ஸ்ரீ அச்யுத –
நியந்த்ருத்வ ஸ்வாமித்வாதி கல்யாண குணங்களாலே குறை வற்று இருக்கை -என்னுதல் –
ஏக ரூபமாய் இருக்கும் -என்னுதல்
என்றும் ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் இருப்பை நழுவ விடாதவன் -என்னுதல் –
ஆர்ந்த புகழ் அச்சுதன் -திருவாய்மொழி -3-5-11- என்றும்
நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை -திருவாய்மொழி -3-6-8-என்கிறபடியே
ஆஸ்ரிதரை தாம்தாம் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாதவன் -என்னுதல் –
பூயோ நமோ அபரிமித அச்யுத பக்தி தத்தவ
ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி
யோகாய நாத முநயே யமிநாம் வராய–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்–3-
————–
அச்சன் (1)
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்கள் ஆகி அவனுக்கே – நாலாயி:666/3
அச்சுதன் (7)
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன் முத்தம் இருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே – நாலாயி:28/3,4
அரி_முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து – நாலாயி:564/3
அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன் – நாலாயி:868/3
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே – நாலாயி:3157/4
அச்சுதன் அமலன் என்கோ அடியவர் வினை கெடுக்கும் – நாலாயி:3158/1
அறியும் செம் தீயை தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் – நாலாயி:3266/1
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் வீவு இல் சீரன் மலர் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3277/1,2
அச்சுதன்-தன்னை (2)
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன்-தன்னை தயரதற்கு மகன்-தன்னை அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே – நாலாயி:3183/3,4
நாவில் கொண்டு அச்சுதன்-தன்னை ஞானவிதி பிழையாமே – நாலாயி:3360/2
அச்சுதனுக்கு (2)
அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள் – நாலாயி:51/3
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே – நாலாயி:151/4
அச்சுதனே (2)
அம் கள் மலர் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய் – நாலாயி:3639/1
அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணமே – நாலாயி:3647/3,4
அச்சுதனை (5)
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவு_அணை பள்ளியானை – நாலாயி:432/2
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்-தன் மேல் – நாலாயி:3162/2
ஆர்ந்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை – நாலாயி:3175/2
அரியினை அச்சுதனை பற்றி யான் இறையேனும் இடர் இலனே – நாலாயி:3223/4
ஆழி_நீர்_வண்ணனை அச்சுதனை அணி குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3593/2
அச்சுதா (1)
அச்சுதா அமரர் ஏறே ஆயர்-தம் கொழுந்தே என்னும் – நாலாயி:873/2-
————–
அச்சன் (1)
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்கள் ஆகி அவனுக்கே – நாலாயி:666/3
மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று
எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே
பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே–2-9-
என் அத்தன் அச்சன் –
எனக்கு ஜனகனுமாய் ஸ்வாமியும் ஆனவனை
அரங்கனுக்கு அடியார்களாகி –
ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு அநந்ய பிரயோஜனராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடியாராகி
அவனுக்கே பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள்
அவர்க்கு பக்திமான்களாய் பக்தி கார்யமான பித்தேறித் திரிகிறவர்கள் -பித்தர் அல்லர்கள் –
மற்றையார் முற்றும் பித்தரே–
இந்த பக்தி கார்யமான பித்தர் அல்லாதவர்கள் அடைய பித்தரே –
இக் கலக்கம் இல்லாதே தெளிந்து இருக்கும் ஸ்ரீ சனகாதிகளே யாகிலும் அவர்களே பித்தரே –
————–
அச்சுதன் (7)
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன் முத்தம் இருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே – நாலாயி:28/3,4
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகில் நகையீர் வந்து காணீரே -1-2-6-
மங்களா சாசன பரர் ஆகையாலே -விரோதிகள் அறிந்து அபசரிக்கைக்கு அவகாசம்
இல்லாதபடி திருவவதரித்த நாளை மறைத்து அருளி செய்கிறார் –
அச்யுத பாநு நா தேவகி பூர்வ சந்த்யாயாம் ஆவிர்பூதம் -என்கிறபடியே –
தேவகி திரு வயிறு கிழக்கு ஸந்த்யை -இவன் அச்யுத பாநு
(கிழக்குக்கும் ஸூர்யனுக்கும் உள்ள சம்பந்தம் போல் இவனுக்கும் இவள் கர்ப்பத்துக்கும் தொடர்பு )
கர்ப வாச தோஷம் அற ஆவிர்பவித்து –
(சேதனனைப் போலே கர்ம நிபந்தம் இன்றிக்கே
இச்சா க்ருஹீத -அனுக்ரஹத்தாலே ஆவிர்பவித்தான் -என்கிறது )
ஆஸ்ரிதரை ஒருகாலும் நழுவ
விடாதவனுடைய முத்தம் இருந்தபடியை காணுங்கோள் –
முத்தம் -சண்ணம்
முகிழ் நகை -மந்தஸ்மிதம்-
———–
அரி_முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து – நாலாயி:564/3
வரிசிலை வாண் முகத்து என் ஐமார் தாம் வந்திட்டு
எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து
பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-9-
என்னுடைய ப்ராதாக்கள் ஆனவர்களே –
இதுக்கு எல்லாம் –லாஜ ஹோமம் –அபிமானிகள் -என்னும் இடம்
தங்கள் முகத்தில் ஒளியிலே காணும் படியாக வந்து
அக்னி முகத்தை பாரித்து -ஜ்வலிகச் செய்து —
நான் வ்ரீளையால் இறாய்க்க-என்னை எடுத்து முன்னே நிறுத்தி-
அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–
பொரி முகந்து -அட்ட –
பொரியை அள்ளி அக்னியிலே பரிமாற-
மைத்துனமை முறையுடையார் இவனை இளிம்பு படுத்திச் சிரிக்க வேணும் என்று
சில விலாச சேஷ்டிதங்களை பண்ணக் கோலினால்
அவர்களுக்கு கணிசிக்க ஒண்ணாத படி அநபிபவனாய் இருந்த இருப்பு –
அச்சுதன் –
அவர்கள் பொரியட்டி விட்டாலும் தான் கை விடாதவன் –
கைம்மேல் என் கை வைத்து –
அடியார் ரஷணத்தில் பிராட்டி புருஷகாரம் அடியாக என்பதால்
இவள் கையே மேலே இருக்கும்
என் கை மென்மையை தோழி நீ அறிவாயே-
அவனும் அறியும் படி அவன் கை மேல் என் கை வைக்கப் பெற்றேன்
————
அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-
அத்தனாகி –
ஹிதமே ப்ரவர்த்திப்பிக்கும் பிதாவுமாய் –
அன்னையாகி-
பிரியமே ப்ரவர்த்திப்பிக்கும் மாதாவுமாய் –
ஓருபிதா செய்யும் உபகாரத்தை மாதா செய்ய மாட்டாள் –
மாதா செய்யும் உபகாரத்தை பிதா செய்ய மாட்டான் –
இரண்டு வகைப் பட்ட உபகாரத்தையும் தானே செய்ய வல்லவனாய் இருக்கை –
சர்வேஷமேவா லோகாநாம் பிதர மாதர ச மாதவ -என்றும் –
உலக்குக்கோர் முத்தைத் தாய் தந்தை -என்றும் சொல்லக் கடவது இறே
அதவா –
அத்தனாகி அன்னையாகி –
ஜ்ஞானத்து உத்பாதகனுமாய் –
உத்பன்ன ஜ்ஞானத்துக்கு வர்த்தகனுமாய் –
இருக்குமவன் -என்னவுமாம் –
க்ரியான் ப்ரஹ்ம மத பிதா -என்று ஜ்ஞான உத்பாதகனை பிதா வென்று சொல்லக் கடவது இ றே
இவ்வளவால் -கீழ்ப் பாட்டில் –ஜ்ஞானமாகி –என்றத்தை விவரிக்கிறது –
———-
அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன் – நாலாயி:868/3
அச்சம் நோயோடு அல்லல் பல் பிறப்பவாய மூப்பிவை
வைத்த சிந்தை வைத்த வாக்கை மாற்றி வானில் ஏற்றுவான்
அச்சுதன் அனந்த கீர்த்தி யாதி யந்தம் இல்லவன்
நச்சு நாகணைக் கிடந்த நாதன் வேத கீதனே -117-
வானில் ஏற்றுவான்-
நோ பஜநம் ஸ்மரான் நிதம் சரீரம் -என்கிறபடியே இவற்றை ஸ்மரிக்கைக்கும்
அவசரம் இல்லாதா பரம பதத்தே ஏறப் பண்ண வல்லவன் –
இஸ் ஸ்வபாவத்தை உடையவன் ஆர் என்ன –
அச்சுதன் –திருவடிகளை ஆஸ்ரயித்தாரை -ஒரு நாளும் -ஒரு படியாலும் -நழுவ விடாதவன் –
அனந்த கீர்த்தி –
இப்படி ஆஸ்ரித ரஷணம் பண்ணுகையால் உண்டான அபரிச்சேத்யமான
குண பிரதையை உடையவன் –
ஆதி யந்தம் இல்லவன் –
ஆதியந்த ரஹீதன் -அதாகிறது –
ஆஸ்ரித விஷயத்தில் செய்ய நினைத்து இருக்குமவற்றுக்கும் முதலும் முடிவும்
இன்றிக்கே இருக்கை
நச்ச நாகணைக் கிடந்த நாதன் –
ஆஸ்ரிதரை ஒருக்காலும் பிரிய மாட்டாத சர்வ ஸ்வாமி
ப்ரதிகூலர் பக்கல் நஞ்சை உமிழ்வானுமாய்
ஜாதி பிரயுக்தமான -மென்மை குளிர்ந்து நாற்றங்களை உடையனுமான
திருவநந்த வாழ்வான் ஆகிற படுக்கையில் கண் வளர்ந்து அருளுகிறவன் –
நாதன் –
தாழ நின்று உபகரிக்கைக்கும்
ஆஸ்ரிதரை பிரியமாட்டாமைக்கும்
ஹேது உடையவன் ஆகையாலே
வேத கீதனே –
அச்யுதனாகவும் –
வகுத்த ஸ்வாமி யாகவும்
நாராயண அனுவாஹத்தில் பிரசித்தமானவன் –
சாஸ்வதம் சிவம் அச்யுதம் நாராயணம் -என்னக் கடவது இறே –
—————-
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே – நாலாயி:3157/4
சாதி மாணிக்கம் என்கோ! சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ! தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ! ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமல னையே–3-4-4-
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே –
ஆதும் இல் காலத்திலே- சம்சார காலத்திலே எனக்குத் தன்னைப் பெறுகைக்கு முதல் ஒன்றுமில்லாத காலத்திலே,
தான் எந்தையான முறையை எனக்கு அறிவித்து,
பின்பு ஒரு காலமும் நழுவ விடாதே ரஷித்து ,
இதுதான் என்பக்கல் ஒரு பிரயோஜனம் கொண்டன்றியே நிர்ஹேதுகமாகத் தன் பேறாகப் ரஷித்தவனை .
அன்றியே,
‘யாதுமில் காலம் உண்டு – பிரளயகாலம் –
கார்யாகாரமான இவையடங்கலும் அழிந்து, ‘சத்’ அவஸ்தமாய் கிடக்கிற அன்று,
தான் ஸ்வாமியான பிராப்தியைக் கொண்டு நாம ரூபங்களை இழந்த இவற்றைச்
சத்தை இழந்து போகாமல் தன் பக்கலிலே ஏறிட்டுக்கொண்டு இவற்றைத் தரித்து, ‘தான்’ என்று சொல்லலாம்படி
இவை தன் பக்கலிலே கலந்த அன்றும் இவற்றின் தோஷங்கள் தன் பக்கல் தட்டாதபடி இருக்கிறவனை’ என்னுதல்.
‘ஆயின், ‘தோய்விலன்’ என்னுமதனோடு இங்குக் கூறிய இரண்டாவது பொருள், கூறியது கூறலாகாதோ?’ எனின்,
‘நாம ரூபங்களையுடையனவாய்ப் பொருளாகச் சொல்லலாம்படி பிரியநின்ற போதும்
இவற்றோடே கலந்து இவற்றின் குற்றம் தன் பக்கல் தட்டாதபடி நிற்கும் நிலையினைச் சொல்லுகிறது அங்கு;
இவை, தான் என்ற சொல்லுக்குள்ளேயாம்படி கலந்து நின்ற போதும்
இவற்றின் குற்றம் தன் பக்கல் தட்டாதபடி நிற்கும் நிலையினைச் சொல்லுகிறது இங்கு,’ என்று அருளிச்செய்வர்.
அதற்கு அடி, பிரவேச ஹேது விசேஷம்.
‘புருடன் மணி வரமாகப் பொன்றா மூலப் பிரகிருதி மறுவாக மான் தண் டாகத்
தெருள் மருள் வாள் உறையாக ஆங்காரங்கள் சார்ங்கஞ்சங்காக மனம் திகிரி யாக
இருடிகங்கள் ஈரைந்தும் சரங்களாக இருபூத மாலை வன மாலையாகக் கருட னுருவா மறையின் பொருளாம்
கண்ணன் கரி கிரி மேல் நின்றனைத்தும் காக்கின்றானே.’ ஸ்ரீதேசிகன் ஸ்ரீசூக்தி (அதிகார சங்.80)
—————
அச்சுதன் அமலன் என்கோ அடியவர் வினை கெடுக்கும் – நாலாயி:3158/1
அச்சுதன் அமலன் என்கோ! அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மா மருந்தம் என்கோ! நலம் கடல் அமுதம் என்கோ!
அச் சுவைக் கட்டி என்கோ! அறு சுவை அடிசில் என்கோ!
நெய்ச் சுவைத் தேறல் என்கோ! கனி என்கோ! பால் என்கேனோ!–3-4-5-
அச்சுதன் அமலன் என்கோ –
நித்ய விபூதியோடே கூடியிருக்கும் இருப்புக்கு ஒருநாளும் அழிவில்லாதபடி யிருப்பவனாய்,
ஹேய ப்ரத்ய நீகனாய் குற்றம் ஒன்றும் தீண்டப்படாதவனாய், –
உபலக்ஷணத்தால்-
கல்யாணை கதானனாய்- நற்குணங்கட்கெல்லாம் தானே இருப்பிடமானவனாய் உள்ளவன் என்பேனோ!
(கீழே‘ஆதியஞ்சோதி’ என்பதனைக் கடாக்ஷித்து, ‘நித்யவிபூதியோடே கூடியிருக்கும் இருப்புக்கு’ என்று அருளிச்செய்கிறார்)
————
அறியும் செம் தீயை தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் – நாலாயி:3266/1
அறியும் செந் தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி,‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினை யுடையாட்டியேன் பெற்ற
செறிவளை முன் கைச் சிறுமான் செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே?–4-4-3–
அறியும் –
‘ஒன்றால் அவிக்க ஒண்ணாது, தாஹகம் -எரிக்குந் தன்மையது’ என்று எல்லாராலும் அறியப்படுகின்ற.
அன்றிக்கே,
‘இவள் தானும் இப்படி மயங்குவதற்கு முன்பு எரிக்கும் தன்மையது என்று அறிந்து-பரிஹரித்து – நீக்கிப் போந்தது’ என்னுதல்.
செந் தீயைத் தழுவி –
எரிக்கின்ற நெருப்பைத் தழுவா நின்றாள்;
‘மந்திரம் மருந்து முதலியவைகளால் -பிரதிபத்த -தடை செய்யப்பட்ட ஆற்றலையுடையது’ என்றுதான் தழுவுகிறாளோ?’
தேஜஸாம் ராசி மூர்ஜிதம் -‘ஒளிகளின் நிலையான திரள்’ என்கிறபடியே, ஒளியுடைமையையே பார்த்துத் தழுவா நின்றாள்.
அன்றிக்கே,
‘பொரு நீர்க் கடல் தீப்பட்டு எங்கும், திகழும் எரியோடு செல்வது ஒப்ப’ என்னுமாறு போன்று,
இப்போது தனக்காக ஒரு மாணிக்கப்படி சாத்தி அணைக்கைக்காக வந்தான் என்று பார்த்துத் தழுவுகின்றாள் என்னுதல்.
அச்சுதன் என்னும் –
‘உடைமையை மங்கக் கொடாமைக்காக வந்தானே!’ என்பாள்.
———–
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3277/1,2
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் றனை
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே–4-5-3-
வீவு இல் இன்பம் –
வீவின்ரிக்கே -ஒரு விச்சேதமும் இன்றிக்கே -அழிவு இன்றிக்கே இருப்பதான
இன்பம் -ஆனந்தம். ‘அதுதான் எவ்வளவு போதும்?’ என்னில்,
மிக எல்லை நிகழ்ந்த –
‘இனி, இதற்கு அவ்வருகு இல்லை’ என்னும்படியான எல்லையிலே இருக்கிற.
நம் –
ஆனந்த வல்லியில் பிரசித்தி.
அச்சுதன் –
இதனை ஒரு பிரமாணம் கொண்டு உபபாதிக்க (விரித்துக் கூற) வேண்டுமோ?
இவ் வானந்தத்திற்கு ஒருகாலும் விச்சதம் (அழிவு) இல்லை என்னுமிடம் திருப் பெயரே சொல்லுகிறதே அன்றோ?
வீவு இல் சீரன் –
இந்த ஆனந்தத்திற்கு அடியான நித்ய விபூதியை (பரமபதத்தை) உடையவன்.
அன்றிக்கே, ‘நித்யமான குணங்களை யுடையவன்’ என்றுமாம்.
குணங்களும் விபூதியும் ஆனந்தத்திற்குக் காரணமாய் -ஆனந்தாவஹமாய் -அன்றோ இருப்பன-
மலர்க்கண்ணன் –
ஆனந்தத்தை இயல்பாகவே-ஸ்வாபாவிகமாக- யுடையவன் என்னுமிடத்தைத்
திருக் கண்கள் தாமே கோள் சொல்லிக் கொடுப்பனவாம்.
————-
அச்சுதன்-தன்னை (2)
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன்-தன்னை
தயரதற்கு மகன்-தன்னை அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே – நாலாயி:3183/3,4
துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்
தயரதற்கு மகன் தனை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே–3-6-8-
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை –
தன் திருவடிகளைப் பற்றினாரை அறிவு கலங்கும்படிக்கு ஈடாக-பிராண வியோகத்தை
உயிரைப் பிரிக்கக் கூடியவர்களாயிருந்துள்ள யமபடர்க்குக் காற்றவொண்ணாத நஞ்சாக உள்ளவனை;
அச்சுதனை
தன்னை ஆஸ்ரயித்தாரை யம வஸ்யராக வீட்டுக் கொடாதவனை
‘உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும்போது ஓடி அயர வென்ற தீர்க்குமவனே அன்றோ?
‘எங்ஙனே கண்டோம்?’ என்னில்,
தயரதற்கு மகன் தன்னை –
தான் அரசு செலுத்தா நிற்கச்செய்தே ஒரு பிராஹ்மணனுடைய குமாரனுக்கு அகால மரணம் உண்டாக,
அவனை வாளாலே மீட்டும்;
இராவணனைக் கொன்ற பின் படைக்குறி காணாநிற்கிற அளவிலே முதலிகளிலே சிலரைக் காணாதொழிய,
இந்திரனை அழைத்துப் போகவிட்டு வரம் கேட்கிற வியாஜத்தாலே அவனை இடுவித்து
அவர்களையும் கூட்டிக்கொண்டு போன சக்கரவர்த்தி திருமகனை;
ஒரு முனிவனுடைய புத்திரனுக்கு அகால மரணம் வர, அப்பாலே மீட்டுக்கொடுத்தும் செய்தவை.
‘தயரதன் மகன்’ என்னாதே, தயரதற்கு மகன் தன்னை’ என்கிறது,
ஒருகால் வெற்றிலைச் செருக்கிலே ‘அரசு தந்தேன்’ என்னா, மீண்டு பெண்ணுக்கு வசப்பட்டவனாய்,
‘நான் தந்திலேன்; நீ காடு ஏறப் போ,’ என்னா, இப்படிச் சொல்லலாம்படி
அவனுக்கு இஷ்ட வினியோகத்திற்குத் தக்க புத்திரனாய் இருந்தான் ஆதலின்.
அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே –
இவ்விடத்தைப் பட்டர் அருளிச் செய்யா நிற்க,
நஞ்சீயர், ‘இவர் புக்க இடம் எங்கும் இப்படியே சொல்லுவர்; இவர்க்கு இது பணியே அன்றோ?’ என்ன,
‘இவர் மற்றோரிடத்தில் தலை நீட்டுவது -பாவநத்வத்தைப் பற்ற;
இவர் தஞ்சமாக நினைத்திருப்பது சக்கரவர்த்தி திருமகனையே,’ என்று அருளிச்செய்தார்.
பாவநஸ் சர்வ லோகாநாம் த்வமேவ ‘‘ஸ்ரீராமா, நீதான் எல்லா உலகங்களிலுள்ள எல்லா உயிர்கட்கும்
பாவத்தைப் போக்குகின்றவனாய் இருக்கிறாய்,’ என்கிறது இல்லையோ இவரையும்?’ என்ன,
‘அவனும் இவரோடு ஒத்தான் ஒருவன்; இவர் ‘இனிய பொருள் வேறில்லை’ என்றிருக்குமாறு போன்று,
அவன் ‘பாவநத்துக்கும் இவர் ஒழிய வேறில்லை’ என்றிருப்பான் ஒருவனாயிற்று.’
பட்டர் இராமாவதாரத்தில் பக்ஷபாதத்தாலே அருளிச்செய்யுமது கேட்கைக்காக,
சிறியாத்தான், ‘பெருமாளுக்கு எல்லா ஏற்றங்களும் அருளிச் செய்ததே யாகிலும், பாண்டவர்களுக்காகக் கழுத்திலே
ஓலை கட்டித் தூது போன கிருஷ்ணனுடைய நீர்மை இல்லையே சக்கரவர்த்தி திருமகனுக்கு? என்ன,
‘அதுவோ! பெருமாள் தூது போகாமை அன்று காண்;
இக்ஷ்வாகு குலத்தாரைத் தூது போக விடுவார் இல்லாமை காண்,’ என்று அருளிச் செய்தார்.
‘அவ்வவதாரத்தில் அக்குறை தீருகைக்காக அன்றோ கிருஷ்ணனாக அவதரித்துத் தூது போயிற்று?
‘முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்,
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே,
பின்னோர் தூது ஆதி மன்னர்க்காகிப் பெரு நிலத்தார்,
இன்னார் தூதன் என்ன நின்றான் எவ்வுட் கிடந்தானே,’ என்பது மங்கை மன்னன் மறைமொழி;
பாரதந்திரிய ரசம் அனுபவிக்கைக்காகப் போந்த பின் அதில் ஒன்று குறைந்தது என்று ஏன் இருக்க வேண்டும்?’
‘எம்பெருமானார் திருவாராதனம் பண்ணிப் போருவது வெண்ணெய்க்காடும் பிள்ளையாய் இருக்கும்.
இங்ஙனமிருக்கவும், ஒரு நாள் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் சக்கரவர்த்தி திருமகனை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு
வந்து கொடுத்தாராய் அவரைப் பார்த்து, இந்த
-மாமேகம் சரணம் வ்ரஜ ‘என் ஒருவனையே சரணமாகப் பற்று’ என்று தேவையிடாதார் எழுந்தருளினார்,’ என்றாராம்.
ஆபிமுக்யத்தாலே பெறலாம் என்றால், அவ் வாபி முக்கியம் தானும்
பரமபத்தியைப் போன்று அரிதாய் இருக்கும் அன்றோ இம்மக்களைப் பார்த்தால்?
‘இத்தலையில் ஆபிமுக்கியத்திற்கு மேற்பட வேண்டா,’ என்று சொல்லுகிறவை எல்லாம்,
சரண்யனுடைய–பற்றப்படுகின்ற சர்வேஸ்வரனுடைய நீர்மையைப் பற்றச் சொல்லுகிறது;
இவனுக்கு வேண்டுவன சொல்லப்புக்கால் ‘மஹாவிஸ்வாச பூர்வகம் – மஹாவிசுவாசம் முன்னாக’
என்ன வேண்டும்படியாய் இருக்கும்.
‘ஒரு சிறாயை நம்பி ஆறு மாதங்கட்கு வேண்டும் சோறும் தண்ணீரும் ஏற்றிக்கொண்டு கடலிலே இழியா நின்றான்;
அதைப் போன்ற நம்பிக்கை யாகிலும் வேண்டாவோ பகவத் விஷயத்தைப் பற்றுகிறவர்களுக்கு?’ என்று அருளிச் செய்தார்
—————
நாவில் கொண்டு அச்சுதன்-தன்னை ஞானவிதி பிழையாமே – நாலாயி:3360/2
மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே–5-2-9-
————
அச்சுதனுக்கு (2)
அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள் – நாலாயி:51/3
கச்சோடு பொற் சரிகைக் காம்பு கநக வளை
உச்சி மணிச் சுட்டி ஒண் தாள் நிரைப் பொற் பூ
அச்சுதனுக்கு என்று அவநியாள் போத்தந்தாள்
நச்சு முலை உண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ -1-3 8-
அச்சுதன் இத்யாதி –
ஆஸ்ரிதரை ஒருகாலும் நழுவ விடாதவனுக்கு என்று ஸ்ரீ பூமி பிராட்டி வர விட்டாள்
தன் படிகளில் ஒன்றும் நழுவ விடாதவன்-என்னுதல்
—————
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே – நாலாயி:151/4
வார் காது தாழப் பெருக்கி அமைத்து மகரக் குழை இட வேண்டிச்
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே – 2-3 13- –
பன்னிரு நாமத்தால் சொன்ன ஆராத அந்தாதி
ஸ்ரீ வைஷ்ணவ சிஹ்னமான கேசவாதி நாமங்களாலே அருளிச் செய்தது
ஆகையால் இறே ஆராத அந்தாதி ஆயிற்று –
பன்னிரண்டும் வல்லார்
இப் பன்னிரண்டு பாட்டையும் சாபிப்ராயமாக வல்லார்கள்
ஆராமை ஆவது
கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் அப்போது விரும்பிக் கற்றால் போலவே
அதிருப்த போகமாய் இருக்கை
அவன் தான் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாய் ஆனால் போலே
அச்சுதனுக்கு அடியாரே
தன் படிகள் ஒன்றும் நழுவ விடாதவனுக்கு அடியராகப் பெறுவர் –
(பெருமைகள் ஒன்றும் குறையாமல் -நழுவ விடாமல் அவதரிப்பவன் அன்றோ )
————–
அச்சுதனே (2)
அம் கள் மலர் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய் – நாலாயி:3639/1
அங்கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே!அருளாய்
திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுட ராய் இருளாய்ப்
பொங்கு பொழி மழையாய்ப் புகழாய்ப் பழியாய்ப் பின்னும் நீ
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!–7-8-2–
அம் கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே –
அழகிதாய்த் தேனோடு கூடின மலரை யுடைத்தாய்க் குளிர்ந்திருந்துள்ள திருத் துழாயைத் திருமுடியிலே யுடையையாய்,
அந்த ஒப்பனையால் வந்த அழகுக்கு ஒரு நாளும் ஒரு வேறுபாடும் இன்றிக்கே
என்றும் ஒக்க நித்யாம்படி இருக்கிறவனே!
வைத்த வளையத்தைப் போன்றும் போக்யமாகிற தாயிற்று விபூதி அனுபவம் இவர்க்கு.
கீழில் திருவாய் மொழியிலே
விள்கின்ற பூந்தண் துழாய் விரை நாற வந்து’ என்று சொன்னதை
ஸ்மரிக்கிறார் -நினைக்கிறார்’ என்று. பிள்ளான் பணிப்பர்.
மாயன் குழல் விள்கின்ற பூந்தண் துழாய் உருவு வெளிப்பாடாய்த் துன்புறுத்தல் தவிர்ந்து,
நேரே கண்டு அனுபவிக்கிறார் அன்றோ?
—–
அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே
வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணமே – நாலாயி:3647/3,4
இல்லை நுணுக்கங்களே இதனி்ற் பிறிதென்னும் வண்ணம்
தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே
அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப!என் அச்சுதனே!
வல்லதோர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்காம் வண்ணமே–7-8-10-
அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப-
நித்ய விபூதி உக்தனாய் -பரம பதத்தை யுடையனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.
அல்லியை யுடைத்தான திருத் துழாய் மாலையாலே அலங்கரிக்கப்பட்ட திரு மார்பினை யுடையவனே!
அச்சுதனே –
அவ் விருப்புக்கு ஒரு நாளும் அழிவில்லாதபடி பரம பதத்திலே எழுந்தருளி யிருக்கிற இருப்பை
எனக்குப் பிரகாசிப்பிக்கிறவனே!
———-
அச்சுதனை (5)
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவு_அணை பள்ளியானை – நாலாயி:432/2
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே – 4-10 -10-
அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
திருப் பவளத்தை மோந்து பார்த்தல் இப்போதும் வெண்ணெய் மணக்கும் ஆய்த்து –
கூர்ம வ்யாக்ரீ நக பரிமள பஞ்ச ஹேதீ யசோதா நத்தா மௌ கத்யா பரணம் அதிகம் நச்சமாதின் திநோதி -என்று
ஸ்ரீ யசோதை பிராட்டி பிள்ளைப் பணியாக சாத்தின திரு ஆபரணம் இப்போதும் ஸ்ரீ பெரிய பெருமாள்
திருக் கழுத்தில் கிடக்கிறது -என்று கண்டு அனுபவித்தார் இறே -ஸ்ரீ பட்டர் –
ஆகையால்
இவ் விடத்தில் மறையோர்கள் என்கிறது-
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் ஸ்ரீ பட்டர் போல்வானவர்களை
(மறையோர்கள் ஏத்தும்-
லோக சாரங்க முனிவர்கள் தோள்களால் ஏத்தி எழுந்து அருள பண்ணிய திருப்பாண் ஆழ்வார் -என்றுமாம் )
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே
அச்சுதனை –
ஆஸ்ரிதரை ஒருகாலும் நழுவ விடதவனை –
பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமல செங்கண் அச்சுதா -என்றார் இறே ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார்
அச்சுதா என்ற அநந்தரம்
ஆயர் தம் கொழுந்தே -என்றும் அருளி செய்தார் இறே
அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப-
நித்ய விபூதி உக்தனாய் -பரம பதத்தை யுடையனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.
அல்லியை யுடைத்தான திருத் துழாய் மாலையாலே அலங்கரிக்கப்பட்ட திரு மார்பினை யுடையவனே!
அச்சுதனே –
அவ் விருப்புக்கு ஒரு நாளும் அழிவில்லாதபடி பரம பதத்திலே எழுந்தருளி யிருக்கிற இருப்பை
எனக்குப் பிரகாசிப்பிக்கிறவனே!
வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணம் –
இதற்கு இரண்டு படியாக அருளிச்செய்வர்:
இவன், தனக்கு உள்ள அளவு எல்லாம் கொண்டு பேசினால், உன் பக்கல் சில சொல்லிற்றா மத்தனை போக்கி யல்லது,
உனக்கு ஓர் இயத்தை -அளவு இல்லையே அன்றோ?’ என்னுதல்;
அப்போதைக்கு, அதுவே உனக்கு ஆம் வண்ணம்? – அது அன்று என்கிறது’ என்னுதல்.
அன்றிக்கே,
உன் பக்கல் அன்புள்ளவர்களாய் இருப்பார் எத்தனையேனும் அளவு இன்றிக்கே, இருந்தாகளாகிலும்,
அவர்கள் ஒன்றைச் சொன்னால், ‘ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய ஸூரிகள் நடுவே அவர்களுக்கும் கூடப் பேச்சுக்கு
நிலம் அன்றிக்கே இருக்கிற நம்மைச் சம்சாரத்திலே அதி ஷூத்ரனாய் -மிகத் தாழ்ந்தவனாய் இருக்கிற
இவன் அறிந்தானாகச் சொல்லுவதே?’ என்று சீறுகை அன்றிக்கே,
இவன் சொன்னதுவே தனக்கு அளவாக நினைத்திருக்கும் என்னுதல்.
————-
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்-தன் மேல் – நாலாயி:3162/2
கண்ணனை மாயன் தன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன் தன் மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன் யாவையும் எவரும் தானே–3-4-9-
கண்ணனை மாயன் தன்னை –
‘எத்திறம்!’ என்ன வேண்டும்படியான குணங்களையும் சேஷ்டிதங்களையும் உடையவனை.
கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை –
ப்ரயோஜனாந்தர பரரானவர்களுக்கும் உடம்பு நோவக் கடல் கடைந்து
அவர்கள் அபேக்ஷித சம்விதானம் -விரும்பிய பொருள்களைக் கொடுக்கும் ஸ்வாமியை.
அச்சுதனை –
தன்னை அடைந்தவரை ஒருநாளும் நழுவவிடாதே ரக்ஷிக்கும் ஸ்வபாவனானவனை .
அனந்தனை –
சொரூப ரூப குண விபூதிகளால் அளவிட்டு அபரிச்சின்னமானவனை
அனந்தன் தன் மேல் நண்ணி நன்கு உறைகின்றானை –
திருவனந்தாழ்வான் மேலே கிட்டி நன்கு கண்வளர்ந்தருளுகிறவனை. –
சேஷத்வ காஷ்டையிலே ‘அடிமை நிலத்தின் எல்லை நிலத்திலே நிற்கையாலே சேக்ஷியானவனையும்
விளாக்குலை கொள்ள வல்லவன்’ என்பார், ‘அனந்தன்’ என்கிறார். அனந்தன் முடிவில்லாதவன்.
பிராட்டிமார் திருமுலைத் தடத்தாலும் நெருக்கி எழுப்ப வொண்ணாதபடி கண் வளர்கின்றானாதலின்,
‘நண்ணி நன்கு உறைகின்றானை’ என்கிறார்.
———
ஆர்ந்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை – நாலாயி:3175/2
தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல
ஆர்த்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை
வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அருவினை நீறு செய்யுமே–3-5-11-
மாயவனை
ஆச்சர்ய சக்தி யுக்தனை
மதுசூதனனை
மங்களா ஸாஸன விரோதிகளை
மதுவாகிற அஸூரனை நிரஸித்தால் போலே நிரஸிக்குமவனை
மாதவனை
அதுக்க்கடியாக ஸ்ரீ யபதியானவனை
மறையோர்கள் ஏத்தும் ஆயர்கள் ஏற்றினை
வேத தாத்பர்யம் கைப்பட்டு இருக்குமவர்களுடைய மங்களா ஸாஸனத்துக்கு
விஷய பூதனான கிருஷ்ணனை
கோப குலத்தின் நடுவே மேனாணித்து இருக்குமவனை-
அச்சுதனை
இப்படி மங்களா ஸாஸன பரரை ஒரு நாளும் நழுவ விடாதவனை
அரங்கத்து அரவணைப் பள்ளியானே
மங்களா ஸாஸனத்துக்கு விஷய பூதனாய்க் கொண்டு
கோயிலிலே தன் ஸுகுமார்யத்துக்குத் தகுதியாக
திரு வனந்த வாழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளுகிறவனை
———
அரியினை அச்சுதனை பற்றி யான் இறையேனும் இடர் இலனே – நாலாயி:3223/4
பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படை யொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே–3-10-4-
பொன் சக்கரத்து அரியினை –
அனுகூலர்க்கு ஸ்ப்ருஹணீயமான – விரும்பத்தக்க திருவாழியைத் தரித்துப் பகைவர்களுக்குச் சிரமப்பட்டும்
காண முடியாதவனை-அப்ரதிருஷ்யமானவனை –
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜானோ த்வாம் புருஷோத்தமம் -. ‘ஓ கிருஷ்ணனே! ஓ கிருஷ்ணனே!
நீண்ட திருக்கைகளையுடையவனே! புருஷோத்தமனாயும் எல்லாரையும் நியமிக்கின்றவனாயும்
பிறப்பு இறப்பு இல்லாதவனாயும் எல்லார்க்கும் மேலானவனாயும் இருக்கும் தன்மையை அறிவேன்,’ என்கிறபடியே,
தோள்வலி கண்ட பின்பு ஆயிற்றுச் சர்வேஸ்வரன் என்று அறிந்தது.
அச்சுதனை –
ஆஸ்ரிதர்களை -அடியார்களை நழுவ விடாதவனை.
ருத்ரன் தன்னை ஆஸ்ரயித்த வாணனைக் கைகழிய விட்டு ஓடினான் அன்றோ?
சடையான் ஓட அடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவன்’ அன்றோ இவன்?
தலைமையாவது, வாணனைக் கைம்முதல் அறுத்துத் தலை அழியாமல் வைத்த தலைமை.
ஆக, இதனால், அநிருத்தாழ்வானுக்காக மார்விலே அம்பு ஏற்கையாலே
ஆஸ்ரிதற்குத் தஞ்சம்’ என்று நம்புதற்குத் தட்டு இல்லை என்று தெரிவித்தபடி.
பற்றி யான் இறையேனும் இடர் இலனே –
இவனைப் பற்றின எனக்குச் சிறிது -அல்பதுக்கமும் இல்லை.
பேரன்’ என்று இருக்கையாலே அநிருத்தாழ்வானுக்கு நாலு நாள் சிறையில் இருக்க வேண்டிற்று;
அடியேன்’ என்று பற்றின எனக்கு அதுவும் வேண்டிற்று இல்லை,’ என்பார்,
இறையேனும் இடர் இலன்’ என்கிறார்.
————
ஆழி_நீர்_வண்ணனை அச்சுதனை அணி குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3593/2
ஊழி தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–7-3-11-
ஆழி நீர் வண்ணனை –
நோக்காதே படுகொலை அடிக்கிலும் விட ஒண்ணாத வடிவு. வேறுபடாதே அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்கும்
அசாதாரண விக்ரஹத்தைச் சொல்லுகிறது.
அச்சுதனை –
அவ்வடிவு தனக்கு ஒருநாளும் அழிவு இல்லை என்னுதல்.
பற்றினாரை ஒரு நாளும் விடான் என்னுதல்.
———-
அச்சுதா (1)
அச்சுதா அமரர் ஏறே ஆயர்-தம் கொழுந்தே என்னும் – நாலாயி:873/2
பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர நான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே -2-
அச்சுதா –
திருஷ்டாந்தமாக சொன்ன மலை -பவளம் -தாமரை -போலே
நாள் செல்லச் செல்ல
செவ்வி மாறுதல் -தான் அழிதல்-செய்யாதே
ஏக ரூபமாய் இருக்கை-
சதைக ரூப ரூபாய -என்னக் கடவது இ றே –
அதவா –
இச் செவ்வி மாறாதே செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார் -என்றுமாம்
சேவடி செவ்வி திருக் காப்பு -என்னக் கடவது இ றே –
இவ் அழகிலே அகப்பாட்டாரை ஒரு நாளும் நழுவ விடான் என்றுமாம்
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply