ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
சப்தசமஸ்ய சாதகஸ்ய ஸ்வ பீஈ விஷ்யேந்திரேப்பிய
தஸ்மை தஸ்மிந் அபி பிரபதனே
வி பலே விஷண்ணா ஈசேன பாதிதம் இவ-
கர்ப்பே பாதயித்ருத்வம்- ஆத்யே முனி
அவதத்-இப்படி பேசினார்
சப்தசமஸ்ய சாதகஸ்ய -முதலில் கூறினார்
ஸ்வ பீஈ -தன்னுடைய பயத்தை
விஷ்யேந்திரேப்பிய-இந்திரியங்கள் விஷயங்களால்
தஸ்மை -தான் பயப்பட்டு இருக்கும் தன்மையை
தஸ்மிந் அபி பிரபதனே -கீழே திருவேங்கடத்தில் சரணாகதி பண்ணியும்
வி பலே விஷண்ணா-பலிக்காமல் துக்க வசப்பட்டு
ஈசேன பாதிதம் இவ-அவனாலே தள்ளி விடப்பட்டவரைப் போல்
கர்ப்பே பாதயித்ருத்வம்-இந்த்ரியர்த்த -வன் சேற்று அள்ளலில் தள்ளும் தன்மையை நினைத்து வருந்து
ஆத்யே முனி-
——–
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-
நிஸ் சங்க்யா ஆச்சர்ய யோகாத் அதி மதுர தயா ஜகத் காரணத்த்வாத்
நியூக்ரோகாத்வ பூம்நா த்ரி தசர்கள் பதித்தாயா வாக் மனஸ் சந்நிதாயாத்
பூயூஷம் ஸ்பர்ச நாத் அகில பதிதயா லோக சம்ரக்ஷகத்த்வாத்
ஸாத்யா சங்க்யாம் ச ஹேத த்ரி தனு அசுர ஹா சிந்தாஹத்யாதி
1–நிஸ் சங்க்யா ஆச்சர்ய யோகாத்–எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!
2-அதி மதுர தயா–கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!
3-ஜகத் காரணத்த்வாத் –ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே
4-நியூக்ரோகாத்வ பூம்நா–யாதும் யாவரும் இன்று நின்னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலினீளிலை
மீது சேர் குழவி! வினையேன் வினை தீர் மருந்தே!
5-த்ரி தசர்கள் பதித்தாயா –ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!
6-வாக் மனஸ் சந்நிதாயாத்–பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.
7-பூயூஷம் ஸ்பர்ச நாத்-குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன்னமுதோ
8–அகில பதிதயா–என்னம்மா! என்கண்ணா!இமையோர் தம் குலமுதலே!
9–லோக சம்ரக்ஷகத்த்வாத்–நில முதல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப் பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!
10-ஸாத்யா சங்க்யாம் ச ஹேத–த்ரி தனு அசுர ஹா சிந்தாஹத்யாதி–
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–என்றும்
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே-என்றும் –
புளிய மரத்தடியில்–
———-
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –
ததேவம் சஷ்டாந்தம் விஹித ச விசேஷ பிரபதன
பல அலாபாத் கின்னஸ் த்வரிதா ஹ்ருதயே சப்தம சதே
அனிஷ்டோப ந்யஸ பிரபத்திபி அநிஷ்ட பிரசமனே
ஸ்வதா சித்தசிலம் ப்ரபும் அபிமுகம் சம்முகாயதி –15-
ததேவம் சஷ்டாந்தம் விஹித ச விசேஷ பிரபதன–ஆறு அங்கங்களுடன் கீழே ஆறு பத்துக்களிலும் பிரபதனம் செய்த ஆழ்வார்
பல அலாபாத் கின்னஸ் –பலம் உடனே கிட்டாததால் மனஸ் சிதிலம் அடைந்து
த்வரிதா ஹ்ருதயே சப்தம சதே அனிஷ்டோப ந்யஸ பிரபத்திபி அநிஷ்ட பிரசமனே -ஆஸ்ரிதர்களை
அனிஷ்டங்களிலே உழன்று இருக்க விடாத ஸ்வ பாவனாய் இருக்க
ஸ்வதா சித்தசிலம் ப்ரபும் அபிமுகம் சம்முகாயதி –மஹா விச்வாஸம் கொண்டு தனக்கு முன் தோன்றி ஸம்ஸலேஷிக்க பிரார்த்திக்கிறார்
இதுவே சங்கதி ஏழாம் பத்துக்கு -ஸ்வா பாவிக அநிஷ்ட நிவாரகன் தானே –
———-
உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1-
———
என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப் பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!–7-1-2-
——-
வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன திருவடிச்
சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3-
———-
சூது நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன்னடிப்
போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்
யாதும் யாவரும் இன்று நின்னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலினீளிலை
மீது சேர் குழவி! வினையேன் வினை தீர் மருந்தே!–7-1-4-
————
தீர் மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5-
———-
விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6-
———
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்?
அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர்
குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன்னமுதோ!–7-1-7-
———
இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா!இமையோர் தம் குலமுதலே!–7-1-8-
——–
குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில முதல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9-
———-
என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10-!–
———
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே.–7-1-11-
——
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -61-பாசுரம்–
அவதாரிகை –
இதில்-இந்த்ரிய பயாக்ரோசத்தை அருளிச் செய்த ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
உலகமுண்ட பெரு வாயனிலே ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே ஆர்த்தி பரவசராய்-
பூர்ண பிரபத்தி பண்ணினவர்
தொடங்கின கார்யம் தலைக் கட்டினால் அல்லது கார்யம் செய்யோம் -என்று இருக்கும்
நிரந்குச ஸ்வதந்த்ரனான ஈஸ்வரன்
பழையபடியே தம்மை சம்சாரத்திலே வைக்கக் கண்டு
சம்சாரம் ஆகிற சிறைக் கூடத்திலே புண்ய பாபங்கள் ஆகிற இரு விலங்கை இட்டு
இந்த்ரியங்கள் ஆகிற படர் கையிலே கண் பாராமல் நலியுங்கோள் என்று காட்டிக் கொடுத்து
நம் எளிவு கண்டு சிரித்துக் கொண்டு
ஸ்ரீ திரு நாட்டிலே தானும் நித்ய ஸூரிகளுமாக இருக்கிறான் என்று அனுசந்தித்து
தம்முடைய ஆர்த்தி அதிசயத்தையும்-
ரஷகத்வ உபாய யோகியானவன் குணங்களையும்
அவன் திரு முகத்தைப் பார்த்து சொல்லா நின்று கொண்டு
கேட்டார்க்கு தரிப்பு அரிதாம் படி கூப்பிடுகிற
உண்ணிலாவிய -யின் அர்த்தத்தை உண்ணிலா ஐவர் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –
——————————————————–
உண்ணிலா வைவருடன் யிருத்தி யிவ்வுலகில்
எண்ணிலா மாயன் எனை நலிய -எண்ணுகின்றான்
என்று நினைந்து ஓலமிட்ட இன் புகழ் சேர் மாறன் என
குன்றி விடுமே பவக் கங்குல்—61-
இருத்தி-இருக்க வைத்து
பவக் கங்குல்-சம்சாரமாகிய காள ராத்திரி –
——————————————————-
வியாக்யானம்–
உண்ணிலா வைவருடன் யிருத்தி யிவ்வுலகில் –
இவ் வுலகில் -உண்ணிலா வைவருடன் யிருத்தி-
இருள் தரும் மா ஞாலமான சம்சாரத்திலே ஆந்த்ர சத்ருக்களாய் வர்த்திக்கிற
ஐந்து இந்த்ரியங்களோடே இருக்கப் பண்ணி –
ஐம் புலன் இவை மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால் -என்றத்தைப் பின் சென்ற படி –
எண்ணிலா மாயன் எனை நலிய -எண்ணுகின்றான் –
எண்ணிலா மாயன்-இவ்வுலகில் -உண்ணிலா வைவருடன் யிருத்தி-எனை நலிய -எண்ணுகின்றான் –
அசங்க்யாதமான ஆச்சர்ய சக்தி உக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன்-தமோபிபூதமான இவ் விபூதியிலே
அஹம் அர்த்தமான ஆத்மாவை-அறிவு அழியப் பண்ணுமதான ஐந்து இந்த்ரியங்களும்
ஆத்மானுபந்தி என்னலாம் படி பொருந்தி இருக்கும்படி ஆக்கி துர்பலனான என்னை
அவற்றைக் கொண்டு விஷயங்களிலே தள்ளி பாதிக்கைக்கு கார்ய விசாரம் பண்ணா நின்றான்-
அதாவது
1-உண்ணிலாவிய வைவரால் குமை தீற்றி என்னை யுன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் எண்ணிலா பெரு மாயனே -என்றும்
2-ஓர் ஐந்து இவை பெய்தி இராப்பகல் மோதிவித்திட்டு -என்றும்
3-ஐவரால் வினையேனை மோதுவித்து -என்றும்
4-ஓர் ஐவரைக் காட்டி -என்றும்
5-ஐவரை நேர் மருங்கு உடைத்தா அடைத்து -என்றும்
6-ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த -என்றும்
7-சுமடு தந்தாய் -என்றும்
அவன் இப்படி ஐவரைக் கொண்டு செய்வித்தான் என்று–அவன் மேலே பழி இட்ட படி -என்கை
எண்ணிலா மாயன் எனை நலிய எண்ணுகின்றான் என்று நினைந்து –
சர்வஞ்ஞனாய்-சர்வசக்தியாய் இருக்கிற ஸ்ரீ ஈஸ்வரன்
அஜ்ஞனாய்-அசக்தனாய்-சரணம் புகுந்த என்னை
நலிந்தது போராமல் இன்னும் நலிய எண்ணுகின்றான் என்று எண்ணி
நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் எண்ணிலா பெரு மாயனே -என்றத்தைக் காட்டுகிறது-
நலிய எண்ணுகின்றான் என்று நினைந்து ஓலமிட்ட –
ஸ்ரீ பரம தயாளு வானவன் -நிர்த்த்தயரைப் போலே தமிப்பிக்க யத்னம் பண்ணா நின்றான் என்று எண்ணி ஓலமிட்ட –
1-எண்ணிலா பெரு மாயனே -என்றும்
2-கார் முகில் வண்ணனே -என்றும்
3-சோதி நீண் முடியாய் -என்றும்
4-வினையேன் வினை தீர் மருந்தே -என்றும்
5-விண்ணுளார் பெருமானேயோ -என்றும்
6-பத்தியின் உள்ளாய் பரமீசனே -என்றும்
7-கொடியேன் பருகு இன்னமுதே -என்றும்
8-என் அம்மா என் கண்ணா -என்றும்
9-முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியோ -என்றும்
இப்படி இந்த்ரிய பயத்தாலே ரஷகத்வாதி குணங்களுக்கு வாசகமான அவன் திரு நாமங்களைச் சொல்லி –
சாகா ம்ருகா ராவண சாயகர்த்தா -என்றும்
ஹா ராம சத்ய வ்ரத தீர்க்க பாஹோ ஹா பூர்ண சந்திர ப்ரதிமா ந்வக்த்ர-(ஸூ ந்தர -28-11)-என்றும்
சாகா மிருகங்களைப் போலே இவரும் கண் வாளிக்குடைந்தடைந்தும்-கண் என்னும் வாளி -அம்புக்கு உடைந்து அடைந்து
ம்ருகீ சிம்ஹைரி வாவ்ருதா -என்னும்படி ம்ருகசாபாஷி யானவள் ராஷசிகள் மத்யம் அசஹ்யமாய்
அவர் குளிர்ந்த முகத்திலே விழிக்க ஆசைப் பட்டு கூப்பிட்டால் போலேயும் கூப்பிட்டபடி-
இன் புகழ் சேர் –
நாடடைய இந்த்ரிய கிங்கராய்-தத் அலாபத்தாலே கூப்பிட
இவர் இந்த்ரிய பய குரோசம் பண்ணுகை யாயிற்று-இவருக்கு இன் புகழ் சேர்ந்தது
காமாத்மத கல்வபி ந ப்ரசஸ்தா -என்னக் கடவது இறே –
(காம ரூபமாய் இருந்தாலும் கொண்டாடும் படி என்றபடி )
பாதம் அகலகில்லாத் தம்மை அகற்றுவற்றின் நடுவே இருத்தக் கண்டு -நலிவான் – சுமடு தந்தாய் -ஒ -என்று
சாதன பலமான ஆக்ரோசத்தோடே-பழி இட்டு – என்று இறே ஸ்ரீ அழகிய பெருமாள் நாயனார் அருளிச் செய்தது
இன் புகழ் சேர் மாறன் என –
கேட்க்கைக்கு இனியதாய் ஸ்லாக்கியமான யஸஸ்ஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் -என்று அனுசந்திக்க –
குன்றி விடுமே பவக் கங்குல் –
இவ் உக்தி மாத்ரத்தாலே-சம்சாரம் ஆகிற காளராத்ரி நசித்து விடும்
இது நிச்சயம் –
குன்றுதல் -குறைதல்
ஸ்ரீ ஆழ்வாரைப் போலே-அமுதம் கொண்ட மூர்த்தியோ -என்று கூப்பிடுகை அன்றிக்கே
அவர் திரு நாமத்தைச் சொல்லவே-விடியா வென்னரகான சம்சாரத்துக்கு விடிவு பிறக்கும் —
——————————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்