ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
தீஷை ஆதிதி ஷட்ஷ்ட சாதக ஸ்ய
அதீத ஆர்த்தி நாரீ சமாதி அதிகம்ய
நிஜாம் அவஸ்தாம் அர்ச்சா ஹரிம் கம
பஷி ஆபன்ன ரஷண அபோதயத் –
தீஷை -விரதம் கொண்ட பெருமாள்
ஆதிதி ஷட்ஷ்ட சாதக ஸ்ய–ஆறாம் பத்து முதலில்
ஆர்த்தி -அதீத ஆர்த்தி -ப்ரஹ்மாஸ்திரமே பலிக்காததால் நான்கு சரணாகதியும் பலிக்காததால் வந்த ஆர்த்தி
நாரீ சமாதி அதிகம்ய -நாயிகா பாவனை பெற்று
நிஜாம் அவஸ்தாம் -மணி வல்லி பேச்சு வந்தேறி அல்ல
அர்ச்சா ஹரிம் -திருவண்வண்டூர் பெருமாள்
கம பஷி ஆபன்ன ரஷண அபோதயத் -ஆபத்து ரஷக தீக்ஷை உணர்த்தத் சொல்லித் தூது
———–
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-
சடஜித் தேசிகத் த்வார கம்யம் சக்ரித்வாத் ஸ்வாமி பாவாத்
விபூதி சஹிதயா பிம்ப த்ருஸ்யாத்வதாத் அதி ஸ்யாமாத்யா காந்த்யா
த்ருதர் துளசிதயா நிர் ஜரை ஈஸ பாவாத் ரக்த ஆசாபாத் அங்கரி பாத்
த்ருத மகுட தயா ஆச்சர்ய சர்யா விசேஷம் லங்காத் த்வம்சாத்–
சடஜித்-தேசிகத் த்வார கம்யம்–ஆச்சார்யர் மூலமாக பற்ற வேண்டும் என்பதைப் பேச
1-சக்ரித்வாத்–கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு–
2-ஸ்வாமி பாவாத் விபூதி சஹிதயா-நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு பாதம் கை தொழுது பணியீர்
3–பிம்ப த்ருஸ்யாத்வதாத்–கறங்கு சக்கரக் கைக் கனி வாய்ப் பெருமானைக் கண்டு–
4-அதி ஸ்யாமாத்யா காந்த்யா–கடலின் மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு–
5-த்ருதர் துளசிதயா–புணர்த்த பூந்தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு-
6-நிர் ஜரை ஈஸ பாவாத் –ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு-மாற்றம் கொண்டருளீர்
7-ரக்த ஆசாபாத் அங்கரி பாத்–கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே
8–த்ருத மகுட தயா–பெரு நீண் முடி நாற்றடந்தோள் கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே-
9–ஆச்சர்ய சர்யா விசேஷம்–கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்;
10-லங்காத் த்வம்சாத்–மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த–ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே
—————
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –
அநாதி அந்த ஆனந்த ஸ்வ ரஸ கருணா கண்ட ஜெனித
ப்ரேனோ துர் வியாபார பிரபதன விபாகார்ஹ உதித
தம் ஆச்சார்யோ பஜனம் சிர விரஹித ஸ்வாத மகதன
ஸ்ப்ருஹ அசக்திம் சஷ்டே முனிர சரணோ யாதி சரணம் —13-
ஸ்வ பாவிக கிருபையை ஐந்தாம் பத்தில் அருளிச் செய்து
இசைவித்து தன் தாளிணைக் கீழ் இருத்தும்
அவன் ஸ்வ பாவத்தை ஆறாம் பத்தில் அருளிச் செய்கிறார் –
சரணாகத ரஷாக வைபவம் அருளிச் செய்கிறார் –
ஆதி மத்திய அந்த ரஹிதன்
அநாதி
ருசி ஜனகன்
ஸ்வ ரஸ கருணா கந்த ஜனகன்
சிர விரஹித ஸ்வாத மகதன ஸ்ப்ருஹ அசக்திம்-க்ஷண காலம் விரஹமும் ஸஹிக்க ஒட்டாமல் –
கிருபையால் ஆச்சார்யர்கள் இடம் நம்மை சேர்த்து அருளுகிறான்
—————————
வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1-
———-
காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கரு நாராய்!
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே.–6-1-2-
————
திறங்களாகி எங்கும் செய்களூ டுழல் புள்ளினங்காள்!
சிறந்த செல்வ மல்கு திரு வண் வண்டூருறையும்
கறங்கு சக்கரக் கைக் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே.–6-1-3-
————-
இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்?
விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
கடலின் மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.–6-1-4-
———–
உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண் வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.–6-1-5-
———-
போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.–6-1-6-
————
ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண் கிளியே!
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலைத் திருவண் வண்டூர்
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.–6-1-7-
———–
திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய்!
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர்
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே.–6-1-8-
———–
அடிகள் கை தொழுது, அலர் மேல் அசையும் அன்னங்காள்!
விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறு கொண்டே.–6-1-9-
———–
வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண் வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10-
————
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வ னடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.–6-1-11-
——-
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -51-பாசுரம்–
அவதாரிகை –
இதில்-ஆற்றாமையாலே தூது விடுகிற ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
அடி விடாமல்-நோற்ற நாலிலும் அமோகமாய் இருக்கிற சரண வரணம் ஆகிற ப்ரஹ்மாஸ்திரம்
பண்ணி இருக்கச் செய்தேயும்
அவன் ஜகத் ரஷண ஹேதுவாக கார்யம் செய்யாது ஒழிய
அத்தாலே-தம் அபேஷிதம் கிடையாமையாலே
மிகவும் தளர்ந்து-ஆர்த்த ரஷணத்தில் தீஷித்து இருக்கிறவன் ஆகையாலே நம் ஆர்த்தியை அறிவிக்கவே
தப்பாமல் நம் கார்யம் செய்யும்
(பம்பை உத்தர தேசம் ரக்ஷண ஸ்தைர்யம்-அறிவித்த குணம் )
ஸ்ரீ திரு வண் வண்டூரில் ஐஸ்வர்யத்தில் கால் தாழ்ந்து நம்மை மறந்தான் இத்தனை -என்று அனுசந்தித்து
கடகரை இட்டு
நத்யஜேயம் -என்ற ஸ்ரீ தசரதாத் மஜனுக்கு தம் தசையை அறிவித்துச் சொல்லுகிறபடியை
ஸ்ரீ நாயகன் வரும் அளவும் கண்டு ஆறி இருக்க மாட்டாமல் ஆற்றாமையாலே ஸ்ரீ நாயகனைக் குறித்து
தூது விடுகிற ஸ்ரீ நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிற
வைகல் பூம் கழி வாயில் அர்த்தத்தை-வைகல் திரு வண் வண்டூர் -என்று தொடங்கி
அருளிச் செய்கிறார் -என்கை –
———————————————–
வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு என்
செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் -கை கழிந்த
காதலுடன் தூது விடும் காரி மாறன் கழலே
மேதினியீர் நீர் வணங்குமின் —51-
————————————————-
வியாக்யானம்–
வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு –
தேறு நீர் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர்
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -என்றத்தை நினைக்கிறது
இரண்டாம் தூதுக்கு விஷயம் ஸ்ரீ விபவம் இறே
வ்யவசாயஞ்ஞர் ரஷண ஸ்தைர்யம் பம்போத்தர தேசஸ்தம் –என்றார் இறே நாயனார்-
ஸ்ரீ திரு வண் வண்டூரிலே பிற்பட்டாரை ரஷிக்கைக்கு சர்வ காலமும் நித்ய வாசம் பண்ணுகிற
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுக்கு
ஜனக குல சுந்தரி ஜீவந்தீம் யதி-என்று ஆள் விட்டதும்
பம்பா பரிசர பர்வதத்திலே வர்த்திக்கிறவரைக் குறித்து ஆயிற்று –
(கிஷ்கிந்தை -மால்யவான் பம்பை வடபாலை தானே)
ஸ்தைர்யம் ஹிமவான் போலே -ஸ்ரீ ராமன் – உத்தர -கிஷ்கந்தை -அங்கு ஸ்ரீ சீதை ஆள் விட்டாள்
என் செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் –
என் தசையைப் பஷ பாதம் உடையவர்களே தாழாமல் சொல்லும் என
(சிஷ்யர் மேல் பஷ பாதிக்கும் ஆச்சார்யர்கள் )
அதாவது –
குருகினங்காள் -வினையாட்டியேன் காதன்மையைக் கைகள் கூப்பிச் சொல்லீர் -என்றும்
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே -என்றும்
திறங்களாகி எங்கும் செய்கலூடுழல் புள்ளினங்காள் -அடியேன் இடரை இறங்கி நீர் தொழுது பணியீர் -என்றும்
மட வன்னங்காள் உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே -என்றும்
உடன் மேயு மட வன்னங்காள் -அடியேனுக்கும் போற்றுமினே -என்றும்
புன்னை மேலுறை பூங்குயில்காள் மாற்றம் கொண்டு அருளி உரையீர் மையல் தீர்வது ஒரு வண்ணமே -என்றும்
அடையாளம் திருந்தக் கண்டு எனக்கு ஓன்று யுரை ஒண் கிளியே -என்றும்
கரும் திண் மா முகில் போல் திருவடிகளை –திருந்தக் கண்டு எனக்கு ஓன்று உரையாய் ஒண் சிறு பூவாய் -என்றும்
அடிகள் கை தொழுது அலர் மேல் அசையும் அன்னங்காள் கொடிய வல் வினையேன் திறம் கூறுமின் வேறு கொண்டே -என்றும்
இப் புடைகளிலே அத்யார்த்தியை அனைவருக்கும் அறிவித்தவை -என்கை –
கை கழிந்த காதலுடன் தூது விடும் –
என்னையும் உளன் என்மின்களே -என்று தாம் வந்து நோக்கா விடில் சத்தை இல்லை –
இப்போது வந்து நோக்குகைக்கு ஈடான சத்தா மாத்ரமும் கிடக்கிறது என்னுங்கோள் என்கையாலே
கை கழிந்த காதல் உடன் தூது விட்ட படி இது வாயிற்று —
காதலுடன் தூது விடும் காரி மாறன் கழலே மேதினியீர் நீர் வணங்குமின் –
ஆற்றாமையோடு தம் பேற்றுக்கு கடகரை அர்த்திக்கிற ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை
உங்கள் பேற்றுக்கு பூமியில் உண்டானவர்களே நீங்கள் வணங்கி வழி படுங்கோள்
அவர் -மாநிலத்து எவ் உயர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் –என்னுமா போலே
இவரும் இருந்ததே குடியாக உபதேசிக்கிறார் –
——————————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்