ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–5-6–கடல் ஞாலம் செய்தேனும்–சாரங்கள்-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சோகஞ்ச தம் சோகம் விஞ்ச பரி சௌரெ
அகிலானாம் சர்க்காதி கர்து அநுகார ரசேன
தத் பாவ பாவித மனா முனீர் சஷ்டே தஸ்ய
பிரவ்ருத்தி அகிலா மயா சரிதா இதி

சோகஞ்ச தம் –காதல் மிக்கு -சோகம் விஞ்ச -பேர் அமர் காதல் பின் நின்ற காதல்
கழிய மிக்கதொரு காதல் விஞ்சி -அப்ரீதி தலைக்கு மேலே போக -சோகம் ஆற்ற அநுகாரம்
பரி சௌரெ அகிலானாம் -ஜகத்தில் அனைவரது
சர்க்காதி கர்து அநுகார ரசேன -சர்க்காதி ஸ்ருஷ்ட்டி முதலான கிரியைகளை எல்லாம் தொடங்கி
தத் பாவ பாவித மனா முனீர் சஷ்டே-ஆறாம் பத்தில் நான்காம் திருவாய்மொழியில் -அவனது பாவமே அடைந்து பேசின ஆழ்வார்
தஸ்ய பிரவ்ருத்தி அகிலா மயா சரிதா இதி -என்று கூடினார் -ப்ரஹ்ம ப்ரவ்ருத்திகள் அனைத்தும்
ஓன்று விடாமல் தாமே செய்ததாக அநுகரித்து தரித்தார்

———–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ஸ்ரஷ்ட்ருத்வாதி ஜகத்தியா சகல வித கலா வர்த்தகத்வேன பூத அந்தராத்மத்வேன
க்ருதி உத்தரணம் பூ பர நிராகத சைலேந்திர உத்தாரண-கிரி ராஜ்
வ்ருஷ காண மர்த்த ஸூ யஜன ஹிததையாஆஸ்ரித ஹித துஷ் கர்ம
உன்மூல ஆத்யைகி ஆதி -சுப அசுப சங்க்ரஹனம் தன்மைய பிரதத்வம்-

1-ஸ்ரஷ்ட்ருத்வாதி ஜகத்தியா –கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்–இத்யாதி —

2-சகல வித கலா வர்த்தகத்வேன–கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்–இத்யாதி –

3-பூத அந்தராத்மத்வேன –காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்–இத்யாதி

4-க்ருதி உத்தரணம் –செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்–இத்யாதி

5-பூ பர நிராகத–திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்–இத்யாதி

6-சைலேந்திர உத்தாரண கிரி ராஜ் வ்ருஷ காண மர்த்த–இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்–இத்யாதி

7-ஸூ யஜன ஹிததையா–உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்-இத்யாதி

8-ஆஸ்ரித ஹித துஷ் கர்ம உன்மூலஆத்யைகி –உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும்–இத்யாதி

9–ஆதி -சுப அசுப சங்க்ரஹனம் –கொடிய வினை யாதும் இலனே என்னும்—இத்யாதி என்றும்
கோலங் கொள் சுவர்க்கமும் யானே என்னும்-இத்யாதி என்றும்

தன்மைய பிரதத்வம்–தன்னைப் போலே பேச வைக்கும் திருக்குணம் –
கோபிகள் அனுகரித்து தரித்தால் போலே அஹம் புத்தியால் -ஸோஹம்-சரீராத்மா பாவம் அந்தராத்மா பாவம் –

———-

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத் தீசன் வந்து ஏறக் கொலோ?
கடல் ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல் ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1-

———

கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வி யீர்க்கு இவை என் சொல்லுகேன்?
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.–5-6-2-

———-

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்?
காண்கின்ற என் காரிகை செய்கின்றவே.–5-6-3-

———-

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனி வாய் இள மான் திறத்தே.–5-6-4-

——

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்
திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
திறம்பாது என் திருமகள் எய்தினவே.–5-6-5-

———-

இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தெனும் யானே என்னும்
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்?
இன வேற் கண்ணி என்மகள் உற்றனவே.–5-6-6-

———–

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்து ஏறக் கொலோ?
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.–5-6-7-

———

உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசை முகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக் கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்?
உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே.–5-6-8-

———

கொடிய வினை யாதும் இலனே என்னும்
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்?
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.–5-6-9-

———-

கோலங் கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோல மில் நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்
கோலம் கொள் தனி முதல் யானே என்னும்
கோலம் கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ?
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே.–5-6-10-

———-

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-

——-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -45-பாசுரம்–

அவதாரிகை-

இதில் அனுகாரத்தாலே தரிக்கப் பார்க்கிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
எங்கனயோ -வில் பிரீதி அப்ரீதி சமமாய் சென்ற இடத்தில்
ப்ரீத்யம்சம் தலை எடுத்து தரிக்கைக்கு யோக்யதை உண்டாய் இருக்க
பாஹ்ய ஹானியாலே அப்ரீதி யம்சமே தலை எடுத்து
பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படி-ஆற்றாமை கரை புரண்டு
ஸ்ரீ கோபிமார் ஸ்ரீ கிருஷ்ணனை அனுகரித்து தரித்தால் போலே இவரும் உபய விபூதி நாதனை அனுகரித்து
தரிக்கப் பார்க்கிற படியைக் கண்டு கண் கலங்கின பரிவர் சந்நிஹிதர்க்கு விலஷணராய் சொல்லிச் செல்லுகிற க்ரமத்தை
ஸ்ரீ நாயகனைப் பிரிந்த ஆற்றாமையாலே-தத் பிரகாரங்களை அனுகரித்து தரிக்கப் பார்க்கிற
தலைவி நிலையை வினவ வந்தவர்களுக்கு
ஸ்ரீ திருத் தாயார் -ஸ்ரீ சர்வேஸ்வரன் ஆவிஷ்டன் ஆனானோ -என்று
க்லேசத்தாலே சொல்லுகிற துறையிலே வைத்து அருளிச் செய்கிற -கடல் ஞாலத்தில் அர்த்தத்தை
கடல் ஞாலத்து ஈசனை -என்று துடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————-

கடல் ஞாலத்து ஈசனை முன் காணாமல் நொந்தே
உடனா வனுகரிக்கலுற்று திடமாக
வாய்ந்து அவனாய்த் தான் பேசும் மாறன் உரையதனை
ஆய்ந்துரைப்பார் ஆட்செய்ய நோற்றார் –46-

திடமாக–அனுகரித்தபடியால் பெற்ற உறுதி–5-2- உறுதி இருந்தது -5-3/5-4/5-5–தளர்ந்து போனாரே –
மீண்டும் அவனை அனுகரித்து -அதனால் பெற்ற -கொஞ்சம் உறுதி -தானாக பேசாமல் -திருத் தாயார் பேச்சாக –

————————————————–

வியாக்யானம்–

கடல் ஞாலத்து ஈசனை –
கடல் சூழ்ந்த பூமியில் உள்ளோர்க்கு நியந்தாவாய்-அத்தாலே சர்வ நிர்வாஹகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை

முன் காணாமல் நொந்தே –
பிரத்யஷ சாஷாத் காரம் பண்ணாமல் நொந்து -அதாவது –
சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் -என்றும்
அறிவரிய பிரானை -என்றும்-அருளிச் செய்த மானஸ சாஷாத்கார மாத்ரம் ஒழிய
பிரத்யஷ சாஷாத்காரம் இல்லை -என்றபடி – அத்தாலே அவசன்னராய் –

உடனா வனுகரிக்கலுற்று –
அனந்தரமாக
ஸ்ரீ கோபிமார் ஸ்ரீ கிருஷ்ணனை அனுகரித்து தரித்த படியை ஆராய்ந்து
தாமும் அனுகரித்து தரிப்பதாக திரு உள்ளத்திலே உற்று –

திடமாக வாய்ந்து –
திருட அத்யாவச்ய யுக்தராய்-வாய்ந்த வழுதி வள நாடன் -என்னும்படி-பாவ பந்தத்தோடு கிட்டி –

அவனாய்த் தான் பேசும் -அதாவது –
1-கடல் ஞாலம் -என்றும்
2-கற்கும் கல்வி என்றும்
3-காண்கின்ற -என்றும்
4-செய்கின்ற -என்றும்
5-திறம்பாமல் -என்றும்
6-இனவேய்-என்றும்
7-உற்றார்கள் என்றும்
8-உறைக்கின்ற -என்றும்
9-கொடிய வினை -என்றும்
10-கோலங்கொள் -என்றும்
11-கூந்தல் -என்றும்
என்கிற இவை ஆதியாக -பத்தும் பத்தாக -(சொல்லாமல் விடப்பட்ட பலவும் உண்டே -ஆகவே ஆதி )

1-ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்கள்
2-சகல வித்யா வேதனமும் வித்யா ப்ரவர்தகத்வாதிகளும்
3-காரணமான பூத பஞ்சகங்களும்
4-கால த்ரயத்தால் உண்டான க்ரியா ஜாதங்களும்
5-ஜகத் ரஷண பிரமுகமான சேஷ்டிதங்களும்
6-ஸ்ரீ கோவர்த்தன உத்தரணம் முதலான ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களும்
7-ஸ்ரீ எம்பெருமான் ஆஸ்ரித நாஸ்ரித விஷயங்களில் இருக்கும் இருப்பையும்
8-ஜகத் பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதி பிரகாரித்வமும்
9-அகர்ம வச்யத்வ பிரமுகமானவை
10-ஸ்வர்க்க ப்ரமுகவானவையாய்

இப்படி உக்தங்கள் ஆனவை எல்லாம் நான் இட்ட வழக்கு என்று
யானே என்ன வாய்ந்து ஏறப் பேசி –ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் –என்றபடி
அவனாகவே அனுகரித்த பிரகாரத்தை அருளிச் செய்யும்-

மாறன் உரையதனை –
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியானத்தை –

ஆய்ந்துரைப்பார் –
ஆய்ந்த தமிழ் மாலை யாயிரத்து இவையும் ஓர் பத்து என்று
இதன் வைபவத்தை ஆராய்ந்து அனுசந்திப்பார் –

ஆட் செய்ய நோற்றார் –
ஸ்ரீ திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்கள் -என்னும்படி
ஸ்ரீ ஆழ்வாருக்கு அடிமை செய்ய நோற்றார் ஆவார்
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே-என்று இறே அவர் இருப்பது

அஹத்வா ராவணம் சங்க்யே ச புத்ரம் சஹ பாந்தவம்–
கொடியான் இலங்கை செற்றேனே -என்னக் கடவது இறே-
(மூல பிரமாணம் –கொடியான் என்றதுக்கு-பெருமாள் வார்த்தை இல்லை -தாயார் வார்த்தை என்று ஈட்டில்-
அனைத்தும் தலைமகள் வார்த்தையாக இருந்தாலும் -அதுக்கும் பிரமாணம் காட்டி அருளுகிறார் –
மூல பலத்தை அழிக்கும் படி கொடியான் அன்றோ )

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading