தார்
பட்டரும், “ஐ்ஸ்வரய மக்ஷர கதிம் பரமம் பதம் வா கஸ்மைசிதஞ்ஜலிபரம் வஹதே விதீர்ய -அஸ்மை ந கிஞ்சிதுசிதம் க்ருதமித்ய தாம்பத்வம் லஜ்ஜஸே கதய கோய முதாரபவ.* என்று ஸ்ருதியில் உதார ஸப்தத்துக்கு வ்யாக்யாநம் பண்ணினார் இத்யாதியாலும்-இப்படி மத்யஸ்த த்ருஷ்டியாலே ப்ராமாணிகார்த்தங்கள் தோற்றச் செய்தே பற்றினது விடாதொழியில், த்ருட பூர்வ ஸ்ருதோ மூர்க்கோ தர்மாணா மவிஸாரத,। வ்ருத்தாந ப்ருச்சந் ஸந்தேஹாந் அந்த ஸ்வ ப்ரமிவர்ச்சதி – அந்யதா மந்த புத்தீநாம். ப்ரதிபாதி துராத்மநாம். | குதர்க்க(வ்யால தஷ்டாநாம்), ஜ்ஞாநதுஷ்டாநாம் விப்ராந் தேந்த்ரிய வா(ஜி)திநாம் என்கிற தஸையாம்- ஆகையால் ஸித்தோபாய ஸப்த வாஸ்ய விமர்ஸத்தில் நாநயோர் வித்யதே பரம் இத்யாதியாலும், ஸப்த விம்ஸாதிகாரத்திலே, வக்ஷ்ம்யா ஸஹ … கீயதே ‘இத்யாதிகளிற்படியே ஸபத்நீக ஸித்தனாயிருக்கையாலே இங்கே ப்ரமாண ஸித்தோபயோக விஸேஷமான பத்நீ ஸம்பந்தம் ஆர்த்தம். இப்படி ஸந்நியோக சிஷ்ட ந்யாயத்தாலே எம்பெருமானைச் சொன்ன விடமெங்கும் பிராட்டியையும் சொல்லிற்றாம்’ என்றும், அஷ்டாவிம்ஸாதிகாரத்திலே, “நாராயணன் ஸரண்யனாம் போது லக்ஷ்மீ விஸிஷ்டனா யிருக்குமென்கைக்காக பூர்வகண்டத்தில் ஸ்ரீமச் சப்தம்‘ என்றும், ‘சரணா விதி நிர்தேஸ பத்நீ வைஸிஷ்ட்ய பாதக -இதி மந்தைரிதும் ப்ரோக்தம் ஸ்ரீமச் சப்த நிரோததா! ஸப்த ஸ்வ ரஸத ப்ராப்தம் வைஸிஷ்ட்யம் பரமம் ஸ்ருதம் | விஸேஷ்ய சரண த்வித்வம் ந ஹி பதிது மர்ஹதி !! சரணாநிதி வக்தவ்யமிதி யச்ச ப்ரஸஞ்ஜிதம் | க்ரந்தஜ்ஞைர பஹாஸ்யம் தத் பதி ப்ராதாந்யதோ அந்வயாத் – ந ஸம்ராஜி ஸ பத்நீ கே. ஸத்,விதீயோக்தி ஸாஹஸம் | ததாத்ரேத்ய பராம்ருஸ்ய தர்ஸிதம் குரு ஸாஹஸம்’ இத்யாதியாலும் இப்படியே உபாய ஸ்ரீ , என்று ஸாதிக்கப்பட்டது –
இதி பூர்வ பக்ஷக்ரந்த.
அத, ஸித்தாந்த–நோபாய-ஸ்ரீ;
ஸ்ரீவசந பூஷண வ்யாக்யாநத்திலே – “புருஷகாரமென்றும், உபாயமெண்றும் இவற்றை நிரூபகமாக அருளிச் செய்தது. – பிராட்டிக்கு புருஷகாரத்வமும், ஈஸ்வரனுக்கு உபாயத்வமும் அஸாதரணம் என்று தோற்றுகைக்காக-இது தன்னை –மத் ப்ராப்திம் ப்ரதி ஐந்தூநாம் ஸம்ஸாரே பததாமத। லக்ஷ்மி புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி,। மமாபி ச மதம் ஹ்யேதத் நாநயதா லக்ஷணம் பவேத் என்றும், “அதம் மத் ப்ராப்தயுபாயோ வை ஸாக்ஷாத் வக்ஷ்மீ பதி: ஸ்வயம் | வக்ஷ்மீ, புருஷகாரேண வல்லப. ப்ராப்தி யோகிநீ | ஏதஸ்யாஸ் ச விஸேஷோயம் நிகமாந்தேஷு ஸப்த்யதே? என்றும். “ஆகிஞ்சந்யைகரணா கேசித் பாக்யாதிகா; புந மத் பதாம்போருஹ த்வந்வம் ப்ரபத்ய ப்ரீதா மாநஸா வக்ஷ்மீம் புருஷகாரேண வ்ருத வந்தோ வராநந। மத் க்ஷமாம் ப்ராப்ய ஸேநேஸ ப்ராப்யம் ப்ராபகமேவ மாம்! வப்த்வா க்ருதார்த்தா ப்ராப்ஸ்யந்தி மாமேவ அநந்ய மாநஸா:*. எண்றும் பகவஸ் ஸாஸ்த்ரத்திலே. தானே அருளிச் செய்தானிறே” என்றும், “உபாயத்வமும், *கருஷ்ணம் தர்மம் ஸநாதநம்‘ என்று ஸநாதந தர்மமாகச் சொல்லப்படுகிற அவனுக்கே ஸ்வதஸ் ஸித்தமாய், ததீஃயருக்கும் ததா ஸத்தியடியாக வருகிறதிறே யுள்ளது. ஆகையாலே பிராட்டிக்கு, புருஷகாரத்வமும் ஈஸ்வரனுக்கு, உபாயத்வமும் நிரூபகமாகத் தட்டில்லை – இவ்வர்த்தத்தை. வெளியிடுகைக்காக வாயிற்று இவரிப்படி அருளிச் செய்தது” என்றும். “இப்படி புருஷகார ஸாபேஷமென்னில் உபாயத்தினுடைய நைரபேஷ்ப ஹாநி வாராதோ என்கிற ஸங்கையிலே அருளிச் செய்கிறார்மேல் உபாயமென்று. தொடங்கி–அதாவது – ஸஹாயாந்தர ஸம்ஸர்க்க அஸஹமான ஸித்தோபாயம் ஸரண வரண ஸ்வரூப ஸ்வீகாரத்திஸ் ஸ்வீகர்த்தாவான புருஷனையும் ஸ்வீகரிப்பிக்கும் புருஷகாரத்தையும் அபேஷித்திருக்கும்- ஸ்வீக்ருதனான தான் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட ப்ராப்தி பண்ணுகையாகிற கார்ய காலத்தில் புருஷனும் புருஷகாரமுமாகிற உபயத்தையும் அபேஷியாதே தானே செய்து தலைக்கட்டும் என்கை –
கார்ய காலத்தில் ஸஹகாரி ஸாபேஷத்வமுண்டாகிலிறே உபாயத்தினுடைய நைரபேக்ஷ்யத்துக்கு. ஹாநி வருவதென்று கருத்து” என்றும், ரஹஸ்ய த்ரய வ்யாக்யாநத்தில் அகாரார்த்த விவரணத்தில், “வக்ஷ்ம்யா. ஸஹ… கீயதே என்கிறபடியே ரக்ஷகனான ஈஸ்வரன். சேதநரை ரக்ஷிக்கும் தஸையில் இவர்களுடைய அபராதங்களைக் கண்டாதல், தன் ஸ்வாதந்த்ர் யத்தாலே யாதல் உபேஷியாமற் செய்கைக்குறுப்பான க்ருபையை ஜநிப்பிக்கும். புருஷகார பூதையான பிராட்டி ஸந்திதி அவஸ்யாபேக்ஷித-மாகையாலே, ரக்ஷகனானவனைச் சொல்லுகிற இவ் வகாரத்திலே லக்ஷ்மீ ஸம்பந்தம் அநு ஸந்தேயமென்கை’ என்றும் த்வயத்தில் பூர்வகண்டத்தில் ஸ்ரீமத் பதார்த்த விவரணத்தில், ‘இப்போதிவளேச் சொல்லுகிறது புருஷகாரமாக” என்கையாவே உபாய வஸ்து விஸேஷணமா யிருக்கிற ஆகாரத்தை யிட்டு இவளுக்கு உபாயத்வத்தில், அந்வயம் சொல்லும் பக்ஷம் நிரஸ்தம்’ என்றும் சரணாவிதி பதார்த்த விவரணத்தில் த்வி வசநம் இரண்டுக்கு மேல் மற்றொன்று புகுர ஸஹியாமையாவே ஸஹாயாந்தர நிரபேக்ஷமான உபாய பூர்த்தியையும் சொல்லுகிறது என்கை’ என்றும், “அவனுபாயமாமிடத்தில் ஸஹாயாந்தரங்களை ஸஹியாமையாலே தான் உபாய பாவத்தில் அந்வயமின்றிக்கே புருஷகாரமாயிருக்கும் என்றும். ‘பெரிய ஜீயர் அருளிச் செய்தார் –
பரந்த ரஹஸ்யத்தில் (த்வய ப்ரகரணே மதுபர்த்த விசாரே), ஸ்ரீமந் நாராயண சரணெள என்று உபாய தயா வக்ஷ்யமாணனான நாராயணனுக்கு விஷேஷணமாக ஸ்ரீமத்தையைச் சொல்வா தின்றால் நாராயண ஸப்தத்திற் சொல்லப் புகுகிற குண விஸேஷங்கள் விஸேஷணத்வேந உபாய ஸரீரத்திலே அந்விதமாகிறவோபாதி இவளும் உபாய அவயவமாக ப்ராப்தையுமாய் மாதா பிதாக்களிருவரும் சேர விருந்து ப்ரஜா ஸம் ரஷணம் பண்ணுகை ப்ராப்தமுமாய் அதுக்கு மேலே *வேரி மாறாத பூமேலிருப்பாள் வினை தீர்க்குமே என்று உபாய க்ருத்யமான விரோதி நிவர்த்தகத்வம் இவ் வர்த்தத்திலே நிஷ்டரான நம்மாழ்வார் திருவுள்ளத்தாலுமுண்டாய் ப்ரதேஸாந்தரங்களில், இவளை புருஷகாரமாக நினைத்துச் சொல்லுகிறார்களென்கிறவையும் உபாய பாவத்திலே அந்வயிப்பிக்க யோக்யமுமாய் அதுக்கு மேலே, *அரி ப்ராணாந் பரித்யஜ்ய ரஷிதவ்ய* என்று மேலே அநுஷ்டிடக்கப் புகுகிற ப்ரபத்தி தானே புருஷகார க்ருத்யத்தைச் செய்ய வற்றாகையாலும், மாட்டாதாகில் இவள் ஸ்வாதந்த்ர்யத்தை யாற்றிச் சேரவிட உபாயபூதனானவிவன் ரஷிக்க வமைந்திருக்க உபாயாந்விதமான இவனுடைய ப்ரபத்த்யநுஷ்டாநம் நிஷ்பலமாம் படியுமாயிருக்க இவளுக்கு உபாய ஸரீரத்தில் அந்வயமில்லை – புருஷகார பாவத்திலே என்று ஒதுக்கித் தருவாரார் என்னில் விஸேஷணத்வ முண்டே யாகிலும் விஸேஷணகதமான குணங்களோபாதி உபாயோபயோகித்வம். இவளுக்கு இல்லாமையாலும் ஸமாஸ்ரயணைகாந்தமான ஸெளஸீல்யாதி குணோதய விரோதியான ஸ்வாதந்த்ரயத்தை புருஷகார பூதையான இவளாற்றினாலும் அவன் கார்யம். செய்யும் போதைக்கு “ரக்ஷ்யாபேஷாம் ப்ரதீக்ஷ்தே* என்கிறபடியே உபாய ப்ரார்த்தநா ரூபமான ப்ரபத்தி வேண்டுகையாலும், *வினை தீர்க்கும்” என்கிறவிடம் *களைவாய் துன்பம் களையாதொழிவாய் களை கண் மற்றிலேன் * என்கிறவருடைய உக்தி யாகையாலே இத் திருவாய்மொழி அநுஸந்தித்தவர் பக்கல் இவளுக்குண்டான ஆதராதிஸய ப்ரகாஸகமாகையாலும் இவளுக்கு புருஷகார பாவத்திலே நோக்காகக் கடவது-
இவளுக்கு உபாய பாவத்தில் அந்வயமுண்டாகில் சாதன பூதமான கர்மஜ்ஞாநாதிகளுக்கு “பலமத;* “ஸப்ரிதோ அலம் பலாய* என்று ஆராதந ப்ரீதனான ஈஸ்வரன் முகத்தாலே இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹார ரூபமான பல ஸித்தி இவனாலேயாதல், அங்ஙனன்றியிலே பல ப்ரதிபாதந ஹேதுவான ஜ்ஞாந ஸக்த்யாதிகளுக்கு உத்பாதிகையாதாலாக வேண்டும் -தான் பல ப்ரஸாதிகையாகில் –யஸ் ஸர்வஜ்ஞஸ் : ஸர்வவித்*, *பராஸ்ய ஸக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச *, *தேஜோ பலைஸ்வர்ய மஹாவபோத, ஸூ வீர்ய ஸக்த்யாதி குணைகராஸி , என்று ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் ஈஸ்வரனுக்குச் சொல்லுகிற ஜ்ஞாந ஸக்த்யாதி குண விஸேஷங்களின்றியிலே யொழிய வேணும்-உண்டாகிலிவனளை யொழியவே ஈஸ்வரன் தானே கார்ய கரண க்ஷமனே. அக் குணங்களை உத்பாதிக்கிறாளாகில் குணங்களுக்கு ஸ்வாபாவிகத்வ மின்றியிலே யொழியும். ஸெளஸீல்யாதிகளோபாதி திரோஹித மானவற்றை ப்ரகாஸிப்பிக்கிறாளென்னில், ஐகத் ஸ்ருஷ்டி ஸம்ஹாராதிகளிலே இடைவிடாமல் விநியோகம் கொண்டு போருகிற ஜ்ஞாந ஸக்தயாதிகளுக்கு ஸெளஸீல்யாதி திரோதாயகமான ஸ்வாதந்தர்யத்தோபாதி ஒரு திரோதாநமில்லையே- உண்டாகில் ஸ்ருஷ்ட்யாதிகள் நடவா தொழிய வேணும்- ஸர்வதா அந்விதையாகில் ஸ்வ விரோதி நிவ்ருத்தியில், தத் தஸ்ய ஸத்ருஸம் பவேத் என்று இருக்கக் கூடாதே.. குண விஸேஷங்களே அமைகை யன்றோ-“ஆஸம்ஸேயம் ஹரி ஸ்ரேஷ்ட, க்ஷிப்ரம் மாம் ப்ராப்ஸ்யதே பதி! அந்தராத்மா ச மே ஸூத்த தஸ்மிம்ஸ் ச பஹவோ குணா என்று தன் பக்கல் அநந்வோபாயத்வமும் அவன் பக்கல் குண” விஸேஷங்களுமே பல ஸித்திக்கு மபேஷிதமாகத்தான் அறுதியிட்டு வைத்தது-நாம் உபாயமாக யாதொரு வஸ்துவை ஸ்வீகரிக்கிறோம், அவ் வஸ்துவுக்கு இவள் ஸ்வரூப நிரூபிகை யாகையாவே ப்ரணவத்தில் ப்ரதம பதத்திற் போலே *யத்யபி ஸச் சித்த. “என்கிற குண ஸித்தி ந்யாயத்தாலே அவர்ஜநீயமாய் அந்வயியாதோ வென்னில், ஸ்வரூப நிரூபகத்வேந அவர்ஜநீய ஸம்பந்தம் உண்டே யாகிலும் உபாய தஸையைக் கொண்டு கொள்வதொரு ப்ரயோஜந மில்லாமையாலே ஸ்வரூப நிரூபகங்களான ஜ்ஞாநாநந்தகங்களோபாதியும். குமரிருந்து போமித்தனை-இவற்றுக்கு ப்ரயோஜந மின்றிக்கே யொழிகைக்கு ஹேது அவனுடைய நைரபேஷ்யமாகில், சில குண விஸேஷங்கள் உபாயதயா அந்வயிக்கிறபடி என் என்னில், இவை கார்யோபயோகி யாகையாலும், குணத்வேந அப்ருதக் புத்தி ப்ரவ்ருத்திக மாகையாலும் குணி குண த்வாரா கார்யம் செய்கை நைரபேக்ஷயத்துக்குக் கொத்தை யல்லாமையாலும் அவற்றுக்குத் தட்டில்லை–
இவள் கார்யாநுபயுக்தை யாகையாலும் த்ரவ்யத்வேந ப்ருதக் புத்தி ப்ரவ்ருத்தி யோக்யதை யுண்டாகையாலும் அத்தாலே உபாய நைரபேக்ஷ்யத்துக்குக் கொத்தையா யறுகையாலும் உபாய பாவத்தில் அந்வயமில்லை-ஆகையால். ஸேக்ஷித்வ தஸையிலும் ப்ராப்யத்வ தஸையிலும் ஒரு மிதுநமே ஆக வேண்டினவோபாதி உபாய தஸையிலே ஸ்வேதர ஸகலாஸஹாயாஸஹ மாயிருக்கையாலே இவளுக்கு உபாய பாவத்தில் அந்வயமின்றியிலே புருஷகார பாவத்திலே யாகக்கடவது– என்றும், கதய த்ரய வ்யாக்யாநத்திலே ‘ஸ்ரீவல்லப, – இவ் வாலப்யம் புருஷகார பாவத்துக்கும் ப்ராப்யதைக்கும் உறுப்பாயிறே யிருப்பது‘ என்றும்.” ஸ்ரீமந்- இப்படி யிருக்கிற உன்னையுங் கூட அசிர்த்து, புருஷகார பூதையான பிராட்டியைப் பார்த்து ரஷிக்க வேணும்” என்றும், ‘ஸ்ரீமதே* என்கிற விடத்தில் ஸ்வரூபாநு பந்தியான லக்ஷ்மீ ஸம்பந்த மநுஸந்தேயம்-இத்தால் புருஷகாரபாவம் சொல்லிற்று என்றும், ‘ஸ்ரீமந்– பூர்வ வ்ருத்தம். பாராதே விஷயீகரிக்கும்படி அருகே யிருந்து சேர்ப்பாருமுண்டு” என்றும் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் –
சரம ரஹஸ்ய த்ரயத்தில் –இப்பதத்தில் த்வி வசனம் ஸ த்விதீயம் இவ் வுபாயம்’ என்கிற ஸாஹஸ வசநத்தைத் தள்ளுகிறது.. அவனுமவளும் கூட உபாயமென்னில், சரணங்கள் இரண்டு என்ன வொண்ணாது, நாலென்ன வேணும். இவ்விருவரும். ஸமப்ரதாநரென்னில், அவளும் தனியே உபாயமாய் அவனும் தனியே உபாயமாய் விஸிஷ்டம் உபாயமென்னும் வார்த்தையோடு விரோதிக்குமாகையாலே, அவளுக்கு, புருஷகார பாவமும் அவனுக்கு உபாய பாவமும் வ்யவஸ்த்திமாயே யிருக்கும்‘ என்று நயினாராச்சான் பிள்ளை அருளிச் செய்தார். ரஹஸ்யாம்ருதத்திலே “இவளுடைய உபாய பாவத்தை ஸகல ப்ரமாணங்களும் சொல்லிற்றே யாகிலும் வக்ஷ்மீ விஸிஷ்டம் உபாயம் என்னுமனவில் விஸேஷ்யமான ஈஸ்வராம்ஸத்திலே ப்ராதாந்யமும் விஸேஷணமான இவள் பக்கலிலே அப்ராதாந்யமுமாகக் கடவது-அதாவது புருஷோத்தமத்வத்தாலே வந்த ஸ்வாதந்த்ரியத்தாலே அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட ப்ராப்தியும் பண்ணிக் கொடுப்பான் – ஈஸ்வரனேயாய், இது கண்டு தானுகந்து அவனைப் பின் செல்லுகை – தனக்கு ஸ்வரூபமா யிருக்கை-ஆன பின்பு தனித்து இருவரும் உபாயமாகச் சொல்லுகிற விடங்கள் பகவானுக்கு அபிமதையாய் அநுரூபை யாயிருக்கிற ப்ராதாந்யத்தாலே இவள் சொல்விற்றை அவன் செய்யுமென்கிற நி்ஸ்சய நிபந்தநமாகக் கடவது-ஆகையால். உபாய விஸேஷணமான விக்ரஹாதிகளில் ஸூபாஸ்ரயத்வத்திலே விக்ரஹத்துக்கு அந்வயமாகிறாப் போலேயும் அக் குணங்களில் வாத்ஸல்யாதிகளுக்கு. ஆஸ்ரயணீயத்வத்திலும், ஜ்ஞாந சக்த்யாதிகளுக்கு கார்ய கரத்வத்திலும் அந்வயமாகிறாப் போலவும் குணங்களுக்குத் தனித் தனியே கார்ய பேதமுண்டானாப் போலவும் லக்ஷ்மிக்கு புருஷகார பாவத்திலே அந்வயமென்று நிஷ்கர்க்ஷிக்கப் பட்டதாயிற்று” என்று வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்தார்
தத்வ பூஷணத்திலே ‘காரண வஸ்துவே உபாஸ்யமுமாய் ஸரண்யமுமாகையாலே இவளுக்கு உபாய பாவத்தில் அந்வயமில்லை. இவளுக்கு உபாய பாவமுண்டாக ப்ரமாணங்களுண்டே என்னில் – அது ஸரண்யனுடைய இச்சாநுவிதாயித்வமாகக் கடவது’ என்றும். “மேலே ப்ரதம பதாந்தமான த்வி வசநத்தாலே நிர்விக்ரஹவாதிகளை நிரஸிக்கிறது-அநந்தர பதத்தாலே உபாயத்வித்வாதிகளை நிரஸிக்கிறது. என்று நடுவில் திருவீதிப் பிள்ளை நிர்வஹிப்பர்” என்றும், ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே ‘சரணெள’ என்று த்வி வசந ப்ரயோகம் பண்ணுவான் என் என்னில் ஏக வசந ப்ரயோகம் பண்ணினால் ஜாத்யேக வசநமாகக் கொண்டு லக்ஷ்மீ விஸிஷ்டோபாயத்தைக் காட்டுகையாலே–அதை வ்யாவர்த்திக்கைக்காக த்வி வசந ப்ரயோகம்” என்றும்- ‘வக்ஷ்மீ குண விக்ரஹங்கள் விஸேஷணமாய்- அவன் விஸேஷ்யமாகையாலே விஸேஷ்யாம்ஸ பூதனானவனுக்கே ப்ராதாந்யேந கார்ய கரத்வம்-விஸேஷணாம்ஸமான இவற்றுக்கு ததநுவிதாயித்வ மாத்ரமே யாயிருக்கு மாகையால்-விக்ரஹத்துக்கு ஸுபாஸ்ரவத்வம் வாத்ஸல்யாதி களுக்கு ஆஸ்ரயண சவ்கர்யாபாதகத்வம்-ஜ்ஞாந ஸக்த்யாதிகளுக்கு ஆஸ்ரித கார்யாபாதகத்வம் இந்த குணங்களுக்குத் தனித்தனியே கார்ய பேதம் எப்படி அப்படியே வக்ஷ்மீ புருஷகாரத்வம் நியதமாகவே யிருக்கும் என்றும், ஸ்ரீ மாலாதி பவம்ஸ மவ்க்திகமணி கண்டீரவோ வாதிநாம் நாம்நா யாமுந தேஸிக கவிவர பாதஞ்ஜலே பண்டித. என்று சொல்லப்பட்டவராய், அழுகருக்கு புரோஹிதராய் வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் பாதத்திவலவரான யாமுநாசார்யர் அருளிச் செய்தார்- இத்தால் ப்ரமாண ஸித்தமு மின்றியிலே பகவதபிமதமுமின்றியிலே ஸம்ப்ரதாய ஸித்தமுமின்றியிலே ஆசார்ய ருசி பரித்யக்தமான இந்த உபாயத்வம் பரித்யாஜ்யம் ப்ரமாண ஸித்தமுமாய் பகவதபிமதமுமாய், ஸம்ப்ரதாய ஸித்தமுமாய் ஆசார்ய ருசி பரிக்ருஹீதமு மாயிருக்கிற புருஷகாரத்வமே ப்ராமாணிகருக்கு பரிக்ராஹ்ய மென்றதாயிற்று-
இதி ரஹஸ்ய விவேகே ப்ரதம விவேக ஸமாப்தம்
————
அத, பூர்வபக்ஷி- ஸ்ரீர் விப்வீ
சதுஸ் ஸ்லோக் யதிகாரே –ஏவம் கில தே வதந்தி யதா விபு ஸ்வபாவஸ்ய ஈஸ்வரஸ்ய அகடிதகடநா ஸாமர்த்யாத் அணுத்வம்-ததா அணு ஸ்வபாவாயா ஏவ தஸ்யா விபுத்வமிதி தத்ர த்ருஷ்டாந்தஸ் தாவத யுக்த உபாத்யவச்சேத மாத்ரேண ஹி அணுத்வம் ஈஸ்வரே அங்கீ க்ரியதே ந து ஸ்வரூபத யதிசாகடிதகடநா ஸக்தயா அத்ர விருத்த த்வய ஸம்பவ ததா ஸர்வாத்வைத பேதாபேத பஷாப்யாம் கிமபராத்தம்-என்றும்-ந ச ஸர்வகதாதி ஸப்தாநாம். ஸார்வத்ரிகாவதார ஸர்வ ஸேஷித்வாதி ப்ரதிபாதகத்வம் கல்ப்யம்- யதா ஸ்ருத ஸ்வீகாரே விரோதாபாவாத் நாபி! முக்தவத் தர்ம பூத ஜ்ஞாந த்வாரா வயாப்தி கல்பநம் யுக்தம் தத்வத் பாதக ஸ்ருத்யாத்ய பாவாத-விபுத்வயாஸம்பவே இஹ பாதக இதி சேந் ந – கால தத்வே நித்ய முக்தேஸ்வராணாம்-தர்ம பூத ஜ்ஞாநே ச விபுத்வ ஸ்வீகாராத் என்றும். அதோ ஜீவத்வேப்யஸ்யா ஸ்வரூப விபுத்வேந பதி ஸ்வரூபாநுரூப்யமிதி” என்றும், ஸப்த விம்ஸாதிகாரத்திலே “வ்யாப்தனுக்கு ப்ரதி வஸ்து பூரணத்வமாவது ஓரொரு உபாத்ய வச்சிந்ந ப்ரதேஸமே ஸர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல ஸக்தியை யுடைத்தா யிருக்கை யல்லது வஸ்து தோறும். ஸ்வரூப ஸமாப்தி யன்று. இது கொள்ளில் பஹிர் வ்யாப்திக்கு விருத்தமாம். இத்தை அகடிதகடநா ஸக்தியால் நிர்வஹிக்கில் விருத்த ஸமுச்சயம் கொள்ளும் பர மதங்களிற் படியாம்‘ என்றும் ஸ்ரீக்கு விபுத்வம் ஸாதிதமாயிற்று-
இதி பூர்வ பக்ஷ க்ரந்த
அத ஸித்தாந்த -ஸ்ரீர் ந விப்வீ
ஸ்ரீக்கு விபுத்வம் கிடையாது– எங்ஙனே யென்னில் ஈஸ்வரன் அணுக்கள் தோறும். பரி ஸமாப்ய வர்த்திக்மென்னுமிடம் கூடாதாகில் பரி ஸமாப்ய வ்ருத்தியைச் சொல்லுகிற அந்தர்யாமி ப்ராஹ்மண ஸுபாலோபநிஷத் ப்ரப்ருதி ஸகல ப்ரமாண விரோதம் ஸம்பவிக்கும்- திருவாய்மொழி முதல் திருவாய்மொழி எழாம் பாட்டின் ஈட்டிலே. ‘”அவை யவை தொறும்” – அவ்வோ பதார்த்தங்கள் தோறும் அவற்றிலே வ்யாபிக்கு மிடத்திலே பல தூணுக்காக ஒருத்திரம் கிடந்தாப் போலே யன்றிக்கே ஜாதி வ்யக்தி தோறும் பரிஸமாப்ய வர்த்திக்குமாப் போலே எல்லாவற்றிலும் தனித் தனியே குறைவற வ்யாபித்து-நிற்கும் என்றும், “(எங்கும் பரந்து) அந்தர் பஹிஸ்ச வ்யாபித்து- இதில் ப்ரமாணமென்னென்னில். (உளன் சுடர் மிகு சுருதியுள்) அபெளருஷேயமாய் நித்ய நிர்தோஷமா யிருக்கிற வேதத்தாலே ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கும்” என்றும், பத்தாம் பாட்டில் “இப்படி வ்யாபித்து, நின்றால் அசித் ஸம் ஸர்க்கத்தாலே சேதநனுக்கொரு ஸங்கோசம் பிறவா நின்றதிறே. அப்படியே இவனுக்கு மிவற்றோட்டை ஸம் ஸர்க்கத்தாலே ஸங்கோசம் பிறக்குமோ வென்னில்- அது செய்யாது, அஸங்குசிதமாக வ்யாபித்து நிற்குமென்று வ்யாப்தி ஸெவ்கர்யத்தை யருளிச் செய்கிறார் (பரந்த தண் பரவை) இத்யாதி–பரந்து குளிர்ந்திருந்துள்ள. கடலில்-ஜல பரமாணுக்கள் தோறும் வ்யாபித்திருக்கும் நீர்ச் செறிவாலே திரண்டு தோற்றுகிற வித்தனை யிறே; பரமாணு ஸங்காதமிறே- “ஜ்யாயா நந்தரிக்ஷாத்* என்கிற வஸ்து, ஜல பரமாணுக்களிலே வ்யாபியா நின்றால் அல்பாவகாஸமாய் நெருக்குப் பட்டிருக்குமோ வென்னில் பரந்த அண்டம்-இது எனவாயிற்று வ்யாபித்திருப்பது-ஓரண்டத்தைச் சமைத்து அதிலே ஓர் ஏகாகியை ஸவத்தாப் போலே இருக்கும்- இப்படி ஜல பரமாணுக்களிலே வ்யாபித்து, விடுமத்தனையோ என்னில் எண்றும் * (இடந் திகழ் பொருடொறும்) – அவ்வ ஸரீரங்களிலே ஜ்ஞாநாநந்த லக்ஷணமாய்க் கொண்டு மிளிருகிற ஆத்மாக்கள் தோறும், (எங்கும் பரந்துளன் ) சேதநன் ஸரீரத்திலே வ்யாபிக்கும் போது அதில் ஏக தேஸத்திலே நின்று ஜ்ஞாநத்தாலே எங்கும் வ்யாபிக்கக் கடவனாயிருக்கும். இவன் அங்கனன்றிக்கே ஸ்வரூபத்தாலே எங்கும் வ்யாபித்திருக்கும்-விபுத்வத்தை அவனுக்குச் சொல்லி அணுத்வத்தை. இவனுக்குச் சொல்லி இதுக்குள்ளே அவன் குறைவற வ்யாபித்திருக்கும் என்றால், அது கூடுமோ வென்னில், (இவை யுண்ட கரனே) சிறுவடிவைக் கொண்டு பெரிய வற்றை யெல்லாம் தன் வயிற்றிலே வைத்தால் தயிருண்ட பொன் வயிறிவ்வேழுலகு முண்டு மிடமுடைத்தால் என்கிறபடியே – பின்னேயும் அவ் வயிறே இடமுடைத்தாம்படி இருக்க வல்ல ஸர்வ ஸக்தி – சிறிய வற்றிலே குறைவற இருக்க மாட்டானோ என்கிறார். இப்படி ஸூ த்ருட ப்ரமாண ஸித்தனென்று மயர்வற மதிநலமருளப் பெற்று, ஸகல ப்ரமாண ப்ரமேயங்களை ஸாக்ஷாத்கரித்த ஆழ்வார் (பரந்த வண்டமிதென – இடந் திகழ் பொருடொறும் எங்கும் கரந்து பரந்துளன் ) என்று ஸாப்தமாக அருளிச் செய்ததை நம்பிள்ளை முதலானோர் விவரிக்கையாலே ஆழ்வார்கள் திவ்ய ஸுக்திகளோடும், ஆசார்ய திவ்ய ஸூக்திகளோடும் விரோதமாம்
அணோரணியாந் மஹதோ மஹியாந் என்று அணியஸ்த்வ-. மஹீயஸ்த்வங்களைச் சொல்வி அந்தர்பஹிஸ் ச தத் ஸர்வம். வ்யாப்ய… என்று அணுவுக்குள்ளிலும் விபுவுக்குப் புறம்பும் வ்யாபிக்குமென்று சொல்லி, இப்படிக் கூடுமோவென்று ஸ்ருதி தானே ஸங்கித்து பராஸ்ய ஸக்திரவிவிதைவ ஸ்ரூயதே என்று அகடிகடநா ஸாமர்த்யத்தைச் சொல்லி பரிஹரித்ததிறே. ஆகையாலே பரம மஹானாயிருக்கிறவனுக்கும் அணுவுக்குள்ளே அந்தர் வ்யாப்தி கொள்ள வேணும். திருவாய்மொழி ஈட்டில் முடியானேயில் “கொள்வன்: நான் : மாவலி” என்கிற பாட்டிவே, *எஞ்ஞான்று பொருந்துவன் -என்கிற அடியிலே. “ஸரவாத்மாக்களுக்கும் ஸேஷத்வம். அவிஸிஷ்டமாய் இருக்கச் செய்தே பத்தரும் முக்தரும். நித்யரும் என்கிற பிரிவோபாதி மஹிஷிகளும்; “அநந்யா”. என்கிற பிராட்டியின் வார்த்தை எல்லார்க்கும் சொல்லவாம்படியிறே ஸ்வரூபத்தை உணர்ந்தாரிருப்பது. ஈஸ்வரனுக்கும் பிராட்டிமார்க்கும் பேதம் சொல்லுகிற. ப்ரமாணங்களெல்லம் அல்லாதாரோபாதி பிரிவுண்டென்னுமிடம் சொல்லுகிறன. ஜக்யம் சொல்லுகிற விடமெல்லாம் பாரதந்தர்ய காஷ்டையைப் பற்றச் சொல்லுகிறனவென்று. ப்ராஸங்கி,கமாக ஒருருவிவே அருளிச் செய்தார்! என்று. வடக்குத் திருவீதிப் பிள்ளை அருளிச் செய்தார்-
தத்வங்கள் மூன்றே யாகையாலும். ஈஸ்வர கோடியிலே கூடினால் ஈஸ்வர த்வித்வம் வருகையாலும் சேதநகோட்யந்தர் பூதையாகையாலே. அணு ஸ்வரூபையா யிருக்கு மிப்பிராட்டி ஸ்வரூப நிரூபக தர்மமாய்க் கொண்டு ஈஸ்வரன் இருந்தவிடமெங்கும். *ஈஸ்வரீம்? என்று ஸ்ருதையாந அகடிதகடநா ஸக்தியாலே வ்யாபிக்கத் தட்டில்லை. “பர்த்தாவினுடைய படுக்கையையும் ப்ரஜையினுடைய தொட்டிலையும் விடாதே யிருக்கும் மாதாவைப் போலே ப்ரதம சரம பதங்களை விடாதே யிருக்குமிருப்பு‘ என்றும், ‘நாரங்களாவன ” என்று தொடங்கி, ‘பெரிய பிராட்டியார் தொடக்கமான” என்றும் பிள்ளை வோகாசார்யர் அருளிச் செய்தார். இதன் வயாக்யாநத்திலே ‘ஈஸ்வர சேதந வாசகங்களான அகார மகாரங்களிரண்டிலும் இவளுக்குண்டான அநவரதாந்வயத்தை ஸத்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார்’ என்றும் “பெரிய பிராட்டியார் தொடக்கமான நாய்ச்சிமாராவார். *ஏவம் பூத பூமி நீளா நாயக!*,”தேவி!! த்வாமநுநீளயா ஸஹ மஹீதேவ்யஸ் ஸஹஸ்ரம் ததா என்கிறபடியே ப்ரதாந மஹிஷியான பெரிய பிராட்டியார் முதல் தத் ஸமானைகளாண பூமி நீளைகளும் மற்றும் அநேகராகச் சொல்லப் படுகிற நாய்ச்சிமாரும் என்றும், “ ‘ஸஷ்மீ ப்ரப்ருதி மஹிஷீ வர்க்கங்களும்’ என்றிறே ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது” என்றும் பெரிய ஜீயர் அருளிச் செய்தார்-
பரந்த ரஹஸ்யத்திலே ஸ்ரீயபதி. என்கிறபடியே பிராட்டி பகவத் ஸ்வரூப நிரூபிகை யாகையாலே, “யத்யபி ஸச்சித்தோ ந நிரபுக்ண தைவதம் குண கணம் மநஸா அநுதாவேத் ததாப் யந்தர் குண கணாமேவ தேவதாம் பஜதே தத்ராபி! ஸகுணைவ தேவதா ப்ராப்யதே’ என்கிற குண ஸித்தி நியாயத்தாலே ஸக்ஷ்மீ ஸம்பந்தமும் ஆர்த்தமாக இவ் விடத்திலே சொல்லிற்றாயிற்று –அணுரப்யாத்மா” என்று ஆத்ம ஸாமாந்ய ப்ரயுக்தமாம் இவளுக்கு வரும் அணுத்வமும், யதா ஸர்வகதோ விஷ்ணு ததைவேயம் த்விஜோத்தம” இதயாதிகளிலே சொல்லுகிறபடியே ஈஸ்வரனோபாதி இவளுக்குண்டான ஸர்வ வ்யாபகத்வமும் தன்னில் விருத்தமாய் ஏகாஸ்ரயஸ்தமாகக் கூடாமையாலே இரண்டும் கூடுகைக்காக “அநுபபத்யமாநார்த்த தர்ஸநாதுபபாத கார்த்தாந்தர கல்பநம் அர்த்தாபத்தி–என்கிற அர்த்தாபத்தியின் படியே அபரிச்சேத்யமான ஸ்வரூப வைபவத்தை யுடையனான ஸர்வேஸ்வரன் அத்யந்த ஸுஷ்மங்களான பதார்த்தங்களிலே பண்ணும் அவ்வவ வ்யாப்திக்கு ஒரு ஸக்தி விஸேஷேத்தைக் கொள்ளுமோபாதி. இவளும் ஒரு ஸக்தி விஸேஷத்தாலே வ்யக்த்யாஸ்ரயமான ஜாதி போலே ஈஸ்வரன் வ்யாபித்த விடமெல்லாம் ல்யாபிக்கக் கடவளாகையாலே ஈல்வர ஸ்வரூப நிரூபிகை என்னுமிடம் ஸம் ப்ரதிபந்தம்-வ்யக்திக்கும் ஜாதிக்கும் உண்டான ஸம்பந்தம் போலே ஈல்வரனுக்கும் பிராட்டிக்குமுண்டாண ஸம்பந்தமும்-அதில் ஜாதியாகிறது – வ்யக்தி ஸ்வரூபத்தைப் பற்றிக் கடக்க நிற்க வற்றாய் அதில்வாதவன்று தானில்லை யென்னலாம் படியுமாய் வ்யக்தியுள்ள விடமெங்கும் வ்யாபிக்கவும் கடவதாய், ஸ்வாஸ்ரயத்துக்கு இதர வ்யவச்சேதகமு மாயிருக்கும். வ்யக்தி யாகிறது – ஜாதிக்கு ஆஸ்ரயமாய் ஜாதியோடே வ்யாப்தமுமாய் ஜாதி வ்யவச்சேத்யமுமாய் ஜாதிக்கு விஸேஷ்யமுமாயிருக்கும். அதில் ஜாதி போலே பிராட்டியும், *அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா *, *அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா – என்றும். *நித்யைவைஷா ஐகந் மாதா விஷ்ணோ ஸ்ரீர் அநபாயிநீ* என்றும் சொல்லுகிறபடியே ஆதித்யனுடைய ப்ரபை போலே பிரியில் ஸ்திதை யாகாதபடி ஈஸ்வரனை ஆல்ரயமாகா வுடையளாய், யதா ஸர்வகதோ விஷ்ணு ததை வேயம் த்விஜோத்தம த்வயா ச விஷ்ணுநா சாம்ப, ஜகத் வ்யாப்தம் சராசரம் என்கிறபடியே ஈஸ்வரனுள்ள விடமெல்லாம் வ்யாப்தையுமாய், *ஸ்ரீ யபதி; – நித்ய ஸ்ரீ ” என்கிறபடியே பகவத் ஸ்வரூபத்தினுடைய இதர வ்யவச்சிந்ந புத்தி ஹேது பூதையாய் *விஷ்ணு பத்நீ” என்கிறபடியே பகவச் சேஷ பூதையுமாயிருக்கும்-அவனும் வ்யக்தி போலே இவளுக்கு ஆஸ்ரயமாய், இவளோடே வ்யாப்தனுமாய், இவளைக் கொண்டு அறிய வேண்டுமவனுமாய், இவளுக்கு ஸேஷியுமாயிருக்கும்–
இனி ஜாதி நிரூப்யமான கட வ்யக்தியைச் சொன்ன போதே நிரூபகமான ஜாதியும் தன்னடையே அந்விதமாமாப் போலே இப்பதமும் நிரூப்யனான ஈஸ்வரனைச் சொன்ன போதே நிரூபக பூதையான பிராட்டியையும். சொல்விற்றாய் விடும்- என்றும்-கத்ய வ்யாக்யாநத்திலே. (வி-ப -வ) *அர்த்தோர் விஷ்ணுரியம் வாணீ-என்று அர்த்தாம்ஸம் அவனதாய் லஸப்தாம்சம் இவளதாயிருக்கை –பும்நாமா பகவாந் ஹரி ஸ்த்ரீநாம் நீ லக்ஷ்மீ:. என்கிறபடியே புல்விங்க பதார்த்தம் அவனதாய் ஸ்த்ரீ லிங்க பதார்த்தம் இவளதாயிருக்கை என்றும், சென்னியோங்கு வ்யாக்யாநத்திலே – (சதிரா) தன்னடியார் – ஒரு மிதுநம் ஸேஷியாணால் தம்மடியாரென்ன வேண்டாவோ வென்னிவ், அடியாரென்கிறதுக்குள்ளே அடிமையில், அந்தர் பாவம் தனக்குண்டாகையாலே யென்னுதல், இத்தால்- நார கோடி கடிதை என்கை’ என்றும், பரந்த ரஹஸ்யத்திலே ‘நார ஸப்தார்த்த விவரணத்திலே லக்ஷ்மீ ப்ரப்ருதி மஹிஷீ வர்க்கங்களும் என்று பிராட்டி நார கோடி கடிதையாகையாவே இப் பதத்தில் லக்ஷ்மீ ஸம்பந்த மநு-ஸந்தேயம்” என்றும் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் –
தத்வ ஸங்கரஹத்திலே ‘ஏவமாதமநாமணுத்வே கத,மயம். வ்யவஹார; யதா ஸர்வ கதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம இதி ஸரிய। அத்ராஹு. – நேயமாத்மாந்தர் பூதேதி கதமித மநந்தர் பாவ வசநம் போக்யாந்தர் பாவாத் ஈஸ்வராந்தர் பாவாத் கோடி த்ரயாதி ரேகாத்வா? நாத்ய- ஜ்ஞாத்ருத்வ விரோதாத் (ஜ்ஞாத்வாஜ்ஞாத்வ விரோதாத் இதி தால கோஸஸ்த பாட). ந த்விதீய, ஈஸ்வரத்வஸ்ய த்வி நிஷ்டத்வா ஸம்பவாத் தயோ, ஸ்வாஜ்ஞா வ்யாகாதத்வேநா நீஸ்வரத்வா பத்தே। அத எவ ஸ்ரூயதே – “ஈஸதே தேவ ஏக .” இதி । நேயமேவ ஸ தத் பத்நீத்வேந நிர்தேஸாத்। ந ச இயமேகைவ த்விதா அவஸ்திதேதி யுக்தம் வக்தும் ஏகத்வே ப்ரமாணா பாவேந தத் கல்பநாநுபபத்தே! ந ச *அர்த்தோ வா ஏஷ ஆத்மநோ யத் பத்நீ இதி ஸாதாரண வசநாத் அத்ராப்யேகத்வ ஸித்தி-
ஸூக துக்காதி வ்யவஸ்தா லஷணாத் ஆத்ம பேத ஹேதோ ஸ்ருதே: ஸ்துதித்வா வஸாயாத் | யத் யஸ்தி ஏக தயா நிர்தேஸ க்வசித் ஸோபி அவிநாபாவ நிபந்தந தயா அவகந்தவ்ய “ஏகைவ வர்த்ததே பிந்நா ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீதிதே- இதி ப்ராஹ்ம புராணே தர்ஸநாத்– யதா ஜ்யோத்ஸ்நா,. ஜ்யோத்ஸ்நாவதோ பிந்நாபி அவிநாபூதா வர்த்ததே இத்யர்த்த,.। அநேந காரணாந்தர் பாவோப்ய பாஸ்த,. ஈஸ்வரத் வவத் தஸ்யாபி த்வி நிஷ்டத்வா ஸம்பவாத். | ஐகஜ் ஜந்மாதி காரணத்வம் ஆஸ்யாந்தரேபி பவேத் | ப்ரஹ்ம. வக்ஷண தயா ந நிர்தேஸ்யத்வம் ஸ்யாத் [நிரதேஷ்டவ்யம் ஸ்யாத் இதி தாள கோஸஸ்த பாட.)லக்ஷணஸ்ய அஸாதாரண தர்மத்வாத் | நிர்த்திஸ்யதே ச “ஜந்மாத்யஸ்ய யத் இதி | கிஞ்ச குத்ரேயம் அநு விஸதி? ந தாவது பாதாநே, தஸ்ய *ஸதேவ ஏகமேவ” இத்யேகத்வா வதாரணாத்। க்வசித் அநு ப்ரவேஸோபி ஏகத்வா விரோதீதி சேத் – ந தயோரநு ப்ரவேஸா பாவே ஜகதுபாதாநத்வம் ந நிர்வஹதி ப்ரஹ்மண அபரிணாமித்வாத் பரிஸூத்தத்வாச்ச–நசைவமத்ர தர்மி க்ராஹகத்வாத் அந்வய வ்யதிரேகாப்யாம் அநுபபத்தே: வசந பாவாத் வா கஸ்யசித் காரணத்வம் அப்யுப கந்தவ்யம் | ந சதுஷ்டய மப்யத்ரேதி கதமியம் காரண தயா ஸ்வீக்ரியதே! ஸ்வரூபாந்தர் பாவாத் அவர்ஜநீய: தத் ஸந்நிதி ரிதிசேத் – ஸத்யம், அவர்ஜநீய தயைவ ஸந்திதி ரஸ்யா ந து காரணதயா, ததாத்வே ப்ரமாணா பாவாத் । நாபி நிமித்தே அந்தர்பவதி அத்விதீய பத ப்ரகோபாத் ஸத்ய ஸங்கஸ்பஸ்ய தஸ்ய ஈஸ்வரஸ்ய ஸஹாயாந பேக்ஷத்வாச்ச। அநேந உபாயாந்தர் பாவோப்யு பருத்த,!। தஸ்ய மாமேகம் இத்யே கத்வ நிரதேஸாத் அமோக ஸங்கல்பதயா ஸஹாயாந பேஷத்வாச்ச। ந நு – ஸ்ரீமத ஏவ தஸ்ய உபாயத்வம் உபதிஸ் யத இதி சேத் ந – தத்ர சரண யோரேவ ஸரணதயா அவஸீய மாநத்வாத் ததாபி தயோரேவ **சரணஸ்ய (சரணாநாம்.- இத பாடாந்தரம்.] ததாவஸாய இதி சேத் ந- சரணாவிதி த்வித்வ விரோதத்! அதோ விஸேஷண தயா நிர்திஷ்டாயா விநியோகாந்தர மந்வேஷ்டவ்யமிதி। ந த்ருதீய ப்ரமாணா பாவாத் | ந நு கோடி த்ரயாநத்தர் பாவ ஹேதுவத் ஆத்ம ஜாத்ய நந்தர் பாவா–ஹேது வ்யாபகத்வேஸ்வரத்வயோ ; பகவதீவ அஸ்யா அபி விதயமாநத்வாத் நாத்ம ஜாத்யந்தர்பூதா தாப்யாமேவ ஹி. புருஷாந்யத்வம் உத்தம புருஷஸ் யோபதிஷ்டம் | “உத்தம; புருஷஸ்த்வந்ய பரமாத்மேத் யுதஹ்ருத। யோ லோக த்ரய. மாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர: | இயமபி ததா வ்யபதிஸ்யதே, யதா ஸர்வகதோ விஷ்ணு ததைவேயம் த்விஜோத்தம “ஈஸ்வரீம் ஸர்வ பூதாதாம்” இத்யாதி-ஷ் விதி சேத் ந-ப்ரதமஸ்து ஸ்வரூபாஸித்தோ ஹேது: தைஸ் தைஸ் சரீர விஸேஷை, ஸர்வத்ர ஸந்நிதேரேவ ஸர்வ கதார்த்த த்வேந விவக்ஷி தத்வாத் | ததாத்வம் ச ப்ரஸ்ந ப்ரதி வசநோ பபாதந ப்ரகாரை ரேவா வதார்யதே | ததாஹி பூர்வத்ர -: *தே வெளவ் தாத்ரு விதா தாரெள ப்ருகோக் யாதிரஸூயத। ஸ்ரியம் ச தேவதேவஸ்ய பத்நீம் நாராயணஸ்ய ச இதி! ஸ்ரிய க்யாத்யாம்-ப்ருகு பத்ந்யாம் பராஸரோக்த்யா உத்பத்திம் உபஸ்ருதய மைத்ரேய ப்ருச்சதி – ஷீரோதாத் ஸ்ரீ. ஸமுத் பந்நா ஸ்ரூதே அம்ருத மந்தநே | ப்ருகோ க்யாத்யாம் ஸமுத்பந்நேத்யே ததாஹ கதம் பவாந் இதி। ந ச ஏகஸ்யா அநேகத்ர உத்பத்தி விரோததியா அயம் ப்ரஸ்ந தஸ்ய காலாதி பேதேந ஸம்பவாத் மஹதாம் யுகபத் ஸம்பவச்ச, *தத் தத் கல்பாந்த வ்ருத்தாந்த மதி க்ருத்ய மஹர்ஷிபி,.। தாநி தாநி ப்ரணீதாநி வித்வாநத்ர ந முஹ்யதி இத்யத்ர பரிஹ்ருதத்வாச்ச। அதோயமேவ ப்ரஸ்நார்த்த நித்யதயா நிகில ஜகஜ் ஜநநீத்வேந பகவதா நிரபாயதயா ச ப்ரதி, தாயா கத மயமுபதேஸ ததாத்வே நித்யத்வாத் யநுபபத்தேரிதி | அயமேவ யுக்த உத்தராநுகுண்யாத் | தஸ்யோத்தரம் – “நித்யைவைஷா ஐகந் மாதா விஷ்ணோ: ஸ்ரீர் அநபாயிநீ । யத ஸர்வ கதோ விஷ்ணு: ததைவேயம் த்விஜோத்தம இதி ! தஸ்யாயமர்த்த ந நிதயத்வாதேர் ஜந்மநோ விரோத உபயோர் விஷ்ணெள ஸஹ ஸந்தர்ஸநாத் யதா விஷ்ணு நித்யத்வாதி குணகஸ்ஸந் ஸர்வ ஜகத் த்ராணாய ஸர்வேஷு தேஸ காலாதி விஸேஷேஷு கத தைஸ்தை ஸரீரை ஸந்நிஹித ஏவம் இயம்பி நிதயா நிகில ஜகஜ் ஜநநீ – நிரபாயா ஸதீ தைஸ்தை: ததநுரூபைஸ் ஸரீரை: ஸர்வத்ர ஸந்நிஹிதேதி நாநுப–பத்திரிதி அஸ்யாய மேவார்த்தோ யுக்த-அர்த்தோ விஷ்ணுர் இயம் வாணீ* இத் யுபக்ரம்ய அத்யாய ஸேஷேண “பகவத், விக்ரஹ விஸேஷைஸ் ததநுகுணை ஏததீயை விக்ரஹைஸ் ச ஐகத் வ்யாப்தி ப்ரகாரோப பாதநாத்। அந்யதா ஸர்வ கதத்வ நிர்தேஸ்ய ஸ்வரூப வ்யாப்தி பரத்வே உபயோ ஸர்வத்ர வ்யாப்த் யுபபாதநாத் புல்லிங்ககா பதரர்த்தா பகவத் ரூபம் ஸ்த்ரீ லிங்ககா பதார்த்த லக்ஷ்மி” ஸ்வரூபமிதி விபாகோ நோபபத்யதே
ஏவ முத்தரத்ராப் யுபபாதிதம்அம்ஸைர் யதா ஐகத் ஸ்வாமீ தேவதேவோ ஜநார்தந।। அவதாராந் கரோத்யேஷா ததா ஸ்ரீஸ்தத் ஸஹாயிீ நீ | புநஸ் ச பத்மா ஸம்பூதா ஆதி த்யோபூத் யத்ர ஹரி யதா து பர்கவோ ராம; ததா பூத் தரணி த்வியம் ராகவத்வே அபவத் ஸீதா ருக்மிணீ க்ருஷ்ண ஐந்மநி | அந்யேஷு ச அவதாரேஷு விஷ்ணோரேஷா அநபாயிநீ ॥ தேவத்வே தேவதேஹேயம் மநுஷ்யத்வே ச மாநுஷீ। விஷ்ணோர் தேஹாநு ரூபாம் வை கரோத்யேஷா ஆத்மநஸ் தநும் ॥ அநயைவ திஸா “த்வயா ச விஷ்ணுநா சாம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம்” இத்யாதி கமபி நேயம். “ஸெம்யாஸெளாம்யைர் ஐகத் ரூபை த்வயை தத்தேவி பூரிதம்* இதி. தத்ரைவ விவ்ருதத்வாத் ஏவமுப பாதநாத் உபயோஸ் ஸரீர விஸேக்ஷைர் வ்யாப்தி ரித் யவதீர்யதே! தேஷு ஸர்வேஷு ஸரீரேஷு ஸெபரி ப்ரமுகவத் குண த்வாரா வ்யாப்திரித் யுபபத்தே ந கட குட ப்ரபாதாநுகார। ஸூத்ரிதம் சைதத்- “குணாத்வா அவலோகவத் இதி | யஸ் ச த்விதீயோ ஹேது ஸோப்ய ப்ரஸித்த ஸ்வேதர ஸகல பதார்த்தே ஸ்வரத்வஸ்யைவ புருஷாந்யத்வ ஸாதகத்வாத் அந்யதா கதிபயேஸ்வரத்வ மாத்ரேண புருஷாந் யத்வே ஸர்வேஷாம் பும்ஸாம் ஈஸ்வரத்வாபத்தே। ந ஹி ஸ்வ ஸரீர மாத்ரஸ்யாப்ய நீஸ்வர; கஸ்சித் அஸ்தி’ இத்யாதி யும், “ஸாந்தா நந்தேத்யாதி ஸ்லோகோக்தம் ச என்றும், ஏதத் வ்யாக்யாநத்திலே “திவ்யாத்ம ஸ்வரூபத்திலுங் காட்டில் ப்ரிய தரமாயிருக்கக் கடவதாய் மூர்த்தம் ப்ரஹ்ம என்னும் பெயரை யுடைத்தான
திவ்ய மங்கள விக்ரஹம் தொடக்கமான அவனுடைய நாநா விக்ரஹங்களடைய அவனுக்கு அநுரூபமான அவ்வவ விக்ரஹங்களாலே ஸர்வ காலமும் ஆலிங்கநம் பண்ணி நிற்குமென்றும் சொல்லப்பட்டது” என்றும், “அர்த்தோ விஷ்ணுரியம் வாணீ” என்று தொடங்கி. அத்யாய ஸேஷத்தாலே இவருடைய விக்ரஹ விஸேஷத்தாலும் ஐகத் வ்யாப்தி ப்ரகாரத்தைச் சொல்லி உபபாதிக்கையாலும்- ஸர்வ ஸப்தத்துக்கு விக்ரஹ வ்யாப்தியே அர்த்தம் என்னக் குறையில்லை- அங்ஙன் அன்றிக்கே, ஸ்வரூப வ்யாப்தியைச் சொல்லுகிறதாகில் –தேவ திர்யங் மநுஷ்யேஷு புந் நாமா பகவாந் ஹரி! ஸ்த்ரீ நாம்நீ லக்ஷ்மீர் மைத்ரேய நாந யோர் விதயதே பரம்” புல்லிங்க ஸப்த வாஸ்யமானவை பகவத் ரூபம், ஸ்த்ரீ லிங்க ஸப்தமானவை ஸக்ஷ்மீ ஸ்வரூபமென்று பிரித்துச் சொல்வக் கூடாது என்றும் – ‘இவ்வோ அர்த்தங்களை, ப்ரமாண ஸித்தமுமன்றியிலே ஸம்ப்ரதாய ஸித்தமுமன்றியிலே, ஸத்தாவத்துமன்றியிலே யிருக்க யாவர் சிலர் ரஹஸ்ய ரூபேண உபதேஸித்து ஜகத்தை மோஹிப்பிக்கிறார்கள் அவர்கள் ஸகல சிதசித் வஸ்து விலக்ஷணைமாய், நிகில ஜகதேக காரணமாய் நிரஸ்த ஸமஸ்த ஸமாப்யதிக வஸ்து ஜாதமாய், நாராயண ஸப்த வாஸ்யமான பர ப்ரஹ்மமே. ஸகல வேதாந்த வேத்யமென்று ப்ரஹ்ம மீமாம்ஸா ஸுூத்ர ந்யாயத்தாலே அறுதி யிடுமவர்களாய், வேதவிதக்ரேஸரருடைய நினைவைப் பின் சென்றிருக்கக் கடவ நம்மாசாரயர்களாலே அங்கீகரிக்கப் படார்கள் என்றிட்டு நம்மாலேயும் ஆதரிக்கப்படார் என்றும் நயினாராச்சான் பிள்ளை அருளிச் செய்தார்-ரஹஸ்யாம்ருதத்திலே “வக்ஷ்மீ விஸிஷ்டமாய்க் கொண்டு ல்யாபிக்குமென்கிற பக்ஷம் ஸ்ரீ விஷ்ணு புராணத்திற் சொல்லுகிற ஸ்வ விபூதி பேதத்தாலே யாதல், ஸ்லரூப நிரூபகத்வ நிபந்தநமான அப்ருதக் பாவத்தாலே யாமித்தனை யல்லது ஈஸ்வரன் ஸ்வரூபத்தோபாதி ஸ்வரூபத்தினுடைய பரம மஹத்வத்தாலாக மாட்டாது-அப்படியாமாகில் ஈஸ்வர. த்வித்வாதிகளாகிற தோஷங்களுண்டாம். இவளுடைய பத்நீத்வ ஸ்ருதியோடும் ஈஸ்வரனுடைய ஏகத்வ ஸ்ருதியோடும் விரோதிக்குமாகையாலே ஸ்ரிய:பதித்வ நிரூமான ஸ்வரூபமே வ்யாபகமென்றதாயிற்று! என்று வாதி, கேஸரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்தார். ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே – ‘அதிஸயகரியான லக்ஷ்மிக்கும் வஸ்து ஸம்ஸ்தந ரூப ஜாத்யாதி போலே நிரூபகத்வ நிபந்தநமான ஸ்வரூபாந்தர் பாவமுண்டாகையாலே’ என்று வாதி. கண்டீரவரான யாமுநாசார்யர் அருளிச் செய்தார்-அத்வைத பேதாபேத பக்ஷங்களில் விருத்த ஸமுச்சய நிபந்தநமான ஈஸ்வரனுடைய அகடிதகடநா ஸக்தியைக் கொள்ளாமையாலே அது அஸத் ப்ரதிபந்தி- ‘அதோ ஜீவத்வேப்யஸ்யா ஸ்வரூப விபுத்வேந பதி ஸ்வரூபாநுரூப்யமிதி”-என்றதும் வாலாக்ர ஸத பாகஸ்ய ஸததா கல்பிதஸ்ய பாகோ ஜீவ–‘த்ரஸரேணு ப்ரமாணாஸ்தே” இத்யாதி ஸ்ருதி விருத்தம். ஜீவத்வ ப்ரயுக்தமாண அணுத்வம் அவர்ஜநீயமாகையாலும், இவளுடைய விபுத்வ ப்ரமாணங்கள் அந்யதா ஸித்தங்களாகையாலும், ‘வ்யாப்தனுக்கு ப்ரதி வஸ்து பூர்ணத்வமாவது- ஓரொரு உபாத்யவச்சிந்ந ப்ரதேஸமே ஸர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல ஸக்தியை யுடைத்தாயிருக்கை என்று கல்பிக்கைக்கும் கல்பகமிவ்லை., ஜாதி வ்யக்தி தோறும் பூரணமாக வ்யாபிக்கக காணாமையாலே இவளுக்கிது கொள்ளில் பஹிர் வ்யாப்திக்கு விரோத பரஸங்கமில்லை. இதை அகடிதகடநா ஸக்தியால் நிர்வஹிக்கில் விருத்த ஸமுச்சயம் கொள்ளும் பர பக்ஷத்தின் படியாகாதாப் போவவும் வேதம் ப்ரமாணம் என்கிற விடத்தில் ஈஸ்வர ப்ரணீதமின்றியிலே அபெளருஷேயத்வாதி பேதமுண்டாகையாலும், தேஹாதிரிக்தன் ஆத்மா என்கிற விடத்தில் பகவச் சேஷத்வாதி பேதமுண்டாகையாலும்., பர பக்ஷத்தின் படியாகா என்னில் ஈஸ்வரனுடைய அந்தர்” வ்யாப்தி பஹிர் வயாப்திகளில் அகடிதகடநா ஸக்தியாலே பர பக்ஷத்தின்படி ஆகாதென்று கைக் கொள்ளுவது ..
இதி ரஹஸ்ய விவேகே ஸ்ரீவிபுத்வ கண்டநம் நாம-த்வதீயோ விவேக ஸமாப்தம்
—————
அத, பூர்வபக்ஷி ஸரண வசஸ. ஸாதநமிதி.
ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே இருபத்து மூன்றாமதி,காரத்திவே -: ஸித்த உபாயத்தைப் பற்றி வரும் கலக்கங்களும், அவற்றின் பரிஹாரங்களும் சொல்லுகிறோம் :அநாதி,காலம் அநாதரித்த. ஈல்வரன் இன்று ஒருத்தனை ஆதரிக்கிறது தன் ஸ்வாதந்தர்ய-. மாத்ரத்தாவே யன்றோ? இங்ஙன் அன்றாகில், “இன்றென்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்” என்று ஆழ்வார் விண்ணப்பம் செய்ய ஸர்வேஸ்வரன் “சூழ் விசம்பணி முகில் தூரியம் முழக்கின* இதொழிய வேறொரு உத்தரம். அருளிச் செய்தானா ? ஆகையால் நாமொரு உபாயாநுஷ்டாநம் பண்ணுகை என்னென்பது, “நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை * என்கிறபடியே “அருள் புரிந்த சிந்தை யடியார் மேல் வைத்தவன் தானே ரஷித்த போது, காணுமத்தனை யன்றோ’ என்று சிலர் கலங்குவர்கள், இவர்களைத் தெளிவிக்கும்படி, – ஈஸ்வரன் ஸவதத்த்ரனே யாகிலும், வைஷம்ய நைர்க்ருண்யமாகிற தோஷங்கள் தனக்குத் தட்டாமைக்காக இவன் பக்கலிலே ஒரு வ்யாஜத்தை யுண்டாக்கி அத்தை அவலம்பித்துத் தான் ரக்ஷிக்கும்- இவ் வர்த்த,த்தை, “திருமா லிருஞ்சோலை மலை யென்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்* என்று ஆழ்வார் அருளிச் செய்தார்… இப்படியானால், “இன்றைன்னைப் பொருளாக்கி” என்கிற பாட்டுக்கும் இதுக்கும் மூலமான வசநங்களுக்கும் நிர்வாஹமேதென்னில் – அது சொல்லுகிறோம். – ஈஸ்வரனுக்கு ஸஹஜங்களான ஸ்வாதந்த்ரய காருணயங்களினுடைய ப்ராதாந்யத்தாலே இவற்றுக்கு வ்யாஜ பூதங்களான விஸேஷ காரணங்களை அநாதரித்துப் பண்டென்னைப் பராங்முகளாக்குகைக்கும், இவற்றுக்கு வயாஜ பூதங்களான விஸேஷ காரணங்களை ஆதரித்து இன்றென்னை அபிமுகனாக்குகைக்கும் உன் ஸ்வாதத்த்ர்யமும் கிருபையுமொழிய வேறொரு ப்ரதாந காரணம் கண்டிலேன்–
எனக்குக் காட்டாதே ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான நீ கண்டதுண்டாகில் அருளிச் செய்ய வேணுமென்ன, ஈஸ்வரன் நிருத்தரனா யிருக்கிற விருப்பாலே ஸ்வாதந்தர்ய க்ருபைகளினுடைய ப்ராதாந்யத்தை நாட்டுக்கு வெளியிடுகிறார். இத்தால். இச் சேதநனை லிவோபகரண மாக்குகைக்கு ப்ரதாந காரணம் ஈஸ்வர ஸ்வாதந்த்ரயம்- இதுக்கு ஸஹகாரி காரணம் ப்ரவாஹாநாதியான ஸ்வாஜ்ஞாதிவங்கநம். இவனை போக உபகரணமாக்குகைக்கு ப்ரதாந காரணம் ஈஸ்வரனுடைய ஸ்வாபாவிக் காருண்யம். இதுக்கு ப்ரதிபந்தகமான ஈஸ்வர நிக்ரஹத்தை ஸமிப்பித்துக் கொண்டு ஸஹகாரி காரணமென்று பேர் பெற்றது – இவனுடைய ஸாுக்ருத விஸேஷ த்வாரா க்ருபை யடியாக வந்த வஸீ கரண விஷேஷங்கள் என்று ஈஸ்வரனுடைய ஸ்வபாவத்தையும், வைஷம்ய நைர் க்ருண்யங்க ளில்லாமையையும், பந்த மோக்ஷாதி வ்யவஸ்தையையும் ப்ரமாண ப்ரதி நியதமானபடியே அனுஸந்தித்து. ஸ்வதந்த்ரனுடைய க்ருபையிலே யூன்றிப் போர வடுக்கும். என்று கருத்து’ என்றும், நாவாமதிகாரத்திலே –முக்தராவார். – ஸாஸ்த்ர சோதிதங்களான உபாய விஸேஷங்களால் வுண்டான பகவத் ப்ரஸாதத்தாலே அத்யந்த நிவ்ருத்த ஸம்ஸாரராய்‘ என்றும், ‘ப்ரதாந விரோதிக்குச் செய்யும் பரிஹாரத்தை, தஸ்ய ச வஸீ கரணம் தச் சரணாகதி ரேவ என்று கட வவ்லியில் வஸீ கார்ய பரம்பரையை வகுத்த விடத்தில் பாஷ்யகாரர் அருளிச் செய்தார்” என்றும், இருபத்து மூன்றாம் அதிகாரத்திலே “க்ருபா விஸிஷ்டனாண ஈஸ்வரன் *கருஷ்ணம் தர்மம் ஸநாதநம்-என்கிறபடியே ஸித்த உபாயம்-இவனுக்கு ப்ரஸாதநங்களான பக்தி ப்ரபத்திகள் ஸாத்யோபாயங்கள்-ஓரதிகாரி விஸேஷத்துக்கு கர்த்தவ்யமாக *மாமேகம் மரம் வ்ரஜ*என்று விதிக்கப்படுகிற ப்ரபத்தியை அதிகாரி விஸேஷணம் என்று சிலர் சொன்ன விடம் அதிகாரி விஸேஷணத்துக்குச் சொல்லும் லக்ஷணத்தோடு சேராமையாலே அதிவாதம்-இங்ஙனல்வாத போது, ஈஸ்வரன் உபாயமாய் நிற்க உபாஸநாதி ஸாஸ்த்ரார்த்தங்களும் அதிகாரி விஸேஷணங்களாம். ஆகையாலே ப்ரபத்தியுங்கூட உபாயமன்று என்று சிலர் அதிவாதம் பண்ணுகிறதும் ஸித்த உபாயத்தினுடைய ப்ராதாந்யமடியாக வித்தனை-அது ப்ரதாநமான படி ப்ரஸாதநங்களாலே ப்ரதிபந்தகமான நிக்ரஹம் ஸமித்தால் ஸ்வாபாவிகாநு பவத்துக்கு ப்ரயோஜக மாகையாலே’ என்றும், ‘ஸித்தோபாயம் ப்ரதாநமே யாகிலும் தத் வஸீகரணார்த்தமான ஸாத்வோபாயாநுஷ்டாநத்துக்கு *இன்றென்னை” இத்யாதி பூர்வாசார்ய வாக்ய விரோதம் இல்லை என்றும், “இப்படி ஈஸ்வர ஸ்வாதந்த்ர்ய ஸஹஜ காருண்யங்களடியாக வரும் கலக்கங்களுக்குப் பரிஹாரம். சொன்னோம். ஸம்பந்த விஸேஷமடியாக வரும் கவக்கத்துக்கு பரிஹாரம் சொல்லுகிறோம்” என்றும் “இவை யெல்லாம் ஸ்வரூபத்துக்குப் பொருந்துமோ என்று சிலர் ஸித்தோபாய முகத்தாலே ஸாத்யோபாய ஸரீரத்தை அழிக்கப் பார்ப்பர்கள், அவர்களை விலக்கும்படி பரமர்ஷிகளும் ஸ்ரீ பாஷ்யகாராதிகளும், விஸ்வாஸ பூர்வக ப்ரார்த்தநாத்மநிஷே பாதிகளைத் தாங்களும் அநுஷ்டித்து இதுக்கு ஸாஸ்த்ரங்களை மூதலிப்பித்துக் கொண்டு உபதேஸ பரம்பரையும் நடத்திப் போருகையாலே ஸேஷித்வாதி ஸம்பந்த,ம். நித்யமே யாகிலும் கர்மவான்௧ளான ஜீவர்கள் விஷயத்தில் ஈஸ்வரன் ஒரு ஸாத்யோபாய விஸேஷத்தை முன்னிட்டல்வது ரஷியான் என்று ஸாஸ்த்ரம் சொல்லுகையாலே ஸாஸ்த்ர நிஷ்டருக்கு பரிக்ரஹிக்க வேணும்’ என்றும், ‘தன்னை ஈஸ்வரன் ரஷிக்கும் போது ஸம்பந்தத்தோடு கூட விலக்காமையே வேண்டுவதென்னில், அதுவும் அநுபபந்நம்’ என்றும்-இருபத்தேழாமதிகாரத்தில் ஸாத்யோபாய விஸேஷத்தாலே வஸீகார்யமுமாய் ப்ராப்யமுமா யிருக்கிற ஸித்தோபாயம்” என்றும்-புருஷார்த்தத்துக்கு ஸாதநமாக ஸாஸ்த்ர விஹிதமான ஸாத்யோபாயமும் பர ந்யாஸ பர்யந்தமாக அகிஞ்சநனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியைச் சொல்லுகிற நமஸ்ஸிலே ஆர்த்தமாக அனுஸந்தேயம்” என்றும், ‘உபாய ப்ரகாரம் வஸீ கரண விஸேஷம்’ என்றும், “அகிஞ்சநனான அதிகாரிக்கு யதாவிதி ரக்ஷாபேஷாபூர்வக பரந்யாஸத்தை யொழிய வேறொன்றால் அபேஷை யில்லாத ஸித்தோபாயத்தை –மாமேகம் என்று காட்டி அதினாலே வஸீகரணார்த்தமான ஸாத்யோபாயத்தை ஸரணம் வ்ரஜ- என்று விதியாலே காட்டுகிறது. இப்படி விதிக்கிற ப்ரபத்தி ரூப வித்யைக்கு ஸரண்ய ப்ரஸாதநமாசோதி தத்வத்தாலே வருகிற உபாயத்வமும் பக்தியோடு துல்யம்’ என்றும், இருபத்தொன்பதாமதிகாரத்திலே “என்னுணர்வினுள்ளே யிருத்தினோண். அதுவுமவனதின்னருளே என்றும், “இசைவித்தென்னை உன் தாளிணைக் கீழிருத்துமம்மானே * என்றும் சொல்லுகிறபடியே உபாய பூதனான அவன் இசைவிக்கச் செய்கிற வ்யாஜ மாத்ரத்தை அவனோடொக்க உபாயமாக எண்ணுகை உசிதமன்றென்று ஏக ஸப்த தாத்பர்யம்- இப்படி ஸித்தோபாயத்தைப் பற்ற ஸாத்யோபாயம் வ்யாஜ மாத்ரமாய் ப்ரதாநமின்றிக்கே நிற்கிற நிலையைப் பற்ற ஸம்பந்த ஜஞாந மாத்ரம், ஸித்தோபாய ப்ரதிபத்தி மாத்ரம், அநிவாரண மாத்ரம், அநுமதி மாத்ரம், அசித் வ்யாவ்ருத்தி மாத்ரம், சைதந்ய க்ருத்யம், சித்த ஸமாதாநம், அதிகாரி விஸேஷணம்’ என்று இப் புடைகளிலே அதிவாதம் பண்ணினார்கள். இவ்வந்ய பரோக்தியைக் கொண்டு இவை தானே அர்த்தம் என்றும் அறுதியிட ஒண்ணாது –இவை எல்லாம் சரணம் வ்ரஜ -என்கிற விதிக்கு விருத்தங்களாம்-அதி ப்ரஸங்காதி தோஷங்களுமுண்டு-அதெங்கனே என்னில், ஸம்பந்த ஜஞாந மாத்ர மென்றாலும், ஸித்தோபாய ப்ரதிபத்தி மாத்ரமென்றாலும், அது வாக்ய மாத்ர ஜந்யமாகில் விதி விஷயமாக மாட்டாது. அவிதேய ஜ்ஞாநத்தாலே மோக்ஷமென்பாருக்கு உபாஸநாதி விதி விரோதம் பாஷ்யாதி ஸித்தம்-தத்வஜ்ஞாந முடையவருக்குப் பின்பு கர்த்தவ்யமாண ஜஞாநாந்தரமாகில் ப்ரபத்தியினுடைய விதி லக்ஷண அநுஷ்டந வாக்யங்கள் சொல்லுகிறபடியே இதன் ஸ்வரூப மங்கீ கரிக்க வேணும். ஸித்தோபாய ஸ்வீகாரமென்ற பாசுரத்துக்கும் – ஸித்தோபாயத்தை யறிந்து அது தனக்கு. கார்ய கரமாம்படி பண்ணுகிற விதி ப்ராப்த ப்ராரத்தநா பூர்வக பர ந்யாஸ ரூபாதிகாரி க்ருத்யத்திலேயிறே தாத்பர்யம். அநிவாரண மாத்ரமென்றது விலக்காத மாத்ரமானால் ரக்ஷகனான ஈஸ்வரனை இவன் முன்பு ப்ரபலனாய் விலக்கினானாகில் ஈஸ்வரனுடைய ஈஸ்வரத்வம் ஸங்குசிதமாம்.
அபராதத்தாலே நிக்ரஹத்தை உண்டாக்கி விலக்கினானாகில் இவன் பண்ணுகிற ப்ரபத்தி ப்ரஸாதநமே யாக வேணும். ஸ்வ ரக்ஷணார்த்த வ்யாபாரத்தாலே விலக்கினானென்னில் நிர் வ்யாபாரமான ஸுஷுப்தி ப்ரளயாத் யவஸ்தைகளிலும், வ்யாபரிக்க. யோக்யனா யிருக்கிற ஜாக்ரத் தஸையிலும் விலக்காதே யிருக்கும் போதும் ஈஸ்வரன் மோக்ஷப்ரதாநம். பண்ண ப்ரஸங்கிக்கும். அநுமதி மாத்ரமென்றால் அது உபாஸகனுக்கும் துல்யம்- அசித்,வ்யாவ்ருத்தி மாத்ரம் ப்ரதிகூல தஸையிலு முண்டாகையாலே இவ்வளவே ரக்ஷணீ யதைக்கு உறுப்பாகாது-சைதந்ய க்ருத்யமென்னால் உபாஸநாதிகளும் மற்றுமுள்ள சேதந வ்ருத்திகளும் எல்லாம் சைதந்ய க்ருத்யமாகையாலே இதுக்கொரு வாசி சொல்விற்றாகாது. சேதநனுக்குத் தானே வருமதென்று விவக்ஷிக்கில் உபதேஸாதிகள் வேண்டாதொழியும். பலாநுப வுக்தா சித்த ஸமாதாந மாத்ரமே யென்னில், தந்தாம் ருஸ்யநு ரூபமாக ப்ரதி புருஷம் வேறுபடும். “வ்ரஜ? என்று விதேயமாய் பல தத் காமநாதிகளன்றிக்கே யிருக்கிற வித்தை அதிகாரி வி்ஸேஷணமென்ன வொண்ணாது. கர்த்தவ்யமாக விதிக்கிற ப்ரபத்தி தனக்கே. இப்படி ஏதேனுமொரு கண்ணழிவு பண்ணில், உபாஸநாதிகளையும். இப்படிக் கண்ணழிக்கலாம். அப்போதும் இம் முகங்களாலே உபாஸநாதிகளிற் காட்டில் ப்ரபத்திக்கு வ்யாவ்ருத்தி சொல்ல நினைத்தது தலைக் கட்டாது. ஸ்வ விஷய ஸ்வீகார விஸிஷ்டமாய்க் கொண்டு பல ப்ரதமாகா நிற்கச் செய்தே இஸ் ஸித்தோபாயம் ஸ்வீகாரத்தாலும் நிரபேஷமென்று புத்தி பண்ண வேணுமென்னில் இது த்ருஷ்டி விதி போலே ஆரோபிதமாதல் ஸ்வ வசந விருத்தமாதலாம். ஆகையால் ஈஸ்வரன் ப்ரஸாத நீயனாய் ப்ரதாநமான ஸித்தோபாயம் பக்தி ப்ரபத்திகளிரண்டும் ப்ரஸாதநங்களாய்க் கொண்டு ப்ரதாந மல்லாத ஸாத்யோபாயங்கள் “இவை யிரண்டத்தொன்றிலே யதாதிகாரம் நிலையாகக் கடவது‘ என்றும், “இப்படி பக்தயாதிகள் போலே ஸரணாகதி தர்மமும் கர்த்தவ்யமாக விதிக்கப்படுகையாலே. “தன்னால் வரூம் நன்மை விலைப் பால் போலே, ஈஸ்வரனால் வரும் நன்மை முலைப் பால் போலே என்கிற பிள்ளான் வார்த்தைக்கு பக்தி ப்ரபத்த்யாதிகளெல்லாம் அவனால் வருகிறதென்று நினைக்க வேணுமென்று தன்னுடைய பராதீந கர்த்ருத்வத்திலே தாத்பர்யம் –
அந்ய விஸ்வாஸ ஸித்த்யர்த்தவம் பக்த் யுபாய விதிம் வதந்। ஸர்வ ஸாஸ்த்ரேஷ்வ விஸ்வாஸம் ஆதத்தே முக பேதத:!! மத்யோபஹத பாத்ரஸ்த, தீர்த்த, த்ருஷ்டாந்த வர்ணநம் | அஹங்காராந்வயே து ஸ்யாத் ப்ரபத்தாவபி பக்திவத் ஆகையால் “ப்ரஸீத மத் வ்ருத்த மசிந்தயித்வா- இத்யாதிகள் முன்பு தான் பண்ணின ப்ரபத்திக்கு ஷமை கொள்ளுகிற படி யென்று சிலர் சொல்லுமதுவும் அஹங்கார ஸ்பர்ஸாதி ஸங்கையைப் பற்றவா மத்தனை யல்லது யதா ஸாஸ்த்ர மநுஷ்டித்த ப்ரபத்தி அபராதமாய் அதுக்கு க்ஷமை கொள்ளுகிற படியன்று -அப்படியாகில் பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய ப்ரஸீத- என்கிற பூர்வாசார்ய புரஸ்காராதிகளும் தான் செய்கிறதாகையாவே அதுக்கு க்ஷமை கொள்ள வேண்டி அநவஸ்தையாம்-இது ஸ்வ பர நிர்வாஹமாகில் அது போலவே முன்பு பண்ணின ப்ரபதநமும் ஸ்வ பர நிர்வாஹமென்னலாம். இங்குச் சொல்லும் குதர்க்கங்களாலே பூர்வர்கள் பண்ணின ப்ரபத்தியும் அபராதமா யறுகையாலே பூர்வர்களை முன்னிடவு மொண்ணா தொழியும்’ என்றும், “புத ப்ரபதநம் வேண்டாவென்கையும் பர பக்ஷமாம் இவ் விடத்திலே சிலர் – வ்ரஜ இத்யாதி விதிகளை அந்ய பரங்களாக்கி யோந்யதா ஸந்த மாத் மாநம் அநுயதா ப்ரதி பத்யதே! கிம்தேந ந க்ருதம் பாபம் சோரேண ஆத்ம அபஹாரிணா –யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்தவைஷ ஹ்ருதி ஸ்தித தேந சேத விவாதஸ்தே மா கங்காம் மாகுரூந் கம “ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வபாவம் ச ஸதா ஸ்மர* இத்யாதிகளில் தாத்பர்ய கதிகளையும் பராமர்ஸியாதே. இவற்றைக் கொண்டு ஸாஸ்த்ர ஜந்ய ஸம்பந்த ஞாநமொழிய வேறு முமுஷுவுக்கு அநுஷ்டேயமாய் இருப்பதொரு உபாயமில்லை என்பார்கள். இது பக்தி ப்ரபத்த் யாதி விதி ஸ்வாரஸ்ய விருத்தம்” என்றும், “இங்கனல்லாத போது. புந ப்ரபத்தி விதாயக ஸாஸ்த்ரமும் அப்படிகளுக்கு ஸிஷ்டாநுஷ்டாநமும் பூர்வ ஸம்ப்ரதாயமும் விரோதிக்கும்” என்றும், இருபத்து நாலாமதிகாரத்திலே “உபாஸநாதிகள். ஸ்வரூப விருத்தங்களென்று சிலர் சொல்லுவர்கள். இதுவும் ப்ரபத்தியை ஸ்துதிக்கைக்காக அதிவாதம் பண்ணினார்களா மித்தனை -எங்கனே யென்ணில் நித்யமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு இவை நாஸகங்களாய்க் கொண்டு. ஸ்வரூப விருத்தங்களென்ன வொண்ணாது’ என்றும், “மோக்ஷ ப்ரதிகூவங்களான ராகாத் யுபாதிகளாலே வந்த காம்ய நிஷித்தங்கள் போலே பந்தகங்களல்லாமையாலும் மோக்ஷார்த்தி தனக்கே விதிக்கையாலும் உபாஸநாதிகளுக்கு ஸாஸ்த்ர முகத்தாலே அநர்த்தா வஹத்வ ரூபமான ஸ்வரூப விரோதம் சொல்ல வொண்ணாது- ஆகையால் ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்ற உபாஸநாதிகளுக்கு நாஸகத்வ அஸம்பாவிதத்வா நர்த்தா வஹத்வங்களில்லாமையாலே ஒரு, படியாலும் ஸ்வரூப விரோத ப்ரஸங்கமில்லை! என்றும், “உபாஸநாதிகள் அஹங்காராதி கர்ப்பங்கள் என்னுமிடம் ஸாஸ்த்ரமிசையா திருக்கச் செய்தே ஆரோபித்தார்களத்தனை” என்றும், ‘அபிசாராதிகளை விதித்த கட்டளையிலே ஸாஸ்த்ர ப்ரரோசநாதிகளில் அபி ஸந்தியாலே அதிகார விஸேஷத்திலே உபாஸநாதிகளை விதித்ததத்தனை யன்றோ! முமுஷு வுக்கு ப்ராப்ய ப்ராபகங்கள் ஏகமாகையாலே ப்ராப்யாநுரூபமான உபாயம் ஸர்வேஸ்வரன் ஓருவனுமே யாகையாலன்றோ-அத பாதக பீதஸ்த்வம் ஸர்வ பாவேந பாரத । விமுக்தாந்ய ஸமாரம்போ நாராயண பரோ பவ” என்று தர்ம தேவதை தன் புத்ரனுக்கு உபாஸநாதிகளை ப்ராப்ய விரோதிகளென்று நினைத்து நிந்தித்ததென்னில் அதுவும் அத்யந்தாநுபபந்தம்-என்றும், “அத பாதக பீதஸ்த்வம் என்கிற விடத்திலும் ‘பாதக ஸப்தத்தாலே உபாஸநாதிகளை நிந்திக்கிற (நினைக்கிற )தென்கைக்கும் ப்ரமாணமில்லை- ஆகையால் முமுஷுவுக்கு விஹிதங்களாகையாலே பக்தி ப்ரபத்திகஎிரண்டும் யதாதிகாரம் பரிக்,ராஹ்யங்கள்- என்றும், “இவை “அகிஞ்சநோ அநந்யகதி-என்றிருக்குமதிகாரிக்கு ஸ்வாதிகார விருத்தங்களென்ன ப்ராப்தம்- இவ்வதிகார விரோத மறியாதே உபாஸநாதி களிலே ப்ரவர்த்திக்குமவனைப் பற்ற -நரஸ்ய புத்தி தெவ்ர்பல்யாத் உபாயாந்தர மிஷ்யதே* என்றதும்’ என்றும், “இப்படி இவ் வுபாயத்தின் அதிகாரத்திலும் ஸ்வரூபத்திலும் வரும் கலக்கங்கள் ஸமிப்பித்தோம். இனி மேல் பரிகரங்களில் வரும் வ்யாமோஹம் சமிப்பிக்கிறோம் -இவ்வுபாயத்துக்கு ஆனுகூல்ய சங்கல்பாதிகள் வேணுமோ?’ ‘ஆர்த்தோ வா யதி வா த்ருப்த- என்றும், மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந | தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் என்றும்,. யதி, வா ராவணஸ் ஸ்வயம் என்றும் சொல்லுகிற ரிபூணா மபி வத்ஸலனான ஸரண்யண் ஸரணாகதனுடைய தோஷங்களைப் பார்க்குமோ? “அநாலோசித விஸேஷ அசேஷ லோக ஸரண்ய என்றன்றோ பூர்வர்கள் பாசுரம், ஆகையாலிவை ஸம்பாவித ஸ்வபாவங்களாமித்தனை யன்று அன்றோ வென்று சிவர் சொல்லுவர்கள். இதுக்கு ப்ரபத்த யுத்தர காலத்தில் ஆநுகூல்யாதிகள் அநுவர்த்தியாதொழியிலும், ப்ரதி ஸமாதநம் பிறந்து ப்ரபத்தி பலமும் குறைவற்றிருக்கு மென்கையிலே தாத்பர்யம் கொள்ளலாம். இங்ஙனல்லாத போது ஷட் விதா ஸரணாகதி என்றும், ந்யாஸ பஞ்சாங்க ஸம்யுத என்றும் “ஸ்வாங்கை,, பஞ்சபி,ராவ்ருதாம் என்றும், அங்காங்கிகளை விபஸித்துச் சொல்லுகிற பல ப்ரமாணங்களுக்கும் விருத்தம் என்றும், இருபத்தெட்டாமதிகாரத்திலே -ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளிலே அங்க,பஞ்சக ஸம்பந்நமான ஆத்ம ரஷா பர ஸமர்ப்பணம் பண்ணுகிறேனென்று த்வயத்தின் திரண்ட பொருள்-இங்கன் அல்லாத போது பக்தி ரூப மோக்ஷோபாயங்களை விதிக்கிற ஸாஸ்த்ரங்கள் எல்லாம் அத்யந்த வ்யாகுலங்களாம்’ என்றும் சொல்லப் பட்டது.
இதி பூர்வ பக்ஷ
அத, ஸித்தாந்த.-ந ஸரண வசஸ ஸாதநத்வே ப்ரமாணம்.
ப்ரபத்திக்கு உபாயத்வத்தில் ப்ரமாணமில்லை (உபாயமென்கை ப்ரமாண விருத்தமாம்.) எங்ஙனே யென்னில்-இன்றென்னைப் பொருளாக்கி” என்கிற பாட்டுக்கு – அநாதி காலம் ஈஸ்வரன் சேதநனை க்ருபை பண்ணாமைக்கு ப்ரதாந ஹேது ஈஸ்வர ஸ்வாதந்தர்ய மென்றும், அப்ரதாந ஹேது ஆஜ்ஞாதிலங்கநமென்றும் இவன் கருபை பண்ணுகைக்கு அப்ரதாந ஹேது ப்ரபத்தி என்றும் தாத்பர்யம் கல்பிக்கைக்கு ப்ரமாணாமில்லை – ப்ரத்யுத – நிர் ஹேதுகத்வமே இதுக்கு தாத்பரிய மென்கைக்கு ப்ரமாணங்களுமுண்டு-ஸ்வ கர்மபி ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமாணே” என்கையாலும்“முன் செய்த முழு வினையால், யானே யென்னை யறிய கிலாதே என்று ஆழ்வார் தாமே அருளிச் செய்கையாலும் அநாதி காலமிழவுக்கடி கர்மம்-ஜீவே துக்காகுலே விஷ்ணோ க்ருபா காப் யுப ஜாயதே, *விதி வாய்க்கின்று காப்பாரார்? *நாஸெள புருஷகாரேண* புருஷகாரமும் மிகையாம்படி யிறே யவன் படி. *செய்தாரேல் நன்று செய்தாரென்னு மவனிறே.
(ந சாப்யந்யேந ஹேதுதா) உபாயாந்தரத்தாலன்று (கேவலம் ஸ்வேச்சயா) அப்ரதாந ஹேதுவுமில்லை- (ஏவ) இப்படியே- இதில் ஸம்ஸய லேசமுமில்லை (அஹம் ப்ரேஷே ), *அஸங்கல்பித மப்யஸ்ய ப்ரேரணம். யத் க்ருதம் மயா! விஷ்ண்வாய தநதீ பஸ்ய தஸ்யை தத் புஜ்யதே பலம்”, மாதவனென்றதே கொண்டு”, “என்னுள் புகுந்திருந்து, *திருமாலிருஞ்சோலை மலை யென்றேனென்ன திருமால். வந்தென்னெஞ்சு நிறையப் புகுந்தான்” இத்யாதிப்படியே வைஷம்ய நைர்க்ருண்ய பரி ஹாரார்த்தமாக யாத்ருச்சிக ப்ராஸங்கிக ஸுக்ருத விஸேஷங்களை கல்பித்து கடாக்ஷிப்பன் (கஞ்சித்) அதிகாரி நியமமில்லை (கதாசந) கால நியமமில்லை- என்றித்யாதிப்படியே ப்ரமாணங்க ளுண்டாகையாலே – இன்று பேற்றுக்கடி க்ருபையே யாகையால் இதுக்கு வஸீகர உபாயம் ஸாதகமன்று’ என்றித்யாதியும், ஸைவ தஸ்யாப வஸீகரணம் பவதி” என்று சரணாகதியை தச்சேஷதா ப்ரதிபத்தி யென்று அதிகாரி விஸேஷணமாக ஸ்ருத ப்ரகாஸிகையிலே பட்டர் விவரித்தருளினார் –
பாஷ்யகாரரும் பாஷ்யத்திலே பக்தியை, “ஸ்வாஜ்ஞாதி வ்ருத்தி வ்யவஸாய நிவ்ருத்தி மாதரேண * இதயாதியாலே அதிகாரி விஸேஷணமாக அருளிச் செய்தார்-ஆகையால் ஆழ்வார் திவ்ய ஸூக்தி விரோதமும் பாஷ்யகாரர் திவ்ய ஸூக்தி விரோதமும் ஸ்ருத ப்ரகாஸிகா பட்டர் திவ்ய ஸூக்தி விரோதமும் வஸீகரணோபாயம் ஆர்த்தமாகக் கல்பிக்கிற விடமெங்கும் துர்வாரம். ஸமந்வயாதிகரணத்திலே ஸ்ருத ப்ரகாஸிகையிவே பட்டர் ஸேக்ஷஸேஷி பாவ ஸ்வரூபோபாஸநாத்மக ஜ்ஞாநத்தாலே சேதநேஸ்வரர்கள் ஸங்கதராகிறதற்கு த்ருஷ்டாந்தமாக நாவுபெ,ள ஸங்கச்சேதே என்று பூர்வம் அவிஜ்ஞாத ஸம்பந்தராயிருக்கிற ராஜ புத்ரர்கள் ஸம்பந்த ஞாநாநந்தரம் ஸங்கதராவர்கள் என்று அருளிச் செய்கையாலே ஸம்பந்த ஜ்ஞாநமே போருமென்கிறத்தை ப்ரகாஸிப்பித்தருளினார்- ரிஷிகளுடைய தாத்பர்யஜ்ஞரான பாஷ்யகாரர் கத்யத்திலே ப்ரபத்தி பண்ணினதுக்கு. க்ஷாமணம் பண்ணி யருளினார் என்றும். பிள்ளை முதலானார் வ்யாக்யாநம் பண்ணி யருளினார்கள்.
(ஸ்வ ரக்ஷணே ஸ்வாந்வய நிவ்ருத்தியைச் சொல்லுகிற நமஸ்ஸிவே ஸ்வ ரக்ஷணார்த்தமான ஸாத்யோயாயத்தை ஆர்த்தமாகச் சொல்லுகை அஸங்கதம். அகிஞ்சநனான அதிகாரிக்கு பர ந்யாஸத்தை யொழிய வேறு ஓன்று அபேஷை யில்லாத ஸித்தோபாயத்தை மாமேகம் எண்று காட்டி. அவனுடைய வஸிகரணார்த்தமான ஸாத்யோபாயத்தை. ஸரணம் வ்ரஜ என்று விதிக்கையாலே காட்டுகிறதென்கையும், ‘ஏக ஸப்த ஸ்வாரஸ்ய விருத்தம்-பாஷ்யகாரரும். பதினெட்டு பர்யாயம் திருக்கோட்டியூர் நும்பி பக்கலிலே எழுந்தருளி மாஸோபவாஸம் பண்ணி சூழரவு கொண்டு பெற்ற அர்த்தத்துக்கு விருத்த மாகையாலே ஸம்ப்ரதாய விருத்தம்.
ஸரணம் வ்ரஜ என்று சோதிதத்வத்தால் வருகிற அதினுடைய உபாயத்வம்*ஏக -ஸப்தத்தாலே அபோதிதம். “என் உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே -என்கிறவிடத்தில் – இருத்துகையும், “இசைவித்தென்னை . என்கிற விசைவுமே அவனுடைய அருளின் கார்யமாகையாலே அவ்வருளூக்கு அப்ரதாநமாகவும் காரணமன்றிறே. பாஷ்யகாரர் திருவாய் மொழியைக் கொண்டு ஸூத்ர வாக்யங்கள் ஒருங்க விடுவரே- அப்படிப்பட்டவர் “ஆறெனக்கு நின் பாதமே”, *கழல்களவையே சரணாக”, “நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்”, அடிக் கீழமர்ந்து புகுந்தேனே என்கிற வித்யாதி ஆழ்வார் பாசுரத்துக்கு விருத்தமாக ப்ரபத்தியை அப்ரதாந வஸீகரணோபாயமாகவும் திருவுள்ளம் பற்றாரிறே-அப்படிப் பட்டவர் வஸீகரணேபாயமென்றால் அதுக்குக் கருத்து குத்ருஷ்டிகளுக்கு ரஹஸ்யோபாயத்தை வெளியிட வொண்ணாமையிறே. உபாஸநாத்மக ஜ்ஞாநத்தை பாஷ்யத்திலே அருளிச் செய்ததுக்குக் கருத்து அதுவே- கத்ய வ்யாக்யாநத்திலே ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார். பாஷ்யகாரர் தாம் ஸ்வீகாரத்தில் அநுபாயத்வமாகிற ஏக சப்த தாத்பர்யத்தை அருமைப்பட்டிறே பெற்றது.ஆகையால் அதுவே யிறே இவருக்குத் திருவுள்ளம். அப்படிப்பட்ட எம்பெருமானார் திருவுள்ளத்துக்கு விருத்தமாக ஏகஸப்த தாத்பர்ய கல்பநம் அத்யந்த ஸாஹஸ கார்யமாமத்தனை – ஸித்தோபாய ப்ரதிபத்தி மாத்ரம், அநுமதிமாத்ரம், அசித் வ்யாவ்ருத்தி மாத்ரம், சைதந்ய கார்யம், சித்த ஸமாதாநார்த்தம், அதிகாரி விஸேக்ஷணம்’ என்கை அதிவாதமாகிறதும், (இல்விடம் தாள கோஸத்தில் சிதிலமையிருப்பதால். ஸூத்த பங்க்தி காண வில்லை ) ஏஷ து. வா அதிவததி யஸ்ஸத்யேந அதிவததி என்றாலும் விஹிதமான அதிவாதமிறே. ஆகையால் இவை தானே அர்த்தமென்று அறுதியிடவேணும்- இவை யெல்லாம் “மாமேகம் சரணம் வ்ரஜ என்கிற விதிக்கு அத்யந்தம் அநுகூலங்களிறே. ப்ரமாண விருத்தங்களான அர்த்தங்களுக்கே யிறே அதி ப்ரஸங்காதி தோஷங்கள் உள்ளது. ஸம்பந்த ஜ்ஞாநமும், ஸித்தோபாய ப்ரதிபத்தியும் ஆசார்யோபதிஷ்டமான திருமந்த்ர ரூப வாக்ய ஜந்ய ஜ்ஞாந மாத்ரமுமாகலாம்-தத்வஜ்ஞானமுடையவ னுக்குப் பின்பு “ப்ரபத்யே* என்கிற வர்த்தமாந நிர்தேசத்தாலே ஸதாநுஸந்தேயமான ஜ்ஞாநமுமாகலாம் “இது உபாயமன்று, ஈஸ்வரனே உபாயம்’ என்பாருக்கு உபாஸநாதி வித்யாநுகூல்யமும், அதினுடைய அதிகாரி விஸேஷணத்வ ப்ரதிபாதநமும் பாஷ்யாதியில் ஸித்தம். ப்ரபத்தியினுடைய – மாமேகம் ஸரணம் வ்ரஜ, “ப்ரார்த்தநா மதி ஸரணாகதி.*, *ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ப்ரபத்தி. , சரணெள ஸரணம் ப்ரபத்யே என்கிற விதி லக்ஷண அனுஷ்டான வாக்யங்கள் சொல்லுகிறபடியே அதிகாரி விஸேஷணமாக அங்கீகரிக்க வேணும்.ஸித்தோபாய ஸ்வீகாரமென்ற பாசுரத்துக்கும் அதிகாரி க்ருத்யத்திலே தாத்பர்யமென்ற அம்ஸம் ப்ராமாணிகம்- அதிரிக்தம் அப்ராமாணிகம்-விலக்காத மாத்ரமானாலும் அநாதி காலம் ஆஜ்ஞாதி வ்ருத்தி வ்யவஸாயத்தாலே விலக்கென்று பண்ணுகிற தந் நிவ்ருத்தி ரூப ப்ரபத்தி அதிகாரி ஸம்பத்தியைக் காட்டுகிற வழியாலே ப்ரஸாதநமாகலாம்-அநாதி காலம் ஸ்வ ரக்ஷணார்த்த வ்யாபாரத்தாவே விலக்கினானே யாகிலும் இப்போது ‘பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி’ என்று அறிந்து தந் நிவ்ருத்தியாலே உண்டாகிற விவக்காமை ஸூ ஷுப்த்யாத் யவஸ்த்தைகளில் இல்லையிறே-ஆகையால் அவவவஸ்த்தையில் மோக்ஷம் வர வேணுமென்கை அஸங்கதம்-அநுமதி மாத்ரமென்றாலும் அது உபாஸநத்துக்குத் துல்யமென்கை இஷ்டம். புத்தி தெவ்ர்பல்ய நிபந்தநமான சோதிதத்வத்தால் வருகிற உபாயத்வம் கழியுமே“அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத ஸந்தமேநம்* என்கிற அசித் வ்யாவ்ருத்தி யில்வையே ப்ராதிகூல்யதஸையில். ஆகையால் அசித் வயாவ்ருத்தியே ரக்ஷணியதைக்குப் போரும். சைதந்ய க்ருத்யமென்னாலும். இவ் விடத்தில் சைதந்யம் ஸ்வரூப யாதாத்ம்ய விஷயமாகையாலே “அஜ்ஞாநமதோந்ய துக்தம்” என்கிற படியே ஸ்வரூப விஷயமாண உபாஸநாதிகளும் புத்தி தெவ்ர்பல்ய நிபந்தநமாகையாலே இதுக்கு நெடுவாசி சொல்லிற்றாம். ஸாமாந்யேந சேதநனுக்குத் தானே வருமென்று அநுக்தோபாலம்பம். சித்த ஸமாதாநம் என்றது தந்தாம் ரூச்யநுரூபமாக பலம் பேதிக்கிலும் அவ்வோ
பலாநுகுண ரஷணம் இனிப் பண்ணுமென்றும் சித்த ஸமாதாநம் ப்ராபத்தாக்களில் வேறுபடாது. ப்ரபத்தி ப்ரார்த்தநா ரூபமாய், காமணையிலே அந்தர்பவிக்கையாலே அதிகாரி விஸேஷணமென்னத் தட்டில்லை. இவ்வதிகாரிக்கு அத்வேஷம் தொடங்கி கைங்கர்ய பர்யந்தம் பல பரம்பரை யாகையாலும் அநந்யார்ஹ ஸேக்ஷத்வ ஜ்ஞாநமும் பலமாகையாலும் பகவத் காமநா கார்யமாகையாலும் அதிகாரி விசேஷணம் என்னலாம்- பகவத ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவருத்தி ரூபமான உபாஸநத்துக்கு தந் நிவ்ருத்தி ரூபத்வம் துரவசம் -ஆகையால் நெடு வாசி சொல்லிற்றாம்-ஸித்தோபாயம் இவன் ஸ்விகரிக்கும் தஸையில் இவனுக் கதிகாரார்த்தமாக தத் ஸாபேஷமொழிய கார்ய காலத்தில் தந் நிரபேஷமாகையாலே ஸ்வீகார நிரபேஷமென்னும் நினைவு ஆரோபமன்று-ஸ்வ வசந விருத்தமுமன்று- அப்ரதாந ஹேது வல்லாமையாலே அவையிரண்டத் தொன்றிலாக வுமொண்ணாது -எம்பெருமானார்க்கு அபிமத விஷயமாய் அவர் பக்கவிலே. பழுக்கக் கேட்டு தந் நிஷ்டரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் திவ்ய ஸூக்திக்கு முக்ய பாதை இல்லாதிருக்க அமுக்ய தாத்பர்ய கல்பநமந்யாய்யமென்று – பக்தி அநுபாயமென்றால் பக்தி ஸாஸ்த்ரத்தில் அவிஸ்வாஸம் வருமென்று தத் பரிஹாரார்த்தமாக “நராணாம் புத்தி தெர்பல்யாதுபாயாந்தர மிஷ்யதே- என்கிறபடியே ஸ்வரூப விஸ்வாஸத்துக்கே ஸாஸ்த்ர விஸ்வாஸம் கார்ய மாகையாலே ஒரு ஸாஸ்த்ரத்திலும் அவிஸ்வாஸம் வாராது-மத்யோபஹதபாத்ரஸ்த தீர்த்த த்ருஷ்டாந்த வர்ணநம் ப்ரபத்தியிலும் வருமென்றதுவும் வஸீகரண உபாயம் என்ற பக்ஷத்தில் வருமென்கையாலே இஷ்டம். “மத் வ்ருத்தமசிந்தயித்வா” என்று ஸ்வ பூர்வ வ்ருத்தத்தை நினைத்து இப்படியிறே ப்ரபத்தி பண்ணுகிறான் என்று ஸ்வாமி திரு வுள்ளத்திலே கலக்கத்தை எண்ணி அதுக்கு க்ஷமை. கொள்ளுகிறதென்று தோற்றா நிற்க-அல்லாத அஹங்காார ஸங்கையைக் கல்பித்து தந் நிபந்தநம் என்கை பரமாசார்யர் திருவுள்ளக் கலக்கத்துக்கு ஹேதுவாம்-ஆசார்ய புரஸ்காரத்தாலே ப்ரபதந கர்த்தா தாமன்றிக்கே -ஆசார்யனாகையாலே அவ்விடத்தில் அநவஸ்தையில்லை பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள் ளுமாசார்யன் திருவுள்ளம் பூர்வ வ்ருத்தததை யெண்ணிக் கலங்காமையாலே அவ் விடத்திலும் அநவஸ்தையில்லை அதுவுமவனதின்னருளே* என்கிறபடி யன்றிக்கே ஆசார்யனாகையாலே- அவன் ப்ரஸாத கார்யமாந ப்ரபத்தியை அவனுக்கு ப்ரஸாதநம் என்னுமிடத்திலே ஆத்மாஸ்ரயமும், அந்யோந்யாஸ்ரயமும், அநவஸ்தையும் வரும். எங்கனே என்னில் ஸாத்யோபாயம் தன்னை யுண்டாக்குகிற ஸித்தோபாயத்தை வஸீகரிக்கும் போது தானுண்டாகையாலே ஆத்மாஸ்ரயம். ஸாத்யோபாயம் வஸீகரணத்தை அபேஷிக்கையாலும் வஸீகரணம் ஸாத்யோபாயத்தை அபேஷிக்கையாலும் அந்யோந்யாஸ்ரயம் ஸாத்யோபாயமுண்டாயே யிதுக்கு வஸீமகரணத்வம் உண்டாக வேணும்- ஸாத்யோபாய ஜநகத்வம் ஸித்தோபாயத்துக்கு உணடாயே ஸாத்யோபாயம் ஸித்திக்க வேணுமென்று ஸங்க்ரஹம் – இப்போது ஸாத்யோபாயமுண்டாகை அவனருளாலே. அந்த வருள் அதுக்கு முந்தின அருளாலே என்று அநவஸ்தையாம். பிஜாங்குர நியாயத்தாலே அநவஸ்தை தோஷாய அன்றென்னில் மேல் வஸீகரண பரம்பரைக்கு ஸாத்யோபாய ப்ரதாந பரம்பரையே பலமாய் அநிர்மோக்ஷம் ப்ரஸங்கிக்கும்.
ப்ரதம ப்ரபத்திக்கு ஷாமணம் பண்ணுகிறவர்களுக்கு புந ப்ரபதநம் வேண்டா வென்றது ஸ்வ பஷமோழிய பரபஷமானபடி எங்ஙனே? தான் ஸ்வதந்த்ரனாய் ஈஸ்வரனை வஸீகரித்தால் ஸ்வாதந்த்ர்யமாக ஆத்மாபஹாரம் வருமென்று அது வாராமைக்காக அவனோட்டை அவிவாதமே போரும்- உனக்குமவனுக்குமுண்டாண ஸ்வாபாவிக ஸம்பந்தத்தை எப்போதும் நினை யென்று சொல்லுகிற. “யோந்யதா ஸந்தம்”, யமோ வைவஸ்வதோ ராஜா- “ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம்* இத்யாதி ப்ரமாணங்களுக்கு விருத்தமான தாதபர்யகதி கல்பநம் ஆசார்யாநுஷ்டாந ஸம் ப்ரதாயங்களுக்கு விருத்தமாம்- “ஸக்ருதேவ ப்ரபந்நாய”, “ஸக்ருதேவ ஹி ஸாஸ்த்ரார்த்த,, “ஸக்ருத் க்ருதோஞ்ஜலி.” இத்யாதி ப்ரமாணாநுகுணமாக ப்ராயஸ்சித்திரியம் ஸாத்ர யத்புந ஸரணம் வ்ரஜேத்” என்கிற விதுக்கு தாத்பர்யம் கொள்ளாதே புந ப்ரபதநமாமென்கையும் ஸிஷ்டாநுஷ்டாந ஸம்ப்ரதாய விருத்தம்- ஆநுகூல்ய ஸங்கல்பாதிகளையும். அங்கம் என்கையும் ஸம்பாவித ஸ்வபாவங்கள் என்கிறத்தை ப்ரபத்த் யுத்தர காலம் அநுவர்த்தியாது ஓழியிலும் பலம் குறைவற்றிருக்கும் என்கையும் அங்க பஞ்சக ஸம்பந்நமான ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகிற தென்று த்வயத்தில் திரண்ட பொருள் என்கையும், ‘இங்ஙன் அல்லாத போது பக்தி ப்ரபத்தி ரூபோபாயங்களை விதிக்கிற ஸாஸ்த்ரங்களொல்லாம் அத்யந்த வ்யாகுலங்களாம் என்கையும்- “அஹமஸம்யபராதநாமாலயோகிஞ்சநோதித்வமேவோபாய பூதோ மே பவேதி ப்ரார்த்தநாமதி। ஸரணாகதி ரித்யுக்தா ஸா தேவேஸ்மித் ப்ரயுஜ்யதாம் என்கிற லக்ஷண வாக்ய விருத்தம்- அவதாரணத்தாலே அவனை யொழிந்த தொன்றுக்கும் உபாயத்வமில்லே யென்று கழிக்கையாலே அங்கத்வம் சொல்லுகிற வசநங்களுக்கும் ஸம்பாவித ஸ்வபாவ(த்வ)த்திலே தாத்பர்யமாககக் கடவது-ஸகலாத்மாக்களுக்கும் அநந்ய ஸரணத்வ ப்ரதிபாதகமான நமஸ்ஸுதானே ‘உபாஸநாதிகள் அநந்ய ஸரணத்வத்துக்கு விருத்தங்கள் என்கைக்கும் ப்ரமாண மாயிருக்க, ப்ரமாணமில்லை யென்றும் அத்தை ஸ்துதி யென்றும் அதிவாத மென்றும், அவற்றுக்கு ஸ்வரூப விரோதம் சொல்ல வொண்ணாது என்றும் “த்வ்யக்ஷரஸ்து பவேத் மருத்யு; தீர்யக்ஷரம் ப்ரஹ்மணா பதம் | மமேதி த்வ்யக்ஷரோ ம்ருத்யு ந மமேதி ச ஸாஸ்வதம் என்கிறபடியே அநந்யார்ஹ ஸேஷத்வ அநந்ய ஸரணத்வ அநந்ய போக்யத்வ ஸ்வரூப நாஸகத்வமுண்டாயிருக்க அவற்றுக்கு ஸ்வரூப விரோத ப்ரஸங்கமில்லை யென்றும் ஏகாந்தீ து விநிஸ் சித்ய தேவதா விஷயாந்தரை பக்த்யுபாயம் ஸமம் க்ருஷ்ண ப்ராப்தவ் க்ருஷ்ணைக ஸாதந- என்றும் தேவதாந்தர ஸப்தாதி பக்தி க்ருஷ்ணாக்ய ஹேதுஷு | ஸாம்ய க்ருத் பரமைகாந்தீ ஹரெவ் ஸ்வாமீதி புத்திமாந் என்றும் வஸீகரண உபாயமென்று பக்திகளை தேவதாந்தர விஷயங்களோடு ஓக்க ஸ்வரூப நாஸகங்களாக ஸாஸ்த்ரம் சொல்லா நிற்க ஒரு படியாலும் ஸ்வரூப விரோதி பிரசங்கமில்லை என்றும் –
அஹங்கார கர்ப்பம் என்று ஆரோபித்தார்கள் என்றும் “அத, பாதக பீதஸ்த்வம்” என்கிற இடத்தில் பாதக ஸப்தத்தாலே உபாஸநாதிகளை நினைக்கிறதென்கைக்கும் தர்ம புத்ரனுக்கும் தர்மாநுஷ்டாநம் ஒழிய வேறு பாதகமில்லாமையே உபபந்ந மாயிருக்க, அநுபபந்நமென்றும் “ஸர்வே பாப்மாநோதோ நிவர்த்தந்தே”, “ஸர்வே பாப்மாநா ப்ரதூயந்தே, “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்று ஸ்ருதி ஸ்ம்ருதிகள் புண்யத்தையும் ‘பாப’ஸப்தத்தாலே சொல்லா நிற்க, அப்படிச் சொல்லவுமில்லை யென்றும்- இவற்றுக்கு அநந்ய ஸரணத்வ ஸ்வரூப விரோதித்வம் ஸர்வாத்ம ஸாதரணமாயிருக்க அத்தைச் சிலரிடத்திவே யொதுக்கி, அவர்களதிகாரத்துக்கு விருத்தமென்றும் ப்ரமாண விருத்தர்த்தங்களைச் சொல்லுகை அதி ஸாஹஸம். வலிதா சரிதே-அஸங்கல்பிதமப்யஸ்ய ப்ரேரணம் யத் க்ருதம் மயா | விஷ்ண்வாய தநதீ பஸ்ய தஸ்யைதத் புஜ்யதே பலம். ॥ ததோ ஜாதி ஸ்ம்ருதி ஜந்ம மாநுஷ்யம் ஸோபநம் வபு ॥ வஸ்ய பதிர்மே ஸர்வாஸாம் கிம்புந ; தீபதாயிநாம் – இத்யாதி…
ஸூவ்ரதோ பாக்யாநே – *ஸ்ருணு தஸ்ய மஹா ப்ராஜ்ஜே !: நிமித்தம் கத தோ மம । யேந த்வம் ப்ராஹ்மணஸ் யாஸ்ய குலே ஜாதா மஹாத்மந.” என்று தொடங்கி இஜ் ஜந்ம ஹேது புறத் திண்ணையிலே வைஷ்ணவன் வந்து இருந்தானென்று, சொல்லிற்று. காருடே ஸ்ரீரங்க, மாஹாத்ம்யே – *பத்ரே த்வயா ஸுஷ்டு க்ருதம் ந கிஞ்சிதிஹ வித்யதே । இதோ: த்வாதஸ ,ஜந்மாந்தே த்வாம் கஸ்சித் ஸித்த ஆவிஸத் விஷ்ணு பக்தோ நிவாஸார்த்தம் ராத்ர்யாம் து தவ வேஸ்மநி | தத் ஸந்நிதாந ப்ரபவ தவ ஸாது ஸமாகம ஸா ஹி வை ப்ரஹ்மவிதுஷீ ஸ்ரீமத் ரங்கமுபாஸ்ரிதா॥ தத்ர தீர்த்தோதகம் ஸ்ரீமத ஸ்வத்தம் நாம ஸம்ஸ்ரிதா | தர்ம ஜ்ஞாதர்ம பரமா யஸ்யாஸ்தே ஸங்கமோபவத்–இத்யாதி “நிர்ஹேதுக கடாக்ஷேணே மதீயேந மஹாமதே | ஆசார்ய விஷயீ காராத் ப்ராப்நுவந்தி பராம் கதிம் ம சித பரம சில்லாபே ப்ரபத்திரபி நோபதி | விபர்யயே து நைவாஸ்ய ப்ரதிஷேதாய பாதகம்”, *நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க நரகமே சுவர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி-அவனதூர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்தனிய மாந்தர் கவலயுட்படுகின்றார் என்று அதனுக்கே கவல்கின்றேனே”(அருளினன்).! 1.1) நிர்ஹேதுகமாக அருளிக்கொண்டு நிற்கக் கண்ட வித்தணை- எனக்கு அருளினன் என்னாதொழிந்தது – பகவத் விஷயீகாரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்திருக்கையாலே -அருளினன் -இத்தலை அர்த்திக்க அன்றிக்கே முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே அருளிக் கொண்டு நிற்கக் கண்ட வித்தனை என்றும் -“தாது. ப்ரஸாதாத் மஹிமாருமீலம்” எண்கிற. படியே நிரஹேதுகமாக அருளிக்கொண்டு நிற்கக்கண்ட வித்தனை என்றும், (உடையானிடை]) (1-2-1) அவனுடையவனாய் உங்கள் ஸத்தையை நோக்கிக் கொண்டு போரா நிற்க,, நீங்களும், ‘நான், என்னது! என்று அகலப் பாராதே உங்களை அவன் பக்கலிலே ஸமர்ப்பிக்கப் பாருங்கோள்-அவன் உடையவனான பின்பு அவனோடு அவிவாதமே உங்களூக்கு ‘வேண்டுவது’ என்றும், “தேந சேத விவாதஸ்தே – உடையவனா யிருக்கிறவனோடே உனக்கு அவிவாதம் உண்டாகில் இத்தால் பேறு என் என்பாயோ? “மா கங்காம் மா குரூந் கம. – ஒரு தீர்த்தம் தேடிப் போதல் புண்ய ஷேத்ரம் தேடிப் போதல் செய்ய வேண்டா- அஹங்கார மமகாரங்கள் கிடக்க ப்ராயஸ்சித்தம் பண்ணுகை யாவது -நிஷித்த த்ரவ்யத்தை உள்ளே வைத்து மெழுகூட்டினவோபாதியிறே உடையவனுக்கும் உடைமைக்கும். தக்கபடியிறே ப்ராயஸ்சித்தமும்- உடையவன் ஸர்வேஸ்வரன்., த்ரவ்யங்களில் ப்ரதாந த்ரவ்யமான ஆத்ம த்ரவ்யத்தையிறே அபஹரித்தது. அபஹரித்த த்ரவ்யத்தைப் பொகட்டு ப்ராயஸ்சித்தம் பண்ண வேணுமே. பொகடுகிற த்ரவ்யம் தானாகையாலே ப்ராயஸ்சித்தம் பண்ணுகைக்கு வேறு அதிகாரமுமில்லையே- ஆகையால் நீங்களும் உடையவன் பக்கலிலே விடு செய்மினே-வீடு – ஸமர்ப்பிக்கை– அதாகிறது – இசைகை’ என்றும் ‘(வெறிதே அருள் செய்வர்) நிர்ஹேதுகமாக கிருபை பண்ணுவர்-ஆருக்கென்னில்
(செய்வார்கட்கு) “யமேவைஷ வ்ருணுதே” என்று தாம் விஷயீகரிக்க நினைத்தார்க்கு-தாந்தாம் ஒன்று செய்வார்க்கென்னில, ‘வெறிதே’ என்னக் கூடாதிறே- ஆனாலுமொரு ஹேது வேண்டாவோ அருளுக்கென்னில்- உகப்பாயிற்று ஹேது- *ப்ரியதம ஏவ ஹி வரணீயோ பவதி” என்னக் கடவதிறே- ருசி யுண்டானாலும் இவன் சேதநனான வாசிக்கு சைதந்ய ப்ரயுக்தமான ஸ்வபா வமாகக் கொள்ளுமித்தனே யல்லது பேற்றுக்கு ஸாதநமாகச் சொல்ல ஓண்ணாதிறே என்றும், ‘ ‘மதி-அநுமதி! என்றாக்கி அநுமதி மாத்ரத்தாலே’ என்பர் பட்டர். அதாவது ‘அவன் புகுகிற விடத்தில் விலக்கிற்றிலன் என்கை’ என்றும், (வைத்தேன். மதியாலே எனதுள்ளத்தகத்தே) – அநுமதியாலே என் நெஞ்சினுள்ளே வைத்தேன்-ஓர் அநுமதி மாத்ரத்துக்கு இத்தனை பலமுண்டாவதே- (எய்த்தே ஒழிவேனல்லேன் ) – இனிப் பிறந்து கலேஸிக்கக் கடவேனல்லேன்” என்றும், முதற்பாட்டிஸ், யாத்ருச்சிகமாகக் திருமலையைச் சொல்லுங் காட்டில் நிரபேஷனான தான் பிராட்டியோடே கூட வந்து என்னுள்ளே புகுந்தருளின னென்கிறார்(திருமாவிருஞ்சோலைமலை இத்யாதி) முன்பு அநாதி காலம் ஈஸ்வரனுக்குத்தம் பக்கல் பேரிட்டுக் கொள்ளலாவ தின்றிக்கே யிருக்க இப்போது அவனுக்குப் பேரிட்டுக் கொள்ளுகைக் கடியானது இன்னதென்கிறார். ஓரோ தேசங்களில் மலைகளைச் சொல்லா நின்றால் ஓரோ விஸேஷங்களை யிட்டுச் சொல்லக் கடவதாயிருக்குமிறே- அப்படியே திருமாலிருஞ்சோலைமலை என்றேன். (என்ன) மநஸ் ஸஹகாரமுமில்லை கிடீர் – உக்தி மாத்ரமே என் பக்கலுள்ளது- இவன் ஸேஷ பூதனாயிருந்தானாகில், உபாய பாவம் நம் பக்கலிலே யாயிருந்ததாகில் இவனுடைய பேறு நம் பேறாயிருந்ததாகில், சேதந வாசிக்கு உக்தி மாத்ர முண்டாய்த்தாகில், இதுக்கவ்வருகு, கொண்டு கார்யமென்?’ என்றிருக்குமவனிறே-இது தான். ஒரு மலையிறே -அவனுக்கு உக்தியை இல்லை என்ன வொண்ணாதே. இதுக்கடி ஆராயுமவனல்லனே- ராவணன் தம்பிக்கு. மித்ர பாவமே யமையும் என்னுமவன் இதுக்கு, அவ்வருகொன்று வேணுமென்றிரானிறே-மலைகளினுடைய சாமான்யம் கிடக்க இவ்விசேஷத்தைச் சொல்லிற்று இதிலுண்டான ஆதராதிஸமன்றோ என்றிரா நின்றானாய்த்து அவன் – ஆக. இவர்க்கொன்றில்லை என்னவுமாய், அவனுக்கு இது ஒன்றுண்டு என்னவுமாம்படி யிருக்கறதிறே இது தானே(திருமால்) அஹ்ருதயமாகச் சொன்னது தன்னை ஸஹ்ருதயமாக்கிக் கொடுப்பாருமருகே யுண்டு என்கிறார். (வந்து) ‘அவன் வருவதே என்றிவர் விஸ்மயப்படா நிற்க, ‘பிபாஸை வர்த்தித்தவன் தண்ணீரிருந்த விடத்தே வருமத்தனே யன்றோ’ என்றாயத்து அவன் வார்த்தை-க்ருபணராயிருப்பார் ஸ்லாக்யரிருந்த விடத்தே வருமித்தனை யன்றோ என்றிரா நின்றான்-எல்லார்க்கு அதிகம்யனானவனுக்கு நான் அபிகம்யனானேன் *ஸோப்ய கச்சத் ஸபரீம்* என்னுமா போலே (என் நெஞ்சம்) அந்த உக்தி ஸஹ்ருதமான என் நெஞ்சிலே (நிறையப் புகுந்தான்) விஷயாந்தரங்களுக்கு அவகாஸ மில்லாதபடி புகுந்தான்- அத்ரிபகவானாஸ்ரமத்திலே ‘நான் ராமன் , இவள் மைதிலி, இவன் லக்ஷ்மணன்” என்று நமஸ்கரித்து நின்றாப் போலே, அக் காட்டில் பாழடையத் தீரும்படி புக்காப் போலே என் நெஞ்சில் பாழ் தீரப் புகுந்தான்” என்றும் (இன்றென்னைப். பொருளாக்கி) அஸத் கல்பனான என்னை இன்று ஒரு வஸ்துவாம்படி பண்ணி ‘பொருளல்லாத வென்னை’ என்றாரிறே. (தன்னை) ஸத்துக்களுக்கு(ம்) அஸத்துக்களுக்கும் – என்று விகித புஸ்தக பாடம்) ஸப்ருஹணீயனான தன்னை. (என்னுள் வைத்தான்) தன்னைப் பிறர்க்கு அவகாஸ மில்லாதபடி முற்றூட்டாக என்னுள்ளே கொடு வந்து வைத்தான் – (அன்று) அவன் விஸேஷ கடாக்ஷம் பெறுவதற்கு முன்புள்ள நாளை வெல்லாவற்றையும் சொல்லுகிறார். இன்றென்கிறது மயர்வற மதி நலம் அருளப் பெற்றவதுக்குப் பின்புண்டான காலத்தை (என்னைப் புறம் போகப் புணர்த்ததென் செய்வான்?) பரதந்த்ரனான என்னைப் புறம்பு போகப் பண்ணிற்று என் செய்கைக்காக? பாஹ்யனாகப் பண்ணுகை யாகிறது- உபேஷிக்கை… இழந்த நாளிழந்தது மவனாலே பெற்ற வின்று பெற்றதுமவனாலே ‘ என்றிருக்கிறார். பரதந்த்ர வஸ்து செல்ல நிற்க வற்றோ, வர நிற்க வற்றோ. (குன்றித்யாதி.,) இப்படி-மதிப்பனானவன் மலைகளைச் சேர வைத்தாப் போலே விளங்கா நின்றுளள மாடங்கள் சூழ்ந்த திருப்பேரான்., (ஒன்று எனக்கு அருள் செய்ய) முன்பு கை விட்டதுக்கு ஹேது சொல்வவுமாம், இன்று என்னை விஷயீகரித்ததுக்கு ஹேது சொல்லவுமாம். (உணரத்தலுற்றேனே) இதுக்கு ஒரு மறு மாற்றம் அருளிச் செய்ய வேணு மென்று திரு வுள்ளத்திலே படும்படி விண்ணப்பம் செய்ய வேண்டி யிரா நின்றேன். ‘இது நாம் சொல்ல வேணுமோ? நீரே அறியிரோ’ என்றான் ‘அடியேன் அறியேன், ஸர்வஜ்ஞரான தேவர் அருளிச் செய்யவேணும்’ என்றார். ‘ஆனால் நாம் உம்முடைய நெஞ்சிலே புக்கிருககிற இடத்தில் ஸம்வதித்திருந்தீர் அத்தாலே காணும்’ என்றான் – ‘ஓம், அது தானுண்டோ யான் ஓட்டி என்னுள் இருத்துவம் ‘ என்றார். ‘அதில்லே யாகிலும் புகுந்த பின்பு, நம்மை ஆதரித்தீரே’ என்றான். ‘மருவித் தொழும் மனமே தந்தாய் என்று அதுவும் தேவர் செய்த வித்தனை’ என்ரார். ‘ஓங் காணும், அதில்லை யாகிலும் நம்மோடு ஓக்க விஷயாந்தரங்களையும் விரும்பாதே யிருந்தீரே என்றான் – “என்னைத் தீமனங்கெடுத்தாய்* என்று அதுவும் தேவரே யன்றோ ‘ என்றார். ‘இவை யொன்றுமில்லை யாகிலும் நாம் தந்த மதிநலத்தை வளர்த்துக் கொண்டு போந்தீரே’ என்றான். “காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி என்று அதுவும் தேவரீரே யன்றோ’ என்றான் – இப்படியிவர் முடியத் துடர்ந்தவாறே பெருங்கடல் மண்டினாரைப் போலே. போக்கற்றான் – ‘இதுக்கு ஈஸ்வரன் சொன்ந உத்தரமென் என்று ஜீயர் பட்டரைக் கேட்க “இவர் தலையிலே ஒரு பழியை யேறிட்டு நெடுநாள் இழந்த நாம் சொல்வதன்” என்று லஜ்ஜாவிஷ்டனாய்க் காலாலே தரையைக் கீறி நிற்கும் அத்தனை போக்கி வேறு உத்தரம் உண்டோ -என்று அருளிச் செய்தார் -அதாவது- ‘முன்பு ருசி யில்லாமையாலே’ என்ன மாட்டான் – “இப்போது ஸாதநாநுஷ்டாநம் பண்ணுகையாலே’ என்ன மாட்டான் – ஆனால் பின்னை ஈஸ்வரனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யாதிகள் வருதல், ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வருதல் செய்யாதோ வென்னில் அது செய்யாது- அடியிலே அத்வேஷமும் இச்சையும் பிறக்கைக்குத் தான் கிருஷி பண்ணி -அது-பக்வமாமளவும் பார்த்திருக்கையாலே அவன் கேட்டதுக்கு ஒரு மறு மாற்றம் சொல்லக் காணாமையாலே ‘அறிந்தோம். இதுக்கு ஹேது – இ௩்ஙனே யாக வேணும்’ எண்று பார்த்தார். ‘தன்னுடைய ஸ்பர்ஸம் ப்ரதி கூலமாகை தவிர்ந்து விலக்காத ஸமயம் பார்த்திருந்தானாதல் தன்னை யொழிந்த வற்றில் ஸாதந புத்தி தவிருமளவும் பார்த்திருந்தானாதவாக வடுக்குமென்று பார்த்தார்-ஆனாலிது தன்னை அவன் உத்தரமாக அருளிச் செய்யா தொழிவான் என்னென்னில், ‘சைதந்ய ப்ரயுக்தமாய் வருகிற அத்வேஷத்தை ஸாதநமென்ன மாட்டானே-உபாய பாவம் தன் தலையிலே யாய்த்தே, நெடு நாள் இவர் தலையிலே பழி யிட்டிழந்திருந்த நாம் எத்தைச் சொல்லுவது! என்று பேசாதே இருந்தான் – ‘*ஹ்ரீரேஷாஹி மமாதுலா * என்று பிற்பாட்டுக்கு வஜ்ஜித்து நிற்குமவனிறே .-இவர்தாமெடுத்து வைத்து வார்த்தை சொல்லும்படியாய்த்து அவன் நிலை சைதந்ய ப்ரயுக்தமாண ருசி தான் ஸ்வரூபாதிரேகியன்றிறே’ என்றும், சார்வே தவ நெறிக்கு – ஒன்பதாம். பாட்டிலே. “ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு” என்கிறபடியே அநேக கால ஸாத்யமான பக்தியாலே லபிக்கப்படுமவனை கேவலம் அவன் ப்ரஸாதத்தாலே காணப் பெற்றேன் – என்கிறார். “கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே வொழிந்த” என்றும், “(அவன தருளால்) அவனுடைய ப்ரஸாதத்தாலே-ப்ராப்யமவனே என்கிற நிபந்தநத்தோபாதி ப்ராபகமுமவன் ப்ரஸாதமேயா யிருக்கிறபடி.(உறல் பொருட்டு) ப்ராபிக்கையின் பொருட்டு, ப்ராப்ய ப்ராபகுமவனே யாகில் நீர் இதில் அந்வயித்த அம்சம் ஏதென்ன -என் உணர்வினுள்ளே இருத்தினேன் -அவனை என்னுடைய ஞானத்துக்கு விஷயமாக்கினேன் -“வைத்தேன். மதியால்” என்றது தானிறே. இச்சித்தேனென்கை – இச்சை தான் ஸ்வாதீநுமோ வென்னில், (அதுவும் அவனதின்னருளே) அந்த இச்சை தான் பிறந்தது அவன் ப்ரஸாதத்தாலே ‘ என்றும் ஈட்டில் -பிள்ளை யருளிச் செய்தருளினார்.ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்* என்றும், “களைவாய் துன்பம் களையாதொழிவாய் களை கண் மற்றிலேன் ” என்றும்., நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று நாடொறுமேக சிந்தையனாய் என்றும், அடிக்கீழமர்ந்து புகுந்தேனே என்றும், கழல் களவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன் அருளிச் செய்தார்
தஸ்ய ச வஸீகரணாம் தச்சரணாகதிரேவ* என்று ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தது-அவ்விடத்தில் ஸ்ருத ப்ரகாசிகையில்
“கதம் ஸர்வ ஸ்மாத் பரஸ்ய அநீஸ்வரேண ஸம்ஸாரிணா । வஸீ கர்த்தும் ஸக்யத்வம் ஸக்யஸ்சே(ஞ்சே)த் தத் ப்ரகாரோஃபி க்வசித் ஸ்ரூயேத | ந ச ஸ்ரூயதே। *யச்சேத் வாங்மநஸீ ப்ராஜ்ஞ இத்யாதவ் தஸ்ய வஸீகார்யத்வ ஸ்ரவணம் தர்ஸ யிஷ்யதே | இத்யுக்த வஸீ கரண ப்ரகார ப்ரதிபாதக“தத்,யச்சேத் ஸாந்த ஆத்மநி ” இதி ஸ்ருதி வ்யாக்யாநே *தத்,யச்சேத் ஸாந்த ஆத்மநீதி ஸாந்தே ஸ்வத ஊர்மி ஷட்க ப்ரதிபடே மஹத ஆத்மநோ ஜீவஸ்ய நியமம் நாம தத் சேஷதா ப்ரதிபத்தி। ஸைவ தஸ்யாபி வஸீகரணம் பவதி’ என்று பட்டராலே அதிகாரி விஸேஷணமாண ஸேஷத்வஜ்ஞாந கார்யமாக வ்யாக்யாதமாயத்திறே. “ரசநாநுபபத்தே: இத்யாத்,யதிகரணத்திலே வ்யதிரேகோ அநவஸ்திதே. என்கிற ஸூத்ர பாஷ்யத்திலே ‘ஸ்வ ஸாஸநாதி வ்ருத்தி வ்யவஸாய நிவ்ருத்தி மாத்ரேணே அநாத் யநந்த கல்போபசித துர்விஷஹா ரந்தாபராதா நங்கீகாரேண நிரதிஸய ஸுக- ஸம்வ்ருத்தயே ஸ்வயமேவ ப்ரயததே | யதோக்தம்-தேஷாம் ஸதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் | ததாமி புத்தி யோகம் தம் யேந மாம் உபயாந்தி தே, “தேஷாமேவாநு கம்பார்த்தம் அஹமஜ்ஞாநஜம் தம। நாஸயாம் யாத்மபபாவ ஸ்த ஜ்ஞாநதீ பேந பாஸ்வதா * இதி’ என்று பகவதஜ்ஞாதிலங்கந புத்தி நிவ்ருத்தி ஸ்தாநத்திவே ப்ரீதி பூர்வக பஜநத்தையும் பாஷ்யகாரர் அருளிச் செய்தார். ‘வாக்யாந்வயாத்’ இத்யத்ர ச ‘அதோத்ர பரமாத்மைவ அம்ருதத் வோபாயதயா ‘த்ரஷ்டவய.’ இத்யாதி நா உச்யதே’ என்று பகவானே உபாயமென்று பாஷ்யகாரர் முக்தகண்டமாக அருளிச் செய்தார். பர மதஸ் ஸேதூந்மாந இத்யாத் யதிகரணத்தில்உபபத்தஸ் ச என்கிற ஸூத்ர பாஷ்யத்திலே-‘ப்ராப்யஸ்ய ‘பரம புருஷஸ்ய ஸ்வ ப்ராப்தவ் ஸ்வஸ்யைவ உபாயத்வோப பத்தே
*நாயமாத்மா ப்ரவசநேந லப்ய: ந மேதயா ந பஹுநா ஸ்ருதேந யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்” இத்யநந்யோபாயத்வ ஸ்ரவணாத்’ என்றும், ஸ்ருத ப்ரகாஸிகையிலே ‘அநந்யோபாயத்வ ஸ்ரவணாத் – ப்ராப்யஸ்யைவ உபாயத்வ ஸ்ரவணாதி த்யர்த்த,. *விவ்ருணுதே தநூம் ஸ்வாம்* இதி அநேந ப்ராபகத்வம் ப்ராப்யத்வம் ச கம்யதே’ என்றும், “பவமத உபபத்தே,* என்கிற விடத்தில் “உபாஸீநாநாம் பரஸ்மா தேவாஸ்மாத் புருஷாத் தத் ப்ராப்தி ரூபம் அபவர்க்காக்யம் பலமிதி ஸம்ப்ரதி ப்ரூதே’ என்றும், ‘உபபத்தே ஸ்வ ஹி ஸர்வஜ்ஞ ஸர்வஸக்தி மஹோதார யாக தாந ஹோமாதிபிர் உபாஸநேந ச ஆராதித ஐஹிகாமுஷ்மிக போக ஜாதம் ஸ்வ ஸ்வரூ பாவாப்தி ரூபமபவர்க்கம் ச தாதுமீஷ்டே நஹ்ய சேதநம் கர்ம க்ஷணத்வம்ஸி காலாந்தர பாவி பல ஸாதநம் பவிதுமர்ஹதி’ என்றும்-ஸ்ருதத்வாச்ச* என்கிற ஸூத்ர பாஷ்யத்திலே ‘*ஸ. வா ஏஷ மஹாநஜ ஆத்மா அந்நாதோ வஸுதாந, ஷி ஹ்யேவ ஆநந்தயாதி * இதி பேகோபவர்க்க ரூபம் பலம் அயமேவ ததாதீதி ஹி ஸ்ரூயதே‘ என்றும், ‘ஸித்த தர்மமே மோக்ஷ ஸாதநம் ஸாத்ய தர்மம் தத் ஸமாராதநம்’ என்றும் ப்ரகாஸிப்பிக்கப் பட்டது. அருளாளப் பெருமாளெம்பெருமானார் – ப்ரமேய ஸாரத்திலே – கருமத்தால் ஞாநத்தால் காணும் வகை யுண்டே* என்று தொடங்கி நாலு பாட்டாலே நமஸ் ஸப்தார்த்தமான அநந்ய ஸரணத்வத்தை அருளிச் செய்கிறார். (நமஸ் ஸுப்த்தார்த்தம் – அநந்ய ஸரணத்வமிறே). “நாலாம் பாட்டு – ஸேஷி யானவன் திருவடிகளை – அத் திருவடிகள் தானே தருகை யொழிய உபாயாந்தரங்களால் காண விரகுண்டோ? என்கிறார்’ என்றும், “அஞ்சாம் பாட்டு ஸித்தோபாயத்தின் படியைக் கண்டாவ் உபாயாந்தரங்களை ஸவாஸநமாக விட்டு அது தன்னிலும் தன்னுடைய ஸ்வீகாரத்தில் உபாய புத்தி யற்றுத் தன் வெறுமையை அநுஸந்தித்திருக்குமது – ஸர்வேஸ்வரனுடைய க்ருபாபலமென்கிறார்-என்றும்.’ஏழாம் பாட்டு- “குறையேதுமில்லா தார்கு என்றுமிறை யேதுமில்வாத யாம்’ என்று அருளிச் செய்த ப்ரஸங்கத்திவே- இப்படி யிரண்டு தலைக்கும் உள்ள இல்லாமையை அநுஸந்தித்து ஸேஷியான வனை ஐயித்திருப்பாரில்லை. அதொருவருக்கு ஸித்திக்குமதோ ? என்கிறார்” என்றும் தத் வ்யாக்யாநத்திலே ஜீயர் அருளிச் செய்தருளினார் –
தன்னால் வரும் நன்மை விலைப்பால் போலே அவனால் வரும் நன்மை முலைப்பால் போலே- என்று ஸ்வகத ஸ்வீகாரத்தினுடைய ஹேயதையையும், பரகத ஸ்வீகாரத்தினுடைய ஸ்லாக்யதையையும் பரம ரஹஸ்யத்திலே. ராத்ரி பர்த்தாவோடு ஸம்ஸ்லேஷித்து விடிந்தவாறே கூலிதர வேணுமென்னுமா போலே பக்தியை உபாயமாக்கிக் கொள்ளுகை-உபேய விஷயத்தில் எம்பெருமானாலேயே எம்பெருமானைப். பெறுமித்தனை போக்கி தந்தம் நன்மை கொண்டு பெற நினையார் ஸ்வரூப ஜ்ஞநாமுடையார்’ என்றும் திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்தார்- பட்டர் – ரஹஸ்ய த்ரய விவரணமான அஷ்டஸ்லோகியில் கர்த்தும் த்யக்துமபி ப்ரபத்துமநலம்* என்று ப்ரபத்தி பண்ணுகைக்கும் யோக்யதை யில்லாமையை அருளிச் செய்தார் (எம்பெருமான் படியை அனுசந்தித்து ) கத்ய வியாக்யானத்திலே -அநந்தரம் கீழ் சரணம் புக்க அதுக்கு ஷாமணம் பண்ணுகிறார்-ஷாமணம் பண்ணுகிறது ஆருடைய ஹ்ருதயத்தாலே யென்னில்- ஸ்வ ஹ்ருதயத்தாலே-அதென்னென்னில், அநாதி காலம் அபராதத்தைப் பண்ணிக் கூடு பூரித்தவன் இன்றாக. ஆபி முக்யம் பண்ணினானே யாகிலும், *ரிபூணமபி வத்ஸல :, “யதி வா ராவண ஸ்வயம்” என்றிருக்குமீஸ்வரனுடைய படியைப்: பார்த்தால் கைக் கொள்ளுகைக்கு ஒரு குறையுமில்லை-பதி வ்ரதையானவள் நெடுநாள் வ்யபிசரித்து பின்பு பர்த்தா. வானவன் பழியா(ள )னென்கிற விதுவே ஆலம்பநமாக வந்தென்ணை ரக்ஷிக்க வேணுமென்று முன்னே நின்றால் வருகை தானே அபராதம்- அதுக்கு மேலே என்னை ரக்ஷிக்க வேணுமென்கை யாவது அபராதத்துக்கு மேல் எல்லையாய் ஸ்த்ரீத்வ ஹாதியுமாயிருக்குமிறே-அப்படியே இவனும் அநந்யார்ஹ ஸேஷ பூதனுமாயிருந்து வைத்து கனக்க அபராதத்தைப் பண்ணிப் போந்து இன்று வந்து ஸரணம் புகுருகையாவது அபராததுக்கு மேல் எல்லையாய் சேஷத்வ ஹாநியுமா யிருக்கக் கடவதிறே- ஆனால் ஸரணம் புகுருகை அபராதமானால் அது பண்ணுவான் என் என்னில்,, *த்வமேவ ஸரணம் கத:” என்று புறம்பு புகலில்லாமையாலே- ஸரணம் புகவும் வேணும்- பூர்வ வ்ருத்தத்தைப் பாரா பண்ணின இதுவும் அபராதமென்று பய ஹேதுவாகையாலே க்ஷாமணம் பண்ணவும் வேணும் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார். “உபாயத்தில் அஹங்காரமாவது, – ஸ்வகத ஸ்வீகாரத்தில் உபாய புத்தியை த்யஜித்து பரகத ஸ்வீகாரத்துக்கு விஷய பூதனாகை என்று இவர் தாமே (வார்த்தா மாலையில்) அருளிச் செய்தார்.
“ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்தாசார்யனாலே மோக்ஷமோ? கிருபா மாத்ர ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷமோ?’ என்றிங்ஙனே ப்ரஸங்கமாக, முதலியாண்டான் – ‘ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசாரயனாலே ‘ என்ன ஆழ்வான் ‘க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யனாலே ‘ என்ன, ஆண்டான். – “குற்றமின்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கு அநுகூவராய் என்று பெரியாழ்வார் அருளிச் செய்கையாலே ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாலே யாக வேணும்-என்ன அவ்வளவிலே ஆழ்வான் ‘அங்கனன்று, “பயனன்றாகிலும் பாங்கல்ல ராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்-குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி? என்று ஸ்ரீமதுரகவி யாழ்வார் அருளிச் செய்கையாலே அவருடைய அடிப் பாட்டிலே யிருக்கிற நமக்கெல்லாருக்கும் ஸ்வாநுவ்ருத்தி கூடாமையாலே கிருபா மாத்ரத்திலே மோக்ஷம் என்று அருளிச் செய்தார்- அன்று ஆண்டானும். ‘அப்படியாக வேணும்’ என்று போர ப்ரீதராய் அருளினார் என்று வார்த்தா மாலாதிகளிலே. ப்ரஸித்தமிறே-
இயமிஹ மதிரஸ் மதுஜ் ஜீவிநீ வரத தவ கலு ப்ரஸாதா த்ருதே ஸரணமிதி வசோபி மே நோதியாத் என்றும், “ஏவம் ஸதா ஸகல ஜந்மஸு ஸாபராதம் ஷாம் யஸ்யஹோ ததபி ஸந்தி விராம மாத்ராத்” என்றும் ஆழ்வான் அருளிச் செய்தாரிறே-சரம ஸ்லோக வ்யாக்யாந ப்ரவேஸத்திலே “இதில் வர்த்தம் கேட்கைக்காக விறே எம்பெருமானார் பதினெட்டு பர்யாயம் திருக்கோட்டியூர் நம்பி பக்கலில் எழுந்தருளிற்று-நம்பி தாமும் இதிலர்த்தத்தினுடைய கெளரவத்தையும் இதுக்கு அதிகாரிகளில்லாமையையும் பார்த்திறே இவருடைய ஆஸ்திக்யாதர பரீக்ஷார்த்தமாகவும் பலகால் நடந்து துவளப் பண்ணி சூளரவு கொண்டு மாஸோபவாஸம் கொண்டு அருமைப் படுத்தி யருளிச் செய்தருளிற்று-நிஷ்க்ருஷ்ட தத்வ நிஷ்டனாய் பரமாத்மநி ரக்தனாய் அபரமாத்மதி வைராக்யமுடையவனாய், ப்ரமாண பரதந்த்ரனாய் பகவத் வைபவம் ஸ்ருதமானால்.அது. உபபத்ந மென்னும் படியான விஸ்ரம்ப பாஹுள்யமுடையனாய் ஆஸ்திகாக்ரேஸரனா யிருப்பானொருவ னுண்டாகில், அவன் இந்த ஸ்லோகார்த்த ஸ்ரவணாநுஷ்டாநத்துக்கு அதிகாரி யாகையாலே அதிகாரி துர்லபத்வத்தாலும், அர்த்த கெளரவத்தாலு மித்தை வெளியிடாதே மறைத்துக் கொண்டு. போந்தார்கள் எம்பெருமானார்க்கு முன்புள்ளார். ஸம்ஸாரிகள் துர்கதி கண்டு பொறுக்க மாட்டாதபடி க்ருபை புரண்டிருக்கையாலே அர்த்தத்தின் சீர்மை யாராதே அநர்த்தத்தையே பார்த்து வெளியிட்டருளினார் எம்பெருமானார்-என்று பெரிய ஜீயர் அருளிச் செய்தார்.
திருவிருத்தத்திலே – ஈனச்சொல் என்கிற பாட்டிண் வ்யாக்யாநத்திலே “(ஞானப்பிரானை யல்லாலில்லை) அவனை யொழிந்த தானும் பரிக்ரஹிக்கிற உபாயங்களும். அடையக் கழுத்துக் கட்டி யென்கை. ஒருவிசை திருக்கோட்டியூர் நம்பி திருநாளுக்கெழுந்தருளின ஸமயத்திலே இவ்வர்த்தத்தை அருளிச் செய்வதாக ஒரு ஏகாந்த ஸ்தலத்திலே எழுந்தருளி எம்பெருமானாரையும் கூடக் கொண்டு புக்காராய், திருப்பணி செய்வானொருவன் உறங்கிக் குறட்டை விடா நிற்க, அவனைக் கண்டு ‘அநர்த்தப் பட்டோம்” எண்று அவ்விசை தவிர்ந்து மற்ற விசை அருளிச் செய்யக் கேட்டருளி எம்பெருமானார் ஆழ்வான் அகத்திலே அமுது செய்து இருக்கிற வளவிலே உச்சி வெய்யிவிலே தண்டையும் கொண்டு வந்து புகுந்து நம்பி. – ‘இவ்வரத்தத்தை ஒருவர்க்கும் சொல்லாதே கொள்’ என்று, அருளிச் செய்தார். உணக்குச் சொல்வாதிருக்க மாட்டுகிறிலேன் இறே என்று ஸஹகாரி நைரபேஷ்யத்தை அருளிச் செய்தாரிறே- இனி பல போக்தாவான தன் ஸ்வரூபமும் தான் பரிக்ரஹித்த உபாயமுமே யிறே ஸஹகாரி யாயுள்ளது. அத்தைத் தவிர்க்கிறது-( நான் கண்ட) கைப்பறியாகப் பறித்த புண்ய பாபங்கள் கலந்திருக்கையாலே புண்யம். தலை யெடுத்த போதாக வெளிச் செறித்து அல்லாத போது கலங்கிக் கிடக்கிற ஜ்ஞாநத்தைக் கொண்டு பிறரை ப்ரமிப்பக்கைக்காகச் சொல்லுகிற விப்ரலம்பக வாக்யமன்றியே பகவத் ப்ரஸாத லப்தமான ஞாநத்தை யுடையேனாய், அவ்வெளிச்செறிப்புக்கே சொன்ன அர்த்தம் இது தான் பிறர்க்குச் சொல்ல வேணுமென்று சொல்லிற்றுமல்ல- ஹர்ஷத்துக்குப் போக்கு விட்டுச் சொன்ன வார்த்தை என்கிறார்” என்று நம்பிள்ளை அருளிச் செய்தார்.
முமுஷுப்படியில் த்வய ப்ரகரணத்திலே, “உபாயமவனாகையாலும் இவை நேரே உபாயமல்லாமையாலும்’என்கிற ஸுூத்ர வ்யாக்யாநத்திலே, “அதாவது – பல ஸித்தி்க்கு உபாயம் பற்றப்படுகிற ஈஸ்வரனாகையாலும் கரண த்ரயத்தாலுமுண்டான பற்று தல்களாண இவை ஆபாத ப்ரதீதியில் உபாயம் போல் தோற்றிக் கழியுண்டு போமதொழிய ஸாக்ஷாதுபாயம் அல்லாமையாலும்’ என்றும் சரம ஸ்லோக வ்யாக்யாநத்திலே – வரணத்திலே ஸாதநதா ராஹித்யத்தையும், மூலத்திலே – (ஏகம்) இந்த ‘ஏக ஸப்தம் ஸ்தாந ப்ரமாணத்தாலே அவதாரணார்த்தத்தைக் காட்டுகிறது’ என்று தொடங்கி – “உபாய பாவத்தில் அந்தர்பவியாது’ என்னுமளவும் மற்றும் இதின் வ்யாக்யாநத்திலே “உய்யக் கொண்டார் என்று தொடங்கி மேலெல்லாம், மூல வ்யாக்யாநங்களிரண்டிலும் ஸ்ரீவசந பூஷண தத் வ்யாக்யாநங்களிலே, “இது தன்னைப் பார்த்தால்! என்று தொடங்கி, – “ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு. உகப்பானுமவனே” என்னுமளவாக – உபாயாந்தர ஸ்வீகாரங்களினுடைய ஸ்வரூப விரோதித்வ அநு பாயத்வாதிகளையும் “ப்ரதி கூலராகிறார்’ என்று தொடங்கி “இங்கு ஸ்வ ப்ரயோஜமென்கிறது ஆஸ்ரயண தோஷ ஜந்யமானத்தை என்னுமளவாக உபாயாந்தர நிஷ்டரும் வரண ரூப ப்ரபத்தியை உபாயம் என்றால் வரும் அவத்யத்தையும் அதின் அங்க நைரபேக்ஷயத்தையும் ஆநு கூல்ய ஸங்கல்பாதி களினுடைய ஸம்பாவித ஸ்வபாவத்வத்தையும், ஸஹ வாஸ நிவ்ருத்திக்கு அவிஷயமாகச் சொன்ன ப்ரதிகூல அந்தர் கதமென்னுமிடத்தையும், “இழவுக்கடி கர்மம், பேற்றுக்கடி க்ருபை” என்றும். ‘த்ரிபாத்வியூதியிலே ‘ என்று தொடங்கி, ‘நிவர்த்ய ஜ்ஞாநம் பய ஹேது- நிவர்த்தக ஜஞாநம் அபயஹேது’ என்னுமளவாக, மூல வ்யாக்யாநங்களிரண்டிலும். நிர்ஹேதுக விஷயீ காரத்தையும் தனி சரமத்திலே ‘(ஏகம்) நஞ்சீயர் இதுக்கு அவதாரணத்தைச் சொல்லுகிறதென்று அருளிச் செய்வர்-எங்ஙனே யென்னில் த்வமேவோபாய பூதோ மே பவ என்றும், “தமேவ ஸரணம் கச்ச,” என்றும், *மாமேவ யே ப்ரபத்யந்தே” என்றும், *தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே * என்றும்- ஸ்தாந ப்ரமாண ஸித்தமாகையாலே– ஆனால் இவ்வவதாரணத்துக்கு வ்யாவர்த்யமாவது ஏதென்றால் கீழே உபாயாந்தரங்களை த்யாஜ்யங்களாகச் சொல்லுகையாலே அவற்றை வ்யாவர்த்திக்கிற தென்ன வொண்ணாது- “மாம்” என்று அஸாதாரணாகாரத்தைக் கீழே சொல்லுகையாலே தேவதாந்தரம் வ்யாவர்த்ய மென்ன வொண்ணாது-பின்னையேதாவதென்றால்- இனி இங்குள்ளது ஸ்வீகார்யமும், ஸ்வீகாரமும், ஸ்வீகர்த்தாவுமாக வேணுமிறே. அதில் ஸ்வீகார்யன் உப௱யமாய் நின்றால், இனி யுள்ளது ஸ்வீகாரமும் ஸ்வீகர்த்தாவுமிறே. அந்த ஸ்விகர்த்தாவோபாதி ஸ்வீகாரமும் உபாயத்தில் புகாதென்கிறது. ஆவதென் *உபாயோபேயத்வே ததி ஹி தவ தத்வம் நது குணெள” என்கிறபடியே, உபாயத்வம். நித்யமே யாகிலும் இவனுடைய ஸ்விகாராநந்தரமாக வன்றோ உபாயமாகிறது. *யதநந்தரம் யத் பவதி, தத்தஸ்ய காரணம்” என்கிறபடியே இந்த ஸ்வீகாராநந்தரமாக வல்வது. ஈஸ்வரனுடைய உபாய பாவம் ஸித்தியாமையாலே இது உபாயமாதல் ஸஹகாரி(யா)யாதவாக வேண்டாவோவென்னில், “மாமேகம் ஸரணம் வ்ரஜ* என்று, உபாய ஸ்வீகாரமாகச் சொல்லுகையாலே ஸாஷாதுபாயத்வமில்லை -இனி ஸஹகரிக்கையாவது – உத் பத்தியிலே ஸஹகரித்தல் பல ப்ரதாநத்திலே ஸஹகரித்தலாய்த்து-பக்த்யுபாயம் கர்ம ஜ்ஞாந ஸாத்யமாகையாலே உத்பத்தியிலே சேதந ஸாபேக்ஷம், அசேதந மாகையாலே பல ப்ரதாநத்தில் ஈஸ்வர ஸாபேக்ஷம் இவ்வுபாயம் ஸித்த வஸ்துவுமாய், ந்ருபாதிக ஸர்வ ஸுஹ்ருத்துமா யிருக்கையாலே உத்பத்தி நிரபேக்ஷம்- ஸர்வ ஸக்த்வாதி குண விஸிஷ்டமாகையாலே பல ப்ரதாநத்தில் நிரபேஷம்-ஆனால் ‘ய(த்ய)த்ஸாங்கம் த(த்த)த் ஸாதநம்’ என்கிறபடியே உபாயம் ஸங்கமாயன்றோ இருக்க வேணும். இவ்வுபாயம் ஸித்தமா யிருக்கிறபடி யென் என்னில் உபாயமாகிவ் ஸாங்கமாயிருக்கு வேணுமென்கிற நிர்பந்தமில்லை. அவை ஸாத்யமுமாய் அத்ய ஸாபேஷமுமா யிருக்கையாலே ஸாங்கமாக வேண்டிற்றித்தனை-இவ் வுபாயம் ஸித்தமுமாய் அந்ய நிரபேக்ஷமுமா யிருக்கையாலே நிரங்கமுமாயிருக்கும்-ஆனால் உபாயாந்தரங்களுக்கும் உபாயத்வ வ்யபதேஸமும் பண்ணுகிறது – பல ப்ரதங்களான தேவதைகளுக்கு ப்ரஸாதகங்களான முகத்தாலே யன்றோ? அவ்வோபாதி இவ் வுபாயமும் ஈஸ்வர ப்ரஸாதகமானாலோ வென்னில் தேவதைகளில் சேதநருக்கு பூர்வமே பலத்தைக் கொடுப்பதாக நினைவின்றிக்கே யிருக்கச் செய்தே இச் சேதநருடைய க்ரியை யாய்த்து அவர்கள் ப்ரஸாதத்தை ஜநிப்பிக்கிறது- ஈஸ்வர விஷயத்தில் வந்தால் , ஸர்வாத்மாக்களுக்கும் ஸ்வரூபாவிர்பாவத்தை யுண்டாக்குவதாக. பூர்வமேவ சிந்தித்து அவஸர ப்ரதீக்ஷனாய்ப் போருகையாலே அவனுக்கு ப்ரஸாத ஐநகமாகச் செய்ய வேண்டுவதொன்றில்லை- உண்டென்றிருக்கையாகிறது தன் ஸ்வரூப பாரதந்தரயத்தையுமழித்து அவனுடைய ரக்ஷகத்வத்தையும் ஸோபாதிகமாக்குகிறான் இத்தனை ” என்று பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்தருளினார்.
இதி ஸித்தாந்த.
பூர்வபக்ஷாந்தரம்.
ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே இருபத்தைந்தாமதிகாரத்தில். “இப்படி த்வயத்தில் த்விதீயாந்த பதங்களாலே ப்ரகாஸிதமான ஸித்தோபாய விஷயமாகவும், ஆக்யாத பதத்தாலே சொல்லப் பட்ட ஸாத்யோபாய விஷயமாகவும் பிறக்கும் வ்யாகுலங்களை ஸமிப்பி(க்க வேணும்)க்கிறோம்’ என்றும் “ந சூத்ரா பகவத் ப,க்தாஃ விப்ரா பாகவதா; ஸ்ம்ருதாப ஸர்வ வர்ணேஷு தே ஸூத்ரா: யேஹ்ய பக்தா ஜநார்தநே என்று பகவத் பக்தியாகிற குண விஸேஷ ஸத ஸத் பாவங்களாலே அபக்ருஷ்ட ஜாதீயரை உத்க்ருஷ்ட ஜாதி வாசக ஸப்தத்தாலே சொல்லியுமிருந்தது. இதடியாக பகவத பக்தரெல்லாரும் ஏக ஜாதீயர் அன்றோ வென்று சில ம்ருது ப்ரஜ்ஞர் நினைப்பார்கள்-‘இங்ஙனே யாகில் பாகவத ப்ராஹ்மணன் இன்ன படியே வர்த்திப்பான் பாகவத ஸூத்ரன் இன்னபடியே வர்த்திப்பான் என்று ஆசார நியமங்கள் சொல்லும் ஸர்வ ஸாஸ்த்ரங்களும் விரோதிக்கும். கேவல ப்ராஹ்மணனுக்கும் கேவல ஸூத்ரனுக்குமுள்ள எல்லை பாகவத ப்ராஹ்மணனுக்கும் பாகவத ஸூத்ரனுக்கும் கொள்ள வேணுமென்றும், இவரை ஸமர் என்கிற ஸாஸ்த்ரங்களும் பரம புருஷார்த்த ஸாம்யாதிகளாலே. என்றும் கிடாம்பி அப்புள்ளார் அருளிச் செய்தார் என்றும், “ஜாதி பேதியாது. திருஸுரபியானாலும் கோத்வம் கழியாதிறே’ என்றும், ‘ஸ்ரீ விதுரரும் ஸ்வ ஜாத்யநுரூபமாக விவாஹாதிகளைப் பண்ணினார்-“புக்த வத்ஸு த்விஜாக்ர்யேஷு நிஷண்ண பரமாஸநே | விதுராந்நாநி புபுஜே ஸூசீநி குணவந்தி ச ‘ என்றித்தைக் கேட்டு துர்யோதநன் “பீஷ்மாத்ரோணா வதி க்ரம்ய மாம் சைவ மதுஸூதந கிமர்த்தம் புண்டரீகாக்ஷ புக்தம் வ்ருஷவ போஜநம்” என்று கேட்க, “த்விஷதந்நம் நைவ போஜூயேத் பாண்டவான் த்விஷஸே ராஜந் மம ப்ராணா ஹி பண்டவா – என்று, உத்தரமருளிச் செய்கையாலே ஸ்ரீ விதுரருக்கு துர்யோதனன் சொன்ன ஜாதி விஸேஷத்தை பகவான் இசைந்தானாயிறறு- ஆனால் ப்ராஹ்மணர்க்கும் க்ஷத்திரியர்க்கும் ஸூத்ரனுடைய பக்வாந்நத்தை புஜிக்கை நிஷித்தமன்றோ வென்னில், “ஆர்யாதிஷ்டிதா வா ஸூத்ரா. (அந்ந ) ஸம்ஸ்கர்த்தார ஸ்யுட்-என்று ஆபஸ்தம்பாதிகள் சொவ்லுகிறபடியே யுகாந்தரங்களிவ் ஆர்ய பரதந்தரரான குணவச்-ஸூத்ரர்கள் ஆர்யர்க்கு அந்ந ஸம்ஸ்காரம் பண்ண அநு ஜ்ஞாதராகையாலே அவ்விடத்தில் நிஷேதமில்வை. இது ஸூசிஸ்து ப்ரயதோ பூத்வா விதுரோந்நமுபாஹரத்-என்று ஸ்ரீ விதுரருடைய குண விஸேஷங்கள் சொல்லுகையாலே ஸூசிதம். *ப்ரஹ்ம வித்தான இவர் யோக ப்ரபாவத்தாலே தேஹ ந்யாஸம் பண்ணின பின்பு ப்ராப்தனான தர்ம புத்ரன் செய்த ஸம்ஸ்கார விஸேஷம் தூஷ்ணீம் அனுஷ்டிதமாதல் வ்யக்தி விஸேஷ நியதமாதலாமித்தன- அது கொண்டு வ்யக்தயந்தரங்களில் ந்யாய ஸஞ்சாரம் பண்ண வொண்ணாது என்றும், “மோஹந ஸாஸ்த்ரங்களிற் சொன்ன ஜாத் யுத்தாராதிகளை ப்ராமாணிகர் நினைக்கலாகாது-சருவ்யத்யாஸாதிகளான சில விஸேஷ நிதானங்களாவே வருகிற விஸ்வாமித்ராதிகளுடைய நிலை வேறு சிலர்க்குக் கூடுமென்கை வசந விருத்தம்- விதுராதிகளிலும் உத்கருஷ்ட ப்ரபாவரான ஆழ்வார்களுடைய வ்ருத்தாந்த விஸேஷங்களை நம்மனுஷ்டாநத்துக்குத் த்ருஷ்டாந்தமாக்கலாகாது- அவர்கள் வ்ருத்தாந்தங்களையும் ஆராய்ந்தால், ஸ்வ ஜாதி நியமத்தைக் கடந்தமை யில்லை- என்றும், “இப்படி யானாலும் வித்யா மந்தராதி களுடைய க்ரஹணம் ப்ராஹ்மணாதி விஷயத்திலேயாக வேணுமென்னுமிடம் “ஸூத்ர யோநாவஹம் ஜாதோ நாதோந்யத் வக்து முத்ஸஹே! என்ற ஸ்ரீ விதுர வாக்யத்தாலே ஸித்தம்-துவாதார தர்ம வ்யாதாதிகளும் ஸந்தேஹம் கேட்கவந்த ப்ராஹ்மணரைத் தாங்கள் ஸம்பாவித்து தீர்த்த யாத்ரையிலே வழி திகைத்தாரை வழியிலே சேர்த்த மாத்ரம் அவர்களைத் தெளிவித்து விட்டார்களா மத்தனை யல்லது – முக்யமான ஆசார்ய கர்மம் பண்ணினார்களன்று- இப் ப்ரகாரங்கள் அவ்வோ இதிஹாஸங்களிலே கண்டு கொள்வது. *பக்திரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சேபி வர்த்ததே | தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதாஹ்யஹம்* என்றதுவும், கந்யா ப்ரதாந பரமன்று, ஜ்ஞாந ப்ரதாந பரமென்று வ்யாக்யாநம் பண்ணினார்கள். “பூஜ்ய என்கிற ஸப்தமும் ஸாதாரணமாகையாலே பாகவதத்வம் உண்டானால் ஸர்வரும் ஸாஸ்த்ரம் சொன்ன மட்டுக்களிலே ஆதரணீயர்” என்றும். “அதோ ஜாதேர் நிக்ருஷ்டாயா ஸர்வஸ்யா வா விநா ஸத | ஸாஜாத்யம் விஷ்ணு பக்தாநாமிதி மந்தமிதம்: வச என்றும், ‘ஸாரீர குண விஸேஷமடியாக வ்யவஸ்திதங்களான ஸரீர ஜாதி விஸேஷங்கள் உத்பத்தி ஸித்தங்களாய் மரணாந்தமாக ஸ்திரங்களாயிருக்கும்’ என்றும் போனகம். செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே” என்றதுவும் குரு விஷயமாம் அத்தனை – என்றும் -இதில் சேஷ ஸப்தம் அன்ன சேஷ கிம் க்ரியதாம் இஷ்டைஸ் ஸஹ புஜ்யதாம் இத்யாதிகளில் ந்யாயத்தாலே பாண்டஸ்த விஷயமானால் விரோதமில்லை -என்றும், இருபத்தொன்பதாமதிகாரத்திலே “மாத்ருபி பித்ருபி ஸ்சைவ பதிபிர் தேவரைஸ்ததா | பூஜ்யா பூஷயித வ்யாஸ்ச பஹு கல்யாண மீப்ஸுபி ப ஜாமயோ (ஜ்ஞாநி நாம்) யாநி கேஹாநி ஸபந்த்ய ப்ரதி பூஜிதா! தாநி கருத்யா ஹதாநீவ விநஸ்யந்தி ஸமந்தத; !! ஏவமாதிஷு பூஜோக்தி! யதவ் சித்யாத் நியம்யதே | பக்த ம்லேச்சாதி பூஜோக்தி ஏவமேவ நியம்யதாம்’ என்றும் சொல்லப்பட்டது-
இத்ய வாந்தர பூர்வ பக்ஷ க்ரந்த,
அத ஸித்தாந்த-
ஜாதி போகாதென்கிறது ஸாஸ்தர விருத்தமாகையாலே அயுக்தம். எங்ஙனே யென்னில், அபக்ருஷ்ட ஜாதீயரை பாகவத் ஸத்ரரென்றும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ஜந்ம நிரூபணம் பண்ணுகையும் பகவத் பக்தரெல்லாரும் ஏக ஜாதீயரன்றோ வென்று நினைக்கிறவர்களை ம்ருது ப்ரஞ்ஞர் என்கையும்அவர்களுக்கும் கலக்கங்கள் உண்டு என்று சொல்லுகையும் அநகத்வ விநிக்ரஹமுமாய் அவர்கள் பரமாசார்யர்களாகையாலே ஆசார்யாபசாரமுமாம்-ஏக ஜாதீயரானாலும் ஆசார நியமங்களைச் சொல்லும் ஸாஸ்த்ர விரோத ப்ரஸங்கமுமில்லை- வர்ணாஸ்ரமாதிகளிலே அவதரித்த பாகவதரெல்லார்க்கும் பண்டைக் குலத்தைத் தவிர்ந்து தொண்டக் குலமொன்றே யாயிருந்தாலும்- *நீசனேன் நிறைவொன்றுமிலேன் என்கிறபடியே, ‘அடியேன் பாணண் அடியேண் பாணன்’ என்று ஸ்ரீலோக ஸாரங்க, மஹா முநிகளுக்குத் திருப்பாணாழ்வார் விலங்கி யோடுகையாலும் திருமழிசை யாழ்வார் ‘க்ருஷ்ணாநாம் வ்ரீஹீணாம் நகநிர்பிந்நம்” என்கிற ஸ்ருதியை உச்சரியாமையாலும், பண்டைக் குலம் தவிரந்து தொண்டக் குலமானது ஸாஸ்த்ர த்ருஷ்டிகளூக்கொழிய மாம்ஸ சஷுஸ்ஸுக்களுக்குத் தோற்றாமையாலும் “லோக ஸங்க்ரஹமேவாபி ஸம்பஸ்யந் கர்த்து மர்ஹஸி’ என்று தர்ம ஸம்ஸ்தாபநம் பண்ணப் பிறந்தவன் தான் லோக ஸங்க்ரஹார்த்தமாக விதிக்கையாலும் “அவிப்வவாய தர்மாணாம் பாவநாய குலஸ்ய ச இத்யாதி-அநபேஷா5பி தாம் ப்ரதி । உபாயத்வ க்ரஹம் தத்ர வர்ஜயேந்மநஸா ஸாதீ ப்ரியாய மம விஷ்ணோஸ் ச தேவதேவஸ்ய ஸார்ங்கிண | மநீஷீ வைதி காசாரம் மநஸாபி ந லங்கயேத்! ஏவம் விலங்கயந் மர்த்யோ மர்யாதாம் வேத நிர்மிதாம் ப்ரியோபி ந ப்ரியோ மே அசவ் மதாஜ்ஞாவ் யதிவர்த்தநாத்- என்றும் பிராட்டி விதித்தருளுகையாலும்- ஸ்ரீவசந பூஷண வ்யாக்யாநத்திலே – ‘வர்ணாஸ்ரமாசாரத்தை அநிஷ்ட கோடியாகச் சொல்லப் பார்க்கில் ஸர்வேஸ்வரனும் பிராட்டியும் அருளிச் செய்த வசநங்களோடும் பூர்வாசார்ய வசநாநுஷ்டாநங்களோடும் விரோதிக்குமிறே. என்று பெரிய ஜீயர் அருளிச் செய்கையாலும், ஜாதி போமென்கிறத்தில் ஸாஸ்த்ர விரோத ப்ரஸங்கமில்லை யிறே- பண்டைக் குலத்தைத் தவிர்ந்து தொண்டக் குலமாவது – ஆழ்வார்களும் ஆசார்யர்களும் அருளிச் செய்தார்கள்-கேவல ப்ராஹ்மணனுக்கும்- கேவல ஸூத்ரனுக்கும் உள்ள எல்லை அவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களான பின்பு கொள்ள வேணுமென்கை -காய அன்ன ஸ்தல ஸூத்தி பண்ணின வ்ருத்த ஆசார விருத்தம் -(இதன் அர்த்தம் ஸித்தாந்தத்தின் முடிவிலே ஸ்பஷ்டமாகும்] *மாத்ரு யோநி பரீக்ஷயாஸ் துல்யமாஹார் மநீஷிண | அரச்சாவதாரோபாதாநம் வைஷ்ணவோத்பத்தி சிந்தநம்” ஜாதி போகாது என்கிற விடம் விஸ்வா மித்ர வீத ஹவ்யாதி களிடத்திவே பாதிதம் “பகுவத் பக்தா ந ஸூத்ரா- என்னுமா போலே- ‘தேவஸுரபி நகவ் என்று ப்ரமாண மில்லாமையாலே அது, த்ருஷ்டாந்தமன்று-‘கிமர்த்த)ம் புண்டரிகாக்ஷ। மாம் சைவாதி க்ரம்ய வ்ருஷவ போஜநம் புக்தம்’ என்று கேட்க- த்விஷதந்நம் ந போக்தவ்யம்’ என்று உத்தரம் அருளிச் செய்கையாலே நீ என் உயிர் நிலையிலே த்வேஷிக்கையாலே- யோ விஷ்ணும் ஸததம் த்வேஷ்டிதம் வித்யா தந்த்ய ரேதஸம்” என்கிறபடியே”நீ அந்தயரேதஸ்ஸாகையாலே உன்னை பரித்யஜித்தோம்’ என்றும் “பாகவதா விப்ரா: என்கிறபடியே ஸ்ரீவிதுரர் விப்ரர் ஆகையாலே அவருடைய அந்நத்தை புஜித்தோமென்றும் தாத்பர்யம் ஸுசிதம்- ஆகையால் துரியோதநன் சொன்ன ஜாதி விஸேஷத்தை “பகவத் பக்தா ந ஸூத்ர- என்று நிராகரித்தானாய்த்து
தர்ம புத்ரர் விதுரர்க்குப் பண்ணின ப்ரஹ்ம மேதத்தை தூஷ்ணிம் அனுஷ்டிதம் என்கை -லோக வைலக்ஷணோ நாம பவிஷ்யத்யஸ்ய பார்த்திவ யதி, தர்ம மவாப்தோ அஸெள’ என்கிற வசந விருத்தம்- வ்யக்தி விஸேஷ நியதமென்று கல்பிக்கைக்கு கல்பகமில்லை. மோஹந ஸாஸ்த்ராதிகளில் சொன்னதன்றே. “ந ஸத்ரா பகவத் பக்தா- இத்யாத் யுக்த ஜாத் யுத்தாராதிகளில் விஸ்வாமித்ரனுடைய விப்ரத்வம் சருவ்யத்யாஸாதி நிதாநமாகில் அந்த விப்ரத்வம் தபஸ்ஸூக்கு பூர்வமே வர வேணும்-தபஸ்ஸாலே வந்தாலும் ப்ராஹ்மணாநுக்ரஹ மூலகமிறே- வீதஹவ் யாதிகளூக்கும் பரத்வாஜாத்,யநுக்ரஹாதிகளாலே வந்ததென்று அநுஸாஸநாதி களிலே சொல்லா நின்றதிறே “யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட தத்ததே வேதரே ஐநா- என்கிறபடியே ஆழ்வார்களுடைய அநுஷ்டாநத்தை நம் அநுஷ்டாநத்துக்கு தருஷ்டாந்தமாக்கலாம்-அவர்கள் அநுஷ்டாநத்தை ஆராய்ந்தால் பண்டைக் குலத்தைத் தவிர்ந்தாலும் லோக
த்ருஷ்ட் யநு குணமாக அநுஷ்டாநம் நைச்ய நியந்தநமாக உண்டாயிருக்கும்- அது கொண்டு அவர்களுக்கும் பண்டைக் குலம் தவிர வில்லை- என்று நினைக்கை மஹா பாகவதாபசாரம்- வித்யாமந்த்ராதி க்ரஹணமும் ப்ராஹ்மணாதி நியம விஷயமென்கையும் “ததோ க்ராஹ்யம்”, “ததுக்தி மாத்ரம் மந்த்ராக்ரயம்”, கொடுமின் கொள்மின்” இத்யாதிகளோடு விரோதிக்கும்… ஸூத்ரயோநவ் – இத்யாதி நைச்யாநுஸந்தாநமென்று கொள்ள வேணும்- ஆசார்யத்வமும் தர்ம ஸந்தேஹமும் ஸமிப்பிக்கை தானேயிறே- ஆகையால் விஷ்ணு பக்தர்க்கெல்லாம் பண்டைக் குலம் போய்த் தொண்டக் குலமென்று பெரியாழ்வார் அருளாளப் பெருமாளெம்பெருமானார் முதலானோர் அருளிச் செய்தார்கள். ‘அதுவும் மந்த வசநமிறே என்கை அவர்கள் பக்கல் அபசாரமாம்-ஸரீர ஜாதி விஸேஷங்கள் உத்பத்தி ஸித்தங்களாய் மரணாந்தமாக ஸதிரமா யிருக்க வேணும்’ என்றதும் ஆழ்வாராசார்களின் திவ்ய ஸுக்திகளோடும் ஸ்ருதி ஸ்ம்ருத்யாகளோடும் விரோதிக்கும்-போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம்* என்றது குரு விஷயம் என்றாலும் நாராயண ஏக நிஷ்டர் எல்லாரும் குறு துல்யராகையாலே -ததுச்சிஷ்டம் ஸூ பாவநம்- என்கிறபடியே பரகத ஸ்வீ கார நிஷ்டரெல்லாரும் விஷயமென்றபடி -பாண்டஸ்த விஷயமானால் விரோதமில்ல’ என்கிறது- ‘கலத்ததுண்டு” என்கிறத்தோடு விரோதிக்கும்- ‘பக்த ம்லேச்சாதி பூஜோக்தி ரேவமேவ நியம்யதே’ என்று சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர்களை ஸ ச பூஜ்யத என்கிறதும்- மணவாட்டிப் பெண்களை “பூஜ்யா என்ற மாத்ரம்’ என்கையும் *யதாஹ்யஹம்” என்கிறத்தோடு விரோதிக்கும்-
திருப் பல்லாண்டு வ்யாக்யாநத்திலே ‘(பண்டைக் குலத்தைத், தவிர்ந்து) ப்ரயோஜநாந்தர பரர் அநந்ய ப்ரயோஜநரான பின்பு முன்புத்தை நிலை பண்டைக் குலமாய்த் தோன்றின படி. லங்கையில் நின்று கால் வாங்கின போதே ராவணனை: “நிஸாசரன்’ என்றானே ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-‘ராக்ஷஸாநாம். பலா பலம்‘ என்றாரிறே பெருமாள் தாமும்- க்ஷத்ரியனாயிருக்கச் செய்தே தபோ பலத்தால் ப்ராஹ்மண உத்தமனாய் அத்யயனம் பண்ணுவிக்கவும் யஜிப்பிக்குவும் கடவனானானிறே. விஸ்வாமித்ரன்” என்று நம்பிள்ளை அருளிச் செய்தார் –
ஸ்ருத ப்ரகாஸிகையிலே, தேவதாதிகரணத்திலே. “பஸ்சாத். விஸ்வாமித்ர ப்ரப்ருதீநாம் ச ப்ராஹ்மண்யாத்ய பாவா ப்ரஸங்காத் என்று விஸ்வாமித்ராதிகளுடைய ப்ராஹ்மண்யாதிகளை ஐந்ம ப்ரப்ருதி யன்றியே பின்பு வந்ததாக, அருளிச் செய்தார்- ‘ஏதேந ஸர்வே வ்யாக்யாதா இத்யத்ர ‘தபோ வி்ஸேஷாத் வரண விபோகோஸ்தி’ என்று அருளிச் செய்தார்-
ஜ்ஞாந ஸார வ்யாக்யாநத்திலே. “குடியும். குலமுமெல்லாம் கோகநகை கேளவனடியார்க்கு” (குடி) – க்ராமம்(குலம்) கோத்ரம் (எல்லாம்) என்றது மற்றும் நிரூபகமாய்ப் போருமவை பல வுண்டாகையாலே- அவை யாவன சரண: ஸூத்ராதிகள் (கோகநகை கேளவனடியார்க்கு அவனடியே யாகும்) அதாவது – முன்பு ஓளபாதிகமாக நிரூபகமாய்ப் போந்த குடியும் குலமுமெல்லாம் போய் ஸேஷியானவன் திருவடிகளில் ஸம்பந்தமே நிரூபகமாய் அத்தை விட்டு வ்யபதேஸிக்கும் படியாய் விடுமென்கை-இதுக்கு த்ருஷ்டாந்த மருளிச் செய்கிறார் மேல் – (படியின் மேல் ) என்று தொடங்கி – பூமியின் மேலுண்டான ஐல ஸம்ருத்தியடைய நதிகளின் நாமமும் வர்ணமுமெல்லாம் ஸமுத்ரத்தை. ப்ரவேஸிக்கவே பின்பு காண வொண்ணாதபடி போமா போலே என்கை- “ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ நைவ க்ராம குலாதிபி- நத்யாஸ் தஸ்யைவ நாமாதி ப்ரவிஷ்டாயா யதார்ணவம் | ஸர்வாத்மநா ப்ரபந்நஸ்ய விஷ்ணு மேகாந்திநஸ் ததா என்னக் கடவதிறே-
ஸ்ரீவசந பூஷணத்திலே – ‘க்ஷத்ரியனான விஸ்வாமித்ரன் ப்ரஹ்மர்ஷியானான் ” என்கிற ஸூத்ர வ்யாக்யாநத்திலே-“இப்படி இதிஹாஸாதிகளாலே பாகவத வைபவம் சொல்லப் பட்டதே யாகிலும்.*ந ஸூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதா ஸ்ம்ருதா -ஸ விப்ரேந்த்ரோ முநி ஸ்ரீமான் ஸயதிஸ் ஸ ச பண்டித- என்று சொன்ன விப்ரத்வாதிகள் அர்த்தவாதமாமித்தனை யல்லது அபக்ருஷ்ட ஜந்மாவானவன் அந்த ஸரீரந் தன்னிலே உத்க்ருஷ்டனாகக் கூடுமோ வென்ன-கூடுமென்னுமிடத்துக்கு உதரஹரண தயா அருளிச் செய்கிறார் – க்ஷ்த்ரியனான என்று தொடங்கி- அதாவது – க்ஷத்ரிய குலோத்பவனான விஸ்வாமித்ரன் – அஜ் ஜந்மத்திலே தான் பண்ணின தபோ விஸேஷமடியாக வஸிஷ்ட வாக்யத்தாலே க்ஷத்ரியத்வம் பின்னாட்டதபடி ப்ரஹ்ம ருஷியாய் விட்டானிறே-ஆகையாலே அத்யந்தாபக்ருஷ்ட குலோத்பவரானாலும் அந்த ஸரீரந்தன்னோடே அநவதிக ஸக்திக பகவத் ஸம்பந்த ரூப ஸம்ஸ்கார விஸேஷத்தாலே அத்யந்தோத்க்ருஷ்ட குல ஜாநுவர்த்தநீயராம்படி உத்க்ருஷ்ட தமராகக் குறையில்லை என்கை- அல்ப ஸக்திக வஸிஷ்ட வாக்யம் செய்த படி கண்டால் ஸர்வ முக்திக ஸம்பந்த விஸேஷம் என் செய்யமாட்டாது’ என்றும், ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யாநத்திலே – பாகவத வைபவத்தைப் பல உதாஹரணங்களாலும் ப்ரகாசிப்பியா நின்று கொண்டு, ‘இவ்வாகாரங்கள றிந்தாருக்கிறே ஐந்மத்தில் உத்கர்ஷாபகர்ஷம் தெரிவது என்கிறார் மேலொரு சூர்ணையாலே
85–ம்லேச்சனும் பக்தனானால் சதுர்வேதிகள் அநுவர்த்திக்க அறிவு கொடுத்து, குல தைவத்தோ டொக்கப் பூஜை கொண்டு பாவந தீர்த்த, ப்ரஸாதனாம் என்கிற திருமுகப் படியும், விஸ்வாமித்ர -விஷ்ணுசித்த -துளஸீ ப்ருத்யரோடே உள் கலந்து தொழு குலமானவன் நிலையார் பாடலாலே ப்ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும், கீழ் மகன் தலை மகனுக்கு ஸம ஸஹாவாய்த் தம்பிக்கு முன் பிறந்து வேலும் வில்லுங் கொண்டு பின் பிறந்தாரைச் சோதித்துத் தமையனுக்கு இளையோன் ஸத் பாவம் சொல்லும்படி ஏக குலமானமையும், தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய ஸம்யக் -ஸகுண-ஸஹ போஜநமும், ஒரு பிறவியிலே இரு பிறவியானா ரிருவர்க்கு தர்ம ஸூநு ஸ்வாமிகள் அக்ர பூஜை கொடுத்தமையும், ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் ஸந்தேஹியாமல் ஸஹஜரோடே புரோடாஸமமாகச் செய்த புத்ர க்ருத்யமும், புஷ்ப த்யாக போக மண்டபங்களில் பணிப் பூவும் ஆல வட்டமும் வீணையுங் கையுமான அந்தரங்கரை முடி மன்னவனும் வைதிகோத்தமரும் மஹா முனியும் அநுவர்த்தித்த க்ரமமும், யாக,அநுயாக உத்தர விதிகளில் காய அந்ந ஸ்தல ஸூத்தி பண்ணின வ்ருத்தாசாரமும் அறிவார்க்கிறே ஜந்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது.
சதுர் வேதிகள் அனுவர்திக்க அறிவு கொடுத்து –
அதாவது –
ச விப்ரேந்தரோ முனி ஸ்ரீமான் ச யதிஸ் ச பண்டித தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் -என்றும் –
பழுது இலா ஒழுகலாற்று பல சதுப் பேதிமார்கள் இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் – கொடுமின் கொள்மின் -திருமாலை -42-என்றும் சொல்லுகிற படியே –
சர்வோத்க்ருஷ்டனாய் -உத்க்ருஷ்ட வர்ணரான சதுர்வேதிகள்
அபிஜன அத்யபிமான தூஷிதமான ஸ்வ ஸ்வரூப சுத்யர்தமாக -அனுவர்த்திக்கைக்கு விஷயமாய் –
அவர்களுக்கு ஞான அபேஷை உண்டாகில் ஞான பிரதானம் பண்ணி-
குல தெய்வத்தோடு ஒக்க பூஜை கொண்டு –
அதாவது –
ச ச பூஜ்யோ யதாஹ்யஹம் -என்றும்
நின்னோடு ஒக்க வழி பட அருளினாய் -போல் மதிள் திருவரங்கத்தானே -திருமாலை -42-என்கிற படியே-
மம நாதம் -மம குலதைவதம்–கத்யத்ரயம் –என்று குல தெய்வமாக சொல்லப் படுகிற சர்வேஸ்வரனோடு ஒக்க –
( யாவர்க்கும் தொழு குலமாம் இராமன் -கம்பர் – குகப்படலம் -68-)
கடல் மல்லைத் தல சயனம் ஆர் என்னும் நெஞ்சுடையார் -அவர்கள் எங்கள் குல தெய்வமே –பெரிய திருமொழி -2-6-4-என்கிற படியே
குல தெய்வமாய் அவர்களை பூஜை கொண்டு-
பாவன தீர்த்த பிரசாதனாம் என்கிற திரு முகப் படியும் –
அதாவது –
தத் பாதாம்பு அதுலம் தீர்த்தம் தத் உச்சிஷ்டம் ஸு பாவனம் -என்று
அவன் திருவடிகளை விளக்கின ஜலம் அனுபமமான தீர்த்தம் –
அவன் அமுது செய்த சேஷம் பரம பாவனம் என்கையாலே –
அஹங்கார மதிரா பாந மத்தரான அசுத்தரும் இந்த தீர்த்த பிரசாத அன்வயத்தாலே – சுத்த ஸ்வரூபராம் படி
பாவன தீர்த்த பிரசதனனாம் என்று அருளிச் செய்த பகவத் உக்தியான திரு முகமும் –
அதன் படி எடுப்பான ஆழ்வார் பாசுரமும் ..
(வானுளார் அறியலாகா வானவா என்பராகில் -தேனுலாம் துளப மாலைச் சென்னியாய் என்பராகில்
ஊனமாயினகள் செய்யும் ஊன காரகர்களேலும் போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே –)
விஸ்வாமித்ர விஷ்ணுசித்த துளஸீ ப்ருத்யரோடே உள் கலந்து தொழு குலமானவன்
அதாவது –
அபர ராத்ரியிலே சென்று பாடி -நம்பியை திரு பள்ளி உணர்த்துகையாலே –
கௌசல்யா ஸுப்ரஜா ராமா பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நரசார் தூலே கர்த்தவ்யம் தைவமாஹ்நிவம் –பால -23-2—என்றும் ,
அரவணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாயே –பெரியாழ்வார் -2-2-1 -என்றும் ,
அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -திருப்பள்ளி எழுச்சி -என்று திரு பள்ளி உணர்த்தின
விஸ்வாமித்திரன் ,பெரியாழ்வார் ,துளபத் தொண்டாய தொண்டர் அடி பொடி ஆழ்வார்
ஆகிற இவர்களோடு ச கோத்ரியாய்–
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் -என்கிற படியே –
பகவத் சேஷத்வ ஞான பூர்வகமாக -அநந்ய பிரயோஜன வ்ருத்தியிலே -அன்விதனாய் உள் கலந்து –
(நம்பியைத் திருப்பள்ளி உணர்த்துகையாலே மூவருடன் ஒரு சேர எண்ணப்பட்டு )
வலம் தங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் –திருவாய் -3-7-9–என்கிறபடியே
ஒப்பும்மைப் பெற்று எம் தொழு குலம் -திருவாய் -3-7-8-என்று விசேஜ்ஞர் ஆதரிக்கும் ஏற்றத்தை அடைந்த
ஜன்ம சித்த நைச்யனான பாகவதன் –(நம்பாடுவான் )
நிலையார் பாடலாலே ப்ராஹ்மண வேள்வி குறை முடித்தமையும் –
அதாவது –
சரக குலோத்பவனான சோம சர்மா வாகிற பிராமணன் உபக்ரமித்த யாகத்யை யதாக்ரமம் அனுஷ்டியாமையாலும் –
அது சமாமிப்பதுக்கு முன்னே மரிக்கையாலும் -பிரம ரஷசாய் பிறந்து திரியா நிற்க செய்தே –
த்வம் வை கீதப் ப்ரவானே நிஸ்தார யிதுமர்ஹசி
ஏவ முக்த்வாத ,சண்டாளம் ராஷசஸ் சரணம் கத -என்கிற படியே
நீ உன்னுடைய கீத பிரபாவத்தாலே என்னை இவ் ஆபத்தில் நின்றும் கரை ஏற்ற வேணும் என்று சரணம் புக –
யன் மயா பஸ்சிமம் கீதம் ஸ்வரம் கைசிக முத்தமம் –
பலேன தஸ்ய பத்ரம் தே மோஷ இஷ்யதி கில்பிஷாத் –கௌசிக மஹாத்ம்யம்
(உயர்ந்த ஸ்வரம் கௌசிகம் பலத்தால் உன்னை இந்தப் பாபத்தில் இருந்து விடுக்கிறேன் )என்று
நம்பி சந்நிதியில் பின்பு பாடின – நிலையார் பாடலான கைசிக பண்ணாலே –
ஏவம் தத்ர வரம் க்ருஹ்ய ராஷசோ ப்ரஹ்ம சம்ஜ்ஞத
யக்ஜா சாபாத் விநிர் முக்த சோமசர்மா மகாயச -கௌசிக மஹாத்ம்யம் –என்னும் படியாக
வைகல்ய தோஷத்தால் வந்த ராஷசத் வத்தைப் போக்கி உஜ்ஜீவிப்பிக்கையாலே –
அந்த ப்ராஹ்மணன் உடைய யாகத்தில் குறையை தலைக் கட்டின படியும்
கீழ் மகன் தலை மகனுக்கு சக சகாவாய் –
அதாவது –
நிஷாத வம்ச ஜராகையாலே-(வேடர் குலத்தில் பிறந்தவர் ஆகையால்) –
ஏழை ஏதலன் கீழ் மகன் –பெரிய திருமொழி -5-8-1–என்னும் படி ,
ஜன்ம வ்ருத்த ஞானங்களால் தண்ணியரான ஸ்ரீ குஹப் பெருமாள்-
(தலை மகனுக்கு )அயோத்தியர் கோமான் ஆகையாலே அவை-ஜன்ம வ்ருத்த ஞானங்களால் எல்லாத்தாலும்
உத்க்ருஷ்டனாய் இருக்கும் அளவு அன்றிக்கே –
தர்ம ஐக்யத்தாலே -( ஆதி யம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவன் ஆகையால் )
வானோர் தலை மகனாய் -7-2-10–இருக்கிற சக்கரவர்த்தி திரு மகனுக்கு
உகந்து தோழன் நீ –பெரிய திருமொழி -5-8-1-என்கையாலே சமனான சஹாவாய்-
(ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ தோழன் மங்கை கொழுந்தி
எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி மயங்குவான் –கம்ப நாட்டாழ்வார் )-
தம்பிக்கு முன் பிறந்து –
அதாவது –
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி என்று ஒழிந்திலை –பெரிய திருமொழி -5-8-1-
என்கையாலே -இவர் தம்பியான இளைய பெருமாளுக்கு முன் பிறந்தவராய்-
வேலும் வில்லும் கொண்டு பின் பிறந்தாரை சோதித்து –
அதாவது –
இப்படி தம்மை அங்கீகரித்த அன்று இராத்திரி பெருமாள் பள்ளி கொண்டு அருளா நிற்க –
அவருடைய சௌகுமார்ய அனுசந்தாநத்தால் உண்டான பரிவாலே கண் உறக்கம் அற்று ,
கையும் வில்லுமாய் காத்துக் கொண்டு நிற்கிற இளைய பெருமாளை அதி சங்கை பண்ணி –
கூர் அணிந்த வேல் வலவன்–பெரியாழ்வார் -3-10-4- -என்றும்
ததஸ்த் வஹஞ்ச உத்தம பாண சாப த்ருத் ஸ்திதோபவம்
தத்ர ச யஸ்ய லஷ்மண –அயோத்யா –87-23-–
( இளைய பெருமாள் ஸ்ரீ குகப்பெருமாளை அதி சங்கை பண்ண
இருவரையும் அதி சங்கை பண்ணி ஸ்ரீ குகப் பெருமாள் பரிக்ரகம் பெருமாளை நோக்கிற்று இறே-
ஒரு நாள் முகத்தில் விழித்தவர்களை வடிவழக்கு படுத்தும் பாடாயிற்று இது –ஸ்ரீ வசன பூஷணம் )
(மாலைவாய் நியமம் செய்து மரபுளி இயற்றி வைகல் வேலை வாயமிர் தன்னாளும் வீரனும் விரித்த நாணல்
மாலை வாய்ப் பாரின் பாயல் வைகினன் – வரி வில் ஏந்திக் காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான்
தும்பியின் குழாத்தின் சுற்றம் சுற்றத்தன் தொடுத்த வில்லன் வெம்பி வெந்து அழியா நின்ற நெஞ்சினன் விழித்த கண்ணன்
தம்பி நின்றானை நோக்கித் தலைமகன் தனிமை நோக்கி அம்பியின் தலைவன் கண்ணீர்
அருவி சோர் குன்றின் நின்றான் -கம்ப நாட்டாழ்வார் ) என்றும் சொல்லுகிற படியே சாயுதராய் கொண்டு
இவர் மேல் கண்ணாய் நின்று அவர் நினைவு சோதித்து-
தமையனுக்கு இளையோன் சத்பாவம் சொல்லும் படி ஏக குலம் ஆனமையும் –
அதாவது-
ஆச சஷேத சத்பாவம் லஷ்மணஸ்ய மகாத்மான
பரதாயா அப்ரேமயாயா குஹோ கஹன கோசர -அயோத்யா -86-1–என்கிற படியே
ஸ்ரீ ராம விரக கிலிஷ்டனாய் – சித்ர கூடத்து ஏறப் போவதாக வந்த தமையனான
ஸ்ரீ பரதாழ்வானுக்கு தம்பியான ஸ்ரீ இளைய பெருமாள் உடைய –
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த – பால -18-27–என்றும் –
பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே –ஆரண்ய -15-7–என்றும் -சொல்லுகிற படியே
ஸ்ரீ பெருமாள் பக்கல் பிரேம பாரதந்த்ர்யங்களே நிரூபகமாம் படி இருக்கையாகிற சத்தையோடே ,
( ஸத்பாவம் -பிரேம பாரதந்தர்யங்களே சத்தையாம்படி ) வ்யாப்தமான ஸ்வாபத்தை சொல்லும் படி இஷ்வாகு வம்சயரோடு
ஏக குலம் ஆனபடியும் –
தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய
சம்யக் சகுன சஹ போஜனமும்
அதாவது –
முன்னோர் தூது வானரத்தின் வாய் மொழிந்து -பெரிய திருமொழி -2-2-3-என்று ஸ்ரீ பிராட்டிக்கு தூது வாக்யத்தை
ஸ்ரீ திருவடி வாயிலே சொல்லி விட்ட ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன்
சபர்யா பூஜி தஸ் சம்யக் ராமோ தசரதாத்மஜா–பால-1-57- -என்கிற படி
ஸ்ரீ சபரி கையால் பண்ணின சம்யக் போஜனமும் ,
(ஆண்டவள் அன்பின் ஏத்தி யழுதிழி அருவிக் கண்ணன் மாண்டது என் மாயப்பாசம் வந்தது வரம்பில் காலம்
பூண்ட மாதவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள் வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து செய்திருந்த வேலை –கம்ப நாட்டாழ்வார் )
குடை மன்னரிடை நடந்த தூதா-பெரிய திருமொழி -6-2-9- -என்னும் படி -ஸ்ரீ பாண்டவர்களுக்கு தூது போன
ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ பீஷ்ம ஸ்ரீ துரோணாதி க்ருஹங்களை விட்டு –ஆதியால் துரியோதனன் க்ருஹம்
விதுரான்னானி புபுஜே சுசீனி குணவந்தி ச பாரதம் -உத்யோக பர்வம் – என்கிறபடியே-ச காரம் பாவனத்வமும் போக்யத்வமும்
பாவனத்வ போக்யத்வங்கள் கண்டு உகந்து ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே
பண்ணின சகுண போஜனமும் ,
தூது வந்த குரங்கு -பெரிய திருமொழி -10-2-6–என்கிற ஸ்ரீ திருவடி -த்ருஷ்டா சீதா -பால-1-78- என்ற ப்ரீதியாலே
( கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால் )
உபகாராய சுக்ரீவோ ராஜ்ய காங்ஷி விபீஷண-நிஷ்காரணாய ஹனுமான் தத் துல்யம் சஹ போஜனம் –பாத்மோத்தர புராணம் –
என்று திரு உள்ளம் பற்றி -கோதில் வாய்மையினானோடு உடனே உண்பன் நான் –பெரிய திருமொழி -5-8-2-
என்று ஸ்ரீ பெருமாளோடு பண்ணின சஹ போஜனமும் .
ஒரு பிறவியிலே -இத்யாதி -அதாவது –
யது குலத்திலே பிறந்து -கோப குலத்தில் சஜாதீயத்வேன வளருகையாலே
ஒரு பிறவியிலே இரு பிறவியான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஸ்ரீ தர்ம புத்ரர் தம்முடைய
யாகத்திலே அகர பூஜை கொடுத்தமையும் –
ருஷி புத்ரராய் பிறந்து -போய் மற்றோர் இடத்திலே -தஜ் ஜாதீயராய் வளருகையாலே
ஒரு பிறவியில் இரு பிறவியான திரு மழிசைப் பிரானுக்கு ஸ்ரீ பெரும் புலியூர் அடிகள்
தம்முடைய யாகத்தில் அக்ர பூஜை கொடுத்தமையும்-
ஐவரில் இத்யாதி -அதாவது –
பாண்டவர்கள் ஐவரில் பிரதானரான ஸ்ரீ தர்ம புத்ரர் ஸ்ரீ விதுரருக்கு
ஞானாதிக்யத்தையும் -அசரீரீ வாக்யத்தையும் கொண்டு சந்தேகியாமல் செய்த புத்ர க்ருத்யமும் –
ஸ்ரீ தசரதாத்மஜர் நால்வரில் பிரதானரான ஸ்ரீ பெருமாள்-
சௌமித்ரே ஹரே காஷ்டானி நிர்மதிஷ்யாமி பாவகம்
க்ருத்ரராஜம் திதஷாமி மத்க்ருதே நிதனம் கதம் –ஆரண்ய -68-27- என்று
சகஜரான ஸ்ரீ இளைய பெருமாளும் கூட நிற்க செய்தே அவர் கையிலும் காட்டாமல் –
ஏவமுக்த்வா சிதாம் தீப்தாமாரோப்ய பதகேச்வரம் –
ததாஹா ராமோ தர்மாத்மா ஸ்வ பந்துமிவ துக்கித –ஆரண்ய -68-31-என்கிற படியே
ஸ்ரீ பெரிய உடையாருக்கு செய்த புத்ர க்ருத்யமும் –
(இந்தநம் எனைய என்னக் காரகில் ஈட்டத்தோடும் சந்தனம் குவித்து வேண்டும் தருப்பையும் திருத்திப் பூவும்
சிந்தினன் மணலின் வேதி தீர் தர இயற்றித் தெண்ணீர் தந்தனன் தாதை தன்னைத் தடக்கையால் எடுத்துச் சார்வான்
ஏந்தினன் இருகை தன்னால் ஏற்றினன் ஈமம் தன் மேல் சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல்
காந்தெரி கஜலமூட்டிக் கடன்முறை கடவா வண்ணம் நேர்ந்தனன் நிரம்பு நன்னூல் மந்த்ர நெறியின் வல்லான் –கம்ப நாட்டாழ்வார் )
ஸ்ரீ பெரிய நம்பி ,ஸ்ரீ திரு கோட்டியூர் நம்பி ,ஸ்ரீ பெரிய திரு மலை நம்பி -என்று சக ப்ரஹ்மச்சாரிகளாய்க் கொண்டு
ஸ்ரீ ஆளவந்தார் திரு அடியிலே சேவிக்கையாலும் -ஸ்ரீ உடையவருக்கு ஆச்சார்யர்கள் ஆகையாலும் –
பிரசித்தரான ஸ்ரீ நம்பிகள் மூவரிலும் -பிரதானரான ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ மாறனேர் நம்பிக்கு –
புரோடாசத்தை நாய்க்கு இடாதே கொள்ளும் -என்று அவர் அருளிச் செய்து போந்த படி
புரோடாசமாக நினைத்து செய்த புத்ர க்ருத்யமும்-
புஷ்ப த்யாக இத்யாதி -அதாவது
சிந்து பூ மகிழும் திருவேம்கடம்-திருவாய் -3-3-2-என்கிறபடியே புஷ்ப மண்டபமான ஸ்ரீ திரு மலையிலே
பணிப்பூவும் கையுமாய் திரு உள்ளம் அறிந்து பரிமாறுகையாலே ஸ்ரீ திரு வேங்கடம் உடையானுக்கு
அந்தரங்கரான ஸ்ரீ குரும்பறுத்த நம்பியை-
துளங்கு நீண் முடி அரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் –பெரிய திருமொழி -5-8-9–என்கிற
அபிஷிக்த ஷத்ரியாக்யரான ஸ்ரீ தொண்டை மான் சக்கரவர்த்தி அனுவர்தித்த க்ரமும் –
வேகவத் உத்தரே தீரே புண்ய கோட்யாம் ஹரிஸ் ஸ்வயம்
வரதஸ் சர்வ பூதானாம் அத்யாபி பரித்ருச்யதே –ஸ்ரீ காஞ்சீ மஹாத்ம்யம் -என்கிற படியே
த்யாக மண்டபமான ஸ்ரீ பெருமாள் கோவிலிலே திரு ஆல வட்டமும் கையுமாய்
பெருமாளுக்கு அந்தரங்கராய் நின்ற ஸ்ரீ திரு கச்சி நம்பியை
வைதிகோதமரான உடையவர் அனுவர்தித்த க்ரமமும்-
தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடி வருட பள்ளி கொள்ளும்–பெருமாள்–1-1–என்கிற படியே
போக மண்டபமான ஸ்ரீ கோவிலில் வீணையும் கையுமாய் பெருமாளுக்கு அந்தரங்கராய்
வர்த்தித்த ஸ்ரீ திரு பாண் ஆழ்வாரை ஸ்ரீ லோக சாரங்க முனிவர் அனுவர்தித்த க்ரமும் –
யாக அனுயாக உத்தர வீதிகளில் காய அன்ன ஸ்தல சுத்தி பண்ணின வ்ருத்தாசாரமும்-
அதாவது –
யஜ தேவ பூஜாயாம் -என்கையாலே யாக சப்த வாச்யமான திரு ஆராதனத்திலே
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் ஸ்பர்சத்தாலே காய சுத்தி பண்ணிய ஸ்ரீ உடையவரும்
பகவத் ஆராதன அநந்தரம் தத் சமாப்தி ரூபேண பண்ணப் படும் அது ஆகையாலே –
அனுயாக சப்த வாச்யமான பிரசாத ஸ்வீகாரத்தில் -ஸ்ரீ பிள்ளை ஏறு திரு உடையார் தாசர்
கர ஸ்பர்சத்தாலே -அன்ன சுத்தி பண்ணின ஸ்ரீ நம் பிள்ளையும் –
உத்தர வீதி குடி புகுகிற போது ஸ்ரீ பிள்ளை வானமாமலை தாசர் சஞ்சரணத்தாலே ஸ்தல சுத்தி
பண்ணின ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டரும்
ஆகிய ஞான வ்ருத்தர்களுடைய ஆசாரமும் -அறிவார்க்கு இறே ஜன்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது –
அதாவது –
இப்படி கீழ் சொன்ன இவை எல்லாம் அறிவார்க்கு இறே
இன்ன ஜன்மம் உத்க்ருஷ்டம் -இன்ன ஜன்மம் அபக்ருஷ்டம் -என்று
ஜென்மத்தினுடைய உத்கர்ஷமும்
அபகர்ஷமும் தோன்றுவது என்ற படி ..
இத்தால் ஜென்மாத் யபக்ருஷ்டர் பகவத் பக்தர்கள் ஆனார்கள் ஆகில் –
உத்க்ருஷ்ட வர்ணரால் அனுவர்த நீயராய் –
அவர்களுக்கு ஞான பிரதராய் –
ஸ்ரீ ஈஸ்வரனோபாதி அவர்களுக்கு பூஜ்யராய் –
ஸ்வ தீர்த்த பிரசாதங்களாலே சர்வரையும் சுத்தர் ஆக்குமவர்களாம் படியும்
பாப மக்னரான உத்க்ருஷ்ட வர்ணருக்கும் ஸ்வ சம்பந்தத்தாலே உத்தராகராம் படியையும் ,
அவர்கள் அளவில் ஸ்ரீ பகவத் ததீயர்கள் உடைய ஆதார அனுவர்த்த பிரகாரங்களையும் –
அவர்களுடைய ஸ்பர்சமே பரம பாவனத்வம் என்னும் அத்தையும் –
பிரமேய பூதனான ஸ்ரீ ஈஸ்வரனுடையவும்
பிரமாத்ரு பூதரான ஸ்ரீ ததீயர் உடையவும்
வசன அனுஷ்டானங்களாலே -மந்த மதிகளும் அறியும் படி பிரகாசிப்பித்தார் ஆய்த்து ..என்றும் பெரிய ஜீயர் அருளிச் செய்தருளினர்.
(ஸ்ரீ வசன பூஷணத்தில் -226-தொடங்கி-239-வரை உள்ள சூத்திரங்களையும் அவற்றின் வியாக்யானத்தையும் போலே இங்கும் )
அஜ்ஞர் ப்ரமிக்கிற வர்ணாஸ்ரம வித்யா வ்ருத்தங்களை, கர்த்தப ஐந்மம் ஸ்வபசாதமம், ஸில்பநைபுணம், பஸ்மாஹுதி, ஸவ விதவாலங்காரமென்று கழிப்பர்கள்’ என்றும், “ஒரு ராஜா தன்னை மறை முனிவன் ஆக்கினவன் நீசனாக்குவித்த ராஜாவை வாரே உறுப்பாக யஜிப்பித்து ஸ்வர்க்க மேற்றின போதே தெரியும்: என்றும், “ஸர்வ வர்ண ஸூத்ரத்வம் காடுவாழ் சாதியில் கடல் வண்ணண் வேடம் தென்னுரையில் ஹரி கீர்த்தி ஸ்வ பசரில் பத்திபாசநமுமறிவார் ஆராரமரரென்ன வேற அறியாதார் சாதி யந்தணர்களேலும் தகர விழுவர்’ என்றும் பிள்ளை லோகாசார்யர் திருத் தம்பியாரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்தார்-தத் தத் ஸூத்ர வயாக்யாநங்களிலே பெரிய ஜீயரும் விஸகரித்தருளினார்-விஷ்ணு சித்தனுக்குப் போலே பண்டைக் குலத்தைத் தவிர்ந்து தொண்டக் குலமான படியும், ஆசாரய விஷ்ணுவத் பூஜ்யத்வ பாவநத்வாதி க்யாதிகளும் விஸ்வாமித்ர விப்ரத்வ தபோ மூலத்வமும் ப்ராமாணிகமென்று நம்மாசார்யர்கள் ஏக கண்டமாக ஸ்தாபித்தருளினார்கள்-“விஸ்வம் க்ராந்தம் வாஸுதேவம் விஜாநந் விப்ரோ விப்ரத்வம் கச்சதே தத்வ தர்ஸீ* இத்யாதி ஸ்ருதிகளுமுண்டு.
இதி ஸித்தாந்தம்
——————-
அத பூர்வ பக்ஷ -ந கைவல்யம் முக்தி
ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே சரம ஸ்லோக அதிகாரத்திலே -ஸர்வ பாப நிவ்ருத்தி கைவல்யத்துக்கும் பகவத் பிராப்திக்கும் பொதுவன்றோ என்கை மந்த சோத்யம் -எங்ஙனே யென்னில், ஸர்வ பாபம் கழிந்ததாகில் ஸ்வத ப்ராப்தமான பகவதநுபவத்தை யிழந்து கிடக்கைக்குக் காரணம் இல்லை – அப்போது பகவதநுபவ ரஹிதமான ஆத்மாநுபவ மாத்ரம் கடியாது. ஆகையால் அவ் வவஸ்தையில் ஐஸ்வர்யமும் ஜரா மரணாதி துக்கங்களும் வருகைக் கீடான கர்மங்கள் கழிந்து பரிபூரண பகவதநுபவத்துக்கு ப்ரதிபந்தகமான கர்மம் கழியாதே கிடக்கிற வளவிலே, *யம் லப்த்வா சா பரம் லாபம் மந்யதே நாதி கம் தத– என்னும் படி இருப்பதொரு ஸ்வாத்மாநுப வாநந்த விஸேஷம் —ஆத்மார்த்தீ சேத் த்ரயோப்யேதே தத் கைவல்யஸ்ய. ஸாதகா- என்று சொல்லுகிறபடியே தனக்கு ஸக்யமாயிருப்பதொரு உபாய விஸேஷத்தாலே ஸித்தித்தால் இவ்வநுபவத்தை அசிதநுபவத்தோடும் பகவதநுபவத்தோடும் துவக்கு இல்லாதபடியாலே கைவல்யமென்று. ப்ராப்தியில் கைவல்ய ஸப்தம் ஸர்வோபாதி நிவ்ருத்தியை நினைக்கிறது. ஆத்ம மாத்ராநுபவ விஷயமாக, ‘ஸ்வாத்மாநு பூதிரிதி யாகில முக்திருக்தா’. இத்யாதி களில் பரயுக்தமான ‘முக்தி’ஸப்தமும் *விகதேச்சாப யக்ரோதோ யஸ் ஸதா முக்த ஏவ ஸ- இத்யாதிகளிற் போலே நிர்வாஹ்யம். ‘ஜரா மரண மோக்ஷாய’ என்றதுவும் தேவர்களுடைய அமரத்வ வ்யபதேஸம் போலே ஆபேஷிகம். க்ரமேண முக்தி பர்யந்தமாம் விஷயத்தைப் பற்றச் சொல்லுகிற தாகவுமாம்-இப்படி விபவ வ்யூஹ ஸாலோக்யாதி மாத்ரத்தில் ‘முக்தி’ஸப்தபமும் நிர்வாஹ்யம்-வோகேஷு விஷ்ணோர் நிவஸந்தி கேசித் ஸமீபம் ருச்சந்தி ச கேசி தந்யே | அந்யே து ரூபம் ஸத்ருஸம் பஜந்தே ஸாயுஜ்ய மந்யே ஸ து மோக்ஷ உக்த. என்று நியமிக்கப் பட்டதிறே. இதில் சொன்ண ஸாயுஜ்யம் பரமபதத்திலே. சென்றவனுடைய போக ஸாம்யம். கேவலாத்மாநுபவம் நித்யமன்று என்னுமிடமும், ஸாக்ஷாத் மோக்ஷமன்று என்னுமிடமும் “சதுர்விதா மம ஜநா; பக்தா. ஏவ ஹி தே ஸ்ரூதா! தேஷாமேகாந்தி நம ஸ்ரேஷ்டா தே சைவா நந்யதேவதா:। அஹமேவ கதிஸ் தேஷாம் நிராஸீ கர்ம காரிணாம் । யே து ஸிஷ்டாஸ் த்ரயோ பக்தா பல காமா ஹி தே மதா ஸர்வே ஸ்யவந தர்மாண ப்ரதி புத்தஸ்து மோக்ஷபாக்” என்கிற வசநத்தாவே ஸித்தம் -முச்யேதா அர்த்தஸ் ததா ரோகாத். ஸ்ருத்வே மாமாதித கதாம். ॥ ஜிஜ்ஞாஸுர் லபதே பக்திம் பக்தோ பக்த கதிம் லபேத் என்கையாலே ஸ்ரீகீதையில் “ஜிஜ்ஞாஸு* என்கிற ஆத்மா நிஷ்டனும் க்ரமேண ஜ்ஞாநியாமென்று உக்தமாயிற்று- மன்னுறில்” என்று பகவதநுபவத்தை நித்யம் என்கையாலும் இதுக்கு வ்யவச்சேத்யமாகச் சொல்லும் ஆத்ம மாத்ராநுபவம் நித்யமன்று என்னுமிடம் வ்யஞ்ஜிதம்-இதுக்கு “இறுதிகூடா* இத்யாதிகளில் நாஸமில்லை என்கிற பாசுரமும் சாதுர் மாஸ்யாதி கர்ம பல விஸேஷங்களில் அக்ஷய்யத்வோக்தி போலே -எனை வூழி” என்கிற அதி சிரகால ஸ்தாயித்வாபிப்ராயம் என்னும்- கீதா தாத்பர்ய சந்த்ரிகையிலே, எழாமத்யாயத்திலே, ‘(கேவலாத்ம ந்யபர்யவஸ் யந்நிதி) நகரம் ப்ரவி விஷோரத் வகஸ்ய சாயா தருமூல ஸ்வாபவத் ஆத்மாநுபவ விலம்ப இதி பாவ- அத்ர ஜிஜ்ஞாஸோர் வக்தவ்யம் ஸர்வம் அஷ்டமே பிரபஞ்ச யிஷ்யாம-என்றும், அஷ்டமத்திலும் – நித்ய ஸ இத்யநேந, ஆத்மாநுபவாதி பலாந்தர வ்யவதாந நைரபேக்ஷ்யம் விவக்ஷிதமித்யாஹ’ என்றும்,-அக்ஷர யதாத்ம்ய நிஷ்டா நாம் து ஸ்வ ஸ்வரூப மேவ பூர்வம் போக்யம் வஸ்வாதி பத ப்ராப்தி பூர்வக ப்ரஹ்ம ப்ராப்தி ஸாதந மது வித்யாதி ந்யாயாத் அந்ததோ ப்ரஹ்ம ப்ராப்தி ஈத்ருஸ பர்வ க்ரம ப்ரதி நியமல்ஸ ப்ராசீநா பேக்ஷயா ருசி பேதாத் ஸ ச ப்ராசீந கர்ம விஸேஷாத் “சதுர்விதா பஜந்தே மாம்- இதி ப்ராகேவ தர்ஸித என்றும் ‘ஆத்ம மாத்ராநுப வஸுகஸ்ய அஸ்தி ரத்வாதேவ ச்யவநதர் மத்வமுச்யதே’ என்றும், “அவ்யவஹித மோக்ஷ பாக்த்வம் ப்ரதி புத்த ஸ்யோச்யதே”என்றும், “ப்ரஹ்ம காயநிஷேவண ஸங்காத் முக்தஸ்ய தேவ யாநேந மார்க்கேண பரமாகாஸக மநமுச்யதே தத்வதிஹாபி-ஸ்வாத்மாநுபவ ஸ்தாநாத் ப்ரச்யுதஸ்ய பரம வ்யோமாதி ரோஹஸ்யாத் । அர்ச்சிராதி கதிஸ்சாஸ்ய அவாந்தர பாவாநுபவாத் பஸ்சாத் வா கதிமத்யே வா தக்ஷிணாயந ம்ருதஸ்ய சந்த்ர மஸ ஸாயுஜ்யவத் விஸ்ரம
மாத்ரரூபோயம் அவாந்தர பலாநுபவ இத்யுப யதாபி ந விரோத,” என்றும், ‘ஸ்மரந்திச ஸ்வாத்மாநுப வஸ்தாநம். முக்தி ஸ்தாநாதர்வாசீநம். ‘யோகிநாமம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம ஸந்தோஷ காரிணாம்’ இதி” என்றும், “ஸர்வ தர்மாம்ம்ச ஸந்தயஜ்ய ஸர்வ காமாம்ஸ்ச ஸாக்ஷராந். | லோக விக்ராந்த சரணென சரணம் தேவ்ரஜம் விபோ ॥. (இதி). *கைவல்யம் பகவந்தம்ச மந்த்ரோயம் ஸாத யிஷ்யதி இத்யாதி -ஷ்வபி கைவல்ய சப்தேன ஆத்ம மாத்ர அனுபவ ஸூகம் ததபேஷிபி ப்ராப்யமுச்யதே | ஏதச்ச அந்தராய கோடி நிவிஷ்டத்வாத் ஆதித ஸாவதாநா ஜ்ஞாநிந: பரிஹரந்தி । கேசித்து – ப்ரஹ்மாநுபவ வைமுக்யேந நித்யம் ஆத்மாநுப ஸூகமிச்சந்தி ந தத்ர பாஷ்யகாராதி ஸம்ப்ரதாயம் ப்ரமாணம் யுக்திம் வா பஸ்யாம நிஸ்ஸேஷா கர்மக்ஷயே ஸ்வாபாவிக ரூபாவிர்பாவேந ப்ரஹ்மாநுபூவாவஸ்யம்பவாத், கர்ம ஸேஷயோகே து ஸம்ஸார ப்ரஸங்காச்ச ஜரா மரணாதி ஹேது பூத ஸர்வ கர்ம விநாஸாத் அஸம்ஸார: | தாவந் மாத்ரேண ச முக்தத் வவ்யபதேஸ | ப்ரஹ்மாநுபவ ப்ரதிபந்தக கர்மணஸ்து அவிநாஸாத் ததநுபவாபாவ இதி சேத் – அஸத்வேவமேதத் கர்ம: பரஸ்தாதபி ந நங்க்ஷய தீத்யத்ர ந நியாமகமஸ் தீத்யேஷா திக் ” என்றும் சொல்லப் பட்டது.
இதி பூர்வபக்ஷ க்ரந்த
அத, ஸித்தாந்த- கைவல்யம் முக்தி!
‘ஸர்வ பாப நிவ்ருத்தி கைவல்யத்துக்கும் பகவத் ப்ராப்திக்கும் பொதுவன்றோ வென்கை -மந்தசோத்பயம்’ என்கையே மந்த சோத்யமாமத்தனை- எங்ஙனே என்னில் பாபமாவது அநிஷ்டாவஹமிறே. கேவலனுக்கு அநிஷ்டாவஹம் ஈஸ்வராத் யநுபவ ஹேதுக்கள். அதடையக் கழிந்தால் பகவதநுபவத்துக்கு ஹேது வில்லை. பகவதநுபவம் ஸ்வத ப்ராப்தமானாலும் ப்ரதிபந்தக நிவ்ருத்தி ஹேது ஜன்யமிறே
பரத்யுத விரோதியான பரமாத்ம ஸரீராத்மாநுபவ ஹேதுவும் கிடக்கையாலே அந்த ஆத்ம மாத்ராநுபவ மொழிய பகவதநுபவ ப்ரஸங்கமும் கடியாது. அந்த ஆத்ம மாத்ராநுபவ ஹேதுவும்- “பராபி த்யாநாத்” இத்யாதி ஸூத்ரோக்தமான உபாஸநாநுகுண பல ஸாதக பகவத் ஸங்கல்பம்- அது பின்னை ‘தேஹ யோகாத் வா ஸோபி’ என்கிறபடியே- தேஹாதி மூலமாகில் மோக்ஷமின்றியிலே யொழியுமென்னில் ஆத்மாநுபவ விரோதி ஸகல கர்மங்களும் அதடியான ப்ரக்ருதி ஸம்பந்தமும் கழிகையாலே இத்தை மோக்ஷமென்னத் தட்டில்லை – இது பக்தி ப்ரபத்தி ரூப புண்ய ப்ரபந்ந பகவதநுபவ ஸ்வார்த்த தத் கைங்கர்யங்களுக்கும் ஒக்கும்-அவற்றுக்கு ஸ்வ ஸ்வரூப ஸாதநமொழிந்த ஸ்வ ஸ்வ விரோதி ஸகல கர்ம க்ஷயமுண்டே யென்னில் அது ஆத்மாநுபவத்துக்கும் ஒக்கும்-ஆத்மாநுபவம் ஸ்வத ப்ராப்தமன்றே யென்னில் பகவதநுபவ ஸ்வார்த்த தத் கைங்கர்யங்களும் அஹங்கார கர்ப்ப மமகாரமாகையாலே கிங்கரனுக்கு ஸ்வத ப்ராப்தமன்று-தெளிவிசும்பாகையாலே அவையும் கழியுமென்னில் அதுவும் ஆத்மாநுபவத்துக்குமொக்கும். ஆத்மாநுபவம் கழிக்கிறது – அங்குத்தை பகவதநுபு பூஷயா உபாஸநத்தாலே என்னில் பகவதநுபவ கைங்கர்யங்களில் ஸ்வார்த்தத்வத்தைக் கழிக்கிறபடி என்ன வேணும். அங்கவற்றில் ஸ்வார்த்தத்வத்தைக் கழிக்கிறது ப்ராயஸ்சித்த புருஷகார ஜந்ய பகவத் கிருபையாலே என்னில் ஆத்மாநுப,வைஸ்வர்ய காமனைகளுமத்தாலே கழிய வேணும். “ஸ சாநந்த்யாய கல்பதே ஸர்வம் ஹ பஸ்ய பஸ்யதி சாயா வா ஸத்வ மநுகச்சேத் கிங்கரா மம தே நித்யம்” இத்யாத் யுக்தமான ஆவிர்பாவ ஸமத்ருஷ்டித்வ பாரதந்த்ர்ய கைங்கர்யங்களும் பகவத் க்ருபையாலே ஐஸ்வர்ய கைவல்யார்த்திகளுக்கும் வர வேணும். தத் க்ரது ந்யாயத்தாலே அவை அவர்களுக்கு வாராதே என்னில் அது உபாயாந்தர நிஷ்ட ஸ்வ ப்ரயோஜந பரர்க்குமொக்கும். ஆனால் பகவதநுபவ ஸ்வார்த்த கைங்கர்யங்கள் மோக்ஷமென்னில், ஆத்மாநுபவமும், “ஆத்மாநுபூதிரிதி யாகில முக்திருக்தா, ஐரா மரண மோக்ஷாய” என்கிற வசநங்களை அந்யதாகரிக்கக் கூடாது
ஸா லோக்யாதிகளில் முக்தி ஸப்தமும் ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானங்களில் “சதுர்விதமான மோக்ஷம்’ என்றும்,’ஸாலோக்ய ஸாமீப்ய ஸாரூப்ய ஸாயுஜ்யங்களொன்கிற நாலு வகைப்பட்ட மோக்ஷம்’ என்றும், எம்மா விட்டினீட்டிலே “[இத்தோடு (எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) ஒரு தமிழன் எம்மா வீட்டு விகல்பம் செவ்வியவாம்- என்றான்- அந்த பஷத்திலே என்கிற சுட்டு முன் பங்க்தியையும் கூட்டிக் கொள்ளக் கடவது;] வீட்டு விகல்பமாவது – ஸாலோக்ய ஸாரூப்ய ஸாமீப்ய ஸாயுஜ்யமென்கிறவை- செவ்வியவாகை யாவது – ஸாலோக்யாதிகளெல்லாம் இம் மோக்ஷத்திலே யுண்டாகை! என்றும், பரமபதத்திலே நாலு உண்டாக. நிர்வஹிக்கையாலே அதுவே முக்யமென்று நிர்வாஹ்யம். யே து ஸிஷ்டாஸ் த்ரயோ பக்தா பவகாமா ஹி தே மதா. | ஸர்வே சயவந தர்மாண ப்ரதிபுத்தஸ்து, மோக்ஷ பாக் என்கிற விடத்திலே சயவநத்துக்கு பல காமனையை ஹேதுவாகச் சொல்லுகையாவே “பலார்த்தீ,. ந மே பக்த ஸ வை வணிக” என்கிறபடியே அநந்ய போக்யத்வ ஸ்வரூப ஹாநியே ‘சயவந ஸப்தார்த்தம். இங்கனறிக்கே தாங்கள் அநுபவிக்கிற பல ப்ரச்யுதி யாகில், ஸவகீய பல காமனையாலே வந்த பகவதநுபவ ஸ்வார்த்த கைங்கர்யங்களும் அநித்யமாக வேணும். பகவான் நித்யனாகையாலே அவை நித்யம். ஆத்மாவும் நித்யனாகையாவே ததநுபவும் நித்யமாம். ஆகையால் ஸ்வ பல காமனையால் வந்த ஸ்வார்த்த பகவத் கைங்கர்ய காமர்க்கும் –ஆத்மாநுபவ காமர்க்கும் ஐஸ்வர்ய காமர்க்கும் ஏக ரூபமாக ஸ்வரூப பிரஸ்யுதியே ஸ்யவன சப்தார்த்தமாகக் கடவது -இதில் நித்ய பாலார்த்திகளுக்கு ஸ்வரூப ஹானி நித்யம் அநித்ய பாலார்த்திகளுக்கு அநித்யம் என்றதாயிற்று -நித்ய பலங்களை நித்ய ஸம்ஸாரமாக நினைத்திறே ஸா யுஜ்யத்துக்கு அது இல்லாமையைப்பற்ற ஸ து மோக்ஷ உக்த என்றதும்–பிரதி புத்தஸ்து மோக்ஷ பாக் என்றதும் ‘ஜ்ஞாநியே அத்தைப் பெறுவான்” என்றதும்– ஆகையாவே ஜரா மரண மோக்ஷமுண்டாகையைப் பற்ற கைவல்யத்தை மோக்ஷ மென்னத் தட்டில்லையே–
“முச்யேதார்த்த: ததாரோகாத்* இத்யாதி ஸ்லோகத்தில், ‘ஆர்த்த ஸப்தம். நஷ்டைஸ்வர்ய காமனைச் சொல்லாதே, “ஆரோக்யம் பாஸ்கரோதிச்சேத்* என்கிற ஆரோக்ய காமானைச் சொன்னாப் போலே அந்த ஸ்லோகத்தில் ஜிஜ்ஞாஸுவைச் சொல்லுகையாலே ஸ்ரீகீதையில் ‘ஜிஜ்ஞாஸு என்கிற ஆத்மநிஷ்டன் க்ரமேண ஜ்ஞாநியாம் என்னவில்லை. மன்னுறில், “இறுதி கூடா* என்கிற விடங்களில் பண்ணுகிற விஸ்வாமித்ர ஸ்ருஷ்டியும் அவ் விடங்களில் பூர்வர்கள் பண்ணி யருளின வ்யாகயாநங்களுக்கு விருத்தமாம். நகரத்துக்குப் போம் வழிப் போக்கர் மரத்தடியிலே உறங்கினாப் போலே ஆதமாநுபவ விளம்பமென்று கல்பிக்கைக்குக் கல்பகமில்லை. மது வித்யா ந்யாயம் அந்யாயயம்- எங்ஙனே என்னில்- மது வித்யையில் கார்ய காரணேபயாவஸ்த ப்ரஹ்மோபாஸந மாகையாலே கல்பாந்தரத்திலே அநித்யமான தேசத்திலே அநித்யமான வஸ்வாதி ப்ராப்தியாய், அநித்யமான கார்யாவஸ்த ப்ரஹ்மத்தை அநுபவிக்கலாம். நித்யமான பரமபதத்தில் அநுபவிக்கக் கூடாது. ததநந்தரத்திலே காரணாவஸ்தமாய் விஸேஷ்யமான பரப்ரஹ்மத்தை நித்யமான பரம பதத்திலே நித்யனான தாணன் அநுபவிக்கிலுமாம். விஸேஷணமான ஆதித்யன் அநித்யனாகையாலே ததநுபவம் பரமபதத்தில் கூடாது. ஆகையால், அங்கு. அப்படியாகலாம்-
பஞ்சாக்நி வித்யையில், ப்ரக்ருதி வியுக்த ப்ரஹ்மாத்மக ஸ்வாத்மோபாஸந மாகையாலே, நித்யாத்மாநுபவம் அநித்ய தேச காலங்களில் கூடாது, ப்ரக்ருதி வியுக்தாத்மாநுபவம் ப்ரக்ருதி மண்டலத்தில் கூடாது. ஆகையால் மது. வித்யா ந்யாயம் அந்யாயமென்னக் குறையில்லை – ஈத்ரூஸ கிரமேண இச்சையும் பூர்வமில்லை – ‘ஜிஜ்ஞாஸு, – ப்ரக்ருதி வியுக்தாத்ம ஸ்வரூபாவாப்தீச்சு,.” என்றிறே பாஷ்யம். ப்ரக்ருதி வியுக்தாத்ம ஸ்வரூபாவாப்தி – மண்டலத்தில் கூடாதிறே (இவ்விடத்தில் சில ப்ரதிகளில் பங்க்தி. ஸ்கலிதமாயும் முன்னும் பின்னுமாயும் காண்கிறது,-கோஸாந்தர ஸஹாயத்தினால் ஸோதித்துக் கொள்க] ஸூஹ்ருதமும் மூலமாயிறே சொல்லப்பட்டது -ஆகையால் பர்வ க்ரம நியம கல்பநம் மூல கிரந்த பாதிதம். அர்ச்சிராதிகதியில் விளம்ப கல்பநமும், ப்ரக்ருதி மண்டலத்தில் ஸ்தாந கல்பநமும் “விரஜா பரமவ்யோம்நோரந்தரா கேவலம் ஸ்ம்ருதம்* இத்யாதி ப்ரமாண விருத்தம்- த்ருஷ்டாந்த கல்பநங்களும் வ்யர்த்தம். “ஸர்வ காமாம் ஸ் ச ஸாக்ஷராந் | கைவல்யம் பகவந்தம் ச * இத்யாதிகளில். அக்ஷர கைவல்ய ஸப்தங்களும் ஜிஜ்ஞாஸு விஷயம் [இவ் விடத்தில் தாளபத்ரகோளம் ஸிதில மாயிருப்பதால் ஸூத்த பங்க்தி கோஸலாந்தரங்களில் காண்க ) அவ்யக்தோக்ஷர இத்யுக்த யேத்வாக்ஷரம நிர்தேஸ்யம்’, ‘கேவலாத்மந்ய பர்யவஸ்யந், அத, கைவல்யார்த்தி,நாம்‘ இத்யாதி ப்ரயோகாத் ப்ரஹ்மாநுப,ப்ரதிபந்தக கர்மண ஸத்வாத், ஆத்மாநுபவம் நஸியாதென்கிறதற்கு நியாமகம், யத் ப்ராப்ய ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம, தச்சாபுநரா வ்ருத்தி லஷணம்” இத்யாதி- கைவல்யம் முக்தி யென்றும் நித்யமென்றும் ஆழ்வார்கள் முதலான ஆசார்யர்களும் அருளிச் செய்தார்கள். எங்ஙனே என்னில், “(உற்றது வீடுயிர்) ஆத்மா மோக்ஷத்தை ப்ராபித்தது-அது நித்யமாய் ஜ்ஞாநா நந்த லக்ஷணமா யிருக்கையாலே’ என்றும், ‘இறுகலிறப்பு* என்றும், *ஞாநிக்கும் – ஸங்கோசத்தை மோக்ஷமென்று சொல்லுகிற ஆத்மஞ்ஞருக்கும் என்றும் (6-9-10)குறுகா நீளா -ஸ்வத குறுகையும் நீளுகையும் இன்றிக்கே இருக்கை -(எனையூழி இத்யாதி )காலோபாதியால் வரும் ஸங்கோச விகாஸங்கள் இன்றிக்கே யிருக்கை (அளவிவினபம் சேர்ந்தாலும்) இங்ஙனே யிருக்கையாலே முடிவின்றிக்கே யிருக்கிற ஆத்மாநுபவ ஸுகத்தை பிராபித்தாலும் (பெரும் துன்பம் வேரற நீக்கி!) ஜந்மம் போனால் அநந்தரம் வரக்கடவதான ‘கைவல்யமாகிற மஹா துக்கத்தை ஸவாஸநமாகப் போக்கிக் கீழ் நின்ற நிலை தான் நன்று என்னும்படியிறே இதன் தண்மை- அதுக்குப் பின்பொரு ஸரீர பரிக்ரஹம் பண்ணி யாகிலும் பகவத் ஸமாஸ்ரயணம் பண்ண யோக்யதை உண்டிறே…
இது நித்யமாயிருப்பதொன்றன்றோ என்று ஆத்ம லாபத்துக்காக வந்து உபாஸிக்கிற கேவவர் வந்து தோற்ற அவர்களை ஷேபிக்கிறார் – (சரணமாகிய வித்யாதி..)” என்றும், “(திருத்தாள் வணங்கி) பாவியேனுக்கு பகவத் விஷய மில்லாமையாலே ஆத்ம ப்ராப்தி அபுருஷார்த்தம், ஜஸ்வர்யம் போலே அஸ்திரமல்லாமையாலே நிலை நின்ற அபுருஷார்த்தமென்கை’ என்றும், ‘(யாதுமில்லை இத்யாதி) ‘இவ்வாத்மாநுபவ ஸூகத்துக்கு மேற்பட்டிருப்ப தொன்றில்லை என்று அவ் வருகே பகவதநுபவ ஸூகமுண்டே யாகிலும். அத்தையே புத்தி பண்ணிக் காது பெருக்கப் புக்கவன் அத்தைப் பல காலும் அறுத்து வைத்து முன்புத்தை யோக்யத்தையும். கூடக் கெடுக்குமா போலே-பகவத் ஸமாஸ்ரணத்துக்கு யோக்யமான ஸம்ஸாரத்திலே ஸப்தாதி விஷயங்களை அநுபவித்திருக்கு மத்தையும் இழக்கும்” என்றும், (திருவாய்மொழி -8-8-6-) (அதுவே வீடு) “அற்றது பற்றெனில் உற்றது வீடுயிர்’ என்று ப்ராக்ருதங்களில் தொற்றற்றவாறே ஆத்ம ப்ராப்தி லஷண மோக்ஷமா யிருக்கும்- அதுக்கென்னச் செய்ய வேண்டுவதில்லை (வீடாமே) அவனுக்கு ப்ரகாரமாக ஆத்ம வஸ்துவை. அநுஸந்தித்து அவ் வழியாலே இது தன்னை ப்ராப்யமாக விறே இவர் தாம் நினைத்திருப்பது. அவ்வளவு போக மாட்டாதே இதின் நன்மையைக் கண்டு இவ்வளவிலே கால் தாழ்வார்க்கும். போந்திருந்ததீ என்கிறார் என்றும், (8-8-7) “(அதுவே வீடு) கீழ்ச் சொன்னவதுவே ஆத்ம ப்ராப்தி லக்ஷண மோக்ஷமாகிறது- (வீடு பேற்றின்பந்தானுமது) அம் மோக்ஷத்தை ப்ராபித்தால் வரும் ஸூகமும் அதுவே (அதுவே வீடு) கீழ்ச் சொன்ன ஆத்ம ப்ராப்தியே மோக்ஷம்(வீடு பேற்றின்பந்தானுமது) மோக்ஷ ஸித்தியில் வரும் ஸுகமும் அந்த ஆத்மாநுபவம்’ என்றும் திருப் பல்லாண்டு வயாக்யானத்தில் – “கைவல்யார்த்திகளை அழைக்கிறார். அவர்கள். உபாஸித்துத் தலைக் கட்டப் புகுகிற மோக்ஷம் தான் அநர்த்தம் என்று தோற்றி யிருந்ததிவர்க்கு. அம் மோக்ஷம் ப்ரத்யா ஸந்நமா யிருக்கையாலே அத்தைத் தவிர்த்து இங்கே வாருங்கோள் என்கிறார். அநந்தரம் ஸ்வ ஸ்வரூபாவாப்தி மோக்ஷமாகையாலே அவ் வருகு போக்கில்லை – இவ்வருகு வரவில்லை வறுத்த பயறு முளைக்கிற யோக்யதையையும் கூடக் கெடுக்கிறதிறே.-ஜரா மரண மோஷாயா -என்று பிரக்ருதி வியுக்தாத்ம அனுபவத்தை புருஷார்த்தமாக அனுபவித்து மோக்ஷமாக. நினைத்திருப்பது’ என்றும், “ஆத்ம ப்ராப்தி உத்க்ருஷ்டமென்னும் நினைவாலே அழைக்கிறார் அல்லர்- அந்த மோக்ஷத்தை இவர் அநர்த்தமென்று இருக்கையாலே அந்த மோக்ஷத்தை ப்ராபித்தால் மீள வொண்ணாமையாலும் ஐஸ்வர்ய காமனுக்குக் காலாந்தரத்திலே யாகிலும் பகவத் ஸம்பந்தம் பண்ண யோக்யதை உண்டாகையாலும் இவனுக்கு அந்த யோக்யதையும் அழிகையாலே துர்க்கதியைக் கண்டு முற்பட அழைக்கிறார்” என்றும், பெரிய திருமொழி (8-2-8) “தொண்டெல்லாம்* என்கிற பாட்டின் வயாக்யாநத்திலே (நின்னடியே தொழுது!) என்று உன்னை யன்றே யிவன் தொழுதது – திருக்கண்ணபுரத்தை யிறே. யதோ உபாஸநமன்றோ பலம்- ஜஸ்வர்யார்த்திகள் ஐஸ்வர்ய விஸிஷ்டனை இறே பற்றுவது -ஆத்ம ப்ராப்தி காமன் ஸூத்தி விஸிஷ்டனையிறே பற்றுவது-இவளும். இவ்வூரை ஆசைப் பட்டவளாகையாலே. ஊரைத் தொழுகிறாள்- யத் விஸிஷ்ட வஸ்துவைப் பற்றினால் தத் விஸிஷ்ட வ-ஸ்துவே யிறே ப்ராப்யம்’ என்றும், நாச்சியார் திருமொழி! வ்யாக்யாநத்தில், (5-11) – ‘(நமோ நாராயணைய என்பாரே) ‘நமோ நாராயணய வென்று பல்லாண்டும் பரமாத்மாவைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டு’ என்றிறே தமப்பனார் வார்த்தை– இக் குடிக்காக வுள்ளதோர் ஆசையிறேயிது-அதுவே பலமாகப் பெறுவரென்று நல்லாண்டென்று நவின்று, பல்லாண்டென்றுரைப்பார்- நமோ நாராயணாய வென்று பல்லாண்டு மேத்துவரிறே. தத் க்ரது ந்யாயத்தாலே பேறாகையாலே காதாசித்கமாகை தவிருகையே உள்ளது -ப்ராப்ய பூமியிலே புக்கிருந்து இப் பாசுரம் சொல்லி அநுபவிக்கப் பெறுவர்” என்றும், மற்றும். பல விடங்களிலும் பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தார்.
கீழ் “சமயங்கள் கண்டானவை காப்பான்* என்கிற விடத்தில், கர்ப்பிதமான ஸம்ஸாராபத்,ரக்ஷகத்வத்தை விவரிக்கிறார் – (4-திருவந்தாதி-88) (உயிர் கொண்டு உடலொழிய வித்யாதி) ஆத்மா ஸரீரத்தைப் பொகட்டு ப்ராணனைக் கொண்டு யம படராலே ப்ரேரிதனாய்ப் போம் போது ஆஸ்ரிதரானவர்களை ஆளிட்டந்தி தொழாதே தானே விரைந்து சென்று அவர்கள் தர்ஸநத்தால் வந்த அறிவு கேடு முதவான ‘துரிதமென்று பேர் பெற்றவை யெல்லா வற்றையும் போக்கும் ஸ்வபாவனா னவனுடைய குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான திரு நாமங்களை ப்ரீதி பரவஸராய்க் கொண்டு சொல்லி இவர் ஸ்வ ரக்ஷணத்துக் குடலாகச் செய்யக் கடவதொரு ப்ரவருத்தி யில்லாதபடி ஸ்வருப பாரதந்த்ரயத்தை அநுஸந்தித்து எம்பருமானே நிர்வாஹகனென்று அவன் தலையிலே ஸர்வ பரத்தையும் பொகட்டு தத் குண அநுபவம் பண்ணி வாழுமவர்களே பழுதற வாழுமவர்கள்-அந்ய ஸா பேஷமாகையாலே அதி ஷூத்ரமாய் ப்ரதி புருஷம் தத் தத் ருசி அனுகுணமாக வியவஸ்திதமாய் துக்க ஹேதுவான அஹங்கார மமகார கர்ப்பமாகையாலே பந்தகமுமாய் இருக்கிற கர்மாத்,யுபாய விஸேஷங்களைப் பற்றி நிற்கிறவர்களுடைய வாழ்வாமாகில் நிஷ் ப்ரயோஜநமாயிருக்கும்- அந்வய வ்யதிரேகங்களாலே இவற்றுக்கு உபாயத்வம் முதவிலே யில்லை யென்று உள்ள படி உணர்ந்திருக்கும். ஜ்ஞாநிநாமக்ரேஸரராகையாலே (பந்தனையார் வாழ்வேல் பழுது) என்று அவற்றிலொரு சரக்கற அருளிச் செய்கிறார்’ என்று பெரிய ஜீயர் ஸ்ரீ பாதத்தில் பிள்ளை அருளிச் செய்தார். அர்த்தபஞ்சகத்தில், ‘கேவவனாவான். – தனி யிடத்திலே’ என்று தொடங்கி, ஆத்மாநுபவ மாத்ரத்தையே புருஷார்த்தமாக அநுபவித்து பின்பு ஸம்ஸார ஸம்பந்தமும் பகவத் ப்ராப்தியுமற்று யாவதாத்மபாவி அஸரீரியாய்க் கொண்டு திரிவான் ஓருவன்‘ என்று பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்தார் –
இதி ஸித்தாந்தம்
அத, பூர்வபக்ஷ-: புநரபி பர ப்ராப்தி கதநம்.
ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே, இருபத்தொன்பதாமதிகாரத்திலே. -பஞ்சாக்நி வித்யாதிகளில் சொன்ன ப்ரஹ்மாத்மக ஸ்வாத்மாநுபவம் பண்ணுவார்க்கு பாஷ்யாதிகளிலே அர்ச்சிராதிகதியும் ப்ரஹ்ம ப்ராப்தியும் சொல்லப் பட்டது- ஆகையால் இப் பஞ்சாக்நி வித்யா நிஷ்டர்க்கு ஆத்ம மாத்ராநுபவ ரூபமான அவாந்தர பலம் வந்தாலும் மது வித்யா ந்யாயத்தாலே ப்ரஹ்ம ப்ராப்தி பர்யந்தமாய் விடும் என்றும். –ஜிஜ்ஞாஸுர் லபதே பக்திம்- என்கையாலே ஸ்ரீ கீதையில் ‘ஜிஜ்ஞாஸு: என்கிற ஆத்ம நிஷ்டனும் கிரமேண ஜ்ஞாநியாமென்று உக்தமாயிற்று’ என்றும் கீதா தாத்பர்ய சந்த்ரிகையில், ‘ஆத்ம யாதாம்ய நிஷ்டாநாம்’ என்று தொடங்கி, ‘அந்ததோ ப்ரஹ்ம ப்ராப்த- ஈத்ருஸ பர்வ க்ரம ப்ரதி நியமம்ச ப்ராசீநாபேஷயா ருசி பேதாத்‘ என்றும். “ஸ்வாத்மாநுபவ-. ஸ்தாநாத் ப்ரச்யுதஸ்ய பரம வ்யோமாதி ரோஹஸ்யாத்। அர்ச்சிராதிகதிஸ் ச அவாந்தர பலாநுபவாத் பஸ்சாத், வா. கதி மத்யே வா அவாந்தர பலாநுபவ.” என்றும். சொல்லப் பட்டது.
இதி பூர்வ பக்ஷ க்ரந்த.
அத, ஸித்தாந்த. அஸ்மாந் ந பரம புருஷ ப்ராப்தி:
பஞ்சாக்னி வித்யா நிஷ்டனுக்கு பாஷ்யாதி களிலே அர்ச்சிராதிகதியும், ப்ரகக்ருதி வியுக்த ப்ரஹ்மாத்மக ஸ்வாத்ம ப்ராப்தியும் பாஷ்யகாரர் அருளிச் செய்கையாலே அர்ச்சிராதி கதிக்கு பூர்வமும் கதிமத்யத்திலும் ப்ரக்ருதி வியுக்த ப்ரஹ்மாத்மக ஸ்வாத்ம ப்ராப்தி யில்லை யாகையாலே ஆத்மாநுபவ அந்தத்தில். ப்ரஹ்ம ப்ராப்தி என்கை கூடாது. ‘கைவல்யம் முக்தி! என்கிற விடத்தில், மது வித்யையில் நித்யா நித்யோபாஸந மாகையாலும் பர்வ க்ரம நியமம் கூடும், இங்கு நித்யோபாஸநமாகையாலே பர்வ க்ரம நியமாபேஷை அவனுக்கு இல்லாமையை, ‘ஜிஜ்ஞாஸு- ப்ரக்ருதி வியுக்தாத்ம ஸ்வரூபாவாப்தீச்சு,.’ என்று பாஷ்யகாரர் அருளிச் செய்கையாலும் அது கூடாதென்று சொல்லப்பட்டது. “ஜிஜ்ஞாஸாுர் லபதே பக்திம்* என்கிற ஜிஜ்ஞாஸுவும், ‘முச்யேதார்த்த ததராரோகாத்‘ என்று சொல்லப்பட்ட (ஆர்த்தன் ) ப்ரஷ்டைஸ்வர்ய காமனன்றிக்கே, “ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத் என்று சொல்லப்பட்ட ரோகார்த்தன் ஆகிறாப் போலே. கைவல்யார்த்தி யன்றிக்கே, ஈஸ்வராத் ஜஞாநமந் விச்சேத் ! என்கிற விடத்திற் சொன்ன ஜ்ஞாநாந் வேஷியே. ‘பக்தி்ஸ் ச ஞாந விஸேஷ என்கிறபடியே பக்தியும் ஜ்ஞாந விஸேஷமிறே. ஆகையாலே, ஆர்த்தோ ஜிஜ்ஞாஸு என்று சொல்வப்பட்ட ஜிஜ்ஞாஸு க்ரமேண ஜ்ஞாநி யாவான் என்றும் சொன்னோம்- யாவதாத்ம பாவி ஸ்வாத்மாநு பவமே பண்ணுமிடத்துக்கு ஆழ்வார்கள் முதலான ஆசார்யர்கள் திவ்ய ஸுக்திகளும் காட்டினோம்.
இதி ஸித்தாந்தம்
———————–
அத, பூர்வபக்ஷம் -தத் அண்டாந்தர் பாவ ப்ரமிதி வசநம் கேவல கதே.
ரஹஸ்ய த்ரய ஸாரத்திவே இருபத்தொன் பதாமதிகாரத்திலே, “யோகிநாமம்ருதம் ஸ்தாநம் என்று இவ் வாத்மாநுபவ ஸ்தாந விஸேஷமும் சொல்லப் பட்டது. இஸ்தாந விஸேஷம் பரமபதமன்று என்னுமிடம் இப்ரகரணந் தன்னிலே, “ஏகாந்தி-நஸ் ஸதா ப்ரஹ்ம த்யாயிநோ யோகிநோ ஹி யே தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யத்வை பஸ்யந்தி ஸூரயட்-என்று பகவத் ப்ராப்தி காமனான பரமைகாந்திக்கு ஸூரி த்ருஸ்யமாண ஸ்தாநாந்தரம் சொல்லுகையாலே ஸித்தம்’ என்றும் தாத்பர்ய சந்த்ரிகையிலே,’ஸமரந்தி ச ஸ்வாத்மாநுப ஸ்தாநம் முக்தஸ்தாநா தர்வாசீநம்”யோகி நாமம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம ஸந்தோஷ காரிணாம் இதி என்றும் சொல்லப்பட்டது
இதி பூரவபக்ஷ க்ரந்த,.
அத, ஸித்தாந்த–ஊர்த்வம் ப்ரக்ருத்யா
ஆத்மானுபவ காமஸ்து பகவதோ போக்யத்வம் பரித்யஜ்ய ஸ்வாத்மாநுப ப்ரதிபந்தக ப்ரக்ருதி வித்வம்ஸநோபயோகி தயா பாவநத்வ மாத்ரம் அநுஸந்தாய தேநைவ நிரஸ்த ஸமஸ்த ப்ரதிபந்தக பரமபத ப்ரவேஸ பூர்வகம் ஆத்மகதா திஸயிதாநுகூல்ய விஸேஷம் உபாஸநாநுகுணம் அநுபவந் அநாக்ராத பகவத் போக்யதாநுப வர்த்ததே! அத கைவவ்யார்த்தி ந ப்ரக்ருதி வியுக்தாத்ம ஸ்வரூபாநுபவ ப்ரக்ருதி மண்டலாதிக்ர மண மந்தரேண ந கடதே இதி தஸ்யாநுபவ ஸ்தாநம் பரமபதமிதி கம்யதே | தேஸ விஸேஷ ப்ரவேஸே ஸத்யபி ஆவிர்பூதாஸங்குசித ஞ்ஞாந தயா பகவத் ஸ்வரூப ஸாக்ஷாத்காரே ஸத்யபி உபாஸநாநுகுணம் ஸர்வேஸ்வர ஸ்வ போக்யத்வ விஷயம் ஜ்ஞாநம் ஸங்கோசயதி | உபாஸநாநுரூப பல ப்ரஸாதக பகவத் ஸங்கல்ப ஏவாத்ர ஸங்கோசக! யதப்யுக்கம் ‘அநந்ய ப்ரயோஜநைக லப்யதே ஸ விஸேஷ ப்ரவேஸ ப்ரயோஜநாந்தர நிஷ்டஸ்வ கதமுபபத்யதே இதி – ததப்ய வ்ருத்தம் | விரஜோத்தரணாநந்தரம் பரமாகாஸ ஸப்த வாஸ்யே திவ்ய ஜநபத திவ்ய நகர வ்யதிரிக்த ப்ரதேஸே கேவலாநாம் அவ. ஸ்தாநம் ந து திவ்ய ஜந பத திவ்ய நகர ப்ரவேஸ இத்யப்யுபகமாத் | ப்ரக்ருதி மண்டலா தூரீத்வம் ஸ்ரீ வைகுண்ட தர்வாக் பரமாகாஸ ஸப்த வாச்யே தேஸ விஸேஷே கேவலாநாம் அநுபவ ஸ்தாநமிதி ப்ரதிபாதிதம் பவதி | பாத்மே புராணேப்யேதத் ஸ்பஷ்டமுக்தம் பவதி | *விரஜா பரமவ்யோம்நோ ரந்தரா கேவவம் ஸ்ம்ருதம் | தத்ஸ்தாந முப போக்தவ்யா மவ்யக்தம் ப்ரஹ்ம ஸேவிபி,.” இதி | *முக்தாநாம் பரமா கதி.” இத்யேதத் வ்யாக்யாநாவஸரே ஸ்ரீ பராஸர பட்டர் மிஸ்ரைரபி ஏவமுக்தம் – ‘பரமேதி விஸேஷணேந -முக்தாநா மேவ கேஷாஞ்சித் அர்வாசீநா கதிர் கம்யதே க்ருஹ்யதே ச நிர்முக்த ஜரா மரணாத்மக கைவல்ய லஷணா “ஜரா மரண மோக்ஷாய மாமாஸ்ரித்ய யதந்தி யே* இதி. ஸம்ஸார பரமபதயோர் மத்யே தேஷாம் ஸ்தாநம் ச யோகிநாம் அம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம ஸந்தோஷ காரிணாம்* இதி’ இதி அர்ச்சிராதி,மார்க்க கமந மப்யஸ்ய கேவலஸ் யாஸ்தி, | ஸ்ரீ பகவத் கீதா பாஷ்யே பகவாந் பாஷ்யகாரோபி ஏவமாஹ ‘அத, ஆத்ம யாதாத்ம்ய வித பரம புருஷ நிஷ்டஸ்ய ஸாதாரணீம் அர்ச்சிராதி காம் கதிமாஹ – தவயோரப் யர்ச்சிராதி கதி ‘ஸரூயதே’ இத்யாதி,நா (‘ஸ்ருதெவ் ஸ்ருத்யா இத்யாதி நா’ என்று ஒரு ஸ்ரீ கோஸத்தில் காண்கிறது ]. “தத்ய இத்தம் விதுயே சேமேரண்யே ஸ்ரத்தா தப இத்யுபாஸதே தேர்ச்சிஷமபி ஸம்ப வந்தி” இதி ஹி ஸ்ருதி *ப்ராஜா பத்யம் க்ருஹஸ்தாநாம் ப்ராஹ்மம் ஸந்யாஸிநாம் ஸ்ம்ருதம். [ந்யாஸிநாம் ப்ரஹ்ம ஸம்ஜ்ஜிதம் – பார – இதி கேவலாஸ்ரம தர்மாநுவர்த்திநாம் ஜஸ்வர்யார்த்திநாம் ப்ரப்ய தயா ப்ரஹ்ம லோக பர்யந்தாநபிதாய, “யோகி நாமம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம ஸந்தோஷ காரிணாம்” இத்யாதி சதுர்முககாதி ஸ்தாந வ்யாவ்ருத்தம் ஸுஸ்திரம் ஸ்தாநம் கைவல்யார்த்திநாம் ப்ராப்ய தயா ப்ரதிபாத்ய அநந்தரம், ஏகாந்திந ஸதா ப்ரஹ்ம த்யாயிநோ யோகிநோ ஹி யே தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யத் வை பஸ்யந்தி ஸூரய-இதி பகவச் சரணார்த்திநாம் நித்ய ஸூரி நிஷேவணீயம் ஸ்ரீ வைகுண்டாதி ஸப்த வாச்யம் பரமம் ஸ்தாநம் ப்ராப்ய தயா பகவதா பராஸரேண ஹி உக்தம்- என்று கைவல்ய தத் ஸ்தாநாதிகளை ப்ரமாண உபபத்திகளாலே நம்முடைய நயினார் நிரணயித்தருளினார்-
இதி ஸித்தாந்த:
———-
அத, பூர்வ பக்ஷ- ப்ரபத்தேர் தெவ்ர் பல்யம்.
(இந்த உக்தி – ஸாப்தமாதல் ஆர்த்த மாதாவாகக் கடவது-ஸாப்தமான போது வல்லவர்கள் இருக்கற விடம் பார்த்துக் கண்ட விடங்களிலே ஸங்க்ரஹித்துக் கொள்வது.)
“இதி பூர்வபக்ஷ க்ரந்த-
அத- ஸித்தாந்த ப்ராபல்யம் ஹி ப்ரபத்தே
இப்போது பிரதிபத்திக்கு தவ்ர்பல்யம் துஸ் ஸகத்வ ஸ்வரூப விரோதித்வ. விலம்ப்ய பல ப்ரதத்வ அதி க்ருதாதிகாரத்வாதி தோஷங்களில்லாமையாலே அவற்றால் தவர்பல்யம் சொல்ல வொண்ணாது- ப்ரகாராந்தரேண தெளர்பல்யம் சொல்லுமதுவும்- “தஸ்மாத் ந்யாஸ மேஷாம் தபஸாம் அதிரிக்தமாஹு -என்கிற ஸ்ருதி வ்ருத்தம் -ஸக்தாநாம் பக்தியோக ப்ரபதந விஷய ஸக்தி ஹீந அதிகாரி -என்கையாலே ஆர்த்தமாக ப்ரபத்திக்கு தவ்ர்பல்ய முக்தமென்ற பக்ஷத்திலும் பக்தி ப்ரபத்திகளுடைய சக்தாஸக்தாதிகாரத்வ நிராகரணத்தாலே அதுவும் நிராக்ருதம் -ஆகையால் பிரபத்திக்கு தவ்ர் பல்யம் ஒருபடியாலும் சொல்ல ஒண்ணாது ஸரணாகதி கத்ய வ்யாக்யாநாவதாரிகையில்- “ஆனால் இவ் வுபாயம் வேதாந்த ஸித்தமன்றோ வென்னில், யாஜ்ஜிகீயமான உபநிஷத்திலே “ஸத்யம் தபோ தம ஸம தாநம் தர்ம ப்ரஜநநம் அக்நய அக்நி ஹோத்ரம் யஜ்ஜோ மாநஸம்* என்று ஒன்றுக்கொன்று உத்க்ருஷ்டமாகச் சொல்லிப் போந்து எல்லாவற்றுக்கும் மேலாக “தஸ்மாத் ந்யாஸமேஷாம் தபஸாம் அதிரிக்தமாஹு- என்று ‘தபஸ்ஸுகளில் வைத்துக் கொண்டு அதிரிக்தமாண தபஸ்ஸூ ப்ரபத்தி என்று இதினுடைய உத்கர்ஷம் சொல்லிற்று- அதுக்கு மேலே “தர்மஜ்ஞ ஸமய; ப்ரமாணம் வேதாஸ் ச” என்று ப்ரபல ப்ரமாணமான ஆசார்ய ருசி பரி க்ரூஹீதத்வாமாகிற ஏற்றமும் இதுக்கு உண்டு. ‘வேதாஸ் ச ‘ என்று வேதமும் அப்ரதாந ப்ரமாணமாம்படி யிறே வைதிக பரிக்ரஹத்தின் ப்ராமாண்யாதி ஸயமிருப்பது. அளவுடையராயிருப்பாரக்கு இதுவே போருமாயிற்று ப்ராமாணயத்துக்கு-
இது தான் அளவில்லாதார்க்கு வேதாந்த ஸித்தமுமாய் யிருக்கும். ஆக இப்படி வேதாந்த ஸித்தமுமாய்- ஸ்வரூப ப்ராப்தமுமாய் ஆச்சார்ய ருசி பரிக்ரூஹிதமுமாய், சரண்ய ஹ்ருதய அநு சாரியுமாய் இருக்கையாலே அதிலும் இதுவே அநுஷ்டேயம் என்னுமிடத்தைத் தம்மை விஸ்வஸித்திருக்கும் ஸாத்விகர் இழக்க வொண்ணாதென்று பார்த்துத் தாமும் பெரிய பெருமாளும் அறிந்ததாக அநுஸந்தித்தவிடம் அமைந்திருக்க, தம்முடைய பரம க்ருபையாலே கத்ய ரூபேண வெளியிடுகிறார் என்றும். ‘வேதாந்தங்களிலே மஹா பதமாகச் சொல்லுகிற பக்தியைக் காட்டிஸ் இப்ரபத்திக்கு ஏற்றமென்னென்னில், அது அதி க்ருதாதிகாரமுமாய், விளம்ப்ய பல ப்ரதமுமாய், ப்ரமாத ஸம்பாவனை யுள்ளதுமாய், ஸாத்யமுமாய், ஸவரூப அநநுரூபமுமாய் ப்ராப்யத்துக்கு விஸத்ருஸ முமாயிருக்கும். இதுவோ வென்றால் இதுக்கு எதிர்த்தட்டாம்படி ஸர்வாதிகாரமுமாய், ஸூகரமுமாய், அவிளம்ப்ய பல ப்ரதமுமாய், ப்ரமாத ஸம்பாவனையுமின்றிக்கே ஸித்தமுமாய், ப்ராப்யத்துக்கு ஸத்ருஸ முமாயிருக்கும் என்றும் பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தார்-
இதி ஸித்தாந்த –
அத, பூர்வபக்ஷ –ஸக்தாநாம் பக்தி யோக ப்ரபதந விஷய। ஸக்தி ஹிநாதி,கார:
ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே இருபத்தொன்பதாமதிகாரத்திலே-வ்யாஸாதிகள் அதிகாரி புருஷர்களாகையாலே விளம்ப. க்ஷமருமாய், உபாயாந்தர ஸக்தருமா யிருப்பார்களாகையால் உபாஸநத்தில் இழிந்தார்களல்லது ஜ்ஞாந மாந்த்யமாதல் ,
விஸ்வாஸ மாந்த்யமாதல் உண்டாய் யிழிந்தார்களன்று-என்றும்- இருபத்து நாலாமதிகாரத்திலே- ஆதுராதிகளுக்கு அவகாஹநாதிகள் போலே ஆகிஞ்சன்ய அநந்யகதி என்றிருக்கும் அதிகாரிக்கு ஸ்வாதிகார விருத்தங்களென்ன ப்ராப்தம். இவ்வதிகார விரோதமறியாதே, உபாஸநாதிகளில் பரவர்த்திக்குமவனைப் பற்ற,”நரஸ்ய புத்தி தவ்ர்பால்யாத் உபாயாந்தர மிஷ்யதே –என்றது ஆகையால் இவ் வுபாஸநாதிகளும் அதிகாரயந்தரத்துக்கு யதாதிகாரம் அநு குணங்கள் அபிசாராதிகளை விதித்த கட்டளை யிலே ஸாஸ்த்ர ப்ரரோசநாதிகளில் அபிஸந்தியாலே அதிகாரி விஸேஷேத்திலே உபாஸதநாதிகளை விதித்ததத்தனை யன்றோ’ என்றும், ‘ ‘நரஸ்ய புத்தி தெவ்ர்பல்யா துபாயாந்தர மிஷ்யதே’ என்றுமிப்படி அதிகாரத்தில் வரும். கலக்கங்களை ஸமிப்பித்தோம்-என்றும், (29-அ) “உபாயாந்தரத்தில் ஸக்தி யில்லாத போது அகிஞ்சனனாய் ப்ரபத்திக்கு அதிகாரியாய்” என்றும்-அல்லாத போது உபாய விதாயக ஸாஸ்த்ரங்கள் நிரர்த்தகங்களாம்-‘உபாயாந்தரத்தில் அநுஷ்டாந ஸக்தி யில்வாதார்க்கும்” என்றும், ‘உபாயாந்தரங்களிலஸ். ஐ்ஞாநாபாவத்தாலே யாதல்- ஜஞாந முண்டாயிருக்க ஸக்த்யபாவத்தாலே யாதல்- ஸோகித்த அதிகாரியைப் பற்ற அவ் வுபாயங்களொன்றிலும் நீ அலைய வேண்டா, அவை ‘தனித்தனியே தரும் பலங்கள் உனக்கெல்லாம் ப்ரபத்தி வஸீக்ருதனான நான் ஓருவனுமே அமையுமென்று சொல்விற்றாயிற்று’ என்றும், (24ம் அதிகாரத்தில்) “அவற்றுக்கு. ஸாமர்த்ய மில்லாமை யாலாதல் விளம்ப க்ஷமனல்லாமை யாலாதல் இப் ரபத்தியை ஸ்வதந்த்ரோபாயமாகப் பற்றினவனை *செய்த வேள்வியன்” என்றும், *க்ருதக்ருத்யன் ” என்றும், உபாஸநாதிகளில் ஸமர்த்தனல்வாதவனுக்கு ப்ரபத்தியை விதித்தாலும் இப் ப்ரபத்தி தானே அவை கொடுக்கும் பலத்தையும் அவை தன்னையும் கொடுக்க வற்றாம் அகிஞ்சநனுக்கு உத்தாரகமாய் அவனபேஷித்த காவத்திலே பலாவிநபாவத்தையும் உடைத்தா யிருக்கையாலே அதிக-ப்ரபாவமா யிருக்கும்’ என்றும் சொல்லப்பட்டது-
இதி பூர்வ பக்ஷ க்ரந்த-
அத, ஸித்தாந்த –பஜந விதி,ரஸெவ் புத்தி தவ்ர்பல்ய மூல; ந்யாஸ ஸர்வாதிகார:
வ்யாஸாதிகள் உபாஸநத்திவிழிந்தது புத்தி தவ்ர் பல்யத்தாலே என்னுமிடமும் பிராமாணிகம் -ஸகல ஆத்மாக்களுக்கும் ஸேஷத்வ பாரதந்த்ர்ய ரூப ஸ்வாதிகார விருத்தமாகையாலே (அகிஞ்சநோநந்யகதி.) என்றிருக்குமதிகாரிக்கே அவிருத்தம் என்கை யுக்தம்- ஸகலாத்மாக்களுக்கும் வேஷத்வ பாரதந்தர்ய ரூப ஸ்வரூப விருத்தமென்றும் அறிந்திறே நராணாம்” என்று சேதந ஸாமாந்ய வாசி ஸப்தத்தாலே உத்தேஸித்து “புத்தி தெவ்ர்பல்யா துபாயாந்தர மிஷ்யதே” என்று உபாஸகனுக்கு புத்தி தெளர்பல்யத்தை ஹேதுவாக விதித்தது. ஆகையால் அகிஞ்சந வ்யதிரிக்தாதிகாரிக்கு அநு குணம் என்ன வொண்ணாது-‘கலக்கங்கள் ஸமிப்பித்தோம்’ என்கிறதும் ஸ்வ வசந வ்யாஹதம்- வ்யாஸாதிகள் உபாயாந்தர நிஷ்டரானது ஜ்ஞாந மாந்த்யாதி மூலம் என்னுமிடத்தை ஆழ்வார்களும். ஆசார்யர்களும் அருளிச் செய்தார்கள். “ஓராயிரம் என்கிற திருவாய்மொழியில் மூன்றாம் பாட்டிலே – (அறிந்தனரெல்லாம்) மற்றுடம் அறிந்தாராயிருக்கிற பராசர வ்யாஸ வால்மீகி ப்ரப்ருதி ருஷிகளும்- (அரியை வணங்கி) ஸர்வ துக்க நிவர்த்தகரை வணங்கி – ஆஸ்ரயித்து, (அறிந்தனர் நோய்களறுக்கும் மருந்தே) ஸம்ஸார துரித பேஷஜம் என்னும் இவ்வளவே வறிந்தார்கள் – “ஸம்ஸார ஸர்ப்ப ஸந்தஷ்ட நஷ்டா. சேஷ்டைக பேஷஜம்”அவனுடைய போக்யதையில் இழிந்திலர்கள்- அவனுடைய நிரபேக்ஷேபாய பாவத்தில் இழிந்திலர்கள்” என்றும். கண்ணி நுண் சிறுத் தாம்பு வ்யாக்யாந ப்ரவேஸத்திலே த்ரை குண்ய விஷயா வேத் என்கிற வேத மர்யாதையிலே நின்றார்கள் ருஷிகள் என்று தொடங்கி இத்தை உபபாதித்துக் கொண்டு போய், “இந்த ருஷிகளிற் காட்டில் ஆழ்வார்களுக்கு நெடு வாசி யுண்டு’ என்றும்,
ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யாநத்திலே(முனிவரை இத்யாதி.) (முனிவரை இடுக்கியும் முந் நீர் வண்ணனாயும் வெளியிட்ட ஸாஸ்த்ர தாத்பர்யங்களுக்கு விஸிஷ்ட நிஷ்க்ருஷ்ட வேஷங்கள் விஷயம் -1-17- அதாவது – *இருள்கள் கடியும் முனிவர்” என்கிற. ஸ்மர்த்தாக்களான வ்யாஸாதி ருஷிகளை..யிட்டு வெளியிட்ட சாஸ்தரத்துக்கு சேதனருடைய தேக விசிஷ்ட வேஷம் விஷயம்-ஸ்ரீ பதரி ஹாஸ்ரமத்திலே ஸ்வேன ரூபேண நின்று வெளி இட்ட சாஸ்திர தாத் பர்யமான திரு மந்த்ரத்துக்கு சேதனருடைய நிஷ்க்ருஷ்ட வேஷம் விஷயம் என்கை என்றும்
சாஸ்திரிகள் தெப்பக் கரையரை போலே இரண்டையும் இடுக்கி பிறவிக் கடலை நீந்த சாரஜ்ஞர் விட்டத்தில் இருப்பாரைப் போலே இரு கையும் விட்டு கரை குறுகும் காலம் எண்ணுவார்கள்-சூரணை1–19-ஆறு நீஞ்சுவார் தெப்பத்தை ஒரு கையிலே இடுக்கி தாங்களும் ஒரு கை துழாவுமா போலே-ஸ்வ யத்னமும் தத் சாத்திய பகவத் கிருபையும் ஆகிய உபயத்தையும் அவலம்பித்து கொண்டு -பிறவி கடல் நீந்துவார்க்கே -திருவாய் -2-8-1–என்கிற படியே சம்சார சாகரத்தை கடக்க தேட-ஸ்வ யத்ன நிஷேத பூர்வகமாக ஆத்மாவின் பகவத் ஏக உபாயத்தை பிரதி பாதிக்கிற சாஸ்திர சாரமான திரு மந்த்ரஜ்ஞர் ஆனவர்கள் ஓடம் ஏறினவர்கள் தீரகமனார்தமான ஸ்வ யத்னத்தையும் தெப்பத்தையும் கை விட்டு -கரை குறுவது எப்போது -என்று பார்த்து கொண்டு அதன் விட்டத்திலே இருக்குமா போலே-சம்சார ஆர்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம் விஷ்ணு போதம் விநாநாந்யத் கிஞ்சித் அஸ்தி பாராயணம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம்-என்கிற படியே-அக்கரையும் இக்கரையும் ஊடுருவ நின்று சம்சார சமுத்ரத்தை கடத்தும்-வைகுந்தன் என்பதோர் தோணியை-நாச்சியார் -5–4– சம்சார நிஸ்தாரமாகப் பற்றி-தத் ஞான சக்தியாதி அனுசந்தானத்தாலும் ஸ்வ பாரதந்த்ர்யாதி அனுசந்தானத்தாலும் நிர் பரர் ஆகையாலே இரண்டு கையும் விடுமா போலே-ஸ்வ யத்ன ரூப உபாசனாதியையும்-தத் சாத்திய பகவத் கிருபையையும்-அவலம்பிக்கையை விட்டு கேவல பகவத் கிருபையே உத்தாரகம் என்று அத்யவசித்து-கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ -திருவாய் -6–9–9 -என்றும்-ஆக்கை விடும் பொழுது எண்ணே–திருவாய் -1–2–9-என்று சொல்லுகிற படியே பகவத் பிராப்தி ஆகிய கரையை குறுகைக்கு ஈடான கால சிந்தனை பண்ணா நிற்பார்கள் என்கை-என்றும்
இவை-ஸ்வரூபத்தை உணர்ந்து உணர்ந்து உணரவும் உணர்வைப் பெற ஊர மிக உணரவும் உண்டாம்-சூரணை-1-20-இத்தால் இவர்கள் உடைய ஸ்வரூப ஜ்ஞான ஆகார தார தம்யமே-கீழ் சொன்ன ஆகாரங்கள் இவர்களுக்கு உண்டாகுகைக்கு ஹேது என்றது ஆயிற்று-என்றும்
முளைத்து எழுந்த ஸூர்ய துல்ய யாதாத்ம்ய சரமம் விதியில் காணும் பிரதம மத்யம தசைகளை பகல் விளக்கும் மின்மினியும் ஆக்கும்-சூரணை -23 –ஆழ்வார்கள் பகவத் ப்ரஸாதத்தாலே பெற்ற பாரதந்தர்ய போக்யதைகள் ஸூர்ய துல்ய யாதாத்ம்ய சரமமாகிறன -ருஷிகள் ஸாஸ்த்ரத்தாலே பெற்ற ஸேக்ஷத்வ போக்த்ருத்வங்கள் (விதியிற் காணும்) ப்ரதம மத்யம தஸைகள் ஆகிறன-மண்டினாரும் மற்றையாரும் ஆஸ்ரயம்- சூரணை -28 –அதாவது-கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டினார்-திருக் குறும் தாண்டகம் -19–என்று உகந்து அருளின நிலங்களிலே அத்ய அபிநிவிஷ்டராய் இருக்கிற பிர பின்னர் கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயம்-விளக்கினை விதியின் காண்பார் மெய்மையைக் காண்கிற்பாரே -திருக் குறும் தாண்டகம்-18–என்று கீழில் பாட்டில் சொன்ன மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே -திருக் குறும் தாண்டகம் -19—மற்றையரான–உபாசகர் கர்மத்துக்கு ஆஸ்ரயம் என்கை-என்றும் -மேலே பல ஸூத்ர வ்யாக்யாநங்களிலும் பரக்க அருளிச் செய்தார். திருநெடுந்தாண்டகத்திலே, *கல் எடுத்து” என்கிற பாட்டின் வ்யாக்யாநத்திலே ‘அஸக்தாதிகாரமிது, ஸக்தாதிகாரம். ஸாதநாந்தரங்கள் என்கிற வார்த்தை நம் ஆசார்யர்கள் கோஷ்டியிலே புகுரக் கடவதன்றியே யிறே யிருப்பது’ என்று பெரியவாச்சான் பிள்ளை நிஷ்கர்ஷித்தருளினார்.
பிள்ளை லோகாசார்யரும் முழுக்ஷுப்படியிலே “கொண்டிப் பசுவுக்குத் தடி கட்டி விடுவாரைப் போலே அஹங்கார மமகாரங்களால் வந்த களிப்பற்று ஸ்வரூப ஜ்ஞாநம் பிறக்கைக்காக‘. என்று அருளிச் செய்தார்- பெரிய ஜீயர் இதின் வ்யாக்யாநத்திலே ஆப்தனான வேத புருஷன் உபாயாந்தரங்களை விதித்தது பட்டி தின்று திரிகிற பசுவுக்கு வசப்படுகைக்கு என்றித்யாதி அருளிச் செய்தருளினர்-ஸ்ரீ வசந பூஷணத்திலே “வேதாந்தங்கள் உபாயமாக, விதிக்கிறபடியென்? என்னில்- ஓளஷத ஸேவை பண்ணாதவர்களுக்கு அபிமத வஸ்துக்களிலே அத்தைக் கலசி இடுவாரைப் போலே ஈஸ்வரனைக் கலந்து விதிக்கிறதித்தனை – இத்தை ப்ரவரத்திப்பித்தது பர ஹிம்ஸையை, நிவர்த்திப்பிக்கைக்காக- இது தான் பூர்வ விஹித ஹிம்ஸை போலே விதி நிஷேதங்களிரண்டுக்கும் குறை யில்லை. அத்தை ஸாஸ்த்ர விஸ்வாஸத்துக்காக விதித்தது. இத்தை ஸ்வரூப விஸ்வாஸத்துக்காக விதித்தது. அது தோல் புரையே போம். இது, மர்ம ஸ்பர்ஸி ” என்று அருளிச் செய்தார். ஆகையால் ‘பக்தி ஸக்தாதிகாரம், ப்ரபத்தி ஸக்தி ஹீநாதிகாரம்’ என்ன வொண்ணாது எண்றதாயிற்று-
இதி ஸத்தாந்தம்
———–
அத, பூர்வ பக்ஷ-ப்ரத்யேகோபாயதா ந ப்ரதி நியமவதாம் கர்ம யோகாதிகாநாம்.
ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே – இருபத்தொன்பதாமதிகாரத்திலே “ஸர்வ தர்மாந் பஹுவசநத்தாலே – ஸ பரிகரங்களாய் நாநா ப்ரகாரங்களான உபாஸநங்களை யெல்லாம் சொல்லுகையிலே தாத்பர்யம்.-புருஷோத்தமத்வ ஜ்ஞாநம் ஸர்வ வித்யைகளுக்கும் உபகாரகமான தத்த்வ ஜ்ஞாந மாத்ரமாகவும், அவதார ரஹஸ்ய சிந்தநம் அநுஷ்டிக்கிற உபாஸநாதிகளுடைய ஸீக்ர நிஷ்பத்தி ஹேதுவாகவும் தேஸ வாஸாதிகள் உபாய விரோதி பாப க்ஷய ஹேதுக்களாய்க் கொண்டு உபாய நிஷ்பாதகங்களாகவும் ஸ்ரீகீதா பாஷ்யாதிகளிலே ஸமர்த்திககையாலே, இவற்றை ஸாக்ஷாந் மோஷோபாயங்களாக்கி அங்கி பஹுத்வ விஷயமாந பஹு வசநத்தாலே விவக்ஷிக்கிறதென்கை யுசிதமன்று. நாநா ஸப்தாதி பேதாத் என்கிறபடியே இவை யொழியவும் ஸத் வித்யா தஹர வித்யாதி பேதத்தாலே அங்கி பஹுத்வம் கிடக்கையால் இப்பஹு வசநம் ஸார்த்தம்’ என்று சொல்லப் பட்டது.
இதி பூர்வபக்ஷி க்ரந்த-
அத, ஸித்தாந்த ததிதர ஸரணாந் யஸ்வ தந்த்ராணி நைவ
ஞான பக்த் யந்விதம் கர்ம ஜநகாதிஷு த்ருஸ்யதே -கர்ம பக்த் யந்விதம் ஜஞாநம் ப்ராயேண பரதாதி ஷு கர்ம ஜ்ஞாநாந்விதா பக்தி ப்ரஹ்லாத ப்ரமுகாஸ்ரயா* என்று கர்மாதிகள் ஸ்வதந்த்ரங்களாக ஸாஸ்த்ரோக்தங்களாகையாலும், புருஷோத்தமத்வ ஜ்ஞாநாதிகள் ஸர்வ வித்யாஸாதாரணங்களானாலும் ப்ரபத்தி போலே ஸ்வதந்த்ரமாகக் குறையில்லாமையாலும் இவற்றை ப்ரதாந மோக்ஷ ஸாதநமாக்கி பஹு வசநார்த்தமாகச் சொல்லுகை உசித க்ரமம். ஆகையிறே- ஸரணாகதி கத்ய வ்யாக்யாநத்திலே ‘(ஸர்வ தர்மாம்ஸ் ச ) ‘தர்மி ஸப்தத்தாலே உபாய ரூபமான கர்ம யோகாதிகளைச் சொல்லுகிறது” என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார். ரஹஸ்யாம்ருதத்திலே ‘தர்மாந் என்கிற பஹு வசநம் கர்ம ஜ்ஞாந பக்தி ரூபத்தாலே- அவைதான் மூன்று வகையாய்ப் பவவாயிருக்குமென்கிறது. இவை மூன்றும் தன்னில் தான் ஸஹகாரிகளாய்க் கொண்டு தனித்தனியே புருஷார்த்தத்துக்கு ஸாதநமாயிருக்கும். எங்ஙனே கண்டதென்னில், ஜ்ஞாந பக்திகளோடே கூடின கர்மம் ஐநகாதிகள் பக்சகலிலும், கர்ம பக்திகளோடே கூடின ஜ்ஞாநம் ஆதி பரதாதிகள் பக்கலிலும் கர்ம ஜ்ஞாநங்களோடே கூடின பக்தி ப்ரஹ்லாதாதிகள் பக்கலிலும் காணப்பட்டது. அவ்வோ க்ரியைகளை ப்ரதாநமாக அநுஷ்டிக்கிற கர்த்தாக்களுடைய பேதத்தாலே மூன்றாகச் சொல்லப்பட்டது. ஆகையாலே யிறே பகவச் ஸாஸ்த்ரத்தில் கர்மாத் யுபாயங்கள் மூன்று, என்றும்; ப்ரபத்தி சதுர்த்தோபாயமென்றும் சொல்லப் படுகிறது.” என்று வாதி கேஸரி அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்தார்.
முழுஷுப்படி சரம ல்லோக ப்ரகரண வ்யாகயாநத்திலே, இனி மேல் பஹுவசநார்த்தத்தை அருளிச் செய்கிறார்” என்று தொடங்கிப் பெரிய ஜீயர் அருளிச் செய்தவற்றையும் கண்டு கொள்வது-
——————
இதி ஸித்தாந்த-
அத, பூர்வபக்ஷ-: ஸாத்யோபாயேந ஸித்தம் பவதி –
ரஹஸ்ய த்ரய ஸாரத்திவே-இருபத்து மூன்றாமதிகாரத்திலே”க்ருபா விஸிஷ்டனான ஈஸ்வரன் – க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம் என்கிறபடியே சித்தோபாயம் – இவனுக்கு ப்ரஸாதகங்களான பக்தி ப்ரபத்திகள் ஸாத்யோபாயங்கள்” என்றும், ரஹுஸ்ய ரத்நாவளீ ஹ்ருதயத்திலே ‘மோக்ஷோ-: பாயமான ஸாத்யோபாயம் பக்தி யென்றும் ப்ரபத்தி என்றும் இரண்டுபடியாயிருக்கும்’ என்றும் சொல்லப் பட்டது. ஜ்ஞாந த்ரவ்யமும் இதினுடைய ஸர்வ விஷய விகாஸத்துக்கு ஸ்வரூப யோக்யதா ரூபையான ஸக்தியும். நித்யங்களாகையாவே அவற்றில் ஆவிர்பாவ ஸப்தம் முக்யமென்கிற உக்தியாலே மோக்ஷமும் என்றதாய்த்து.. [இந்த பங்கதிக்கு ஆகரம் காண வில்வலை )
இதி பூர்வபக்ஷ க்ரந்த:
அத, ஸித்தாந்த: ஸாத்,யோபாயேந ஸித்தம் ந பவதி
ஆசார்ய ஹ்ருதயத்திலே “மற்றொன்று கண்ணணல்லாஸ். என்கிற வைகல் வாழ்தலான ஸித்தோபாயம்’ என்று, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்தார். தத் வ்யாக்யாநத்திலே – ‘*குற்றமில் சீர் கற்று வைகல்வாழ்தல் என்கிற யாவதாத்ம பாவியான குண அனுபவத்துக்கு உடவான ஸித்தோபாயத்தை’ என்றும், **யாதுமில்லை மிக்கதனில் ” என்று தொடங்கி இவனை ஓழிய வேறு ஓன்றை ‘ரக்ஷகம்’ என்று பற்றினவர்கள் பண்டு நின்ற நிலையும் கெட்டு அநரத்தப் பட்டுப் போவர்கள்’ என்றும் அருளிச்செய்தார் பெரிய ஜீயர்-
நான்முகன் திருவந்தாதியிலே. திருமழிசைப் பிரான் “செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயம் பந்தனையார் வாழ்வேஸல் பழுது” என்று ஸ்வ ரக்ஷணத்துக்கு உடலாகச் ‘செய்யக் கடவதொரு ப்ரவ்ருத்தி யில்லாதபடி ஸ்வரூப பாரதந்த்ர்யத்தை அநு ஸந்தித்து எம்பெருமானே நிரவாஹகன் என்று அவன் தலையிலே ஸர்வ பரத்தையும் பொகட்டு தத் குணநுபவம் பண்ணி வாழுமவர்களே பழுதற வாழுமவர்கள் அந்ய ஸாபேஷமாகையாலே. அதி ஷூத்ரமாய் ப்ரதி புருஷம் தத்தத் ருச்யநு குணமாக வ்யவஸ்திதமாய் துக்க ஹேதுவான அஹங்கார மமகார கர்ப்பமாகையாலே பந்தகமாயிருக்கிற கர்மாத் யுபாய விஸேஷங்களைப் பற்றி நிறகிறவர்களுடைய வாழ்வாமாகில் நிஷ் ப்ரயோஜநமாயிருக்கும் என்று அருளிச் செய்கையாலே ஸாத்யோ பாயத்தாலே ஸித்த ப்ராப்தியிவ்லை என்றதாய்த்து
இதி ஸித்தாந்த:
———-
அத, பூர்வபஷ-
விஸத்ருஸம் ப்ராய்யமென்கிறதுவும். பூர்வபக்ஷ் க்ரந்தத்திலே ஸாப்தமாக வுண்டானால் அவ்விடங்களிலே கண்டு. கொள்வது. “ஸாத்யோபாயேந ஸித்தம் பவதி‘ என்கிறத்தாவே அது ஆர்த்தமாகில், தந் நிராகரணத்தாவே இதுவும் நிராக்ருதமென்று கொள்வது.
இதி பூர்வ பக்ஷ க்ரந்த,.
அத, ஸித்தாந்த: ஸத்ருஸம் ப்ராப்யம்.
ஸ்ரீ வசந பூஷணத்திலே ரத்நத்துக்குப் பலகறை போலேயும் ராஜ்யத்துக்கு எலுமிச்சம்பழம் போவேயும் பலத்துக்கு, ஸத்ருஸம் அன்று‘ என்று பிள்லை லோகாசார்யர் அருளிச் செய்தார். பெரிய ஜீயரும் அதின் வ்யாக் யாநத்திலே “பரமோதாரனான ஈஸ்வரன் இவன் பக்கல் பக்தி மாத்ரமே பற்றாசாக பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷத்தைக் கொடுத்தாலம் பலத்துக்கு இது ஸத்ருஸ ஸாதநமன்று என்கை என்று அருளிச் செய்தார். கத்ய வ்யாக்யாநத்திலே ‘பக்தி ப்ராப்யத்துக்கு விஸத்ருஸமாயிருக்கும். இது அதுக்கு எதிர்த்தட்டாம்படி ப்ராப்யத்துக்கு ஸத்ருஸமமாயிருக்கும்’ என்று ஆச்சான் பிளளை அருளிச் செய்தார்-
இதி ஸித்தாந்த.
———-
அத, பூர்வபஷ- அந்யேந சாந்யத்.
இதுவும் பூர்வ பக்ஷ க்ரந்தங்களிலே ஸாப்தமாய் உண்டான விடங்களிவே கண்டு கொள்வது. “ஸாத்யோபாயேந ஸித்தம் பவதி’ என்கிறத்தாலே ஆர்த்தமாகில், தந் நிராகரணத்தாலே ஏதந் நிராகரணமும் ஸித்தம்-
இதி பூர்வபக்ஷ க்ரந்த.
அத, ஸித்தாந்த- அந்யேந நாந்யத்
அவன் திருவடிகளுக்கு அவன் திருவடிகளே உபாயமென்று நம்மாழ்வார் அருளிச் செய்தார். “அஃதே உய்யப் புகுமாறு” என்றும், “திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ” என்றும் அருளிச் செய்தாரிறே. “நான் சொன்னதுவே உஜ்ஜீவிக்கைக்கு உபாயமும் உபேயமும் என்று தத் வ்யாக்யாதாக்களும் அருளிச் செய்தார்கள்-
முழுஷுப்படியில் த்வய ப்ரகரணத்திலே “சரணவ் ஸரணம்” என்கையாலே ப்ராப்யம் தானே ப்ராபகம் என்கிறது‘ என்று பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்தார். இந்த பக்ஷத்துக்கு பூர்வாசார்யர்களுடைய ஸ்ரீஸூக்திகள் அபரிமிதங்களென்று விவேகிகள் கண்டு கொள்வது
இதி ஸித்தாந்த-
———
அத பூர்வபக்ஷ தியாக, ஸித்த அநுவாத
ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே சரம ஸ்லோகாதிகாரத்திலே- “இவ்வநுவாதத்துக்கு அதிகாரி விஸேஷத்தைக் காட்டுகையே ப்ரயோஜநம்- அதில், ‘பரி’ என்கிற உபஸர்க்கம் அதிகார பவ்ஷ்கல்யத்தை விவக்ஷிக்கிறது.” *அநிதயம ஸூகம் லோகமிமம் ப்ராப்ய பஜஸ்வ. மாம்-என்கிற விடத்தில் ‘ப்ராப்ய’ என்கிறது விதி யன்றிக்கே. ‘ப்ராப்ய வர்த்தமாநஸ் த்வம்’ என்று வ்யாகயாதமானாப் போலே இங்கு ‘பரித்யஜ்ய ஸ்திதஸ்த்வம்’ என்று விவக்ஷிதமாகக் கடவது- இப்படி அர்த்தாந்தரங்களிலும் ப்ரயோகம் உண்டாகையாலே –த்வா-ஸ்ருதி மாத்ரத்தைக் கொண்டு த்யாகம் அங்கமென்ன வொண்ணாது- என்றும் “இங்கனன்றிக்கே கர்ம யோகம் ஜ்ஞாந யோகம், பக்தி யோகம்- என்கிற தர்மங்களினுடைய ஸ்வரூப த்யாகம் ப்ரபத்திக்கு அங்கமென்னும் பக்ஷத்தில், ப்ரபத்தி ஸர்வாதிகாரமன்றிக்கே ஒழியும்- தர்மாநுஷ்டாந ஸக்தனுக்கு இறே அவற்றினுடைய தியாகத்தை விதிக்க வேண்டுவது- இது பஹு ப்ரமாண ஸித்தமான கார்ப்பண்யமாகிற அங்கத்துக்கும் *புகலொன்றில்லா வடியேன் *, *குலங்களாய, குளித்து மூன்று” “ந தர்ம நிஷ்டோஸ்மி இத்யாதிகளிலே ப்ரஸித்தமான அகிஞ்சன அதிகாரம் என்கிற ஸம்ப்ரதாயத்துக்கும் விருத்தமாம்- ஈஸ்வரனைப் பற்ற அத்யந்த பரதந்த்ரதையாவே உபாயாந்தரங்களுக்கு க்ஷேத்ரஜ்ஞன் நித்ய அஸக்தன் என்று காட்டி இவனுக்கு அவற்றினுடைய த்யாகத்தை விதிக்கிறதென்னுமது ஸர்வ ஸாஸ்த்ர ஸ்வ வசந ஸ்வ ப்ரக்ருத்யாதி விரோதத்தாலே அத்யந்த பரிஹாஸ்யம்-அப்போது துல்ய ந்யாயதையாலே “வ்ரஜ* என்கை தானும் கடியாது- உபாயாந்தரங்களுக்கு ஜீவாத்மா நித்ய அஸக்தன் என்கை தங்களுக்கு அநிஷ்டமான அநுவாத பக்ஷத்துக்கு ஸ்திரீகரணம் பண்ணினபடியாமத்தனை – என்றும் சொல்லப்பட்டது –
இதி பூர்வபக்ஷ க்ரந்த-
அத, ஸித்தாந்த: தியாகஸ் சாங்கம்’ ப்ரபத்தே-
முமுஷுப்படியிலே,( பரித் யஜ்ய) த்யாகமாவது-உக்தோபாயங்களை அநுஸந்தித்து ஸூக்திகையிவே ரஜக புத்தி பண்ணுவாரைப் போலேயும் விபரீத திஸாகமநம் பண்ணுவாரைப் போலேயும் அநுபாயங்களிலே உபாய புத்தி பண்ணினோம் என்கிற புத்தி விஸேஷத்தோடே த்யஜிக்கை- பரி என்கிற உப ஸர்க்கத்தாலே பாதகாதிகளை விடுமா போலே ருசி வாஸனைகளோடும் கூட மறுவவிடாதபடி விட வேணுமென்கிறது. ‘ல்யப்’பாலே ஸ்நாத்வா புஜ்ஜீத என்னுமா போலே உபாயாந்தரங்களை விட்டே பற்ற வேணும் என்கிறது என்றும்- தனி சரமத்திலே த்யஜ்ய என்கிற ‘லயப்பாலே *ஸ்நாத்வா புஞ்ஜீத” என்கிறபடியே உபாய ஸ்வீகாரத்துக்கு உபாயாந்தர த்யாகத்தினுடைய அங்கத்வம் சொல்லுகிறது. யாகத்திலே இழியுமவனுக்கு தத் வ்யதிரிக்த ஸர்வ தர்ம த்யாகம் அங்கமாகிறாப் போலே இதுவும் ஆத்ம த்யாகமாகையாலே தத் வ்யதிரிக்த ஸர்வ தர்ம த்யாகம் அங்கமாகக் கடவதென்றும் முன்பே சொல்லிற்று-இத்தால் ஸாஸ்த்ர வையர்த்யமும் பரிஹரிக்கப்பட்டது- விட்டே பற்ற வேணுமாகில் ஸர்வாதிகாரத்வ பங்கம் வாராதோ வென்னில் அஸக்தனுமாய் அயோக்யனுமானவன் ஸ்வரூப ஞான வைஸத்யத்தாலே விட்டுப் பற்றக் கடவன் அல்லாதவர்களும்: உக்த லக்ஷணத்தாலே அஸக்தராயிருக்குமத்தன போக்கி ஸர்வத்திலும் அஸக்தரா யிருப்பா ரொருத்தருமில்லையே அவர்களும் விக்ந விளம்பாதி பயமுடையராகில் யதா யோக்யம் விட்டுப் பற்றக் கடவர்கள்-ஆகையாலே ஸர்வாதிகாரத்வ பங்கம் வாராது- இப்படிக் கொள்ளாதே ஸர்வோபாய ஸூந்யனுக்கு இது உபாயமென்னும் பக்ஷத்தில் ஸர்வோபாய ஸூந்யராயிருப்பார் ஓருத்தரும் இல்லை யாகையாலே அந்த பக்ஷத்துக்கும் இந்த தூஷணம் வருமாகையாலே த்யாகம் அங்கமென்கிறவிது உபபந்தம் என்றும் பிள்ளை வோகாசார்யர் அருளிச் செய்தார்
ரஹஸ்ய த்ரயத்திலே இவ் விடத்திற் பரிஹாரம் சொல்ல ப்படுகிறது. விளம்பா க்ஷமனான புருஷனுக்கு சிர கால ஸாத்யமான உபாயங்களில் துஷ்கரத்வாதி யடியான ஸ்வத பரி த்யாகமும் உபாய ஸூந்யத்வமடியான ஸோகோதயமும் கூடும். அதின் விரோதியைப் பார்த்தாலும் அநாகதமான அநந்த காலத்திலும் ஸந்தாரோபாயம் காணவரிதென்று உபாயாந்தர துஷ்கரத்வத்தை நச்சி கத்யத்திலே பாஷ்யகாரர் அருளிச் செய்தார்-இப்படி ஸ்வதஸ் ஸித்த த்யாகம் ஸம்பவிக்கிலும் இங்கு சொல்லுகிறபடி த்யாகம் அதுவன்று- அதாவது இவ் விஷயத்தில் விதிக்கப்படுகிற ப்ரபதநத்தினுடைய ஸ்வரூபம் உபாயாந்தர ஸம்ஸர்க்கத்தை ஸஹியாது என்னுமிடம் வசந பலத்தாலே கொள்ள வேணும்- அந்த உபாயாந்தர ஸம்ஸர்க்க அஸஹத்வமாகிற உபாய ஸ்வரூபம் இவ் விடத்தில் வேறொரு ப்ரமாணத்தாலே காண வொண்ணாமையாலே ஸாஸ்த்ர விதியை அபேஷித்திருக்கும்- இத்தாலேயிறே ‘ஸர்வ’ஸப்தத்துக்கு அர்த்தபூர்த்தி அல்லாத போது நிரவஸேஷ த்யாகம் ஸித்தியாதே- தானே உபாயங்களை துஷ்கரமென்று விட்டவணுக்கு ஸக்யாம்ஸம் அநுவர்த்தித்தால் விரோதமில்லை –
ரஹஸ்யாம்ருதத்திலே, “இன்னமும் அநுவாத பக்ஷத்திலே த்யாகம் துஷ்கரத்வமடியாகவாகை ராஜஸமாய்க் கொண்டு ஜ்ஞாந கார்யமல்லாமையால் நிஷ் ப்ரயோஜநமாம்- அதாவது காய க்லேஸ பயத்தாலே கர்மத்தை துக்க கரமென்று, ஸ்வரூபேண விட்டவன் ராஜஸ த்யாகம் பண்ணினாகையாலே த்யாக பலமான கஷாய பாக மநோநைர்மல்ய ஐ்ஞாநோத்பத்த் யபிவ்ருத்திகளைப் பெறான் என்று தியாகத்தை வித்யோபதேஸத்திலே ஸரண்யண் தானே அருளிச் செய்தான் -அந்த ந்யாயத்தாலே இந்த அதிகாரிகளுக்கும் துஷ்கரம் என்று விடுமளவில் நிரவஸேஷ த்யாகம் கூடாமையாலே- தியாக பலமான ஆகிஞ்சன்யம் ஸித்தியாது-விதேய பக்ஷத்தில் த்யாகம் ஸாஸ்த்ரமாகையாலும் ஸாத்விகமாகையாலும், ஜ்ஞாந கார்யமே யாயிருக்கும்’ என்றும்- ஆகையால் ஸர்வோபாய ஸம்ஸர்க்க அஸஹமாந ப்ரபதந ஸ்வரூபம் விதேயமாகையாலே இவ் விடத்தில் ஸர்வ தர்ம த்யாகத்தினுடைய விதேயத்வம் மிகவும் உபபந்நம்’ என்று வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்தார். “சிலர் , ‘இங்கு த்யாகத்தை விதிக்கிறதன்று அநுவதிக்கிறது’ என்பர்கள். அதுக்கு ஸப்த ஸ்வாரஸ்ய மில்லாமையாலே தர்ம த்யாக விஸிஷ்டமான ஸரணாகதியை விதிக்கிறதென்று ஆழ்வான் பணிக்கும்- எண்று சரம ரஹஸ்யத்திலே நயினாராச்சான் பிள்ளை அருளிச் செய்தார்.
இதி ஸித்தாந்த–
———-
அத பூர்வ பக்ஷ ப்ரணவ விரஹத: அஷ்டாக்ஷரத்வம் மநோஸ் ச
ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே மூல மந்த்ராதிகாரத்திலே ந ஸ்வர ப்ரணவோங்காநி நாப்யந்யவித யஸ்ததா ஸ்த்ரீணாம்ஸ் ச ஸூத்ர ஜாதீநாம் மந்த்ர மாத்ரோக்திரிஷ்யதே- என்கிறபடியே ப்ரணவ மொழிந்த போது, “தத்ரோத்தராயணஸ்யாதி பிந்துமாந் விஷ்ணு ரந்தத. | பீஜ மஷ்டாக்ஷரஸ்ய ஸ்யாத்தேநாஷ்டாக்ஷரதா பவேத்” என்கிற ப்ரக்ரியையாலே எட்டெழுத்தும் அநுஸந்தேயமாக விதிக்கப்பட்டது’ என்று, சொல்லப் பட்டது-
இதி பூர்வபக்ஷ க்ரந்த
அத ஸித்தாந்தம் -பிரணவ விரஹத அஷ்டாக்ஷரத்வம் மநோஸ் ச
இதினுடைய அஷ்டாக்ஷரத்வம் சொல்லுகிற விடத்தில், ஓமித்வேகாக்ஷரம் என்று ப்ரணவத்தை ஓரக்ஷரமாகவும், “நம இதி த்வே அக்ஷரே” என்று நமஸ்ஸூ இரண்டு அக்ஷரமாகவும், “நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி* என்று. நாராயண பத,த்தை அஞ்சக்ஷரமாகவும் ஸ்ருதி சொஸ்லுகையாலே ஸமஸ்தமான நாராயண பதத்தில் நார பதத்தைப் பிரித்து ஷடஷரமாக்க ப்ரணவத்தை யொழிய அஷடாக்ஷரத்வம் சொல்லுமவர்களுடைய பக்ஷம் அவைதிகமாகையாலே அநாதரணியமாகக் கடவது’ என்று முழமுஷுப்படி வ்யாக் யாநத்திலே பெரிய ஜீயர் அருளிச் செய்தார்.
*நஸ்வர ப்ரணவோங்காநி * இத்யாதிகள்-நாரதீ யாஷ்டாக்ஷர ப்ரஹ்ம வித்யையிலே ஜப ப்ரஸ்தாவபடித மாகையாலே ஸ்த்ரீ ஸூத்ராதிகளுக்கு ப்ரணவாதிகார நிஷேதம்- ஜப விஷயமாமத்தனை யென்று தத்வஜ்ஞர் தெளிந்து கொள்வர்கள். ஆகையால் ‘விரோதாதிகரண ந்யாயத்தாலே ஸ்ருதி விருத்த ஸ்ம்ருதி அப்ரமாணமாகையாலே அநாதாரணீயம்’ என்று நிர்வஹித்து “ந ஸ்வர.” இத்யாதி வசநத்துக்கு கதி கல்பிப்பதும் அவிவக்ஷிதமென்று கொள்வது -[ரஹஸ்ய த்ரய ஜீவாது முதலிய ரஹஸ்ய க்ரந்தங்களில் இப்படி கதி கல்பிக்கப்பட்டது காண்க)
இதி ஸித்தாந்த,
அத, பூர்வ பக்ஷ. ஸருஷ்ட்யாதவ நைவ ஸக்தி ஸ்புட மதி மஹதாம் நித்ய முக்தாதி காநாம்
ஸ்தோத்ர பாஷ்யத்திலே [ஸ்தோந்ர ரத்நே த்வத் ஆஸ்ரிதாதாம் ஐகதுத்ப ஸ்திதி . இத்யாதி–விம்ஸ ஸ்லோக பாஷ்யே – ஏவம். முக்தாநாம்-ஜகத் வ்யாபாரே ஸக்திரஸ்தி, தத் ப்ராப்திர் நாஸ்தீதி பக்ஷோபி ந விசாரார்ஹ ந ஹி முக்தாநாம்
ஸர்வ ஸரீரத்வம் அஸ்ருதத்வாத், அநுபபத்தேஸ் ச। தத பாவே கதம், பஹுஸ்யாம்” இதி ஸங்கல்ப ஸக்தி, ததாவித ஸக்தி ஸாலிந தத,ப்ராப்திஸ் சாத்ர துர்வசா ததைவ நித்யாநாமபி | உக்தம் ஹி பாஷ்யே அநந்த பத வ்யாக்யாநே ‘ஸாதிஸய ஸ்வரூப ஸ்வகுணா ; நித்யா வ்யாவ்ருத்தா:’ இதி அத யதோக்த ஏவார்த்த ‘ஜகத் ஸ்ருஷ்ட்யாதி பார அஸ்மிந் ஸமர்ப்பித இதி கேஷாஞ்சித் வயாக்யாநம் து. பகவததீந தத் ப்ரபாவாதிஸய ப்ரஸம் ஸார்த்தம் | ஏகஸ்யைவ ஹி ஸர்வ ஸரீரிண “பஹுஸ்யாம் இதி ஸங்கல்ப க்ஷமத்வமிதி ப்ராகேவ ஸ்தாபிதம்। அத எவ ஹி “ஸ்ரீமதி விஷ்வக்ஸேநே ந்யஸ்த ஸமஸ்தாத்மைஸ்வர்யம்* இதி ஸ்ரீவைகுண்ட கத்யோக்திரபி , பக்தாநாம் ஸ்வாமிநோ வா விக்ந ப்ரஸமநே பரிஜன நியோகாதவ் ச யோஜநீயா! விஷ்வக்ஸேந மந்த்ரே து *விஸ்வம் ஸ்ருஜ இதி பதம் முக்தவத் ப்ரபூத ஸ்ருஷ்டி மாத்ர விஷய பரம் விசேஷ்ய பூத பரமாத்ம பரம் வா நேதவ்யம்‘ என்று சொல்லப் பட்டது.
இதி பூர்வபக்ஷ் க்ரந்த,.
அத, ஸித்தாந்த ஸ்ருஷ்ட்யாதெவ் சாஸ்தி ஸக்தி) ப்ரபு நியமநதோ நித்ய முக்தாதிகாநாம்.
விஷ்வக்ஸேந மந்த்ரத்திலே ,*விஸ்வம் ஸ்ருஜே * என்று இவருக்கு ஸ்ரஷ்ட்ருத்வம் கண்டோக்தம் –ஸங்கல்ப மாத்ரா வக்லுப்த ஜகஜ் ஜென்ம ஸ்திதி த்வம்ஸாதிகே ஸ்ரீமதி விஷ்வக்ஸேந ந்யஸ்த ஸமஸ்தாத்மைஸ்வர்யம்” என்று ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே பாஷ்யகாரர் அருளிச் செய்தார்- ஆகையாலே ‘நித்ய முக்தாதிகளுக்கு ஸ்ருஷ்ட்யாதியில் ஸக்தி யில்லை என்கை- எம்பெருமானார் திவ்ய ஸூக்திக்கு அத்யந்த விருத்தமாகையாலே எம்பெருமானார் தர்ஸநஸ்தராலே அத்யந்த பரிஹாஸ்ய மாயிருக்கும்- “தம்முடைய ஸங்கல்பத்தாலே ஐகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைப் பண்ணக் கடவ ஸேனை முதலியார் தொடக்கமான திவ்ய புருஷர்களும் வரிசையிலே ஸேவித்திருக்க’ என்கிறபடியே ஸ்ரீய பதியான ஸர்வேஸ்வரன் தானே தன்னுடைய உபய விபூதியையும் அன்ன புகழ் முடும்பை யண்ணலுகாசிரியருக்கு ஸாக்ஷாத் கரிப்பிக்க அப்படியே விஸத விஸததர விஸத தமமாக உபய விபூதியையும் யதாவஸ்தித ஸ்வரூப ஸ்வபாவமாக ஸாக்ஷாத் கரித்த ப்ரகாரத்துக்குப் பாசுரமிட்டருளின அர்ச்சிராதியிலும் “இதில் நித்யராவார் ஒரு நாளும் ஸம்ஸார ஸம்பந்தமாகிற அவத்யமின்றிக்கே. நிரவத்யராய் -வானிளவரசு வைகுந்தக். குட்டன் வாசுதேவன்- என்கிற வைகுண்ட நாதனுக்கு விண்ணாட்டவர் மூதுவர்: என்கிறபடியே பட்டம் கட்டுகைக்கு உரியராம்படி மூப்பரான மந்த்ரிகளாய் ஈஸ்வர நியோகாத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைப் பண்ணவும் ஸக்தராய்’ என்றும், ஸ்தோத்ர ரத்நத்தில்,”த்வத் ஆஸ்ரிதாநாம்“என்கிற ஸ்லோக வ்யாக்யாநத்தில் தேவரை தூர நின்று ஆஸ்ரயிக்கிற ப்ரஹ்மாதிகள் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கர்மங்களை உபதேஸ க்ரமத்தாலே பெற்று ஸம்ஸார விமோசநத்தைப் பண்ண ஸக்தராண பின்பு, அநந்யப்ரயோஜநராய் ஆஸ்ரயிக்குமவர்கள் அவற்றைச். செய்யப் பார்த்தால் லீலையாகா நின்றது- முக்தர் தேவரோடே லீலா ரஸம் அநுபவிக்கும்போது ஸங்கல்பத்தாலே ஜாத்யாதிகளை ஸ்ருஷ்டித்திறே அநுபவிப்பது. “ஸங்கல்பாதேவ தச்ச்ருதே.* *ஸங்கல்பாதேவாஸ்ய பிதரஸ் முக்த்திஷ்டந்தே” ஜகத் ஸ்ருஷ்ட்யாதி ப்ராப்தி யில்லாமைபோக்கி ஸக்தி யில்லாமையாலே தவறுகிறாரல்வர்’ என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தருளினார்-
ப்ரஹ்மாதிகளுடைய ஏக தேஸ ஸ்ரஷ்ட்ருத்வாதி ஸக்தி ஈஸ்வராதீனை யாகிறாப் போவே நித்ய முக்தருடைய ஸகல ஐகத் ஸ்ருஷ்ட்யாதி ஸக்தியும் ஈஸ்வராதீனை யிறே- ஆகையால். நித்யமுக்தர்களுக்கு ஸ்ருஷ்ட்யாதியில் ஸக்தி உண்டென்னுமிடம் உபபந்நம்-
இதி ஸித்தாந்தம்
அத பூர்வ பக்ஷ -தோஷா த்ருஷ்டிஸ்து வாத்ஸல்யம்-
ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே த்வயாதிகாரத்திலே, “இவற்றில் வாத்ஸல்யமாவது. – தோஷே யத்யபி தஸ்ய ஸ்யாத்” என்கிறபடியே ஆஸ்ரிதருடைய தோஷம் பாராதே அங்கீகரிகைக்கீடான இரக்கம்” என்றும், ரஹஸ்ய ரஷையில், ப்ருது கத்யாதிகாரத்திலே, “வாத்ஸல்யம் – ஸரணகத வத்ஸல ‘ இத்யாத்யபிப்ரேதா ஸ்வ ரக்ஷணீ யதயாபி மதேஷு தோஷதிரஸ்காரிணீ ப்ரீதி தோஷாணமபி குணத்வேந தர்ஸநம்’ இதி து அதிவாத,! என்றும் சொல்லப்பட்டது.
இதி பூரவ பஷ க்ரந்த,.
அத, ஸித்தாந்த-தோஷேஷு இச்சைவ வாத்ஸல்யம்.
“வாத்ஸல்யம் நாம தோஷேஷ்வபி குணத்வ புத்தி யதா மாதுர்வத்ஸே’ என்று ஸமந்வயாதிகரண பாஷ்ய ஸ்ருத ப்ரகாஸிகையிலும், ‘வாத்ஸல்யம் நாம தோஷேபி குணத்வ புத்தி யதா ஸத்ய ப்ரஸூதாயா தேநோர் வத்ஸே ‘ என்று ஸரணாகதி கத்ய ஸ்ருத ப்ரகாஸிகையிலும் வேத வ்யாஸ பட்டர் அருளிச் செய்தார்-
ஞான ஸாரத்திலே, “அற்றமுரைக்கில் வடைந்தவர் பாலம்புயை கோன் குற்றமுணர்ந்திகமும் கொள்கையனோ- எற்றே தன் கன்றினுடம்பின் வழுவன்றோ காதலிப்பது அன்றதனை ஈன்றுகந்த வா’ (25-பா) என்று அருளாளப் பெருமாளெம்பெருமானார் அருளிச் செய்தார்-(இது ப்ரஷிப்தம் ] (அதற்கு. “ப்ரபந்நாந் மாதவஸ் ஸர்வாந் தோஷேண பரிக்ருஹயதே | அத்யஜாதம் யதா வத்ஸம். தோஷேண ஸஹ வத்ஸலா(பரிக்ருஹ்யதே -பரிக்ருஹ்ணா நீத்யர்த்த ஆர்ஷத்வான் ந தோஷ என்று பவ் ராணிக ப்ரமாணம் சேர்த்தருளினார் பெரிய ஜீயர் )-குன்றனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும்” *செய்தாரேல் நன்று செய்தார் *செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே – என்றித்யாதி ஆழ்வார்களும் அருளிச் செய்தார்கள் – தோஷம் போக்யமாகில் (தோஷம்)புத்தி பூர்வகமாகச் செய்ய வேண்டி வாராதோ வென்னில் வாராது – *உண்ணிலாவிய வைவரால் குமை தீற்றி , *பல நீ காட்டிப் படுப்பாயோ”, *ஐவரறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன்” இத்யாதிகளிலே ஜ்ஞாநி களுக்கு தோஷம் பயாவஹமாகச் சொல்லுகையாலே புத்தி பூர்வகமாகச் செய்யானென்னுமிடம் (‘செய்ய வேண்டா என்னுமிடம்! – (க) பாடம்] ஸித்தம்-தனி சரமத்திலே “வாத்ஸல்யமாவது – ஸத்யோஜாதமான வத்ஸத்தின் பக்கல் தேநுவுக்கு உண்டாண காமம், அதாவது – சுவடு பட்ட தரையிலே புல் தின்னாத பசு அன்றீன்ற கன்றின் தோஷத்தை தோஷமெண்று கருதாதே தனக்கு போக்யமாகக் கொன்ளுமா போலே, ஆஸ்ரிதருடைய தோஷத்தைத் தன் பேறாகப் போக்கித் தன் கல்யாண குணங்களாலே தரிப்பிக்கை! என்று பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்தருளினார்-
இதி ஸித்தாந்த-
———–
அத பூர்வபக்ஷ- பர துக்கத் த்ருதீச்சா தயா.
ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே த்வயாதிகாரத்திலே, ‘பரம காருணிகத்வமாவது – ஸவார்த்த, நிரபேக்ஷையான பர துக்க நிராகரணேச்சை.! என்றும், ரஹஸ்ய ரஷையில் – ப்ருது கத்யாதிகாரத்திலே.’காருணிகத்வம் – அநுத்திஷ்ட ஸ்வ ப்ரயோஜநாந்தர பர துக்க நிராகரணேச்சா | பர துக்க துக்கித்வாதிகம் து ந லக்ஷணம் அவ்யாப்தே அதி வ்யாப்தேஸ் ச । ஸர்வ ப்ரஸாஸிது, ஸாபராத நிக்ரஹஸ்யாபி ஸாஸ்த்ர ஸித்ததவாத் ததநுரோதேந காருண்யம் நியந்தவ்யம்” என்றும் சொல்லப் பட்டது.
இதி பூர்வபக்ஷ க்ரந்த-
அத, ஸித்தாந்த-பர துக்க அஸஹத்வம் -தயா–
ஸ்ரீ பாஷ்யத்திலே பல விடங்களிலும் தயா ஹி நாம ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க அஸஹிஷ்ணுதா’ என்று பாஷ்யகாரர் அருளிச் செய்தார்- திருவாய்மொழி உயர்வற உயர்நலத்தின் ஈட்டிலே ‘துயரறு சுடரடி என்று எம்பெருமானார் அருளிச் செய்யும்படி வ்யஸநேஷு மநுஷ்யாணாம். ப்ருஸம் பவதி துக்கித- என்றால் துக்க நிவ்ருத்தியும் அவனதாயிருக்குமிறே- இவர் துயரற தான் துயர் தீர்ந்தானாயிருக்கை- இத்தால் இவர் மயர்வற அவன் துயரற்றபடி” என்றும், ‘(அவன் மேவி யுறை கோயில்) அவன் பரம பதத்தில் உள் வெதுப்போடே போலே காணுமிருப்பது- ஸம்ஸாரிகள் படுகிற கிலேசத்தை அநுஸந்தித்து இவை என்படுகிறனவோ’ என்கிற திருவுள்ளத்தில் வெதுப்போடே யாயிற்று அங்கிருப்பது. “நோபஜநம் ஸ்மரந் என்று கொண்டு இங்குத்தை துக்கத்தை நினையாது ஓழிய வேண்டுவது பண்டு துக்கியாயிருந்து ஸம்ஸாரத்தில் நின்றும் போனவனுக்கிறே. இங்குத்தை துக்கத்தை நினைக்குமாகில், அநுபவிக்கிற ஸுகத்துக்குக் கண்ணழிவாகாதோ என்னும் கண்ணழிவில்லை யிறே அவனுக்கு- ‘பரமபதத்திலும் ஸம்ஸாரிகள் படுகிற கிலேஸத்தை அநுஸந்தித்துத் திருவுள்ளத்தில் வெ(து)றுப்போடே யாயிற்று எழுந்தருளி யிருப்பது’ என்று பட்டர் அருளிச் செய்ய ஆச்சானும் பிள்ளை யாழ்வானும் இத்தைக் கேட்டு-‘பரம பதத்திலே ஆநந்த நிர்ப்பரனா யிருக்கிற விருப்பிலே திரு உள்ளத்திலே ஒரு வியசனத்தோடே இருந்தான் என்கை
உசிதமோ? என்றார்கள் என்று பண்டிதர் என்கிறவர் வந்து விண்ணப்பம் செய்ய “வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்ரூஸம். பவதி துக்கித.” என்றது குண ப்ரகரணத்திலேயோ, துக்க ப்ரகரணத்திலேயோ’ [ தோஷ ப்ரகரணத்திலேயோ’ என்றபடி) என்று கேட்க மாட்டிற்றிலீரோ? இது குணமாகில் குணம் என்று பேர் பெற்றவற்றில் அங்கில்லாததொன்றுண்டோ” என்று அருளிச் செய்தார் *ஸமஸ்த கல்யாண குணாத்மகோ அஸவ் * என்னக் கடவதிறே. தன்னிச்சை யொழிய கர்ம நிபந்தநமாக வருமவை யில்லை. என்னுமத்தனை போக்கி அநுக்ரஹ கார்யமாய் வருமவை யில்லை என்னில்-முதலிலே ‘சேதநனன்றிக்கே ஒழியுமிறே ‘ஸ ஏகாகீ ந ரமேத என்றது – நித்ய விபூதியும் குணங்களும் உண்டா யிருக்கச் செய்தே யிறே” என்றும் நம்பிள்ளை அருளிச் செய்தருளினார்-
ஸ்ரீ ஸஹஸ்ரநாமத்திலே -விகர்த்ரு- நாம பாஷ்யம் அருளிச் செய்யா நின்ற பட்டர் ஸ்வார்த்த ஹர்ஷ ஸோக அந்ய பாவேபி பரார்த்த தத் ப்ரஸக்திரதோஷ | அந்யதா பரதுக்க துக்கித்வாதயோ குணா கதம் அஸ்ப ஸ்புட- என்று வ்யக்தமாக அருளிர் செய்து போந்தாரிற ஸ்ரீ வேத வ்யாஸ பட்டரும்- தயா ஹி ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க அஹிஷ்ணுதா என்று ஜிஜ்ஞாஸ அதிகர ஸ்ருத ப்ரகாஸிகையிலும் காருண்யம். – ஸ்வார்த்தா ந பேஷயா பர துக்க அஸஹிஷ்ணுதா” என்று சரணாகத ஸ்ருத ப்ரகாஸிகையிலும் அருளிச் செய்தார் – *ஆவாவென்றருள் செய்தான்” என்றும், ”அடியோர்க்காவாவென்னாய் என்றும், “ஆவா வடிபணிவனென்று அருளாய் ? என்றும். *அடியேர்க்காவாவென்றிரங்கி* என்றும், “ஆவாலென்நடியேத்கிறை இரங்காப்* ன்றும். அப்போ வப்போ வென்று க்ருபை பண்ணி யென்றும்- க்ருபை யாகிறது- பர துக்க அஸஹிஷ்ணுத்வமென்றும் , “மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் ஸ்பஷ்டமாக அருளிச் செய்தார்கள்-தத்வ த்ரயத்திலே – ஈஸ்வர ப்ரகரணத்திலே, “க்ருபை துக்கிகளுக்கு ‘ என்கிற விடத்தில் வ்யாக்நதத்தில் -கிருபையாவது -பர துக்க அஸஹிஷ்ணுத்வமாகையாலே -ஆவாரார் துணை என்று அவ நீர் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக்கடலுள் நின்று துளங்குகை முதலான துக்க முடையவர்களுக்கு உறுப்பாமிருக்குமென்கை என்று பெரிய ஜீயர் அருளிச் செய்தார்.
ஆகையால் நம்மாழ்வார் முதலான ஆழ்வார்களும், எம்பெருமானார் முதலான ஆசார்யர்களும் ஒரு மிடறாக அருளிச் செய்தருளின ஸுக்திகளுக்கு விருத்தமாக அர்த்த கல்பநம் அத்யந்தாநுப பந்நம்-
இப்படிப் பிள்ளை லோகாசார்யர் பெரிய ஜீயர் முதலான நம் ஆசார்யர்கள் அருளிச் செய்த அர்த்த விஸேஷங்களுக்கே ப்ரமாணோபபத்தியில் ஸம்ப்ரதாயமுண்டாகையாலே இதுவே ப்ராமாணிகருக்கு உபாதேய மென்றதாயிற்று-
அழகிய மணவாள நயினார் அருளிச் செய்த ரஹஸ்ய விவேகம் முற்றிற்று.
அவன் பக்கலிலே நிஷிபத பரராயிருககின்ற நீங்கள் நாலவரிருவர் இங்கிருககிற நாலு நாளும் த்யாஜ்யமான அர்த்த காமங்களைப் பறறி “சீறு பாறு? என்னாதே நம் பெரிய குழாத்திலே போயப் புகுமளவும ஒரு மிடறாய் அநுபவிக்கப் பாருங்கோள் –பூர்வர் ஸ்ரீ ஸூக்தி ரத்னம்
எம்பெருமானார் திருவடி சம்பந்தம் பெற்ற பாக்யவான்கள் வம்சத்தில் பிறந்து வைத்து-ஞான அனுஷ்டானங்களை ஒழிந்தாலும் அவர்கள் ஸம்பந்தமே பேற்றுக்கு உபாயமாகிறாப் போலே அவை யுண்டானாலும் இழவுக்கு ௮வர்கள் பககல் அபசாரமே போதும” ஸ்ரீவசந பூஷண ஸ்ரீ ஸூக்தி –
எம்பெருமானாருடைய திருவடி ஸம்பத்திகளிலே, கூரத்தாழவான் எம்பார் பட்டர் நஞ்சீயர் நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளை பிள்ளை லோகாசாரியர் திருவாய் மொழிப் பிள்ளை மணவாள மா முனிகள் என்கிற ஒரு ஆசார்ய பரம்பரையும் –
திருக் குருகைப் பிரான் பிள்ளான் , கிடாம்பியாச்சான் , எங்களாழவான் , நடாதூரம்மாள் , கிடாம்பியப்புள்ளார் , வேதாந்த தேசிகன் என்கிற ஒரு ஆசார்ய பரம் பரையும் ஏற்பட்டு இரணடு வகுப்பிலுமுள்ள ஆசாயர்களும் உபய வேதாந்த ப்ரவர்த்தங்களாய அற்புதமான ஸ்ரீ ஸூக்தி ரத்னங்களாலே இவ் விபூதியை இருள் தருமா ஞாலமென்று பேச வொண்ணாத படி ஆக்கி யருளினவர்கள்-பிராசீனமாயும் அதே சமயம் குண புஷ்கலமாயும் இருக்கும் நம் ராமானுஜ தரிசனத்துக்கு எதுவுமே நிகரில்லையே
யதி ஷமாப்ருத் த்ருஷ்டம் மதம் இஹ நவீ நம் ததபி கிம் –
தத் பராக் ஏவ அந்யத் வத ததபி கிம் வர்ண நிகேஷ
நிசாம் யந்தாம் யத்வா நிஜமத திரஸ்கார விகமாத்
நிரா தங்கா டங்க த்ரமிட குஹதேவ பரப்ருதய –57
ஓ, ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் சமீபத்தியது என்பதில் நீங்கள் திருப்தி அடைகிறீர்கள்.
எல்லாம் சரி. எந்த பிரச்சினையும் இல்லை. அப்படியே இருக்கட்டும். என்றால் என்ன?
அப்படியானால், அதற்கு முன்னரே ஏதோ ஒரு மதம் இருந்திருக்க வேண்டும் என்று
நீங்கள் சுட்டிக் காட்டலாம். இது எதை நிறுவுகிறது-பூர்வர்கள் ஸித்தாந்தம் என்னும் ஸ்வா ரஸ்யம் ராமானுஜ தர்சன ஸித்தாந்தத்தை உரைத்துப் பார்த்தால் அகப்படும் -அநாதி மதமே யன்றி நவீநமதமன்று என்பது தெற்றென விளங்கும்-என்றவாறு-ஒழிக்க ஒழியாத ஸம்பந்த ஞான மாத்ரமே மமககு மேலான நன்மைகளுக்கு எல்லை அஃது உணடானால் நாம் எம் பெருமானோடு விவாதப் பட மாடடோம் – எவ்விதப் பணி விடைகளும் நாம் செய்தோமாவோம்
யமோ வைவஸவதோ ராஜா யஸ தவைஷ ஹருதி ஸதித; தேந சேத விவாதஸ தே மா கககாம மா குரூ ந கம ‘ மநு -8-92-ஸர்வ நியாமகன் -தண்டதரன் -ஸூர்ய வம்சத்தன் -ஆதித்ய மண்டல மத்யவர்த்தி-ஸமஸ்தருக்கும் இனியவன் -உள்ளத்திலே உறைபவன் -இதை உணர்வது சேஷத்வ கைங்கர்யம் செய்தால் கங்கை நீராட்டமோ தீர்த்த யாத்திரையும் வேண்டாமே-அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே –1-2-7-இந்த ஐஸ்வரியம் எல்லாம் நமக்கு வகுத்த சேஷியானவனுடைய ஐஸ்வரியம் என்று அனுசந்திக்கவே – நினைத்தால் தானும் அதுவாக அந்வயிக்கலாம் இறே -சேரலாமே!-ஆன பின்னர், சம்பந்த ஞானமே வேண்டுவது என்கிறார்.
ஒரு வணிகன் தன் மனைவி கருவுற்று இருக்குங்காலத்தில்-அர்த்த ஆர்ஜனம் – பொருள் தேடும் விருப்பினால் வெளி நாடு சென்றான்; அவளும் கரு உயிர்த்தாள்; மகனும் தக்க வயது அடைந்து தனக்கும் தகப்பனாருடைய வாணிகமே தொழிலாக மகனும் பொருள் தேடப் போனான். இருவரும் தத்தமக்கு வேண்டிய சரக்குப் பிடித்துக்கொண்டு வந்து ஒரு பந்தலில் தங்கினார்கள்; அஃது, அவ்விருவருக்கும் இடம் போதாமையால் அம்பு அறுத்து எய்ய வேண்டும்படி விவாதம் உண்டான சமயத்தில், இருவரையும், அறிவான் ஒருவன் வந்து,‘இவன் உன் தமப்பன்; நீ இவன் மகன்,’ என்று அறிவித்ததால்,கீழ் இழந்த நாள்களுக்குச் சோகித்து, இருவர் சரக்கும் ஒன்றாய்,அவன் -ரக்ஷகனாய் -காப்பாற்றுகின்றவனாய் இவன் -ரஷ்யமாய் -காப்பாற்றப்படும் பொருளாய் அந்வயிக்கலாம் அன்றோ-கலந்துவிடுவார்கள் அன்றோ? அது போன்று,
உன்னுமின் -ஸ்மரணம் -சேர்மினே -ஸங்கமம் -புல்கு -பஜநம் -பற்று -கைப்பிடிக்க அத்யாவசாயம் -அடங்கு -சேஷ வ்ருத்திகள் செய்து -ஒடுங்கு -ஸாயுஜ்யம் –இவையே பரபக்தி பரஞான பரமபக்தி -காதல் அன்பு வேட்க்கை அவா -சங்க காம அநுராக ஸ்நேஹ உதயவஸாதி தசைகள்-பகவத் தாஸ்யமே ஆத்மாவுக்கு நிரூபகம் என்று உணர்ந்த பெரியோர் வர்ணாஸ்ரம வித்யா விருத்தங்களை கர்தபஜந்மம், ஸ்வவவாதமம், சில்பநைணம், பஸ்மாஹுதி, ஸவவிதவாலங்கார மென்று கழிப்பர்கள். ஆத்ம ஸ்வரூபத்தை அறியாதவர் ப்ராம் மண்யா ஷிப்ரயுக்தம் குலம் உச்ராயம் என்றுப்ரமிப்பர்கள், தோல் புரையே போமதுவான இதன் உண்மையை அஜ்ஞர்கள் எங்ஙனம் அறிவர்?-நன்பொருள் என்கிறது ஆத்மாவை-தாஸ்ய வைலக்ஷண்யத்தை யுடையனாகையாலே- பகவச் சேஷத்வமாவது பகவத்தளவில் நில்லாகே சேஷத்வ காஷ்டையில் நிற்கக் கடவ ஆத்ம வஸ்துவைக் கிடீர் நானபஹரித்தது- என்று நம்பினேன் பிறர் நன்பொருள் -ஆக நன்மக்கள் என்கிறது ஆத்ம கத சேஷத்வ அனுரூபமான ப்ரபதனத்தில் இழிந்தவர் என்கிறது
குழந்தைகள் போல் தனக்கென்றொரு பிரவிருத்தி யின்றிக்கே மாசில்லாதாரா யிருக்குமவர்கள் ப்ரபந்கர் என்றதாயிற்று, இது கொண்டே ப்ரபந்ர்குலத்தை-மாசில்குடி என்று ஆழ்வாரும் அருளிச்செய்தார். மாசாவன அகங்கார மமகாரங்கள் ,
கஹந்தே நாஹந்தே விஹரண பதம்‘ என்று அகங்காரத்தை ப்ரபந்நர்கள் “வானோ மறி கடலோ மாருதமே” என்கிற கணக்கிலே விரட்டி யடி.ப்பவர்கள்- ஆகையாலிறே மாசில் குடியாயிற்று ப்ரபந்ந குலம்-ப்ரபந்நன் தலைக்கு மேலேயும் தளிர் புரையும் தண்மை திருவடிகளுக்கு இயற்கையாம், லாலித புத்ரர்களுக்கு அபராத பயம் இல்லை யென்பது வெள்ளிடை மலை
———————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வரவரகுருவரர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply