Archive for May, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–5-1–கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே!—சாரங்கள்-

May 28, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆதே முநிஸ்ய சாதகஸ்ய பஞ்சம
ஸ்ரேயஸ் ஹித போதன ஸ்வயீத மீஷமான
ஏதத் விரோதி பஹூளஸ்ய-மம -அத்ர ஹேது
சௌரே கிருபை ஏவ மகாதீதி ச சம்ஸ்ய பூயக

ஆதே முநிச்ய சாதகஸ்ய பஞ்சம -ஐந்தாம் பத்து ஆதியில்
ஸ்ரேயஸ் ஹித போதன ச்வயீத மீஷமான –ஹிதம் சொல்லி திருத்தும் படியான பெருமை –
ஏதத் விரோதி பஹூளச்ய-மம -அத்ர ஹேது -விரோதி கூட்டங்களை தள்ள
சௌரே கிருபை ஏவ மகாதீதி ச சம்ஸ்ய பூயக -மீண்டும் மீண்டும் கூறி -சௌரே கிருபை ஒன்றே ஹேது

நிருஹேதுக கிருபா என்றும் அவனுக்கு -இங்கு கிருபா பரவச்த்வம் -என்றும் -தேசிகர்
பேர் அருளின் தன்மை -மகா காருண்யம் -மா முனி

————-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

காரி ஸூனு சக்ர ஸூவ ஜன வசதயா ரஷணம் உத்ய பாவாத்
பவ்யத்வாத் ஸ்வாத்மதானாத் அமல தனுதயாத்
ஸ்ரீ கஜேந்திர அவநாஸ் ச நாநா பந்துத்வ யோகாத்வாத்
விபதி சஹிதயாத் வ்யாஜ மாத்ராத் அபிலாஷாத்

1-காரி ஸூனு சக்ர –கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே

2-ஸூவ ஜன வசதயா –எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்–ஆஸ்ரிதர் இட்ட வழக்கு-

3-ரஷணம் உத்ய பாவாத் —வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே–திருப் பாற் கடலில் -அவதார மூலம்

4-பவ்யத்வாத் —-என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே–அவதரித்து ரக்ஷணம் அனுஷ்டிக்கை —

5–ஸ்வாத்மதானாத் —கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை நண்ணியும் நண்ணகில்லேன்—
ஆஸ்ரிதருக்கு ஸ் வ ஆத்மாவை அனுபவிக்கும் உபகாரகன்

6–அமல தனுதயாத்—அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே—குற்றம் அற்ற திரு மேனி

7-ஸ்ரீ கஜேந்திர அவநாஸ்ச –கைம் மா துன்பொழித்தாய்! —

8-நாநா பந்துத்வ யோகாத்வாத்—சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்–
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே–அனைத்து பந்தும் அவரே —

9–விபதி சஹிதயாத் –ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும் நாவாய் போல்-

10–வ்யாஜமாத்ராத் அபிலாஷாத்–ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து தானே
இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்

கிருபா பரவசராய் -கிருபைக்கு பரவசப்பட்டு குணம்-

————

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

உபாயத்வம் யதாத் பிரதம சதகே அபாவ்யத விபோ
அநந்ய உபாயசத் த்ரதாயதி பரம் பஞ்சம முகையைஹ
நிரீ ஹஸ்த்ராதவ் நிரவதிக நிர் ஹேதுகதயா
சரித்ஸ்ரோதவ் பத்மம் சரணாயதி நாதஸ்ய சரணம் –11-

உபாயத்வம் யதாத் பிரதம சதகே அபாவ்யத விபோ–முதல் பத்தாலே அவனே நிருபாதிக உபாயம்
அநந்ய உபாயசத் த்ரதாயதி பரம் பஞ்சம முகையைஹ–உபாயாந்தர தோஷங்களை காட்டி அருளி
அத்தை ஸ்திரீகரித்தார் மேல் உள்ள பத்துக்களாலே
நிரீ ஹஸ்த்ராதவ் நிரவதிக நிர் ஹேதுகதயா சரித்ஸ்ரோதவ் பத்மம் சரணாயதி –தாமரை திருவடிகளில் சரணாகதி
நாதஸ்ய சரணம் பத்மம் சரணாயதி–அந்த திருவடிகளே ப்ராப்யம் –

பிரச்யே சேவா அனுகுணயாத் பிரபுமிக சடகே மம்ஸ்த முக்தே உபாயம்
முக்த ப்ராப்யம் த்விதீய முனிர் அனுபபுதே போக்யதா விஸ்தரேண
ப்ராப்யத்வ உபாய பாவவ் சுபாஸ் உபகதனோ இத்யவாதித் த்ரீயே
அநந்ய ப்ராப்யா சதுர்த்தே சம்பவதித்தரை அப்ய அநந்யாத் உபாய –ரத்னாவளி -6-

———-

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-

———-

போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2-

———-

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-

———-

என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4-

———

கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத்
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–5-1-5-

———–

புறமறக் கட்டிக் கொண்டு இருவல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே–5-1-6-

———-

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம் மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.–5-1-7-

———-

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8-

——-

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

———–

ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே.–5-1-10-

———-

கார் வண்ணன் கண்ண பிரான் கமலத் தடங்கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே.–5-1-11-

——-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -41-பாசுரம்–

அவதாரிகை –

இதில்
சம்சாரிகளையும் திருத்தும் படியாக சர்வேஸ்வரன் பண்ணின
நிர்ஹேதுக விஷயீ காரத்தாலே வித்தராகிற
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்

1-ஸ்வ பிராப்தி சாதனங்களில் இறங்காமல்
2-துர் விஷயங்களிலே மண்டி
3-இவ் வனர்த்தத்தை உணரவும் அறியாதே
4-அத்யந்தம் உபேஷ்யனாய்-
5-சம்சாரிகளில் அந்ய தமனான என்னை

1-இவை ஒன்றுமே பாராமல் நிர்ஹேதுகமாக அங்கீகரித்து
2-தன் திருவடிகளிலே சேஷத்வத்தையும் அறிவித்து
3-கைங்கர்யத்தால் அல்லாது செல்லாதபடி பண்ணி
4-பிறரையும் திருத்தும்படியான சதிரையும் உண்டாக்கி
5-என் பக்கல் வ்யாமுக்தனாய் என்னோடு வந்து கலந்தான் என்று ப்ரீதர் ஆகிற
கையார் சக்கரத்து -அர்த்தத்தை
கையாரும் சக்கரத்தோன் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் என்கை –

கையாரும் சக்கரத்தோன் காதல் இன்றிக்கே இருக்க
பொய்யாகப் பேசும் புறனுரைக்கு -மெய்யான
பேற்றை யுபகரித்த பேர் அருளின் தன்மைதனை
போற்றினனே மாறன் பொலிந்து ——-41-

வியாக்யானம்–

கையாரும் –
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே -என்று தொடங்கி
விதி வாய்க்கின்றது காப்பார் ஆர் -என்னும் அளவும்
கடாஷித்து
அருளிச் செய்தபடி –

கையாரும் -சக்கரத்தோன் –
திருக்கை நிறையும்படி
திரு ஆழியை தரித்தது
அதுவே நிரூபகம் ஆனவன் –

காதல் இன்றிக்கே இருக்க –
ஸ்வ விஷய பக்தி இன்றிக்கே இருக்க –

கையாரும் -சக்கரத்தோன் -காதல் இன்றிக்கே இருக்க –பொய்யாகப் பேசும் புறனுரைக்கு –
சக்கரத்து உன்னையே அவி இன்றி ஆதரிக்கும் என் ஆவியே -என்னும்படி
தத் விஷயத்தில் ப்ரேமம் உண்டாக வேண்டி இருக்க

இவ் வழகைக் கண்டு இருக்கவும் தத் அனுகுணமான
அக்ருத்ரும பிரேமம் இன்றிக்கே
க்ருத்ரிம பிரேமத்தாலே இவற்றைப் பேசி அனுபவிக்கிற படியை கண்டு
போட்கனாய் இருக்கிற மித்ர பாவத்தையே பார்த்து
அந்த அஹ்ருத்யமான உக்திக்கு –

பொய்யாகப் பேசும் புறன் உரையாவது –
பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே யாடி -என்றும்
என்று என்றே சில கூத்துச் சொல்ல -என்றும்
புறமே சில மாயம் சொல்லி -என்றும்
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் -என்றும்
இப் புடைகளிலே சொன்னவை –

ஏவம் விதமான
மித்ரபாவ
மாத்ர ஜல்பிதங்களுக்கு
மெய்யான பேற்றை யுபகரித்த-
யதா ஞானம் உடையார் பேறும்
சத்யமான பேற்றை
உபகரித்த –
அதாவது –
மெய்யே பெற்று ஒழிந்தேன் -என்றும்
என்னாகி ஒழிந்தான் -என்றும்
உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன் -என்றும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண்டு ஒழிந்தேன் -என்றும்
எம்பிரானும் என் மேலானே -என்றும்
மாலார் வந்து இன்னாள் அடியேன் மனத்தே மன்னினார் -என்றும்
அடியோனோடும் ஆனானே -என்றும்
ஆனான் ஆளுடையான் என்னை முற்றவும் தானான் -என்றும்
பேசும்படியான இப் பேற்றை என்றபடி –

இத்தை யுபகரிக்கை அடி என் என்னில்
பேர் அருள் -என்கிறது
அதாவது –
விதி வாய்க்கின்றது காப்பார் ஆர் -என்றும்
எம்மா பாவியேற்கும் விதி வாய்கின்று வாய்க்கும் -என்றும்
ஆவா வென்று அருள் செய்து -என்றும்
தானே இன்னருள் செய்து -என்றும்
அருளிச் செய்தவை-என்கை –

பேர் அருளின் தன்மைதனை -போற்றினனே மாறன் பொலிந்து-
அதாவது
இரும்பைப் பொன் ஆக்குவது போலே
நித்ய சம்சாரிகளுக்கும்
நித்ய சூரிகள் பேற்றை உபகரிக்கும்
எம்பெருமான் உடைய நிர்ஹேதுக
கிருபா பிரவாஹத்தின் ஸ்வபாவத்தை
ப்ரீதியாலே அருளிச் செய்தார் -ஆழ்வார் -என்கை
க்ருபயா பர்யபாலயத் -என்னுமா போலே-

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–4-10–ஒன்றும் தேவும் உலகும் உயிரும்–சாரங்கள்-

May 28, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

பந்தே சமேபி ஹரிணா நிகிலாத்மா ராசே
சம்சார ஹேது இதரேஷூ பரத்வ போதம் -பீஜம்
வேத இதிகாச யுக்த -முகதா பரிக்ருத சௌரே
அர்ச்சா தநோ -தசமே பரத்வம் விவர்நோத்–

பந்தே சமேபி ஹரிணா-சமமான சம்பந்தம் ஹரி உடன் -சம்சாரிகள் அறியாமல் உழன்று இருக்க
நிகிலாத்மா ராசே -அணைத்து சம்சாரிகள் உடன்
சம்சார ஹேது இதரேஷூ பரத்வ போதம் -பீஜம் அந்நிய சேஷத்வ அபிமானம் –அந்ய சேஷத்வ பரத்வ பிரமம் -அஞ்ஞானம்
வேத இதிகாச யுக்த -முகதா பரிக்ருத –வேத இதிகாச புராண யுக்திகள்-முகத்தால் பரிஹரிக்க
சௌரே அர்ச்சா தநோ -தசமே –அர்ச்சையில் பரத்வம் இதில்
பரத்வம் விவர்நோத்–பரத்வம் விளக்குகிறார்

————–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

கல்பாந்தேபி சிதத்வாத் சகல ஸூரகண ஸ்ர்ஷ்டு பாவாத்
ஜனானாம் ரஷாத் வியாபகத்வாத் சிவா விதி தரணாத்
மது கைடபர் சம்பரன சர்வ தேவ ஆத்மபாவாத் தது கர்மானுரூபம்
பல விதரண தக வைனதேய த்வஜத்வாத் மார்கண்டேயே அவதானேகா

1-கல்பாந்தேபி சிதத்வாத் —ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று-தான் ஒருவனே இருந்த அன்று -கல்பம் ஆதி அந்தம்

2-சகல ஸூரகண ஸ்ர்ஷ்டு பாவாத்–நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான்

3-ஜனானாம் ரஷாத் வியாபகத்வாத் –பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்-

4-சிவா விதி தரணாத்—-பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே
கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்–வேத அபகார குரு பாதக -தைத்ய பீடா -நியாந்தா -ரக்ஷகன் –

5-மது கைடபர் சம்பரன -சர்வ தேவ ஆத்மபாவாத் –திரு மெய்யம் திவ்ய தேசம் –- —
மற்றும் நும் தெய்வவுமாகி நின்றான் -அந்தராத்மா-இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்

6-தது கர்மானுரூபம் பல விதரண தக –எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;–

7-வைனதேய த்வஜத்வாத் –ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே–

8-9-10—மார்கண்டேயே அவதானேகா–ஆதி சப்தம் 8/9/10 -அபரிச்சின்ன ஆச்சர்ய சேஷ்டிதங்கள்
புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;–என்றும்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான்–என்றும்
குறிய மாண் உருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே-என்றும் அருளிச் செய்தாரே

————

நித்ய ஐஸ்வர்யம் து துர்யே சஹஜ பஹுள சத் போக்யம் அந்யோன்ய சக்தம்
கிலேசா பாதிஸ்வ துல்யம் ஸ்வ ஜன க்ருத க்ருதார்த்தி க்ரிதிம் ஸ்னேஹா வைத்யம்
சம் யுக்தம் சத் குண உகைஹா ஸ்வ ஜன பரிஹ்ருத அபேஷா மிஷ்டார்த்த ரூபம்
ஸ்ரேஷ்டாம் நிஸ் சேஷ போக்யதா மநுத சடாகே தேவதா ஸார்வ பவ்மன் – –58–

1-ஆபத் சகத்வம் -புகுமூரில் பிரசித்தம் –வைத்த மா நிதி பெருமாள் –

2-சஹஜங்கள்-பஹூ வித போக்ய வஸ்துக்கள் -பாலனாகி –துளஸீ பிரஸ்தாபம்

3-அந்யோந்ய சக்தன் -கோவை வாயாள்-ஆஸ்ரித நெருக்கம்

4-விரஹ சமய -கிலேச -வளர்க்க -சத்ருச-ஸ்வ சம்பந்தி சத்ருச பதார்த்தங்கள் -மண்ணை இருந்து துழாவி –

5-ஸுவ ஆஸ்ரிதர்களை கிருதார்த்தராக செய்ய வல்லவன் -வீற்று இருந்து -பல்லாண்டு பாட அருளுபவர்

6-ஸ்நேஹம் உடைத்தார்க்கு தானே வைத்தியன் –தீர்ப்பாரை யாமினி –

7-சமீசீன குண விசிஷ்டன் -சீலமில்லா சிறியேன் பதிகம் -அத்யந்த ஸூலபன்

8-ஸுவ ஆஸ்ரிதர்களால் பரிஹரிக்கப்பட்ட ஆத்மாத்மாயங்கள் -உபேஷ்யம்

9-அபீஷ்டமான புருஷார்த்த ரூபன் -நண்ணாதார் -அழுதாலும் -புருஷார்த்தம் கண்டார் –

10-விட்டத்தை சொல்லாமல் பிடித்துக் கொண்டதை சொல்லி -நிலா நிற்ப கண்ட சதிர்

சர்வ தேவதா சார்வ பௌமன் சமஸ்த போக்ய வஸ்துக்களிலும் அதிசய போக்கியம் உடையவன்-

———-

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

ஸ்திர ஐஸ்வர்யம் துர்யே சஹஜ பஹு போக்யம் நிரவிசத்
மிதா ஸ்லிஷ்டம் கிலேசாவஹம் ஸஹித துல்யம் நிஜ ஜனம்
க்ருதார்த்தி குர்வந்தம் பிரணயி பிஷஜம் சத் பகு குணம்
ஸ்வ ஹேயஸ்வ அபேக்ஷ்யம் ஸ்வமத பல முகை ஸ்வாகதம் –10–

நான்காம் பத்தில்
1–ஸ்திர ஐஸ்வர்யம்
2- சஹஜ பஹு போக்யம்
3- ஆஸ்ரிதர்கள் உடன் நித்ய சம்ச்லேஷ ஸ்வ பாவன்
4- விஸ்லேஷ சமயங்களில் கிலேசாவஹம்
5-செய்த வேள்வியர் களுக்கு உண்ணும் சோறு இத்யாதி எல்லாமே ப்ராப்ய பூதன்
6- பிரணயிகளுக்கு மருத்துவனாய் நிற்கும் மா மணி வண்ணன்
7-ஸமஸ்த குண சாகரம்
8- பிரதிகூல வர்ஜனத்துக்கு ஸஹாயன்
9- சர்வ பல பிரதன்
10- நிரதிசய ஆனந்த மயன் –

———-

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-

—-

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-

———-

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3-

————

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4-

———

இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5-

——-

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-

——–

ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–4-10-7-

——–

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8-

———

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9-

———–

உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
குறிய மாண் உருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–4-10-10-

———-

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-

——–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -40-பாசுரம்–

அவதாரிகை –

இதில்
சம்சாரிகள் ஆஸ்ரயணத்துக்கு உறுப்பாக அர்ச்சாவதாரே
பரத்வத்தை அருளிச் செய்த
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
நண்ணாதாரில் -ஈஸ்வரனும் கூட -திருத்த ஒண்ணாது -என்று
கை விட்ட சம்சாரிகளைத் திருத்த ஒருப்பட்டு
ப்ரமாணாந்தர விலஷணமாய்
நித்ய
நிர்தோஷமான
வேதாந்த வாக்யங்களாலும்
சந்தம்ச நியாயங்களாலும்
இதிஹாசாதி சித்திதமான
ஜகன் நிதரணாதி திவ்ய சேஷ்டிதங்களாலும்
சம்சார பீஜமான தேவதாந்திர பரத்வ பிரதிபத்தியை அடி அறுத்து
ஸ்ரீ யபதியான நாராயணனே ஜகத் காரண பூதன் -என்று
த்ருட தரமாக உப பாதித்து
இப்படி சர்வ ஸ்மாத் பரனான இவன் அரியன் -என்று
கை வாங்க வேண்டாத படி
திரு நகரியிலே வந்து சந்நிஹிதன் ஆன பின்பு
அவனை ஆஸ்ரயிங்கோள் என்று
பரோபதேச பிரவ்ருத்தர் ஆகிற
ஒன்றும் தேவில் அர்த்தத்தை
ஒன்றும் இலைத் தேவு -என்று துடங்கி
அருளிச் செய்கிறார் என்கை –

ஒன்றும் இலைத் தேவு இவ் வுலகம் படைத்த மால்
அன்றி என யாரும் அறியவே -நன்றாக
மூதலித்துப் பேசி யருள் மொய்ம் மகிழோன் தாள் தொழவே
காதலிக்கும் என்னுடைய கை——40-

வியாக்யானம்-

ஒன்றும் இலைத் தேவு இவ் வுலகம் படைத்த மால் அன்றி என –
இவ் வுலகம் படைத்த மால் அன்றி
தேவு
ஒன்றும் இலை
என-
சர்வ ஸ்ரஷ்டாவான சர்வேஸ்வரனை ஒழிய
கார்ய பூதரில் காரணத்வத்தால் வந்த புகரை உடையவர்கள்
ஒருவரும் இல்லை என்று –
அதாவது
ஒன்றும் தேவும் -என்று துடங்கி
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்-என்றும்
ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே -என்றும்
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் வீடில் சீர் புகழ் ஆதிப் பிரான் -என்றும்
அருளிச் செய்த காரணத்வ பிரயுக்தமான சந்தைகளை கடாஷித்த படி -என்கை –

யாரும் அறியவே -நன்றாக மூதலித்துப் பேசி யருள் –
அதாவது
எத்தனையேனும் கல்வி அறிவு இல்லாத ஸ்திரீ பாலரும் அறியும் படி
த்வம் அப்ரமேயச்ச –
தமஸ பரமோதாதா சங்க சக்ர கதா தர –என்று
தாரா அங்கதாதிகளும் அறியும்படி ஆனால் போலே
பரந்த தெய்வமும் -என்று துடங்கி -கண்டும் தெளியகில்லீர்-என்றும்
பேச நின்ற சிவனுக்கும் -என்று துடங்கி -கபால நன் மோக்கத்து கண்டு கொண்மின் -என்றும்
இலிங்கத்திட்ட புராணத்தீரும் -என்று துடங்கி -பொலிந்து நின்ற பிரான் கண்டீர் -என்றும்
போற்றி மற்றோர் தெய்வம் -என்று துடங்கி -ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் -என்றும்
ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து -என்று துடங்கி -பல் படி கால் வழி ஏறிக் கண்டீர் -என்றும்
புக்கடிமை யினால் நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே -என்றும்
விளம்பு ஆறு சமயமும் -என்று துடங்கி -உளம் கொள் ஞானத்து வைம்மின் -என்றும்
உறுவதாவது நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே -என்றும்
பேச நின்ற தேவதா அஜ்ஞான அசக்தி சாபேஷத்வாதிகளையும்
இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத தமோ நிஷ்டமையும் சொல்லி
ஓடி –கண்டீர் –
கண்டு –தெளிய கில்லீர் –
அறிந்து ஓடுமின்
ஆட் செய்வதே -உறுவதாவது -என்று
விரகத பூர்வகமாக
ஆஸ்ரயம் ருசிக்கும்படி அருளிச் செய்தவை -என்கை –
பரத்வ சங்கை தீர -இதுவே பரத்வத்தில் நாலாவது திருவாய்மொழி –
மேலே பண்ண வேண்டாம் படி திருந்தினார்கள்

மூதலித்து பேசி அருள் மொய்ம் மகிழோன் தாள் தொழவே காதலிக்கும் என்னுடைய கை –
எம் பெருமான் திருவடிகளுக்கு
ஆட் சேர்த்து அருளுகையாலே
பகவத் கைங்கர்ய அதி சீதள அம்ருத மய தடாக அவகாஹன
ஸூ பிரசன்ன ஆத்மா ஸ்வரூப காத்ர
நிரதிசய ஸூ கந்த விகசத் கேசர மால அலங்க்ருத
வஷஸ் ஸ்தலரான ஆழ்வார் திருவடிகளை –
வகுளா பிராமம் ஸ்ரீ மத அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா
என்று பஜிக்கையிலே பக்தி பண்ணா நின்றன
என்னுடைய ஹஸ்தங்கள் ஆனவை –

மகிழ் மாலை -மகிழம்பூ மாலை /
பரத்வ சங்கை ஒழிந்தால் மகிழ்ந்தார் அதனால் மகிழ் மாலை /
மாலை இவருக்கு சாத்தின பின்பே மகிழ்ந்தது

காதலிக்கை -கௌதூஹலிக்கை ஆகவுமாம்
முடியானிலே -கரணங்களின் படியே யாயிற்று –
தம் கரணங்கள் குருகூர் நம்பி மொய் கழல்களிலே
காதலிக்கும் படியும் -என்கிறார் –
மானஸ வியாபாரத்தையும் மா முனிகள் திருக் கரங்கள் ஆசைப்படுகின்றன

இத்தால்
பரோபதேசம் பண்ணி
உஜ்ஜீவிப்பிக்கும் ஆழ்வார் திருவடிகளிலே
பற்ற அடுப்பது –
என்றதாயிற்று-

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–4-9–நண்ணாதார் முறுவலிப்ப–சாரங்கள்-

May 28, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சோசன் முனி ஸூ சத்ருசஞ்ச சகாயம் இச்சன்
லோகம் விலோக்ய விபரீத ருசிம் விஷண்ண
அத்ரத்ர வாஸம் அசஹன் ஹரிணா ஸூ வாஸம்
வைகுண்டம் பிரகடனம் நவமே ததர்ச

முனி சோசன் -சோகித்தார்
ஸூ சத்ருசஞ்ச சகாயம் இச்சன் -தன்னோடு ஒத்த -சம்சாரிகள் நடுவில் தேட
லோகம் விலோக்ய -லோகத்தில் பார்க்க
விபரீத ருசிம் விஷண்ண -விபரீதமாகவே ருசி -விஷயாந்தர ருசி கண்டு -மிக்க சோகித்தார்
அத்ரத்ர வாஸம் அசஹன் -இந்த லீலா விபூதியில் இருப்பதை சகிக்க முடியாமல்
ஹரிணா ஸூ வாஸம் -தான் எப்பொழுதும் இருக்கும் நித்ய விபூதி -ஹரியாலே
வைகுண்டம் பிரகடனம் -ஸ்ரீ வைகுண்ட சாம்ராஜ்யம் பிரகடனப்படுத்த காட்ட –
நவமே ததர்ச-கண்டார்

————-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

காருண்யாத் அப்தி மாத்யாத் தத் உபரி சயித தது சமானஅங்க வர்ண
க்யாத் ஔதார்ய ஸ்வதானே ருசிர மணி ருசி வேஷத அதீவ
போக்யதா ஆத்மத்வேன அனுபாவ்ய துரதிகம பத பந்த மோஷ
ஸ்வ தந்திர ஸ்வ அந்ய ப்ரேமம் உபரோதி விபு தத் பதோத் கண்டித–

1–காருண்யாத் அப்தி மாத்யாத் –கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே—கிருபாவான்

2-தத் உபரி சயித —-அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரை கண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே–லோக ரக்ஷணம்-

3–தது சமானஅங்க வர்ண –கடல் வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே

4–க்யாத் ஔதார்ய ஸ்வதானே —வள்ளலே! மணி வண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே–திருமேனியை ஆஸ்ரிதற்கு வழங்கி-

5-ருசிர மணி ருசி –மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே–திரு மேனி காந்தி –

6-வேஷத அதீவ போக்யதா –திருப் பரிவட்டம் – வெறி துளவ முடியானே வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே

7–ஆத்மத்வேன அனுபாவ்ய –ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்–அந்தராத்மா-

8–துரதிகம பத —கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?—ஸூ யத்னத்தால் அடைய முடியாதே

9-பந்த மோஷ ஸ்வ தந்திர —-கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்!–இரண்டிலும் ஸ்வா தந்த்ர்யம் உண்டே – ––

10-ஸ்வ அந்ய ப்ரேமம் உபரோதி —-தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே–
சிற்றின்பம் ப்ராவண்யம் ஒழித்து -மால் பால் மனம் சுழித்து இத்யாதி —

விபு தத் பதோத் கண்டித–விபு -அன்றோ அவன் –

தாப ஹார- தேச வாஸித்வம் -இந்த பதிகம் குணம்

——–

உலகு இயற்கை பட்டியல்

தாபை சம்பந்தி துக்கை ஸ்வ விபவ மரணைதி தாப க்ருத்
போக்ய சங்கைகி துர்கத்யா ஆஜ்ஞ்ஞாதி வ்ருத்தே
அனிதர விதுதே சேஷதைக ரசன் அண்ட காரா
நிரோதாத் பிரக்வீ பாவம்பிரலகு சுக பரிஷ்வங்கஸ்ய

1-தாபை —எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?—எண்ணி முடியாத துக்கம்-

2-சம்பந்தி துக்கை –தமர் உற்றார் தலைத் தலைப் பெய்து
ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகியற்கை–தேக அனுபந்தி —

3–ஸ்வ விபவ மரணைதி –உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! –விநாசங்கள் –

4-தாப க்ருத் போக்ய சங்கைகி –கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ் செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை

5-துர்கத்யா –இதன் மேல் வெந் நரகம்; இவை என்ன உலகியற்கை!-

6-ஆஜ்ஞ்ஞாதி வ்ருத்தே —-அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!-
ஆணை -சாஸ்திரம் மீறி -வயிற்றை நிரப்ப ஹிம்சித்தல் இத்யாதி

7-அனிதர விதுதே –நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை

8–சேஷதைக ரசன் —-எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள்–சேஷத்வமே அறிந்த ஜீவனை இவற்றுடன் சேர்த்து-

9–அண்ட காரா நிரோதாத் —இமையோர் வாழ் தனி முட்டைக் கோட்டையினிற் கழித்து -அண்டம் சிறை சாலையில் துன்பம்-

10-பிரக்வீ பாவம்—-இமையோரும் தொழா வகை செய்து, ஆட்டுதி நீ –வணக்கம் இல்லாமல் -செருக்கி –

பிரலகு சுக பரிஷ்வங்கஸ்ய—-ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே–

———

பாசுரம் 7-10-அர்த்தாந்தரம் அருளிச் செய்யக் கடவராய் –

ஸ்வா நாம் நிர்வாகத்வாத் -கண்ணாளா -கடல் கடைந்தாய் -தேவர்களை நிர்வகித்து
அகிபத சயநாத் -ஆதி சேஷன் சயனம்
அத்யந்த உதாரபாவாத் -வள்ளலே மணி வண்ணா
வளவத் தர்சநீய யோகத்வாத் -அழகைக் காட்டி
சந் மௌலி துளசி -ஒப்பனை அழகு -கீழே உள்ள அர்த்தம்
பிரிய கரண முகைகே –7 பாசுரம் -தாய் போலே பிரியமானவன் -அனைத்து லோகத்தாருக்கும் –
கீழே சர்வாந்தராத்மா அர்த்தம் -ஆயே -தாய் இங்கு
அண்ட ஸ்ருஷ்டத் -சக்தி –8 -சாமர்த்தியம் இங்கு -மகதாதி ஸ்ருஷ்ட்டி சமர்த்தன் / அண்டத்துக்கு உள்ளே வருத்தம் கீழே
சுப்ராபத்வம் –சுலபமாக அடைய புருஷகாரம் -ஆதி சப்தம் ஸ்ரீ மத்வம்-9-புருஷகார பூதை-இருப்பதால் -ஆஸ்ரிதற்கு சுலபன்-46-

————

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1-

———

சாமாறும் கெடுமாறும் தமர் உற்றார் தலைத் தலைப் பெய்து
ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகியற்கை?
ஆமாறு ஒன்று அறியேன் நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரை கண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.–4-9-2-

——–

கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல் வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–4-9-3-

———

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ் செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணி வண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4-

———

வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப் பிணி மூப்பால் தகர்ப் புண்ணும்;
ஈங்கு இதன் மேல் வெந் நரகம்; இவை என்ன உலகியற்கை!
வாங்கு எனை நீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.–4-9-5-

———

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-

———–

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-

———

காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8-

———-

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-

———

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10-

———

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே.–4-9-11-

———-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -39-பாசுரம்–

அவதாரிகை –

இதில்
சம்சாரிகள் உடைய அனர்த்தத்தைக் கண்டு
வெறுத்த பாசுரத்தை
அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
கீழே
ஆத்மாத்மீயங்களில் நசை அற்ற இடத்திலும்
அவை போகக் காணாமையாலே
விரஹ வ்யசனம் அதிசயித்து
தம் இழவுக்கு கூட்டாவார் உண்டோ -என்று சம்சாரிகளைப் பார்த்த இடத்தில்
அவர்கள் பகவத் விஷயத்தை காற்கடைக் கொண்டு
இதர விஷயங்களின் யுடைய லாப அலாபங்களே
பேறும் இழவுமாய் நோவு படுகிற படியைக் கண்டு
அது பொறுக்க மாட்டாமல்
சர்வேஸ்வரனை பார்த்து -ரஷகனான நீ உளனாய் இருக்க
இவை நோவு படுகை போருமோ -பிரானே
என்று விஷண்ணராய்
இவர்கள் நோவைப் போக்குதல்
இது கண்டு பொறுக்க மாட்டாத என்னை முடித்தல்
செய்து அருள வேணும் -என்ன
இவர்களுக்கு இச்சை இல்லாமையாலே
உம்மோபாதி நாமும் நொந்து காணும் இருக்கிறது -என்ன
ஆனால் இவர்கள் நடுவில் நின்றும் என்னை வாங்க வேணும் -என்ன
இவர் கிலேசம் தீரும்படி
பிராட்டியும் தானுமாக திரு நாட்டில் இருக்கும் இருப்பை அவன் காட்டிக் கொடுக்க
அத்தைக் கண்டு அனுபவித்து க்ருதார்த்தர் ஆகிற
நண்ணாதார் முறுவலிப்ப -வில் அர்த்தத்தை
நண்ணாது மாலடியை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை-

நண்ணாது மாலடியை நாநிலத்தே வல் வினையால்
எண்ணாராத் துன்பமுறு மிவ் வுயிர்கள் -தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள்
உண்டு நமக்கு உற்ற துணை யொன்று——-39-

தாபஹர தேச வாசித்வம் -கல்யாண குணம் –

வியாக்யானம்–

நண்ணாது மாலடியை –
ஆஸ்ரித வ்யாமுக்தனான
சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயியாமல்-
ஆத்மாத்மீயங்களில் தாம் நசை அற்ற இடத்திலும் அவனைக் கிட்டப் பெறாமல்
சம்சாரிகளில் தம் இழவுக்கு கூட்டுவார் உண்டோ என்று பார்த்து

நாநிலத்தே வல்வினையால் -இத்யாதியாலே
வெறுத்து அருளிச் செய்கிறார்
என்கிறார் –

நாநிலத்தே –
நாலு வகைப் பட்ட பூமியிலே
அதாவது
குறிஞ்சி நிலமான திருமலைகளிலும்
முல்லை நிலமான திருக் கோட்டியூர் திரு மோஹூர் தொடக்கமான ஸ்தலங்களிலும்
மருத நிலமான கோயில் பெருமாள் கோயில் தொடக்கமான ஸ்தலங்களிலும்
நெய்தல் நிலமான திரு வல்லிக் கேணி திருப் புல்லாணி திரு வல்லவாழ்
திரு வண் வண்டூர் தொடக்கமான ஸ்தலங்களிலும்
ஸூலபனாய் இறே அவன் இருப்பது
அந்த ஸூலப்யமே ஹேதுவாக
அவன் திருவடிகளை ஆஸ்ரயியாதே

நாநிலத்தே வல்வினையால் எண்ணாராத் துன்பமுறு மிவ்வுயிர்கள் –
இப்படி விலஷணமான பூமியிலே
பகவத் ஆஸ்ரயணீயம் பண்ணி உஜ்ஜீவியாமல்

மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பது இது வன்றே மேலைத் தாம் செய்யும் வினை –
என்னும்படி பிரபல கர்மங்களாலே
அசங்க்யாதமான துக்கத்தை மிகவும் அடைந்து போகிற
இவ் வாத்மாக்கள்
நந்தந்த் யுதித ஆதித்யே நந்தந்த் அஸ்தமிதே ரவௌ
ஆத்மா நோ நாவ புத்யந்தே மனுஷ்ய உஜ்ஜீவித ஷயம்-என்னும்படி

தண்ணிமையைக் கண்டிருக்க மாட்டாமல் –
இவர்கள் அனர்த்தத்தை கண்டு ஆற்ற மாட்டாமல் –
அதாவது
எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை –
ஏமாறி கிடந்தது அலற்றும் இவை என்ன உலகு இயற்கை –
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை –
தம மூடும் இவை என்ன உலகு இயற்கை –
ஈங்கு இதன் மேல் வெந்நரகம் இவை என்ன உலகு இயற்கை –
அறப் பொருளை அறிந்தோர் ஆர் இவை என்ன உலகு இயற்கை –
கொடு உலகம் காட்டேல் –
இத்யாதிகளாலே இவற்றின் கொடுமையை பல காலும் அருளிச் செய்து

கண் கலங்கும் மாறன் –
திருக் கண்களும்
திரு உள்ளமும்
கலங்கிப் போகும் ஆழ்வார்
அதாவது
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேல்
வாங்கு எனை
கூட்டரிய திருவடிகள் எஞ்ஞான்று கூட்டுதியே –
என்று கூப்பிட்ட பின்பு

எம்பெருமானாலே
கூட்டரிய திருவடிக் கண் கூட்டினை –
அடைந்தேன் உன் திருவடியை –
என்னும்படி சமாஹிதராய்
சம்சாரிகள் நோவுக்கு நொந்து
அருளிச் செய்த ஆழ்வார் –

அருள் உண்டு நமக்கு உற்ற துணை யொன்று –
இப்படி ஈஸ்வரனும் கூட கைவிட்ட
சம்சாரிகளையும் அகப்பட விட மாட்டாமல்
ஈச்வரனோடே மன்றாடும் ஆழ்வார் உடைய அருள்
அந்தரங்கமான ரஷையாக நமக்கு ஓன்று உண்டு –
வேறு ஒரு ரஷகாந்தரம் தேட வேண்டா –
தானே ரஷகமாய் இருக்கும்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்னக் கடவது இறே –

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–4-8–ஏறு ஆளும் இறையோனும்–சாரங்கள்-

May 28, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஏவம் ருதன்நபி சடாரி அலப்த காம
ஸூ அபேஷைணைக்க பரதாம் சௌரே
அவதார்ய தத் சேஷதைக ரஹித சகல
ஸ்வகீய ஸ்வஸ்மின் அபி ஸ்ப்ருத நிஸ்ப்ருஹதா

ஏவம் ருதன்நபி – அழுது கொண்டே -சீலம் இல்லா சிறியேன் திருவாய் மொழியில்
ஸூ அபேஷைணைக்க பரதாம் -ப்ரீதிக்கு விஷயமாக
சௌரே அவதார்ய -உணர்ந்து சொல்லி
ஸ்வகீய ஸ்வஸ்மின் அபி -ஆத்மீயத்திலும் ஆத்மாவிலும் கூட
ஸ்ப்ருத -அப்பொழுதே தோன்றிய
நிஸ்ப்ருஹதா -விருப்பம் அற்ற தன்மை குறைவில்லாமே
சர்வ பிரயோஜனத்வம் -அவன் அன்றோ-இந்த திருவாய் மொழி குணம் –
சர்வ இந்திரியங்களுக்கு ஆத்மாவுக்கும் ஆத்மாவுக்கும் அவனுக்காகவே என்று இருக்க வேண்டும் –

————-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

சௌந்தர்யாதௌ-ஸூ கீய ஹ்ருத்திக கரண -பூர்ணதாயாஞ்ச காந்தௌ
சமயக் ஞ்ஞானே பிரகாசே வலைய ரசனயோஹொ வர்ஷ்மணி
ஸ்வ ஸ்வரூப சிவாத் ஆஸ்ரிதாங்கம் இத்யுஜ்ய காரி சூனு
தத் இதம் அகிலம் உன்மூலம் ந தே ந பிராண பரித்யாஜ்யம்

1-சௌந்தர்யாதௌ-ஸூ கீய -மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே

2-ஹ்ருத்திக கரண -மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே

3-பூர்ணதாயாஞ்ச –நெடு மாயன் கவராத நிறையினால் குறை யிலமே.–நிறைவு ஸ்த்ரீத்வம்

4-காந்தௌ –சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே–தேக காந்தி-

5–சமயக் ஞ்ஞானே –அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே

6-பிரகாசே –கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே–சமுதாய சோபை-

7—8–வலைய ரசனயோஹொ –வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே– என்றும் —
விரி புகழான் கவராத மேகலையால் குறையிலமே.- என்றும் அருளிச் செய்கையாலே -வரி வளை -மேகலை இரண்டையும்-

9- வர்ஷ்மணி –யோகு அணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே

10–ஸ்வ ஸ்வரூப சிவாத் ஆஸ்ரிதாங்கம் –உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே

இத்யுஜ்ய காரி சூனு தத் இதம் அகிலம் உன்மூலம் ந தே ந பிராண பரித்யாஜ்யம் —
உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித் தயிர் வெண்ணெய் உண்டானை

———–

ஏறு ஆளும் இறையோனும், திசை முகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குல மா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே.–4-8-1-

———–

மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–4-8-2-

———-

மட நெஞ்சால் குறையில்லா மகள் தாய் செய்து ஒருபேய்ச்சி
விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி
பட நாகத்து அணைக் கிடந்த பருவரைத் தோட் பரம் புருடன்
நெடு மாயன் கவராத நிறையினால் குறை யிலமே.–4-8-3-

———–

நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த
கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4-

———

தளிர் நிறத்தால் குறையில்லாத் தனிச் சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.–4-8-5-

———–

அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6-

———–

கிளர் ஒளியால் குறைவில்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,
கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த,
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன், மணி நீல
வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே.–4-8-7-

————-

வரி வளையால் குறை யில்லாப் பெரு முழக்கால் அடங்காரை
எரி அழலம் புக ஊதி இருநிலம் முன் துயர் தவிர்த்த
தெரி வரிய சிவன் பிரமன் அமரர் கோன் பணிந்து ஏத்தும்
விரி புகழான் கவராத மேகலையால் குறையிலமே.–4-8-8-

———

மேகலை யால் குறை யில்லா மெலி வுற்ற அகல் அல்குல
போக மகள் புகழ்த் தந்தை விறல் வாணன் புயம் துணித்து
நாக மிசைத் துயில்வான் போல் உலகெல்லாம் நன்கொடுங்க
யோகு அணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே.–4-8-9-

————–

உடம்பினால் குறையில்லா உயிர் பிரிந்த மலைத் துண்டம்
கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த
தடம் புனல சடை முடியன் தனி ஒரு கூற மர்ந்துறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.–4-8-10-

————-

உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப் பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே.–4-8-11-

———-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -37-பாசுரம்–

அவதாரிகை –

இதில் இவ் வாற்றாமைக்கு உதவாமையாலே
அவனுக்கு உறுப்பு அல்லாத
ஆத்மா ஆத்மீயங்களில் தாம் நசை அற்ற
படியைப் பேசின
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில் –
கீழ்
சீலமில்லாச் சிறியனில் ஓலம் இட்டு அழைத்த இடத்திலும்
வந்து முகம் காட்டக் காணாமையாலே
பிராப்தனாய்
சீலவானாய்
விரோதி நிரசன சமர்த்தனாய்
இருக்கிற சர்வேஸ்வரன் இத்தசையில் முகம் காட்டாமைக்கு அடி
இத்தலையை வேண்டாது ஒழிகை இறே –
அவனுக்கு வேண்டாத
என் ஆத்மா ஆத்மதீயங்களால் எனக்கு ஒரு கார்யம் இல்லை -என்று
அவற்றில் நசை அற்ற படியை அன்யாபதேசத்தால் அருளிச் செய்து
திருவருள் செய்பவன் போல் –உருவமும் ஆர் உயிரும் உடனே வேண்டான் –
அவனால் -விருப்பட்ட வரிசைக் கிரமத்தில்-ஆத்மீயங்களை முதலில் வைத்து இங்கும் அருளிச் செய்கிறார்
ஏறாளும் இறையோனில் அர்த்தத்தை
ஏறு திரு உடைய ஈசன் உகப்புக்கு -என்று துடங்கி
அருளிச் செய்கிறார் -என்கை-

ஏறு திரு வுடையை ஈசன் உகப்புக்கு
வேறு படில் என்னுடைமை மிக்க வுயிர் -தேறுங்கால்
என் தனக்கும் வேண்டா வெனு மாறன் தாளை நெஞ்சே
நம் தமக்குப் பேறாக நண்ணு ——————38-

ஏறு திருவுடையை ஈசன்-தன் திரு மார்பில் ஏறப் பெற்ற
பெரிய பிராட்டியாரை உடையனான சர்வேஸ்வரன்

வியாக்யானம்–
ஏறு திருவுடையை ஈசன் –
பிராட்டி ஏகாநை யாகையாலே
நஹிமே ஜீவிதேன– இத்யாதியாலே
அத் தலைக்கு உறுப்பு அல்லாத ஆத்மா ஆத்மீயங்களில்
நசை அற்ற படியைச் சொன்னாள்
இவர் மிதுநாயனர் ஆகையாலே –
திரு மகளும் கூறாளும் தனி உடம்பன் -என்றும்
மலர் மாதர் உறை மார்பன் -என்றும்
பட நாகத்தணைக் கிடந்த பரு வரைத் தோள் பரம் புருடன் -என்றும்
இப்படி ஸ்ரீ யபதியாய் இருக்கிற சர்வேஸ்வரன் உடைய உகப்புக்கு
புறத்தியான மாமை முதலான
உடைமையோடு
உயிரோடு
வாசி அற வேண்டா -என்கிறார் –

ஏறு திரு உடைய ஈசன் -என்று
ஸ்ரீயபதித்வத்தால் வந்த சர்வேஸ்வரத்வம் சொல்லுகிறது
திரு ஏறினால் தானே ஸர்வேஸ்வரத்வம்

ஏறு திரு –
யவௌ வஷஸ் ஸ்தலம் ஹரே –என்று ஆரூட ஸ்ரீசன் இறே
வளர்ந்து வரும் ஸ்ரீ மத்வம் -அவள் ஏறி அமர்ந்ததால்

ஏவம் விதனானவன் உடைய
உகப்புக்கு -வேறுபடில் –
அதாவது
சந்தன
குஸூம
தாம்பூலாதிகளைப் போலே
அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹ்யமாய் இருக்கை அன்றிக்கே

ஸ்வார்த்தைக்கு உறுப்பாக இருக்குமாகில் அத்தை ஆயிற்று
தவ சேஷத்வ விபவாத் பஹிர்பூதம் -என்றது –

என்னுடைமை –
அதாவது
மணிமாமை
மட நெஞ்சால்
நிறைவினால்
தளிர் நிறத்தால்
அறிவினால்
கிளர் ஒளியால்
வரி வளையால்
மேகலையால்
உடம்பினால் -என்று
ஆத்மாத்மீயங்களாய் உள்ளவை-

மிக்க உயிர்-
இவற்றில் விலஷணமாய்
ஞானானந்த ஸ்வரூபமாய்
பகவத் சேஷமாய்
ஸ்ரீ ஸ்தனம் ஸ்ரீ கௌஸ்துபம் போலே எம்பெருமானுக்கு அத்யந்த போக்யமாய்
இருப்பதொரு ஆத்மா ஸ்வரூபம் என்று-

தேறும் கால் –
பர ப்ரீதி விஷயமாகவே இருக்கிற ஆகாரத்தை
நன்றாகத் தெளியுங்கால் –
நாரணன் தன வாடா மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்றது -என்றும்
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்றும்
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -என்றும்
இப்படி தெளிய ஆராய்ந்தால் அத் தலைக்கு உறுப்பாகவே இருக்க வேணும் –

இப்படி அன்றிக்கே
வேருபட்டதாகில்
ஸ்வார்த்தைக்கு உருப்பாகில்
என் தனக்கும் வேண்டா –
பர தந்த்ரனான எனக்கும் தான் வேண்டா –

எனும் மாறன் தாளை- நெஞ்சே -நமக்கு பேறாக நண்ணு –
என்று இப்படி அருளிச் செய்யும் ஆழ்வார் திருவடிகளை
நெஞ்சே
நமக்கு பிராப்யமாம்படி
அடை
நமக்கு இந்த நிர்பந்தங்கள் ஒன்றும் வேண்டா
ஆழ்வார் திருவடிகளே பிராப்யம் என்று பிராபி-

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–4-7–சீலம் இல்லாச் சிறியே னேலும்–சாரங்கள்-

May 28, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தது பேஷாஷாஸ்-ச ஹரி நாம கதா
பிரசங்காத் முனிர் உத்பட துக்க போத
ஆபத் சகத்வம் முகத் உச்சயத்
ஆக்ருத்ச வாஞ்சிதா மயச்சித

தது பேஷாஷாஸ்-ச ஹரி நாம கதா பிரசங்காத் –துவாரகா தீசன் திரு நாம -பிரசங்கம் -வெறும் பேச்சு எழுந்ததே
முனிர் உத்பட துக்க போத -துக்கம் வளர
ஆபத் சகத்வம் முகத் -ஆபத் ஸகத்வத்தை முன்னிட்டுக் கொண்டு
குணம் -ஆபத் சகத்வம்
உச்சயத் ஆக்ருத்ச வாஞ்சிதா மயச்சித-கூப்பாடு

———–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ஆபத் பந்துத்வ தீப்தம் நிரவதிக மகானந்தம் கிராந்த லோகம்
துர்தசரம் தேவதானம் பிதரம் அனுபதிம் சர்வ பூதாந்தரஸ்தம்
பூர்ண ஞான ஏக மூர்த்தி த்ருத சுப துளசிம் சக்ர நாத சுருதி நாம்
விஸ்ராந்த ஸ்தானம் கின்னஸ் சடாரி -விசத பகு குணம் ப்ராக-

1-ஆபத் பந்துத்வ தீப்தம் —-ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா!–பிரளய ஆபத்தில் -பந்து அதனால் -ஞான மூர்த்தி தேஜஸ் —

2–நிரவதிக மகானந்தம் –கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என் வள்ளலேயோ-

3-கிராந்த லோகம் –தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,–

4-துர்தசரம் தேவதானம் –பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே-

5-பிதரம் அனுபதிம் —அப்பனே!அடல் ஆழி யானே! ஆழ் கடலைக் கடைந்த துப்பனே!–காரணம் அற்ற பிதா-

6-சர்வ பூதாந்தரஸ்தம் –ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே

7-பூர்ண ஞான ஏக மூர்த்தி –நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,-

8–த்ருத சுப துளசிம் –வண் துழாயின் கண்ணி வேந்தே

9-சக்ர நாத சுருதி நாம் –எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே-

10-சுருதி நாம் விஸ்ராந்த ஸ்தானம் –மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே-

கின்னஸ் சடாரி -விசத பகு குணம் ப்ராக–தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்-
நொந்து சிதிலமான ஆழ்வார் -விசதமாக திரு உள்ளத்தில் பிரகாசிக்க –

——-

ஆழ்வார் குறைகள் பட்டியல்-இந்த ஸ்லோகத்தால்

துஸ் சீல மாம்ஸ சஷூஸ் நிரவதிக துரித வீத லஜ்ஜா
விலோலக ப்ரேஷா ஹீன அந்ய சங்காத் க்ருதம் -அபி
சீலம் அந்தர் ததார்த்தம் கர்ம ஜ்ஞனாதி சூன்யன் நிருபதிக
விஹிதான் ஸூ தோஷான் ஏவம் பிரக்ய பத்தி குண ரஸ்ய தத் த்ருஷ்யா

1-துஸ் சீல –சீலம் இல்லாச் சிறியே னேலும்-

2-மாம்ஸ சஷூஸ் —-கள்ள மாயா! உன்னை என் கண் காண வந்து ஈயாயே–
கண் காண யோக்யதை இல்லாதவன் -திவ்ய-

3-நிரவதிக துரித –ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்-

4-வீத லஜ்ஜா–நாணம் இல்லாச் சிறு தகையேன் நான்–

5-விலோலக –இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே-

6-ப்ரேஷா ஹீன –நாக்கு நீள்வன், ஞானம் இல்லை-

7–அந்ய சங்காத் க்ருதம் -அபி—பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன்–
மதி நலம் கொடுத்ததையும் பரியாப்தம் அன்று

8-சீலம் அந்தர் ததார்த்தம் –கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி, உகந்துகந்து,

9–கர்ம ஜ்ஞனாதி சூன்யன் –இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;

10-நிருபதிக விஹிதான் –பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;

ஸூ தோஷான் ஏவம் பிரக்ய பத்தி குண ரஸ்ய தத் த்ருஷ்யா
ப்ரேமத்துக்கு தக்க காஷி இல்லையே -ஞான த்ருஷ்டிக்கும் சோகித்து-

——–

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1-

———

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
நள் இராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என் கண் காண வந்து ஈயாயே.–4-7-2-

———

ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,
கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண் பனி சோர நின்றால்,
பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–4-7-3-

———-

காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ,
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று,
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?–4-7-4-

———-

அப்பனே!அடல் ஆழி யானே! ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே!‘உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு, ஆவி துவர்ந்து துவர்ந்து,
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே.–4-7-5-

——–

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே.–4-7-6-

———–

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-

——-

கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.–4-7-8-

—————

இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?–4-7-9-

——-

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10-

———

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–4-7-11-

———-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -37-பாசுரம்–

அவதாரிகை –

இதில்
திரு நாமத்தால் உணர்ந்தவர்
நாமியான நாராயணனை அனுபவிக்கப் பெறாமையாலே
அதி பிராலாபமாய் பிராலாபிக்கிற
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ் –
வர்ஷேண பீஜம் பிரதிச்ஜ்ஞ ஹர்ஷா -என்னுமா போலே
தோழி சொன்ன ம்ருத சஞ்ஜீவியான-திரு நாம பிரசங்கமே
சிசிரோபோபசாரமாக வாஸ்வச்தராய்
உணர்ந்த அநந்தரம்
பிறந்த உணர்த்தி பேற்றுக்கு உடல் அன்றிக்கே
கிலேச அனுசந்தானத்துக்கு உடலாய்
அத்தாலே நோவு பட்டு ஆபத் சகனாக
தந் நிதான பரிஹாரங்களை உள்ளபடி அறியும் சர்வஞ்ஞனாய்
கார்யம் செய்கைக்கு உறுப்பான உறவையும் உடையனாய் இருக்கிறவன்
ரஷியாது ஒழிகையாலே ஆர்த்தி நிரம்பின கடல் கை எடுத்துக் கூப்பிடுமா போலே
அவனைக் காண வேணும் என்று கேட்டார் அடைய
நீர்ப் பண்டமாம்படி கூப்பிடுகிற
சீலமில்லா சிறியனில் அர்த்தத்தை
அருளிச் செய்கிறார்
சீலம் மிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து –இத்யாதியாலே -என்கை –

சீலமிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து
மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு சால
வருந்தி இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு
இருந்தனனே தென் குருகூர் ஏறு—37-

வியாக்யானம்–
சீலமிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து –
பிரணயிநி களோடு கலந்த சீலாதிக்யத்தை யுடைய
கிருஷ்ணன் திரு நாமத்தை
வண்டுவராதிபதி மன்னன் -என்று
தோழி சொல்லக் கேட்டு
மோஹம் தெளிந்து –

மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு –
உணர்ந்த அநந்தரம்
அவன் விக்ரஹத்தைக் கண்டு கிட்டி
அனுபவிக்கைக்கு –
அதாவது
கோல மேனி காண -என்றும்
என் கண் காண -என்றும்
பாவியேன் காண வந்து -என்றும் –
உன் தோள்கள் நான்கையும் கண்டிட -என்றும்
உன்னைக் காண்பான் -என்றும்
நான் உன்னைக் கண்டு கொண்டே -என்றும்
கண்டு கொண்டு -என்றும்
எங்குக் காண்பன் -என்றும் –
தக்க ஞானக் கண்களால் கண்டு தழுவுவனே-என்று
இப்படி பத்தும் பத்தாக அபேஷித்து

சால வருந்தி –
மிகவும் வருந்தி –
அதாவது
நாராயணா -என்றும்
கூவிக் கூவி -என்றும்
வையம் கொண்ட வாமனாவோ -என்றும்
தாமோதரா -என்றும் –
ஆணி செம்பொன் மேனி எந்தாய் -என்றும்
அப்பனே அடல் ஆழி யானே -என்றும்
நீக்க மின்றி எங்கும் நின்றாய் -என்றும்
நறும் துழாயின் கண்ணி யம்மா -என்றும்
வண்டுழாயின் கண்ணி வேந்தே -என்றும்
சக்கரத் தண்ணலே -என்றும்
இப்படி பஹூ பிரகாரமாக பிரயாசப் பட்டு –
ஹா ராமா ஹா லஷ்மணா -என்றும்
ந்சைவ தேவீ வீரராம கூஜிதாத் -என்னுமா போலே –

இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு இருந்தனனே தென் குருகூர் ஏறு –
காலம் தோறும் -என்றும்
நள்ளிராவும் நன்பகலும் நான் இருந்து ஓலமிட்டாள் -என்றும்
கூவிக் கூவி நெஞ்சு உருகி -என்றும்
சக்கரத் தண்ணலே என்று தாழ்ந்து -என்றும்
இப்படி திவா ராத்திரி விபாகம் அற
சர்வ காலத்திலும் கூப்பீடோவாமல் இருந்தார் ஆழ்வார் –

இது என்னாகப் புகுகிறதோ என்று
இவர் நெஞ்சு உருகி நோவு பட்டு அருளுகிறார் –

தென் குருகூர் ஏறு –இருந்தனனே –
இனி திரு நகரியில் ஆழ்வார் பிரதான்யம்
எங்கனே நடக்கக் கடவதோ
என்று சங்கிக்கும் படியாய் இருக்கிறது –

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–4-6–தீர்ப்பாரை யாம் இனி–சாரங்கள்-

May 28, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தத் உசிதஜ்ஞ தே வாரிதா ஏ ஷூத்ர தேவ
முகதா பரிகாரஷட்கே அலப்ய ஸ்வாபேஷ்ய-
சடஜித் வியசநாத் விசம்யே
ஸ்வப்ன உபமாத் -அனுபவாத் -அமுதோப்ய லப்ய

தத் உசிதஜ்ஞ- இறைவ -உசித ஞானம் உள்ளவர்கள் வாக்கால் – தோழிகள் -வாக்கால்
தே வாரிதா -அவர்கள் தோழிகளால் -தாய்மார்கள் – விலக்கப்பட்டார்கள் –
ஏ ஷூத்ர தேவ முகதா பரிகார -அவர்கள் செய்யும் பரிகாரம் ஸூத்ர தேவதா முகமாக இருப்பதால்
ஷட்கே -ஆறாவது திருவாயமொழியால்
அலப்ய ஸ்வாபேஷ்ய-சடஜித் வியசநாத் விசம்யே–அறிவற்று மயங்கி -விரும்பியது கிட்டாமல் –
பாஹ்ய சம்ஸ்லேஷம் இல்லையே -ஸ்வப்னமாக போனதே –
ஸ்வப்ன உபமாத் -அனுபவாத் -அமுதோப்ய லப்ய-நன்கு அனுபவித்தார் மானஸ சாஷாத்காரம் கீழே –

அந்ய தேவதைக்கு அகப்படாமல் -நிரசித்து – -சர்வ சரண்யத்வம் இதில் குணம் –
அன்யா தேவதா ஸ்பர்ச நிவர்த்தகத்வம் என்றுமாம்

—————

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

இச்சாத் சாரத் யோகாத் பிரகரண நவநாத்
ஸ்ரீ துளச்யாட்ய மௌலே-ஸ்துத் அங்க்ரியோ பாத தூள்யா
ஸ்வ ஜன பஜன தத் பாத தூளி நமோபி தன் மூல
ஸ்வ அங்க்ரி நுத்யா தத் இதர பஜந தியாக பூர்வே

1–இச்சாத் சாரத் யோகாத் –போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த் தேர்ப் பாகனார்க்கு

2-பிரகரண நவநாத் –திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க–சங்கு சக்கரம் -ஸ்தோத்ரத்தால்-

3-4–ஸ்ரீ துளச்யாட்ய மௌலே-ஸ்துத் அங்க்ரியோ –மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்-என்றும்
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட பெருந்தேவன்-என்றும் அருளிச் செய்த படியே
ஸ்துதி திரு நாம சங்கீர்த்தனத்துக்கும் உப லக்ஷணம் -3/4/பாசுரம் சேர்த்து

5-பாத தூள்யா –தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே.

6–7—ஸ்வ ஜன பஜன தத் பாத தூளி நமோபி –மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே-என்றும்
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே-என்றும் அருளிச் செய்த படியே –

8–9-தன் மூல ஸ்வ அங்க்ரி நுத்யா –வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,–என்றும்
கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே-என்றும் அருளிச் செய்த படியே

10-தத் இதர பஜந தியாக பூர்வே–உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;

அந்ய தேவதா சம்பந்த நிவர்த்தகம் -தேவதாந்த்ர தத் அடியார் தியாக பூர்வகமாக அவனை அவன் அடியார் மூலம் –

———–

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1-

———–

திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெறுமிது காண்மினே –4-6-2-

———-

இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–4-6-3-

——–

மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.–4-6-4-

————-

இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!
குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்;
கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால்
தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே.–4-6-5-

——-

தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்!
பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்;
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே.–4-6-6-

——

அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள் குலைக் கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–4-6-7-

——–

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8-

———-

கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்
நாழ்மை பலசொல்லி, நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்;
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து;
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே.–4-6-9-

————

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10-

———

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாடவல்லார் துக்க சீலம் இலர்களே.–4-6-11-

———-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -36-பாசுரம்–

அவதாரிகை –

இதில்
பிரணயித்வ குண விசிஷ்ட வஸ்துவை பிரத்யஷமாக
அனுபவிக்கப் பெறாமல்
பிரகிருதி விக்ருதியாய் மோஹித்துக் கிடக்க –
பிரேம பரவசர் பிரதிகிரியை பண்ணத் தேட
அத்தை பிரபுத்த ஸூஹ்ருத்துக்கள்-இது அநநுரூபம் -என்று
அறிந்து அனுரூபமான
நிதானத்தையும்
தத் பரிகாரத்தையும்
விதிக்கிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –

அது எங்கனே என்னில் –
கீழ் உண்டான அனுபவம் மானச அனுபவ மாத்ரமாய்
பாஹ்ய கரண யோக்கியம் அல்லாமையாலே
தம் தசையைத் தாம் அறியாதபடி மோஹித்துக் கிடக்க
பரிசர வர்த்திகளான பரிவர்கள்-அத்தைக் கலங்கி
சர்வான் தேவான் நமஸ் -யந்தியின் படியே
பரிவின் கனத்தாலே பரிஹரிக்க ஒருப்பட
இவர் பிரகிருதி அறிந்த ஸ்ரீ மதுரகவி பிரக்ருதிகளான
பிரபுத்த ஸூஹ்ருத்துக்கள்
அத்தை விலக்கி
உசித பரிஹாரத்தை விதித்துச் சொல்லுகிறபடியை

கலந்து பிரிந்த தலைமகள்
அறிவு அழிவு கண்டு கலங்கி
பரிவின் கனத்தாலே -தேவதாந்திர பரையாய்
பிரதிபன்ன பாஷிணியான கட்டுவிச்சி பாசுரம் கொண்டு
வெறி யாட்டாலே
பரிஹரிக்க தேடுகிற தாய்மாரை நோக்கி

இவள் பிரகிருதி அறியும் உயிர் தோழி யானவள்
நோயின் நிதானத்தை நிரூபணத்தாலே அறிந்தாளாய்க் கொண்டு
கிருஷ்ணன் அடியாக வந்த நோவுக்கு அவனைக் கொண்டே பரிஹரிக்கும் அது ஒழிய
நீங்கள் செய்கிறவை பரிஹாரம் அல்ல
தேவதாந்த்ர ஸ்பர்சத்துக்கும்
தத் சம்பந்தி ஸ்பர்சத்துக்கும்
தேர் பாகனாரான வண் துவாராபதி மன்னனை ஆஸ்ரயித்து
மாயன் தமர் அடி நீர் கொண்டு அணியுங்கோள் என்று
வெறி விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிற
தீர்ப்பாரை யாமினி — யில் தாத்பர்யத்தை
தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால் -என்று துடங்கி
அருளிச் செய்கிறார்-

தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால்
ஒர்ப்பாதும் இன்றி யுடன் பிரிய -நேர்க்க
அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு
அறிவு பெற்றான் மாறன் சீலம்—36-

சாத்மிக்க சாத்மிக்க கொடுப்பவன் உடனே பிரிந்தானே –
ஒர்ப்பாதும் இன்றி-அசங்க்யேவ சங்கதி

வியாக்யானம்–

தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால் –
மண்ணை இருந்து துழாவில்-4-4-
மயல் பெரும் காதலானது தீர
வீற்று இருந்து ஏழ் உலகில்-4-5- கலந்த சர்வேஸ்வரன் –

ஒர்ப்பாதும் இன்றி யுடன் பிரிய –
பிரிகைக்கு ஹேது நிரூபணம்
அத்யல்பமும் ஆராயாமல்
பெருக்காறு வற்றி அடி சுடுமா போலேயும்
அபிஷேக மகோத்சவம் குலைந்து அரண்ய பிரவேசம் ஆனால் போலேயும்
உடனே பிரிய
பேதை நின்னைப் பிரியேன் -என்னுதல்
பொருட்கோ பிரிவன-என்னுதல்
செய்யாமல்
கலந்த கலவி கனவு என்னலாம் படி அசங்கிதமாக அகல
நேர்க்க –

நேர்க்க அறிவழிந்து –
சத்ருக்ந அநந்தாச்தித-என்னும்படி பரத ஆழ்வான் நின்றால் போலே நில்லா
மோஹித்தால் போலே மோஹித்து –

நேர்க்க அறிவு அழிகை யாவது –
மண்ணை இருந்து துழாவியில் காட்டிலும்
அறிவு கலங்கி
அங்கு
காணவும்
கேட்கவும்
பேசவும்
பின் செல்லவும்
ஷமையாய் இருந்தாள்-
இங்கு
குவளைத் தடம் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்து
மதி எல்லாம் உள் கலங்கி மயங்கி இறே கிடக்கிறது

உற்றாரும் அறக் கலங்க –
யேது ராமஸ்ய ஸூஹ்ருதயஸ் சர்வே தே மூட சேதச -என்னும்படி
அத்தைக் கண்ட அன்னையரும்
தோழியரும்
தொடக்க மானவரும்
மிகவும் அறிவு கலங்கிக் கிடக்க
ஸ்ரீ கௌசல்யாரைப் போலே மங்களா சாசன பரையான மாதா
சர்வான் தேவான் நமஸ்யந்தி ராமச்யார்த்தேய யசச்வின-
என்னும்படியே எத்தை யாகிலும் செய்து
இவளை மீட்கத் தேட –
அவ்வளவில் தேவ தாந்திர பரையாய் இருப்பாள் ஒரு கட்டுவிச்சி
அதுக்குப் பரிஹாரமாக சொல்லுகிற
ஆடும் கள்ளும் இறைச்சியும் கரும் சோறும் செஞ்சோறும்
ஆகிய நிந்த்ய த்ரவ்யங்களாலே
இளம் தெய்வத்துக்கு இழைத்தாடும் நிஹீநதைகளைக் கண்டு
இவள் பிரகிருதி அறியும் உயிர் தோழி யானவள் அத்தை நிஷேதித்து
தேர்ப் பாகனாற்கு இவள் சிந்தை துழாய் த்திசைக்கின்றதே -என்று

பேர் கேட்டு அறிவு பெற்றான் மாறன் சீலம் –
நோய்க்கு நிதானத்தையும்
அதுக்கு பரிஹாரமாக
சங்கு சக்கரம் -என்று இசைக்கும் படியையும்
மாயப் பிரான் கழல் வாழ்துதலையும்
பெரும் தேவன் பேர் சொல்லும் படியையும்
களிறு அட்ட பிரான் திரு நாமத்தால் தவளப் பொடி கொண்டு நீர் இட்டிடுமின் -என்றும்
மாயன் தமரடி நீறு கொண்டு அணிய முயலில் -என்றும்
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரை -என்றும் –
ஊழ்மையில் கண்ண பிரான் கழல் வாழ்த்துமின் -என்றும்
வண் துவாராபதி மன்னனை ஏத்துமின் -என்றும்
சொன்ன படியைக் கேட்டு
தொழுது ஆடி
தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து
நோய் தீர்ந்த பிரகாரத்தை -பேர் கேட்டு அறிவு பெற்றாள் -என்கிறது –

மாறன் சீலம் –
ஆழ்வார் ஸ்வபாவம் இது வாயிற்று -(மயங்கின நிலையிலும்)
செவிக்கு இனாத கீர்த்தியை கேட்டு சத்தயா பாதகமாகவும் –
செவிக்கு இன்பம் ஆவதும் செங்கண் மால் நாமம் -என்கிற
கேசவன் கீர்த்தியைக் கேட்டு சத்தை பெறவுமே இறே இருப்பது-

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–4-5–வீற்றிருந்து ஏழுலகும்–சாரங்கள்-

May 28, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆனந்த நிர்ப்பர ஆ தீன விபூதி உக்தம் அத வீஷம்
நான்யஸ்ய சமாப்தி ஆசசாத அதி பஞ்சமா
நாபி அனவாப்ய மத்ய ஆனந்த பூரம்
நான்யத்ராப்ய அஸ்தி நாபி அநவாப்யம் அஸ்தி

ஆ தீன விபூதி உக்தம் -தீன விபூதி லீலா -அ தீன -நித்ய விபூதி
வைகுண்ட நாதம்
அத வீஷம்-நன்கு கண்டார் -நன்றாக ஸ்தோத்ரம்
நான்யச்ய சமாப்தி -அன்யா சம நாஸ்தி
ஆசசாத அதி பஞ்சமா–ஐந்தாவில் கூறி
நாபி அனவாப்ய மத்ய -நிறைவேறாத ஆசையும் இல்லையே
ஆனந்த பூரம் -மகிழ்ச்சியில் எல்லை

நித்ய விபூதி வைசிஷ்ட்யம் -இதில் காட்டிய கல்யாண குணம்-வீற்று இருக்கும் வேற்றுமை தோற்ற இருக்கும் இருப்பு

பரம புருஷார்த்தத்வம் -4-1- முதல் பதிகம்
ஆர்யத்வம் -பாலனாய் -4-2–குணங்கள் -யாரை நினைக்க உள்ளம் தூக்கிச் செல்லப்படுமோ
அந்யோந்ய சம்ச்லிஷ்ட்த்வம் -4-3-நன்றாக கலந்து
சர்வ சம்பந்தித்வம் –சர்வ சத்ருசத்வம் -4-4-போலி கண்டு மயங்கி –
சர்வாத்மத்வம்- புகழும் நல ஒருவன் என்கோ கீழே பார்த்தோம்
நித்ய விபூதி வைசிஷ்ட்யம் இதில்

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

நிந்தித்த அந்ய ஆபன்னான் அந்ய பந்தோ சரசிஜ நிலய வல்லபே
சாந்திர மோதே பக்த அக த்வம்ச சீலே தத் உசித சமய
ஆஸ்வாச தான -ப்ரதன் -ப்ரவீண கர்ப்பூர ஆலேப
சோபே சமயதிக ரஹித தோஷகே சர்வ பூர்ணே ஸர்வத்ர-

1-நிந்தித்த அந்ய -பாக்யம் இல்லாதாரை நிந்தித்தும்

2-ஆபன்னான் அந்ய பந்தோ –வீவு இல் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனை–
ஆஸ்ரித அர்த்தமாக அவதரித்து விரோதி நிரசன சீலன்

3-சரசிஜ நிலய வல்லபே–மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்

4-சாந்திர மோதே –வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே–ஆனந்த எல்லை-

5-பக்த அக த்வம்ச சீலே –மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்

6-தத் உசித சமய ஆஸ்வாச தான -ப்ரதன் -ப்ரவீண –ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை —
பொறுக்க பொறுக்க-சாத்மிக்க-சாத் மிக்க

7-கர்ப்பூர ஆலேப சோபே –பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்-
வெளிய நீறு -பச்சை கற்பூரம் -சோபை மிக்கு

8-சமயதிக ரஹித –ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு இன்றி நின்றானை –
ஓத்தார் மிக்கார் தன் தனக்கு இல்லாமல் ஸுலப்யம் இயற்கைத்தனம்

9-தோஷகே –நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை-ஆனந்திப்பிக்குமவன்

10-சர்வ பூர்ணே –வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தன்னை,-சர்வ வியாபகத்வம்

ஸர்வத்ர–உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
சொல் மாலைகள் ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே
தன்யன் ஆனேன் -பாடப் பெற்றேன்

ஏவம் பூதன் வண் துவாராபதிப் பிரான் ஸ்துதிப்பவர் பாஹ்யவான்
தத் வியதிரிக்தர் பாஹ்ய ஹீனர்

———

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

———–

மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-

————

வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-

———-

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-

———-

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5-

————

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-

————

என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்றனைக்
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–4-5-7-

————

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-

———-

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தன்னை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-

—————

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-

———-

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே.–4-5-11-

——–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -35-பாசுரம்–

அவதாரிகை –

இதில்
அப்ராக்ருத விபூதியில்
அசாதாராண ஆகாரத்தைக் காட்ட அனுபவித்து ஹ்ருஷ்டராகிற படியைப் பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –

வல்வினை தீர்க்கும் கண்ணனான சர்வேஸ்வரன்
சத்ருச சம்பந்த வஸ்துக்களையும் அவனாகவே
அனுசந்திக்கும்படி பிறந்த இவருடைய பித்து சவாசனமாகத் தீரும்படி
சர்வ தேவ நமஸ்காரம் கேசவனுக்கு செல்லுமே -மழை நீர் அருவிகள் கடலுக்கு போவது போலே -சாதாராண ஆகாரம் சர்வாத்மகம்
அசாதாராண வடிவம் -சத்வாரகமாக அன்றி நேராக கூராழி வெண் சங்கு ஏந்தி வாராய்
விலஷண ஸ்வரூப குண விக்ரஹ விபூஷண ஆயுத பத்னீ பரிஜன விசிஷ்டனாய்க் கொண்டு
பரமபதத்திலே வ்யாவ்ருத்தி தோன்ற இருக்கிற மேன்மையையும்
லீலா விபூதியில் உள்ளார் எல்லாரையும்
ஸ்ருஷ்ட்ய அனுபிரவேசாதிகளால் ரஷிக்கிற அளவன்றிக்கே
மனுஷ்யாதி ரூபேண வந்து அவதரித்து
ரஷித்துக் கொண்டு போருகிற படியையும் இவருக்குக் காட்டிக் கொடுத்து
சர்வேஸ்வரன் இவரோடு வந்து பூர்ண சம்ச்லேஷம் பண்ணி அருள
அத்தைக் கண்டு

சூழ் விசும்பு அணி முகிலுக்கு மேலே அங்கே சென்றால்
பண்ணுகிற மங்களா சாசனத்தை
இங்கேயே இருந்து
அவனுடைய உபய விபூதி ஐஸ்வர்யத்துக்கும் மங்களா சாசனம் பண்ணி
க்ருத்க்ருத்யராய்
உபய விபூதியிலும் என்னோடு ஒப்பார் இல்லை -என்று
ஹ்ருஷ்டர் ஆகிற -வீற்று இருந்து ஏழ் உலகின் தாத்பர்யத்தை
அருளிச் செய்கிறார் -வீற்று இருக்கும் மால் விண்ணில் -இத்யாதியாலே -என்கை –

வீற்று இருக்கும் மால் விண்ணில் மிக்க மயல் தன்னை
ஆற்றுதற்காத் தன் பெருமையானது எல்லாம் -தோற்ற வந்து
நன்று கலக்கப் போற்றி நன்கு உகந்து வீறு உரைத்தான்
சென்ற துயர் மாறன் தீர்ந்து —35-

வியாக்யானம்–

வீற்று இருக்கும் மால் -விண்ணில்
விண்ணில்-வீற்று இருக்கும் மால்-
ஆசீன காஞ்சநே திவ்யேச ச சிம்ஹாச நே பிரபு -என்றும்
ராமம் ரத்ன மயே பீடே சஹ ஸீதம் ந்யவேசயத் -என்றும்
பரிவார்யா மஹாத்மானம் மந்த்ரினஸ் சமூபசிரே -என்றும்
சொல்லுகிறபடியே
வானக் கோனாய்
விண்ணோர் பெருமானாய்
மைய கண்ணாள் மலர் மேல் உறை மார்பனாய்
வீற்று இருந்து ஏழ் உலகும் தனிக் கோல் செல்ல
எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரன் –

மிக்க மயல் தன்னை –
ஆழ்வார் உடைய அத்யந்த
வ்யாமோஹத்தை-
மயல் பெரும் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே -என்று
பெற்றவர்களும் பேசிக் கை விடும்படியான
மிக்க மயல் தன்னை

ஆற்றுதற்காத் –
கைபிடித்த தான் ‘இத்தை ஆற்றுதற்க்காக-

தன் பெருமையானது எல்லாம் -தோற்ற வந்து –
கீழில் ப்ரமம் எல்லாம் ஆறும்படி –
பூவின் மிசை நங்கைக்கு இன்பன் –
தூவியம் புள்ளுடையான் அடலாழி அம்மான் தன்னை –
என்று
பிராட்டியாரோடும்
நித்ய சித்தரோடும்
கூடி இருக்கிற இருப்பையும்
ஞாலத்தார் தமக்கும் வானவர்க்கும் பெருமானை -என்றும்
உபய விபூதி ஐஸ்வர்ய உக்தனாய் இருக்கிற படியையும்
வீவில் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை -என்றபடி
குண விக்ரஹாதி வைலஷண்யம் முதலான
வைபவம் எல்லாம் பிரகாசிக்க
இங்கே வந்து –

நன்று கலக்கப் –
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான் -என்னலாம்படி
இவருடன் சம்ச்லேஷிக்க –

போற்றி நன்கு உகந்து –
சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரனை கண்டு –
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது
மங்களா சாசனம் பண்ணி
வீவில் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்நதன் மேவியே –
என்று மிகவும் ஹ்ருஷ்டராய் –

அந்த ப்ரீதி உத்ததியாலே
வீறு உரைத்தான் –
வானக் கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே -என்றும்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே -என்றும்
தாம் உபய விபூதியிலும் வ்யாவர்த்தரான படியைப் பேசினார்

சென்ற துயர் மாறன் தீர்ந்து –
நிவ்ருத்த துக்கரான ஆழ்வார்
விஸ்லேஷ வ்யசனம் -என்னுதல்
வெய்ய நோய்கள் முழுவதும் வியன் ஞாலத்து வீயவே -என்றும்
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே -என்றும்
சொல்லுமவை யாதல் –

சென்ற துயர் -தீர்ந்து – மாறன் -நன்கு -உகந்து -வீறு -உரைத்தான் –
நடந்து சென்ற துக்கம் தீர்ந்து
ஆழ்வார் அத்யந்த ப்ரீதராய்
ப்ரீதி பிரகர்ஷத்தாலே
தம்முடைய பெருமையை
தாமே பேசினார் -ஆயிற்று-

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆளவந்தார் வைபவம் /ஸ்ரீ ஸித்தி த்ரயம்:

May 27, 2021

ஸ்ரீ திருநக்ஷத்ர தனியன் :

ஸூசௌ மாஸ்யுத்தாராஷாடாஜாதம் யாமுநதேஸிகம் |
ஸ்ரீராமமிஸ்ரசரண ஸரோஜாஸ்ரீத மாஸ்ரயே ||

ஆடி உத்திராடத்தில் அவதரித்தவரும், மணக்கால் நம்பியாகிற ஸ்ரீராமமிஸ்ரரின் திருவடித் தாமரைகளை
ஆச்ரயித்தவருமான ஆளவந்தார் என்னும் யாமுனாசார்யரை ஆச்ரயிக்கிறேன்.

ஸ்ரீ மணக்கால் நம்பி அவதரித்து 47 வருடங்களுக்குப் பின்பு “தாது” (வருடத்திலே கி.பி.976) ஆடி மாதம், பௌர்ணமி நாளன்று
உத்திராடம் கூடிய வெள்ளிக்கிழமையில், ஸ்ரீமந்நாதமுனிகளுடைய திருக்குமாரரான ஈஸ்வர முனிகளுக்கும்
அவருடைய தர்மபத்தினியான ஸ்ரீரங்கநாயகிக்கும் குமாரராக, ஸ்ரீமந்நாதமுனிகள் ஆதரித்த திவ்யக்ஷேத்ரமான
வீரநாராயணபுரத்திலே யமுனத்துறைவர் என்ற இயற்பெயர் கொண்ட ஸ்ரீ ஆளவந்தார் அவதரித்தருளினார்.

ஸிம்ஹாநநாம்ச பூதரான ஆளவந்தாருக்குத் திருவவதாரஸ்தலம் சோழ தேசத்திலே திருக்காவேரிதீரத்தில்
வீரநாராயணபுரம். திருநக்ஷத்ர கலியுகம் மூவாயிரத்து எழுபதேழுக்குமேல்
தாது வருஷம் ஆடி மாஸம் பௌர்ணமி வெள்ளிக்கிழமை உத்தராடம் விஷ்கம்பம் பவகரணம்.

திருத்தகப்பனார் ஈச்வரமுனிகள். திருப்பாட்டனார் நாதமுனிகள். திருத்தாயார் ஸ்ரீரங்கநாயகி.

குமாரர் திருவரங்கப் பெருமாளரையர், தெய்வத்துகரசு நம்பி, பிள்ளையரசு நம்பி, சொட்டை நம்பி.

திருநாமங்கள் யாமுனாசார்யார், யமுனைத்துறைவர், வாதிமத்தேபஸிம்ஹேந்த்ரர், ஆளவந்தார், பெரியமுதலியார்,

குடி சொட்டை. திருவாராதனம் நம்பெருமாள். இருப்பிடம் கோயில்.

சிஷ்யர்கள்
பெரியநம்பி,
பெரியதிருமலைநம்பி,
திருக்கோட்டியூர்நம்பி,
திருமாலையாண்டான்,
தெய்வவாரியாண்டான்,
வானமாமலையாண்டான்,
ஈச்வராண்டான்,
ஜீயராண்டான்,
ஆளவந்தாராழ்வான்,
திருமோகூரப்பன்,
திருமோகூர் நின்றார்,
தேவப்பெருமாள்,
மாறனேரி நம்பி,
திருக்கச்சிநம்பி,
திருவரங்கப்பெருமாளரையர்,
திருக்குருகூர்தாஸர்,
வகுளாபரண ஸோமயாஜியார்,
அம்மங்கி,
ஆள்கொண்டி,
வடமதுரையில் பிறந்த கோவிந்த தாஸர்,
ராஜபுரோஹிதரான நாதமுனி தாஸர்,
ரங்கசோழாவின் ராஜபத்னியான திருவரங்கத்தம்மான்
ஆக சிஷ்யர் ப்ரதானரானவர் இருபத்திருவர்.

————–

யத்பதாம்போருஹத்யாந வித்வஸ்தாஸேஷகல்மஷ |
வஸ்துதாமுபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் | (“கீதாபாஷ்ய மங்களம்”)

எவருடைய திருவடித்தாமரைகளை தியானிப்பதால் எல்லா தோஷங்களும் நீங்கப்பெற்று யான் ஒரு பொருளாக ஆனேனோ,
அத்தகைய யமுனைத்துறைவரை வணங்குகிறேன்.

——–

ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்தம் ஸுதுர்க்ரஹம்|
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர தம் வந்தே யாமுநாஹ்வயம்||

[யதிகளுக்குத் தலைவரும், மறை பொருளின் உயரிய அர்த்தங்களை எல்லோருக்கும் புரியும்படியாக
ஶ்லோகங்களாக அருளிச் செய்தவருமான ஸ்வாமி யாமுந முநியை வணங்குகிறேன்.]

—–

நிதியைப் பொழியும் முகிலென்று நீசர்தம் வாசல்பற்றி
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன், இனி தூய்நெறிசேர்
எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்
கதிபெற்றுடைய, இராமானுசன் என்னைக் காத்தனனே

———

“ராமானுஜாங்க்ரிஸராணோஸ்மி குலப்ரீதீபஸன்
வாஸீத் ஸ யாமுனமுனேஸ் ஸச நாதவம்ஸ்ய |
வஸ்ஸ்ய பராங்குஸமுநேஸ்ஸ ச ஸோ தேவ்யா:
தாஸஸ்தவேதி வரதாஸ்மி தவேக்ஷணீய: ||-(கூரத்தாழ்வான் அருளிய “வரதராஜஸ்தவம்” ஸ்லோகம் 102).

எம்பெருமானாரின் (இராமானுசர்) திருவடிகளை உபாயமாக உடையவனாகிறேன்.
அந்த எம்பெருமானார் யாமுநமுனியின் (ஆளவந்தார்) குலவிளக்காக இருக்கிறார்.
அந்த யாமுநமுனியாகிற ஆளவந்தார் நாதமுனிகள் திருவம்சத்தவர். அந்நாதமுனிகள் நம்மாழ்வாரின் வழி வந்தவர்.
அந்த நம்மாழ்வாரும் பெரியபிராட்டியின் (ஸ்ரீரங்க நாச்சியார்) திருவருள் பெற்றவர்.
வரதராஜரே! இவ்விதம் தேவரீருக்கு (உமக்கு) வழிவழித் தொண்டன் அடியேன் என்று
கடாக்ஷத்துக்குப் பாத்திரமாக இருக்கக் கடவேன் ஆகிறேன் என்று உரைக்கிறார் கூரத்தாழ்வான்.

———-

விதாய வைதிகம் மார்க்கம் அகெளதஸ்குதகண்டகம் |
நேதாரம் பகவத்பக்தேர் யாமுநம் மநவாமஹை || ( ஸ்ரீ பராசர பட்டர் அருளிச்செய்த ஸ்ரீரங்கராஜஸ்தவம், ஸ்லோ.1.4)

ஏன் ஏன் என்று கேட்டு விதண்டாவாதம் செய்யும் வாதியராம் இல்லாததாக வைதிக நெறியைச் செய்து (அதில்),
அழைத்துச் செல்பவராய் பகவானிடம் தழைத்தோங்கச் செய்பவரான ஆளவந்தாரை தியானிப்போமாக.

———-

இவ்வாறு உயர்ந்த குருபரம்பரையில் வந்தவரான ஸ்வாமி ஆளவந்தாரின் மேன்மையை அறிந்தவர்கள்
ஸ்ரீ யாமுநாரயஸமோ வித்வான் ந பூதோ ந பவிஷ்யதி என்று உறுதியாகக் கூறுவர்.
ஸ்வாமியைப் போன்று ஒரு மஹாவித்வான் பிறந்ததும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை.

———-

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்த க்ரந்தங்கள் எட்டு:
அவை: (1) ஆத்ம ஸித்தி,
(2) ஸம்வித் ஸித்தி,
(3) ஈஸ்வர ஸித்தி,
ஸித்தி த்ரயம் – ஆத்ம ஸித்தி, ஈஸ்வர ஸித்தி மற்றும் ஸம்வித் ஸித்தி ஆகியவை ஆகும்.
(4)கீதா ஸங்க்ரஹகம் ,
(5) ஆகம ப்ராமாண்யம்,
(6) மஹாபுருஷநிர்ணயம்,
(7) ஸ்தோத்ர ரத்னம்
மற்றும் (8) சது:ஸ்லோகீ ஆகியன ஆகும்.

—————

ஸ்ரீ ஆளவந்தார் அருளிய ஸித்தி த்ரயம் தான் எம்பெருமானார் ப்ரம்ம சூத்ர விவரணமாக அருளிச் செய்த
ஸ்ரீ பாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த சாரம், வேதார்த்த ஸங்க்ரஹம் ஆகிய நான்கு கரந்தங்களுக்கும் மூலமாக அமைந்தது.

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்த கீதார்த்த ஸங்க்ரஹமே ஸ்வாமி எம்பெருமானார் அருளிச்செய்த கீதா பாஷ்ய கிரந்தத்துக்கு மூலமாக அமைந்தது.

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த ஸ்தோத்ர ரத்னம், சதுஸ்லோகி போன்ற ஸ்தோத்ரங்கள் ஸ்வாமி எம்பெருமானார்
அருளிச்செய்த கத்யத்ரயத்திற்கு மூலமாக அமைந்தது.

ஸ்ரீ ஆளவந்தார் அவதார ஸ்தலம் – காட்டுமன்னார்கோயில் (சதுர்வேதி மங்கலம்)
பிதாமஹர் – ஸ்ரீமந் நாதமுனிகள்
திருத் தகப்பனார் – ஈஸ்வரமுனி
திருத் தாயார் – அரங்கநாயகி
இயற்பெயர் – யாமுனன்/யமுனைத்துறைவன்

திருவரசு – ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ஆளவந்தார் படித்துறை அமைந்துள்ளது.

——

ஆகம ப்ராமாண்யம் என்னும் நூலை எழுதியதற்குக் காரணம் ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமங்கள் இறைவனால் வெளிவந்தவை என்றும்,
பாஞ்சராத்ர ஸாஸ்த்ரமும் வேதம் போல் அபௌருஷேயமானதும் ஒப்புயர்வற்ற அதிகார பூர்வமாகக் கொள்ளத்தக்கது
(வேதங்களோடு ஒக்க ப்ரமாணங்களாகக் கொள்ளத்தக்கது) என்றும் விக்ரஹ ஆராதனை வேத மூல ப்ராமணமானது என்றும்
அர்ச்சாவதாரமாகிய திரு உருவங்களில் பகவானுடைய சாந்நித்யம் பூர்ணமாக உண்டு என்றும் ஸ்தாபிப்பதற்காகவே ஆகும்.

மேலும் அதிகார பூர்வமான ஓர் ரக்ஷை பாஞ்சராத்ரத்திற்கு அமைக்காவிட்டால் பரமவைதிகமானதும் எம்பெருமானாலேயே
தோற்றுவிக்கப் பட்டதுமான மகோன்னதையை பாஞ்சராத்ர ஸாஸ்த்ரம் இழந்துவிடக்கூடும் என்பதாலே
ஆகம ப்ராமாண்யம் என்ற நூலை தம் ஸம்பூர்ண ப்ராஜ்ஞத்வத்தினால் அருளிச் செய்தார் ஸ்ரீ ஆளவந்தார்.

—————

புருஷ நிர்ணயம்– இந்நூல் ஸாத்விக புராணங்களில் சிறந்ததான ஸ்ரீ விஷ்ணு புராணம், பகவத் கீதை
மற்றும் உபநிஷத்துக்கள் ஆகியவைகளைக் கொண்டு ஸ்ரீமந் நாராயணனே தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம்
என்று தெரிவிப்பதாக அறியப்படுகிறது. இந்நூல் இப்போது கிடைக்கவில்லை.

—————

இவ்வாறு உபநிஷத்துக்கள் , ப்ரம்ம சூத்திரம், கீதை இவை மூன்றுக்கும் (பிரஸ்தான த்ரயம்) வ்யாக்யானம் (உரை)
எழுதியதால் தான் ஸ்ரீ ராமானுஜர் தர்சன ஸ்தாபகர் என்றும் ஶ்ரீபாஷ்யகாரர் என்றும் போற்றப்பட்டார்.
இப்படி ஶ்ரீபாஷ்யம் எழுதுவதற்காக யதிராஜர் முதலில் நம்மாழ்வாரின் பாசுரங்களின் ஆழமான கருத்துகளை வெகுவாக ஆராய்ந்தார்.
ஏற்கனவே பல பெரியோர்கள் விரிவுரைகளை எழுதியிருந்தார்கள். உதாரணமாக
1. போதாயந பாஷ்யம் என்ற ஒரு வ்யாக்யானத்தை வியாசபகவான் சீடர்களில் ஒருவரும் மகரிஷியுமான போதாயநர் எழுதி இருந்தார். .
2. திரமிட பாஷ்யம் என்று ஒரு உரையை திரமிடாசார்யர் எழுதிஇருந்தார்..
3. ப்ரமானந்தி என்கிற ஒரு ஞானி ப்ரஹ்ம சூத்திரத்திற்கு ‘வார்த்திகா’ என்ற உரை எழுதியிருக்கிறார்.
4. குஹா தேவாசாரியர் பாஷ்யம் என்றும் ஒன்று இருந்தது.
5. ஆசார்ய பாருசி பாஷ்யம் என்று மற்றொன்று.
6. பகவத் ஸ்ரீவத்ஸாங்கமிச்ரர் என்பவரின் பாஷ்யம் ப்ரம்மசூத்ர பாஷ்யங்களில் மிகவும் பழமையானது.
7. நாதமுனிகள் ஒரு சில அருமையான நூல்களை இயற்றி இருந்தார். அவை விசிஷ்டாத்வைத தத்துவத்தின் யோகரஹஸ்யம், ந்யாயதத்வம் ஆகும். .
8. யாமுனாசார்யர் (ஆளவந்தார்) எழுதிய ஸம்வித் ஸித்தி, ஈசுவரஸித்தி, ஆத்மஸித்தி ஆகமப்ரமாண்யம் முதலிய நூல்களும் பிரசித்தமானவை.

————-

ஸித்தி த்ரயம்: ஸித்தி என்பது தத்வ நிர்ணயம். இந்த நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது.

ஸ்ரீ ஆளவந்தார் எழுந்தருளியிருந்த காலத்தில், ஸித்தி என்ற பெயருள்ள
இஷ்ட ஸித்தி, நைஷ்கர்ம்ய ஸித்தி மற்றும் ப்ரம்ம ஸித்தி போன்ற பல நூல்கள் தோன்றியிருந்தன.
ஒரு பொருளை ஆழ்ந்து ஆராய்ந்து காணும் முடிவு ஸித்தாந்தம் அல்லது ஸித்தி என்பதாகும்.
இந்த முறையில் ஸ்ரீ ஆளவந்தாரும் தமக்கு முன்பு தோன்றிய இஷ்ட ஸித்தி முதலிய நூல்களின் முடிவுகளை கண்டித்து
விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலைநாட்டியுள்ளார்.
இந்த நூல் ஆத்ம ஸித்தி, ஈஸ்வர ஸித்தி, ஸம்வித் ஸித்தி என்று மூன்று பகுதிகளைக் கொண்டு
ஜீவாத்மா, பரமாத்மா, பகுத்தறிவதற்குரிய ப்ரமாண ஞானம் ஆகிய மூன்று தத்வங்களை தெளிவாக விளக்குகிறது.

ஸித்தி த்ரயம் – ஆத்ம ஸித்தி

ஆத்ம ஸித்தியில் ஆத்ம ஸ்வரூபம் ஆராயப்பட்டு சித்தாந்தப் படுத்தப்படுகிறது.
ஆத்ம விஷயத்தில் தேஹமே ஜீவன், புலன்களே ஜீவன், மனமே ஜீவன், பிராணனே ஜீவன், புத்தியே ஜீவன் என்று
கூறுகிறவர்களின் வாதங்களைக் கண்டித்து, ஜீவாத்மாவின் தன்மை இவற்றைக் காட்டிலும் வேறுபட்டிருக்கும்.

ஆத்மா சரீரம், இந்திரியம், மனது, பிராணன், புத்தி இவைகளைக் காட்டிலும் வேறுபட்டதாய்,
நித்யமாய், அணுவாய், ஸ்வயம் ப்ரகாசமுமாய், ஆனந்தமயமாய் அநேகமாயும்,
பரமாத்மாவுக்குச் சரீரமாய், பரதந்திரமாய், சேஷமாயிருக்கிறது என்று அறுதியிட்டுள்ளார் ஸ்ரீ ஆளவந்தார்.

தைத்ரிய உபநிஷத்தில் அன்னமய, ப்ராணமய மனோமயங்களுக்கு அவ்வருகே சரீரம், ப்ராணன், மனம் இவற்றைக் காட்டிலும்
வேறுபட்டுள்ள ஜீவாத்மாவை அறிவு நிறைந்தவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
உணர்வற்ற பொருள்களைக் காட்டிலும் ஆத்மாவிற்கு உண்டான வேறுபாட்டினை வேதம் விஜ்ஞாநமயன் என்று காட்டியது.
ப்ரபந்நஜனகூடஸ்தரான நம்மாழ்வாரும் “சென்று சென்று பரம்பரமாய்” என்னூனில் உயிரில் உணர்வினில்
நின்ற ஒன்றை உணர்ந்தேனே என்று ஆத்மாவின் நிலையை உணர்த்துகிறார்.

ஸம்ஸார துக்கங்கள் அநாதி காலமாகச் செய்த கர்மத்தின் பயனாய் வந்தேறியுள்ளது.
பகவானை சரணமடைந்து அவனுடைய கருணைப் பெருக்கினால் கர்ம பந்தம் நீங்கி,
எம்பெருமானுக்கு தொண்டு செய்து உகப்பிக்கும் நிலை ஏற்படும்.
ஜீவாத்மாவின் உண்மைநிலை பகவத்குண அனுபவத்தைப் பண்ணி, உகந்து பணி செய்து களித்திருப்பதே ஆகும்.

ஸித்தி த்ரயம் – ஈஸ்வர ஸித்தி
ஈஸ்வர ஸித்தியில் அகில உலகின் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய அனைத்தும்
இறைவனுக்கு உட்பட்டதே என்று தெரிவிக்கப்படுகிறது. இதனை அறிவுருத்த எல்லாம் அறிந்தவனும், எல்லாம் வல்லவனும்,
ஸத்யஸங்கல்பனுமான இறைவன் ஒருவன் உளன் என்பதை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகிறது.

வேதத்தை ப்ரமாணமாக ஏற்றுக் கொண்டு, ஆனால் வேதவேத்யனான பரமபுருஷனை ஒத்துக்கொள்ளாமல்,
யாகம் முதலிய கர்மங்களே ஸ்வர்கம் முதலிய பயனைக் கொடுக்கின்றது.
ஆகையால் உலகிற்குக் காரணமாய், கர்ம பலன்களைக் கொடுக்கும் இறைவனால் ஒரு பயனுமில்லை என்று கூறும்
கர்மமீமாம்சகர் கூறும் கூற்றைத் தவிர்த்து, ப்ரளயத்தில் அழுந்திக் கிடந்த அகில உலகையும் ஸ்ருஷ்டி காலத்தில்
மறுபடியும் படைத்து காத்தருளும் ஸர்வேஸ்வரன் ஒருவன் உளன் என்று நிலைநாட்டுகிறார்.

மேலும் எவனுடைய ஆராதனங்களான யாகம் முதலியவை ஸாஸ்த்ரத்தினால் விதிக்கப் படுகின்றனவோ,
அவை எம்பெருமானுடைய அருளாலேயே பயனை கொடுக்கின்றன. அந்தப் பரமன் இல்லாதபோது, கர்மமும் கர்ம பலமும் சித்திக்காது.

எனவே ஜகத் ச்ரஷ்டாவாய் (உலகைப் படைப்பவனாய்),
ஸர்வகர்ம ஸமாராத்யனாய் (அனைத்து கர்மாக்களாலே வழிபடப்படுபவனாய்),
ஸர்வ பலப்ரதனான (அவற்றிற்கு பயனும் அளிப்பவனான) பரம புருஷனை ஸாஸ்த்ரம் காட்டும் வழியிலே
அங்கீகரித்தே(ஏற்றுக்கொள்ள) வேண்டும் என்று பலபடிகளாலே நிரூபித்து,
“கருமமும் கருமபலனுமாகிய காரணன் தன்னை” என்ற நம்மாழ்வாரின் ஸகல வித்யா சர்வஸ்வம் என்று
போற்றுதற்குரிய திருவாய்மொழியைக் கொண்டு பரம்பொருளை ஈஸ்வர ஸித்தியில் அறுதியிடுகிறார்.

ஸித்தி த்ரயம் – ஸம்வித் ஸித்தி
ஸம்வித் ஸித்தியில் அத்வைத வாதமும் மாயா வாதமும் கண்டிக்கப்படுகிறது. உளதான பொருள் ஒன்று தான்.
அநேகமில்லை என்று கூறும் வாதத்தையும், ஜ்ஞானம் ஒன்றே உள்ளது; அறியப்படும் பொருளும்,
அறிகிறவனும் வேறில்லை என்று கூறுபவர்களுடைய வாதத்தையும் கண்டித்து;
அறிவு, அறியப்படும் பொருள், அறிகின்றவன் என்ற மூன்றும் உள்ளன.

இப்படியே சித், அசித், ஈஸ்வரன் என்ற மூன்று தத்வங்களும் உள்ளன என்பதை நிரூபிக்கிறார் பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார்.
மேலும் பரம்பொருளுக்கு குணம், ரூபம், ஐஸ்வர்யம், ஆகிய ஒன்றுமில்லை என்ற அத்வைதிகள் கூற்றைத் தகர்த்து
எம்பெருமானுக்கு நற்குணங்களும், திவ்ய ரூபங்களும், வைபவங்களும் பல பல உண்டு.
கணக்கில்லாத நற்குணங்களுக்கு இருப்பிடமாக எம்பெருமான் போற்றப்படுகிறான்.
ஆதலால் எம்பெருமான் ஒருவனே ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாய், தானே அனைவருக்கும் பிரதானனாயிருக்கிறான்
என்பதை அறுதியிட்டு நம் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் கொள்கைகளை நிலைநாட்டியுள்ளார் நம் ஸ்வாமி.

“ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்ம” என்ற வாக்கியம் அத்வைதக் கொள்கைக்கு முக்கியமானது.
இதற்கு ப்ரஹ்மம் தவிர வேறேதும் உண்மையில் இல்லை என்பதே அத்வைதிகள் கூறும் பொருள்.

ஸ்ரீ ஆளவந்தாரின் விவரணம் பின்வருமாறு:
நாம் ப்ரத்யக்ஷமாகக் காணும் காரியப் பொருள்கள் யாவும் உண்மை. “பரம்பொருள் ஒன்றே” என்பதால் உலகம் பொய் என்றாகாது.
உண்மையாக உள்ள பரம்பொருளையும், இல்லாததான உலகத்தையும் ஒரு பொருளாகக் கூறமுடியாது.

இப்படிச் சொன்னால் (பொய்யான உலகில்) இல்லாத உலகில் உள்ள பரம்பொருளும் இல்லாததாகும்.
எனவே பரம்பொருள் ஒன்றே! இரண்டல்ல” என்று பொருள் கொள்ளவேணுமே ஒழிய உலகில்லை
(உலகு பொய் என்று பொருள் கொள்ள முடியாது ) என்பது ஸ்ரீ ஆளவந்தார் கூற்று.
ஆக அத்விதீயன் என்றால் பரம்பொருளைப் போன்ற மற்றொருவர் கிடையாது என்பதே ஆகும்.
உலகும், மக்களும், தேவர்களும் எம்பெருமானுடைய செல்வத்தில் அடங்கியவையே ஆகும்.
ஆக எம்பெருமானே புருஷோத்தமன் ஆவான் என்று தெளிவாகக் காட்டுகிறார் நம் ஸ்வாமி.

இதே போன்று தத் த்வம் அஸி என்ற வாக்கியத்திற்கு பொருள் கூறும் அத்வைதிகள் ப்ரஹ்மமும் ஜீவாத்மாவும் ஒரே பொருள் என்பதாகும்.
இதற்கு நம் ஸ்வாமி அறிவுக் களஞ்சியமான பரம்பொருளையும், குறுகிய ஞானமுடையனாய் சம்சாரியாய் துக்கப்படுபவனான
ஜீவாத்மாவோடு ஒன்று படுத்திப் பேசுவது ஒளியையும், இருளையும் ஒன்று என்பது போல் ஆகிவிடும் என்கிறார்.

———–

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஆத்ம ஸித்தி – ஸ்லோகம்
தேக இந்திரிய மன பிராண தீ–அந்நிய அநந்ய சாதன (ஸ்வயம் பிரகாசம் -)
நித்யோ வ்யாபி பிரதி க்ஷேத்ரம் பிரதி சரீரம் பின்ன ஸ்வத ஸூகீ–

——–

ஆளவந்தார் ஸாதிக்கும் விஷயங்கள்!

திருக்கோட்டியூர் நம்பிகள் , ஒருமுறை….ஆளவந்தாரிடம்…உபாயாம்சத்தில் எது தஞ்சம் என்று கேட்கும்போது….
ஆளவந்தார் அருளினது!

நீண்ட காலம்,ஸ்வரூப நிரூபணம் ..செய்து.. உபாய நிரூபணத்தை தேடுவதே..என்று சொல்ல…
ஒரு மனைவி,….தன்னை நன்கு அழகுபடுத்திக் கொண்டு இருந்தால்,கணவனுக்கு அவன் மனைவியைப் பார்க்கும் போது ..
அவளது ஒப்பனையினால், அவனுக்கு..ஈடுபாடு மிகுந்து இருப்பதைப் போலத் தான் எம்பெருமானுக்கும்…. நமக்கும் உள்ள அந்யோந்யம்!
மனைவி கணவனுக்காக, தன்னை அழகுபடுத்திக் கொள்வதைத் தவிர வேறு உபாயம் வேண்டாம்!
அதைப் போலவே…. ஜீவாத்மா பரமாத்மாவுக்கு பார்யையைப் போல!
அறியாமை என்ற அழுக்குடன் உள்ள ஜீவன்,தன் அழுக்கை அறுக்க , அறுக்க…தன் ஸ்ரூபமாகிய அலங்காரம் வந்து….
அதைக் கண்டு…இந்த ஜீவனை பரமன் உகப்பான்!
ஆகையால்…தன்னை விஷயீகரிப்பதற்கு …. உபாய அநுஷ்டானம் தேவையில்லை!
என்று ஆளவந்தார் அருளிச் செய்தார்!

———

ஆளவந்தார், ஆண்டாள் பாசுரங்களைப் போற்றி கீழ்காணும் இரண்டு தனியன்கள் பாடியுள்ளார்.

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம் – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை பாடி அருளவல்ல பல்வளையாய் – நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம் நாங்கடவா வண்ணமே நல்கு.

———

ஸ்ரீ ஆளவந்தார் 105 திருநக்ஷத்ரம் இப்பூவுலகில் எழுந்தருளியிருந்தார்.
இவர் நம்பெருமாள் அநுஜ்ஞையினாலே திருநாட்டுக்கு திருநாட்டுக்கு எழுந்தருளின ஸ்தலம் கோயில் (திருவரங்கம்).

நாலாயிர திவ்யப்ரபந்தத் தனியன்களில் ஒன்றான,

“மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்
ஸர்வம் யதேவ நியவேத மதந்வயாநாம் ||
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த் நா ||–என்ற தனியனை அருளிச்செய்தவர் ஸ்ரீ ஆளவந்தார்.
இது இவர் அருளிச்செய்த “ஸ்தோத்ரரத்ன”த்திலும் இடம்பெற்றுள்ளது.
நம்மாழ்வாரைப் போற்றும் வகையில் இந்தத் தனியனை அருளியுள்ளார் ஸ்ரீ ஆளவந்தார்.

என் குலத்தவர்க்குத் தாய், தந்தை,மனைவிமக்கள், செல்வம் என்றும் எதுவேயாகிறதோ,
எங்களுக்கு ஆதிகுலபதியான நம்மாழ்வாரின் வகுளமாலையால் அழகுபெற்று விளங்கும்
அந்தத் திருவடி இணையினைத் தலையால் வணங்குகிறேன்.

—-

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம:
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம:

——–

ஸ்ரீ ஆளவந்தார் வாழித்திருநாமம் :

மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்த்தான் வாழியே
மறைநான்கும் ஓருருவில் மகிழ்ந்து கற்றான் வாழியே
பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே
பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழி
கச்சிநகர் மாயன் இருகழல் பணிந்தோன் வாழியே
கடக உத்தராடத்துக்குக் காலுதித்தான் வாழியே
அச்சமர மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே!

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் -முதல் பத்தில் -கிளி -குயில்–கோழி-வண்டு–எம்பெருமான் குணம் பாடி – இன்னிசைக்கும் பாசுரங்கள் –

May 27, 2021

மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர்-ஸ்ரீ பெரிய ஆழ்வார் திரு மொழி-2-2-6-

விச்தர்தமான குழல் மேலே மது பான அர்த்தமாக அவஹாகித்த வண்டுகள் ஆனவை –
மது பானத்தாலே செருக்கி இனிய இசைகளை பாடா நிற்கும் -ஸ்ரீ வில்லி புத்தூரிலே –

விரி குழல் -என்கையாலே –
நாநா வானப் பிரபத்திகளை ஏகாஸ்ரயத்தில் சேர்த்து முடித்து நிஷ்டனாய் –
ஸூ மநாவுமாய் உபதேசிக்க வல்ல ஆச்சார்யனையும்

மேல் நுழைந்த வண்டு -என்கையாலே
இவற்றுக்கு பாத்ரமான பிரபன்னனையும்

இன்னிசை -என்கையாலே
ஆச்சார்யனுடைய ஜ்ஞான பக்தி வைராக்ய வைபவங்களை இனிதாகப் பேசி
அனுபவிக்கிற வாக்மித்வங்களையும்

இவை எல்லாம் காணவும் கேட்க்கவுமாவது
திரு மாளிகையிலே ஆகையாலே
இத்தை உகந்து அருளி
இனிது அமர்ந்த வில்லி புத்தூர் உறைவாரையும் காட்டுகிறது-

———

வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென் அரங்கன்-
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்-2-9-11-

வண்டுகள் ஆனவை மது பானத்தால் களித்து பாடுகிற கோஷத்தை உடைத்தான பொழில்களாலும்
பொழில்களுக்கு தாரகமாக பெருகி வாரா நின்றுள்ள புனலை உடைத்தான காவிரியாலும் சூழப்பட்டு
திரு மதிள்களும் – திருக் கோபுரங்களும் -திரு வீதிகளும் -மாட மாளிகைகளுமான -இவற்றோட சேர்த்தியால் வந்த
அழகை உடைத்தாய் இருந்துள்ள -ஸ்ரீ திருவரங்கப் பெரு நகரிலே நித்யவாசம் பண்ணும் வைபவத்தை உடையனானவன்
முன்பு -விபவ அவதாரத்திலே -செய்த லீலா சேஷ்டிதங்கள் எல்லாவற்றையும்
அந்த லீலை தான் வ்யாஜமாய் -லோகத்துக்குப் பீதி மூலமாகவும் -பக்தி மூலமாகவும் -பிராப்தி மூலமாகவும் –
பிராப்தி அனுஷ்டானங்களோடே சேர்க்கலாய் இறே இருப்பது –

————-

அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி
சிறுகாலை பாடும் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 -8-

ஷட் பதங்களான அழகிய வண்டுகள் -இத்தால் இவற்றின் உடைய ரூப குணங்கள் சொல்லிற்று-
தேவோ நாம சகஸ்ரவான் -என்று அவனுடைய ஆயிரம் திரு நாமங்களையும்
சத்வோத்தரமான காலத்திலே ப்ரீதிக்கு போக்கு வீடாக பாடா நிற்கும்

————–

பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருகத்
தோண்டல் உடைய மலை தொல்லை மால் இரும் சோலை அதுவே -4- 3-6 –

பாட்டுக்கு தகுதியான வண்டு இனங்கள்
அதாவது பிறப்பே பிடித்து பாட்டே ஒழிய வேறு ஓன்று அறியாதே இருக்கை
ப்ரீதி பிரகர்ஷத்தால கானாவான பண்களைப் பாடிக் கொண்டு -மதுபானம் பண்ணிச் செல்லும்படியாக
திருச் சோலைகள் ஒரு காலும் வாடாமல் -நித்ய வசந்தமாய் செல்லும்படி ஊற்று உடைத்தான மலை –

———–

குருவு அரும்ப கொங்கு அலற குயில் கூவும் குளிர் பொழில் சூழ்
திருவரங்கம் என்பதுவே என் திரு மால் சேர்விடமே – 4-8 5- –

குரவுகளானவை அரும்பி செல்லவும் கோங்குகள் ஆனவை அலர்ந்து செல்லவும்
குயில்கள் ஆனவை ஹர்ஷத்தால் இருந்து கூவும்படியான
குளிர்ந்த சோலைகளால் சூழப்பட்டு இருக்கிற திருவரங்கம்
இத்தால்
அநேக புராண பிரசஸ்தம் ஆகையாலும்
ஆழ்வார்கள் எல்லோரும் ஓர் மிடறாக அருளி செய்கையாலும் உண்டான பிரசித்தியை சொல்லுகிறது

——-

தாழை மடலூடு உரிஞ்சித் தவள வண்ண பொடி அணிந்து
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – 4-8- 6-

மலர தொடங்குகிற தாழம் பூ மடலின் உள்ளே பரிமளத்தில் லோபத்தாலே
உடம்பை உரோசிக் கொண்டு புகுந்து
அதின் உள்ளில் உண்டான -வெளுத்த நிறத்தை உடைத்தான -சுண்ணத்தை உடம்பு எங்கும் அணிந்து கொண்டு
அந்த ஹர்ஷ பிரகர்ஷத்தாலே -யாழ் ஓசை போல் இருக்கிற இனிய இசையை உடைய
வண்டின் உடைய திரள் ஆனவை பாடுகைக்கு அடிக் கொண்டு
தென தென என்று ஆளத்தி வையா நிற்கும் அரங்கமே

———–

எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8- 8-

அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி சிறு காலை பாடும் -என்றாரே
அங்கே தென் திரு மால் இரும் சோலையே – 4-2 -8-
இங்கே இப்படி அருளிச் செய்கிறார் -இத்தால்
திவ்ய தேசங்களில் வர்த்திக்கும் வண்டுகள் ஆனவை -கால அனுகுணமாக பண்களிலே
பகவத் குணங்களை நியமேன பாடும்படி சொல்லுகிறது
எல்லியம் போது -அந்திப் போதிலே
இரும் சிறை வண்டு -பெரிய சிறகை உடைத்தான வண்டுகள் ஆனவை –
பகவத் பிரவணமான விஷயங்களுடைய ரூப குணங்களும் உத்தேயம் என்று
இருக்குமவர் ஆகையாலே இவற்றினுடைய சிறகை வர்ணித்து கொண்டு அருளி செய்கிறார் –
எம்பெருமான் குணம் பாடி –
சர்வ ஸ்வாமியான பெரிய பெருமாளுடைய ஆஸ்ரித ரஷணங்களால்
உண்டான திவ்ய குணங்களை ப்ரீதி ஹர்ஷத்தாலே பாடி

——-

மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும் என் நாவி னுக்காற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே -5-1- 1-

அறிவுடையார் -குற்றம் ஆகாத அளவு அன்றிக்கே -குணமாகவும் கொள்ளுவார்கள் –
அது ஓர் இடத்தே இருந்து தனக்கு வேண்டினது பிதற்றிப் போகவும் -அத்தை அறிவுடையார் –
நமக்கு நன்மை சொல்லுகிறது -என்று கொள்ளுவார்கள் இறே –
கட்டுரை -நல் சொல்லு
அப்படியே நான் வேண்டிற்று சொன்னதையும் -குணமாக்கி கொள்ள வேணும் –

———–

புள்ளும் சிலம்பின காண்–திருப்பாவை–6–

போது விடிந்தது–பஷிகள் அகப்படக் கிளம்பி இரை தேடித் போகா நின்றன — காண் -என்ன
ஆசார்யர் -சிஷ்யர் பெறாத பொழுது குமிறிக் கொண்டு இருப்பாராம்
இவ்விடத்தில் பிள்ளைப் பிள்ளை யாழ்வான்-
பகவத் சமாஸ்ரயணத்துக்கு அனுகூலமான காலத்தை சூசிப்பிக்கிற பஷிகளின் நாதம் அல்லது-
இவ்வாத்மாவுக்கு உத்தேச்யம் இல்லை என்று பணிக்கும் —என்று அருளிச் செய்வர்-
நீங்கள் பிறந்த ஊரில் பஷிகளுக்கு உறக்கம் உண்டோ —
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்–மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல்-மெய்ம்மை கொலோ –
என்று அன்றோ இருப்பது –
புள்
என்கிறது -சேர்ப்பாரை -யில் சொல்லுகிறபடியே ஞான அனுஷ்டங்களாலே –
பகவத் சம்பந்தம் கடகரான பாகவதர்களை –
ஆகையால்–சத்வோத்தரமான காலம் ஆனவாறே சாத்விகரான பாகவதர்கள் —பகவத் குண அனுசந்தான பூர்வகமாக
பகவத் கைங்கர்ய ரூபங்களாய்-தத் தத் வர்ண ஆஸ்ரம உசிதங்களான காலிக கர்மங்களை அனுஷ்டிக்கைகாக–
சர்வவோதிக்கமாக எழுந்து இருந்து புறப்பட்டார்கள் –

——–

கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ-திருப்பாவை–7–

அநஷர ரசமாய் இருக்கை–
சுகீசு என்று ஆனைச் சாத்தன் பேசின–
கீசுகீசு என்று ஆனைச் சாத்தன் எங்கும் பேசின –
கீசுகீசு என்று ஆனைச் சாத்தன் எங்கும் கலந்து பேசின–
கொண்டு வருவது போலே–
பிரியா விடை -அனுபவம் தேக்கி விளை நீர் அடித்தல்-
கரிய குருவி – வலியன் கரிச்சான் குருவி -கண் அழகாக இருக்கும் –
கஞ்சரீகிகா பஷி -ஆனைச் சாத்தன் மலையாள –
சின்ன கலியன் ஸ்வாமி -25 பட்டம் -மலையாள யாத்ரையில் பார்த்து –
இந்த பெயரைச் சொல்லி இந்த விஷயத்துக்கு நீ அன்றோ ஆசார்யன் கை கூப்பினார் —
ஆனைச் சாத்தன் –
குவலயா பீடம் நிரசித்த/ புலன் அடக்கம் அருளிய ஆச்சார்யர் –
பஷிக்கு அந்தராத்மாதயா எம்பெருமான் என்றுமாம்
சர்வோத்திக்கமாக அஹங்கார நிவர்த்தகரான மகா பாகவதர்–
நாம் பிரியப் புகா நின்றோமே -என்று
பிரிந்தால் மறுபடியும் கூடும் தனையும் தரித்து இருக்கைக்காக–பரஸ்பரம் சம்ச்லேஷித்து–
கத்கத ஸ்வரம் ஆகையாலே அநஷர ரசமாக பேசின பேச்சரவம் —
விஸ்லேஷ வ்யசனம் தோற்றும்படியாக பேசின பேச்சின் உடைய த்வனியை கேட்டிலையோ –
ஆனைச் சாத்தான் -உடல் சிறுத்து கண் பெரிதாக -ஆசார்யர்கள் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் –
சர்வமும் கிருஷ்ணா கிருஷ்ணா என்றே ஆய்ப்பாடியிலே உள்ளது –
பக்ஷிகள் கலந்து பேசும் அரவமும் -தயிர் அரவமும் –கீசு கீசு -கிருஷ்ணா கிருஷ்ணா என்று அன்றோ இங்கே உள்ளது –
அத்தை போலே என்றபடி-
கீசு கீசு
கிருஷ்ணா கிருஷ்ணா -தன்னைப் போல் பேரும் தாருமே பிதற்றி –
தில்லைச் சித்ர கூடம்-பத்னிகள்-கிளி -வேதம் சந்தை சொல்வதை கேட்டு –

——-

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்–திருப்பாவை–13–

புட்கள் உணர்ந்த மாதரம் அன்றிக்கே இரை தேடி சிலம்பி போயிற்றன –
மற்றுள்ள பாகவதர்களும் த்வரித்துக் கொண்டு போந்தார்கள்
புலம்பின புட்களும் -போயிற்று கங்குல் புகுந்தது புலரி -என்பர் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் –

——

வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்–திருப்பாவை–18–

கோழி கூவா நின்றது என்ன –
ஒரு கோழி கூவினவாறே விடிந்தது ஆமோ -என்ன–
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் –
துடை தட்டி எழுப்புவாரைப் போலே சர்வதோதிக்கமாக கோழி கூவா நின்றன –
உணர்ந்தவை எல்லாம் கூப்பிடும் பின்னை உறங்குமது தான் சாமக் கோழி -என்ன –
கோழி கூவும் என்னுமால் -தோழி நான் செய்கேன் ஆழி வண்ணர் திருத்தாய் செம்போத்தே – திருமங்கை ஆழ்வார்
முதல் சந்தோஷ வார்த்தை அப்புறம் துக்கம் வார்த்தை
ஜாமம் பிரித்து -கோழி கூவின உடன் வருவேன் அடுத்த கூவலுக்கு போவானாம்
கோழி கூவும் -என்னுமால் -ஆழி வண்ணர் வரும் பொழுது ஆயிற்று
வந்ததும் -கோழி கூவும் என்னுமால் தோழி நான் என் செய்கேன் -பாதம் மாற்றி –
கண்ணன் கோழி மடியிலே இட்டுக் கொண்டு வருவானாம்
கோழி வயிறு எரிச்சல் திரு வாய்ப்பாடி உனக்கு அது இல்லையே -எங்களைப் போலே –
கோழி அழைப்பதன் முன்னம் குளிக்கவும் வேண்டாவே உனக்கு
கோழி கூவு என்னுமால் என்று உனக்கு வயிறு எரிகைக்கு உடல் அல்லாமையாலே தெரியாதே -என்கிறார்கள்
கோழி கூவும் என்னுமால் தோழி மார் யான் என் செய்கேன்-
ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்று கோழி கூவும் என்னுமால்
மாதவிப் பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
கொத்தலர் கோவின் மணித்தடம் கண்படை கொள்ளும் இளம் குயிலே
என் தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலை யல்லால் கைம்மாறு இலேனே
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்து நின்றும் துரப்பன் –

மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவினகாண் –
ஸூக ஸ்பர்சத்தாலே-படுக்கையிலே உறங்குகிறவை உணரும் போது விடிய வேண்டாவோ -என்ன –
ஒரு குயில் ஒருகால் கூவும் காட்டில் விடிந்ததோ -என்ன
பல்கால் குயில் கூவிற்றுக் காண் –
உன்னுடைய நோக்கும் ஸ்பர்சமுமே தாரகமான குயில் விடிந்ததும் உன்னைக் காணப் பெறாமையாலே
பல் காலும் கூவா நின்றது
ஒரு குயில் பல் கால் கூவினது பிரமாணமோ -என்ன –
உன்னைக் காணப் பெறாமையாலே நாக்கு ஒட்டினமை தோற்ற குயில் இனங்கள் கூவின காண் –
இனம் இனமாக குயில்கள் பலகாலும் கூவின –
சத்வோத்தரமான காலம் ஆனவாறே–சர்வோதிக்கமாக பாகவதர் எழுந்து இருந்து
பகவத் கைங்கர்யார்தமாக ஒருத்தரை ஒருவர் எழுப்பா நின்றார்கள் –என்ன-
அவர்களை உறங்க ஒட்டாமைக்கு நீங்கள் உண்டே -என்ன –
வேதாந்தங்களிலே வேதாந்த அர்த்தங்களை அனுபவியா நிற்கும் நாத யாமுநர் போலும்–
பரம பாகவத சமூஹங்கள்-
சத்வம் தலை எடுத்த பின்பும்–உன்னைக் காணாமையாலே நாக்கு ஒட்டினமை தோற்றப்
பலகாலும் கூவா நின்றன காண் –
குயில் இனங்கள் ஓன்று இல்லை–ஒரு குரல் இல்லை–பல் கால் கூவின–உறக்கத்தால் அலர்த்தி
மாதவி பந்தல் இஷ்டமான பந்தல்–
நோ பஜனம் ஸ்மரம் படுக்கை வாய்ப்பால் —உன் நோக்கும் உன் பேச்சும் தாரகமாக இருக்கும்
தயிர் பழம் சோறு பல் அடிசில் –கோல கிளியே நாராயணனை வரக் கூவாயால் துரத்துவேன்
மேல் ஒரு திரள்–கீழே நாங்கள்

புன்னை மேல் உறை பூம் குயில்காள் -போற்றி யான் இரந்தேன்-திரு வண் வண்டூர் உறையும் –
மாற்றம் கொண்டு
குயில் த்வனி பஞ்சமம் த்வனி ஐந்தாவது வேதம் பாரதம் பஞ்சம வேதம்

——-

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்–நாச்சியார் திரு மொழி–3-1-

கிருஷ்ணன் தான் ராத்ரி முற்கூற்று எல்லாம் பெண்களுடைய முலைகளோடும் தோள்களோடும் பொருது உறங்குவது பிற்கூற்றிலே யாகையாலே
இக்காலத்தில் இவன் உணரான் என்று -அது பற்றாசாக வாய்த்து -இவர்கள் போந்தது –
இவர்கள் நினைவு இதுவானாலும் கோழி கூவினவாறே உணர்வான் ஒருவன் ஆயத்து
தாங்கள் உறக்க உறங்கி கோழி உணர்த்த உணர்ந்து போரும்படியை கண்டு அந்வய வ்யதிரேகங்கள் இரண்டும் அறிந்து யாய்த்து போந்தது –
இவன் தன்னை துடை தட்டி எழுப்புவாரைப் போலே கோழி கூவி எழுப்ப வேண்டும்படி யாய்த்து நித்ராபரவசனாய்க் கிடக்கும் படி-

———–

புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய்–5-1-

என்னுடைய சோகத்து அடியான அக்குணப் பரப்போபாதியும் போந்து இருந்ததீ உன் களிப்புக்கு அடியான படுக்கை வாய்ப்பும்
நான் தரைக்கிடை கிடக்க நீ படுக்கையிலே பொருந்துவதே
எனக்கு மென்மலர்ப்பள்ளி வெம் பள்ளியாய் இருக்க நீ படுத்த படுக்கை பரப்பு இருந்த படியே-
இத்தை விட்டு உனக்கு செய்ய வேண்டுமத்தை சொல்லலாகாதோ என்ன –
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய்–
ஒரு கால் சொல்லி விடுகை அன்றிக்கே பலகாலும் இருந்து ஆனை இடர்பட்ட மடுவின் கரையிலே
அரை குலைய தலை குலைய வந்து விழுந்தால் போலே விரைந்து வந்து
என்னோடு கலந்து போகிற சமயத்தில் அணைத்து ஸ்மிதம் பண்ணி வரும் அளவும் ஜீவித்து இருக்கும்படி
விளை நீர் அடைத்து போன போதை செவ்வியோடும்
அதரத்தில் பழுப்போடும் வந்து அணைக்கும் படியாக கூவப் பாராய் -என்கிறாள்

———-

கள்ள விழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்–5-2-

மது விரியா நின்றுள்ள செண்பகப் பூவிலே ருஜீஷமான -கோதுவான -அம்சத்தைக் கழித்து -மலரைக் கோதி
நான் பூக்காண வெருவ – நீ களித்து-ஹர்ஷம் வழிந்தால் போலே இருக்க இசை பாடுகிற குயிலே –
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்–
அருகே இருந்து நிரம்பா மென் சொற்களைச் சொல்லி விலாச சேஷ்டிதங்களைப் பண்ணாதே

———-

போதலர் காவில் புதுமணம் நாறப் பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவாய் —5-3-

பரப்பு மாறப் பூத்த -சோலையிலே -அப்போது அலர்ந்த செவ்வி அழியாத அபரிமிதமான பரிமளமானது கமழ
ரசாயன சேவை பண்ணினால் போலே -தர்ச நீயமான வண்டானது –காமரம் -என்ற பண்ணைப் பாட -அதுக்கு செவி தாழ்த்து
மேல் விளைவது அறிந்து விடாதே வர்த்திக்கிறாய் அன்றோ –
தன்னைப் பிரிந்து நான் கிடக்கும் படி பண்ணிப் போனவனைப் போல் அன்றிக்கே உன் பேடையுடன் சேர வர்த்திக்கிற குயிலே
தன் வடிவைக் காட்டி என்னை அனந்யார்ஹம் ஆக்கினவன் வரக் கூவாய் -என்கிறாள் –

———-

அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4-

பிறர் நோவு பட பொறுக்க மாட்டாதவன் நெஞ்சு திருத்த வேண்டா
நீ சென்று கிணுக்க அமையும் காண் அவன் வருகைக்கு -என்கிறாள் –
சிறிது உணர்த்தினாயாகில் -என்றபடி -அல்பம் ஸூசிப்பிக்க அமையும் –

——-

இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5-

பிறரோடு தோழமை கொள்ளுகைக்கு அவகாசம் இல்லாதபடி ஸ்லாகித்து கொண்டு போருகிற என் கிளியை–
இங்கே ஒரு குறை உண்டாகில் அன்றோ பிறர் தோழைமை நாடுவது
இப்படி நான் உபாலாளநம் பண்ணிக் கொண்டு போருகிற கிளையை -உன்னோடு தோழமை கொள்ளுவிப்பன் –
அதுக்கு கடவள் தானே -நியமிப்பேன் -என்றவாறு
குயில் -ஆசார்யன் -தானே ஆசார்யனுக்கு அடிமை யாகி என் உடைமைகளையும் அவனுக்கு அடிமை ஆக்குவேன் -அரும்பொருள் த்வனிக்கும் –
கொள்ளுவன்-என்னாதே கொள்விப்பன் -என்றது -அந்த கிளியைப் போலே உன்னையும் உபலா ளிப்பன்-என்றபடி
இத்தோடு தோழமை கொள்ளுகையாகிற ஏற்றம் உனக்கு –
பேறு எனக்குக் கைப்படும் –
எல்லாரோடும் வரையாதே பொருந்துமவன் வரக் கூவுகை -உனக்குக் கார்யம் —
குணாகுணம் நிரூபணம் பண்ணாதே –வசிஷ்ட சண்டாள விபாகம் அற எல்லாரோடும் பொருந்துமவன் வரும்படி கூவப் பாராய் –

———

கொத்தலர் காவில் மணித் தடம் கண் படை கொள்ளும் இளங்குயிலே
என் தத்துவனை வரக் கூகிற்றி யாகிற்றிலை யல்லால் கைம்மாறு இலேனே –5-6-

நீ பண்ணின உபகாரத்துக்கு இத்தலையால் செய்வது ஓன்று உண்டோ -என்று என் தலையை உனக்காக்கி –
காலம் எல்லாம் உன் காலிலே வணங்கி வர்த்திக்கும் அத்தனை -என்கிறாள் –

———-

அங்குயிலே உனக்கு என்ன மறைந்து உறவு ஆழியும் சங்கும் ஒண் தண்டும்
தங்கிய கையவனை வரக் கூவில் நீ சாலத் தருமம் பெறுதி–5-7-

உனக்கு ஒரு உக்தியே நேர வேண்டுவது
ஒரு வாய்ச் சொல்லாலே தண்ணீர் -ஆறி இராதே இத்தனையும் செய் பந்தலாம் –

நீ சாலத் தருமம் பெறுதி-
சேஸ்வரமான ஜகத்தை ரஷித்தாய் என்னும் ஏற்றம் பெறுதி
பழையத்தை புதியது ஆக்கினாய் யாவுதி
பண்டும் ஒரு பஷி இறே தன்னை அழிய மாறி சரணாகதனை ரஷித்தது-கபோத உபாக்யானம்
இங்கு உன்னை அழிய மாற வேண்டா
ஓர் உக்தியே நேர வேண்டுவது
இவள் இல்லையாகவே அவன் இல்லையாம்
பின்னை உபய விபூதியும் இல்லையாம் அத்தனை இறே
தருமம் பெறுதி என்னாதே –நீ சாலத் தருமம் பெறுதி–என்கிறது
அங்கு நிஷாதன் ஒருவனும் -இங்கு உபய விபூதியும்
தர்மத பரி ரஷிதா–யுத்த 1-12-என்று அருளிச் செய்தார் இறே பெருமாளும் திருவடியிடம்

——–

சிறு குயிலே திருமாலை ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்று யாகில் அவனை நான் செய்வன காணே–5-8-

நீ அத்தலையிலே சென்று அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது –
நம் குற்றங்களைப் பொறுப்பித்து பதறி நடந்து வரப் பண்ணுவார் அருகே யுண்டு
அவன் பதறி நடந்து வரும்படி சடக்கென கூவ வல்லையாகில்
இவள் படுகிற கிலேசத்துக்கு ஒரு ப்ரேயோஜனம் இல்லை என்று இறே நீ இருக்கிறது
அவன் வந்து கிட்டினவாறே அவன் பிரிந்து நெடுநாள் என்னைப் படுத்தின பாட்டை எல்லாம் உன் சந்நிதியிலே அவனை படுத்தும் படி பாராய் –
அது காண்கையே போரும் இறே உனக்கு பலம்

————

பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக் கொண்டிது நீ கேள்
சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருத்தில் இரண்டைத் தொன்றேல் திண்ணம் வேண்டும்–5-9-

இசைகள் நிரந்த சோலையிலே
அவ விசைகளைக் கேட்டுக் கொண்டு அதுவே போது போக்காக நீ-திரிந்தாய் ஆகிலும் நான் உன்னை விடுவேன் அல்லேன்
ஏனோ தானோ என்று கேளாதே–வண்டுகளை இசையில் நின்றும் காதுகளை மீட்டுக் கொண்டு
என் வாய்ச் சொல்லை குறிப்பாக கேள் –
குயிலே நீ இச் சோலையில் இருந்து ஜீவிகிக்க வேணுமே-என்னை அலட்ஷியம் செய்தால் இதிலே உனக்கு வாழ முடியுமோ
நான் முடிந்து போனால் இச் சோலையை உனக்கு நோக்கித் தருவார் யார்
வலங்கை ஆழி இடக்கை சங்கம் உடையானான எம்பெருமான் இங்கே வரும்படி கூவுதல் ஓன்று
என் கையில் வளைகளைக் கொண்டு வந்து கொடுத்தல் ஓன்று-இவை இரண்டினுள் ஒன்றை நீ செய்தாக வேணும் என்கிறாள்-
கை வளை தங்குவது எம்பெருமான் சம்ச்லேஷத்தால் மட்டுமே ஆகும்-அதுவும் அவன் வந்தால் அன்றி ஆகாதே
இரண்டு பஷமாக அருளிச் செய்வான் என் என்னில்
சத்யவான் உயிர் மீட்ச சாவித்திரி யமன் இடம்-பல பிள்ளைகள் பிறக்கும்படி அருள வேணும் என்றால் போலே
இதுவும் ஒரு சமத்காரமான உக்தி-ஒரு கார்யத்தாலே இரண்டும் தலைக் கட்டும் இறே

நாராயணாதி நாமங்களை குறிப்பிடாதே சங்கோடு சக்கரத்தான் -என்கையாலே
அவனுடைய ஆபரணத்தை யாவது இங்கே கொண்டு சேர்
அல்லது
என்னுடைய ஆபரணத்தை யாவது கொண்டு கொடு -என்கிற ரசோக்தி

———

என்றும் இக்காவில் இருந்து இருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்–—-5-10-

உடைமை தான் அசித் சம்ஸ்ருஷ்டமாய்த்து என்று கால் கடைக் கொள்ளாதே
அழுக்கு உகப்பாரைப் போலே அது தன்னோடு விரும்பும்படியாய் இருக்கிறவனை வரும்படி கூவாயாகில் –
இங்குத்தை நின்றும் துரப்பன்- ஒட்டுவன் – ஒட்டுவன ஒட்டி -இருத்துவன இருத்தி செய்கிறவள் அல்ல இறே இவள்
ஆனால் சொல்லுகிறது என் என்னில் -நான் முடிவன் –
பின்னை இங்கு நின்றும் புறப்பட்டுப் போம் அத்தனை கிடாய்
நான் உளேனாய்ச் சோலை நோக்கித் தர வேணுமே –
நான் முடிந்தால் பின்னை உனக்கு இருப்பு இல்லை கிடாய் -என்கிறாள் –

———

கண்ணுற வென் கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே என்ற மாற்றம்–5-11-

கண்ணுற –அவன் தன்னை வேலுக்கு இரையாக்கத் தேடுகிறாள் –
என் கண்ணுக்கு விஷயமாம்படி ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் வரும்படி –
உன் வடிவைக் காட்டி அவன் வடிவுக்கு ஸ்மாகரமான நீ என்னையும் அவனையும் சேர்க்க வேணும் -என்று சொன்ன பாசுரமாய்த்து –

———-

வண்டினங்காள் தொகு பூஞ்சுனைகாள் சுனையில்
தங்கு செந்தாமரைகாள் எனக்கோர் சரண் சாற்றுமினே–9-5-

இவளுக்கு குறைவற்றார் குறைவாளர் குறை தீர்க்க வேண்டாவோ-
தர்மபுத்திரன் பீஷ்மத்ரோணாதிகள் பக்கலிலே சென்று -உங்களை நான் கொல்லும் விரகு நீங்களே சொல்ல வேணும் என்றால் போலே
பாதிக்க ஒருப்பட்டு நிற்கிற இவற்றைப் பார்த்து நான் உங்களை தப்பி ஜீவிப்பதற்கு ஒரு விரகு சொல்ல வல்லி கோளே -என்று கேட்கிறாள் –
சிகண்டியை முன்னே நிறுத்துவது -வில்லைப் பொகடுகிறோம்-கொன்று கொள்-என்றால் போலே ஒரு விரகு சொல்ல வல்லி கோளே
அஸ்வத்தாமா ஹத -என்றது துரோணன் வில்லை போகட காரணம்-
நாங்கள் இல்லாதவிடம் இன்ன இடம் அங்கே போய் நீ ஜீவி -என்று ஒரு புகல் சொல்ல வல்லி கோளே –
இவை தனக்கு ஒரு புகல் சொல்ல வேண்டும் படி காணும் இவள் தான் புகல் அற்ற படி –

———

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ–9-8-

சிறியாத்தான் பணித்ததாக நஞ்சீயர் அருளிச் செய்யும் படி –
இவள் பிறந்த ஊரில் திர்யக்குகளுக்குத் தான் வேறு பொது போக்கு உண்டோ
கண்ணுறக்கம் தான் உண்டோ –என்று
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -திருவாய் -6-7-2-வி றே பண்ணிக் கொண்டு இருப்பது –
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ-
ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய சிந்தையே தாத்மனோ ஹிதம் ஹரிர் ஹரிர் ஹரிரிதி
வ்யாஹரேத் வைஷ்ணவ புமான் -வங்கி புரத்து நம்பி நித்ய கிரந்தம் –என்னுமா போலே யாய்த்து
கரிய குருவிக் கணங்கள்-வடிவாலும் பேச்சாலும் உபகரிக்குமவை யாய்த்து –
மாலின் வரவு சொல்லி –அவன் முன்னடி தோற்றாதே வரும்படியைச் சொல்லி
மருள் இந்தளம் என்கிற பண்ணைப் பாடுகிறது மெய்யாக வற்றோ
கிந்நு ஸ்யாச் சித்த மஓஹோ அயம் -சீதா பிராட்டி பட்டது எல்லாம் ஆண்டாளும் படுகிறாள் –
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ-இது மெய்யாக வற்றோ –

——-

பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல்வேங்கட
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி யுடையார் வந்து அருள் செய்து
கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே –10-5-

சம்ச்லேஷ சமயத்திலும் உங்கள் பாட்டுக் கேட்டு அறிவுதோம் இறே-
இன்று தொடங்கி பாடுகிறி கோள் அன்றே
என்றும் ஒக்கப் பாடிப் போரா நிற்கச் செய்தே -செவி வழியே நெருப்பைச் சொரிந்தால் போலே –
இற்றைக்கு உதவ இது ஒரு பாட்டை எங்கே தேடினி கோள் –
பாடும் குயில்காள் –
ந து ராஷச சேஷ்டித-ஆரண்ய -17-24–என்கைக்கு ஒருவரையும் பெற்றிலோமீ –
ஈது என்ன பாடல்
இக்காலத்திலே பாடுவதே
இப்பாட்டைப் பாடுவதே
இரண்டருகும் நெருப்புப் பற்றி எரியா நிற்கச் செய்து நடுவே இருந்து சாந்து பூசுவாரைப் போலே இருந்து பாட்டுக் கேட்கும் தசையோ என் தசை
நெருப்பு கிடந்த இடத்தே சுடுமா போலே அவற்றினுடைய ஆஸ்ரயத்தையும் அழிக்கும் என்று இருக்கிறாள்
கெடுவிகாள் உங்களுக்கு செவி இல்லையோ –
நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்–
உங்கள் பாட்டுக் கேட்கைக்கு செவி உண்டானால் வந்து பாடுங்கோள்-
இப்போது இவள் கரணங்கள் ஸ்வ ஸ்வ விஷயங்களை கிரஹிக்க மாட்டாதே இறே கிடக்கிறது
என் ஐம் புலனும் எழிலும் கொண்டு -பெரிய திருமொழி -7-5-9–என்கிறபடியே
வந்து பாடுமின்
இபொழுது உங்கள் சந்நிதி எனக்கு அசஹ்யமாய் இரா நின்றது –போங்கோள்-என்றபடி
உங்கள் சந்நிதி அபேஷிதமாய் இருப்பதும் ஒரு போது உண்டு இ றே -அப்போது வந்து பாடுங்கோள் –

——

வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ–பெருமாள் திருமொழி – 8-4–

வண்டினங்கள்-காமரம் -என்கிற பண்ணிலே -இசை பாடுகிற
ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனவனே

——-

வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை–திரு மாலை-14–

வண்டினம் முரலும் சோலை –
கிண்ணகத்தில் இழிவார் திரளாக இழியுமா போலே
மது வெள்ளத்தால் வண்டுகள் திரள் திரளாக வாய்த்து இழிவது –
கழுத்தே கட்டளையாக மது பானத்தைப் பண்ணி
புக்க த்ரவ்யம் இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலும்
தான் வாய் விட மாட்டாமையாலும் ஆளத்தி வையா நிற்கும் ஆயத்து –
முக்தர் திரள் திரளாக பகவத் அனுபவம் பண்ணி
போக்குவீடாக சாமகானம் பண்ணிக் களிக்குமா போலே
இவ் ஊரில் திர்யக்குகளும் கழித்து வர்த்திக்கும் -என்கை –

குயிலினம் கூவும் சோலை –
கீழ் சொன்னவற்றின் வியாபாரம் இன்றிக்கே
குயில் இனங்கள் ஆனவை இருந்த இடத்திலே இருந்து
தம் தாம் இருந்த பிரதேசத்திலே குளிர்த்தியாலே அன்யோன்யம் அழையா நின்றன –

——–

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை—திரு மாலை-32–

திருச் சோலையிலே மதுவைப் பானம் பண்ண இழிந்த வண்டுகள் ஆனவை
அபிநிவேசத்தாலே பரிச்சேதித்து இலிய அறியாதே இழிந்து
கழுத்தே கட்டளையாகப் பருகி
புக்க மது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே
ஆர்த்துக் கொள்ளா நிற்கும் –
முக்தர் பகவத் அனுபவ ஜனித்த ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக
சாம கானம் பண்ணுமா போலே
ஒரு தேச விசேஷத்திலே –
பகவத் அனுபவத்தாலே
முக்தருக்கு பிறக்கும் விகாசம்
திர்யக்குகளுக்கும் பிறக்கும் படி யாய்த்து
கோயிலின் போக்யதை இருப்பது
காயந்தி கேசித் பிரணமந்தி கேசித் நர்த்யந்தி கேசித் -என்று
மது வனத்தை அழித்த முதலிகள் ஹர்ஷத்துக்கு போக்குவீடு விட்டு
பாடுவார் ஆடுவார் ஒருவரை ஒருவர் சுமப்பார் ஒருவரை ஒருவர் பொகடுவார் ஆனார்கள் இ றே-
இவர் தம்முடைய சத்தை உண்டாகைக்கு கூப்பிடுகிறார் –
இவை பிரீதிக்கு போக்கு வீடாக கூப்பிடுகின்றன –

வண்டு அலம்பும் சோலை –
மது பானம் பண்ண இழிந்த வண்டுகள் மதுவின் மிகுதியாலே
பிரளயத்தில் அகப்பட்ட மார்கண்டேயனைப் போலேயும்
கிண்ணகத்தில் அகப்பட்ட திருச்சோலை போலேயும்
அலையா நிற்கும் யாய்த்து –

———

மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-அமலனாதி பிரான்–4-

ஸ்ரீ வைகுண்ட நாதன் பெரிய பெருமாள் ஆனவாறே
நித்ய சூரிகளும் வண்டுகளும் மா மயில்களும் ஆனபடி
சர்வை பரி வ்ருதோ தேவைர் வாநரத்வ முபாகதை -என்னக் கடவது இறே
ராஜா வெள்ளைச் சட்டை இட்டால் அடியார் கறுப்புச் சட்டை இடும் இத்தனை இறே-
வினை அற்றவாறே ஆடல் பாடலுக்கு இடம் கொடுத்த படி

ராவண வதம் பண்ணின வீர லஷ்மி யுடனே நின்ற அழகைக் கண்டு
ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரம் பண்ண -அப்சரஸ்ஸூக்கள் மங்கள ந்ருத்தம் பணணினாப் போலே –
ஆத்மாநாம் மாநுஷம் மன்யே -என்கிற பெருமாளுடைய பூமிகைக்கு அநுரூபமாக
முக்தரும் நித்தியரும் கூடி -ரூபாந்தரம் -கொண்டு வந்தார்கள் என்னலாம்படி
அதி மதுரங்களாய் -ஜஞாநாதி குண மகாத்தையும் உடையவையான வண்டுகள் காலப் பண்கள் பாட –

——–

குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-கண்ணி நுண் சிறுத் தாம்பு — 10-

இவரை அவகாஹித்த திர்யக்குகளும் களித்து வர்த்திக்கும் படி இவரைக் கிட்டினார்க்கும் உண்டு காணும்
ஏதத் சாம காயன் நாஸ்தே -என்கை பகவத் விஷயத்துக்காகில் இ றே ஒரு தேச விசேஷத்து ஏறப் போக வேண்டுவது
ஏற்றம் உள்ள விஷயத்தைப் பற்றினார்க்கு இங்கே கிடைக்கும் போலே காணும்
முக்தர்க்கு இ றே அங்குப் போக வேண்டுவது -முமுஷுக்களுக்கு கிடைக்கும் இடம் இ றே இவ்விடம்
எம்பெருமானோடு நித்யரோடு முக்தரோடு வாசியற ஹ்ருஷ்டராம் படி இ றே ஆழ்வாருடைய பூர்த்தி

இவர் ஆற்றாமையாலே ஒரு காலத்திலேயே காண வாராய் என்று கூப்பிடுவதுமொரு பாசுரம் உண்டு-
ஹர்ஷத்தாலே யாவர் நிகர் அகல் வானத்தே -என்று களித்துச் சொல்லுவதும் ஒரு பாசுரம் உண்டு-
இரண்டு பாசுரத்துக்கும் குயில் யாயிற்று பயிற்ருவன
இவர் பேச்சைக் கேட்க செவி ஏற்றாலே அவையும் இவர் பாசுரத்தைச் சொல்லும் யாயிற்று

திருவாய் மொழி பாடக் கற்றுப் பாடா நின்றால் சேதனான நான் திருந்தச் சொல்ல வேணுமோ
சாகா சம்பந்தம் உண்டாகையாலே அக்குயில்கள் திருவாய் மொழியைப் யாய்த்து பாடுவது
(சாகா சம்பந்தம் -கிளை சம்பந்தம் ஆயிரம் பாசுரங்கள் சம்பந்தம் ) –அவை பாடும் குயில்கள் ஆகையாலே
தம்பிரான்மாரைப் போலே ஆழ்வாருக்கு திருவாய் மொழி பாடுவான வாய்த்து-
(விண்ணப்பம் செய்வார் முன்னே இரண்டு பேர் சேவிக்க –அத்தை அரையர் அனுவதிக்குமா போலே
ஆழ்வார் முன்னே முன்னுரு அனுசந்திக்க -குயில்கள் தம்பிரான் பாட ஆழ்வாரும் கூட பாடுகிறார் என்றவாறு )
ஒரு தேச சம்பந்தத்தாலே செவ்வாய்க் கிளி நான்மறை பாடுமானால்-(தில்லை திருச் சித்ரகூடம் பாசுரம் கலியன் )
இத்தேச வர்த்திகளுக்குத் திருவாய் மொழி பாடச் சொல்ல வேண்டா விறே-
தாம் மதுர வாக்காகை யாலே மதுர வாக்கான குயிலை இட்டுப் பொழிலை சிறப்பிக்கிறார்-

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–4-4-மண்ணை இருந்து துழாவி,–சாரங்கள்-

May 27, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தேன பிரகர்ஷம் அதிமாத்ர பவம் ஸூ கீயம் –
சாத்ம்யம் விதாதுமத தூரகத முகுந்தே
சம்பந்திநஸ்ய சத்ருநஸ்ய விலோக்ய
சௌரெ ப்ரமை யால் முனி ஆர்த்திம்

தேன பிரகர்ஷம் அதிமாத்ர பவம் ஸூ கீயம் –
சாத்ம்யம் விதாதுமத -சாத்ம்யம் ஆவதற்கு
தூரகத முகுந்தே -தள்ளிப் போக தளன்று
சம்பந்திநஸ்ய சத்ருநஸ்ய
விலோக்ய சௌரெ-பார்த்து
ப்ரமை யால்
முனி ஆர்த்திம்
பொறுக்கப் பண்ணி -சாத்ம்ய போக பிரதத்வம் -9-2- புளிங்குடி
போக சாந்தனம் -பண்ணி
சாந்த்யத்வம் குறைக்கும் தன்மை இங்கு
பொறுக்க பொறுக்க போகம் கொடுக்கும் தன்மை -9-2-புளிங்குடி -இங்கு போகம் குறைக்கும் தன்மை –

————

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

பூம்யாத் தேகி சாகராத் தேகி ஜ்வலன சசிமுகைகி
வச்துபூர் வத்ச்ய பூர்வ ந்ருத்யைத்ய லோகாதிபி
ஊர்த்வ புண்டர தளம் துளசி தாமம் பிருத்வி ஷிப்தி
ஆத்மீய தாஸ்யை சுவீக ஸூ சதுரச

1-பூம்யாத் தேகி –மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்–மண்ணை -ஆதி -விண் –

2-சாகராத் தேகி –பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;

3-ஜ்வலன சசிமுகைகி–அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்
ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்;

4-வச்துபூர் வத்ச்ய பூர்வ –கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;

5–ந்ருத்யைத்ய –கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;

6–லோகாதிபி-ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
ஊர்த்வ புண்டர தளம் -நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
துளசி தாமம் –நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;

8–பிருத்வி ஷிப்தி–திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;

9-ஆத்மீய தாஸ்யை –விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;

10–சுவீக ஸூ சதுரச—-மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?

வல்வினை தீர்க்கும் கண்ணனை–வண் துவரை பெருமாள் விச்லேஷத்தால் -ஆச்ரிதை துக்கிப்பியா நின்றான் –
இறுதியில் விலக்கினான் அன்னை கைவிட்டதும் –

————-

மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;அன்னே!என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!–4-4-1-

———–

பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2-

———–

அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–4-4-3-

———-

ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்;
நின்ற குன்றத்தினை நோக்கி, ‘நெடுமாலே! வா!’ என்று கூவும்;
நன்று பெய்யும் மழை காணில், ‘நாரணன் வந்தான்’ என்று ஆலும்;
என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே.–4-4-4-

—————

கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–4-4-5-

———

கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;
வாய்த்த குழல் ஓசை கேட்கில், ‘மாயவன்’ என்றுமை யாக்கும்;
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், ‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே!–4-4-6-

————

ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.–4-4-7-

————-

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8-

———

விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;
கரும் பெரு மேகங்கள் காணில், ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;
பெரும் புலம் ஆநிரை காணில், ‘பிரான் உளன்’ என்று பின் செல்லும்;
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே.–4-4-9-

———-

அயர்க்கும்;சுற்றும் பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;
வியர்க்கும்; மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?–4-4-10-

————

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–4-4-11-

———

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -34-பாசுரம்–

இதில்
சத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்தி பதார்த்தங்களையும்
அவனாகவே பிரமித்து பேசின பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில் –
கீழ் –
காதல் மையல் ஏறினேன் -என்று
பிரணயித்வ குணத்தை அனுபவித்து விளைந்த
ப்ரீதி பிரகர்ஷம் ஆஸ்ரயத்தையும் அழிக்கும் படி கரை அழித்துப் பெருக
அத்தை அரை ஆறு படுத்துக்கைக்காக அவன் பேர நிற்க –
பிரிந்தது அவனை ஆகையாலே அவசன்னராய்
ராம குணங்களுக்கு இட்டுப் பிறந்த பரத ஆழ்வான்
ஒரு வேடன் வாய் இட்டு
ராம சரிதத்தைக் கேட்டு
தரித்தால் போலே
இவ் வாழ்வாரும் அவனோடு சத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்தி பதார்த்தங்களையும்
அவனே என்று பிச்சேறும் படி
தமக்குப் பிறந்த அவஸ்தா விசேஷத்தை
அன்யாபதேசத்தாலே பேசின
மண்ணை இருந்து துழாவி -யின் -அர்த்தத்தை
மண்ணுலகில் -இத்யாதியால் -அருளிச் செய்தார் -என்கை –

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் மாறன்
பெண்ணிலைமை யாய்க் காதல் பித்தேறி -எண்ணிடில் முன்
போலி முதலான பொருளை யவனாய் நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு–34-

வியாக்யானம்–

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் –
பூலோகமான இவ் விபூதியில் முன்னம்
கோவை வாயாளிலே பெறாப் பேறான சம்ச்லேஷத்தை யுண்டாக்கி
சர்வேஸ்வரன் விச்லேஷிக்கையாலே –

மாறன் பெண்ணிலைமையாய்க் –
ஆழ்வார்
அபலையினுடைய
அவஸ்தையை
அடைந்து –

காதல் பித்தேறி –
என் கொடியே பித்தே -என்னும்படி
பக்தியாலே காதல் பித்தேறி –
க்வசிதுத் பரமதே -இத்யாதிப்படியே சித்த விப்ரகம் பிறக்க –

எண்ணிடில்-
அந்த பித்தேறின பிரகாரத்தை நிரூபிக்கில் –

அன்றிக்கே –
பித்தேறி எண்ணிடில் –
பித்தேறின ஆகாரத்தோடே
தாம் நிரூபிக்க புகில்

முன் போலி முதலான பொருளை யவனாய் நினைந்து –
அதாவது –
மண்ணை இருந்து தொடங்கி
அயர்க்கும் அளவும் பிரதிபாதிக்கப் படுகிற
முன் கண்ட சத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்த பதார்த்தங்களையும்
அவனாகவே பிரதிபத்தி பண்ணி -என்கை –

இது எத்தாலே என்னில்
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு
மையல் தனின் வீறு -மேல் விழுந்தான்-
வயாமோஹ அதிசயத்தாலே
அவற்றிலே அத்ய அபி நிவிஷ்டரானார்
இவருடைய அபி நிவிஷ்ட அதிசயம் இருந்த படி என் என்று
ஜீயருக்கும் இது கண்டு
சஹிக்க ஒண்ணாதபடி யாயிற்று —

சத்ருச பதார்த்தங்களும்
சம்பந்த பதார்த்தங்களும் ஆவன –

சத்ருச பதார்த்தம் –
விண்
கடல்
நாயிறு
செந்தீ
தண் காற்று
ஒன்றிய திங்கள்
நின்ற குன்றம்
நன்று பெய்யும் மழை
கூத்தர்
நீறு செவ்வே இட
திரு வுடை மன்னர்
உரு வுடை வண்ணங்கள்
கருவுடைத் தேவில்கள்
விரும்பிப் பகவர்
கரும் பெரு மேகங்கள் —

சம்பந்தி பதார்த்தங்கள் ஆவன –
நாறு துழாய்
வாமனன் மண்
கோமள வான் கன்று

சம்பந்த பதார்த்த சத்ருசங்கள் –
போம் இள நாகம்
வாய்த்த குழலோசை
ஆய்ச்சியர் வெண்ணெய்
என்று விபஜித்து ஆயிற்று ஆச்சான் அருளிச் செய்யும் படி-
அடையவளைந்தான் அரும் பெரும் உரை அருளிச் செய்த ஆத்தான் ஜீயர் –

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்