Archive for April, 2022

ஸ்ரீ மாறன் அலங்காரம்–பொருளணியிய லுரை–பகுதி-1- –ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853
இரண்டாவது
பொருளணியிய லுரை.
1-தன்மையலங்காரம்
2-உவமையலங்காரம்

——

86.பொருளினுஞ்சொல்லினும்புனையுறுசெய்யுட்
கணிபெறப்புணர்த்தலினணியெனும்பெயர்த்தே.
என்பது சூத்திரம்.
இவ்வோத் தென்னுதலிற்றோவெனின், ஒத்த நுதலியதூஉ மோத்தினதுபெயருரைப்பவே விளங்கும்.
ஆயின் இவ்வோத் தென்னபெயர்த்தோவெனின்? பொருளணியிய லென்னும் பெயர்த்து ;
பொருளானா மணிக ளுணர்த்தினமையின். ஆயின், இதன்றலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின்?
சொல்வான் றொடங்கிய அணி யென்பவற்றிற்குக் காரண மிவையென்பதூஉம் அவை
செய்யுட் கின்ன சிறப்புடைத்தாகப் புணர்த்தலி னிப்பெயர்த்தாயிற் றென்பதூஉ முணர்-ற்று.

(இ-ள்) புலவராற் றொடுக்கப்பட்ட கவிகட்குப் பொருளானுஞ் சொல்லானும் அழகெய்தப் புணர்ப்பதால்
அணியென்னும் பெயரை யுடைத்தாயிற் றிவ்வலங்காரமென்றவாறு.

புலவரா லென்பதூஉம் அலங்கார மென்பதூஉஞ் சொல்லெச்சம் அணி யிரண்டனுண் முன்னையது அழகாம்.
பின்னையது பூணாம். எனவே பொருளானுஞ் சொல்லானு மணி யிரண்டென்பதாயிற்று.

87.அவற்றுள்,
புவனம்போற்றியபொருளணிபுகலிற்
றவலரும்பான்மைத்தன்மையுவமை
யுருவகமுள்ளுறையொட்டுல்லேக
மொப்புமைக்கூட்டம்வேற்றுமைதிட்டாந்தந்
தற்குணம்பிரத்தியனீகஞ்சந்தய
மற்புதநிதரிசனந்தற்குறிப்பதிசயஞ்
சிலேடைபின்வருநிலைதீபகநிரனிறை
பூட்டுவிலிறைச்சிப்பொருள்கோள்பொருண்மொழி
யதிகம்வகைமுதலடுக்கிணையெதுகை
விரோதமுபாயம்விசேடஞ்சமாயித
மேதுச்சுவைபரியாயமிலேசந்
தற்பவமசங்கதிதடுமாறுத்தி
புணர்நிலைவேற்றுப்பொருள்வைப்புவிபாவனை
யார்வமொழிநெடுமொழிபரிவருத்தனை
காரணமாலைகாரியமாலை
யேகாவலிபிரதீபம்பிறவணி
முன்னவிலக்கபநுதிநிந்தாத்துதி
புகழ்வதினிகழ்தன்மாறுபடுபுகழ்நிலை
பரிசங்கைகாவியலிங்கம்பரிகர
முறுசுவைவிநோத்திசமுச்சயமுதாத்த
மாசிசங்கரஞ்சங்கீரணமே
பாவிகமெனவறுபானான்காகும்.
(எ-ன்) வைத்தமுறையானே பொருளானா மணிகளது பெயருமுறையுந் தொகையு முணர்ற்று.

(இ-ள்) அங்ஙன மிரண்டுகூற்றவாகிய அணிகளுள் உயர்ந்தோர் முதலெனப் போற்றப்பட்ட பொருளணி
யொன்றனையுங் கூறுமிடத்துத் தன்மை முதலாகப் பாவிகமீறாக அறுபத்துநான்கா மென்றவாறு.

இவற்றிற்கெல்லா மெண்ணும்மை தொக்குநின்றன. என என்பது எண்ணிடைச்சொல் ; என்னை?
“என்று மெனவு மொடுவு மொரோவழி, நின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும்” என்பதனால்.
எனவென்ப தனைத் தன்மைமுதலாக வெண்ணிய வெங்கு மொட்டுக.

அஃதாக ; இச்சூத்திரத்துள் சிலேடை, பின்வருநிலை, தீபகம், நிரனிறை முதலிய சொல்லானாமணிகளு மிதனுட்கூறா
நிற்பப் பொருளணியிய லென்ப தென்னையெனின், மிகுதி பொருண்மேலவாதலின் மிக்கவற்றாற் பெயர்கொடுத்தார்;
அஃ தியாவதுபோலவெனின், அங்கராகமாகிய சந்தனத்துடன் குங்கும கற்பூர கத்தூரி கூடினும் பூசியது சந்தனமென்பதுபோலக் கொள்க.

அற்றேல் இவை முறையாயினவாறென்னையோவெனின், இயல்பு விகாரமென விரண்டாகிய வவற்றுள்,
தன்மை யியல்பாகலான் முற்பட்ட முறைமைத்தாக வைக்கப்பட்டது.
உவமையை மூன்றுறுப்படக்கிய பிண்டமாகுந் தொல்காப்பியத்து ளிறுதிநின்ற பொருளகத் தகப்பட்டதாக
அலங்காரத்தினையுங் கூறிய ஒல்காப்புலமைத் தொல்காப்பியனாரு முவமையென்ப தொன்றாகத் தொகைபெற்று
வினைமுதலிய நான்காய் வகுத்துப் பலவேறு விரிவாய்நின்று விகாரமாயதன்றிப்
பிறவலங் காரங்கட்கு முபகாரமுடைத்தாகலானு மஃதொன்றினையுமே முக்கியமாக்கி யதனுட னுருவகமும்
உள்ளுறையுவமமும் வகுத்துக்கூறிய முதன்மையானும், இதற்குத் தனியே முதனூல்செய்த தெண்டி யாசிரியரும்
அவர் நோக்கமே தாமு முடம்பட்டாராகத் தன்மையின்பின் னுவமையை வைத்தாராகலானும்,
இருவர்நோக்கமு முட்கொண் டிந் நூலுடையா ரவையிரண்டிற்கு மிந்நூல் வழிநூலாகலானுந் தன்மையை முதல்
வைத் ததன்பின்ன ருவமையையு முதல்வைத்தது முறையெனக் கொள்க.
உருவகமும், உவமையும் பொருளும் வேறுபட்டு நில்லா தொன்றென்னும் பான்மைத்தாய மாட்டேற்று முவமையாதலானும்
உள்ளுறை யுவமமும் இசைதிரிந் திசைக்கப்படுவதா யுவமையோ டுவமிக்கப்படும்பொருள் பிறிதோராறு தாராது
அவ்வந்நிலங்களிற் பிறந்த கருப்பொருளோடுஞ் சார்த்தி யுள்ளுறுத்திக்கொள்ளுமுவமை யாதலானும் அவை முறையே வைக்கப்பட்டன.
ஒழிந்த ஒட்டு உல்லேக முதலியனவு முவமையைப் பின்சென்றிருத்தலா னவை வைத்தமுறையு முய்த்துணர்ந்துகொள்க.
அவையெல்லா மீண்டுரைப்பிற் பெருகும். உவமையைப் பின்சென்றனவல்லாத அலங்காரங்களையுந் தமக்குப்
பொருந்தின முறையே வைத்தமுறையு முய்த்துணர்ந்துகொள்க. அவையு மீண்டுரைப்பிற் பெருகும்.

அஃதாக ; ஆனா லிந்நூலுடையார் முதனூல்களிற் கூறியபடியே வழிநூலிற் சிறிது புடைநூலிலக்கணந் தவறாது கூறப்
புகுந்து மிகவுமிதன் முதனூலாகிய தண்டி கூறிய அணிகளுள் நுட்பமென்னும் அலங்காரத்தைக் குறைத்துப்
பிற முதனூலணிகள் கூறிய அணிகளையுந் திரட்டிக்கூறி, முந்து நூல்களுட் கூறாத பூட்டுவில் இறைச்சிப்பொருள் கோள்
பொருண்மொழி யென்னுமூன்றினோடும் வகைமுதலடுக்கு இணையெதுகை உபாயம் உறுசுவை புகழ்வதினிகழ்த லென்னும்
அலங்காரங்களையுங் கூட்டி அறுபத்துநாலாக மிகுத்ததூஉ மொருவழிக் குன்றக் கூறன் மிகைபடக்கூற லென்னுங்
குற்றமாம்பிறவெனின், ஆகாது ; என்னை? நுட்பமென்பது பரிகரத்து ளடங்குமெனக் குறைத்துச் செய்யுட் கணி
பெறப் புணர்ப்பதெல்லா மணியெனப்படுதலான் முன்னைய மூன்றுஞ் சொல்லிலக்கணத்தினும் பொருளியலினும்
புறத்திணையினுங் கூறியபடியே செய்யுட்கழகாதலி னணியிற்கூட்டி மிகுத்தார் ;
ஏனைய வைந்து மழகெய்துவதா யிலக்கியங்கண்டதற் கிலக்கண மியம்பியதாக்கி மிகுத்தாராகலானென்றுணர்க.
அன்றியும், வழிநூலும் புடைநூலுஞ் செய்தற்கேதுத் தொகுத்தன்முதலிய நான்கினுள்ளு முதலன
விரண்டு மிகவு மேதுவாகலானுங் கூறப்பட்டன. அற்றேல் ஐயமுந் தெரிதரு தேற்றமும் பொதுநீங்குவமையுந்
தெண்டியாசிரிய ருவமவிரியுட் புணர்க்க, அவற்றை யேனையாசிரியர் வேறுவேறணியாகப் புணர்க்க,
இந்நூலுடையார் முதலிரண்டும் பிறர்நோக்கத்தோடுங் கூட்டிப் பிறிதோ ரணியாக்கிப் பின்னையது தெண்டி
நோக்கத்தோடுங் கூட்டிப் புணர்த்ததூஉங் குற்றமாமெனின், குற்றமன்று. இருவர்க்கும் முதலான தொல்காப்பியனார்
“தடுமாறுவமங் கடிவரையின்றே” யென வழுவமைதிவாய் பாட்டாற்கூறினமையானும் அவற்றுள்
உவமவுருபு புணராமையானு முவமையைப் பின்சென்ற பிறிதோரணியாகப் பிறருடம்பட்டது தானுடம்படுதல் என்னுமுத்தியா னுடம்பட்டும்,
ஏனையது “தானே தனக்குவமைதா” னென உவமவாசகம் புணர்ந்தமையானும் “ஒரீஇக் கூறலு மரீஇய பண்பே” என்றாராதலானும்
பிறர்மதங்களைதலென்னு முத்தியானுங் கூறப்பட்டது. இங்ஙனம் பெயரு முறையுந் தொகையுமாகிய அணிகளை
முதனூலாசிரியர் வகைப்படுத்தியும் விரித்துங் கூறிய நோக்கத்தோடுஞ் சிலவற்றை யிந்நூலுடையார்
தன்கோட்கூறலென்னு முத்தியானுந் தன்குறியிடுதலென்னு முத்தியானும் வகுத்ததன்மேல் விரித்துவகுத்தும்
விரித்ததன்மேல் விரித்ததையும் அவ்வணிகட் குணர்த்தும் பீடிகைமுதலாய வுரைநடைநோக்கங்களா னாங்காங்குக் கண்டுகொள்க.
அவையெல்லா மீண்டுரைப்பிற் பெருகும்.

88.வழுவாமரபினெப்பொருளையும்விகாரந்
தழுவாநடைபெறப்புணர்ப்பதுதன்மை.
(எ-ன்) மேனிறுத்தமுறையானே தன்மையென்னு மலங்காரத்தினது பொதுவிலக்கண முணர்ற்று.
(இ-ள்) இருதிணையுட்குற்றமில்லாத இலக்கணத்தையுடைய எவ் வகைப்பட்ட பொருள்களையு முவமை முதலிய
விகாரவணிகள்கூடாதே சுபாவநடைபெறப் புலவன் பாடுவது தன்மையென்னு மலங்காரமா மென்றவாறு.

நடை – ஒழுக்கம். குற்றமில்லாத எவ்வகைப்பட்ட பொருளையு மெனவே குற்றமுள்ளவற்றின் சுபாவத்தைப் பாடுவதுந்
தன்மையா மெனினும் அலங்காரத்தின்பாற்கூடாதென்பதாம். வழுவாதமரபென்னும் வினையெதிர் மறுத்த
பெயரெச்சவாய்பாடு செய்யுள்விகாரத்தாற் றொக்கீற்றுயிர்மெய் கோவாமுத்தமென்பதுபோலக் குறைந்துநின்றது.
தழுவா வென்பது மது. விகாரம் ஆகுபெயர்.

89.அதுவே,
ஒண்பொருண்மக்களுயிருளவஃறிணை
சினைவினைபண்பிடமெனவுஞ்சிவணும்.
(எ-ன்) தன்மையின் சிறப்பிலக்கணப்பாகுபாடுணர்-ற்று.

(இ-ள்) அத் தன்மையென்னுமணி, உயர்திணையிடத்துப்பொருட் டன்மையும் மக்கட்டன்மையும்,
அஃறிணையிடத் துயிருள்ள அஃறிணைத் தன்மையும், உயிரில்லாத அஃறிணைத்தன்மையும்
அப்பொருளின் சினைத்தன்மையும், வினைத்தன்மையும், பண்புத்தன்மையும்,
இடத்தன்மையுமெனத் தனித்தனி புலப்படப் பொருந்துமென்றவாறு.

அதுவே, என்பது “சீர்கூனாதல் நேரடிக்குரித்தே” யென்பதனாற் சீர்கூனாயிற்று.
இவற்றிற்கெல்லா மெண்ணும்மை செய்யுள்விகாரத்தாற் றொக்குவிரிந்தன.
உயிரில்லாஃறிணை யென்பது முயர்திணையென்பது மெதிர்மறையெச்சமாகி விரிந்தன.
இன்னு மவ்விலேசானே யுயிருள வஃறிணையு ளியங்குதிணையும் உயிரில்லவற்றுட் கருத்துப்பொருளுங் கொள்க.

90.அவற்றுள்,
பொருளியல்பாண்பெண்ணெனவிருபுலப்படும்.
(எ-ன்) இதுவும் பொருட்டன்மைக்கோர் பகுதியுணர்ற்று.

(இ-ள்) அச் சொல்லப்பட்ட வுயர்திணை யஃறிணையுட் பொருட் டன்மை ஆடூஉப்பொருட்டன்மை
மகடூஉப்பொருட்டன்மை என விரு வகைத்தாய்த்தோற்றுமென்றவாறு.

91. அரும்பெறன்மக்கட்டன்மையுமற்றே.
(எ-ன்) இதுவும் உயர்திணைக்கண் மக்கட்டன்மைக்கோர் கூறுபா டுணர்-ற்று.

(இ-ள்) பெறுதற்கரிய மக்கட்டன்மையும் பொருட்டன்மைபோல விருவகைப்படு மென்றவாறு.

அற்று உவமவுருபு. அஃறிணைக் கொருமை பன்மை யென்பதல்லாது ஆண்பெண் ணென்பது சிறப்பின்மையாற் கூறாராயினார் ; என்னை? “ஆண்பெண்பலரெனமுப்பாற்றுயர்திணை”, “ஒன்றேபலவென்றிருபாற் றஃறிணை ” யென்பதனா லறிக.

இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு :-

செம்பொனாடைசெறிதிருமருங்கின
னம்புயத்தனிமலரலர்ந்தவுந்தியன்
கவுத்துவக்கடவுட்கவினிழன்முழுமணி
பவித்திரத்திருமகள்பதிந்தமார்பினன்
வலம்பயின்முப்புரிநூலொடும்வாடா
திலங்கியவனமாலிகைபுனையிணைப்புய
னிகல்புரிதிகிரிசங்கேந்தியகரத்தினன்
கதிர்மணிமௌலிகவித்தசேகரன்
மதிதவழ்சோலைமலையலங்காரன்
பூதலந்தாயபொன்னடி
காதலித்தவர்வல்வினைகடந்தவரே. (118)
இது ஆடூப்பொருட்டன்மை. திணை – பாடாண். துறை – கடவுள் வாழ்த்து
உரையிற்கோடலென்பதனா லுரையெழுத வேண்டுவதில்லை. பா – நேரிசையாசிரியப்பா.

கனையிருள்கடிவயிரப்பரல்செறிதமனியப்
புனைகழலொடுவனைபரிபுரப்பூந்தாளினன்
குறங்கிணையொடுமருங்கினைவளைபொலந்துகிலின
னறந்தழைதருமயன்றனையருளலருந்தியன்
கவுத்துவமணிவனமாலிகைகலந்தொளிர்திருப்
பவித்திரமுடன்மலர்மாமகள்பயின்மார்பினன்
வான்றோய்கதிரினிற்றிகிரியைவலனேந்தியு
மீன்றோய்மதியினில்வரிவளையிடனேந்தியு
மகரக்குழைதழைகாதினன்மணிமௌலியன்
சிகரப்பலதலைசேர்திருமலைமேலுறை
செல்வனை,
மனமொழிமெய்களின்வழிபடுபவராய்ப்
புனநறுமலர்பொழிபவர்பாற்
கனவிலுமுறான்கொடுங்கணிச்சியோனே. (119)
கனையிருள் – செறிந்தவிருள். வயிரப்பரல் – வயிரமணி ; உள்ளீடாய தரி.
தமனியப்புனைகழல் – பொன்னாற்புனையப்படும் வீரக்கழல். பூந்தா ளென்றது பொலிவினையுடைய சீபாதம்.
வான்றோய்கதிர்… ஏந்தியும் – வானிடத் தலமரல்பொருந்திய கதிராற்கொண்ட சக்கரத்தை வலத்தே தரித்தும்,
மீன்றோய்….. இடனேந்தியும் – நாண்மீனோடு பொருந்திய மதியாற்கொண்ட வலம்புரியை யிடத்தே பொறுத்து மென்க.
என்னை? வான்றோய் கதிர்போன்ற திகிரியை, மீன்றோய் மதிபோன்ற வலம்புரியை யென வுவமைத்தொகைத்
தொடர்மொழியன்றோவெனின், அன்று ; “இமையாதமுக்கண், மூவரிற் பெற்றவ” ரென்பது போலக் கொள்க.
ஈரிடத்தும் இன் சரியை. ஆல் என்னு முருபு இல்லென மூன்றாவ தைந்தனுருபாய் மயங்கின.
கொண்ட வென்னும் வினையுந் தொக்கது. செல்வனை யென்பது தனிச்சொல். சீபாத முதலியவற்றை யுடையனாகித்
திருமலைமே னிலைபெற்ற திருவுடையானைத் திரிவித கரணங்களாலும் அருச்சனைசெய்பவராய்க்
கைகளா னறுமலர்தூயவரிடத்துக் காலன் நனவினுங் கனவினு மணுகானென்றவாறு.
இது பத்தடியாய்ச் செல்வனை யென்னுந் தனிச்சொற்பெற்று மூன்றடி நேரிசையாசிரியச்சுரிதகத்தாலிற்ற சிந்தடிவஞ்சிப்பா.
அலங்காரமுந் திணையுந் துறையு மிதுவு மது.

பூங்கமலக்கோயிலாள்புத்தமிர்தினுட்பிறந்தாள்
வீங்குதுணைமுலையாள்வெண்ணகையா-ளோங்குபுனற்
பொன்னிநடுவுட்பொருண்மார்பகத்தாளென்
சென்னிபிரியாத்திரு. (120)
இது மகடூஉப் பொருட்டன்மை. இதனுள், பொன்னிநடுவுட் பொருள் என்ற திரண்டாற்றிடைக் கண்வளர்ந்த நம்பெருமாள்.
திணை – இதுவுமது. துறை – பெண்பாற்கடவுள்வாழ்த்து.

முப்புரிநூன்மார்பினான்முக்கோல்கைக்கொண்டுளான்
பொய்ப்புலனைவென்றபொறையுடையான்-மெய்ப்பொருளைச்
சேவிக்குநுண்ணுணர்வான்சீநிவாதன்றமியே
னாவிக்கருள்புரிந்தாள்வான். (121)
இஃது ஆடூஉ மக்கட்டன்மை. ஆவியை என்பது ஆவிக்கென இரண்டாவது நாலாவதாயிற்று.
திணை – வாகை. துறை – தாபதவாகை ; என்னை?
“பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாம, லொருவழிப் படுப்பது தொகைநிலைப் புறனே”,
“மனத்தினை யொருவழி நிறுப்பது பொறையே”,
“நிறுத்திய மனத்தினை நிலைதிரி யாமற், குறித்த பொருளொடு கொளுத்துத னினைவே” என்ற
முறையே தொகைநிலை பொறைநிலை நினைத லென்னு மூன்று மிப்பாட்டினுள்ளே கூறினமையான்
“அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கமும்” என்னுஞ்சூத்திரத்துள்
‘நாலிரு வழக்கிற் றாபதபக்கமு’ மென்னு மெட்டனுள் தவஞ்செய்து யோகம்பயில்வார்க்குரிய விம்மூன்றும் வந்தமையா லெனக்கொள்க.

கூரெயிற்றாருண்கண்ணார்கொம்மையிளமுலையார்
வார்புருவத்தார்திலகவாணுதலார் – காரகத்தெம்
மால்வரையாரெண்ணிறந்தமாதருணின்னாற்குறித்த
கோல்வளையாராரிறைவகூறு. (122)
இது மகடூஉமக்கட்டன்மை. கூரெயிறு – கூரியபல். உண்கண் – மையுண்கண். கொம்மை – திரட்சி. இளமை – மேனிவனப்பு.
வார் புருவம் – நீண்டபுருவம். கோல்வளை – திரண்டவளை. வாணுதல் – ஒளி பொருந்திய நுதல். பகுதி – சேட்படை.
துறை – அறியாள்போன் றவனினைவுகேட்டல்.

வள்ளுகிருந்தோலடியுஞ்செவ்வாயும்வார்சிறைகூர்
புள்ளியுமென்சூட்டுமுறுபொற்பினதா–மொள்ளியரை
மாறிவருவாதியரைவென்றமகிழ்மாறனா
ரேறிவருவெள்ளோதிமம். (123)
இஃது உயிருளதா யியங்கு மஃறிணைத்தன்மை. வள் – கூர்மை. தோலடி – என்பில்லாத அடி. புள்ளி – பொறி.
திணை – பாடாண் பொதுவியல். துறை – அன்னவாழ்த்து. என்னை?
பாலறிமரபிற் பொருநர் கண்ணும் வாகைத்திணையுட்கூறிய சூத்திரம்போல வென்றி கூறாது
அன்னத்தினது தன்மைகூறியதனாலும் வாழ்த்தெல்லாம் பாடாணாதலாலு முணர்க.

பரியரைத்தாய்த்திணிவயிரம்பயின்றுநிலங்கிளைமுதற்றாய்
விரிசினைத்தாய்ப்பசுந்தழைத்தாய்விரைமலர்த்தாய்விழைகனித்தாய்ப்
பெரியகதிரவன்மறைந்தபிழம்பிருட்குமுறங்காது
வரிவளையூர்புனற்குருகூர்மகிழ்மாறர்திருப்புளியே. (124)
இஃது உயிருளதாகி யியங்கா வஃறிணைத்தன்மை. இவையிரண்டுங் கடவுட்டன்மையுடைத்தாயினு
முலகின்கட்டோன்றும் வடிவ மஃறிணைத் தன்மையவாதலி னிங்ஙனம் கூறுவதாயிற்று.
திணை – இதுவுமது. துறை – தாவரவாழ்த்து. பா – தரவுகொச்சகக்கலிப்பா. இருள் – ஆகுபெயர்.

ஆதாரபீடத்தமர்ந்துயர்ந்தபாதசெடி
மீதாயழுந்தமிதித்துநிமிர்தாட்டுணைத்தாய்த்
தாழ்ந்ததுதிக்கையினைத்தாவியிருகைபற்ற
வாழ்ந்தபகுவாயகத்தோங்குநாவின்
வளையெயிற்றுக்கூர்ங்கோட்டுவான்பிடர்வீழ்கற்றை
யுளைவனப்பிற்பாங்கருயர்செவித்தாயொண்கருக்கி
னூழொன்றியசீர்த்தொடூற்றமுறுமாளியின்மே
லாழங்குடைத்தாயதன்மேற்கொளாளியதாய்
நான்றதலைப்போதிகைத்தாநாவீறர்வண்புளிக்கீழ்த்
தோன்றுதிருக்காவணக்கற்றூண். (125)

இஃது உயிரிலஃறிணைத்தன்மை. இது பத்தடியான்வந்த பஃறொடை வெண்பா. திணை – இதுவுமது. துறை – மதலைவாழ்த்து.

நீண்டசெவியுறவினீள்புருவத்திம்பரொளி
கூண்டுபயநோக்கமுங்கைக்கொண்டதாம்–பாண்டவர்தந்
தேர்ப்பாகனானசிறுபுலியூரானுலகங்
காப்பான்றன்மால்வரையாள்கண். (126)
இது சினைத்தன்மை. உபயநோக்கம் – அருணோக்கமு மருணோக்க மும். பகுதி – சேட்படை. துறை – கண்ணயப்புரைத்தல்.

கைச்சிரத்தானுந்து திப்பக்கன்றினராகந்திறந்து
பச்சிரத்தமுண்டுயிருண்பான்மைத்தே–வச்சிரத்தாற்
குன்றெறிந்தானும்பரவுங்கோயிலான்பாரதப்போர்க்
கன்றெறிந்தவன்சக்கரம். (127)
இது வினைத்தன்மை. ஆகம் – மார்பு. திறத்தல் – பிளத்தல். பச்சிரத்தம் – குளிர்ந்த ரத்தம்.
அன்று – முற்காலத்து. குவ் வுருபு மயக்கம். திணை – வாகை. துறை – திகிரிவென்றி.

பூரித்துடலம்புளகித்திடப்புலமை
சீரித்துயிர்தளிர்ப்பச்சேர்ந்துருகும்–பாரித்த
முத்தமிழ்மாறன்ஞானமுத்திரைக்கைகண்டுதொழு
முத்தமராய்வாழ்வாருளம். (128)
இது பண்புத்தன்மை. பூரித்தல் – தடித்தல். புளகித்தல் – உரோமஞ் சிலிர்த்தல். புலமை – அறிவின்றன்மை.
சீரித்தல் – இடைவிடாமற் பழகுதல். தளிர்த்தல் – தழைத்தல். சேர்ந்துருகுதல் – பரத்துவ சொரூபத்தை யோகித்துக் குழைதல்.
பாரித்தல் – விரித்துரைத்தல். முத்தமிழ் – சித் தசித் தீச்சுர மூன்றுங் கூறுந் தமிழ் ; அது திருவாய்மொழி.
உளம் – ஆன்மஞானம். முத்தமிழ்மாறன் ஞானமுத்திரைத் திருக்கையைக் கண்ணினாற் கண்டுங் கையினாற் றொழுது
முத்தமராய் வாழ்வாரது ஆன்மஞானமான துடலந் தடித் துரோமஞ் சிலிர்ப்பப் பரத்துவஞானத்தோடும் பயின்ற
பரத்துவசொரூபத்தை யோகித்துக் குழையு மெனக் கூட்டுக. திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப் பரவல்.

உற்றபரமேட்டிமுதலோங்கியவைம்பூதநிலை
பெற்றுளதாய்ச்சோதிப்பிழம்பதாம்–பற்றிலர்பே
ரானந்தமெய்துவதாமாதியிடையென்பவுடன்
றானந்தமில்லான்றலம். (129)
இஃது இடத்தன்மை. பரமேட்டி முதலாய வைம்பூதமாவன :- பரமேட்டி, புமான், விச்சுவம், நிவிர்த்தி, சருவன்.
இது பரமபதமாகிய இடத்தன்மை. திணை – பாடாண்பொதுவியல். துறை – புலவரேத்தும் புத்தேணாடுவாழ்த்து. புலவர் – நித்தியசூரியர்.

ஏழாவரணமிசைந்தீர்ந்தண்புனற்பொன்னி
சூழாமணிமாடஞ்சூழ்ந்துளதா–வாழ்மறையோர்
வேதவொலியும்விழாவொலியுங்கூர்தகைத்தா
நாதனரங்கநகர். (130)
இதுவும் இடத்தன்மை. திணை – இதுவுமது. துறை – நகர் வாழ்த்து.

தேவும்புவனமுந்திரண்டமன்னுயிர்
யாவும்யாவருமிறந்தொடுங்கியஞான்
றொருபெருந்திருமாலுந்தியங்கமலத்
தருள்பகிரண்டகோடிகளெனுமவற்று
ளொன்றயனுலகாதியாயவீரேழி
னயனிலைமேருநடுக்கொள்பூலோக
நவகண்டமதாநாவலந்தீவொடு
முவரொன்றியநீருடைக்கருங்கடலொடு
மேழ்பெருந்தீவுமேழ்பெருங்கடலும்
வாழ்வுடைத்தாகியும்வானவர்வைகு
மேமபூதலமிடையிடுதிகிரிக்
காமர்மால்வரைகடந்தநள்ளிருளா
யண்டபித்தியினகத்தண்டகோளகைக்கீழ்
மண்டுமாழ்புனற்குமேல்வடக்கொடுகுணக்கெதி
ரைம்பதுகோடியோசனைத்தெனவளவை
யும்பரோடிம்பருமுணர்வுறவுணர்வான்
றீதறுபான்மையிற்றெருட்டும்
போதமுற்றோங்கியபுராணசித்தமதே. (131)

இதுவும் இடத்தன்மை. திணை – இதுவுமது. துறை – பேரண்ட வாழ்த்து.
இதனுள், தே என்றது அன்னியதெய்வங்கள். புவனம் – இருநூற்றொருபத்து நாலு புவனமும்.
யாவும் யாவரும் – அஃறிணைகளும் உயர்திணைகளும்.
மேருநடுக்கொள்பூலோகம் – மேருவைத் தனது மத்திமத்தே தாங்கிக்கொண்ட பூலோகம்.
வானவர் வைகு மேமபூதல மிடையிடுதிகிரிக் காமர்மால்வரை – கடவுளர் அரமகளிரோடு மின்ப மெய்திவைகும்
ஏமபூதலத்தை நல்லதண்ணீர்க்கடற்குந் தனக்கும் நடுவாக வைத்த சக்கரவாளகிரி யென்னு மழகிய பெரிய மலை.
மண்டுமாழ் புனல் – கெர்ப்போதகம். வடக்கொடு குணக்கெதிர் என்பது வடதிசைக்குங் கீழ்த்திசைக்கு மவற்றிற்
கெதிரான தென்றிசைக்கும் மேற்றிசைக்கு மென்பதாம். புராணசித்தம் – ஆகுபெயர். ஒழிந்த அகலமுரையிற்கொள்க.
பா – நேரிசையாசிரியம். எனவு மென்னு மும்மை யெச்சவும்மையாதலாற் காலத்தன்மையு முள.

நித்தமாய்மூன்றுநெறித்தாயிலவமுதல்
வைத்தபான்மைக்குரித்தாமாண்பிற்றே–யத்திகிரிச்
செங்கண்மாலுந்தியின்மேற்செங்கமலத்தோன்முதலா
மங்கண்ஞாலம்புகழ்காலம். (132)

இது காலத்தன்மை. இதனுள் மூன்றுநெறியென்றது இறப்பெதிர்வு நிகழ்வு.
இலவ முதலியனவும் முறையே பிரமகற்பமீறாக வுணர்ந்துகொள்க. திணை – பொதுவியல். துறை – பருவவாழ்த்து.

1-தன்மையலங்காரம் முற்றும்.

——-

2-வது உவமையலங்காரம்

—–

92.உவமையின்வகையேயுணருங்காலை
வினைபயனுறுப்புருவென்றநான்கினுந்
தமிதமிநிகழ்ந்துந்தம்மின்விரவியுங்
காதல்சிறப்பேநலன்வலியுடனிழி
போதியவைந்துமுறுநிலைக்களனா
யிருதிணையைம்பாலிவற்றொடுமயங்கியு
முதலொடுசினைகளின்முறைமையிற்பிறழ்ந்து
முதல்சினைவினைகுணமின்றியுமுயர்ந்தும்
பெருமையுஞ்சிறுமையும்பெற்றியிற்சிறந்து
மெண்மெய்ப்பாட்டினெழில்பெறமரீஇ
யகத்தினும்புறத்தினுமமர்தருநெறித்தா
யுரனுடையுரவோருளங்கொளமுதனூல்
வரன்முறைபுணர்க்குமாண்பிற்றாகும்.
(எ-ன்) வைத்தமுறையானே உவமையென்னு மலங்காரத்தினது பொதுவிலக்கண முணர்-ற்று.

(இ-ள்) உவமையென்னு மலங்காரத்தினது கூறுபாட்டை யாராயு மிடத்து வினையும் பயனு முறுப்பு முருவு மென்னு
நான்கும் காரணமாகத் தோன்றுவனவாகியும், அங்ஙனந் தோன்றுவன வொரு பொருளோடொருபொரு ளுவமஞ்செய்யும்
வழி யொன்றேயன்றி யிரண்டு மூன்று விரவுவனவாகியும், காதலுஞ் சிறப்பு நலனும் வலியு மவற்றோடுங் கிழக்கிடும்
பொருளுமாகிய வைந்துந் தமக்கு நிலைக்களனாகியும்,
உயர்திணைக் குயர்திணையு முயர்திணைக் கஃறிணையு மஃறிணைக் கஃறிணையு மஃறிணைக் குயர்திணையு மாண்பாற்
காண்பாலு மாண்பாற்குப் பெண் பாலும் பெண்பாற்குப் பெண்பாலும் பெண்பாற் காண்பாலும் ஒருமைப்பாற்
கொருமைப்பாலு மொருமைப்பாற்குப் பன்மைப்பாலும் பன்மைப்பாற்குப் பன்மைப்பாலும் பன்மைப்பாற் கொருமைப்பாலு
மயங்காதும் மயங்கியும், முதற்கு முதலும் முதற்குச் சினையும் சினைக்குச் சினையுஞ் சினைக்கு முதலுமாகப் பிறழாதும் பிறழ்ந்தும்,
முதலுஞ் சினையும் வினையுங் குணனு மின்றியு முவமங் கூறுவனவாகியும், பொருளினுமுவம முயர்ந்து மிறப்பவுயர்வு
மிறப்பவிழிபு முவமிக்குங்கா லின்னாவாகச் செய்யாது கேட்போர் மனங்கொள்ளும்படி சிறப்பிற்றீராவாகிச் சேர்தலியல்பு
சிறந்தும், எட்டு மெய்ப்பாட்டினொடுங் கூடி யழகுபெறு நிலைமைத்தாகி, அகப்பொருளினும் புறப்பொருளினுஞ் சென்று
பொருந்து நெறியை யுடைத்தாய்க் கற்றுவல்ல அறிவுடையோ ரறிவிற்குப் பொருந்த முதனூல் வரலாற்று
முறைமையிற் றிரியாது சேர்க்கப்பெறும் பெருமையை யுடைத்தென்றவாறு.

இதனுள் நான்கினுமென்ற வும்மை யெச்சவும்மையாகலா னவை நான்குமே காரணமாகிய வற்றோடுஞ் சொற்பொருள் காரணமாகவும்
உவமை பிறக்குமென்றவாறு. அவை மேற் கூறப்படும். மயங்கியும் பிறழ்ந்து மென்பது எதிரதுபோற்றுந் தந்திரவுத்தி.
இவற்றிற்கெல்லாம் உதாரணம் உரைநடையானுஞ் செய்யுணடையானும் வருமாறு :-

புலியன்ன மறவனென்பது வினையுவமம். ‘மாரியன்ன வண்மை’ யென்பது பயனுவமம்.
‘துடியன்ன விடை’யென்பது உறுப்புவமம். ‘செவ்வானன்ன மேனி’யென்பது உருவுவமம்.
‘செவ்வானன்னமேனி’ யென்பது வண்ணமொன்றுமே பற்றி யுவமஞ்சென்றது.
“ஊர்ந்ததேறே சேர்ந்தோளுமையே, செவ்வானன்னமேனியவ்வா, னிலங்குபிறையன்ன விலங்குவால்வையெயிற்” றென்பது
வண்ணத்தோடு வடிவும் பற்றி யுவமஞ் சென்றது.

வள்ளைக்கொடிமிசைபாய்மைக்கயல்போல்வார்குழையி
னுள்புக்குலாவருமையுண்கண்ணாய்–புள்ளார்
வகுளாம்புயன்வரைமேல்வான்பிறைக்குன்செங்கை
முகுளாததென்னோமொழி. (133)
இதனுள் வினையு முருவு முறுப்புமாகிய மூன்றுவமையு மொரு பொருட்கண்ணே பிறிதொருபொருளுங்கூடி வந்தவாறு காண்க.
இவை விரவுவமை. பகுதி – நாணநாடல். துறை – பிறைதொழுகென்றல்.

“பாவையன்ன பலராய மாண்கவின்” எ-து மகள்கட்சென்ற காதலுவமைக்கு நிலைக்களனாயிற்று.
‘என்னானை’ யென்பது மது. “முரச முழங்குதானை மூவருங்கூடி, யரசவையிருந்த தோற்றம்போலப்,
பாடல் பற்றிய பயனுடையெழாஅற், கோடியர்தலைவகொண்டதறிந”
எ-து சிறப்பினாற்பெற்ற வுவமமாதலிற் சிறப்புநிலைக்களனாயிற்று. உலகத்து ளியல்புவகையானன்றி விகாரவகையாற் பெறுஞ் சிறப்பு
‘ஓவத்தன்ன விடனுடைவரைப்பின்’ என்புழி அந்நகரின் செயற்கைநலந் தோன்றக் கூறினமையின் நல னிலைக்களனாயிற்று.
நலனென்பது அழகு. ‘அரிமா வன்னவணங்குடைத்துப்பிற், திருமாவளவன்றெவ்வர்க்”கென ஒருவன் வலிநிலைக்களனாயிற்று.
“அரவுநுங்குமதியி னுதலொளிகரப்ப”என்றது ஒன்றினிழிபுதோன்ற வுவமித்தலி னிழிபுநிலைக்களனாயிற்று.

குமரனனையானுங்குறமகளன்னாளு
மமரர்குழாமெனக்கூண்டன்பர்–தமரணங்கே
நின்றிறைஞ்சுமாயோனைநின்றவூரங்கிதன்முன்
சென்றிறைஞ்சுவார்நீதிரும்பு. (134)
இதனு ளுயர்திணைக் குயர்திணையும் ஒருமைப்பாற் கொருமைப் பாலும் பன்மைப்பாற்குப் பன்மைப்பாலும்
ஆண்பாலுக் காண்பாலும் பெண்பாற்குப் பெண்பாலும் வந்து திணையும் பாலு மயங்கா துவமை யாயிற்று.
பகுதி – உடன்போக்கு. துறை – இயைபெடுத்துரைத்தல். நகரடைந்தமைகூறலுமாம்.

“மகிழ்வார்க்கு மல்லார்க்குந், தாயாகித் தலையளிக்குந் தண்டுறை யூரனீ,”
“கலங்கவிழ்ந்தநாய்கன்போற் களைதுணைபிறிதின்றிப், புலம்பு மென் னிலைகண்டும் போகலனே யென்றியால்”
என்பனவிவை யாண் பாற்குப் பெண்பாலும் பெண்பாற் காண்பாலு மயங்கிவந் துவமை யாயிற்று.

அரிக்குழாமன்னவடலரக்கர்வாவும்
பரிக்குழாந்தேர்க்குழாம்பாயுங்–கரிக்குழா
மோர்வாளிபட்டுருள்வானோங்குசிலைக்கால்வளைகைக்
கார்வானமாலிமையோர்கண். (135)
எனவும்,

பிறைபுரைவெண்கோட்டுப்பிணர்த்தடக்கைவேழத்
திறைபுரந்தபொன்னகருக்கிப்பா–ருறைதருவான்
பூணவாவற்றெனமால்பொற்புருடையாட்கிரங்கும்
வேணவாநெஞ்சேவிடு. (136)
எனவும், வரு மிவற்றுள் உயர்திணையாண்பாற்பன்மைக் கஃறிணையாண் பாற்பன்மையும்
அஃறிணைப் பன்மைச்சினைக் குயர்திணை யொருமை முதலும் மயங்கிவந் துவமையாயிற்று.
வேழத்தையுடையவிறை – ஈண்டிந்திரன். அற்றென – அதுபோலுமென. பூணவா – மனத்துட்பூண்ட ஆசை.
வேணவா – வேட்கைப்பெருக்கம். இவ் விரண்டினுண் முன்னது திணை – வாகைப்பொதுவியல்.
துறை – வில்வென்றி ; அல்லது திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்துமாம்.
பின்னது பகுதி – இரவுக்குறி, துறை – அருமைகேட்டழிதல்.

முத்தநகைவெம்முலைபோன்மலைகொடியே
யெய்த்தவிடைநுதலுக்கேந்திழா–யொத்ததுதா
னேற்றுருவங்கொண்டநிலாத்தளிரேகூற்றுருவம்
வேற்றுருவங்கொண்டனையாண்டுமெய் (137)
இதனுள், பன்மைச்சினைக்குப் பன்மைச்சினையும், பன்மைச்சினைக் கொருமைமுதலும்,
ஒருமைச்சினைக் கொருமைமுதலும், ஒருமைச் சினைக்கு ஒருமைச்சினையும், பெண்பாற் காண்பாலும்
மயங்காதும் மயங்கியும்வந் துவமையாயிற்று. இதனுள் முத்தமும் நகையும் முலையும் சாதியேகவசனம்.
பகுதி – சேட்படை. துறை – தலைவன் பாங்கிக் கவயங்கூறல்.

‘கருஞாயிறன்னான்,’ ‘விசும்புதோலுரிப்பனபோல,’ ‘மலைநடந்தனைய,’ ‘அமிர்துபுளித்தாங்கு’
இவை முதலுஞ் சினையும் வினையுங் குணமு மில்லாதன வுவமையாயின.

“கடல்கண்டன்னகண்ணகன்பரப்பின்,” ‘மாரியன்னவண்மைத், தேர்வேளாயைக்காணிய,”
“தெள்ளமிர்தென்னத்திருந்தியதேமொழி,” “ஏறுபோற்பீடுநடை” என்பன உவமையினதுயர்ச்சியாற் பொருட்குயர்ச்சியாயின.

“அவாப்போ லகன்ற வல்குன்மேற் சான்றோ, ருசாப்போல வுண்டே மருங்கு” லென்பன

கழியபெரியவாயினுங் கழியசிறியவாயினுஞ் சிறப்பிற்றீரா வுவமையாயின. சிறப்பிற்றீர்வனவு முவமவொழிபிற் கூறுப.
எண்மெய்ப்பாட்டினும் அகத்தினும் புறத்தினும் வருவன முந்து நூல்களுட் கண்டுகொள்க.
அஃதாக ; இதன் முதனூல்செய்த தெண்டியாசிரியர் பண்புமுதலாகக் காரண மூன்றென்ப துணர்ந்து
மிந்நூலுடையா ருறுப்பினைக் கூட்டிக் காரண நாலென்பதூஉம் நிலைக்கள னைந்தென்பதூஉம்
மிகைபடக் கூறலென்னுங் குற்றமாமாலோவெனின்? ஆகாது ; என்னை?
தெண்டியாசிரியர் “வடிவி னளவின் வண்ணத்தின் வரூஉ” மென்னுஞ் சூத்திர நோக்கி வடிவும்
பண்பினுளடங்குமென் றுட்கொண்டாரேனுமிந் நூலுடையார், உற்றுணரும் பண்பும் கட்புலனாம்பண்பு மெனப்
பண்பினை வேறுபடக் கொண்டார், அங்ஙனங்கோடல் வடிவுபற்றியபண்பு இருளின் கண்ணும் உற்றுணரப்படும் ;
வண்ணமாகிய கட்புலனாம் பண்பு அவ்வாறுணரப்படாதாதலால் வடிவினைக்கூட்டி நாலென்றார்.
அன்றியும், “வினைபய மெய்யுரு வென்ற நான்கே, வகைபெற வந்த வுவமைத் தோற்றம்” எனவு
மிக்கருத்தேபற்றி முதனூல்செய்த ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனாருங் கூறினார் ;
இதற் கதுவு முந்து நூலாகலின் அவர்கருத்தே யிந்நூலுடையாரும் உட்கொண்டாரென வுணர்க.

அன்றியும், “விரவியும் வரூஉ மரபின வென்ப,” “சிறப்பே நலனே காதல் வலியோ, டந்நாற் சொல்லு நிலைக்கள னென்ப,”
“கிழக்கிடும் பொருளோ டைந்து மாகும்,” “முதலுஞ்சினையுமென் றாயிருபொருட்கு, நுதலிய மரபி னுரியவை யுரிய,”
“உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை, “பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பிற் றீராக், குறிப்பின் வரூஉ நெறிப்பாடுடைய,”
“பெருமையுஞ் சிறுமையு மெய்ப்பா டெட்டன், வழிமருங் கறியத் தோன்று மென்ப” எனவுங் கூறிய சூத்திரங்களானு மேனையவு முணர்க.

93.அதுவே,
நிறைவினுங்குறைவினுநிகழ்த்துதனெறித்தாய்த்
துறைதொறும்பழமையும்புதுமையுந்தோய்ந்து
விரியினுந்தொகையினும்விழுமிதினடைபெறும்.
(எ-ன்) இதுவும் அவ் வுவமைக்காவதோர் பொது விலக்கணமுணர்ற்று.

(இ-ள்) அதுவே- அவ்வகைப்பட்ட வுவமை யென்னுமது, நிறைவுவமை குறைவுவமை யெனப் புலவராற் கூறுதலைத்
தனக் கிலக்கண நெறியாகவுடைத்தாய் வினைமுதலாய் நால்வகைப்பட்ட இடந்தோறு முந்து நூற்புலவராற்
கூறப்பட்ட தொன்மைத்தாகியும், அதன்பின்னர் அவ்வவகாலத்துப் புலவராற் புதுவதுபுதுவதாகக் கூறப்பட்டுவரு வனவுமாகப்
பொருத்தமுற்று விரியுவமை தொகையுவமை யென இரு திறத்தினும் விழுமிதாக நடைபெறு மென்றவாறு.

விழுமிதினென்று சிறப்பித்தவதனால் இவைநான்கும் இனிமேல் வரும் விரியுவமையனைத்திற்கும் பொதுவாமெனவும்,
இன்னு மவ்விலேசானே அவற்றுள் விரியுவமையுந் தொகையுவமையும் வினைமுதலிய
நான்கினோடு மெட்டாமெனவுங் கொள்க ; என்னை? “நாலிரண் டாகும் பாலுமாருண்டே” என்றாராகலின்.

94.அவற்றுள்,
முக்கியப்பொருட்டிறமுற்றுதனிறைவே.
(எ-ன்) நிறைவுவமையின திலக்கண முணர்-ற்று.

(இ-ள்) உவமேயத்தி னான்குகூறுபாடு முவமையினு முற்றக் காண்பன நிறைவுவமையா மென்றவாறு.

ஆராவமுதமளித்ததிருப்பாற்கடலு
ணாராயணனாகணைமீது–நேரிழா
யெப்படியேகண்வளராநின்றானெனுமரங்கத்
தப்படியேகண்வளர்வானாம். (138)
இது நிறைவுவமை. இதனுள், திருப்பாற்கடனாத னுவமை. ஆரிய ரிதனைப் பூரணவுவமை யென்ப.
அங்ஙனமாதல், அவன் கண்வளரா நின்றதுபோல விவனுங் கண்வளராநின்றானென வினையுவமையும்,
அவன் றிருமேனி யெப்படியேயிருக்குமென்னும் அப்படியே யிவன் றிருமேனியுமிருக்கு மெனவே வடிவினோடு காந்தியாகிய பண்பும்,
அவனைச் சேவிப்பார்க் கச்சேவை காரணமாக முத்தியாகியகாரியம் பயக்குமது போல விவனைச் சேவிப்பார்க்கு
முத்தியாகியகாரியம் பயக்குமெனப் பயவுவமையும் உவமையாகிய திருப்பாற்கடலிடத்தும் வினைமுதலிய நான்கும்
பூரணமாகி யுவமை யுயர்ந்தபடியுங் காண்க.
எப்படியே கண் வளராநின்றானெனு மென்பது பிரமன்முதலாயினார் புராணங்க ளெப்படியேகூறுமென்பதாம்.
பயவுவமையென்பது ஒன்றன்றொழி லேதுவாகப் பிறக்குங் காரியம். அஃதெச்சமாயிற்று.
நேரிழா யென்பது மகடூஉமுன்னிலை. இரண்டாற்றிடையரங்கத்துத் திருமதிட்குப் பாற் கடனள்ளிடை யாவரண முவமை.
திணை – பாடாண். துறை – கண்படை வாழ்த்து.

பனிமதிக்கிரணம்வியன்களநடுவட்
பரந்துடல்கதுவுபோர்ப்பாய்மா
முனியுறப்பொழியுமிருண்மதமுடுக்க
முரணிழந்திரியல்போம்வேடர்
குனிதிரைத்திருப்பாற்கடலினைக்கடைநாட்
கொதித்தெழுங்கருவிடந்தொடரத்
தனிதனியுலக்கற்றறிவிழந்திரிந்த
தலைமைவானவரையொத்தனரே. (139)
இதுவுமது. இதனுள், திருப்பாற்கடலீன்ற கருவிடந் தொடர்ந்தது வெண்ணிலவு வியன்களநடுவட் பரந்துடல் கதுவிய
போர்ப்பாய்மாப் பொழியு மிருண்மத முடுக்கினதற் குவமை.
முரணிழந் திரியல்போம்வேடரென்பது தனித்தனி யொருவர்க்கொருவ ருதவாது ஓடின
தலைமைவானவரை யொத்தன ரென்றவாறு.

இருண்மத முடுக்கவெனவே பண்பும் வடிவும் வினையுவமையும், அறிவிழந்தெனவே அதனாலாய காரியமாதலாற்
பயனுவமையுமாகிப் பூரணவுவமையாயவாறு காண்க.

95. ஒன்றாதியசிலவொப்பதுகுறைவே.
(எ-ன்) குறைவுவமையாமா றுணர்-ற்று.

(இ-ள்) உவமேயத்தின்வினைமுதலிய கூறுபாடு நான்கும் ஒவ்வாது அவற்றுள் ஒன்று
முதன் மூன்றொப்பது குறைவுவமையா மென்றவாறு.

இஃது “ஒரீஇக் கூறலு மரீஇய பண்பே” என்பதன்பாற்படும்.

வாவித்திருக்குருகூர்மாறாநின்வண்டமிழென்
னாவிற்கினிமைநயப்பதாற்–றேவர்
மருந்துநிகரென்றேமதித்துரைப்பன்முற்றப்
பொருந்துவமற்றின்மையினிப்போது. (140)
இஃது ஒன்றொத்த குறைவுவமை.

வெள்ளைப்பிறைக்கோட்டுவெங்கரியைவென்றவிற்
பிள்ளைப்பெருமான்றென்பேரைவாழ்–வள்ளைக்
குழையாரைத்தோய்ந்தகன்றகொற்றவனைக்காய்ந்த
பிழையார்பொறுப்பாற்பிறர். (141)
இஃது இரண்டுபெற்றவுவமை.

பாயுங்கருங்கயல்போற்பாங்கியிவளென்றுமருங்
கேயும்படிதாவினதியற்பாத்–தோயும்
புவிநாவலர்புகழ்மால்புட்குழியாள்செவ்விக்
கவினானனத்துலவுண்கண். (142)
இது தொழில் பண்பு வடிவு மூன்றும்பெற் றொன்று குறைந்த வுவமை.

“அகர முதல வெழுத்தெல்லா மாதி, பகவன் முதற்றேயுலகு”
“மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற், காதலை வாழி மதி” என்பனவும் எடுத்துக்காட்டுவமை எனவும்,
ஒன்றொத்த குறைவுவமை எனவும் படும்.

செய்யகமலமுகஞ்செங்கனிவாய்முத்தநகை
வெய்யகளபமுலைமின்மருங்குன்–மொய்யிழாய்
பையரவப்பாயலான்பாடகத்தான்மால்வரைவாழ்
தையலடிமாந்தளிர். (143)
இதுவுமது. பகுதி – சேட்படை. துறை – தலைவன்பாங்கிக் கவயவங்கூறல். வடநூலார் உலுத்தவுவமை யென்பது மிது.

முந்துநூற் புலவராற் கூறப்பட்டுத் தொன்றுதொட்டுவரு முவமை யாவன :-
‘புலிபோற்பாயுமறவன்,’ ‘மாரியன்னவண்மை,’ ‘துடிபோற் சுருங்கு மருங்குல்,’ ‘பவளம்போன்ற செவ்வாய்,’
‘குறைபடுமதியந்தே யக்குறுமுயறேய்வதேபோல்,’ ‘நஞ்சுமமிர்தமுமேபோல் குணத்த,’
‘கரு மணியம்பாலகத்துப்பதித்தன்ன,’ ‘பொருகயற்கண்’ என்பன முதலியன.

அதன்பின்ன ராகுங்காலங்கடோறும் புலவராற் புதுவதுபுதுவதாகப் புணர்த்தவற்றுட் சில வருமாறு :-

கோழரையகாஞ்சிரைதாம்பழுத்தருகேநிற்பவற்றிற்
குறுகாதாங்குக்
காழிலவாங்கொழுங்கதலிக்கனிகளைச்சேட்சென்றருந்துங்
கவிகண்மார்க்க
மூழிலவாய்ப்படைத்தபொருள்பிறர்க்குதவாவுதலுத்தரைநீத்
துசிதமான
வாழ்வுடையோர்பொன்மனைச்சென்றமிர்தருந்திப்பசிதணிவார்
மார்க்கமானும். (144)

வாசமொருசிறிதின்றாயிணரூழ்த்தசெம்மலர்தம்
மருங்காய்நிற்பப்
பூசல்வரிவண்டினங்கணீளிடைப்போய்வாலிதாம்
பூந்தேன்மாந்த
லாசறக்கற்றுணர்ந்தறியாரவைக்களநீத்தேசெலச்சொல்
பவராய்நுண்ணூல்
காசறக்கற்றவர்கழகத்தடைந்துநலனுணர்பவர்தங்
காட்சிமானும். (145)

உற்றவயக்களிற்றினொடும்பிடியினையாங்கொருபாந்த
ளொருவாய்க்கொள்ளக்
கற்றதுகண்டிருதலைப்புளவற்றிருகைகவர்ந்தெடுப்பக்
கௌவுகாலைப்
பற்குலமுக்கிடருழத்தறீவினைவந்தடியிடுநாட்
பசையதாகப்
பெற்றபொருளினைப்பேணிமுதலுமிழந்திடருறுவோர்
பெற்றிமானும். (146)

உச்சவான்மலைச்சிகரத்துறுகொடிகள்படர்பாங்க
ருடையவாகும்
பச்சைவேய்ங்கழைத்தலையிற்சுழல்வனவாய்த்தோகைநடம்
பயிலுநீர்மை
மொய்ச்சுலாங்குழற்கழைக்காரிகைபாசம்பூண்டகழை
முடிமேனின்றே
விச்சைமேதகப்பவுரிகாட்டுவதாமெனக்கவினும்
விளம்பின்மன்னோ. (147)

காவின்மேற்படுபலவின்கனிகடுவன்கொடுசினைதாழ்
காமர்வல்லி
மாவின்மேற்படர்ந்ததன்மேன்மந்திகடாம்வயிற்றிடையே
மகவைத்தாங்கித்
தாவினாற்றவறுடைத்தாமெனவருவதொடுபோகுந்
தன்மைகூத்த
ரோவில்வான்கழைக்கயிற்றின்முழவுதழீஇயெதிர்நடப்ப
தொப்பதாமே. (148)

வெதிரெதிர்சென்றேபொரவிண்டுகுதழலவ்வெதிரினையும்
வெண்ணீறாக்கி
யெதிர்பொருதற்றிறனறியாச்சந்தனத்தேம்பொதும்பரையு
மெரித்தமார்க்கம்
பிதிரெனவாழ்ந்திடுசிறியார்விளைத்தசினமவர்திருவின்
பெற்றிதேய்த்துச்
சதிருடன்வாழ்ந்திடுதலைமைத்தமர்திருவுந்தொலைத்திடுமத்
தன்மைமானும். (149)

வீங்குபராரைக்கழைகண்முளிந்தனவாயுயிர்த்ததழன்
மிறைசெய்காலை
யோங்குபசுங்கழைக்குலங்கண்மழைக்குலங்கீண்டுகுபுனலா
லொழித்தபான்மை
தீங்குவிளைத்திடுமுதுவருறுமிடரையக்குலத்துட்
சிறுவர்மன்னர்
பாங்குபடைத்துளகருணைமுகத்தவராற்றணித்தருளப்
பான்மைமானும். (150)

கருநிறப்பரூஉக்காழ்க்களங்கனிவகுளக்காமர்தீங்
கனிகண்மாங்கனிகள்
பெருமிதப்பலவின்கனிசுவைத்ததன்பின்
பீடுலாங்காழிலாக்கனியை
யொருமுகப்படவுண்சுகமுறுசுகமாங்
குபயநூல்களைமுறைமுறையே
குருமுகத்துணர்ந்தபின்னர்நான்மறைதேர்
குறிப்பினர்சுகம்பொருவருமே (151)
இவை எட்டும் குருகாமான்மியத்திற் கந்தமாதனச் சுருக்கத்திற் பாட்டு.
இவற்றுள் நால்வகைக்கும் புதுவதா முவமை புணர்த்தவாறு காண்க.

96.உவமையுமுருபுமேதுவும்பொருளுந்
தவலருஞ்சிறப்பிற்றாம்விரிவனவிரி.
(எ-ன்) வைத்தமுறையானே விரியுவமைக் கிலக்கண முணர்ற்று.

(இ-ள்) உவமையும், உவமவுருபும், வினை பய முறுப் புருவென்ற நான்கினு ளொன்றும், உவமேயமும் என்னு நான்கும்
ஒன்றற் குவமங் கூறுமிடத்துத் தொகாது விரிவன விரியுவமையா மென்றவாறு.

தவலருஞ் சிறப்பிற் றாம்விரிவன வென்றதனாற் பெயரு முறையுந் தொகையுஞ் சிதையாமல் வருதல் சிறந்ததென் றுணர்க.
அவையாவன :- பவளம்போலச் செவ்வா யென்புழி, பவளம் உவமையெனவும் உவமான மெனவும் படும்.
போலவென்பது உவமவுருபு. செம்மை யென்பது குணமாகியவேது. வாயென்றது உவமேயமெனப்படும்.
இப்பெயர்-பெயர், இம்முறை முறை, இத்தொகை தொகை யெனக்கொள்க.

கருங்குவளைபோற்கருங்கண்கன்னல்போலின்சொற்
சுருங்குதுடிபோற்சுருங்கு–மருங்குல்
பிடிபோலியங்குநடைப்பெய்வளையைக்கண்டாற்
குடிபோங்குடிபோங்குணம். (152)
இதனுள் உவமைமுதலிய நான்கும் முறையே வந்தவாறு காண்க. அன்றியும், வினை பய முறுப்புரு வென்ற
நான்குவமையு மிதனகத்து வந்தவாறுங் கண்டுகொள்க. அடுக்குத் துணிவின்மேற்று. குணம் – அறிவு.
குடிபோமென்றல் தன்னிலையி னீங்குமென்றல். பகுதி – பாங்கற் கூட்டம். துறை – தலைவன்வியத்தல்.

இலவிதழ்போற்செவ்வாயியற்றமிழ்போலின்சொல்
கலகநமன்போலவடுங்கண்க–டிலகப்
பிறைபோல்வளைநுதலிப்பெண்ணமிர்தைக்கண்டா
லறைபோமறைபோமறிவு. (153)
இதுவுமது. இதனுள்ளும் நான்குவமையும் வந்தவாறுகாண்க. துறை – இதுவுமது.
இதன்கண் ணடுக்குந் துணிவின்மேற்று. அறை போதல் – கீழறுத்தல்.

97.உரைத்தநான்கினுளொன்றிரண்டிடையன
யாப்பினுளிடைப்பட்டெஞ்சலுந்தொகையே.
(எ-ன்) ஏனைத் தொகையுவமையிலக்கணமுணர்ற்று.

(இ-ள்) விரியுவமைக் குவமைமுதலாகச் சொல்லப்பட்ட நான்கனு ளிடைப்பட்டன விரண்டனு ளொன்றேயாயினும்
இரண்டேயாயினும் யாப்பினிடத் திடைப்பட்டுத்தொகுவது தொகையுவமையா மென்றவாறு.

இதனுள், தொகையென்றதல்லது உவமையென்பதுபெற்ற தியாதோவெனின், விரியுவமைக்கு
முதலே யுரைத்த சூத்திரத்தாற் பெற்ற தெனக் கொள்க.

அம்பவளச்செவ்வாயுமாரநிரைவெண்ணகையும்
பைம்பொனசலப்பணைமுலையின்–விம்பமுடன்
கண்டுகளித்தேந்திருமால்காட்கரையார்கன்னலின்சொல்
லுண்டுகளிப்புற்றிலமன்னோ. (154)
இஃ துவமவுருபொன்று மிடையிற் றொக்க தொகையுவமை ; இதனுள் அம்பவளச் செவ்வாய் முதலியவற்றிடையிற்
போலவென்னு முவமவுருபு தொக்கதனாலறிக. நெஞ்சமே யென்னு முன்னிலையு மெழுவாயு மெச்சம்.
மன்னும் ஓவும் அசை. பகுதி – இயற்கை. துறை – கிளவி வேட்டல்.

நீலம்போற்கண்ணுநிறைமதியம்போன்முகமும்
வாலமதிபோனுதலும்வண்டிமிர்பூங்–கோலத்
தொடைத்துளபமாலைத்தொழுமாறன்வெற்பிற்
படைத்துளதேன்மன்னுயிர்நண்பா. (155)
இஃதுவமவேது வென்பதொன் றிடையிற்றொக்க தொகையுவமை.

(இ-ள்) கருங்குவளைபோலக் கரியகண்ணினையும், எல்லாக் கலைகளு நிரம்பின மதிபோன்ற செம்முகத்தினையும்,
பிறைபோல வளைந்த நுதலினையும் வண்டுகளாரவாரிக்கு மழகிய தொடையாகிய துளப மாலிகையையுடைய
மாயோனைத் தொழு மாறன்றுடரிவெற்பிற் றனக் குறுப்பாகப் பெற்றுநிற்ப நீகண்டதுளதே லஃதென் னிலைபெற்ற வுயிரா மென்றவாறு.

இதனுள் நிற்ப நீகண்டது என்னுஞ் சொற்களையும் அஃ தென்னென்னுஞ் சொற்களையு மெச்சமாக நின்றனவாக்கி விரித்துரைக்க.
பகுதி – பாங்கற் கூட்டம். துறை – அவ்விடத்தேகல்.

அஃதாக ; இதன் முதனூல்செய்த தெண்டியாசிரியர் வினை பய முதலிய வேதுக்கடொகுவதே தொகையுவமையென நோக்கவும்

இந்நூலுடையா ருவமவுருபு தொகுவதுந் தொகையுவமையென்ற தென்னையோவெனின், அஃதே ;
நன்றுசொன்னாய் ! இவையிரண்டிற்கும் முதனூலாகிய தொல்காப்பியத்துள் “உவமைத் தொகையே யுவமவியல” என்பதனாலும்,
அதன்பின்னர் நேமிநாதர் பவணந்தி முதலியோரும் “உவமவுருபிலதுவமத்தொகையே” என்பதனாலுங் கூறப்பட்டது.

பவளவாய்முத்தநகைப்பைந்தொடியீரூழி
யவளவாய்க்கங்குனெடிதாமோ–துவளருவிச்
சோலைமலையார்துணைத்தோளிற்பைந்துளப
மாலைமலையாமயிற்கு. (156)
என்ப திரண் டிடையிற் றொக்க தொகையுவமை ; என்னை? பவளம் போலச் சிவந்த வாயினையு முத்துப்போல
வெளுத்த நகையினையுமென்னு முவமவுருபும் பண்பு மிடையிற் றொக்கதா லென்றுணர்க.
திணை-பெருந்திணை. துறை – கண்டுகைசோர்தல்.

கறைவேல்விழியிலவிதழிதழ்
நறைநாண்மலரஃதானனம்
புருவஞ்சிலையுருவம்புய
லுருவம்புரிகுழலெனுமது
பொன்னங்கிரிகொங்கைத்துணை
மின்னென்றுரையிடைகண்டிலன்
எனவாங்குக்
கற்றறிவுடையவென்னிறையினைக்கலந்து
ணற்றிருவுறைவிடநண்பா
சொற்றமிழ்மாறன்றுடரிவண்பொழிலே. (157)
இதுவு மிரண்டு தொக்க தொகையுவமை. இஃ தாறடித்தா யொன்றியும் ஒன்றாதும் வரும் வஞ்சித்தளையான்,
எனவாங்கு என்னுந் தனிச்சொற்பெற்று மூன்றடி நேரிசையாசிரியச்சுரிதகத்தாலிற்ற குறளடி வஞ்சிப்பா.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.

‘இடைப்பட்டெஞ்சலு’மென்ற வும்மையா னிடைப்பட்டுத்தொகாது முதலானும் முதலைக்கூறச் சினையறிகிளவியாகிய வாகு பெயரானும்
உவமையு முவமவுருபும் விரிந் தீற்றி லிரண்டு தொகுவனவு முளவென்ப தூஉந் தோன்றிநின்றது.

கொடிபோல்வடவரைபோற்கொவ்வைபோற்காமர்
பிடிபோலிளமான்பிணைபோல்–வடிவமைந்த
தென்னாருயிரமார்க்கின்னமிர்தன்றீந்தபிரான்
றன்னாகையன்னாடனக்கு. (158)
(இ-ள்) கொடிபோ னுடங்குகின்ற விடையினையும், வடமலை போலப் பெருத்த முலையினையும், கொவ்வைக்கனி
போலச் சிவந்தவாயினையும், அழகிய பிடிபோன்ற மென்னடையினையும், இளைய மான்பிணை போல
வெருண்ட நோக்கினையு முடைத்தாகிய வடிவா லழகமைந்திருப்ப தொன்று ;
தோழீ யெனக் குயிர்போலச் சிறந்தவனுமாகி யமரர்க்கு முன்னைநா ளமிர்தமீந்தபிரான் றிருநாகையனையாட் கென்றவாறு.

இதனு ளீற்றில் விரித்தவிரண்டுஞ் செய்யுட்கட்டொக்கவாறு காண்க. தோழீ யென்னு முன்னிலை யெச்சமாயிற்று.
பகுதி – சேட்படை. துறை – தோழிக் கவயவங்கூறல்.

இரண்டுமென்ற வும்மை யெச்சமாதலா னீற்றின் மூன்று தொகு வனவுமுள.

அன்னநடைமானோக்கணியிழாய்வார்சுமந்த
பொன்னசலந்தன்னைப்பொறுப்பதாய்–முன்னுதித்த
வெய்யாநடுவறக்கொன்றிட்டதைவைத்தென்னோசெங்
கையான்மறைத்தமையுண்கண். (159)
என்பது, அன்னநடைபோன்ற மென்னடையினையு மானோக்குப் போன்ற வெருண்ட நோக்கினையு மழகிய பூணினையு முடையாய் !
வாரைச் சுமந்த வாய்ப் பொன்மலைபோலப் பணைத்த முலையானவை தம்மைச்சுமப்பதுமாய்த் தாம் பிறந்து பணைப்பதற்கு
முன்னே பிறந்த வுடன்பிறப்பாகிய தேயாநடுவினை முற்றக்கொன்றவற்றைக் கொல்கவென வெளியில்வைத்து
யானுய்யும்படிக் குனதுயிர்போன்ற தோழியைக் காட்டித்தந்த மையுண் கண்களைக் கைகளான் மறைத்த தென்ன பேதைமையோ வென்றவாறு.

உண்கண்களையென் றோர் சொல் லிறுதி யிரண்டாவது தொக்கு விரிந்தது. ஒழிந்த சொல்லெச்சங்களும்
குறிப்பினால் விரித்துரைத்த வாறுங் காண்க. பகுதி – இடந்தலை. துறை – நாணிக்கண்புதைக்க வருந்தல்.

98. இருமையுமொருதொடர்பினுளுறலியல்பே.
(எ-ன்) இன்னு மத் தொகை விரி யுவமைகட் காவதோர் விதியுணர்ற்று.

(இ-ள்) அத்தொகையுவமையும் விரியுவமையு மாகிய விரண்டு தன்மையு மொருசெய்யுளகத்து வருதலுமா மென்றவாறு.
உம்மை செய்யுள்விகாரத்தாற் றொக்கது.

மொழியமுதமுற்றாமுலைமுகுளம்வைவேல்
விழிமகிழ்மாறன்றுடரிவெற்பி–லெழின்மயிற்கு
நன்போதவிழ்குழல்கார்நண்பனேசெம்மேனி
பொன்போன்ம்பல்வெண்முத்தம்போன்ம். (160)
என்பது, நண்பனே ! மகிழ்மாறன் றுடரிவெற்பி லழகிய மயில்போலுஞ் சாயலுடையாட்கு மொழி யமுதம்போலும் ;
இளமுலை தாமரைமுகுளம் போலும் ; விழி கூரிய வேல்போலும் ; செருகிய முல்லையரும்பவிழாநின்ற குழல் கார்போலும் ;
சிவந்தமேனி பொன்போலும் ; வெண்பல் முத்த நிரைபோலு மென்றவாறு.

இதனுள் முன்னையநான்கும் உவம வுருபு மேதுவு முவமேயத்தை முன்னிட்டுத் தொக்கன.
எழின்மயின் முற்றுவமை பின்னையவிரண்டும் விரியுவமை. போலு மென்னு முவமவுருபீற்றினுகரம்,
“செய்யுமெனச்சவீற் றுயிர்மெய் சேறலுஞ், செய்யுளு ளும்முந் தாகலு முற்றே, லுயிருமுயிர் மெய்யு மேகலு முளவே”
என்பதனால் முற்றாதலின் உயிர் கெட்டது. “மெல்லெழுத் தியையின் னகார மாகும்” என்பதனால் லகாரம் னகாரமாய்த் திரிந்தும்,
“னகார முன்னர் மகாரங் குறுகும்” என்பதனா லீற்றுமகாரங் குறுகியும்,
“செய்யு ளிறுதிப் போலி மொழிவயின், னகார மகார மீரொற்றாகும்” என்பதனா லீரொற்றுடனிலையாயும்,
மேலே பகரவொற்று வருதலின் செய்யுளிடைப்பட்டும் வந்த முற்றுப் போன்ம் என்றாயிற்று.
“ஐவிரைமாண்பகழியரந்தின்வாய்போன்ம் போன்ம்போன்ம், பின்னுமலர்க்கண்புனல்” எனப் பரிபாடலாகிய
சங்கச் செய்யுளகத்தும் பகர மேலே வருதலாற் செய்யுளிடைப்பட்டும் வந்தமை காண்க. இது தொகைவிரியுவமை.

இன்னும் வேறுபட வருவனவெல்லாந் தொகைவிரியுவமைக்க ணமைக்க.

99.அவைதாம்,
வெளிப்படைகுறிப்பினும்விழுமிதினடைபெறும்.
(எ-ன்) இதுவு மவ்விருவகை யுவமையின் கூறுபாடுணர்-ற்று.

(இ-ள்) அங்ஙனங் கூறப்பட்ட விரியுவமையுந் தொகையுவமையு மென்னு மிரண்டும்
வெளிப்படையுவமங் குறிப்புவம மென்னு மிரண்டாய் விழுமிதாக நடைபெறு மென்றவாறு.

பவளச்செவ்வா யென்புழி இரண்டற்கும் பொதுவாய செம்மைக் குணத்தை வெளிப்படையாகக் கூறினமையான்,
குறிப்பின்றியுவமை கொள்ளப்படுதலானும், பவளவா யெனநின்றவழிப் பவளத்தினையும் வாயினையுங்கூட்டிச்
செம்மைக்குணம்பற்றி யுவமஞ்செய்ததெனக் குறித்துக் கொள்ளப்படுவதல்லது வல்லென்ற பவளத்திற்கும்
மெல்லென்ற விதழிற்குமுள்ளதோரொப்புமைக்குணங்க ளாண்டில்லை யென்பதூஉம்,
பானல்போற் கருங்கண் ணென்புழியும் இரண்டற்கும் பொதுவாய கருமைக்குணத்தை வெளிப்படையாகக் கூறினமையாற்
குறிப்பின்றி யுவமையே கொள்ளப்படுதலானும், பானலுண்கண் ணெனநின்றவழிப் பானலையுங் கண்ணினையுங்கூட்டிக்
கருமைக்குணம்பற்றி யுவமஞ்செய்த தெனக் குறித்துக் கொள்ளப்படுவதல்லது பல விதழினோடும்
பலவல்லியுந் தாதுவுங் கூடிய பரிமளப்போதிற்கும் நீண்டு பிறழ்ந் துலாய்க் குழை மேற்றாய
கண்ணிற்கு முள்ளதோ ரொப்புமைக ளாண்டில்லை யென்பதூஉ முணர்க. பிறவுமன்ன ;
என்னை? “சுட்டிக் கூறா வுவம மாயிற், பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளலே” என்றாராகலிற் கொள்க.

விழுமிதி னடைபெறு மென்றதனால் விழுமிதாய குறிப்புவமையுமுள. அவையு மேற்காட்டுதும்.

பாற்கடல்வெய்யோனிலொளிபாரித்தசோதிவட
நூற்கடலைத்தென்னுரைநன்னூற்கடலாய்–மாற்கடிமை
வாய்ந்தாரீடேறவகுத்தளித்தான்றண்ணளிதாந்
தாந்தாமெனும்வகுளத்தான். (161)
இது விழுமிதாய குறிப்புவமை.

(இ-ள்) உலகின்கண்ணேயிருந்து நோக்குவார்க்குத் திருப்பாற் கடலின்கட்டோன்று முதயதிவாகரனைப்போல
ஒளியைப்பாத்தின சோதிச்சொரூபத்தையுடையான் அவன் யாரெனில் வடமொழியாகிய சுருதிக்கடலைத்
தென்னுரை நூற்கடலாக்கித் திருமாலுக் கடிமையாகத் தோன்றினார் பேரின்பமெய்தப் பாடித்தந்தான்
குளிர்ந்த வண்டுகள் தாந்தாமெனப்பாடித் தேனையுண்ணும் வகுளமாலிகையை யுடையான் ;
அவன் பரமகருணையிருந்தபடியோ ! வென்றவாறு.

இது விழுமிதாய குறிப்புவமையாயது, இதனுள், திருப்பாற் கடலிற்றோன்று முதயதிவாகரன் றனது
செய்யமேனியி லாயிரங்கிரணங் களைப்பரப்பி யுலகத்திருளைத்துரத்தி யுலகினுள்ளார்க்குக் கடபடாதிகளைக் காட்டி
யின்பத்தைப் புரந்தாற்போல விவனும் வெண்டிரைப் பொருநைத்துறை மாடத் திருக்குருகூரினிடத்துச் சிவந்தமேனியோடுந்
தோன்றித் திருவாய்மொழியாகிய வாயிரம் பாடல்களையும் விரித்ததனோடு மன்னவாகனத்தினுந்தோன்றித் தன்னை
மனோவாக்குக் காயங்களாற் றியானித்தும் வாழ்த்தியும் வணங்குவார்மனத்து ளறியாமையாகிய வந்தகாரத்தை நீக்கிப்
பரப்பிரமத்தைக் காட்டித்தருவனென வினையுவமம் பயவுவமம் வடிவுவமம் உறுப்புவம மென்னும் நான்குவமையுங்
குறிப்பினாற் கொள்ளக்கிடந்தமையானெனக் கண்டுகொள்க.

தண்ணளி…… தான் என்பதற்குக் குளிர்மையுடன் கூடியதாய வண்டுகள் பாடித் தேனையுண்ணும்
வகுளமாலிகையை யுடையானெனினுமாம். வெண்டிரைப் பொருநைமாடத் திருக்குருகூரொடும்
அன்ன வாகனமுந் திருப்பாற்கடற்குவமை.

இக்குறிப்புவமை இந்நூலுடையார் யாண்டுப்பெற்றாரெனின்? நலமிகு புலமை நக்கீரர்
“உலக முவப்ப வலனேர்பு திரிதரு, பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாஅங், கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி”
எனக் கூறிய முருகாற்றுப்படுத்ததுட் பெற்றாராம்.

வாழ்த்தெல்லாம் பாடாணாதலால் திணை- பாடாண்சார்ந்த பொதுவியல். துறை – பனுவல்வாழ்த்து ;
அன்றியும், வாகையைச் சார்ந்த பொது வியலிற்கூறிய பாடல்வென்றியுமாம்.

மின்பதிந்தகார்மேனிவிண்ணகர்மாலைப்புலவன்
பின்பதிந்துசென்றபெருமானை–முன்பதிந்து
சேவித்தாராளுந்திருநாடுதேவரெனப்
பாவித்தார்க்கெட்டாப்பதம். (162)
இதுவுமது ; என்னை? மின்குடிகொண்ட கார்போலுந் திருமகள் குடிகொண்ட மார்பினோடுங் கூடிய
கரிய திருமேனியையுடையான் எனக் குறிப்புவமை கொள்ளக்கிடந்தமையா னெனக்கொள்க.
தேவரெனப் பாவித்தார்க் கெட்டாப்பதம் என்பது-கண்டாகன்னனாலறிக. திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பரவல்.

100.உவமேயத்தியலுயர்த்தியபின்ன
ருவமப்பொருளியலுயர்த்திமுடித்தலுங்
கவினப்பொருட்குறிற்கடிநிலையிலவே.
(எ-ன்) இஃ தவ்வுமத்திற் கெய்தாத தெய்துவித்தது.

(இ-ள்) முதலே யுவமேயத்தினது பட்டாங்கை யுயர்த்திக்கூறி, அதன்பின்னர் உவமப்பொருளின்பட்டாங்கை யுயர்த்தி
முடித்தலும் அவ் வுவமேயத்திற் குயர்ச்சி குறிப்பினாலுண்டாம்படி பயனிலை தோன்றுமெனி னீக்கப்படா தென்றவாறு. கவின் ஆகுபெயர்.

முத்திரைக்கைம்மாறன்மொழிந்ததிருவாய்மொழியே
சத்தியநூலென்பர்தகைசான்ற–மெய்த்தமிழோர்
மேதினிமேலாரணப்பாமெய்த்திருமாலேபரனென்
றோதியதூஉமாதியினிலுண்டு. (163)
(இ-ள்) திருஞானமுத்திரைக்கையினையுடைய காரிமாறப்பிரான் சீமந்நாராயணனே பரதத்துவமென்று அவனது
சொரூபரூப குண விபூதிகளைக்கூறிய திருவாய்மொழியே யுண்மைநூலென்று பெருமை பூர்த்தியான வாய்மைத்தமிழ்ப்புலவோர் கூறுவர்.
அத்திருவாய்மொழியே யன்றி யுண்மைப்பொருளான திருமாலே பரதத்துவமென் றாதிகாலத்துப் பூலோகத்துக்கு மேலாய
சத்தியலோகத்தினுமிருந்து வடமொழியாகிய சுருதி கூறியதூஉ முண்டென்றவாறு.

எனவே, ஆதியாய்ச் சத்தியலோகந் தொடங்கிப் பரந்த வட மொழியா யுணர்த்திற்றென்று சுருதியாகிய நூலை
மிகச்சிறப்பித்துக் கூறுவானாகித் திருவாய்மொழியாகிய நூலை யுயர்த்திக் கூறாததுபோல வியல்பினாலாய
வுவமங் கூறினாராயினும், மண்ணின்குடத்தோடு பொன்னின்குடத்திற்குண்டாய வேற்றுமைபோல
அந்தணரு மேனை மூவகைக் குலத்தோரு மோதுவதாகவும் பரந்துபோகாதே தமிழ்மொழியா லெவ்வுலகத்தாரும்
பரதத்துவத்தையுணரும் படிக்கு மறைவின்றி யிருட்டற வேதசாரத்தை யெடுத்துக்கூறித் தெருட்டிற்றெனத்
திருவாய்மொழிக் கேற்றமானதோர் பயனிலை குறிப்பினாற் றோன்றினவாறு காண்க.
என்னை? “உவமத் தன்மையு முரித்தென மொழிப, பயனிலை புரிந்த வழக்கத்தான” என
ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனார் கூறிய விலக்கணத்தானும்,
“பாரி பாரி யென்றுபல வேத்தி-யொருவற் புகழ்வர் செந்நாப்புலவர்-பாரியொருவனு மல்லன்-மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே”
என்னுஞ் சங்கச்செய்யுளாகிய இலக்கியத்தானு முணர்க.
திணை – பாடாண். துறை – பனுவல்வாழ்த்து ; அல்லது வாகைசார்ந்த இயல்வென்றியுமாம். இதுவுங் குறிப்புவமைப்பாற்படும்.

101.பலபொருளொருபொருளொருவயிற்பலவயிற்
போலியில்பொருண்மறுபொருள்விபரீத
மருட்கைதலைதடுமாற்றம்விகாரந்
தடுமாற்றம்மேசமுச்சயமின்சொ
னியமமநியமம்புகழ்நிந்தையுவம
மோகமவயவமவயவிமுற்றே
யேகமாலையந்தாதிபொதுநீங்கலென்
றாகவையைந்தாமதன்விரியே.
(எ-ன்) இதன்முன்னர் உவமையெனத் தொகையா னொன்றாய் நின்றது வினை பய முறுப் புருவென்ற நான்கினோடுங்
கூடி யேதுவைந்தா மெனனுமவை முதலிய வகையின் பாகுபாடுகளெல்லா முணர்த்தி யவற்றினின்றும்
விரிந்த வுவமையினது பெயர்வேறுபாடுந் தொகையு முணர்ற்று.

(இ-ள்) அதன் விரி – அங்ஙனங் கூடுபடுத்தின வுவமையின் விரி, பலபொருளுவமைமுதலாகப்
பொதுநீங்குவமையீறாக விருபத்தைந்தா மென்றவாறு.

இவற்றிற்கெல்லாம் எண்ணும்மை தொக்கன. போலியென்பதனை யிறுதிவிளக்காக்கி, இருவயினுங் கூட்டி,
உவமமென்பதனை மத்திம தீபமாக்கி, முன்னும் பின்னும் எல்லாவற்றோடுங் கூட்டி யுரைக்க.
என்றென்ப தெண்ணிடைச்சொல் ; “என்று மெனவு மொடுவு மொருவழி, நின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும்” என்பதனா லறிக.
இவையெல்லாஞ் சொல்லின்முடியு மிலக்கணத்தனவாதலாற் பெரும்பான்மையும் தம் பெயருள்ளே இலக்கணமும் புலப்படும்.
அல்லதூஉம் உரையினுங் கொள்க.

அவற்றுள், பலபொருளுவமையென்பது ஒருபொருட்குப் பலபொருளுவமைகாட்டுவது.
பலபொருளுவமையெனப் பொதுப்படக் கூறினமையான், அது ஒன்றுபலகுழீஇய பலபொருளுவமையும்,
வேறு பலகுழீஇய பலபொருளுவமையுமென விருகூற்றவாம். அவற்றுள், ஒன்றுபலகுழீஇய பலபொருளுவமை வருமாறு :-

எண்ணிற்கடங்காவிளஞாயிறொன்றியபோற்
கண்ணிற்கடங்காக்கதிர்விரிக்கும்–விண்ணிற்
பரந்தாமமாதவன்பொற்பாதநினைந்தேத்தும்
வரந்தாம்படைத்தார்வசம். (164)
இஃது ஒன்றுபலகுழீஇய பலபொருளுவமை. இதனுள், பரந்தாமம் என்றது பரமபதம்.
வரந்தாம் படைத்தார் வசம் என்பது மாதவன் றிருவடிகளை யிப்பிறப்பிற் சிந்திக்கவும் வாழ்த்தவும்
முற்பிறப்பில் வரம்படைத்தவர்தா மெவர் அவர் கைப்படும்பொருளாமென்றவாறு.

கொடியுமொருபிடியுங்கோளரவுமின்னுந்
துடியும்புரைமருங்குற்றோகை–வடிநெடுங்கண்
ணென்னுயிர்க்குத்தம்பமதாயிந்தளூர்மால்வரைத்தன்
மன்னுயிரைக்காட்டுமதித்து. (165)
(இ-ள்) திருஞானமுத்திரைக்கையினையுடைய காரிமாறப்பிரான் சீமந்நாராயணனே பரதத்துவமென்று
அவனது சொரூபரூப குண விபூதிகளைக்கூறிய திருவாய்மொழியே யுண்மைநூலென்று பெருமை பூர்த்தியான
வாய்மைத்தமிழ்ப்புலவோர் கூறுவர்.
அத்திருவாய்மொழியே யன்றி யுண்மைப்பொருளான திருமாலே பரதத்துவமென் றாதிகாலத்துப்
பூலோகத்துக்கு மேலாய சத்தியலோகத்தினுமிருந்து வடமொழியாகிய சுருதி கூறியதூஉ முண்டென்றவாறு.

இது வேறுபலகுழீஇய பலபொருளுவமை. ஒரு பிடி-ஒருகையை விரன்மடக்கின அளவாம்.
“ஒருபிடிநுசுப்பினாட்கே” எனச் சிந்தாமணியினுங் கூறினமை காண்க. பகுதி – இயற்கை. துறை – பாங்கியையறிதல்.

ஆலம்போற்செவ்வேளயில்போலடுங்காலன்
சூலம்போற்காமன்றொடுத்தியக்கு–நீலம்போற்
கொல்வான்பிறழ்கட்கொடிக்கிடமாமூலமெனச்
செல்வான்கடிகைச்சிலம்பு. (166)
இதுவுமது. பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.

2. ஒருபொருளுவமை யென்பது பலபொருட் கொருபொருளுவமை காட்டுவது :-

இமிழ்திரைநீர்ஞாலத்திருளிரியவான்றோய்ந்
துமிழ்கதிர்வெண்டிங்களுடனேயெஞ்ஞான்றும்
வலஞ்செய்சுவணவடவரைபோன்மாடம்
பொலஞ்செய்மதிள்கோபுரஞ்சிகரபந்தி
யிலங்குமதிளரங்கத்தெம்பிரான்பல்புகழைப்
பாடினார்பாதந்தனைப்பாடிச்சென்னியின்மேற்
சூடினார்க்குண்டோதுயர். (167)
என்பது பலபொருட் கொருபொருளுவமை. பலபொருள் – செம்பொன் மாட முதலியன. உவமை வடமேருவெனும் ஒன்று.
பா-ஏழடியான் வந்த பலவிகற்பப் பஃறொடைவெண்பா. திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பணிதல்.

வண்ணவனசமலர்போற்றிருமுகமுங்
கண்ணுமலரடியுங்கைக்கொண்ட–பெண்ணரசைச்
செந்தமிழ்மாறன்சிலம்பிற்சேர்ந்தகன்றென்பாலுரைக்க
வந்தவனேதிண்ணியனாவான். (168)
இதுவும் ஒருபொருளுவமை. பகுதி – இதுவுமது. துறை – தலைவனை வியத்தல்.

3. ஒருவயிற்போலி என்பது ஒரு தொடர்மொழிக்கட் பல வுவமைவந்தா லுவமைதோறும்
உவமைச்சொற் புணராது இறுதியி லோருவமைச்சொற் புணர்ப்பது :-

வாவித்திரையெறிந்தநித்திலத்தின்மள்ளரெறி
காவித்திரள்சேர்கமலமலர்–பாவைமார்
வெண்ணகையுண்கண்ணானனம்போன்மெனத்தோன்றுங்
கண்ணபுரத்தானிமையோர்கண். (169)
இஃ தொருவயிற்போலி. திணை – பாடாண். துறை – கடவுள் வாழ்த்து ; நாடுவாழ்த்துமாம்.
திரையெறிந்த நித்திலத்தினோடு மள்ளர்களை கட்டெறிந்த காவிகளுஞ் சேர் கமலமென்க.
போன்மெனத் தோன்று மென்பது போலத்தோன்று மென்றவாறு. ஒழிந்த அகல முரையிற் கொள்க.

4. பலவயிற்போலி யென்பது ஒருதொடர்மொழிக்கட் பல வுவமைவந்தா லுவமைதோறு முவமைச்சொற் புணர்ப்பது.

பொன்மலைபோலுந்திருமால்புட்குழியாள்பூண்முலைநீர்
மன்னருவிபோலுமணிவடங்கள்–சொன்னதன்மேற்
செக்கர்வான்போலுமெழிற்செம்படாமும்புனைந்தா
ரெய்க்குநூலென்னாமினி. (170)
இது பலவயிற்போலி. எய்க்குநூல் – எய்யாநிற்குநூல். பொன் மலைபோன்ற முலையின்மேற் பொற்பூணையும் பூட்டி
முத்து வடத்தையும் பூட்டிச் செம்படாத்தையு முத்தரீகமாகப்போட்டமையா னினி யிடை யிறுமென்றவாறு.
என்னா மென்பது குறிப்புமொழி. எனவே, இடையைத் தாங்கி வடமுதலியவற்றைத் தாங்கிப் புடைபெயர்த்துத்
தனத்தைப் பரிசித்து மருங்கணைந்தானாம். பகுதி – இடந்தலை. துறை – மருங்கணைதல்.

5. இல்பொருளுவமையாவது முன்பில்லாததொன்றை யொன்றற் குவமையாக்கி யுரைப்பது :-

உதிக்குங்கருஞாயிறென்றேயுவமை
மதிக்கும்வடமலைமாயோனைத்–துதிக்குந்
திருநாவுடையபிரான்செந்தமிழையோதி
யிருநாவேவாராதிடர். (171)
என்பது இல்பொருளுவமை. என்னை? கருஞாயிறு இல்லாத பொருளாதலால் அதனைக் காளமேகம்போன்ற
திருமேனிக் குவமைகூறினமையா னென்றுணர்க. திணை – பாடாண். துறை – ஓம்படை.

சொன்னவாறொன்றுரைக்கக்காணேன்றுணைமேரு
வென்னவாழ்வுற்றவிணைமுலையாண்-மன்னவா
பந்துகழங்கம்மனைகைப்பற்றுகவென்றின்றெனையும்
வந்துதழீஇக்கொண்டாண்மகிழ்ந்து. (172)
இதுவுமது ; இதனுள் துணைமேருவென்றதனால் வடமேரு ஒன்றல்ல தில்லையால் இல்பொருளுவமையாயிற்று.
இவ்வணஞ் சிந்தாமணியினும் “கோண்மின்னு மீன்சூழ் குளிர்மாமதித் தோற்ற மொத்தே” என
வந்தமையா லிதனது வேறுபாடுங் காண்க. பகுதி – உடன்போக்கு. துறை – குறிப்புணர்தல்.

6. மறுபொருளுவமை யென்பது முன்னர்வைத்த பொருட்கு நிகராவதோர் பிறிதொருபொருள் பின்னரு மதன்கண் வைப்பது :-

மாண்குலாமாறாநின்வண்டமிழ்போன்மற்றொருநூல்
காண்கலேனாங்கதுபோற்காண்கலேன்–மீண்டும்
புதல்வற்கருள்புரிந்துபொற்றூணிற்றோன்று
முதல்வற்கிணையாமுதல். 173)
இது மறுபொருளுவமை. திணை – பாடாண். துறை – பனுவல் வாழ்த்தோடு கடவுள்வாழ்த்துமாம்.

7. விபரீதவுவமையென்பது முன்பி லுவமையாகவந்ததனைப் பொருளாக்கிப் பொருளை யுவமையாக்குதல் :-

மென்றோளெனத்திரண்டவேயினங்கள்வெம்முலைக
ளன்றோவெனக்கோங்கரும்புறா–நின்றனவால்
வண்டமிழ்மாறன்றுடரிவண்பொழிலுமின்றெனக்கவ்
வொண்டொடியாய்த்தோற்றமுறும். (174)
இது விபரீதவுவமை. என்னை? “பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினு, மருளறு சிறப்பினஃ துவம மாகும்” என்றாராகலின்.
அன்றோ வென்பது அல்லவோவென எதிர்மறையாகி ஆம் என்றாயிற்று. பகுதி – பாங்கற்கூட்டம். துறை – பொழில்கண்டுமகிழ்தல்.

8. மருட்கையுவமை யென்பது உவமைகூறுவான் மருட்கை வயத்தனாகி யொருபொருட்குக் கூடாதபண்பினைக்
கூடுவதாகக்கொண்டு அதனை யொன்றிற் குவமையாக்கி யுரைப்பது :-

தாகம்பெறநுகர்தீந்தண்மருந்துகைத்தழலின்
வேகம்பயின்றவிதிபோலு–மோகம்
படையாதமாறன்பனிவரைமேலென்னோய்
துடையாதுநீயுரைக்குஞ்சொல். (175)
இது மருட்கையுவமை. தெண்டியாசிரியர் கூடாவுவமை யென்பது மிது.
தீந்தண்மருந்து – இனிய குளிர்ந்த வமிர்து. கைத் தழலின் வேகம் பயிலுதல் – கயந்து தழல்போலச் சுடுங் கோப மிடைவிடாமை.
பகுதி – இதுவுமது. துறை – பாங்கனைநொந்துகூறல்.

9. தலைதடுமாற்றவுவமை யென்பது மேற்றொட்டு முதலே வந்த வுவமப்பொரு ளிடையினு மீற்றில் வந்த
வுவமேயப்பொருண் முதலினும் இடையினின்ற வுவமவுருபு இறுதியிற் றொக்கதும் விரிந்ததுமாகப் புணர்ப்பது :-

மையமருண்கண்காவிவாய்பவளந்தோளிணைவே
யையவிடைநுண்ணூலகலல்குல்–பையரவங்
கஞ்சத்திருமாதுகாதலிக்குமார்பகத்தான்
றஞ்சைத்திருமான்றனக்கு. (176)

இது தலைதடுமாற்றவுவமை. இவை யுவமவுருபு இறுதியிற் றொக்கது.
“குவவின கொங்கை குரும்பை குழல் கொன்றை” யென்பது மிது.
மையமருண்கண்-கருமைபொருந்திய மையுண்கண். ஐயவிடை நுண்ணூல்-உண்டில்லையென்று சந்தேகமுற்ற
விடை நுண்ணிய நூல் போலு மென்றவாறு. ஐயவிடை யென்பதற்கு ஐயனே யென
அண்மை விளியா யுவப்பின்கண்ணே மயங்கியதாகக் கூறினானெனினுமாம். பகுதி – இதுவுமது. துறை – இயல்பிடங்கூறல்.

10. விகாரவுவமை யென்பது உவமையாகிய தன்மைப் பொருள் விகாரம் பண்ணியதாக உவமிப்பது :-

தெள்ளமிர்தத்துள்ளாயதீஞ்சுவையைமெய்வேதத்
துள்ளவுணர்வையுணர்வினா–லள்ளி
யெடுத்திசைத்ததொன்றெனலாமின்பொருளான்மாறன்
றொடுத்திசைத்தவுத்தமப்பாச்சொல். (177)
இது விகாரவுவமை. உணர்வை யுணர்வாலள்ளி யென்பது உபநிடதச் சொல்லுளிருந்த ஞானத்தைத்
தனதுண்மைஞானத்தாற் சொல்லைநீக்கித் திரட்டியெடுத் தென்றவாறு. இரும்பை யிரும்பினாலறுத் தென்பது போலக் கொள்க.
சொல்லெனவே சொல்லு மதனுட் பொருளுமாயிற்று. சொல்லு மதனுட்பொருளும் அமிர்தினுள்ள
சுவையையு முபநிடதச் சொல்லினுள்ள வுணர்வையுந் தனது பரம ஞானத்தா லள்ளி யெடுத்துச் சொல்லும்
பொருளுமாகத் தொடுத் திசைத்ததொன் றெனலா மென்க. இது பனுவல்வாழ்த்து.

11. தடுமாறுவம மென்பது ஒருபொருள் ஒருகால் உவமையுமாய் ஒருகாற் பொருளுமாகி யொருதொடர்ச்சிக்கண்ணே தடுமாறிவருவது :-

மெய்வேதம்போன்றதுநின்மெய்த்தமிழ்நின்மெய்த்தமிழ்போன்
மெய்வேதமுங்காட்சிமேயதால்–வையகமெண்
ணாவலவர்காரிதருநாவீறாநின்னிகராம்
பாவலரிங்காரோபகர். (178)

இது தடுமாறுவமை ; என்னை? “தடுமாறுவமங் கடிவரையின்றே” என்றாராகலின்.
தெண்டியாசிரியர் இதரவிதர மென்பது மிது. திணையுந் துறையு மிதுவுமது.

12. சமுச்சயவுவமை யென்பது இதனானேயன்றி யிதனையொப் பதினானு மொக்கும் என்பது :-

வண்ணத்தாலன்றிவடிவாலளவினா
லெண்ணிற்கமலமுகையேய்க்குமே–கண்ணன்
வழியார்துணைமாறன்மால்வரையாய்கன்னன்
மொழியார்துணைமாமுலை. (179)
இது சமுச்சயவுவமை. கண்ணன்வழியார்-கண்ணனே பரதத்துவ மெனநிற்கு மார்க்கத்தினையுடையார்.
துணையென்றது அவர்களான்மாவுக் குறுதித்துணை யென்றவாறு. மாறன் மால்வரையிலுள்ள தலைவனே !
கன்னலினதுபாகுபோலு மொழியையுடையாரென்று நீ சொல்லப் பட்டவ ருபயமுலை செம்மைநிறத்தா லொத்ததன்றி
வடிவினாலு மளவினாலு முள்ளத்தா லுவமைகுறிக்கின்ற செந்தாமரைமுகையை நீ சொன்னபடியே யொக்குமென்றவாறு.

குறிவழிச்சென்ற பாங்கன் தலைவி தனமுங் காண்பனோவெனிற் காண்ப துண்டென்பதற்குச் செய்யுள் :-
“அரனம்பலத்தி, னியலுள வேயிணைச்செப்புவெற்பாநினதீர்ங்கொடிமேல்” என்றதனா லறிக.
மால் வரையாயென்றதனா னில மொன்றென்பதாயிற்று. பகுதி – பாங்கற் கூட்டம். துறை – செவ்விசெப்பல்.

13. இன்சொலுவமை யென்பது பொருளினு முவமைக்கோர் மிகுதி தோன்றக்கூறி
யுவமேயத்தினு மிகுதியுளவேனு மொப்பதன்றிச் சிறந்ததன்றென்பது :-

ஒன்றாயநின்முகத்ததொண்டமிழ்வேதங்குரவ
னன்றாயுநான்முகத்ததவ்வேத–மென்றாலும்
வண்டமிழ்மாறாவண்டமிழ்மறைக்கொப்பன்றிமறைக்
குண்டெனலாமோவேறுயர்பு. (180)

இஃது இன்சொலுவமை. இதனுள் ஒப்பதன்றியென்பது ஒப்பன்றி யெனச் செய்யுள்விகாரத்தாற் றொக்கது.
திணை – பாடாண். துறை – பனுவல்வாழ்த்து.

14. நியமவுவமை யென்பது இன்னதற் கின்னதே யுவமை யென்று தேற்றேகாரம்பெறத் துணிந்துசொல்வது :-

வாய்மைமறையேநினதுவாய்ந்ததமிழ்மறையின்
வாய்மைதனக்கிணையாம்வாழ்த்துங்காற்–றாய்முலைப்பா
லுண்ணாதமெய்ஞ்ஞானமோங்கியமாறாகமலக்
கண்ணானேநின்னிணையாங்காண். (181)
இது நியமவுவமை. வாய்மைமறை – மெய்வேதம். திணை – வாகை. துறை – தாபதவாகை.

பைம்பொற்குன்றேபணையிளவனமுலை
யம்புத்துணையேயரிமதருண்கள்
குனிசிலையிரண்டேகொடுநன்புருவம்
பனிமாமதியேபழிதீர்நன்முகங்
கொடியேதளரிடைகொண்மூவேகுழ
லாடரவின்படமாமேகடிதடங்
காந்தளின்றுணைமலர்க்கவினேகையும்
பூந்தளிரன்றேபுடைபெயர்மெல்லடி மாதே,
படர்புகழ்மாறன்பராங்குசன்
றுடரிமால்வரைவளர்தோகையதியலே. (182)
இதுவுமது. பா-பொதுச்சீர் பதினாறும்வந்து நேரிசையாசிரியச் சுரிதகத்தாலிற்ற குறளடிவஞ்சிப்பா.
பணையிளவனமுலை – பெருத்த இளைய அழகிய முலை.
அரிமதருண்கண் – செவ்வரிபரந்து கண்டார்க்கு விருப்பத்தைக்கொடுக்கு மையுண்கண். பகுதி – சேட்படை. துறை – அவயவங்கூறல்.

15. அநியமவுவமை யென்பது நியமித்த வுவமையை விலக்கிப் பிறிதுமோருவமை புணர்ப்பது :-

தேன்சுவைக்கொண்டோங்குமகிழ்ச்செல்வாநின்செந்தமிழின்
வான்சுவைக்குவான்சுவைகொள்வான்கனியே–நான்பகர்தற்
கொப்பாகக்கண்டதுமற்றுள்ளிற்சுவைதெவிட்டா
தப்பான்மைத்தானதுமொப்பாம். (183)
இஃது அநியமவுவமை.

(இ-ள்) வண்டுகள் தேனையுண்ணும் பரிமள வகுளமாலிகையையுடைய செல்வனே !
நினது திருவாய்மொழியிலுண்டான சொல்லும் பொருளும் கேட்ட செவிக்கும் ஓதின நாவிற்கும் உற்ற வுணர்விற்கும்
இனிமைதரும் பெரிய வினிமைக்குப் பரமபதத்துள்ளார் மனோ வாக்குக் காயங்களால் இனிமைகொள்ளும்
பரமபதநாதனாகிய அக்காரக்கனியே நான் சொல்லுதற் கொப்பாகக் கண்டது ;
அஃதன்றி வேறுவமை குறிப்பேனாகின் முப்பொறிகளுஞ் சுவை தெவிட்டாத திருவாய் மொழியேபோலப்
பண்ணும் பாடலுமாய் நடைபெறுஞ் சுருதியும் அதற்கொப்பா மென்றவாறு.

அப்பான்மைத்தானதும் என்றது சுருதியை. துறை – பனுவல் வாழ்த்து.

16. புகழுவமை யென்பது உவமையைப் புகழ்ந்துவமிப்பது :-

விண்ணோருயிர்தளிர்ப்பான்வேலைவாயன்றுதித்த
தண்ணாரமிர்தந்தனைநிகர்க்கும்–பண்ணாற்
றிருந்துமறையைத்தமிழ்செய்தேவேசன்வெற்பின்
முருந்துநகையார்மொழி. (184)
இது புகழுவமை. பண்ணாற்றிருந்து மறை – கீதநடைத்தாய்க் குற்றமற்ற மறை ; அது சாமவேதம்.
மறையைத் தமிழ்செய் தேவேச னெனவே வேதந்தமிழ்செய்தபெருமாள் என்னு நாவீறுடையபிரான் என்பதாயிற்று.
பகுதி – இயற்கை. துறை – புணர்ச்சியிறுதிக்கட்டலைமகன் காதற்சிறப்புரைத்தல்.

17. நிந்தையுவமை யென்பது உவமையை இகழ்ந்துவமிப்பது :-

உறைகழித்துக்கைம்மிசைக்கொண்டொண்மறவரோச்சின்
மிறைபுரிவேலொப்பெனினுமேலா–நறையூர்வாழ்
தேந்துளபமால்வரைமேற்றானேதெறுஞ்செயலா
லேந்திழையாள்வன்கண்ணிணை. (185)
இது நிந்தையுவமை. ஒண்மறவர் – கொலைமேற்கொண்டொழுகு மொள்ளிமையுடையமறவர் ஒச்சில் – செலவிடுக்கில்.
மிறைபுரிவேல் – கொலையைவிரும்பும் வேல் ; எடுத்தெறிதலைவிரும்புவார்தொழிலை வேலின்மே லேற்றியது காரண காரிய மயக்கம்.
மறவரோச்சுகிற் கொல்வ தல்லது வன்கண்போற் றானேதெறுஞ்செய லின்றென்பதனால் நிந்தை யுவமையாயிற்று.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – உற்றதுரைத்தல்.

18. மோகவுவமை யென்பது ஒருபொருளின்மே லெழுந்த வேட்கையாலதற்கு உவமையாகக் குறிக்கப்பட்ட
வதன்மேலும் வேட்கை நிகழ்ந்ததாகக் கூறுதல் :-

அம்பவளமொன்றிருப்பவன்புறுமாதொண்டையெனச்
செம்பதுமத்தேனேநின்செவ்வாயை–விம்பமுநே
ராதற்கதைவிரும்புமாழியான்கோழியூர்க்
காதற்சிறப்புடையேன்கண். (186)
இது மோகவுவமை.

(இ-ள்) ஆழியான் கோழியூர்ச் செய்யபதுமத்தினிடத்து விளைந்த தேன்போலுமொழியையுடையாய் !
நினது சிவந்த வாயை யதற்கொத்த அழகிய பவளமுளதாயிருப்பவும் ஆதொண்டையை யொப்பெனநோக்கி
யன்புறாநிற்கு மஃதன்றி யவ் வாதொண்டை செய்ய வாயினிறத்தோடும் வடிவிற்கு மொப்பதால்
அவ்வாயினையுங் காதலிக்கப்பட்ட சிறப்புடையே னோடுங் கூடிய கண்கள் அவ்வாதொண்டையையும் விரும்பாநின்ற வென்றவாறு.

ஆதற் கென்பது மூன்றாவது நான்காவதாயிற்று. அதையும் என்னு மும்மை விகாரத்தாற்றொக்கது.
விம்பம் – வடிவம். பகுதி – இடந்தலை. துறை – காதற்சிறப்புரைத்தல்.

19. அவயவவுவமை யென்பது அவயவத்தையுவமித் தவயவியை வாளாதே கூறுவது :-

மாதரிலவிதழ்போன்மாண்பிற்றேமாதவனால்
வானோரருந்துமருந்து. (187)
இதனுள், மாதரென்ற தவயவி. இலவித ழென்ற தவயவம். பகுதி – இதுவுமது.
துறை – நலம்புனைந் துரைத்தல். புணர்ச்சிமகிழ்தலுமாம்.

வல்லிக்கொடிமருங்குன்மாதினுக்குமேருமுலை
யல்லிக்கமலமனையதடி–கல்லதர்தீ
சொல்லும்பொழுதரங்கர்தொன்னகர்சேய்த்தாயிழாய்
செல்லும்படிக்கெளிதோசெப்பு. (188)
இதுவும் அவயவவுவமை.

(இ-ள்) வல்லிக்கொடிபோலு மருங்குல் ; வடமேருப்போலு முலை ; அல்லியோடுங் கூடிய தாமரைபோலுந் தாள்கள் ;
பரலோடுங் கூடிய வதரும் அழல்போலச் சுடும்.
சொல்லுங்காலத்தில் அரங்கர்நகரமென்றால் நெடுந்தூர மாகையா லாராய்ந்தணிந்த பூணினையுடையாய் !
நினது மாதினுக் கென்னோடும்வரும்படி யெளியதொன்றல்ல வென்றவாறு. பகுதி – உடன்போக்கு. துறை – அருமையுரைத்தல்.

20. அவயவியுவமை யென்பது அவயவியை யுவமித்து அவயவத்தை வாளாதே கூறுவது :-

பொன்னங்கொடியனையபொற்றொடிதன்றாட்சுவடு
மென்னன்புறத்தோன்றுமிங்கிவைக–ளன்னங்
கடிக்கமலஞ்சேரரங்கர்கானிகராங்காளை
யடிச்சுவடுமாங்கவையேயாம். (189)
இஃது அவயவியுவமை. அரங்கர்கானிகராங் காளை – அரங்கர்புதல்வ னாங் காமன்போல்வானாங் காளையென்பதாம்.
பகுதி – இதுவுமது. துறை – சுவடுகண்டறிதல்.

21. முற்றுவமை யென்பது அவயவ அவயவிகளை யொருசெய்யுளகத் தொக்க வுவமிப்பது :-

பொன்னெடுங்குன்றெனச்செறிந்துபுடைபரந்தபுளகமுலை
மின்னெனலாநுணுகிடையவேய்புரையுந்தடமென்றோட்
குளிர்மதிபோன்மிளிர்வதனக்கோமளப்பூங்கொம்பன்னா
டளிர்புரைமெல்லடிச்சுவடுந்தளர்ந்தனவெய்யோன்மன்னோ
குடதிசைவான்கதிர்சுருக்கிக்கொடித்தேரினொடுமறைந்தா
னடல்புனைவேடுவர்குறுகியற்றம்பார்த்தாறலைப்பார்
பொன்புனைபூண்மணிமார்பிற்புரவலவின்றிருவீரு
நன்குலத்தெம்மில்வைகிநறுந்தேன்செந்தினையருந்தி
மரையதளிற்றுயில்வைகிவைகறைவாய்த்துயிலெழுந்து
விரைகமழ்தார்மகிழ்மாறன்மெய்த்தமிழ்ச்சொற்குருகூரின்
முதிர்திரைப்பாலாழியின்வான்முகடுரிஞ்சுமுதயகிரி
கதிர்வருமுன்சேர்தல்கடன். (190)
இது முற்றுவமை.

(இ-ள்) பொன்மேருவாகிய மலைகளென்னும்படி சிக்கென்று மருங்ககன்ற புளகமுலையினையு மின்னெனத் தகுவதா
நுண்ணிய விடையினையு மூங்கில்போலும் பெரிய மெல்லிய தோளினையு மதிபோல விளங்கு முகத்தினையு முடைத்தாய
பூங்கொம்பன்னாள் தளிர்போன்ற மெல்லிய வடியிரண்டுந் தளர்ந்தன, ஆதித்தனுங் குடதிசைவாய் வானிற் கிரணங்களை
யொடுக்கிக் கொடியையுடைய தேரினோடு மறைந்தான், வெற்றியையுடைய வேடுவர்கள் அற்றம் பார்த்து வழிபறிப்பர்,
இனிப் பொன்னினாற்செய்த பூணினையணியு மார்பினையுடைய மன்னனே !
இற்றைப் போது நீங்களிருவீரு முத்தமகுலமாகிய எங்களில்லின்கண் வதிந்து, நல்லதேனினோடுங் கூடிய
தினைமாவினையுந் துய்த்து, மான்றோலிற் றுயிலமர்ந்து, வைகறையிற் றுயிலெழுந்து,
மணங்கமழாநின்ற வகுள மார்பன் மெய்த்தமிழ் பாராட்டப்பட்ட கீர்த்தியையுடைய குருகாபுரியிடத்துப் பெருத்த
திரையையுடைய திருப்பாற்கடலின்கண் வானின் துச்சியைத் தைவருங் கொடுமுடியையுடைய வுதயகிரியிற்
கதிரோ னுதிக்குமுன்ன மெய்துவதே முறைமை யென்றவாறு.

மன்னும் ஓவும் அசை. பகுதி – இதுவுமது. துறை – நெறிவிலக்கு. பா-வெண்கலிப்பா.

22. ஏகவுவமை யென்பது உவமையும் உவமேயமுந் திணை பான் முதல் சினை பெயர் வினை யென்பன மயங்கா தொன்றாயிருக்கை :-

முற்றவுணர்த்துமுதுகாப்பியம்புணர்ப்பா
னுற்றவர்தங்கண்போன்றுறங்காவா–மிற்பிரிந்தா
னல்லியலார்வந்தனைசெய்நாவீறன்மால்வரைமேன்
மெல்லியலாரின்பவிழி. (191)
என்பது ஏகவுவமை. இதுவும் பூரணவுவமைப்பாற்படும்.

(இ-ள்) நெஞ்சமே ! நன்புலவ ரஞ்சலிசெய்யு நாவீறுடைய பிரான் வண்குருகூரினிடத்து மெல்லிய
சாயலையுடையா ரின்பவிழியானது இனிநாமிவரை யில்லின்கண்வைத்துப் பிரிவோமாகில் அறமுதலிய
நாற்பொருளு மலை கடனாடு முதலிய பதினெட்டு வருணனையு மொழிந்தனவுங் குறைவின்றி யுணர்த்தப்
படுவனவாகும் பெருங்காப்பியம் பாடுதற் குட்கொண்ட புலவர்கண்போலத் துயிலொழிந்ததோடும் துன்பவிழியா மென்றவாறு.

இது, கற்பினு ளில்வாழ்க்கையென்னும் பகுதிக்கண் பிரிந்து சேய்நாட் சென்று வந்து கூடிய தலைமக னவளுறுப்புக்களை
வேட்கை மிகுதியாற் புதுவது புதுவதாகப் பாராட்டத் தலைமக ளிஃதொன்றுடைத்தென வஞ்சியவழிப்
புணர்ச்சியந்தியத்துந் துயிலாததைத் துயின்று துயிலொழிந்தோன் தன்கட் பிரிதற்குறிப்புளதாகக் குறித்த
வேறுபாடெனக் குறிப்பானறிந்த தலைமகன் முன்னிலைப் புறமொழியாகத் தன்னெஞ்சிற் கவள்குறிப்பறிவுறுத்துவான்போல
வினி நின்னிற் பிரியேனெனப் பிரியாத தன்குறிப்பினைத் தலைமகட்கறிவுறுத்தல் கலி யுள்ளும்,
“மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுட், பாயல்கொண் டென்றோட் கனவுவா ராய்கோற்,
றொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள், கடிமனை காத்தோம்ப வல்லுநள் கொல்லோ” எனத்
தலைமகன் புணர்ச்சியந்தியத்துக் கனவினரற்றியதனைத் தலைவி துயிலொழிந்திருந்தவன் குறிப்புணர்ந்தனளென்பது முணர்க.
அன்றியும், கற்பினுட் குறிப்பறிவுறுத்த லென்னு மதிகாரத்தின்கண் வள்ளுவரும்
“கரப்பினுங் கையிகந் தொல்லாநின் னுண்க, ணுரைக்க லுறுவதொன் றுண்டு” என்னுங்
குறட்பாவினுட் டலைவன் றன்பிரியாமைக்குறிப்பினைத் தலைவிக் கறிவுறுத்தவாறுங் காண்க.
இதனுள், தலைவி இஃதொன் றுடைத்தென நாடின் மடனழிந்ததன்றோ வெனின்?
தலைவன்கட் டலைவி விரும்புதலா லதுவுங் கடனாயிற்று. என்னை?
“தன்வயிற்கரத்தலுமவன்வயின் வேட்டலு, மன்னவிடங்களல்வழியெல்லா, மடனொடுநிற்றல்கடனென மொழிப” என்னும்
பொருளியற்சூத்திரத்தா னுணர்க. முதுகாப்பியம் புணர்ப்பா னுற்றவர்தங் கண்போன் றுறங்காவா மென்றதனால் தோழி கூற்றன்று ;
தலைவன்கூற்றென வுணர்க ; என்னை? “இவ்விடத் திம்மொழி யிவரிவர்க் குரியரென், றவ்விடத் தவரவர்க் குரைப்பதை முன்னம்”
என்னுஞ் செய்யுளியற்சூத்திரத்தான், பெருங்காப்பிய வொழுக்கம் அறிவது பெண்டன்மைக் குரிமையன்மையி னுணர்க.
இங்ஙனங்கூறிய விலக்கணங்க ளிறந்தவற்றிற்கு மினிமேல்வருவன வற்றிற்கு மிலக்கணமென வுணர்க.

23. மாலையுவமை யென்பது ஒருபொருட்குப் பலவுவமை வந்தா லவை யொன்றோடொன் றிடைவிடாது
தொடர்ச்சியுடையனவாகப் புணர்த்துக் கடைக்கட் பொருளை வெளிப்படையாகக் கூட்டி முடிப்பது :-

பாற்கடலுண்மால்போலவன்மார்பிற்பைந்தொடிபோற்
கோற்றொடியுட்கொண்டகுணமேபோ–னூற்கடலாய்ந்
தாமாறுணர்ந்தாரறம்பயின்றநாவகலா
பாமாறன்சொன்னதமிழ்ப்பா. (192)
இது மாலையுவமை. அறம்-வேதம். உட்கொண்டகுணம் – கருணை. துறை-பனுவல்வாழ்த்து.

தென்னரங்கனுந்திச்செழுமலர்போலம்மலருண்
மன்னுமயன்போலயன்மனத்து–ணன்மறைபோ
னீங்காதொருபொழிற்கண்ணோவியம்போனின்றதொன்று
பாங்காகக்கண்டனன்வெற்பா. (193)
இதுவுமது.

(இ-ள்) வெற்பனே ! திருவரங்கேச னுந்தித்தாமரைபோலவும் அத்தாமரையுள் வைகும் பிரமனைப்போலவும்
பிரமன்மனத்துட் குடி கொண்ட நல்ல சுருதிபோலவும் ஒருபொழுதும் நீக்கமின்றி நீகூறிய
பொழிற்கண் ணோவியம்போனின்றதொரு பெண்ணுருவத்தைக் காவின தொருபக்கமாகக் கண்டன னென்றவாறு.

ஓவியம்போனின்ற தென்றான் உயிர் நின்னிடத்தும் உடலங்கு மாக நின்றதென்பது தோன்ற.
ஒருபக்கத்தேநின்ற தென்றான் ஆயத்தை நீங்கிநிற்பதுதோன்ற. பகுதி- பாங்கற்கூட்டம். துறை-பாங்கன் கண்டமைகூறல்.

24. அந்தாதியுவமை யென்பது ஒரு செய்யுளகத்துப் பல பொருட்குப் பலவுவமை வந்தான் முதலே
யுவமஞ்செய்த வுவமேயப் பொருட்பெயரினை யாகுபெயராதல் அன்மொழித்தொகைப்புறத்துவந்த
பெயராத லாக்கித் துணித்துநிறீஇ யவ்வுவமேயப்பெயரினை யந்தாதித் துவமானப்பெயராக்கி
யுவமவுருபுகொடுத்துப் பின்ன ரதன்மேல்வரு முவமேயப்பொருளோடு புணர்த்து நிகழ்த்துவது :-

குருமணிகுயின்றபொற்குடமெனத்தகைசால்
பருமணிவடந்தோய்ந்தெழுதருபணைமுலை
முலையெனப்பொடித்ததாமரைமுகைமுகைநெகிழ்
பொழுகுதண்ணறவெனவுறுநர்நன்மார்பத்
திழுகுமான்மதமளாயெழுபுனற்சங்கணித்
துறைவளங்கெழீஇயதொன்மைசான்மரபி
னீங்கிதுபுவனம்யாவையுந்தழைத்தற்
கோங்கியவிராமாநுசமுனியிருக்கை
யாங்கதுதருமமோர்படிவமுற்றனைய
பாங்குறுசக்கரபாணிபேர்புனைபதி
மழைகிழித்தெழுந்தபொன்மாளிகைச்சூளிகைத்
தழைதுகிற்கொடித்திரடாமவெண்மதியகட்
டுறுமறுத்துடைத்துவானொரீஇநுடங்கூங்குது
முருகார்மொய்ம்மகிழ்மாறன்
குருகாபுரியெனக்கூறுநன்னகரே. (194)
இஃது அந்தாதியுவமை. இதனுள், பணைமுலை யென்பது பணைத்த முலையினை யுடையாயென
வினைத்தொகைப்புறத்துவந்த வன் மொழித்தொகைப் பெயராய் அண்மைவிளியேற்றுத் துணித்துநிறீஇய வாறும்
முலையென வருபெயரினை யுவமானப்பெயராக்கி, யுவமவுருபு கொடுத்துப் பின்ன ரதன்மேல்வருந் தாமரை
முகையென்னு முவமேயப் பொருளோடும் புணர்த்தலுங் காண்க.
முகை நெகிழ்பு – முகைநெகிழ்ந்து. ஒழுகு தண்ணறவென – ஒழுகு தண்ணறவுபோல.
வுறுநர் – தன்னிடத்திலே பரிசிப்பார். இழுகுமான்மதம் – பூசுங் கத்தூரி.
அளாயெழுபுனற் சங்கணித்துறை – கலந்தோடும் புனலையுடைய திருச்சங்கணித்துறை.
ஈங்கிது வென்றது தமக்கு முன்னானவிடத்தை. ஆங்கது வென்றது தமக்குச் சேய்த்தானவிடத்தை.
ஊங்குது வென்றது இரண்டிற்கும் நடுவான விடத்தை. தாமவெண்மதி – ஒளியையுடைய மதி. ஒழிந்த வகல முரையிற் கொள்க.

அஃதேல், “அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே” எனத் தொல்காப்பியனா ரிதனைக்கூறி மறுக்கவும்
இங்ஙனங் கூறுமது மாறுகொளக் கூற லென்னுங் குற்றமாம் பிறவெனின், ஆகாது ; என்னை?
அஃ தொருபொருளோ டொருபொருளை யுவமித் ததற் குவமவுருபுகொடுத்துப் பிறிதொருபொருளை யுவமித்தல்.
அதற்குச் செய்யுள், “மதியத் தன்ன வாண்முகம்போலும், பொதியவிழ் தாமரைப் புதுப்பூம் பொய்கை” என்பது ;
மதியத்தன்ன வாண்முகத்தை யொக்கும் தாமரை யென்றமையின் அவை யொன்றினோடொன்று பொருந்தாதென்பதுகருதி மறுத்தார்,
இஃதன்னதன்று. என்னை? பருமணிவடந்தோய்ந் தெழுதரு பணைமுலையினையுடையாயெனத் துணித்துக்கூறினமையா னென்றுணர்க.
“ஈர்ந்து நிலந்தோயு மிரும்பிடித் தடக்கையிற், சேர்ந்துடன் செறிந்த குறங்கினள் குறங்கென,
மால்வரை யொழுகிய வாழை வாழைப் பூவென” என்பதுபோலக் கூறினாரென்க.
பகுதி-உடன்போக்கு. துறை-பதிபரிசுரைத்தல். பா-நேரிசையாசிரியப்பா.

25. பொதுநீங்குவமை யென்பது உவமையைக் குறிப்பினானாதல் வெளிப்படையானாதல் கூறி
மறுத்துப் பொருடன்னையே பொருட் குவமையாக்கி யுரைப்பது :-

முற்குணத்தான்மாதர்முலைப்பாலருந்தாத
நற்குணத்தால்வேதமொருநான்கினையுஞ்–சிற்குணத்தா
லோதாதுணர்ந்துணர்த்துமுத்தமமாறற்கிணைபார்
மீதார்மனனேவிளம்பு. (195)
இது குறிப்பால் வந்த பொதுநீங்குவமை. இதனுள், மனனே விளம்பென்பது மரபுவழுவமைதி ; என்னை?
நாவாகியபொறியினது கிரியையை அந்தக்கரணத்தின்மேலேற்றி யதனைக் கூறுக வென்றதனால்.
நாவாகிய பொறிக்குச் சொற்கிளத்தலுஞ் சுவையறிதலுமாகிய இருதிறத்தனவா மவையிரண்டு மந்தக்கரணங்கள்கூடாதே
யதற்குங் கூடாதாதலா னதனை யங்ஙனங் கூறப்பட்டது.
திணை – பாடாண். துறை – “அமரர்கண் முடியு மறுவகை யானு” மென்பதனான் முனிவர்வாழ்த்து.

வாரியைமொண்டுண்டோன்வசிட்டன்முதலாய
சீரியரின்ஞானஞ்செறிந்ததாற்–காரிதருஞ்
சேயேயுடையநங்கைசெம்முலைப்பாலுண்ணாதாய்
நீயேநினக்குநிகர். (196)
இது வெளிப்படையாய்வந்த பொதுநீங்குவமை. துறை – இதுவுமது.

ஆகப் பலபொருளுவமைமுதற் பொதுநீங்குவமையீறாக வுவமவிரி யிருபத்தைந்தும் அடைவே காண்க.

102. சிறப்பினும்வரூஉந்திறமுமொன்றுளதே.
(எ-ன்) இஃதுவமவிரியு ளோதாததாகவொழிந்த தொன்றுணர்-ற்று.

(இ-ள்) ஒருபொருளைப் பிறிதொருபொருளாகச் சிறப்பித்துச் சொல்லுமிடத் துளவாய்வரூஉங் கூறுபாடு மொன் றுளதென்றவாறு.

சிறப்பென்பது ஒருபொருளையெடுத் ததற்குச் சிறந்த பல அடைகளையு முவமித் தவற்றானே யுவமையாக்கி யுரைப்பது.

நுண்டுகிற்கொடிகணுடங்குபுவளங்கெழு
வெண்பொன்மாளிகைசுலாம்வீதிதெண்டிரையெழும்
பாற்கடற்பரப்பதாய்வரிபலபயின்மதிண்
மேற்படநிவந்துவிளங்குகோபுர
மைவாய்ச்சேடன்மண்டலித்தனனாகிப்
பைவாய்த்தலைநிமிர்பான்மையவாகக்
கருங்கடன்மொண்டெழுங்கருவிக்கார்மழை
யொருங்கதனனந்தலையுறப்படிந்ததொடு
மோங்குபொற்கம்பத்துச்சிமேலதனொளி
பாங்குறவுச்சியிற்பதிதருபானு
யோகநித்திரைகொளுமுரவோனுந்தியி
னேகதாட்டாமரைப்பொகுட்டிறைவனைநிகர்
சினகரக்குருகாபுரியினுட்செவ்வியி
னனவரதமுஞ்சராசரங்களாக
வுதிக்குமன்னுயிர்களையுவந்தே
துதிப்பர்நித்தியரெனத்துறவுளோரே. (197)
இது சிறப்புவமை. திணை – இதுவுமது. துறை – சினகர வாழ்த்து.

103. அடையொடுபொருட்கடைபுணர்க்குமஃதிரட்டை.
(எ-ன்) இதுவும் விரியுளோதாத வொழிபுணர்-ற்று.

(இ-ள்) அடையடுத்த முக்கியப்பொருட் கொப்புமை கூறும் ஒப்புடைப்பொருளிடத்து முக்கியப்பொருளி னடை
புலப்படப் புணர்ப்பது மிரட்டையுவமையா மென்றவாறு.

புணர்ப்பது மென்னு மும்மையால் ஒற்றைக்கிளவியும் இரட்டைக் கிளவிவழித்தாகிவருவன கொள்க;
என்னை? “இரட்டைக்கிளவி யிரட்டைவழித்தே” என்றாராகலின். உவமை யென்பது அதிகாரத்தாற் பெற்றது.

நறைமல்கியகொழுங்காவியைப்போனள்ளிரவினுநீ
டுறைமல்கியகண்டுயிலாமையன்பர்க்குரைக்கிலநான்
மறைமல்கியசெந்தமிழ்மாறன்வண்குருகூர்ப்பொருநைத்
துறைமல்குசேவற்சிறையிறைநீங்கிற்றுயரன்னமே. (198)
இஃ திரட்டையுவமை ; நறைமல்கியகாவிபோ லுறைமல்கியகண் ணென்பதா லறிக. மல்குதல் – பெருகுதல்.
உறை – துளி. இறை நீங்கில் – சிறிது நீங்கில். துயரன்னம் – துன்புறுமன்னம்.
பகுதி – ஒருவழித்தணத்தல். துறை – ஓதிமப்பெடையோடூடியுரைத்தல்.

ஊனூறியவிருகோட்டொருமாவையுறுபுனல்வன்
மீனூறுசெய்வதைத்தீர்த்தபிரான்வடவேங்கடத்திற்
றேனூறிலவிதழைக்கண்டபோழ்திலென்சிந்தையும்பர்
வானூர்மதிமுகத்தாளிதழாகமதித்திடுமே. (199)
இஃது ஒற்றைக்கிளவி யிரட்டைவழித்தாய்வந்த வுவமை ; இதனுள், தேனூறிலவிதழைக்கண்டபோழ்தெனக் கூறிய
வழிப் பானமூறுமித ழென்னாதே இதழென ஒற்றைக்கிளவியாய்க் கூறினமையா னென்றுணர்க.
பின்னர்வந்த விதழ் – அதரம். உம்பர் வானூர் மதிமுகத்தா ளென்பதன்கண்ணு மிவ்வுவமை வந்தவாறு காண்க.
அது, “கருங்கால் வேங்கை வீயுகு துறுக-லிரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை” என்னுங் பாட்டினுங் காண்க.
முன்னர்வந்ததற்கும் “பொன்காண் கட்டளை கடுப்பச் சண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்” என்பதனுட் காண்க.
பகுதி – இடந்தலை. துறை – புனங்கண்டுமகிழ்தல்.

104. உவமையுமுருபுந்தொடர்வழிப்பிறிதுமொன்
றுவமேயப்பொருட்கடைபுணர்ப்பதுமுள.
(எ-ன்) இதுவு மெய்தாத தெய்துவித்தது.

(இ-ள். ) ஒப்புடைப் பொருளொடு புணர்ந்த வுவமவுருபிற்குப் பின்னாகப் பிறிதுமோ ரொப்புடைப்பொருண்
முக்கியப்பொருட் கடையாக முன்னோராற் புணர்க்கப்பட்டுவருவது முளவென்றவாறு.
இஃ திலக்கியங்கண்டதற் கிலக்கணங் கூறியதெனவுணர்க.

அம்பனையவேற்கண்ணணங்காலறிவழிந்த
திம்பருனக்கெய்தியதாலெவ்வுளா–னும்பரெலாம்
போற்றவருண்மாலைப்போற்றார்போலாயினையான்
மாற்றமிதற்கென்னுரைக்கேன்மற்று. (200)
அம்பனையவேற்கண்ணென்றவழி யுவமப்பொருளின் துருபின் பின்னர் வேற்கண்ணென வந்தவாறு காண்க.
இதற்கு முன்னோர் கூறிய விலக்கியமாகக் கண்டன யாவையோ வெனின்,
“துப்புறழ் தொண்டைச் செவ்வாய்” எனத் திருத்தக்கமாமுனிகள் கூறிய சிந்தாமணியினும்,
“ஆம்பனாறுந் தேம்பொதி நறுவிரைத்-தாமரைச் செவ்வாய்” என்புழித்
“தேம்பொதிநறுவிரை யாம்பனாறுந் தாமரைச் செவ்வாய்” என இளங்கோவடிகள் பாடிய அந்தி மாலைச்
சிறப்புச்செய்காதையினுங் கண்டவை யென்றுணர்க.
இம்பருனக்கும் என்னு மும்மை செய்யுள்விகாரத்தாற் றொக்கது. பகுதி – பாங்கற்கூட்டம். துறை-பாங்கன்கழறல்.

105. மரபினும்வருவதோர்மரபுடைத்தென்ப.
(எ-ன்) இதுவு மெய்தாததெய்துவித்தது. இலக்கியங்கண்டதற் கிலக்கணங்கூறலு மாம்.

(இ-ள்) ஒருதொடர்பினு ளொருபொருட்காதல் பலபொருட்காதல் உவமைகூறுமிடத் துவமப்பொரு ளொருகுழுவினு ளொரு
மரபாகப் பலவுவமம்வருவது மரபுவமையா மிலக்கணத்தை யுடைத்தென்று கூறுவர் சான்றோ ரென்றவாறு.

செந்தாமரைவதனஞ்சேதாம்பல்வாய்நயன
நந்தாதசெங்குவளைநாடுங்காற்–கொந்தார்
வகுளம்புனைவார்வரைமயிற்குக்கஞ்ச
முகுளம்புணர்மாமுலை. (201)
இது மரபுவமை ; என்னை? கோடு கொடி நீர் நிலம் என்னும் நால்வகைப்பூக்களுள் நீர்ப்பூவாகிய குழுவுள்,
செம்மையென்னு மோரிலக்கணத்தனவாந் தாமரை யாம்பல் குவளை யென்னும் மூன்றினையும்
முகம் வாய் நயனம் முலை யென நான்கிற்கு மரபுபொருந்துவனவாக வுவமம்புணர்த்தலினெனக் கொள்க.
இதற் கிலக்கியங்கண்டதாவது :
“கடையாயார் நட்பிற் கமுகனைய ரேனை, யிடையாயார் தெங்கி னனையர்- தலையாயா, ரெண்ணரும்
பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே, தொன்மை யுடையார் தொடர்பு” என்பதனுள் ஓரினத்தனவாகிய
புறக்காழ்ப் புன்மரமேகூறி யொழிந்தமரங்க ளொப்பன வுளவாயினுங் கூறாராயினாராதலான் மரபுவமையாமென வுணர்க.
துறை – இயல்பிடங் கூறல்.

106.ஒத்ததுவென்றதென்றொருபொருட்குவமை
வைத்தனவாயொருதொடர்பினும்வருமே.
(எ-ன்) இதுவு மெய்தாத தெய்துவித்தது.

(இ-ள்) ஒருபொருட் குவமைகூறுமிடத்து ஒருபொருளை யொத்தது ஒருபொருளை வென்றது என்றிருபொருளைக்
குறித்தனவா யொரு செய்யுளகத்துவருவனவு முவமவிலக்கணத்திற்குக் கூடியும் நீங்கியும் வருமென்றவாறு :-

கூற்றுவன்வேல்போன்றுகுகன்வேலைவென்றுகொலை
யாற்றலுறும்வன்கண்ணமர்விளைப்பத்–தோற்றமுறுங்
கொல்லிப்பாவைக்கிணையாய்நின்றதெவன்கோகனக
வல்லிப்பாவைக்கிணையாவாய். (202)
இஃது ஒத்தது வென்றதென்றல். ஆற்றல் – பெருமை. தோற்றம் – பொலிவு.
கொல்லிப்பாவை – காமுகரைக்கொல்லும் பாவை. கோகனக வல்லிப்பாவை – திருமகள். பகுதி – இயற்கை. துறை – இரந்துபின்னிற்றல்.

தெண்ணறவைவென்றுதிரைத்தெள்ளமிர்தையொத்தமொழிப்
பெண்ணரசேமாதவன்றென்பேரைவாய்த்–தண்ணறும்பூக்
கொய்யாமலாயமுடன்கூடாமலூசலிற்றாள்
வையாமனின்றதென்னோமற்று. (203)
இது வென்ற தொத்த தென்றல். பகுதி – இதுவுமது. துறை – முன்னிலையாக்கல்.

107. ஏதுநுதலியமுதுமொழியினும்வரும்.
(எ-ன்) விரியுவமையினு ளின்னு மோ ரொழிபுணர்-ற்று.

(இ-ள்) அவ்வுவமை யேதுப்பொருளைக்குறித்துமுடித்தற்குப் பிறிதொருபழமொழியினும் வருமென்றவாறு.

பாம்புகடித்ததற்குத்தேளுக்குப்பார்ப்பதுபோ
லாம்புகழ்மால்கச்சியணிவரைவா–யாம்பகட்டா
லோடத்துணிந்தளித்தானுய்த்தநோய்க்கின்றுவெறி
யாடத்துணிந்தானறிவு. (204)

இஃது ஏதுநுதலியமுதுமொழியுவமை ; என்னை?
“நுண்மையுஞ் சுருக்கமு மொளியுடை மையு. மென்மையு மென்றிவை விளங்கத் தோன்றிக்,
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉ, மேது நுதலிய முது மொழி யென்ப” என்றாராகலின்.
இதனுட் குறித்தபொருண்முன்னரொரு முதுமொழியினை வைத்துப் பின்னர்த் தான்குறித்த பொருளை
வெளிப்படையாகவைத்தமையா னெனவுணர்க.
பகட்டாலோடத் துணிந்தளித்தானென்பது யானையைக்கண் டியாங்கள் பயந்தோடா நிற்ப அவ்வியானையையும்
பொருதற்குத்துணிந் திவளுயிரைத் தந்தானென்க. உய்த்தநோய்க்கு-தந்தநோய்க்கு.
வெறியாடத் துணிந்தான் என்பது இகழ்ச்சிக்குறிப்பு. அறிவென்ற தீண்டறியாமை.
“உழுத வுழுத்தஞ் செய் யூர்க்கன்று மேயக், கழுதை செவியறிந் தற்றால்-வழுதியைக், கண்டநங்
கண்ணீ ருகுப்பப் பெரும்பணைத்தோள், கொண்டன மன்னோ பசப்பு” என்பது மிது. துறை – வெறிவிலக்கு.

108. பிசியினும்புலப்படும்பெற்றியதாகும்.
(எ-ன்) இதன்முன்னர் விரியுவமையி னொழிபுகூறி யிதனுட் டொகையுவமையினதொழிபுணர்-ற்று.

பிசியென்பது நற்பொருள் ; என்னெனின்? “பிசியென்ப பொய்யுஞ் சோறும் பேசுநற் பொருளும்” என்பதனா லறிக.

(இ-ள்) பிசியென்ற இலக்கணத்தோடும் புலப்படு மியல்பினையு முடைத் தவ்வுவமை யென்றவாறு.

அஃதாவது உவமேயப் பொருட்குள்ள சினை வினை சார்பு முதலியன வுவமப்பொருட்கண் ணில்லையாயினும்
அவற்றை யதனோடு சார்த்தி யுவமப்பொருளொன்றனையுங்கூற வுவமேயப்பொருளு மேதுவு முவம வுருபும் விரிந்து புலப்படுதலாம்.

வருங்குன்றினைக்கடிந்தெம்மன்னுயிரைத்தந்தா
னிருங்கங்கணக்குன்றிருப்பப்–பெருந்தகைசால்
செந்தமிழ்மாறன்சிலம்பிற்சேய்நீநடித்தருந்த
வந்ததையானோதடுப்பேன்மற்று. (205)
இஃது ஒப்பொடுபுணர்ந்த வுவமத்தானுஞ் சார்பினானும் வந்த பிசியுவமை ; என்னை?
“ஒப்பொடு புணர்ந்த வுவமத் தானுந், தோன்றுவது கிளந்த துணிவி னானு, மென்றிரு வகைத்தே பிசிவகை நிலையே”
என்றாராகலின். இதனுள், வருங்குன்றினை யென்றது யானையை எனவும், இருங்கங்கணக்குன்றென்றது
சார்போடுந் தோளினை யெனவும் வினையானும் வடிவானும் சார்பானும் உவமவுருபுமுதலியனவு
முவமேயப்பொருளும் புலப்படுவதாயிற்று. ஒழிந்த அகல முரையிற் கொள்க. பகுதி – இதுவுமது.
துறை-களிற்றிடையுதவிக் கறத்தொடு நிற்றல்.

109. முக்கியப்பொருட்குமுக்கியப்பொருளுவமை
புணர்ப்பதுமுதன்மைப்புலனெறிவழக்கே.
(எ-ன்) இதுவு மொருவகையா மொழிபுணர்-ற்று.

(இ-ள்) உவமேயப்பொருட் குவமேயப்பொருள்களை யுவமமும் பொருளுமாக்கியச் செய்யுளகத் துரைப்பனவும்
புலவராற்றுவழக்கமா மென்றவாறு. இஃது இலக்கியங்கண்டதற் கிலக்கணங் கூறல்.

சீதரனேமுத்தனெனுந்தேற்றமுறச்சிந்தையினுட்
பேதமைபோலற்றபிறர்நசையும்–பாதகமாம்
பொன்றாவழுக்காறெனப்போயதுபுலமைக்
கொன்றாப்புறங்கூறலும். (206)
என்பது, நெஞ்சமே ! நாம் சீமந்நாராயணனே யகிலாண்டகோடி பிரமாண்டங்களையுஞ் சத்தாவரணங்களையும் பிரகிருதியையும்
கடந்து மேலாய விரசைக்கக்கரையா முத்தியைத் தருவதற்குரியனென்ப தாரியனா லுணர்ந்து அறிவுபிறந்தபின்னர்
நம்மிடத்து முன்பு நின்ற வறியாமை போல வகன்ற தொழிந்த அர னய னென்னு மிருவரைப்பற்றின பசையும் ;
அதுவுமன்றிப் பாதகத்திற் கேதுவா மழுக்காறகன்றதுபோ லகன்றது அறிவிற்குப்பொருந்தாப் புறங்கூறலும் ;
ஆதலாலினி நா மீடேறினே மென்றவாறாயிற்று.

திணை – பொதுவியல். துறை – முதுகாஞ்சி. எதிர்மறைகளை யுவமமும் பொருளுமாக்கிய திரண்டானும் பெறுதற்கு இலக்கியம்,
“இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்குங், கழிபே ரிரையான்க ணோய்” என்பதனாலறிக.

110.உருவகநிரனிறையதிசயஞ்சிலேடை
தற்குணந்தற்குறிப்பற்புதம்விரோத
மொப்புமைக்கூட்டமேதுவிலக்குடன்
மெய்ப்படவிரவுமேதகவுடைத்தே.
(எ-ன்) அவ் வுவமையலங்காரம் பிறவலங்காரங்களோடுங் கூடி வருமாறு கூறுகின்றது.

(இ-ள்) உருவகமுதலாக விலக்கீறாக மேற்கூறப்படும் பதினோரலங் காரங்களுடன் விரவிவரு மவ்வுவமையலங்கார மென்றவாறு.

மெய்ப்படவிரவும்-பொருள்பெறவிரவு மென்பதாம். மேதகவுடைத்து – பெருமையுடைத்து.

111.இவைதத்தமவிலக்கணங்களிற்றிறம்பா
துவமச்சொற்புணர்ந்திறினஃதுவமை.
(எ-ன்) இஃ தவ்வுவமையலங்காரம் பிறவலங்காரங்களோடுங்கூடி வருவதற் கோ ரறிகுறியுணர்-ற்று.

(இ-ள்) இவை-பதினோரலங்காரமும், தனக்குத் தனக்கு விதித்த விலக்கணங்களிற் குன்றா துவமவுருபுடனேகூடி
யுவமையந்தன்மை பெறமுடியுமாயி னவற்றை யவ்வவபெயரானே யுவமையென்று பெயர் கொடுத்து வழங்கப்பெறு மென்றவாறு.

பூந்தண்வகுளாபரணன்புயசயிலம்
வாய்ந்தவருவிவரைமானும்–பாய்ந்ததிரை
தங்கொலிநீர்வையந்தனைச்சூழிருடுரத்தும்
பொங்கொளிசேர்முத்தவடம்பூண்டு. (207)
இஃது உருவகவுவமை. இதனை முதனூல்செய்த தண்டியாசிரியர் உருவகத்தின்கண் ணுவமையுருவக மென்றார்.
அதற்குக் காட்டிய, “மதுமகிழ்ந்த மாதர் வதன மதிய, முதய மதியமே யொக்கும்” என்ற செய்யுளகத்
துருவகவாய்பாடாகவந் துவமவுருபோடிறுதலி னது பொருந்தாதாதலா னிவ ரதனை யுவமையி லுருவகவுவமையென்று
பெயர்கொடுத்ததே பொருத்தமென்றறிக.
பூந்தண் வகுளாபரணன்-பொலிவினையுங் குளிர்மையையுமுடைய மகிழமாலிகையை யாபரண மாகவுடைய மாறன்.
புயசயிலம் – திருப்புயங்களாகிய மலை வாய்ந்த – புலப்படுவதான.
அருவிவரைமானும் – நீரருவியோடுகூடிய வரையை யொக்கும். பாய்ந்ததிரை – பரந்ததிரை.
புயசயிலம் முத்துவடம்பூண்டதால் நீரருவியுடன்கூடிய மலையையொக்குமெனக் கூட்டுக. திணை – பாடாண். துறை – புயவருணனை.

மலைமதிதேன்மாறன்வரைவேல்விழியாண்
முலைவதனநண்பாமொழி. (208)
இது நிரனிறையுவமை. பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங் கூறல்.

புருவநயனம்பொருசிலைவேல்போன்ற
திருமகணின்னோடுவரிற்செல்வா–கருவிளைமென்
பூநீனிறமாயன்புட்குழிசூழ்வாசமலர்க்
காநீர்த்தடமாங்கடம். (209)
இதுவுமது. இவையிரண்டும் பெயரொடுபெயர் நிரனிறையுவமை.
வாசமலர்க்காநீர்த்தடமாம் – பரிமள மலர்ச்சோலையும் வாவியும்போலக் குளிர்மையையுடையவாம் ;
கடம் – சுரம். நின்னொடுவருகி லவளுக்கெனக் கூட்டுக. ஒழிந்த வகல முரையிற் கொள்க.
பகுதி – உடன்போக்கு. துறை – ஆதரங்கூறல்.

காருலாவியகொழும்பொன்மணிமாடவெயிற்பிழம்புகதுவநாளு
மேருமால்வரையெனவேபொலிந்தபனிவரைக்குலங்கள்வேலைநீர்சூழ்
பாருமாடகநகரிற்சிறந்தவிறன்மதன்மகுடபந்திமானும்
வாருலாமுகிழ்முலைமங்கையருமலைமகள்குழுவின்வாழ்வார்மன்னோ. (210)
என்பது குணவதிசயவுவமை. திணை – பாடாண். துறை – நகர வாழ்த்து (குருகாமான்மியம்).

வார்செறிந்துகல்லாரமன்னியகலத்தவாய்த்
தார்செறிந்தவல்லியெழுதற்கிடமாஞ்–சீர்செறிந்த
நற்றிருமால்வைகியதென்னாகைத்தடமானு
முற்றிழையாண்முற்றாமுலை. (211)
இது செம்மொழிச்சிலேடையுவமை. தடத்திற்குந் தனத்திற்குஞ் சிலேடை.

(இ-ள்) தண்ணீர்பொருந்திச் செங்கழுநீரோடுங்கூடி யிடமகன்ற தாய்ப் பூநெருங்கின வல்லிக்கொடிகடோன்றுதற்
காகரமாந் தடத்தை யொக்கும், கச்சினதசத்தடங்கி மாணிக்கப்பூ ணிலைபெற்று மார்பிடத்த வா யொழுங்குசேர்ந்த
தொய்யிலெழுதுதற் கிடம்பெற்றன முற்றிழையா ளிளமுலையென்றவாறு.

பொலிவுகுடிகொண்ட நல்ல திருமால்வைகு மழகிய திருநாகைத் தடத்தை யெனக் கூட்டுக.
தடத்தின்மேற் சொல்லுங்கால், வார் – தண்ணீர். செறிதல் – பொருந்துதல். கல்லாரம் – செங்கழுநீர்.
மன்னி – கூடி. தார் – பூ. செறிதல் – நெருங்குதல். வல்லி – கொடி. எழுதல் – தோன்றுதல்.
இடமாம் – ஆகரமாம். தனத்தின்மேற் சொல்லுங்கால் வார்- கச்சு. செறிதல் – அடங்குதல். கல்லாரம் – மாணிக்கப்பூண்.
மன்னி – நிலைபெற்று. அகலம் – மார்பு. தார் – ஒழுங்கு. செறிதல் – சேர்தல். எழுதல் – எழுதுதல்.
இடமாம் – இடம்பெற்றதாம் என்க. பகுதி – பாங்கற் கூட்டம். துறை – செவ்விசெப்பல்.
பகுதி – இயற்கை. துறை – நலம்புனைந்துரைத்தலுமாம்.

மான்மதங்கூர்வெங்களபமட்டிக்கமைந்துளவாய்க்
கானிலவாவாரநிழல்கைக்கொண்ட–ஞானமுனி
செஞ்சொற்றமிழ்மலயமேபோலுஞ்சீதரன்வாழ்
தஞ்சைத்திருமான்றனம். (212)
இது பிரிமொழிச்சிலேடையுவமை. இது மலயத்திற்குந் தனத்திற்குஞ் சிலேடை.

(இ-ள்) மயக்கத்தைத்தருங் கடமுண்டான வெம்மையைச்செய்யும் யானையும் பூவிற்றேனும் வைத்ததேனும்
நிறைந்துளவாய்க் காடாய இலவும் ஆச்சாவும் சேர்ந்த மலைப்பக்கங்கள் குளிர்மையைத் தன்னிடத்துக்கொண்ட
தமிழ்மலையை யொக்கும், கத்தூரிமிகுந்த விருப்பத்தைத் தருஞ் சந்தனச்சேற்றைப் பூசப் புளகித் திறுகிய
வலியையுடையவாய்ப் பரிமளநிலைபெற்று முத்தினொளியைத் தன்னிடத்துக்கொண்ட
புன மான்போலும் விழியையுடையாள்தனம் என்றவாறு.
ஞானமுனி செஞ்சொற் றமிழ்மலையை யெனவுஞ் சீதான்வாழ் தஞ்சைத் திருமான்றனமெனவு முன்னும் பின்னுங் கூட்டுக.
கூர் வெங்களபம் – வினைத்தொகை. ஏகாரம் – அசை. பொதியத்தின்மேற்சொல்லுங்கால் மால் – மயக்கம். மதம் – கடாம்.
கூர் – உண்டான. வெம்மை – வெப்பம். களபம் – யானை. மட்டு – பூவிற்றேன். இக்கு – வைத்ததேன் ;
“தேன், றுளியொடுமதுத்துளி”யென்றார் சிந்தாமணியினும். அமைதல் – நிறைதல். உளவாய் – உண்டாய்.
கான் – காடு. இலவு – இலவமரம். ஆ – ஆச்சாமரம். வாரம் – பக்கம். நிழல் – குளிர்மை.
முலைமேற்சொல்லுங்கால். மான்மதம் – கத்தூரி. கூர்தல் – மிகுதல். வெம்மை – விருப்பம். களபம் – சந்தனச்சேறு.
மட்டித்தல் – பூசுதல். மைந்து – வலி. கான் – பரிமளம். நிலவா – நிலைபெற்று. ஆரம் – முத்துவடம்.
நிழல் – ஒளி. கைக்கொண்ட வென்ப திருதலைக்கு மொருபொருள். இது பகுதி – இயற்கை. துறை – நலம்புனைந்துரைத்தல்.

நடுக்கற்றறைவளத்தினன்பொருள்களெல்லா
மிடுக்கற்றுதவுமியல்சான்–றொடுக்கமற
வேய்ந்தமலையமெனவளர்கின்றான்பரன்சீ
ராய்ந்ததமிழ்மகிழ்மாறன். (213)
இஃது இருவகைச்சிலேடையும் விரவி யிரண்டுபொருளைக் கவிநாயகனுக் குவமையாக்கி யவற்றை யிரட்டுறமொழிந்து
மூன்றாவது கவி நாயகன்மேலுஞ் சிலேடை செல்வதாக வவனு மவைபோலிருந்தானென்னு மூன்று
பொருள்பயந்தசிலேடையுவமை. இது பொதியத்திற்குங் கடலுக்குங் காரிமாறப்பிரானுக்குஞ் சிலேடை.

(இ-ள்) அசைவற்றுப் பக்கப்பாறைகளின் வளத்தோடுங்கூடி நல்ல பொருள்களையெல்லாங் குறைவற்றளிக்கு
மியல்பமைந் தழிவின்றித் தகுதியடைந்த பொதியமலையொப்பெனவும் தழையாநின்றனன்.
மத்திமம் பாராகிய தறைவளத்தோடுங்கூடி நல்லபொருள்களையெல்லாங் குறைவறவளிக்கு மியல்பமைந்து
அழிவின்றித் தகவடைந் தழகிய வலையையுடைய கடலை யொப்பெனவுந் தழையாநின்றனன்,
அவன் யாரெனில் உண்மைநூல்களை யோதாதுணர்ந்து பிறர்க்குணர்த்தும் வளத்தினோடுங்கூடி
நல்லபொருள்களையெல்லாங் குறைவறவளிக்குந் தகுதியடைந்து பரத்துவ சொரூபரூபகுணவிபூதியாகிய
பொலிவினையாராய்ந்த திருவாய்மொழி யென்னுந் தமிழையுடைய திருமகிழ்மாறன் என்றவாறு.

மலயத்தின்மேற்சொல்லுங்கால், நடுக்கு – அசைவு. அற்று – இன்றி. அறை – பாறை. வளத்தின் – வளத்தோடுங்கூடி.
கடன்மேற்சொல்லுங்கால், நடு – மத்திமம். கற்றறை – பாராகிய தறை. வளத்தின் – வளத்தோடுங்கூடி.
மாறன்மேற் சொல்லுங்கால், நடுக்கற்று-உண்மைநூல்களை யோதாதுணர்ந்து. அறை – உணர்த்தும்.
வளத்தின் – வளத்தோடுங் கூடி என்க. எல்லாம் – முழுதும். இடுக்கு – குறைவு. அற்று – இன்றி.
உதவும் – அளிக்கும். இயல் – இயல்பு. சான்று – அமைந்து. ஒடுக்கம் – அழிவு. அற்று – இல்லையாக, என்க.

இப்பாட்டினுள் “வளத்தி னன்பொருள்களெல்லா மிடுக்கற்றுதவு மியல்சான் றொடுக்கமற வேய்ந்த” வென்னுந்
துணையு மூன்றுபொருட்கு மத்தச்சிலேடை யொன்றாய்நின்றன. அவற்றுள்ளும் பொருளென்பது
பலபொருளொருசொல்லாதலின் மலை முதலிய மூன்றுபொருட்கு முறை முறையே
சந்தனம் அகில் குங்குமம் தக்கோலம் ஏலம் இலவங்கம் சாதிக்காய் தேன் என்பனவும் பிறவும், சங்கு முத்து பவளம் என்பனவும் பிறவும்,
சித் தசித் தீச்சுர மென்பனவுமாம். இதனுள், ஏய்ந்தமலைய மெனநின்ற பெயரெச்சவாய்பாட்டைக் கடலைக்கூறுமிடத்து
ஏய்ந்து என வினையெச்சவாய்பாடாக நிறுத்தி அம் அலையென்பவற்றை இடையில் ஏற்பன வந்தனவாக
வளர்கின்றா னென்னுந் தன்னெச்சமான வினையோடுங் கூட்டுக.
பரன்சீராய்ந்த தமிழ் என்பது காரண காரிய மயக்கம். திணை – பாடாண். துறை – செந்துறைப்பாடாண்பாட்டு.

பெற்றாளிகழவளர்த்தாளிடர்செயப்பேர்த்துறவொன்
றற்றாகமெங்குங்கருகியும்வாய்விட்டாற்றுமந்தோ
பொற்றாமரைக்கண்ணன்விண்ணோர்பிரான்புட்குழியில்வஞ்சங்
கற்றார்பொருட்பிரிவுற்றிடைவேனிற்கருங்குயிலே. (214)
இஃது அத்தச்சிலேடையுவமை. பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – குயின்மேல்வைத்துக்கூறல்.
சொற்பொருள்காரணமாகவும் உவமைபிறக்கும் ; அவை முன்னர்க்காட்டுவது மென்றாம் ; அவை யிவை யெனவுணர்க.

அறிவுடையார்தத்துவநுண்பொருளுரையாய்ந்தறிகழகத்
தறிவொன்றில்லா
வறிதுடையாரடைதரிற்சிற்குணத்தினராய்த்தலைப்படுமவ்
வாழ்வுபோல
வெறிவரிவண்டுளர்நறுமென்சந்தனப்பூம்பொதும்பரிடை
விராயவேனை
முறிபடுதண்சினைவெளிற்றுத்தாருவுமாங்கதிற்கமழு
முதன்மைத்தாமே. (215)
இது தற்குணவுவமை. துறை – பருப்பதவாழ்த்து.

சிலைவணக்குந்திருநுதலார்சிற்றிடையைவணக்கியவச்
சிறுமைநோக்கி
முலைவணக்கஞ்செய்ததுபோன்முதுக்குறைவந்தடைந்துபொறை
முதிரநோன்றா
ணிலைவணக்கங்கொண்டதுகண்டீன்றதாய்சுமந்திறுத
னெறித்தன்றென்றே
தலைவணக்கங்கொண்டுகதிர்நிலமகட்கேசரணமெனச்
சாய்ந்தமன்னோ. (216)
இது தற்குறிப்பேற்றவுவமை. நாடுவாழ்த்து. (இவையிரண்டுங் குருகாமான்மியம். )

கொடிமேல்வளருமிருகுன்றுமுளவென்னும்
படிமேதகப்பணைத்தபாவாய்–வடிவேற்கட்
பொற்றொடிக்கைப்பூமகள்கோன்புத்தூர்வரைமடமான்
சிற்றிடைமேற்கொங்கைத்திரள். (217)
இஃது அற்புதவுவமை ; என்னை? குன்றின்மேற் கொடிவளர்வதல்லது கொடிமேற் குன்று வளர்வதின்று,
ஆதலான் அற்புதவுவமை. அற்புதமென்பது ஆச்சரியம். பகுதி – சேட்படை.
துறை – பாங்கிக் கவயவங்கூறல். பாங்கன் செவ்விசெப்பலுமாம்.

மின்னுமரவும்விளங்கிழாய்நின்னிடையும்
பன்னுதமிழ்மாறன்பனிவரைவா–யுன்னில்
விருத்தமுளவாயிருப்பமெய்யுவமைக்கென்னோ
பொருத்தமுடைத்தென்னும்புவி. (218)
இது விரோதவுவமை. பகுதி – இடந்தலை. துறை – நலம்புனைந் துரைத்தல்.

எப்பொருளுங்கோதற்றிசைக்குமறையம்மறைபோன்
மெய்ப்பொருளெல்லாஞ்சொலுநின்மெய்த்தமிழு–முப்பொருளு
மாசின்றுணர்த்துமயனயன்போன்மாறாநீ
யாசின்றுணர்த்துமவை. (219)
இஃது ஒப்புமைக்கூட்டவுவமை. எப் பொருளு மென்பன :-
“மிக்க விறைநிலையு மெய்யா முயிர்நிலையுந், தக்க நெறியுந் தடையாகித் தொக்கியலு, மூழ்வினையும் வாழ்வினையும்” என்பனவாம்.
முப்பொருளும்…… உணர்த்தும் என்பது அங்ஙன முதலிற் கூறிய மறை, அரி அயன் அரனென்னுமவர்
மூன்று பொருளாய் முக்குணமாய் மூன்றுதொழிலா யிருக்குமெனக் கூறியவண்ணமே குற்றமின்றி யுணர்த்து மென்பதாம்.
இன்றியென்னும் வினையெச்சவாய்பாட்டிகரம் இன்று என உகரவீறாயிற்று ; என்னை?
“அன்றி யின்றியென் வினையெஞ் சிகரந், தொடர்பினு ளுகர மாய்வரி னியல்பே” என்றாராகலின்.
அவற்றை யென்பது அவையென இரண்டாவ திறுதியிற்றொக்கது.
கோதற்றென்பதனைக் கோதறவென்றாக்குக. முன்னது – பனுவல்வாழ்த்து. பின்னது – இயன் மொழிவாழ்த்து.

மாடசூளிகைக்கொழும்பொற்றகட்டமைத்தமுழுமணிவால்
வயிரநீலம்
பாடல்சால்பசுமணிபொன்னிறப்புருடராகமிவை
பத்திவாய்ந்து
கோடலால்வளந்தருசெங்கேழ்கிளர்மாண்செக்கரொடுங்
குறைவொன்றில்லா
வாடகாசலக்குடுமிவளைத்தெழுமிந்திரதனுவொத்
தவிர்வதொன்றே. (220)
இஃ தேதுவுவமை. துறை – நாடுவாழ்த்து.
(குருகாமான்மியம். )

பூரணமாங்கண்மலர்க்கும்புத்திக்குந்தித்திக்குங்
காரணத்ததாமோகடலமிர்தந்–தாரணிமேற்
கன்னியிடத்தார்பரவக்காகோதரத்துவளர்
பொன்னியிடத்தாரமுதைப்போல். (221)
இது விலக்குவமை. துறை – கடவுள்வாழ்த்து.

அளிமருவும்பொற்காவகமணந்துஞ்சங்க
வொளிமருவுநீணிதியுட்கொண்டும்–விளிவில்லா
நன்னரங்கவீடருளநாடாதருளரங்கன்
றென்னரங்கநேர்வரும்புத்தேள். (222)
இதுவும் விலக்குவமை.

(இ-ள்) அளிமருவும் பொற்கா- கொடையைப்பயிலும் பொற்சொரூபமான கற்பகக்கா. மணந்து – குடிபுகுந்து.
சங்கவொளி மருவு நீணிதி – சங்கநிதி. திருவரங்கத்தின்மேற் சொல்லுங்கால். வண்டு பொருந்திய பொலிவையுடைய சோலைகள்.

(மணத்தல்-) பரிமளங்கூர்தல். சங்கவொளிமருவுநீணிதி – பாஞ்சசன்னியத்தைத்தரித்த அன்பர்க்கழியாவைப்பாகிய அரங்கநாதன்.
நன்னர் – நன்மை. வீடு – பரமபதம். நாடாது – ஒவ்வாது ; அப் பரமபதத்தைக்கொடுக்கப் புத்தேள் நினையாது.
திருவரங்கம் பரமபதங்கொடுக்கு நினைவுள்ளதா மாதலாற் புத்தேளைத் திருவரங்கத்துக் குவமைகூறுவது பொருந்தாதென விலக்குக.
நேர் வரும்புத்தேளென்பது இகழ்ச்சிக்குறிப்பு ; எதிர்மறையு ளடங்கும். இங்ஙன முவமையைக் கூறிவிலக்குதலால் விலக்குவமையாயிற்று.

இதனுள்ளுஞ் சிலேடை விரவிற்றேனும் வீடருளநாடாதென்பதனால் விலக்குவமையென்பதே நோக்கம்.
தண்டியாசிரியரும் “குழை பொருது நீண்டு குமிழ்மேன் மறியா, வுழைபொருதென் னுள்ளங்கவரா” வென்னும்
விலக்குவமையினுஞ் சிலேடைவிரவியதூங் காண்க. திணை – பாடாண். துறை – நகரவாழ்த்து.

ஆக உருவகவுவமை முதலாக விலக்குவமை யீறாகப் பதினொன்றும் அடைவே வந்தவாறு காண்க.

112.சிறப்பிற்றீர்ந்தசெய்கையவாகி
யிறப்பவுயர்த்தலிழித்தன்மிகுத்தல்
குறைத்தல்பான்மாறுதல்கொள்கடனிலவே.

(எ-ன்) உவமைக்குக் கூறிய பொதுவிதிச்சூத்திரத்துட் பெருமையுஞ் சிறுமையும் பெற்றியிற்சிறந்து மென்பதற்குச்
சிறப்பிற்றீர்ந்துவருவனவாய்க் கடியப்பட்டன முன்னர்க் கூறப்படுமென்றா மவையிவை யென்ப துணர்-ற்று.

(இ-ள்) ஒன்றினை யுவமிக்குங்காற் சிறப்பினைநீங்கியசெய்கையை யுடையவா யிறப்பவுயர்ந்த வுவமேயத்திற்
கிறப்பவிழிந்த வுவமானத்தினை யுவமித்தலு மிறப்பவிழிந்த வுவமேயத்திற் கிறப்பவுயர்ந்த வுவமானத்தினை
யுவமித்தலு முவமேயவடைக் குவமானவடை மிகப்புணர்த்தலு முவமேயஅடைக் குவமானவடை குறையப் புணர்த்தலும்
ஆண்பாற்குப் பெண்பா லுவமித்தலும் பெண்பாற் காண்பா லுவமித்தலும் ஒருமைப்பாற்குப் பன்மைப்பா லுவமித்தலும்
பன்மைப்பாற் கொருமைப்பா லுவமித்தலும் பெரியோ ராமெனக்கொள்ளுங் கடனிலவா மென்றவாறு.

ஆனையெருத்தமகழ்வான்வெரினேய்க்கும்
பூனையிடியேறுபோன்முழங்கு–மூனை
யயிலரியேறன்னாளிவளிவடன்னாசி
பயிலணிதாராகணமொப்பாம். (223)
இதனுள், இறப்பவிழிந்த அகழ்வான்வெரினை யிறப்பவுயர்ந்த யானையின்முதுகிற் குவமைகூறியதூஉம்,
இறப்பவிழிந்த பூனைமுழக்கிற்கு இறப்பவுயர்ந்த இடியேற்றின்முழக்கை யுவமைகூறியதூஉம், அரியேறாகி
யிறப்பவுயர்ந்த வஃறிணையாண்பாலை யுயர்திணைப் பெண்பாற் குவமைகூறியதூஉம்,
நாசியாபரணமான முத்தினொருமைக்குத் தாரா கணப் பன்மையை யுவமைகூறியதூஉம் வழுவாயிற்று.

பைங்குவளைமுல்லைபனிவண்டுலாங்குமுதந்
திங்களிடத்தாயினபோற்செவ்விதரு–மிங்கிதமே
கற்றமர்கூர்கண்ணகைவாய்காமுறவாழ்வெய்தியவிம்
முற்றிழையாள்சோதிமுகம். (224)
இதனுள், உவமானமான குமுதத்துட் புணர்த்த வண்டிற் குவமேயமின்றி யுவமான அடை மிகுந்து வழுவாயிற்று.

தேனருவிநீரருவியோடேசிறந்துளநற்
றானவடமேருவெனுஞ்சால்பிற்றே–மானனையார்
சித்திரப்பொற்கச்சணிந்துசெய்யமணிவடமு
முத்தவடமும்பூண்முலை. (225)
இதனுள், பொற்கச்சணிந்தென்னு முவமேயவடைக் குவமான வடை குறைந்து வழுவாயிற்று. பொற்கச்சு – பொன்னெழுத்துக்கச்சு.

நமன்மடந்தையன்னானிவனிவன்றன்னாரி
சமனனையளீங்கிவர்க்குத்தையா–லமர்புதல்வ
ரெண்ணிருவர்க்கொப்பாகுமன்றேயமன்சமரிற்
பண்ணமைத்தாங்கேறும்பகடு. (226)
இதனுள் உயர்திணையாண்பாற் குயர்திணைப்பெண்பாலு முயர்திணைப் பெண்பாற் குயர்திணையாண்பாலும்
உயர்திணையாண்பாற்பன்மைக் கஃறிணையாண்பாலொருமையுஞ் சிறப்பிற்றீர்ந்தனவாய் வழக்கின்றாய்க் கூறுதலால் வழுவாயிற்று.

வாலிலாச்சம்புவெனவாழ்மதங்காவந்ததற்குப்
பாலிலாவுண்டிபடையேமான்–மேலுமக்குக்
கூகைக்கறியிலையேகோதிலாத்தேனுடனே
பாகைச்சொரிந்தென்பயன். (227)
இதனுள் இங்ஙனம் வாலிலாச்சம்புவெனப் பழித் துவமைகூறுதல் வழுவன்று. சம்பு – நரி.
பகுதி – பரத்தையிற்பிரிதல். துறை – பாணனைப் பழித்தல்.

113.பொதுவினுஞ்சிறப்பினும்புணர்ந்துளவாகி
யிதுவழக்கிதுசெயுளெனுமீரிடத்தும்
வெளிப்படைகுறிப்பெனவிழுமியநெறியாற்
கொளப்படுமுவமவுருபினைக்கூறி
னன்ன போல வனைய மான்
வென்ன நேர விறப்ப நிகர்ப்ப
நாட நளிய நடுங்க நந்த
வோட வொன்ற வொடுங்க வொட்டக்
கள்ளக் கருதக்காட்டக் கடுப்ப
வெள்ள விழைய வெதிர வேய்ப்ப
மருள மலைய மாற மதிப்ப
வென்ற வந்த வேர வேய
வாங்க வொப்ப வமர வியையப்
புல்ல வுறழப் புரையப் பொருவ
வனை துணை கெழு வீழ்தழை செத்தற்றணி
யென்றிவைநாற்பானெட்டும்பிறவு
மொன்றியதிறத்தாலொழுகுதலுளவே.
(எ-ன்) இஃ துவமேயத்தினையு முவமானத்தினையு மொப்புமைப் படுத்துங்கா லிடையினு மீற்றினும்
வரு முவமவுருபினை யினைத்தெனக் கூறுத னுதலிற்று.

(இ-ள்) கொள்ளப்படு முவமவுருபினைக்கூறின் என்பது இது வினைப்பாலுவமம் இது பயனிலையுவமம்
இது மெய்ப்பாலுவமம் இஃ துருவினுவமம் என நால்வகைத்தாக மனத்தான் மதித்துக்கொள்ளப் படுதலையுடையவாய்ப்
பொதுவானுஞ் சிறப்பானும் பொருந்துவதுளதாயிது வழக்கிட மிது செய்யுளிடமென விரண்டிடத்தினோடுங்கூடி வெளிப்படை
குறிப்பென வருஞ் சொற்களுக்கு வரையறைகூறின் அவை, அன்ன போல வென்பன முதலாக அற்று அணி யென்பன வீறாக
வெண்ணப்பட்ட நாற்பத்தெட்டும் பிறவுமாகிப் பொருந்துங் கூறுபாட்டா னொழுகலாறுடைத்தா மென்றவாறு.

பிறவுமென்பதனால் எடுத்தோதினவேயன்றி வெல்ல, வென்ற, வியப்ப, ஒத்த, ஒக்கும், தகைய, தகைப்ப, பொற்ப, காய்ந்த,
நோக்க, மருளும், புரையும், துலை என்றற் றொடக்கத்தனவும், ஐந்தாம்வேற்றுமை யுருபாய்வரும்
இன்னும், என, என்னென வரும் எச்சவாய்பாடுகளாய் வருவனவும், பிறவுங் கொள்க.
சொல்லினை யிரண்டு நாலு மயக்கம். இவற்றுட் பலவும் செயவனெச்சமாயவாய்பாட்டான்வந்தனவெனினும் போல
வென்னுஞ்சொல் புலிபோலவந்தானென வினையெச்சவாய்பாட்டான் வினைகொண்டும்,
புலிபோலும்மறவ னென்புழியும் புலிபோன்ற மறவ னென்புழியும் பெயரெச்சவாய்பாட்டாற் பெயர்கொண்டும்,
புலி போன்மறவ னென்புழி யிடைச்சொல்வாய்பாட்டாற் பொதுவாயும் நிற்கும்.

இவ் வோதியவாய்பாடெல்லா நாக்குவமத்திற்கும் பொதுவென்ப தீண்டுக் கூறினார்.
இனிச் சிறப்புவகையா னுரியவாம்வகை, ஒல்காப் புலமைத் தொல்காப்பியனாரும், உவமவியலுள்
“அன்ன வாங்க மான விறப்ப, வென்ன வுறழத் தகைய நோக்கொடு, கண்ணிய வெட்டும் வினைப்பா லுவமம்,”
“அன்னவென் கிளவி பிறவொடுஞ் சிவணும்,”
“எள்ள விழையப் புல்லப் பொருவக், கள்ள மதிப்ப வெல்ல வீழ, வென்றாங் கெட்டே பயனிலை யுவமம்,”
“கடுப்ப வேய்ப்ப மருளப் புரைய, வொட்ட வொடுங்க வோட நிகர்ப்பவென், றப்பா லெட்டே மெய்ப்பா லுவமம்,”
“போல மறுப்ப வொப்பக் காய்த்த, நேர வியப்ப நளிய நந்த வென், றொத்துவரு கிளவி யுருவி னுவமம்,”
“தத்த மரபிற் றோன்று மன் பொருளே” என்ற சூத்திரங்களா னுணர்க.

இவற்றுள், அணியென்பது முதலாய சிலவுருபுக ளீறுவிகாரப் பட்டுநிற்பனவு முள.
அஃதேல் அணி, வந்த, துலை என்னு முருபுகள் முன்னோர்கூறிய வுவமவுருபுத்தொகைச்சூத்திரங்களு ளில்லையாலோ வெனின்,
அவை “முலையணிந்த முறுவலாள்” எனவும்,
‘கயல்வந்த கண்ணியர்’ எனவும்,
“தோல்வி, துலையல்லார் கண்ணுங் கொளல்” எனவும் இலக்கியங்களுட் கண்டமையாற் காட்டியதெனக் கொள்க.
ஒழிந்தனவாய் மறைந்த வுவமவுருபுகட்கு மீண் டிலக்கியங் காட்டி லிறப்பப் பெருகும். அவைகட்கும் வந்தவழிக் கண்டுகொள்க.

2-வது உவமையலங்காரம் முற்றும்.

——————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறன் அலங்காரம்–சிறப்புப்பாயிரம்–பொதுவியலுரை –ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

சிறப்புப்பாயிரம்

இனிச் சிறப்புப்பாயிரமாவது பதினொருவகைத்தாம். அவை வருமாறு.

60.எல்லைவழிநுதலியபொருள்யாப்பே
நூற்பெயர்நுவல்வோன்பெயர்காரணம்பயன்
காலங்கேட்போர்களனெனப்பதினொரு
பால்புணர்த்துரைப்பதுசிறப்புப்பாயிரம்.
(எ-ன்) சிறப்புப்பாயிரத்தினது கூறுபாடுணர்-ற்று.

(இ-ள்) எல்லையும், வழியும், நுதலியபொருளும், யாப்பும், நூற்பெயரும், நூனுவல்வோன்பெயரும்,
காரணமும், பயனும், காலமும், கேட்போரும், களனும் என்னும் பதினொருபகுதியாகச் சேர்த்துக் கூறுவது
சிறப்புப்பாயிரமா மென்றவாறு.

புணர்த்துரைப்பதென்ற விதப்பினால், நூல்செய்தோன் வழிபடு தெய்வத்தினையும்,
தெய்வமென்பதும் ஒன்றுளதென் றுண்மையுணர்த்திய அவனது ஞானாசாரியனையும்,
அவன்றாதையையும், குலத்தினையும் பதியினையும், அப்பாயிரத்துட் கூறுவதும் வரலாற்று
முறைமையினான் மரபெனக் கொள்க. எனவே பதினாறென்ப துட்கோள்.

இனிச் சிறப்புப்பாயிரத்தினதிலக்கணஞ் செப்புமாறு :-

61.சிறப்பினதியல்பேதெரியினூனுதலிய
திறப்படுபொருளைத்தன்னகத்தடக்கி
யகவலின்வெள்ளையினறைவதொன்றாகும்.
(எ-ன்) சிறப்புப்பாயிரத்தி னிலக்கண முணர்-ற்று.

(இ-ள்) சிறப்புப்பாயிரத் திலக்கணத்தை யாராயுமிடத்துப் புலவனா லுரைக்கப்படும் நூனுதலிய பொருளை
யெல்லாங் குறிப்புரையானன்றி வெளிப்படையாக அடக்குவாய்செய்து ஆசிரியத்தானாதல் வெண்பாவானாதல்
கூறத்தகுவதொன்றா மென்றவாறு. சிறப்பென்ற தீண்டொன்றற்குரிய தென்பதாம்.

62.கலைகள்யாவையுங்கற்றுரைதெளிந்து
துலைநாச்சமனிற்றுணிநிலைபுரியும்
வாய்மையும்பிறர்க்கவைமயர்வறவளிக்குந்
தூய்மையுஞ்சான்றதுணையிலனெனினு
மொல்காப்பதினெண்ணுறுப்புடைநாற்பொருட்
பல்காப்பியம்பழிப்பறநவம்புணர்க்கவு
முத்தமிழ்க்கல்வியுமுத்தமவாக்கின்
வித்தகக்கவிதையும்வேண்டினனாகிலுந்
தற்புகழ்தலும்பிறன்றன்னையிகழ்தலும்
பொற்பலவாகும்புலனுடையோர்க்கே.
(எ-ன்) நூல்செய்தான் பாயிரஞ்செய்வானல்ல னென்பதுணர்-ற்று.

(இ-ள்) இலக்கண இலக்கியங்களை முற்றப் பாடம்போற்றி யுரையைச் சந்தயமறத் தெளிந்து
துலைநாப்போன்றும் துலாக்கோற்சமன் போன்று மையமுற்றபொருளை யையமறக் கேட்டோர்க்குணர்த்து

மொப்பிலாதானா மெனினும் எழுத்தாகிய வைந்திலக்கணங்களையும் பதினெட்டுறுப்போடு நாற்பொருள்
பயப்பதாய பெருங்காப்பியங்களையுங் குற்றமறப் புதிதாய்ப் பாடல்சான்றவனா மெனினுந் தன்னைப் புகழ்தலும்
பிறனொருவனை யிகழ்தலு முணர்வுடையோர்க் கழகல்ல வென்றவாறு.
இன்னும், “தோன்றாதோற்றித்துறைபலமுடிப்பினுந்தான்றற்புகழ்ந்தறகுதியன்றே” என்பதனாலுங் கொள்க.

63.பன்னருஞ்சிறப்புப்பாயிரம்பகர்வோர்
தன்னுயிர்பேணுஞ்சதிராசிரிய
னொருபுடைகற்றவுயர்மாணாக்கன்
றன்னொடுகற்றதலைமாணாக்க
னுரைகாரணனெனுமுரனுடையோரே.
(எ-ன்) பாயிரஞ் செய்தற்குரியோரை யுணர்-ற்று.

(இ-ள்) கூறுதற்கரிய சிறப்புப்பாயிரங் கூறுதற்குரியோரிந் நால்வரு ளொருவராமென்பது.
அந்நால்வருள்ளு மிப்பாயிரஞ்செய்தா ரிந்நூற் குரைசெய்த திருமேனி யிரத்தினகவிராயனென்றுணர்க.
நூலாசிரியர்க்கு மாணாக்க னென் பதனாலுமாம்.

‘உலகம்யாவையும்………. புலமையோனே’.
(எ-ன்) அலங்காரத்தினது பெருந்தன்மையு மிந்நூற்குச் சிறப்புப் பாயிரமு முணர்ற்று.

உலகம் யாவையு மென்பது முதல் வடவேங்கட மென்னு மத்துணையு மொருதொடர்.
இதனுள், உலகமென்பது “மூன்றுதலையிட்ட முப்பதிற்றெழுத்தி, னிரண்டுதலையிட்ட முதலா………
மெய்யேயுயிரென் றாயீரியல” என்பதனால் உயிர்முதன் மெய்யீற்றுமொழியாயிற்று.

உலகம் யாவையு மென்பது “உயிரிறுசொன்முன்னுயிர்வருவழியு, முயிரிறுசொன்முன்மெய்வருவழியும்………
மென், றாயீரியல புணர்நிலைச் சுட்டே” என்பதனாலும்,
“அவற்றுள், நிறுத்த சொல்லினீறா கெழுத்தொடு, குறித்துவருகிளவி முதலெழுத்தியையப், பெயரொடு
பெயரைப் புணர்க்குங்காலு…………. மூன்றே திரிபிடனொன்றே யியல்பென, வாங்கந்நான்கேமொழிபுணரியல்பே”
என்பதனாலும் இவை உயிர்முதன் மெய்யீற்றுமொழி நிற்ப மெய்ம்முதன் மெய்யீற்றுமொழி வரு மொழியாய்ப் பெயரொடு
பெயரைப் புணர்ப்பதாய் “வேற்றுமைமப்போய் வலிமெலியுறழ்வு, மல்வழியுயிரிடைவரினியல்பும்முள” என்பதனால்
அல்வழிக்கண் ணிலைமொழியீற்று மகரம் வருமொழி முதல் யகரத்தோடு புணர்ந் தியல்பாயது.

யாவையுமுறு வென்பது “புள்ளியில்லாவெல்லாமெய்யும்,………. ஆயீரியலவுயிர்த்தலாறே” என்பதனால்
அல்வழிக் கண் ணேனையுயிரோ டுருவுதிரிந்துயிர்த்தது. இது எட்டிறந்த பல வகையுட்கூட்டம்.

உறுபய னென்பது “மூன்றாறுருபெண்வினைத்தொகைசுட்டீ, றாகுமுகரமுன்னரியல்பாம்” என்பதனால்
வினைத்தொகை வாய்பாட்டு முற்றுகரத்தின்மேல் வருபகர மியல்பாயது.

பயன்விளையென்பது “ணனவல்லினம்வரட்டறவும்பிறவரி, னியல்பு மாகும்வேற்றுமைக்” கென்பதனால்
வேற்றுமைப்புணர்ச்சிக்கண் ணிடை யினம்வர னகார மியல்பாயது.

விளைப்பானென்பது “பெயரெச்ச வினையெச்ச வாய்பாடுகளும் பொருண்முடியுமாறறிந்து பகுதி விகுதி யாக்கி
யிடைநிலையும் வேண்டுழித் தந்துமுடிக்க” வென்பதனால் விளைக்கவேண்டி யென்னும் பொருண்மை
தோன்ற விளையென்னும் பகுதியை முதல்வைத்து அதன்மேல் “என்பவும்பிறவும், வினையின்விகுதி” யென்பவற்றால்
பானென்னும் விகுதியை நிறுவிப் “பவ்வமூவிடத்தைம்பாலெதிர்பொழு, திசை வினையிடைநிலை” என்பதனாற்
பகரவிடைநிலையை மிகுத்து முடிக்க

விளைப்பானல கென்பது “புள்ளியீற்றுமுன்னுயிர்தனித்தியலாது, மெய்யொடுஞ்சிவணுமவ்வியல்கெடுத்தே” என்பதனால்
னகரவொற்றியல் பாய்நிற்க வதன்மேல் அகரமேறி முடிந்தது. இதுவுங் கூட்டம்.

அலகிலென்பது “குற்றியலுகரமுமற்றெனமொழிப” என்பதனால் நிலைமொழியீற்றுக் குற்றியலுகரம்
புள்ளியீறுபோல வருமொழிமுத லிகரவுயிரேற இடங்கொடுத்தது. இம்மாட்டேற் றொருபுடைச்சேற லென்றுணர்க.
அன்றிக் குற்றியலுகர மழிந்ததெனிற் பொருள் வேறுபடும். அஃதுரையன்றென்க.
இது குறைவுங் கூட்டமு முடனொன்றியது. கருவி-அகக்கருவி. என்னை?
நிலைமொழியீற்றுகரம் வருமொழிமுத லிகரமேற இடங்கொடுத்தலா லென்றுணர்க.

அலகில்சோதியென்பது “அல்வழியெல்லாமுறழெனமொழிப” என்றாராகலின் லகாரம் அல்வழிக்கண் வல்லினம்வர வியல்பாயது.

சோதியணி யென்பது “இ ஈ ஐ வழியவ்வு” மென்பதனால் யகர வுடம்படுமெய் பெற்றது. இது புறப்புறச் செய்கை.

அணிகிள ரென்பது “அல்வழி இ ஐ முன்னராயி, னியல்பு மிகலும் விகற்பமுமாகும்” என்பதனால்
இகரவீற்று வருமொழி முதல் வல்லினம் அல்வழிக்கண் ணியல்பாயது.

கிளர்திரு வென்பது “ஆவியரழவிறுதிமுன்னிலைவினை, யேவன் முன்வல்லினமியல்” பென்பதனால்
வினைத்தொகைவாய்பாடு மேவல் வினைபோறலின் அல்வழிக்கண் ரகாரமுன் வல்லின மியல்பாயது.

திருவுரு வென்பது “ஏனையுயிர்வழிவவ்வு” மென்பதனால் வகர வுடம்படுமெய் பெற்றது. செய்கை – இதுவும் புறப்புறச்செய்கை.

இனி உலகம் என்பது பலபொருள்குறித்த ஒருசொல்லாயினு மீண்டுச் சிறப்புடையுயிர்கண்மே னின்றது.

உலகம் யாவையு மென்பது “பெயரினாகியதொகையுமாருளவே” என்பதனாலும்,
“காலமுலகமுயிரேயுடம்பே,… பால்பிரிந்திசையா வுயர்திணைமேன” என்பதனாலும்
ஆபல என்பதுபோலப் பிறிதோர்பயனோக்காது உயிர்களோ டமைந்து ஆகிய வென்னும் பண்புத்தொகைவாய்
பாட்டோடும் எல்லாமென்னு மஃறிணைப் பன்மைமுற்றுப் பெயர்ப் பயனிலைக் கொண்டது.
யாவையு மென்னும் பயனிலை தானே யெழுவா யுருபாகி மிகுந்த வென்னும் வினைத்தொகை
முதனிலையாய்த் தன்னெச்சமான வூதியமென்னும் பெயரோடும் வினையெச்சவாய்பா டேற்றது.

அலகில் சோதியென எண்ணையுணர்த்தும்பெயரொடும்புணர்ந் தாகிய வென்னும் பண்புத்தொகை
வாய்பாட்டான் வினையெதிர்மறுத்த பெயரெச்ச வினைக்குறிப்பு, தன்னெச்சமாகிய சோதியென்னும்
பெயரொடு முடிந்தது. “கோளில்பொறியில்”, “கோட்டமில்கட்டுரை” என்பனவுமிது.

சோதியணிகிளர்திருவுரு வென்பது உவமைத்தொகை, உம்மைத்தொகை, வினைத்தொகை யொற்றுமை நயம்
பெற்று மூன்றாவதன்றொகைப் புறத் தும்மைத்தொகையுமுற் றன்மொழித்தொகைப் பெயர்ப்பயனிலை கொண்டது.

உறுபய னென்பது உரிச்சொல்லடையோடுங் கூடிய பண்புப்பெயரெனினுமாம் ;
‘நள்ளிருட்கிடந்தேன்’ என்பதுபோலும். உறுபயன் முத்தி. அணி-கௌத்துவமணி. இவை ஆகுபெயர் ;
என்னை? “அவை தாந், தத்தம்பொருள்வயிற் றம்மொடுசிவணலும்” என்பதனா லறிக.
இனி, “எல்லாத்தொகையுமொருசொன்னடைய” என்பதனால் இம்முத லீரடியுள் உலகம் யாவையு மென்பது
இருமொழித்தொடர்த்தொகைச் சொல்.

உலகம் யாவையு மென்பது முதல் திருவுருவென்ப தீறாயின பன்மொழித்தொடர்த் தொகைச்சொல்.
அவற்றுள்ளும் அலகில் சோதி யணிகிளர்திருவுரு வென்பன அறுவகைத்தொகையு மோ ரள வடிக்கண்ணே யொருங்குதொக்கன.
என்னை? அலகிலவாகிய சோதி களி னொளியைப்போலு மொளியையுடைய வணியையுந் தழையாநின்ற திருவோடுங்கூடிய
திருமேனியையு முடையானெனத் தொகைதொடர்ந்து நிகழ்ந்தமையா னெனக் கொள்க.
அன்றியும், விளைப்பானென்பதனை யெடுத்தலோசையால் வினைப்பெயராக்கி யிருபெயரொட்டுப்பண்புத் தொகை
வாய்பாட்டான் உறுபயன் விளைப்பானாகிய திருவுருவெனினுமாம். வினைப்பெயர் முற்றாய்ப் பெயர்ப்பெயரே
போல வுருபேற்றலினெனக் கொள்க. இவ்விரண்டிற்கும் விளைப்பான்றிருவுருக் குடிபுகு வடவேங்கட மெனவும்,
விளைப்பானாகிய திருவுருக் குடிபுகும் வடவேங்கடமெனவும் முறையே தொடர்ப்படுத்து முடிக்க.
இச்செய்யுட்குப் புலவீர்கா ளென்னுந் தோன்றாவெழுவாயை முதலேவிரித் துரைநடையொட்டுக.
இவை யிரண்டுமன்றி விளைப்பான் என்பதனைப் படுத்த லோசையால் வினைப்பதமாக்கி,
உயிர்களெல்லா முத்தியை விளைக்கப் படுவா னென்றவ னலகில்சோதி யணிகிளர்திருவுருவெனத்
தன்னெச்சமான பெயர்கொண்ட முற்றாக்குதல் இச் சிறப்புப்பாயிரஞ் செய்தார் கருத்து.
இம் முற்றிற்கு அதன்பின்னர் அவன் என்னுஞ் சுட்டுப் பெய ரெஞ்சியதாக விரித்து மேல்வரும்
உணர்வுயிரென்பவற்றோடும் புணர்த்து அவன்குடிபுகும் வடவேங்கடமென முடிக்க.

இம் முதலீரடிக்கு மித்துணையும் எழுத்துச் சந்தி முடிவுஞ் சொன் முடிவும் விரித்தனம்.
இங்ஙனம் வகுத்தவற்றுள் இம்முற்றிற்குப் பொருள்கோள் – ஆற்றுநீர். பொருள் – புறப்புறம். திணை – வாகை.
துறை – அருளொடு நீங்கல். என்னை?
“ஒலிகடல்வையகத்து, நலிவு கண்டுநயப்பவிந்தன்று” என்னும் வெண்பாமாலையுள் வாகைத்திணையுளிறுதிச் சூத்திரத்தா னுணர்க.
யாப்பு- குறள்வெண்செந்துறை. அலங்காரம்- ஒருபொருட் கொன்றுபலகுழீஇய பல்பொருளுவமை.
மெய்ப்பாடு – கல்விபற்றிய பெருமிதம். பயன் – ஆதலான் முத்திவேண்டுகில் இக்காயமிருக்கப் பெற்றபொழுதே
இந்திரியங்களையடக்கி, மண் பெண் பொன் என்னும் பற்றினைவிட்டு, மனோ வாக்குக் காயங்களா லவனைச்
சிந்தித்தும் வாழ்த்தியும் வணங்குமின் ; பேரின்பம் பெறலாம் என்பதாம்.

இப்பாயிரச் செய்யுண் முதலீரடியையு மிங்ஙனம் பிரித்துச் சொல்லணிக்கட்காட்டிய பிறிதுபடுபாட்டாக்கியது
பஞ்சாதிகாரவிலக்கண நடைதழீஇய ஒருவகை விரித்துரைகாட்டுதற் கெனக் கொள்க.
இனி ஏனையடிகட்கெல்லாம் இவ்வாறு விரித்துரைப்பி னுரைபெருகுமாதலான் அவற்றிற் கிவற்றிற் சுருங்கக்
கூறுவதையுங் கற்றபெற்றி நற்குணனுடையோர் தெற்றென முற்ற வுய்த்துணர்க.

உணர்வுயிர்………. கவின்பதிநின்று மென்பது அவன் ஆயுவும், ஞானமும்போலத் தன்னுடன்
அளவளா யுத்தமராகிய நித்தர் கூட்டம் விட்டுநீங்காத அழகிய சுவணமயமாம் அந்தாமத்தின்கண்ணு
மவ்வுருநிலை பெற்றிருப்பதோடும் என்றவாறு. உணர்வுயிர்-உம்மைத்தொகை.
கணமகலாத வென்பதற்குக் கணப்பொழுதும் விட்டுநீங்காத வெனினுமாம். என்னை?
“ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார்” என்றாராகலின். நித்தர் – அநந்த கெருட சேனாதிபதிமுதலியோர்.
அகலாதபொற்கவின்பதி என்பது “உருபும்வினையுமெதிர்மறுத்துரைப்பினுந்,
திரியாதத்தமீற்றுருபினென்ப” என்பதனால் எச்சப்பெயர் திரிபின்றி முடிந்தது.

உரவுநீர்வளைத்தவொன்பானுள்………. வடவேங்கட மென்பது கடல்சூழ்ந்த பூமியினிடத்துக்
கண்டமொன்பதினுள்ளுந் தென்றிசைக்கட் பரதகண்டத்துள் அந்தாமமாகிய அப் பழம்பழி
பூலோகவைகுண்டமானதென் றுயர்ந்தோர் கூறும்படிக்குக் குடிகொண்டுறையும் விசும்பைத் தொடவுயர்ந்த
சோலையையுடைய வடக்கின்கண் வேங்கடமு மென்றவாறு. உரவுநீர் வளைத்த வொன்பானென்பது
அடிப்பட்டபெய ரெஞ்சாது முதனின்று தொடர்ந்த பெயரெச்ச வாய்பாடு தன்னெச்சமான பெயர்கொண்டு முற்றியது.
அடிப்பட்ட பெயரெஞ்சியதாவது உண்டசாத்தன் என்பதற்கு அமுதுண்ட சாத்தன் என்றும்,
உண்டவமுதென்பதற்குச் சாத்தனுண்ட வமுதென்றும் முதலே நின்ற பெயராகிய அமிர்துஞ் சாத்தனும் எஞ்சிநிற்பது.
அஃதீண்டு யாண்டு விரிந்ததெனின்? உரவுநீர் அடிப்பட்டபெயர் ; வளைத்த வென்பது பெயரெச்ச வாய்பாடு ;
ஒன்பான் என்றது தன்னெச்சமான பெயர். ஆதலால் உரவுநீர் வளைத்த என முதலே எஞ்சாது விரிந்தமை காண்க.
இவை வினையெச்சத்திற்குமுள. அவையும் இம்முறையே காண்க.

உரவுநீர் – போக்குவரவு நீர். ஒன்பானுள் என்பது “ஒன்றுமுதலாகப் பத்தூர்ந்துவரூஉ, மெல்லாவெண்ணுஞ்
சொல்லுங்காலை, யானிடைவரினு மானமில்லை, யஃதென்கிளவியாவயிற்கெடுமே, யுய்தல்வேண்டும்பஃகான் மெய்யே”
என்றாராகலின், அஃதென்னுஞ் சொற் கெட்டுப் பகரமெய்நிற்ப வுருபு புணர்ச்சிக்கண் ணிடை ஆன்சாரியை பெற்றது.
ஒன்பானுட் டென்புல என்பது எட்டிறந்த பலவகையுட் டிரிந்ததன்றிரிபு.

கண்டத்துள் என்பது “மஃகான்புள்ளிமுன்னத்தேசாரியை” என்பதனால் அத்துச்சாரியை பெற்று,
“அத்தேவற்றேயாயிருமொழிமே, லொற்று மெய்கெடுதறெற்றென்றற்றே” என்பதனான் மகரங்கெட்டு
“அத்தினகரமகரமுனையில்லை” என்பதனால் அத்துச்சாரியை அகரங் கெட்டது.
அப்பழம்பதி என்பது “வினையெஞ்சுகிளவியு………. சுட்டினிறுதியு, மாங்கவென்னுமுரையசைக்கிளவியு,
ஞாங்கர்க்கிளந்தவல் லெழுத்துமிகுமே” என்பதனாற் பகரமிக்கது. வடவேங்கடம் வேற்றுமைத் தொகை.

இதன் பொழிப்புரை
புலவீர்காள் உயிர்கண்முழுதும் பெறுதற்கரிய முத்தியை விளைக்கப்படுவான் எண்ணிறந்த பலகோடியவா
மிள ஞாயிறுபோன் றொளியையுடைய கௌத்துவமணியையுந் தழையா நின்ற திருவோடுங்கூடிய
திருமேனியையு முடையான் அவனாயுவும், ஞானமும்போலத் தன்னொடு மளவளாய வுத்தமராகிய நித்தர்
கூட்டந் தனது காந்தியையுங் கருணையையுங்கண்டுங் கருத்துட்கொண்டும் விட்டு நீங்கா தழகிய
சுவணமயமாகிய அந்தாமத்தின்கண்ணும், அகிலபூரணனாகி நிலைபெற்றிருப்பதோடும்
கடல் சூழ்ந்த பூமியின்கண்ணவாங் கண்ட மொன்ப தென்றவற்றுள்ளும் பரதனாற்பெயர்பெற்ற கண்டத்தினுட்
பழம்பதி பூலோக வைகுண்டமானதென வுயர்ந்தோர்கூறும்படிக்குக் குடிகொண்டுறையும் வடக்கின்கண் வேங்கடமும் என்பதாம்.

அவன் குடிகொண்டுறையும் வடக்கின்கண் வேங்கடமும் எனக் கூட்டுக.
அற்றேல் விளைப்பான்…. திருவுரு என்பது முதலாய வவற்றினிடையிடை பிறபல சொற்றொடர்ந்தவா றென்னையெனின்,
நன்று சொன்னாய் ! “தத்தமெச்சமொடுசிவணுங்குறிப்பி, னெச்சொல்லாயினுமிடைநிலைவரையார்”
என்பதனா லிடையிடையேற்பன அடைச்சொல்லாய்வந்தன.
அஃதாக இங்ஙனந்தொடர்ந்த வவற்றி னிடையிடை பெறுதற்கரியவென்பது முதலாய சொற்கள் கூட்டியுரைத்த
வுரைநடை யாதோவெனின், “சொல்லொடுங்குறிப்பொடுமுடிவுகொளியற்கை, புல்லிய கிளவியெச்சமாகும்” என்றாராகலின்,
கூட்டியுரைக்கப்பட்டது. ஆனாற் சொல்லெச்சங்களேயன்றிக் குறிப்பெச்சமு மிதனுள்ளு முளவோவெனின்,
உள. அஃ தியாண்டுக்குறித்ததெனின், பரமவைகுண்டத்திருப்பவன் அவ னனைத்துலகத்துயிர்கடோறும்
அந்தரியாமியாயிருப்பதோடுங் கைம்மாறின்றியு மிவ்வுலகத்துயிர்கள் பெறுதற்கரிய முத்தியை
யெளிதின் விளைப்பவனாகிப் பரதகண்டத்துட் பழம்பதியெனக்குடிபுகுந்துறையும் வடவேங்கடமெனவே
அவன் பரமகிருபையிருந்தபடியோவெனவும், பரமவைகுண்டத்தினுந் திருமாமணிமண்டபத்தினும்
நித்தர் முத்தரோடுங்கூடிய திருவோலக்கத்திற் குறைவின்றி யிருப்பதோடும்,
வடவேங்கடத்தினுந் தெய்வத்திருமேனியோடுந் தொண்டக்குழாங்கள்
கைதொழக் குடிபுகுந்துநின்ற தென்ன அகடிதகெடித சாமர்த்திய குணமோ வெனவு மீரிடத்துங் குறிப்பெஞ்சிநின்றதெனக் கொள்க.
மெய்ப்பாடு – மருட்கையைச் சார்ந்த பெருமிதம். இவ் வுரைநடையுட் பொழிப்புரை தலைதடுமாறியும்,
பொழிப் பகல நுட்ப மெச்ச மென்னும் நால்வகையுரை நடையும் நிகழ்ந்தமையுங் காண்க.

தெண்டிரை……. ஆயிடை என்பது தெளிந்த திரையார வாரிக்குந் தெற்கின்கட் குமரியும் எல்லையாக
வுடையதென்று கூறப்படுவனவாம்
அவற்றி னடுவிருந்து என்றவாறு ஆயிடை என்பது “நீடவருதல்செய்யுளுளுரித்தே” என்பதனாலும்,
“சுட்டு, நீளின்யகரமுந் தோன்றுதனெறியே” என்பதனாலும் யகரவுடம்படுமெய் தோன்றியது.

அமிழ்தினும்……… மதிக்கும் என்பது தேவர்பானமாகிய வமிர்தினும் பெருத்தசுவையுடைத்தாம்
எழுத்துச் சொற்பொருளென மூன்றுதன்மைத்தாகிய தமிழை யாராயாநிற்கும் அறிவின்றன்மையை
யுடைய பெரியார் நன்குமதிக்கும் என்றவாறு.

முதுமொழித்தெண்டி……… புணர்த்தியலணியையும் என்பது முந்துநூல்களையாராயுந் தெண்டியாசிரியர்
கூறப்பட்ட முதனூலணிகளோடுந் தினமு நவமான பாடலேபாடும் புலவராற்கூறப்பட்டனவா யுலகின்
கண்ணே வழங்குவனவா மணிகள் பலவற்றையும் என்றவாறு.

தனாது நுண்ணுணர்…….. விரித்தும் என்பது தனது நுண்ணிய வறிவுகாரணமாகக் கண்டளித்த
பலவணிகளையுங் கற்றோர் மனத்துட்கொள்ளத் தொகுத்தும், தொகுத்ததனை வகுத்தும், வகுத்தவற்றை விரித்தும் என்பதாம்.
தனாது, மனாது என்பன “ஆறனொருமைக்கதுவு மாதுவும்” என்பதனால் அதுவென்னு மாறனுருபு ஒருமையிடத்து ஆது ஆயிற்று.

பொதுவியல்……… எச்சவியலென வென்பது பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியலென்று
கூறும் படிக்கு என்றவாறு.
இவற்றுள், இயல் என்பதனை நான்கினுங்கூட்டி அணி என்பதனைப் பொருண்முத லிரண்டினுங் கூட்டியுரைக்க.

சதுர்பெற……. சார்பெனலாய் என்பது நால்வகைபெற்றுச் செய்யுளிடம் வழக்கிடமென்னு
மீரிடந்தழுவின சார்புநூலென்பதாக வென்றவாறு.

காரிதந்தருள்……… உரைத்தனன் என்பது அந்நூற்குக் காரியா ருலகின்மன்னுயிர்க ளீடேறப் பெற்றருள்செய்த
நூற்கடலினியற்பெயரால் மாறனலங்கார மென வத் திருநாமத்தின் யவ்வணிக்கணியாகவே யலங்கரித்து
ஞானாசாரியர் குழீஇயதாம் அவையின்கண் ணரங்கேற்றினன் என்றவாறு.

சிற்குணச் சீநிவாதன்……… உணர்வோன் என்பது அவன் யாரெனில்,
சாத்துவிககுணத்தையுடைய சீநிவாதனென்னும் ஞானாசாரிய னினியகருணையால் நன்பொருளாகிய
சித் தசித் தீச்சுரமென்னும் மூன்றினையும் உணர்த்தும் ஞானநூல்களை நாடோறும் பேரானந்த மிகும்படி யாராய்வோன் என்றவாறு.
“வேண்டியகல்வியாண்டுமூன்றிறவா” தென்பதனால் உணர்வோனென நிகழ்வு மெதிர்வும் பெறக் கூறினாரென்றறிக.

பெருநிலம்…….. வருமனகன் என்பது பெரியவுலகினிடத் துயர்ந்தோர் கீர்த்திக்குந் திருக்குருகைப்பெருமாள்
பெற்றருளும் அழுக்கற்றவன் ; புண்ணியன். என்றவாறு.

செழுந்தேன், மருக்கமழ்சீரகத்தார் வணிகன் என்பது வளமையை யுடைய தேனினது பரிமளம்
பரிமளிக்குஞ் சீரகத்தார்புனைந்த வணிகர் குலத்துள்ளான் என்றவாறு.

புகழ்த் திருக்குருகைப்பெருமாள் கவிராயன் என்பது கீர்த்தியையையுடைய திருக்குருகைப்பெருமாள்
கவிராயனென்னுஞ் சிறப்புப்பெயரை யுடையோன் என்றவாறு.

அருட்குணத்துடன்வளர்சடையன் என்பது கருணைக் குணத்துடன் வளராநின்ற சடையன் என்னு மியற்பெயருடையோன் என்பதாம்.

பொருட்டொடர் நவம்புணர் புலமையோன் என்பது பெருங்காப்பியம் புதிதாகப் பாடல்சான்ற
அறிவின்றன்மையையுடையோன் என்றவாறு. ஏகார மீற்றசை.

வடக்கின்கண் வேங்கடமுந் தெற்கின்கட் குமரியுமென்னக் கூறப்படுவனவா மவற்றினடுவிருந்து
தமிழை யாராயு முணர்வுடையோர் நன்குமதிக்குந் தெண்டிமுதனூலணியொடும் புலவர் புணர்த்து
வழங்கு மணியையுந் தனது நுண்ணுணர்வாற் கண்டளித்த பலவணியையுங் கற்றோர்
மனத்துட்கொளத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் நால்வகை யியலா னீரிடம்பொருந்தின சார்பு நூலென்பதாகவும்,
அந்நூற்குக் காரி யார் பெற்றருள் கலைக்கடலியற்பெயரை யணியாகப் புனைந் தாரியர்குழீஇய வவையின் கண் ணரங்கேற்றினன் ;
அவன் யாரெனிற் சிற்குணச் சீனிவாதனின்னருளால் நற்பொருண் மூன்றையு மாராய்வோன்
திருக்குருகைப் பெருமாள்கவிராயன் சடையன் பொருட்டொடர்நவம்புணர் புலமையோ னென்க.

அஃதாக முன்னர்ச் சிறப்புப்பாயிரம் பதினொருவகைப்படுமெனக் கூறிய வப்பதினொன்றும்
இப்பாயிரத்துட்பெற்றவா றெங்ஙனேயோ வெனின்?
வடவேங்கடந் தென்குமரியெனவே எல்லையும், முதனூலணியொடு மெனவே வழியும் நுதலிய பொருளும்,
தனாது நுண்ணுணர்வாற்றருபல வணியையு மெனவே காரணமும், பயனும்,
பொதுவியல் பொருள்சொல் லணியெச்ச வியலென வெனவே யாப்பும்,
காரிபெற்றருள் கலைக்கடலியற்பெயர்புனைந் தெனவே நூற்பெயரும்,
ஆரியர் அணிற வவைக்களத்துரைத்தன னெனவே கேட்டோரும்,
களனும் திருக்குருகைப்பெருமாள்கவிராயன் சடையனெனவே நூல்செய்தோன்பெயரும்,
காலமும் ஆகப் பதினொன்றும் இப்பாயிரத்துள்ளே பெற்றவாறு காண்க.

அன்றியும்,
நூல்செய்தோன் வழிபடுதெய்வமும் தெய்வத்து ளிதுவே பரத்துவமென்ன வறிவித்த ஞானாசிரியனும்,
நூல்செய்தோன் பிதாவும், குலனும், பதியும் கூட்டிப் பதினாறென்னுமவையும் இப்பாயிரத்துட் பெற்றவாறு காண்க.

இஃ திருபத்தாறடியான் வந்த நேரிசையாசிரியப்பா. என்னை? “ஈற்றயலடியேயாசிரியமருங்கிற், றோற்றமுச்சீர்த்தாகுமென்ப” என்றாராக
லின். இவ்வாசிரியப்பா முதலீரடியையுங் குறள்வெண்செந்துறை யாக்குதலாற் சொல்லணியுட் சித்திரப்பாவினுட் பிறிதுபடுபாட்டாயது.

64.பாவிற்கணிபோற்பனுவற்றெளிவுணர்ந்தோர்
நாவிற்குவாய்மைபோனாரணனாந்-தேவிற்கு
வாய்ந்தவருள்போலவாய்ந்ததேநூலகத்தா
யேய்ந்தபொருட்பாயிரம்.
(எ-ன்) சிறப்புப்பாயிரத்தினது சிறப்பிற் குவமையுணர்ற்று.

இதனுள், வாய்மை – சத்தியவசனம். கற்றகல்வியைப் பிறர்க்குச் செலச்சொல்லுதலுமாம்.
நூலகத்தா யேய்ந்தபொருட்பாயிரம் என்பதனாற் சிறப்புப்பாயிரம்.
நூலகத்தா யேய்ந்தபொருள் புலவன்கூறிய வவ்வவ நூலுக்குச் சிறந்தபொருள்களா மெனவுணர்க.

பாயிரவுரை முற்றும்

————–

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே.

ஸ்ரீ :
மாறனலங்காரம்
முதலாவது
பொதுவியலுரை

65.திருப்பாவையென்னத்திருந்தியற்பாத்தந்த
திருப்பாவைவில்லிபுத்தூர்ச்செல்வி-யருட்பார்வை
வாய்ந்ததனாற்செய்யுள்வழக்கென்றிரண்டிடத்தா
லாய்ந்துரைப்பல்செய்யுளணி.—என்பது சூத்திரம்.

இவ் வதிகார மென்னுதலிய வெடுத்துக்கொள்ளப் பட்டதோவெனின்,
அதிகார நுதலியதூஉ முன்னர்க்கூறிப்போந்த சிறப்புப்பாயிரத்தானே யுணரப்படும். என்னை?
“தனாதுநுண்ணுணர் வாற்றருபலவணியையும்” என்பதனாலுணர்க.
ஆயின், இவ் வணியதிகாரத்து ளணியிலக்கண மெனைவகையோத்தினானுணர்த்தினாரோ வெனின்,
இனைவகையோத்தினா னுணர்த்தினா ரென்பதூஉம் அச்சிறப்புப் பாயிரத்தானே விளங்கும். என்னை?
“பொதுவியல்பொருள்சொல்லணி யெச்சவியலென” எனக் கூறியதனாலுணர்க.
அஃதாக, இவ் வதிகாரத்தின் முதற்கணோத்தினைப் பொதுவிய லென்ற தென்னையெனின்,
அணி பெறுஞ் செய்யுள்கட்கும், பொதுவான வொருசாரணிக்கும் பொதுவிலக்கண முணர்த்தினமையாற் பொதுவியலென்னும் பெயர்த்தாயிற்று.
இவ்வோத்தினு ளிச்சூத்திர மென்னுதயில்றோவெனின், ஒருசாராசிரியர் வேண்டுஞ் சிறப்புப்பாயிரமுணர்-ற்று. என்னை?
“தெய்வவணக்கமுஞ் செயப்படுபொருளு, மெய்தவுரைப்பதுந்தற்சிறப்பாகும்.” என முன்னையோர் கூறிய முறையானும்,
“கடவுள்வணக்கமுங்கருதியபொருளுந், திடனுறப்புகல்வதுஞ்சிறப்பென்றாகும்.” என இந் நூலுடையாருங் கூறிய முறையானு முணர்க.
உம்மை இறந்தது தழீஇயிற்று. அன்னவாறாதலிச்சூத்திரத்திற்குப் பொருளுரைப்பவே விளங்கும்.
ஆனா லிச் சூத்திரச் சொற்பொருள் யாதோவெனின், அப் பொருளுரை நான்குவகைப்படும் ;
கருத்துரைத்தலும், கண்ணழித்துரைத்தலும், பொழிப்புத்திரட்டலும், அகலங்கூறலும் என. என்னை?
“உட்கோள்கண்ணழிப்புடன்பொழிப் பகலஞ், சுட்டிக்கூறல்சூத்திரச்சொற்குரை” எனவரும்.
அவற்றுள்ளும், கருத்துரைத்தலாவது சூத்திரத்தினுட்கோளுரைத்தல். என்னை?
“கருத்துரை சூத்திரத்துதிரட்கோள்கழறல்” எனவும், கண்ணழித்துரைத்தலாவது சூத்திரத்திற் சொற்றொறுஞ் சொற்பொருளுரைத்தல். என்னை? “தொகுத்தசொற்றொறுஞ்சொற்பொருளுணர்த்த, லடுத்த கண்ணழிப்பென்பர்கற்றவரே’ எனவும்,
பொழிப்புத்திரட்டலாவது சூத்திரத்திற் பொருளையெல்லாந் தொகுத்துரைத்தல். என்னை?
“ஒலிகெழுசொற் பொருள்களைத் தொகுத்தொருங்கே, பொலிவுறத் திரட்டியுரைப்பது பொழிப்பே” எனவும்,
அகலமாவது சூத்திரத்திற் பொருளைச் செம்மை செய்தற்குக் கடாவும் விடையு முள்ளுறுத்தி விரித்தல். என்னை?
“மனாது றும்யாப்பின்மரீஇயசொற்பொருளை, வினாவினும்விடையினும் விழுப்பொருளாக்கி,
யகற்றுபுவிரித்துரைப்பதுவேயகலம்” எனவும் இந் நூலுடையார் கூறிய சூத்திரங்களானு முணர்க.

இவ்வகையெல்லா மிச்சூத்திரத்தினுட் பெறுமுறை யெங்ஙனேயோ வெனின்,
“திருப்பாவை…….. யருட்பார்வைவாய்ந்தனா” லெனவே கடவுள்வணக்கஞ் சொன்னவாறு.
“செய்யுளணி” யெனவே அதிகாரத்துட் கருதியது சொன்னவாறு. அதிகாரம்-முறைமை. இதனாற் கருத்துரை முற்கூறப்பட்டது.

இனிக் கண்ணழித்துரைக்குமாறு :- திருப்பாவையென்ன வென்பது அழகையுடைய நோன்பென்று சொல்லுவதாக என்றவாறு.
திருந்தியற் பாத்தந்த வென்பது நிரம்பிய இலக்கணத்தையுடைய பாட்டை யுலக மீடேறப் பாடித்தந்த என்றவாறு.
திருப்பாவை வில்லிபுத்தூர்ச்செல்வி யென்பது திருப்பாவையென்னுந் திருநாமத்தையுடைய ஸ்ரீவில்லிபுத்தூர்த் திருவுடையாள் என்றவாறு.
அருட்பார்வை வாய்ந்ததனா லென்பது அவளது கருணையோடுங் கூடிய திருக்கண்ணோக்கம் எனக்கே பலித்ததனால் என்றவாறு.
செய்யுள் வழக்கென் றிரண்டிடத்தா லென்பது செய்யுளென்றும், வழக்கென்றுஞ் சொல்லப்பட்ட இரண்டிடங்களானு மென்றவாறு.
ஆய்ந்துரைப்பல் செய்யுளணி யென்பது (செய்யுளணி யாய்ந்துரைப்பலெனப் பாடமாற்றி) முன்னோர் கூறிய
செய்யுளிடனாகத் தோன்று மணியிலக்கணங்களை யாராய்ந்து கூறுவ லென்றவாறு.

அணியென்ப தீண்டணியிலக்கணங்களை. செய்யுட் கழகு கொடுத்தலின் அணியென்றாயிற்று.

இனிப் பொழிப்புத் திரட்டுமாறு :-
அழகையுடைய நோன்பென்று சொல்லுவதாக நிரம்பிய இலக்கணத்தை யுடைய பாட்டை யுலக மீடேறப்
பாடித்தந்த திருப்பாவையென்னுந் திருநாமத்தையுடைய ஸ்ரீ வில்லிபுத்தூர்த் திருவுடையாளது
பரம கருணையோடுங் கூடிய திருக்கணோக்கஞ் சிறிது மறிவிலனா மெனக்கே பலித்ததனாற் செய்யுளென்றும்
வழக்கென்றுங் கூறிய விரண்டிடங்களாலு முன்னோர் கூறிய செய்யுளிடனாகத் தோன்று மணி
யிலக்கணங்களை யாராய்ந்து கூறுவ லென்றவாறு.

இனி, அகலமாவது விரித்துரையாதலால் இதற்கும் விரித்துரை யீண்டுக்கூறின் உரைபெருகுமாதலா லதனை
யுள்ளுறுத் துய்த்துணர்ந்துகொள்க. அஃதாக ; முன்னோர்கூறிய இலக்கண நூல்க ளெனை வகை
யோத்தினானுணர்த்தினாரெனினு முற்று மொருபாவினாற் கூறவும், இந்நூலுடையார் பொதுவியலொன்றையும் வெண்பாவாற்கூறி
யேனை யியல்கண் மூன்றினையும் ஆசிரியத்தாற்கூறிய தென்னையோவெனின்,
நன்றுசொன்னாய் ! இக் கடாவிற்கு, எதிரது போற்றலென்னு முத்தியாற் பாயிரத்துள்,
“விதியாச்செய்யுளின்மிகுத்திலக்கணமு, மதியாலுரைத்ததும் வழங்கன்ஞாபகமா” எனக்கூறிய சூத்திரத்தா னுணர்க.

66.வெண்பாவகவல்விரிகலிப்பாவஞ்சிப்பா
பண்பார்மருட்பாபரிபாட-லொண்பா
வினமென்றாலித்திரண்டாறீராறவாய்ச்சென்
றனமுந்து நூல்கற்றது.
(எ-ன்) முன்னர்ச் செய்யுளிடனாகத் தோன்று மணியிலக்கண முரைப்பலென்றார்;
செய்யுளுணர்ந்தே அணி யுணரப்படுமாகலான், அணிபெறுஞ்செய்யுளின் பெயரும், முறையும், தொகையு முணர்ற்று.

(இ-ள்) செய்யுளெனத் தொகையா னொன்றாய்நின்ற அது, வெண்பா அகவல் என வகைவரையறை யிரண்டாய்
அவற்றின் மரபு மிக்க கலி, வஞ்சி, மருட்பா, பரிபாடல் என நான்கினோடும் விரிவரையறை யாறாய்ச்
செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்ற வோசை யுடைத்தாய் விரியொடுநின்ற வாறனுள்
வெண்பா முதலாய நான்கென்னு மொள்ளிய பா இன மெனப் பன்னிரண்டாய் முந்துநூல் கூறப்பட்டு நிகழ்ந்தன வென்றவாறு.

என்றென்பது எண்ணிடைச்சொல். அதனைப் பா, பாவின மென்னு மெல்லாவற்றினும் பிரித் தேற்றுக. என்னை?
“என்று மெனவு மொடுவு மொரோவழி, நின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும்” என்ப வாசலின்.
அது “வினைபகையென்றிரண்டினெச்ச” மென்பதுபோலக் கொள்க. இரண்டாறீராறென்பன நிரனிறை.
ஆயென்ப திறுதிவிளக்கா யீண் டாக்கத்தினைக் காட்டியது. ஒலித்தாயென்ப துடைமைவினைக் குறிப்பு.
“மருட்பாவேனையிருசாரல்லது, தானிதுவென்னுந் தனிநிலையின்றே” என்பதனால் அதற்குச் செப்பலும் அகவலுங் கொள்க.
“பரிபாடல்லேதொகைநிலைவிரியி, னிதுபாவென்னுமியனெறியின்றிப், பொதுவாய்நிற்றற்குமுரித்தெனமொழிப” என்பதனால்
அதற்கு முழுதுமிசையாய்க்கொள்க. இப்பெயர் பெயர் ; இம்முறை முறை ; இத்தொகை தொகை எனக் கொள்க.
இவற்றுள் வெண்பா முதல்வைத்தது தலைதடுமாற்றமெனினுமாம்.
ஆயின் முதலே யணியிலக்கணங் கூறுவலெனப்புகுந் தீண்டுச் செய்யுளிலக்கணங்கூறிய முறையான்
மற்றொன்று விரித்தலென்னுங் குற்றமாமெனின், ஆகாது. என்னை?
எழுத் தசை சீர் தளை யடி தொடை யென்னு மாறுறுப்பின திலக்கணங்களைக் கூறி யவற்றானாய பாவினைத்
தளையானும், அடியானும், தொடையானும், ஓசையானும், பொருளானும் வேறுபட்டமைகூறி
யினங்களையு மவ்வகையே கூறா திவ ரீண்டைக்கே வேண்டுஞ் செய்யுட்களது தொகை வகை மாத்திரமே கூறினமையா னெனக் கொள்க.

67.ஆற்றலணிக்கண்ணவைமுத்தகங்குளகந்
தோற்றுந்தொகையேதொடர்நிலையென்றேற்புடைய
வென்றுமவற்றுளெழுவாய்தனிநின்று
சென்றுபொருண்முற்றுந்திடன்.
(எ-ன்) இதுவும் அங்ஙனம் விரிந்தபாக்க ளணிபெறுதற்பொருட்டுச் சிறப்பிலக்கணத்தா லவற்றிற்கு
மீட்டு மொருவகைப் பெயரு முறையுந் தொகையு முணர்-ற்று.

(இ-ள்) வகையினும் விரியினுங்கூடி யிரண்டா றீராறென்னுஞ் செய்யுட்களாகிய வவை பெருமையுடைய
வணியிலக்கணங்களிடத்து முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலையெனச் செய்யு ணான்காகப்
பொருணோக்கத்தாற் றொகைபெற்று எக் காலத்திற்கும் பொருந்துத லுடையனவாம்.
அந்நான்கனுள் ஆதியாகிய முத்தகச்செய்யு ளொன்றாக நின்று திடனாகச்சென்று புலவன் குறிக்கப்பட்ட
பொருளைப் பயந்து முற்றுப்பெறு மென்றவாறு.
இவற்றுள் முத்தகம், குளகம் என்பன வடமொழிப் பெயர். ஏனையவிரண்டுந் தமிழ்மொழிப் பெயர்.
அவை யங்ஙனமாமாறு மே லறியப்பெறும். நிலையென்பதனை யிரண்டிடத்துங் கூட்டியுரைக்க.
ஆற்றல் – பெருமை. தோற்றுதல் – உண்டாதல். சென்றென்பதனாற் செய்யுளின்கண் ணிகழ்ந்த சொற்பொருளொடு
முற்றாது எஞ்சிநின்ற சொல்லேயாயினும் பொருளேயாயினும் கொணர்ந்து முற்றுவிக்க முற்றுமென்பதூஉங் கொள்க.
எழுவாயென்ப தீண் டிடத்தானாகிய ஆகுபெயர். இச்சூத்திரப் பொருள்கோள் மொழிமாற்றெனக் கொள்க.

இனி முத்தகச்செய்யுட் குதாரணம் வருமாறு :-

பொன்னகர்புகுந்தயாணர்ப்புத்தமிர்தம்
பின்னொருநிலத்துப்பிறிதொருபடிவத்
தொருபகலுறைவதன்றெனவுலகுரைசெய
வருள்புரிகடவுளாணையின்வேட்டமுற்
றிகல்புரிவிலங்கினினந்தொலைத்ததற்பி
னகநகர்புரப்பேனயர்வுயிர்த்தற்குப்
பொலந்தகட்டுருளிப்புரவியூர்தியின்
வலம்பயில்பாகன்வரவுறீஇப்புறநகர்த்
தண்ணிழனாடினன்சார்வுழிமனனே
பெண்ணியல்பெருக்கியப்பேரமிர்தெதிர்தலும்
யாவதிவ்வுருவெனவிடைவிடாதுயவலுங்
காவகத்திஃதொருகவினிலைக்களனென்
றுண்ணிகழுழுவலன்புடனின்றூட்டக்
கண்ணயந்தனவாய்க்காமுறக்காண்டொறும்
புகுமுகம்புரிதலிற்புணர்ச்சிமேற்கொளத்
தொகுபதினொன்றுந்தொடர்பிற்றோற்றி
யொளியுமூறுமுரிசையும்வாசமுங்
களியதாய்மிழற்றோசையுமைம்பொறி
யேககாலத்திலவிதழொன்றினுண்
டாகயாவருமணுகாதமைநலன்
வண்டுழாநெகிழ்ந்துமணமலிசெவ்வித்
தண்டுழாயரங்கன்றடந்துறைப்பொன்னித்
திரைவரன்றெறிநித்திலத்திரணிலவெழும்
விரைமலர்பரப்பிமெல்லணைவிரிபுன்னையி
னேந்தெழிற்சினைகவியெழினியுள்
வாய்ந்தருண்மறையார்மனக்கொள்பவரே. (1)

என்பது இயற்கைப்புணர்ச்சி புணர்ந்தவழித் தலைமக ளிவ னெக் குலத்தான்கொல்! எவ்விடத்தான்கொல்!
இன்னு மிப்புணர்ச்சிகூடுங் கொல்! இவ னென்னிடத் தன்புடையான்கொல்!
எனக் கூற்றா லையுற் றுரையாளாயினுங் குறிப்பாலையநிகழும்;
அவற்றைத் தலைமக னுளத்தா னுட்கொண்டு நால்வகையையமுந்தீரக் கூறியது.

(இ-ள்) பொன்னகர்……… உரைசெய-மனனே சுவர்க்கத்துட் குடிபுகுந்த அழகிய புதிய அமிர்தங் குடிபுகுந்த
பின்னர்ப் பொன் மயமல்லாத மற்றொருநிலத்தின்கட் சலமயமல்லாத மற்றொரு வடிவெடுத் தொருகணப்பொழுதுந்
தங்குவதன்றென் றுயர்ந்தோர் கூறாநிற்பவும்; அப்பேரமிர்து-அப் பெருமையையுடைய வமிர்தம்;
அகநகர் புரப்பேன்-அகநகரின்கண் ணிருந் துலகினைப் புரக்கு மரசுரிமையுடையேன்;
அருள்புரிகடவுளாணையின்…… தொலைத்ததற்பின்-என்னிடத் தினியகருணையைச் செய்யும்
பால்வரைதெய்வத்தினேவலான் வேட்டைமேன் மனம்வைத் துலகத்துயிர்கட்கு மாறுபாடிழைக்கும்
ஆளி முதலிய விலங்கின்கூட்டத்தைக் குறைத்தபின்னர் ;
அயர்வுயிர்த்தற்கு…. சார்வுழி-அவற்றைத் தொடர்ந் தோடி யாடின வருத்தம் போக்குதற்குப் பொற்றகடு
பொதிந்த நேமியையுடைய குதிரைபூண்ட தேரோடும் வென்றி விட்டுநீங்காத பாகன் சுவடுபார்த்து
வருவனென வுட்கொண்டு புறநகர்ப்பொதும்பர்க் குளிர்ந்தநிழலைநோக்கி யணுகின காலத்து ;
பெண்ணியல் பெருக்கி யெதிர்தலும் – பெண்ணின திலக்கணத்தைத் தனதாகப் பெருப்பித் தெனதெதிர்நிற்ப ;
யாவதிவ்வுருவென……. காண்டொறும்-மலர்மகள் முதலாயினோருருவினுள் யாதுதா னிவ்வுருவமென
நின்னொடுங்கூடி நீக்கமின்றி யுசாவாநிற்ப வுள்ளேநிகழு மெழுகையுந் தொடர்ந்தவன்பு பால்வரை
கடவுளினன்புடன்கூடி யிக்காவகத் திவ் வுருவ மலர்மகண்முதலாயோர் காந்திகளெல்லாந் திரண் டேகமாகக்
குடியிருப்பதேப ரிடவகைதானென் றுணர்வினு ளொன்றுவிப்ப வந்நிலையே கண்க ளிவ்வுருவினை
விருப்புற் றுட்கொண்ட விருப்பமிகையானே நோக்குந்தொறும் ;
புகுமுகம்புரிதலின்…… அமைநலன்-எனது நோக்கிடமாகப் புகுந்து தன்கண் விரும்பிநோக்குதலால்
யான் புணர்ச்சிமேன் மனம்வைப்பப் புகுமுகம் புரிந்தபின் பொருளிலக்கணந் திரட்டியுரைத்த பொறிநுதல்வெயர்த்தன்
முத லிருகையுமெடுத்த லீறாய பதினொருமெய்ப்பாடு மொன்றன்பின்னொன்று தொடர்புடைத்தாகத் தோற்றிக்
கண்டுற் றுண் டுயிர்த்தலாகிய நான்கோடு மென்மேல்வைத்த கருணையுடைத்தாய் மிழற்றுமோசையு மெனக் கேட்பதுமாக
வைம்புலன்களையு மென தைம்பொறிகளும் ஒரு காலத் திலவமலர்போன்ற வதரமொன்றின்கண் ணுகர்ந் தாக்கமெய்த
விருதலையினும் வழிபடும் யாவரு மணுகாதபடிக் கேகாந்தமாக முழுத்த வின்பத்தை ;
வண்டுழா…….. பொன்னி-சுரும்புக ளாறுதாளி னாலுந் துவைப்ப முகைவிண்டு பரிமளத்தை மிகுப்பதாங்
குளிர்ந்த துளபமாலிகையையுடைய அரங்கேசனது தடந்துறைவாய்ந்த திருக் காவிரியினடத்து ;
திரைவரன்றெறி……….. வாய்ந்தருண் மறை – பெரிய திருமுகத்துறைத்திரைகள்
கொழித்தெறியுந் தரளத் திரணில விருளைத்துரந்து நிமிராநிற்பப் பரிமளப்பூவாகிய மெல்லிய அணையை
விரிக்கும் புன்னையின்கீ ழுயர்ந்த வழகொடுந் தாழ்ந்தசினைக ளாகிய திரையினுட் டோன்றி யளித்த விராசியத்தை ;
யார் மனக் கொள்பவரே-யாமேயறிவதல்ல துலகத்துள் யாவ ரறிவரென்றவாறு.

இதனுள் ; நாடினனென்பது ‘வினையெஞ்சுகிளவியும்வேறுபல்குறிய’ என்பதனால் வினையெச்சத் தனித்தன்மைத் தெரிநிலைமுற்று.
சார்வுழி என்பது கொள்வுழி, செல்வுழி என்பனபோல ஒற்றீற்று வகர வுடம்படு மெய் வந்தது. உயவல் – உசாவல் ;
“யானொன்றுயவுகோவையசிறிது” என்பதனாலறிக. யாவர்மனக்கொள்பவரென்பது யாரென வகரங் கெட்டது.
யாதிவ்வுரு என்பது யாவ திவ்வுரு வென வகர மிகுந்தது. என்னை?
“பலரறிசொன்முன்யாவரென்னும், பெயரிடைவகரங்கெடுதலு மேனை, யொன்றறிசொன்முன்யாதென்வினாவிடை, யொன்றியவகரம் வருதலுமிரண்டு, மருவின்பாத்தியிற்றிரியுமன்பயின்றே” என்றாராகலின். அப்பேரமிர்து என்பது
“வினையெஞ்சுகிளவியு முவமக்கிளவியு, மெனவெ னெச்சமுஞ்சுட்டினிறுதியு, மாங்கவென்னுமுரையசைக்கிளவியும்,
ஞாங்கர்க்கிளந்தவல்லெழுத்துமிகுமே” என்பதனால் வல்லொற்று மிகுந்தது.

இச்செய்யுளின்கண் ணகநகர்புரப்பேனெனவே யா னரசனென்னுங் குலனும், புறநகர்சார்வுழியெனவே
“ஒன்றேவேறேயென்றிருபால்வயி” னென்பதனால் ஒரு நகருள் அகநகரும் புறநகரும் என்னு மிடமும்,
உண்ணிகழுழுவலன்புடனின்றூட்ட வெனவே உழுவலன்பாற் பண்டும் பயின்றுவருகின்ற நட்பு இப் பிறப்பினுங் கூடிற்று ;
இதுபோல இன்னு மிடையிடையே கூட்டநிகழு மென்பதூஉம், அப் பேரமிர்து பெண்ணியல் பெருக்கி யெனவே
நலம்பாராட்டலா லவன் தன்மே லன்புடையா னென்பதூஉந் தலைமக ளுட்கொண்டுணரு மென்பதாம்.
இதனுள், பொன்மயமல்லாத சலமயமல்லாத என்பன முதலாய யாமே யறிவதல்ல தென்பதீறாய சொல்லெச்சங்களும்,
தலைவியுள்ளக்குறிப்பைக் குறித்தானென்னுங் குறிப்பெச்சமும் எஞ்சிநின்று விரிந்து முடிந்த வாறுங் கண்டுகொள்க.

இச் செய்யுள் “அகன்றுபொருள்கிடப்பினு மணுகியநிலையினு… மாட்டெனமொழிப்பாட்டியல்வழக்கின்” என்பதனால்
மாட்டென்னு முறுப்பாற் பொருள்கோள் நிகழ்ந்தவாறுங் காண்க.
இது மருதநிலத்தலைமகன் பாலதாணையின் ஆயத்தைநீங்கிய மருதநிலப் புறநகர்த்தலைவியை யெதிர்ப்பட்டுக்கூடிய
களவொழுக்கக் கந்தருவம். என்னை?
“முதலொடும்புணர்ந்தயாழோர்மேன, தவலருஞ்சிறப்பினைந் நிலம்பெறுமே” என்றாராகலின்.

இனிவருஞ் செய்யுட்கு மிவ்வாறு விரித்துரையெழுதாததற்குஞ் சொற்றொறும் பொரு ளுய்த்துணர்ந்து கொள்க.
பகுதி – இயற்கை. துறை – புணர்ச்சி மகிழ்தல்.

முயற்சியொன்றின்றாய்நெருநன்முழுநல
னியற்றியதெய்வதமிறவாதிருப்பதொன்
றென்றுணர்ந்துழப்புறினின்றுமாங்கெதிர்தன்
மன்றவென்றுறுதலின்மடந்தையர்குழாமொரீஇ
மடந்தபமாணிழைவணரிணரைம்பா
லிடந்தலைப்பாட்டினெய்தின்பநன்பனுவலைத்
தேரின்பத்தையுஞ்சிறிது நில்லாதே
பேரின்பமதாய்ப்பெருகவுமன்னோ
சிற்றின்பமெனத்தீர்ந்தனராகிச்
சொற்றமிழ்மாறனைத்துதிக்குமெய்த்தொண்டர்
பற்றறுத்துணர்த்தியபாசுர
முற்றிடிலாசங்கையதாமொன்றே. (2)
என்பது இடந்தலைப்பாட்டின் கூட்டத்திறுதிக்கட்டடலைமகன் சொல்லியது.

(இ-ள்) மனனே ! நம்மிடத்து முயற்சி சிறிது மில்லையாகவும் நெருநற்று நமக்குப் பெருத்த வின்பத்தை யுண்டாக்கித்
தந்த தெய்வமான தென்று மிறவாதிருப்பதொன்றாமென்றறிந் தினி நாஞ் சிறிது முயற்சி யுறி னின்று
மத்திருவுரு முதுனாட்கண்டவிடத் தெதிர்தல் சந்தய மில்லையென் றியா முறுதலோடு மிகுளையர்குழாத்தைவிட்டுநீங்கி
நம்மிடத்து வைத்த வேட்கையாற் றன்னிடத்தொன்றிய மடமையுந் தன்னை விட்டுநீங்க மாட்சிமைப்பட்ட அணிகளோடுங்
கடைகுழன்று பூங்கொத்துச்செருகிய குழலினையுடையா ணம்வரவுபார்த்துநின்ற விடத்துத் தலைப்படுதலாலெய்திய வின்பமானது,
நன்பனுவல்களை யாராய்ந்து நமதுண்ணின்ற வின்பத்தைச் சிறிது நிலைபெறாதே பெயர்க்கப்பட்டதா
யவ்வின்பநின்றவிடங்கொண் டாராவின்பமாகப் பெருகா நிற்ப இதனைச் சிறியதாகிய வின்பமென விட்டுநீங்கினராகிச்
செஞ்சொற் றமிழாகிய திருவாய்மொழிபாடிய காரிமாறப்பிரானை வாழ்த்து முண்மைத்தொண்ட ரிவ்வுலகத்து
மகளிரிடத்தெய்து மின்பத்தின்மேல் வைத்த வாசையைவிட்டுப் பரமபதத்தின்பமே தெவிட்டாதவின்பமென
முன்னமுணர்த்திய முதுமொழி யிதுபொழுது விசாரிக்கிற் சந்தயமாவ தொன் றென்றவாறு.

மனனே என்பது தோன்றாவெழுவாய்.
நின்றவென்பது முதலாய சொல்லெச்சங்களையு மாங்காங்கு வருவித்துக்கொள்க.
மன்-ஆக்கம். ஓ- அசை. பகுதி – இடந்தலை. துறை – இதுவும் புணர்ச்சிமகிழ்தல்.

முதல்வனிற்பெறுநூன்முதற்றாயெனலாய்ப்
புதல்வனிற்பிறந்தவழிநூற்பொழிப்புரை
செலச்சொலுங்குரவனிற்றெளிந்தோர்தமக்கவ்
விலக்கணவிலக்கியமீந்தவின்பத்தினு
நயப்படவிரித்துரைநடைதாந்தமது
முயற்சியினுணர்வுழிமுன்னுமின்பத்தினு
முணராநுட்பமுமெச்சமுமொருபுடைப்
புணர்மாணாக்கரிற்புலப்படுமவர்பா
லெய்தியதெவிட்டாவின்பமொன்றெனலாம்
பொய்கையுட்கராமொடுபொருதுநைந்தழைத்த
கடமலைக்குதவியகண்ணன்
வடமலைமடவரல்வாய்ந்தருணலனே. (3)
என்பது பாங்கற்கூட்டத்திறுதிக்கட் டலைமகன் புணர்ச்சிமகிழ்தல்.

(இ-ள்) மனனே ! முதல்வனா லமைத்தருளப்பட்ட முந்து நூல் நற்றாயாக அதற் கொரு புதல்வனைப்போலப்
புலவராலமைக்கப்பட்டுண்டான வழிநூலின்பொழிப்புரை முதலே கேட்போ ருணர்வுட்கொள்ளப் புகலுங்
குரவனாற் றெளியப்பட்டோர்க் கவ் விலக்கண விலக்கியங்கள் புரந்தவின்பத்தினும் நன்குமதிப்பதாக
வந்நூல்கட் காசிரியர் விரித்துரைப்பதாய வுரையினது ஒழுக்கத்தை யவ்வுரைகோளாளர் தமதறிவுடன்
முயற்சியாலுணர்ந்தவிடத்துண்டான இன்பத்தினும் நூல்களிடத் துணரப்படாத வரும்பதநுட்பமும் எச்சமும்
தம்மொடு கற்ற வொருபுடைமாணாக்கராலாராய்ந் தறிவிற்புலப்பட்ட வவர்பா லெய்தி தெவிட்டாவின்பம்போலு மொன்றெனலாம்,
பொற்றாமரையோடையினிடத்துக் கராமொடுபொருது நொந்தழைத்த கடாத்தொடுகூடிய மலைபோன்றயானைக்
கதனுயிர்பிழைப்பான் சென்றுதவிய கண்ணனது வடக்கின்கண் வேங்கடவெற்பினிடத்து மடவரல் தோன்றிநின்றருளிய பேரின்ப மென்றவாறு.

மனனே என்பது தோன்றாவெழுவாய்.
இதனுள், பொழிப்புரை குரவனிற் றெளிந்தோர்க் கந்நூல்களீந்த வின்பத்தினும் என்பது
முயற்சியின்றி யியற்கையிற் றெய்வத்திற்கூடிய இன்பமதாம்.
விரித்துரை தாந் தம் முயற்சியாலுணர்வுழி முன்னுமின்பத்தினு மென்பது சிறிது முயற்சியா னிடந்தலைப்பாட்டினெய்திய
வின்பத்தினு மென்பதாம். நுட்பமு மெச்சமு மொருபுடைமாணாக்கரி னுணர்ந்தவிடத் தெய்திய
தெவிட்டாவின்பமொன்றெனலா மென்பது பாங்கனாற்கூடிய கூட்டத் தெய்திய வின்பமென்பதாம். இவை குறிப்புவமை.

குலனுந்தொன்மையுங்குணனுந்திருவு
நலனும்பருவமுமுருவமுநயந்தோ
ரறம்புரிகொள்கையோடளவளாய்வாழ்நாட்
டிறம்பாக்கற்புடைச்சேயிழைவயிற்றிற்
கருப்பம்வந்தடியிடக்கண்டகண்மலரால்
விருப்பமுற்றதனினுமேம்படுநிலத்துறப்
பிறந்தநன்புதல்வர்பீடுடைமுகமலர்
சிறந்தவர்காண்டொறுஞ்செறிபேருவகை
யாங்கவற்றினுமிகுமரும்புமென்மழலை
யோங்கியசெவிப்புலத்துறவருமுவகை
யுவகையிற்கழிந்தபேருவகையதாகு
மவமதிப்பின்றியேழாண்டமைவெய்தலும்
பொற்புடைக்குரவர்தம்பொன்னடிவணங்குபு
கற்பனயாவையுங்கசடறக்கற்றபின்
கல்வியுங்கவியுங்கவின்பெறச்செலச்சொலு
மெல்லையிற்றாதையின்புறலும்பொருவரும்
பூதலம்புகழப்பொலிந்துநின்றருளிய
சீதரன்குருகாபுரேசன்சிலம்பின் மதுமலர்ச்சோலையுண்மடவரல்
புதுவதுபுதுவதாய்ப்புரிந்தருணலனே. (4)
என்பது பாங்கியிற்கூட்டத் திறுதிக்கட் டலைமகன் கூறியது.

இதனுள், கருப்பம்வந்தடியிடக்கண்டகண்மலரால் விருப்பமுற்றது என்பது இயற்கையிற்கூடிய வின்பவிருப்பத்தை.
அதனினு மேம்படும் புதல்வர்பீடுடைமுகமலர் சிறந்தவர்காண்டொறுஞ் செறிபேரு வகை என்பது
இடந்தலைப்பாட்டிற்கூடிய வின்பமகிழ்ச்சியை. ஆங்கவற்றினுமிகு மழலை யோங்கியசெவிப்புலத் துறவருமுவகை யென்பது
பாங்கற்கூட்டத்திறுதிக்கட் கூடிய வின்பமகிழ்ச்சியை. உவகையிற் கழிந்தபேருவகையதாகுங் கல்வியுங் கவியுங்
கவின்பெறச் செலச்சொலு மெல்லையிற்றாதையின்புறலும்பொருவரும் என்பது பாங்கியிற்கூட்டத்துக்கூடிய புணர்ச்சியை.
பொருவருமென்பதனை நான்கினுங் கூட்டுக.
குணம்-அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி, நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு. திரு-செல்வம். அளவளாய் – கலந்து.
திறம்பா – அழியா. அவமதிப்பு – கற்கப்படுநூல்களைக் கற்கநினையாமை – இகழ்தல். இன்றி-இல்லாமை.
செலச்சொலல் – கூறும்பொருள்களறிதற்கரியவாயினுங் கேட்போர்க் கெளியவாய் மனத்துட்கொளக் கூறல்.
கவின்பெற – அழகு பெற. ஒழிந்த அகல முரையிற்கொள்க.
இது மாட்டுறுப்பு மெச்சமு மின்றிவந்த முத்தகச்செய்யுள். என்னை?
“மாட்டுமெச்சமுநாட்ட லின்றி, யுடனிலைமொழியினுந்தொடர்நிலைபெறுமே” என்றாராகலின்.
பகுதி – பகற்குறி. துறை – இதுவும் புணர்ச்சிமகிழ்தல்.

தண்டளவுங்கொன்றையும்பைந்தார்தழைப்பவாய்மயிலின்
கண்டழைப்பவண்டுகளிதழைப்ப–நுண்டுளிசோர்
கார்வரவிதென்றயரேல்கண்ணன்குறுங்குடியார்
தேர்வரவிதென்றணங்கேதேர். (5)
இதுவும் மாட்டுறுப்பு மெச்சமுமின்றிவந்து தனிநின்றுமுடிந்த முத்தகச்செய்யுள்.
தார் – பூ. ஆய்மயில் – ஆடாநின்ற மயில்.
வரவு என்பது தொழிற்பெயர்போலநின்று நிகழ்காலங்காட்டுவதோர்வாய்பாடு. நுண்டுளி – அசும்பு. கார் – மழை.
வரவு – வாராநின்றது. அயரேல் – வருந்துவதொழி என்றவாறு. பகுதி – வரைபொருட்பிரிதல். துறை – பருவங்காட்டிவற்புறுத்தல்.

நிறையழிகாமக்கடலைநீந்திச்சலாபத்
துறைமுகமுத்தங்கொளவேசூழ்வார்க்–கிறைவளையா
யாய்ந்தபுணையென்பவருண்மாறன்வண்குருகூர்
வாய்ந்தபனைமாமடல். (6)
(இ-ள்) அருண்மாறன் வண்குருகூரிறைவளையாய் ! ஆடவர் நிறையாகிய கரையை யழிக்கப்பட்ட காமமாகிய
புணரியைக் கடந்து மகளிரிடத்தின்பத்துறையைத் தரும் முகத்தில் அதரபானத்தையுட்கொள வழி யேதென்று
விசாரிப்பவர்க்கு வாய்ந்த பனைமாமடலே ஆராய்ந்தறிந்த புணையென்றுகூறுவர் பெரியோரென்றவாறு.

இதுவும், ஆடவர்களென்னும் பெயர்ச்சொல்லும், எனக்கு மதுவே குறிப்பென்னுங் குறிப்பும் எஞ்சிநின்று முற்றியதால்
இருவகையெச்சமும் மாட்டுறுப்புங்கூடித் தனிநின்று முற்றின முத்தகம். சலாபத்துறை முகமுத்தங்கொள என்பது சிலேடை.
இது, பாங்கியிற்கூட்டத்துச் சேட்படுக்கப்பட்டானான தலைமக னாண்டுறந்துரைத்தல்.
பகுதி – மடல். துறை – உலகின்மேல்வைத்துரைத்தல். முத்தகமென்பது காரணப் பெயர். முத்தகம் முற்றும்.

இனிக் குளகம் வருமாறு :-

68. குளகம்பலபாட்டொருவினைபேர்கொண்டு
வளர்முலையாய்மூன்றிடத்துமன்னு–மளவை
யுகளகஞ்சாந்தானிகங்காபாலிகத்தோடைந்தின்
மிகல்வகைத்தாநூல்சொல்விதி.
(எ-ன்) முறையே குளகச்செய்யுளின்கூறுபாடுணர்….. ற்று.

(இ-ள்) வளராநின்ற முலையினையுடையாய் ! குளகச் செய்யுளென்பது, பலபாட் டொருவினையேயாதல்
ஒருபெயரேயாதல்கொண்டு, எண்ணினதளவு உகளகம், சாந்தானிகம், காபாலிகம் என்னு மூன்று திறத்தினோடும்,
ஐந்தாயும் அவ்வைந்தினுமிகுங் கூறுபாடுடைத்தாயும் செய்யுளகத்து முதல் இடை கடை யென்னு மூன்றிடத்தும்
நூல் சொன்னவிதியாக நிலைபெறுமென்றவாறு.

வினையென்ற விதப்பால் வினையின்வேறல்லவாம் வினைக்குறிப்பும், பெயரென்ற விதப்பாற் பெயர்ப்பெயரேயன்றி
வினைப்பெயருங் கொள்ளுமென வுணர்க. வினைமுதலிய நான்கோடுந் தானமூன்றோடு முற்றவுதாரண மீண்டுரைப்பிற் பெருகும்.
அவற்றுட் சிலவுதாரணங் காட்டுதும் :-

நினைமருவொன்றில்லாஞானாதிகளைப்
புனைவகுளத்தாமப்புயனை–வினையினையே
வென்றானைக்காரிதரும்வித்தகனைப்பாவலன்பின்
சென்றானேநாதனெனத்தேர்ந்து, (7)

வேதமதனைவிளங்குதமிழ்ப்பாப்படுத்திப்
போதந்தழைந்துபுகழ்புண்ணியனை–நாதமுனி
போற்றும்புனிதனையந்தாமம்புகமனனே
தேற்றம்பயின்றேதினம். (8)

இவை யிரண்டும் வினைகொண்டு முற்றிய யுகளகாதிகுளகம்.
உகளக குளகமென்பது இரண்டுபாட்டு வினைமுதலியவற்று ளொன்றுகொண்டு முற்றுவது.

குன்றமதனைக்குடைகொண்டநீலமணிக்
குன்றமதனைக்குணக்கடலைக்–குன்றமதே
மத்தாகக்கொண்டமிர்தம்வானோர்க்களித்ததரு
மத்தானைத்தேவாய்மதித்து, (9)

வாழ்த்துபரசமயவாதியர்தம்வாய்மதத்தைச்
சாய்த்ததமிழ்மறைப்பாத்தந்தானைக்–கீர்த்திபுனை
பாவேசர்போற்றும்பராங்குசனைமுத்திபெற
நாவேமனத்தானயந்து. (10)

இவையிரண்டும் வினைகொண்டுமுற்றின யுகளகமத்திய குளகம்.
வாழ்த்து என்பது ஏவல்வினை. இவை நான்கும் திணை – பாடாண் ; துறை – ஓம்படை.

காலிருக்கக்கையிருக்கக்கண்ணிருக்கச்சென்னியதன்
மேலிருக்கநாநடுவேவீற்றிருக்க–நாலிருக்கும்
பொய்யாதிருக்கப்புகழ்மாறனைவலஞ்செய்
துய்யாதுமஞ்சலியாதும். (11)

பூவிற்சிறந்தவவன்பொன்னடியைக்கண்டுமலர்
தூவிவணங்கித்துதியாத–பாவிகளோ
டொன்றாகியவுளமேபோனவைபோட்டூதியமா
மின்றாகிலுமுற்றிறைஞ்சு. (12)

இவையிரண்டும் வினைகொண்டு முற்றிய யுகளகாந்தியகுளகம்.
இதனுள் மாறனையென்பது மால்தனை எனவும் பொருந்தும்.
இவை யாறிற்கும் ஒழிந்த அகல முரையிற் கொள்க. திணையுந் துறையு மிதுவு மது.

அடித்தகைத்தலம்பிடித்துவன்கனகனாருயிரைக்
குடித்தகோளரியாயகொற்றவனுமாண்குறளாய்
நடித்துமூவுலகன்றளந்தவனுமைந்நாகந்
துடித்துமூலமென்றழைத்ததற்குதவியசுகத்தோன். (13)

அம்பிகாபதியிரப்பொழித்தவனுமாதரவா
லும்பராரமுதருந்தவைத்தவனுமும்பருளார்
தம்பமாந்தசரதன்றிருமகனெனத்தழைத்தே
கம்பவாரிதியடைத்தருளயோத்திகாவலனும். (14)

இவையிரண்டும் வினைக்குறிப்புக்கொண்டு முற்றிய யுகளமத்திய குளகம.
திணை – பாடாண் ; துறை – கடவுள்வாழ்த்து.

அரியுமயனுமரனுமெனமூன்றாய்த்
தெரியுமவருட்டெளிதற்–குரியபொரு
ளந்தாமத்தானென்றுணர்த்தியடியவர்தஞ்
சிந்தாகுலந்தவிர்த்ததே, (15)

முந்தமதுரகவிக்களித்தமூதுரைசா
லந்தமலரடியையாதிரைநாள்–வந்த
மறையவர்கோன்சென்னியினும்வைத்தெமையாள்செந்தே
னிறைவகுளப்பூங்கண்ணியன். (16)

இவையிரண்டும் வினைக்குறிப்புக்கொண்டுமுற்றிய யுகளகாந்திய குளகம்.
கண்ணியைப் புனைந்தவனென்னும் வினையைக் குறிப்பினாற் கொள்ளக்கிடந்தமையானென் றுணர்க. என்னை?
“காலந்தாமேமூன் றெனமொழிப” “இறப்புநிகழ்வுமெதிர்வுமென்றா, வம்முக்காலமுங் குறிப்பொடுங்கொள்ளு,
மெய்ந்நிலையுடையதோன்றலாறே” என்றாராகலின். ஆதலால் வினைக்குறிப்பிற்குங் காலமுண்டெனக் கொள்க.
திணை – இதுவுமது. துறை – பழிச்சினர்ப்பரவல்.

முழுக்கலையற்றரைக்கலையுமிழந்தாய்தோகை
முருந்துறுபீலியின்முழுதுமுன்றில்சீக்கு
மொழுக்குறநின்றனையுடையுமஃதேயானா
யுன்விரதமெதுபெயரேதுரைத்தியென்னா
வழுக்கறவேயியங்குயிர்கொல்லாமையாசீ
வகனாகவிறைவன்யாரருகனில்யா
திழுக்கியல்பின்றாந்தனியூர்யாதுசெம்பொ
னெயிலெனவவ்வெயிலெவணென்றிசைத்துமீட்டும் (17)

எப்படிவந்தோன்றியதப்படிவத்தெல்லா
மின்னுயிருண்மையையுணராயியங்கற்பால
வப்படிவத்துயிருளதாயுணர்ந்தாயீசற்
கருத்துமுறையினிலருத்தியறத்திற்கேற்ற
துப்புரவுண்பதுகடனென்றுள்ளாயாகத்
தொழிலிகழ்ந்தாய்சுடர்சொருபாம்வேதமார்க்கந்
தப்பினையெம்மறைகொடுசாதிப்பதென்றே
சமண்மதத்தைப்பழித்தனராயழித்துச்சாய்த்தார் (18)

இவையிரண்டும் வினைப்பெயர்கொண்டுமுற்றிய யுகளகாந்திய குளகம்.
திணை – பாடாண். துறை – “அமரர்கண்முடியுமறுவகையானு” மென்றதனால் முனிவர்வாழ்த்து ; பார்ப்பனவாழ்த்துமாம்.

முன்புலகமேழினையுந்தாயதுவுமூதுணர்வா
ரின்புறக்கங்காநதியையீன்றதுவு–நன்பரதன்
கண்டிருப்பவைகியதுங்கான்போயதுமமிர்த
முண்டிருப்பாருட்கொண்டதும், (19)

வெந்தகரியதனைமீட்டுமகவாக்கியது
மந்தச்சிலையினைப்பெண்ணாக்கியதுஞ்–செந்தமிழ்தேர்
நாவலன்பின்போந்ததுவுநன்னீர்த்திருவரங்கங்
காவலன்மாவலவன்கால். (20)

இவையிரண்டும் பெயர்ப்பெயர்கொண்டுமுற்றிய யுகளகாந்திய குளகம். என்னை?
“பெயர்நிலைக்கிளவிகாலந்தோன்றா, தொழினிலை யொட்டு மொன்றலங்கடையே” என்றாராகலின்,
இடுகுறியாய்க் கால் எனக் காலமுந் தொழிலுந் தோன்றாதுநின்றவாறு காண்க.
திணை – இதுவுமது. துறை – கடவுள்வணக்கம்.
ஒழிந்த ஆதியினும் இடையினும் யுகளககுளகம் வந்தவழிக் கண்டுகொள்க. யுகளககுளகம் முற்றும்.

தொடுத்துமுத்தலைச்சூலவன்படையினைத்துண்டப்
படுத்துவெஞ்சினத்தாடகையுயிர்நமன்பகுவாய்
மடுத்துவேள்விகாத்தெதிர்ந்தபோர்நிருதர்க்குமரணங்
கொடுத்தடுந்தொழிற்கரன்முதலவர்க்குவிண்கொடுத்தே, (21)

கிளைத்துநாகவன்பிடர்மிசைக்கிளர்மராமரமேழ்
துளைத்துவாலிமார்பமுந்துளைத்தடற்கருஞ்சுடுதீ
விளைத்துவேலையுளுருகெழுகோதண்டமேனாள்
வளைத்துவாய்மையோர்வடிவெடுத்தனையதோர்வாளி, (22)

கும்பனைப்பொருநிகும்பனைக்கும்கன்னனைநீ
டம்புராசியிற்குரைத்தெழுபலப்படையதனைச்
செம்பொனாலயம்விருப்புறத்தெசக்கிரீவனைக்கொன்
றெம்பிரான்சனகியைமணந்தாடலெய்தியதும். (23)

இவைமூன்றும் வினைகொண்டுமுற்றிய சாந்தானிகாதிகுளகம். திணை – வாகை. துறை – வில்வென்றி.

அருமறையாய்நள்ளிரவிற்கொடுபோகிவசுதேவராயர்பாடித்
திருநகரத்திடைகரப்பவளர்ந்தவனும்வெண்ணெயினைத்திருடிமேனாட்
பொருவறுகைத்தாமரையாற்செங்கனிவாய்வைத்தவனும்போதனேற
னிருவருங்காண்பதற்கரிதாமந்தாமந்ததிபாண்டற்கெளிதினன்பால், (24)

கொடுத்தவனுமானிரைகாத்தருள்காலைக்
கன்மாரிகுடைகுன்றாகத்
தடுத்தவனுநான்முகத்தோன்கொடுபோய
பல்லுருவின்றன்மையாக
மெடுத்தவனுந்தேவகியீன்றருள்புதல்வன்
றுரோவதியாமின்பக்கொம்பன்
றுடுத்ததுகிலிருஞ்சபையுட்டொலையாமை
யளித்தவனுமுண்மைகூறின், (25)

காண்டகுபொன்முடியுதைத்துக்கஞ்சனைக்கொன்
றுறவோர்முன்கடுஞ்சொற்கூறப்
பூண்டதொழிற்சிசுபாலன்பொன்முடிசக்
கரத்தறுத்துப்புவனம்போற்றப்
பாண்டவற்குத்தூதாகிநூற்றுவர்மு
னுருணெடுந்தேர்ப்பாகனாகி
யாண்டகைமைத்தருமன்முதலவர்க்கவனி
யனைத்துமளித்தவனுமன்னோ. (26)

இவைமூன்றும் பெயர்ப்பெயர்கொண்டுமுற்றின சாந்தானிக மத்தியகுளகம். துறை – கடவுள்வாழ்த்து.

தெள்ளுநான்மறைப்பனுவலுமயனையாதியரும்
வெள்ளிவெண்மதிக்கடவுளுங்கதிருமீன்கணமுந்
தள்ளரும்பொறைமன்னுயிர்க்கணங்களுந்தழங்கு
கொள்ளைவெண்டிரைப்புணரிமொண்டெழநிலைகுலையா, (27)

வாக்கும்பாதமும்பாணியுங்கரணமுமற்று
நீக்கமுற்றமன்னுயிர்கடாமாயையுண்ணெடுங்கற்
றாக்குமாடகத்துகண்மெழுகடைந்தபோற்றயங்கக்
காக்கும்வாய்மையீங்கெனதெனத்திருவருள்கலந்தே, (28)

காலம்யாவையுங்கழிந்தபின்கழிந்தபேருருவின்
ஞாலமுற்றவுண்டுறுபுனனடுவணநயந்தோ
ராலநுண்டளிரெனுமனந்தனிலுலகனைத்தும்
பாலனாகியுள்ளடக்குபுதுயின்றனன்பரிப்பான். (29)

இவைமூன்றும் வினைப்பெயர்கொண்டு முற்றின சாந்தானிகாந்திய குளகம். திணை – பாடாண். துறை – கண்படைநிலை.

(குருகாமான்மியம். )

பரத்துவமுதலாப்பஞ்சவுற்பனனாம்
பரமனெமமிறைவனாமெனல்போல்
வரத்தொடும்புகழும்பஞ்சமாத்தொழிலும்
வழங்கலுமிவன்றிறத்தெனல்போற்
றிரத்தவாம்பஞ்சபூதமுஞ்செனித்த
செய்கையுமிவன்றிறத்தெனல்போற்
கரத்தினிற்பஞ்சாயுதங்களேதரித்த
கருணையங்கடவுளாமெனல்போல், (30)

ஞானமுமழகும்வீரமுந்திருவுநவையிலானந்தமுமெமவே
யானவேனையவாமுலகமென்பவற்றிற்கவையமைதியவலவெனல்போல்
வானுறநிவந்தவெழுநிலத்தமைந்தமாடசூளிகையின்யாப்புறுத்தைம்
பானிறந்தழீஇயதுகிற்கொடிநுடங்குபாங்கரின்வயங்குமெம்மறுகும், (31)

செம்மையின்யாணர்த்திவ்வியமணியாற்
செழும்பொனாற்றிசைதிசையெறிக்கும்
பொம்மலுநிவப்பும்வியலுநீளிடையும்
பொருந்தலினொருமறுகிடைப்புக்
கிம்மறுகெவனிங்கிவற்றுளிம்மாட
மெம்மணிமாடமென்றியாருந்
தம்வயிற்செறிந்தோரிமைப்பருநாட்டந்
தாங்கியுமறிவருந்தகைய. (32)

இவைமூன்றும் பண்பிடனாகத்தோன்றினவுடைமைவினைக்குறிப்புக் கொண்டுமுற்றின சாந்தானிகாந்தியகுளகம்.
சாந்தானிககுளகமென்பது மூன்றுபாட்டு வினைமுதலியவற்று ளொன்றுகொண்டு முற்றுவது.
திணை – இதுவுமது. துறை – பரமபதவருணனை.
இவையுள குருகாமான்மியம். ஒழிந்தனவும் வந்தவழிக்கண்டுகொள்க. சாந்தானிககுளகம் முற்றும்.

ஆதிப்பரப்பிரமநாராயணனென்றுஞ்
சோதிச்சுடர்மயமாந்தோற்றஞ்சா–னீதிச்
சொருபமுடனுருவந்தோய்ந்துளன்காணென்று
மொருபரந்தாமத்தானென்றும், (33)

பாங்குடையமன்னுயிரொன்றல்லபலவென்று
மாங்கவற்றுணீங்காதவனென்று–மோங்கவற்றை
நித்தியமாமென்றுமுடனித்தியமன்றென்றுமதை
யுய்த்ததுபூதாகியதென்றும், (34)

முத்திக்கவனேமுதற்காரணனென்றும்
பத்திவிடாதேபயிலென்றுஞ்–சத்தியமாய்ச்
செல்வத்திருப்பதிவாழ்சீநிவாதன்பகர்ந்த
சொல்வித்தகமேதுணிந்து, (35)

நாமானிடப்பிறவிநன்றென்றுந்தேர்ந்தனமாற்
காமாதிகளாங்களைகளைந்து–பாமாலை
சாத்தியேநெஞ்சேதருமெமக்குமுத்தியென
வேத்தியேயின்புற்றிரு. (36)

இவை நான்கும் வினைகொண்டுமுற்றின காபாலிகாந்தியகுளகம். திணை – பாடாண். துறை – குரவனைவாழ்த்தல்.

இச்சிப்போனிட்டவிணையடிப்போதன்றொருவ
னுச்சிப்போதானதுலகறிந்த–நிச்சயமே
யாய்ந்தாலொருவன்சிரத்தணிந்ததன்றொருவன்
பூந்தாள்கழுவும்புனல், (37)

இளிவந்ததுசெய்திரந்தானொருவன்
வெளிவந்தொருவனதைமீட்டான்–களிவந்த
சித்தமுறத்தன்பெயரேகேளாச்செவியனுக்கு
முத்தியளித்தானோர்முதல், (38)

சேதிப்பதாமொருவன்செய்தொழிலுமேனையவற்
காதிப்புவனமவைகாவல்–கோதற்ற
நற்குணத்தெம்பூமகள்கோனாரணனந்தாமத்தான்
முற்குணத்தானேயெம்முதல், (39)

என்றாய்ந்துணர்ந்துணர்த்தியிங்கெமையீடேற்றினான்
பொன்றாதசெஞ்சொற்புலவீர்கா–ளொன்றாய
தேவின்புறத்தமிழ்செய்தென்குருகூரன்மனம்போல்
வாவுஞ்சிறையோதிமன். (40)

இவை நான்கும் வினைக் குறிப்புக் கொண்டு முற்றின காபாலிகாந்திய குளகம்.
திணை – இதுவுமது. துறை – பழிச்சினர்ப்பரவல்.

மீனமதாயாமையாய்வெள்ளைவராகமதாய்த்
தானவனைக்கொன்றுமறைதந்தானும்–வானவர்க்காய்
வாங்குதிரைகடைநாண்மந்தரமேற்கொண்டானு
மோங்குமகிலங்கொணர்ந்தானும், (41)

ஆளரியாயாடகனைச்செற்றானும்வாமனமாய்த்
தாளிணையான்மூவுலகுந்தாயானுங்–கோளரிபோன்
மாறுதிரட்காவலரைமாய்த்தமழுவாளியா
யூறுதிரத்தேகுளித்தானும், (42)

அன்றுதனுராமனாகியிருபதுகைக்
குன்றினுயிரைக்குடித்தானும்–வென்றியுடன்
பார்திருத்துநாஞ்சிற்படையானும்பாண்டவர்க்கவ்
வூர்திருத்தமுற்றளித்தானும், (43)

புண்டரிகத்தானைப்புரந்தானுமைந்நீல
கண்டனிரப்பொழியக்கண்டானு–மண்டமினி
மேலிலையிங்கென்னவிழுங்கியவேகோதகத்தோ
ராலிலையின்மீதுதுயின்றான். (44)

இவைநான்கும் வினைப்பெயர்கொண்டுமுற்றின காபாலிகாந்திய குளகம். திணை – இதுவுமது. துறை – கடவுள்வாழ்த்து.

மாயோனெடியோன்மதுசூதனன்புவனந்
தாயோன்முகுந்தன்சராசரங்க–ளாயோ
னராரியரியச்சுதனாகணையான்
முராரியழியாமுதல், (45)

மாதவன்கேசவன்வாமனன்கோவிந்தன்
சீதரன்பூமகள்கோன்றேவேசன்–பூதலத்தை
யுண்டோன்விரிசிறைப்புள்ளூர்ந்தோன்பகிரண்டங்
கண்டோனிருதாந்தகன், (46)

மந்தாகினிபிறந்தவார்கழலோனேமியோன்
றந்தாவளமுரைத்தசால்பினோ–னெந்தை
திருமால்வரனுந்திபூத்தோனமரர்
பெருமான்பிரமன்பிதா, (47)

கண்ணன்கருணாகரனமலன்காயாம்பூ
வண்ணன்கடல்வண்ணன்மைவண்ணன்–விண்ணவர்கோன்
றம்பிரானாரணனந்தாமத்தான்வேதாந்த
னெம்பிரான்முத்தனிறை. (48)

இவைநான்கும் பெயர்ப்பெயர்கொண்டுமுற்றின காபாலிகாந்திய குளகம்.
துறை – கடவுள்வாழ்த்து. ஒழிந்தவும் வந்தவழிக் கண்டு கொள்க. காபாலிக்குளகம் முற்றும்.

செம்பினையுருக்கிவாக்கித்திண்ணிதினகழிதூர்த்திட்
டும்பரின்முதலேவெண்பொனுவானமதமைத்தபின்றைப்
பைம்பொனார்செகதிகண்டம்பட்டிகைவகுத்திட்டோர்சா
ரிம்பர்நின்றேறயாளிச்சுருட்படியியற்றிமன்னோ, (49)

பாங்கர்வேதிகைக்குத்தானம்பகுத்தரங்கினுக்குநாப்ப
ணோங்குபொற்சுவர்நிறீஇவித்துருமசாளரஞ்செய்தோவா
வீங்கிருடுணிக்குஞ்செய்யவிழுமணியதனான்மேல்வாய்த்
தாங்குமுத்திரம்வைத்துள்வச்சிரத்துலாந்தகவின்வைத்தே. (50)

பச்சைநன்மணியையீர்ந்தபலகைமேற்பரப்பிநீலத்
தச்சுறுகொடுங்கைமூட்டியதன்புழையகத்தவாக
வச்சிரவளைகளோடிமணிசெய்வேதிகைமாண்டூணத்
துச்சிமேற்பலகைசிற்றுத்திரத்தினோடொன்றச்சேர்த்தே, (51)

வெள்ளிவெண்பலகைநான்குவிரல்வியனீப்பின்றாக
வள்ளுறநிறைத்துவண்பொன்னாணிகளழுத்திக்கையா
லள்ளுபுதிரளுமொண்பொன்னரதனஞாங்கர்மேய்ந்து
தெள்ளிதினேழதாகத்திகழ்நிலம்புணர்த்துமாதோ, (52)

வாரிநீணிலையுமேல்கீழ்மரீஇயநோன்படியுந்தாளுங்
கூர்கபாடமுமொன்றாகக்கொளீயமாண்மணிகடம்மாற்
சீர்கெழுதசும்புசூட்டுஞ்சிமயமோடுயர்ந்துவானு
ளார்தமக்கமைந்ததச்சர்க்கணங்குசெய்வனபொன்மாடம். (53)

இவை ஐந்தும் பெயர்கொண்டுமுற்றின அந்தியகுளகம்.
மேலைந்து முதலிய வெவற்றிற்குங் குளகமென்பன பொதுப்பெயர். திணை – பாடாண். துறை – நகர்வாழ்த்து.

அற்புதமாமன்னுயிரேபிரமமென்று
மலகிலவன்றொன்றெனவுமலகில்யாக்கை
நிற்பனயாதெனிற்புனல்பெய்கடங்கடோறு
நிழற்கதிர்தோன்றியநெறித்தாமென்றுமங்ஙன்
பொற்பனவொன்றிறத்தலுமேனையவும்பொன்றாப்
பொலிவெவனென்றாலவைபோலெனவுமாறிக்
கற்பனைசெய்பவன்றனைநான்பிரமமென்றே
கழறுமிரண்டெவனெனவேகழறிமீட்டும், (54)

நான்பிரமமென்றனைநீபிரமமாகி
னான்முகனையுந்தியிற்பெற்றிடுதிபொன்றா
வான்பிரமமமைத்தபகிரண்டமெல்லாம்
வயிற்றிடைவைத்திடுதிசதுமுகத்தால்வையந்
தான்புரந்தவ்வுலகினைமூவடியிற்றாய
தனுவினனோரணுமயமாந்தனுவுங்கோடி
யூன்பயின்றகுரம்பையைநீத்துலகமெல்லா
மொருங்கெறிக்குஞ்சுடர்மயமாமுருவுங்கோடி, (55)

ஆயிரவாய்ப்பஃறலைப்பாம்பணைமேற்காவ
லறிதுயிலுங்கொண்டிடுதியனந்தனாகி
மாயிருஞாலங்களொருபத்துநாலு
மணிமுடிமேற்றரித்திடுதிவழிந்துநாளுந்
தாயதிரைப்பாற்கடலைத்தயிரேயாக்கிச்
சந்திரனைமந்தரமேற்றறியதாக்கித்
தூயசுவைத்தெள்ளமிர்தநரர்க்கும்விண்மேற்
சுரர்க்களித்ததெனவளிக்குந்தொழிலுங்கோடி, (56)

எண்ணிறந்தநால்வகைத்தோற்றத்துளாய
வெழுவகைத்தாஞ்செனனமுநீயிசைந்துபின்ன
ரெண்ணிறந்தவிடங்கடொறுநிற்பதோடு
மியங்குதியீங்கிவையன்றியேககாலத்
தெண்ணிறந்ததொழில்புரிதியண்டரண்டத்
திவ்வுலகிற்பாதாளத்தின்பதுன்ப
மெண்ணிறந்தவிவர்க்கிவற்றிற்கிசைந்ததென்றென்
றிசைந்ததிறம்வாய்மையதாயிசைப்பதோடும், (57)

இவ்வுடலத்திறத்தியிறந்திடுகாயத்தை
யீமத்தங்கிடுபொழுதிலெரிந்திடாதே
யவ்வுடலத்துடனெழுந்துவருதிகாயத்
தருவருப்பாக்கியமலமூத்திரங்களெய்தாச்
செவ்வியின்வாழ்ந்திடுதிநரைதிரைமூப்பில்லாச்
சிறப்பினொடும்வளிமுதலாச்செறிந்தமூன்றும்
வவ்வுதலற்றீறில்சுகானந்தமேய
வச்சிரகாயம்புணர்ந்தவாழ்வினோடும், (58)

மின்னுயிர்க்குங்கனகன்வினவினபொற்றூணம்
வெடிப்பவுதித்தடித்தகரம்பிடித்தபோல
வுன்னுயிர்கொண்டெனதுகரம்பிடித்ததூணத்
துறுதியிவைமுதலவுனக்குறுதிவதின்றான்
மன்னுயிர்தாமலகிலவாம்வகையுமீசன்
வாழ்வகையுமுணர்ந்திலையுன்மத்தனானா
யின்னுயிர்வேறின்னுயிர்கட்குயிராய்நின்ற
விறைவனும்வேறெனத்தெளிவித்திதஞ்செய்வாரே. (59)

இவையாறும் வினைப்பெயர்கொண்டுமுற்றின அந்தியகுளகம். திணை – பாடாண். துறை – முனிவர்வாழ்த்து.
*”ஆங்கதன்” முதல், “கொண்டமால்வரை” ஈறாக 9-ம் பரனிருப்பான் என வினைமுற்றுக் கொண்டுமுற்றின அந்தியகுளகம்.
இவற்றின்மிக்குவருவனவு முள ; அவையும் பெருங்காப்பியங்களினிடத்துக் கண்டுகொள்க. குளகம் முற்றும்.

* ‘ஆங்கதன்’ என்பது குருகாமான்மியம் பரமபத வருணனைச் சருக்கத்து 105-ம் செய்யுள்.
‘கொண்டமால்வரை’ என்பது மேற்படி சருக்கத்து 113-ம் செய்யுள்.

நாவலன்பின்போந்தநறுநீர்த்திருவரங்கங்
காவலன்பொற்றாளாங்கமலத்தே–பாவலர்தம்
பாமாலைசூட்டாதப்பாமாலையையெவனோ
தாமானிடர்க்களிக்குஞ்சால்பு. (60)

புரந்தரனாதியராயபுத்தேளிர்பொற்போதுகடூஉய்
நிரந்தரமேத்தும்படியேதுயின்றதுநெஞ்சத்தன்பு
கரந்தரன்சாபந்துடைத்தோனிருந்ததுதொண்டர்க்கெல்லாம்
வடிந்தரநின்றதரங்கநன்காஞ்சிவடமலையே. (61)

மலைமுழைவைகலும்வைகினராகியுங்
கனிகிழங்கடகுகண்டனமாந்தியு
மூவராயுமுதற்கடவுட்
காவலநீயேகாத்தல்வேண்டுவலே. (62)

வேண்டுவதிங்கின்றெமக்குமெய்க்காவிரியரங்கத்
தாண்டகைதன்வெற்பிலணங்கன்னார்–காண்டகுசீர்ப்
பொன்றாமலர்முகமும்பூண்முலையுங்கண்டனம்யா
மென்றாலினியிதன்மேல்யாது. (63)

என்றாலினியிதன்மேல்யாதுவேண்டுமெனக்குவெள்ளிக்
யன்றாடரவிற்றுயிலரங்கேசனருள்புரிந்து
பொன்றாதசெல்வத்திருமாதுடனுட்புகுந்தனனே. (64)

இவ்வைந்துபாட்டினும் எழுத்து அசை சீர் அடியென்னும் நாலந்தாதியும் அடைவே வந்தவாறு கண்டுகொள்க.
இவற்றுள் “வேண்டுவதிங்” கென்ற வெண்பாவொன்றும் கிளவிவேட்டல். ஒழிந்த நான்குங் கடவுள்வாழ்த்து.
இவை நம்பெருமாள்மும்மணிக்கோவை.

இனிப் பலவடியான்வரும் ஒரு செய்யுளகத்து நாலந்தாதியும் வருமாறு :-

நாவேயுரனுறுநலமிகுமுதற்பொருள்
பொருளுரையாய்தரிற்புகலுமற்றுளதே
யுளதேவண்டிமிருறுமலரோடை
யோடைமால்வரைமூலமென்றுரைசெய
வோடைமால்வரைமூலமென்றுரைசெய
வுரைவிசைத்தடங்காவொல்லையிற்குறுகுபு
புனிற்றாவெனவருள்புரிந்திடர்செகுத்த
வறைபுனலரங்கத்தமுதினையன்றியு
மதித்தொருமுதலையேமகிழ்ந்து
துதிப்பதுமுளதோசுரர்பெருநாவே. (65)
இந்நேரிசையாசிரியப்பாவினுள் நாலந்தாதியும் வந்தவாறு காண்க.

இன்னு மவ்விலேசானே இறுதிநின்ற சொற்பொருணோக்கத்தான் ஆகுபெயராற் சொற்றொடர் வருவனவுமுள. அதற்குச் செய்யுள் :-

“பரிவதிலீசனைப்பாடி
விரிவதின்மேவலுறுவீர்
பிரிவகையின்றிநன்னீர்தூஉய்ப்
புரிவதுவும்புகைபூவே.” (66)

“மதுவார்தண்ணந்துழாயான்
முதுவேதமுதல்வனுக்
கெதுவேதென்பணியென்னா
ததுவேயாட்செயுமீடே.” (67)

69.உலவாதகேள்வியொருவர்பலராற்
பலவாய்ப்பகர்பாவினமா–யிலகுபொரு
ளெண்பாட்டளவுதொழிலிடங்காலஞ்சினையின்
பண்பாந்தொகைநிலைச்சொற்பா.
(எ-ன்) வைத்த முறையானே தொகைநிலைச்செய்யுளாமாறுணர்-ற்று.

(இ-ள்) தொகைநிலைச்செய்யுளென்பது குறையாத கேள்வியினை யுடைய வொருவரானாதல் பலரானாத லுரைக்கப்பட்டுப்
பலபாட்டாய் வருவனவாய், அவை பொருளானும் எண்ணானும் பாட்டானும் அளவானும் தொழிலானும் இடத்தானும்
காலத்தானும் சினையானும் தொகுத்து பெயர்பெற்ற பண்பினையுடையவாமென்றவாறு.

இன் உருபுமயக்கம். உம்மை செய்யுள்விகாரத்தாற் றொக்கது. உலவாத கேள்வியென்பதனை யிருவரிடத்துங் கூட்டுக.
கேள்வி-கல்வி ஒருவராலுரைக்கப்பட்டன திருவள்ளுவப்பயன். பலராலுரைக்கப்பட்டன – நெடுந்தொகை.
இஃ தெல்லாத் தொகைக்கும் பொது. பொருளாற்றொகுத்த பெயர்பெற்றது புறநானூறு.
எண்ணாற்றொகுத்தபெயர் பெற்றது பதிற்றுப்பத்து. பாட்டாற்றொகுத்தபெயர்பெற்றது கலித்தொகை.
அளவாற்றொகுத்தபெயர் பெற்றது குறுந்தொகை. தொழிலாற்றொகுத்த பெயர்பெற்றது ஐந்திணை.
இடத்தாற்றொகுத்தபெயர்பெற்றது களவழிநாற்பது. காலத்தாற்றொகுத்தபெயர் பெற்றது கார்நாற்பது.
சினையாற்றொகுத்தபெயர்பெற்றது நயனப்பத்துபயோதரப்பத்து.
உம்மை யெச்சவும்மையாகலானிவ் வெட்டுவகையானுமன்றிப் பிறவகையானும் பெயர்பெற்றனவுளவேனும்
அவையும் அறிந்துகொள்க. தொகைநிலைச்செய்யுண் முற்றும்.

70.சொல்லாற்பொருளாற்றொடருந்தொடர்நிலைக
ளெல்லாமவற்றுளெழுத்தசைசீர்–மல்கு
மடிசொற்றொடர்நிலைகளந்தமுதலாம்
படிவைத்தனர்முன்பகுத்து.
(எ-ன்) தொடர்நிலைச்செய்யுளினது கூறுபாடுணர்ற்று.

(இ-ள்) தொடர்நிலைச்செய்யுளென்றுகூறப்படுவன வெல்லாஞ் சொல்லானும் பொருளானுந் தொடரப்படுவனவாம்.
அவ்விரண்டனுள், சொற்றொடர்நிலையைப் பகுத்துக்கூறுமிடத்து நின்றசெய்யுளி னீற்றெழுத்தாதல்,
அசையாதல், சீராதல், அடியாதல் வருஞ்செய்யுட்கு முதலாகத் தொடுக்கும்படியென வுட்கொண்டனர் முற்காலத்துப் புலவரென்றவாறு.

வைத்தனர் – உட்கொண்டனர். இச்சூத்திரப்பொருள்கோள் மட்டுறுப்பு.
எல்லாமென்றதனான் மூன்றாவது சொல்லினாலும் பொருளினாலுந் தொடர்வதுமுளவெனக்கொள்க.
மல்குமென்று சிறப்பித்தவதனால் நான்கும், பலவடியான்வரு மொருசெய்யுளகத்தும் வருவதுளவெனக் கொள்க.

இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு :-
இவை முதற்பத்தி லாறாந்திருவாய்மொழியின் முதற்பாட்டும் இரண்டாம்பாட்டும்.
இவற்றுள், பூவென்றசொல்லின் பொருணோக்கத்தாற் சினையைக்கூற முதலையறிவிக்கும் ஆகுபெயரால் அந்தாதித்தவராறுணர்க.
இவை நாலுவேதத்தையும் ஓதாதுணர்ந்த ஞானபூரண ஞானமுத்திரைக்கராம்புயன் றிருவாக்கு. சொற்றொடர்நிலைச்செய்யுண் முற்றும்.

71.பெருங்காப்பியங்காப்பியமெனும்பெற்றித்தாற்
சுருங்காப்பொருட்டொடருஞ்சொல்லிற்–பொருந்தவற்று
ளொன்றும்பலவும்பொருளிற்குறைவுறுமே
லென்றுமதுகாப்பியம்.
(எ-ன்) பொருட்டொடர்நிலைச்செய்யுளின்கூறுபாடுணர்-ற்று.

(இ-ள்) பொருட்டொடர்நிலைச்செய்யுளின்கூறுபாடு சொல்லுமிடத்துப் பெருங்காப்பியமென்றும் காப்பியமென்றுங்
கூறு மிரண்டியல் பினையுடைத்தாம் ; அங்ஙனம் பொருந்தியவற்றுள் அறமுதலிய பொருள்கள் நான்கினுள்
ஒன்றாயினு மிரண்டாயினுங் குறைவெய்தவரு மெனில் அதனை யெக்காலத்தினுங் காப்பியமென்பதேயா மென்றவாறு.

எனவே நாற்பொருளுங் குறைவின்றிவருவதே பெருங்காப்பிய மென்பதாம்.
சுருங்காப்பொருட்டொடரெனவே பொருட்டொடர் மிகவும் விரிவுடையதென்பதூஉமாயிற்று.

72.வைத்தபெருங்காப்பியநிலையும்வாழ்த்தியல்பார்
மெய்த்தவவையடக்கம்வீறுசான்–முத்திதருந்
தெய்வவணக்கமுடன்செய்பொருளுமுன்வரவாங்
கெய்தவுரைப்பதுதானேய்ந்து.

73.தப்பிலாநாற்பொருளுஞ்சாற்றுவதாய்த்தாரணிமே
லொப்பிலாதான்சரிதையுட்கொண்ட–செப்பமுற
நன்மணமில்வாழ்க்கைநலம்புதல்வர்ப்பேறுபசும்
பொன்மகுடம்வைத்தின்புறல்.

74.அலையாழிமேன்மையருட்புயலின்செய்கை
மலையாறுநாடூரின்வண்மை–தொலையா
விருசுடரின்றோற்றமிருதுவளம்பானம்
பொருபுனல்புக்காடல்பொழில்.

75.மந்திரந்தூதொற்றொடல்வாய்ந்தநிரைகோடல்
புந்தியுறச்சேறல்புறத்திறுத்தல்–வெந்திறல்கூர்
மிக்கவிகல்வென்றிநிலையாமையைமிகுத்தல்
கைக்கிளைகள்கூறுங்கடன்.

76.படலமிலம்பம்பரிச்சேதங்காண்டந்
தொடர்தொடர்பிற்பாடையுரைதோய்ந்துந்–திடமுறச்சொன்
மூன்றுட்கொளலாமுறையிற்சுவைவிறல்கூர்ந்
தான்றவர்மெய்ப்பான்புகல்வதாம்.

இவ்வைந்து பாட்டும் என்னுதலிற்றோவெனின், மேற்சொன்ன பொருட்டொடர்நிலை யிரண்டனுள்ளுங்
காப்பியத்தின் மரபுணர்த்திப் பெருங்காப்பியத்தின்மரபுணர்-ற்று.

(இ-ள்) சொல்லுவானுட்கொண்ட பெருங்காப்பியத்தினிலக்கண முலகமதிக்கப்பட்ட வாழ்த்தியலும் அவையடக்கியலும்
தெய்வவணக்கமும் செயப்படுபொருளும் என்னும் நான்கும் பாயிரத்தினு ளவ்வவ் விலக்கண முரைத்தபடியே பொருந்துவனவாய்,
வழுவுதலில்லாத நான்கு பொருளையுங் குறைவறக் கூறப்பெற்று, உலகத் தொத்தாரு மிக்காரு மில்லாத தலைவன்
சரிதையுட்கொண்ட வுண்மையுற்று, நன்மணம், இல்வாழ்க்கை, கலவி, புதல்வர்ப்பேறு, பொன்முடிபொறுத்தின்பமுறுதல்,
கடலை மேகத்தை மலையை யாற்றை நாட்டை நகரத்தை ஆதித்த வுதயத்தைச் சந்திரவுதயத்தைச் சிறுபொழுதைப்
பெரும்பொழுதை வருணனைபுரிதல், வீரபானம், காமபானம், புனல்புக்காடல், பொழில்புக் காடல், மந்திரம்பகர்தல்,
தூதுவிடுதல், ஒற்றாடல், நிரைகோடல், மேற்சேறல், எயிற்புறத்திறுத்தல், செருச்செய்கை, வென்றியெய்தல்,
வென்றவேந்தன் நிலைபெற்றிருப்ப இறந்தவேந்த னிலையாமையை மிகுத்துரைத்தல், ஆண்பாற்கூற்றுக்கைக்கிளை,
பெண்பாற்கூற்றுக் கைக்கிளை யென்னு மிவற்றினையும் பாடாண்பகுதி யென்பதனோடுங் கூறுமுறைமையுடன்
படலமென்றாதல் இலம்பகமென்றாதல் பரிச்சேதமென்றாதல் பகுதிப்படுமவற்றை யுட்கொண்ட காண்டங்களோடும்
பொருட்டொடர் புடைத்தா மொருதிறப்பாட்டு மிருதிறப்பாட்டுமாகிய பாப்பாவினத்தோடும்
பாடைவிராயு முரைவிராயு மேற்சொன்ன வுண்மையுடைய முத்தகமுதலிய மூன்று முட்கொள்வனவா முறைமையுடன்
எட்டு மெய்ப்பாடும் மெய்ப்பாட்டுக்குறிப்பு மிகுந்து கல்வி கவியான்மிக்கோர் மதிக்கும்படியுரைப்பதா மென்றவாறு.

இதனுள், வைத்த என்பது உட்கொண்ட எ-று. நிலை–இலக்கணம். இயலு மது. பார்-உயர்ந்தோர் ; இடைநிலைத்தீபகம்.
முன்வரவு-பாயிரம். என்னை? நூற்குமுன்னேவருதலான் முன்வரவென்றாயிற்று.
செய்பொருளு மென்னு மும்மையாற் றழுவப்படும் எஞ்சுபொருட்கிளவி பிற்படக்கிளத்தலாய்நின்றும்மையில்செஞ்சொல்லாய்
முற்படக்கிளந்த வாழ்த்தியல் முதலாய மூன்றினுங் கூட்டி விரித்துரைக்கப்பட்டது. என்னை?
“எஞ்சுபொருட்கிளவிசெஞ்சொலாயிற், பிற்படக்கிளவார் முற்படக்கிளத்தல்” என்றாராகலின். நலம் – புணர்ச்சி.
இருதுவும் பானமும் சாதியேகவசனம். புக்காடலென்பதனைப் புனல் பொழி லிரண்டினுங் கூட்டுக.
செப்பமுற – உண்மையுற ; என்பது, செய்து என்பது செய என ஒரு வினையெச்சம் மற்றொருவினையெச்சமாகிநின்றது.
வாய்ந்தநிரைகோடல் என்பது முதலாக் ‘கைக்கிளைகள் கூறுங்கடன்’ என்பதனால் வெட்சிமுதற் பாடாண்டிணையீறாகப்
புறம் புறப்புறம் அகப்புறம் என்னும் மூன்றுகூறாய வெழுதிணையு முறையே கூறியவாறுங் காண்க.
இவ்வாறன்றி, இவற்றி னிடையிடை கரந்தை நொச்சி என்பவற்றையும், இறுதியிற் பொதுவியல் கைக்கிளை பெருந்திணை
என்பவற்றையும் கூட்டிப் பன்னிரு படலமாக்கி யவற்றிற்கு இருபது, பதினாலு, இருபத்தொன்று, இருபத்திரண்டு, ஒன்பது,
இருபத்தொன்பது, இருபத்துநாலு, முப்பத்துமூன்று நாற்பத்தெட்டு, முப்பத்தேழு, பத்தொன்பது, முப்பத்தாறு
எனத் திணையுந் துறையுமாக விரித்து வெண்பாமாலையாகிய வழிநூலுள் ஐயனாரிதர் கூறிய
தூஉம் இவ்வெழுதிணையு ளடங்குமெனக் கொள்க.
தப்பிலா நாற்பொருளுஞ் சாற்றுவதாய் என்பதனாற் கூறிய வுறுப்புக்கள் சிலபல குறையினும்
நாற்பொருளுங் குறையாதனவெல்லாம் பெருங்காப்பியமெனக் கொள்க.
பாடை – திசைச்சொல் ; “சிதைந்தனவரினு மியைந்தனவரையார்” என்பதனால் *பாஷை பாடையாயிற்று.
உரை – செய்யுளின்றி உரைநடை யான் வருவது. அது இளங்கோவடிகள் கூறிய சிலப்பதிகாரத்துட் கண்டுகொள்க.
உம்மையால் உரையிடைவிரவாது வருவதே சிறப்புடைத்தெனக் கொள்க.

77.மன்னியபேர்யாப்பிற்குவைதருப்பம்வான்கவுடம்
பன்னியபாஞ்சாலமெனப்பகுத்து–மின்னிடையாய்
நன்னூன்முழுதுணர்ந்தோர்நாட்டகத்துநாட்டலுறீஇ
முன்னூலுட்கண்டநெறிமூன்று.
(எ-ன்) இதுவு மேற்சொன்ன செய்யுட் கூறுபடுபாகமுணர்-ற்று.

(இ-ள்) இங்ஙனம் நால்வகைத்தாக நிலைபெற்றபெயரையுடைய செய்யுளனைத்திற்கும் வைதருப்பம் கௌடம் பாஞ்சாலமென்னு
மூன்று நாட்டினகத்துள்ளாரால் வழங்கும் பாகத்தான் மூன்றாகப் பகுத்து அவ்வவநாட்டினதுபெயரால் நல்ல நூல்களை
முற்றவுணர்ந்தோர் தங்களாற் செய்யப்படுமுந்து நூலகத்து நாட்டுதலையுற்றுக் கண்டமார்க்க மூன்றுளவாமென்றவாறு.

உறீஇ – உற்று. வைதருப்பம் – விதர்ப்பநாட்டது. மின்னிடையாய் என்பது மகடூஉமுன்னிலை.

78.இழுமென்மொழியுமினியபொருளுந்
தழுவுமதுவைதருப்பம்–விழுமியவாஞ்
சொற்கடினத்தோடும்பொருட்கடினந்தோய்ந்தரிதாய்க்
கற்பனசாருங்கவுடங்காண்.
(எ-ன்) வைத்தமுறையானே வைதருப்பபாகமுங் கௌடபாகமும் பாகுபடுமாறுணர்-ற்று.

(இ-ள்) மெல்லென்ற விழுமிய இனியமொழியும், மெல்லென்ற விழுமிய இனிய அறமுதலிய நாற்பொருளும்
பொருந்துவன வைதருப்ப பாகமாமென்றும், விழுமிய சொற்கடினமும் பொருட்கடினமுந்தோய்ந் தரியநடைத்தாய்ப்
புலவனாற்கூறப்படுவது கௌடபாகமாமென்றும் மனத்தாற் கண்டுகொள்க வென்றவாறு.
* பாழ்சை – பிரதிபேதம்.
விழுமியது – முக்கியம். இதனுள் விழுமியவாம் என்பதனை இடைநிலைத்தீபகமாக்கியும்,
காண் என்பதனை யிரண்டிற்கு மிறுதிவிளக் காக்கியும், மனத்தாலென்பதனை யெச்சமாக விரித்தும்,
மென்மையினிமை யென்பவற்றை முன்னையதற்கு முதனிலைத்தீபகமாக்கியுங் கொள்க.
சொற்கடினம் – வல்லினம் வல்லொற்றடுத்து மிகுதல். பொருட் கடினம் – பயங்கரமாகிய பொருள்பயத்தல்.

79.இடையிட்டனவாகுமின்சொற்பொருளாற்
றடையற்றொழுகுவபாஞ்சால–மடைவடைவே
யக்கவிகள்பாடுமவர்க்கங்கவைபெயராய்
மிக்குலகங்கூறும்விதித்து.
(எ-ன்) ஒழிந்த பாஞ்சாலத்தின்பாகுபாடும் அக்கவிகள் பாடு வோர்க்கெய்துங் காரணப்பெயருமாமாறுணர்ற்று.

(இ-ள்) மென்மையுங் கடினமுமாகிய வைதருப்பகௌடங்களோடுங் கூடாதே யிடைநிலைப்பட்டவா மினிய
சொல்லானும் பொருளானுந் தடையின்றி நடைபெற்றொழுகுமது பாஞ்சாலபாகமாம்.
முறை முறையே அக்குணக்கவிகள் பாடுவோர்க்கு மங்கங் கதுவேபெயராக விதித்து
மிக்க பெரியோராற் கூறப்படு மென்றவாறு. அவை வைதருப்ப கவி கவுடகவி பாஞ்சாலகவி என்பனவாம்.

இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு :-

பதியுமாமுகில்கரிப்படாமுமாய்ப்புன
னதியுமாய்ப்படுகதிர்நான்றவேணியாய்
மதியமாமுளைமதிமதியமாய்த்தமிழ்ப்
பொதியமானதுசிவன்போலுமானதே. (68)

உந்தியங்கமலமேலுதிப்பதாலுரஞ்
சிந்துதெள்ளருவிவெண்ணூலின்செம்மைத்தாய்ப்
பந்திசேர்திசைமுகம்பயிலும்பான்மையாற்
சந்தமால்வரைமறைத்தலைவனொத்ததே. (69)

விண்டுவென்றுரைப்பதால்விண்ணினோங்கியே
பண்டுலகளந்தமெய்ப்படிவங்கூர்ந்தடிக்
கொண்டநீர்பகிரதிக்கோதையொத்ததால்
வண்டுழாய்மலைந்தசெம்மலையுமொத்ததே. (70)
இவைமூன்றும் வைதருப்பபாகம். திணை – பாடாண். துறை – மலைவருணனை.

முப்புரத்தினைச்செகுத்தமுக்கணக்கனிற்சிரித்து
முத்தலைக்கணிச்சியுக்கதாற்
றப்பறப்பொருப்பினைக்குலுக்கிடக்கையைச்செருத்
தலத்துறப்புடைத்துருத்தெழா
நெய்ப்புறத்தினிற்குளித்தவச்சிரத்தினைப்பிடித்து
நெட்டுயிர்ப்புயிர்த்தியக்கவே
குப்புறப்புழைக்கைவெற்பின்மத்தகத்தினைத்துளைத்த
கொப்புளித்தபச்சிரத்தமே. (71)

மத்தகத்தழுத்துவச்சிரத்தினைப்பறித்துயர்த்தி
மத்தவெற்புடற்றிநிற்பதா
னத்தகத்தடக்குமைக்கடற்கடைக்கனற்சினத்த
னச்சுளத்தினுற்றெதிர்ப்பவே
பித்தகத்தழைத்தடற்பொறிப்புலிப்புலத்தினுற்ற
பெற்றமொப்பவட்கியுட்குநீ
டுத்தமச்சுவர்க்கமுற்றகொற்றவற்கிமைப்படுத்த
வொத்தபத்துடைச்சதக்கணே. (72)

புற்புதக்கடக்கவுட்பொருப்புவச்சிரத்தினைப்
புழைக்கையிற்புடைத்தியக்கவே
யுற்றதுக்கிரச்சமர்க்குடக்குமிக்குரத்துரத்
துடைத்ததைப்பறித்துருத்திடா
வற்புதத்தெதிர்த்தியக்கநெட்டடிக்குளுற்றதொற்றை
யக்களிற்றைவிட்டுமுட்டவே
தெற்குவெற்பினைத்துளைத்ததப்புறப்புறக்கொடைத்
திசைக்களிற்றினைத்துளைத்ததே. (73)

முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்

82 மாறனலங்காரம்
இவைமூன்றுங் கௌடபாகம். திணை – தும்பை. இவற்றுள், முப்புரத்தினையென்றது ஏமவெருமை. ஏனையிரண்டும் யானைமறமும் ஏமவெருமையுமாம்.

விரைக்கமலமுறுக்குடைந்ததகட்டகட்டினடுப்பொகுட்டு
வெண்டோட்டும்பர்
நிரைக்கமலத்தினிதிருந்துசூட்டெகினம்பார்ப்பருத்த
நினைத்துநீர்வா
யிரைக்கெழவேசெங்கால்வெள்ளுகிருறுமுன்னிதழுரிஞ்சி
யிழிந்ததீந்தே
னரைக்குடுமிமறைக்கிழவனெருப்பிடைநெய்யுகுப்பனபோ
னான்றமாதோ. (74)

மாதண்டர்புகழ்ந்திடவாழ்ந்தருள்வாமபாகத்து
மழைதோய்வெள்ளி
வேதண்டமிசைப்பவளவேதண்டம்பகிரண்டம்
விழைவுகூர்வான்
மூதண்டமுகடுதொடுமும்மதிளின்முரண்முருக்க
முன்கைக்கொண்ட
கோதண்டவடவரைபோற்பணைத்தகெந்தமாதனமாங்
குன்றொன்றுண்டே. (75)

நெய்த்திருண்டுசுருண்டுகடைகுழன்றறலின்கெழுதகைத்தாய்
நெறித்துநீண்டு
மொய்த்திருக்குங்குழற்காட்டின்முகையவிழ்பூந்துணர்விரையு
முற்றாமுன்ன
ரெய்த்திருக்குமிடைக்கிடர்மேலிடரிழைக்குந்தமர்போலு
மிறுமாந்தொண்பூண்
வைத்திருக்குமுலைமுகட்டிற்பொதிகளபத்தொளிவிரையும்
வளைந்தமன்னோ. (76)

இவை மூன்றும் பாஞ்சாலபாகம். முதற்பாட்டு நாடுவாழ்த்து. இரண்டாவது மலைவருணனை. மூன்றாவது குழல்வருணனை.
இவை யொன்பதுங் குருகாமான்மியம். இவை மூன்றுபாகமும் பலவடியான்வரு மொருசெய்யுளின்கண்ணே
பலவடிதோறும் விரவியும் பேதித்தும் வருவனவு முள. அவையும் மேற்காட்டுதும்.

80.இன்பந்தெளிவுசெறிவுசமனின்னிசையே
நன்சொலுதாரநவின்றவலி–மன்காந்தந்
தையலுய்த்தலில்பொருண்மைசாற்றுஞ்சமாதியுட
னையிரண்டும்வைதருப்பமாம்.
(எ-ன்) எடுத்தமுறையானே வைதருப்பத்திற் கெய்துவனவாங் குணவலங்காரங்கட்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்ற்று.

(இ-ள்) இன்பமுந் தெளிவுஞ் செறிவுஞ் சமனிலையு மின்னிசையு முதாரமும் வலியுங் காந்தமு முய்த்தலில்
பொருண்மையுஞ் சமாதி யென்பதோடும் பத்தும் வைதருப்ப குணவலங்காரமாமென்றவாறு.

81.ஏனைக்கவுடமிவையீரைந்தொடுங்கூடா
மானைப்பழித்தமதர்விழியாய்–நூனயந்திங்
கெண்ணியபாஞ்சாலமிவைகட்கிடைப்பட்டு
நண்ணியதோர்சால்புடைத்தாநான்கு.
(எ-ன்) ஒழிந்தனவாங் கௌட பாஞ்சாலங்களும் அக்குணவலங்கார மேற்குங் கூறுபாடுணர்ற்று.

(இ-ள்) ஒழிந்த கௌடமு மிங்ஙன மெண்ணப்பட்ட பத்தி னோடுங்கூடாது நடக்கு மிலக்கணத்தவா மென்றவாறு.
பத்தினோடுங் கூடாதெனவே யும்மை யெச்சமாதலாற் சிலவற்றோடுங் கூடியும் வருமென்பதாம்.
பாஞ்சாலமு மப்பத்தினோடும் வைதருப்ப கௌடங்க ளோடுங் கூடா திடைப்பட்டுநடத்தலைப்பொருந்து
மொழுக்கத்தினை யுடைத்தென்றவாறு. இவைகட்கும் என்னும் உம்மை யிறந்தது தழீஇய எச்சவும்மையாம்.

82.சொல்லாற்பொருளாற்சுவையுறலின்பந்தெளிவு
மொல்காப்பொருள்புலப்பாடொண்செறிவு–நல்லா
யெழுத்தோரினஞ்செறிதலெல்லாவெழுத்தும்
வழுத்தீர்ந்துறல்சமனுமாம்.

83.இன்னிசையதின்னிசையாமேய்ந்தவுதாரங்குறிக்கொள்
சொன்னடையால்வேறுபொருடோன்றலா–நன்னுதாஅல்
வாய்ந்ததொகைமிக்குவருதல்வலிகாந்த
மாய்ந்தொன்றனையுயர்த்தலாம்.

84.செய்யுட்பொருளைத்தெளியவிரித்தற்குரிச்சொல்
லெய்துநடைத்துய்த்தலில்பொருண்மை–தையலா
யோங்குஞ்சமாதியுவமேயத்தின்வினையை
யாங்குவமைக்கேற்றுவதொன்றாம்.
(இவைமூன்றுசூத்திரமு முடனெழுதப்பட்டன. )

(எ-ன்) இவை யின்பமுதற் சமாதியீறாய பத்து மாமாறுணர்-ற்று.

(இ-ள்) சொல்லினாலும் பொருளினாலு மினிமையுறவருதல் இன்பமாம்.
தெளிவென்பது கவியாற் கருதப்படும்பொருள் கேட்போர்க்குக் குறிப்புமொழியின்றி வெளிப்படைமொழியாகத் தோன்றுவதாம்.
ஒள்ளியசெறிவும், மூவினமாகிய எழுத்து ளோரின மிகுந்து செறியப் பாடுவதாம். ஒள்ளியசெறிவென்றதனால்
எழுத்தானாகிய சொல்லானாய பொருள் செறிதலுங் கொள்க. சமனிலை மூவினமும் விரவப் பாடுவதாம்.
இரட்டை துணிவு. இன்னிசையும் அவ்வவ் செய்யுட்கேற்ற சொன்னடையாற் பாடுவதாம்.
உதாரமும் செய்யுட் சொன்னடையால்வரும் பொருளன்றி யதன் குறிப்பினால் வேறுபொருடோன்றுவதாம்.
வலியும் தொகைநிலைச்சொன் மிக்குவருவதாம். காந்தமும் ஒன்றனை யுயர்த்திப்புகழுங்கா லுலக
நடையிறவாமை யாராய்ந்துயர்த்துவதாம். உய்த்தலில்பொருண்மை கவி தன்னாற்கருதிய செய்யுட்பொருளை
விளங்க விரித்துக் கூறுவதற்குப் பிறிது மொழிபெய்துகூட்டா ததற்குரியசொற்கள் செய்யுளகத்துளவாம்படி பாடுவதாம்.
சமாதி உவமேயத்தின்வினையை யுவமைக்கேற்றுவதோரிலக்கணத்ததா மென்றவாறு.
இதனைச் சாற்றுஞ் சமாதியென்றதனாற் குணவலங்காரங்கள் பத்தினுள்ளு மிதுவே சிறந்த
குணவலங்கார மென்பதூஉ மிஃது மூன்றுநெறியார்க்கு மொக்குமென்பதூஉ மாயிற்று.
இவற்றிற்கெல்லாம் எண்ணும்மை யிடையிட்டுவந்தன. ஆம் என்பதனைச் சூத்திரந்தோறு மிறுதிவிளக்காகக் கூட்டுக.
நல்லாய், நன்னுதாஅல், தையலாய் என்பன மகடூஉமுன்னிலை. தையலென்பது அண்மைவிளி.

அவற்றுள், சொல்லின்பமாவது அடை சினை முதலென முறைமூன்று மயங்காமை வரும் வண்ணச்சினைச்
சொற்களும் முதலொடு குணமிரண்டடுக்கிவரும் அடைசொற்களுஞ் சினையொடு குணமிரண்டடுக்கி வரும்
அடைசொற்களும் வழக்கிடமுஞ் செய்யுளிடமுமாக விரண்டிறந்தனவா யடைபல வேண்டினவழியேபுணர்ந்த
சொற்களுடன், வழிமோனை முதலியன வரத்தொடுப்பனவாம்.
அவற்றாற் கேட்டோர் பெறு மின்பம் சொல்லின்பம். பொருளாவன :- அறம் பொருள் இன்பம் வீடென்பன.
அப்பொருளால்வரு மின்பமாவது மலரின் மதுக்காரணமாக மதுகரங்கட்கு வரு மின்பம்போலக் கவிப்
பொரு ளுட்கொண்டோர்க்குவரு மின்பமாம். னெவே யவ்விரண்டினுள், பொருளணியுள்ளு முக்கியமான
பொருளணி யுடைத்தாய்ப் பாடுவதே பொருளின்பமாம். இனிச் செய்யுள் வருமாறு :-

வெண்டிரைப்புனலறாவியலயல்வயல்விரி
வண்டிமிர்பாசடைக்குவளைமென்பனிமலர்
புறக்கொடைமதிதரப்பொதியவிழ்ந்ததுபோய்ச்
சிறக்கணித்தனவாஞ்சேயிதழ்க்குமுத
முட்டாட்டாமரைமுறுக்குடைநாண்மலர்க்
கட்காமருகடைவாய்வழிந்திழிதா
மேய்தருகயவாய்மேதிகன்றுள்ளுபு
பணைமுலைசுரந்துபனித்தபாற்றடினி
நெடுவெண்டிங்கணிறைமறுத்துடைத்தொளிர்
செந்தளிர்ப்பூஞ்சுனைத்தேமாத்துகுகனி
முடப்பரியரைப்பலாமுட்புறக்குடக்கனி
புறக்காழ்மரகதப்பூகமிடற்றி
னிறக்காழ்திரண்டுநீண்டுதிர்பழுக்காய்
நெட்டிலையரம்பையினீடுபொற்கூன்கனி
புதையிருடுரீஇக்கதிர்பொழிநவமணிக்குவை
சுழித்தெடுத்திரைத்தவாய்த்தூமலர்பலகொடு
பாற்கடல்பொன்னியுட்படிதிருவுருவங்
காண்பதின்முன்னியகாட்சியொன்றெனலாய்த்
துறைதொறுந்துறைதொறுந்துழனியின்வளைக்குந்
திருவரங்கேசனைத்திருமறுமார்பனை
மனத்துறநினைந்தும்வாழ்த்தியும்வணங்குந
ரெக்குலத்தெவரேயாயினு
மக்குணத்தவர்க்கடியேனடியேனே. (77)
இந்நேரிசையாசிரியப்பாவினுள் நால்வகை யடைசொற்களும் வந்தவாஞ் சொல்லின்பத்தோடும் பொருளின்பமும்
வந்தமையா லிது சொற்பொருளின்பம். இதனு ளீரடை முதலொடுஞ் சினையொடும் புணர்ந்தன வைதருப்பம்.
இரண்டிறந்த மூவடை புணர்ந்தன பரஞ்சாலம். இரண்டு மூன்று மிறந்த பலவடை புணர்ந்தன கௌடச்சொல்லின்பம்.
ஆதலாற் சொல்லின்ப மூன்றுபாகமும் அவற்றோடு மூன்றுநெறியார்க்கும் ஒரு தன்மைத்தாம்
பொருளின்பமும் பல வடியான்வந்த ஒரு செய்யுளகத்துக் காட்டியவாறு கண்டுகொள்க.
இதனுட் பொருளணியாவது தற்குறிப்பேற்றவுவமை. திணை – பாடாண். துறை – நாடுவாழ்த்து.

பொன்னசலந்திரண்டிரண்டாம்பொருவமர்தோட்கமலக்கட்
பொலிந்துநின்றா
ரன்னவயற்குருகூரரணிவரைவாழ்மதர்நெடுங்க
ணணியிழாய்கேண்
மின்னிடையார்புறந்தருநாண்மிகுகாமக்கடலாழ்ந்த
மிக்கோர்தங்கண்
மன்னுயிரைத்தரும்புணைதான்மலிதிரைநீர்க்கடலிடத்தார்
மடலென்பாரே. (78)
இது வைதருப்பச்சொல்லின்பம். பகுதி-மடல். துறை-உலகின் மேல்வைத்துரைத்தல்.
இவ்வாறு பொழிப்புமோனையாய்வருத லின்னா தெனவேண்டுவர் கௌடர்.

குயிலாருங்குளிர்பொழிற்றென்குருகேசன்குழகனுயர்
குன்றிற்குன்றாக்
கயிலாயன்களத்தணிந்தகடுவிடமுங்கரத்துழையுங்
கரந்தகண்ணாய்
மயிலாலுமழைதவழ்நும்மணிவரைக்கெம்மணிவரைநின்
மணிப்பூண்மன்னும்
பயிலாரப்பணைமுலைக்கோர்பணைமுலையெப்படியெனுமப்
படியாம்பண்பே. (79)
இது கௌடச்சொல்லின்பம். பகுதி – வன்புறை. துறை – இட மணித்துக்கூறி வற்புறுத்தல்.

கடுவேகயலெனக்கரந்தடுங்கண்ணிணை
காமனுங்காமுறுங்காட்சியகாண்முகங்
கிள்ளையின்கிளையுங்கிளைத்தகைக்கிளையுடைக்
கீரமுங்கீர்த்திக்கீரமுங்கீரே
குவடுடைக்குளிர்பொற்குன்றேகுவிமுலை
கூர்புதற்கூன்சிலைகூற்றுயிர்கூட்டுணுங்
கெடலருங்கெழுதகைகெழுமுபுகெழீஇய
கேகயங்கேளொடுங்கேடுறுங்கேழியல்
கைபுனைகைக்கிசைகைக்கிணைகைத்துணை
கொண்டலுட்கொண்டன்னகொண்டையுங்கொடியிடை
கோடாக்கோவலர்கோற்றொடிகோமான்
கௌரவகௌசிகன்கௌசிகங்கௌத்துவ
மணியெனக்கொண்டுமனவீடளித்தோன்
கண்ணன்குறுங்குடிக்கனவரை
மண்ணகத்துறையுளாய்வளர்நிலமகட்கே. (80)
இது ககர வருக்க முற்றுமோனை. இதுவுங் கௌடச்சொல்லின்பம். பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங் கூறல்.

கயலெனவேமதர்த்தமர்த்தகருநெடுங்கண்ணிவடனக்கிக்
கன்னிமன்னோ
வயலெனவேயமர்துணையன்றளவளாயமர்துணையென்
றறிந்ததன்பான்
மயலறவேயியற்றமிழ்செய்மகிழ்மாறன்றுடரியின்கண்
மணந்தகாதல்
புயலெனவேபுரைநறுமென்புரிகுழற்குப்புகல்வனினிப்
புகலுமாறே. (81)
இது பாஞ்சாலச்சொல்லின்பம். பகுதி – மதியுடன்படுதல். துறை – குறையுறத்துணிதல்.
“குயிலாரு” மென்பதனையும் பாஞ்சாலச்சொல்லின்ப மெனினு மாம்.

வண்ணமுலைப்பொற்றாமரைமுகுளம்வீறழிந்து
கண்ணெகிழாவண்ணங்கருதியோ–தண்மதியை
மால்வைத்தமாநிதிவண்கோளூரில்வாணுதாஅன்
மேல்வைத்தான்மேனாள்விதி. (82)
இது பொருளின்பம். இதனுண் முலையாகிய பொற்றாமரைமுகை யவிழாதிருப்ப வதன்மேலாகப் பிரமன் மேனாண்
முகமென்று பெயரை யுடைய மதியைவைத்தா னென்னும் பொருளின்பம் வந்தவாறு காண்க.
பகுதி – இடந்தலை. துறை – மருங்கணைதல்.

மேலைமலைக்கதிர்மறையக்குவிமரையுட்டேனசையான்மீளாவைகிச்
சோலையில்வண்டினந்திறப்பவயற்கழுநீரிடந்தோய்ந்தசுரும்புமாதோ
மாலையிற்றன்மனைபுகுதுமணமகனைவிறலியொடுமதங்கன்பாடிக்
காலையினிற்றுயிலெழுப்பக்கடைதிறந்துபரத்தையிற்போகியகாட்சித்தே. (83)
இதுவுமது. துறை – நாடுவாழ்த்து.

திரகாயத்திரிகருணைக்கிலக்காகுமுணர்வுடையோர்சித்திகாட்டப்
பரகாயத்திடைபுகுந்துமறித்தொருகாயம்புகுமப்பான்மையேய்ப்ப
வுரகாயத்துரிவையுரீஇயொருபரந்தளொருபாந்தளுரிபுக்கூர்ந்து
வரகாயத்தகடுரிஞ்சும்பஃறலையமலைமுழைபோய்வைகுமன்னோ. (84)
இதுவுமது. மலைவருணனை. இவையிரண்டுங் குருகாமான்மியம். இன்பம் முற்றும்.

ஏவொன்றுடக்கியிருபதுகைக்கார்வயிரத்
தூவொன்றுடலந்துளைபடுத்த–காவொன்
றரங்கத்தானல்லாதனைத்துயிருங்காத்தற்
கிரங்கத்தானல்லாரெவர். (85)
இது வைதருப்பத்தெளிவு. இதற்குச் சொல்லின்முடிவாற் பொருடோன்றும். துறை – கடவுள்வாழ்த்து.

தேனேமுளைமதியஞ்செந்தழல்பாரிப்பவிருந்
தேனேயயலார்சிரிப்பவே–தேனே
யிறைவகுளத்தாமரையோவெய்தார்வேளெய்து
குறைவகுளத்தாமரையோகூறு. (86)
இது சொல்லாற் கவியருமையும் நோக்குடைப்பொருள்கோளுந் தோன்றத் தொடுத்தமையாற் கௌடத்தெளிவு.

(இ-ள்) தேன்போலும் இனிய மொழியையுடையாய் ! இளம்பிறை யானது தழலைவிரிப்பவும் அயலார்சிரிப்பவும்
இத்துணைப்போதும் உயிரைத் தாங்கியிருந்தேனே ! இங்ஙனமிருந்த வெனது துன்பமிகுதியும் நாண்டுறந்ததுங் கண்டு
தேனையொழுக்காநின்ற வகுளத்தாமத்தை யுடையோர் அந்தோ மேவுகிலர் ;
இனிக் காமனெய்து குறைந்துபோவன குளத்தின்கட் டாமரையொன்றேயோ, ஓடையிற் காவியும் ஆவியு மல்லவோ கூறுவாயாக ; என்றவாறு.

ஏகார நான்கினுண் முன்னது விளி. இரண்டாவது திரக்கத்தின்கட் குறிப்பு. பின்னைய விரண்டு மீற்றசை.
தாமரையோவென்னு மோகாரம் ஒழியிசை. திணை – பெண்பாற்கூற்றுப்பெருந்திணை. துறை – துன்பு மிகுதி தோழிக்குரைத்தல்.

உள்ளத்துணர்வெனுங்கண்ணுட்கொண்டுகாண்பதற்குங்
கள்ளக்கருங்கண்கலுழ்வனகண்–டெள்ளிப்
பிரியாரையுந்திருமால்பேர்நகரார்தூற்றத்
தரியாதென்னுள்ளந்தளர்ந்து. (87)
(இ-ள்) எனதகத்தே யறிவென்னுங் கண்ணானது நங்காதலருட னென்னையு முட்கொண்டு காணாநிற்பதற்குப் புறத்தே தாமுங்காணாத
உடன்போக்கு. துறை – பூத்தருபுணர்ச்சிக் கறத்தொடு நிற்றல். இவ்வாறு மெல்லினவண்ணத்தால்
மெல்லெழுத்துச் செறிந்துவருதல் விரும்பாது வல்லினவண்ணத்தால் வல்லெழுத்துச்செறிந்த
சொல்லோடும் வற்கெனத் தொடுப்பதே வேண்டுவர் கௌடர்.

புட்குழியுத்தமர்புட்கொடியத்தர்பொருப்பின்மடக்குயிலே
கட்டழல்கக்குகுழிச்சிறுகட்கரடத்ரிகடத்தொருமா
விட்புலமுற்றவிருப்பமிகுத்ததொர்வெற்றியனைக்குறுகா
வுட்குறவெற்றினனற்றதுதிக்கையொடுற்றமருப்பிணையே. (89)
என்பது, புட்குழியென்னுந்திருப்பதியின்கண் ணுத்தமர், கருடக்கொடி யுயர்த்த சுவாமியார்
பொருப்பிடத்து மடப்பத்தையுடைய குயிலே ! மிக்க அழலைக்கக்குங் குழிந்த சிறுகண்களையு முள்ளத்தறுகண்மையையுங்
கவுளின்கண் மதத்தினையு முடையதோர் யானை, விண்ணோரனை வரும் விருப்பத்தை மிகுப்பதோர்
வெற்றியையுடையானொருவனைப் பாயும்படிக்குக் குறுகினகாலத் ததனுள்ளமுட்க வவ னதனை வாளாலெறிதலு
மதன் றுதிக்கையுந் துதிக்கைபற்றிய விருகோடு முடனே யற்ற வென்றவாறு.

இங்ஙனம் வல்லிசைவண்ணத்தால் வந்தவாறு கண்டுகொள்க. அஃதே லிதன்முதனூல் செய்த தெண்டியாசிரியர்
“செறிவெனப்படுவது நெகிழிசையின்மை” யென வைதருப்பச் செறிவிற்குக்கூறியதனை விரும்பாது
ஒருதிறத்தெழுத்தானே நெகிழத்தொடுப்பதே கௌடச்செறி வெனவேண்டிய திந்நூலுடையாருட்கொண்டு
மிங்ஙனம் வற்கெனத் தொடுத்தன் முதனூலோடும் வழிநூன் மாறுகொளக்கூறலென்னுங் குற்றமாமாலோவெனின்,
நன்றுசொன்னாய் ! அவர்தாமே “விரவத் தொடுப்பது சமநிலையாகும்” என்பதற்குச்
“சோகமெவன்கொலிதழி பொன்றூக்கின” என்பதனுள் மூவினமும் விரவத்தொடுத்ததனை வைதருப்பச்சமநிலையெனவும்,
விரவுதலுள்ளும் வல்லெழுத்துச்செறிய இடர்த்திறத்தைத்துறபொற்றொடிநீயிடித்துத்தடித்துச்,
சுடர்க்கொடித் திக்கனைத்துந்தடுமாறத்துளிக்குமைக்கார்’ என வற்கெனத் தொடுப்பதே கௌடச்சமநிலையெனவும்
காட்டினமையானும் இவ்வண்ணங் கூறாக்கால் வைதருப்பச் செறிவிற்கும் வைதருப்பச் சமநிலைக்கும்
வேற்றுமையின்மையானு மிச்செறிவிற்கு மோசையே நோக்கமென்பதனாவிருப்பத்தா லென்னை வஞ்சித்த கள்ளத்தையுடைய
விக்கண்களழு வதனைக்கண்டு எம்மையிகழ்ந்து பிரியாதவரையுந் திருமால் திருப்பேர் நகரின்கணுள்ளார்
பிரிந்தாரென்று தூற்றுமதனைக்கேட்டுத் தளர்ந்தவென்னுள்ளம் ஒருவழிப்பட்டுநில்லாதென்றவாறு.

இது பாஞ்சாலத்தெளிவு. என்னை? வைதருப்பத்தெளிவுபோல வெளிப்படையுமன்றிக் கௌடத்தெளிவுபோல
நுண்ணிதாய்க் குறிப்பினாற் கொள்வதுமன்றி யிடைப்பட்டநீர்மைத்தாய்வந்தமையா னெனக் கொள்க.
பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – தலைவி தலைவனை யியற்படமொழிதல். தெளிவுமுற்றும்.

வண்ணமைந்நிறவண்ணன்விண்ணினு
மண்ணினும்முறைவார்
கண்ணன்விண்ணகர்மஞ்ஞைவிம்மிய
கண்ணகன்வரையோ
ரண்ணலிம்மலர்கொண்மினென்னவு
மன்னையங்ஙனம்யா
னெண்ணவொண்ணுதன்முன்னின்முன்னருள்
கென்னமுன்னினளே. (88)
என்பது, அன்னாய் ! அழகிய மேகம்போன்ற திருமேனியையுடையான், சுவர்க்கத்தினும் பூமியினு முறைவார்
கண்ணினுள்ளான் அவனது திரு விண்ணகரத்து மயில்கள் அகவும் இடமகன்ற மலைப்பக்கத் தொரு பெரியோன்
யாங்கள் விளையாடும் வண்டன்மாளிகை முன்றிற்கண் வந்து நுமது வண்டலம்பாவைக்கணிய விம்மாலையை
வாங்கிக்கொண்மினென்று கூற, அங்ஙனம் வந்து கூறியதற்குச் செய்யவேண்டுவதென்னென் றியா னெண்ணாநிற்ப,
நம தொளிபொருந்தின நுதலினையுடையாள் முன்னாள் அதனை யருள்கென வவன்முன்னேசென்று அதனை வாங்கினள் ;
இஃ தியானறிந்தபடி யென்றவாறு.

முன்னில்-இன்முன் ; அஃது முன்றிலென இலக்கணப்போலியாயும் வரும். முன்னிலெனவே வண்டன்மாளிகையும்
வண்டலம் பாவையுங் கூட்டியுரைக்கப்பட்டன. இது வைதருப்பச்செறிவு. என்னை?
மெல்லினமாகியவெழுத்துச்செறிய மெல்லினவண்ணமுற் றவ்வெழுத்தானாய சொற்கள் செறியச் செறித்தமையி னெனக்கொள்க.
பகுதி -பிறவினமுஞ் சிறிது விரவுவதே முறையென்றுணர்க. இவற்றுள் முன்னையது பகுதி – நடுங்கநாடல் ; துறையுமது.
இது பகுதி – உடன் போக்கு. துறை – பதிபரிசுரைத்தல். இவைமூன்றும் எழுத்துச்செறிவு.

மறைமுரசந்தாமமகிழ்வழுதிநாடர்
துறைபொருநைவெற்பூர்துடரி–யுறைகுருகை
யஞ்சம்பராங்குசம்வெள்ளானைகொடியாணைமா
பஞ்சகலியாணன்பரி. (91)
என்பது, வழுதிவளநாடர் துறை – பொருநை ; வெற்பும் ஊரும் – துடரியும் உறையுளாங் குருகாபுரியும் ;
பரி – பஞ்சகலியாணன் ; மா – வெள்ளானை ; ஆணை – சீபராங்குசம் ; கொடி – அன்னம் ; தாமம் – மகிழ் ; முரசு வேதம் என்றவாறு.

இதனுள் வழுதிவளநாடர் என்பது மத்திமதீபம். அதுவே நாடுந் திருநாமமுமாம். வெற்பூர் – நிரனிறை.
பரி மா ஆணை கொடி விதலை யாப்பும், தாமம் மகிழ், முரசு மறை என மொழிமாற்றுமாகத் தசாங்க மென்னுஞ்
சின்னங்களாகிய பல்பொருட் செறிவோடும் பல பொருள் கோளுஞ் செறிதலா னிது பொருட்செறிவு. துறை – தசாங்கவாழ்த்து.

மறந்தாங்கித்தெவ்வடுவைந்நுதிதாங்கியிருட்பிழம்புமடியச்செந்தீ
நிறந்தாங்கியிடங்கரின்வெண்ணிணந்தாங்கியனைத்துலகுநியதிகாக்குந்
திறந்தாங்கியொளிர்திகிரிப்படைதாங்கித்திருவடிபொற்சென்னிதாங்கி
யறந்தாங்கிவளம்புகழ்வாரறந்தாங்கியவரெனுமிவ்வங்கண்ஞாலம். (92)

தழற்பாணிகறைகெழுவச்சிரபாணிமிளிர்படிகத்தாமம்வேய்ந்த
நிழற்பாணிவிழைந்தகமண்டலபாணிமுதலெவர்க்குநிபனேயாய்வேய்ங்
குழற்பாணிகொடுதொறுவின்குழுவழைத்தமழைமுகில்பார்குளிர்ப்பானீன்ற
கழற்பாணிதனைப்புகழ்சக்கரபாணியனைத்துயிர்க்குங்களைகணாவான். (93)

இவையிரண்டும் ஒருவகைச் சொற்செறிவு. இங்ஙனம் வந்த சொற்செறிவும் பொருட்செறிவும் மூன்றுநெறியார்க்கு மொக்கும்.
துறை – செந்துறைப்பாடாண் பாட்டு. செறிவு முற்றும்.

விழியுங்களபமுலையும்புன்மூரலும்வேயுமுந்திச்
சுழியும்முரோமவொழுங்குங்கண்டேம்வண்டுசூழ்ந்துசெந்தேன்
வழியுந்திருமகிழ்மாலைப்பிரான்வெற்பில்வல்லிசெவ்வாய்
மொழியுந்துணைநெஞ்சமேசெவிக்கேயென்றுமூழ்குவதே. (94)
இது வைதருப்பச்சமனிலை. துறை – கிளவிவேட்டல்.

பனிப்பிறைப்பற்றுளைக்கட்செவித்துத்திப்பணாடவிமேற்
குனித்தபொற்சிற்றடிச்சித்திரக்கார்குருகேசன்வெற்பிற்
றுனித்தழற்கட்களிற்றைக்கொடுஞ்சீயந்துரத்திருள்வாய்த்
தனித்துறற்குய்த்துணர்த்துங்கதிர்வேலவன்றாழ்குழலே. (95)
இது கௌடச்சமனிலை. சூத்திரத்துள் நிலையென்பது செய்யுள் விகாரத்தாற் றொக்கதனை விரித்துரைக்க.
தனித்துறற்கு – கங்குலின் கட்டனித்துக் குறிவழிவருதற்கு. உய்த்துணர்த்தும் – என்னுள்ளங் கொள்ளச் செலச்சொல்லி யுணர்த்தாநிற்கும்.
கதிர்வேலவன் – ஒளியையுடைய வேலவன். தாழ்குழலே – தாழ்ந்தகுழலினையுடையாய்.
யான் இதற்குச் செய்யவேண்டுவ தென்னென்றவாறு. பணாடவி – ஆகுபெயர். பகுதி – இரவிற்குறி. துறை – இரவுவரவுணர்த்தல்.

இடிக்குங்கடகளிற்றான்சடகோபனியலிசையாய்
வடிக்குந்தமிழ்மறைபாடியமாறன்மணிவரைமே
னடிக்குங்களிமயிலேவருந்தேனுமர்நல்வரைப்பூங்
கொடிக்குங்கொழுகொம்பராமெமர்மாடக்கொடிக்கழையே. (96)
இது பாஞ்சாலச் சமனிலை. பகுதி – இயற்கை. துறை – இட மணித்துக்கூறி வற்புறுத்தல்.
இவற்றுள் மூவினமும் விரவிவந்தவாறு காண்க. மூன்றனுண் முதற்பாட்டும் மூன்றாம் பாட்டும் கிளவிமணிமாலை. சமனிலை முற்றும்.

எழுகாதலினாலிருகாவியுணீ
ரொழுகாமதியாலுலைவாய்–மெழுகா
யுருகாதணையாருயிர்காவலர்பே
ரருளாளருமாமவர். (97)
இதனுள், இருகாவியுணீர் – இரண்டுகண்ணு ணீர். ஒழுகா என்றது ஒழுகவென்பத னெதிர்மறை.
உருகாதணையாரென்பது வினையெதிர் மறுத்தவினையெச்சம், அணையாரென்னும் வினைகொண்டது.
பேரருளாளருமாமென்னு மும்மையால் உயிர்காவலருமாம் என்னு மும்மை விரிக்க.
உயிர்காவலருமாய்ப் பேரருளாளருமாக, உருகு மென் காதல் கண்டு முருகியணைகின்றில ராதலா லிஃ தென்வினையன்றோ வென்றவாறு.

திணை- பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – நிலவுகண்டழுங்கல். இது தூங்கிசைச்செப்பலோசைத்தாய்
வந்தமையால் வைதருப்ப வின்னிசை. என்னை?
“இயற்சீர்வெண்டளையான்வரும்யாப்பைத், தூங்கிசைச்செப்ப லென்மனார்புலவர்.” என்றதனா லறிக.
இவ்வாறு விரும்பா தேந்திசைச்செப்பலோசைத்தாய்த்தொடுப்பதே வேண்டுவர் கௌடர்.

குஞ்சரமாமெய்ததுவன்கோதண்டங்கூடாமல்
வெஞ்சரம்பாய்வித்தனரால்வேட்டைதான்–வஞ்சகமே
யாங்கடவார்பூம்புனமீங்காரிவரென்றேயறியேம்
வேங்கடவாணன்சிலம்பின்மேல். (98)
என்பது, வேங்கடவாணன்வரையிடத் திவ ரெய்ததுங் குஞ்சரமாம் ; வில்லுமின்றியே தழையே வில்லாக வெம்மையைச்
செய்யும்வாளியைப் பாய்வித்தனராகையா லிவர் வேட்டைமேலிட்டுவந்தது தான் வஞ்சமே யாம் ;
அதுவுமன்றி, நமது பொலிவையுடைய புனத்தைவிட்டுநீங்கு கின்றிலரால், இவர் யாரென்றும் வந்தகாரணம் யாதென்றுந் தெளிகில மென்றவாறு.

பகுதி – இருவருமுளவழி யவன்வரவுணர்தல். துறை – ஐயுறுதல். இஃ தேந்திசைச்செப்பலோசைத்தாய்
வந்தமையாற் கௌடவின்னிசை. என்னை?
“வெண்சீர்வெண்டளையான்வரும்யாப்பை, யேந்திசைச்செப்ப லென்மனார்புலவர்” என்பதனாலறிக.

மானபரனீந்தமணியாழிகைக்கொடுத்துச்
சானகிதன்னாவிதளிர்ப்பித்தான்–மீன
நெளிதரங்கவேலைநெறிகடந்துதேவர்
களிபுரந்தசேயெமதுகண். (99)
என்பது, பெருமையுடைய பரமனாகிய இரகுநாதன் கொடுத்த மாணிக்கத் திருவாழியைக் கொடுத்துச் சனகராசன்
புதல்வி திவ்வியான்மாவைத் தழைப்பித்தான் ; அவன் யாரெனின்,
மீன்களையுடைத்தாய் நெளிக்கப் பட்ட திரையையுடைய சமுத்திரத்தி னெல்லையைக்கடந்து தேவர்க் கெல்லாங்
களிப்பைக்கொடுத்த அஞ்சனைபெற்ற புதல்வன், எனக்கென்னுறுப்பிற்சிறந்த கண் ணென்றவாறு.

இஃ தொழுகிசைச் செப்பலோசைத்தாயே வந்தமையாற் பாஞ்சால வின்னிசை. என்னை?
“வெண்சீரொன்றலுமியற்சீர்விகற்பமு, மொன்றியயாப்பேயொழுகிசைச்செப்பல்” என்பதனா லறிக.
இம்மூன்று விகற்பமு மூன்று நெறியார்க்கு மொக்கு மென்பாரு முளர். திணை – பொதுவியல். துறை – தூதுவென்றி.

நாட்டங்களிபற்றநாவுநசைபற்ற
வேட்டிற்பலர்கையிணைபற்றத்–தோட்டிலஞ்சிக்
கன்புற்றமுத்தர்பெருமானடிபரவி
யின்புற்றவர்க்கடிமையாம். (100)
இவ்வாறு வரும் பொய்ந்நிலப்பட்ட வின்னாவிசை மூன்றுநெறியாரும் வேண்டாரெனக்கொள்க.
தெண்டியாசிரியர் ஒழுகிசையென்பது மிது. திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பரவல். இன்னிசை முற்றும்.

மண்ணோர்தொழுஞ்சேறைமாயோன்மணிமார்பிற்
பெண்ணோர்மனுகுலமாம்பெற்றியாய்–விண்ணோர்
மருந்துதலைப்பெய்திருப்பமம்மர்கூர்நஞ்ச
மருந்துதலைச்செய்பவரிங்கார். (101)
என்பது, உலகின்கண்ணுள்ளார்வணங்குந் திருச்சேறையின்கண் மாதவன் றிருமார்பிலிருக்குந் திருமகள்
மனுகுலத்துட் டோன்றிய தொன்றா மியல்பினையுடையாய் !
விண்ணிற் றேவர்பானமாகிய அமிர்தமானது தம்மிடத்தே தமதாகவிருப்ப அதனையு மருந்தி மருந்து
பிறிதில்லாப் பெரும்பிணியைத்தரும் நஞ்சையு முண்ணாநிற்பவ ரிவ் வுலகின்கண் யாவர்தா மென்றவாறு.

பகுதி – பரத்தையிற்பிரிவு. துறை – நினைவறிகண்புதை. இது வைதருப்பவுதாரம். என்னை?
தம்மிடத்திலே பெறுதற்கரிய அமிர்த மெளிதாயெய்தியிருப்ப வதனை யுண்ணாநின்றவர் அயலேயிருக்கு
நஞ்சினையுஞ் சென்றுண்ண விரும்புவா ருலகின்கண்ணில்லையால், அதுபோல நின்னிடத் துவட்டா வின்பந்துய்க்கின்ற
யான் பிறரிடத் துவர்ப்புடைத்தா மின்பந் துய்யேனென்பது குறிப்பினாற் கொள்ளக் கிடந்தமை யினானெனக் கொள்க.

நாதன்மகிழ்மாறனன்பனுவல்கற்றுணர்ந்து
போதந்தழைந்தபுனிதர்தாம்–வேதம்
விதித்தவொருமூன்றின்மெய்ம்மையுணர்வான்
மதித்தொருநூலோதார்மறித்து. (102)
இதுவும் வைதருப்ப வுதாரம். என்னை? மகிழ்மாறன் பனுவல் கற்றுணர்ந்தார் தத்துவங்கண்மூன்றி னுண்மையுணர
வேண்டி மறித்தொரு நூலோதாரெனவே யத்தத்துவங்கண்மூன்றினையு மதுதானே மயக்கமறக் கூறுமென்பது
குறிப்பினாற் கொள்ளக்கிடந்தமையானெனக் கொள்க.
வேதம்விதித்தவொருமூன்றாவன :- சித் தசித் தீச்சுரம். மெய்ம்மை – உண்மை.
உணர்வான் – உணரவேண்டி. மதித்து – உட்கொண்டு. மறித்து – மீண்டும். திணை – பாடாண். துறை – பனுவல்வாழ்த்து.

காழில்கனியுண்கடுவன்களங்கனியை
யூழிற்பருகியுருகுதிரு–மூழிக்
களத்தாதியைமதங்காகாமக்குழவி
வளத்தாரிடந்தேடுவாய். (103)
என்பது, காலைமங்கலம் பாடவந்த யாழ்ப்பாணனே ! பரலில்லாதே முழுது மென்மையு மினிமையுமுடைய அரம்பைக்
கனியை யச்சமின்றி யுண்ணாநின்ற கடுவன் அகத்துமுழுதும் பரலாய்ச் சிறிது புறமென்மையு மற்பச் சுவையுமுடைய
களங்கனியையு முறையேபோலப் பருகி யதன்சுவைக்கு முள்ளமுருகுந் திருமூழிக்களத்து முதல்வனைக்
காமமென்னுங் குழவிச்செல்வத்தையுடைய பரத்தையரிடத்தே தேடிக் காண்பாயாக ; அஃதன்றி யெம்மிடத்துக்காண்ட லரிதென்றவாறு.

காழ் – கொட்டை. ஊழில் – ஊழ்வினையாலேயெனினுமாம். இது கௌடவுதாரம். என்னை?
‘காழல் கனியுண் கடுவன் களங்கனியை யூழிற்பருகியுருகு திருமூழிக்கள’ மெனவே யக்கடுவன்போல,
உத்தமமாகிய விவளோடும் உள்ளும் புறம்பும் ஒருநீர்மைத்தா மென்மையோடும் உவர்ப்பில்லாத பேரின்பத்தைத் துய்த்த தலைவன்,
இழிந்த வியற்கையை யுடையராய்ப் புறம்பு பொருணசைக்காய்ச் சிறிதுநெகிழ்ந் துண்ணெகிழ்ச்சியற்ற பரத்தையரிடத்தே
யுவர்த்த சிற்றின்பத்தைத் துய்த் தவ்வின்ப மீட்டுந்துய்ப்பா னவர்சேரிவிட்டு நீங்கானாயினானென வுள்ளுறையுவமங்
குறிப்பிற் கொள்ளக்கிடந்தமையானும், காமக்குழவி வளத்தாரிட மெனவே யிஃது எமது காதற்புதல்வன்
என்னுஞ் செல்வத்தையுடைய மனையென்பதூஉம், யாம் புதல்வற்பயந்த மூப்புடையே மென்பதூஉம்,
இன்னும் அவ்விலேசானே யெம்மிடத் தவர்பெறு மின்பம் எமக் கவர்கொளுத்தக்கொண் டியாங்கொடுக்கு மியற்கை
யின்பமே யல்லாது பலரையுந்தோய்ந் தவரவர்கொளுத்தக் கொண்ட பல விகற்பமாகிய செயற்கையின்ப
மெம்மிடத்தில்லையே யென்னுங் கூற்று மாகக் குறிப்புங் கூற்றுங் குறிப்பினாற் கொள்ளக் கிடந்தமையானே
யிவ்வாறு வேண்டுவர் கௌடரெனக்கொள்க. பகுதி – இதுவுமது. துறை – பாணனொடு கூறல். கூற்று – தோழிகூற்று.

நாம்பிரமமென்றேநவில்வாருமன்னுயிர்க
டாம்பிரமத்தொன்றுமெனுஞ்சார்பாரு–மாம்பிரம
நாரணனோவென்பாருநாவீறுடையபிரா
னாரணப்பாக்கற்றுணராதார். (104)
என்பது, பேரானந்தச் சிற்குணாதிகச் சுடர்ச்சொரூப ரூபப் பரத்துவ மென்னும் பரமபதநாதன்,
அநிருத்தனாகி யுந்தியந்தாமரைப் பொகுட்டிற் பலகோடியண்டங்களைப் படைத்துப் பலகோடி யண்டந்தோறும்
பலகோடி பிரமாதிகளைப்படைத் தழிவிலதா யலகிறந்த வணுக்கடோறும் திவ்வியாத்ம சொரூப வியத்தியுடன்
சருவபூத பூரண காரணனாகி மீனாவ தாரமுதலாய வவதாரங்களாலும் அம்சாவதாரங்களாலுங் காவல்பூண்டு
வாழ்நாளுட் டன்னால், லீலைக்காக அமைத்த வவையனைத்து மழிந்துந் தானழியா தேகோதகத்தின்
மே லோராலிளந்தளிரு ளடங்கும் பச்சைக்குழவியாகியும் பல்லாயிரகோடி யண்டமாகியவற்றை யகத்திட்டு மறித்தும்
புறத்திட்டுக் காவல்பூண்டு விளையாடு மகடிதகெடா சாமர்த்திய குணங்களு ளொருகுணமுமின்றி யிருவினைத் தளைப்பட்டு
மல மூத்திராதிகளாலாய பாண்டத்தோடு மிறந்தும் பிறந்து முழலு முத்தியறியா மூடராகி நரம்பிரமமென்றே
நாக்குத் தடுமாறாது நவிலு மொரு சார்பாரும், கற்றறி நூல் பல கற்றனராகித் தத்துவமுணர்ந்தும்
பற்றறச் சாலோகமுதலிய மூன்று மெய்தி யிருவராயிருந் தீறில்பேரின்ப மொருவராமெனத் துய்க்குஞ் சுகரநந்தத்தைக்
கெடுத்துக் கூடாததனைக் கூடுவதாக்கிச் சூனியப்படுத்தி மன்னுயிர் பிரமத்தோடு மொன்றாமென்று நாயனடிமைத்திறம்
நழுவிய மூடரா மொருசார்பாரும், ஆதியு மந்தமு மருமறை யரியென வோதிய பொருளுரைக் குடையதை யறிந்தும்
அகிலாண்டகோடி பிரமாண்டநாயகனென முத்திதருவதாம் பிரமம் சீமந் நாராயணனோவென்றையுறு முழுமூடரும்
ஒருநான்மறைத்துணி வோதாதுணர்ந்த நாவீறுடையபிரான்கூறிய திருவாய்மொழியைக்கற் றுண்மைப்பொருளுணரா மூவகைமூட ரென்றவாறு.

ஆரணத்தின்வழிவந்த நூலாதலாற் றிருவாய்மொழிக் காரணப்பா வென்ப தாகுபெயர்.
அல்லதூஉந் தமிழ்வேதமென்றும் அதற்குப் பெயர். ஆரணப்பாக் கற்றுணராதா ரெனவே யதனைக் கற்றுணர்ந்தா ரவை
கூறாரென்னுங் கூற்று மெஞ்சிநிற்பதூஉங் காண்க. இங்ஙனங் கூறிய மூன்றும் வேதத்தின்வழிவந்த திருவாய்மொழியாகிய
பனுவற்றுணிவன் றென்பதூஉம் அதனைக் குரவரா லுணர்ந்தோர்மதமும் அம் மூன்றினையுந் தள்ளின மதமே
யென்னுமவையுங் குறிப்பெச்சம். இக் கூற்றுங் குறிப்பும் புலவனாலறியலாம்.
இங்ஙனமாகிய சொன்னடை கொண்டு வேறுபொருடோன்றலா லிதுவுங் கௌடவுதாரம். திணை – வாகை. துறை – சால்புமுல்லை.

சினமென்பதையறியாதவர்தினமும்புகழ்மாறன்
செஞ்சொற்றமிழ்மறைபாடியசெல்வன்குருகையுளார்
முனமன்பினதளவொன்றியமுறையான்மலரணைமேன்
முடுகும்பரிசமொடிங்கிதமொழியென்பதுபெறவே

தனமின்றெனினுலகத்தெவர்தனியின்பமது றுவார்
தாமென்றபினளகத்துறுதனிவண்டொடுநின்பான்
மனமொன்றியபெடையேவலியுளதென்றனரன்றே
மறையென்றதையுணராதவென்மனதேகொடியதுவே. (105)

என்பது, தோழீஇ! வெகுளியென்பதை மனத்தினாலுங் குறித்தறியாத சுத்தசாத்துவிககுணனுடையோர் வாழ்த்துங் காரிமாறப்பிரான்,
செஞ்சொலாகிய தமிழ்மறையைப்பாடிய செல்வத்தையுடையோன் குருகைமா நகரினிடத்து நம்மிறைவர்
பொருண்மேற்பிரியுமுன்னர் இருவர்க்கும் புணர்ச்சிமேற்சென்ற வுள்ளத்தின்பினதளவும் யாக்கையின்களிப்பு
மேகாந்தமு மிடையாமமும் ஒன்றாகப் பொருந்திய வியல்பான் மலராலலங்கரிக்கப்பட்ட அமளியிடத்து
முடுகிய பரிசத்தோடு நலம்பாராட்ட லென்னு முரைபோற் பிரிதனிமித்தமென்பதாக,
என்னோடுந் ‘திருவே ! மகளிரிடத்துத் தனமென்பன வில்லையாகி னுலகத்துள்ள வாடவருள் யாவர்தா மொப்பற்ற
வின்பத்தை யெய்துமவர்க’ ளென்றன ரதன்பின்ன ரளகத் தரும்பவிழ்ந்தகாலைத் தேனையுண்ண
வந் ததனிடத்துறைவதாந் தனிச்சுரும்போடும் நினதிடத் தொருமனப்பட்ட பெடையே மனவலியுடைய தென்றனரன்றே;
அவையிரண்டையும் மிக்க தொனியென் றுட்கொளாத வெனது மனதே கொடியதென்றவாறு.

இது பாஞ்சாலவுதாரம். என்னை? தனமென்ப திரட்டுறமொழிதலாய் நடுவணை யெய்தாதவர்க் கிருதலையுமெய்தா;
பொருள்வயிற்போக வேண்டு மென்பதனை யுணர்த்தியதாகவும், நின்பான் மனமொன்றிய பெடையே வலியுளதென்றதனால்
நீவைத்து நீங்கியபெடை நின்னையின்றி யாற்றாமையாற் றானிறக்கி னீயு மிறப்பையென்று நினதுயிரைப் போற்றித்
தனதுயிரைப் பிடித்திருந்த மனவலியுடைத் தென்பதா யது போலத் தாம்பிரிந்தகாலத் தியானு மாற்றாமையா லிறவாது
தம் முயிரையும் போற்றி இல்லறங்காத்திருத்தல்வேண்டுமென்பதூஉ முணர்த்தியதாகக் குறிப்பினாற்
பிறபொருள் கொள்ளக்கிடந்தமையா னென்றறிக.
இதனுள் அளவும் என்னு மும்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கதனை விரித்துரைக்க.
தோழீஇ என்னு முன்னிலைப்பெயரு மெஞ்சிநின்றதுங் காண்க. பகுதி – பொருள்வயிற்பிரிதல்.
துறை – தலைவி தலைவனை யியற்படமொழிதல். இவற்றை மூன்றுநெறியார்க்கு மொக்குமென்பாருமுளர்.
அவை பொருந்தாவென வுணர்க. உதாரம் முற்றும்.

மன்னிலங்கைமூதூர்வழியோதிறந்ததொன்னார்
பொன்னகர்செல்வாயிற்புதவன்றோ–தென்னரங்கன்
மைந்நீரசெம்பவளவால்வளையவண்டரள
முந்நீரணைகட்டுமுன். (106)

என்பது, அழகிய திருவரங்கத்தையுடைய மாயோன் கடலைக் கரை கட்டின முற்காலத்து இராவணனாகிய
நிருதர்கோன திலங்கையாகிய பழையநகர்க்குச் செல்லும் வழியோ திறந்தது?
தென்னரங்கேசனது பாணத்தா லிறந்த சத்துருக்களாகிய அரக்கர்செல்லும் வீரசொர்க்க வாயிலின்கட் கதவல்லவோ திறந்த தென்றவாறு.

எனவே வழியுங் கதவுந் திறந்த தென்பதாம். மைந்நீர செம்பவள வால்வளைய வண்டாள முந்நீரை யெனக் கூட்டுக
இது வைதருப்பவலி. என்னை? இருளி னீர்மையுடைத்தாய்ச் சிவந்த பவளத்தைப் பெற்ற வெளுத்த வளையைப்பெற்ற
அதனிடமாக வளவியதரளத்தைப் பெற்ற முந்நீரை யூடறுத்துக் கடலை யணைகட்டின முற்காலத்தெனவே
வேற்றுமைத்தொகை இருபெயரொட்டுப்பண்புத்தொகை வினைத்தொகைகளை முன்னிட்டுப் பெயருடைமைப்
பொருளாய் நின்று கருகும்நீர்மை யுடையநீரையெனப் பெயர்மே லேறியவிடத்து மிப்பொருளையுடையதாயிருந்த
திப்பொரு ளென்னுமிடத்து மிடைநின்ற வுடைமைவினைக் குறிப்புங் காலம்பெற்ற வினைக்குறிப்புமாகிய
சொற்க ளிடையிடை பல விடத்துந் தொக்கதோடும் பிறசொற்களுந் தொகைமிக்கு விரிதலானும் எனக்கொள்க.
திணை – உழிஞை. துறை – புறத்திறை.

வன்கேழற்பன்றியாய்வான்பிறைக்கோட்டாழ்புனலாழ்
கொன்கேழ்கிளர்தாழ்குழல்களிப்ப–முன்கொணர்ந்த
வெம்பிரான்சங்காழியேந்தினானெவ்வுளார்
தம்பிரான்றாளேசரண். (107)

என்பது, வலியகேழலாகிய பன்றியாய் வானின்கட் பிறைபோன்ற கோட்டாலே யாழ்ந்த புனலின்
கட் டாழ்ந்த நிறங்கிளருந் தாழ்ந்த குழலினையுடைய பூமிதேவியானவ ளுள்ளங்களிப்ப முன்னாட் புறத்தே
கொண்டுவந்த எம்முடைய பிரான் சங்கையு மாழியையுங் கைகளிலேந்தினான் எவ்வுளார்க்குந் தம்பிரான்;
அவனது திருவடிகளே சரணாமென்றவாறு.
கொன் – பயனில்சொல். இது கௌடவலி; என்னை? இதனுளிருதிறப் பண்புத்தொகை முதலாகத் தொகையாறு
முடைமைவினைக் குறிப்பும் பிறசொற்றொகைகளு மிகவருதலா னெனக்கொள்க. துறை- கடவுள் வணக்கம்.

பொற்றொடிவேற்கண்கள்புடைசிறந்தாட்கெஞ்ஞான்று
முற்றவுடலுயிரீங்கொன்றென்றே–சொற்றனவாற்
றோடலர்தார்மாறன் றுடரியினெஞ்சேயிவளைக்
கூடலெளிதென்றேகுறி. (108)

என்பது பாஞ்சாலவலி. என்னை? பொற்றொடியெனவே வேற்றுமைத் தொகைப்புறத்துவந்த அன்மொழித்தொகையும்,
வேற்கண்ணெனவே யுவமைத்தொகையும், புடைசிறந்தாட்கெனவே வேற்றுமைத்தொகையும்,
உடலுயிரெனவே யும்மைத்தொகையும், தோடலர்தாரெனவே வினைத்தொகையும் வந்து பண்புத்தொகையொன்றுமே வராது,
பெயர் வினைச்சொற்களு முளவாய், முன்னவைபோலச் சுருங்காது மிகாது மிடைநிலைப் பட்டமையா னென்றுணர்க.
பகுதி – பாங்கியிற்கூட்டம். துறை – பாங்கியையறிதல். வலி முற்றும்.

ஆவிக்குறுதுணைப்பெண்ணாரமுதைப்போலுரைத்த
நாவிற்கினிமைநயப்பதோ–மூவுலகுந்
தாய்க்கொண்டதாளரங்கர்தண்ணளிசார்விண்ணவர்தாம்
வாய்க்கொண்டுயிர்வாழ்மருந்து. (109)

என்பது, எனதாவி வாழ்வதற்கு மிக்கநற்றுணையாகிய விப்பெண்ணாகிய அமிர்தினைப்போற் றன்பெயரினைச்
சொன்னாற் சொன்ன நாவிற்கு மினிமையை யளிப்பதொன்றாமோ? பூமி முதலாய மூன்றுலகங்களையுந் தாண்டி
யளந்துகொண்ட தாளினையுடைய திருவரங்கேசர்கருணையைப் பொருந்தின வானிலுள்ளார்
வாயாலுண் டினிமையைக்கொண் டுயிர் வாழாநின்ற அமிர்தமென்றவாறு.

ஓகாரம் ஒழியிசை. இதனுள், பெண்ணாகிய அமிர்தினுயர்த்தி யுலகொழுக்கிறவாமை யுயர்த்தினமையால்
இது வைதருப்ப காந்தம். பகுதி – இடந்தலை. துறை – நலம்புனைந்துரைத்தல்.

திங்கள்வெண்கதிரும்பானுவின்கதிருஞ்சிறிதும்வைகலுநுழைந்தறியாப்
பொங்கர்மல்கியபூஞ்சோலைநள்ளிடையிற்புதையிருளிரிதரமடவா
ரெங்குமேந்தியசெஞ்சுடர்களாலுரகனேந்தெழின்மவுலியாயிரத்துந்
தங்குபன்மணிகள்பரப்பிவைத்தொளிர்பாதாலமீதெனப்பொலிதருமால். (110)
இதுவுமது. (குருகாமான்மியம். ) திணை – பாடாண். துறை – விளக்கு நிலை.

தென்னனந்தைமால்வரைமேற்சேயிழைவன்கட்கூற்ற
முன்னிலுயிருண்ணுமெனமுன்னுற்றோ–மன்னுயிருண்
கூற்றுருவமக்களுருக்கொண்டோர்விழிக்கெதிரே
தோற்றுவருங்கொள்ளாத்துணிவு. (111)
இது கௌடகாந்தம். பகுதி – இயற்கை. துறை – தகையணங் குறுத்தல்.

பூட்டியுழுங்கருமேதியரிதாளிற்கருங்குவளைப்போதுமேயத்
தீட்டியநாவினைக்குறுக்கிச்சிறைவண்டின்பண்ணமுதைச்செவியாலுண்டு
மோட்டுமுது முலைக்கண்மடைதிறந்தொழுகும்பாலமுதமுழங்கியாம்பற்
காட்டுவரம்புடையப்பவயற்கழனியடைத்துழவருழுங்காட்சித்தொன்றே. (112)
இது பாஞ்சாலகாந்தம். துறை – நாடுவாழ்த்து.

(குருகாமான்மியம்). காந்தம் முற்றும்.

ஆழிப்படைக்கையருளாளன்மிக்கதிரு
மூழிக்களத்துறையுமூவர்கோ–னூழிதொறும்
வித்தகனேகாரிதருமெய்ஞ்ஞானமுத்திரைக்கை
யுத்தமனேகாக்கவுனை. (113)
திணை – பாடாண். துறை – புறநிலைவாழ்த்து.

இறையேதிருமால்வீடென்பது மந்தாம
மறையேபனுவலெனவைக்கு–நிறைகூர்
கரையற்றபோதக்கடன்மாறனுண்மை
யுரைகற்றுணர்ந்தாருளம். (114)

திணை – பொதுவியல். துறை – பனுவல்வாழ்த்து. இவையிரண்டும் உய்த்தலில்பொருண்மை.
இவை மூன்றுநெறியார்க்குமொக்கும். உய்த்தலில்பொருண்மை முற்றும்.

கூண்டுகுமுதமலர்சிரிக்கக்கோகனக
மீண்டிதழ்ச்செங்கைகுவிக்குமெல்லிதா–னீண்டுகமா
மென்றாலிறையரங்கத்தேந்தல்பொருட்கேக
லொன்றாலுமாகாதுனக்கு. (115)
சிரித்தல் – மலர்தல். ஏந்தல் அண்மைவிளி. இதனுள், சிரிக்க வெனவும் கைகுவிக்கவெனவு முக்கியப்பொருளாகிய
வாயினதுகிரியையும், கையினதுகிரியையும் ஒப்புடைப்பொருளாகிய குமுதத்தினுங் கமலத்தினும்
புணர்த்து ரைத்தமையாற் சமாதி யெனக்கொள்க. பகுதி- பொருள்வயிற்பிரிதல். துறை – செலவழுங்குவித்தல்.

ஆரப்பொழிற்கோங்கரும்புதினமாக
வாரைப்பொருதெழுந்தவண்மைசேர்–பேரைக்
குழைக்காதரென்றொருகாற்கூறாதோவென்றிக்
கழைக்கார்முகன்காகளம். (116)
இது சிலேடைவாய்பாட்டால் வந்த சமாதி.

சந்தனப்பொழிலகத்துநின்ற கோங்கரும்பு வைகலும் மேகத்தினிடத் துண்டாகிய தண்ணீரைத் துழாயெழும் எனவும்,
ஆகத்தினிடத்துக் கட்டின கச்சினைப் பொருதெழு மெனவும் முலையினது கிரியையைக் கோங்கினதரும்பிடத்துப் புணர்த்தவாறு காண்க.
மாகம், ஆகம் எனப் பிரிமொழிச்சிலேடையும், வாரையெனச் செம்மொழிச் சிலேடையுங் கொள்க.
இவை மூன்றுநெறியார்க்கு மொக்கும். சமாதி முற்றும்.

ஆக இன்பமுதற் சமாதியீறாகக் குணவலங்காரம் பத்தும் அடைவே வந்தவாறு காண்க.
திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – குயிலொடுவெறுத்துக்கூறல்.

85.செய்யுட்குணங்களொழிவறவேசெப்புவதும்
பொய்யில்புலமையுறாப்புன்கவியேற்–கெய்துமதோ
சொற்றவற்றாற்சொல்லாதவற்றினையுஞ்சொல்லியவா
முற்றுவித்தல்கற்றோர்முறை.

(எ-ன்) சொல்லிய குணவலங்காரங்கட் கொழி புணர்ற்று.
(இ-ள்) செய்யுட்களின் குணவலங்காரங்களை யொழிவற முற்ற வுணர்த்துவதும் பொய்யென்பதில்லாத
அறிவின்றன்மைபொருந்தாத புன்சொற்கவியேற்கு மெளிதா யெய்தப்பெறுந்தன்மைத்தொன்றோ?
ஆகையா லிங்ஙனஞ் சொல்லப்படுங் குணங்களோடுஞ் சொல்லாதொழிந்த வக்குணங்களையுஞ் சொல்லியனவாக
முற்றுவித்தல் கற்றுணர்ந்த சான்றோர்கட னென்றவாறு.

இங்ஙனம் கூறவேண்டும்நோக்கம் யாதோவெனின், செறிவென்று சொல்லப்படுவதும்
எழுத்துச் செறிவும் சொற்செறிவும் பொருட் செறிவுஞ் செறிந்து வேறுவேறு ஒலித்துநடக்கும் என்று கூறியவற்றுள்
எழுத்துச் செறிவும் வண்ணமு மூன்றுநெறியார்க்கும் வேறுவேறாக்கி, யொருவகைச் சொற்செறிவு மவையல்லாத
பொருட்செறிவு மூன்றுநெறி யார்க்கும் பொதுவாகக் கூறினாரெனினும்
மெய்க ளுடனிலைமயக்கமின்றி யேனைமயக்கமாக வண்ணமும் பொதுவாவனவு முள. அது வருமாறு :-

மயர்வறமதிநலனருளியநறைகமழ்மலர்மகள்புணர்பவன்மே
லுயர்வறவுயர்நலனெனமுதிர்தமிழ்மறையுரைமகிழ்முனிவரைவாழ்
புயல்புரைகுழன்மதிபுரைநுதல்வடவரைபுரைபுணரிளமுலைசேர்
கயல்புரைவிழியெனதுயிரெவணினதுயிர்கவல்வகையெவன்மயிலே. (117)

இது அராகந்தொடுத்த அடியோடும் பிறிதடியும்படத் தொடர்ந் தோடினமையான் முடுகுவண்ணம் ;
“முடுகுவண்ண, மடியிறந்தோடிய வதனோரற்றே” என்றாராகலின். இவ்வண்ணமு மூன்றுநெறியார்க்கும் ஒக்கும்.
ஒழிந்தனவற்றுள்ளு மிவ்வண்ணம் பாகுபடுமென்னு நோக்கத்தாற் கூறப்பட்டது.
அவையெல்லா மீண்டுரைப்பிற் பெருகும். பகுதி – உடன்போக்கு. துறை – செவிலிதேடல்.
பொதுவியலுரை முற்றும்.

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே.

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறன் அலங்காரம்–பொதுப்பாயிரம்–ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

மாறன் அலங்காரம் தமிழ் இலக்கண நூல்களுள் ஒன்று.
இது பாட்டில் அமையும் அணிகள் பற்றி விரிவாகப் பேசும் நூல்.
இது ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால்
இது எழுதப்பட்ட மாறன் அகப்பொருள். மாறன் பாப்பாவினம், மாறன் அலங்காரம் என்னும் மூன்று நூல்களில் ஒன்று.
தமிழ் இலக்கணம் பற்றிப் பேசும் அதே வேளையில் இந்நூலில்
மாறனாகிய நம்மாழ்வார் பெருமையும் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.
பேரை காரி ரத்தினக் கவிராயர் என்பவர் இந்நூலின் பழைய உரையாசிரியர்.
பழைய உரையுடன் தேவைப்படும் விரிவான விளக்கங்களுடன் புதிய உரை ஒன்றை தி.வே. கோபாலையர் வெளியிட்டுள்ளார்.

அணிகள்
அணிகள் (மாறன் அலங்காரம்-64 அணிகள்)
இதில் அணி மற்றும் அணி வகைகளாக மொத்தம் 321 அணிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

அசங்கதி 2
அதிகம் 1
அபநுதி 4
அற்புதம் 2
ஆசி 2
ஆர்வமொழி 1
இணையெதுகை 2
இலேசம் 1
இறைச்சிப்பொருன் 1
உதாத்தம் 9
உபாயம் 1
உருவகம் 26
உல்லேகம் 4
உவமை 46
உள்ளுறை 5
உறுசுவை 1
ஏகாவளி 1
ஏது 24
ஒட்டு 6
ஒப்புமை 2
காரணமாலை 1
காரியமாலை 1
காவியலிங்கம் 1
சங்கரம் 1
சங்கீரணம் 1
சந்தயம் 3
சமாயுதம் 1
சமுச்சயம் 2
சிலேடை 18
சுவை 18
தடுமாறுத்தி 1
தற்குணம் 1
தற்குறிப்பேற்றம் 2
தற்பவம் 1
தன்மை 12
திட்டாந்தம் 1
தீபகம் 18
நிந்தாத்துதி 1
நிரல்நிறை 13
நெடுமொழி 1
பரிகாரம் 4
பரிசங்கை 2
பரியாயம் 1
பரிவர்த்தனை 1
பாவிகம் 1
பிரத்தியனீகம் 1
பிரதீபம் 1
பிறவணி 1
புகழ்வதின் இகழ்தல் 1
புணர்நிலை 2
பொருள்மொழி 1
மாறுபடு புகழ்நிலை 1
மின்வருநிலை 3
முன்னவிலக்கு 21
வகைமுதலடுக்கு 1
விசேடம் 6
விதர்சனம் 2
விநோத்தி 1
விபாவனை 4
விரோதம் 7
விற்பூட்டு 1
வேற்றுப்பொருள் வைப்பு 8
வேற்றுமை 5

——–

மாறனலங்காரம் ஓர் அணியிலக்கண நூல். இது உரைதருநூல்களில் ஒன்று.
இது திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது.
வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வாரைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல்.
பாண்டி நாட்டுச் சிற்றரசர் வழிவந்தவர் நம்மாழ்வார்.
பேரரசர்களுடைய பெயரைச் சிற்றரசர்களும் சூட்டிக்கொள்ளும் அக்கால வழக்கத்துக்கு அமைய
நம்மாழ்வாரும் பாண்டிய மன்னர்களைக் குறிக்கும் மாறன் என்ற பெயராலும் அறியப்பட்டவர்.
இதனால் இப் பெயரைத் தழுவி இந்நூலுக்கு மாறனலங்காரம் எனப் பெயரிடப்பட்டது–

அணியிலகணத்தைத் தனிநூலாகச் செய்த முதல் நூல் தண்டியலங்காரம்.
காஞ்சிபுரத்தில் வாழ்ந்த தண்டி என்பவர் வடமொழியில் இயற்றிய அலங்கார நூலைப் பின்பற்றித் தமிழ்நூல்
தண்டியலங்காரம் 12-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அதன் விரிவாக மாறன் அலங்காரம் எழுதப்பட்டது.
இதில் மாறன் என்னும் சொல் நம்மாழ்வாரைக் குறிக்கும்.

————

சிறப்புப்பாயிரம்

உலகம்யாவையுமுறுபயன்விளைப்பா
னலகில்சோதியணிகிளர்திருவுரு
வுணர்வுயிரெனக்கலந்துத்தமர்நித்தர்
கணமகலாதபொற்கவின்பதிநின்று
முரவுநீர்வளைத்தவொன்பானுட்டென்புலப்
பரதகண்டத்துட்பழம்பதியெனப்புகும்
விண்டொடநிவந்தபொழில்வடவேங்கடந்
தெண்டிரைகறங்குதென்குமரியென்றாயிடை
யமிழ்தினும்வான்சுவைத்தாகியமும்மைத்
தமிழ்தெரிபுலமைச்சான்றோர்மதிக்கு
முதுமொழித்தண்டிமுதனூலணியொடும்
புதுமொழிப்புலவர்புணர்த்தியவணியையுந்
தனாது நுண்ணுணர்வாற்றருபலவணியையு
மனாதுறத்தொகுத்தும்வகுத்தும்விரித்தும்
பொதுவியல்பொருள்சொல்லணியெச்சவியலெனச்
சதுர்பெறவிரண்டிடந்தழீஇயசார்பெனலாய்க்
காரிதந்தருள்கலைக்கடலியற்பெயர்புனைந்
தாரியர்துவன்றவவைக்களத்துரைத்தனன்
சிற்குணச்சீநிவாதனின்னருளா
னற்பொருண்மூன்றையுநலனுறவுணர்வோன்
பெருநிலம்புகழ்திருக்குருகைப்பெருமா
ளருள்குருகூர்வருமனகன்செழுந்தேன்
மருக்கமழ்சீரகத்தார்வணிகன்புகழ்த்
திருக்குருகைப்பெருமாள்கவிராய
னருட்குணத்துடன்வளர்சடையன்
பொருட்டொடர்நவம்புணர்புலமையோனே.–என்பது பாயிரம் :-

எந்நூலுரைப்பினுமந் நூற்குப் பாயிரமுரைத்தே நூலுரைக்கவென்பதுமரபு.
என்னை? “ஆயிரமுகத்தாலகன்றதாயினும், பாயிரமில்லது பனுவலன்றே.” என முன்னோர்கூறிய முறைமையானும்,
இந்நூலுடையாரும் “பொற்புறவிழுமியபொருள்பல புணர்க்கினுந், தற்சிறப்புளதே தந்திரமென்ப.” என்பதனானுமுணர்க.
இப் பாயிரத்துக்குப் பொருண் மேற்காட்டுதும்.

1.புறவுரைமுகவுரைபுனைந்து ரைதந்துரை
பதிகநூன்முகமணிந்துரைபாயிரம்.
(இதன்பொருள்) இவையேழும் பாயிரத்திற்குக் காரணப்பெயரா மென்றவாறு.

2.புறவுரையேயதுகேட்டென்னைபயனெனின்
மாயிருஞாலத்தவர்மதித்தமைத்த
பாயிரமில்லாப்பனுவல்கேட்கிற்
காணாக்கடலிடைக்கலைஞரில்கலத்தரின்
மாணாக்கன்றன்மதிபெரிதிடர்ப்படும்.
(என்னுதலிற்றோவெனின்) பாயிரமில்லாப் பனுவல் கேட்போன் மதியிடர்ப்படுதற் குவமையுணர்த்து தனுதலிற்று.

(இதன்பொருள்) முந்து நூல் செய்தற்காசிரியர் மனத்தினாலுட் கொண்டு விதித்ததாம்
பாயிரமில்லாத நூல்கேட்பானாகிற் கேட்ட மாணாக்கன்மதி முன்பு கண்டறியாத கடலிடத்து
மீகானில்லா வங்கத்திற் செல்பவர் மதிபோல மிகவுமயக்கமெய்து மென்றவாறு;
என்பதாற் பாயிரங் கேட்டல் பயனுடைத்தாயிற்று.

3.பொதுச்சிறப்பெனவதுபுகலிருவகைத்தே.
(எ-ன்) பாயிரத்தினது கூறுபாடுணர்-ற்று,

இ-ள்) பாயிரமென்ன வொன்றாய் நின்றவது
பொதுவுஞ் சிறப்புமென முந்துநூல் கூறியதா மிரண்டுகூறுபாடுடைத்தென்றவாறு.

4.அவற்றுள்,
போக்கறுபனுவலுட்புகல்பொருளல்லா
தாக்கமுற்றனைத்தினுமமைவதுபொதுவே.
(எ-ன்) முறையானே பொதுப்பாயிரத்தியல்புணர்ற்று.

(இ-ள்) அவ்விரண்டனுட் புலவராற் கூறப்பட்ட குற்றமற்ற நூல்களுட் கூறப்படும் பொருளல்லாத
புறப்பொருளாயெல்லாநூன் முகத்து மின்றியமையா தாக்கம்பெற்றமைவது பொதுப்பாயிரமா மென்றவாறு.
அமைதல் வெளிப்படாது மறைந்துமறைந்து நடத்தல்.
எல்லா நூன்முகத்தும் பொதுவாக மறைந்து நடத்தலிற் பொதுவெனக் காரணப்பெயராயிற்று.

5.அதுவே,
நுண்ணூனுவல்வோனுவல்வதனியற்கை
கொள்வோன்குறிப்பிற்கொள்கடன்றன்னொடுந்
தெள்ளிதினைந்தெனச்செப்பினர்புலவர்.
(எ-ன்) பொதுப்பாயிரத்தின் கூடுபாடுணர்ற்று.

(இ-ள்) அப்பொதுப்பாயிரம் நுண்ணியநூலின்மரபும், நுவல் வோன்மரபும், நூல்நுவல்வதன்மரபும்,
கொள்வோன்மரபும், அம்மாணாக்கனுள்ளக் குறிப்பினாற் கொள்வதன் மரபு தன்னொடு மைந்தென்று
தெள்ளியதாய்க் கூறினர் முந்து நூலாசிரியரென்றவாறு. ஏகாரமீற்றசை.
தெள்ளிதினைந்தெனச் செப்பினரென்று சிறப்பித்தவதனால் “ஈரிரண்டென்ப பொதுவின்றொகையே” என்போர்
சுருங்கக் கூறிய நோக்கமே நீக்கி யைந்தென்போர் நோக்கமே யுட்கொண்டாரென்பதாயிற்று.

6.அவற்றுள்,
உத்தமநூன்மரபுணர்த்துங்காலை
முத்திறத்தொன்றாய்ப்பாயிரமுதலுபு
நாற்பொருணலனுறநவில்வனவாகிச்
சூத்திரமோத்துப்படலமென்றுரைபெறு
முறுப்புடைப்பிண்டத்தொடுமமைந்தஃகாக்
காண்டிகைவிருத்தியிற்காட்சிதந்தீரைங்
குற்றமொன்றின்றிக்குழகொடுமெண்ணான்
குத்தியிற்சிறந்ததென்றுரைத்தனர்புலவர்.
(எ-ன்) வைத்தமுறையானே நூன்மரபுணர்ற்று.

(இ-ள்) அங்ஙனங்கூறப்பட்ட வைந்தனுள்ளு முத்தமநூலின திலக்கணத்தை யறிவிக்குமிடத்து
முத்திறத்தொன்றென்பது முதலாக வெண்ணான்குத்தியீறாகப் பன்னிரண்டுகூற்றதாய்ச் சிறந்ததென்று
மேனாட் கற்று வல்லோருரைத்தன ரென்றவாறு.
எனவே, இந்நூலுடையார்க்கு மங்ஙனமுரைப்பதே கருத்தென்பதாயிற்று.
பிண்டத்தொடு மமைந்தெனவே மகாபிண்டமு மொன்றுளதாகப் பன்மூன்றுண்டென வுணர்க.
இவை பன்மூன்றும் மேற்காட்டும் வகைச்சூத்திரங்களாலுணர்க.

7. முத்திறத்தொன்றென்பனமுதல்வழிசார்பே.
(எ-ன்) தொகைச்சூத்திரத்தினுண் முதலே நூல்கண்
மூன்று கூற்றினுளொன்றாமென்றா ரவையிவையென் றவற்றின் பெயரு முறையுந் தொகையுமுணர்ற்று.

(இ-ள்) நூல்கண் மூன்று கூற்றினுளொன்றென்பன முதனூல் வழிநூல் சார்பு நூலென மூன்றுகூற்றனவாமென்றவாறு.
நூலென்பதனை யதிகார முறையான் மூன்றினும் விரித்துரைக்க.

8. முதல்வனிற்சிறந்ததுமுதனூலாகும்.
(எ-ன்) முறையானே முதனூலாமாறுணர்ற்று.

(இ-ள்) முதல்வனான் மொழிவதா யழிவிலாதே சிறப்பெய்தியது முந்து நூலாமென்றவாறு.
அன்றியும் முதல்வன் றனதில்லாளுக்குரைத்ததாய்ச் சிறப்பெய்தி வருவதெனினுமாம்.
அதற்கு அரி அயன் அரன் எனுமிவர் பூமிதேவி காயத்திரி உமாதேவி என்பவர்க்குரைத்ததாய் எனக்கூறுக.
இன்னும் அவ்விலேசானே இல்லென்பதனை யுவமவுருபாக்கி முதல்வனைப்போலப்
பழமைத்தா யழிவில்லாதே சிறப்பெய்தி வருவதெனினுமாம். அது கருதியேயாம்.

9.விழுமியமுதனூல்விதித்தவற்றினொடும்
பழுதறச்சான்றோர்படைத்தவுந்தழீஇ
வழுவின்றாய்வரல்வழி நூலாகும்.
(எ-ன்) வழி நூலாமாறுணர்ற்று.

(இ-ள்) முக்கியமான முதனூல் கூறிய விலக்கணங்களோடுங் குற்றமறக் கற்று வல்லோரால் விதித்து
வழங்கிவருமி லக்கணங்களோடும் பொருந்தி முறைவழுவுதலின்றிப் புலவராலமைக்கப்பட்டு வருவது வழி நூலாமென்றவாறு.
வழி-பின்.

10.இவ்வகைப்பனுவலோடொத்திழுக்கின்றாய்ச்
செவ்விதிற்சிறிது திரிவதுசார்பே.
(எ-ன்) சார்புநூலாமாறுணர்-ற்று.

(இ-ள்) இங்ஙனமிரண்டு திறத்தவாகப் பகுத்துக் கூறப்பட்ட நூல்களிரண்டோடுமொரு தன்மைத்தாகவொத்து
அவற்றோடு மூன்றாவதோர் புலவ னிலக்கணமிழுக்கா தழகிதாகச் சிறிது வேறுபட விரிப்பது சார்பு நூலாமென்றவாறு.
இம் மூன்றனுளொன்றாய்வருவது நூலென்றறிக.

11.அதன்வழிநடைபெறுமதுநால்வகைத்தே.
(எ-ன்) வழிநூலினைத்தெனவுணர்-ற்று.

(இ-ள்) இறந்ததுபோற்ற லென்னுமுத்தியான், முதல்வனிற் சிறந்த முதனூலின்வழியொழுகலாறுடைய
வழி நூலானது நால்வகைப் படுமென்றவாறு. அதை முன்னர்க்காட்டுதும்.

12.தொகுத்தலும்விரித்தலுந்தொகைவகைவிரியிற்
பகுத்தலுமொழிபெயர்த்தலுமெனும்பான்மைய.
(எ-ன்) மேற்காட்டப்படுமென்ற நால்வகை யாப்பிற்கும் பெயரு முறையுந் தொகையு முணர்ற்று.

(இ-ள்) முதனூலாசிரியன் விரித்துச் செய்ததனைத் தொகுத்துச் செய்தலுந் தொகுத்துச் செய்ததனை
விரித்துச் செய்தலு மிருவகையையுந் தொகைவகைவிரியாகப் பகுத்துச் செய்தலும் வடமொழியைத்
தமிழ் மொழியாகப் பெயர்த்துச் செய்தலுமெனப் பெரியோராற் கூறப்படும் பான்மையையுடைய அந்நால்வகையுமென்றவாறு.

13.பாயிரமுன்பின்பகர்நெறியினிலுறும்.
(எ-ன்) தொகைச்சூத்திரத்துட் பாயிரமுதலுபுவென்றா ரவை யிரண்டு முணருமாறுணர்ற்று.

(இ-ள்) பொதுவுஞ்சிறப்புமெனக் கூறிய பாயிரங்களினிலக்கணங்க ளிந்நூன்முகத்து முன்னரும் பின்னருங்
கூறு மிருவகைச் சூத்திரங்களா னறியப்பெறு மென்றவாறு. எனவே வேறெடுத்துக் கூறப்படுவதில்லை யென்பதாம்.

14.அறம்பொருளின்பம்வீடவைபகர்நாற்பொருள்.
(எ-ன்) நாற்பொருணலனுற நவில்வனவாகியென்றா ரவையிவை யென்பதுணர்-ற்று.

(இ-ள்) அந்நூல்கள் பகருநாற்பொருள் அறனும் பொருளுமின்பமும் வீடுபேறுமாமென்றவாறு.

15.நூலினொருபொருணுதலியதொன்றாய்ச்
சில்வகையெழுத்திற்செறிந்திடும்யாப்பாய்ப்
பலதிறப்பயன்றெரிவுடையதோர்பண்பாய்ப்
படிமக்கலத்துட்படுநிழல்பொருவ
வொண்மையுநுண்மையுமுறுவதுசூத்திரம்.
(எ-ன்) நூல்கட்கங்கமாகிய சூத்திரங்களினிலக்கணமுணர்-ற்று.

(இ-ள்) மேற்றொகுத்தன்முதலாய நால்வகையாப்பிற்றாம் நூலினுளொரு பொருளைக் குறித்ததொன்றாகிச்
சில்வகையெழுத்தினா லகல் வின்றியடங்கிய யாப்பா யுரைக்குங்காற் பலவகைத்தாய
பொருள்களெல்லாந் தன்னகத்தடக்கி யாராயப்படுவதோர் பண்புடைத்தாகி யாடி
சிறிதாயினும் அகன்ற பொருள்களின் வடிவை யகத்தடக்கியறிவித்தாற் போல
நுண்ணிய பொருண்மையோடு விளக்கமுடைத்தாய் மிகுவது சூத்திரமாமென்றவாறு.

16.அதுவே,
மாட்டுறுப்பரிமாநோக்கந்தவளைப்
பாய்த்தாற்றொழுக்குப்பருந்தின்வீழ்வொடு
நிரனிறைவிளக்கெனும்பொருள்கோணிலைத்தே.
(எ-ன்) சூத்திரங்களின் பொருள்கோணிலையுணர்ற்று.

(இ-ள்) அச்சூத்திரம் மாட்டுறுப்புமுதலாகத் தீபகமீறாகக் கூறப்பட்ட வேழு பொருள்கோணிலையை யுடைத்தென்றவாறு.
நிலைமை யுடைத்தென்றதனா லொழிந்தபொருள்கோளான் வருவனவுங்கொள்க.

17.ஓத்தெனப்படுவதோரினப்பொருளைக்
கோத்தொருநெறிபடக்கூறுவதாகும்.
(எ-ன்) இஃதோத்திலக்கணமுணர்ற்று.

(இ-ள்) மேலோத்தெனக்கூறப்பட்டது ஓரினமாகியபொருள் களையிதற்கிஃதியைபுடைத்தென்ன நேரினமணிகளை
வடத்திற்கோத்தாற் போல அடைவிலேசேர்த்தோரியலாகிய நடைபெறக் கூறுவதாமென்றவாறு.
அது வேற்றுமையோத்து, வேற்றுமைமயங்கியல், விளிமரபென முறையே வேற்றுமையாயினும்
வேறுவேறியலாக்கி யொரோரின மாகவுரைத்தவாற்றா னுணர்க.

18.படலமென்பது பன்னெறிப்பொருளாற்
புடைபடவிரவியபொது மொழித்தொடர்பே.
(எ-ன்) படலமென்பதனிலக்கணமுணர்ற்று.

(இ-ள்) படலமென்று கூறப்படுவது பலவேறு நடைபெற்று வருபொருளா லிடம்பெற்று
விரவிய பொதுமொழித்தாய்வருந் தொடர்புடைத்தாமென்றவாறு.

19.அவையொருமூன்றுமடக்குதல்பிண்டம்.
(எ-ன்) பிண்டமாமாறுணர்ற்று.

(இ-ள்) மேற்கூறிய சூத்திர மோத்துப் படல மென்னுமூன்றுறுப்பையு மகத்தடக்குவது பிண்டமாமென்றவாறு.
அம்மூன்றினையு முறுப்பெனவே பிண்டமென்ப துறுப்புடையவயவியென்பது பெற்றாம்.
அவையாவன : தொல்காப்பியமென்பது பிண்டம். அதனுள் எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் பொருளதிகாரம் என்பன படலம்.
ஒழிந்த விரண்டும் ஓத்தும் சூத்திரமுமாம்.

20.மிகத்தெளிவுடையவகத்தியமதுபோன்
முத்தமிழுட்கொளுமூன்றுபிண்டமுமுறுப்
பொத்தொருங்குட்கொளலுறின்மகாபிண்டம்.
(எ-ன்) மகாபிண்டமாமாறுணர்ற்று.

(இ-ள்) மிகவுமுந்து நூல்களையாராய்ந்து தெளிந்த கேள்வியையுடைய அகத்தியனாற் கூறப்பட்ட வகத்தியமென்னு
நூல்போல இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்னு மூன்று பிண்டத்தினையுந் தனக்குறுப்பாகப் பொருந்தும்படி
முழுதுமுட்கொண் டொருநூலாக நிற்றல்பொருந்தின் மகாபிண்டமாமென்றவாறு.

21.உற்றதுபதப்பொருளுதாரணமூன்றுடன்
கற்றவர்வினாவிடைகாட்டுதல்காண்டிகை.
(எ-ன்) வைத்தமுறையானே காண்டிகையாமாறுணர்ற்று.

(இ-ள்) நூல்களைக் கற்றுணர்ந்த வாசிரியர் சூத்திரத்துட்கூறக் கருதியதுணர்த்தலுஞ் சூத்திரத்துட்
சொற்றொறும் பொருளுணர்த்தலு மதற்குதாரண முணர்த்தலு மென்னு மிம்மூன்றுடன்
கடாவுங் கடாயதற் கெதிர்மொழியுங் காட்டுதல் காண்டிகையாமென்றவாறு. வினாவல்-கடாவல், விடை – அதற்கெதிர்மொழி.

22.ஒன்றியசூத்திரத்துட்பொருளன்றியு
மின்றியமையாதனபுணர்த்திசைத்தவைந்
துறுப்புடனிருதிறத்துரையிடனாகமெய்ந்
நிறுத்தியதொன்றெனநிகழ்த்துதல்விருத்தி.
(எ-ன்) முறையானேவிருத்தியாமாறுணர்ற்று.

(இ-ள்) புலவனாற்கூறக்கருதிய பொருளினைக் கூறுதற்குப் பொருந்திய சூத்திரத்துட் சொல்லோடும் பொருளன்றி
யெஞ்சிநின்றவற்றையு மிவ்விடத்திற் கிஃதின்றியமையாதென்பனவற்றையு மவ்விடத்திற் கொணர்ந்து
பொருத்திச் சொல்லப்பட்ட காண்டிகையுறுப்பாகியவைந் தோடுங்கூட்டி யதற்குத் தன்னூலிடனாகவும்,
பிறநூலிடனாகவுமுண்மை நிலைநிறுத்தப்படுவதொன்றாய் நடத்துதல் விருத்தியாமென்றவாறு.
உறுப்பைந்தாவன. கருத்துமுதல் விடையீறாகக் கூறியவைந் தென்றறிக.
இருதிறத்துரையிடனாகவென்பது தன்னூல் பிறநூலென்னுமிரண்டிடனாகவென்றறிக.

23.பொருளிலகூறன்மருணிலைத்தாத
லின்னாச்சொற்பெறல்வெளிறுபட்டிழிதன்
மொழிந்ததைமொழி தன்முரண்கொளமொழிதல்
குறைபடக்கூறன்மிகைபடவிளம்பல்
சந்தவின்பந்தழுவுதலின்மை
யெதிர்மறுத்துணர்த்தலென்றிவையுளப்படக்
கூறினரீரைங்குற்றநூற்கே.
(எ-ன்) மேலதிகாரப்பட்ட முறையே யீரைங் குற்றமுமுணர்ற்று.

(இ-ள்) பொருளிலகூறலென்பது முன்னும் பின்னும் வருகின்ற பொருண்மைக்கொப்பின்றிப் பயனில்லாதனகூறல்.
மருணிலைத்தாத லென்பது கேட்போர்க்குப் பொருள்விளங்காமன் மருளுதற்கிடனாதல்.
இன்னாச்சொற் பெறலென்பது கேட்போர்க்கின்னா யாப்பிற்றாயிருத்தல்.
வெளிறுபட்டிழித லென்பது குறிப்புமொழி சிறிதுமின்றி வெளிப்படக் கூறல்.
மொழிந்ததை மொழிதலென்பது ஒருகாற்கூறியதனைப் பின்னுங் கூறல்.
முரண்கொள மொழிதலென்பது முதலே கூறியபொருளோடு மாறுகொள்ளுமாறு பின்னர்க்கூறல்
குறைபடக்கூறலென்பது முதலே யதிகரித்த பொருள்களுட் சிலவற்றைக் கூறாதொழிதல்.
மிகைபடவிளம்பலென்பது அதிகரித்த பொருளன்றிப் பிறபொருளுங்கூறல்.
சந்தவின்பந் தழுவுதலின்மை யென்பது எடுத்த யாப்பிற்கிணங்குமோசையின்றிக் கூறுதல்.
எதிர்மறுத்துணர்த்தலென்பது எதிர்மறுத்துணர்த்தலுங் குற்றமாமென்றவாறு.
அஃதாவது
பாவஞ்செய்தானிரயம்புகுமெனக் கருதிக்கூறுவான் தவஞ்செய்தான் சுவர்க்கம்புகுமென்றல்.
இவ்வாறு கூறிற் சுவர்க்கம் புகுமென்னும் பொருடோன்றி நிரயம்புகுமென்னும் பொருடோன்றாமையிற் குற்றமாயிற்று.
என்னை? “எதிர்மறுத்துண ரினித்திறத்தவுமவையே” என்னுமரபியற் சூத்திரத்தானுணர்க.

24-அழகெனத்தகுவதரிறபநாடி
னகலாநடைத்தாயாழமது டைத்தாய்ப்
பொருள்புலப்பாட்டிற்பொருணலன்சொன்னல
னோசையினிமையோடூதியம்பயத்த
லுலகமலையாமையுதாரணம்புணர்த்த
னவிறொறும்புதுவதுவாய்நயனளிப்பதி
னீரைந்தாமெனவியம்பினர்புலவர்.
(எ-ன்) ஈரைந்தழகுமுணர்-ற்று.

(இ-ள்) நூலுக்கழகெனும்படிக்குத் தகுவது குற்றமற வாராயிற் சூத்திரஞ்சில்வகையெழுத்தாற்
செறிந் திறப்பவகலாதநடைத்தா யாழ்ந்த பொருளுடைத்தா யிலக்கணவான்களுக்குப் பொருள் புலப்படுவதாய்ப்
பொருணலனுஞ் சொன்னலனு மோசையினிமையுமுடைத்தாய்க் கற்றோர்க்குப் பயன்றருவதா யுலகத்தோடு
மாறுபடுதலின்றி யுதாரணம் புணர்ப்பதாய்க் கற்குந்தொறும் புதுவதா யின்பமளிப்பதோடு மீரைந்தென்று கூறினர் புலவரென்றவாறு.

25.உள்ளுறுத்தமைத்தவுத்திவகையுணர்த்தி
னுள்ளியதுணர்த்தலுரைமுறைவைப்பே
தொகைபெறநாட்டல்வகைபெறக்காட்டல்
விரிந்தவையிவையெனவிழுமிதிற்கூட்டல்
தொகுத்தமொழியின்வகுத்தனகோடன்
முந்துமொழிந்ததன்றலைதடுமாற்றே
பலபொருட்கேற்பினல்லவைகோடன்
மொழிந்தபொருளோடொன்றவைத்தன்
மொழிந்தனமென்றன்மொழிவாமென்ற
லிறந்ததுகாத்தலெதிரதுபோற்றன்
மொழியாததனைமுட்டின்றிமுடித்தல்
வந்ததுகொண்டுவாராததுமுடித்தல்
வாராததுகொண்டுவந்ததுமுடித்தல்
பிறன்கோட்கூறறன்கோட்கூறல்
பிறனுடம்பட்டது தானுடம்படுத
லறியாதுடன்படலாணைகூற
றன்குறியிடுதறந்துகொணர்ந்துரைத்தன்
மறுதலைசிதைத்துத்தன்றுணிபுரைத்தன்
மாட்டெறிந்தொழிதலிரட்டுறமொழித
லொன்றினமுடித்தறன்னினமுடித்தன்
மாட்டுறுப்பினவாமனக்கொளக்கூற
லுய்த்துக்கொண்டுணர்தலினுரனுடையனவாய்த்
தீபகவகையாற்சிறப்புறக்கூறல்
சொல்லினெச்சஞ்சொல்லியாங்குணர்த்தலென்
றமைத்ததினகப்படவமையாதனவுஞ்
சுருங்கக்கூறியதொடர்பினைநாடி
யொருங்கமைத்துணர்த்துதலுரவோர்கடனே.
(எ-ன்) மேலதிகாரம்பாரித்த பன்னிரண்டினு ளிறுதிநின்ற தந்திரவுத்தியாமாறுணர்-ற்று.

(இ-ள்) உள்ளியதுணர்த்தன் முதலாகச் சொல்லினெச்சஞ் சொல்லியாங் குணர்த்தலீறாகச் சொல்லப்பட்ட
முப்பத்திரண்டு மத்தன் மையபிறவுந் தந்திரவுத்திகளாம்.
அவற்றையு மிதனுட்கூறியதாகப் பிறர்க்குணர்த்துத லறிவுடையோர்க்கு முறைமையாமென்றவாறு.
தந்திரமெனினு நூலெனினுமொக்கு மென்றவாறு உத்தியென்பது வடமொழிச் சிதைவு.
அஃதாவது சூத்திரத்தின்பாற் கிடப்பதோர் பொருள் வேறுபாடுகாட்டுவது.
உள்ளுறு…… யுணர்த்தினென்பது முந்துநூல் செய்த ஆசிரியர் நூற் கின்றியமையாச் சிறப்பென்பதாகக
கருதியமைக்கப்பட்ட தந்திரவுத்தியினது கூறுபாடுணர்த்தினென்றவாறு.

உள்ளியதுணர்த்தலென்பது சூத்திரத்திற் சொற்றசொற்குக் கூறிய வடைவே பொருளுணர்த்துவதன்றி
யிதன்கருத் திஃதெனவுணர்த்தல்.
அஃதாவது எழுத்தெனப்படுப என்னுஞ்சூத்திரத்தினுள் எழுத்தினைத் தென்றறிவித்தலை நுதலிற்றென்றல்.

உரைமுறைவைப் பென்பது நூலுண் முன்னம் பலபொருளை யதிகரித்தவழிப் பின்னுமவற்றை யம்முறையேவிரித்தல்.
அஃதாவது உயர்திணை யஃறிணையென வதிகரித்து ஆடூஉவறிசொன் மகடூஉவறி சொல்
என்னுஞ்சூத்திரங்களா னிறுத்தமுறைபிறழா துயர்திணையை முற்கூறல்.
இன்னுமிதனானே ஒரு சூத்திரத்திலே கருதின பொருளை வைத்து வருகின்ற சூத்திரத்துளோதாததன் காரியமாயின
வழியதனைச் சூத்திரந்தோறுங் கொணர்ந்துரைத்தலுமாம்.
அஃதாவது ஏழாவதுயிர் மயங்கியலில் “அகரவிறுதிப்பெயர்நிலைமுன்ன” ரென்னுஞ் சூத்திரத்திற் கசதபத் தோன்றினெனக்கூறி,
வினையெஞ்சுகிளவியுமென்னுஞ் சூத்திரத்திற் கூறிற்றிலரேனும் அதிகாரமுறைமையினால் வல்லெழுத்து வரும்வழி யெனவுரைத்தல்.

தொகைபெறநாட்டலென்பது வகைபெறக் கூறல் வேண்டுமாயினு மதனைத் தொகுத்துக் கூறல்.
அஃதாவது “அகரமுதனகரவிறுவாய் முப்பஃதென்ப” என்றாற்போல்வன.
இன்னும் பலசூத்திரத்தாற்கூறிய பொருளை யித்துணையுங்கூறப்பட்ட திஃதெனக் கூறலுமாம்.
அஃதாவது “தூக்கியல்வகையேயாங்கெனமொழிப” என்பதனாற்கொள்க.

வகைபெறக்காட்டலென்பது தொகைபெறக் கூறியவற்றை வகைபெறக் கூறல்.
அஃதாவது “அகரமுதனகரவிறுவாய்முப்பஃதென்ப” எனத் தொகுத்தவற்றை
அ இ உ எ ஒ என்றும் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்றும் வகுத்தல்.
அன்றியும் “ஒளகாரவிறுவாய்ப், பன்னீரெழுத்து முயிரெனமொழிப”
“னகாரவிறுவாய்ப், பதினெண்ணெழுத்து மெய்யெனமொழிப” என்பனவுமாம்.

விரிந்தவையிவையென விழுமிதிற் கூட்டலென்பது, தொகுத்தும் வகுத்துங் காட்டியவற்றை யிறப்ப
விரியாமல் விழுமியவாக விரித்து முடித்தல்.
அஃதாவது “உயிர்மெய்யாய்தமுயிரளபொற்றள, பஃகிய இ உ ஐ ஒள மஃகான், றனிநிலைபத்துஞ்சார்பெழுத்தாகும்” என்னு
மதனுட் சார்பெழுத்தெனத் தொகையாலொன்றும் வகையாற்பத்து மாகியவற்றை
“உயிர்மெய்யிரட்டு நூற்றெட்டு” என்னுஞ் சூத்திரத்தான் “ஒன்றொழிமுந்நூற்றெழுபானென்ப” என விரித்ததன்
மேலும் உயிர் மெய்க்குறில் உயிர்மெய்ந்நெடில் உயிர்மெய்யகரமெனவும் வல்லினம் மெல்லினம் இடையினம்
எனவும் இறப்பவிரியாமல் விழுமிதாய்க்கூட்டல்.

தொகுத்த……. கோடலென்பது “றெட்டெழுத்திம்பரும்…… வல்லாறூர்ந்தே” என்னுஞ் சூத்திரத்தாற்
பிறிதுமோர்பொருள் வகுத்துக் காட்டல்.
அஃதாவது “குற்றியலுகரமுறைப்பெயர்….. முதலும்” என்னுஞ் சூத்திரத்தான் மொழி
முதற் குற்றுகரமுங்கோடல். சொல்லின் முடிவினப் பொருண்முடித்த லென்பது மது.

முந்துமொழிந்ததன்றலை தடுமாற்றே யென்பது முற்படவதிகரித்த பொருளை யம்முறையிற்கூறாது முறைபிறழக்கூறுதல்.
அதனை யங்ஙனங் கூறுங்கால் ஒருபயனோக்கிக் கூறல்வேண்டும்.
அது புள்ளிமயங்கியலுள் “ஞகாரையொற்றிய” என்ற சூத்திரத்தினுள் ஞகார வீறுகூறி யதன் பின்னர்
ணகாரவீறுகூறாதே வருஞ்சூத்திரத்தினுள் “நகரவிறுதியுமதனோரற்றே” என முடிபொப்புமை நோக்கிக் கூறியதாற் கண்டுகொள்க.

பலபொருட்… கோடலென்பது ஒருவகைப்பொருள் பலபொருட் கேற்குமாயினு மவற்றுணல்லதனைக் கோடல்.
அஃதாவது மெய்ப்பாட்டியலுள் அகத்திற்குரியவாகப் புகுமுகம்புரிதன் முதலாகக் கையறவுரைத்த லீறாகக் கூறிய
அறுநான்கு மெய்ப்பாடும் அகத்தினுள் இரு வகைக் கைகோளுள்ளுங் களவினுள் முறையேவந்து கற்பினுளம்
முறையே வரப்பெறாமையி னவைகளவிற்கே யுரித்தென விதந்து கூறலானறிக.
அன்றியும் ஒரு சூத்திரம் பலபொருட்கேற்குமாயினு மதற்குணல்லதனைப் பொருளாகக்கோடலுமாம்.
அஃதாவது “வேண்டிய கல்வியாண்டு மூன்றிறவாது” என்பதற்குக் கல்வி வேண்டிய ஆண்டிறவாது
அக் கல்வியெல்லா மூன்றுபாதத்தைக் கடவாதென்றதனாலறிக. அன்றி ஓதற்பிரிதற் காண்டு மூன்றென்பது பொருந்தாது.
அன்றியும் “இலனென்னுமெவ்வமுரையாமையீதல், குலனுடையான்கண்ணேயுள” என்பதனுட் பலபொருடோன்றியவிடத்து
முதலேகண்ட விரண்டு கிரிகையுமன்றி யிரப்போனின்னு மொருவர்பால் யானொன்று மில னென்னு மான
பங்கங்கூறாம லிரக்கப்படுவோ னீகையெனப் பொருள் கோடலுமாம்.

மொழிந்த பொருளோடொன்றவைத்த லென்பது சூத்திரத்துப் பொருள் பலபடத் தோன்றுமாயினு
முற்பட்ட சூத்திர யாப்பிற்கேற்பப் பொருளுரைத்தல். அஃதாவது
“இலனென்னுமெவ்வமுரையாமை” என்னுங் குறளுக்கு முன்னருத்திக்கேற்பக் கூறிய பொருளன்றி
“நல்லா றெனினுங்கொளறீதுமேலுலக, மில்லெனினுமீதலேநன்று” என்னு மேலிற் குறளிற் பொருள்கட்கொன்ற
வும்மையைவிரித்து இலனென்னு மெவ்வமுரையாமையு மீகையுங் குலனுடையான் கண்ணேயுள எனவுரைத்தல் கொள்க.

மொழிந்தனமென்றலென்பது பலபொருள்களையும் அதிகரித்த வற்றுட் சிலபொருளை மேற்கூறப்பட்டனவென்றல்.
“அஃதாவது மாத்திரை யளவு மெழுத்தியல்வகையு, மேற்கிளந்தன்ன” வென்றதனாற் கொள்க.

மொழிவாமென்றலென்பது சில பொருளைக் கூறி யவற்றுள் ஒன்றனை யின்னவிடத்துக் கூறுவாமென்றல்.
அஃதாவது “குற்றியலிகரநிற்றல் வேண்டும்” என்ற சூத்திரத்தில் ஒருமொழிக் குற்றியலிகரங்கூறி
அதன் பின்னர் இருமொழிக்கண்ணுங் குற்றியலிகரம் வருமென்பதற்கு “புணரியனிலையிடைக்குறுகலுமுரித்தே” என்னுஞ் சூத்திரத்தின்
“உணரக் கூறின் முன்னர்த்தோன்று” மெனக்குற்றியலுகரப் புணரியலுள்ளே கூறப்படுமென்றத னாலுணர்க.

இறந்தது காத்தலென்பது மேற்கூறப்பட்ட சூத்திரத்தாற் கூறப்படாத பொருளைப் பின்வருஞ்சூத்திரத்தானமைத்தலாம்.
அஃதாவது முதனூலுக்குச் சூத்திரங் கூறிய பின்னர் “வழியெனப்படுவததன் வழித்தாகும்” என்று
வழி நூற்குக்கூறிய சூத்திரத்தில் வழிநூலானாய பயன் கூறாது மேல்வருஞ் சூத்திரங்களாயவவற்றின்கண்
“வழியினெறியே நால்வகைத்தாகும்” என்ற பின்னர் அதனாலாயபய னதனிற்கூறாது
“தொகுத்தல் விரித்தல்” என்னுஞ்சூத்திரத்தா லதனாலாயபயன் கூறல் இறந்தது காத்தலாயிற்று.

எதிரது போற்றலென்பது முன்பு கூறிய சூத்திரத்தானே மேல் வருஞ் சூத்திரப் பொருளையும் பாதுகாத்தமைத்தல்.
அஃதாவது நூன் மரபினுள் “உட்பெறுபுள்ளியுருவாகும்மே” எனப்பகரத்தோடு மகரத்திடை வரிவடிவிற் கிலக்கணங் கூறப்
புகுந்து மேல்வருஞ் சூத்திரத்தின் “மெய்யினியற்கை புள்ளியொடுநிலையல்” என்றதனால்
மெய்களிற்கூடிப் புறத்திற் பெறும்புள்ளியோ டுள்ளாற்பெறும்புள்ளியும் மகரத்திற்கு வரிவடிவாமெனக் கோடல் எதிரது போற்றலாயவாறு காண்க.
“அற்புதஞ்சிலேடை” யென்னும் பொருளணியியற் சூத்திரமுமிது.

மொழியாததனைமுட்டின்றி முடித்தலென்பது சூத்திரத்தின் கண்ணேயெடுத்தோதாத பொருளை முட்டுப்படாம லுரையினான் முடித்தல்.
அஃதாவது “அரையளபுகுறுகன்மகரமுடைத்தே, யிசையிட னருகுந்தெரியுங்காலை” என்பதனாற்கொள்க.
என்னை? அரையளவாகிய வெல்லையிற்குறுகிக் கான்மாத்திரையவாதலை மகரமெய்யுடைத் தஃதி யாண்டோவெனின்
வேறோரெழுத்தின தோசையின் கண்ணதுதான் சிறுபான்மையவாகிவரு மாராயுங்காலத்தென்பதனாலாயிற்று.
என்னை? கான்மாத்திரையென்பது சூத்திரத்தின் கண்ணவாய்ச்சொல்லி முடியாததனை யுரையினான் முட்டின்றி முடித்தலானெனக்கொள்க.
இக் கருத்தினானே “சூத்திரத்திற் பொருளன்றியும் யாப்புற, வின்றியமையா தியைபவை யெல்லா,
மொன்ற வுரைப்ப துரையெனப்படுமே” யென்றோதுவாராயிற்று.

வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதும், வாராதது கொண்டு வந்தது முடித்தலென்பதுமான
ஒருங்கெண்ணப்பட்ட விரண்டிற்கும் ஒரோவொன்றாகப்பகுத்து இலக்கணங்கூறிய விரண்டனுள்
பின்னர்க்கூறிய சூத்திரத்தினுள் வந்ததனைக் கொண்டு முன்னர்க்கூறிய சூத்திரத்துள்
வருமிலக்கணத்திற்கு வாராததனைக் கூட்டிமுடித்தலும், முன்னர்க்கூறிய சூத்திரத்தினுள் வாராததனைக் கொண்டு பின்னர்க் கூறிய
சூத்திரத்துள் வருமிலக்கணத்திற்கு வந்ததனைக்கூட்டி முடித்தலுமாம்.

அவையாவன : “கூறியவுறுப்பிற் சிலகுறைந்தியலினும், வேறுபாடின்றென விளம்பினர்புலவர்” எனவும்,
“அறமுதனான்கினுங் குறைபாடுடையது, காப்பியமென்று கருதப்படுமே” எனவும் பொதுவியலுட் கூறிய சூத்திரங்களானுணர்க.
என்னை? அறமுதனான்கினுங் குறைபாடுடையது காப்பியமெனவே, பின்னர்க்கூறிய சூத்திரத்தினுள் வந்தது கொண்டு
அறமுதனான்கு மொழித் தல்லா தவுறுப்பிற் குறைவதே பெருங்காப்பியமென்று முடித்தலானுங்,
கூறியவுறுப்பிற் சில குறைந்தியலினு மெனவே முன்னர்க் கூறிய சூத்திரத்தினுள் வாராத அறமுதனான்கின்
ஒன்றும் பலவுங் குறைபாடுடையது முறுப்பிற் சில குறைதலுங் காப்பியமென்று வாராததனைக் கொண்டு வந்ததனோடு
முடித்தலானுமென அடைவே கண்டுகொள்க. இவை தம்மிற்றாமாறாடினுமிழுக்காது.

பிறன்கோட்கூறலென்பது பிறநூலாசிரியன் கொண்ட கோட்பாட்டைக் கூறுதல்.
அஃதாவது “வேற்றுமைதானேயேழெனமொழிப” என்றல். எனவே, தன் கோட்பாடன்றென்பதாயிற்று.

தன்கோட்கூறலென்பது பிற நூலாசிரியன் கூறியவாறு கூறாது தன் கோட்பாட்டாற் கூறுதல்.
அஃதாவது “விளிகொள்வதன்கண் விளியோடெட்டே” என்றல்.

பிறனுடம்பட்டது தானுடம்படுத லென்பது பிறநூலாசிரிய னுடம்பட்டதற்குத் தானுமுடம்படல்.
அஃதாவது இரண்டாம் வேற்றுமை செயப்படுபொருட்கண் வருமென்றார் பாணினியா ரஃதிவர்க்கு முடம்பாடு என்றல்.
அஃது இயற்றப்படுவதும் வேறுபடுக்கப்படுவதும் எய்தப்படுவதுமாம்.
அதற்குதாரணம் – எயிலையிழைத்தான், மறத்தைக் குறைத்தான், நூலைக் கற்கும் என அடைவேகாண்க.

அறியாதுடம்படல் என்பது தானறியாதவற்றைப் பிற பெரியோர் கூறியவாற்றானுடம்படல்.
அஃதாவது ஏழாநரக மித்தன்மைத்தெனச் சான்றோர் கூறியவழித் தனக்கது புலப்படாததாயினுந் தானதற்குடம் படல்.
இது வழி நூலாசிரியர்க்குமுரித்து.

ஆணைகூறலென்பது ஒருபொருளைக் கூறும்வழி யேதுவினாற் கூறலன்றித் தன்னாணையாற்கூறல்.
அது வேற்றுமை யேழெனப் பாணினியார் கூறியவழி அவர் விளியை முதல்வேற்றுமையிலடக்கினார்.
அதற்குத் திரிபு கூறாதே யதனை யெட்டாம் வேற்றுமை யென்றாலும் ஆண்டுக் கடாவப் படாமை.

தன்குறியிடுத லென்பது உலகின்கண் வழக்கின்றி யாசிரியன்றன் குறியிடல். அஃதாவது உயர்திணை அஃறிணையென்பன.

தந்துகொணர்ந்துரைத்த லென்பது முன்னராயினும் பின்னராயினு நின்ற சூத்திரச் சொல்லை யிடைநின்ற சூத்திரத்திற்
கொணர்ந்து புணர்த்துரைத்தல். அஃதாவது
“நெட்டெழுத்திம்பருந்தொடர்மொழி யீற்றுங், குற்றியலுகரம்வல்லா றூர்ந்தே” என்பதனில் முன்னின்ற சூத்திரத்தில்
நிற்றல்வேண்டுமென்ற சொல்லைக் கொணர்ந்து புணர்த்துரைத்தல்.

மறுதலை சிதைத்துத்தன்றுணிபுரைத்த லென்பது நெட்டெழுத் தேழளபெடையென்பன குற்றெழுத்தின் விகாரமென்பாரை மறுத்தது.
அது அஅஅ என நின்றதல்லவென அவர் மறுதலையைச் சிதைத்து வேறோரெழுத்தென்று கூறல்.

மாட்டெறிந்தொழித லென்பது முன் னொரு பொருட்கிலக்கணங் கூறிப் பின்னர்வருவது மதுபோலுமென்றல்.
அஃதாவது ஏழாவ துயிர்மயங்கியலில் “உகரவிறுதியகரவியற்றே” என்றல்.

இரட்டுறமொழித லென்பது ஒருவகையானின்ற தொடர்ச்சொல்லாதல் ஒரு சொல்லாதல் ஒரு செய்யுளகத்துப்
பலபொருளை மொழிவதா மென்றவாறு. அஃதாவது
“வந்தவரவென்னையெனவாட்கண்மடவாய் கேள், சிந்தை நலிகின்ற திருநீர்க்குமரியாட,
வந்திலதனாய பயனென்னை மொழி கென்றாண், முந்திநலிகின்ற முதுமூப்பொழியுமென்றான்” என்பதனாலறிக. என்னை?
திருநீர்க்குமரியாடவெனவே அழகிய நீர்மையையுடைய கன்னியாகிய நின்னைப் புணரவந்தேனென்பதனை மறைத்தனவாகவும்,
பொலிந்த தீர்த்தநீராகிய குமரியாற்றை யாடவந்தேனென வெளிப்படையாகவுஞ் செம்மொழியாக விரட்டுறமொழிதலாலும்,
அதனாலாய பயன்யாதென அக்காலத் திம்மூப்பு நீங்குமென அத்தச்சிலேடையாகவுங் கொள்ளக்கிடந்தமையாலு மெனக் கொள்க.

ஒன்றினமுடித்த லென்பது ஒன்றற்கிலக்கணங்கூறியவிடத்துக் கூறாது தொக்குநின்ற ஒழிபிற்கு மதுதானே விதியாகமுடித்தல்.
அஃதாவது “புள்ளியீற்றுமுன்னுயிர் தனித்தியலாது, மெய்யொடுஞ் சிவணுமவ்வியல் கெடுத்தே” என்னும் சூத்திரத்தானுணர்க.
என்னை? இயல்பல்லாத புள்ளிமுன் னுயிர்வந்தாலும் அவ்விதி கொள்கவென முடித்தல்
உதாரணம் :- ஆலடை, ஆலாடை எனவும், அதனை எனவும், நாடுரி எனவும் வரும்.

தன்னினமுடித்த லென்பது ஒருவகையுட்சிலவற்றிற் கிலக்கணங் கூறியவிடத்துச் சொல்லாதொழிந்தனவாய்த் தொக்கதற்கும்
ஆட்சியுங் காரணமும்பற்றி யச்சூத்திரத்தினிடத் ததற்கும் வேறோரிலக்கணங் கூறிமுடித்தல்.
அஃதாவது “அ இ உ அம்மூன்றுஞ்சுட்டு” என்னுஞ் சூத்திரத்தானுணர்க. என்னை?
குற்றெழுத்தென்றவற்றுண் மூன்றனைச் சுட்டென்னுங் குறியவென்று கூறியவிடத்து எகரமும் வினாப்பொருளு ணர்த்துமென முடித்தல்.

மாட்டுறுப்பினவாமனக்கொளக் கூறலென்பது ஒரு சூத்திரத்துப் பொருள்கொள்ளுங்கா லகன்று பொருள்கிடப்பனவும்,
அணுகிக்கிடப் பனவுமான விருவகையையும் பொருண்முடியுமாற்றாற் கொணர்ந்துரைப்பச் செய்தல். என்னை?
“அகன்று பொருள்கிடப்பினும்… மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்” என்றாராகலின்.
மனக்கொளவென்பது கேட்டோர் மனத்துட் கொளவென்பதாம். இதற்குச் சூத்திரம்
“வடவேங்கடந்தென்குமரி…………… படிமையோனே” என்பதெனக்கொள்க.
அதற் கிளம்பூரணருரையன்றி நச்சினார்க்கினிய ரெழுதின வுரையைக் கண்டுகொள்க. அவற்றை யீண்டுரைப்பிற் பெருகும்.

உய்த்துக்கொண்டுணர்த லென்பது ஒரு சூத்திரத்தானொன்றற் கிலக்கணங்கூறியவழி யதற்குப் பொருந்தாமையுளதாகத்
தோன்றின் அதனையு மதற்குப் பொருந்தினவழியாகக் கூட்டுதல். அஃதாவது
ஏழாவ துயிர்மயங்கியலிற் “பனியெனவரூஉங்காலவேற்றுமைக், கத்து மின்னுஞ் சாரியையாகும்” என்பதன்கண்ணுணர்க.
என்னை? பனியத்துக்கொண்டான், பனியின்கட்சென்றான், பனியிற்சென்றான் என வரும்.
அவற்றுள் இன்பெற்றுழி முன்னர்க்கூறிய நாழிக்காயம், உரியக் காயம் என்பதுபோல
வல்லெழுத்து மிகாது வீழ்க்க என்பதற்குப் பொருந்த வுய்த்துணர்தல்.

தீபகவகையாற் சிறப்புக்கூறலென்பது குணந் தொழில் சாதி பொருள் என்னு நான்கனுள் ஒன்றைக்குறித்தவொருசெல்
செய்யுளிடத்து முதலிடைகடையென்னு மூன்றிடத்தினுள் ஓரிடத்தாகி யாதியினின்ற தந்தத்தளவுமோடவும் இடைநின்றது முன்னும்பின்னுமோடவும்,
இறுதிநின்ற திடையு முதலுமோடவுங் கவின்பெறக் கூறுதல். என்னை?
“குணந்தொழில் சாதி பொருள்குறித்தொரு சொல், லொருவயினின்றும் பலவயிற்பொருடரிற், றீபகஞ்செய்யுண்மூவிடத்தியலும்”
என்பது அணியியலாகலினுணர்க. அவற்றிற்கெல்லா முதாரண மீண்டுரைப்பிற் பெருகும்.

சொல்லினெச்சஞ்சொல்லியாங்குணர்த்த லென்பது
“பெயர்வினையும்மை சொற்பிரிப்பென வொழியிசை, யெதிர்மறையிசையெனுஞ்சொல் லொழிபொன்பது” மென்னுஞ்
சொல்லெச்சங்களைக்கண்டு ஆங்காங்குச் சொல்லியவாற்றாற் பொருள்கோடலாம்.
அன்றியும் தொல்காப்பியர் நோக்கம் பற்றிப் பிரிநிலை முதலாகச் சொல்லப்பட்டவெனினுமாம்.
அவற்றிற்கெல்லா முதாரண மீண்டுரைப்பிற் பெருகும். அவையும் வந்துழிக் கண்டுகொள்க.

“என், றமைத்ததினகப்படவமையாதனவுஞ், சுருங்கக் கூறிய தொடர்பினைநாடி, யொருங்கமைத்துணர்த்துதலுரவோர்கடனே” என்பது,
(என்றென்பது-எண்ணிடைச்சொல். ) ஆதலா லங்ஙனங்கூறிய முப்பத்திரண்டாக அமைத்ததி னமையாதனவாமவற்றையுஞ்
சுருங்கக் கூறலென்னு மழகுநோக்கியும், முன்னோர் தந்திரவுத்தி முப்பத்திரண்டெனக் கொண்ட வரையறை
யிகவாமைக்கூறியதாகநோக்கி மிதனகத்தமைந்தனவாக வுணர்த்துதல் அறிவுடையோர்க்கு முறைமை யென்றவாறு.
அமையாதனவாவன பலவுள. அவற்றுள்ளுஞ் சில வருமாறு. வேண்டாது கூறிவேண்டியது முடித்தல், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி
வகுத்தல், பொருளிடையிடுதல் என்பன.
அவையாவன :- “ஏனையுயிரேயுயர் திணைமருங்கிற், றாம்விளிகொள்ளாவென்மனார்புலவர்” என்னுஞ் சூத்திரத்தானும்,
“அளபெடைமிகூஉமிகரவிறுபெய, ரியற்கையவாகுஞ் செயற்கையவென்ப” என்னுஞ் சூத்திரத்தானும்,
“ஒருமைசுட்டிய பெயர்நிலைக்கிளவி, பன்மைக்காகுமிடனுமாருண்டே” என்னுஞ் சூத்திரத்தானு முணர்க.

இவற்றுள் முன்னைய விரண்டும் விளிமரபு. மற்றையது எச்சவியல்.
அவற்றொடும் “ஆற்றொழுக்கரிமாநோக்கந்தவளைப், பாய்த்துப்பருந்தின் வீழ்ச்சிநிரனிறை” யென்பனவு
மொருசாராசிரிய ருத்தியுளமைத்தாரெனக் குறித்ததாம்.
அன்றியும், ஒன்றற்கிலக்கணங்கூறும்வழி யொருசூத்திரத்துட் பலவுத்திவருவனவு முளவென்னுநோக்கத்தாற் கூறியதூஉமாம்.
அதற்குதாரணம் :- “எல்லாமொழிக்குமுயிர் வருவழியே, யுடம்படுமெய்யினுருவு கொளல்வரையார்” என்பதனாலுமுணர்க.
என்னை? மூவகைப்பட்ட மொழிக்கு முயிர்முதன் மொழிவருமிடத்து இடை யுடம்படுமெய்யாகிய வடிவுகோடல் நீக்காரென்புழி
யுடம்படுமெய் யென்றாரல்ல தவை யிவையெனக் கூறா ரவற்றை யுரையிற்கோடலென்று மவை யகரமும், வகரமும் எனவும்,
அவற்றுள் இ ஈ ஐ வழியவ்வும் அல்லனவருவழி வகரமும் வரும் எனக்கோடலானும் ஒன்றினமுடித்த
லென்னுமுத்தியான் விகாரப்பட்ட மொழிக்கண்ணு முடம்படுமெய் கொள்ளப்படுமெனக் கூறியதற் குதாரணம்
மரவடி, ஆயிருதிணையெனவும் இரண்டுத்திவந்தவாற்றானறிக. தந்திரவுத்திமுற்றும்.

26.அடிவரையுளவாயடிவரையிலவாம்
பாட்டினும்பாவின்றெழுகிளவியினுங்
காட்டியவெழுநிலத்தனவாய்க்கழறிய
பொருளொடுகலந்துபுரைதீரொலிசெறிந்
தெண்ணத்தகைசாலீராறடிநிமிர்
பண்ணத்தியினும்பயில்வனவாகும்.
(எ-ன்) இதுவும் அந்நூலிற்கோ ரொழிபுகூறுதனுதலிற்று.

(இ-ள்) குறளடி முதலாய வைவகையடியானும் வரையறையுள வாம்பாட்டினாலும், அடிவரையறையிலவாம் பாட்டினாலும் பாவின்றி
யொழுகலாறுடைய பலசொற்றொடராலுங் கற்றோர்காட்டப்பட்ட வெழு நிலத்தெழுந்த செய்யுணடைத்தாயும்
அவற்றுட்பாட்டிற்குக் கூறிய பொருளோடுங்கூடிக் குற்றமற்ற ஓசைசெறியப்பட்டுப் புலவரானெண்ணும் படிக்குத் தலைமை
சான்ற பன்னிரண்டெனலாய நாற்சீரடியின் மிகுந்துங் குறைந்தும் வரும் பாவினத்தோடும் பயில்வனவாம் நூல்களென்றவாறு.
எழுநிலமாவன:- பாட்டும், நூலும், உரையும், பிசியும், முதுமொழியும், மந்திரமும், குறிப்புமொழியும்.
அவற்றுள் அடிவரையுளபாட்டாவன :- வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி, மருட்பா, பரிபாடல் என்பன.
அடிவரையிலவாவன:- நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்புமொழி யெனக்கொள்க.
என்னை? “எழுநிலத்தெழுந்த செய்யுட்டெரியி, னடிவரையில்லனவாறெனமொழிப” எனவும்,
“அவை தாம், நூலினான உரையினான, நொடியொடு புணர்ந்த பிசியினான, வேது நுதலிய முதுமொழியான,
மறைமொழி கிளந்த மந்திரத்தான, கூற்றிடை வைத்த குறிப்பினான” என்பவற்றானு முணர்க.
அன்றியும் இவற்றிற்கு முன்னர்ப் பாட்டுரைநூலேயென்னுஞ் சூத்திரத்தானுமுணர்க. எழு நிலத்தெழுந்த வென்பது வரையறைப் பண்புப்பெயர்.
பண்ணத்தி யென்பது பாவினம். பண்ணைத்தோற்றுவிக்கையாற் பண்ணத்தியென்று பெயராயிற்று.
இவை இளம்பூரணர் முதலாயினாரொருசா ராசிரியர் நோக்கம். நச்சினார்க்கினியர் நோக்கமுமுணர்ந்துகொள்க.

27.விதியாச்செய்யுளின்மிகுத்திலக்கணமு
மதியாலுரைத்ததும்வழங்கன்ஞாபகமா
விரிந்தநூல்களுள்வேறுவேறினமாய்த்
தெரிந்தவியல்களைச்செம்மையிற்றமிதமி
வெள்ளையினகவலின்விளம்பலுமரபே.
(எ-ன்) இதுவும் அந்நூற்குக் கூறிக் கூறாத வொழி பெதிரது போற்றலென்னுமுத்தியாற் கூறுதனுதலிற்று.

(இ-ள்) இங்ஙனங் கூறப்பட்ட விலக்கண நூல்களை அகவலின் வெள்ளையி னறைகவென்று முந்து நூல் விதித்தமையுளவாகவும்,
விதியாது நீக்கிய கட்டளைக்கலித்துறை, ஆசிரியவிருத்த மென்னும் பாவினத்தாற்
பின் பிலக்கண நூல்செய்தோ ரிலக்கணங்களைக் கூறியதுங் கற்றோராலெடுக்கப்பட் லெடுக்கப்பட் டுலகின்கண்ணே
வழங்குதன்ஞாபகமாக விரிந்த நூல்களுள்ளும் பலவேறினமாக வாராய்ந்து பிரிக்கப்படும் பலவியல்களுள்ளுமோரியலை
முதலே வெண்பாவிற்கூறி, யதன்பின்னர்வரு மேனையியல் களையகவலானு மழகிதாய்த் தமிதமிகூறுவது மரபாமென்றவாறு.
அவை யாப்பருங்கலக்காரிகை, கயாகர நிகண்டு, சூடாமணி நிகண்டென்க.
இலக்கணமு மென்றவும்மை யெச்சவும்மையாதலாற் கதைதொடர்ந்த விலக்கியங்களுள்ளும்
வேறுவேறு பாவாகத் தமிதமிகூறலு மரபென்றவாறு. அவை சிலப்பதிகாரத்துள் மங்கலவாழ்த்துக்காதை மயங்கிசைக் கொச்சகக்கலியினும்,
அந்திமாலைச் சிறப்புச்செய்காதை, இந்திரவிழவூரெடுத்த காதை, கடலாடுகாதை இவை நிலைமண்டிலவாசிரியத்தும்,
கனாத்திறமுரைத்த காதை கலிவெண்பாவிலும் வந்தவாறுகாண்க. ஒழிந்தனவு மிவ்வாறுவந்தமை யாங்காங்குக் காண்க.

28. இருவகைநூன்மரபிவையெனமொழிப
(எ-ன்) இதுவும் அந்நூலினைத் தொகைவகைவிரிப்படுத்தி யொழிபுகூறுதனுதலிற்று.

(இ-ள்) நூலெனத் தொகையா னொன்றாய்நின்றவது இலக்கண விலக்கியமென வகையானிரண்டாம்.
நூலினது விரியின்மரபிவையெனக் கூறுவர் அகத்தியன் முதலிய தொல்லாசிரியரென்றவாறு. நூன்மரபு முற்றும்.

29. புரப்போன்மரபினைப்புகலுங்காலைக்
குலனுங்குணனுங்குரவரைப்பேணு
நலனுங்கடவுளைநயத்தலுங்கருணையும்
புலனவித்தொழுகலும்பொறையுந்தோற்றமு
முலகியலறிந்துயிர்க்குறுதிகோடலுங்
கற்றவர்காமுறவாழ்தலுங்காந்தியு
மதிநிகர்கல்வியுங்கதிர்நிகர்வனவாம்
வாய்மையுந்தூய்மையும்வழுவுதலின்றாய்
வாடாக்கற்பகமணமலிபொற்பூக்
கோடாச்செங்கேற்கொற்றவனிதியறை
வான்சுவைமருந்தாயிரவாய்ச்சேடனிற்
கற்றனயாவுங்கழகத்துதவும்
பெற்றியன்மறந்தும்பிறன்பழிகூறான்
சதிருடையேனெனத்தற்புகழ்ந்தறியான்
முதுமொழியிலக்கணவிலக்கியமுறையே
புதுமொழிபுணர்க்கும்புலமையோனே.
(எ-ன்) வைத்தமுறையானே நுவல்வோன்றன்மையுணர்-ற்று.

(இ-ள்) நுவல்வோன் – நூனுவல்வோன், எனவே ஆசிரியனாம். நூனுவல்வோனிலக்கணத்தைக் கூறுமிடத்துக்
குலமுதல் தூய்மை யீறாகவெண்ணப்பட்ட பதினாலினுள்ளு மொன்றும் வழுவுதலிலனுமாகிக்,
கற்பகமணமலிபொற்பூமுதலிய மூன்றனையுஞ் சேடனையுமொப்பவனுமாகிக், கற்றனகழகத்துதவும்பெற்றி,
பிறன்பழிகூறாமை, தற்புகழாமை மூன்று முடையனுமாகி, முந்து நூல்கூறியபடியே யிலக்கண விலக்கியமிரண்டும்
புதுமொழியாகப் புணர்க்கும் புலமையுமுடையோனாமென்றவாறு.
முதுமொழி – முந்து நூல். கற்பகமணமலி பொற்பூமுதலிய மூன்றுஞ், சேடனு மூவமையாதற்கேது முறையே மேற்காட்டுதும்.
இது பொழிப்புரை. ஒழிந்தவகல முரையிற் கொள்க.

30-ஆய்ந்தமைவுடையகல்வியுங்கவியும்
வாய்ந்ததற்குவமைமணமலிபொற்பூ.
(எ-ன்) முறையே மேற்காட்டுதுமென்ற நான்கனுள் மணமலி பொற்பூவை யொத்ததற்கேது வுணர்-ற்று.

(இ-ள்) வாடாதபொற்பூ முந்துநூல்களை யாராய்ந்தமைவுடைய கல்வியுங் கவியுமெய்தியதற் குவமையாமென்றவாறு.
வாடாக்கற்பக மென்பது சூத்திரத்தில்லையாலோவெனின், தந்துகொணர்ந்துரைத்த லென்னுமுத்தியாற் கூறப்பட்டது.
அமைவு – நிறைவு. பொற்பூ – கல்வி. மணம் – கவியெனக் கொள்க.

31–அறன்றருபலபொருளான்றமைவுடைமையும்
பிறர்நிதியறையிற்பெருகியசெல்வமு
மளப்பருந்தன்மையுமவரவர்தாந்தினங்
கொளக்குறைவில்லதுகொற்றீவனிதியறை.
(எ-ன்) கொற்றவனிதியறையொத்தற் கேதுவுணர்ற்று.

(இ-ள்) அறத்தினாலுண்டாக்கப்பட்ட பலபொருள்களுநிறைவெய்துதலும், பிறர்நிதியறையினும் பெருகிய
செல்வவளனு, மொருவராலளத்தற்கரிய பெற்றியும், வறியோர்தாமே தினமும்வேண்டுவன தினமுங் கொள்ளா
நிற்கக் குறைவில்லாமையுஞ் செங்கோற்கொற்றவனிதியறைக் குண்டாய குறியென்ற வாறு.
எனவே, இவனுளத்து அறமுதலிய நாற்பொருளாங்கல்வி நிறைவுடைமை பிற ராராய்வின் மேம்பட்ட கல்வி
நிறைவுடைமை யெனவும், இவன் கல்விநிறைவுடைமை யளத்தற்கரியதென்பதூஉம், பிறரிவனிடத்து வித்தையைக்
கொள்ளக் கொள்ளக் குறையா தென்பதூஉ முய்த்துவமைகொள்ள நின்றமையுணர்க. இவை குறிப்புவமை.

32.உண்ணத்தெவிட்டாவுரிசையுமஃகா
வண்மையுந்தண்மையும்பயப்பதுமருந்தே.
(எ-ன்) வான்சுவைமருந்தொத்தற் கேதுவுணர்-ற்று.

(இ-ள்) அமிர்தமானது தன்னையுண்பவ ருண்ணவுண்ணத் தெவிட்டாவினிமையும், வற்றாவளமையும், குளிர்ச்சியும்
பயப்பதாமென்றவாறு. எனவே, அவன் கல்வியுங் கவியுங் கேட்போர் செவியாலுட் கொள்ள வுவட்டாதென்பது
மக்கல்விகவி கொள்வார்கொள்ளுந்தோறுங் குறைவின்றி நிறைவெய்துந்தன்மையாயிருக்குமென்பது
முவமையாலுய்த்துக் கொள்ள நின்றவா றுணர்க. அலங்க மிதுவு மது.

33.பாயிரந்தோய்ந்து பருப்பொருளின்றி
நுண்பொருள்பயக்குநூல்பலவாங்காங்
குலப்பின்மாணாக்கர்க்கோர்பகன்மயர்வறச்
செலச்சொலற்குவமையாயிரவாய்ச்சேடன்.
(எ-ன்) ஆயிரவாய்ச்சேட னுவமையென்பதற் கேதுவுணர்-ற்று.

(இ-ள்) சிறப்புப்பாயிரத்தோடுங்கூடிப் பருப்பொருளின்றி நுண்ணிய பொருள்களைக் கூறுவனவாம்
பல நூற்பொருள்களைக் குறைவில்லாத மாணாக்கர்பலர்க்கு மொருகாலத் தொருங் கிருடீரச் செலச்
சொல்லுதற் காயிரவாய்ச்சேட னுவமையா மென்றவாறு. இவர் கற்கப்படுவோர்.

34.மடியழுக்காறுவஞ்சகம்வெகுளி
யுணராததையுணர்ந்ததின்மேற்கோட
றம்மைப்புகழ்வதிற்றான்பிறரிகழ்தல்
கற்றவர்புனைந்தகவியினுட்சார்ந்த
குற்றமொன்றுளதேற்குணனமைத்தறியான்
செவ்வியின்மலர்ந்துநாறாச்செம்மலர்
வெவ்விடவரவுதன்வாய்க்கொள்விழுமணி
பொதுமகள்பாற்கொளப்பொருந்தியபோகஞ்
சிறியவன்றன்பாற்செறிதருபொருளெனுங்
கல்வியனாரியனாங்கடனிலனே.
(எ-ன்) கற்கப்படாதோர்குண முணர்-ற்று.

(இ-ள்) மடிமுதலாகக் கூறப்பட்ட நான்குங் கல்லாமைமேற் கொண்டொழுகலுந் தம்மைப்புகழ்வதோடும்
பிறர் குற்றமற்ற கல்வியையுங் கவியையு மிகழ்தலுங் கற்றோராற்புணர்க்கப்பட்ட செய்யுட்கண்ணுஞ் சார்ந்த குற்றஞ்
சிறிதுளவாமெனி லதனைக் குணனாகவமையாதது முடையனாகி யவற்றோடு நாறாச்செம்மலர் முதலிய நான்கும்
போலும் கல்வியையுடையவ னாரியனாங்கடனில னென்றவாறு.
கடன் – முறை. நாறாச் செம்மலர் முதலிய நான்குமொப்பென்பதற்கேது மேற்காட்டுதும். தம்மையென்னும் பன்மை யிழிபின்கண் மயங்கிற்று.

35.பல்காற்சொல்லியுந்தெற்றெனப்பயன்கொள
நல்காவாக்கதுநாறாமலரே.
(எ-ன்) நாறாச்செம்மல ரொப்பென்பதற் கேதுவுணர்ற்று.

(இ-ள்) ஒருசெய்யுளுக்குப்பொருள் பலகாற்கூறியுங் கேட்போ ருள்ளத்துத் துணிவுறச் செலச்சொல்லாவாக்கிற்குப்
பருவத்து மலர்ந்தும் பரிமளமெய்தாத மல ருவமையாமென்றவாறு. பருவத்தின் மலர்ந்து பரிமளமெய்தாத மலர் – முருக்கமலர்.

36.உகுமெனிற்கோடலல்லது வந்துகொள்
பகுதியின்றாகும்பாம்பின்வாய்மணியே.
(எ-ன்) பாம்பின்வாய்மணி யொப்பென்பதற் கேதுவுணர்ற்று.

(இ-ள்) பாம்பின்வாய்மணி பாம்பு தானேயுகுக்குமெனிற்கொள்வதல்லது இப்பொழுது வேண்டுமென விரும்பினோர்
விரும்பினபடியே யக்காலத்திற் கொள்ளும்பகுதி யில்லையாமென்றவாறு.
எனவே, அதுபோலவ் வாசிரியரிடத்திற் கல்வியுமவர்தாமேதரிற் கொள்வதல்லது கற்க விரும்புமாணாக்கர்க்கு விரும்பிய
காலத்து விரும்பினபடியே கொள்ளும் பகுதியின்றென்ப துய்த்துணரநின்றவாறு காண்க.

37.பொருளளவையில்வரும்பொதுமகணலனே.
(எ-ன்) பொதுமகளிடத்துநல மொப்பென்பதற் கேதுவுணர்ற்று.

(இ-ள்) பொருட்பரத்தையரிடத் துண்டானநலன் புமான்கள் கொடுத்த பொருளின தளவெவ்வள வவ்வளவைக்கொப்ப
வெய்து மென்றவாறு. எனவே, அவ்வின்பம்போல வவ்வாசிரியனிடத்துண்டான கல்வியு மாணாக்கர்கொடுத்த
பொருளளவைக்கொப்பக் கொள்ளப்படுமென வுய்த்துணரநின்றவாறு காண்க.

38–அறத்தமர்பசித்துழந்தலமரவுலகிற்
பிறர்க்குணவெதிர்செலும்பேதைகைப்பொருளே.
(எ-ன்) சிறியவன்பாற் செறிதருபொரு ளொப்பென்பதற்கேதுவுணர்ற்று.

(இ-ள்) பேதையரிடத்துண்டான பெரும்பொருளின்ப துன்பத்திற்குரியரா யுதவுந் தமராயுள்ளார் மிகவும்
பசித்துத் துன்பமுற்று மறுக்கமெய்தவும் அவர்க்குதவாது துன்பமுறுகாலத்துச் சிறிது முதவுதலில்லாத
வேதிலாருண்ணும்படிக் கவர்பசிக் கவர்கேட்குமுன்னெதிர் கொள்ளுமென்றவாறு.
எனவே, அப்பொருள்போல வவ்வாசிரியரிடத்துக் கல்வியுந் தம்மை வழிபடு மாணாக்கர்க்கெய்தாது
வழி படாமாணாக்கர்க் கெய்துவதொன்றாமென வுய்த்துணரநின்றவாறு
காண்க. இவை மூன்று சூத்திரமுங் குறிப்புவமை. இவர் கற்கப்படாதோர்.

39.புரத்தலினியல்பேபுகலுங்காலை
யதற்கமையாண்டின்மாணாக்கனையெதிருபு
கடவுளைவாழ்த்திக்காலமுமிடனுந்
திடனுறக்குறித்துமங்கலத் திசைநோக்கி
யிருந்துனக்கிவையியல்பென்னவுள்ளுறுத்தித்
திருந்தியசிந்தையிற்செம்முகமலர்ந்து
நுவலத்தகுநூனுதலியதிறத்தினைத்
தவலருஞ்சிறப்பிற்றான்முதற்கொளுத்திப்
பொழிப்பாதியவாய்ப்புகன்றவாய்மையின்
விடத்தகுவெகுளியின்விரைவிலனாகி
நாளுநாளுநவிறொறுநவிறொறு
மஞ்சிறைப்பறவையினணைந்துறத்தழுவியும்
வெஞ்சிறைப்படுபுனன்மீன்போனோக்கியு
மகன்றனனாமெனினாமைபோன்றுன்னியும்
புனிற்றாவெனவவன்புலந்தனின்முன்னியுங்
கொளத்தகுமுணர்வின்குறியறிந்தனனாத்
தானெனலாக்கியதன்மைகண்டுலகம்
வேட்டைவாளியின்விழுமியனெனமனக்
கோட்டமொன்றின்றிக்கொடுக்குமதென்ப.
(எ-ன்) நூனுவல்வத னியல்புணர்-ற்று.

(இ-ள்) நூனுவல்வத னிலக்கணத்தைக் கூறுமிடத்துக் கல்வி தொடங்க நூலமைத்தவையாண் டேழாண்டென்னும்
பருவத்தினற் காலத்தோடு மதி திதி முதலிய நாற்காலமுங் கழகமுந் திடனாகக் குறித்துக் குணதிசை வடதிசையென்னு
மங்கலத்திசைகளைநோக்கி யிருந்து வழிபடுகடவுளை வாழ்த்தி வித்தைகொள்ளுமிடத்தியல்பு நினக்கிவையென
வவன்கருத்துறப்படுத்தித் தன்னோடொன்றிய சிந்தையொடு முகமலர்ந்து முதலே கூறத்தகு நூல்கருதிய
கூறுபாட்டைக் கெடுதலில்லாத சிறப்புவிதியாற் கருத்துறப்படுத்தி விடத்தகும் வெகுளிபோல விரைவுமிலனாகிக்
கொளத்தகுமுணர்வின் குறியையறிந்து பொழிப்பகல நுட்ப மென்னு முரைநடையா னாளுநாளும்
நவிலுந்தோறு நவிலுந்தோறும் பறவைபோலணைத்துத் தழுவியு மீன்போனோக்கியும் விட்டு நீங்கிய காலத்தும்
ஆமைபோன் றுளத்தானினைந்து மீன்றணிமைப் போதினிலா போலவனிருக்கும் புலத்துச் சென்றுந் தானென்றுஞ்
சொல்லப்படுவதாகிய பெற்றிமையைக் கண்டு பெரியோர் வேட்டைவாளியின் விழுமியனென்று கூறும்படிக்
கழுக்காறின்றிக் கொடுப்பதாமென்றவாறு.
இச்சூத்திரத்திற்கிங்ஙன மாட்டுறுப்பாகப் புணர்த்தலிந் நூலாசிரியர் கருத்தென்றுணர்க.

40.ஆரியன்றிருமகனையுறல்கடிந்த
கூரியமுதன்மைமாணாக்கன்குலமகன்
றன்மகன்மன்மகன்மந்திரத்தலைவ
னன்மகனிருநிதிநனிதமிபுரப்போ
னருத்தியின்வழிபடுபவனுரைநுழைந்துகொள்
கருத்தினனிவர்கள்கற்கப்படுவோர்.
(எ-ன்) இனிக்கொள்வோர் கற்பிக்கப்படுவோருங் கற்பிக்கப்படாதோரு மென விருவகையர்.
அவருள்ளுங் கற்பிக்கப்படுவோரெண்மர். அவ ரிவரென்பதுணர்-ற்று.

(இ-ள்) எண்மருட் கூரியமுதன்மைமாணாக்கனாவான்- தன்னொடு மொருங்கு கற்ற வொருபுடை
மாணாக்கருட்சேட்டன். இருநிதிநனிதமிபுரப்போன் பிறமாணாக்கர்க்குப் பங்கென்னாது தனியே கொடுப்போன்.

41.பளிங்குடனோதிமம்பரவைகொண்மூவெனத்
தெளிந்தநுண்ணுணர்வுறுந்தெள்ளியோரே.
(எ-ன்) அவர்தன்மையுணர்ற்று.

(இ-ள்) இதற்குரை வேண்டுவதில்லை. இவைநாலு மவர்க் குவமை யாதற் கேது மேற்காட்டுதும்.

42.அழுக்கின்றாதலடுத்தவைதனதாக்
கோடலென்றிரண்டும்பளிங்கின்குணமே.
(எ-ன்) பளிங் கவர்குணத்திற் குவமையாதற் கேதுவுணர்ற்று.

(இ-ள்) நின்மலமாய் விளங்குதலுடன் அடுத்த பொருள்களின் குணங்களைத் தனதுகுணமாகக் கொண்டிருத்த
லென்னுமிரண்டும் பளிங்கின் குணமா மென்றவாறு.
எனவே, அதுபோலக் களங்கமற்று விளங்கிய நுண்ணுணர்வா லாசிரியன்கொடுத்த பலவேறு வகைப்பட்ட
கல்விகளையெல்லா முணர்விலூட்டிக் கற்ற கல்வியைப் புறத்தே தோற்றுவிப்பனென் றுவமை யுய்த்துணர நின்றவாறு காண்க.

43.நீர்தெரித்தமிர்துணுநீர்மையினோதிம
மோரிருபான்மைக்குவமையதாகும்.
(எ-ன்) அன்னம் அவரறிவிற் குவமையாதற் கேதுவுணர்-ற்று.

(இ-ள்) பாலையும் புனலையுங் கலந்துவைத்தாற் புனலைநீக்கிப் பாலைப் பருகுந்தன்மை
யிரண்டினா லோதிம மவரிடத்துண்டானவோ ரிரண்டு பகுதிக் குவமையாமென்றவாறு.
எனவே, அதுபோல வவரும் பலவேறு வகைப்பட்ட கல்வியுள் அசாரத்தை நீக்கிச் சாரமான கல்வியை
யுட்கொள்வரென் றுவமையுய்த்துணர நின்றவாறு காண்க.

44.பகிரதிமுதலியபன்னதியுட்புக
வுகுதலின்றாய்த்தன்னுட்கொளுமுவாவே.
(எ-ன்) பரவை யுவமையென்பதற் கேதுவுணர்-ற்று.

(இ-ள்) கடல், கங்கைமுதலாகிய பல நதிகளும் தன்னுட்புகா நிற்பவு மவற்றைப் புறத்தே கக்குதலின்றித்
தன்னகத் தடக்கிக்கொள்ளு மென்றவாறு. எனவே, அக்கடல்போல வவருணர்வும் ஆசிரியன் அறிவிக்க
வுட்கொண்ட வெல்லாக்கல்வியையும் புறத்தே தப்பவிடா துட்கொள்ளுமென் றுவமை யுய்த்துணரநின்றவாறு காண்க.

45.படிந்துவாறுத்துணப்படுபுனல்யாண்டும்
படர்ந்து பஃறுளியிற்பயன்றருமுகிலே.
(எ-ன்) கொண்மூ வுவமையென்பதற் கேது வுணர்-ற்று.

(இ-ள்) மேகஞ் சமுத்திரத்திற்படிந்து உவரறுத்துண்டு விளைவெய்திய புனலை யுலகமெங்கு
மாங்காங்குச் சென்று பலதுளியாகப் பெய் துலகத்திற்குப் பயனாமென்றவாறு. உலகம் சொல்லெச்சம்,
எனவே, அதுபோல அவர் தம்மாசிரியனிடத்து அதிகரிக்கப்பட்ட வவற்றுள் அசாரநீக்கிச் சாரமுட்கொண்டு
பரிபாலிக்கப்பட்ட தம்மிடத்துக் கல்வியையு முலகின்கண் வரைதலின்றி யாவர்மாட்டுங்கொடுப்பரென
வுவமை யுய்த்துணர நின்றவாறு காண்க. இவை நான்கிற்குங் குறிப்புவமை முன்புபோலக் கொள்க.

இனிக் கற்பிக்கப்படாதோ ரொருபன்மூவர். அவர்தாம்,

46.காமுகன்களியன்கடுஞ்சொலன்சினத்தன்
மடியன்றடுமாறுளத்தன்மறவியன்
றுயில்வோன்பிணக்கன்சோரன்பொய்யன்
மானவன்பிணியின்மரீஇயவனிவர்க்குநற்
றானமதாயினுஞ்சாற்றார்நூலே.
(எ-ன்) கற்பிக்கப்படாதோர்க்கு வரையறை கூறுதனுதலிற்று.

(இ-ள்) காமுகன் முதலாகப் பிணியின்மரீ இயவ னீறாகப் பதின்மூன்று பெயர்க்குங் கல்வியீத னற்றானமென்று
நூல்கள் கூறிற்றாயினுஞ் சான்றோர் பெருநூ லுணர்த்தாரென்றவாறு.
பெருநூலென்ப தாட்சி பற்றிய சொல்லெச்சம். இவர் தன்மையாவன :-

47.ஆடுபந்துறுசுவரளந்தறிமுகவை
கோடின்றாங்குளனெனுங்குறியோரே.
(எ-ன்) கற்பிக்கப்படாதோர்க் குவமை யுணர்ற்று.

(இ-ள்) ஆடும் பந்து றுசுவரு மொருபதார்த்தத்தை யளந்தறி முகவையுங் கரையில்லாத
வேரியு முவமையா மிலக்கணத்தை யுடையரா மென்றவாறு. இவைநான்கு முவமையாதற் கேது மேற்காட்டுதும்.

48.ஓரிடத்துறுகுளகமைத்தறவுண்ணா
தவணவணிறைவற்றலமருமாடே.
(எ-ன்) ஆடுவமையாதற் கேது வுணர்ற்று.

(இ-ள்) ஆடு நுகரிடத்து மிகுதியாகவுண்டான குழையை நிறைய வுண்ணாது சிறிதருந்தியதனாற்
பசியடங்கா தாங்காங்குத் தெருமந்து திரியுமென்றவாறு.
எனவே, அதுபோல வவரு மொருசா ராசாரிய னிடத்துக் கற்கத்துடங்கிய முக்கியமான வொருநூலையாயினு
மவனிடத்துத் தெற்றென முற்றக்கல்லாது பல நூல்களையும் பலரிடத்துங் கற்கத்தொடங்கிச் சிறிதுசிறிது
கற்றுக் கல்விமுற்றா துழல்வரென்றுவமையுய்த்துணரநின்றவாறு காண்க.

49.எற்றியபந்தினையெதிர்செலவிடுத்தொரு
பற்றறநிற்பதுசுவரின்பண்பே.
(எ-ன்) பந்துறுசுவ ரொப்பென்பதற் கேதுவுணர்ற்று.

(இ-ள்) ஒருவர் கையாலெற்றியபந்தினைத் தன்மெய்யிற்பரிசித்ததனை யெற்றியவரெதிர் செலவிடுத்துத்
தானப்பந்தோடு பரிசித்திருக்கும் பற்றின்றி நிற்பது சுவரின் குணமாமென்றவாறு.
எனவே, அதுபோ லவரு மாசாரியன் றமது மனத்திலே பற்றவுரைக்கப்பட்ட கல்வியையு மனப்பற்றின்றி
வறியமனதாயிருப்பரென் றுவமை யுய்த்துணரநின்றவாறு காண்க.

50.அளந்தகத்தடக்கியபொருள்களையாங்கவண்
முற்றப்புறத்துகன்முகவையின்குணமே.
(எ-ன்) முகவை யொப்பென்பதற் கேது வுணர்-ற்று.

(இ-ள்) அளந்தறிவதாகிய பதார்த்தங்களை யொருவர்பெய்யத் தன்னகத் தடங்கியபொருள்களை
முழுதும் புறத்தே யுகுவது முகவையின்குணமா மென்றவாறு. முகவை நாழிமுதலியனவாம்.
முற்றவும், புறத்துகலும் என்பனவாய்த் தொக்கவும்மை யெச்சவும்மை யாதலாற்
சில பொருள்களா யகத்தடக்கப்பட்டவற்று ளுகுங்காற்சிறி துள்ளே பற்றுவனவு முளவென்றாயிற்று.
அவை எள் பயறு உழுந்து நெல் அரிசி முதலியனவன்றிப் பால் தயிர் நெய் முதலியவாம்.
எனவே, அவரிடத்துஞ் சிறி தாசாரியனுரைத்தவற்றுட் பற்றுவ துளதென் றுவமை யுய்த்துணரநின்றவாறு காண்க.

51.பயஞ்சிறிதடக்கலிற்பயனிரம்பாதாங்
கொழும்புனல்புகுந்தகோடின்றாங்குளனே.
(எ-ன்) கோடின்றாங்குள னுவமையாதற் கேது வுணர்ற்று.

(இ-ள்) கோடின்றாங்குள மாரியாற்பெய்யப்பட்டுப் புகுந்தபுனலைப் புறம்போகவிட்டுச் சிறிது
புனலடக்குவதா லுண்பார்க்கும் போகங் கொள்வார்க்கும் பயனிரம்பாவாமென்றவாறு.
எனவே, அதுபோ லவருந் தம்மிடத் தாசாரிய னளிக்கப்பட்ட கல்வியை முற்றப்பற்றா துணர்வு சிறிதாகலின்,
புறம்போகவிட்டுக் கல்வியிற்சிறியரெனப்பட்டாராய்த் தமக்கும் பிறர்க்கு மினிமைப்பயனிரம்பாத
புன்புலவராவரென் றுவமை யுய்த்துணர நின்றவாறு காண்க.
இவை நான்கு சூத்திரத்தானு முன்பு போலக் குறிப்புவமை கொள்க.
இவ்விருவர்க்கும் “அன்னங்கிளியே நன்னிறநெய்யரி, யானையானே றென்றிவைபோலக், கூறிக்கொள்பகுணனுடையோரே” எனவும்,
“அன்னமாவே மண்ணொடுகிளியே, யில்லிக்குடமாடெருமைநெய்யரி, யன்னர்தலையிடை கடைமாணாக்கர்” எனவும்
முன்னோர் கூறிய சூத்திரங்களானு முவமை யுய்த்துணர்ந்து கொள்க.

52.குரங்கெறிவிளங்காய்கொள்பவர்போல்வார்
பழம்பகைமறைத்துப்பணிபவராகிக்
கூடாவொழுக்கிற்கொள்பவர்கல்விச்
சால்பிலராகித்தலைமைவந்தடுத்தோர்
கரந்தங்கொருவரைக்கற்கவிட்டுணர்வான்
வருபவர்தமக்கும்வழங்கார்நூலே.
(எ-ன்) இதுவுங் கற்பிக்கப்படாதோருட் கூறாதொழிந்தோரை யுணர்ற்று.

(இ-ள்) கொள்வதற்கரிய விளங்கனியை யுண்ணவிரும்பி, அவ்விளவி லிருக்குங் குரங்கைக் கற்கொண்டெறிந்து
அக்குரங்கெறியும் விளங்கனியைக் கொள்பவரைப்போல வுபாயத்தாற் கல்விகோடற்கு வருவார்க்கும்,
பழம்பகையைத் தோன்றாதுமறைத்ததற்குக் கூடாவொழுக்கத்தினோடும் புறத்துற்ற நட்பினராகியும் நிலத்தில் வீழ்ந்து
பணிதன் முதலியன செய்து முபாயமாகக் கல்விகோடற்கு வருவார்க்கும், கல்வியாற் பூரணமிலராயும்
அறிவிலாதாராற் சிறப்பெய்தினோர் பிற சான்றோருழை யுடையார்முன் னில்லார்போலேக் கற்றும்
வெளிப்பட வந்துநின்று கல்லாது மாண்பிறந்தமானத்தாற் பிறரை யவரிடத்துக் கரந்துவிட்டவரேவலால்
வருவார்க்கும் சான்றோர் நூற்பொருள் வழங்காரென்றவாறு. வழங்குதல் வித்தைகொடுத்தல்.
நூல்-ஆகுபெயர். அவை இலக்கண விலக்கியம்

இனிக் களங்கடியப்படுவார் பலர். அவ ரிவரெனல்,

53.ஆசாரமில்லாரழுக்காறுள்ளார்நகுவார்
கூசாதுமற்றொன்றுகூறுவார்–தேசிகன்சொற்
கற்றொன்றுறாதார்கழகத்துறிலிருந்தா
ரெற்றென்றுரையாதிரார்.
என்பதனா லுணர்க. எற்றென்பது கையாற்புடைத்தலுங் காலாலுதைத்தலுமாம்.

இனிக் கோடன்மரபு வருமாறு :-

54.கொள்வோன்கொள்கடன்கூறுங்காலைக்
கடையாமத்திடையெழுந்துளகடன்கழித்
தாரியன்மாளிகைவாயில்சென்றெய்திக்
காலமுமிடனுங்கருதுபுநின்றாங்
கெவணெவணோக்கினனவணுளனாகி
வணக்கமுமொடுக்கமும்வாய்ந்தயனிற்ப
வருகவென்றழைத்தலுமருகுசென்றிறைஞ்சலு
மருத்தியினிருத்தியென்றறைதலுமிருந்தாங்
குரையெனவுரைத்துரைத்துரனுறத்தோய்தரப்
பொழிப்பேயகலநுட்பமெச்சமெனப்
பழிப்பின்றாமுரைபகர்தலுந்தெற்றென
வுணர்ந்தபின்பொழிகெனவொழிதலுமவன்றிறத்
தோவாதுதவுவதொல்லும்வகையா
னேவாதியற்றியவின்பமெய்தியபின்
பகலினுமிரவினும்பயின்றுபின்முன்ன
ரகலானாகியவன்பினனாதலுந்
துயில்வுழித்தைவருந்துணைத்தாளினைத்துறந்
தொல்லையிற்றுயின்றேழுந்தொழுகுதலன்றே.

இவற்றானுணர்க.
இதற்குரை வேண்டுவதில்லை.
“எத்திறனாசானுவக்கு மத்திற, மறத்திற்றிரியாப்படர்ச்சிவழிபாடே” என்பதுங்கூட்டி யுணர்க.

55.கேட்டவைகேட்டவைநிரந்தரம்பாடம்
போற்றலினேட்டிற்றானேபொறித்தலு
முரைநுழைந்துணர்ந்தவொண்பொருளையுள்ளுறுத்தலு
மயலற்றொருபுடைபயின்மாணாக்கரி
னையமெய்தியதையமகற்றலு
மெய்யுணர்வினிலுறப்பிறர்க்கவைவிளம்பலு
மெய்தியதிழவாததற்கிலக்கணமே.
(எ-ன்) கற்றகல்வி யிழவாததற் குபாயமுணர்ற்று.

இதன்பொருள் வெளிப்படை. இதனுள் உரைநுழைதலென்பது உரைமுகத்து நுண்ணிதா யாசிரியன்
காட்டக்கண்ட அரும்பதங்களை மனத்தான் மறவாது தரித்தல். இவ்வாறுகோடலால் மாணாக்கன் முற்ற வுணர்ந்தானாமாறு.
“ஆசானுரைத்ததமைவரக்கொளினுங் காற்கூறல்லது பற்றிலனாகும்,”
“அவ்வினையாளரொடுபயில்வகையொருகால்-செவ்விதினுரைப்பவவ்விருகாலு-மையறுபுலமை மாண்புநனி யுடைத்தே”
என்னுஞ் சூத்திரங்களானு முணர்க.

56.தோய்ந்தவையன்றியுந்தோயாதவற்றை
யாய்ந்தெழுகாலத்ததன்பயனெனலாய்
விழுமியதிறத்தினுள்விழுமியதொன்றாஞ்
சொல்லொடுசொல்லினைத்தொடுத்தலுந்தொலையாக்
கல்வியிற்பயிறலுங்கடனாகும்மே.

(எ-ன்) முன்னர் நூனுவல்வோனாகிய வாசிரியன் வாடாக்கற்பக மணமலிபொற்பூப்போல
வாய்ந்தமைவுடைய கல்வியுங் கவியுமுடைய னாதல்வேண்டுமென்றா ரவ்வாரியன்போல
மாணாக்கனுங் கல்வியுங் கவியுமுடையனாதற் குபாய முணர்-ற்று.

(இ-ள்) கற்றநூலன்றிக் கல்லாதவற்றையு மாராயுங்காலத்துக் கல்வியாலாய விழுமிய கூறுபாட்டையுடைய
கலை பலவற்றுள்ளும் விழுமிய பயனென் றுலகங்கூறப்படுவதாஞ் சத்தங்களைத்தொடுத்துச்
சாதிப்பதூஉம் தொலையாக் கல்வியுடன் சாதித்துவருவதூஉ முறையா மென்றவாறு.

57.பாவினையொலிபெறப்படனஞ்செய்திடு
நாவினனாகிநாற்கவிப்புலவோர்
புதுமொழிபுணர்ப்புழிப்பொறிப்பவனாகியு
மனப்படுமொருபொருண்மதித்தவரொருமொழி
யெடுத்ததற்கியைபுறவெதிரெதிர்பன்மொழி
தொடுப்பதும்பெயர்வினைகோப்புணப்பிறிதடி
தொடுப்பதுந்தொடைபலதொடர்ந்தொருபாவாய்
முடிப்பதுங்குறிக்கொளன்முதற்காரணமே.
(எ-ன்) சத்தஞ்சாதித்தற்கு முதற்காரண முணர்ற்று.

(இ-ள்) புலவர்பலரும் பாடிய பாப் பாவினங்களை யவ்வவபாவிற் கமைத்த வொலிமுறையே
படனஞ்செய்திடும் வாக்கினனாகியும், அந் நாற்கவிப்புலவர் புதுமொழிபுணர்ப்புழி யவர்க்குப் பட்டோலை
பொறிப்பவனாகியும், ஒருபொருளைக் குறித்தவர் முதலேயோர் சொல்லையடுத்தலு மதன்மேற் பன்மொழி
யவ்வடிக்குப் பொருந்தக் கொளுவுதலும், அதன் மேற் பலவடியையுந் தொடுத்தலும்,
அடிதொடர்ந்தா லொருதொடையினாதல் பலதொடையினாதல் ஒருபாவாக்கிப் பெயராதல் வினைபாதல்
கோப்புண முற்றமுடிப்பது முதலாயினவற்றை மனத்துட் குறிக்கொளலுஞ் சத்தந்தொடுத்தற்கு
முதற்காரணமா மென்றவாறு. ஒழிந்த வகலமுரையிற்கொள்க.

58.சொற்பொருளணிநலன்றோயாதாயினு
மடியாதெடுத்தடிமடக்குதலின்றா
யாப்பினதுறுப்பிழுக்காதிறுதியில்வினை
கோப்புணமுடித்தலதன்முதற்குறியே.
(எ-ன்) இதுவும் அச்சத்தஞ்சாதித்தற்கு முதற்குறி யுணர்ற்று.

குறியாவ திலக்கணம். உறுப்பு – எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை யென்னு மாறுறுப்பும்.
நலனென்பது கேட்டோர்க்கின்பங் கொடுத்தல். தோயாதது – கூடாதது. ஒழிந்த அகல முரையிற்கொள்க.

59.அருமணிநிரல்வைத்தன்னசொன்னல
னொளியதனுட்சிறந்தன்னபொருணல
னழகதற்காங்கமைந்தன்னவணிநல
னுரனுடைப்பழம்பாட்டுணர்வுழியுணர்ந்தோர்
வரனுடைப்பாட்டுணர்வாய்மையின்வருமே.
(எ-ன்) அங்ஙன முன்னர்க்கூறிய முதற்குறிப்பும் குறிக்கொள்பவன் கூறுஞ் சத்தங்களினிடத்துச்
சொன்னலனும் பொருணலனு மவ் விரண்டினாலுமான வணிநலனு மெய்துதற் குபாய முணர்-ற்று.

உரனுடைப்பழம்பாட்டென்பன சங்கச்செய்யுள். ஒழிந்த அகல முரையிற்கொள்க.

பொதுப்பாயிர முற்றும்

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருஎழுகூற்றிருக்கை (சித்திரக்கவி வடிவம்) – மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றியது

April 27, 2022

ஸ்ரீ திருஎழுகூற்றிருக்கை (சித்திரக்கவி வடிவம்) – மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றியது

ஸ்ரீ திருஎழுகூற்றிருக்கை
இலக்கணம்:-
எழுகூற்றிருக்கை என்பது சித்திரக் கவிகளுள் ஒருவகை. இஃது இரத பந்தத்தில் (தேர் உருவில்) அமைக்கப்பெறும்.
தேரின் உருவம் போன்று கட்டங்கள் அமைத்து அவற்றில் எண் முறையை
ஒன்று முதல் ஏழுவரை குறைந்தும் கூடியும் வருமாறு வைத்துப் பாடுவது எழு கூற்றிருக்கை.
எழு+ கூறு+ இருக்கை எனப்பிரிந்து நின்று பொருள் தரும்.

கோதி லேழறை யாக்கிக் குறு மக்கண்
முன்னின்றும் புக்கும் போந்தும் விளையாடும்
பெற்றியால் வழு வாமை யொன்று
முதலாக வேழீ றாய்முறை யானே
இயம்புவ தெழுகூற் றிருக்கை யாகும் – முத்துவீரியம் 1123

பூரியே முரையாக்கி குறுமக்கண் முன்னின்று
புக்கு போந்துங்கேளியும்
புகழின்வழு வாமையா லொன்றுமுத லேழிறுதி
புகலெழு கூற்றிருக்கை- பிரபந்ததீபிகை – 30

எழு கூற்றிருக்கை ஏழு அறை கீறிக்
குறுமக்கள் முன்னர்க் குறுகியும் மறுகியும்
விளையாடும் பெற்றி விளம்புதல் என்ப- பிரபந்த தீபம் – 20

எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் என்னும் அருட்பெருஞ்சோதித் தனிப்பெரும்
கருணையரின் திருவருட் பெரும் புகழை திரு எழுகூற்றிருக்கை என்னும் சித்திரக் கவியான் விதந்தோதுதல் இப்பனுவலின் நோக்கம்.

திருஎழுகூற்றிருக்கை

காப்பு
தொழுதெழுந்தேன் துய்யமலர்ப் பொற்பாதம் சீரார்
எழுகூற்றிருக்கைதனைப் பாட – முழுமுதல்வர்
மெய்வழிதெய் வத்தருளார் வான்கருணை தான்வையம்
உய்ந்திடநற் காப்பாகும் காண்.

நூல்
நிலைமண்டில ஆசிரியப்பா

ஒருதனி முதல்வ! மெய்வழி அருள்தரும்
ஒருதிரு இறையே! இருவினை தீர்க்கும்
ஒருபெருந் தகையே! திருவடி சரணம்
ஒருதிரு வுருவாய் இருபத முளரிகள்
திருவுள மிரங்கி முத்தி வழங்கும் ⁠(5)

திருவுயர் புவியில் அருள்நடம் புரிய
இகபர மிரண்டின் செல்வம் ஒருங்குற
ஓர்எழில் மறைநா உயிர்உடல் இரண்டும்
முப்பதிச் சோபனம் நாற்பதம் பெறவே
முத்தா பங்கள் தீர்ந்திட இரண்டாம் ⁠(10)

மறுபிறப் பெய்தினம் மலரடி ஒன்றி
குருவருள் பெறவே ஒருமெய் வழியில்
இருங்குணப் பழமையர் மூவா முதல்வர்
நாற்கா ரணரெனும் ஐவகைப் பொறுப்பினர்
நாற்கவி ராஜர் முத்தமிழ் வித்தகர் ⁠(15)

வையகம் வானகம் இரண்டும் ஈடிலா
ஒருபெரும் தவத்துறை ஓங்கு சிறப்பினர்
ஒருங்கெமைக் கூட்டி இரண்டறக் கலந்து
முச்சுடர் காட்டி நாற்கரம் அருளி
ஐம்மணிப் பொதிகை ஆற்றினில் இருத்தி ⁠(20)

ஐம்புலன் அடக்கும் ஆற்றலும் அருளி
நாற்சிற குடைய பிரணவப் பட்சி
ஆசனத் திருத்தி அழகிய மும்மணி
இருள்மனத் தொளிசெய் ஒருபெருங் கருணையே
ஒன்றே குலமென உரம்பெற நிறுவி ⁠(25)

இரண்டிலை இறைவர் எனவே உறுதிசெய்
முக்குண இயல்பில் சத்துவம் ஓங்க
நான்மறை தெளிய ஐந்திரம் சிறக்க
அறுபுரிக் கோட்டை ஏழ்நிலை மாடம்
அங்கதில் ஏற்றி அறுபுரி நூலை ⁠(30)

அணிவித் தைங்கரர் நால்வாய்த் தகையர்
முப்பழம் மோதகம் திருமுனர் படைக்க
இருகரம் அருளினீர் ஏழையேன் ஒருவன்
ஒன்றினேன் உயர்திரு இருமலர்ப் பதத்தில்
உடல்பொருள் ஆவி மூன்றும் சாற்றி ⁠(35)

அறம்பொருள் இன்பம் வீடெனும் நான்குற
ஐவண நாதர் ஆறங்கம் தெளிவித்(து)|r}}
ஏழ்வகை அமானிதம் என்னென விளக்கி
அறுவகை வேகம் அதுபின் னடையவே
ஐவழி தீங்கில் செல்லா திருத்தி ⁠(40)

நாற்கரம் தந்துமுத் தோடம் விலகிட
இருவழி யன்று ஒருவழி மெய்வழி
என்றுநன் குணர்த்தி அருள்தரும் தெய்வமே
ஒன்றாய்க் காண்பது காட்சி என்று
நன்றாய்த் தெளிவது நன்னிலை ஏற்றம் ⁠(45)

இரண்டிலை ஏகன்அ னேகன் என்பதை
மன்பதை மாந்தர் அறிந்து முப்பாலுக்(கு)|r}}
அப்பால் ஆக்கிய அருட்பெருஞ் சோதி
நால்வகை வருண மேல்வகை அனந்தர்
ஐவகை நுகர்வில் அழுந்தா துய்ய ⁠(50)

அறுவகைக் குற்றம் அகன்ற மாண்பினர்
செம்புலத் தாழ்க ஐம்புல நுகர்வு
நானிலம் தன்னின் மேனிலம் சாலை
மூவகைப் பண்பில் முதலது சத்துவம்
அத்தகு சத்துவத்(து) தாழ்ந்திட எங்கோன் ⁠(55)

இரண்டெனும் வாசியில் ஏகும் தரம்தெரி
ஒருபெரும் மெய்வழி உய்வழி செப்பினர்
ஓருயிர்க் கலையே உய்கதி நிலையே
சீருயர் தவத்தோர் தங்கிரு தயமே
முந்நீர் ஆழ்ந்த மகிதல மிசைவரு ⁠(60)

நாற்பத மேஅருள் நாதநா தாந்தா
அஞ்சேல் என்றெமக் கடைக்கலம் அருளி
நால்வரு ணத்தின் மேல்வரு ணத்தோன்
என்றெனை ஆக்கிய இன்னுயிர்த் துணையே
மும்மலம் கருகு முறையருள் முதல்வா ⁠(65)

இருநிதிக் கரசே எனைஒரு பொருளென
ஏன்றமெய்த் தயவே எம்பெரு மானே
ஆன்றசற் குருவே அளக்கரும் புகழோய்
ஒருகற் பகமே உயர்நிலை ஏற்றி
இருயிங் கெனவே எளியனை யமர்த்தி ⁠(70)

முத்தமிழ்க் கடலுள் மூழ்கிடச் செய்த
அத்தனே நான்மறைக் கரசே போற்றி
முப்பா டியற்றி முதுகலை பயிற்றி
செப்பரும் தவத்துறை திறமருள் இறையே
தங்கமா கிடுநெறி தனிலிரு வென்ற ⁠(75)

துங்கமா மணியே தொல்புவிச் செல்வமே
எங்கெவர்க் கும்ஓர் இணையிலாத் துணையே
சங்கத் தமிழே தனிச்சீ தனமே
ஒருதனித் தலைமை உதயமே! இதயமே!
இருமை வகைதரு திரிமூர்த் தியரே ⁠(80)

பெருமை தருகும் சீரடி ஈரடி
ஓரடி யாலே உலகளந் தோயே
சேரடி என்றெனைச் சேர்த்தணைத் தாயே!
ஒரடி என்றெனை ஈரியல் பறிவால்
ஒருமை வகைபுரி ஓங்கிடு தவத்தமர் ⁠(85)

ஒருவரே மெய்வழி தெய்வமே வாழிய! ⁠(86)

குறிப்பு:-

இருவினை : பிறப்பு, இறப்பு (நல்வினை, தீவினை யன்று)
பதம் : திருவடி
முளரி : தாமரை
முத்தி : மோட்சம்
முத்தீ : ஆகவனீயம், தட்சிணாக்கினியம், காருகபத்தியம்
சோபனம் : அழகு, வாழ்த்து
முத்தாபம் : ரோகத்தரித்திரியம், ஜெகமிருக அபாயபயம், திண்டாடும் இறுதியின் நாள் துன்பம்
நாற்காரணம் : தூங்காமை, கல்வி, துணிவுடைமை, நீங்காநிலம்
நாற்கவி : ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம்
முத்தமிழ் : இயல், இசை, நாடகம்
முச்சுடர் : சூரியன், சந்திரன், அக்கினி
ஐம்மணிப்பொதிகை : பஞ்சாட்சரம்
மும்மணி : சூக்குமதேகம்
முக்குணம் : சத்துவம், ராஜஸம், தாமஸம்
ஐந்திரம் : நித்தியம் பெறும் யோகம்
முப்பழம் : மா, பலா, வாழை
ஏழ்வகை அமானிதம் : காலம், நியதி, கலை, வித்தை, ராகம், புருஷன், சுத்தமாயை(என்னும் வித்தியாதத்துவங்கள்)
அறுவகை வேகம் : சரகதி, சர்ப்பகதி, மயூரகதி, இடிகதி, மின்கதி, மனோகதி (கதி = வேகம்)
ஐவழி : ஐம்பொறிகளால் உணரப்படும் உணர்வுகள்(கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறிதல்)
முத்தோஷம் : நினைவால் செய்வது தோஷம்; சொல்லால் வருவது குற்றம்; செய்கையால் வருவது பாவம்
அறுவகைக் குற்றம் : காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம்
மூவகைப் பண்பு : சத்துவம், ராஜஸம், தாமஸம்
முந்நீர் : ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்(கடல் எனவும் பொருள் பெறும்)
மகிதலம் : உலகு
நாற்பதம் : சாலோகம்,சாமீபம், சாரூபம்,சாயுச்சியம்
மும்மலம் : ஆணவம், கன்மம், மாயை
இருமை : இம்மை, மறுமை
முப்பாடு : மனம், மொழி, மெய்களால் பாடுபடுதல்
தூயது : தங்கம்

திருஎழுகூற்றிருக்கை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!

——————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நக்கீர தேவ நாயனார் -ஸ்ரீ திரு வெழு கூற்று இருக்கை

April 27, 2022

பதிக வரலாறு :
எழுகூற்றிருக்கை – ஏழு கூறுகளது இருக்கையாகிய பாட்டு. இருக்கை – இருப்பிடம்.
ஏழு கூறுகள், ஒன்று முதல் ஏழு முடிய உள்ள எண்கள் ஒரு முறை கூடியும், குறைந்தும் வர,
எண்ணலங்காரம் அமையப் பாடுவதால் அமையும்.

அம்முறையாவது:
1) 1,2,1.
(2) 1,2,3,2,1
(3) 1,2,3,4,3,2,1,
(4) 1,2,3,4,5,4,3,2,1,
(5) 1,2,3,4, 5,6,5,4,3,2,1,
(6) 1,2,3,4,5,6,7,6,5,4,3,2,1.

ஏழு கூறு வருதல் வேண்டும் என்பதற்காக ஆளுவதாகச் சொல்லப்பட்ட அந்த முறையை
மீட்டும் ஒருமுறை சொல்லிப் பாட்டை முடிப்பார்கள். இப்பாட்டு அகவற்பாவாகவே வரும்,
இது, `மிறைக் கவி` எனப்படும் சித்திர கவிகளில் ஒன்றாகும்.
அதற்கு ஏற்ப இதனைத் தேர்போல வரையப்பட்ட ஓவியத்திற்குள் எண்ணுப் பெயர்கள் முறையாக அமைய அடைத்துக் காட்டுவர்.
அதனால் இது `மிறைக் கவி` எனப்படும் சித்திர கவிகளில் ஒன்றாகும்.
அதற்கு ஏற்ப இதனைத் தேர்போல வரையப்பட்ட ஓவியத்திற்குள் எண்ணுப் பெயர்கள் முறையாக அமைய அடைத்துக் காட்டுவர்.
அதனால், இது `இரத பந்தம்` என்றும் சொல்லப்படும்.

சித்திர கவியை `அருளாளரல்லது பிறர் பாடலாகாது` எனத் தொல்காப்பிச் செய்யுளியல் உரையில்
ஆத்திரையன் பேராசிரியனார் கூறுவர்.
திருஞானசம்பந்தர் அருளிச் செய்த சித்திரக் கவிப்பாடல்களுள் திரு எழுகூற்றிருக்கையும் ஒன்று.1 என்பது அறியத்தக்கது.
இதனுள் சில சொற்கள் பொருளால் எண்ணுப் பெயராய் இல்லாவிடினும் சொல்லால் எண்ணுப் பெயராய் எண்ணலங் காரத்தை நிரப்பும்,
எண்ணலங்காரமும் முரண் தொடையுள் அடங்கும்.

ஒருடம் பீருரு வாயினை ஒன்றுபுரிந்
தொன்றின் ஈரிதழ்க் கொன்றை சூடினை
மூவிலைச் சூலம் ஏந்தினை
சுடருஞ் சென்னி மீமிசை
இருகோட் டொருமதி எழில்பெற மிலைச்சினை:
ஒருகணை இருதோள் செவியுற வாங்கி
மூவெயில் நாற்றிசை முரணரண் செகுத்தனை
ஆற்ற முன்னெறி பயந்தனை
செறிய இரண்டும் நீக்கி
ஒன்று நினைவார்க் குறுதி ஆயினை
அந்நெறி ஒன்று
மனம்வைத் திரண்டு நினைவிலோர்க்கு
முன்னெறி உலகங் காட்டினை அந்நெறி
நான்கென ஊழிதோற்றினை
சொல்லும் ஐந்தலை அரவசைத் தசைந்தனை

நான்முகன் மேல்முகக் கபாலம் ஏந்தினை
நூன்முக முப்புரி மார்பில்
இருவர் அங்கம் ஒருங்குடன் ஏந்திய
ஒருவநின் ஆதி காணா திருவர்
மூவுல குழன்று நாற்றிசை ஊழிதர

ஐம்பெருங் குன்றத் தழலாய்த் தோன்றினை
ஆறுநின் சடையது ஐந்துநின் நிலையது
நான்குநின் வாய்மொழி மூன்றுநின் கண்ணே
இரண்டுநின் குழையே ஒன்றுநின் ஏறே
ஒன்றிய காட்சி உமையவள் நடுங்க

இருங்களிற் றுரிவை போர்த்தனை நெருங்கி
முத்தீ நான்மறை ஐம்புலன் அடக்கிய
அறுதொழி லாளர்க் குறுதி பயந்தனை
ஏழில் இன்னரம் பிசைத்தனை
ஆறில் அமுதம் பயந்தனை ஐந்தில்
விறலியர்கொட்டும் அழுத்த ஏந்தினை
ஆல நீழல் அன்றிருந் தறநெறி
நால்வர் கேட்க நன்கினி துரைத்தனை
நன்றி இல்லா முந்நீர்ச் சூர்மாக்
கொன்றங் கிருவரை எறிந்த ஒருவன்

தாதை ஒருடல் திருவடி வாயினை
தருமம் மூவகை உலகம் உணரக்
கூறுவை நால்வகை
இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை
ஐங்கணை யவனொடு காலனை அடர்த்தனை அறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனை
ஏழின் ஓசை இராவணன் பாடத்
தாழ்வாய்க் கேட்டவன் தலையளி பொருந்தினை
ஆறிய சிந்தை யாகி ஐங்கதித்
தேரொடு திசைசெல விடுத்தோன்
நாற்றோள் நலனே நந்திபிங் கிருடியென்
றேற்ற பூதம் மூன்றுடன் பாட
இருகண் மொந்தை ஒருகணம் கொட்ட
மட்டுவிரி அலங்கல் மலைமகள் காண
நட்டம் ஆடிய நம்ப அதனால்

சிறியேன் சொன்ன அறிவில் வாசகம்
வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும்
வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து
கீதம் பாடிய அண்ணல்
பாதம் சென்னியிற் பரவுவன் பணிந்தே

பணிந்தேன்நின் பாதம் பரமேட்டீ பால்நீ
றணிந்தால வாயில் அமர்ந்தாய் தணிந்தென்மேல்
மெய்யெரிவு தீரப் பணித்தருளு வேதியனே
ஐயுறவொன் றின்றி அமர்ந்து

—————–

குறிப்புரை

அடி-1)
ஒருடம்பு ஈருரு வாயினை ஒன்று புரிந்து
ஓன்றின் ஈரிதழ்க் கொன்றை சூடினை

ஒன்று புரிந்து – வீடு பேற்றினை விரும்பி. (உயிர்கள் அடைய வேண்டும் என்று கொன்றை சூடினை என்க.)
கொன்றைப் பிரணவ வடிவினது ஆதலால், பிரணவத்தின் பொருள் தானே என்பதை உயிர்கள் உணர்ந்து
வீடடையவே அம்மாலையை அடையாள மாலையாகச் சிவன் சூடியுள்ளான்` என்றபடி.

(அடி-2)
ஓன்றின் ஈரிதழ்க் கொன்றை சூடினை
ஒன்றின் – `ஓரு காம்பிலே ஐந்து இதழ்` என்க.
ஈர் இதழ் – குளிர்ந்த இதழ்

(அடி-5)
இருகோட் டொருமதி எழில்பெற மிலைச்சினை:
இரு கோடு – இரண்டு முனை.

(அடி-7) `
மூவெயில் நாற்றிசை முரணரண் செகுத்தனை
மூவெயிலது அரண்` என்க.
முரண், நாற்றிசையிலும் செல்லும் முரண், முரண் – வலிமை.
அரண் பாதுகாத்தல். `முரணுடைய அரண்` என்க.

(அடி-8)
ஆற்ற முன்னெறி பயந்தனை
ஆற்ற – மிகவும், ஆற்றப் பயத்தல் – முற்ற விளக்குதல்.
முன் நெறி முதல் நெறி “முன்னெறியாகிய, முதல்வன்
முக்கணன் தன்னெறி“ 2 என அப்பரும் அருளிச் செய்தார்.
“முன்னெறி“ என்பது ஓசை வகையில் `முந்நெறி` என்பதனோடு ஒத்து,
`மூன்று` என்னும் எண்ணலங் காரமாய் நின்றது.
இவ்வாறு மேலும் வருவனவற்றை அறிந்து கொள்க.

(அடி-9)
செறிய இரண்டும் நீக்கி
இரண்டு – விருப்பு வெறுப்புக்கள்

(அடி-10)
ஒன்று நினைவார்க் குறுதி ஆயினை
ஒன்று, திருவருள்.
உறுதி – நல்ல துணை.

(அடி-11,12) `
அந்நெறி ஒன்று
மனம்வைத் திரண்டு நினைவிலோர்க்கு
அந்நெறி ஒன்றையே மனத்துள் வைத்து` என்க.
இரண்டு நினைவு – ஐயம்

(அடி – 13)
முன்னெறி உலகங் காட்டினை அந்நெறி
முன் ஏழாவது விரிக்க

(அடி -14)
நான்கென ஊழிதோற்றினை
ஊழி – யுகம். `ஊழி நான்கு எனத் தோற் றினை` (படைத்தனை) என்க.

(அடி-15)
சொல்லும் ஐந்தலை அரவசைத் தசைந்தனை
சொல்லும் – சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற.
அசைத்து – உறுப்புக்களில் கட்டி.
அசைந்தனை – ஆடினை

(அடி -16)
நான்முகன் மேல்முகக் கபாலம் ஏந்தினை
மேல் முகம் உச்சி முகம்.
கபாலம் – தலை ஓடு.

(அடி-17)
நூன்முக முப்புரி மார்பில்
நூல் முகப் புரி` என்க.
தோளில் ஏந்திய அங்கத்தை மார்பில் ஏந்தியதாகக் கூறினார்.

(அடி-18)
இருவர் அங்கம் ஒருங்குடன் ஏந்திய
இருவர், அயனும், மாலும். அங்கம் எலும்புக் கூடு.
இது `கங்காளம்` எனப்படும்.

(அடி-19) `
ஒருவ நின் ஆதி காணா திருவர்
ஒருவனாகிய நினது` என்க.
“ஆதி“ என்றதனானே அந்தமும் கொள்க.
ஐ – அழகு. இஃது `ஐந்து` என்பதுபோல நின்றது.

(அடி-22)
ஆறுநின் சடையது ஐந்து நின் நிலையது
ஆறு – யாறு; கங்கை. இதுவும் எண்ணுப் பெயர் போல நின்றது,
ஐந்து நிலைகளாவன படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்

(அடி-23)
நான்குநின் வாய்மொழி மூன்றுநின் கண்ணே
வாய்மொழி, வேதம்.

(அடி-24)
இரண்டுநின் குழையே ஒன்றுநின் ஏறே
இரண்டு – இரண்டு வகை. `
`குழை“ என்பது பொதுப்பட, `காதணி` என்னும் பொருட்டாய் நின்றது.

(அடி-26)
இருங்களிற் றுரிவை போர்த்தனை நெருங்கி
இரு – பெரிய. இதுவும் எண்ணுப் பெயர்போல வந்தது

(அடி -28)
அறுதொழி லாளர்க் குறுதி பயந்தனை
உறுதி, அறம் முதலிய பொருள்கள்.
ஆறில் அமுதம் – அறுசுவையில் உணவு.

(அடி -31)
ஐந்தில் விறலியர்கொட்டும் அழுத்த ஏந்தினை
ஐந்து – ஐந்து வகையான இசைக் கருவிகள். (தோல், துளை, நரம்பு, கஞ்சம், மிடறு.)
கொட்டு – வாச்சியம்.
உம்மை, எச்சப் பொருட்டு. `எல்லா வாச்சியங்களையும் இறைவன் உடையவன்` என்றபடி,

(அடி-34)
நன்றி இல்லா முந்நீர்ச் சூர்மாக்
முந்நீர் – கடல். `முந்நீரில் நின்ற` என்க.
சூர் மா – சூரபதுமனாகிய மாமரம்.

(அடி-35)
கொன்றங் கிருவரை எறிந்த ஒருவன்
இருவரை – பெரிய மலை; கிரௌஞ்சம்.

(அடி – 36)
மிடல் வடிவம் – விசுவ ரூபம். மிடல் வலிமை,

(அடி-37,38) `
தருமம் மூவகை உலகம் உணரக்
கூறுவை நால்வகை
தருமம் கூறுவை` என இயையும்.

(அடி – 38,39) `
கூறுவை நால்வகை
இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை
நால்வகை இலக்கணங்களையும், அவற்றையுடைய இலக்கியங்களையும் மொழிந்தனை` என்க.
நால் வகை இலக்கணமாவன `எழுத்து, சொல்,பொருள், செய்யுள்` என்பன பற்றியவை,
அணியிலக்கணம் வடநூற் கொள்கை.

(அடி-41)
ஐங்கணை யவனொடு காலனை அடர்த்தனை அறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனை
நெறிமையில் நெறியாம் வகையில்.

(அடி-42)
ஏழின் ஓசை இராவணன் பாடத்
ஏழ் இன் ஓசை` என்க.
ஓசை – இசை.

(அடி-43)
தாழ்வாய்க் கேட்டவன் தலையளி பொருந்தினை
தாழ்வு – இரக்கம்.
“அவன்தலை“ என்பதில் தலை ஏழன் உருபு.
அளி- அருள்,

(அடி-44)
ஆறிய சிந்தை யாகி ஐங்கதித்
ஆறிய – தணிந்த. சிந்தையனை, “சிந்தை“ என்றது. ஆகுபெயர்.

(அடி – 45)
ஆறிய சிந்தை யாகி ஐங்கதித் தேரொடு திசைசெல விடுத்தோன்
ஐங்கதி குதிரைகளின் ஓட்டத்தின் வகை.
`ஐங்கதியொடு தேர் திசை செலவிடுத்தோன்` பிரமன்.

(அடி- 46,47)
நாற்றோள் நலனே நந்தி பிங் கிருடியென்
றேற்ற பூதம் மூன்றுடன் பாட
அவனுக்கு முகம் நான்காயினும் தோளும் நான்கே.
நலன். இங்குத் திறமை. `அதனைப் பாட` என்க.
நந்தி பிங்கிருடி – நந்தி கணத்ததாகிய பிங்கிருடி. “
பூதம் மூன்று“ என்றதனால், தண்டி, குண்டோதரன் இவர் கொள்ளப்பட்டனர்,

(அடி-48)
இருகண் மொந்தை ஒருகணம் கொட்ட
கண் – பக்கம்.
மொந்தை, ஒருவகை வாச்சியம்.
ஒரு கணம் – ஒப்பற்ற கணங்கள்.
மட்டு விரி – தேனோடு மலரும்

(அடி -50)
நட்டம் ஆடிய நம்ப அதனால்
“அதனால்“ என்றது, கூறிவந்தவை அனைத்தை யும் தொகுத்துக் குறித்தது.
ஆகையால் இப்பாட்டினை,
`நம்ப, நீ ஓர் உடம்பு ஈருருவாயினை;
கொன்றை சூடினை;….அளி பொருந்தினை,
அதனால், சிறியேன் சொன்ன வாசகம் வறிதெனக் கொள்ளா யாதல் வேண்டும்;

(அதன் பொருட்டு)
அண்ணலாகிய நின் பாதம் சென்னி யிற் பணிந்து பரவுவன்` என இயைத்து முடிக்கற் பாற்று.

(அடி-52)
வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும்
வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து
வறிது – பொருளற்றது.
வெளி – நறுமணம். `
சிவபெருமான் ஊழியிறுதியில் வீணை வாசித்திருப்பன்` என்பதை,
`பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்,
இருங்கடல்மூடியிறக்கும்; இறந்தான் களேபரமும்,
கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே`*
என்னும் அப்பர் திருமொழியால் அறிக.
முக்காலத்தும் நிகழற் பாலதனை, “பாடிய“ என இறந்த காலத்தில் வைத்துக் கூறினார்.

திருஎழுகூற்றிருக்கை முற்றிற்று.

—————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

வாராரு, வாராரு அழகர் வாராரு… ஸ்ரீ மதுரையில் ஸ்ரீ கள்ளழகர் ஆற்றில் இறங்கிய காட்சி…!

April 25, 2022

ஸ்ரீ அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!
எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி.
அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள்.
திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும்.
மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள்.
சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன்,
அவர் குடிக்கொண்டிருக்கும் அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும்.

மதுரைக்கு வடக்கே சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது.
பார்ப்பதற்கு காளை வடிவிலிருப்பதால் இந்த மலைக்கு ‘விரிஷபாத்ரி’ என்று ஒரு பெயர் உண்டு.
தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான்.
தவத்தை மெச்சி, எமதர்மனுக்கு பெருமாள் சாபவிமோசனம் தந்தபோது,
‘இதேபோல் இங்கேயே தங்கியிருந்து பூலோக பக்தர்களுக்கும் அனுக்கிரகம் பண்ண வேண்டும்’ என்று
எமதர்மன் கேட்டுக்கொண்ட காரணத்துக்காக, இந்த மலையில் பெருமாள் குடிகொண்டதாகப் புராணம் சொல்கிறது.

எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப் பெருமாள்
சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார்.
அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது.
பக்தர்களிடமிருந்து அபயக்குரல் வந்தால், கண நேரமும் தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும்
என்பதற்காக சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள்.

மூலவருக்கு அடுத்தபடியாக அதிமுக்கியமானவர் சோலைமலைக்கரசராக விளங்கும் உற்சவர்தான்.
‘அபரஞ்சி’ என்ற அரியவகை தங்கத்தாலானவர் சோலைமலைக்கரசர்.
‘அபரஞ்சி’ என்பது தேவலோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பூஜிக்கிறார்கள்.
உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன.
ஒன்று – அழகர் கோயிலில்! இன்னொன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயிலில்.

அழகர் ஆற்றில் ஏன் இறங்குகிறார் என்று பார்ப்போமா?

அழகர்மலை அடிவாரத்திலிருந்து சுமார் 2 கி.மீ. உயரத்தில் முருகனின் ஆறுபடை வீடுகளில்
ஆறாவதான பழமுதிர்சோலை முருகன் கோயில் உள்ளது. பழமுதிர்சோலை முருகன் கோயிலிலிருந்து
ஒரு கி.மீ. தொலைவில் ராக்காயி அம்மன் கோயில் உள்ளது.
இந்த ராக்காயி அம்மன் சந்நதியிலிருந்து தான் நூபுரகங்கை நீரூற்று உருவாகி வருகிறது.
இந்த நீருற்றில் சுதபமுனிவர் நீராடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஒரு முறை நீராடும்போது எதிர்பட்ட துர்வாசர் முனிவரை, கண்டும் காணாதது போல் இருந்து விட்டார்.
இதனால் ஆத்திரம் கொண்ட துர்வாச முனிவர், சுதபமுனிவரை மண்டூகமாக (தவளையாக) போகக்கடவாய் என சாபமிட்டார்.

சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார்.
அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார்.
பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர்
‘மண்டூகோ பவ’ (தவளையாக போகக் கடவாய்!) என சாபமிட்டார்.
உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது,
‘விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு.
சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்’ என சொல்லியிருக்கிறார் துர்வாசர்.
அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு,
விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் விவரிக்கின்றன.

சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது.
முதல் இரண்டு நாட்கள் கோயிலில் இருப்பார் அழகர்.
மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கிப் புறப்படுகிறார்.
ஆரம்ப காலத்தில் கோயிலை விட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார்.
அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கிவைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள்.
அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்காரநல்லூராக இருந்து,
பின்பு அலங்காநல்லூராக மாறிப்போனதாகச் சொல்கிறார்கள்.
அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர்,
அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு (சுதபஸ்) சாபவிமோசனம் கொடுப்பார்.
இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டியூராகிப் பிறகு வண்டியூராகிப் போனதாம்.

கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (பூமராங்), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி)
என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர்.
அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற
ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்கிவிட்டு,
நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்து சேருகிறார்.
அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்றுமாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு
அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி களைகட்டுகிறது.

நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும்.
இந்த அபிஷேகத்துக்கும் நூபுர கங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது.
அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம். இதிலும்கூட ஒரு நம்பிக்கை.
அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும்.
இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா…என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும்.
கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார்.
அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும்.
அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப
அந்த வருடத்தில் நல்லது – கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும்.
சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது.
நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும்.
வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும்.
மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும்.
இப்படி நம்பிக்கை இருப்பதால் ‘ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?’
எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஐந்தாம் நாள் பௌர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்.
இதற்கு தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது.
அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும்,
வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.
காலப்போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது.
அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது.

ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார்.
ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள்.
அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர்.
வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர்.

ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை.
பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர்,
வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார்.
அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம்
(இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது.
ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது) வந்து சேருகிறார் அழகர்.

தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர்,
அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார்.
பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர்,
ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார்.
அன்றிரவு அங்கு தங்குகிறார்.
இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர்,
ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில்
(திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது)
தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார்.

அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும்.
எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக
பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக்கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோயிலைச் சென்றடைவார்.
பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது.
அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று
மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை.

கோயில் வளாகம் வந்ததும், பல இடங்களில் பலபேர் கண் பட்டிருக்குமே அழகருக்கு
அதனால் திருஷ்டி சுத்தி போடும் வகையில் 18 பூசணிக்காய் களுடன் 18 கன்னிப்பெண்கள் நிற்பார்கள்.
அவர்களிடம் இருந்து பூசணிக்காய்களை வாங்கி காளையர்கள் அழகருக்கு சுற்றிப் போட்டு உடைப்பார்கள்.
பின்னர் செம்பில் சர்க்கரை நிரப்பி அதை வாழ இலையில் மூடி, அதன் மேல் கற்பூரம் வைத்து தீபம் ஏற்று வார்கள்.
இதற்கு சர்க்கரை தீபம் ஏற்றுதல் என்று பெயர்.

காவல் ஜமீன்!

அந்தக் காலத்தில் கள்ளழகரின் பாதுகாவலராக வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் நியமிக்கப்பட்டிருந்தார்.
இன்றுவரை அந்த ஜமீன் வாரிசுகள் தான் கள்ளழகருக்குப் பாதுகாப்பு.
இன்றும் ஜமீன்தார் வந்து அவருக்குரிய மரியாதைகள் வழங்கப்பட்ட பிறகுதான் கோயிலை விட்டு மதுரைக்குக் கிளம்புவார் அழகர்.
அந்தக் காலத்தில் அழகருக்குப் பாதுகாவலாகக் குதிரை பூட்டிய சாரட் வண்டியில்
அழகரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருப்பார் ஜமீன். இப்போது வண்டிதான் மாறியிருக்கிறது.
பத்து நாட்களும் அவர் அழகருடன் இருப்பார். இப்போதும் அதே வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பாண்டிய நாட்டின் இளவரசி தடாகை என்னும் மீனாட்சி போர்கலைகளில் கொடி கட்டி விளங்கி சென்ற
இடமெல்லாம் பாண்டிய நாட்டின் வெற்றிக் கொடியை ஏற்றி வந்தாள்.
வெற்றித் தொடரின் இறுதியில் திருகைலாயம் சென்றபோது சிவனை எதிர்த்து போரிட்டவள்
அவர் மீதான காதலில் தன் மனம் இழந்தாள். இந்த போரும் வெற்றி தான்.
ஆம் பாண்டிய நாட்டு மருமகனாக எம்பெருமான் சிவனை கொண்டு வந்தது மாபெரும் வெற்றிதானே.
போர்க்காயங்களை வெற்றித் தழும்புகளை சிவனின் காதல் மடை மாற்றியது.
மாறாத காதலுடன் மதுரை திரும்பிய தடாகை அன்னை மீனாட்சியானாள்.

அன்னை மீனாட்சியை மதுரையில் கரம் பிடித்து திருமணக்கோலம் கண்டார் சுந்தரேசர்.
தமக்கை மீனாட்சியின் திருமண வைபவத்தில் கலந்து கொள்ள சகோதரர் அழகர்,
மதுரையிலிருந்து 25கிமீ தொலைவில் உள்ள அழகர் மலையிலிருந்து புறப்பட்டார்.
அந்த கால கட்டத்தில் அழகர் மலைப் பகுதியில் கள்ளர்கள் (திருடர்கள்) அதிகம்.
எனவே அழகர் கள்ளர் வேடமிட்டு கள்ளழகராக மாறி தங்கை மீனாட்சிக்கு சீர் கொண்டு வந்த பொருட்களை
பாதுகாத்து வைகை ஆற்றின் அருகே வந்தடைந்தார்.
அதற்குள் மீனாட்சி கல்யாணம் நடந்து முடிந்தது என்பதை அறிந்த அழகர் பெருங் கோபம் கொண்டு
வைகை ஆற்றில் இறங்கினார். தமது சகோதரர் அழகரின் கோபம் அறிந்த மீனாட்சி தனது கணவரான
சுந்தரேஸ்வரருடன் வைகை ஆற்றிற்கே சென்று ஆசி பெற்று சீர் பொருள்களை பெற்றார்.
இன்றைக்கும் இந்த சடங்குகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அழகர்கோவிலுக்குள் ஆயிரமாயிரம் அதிசய தகவல்கள் மூழ்கிக் கிடக்கின்றன.
குறிப்பாக, அழகர்கோவில் கருவறையை ‘நங்கள் குன்றம்’ என்கின்றனர்.
கோயில் கருவறைப்பகுதிக்கு மட்டுமே தனி பெயர் இங்கு மட்டுமே அழைக்கப்படுகிறது.

என்கொல் அம்மான் திருஅருள்கள்?* உலகும் உயிரும் தானேயாய்*
நன்கு என் உடலம் கைவிடான்* ஞாலத்தூடே நடந்து உழக்கி*
தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற* திருமாலிருஞ்சோலை*
நங்கள் குன்றம் கைவிடான்* நண்ணா அசுரர் நலியவே.

ஞாலத்தூடே நடந்து உழக்கி – பூமியெங்கும் நடையாயடியுலாவி
தென்கொள்திசைக்கு நிலதம்ஆய் நின்ற திருமாலிருஞ்சோலை – தெற்குத் திக்குக்குத் திலகமாயிராநின்ற திருமாலிருஞ்டசோலையாகிற
நாங்கள் குன்றம் கைவிடான் – நமது திருமலையைக் கைவிடாதவனா யிருக்கிறான்;
என் உடலம் நன்கு கைவிடான் – என்னுடம்பிலே மிகவும் விருப்பம் பண்ணா நின்றான்;
அம்மான் திரு அருள் என்கொல் – எம்பெருமானுடைய வியாமோஹத்தின்படி என்னே!

கருவறை அடி முதல் முடி வரையான இக்கோயில் விமானம் வட்ட வடிவ அமைப்புடையது.
வட்ட வடிவ கருவறை அமைப்பு தமிழகத்தில்
அழகர் கோயிலுடன்,
காஞ்சிபுரம் கரபுரீஸ்வரர்,
புதுக்கோட்டை நார்த்தாமலை விசயாலயச் சோழீஸ்வரம் ஆகிய
3 பழமைக் கோயில்களில் மட்டுமே இருக்கின்றன.

அழகர்கோவிலின் இந்த வட்ட வடிவக் கருவறையைச் சுற்றி,
அதனுள்ளேயே வட்ட வடிவில் ஒரு திருச்சுற்று பிரகாரமும் இருக்கிறது.
இக்கோயிலின் இந்த கருவறை அமைப்பானது பிற்கால சோழர் காலத்திற்கும் முந்தியது.
பவுத்த கோயிலுக்குரிய வடிவமிக்க இக்கோயிலின் ஆதி தல விருட்சம் போதி (அரச) மரமாக இருந்ததும் அறியப்படுகிறது.
இக்கோயிலில் யுகத்திற்கு ஒன்றாக நான்கு யுகங்களிலும் நான்கு தல விருட்சங்கள் இருந்தாக
அழகர் குறவஞ்சி, சோலைமலைக் குறவஞ்சி இலக்கியங்கள் பேசுகின்றன.
இன்னும் ஸ்ரீரங்கம் கோயில், அழகர்கோயில் இடையே கோட்டை மதிற்சுவர்கள்,
சுதர்சன வழிபாடு, ஆர்யன் வாசல், ஆர்யபடான் வாசல் என பிரதான வாயில்கள்,
தனி நெய்யில் பிரசாதம், விளக்கிடுதல் என்பதுடன் திருவிழாக்களிலும் ஒற்றுமை காண முடிகிறது.

ஆனாலும்.. பக்தர்கள் இறைவனைத் தேடிச் செல்வது ஒருபுறமிருக்க,
தன் மலையிலிருந்து பல்லக்கு பயணத்தில் இறைவனே பக்தர்களைத் தேடி
மதுரை நகர் வரை வந்து 400க்கும் அதிக மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கிற
அதிசயம் ஆண்டுக்கொரு முறை இங்கு மட்டுமே நடக்கிறது.
மீனாட்சி கோயில் திருவிழாவை தொடர்ந்து அழகர் பெருமாள் வந்து செல்வதென ஒரு அற்புதப் பெருவிழா
ஒட்டு மொத்த சித்திரை விழாவாக இரண்டரை வாரங்கள் இந்த மதுரை மண்ணில் நடந்தேறி கடந்திருக்கிறது.
இவ்விழா கொட்டிச் சென்றுள்ள குதூகலம், அடுத்த ஆண்டு வரையிலும் மனதின் ஆழத்திற்குள் அமர்ந்து,
எண்ணும் போதெல்லாம் இதம் சுகம் நிறைக்கும்.

ஸ்ரீ கள்ளழகருக்குரிய திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்ரா பௌர்ணமித் திருநாள் தான் .
மதுரை ஸ்ரீ மீனாட்சிக் கோயிலில் தொடங்கும் சித்திரைத் திருவிழாவும் இவ் விழாவும் ஒரே சமயத்தில் நடக்கின்றன .
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு இந்த இரண்டு உற்சவங்களும் வெவ்வேறு மாதங்களில் நடந்தன.
இதனால் தான் மாசி மாதத்தில் நடக்கும் இத் திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர்களுடைய ரதம்
செல்லும் வீதிகளுக்கும் மாசி வீதிகள் என்று பெயர் ஏற்பட்டது .

திருமலை காலத்திற்கு முன்பு ஸ்ரீ அழகர் சித்திரை மாதத்தில் அலங்காநல்லூர் , தேனூர் முதலிய ஊர்கள்
வழியாக வந்து வைகை ஆற்றில் இறங்கி வண்டியூரில் தங்கியிருந்து , மீண்டும் அழகர் மலையையைடைவது வழக்கம் .
திருமலை நாயக்கர் , இந்த இரண்டு விழாக்களையும் ஒன்றாகச் சேர்ந்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும்
என்று கருதி அப்படியே செய்தார் . அவருடைய ஏற்பாட்டின் படியே இப்பொழுதும் நடந்து வருகிறது.

ஸ்ரீ அழகர் ஆற்றுக்குச் செல்லும் பொழுது முதலில் வெட்டி வேர் சப்பரத்திலும் ,
பிறகு மைசூர் மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்து அருள்வார்.
ஆற்றில் எழுந்தருளியருளும் மதுரை ஸ்ரீ வீர ராகவப் பெருமாள் அவரை எதிர் கொண்டு அழைக்கிறார் .
இந்த வைபவம் அழகர் ஆற்றில் இறங்குதல் என்று சொல்லப்படும் இதனைக் காண
இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு இதைக் காண வருகை தருவார்கள்.

பெரும்பாலும் ஆறுகள் மலைகளில் தோன்றி சமவெளிகளில் பாய்ந்து கடலை அடையும்.
ஆனால், வைகை கடலை அடையாத ஆறு.
அது ஏன் கடலை அடையவில்லை என்பதற்கு கவிஞர் ஒரு கற்பனையான காரணத்தைப் பாட்டாகக் கூறினார்.
பெருந்தொகை என்னும் நூலில் இடம்பெற்றுள்ள அப்பாடல்,
‘நாரி இடப்பாகர்க்கு நஞ்சளித்த பாவி’ என்று
வாரி இடம் போகாத வையையே நதி பெண். கடல் ஆண். தேவர்கள் பாற்கடலை கடைந்தார்கள்.
அப்போது ஆலகால நஞ்சு வந்தது. கடலில் வந்த அந்த நஞ்சை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார்.
வைகை நினைத்ததாம். “ஏ கடலே..எங்கள் அன்னை மீனாட்சியின் நாயகனுக்கு நஞ்சு கொடுத்த
உன்னைச் சேர என் மனம் ஒப்பவில்லை. எனவே, உன்னை அடைய மாட்டேன்.”
மீனாட்சியின் நாயகனுக்கு நஞ்சு கொடுத்த கடலை அடைதல் பாவம் என்பதால் வையை கடலை அடையவில்லை!

பாற்கடலை கடைந்த போது, அந்த கடல் சிவனுக்கு நஞ்சை கொடுத்தது. அந்த பாற் கடலுக்கு
இந்த கடல் எல்லாம் உறவுதானே என்று நினைத்து,
இப்படி பட்ட கடலுக்கு நாம் ஏன் நீர் தரவேண்டும் என்று வைகை நதி தன்னிடம் உள்ள நீரை எல்லாம்
வரும் வழியில் இரு புறமும் உள்ள வயல்களுக்குத் தந்து விட்டு மீதி உள்ள கொஞ்ச நீரை
ஒரு ஏரியில் கொண்டு செலுத்தி விடுவதாக புகழேந்திப் புலவர் கற்பனை செய்கிறார்…..

பாடல்

நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.

நாரியிட பாகருக்கு = நாரி என்றால் பெண். பெண்ணை இடப் பாகம் கொண்டவருக்கு
நஞ்சளித்த பாவியென்று = நஞ்சு அளித்த பாவியென்று
வாரியிடம் = கடலிடம்
புகுதா வைகையே = புகாத வைகையே
மாறி = அதற்க்கு மாறாக
இடத்தும் புறத்தும் = இடப் புறமும் வலப் புறமும்
இருகரையும் பாய்ந்து = இரண்டு கரைகளும் பாய்ந்து
நடத்தும் = நல்வழி நடத்தும்
தமிழ்ப் பாண்டிய நாடு.= தமிழ் வளர்க்கும் பாண்டிய நாடு
இப்பவாவது தெரிஞ்சுக்குங்க ஏன் வைகை கடலில் கலக்கவில்லை என்று.

தமிழகத்திலேயே உற்பத்தியாகி இங்கேயே கடல் சேர்கிற வைகை ஆற்றின் நீளம் 258 கி.மீ. ஆகும்.
இது தமிழகத்தின் நான்காவது பெரிய ஆறு ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலைதான் வைகை உற்பத்தியாகிற இடம்.
வருசநாடு, மேகமலை பகுதிதான் வைகையின் பிறப்பிடம்.
கடல் மட்டத்திலிருந்து 5,333 அடி உயரத்தில் இருக்கிற மேகமலையில் உள்ள ஒரு சிகரமான வெள்ளி மலையில் தான் அது உற்பத்தியாகிறது.
சுருளியாறு, தேனியாறு, வரட்டாறு, வராகநதி, மஞ்சளாறு, நாகலாறு, மருதநதி, சிறுமலையாறு, சாத்தையாறு முதலியவை
வைகையின் துணை ஆறுகளாகும். பழனி மலையில் உற்பத்தியாகும் வராகநதி கொடைக்கானல் மலையிலிருந்து வரும்
பாம்பாற்றுடன் (வெள்ளி அருவி உள்ள ஆறு) இணைந்து தேனிக்குக் கிழக்கே குன்னூருக்குத் தெற்கில் வைகையுடன் கலக்கிறது.
பின்னர் முல்லையாறாக பயணிக்கிறது. இவ்வாறு பயணிக்கும் பொழுது சுருளியாறு இதனுடன் கலக்கிறது.
பின்னர், வள்ளல் நதி என்று சொல்லப்படும் வருசநாட்டு பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் வள்ளல் நதியுடன்
கலந்து வைகையாறாக வைகை அணையைச் சென்று அடைகிறது.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் காட்டும் அழகர் கோயிலின் சிறப்பு

‘‘அவ்வழி படரீர் ஆயின், இடத்து செவ்வழி பண்ணிற் சிறைவண்டு அரற்றும் தடந்தால் வயலொடு
தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து திருமால் குன்றத்து செல்குவிர் ஆயின் ”என
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அழகர் கோயிலின் சிறப்பு பற்றி கூறுகிறார்.

மதுரையைச் சுற்றி மூன்று அழகர்கள் இருக்கிறார்கள்.
ஒருவர் மாலிருஞ் சோலை அழகர்.
இன்னொருவர் திருமோகூர் அழகர்.
மூன்றாமவர் மதுரையிலேயே இருக்கக்கூடிய கூடல் அழகர்.
திருமாலிருஞ்சோலை அழகருக்கு கள்ளழகர் என்று பெயர்.
கருவறையில் பெருமாள் ஸ்ரீ பரமசுவாமி எனப்படுகிறார்.

இங்கு பெருமான் மட்டும் அழகரல்ல. மலை அழகு, மண்டபங்கள் அழகு, சிலை அழகு, சோலைகள் அழகு.
கண்ணதாசன் ஒரு பாடலில் இந்த அழகை ‘‘மலை அழகா? அழகர் சிலை அழகா” என்று வர்ணிப்பார்.
மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது.
ஆரியன் மண்டபத்தில் இசைத் தூண்கள் உள்ளன.
கல்யாண சுந்தரவல்லி தாயாரின் சந்நதியும் கலைநயத்துடன் உள்ளது.
இராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது.
சிதைந்த நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினை வெளிப்படுத்துகிறது.

திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம்,
லட்சுமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிறந்த படைப்புகளாகும்.
வசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் அழகிய ஒவியங்கள் உள்ளன.

கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பசாமி சந்நதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது.
இந்தச் சந்நதியும் இங்கு ஒரு சிறப்புதான். மக்கள் திரளாக வருகிறார்கள். பெருங்கதவு முன் நிற்கிறார்கள்.
பிரமாண்டமான இரட்டைக் கதவு. கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருக்கிறது.
அதில் சந்தனம், குங்குமம், கற்பூரம் முதலியன பூசி மாலையும் மலர்களும் சாத்தி கதவையே தெய்வமாக எண்ணி வணங்குகிறார்கள்.

தலையில் உருமால், தோளில் வல்லவேட்டு, இடுப்பில் சுங்குவைத்துக் கட்டிய கச்சை,
கையில் கத்தி, ஈட்டி, வல்லயம், வீச்சரிவாள், தோளில் சாத்திய கட்டாரி, காலில் சல்லடம் என்று
கம்பீரமாகக் காட்சி தருபவராம் கருப்பசாமி.
சித்திரைத் திருவிழாவுக்குப் புறப்படும்போது முதலில் கருப்பசாமியின் சந்நதிக்குதான் அழகர் வருகிறார்.

அங்கே அழகர் அணிந்திருக்கும் நகைகளின் பட்டியல் வாசிக்கப்படுகிறது.
திருவிழாக்கண்டு திரும்பிக் கோயிலுக்குள் செல்லும் முன்பு, கொண்டு சென்ற நகைகள் எல்லாம் திரும்ப
பத்திரமாகக் கொண்டு வந்துவிட்டதை கருப்பசாமியிடம் காட்டிச் செல்ல வேண்டும்.
அழகருக்கு அபிஷேகம் செய்ய கொண்டுவரப்படும் தீர்த்தத்தைக் கூடக் கருப்பசாமியிடம் காட்டிவிட்டுத்தான் எடுத்துச் செல்வது வழக்கம்.

பக்தர்களின் உள்ளம் கவர்ந்தவன். வெண்ணையை திருடித் தின்றவன் என்ற காரணங்களால் கள்ளழகர் எனப்பெயராயிற்று.
கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (வளரி), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என
விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர்.
அழகர் கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர் கள்ளழகர் என மாறியது.

(ஆண்டாள் கோயில் மாலை 3 பேருக்கு மட்டும்தான்.
1, சித்திரை மாகம் கள்ளழகர்.
2,புரட்டாசி மாதம் திருப்பதி திருவேங்கடநாதன்.
3, பங்குனி மாதம் ஸ்ரீ ரங்க நாதர்.)

————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கல்யாண ஸூந்தர வல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ கள்ளழகர் ஸ்ரீ பரம ஸ்வாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பார்த்தசாரதி ப்ரஹ்மோத்சவ அனுபவம் — ஸ்ரீ யதுகிரி ஸ்ரீ ராம் ஸ்வாமிகள் —

April 23, 2022

ஸ்ரீ பார்த்தசாரதி ப்ரஹ்மோத்சவம்

முதலில் இரவில் -செல்வர் உத்சவம் -புஷ்ப பல்லாக்கு
அடுத்த நாள் -மாலை -அங்குரார்ப்பணம் –சேனை முதன்மையார்

முதல் நாள்
காலை –தர்மாதி பீடம்
மாலை –புன்னை மர வாஹனம்

இரண்டாம் நாள்
காலை –சேஷ வாஹனம் –பரமபத நாதன் திருக்கோலம்
மாலை -ஸிம்ஹ வாஹனம்

மூன்றாம் நாள்
காலை -கருட சேவை
பகல் -ஏகாந்த சேவை
மாலை -ஹம்ஸ வாஹனம்

நான்காம் நாள்
காலை –ஸூர்ய ப்ரபை
மாலை –சந்த்ர ப்ரபை

ஐந்தாம் நாள்
காலை -பல்லக்கு -நாச்சியார் திருக்கோலம்
மாலை -ஹனுமந்த வாஹனம்

ஆறாம் நாள்
காலை -ஸூர்ணாபிஷேகம்
காலை -ஆனந்த விமானம்
மாலை -யானை வாஹனம்

ஏழாம் நாள்
காலை –திருத்தேர்
இரவு –தோட்டத் திருமஞ்சனம்

எட்டாம் நாள்
காலை -வெண்ணெய் தாழிக் கண்ணன்
மாலை -குதிரை வாஹனம்

ஒன்பதாம் நாள் -சித்திரை திருவோணம்
காலை -ஆளும் பல்லாக்கு
மதியம் -தீர்த்தவாரி
மாலை -கண்ணாடி பல்லாக்கு

பத்தாம் நாள்
மதியம் -துவாதச ஆராதனம்
இரவு -சப்தாவரணம் -சிறிய தேர்

பிரதி தினம் மாலை -பத்தி உலாத்தல்

விடையாற்று உத்சவம் -பத்து நாள்கள்

————–

வைநதேயஸ்ச பக்ஷிணாம் பறவைகளுக்குள் நான் பக்ஷிராஜ னான கருடனாக இருக்கிறேன்
என்று கண்ணன் கீதையில் கூறியிருக்கின்றான்.

பொலிந்திருண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி
மலிந்து திருவிருந்த மார்வன் பொலிந்து
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே
தெருடன்மேல் கண்டாய் தெளி பேயாழ்வார்

வேத ஸ்வரூபி வேதாத்மா விஹகேஸ்வர….
வேதப்பகுதி – கருடனின் அங்கம்
காயத்ரி மந்திரம் – கண்கள்
த்ரிவ்ருத் – தலை
வாமதேவ்யம் – உடல்
ஸ்தோமம் – ஆத்மா
சந்தஸ் – கால்கள்
தீஷ்ண்யம் – நகங்கள்
யஜ்ஞாயஜ்ஞம் – வால்
ப்ருஹத், ரதாந்தரம் – இறக்கைகள்

கருடனுக்கு கருத்மான் சுபர்ணன் பந்தகாசனன் பதகேந்திரன்
பக்ஷிராஜன் தார்ச்டயன் மோதகாமோதர் மல்லீபுஷ்யபிரியர் மங்களாலயர் சோமகாரீ
பெரிய திருவடி விஜயன் கிருஷ்ணன் ஜயகருடன்
புள்ளரசு கலுழன் சுவணன்கிரி என்றும்
ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.

எம்பெருமானும் உவண கேதனன் -உவணமுயர்த்தோன்
வெஞ்சிறைப்புள் உயர்த்தான், அரவப்பகை கொடியோன் -கருடத்வஜன், கருட கமனன்,
ஆடும் கருளக்கொடியுடையான் வெற்றிக்கொடியுடையான் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றான்.

உதவப் புள்ளூர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த“ என்று பெரியாழ்வார்….

தாஸஸ் ஸகாவாஹந மாஸநம் த்வஜ:
யஸ்தே விதானம் வ்யஜனம் த்ரயீமய:
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்க சோபினா II

“ வேதங்களைத் தனக்கு அவயவங்களாகக்கொண்டவனும், அடியவனாகவும், நண்பனாகவும்,
சிம்மாஸனமாகவும், வாகனமாகவும், மேற்கூரையாகவும், ப்ரகாசமான கொடியாகவும்,
நீர் ஏறிச்செல்லும் போது, உமது திருவடிகளின் நெருக்கத்தினால் உண்டான தழும்பை ஏந்தி
அடையாளமாகக் கொண்டவனும், நீர் ஏறிச்செல்லும் போது சந்தோஷத்தை அளிக்கும்
சாமரங்கள் போன்று வீசும் சிறகுகளை உடையவனும், நின்முன் கைகட்டி நிற்பவனுமான,
கருடனென்கிற பழையவனை உடையவனாக உள்ளாய். ” என்று
ஸ்ரீஆளவந்தார் தமது ஸ்தோத்ர ரத்னத்தில் ” ஒரு ஸ்தோத்திரத்தில் குறிப்பிடுகிறார்….

எம்பெருமானைக் கருட வாகனத்தில் சேவித்தவர்க்கு வைகுண்ட பேறு உண்டு
மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்.

———–

முன்னுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு வீடுமறியாது
என்னிது வந்ததென்ன இமையோர் திசைப்ப எழில் வேதமின்றி மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்ந்து இவ்வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூலுரைத்த அது நம்மை யாளும் அரசே…..

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை…..

ஆமையாகி அரியாகி அன்னமாகி அந்தணர் தம் ஓமமாகி ஊழி யாகி -முன் காமற்பயந்தான்……..

முன் இவ் வேழ் உலகு உணர்வின்றி இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே

அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம் மாயனே அருளாய்……

துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள் அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன்….

என்றெல்லாம் ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூக்திகள்… 🙏🙏

கல்வி கரையில! கற்பவர் நாள் சில
மெல்ல நினக்கிற் பிணி பல – தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே *நீர் ஒழிய
பால் உண் குருகின் தெரிந்து* (நாலடியார்)

கற்கவேண்டிய விஷயம் கடல் போலப் பரந்தது. நம்முடைய வாழ்நாளோ சிறியது.
போதாக் குறைக்கு நோய்கள் வேறு நம்மைப் பிடித்து ஆட்டுகின்றன.
இதனால்தான் சான்றோர்கள் அன்னப் பறவை எப்படி தண்ணீரை விட்டுவிட்டு பாலை மட்டும் பிரித்து
எடுத்துக் கொள்கிறதோ அப்படியே நல்ல நூல்களை மட்டும் எடுத்துப் படிப்பார்கள்.

பூமியில் நடக்கவும், வானத்தில் பறக்கவும், தண்ணீரில் நீந்தவும் கூடிய அன்னப்பறவைகள் குறித்து,
இந்தியப் புராணங்கள் கூறுகின்றன

நீரில் வாழ்ந்தாலும் அதன் இறகில் ஒருதுளி நீர் கூட ஒட்டாது.
பாலும் நீரும் கலந்திருந்தாலும், அன்னம் தனியாகப் பாலினை பிரித்து அருந்தும்.
நீரின் அழுக்குகளில் வாழ்ந்தாலும், தான் உண்பவற்றை, அருந்துபவற்றை சுத்தமாக்கி உண்ணும் பண்புடையது அன்னப்பறவை …

அன்னப் பறவைகளில் ராஜ ஹம்சம், கால ஹம்சம், க்ஷுத ஹம்சம், மஹா ஹம்சம், காதம்ப ஹம்சம், மத்த ஹம்சம்
என்று பல வகைகளை வடமொழி நூல்கள் பாடுகின்றன….

சாந்தோக்ய உபநிஷதத்தில் அன்னப் பறவை கற்பிக்கும் பாடம் வருகிறது.

அன்னம் என்பதை புகழ், தூய்மை, உயர்வு, ஞானம், தெய்வீகம், அன்பு, பாசம், ஏகபத்னி விரதம், அழகிய நடை,
கிண்கிணி ஓசை என்னும் பல பொருள் தொனிக்க நயம்படப் பாடினர் நம் முன்னோர்கள்!

ஆசார்யர்களை அன்னத்திற்கு ஒப்பாகக் கூறுவர்
அஸாரங்களைத் தள்ளி ஸாரத்தை உணர்த்துபவர்கள்… 🙏

———–

ஆதித்யானாம் அஹம் விஷ்ணு:

ஆதி³த்யாநாம் விஷ்ணு:…..

ஜ்யோதிஷாம் அம்ஸு²மாந் ரவி:……

ஆண்டாளும்
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு… என்கிறாள்…………

காரார் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி…….

சூரிய ரதத்தின் ஏழு குதிரைகள்
காயத்ரி பிருஹதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்க்தி என்று ஏழு சந்தஸ்ஸுக்கள்.

ஸப்த யுஞ்ஜந்தி ரதம் ஏக சக்ரம்……

முக்தி மார்க்கத் தலைவாசல்……..

ஜகத் ஏக சக்ஷுஷே…..

ஸவித்ருமண்டல மத்யவர்த்தி நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட:……. …..

செய்யதோர் ஞாயிற்றைக்காட்டி சிரீதரன் மூர்த்தி ஈதென்னும்…..…..

புரவியேழ் ஒருகாலுடைய தேரிலே…….

ஏழு குதிரைகளும்
(ஏழு சந்தஸ்ஸுக்களும்) ஒரு சக்கரத்தையும் உடைத்தாகையாலே விலக்ஷணமான பெருமை வாய்ந்த தேரிலே
தேஜோ விசேஷத்தாலே
திருவாழியுடன் ஒத்து
கால சக்ர நிர்வாஹகனான எம்பெருமான் ஆஞ்ஜையை நடத்தி
நக்ஷத்ரம் முதலிய சோதி மண்டல தேஜஸைக் குறைத்து அக்னியினுடைய தேஜஸ் ஸூக்கும்
சந்திரனுடைய அம்ருதத்துக்கும் பிறப்பிடமாயும்

மந்தேஹர் என்னும் ராக்ஷஸர்களுக்கு சிவந்த நெருப்பாயும்

அர்ச்சிராதி கதிக்கு முதல் வாசலாயும்

ஜகத் சக்ஷுஷே-
என்கிற படியே அனைவருக்கும் கண் போன்ற
ஸர்வேஸ்வரன் கண்ணிலே பிறந்த கண் மணியாயும்
வேத மயமுமாய் இருக்கும் ஸூர்ய மண்டலத்தில்
சீர் பூத்த செழும் கமலத் திருத் தவிசில் வீற்று இருப்பவனாய்

தோள் வளையும் மகரக் குண்டலங்களும் கிரீடமும் ஹாரமும்
திரு வாழி திருச் சங்கும் பொன்னிறமான திரு மேனியும்
செந்தாமரைக் கண்களும் உடையனாய் பகவத் விக்ரஹத்தையும்
ஆதித்ய மண்டலத்தையும் தன்நிறம் ஆக்குகின்ற சிவந்த திரு நிறத்தை உடையளான பிராட்டியோடே கூட ஆதித்யன் உள்ளே இருப்பவனாய்
எப்போதும் சிந்திக்க உரிய தேஜோ ரூபியாய் இருக்கிற விலக்ஷண பரம புருஷனை ப்ரதிபாதிக்கின்ற

சூர்யப்ரபை.. யில்
ஸ்ரீ பார்த்தஸாரதி திருவீதி புறப்பாடு கண்டருள்கிறார்….🙏🙏

————-

சந்த்ரமா மநசோ ஜாத…

புருஷ ஸூக்தத்தின்படி
பரம் பொருளின் மனத்தில் இருந்து சந்தரன் உண்டானான் என்கை…

ஆண்டாளும்…
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல்–என்கிறாள்..

விஷ்ணோ கடாட்சம் !! குளிர்ச்சியான கண் ஞானத்தை பெருக்க வல்லது,
வெப்பம் தரும் கண் அஞ்ஞான இருளை விலக்க வல்லது–திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல் …
ஆண்டாள் பரமனின் கண்களில் ஒரு சேரக் காணப்படும் குளிர்ச்சியையும், வெப்பத்தையும் பற்றிச் சொல்வது,
அடியவரைக் காப்பவனாகவும், அதே நேரம் பகைவர்க்கு நெருப்பாகவும் விளங்கும் பரமனின் தன்மையைச் சொல்வதாம்….

ஏககாலத்தில் ஞாயிறும் திங்களும் உதித்தால் தாமரைமலர் பாதி முகுளிதமாயும், பாதி விகஸிதமாயுமிருக்கு மென்று கொண்டு,
கண்ணபிரானுடைய திருக்கண்களுக்கு அந்த நிலைமையை வேண்டுகின்றனர்.
இஃது, இல்பொருளுவமை’ வடநூலார், அபூதோபமை’ என்பர்.
கண்ணனுடைய திருக்கண்கள் சேதனருடைய குற்றங்குறைகளை நினைத்துப் பாதி மூடியும்,
அவர்களுடைய கூக்குரலைக் கேட்டுப் பாதிதிறந்து மிருக்கு மாதலால், அதற்கு இந்த உவமை கூறியது மிகப் பொருந்தும்.

மகாவிஷ்ணுவின் இரண்டு கண்களும் சூரியன் மற்றும் சந்திரனாகப் பிரகாசிக்கிறது.
இரண்டுமே உதய காலத்தில் குளிர்ந்த கிரணங்களைப் பெற்றிருக்கும்.
எனவே, எழுந்தாற்போல் உதயமான சூரிய *சந்திரனைப் போன்று, இரண்டு கண்களால் எங்களை நோக்கினால்,
நாங்கள் சாபம் நீங்கியவர்களாக ஆவோம் என அழைக்கிறாள் ஆண்டாள் . 

சந்த்ரப்ரபை வாஹனத்தில் ஸ்ரீ பார்த்தஸாரதி
திருவீதி புறப்பாடு கண்டருள்கிறார்🙏🙏

———-

அஹம் ராமஸ்ய ஸந்தேசாத் தேவி தூதஸ்தவாகத: என்று
வந்தவர் பிராட்டி ஸம்பந்தத்தாலே
தாஸோ(அ)ஹம் கோஸலேந்த்ரஸ்ய *ராமஸ்யாக்லிஷ்ட
கர்மண:*
என்றாரிரே!!!! 🙏🙏

ஹனுமன் கருடனை போல் நித்யசூரி அல்ல! அவன் ஒரு சிரஞ்சீவி!
இன்னும் பூமியில் தானே வசிக்கிறான் அப்படியிருக்க ஏன் ஹனுமந்த வாகனம்…

இராமாயணத்தில் ஶ்ரீராம ராவண யுத்தத்தில் ஒரு நிகழ்வு

ஶ்ரீராமனுடன் போரிட வந்த இராவணனை ஶ்ரீராமானுஜனான இலக்குமணன் முதலில் எதிர்த்து போரிடுகிறான்

இராவணன் எய்யும் ஒவ்வொரு அஸ்திரத்தையும் செயலிழகச்செய்து கொண்டே வருகிறான்

ஒரு சில நிமுடத்துளியில் இலக்குமணன் விட்ட அம்பு
இராவணனின் பத்து கைகளிலில் இருந்த ஆயுதங்களையும் கீழே விழச் செய்ததுடன்
மேலும் தீவீரமாக ராவணனுடன் போர் புரிய தொடங்குகிறான்

ஶ்ரீலக்குமணனின் போர் திறமையை கண்டு வியந்த ராவணன்
இலக்குமணனை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது என கண்டு கொண்டு
பிரம்மா விசேடமாக தனக்கு தந்த வில்லை இலக்குமணன் மேல் ஏவுகிறான்

தன் மார்பை நோக்கி வரும் வில்லின் மகிமையை உணர்ந்த லக்குமணன்
அதனை எதிர்க்காமல் விட அந்த வில் மார்பில் பட்டு இலக்குமணன் மூர்ச்சை ஆகிறான்

இராவணன் வேகமாக வந்து இலக்குமணனை இலங்கையின் உள்ளே தூக்கி செல்ல எத்தனிக்கிறான்
அவனால் துளி கூட லக்ஷ்மணன் உடலை அசைக்க முடியவில்லை பத்து கைகளை கொண்டும் முயல்கிறான் முடியவில்லை

இதை தூரத்தில் இருந்த கவனித்த ஹனுமான் இலக்குமணன் உடல் அருகே வேகமாக வந்து
ஒரு குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் காக்கும் தாயைப் போல
இலக்ஷ்மணனை கைகளால் தூக்கிக் கொண்டு இராவணன் கண் முன்னாடியே வேக வேகமாக
ஶ்ரீஇராமன் இருக்குமிடம் சென்றடைந்தான்

மூர்ச்சையாகிக் கிடந்த இலக்ஷ்மணனை அவனெதிரே கிடத்தினான்

செயலற்றவனாய் மூர்ச்சையாகி கிடந்த இலக்ஷ்மணனைப் பார்த்து தன்னிலை இழந்த இராமன்
சற்றைக்கெல்லாம் தன்னைச் சுதாரித்துக் கொண்டு
மிகுந்த சினம் கொண்டு தம்பியை இந்நிலைக்கு ஆளாக்கிய இராவணனை போரில் சந்திக்கப் புறப்பட்டான்

அதே நேரம் இராவணனும் ஶ்ரீஇராமனுடன் போர் புரிய எண்ணி ஶ்ரீஇராமன்முன் தனது தேரை கொண்டுவந்து நிறுத்த
அதர்மத்தையே தொழிலாக கொண்ட இராவணன் தேரில் போரிட வருகின்றபோது
தர்மத்தின் தலைவனான ஶ்ரீராமன் அவனெதிரே வெறும் தரையில் நின்று கொண்டிருப்பதை கண்ட வாயு புத்திரன்
மனம் நெகிழ, விழிகளில் அவனறியாமல் கண்ணீர் சுரக்க,
ஶ்ரீராமன் அருகே சென்று இருகரம் கூப்பி நாத்தழுதழுக்க ஶ்ரீஇராமனை பார்த்து

ஐயனே அந்த அதர்ம சொரூபமான ராவணன் ஆயிரம் குதிரை பூட்டின தேரில் உங்கள் முன் போரிட வந்துள்ளான்
அவன் எதிரில் தர்மமே வடிவமான ராமா !!!வெறும்தரையில நின்று போரிடப் போவது எனக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது
தேவரீர் அடியேனை ஒரு அல்பமான வானரம் என எண்ணாமல் பெரிய மனது கொண்டு
என்னோட தோள்மேல ஏறிகொண்டு அவனுடன் போரிட வேண்டும் என வேண்ட
அனுமனின் அன்பு வார்த்தைகளைக் கேட்டு ஆனந்தித்த இராமனின் விழியோரம் நீர்துளிர்க்க

ஹே! வாயுபுத்ரா!!எனக்கு இதைவிடச் சிறந்த உபகாரம் இந்நேரத்தில் வேறென்ன இருக்கமுடியும்
அதுவும் இல்லாமல் உன்னை போன்ற அன்பான சீடன் என்னுடன் இருக்கும் போது
எனக்கு ஏதுகுறை என சொல்லிக்கொண்டே அனுமனின் தோள்களில் ஏறி அமர்ந்தான் தசரத நந்தன்

ஹனுமானும் ஆனந்தத்தில் ஜொலித்தான்
ஶ்ரீராமனோ மேன்மை மிகுந்த மேருமலை மேல் கம்பீரமாய் அமர்ந்திருக்கும்
ஒரு ஆண் சிங்கம் போல் ஹனுமன் தோளில் காட்சி கொடுக்க

இந்தக் காட்சியை கண்ட விண்ணுலக தேவர்கள் தங்களது நல்லாசியை
இருவருக்கும் பூமாரி பொழிந்து வாரி வழங்க….
காலம் காலமாய், நடந்தால் குடையாக நின்றால் மரவடியாக சயனித்தால் படுக்கையாக
திருமாலைத் தாங்குகின்ற பெருமையை கொண்டிருந்த ஆதிசேஷனும்
திருமாலுக்கு ஊர்தியாய் வாயுவேக மனோவேகமாய் எப்போதும் சுமந்து செல்லும் பெரிய திருவடியான கருடனும்
விஸ்மயமாகி நோக்கிக்கொண்டிருக்க…..!!!

ஹனுமனின் மீதமர்ந்த ஶ்ரீஇராமனோ ,
ஹே! வானரவீரா!!
வெகுகாலமாக நான் தேடிய எனக்கேற்ற வாகனம், ஆசனம் இன்றே கிட்டியது என்னும் விதமாக
அனுமனின் தோள்களில் வெகு பாந்தமாய் ஆரோகணித்திருந்தான்

அதே கோலத்துடன் இராவணனுடன் அதிதீவீரமாக போர் புரிந்து அவனது அரக்கர் படைகளையும்
அழகிய தேரையும் பலவித அஸ்திரங்களையும் அவனின் வில்லையும் செயலிழக்கச்செய்து நிராயுத பாணியாக நிறுத்தி
ஹே! ராவணா!!நிராயுதபாணியான உன்னை இன்று கொல்ல மனம் ஒப்பவில்லை.
நீ இன்றுபோய் நாளை வா என கூறி அனுப்பியது வரலாறு…..

அந்த போர்க்கள ஶ்ரீராமனின் வாகனமான ஹனுமந்த வாகனத்தை நினைவு கூறவே
இன்றும் பூர்வர்களால் ஏற்படுத்தபட்டு இன்றும் வைணவ திவ்யதேச மற்றும்
அபிமான கோயில்களில் ஹனுமந்த வாகனம் மேல் பகவான் புறப்பாடு கண்டருளபடுகிறது

ஹனுமன் வானரமோ மானுடமோ அல்ல
அவன் அளப்பறிய இயலாத சக்தி கொண்ட ஶ்ரீராம தூதன்/ஸ்ரீ ராமதாஸன்🙏🙏

தூதோஹம் ராமஸ்ய என்று வந்தவன்,
பிராட்டி ஸம்பந்தத்தால்
தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய
என்றானிறே🙏🙏

நவ வ்யாகரண பண்டித:* என்று பெருமாளே கொண்டாடிய ஹனூமந்தன்…
,
மாயா காலமிமம் ப்ராப்யதத்தம் தஸ்ய மஹாத்மந:
அவிஸ்தரம் அஸந்திக்தம் அவிலம்பிதம் அவ்யதம் !
உரஸ்த: கண்டகம் வாக்யம் வர்ததே மத்யமஸ்வரம் !!

ஏஷ ஸர்வஸ்வபூதஸ் து பரிஷ்வங்கோ ஹனூமத:
ஏஷ ஸர்வஸ்வபூதஸ் து பரிஷ்வங்கோ ஹனூமத:
அலப்யலாபமான ராம பரிஷ்வங்கம்🙏

இவ்வாறு பல பெருமைகள் வாய்ந்த ஹனுமந்த வாஹனத்தில்
ஸ்ரீ பார்த்தஸாரதி
திருவீதி புறப்பாடு கண்டருள்கிறார்🙏🙏

————

சூர்ணத்தால் எம்பெருமானுக்குச் செய்யும் அபிஷேகமான சூர்ணாபிஷேகம் நிறைவடைந்தவாறே,
ஸ்ரீ பார்த்தஸாரதி ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதனாய்த்
தங்கச்சப்பரத்தில் திருவீதி புறப்பாடு கண்டருள்கிறார்..
🙏🙏🙏

——–

தொடர் சங்கிலி கை சலார் பிலார் என்னத் தூங்கு பொன்மணி ஒலிப்பப்
படு மும்மதப் புனல் சோர வாரணம் பைய நின்றூர்வது போல்
உடன் கூடி கிண்கிணி யாரவாரிப்ப வுடை மணி பறை கறங்கத்
தடம் தாளிணை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ –பெரியாழ்வார் திருமொழி..1-7-1-

யானையை இரும்புச் சங்கிலியால் கட்டிப் போட்டிருப்பார்கள்..
கிளர்ச்சியுற்ற அந்த யானையின் மதநீர், அதன் இரு கன்னங்களிலும் வழிந்தோட, கால்கள் பிணைக்கப்பட்டுள்ளதால்
அகலமாக வைக்க இயலாது, அருகருகே அடி வைத்து மெல்ல மெல்ல நடப்பதை போல
தூங்கு பொன்மணியொலிப்ப உடன்கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப உடைமணி பறை கறங்க
கண்ணன் அணிந்துள்ள பொன் ஆபரணங்களின் மணிகள் ஒலி எழுப்ப,
அவ்விசைக்கேற்றவாறு காலில் அணிந்துள்ள கிண்கிணி சதங்கைகள் ஆர்ப்பரிக்க,
இடையில் கட்டிய அரைஞாண் கயிற்றிலுள்ள மணிகளும் இவற்றோடு சேர்ந்து பறை ஓசையினைப் போல்
பெருமளவு சத்தம் உண்டாக்க தன்னுடைய பெரிய பாதங்களை மெல்ல மெல்ல
தன் கால் எட்டுகின்ற அளவு அடி வைத்து,சாரங்கம் என்ற வில்லினை ஆயுதமாகக் கொண்டவன்
தளர்நடை நடக்கிறான்…!!!🙏

அநுபவரசிகர்களான ஆழ்வார்கள் எம்பெருமானை யானையாகவே பல இடங்களில் பேசுவார்கள்.
யானைக்கும் எம்பெருமானுக்கும் பல விதங்களில் ஒத்த கருத்து நிலவும்

1.யானையை எத்தனை தடவை பார்த்தாலும்பார்க்கும் போதெல்லாம் அபூர்வ வஸ்து போலவே இருந்து பரமாநந்தம் பயக்கும்.
எம்பெருமானும் எப்பொழுதும் நாள், திங்கள், ஆண்டு ஊழி யூழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது
என்னாராவமுதம் என்னும்படி யிருப்பான்.
2.யானையின் மீது ஏற வேண்டியவன் யானையின் காலைப் பற்றியே ஏறவேண்டும்.
எம்பெருமானிடம் சென்று சேர வேண்டியவர்களும் அவனதுதிருவடியைப் பற்றியே சேர வேண்டும்.
3.யானை தன்னை கட்ட தானே கயிற்றை எடுத்துக் கொடுக்கும். எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் (திருச்சந்த விருத்தம்) என்கிறபடியே,
எம்பெருமானை கட்டுப் படுத்தும் பக்தியாகிறகயிற்றை அவன் தந்தருள்வான்.
4. யானையை நீராட்டினாலும் அடுத்த க்ஷணத்திலேயே அழுக்கோடு சேரும். எம்பெருமான் சுத்த ஸத்வ மயனாய் பரம பவித்ரனாய்
இருக்கச் செய்வதாயும் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குமுடைய நம் போல்வாரோடு
சேர திருவுள்ள மாயிருப்பான் வாத்ஸல்யத்தாலே.
5.யானையைப் பிடிக்க வேண்டில் பெண் யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும்
அதன் போன்றே பிராட்டியின் புருஷாகாரமின்றி எம்பிரான் வசப்படான்
6.யானை பாகனுடைய அனுமதியின்றி தன்னிடம் வருபவர்களை தள்ளி விடும்.
எம்பெருமானும் வேதம் வல்லார் துணைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து என்கிறபடியே
பாகவதர்களை முன்னிட்டுப்
புகாதாரை அங்கீகரித்தருளான்.
7. யானையின் மொழி யானைப் பாகனுக்குத் தெரியும், எம்பெருமானின் மொழி திருக்கச்சி நம்பிகள் போல்வார்க்கே தெரியும்
(பேரருளானப் பெருமானோடே பேசுபவர் நம்பிகள்).
8. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும்
எம்பெருமான் அமுது செய்து சேஷித்த பிரசாதத்தாலே பல கோடி பக்தவர்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம்.
9.யானைக்கு கை நீளம் எம்பெருமானும் அலம் புரிந்த நெடுந்தடக்கையன் இறே….
நீண்ட அந்தக் கருமுகிலையெம்மான் தன்னை”(பெரிய திருமொழி )
10.யானை இறந்த பின்பும் உதவும் எம்பெருமானும் தீர்த்தம் பிரசாதித்துத் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளின பின்பும்
இதிகாச புராணங்கள் உணர்த்த உதவுகின்றன.
11. யானை ஒரு கையே உள்ளது எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழிய கொள்ளும் கையில்லை
12. யானை பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும். எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகம் ப்ரப்ருதிகளுக்கு சம்பாத்யத்திற்கு வழி செய்கிறார்.
13. யானை மெல்ல அசைந்து அசைந்து செல்லும். எம்பெருமானும் உலா வரும் பொழுது அசைந்து அசைந்து வருவார்.
14. யானை சாதுவானது எம்பெருமானும் சாதுவானவரே…!!!!

(காஞ்சி ஸ்வாமி )
🙏🙏
இனி

ஆழ்வார்கள் ஈரச்சொல்லால் எம்பெருமானை யானையாக அநுபவித்த ஒரு சில பாசுரங்கள்….. 🙏

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்–பெரியாழ்வார் திருமொழி -1-2-6-

தந்த களிறு போல் தானே விளையாடும் நந்தன் மதலை–1-2-8-

தேனுகனும் முரனும் திண் திறல் வெந்நரகம்
என்பவர் தாம் மடிய *செரு வதிரச்
செல்லும்ஆனை* எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போர் ஏறே! ஆடுக ஆடுகவே – 1-5 4-

தொடர் சங்கிலிகை சலார் பிலார் என்ன தூங்கு பொன் மணி ஒலிப்ப
படு மும் மதப்புனல் சோர வாரணம் பைய நின்றூர்வது போலே
உடன் கூடி கிண் கிணி ஆரவாரிப்ப வுடை மணி பறை கறங்க
தடம் தாள் இணை கொண்டு சாரங்க பாணி தளர் நடை நடவானோ -1 7-1 –

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்தது ஒரு வேழத்தின் கரும் கன்று போல்
தெள் புழுதி யாடி திருவிக்ரமன் சிறு புகர் விட வியர்த்து
ஒண் போது அலர் கமல சிறுக் கால் உறைத்து ஒன்றும் நோவாமே
தண் போது கொண்ட தவிசின் மீதே தளர் நடை நடவானோ -1 7-9 –

மதுரைப் பிறந்த மா மாயனே என் ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10 8-

வேழ போதக மன்னவன் தாலோ-பெருமாள் திருமொழி –7-1-

கைம்மாவின் நடை அன்ன மென்னடையும் கமலம் போல் முகமும் காணாது
எம்மானை என் மகனை இழந்திட்ட இழி தகையேன் இருகின்றேனே– 9-6–

மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-2-

திருவேங்கடம் மேய என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே –1-10-6-

உறியார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க
தறியார்ந்த கருங்களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை–2-10-6-

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் *காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை* என்றும்–4-8-1-

அண்டர் கோன் என் ஆனை என்றும் –4-8-3-

சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே -4-9-2-

கைம்மானம் மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை
யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-1-

மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர் தம் கோவே என்று-7-4-1-

கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம்பெருமான் இருந்தாயே-10-4-9-

என் ஆனாய் தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபால மதயானாய் -திரு நெடும் தாண்டகம்-10-

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும் –
திரு நெடும்தாண்டகம்-15

திரு வேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே -திருவாய்மொழி–3-9-1-
அமுதனாரும் இராமானுசனை
யானையாய் பாவித்து…..

பண் தரும் மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மாதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் என்றாரிறே..
🙏🙏🙏🙏

இவ்வாறெல்லாம் எம்பெருமானை ஒரு யானை யோடு
ஸாம்யம் தெரிவிக்கப்பட்டதெனினும்….

கஜேந்த்ரனுக்கு மோக்ஷமளித்த எம்பெருமானை ஆழ்வார்களின் ஈரச்சொல்லால்* அனுபவிப்போம்..

பதக முதலைவாய்ப் பட்ட களிறு, கதறிக் கை கூப்பி என் கண்ணா, கண்ணா என்ன உதவப் புள் ளூர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த, அதகன்………

ஒரு ஆரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஜேந்திரன் என்ற யானையின் கைங்கர்யத்தை ஏற்றுக்கொண்டு, குவலயாபீடம் என்ற யானையை கொன்று, . . ..

ஒரு யானையைக் காத்து, ஒரு யானையைக் கொன்றான்;…….
ஒப்பிலேன் ஆகிலும், நின்னை அடைந்தேன், ஆனைக்கு நீஅருள்
செய்தமையால்…..

குண்டு நீருறை கோளரீ மத யானை கோள்விடுத்தாய்…..

ஆனை காத்து ஓர் ஆனை கொன்றது….

மதித்தாய் மடுகிடந்த மாமுதலை கோள் விடுப்பான்…….

உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகி, செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார்…..

விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை யீந்த கண்ணறா……

விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய், வெள் எயிறு உற அதன் விடத்தி னுக்கு அணுங்கி ,
அழுங்கிய ஆனையின் அரும் துயர் கெடுத்தான்….

மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத்து அலறக் கரா அதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து சென்று நின்று ஆழிதொட் டானை,
தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக்கேணி….

பொய்கைக் கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டதற்கு எள்கி, அழுந்தி யமா களிற்றினுக்கு
அன்று ஆழி யேந்தி அந்தரமே வரத்தோன்றி யருள் செய்தான்….

முதலைத் தனிமா முரண்தீர அன்று முதுநீர்த் தடத்துச் செங்கண் வேழம் உய்ய,
விதலைத் தலைச் சென்றதற்கே உதவி வினை தீர்த்த அம்மான்….

தூம்பு உடைப் பனைக் கை வேழம் துயர் கெடுத்து அருளியவன்….

தடமலர்ப் பொய்கை புக்கு, நாவளம் நவின்று ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய், ….

பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதன்….

இன்னும் பல…. 🙏

யானை வாகனத்தை ஆரோஹித்த
ஸ்ரீ பார்த்தஸாரதி
திருவீதி புறப்பாடு
கண்டருள்கிறார்🙏🙏

———-

*இன்று …
திரு அல்லிக்கேணி
ஸ்ரீ பார்த்தஸாரதி எம்பெருமானின் தேர்த்திருவிழா!!!!*!

தேர்கள், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கனமான சக்கரங்களைக் கொண்டவையாகும்.
இவற்றின் மூன்று பக்கங்களிலும் இறையுருவங்களும், புராணக்கதைத் தொகுதிகளைக் காட்டும் சிற்பத் தொகுதிகளும்,
மிருகங்கள், செடி கொடிகள் ஆகியவற்றின் உருவங்களும், ஆங்காங்கே பக்தர்கள் உருவங்களும்
செதுக்கப் பட்டிருப்பதைக் காணலாம்…………. .. 🙏

திருவிழாக் காலங்களில் அவற்றின் மீது எண்ணெய் பூசுவதால் இச்சிற்பங்கள்
அழகாகக் கற்சிற்பங்கள் போன்று காட்சியளிக்கும்…… . . 🙏

தேரின் அமைப்பைப் பொறுத்தவரை அது கோயில் விமானத்தின் அமைப்பைப் பிரதிபலிப்பதாகவே அமைகிறது.
இத்தேர் சதுரம், அறுகோணம் என பல வகைகளில் அமைக்கப்படுகிறது…. . 🙏

வண்ண வண்ண மலர்த் தோரணங்கள், உதிரிப் பூக்கள், அழகிய வேலைப்பாடுகள் கொண்ட திரைச்சீலைகள்,
குஞ்சங்கள் கொண்டு தேர் அலங்காரம் செய்யப்படும்……….. 🙏

வாழை மரங்கள், அழகிய வண்ணக்கொடிகள், பல்வேறு சிற்பங்கள் என்பன கொண்டு தேர் அலங்காரம் செய்யப்படும்……….. 🙏

அர்ச்சுனனை
(பார்த்தன்) வில் எடுக்கும்படி பண்ணி அவனுடைய
திண்தேர்மேல் முன் நின்ற–வண்மையான- தேரில்…….
எம்பெருமான் தானே சாரதியாக முன்னின்று

அர்ஜூனன்… மேல் விழவேண்டிய அம்புகளை தன்மேல் தாங்கி!!

செங்கண்-செம்மையான அருள் நோக்கு நோக்கும் திருமால்
வாத்ஸல்யம் மிக்க- கண்களால் பரிவுடனே பாண்டவர்களை ரக்ஷித்த கண்ணழகு!!!!
செங்கண்மாலின் செந்தாமரைக் கண்ணழகு!!

அலவலை தன்னால் வந்த வெற்றி என்று இல்லாமல்
அப்படி ஆகிவிடாதவாறு அர்ஜூனன் வெற்றி பெற்றான் என்பது போல அவனைப் புகழ்ந்த கண்ணன்.!!!!

பக்தர்களுக்குத் தன்னை நம்பி சரணடைந்தவர்களின் பால் பகவான் அருளும் பாங்கு அப்படிப்பட்டது!!

அலவலை என்றால், தான் சொன்ன உபதேசத்தின் அர்த்தமும் கேட்பவர்கள் தகுதியும் பார்க்காது…….
அலை!! அலையாக!!! உபதேசம் பண்ணின சீர்மை!…. எளிமை!
🙏🙏🙏🙏

மங்கல நன் வனமாலை மார்வில் இலங்க
மயில் தழைப்பீலி சூடி பொங்கிள வாடை அரையில் சாத்திப்
பூங்கொத்து காதில் புணரப் பெய்து ……. …

தேரில் எழுந்தருளி உலா வரும் எம்பெருமான் …
🙏🙏🙏🙏

அழகுடன் அலங்காரம் செய்யப்பட்ட பீடத்தின்
நடுவில்

ஸ்ரீ பார்த்தஸாரதி எம்பெருமான்*
*ஸ்ரீதேவி பூதேவி
ஸஹிதனாய்த்* தேரில் ஆரோஹித்துத் திருவீதி புறப்பாடு கண்டருள்கிறார்🙏🙏

கோஷ்டியார் தொடக்கத்தில்…

திருமங்கையாழ்வார்
அருளிச் செய்த

திருவெழுகூற்றிருக்கை என்னும் ப்ரபந்தமும், தொடர்ந்து
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்………….என்னும் பெரிய திருமொழியும்
சேவிக்கப்படுகிறது
🙏🙏

பெரிய கயிறுகள், சங்கிலிகள் தேரில் இணைக்கப்படும், அவற்றை வடம் என்று கூறுவர்.
இவ்வடத்தைப் பற்றி இழுத்துச் செல்வதை வடம் பிடித்தல் என்பர்.
கோவிலைச் சுற்றி தேர் செல்லக்கூடிய அளவு அகலமான வீதி அமைந்த இடங்கள் ரத வீதிகள் என்று அழைக்கப்படும்…….

தேர் செல்லும் வழி எங்கும் மக்கள் தத்தம் வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போட்டு,
வழிபாட்டுப் பொருட்களுடன் வாசலில் நின்று கொண்டு இருப்பார்கள்…………

தேரோட்டத்தன்று எம்பெருமான் எழுந்தருளிய எழில்மிகு தேரை வடம் பிடித்து ஊர்மக்கள் யாவரும்,
அந்த ரதவீதிகளில் தேரை இழுத்து வருவர்.
எம்பெருமானின் திருநாமத்தைச் சொல்லித் தேர் இழுப்பவர்களுக்கு நீர்மோர், பானகம், தண்ணீர்
என வழங்க பந்தல்கள் அமைக்கப் பெற்று விளங்கும்….
கோவிலின் நாற்புறமும் உள்ள ரத வீதிகளைக் கடந்து திரும்பவும் தேர்
தன் நிலை வந்து அடையும் வரை தேரோட்டம் நடைபெறும்….. 🙏

இன்று உதயம் 7 மணி முதல் திருத்தேர்த் திருவிழா நடைபெற்று வருகிறது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து
கோவிந்தா!! பார்த்தஸாரதி!! கோவிந்தா!!!! ….என்னும் முழக்கத்துடன் வடம்பிடித்து வருகின்றனர்….
🙏🙏🙏🙏

——–

கோவலனாய் வெண்ணெய் உண்டவாயன் என்று திருப்பாணாழ்வார்…
விரலொடு வாய்தோய்ந்த வெண்ணெய் என்று பொய்கையாழ்வார்..

ஆய்ச்சி பாலையுண்டு வெண்ணெயுண்டு மண்ணையுண்டு என்று திருமழிசையாழ்வார்.

கானாயன் கழமனையில் தயிருண்டு நெய்பருக நந்தன் பெற்ற ஆனாயன்
என்று திருமங்கையாழ்வார்

ஆழ்வார்களின் ஈடுபாட்டை வ்யாக்யானிக்கும் ஆசாரியர்களின் ஸ்ரீஸூக்திகள் அற்புதமானவை.

மஹதா தபஸா என்று சக்ரவர்த்தி நாடாள ஒரு பிள்ளை பெறவேணும் என்று
நோன்பு நோற்றுப் பெற்றாப்போலே.
கவ்யங்கள் பாழ்போக வொண்ணாது. இவற்றை புஜிப்பானொருபிள்ளை வேணும் என்று
இதுக்கன்றோ இவனைப் பெற்றது.
என்பன இவ்விடத்து வ்யாக்யான ஸ்ரீஸூக்திகள்……..

இப்படியிருக்கக் கண்ணன் வெண்ணெய் உண்ட போது இவர்கள் மகிழாமல்
அவனைக் கட்டவும் அடிக்கவும் காரணமென்ன
வெண்ணெய்தானமுது செய்ய வெகுண்டு *மற்றாய்ச்சி யோச்சி
கண்ணியார் குறுங்கயிற்றால்* கட்டவெட்டென்றிருந்தான்

அளவுக்கு அதிகமாக உண்டானாகில் இவனுக்கு ஜரிக்காதே என்று அவர்கள் அவற்றை
இவனுக்கு அகப்படாத வண்ணம் உறிகளிலே சேமித்து வைப்பார்கள்.
அவர்கள் அவற்றை மறைக்க மறைக்க இவனுக்கு அதிலே ஆசை அதிகமாகும்.
எப்படியாவது அவற்றைத் திருடி உண்டு விடுவான். அகப்பட்டுக் கொள்வான்.
அவர்கள் அவனை உரலோடு வைத்துக் கட்ட வெட்டென்றிருந்தான் – அதற்கு இசைந்திருந்தான் கண்ணன்.
தனது ஸௌசீல்யம் ஸௌலப்யம், ஆச்ரித பாரதந்தர்யம் முதலிய குணங்களை வெளியிடுவதற்காகவே
அவதரித்திருக்கிற தன்னுடைய விருப்பம் நிறைவேறிய இசைந்திருந்தானாம்.

நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறிப்பால் தயிர்நெய்
அன்றாய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடாப்புண்டிருந்த பெருமான்
பெற்ற தாயாலாப்புண்டிருந்தழுதேங்கும் தாடாளா!!.. என்று
திருமங்கையாழ்வார்!!!

முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும் முகிழிளம் சிறுத் தாமரைக் கையும்
எழில்கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் தொழுகையும்” என்று குலசேகராழ்வார்……

பெரியாழ்வார்…………..
“பொத்த உரலைக் கவிழ்த்து அதன்மேலேறி தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திருவயிறு ஆரவிழுங்கிய அத்தன்” என்றும்

“மிடறுமெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப் போய்” என்றும் அனுபவித்தார்…

ஆண்டாளும்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் என்று…

திருமங்கையாழ்வாரும்.. …

ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று, தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த மோரார் குடமுருட்டி முன்கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டவளும்………… ஆராவயிற்றினோடு ஆற்றாதான் என்று…

உன்னுடைய விக்கிரமம் ஒன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர்வழி எழுதிக்கொண்டேன்
என்று அருளிச் செய்கின்றார் பெரியாழ்வார்.

இங்கு
ஒன்றொழியாமல்
என்பதன் தாத்பர்யமாவது…
ஆழ்வார்களுக்கு அத்வாரகமாயும் ரிஷிகளுக்கு ஸத்வாரகமாயும் திருவருள் செய்தருளின எம்பெருமான்…….
இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிது!
கண்ணனுடைய வெண்ணெய்க் களவு சரித்ரத்திலேயே ஈடுபட்ட நம்மாழ்வாரும் கூட,
இந்தச் சரித்திரத்தை நெஞ்சால் நினைக்கவும் முடியாது என்கிறார்.

*துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவியிடர் கடிவான் இமையோர் தமக்கும்*
*தஞ்சார்விலாததனிப்பெருமூர்த்திதன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால்* வெண்ணெயூணென்னும் ஈனச்சொல்லே
(திருவிருத்தம் 98)

மிகவும் தாழ்ந்தவர்களான இந்நிலவுலகத்தவர்கள் இவ்வுலகத்து போகங்களையும் கூட முழுமையாக அனுபவிப்பதற்குச் சக்தியற்றவர்கள்.
ஆனால் பரமபதத்திலுள்ள நித்யஸூரிகள் எப்போதும் எம்பெருானோடு கூடியிருப்பவர்களாய் நிரந்தரமாக
அவனையே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்குங்கூட கண்ணபிரானுக்கு
வெண்ணெய் உணவாயிற்று என்று சொல்லப்படும் இழிசொல் நெஞ்சால் நினைப்பதற்கும் அரிதானது என்கிறார் நம்மாழ்வார்.

இங்கு நம்பிள்ளை ஈடு:

ஸர்வேச்வரனாய் ப்ரஹ்மாதிகளுக்குங்கூட ஆச்ரயணீயனாய், அவாப்த ஸ்மஸ்தகாமனாய் இருக்கிறவன்,
ஆச்ரித ஸ்பர்சமுள்ள த்ரவ்யமே தனக்கு தாரகமாய், நேர்கொடு நேர்கிட்டப் பெறாதே, இப்படிக் களவு கண்டாகிலும் புஜிக்கவேண்டி,
அதுதான் தலைக்கட்ட பெறாதே, வாயது கையதாக அகப்பட்டு, கட்டுண்டு, அடியுண்டு, ப்ரதிக்ரியையற்று,
உடம்பு வெளுத்துப் பேகணித்து நின்ற நிலை சிலர்க்கு நிலமோ?”

கண்ணபிரானுடைய வெண்ணெய்க் களவை அனுபவிப்பதிலேயே திளைத்திருக்கும் நம்மாழ்வார்
“கண்ணபிரானுடைய மற்ற சரிதங்களை அனுபவித்தாலும் அனுபவிக்கலாம். .
ஆனால் இந்த வெண்ணெய்க்களவை அனுபவிப்பது என்பது நெஞ்சினால் நினைக்கவும் முடியாது.
நித்யசூரிகளுக்கும் நெஞ்சினால் நினைக்கவும் முடியாததை நாம் அனுபவிப்பது முடியுமோ? என்கிறார்.

வெண்ணெய்த்தாழிக்கண்ணனாய்

ஸ்ரீ பார்த்தஸாரதி
திருவீதி புறப்பாடு கண்டருள்கிறார்
🙏🙏🙏🙏

———————

மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த மூவா முதல்வா –நம்மாழ்வார்

மாவாய்ப்பிளந்தா னை– ஆண்டாள்..

கேசி என்ற அரக்கனின் வாயைப் பிளந்து கொன்றவர்…

அதுவுமன்றிக்கே….

குதிரை முகனாய் ஹயக்ரீவனாய்….
மாவாகி ஆமையாய் மீனாகி என்ற நம்மாழ்வார் ஸ்ரீ ஸூக்திப்படியே…

அவதாரக் காரணம்
மது, கைடபன் எனும் அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்த வேதங்களைப் பறித்துக் கொண்டனர்.
அத்துடன் பாதாள உலகத்திற்குச் சென்றனர்.
அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணுவை வேண்டினார்.
மதுவும், கைடபனும் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர்.
அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்தார்.
இந்த ரூபமே ஹயக்ரீவர் என்று அழைக்கப்படுகிறது.
அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார்.

குதிரை……….

புராணங்களிலும், சங்க இலக்கியங்களிலும், மன்னர் காலத்திலும், சிறப்பாக கருதப்பட்டு வந்து உள்ளது.
இளவரசர்கள் யானை ஏற்றம், குதிரை ஏற்றம் ரதம் ஓட்டுதல் இவற்றில் தேர்ச்சி அடைந்தனர்.
பண்டையஅரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது.
குதிரைகள் மிக வேகமாக ஓடும் வல்லமை பெற்றது.

நமது வைணவ திருக்கோவில்களில் பிரஹ்மோத்சவத்தில் குதிரைவாஹனம் சிறப்பானது.

குதிரை….

புரவி தவிர ~
மா பரி மான், இவுளி, *கலிமா – என்று குதிரையின் வேறு பெயர்கள்.

குதிரை வாகன புறப்பாட்டில், திருமங்கை மன்னனின் திருவவதார மகிமையை
விளக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கலியன் நீலன் திருவாலிநாடன் என பலவாறு பெயர்பெற்ற திருமங்கை ஆழ்வார், ஒரு மன்னர்.
தினமும் 1008 பாகவத அடியார்களுக்கு நித்யம் ததீயாராதனை செய்து உபசரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் அவரிடமிருந்த செல்வம் குறைந்து, அப்பணியைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனாலும் கலங்காத அவர் ஒருகட்டத்தில் களவு செய்தாவது அடியார்களுக்கு அன்னமிடும் சேவையைத் தொடர்ந்தார்.
அவரது பக்தியை வெளிப்படுத்துவதற்காக எம்பெருமான் திருமணக்கோலத்தில் சென்று எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார்
அதன்பின் அவர் ஆழ்வார்களில் ஒருவராகி, திருமங்கையாழ்வார்’ என்று பெயர்பெற்றார்.

இந்த உன்னத நிகழ்வை நினவு கூறும் விதமாக இன்று
ஸ்ரீ பார்த்தஸாரதி தங்க குதிரையின் மீது எழுந்து அருளுகிறார்
🙏
திருமங்கை மன்னன் தன்னுடைய ஆடல்மா என்கிற குதிரை மேல் ஏறிக்கொண்டு புறப்பாடு காண்கிறார்.
பெருமாளுடன் வரும் கொத்து பரிசாரங்களையும் மிரட்டி அவர்களிடம் உள்ள எல்லா பொருட்களையும் கவர்கிறார்.
ஸ்ரீமன் நாராயணன், ஆலி நாடனை கலியனாக ஆட்கொண்டு நம் கலியனோ?!!? என்று…

ஓம் நமோ நாராயணா என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசிக்கிறார்;
🙏
சிந்தை தெளிந்து அருள் பெற்ற ஆழ்வாரும்,
திருமொழி பாசுரங்களை வாடினேன் வாடி வருந்தினேன் என தொடங்குகிறார்.
🙏🙏

சிங்கராச்சாரி தெருவும் தேரடி வீதியும் சேரும் இடத்தில் உள்ள குதிரை வாகன மண்டபதிற்கருகே,
ஏசல் முடிந்து ஆழ்வார் மங்களாசாசனம் நடந்து பட்டோலை வாசித்தல் நடைபெறுகிறது.
இன்று பெருமாள் திருப்பரிவட்டத்துடன் திருவல்லிக்கேணி தல புராணத்தில் உள்ள
இந்தப் பட்டோலை வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது
🙏

ஸ்ரீ பார்த்தஸாரதி
குதிரை வாகனத்தில்..
திருமங்கையாழ்வாரைக் கடாக்ஷிக்கும் பொருட்டு
திருவீதி புறப்பாடு கண்டருளுகிறார்…
🙏🙏🙏🙏

————

அழகான கண்ணாடி பல்லக்கு–
முழுதும் கண்ணாடி வேலைப்பாடுகளுடன், பெரிய குஞ்சலங்கள் போன்று தொங்கும் கண்ணாடிகள் உடன் அழகாக இருக்கும்
பெரிய கண்ணாடி பல்லக்கில் இன்று ..

மின் இலங்கு திருஉருவும் பெரிய தோளும், கைத்தலமும், அழகான திருக்கண்களும்
என்கிற ஆழ்வார் ஸ்ரீஸூக்திப்படி…
ஸ்ரீ பார்த்தஸாரதி
கண்ணாடி பல்லக்கில் …
எதிரே உபயநாச்சிமார் எழுந்து அருளி இருக்க, வாண வேடிக்கைகளுடன், விமர்சையாக புறப்பாடு நடைபெற்றது…. 🙏

கண்ணாடி உருவத்தைக் காட்டும்.
ஆனால், உருவத்தில் ஒட்டியுள்ள அழகையோ, அழுக்கையோ தன்னில் ஒட்டிக்கொள்ளாது.
கண்ணாடி ஸ்வரூப ஜ்ஞானத்திற்கு ப்ரதீகை…….

ஆண்டாள் ……
உக்கமும் * *தட்டொளியும் தந்து என்கிறாள்…
உக்கம் என்பது விசிறி=ஆலவட்டம்
தட்டொளி என்பது கண்ணாடி….
ஆலவட்டம் கைங்கர்யத்தையும்
தட்டொளி என்பது ஸ்வரூப ஜ்ஞானத்தையும்……
ஒன்று கைங்கர்யத்துக்கு. ஒன்று ஸ்வரூபத்தைக் காட்டுவதற்கு……..
கைங்கர்யமும், ஸ்வரூப ஞானத்தையும் பிராட்டியிடம் கேட்டுப் பெற்று
ப்ரஹ்மத்தை அடைவதே மோக்ஷம். அதையே ஆண்டாள் கூறுகிறாள்….

கண்ணாடிப் பல்லக்கில்
ஸ்ரீதேவி பூதேவி ஸஹிதனாய் சேவை சாதிக்கும்
ஸ்ரீ பார்த்தஸாரதி எம்பெருமான்… 🙏

———–

நம்மாழ்வார் வைபவம்

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||……. பராங்குச பஞ்ச விம்சதி… 🙏

ஆழ்வார்களில் தலைவர் நம்மாழ்வார்.
இவரே ஆழ்வார் கோஷ்டியிலும், ஆசார்யர்கள் கோஷ்டியிலும் அக்ரேஸரர் ( முன்னே இருப்பவர்).
* ப்ரபன்ன ஜன கூடஸ்த்தர் * என்று இவருக்குத் திருநாமம் ப்ரபன்னர்களான ஜனங்களுக்கு மூலபுதர் என்றபடி.
இவரை வைத்துத் தான் ப்ரபத்தி மார்க்கம் நன்றாகப் பரவும்படிச் செய்தான் பகவான்.
ஸம்ஸாரிகளைக்காட்டிலும் பெருமை படைத்தவர் என்று ஒப்புக்கொண்டாலும்

விண்ணுளாரிலும் சீரியர் * என்று ஆழ்வார் நித்யசூரிகளைக்காட்டிலும் வ்யாவ்ருத்தரே !
யாவர்நிகர் அகல்வானத்தே ( எம்பெருமானைக் கவிபாட வல்ல எனக்குப் பரமபதத்தில் ஸூரிகளும் நிகரல்லர்
என்று ஆழ்வாரும் ப்ரஸ்தாவிக்கும்படியாயிற்று இவர் புகழ்🙏

வேதம் தமிழ் செய்த மாறன் * என்றே திருநாமமிட்டுக் குறிப்பிடுகிறார் உபதேசரத்தினமாலையில் ஸ்ரீமத் வரவரமுனிகள்🙏

இவரது ஆப்ததமத்வம் தோற்ற * மெய்யன் * என்றார் ஸ்ரீமத்வரவரமுனிகள்.
ஆப்தர் என்றால் * यथार्थद्रष्टुत्वेसति यथार्थवक्त्रुत्वम् – आप्तत्वम्* – அதாவது தான் உள்ளதை உள்ளபடி அறிந்து கொண்டு
அது தன்னையேபிறர்க்கும் உபதேஸித்துப் போருபவர்கள். இவர்களில் தலைவரன்றோ ஆழ்வார் !🙏

யச் ச்ருதே: உத்தரம் பாகம் சக்ரே த்ராவிட பாஷயா யாவரொரு நம்மாழ்வார் வேதத்தின் உத்தர பாகத்தை
த்ராவிட பாஷையினால் அருளிச் செய்தாரோ ] என்று பராங்குசாஷ்டகம்.🙏

ஈட்டில் முதல் ச்ரியப்பதிப்படியில், ஆழ்வார் ப்ரபாவம் சொல்லுமிடத்து நம்பிள்ளையின் ஸ்ரீஸுக்திகள். …
இப்படியிருக்கிற சிதசிதீஶ்வரர்கள் ஸ்வரூபஸ்வபாவங்களை அறியக்கடவார் ஒருவருமில்லை.
இவற்றையுள்ளபடி அறிவாரில் தலைவராயிற்று இவ்வாழ்வார். இவர்க்கு ஒப்புச் சொல்லலாவார் ஸம்ஸாரிகளிலுமில்லை
நித்யஸூரிகளிலும் இல்லை. தம்படி தாமுமறியார், ஸம்ஸாரிகளுமறியார்கள் ஸர்வேஶ்வரனும் அறியான் *
ஆழ்வார் ப்ரபாவம் அருளிச் செய்யுமிடம் இது!. …

பகவத் விஷயம்
இன்றளவும் திருவாய்மொழி காலக்ஷேபத்தை * பகவத் விஷயம் என்றே வ்யவஹரிப்பர்கள் பூர்வர்கள்.

இதற்குக் காரணம் என்னென்னில்
திருவாய்மொழியில் உள்ள பகவதேகபரத்வம்

இங்கு எம்பெருமான் தானும் திருவாய்மொழியில் மகிழ்ந்து உறைகிறான் என்பதனை
ஸ்ரீபராசரபட்டர் தம்முடைய ஸ்ரீரங்கராஜஸ்தவத்திலே

வடதலதேவகீ ஜடரவேதஶிர: கமலாஸ்தந ஶடகோபவாக்வபுஷி ரங்கக்ருஹே சயிதம்
வரதமுதாரதீர்க்கபுஜலோசநஸம்ஹநநம் புருஷமுபாஸிஷீய பரமம் ப்ரணதார்த்திஹரம் || ( பூர்வ சதகம் – 78)

என்ற ஸ்லோகத்தினால் அருளிச்செய்தார்.
எம்பெருமான் மகிழ்ந்து உறையும் இடங்களைக் குறிப்பிட்டு வருகையிலே
ஆலிலை, தேவகீ பிராட்டியின் திருவயிறு முதலானவற்றோடு ஆழ்வார் அருளிச்செயலான திருவாய்மொழியிலும்
எம்பெருமான் ஆதரத்தோடு உறைகிறான் என்பது இதனால் கிடைக்கப்பெற்ற அர்த்தமாகும்…🙏

எம்பெருமானுடைய மயர்வற மதிநலம் ஆகிய அருள் கொண்டு அன்றோ ஆயிரம் இன்தமிழ் பாடினது.
இப்படி இருக்கும்இன்தமிழும் பகவதேகபரமாய் போக்யமுமாய் ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய்
ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய் ஸம்ஸார விச்சேதமுமாய் சீக்ர பலப்ரதமுமாய் இருக்கை..
இவையனைத்தும் பிள்ளைலோகஞ்சீயர் காட்டியருளிய விசேஷணங்கள்… 🙏

பகவதேகபரத்வம்
மாற்றங்களாய்ந்து கொண்டு என்று சொற்களை ஆராய்ந்தெடுத்து வேறு ப்ரஸ்தாவம் அன்றிக்கே
எம்பெருமானையே விஷயமாகக் கொண்டது திருவாய்மொழி.

போக்யத்வம்
தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்

ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கும்போதே பக்தாம்ருதம் என்றருளிச்செய்தது இந்தப் பாசுரத்தையுட்கொண்டேயாம்.
முதலிலேயே பாலேய்தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரம் என்று அருளிச்செய்திருந்தாலும்
*தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் என்கிற இப்பாசுரம் இணையற்றது.”
இது இவ்வுலகில் உள்ளார்க்கும் மட்டுமன்றி வானவர்களான நித்ய ஸூரிகளுக்கும் பரம போக்யமாய் இருக்கும்.
இதனை ஆழ்வார் * கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே என்றவிடத்தில் அருளினார்… 🙏

ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய் இதனால் அர்த்த பஞ்சகம் சொல்லப்பட்டது.
* அறிய வேண்டும் அர்த்தமெல்லாம் இதற்குள்ளே உண்டு – அதாவது அஞ்சர்த்தம் * என்று முமூக்ஷுப்படி……….
.
திருவாய்மொழி அறிவிக்கும் பொருளானது அர்த்த பஞ்சகமே என்பதை,

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்…

என்கிற தனியனினால் அருளிச்செய்கிறார்
ஸ்ரீபராசரபட்டர்🙏

ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய்
இத்திருவாய்மொழியினை கேட்டதால் எம்பெருமான் தானே தனக்கு ப்ரீதி உள்ளடங்காமல்
போக்கு வீடாகத் தென்னா தென்னா என்று ஆனந்திக்கிறான் என்பதனை ஆழ்வார் தாமும்
* தென்னா வென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே என்றருளினார்….. 🙏

ஸம்ஸார விச்சேதமுமாய்……
அளவு காண இயலாத ஸம்ஸாரத்தையும் * ஸம்ஸாரம் ஸாகரம் கோரம் என்றிருப்பதையும் வற்றச் செய்வதாய்
இருப்பது திருவாய்மொழி.
* ஆயிரத்துள் இப்பத்து அருளுடையவன்தாள் அணைவிக்கும் முடித்தே என்றாறிரே ஆழ்வார்.
ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களில் இப்பத்துப் பாசுரங்களே பாவங்களை ஒழித்து, எம்பெருமான் திருவடிகளில் சேர்ப்பிக்கும்என்றபடி.🙏

இத்தகைய திருவாய்மொழியை செவி சாய்த்துக் கொண்டு
ஆனந்திக்கும் ஸர்வேஸ்வரனும்
ஆழ்வார்கள் ஆசார்யர்களும்
ஸுக்ருதின: ஜனா:
என்கிறபடியே
ஸர்வஜன ஸுக்ருத்துக்களும்…
🙏🙏🙏🙏

———-

வெட்டிவேர்!!!!! நறுமணத்துடன் குளிர்ச்சியையும் தரக்கூடியது!!!!!
வெட்டிவேர்சப்பரம் என்று பிரபலமாக அறியப்படும் *சின்ன திருத்தேர்..
இந்த வெட்டிவேர்…… இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டது.
வெட்டிவேர் என்று அழைக்கப்படும் இவை 1.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது…..
மற்றும் அகலமான கொத்துக்களை உருவாக்குகிறது……
இந்த தேர் வெட்டிவேர்சப்பரம் என்று அழைக்கப்படுகிறது…
இந்த புல்லால் செய்யப்பட்ட பல தாள்கள் கோயில் தேரின் மீது வைக்கப்பட்டுள்ளன…
தூரத்திலிருந்தே தெய்வீக வாசனையை ஒருவரால் உணர முடியும்…..
புல் வெட்டிவேரின் தண்டு வெட்டப்பட்டு, மிருதுவாகி பாய் போடப்படுகிறது…..
இந்த பாய்கள் முன்பு கூட வீடுகளில் பயன்படுத்தப்பட்டன,
மேலும் காற்று அதன் வழியாக செல்லும்போது, ​​​​காற்றின் நறுமணமும் இயற்கையான குளிர்ச்சியும் இருக்கும்……….

இன்று …..
ஸ்ரீ பார்த்தஸாரதி
ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஸமேதனாய்
வெட்டிவேர்ச்சப்பரத்தில்
எழுந்தருளி திருவீதி புறப்பாடு கண்டருள்கிறார்🙏

புறப்பாட்டில் கோஷ்டியாரால் திருவரங்கத்து அமுதனாரின் இராமானுச நூற்றந்தாதி
சேவிக்கப்படுகிறது… 🙏🙏🙏

—————————————————–———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருவெழு கூற்றிருக்கை -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யான சாரங்கள் —

April 23, 2022

ஸ்ரீ ஆராவமுதன் இடம் சரணாகதிக்கு ஸ்ரீ நம்மாழ்வார் போல் இவரும்
சம்சார துக்கம் போக்கவே
ஆறு அங்கம் கூற அவதரித்தவர் அன்றோ –

20- குணங்களை காட்டி சரண்

1-ப்ரம்மா ஸ்ருஷ்ட்டி
2-விரோதி நிரஸனம்
3-ஆஸ்ரித ரக்ஷணம் -மூவடி —அளந்தனை
4-ஆபத் சகத்வம் -நால் திசை –மடுவில் தீர்த்தனை
5-ஸர்வ பல பிரதத்வம்
6-தேவர்களாலும் அறிய முடியாத பெருமை
7-சர்வ ரக்ஷகத்வம்
8-சர்வ போக்யத்வம் -ஆறு சுவை
9-ஆயுதங்கள் தரித்து
10-புருஷகாரம்
11-சாமான்ய ரஷணம் சொல்லுகிறது –
12-சாமான்ய ரஷணம் சொல்லி விசேஷ ரஷணம் சொல்லுகிறது –
13-அநாஸ்ரிதரான பாஹ்யருடைய நினைவுக்கு கோசரமில்லை-
14-ஸ்ரீ யபதித்வம் சொல்லப் படுகிறது –
15-ஆராதனைக்கு எளியவன்
16-சரீர சரீரீ பாவம் –
17-பிரதிபந்தகம் போக்கி
18-சாஸ்திரம் ஒன்றாலே அறிந்து கொள்ளும் படி உள்ளவன்
19–சர்வ அந்தர்யாமி
மேன்மைகள்-இத்தால் ஐஸ்வர்யம் சொல்லிற்று –
20-ஸுலப்யம் -செல்வம் மல்கு திருக்குடந்தை ஆராவமுதன்
நீர்மைக்கு எல்லையான இடத்தில் சரணம் புகுகிறார்
ஸ்ரீ நம்மாழ்வார் போல்

————-

ஸ்ரீ திரு எழு கூற்று இருக்கை -ஒரே திவ்ய தேசம் -பக்கம் நோக்கு அறியான் பரகாலன்
46-வரிகள் -ஏழு அடுக்கு
மேல் மூன்று பெட்டிகள் –அப்புறம் -5-7-9-11-13-13-பெட்டிகள்-
36 வரிகள் பெட்டிகளுக்குள்
பின்பு 10 வரிகள் – திவ்ய தேசம் வளப்பம்
கொடி -கும்பகோணம் வெற்றிலை இன்றும் சிறப்பு உண்டே
செல்வம் மல்கும் தென் திருக் குடந்தை –ஆடு அரவு அமளியில் அறி துயில் அமர்ந்த
பரமன் நின் அடி இணை பணிவன்-இடர் அகல -சரணாகதி பண்ணி அருளுகிறார் –

ஏழு அடுக்கு -ஏழு ஆழ்வார்கள் –
வேதம் -ஏழு சந்தஸ் ஸூக்கள் -உண்டே
காயத்ரி அனுஷ்டுப் பிருஹத் ஜகதி -இவையே தேர் -தைத்ரியம்
காயத்ரி ஜகதி இரண்டும் தேர் சக்கரம்
உஷ்னுப் த்ருஷ்டுப் தேர் கட்டைகள்
அனுஷ்டுப் பங்க்தி குதிரை
பிருஹத் தேர் மேடை –

கல் தேர் மர தேர் சொல் தேர் மூன்று தேர்கள் மதனுக்கு
கர்ப்ப க்ருஹம் -குதிரையும் யானையும் உண்டே -அழகும்
வைதிக விமானம் -வேதம் இரண்டு பகுதிகள் -சாகை -யானை -சம்ஹிதை -குதிரை போல் வேகமாக –
இத்தை உணர்த்தவே இரண்டும் இங்கு
சித்திரை தேர் -மர தேர் -பிரசித்தம் –

————–

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர்  வாழ் வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன்
தூயோன் சுடர் மான வேல் —தனியன் –

எம்பெருமானுக்கு திரு மதிள் போல் அரணாய் இருப்பதான ஆறு பிரபந்தங்கள்
செய்து அருளின ஆழ்வாருடைய திரு நாமங்கள்
பலவற்றையும் சொல்லி அவரை வாழ்த்துகிறது இதில் –

பிரத்யசேஷ குரவஸ் ஸ்துத்யா-என்னக் கடவது இறே –
ஆழ்வார்கள் அர்ச்சாவதாரமாய் எப்போதும் எல்லாருக்கும் பிரத்யஷராய் இறே இருப்பது –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்-

வாழி பரகாலன் –
பகவத் த்விட்டுக்களான பிரதிகூலருக்கு காலரானவர் வாழி

வாழி கலிகன்றி-
கலி தோஷ நிவாரகர் வாழி

வாழி குறையலூர் வாழ் வேந்தன் —
திருக் குறையலூரை அவதார ஸ்தலமாக உடையராய் –
அது வாழும்படிக்கு அத்தை நோக்குகிற ராஜா என்னுதல்-
அங்கே வாழுகிறவர் என்னுதல்

வாழியரோ–மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன் தூயோன் சுடர் மான வேல் -என்று
ஆழ்வாரையும்
அவர் திருக்கையிலே வேலையையும் ஒருகாலே ஆசாசித்த படி –

மாயோனை –
அரங்கத்து அரவணைப் பள்ளி கொள்ளும் மாயோனை இறே வாள் வலியால் மந்திரம் கொண்டது –
தென்னரங்கன் தன்னை வழி பறித்த வாளன் இறே –
கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டவர் இடத்திலே இறே மந்திரப் பொருள் கைக் கொண்டது –
மந்திரத்தைப் பற்றி இறே மந்திரம் கொண்டது

மங்கையர் கோன்-
மங்கையர் மன்னன் இறே

தூயோன் –
தூய்மை என்னும் பாஹ்யாப்யந்தர சுத்தியை யுடையவர்

அங்கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்டமுக்கி யடையார் சீயம்
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் -என்று
தாமே தம் திரு நாமங்களைக் கூறினார் இறே

சுடர்மான வேல் –
தேஜோ ரூபமான மான வேல் –
பெரிய வேல்
திருமங்கை மன்னன் எடுக்கும்படியான வேல் –

வாழியரோ –
இத்தால் ஆழ்வாரோ பாதி
ஆயுதமும் ஆசாஸ்யம் என்றபடி –

நின் கையில் வேல் போற்றி என்னக் கடவது இறே
இது தான் கொற்ற வேல் ஆகையாலே வெற்றி வேலாய் இருக்கும் –
இதன் விஜயத்தை வேண்டுகிறது —ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்

————————————————————————–

அவதாரிகை -1-
சம்சார ஸ்வபாவ அனுசந்தானத்தாலே மிக அவசன்னரான ஆழ்வார்
அவற்றின் பரிகாரமாக
அவனை கைகளால் தொழுது
மனசாலே நினைத்து
வாயாலே பேசி திருவடிகளிலே விழுந்தார் –

இங்கனே கிடந்தது நோவு பட உமக்கு அபேஷிதம் என் என்ன
பகவத் விரோதியாகிற சம்சாரத்தை வாசனையோடு போக்கித் தர வேணும் -என்றார்

அத்தை நம்மால் செய்யல் ஆவாதே என்ன

உன்னை ஒழிந்த சகல பதார்த்தங்கள் உடைய ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் உனது அதீனமே
சர்வ சமாஸ்ரயநீயன் ஆகவும்
ஆபத் சகன் ஆகவும்  இருக்கிற நீயே
என்னுடைய சம்சாரத்தை கழித்து அருளா விடில்
என்னால் கழித்துக் கொள்ளப் போகாதே -என்று
திருவடிகளிலே விழுந்து தம் தசையை அறிவிக்கிறவராய் -இருக்கிறது –

அவதாரிகை -2-
முதலிலே கரண களேபர விதுரமாய்
அவிஜ்ஞ்ஞேய ஸ்வரூபமாய்
அசித் கல்பமாய் இருக்கிற இவற்றை –

அர்த்தித்வாதி நிரபேஷமாக
உன்னுடைய நிரவதிக தயையாலே உண்டாக்கின நீயே அருளிக் கடாஷியாயகில்
அமூநி புவநாநி பாவித்தும் நாலம்-ஸ்தோத்ர ரத்னம் -10–
முதலிலே இவை யுண்டாகவே மாட்டாது
சத்தையே தொடங்கி உன்னதீனமான பின்பு
உன்னை ஒழிய இவற்றுக்கு ஒரு பிரவ்ருத்தி நிவ்ருத்தி கூடாது
என்னும் இடம் சொல்லவும் வேணுமோ

இது இல்லாத வன்று உண்டாக்கின நீயே
இதுக்கு ஒரு போக்கடி பார்க்கை ஒழிய
நான் ஓன்று செய்து உன்னைப் பெறுகை என்று ஒரு பொருள் உண்டோ-

சரணா மறை பயந்த -தாமரை யானோடு
மரணாய மன்னுயிர்கட்கெல்லாம் -அரணாய
பேராழி கொண்ட பிரானன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு –முதல் திரு -60-என்றபடி

ஜ்ஞானாதிகனான சதுர முகனோடே கூட உத்பத்தி விநாசாதிகளுக்கு கர்மீ பவிக்கிற சகல சேதனர்க்கும்
ரஷை என்று பெற்ற பெற்றவை எல்லாம்
நம் மேல் வினை கடிவான் என்றபடி
ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்காக கையிலே திரு ஆழியைத் தரித்துக் கொண்டு இருக்கிற
உபகாரகனான அவன் பார்க்கில் பார்க்கும் இத்தனை அல்லது
வேறு கடல் சூழ்ந்த பூமியில் உள்ள சேதனர் தங்களுக்கு ரஷை தாங்கள் அன்றியார்கள்

அவனை ஒழிய இவை அறியாது ஒழிய வேண்டுகிறது என் என்னில் –
நைவ கிஞ்சித் -ஜிதந்தே -1-6-இத்யாதி –
உனக்கு-பரோஷமாய் இருப்பது ஓன்று இல்லை
எத்தனை யேனும் ஜ்ஞானாதிகரராய் இருப்பாருக்கும் நீ கண்ணுக்கு விஷயம் ஆகாய்
உனக்கு கை புகராதது ஒன்றும் இல்லை –
எத்தனை யேனும் அதிசய ஜ்ஞானாதிகர்க்கும் நீ கை புகுந்தாய் இராய்-

இத்தால் சொல்லிற்று ஆயிற்று என்ன வென்றால்
ஒருவனுக்கு கண்ணும் தோற்றாதே
காலும் நடை தாராதே இருப்பது

ஒருவனுக்குக் கண்ணும் தோற்றி
காலும் நடை தருவது

இப்படி இருந்தால் யார் வழி காட்டிக் கொடு போவார்கள்

நான் அஜ்ஞனாய் அசக்தனாய் இருந்தேன் -நீ சர்வஜ்ஞனாய் சர்வ சக்தனாய் இருந்தாய்
இங்கனே இருந்த பின்பு நீ என் கார்யம் செய்து தலைக் கட்டும் இத்தனை போக்கி
நான் என் கார்யம் செய்து தலைக் கட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ என்கிறார்-

நீ தந்த ஜ்ஞானம் கொண்டு அறியப் பார்த்தாலும்
அறிந்த படி செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான சக்தி எனக்கு யுண்டோ –

ஆழ்வாருக்கு முதலிலே செப்பேட்டைக் கையிலே கொடுத்து
நிதியைக் காட்டிக் கொடுப்பாரைப் போலே
திரு மந்த்ரத்தையும்
அதில் அர்த்தத்துக்கு எல்லை நிலமாகக் கோயில்களையும் காட்டிக் கொடுக்கக் கண்டு
க்ருதக்ருத்யராய் –
சம்சாரத்தையும் பரம பதத்தையும் ஒக்க மறந்தார்

ஆழ்வாரைப் பார்த்து எம்பெருமான் –
நீர் இருக்கிறது சம்சாரத்தில் கிடீர் -என்று அருளிச் செய்ய –
அதன் கொடுமையை அனுசந்தித்து ஆற்றாமையாலே
மநோ வாக் காயங்களாலே எம்பெருமானை அனுபவித்து ஆற்றப் பார்த்தார்

அது பண்டையிலும் இரட்டையாய்
மிகவும் ஆற்றாமையாலே
எம்பெருமானுடைய சரண்யதவத்தைப் பேசிக் கொண்டு
அதுக்கு எல்லை நிலமான திருக் குடந்தையில் ஆராவமுத ஆழ்வார் திருவடிகளையே
எத்தசைக்கும்
இஷ்ட பிராப்திக்கும்
அநிஷ்ட நிவாரணத்துக்கும் உபாயமாக பற்றி முடிக்கிறார் –

சித்திர கவி வகைகள்
சக்ரபந்தம் -பத்ம பந்தம் -நாக பந்தம் -ரதபந்தம்

————————————————————————–

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒரு முறையானை ஈன்றனை –
ஒரு முறை இரு சுடர்  மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியின் அட்டனை
மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு  மானுரியிலங்கு மார்வினன் இரு  பிறப் பொரு மாணாகி
ஒரு முறை  ஈரடி மூவுலகு அளந்தனை
நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை
ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை
முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அறு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன் அகத்தினுள் செறுத்து
நான்குடன் அடக்கி முக்குணத்து இரண்டவை அகற்றி  ஒன்றினில்
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை
முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை
ஏழு உலகு எயிற்றினில்  கொண்டனை
கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை
சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை
சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண நின்னீரடி யொன்றிய மனத்தால்
ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின் முப்பொழுதும் வருட அறி துயில் அமர்ந்தனை
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை
மேதகு மைம் பெரும் பூதமும் நீயே
அறுபத முரலும்   கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை
அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை
அறமுதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை

குன்றாமது மலர்ச்சோலை வண் கொடிப் படப்பை
வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ்வன முடுத்த
கற்போர் புரி செய்கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்
செல்வம் மல்கு தென் திருக் குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியி லறி துயில் அமர்ந்த பரம
நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே –

தனிப்பாடல் –
இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பன என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருத்துந்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே

————————————————————————–

1- ப்ரம்மா ஸ்ருஷ்ட்டி

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒரு முறையானை ஈன்றனை –

———–

2-விரோதி நிரஸனம்

ஒரு முறை இரு சுடர் மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய
ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை-

தான் உண்டாக்கின பயிருக்குக் களை பறிப்பானும் தானே யானால் போலே
ஸ்ருஷ்டமான ஜகத்தை அழிவு செய்யும் ராஷசரை நிரசிப்பானும் தானே —

இல்லாததை யுண்டாக்கின உனக்கு உள்ளதுக்கு
ஒரு குண தானம் பண்ணுகை அரிதோ என்கையும்

பிராட்டியோட்டைக் கலவிக்கு விரோதியான ராவணனை அழியச் செய்த உனக்கு
என்னுடைய பிரதிபந்தகம் போக்குகை அரிதோ என்கையும்

ப்ரஹ்ம சிருஷ்டி போலே சங்கல்ப்பத்தாலே செய்கை அன்றிக்கே
நேர் கொடு நேரே பூசலில் நின்று அழியச் செய்தாய் –

————-

3-ஆஸ்ரித ரக்ஷணம் -மூவடி —அளந்தனை

மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன்
இரு பிறப் பொரு மாணாகி-ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-

அம்பாலே சாதிக்க ஒண்ணாத இடம் அழகாலே சாதித்த படி சொல்கிறது –
அம்பாலே அழிக்க ஒண்ணாத இடத்தை -அழகாலும் இரப்பாலும் அழியச் செய்த படி –

—————-

4-ஆபத் சகத்வம் -நால் திசை –மடுவில் தீர்த்தனை

நாற்றிசை நடுங்க–அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி
ஒரு தனி வேழத் தரந்தையை-ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-

பெரு மதிப்பரான இந்த்ராதிகளுக்கயோ அபேஷிதம் செய்தது என்னில்
அன்று
ஆபத்தும் விசுவாசமும் என்கிறது அல்பம் உண்டானால்
தான் தண்ணியரான திர்யக்குகளுக்கும் அபேஷிதம் செய்யும் என்கிறது-

பெரு மதிப்பரான இந்த்ராதிகளுக்காக உன்னை அழிய மாறிக் கார்யம் செய்த அளவேயோ –
ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற ஆனை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே
அரை குலையத் தலை குலைய வந்து விழுந்தவன் அன்றோ –

————-

5-ஸர்வ பல பிரதத்வம்

முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அரு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை-

உபாயாந்தர நிஷ்டருக்கும் அவற்றை நடத்திக் கொடுப்புதி இறே –
யோகோ யோகவிதாம் நேதா -என்கிறபடியே –

வர்ணங்களில் உத்க்ருஷ்ட வர்ணமாய் நல்வழி போகக் கடவதாய் இருக்கும்
ப்ராஹ்மண ஜாதிக்கு அடைய-
ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படியைச் சொல்கிறது

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி
முக்குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை –

கர்ம யோகத்தை அங்கமாக யுடைத்தான உபாயம் சொல்லப் படுகிறது –
இனி சம்சார பய பீதராய் முமுஷூக்களாய் இருப்பாருக்கு ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படி சொல்கிறது-

——————–

6-தேவர்களாலும் அறிய முடியாத பெருமை

முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை-

தம்தாமுடைய கண்களின் மிகுதியாலும்
ஜ்ஞாதிக்யம் என்கிற இதுவே ஏற்றமாகக் கணிசிப்பார்க்கும் –
அவர்களுக்கும் எட்டாத ஸ்வபாவத்தை யுடையவன் என்கிறது –

அபிமாநிகளாய் இருப்பார் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானராய் இருந்தார்களே யாகிலும்-
அவர்களுக்கும் அறிய ஒண்ணாத படியான உத்கர்ஷம் சொல்லுகிறது –

—————

7-சர்வ ரக்ஷகத்வம்

ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை-

ஆபத்து வந்தால் சக்தனோடு அசக்தனோடு வாசி இன்றிக்கே
சர்வ பிராணிகளுக்கும் உதவி அருளினாய் –
ஆபத்து வந்த அன்று -அந்த ருத்ராதிகளோ நீயோ உதவினார்

————

8-சர்வ போக்யத்வம் -ஆறு சுவை

கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை-

மனுஷ்யருக்குப் போக்யமான ஷட் ரச ரூபமான பிரயோஜனம் ஆனாய்
என்னுடைய பிரயோஜனத்தையும் எனக்குத் தந்து அருள வேணும் -என்கிறார் –

சாஸ்த்ரங்களால் ஷட் ரசங்களுடைய பிரயோஜனமாய் இருந்து வைத்து-
என்னுடைய பிரயோஜனத்தையும் எனக்குத் தந்து அருள வேணும் -என்கிறார் –

———–

9-ஆயுதங்கள் தரித்து

சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண-

தம்முடைய போக்யமாய் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –
மிகவும் பிரகாசத்தை யுடைத்தாய் இருக்கிற திவுய ஆயுதங்களை
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படியான அழகிய திருக் கையிலே தரிப்பாய்

——————

சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண-

10-சர்வ பல பிரதத்வம்

——————

11-புருஷகாரம்

நின்னீரடி யொன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும்
மலரன அங்கையின்-முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை –

தம்முடைய அபேஷிதம் பெறுகைக்கு புருஷகாரம் யுண்டு என்கிறார் –
எனக்குப் புருஷகாரம் இல்லாமே இழக்கிறேனோ

————

12-சாமான்ய ரஷணம் சொல்லுகிறது –

நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை மேதகு மைம் பெரும் பூதமும் நீயே-

முன்பு அனுசந்தித்த படியே ரஷித்த ரஷண பிரகாரம் சொல்லுகிறது —

சாஸ்திர முறை தப்பாத படி முறையிலே நடக்கிற நாலு வகைப் பட்ட வர்ணங்களும்
நீ இட்ட வழக்காய் இருக்கிறது
ஜகத் ஆரம்பகமான பூத பஞ்சகங்களும் நீ இட்ட வழக்கு
சத்தாதிகளும் உன் அதீனமான பின்பு உன்னை ஒழிய ரஷகர் யுண்டோ –

—————-

13-சாமான்ய ரஷணம் சொல்லி விசேஷ ரஷணம் சொல்லுகிறது –

அறுபத முரலும் கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை –

சாமான்ய ரஷணம் சொல்லி விசேஷ ரஷணம் சொல்லுகிறது –
என்னுடைய பிரதிபந்தகங்களை நீயே போக்கி அருள வேணும் –

——————-

14-அநாஸ்ரிதரான பாஹ்யருடைய நினைவுக்கு கோசரமில்லை-

அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை-

————-

15-ஸ்ரீ யபதித்வம் சொல்லப் படுகிறது –

ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை –

மேல் சொல்லப் படுகிற ஐஸ்வர்ய சௌலப்யங்களுக்கு அடியான
ஸ்ரீ யபதித்வம் சொல்லப் படுகிறது –
ந கச்சித் ந அபராத்யதி என்னும்
பெரிய பிராட்டியாரைத் திரு மார்பினில் வைத்து அருளினாய்-

————–

16-ஆராதனைக்கு எளியவன்
17-சரீர சரீரீ பாவம் –
18-பிரதிபந்தகம் போக்கி
19-சாஸ்திரம் ஒன்றாலே அறிந்து கொள்ளும் படி உள்ளவன்
20-ஸ்ரீ யபதித்தவம்
21-சர்வ அந்தர்யாமி
22- மேன்மைகள்-இத்தால் ஐஸ்வர்யம் சொல்லிற்று –

அற முதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை-
தர்மார்த்த காம மோஷங்கள் ஆகிற புருஷார்த்த சதுஷ்ட்யங்களுமாய்-
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நடுவே ஸ்வ ரூபேண நின்று -அவர்களை சரீரமாகக் கொண்டு நின்று

ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் ஸ சம்ஜஞாம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன -ஸ்ரீ விஷ்ணு புராணம்
என்னலாம் படி நிற்பானாய்
சுக துக்கங்களுக்கு நியாமகனாய்
காரண அவஸ்தையிலே சத் சப்த வச்யனாய்
சிருஷ்டி காலத்தில் வந்தவாறே
பஹூஸ்யாம் என்கிறபடியே –
விஸ்த்ருதனாய் நிற்கிறாயும் நீ

———–

23-ஸுலப்யம் -செல்வம் மல்கு திருக்குடந்தை ஆராவமுதன்
நீர்மைக்கு எல்லையான இடத்தில் சரணம் புகுகிறார்

குன்றாமது மலர்ச்சோலை வண் கொடிப் படப்பை வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ்வன முடுத்த கற்போர் புரி செய்கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும் செல்வம் மல்கு
தென் திருக் குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியிலறி துயில் அமர்ந்த பரம–
நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே –

நீர்மைக்கு எல்லையான இடத்தில் சரணம் புகுகிறார்

உன்னுடைய திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
இத்தை அனுபவிக்கைக்கு விரோதியைப் போக்கி அருள வேணும் –

இத்தால் –
இஷ்டப் பிராப்திக்கும்
அநிஷ்ட நிவாரணத்துக்கும்
சித்தமான உபாயத்தை பற்றிவிடுகிறார் –

என்னுடைய ஸ்வரூப அனுரூபமாக
தேவரீர் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

நீயும் உன்னுடைய ஸ்வரூப அனுரூபமாக
என்னுடைய சம்சாரிக வருத்தத்தைக் கழித்துத் தர வேணும் -என்கிறார்-

—————

இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பது என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருந்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே –

ஆராவமுத ஆழ்வார் உடைய திருவடி இணைகள் ஆழ்வார் திரு உள்ளத்தில் பொருந்தி
பெறாமல் இருப்பதை- ஆழ்வார் அனுசந்திப்பதாக
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் அருளிச் செய்கிறார்

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -61-70–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

April 21, 2022

அவதாரிகை

இப்படி இவளுடைய பிராப்தி த்வரையைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள்
உபய விபூதிக்கும் நாயகனான மேன்மையை யுடைய ஸர்வேஸ்வரன்
ஆஸ்ரித ஸூலபனாகைக்காக கிருஷ்ணனாய் வந்து அவதரித்த பிரகாரம்
வாஸா மகோசரம் ( மொழியைக் கடக்கும் பெரும் புகழான்) அன்றோ என்று
அவனுடைய ஸுலப்ய அதிசயத்தைச் சொல்லி ஆஸ்வஸிப்பித்த பிரகாரத்தை

வரைந்து தோளிலிலே விரைந்த தலைமகனைக் குறித்து
அவன் பெரியவனே யாகிலும் நமக்கு எளியனாய் வரும் காண் என்று
தோழி நாயகனுடைய சீலம் புகழ்ந்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

வாசகம் செய்வது நம் பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும்
வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால்
தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 –

பாசுரம் -61-வாசகம் செய்வது நம் பரமே –
தோழி தலைவன் நீர்மையைத் தலைவிக்கு கூறுதல் –
பிறந்தவாறும் -5-10-

பதவுரை

தொல்லை வானவர் தம் நாயகன்–பழமையான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்
நாயகர் எல்லாம் தொழுமவன்–ஈஸ்வரத்வம் பாராட்டுகிற (பிரமன் முதலியோர்) எல்லோரும்
(தம் தம் தலைமைபெறும் பொருட்டு) வணங்கும்படியானவனும்
ஞாலம் முற்றும்–உலகம் முழுவதையும்
வேய் அகம் ஆயினும் சோரா வகை–ஒரு கோற்குத்து நிலமாயினும் தவறாதபடி (துளியிடமும் மிச்சமாகாதபடி)
இரண்டே அடியால் தாயவன்–(தனது இரண்டு அடிகளாலே அளந்து கொண்டவனுமாகிய
நம்மிறையே–நமது தலைவன்
ஆய் குலம் ஆய் வந்து தோன்றிற்று–இடையர் குலத்தை யுடையவனாய்க் கொண்டு அக்குலத்தில் வந்து வளர்ந்த எளிமையை
வாசகம் செய்வது–எடுத்துப் புகழ்ந்து கூறுவது
நம் பரமே–நம்மாலாகக் கடவதோ? (ஆகாது)

வியாக்யானம்

வாசகம் செய்வது நம் பரமே
அவன் மேன்மைக்கு வேதங்களும் அகப்படப் பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டாமல் மீளா நிற்க
அவன் நீர்மைக்குப் பாசுரம் இட்டுச் சொல்லுகை நம் தலையிலே கிடப்பது ஒன்றோ

தொல்லை வானவர் தம் நாயகன்
நீர்மைக்கு ஊற்றான மேன்மையைச் சொல்லுகிறது
யத்ர பூர்வே ஸாத்யா சந்தி தேவா -புருஷ ஸூக்தம் -என்று
பழையவரான நித்ய ஸூரிகளுக்கு அசாதாரண சேஷி யானவன் என்று
நித்ய விபூதி யோகம் சொல்லிற்று

மேல் லீலா விபூதி யோகம் சொல்லுகிறது

நாயகர் எல்லாம் தொழுமவன்
ஈஸ்வர அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடே
இந்த்ராதிகளான லோக பாலாதிகளோடே வாசியற
ஸ்வ அதிபத்ய ஸித்யர்த்தமாகத் தொழப்படுமவன்

ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை
ரக்ஷணீயமான விபூதி எல்லாவற்றையும்
குழற் குத்தும் சோராத படி

இரண்டே யடியால் தாயவன்
அந்நிய சேஷத்வ
ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் இரண்டும்
இரண்டு திருவடிகளாலும் போம்படி அளந்து கொண்டவன்

இப்படி
1-ஸூரி போக்யனுமாய்
2-ப்ரஹ்ம ருத்ராதி ஸேவ்யனுமாய்
3-நிருபாதிக பந்துவுமானவன்
4-ஆஸ்ரிதற்கு பவ்யனாகைக்காக

ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று
இடைக் குலத்தை யுடையனாய்க் கொண்டு
ஆவிர் பவித்தது

நம்மிறையே
நமக்கு ஸ்வாமி யானவன்

நம் இறை வந்து தோன்றிற்று
வாசகம் செய்வது நம் பரமே
என்று அந்வயம்

இத்தால்
பிராப்தி த்வரையாலே கலங்கின இவரை
ஸூஹ்ருத்துக்கள்
ஸுலப்ய அதிசயத்தைச் சொல்லி
ஆஸ்வஸிப்பித்த தாயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
பெருமாள் மலையோ திருவேங்கடம் -என்று
இவள் சொன்ன பாசுரமாகத் திருத்தாயார்
அநு பாஷித்த இத்தைக் கொண்டு
பிராட்டியான தசை போய் தாமான நிலையானாம் படி தரித்தார்
இவர் தம்மைத் தாம் உணர்ந்தால்
பின்னை இவர் இழியும் துறை ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் இறே
அங்கு புக்கு
எத்திறம் -என்கிறார்

வியாக்யானம்
வாசகம் செய்வது நம் பரமே
எத்திறம் -திருவாய் -1-3-1- என்று
மோஹித்திக் கிடக்குமத்தனை போக்கி
பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது

என் தான்
பாசுரம் இட்டுச் சொல்லப் போகாமை என் என்ன

தொல்லை வானவர்
நித்ய ஸூரிகள் உண்டு
யத்ர ர்ஷய பிரதமஜா யே புராணா -(அச்சித்ரம் -92-)என்கிறவர்கள்

தம் நாயகன்
அவர்களுக்கு நிர்வாஹகனானவன்

ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் சேருவது நம் பரமே -என்கிறார்

வேதங்களோடு
வைதிக புருஷர்களோடு
வாசியில்லை யாயிற்று பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டாமைக்கு
வேதங்களும் ஆனந்தாதி குணங்களைப் பேசப்புக்க மாத்திரத்திலே இறே
ய தோ வாஸோ நிவர்த்தந்தே -(தைத்ரியம் ஆனந்த வல்லி )என்றது

தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம் -(புருஷ ஸூக்தம் )

அகர்ம வஸ்யனானவன்
பிறக்கைக்கு ஹேதுவான கர்மம் இன்றிக்கே இருக்க வந்து பிறந்த நீர்மையை
தீமதாம் அக்ரேசரராய் இருக்குமவர்கள்
அது தன்னிலும் இழியப் போகாமையாலே
அத்தைச் சுற்றும் வந்து ஆழங்கால் படுகிறார்கள்

ஸர்வஞ்ஞனான தான் சொல்லும் போதும்
ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந-ஸ்ரீ கீதை -4-9-

அர்ஜுந!-அர்ஜுனா!
மே ஜந்ம கர்ம ச திவ்யம்-எனது பிறப்பும் செய்கையும் தெய்வத்தன்மை கொண்டது,
ஏவம் ய: தத்த்வத: வேத்தி-இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்,
ஸ: தேஹம் த்யக்த்வா-உடலைத் துறந்த பின்னர்,
புநர்ஜந்ம ந ஏதி-மறுபிறப்பு எய்துவதில்லை,
மாம் ஏதி-என்னை எய்துகிறான்.

எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்
உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.

அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய:
பரம் பாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம்-ஸ்ரீ கீதை -7-24-

அபுத்தய: மம அநுத்தமம்-அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும்,
அவ்யயம் பரம் பாவம்-அழிவற்றதும் உத்தமமும் ஆகிய பர நிலையை,
அஜாநந்த:-அறிந்து கொள்ளாமல்,
அவ்யக்தம் மாம்-புலன்களுக்கு அப்பாற்பட்டவனான என்னை,
வ்யக்திம் ஆபந்நம்-கண்களால் காணக் கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்று (மனிதனைப் போல பிறப்புள்ளவனாக),
மந்யந்தே-கருதுகின்றனர்.

என்றும் சொல்லும் அத்தனை

இவருக்குத் தான் எத்திறம் என்று மோஹித்துக் கிடக்கை ப்ரக்ருதி இறே

தொல்லை வானவர் தம் நாயகன்
நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகு வானவன்

நாயகர் எல்லாம் தொழுமவன்
இவ்வருகு ஆக்கரான நாயக்கர் உண்டு -ப்ரஹ்மாதிகள்
சதுர்தச புவனங்களுக்கும் கடவோம் என்கிற அபிமானத்தைப் பொகட்டு வந்து தொழா நிற்பர்கள்
பிறவாதாய் இருக்கிறவர்கள் இறே
பிறக்கிறவனை வந்து ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள்
மனுஷ்யர் கண்ணுக்கும் கூடத் தோற்றாதவர்கள்
ராவண வத அநந்தரத்திலே வந்து ஸ்தோத்ரம் பண்ணினார்கள் இறே

ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை
பூமிப் பரப்பு அடங்க ஒரு கோல் குத்து நிலம் விடேன் என்று அபிமானித்தால் போலே யாயிற்று
இவனும் இந்திரனுக்காக மஹா பலிக்கு ஒரு கோல் குத்தும் விட்டேன் என்றபடி

இரண்டே யடியால் தாயவன்
மூன்று அடியை இரந்து
இரண்டு அடிக்காக்கி
ஓரடிக்காக அவனைச் சிறை யிடுகைக்காக
இரண்டு அடியாலே யாயிற்று அளந்து கொண்டது

ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று
இப்படிப் பூமிப் பரப்பு அடங்கலும் தன் காலின் கீழே இட்டுக் கொண்டவன்
காலின் கீழே துகையுண்ட பதார்த்தத்துக்குத் தான் புத்ரனாய் வந்தவன்
இது நம்மாலே பாசுரம் இட்டுச் சொல்லலாவது ஓன்று அன்று இறே

ஆய்க்குலமாய்
ஸம்ஸாரிகளிலே ஒருவன் அல்ப விவேகம் யுண்டானால்
பால்யேந திஷ்டா ஸேத் -(ப்ருஹதாரண்யம் -5-4-) என்று
அபிஜன வித்யா விருத்தங்களால் வந்த அபிமானத்தைப் பொகடா நின்றான் இறே
அல்பம் விவேகியாய் இருக்கிறவன் உட்பட பொகடா நிற்க
ஸர்வஞ்ஞனான தான் அபஹத பாப்மத்வாதிகளைக் காற் கடை கொண்டு
இக்குல அபிமானத்துக்கு அவ்வருகு ஓன்று அறியாதானாய் வந்து பிறந்தான்

ஜஜ்ஜே விஷ்ணு ஸநாதந -அயோத்யா -1-7-என்றபடியே
தன்னைப் பற்றினாரும்
பழையாரும்
பிறவாதாருமாம் படி இருக்கிறவன்
வந்து பிறக்குமதுக்குப் பாசுரம் இடப்போமோ

வந்து தோன்றிற்று நம்மிறையே
ஆவிறர் பூதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-2-2-என்னக் கடவது இறே

இரண்டே அடியால் தாயவனான நம்மிறை
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் செய்வது நம் பரமே

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படியாகத் தன் தாய்க்குச் சொன்ன தோழிமார்களை
ஒன்றும் அறியாச் சிறுமியனாய் நம்மிறை வெறும் பரனேயோ
வெறும் ஸூலபனேயோ
அதுகள் தான் அவனுக்கு எவ்வளவு என்று கேட்டவனான தனக்கு
நம்மிறையோடீ
அவர் வாக் கோசரத்துபய ஸ்வ பார்
அதுகள் எங்களால் தான் அளவிட்டுப் பேசத் தகுமோ – என்று
அவர்களாய்த் தாம் அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்
வாசகம் செய்வது நம் பரமே
வாய் அவனை விட்டுச் சொல்லுவது நம்மால் தகுமோ
அவன் பர ஸானத்தைக் கேளாய்

தொல்லை வானவர் தம் நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன்
யத்ர பூர்வே -என்னப்பட்ட விண்ணவர்க்கு எல்லாம்
நித்ய நிர்வாஹக சேஷி யானவன்
சில ஒவ்பாதிக சேஷியான விதி சிவ இந்த்ராதிகளால் தொழப்படுமவன்

இப்படிப்
பரனே
ஸூஸீலனுமானவனே -என்கிறார்கள்

ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால் தாயவன்
பூ லோக
உபரித லோகங்களில்
ஒரு கோல் குத்து நிலமும் விடாதபடி
க்ருத்ஸ்நத்தையும் இரண்டு அடியாள் அளந்து கொண்டவன்

இப்படியான நம்மிறையே

அவனே
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று –
இடைக்குலத்திலும் ஆவிர் பவித்தான்

இவனுடைய
1- பரத்வ
2-ஸுசீல்ய
3-ஸுலப்யங்கள்
வாசா -இவ்வளவு என்று நம்மால் சொல்லப் போமோ

———————

அவதாரிகை

இப்படி ஆஸ்ரித ஸூலபனாய் வந்து அவதரித்தது
தமக்குச் சடக்கென லபிக்கைக்கு உறுப்பாகக் காணாமையாலே
(கீழே நமக்கு இறை என்றாரே ஸ்வாமித்வம் தானே
ஆய்க் குலத்துக்குத் தான் எளியவன் )
ஆர்த்தரான இவருக்கு
ஸம்ஸார சாகர கோலாஹல தர்சனத்தால் பிறந்த ஸைதில்யத்தைக் கண்ட
ஸூஹ்ருத்துக்கள் வெறுத்து யுரைத்த பாசுரத்தை
கடவோதத்துக்கு ஆற்றாத தலைவி யுடைய தளர்த்தி கண்டா தோழி
புலம்பி யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல் ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – 62-

பாசுரம் -62-இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண் பால் –
தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்குக் கூறுதல் –
தேவிமார் ஆவார் -8-1-

பதவுரை

இரக்கினும்–எவ்வளவு வேண்டிக் கொண்டாலும்
ஓர் பெண்பால் எனவும் ஈங்கு இறை இரங்காது–இவள் ஒரு பெண் மகளென்று கருதியும்
இவளிடத்திற் சிறிதும் இரக்கம் கொள்ளாமல்
கருங் கடல்–கரியகடலானது
அறையோ என நின்று அதிரும்–(இவளெதிரில்) அறை கூவுகிறதோ வென்று சொல்லும்
நிலை நின்று (ஒரே விதமாக) கோஷஞ் செய்கின்றது;
ஓ–இஃது ஒரு கொடுமையே
அரவு அணைமேல்–சேஷ சயனத்தின் மீது
பள்ளி கொண்ட–சயனித்தருளா நின்ற
முகில் வண்ணனே–காளமேகம் போன்ற வடிவுடையவனே!
ஈங்கு–இவ்விடத்தில்
இவள்தன்–இவருளுடைய
நிறையோ–நிறைக் குணமோவென்னில்,
இனி–இனிமேல்
உன் திருஅருளால்–உனது கிருபையினாலல்லது (வேறொன்றாலும்)
அன்றி–பாதுகாத்து வைக்க முடியாது;காப்பு அரிது–
முறையோ–(இவளை நீ இங்ஙனம் உபேஷித்தல்) முறைமையோ?

வியாக்யானம்

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
சக்ரவர்த்தி பரசுராமனை இரந்து
பிள்ளைகள் பால்யத்தை முன்னிட்டால் போலே
நான் ப்ரார்த்தனா ரூபமான பிரபதனத்தைப் பண்ணிலும்
அவள் ஒரு பெண் அன்றோ
இன்று பல ஹானியை முன்னிடிலும் இவ்விடத்தில் இறையும் இரக்கம் இன்றியே இருந்தது
ஓ ஒரு கொடுமையே

இரக்கம் இல்லாமை கண்டபடி என் என்னில்

அறையோ என நின்றதிரும்
இவள் எதிராக அறை கூவுகிறதோ -என்னலாம் படி
நிலை நின்று கோஷியா நிற்கும்

கருங்கடல்
இவள் அளவில் கடலுக்கு யுண்டான நெஞ்சில்
கருகுதல் வடிவிலும் தோன்றா நின்றது

ஈங்கிவள் தன் நிறையோ
இவ்விடத்தில் ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தையான இவளுடைய
ஸ்த்ரீத்வ பூர்த்தி யானது

வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
பிரபல விரோதி யுண்டாய்
ஸ்வ சக்தியும் இல்லாத பின்பு
ப்ராப்தனான உன்னுடைய நிருபாதிகையான கிருபையால் அன்றி
ரஷிக்கை சக்யம் அன்று

முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே-
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே முறையோ
நீ படுக்கை வாய்ப்பு அறிந்து கிடக்க
இவள் பாடாற்ற மாட்டாத இது கிரமமோ

முறையோ என்று
க்ரம ஹானியை ஸூசிப்பித்துக் கூப்பிட்ட படி

1-ஸ்ரம ஹரமாய்
2-தர்ச நீயமாய்
3-உதாரமான வடிவை யுடைய நீ
இவள் ஆர்த்தி தீர உபகரியாதது முறையோ என்று
தோழியானவள் தன் ஆற்றாமையாலே தலைவனை யுட் கொண்டு
விளித்து யுரைத்தாள் யாயிற்று

இது செவிலி இரங்கல் யாகவுமாம் –
(தமிழர் அகத்துறைப்படி தோழி பாசுரம் கொள்ளத் தகும் என்பர் )

இத்தால்
அநந்த க்லேச பாஜனமாய்
கோரமான ஸம்ஸார ஸாஹரத்தினுடைய
கோலாஹலத்தைக் கண்டு ஆழ்வார் ஈடுபாட்டுக்கு அஞ்சின ஸூஹ்ருத்துக்களால்
இது பரிஹரிக்க அரிது என்று நினைத்து
ஆழ்வாருடைய ஸ்வரூபம்
ஈஸ்வரனுடைய கிருபா ஏக ரஷ்யம் ஆகையால்
ரக்ஷகரான பெரிய பெருமாளைக் குறித்துத்
தங்கள் ஆர்த்தி தோற்ற விண்ணப்பம் செய்த பாசுரமாய் இருக்கிறது —

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

கீழ் ஸ்ரீ கிருஷ்ண அவதார ஸுலப்யத்தை அனுசந்தித்து
அவதார சமகாலத்திலே தாமாகப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாலே
கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையை ப்ராப்தரானார்
அந்த பிரிந்த ஆற்றாமைக்கு மேலே கடலோசையும் வந்து பாதகமாகா நின்றது என்று சொல்லா நின்றாள்
என்று திருத்தாயார் சொல்லுகிறாளாய் இருக்கிறது –

வியாக்யானம்

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
காலிலே விழுந்து சரணம் புகச் செய்தேயும்
சரணம் புகுகை தான் மிகை என்னும்படிக்கு ஈடாய் இருக்கிறவளுடைய
தசையைக் காட்டாச் செய்தேயும்
புறம்பு ஒரு புகல் இல்லாதாள் ஒரு அபலை கிடாய் என்னச் செய்தேயும்
ஏக தேசமும் இரங்குகிறது இல்லை
பாதகர்க்கு இத்தலையிலே அருமை காற்றுமது அன்று இறே

அறையோ என நின்றதிரும்
இங்கனே வெளியில் புறப்படாயோ என்று
அறையோ என்று அலற கூவுகிறால் போலே இரா நின்றது –

கருங்கடல் ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவதாரிகை

வியாக்யானம்
இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது அறையோ என
நின்றதிரும் கருங்கடல் ஈங்கிவள் தன் நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
ரக்ஷகன் அநாதரித்தால் சத்ருக்கள் எதிர்ப்பட்டு நின்று ஒருபடிப்பட அறை கூவுவர்கள் இறே
அவர்களை போலே இக்கடல் தன ஸ்வரூபத்தால் உம்மை ஸ்மரிப்பக்கவும்
ஒருபடிப்பட நின்று அறை கூவுவுமாய்
இவள் பக்நைர்யையாம் படி அதிரா நின்றது
இவ்வவஸ்தையில் இவள் நிறை
அடக்கமானதது ஓ -என்னாலும் துர் பேத்யமே
இனி அது அழித்து உன்னையே கூப்பிடுமதான பின்பு
உன்னருளால் அன்றி இல்லையே
அத்தால் அவ்வவஸ்தை யானானாள்

முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே –

——————-

அவதாரிகை

இப்படித் தாங்களும் ஆர்த்தராய்க் கூப்பிடும்படி இவருக்கு
ஆர்த்தியை ஈஸ்வரன் ஜநிப்பித்து
கடுக முகம் காட்டாமையாலே
ஈஸ்வரன் பக்கலிலே க்ரூர்ய சங்கையைப் பண்ணின
ஸூஹ்ருத்துக்களைக் குறித்து

அவனுடைய பூர்ண கடாக்ஷம் நடத்தாத தம்முடைய திரு உள்ளத்தில் ப்ரதிஷ்டிதமாம் படி
ப்ரகாசிப்பித்த பிரகாரத்தை அவர்களுக்கு அறிவித்து
சமாதானம் பண்ணின பாசுரத்தை

தலைவன் கொடுமையைச் சொல்லி இயல்பு அழித்த தோழிக்கு
இயற்பட மொழிந்த தலைவி பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய
தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திரு முகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனோடு இக்காலம் இருக்கின்றதே — 63-

பாசுரம் -63-வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் –
தலைவி தோழியிடம் தலைவன் இயல்பை எடுத்துக் கூறுதல் –
இவையும் அவையும் -1-9-

பதவுரை

வண்ணம் சிவந்துள–திருநிறம் சிவந்துள்ளவையும்
வான் நாடு அமரும் குளிர் விழிய–பரமபதம் ஆனந்த மடையும் படியான குளிர்ந்த பார்வையை யுடைவையும்
தண் மெல் கமலம் தடம் போல் பொலிந்தன–குளிர்ந்த மென்மையான தாமரைத் தடாகம் போல விளங்குகின்றவையுமாகிய
இவையோ தம்–இத்திருக்கண்களோ
கண்ணன்–கிருஷ்ணாவதாரஞ் செய்தவனும்
திருமால்–திருமகள் கணவனுமான பெருமானுடைய
திருமுகம் தன்னொடும்–திருமுக மண்டலத்திலே
காதல் செய்தேற்கு–வேட்கை கெண்டிருக்கிற என்னுடைய
எண்ணம்–மனத்திலே
புகுந்து–பிரவேசித்து
இ காலம்–இப்பொழுதும்
அடியேனோடு இருக்கின்ற–(விட்டு நீங்காமல்) என்னோடு இருக்கின்றன.

வியாக்யானம்

வண்ணம் சிவந்துள
தம் பக்கல் இவருக்கு யுண்டான ராகம்
இக் கண்களினுடைய நிறத்தில் சிவப்பிலே காணலாம்

அது சீற்றத்தாலோ என்னில்

வானாடமரும் குளிர் விழிய
நித்ய விபூதியிலே இருந்து
நித்ய அனுபவம் பண்ணி
நிரதிசய ஆனந்தத்தாலே குளிர்ந்த பார்வையை யுடைத்தாய் இரா நின்றன

இவர் திரு உள்ளத்தில் பிரகாசிக்கிற தசையிலும்
குளிர்த்தி மாறாது இருக்கை –

தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன
இக் கண் அழகுக்கு சீதளமாய் மிருதுவான தாமரைத் தடாகத்தைப் போலி யாக்கினால்
மிகுத்துத் தோன்றா நின்றன –

தாமிவையோ
இவை ஸ்ம்ருதி மாத்ரமும் இன்றியே
உரு வெளிப்பாடாம் படி பிரகாஸியா நின்றன

(ஸ்ம்ருதி -நினைவு மட்டும்
அத்தையும் தாண்டி உருவ வெளிப்பாடு -முழுவதாக அறிவது
அத்தையும் தாண்டி பிரத்யக்ஷம் நேராக் காண்பது )

கண்ணன்
பெண் பிறந்ததற்கு பவ்யனானவன்
(சுவையன் திருவின் மணாளன் )

திருமால்
நாரீணாம் உத்தமையான பிராட்டிக்குப் பிச்சனாவான்

திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
கண்ணன் கோள் இழை வாண் முகம் -திருவாய் -7-7-8-என்கிறபடியே
சகல ஸுந்தர்ய ஸாம்ராஜ்ய ஸ்த்தலமான திரு முகத்திலே
ஸாமான்ய ஸ்நேஹம் பண்ணின எனக்கு

எண்ணம் புகுந்து
தடாகத்தின் சுழி போலே கொண்டு முழுகும் படியான கண்கள் தானே
என் நெஞ்சிலே புகுந்து

அடியேனோடு
தனக்கே சேஷமான என்னோடே கூட
(ஏவகாரம்-அநந்யார்ஹ சேஷத்வம் )

இக்காலம் இருக்கின்றதே
க்லேசிக்கிற இக்காலத்திலும் விடாதே இரா நின்றன

ஆதலால் அவன் நம்மை அநாதரித்தான் என்று
இயல் பழிக்கப் படாது காண் என்று
தோழிக்கு
இயற் பட மொழிந்ததாயிற்று

இத்தால்
வண்ணம் சிவந்துள என்கையாலே
ஆழ்வார் பக்கலிலே ஈஸ்வரனுக்குப் பிறந்த
ராகம் ஸூசிதமாயிற்று

வானாடு இத்யாதியாலே
அந்த விபூதியில் அனுபவத்தாலே யுண்டான செவ்வியும்
இவர் பக்கல் செறிவாலே உண்டானமை தோற்றிற்று ஆயிற்று

(அந்தா மத்து அன்பு செய்து –என்னாவி சேர் அம்மான்
சேர்ந்த பின்பு தானே அவையும் சித்தி பெற்றது
என் உச்சி உள்ளே நிற்கும் -தேவதேவன் -நின்றபடியாலே தேவ தேவன் ஆனான் )

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

முறையோ என்று கூப்பிட்டால் ஆறி இரான் இறே
வந்து குளிர நோக்கினான்

வியாக்யானம்

வண்ணம் சிவந்துள
திருக்கண்களுக்குச் சிவப்புப் பிறப்பே பிடித்து
ஸ்வ பாவமாய் இருக்கும் இறே
இப்போது வண்ணம் சிவந்துள -என்கிற இத்தால்
பூர்வ அவஸ்தையில் வை வர்ண்யம் அத்தலையில் என்னும் இடம் தோற்றுகிறது

ந ஜீவேயம் க்ஷணம் அபி -ஸூந்தர –66010-என்னும்படி இறே
அத்தலையில் ஆற்றாமை
ஆகையால் கண் உறங்காமையாலே வந்த சிவப்பும்
வை வர்ண்யமும் தீர்ந்தது இப்போது என்னும்படி இருக்கை

வானாடமரும் குளிர் விழிய
ஒரு த்ரிபாத் விபூதியாக ஒரு கண்ணில் குமிழில் கீழே யாயிற்று ஜீவித்துக் கிடப்பது
வானாடு அமரும்படியான குளிர்ந்த கடாக்ஷத்தை யுடையவன்

அமருகையாவது
இத்தாலே உண்டு உடுத்து வர்த்திக்கை
தாரகமும் போஷகமும் போக்யமும் எல்லாம் இவையே என்று இருக்கை

தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன
குளிர்ந்து
மிருதுவாய் இருபத்தொரு தாமரைப் பொய்கை பரப்பு மாற
அலர்ந்தால் போலே யாயிற்று
திருக்கண்கள் இருப்பது

தாமிவையோ
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -(சாந்தோக்யம் -1-6-7-)என்று
கேட்டார் வாய் கேட்டு இருந்தோம்
அவை தான் இருக்கும் படி இதுவோ

கண்ணன் திருமால்
திருமால் கண்ணன்
ஸ்ரீ யபதி யாகையாலே
ஆஸ்ரிதற்குக் கையாள் யானவன்

திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
அழகிய திரு முகத்தோடு வந்து
குளிர நோக்க வேணும் என்று ஆசைப்பட்ட எனக்கு

எண்ணம் புகுந்து
மநோ ரதித்த படியே கை புகுந்தது என்னுதல்
அன்றிக்கே
எண்ணம் புகுந்து என்றாய்
என்னுடைய மநோ ரதத்தைத் தானே ஏறிட்டுக் கொண்டு

அடியேனோடு
ஜிதம் -ஜிந்ததே ஸ்தோத்ரம் என்கிறார்
அஹம் அர்த்தத்தினுடைய ஸ்வரூபம் தான் அடியேன் என்று போலே காணும் இருப்பது
ஜீவா ஸ்வரூப பரமான வாக்கியத்தில் அப்படியே இறே சொல்லுகிறது
அது ஜீவா ஸ்வரூப பரமோ என்னில்
ஓம் இத்யாத் மாநம் யூஞ்ஜீத -தைத்ரியம் -என்றும் யுண்டு
ஓங்காரே பகவான் விஷ்ணு என்றும் சொல்லா நின்றது இறே

இக்காலம்
இப்பேற்றுக்கு வரவாறு முன்நாள் அறிந்திலேன் கிடீர்

இருக்கின்றதே
நச புநரா வர்த்ததே -சாந்தோக்யம் -8-15- என்னும்
பேற்றைப் பெற்றோம் ஆகாதே என்று தோற்றி இரா நின்றது
ஒரு நாளும் இனிப் பிரிகைக்கு சம்பாவனை இல்லை என்று தோற்றி இரா நின்றது
ப்ரத்யக்ஷ ஸமாநா காரமாகிலும் இவர்க்கு
சமாநாசா காரம் என்று தோற்றாதே
ப்ரத்யக்ஷம் என்றே தோற்றுகிறது –

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இது உசிதமோ என்று நொந்து சொன்னால் ஆறி இரான் இறே
வந்து குளிர நோக்கினான்
அந்நோக்குக்கு இலக்கான தலைமகள்
ஹ்ருஷ்டையாய்
தன் தாய்க்கும் தோழிக்கும் சொல்லுகிறாளாய்
அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்

வண்ணம் சிவந்துள
என்னில் அநு ராக உத்தரமான கண்ணில் சிவப்பு இப்போது யுண்டாயிற்று

அதுக்கும் மேலே

வானாடமரும் குளிர் விழிய தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
இவை திருக்கண் மலர்கள்
வான் நாட்டில் உள்ளாரில் காட்டிலும் என்னிவ் வக்நமாய்
ஸூ சீதளமான பார்வையை யுடைத்தாய் குளிர்த்தியும் மார்த்தவமும் யுள்ள
கமலங்களேயான தடாகத்தைப் போன்றதாய்
அது தான் இவைக்கு சரியோ என்னலாய் இரா நின்றது


இது ஹாவு ஹாவு -தைத்ரியம் என்றபடி

கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு எண்ணம் புகுந்து அடியேனோடு யக்காலம் இருக்கின்றதே
என்பது இங்கே கூடும்
திருமால் வ்யாமோஹம் செய்யும் கண்ணனுடைய திரு முகத்தோடே
கோள் இழைத்த தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோள் இழையா வுடைய கொழுஞ்சோதி வட்டம் கொல் கண்ணன்
கோள் இழை வாண் முகமாய்க் கொள்கின்ற –திருவாய் –7-7-8-
ஸகல ஆனந்த ஸுந்தர்ய ஸாம்ராஜ்ய ஸ்த்தலமான திரு முகத்தில்
அதீப் தீயா நித்ய உபாயான சீலர்க்கு த்யான ரூடமாய் இருக்குமே அது

அடியேனோடு இக்காலம் இருக்கின்றதே
தனக்குப் பூவின் மீசை நங்கை போல் அடிமை செய்ய வேண்டின என்னோடே இப்போது
அநு பாவ்யமாய் இருக்கிறது
ப்ரத்யக்ஷமாய்த் தானே
இங்கும் ஓ என்பது அன்விதம்

—————

அவதாரிகை

இப்படி அனுபாவியனான ஸர்வேஸ்வரனுடைய திருக்கண்கள் உம்முடைய திரு உள்ளத்திலே
அபரோக்ஷ சித்தமாம் படி அனுபவித்து
இதுக்குப் பாசுரம் இட்டுச் சொல்லுவதும் செய்யா நின்றீர்
இனி வேண்டுவது என் என்ன

விலக்ஷணமான புருஷர்கள் ச க்ரமமாக ஆஸ்ரயித்து அனுபவிக்கிறாப் போலே
பூர்ண அனுபவம் பண்ணப் பெறாமையாலே
தரித்து இருக்கைக்காக அவன் திரு நாமத்தைச் சொல்லப் பெற்றேன்
இத்தனை யன்றோ என்கிறார் –

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64 –

பாசுரம் -64-இருக்கு ஆர் மொழியால் நெறி இழுக்காமை –
தலைவன் பேர் கூறி தரித்து இருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறி இரங்கல் –
பாமுரு மூவுலகும் -7-6-

பதவுரை

நிலத் தேவர் –பூமி தேவர்களாகிய பிராமணர்கள்
இருக்கு ஆர் மொழியால்–வேதங்களிற் பொருந்தின மந்திரங்களைக் கொண்டு
நெறி இழக்காமை–முறைமை தவறாமல்
உலகு அளந்த திருதால் துணை வணங்குவர்–உலகங்களை அளவிட்ட (எம் பெருமானது)
திருவடிகளை வணங்கி அனுபவிப்பார்கள்:
யாமும்–நாமும்
அவா ஒருக்கா–(எமது) ஆசையை அடக்க மாட்டாமல்
வினையொடும் எம்மொடும் நொந்து–(அப்படி அநுபவிப்பதற்கு விரோதியான எமது) பாவத்தையும்
(அப் பாவத்திற்கு இடமான) எம்மையும் வெறுத்துக் கொண்டு
கனி இன்மையின் கருக்காய் கடிப்பவர்கள் போல–பழம் கிடைக்காமையாற் பிஞ்சைத் தின்பவர் போல
திருநாமம் சொல் கற்றனம்–(பூர்ணாநுபவம் கிடைக்காமையால் அதுவரையில் தரித்திருப்பதற்காக அவனது)
திருநாமங்களாகிய சொற்களைச் சொல்லுதல் செய்கிறோம்.

வியாக்யானம்

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர்
வேதங்கள் எல்லாம் தனக்குள்ளே யாகும்படியான மூல மந்திரமான மொழியாலே
(ஓம் என்னும் படி உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய் இருக்குமே )
ஆஸ்ரயண பிரகாரத்தில் ஒன்றும் வழுவாதபடி அந்த மந்த்ரார்த்த ப்ரகாசமாய்க் கொண்டு
ஸகல லோகங்களையும் தனக்குள்ளே யாக்கின திருவடிகளை
பூமிக்கு தேவர்களான ப்ராஹ்மண உத்தமர் ஆஸ்ரயித்து அனுபவியா நிற்பர்கள்

யாமுமவா
யாமும் அவா
அந்த அதிகாரம் இல்லாத நாமும் அப்படியோ
அல்ல என்றபடி

ஆனால் உம்முடைய அளவு என் என்னில்
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து
அனுபவ விரோதியான பாபத்தை ஒருங்க விடாமையையும்
பிரதிபந்தகம் யுண்டானால் ஆறி இருக்க ஒண்ணாதபடி சபலமான ஸ்வரூபத்தையும்
பார்த்து ஈடுபட்டு (துன்பப்பட்டு )-

கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல்
பழம் கிடையாமையாலே பசுங்காயைத் தின்பாரைப் போலே

திருநாமம் சொல் கற்றனமே
பூர்ண அனுபவம் பெறாமையாலே சத்தை கிடைக்கைக்காக
அவன் திரு நாமத்தைச் சொல்லுகையை அப்யஸித்தோம் (இத்தனை ) என்றபடி

இப்பாட்டு
கலந்து பிரிந்த நாயகி
கலவி கிட்டாமையாலே நாயகனான ஈஸ்வரனுடைய குண நாமங்களைத் தான்
தரித்து இருக்கைக்காக உரைத்தேன் என்று
பாங்கியிடம் உரைத்தலாகவுமாம்

சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே –திரு நெடும் -13-

திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் -திரு நெடும் -14-

என்றதாய்க் கொண்டு
திரு நாமத்தால் நாயகி தரித்த இடங்களும் உண்டு இறே

கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்
காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல்லடர்த்து மல்லரையன் அட்டாய் என்னும்
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே என்று
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே-13

முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே –14-

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இவரைத் திருக்கண்களால் கடாக்ஷித்தான் என்று இறே கீழ் நின்றது
அல்லாதார் மேல் வையாதே நம் மேலே இவ்விசேஷ கடாக்ஷம் பண்ணுகைக்கு
நிபந்தம் என் என்று ஆராய்ந்தார்
அஹ்ருதயமாகத் திரு நாமத்தைச் சொன்னேன்
அத்தாலே அன்றோ என்கிறார் –

வியாக்யானம்

இருக்கார் மொழியால்
இருக்கில் ஆர்ந்த மொழியாலே
பிரதிபத்தாக்களுடைய புத்தி விசேஷங்களாலே அரை வயிறாகவும் பதராகவும்
பார்க்கலாய் இருக்கும் இடங்கள் உண்டாய் இருக்குமாயிற்று வேதங்களிலே
அவன் விபூதியைப் பரக்கச் சொல்லா நின்றால் –
அதில் ஏகதேச பூதரானவர்கள் பக்கலிலே பரத்வ பிரதிபத்தியைப் பண்ணியும்
ப்ரஸம்ஸா பரம் என்றும் சொல்லா நிற்பர்கள் இறே

அவன் ஸ்வரூப ரூபா குண விபூதிகளைப் பேசுகிற இடத்தில்
ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பிரமிப்பாரும் பிரமிக்க அவகாசம் இல்லாதபடி பேசுகிற
அநந்ய பரமான நாராயண அநு வாகாதிகளை யாயிற்று
இதில் ஆர்ந்த மொழியாகச் சொல்லுகிறது

ஸர்வே வேதா யத்ரைகம் பவந்தி -(யஜுஸ் ஆர ப்ரச்னம் -3)இத்யாதியால்
எல்லா வாக்யங்களுக்கும் அவனே வாஸ்யனாகை இறே யுக்தம்
உத்க்ருஷ்ட பதார்த்தங்களுக்கு வாசகமான ஸப்தங்கள்
இவ்வநுவாகத்திலே நின்று அவன் பக்கலிலே ப்ரயோகிக்கையாலே
எல்லாம் அவனையே சொல்லிற்று ஆக வேணும் இறே

நெறி இழுக்காமை
பகவத் ஸமாராதநம் ஆகிற வைதிக மர்யாதையைத் தப்பாமே

உலகளந்த திருத் தாளிணை
இவை அறியவுமாம்
அறியாது ஒழியவுமாம்
என்னுடைமையை நான் விடேன் -என்று ஸ்வீ கரிக்கும் ஸ்வ பாவனாய் யுள்ளவனை
இவை அறியாதே இருக்கச் செய்தேயும்
தானே எல்லை நடந்து மீட்டுக் கொண்டான் இறே

நிலத் தேவர் வணங்குவர்
ஸம்ஸாரத்திலே வர்த்தியா நிற்கச் செய்தேயும்
விண்ணுளாரிலும் சீரியர் –திரு விருத்தம் –79- என்னும்படியே
பூ ஸூரர் ஆனவர்கள் உலகு அளந்த திருத்தாளிணை நெறி இழுக்காமை வணங்குவர்

யாமும்
அவர்களுடைய பரிகரம் இன்றிக்கே இருக்கிற நானும்

அவா ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே

———————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

வியாக்யானம்

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து

கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல்
கனிந்த பழம் இல்லாத போது
காய்ப்பழத்தைப் புஜிப்பாரைப்
உபாயத்தில் ஸூ விசத ஞானமும் அனுஷ்டான சக்தியும் உண்மைக்கு கனி நிதர்சனமும்
மந்த ஞான சக்திகளுக்குக் கருக்காயும்

திருநாமம் சொல் கற்றனமே
அவன் அறியப் பரி பூர்ண உபாய கர்ப்பமாய் அவன் திரு நாமத்தை உட் கொண்ட சொல்
நமோ நாராயணாய என்பது
அத்தை உச்சரித்தேன்
அத்தால் கடாக்ஷத்தைப் பெற்றேன் என்றதாயிற்று –

—————

அவதாரிகை

இப்படி இவ்வாழ்வாருக்கு பகவத் விஷயத்திலே
எண்ணம் புகுந்து –திரு விருத்தம் -63-என்கிறபடியே
மானஸ அனுபவம் நடக்கிற படியும்
கருக்காய் கடிப்பவர் போல் –திரு விருத்தம் -64-என்று
பூர்ண அனுபவம் பெறாமையால் யுண்டான அதிருப்தி நடக்கிற படியையும் கண்டு

(உற்றும் -எண்ணம் புகுந்தது படி -மானஸ அனுபவம்
உறாததும் -கனி இருக்க காய் -உண்ட பூர்ண பாஹ்ய அனுபவம் கிடைக்காமல் )

இந்த உபய ஆகார விசிஷ்டமான இவருடைய ஞானத்திலே (கண்ணிலே )
அன்பர் அகப்பட்டு உரைத்த பாசுரத்தை

தலைவி நோக்கின் வாசி கண்டு
தலைவன் குறித்து ( விரித்து )யுரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோ கரும
முற்றுப் பயின்று செவியொடு உசாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே –65 –

பாசுரம் -65-கற்றுப் பிணை மலர்க் கண்ணின் குலம் வென்று –
தலைவியின் கண்கள் கவர்ந்ததைத் தலைவன் கூறல் –
நோற்ற நோன்பு -5-7-

பதவுரை

கன்று பிணை–இளமையான பெண்மான்களுடைய
மலர் கண்ணின்–பரந்த கண்களின்
குலம்–சாதியை
வென்று–ஜயித்து
ஒரே கருமம் உற்று–ஒரு காரியத்திலே பொருந்தி
பயின்று–அக்காரியத்திலே பழகி
செவியோடு உசாவி–(அக்காரியத்தைக் ) காதுகளோடு வினாவி ஆலோசித்து,
உற்றும் உறாதும் மிளிர்ந்த–(எனக்கு) அனுகூலமாயும் பிரதிகூலமாயும் தடுமாறுகிற
கண் ஆய்–கண்களாய் (இவை)
உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திரு அடி கீழ்–எல்லா வுலகங்களையும் மிச்சமில்லாதபடி
(பிரளய காலத்தில்) வயிற்றினுட்கொண்டு (பின்பு) வெளியிட்ட எம்பெருமானது திருவடிகளின் கீழே (இவ்வுலகத்திலே)
எம்மை உணர்கின்ற–எம்மை (த் தமக்கு உள்ளாம்படி) கவர்ந்து கொள்கின்றன.

வியாக்யானம்

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று
இளைய மான் பேடைகளுடைய மலர்ந்த கண்ணின் ஜாதியை வென்று

ஒரோ கரும முற்றுப் பயின்று
தன்னில் தான் பலகாலும் கிட்டுகையாலே
பர்யாயம் தோறும் ஒரு கார்யத்தைக் கிட்டி அறுதியிடுகிறது என்னலாய்

செவியொடு உசாவி
மாண்டு கர்ணத்து அளவும் செல்லுகையாலே அறுதியிட்ட காரியத்தை
ஸ்ரவண இந்த்ரியத்தோடே விசாரியா நின்றது என்னலாய்

உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
லோகம் அடைய பிரளய ஆபத்தில் ஈடுபடாமல் திரு வயிற்றிலே வைத்து நோக்கியும்
நெருக்குப் படாமல் வெளிநாடு காட்டியும் ரஷித்த
ஈஸ்வரனுடைய திருவடிகளிலே

உற்றமுறாதும்
உற்றும் உறாதும்
கிட்டினார் கண் போலேயும்
கிட்டாதார் கண் போலேயும்

அதாவது
உகப்பும்
செல்லாமையும்
தோற்றி இருக்கை

நாயகனைக் கண்ட உகப்பும்
இவனை ஒழியச் செல்லாமையும்
தோற்றும்படி
பார்வையிலே அறியலாய் இருக்கை

மிளிர்ந்த கண்ணாய்
உகப்பும் செல்லாமையும் மிளிர்தலிலே காணலாம் படி
கண் என்று பேராய்

எம்மை உண்கின்றவே
நம்மைத் தனக்குள்ளே யாம் படி க்ரஹியா (க்ரஸியா) நின்றன என்று தன்னை இவள்
கண்களுக்கு ஆக்கிக் கொண்டமை சொன்னான் ஆயிற்று

இத்தால்

கற்றுப் பிணை -இத்யாதியாலே
இவ்வாழ்வாருடைய ஞானம்
ஸம்ஸாரம் ஆகிற காட்டிலே திரிகிற முக்தமான ம்ருக பிராயருடைய
ஸப்தாதி விஷயங்களிலே விகஸிதமான ஞான ஜாதியை
வென்று இருக்கும் என்றபடி

ஒரோ கரும முற்றுப் பயின்று -என்கையாலே
ஞாதவ்யமான பகவத் ஸ்வரூபாதிகளிலும்
ஸ்வரூப விரோதிகளிலும்
புருஷார்த்த விரோதிகளிலும்
சாதனா விரோதிகளிலும்
வ்யவசிதமாய்க் கொண்டு சீலித்த படி

செவியொடு உசாவி -என்கையாலே
இவ் வர்த்த நிஷ் கர்ஷங்கள் இதுக்கு
நிர்ணாயக ப்ரமாணமான ஸ்ருதியோடே
சம்வதித்து இருக்கும் என்றபடி
(ஸ்ருதி சொல்வதை ஸ்ராவ்ய காது இடம் தானே கேட்க வேண்டும் )

உலகம் இத்யாதியாலே
ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே மானஸ அனுபவத்தால் வந்த உறுதலையும்
பாஹ்ய அனுபவத்தால் வந்த உறாமையையும் சொல்லுகிறது

மிளிர்ந்த கண்ணாய் -என்கையாலே
ஸர்வ அவஸ்தைகளிலும் ஞானத்தினுடைய விகாஸம் சொல்லிற்று

எம்மை யுண்கின்றனவே -என்கையாலே
இந்த பிரகாரத்தாலே இவருடைய ஞானம் ஆஸ்ரிதரை
வஸீ கரித்த படி சொல்லிற்று ஆயிற்று

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தலைமகள் நோக்கிலே ஈடுபட்ட தலைமகன்
ஆக்கங்கள் தனக்கு பாதகம் ஆகிறபடியைப்
பாங்கனுக்குச் சொல்லுகிறான்

வியாக்யானம் –

கற்றுப் பிணை
கன்றான மான்
முக்தமான மானினுடைய

மலர் கண்ணின்
மலர் போலே இருக்கிற கண் என்னுதல்
விகஸிதமான கண் என்னுதல்

குலம் வென்று
அஜ்ஜாதியாக வென்றதாயிற்று

ஒரோ கரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி
ஒரோ கார்யத்திலே யுற்று
அதிலே நெருங்கி
அத்தைச் செவியோடே உசாவி
ஸர்வ விஷயமாய் ஓர் இடத்திலும் பற்று இன்றியிலே இராதே
ஒன்றிலே துணிந்து
அதிலே நெருங்கி
அத்தை தேசிகாரோடே போதயந்த பரஸ்பரம் –ஸ்ரீ கீதை –10-9-பண்ணுவாரைப் போலே
இவனையே ச விசேஷமாகக் கடாக்ஷிப்பது
இவன் பார்த்தவாறே
கண்ணை மாற வைப்பதான போது இருந்தபடி

உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
ஸர்வ ரக்ஷகரானவர் திருவடிகளிலே இருந்து
அவர் எல்லைக்குள்ளே இருந்தாயிற்று இவை பாதகம் ஆகிறது

உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணாய்
மாறுபாடு யுருவும்படி இவனை நோக்குவது
அந்நோக்கிலே பரவசனாய்
இவன் பார்த்தவாறே அந்நோக்கை மாற வைப்பதாய்
மிளிரா நின்றுள்ள கண்ணாய்

எம்மை உண்கின்றவே
கண் என்கிற வியபதேசத்தாலே ஒரு பாதக பதார்த்தம் என்னை நலியா நின்றது

இத்தால்
ஆழ்வார் படியைக் கண்டவர்களுக்கு இருக்கிற படி இறே இது
கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று -என்கிற இத்தால்
கார்ய புத்தி இல்லாத முக்யத்தை நினைக்கிறது

ஒரோ கரும முற்றுப் பயின்று -என்கிற இத்தால்
ப்ரபத்தியைச் சொன்னபடி இறே இது
பின்னை ஞான கார்யம் அன்றோ
கீழ்ச் சொன்ன மௌக்த்யம் இதுக்குச் சேர்ந்த படி எங்கனே என்னில்
அதில் கர்தவ்யதா புத்தி இன்றிக்கே இருக்கையை நினைக்கிறது
இது தன்னைச் செய்யா நிற்கச் செய்தே சாதனத்தில் அந்வயியாதே
ஸ்வரூபத்திலே அந்தர்பவித்து இருக்கும் இறே

செவியொடு உசாவி உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே
சொன்னபடியே யுடையராய் இருக்கிற இருப்புத் தான் கண்டாரை ஈடுபடுத்தும் படியைச் சொல்லுகிறது

———

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

வண்ணம் சிவத்தில்
அவள் நோக்கில் அவனுக்கு அகப்பட்ட தலைமகன்
அவன் நோக்கின் வாசியை
செங்கண் சிறுச் சிறிதே -திருப்பாவை -22-
என் மேல் செய்த படியைக் கண்டு நாயகன் கருத்து அறிந்த
தாயாருக்கும் தோழிமார்க்கும் உரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று
இள மான் பேடைகளுடைய மலர்க்கண்களை எல்லாம் ஜயித்தாய்

ஒரோ கரும முற்றுப் பயின்று
பரஸ்பர ஸ்ப்ர்த்தை யுள்ளதாய்
தன்னில் தான் பர்யாயத சலிக்குமதாய்
ஓர் காரியத்தை எண்ணி அறுதியிடுகிறது என்னவாய்

செவியொடு உசாவி
அறுதியிட்டு கார்யத்தைச் செவியோடே உற்றுப் பேசுகிறது என்னலாய்

உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
லோகங்களை பிரளயம் வர திருவயிற்றிலே வைத்து ரஷித்தும்
அது போக வெளிப்படுத்தி ரஷித்தும்
உபகரித்த அவன் திருவடிகளுக்கு அடிமை செய்ய

உற்றமுறாதும்
கிட்டின அவளாயும்
கிட்டாத அவளாயும்

மிளிர்ந்த கண்ணாய்
கடாஷமுள்ள திருக்கண் மலர்களாய்

எம்மை
என்பது -ஸ்வீ யரைக் கூட்டிக் கொண்டு

உண்கின்றவே
எம்மை அனுபவிப்பதாய் ப்ரதிமையைப் பண்ணுமவையாய்
இரா நின்றதுகன் –

—————-

அவதாரிகை

இப்படி இவருடைய ஞான வைலக்ஷண்யத்தைக் கண்ட அன்பர்
நம்முடைய அளவிலேயே இவருடைய ஞானம் விஷயீ கரித்தது
விலக்ஷண ஞானரான பரம யோகிகளுக்கும் நித்ய அனுபாவ்யமாய் யன்றோ இருப்பது என்று
தங்கள் ஸூஹ்ருத்துக்களுக்குச் சொன்ன பாசுரத்தை

தலை மகளை இயற்கையில் கலந்து பிரிந்த தலைவன்
தன்னுறாவுதல் கண்டு வினாவின பாங்கனைக் குறித்து
உற்றது யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே – -66 –

பாசுரம் -66-உண்ணாது உறங்காது உணர்வுறும் எத்தனை –
தலைவன் தோழன் பேச்சை மறுத்தல் –
ஆராவமுதே -5-8-

பதவுரை

எரி–அக்நியும்
நீர்–ஜலமும்
வளி–வாயுவும்
வான்–ஆகாசமும்
மண்–பூமியும்
ஆகிய–என்னும் பஞ்ச பூதங்களின் வடிவமான
எம்பெருமான் தனது எம்பெருமானுடைய
காவிகள்–செங்கழுநீர்ப் பூக்காளனவை
உண்ணாது–உண்ணாமலும்
உறங்காது–தூங்காமலும்
உணர்வு உறும்–(எப்பொழுதும் த்யாக ரூபமான) ஞானத்திற் பொருந்தின
வைகுந்தம் அன்னான்–ஸ்ரீவைகுண்டத்தை யொத்து எப்பொழுதும் அநபவிக்கத் தக்கவளான தலைமகளினுடைய
கண் ஆய்–கண்களென்று பேராய்
அரு வினையேன் உயிர் ஆயின–தீர முடியாத தீவினைகளையுடைய எனக்கு உயிர் நிலையான
எத்தனை யோகியர்க்கும்–மிக்க யோக நிலையை யுடைய முனிவர்க ளெல்லோர்க்கும்
எண் ஆய்–(அந்த யோகத்தை விட்டு எப்பொழுதும்) நினைக்கத் தக்கவையாய்
மிளிரும்–பிறழ்ந்து தோன்றுகிற
இயல்வின் ஆம்–தன்மையை யுடையவையாம்.

வியாக்யானம்

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்
அத்யசனமும்
அதி நித்தரையும்
யோக விரோதியாம் என்று துறந்து
யுக்தாஹார விஹாரராய்
யுக்த ஸ்வப்ந அவ போதராய்க் கொண்டு
நிரந்தர த்யான தத் பரரான
ஸநகாதி பரம யோகிகளுக்கும் ஹ்ருதயமாய்க் -(எண்ணாய் )கொண்டு
நிரந்தர அனுபாவ்யமாய்
மிளிர்ந்து தோற்றும் ஸ்வ பாவத்தை யுடையனவாகா நிற்கும்
(ஆழ்வாரது கண்கள் )

எரி நீர் வளி வான் மண்ணாகிய வெம்பெருமான்
பிராணிகளுக்கு சீதோஷ்ண பரிஹார ரூபமாயும் (எரியும் நீரும் )
ஆஸ் வாஸ கரமாயும் (காற்று)
அவகாஸ ப்ரதமாயும்
தாரகமாயும் யுள்ள பஞ்ச பூதங்களுக்கும் அந்தராத்மாவாய்
அக் கணக்கிலே நமக்கு ஸ்வாமியான ஸர்வேஸ்வரனுடைய

தனது வைகுந்த மன்னாள் கண்ணாய்
அசாதாரணமாய்
அழிவற்ற தேசம் போலே
நித்ய அநுபாவ்யை யானவளுடைய கண் என்ற பேராய்

அருவினையேன் உயிராயின
நிரந்தர அனுபவம் பண்ணப் பெறாமல் பிரிகைக்கு
அடி முடி காண ஒண்ணாத (அநாதியான -அந்தமும் இல்லாத ) பாபத்தை யுடையேனான
எனக்கு முடிய ஒண்ணாத படி பிராணனாய்ப் புக்கு நில்லா நிற்பன வாயின

காவிகளே
ராக உத்தரதையாலே செங்கழுநீர்த் தடாகம் போலே இருக்கையாலே
காவி என்னாலானவை

கண்ணாய் அருவினையேனு யிராயின காவிகள் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்
என்று அந்வயம்

இத்தால்
ஆஸ்ரிதரான அன்பருக்கு தாரகமாய்
ராகோத்தரமான ஆழ்வாருடைய ஞானமானது
அசநாத்ய தீதராய் அசங்குசித ஸ்வ பாவராய் நிரந்தர அனுபவ தத் பரரான
நித்ய யோகத்தை யுடைய ஸூரிகளுக்கும் நித்ய அனுபாவ்யமாய்க் கொண்டு
விளங்கித் தோற்றும் ஸ்வ பாவத்தை யுடைத்தாகா நிற்கும் என்றதாயிற்று –

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தலைமகள் கண் அழகிலே ஈடுபட்ட தலைமகன் வார்த்தையாய் இருக்கிறது கீழ் போலே

வியாக்யானம்

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
பிராகிருத போகங்களால் தரியாதாராய்
ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற புத்தியே யன்றியே
உபாதேயமான ஆத்மவஸ்து உத்தேச்யம் என்னும் புத்தியை யுடையராய்
அவ்வாத்ம வஸ்து தான் ஸ்வ தந்திரம் என்று இருக்கை அன்றிக்கே
ஆத்ம யாதாத்ம்ய ஞான பூர்வகமாக ஈஸ்வர ஞானத்தை யுடையராய்
இது அவனுக்கு பிரகாரம் என்று இருக்கும் படி பரம யோகம் கை வந்து இருக்குமவர்களுக்கும்

எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்
அவர்களும் இக்கண்ணுக்கு இலக்கானார்கள் ஆகில்
தங்களுக்கு ஸூபாஸ்ரயமான பரதத்வம் தன்னையும்
காற்கடைக் கொண்டு
இத்தையே அது அது என்னும்படி பிரகாசிக்கையே ஸ்வ பாவமாக யுடையனவாய் யுள்ளன

எரி நீர் வளி வான் மண்ணாகிய
காரணமான பூத பஞ்சகங்களும் கார்ய ஜாதத்துக்கு எல்லாம் உப லக்ஷணம்
அக்னி நீர் காற்று ஆகாசம் பூமி இவை யடையத் தனக்கு விபூதியாக யுடையவன்

வெம்பெருமான்
அவனுடைய விபூதி யோகம் தனக்குப் பேறாய் இருக்கிற படி

தனது வைகுந்த மன்னாள்
மானாவிச்சோலை போலே ஆவது அழிவதாம் இவ்விபூதி போல் அன்றிக்கே
ஒரு நாளும் அழியாததாய்
அவனுக்கு அஸாதரணமாய்
அந்தரங்கமான நித்ய விபூதியோடே ஒத்து இருந்தவள்
அவனோடே அழியாத விபூதியோடே ஒத்து இருந்துள்ளவள்

கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே
அப்படிப்பட்டவன் பக்கலிலே வந்தவாறே
பிரதான அவயவமாய்
என் பக்கலிலே வந்தவாறே அச்சேத்யமாய் அதாஹ்யமாய் அழியாததாய் இருந்துள்ள ஆத்ம வஸ்துவாய்
பாதகமாம் இடத்தில் ஸ்வ தந்திரமாய் நின்று பாதகமாகா நின்றன

ஆறு வினையேன்
ரக்ஷகமானவை தானே பாதகமாம் படி பாபத்தைப் பண்ணினேன் –

—————

அவதாரிகை

இப்படி அனுபாவ்யமான ஆழ்வாருடைய ஞான வைலக்ஷண்யத்தை
போக்தாக்கள் உகந்து யுரைத்த பாசுரத்தை
தலைமகள் கண்ணழகு கண்டு தலைமகன் வியந்து யுரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு அசுரைச் செற்ற
மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – 67-

பாசுரம் -67-காவியும் நீலமும் வேலும் கயலும் பல பல –
தலைவன் தன் வலி யழிவு உரைத்தல் –
உலகமுண்ட பெரு வாயா -6-10-

பதவுரை

அசுரை–அசுரர்களை
செற்ற–அழித்த
மா விய புள் வல்ல–பெரிய ஆச்சர்ய கரமான கருடப் பறவையை ஏறி நடத்துகிற
மாதவன்–திருமகள் கணவனும்
துணை மலர்–ஒன்றொடொன்று ஒத்த இரண்டு தாமரை மலர்கள்
காவியும்–செங்கழுநீர்ப் பூவையும்
நீலமும்–கருநெய்தற் பூவையும்
வேலும்–வேற்படையையும்
பலபல–(மற்றம் கண்ணுக்கு ஒப்பாகின்ற மான்விழி முதலிய) மிகப்பல பொருள்களையும்
கோவிந்தன்–பசுக்களைக் காப்பவனுமான பெருமானுடைய
வேங்கடம்–திருவேங்கடமாமலையிலே பொருந்தி வாழ்கிற
தூவி அம்பேடை அன்னாள்–சிறகழகையுடைய அன்னப் பேடை போன்றவளது
கண்கள் ஆய்–கண்களாகிய
வென்று–தமக்கு ஒப்பாகாதபடி ஜயித்து
பாரிப்பு–என்னை வருத்துவதற்கு அடி கோலிய பரப்பு
ஆவியின் அல்ல–(எனது) உயிரின் தன்மைக்கு
அளவு அல்ல–ஏற்ற அளவல்ல.

வியாக்யானம்

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
சிவப்பாலே செங்கழு நீரையும்
நைல்யத்தாலே நெய்தலையும்
கூர்மையாலும் ஒளியாலும் வேலையும்
குளிர்த்தியாலும் மிளிர்த்தியாலும் கயலையும்

மற்றும்
கண்ணுக்கு ஒப்பான
வாள்
அம்பு
வடி
மான் விழி
முதலான பலவற்றையும் வென்று

அன்றியே
கீழ்ச் சொன்னவற்றைத் தனித்தனியே
பலவற்றையும் வென்று என்னவுமாம்

ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு
நம்முடைய பிராணனின் ஸ்வரூபத்துக்குத் தக்கதல்ல
இவற்றினுடைய கோலுதலின் பரப்பு

அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன்
விரோதி நிரசன ஸமர்த்தனாய்
பெரிய ஆச்சர்யத்தை யுடையவனான பெரிய திருவடியை நடத்த வல்லவனாய்

பொரு சிறைப் புள்ளுவந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன் –திருவாய் -1-9-3- என்கிற படியே
இந்த கருட வாஹனத்வத்துக்குத் தகுதியான ஸ்ரீயபதித் வத்தை யுடையவன்

கோவிந்தன்
வெறும் பரத்வத்தால் வந்த மேன்மையோ
பசுக்களின் பின்ன போகலாம்பாடி பவ்யனானவன்

வேங்கடம் சேர் தூவியம் பேடை யன்னாள்
இந்த பரத்வ ஸுலப்யங்கள் இரண்டும் ப்ரகாசிப்பதான திருமலையில்
பொருந்தி வர்த்திக்கிற
அழகிய சிறகுகளை யுடைய அன்னப் பேடை போலே இருக்கிற இவளுடைய

(ஸ்ரீ வைகுண்ட விரக்தாயா வேங்கடேசாயா ரமயா ராமமாணாயா ஸ்வாமி புஷ்காரணீ தடே
ஸ்லோகத்தில் -இவை அனைத்துமே உண்டே )

கண்களாய துணை மலரே
கண் என்று பேராய் இருக்கிற
தன்னில் தான் சேர்ந்த இரண்டு கண்களானவை

இவற்றுக்கு -என்று
அத்யாஹரித்து
ஆவியின் தன்மை அளவுள்ள பாரிப்பு -என்று
அவயம்

இத்தால்

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு -என்கையாலே
ஆழ்வாருடைய ஞானமானது
ராக ஹேதுவான ரஜஸ்ஸையும்
கார்ஷ்ண்ய ரூபமான தமஸ்ஸையும்
லகுவாய் ப்ரகாசகமான சத்வத்தையும் கடந்து
(மிஸ்ர ஸத்வம் தாண்டி ஸூத்த ஸத்வம் வேண்டுமே
முக்குணம் தாண்டி நித்ய ஸத்வம் வேண்டுமே )

இப்படி குண த்ரய உத்தீர்ணம் ஆகையால்
ஜட ப்ரக்ருதியான பதார்த்தங்களில் சேர்த்தி அற்ற படி
பஹு பிரகாரமான வ்யாவ்ருத்தியை யுடைத்தாய்க் கொண்டு
நம்முடைய ஸ்வரூபத்தின் அளவன்று இதினுடைய பாரிப்பு என்றபடி

தூவியம் பேடை யன்னாள் -என்கையாலே
இவருடைய ஸூத்த ஸ்வபாவத்தையும்
(வேல் வெளுப்பு மிஸ்ர ஸத்வம் )
ஞான அனுஷ்டான ரூப பஷ த்வய அந்வயமும்
பாரதந்தர்யமும் (பேடை)
ஸூசிதமாயிற்று

அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் தூவியம் பேடை -என்று
அலர் மேல் மங்கையைச் சொல்லி
அவளோடே இவருடைய ரூபத்துக்கு ஒப்புச் சொல்லிற்று ஆகவுமாம்
(கடி மா மலர்ப்பாவையுடன் ஷாம்ய ஷட்கம் உண்டே )

கண்களாய துணை மலரே -என்றவிடம்
இவருக்கும் துணையாய்
ஆஸ்ரிதற்கும் துணையான
விகாஸத்தை உடைத்து என்று தோற்றுகிறது

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இப்பாட்டாலும் கண்ணழகு தன்னையே சொல்லுகிறான்
தலைமகன்

வியாக்யானம் –

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
கண்ணுக்கு ஒப்பு தேடப் புக்கால்
விஷ்ணுநா சத்ருஸோ வீர்யே –ஸ்ரீ பாலா -1-18-என்கிறபடியே
ஒரோ ஆகாரங்களாலே ஒப்பாகப் பலவற்றையும் பிடித்தால்
எல்லாம் கூட ஒப்பாகவற்றோ
மாட்டாது என்னும்படி இறே இவை தான் இருப்பது

விஷ்ணுநா சத்ருஸோ வீர்யே
பரத்வமும் வீர்ய குணம் ஒன்றுக்கும் ஒப்பாம் அத்தனை

இப்படி சீலாதி குணங்கள் கண்டு அனுபவிக்கப் போகாதே இறே அங்கு

சிவப்பாலே செங்கழுநீரை வென்று
கருமையாலே நெய்தலை வென்று
ஓராளும் ஓர் நோக்குமாய் இருக்கும்படி இருக்கையாலே வேலை வென்று
மவ்க்யத்தாலே கயலை வென்று
மற்றும் ஒப்பாகச் சொல்லும் அவற்றை அடையப் புக்கவிடம் புக்கு வென்று

ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு
தன்னடையே அழியுமவற்றை வெல்லுகை வெற்றிக்கு உடலோ என்று
அழியாத ஆத்ம வஸ்துவையும் அழிப்பதாகக் கோலா நின்றன

ஆவியின் தன்மை அளவுள்ள
இவ்வாத்ம வாஸ்துவின் அளவன்றியே
இதனுடைய சத்தா ஹேதுவான பதார்த்தத்து அளவும் செல்வன போலே இரா நின்றன
இவளுடைய அவயவங்கள் அவனையும் கூட மயக்க வல்ல போலே காணும்

அசுரைச் செற்றமாவியம்புள் வல்ல மாதவன்
அசுரர் வர்க்கத்தை யடைய அழியச் செய்து
மஹானாய்
அவன் தன்னோ பாதியும் பெரியனாய்
விஸ்மய நியாமான வியாபாரங்களை யுடையனாய்
இருந்துள்ள பெரிய திருவடியைக் கருத்து அறிந்து நடத்த வல்லவன்

மாதவன்
கருட வாஹனனான ஏற்றத்துக்கு மேலே
ஸ்ரீ லஷ்மீ பதியான ஏற்றத்தை யுடையவன்

கோவிந்தன்
அவளோட்டைக் கண் கலவியாலே ஆஸ்ரித ஸூலபனானவன்

வேங்கடம் சேர்
அந்த ஸுலப்யமும் மேன்மை என்னும்படி
திருமலையிலே வந்து ஸூலபனானவன்

தூவியம் பேடை யன்னாள்
கோவிந்தனதான வேங்கடத்தைச் சேருமதாய்
புறம்பு ஓர் இடத்திலும் பொருந்தாததான
தூவியம் பேடை யுண்டு
அழகிய சிறகை யுடைய அன்னப்பேடை
அத்தோடு ஒத்து உள்ளவள்

அன்றிக்கே
தூவியம் பேடை -என்று
பெரிய பிராட்டியாரைச் சொல்லிற்றாய்
அவளோடே ஒத்து உள்ளவள் என்றுமாம்

கருட வாஹனன்
ஸ்ரீ லஷ்மீ பதி
என்கிற இவை இப்போது சொல்லுகிறது என் என்னில்
ஸுலப்யத்தைச் சொல்ல நினைத்து
அது குணம் ஆகைக்கு அடியான பரத்வத்தைச் சொல்லி
பின்பு அந்த ஸுலப்யத்தின் எல்லையில் வந்து ஆறுகை

கண்களாய துணை மலரே
கண் என்கிற வியபதேசத்தாலே
ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் இருப்பன இரண்டு பூக்களாயிற்று

கண்களாய துணை மலரின் பாரிப்பு
காவியும் என்று தொடங்கி
ஆவியின் அளவுள்ள பாரிப்பு
என்று அந்வயம்

இத்தால்
திருமலையிலே வந்து நிற்கிறவனுடைய சீல குணத்திலே வித்தராய் இருக்கிற
ஆழ்வார் படி போக்த்தாக்கள் அளவல்ல என்று
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லுகிற பாசுரத்தை
பார்ஸ்வஸ்த்தர் பாசுரத்தாலே அனுபவிக்கிறார் தாம்

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இப்படி பகவானுடைய உக்த வித கடாக்ஷத்தாலே
தாம் இங்குள்ள இருப்பில் உயரப் பெற்றமையை அருளிச் செய்து
நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து –திருவாய் -9-2-1- என்று
அருளிச் செய்த படியே
இவ்வாழ்வார் அவ்விருவராலும் ஒரு நினைவால் நீயதராய்
இந்த திவ்ய பிரபந்த கரணத்தில்
அதிக்ருதரானது கொண்டு அவன் கடாக்ஷத்தைக் கடாஷித்தவராய்
இங்கான வெந்நிலத்தில் உள்ள பங்கயத்தாள் பாரிப்பு என்னாத்ம ஸ்வரூபம் மட்டுல்ல என்று
அவளுடைய இப்போதான் விசேஷ கடாக்ஷத்தில் தாமான தன்மையில் ஈடுபடுகிறார் இதில்

வியாக்யானம்

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
சிவப்பாலே செங்கழு நீரையும்
கறுப்பாலே நெய்தலையும்
தன் படியை ஸ்வ வசமாக்கிக் கொள்ளுமத்தால் வேலையும்
ஒளியோடு கூடின ஆகார ஸுந்தரியத்தாலே கயலையும்
மற்றும் கண்ணுக்கு ஒப்பாகச் சொல்லப்பட்ட அம்பு மான் விழி என்று
பல பல வானவைகளையும் வென்ற கண் படைத்தவள்

அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் தூவியம் பேடை யன்னாள்
அதி விஸ் மய நீய விரோதி நிரசனமுள்ள ககேந்த்ரனை நடத்த வல்ல
ஸ்ரீ லஷ்மீ வல்லபன் கிடீர்
கோவிந்தனாய் வந்து அவதரித்தவனும்
திருவேங்கடம் சேர்ந்தவனும்
அவனுடையதாய் அமைந்த ஸர்வ ஸரீரியாய்
தத் கத தத் ப்ரயுக்த தோஷ அஸ்பர் ஸித்வம் உள்ளது கொண்டு
அவனுக்கு அழகியளான பேடை யானப்பட்டவளுடைய

கண்களாய துணை மலரே
ஒன்றுக்கு ஒன்றே ஸுந்தர்ய சாத்ருஸ்யம் கொண்டதான திருக்கண் மலர்களே

என் ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு
என்னாத்மாவுக்கு யுள்ள ஸ்வ பாவ ஸித்த ஞான சக்த்யாதிகளின் மாட்டு இல்லாத
பலவிதரண உத்ஸாஹம் உள்ளது

ஐஸ்வர்யம் அக்ஷர கதிம் –ஸ்ரீ குணரத்ன கோசம் -68- என்று அருளிச் செய்த
ஸுந்தர்யத்தின் மாட்டு அல்லவாய் இரா நின்றது என்னில்
கடாக்ஷத்தால் அறியப்பட்ட ஸுந்தர்யம் என்றபடி –

————–

அவதாரிகை

இப்படி நிரதிசய வைலக்ஷண்யத்தை யுடைத்தான தம்முடைய ஞானத்தால்
பகவத் பாகவத விஷயங்களை நிறைந்த அனுபவம் பண்ணப் ப்ராப்தமாய் இருக்க
யோக்ய காலங்களில் அனுபவிக்கப் பெறாமையாலே பிறந்த ஸைதில்யத்தை
ஸூஹ்ருத்துக்கள் ஆற்றினை பாசுரத்தை
காலம் கண்டு இரங்கின தலைவியைக் காலம் இளையது என்று ஆற்றினை
தோழி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே – 68-

பாசுரம் -68-மலர்ந்தே ஒழிந்தில மாலையும் –
கால மயக்கு காலம் இளையது என்றல் –
கொண்ட பெண்டிர் -9-1-

பதவுரை

பொரு கடல் சூழ்–அலை மோதுகிற கடலால் சூழப்பட்ட
நிலம்–பூலோகத்தை
தாவிய–அளந்தருளின
எம்பெருமான் தனது–எம்பெருமானுடைய
வைகுந்தம்–ஸ்ரீவைகுண்டத்தை
அன்னாய்–ஒத்து விளங்குகிறவளே!
கலந்தார் வரவு எதிர் கொண்டு–(உன்னோடு) கலந்து பிரிந்து சென்றவருடைய வருகையை முந்தி எதிர்பார்த்து
வல் கொன்றைகள்–வலிய கொன்றை மரங்கள்
கார்த்தனவே–கருவடைந்து அரும்பின; (அதுவே தவிர)
மாலையும்–மாலைகளையும்
மாலை பொன் வாசிகையும்–பொன்னாலாகிய சுருள்மாலை வட்டத்தையும்
புலம் தோய் தழை பந்தர்–மநோஹரமான தழைகளார் சிறு பந்தலிலே
தண்டு–கொம்புகளிலே
உற–நெருங்க
நாற்றி–தொங்க விட்டுக் கொண்டு
மலர்ந்தே ஒழிந்தில–முற்றும் மலர்ந்து விட்டனவில்லை

வியாக்யானம்

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி
கொன்றைகளானவை மாலையாகவும்
மாலையாலே சமைந்த பொன்னின் வாசிகையாயும் இருக்கிற பூக்களை
கண் வைத்தால் வாங்க ஒண்ணாத படி செறிந்த தழைப் பந்தலிலே
கொம்புகள் சிக்கனைத் தூக்கி
மலர்ந்தே வியானவில்லை

பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான்
அலைகள் தன்னில் தான் பொருகிற கடலாலே
சூழப்பட்ட பூமியை அளந்து கொண்ட நம்முடைய
ஸ்வாமியானவனுடைய

பொருகடல்
செறிந்த கடல் என்னவுமாம்

தனது வைகுந்த மன்னாய்
அவனுக்கு அசாதாரணமான பரமபதம் போலே
அந்நிய அபிமான பிரசங்கம் யுண்டாய்க் கழிக்க வேண்டாதபடியான
ஸ்வ பாவத்தை யுடையவளே

(உலகு அளந்த பொன்னடி -சாத்ய பூமி அது
பற்றுவது இங்கே -திருவிக்ரமனது திருவடி பற்றி
அங்கு சென்று அந்த ஸ்ரீ வைகுண்டம் போல் இனியவளே
நித்யம் நிரதிசய போக்யம் -கீழ்
அந்நிய அபிமான பிரசங்கம் இல்லாத ஆழ்வார் –
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றத் தெய்வம் நாடுதிரே என்று இகழல்பவர் அன்றோ )

கலந்தார் வர வெதிர் கொண்டு
தம்மோடு முன்பு ஸம்ஸ்லேஷித்த அன்புடையாருடைய வரவை முற்கோலி

வன் கொன்றைகள்
நாம் மலர்ந்தால் இவள் ஈடுபடும் என்னும் இரக்கம் இல்லாத
வன்மையை யுடைய கொன்றைகள்

கார்த்தனவே –
கருவடைந்து அரும்பின இத்தனை
மலர்ந்தன வில்லை என்றதாயிற்று

வன் கொன்றை என்று
அரும்பின சிக்கனவைச் சொல்லி
மலர விளையது என்றதாகவுமாம்
(வன் -செறிந்து அடர்ந்து என்றபடி இதில் )

இத்தால்
விஸ்லேஷித்த நண்பரான பாகவதருடைய ஆகமநத்தை
ஸாம்ஸாரிக போக தர்சனத்தாலே
(கொன்றைப்பூக்கள் பூக்க ஆரம்பிப்பது ) வந்த ஆர்த்தி சமிக்கைக்கு
உஸாத் துணையாக ஆசைப்பட்டவர்
விளம்ப அஷமதையாலே சிதிலராக
ஸூஹ்ருத்துக்கள் ஆற்றின பாசுரமாய் இருக்கிறது

இதில்
வன் கொன்றை -என்கையாலே
ஸ்த்தாவர பிராயராய்
அஞ்ஞரான சரீரிகளுடைய
தேவதாந்த்ர அபிமானத்தை சிக்கனவை ஸூசிப்பிக்கிறது
(கொன்றைப்பூ சிவனது )

புலந்தோய் தழைப் பந்தர் -என்கையாலே
இந்திரியங்கள் படியும்படியான விஷய பிரவணர் ஒதுங்க நிழல் என்றபடி

மாலையும் மாலைப் பொன் வாசிகையும்-என்கையாலே
ருஜு வாயும் (நேர்மையாயும் -சாத்விக ஆகாரம் அளவு விஞ்சி போல் )
வக்ரமாயும் (வளைந்தும் ராஜஸ தாமஸ ஆகாரங்கள் தள்ளுபடி தானே )
யுண்டான போக்ய வஸ்துக்களை
ஸூசித்தப்படி

தண்டுற நாற்றி -என்கையாலே
(கிளையில் பொருந்தி )
இவ்விஷயங்களினுடைய அநு பந்தம் ஆஸ்ரய பர்யந்தமாய் இருக்கும் என்றபடி
(கிளையும் தள்ளுபடி -விஷயாந்தரம் போல் விஷயாந்தர பரரும் த்யாஜ்யம் )

மலர்ந்தே ஒழிந்தில -என்கையாலே
கிலேச கரமான வைஷயிக போக விகாஸம் உம்முடைய ஸந்நிதியில்
அதிசயித்தது இல்லை என்றபடி
அப்போது இறே உஸாத் துணை வேண்டுவது

பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர் கொண்டு -என்று
உஸாத் துணையான நண்பருடைய ஆகமநம் மேல் அபேக்ஷிதம் என்றபடி

கார்த்தனவே -என்கையாலே
ஆகாமியான விகாஸத்துக்கு ஸூசகம் யுண்டு இத்தனை என்றதாயிற்று

———-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

ஸ்வாபதேசம்
இத்தால்
அவனுடைய குண ஞானத்தாலும்
இக்கலையை அவகாஹித்த படியாலும்
போக யோக்கியமான காலத்தில் வாராது ஒழியான் என்று
பார்ஸ்வஸ்த்தர் ஆஸ்வஸிப்பிக்கிற படியைச் சொல்லுகிறது

——

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

கலந்து பிரிந்த தலைமகள்
கொன்றை பூக்கிற காலத்திலே வருகிறேன் என்று போனானாய்
அக்காலமும் வந்து
அவையும் பூக்கவும்
அவன் வரக் காணாமையாலே
தலை மகள் தளர
அத்தைக் கண்ட தோழி
அவை இப்போது பூக்க உத்யோகிக்கிற அத்தனை –
காலம் தாமும் இளையது என்று ஆற்றினை தோழி பாசுரத்தாலே
தம்மில் தாமே ஸமாஹிதராகிறார்
இதில்

வியாக்யானம்

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி
கொன்றைகளானவை மாலையாயும்
மாலைகளால் கட்டப்பட்ட பொன் வாசிகையாயும் யுள்ள பூக்களை
வைத்த கண் வாங்காதபடி அழகுள்ள பசும் தழைப் பந்தலில் யுள்ள கொம்புகளிலே
தூக்கின அளவே காண்

மலர்ந்தே ஒழிந்தில
மலர உபக்ரமித்தனை
இன்னும் மலர்ந்தது இல்லை
அவன் வரும் அளவில் அல்லது மலராது காண்
மலரும் காலத்தில் அவன் வருவது நிச்சிதம்

பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய் கலந்தார்
வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே
அலைகள் தன்னில் தாம் பொருகிற கடலாலே சூழப்பட்ட பூமியை அளந்து கொண்டு
நம் ஸ்வாமியால் நம் விபூதகி எல்லாம் ஒரு தட்டு
இவள் ஒரு தட்டு என்று அபிமானிக்கப் பட்டவளே
உன்னோடு கலந்தவருடைய வரவுக்கு எதிர்கொண்டு அவரைக் கண்டு அல்லது அலரலாகாது
என்கிற புத்தி சக்தி பலமுள்ள கொன்றைகள்
கார்த்திக் கொண்டே நின்றன காண்

கலந்து பிரிந்தவர்கள் ஆராரோ
அவர்களை எல்லாம் எதிர்கொண்டு என்றுமாம்

—————–

அவதாரிகை

இப்படி ஆஸ்வாஸ கறாரான பாகவதருடைய ஆகமநமும் இன்றியே
அனுபவ யோக்ய காலத்தில் பகவத் அனுபவமும் ஸித்தியாமையாலே
சிதிலரான இவரை ஸூஹ்ருத்துக்கள் ஆனவர்கள்
இவ்வவஸ்தையில் பகவத் அங்கீ காரத்துக்குக் குறையில்லை என்று
ஆஸ்வஸிப்பித்த பிரகாரத்தை
மாலைக்கு ஆற்றாத் தலை மகளை ஆற்றி யுரைத்த
தோழி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான்
போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை புவனி எல்லாம்
நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே – -69 –

பாசுரம் -69-கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு
மாலைப் பொழுது கண்டு மயங்கிய தலைவியைத் தோழி ஆற்றுதல் –
கற்பார் இராம பிரானை -7-5-

பதவுரை

கார்–கருத்த
இருள்–இருளாகிய
ஏறு–எருதானது
செகில்–சிவந்த
சுடர்–ஸூர்யனாகிய
ஏற்றிற்கு–எருதுக்கு எதிரில்
உளைந்து–இளைத்து
வெல்வான்–(மீள) வெல்லும் பொருட்டு
போர் ஏற்று–போர் செய்வதை ஏற்றிக் கொண்டு
எதிர்த்தது–வந்து எதிரிட்டது.
நீர் ஏற்று–(மாவலி கையால் தாரை வார்த்துத் தத்தஞ்செய்த) நீரை (க் கையில்) ஏற்று
புவனி எல்லாம்–எல்லா வுலகங்களையும்
அளந்த–அளந்து கொண்ட
நெடிய–நீண்ட வடிவமுடைய
பிரான்–தலைவன்
புன்தலை மாலை–அற்புதமான தன்மையையுடைய மாலைப் பொழுதிலே
அருளாவிடுமே–(உனக்கு) அருள் செய்யாதொழிவனோ? (ஒழியான்.)
வார் ஏற்றும் இன முலையாம்–கச்சை மேலேறுவிக்கும்படி வளர்ந்த இளமை மாறாத தனங்களை யுடையவனே!
உன் வளை திறம்–உனது கைவளையின் நிமித்தமாக
வருந்தேன்–வருத்தப்படாதே.

வியாக்யானம்

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து
கறுத்த ஏறு போலே மேல் எழுச்சியை யுடைத்தான இருளானது
சிவந்த ஏற்றினை ஒத்த ஆதித்யன் சுடருக்கு முன்பு இடைந்து

வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை
வெல்லுகைக்காக யுத்தத்தை ஏன்று கொண்டு எதிர
புல்லிய தலைப்பாட்டை யுடைத்தான மாலையிலே

இதுக்கு வன்மையாவது
பிரிந்தாரை நலிகை

புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
பூமி முதலான ஸர்வ லோகத்தையும் பிறர் மேலிடாதபடி இரந்து
தன் கைப்படுத்தி எல்லை நடந்து காற் கீழே யிட்டுக் கொண்ட
சர்வாதிகனான மஹா உபகாரகன்
பூமியோ பாதி அநந்யார்ஹை யான உனக்கு அருளாது ஒழியுமோ

வாரேற்றி இள முலையாய்
வாரை ஏற்றுவிக்கும் படி வளருகின்ற இளமையே வடிவான
முலையை யுடையவளே

ஏற்றுகை -முடிகை
(
வருந்தேல் உன்வளைத் திறமே
உன் முகப்படம் கிழிந்து இருக்க வளை கழலுகிறதே என்று
கிலேசிக்க வேண்டுவது இல்லை
அவன் அருளும் என்றதாயிற்று –

இத்தால்

காரேற் றிருள் -என்று
(மயர்வற மதிநலம் அருளுவதுக்கு முன்பு )
பூர்வகமான அஞ்ஞானத்தை ஸூசிப்பித்து

செகிலேற்றின சுடருக்கு உளைந்து -என்று
அது ராகோத்தரமான விவேகம் ஆகிற பக்தி ரூபாபன்ன ஞானத்தாலே
கழிந்தமை சொல்லி

வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை புவனி எல்லாம் நீரேற்று
அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே-என்று
யோக்ய காலத்தில் அனுபவ அலாபத்தாலே இருந்த விவேகமும் அழியும்படி
மோஹ அந்தகாரம் மேலிடும் அவஸ்தையை ஸூசிப்பித்ததாயிற்று

வாரேற்றி இள முலையாய் –என்கையாலே
இவளுடைய பக்தி அபி விருத்திக்குத் திரோதாயகர் இல்லை என்றபடி

வருந்தேல் உன் வளைத் திறமே -என்று
இப்படி பக்தி ப்ரபாவத்தை யுடைய உம்முடைய கையில்
பாரதந்தர்ய ஸூசகமான மினுக்கம் கழலுகிறது என்று கிலேஸிக்க வேண்டா

சம்பந்தம் உள்ளாரைத் தானே இரந்து வந்து
அநந்யார்ஹர் ஆக்கிக் கொள்ளும்
சர்வாதிக ஸ்வாமி யானவன் அருளாது ஒழியுமோ என்று
ஆஸ்வஸிப்பித்தார் ஆயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

அதுக்கு மேலே ஸந்த்யையும் வந்து நலிய
போக யோக்கியமான காலமாய் இருக்க அவன் வந்து தோற்றாமையாலே
தலைமகள் நோவு பட
இத்தைக் கண்ட தோழியானவள்
ஸந்த்யை அல்ல -இரண்டு வ்ருஷபங்கள் தன்னிலே பொருகிறன காண் என்று
இங்கனே சொல்லி ஆஸ்வஸிப்பிக்கிறாள்

வியாக்யானம்

காரேற் றிருள்
இருளான கார் ஏறானது
கறுத்த வ்ருஷபமானது

செகிலேற்றின சுடருக்கு உளைந்து
ஆதித்யன் ஆகிற சிவந்த வ்ருஷபத்துக்குத் தோற்றுப் போய் சுரமடைந்தது

வெல்வான் போரேற்று எதிர்ந்தது
நாம் முடிய இங்கனே தோற்றுக் கிடைக்கும் இத்தனையோ
நாமும் ஒரு கால் மேலிட வேணும் என்று பார்த்து
போரிலே வந்தேன் என்று கொண்டு எதிர் இட்டது

புன் தலைமாலை
புல்லிதான தலையை யுடைத்தான ஸந்த்யையானது
ஜசுகைசான இருள் கொழுந்துகளை உடைத்தான ஸந்த்யையானது

நக நிர் லுஞ்ச நீயா தமோ வல்லய
(இந்த ஸ்லோகத்தின் அக்ஷரங்கள் சரியாகாது தெரியவில்லை என்று
பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்யானத்தில் குறிப்பு உள்ளது )
ஸந்த்யையினுடைய உபக்ரமம் அத்தனை
ஸந்த்யை தான் அல்லது காண் இது

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

வியாக்யானம்

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை
இருளாகிற கறுத்த ருஷபமானது முன்
செகிலேறு சிவந்த வ்ருஷபமான ஆதித்யனுடைய கிரணங்களால் பஃனமாய் ஓடிப்போனது
இப்போது அந்த சிவந்த வ்ருஷபத்தை ஜெயிக்கவே பொரும் விருஷபமாய் எதிர்த்தது

மேகத்தின் செக்கரைத் தான் ஏறிட்டுக் கொண்டு
பொன்னிறம் போன்ற மாலைகள் அசைய அசைய

புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே
பூமி முதலான ஸர்வ லோகத்தையும் தன் பொற் கையில் நீர் ஏற்றவனாய்
தன் திருவடிகளால் அளைந்து கொண்டு
ஸர்வத்திலும் நெடு மாளாய் உபகரித்தவன் தான் கடுக வாராமல் அருளிச் செய்த மாத்ரமாய் விடுமோ
கண் எச்சில் வாராதபடியும் வெளிறு மேல் இடாதபடியும்
கச்சை காட்டும் படி இள முலைகள் அழகியளானவளே
உன் வளைகள் கழலுமதாய் மநோ விசாரப்பட்டு ஆயாசப்படாதே கொள்ளாய்

உன்வளைத் திறமே
வளை விஷயத்தில் உன்னோடு வரும் காலம் குறித்தவன் அக்காலம் வரவே
வாராமல் தப்பான் காண் என்கிறாள் –

——————–

அவதாரிகை
இப்படி பார்ஸ்வஸ்தர் ஆஸ்வஸிப்பித்த இடத்திலும்
விளம்ப அஷ மத்வத்தாலே கால தைர்க்யம் பொறாமையாலே
வந்த ஆர்த்தியை
இரவின் நெடுமைக்கு இரங்கின
தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — 70-

பாசுரம் -70-வளை வாய்த் திருச் சக்கரத்து எங்கள் –
தலைவி இரவின் நெடுமைக்கு இரங்குதல் –
பிறவித் துயரற -1-7-

பதவுரை

வளை வாய் திரு சக்கரத்து–வட்டமான நுனியையுடைய அழகிய சக்கராயுதத்தையுடைய
எங்கள் வானவனார்–எமக்குத் தலைவரும் பரமபதத்திலிருப்பவருமான பெருமானுடைய
முடிமேல்–திருமுடியிற் சாத்தியுள்ள
தளைவாய்–கட்டு வாய்ந்த
நறு–பரிமளமுள்ள
கண்ணி–மாலை வடிவமான
தண் அம்–குளிர்ந்து அழகிய
துழாய்க்கு–திருக்குழாய்க்கு (ஆசைப்பட்டு)
உண்ணம் பயலை விளைவான்–(எமது) மாயை நிறம் மாறிப் பாலை நிறம் விஞ்சம்.
மிக வந்து–அடாவந்து
நான் திங்கள் ஆண்டு வழி நிற்க–நாளாயும் மாதமாயும் வருடமாயும் கற்பமாயும் தோன்றினது தவிர
எம்மை உளைவான் புகுந்து–எம்மை முற்று மழிக்க நெருங்கி
இது ஓர் கங்குல்–இந்த ஒரு ராத்ரிதானே
ஆயிரம் ஊழிகளே-ஆயிரம் கற்பமாகா நின்றது.

வியாக்யானம்

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
வளைந்த வாயை யுடைத்தான திருவாழியை யுடையனாய்
எங்கள் பக்கலிலே பரமபதத்திலே பண்ணின அபிமானத்தை பண்ணும்
ஸர்வேஸ்வரனுடைய திரு முடியில் சாத்தின

தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு
கட்டு வாய்ந்து பரிமளத்தை யுடைத்தான
மாலா ரூபமான குளிர்ந்த திருத்துழாய்க்கு

வண்ணம் பயலை விளைவான்
ஸ்வ பாவிகமான நிறம் ஒழிந்து
வெளுப்பு நிறம் விஞ்சி வருகைக்காக

மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க
ஒரு ராத்ரி மிக்கு நாளாயும்
மாஸமாயும்
ஆண்டாயும்
ஊழியாயும்
வந்து ஒழிய

எம்மைஉளைவான் புகுந்து
எம்மை ஈடுபடுத்துகைக்காகக் கிட்டி

இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே
இந்த ஒரு ராத்ரியானது
ஆயிரம் கல்பம் ஆகா நின்றன

ஆயிரம் என்றது
அநந்தம் என்றதாகவுமாம் –

இத்தால்
வளைவாய்த்  திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல் தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு

ஈஸ்வரத்வ சிஹ்னமான பரிகரத்தையும்
விபூதியையும்
பூஷணத்தையும்
ஒப்பனையையும் யுடைய
ஸர்வேஸ்வரனுடைய போக்யதையை

வண்ணம் பயலை
அனுபவிக்கப் பெறாமையாலே
ஸ்வரூப விபர்யாசம் பிறக்கும் படி நம்மை கிலேசிப்பதாகக்

விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — 70-

காலமானது
அவச்சேதகங்களால் பரிச்சின்னமாகை யன்றியே பிரகாச பிரஸங்கம் இல்லாதபடி
அபரிச்சின்னம் ஆகா நின்றது என்று தளர்ந்து அருளிச் செய்தார் ஆயிற்று

————

ஸ்ரீ நம்பிள்ளை –ஈடு –

அவதாரிகை –

ஸ்ரீ வைகுண்ட நாதன் சாத்தின திருத்துழாய் மாலையைப் பெற வேணும்
என்னும் அபேக்ஷையால் உண்டான
த்வரையாலே காலம் செலுத்த உள்ள அருமை சொல்லுகிறது

வியாக்யானம்

வளைவாய்த் திருச் சக்கரத்து
வளைந்த வாயை யுடைய திருச்சக்கரம் என்னுதல்
அன்றிக்கே
வளையையும்–ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
வாயையும் யுடைய -திருச்சக்கரத்தையும் என்னுதல்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர -யுத்த –114-15-என்னக் கடவது இறே

எங்கள் வானவனார் முடிமேல்
த்ரிபாத் விபூதியை யுடையராய்
திவ்ய ஆயுதங்களும்
சாத்தின மாலைகளுமான
அழகேயாய் இருக்கிறவர்
ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய திரு அபிஷேகத்தில் யுண்டான

தளைவாய்
தொடை வாய்ப்புள்ள
அநந்த வைநதேயாதிகள் தொடுக்கிறது இறே

நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு
செவ்வியை யுடைய மாலைத் திருத்துழாய்க்கு

வண்ணம் பயலை விளைவான்
அம்மாலையை ஆசைப்பட்டுப் பெறாமையாலே நிறமானது பயலை விளையும்படியாக
விவரணமாம் படியாக

மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க
முந்துற வந்ததொரு ராத்ரி ஒரு நாளாய்ப் பெருகிற்று
அது போய் ஓர் ஆண்டாய்ப் பெருகிற்று
அது போய் ஒரு கல்பமாய்ப் பெருகிற்று

அது நிற்க
அத்தைக் கடக்க நிறுத்தி
இது ஒரு ராத்ரி இருந்தபடி என்
அவை போலே இன்றிக்கே இது வேறு ஒன்றாய் இரா நின்றது

எம்மைஉளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே
இவை யடைய நமக்கு அனுகூலம் என்னும்படி என்னை நலிகைக்காக வந்து புகுந்தது
அநேகம் ஊழிகளாய் இரா நின்றன

மிக வந்து
ஒன்றுக்கு ஓன்று மிகும் படி வந்து என்னுதல்
அநேக ராத்ரிகள் எல்லாம் வந்தது இறே
இது ஒரு ராத்ரி இருந்தபடி என்

ஸ்வா பதேசம்
இத்தால்
பதி ஸம்மாநிதா ஸீதா –அயோத்யா -16-21-
அவதாரத்தில் பிராட்டி பெற்ற பேற்றை ஸ்ரீ வைகுண்ட நாதன் பக்கலிலே பெற வேணும்
என ஆசைப்பட்டுப் பெறாமையாலே காலம் செல்ல அரிதான படியைச் சொல்லுகிறது

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இதுக்கு மேல் வந்த நெடுகைக்கு இரங்கின
தலைமகன் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் ஸ்வயம் விளம்ப அஷமராய்
இப்பாசுரத்தில்

வியாக்யானம்

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல் தளைவாய் நறுங்கண்ணித்
தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை விளைவான்
வளையவும் பர பேத நத்துக்கான தீக்ஷணமாகிய வாயுள்ள திருவாழியை யுடையவராய்
எங்கள் பக்கல் வானில் பண்ணும் ப்ரீதியைப் பண்ணுமவருடைய
திரு அபிஷேகத்தில் சாத்தின திருத்துழாயாதான
மரு கானத்தில் எங்கும் வாய்ந்த நறு நாற்றமுள்ள திருமாலையான திருத்துழாய்க்கு ஆசைப்பட்டு
என்னில் பசுமையான வர்ணத்தை உண்டாக்கி விளைப்பதுக்காக

மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க
ஒரு நாழிகையே வந்து
நாளாயும்
திங்களாயும்
ஆண்டையும்
ஊழியாயும்
மிகவும் வளர்ந்து நிற்குமே

எம்மை உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே
ஒரு ராத்ரியானது பதினாயிரம் ஊழி களாய்க் கொண்டு
நம்மை வளைத்துக் கொண்டு கொள்ளப் புக்கது
எங்கனே நான் தரிக்கும் படி –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த ஸ்ரீ முதல் திருவந்தாதி தனியன் -ஸ்ரீ நம்பிள்ளை–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்- ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் அருளிச் செய்த – வியாக்யானம் —

April 21, 2022

கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த
பொய்கைப் பிரான் கவிஞர் போரேறு –வையத்
தடியவர்கள் வாழ அரும் தமிழ் நூற்றந்தாதி
படி விளங்கச் செய்தான் பரிந்து —-ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த தனியன் –

கைதை சேர் –தாழைகள் நெருங்கிச் சேர்ந்து இருக்கிற
படி விளங்கச் செய்தான் பரிந்து –படி -பூமியிலே -அன்புடன் கூடியவராய் -பிரகாசிக்கும் படி செய்து அருளினார் –
அருந்தமிழ் அந்தாதி -பாட பேதம்

————-

ஸ்ரீ நம்பிள்ளை வியாக்யானம்

அவதாரிகை-

பூமியையும் -ஜலத்தையும் -தேஜஸ் சையும் -மூன்றையும் சொல்லி
இவை தன்னை அஞ்சுக்கு உப லஷணம் ஆக்கி
அவ் வஞ்சாலும் இந்த பூமி தொடக்கமாக இழியும் இடத்தில்
இதுக்கு பிரதான குணமான காடின்யத்தையும்
ஜலத்தின் உடைய த்ரவத்தையும்
தேஜஸ் சினுடைய ஔஷ்ண் யத்தையும் சொல்லிக் கொடு போந்து
இவ் வழியாலே லீலா விபூதி யடங்க நினைத்து –

நித்ய விபூதி அடங்க உப லஷணமாக
திரு வாழி ஆழ்வானைச் சொல்லி

ஆக
இத்தனையாலும் உபய விபூதி யுக்தன்  என்னும் இடத்தைச் சொல்லி

இப்படி அவனுடைய சேஷித்வத்தையும்-
தம்முடைய சேஷத்வத்தையும் சொல்லி

அதுக்கு அநு கூலமாக அவன் திருவடிகளிலே பரிசர்யையும் பண்ணி
அவன் உகப்பே இவர் தமக்கு உகப்பாக நினைத்து இருக்கையாலே
இவர் செய்தது எல்லாம் தனக்கு அலங்காரமாகவும் போக்யமாகவும் நினைத்து இருக்கிற படியையும் சொல்லி

இப்படிப் பட்ட  அடிமை செய்யப் பெறாமையாலே வந்த ஸ்வரூப ஹானியைப் பரிஹரிக்கைக்காக –
அடிக்கே சூட்டினேன் சொன் மாலை -என்றதாதல்

அன்றிக்கே
இங்கனே இருப்பதோர் அறிவு நடையாடாமையாலே
சம்சாரம் இங்கனே நித்யமாய்ச் சொல்லுகிறது என்று பார்த்து
அதுக்காக செய்தாராய் இருக்கிறது –

———-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த தனியன் – வியாக்யானம்

க இதி ப்ரஹ்மணோ நாம தேன தத்ராஞ்சிதோ ஹரி —
தஸ்மாத் காஞ்சீ தி விக்யாதா புரீ புண்ய விவர்த்த நீ –என்னும் படியான
ஸ்ரீ காஞ்சீ புரத்திலே-
புஷ்கரணீயிலே புஸ்கரத்திலே-
விஷ்ணு நஷத்த்ரத்திலே ஆவிர்பவித்து
திவ்ய பிரபந்த தீப முகேன லோகத்தில் அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கி
வாழ்வித்த படியைச் சொல்கிறது இதில் –

கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த-பொய்கைப் பிரான்–
இத்தால் இவர் ஜென்ம வைபவம் சொல்கிறது

கைதை-
கேதகை –தாழை-

கைதை வேலி மங்கை –பெரிய திருமொழி -1-3-10–என்றும்
கொக்கலர் தடந்தாழை வேலி –திருவாய் -4-10-8—என்றும் சொல்லுமா போலே —
அது தானே நீர் நிலங்களிலே யாயிற்று நிற்பது –

தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கை வாய் –பெரியாழ்வார் -4-10-8–என்னும் படி –
அம் பூம் தேன் இளஞ்சோலை —திருவிருத்தம் -26–

சூழ்ந்த கச்சி வெஃகாவில் -பொய்கையிலே
எம்பெருமான் பொன் வயிற்றிலே பூவே போன்ற பொற்றாமரைப் பூவிலே
ஐப்பசியில் திருவோணம் நாளாயிற்று இவர் அவதரித்தது

பத்மஜனான பூவனைப் போலே யாயிற்று
பொய்கையரான இவர் பிறப்பும் –

வந்து உதித்த என்கையாலே
ஆதித்ய உதயம் போலே யாயிற்று இவர் உதயமும் –

வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் -என்னக் கடவது இறே –

பொய்கையிலே அவதரிக்கையாலே அதுவே நிரூபகமாய் இருக்கை –
அது தான் ஸரஸ்வதீ பயஸ்விநியாய் ப்ரவஹித்த ஸ்தலம் யாயிற்று
தத்தீரமான பொய்கை என்கை –

பொய்கைப் பிரான் –
மரு பூமியில் பொய்கை போலே எல்லார்க்கும் உபகாரகராய் இருக்கை
தீர்த்த கரராய்த் திரியுமவர் இறே

கவிஞர் போரேறு -ஆகையாவது
கவி ஸ்ரேஷ்டர் -என்றபடி –
ஆதி கவி என்னும்படி அதிசயித்தவர்-

உலகம் படைத்தான் கவியாலும்–திருவாய் -3-9-10- -பரகால கவியாலும் –
செஞ்சொற் கவிகாள் என்றும்
செந்தமிழ் பாடுவார் என்றும் கொண்டாடப் படுமவராய் –
நாட்டில் கவிகளுக்கும் விலக்ஷண கவியாய் இருப்பர்

இது பொய்கையார் வாக்கினிலே கண்டு கொள்க -என்று இறே தமிழர் கூறுவது –
அந்த ஏற்றம் எல்லாம் பற்ற கவிஞர் போரேறு -என்கிறது –

ஏவம் வித வை லக்ஷண்யத்தை யுடையவர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழும் படி ஸ்நேஹத்தால்
விலக்ஷண பிரமாண நிர்மாணம் பண்ணின படி சொல்கிறது –
வையத்-தடியவர்கள் வாழ அரும் தமிழ் நூற்றந்தாதி-படி விளங்கச் செய்தான் பரிந்து -என்று –

வையத்தடியவர்கள் -ஆகிறார் –
பூஸூரரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
அவர்கட்கே இறே வாழ வேண்டுவது
வானத்து அணி அமரர்க்கு -இரண்டாம் திரு -2–வாழ்வு நித்தியமாய் இறே இருப்பது –

இத்தால்
இவர்கள் வாழுகையாவது —
சேஷத்வ வைபவத்தை ஸ்வ அனுசந்தானத்தாலே உண்டாக்குமதான பிரபந்தம் -என்கை

நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி -என்னக் கடவது இறே –
இவ்வநுஸந்தானமே வாழ்வு -என்னவுமாம் –

அரும் தமிழ் நூற்றந்தாதி-ஆவது –
அர்த்த நிர்ணயத்தில் வந்தால் -வெளிறாய் இருக்கை அன்றிக்கே அரிதாய்
தமிழான பிரகாரத்தாலே ஸூலபமாய் –
அது தான் நூறு பாட்டாய் –
அந்தாதியாய் இருக்கை-

அன்றிக்கே –
வையத்-தடியவர்கள் வாழ அரும் தமிழ் நூற்றந்தாதி–என்று
வையத்து அடியவர்வர்கள் வாழ வருமதான தமிழ் நூற்றந்தாதி என்றுமாம் –

நூற்றந்தாதி படி விளங்கச் செய்கையாவது —
வையம் தகளியாய் -என்று தொடங்கி –
ஓர் அடியும் சாடுதைத்த முடிவாக அருளிச் செய்த
திவ்ய பிரபந்த தீபத்தாலே
பூதலம் எங்கும் நிர்மலமாம் படி நிர்மித்தார் என்கை –

வருத்தும் புற விருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி
ஒன்றத் திரித்து அன்று எரித்த திரு விளக்கு யாகையாலே –
படியில் -பூமியிலே
பிரகாசிக்கும் படி செய்து அருளினார் என்றாகவுமாம்

அன்றிக்கே –
படி -என்று உபமானமாய் –
திராவிட வேதத்துக்கு படிச் சந்தமாய் இருக்கும் படி செய்து அருளினார் என்றுமாம் –

விளக்கம் -பிரகாசம்
படி என்று விக்ரஹமாய் –
திவ்ய மங்கள விக்ரஹம் -திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் -என்றபடி
கண்டு அறியும் படி செய்து அருளினார் என்றுமாம் –

செய்தான் பரிந்து –
பரிவுடன் செய்கை யாவது –
சேர்ந்த விஷய ஸ்நேஹத்தாலே -என்னுதல் –
பர விஷய ஸ்நேஹத்தாலே -என்னுதல்

செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை என்றார் இறே –
ஸ்நேஹத்தாலே இறே விளக்கு எரிவது

இத்தால்
அவர் திவ்ய பிரபந்த உபகாரகத்வத்தாலே வந்த உபகார கௌரவம் சொல்லி ஈடுபட்டதாயிற்று –

——–

ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

கைதை சேர் பூம் பொழில்
தாழைகள் மிகுதியாக சேர்ந்து இருக்கப் பெற்ற அழகிய சோலைகள்-
கேதகீ -வடசொல்-

படி விளங்கச்
இப் பூமி யானது இருள் நீங்கி ஞான ஒளி பெற்று விளங்கும்படியாக

படி –
உபமானத்துக்கும்
திருமேனிக்கும் வாசகம்

வருத்தும் புறவிருள் மாற்ற என் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன திரு வுள்ளத்தே
இருத்தும் பரமன் இராமானுசன் எம்மிறையவனே

பரிந்து –
எம்பெருமான் மேல் காதல் கொண்டு

கவிஞர் போரேறு –
புருஷ சிம்ஹ -புருஷ வயாக்ர-புருஷ புங்கவ -புருஷர்ஷப
சிங்கம் புலி எருது -மிடுக்குக்கு வாசகம்

அருந்தமிழ் அந்தாதி -பாட பேதம்

இன்கவி பாடும் பரம கவிகள் என்றும்
செந்தமிழ் பாடுவார் என்றும்
இவர்கள் திரு வவதரித்தது ஒரோ தேசங்களிலே யாகிலும்
காலப் பழைமையாலே-அச்சுப் பிழை இது –
ஞானப் பெருமையாலே-இருந்து இருக்க வேண்டும் – – இன்னவிடம் என்று நிச்சயிக்கப் போகாது -பெரியவாச்சான் பிள்ளை
யுகாந்திரத்தில் திருவவதாரம்
ஆழ்வார்கள் காட்டில் பகவத் விஷயத்தில் உண்டான
அவகாஹனத்தாலே முதல் ஆழ்வார்கள் மூவரையும் நித்ய சூரிகளோ பாதியாக நினைத்து இருப்பார்கள் -என்று
அருளிச் செய்து இருப்பதால்
அடியார்கள் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே -என்கிற சங்கை என்னவுமாம்
அத்ரி ஜமதக்னி பங்க்த்ரித வஸூ நந்த ஸூ நுவானுடைய யுக வர்ண க்ரம அவதாரமோ
வ்யாசாதிவத் ஆவேசமோ
மூதுவர் கரை கண்டோர் சீரியரிலே ஒருவரோ
முன்னம் நோற்ற அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ என்று
சங்கிப்பர்கள் -ஆச்சார்ய ஹிருதயம் நம் ஆழ்வார் விஷயம் போலே இங்கும் சங்கை

கால பழைமையால் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை இன்னவிடம் தெரியாது எனபது திரு உள்ளமாகில்
எண்ணரும் சீர்ப் பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றிய ஊர்
வண்மை மிகு கச்சி மலை மா மயிலை -என்றும்
பொய்யில்லாத மணவாள மா முனிகள் அருளிச் செய்து இருக்க மாட்டாரே-

————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –