Archive for May, 2020

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –74- தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக் கூராழி கொண்டு குறைப்பது – இத்யாதி —

May 25, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

உண்மை நல் ஞானம் என்று கீழில் பாட்டில் ப்ரஸ்துதமான யதாஜ்ஞானத்துக்கு விரோதிகளான பாஹ்ய குத்ருஷ்டிகளை
நிரசித்து அருளுகிற அளவில் –
ஸ்ரீ சர்வேச்வரனிலும் காட்டில் அனாயாசேன செய்து அருளின பிரகாரத்தை அனுசந்தித்து-வித்தராகிறார் -இதில்-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ் பாட்டிலே
ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய பரம கிருபா கார்யமான ஔதார்யத்தாலே
சேதனர் எல்லாரையும் குறித்து யதாவஸ்த்தித ஞான உபதேசம் பண்ணி யருளினார் என்று அருளிச் செய்து –
இதிலே –
சத் அசத் விவேக சூன்யராய் ஸ்வ ஞாநாதி லங்கனம் பண்ணிப் போருகிற துஷ்டரை -ஸ்ரீ சர்வேஸ்வரன்
அநேக அவதாரங்களையும் -அநேக யத்னங்களையும் பண்ணி -ஸ்ரீ சக்ர ஹச்தனாய் கொண்டு -வருத்தத்தோடே
நிரசித்த வோபாதி யன்றிக்கே –
தாம் உபதேசித்த ஜ்ஞானத்துக்கு விரோதிகளாய் ஜ்ஞான லவ துர்விதக்தராய் கொண்டு
திரண்டு கிடக்கிற பாஹ்ய குத்ர்ஷ்டிகளை தாதாத்விகையான ஒரு கஷியாலே நிரசித்தார் என்று-
கஷி -யுக்தி என்றவாறு-அவர் தம்முடைய வைபவத்தை கொண்டாடுகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ எம்பெருமானார் உரைத்த உண்மை நல் ஞானத்திற்குப் பகைவரான புறச் சமயத்தவரையும் –
அகச் சமயத்தவரான குத்ருஷ்டிகளையும் -களைந்து எறியும் விஷயத்தில்
ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பார்க்கிலும் அவ் எம்பெருமானார் எளிதினில் காட்டி யருளும் திறமையை பாராட்டி
அதனில் ஈடுபடுகிறார்-
நாலாவது பாசுரம் -இதிலும் -எம்பெருமானாரின் வண்மை பேசுகிறார்-மூன்று பாசுரங்களில் அருளியதை இங்கும் பின் னாட்டுகிறது –
அநுத்தமான கல்யாண குணங்களை உடையவராய்,நமக்கு சேஷி களாய் இருக்கிற எம்பெருமானார்
எங்கும் தீர்தகராய் திரிந்து-

தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டலனைய வண்மை
ஏரார் குணத் தெம்மி ராமானுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே – -74- –

பத உரை –
மறையின் -வேதத்தின் உடைய
திறம்-பிரகாரத்தை
தேரார் என்று -தெளிந்து கொள்ளாதவர்களாய் இருக்கிறார்களே என்று
மாயவன் -வியக்கத் தக்க அறிவாற்றால் வாய்ந்த ஸ்ரீ சர்வேஸ்வரன்
தீயவரை -கொடியவர்களை
குறைப்பது -துண்டிப்பது
கூராழி கொண்டு -கூர்மை வாய்ந்த ஸ்ரீ சக்ராயுதத்தினாலே
கொண்டலனைய -மேகத்தை ஒத்த
வண்மை -வள்ளல் தன்மை வாய்ந்தவரும்
ஏரார் -அழகார்ந்த
குணத்து -குணங்கள் உடையவருமான
எம் இராமானுசன் -எங்களுக்கு தலைவரான ஸ்ரீ எம்பெருமானார்
அவ் எழில் மறையில் -அப்படிப்பட்ட அழகிய வேதத்தில்
சேராதவரை -ஏற்புடமை இன்மையால் பொருந்தாதவர்களை
சிதைப்பது -சிதைந்து அழியும் படி செய்வது
அப்போது ஒரு சிந்தை செய்தே -அவ்வப்போது தோன்றும் ஒவ்வொரு யுக்தியைக் கொண்டே

வியாக்யானம்
நித்யத்வ அபௌருஷேயத்வ யுக்தமாய் -பிரத்யஷாதி பிரமாண விலஷணமாய் -சமஸ்த சேதன ஹித அஹித ஜ்ஞாபகமாய் –
தம்முடைய சாசனா ரூபமாய் -இருந்துள்ள வேதத்தின் உடைய பிரகாரத்தை நிரூபிக்கிறிலர்கள் என்று
ஆச்சர்ய ஞான சக்திகனான ஸ்ரீ சர்வேஸ்வரன் அஞ்ஞாதி லங்கன சீலரான துஷ்டரை சேதித்து அருளுவது –
கூரிய ஸ்ரீ திரு ஆழியாலே –
சர்வ விஷயமாக உபகரிக்கும்படியாலே மேகத்தோடு ஒக்க -சொல்லலாம்படியான ஔதார்யத்தை உடையவராய் –
அனுத்தமமான கல்யாண குணங்களை உடையவராய் –நமக்கு சேஷிகளாய் இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் –
அந்த விலஷணமான வேதத்தில் -அப்ராமணிய புத்தியாலும் – அயதார்த்த பிரதிபத்தியாலும் -பொருந்தாத நிலை உடையவர்களை
பங்கயத்து அருளுவது -தாதாத்விகைகளான யுக்திகளாலே
ஈதொரு வீர்யம் இருக்கும் படியே -என்று கருத்து .
குறைக்கை-சேதிக்கை
சிதைக்கை-அழிக்கை-
அப்போதொரு சிந்தை செய்கையாவது -அப்போதொரு விசாரத்தைப் பண்ணுகை.

ஸ்ரீ திருவாழி எதிர் பார்ப்பான் அவன் -இவர் யுக்தி மாத்ரத்தால் –
உண்ணும் குலத்தில் பிறந்து –தசரத கோபாலர் 18 நாடான் -மாதவன் –
திர்யக் காலில் விழுந்தும் ,-ஸ்தம்பத்தில் இருந்து ஆவிர்பவித்தும்..-இப்படி எல்லாம் உயர்ந்த செயல்களை செய்தும் –
அலங்கிரித்த சிரை சேதம்-சம்சாரிகளை போல பல தடவை பிறந்து- பால்ய சேஷ்டிதங்களாலே விரோதி நிரசனம்-ஸ்ரீ கண்ணன் –
ஸ்ரீ பெருமாள் போலே வில் வித்யை இத்யாதி கற்ற பின் இல்லாமல் -அவனும் ஸ்ரீ ஆழி உதவியால் –
ஸ்ரீ ராமானுஜர் அப்போது ஒரு சிந்தை செய்தே -அவ வப்போது ஒவ்வொரு சிந்தை –
யதாயத்தா தர்ம -தலை குனிவு சொல்லிப் போந்தத்தை இவர் சிந்தை செய்தே – யுக்தி சாதுர்யத்தால் மட்டுமே –
கிருபை பிரார்த்தனை -70-மேலே நான்கிலும் வண்மை விவரித்து அருளுகிறார் –
ஞான வைபவத்தை விட கிருபை வண்மை பற்றியே பல பாசுரங்கள் –
ஸ்ரீ கூராழி கொண்டு குறைப்பது -ஸ்ரீ மாயவனை இதனால் குறைத்து என்றபடி –
மழுங்காத ஞானம் -படை ஞானம் இரண்டும் எதிர்பார்க்காமல் -சுடர் சோதி -வந்த பின்பு தானே மறையாமல் இருந்தது –

மறையின் திறம் –
வாசா விருபா நித்யயா -என்கிறபடி நித்தியமாய் –
அசேஷ சேமுஷி தோஷ தூஷித மாலின்ய விநிர் முக்த வேதாக்ய ஷரராசேரேவ-என்கிறபடியே –
ப்ரம பிரமாதாதி தோஷ துஷ்ட புருஷ ப்ரநீதம் -அன்றிக்கே –
அபௌருஷேயமாய் -அத ஏவ நித்ய நிரவத்யமாய் -தர்மஜ்ஞ சமயம் பிரமாணம் வேதச்ச – என்கிறபடி பிரமாண தமமாய் –
அத ஏவ பிரத்யஷ்யாதி சகல பரமான விலஷணமாய் –
சாஸ்திர யோநித்வாத் -என்றும் –
ஹர்த்தும் தமஸ் சத சதீ ச விவேக்து மீசோ மாநம் பிரதீபமிவகாருணி கோ ததாதி -என்றும் சொல்லுகிறபடியே
தன்னுடைய சாசன ரூபமாய் -சத் அசத் விவேசநமாய்-மாதா பித்ர் சஹஸ்ரேப்யோ வஸ்த்ரலதரம்-என்கிறபடி-
ஆப்த தமமாய் -ஸ்ருதி ஸ்மரதி மம ஆஜ்ஞ்ஞை -என்றும் —
தன்னுடைய சாசனா ரூபமாய் இருந்துள்ள
வேதத்தினுடைய பிரகாரத்தை -த்யாஜ்ய உபாதேய விவேசன ரூபமான சிஷையை
சத்யம் வத -தர்மம் சர -ஸ்வாத் யாயான் மாப்ரமத -ஆசார்யாய ப்ரியம் தனமாஹ்ரத்த்ய பிரஜாதந்தும் மாவ்யவச்செத்ஸீ -என்றும்
வேத புருஷனாலே போதிக்கப்பட்ட பிரகாரத்தை -என்றபடி –

தேரார் -என்று –
நிரூபிக்கிறிலர்-என்று –
இதமஸ்தீத மபிமே பவிஷ்யதி புனர்த்தனம் -அ ஸௌ மயாஹதஸ் சத்ரூர் ஹ நிஷ்யோ சாபரா நபி -என்ற
ராவணா திகளைப் போலே -வேதத்தை தெளிந்து வைத்தே -தத் விபரீத மார்க்க நிஷ்டராய் போனார்கள் என்று –

தேரார் குறைப்பது –
மறையின் திறத்தை எவ்வளவு எடுத்து உணர்த்தினாலும் தெளிகிலரே என்று
வைதிகர் இல்லாத தீயவரை ஸ்ரீ மாயவன் குறைக்கின்றான் .
மறையின் திறங்களாவன-
நித்தியமாய் இருத்தல் -ஆராலும் ஆக்கப்படாமை -பிரத்யஷ பிரமாணம் –
முதலிய பிரமாணங்களை விடச் சீரிய பிரமாணமாய் இருத்தல் –
ஆப்த தமமாய் எல்லா சேதனருக்கும் நல்லதும் தீயதும் உணர்த்துதல் –
ஸ்ரீ எம்பெருமானுடைய ஆஜ்ஜையாய் இருத்தல் -என்பவையாம் .
தனது ஆணையான மறையை ஏற்காதவர்கள் -த்ரோஹிகளாய் ஆதலின் –தீயவர்கள் ஆகிறார்கள்
சாஸ்திர விதியை மீறுபவர்கள் தன்னோடு மாறுபடும் அசுரர்கள் ஆதலின்
அவர்களைத் தன் ஸ்ரீ கூராழி கொண்டு குறைக்கிறான் ஸ்ரீ மாயவன் –
அசுரப் பிறப்பாளர் -ஒரு காலும் மறையின் திறம் தேராதவர்கள் ஆதலின் –அவர்களை ஸ்ரீ கூராழி யால் குறைப்பது தவிர்க்க
ஒண்ணாதது ஆயிற்று –

மாயவன் –
சகல ஜகத் காரண பூதனாய் இருந்து வைத்தே ராஷசருக்கு பஷன போக்யமான
மானிட சாதியில் தான் பிறந்தும் –
ஒரு திர்யக்குக்கு மோஷத்தை கொடுத்தும் –
ஒரு திர்யக்கின் காலில் விழுந்தும்
வானர சேனா பரிவ்ர்தனாய் கொண்டு -கடலை யடைத்தும் –
ஒருக்காலும் ஒருவரும் கண்டும் கேட்டும் அறியாத ஸ்ரீ நரசிம்ஹா ரூபேண ஆவிர்பித்தும் –
இப்படிப்பட்ட அநேக ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் –

தீயவரை –
ஆஜ்ஞ்ஞாச் சேதீம் மத்ரோஹீ -என்கிறபடியே
ஸ்வ ஆஜ்ஞாதி லங்கனம் பண்ணும் அத்யந்த ரோஹிகளான துஷ்டரை

கூராழி கொண்டு –
வடிவார் சோதி -என்றும் –
ஸ்ப்புரத் சஹஸ்ரா ராசிகாதி தீவ்ரம் ஸூதர்சனம் பாஸ்கர கோடி துல்யம் – என்றும் சொல்லுகிறபடியே –
மிகவும் கூர்மை உடைத்தான ஸ்ரீ திரு வாழியாலே –குறைப்பது –
பிராண விநாசி விஷ்னேச் சக்ரம் – என்கிறபடியே –
ஆஸ்ரித விரோதிகளை -முற்றூட்டாக நிரசிக்க கடவ ஸ்ரீ திரு வாழியை தரித்துக் கொண்டு -அத்தாலே
பகலை இரவாக்கி சைந்தனவனை கொன்றதும் –
சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய் – என்கிறபடியே சீமாலியைக் கொன்றதும் –

குறைக்கை –
சேதிக்கை
அஜாயமானோ பஹூதா விஜாயதே -என்றும் –
பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ர்தாம் –
தர்ம சம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்றும்
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -என்று சொல்லுகிறபடி
இந்த சம்சாரிகளைப் போலே -தானும் பல பிறப்பும் பிறந்து –
ஸ்ரீ திரு வாழி ஆழ்வானை திருக் கையிலே பிடித்துக் கொண்டு அவன் தனக்கு நிரூபகமாம் படி இருப்பது –
வேதாந்தோக்த தர்ம சம்ஸ்தாப நார்த்தமாக -ஸ்வ ஆஜ்ஞ்ஞா அனுவர்த்தனம் பண்ணுகிற சேதனரை ரஷிக்கைகாகவும் –
தத் விரோதிகளாய் -ஸ்வ ஆஜ்ஞ்ஞா சேதிகளான துஷ்டரை சேதிக்கைகாவும் இறே
பஹிரந்த ஸ்தமச்செதி ஜ்யோதிர் வந்தே ஸூ தர்சனம் -ஏ நாவ்யா ஹத சங்கல்பம் வஸ்து லஷ்மி தரம் விது-என்ன கடவது இறே
இப்படி விரோதி நிரசனம் அர்த்தமாக ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு இத்தனை எத்னம் பண்ண வேண்டி இருந்தாலும்

மாயவன் –
ஆச்சர்யமான அறிவும் ஆற்றலும் வாய்ந்தவன் .
அவன் அறிவும் ஆற்றலும் மறையின் திறம் தேராதவரை குறைப்பவனாய் இல்லை .
கூராழி கொண்டே குறைக்க வேண்டியதாயிற்று
இங்கனம் குறைக்கும் இறைவனை இறக்கிப் பேசுகிறார் .
ஸ்ரீ கூராழி கொண்டு குறைத்ததும் -இறைவனது ஆற்றலால் ஆவதன்று –
அது ஸ்ரீ ஆழியின் கூர்மையினால் ஆவது என்பது தோன்ற –கூராழி கொண்டு –என்கிறார் .
கருதும் இடம் பொருது கைந்நின்ற சக்கரத்தன் -என்றபடி –
கருத்தறிந்து பணி புரியும் பெற்றிமை வாய்ந்த ஸ்ரீ திவ்ய ஆயுதம் அன்றோ –ஸ்ரீ திருவாழி –
அது தன் கூர்மையாலே குறைத்து -தான் கருவியாய் நின்று -மாயவன் குறைத்தான் என்று -ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு
பேர் வாங்கி கொடுக்கின்றது -என்க –

பஹி ரந்தஸ் தமச்சேதி ஜ்யோதிர் வந்தே சூதர்சனம்
ஏனா வ்யாஹத சங்கல்பம் வஸ்து லஷ்மீ தரம் விது-என்று
எதனால் ஸ்ரீ திருமகளைத் தாங்கும் ஸ்ரீ பரம் பொருள் தடைப்படாத சங்கற்பம் வாய்ந்ததோ
உள்ளும் புறமும் உள்ள இருளைத் தொலைப்பதும் ஸ்ரீ ஸூதர்சனம் எனப்படுவதுமான
அத்தகைய ஜ்யோதிசை வந்தனம் செய்கிறேன் -என்றபடி
ஸ்ரீ மாயவனுக்கு மகிமை எல்லாம் ஸ்ரீ ஸூதர்சனம் என்னும் ஸ்ரீ திரு ஆழியால் வந்தது அன்றோ –

ஸ்ரீ எம்பெருமானாருக்கு இப்படி எத்தனிக்க வேண்டுவது இல்லை என்கிறார் மேல் –
கொண்டலனைய வண்மை –
தம்முடைய அநதிகாரம் பாராதே கைக் கொண்டு உபகரித்த இதுக்கு வித்தராய் –
பாட்டுத் தோறும் இவருடைய-ஔதார்யத்தையெ கொண்டாடுகிறார் காணும் –
ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்கும் வர்ஷூ கவலாஹகம் போலே
இருந்த இடம் தேடி வந்து உபகரிக்கும்படியான ஔதார்யத்தை உடையராய் –

ஏரார் குணத்து –
அதி போக்யங்களான வாத்சல்ய சொவ்சீல்யாதி குணங்களை உடையராய் –

எம் இராமானுசன் –
அடியோங்களுக்கு இவ் அதிசயங்கள் எல்லாம் தெரியும்படி உபதேசித்து அத்தாலே வகுத்த சேஷியாய்
இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் –

கொண்டலனைய –சிந்தை செய்தே-
ஸ்ரீ மாயவன் தீயவரை குறைக்க ஸ்ரீ கூராழியின் உதவியை நாட வேண்டிய நிலை கூறப்பட்டது கீழே –
மற்று ஒன்றின் உதவியை நாடாது தாம் சிந்தை செய்தே ஸ்ரீ எம்பெருமானார் எளிதில்-
அச் செயலை முடிந்தமை கூறப்படுகிறது மேலே .

உயிர் அளிப்பான் திரிந்து அனைவருக்கும் இயல்பாய் உபகரித்தலின் ஸ்ரீ எம்பெருமானார்
வண்மை கொண்டலனைய தாயிற்று
அவ் வண்மை யினால் தாம் உய்ந்தமை தோற்ற மீண்டும்-மீண்டும் கொண்டாடி -அக்குணத்தில் ஈடுபட்டு
தனித்து எடுத்து அதனைப் பேசுகிறார் ஸ்ரீ அமுதனார் ..
வண்மை போலத் தமக்கு மற்றைய குணங்களும் மிகவும் இனியனவாய் இருத்தலின் –ஏரார் குணம் –என்கிறார் .
இவ் வண்மையிலும் குணத்திலும் ஈடுபட்டு தாம் தோற்றமை தோற்ற –எம்மிராமானுசன் -என்கிறார் .
எமக்கு சேஷியான ஸ்ரீ இராமானுசன்-என்றபடி .

அவ் எழில் மறையில் –
பூர்வோக்தமான நிரவதிக தேஜசை உடையதாய் –
வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி -என்றும் –
ந வேதாந்த சாஸ்திரம் –-என்றும் சொல்லுகிறபடியே நிஸ் ஸ்மாப்யதிகமான வேதத்தில் –
வேதோக்த மார்க்கத்தில் என்றபடி –

சேராதவரை –
ஆஸ்ரயிதவர்களை –
அப்ராமணிய புத்தியாலும் அயதார்த்த பிரதிபத்தியாலும் -அதிலே பொருந்தா நிலை உடையரான
பாஹ்ய குதர்ஷ்டிகளை -என்றபடி –

சிதைப்பது –
பக்னராய் – பராஜிதராக பண்ணுவது –சிதைக்கை-அழிக்கை –

அப்போது ஒரு சிந்தை செய்தே –
அந்த பிரசங்க காலத்திலே தானே –
சஏநாந ப்ரஹ்மம் கமயதி -என்றும்
ப்ரஹ்ம வேதி ப்ரஹ்மை வபவதி–இத்யாதி வாக்யங்களுக்கு உட்பொருள் அறியாதே -அபார்த்தங்களை சொல்லி
அபலாபித்தவர்களைக் குறித்து –
பிரணவோத நுச்சரோ ஹ்யாத்மா ப்ரஹ்ம தல்லஷ்ய முச்யதே -அப்ரமத்தேன வேத்தவ்யம் சரவத்மன்வயோ பவேத் -என்றும்
ஸ்ருதி வாக்யத்துக்கு ததாத்விகையான வொரு யுக்தியாலே
அவர்கள் சொன்ன அபார்த்தங்களை கண்டித்து அருளி அவர்களை நிர்மூலம் பண்ணினார் என்றபடி –

ஸ்வ சித்தாந்த த்வாந்த ஸ்திதிரக்ர்தக துர்வாதி பரிஷத்திவாபித ப்ரேஷாதி நகர சமுத்தான பருஷ – என்னும்படி இறே
இவர் விஷயமான ஸ்ரீ ஸூக்தி இருப்பது –
ஆக சர்வ சக்தி யுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரனிலும் காட்டில்
இவர் அனாயேசன விரோதிகளை நிரசித்தார் என்று இவர் தம் பிரபாவத்தை கொண்டாடினார் ஆய்த்து –

அவ் எழில் மறை-
கீழ்ச் சொல்லப்பட்ட -திறம் வாய்ந்து என்னும் தன் சீர்மை குன்றா மறை என்றபடி –
மறைக்கு எழில் ஆவது –
என்றும் தடை இன்றி மேன்மேலும் வளரும் பிரமாணத் தன்மை -என்க .
மறையில் சேராதவர் –
மறையை பிரமாணமாக ஏலாமையாலும்-பிரமாணம் இல்லாத அதனை நம்பலாகாது என்னும் எண்ணத்தாலும் –
அது கூறும் நெறியில் பொருந்தாத நிலை உடையவர்கள் –

தயைக சிந்துவான ஸ்ரீ எம்பெருமானார் தூய மறைநெறி தன்னை எடுத்து கூறி புத்தி புகட்டினாலும் –
கேளாது -பண்டைய நிலை குலையாமல் இருக்கும் இயல்பினரை சிதைப்பது தவிர வழி இல்லை -என்க .
அப்போது
சேராதவரை சிதைக்கின்ற வேளை எல்லாம் என்றபடி –
இதனுக்கு ஏற்ப -அவ்வப்போது என்று இதனுக்குப் பொருள் கொள்க .

இங்கனமே ஒருசிந்தை செய்து –
என்பதற்கும் ஒவ் ஒரு சிந்தை செய்து -என்று பொருள் உரைக்க .

இப்பாசுரத்தில் ஸ்ரீ மாயவன் செய்த செயலுக்கும்
எம் ஸ்ரீ ராமானுசன் செய்த செயலுக்கும் -காட்டப்பட்ட வேறு பாடுகள் நன்கு உணரத் தக்கன .
1-ஸ்ரீ மாயவன் மறையின் திறம் தேராதவர்களை புத்தியினால் வெல்லலாகாது
கைப்பிடித்த படையினால் வெல்லுகிறான் ..
எம் ஸ்ரீ ராமானுசனோ மறையில் பொருந்தாத அன்னாரைத் தம் யுக்தியினாலேயே வென்று விடுகிறார் ..
2-ஸ்ரீ மாயவன் குறைக்கிறான் -குறைப்பது மீண்டும் தளிர்ப்பதும் உண்டு
இராவணன் தலை அற்றற்று வீழ மீண்டும் முளைத்தன அன்றோ –
எம் ஸ்ரீ ராமானுசனோ –சிதைக்கிறார் -சிதைத்தது மீண்டும் தளிர்க்க வழியே இல்லை
3-ஸ்ரீ மாயவன் வேறு ஒரு பொருளான ஸ்ரீ ஆழி கொண்டு குறைக்கிறான்
எம் ஸ்ரீ ராமானுசனோ தம் சிந்தனா சக்தியாலே சிதைக்கிறார் .
4-ஸ்ரீ மாயவன் குறைப்பது என்றும் உள்ள ஸ்ரீ கூராழி என்னும் ஒரே கருவி கொண்டே
எம் ஸ்ரீ ராமானுசன் சிதைப்பதோ அவ்வப்போது புதிது புதிதாய்த் தோற்றும் சிந்தை கொண்டே –

அப்போதொரு சிந்தை செய்தே –
ப்ரஜ்ஞா நவ நவோன் மேஷ சாலி நீ பிரதிபாமாதா –
புதிது புதிதாக தோன்றி விளங்கும் அறிவு பிரதிபை -என்று கொள்ளப்படுகிறது -என்றபடி
இங்கே கூறப்படும் சிந்தையை பிரதிபை என்று உணர்க ..

தனுஸ்-சரவது தன் மையோ பவது- துருஷ்டாந்தம்-அம்பும் லஷயமும் ஒன்றாக ஆகும்- இல்லை
ஆசார்யன் வில்லாளி வில் பிரணவம் என்று =அது அதுவாக பாவம் உள் பொருள்- ஐக்கியம் இல்லை–
அப் பொழுது ஒரு சிந்தை செய்து அப்பு-அப்பு-இரண்டு மடங்கு / அப்பு- உப்பு- /-உப்பு கரிக்குமே-நிர்விகார தத்வம்-
ஸ்ரீ ராமனுஷ திவாகரன்- பிரபாவம் கொண்டாடுகிறார் –

————–

சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையனே அச்ச வச்ச சங்கம் இடத்தானே அச்சோவச்சோ -பெரியாழ்வார் திருமொழி-–1-8-7-

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போர் ஏறே !-பெரிய ஆழ்வார் திரு மொழி -3-3-5

மழுங்காத வைநநுதிய சக்கர நல வலத்தையாய் தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே–திரு வாய் மொழி–3-1-9-

திருப் புளிங்குடியாய் காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டு ஏந்தி எம்மிடர் கடிவானே -9-2-6-

கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது -10-6-8-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –73- வண்மை யினாலும் தன் மாதகவாலும் மதி புரையும் தண்மை யினாலும்- இத்யாதி —

May 24, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி இவர் வித்தராகிறதைக் கண்டவர்கள் –
உமக்கு உஜ்ஜீவன ஹேதுவான ஜ்ஞான பிரேமங்கள் உண்டாகையாலே தரித்து இருக்கலாமே -என்ன
தம்முடைய ஔதார்யாதிகளாலே இந்த லோகத்தில் உள்ளார்க்கு தாமே ரஷகராய் யதா ஜ்ஞான உபதேசத்தை பண்ணின
ஸ்ரீ எம்பெருமானாரை அனுசந்தித்து இருக்கும் பலம் ஒழிய எனக்கு வேறு ஒரு தரிப்பு இல்லை என்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ் பாட்டிலே
ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய ஔதார்யத்தாலே தம்மை ததீயருடைய சேர்த்தியில் சேர்த்து அருளினர் என்று –
அனுசந்தித்து இவர் வித்தராய் இருந்தவாறே –
அருகே இருந்தவர்கள் – உமக்கு அவர்கள் பக்கல் ஞான பிரேமங்கள் உண்டாகையாலே -அவற்றைக் கொண்டு ஈடேறலாமே என்ன –
வதான்யதையாலும் -அதுக்கு ஹேதுவான பரம கிருபையாலும் -சகல ஜனங்களையும் ரஷிக்கும் போது –
சீறுபாறு செய்யாமைக்கு உடலாய் -ஆஹ்லாத கரனான சந்தரனைப் போலே இருக்கிற தண் அளியாலும்
இந்த பூ லோகத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் கட்டடங்க தமோ ரஷகராய் கொண்டு -யதா வஸ்த்திதமாய் –
விலஷணமான ஞானத்தை உபதேசித்து அருளின ஸ்ரீ எம்பெருமானாரே ரஷகர் என்று அனுசந்தித்து கொண்டு
இருக்கையே நான் ஈடேறு கைக்கு உடலாய் விடும் இத்தனை ஒழிய –
என்னுடைய ஞான பிரேமங்கள் அதுக்கு உடல் அன்று –என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

இங்கனம் ஸ்ரீ எம்பெருமானார் உடைய மிக்க வண்மை யினால் இவர் ஈடுபடுவதைக் கண்டவர்கள்
ஞானமும் ப்ரேமமும் உய்வதற்கு ஹேதுக்களாக உம்மிடம் இருப்பதனால் -நீர் தரித்து இருக்கலாமே -என்ன –
தம்முடைய வள்ளன்மை முதலியவற்றால் இவ் உலகத்தவர் கட்குத் தாமே ரஷகராய் –
உண்மையான ஞானத்தை உபதேசித்து அருளும் ஸ்ரீ எம்பெருமானாரை
ரஷகராக அனுசந்திக்கும் பலம் ஒழிய எனக்கு வேறு ஒரு தரித்து இருக்கும் நிலை இல்லை என்கிறார் .

வண்மை யினாலும் தன் மாதகவாலும் மதி புரையும்
தண்மை யினாலும் இத்தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த விராமானுசனை வுன்னும்
திண்மை யல்லால் எனக்கில்லை மற்றோர் நிலை நேர்ந்திடிலே – – 73- –

பத உரை –
தன்-தன்னுடைய
வண்மை யினாலும் -வள்ளல் தனத்தாலும்
மா தகவலும் -சீரிய அருளினாலும்
மதி புரையும் -சந்திரனை ஒத்த
தண்மை யினாலும் -குளிர்ச்சி யினாலும்
இத் தாரணி யோர்கட்கு -இந்தப் பூமியில் உள்ளவர்களுக்கு
தான் சரணாய் -தானே ரஷிப்பாராய்
உண்மை-பரமார்த்தமானதும்
நல் -சீரியதுமான
ஞானம் -ஞானத்தை
உரைத்த -உபதேசித்த
இராமானுசனை -ஸ்ரீ எம்பெருமானாரை
உள்ளும் -சரணாக நினைக்கும்
திண்மை யல்லால் -வலிமை ஒழிய
தேர்ந்திடல் -ஆராய்ந்து பார்த்தால்
எனக்கு -அடியேனுக்கு
மற்று ஓர் நிலை -வேறு ஒரு தரித்து இருக்கும் நிலைமை
இல்லை-கிடையாது

வியாக்யானம்
அர்த்த கெளரவம் பாராதே உபகரிக்கைக்கு உறுப்பான தம்முடைய ஔதார்யத்தாலும் –
துர் கதி கண்டு பொறுக்க மாட்டாத பரம கிருபையாலும் –
தாப ஹரனுமாய் -ஆஹ்லாத ஹரனுமான சந்தரனைப் போலே இருக்கிற தண்ணளி யாலும் –
அறிவினால் குறைவில்லாத -திருவாய் மொழி -4 8-6 —
இந்த விபூதியில் உள்ளவர்களுக்கு தாமே ரஷகராய் கொண்டு பாரமார்த்திகமாய் விலஷணமான ஜ்ஞானத்தை உபதேசித்த
ஸ்ரீ எம்பெருமானாரை ரஷகராக அனுசந்தித்து இருக்கும் பலம் ஒழிய ஆராய்ந்து பார்க்கில் எனக்கு வேறு ஒரு தரிப்பில்லை –
தண்மை -தட்பம் -அதாவது குளிர்த்தி
திண்மை -திண்ணிமை -அதாவது -மிடுக்கு .

ஞான பக்திகள் கொண்டு உஜ்ஜவிக்கலாமோ என்னில் -நம்முடைய -அஹங்காரம் இல்லாமல் —
ஸ்வாமி தயை வண்மை கொண்டே உஜ்ஜவனம் / இரக்கமே உபாயம்
தன் வண்மை -ஸ்வாமி வண்மை வாசி -வண்மை யினாலும் -வள்ளல் தனத்தாலும்
தன் மா தகவலும் -சீரிய அருளினாலும் / தன் மதி புரையும் -சந்திரனை ஒத்த தண்மை யினாலும்-
வேதம் கீதை ஸ்வாமி -மூன்று வண்மை -அதிகாரி பார்க்காமல் நமக்கு வேண்டியதை மட்டும் –
மா தகவு –இரண்டு திருக் கண்களும் சந்திரன் போலே –
ஸ்ரீ பாத தீர்த்தம் மூலம் -திருவடி நிலைகளை –சாளக்கிராமம் -முதலியாண்டான் –
தகவு- மா தகவு- தன் மா தகவு -மூன்று நிலை –
அதிகாரி பேதம் பார்க்காமல் ததேவ உபாயம் உபேயம் –ஆச்சார்ய அபிமானம் ஒழிய கதி இல்லையே –
ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தை குழைத்து கொண்ட இவனுக்கு —

வண்மை யினாலும் –
அர்த்த கௌரவத்தையும் -அதிகாரி மாந்த்யத்தையும் பாராதே
சர்வரையும் சம்சாரத்தில் நின்றும் உத்தரிப்பிக்குமதான ஸ்ரீ பாத தீர்த்தத்தையும் -திருவடிகளையும் –
லோகம் எல்லாம் பருகும்படியாகவும் -சேவிக்கும்படியாகவும் -சாளக்ராமத்தில் பிரதிஷ்டிப்பைக்கும் –
பரம குஹ்யமான சரம ஸ்லோக அர்த்தத்தை பூரி தானமாக கொடுக்கைக்கும் –
தத்வே நயஸ் சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வ பாவ போகாபவர்க்க தநுபாய கதீருதார -என்றால் போலே
ஸ்ரீ பாஷ்ய கீதாபாஷ்யாதிகளைப் பண்ணி யருளி சர்வ விஷயமாக உபகரிக்கைக்கு உடலான ஔதார்யத்தாலும் –

வண்மை யினாலும் –
தன் என்பதை வண்மை முதலிய மூன்றினோடும் கூட்டுக
ஸ்ரீ எம்பெருமானுக்கும் இல்லாது –ஸ்ரீ எம்பெருமானாருக்கே -தனிப்பட்டு அமைந்து இருப்பவை
வண்மை முதலிய மூன்றும் -என்றபடி

வண்மை யாவது –
தாம் உபதேசிப்பதன் பொருள் சீர்மையை சிறிதும் பாராது
உபதேசத்தை வழங்கும் உள்ளன்மை-
ஸ்ரீ எம்பெருமான் உதவிய வேதமும் ஸ்ரீ கீதையும் போலே
சாரதமம் அல்லாத பொருள்களையும் . கொண்டதாய் அல்லாமல்-
சாரதமமான -அதாவது -பொருள் சீர்மை -மட்டும் வாய்ந்த உபதேசத்தை
ஸ்ரீ எம்பெருமானார் வழங்குதலின் -அவரது வண்மை தனிப் பட்டு அமைந்தது -என்க .

இப்படிப் பட்ட ஔதார்யத்துக்கு மூலம் ஏது என்றால் –
தன் மா தகவாலும் –
ஏவம் சம்ஸ்ர்தி சக்ரச்தே ப்ராம்ய மானேஸ்வ கர்மபி -ஜீவேது காகுலே விஷ்ணோ க்ர்பாகாப்யுஜாயதே -என்றும் –
சம்தப்தம் விவிதைர்த்தும் கைர்த்தூர் வசைரேவ மாதிபி -என்றும் சொல்லுகிறபடியே –
சம்சார கர்த்தத்தில் விழுந்து அழுந்தி கிடக்கிற சம்சாரிகளுடைய துர்கதியைக் கண்டு பொறுக்க மாட்டாத பரம கிருபையாலும் –

தன் மாதகவாலும் –
வந்தேறி யன்றே ஸ்வா பாவிகமாய் -அத்யந்த விலஷணமாய் –
பர துக்க அசஹிஷ்ணுத்வம் கிருபை என்னும் படியான தன் சீர் அருளாலும் –

மா தகவலும் –
மா தகவாவது -பெறுவோரின் தகுதியையோ -உபதேசிப்பதின் பொருள் சீர்மையையோ பாராது –
உயிர் மாய்தல் கண்டு ஆற்ற மாட்டாது -உபதேசிக்கைக்கு உறுப்பான பரம கிருபை .
இதம் தி நாத பச்காய -தவம் செய்யாதவனுக்கு சொல்லல் ஆகாது -என்னும் ஸ்ரீ கீதாசார்யன் போல் அல்லாது
ருசி -விசுவாசம் இல்லாதாரையும் -வலுவில் ருசி விச்வாசங்களை விளைவித்து
சரம உபாயஸ்த்தர் ஆக்கினமையின் -ஸ்ரீ எம்பெருமானார் உடைய மா தகவு தனிப்பட்டு அமைந்தது -என்க-

மதி புரையும் தண்மை யினாலும் –
சர்வ ஜன ஆஹ்லாதகரனான சந்தரனைப் போலே சர்வ ஜன ஹர்ஷ-ஹேதுவாய் கொண்டு
மகத்தான தண் அளியாலும் –
தண்மை -குளிர்த்தி –
புரை -பெருமை –
ஹரிர் துக்காநிபந்தேப்யோ ஹித புத்த்யாக ரோதிச -சாஸ்திர ஷாராக் நிகர்மானி ஸ்வ புத்ராய யதாபிதா -என்கிறபடியே
ஹிதத்தை பண்ணிப் போருகை அன்றிக்கே -பித்த ரோகத்துக்கு மருந்தாக பாலைக் குடிப்பாரைப் போலே
ஸ்வ பிரகாரத்தாலும் ஆஹ்லாதகரமான தண் அளிவை வடிவாகக் கொண்டு இருப்பது என்றபடி –

மதி புரையும் தண்மை யினாலும் –
அதாவது சந்தரன் போலத் தாபத்தைத் தீர்ப்பதும் ஆனந்தப் படுத்துவதுமான குளிர்ச்சி –
உண்மை ஞானத்தை -உபதேசிப்பதனால் சம்சார தாபத்தை தீர்த்தலாலும்-
ஸ்ரீ பகவானுடைய குணங்களை துய்க்க செய்து ஆனந்தப் படுத்தலாலும் –
ஸ்ரீ எம்பெருமானார் இடம் சந்தரன் இடத்தில் போன்ற குளிர்ச்சி உள்ளது என்க .-

சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தன்மை ஸ்ரீ எம்பெருமானிடம் உள்ளதே யாயினும்
அவன் பால் உள்ள ஸ்வா தந்த்ரியத்தின் வெப்பத்தினால் அத் தண்மை தாக்கு உறுவதும் உண்டு
ஸ்ரீ எம்பெருமானார் இடமும் ஸ்வா தந்த்ரிய வெப்பம் அடியோடு
இல்லாமையின் தண்மை என்றும் குன்றாது -தனிப்பட்டதாய் அமைந்தது -என்க .

மதி புரையும் தண்மை –
என்னும் இடத்தில்-சுடர் மா மதி போல் தாயாய் அளிக்கின்ற -என்றபடி தாய்க்கு உபமானமாக
சந்தரன் கூறப்-படுவதற்கு ஏற்ப -தாயின் குணமாகிய வாத்சல்யம் -கருதப் படுகிறது .
ஸ்ரீ பராசார பட்டர்-ஔ தார்ய காருணி கதாஸ்ரித வத்சலத்வ பூர்வேஷூ – என்று
வண்மை கருணை அடியார்கள் இடம் வாத்சல்யம் முதலிய குணங்கள் -என்று லோக மாதாவான-
ஸ்ரீ ரெங்க நாச்சியார் இடம் இம் மூன்று குணங்களை முக்கியமாக அனுசந்த்திது இருப்பது போலே –
ஸ்ரீ அமுதனாரும் இம் மூன்று முக்கிய குணங்களை ஸ்ரீ எம்பெருமானார் இடம் அனுசந்திக்கிறார் .

இத் தாரணி யோர்கட்கு தான் சரணாய் –
இப்புடைகளாலே -உபாஸ்மர்த்தா -என்றும்
உபாய உபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் – என்றும்
ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை தொலைத்து கொண்ட
இவனுக்கு ஆசார்ய அபிமானம் ஒழிய கதி இல்லை -என்று சொல்லுகிற கட்டளையால் தாம் ரஷகராய் –
ச ஏவ சர்வ லோகாநா முத்தர்த்தா நாத்ர சம்சய -என்றும்
தஸ்மின் ராமானுஜார்யே குருரிதசபதம் பாதி நாத்ய த்ர
தஸ்மாத் சிஷ்ட ஸ்ரீ மத் குருணாம் குலமிதமகிலம் தஸ்ய நாதஸ்ய சேஷ -என்னக்கடவது இறே –

இத் தாரணி யோர்கட்குத் தான் சரணாய் –
இருள் தரும் மா ஞாலம் ஆதலின் இத் தாரணியில் உள்ளவர்கள்-தாம் சரணாகுமாறு
கோராததோடு -அறிவினால் குறைவில்லா -என்றபடி அங்கனம் கோரவும் தெரியாதவர்களாகி
விட்டோமே என்னும் குறைபாடும் இல்லாதவர்களாய் இருப்பதை நோக்கி
கீழ்க் கூறிய மூன்று குணங்களாலும் ஸ்ரீ எம்பெருமானார் தாமே சரணாயினார்-என்க .
இத் தாரணி யோர்க்கு சரணானதாக கூறினமையின் சரணாதற்கு அதிகாரி பேதம் இல்லாமை தெரிகிறது .

உண்மை நன் ஞானம் உரைத்த –
தத்வ ஹித புருஷார்த்த யாதாம்ய ஹித ரூபமாய் -சார தமமாய் -இருக்கிற ஞானத்தை உபதேசித்த –
பஜேத் சாரதமம் சாஸ்திரம் ரத்நாகர இவாம்ர்தம் -சரவதஸ் சாரமாதத்யாத் புஷ்பேப்ய
இவ ஷட்பத -என்னக் கடவதிறே –

தத்வ ஹித புருஷார்த்த யாத்தார்த ஹித ரூபமாய் -சார தமம்-அசாரம் சாரம் சாரதரம் கழித்து
ஷட் பதம்-வண்டு-தேன் மட்டும் தருவது போல -அருளினார்

உண்மை நன் ஞானம் உரைத்த
இதனால் சரணாய் ரஷித்தபடி பேசப்படுகிறது .
உபதேசித்து திருத்தி பணி கொள்வதே ஸ்ரீ எம்பெருமானார் புரியும் ரஷணம் -என்க
உண்மை ஞானம் -பாரமார்த்திக ஞானம்
நல்ஞானம் -ஆனந்தம் ஆகும் ஞானம்
உரைத்தல்-உபதேசித்தல்

1-மாதகவால் சரணானார்
2-வண்மையினால் தானே சரணானார்
3-தண்மை யினால் உண்மை நன் ஞானம் உரைத்தார் -என்னலுமாம் –
உண்மை ஞானம் உள்ளதை உள்ளவாறே உணர்த்துவதால் தாபத்தை தீர்ப்பதாகவும்
நல் ஞானம் எம்பெருமான் குணங்களை பற்றியதாய் இருத்தலின் ஆனந்தத்தை விளைவிப்பதாயும் உள்ளது ..
மதி போன்ற தண்மை யினால் உரைக்கும் ஞானமும் மதி புரைவது ஆயிற்று .

ஆறிலே ஒன்றை -ஸ்ரீ பாஷ்யம் கற்று ஆராய்ந்து இருத்தல்
இது முடியவில்லை யாகில் -ஸ்ரீ அருளி செயல் கற்று ஆராய்ந்து இருத்தல்
இது முடியவில்லை யாகில் -ஸ்ரீ த்வயம் ஸ்ரீ குரு பரம்பரை பூர்வமாக சதா அனுசந்தானம் செய்து இருத்தல்
இது முடியவில்லை யாகில்–ஸ்ரீ திவ்ய தேசம் கைங்கர்யம் செய்து வர்த்தித்தல்
இது முடியவில்லை யாகில்–திரு நாராயண புரத்தில் குடிசை கட்டி வர்த்தித்தல்
இது முடியவில்லை யாகில்–ஸ்ரீ வைஷ்ணவர் நிழலில் ஒதுங்கி வாழனும்
இது செய்தால் மேலே கூறியவை எல்லாம் தானே கிட்டும்

இராமானுசனை உன்னும் திண்மை யல்லால் –
ஸ்ரீ எம்பெருமானாரே ரஷகர் என்று அத்யவசித்து இருக்கும் பலம் ஒழிய –
திண்மை -திண்ணிமை -அதாவது-மிடுக்கு –

மற்றோர் நிலை நேர்ந்திடில் -எனக்கு –
நன்றாக கொண்டு நிரூபித்து பார்த்தால் -என்னுடைய ஞானமும் ப்ரேமம் தொடக்கமான வேறு சிறிதும் எனக்கு இல்லை –
அகிஞ்சனனாய் அநந்ய கதியாய் இருக்கிற எனக்கு தாரகமாய் மாட்டாது என்று
தம்முடைய பாரமை காந்த்யத்தை யருளிச் செய்தார் ஆய்த்து –

இராமானுசனை —தேர்ந்திடிலே
தாமே ரஷகர் ஆனவரை ரஷகர் என்று அனுசந்திப்பதே பலம் .
ஆராய்ந்து பார்ப்பின் எனக்கு வேறு வகையில் தரித்து இருப்பது இல்லை –என்கிறார் .

———-

கண்ணார் கண்ண புரம் கடிகைகடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ -பெரிய திருமொழி-–8-9-9-

துயக்கறு மதியில் நல் ஞானத்துள்-ஸ்ரீ திருவாய் -1-3-10–

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –72- கைத்தனன் தீய சமயக் கலகரை- இத்யாதி —

May 24, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமானாருடைய ஔதார்யத்தாலே தாம் லபித்தவற்றை யனுசந்தித்து க்ருத்தார்த்தர் ஆனார் கீழ் ..
இன்னமும் அந்த ஔதார்யத்தாலே தமக்கு அவர் செய்ததொரு மகோ உபகாரத்தை யனுசந்தித்து வித்தராகிறார் .-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ் பாட்டிலே
ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய ஔதார்யத்தாலே இவருடைய அபிமதத்தை கொடுத்து அருள –
இவர் தாம் அவர் தம்மாலே லபித்த புருஷார்த்தங்களை அனுசந்தித்து க்ருதார்தரானார் –
இதிலே –
ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய ஔதார்ய அதிசயத்தாலே அதி ஹேயங்களான வேத பாஹ்யர் உடைய
சமயங்களைப் பற்றி நின்று கலஹிக்குமவர்களை நிரசித்தார் என்றும் –
அத்யந்த பரிசுத்தமான வேத மார்க்கத்தை பூமியிலே எங்கும் ஒக்க நடத்தி அருளினார் என்றும் -அனுசந்திதுக் கொண்டு
ப்ரீதி பிரகர்ஷத்தாலே ஸ்தோத்ரம் பண்ணா நின்று உள்ள பெரியோர்களுடன் கலந்து -பரிமாறும்படி
அடியேனை வைத்து அருளினார் என்று அனுசந்தித்து வித்தர் ஆகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ எம்பெருமானாருடைய வள்ளன்மையால் தாம் பெற்ற பேறுகளை கூறினார் கீழே .
அவ்வள்ளன்மை மிக்கு மேலும் அவர் தமக்கு செய்து அருளிய பேருதவியை நினைவு கூர்ந்து-அதனிலே ஈடுபடுகிறார் .

கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறை நெறி தன்னை என்றுன்னி வுள்ளம்
நெய்த்த வன் போடிருந்தேத்தும் நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே -72- –

பத உரை
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
மிக்க -மிகுந்த
வண்மை -வள்ளல் தன்மையை
செய்து -பண்ணி
தீய சமயக் கலகரை -கெட்ட மதங்களைப் பற்றி நின்று கலக்கம் செய்பவர்களை
கைத்தனன் -கடிந்து அருளினார்
காசினிக்கே -பூமியில்
தூய மறை தன்னை -பரி சுத்தமான வேதம் வகுத்த வழியை
உய்த்தனன்-நடத்தி யருளினார் .
என்று உன்னி -என்று நினைத்து
உள்ளம் நெய்த்து -நெஞ்சு நெகிழ்ந்து
அன்போடு இருந்து -அந்த நெஞ்சு நெகிழ்வோடு இருந்து
ஏத்தும் -துதிக்கும்
நிறை புகழோர் உடனே -நிறைந்த குணம் உள்ளவர்களோடு கூட
என்னை வைத்தனன் -என்னை சேர்த்து வைத்து அருளினார் .

வியாக்யானம் –
ஸ்ரீ எம்பெருமானார் நிரதிசய ஔதாரத்தைப் பண்ணி -வேத பாஹ்யங்களாகிய ஹேயங்களான
சமயங்களைப் பற்றி நின்று கலக்கம் செய்கிறவர்களை -நிரசித்து அருளினார் .
பரிசுத்தமான வேத மார்க்கத்தை பூமியிலே நடத்தி அருளினார் . என்று அனுசந்தித்து ஹ்ருதயம் ஸ்நிக்தமாய்-
அந்த ஸ்நேகத்தொடே இருந்து ஸ்தோத்ரம் பண்ணா நின்றுள்ள பரிபூர்ண குணரோடே-இவனும் ஒருவன் என்று பரிகணிக்கும்படி
என்னை வைத்து அருளினார் .
இப்படி செய்து அருளுவதே -என்று கருத்து .
அதவா –
நிறை புகழோர் உடனே வைத்தான் – என்றது
அசத்துக்கள் நடுவே வர்த்திதுப் போந்த வென்னை-அடியோரோடு இருந்தமை -திருவாய் மொழி -10 1-11 –
என்கிறபடியே ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே வர்த்திக்கும் படி மண்ணினார் –என்னவுமாம்
கைதல்-கடிதல்
உய்த்தல்-நடத்தல்
அவ்வன்போடென்கிற விடத்தில் -வகர ஒற்று குறைந்து கிடக்கிறது
அன்றிக்கே
நெய்த்த அன்பென்று -ஒரு பதமாக யோஜிக்க்கவுமாம்
அன்பு நெய்த்து இருக்கை யாவது -சுஷ்க சிநேகமாய் இருக்கை அன்றிக்கே கயலுண்டு இருக்கை
உள்ளம் நெய்த்த வன்பென்றது-உள்ளத்தில் நெய்த்த வன்பென்றபடி.-

சாது சமாஹம் -நழுவ முடியாமல் திருத்துவார்களே -அடியார்க்கு ஆட்படுத்திய விமலன் போலே -நிலை நிற்குமே –
கீழே வண்மை –இதில் மிக்க வண்மை -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை- உன் அடியார்க்கு ஆட் படுத்தினாய்-
ஐந்தாவது பெருமை தனியாக அருளிகிறார் இந்த பாசுரத்தில்–
காசினி வேந்தே —பூ பாலன் –வேத மார்க்க பிரதிஷ்டானம் -காசினிக்கே உய்த்தனன் தூய மறை தன்னை –
வதான்யக -வரதன் -தேவ பெருமாள் அருளால் வந்த மிக்க வண்மை –கொடுக்க கொடுக்க கூடும் வண்மை இது –
துர்வாசர் சாபம் கொடுக்க கொடுக்க தபஸ் வளரும் –
ஸூ ஸ்ரேயான் பவதி பிறக்க பிறக்க பல் ஒளி மிக்கு அவனுக்கு போலே –

இராமானுசன் –
வசீவதான்ய -என்றால் போலே இவ்வளவும் ஔதார்ய குணத்தை இட்டு பிரதிபாதிக்கப்பட்ட ஸ்ரீ எம்பெருமானார் –

மிக்க வண்மை செய்து –
கொள்ளக் குறைவற்று இலங்கி கொழுந்து-விட்டோங்கிய வுன் வள்ளல் தனத்தினால் -என்கிறபடியே
கொடுக்க கொடுக்க ஒரு குறைகளும் இன்றிக்கே –
சாணை பிடித்த மாணிக்கம் போல் மிகவும் பிரகாசிக்கிற ஔதார்ய குணத்தாலே லோகத்தை எல்லாம்
உத்தரிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி –

கைத்தனன் தீய சமய கலகரை –
வேத பாஹ்யங்கள் ஆகையாலே-அதி ஹேயங்களான பௌத்த ஜைன மாயாவாதிகளுடைய
குத்ர்ஷ்டி சமயங்களிலே நிஷ்ணாதராய்க் கொண்டு
ஜகத்து ஷணிகம் என்றும் –
தத்வம் ஞானம் மாத்ரம் என்றும் –
பிரபஞ்சம் மிதியை என்றும் –
ப்ரஹ்மம் சின்மாத்ரம் என்றும் –
பேதத்தை நிரசித்தும் –

வாக்கு மாத்ரத்திலே வேதத்தை அங்கீகரித்து வைத்து –
அதிலே குத்ர்ஷ்டி கல்ப நன்களைப் பண்ணியும்
அவசானத்திலே வேதத்தை மித்யா கோடியிலே யாக்கியும் –
இப்படி துஸ் தர்க்கங்களை சொல்லியும் கலஹிக்குமவர்களை நிரசித்து அருளினார் –

கைத்தல் -கடிதல் –

இவர்களுடைய பிரசங்கங்கள் எல்லாம் கலஹங்கள் விளைவிக்குமது ஒழிய
வித்வத் சம்மதங்களான பிரசங்கங்கள் அன்று காணும் –

திரு நாராயண புரத்து அருகில் பௌத்தரையும் –
திருமலையில் சைவரையும் –
சரஸ்வதி பீடத்தில் மாயாவாதிகளையும் -நிரசித்தபடி சர்வலோக பிரசித்தம் இறே –
காதா தாதா கதாநாம்-என்னக் கடவது இறே –

கைத்தனன் —கலகரை –
தூய மறை நெறிக்கு முரண்பட்ட போய் நெறிகளை கூருமவைகள் ஆதலின் -புறச் சமயங்கள்-தீய சமயங்கள் ஆயின –
அத்தகைய சமயங்களைப் பற்றி நின்று மெய் நெறி கூறும்-மறையினை புவியில் பரவ வொட்டாது கலகம்
செய்யுமவர்களை கடிந்து களைகின்றார் ஸ்ரீ எம்பெருமானார் -என்க

காசினிக்கே உய்த்தனன் தூய மறை தன்னை –
காசினிக்கே –
அவிவேக கநாந்த திந்முகே பஹூதா -இத்யாதியாலும் –
சம்சார மருகாந்தாரே -இத்யாதியாலும்
சொல்லப்படுகிற இருள் தரும் மா ஞாலத்திலே இருந்து
சம்சரித்து கொண்டு நஷ்டப் பிராயராய் போந்த சேதனரை உத்தரிப்பிக்கைக்காகவே –

காசினி-பூமி -பூமியில் உள்ள சேதனரை -என்றபடி –
இவர்களுடைய துக்க பரம்பரைகளைக் கண்டு பொறுக்க மாட்டாத பரம கிருபா பூர்வாக ஔதார்யத்தாலே –

தூய மறைநெறி தன்னை –
ப்ரம ப்ரமாத விப்ரலம்பாதிகளும் புருஷ சேமுஷீ தோஷ மாலின்யமும் – ஸ்வ ப்ராமாணயத்தில்
இதர அபேஷையும் இன்றி இருந்தது ஆகையாலே –
சுடர் மிகு சுருதி -என்னும்படி அத்யந்த பரிசுத்தமான வேதத்தினுடைய மார்க்கத்தை –
ஸ்ருதி ஸ்மரதிர் மமைவாஜ்ஞா-என்கிறபடியே பகவத் ஆஜ்ஞா ரூபங்களானபரம விதிக்க தர்மங்களை என்றபடி –

மறை என்ற நிரூப பதத்தாலே
பூர்வோத்தரங்களும் -உத் தர பாகங்களும் -த்ரமிட உபநிஷத்தும் சூசிப்பிக்க படுகின்றன –

ஆக ஸ்ருதி ஸ்மரதி சோதிதங்களான சாமான்ய விசேஷ தர்மங்களையும் –
சகல வேதங்களினுடைய சாரதம அர்த்தமான சரணாகதி தர்மத்தையும் –உய்த்தனன் –நடப்பித்தார் –

காசினிக்கே —தூய மறை நெறி தன்னை
காசினிக்கே -பூமியின் கண் -உருபு மயக்கம்
உலகு எங்கும் வேத மார்க்க பிரதிஷ்டாப நாசார்யரானார் -என்றபடி .
தூய மறை
மறைக்கு தூய்மையாவது -ப்ரமம் முதலியவற்றுக்கு இடமாகாது இருத்தலும் –
தான் கூருமவற்றுக்கு வேறு ஆதாரம் தேட வேண்டாதபடி தானாகவே பிரமாணமாய் இருத்தலும் -என்க
இனி தூய்மையை நெறிக்கு -அடை யாக்கலுமாம் ..
அவப்பொருள் கூறும் குத்ருஷ்டிகள் கற்ப்பித்த தீய நெறிகளை தூறு மண்டும் படி செய்து –
பண்டைய தூய நெறியை உய்த்தனன் -என்றபடி .

உய்த்தல் –
நடத்துதல் –

நெறி -மார்க்கம் -என்று உன்னி –
இவை இரண்டையும் செய்தார் என்று த்ரட அத்யாவச்ய பூர்வகமாக அனுசந்தித்து –

உள்ளம் நெய்த்த அன்போடு –
திரு உள்ளம் ஸ்நிக்தமாய் அந்த ஸ்நேஹத்தோடே –
அவ்வன்பு -என்று சொல்ல வேண்டி இருக்க வகர ஒற்று குறைந்து அவன்பு -என்று கிடக்கிறது –
அன்றிக்கே –
நெய்த்தவன்பென்றது –
உள்ளத்தில் நெய்த்தவன்பென்றபடி-இருந்தேத்தும் –
இப்படிப்பட்ட சிநேகத்தோடு இருந்து கொண்டு -அந்த ஸ்நேஹமானது சந்துஷணம் பண்ணவே –
பாஷண்ட த்ரூமஷண்ட தாவதஹன-இத்யாதிப் படியே அவரை ஸ்தோத்ரம் பண்ணா நின்றுள்ள –

நிறை புகழாருடனே-
பரி பூர்ண குணர் உடன் —
அடியார் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ – என்று பிரார்த்திக்க வேண்டாதபடி – இங்கே தானே –

வைத்தனன் என்னை -என்னை சேர்த்து அருளினார் –
வாசா யதீந்திர மனச வபுஷாச ச யுஷ்மத் பாதாராவிந்த யுகளம் பஜதாம் குருணாம்–
கூராதிநாத குருகேச-முகாத்யபும் சாம் பாதாநுசிந்தன பரஸ் சத்தம் பவேயம் -என்றும் –
த்வத் தாஸ தாஸ கண நா சரமா வதவ்யஸ்-தத்தாசதைக ரசதா விரதா மமாஸ்து -என்றும்
இத்தை இறே ஜீயரும் பிராரத்து அருளினார் –

என்று உன்னி –வைத்தனன் என்னை –
ஸ்ரீ எம்பெருமானார் புற நெறிகளை கட்டு மறை நெறி நடத்துகின்ற துறையிலே
அவரது நுண்ணறிவு -கருணை வண்மை என்னும் குணங்களிலே தோற்று – நெஞ்சு நெகிழ்ந்து –
அந்த அன்போடு இருந்து தோற்ற துறைக்கு அவ்வன்பினால் துதி பாடுகின்றனர் மறையோராகிய நிறை புகழோர் -என்க .

நெய்த்த அன்போடு-என்பதை
நெய்த்து அ அன்போடு -என்று பிரித்து அ அன்போடு -என்னும் இடத்தில்
சுட்டுக்கு மேல் வகர உடம்படு மெய்க்கு முன்னர் வகர ஒற்று கேட்டது -என்று அறிக .
அவ்வன்பு -என்று இருத்தல் வேண்டும்

இனி சுட்டாக கொள்ளாமல் நெய்த்த அன்போடு -என்று பிரித்தலுமாம்-
அன்பு நெய்த்து இருந்ததாவது –
வறண்டு போகாது என்றும் புதுமை பெற்று இருத்தல் .
உள்ளம் நெய்த்த அன்போடு -என்பதற்கு -உள்ளத்தில் நெய்த்த அன்போடு என்று பொருள் கொள்க .

இருந்து ஏத்துதல்-இடைவிடாமல் துதித்து கொண்டு இருத்தல்
நிறை புகழோர் -குணம் நிரம்பினவர்
புகழ்-குணம்
புகழோர் உடனே வைத்தல்-
குணம் நிரம்பினவர் கூட்டத்திலே என்னையும் குணம் நிரம்பினவன் ஒருவன் என்று ஒக்க எண்ணலாம் படி சேர வைத்தல் .
இனி தீய குணம் உடையோரிடை இது காறும் கூடி இருந்த என்னை அடியாரோடு இருந்தமை -என்றபடி
நிறை புகழோர் ஆன ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே இருக்கும்படி பண்ணினார் -என்னவுமாம் .
மிக்க வண்மை செய்து வைத்தனன் என்று இயைக்க .

கீழ்ப் பாசுரத்தில் கூறப்பட்ட பேறுகள் அனைத்துக்கும்
நிறை புகழோர் உடனே வைத்தல் அடித்தளமாய் முக்கியமாதல் பற்றி இதனைத் தனிந்து நினைவு கூர்ந்து
மிக்க வண்மையினால் இங்கன் உபகரித்து அருளுவதே ! என்று ஈடுபடுகிறார் –

ஸ்ரீ ஆழ்வாருக்கு சரம பர்வம் அமுதனாருக்கு பிரதம பர்வம்
சரம பர்வமாக ஸ்ரீ ஆழ்வான் அடி பற்றினார்-ஸ்ரீ அமுதனார்
ஸ்ரீ மதுர கவி சொல் படியே நிலையாக பெற்றோம்-
பெரியோர்கள் நடுவில் நிறுத்தின மிக்க வள்ளல் தன்மை போற்றுகிறார்-

மிக்க சீர்த் தொண்டர் -போலே இங்கும் -மிக்க வண்மை செய்தே -72- –
மிக்க சீலம் அல்லால் -2-
அவன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே -6-
சீலம் கொள் நாத முனியை நெஞ்சால் வாரிப் பருகும் இராமானுசன் என் தன் மா நிதியே -20-
பெருமேன்மைக்கு இழுக்கு இது என்று தள்ளுற்று இரங்கும் இராமானுச என் தனி நெஞ்சமே -27-
தன் ஈறில் பெரும் புகழே தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே -37-
தீதில் இராமானுசன் தொல் அருள் சுரந்தே -42-
எண்ணரும் சீர் நல்லார் பரவும் இராமானுசன் -44-
எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே -58-
இராமானுசன் மிக்க நான்மறையின் சுடர் ஒளியால் அவ்விருளைத் துரந்திலனேல்-59-
இராமானுசன் மிக்க பண்டிதனே -63-
உன் பெரும் கருணை தன்னை -70-
இராமானுசன் மிக்க புண்ணியனே -91-
செம்மை நூல் புலவர்க்க்கு எண்ணரும் கீர்த்தி இராமானுச -92-
பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப் பூ மன்னவே–108-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –71- சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் – இத்யாதி —

May 23, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி விண்ணப்பம் செய்தவாறே எம்பெருமானாரும் ஒக்கும் இறே என்று என்று இசைந்து –
தம்முடைய விசேஷ கடாஷத்தாலே –
இவருடைய ஜ்ஞானத்தை ஸ்வ விஷயத்திலே ஊன்றும்படி விசதமாக்கி அருள
தாம் லபித்த அம்சங்களை அனுசந்தித்து க்ருதார்த்தார் ஆகிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

இப்படி இவர் நேர்கோடு நேர் விண்ணப்பம் செய்தவாறே எம்பெருமானாரும் -ஒக்கும் ஒக்கும் -என்று
இசைந்து தம்முடைய விசேஷ கடாஷத்தாலே இவருடைய கரணங்கள் எல்லாம் ஸ்வ விஷயத்திலே தானே ஊன்றி
இருக்கும்படி பண்ணி அருள -அவருடைய திரு முக மண்டலத்தை பார்த்து –பரம குஹ்யமான அர்த்தத்தை பூரி தானம்
பண்ணும்படியான ஔதார்யத்தை உடைய எம்பெருமானாரே -என்று சம்போதித்து – தம்முடைய மனச்சு அவருடைய
திருவடிகளிலே சேர்ந்து அமைந்து இருக்கிற படியையும் –அத் திருவடிகளின் போக்யதையில் ஈடுபட்டு பிரேமமானது
தமக்கு மிக்க படியையும் -தாம் அவருடைய குணங்களிலே அத்யபி நிஷ்டராய் கொண்டு தத் தாஸ்யத்தில் வுற்று இருந்த
படியையும் -தம்முடைய பூர்வ க்ரத கர்மம் எல்லாம் அவருடைய விஷயீ காரத்தாலே தம்மை விட்டு -சும்மனாதே-ஓடிப்
போன படியையும் ஹ்ர்ஷ்டராய் கொண்டு விண்ணப்பம் செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

இவர் விண்ணப்பத்தை எம்பெருமானார் இசைந்து ஏற்று அருளி -விசேஷ கடாஷத்தாலே –
இவருடைய ஞானத்தை தம் திறத்தில் ஊன்றி நிற்குமாறு தெளிவுறுத்தி விட
தமக்கு கிடைத்தவைகளைக் கூறி க்ருதார்த்தர் ஆகிறார்

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும்தகையே !–71-

பத உரை
வண்மை -வள்ளன்மை வாய்ந்த
எம் பெரும் தகை –எங்களுக்கு தலைவரான பெரும் தன்மை உடைய
இராமானுச -எம்பெருமானாரே
என் சிந்தை -என்னுடைய நெஞ்சு
உன் தாளிணைக் கீழ் -தேவரீர் உடைய ஒன்றுக்கு ஓன்று ஒத்த திருவடிகளின் கீழே
சார்ந்தது -பொருந்தி விட்டது
அத் தாமரைத் தாள்களுக்கு -அந்த தாமரை மலர் போல் போக்யமான திருவடிகளுக்கு
அன்பு-பக்தி
தான் மிகவும் கூர்ந்தது -தானே மிகவும் வளர்ந்தது
என் செய்கை -என்னுடைய செயல்
உன் தன் குணங்களுக்கே -தேவரீர் உடைய நற்குணங்கள் விஷயத்திலேயே
தீர்ந்தது -அற்றுத் தீர்ந்தது
முன் செய்வினை -முன் செய்த கர்மம்
நீ செய் வினை அதனால் -தேவரீர் செய்த கடாஷம் என்னும் செயலால்
பேர்ந்தது –நகர்ந்து விலகிற்று

வியாக்யானம் –
கொள்ளுகிறவன் சிறுமையும் கொடுக்கிறதின் சீர்மையும் பாராதே கொடுக்கும் ஔ தார்ய-குணத்தை உடையராய் –
அந்த ஔ தார்யத்தாலே என்னை எழுதிக் கொண்ட பெருமையை உடையவரே !
என்னுடைய நின்றவா நில்லாத -பெரிய திருமொழி -1 1-4 – – நெஞ்சானது வகுத்த சேஷியான தேவரீருடைய-
பரஸ்பர சத்ருசமான திருவடிகளின் கீழே
நிழலும் அடிதாறும் போலே பிரிக்க ஒண்ணாதபடி பொருந்தி விட்டது .
அந்த பரம போக்யமான திருவடிகளுக்கு ஸ்நேஹமானது தான் நிரவதிகமாம் படி மிக்கது .
என்னுடைய வ்ருத்தி தேவரீருடைய குண அனுபவ ஜனித ப்ரீதி காரிதை யாகையாலே
அந்தக் குணங்களுக்கே அற்றுத் தீர்ந்தது .
பூர்வ க்ருதகர்மம் -அதுக்கு நிவர்தகரான தேவரீர் செய்த அந்தச் செயலாலே
மலை பேர்ந்தால் போலே விட்டு நீங்கிற்று .

ஆனபின்பு எனக்கு ஒரு குறையும் இல்லை -என்று கருத்து –
நீ செய்வினை -என்றது அவர் செய்து அருளின விசேஷ கடாஷம்
நீ செய்வனவதனால் -என்று பாடமான போது-
மத் கர்ம நிவ்ருத்யர்த்தமாக தேவரீர் செய்த க்ருஷிகளாலே -என்கை-
கூர்தல் -மிகுதி–

வள்ளல் தன்மை-தன்னையே பார்த்து அருளிய -ஸ்வாமி வள்ளல் தன்மையில் தம் நெஞ்சு ஈடுபட்டதை -அருளிச் செய்கிறார் –
எம் இராமானுசர் -அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து
நான்கு லாபங்கள் இதில் -அருளிச் செய்கிறார் – விசேஷ கடாக்ஷத்தால் –
1-ஞானம் -நிலை பெறச் செய்து –சிந்தை நின் இணைத் தாழ் கீழ் சார்ந்தது –நிழலும் அடி தாறும் போலே –உபாயமாக பற்றி –
2-மேலே –உபேயம் -அன்பு தான் மிகவும் கூர்ந்து அது தாமரை தாள்களுக்கு –
3- என் செய்கை குணங்களுக்கே தீர்ந்தது -ஞப்தி பக்தி வ்ருத்தி மூன்றும் இத்தால் –
4- இதனால் முன் செய் வினை பேர்ந்தது -நீ செய்த அரு வினையால் –பங்குனி உத்தர சரணாகதி –
கடாக்ஷம் வினை என்றுமாம் –
நீ செய்வனவாதனால் -நீ செய்த வினை அதனால் -பாட பேதங்கள்
வாமனன் கண்ணன் பெருமாள் போலே -ஸ்வாமி –வண்மை–ஜல ஸ்தல விபாகம் அற -தசரத கோபால உபேந்த்ரர்கள் –
தாளிணைக் கீழ் சார்ந்தது -அடிக் கீழ் அமர்ந்து புகுந்து -ஆழ்வான் திருப்பாதம் அமுதனார் -மன்னி பொருந்தி –
அன்பு கூர்ந்து அது தாமரை திருவடிகளுக்கு –
செடியாய வல்வினைகள் -தீர்க்கும் திருமாலே –தமர்கள் கூட்ட வினைகளை நாஸம் செய்த சதுர் மூர்த்தி –

என் சிந்தை சார்ந்தது/ அன்பு வளர்ந்தது/செய்கை குணங்களுக்கு தீர்ந்தது–வினைகள் பேர்ந்தது-இந்த நான்கும் –
ஸ்ரீ ரெங்கராஜன் -திரு அரங்க செல்வன்–உமக்கு வசம்-
வண்மை–அடியேனுடைய தண்மையும் உம்முடைய மேன்மையும் பார்த்து அருள பிரார்த்தனை கீழ் –
இங்கு இரண்டையும் பார்க்காமல் கிட்டிய நன்மைகளை பட்டியல் இட்டு அருளுகிறார் -த்வா/ மாம் /அஹம் போல -மூன்று தேவை –
கீழ் பிரார்த்தனை பலராமானுஜன் இடம் -போலே –இங்கு அருளியது நம்மிராமானுஜன் -இதுவே வாசி –
தேவை இடாதார் திருவாராதன பெருமாள் –என்றார் அன்றோ –
திருத்தேர் தட்டு வார்த்தைக்கும் கடல் கரை வார்த்தைக்கும் உள்ள வாசி –
மயர்வற மதி நலம் அருளினான் -போன்ற அனுக்ரஹத்துக்கு நடுவில் பாசுரம் இல்லை –
பிரார்த்தனை முன் பாசுரம் -கிடைத்த பலன்கள் பட்டியல் இதில்
வண் துவாராபதி மன்னனை ஏத்தினாள் எழுவாள் -உடனே அத்தையே கேட்டு எழுந்தது போலே -அனுக்ரஹ வேகம் சொன்னவாறு –
சிந்தை சார்ந்தது தாள்களுக்கு உபாயம் –
இங்கு உன் தாள் -அன்பு கூர்ந்து அத்தாமரை தாள்களுக்கு உபேயம் –இனிமை போக்யம் விஞ்ச அத்தாமரை விசேஷணம் இங்கே
கீழ் உன் -சம்பந்தம் -இங்கு சம்பந்தமே இல்லா விடிலும் விட ஒண்ணாத இனிமை -காட்ட –
மனோ வாக் காயம் -எம்பெருமானார் இடம் போக இனி என்னால் வினைகள் செய்ய முடியாதே –
நாலாவது தன்னையே பேர்ந்தது என்றுமாம் –

வண்மை இராமானுசா –
வசிஷ்ட சண்டாள விபாகம் அற -எல்லார் தலையிலும் தன் திருவடிகளை வைத்த ஸ்ரீ வாமனை போலவும்
ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்கும் வர்ஷூ கவலாஹகம் போலவும் –
அனலோசித விசேஷ அசேஷ லோக சரண்யராய்
கொள்ளுகிறவர்களுடைய சிறுமையும் கொடுத்து அருளிகிற தம்முடைய பெருமையும் பாராதே –
பரம குஹ்ய தமமான அர்த்தத்தை பூரி தானமாகக் கொடுக்கும் ஔதார்ய குணமுடைய எம்பெருமானாரே –

என் பெரும் தகையே –
அந்த ஒவ்தார்யத்தாலே என்னை எழுதிக் கொண்ட பரம சேஷியே –

சார்ந்தது என் சிந்தை உன் தாளிணைக் கீழ் –
தேவரீர் உடன்-அடியேனும் ஏக தேச வாசியாய் இருந்து வைத்து -ஒரு நாளும் தேவரீர் திருவடிகளில் தலை சாய்வு செய்யாதே
ந நமேயம் -என்று இருக்கிற அடியேனுடைய மனசானது –
சஞ்சலம் ஹி மன -என்றும் –
நின்றவா நில்லா நெஞ்சு -என்றும் –சொல்லப்படுகிற நிலை மாண்டு போய் –
த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி -இத்யாதிப்படியே
பிரமருத்ராதிகளுடைய சம்பத்தையும் ஒரு பொருளாக நினைப்பிடாத மகாத்மாக்களாலே ஆஸ்ரயிக்க தக்க
தேவரீர் உடைய திருவடிகளின் கீழே –
கர்ம காலத்திலே ஆதித்ய கிரணங்களாலே தப்தனாவன் -நிழலையும் தட்பத்தையும் உடைத்தான செடியின் கீழே புகுமா போலே –
அவற்றினுடைய போக்யதை இரண்டும் கூடி இருக்கையாலே -அவற்றின் உடைய பௌஷ்கல்யத்த்திலே ஈடுபட்டு –
முன்பு தாம் பட்ட சம்சார தாபம் எல்லாம் தீரும்படி -நிழலும் அடிதாரும் போலே -அவிநா பூதமாய் புக்கு-பொருந்தி விட்டது –

சார்ந்தது –உன் தாளிணைக் கீழ் –
என் சிந்தை -கண்டவா திரி தந்தவனை -என்னுடைய நின்றவா நில்லா நெஞ்சு -என்றபடி –
உன் தாளிணைக் கீழ் -வகுத்த சேஷியான தேவரீர் இணை அடிக் கீழ்
தாளிணையில் சார்ந்த -என்னாது –கீழ்ச் சார்ந்தது -என்றமையின் –
நிழலும் அடிதாறும் போலே விட்டுப் பிரியாது பொருந்தி விட்டது -என்றது ஆயிற்று –
விஷய ப்ரவணனாகிய நான் எங்கே ?
சரம சேஷியான தேவரீர் எங்கே ?
சபலத் தன்மை வாய்ந்த என் நெஞ்சு தேவரீர் திருவடிகளின் கீழ்ப் பொருந்தியது என்றால்
அது என்னால் பெறத் தக்க பேறா ?
தேவரீர் செய்து அருளின விசேஷ கடாஷத்தின் பயன் அன்றோ ?-என்கிறார் .
நீ செய்வினை யதனால் என்னும் ஹேதுவை ஒவ் ஓர் இடத்திலும் கூட்டிக் கொள்ள வேண்டும் .
செய்வினை -செய்கிற கடாஷம் என்னும் செயல் .

அன்பு தான் மிகவும் கூர்ந்தது –
அத் தாமரை தாள்களுக்கு -தாமரைப் பூ போலே செவ்வி நாற்றம் குளிர்த்தி முதலான போக்யதை உடைய –
அத் திருவடிகள் விஷயமாக எனக்கு பிரீதியானது மேன்மேல் எனப் பெருகி மிக்கது –
கூர்தல் -மிகுதி –

அன்பு தான் –தாமரைத் தாள்களுக்கு –
உன் தாளிணை-என்று சம்பந்தம் உள்ளமையின் சிந்தை சார்ந்தமை கூறினார் முன்பு .
இப்பொழுது சம்பந்தம் இல்லா விடினும் -விட ஒண்ணாத இனிமை-போக்யதை –கூறுகிறார் .
தாமரத் தாள்கள் ஆதலின் -இனிமையை நுகர்ந்து -பக்தி தானே மிகவும் வளர்ந்து விட்டது -என்க –
சார்ந்து இனிமையை நுகர விசேஷ கடாஷம் ஹேது
அன்பு மிகவும் கூர்தல் -தானாக வந்தது -என்று அறிக-

உன் தன் குணங்களுக்கே தீர்ந்தது என் செய்கை –
இத்தனை நாள்களிலும் விஷயாந்தரங்களிலே மண்டி விமுகனாய் போந்த என்னுடைய க்ர்த்யம் எல்லாம்
வகுத்த சேஷியான தேவரீர் உடைய குணா அனுபவ ஜனித ப்ரீதி படிம்பிட்டு பிரேரிக்கப் பண்ண கடவதாகையாலே –
சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் அக் குணங்களுக்கே அற்றுத் தீர்ந்தது –
நித்யம் யதீந்திர தவ திவ்ய -என்கிற ஸ்லோகத்தில் இவ்வர்த்தத்தை ஜீயரும் பிரார்த்தித்து அருளினார் இறே –

உன் தன் குணங்களுக்கே தீர்ந்தது என் செய்கை –
உன் குணங்கள் என்னாது –உன் தன்குனங்கள் -என்றமையின் –
இக் குணங்கள் எம்பெருமானாருக்கு அசாதாரண மானவை எனபது போதரும் .
செய்கை-கைங்கர்யம்
குணங்களை அனுபவித்து -ப்ரீதி தூண்ட -எழுந்த செயல்கள் ஆகையாலே
செய்யும் செயல்கள் எல்லாம் குணங்களுக்கு அற்றுத் தீர்ந்தவை யாகின்றன மணவாள மா முனிகள்

நித்யம் யதீந்திர தவ திவ்ய வபுஸ் ஸ்ம்ருதவ் மே சக்தம் மனோபவது
வாக்குண கீர்த்தநேசவ் க்ருத்யஞ்ச தாஸ்ய கரனேது கரத்வயச்ய -என்று
எதிராஜரே தேவரீர் உடைய திரு மேனியை நினைப்பதில் -என் நெஞ்சம் எப் பொழுதும் ஈடுபட்டதாக வேணும் –
இந்த வாக்கு தேவரீர் குணங்களை சங்கீர்த்தனம் பண்ணுவதில் எப் பொழுதும் ஈடுபட்டதாக வேணும் –
இரு கைகளின் உடைய செயலும் அடிமை செய்வதிலேயே எப் பொழுதும் ஈடுபட்டதாக வேணும் -என்று பிரார்த்தனை பண்ணுகிறார் .
அந்நிலை அமுதனார் தமக்கு எம்பெருமானார் கடாஷத்தால் பலித்து விட்டதாக அருளிச் செய்கிறார்.
இந்த சிந்தை சார்ந்து அன்பு கூர்ந்ததையும் செய்கை குணங்களுக்கே தீர்ந்ததையும் கூறியது
வாக்கு குண-சங்கீர்த்தனம் செய்தமைக்கு உப லஷணமாக கொள்க –

நாமங்களைபாட வந்தவர் குண கீர்த்தனம் செய்ய —நாமமே குணங்களால் தானே
ஒரு திரு நாமத்துக்கு நூறு குணம் இங்கு -அன்பு தூண்டி செய்த செய்கை–அனுவப ஜனித-ப்ரீதி -தூண்டிய -கைங்கர்யம்

முன் செய்வினை நீ செய் வினை யதனால் பேர்ந்தது –
என்னுடைய பாப கர்மம் எல்லாம் அதுக்கு எதிர்தட்டாக நிவர்த்தகமாய் இருந்துள்ள தேவருடைய க்ர்ஷி நிறைவேறி –
அது தன்னாலே மலை பேர்ந்தால் போலே –சவாசனமாக விட்டு நீங்கிற்று –
கர்த்த வாசக பத சமிபி வ்யாஹ்ர்த மான –

முன் செய்வினையாம் -என்ற வாக்யத்துக்கு –
த்விஷந்தம் பாபக்ர்த்யாம் -என்கிறபடியே அசல் பிளந்தேறின துரிதங்களும் பொருளாகக் கடவது –

நீ செய் வினை
என்றது -இவர் பெரிய பெருமாள் திருவடிகளில் பண்ணின பிரபத்தியை –
காலத்ரேபி-என்கிற ஸ்லோகத்தில்-இவ் வர்த்தைதை ஜீயரும் அருளிச் செய்தார் இறே –
நீ செய்வன அதனால் பேர்ந்தது -என்ற பாடம் ஆன போது
என்னுடைய பாப கர்மங்கள் எல்லாம் தேவருடைய பிரதம கடாஷத்தாலே போயிற்று என்று பொருளாகக்கடவது –

உடையவர் இடம் உடமை போனதால் மீண்டும் செய்வினை செய்ய ஆள் இல்லை இங்கு-

இப்படியான பின்பு அடியேனுக்கு ஒரு குறைகளும் இல்லை என்றது ஆயிற்று –

முன் செய்வினை நீ செய்வினை யதனால் தீந்தது
செய்வினை -செய்கிற வினை -செய்யப்படுகிற புண்ய பாபா ரூபமான கர்மம் -என்றபடி
நீ செய்வினை -என்பதற்கேற்ப நான் முன் செய்வினை என்று கொள்க
நான் முன் காலத்தில் செய்த வினைகள் நினைத்தவைகள் அல்ல –
செய்தே தீர்ந்தவை -பிரம வித்துக்களுடைய வினைகளால் என்னிடம் வந்தேறினவைகள் அல்ல –
நானே நேரே செய்தவை -வினைகள் செய்வதற்கு நான் –
அவற்றைப் பேர்த்து ஒழிப்பதற்கு தேவரீர் என்னும் கருத்துடன் நீ செய் வினை யதனால் -என்கிறார் .

நீ –
வினையை நீக்க வல்லரான தேவரீர் -என்றபடி .
அரங்கன் சரணாரவிந்தங்களை தான் தரும்படி அரங்கனைத் தன் வசத்தில் வைத்துக் கொண்டு இருப்பவர் ஆதலின் –
தம்மைச் சார்ந்தோரின் வினைகளை விலக்கும் வல்லமை எம்பெருமானாருக்கு உண்டு -என்க .
ரங்கராஜ வச்யஸ் சதா பவதிதே யதிராஜ தஸ்மாத் சக்தஸ் ஸ்வ கீய ஜன பாப விமோசனே த்வம்-
எதிராஜரே ஸ்ரீ ரெங்கராஜன் தேவரீருக்கு எப்பொழுதும் வசப்பட்டவனாய் இருக்கிறான் –
ஆகையால் தேவரீர்-தம்மைச் சேர்ந்த ஜனங்களுடைய பாபத்தைப் போக்குவதில் வல்லமை வாய்ந்தவராய்
இருக்கிறீர்-என்னும் மணவாள மா முனிகள் ஸ்ரீ சூக்தி இங்கு அனுசந்திக்கத் தக்கது .

நீ செய்வினை என்னும் இடத்தில்
வினை என்பதற்கு செயல் எனபது பொருள் .
வினையதனால் -என்பதனை –அது -அந்த -வினையினால் என்று மாற்றுக –
அந்த வினையாவது விசேஷ கடாஷத்தை செலுத்துதல் .

பேர்ந்தது –
விட்டு நீங்காது நெடும் காலமாய் ஒன்றி ஒட்டிக் கிடந்தது -மலை போல் அசைந்து கொடாமல் இருந்த வினை –
கடாஷ மகிமையினால் பேர்ந்து விலகிச் சென்றது .
எம்பெருமானுடைய கமல மலர்ப்பாதத்தை கண்டதும் ஆழ்வாருடைய வினைகள் விண்டு ஒழிந்தன .
மதுர கவி ஆழ்வாருடைய பண்டை வல்வினையை நம்மாழ்வார் கண்டு கொண்டு பாற்றி அருளினார்
அமுதனார் முன் செய்வினை எம்பெருமானார் செய்து அருளிய அத்தகைய விசேஷ கடாஷத்தால் தானே பேர்ந்து ஒழிந்தது

இனி முன் செய் வினை -என்னும்
இடத்தில் இன்னார் செய்த வினை என்று விசேஷித்து கூறாததால் –
தான் செய்தவைகளும் -பிரம வித்துக்கள் செய்து தம்மிடம் வந்து சேர்ந்தவைகளுமான
வினைகளை சொல்லுகிறது -என்று உரைப்பாரும் உளர் .

இனி செய்வினையதனால் -எனபது
ஸ்ரீ ரெங்கநாதன் இடம் எம்பெருமானார் செய்த சரணா கதியை கூறுவதாக பொருள் கொண்டு –
அவர் செய்த சரணாகதியினால் தன்வினை பேர்ந்தது என்று
அமுதனார் அருளிச் செய்வதாக வியாக்யானம் செய்கின்றனர் சிலர் .

சிந்தை தாள் இணைக்கீழ் சார்ந்தமை முதலியவற்றுக்கு –
அது –சரணாகதி காரணம் ஆகாமையாலும் -அவதாரிகையில் விசேஷ கடாஷத்தாலே இவருடைய
கரணங்கள் எல்லாம் ஸ்வ விஷயத்தில் ஊன்றி இருக்கும்படி பண்ணி
அருளினதாக கூறி இருப்பதாலும் -அந்த வியாக்யானம் ஆராயத் தக்கதாகும் .

நீ செய்வனவதனால் -என்றுமொரு பாடம் உண்டு .
நீ செய்யும் முயற்சிகளால் என்று அப்பொழுது பொருள் கொள்ள வேண்டும் .
செய்வன அவற்றால் என்று இருத்தல் வேண்டும் .
அதனால் என்றது ஒருமை பன்மை மயக்கம்

வண்மை –எம் பெரும் தகையே –
வண்மையாவது பெறுமவர் சிறுமையும் -கொடுக்கும் பொருளின் சீர்மையும் பாராது
தம் தகுதிக்கு ஏற்ப வழங்கும் வள்ளன்மையாகும் . –
திருக்கோஷ்டியூரில் கேட்போரின் தகுதியை ஆராயாது -உபதேசத்தின் சீர்மையை சிந்தை செய்யாது
தம் பெரும் தகைமைக்கு ஏற்ப –ஆசை உடையோர்க்கு எல்லாம் எம்பெருமானார்
பதினெட்டு தடவை நடந்து அரும்பாடு பெற்ற சரம ஸ்லோகார்த்தத்தை-உபதேசித்ததை
இதனுக்கு உதாஹரணமாக கொள்ளலாம்

அத்தகைய வண்மையில் ஈடுபட்டு தாம் தோற்றமை தோற்ற-எம் பெரும் தகை -என்கிறார்.
எம்பெருமானார் வண்மையினால் என் மீது விசேஷ கடாஷம் செலுத்த –
என் கரணங்கள் அவர் பால் ஈடுபட்டன .
வினைகள் தொலைந்தன –
இனி எனக்கு என்ன குறை -என்று
தாம் கிருதார்த்தர் ஆனமையை இப்பாசுரத்தால் பேசினார் ஆயிற்று .

———–

அருளிச் செயல்களில் -கரணத்ரய அனுபவம்-

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் -வந்து –கூடும் மனம் உடையீர்கள்–வந்து பல்லாண்டு கூறுமினோ -திருப்பல்லாண்டு –-4-

மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு –உய்யலும் ஆமே -பெரியாழ்வார் திருமொழி -4-5-3-

சித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச் செய்த மாலை இவை பத்தும் வல்லார்
சித்தம் நன்கு ஒருங்கித் திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே -4-5-10-

தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -திருப்பாவை –-5-

தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூ மலர் தூய்த்து தொழுது ஏத்துகின்றேன் –
பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெற–நாச்சியார் திருமொழி -1-9-

தூராத மனக் காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமித் திருப் புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி -பெருமாள் திருமொழி –-1-9-

மாலை உற்று எழுந்து ஆடிப் பாடித் திரிந்து அரங்கன் எம்மானுக்கே மாலை உற்று இடும் தொண்டர் வாழ்வுக்கு
மாலை உற்றது என் நெஞ்சமே -2-8-

மொய்த்துக் கண் பணி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடிப்பாடி இறைஞ்சி
என் அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையோர் முற்றும் பித்தரே -2-9-

சோர்வில்லாத காதலால் தொடக்கறா மனத்தராய் நீர் அரவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லார் வானம் ஆளவே திருச் சந்த விருத்தம்–78-

தன் கழற்கு அன்புறைக்க வைத்த நாள் அறிந்தனன் கொல் ஆழியான் — –-84–

போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன் -தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே– திருமாலை–26-

சிக்கெனைத் திருவருள் பெற்றேன் உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பு எலாம் கண்ண நீர் சோர
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா வென்னும் நாமம் -பெரிய திருமொழி –-1-1-5-

ஓதிலும் உன் பேர் அன்றி மற்றோதாள் -உருகும் நின் திருவுரு நினைந்து காதன்மை பெரிது கையறவுடையள்
-கயல் நெடும் கண் துயில் மறந்தாள்–என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே –2-7-5-

ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை -2-10-4-

நீடு பன்மலர் மாலையிட்டு -நின் இணை அடி தொழுது ஏத்தும் -என் மனம் –3-5-5-

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும் புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் -3-5-6-

ஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின்னடைந்தேற்கு -3-5-9-

ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஓளி மா மலர் பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாதலில் –9-3-9-

உள்ளம் உரை செயல் -உள்ள இம் மூன்றையும் -இறை உள்ளில் ஒடுங்கே—ஸ்ரீ திருவாய் மொழி-1-2-8-

உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே –1-3-6-

தேவபிரானை ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே -3-5-10-

சிந்தை யாலும் சொல் லாலும் செய்கை யினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குருகூ ரவர் சட கோபன்
முந்தை ஆயிரத் துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமா லுக்கே––ஸ்ரீ திருவாய் மொழி–6-5-11-

சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திருவாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே –7-10-10-

வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே — 9-5-4-

நினைதொறும் சொல்லும்தோறும் நெஞ்சு இடிந்து உகும் வினைகொள் சீர் பாடிலும் வேம் எனதாருயிர்
சுனை பூஞ்சோலைத் தென்காட்கரை என்னப்பா நினைக்கிலென் நாண் உனக்கு ஆட் செய்யும் நீர்மையே –9-6-2-

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற தகையான் சரணம் தமர்கட்கோர் பற்றே -10-4-10-

நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -10-5-5-

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
அரு மா மாயத்து எனதுயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என்னூழி முதல்வன் ஒருவனே -10-7-8-

தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி எழுதும் ஏழு வாழி நெஞ்சே
பழுதின்றி மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான் அந்தரம் ஒன்றில்லை யடை -முதல் திருவந்தாதி –-58-

நா வாயிலுண்டே நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே
மூவாத மாக் கதிக் கண் செல்லும் வகை யுண்டே இன்னொருவர் தீக்கதிக் கண் செல்லும் திறம் -95-

தா முளரே தம்முள்ளம் உளதே தாமரையின் பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே
வாமன் திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே அரு நரகம் சேர்வது அரிது -இரண்டாம் திருவந்தாதி –-21-

நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே வா
மருவி மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய் கண்ணனையே காண்க நம் கண் –மூன்றாம் திருவந்தாதி –-8-

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால்
சூழ்த்த துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை வழா வண் கை கூப்பி மதித்து –நான்முகன் திருவந்தாதி –-11-

உலகு படைத்து உண்ட வெந்தை அறை கழல் சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கு அவாவாருயிருகி யுக்க
நேரிய காதல் அன்பிலின்பீன் தேறல் அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருட்க்கு அசைவோர் அசைக–திருவாசிரியம்-2-

வாழ்த்தி அவன் அடியைப் பூப் புனைந்து நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத
பாழ்த்த விதி எங்குற்றாய் என்றவனை ஏத்தாது என் நெஞ்சமே தங்கத்தானாமேலும் தங்கி -பெரிய திருவந்தாதி –-84-

நையும் மனம் உன் குணங்களை யுன்னி என் நா இருந்து எம் ஐயன் ராமானுசன் என்று அழைக்கும்
அருவினையேன் கையும் தொழும் கண் கருத்திடும் காணக்
கடல் புடை சூழ் வையம் இதினில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே –இராமானுச நூற்றந்தாதி –-102-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -23–

May 23, 2020

ஸுது3ஸ்தராமிமாம் மன்யே யோக3சர்யாமனாத்மன: |
யதா2ஞ்ஜஸா புமான்ஸித்3த்4யேத்தன்மே ப்3ரூஹயஞ்ஜஸாச்யுத || 1 ||

இமாம் யோகச்சர்யாம் – இதுவரையில் உங்களால் கூறப்பட்ட மனத்தூய்மை அடையும் வழிகள், பக்தி செய்யும் முறைகள்,
ஆன்மீக பாதையில் செல்லும் வழிகள், குணமாற்றமடைய கடைபிடிக்க வேண்டிய வழிகள் யாவும்
ஸுதுஸ்தராம் மன்யஹ – மிகக்கடினமானது என்று நினைக்கிறேன்.
அனாத்மனஹ – போதிய பக்குவம் அடையாதவர்களுக்கு இந்தப் பாதையை கடப்பது கடினமாக இருக்கும்
அச்யுத – ஹே அச்சுத பகவானே!
புமான் – ஒரு மனிதன்
யதா2 அஞ்ஜஸா – எவ்விதம் மிகச்சுலபமாக பரமபதத்தை அடைய முடியுமோ, இந்தப்பாதையை கடக்க முடியுமோ
தத் அஞ்ஜஸா ப்3ருஹி – அதை எனக்கு தெளிவாக கூறியருளுங்கள்

ப்ராயஶ: புண்த3ரீகாக்ஷ யுஞ்ஜ்யந்தோ யோகி3னோ மன: |
விஷீத3ந்த்யஸமாதா4னான்மனோ நிக்3ரஹகர்ஶிதா: || 2 ||

தாமரை போன்ற கண்களையுடைய பகவானே! பொதுவாக இந்த ஆன்மீக சாதனத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் சாதகர்களுக்கு,
மனவடக்கத்தை பயிற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு, மனமானது எளிதில் அமைதியை அடையாத காரணத்தால்
அவர்கள் பெரும் துயரத்தை அடைகிறார்கள். மனதை நெறிப்படுத்த முயற்சிக்கும் நேரத்தில் மிகுந்த துக்கத்தை அடைகிறார்கள்.

அதா2த ஆனந்த3து3க4ம் பதா3ம்பு3ஜம் ஹம்ஸ:
ஶ்ரேயரன்னரவிந்த3லோசன |
ஸுக2ம் நு விஶ்வேஶ்வர யோக3கர்மபி4ஸ்த்வன்மாயயாமீ
விஹதா ந மானின: || 3 ||

அரவிந்தலோசன – தாமரைகண்ணா!
அதா2த – இருந்த போதிலும்
ஹம்ஸா: – சில அறிவுடையவர்கள், அறிவுடைய சாதகர்கள்
ஸுகம் ஶ்ரேயரன் – எளிதாக அடைகிறார்கள்
விஶ்வேஶ்வரா – அகில உலகத்துக்கும் தலைவனாக இருக்கும் பகவானே!
ஆனந்த துக்கம் – ஆனந்தத்தை கொடுக்கின்ற உங்களுடைய திருவடிகளை வணங்கும் பக்தர்கள்
யோக3 கர்மபி: – பலவிதமான யோக அப்யாஸத்தில் ஈடுபடுகிறார்கள். கர்மயோக, பக்தியோகம் போன்ற சாதனங்களை
கடைப்பிடிப்பதில் ஈடுபடுகிறார்கள். சாதாரண மனிதர்களால் செய்ய முடியாத கடினமான புனிதமான செயல்கள செய்து கொண்டிருக்கிறார்கள்
ந விஹிதா – இந்த செயல்களால் இவர்கள் கர்வத்தினால் பாதிக்கப்படுவதில்லை. புண்ணிய செயல்களினால் அடையும் சுகத்தினால் பாதிக்கப்படுவதில்லை
த்வம் மாயயா – உங்களுடைய மாயையினால் இவர்கள் மோகத்தில் விழ்வதுமில்லை, மாயையினால் ஆட்கொள்ளப்படுவதுமில்லை
நா மானின – அவர்கள் கர்வப்படுவதில்லை

கிம் சித்ரமச்யுத தவைத்த3ஶேஷப3ந்தோ4
தா3ஸேஷ்வனன்யஶரணேஸு யதா3த்மஸாத்த்வம் |
யோ ரோசயத்ஸஹ ம்ருகை3: ஸ்வயமீஶ்வராணாம்
ஶ்ரீமத்கிரிடதடபீடிதபாத3பீட2: || 4 ||

அச்யுத – அச்சுத பகவானே!
தவ ஏதத்3 – உங்களுடைய இப்படிப்பட்ட செயல்களில், பக்தர்களை மாயையிலிருந்து விடுவித்த செயல்களில்
கிம் சித்ரம் – என்ன இருக்கிறது
அஶேஷ ப3ந்தோ – எல்லோருக்கும் நன்மை செய்பவரே
அனன்ய ஶரணேஶு – வேறெதையும் நாடாமல்
தா3ஸேஶு – உங்களிடம் தஞ்சமடைந்தவர்களிடம்
ய்த் அத்மஸாத்தவம் – இப்படிபட்ட பக்தர்களுக்கு அடிமையாகி இருப்பது ஒரு பெரிய விஷயமல்ல
ம்ருகை – மிருகங்களான வானரங்கள், கரடிகள் போன்றவைகளிடத்திலும்
அரோசயத் – நட்போடு பழகுகிறீர்கள்
ஸ்ரீமத்கிரிட – விலைமதிப்புகிக்க கற்களை உடைய கிரிடத்தை உடையவர்களும், தேவர்களும், உங்கள் பாதபீடத்தில்
தலை வைத்து வணங்கதக்கவராக இருக்கிறீர்கள்
பாத3பீத2 – பகவான் கால்வைக்கும் இடம்

தம் த்வாகி2லாத்மத3யிதேஷ்வரமாஶ்ரிதானாம்
ஸர்வார்த2த3ம் ஸ்வக்ருதவித்3விஸ்ருஜேத கோ நு |
கோ வா ப4ஜேத்கிமபி விஸ்ம்ருதயேऽனு பூ4த்யை
கிம் வா ப4வேன்ன தவ பாதரஜோஜுஷாம் ந: || 5 |

தம் த்வா – இப்படிபட்ட நீங்கள்
அகிலாத்ம தயித – எல்லா ஜீவர்களுக்கும் பிரியமானவர், எல்லா ஜீவராசிகளாலும் விரும்பப்படுகின்றவர்
ஈஶ்வரம் – ஈஸ்வரனான தங்களை
ஆஶ்ரிதானாம் ஸர்வார்த2த3ம் – சார்ந்து வாழ்பவர்களுக்கு எல்லா புருஷார்தத்தையும் கொடுப்பவர்
ஸ்வக்ருதவித்3 – உங்களால் அடைந்த நன்மைகளை உணர்ந்தவர்கள், உங்கள் மீது கொண்டிருக்கும் பக்தியை விடமாட்டார்கள்
விஸ்ருஜேத கோ நு – யாரும் உங்களை விட்டுபோக மாட்டார்கள்
கஹ வா ப4ஜேத நிமபி – உங்களுடைய அனுக்கிரஹத்தை பெற்றதை உணர்ந்தவர்கள் வேறெந்த தேவதையையும் நோக்கி செல்வதில்லை
விஸ்ம்ருதயே அனுபூ4த்யை – மோட்சத்திற்காகவோ, மற்ற புருஷார்தத்தை அடைவதற்காகவோ அல்லது
வேறு தேவதையை நோக்கியோ யார் செல்வார்கள்
ந பாதரஜோ விஷாம் – உங்கள் பாத தூளியை அடைந்த எங்களுக்கு
கிம் வா ப4வேன்ன தவ – எதுதான் அடைய முடியாது.

நைவோபயந்த்யபசிதிம் கவயஸ்தவேஶ
ப்3ரஹ்மாயுஷாபி க்ருதம்ருத்3த4முத3: ஸ்மரந்த: |
யோ ந்தர்ப3ஹிஸ்தனுப்4ருதாமஶுப4ம் விது4ன்வன்ன
ஆசார்யதைத்த்யவபுஷா ஸ்வக3திம் வ்யனக்தி || 6 ||

கவயஹ – உங்களுடைய உபதேசத்தை பெற்ற ஞானிகள்,யோகிகள்
தம் ஈஶ – இறைவனாகிய உங்களுடைய
அபசித் – நன்றிக்கடனை
நைவ உபயந்த்ய – தீர்க்க முடியாது
ப்ரஹ்மாயுஷாபி – பிரம்மனுடைய ஆயுட்காலம் முழுவதும் இருந்தாலும் தீர்க்க முடியாது
க்ருதம் உதஹ முதஹ – பகவானுடைய உபதேசத்தினால் கிடைத்த அளவற்ற ஆனந்தத்தை
ஸ்மரந்தஹ – எண்ணிப்பார்க்கும் போது அதை தீர்க்க முடியாது
தனுப்ருதம் – ஜீவர்களுக்கு
அந்தர் பஹிஹி – உள்ளேயும், வெளியேயும் இருந்து கொண்டு
அஶுப4ம் விதுன்வன் – மன அழுக்குகளை அசுபங்களை, தவறான எண்ணங்களை நீக்கிக் கொண்டிருக்கின்றீர்கள்
ஆசிரியராக இறைவன் வெளியே இருந்து கொண்டும், மனசாட்சியாக மனதுக்குள் இருந்து கொண்டும் தன்னுடைய
ஸ்வரூபத்தினால் விளக்கிக்கொண்டிருக்கிறார். அதாவது மனமாகவும்,, குருவாகவும், இருந்து கொண்டு
நமக்கு அருள் புரிந்து கொண்டிருக்கிறார்.

ஸ்ரீஶுக உவாச
இத்யுத்3த4வேனாத்யனுரக்தசேதஸா ப்ருஷ்டொ ஜகத்க்ரீடனக: ஸ்வஶக்திபி4: |
க்3ருஹீதமூர்தித்ரய ஈஶ்வரேஶ்வரோ ஜகா3த்3 ஸப்ரேம மனோஹரஸ்மித: || 7 ||

ஸ்ரீசுகர் கூறுகிறார்
இவ்விதம் உத்தவரால் அளவிடமுடியாத பக்தியினால் கேட்கபட்ட கேள்விகளுக்கு உலகத்தை விளையாட்டாக பந்து போல
வைத்திருக்கின்ற பகவான், தன்னிடமுள்ள மாயா சக்தியினால் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று உருவங்களை எடுத்துக் கொண்டவர்.
எல்லா தேவதைகளுக்கும் ஈஸ்வரனாக இருக்கின்ற பகவான் பதில் கூறத் தொடங்கினார்.
பகவான் மனமகிழ்ச்சியுடன் மனதைக் கவரும் புன்னகையும், அன்புடனும் இவ்விதம் கூறினார்.
மனோஹர – மனதைக் கவரும் புன்னகை உடையவர்

ஸ்ரீபகவான் உவாச
ஹந்த தே கதா2யிஷ்யாமி மம த4ர்மாம்ஸுமங்க3லான் |
யான்ஶ்ரத்3த4யாசரன்மர்த்யோ ம்ருத்யும் ஜயதி து3ர்ஜயம் || 8 ||

ஸ்ரீபகவான் கூறுகிறார்
என்னை அடையும் பாதையை உனக்குக் கூறப்போகிறேன். என்னை அடைவதற்கான சாதனத்தை கூறப்போகிறேன்.
மிகவும் புனிதமான இந்தப் பாதையை கூறுகிறேன். அந்த சாதனத்தை சிரத்தையுடன் பின்பற்றுகின்ற சாதகன்
சுலபமாக வெல்ல முடியாத சம்சாரத்தை மரணத்தை வென்றுவிடுகிறான்

குர்யாத்ஸர்வாணி கர்மாணி மத3ர்த2ம் ஶனகை: ஸ்மரன் |
மய்யர்பித்மனஶ்சித்தோ மத்3த4ர்மாத்ம மனோரதி: || 9 ||

என்னையே இலக்காக கொண்டு எல்லா கடமைகளையும் செய்ய வேண்டும். படிப்படியாக, பரபரப்பின்றி, பலன்மீது
அதிக பற்றில்லாமல் என்னையே நினைத்துக் கொண்டு உன்னுடைய மனதையும், சித்தத்தையும், என்னிடத்தில் அர்ப்பணித்து,
என்னை அடையும் பாதையில் பயணம் செய்து மகிழ்ந்து கொண்டிருக்க வேண்டும். உன்னிடமிருந்து வெளிப்படும் செயல்கள்
யாவும் இறைவனுக்காக செய்கிறோம் என்ற பாவனையுடன் செய்து கொண்டிருக்க வேண்டும்.

தே3ஶான்புண்யானாஶ்ரயேத மத்3ப4க்தை: ஸாது4பி4: ஶ்ரிதான் |
தே3வாஸுரமனுஷ்யேஷு மத்3ப4க்தாசரிதானி ச || 10 |

புண்ணியஸ்தலங்களுக்கு யாத்திரை சென்றுவர வேண்டும். என்னுடைய பக்தர்கள், சாதுக்கள் வந்து சென்ற இடமாக இவைகள்
இருப்பதால் அவைகள் புண்ணிய ஸ்தலமாக கருதப்படுகிறது. மகான்கள் வாழ்ந்து மறைந்த இடங்கள், வழிபட்ட இடங்கள்,
தவம்செய்த இடங்கள் இந்த புண்ணிய ஸ்தலங்கள்
மத்பக்த ஆசரிதானி – என்னுடைய பக்தர்கள் தேவர்களாகவும், அசுரர்களாகவும் மனிதர்களாகவும் இருக்கிறார்கள்

ப்ருத3க்ஸத்ரோண வா மஹயம் பர்வயாத்ராமஹோத்ஸவான் |
காரயேத்3கீ3தந்ருத்யாத்3யைர்மஹாராஜவிபூ4திபி4: || 11 ||

ப்ருதக் ஸத்ரேண வா மஹ்யம் – தனியாகவோ, குழுவாகவோ எனக்கு
பர்வ – திருவிழா நடத்துதல்
யாத்ரா – பாதயாத்திரை செல்லுதல், யாத்திரை செல்லுதல்
மஹோத்யவான் – உற்சவங்களை நடத்துதல்
கோயில்களில் பகவானின் கதையை கேட்டல், கேட்க வைத்தல், பாடுதல், நாட்டியமாக ஆடுதல் ஆகியவற்றை நடத்த வேண்டும்,
மகாராஜாவுக்கு செய்வது போல செய்ய வேண்டும்.

மாமேவ ஸர்வபூ4தேஷு ப3ஹிரந்தரபாவ்ருதம் |
ஈக்ஷேதாத்மனி சாத்மானம் யதா2 க2மமலாஶய: || 12 ||

ச ஆத்மானாம் – ஜீவாத்மாவாக இருக்கின்ற
மாமேவ – ஈஸ்வரனாகிய என்னை ஒருவனையே
ஸர்வபூதேஷு – எல்லா ஜீவராசிகளிடத்திலும்
ஈக்ஷேத – பார்க்க வேண்டும்
ஆத்மனி – உன்னிடத்திலும் என்னையே பார்க்க வேண்டும்
பஹிரந்த அபாவ்ருதம் – வெளியேயும், உள்ளேயும், மறைக்கப்படாமலிருக்கின்ற பூரணமான
யதா2 கம் – ஆகாசமானது எவ்விதம் பிளவுபடாமல் இருக்கின்றதோ
அமலாஶய – அதுபோல தூய்மையான மனதினால்தான் பார்க்க முடியும்

இதி ஸர்வாணி பூ4தானி மத்3பா4வேன மஹாத்3யுதே |
ஸபா4ஜயன்மன்யமானோ ஞானம் கேவலமாஶ்ரித: || 13 ||

உத்தவா! இவ்விதம் எல்லா ஜீவராசிகளிடத்திலும் என்னையே பார்க்கின்ற உணர்வுடன் இருக்கும்போது அவைகளை
பயபக்தியுடன் பார்க்கும் மனநிலையை அடைவாய். தூய்மையான ஆத்மஞானத்தை மட்டும் முழுமையாக அடைந்திடுவாய்.
என் திருவடிகளை சரணமடைந்திருப்பாய்

ப்3ரஹ்மணே புக்கஸே ஸ்தேனே ப்3ரஹ்மண்யேர்ऽகே ஸ்பு2லிங்க3கே |
அக்ரூரே க்ரூரே சைவ ஸமத்3ருக்பண்டி3தோ மத: || 14 ||

ஸமத்3ருக் பண்டிதஹ மத் – எல்லாவற்றையும் சமநோக்குடன் பார்ப்பவன் ஞானியாக கருதப்படுகிறான்.
வேற்றுமைகளிலும் ஒற்றுமையை பார்க்க வேண்டும். அவற்றிற்கு ஆதாரமாக இருக்கும் பரமாத்மாவை பார்க்கும்
மனப்பான்மையை உடையவனாக இருப்பான் ஞானி
அர்கே ஸ்புலிங்க3கே – சூரியனையும், அதன் ஒளியையும் சமமாக பாவிப்பான்
ப்ரஹ்மணே புல்கஸே – பிராம்மணனையும், சண்டாளனையும் ஒன்றாக பாவிக்க வேண்டும்.
இவர்களிருவருக்கும் ஆதாரமாக இருக்கின்ற பிரம்மத்தை பார்த்து நாம-ரூபத்தை விலக்கிவிட வேண்டும்
ஸ்தேனே ப்ரஹ்மன்யே – திருடனையும், நல்லவனையும் தர்மப்படி வாழ்பவன் ஒன்றாக பார்க்க வேண்டும்
அக்ரூரே க்ருரே ச ஏவ – மேலும் கொடுரமான குணத்தையுடையவன், மென்மையான சுபாவத்தை உடையவனையும் சமமாக பாவிக்க வேண்டும்.

நரேஷ்வபீ4க்ஷ்ணம் மத்3பா4வம் பும்ஸோ பா4வயதோऽசிராத் |
ஸ்பர்தா4ஸூயாதிரஸ்காரா: ஸாஹங்காரா வியந்தி ஹி || 15 ||

இந்த சமநோக்கு பார்வையை உடையவனாக இருப்பதால் அடையும் பலன்களை இதில் கூறுகிறார்
நரேஷ்வபீ4க்ஷணம் மத்3பாவம் – எல்லா மனிதர்களிடத்திலும் என்னையே பார்க்கின்ற
பும்ஸா பாவயதே – மனநிலையை உடைய மனிதனிடத்திலிருந்து
அசிரேத் – விரைவில்
ஸ்பர்தா4 – போட்டிபோடும் குணம், மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டு பார்க்கும் மனப்பான்மை
அஶூயா – பொறாமை
திரஸ்கார – சுய பச்சாதம், பரிதாபக் குணம், தாழ்வு மனப்பான்மை
ஸாஹங்கார – அகங்காரத்தோடு இந்த குணங்களும்
வியந்தி – சென்றுவிடும்

விஸுருஜ்ய ஸ்மயமானான்ஸ்வாந்த்ருஶம் வ்ரீடா3ம் ச தை3ஹிகீம் |
ப்ரணமேத்3த3ண்ட3வத்3பூ4மாவாஶ்வசாண்டா3லகோ3க2ரம் || 16 ||

இதில் ஸர்வாத்ம பாவத்தை அடைய உதவும் உபாயத்தை கூறுகிறார்.
விஸ்ருஜ்ய – தியாகம் செய்து
ஸ்வயமானான் – நாம் செய்யும் ஆன்மீக சாதனங்களை பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொள்பவர்களையும்,
கேலி பேசுபவர்களையும் கண்டுக் கொள்ளக் கூடாது
ஸ்வான் – உன்னைச் சார்ந்தவர்களையும், சார்ந்திருப்பவர்களையும் கண்டுக் கொள்ளக் கூடாது
வ்ரீடா3ம் – பகவான் நாமத்தை சத்தமாக சொல்வதிலும், பாடுவதிலும் அடையும் வெட்கத்தையும் விட்டுவிட வேண்டும்.
தை3ஹிகீம் த்ருஶம் – மேலும் தேகத்துடன் சம்பந்தபட்டவற்றிலும், உடலின் மீதுள்ள அபிமானத்தையும் விட்டுவிட்டு
ஸ்வ, சண்டாளன், கோ3கரம் – நாய், சண்டாளன், பசு, கழுதை இவைகளைப் போன்ற ஜீவராசிகளையும்
ப்ரணமே த3ண்ட3வத் பூ4மௌ – கம்பு போல் பூமியில் நெடுங்சாண்கிடையாக விழுந்து வணங்க வேண்டும்.

யாவத்ஸர்வேஶு பூ4தேஷு மத்3பா4வோ நோபஜாயதே |
தாவதே3வமுபாஸீத வாங்மன: காயவ்ருத்திபி4: || 17 ||

யாவத் – எதுவரை
ஸர்வேஷு பூதேஷு மத்3பா4வ – எல்லா ஜீவராசிகளிடத்தில் நான் என்கின்ற உணர்வு
ந உபஜாயதே – தோன்றவில்லையோ
தாவத் ஏவம் உபாஸீதே – அதுவரை இதுமாதிரி உபாஸிக்க வேண்டும்.
வாங்மன: காயவ்ருத்தி – வாக்கு, மனம், உடல் மூலம் சாதனங்களை பயன்படுத்தி விதவிதமான முறையில் உபாஸனம் செய்ய வேண்டும்.
வாக்கினால் பகவான் நாமத்தை உச்சரித்தும், மனதினால் இறைவனை தியானம் செய்தும், உடலினால் செய்யக்கூடிய தவங்களை செய்தல்
போன்ற சாதனங்களை செய்து கொண்டுவர வேண்டும்.

ஸர்வம் ப்3ரஹ்மாத்மகம் தஸ்ய வித்3யயாத்ம மனீஷயா |
பரிபஶ்யன்னுபரமேத்ஸர்வதோ முக்தஸம்ஶய: || 18 ||

யாருக்கு அனைத்தும் பிரம்மஸ்வரூபம் என்று ஆத்மஞானத்தின் மூலமாக அறிவு வருகின்றதோ அந்த அறிவினால்
ஈஸ்வரனாக பார்க்கும் நிலையில் அனைத்து சாதனங்களிலிருந்தும் விடுபடுகின்றான். அவனுக்கு செய்ய வேண்டியது எதுவுமில்லை.
எல்லா சந்தேகங்களிலிருந்தும் விடுபட்டுவிடுவான். ஸர்வாத்மபாவம் வந்துவிட்டால் எல்லா ஆன்மீக சாதனங்களையும் விட்டுவிடலாம்
உபரமேதி – விட்டுவிடலாம்
முக்தஸம்ஶயஹ – அடைந்த அறிவில் சந்தேகமற்றவன்

அயம் ஹி ஸர்வகல்பானாம் ஸத்4ரீசீனோ மதோ மம |
மத்3பா4வ: ஸர்வபூ4தேஷு மனோவாக்காயவ்ருத்திபி4: || 19 ||

எல்லாவிதமான சாத்தியங்களுக்குள் உத்தமமான சாத்தியம் எதுவென்றால், எல்லா ஜீவராசிகளிடத்திலும் ஈஸ்வரனையே பார்த்தல்
என்பது என்னுடைய கருத்தாகும். நம் உடலிலிருந்தும், மனம், வாக்கு இவைகளிலிருந்தும் வெளிப்படும் செயல்கள் அனைத்தும்
ஈஸ்வர பாவத்துடன் இருக்க வேண்டும்.

ந ஹயங்கோ3பக்ரமே த்4வம்ஸோ மத்3த4ர்மஸ்யோத்3த4வாண்வபி |
மயா வ்யவஸித: ஸம்யங்நிர்கு3ணத்வாத3னாஶிஷ: || 20 ||

ஆன்மீக முயற்சியில் தோல்வி என்பதே கிடையாது. கர்மத்தில் வெற்றி-தோல்வி உண்டு ஆனால் கர்மயோகத்தில் இவைகள் கிடையாது.
ஆன்மீகத்தில் சிறிது செய்திருந்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். தோல்வி என்பதே கிடையாது.
என்னை அடைய நினைக்கும் பாதையில் பயணம் செய்பவனுக்கு அணு அளவும் தோல்வி என்பதே கிடையாது.
இறைவனாகிய என்னால் தெளிவாக உருவாக்கப்பட்ட நியதி இது. நிஷ்காமமாக பயிற்சி செய்பவனுக்கு தோல்வி என்பதே கிடையாது

யோ யோ மயி பரே த4ர்ம: கல்ப்யதே நிஷ்ப2லாய சேத் |
ததா3யாஸோ நிரர்த2: ஸ்யாத்3ப4யாதே3ரிவ ஸத்தம || 21 ||

உத்தவா! நம்மிடமிருந்து வெளிப்படும் சில செயல்கள் பயனற்றதாக இருக்கும். உதாரணமாக பயம் ஏற்படும்போது வெளிப்படும்
சில செயல்களினால் ஒரு பலனும் கிடையாது. வெளியேயுள்ள பலனை எதிர்பார்க்காமல் அந்த செயல்களை ஈஸ்வரனான என்னிடத்தில்
அர்ப்பணம் செய்துவிட்டால் அதுவே தர்மமாகி விடும். கர்மயோகமாக செயல்படும்போது பயனற்ற செயல்களும் தர்மமாகி விடுகின்றது.

ஏஷா பு3த்3தி4மதாம் பு3த்3தி4ர்மனீஷா ச மனீஷிணாம் |
யத்ஸத்யமந்ருதேனேஹ மர்த்யேனாப்னோதி மாம்ருதம் || 22 ||

ஆன்மீக வாழ்க்கைக்கு வந்ததே அறிவுடைய செயல்களிலே சிறந்ததாகும், புத்திசாலித்தனமுமாகும். செயல்படுபவைகளிலே
திறமையாக செயல்பட்டுக் கொண்டிருப்பது இதில்தான். பொய்யான இந்த உடலை பயன்படுத்தி, அதன் துணைக் கொண்டு
அழியாத பரம்பொருளான, மெய்யான என்னை அடைய வேண்டும் என்பதே உத்தமமாகவும், புத்திசாலித்தனத்துடனும் செயல்படுவதாகும்.

ஏஷ தேऽபி3ஹித: க்ருத்ஸ்னோ ப்3ரஹ்மவாத3ஸ்ய ஸங்க்3ரஹ:
ஸமாஸவ்யாஸவிதி4னா தே3வானாமபி து3ர்க3ம: || 23 ||

உத்தவா! நீ கேட்டுக்கொண்டபடி உனக்கு இதுவரை வேதாந்த கருத்துக்கள் அனைத்தும் உபதேசிக்கப்பட்டுவிட்டது.
மிக தெளிவாகவும், முழுமையாகவும் வேதாந்தத்தின் சாராம்ஸமும் விளக்கப்பட்டது.
இந்த உபதேசம் சுருக்கமாகவும், தெளிவாகவும் என்னால் உபதேசிக்கப்பட்டது.
தேவர்களாலும் அவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ள முடியாதது இது.

அபி4க்ஷ்ணஶஸ்தே க3தி3தம் ஞானம் விஸ்பஷ்டயுக்திமத் |
ஏதத்3விக்3ஞாய முச்யேத புருஷோ நஷ்டஸம்ஶய: || 24 ||

பல கோணங்களில் சில கருத்துக்கள் மீண்டும், மீண்டும் உபதேசிக்கப்பட்டது. இந்த உபதேசம் தெளிவாகவும்,
அனுமானத்துடன் உனக்கு சொல்லப்பட்டது. இதையறிந்து கொண்ட சாதகன் சந்தேகங்களையெல்லாம் நீங்கப்பெற்று முக்தியை அடைகின்றான்.

ஸுவிவிக்தம் தவ ப்ரஶ்னம் மயைதத3பி தா4ரயேத் |
ஸனாதனம் ப்ரஹ்மகு3ஹ்யம் பரம் ப்3ரஹ்மாதி4க3ச்ச2தி || 25 ||

உத்தவா! உன்னுடைய எல்லா கேள்விக்கும் தெளிவாகவும், விளக்கமாகவும் பதில் கூறப்பட்டுவிட்டது.
ஏதத்3 அபி தா4ரயேத் – இந்த உபதேசத்தை யார் மனதுக்குள் வாங்கிக் கொள்கிறார்களோ
பரம் ப்ரஹ்காதி கச்சதி – அவர்கள் பிரம்மத்தை அடைகிறார்கள். மேலான நிர்குண பிரம்மத்தை அடைகிறார்கள்
ப்ரஹ்ம கு3ஹ்யம் – வேதத்திற்குள் மறைந்துள்ள ரகசியமான தத்துவம் இது.
ஸனாதனம் – அழியாதது, மாறாதது என்றும் உள்ளது இது.

ய ஏதன்மம ப4க்தேஷு ஸம்ப்ரத3த்3யாத்ஸுபுஷ்கலம் |
தஸ்யாஹம் ப்ரஹ்மதா3யஸ்ய த3தா3ம்யாத்மானமாத்மனா || 26 ||

யார் இந்த உரையாடலை என்னுடைய பக்தர்களுக்கு சொல்கிறார்களோ, பெருமை உடையதும், உத்தமமானதும்,
முழுமையான பலனைக் கொடுப்பதுமான இந்த என்னுடைய உபதேசத்தை மற்றவர்களுக்கு யார் சொல்கிறார்களோ
அவர்களுக்கு என்னையே நான் கொடுக்கிறேன்.

ய ஏதத்ஸமதீ4யீத பவித்ரம் பரமம் ஶுசி |
ஸ பூயேதாஹரஹர்மாம் ஞானதீ3பேன த3ர்ஶயன் || 27 ||

யார் இந்த உபதேசத்தை மீண்டும், மீண்டும் கேட்கிறார்களோ, படித்துக் கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் என்னால்
தூய்மைப்படுத்தப்படுகிறார்கள். இது புனிதமானது, மேலான தூய்மைப்படுத்துகின்ற சாதனமாக இருக்கும்.
ஒவ்வொரு நாளும் என்னை ஞானம் என்ற தீபத்தினால் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களே மற்றவர்களுக்கும் ஞான தீபத்தை காட்டுவார்கள்.

ய ஏதச்ச்2ரத்3த4யா நித்யமவ்யக்3ரஃ ஶ்ருணுயான்னர: |
மயீ ப4க்திம் பராம் குர்வன்கர்மாபி4ர்ன ஸ ப3த்4யதே || 28 ||

யார் இந்த உபதேசத்தை சிரத்தையுடனும், முழுமனதுடனும், கவனத்துடனும் கேட்கின்றார்களோ, சஞ்சலமற்ற மனதுடன்
அமைதியான மனதுடன் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் மனிதன். இதுவே என்னிடத்தில் செலுத்துகின்ற மேலான பக்தியாகும்.
எந்தக் கர்மத்தினாலும் அவர்கள் பந்தப்படுவதில்லை. கர்மவினைகளில் இருந்து விடுபடுகிறார்கள், சம்சாரியாக இருக்க மாட்டார்கள்

அப்யுத்3த4வ த்வயா ப்ரஹ்ம ஸகே2 ஸமவதா4ரிதம் |
அபி தே விக3தோ மோஹ: ஶோகஶ்சாஸௌ மனோப4வ: || 29 ||

உத்தவா! நண்பனே! பர பிரம்மமானது உன்னால் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதா?
மதிமயக்கமானது, மனதிலிருக்கும் மோகமானது உன்னை விட்டுவிலகிவிட்டதா?
மனதைப்பற்றிக் கொண்டுள்ள சோகமும் சென்றுவிட்டதா? என்று பகவான் வினவினார்

நைதத்த்வயா தா3ம்பி4காய நாஸ்திகாய ஶடா2ய ச |
அஶுஶ்ரூஷோரப4க்தாய து3ர்வினீதாய தீ3யதாம் || 30 ||

உன்னிடத்தில் கேட்காதவர்களுக்கும், கேட்க விரும்பாதவர்களுக்கும் இந்த உபதேசத்தை கூறக்கூடாது.
பகட்டுக்காக அறிவை பெற விரும்புபவர்களுக்கும், கர்வத்துடனும், டம்பத்துடனும் இருப்பவர்களுக்கும்,
நாத்திகர்கள், வேதத்தை ஞானம் கொடுக்கும் கருவியாக ஏற்றுக்கொள்ளதவர்களுக்கும்,
வேத சாஸ்திரம், ஈஸ்வரன், தர்ம சாஸ்திரம் போன்றவைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும், பண்பாடு அற்றவர்கள்,
கேட்காதவர்கள், பக்தியில்லாதவர்கள், நடத்தை சரியில்லாதவர்கள், பணிவு இல்லாதவர்கள்
ஆகியோருக்கு இந்த அறிவை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

ஏதைர்தோ3ஷைஹீனாய ப்ரஹ்மண்யாய ப்ரியாய ச |
ஸாத4வே ஶுசயே ப்3ரூயாத்3ப4க்தி: ஸ்யாச்சூ2த்3ரயோஷிதாம் || 31 ||

மேற்கூறிய குறைகளற்றவர்களுக்கு உபதேசிக்கலாம். அதாவது நல்லொழுக்கத்துடன் வாழ்பவர்கள்,
உன்னிடத்தில் அன்புடன் இருப்பவர்கள், தவம் செய்து கொண்டு இருப்பவர்கள், மனத்தூய்மையையுடையவர்கள்
ஆகியவைகளோடு பக்தியும் சேர்ந்து விட்டால் அத்தகையவர்களுக்கும் உபதேசிக்கலாம்.
மேலும் சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் கூட உபதேசிக்கலாம்.

நைதத்3விக்ஞாய ஜிக்3ஞாஸோர்ஞாதவ்யமவஶிஷ்ய்தே |
பீத்வா பீயூஷம ம்ருதம் பாதவ்யம் நாவஶிஷ்யதே || 32 ||

இந்த ஞானத்தை அடைந்தவன் அடைய வேண்டியதையெல்லாம் அடைந்து விட்டவனாகின்றான். இனி அடைய வேண்டியது ஒன்றுமில்லை.
அம்ருதத்தை குடித்தவனுக்கு வேறெதையும் குடிக்க வேண்டிய அவசியமில்லை அதுபோல ஒரு சாதகனுக்கு இந்த பிரஹ்ம தத்துவத்தை
உணர்ந்த பிறகு வேறு ஒன்றையும் அறிய வேண்டியது கிடையாது.
க்ருதக்ருதார்த்தம் – அடைய வேண்டியது அனைத்தும் அடைந்துவிட்டான். அறிய வேண்டியது அனைத்தும் அறிந்து விட்டான்.

ஞானே கர்மணி யோகே3 ச வார்தாயாம் த3ண்ட3தா4ரணே |
யாவானர்தோ2 ந்ருணாம் தாத தாவாம்ஸ்தேऽஹம் சதுர்வித4: || 33 ||

நானே அனைத்துமாக இருக்கிறேன் என்ற கருத்தை இதில் தெரிவிக்கிறார்.
சதுர்வித4ஹ – நான்குவிதமான புருஷார்த்தமும் நானே
அறிவின் பலனாக அடையும் அனைத்தும் நானாகவே இருக்கிறேன். உலகத்தைப் பற்றிய அறிவு அடைந்தால் அதுவும் நானே.
அர்த்த, காம, தர்மம் அவைகளும் நானே. செயலினால் அடையும் பலன்களும் நானே.
மனதின் துணைக் கொண்டு செய்யும் தவங்களினால் அடையும் பலன்களும் நானே.
உடலுழைப்பால் அடையும் பலன்களும், உன்னிடத்தில் இருக்கும் சக்தியினால் எவையெல்லாம் அடைகிறாயோ அவைகளெல்லாமும் நானே.
இந்தப் பலன்களனைத்தும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற பிரிவுகளில் ஒன்றில் அடக்கப்படுகிறது

மர்த்யா யதா3 த்யக்தஸமஸ்தகர்மா நிவேதி3தாத்மா விசிகீர்ஷிதோ மே |
ததா3ம்ருதத்வம் ப்ரதிபத்3யமானோ மயாத்மபூ4யாய ச கல்பதே வை || 34 ||

யதா3 மர்த்யா – எப்பொழுது ஒரு மனிதன்
இல்லறத்திலிருப்பவர்கள் கர்மயோகத்தின்படி வாழ்ந்து, ஞானயோகத்தையும் பூர்த்தி செய்தவர்கள்.
நான் என்ற அகங்காரத்தை என்னிடம் அர்ப்பித்து விடவேண்டும்.
நிவேதி3தாத்மா – அகங்காரத்தை இறைவனிடத்தில் சரணடைய வைத்தல்
விசிகீற்ஷிதஹ – அவன் மோட்சத்திற்கு தகுதியுடையவனாக கருதுகிறேன். என்னால் அவன் அங்கீகரிக்கப்படுகிறான்.
அப்போது மரணமற்ற மோட்ச நிலையை அடைந்தவனாகவும், என் ஸ்வரூபமாக அடைவதற்கு தகுதியை அடைந்து விடுகிறான்.

இத்துடன் பகவானின் உபதேசன் முடிவடைந்து விடுகிறது

ஸ்ரீஶுக உவாச
ஸ ஏவமாத3ர்ஶிதயோக3மார்க3ஸ்த்தோ3த்தம:ஶ்லோகச்சோ நிஶம்ய |
ப3த்3தா4ஞ்சலி: ப்ரீத்யுபருத்3த4கண்டோ2 ந கிஞ்சிதூ3சேऽஶ்ருபரிப்லுதாக்ஷ: || 35 ||

ஸ்ரீசுகர் பகவான் கூறுகிறார்
உத்தவருக்கு பகவானால் உபதேசிக்கப்பட்ட ஆன்மீக பாதையை, மோட்சப்பாதையை காட்டப்பட்டது.
அப்போது மேலான புகழுடைய பகவானுடைய உபதேசத்தை உத்தவர் புரிந்து கொண்டு அதை மனதில் நிலைப்படுத்திக் கொண்டார்.
உத்தவர் பகவானை பலமுறை வணங்கி பக்தியுடன் நன்றியுணர்வினால் தொண்டையை அடைக்கப்பட்டவராக ஒன்றும் பேசவில்லை.
பேச இயலாமல் மௌனமாக இருந்தார். கண்களில் நீர் தளும்பி நின்றது. ஆனந்த கண்ணீர் பெருக்கினார்.

விஷ்டப்4ய சித்தம் ப்ரணயாவகூ4ர்ணம்
தை4ர்யேண ராஜன்பஹுமன்யமான: |
க்ருதாஞ்ஜலி: ப்ராஹ யது3ப்ரவீரம் ஶீர்ஷ்ணா
ஸ்ப்ருஶம்ஸ்தச்சரணாரவிந்தம் || 36 ||

மனம் புத்தியை சமநிலைக்கு கொண்டு வந்து, உறுதியுடனும், தெளிவுடனும் மனதை அமைதிப்படுத்திக் கொண்டார்.
தன்னை ஒரு பாக்கியசாலி என்று கருதிக் கொண்டார். இரண்டு கைகளையும் கூப்பி வணங்கியபடி இவ்விதம்
யதுகுலத்தில் மேலானவராக இருக்கும் கிருஷ்ணபகவானிடம் பேசலானார். தன்னுடைய தலையினால்
பகவானுடைய தாமரைப்போன்ற பாதங்களை தொட்டு வணங்கினார்.

ஸ்ரீஉத்தவ உவாச
வித்3ராவிதோ மோஹமஹாந்த4காரோ ய ஆஶ்ரிதோ மே தவ ஸன்னிதா4னாத் |
விபா4வஸோ: கிம் நு ஸமீபக3ஸ்ய ஶீதம் தமோ பீ4: ப்ரப4வந்த்யஜாத்3ய || 37 ||

உத்தவர் கூறுகிறார்.
ஹே பிறப்பற்றவரே, அனைத்துக்கும் முதன்மையாக இருக்கும் பகவானே! அவ்வளவு சுலபமாக நீக்க முடியாத அடர்ந்த இருளான
மோகமானது என்னிடமிருந்து சென்று விட்டது. எந்த மோகமானது என்னைப் பிடித்துக் கொண்டிருந்ததோ அது விலகி விட்டது.
இறைவனாகிய உங்களுடைய தரிசனத்தாலும், அருளினாலும் உபதேசத்தாலும் இது விலகி சென்றுவிட்டது.
சூரிய வெளிச்சம் இருக்கும்போது இருள், குளிர், பயம் இவைகள் இருக்காதோ அதுபோல உங்களுடைய உபதேசத்தினால் இது சாத்தியமாயிற்று.

ப்ரத்யர்பிதோ மே ப4வதானுகம்பினா
ப்4ருத்யாய விக்3ஞானமய: ப்ரதீ3ப: |
ஹித்வா க்ருதக்3ஞஸ்தவ பாத3மூலம் கோऽன்யம்
ஸமீயாச்ச2ரணம் த்வதீ3யம் || 38||

ப்ரதியர்பிதோ – திருப்பிக் கொடுத்தல்
ப்4ருத்யாய – சிஷ்யன்
நீங்கள் விக்ஞானமயமான ஆத்மஞானத்தை எனக்கு திருப்பி கொடுத்தீர்கள். உங்களுடைய அனுக்கிரகத்தினாலும், உபதேசத்தாலும்
சிஷ்யனான என்னிடமிருந்த அறிவை எனக்கே திருப்பி கொடுத்து விட்டீர்கள். மாயையினல் பறிக்கப்பட்டிருந்த அறிவை திருப்பு கொடுத்துவிட்டீர்கள்
க்ருதக்3ஞ – தனக்கு செய்த உதவியை நன்றியுடன் நினைவில் வைத்துக் கொள்வது, நன்றி மறவாதவன்
நான் உங்களிடம் பெற்ற அறிவிற்காக என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் உபதேசத்தின் மூலமாக
அடைந்த பலனுக்காக என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உஙகளுடைய பாதாரவிந்தங்களை விட்டுவிட்டு
வேறு யாரிடம் அறிவுடையவன் செல்வான்? உங்களின் உபதேசத்தின் முழுபலனை அடைந்துவிட்டேன்.
இனி வேறு யாரிடமும் செல்ல வேண்டிய அவசியமில்லை.

வ்ருக்ணஶ்ச மே ஸத்3ருட4: ஸ்னேஹபாஶோ
தா3ஶார்ஹவ்ருஶ்ண்யந்தகஸாத்வதேஷு |
ப்ரஸாரித: ஸ்ருஷ்டிவிவ்ருத்3த4யே த்வயா
ஸ்வமாயயா ஹயத்மஸுபோ3த4ஹேதினா || 39 ||

தாசார்ஹர், விருஷ்ணி, அந்தகர், சாத்வதர் ஆகிய குலத்தாருடன் மிகத் திடமான நட்பு பிணைத்திருந்தது.
அதுவுக் கூட ஆத்மாவைப் பற்றிய தெளிவான அறிவு என்ற வாளால் வெட்டப்பட்டுவிட்டது.
இந்த உறவுகள் படைப்பு வளர்ச்சிக்காக இறைவனான தங்களால் உருவாக்கப்பட்டதுதான்.
ப்ரஸாரித – ஏற்படுத்தப்பட்டது
விவ்ருத்தயே – வளர்ச்சிக்காக

நமோऽஸ்து தே மயாயோகி3ன்ப்ரபன்னமனுஶாதி4 மாம் |
யதா2 த்வச்சரணாம்போ4ஜே ரதி: ஸ்யாத3னபாயினீ || 40 ||

மகாயோகியே தங்களை வணங்குகிறேன். நமஸ்காரம் செய்கிறேன். உங்களிடம் சரணடைந்த எனக்கு அருள்புரிய வேண்டும்.
ஶாதி4 – அருள்புரியுங்கள்
எனக்கு தங்களுடைய சரணாரவிந்தத்தில் குறைவில்லாத உறுதியான பக்தி எப்போதும் இருந்து கொண்டிருக்க வேண்டும்.
அனபாயினீ – வேறெதனாலும் தாக்கப்படாமல்
ரதி: – மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.

ஶ்ரீப4கவானுவாச
க3ச்சோ2த்3த4வ மயாதி3ஷ்டோ ப3த3ர்யாக்2யம் மமாஶ்ரமம் |
தத்ர மத்பாத3தீர்தோ2தே3 ஸ்னானோபஸ்பர்ஶனை: ஶுசி: || 41 ||

ஸ்ரீபகவான் கூறுகிறார்
உத்தவா! என்னால் உபதேசிக்கப்பட்டவனான நீ என்னுடைய ஆசிரமம் இருக்கின்ற பதரி என்ற இடத்துக்கு செல்லும்படி உத்தரவிடுகிறேன்.
அங்கு சென்று என்னுடைய பாதத்திலிருந்து வந்த நீரில் (கங்கை நீரில்) நீராடி, உடலை மனதையும் தூய்மையாக வைத்துக் கொண்டிருப்பாயாக

ஈக்ஷயாலகனந்தா3யா விதூ4தாஶேஷகல்மஷ: |
வஸானோ வல்கலான்யங்க3 வன்யபு4க்ஸுக2னி:ஸ்ப்ருஹ: || 42 ||

ஈக்ஷயாலகனந்தா3யா – அலகானந்தா நதியை பார்த்த மாத்திரத்திலேயே
விதூ4தாஶேஷகல்மஷ – மனமாசுக்கள் அனைத்தும் மறைந்து போய்விடும்
அங்க – உத்தவா!
மரவுரியை அணிந்துகொண்டு எளிமையான ஆடையை அணிந்து கொண்டு வனத்தில் கிடைக்கும் கிழங்கு,வேர்,பழங்கள்
ஆகியவற்றை உணவாக உட்கொண்டிரு. எந்தவிதமான சுகத்துக்கும், வசதிக்கும் ஆசைப்படாமல் வைராக்கியத்துடன் இருக்க வேண்டும்.

திதிக்ஷுர்த்3வந்த3வமாத்ராணாம் ஸுஶீல: ஸம்யதேந்த்3ரிய: |
ஶாந்த: ஸமாஹித்தி4யா ஞானவிக்3ஞானஸம்யுத: || 43 ||

குளிர்-வெப்பம், சுகம்-துக்கம், போன்ற இருமைகளை சகித்துக் கொண்டு, பொறுத்துக் கொண்டு
ஸுஶீலஹ – ஒழுக்கமான வாழ்க்கை முறையுடன் வாழ்ந்து கொண்டு, புலன்களை அடக்கிக் கொண்டு
ஶாந்தஹ – மனக்கட்டுபாடுடன் கூடியவனாக,மன அமைதியுடையவனாகவும் இருந்து கொண்டு
ஸமாஹித தி4யா – உன்னுடைய புத்தியையும், கட்டுக்குள் வைத்துக் கொண்டு ஒரே இடத்தில் நிலைத்த புத்தியால்
ஞான-விக்ஞானஸம்யுதஹ – மெய்யறிவு, அனுபவ அறிவுடன் பொருந்தியவனாக வாழ்ந்து கொண்டிரு.

மத்தோ னுஶிக்ஷிதம் யத்தே விவிக்தமனுபா4வயன் |
மயாவிஶிதவாக்சித்தோ மத்3த4ர்மனிரதோ ப4வ |
அதிவ்ரஜ்ய க3தீஸ்திஸ்ரோ மாமேஷ்யஸி தத: பரம் || 44 ||

நான் இதுவரை உபதேசத்ததிலிருந்து எதை அறிந்து கொண்டாயோ அதை விசாரம் செய்து அனுபவத்துக்கு கொண்டு வரவேண்டும்.
என்னிடத்தில் உன் மனதையும், பேச்சையும் நிலைநிறுத்தி என்னை அடைவதே இறுதி குறிக்கோளாக கொண்டு
அதை அடைவதை முயற்சி செய்ய வேண்டும். மூன்றுவிதமான கதிகளை, பிறப்பான,
மனித லோகத்தில் பிறத்தல், தேவலோகத்தில் பிறத்தல், நரகத்திற்கு பிறத்தல் ஆகியவைகளை கடந்து என்னை அடைவாய்.

ஸ்ரீஶுக உவாச
ஸ ஏவஸுக்தோ ஹரிமேத4ஸோத்3த4வ:
ப்ரத3க்ஷிணம் தம் பரிஸ்ருத்ய யாத3யோ: |
ஶிரோ நிதா4யாஶ்ருகலாபி4ரார்த்3ரதீ4ர்ன்யஷிச்சத3-
த்3வந்த்3வபரோऽப்யபக்ரமே || 45 ||

பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் இவ்வாறு கூறியதும், உத்தவர் அவரை வலம் வந்து அவருடைய பாதங்களில் தன்னுடைய தலையை வைத்து வணங்கினார்.
அவருடைய கண்களிலிருந்து பிரிவைத் தாங்கமுடியாததால் பெருகிய கண்ணீரால் பகவானின் பாதங்களை நனைத்தார்.
இருமைகளை கடந்தவராக இருக்கும் உத்தவர் அவரை பிரிந்து புறப்படும் அந்தச் சமயத்தில் கண்களிலிருந்து நீர் பெருகியது.

ஸுது3ஸ்த்யஜஸ்னெஹவியோக3காதரோ
ந ஶக்னுவம்ஸ்தம் பரிஹாதுமாதுர: |
க்ருச்ச்2ரம் ய்யௌ மூர்த4னி ப4ர்த்ருபாது3கே
பி3ப்4ரன்னமஸ்த்ருத்ய ய்யௌ புன: புன: || 46 ||

பகவானிடம் மிக்க அன்பு கொண்டவர், அவரை விட்டுப் பிரிவது என்பது மிகவும் கஷ்டம்தான்.
மனதில் துயரத்தை சுமந்துகொண்டு துயரப்பட்டவராக இருந்தார். பகவானுடைய பாதுகைகளைத் தலையில் வைத்துக் கொண்டார்.
மீண்டும், மீண்டும் பகவானை வணங்கிவிட்டு விடைப்பெற்று சென்றார்.

ததஸ்தமந்தர்ஹ்ருதி3 ஸன்னிவேஶ்ய
க3தோ மஹாபா4க3வதோ விஶாலாம் |
யதோ2பதி3ஷ்டாம் ஜக3தே3கப3ந்து4னா தப:
ஸமாஸ்தா2ய ஹரேரகா3த்3க3திம் || 47 ||

உத்தவர் தன்னுடைய ஆழ்மனதில் பகவானை நிலைநிறுத்தி பத்ரிகாசிரமத்தை அடைந்தார்.
உலகநலனில் அக்கறை கொண்ட பகவானால் உபதேசிக்கப்பட்டபடி தவ வாழ்க்கையை மேற்கொண்டு இறுதியில்
ஸ்ரீஹரியை அடைந்தார். அவர் விதேஹ முக்திய அடைந்தார்

ய ஏததா3னந்த3ஸமுத்3ரஸம்ப்4ருதம்
ஞானாம்ருதம் பா4க3வதாய பா4ஷிதம் |
க்ருஷ்ணேன யோ3கே3ஶ்வரஸோவிதாங்க்4ரிணா
ஸச்ச்2ரத்3த4ஸேவ்ய ஜக3த்3விமுச்யதே || 48 ||

கடலளவு ஆனந்தத்தை தன்னுள் கொண்டுள்ளது இந்த உத்தவ கீதை. ஞானம் என்கின்ற அம்ருதத்தை கொடுக்க கூடியது.
சிறந்த பக்தரான உத்தவருக்கு இது உபதேசிக்கப்பட்டது. யோகேஶ்வரர்களால் வணங்கப்படும் ஸ்ரீக்ருஷ்ண பகவானால் உபதேசிக்கப்பட்டது.
யார் இதை முழுமையான சிரத்தையுடன் கேட்கிறார்களோ அவர்கள் மட்டுமல்ல அவரைச் சார்ந்த மற்றவர்களும் முக்தியை அடைகிறார்கள்.

ப4வப4யமபஹந்தும் ஞானவிக்3ஞானஸாரம்
நிக3மக்ருது3பஜஹ்ரே ப்4ருங்க3வத்3வேத3ஸாரம் |
அம்ருதமுத3தி4தஶ்சாபாய யத்3ப்4ருத்யவர்கா3ன
புருஷம்ருஷப4மாத்3யம் க்ருஷ்ணஸஞ்ஞம் நதோऽஸ்மி || 49 ||

ப4வப4யம் அஹந்தும் – இந்த உலகத்திலிருந்து அடையும் பயத்தை நீக்குவதற்காக
ஞான விக்ஞானஸாரம் – ஞானம் விக்ஞானம் இவைகளின் சாரமாக
நிக3மக்ருத் – வேதத்தை உருவாக்கிய ஈஸ்வரனான பகவான் கிருஷ்ணன்
வண்டு பலவகையான மலர்களிலிருந்து தேனை எடுப்பதைப் போன்று பகவான் வேதத்திலிருந்து அதன் சாரத்தை எடுத்துக் கொடுத்துள்ளார்.
பாற்கடலிலிருந்து வெளிபட்ட அம்ருதத்தை தேவர்களுக்கு கொடுத்தவர், மனிதர்களுக்கு அதைவிட மேலான ஞானாமிர்தத்தை கொடுத்துள்ளார்.
மனிதர்களுக்குள்ளே உயர்வான உடலை எடுத்தவரும், அனைத்துமாக இருப்பவருமாக இருக்கின்ற பரம்பொருளை நமஸ்கரிக்கின்றேன்.
அந்த ஈஸ்வரனுக்கு கிருஷ்ணன் என்ற நாமமும், ரூபமும் கொடுக்கப்பட்டது. அவரை நான் வணங்குகின்றேன்.

உத்தவ கீதை சுருக்கம்
01 கதை தொடக்கம்
02 தியாகம், சந்நியாஸம், அவதூதரின் கதை
03 அவதூதரின் கதை தொடர்ச்சி
04 அவதூதரின் கதை முடிவு
05 கர்மயோக, ஞானயோக சாரம்.
06 ஞானியினுடைய லட்சணம், பக்தி
07 பக்தியோகம்
08 வேதாந்தத்தின் சாரம், ஹம்ஸ கீதை
09 ஈஸ்வரனை காரிய-காரணமாக விளக்கி, அதை எப்படி தியானம் செய்ய வேண்டும் என்பதன் விளக்கம்
10 சித்திகளை விலக்கிவிடவேண்டும்
11 ஈஸ்வரனுடைய பெருமைகள்
12 வர்ணாசிரம தர்மங்கள்
13 வர்ணாசிரம தர்மங்கள்
14 ஞானம், பக்தி, நற்பண்புகள் அதன் பலன்கள்
15 குண-தோஷம்
16 குண-தோஷம்
17 ஸ்ருஷ்டியின் விதவிதமான எண்ணிக்கையை விளக்கப்படுகிறது
18 பிக்ஷு கீதை
19 ஸ்ருஷ்டி, லயம் விளக்கம்
20 குணத்ரய விபாகம், முக்குணங்களின் விளக்கம்
21 சத்சங்கத்தின் பெருமை, துஷ்சங்கத்தின் விளைவு
22 க்ரியாயோகம் என்ற தலைப்பின் பகவானை வழிப்படும் முறைகள்
23 ஞானயோகம் விரிவாக விளக்கப்பட்டது
24 கர்மயோக, ஞானயோக சாராம்சம்

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -21-கிரியாயோகம்-

May 23, 2020

க்ரியாயேக3ம் ஸமாசக்ஷ்வ ப4வதா3ராத4னம் ப்ரபோ4 |
யஸ்மாத்த்வாம் யே யதா2ர்சந்தி ஸாத்வதா: ஸாத்வதர்ஷப4 || 1 |

உத்தவர் கேட்டார்.
யாதவ குலத்தில் உள்ளவர்களில் சிறந்து விளங்கும் பகவானே! தங்களை வழிபடும் முறையையும்,
கிரியாயோகத்தைப் பற்றியும் உபதேசியுங்கள்.. என்ன காரணத்தினால் இறைவனாக உங்களை யாரெல்லாம்
எவ்விதமாக வழிபடுகின்றார்கள். விஷ்ணு பக்தர்கள் தங்களை எவ்வாறெல்லாம் வழிபடுகிறார்கள்.
தவம், சாஸ்திரம் படித்தல், ஈஸ்வர வழிபாடு இவைகள் மூன்றும் சேர்ந்து செய்வதையே கிரியாயோகம் என்று பதஞ்சலி முனிவர் கூறியிருக்கிறார்.
கிரியாயோகம்
1. முதல் வகை
தவம் – உடலை உருக்கி தவம் செய்தல், சரீர சம்பந்தமான சாதனங்கள்
ஸ்வாத்யாயம் – வாக்கினால் செய்யப்படுகின்ற சாதனங்கள்
ஈஸ்வர ப்ரணிதானம் – மனதினால் இறைவனை பூஜித்தல்
2. இரண்டாவது வகை
தவம் – மானசீகமாக செய்யப்படுகின்ற தவங்கள், மனவடக்கம், புலனடக்கம்
ஸ்வாத்யாயம் – வாக்கினால் செய்யப்படுகின்ற சாதனங்கள்
ஈஸ்வர பிரணிதானம் – உடலினால் செய்கின்ற இறைவழிபாடு
3. மூன்றாவது வகை
ஈஸ்வர பிரணிதானம் – உடலாலும், உள்ளத்தினாலும், வாக்கினாலும் இறைவனை வழிபடுதல்

ஏதத்3வதந்தி முனயோ முஹுர்னி:ஶ்ரேயஸம் ந்ருணாம் |
நாரதோ3 ப4க3வான்வ்யாஸ ஆசார்யோऽங்கி3ரஸ: ஸுத: || 2 ||

மீண்டும், மீண்டும் மனிதர்களுடைய மனதை தூய்மைபடுத்த உதவுகின்ற உத்தமமான சாதனம் (நி;ஶ்ரேயஸம்) என்று நாரதராலும்,
வியாச முனிவராலும், அங்கிரஸ் என்பவரின் மகனான பிரகஸ்வதியாலும், முனிவர்களாலும் கூறப்படுகிறது.

நி:ஸ்ருதம் தே முகா2ம்போ4ஜாத்3யதா3ஹ ப4க3வானஜ: |
புத்ரேப்4யோ ப்4ருகு3முக்2யேப்4யோ தே3வ்யை ச ப4கவான்ப4வ: || 3 ||

தாமரைப் போன்ற சிவந்த தங்களுடைய வாயினால் வகுத்துக் கொடுக்கப்பட்ட பூஜா முறைகளை பிரம்மா தன்னுடைய
புத்திரர்களான ப்ருகு முதலியவர்களுக்கு உபதேசம் செய்தார். பகவான் சிவபெருமான் பார்வதி தேவிக்கு உபதேசித்தார்.
இன்றுவரை இது பரம்பரையாக சொல்லப்பட்டு வருகிறது.

ஏதத்3வை ஸர்வ வர்ணானாமாஶ்ரமாணாம் ச ஸம்மதம் |
ஶ்ரெயஸாமுத்தமம் மன்யே ஸ்த்ரீஶூத்3ராணாம் ச மானத3 || 4 ||

இந்த பூஜைமுறையே எல்லா வர்ணத்தாரும், எல்லா ஆசிரமத்திலிருப்போரும் செய்யக்கூடிய வகையில் பொருத்தமானதாக இருக்கின்றது.
அதேசமயம் உத்தமமான நன்மையை தருவதாகவும் இருப்பதாக நான் கருதுகிறேன். பெண்களும், சூத்திரர்களும் கூட இதைச் செய்யலாம்.

ஏதத்3கமலபத்ராக்ஷ கர்மப3ந்த4விமோசனம் |
ப4க்தாய சானுரக்தாய ப்3ரூஹி விஶ்வேஶ்வரேஶ்வர || 5 ||

பக்தர்களை பெருமைப்படுத்தும் பகவானே கிருஷ்ணா! விஶ்வேஶ்வரா! ஈஸ்வரனே! தாமரை இலைப்போன்ற கண்களை உடையவரே!
எல்லா தேவதைகளுக்கும் தலைவனாக இருக்கின்ற இறைவா!உங்களிடத்தில் பக்தியும், சிரத்தையும் இருக்கின்ற எனக்கு
உங்களை வழிபடும் முறையை உபதேசியுங்கள்.

ஸ்ரீபகவானுவாச
ந ஹயந்தோऽனந்தபாரஸ்ய கர்மகாண்ட3ஸ்ய சோத்3த4வ |
ஸங்க்ஷிப்தம் வர்ணயிஷ்யாமி யதா2வத3னுபூர்வஶ: || 6 ||

பகவான் கூறுகிறார்.
உத்தவா! நீ கேட்ட கேள்வி வேதத்தின் கர்மகாண்டத்தில் உள்ள விஷயத்தைப் பற்றியதாகும். அது எல்லையற்றது,
முழுமையாக என்னால் விளக்க முடியாது. ஆனால் அதை சுருக்கமாகவும், சரியான வழியைக்காட்டக் கூடியதாகவும்
இருக்கின்ற வகையில் கிரமப்படி சொல்லப் போகின்றேன்.
அனந்த பாரஸ்ய கர்மகாண்டஸ்ய – கரை காண முடியாத கர்மகாண்டத்தை
நஹி அந்தஹ – முடிவற்றதான கர்ம காண்டத்தை
யதா2 வதன அபூர்வஶ: – தெளிவாகவும், முறையாகவும்
ஸங்க்ஷிப்தம் வர்ணயிஷ்யாமி – சுருக்கமாக சொல்லப்போகிறேன்

வைதி3கஸ்தாந்த்ரிகோ மிஶ்ர இதி மே த்ரிவிதோ4 மக2: |
த்ரயாணாமீப்ஸிதேனைவ விதி4னா மாம் ஸமர்சரேத் || 7 ||

எனக்கு செய்யக்கூடிய பூஜைமுறையானது மூன்று விதமாக இருக்கின்றது.
அவைகள் வைதிக முறை, தாந்திரிக முறை, இவையிரண்டும் கலந்த முறை ஆகும்.
வைதீக முறை என்பது வேத மந்திரங்களை உபயோகித்து செய்யும் பூஜை.
தாந்த்ரீக முறை என்பது ஆகம அடிப்படையில் செய்யும் பூஜைமுறை.
இவையிரண்டும் கலந்து இருக்க கூடிய பூஜை முறை. சைவ, வைஷ்ணவ, சக்தி ஆகம வழிபாடு முறைகள்.
தமிழ் இறைவழி பாடல்கள் தாந்த்ரீக முறையாகும். பக்தர்கள் எந்த விதியையாவது தேர்ந்தெடுத்து முறைப்படி வழிபட வேண்டும்.

யதா3 ஸ்வனிக3மேனோக்தம் த்3விஜத்வம் ப்ராப்ய பூருஷ: |
யதா2 யஜேத மாம் ப4க்த்யா ஶ்ரத்3த4யா தன்னிபோ3த4 மே || 8 ||

எவ்விதம் அவரவர்களுடைய சம்பிரதாயப்படி பூஜை செய்ய விரும்புபவன் அதை செய்யக்கூடிய தகுதியை அடைந்து எப்படி
என்னைவழிபட வேண்டுமோ அதை சொல்லப் போகின்றேன். பக்தியுடனும், சிரத்தையுடனும் வழிபடும் முறையை
என்னிடமிருந்து அறிந்து கொள்வாயாக.
பகவான் மீதுள்ள அன்பே பக்தி, அவர்மீது வைத்திருக்கும் முழு நம்பிக்கையே சிரத்தையாகும். இவையிரண்டும் மிக முக்கியமானது

அர்சாயாம் ஸ்த2ண்டி3லோऽக்3னௌ வா ஸூர்யே வாப்ஸு ஹ்ருதி3 த்3விஜ: |
த்3ரவ்யேண பக்தியுக்தோऽர்சேத்ஸ்வகு3ரும் மாமமாயயா || 9 ||

வழிபடுபவன், வழிபடும் இறைவன், ஆலம்பனம் என்ற மூன்றின் துணைக் கொண்டு பூஜையானது செய்யப்படுகின்றது.
ஆலம்பனம் என்பது எதன் துணைக் கொண்டு இறைவனை வழிபடுகின்றோமோ அதைக் குறிக்கின்றது.
வழிபட விரும்பும் இறைவனை ஒரு பொருளில் கொண்டுவந்து நிறுத்தி வழிபட ஆலம்பனம் உதவுகின்றது.
அர்சாயாம் – உருவ சிலைகள்
ஸ்தண்டிலோ – யாகம் செய்கின்ற இடம்
அத்னௌ – அக்னியிலும்,
சூரியனிலும், நீரிலும் தன்னுடைய இதயத்திலும் இறைவனை நிலைநிறுத்தி வணங்கலாம்.
அந்த ஆலம்பனத்தில் ஏதாவது ஒரு பொருளின் துணைக் கொண்டு அதாவது மலர், இலைகளைக் கொண்டும்,
விபூதி, குங்குமத்தையும் பயன்படுத்தி பக்தியுடன் கூடியவனாக வழிபட வேண்டும்.
உனக்கு உண்மையான குருவாக இருக்கின்ற என்னை சிரத்தையுடனும், கபடமில்லாமலும்(அமாயயா) வழிபட வேண்டும்.

பூர்வம் ஸ்னானம் ப்ரகுர்வீத் தௌ4தத3ந்தோऽங்க3ஶுத்3த4யே |
உப4யைரபி ச ஸ்நானம் மந்த்ரைர்ம்ருத்3க்3ரஹணாதி3னா || 10 ||

பூர்வம் ஸ்னானம் ப்ரகுர்வீத் – முதலில் உடலை குளிப்பாட்டி தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும்
ஏதத3ந்ததஹ – பல்லையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
அங்க ஸுத்தயே – உடலில் எல்லா உறுப்புக்களையும் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
உப யோக மந்திரஹ – தாந்த்ரிக, வைதீக மந்திரங்களின் துணைக் கொண்டு நீரைத் தெளித்து தூய்மைப்படுத்திப் பிறகு குளிக்க வேண்டும்.
பிறகு உடலை தூய்மைப்படுத்தும் பொருளைக் கொண்டும் தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.

ஸந்த்4யோபாஸ்த்யாதி3கர்மாணி வேதே3னாசோதி3தானி மே |
பூஜாம் தை: கல்பயேத்ஸம்யக் ஸங்கல்ப: கர்மபாவனீம் || 11 ||

ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் சந்தியாவந்தனம், சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட கர்மங்ளோடு சேர்த்து இறைவழிபாட்டை செய்ய வேண்டும்.
சரியான சங்கல்பத்துடன் செய்கின்ற வழிபாட்டின் பலனாக பாவங்கள் அழிந்துவிடும்.

ஶைலீ தா3ருமயீ லௌஹீ லேப்யா லேக்2யா ச ஸைகதீ |
மனோமயீ மணிமயீ ப்ரதிமாஷ்சவிதா4 ஸ்ம்ருதா || 12 ||

இதில் ஆலம்பனத்தைப் பற்றி விவரிக்கின்றார். எட்டுவிதமான ஆலம்பனங்களை கூறியிருக்கிறார். அவைகள்
1 ஶைலி – கல்லால் செய்த உருவச்சிலை
2 தாருமயி – மரத்தால் செய்யப்பட்ட உருவச்சிலை
3 லௌஹீ – தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட உருவச்சிலை
4 லேப்யா – சந்தனம், களிமண் போன்றவற்றினால் செய்யப்பட்ட உருவச்சிலை
5 லேக்யா – வரைப்படத்தில் உள்ள உருவங்கள்
6 ஸைகதீ – மணலில் செய்யப்பட்ட சிலைகள்
7 மனோமயீ – மனதிற்குள்ளே உருவாக்கி வைத்திருக்கும் உருவம்
8 மணிமயீ – மணிகளால் உருவாக்கப்பட்ட சிலை
ஆகியவற்றைக் கொண்டு வழிபாடு செய்தல்

சலாசலேதி த்3விவிதா4 ப்ரதிஷ்டா2 ஜீவமந்தி3ரம் |
உத்3வாஸாவாஹனே ந ஸ்த: ஸ்தி2ராயாமுத்3த4வார்சனே || 13 ||

ஆலம்பனங்கள் இரண்டு விதமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரே இடத்தில் நிலையாக இருப்பது,
வெவ்வேறு இடத்திற்கு எடுத்துச் செல்வது, நகரக்கூடியதாக இருப்பது ஆகியவைகளாகும்
ஜீவ மந்திரம் – உணர்வும், உயிரோட்டமும் உடைய கோவில்கள், ஜீவர்கள் சென்று தரிசனம் செய்வதற்காக
உருவாக்கப்பட்டிருக்கும் ஆலயங்கள் இறைவன் முழுமையாக இருக்குமிடம்
உத்தவா! நிலையாக வைக்கப்பட்டிருக்கும் சிலையில் அங்கு ஒவ்வொரு நாளும் ஆவாஹனம்
(ஒரு பொருளில் இறைவனை எழுந்தருள செய்யும் சடங்கு)
உத்3வாஸா – பூஜை முடிந்ததும் இறைவனை அந்தப் பொருளிலிருந்து அனுப்பி வைத்தல். ஆகியவைகள் நடைபெறாது.
கும்பாபிஷேகம் செய்யும் போது மீண்டும் ஆவாஹனம் செய்வார்கள்

அஸ்தி2ராயாம் விகல்ப: ஸ்யாத்ஸ்த2ண்டி3லே து ப4வேத்3த்3வயம் |
ஸனப்னம் ஸ்வவிலேப்யாயாமன்யத்ர பரிமார்ஜனம் || 14 ||

நகர்கின்ற சிலைகளில் அவரவர் விருப்பப்படி ஆவாஹனம் உத்வாஸம் செய்யலாம். ஆனால் புண்ணியமான இடத்தில் இருக்கும் போது
இவையிரண்டும் செய்தாக வேண்டும். அந்த நீரில் கரையாத சிலையை நீரால் தூய்மைப்படுத்த வேண்டும்.
நீரில் கரையும் தன்மையுடைய சிலையை கைகளால் சுத்தம் செய்ய வேண்டும்.

த்ரவ்யை: ப்ரஸித்3தை4ர்மத்3யாக3: ப்ரதிமாதி3ஷ்வமாயின: |
பக்தஸ்ய ச யதா2லப்3தை4ர்ஹ்ருதி3 பா4வேன சைவ ஹி || 15 ||

வழிபாட்டை ஆத்மார்த்தமாக, சிரத்தையாக செய்ய வேண்டும். சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட, யோக்கியமான பொருட்களை
வைத்து வழிபட வேண்டும். கடவுளுக்கு படைக்கும் பொருட்களில் போலித்தனமும், கள்ளம் கபடமும் இருக்கக்கூடாது.
பக்தியுடனும் படைக்க வேண்டும். உன்னால் கொடுக்க முடிந்த பொருட்களை வைத்து என்னை வழிபடலாம்.
மனமே ஆலம்பனமாக இருந்தால் அதிலேயும் பகவானுக்கு ஏதாவது பொருட்களை வைத்து வழிபட வேண்டும்.

ஸ்னானாலங்கரணம் ப்ரேஷ்ட2மர்சாயாமேவ தூத்3த4வ |
ஸ்த2ண்டி3லே தத்த்வ்வின்யாஸோ வஹனாவாஜ்யப்லுதம் ஹவி: || 16 ||

உத்தவா! நிலையான உருவச்சிலைகளை நீரால் தூய்மைப்படுத்தி, அலங்காரம் செய்வது எனக்கு பிடித்தமானது.
இறைவனை வழிபட ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வழிபட விரும்பினால் அங்கே மந்திரங்களால் தேவதைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
பிறகு வழிபட வேண்டும். ஒருவேளை அக்னி மூலமாக வழிபட நினைத்தால்,
அதில் போடும் பொருட்களை நெய்யில் போட்டு எடுத்து போட வேண்டும்.

ஸூர்யே சாப்4யர்ஹணம் ப்ரேஷ்ட2ம் ஸலிலே ஸலிலாதி3பி4: |
ஶ்ரத்3த4யோபாஹ்ருதம் ப்ரேஷ்ட2ம் பக்தேன மம வார்யபி || 17 ||

நீ எனக்கு படைக்கும் பொருட்கள் எனக்கு முக்கியமல்ல. அவைகளை முழு பக்தியுடனும், சிரத்தையுடனும் படைத்திருக்க வேண்டும்.
சூரியனை ஆலம்பனமாக வைத்து வழிபட நினைத்தால் நீரால் மந்திரத்தை தூய்மைப்படுத்தி அர்ப்பணிக்க வேண்டும்.

பூ4ர்யப்யப4க்தோபாஹ்ருதம் ந மே தோஷாய கல்பதே |
க3ந்தோ4 தூ4ப: ஸுமனஸோ தீ3போऽன்னாத்3யம் ச கிம் புன: || 18 ||

நீரை ஆலம்பனமாக வைத்தால் அதையே எனக்கு அர்ப்பணித்து விடு. நீ எதைக் கொடுக்கிறாய் என்பது முக்கியமல்ல
எப்படிபட்ட பாவனையுடன் கொடுக்கிறாய் என்பதுதான் முக்கியம். பக்தியுடனும், சிரத்தையுடனும் வெறும் நீரைமட்டும்
எனக்கு அளித்தாலே போதுமானது. விலையுயர்ந்த பொருட்கள் பக்தியில்லாமல் எனக்கு படைக்கப்பட்டாலும்
அவைகள் எனக்கு திருப்தியை கொடுக்காது. வாசனைப் பொருட்கள், மலர்கள், தீபங்கள், அன்னம் போன்ற பொருட்களை
பக்தியுடன் கொடுத்தாலே முற்றிலும் மனநிறைவுடன் ஏற்றுக் கொள்வேன்.
பூர்யஹ – அதிகமாக
அபக்தய உபாஹ்ருதம் – மனதில் பக்தியில்லாமல்
தோஷாய கல்பதே – எனக்கு திருப்தியை கொடுக்காது

ஶுசி: ஸம்ப்4ருதஸம்பா4ர: ப்ரக்3த3ர்பே4: ஸல்பிதாஸன: |
ஆஸின: ப்ராகு3த3வார்சேத3ர்சாயாம் த்வத2 ஸம்முக2: || 19 ||

தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு பூஜைக்கு தேவையான பொருட்களை தன்னருகிலே வைத்துக் கொண்டு,
முதலில் தர்ப்பத்திலான தரைவிரிப்பை ஆசனமாக வைத்துக் கொண்டு தெய்வத்தை வழிபடுவதற்கு முன்
கிழக்கு நோக்கியோ, வடக்கு நோக்கியோ அல்லது வழிபடும் தெய்வத்தின் முன்போ அமர்ந்து கொள்ள வேண்டும்.

க்ருதன்யாஸ: க்ருதன்யாஸாம் மத3ர்சாம் பாணினாம்ருஜேத |
கலஶம் ப்ரோக்ஷணீயம் ச யதா2வது3பஸாத4யேத் || 20 ||

உடலிலுள்ள எல்லா அங்கங்களையும் மந்திரங்களால் தூய்மைப்படுத்த வேண்டும். அந்தந்த அங்கங்களுக்குரிய தேவதைகளை வேண்டி
அங்கங்களையும் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். வழிபடும் தெய்வத்தை தன்னுடலில் அமர்த்திக் கொள்ள வேண்டும்.
கையினாலே அந்த தெய்வத்தை தூய்மைப்படுத்த வேண்டும். நீரில் மந்திரத்தை சொல்லி அதை நம் மீது தெளித்துக் கொண்டு
துய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். கலசத்தில் நீர் நிரப்பி அதை மந்திரத்தாலோ, வில்வம், துளசி போன்றவற்றினால் தூய்மைப்படுத்த வேண்டும்.
ப்ரோக்ஷணீயம் – புரோக்ஷனத்திற்கு தயார் பண்ணிவைக்க வேண்டும்.
ப்ரோக்ஷணம் – தெளித்தல்

தத3த்3பி4ர்தே3வயஜனம் த்ரவ்யாண்யாத்மானமேவ ச |
ப்ரோக்ஷ்ய பாத்ராணி த்ரீண்யாத்3பி4ஸ்தைஸ்தைர்த்ரவ்யைஶ்ச ஸாத4யேத் || 21 ||

பாத்3யார்த்4யாசமனீயார்த2ம் த்ரீணி பாத்ராணி தே3ஶிக: |
ஹ்ருதா3 ஶீர்ஷ்ணாத2 ஶிக2யா கா3யஞ்யா சாபி4மந்த்ரயேத் || 22 ||

ப்ரோக்ஷணம் செய்வதற்காக தயாராக வைத்திருந்த நீரைக் கொண்டு எந்த இடத்தில் இறைவனுடைய உருவச்சிலையை
வைத்திருக்கிறோமோ அந்த இடத்தையும், பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்களான மலர்கள், நைவேத்திய பொருட்கள்
ஆகியவற்றை பூஜைசெய்யப்போகும் தன்னையும் நீரை தெளித்து தூய்மைப்படுத்தி கொள்ள வேண்டும்.
பாத்யம் – பாதத்தையும்
அர்க்யம் – அர்ப்பணிக்க வேண்டிய பொருட்களையும்
ஆசமனம் – வாயையும்
மந்திரத்தால் தூயமைப்படுத்தபட்டு தயாராக வைத்திருந்த நீரால் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஹ்ருதாய என்ற மந்திரத்தையும், தலைமுடியை அந்தந்த காயத்ரி மந்திரத்தால் வழிபட வேண்டும்.

பிண்டே3 வாய்வக்3னிஸம்ஶுத்3தே4 ஹ்ருத்பத்3மஸ்தா2ம் பராம் மம |
அண்வீம் ஜீவகலாம் த்4யாயேத் நாதா3ந்தே ஸித்3த4பா4விதாம் || 23 ||

நம் உடலை நீரால் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். தூய்மையான ஆடைகளை அணிந்து கொண்டு,
பிராணாயாமத்தினால் உடலை தூய்மைப்படுத்தி கொள்ள வேண்டும். பிராணாயாமம் நோய்களை விரட்டி, மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
ஸித்தபாவிதாம் – சித்தர்களால் பாவிக்கப்பட்ட தத்துவம்
ஹ்ருத்பத்மஸ்தாம் – பூஜை செய்பவனின் இதய தாமரையினுள்ளே அமர்ந்துள்ள
பராம் மம – என்னுடைய மேலான தத்துவம்
அண்வீம் – புரிந்து கொள்வதற்கு கடினமானது இது
ஜீவகலாம் த்யாயேத் – ஜீவனுடைய உண்மையான ஸ்வரூபத்தை தியானித்து வழிபட வேண்டும்
நாதந்தே – நாத பிந்து சப்தத்தை வழிபட வேண்டும்.

தயாத்மபூ4தயா பிண்டே3 வ்யாப்தே ஸம்பூஜ்ய தன்மய: |
ஆவாஹயார்சாதி3ஷு ஸ்தா2ப்ய ந்யஸ்தாங்க3ம் மாம் ப்ரபூஜ்யேத் || 24 ||

நமது உடலையே ஆலயமாகக் கொண்டு இதயத்தில் வணங்கும் தெய்வத்தை நிலைநிறுத்தி வழிபட வேண்டும்.
பிறகு அந்த தெய்வத்தை வழிபடும் உருவத்தில் வைக்க வேண்டும். இந்த விதத்தில் நாமே இறைவனாக உணர்வு பூர்வமாக பாவித்துக் கொள்கிறோம்.
நம் உடலில் உள்ள ஒவ்வொரு அங்கங்களிலும் தேவதைகளை வரவழைத்து நிலைநிறுத்த வேண்டும்.
இந்த உடலையே ஈஸ்வர தத்துவமாக்கி கொள்ள வேண்டும், இதனால் உடலானது விஷ்ணுமயமாகிவிடுகிறது.
அப்படி இந்த உடலை பூஜிக்க வேண்டும். இவ்வாறு ஆவாகனம் செய்த விஷ்ணுவை வெளியே உள்ள ஆலம்பனத்தில் வைத்து
ஒவ்வொரு அங்கங்கத்திலும் அவரை ஆவாகனம் செய்து விட்டு வணங்க வேண்டும்.

பாத்3யோபஸ்பர்ஶார்ஹணாதீ3னுபசாரான்ப்ரகல்பயேத் |
த4ர்மாதி3பி4ஶ்ச நவபி4: கல்பயித்வாஸனம் மம || 25 ||

உபா4ப்4யாம் வேத3தந்த்ராப்4யாம் மஹயம் தூப4யஸித்3த4யே || 26 ||

பாத்யம் – பாதத்தை தூய்மைபடுத்த பயன்படுத்தும் நீர்
அர்க்யம் – வாயை தூய்மைப்படுத்த பயன்படுத்தும் நீர்
ஆசமனம் – இறைவனுக்கு படைக்கும் பொருட்களை தூய்மைபடுத்தும் நீர்
இது போன்ற பலவிதமான உபசாரங்களை பகவானுக்கு செய்ய வேண்டும். பகவன் அமர்வதற்கு கட்டிலை உருவாக்கி
அதன் நான்கு கால்களை தர்மம், ஞானம், வைராக்கியம், ஐஸ்வர்யம் இவைகளாக கற்பணை செய்து ஒன்பது திசைகளிலும்
ஒன்பது விதமான சக்திகளுடனும் இருக்கிறார் என்று பாவிக்க வேண்டும். இந்த மாதிரி ஒரு ஆசனத்தை உருவாக்கி,
எட்டு இதழ்களை கொண்ட தாமரை பூவில் இருப்பதாகவும், சூரிய, சந்திர கிரணங்கள் அந்த இதழ்களில் பிரதிபலிப்பதாகவும்
கற்பணை செய்து கொண்டு, சாஸ்திரத்தில் கூறப்பட்ட மந்திரங்களால் பூஜிக்க வேண்டும்.
இதனால் ஶ்ரேயஸ், ப்ரேயஸ் இரண்டையும் அடையலாம்

ஸுத3ர்ஶனம் பாஞ்சஜன்யம் க3தா3ஸீஷுத4னுர்ஹலான் |
முஷலம் கௌஸ்துப4ம் மாலாம் ஶ்ரீவத்ஸம் சானுபூஜயேத் || 27 ||

பகவானுடைய கைகளிலிருக்கும் ஆயுதங்களையும் வணங்க வேண்டும். முத்திரைகளையும் வழிபட வேண்டும்.
சுதர்ஶன சக்கரம், பாஞ்சஜன்யம் என்கின்ற சங்கு, கதாயுதம், கத்தி, வில், அம்பு, கலப்பை போன்ற ஆயுதங்களையும்,
ஆபரணங்களான கௌஸ்துபம், மலர்மாலைகள் போன்றவைகளையும், மார்வில் உள்ள ஸ்ரீவத்ஸம் என்கின்ற் மருவையும் வணங்க வேண்டும்.

நந்த3ம் ஸுனந்த3ம் க3ருட3ம் ப்ரசண்ட3ம் சண்ட3ம் ஏவ ச |
மஹாப3லம் ப3லம் சைவ குமுதம் குமுதே3க்ஷணம் || 28 ||

து3ர்கா3ம் வினாயகம் வ்யாஸம் விஷ்வக்ஷேனம் கு3ருன்ஸுரான் |
ஸ்வே ஸ்வே ஸ்தா2னே த்வபி4முகா2ன்பூஜ்யேத்ப்ரோக்ஷணாதி3பி4: || 29 ||

பகவானின் பாதுகாவலர்களான தேவதைகள் நந்த, சுனந்தம், கருடன், ப்ரசண்டம், சண்டம், மஹாபலம், பலம், குமுதம் போன்றவைகளும்,
மேலும் குமுதேக்ஷணம், துர்கா, வினாயகர், வியாஸர், விஶ்வக்ஷேனம், குருமார்கள் மேலும் மற்ற தேவதைகளையும் வழிபட வேண்டும்.

சந்த3னோஶீரகர்பூர குங்குமாகு3ருவாஸிதை: |
ஸலிலை: ஸ்னாபயேன்மந்த்ரைர் நித்யதா3 விப4வே ஸதி || 30 ||

ஸ்வர்ணக4ர்மானுவாகேன மஹாபுருஷவித்3யயா |
பௌருஷேணாபி ஸூக்தேன ஸாமபி4 ராஜனாதி3பி4: || 31 ||.

பூஜை செய்யும் இடம் நல்ல தெய்வீக வாசனையுடன் கூடியதாக இருக்க வேண்டும். வாசனை திரவியங்களுடன்,
சந்தனம், கற்பூரம், குங்குமம் ஆகியவற்றுடன் நீரால் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு நீராட்டி பூஜிக்க வேண்டும்.
தோத்திரங்களாலும், வேத மந்திரங்களாலும், விஷ்ணுபுராணத்திலுள்ள சில மந்திரங்களாலும், புருஷ ஸுக்தம்,
சாம வேதத்திலுள்ள மந்திரங்களாலும் வழிபட வேண்டும்.

வஸ்த்ரோபவீதாப4ரண பத்ரஸ்ரக்3க3ந்த4லேபனை: |
அலங்குர்வீத ஸப்ரேம மத்பக்தோ மாம் யதோ2சிதம் || 32 ||

பாத்3யமாசமனீயம் ச க3ந்த4ம் ஸுமனஸோऽக்ஷதான் |
தூ4பதீபோபஹார்யாணி த3த3யான்மே ஶ்ரத்3த4யார்சக: || 33 ||

கு3ட3பாயஸ ஸர்பீஷி ஶஷ்குல்யாபூபமோத3கான் |
ஸம்யாவத3தி4ஸூபாம்ஶ்ச நைவேத்3யம் ஸதி கல்பயேத் || 34 ||

அப்4யங்கோ3ன்மர்த3னாத3ர்ஶ த3ந்த தா4வாபி4ஷேசனம் |
அன்னாத்3யகீ3தந்ருத்யானி பர்வணி ஸ்யுருதான்வஹம் || 35 ||

பகவானுக்கு விதவிதமான ஆடைகளை உடுத்தியும், ஆவரணங்களை அணிவித்தும், மலர் மாலைகள், நறுமணம் கமழும் சந்தனம்,
வாசனை திரவியங்கள் போன்றவைகளை பூசி வழிபட வேண்டும். ஆலம்பனத்திற்கேற்றாற் போல அலங்காரம் செய்ய வேண்டும்.
பாத்யம், அர்க்யம், ஆசமனம் செய்வதற்கேற்ற நீரும், நறுமணம் வீசுகின்ற மலர்கள், விளக்குகள் ஆகியவற்றை
மிகுந்த சிரத்தையுடன் வைத்திருக்க வேண்டும். பாயஸம், நெய், மோதகம், இனிப்பு பதார்த்தங்கள், விதவிதமான பலகாரங்களை
முடிந்த அளவுக்கு படைக்க வேண்டும். சில சிறப்பான நாட்களில், விசேஷ நாட்களில் அவருக்கு கண்ணாடி காட்ட வேண்டும்.
அவரை தூய்மைப்படுத்தி இசையாலும், நாட்டியத்தாலும் மகிழ்விக்க வேண்டும்.

விதி4னா விஹிதே குண்டே3 மேக2லாக3ர்தவேதி3பி4: |
அக்3னிமாதா4ய பரித: ஸமுஹேத்பாணிதோதி3தம் || 36 ||

பரிஸ்தீர்யத2 பர்யுக்ஷேத3ன்வாதா4ய யதா2விதி4 |
ப்ரோக்ஷண்யாஸாத்3ய த்ரவ்யாணி ப்ரோக்ஷ்யாக்3னௌ பா4வயேத மாம் || 37 ||

தப்தஜாம்பூ3னத3ப்ரக்2யம் ஶங்க2சக்ரக3தா3ம்பு3ஜை: |
லஸச்சதுர்பு4ஜம் ஶாந்தம் பத்மகிஞ்சல்கவாஸஸம் || 38 ||

ஸ்புரத்கிரீடகடக தடிஸூத்ரவரங்க3த3ம் |
ஶ்ரீவத்ஸவக்ஷஸம் ப்4ராஜத் கௌஸ்துப4ம் வனமாலினம் || 39 ||

த்4யாயன்னப்4யர்ச்ய தா3ருணி ஹவிஷாபி4க்4ருதானி ச |
ப்ராஸ்யாஜ்யபா4கா3வாகா4ரௌ த3த்த்வா சாஜ்யப்லுதம் ஹவி: || 40 ||

ஜுஹுயான்மூலமந்த்ரேண ஷோடஶர்சாவதா3னத: |
த4ர்மாதி3ப்4யோ யதா2ன்யாயம் மந்த்ரை: ஸ்விஷ்டி2க்ருதம் பு3த4: || 41 ||

அப்4யர்ச்யாத2 நமஸ்த்ருத்ய பார்ஷதே3ப்4யோ ப3லிம் ஹரேத் |
மூலமந்த்ரம் ஜபேத்3ப்3ரஹ்ம ஸ்மரன்னாராயணாத்மகம் || 42 ||

த2த்த்வாசமனமுச்சே2ஷம் விஷ்வக்ஷேனாய கல்பயேத் |
முக2வாஸம் ஸுரபி4மத்தாம்பூ3லாத்3யமதா2ர்ஹயேத் || 43 ||

விதிப்படி ஹோம குண்டத்த்தை அமைத்து அதில் அக்னியை வளர்க்க வேண்டும். பிறகு பூஜை செய்ய வேண்டும்.
எவைகளையெல்லாம் அதில் போட விரும்பகின்றோமோ அவைகளை தூய்மைபடுத்திவிட்டு அதில் போட வேண்டும்.
மூலமந்திரத்தை சொல்லி என்னை வணங்கவேண்டும். என்னை சுற்றியுள்ள மற்ற தேவதைகளுக்கும் செய்ய
வேண்டியவைகளை செய்ய வேண்டும், கொடுக்க வேண்டியவைகளை கொடுக்க வேண்டும்.

உபகா3யன்க்3ருணன் ந்ருத்யன்கர்மாண்யபி4னயன்மம |
மத்கதா2: ஶ்ராவயன்ஶ்ருண்வன்முஹூர்த க்ஷணிகோ ப4வேத் || 44 ||

இறைவனை போற்றி புகழ்ந்து பாடுதல், அவனுடைய லீலைகளை கேட்டல், அவதார கதைகளை மக்களுக்கு கூறுதல்,
கேட்க வைத்தல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். என்புகழ் பாடியும், ஆடியும், நடித்தும் சிறிது நேரம் உலகத்தை
மறந்து என்னிடத்தில் மூழ்கியிருக்க வேண்டும்.
உபகாயன் – பகவான் கதைகளை
க்3ருணன் – கேட்டுக்கொண்டும்
நிருத்யன் – நடனமாடிக் கொண்டும்
இவைகளை நேரம் போவது தெரியாமல் மனமொன்றி செய்ய வேண்டும்.

ஸ்தவைருச்சாவசை: ஸ்தோத்ரை: பௌராணை: ப்ராக்ருதைரபி |
ஸ்துத்வா ப்ரஸீத3 ப4க3வன்னிதி வந்தே3த த3ண்ட3வத் || 45 ||

பண்டைக்கால பக்தர்களால் செய்யப்பட்டதும், புராணங்களில் கூறப்பட்டதுமான சிறிய-பெரிய தோத்திரப்பாக்களால் என்னை துதித்து,
பகவானே எனக்கு அருள் புரியுங்கள் என்று கேட்க வேண்டும்.
பகவான் ப்ரஸீத வந்தேத தண்டவத் – பகவானை தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி வேண்ட வேண்டும்.
எனக்கு அருள் புரியுங்கள் என்று யாசிக்க வேண்டும். இது நம் அகங்காரத்தை இறைவனிடத்தில் பணிய வைக்கின்றது.

ஶிரோ மத்பாத3யோ: க்ருத்வா பா3ஹுப்4யாம் ச பரஸ்பரம் |
ப்ரபன்னம் பாஹி மாமீஶ பீ4தம் ம்ருத்யுக்3ரஹார்ணவாத் || 46 ||

என்னுடைய பாதங்களில் உன்னுடைய தலையை வைத்து இரண்டு பாதங்களையும் இறுக்கி பிடித்துக் கொண்டு,
இறைவா! உன்னிடத்தில் சரணடைந்த என்னை காப்பாற்றுவாயாக. மரணம் என்கின்ற முதலை பிடியிலிருந்து,
சம்சாரத்தில் துயரப்பட்டு கொண்டிருக்கும் என்னை காப்பாற்றுவாயாக என்று வேண்ட வேண்டும்.

இதி ஶேஷாம் மயா த3த்தாம் ஶிரஸ்யாதா4ய ஸாத3ரம் |
உத்3வாஸயேச்சேது3த்3வாஸ்யம் ஜ்யோதிர்ஜ்யோதிஷி தத்புன: || 47 ||

நமக்கு வரும் அனைத்து அனுபவங்களும் இறைவனின் பிரசாதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதி மயா த3த்தாம் ஶேஷாம் – உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் என்னால் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்க வேண்டும்.
அதை தலையில் எடுத்து வைத்துக் கொள்.
ஒரு சிலையில் தற்காலிகமாக ஆவாகனம் செய்யப்பட்டிருந்தால் பூஜை முடிந்த பிறகு அவரை முறைப்படி அனுப்பி விட வேண்டும்.
ஏற்றி வைத்திருக்கும் விளக்கில் இருந்து அவரை எழுந்தருள வைத்திருந்தால் அதிலேயே அனுப்பிவிட வேண்டும்.

அர்சாதி3ஷு யதா3 யத்ர ஶ்ரத்3தா4 மாம் தத்ர சார்சயேத் |
ஸர்வபூ4தேஷ்வாத்மனி ச ஸர்வாத்மாஹமவஸ்தி2த: || 48 ||

வழிபடக்கூடிய என்னுடைய உருவச்சிலை எந்த இடத்தில் இருந்தாலும் சிரத்தையோது அந்த இடத்திலே என்னை வழிபடலாம,
எல்லா ஜீவராசிகளிடத்திலும், உன்னிடத்திலும் சர்வாத்மாவாக நான் குடிக் கொண்டிருக்கின்றேன்.

ஏவம் க்ரியாயோக3பதை2: புமான்வைதி3கதாந்த்ரிகை: |
அர்சன்னுப4யத: ஸித்3தி4ம் மத்தோ விந்த3த்யபீ4ப்ஸிதாம் || 49 ||

இவ்விதம் இங்கு சொல்லப்பட்ட கிரியாயோகத்தின் வைதீக முறைப்படியும், ரிஷிகள் கூறிய தோத்திரங்கள் மூலமாகவும்
வழிப்பட்டால் இவ்வுலகிலும், மேலுலகிலும் தான் விரும்பியதெல்லாம் என்னிடமிருந்து பெறலாம்

மத3ர்சாம் ஸம்ப்ரதிஷ்டா2ப்ய மந்தி3ரம் காரயேத்3த்3ருட4ம் |
புஷ்பொத்3யானானி ரம்யாணி பூஜாயாத்ரோத்ஸவாஶ்ரிதான் || 50 ||

பூஜாதீ3னாம் ப்ரவாஹார்த2ம் மஹாபர்வஸ்வதா2ன்வஹம் |
க்ஷேத்ராபணபுரக்3ராமாந்த3த்த்வா மத்ஸார்ஷ்டிதாமியாத் || 51 ||

ப்ரதிஷ்ட2யா ஸார்வபௌ4மம் ஸத்3மனா பு4வனத்ரயம் |
பூஜாதி3னா ப்3ரஹ்மலோகம் த்ரிபி4ர்மத்ஸாம்யதாமியாத் || 52 ||

எனக்காக உறுதியான கோயிலைக் கட்டி என்னை பிரதிஷ்டை செய்து அதனருகே நந்தவனங்களை அமைத்து,
விதவிதமான உற்சவங்கள், வருடாந்திர திருவிழாக்கள், தினசரி பூஜைகள் செய்தல், கோயிலுக்கு நிலம் கொடுத்தல்,
கிராமத்தைக் கொடுத்தல், ஆகிய இத்தகைய செயல்களால் நான் அடையும் இன்பத்தை நீயும் அடைவாய்.
எனக்கு நிகரான செல்வ செழிப்பும் உண்டாகும். என் மூர்த்தியை பிரதிஷ்டை செய்தால் மண்ணுலகில் பெரிய பதவியையும்,
கோவில் கட்டினால் மூவுலக ஆட்சியையும், பூஜை முதலியவைகளுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்தால் பிரம்மலோகமும்,
இந்த மூன்றையும் செய்தால் எனக்கு நிகரான நிலையையும் அடைவாய்

மாமேவ நைரபேக்ஷ்யேண ப4க்தியோகே3ன விந்த3தி |
பக்தியோக3ம் ஸ லப4த ஏவம் ய: பூஜயேத மாம் || 53 ||

பலனில் பற்றில்லாமல் கிரியாயோக முறைப்படி பூஜை செய்தால் என்னையே அடைவாய், இங்கு என்னையே அடைவாய்
என்பதை பக்தியோகத்தை அடைவாய் அதில் நிலைபெறுவாய் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

ய: ஸ்வத3த்தாம் பரைர்த3த்தாம் ஹரேத ஸுரவிப்ரயோ: |
வ்ருத்திம் ஸ ஜாயதே விட்பு4க்3வர்ஷாணாமயுதாயுதம் || 54 ||

கர்துஶ்ச ஸாரதே2ர்ஹதோரனுமோதி3துரேவ ச |
கர்மணாம் பா4கி3ன: ப்ரேத்ய பூ4யோ பூ4யஸி தத்ப2லம் || 55 ||

தன்னாலோ அல்லது பிறரைக் கொண்டோ தெய்வத்திற்கு அல்லது பிராமணனுக்கு அளிக்கப்பட்ட சொத்துக்களை
கவர்ந்து கொண்டால் அவன் லட்சோபலட்ச ஆண்டுகள் மலம் புழுவாக பிறந்து துயரப்படுவான்.
இத்தகைய தீய காரியங்களுக்கு உதவி செய்தாலும், தூண்டிவிட்டாலும், ஆதரித்தாலும் அவர்கள் கூட மரணத்திற்கு பிறகு
மீண்டும் மீண்டும் இதே நிலைக்கு ஆளாவார்கள்

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -20-சத்ஸங்கத்தின் மகிமை, தேவை-

May 23, 2020

ஸ்ரீபகவான் உவாச
மல்லக்ஷணமிமம்காயம் லப்3த்4வா மத்3த4ர்ம ஆஸ்தி2த: |
ஆனந்தம் பரமாத்மானமாத்மஸ்த2ம் ஸமுபைதி மாம் || 1 |

மல்லக்ஷணம் இமம் காயம் – இந்த மனித உடல் என்னை அடைவதற்கு உதவியாகவும், சாதனமாகவும் இருக்கக்கூடியது.
மத்3 த4ர்ம ஆஸ்தி2தஹ – என்னை அடைவதற்கான சாதனத்தில் ஈடுபட்டுக்கொண்டு,
(தர்மம் என்ற சொல்லுக்கு பகவானை அடைவதற்கான சாதனங்கள் என்று பொருட்கொள்ள வேண்டும்.)
மாம் ஸமுபைதி- என்னை முழுமையாக அடைகின்றான், என்னிடமிருந்து வேறுபடாதவனாக, நானாகவே உயர்வடைகிறான்.
ஆனந்தம் பரமாத்மானம் ஆத்மஸ்த2ம் லப்த்வா – ஆத்ம ஸ்வரூபமாக இருக்கின்ற அந்த பரமாத்மாவை அடைந்து ஆனந்தமாக இருக்கின்றான்.
ஆனந்த ஸ்வரூபமாக உள்ள பரமாத்மாவாக இருக்கின்ற ஆத்மாவை, என்னை அடைகின்றான்.

கு3ணமய்யா ஜீவயோன்யா விமுக்தோ ஞானநிஷ்ட2யா |
கு3ணேஷு மாயாமாத்ரேஷு த்3ருஶ்யமானேஷ்வ வஸ்துத: || 2 ||

குணமய்யா ஜீவயோன்யா – ஜீவனுக்கு உபாதியாக உள்ள ஸ்தூல உடல் குணங்களால் தூண்டப்பட்டு செய்த செயல்களின்
விளைவாக கிடைத்தது இந்த மனித உடலின் துணைக் கொண்டு
ஞான நிஷ்டயா – ஞானயோகம் என்கின்ற சாதனத்தின் மூலம், ஞானத்தை அடைவதற்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன்
விமுக்தஹ – இதிலிருந்து விடுதலையடைகின்றான். சரீரத்தின் மீது அபிமானம் இல்லாமல் இருப்பான்.
சரீர நிமித்தமான சம்சாரத்திலிருந்து விடுதலையடைந்து விடுவான்.
குணேஷு – மூன்று சரீரங்களுக்குள்
மாயா மாத்ரேஷு – மாயையாக, பொய்யாக மட்டும்
அவஸ்துத – பொய்யாக
திருஷ்யமானேஷ்வ – நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, பார்த்துக் கொண்டு இருக்கும்போது
வர்த்தமானஹ அபி புமான் – இவைகளோடு அவன் இருந்து கொண்டிருந்தாலும் கூட ந யுஜ்யதே – அவன் சம்பந்தப்படுவதில்லை
அவஸ்துபிஹி குணைஹி – சரீரத்தினுடைய தன்மைகளால், பொய்யான தன்மையால் மனம் பாதிக்கப்படுவதில்லை.

ஸங்க3ம் ந குர்யாத3ஸதாம் ஶிஶ்னோத3ரத்ருதாம் க்வசித் |
தஸ்யானுக3ஸ்தமஸ்யந்தே4 பதத்யந்தா4னுகா3ந்த4வத் || 3 ||

ஸங்கம் ந குர்யாத்ஸதாம் – அஸத் புருஷர்களிடத்தில் சங்கம் வைக்கக்கூடாது. அதர்மமாக வாழும் தீயவர்கள் கூட்டத்தோடு சேரக்கூடாது.
ஸத் புருஷர்களான சாதுக்கள் கூட்டத்தோடு இருக்க வேண்டும். காம்ய கர்மத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பவர்களுடைய
உறவு வைக்கக்கூடாது. கர்மத்தால் பலனை அடையும் வழியில் இருப்பவர்களை அஸத் புருஷர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்
ஶிஶ்ன உதர த்ருதாம் – சுவையான உணவை உட்கொண்டாலும், உடலை நன்கு அலங்கார படுத்திக்கொண்டாலும்
அவைகளில் திருப்தி அடையாதவர்களே அஸத் புருஷர்களை பின்பற்றுவார்கள், அடர்ந்த இருளான அறியாமையில்,
மோகத்தில் விழுந்து விடுகின்றார்கள். பார்வையற்றவனை பார்வையற்றவன் பின்பற்றுவது போல இது இருக்கின்றது.

ஐல: ஸம்ராடிமாம் கா3தா2மகா3யத ப்3ருஹச்ச்2ரவா: |
உர்வஶீவிரஹான்முஹயான்னிர்விண்ண: ஶோகஸம்யமே || 4 ||

முன்னொரு காலத்தில் புகழ் பெற்ற ப்ருரவாஸ் என்கின்ற மகாராஜா என்பவர் ஒருவர் இருந்தார்.
அவர் தான் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி பேசுகிறார். சோகத்தின் முடிவில் வைராக்கியத்தை இவர் அடைந்தார்.
வைராக்கியத்தை அடைந்தவராக இருந்த போது அவர் பேசியதை பகவான் கூறுகிறார்,
ஒருநாள் அவனுடன் வாழ்ந்து கொண்டு வந்த ஊர்வசியானவள் அவனை விட்டு நீங்கி விடுகின்றாள்.
அவரிடம் உள்ள புண்ணியங்கள் தீர்ந்தவுடன் இந்த நிலை அவருக்கு ஏற்பட்டது.

த்யக்த்வத்மானம் வ்ரயந்தீம் தாம் நக்ன உமத்தவன் ந்ருப: |
விலபன்ன்ன்வகா3ஜ்ஜாயே கோ4ரே திஷ்டே2தி விக்லவ: || 5 ||

ஊர்வசி தன்னை விட்டு சென்றபோது, ஒரு பைத்தியத்தின் மனநிலையை அடைந்தது மட்டுமல்லாமல்,
துயரத்துடனே அவளை பின் தொடர்ந்து சென்றார். அன்பிற்குரியவளே! என்னை துன்புறுத்தும் அரக்கியே! என்று
அழைத்துக் கொண்டே பின்னால் சென்றார்.

காமானத்ருப்தோऽனுஜுஷன்க்ஷுல்லகான்வர்ஷயாமினீ: |
ந வேத3 யாந்தீர்னாயாந்தீருர்வஶ்யாக்ருஷ்டசேதன: || 6 ||

சிற்றின்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், நிறையாத மனதை உடையவராக இருந்தார்.
இரவும் பகலும் பலவருடங்களாக வந்து போவதையும் அறியாமல் ஊர்வசியுடன் உல்லாசமாக இருந்து கொண்டு
போகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். ஊர்வசியினிடத்து அனுபவிக்கும் இன்பத்தில் மூழ்கிக் கிடந்தார்.

ஐல உவாச
அஹோ மே மோஹவிஸ்தார: காமகஶ்மலசேதஸ: |
தே3வ்யா க்3ருஹீதகண்ட2ஸ்ய நாயு:க2ண்டா3 இமே ஸ்ம்ருதா: || 7 ||

புரூருவஸ் கூறினார்.
அய்யகோ! காமத்தால் கலங்கிய மனதையுடைய என்னுடைய மோகத்தின் பெருக்கு இத்தன்மையானதென்று சொல்லமுடியாததாக இருக்கிறது.
ஊர்வசியால் தழுவப்பட்ட கழுத்தை உடைய என்னுடைய இந்த இரவு பகலென்ற ஆயுட்காலம் என்னால் உணரப்படவில்லையே

நாஹம் வேதா3பி4நிர்முக்த: ஸூர்யோ வாப்4யுதி3தோऽமுயா |
மூஷிதோ வர்ஷபூகா3னாம் ப3தாஹானி க3தான்யுத || 8 ||

அதுவுமல்லாமல் இவளால் ஏமற்றப்பட்ட நான் பல வருடங்களின் நாட்கள் சென்றதையாவது, சூரியன் உதித்ததையாவது,
மறைந்ததையாவது அறியவில்லையே! என்ன கஷ்டம்!

அஹோ மே ஆத்மஸம்மோஹோ யேனாத்மா யோஷிதாம் க்ருத: |
க்ரீடா3ம்ருக3ஶ்சக்ரவர்தீ நரதே3வஶிகா2மணி: || 9 ||

எந்த மோகத்தால் அரசர்களுக்குள் சிறந்தவனும், சக்கரவர்த்தியுமான நான் பெண்களுக்கு விளையாட்டுக் கருவியாகச் மாறிவிட்டேனோ,
அந்த என்னுடைய மனதிலுண்டான மோகமானது ஆச்சரியமானது.

ஸபரிச்ச2த3மாத்மானம் ஹித்வா த்ருணமிவெஶ்வரம் |
யாந்தீ ஸ்த்ரியம் சான்வக3மம் நக்3ன உன்மத்தவத்ருத3ன் || 10 ||

ராஜ்ஜியம் முதலியவற்றுடன் கூடினவனும் சக்கரவர்த்தியுமான என்னை ஒரு புல்லைப் போல விட்டுவிட்டு போகின்ற
பெண்ணை பித்தன் போல இடுப்பில் ஆடை அவிழ்ந்த்தைக் கூட அறியாதவனாய் அழுதுகொண்டே பின்தொடர்ந்து சென்றேனே!

குதஸ்தஸ்யானுபா4வ: ஸ்யாதேஜ ஈஶத்வமேவ வா |
யோ ன்வக3ச்ச2ம் ஸ்த்ரியம் யாந்தீம் க2ரவத்பாத3தாடி3த: || 11 ||

பெண்கழுதையால் பின்கால்களினால் உதைக்கப்பட்ட ஆண்கழுதைப் போல ஓடிப்போகிற ஒரு பெண்ணை எந்த நான்
பின்தொடர்ந்தேனோ அந்த எனக்கு பெருந்தன்மையும் பலமும், ஐஸ்வரியமும் எங்கிருந்து உண்டாகும்?

கிம் வித்3யயா கிம் தபஸா கிம் த்யாகே3ன ஶ்ருதேன வா |
கிம் விவிக்தேன மௌனேன ஸ்த்ரீபி4ர்யஸ்ய மனோ ஹ்ருதம் || 12 ||

எவனுடைய மனம் பெண்களால் கவரப்பட்டதோ அவனுக்கு கற்ற கல்வியால் என்ன பயன் செய்த தவத்தினால் என்ன பலன்?
சாஸ்திர அறிவினால் என்ன பலன்? ஏகாந்த சேவையினால் என்ன பலன்? மௌனமாக இருந்தாலும் என்ன பலன்?

ஸ்வார்த2ஸ்யாகோவித3ம் தி4ங்மாம் மூர்கே2ம் பண்டி3தமானினம் |
யோऽஹமீஶ்வரதாம் ப்ராப்ய ஸ்த்ரீபி4ர்கோ3க2ரவஜ்ஜித: || 13 ||

சக்கரவர்த்தியாக இருந்தும் கூட காளைமாடு போலவும், ஆண்கழுதை போலவும் பெண்களால் ஜெயிக்கப்பட்டேனோ என்னை
அந்த பயனை அறியாதவனும், மூடனுமாக இருக்கின்றேன் ஆனால் பண்டிதன் என்று
நினைத்துக் கொண்டிருக்கின்ற என்னை கொல்ல வேண்டும்.

ஸேவதோ வர்ஷபூகா3ன்மே உர்வஶ்யா அத4ராஸவம் |
ந த்ருப்யத்யாத்மபூ4: காமோ வஹினராஹுதிபி4ர்யதா2 || 14 ||

ஊர்வசியின் அதரமாகிற மதுவை பல ஆண்டுகள் அருந்திக் கொண்டிருந்த என்னுடைய மனதில் திரும்ப திரும்ப
உண்டாகிக் கொண்டிருந்த காமமானது யாக குண்டத்தில் போடப்பட்ட ஆகுதிகளால் கொழுந்துவிட்டு
எரிகின்ற அக்னிபோல திருப்தி அடையவில்லை.

பும்ஶ்சல்யாபஹ்ருதம் சித்தம் கோன்வன்யோ மோசிதும் ப்ரபு4: |
ஆத்மாராமேஶ்வரம்ருதே ப4க3வந்தமதோ4க்ஷஜம் || 15 ||

ஆத்மாவிலேயே ரமிக்கின்ற யோகிகளுக்கும் ஈஸ்வரனும், இந்திரிய ஞானத்திற்கு விஷயமில்லாதவருமான பகவானைத் தவிர
வேறு யார்தான் விபசாரியால் கவரப்பட்ட மனதை விடுவிக்க முடியும்?

போ3தி4தஸ்யாபி தே3வ்யா மே ஸூக்தவாக்யேன து3ர்மதே: |
மனோக3தோ மஹாமோஹோ நாபயாத்யதிதாத்மன: || 16 ||

ஊர்வசியின் அறிவுரையால் அறிவு ஊட்டபட்டவனாக இருந்தும் கூட மனதை வெற்றி கொள்ளாதவனும்,
அதனால் துர்புத்தி உடையவனுமான என்னுடைய மனதில் இருக்கும் மோகமானது விலகவில்லை

கிமேதயா நோ பக்ருதம் ரஜ்ஜ்வா வா ஸர்பசேதஸ: |
த்ரஷ்டு: ஸ்வரூபாவிது3ஷோ யோऽஹம் யத3ஜிதேந்த்ரிய: || 17 ||

கயிற்றின் ஸ்வரூபத்தை அறியாதவனும், அதில் பாம்பு என்று எண்ணிக்கொண்டு இருக்கும் ஒருவனுக்கு கயிற்றால்
உதவி செய்ய முடியாதோ அதேபோல இவளால் காமியான நமக்கு என்ன அபகாரம் செய்யப்பட்டது?
ஏனென்றால் இப்படி இருக்கும் நான்தான் புலன்களை வெற்றி கொள்ளாததால் தண்டனைக்குரியவன்

க்வாயம் மலீமஸ: காயோ தௌர்க3ந்த்4யாத்3யாத்மகோ ஶுசி: |
க்வ கு3ணா: ஸௌமனஸ்யாத்3யா ஹயத்4யாஸோऽவித்3ய யா க்ருத: || 18 ||

மிகவும் அழுக்கடைந்ததும், துர்நாற்றம் முதலியவற்றையே ஸ்வரூபமாக உடையதும், அசுத்தமானதுமான இந்த உடல் எங்கே
மலர்களிலிருந்து வீசுகின்ற நறுமணம், மென்மை முதலிய குணங்கள் எங்கே?
இது அறியாமையினால் செய்யப்பட்ட அத்யாஸமல்லவா?

பித்ரோ: கிம் ஸ்வம் நு பா4யாயா: ஸ்வாமினோऽக்3னே: ஶ்வக்3ருத்4ரயோ: |
கிமாத்மன: கிம் ஸுஹ்ருதா3மிதி யோ நாவஸீயதே || 19 ||

தஸ்மின்கலேவரே மேத்4யே துச்ச2நிஷ்டே2 விஷஜ்ஜதே |
அஹோ ஸுப4த்3ரம் ஸுனஸம் ஸுஸ்மிதம் ச முக2ம் ஸ்த்ரிய: || 20 ||

இந்த சரீரமானது உண்டு பண்ணப்படுவதனால் அது தாய், தந்தைக்கு சொந்தமானதா? அல்லது சுகத்தைக் கொடுப்பதால்
மனைவிக்கு சொந்தமானதா அந்திம் காலத்தில் ஹோமம் செய்யப்படுவதனால் அக்னிக்கு சொந்தமானதா?
ஆகாரமாக பவிப்பதால் நாய்க்கும், கழுகுக்கும் சொந்தமானதா? சரீரம் செய்த பாவ,புண்ணியங்களை அனுபவிப்பதால்
ஜீவாத்மாவுக்கு சொந்தமானதா? உபகாரம் செய்வதால் நண்பர்களுக்கு சொந்தமானதா? என்று தீர்மானிக்கப்படவில்லையோ,
மேலும் மிக அசுத்தமானதும், கிருமியாகவோ, அமேத்தியமாகவோ, சாம்பலாகவோ, முடிவடைகின்றதும், பிரியமாக
ஸ்வீகரிக்கப்பட்டதுமான அந்த சரீரத்தில் பெண்ணின் முகம் அழகாகவும், நல்ல மூக்குள்ளதாகவும்,
நல்ல சிரிப்புள்ளதாகவும் இருக்கின்றது என்று அதில் பற்றுதலடைகின்றன.

த்வங்மாம்ஸரூதி4ரஸ்னாயு மேதோ3மஜ்ஜஸ்தி2ஸம்ஹதௌ |
விண்மூத்ரபூயே ரமதாம் க்ருமீணாம் கியத3ந்தரம் || 21 ||

தோல், மாமிசம், ரத்தம், நரம்புகள், மாமிசக்கொழுப்பு இவைகளின் கூட்டமாகிற சரீரத்தில் ரமிக்கின்ற
மனிதர்களுக்கு மலம்,மூத்திரம், ரத்தம் இவைகளில் ரமிக்கின்ற புழுக்களுக்கும் என்ன வேற்றுமை

அத2பி நோபஸஜ்ஜேத ஸ்த்ரீஷு ஸ்த்ரைணேஷு சார்த2வித் |
விஷயேந்த்3ரியஸம்யோகா3ன்மன: க்ஷுப்4யதி நான்யதா2 || 22 ||

விஷயங்களுடையவும், புலன்களின் சேர்க்கையால்தான் மனமானது கலக்கம் அடைகின்றது. இல்லாவிடில் கலங்குவதில்லை.
ஆகையால் விவேகியானவன் பெண்களிடத்திலும், பெண்களிடத்தில் நட்புடையவர்களிடத்திலும் ஒருபொழுதும் சேரக் கூடாது.

அத்3ருஷ்டாஶ்ருதாத்3பா4வான்ன பா4வ உபஜாயதே |
அஸம்ப்ரயுஞ்ஜத: ப்ராணான்ஶாம்யதி ஸ்திமிதம் மன: || 23 ||

முன் பார்க்கப்படாத்தும், கேட்கப்படாத்துமான பதார்த்த்த்திலிருந்து மனக்கலக்கமானது உண்டாவதில்லை.
இந்திரியங்களை விஷயங்களை அனுபவிக்க செய்யாதவனுடைய மனமானது அசைவற்றதாக ஒடுங்கியிருக்கிறது

தஸ்மாத்ஸங்கோ3 ந கர்தவ்ய: ஸ்த்ரீஷு ஸ்த்ரைணேஷு சேந்த்3ரியை: |
விது3ஷாம் சாப்யவிஸ்ரப்3த4: ஷட்வர்க3: கிமு மாத்3ருஶாம் || 24 ||

காமம், குரோதம் முதலிய ஆறு தீய குணங்களானது விவேகிகளுக்கும் கூட நம்பத்தக்கதன்று. அப்படியிருக்க என் போன்றவர்கள்
விஷயத்தில் சொல்லவும் வேண்டுமோ? ஆகையால் பெண்களிடத்திலும், பெண்களிடத்தில் நட்புடையவர்கள் இடத்திலும்
புலன்களைக் கொண்டு உறவு கொள்ளக் கூடாது.

ஶ்ரீப4கவானுவாச
ஏவம் ப்ரகா3யந்ந்ருபதே3வதேவ: ஸ ஊர்வஶீலோகமதோ2 விஹாய |
ஆத்மானமாத்மன்யவக3ம்ய மாம் வை உபாரமஜ்ஞானவிதூ4தமோஹ: || 26 ||

ஸ்ரீபகவான் கூறுகிறார்.
இறுதியில் ஞானத்தினால் மோகத்திலிருந்து விடுதலை அடைந்தார். இவ்விதம் புலம்பிய இந்த ராஜா, தேவர்களுக்கெல்லாம் தேவனாக
விளங்கிக் கொண்டிருந்த நிலையில் ஊர்வசியையும், உலகத்தையும் மனதிலிருந்து விலக்கி விட்டார்.
அவர் வைராக்கியத்தை அடைந்து அதன் பிறகு மோட்சத்தை அடைந்தார்.
ஞானத்தினால் மோகத்தை விலக்கியவராக முழுமனநிறைவை அடைந்தார்.

ததோ து3:ஸங்க3முத்ஸ்ருஜ்ய ஸத்ஸு ஸஜ்ஜேத பு3த்3தி4மான் |
ஸந்த ஏவாஸ்ய சி2ந்தந்தி மனொவ்யாஸங்க3முக்திபி4: || 26 ||

ஸத் புருஷர்களான தர்மவான்கள், நற்பண்புகளை உடையவர்கள், நல்ல தவங்களை செய்து கொண்டிருப்பவர்கள்,
ஞானத்துடன் கூடியவர்கள் இத்தகையவர்களுடன் உறவு வைத்துக் கொள்வதனால் அவர்களிடம் உள்ள நற்குணங்கள் நமக்கும் வந்துவிடும்.
நல்ல புத்தகங்கள்கூட நமக்கு நற்குணங்கள் வளர்த்துக் கொள்ள உதவும். சத்ஸங்கம் சாதன-சதுஷ்டயத்தை நமக்கு
நினைவூட்டிக் கொண்டிருக்கும். துஷ் சங்கத்திலிருந்து நம்மைக் காப்பாற்றும். நமக்கு சமமானவர்களோடு சேர்ந்திருந்தால்
ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள முடியும். ஆகவே துஷ்சங்கத்தை விட்டுவிட்டு அறிவுடையவர்களோடு தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்.
உக்திபிஹி – ஸத் புருஷர்களின் உபதேச சொற்கள்
மனோ வ்யாஸங்கம் – மனதிலுள்ள தவறான எண்ணங்களை
சி2ந்த3ந்தி – நீக்குவதற்கு, அழிப்பதற்கு உதவுபுரியும்.

ஸந்தோ னபேக்ஷா மச்சித்தா: ப்ரஶாந்தா: ஸமத3ர்ஶின: |
நிர்மமா நிரஹங்காரா நிர்த்3வந்த்3வா நிஷ்பரிக்3ரஹா: || 27 ||

ஸந்தஹ – ஸத் புருஷர்கள் என்பவர்கள்
அனபேக்ஷா – மனதளவில் யாரையும் சார்ந்திருக்காதவர்கள்
மத் சித்தாஹா – என்னிடத்தில் மனதை செலுத்தியவர்கள், பக்தி கொண்டவர்கள்
ப்ரஶாந்தாஹா – அமைதியான மனதை உடையவர்கள்
ஸமதர்ஶினஹ – சமநோக்கு உடையவர்கள், வேற்றுமைகளுக்குள் பொதுத்தன்மையை பார்ப்பவர்கள்.
நிர்மமாஹா – தன்னிடத்திலுள்ள பெருமைகள் அனைத்தும் ஈஸ்வரனுடையது என்ற அறிவுள்ளவன்,
ஆனால் தன்னுடையது என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள்
நிரஹங்காரா – அக்ஞானியுடன் உள்ள உத்தமன் தன்னுடைய அகங்காரத்தை இறைவனிடன் சரணடைய வைத்திருப்பான்.
ஞானியோ நான் சாட்சியாக மட்டும் இருக்கின்றேன் என்றிருப்பான்
நிர்த்3வந்த்வாஹா – இருமைகளை ஒன்றாக பாவிப்பவன். இன்ப-துன்பம், குளிர்-வெப்பம் போன்ற இருமைகளில்
ஒரே நிலையில் இருப்பவன். இரண்டு எதிர்மறையான அனுபவங்களையும் சமமாக நோக்குபவன்
நிஷ்பரிக்3ரஹா – எந்த உறவும், எந்த உடைமையும் இல்லாதவன், எதையும் இலவசமாக பெற்றுக் கொள்ளாதவன்.
தேவைக்கு மேல் எதையும் வைத்துக் கொள்ளாதவன்

தேஷு நித்யம் மஹாபா4க3 மஹாபா4கே3ஷு மத்கதா2: |
ஸம்ப4வந்தி ஹி தா ந்ரூணாம் ஜுஷதாம் ப்ரபுனந்த்யக4ம் || 28 ||

மஹாபா4க3 – உத்தவா! பாக்கியசாலியே! உத்தமனே! சத்புருஷனே!
தேஷு மஹாபாகேஷு – அந்த ஸத்புருஷர்களிடத்தில்
நித்யம் –எப்பொழுதும்
மத் கதா2ஹா ஸம்ப4வ – என்னைப்பற்றிய விசாரம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும். பகவானைப்பற்றிய
விஷயங்களையே பேசிக்கொண்டிருப்பார்கள்
ஹி – உண்மையில்
தாஹா – அந்தமாதிரியான பேச்சுக்கள், விசாரங்கள்
ஜுஷதாம் – பக்தர்களான
ந்ருணாம் – மனிதர்களின்
ப்ரபுனந்த்யக4ம் – பாவத்தை நீக்கி அவர்களை புனிதப்படுத்தும்.

தா யே ஶ்ருண்வந்தி கா3யந்தி ஹயனுமோத3ந்தி சாத்3ருதா: |
மத்பரா: ஶ்ரத்33தா4னஶ்ச ப4க்திம் விந்தந்தி தே மயி || 29 ||

தாஹா – பகவானைப் பற்றிய விசாரங்கள், தத்துவங்கள், புராணங்கள் இவைகளை
யே – எவர்கள்
ஶ்ருண்வந்தி – கேட்பதிலும்
கா3யந்தி – இறைவனின் புகழை, நாமத்தை பாடுவது, ஸ்லோகங்கள், ஸ்தோத்திரம் இவைகளை சொல்வது இவைகளை
ஹி அனுமோதந்தி – ஆழ் மனதில் மகிழ்ச்சியோடு செய்யவேண்டும்
ச ஆத்ருதா: – மேலும் பகவான் மீது அன்பையும், நம்பிக்கையையும், மரியாதையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்
மத் பராஹா – என்னை அடைவதேயே இறுதி லட்சியமாக, பரம் புருஷார்த்தமாக வைக்க வேண்டும்.
ஶ்ரத்தானாஶ்ச – குரு, சாஸ்திரத்தில் நம்பிக்கை கொண்டவனாகவும், குரு உபதேசத்திலும், சாஸ்திர வாக்கியத்திலும்,
உபதேசத்திலும் நம்பிக்கை கொண்டவனாகவும் இருக்கின்ற
பக்திம் விந்தந்தி தே மயி – அவர்கள் என்னிடத்தில் பக்தியை அடைகின்றார்கள், அன்பு கொண்டவர்களாக உயர்வடைவார்கள்

ப4க்திம் லப்3த4வத: ஸாதோ4: கிமன்யத3வஶிஷ்யதே |
மய்யனந்தகு3ணே ப்ரஹ்மண்யானந்தா3னுப4வாத்மனி || 30 ||
இந்த அளவுக்கு பக்தியை அடைந்தவனுக்கு வேறெதுவும் அடைய தேவையில்லை. இந்த உலகத்திலிருக்கும்
எதற்கும் பயப்பட தேவையில்லை. இவன் மோகத்தின் வசப்பட்டிருக்க மாட்டான்.
பக்திம் லப்தவதஹ ஸாது – பக்தியை அடைந்த அந்த சாதகனுக்கு
கிம் அன்யத் அவஶிஷ்யதஹ – வேறென்ன அடைவதற்கு இருக்கின்றது?
மயி அனந்த குணே – விஶ்வரூபமான எல்லையற்ற குணங்களை உடைய
பிரஹ்மண – பிரம்மனாக என்னை
ஆனந்த அனுபவ ஆத்மனி – ஆனந்த, சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்ற நிருகுணத்தை அடைகின்றான்.

யதோ2பஶ்ரயாமாணஸ்ய ப4க3வந்தம் விபா4வஸும் |
ஶீதம் ப4யம் தமோऽப்யேதி ஸாதூ4ன்ஸம்ஸேவதஸ்ததா2 || 31 ||

யதா – எப்பொழுது
பகவந்தம் விபாவஸும் – அக்னிதேவன்
உபாஶ்ரயமாணஸ்ய –துணையை நாடும்போது
ஶீதம், பயம தமஹ – குளிர், பயம், இருள் இவைகள்
அப்யேதி – நீங்குகின்றது
ததா – அதுபோல
ஸாது ஸம்ஸேவ – ஸத்புருஷர்களோடு நட்புறவு கொள்ளும்போது அறியாமையும், பயமும், சம்சார பயங்களும் நீங்கிவிடும்
ஜாட்யம் – மந்தபுத்தியையும் நீக்கி உற்சாகத்தை கொடுக்கும்

நிமஜ்ஜ்யோன்மஜ்ஜதாம் கோ4ரே ப4வாப்3தௌ4 பரமாயணம் |
ஸந்தோ ப்3ரஹ்மவித3: ஶாந்தா னௌர்த்3ருடே4வாப்ஸு மஜ்ஜதாம் || 32 ||

அப்ஶு – நீரில்
மஜ்ஜதாம் – மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு
த்ருடா நௌ இவ – உறுதியான படகு போல
கோ3ரே பவ அப்தௌ – கடினமான சம்சார கடலில்
நிமஜ்ஜியோன்மஜ்ஜதாம் – மூழ்கி எழுந்துக் கொண்டிருப்பவனுக்கு
ப்ரஹ்மவிதஹ – பிரம்மத்தை அறிந்தவர்கள்
ஶாந்தஹ – மன அமைதியை அடைந்தவர்கள்
ஸந்தஹ – இத்தகைய ஸத் புருஷர்கள்
பரமாயணம் – உதவியாக இருப்பார்கள்

அன்னம் ஹி ப்ராணினாம் ப்ராண ஆர்தானாம் ஶரணம் த்வஹம் |
த4ர்மோ வித்தம் ந்ருணாம் ப்ரேத்ய ஸந்தோऽர்வாக்3பி4ப்4யதோऽரணம் || 33 ||

அன்னம் ஹி ப்ராணினாம் ப்ராண – ஜீவராசிகளுக்கு பிராணனாக இருப்பது உணவு
ஆர்தானாம் ஶரணம் த்வஹம் – துயரத்தில் இருப்பவனுக்கு ஈஸ்வரனாகிய நானே புகலிடமாக இருக்கிறேன்.
துயரத்தில் இருப்பவர்கள் என்னை சரணடைகிறார்கள்.
தர்மோ வித்தம் ந்ருணாம் ப்ரேத்ய – மனிதர்கள் இறந்தபிறகும் இருக்கும் செல்வம், தர்மத்தினால் அடைந்த புண்ணியங்கள்
ஸந்தஹ – ஸத்புருஷர்களுடனான உறவு
அர்வாக்3 – ஆன்மீக வீழ்ச்சி அடைவோம் என்று
பி3ப்4யதஹ – பயந்து கொண்டிருப்பவனை
அரணம் – பாதுகாப்பார்கள்

ஸந்தோ தி3ஶந்தி சக்ஷூம்ஸி ப3ஹிரர்: ஸமுத்தி2த: |
தெ3வதா பாந்த்4வா: ஸந்த: ஸந்த: ஆத்மாஹமேவ ச || 34 ||

பஹி அர்க: சக்ஷூம்ஸி – உதித்த சூரியன் வெளிக்கண்ணை திறந்துவிடுகிறது
ஸந்தோ திஶந்தி – ஸத்புருஷர்கள் அகக்கண்ணை திறந்து விடுவார்கள்
ஸந்தா தேவதா – ஸத் புருஷர்கள்தான் தேவதைகளாக இருப்பார்கள்
ஸந்தஹ பா3ந்த்4வா: – இவர்களே உண்மையான உறவினர்கள்
ஸந்தஹ ஆத்மா அஹமேவ ச – ஸத்புருஷர்களாக நானேதான் இருப்பேன்

வைதஸெனஸ்ததோ ப்யேவமுர்வஶ்யா லோகநிஷ்ப்ருஹ: |
முக்தஸங்கோ3 மஹீமேதாமாத்மாராமஶ்ச்சார ஹ || 35

இவ்விதம் சிந்தித்து ஊர்வசி லோகத்தில் வைராக்கியத்தை அடைந்து முற்றிலும் பற்றை விட்டவராக இந்த பூமியில்
வாழ்ந்து கொண்டிருந்தார். தன்னிடத்திலே மகிழ்ந்து கொண்டிருப்பவராக சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.
ஒரு முக்தனாக, ஞானியாக வாழ்ந்து கொண்டிருந்தார்

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -19–மூன்று குணங்களின் செயல்பாடுகள்–ஸ்ரீ பகவத் கீதை 14வது அத்தியாயம் – சுருக்கம்-

May 23, 2020

ஸ்ரீபகவான் உவாச
கு3ணனாம்ஸம்மிஶ்ராணாம் புமான்யேன யதா2 ப4வேத் |
தன்மே புருஷவர்யேத3முபதா4ரய ஶம்ஸத: || 1 ||

ஒவ்வொரு குணமும் ஒருவனை எப்படி வைத்திருக்கின்றது என்பதை கூறப்போகிறார்.
குணங்கள் தனித்தனியாக இருக்கும்போது மனிதன் எந்த குணத்தின் அடிப்படையில் செயல்படுவான்,
எந்த நிலையில் இருப்பான் என்பதை நான் விளக்கப் போகிறேன். மனிதர்களில் சிறந்துவிளங்கும் உத்தவா!
இவைகளை நான் கூறப்போகும் உபதேசத்திலிருந்து அறிந்து கொள்வாயாக.

ஶமோ த3மஸ்திதிக்ஷேக்ஷா தப: ஸத்யம் த3யா ஸ்ம்ருதி: |
துஷ்டிஸ்த்யாகோ3ऽஸ்புருஹா ஶ்ரத்3தா4 ஹ்ரீர்த3யாதி3: ஸ்வநிவ்ருதி: || 2 ||

தூய்மையான சத்துவ குணம் எந்த சூழ்நிலையில், எந்த காலத்தில் மேலோங்கி இருக்கின்றதோ அந்த நேரத்தில்
எந்த மாதிரியான செயல்களில், மனநிலையில் இருப்போம் என்பதை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது
ஶமஹ – இதன் பொருள் மனக்கட்டுப்பாடு அல்லது மன அமைதி. மனமானது எப்பொழுதும் அலை பாய்ந்து கொண்டிருக்கும், எதையாவது நினைத்து துயரப்பட்டு கொண்டிருக்கும். சஞ்சலத்தோடு இருந்து கொண்டிருக்கும். இந்த மாதிரியெல்லாம் இல்லாமல் அமைதியுடனும், நிறைவுடனும் மனதை வைத்திருத்தல்
தமஹ – புலன்களை கட்டுப்படுத்துதல், புலன்களை தூண்டக்கூடிய விஷயங்களில் இருந்து நீங்கி இருத்தல், அமைதியாக இருத்தல்
திதிக்ஷா – பொறுத்துக் கொள்ளுதல், சகிப்புத் தன்மை
ஈக்ஷா – தெளிவாக முடிவெடுக்கும் திறன், சூழ்நிலையை சரியாக புரிந்து கொள்ளுதல், உன்னிப்பாகவும்,சரியாகவும் கவனித்தல், ஆராய்ந்தறியும் திறன்
தபஹ – தன்னுடைய கடமையை செய்தல், குணாதீதனாக உயர்வதற்கு கடைபிடிக்க வேண்டிய அனைத்து சாதனங்கள்
சத்யம் – உண்மையை பேசுதல்
தயா – கருணை, இரக்கம் (மற்றவர்களின் துயரத்தை பார்க்கும் போது இருக்க வேண்டியவை)
ஸ்ம்ருதி – ஆலோசனை செய்து விட்டு செயலில் இறங்கும் சக்தி
துஷ்டி – போதும் என்ற மனநிறைவு
தியாகஹ – விட்டுக் கொடுத்தல், நாம் எதை உயர்வாக மதிக்கின்றோமோ அதை பகிர்ந்து கொள்ளுதல், விட்டு கொடுத்தல்
அஸ்ப்ருஹா – பற்றின்மை, எல்லாவற்றிலும வைராக்கியத்துடன் இருத்தல்
ஶ்ரத3தா4 – சாஸ்திரத்திலும், குருவிடத்திலும், இறைவனிடத்திலும் நம்பிக்கை வைத்தல், கண்ணுக்கு தெரியாத விஷயங்களில் வைக்கும் நம்பிக்
ஹ்ரீஹி – தவறு செய்யும் போது அடைகின்ற வெட்கம்
தயாதிஹி – தானம் போன்ற குணங்கள்
ஸ்வ நிவிருத்தி – தன்னிடத்திலே மகிழ்ந்திருத்தல், தனிமையிலே சுகமாக இருத்தல்

காம ஈஹா மத3ஸ்த்ருஷ்ணா ஸ்தம்ப4 ஆஶீர்பி4தா3 ஸுக2ம் |
மதோ3த்ஸாஹோ யஶ:ப்ரீதிர்ஹாஸ்யம் வீர்யம் ப3லோத்3யம: || 3 ||

ரஜோ குணம் மேலோங்கி இருக்கும்போது வெளிப்படும் குணங்கள் இதில் கூறப்படுகின்றது.
காம – ஆசை, இதுதான் நம்மை செயலில் ஈடுபடுத்துகின்றது.
ஈஹா – செயல் – தேவைக்கு மேல் செயலில் ஈடுபடுதல், பயனில்லாமல் எதையாவது செய்து கொண்டிருத்தல்
மதஹ – கர்வம், செருக்கு, தன்னைப்பற்றி உயர்வாக நினைத்துக் கொள்ளுதல்
த்ருஷ்ணா – போதுமென்ற மனம் இல்லாதது, நிறைவில்லா மனம், அதிருப்தி
ஸ்தம்பஹ – வளைந்துக் கொடுக்கும் தன்மையில்லாதவன், விட்டுக்கொடுக்காத குணம், யாரையும் வணங்காத குணம், பணிவின்மை
ஆஶிஹி – காம்ய பிரார்த்தனை, காம்ய பக்தி
பிதா3 – இருமைகளைத்தான் புரிந்து வைத்திருப்பவர்கள், ஏற்றுக் கொண்டு இருப்பவர்கள்.
வேற்றுமையான பாவனையுடனும், பிரிவினைவாதிகளாகவும் இருப்பார்கள்.
ஸுகம் – புலன்களால் அடையும் இன்பத்தையே நாடுவார்கள். அதுதான் குறிக்கோளாக இருக்கும்.
மத உத்ஸாஹ – கர்வத்துடன் செயல்படுபவர்கள்
யஶப்ரீதிஹி – புகழில் ஆசைப்படுதல், புகழை விரும்புபவர்கள்
ஹாஸ்யம் – மற்றவர்களை கேலி செய்து சிரிப்பவர்கள், மற்றவர்களை சிரிக்க வைப்பவர்கள்
வீர்யம் – தன்னுடைய சக்தியை வெளிக்காட்டுதல். தேவையோ இல்லையோ ஆனாலும் வெளிக் காட்டிக் கொண்டிருப்பவர்கள்
பல உத்யமஹ – மிக கோரமான செயலில் ஈடுபடுதல், மிக உக்கிரமமாக செயல்படுதல்

க்ரோதோ4 லோபோ4ऽந்ருதம் ஹிம்ஸா யாச்ஞா த3ம்ப4: க்லம: கலி: |
ஶோகமோஹௌ விஶாதா3ர்தீ நித்3ராஶா பீ4ரனுத்3யம: || 4 ||

தமோ குணம் மேலோங்கி இருக்கும்போது வெளிப்படும் குணங்களாவது:
க்ரோதஹ – வெளிப்படாத கோபம், வெளிப்படாத வெறுப்பு
லோபஹ – எதையும் பகிர்ந்து கொள்ளாத மனநிலை, கஞ்சத்தனமாக இருத்தல்
அநிருதம் – பொய் கூறுதல். உண்மையை கூறும் தைரியமில்லாத குணம்
ஹிம்ஸா – மற்றவர்களை துன்புறுத்தல், கருணையின்மை, துன்பத்தில் இருப்பவரிடம் கருணையில்லாமல் இருப்பவர்கள்
யாஞ்சா – பிச்சையெடுத்தல், உழைக்க மனமில்லாமல் இலவசமாக கிடைப்பதை பெறுதல், யாசித்தல்
த3ம்ப4ஹ – இல்லாத பெருமையை இருப்பதாக காட்டிக் கொண்டிருத்தல்
க்லமஹ – எப்பொழுதும் சோர்வாக இருப்பதாக மனதில் எண்ணுதல்
க3லி – சண்டை சச்சரவு செய்து கொண்டிருத்தல். ஏதாவது ஒரு துயர சூழ்நிலையை எண்ணி துயரப்பட்டு கொண்டிருத்தல்
ஶோகம் – தோல்வியினால் சோகமடைதல், துயரமடைதல்
மோஹம் – உலகத்தை தவறாக புரிந்து கொள்ளுதல், ஒரு பொருளுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பை விட அதிக மதிப்பைக் கொடுத்தல்
விஷாத – மனச்சோர்வு, காரணமில்லாமல் மனம் துயரப்பட்டு கொண்டிருக்கும். அதை நீக்க முயற்சி செய்யாமல் அந்த நிலையிலேயே இருத்தல்
ஆர்தி – தன்னை பரிதாபத்திற்குரியவன் என்று நினைத்து கொண்டிருத்தல், சுய பச்சாதாபம்
நித்ரா – அதிகமான உறக்கம், தேவைக்கு மேல் தூங்கும்பழக்கத்தை உடையவர்கள்
ஆஷா – மனதில் ஒன்றை அடைய வேண்டும் என்று ஆசை மட்டும் இருத்தல், கற்பணையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்,
கற்பணையில் தன்னாசைகளை நிறைவேறுவதாக எண்ணி அதிலேயே மகிழ்ந்திருப்பவர்கள்
பீ4ஹி – பயம், எதையும் செய்வதற்கு பயப்படுதல்
அனுத்யமஹ – முயற்சியின்மை, குறைவான முயற்சி செய்தல்

ஸத்த்வஸ்ய ரஜஸ்ஶ்சைதாஸ்தமஸ்ஶ்சானுபூர்வஶ: |
வ்ருத்தயோ வர்ணிதப்ராயா: ஸன்னிபாதமதோ2 ஶ்ருணு || 5 ||

சத்துவ, ரஜோ, தமோ குணங்களினுடைய வெளிப்பாடுகளை வரிசைப்படி சுருக்கமாக என்னால் விளக்கப்பட்டது.
ஸன்னிபாதம் என்றால் என்ன என்பதை விளக்கப் போகிறேன் கவனமாக கேள்

ஸன்னிபாதஸ்த்வஹமிதி மமேத்யுத்3த4வ யா மதி: |
வ்யவஹார: ஸன்னிபாதோ மனோமாத்ரேந்த்3ரியாஸுபி4: || 6 ||

ஸன்னிபாதம் – பற்று, அத்யாஸம்
உடலும்,மனமும் முக்குணங்களை உடையது. நாம் எந்த குணத்தில் அதிக அபிமானம் வைக்கின்றோமோ அதற்கு
சன்னிபாதம் என்று கூறப்படுகிறது. நாம் ஏதோ ஒரு குணத்தில் அபிமானம் வைக்கும்போது, அதனால் நம்மிடத்திலிருந்து
வெளிப்படும் செயல்களையும் சன்னிபாதம் என்று கூறுகின்றார்கள்.
உத்தவா! சன்னிபாதம் என்பது நான், என்னுடையது என்று எவைகளையெல்லாம் சொல்கின்றோமோ அவைகளை இவ்வாறு அழைக்கலாம்
வியவஹார சன்னிபாதம் – அதனால் உன்னிடமிருந்து வெளிப்படும் நடத்தையும் சன்னிபாதம் என்று கூறலாம்
மனோமாத்ரேந்திரியாஸுபி4: – மனதினால் செய்யப்படும் விவகாரங்கள், உடலில் இருந்தும், புலனகளிலிருந்தும் வெளிப்படும் விவகாரங்கள்,
பிராணனின் விவகாரங்கள் இவைகள் யாவும் சன்னிபாதம் என்றே கூறப்படுகிறது.

த4ர்ம சார்தே2 ச காமே ச யதா3ஸௌ பரிநிஷ்டி2த: |
கு3ணானாம் ஸன்னிகர்ஷோऽயம் ஶ்ரத்3தா4ரதித4னாவஹ: || 7 ||

சத்துவ குணத்தைச் சார்ந்த தர்மமும், ரஜோ குணத்தைச் சார்ந்த அர்த்தமாகிய பொருளை ஈட்டுதலும்,
தமோ குணத்தைச் சார்ந்த இன்பத்தை மட்டும் அனுபவித்தலும் ஆகிய இந்த மூன்றில் ஒன்றையேதான் மனிதன்
எப்பொழுதும் நாடிக் கொண்டிருப்பான். இது குணங்களில் மனிதன் வைத்திருக்கும் அபிமானத்தை காட்டுகிறது.
இதையே ஸன்னிகர்ஷம் என்ற கூறப்படுகிறது. தர்மத்தில் இருப்பவனுக்கு சிரத்தையை கொடுக்கும்,
காம புருஷார்தத்தில் இருப்பவனுக்கு இன்பத்தைக் கொடுக்கும். அர்த்த புருஷார்தத்தில் இருப்பவனுக்கு செல்வத்தை கொடுக்கும்.

ப்ரவ்ருத்திலக்ஷணே நிஷ்டா2 புமான்யர்ஹி க்3ருஹாஶ்ரமே |
ஸ்வத4ர்மே சானு திஷ்டே2த கு3ணானாம் ஸமிதிர்ஹி ஸா || 8 ||

ரஜோ குணம்தான் செயல்களை செய்ய தூண்டிவிடும். அதிக பொறுப்புக்கள், கடமைகள் இருப்பதாக எண்ணிக் கொள்வது தவறு.
ரஜோ குணம்தான் இந்த சூழ்நிலைகளை கொடுக்கின்றது. சூழ்நிலைகள் இதை தீர்மானிக்கவில்லை.
புமான் – சாதகன்
ப்ரவிருத்தி லக்ஷணே – வெளியே சென்று பொறுப்புக்களை எடுத்துக் கொள்ளுதல். கிருகாஸ்ரமத்தில் இருப்பவர்களால் இவ்வாறு செய்யப்படுகிறது.
யர்ஹி நிஷ்டா – அப்படி கடமைகள் இருக்கிறது என்று நினைத்தல்
குணானாம் ஸ்மிதிஹி – உன்னிடதிலுள்ள குணத்தின் சங்கமத்தினால் தான், பற்றினால்தான் குறிப்பாக ரஜோ குணத்தினால் தான்
இவ்வாறு கடமைகளை இருப்பதாக எண்ணிக் கொள்ளப்படுகிறது
ஸ்வதர்ம ச அனுதிஷ்டத – தன்னுடைய கடமைகளை மட்டும் செய்து கொண்டு இருத்தல். இதுவும் சத்துவ குணத்தின் அடிப்படையில்தான் சாத்தியாமகின்றது.
எனவே இதிலிருந்து அறிந்து கொள்வது வெளிசூழ்நிலைகளால் நாம் செயல்படுவதில்லை குணத்தின் அடிப்படையில்தான் செயல்கள் செய்யப்படுகின்றன.

புருஷம் ஸத்த்வஸம்யுக்தமனுமீயாச்ச2மாதி3பி4: |
காமாதி3பி4 ரஜோயுக்தம் க்ரோதா4த3யைஸ்தமஸா யுதம் || 9 ||

குணலிங்கம் என்பது குணங்களை காட்டும் அடையாளம். நாம் எந்தக் குணத்தின் வசத்தில் இருக்கின்றோம் என்பதை
இந்த ஸ்லோகத்தில் விளக்கப்படுகின்றது. நம்மிடத்திலிருந்து வரும் செயல்களின் வெளிப்பாடுதான்
நாம் எந்தக் குணத்தில் இருக்கின்றோம் என்பதை காட்டிக் கொடுக்கும்..
புருஷம் ஸத்த்வ ஸம்யுக்தம் – ஒரு மனிதனை சத்துவ குணத்தில் இருந்தால்
ஸமாதிபி அனுமீயாத் – சம, தம போன்ற குணத்துடன் கூடியவனாக இருக்கிறான் என்பதை கிரகிக்க வேண்டும்
காமதிபிஹி ரஜோயுக்தம் – ஆசை, கோபம், பொறாமை போன்ற குணங்களின் வெளிப்பாட்டை வைத்து
ரஜோ குணத்தின் இருப்பதாக புரிந்து கொள்ள வேண்டும்
க்ரோதாதயை தமஸா யதம் – குரோதம், சோம்பல், உறக்கம் இவைகளை வைத்து தமோ குணத்தில் இருப்பதாக அறிந்து கொள்ளலாம்.

யதா2 ப4ஜதி மாம் ப4க்த்யா நிரபேக்ஷ: ஸ்வகர்மபி4: |
தம் ஸத்த்வப்ரக்ருதிம் வித்3யாத்புருஷம் ஸ்த்ரியமேவ வா || 10 ||

பக்தியும் குணங்களின் அடிப்படையில் பிரித்து பார்க்கப்படுகின்றது. சாத்விக பக்தி, ராஜஸ பக்தி, தாமஸம் பக்தி என்று பிரிக்கலாம்.
எந்த நோக்கத்துடன் இறைவனை வழிபடுகின்றோமோ அதை வைத்து இந்த பிரிவை கண்டு கொள்ளலாம்.
யதா2 பஜதி மாம் பக்த்யா – இறைவனாகிய என்னை எப்பொழுது பக்தியுணர்வுடன் வழிபடுகின்றானோ
நிரபேக்ஷஹ – என்னிடத்தில் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்தப் பலனையும் கேட்காமல் செலுத்துகின்ற பக்தி
ஸ்வகர்மபிஹி – தன்னுடைய அன்றாத கடமையையே இறைவழிபாடாக செய்யும்போது,
தம் ஸத்வ ப்ரக்ருதிம் வித்யாத் – அப்படிபட்டவர்களை சத்துவ குணத்தில் இருப்பதாக அறிந்து கொள்ள வேண்டும்
புருஷம் ஸ்த்ரியமேவ வா – ஆணோ, பெண்ணோ என்ற வேறுபாடு இதில்கிடையாது

யதா2 ஆஶிஷ ஆஶாஸ்ய மாம் ப4ஜேத ஸ்வகர்மபி4: |
தம் ரஜ:ப்ரக்ருதிம் வித்3யாதி2ம்ஸாமாஶாஸ்ய தாமஸம் || 11 ||

யதா2 ஆஶிஷ ஆஶாஸ்ய – எவ்விதம் தான் விரும்பிய பொருட்களை அடைய மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டு
மாம் பஜேத ஸ்வகர்மபி: – இவைகளை அடைய செய்ய வேண்டிய செயல்களே தன்னுடைய அன்றாட கடமைகளாக கொண்டு என்னை வழிபடுகின்றவர்கள்
தம ரஜ:ப்ரக்ரிதிம் வித்யா – ரஜோ குணத்தில் இருப்பவன் என்று அறிந்து கொள்வாயாக.
ஹிம்ஸாம் ஆஶாஸ்ய தாமஸம் – தனக்கும், மற்றவர்களுக்கும் துன்பம் தரக்கூடிய வகையில் வழிபடுகின்றவர்கள் தாமஸகுணம் உடையவர்கள்

ஸத்தம் ரஜஸ்தம் இதி கு3ணா ஜீவஸ்ய நைவ மே |
சித்தஜா யைஸ்து பூ4தானாம் ஸத்தமானோ நிப3த்4யதே || 12 ||

சத்துவ, ரஜோ, தமோ என்கின்ற மூன்று குணங்கள் ஜீவனைச் சார்ந்தது அதாவது உடல், மனம் சிதாபாஸம் இவைகளைச் சார்ந்தது
பரமாத்மாவை சார்ந்ததல்ல. நம் மனதிலிருந்து வெளிபடுகின்ற இந்த மூன்று குணங்களில் எந்த குணத்தோடு சம்பந்தம் வைக்கின்றோமோ
அதனால் பாதிக்கப்படுகிறான். துயரத்தை அடைகிறான். ஐந்து கோசங்களில் அபிமானம் வைப்பதினால் துயரத்தை அடைகின்றான்

யதே3தரௌ ஜயேத்ஸத்த்வம் பா4ஸ்வரம் விஶத3ம் ஶிவம் |
ததா3 ஸுகே2ன யுத்யேத த4ர்மஞானாதி3பி4: புமான் || 13 ||

குண ஆதிக்யம் என்பது மனதில் மூன்று குணங்களும் எப்பொழுதும் இருந்து கொண்டுதான் இருக்கும் ஆனால் இந்த மூன்றுமே
நம்மை ஆதிக்கம் செலுத்தக் கூடாது. சத்துவ குணம் மேலோங்கியிருக்க வேண்டுமானால் மற்ற இரண்டு குணங்களும் அடக்கிவைக்க வேண்டும்,
அதே போன்று தான் மற்ற இரண்டு குணங்களில் உள்ள நல்ல அம்சத்தை செயல்படுத்த வேண்டும்.
யதா2 – எப்பொழுது சத்துவகுணமானது மற்ற இரண்டு குணங்களை அடக்கி வைக்கின்றதோ,
ததா3 – அப்பொழுது சுகத்தை அடைகின்றோம். புண்ணியத்தை அடைகின்றோம், ஞானத்தை அடைகின்றோம்.
சத்துவ குணமானது ஞான ஸ்வரூபமானது, அறியும் திறனையும் (பா4ஸ்வரம்), தூய்மையையும் கொடுக்க கூடியது,
பாவத்தை கொடுக்காதது, குறைகளற்றது. மன அமைதியை கொடுக்க கூடியது (ஶிவம்)

யதா3 ஜயேத்தம: ஸத்த்வம் ரஜ: ஸங்க3ம் பி4தா3 சலம் |
ததா3 து3:கே2ன யுஜ்யேத கர்மணா யஶஸா ஶ்ரியா || 14 ||

எப்பொழுது ரஜோ குணமானது மற்ற இரண்டு குணங்களை வெற்றி கொள்கின்றதோ அப்பொழுது துயரத்தை அடைகிறோம்.
இது எதாவது ஒரு வேலையை செய்ய வைத்து கொண்டிருக்கும். புகழைக் கொடுத்துக் கொண்டிருக்கும், செல்வத்தை கொடுக்கும்.
இது பற்றை ஏற்படுத்தக்கூடியது, வேற்றுமைகளை மட்டும் பார்க்க கூடியது (பி4தா3), மனதை எப்பொழுதும் சஞ்சலத்துடனே வைத்திருக்கும்.

யதா3 ஜயேத்ரஜ: ஸத்த்வம் தமோ மூட4ம் லயம் ஜட3ம் |
யுஜ்யேத ஶோகமோஹாப்4யாம் நித்ரயா ஹிம்ஸயாஶயா || 15 ||

தமோ குணமானது செயல்படாத தன்மையை கொடுக்க கூடியது. மேலும் உறக்கம், எதையும் கிரகிக்க முடியாத மனநிலையை கொடுக்க கூடியது.
எப்பொழுது தமோ குணம் மற்ற இரு குணங்களை வெற்றி கொள்கிறதோ அப்போது சோகத்தையும், மோகத்தையும், அடைகிறோம்.
சோகம் என்பது துயரத்தை மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டு வருந்தி கொண்டிருக்கும் நிலை.
மோகம் என்பது மனச்சோர்வு, எல்லாவற்றையும் தவறாக புரிந்து கொள்ளும் நிலை. தேவைக்கு மேல் உறங்கிக் கொண்டு இருத்தல்.
இவர்களுடைய செயல்கள் மற்றவர்களுக்கு துன்பத்தைக் கொடுக்க கூடியது. கற்பணையில்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்,
வெறும் ஆசையை மட்டும் மனதில் வைத்துக் கொண்டிருப்பார்கள்.

யதா3 சித்தம் ப்ரஸீதே3த இந்த்3ரியாணாம் ச நிவ்ருதி: |
தே3ஹேऽப4யம் மனோऽஸங்க3ம் த்த்ஸத்த்வம் வித்3தி4 மத்பத3ம் || 16 ||

எப்பொழுது மனம் அமைதியுடன் இருக்கின்றதோ, மனதிலுள்ள விருப்பு-வெறுப்புக்கள் வெளிப்படாமல் இருக்கின்றதோ,
புலன்களும், அறிவுக்கு அடங்கி இருக்கின்றதோ, எல்லா சூழ்நிலைகளிலும் அடங்கி இருக்கின்றதோ,
தேகத்தை குறித்து பயம் இல்லாமல் இருக்கின்றதோ, மனம் அதிக பற்றற்ற நிலையில் இருக்கின்றதோ இந்த நிலைகளே
சத்துவ குணத்தின் வெளிப்பாடாக அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த சத்துவ குணம் பகவானை அடைவதற்கு உதவும் படியாக, வழியாக இருக்கும்

விகுர்வன்க்ரியயா சாதீ4ரநிவ்ருத்திஶ்ச சேதஸாம் |
கா3த்ராஸ்வாஸ்த்2யம் மனோ ப்4ராந்தம் ரஜ ஏதைர்னிஶாமய || 17 |

அதிக செயல்களினால் மனம் சஞ்சலமடைந்து, நாற்புறங்களிலும் புத்தி அலைந்து கொண்டிருக்கும்போது புலன்கள்
அமைதியில்லாமல் இருந்து கொண்டிருக்கும் போது கர்மேந்திரியங்களும் அமைதியின்மையுடன் இருத்தல்,
மனமானது எப்பொழுதும் தவறான எண்ணங்களில் அலைபாய்ந்து கொண்டிருக்கும்.
இவைகள் அனைத்தும் ரஜோ குணத்தின் வெளிப்பாடு என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஸீத3ச்சித்தம் விலீயேத சேதஸோ க்3ரஹணேऽக்ஷமம் |
மனோ நஷ்ட2ம் தமோ க்3லானிஸ்தமஸ்தது3பதா4ரய || 18 ||

தமோ குணம் மற்ற இரண்டு குணங்களை அடக்கி ஆதிக்கம் செலுத்தும்போது மனம் சோர்வடைந்திருக்கும்.
புத்தியானது ஒரு வேலையை செய்யும்போது அதனால் சோர்வடைந்தாலும், வேறொரு வேலையை ஆர்வத்தோடு செய்வதற்கு தயாராக இருக்கும்.
மனம் சோர்வடையும்போது உறக்கத்திற்கு சென்று விடுகின்றது. ஆத்மாவின் ஸ்வரூபம் இருத்தல், அறிவு என்று சொல்லப்படுகின்றது.
இருத்தல் குணம் ஸ்தூல உடலில் வெளிப்படுவதில்லை. சத்துவ குணத்திலிருந்து மனம் தோன்றியிருப்பதால் அது ஆத்மாவை
பிரதிபலிக்கும் தன்மையுடன் இருக்கின்றது. அதனால் உணர்வுடையதாக இருக்கின்றது.
அந்த மனம் சரீரத்தில் அபிமானம் வைத்திருப்பதால் உடலும் உணர்வுடையதாக இருப்பதுபோல் தோன்றுகின்றது.
மனமானது தமோ குணத்தின் ஆதிக்கத்தில் இருக்கும்போது சக்தியை இழந்திருக்கின்ற நிலையில் சைதன்யத்தை பிரதிபிம்பிக்கும்
தன்மையை இழந்து விடுகின்றது. அது ஜடம் போன்ற தன்மையை அடைந்து அறிவை அடையும் சக்தியை இழந்து விடுகின்றது.
தமோ குணம் மேலோங்கி இருக்கும் போது மனம் தற்காலிகமாக ஆத்மாவினுடைய சைதன்ய ஸ்வரூபத்தை பிரதிபிம்பிக்கின்ற
சக்தியை இழந்து விடுகின்றது அதனால் உணர்வை இழந்துவிடுகின்றது. எனவே ஸ்தூல உடலில் எற்படும் வலியும் தெரிவதில்லை.
தமோ குணத்தின் பிடியில் இருப்பவர்களிடம் எந்த அறிவுரையும் எடுபடாது. அந்த நிலையில் அறியாமை என்ற இருள் சூழ்ந்த நிலையில் இருப்பார்கள்.
ஆழ்மனதில் ஏதோ ஒரு சோகம் இருக்கும். மனம் சோர்வு அடைந்திருக்கும். இந்த சோகம் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும்.
தமோ குணத்தில் இருக்கும் குறைப்பாட்டை மட்டுமே நீக்க வேண்டும். சோம்பல், மனச்சோர்வு, கவனக்குறைவு
போன்றவைகள் தமோ குணத்தினல் வரும் குறைபாடுகள்

ஏத4மானே கு3ணே ஸத்த்வே தே3வானாம் ப3லமேத4தே |
அஸுராணாம் ச ரஜஸி தமஸ்யுத்3த4வ ரக்ஷஸாம் || 19 ||

ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் குணங்களின் ஆதிக்கத்திற்கேற்ப செயல்படும். புலன்கள் தேவ, அசுர, ராட்சஸ அம்சங்கள் என
மூன்று விதமாக செயல்படுகிறது. மற்றவர்களுடைய நடவடிக்கைகள், நம்முடைய ரஜோ, தமோ, சத்துவ குணத்தை தூண்டிவிடுவதால்
அதற்கேற்ப நாம் செயல்படுகின்றோம். எனவே அசுர, ராட்சஸ அம்சத்தை தூண்டும்படி இருக்கும் சூழ்நிலைகளிலிருந்து விலகி செல்ல வேண்டும்.
சத்துவ குணமானது மேலோங்கி இருக்கும் போது தேவர்களுடைய சக்தியை அடைகின்றோம். சூட்சும,ஸ்தூல சரீரத்திலுள்ள தேவகுணம் வெளிப்படும்.
இதனால் நமக்கும் பிறருக்கும் நன்மையை கொடுக்கும் நிலையில் இருப்போம்.
ரஜோ குணமானது மேலோங்கி இருக்கும் போது அசுரத் தன்மையை வெளிப்படுத்துவோம். புலன்களையும், அந்தக்கரணத்தையும்
நம்முடைய இன்பத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் செயல்பட ஆரம்பித்து விடும்.
தமோ குணம் மேலோங்கும்போது ராட்சஸ தன்மையானது வெளிப்படும்.
ராட்சஸ தன்மையில் உள்ளவர்கள் மற்றவர்களின் கஷ்டத்தில் இன்பத்தை அனுபவிப்பவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்களை இம்சைபடுத்தி அதனால் மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். சொல்லாலோ, செயலாலோ, எண்ணங்களினாலோ
மற்றவர்களுக்கு துன்பத்தை கொடுப்பது, ஹிம்சை பண்ணுவது தமோகுணத்தின் வெளிப்பாடாகும்.
மற்றவர்களின் குணத்தை நான் தூண்டும் செயலில் ஈடுபடக்கூடாது.

ஸத்த்வாஜ்ஜாக3ரணம் வித்3யாத்3ரஜஸா ஸ்வப்னமாதி3ஶேத் |
ப்ரஸ்வாபம் தமஸா ஜந்தோஸ்துரீயம் த்ரிஷு ஸந்ததம் || 20 ||

மூன்று அவஸ்தைகளை முக்குணங்களோடு ஒப்பிட்டு ஆத்ம தத்துவத்தை பகவான் உபதேசிக்கிறார்.
சத்துவ குணம் ஜாக்ரத் அவஸ்தையோடும், ரஜோ குணம் கனவு நிலையோடும், தமோ குணம் ஆழ்நிலை உறக்கத்தோடும் ஒப்பிடப்படுகிறது.
சத்துவ குணம் விழிப்பு நிலையில் வைத்திருக்கின்றது. இந்த நிலையிலும் மூன்று குணங்களுக்கு ஏற்றவாறு செயல்படுவார்கள்.
சத்துவ குணம் அடிப்படையிலே விழிப்பு நிலையில்தான் வைத்திருக்கும். அதேபோல ரஜோகுணம் கனவு நிலைக்கு காரணமாகின்றது.
கனவிலும் முக்குணங்களின் வெளிப்பாட்டிற்கேற்ப விஷயங்களை அனுபவிப்போம். எல்லா ஜீவராசிகளுக்கும்
இந்த மூன்று அவஸ்தைகளுக்கும் மூன்று குணங்களும் பொதுவானது. நான்காவது நிலையான துரீயம் என்ற தத்துவமானது
மூன்று அவஸ்தைகளிலும் மாறாமல் தொடர்ந்து இருக்கின்றது. இது எந்த சரீரத்திலும் அபிமானம் வைக்காதிருக்கும் சைதன்யம் தான் ஆத்மா.
நாம் எந்த உபாதியில் நான் என்ற அபிமானம் வைக்கின்றோமோ அதற்கேற்ற உலகத்தை அனுபவிக்கின்றோம்.
முக்குணங்கள் அனாத்மா விஷயத்தைச் சார்ந்தது.

உபர்யுபரி க3ச்ச2ந்தி ஸத்த்வேன ப்3ராஹ்மணா ஜனா: |
தமஸாதோ4ऽத4 ஆமுக்2யாத்3ரஜஸாந்தரசாரிண: || 21 ||

இறந்ததற்கு பிறகு நாம் இந்தக் குணங்களால் அடையும் பலன்களை இதில் கூறுகிறார்.
உபர்யுபரி கச்சந்தி – மேலுலகங்களை சத்துவ குணத்தில் உள்ளவர்கள் அதன் பலனாக அடைகிறார்கள்.
பிரம்மலோகம் வரை இதனால் அடைகிறார்கள். தமோ குணத்தில் உள்ளவர்கள் கீழான உலகங்களுக்கு செல்கிறார்கள்
அல்லது இந்த லோகத்திலே மரம், செடி, கொடி வரையுள்ள உலகங்களுக்கு செல்கிறார்கள்.
ரஜோ குணத்தில் உள்ளவர்கள் இடைப்பட்ட உலகங்களுக்கு செல்கிறார்கள் அல்லது நாம் வாழும் இந்த பூலோகத்திலேயே பிறக்கிறார்கள்

ஸத்த்வே ப்ரலீனா: ஸ்வர்யாந்தி நரலோகம் ரஜோலயா: |
தமோலயாஸ்து நிரயம் யாந்தி மாமேவ நிர்கு3ணா: || 22 ||

சத்துவ குணத்தின் ஆதிக்கத்தில் இருந்துக் கொண்டிருக்கும் போது மரணமடைபவர்கள் சொர்க்க லோகம் போன்ற மேலான
உலகத்தை அடைவார்கள். ரஜோ குணத்தில் இருக்கும் போது மரணமடைபவர்கள் மனித லோகத்தை அடைகிறார்கள்.
தமோ குணத்தில் இருக்கும் போது இறப்பவர்கள் நரக லோகத்தை அடைகிறார்கள்.
குணாதீதன் என்பவன் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் என்னையே அடைகின்றான், மோட்சத்தை அடைகின்றான்.

மத2ர்பணம் நிஷ்ப2லம் வா ஸாத்த்விகம் நிஜகர்ம தத் |
ராஜஸம் ப2லஸங்கல்பம் ஹிம்ஸாப்ராயாதி3 தாமஸம் || 23 ||

நம்மிடமிருந்து வெளிப்படும் செயல்கள் சாத்விகம், ராஜஸம், தாமஸம் என்று மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றது.
கர்மயோகம் என்பது சாத்விக கர்மம். சாஸ்திரத்தில் சொல்லியபடி தர்மப்படி செயல்பட்டால் அவைகளெல்லம் சாத்விக செயல்கள்.
காம்ய கர்மங்கள் அதாவது பலனை எதிர்ப்பார்த்து செய்யும் செயல்கள் ராஜஸ குணத்தில் இருந்து வருபவைகள்.
சாஸ்திரத்தில் செய்யக்கூடாது என்று விதித்த கர்மங்களை செய்வது தாமஸ செயல்கள்.

பகவானுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு செய்யும் செயல்களும், பலனில் பற்றில்லாமல் செய்யப்படுகின்ற செயல்களும்(நிஷ்பலம்),
எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யும் செயல்கள், தன்னுடைய கடமைகளை செய்தல், சாஸ்திரத்தில் நமக்கு விதித்திருக்கும்
கடமைகளை செய்தல் இவைகளெல்லாம் சாத்விகமான செயல்கள். பலனை எதிர்ப்பார்த்து செய்யும் செயல்கள் ராஜஸ செயல்கள்.
ஹிம்சை பிரதானமாக செய்கின்ற செயல்கள் யாவும் தாமஸ செயல்களாகும்.
பாவத்தைக் கொடுக்கின்ற கர்மங்களே ஹிம்சையினால்தான் வருகின்றது.

கைவல்யம் ஸாத்த்விகம் ஞானம் ரஜோ கைவல்பிகம் ச யத் |
ப்ராக்ருதம் தாமஸம் ஞானம் மன்னிஷ்ட2ம் நிர்கு3ணம் ஸ்ம்ருதம் || 24 ||

அறிவானது சாத்வீகம், ராஜஸம், தாமஸம் என்று மூன்றாக பிரிக்கப்படுகிறது-வேற்றுமையுடன் செயல்படுவது ராஜஸம்.
மிக கீழான அறிவாகும் தாமஸமான அறிவு. அரைகுறைவான அறிவு தாமஸ அறிவு.
ஈஸ்வரனைப் பற்றிய ஞானம் சாத்விக ஞானமென்றும் அழைக்கலாம்.

வனம் து ஸாத்த்விகோ வாஸோ க்3ராமோ ராஜஸ உச்யதே |
தாமஸம் த்3யூதஸத3னம் மன்னிகேதம் து நிருகு3ணம் || 25 ||

வசிக்கின்ற இடத்தையும் மூன்றாக பிரிக்கலாம். வனவாசம் என்பது சாத்விகமான சூழ்நிலையில் வசித்தல். இது தவத்திற்கு உகந்த இடம்,
தனிமையில் வசிக்கத்தகுந்த இடமாக இருப்பது சாத்விகமான இடம். நாட்டில் வசிப்பது ராஜஸமான இடத்தில் வசிப்பது என்று கூறப்படுகிறது.
சூதாட்டம் நடக்கும் இடம் போன்ற தீய செயல்கள் நடக்கின்ற இடங்கள் யாவும் தாமஸமான இடம்.
பகவான் இருக்கின்ற இடமான கோயில்கள் சாத்விகமான இடமாகும்.

ஸாத்த்விக: காரகோ ஸங்கீ3ऽராகா3ந்தோ4 ராஜஸ: ஸ்ம்ருத: |
தாமஸ: ஸ்ம்ருதிவிப்4ரஷ்டோ நிர்கு3ணோ மத3பாஶ்ரய: || 26 ||

கர்த்தாவையும் சாத்விகம், ராஜஸம், தாமஸம் என்று மூன்று வகையாக கூறுகிறார்.
செயல் செய்பவன் கர்த்தா, பலனை அனுபவிப்பவன் போக்தா என்று அழைப்பர்.
கர்மயோகியாக தர்மப்படி செயல் செய்பவன் சாத்விமான கர்த்தா. காம்ய கர்மத்தை செய்பவன் ராஜஸ கர்த்தா,
கவனக்குறைவாகவும், அதர்மமாகவும் செயல்படுபவன் தாமஸ கர்த்தா.
யோசிக்காமல், அறிவை உபயோகிக்காமல் செயல்படுபவன் தாமஸ கர்த்தா.
சாத்விக கர்த்தா அடையும் பலன் புண்ணியம், மனத்தூய்மையாகும். மற்ற இருவகை கர்த்தாக்கள் அடைவது பாவமும், குற்ற உணர்வும்தான்.

சாத்வீகமாக செயல்படு கர்த்தா பற்றற்றவனாக இருப்பான். உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் நன்மையை கொடுக்காது.
இது ராஜஸ கர்த்தாவின் செயல்முறை. பற்றினால், உணர்ச்சி பெருக்கினல் மதிமயங்கி செயல்படுபவன் ராஜஸ கர்த்தா.
ஏற்கனவே அடைந்த அறிவை உபயோகிக்காமல் செயல்படுபவன், சோம்பலினாலும் அறிவை உபயோகிக்காமல் செயல்படுபவன்,
கவனக்குறைவாக செயல்படுபவம் தாமஸ கர்த்தாவாகும்.
சாத்விக கர்த்தா மேலான சாத்விகமான குணாதீதனாக உயர்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பான்,
மேலும் பகவானை அடைவதே குறிக்கோளாக கொண்டு செயல்படுவான். செயல் செய்ய ஆரம்பிக்கும்போது மிகுந்த கவனத்துடனும்,
உணர்ச்சிகள் அடங்கிய நிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகுதான் அந்த செயலை செய்ய தொடங்க வேண்டும்.

ஸாத்விக்யாத்4யாத்மிகீ ஶ்ரத்3தா4 கர்மஶ்ரத்3தா4 து ராஜஸீ |
தாமஸ்யத4ர்மே யா ஶ்ரத்3தா4 மத்ஸேவாயாம் து நிர்கு3ணா || 27 ||

சிரத்தையும் மூன்று வகையாக பிரித்து கூறுகிறார். அவைகள் மூன்று குணங்களின் அடிப்படையில்தான் பிரிக்கப்படுகிறது.
சாத்விகமானவர்களிடத்தில் வைக்கும் நம்பிக்கை சாத்விக சிரத்தை. அவர்களின் அறிவுரை நம்முடைய நம்பிக்கைக்கு வேறாக இருந்தாலும்
அவர்கள் கூறும் வார்த்தையில் வைக்கும் சிரத்தைதான் சாத்விகமான சிரத்தை.
அதர்மத்தில் வைக்கும் சிரத்தை ராஜஸ, தாமஸ சிரத்தை என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ஸாத்விக்யாத்யாத்மிகி ஶ்ரத்தா – சாத்விக சிரத்தை நித்திய வஸ்துவை ஏற்றுக் கொள்வதில் உள்ள நம்பிக்கை.
சாஸ்திரம் உபதேசிக்கும் பிரம்ம ஞானத்தை ஏற்றுக் கொள்வது. உபநிஷத்தின் வார்த்தைகளில் இருக்கும் நம்பிக்கை சாத்விக சிரத்தை.
கர்ம ஶ்ரத்தா து ராஜஸீ – செயலினால் வரும் பலனை நம்புவது, பலனைத் தரும் செயல்களில் மட்டும் வைக்கும் நம்பிக்கை
ராஜஸ சிரத்தை. கர்ம காண்டத்திலுள்ள வார்த்தையில் மட்டும் சிரத்தையுடன் இருப்பது ராஜஸ சிரத்தை.
தாமஸி அதர்மேயா ஶ்ரத்தா – அதர்ம மான செயல்களில் இருக்கும் நம்பிக்கை தாமஸ சிரத்தை,
அதர்மமான செயல் என்று தெரிந்தாலும் அதுதான் பலனைக் கொடுக்கும்,
திருப்தியைக் கொடுக்கும் என்று நம்புவது தாமஸ சிரத்தை.
அதர்ம வழியில் செல்ல தூண்டுபவர்களின் வார்த்தைகளில் வைக்கும் நம்பிக்கையும் தாமஸ சிரத்தையாகும்.
மத்ஸெவாயாம் து நிர்குணா – நிர்குணமான சிரத்தையானது ஈஸ்வரன், குரு சேவையை குறிக்கும்.
ஈஸ்வர வழிபாடு, மோட்சத்தை அடைய எடுக்கும் முயற்சியும் இதைக் குறிக்கிறது.

பத்2யம் பூதமனாயஸ்தமாஹார்யம் ஸாத்விகம் ஸ்ம்ருதம் |
ராஜஸம் சேந்த்3ரியப்ரேஷ்ட2ம் தாமஸம் சார்திதா3ஶுசி || 28 ||

ஆகாரமும் மூன்று விதமாக பகவான் பிரித்திருக்கிறார். ஆகாரத்தின் சுவையின் அடிப்படையிலும், தன்மையின் அடிப்படையிலும்
இந்த பிரிவு அமைந்திருக்கிறது. ஸ்தூலமானது கழிவாகவும், சூட்சுமமான உணவு உடலாகவும், அதிசூட்சுமமானது மனதை வளர்க்கின்றது.
வயதான காலத்தில் மனமானது அதிகமாக சாப்பிட வைத்து விடும் அல்லது சாப்பிடவே அனுமதிக்காது.
உணவும் சாத்விக சிரத்தை வளர்வதற்கு காரணமாகின்றது.
பத்யம் – உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்ற உணவுவகைகள்
பூதம் – தூய்மையான உணவு, சமைக்கின்ற இடம், பாத்திரம், சாஸ்திர ரீதியாய தூய்மை படுத்தி வைத்தல்,
சாஸ்திர நிஷேத உணவுவகைகள் அசுத்தமானது
அனாயஸ்தம் – எந்த உணவு எளிமையாக கிடைக்கின்றதோ, நாம் வசிக்குமிடத்தில் எது சுலபமாக கிடைக்கின்றதோ,
பருவ காலங்களில் கிடைக்கக்கூடிய பழங்கள், காய்கறிகள்
ஆஹர்யம் சாத்விகம் ஸ்ம்ருதம் – இப்படிபட்ட உணவு வகைகள் சாத்விகமானது என்று கூறப்படுகிறது
அளவுடன் சாப்பிட வேண்டும்., பசிக்கும்போது சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுகின்ற உணவும் சாத்விகமானது
ராஜஸம் ச் இந்திரிய ப்ரேஷ்டம் – சுவைக்காக, இந்திரிய சுகத்தைக் கொடுக்க கூடிய உணவு வகைகள் ராஜஸமானது
தாமஸம் ச் ஆர்த்தம் ஶுசி – நோயைக் கொடுக்க கூடிய உணவு வகைகள், தூய்மை அற்ற உணவு வகைகளும் தாமஸ வகையை சார்ந்தது.

ஸாத்த்விகம் ஸுக2மாத்மோத்த2ம் விஷயோத்த2ம் து ராஜஸம் |
தாமஸம் மோஹதை3ன்யோத்த2ம் நிர்கு3ணம் மத3பாஶ்ரயம் || 29 ||

ஒருவருக்கு எது இன்பத்தைக் கொடுக்கின்றதோ அத்தகைய உணவுவகைகள் அவருடைய சுபாவத்தை சுட்டிக் காட்டிவிடும்.
சாஸ்திரம் கேட்பதிலோ, அதன் உபதேசத்த சிந்திப்பதிலோ, தியானம் செய்வதிலோ சுகத்தை அனுபவித்தால் அது சாத்விகமான சுகங்கள்.
எந்தப் பொருட்களினால், செயல்களினால் இன்பம் அடைகின்றோமோ அதை வைத்து எந்த வகையான சுகத்தை அனுபவிக்கின்றோம் என்று அறிந்து கொள்ளலாம்.
சாத்விகம் ஸுகம் – ஆத்ம தத்துவத்தை அறிவதனாலும், அதை அடைய எடுக்கும் முயற்சியில் கிடைக்கும் சுகமானது சாத்விகமானது.
ஞானயோகத்தை கடைப்பிடிப்பதில் கிடைக்கும் சுகம் சாத்விகமானது.
ஆமோத்தம் – அமைதிபடுத்திய மனதிலிருந்து கிடைக்கும் சுகம் நற்பண்புகளே மனதில் சுகத்தை உருவாக்குவது
விஷய உத்தம் து ராஜஸம் – ஒரு பொருளோடு புலன்கள் வைக்கும் சம்பந்தத்தால் வருகின்ற தற்காலிக சுகமானது ராஜஸ சுகம்
தாமஸம் மோஹதைனயோத்தம் – மோக நிமித்தமாக, தை3ன்ய நிமித்தமாக வரும் சுகமானது தாமஸ சுகம்
மோகம் என்பது துக்கத்தை கொடுக்க கூடிய ஒன்றின் மீது சுகத்தை காண்பது. தற்காலிகமாக சுகத்தைக் கொடுக்கும் பொருட்கள்
மீது நிலையான சுகத்தை கொடுக்கும் என்று நம்ப வைக்கும் மனநிலை
தை3ன்யம் என்பது நம்மையே நாம் பரிதாபத்துக்குரியவனாக பாவித்துக் கொள்ளுதல், சுய பச்சாதாபம் உடைய மனநிலை,
தன்னைத்தானே தாழ்த்தி கொள்ளுதல்
நிர்குணம் மதாபாஶ்ரயம் – என்னை நிமித்தமாக கொண்டு வரும் சுகம் நிர்குணம். பகவானைப் பற்றிய அறிவை அடைவதினால்
வரும் சுகம் நிர்குணமானது. என்னைப்பற்றிய ஞானத்தினால் அடையும் மோட்ச சுகம் சாத்விகமானது

த்3ரவ்யம் தே3ஶ: ப2லம் காலோ ஞானம் கர்ம ச காரக: |
ஶ்ரத்3தா4வஸ்தா2க்ருதிர்நிஷ்டா2 த்ரைகு3ண்ய: ஸர்வ ஏவ ஹி || 30 ||

த்ரவ்யம் – திடமான பொருட்கள், இங்கே உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது மூன்று வகையாக பிரித்திருந்ததை பார்த்தோம்.
அதேபோல வசிக்கும் இடமும் அங்கு வசிக்கின்ற மக்களின் குணங்களைப் பொறுத்து அமைகின்றது.
நமக்கு கிடைக்கும் பலன்கள், காலம், ஞானம் இவைகளும் மூன்றாக இருக்கின்றது. நாம் செய்யும் செயல்களும், கர்த்தாவும்,
சிரத்தையும், அவஸ்தைகளும், எப்படிப்பட்ட உடல் கிடைக்கும், நிஷ்டா இவைகளெல்லாம்
மூன்று குணங்களின் அடிப்படையில்தான் அமைகிறது என்பதை அறிந்தோம்.

ஸர்வே கு3ணமயா பா4வா: புருஷாவ்யக்ததி4ஷ்டிதா: |
த்3ருஷ்டம் ஶ்ருதம் அனுத்4யாதம் பு3த்3த4யா வா புருஷர்ஷப4 || 31 ||

ஸர்வே பாவா – படைக்கப்பட்ட அனைத்தும்
குணமயா – குணமயமாகவே உள்ளது
புருஷ அவ்யக்த திஷ்டிதா – புருஷன், அவ்யக்தம் (மாயா, பிரிகிருதி) இரண்டையும் ஆதாரமாக கொண்டுள்ளது
த்ருஷ்டம் வா புத்தயா – புலன்களால், புத்தியினால் பார்க்கப்பட்டவைகள்
ஶ்ருதம் – கேட்கப்பட்டவைகள்
அனுத்யாதம் – யூகித்து அறிபவைகள்
புருஷர்ஶப – புருஷனையே ஆதாரமாக கொண்டுள்ளது

ஏதா: ஸம்ஸ்ருத்ய: பும்ஸோ கு3ணகர்மநிப3ந்த3னா: |
யேனேமே நிர்ஜிதா: ஸௌம்ய கு3ணா ஜீவேன சித்தஜா: |
ப4க்தியோகே3ன மன்னிஷ்டோ2 மத்3பா4வாய ப்ரபத்3யதே || 32 ||

ஏதா ஸம்ஸ்ருத்ய: பும்ஸஹ – மனித இனத்திற்கு இந்த சம்சாரமானது
குணகர்ம நிபந்தனா: – குணத்தாலும், செயல்களாலும் வந்துள்ளது
நம்மிடமிருந்து வெளிப்படும் செயல்கள் அனைத்தும் குணத்தின் அடிப்படையில்தான் இருக்கும்.
குணத்தின் அடிப்படையில் செய்யும் செயலினால் வரும் பலனை அனுபவிப்பதுதான் சம்சாரம்
யேன ஜீவேன – எந்த ஜீவனால், எந்தவொரு சாதகனால்
குணா நிர்ஜிதா – இந்த குணங்கள் சீரமைக்கப்படுகின்றதோ, நெறிபடுத்தப்படுகின்றதோ
சித்தஜா – நம் புத்தியில் தோன்றி செயல்பட்டு கொண்டிருக்கின்ற
பக்தியோகேன – பக்தி என்ற சாதனத்தை பயன்படுத்தி
மன்னிஷ்டஹ – என்னை சரணடைந்தவன்
மத்பாவாய ப்ரபத்யதே – என்னை அடைவதற்கு தகுதியடைந்தவனாக இருக்கிறான்

தஸ்மாத்3தே3ஹமிமம் லப்3த்4வா ஞானவிக்ஞானஸம்ப4வம் |
கு3ணஸங்க3ம் வினிர்தூய மாம் ப4ஜந்து விசக்ஷணா: || 33 ||

மனித சரீரத்தின் பெருமையை கூறி, குணங்களை சீரமைத்து மோட்சத்தையடைய முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
தஸ்மாத் – ஆகவே
ஞானவிக்ஞான ஸம்பவம் – ஞானமும், விக்ஞானமும் அடைவதற்கான வாய்ப்பை உடைய
இமம் தேஹ லப்த்வா – இந்த மனித உடலை அடைந்து
ஞானம் என்பது ஆத்ம ஞானத்தையும், விக்ஞானம் என்பது ஆத்மஞான பலனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையை குறிக்கின்றது.
குணஸங்கம்– உடலிலும், உலகத்திலும் உள்ள குணத்திலுள்ள பற்றை
வினிர்தூய – முழுமையாக நீக்கி
மாம் பஜந்து விசக்ஷணா – அறிவையுடையவர்கள் என்னை நாடி வர வேண்டும்.

நி:ஸங்கோ3 மாம் ப4ஜேத்3வித்3வான்ப்ரமத்தோ ஜிதேந்திரிய: |
ரஜஸ்தமஶ்சாபி4ஜயேத்ஸத்த்வஸம்ஸேவயா முனி: || 34 ||

இது ஒரு முக்கியமான ஸ்லோகம், இதில் முழு வேதாந்தத்தின் சாரத்தை கூறி இருக்கின்றார்.
சத்துவ குணத்தின் துணைக்கொண்டு ரஜோ, தமோ குணத்தை வெல்ல வேண்டும்.
தமோ குணத்திலிருப்பவன் முதலில் ரஜோ குணத்திற்கு சென்ற பிறகுதான் சத்துவ குணத்திற்கு செல்ல முடியும்.
குணமாற்றம் தவத்தினாலும், நற்செயல்களாலும்தான் சாத்தியமாகும். இந்த சாதனத்தை குணபரிவர்த்தனம் என்று கூறுவர்
வித்வான் – விவேகத்தை அடைந்தவர்கள் (சாத்திய-சாதன அறிவை அடைந்தவர்கள்) நித்ய-அநித்ய வஸ்து விவேகம் அடைந்தவர்கள்
மாம் பஜதே – ஈஸ்வரனான என்னை அடைவதே லட்சியமாக கொண்டு
நி:ஸங்கஹ – வைராக்கியத்தை அடைந்து
அப்ரமத்தஹ – மிகவும் எச்சரிக்கையாகவும், மிக்க கவனத்துடனும் இருப்பவன். உலகத்திலுள்ள போகப் பொருட்களிடத்தில்
இவ்வாறு இருக்க வேண்டும். பலன்கள் விவகாரம் செய்யுமிடத்தில் மிக கவனத்துடன் இருக்க வேண்டும்
ஜிதேந்திரியஹ – புலன்களை அமைதிபடுத்தியவன்; தமத்தைப் பின்பற்றியவனாக இருப்பவன். புலன்களும், மனமும்
இன்பத்தையே நாடியே செல்லும். புத்திதான் உண்மையான லட்சியத்தை வைத்திருக்கும்.
முனிஹி – அறிவை அடைந்த சாதகன்
ஸத்வஸம்வேயா – சத்துவ குணத்தின் உதவியை எடுத்துக் கொண்டு, சத்துவ குணத்திற்கு செயல்களினால் இவைகளை வென்று
சத்துவத்திலே நிலைத்து நிற்க வேண்டும்
ரஜஹ தமஹ அபிஜயேத் – ரஜோ, தமோ குணத்திலிருந்து விடுதலை பெற வேண்டும்.

ஸத்த்வம் சாபி4ஜயேத்3யுக்தோ நைரபேக்ஷ்யேண ஶாந்த்தீ4: |
ஸம்பத்3யதே கு4ணைர்முக்தோ ஜீவோ ஜீவம் விஹாய மாம் || 35 ||

சத்துவ குணத்தை அடைந்தாலும் இதுவும் நம்மை பந்தப்படுத்திக் கொண்டிருக்கும். அந்த நிலையில் அனுபவிக்கும்
இன்பத்திற்கு அடிமையாகி விடுவோம். அமைதியான சூழ்நிலைக்கும் அடிமையாகி இருப்போம்.
எனவே இதிலிருந்து நீங்கி மேலே முன்னேற வேண்டும். இனி செயல் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை.
அறிவை அடைந்தாலே போதும், அறிவினால் நான் இந்த உடலும், மனமும் அல்ல என்ற அனுபவத்தை அடைவோம்.
ஸத்வம் ச அபிஜயேத் – சத்துவத்தையும் வெற்றி கொள்ள வேண்டும்
முக்தஹ – சத்துவ நிலையிலுள்ள விவேகி
நைரபேக்ஷ்யேன – அதிலிருந்து நம்மை நீக்கி கொள்ளுதல், உடலின் மீதும், மனதின் மீதும் கொண்டுள்ள அபிமானத்தை
விடுவதன் மூலம் சத்துவத்தையே கடந்து போக வேண்டும்,
ஶாந்த்தீ4: – ஶமஹ – சாந்தமான அந்தக்கரணத்தை அடைவதனாக
குணைஹி முக்தஹ – அனைத்து குணங்களிலிருந்தும் விடுபட்டவனாக, விடுதலை அடைந்தவனாக
ஜீவோ ஜீவம் விஹாய – ஜீவன் ஜீவத்வத்தை தியாகம் செய்தவனாக, நான் ஜீவனென்கின்ற நினைவை அழித்தவனாக,
சரீரத்தின் மீதுள்ள அபிமானம் நீங்கியவனாக
மாம் ஸம்பத்யதே – மோட்ச ஸ்வரூபமான என்னையே அடைகின்றான்

ஜீவோ ஜீவ்வினிர்முக்தோ கு3ணைஶ்சாஶயஸம்ப4வை: |
மயைவ ப்3ரஹ்மணா பூர்ணோ ந ப3ஹிர்னாந்தரஶ்சரேத் || 36 ||

ஜீவஹ ஜீவ வினிர்முக்தஹ – ஜீவன் ஜீவனிடத்திலிருந்து விடுதலை அடைந்து
ஆஶயஸம்பவைஹி – மனதிலிருந்து வெளிப்படுகின்ற
குணை ச – குணங்களிலிருந்து விடுதலை அடைந்தவனாக
ப்ரஹ்மஃஆ பூர்ண மயா ஏவ – என் ஸ்வரூபமாக முழுமையுடன், மனநிறைவுடன் பிரஹ்ம்மனாகவே இருந்து கொண்டு இருப்பவன்
ந பஹிஹி ந அந்தஹ சரேத் – உள்ளேயும், வெளியேயும் ஆக வேண்டியது, அடைய வேண்டியது ஒன்றுமில்லாதவனாக இருப்பான்

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -18–சாங்க்ய யோகம்-

May 23, 2020

ஶ்ரீபகவான் உவாச
அத2 தே ஸம்ப்ரவக்ஷ்யாமி ஸாங்க்2யம் பூர்வைர்வினிஶ்சிதம் |
யத்3விக்ஞாய புமான்ஸத்3யோ ஜஹயாத்3வைகல்பிகம் ப்4ரமம் || 1 ||

ஸ்ரீபகவான் கூறுகிறார்.
இப்பொழுது உனக்கு ஏற்கனவே ரிஷிகளால் நன்கு நிலைநாட்டப்பட்ட ஆத்ம ஞானத்தை தெளிவாக உபதேசிக்கப்போகிறேன்.
இந்த ஆத்ம தத்துவத்தை ஒரு மனிதன் அறிந்து கொண்டால் அவன் உயிரோடிருக்கும்போதே இருமையினால் வருகின்ற
சம்சாரமானது அவனிடமிருந்து நீக்கப்படுகின்றது. இந்த அறிவின் உடனடி பலனாக இது நிகழ்கின்றது.

ஆஸீஜ்ஜானமதோ2 அர்த2 ஏகமேவாவிகல்பிதம் |
யதா3 விவேகநிபுணா ஆதௌ க்ருதயுகே3ऽயுகே3 || 2 ||

இந்த பிளவுபடாத பிரம்மன்தான் இருக்கிறது. ஞானம், அர்த்தம் என்ற இரு தத்துவங்கள் அதற்குள் சேர்ந்திருக்கிறது.
ஞானம் என்பது ஜீவனாகவும், அர்த்தம் என்பது ஜகத்தாகவும், அயுகம் என்பது பிரளய காலத்தையே குறிக்கிறது.
ஸ்வரூப லட்சணம் – ஏகமேவ அவிகல்பிதம்,
தடஸ்த லட்சணம் – ஞானம், அர்த்தம்.
ஆழ்ந்த உறக்கத்தில் காலத்தைப் பற்றி பேச முடியாது. ஈஸ்வரனுடைய ஆழ்ந்த உறக்கம் பிரளய காலமாகும்.
நம்முடைய ஜாக்ரத் அவஸ்தை அவருடைய கனவு நிலை. பிரளய காலத்தில் ஞானம், அர்த்தம், ஸ்ருஷ்டியும்,
ஸ்ருஷ்டி செய்வதற்குரிய சக்தியும் வெளித்தோற்றத்திற்கு வராத நிலையில் இருக்கும். பிரம்மன் மட்டும்தான் இருக்கும்.
மனிதர்கள் கிருதயுக காலத்தில் நித்ய-அநித்ய வஸ்துவை பிரித்தறியும் விஷயத்தில் நிபுணனாக இருந்த போதிலும்
அவர்களுக்கும் பிரம்மன் ஒன்றாக இருந்தது.

தன்மாயாப2லரூபேண கேவலம் நிர்விகல்பிதம் |
வாங்மனோऽகோ3சரம் ஸத்யம் த்3விதா4 ஸமப4வத்3ப்3ருஹத் || 3 ||

இதில் பிரம்மத்தின் ஸ்வரூப லட்சணத்தை பகவான் கூறுகின்றார். இது தன்னிடத்தில் உள்ள மாயை என்ற
சக்தியை கொண்டு படைப்பை உருவாக்கிறது. முதலில் இரண்டுவிதமான படைப்புக்களான அனுபவிப்பவன்,
அனுபவிக்கப்படும் பொருள் என்று படைக்கப்பட்டது. கனவில் வரும் எண்ணங்களில் முதல் எண்ணம் காண்பவன்,
மற்றதெல்லாம் அனுபவிக்கப்படுகின்ற பொருளாகின்றது.
ப்3ருஹத் – பிரம்மன் (மிகப்பெரியது)
கேவலம் – அது மட்டும்தான் இரண்டற்றதாக
நிர்விகல்பிதம் – பிளவுபடாததாக இருக்கின்றது.
வாங்மனோ அகோசரம் – இதை வாக்காலும், மனதாலும், வரையறுக்க முடியாது, வாக்கினால் நேரிடையாக விளக்க முடியாது.
மனதினால் நேரிடையாக கிரகிக்க முடியாது, புரிந்து கொள்ள முடியாது.
ஸத்யம் – உண்மைப்பொருள், பொய்யாக தோன்றிக் கொண்டிருக்கும் படைப்புக்கு ஆதாரமாக இருப்பது
தத்ர மாய பல ரூபோ திவிதா4 ஸமப4வதி – இந்த பிரம்மன் மாயா ரூபமாகவும், பலன் ரூபமாகவும்
இரண்டு தத்துவங்களாக தன்னை மாற்றிக் கொண்டது.
மாயா – பார்க்கப்படும் உலகமாகவும்
பலம் – பார்ப்பனவாகவும், ஜீவனாக்வும்

தயோரேகதரோ ஹ்யர்த2: ப்ரக்ருதி: ஸோப4யாத்மிகா |
ஞானம் த்வன்யதமோ பா4வ்அ: புருஷ: ஸோऽபி4தீ4யதே || 4 ||

பிரம்மனிடம் இருக்கின்ற இரண்டு தத்துவங்களிலொன்று அர்த்தம். இது பிரகிருதி என்று கூறப்படுகின்றது.
இது காரண-காரியம் என்ற இரண்டு தத்துவங்களாக உள்ளது. ஞானம் என்ற தத்துவம் பிரகிருதியில் இருந்து வேறுபட்டது.
இதை புருஷன் என்று அழைக்கப்படுகிறது.

தமோ ரஜ: ஸத்த்வமிதி ப்ரகிருதேரப4வங்கு3ணா: |
0000000மயா ப்ரக்ஷோப்4யமாணாயா: புருஷானுமதேன ச || 5 ||

மயா-என்னால், இங்கே பகவான் கிருஷ்ணன் தன்னை ஈஸ்வரனாக பாவித்துக் கொள்கிறார்.
இந்த பிரகிருதியானது(ப்ரக்ஷோப்4யமாணாயா) கலைத்துவிடப்பட்டது. பிரகிருதியில் உள்ள மூன்று குணங்களும்,
சமவிகிதத்தில் இருக்கும்போது அது அமைதியாக இருக்கும்,. இந்த விகிதாசாரம் கலைந்து விடும்போது செயல்பட துவங்கிவிடும்.
எனவே பிரளயம் என்பது மூன்று குணங்களும் சமமாக இருக்கின்ற நிலையென்று புரிந்து கொள்ளலாம்..
என்னால் இந்த பிரகிருதியானது ஸ்ருஷ்டிக்கு தயார் செய்யப்பட்டது. பிரம்ம ஸ்வரூபமான என்னால் இதை ஸ்ருஷ்டி செய்ய அனுமதிக்கப்பட்டது.

தேப்4ய: ஸமப4வத்மூத்ரம் மஹான்ஸூத்ரேண ஸம்யுத: |
ததோ விகுர்வதோ ஜாதோ யோऽஹங்காரோ விமேஹன: || 6 ||

பிரகிருதி – ஈஸ்வரன்;
மகத் – ஞானத்துடன் கூடிய ஹிரண்யகர்ப்பன், கிரியா சக்தியுடன் கூடிய ஹிரண்யகர்ப்பன் (சூத்ராத்மா).
பிரகிருதியிடமிருந்து சூத்திரம் என்கின்ற தத்துவம் தோன்றியது. இந்த மகத் தத்துவம் சூத்ர தத்துவத்துடன் சேர்ந்துள்ளது.
இதிலிருந்து ஹிரண்யகர்ப்பன் தோன்றினான். இந்த சூத்திரத்திடமிருந்து அகங்காரம் என்ற தத்துவம் தோன்றியது.
ஜீவனை இதில் அபிமானம் கொள்ளச் செய்கிறது.

வைகாரிகஸ்தைஜஸ்ஶ்ச தாமஸ்ஶ்சேத்யஹம் த்ரிவ்ருத் |
தன்மாத்ரேந்த்3ரியமனஸாம் காரணம் சித3சின்மய: || 7 ||

இதில் அகங்காரத்திலுள்ள அம்சத்தை பற்றி கூறப்படுகிறது. இது சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம்.
இந்த மூன்று குணங்களுடன் கூடியது. இது மூன்று குணங்களின் அடிப்படையில் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது.
இது ஜட ஸ்வரூபமாகவும், உணர்வு ஸ்வரூபமாகவும் இருக்கின்றது. இது பல படைப்புக்களுக்கு காரணமாக இருக்கின்றது.
பஞ்சபூதங்கள், தன்மாத்திரைகள், இந்திரியங்கள், மனம் இவைகள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கின்றது.

அர்த2ஸ்தன்மாத்ரிகாஜ்ஜக்ஞே தாமஸாதி3ந்த்3ரியாணி ச |
தைஜஸாத்3தே3வதா ஆஸன்னேகாத3ஶ ச வைக்ருதாத் || 8 ||

அகங்காரத்தின் தமோ அம்சத்திலிருந்து தன்மாத்திரையாகி அதிலிருந்து ஸ்தூல பஞ்ச பூதங்கள் தோன்றியது.
ரஜோ குண அம்சத்திலிருந்து இந்திரியங்கள் தோன்றின. சத்துவ குண அம்சத்திலிருந்து மனமும், பதினொன்று தேவதைகளும் தோன்றின.

மயா ஸஞ்சோதி3தா பா4வா: ஸர்வே ஸம்ஹத்யகாரிண: |
அண்டமுத்பாத3யாமாஸுர்ம மாயதனமுத்தமம் || 9 ||

படைக்கப்பட்டுள்ள அனைத்தும் என்னுடைய கண்காணிப்புக்குட்பட்டுத்தான் இருக்கின்றது.
இவைகள் அனைத்தும் ஒன்றொடொன்று இணைந்து இயங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த உயிர்கள் வாழும் உலகங்கள் படைக்கப்பட்டு இருக்கின்றது. இதுவே என்னுடைய உத்தமமான இருப்பிடம்.

தஸ்மின்னஹம் ஸம்ப4வமண்டே3 ஸலிலஸம்ஸ்தி2தௌ |
மம நாப்4யாமபூ4த்பத்3மம் விஶ்வாக்2யம் தத்ர சாத்மபூ4: || 10 ||

இந்த அண்டத்தில் நான் விஷ்ணுரூபமாக வெளிப்படுகின்றேன். பாற்கடலில் நாராயணனாக இருக்கின்றேன்.
என்னுடைய நாபியிலிருந்து விஸ்வம் என்ற தாமரை தோன்றியது. அந்த தாமரையில் பிரம்ம தேவன் தோன்றினார்.

ஸோऽஸ்ருஜத்தபஸா யுக்தோ ரஜஸா மத3னுக்3ரஹாத் |
லோகான்ஸபாலான்விஶ்வாத்மா பூ4ர்பு4வ: ஸ்வரிதி த்ரிதா4 || 11 ||

அந்த பிரம்மதேவன் ஸ்ருஷ்டி செய்ய தயாரானார். ரஜோ குணத்தின் துணைக் கொண்டு தவத்தின் மூலமாக என்னுடைய
அனுமதியுடன் உலகங்களையும், தேவர்களையும் படைத்தார். பூ:, புவ, ஸ்வ ஆகிய லோகங்களையும், ஜீவராசிகளையும் படைத்தார்.

தே3வானாமோக ஆஸீத்ஸ்வர்பூ4தானாம் ச பு4வ: பத3ம் |
மர்த்யாதீ3னாம் ச பூ4லோக: ஸித்3தா4னாம் த்ரிதயாத்பரம் || 12 ||

தேவர்களுக்கு சொர்க்கலோகம் இருப்பிடமாக ஆயிற்று. புவர்லோகம் பூதங்களுக்கு இருப்பிடமானதாக ஆயிற்று,
மனிதன் முதலியவர்களுக்கு பூலோகம் இருப்பிடம் ஆயிற்று.
இம்மூன்றுலகங்களுக்கும் மேலுள்ள மஹ: தப: ஸத்யம் என்றவை சித்தர்களுக்கு ஸ்தானமாயிற்று.

அதோ4ऽஸுராணாம் நாகா3னாம் பூ4மேரோகோऽஸ்ருஜத்ப்ரபு4: |
த்ரிலோக்யாம் க3தய: ஸர்வா: கர்மணாம் த்ரிகு3ணாத்மனாம் || 13 ||

அசுரர்களுக்கும், நாகர்களுக்கும் பூமிக்கும் கீழுள்ள அதலம் முதலியவற்றை இருப்பிடமாக பிரபுவானவர், சிருஷ்டித்தார்.
இம்மூவுலகங்களிலும் சத்துவம் முதலிய குணங்களாலுண்டான கர்மங்களூடைய பலன்கள் உண்டாகின்றன

யோக3ஸ்ய தபஸ்ஶ்சைவ ந்யாஸஸ்ய க3தயோऽமலா: |
மஹர்ஜனஸ்தப: ஸத்யம் ப4க்தியோக3ஸ்ய மத்3க3தி: || 14 ||

யோகத்திற்கும், தவத்திற்கும், சன்யாஸத்திற்கும் மஹ: ஜன: தப: ஸத்யம் என்ற மிக சுத்தங்களான
(ராகம், லோபம் முதலிய தோஷங்களில்லாத) ஸ்தானங்கள் பலன் ஆகின்றன. பக்தியோகத்திற்கு வைகுண்டலோகம் பலனாகின்றது

மயா காலாத்மனா தா4த்ரா கர்மயுக்தமித3ம் ஜக3த் |
கு3ணப்ரவாஹ ஏதஸ்மின்னுன்மஜ்ஜதி நிமஜ்ஜதி || 15 ||

கர்மத்துடன் கூடின இந்தப் பிராணிகள் கூட்ட்ம் காலத்தை சக்தியாக உடையவனும் கர்மங்களுக்கு பலனைக் கொடுப்பவனுமான
பரமேசுவரனான என்னால் இந்த சம்சாரத்தில், சத்யலோகம் வரையிலுள்ள உத்தமகதிகளை அடைகிறது.
தாவரம் வரையிலுள்ள தாழ்ந்த கதிகளையுமடைகிறது

அணுர்ப்3ருஹத்க்ருஶ: ஸ்தூ2லோ யோ யோ பா4வ: ப்ரஸித்4யதி |
ஸர்வோऽப்யுப4யஸம்யுக்த: ப்ரக்ருத்யா புருஷேண ச || 16 ||

சிறிதாகவும், பெரிதாகவும், இளைத்ததாகவும், பெருத்ததாகவும் எந்தெந்தப் பொருள் பிரசித்தமாக இருக்கிறதோ
அதெல்லாம் பிரகிருதி, புருஷன் என்ற இரண்டுடனும் கூடினதாகவே இருக்கிறது.

யஸ்து யஸ்யாதி3ரந்தஶ்ச ஸ வை மத்4யம் ச தஸ்ய ஸன் |
விகாரோ வ்யவஹாரார்தோ2 யதா2 தைஜஸபார்தி2வா: || 17 ||

எந்தக்காரியத்திற்கு எந்தப்பொருள் ஆதியாகவும், காரணமாகவும், முடிவாகவும், லயஸ்தானமாகவும் ஆகிறதோ
அதன் நடுவும் அதே பொருள்தான் இருக்கிறது.. அந்தப்பொருள் தான் ஸத் என்று கூறப்படுகிறது.
தங்கத்தின் விகாரங்களான மோதிரம், குண்டலம் முதலியதும், பிருதிவியின் விகாரங்களான பானை முதலியதும் போலவே
காரியமும் உலக வியவஹாரத்திற்காக ஏற்பட்டது.

யது3பாதா3ய பூர்வஸ்து பா4வோ விகுருதேऽபரம் |
ஆதி3ரந்தோ யதா3 யஸ்ய தத்ஸத்யமபி4தீ4யதே || 18 ||

இந்த வெளிதோற்றத்திற்கு வந்த அனைத்து படைப்புக்களுக்கும் மூன்று தத்துவங்கள் ஆதாரமாக இருக்கின்றது.
ஒன்று பிரகிருதி (மாயை), உபாதான காரணமாக இருக்கின்றது. இரண்டாவது பரமபுருஷன் மேலான அறிவு ஸ்வருபமான
தத்துவம்(பிரம்மன்), மூன்றாவது காலம் என்கின்ற தத்துவம் மூன்றாவது ஆதாரமாக இருக்கின்றது.
இந்த மூன்று தத்துவங்களும் நானே என்று அறிந்து கொள்.
பிரகிருதி – மாயை காரியமாக வெளிப்படும்போது, அதுவே இந்த உலகம் காலம் என்ற தத்துவம் பிரகிருதியை தாண்டிவிட்டு
காரியமாக வெளிப்பட வைக்கின்றது. காலம் ஜீவனுடைய கர்மபலன்களாக இருக்கின்றது.
பிரம்மத்திற்கும், மாயைக்கும் உள்ள சம்பந்தமே காலம் என்ற கூறப்படுகின்றது.

ப்ரக்ருதிர்யஸ்யோபாதா3னமாதா4ர: புருஷ: பர: |
ஸதோ பி4வ்யஞ்ஜகள் காலோ ப்3ரஹ்ம தத் த்ரிதயம் த்வஹம் || 19 ||

பிரகிருதி- புருஷன் -காலம் என்பது படைப்புக்கு ஒரு காரணியாக இருக்கின்றது.
இவைகள் மூன்றும் சேர்ந்துதான் பிரம்மன் என்று அழைக்கப்படுகிறது

ஸர்க3: ப்ரவர்ததே தாவத்பௌர்வாபர்யேண நித்யஶ: |
மஹான்கு3ணவிஸர்கா3ர்த2: ஸ்தி2த்யந்தோ யாவதீ3க்ஷணம் || 20 ||

இந்த ஸ்ருஷ்டி எதற்காக, யாருக்காக என்று பதில் கூறப்படுகின்றது. ஜீவர்களுக்காக எல்லா படைப்புக்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இந்த உலகத்திலிருந்து நன்றாக வாழ்ந்துவிட்டு மீண்டும் பிறவாத நிலைக்கு செல்ல வேண்டும்.
இந்த பெரிய படைப்பு, புரிந்து கொள்ளமுடியாத பிரமாண்ட படைப்பு இயங்கிக் கொண்டிருக்கின்றது.
ஈஸ்வரனின் கட்டுப்பட்டுக்குள் இருக்கும் வரை ம் மீண்டும், மீண்டும் தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றது.
குணவிஸர்கஹ – ஜீவன் என்று பொருள், சரீரத்தில் வெளிப்படுபவன்.
இந்த ஜீவனுக்காகத்தான் இந்த படைப்பு அனைத்தும் படைக்கப்பட்டிருக்கிறது

விராண்மயாஸாத்3யமானோ லோக கல்பவிகல்பக: |
பஞ்சத்வாய விஶேஷாய கல்பதே பு4வனை: ஸஹ || 21 ||

தோன்றி மறையும் தன்மையுடைய விராட் என்கின்ற தத்துவமான அனைத்து படைப்புக்களும் இறைவனான என்னால் வியாபிக்கபட்டதாக இருக்கின்றது.
ஆஸாத்யமானஹ – எண்ணங்களால் வியாபிக்கப்படுதல்
உயிரினங்கள் வாழ்கின்ற இந்த உலகம் அனைத்தும் பஞ்ச பூதங்களாக மாறி வியாபித்திருக்கிறது.
அதாவது எண்ணங்களால் வியாபிக்கப்பட்டிருக்கிறது. அபவாதம் என்பது மனதளவில் செய்வதுதான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

அன்னே ப்ரலீயதே மர்த்யமன்னம் தா4னாஸு லீயதே |
தா4னா பூ4மௌ ப்ரலீயந்தே பூ4மிர்கந்தே4 ப்ரலீயதே || 22 ||

மரணமடையக் கூடிய இந்த ஸ்தூல சரீரமானது அன்னத்தில் ஒடுக்க வேண்டும். அன்னம்தான் ஸ்தூல உடலுக்கு காரணம் எனவே அதுவே சத்யம்.
இந்த அன்னத்தை விதைக்குள் ஒடுக்க வேண்டும். அன்னம் காரியமாகி விடுவதால் அது அழியக்கூடியதாக இருக்கிறது.
விதைகள் பூமியில் ஒடுங்குகின்றன.
எல்லா உடல்களையும் உணவில் லயம் செய்ய வேண்டும். எனவே எல்லா உடல்களும் ஒன்றுதான்.
இவைகள் அனைத்தும் விதைக்குள் ஒடுங்குகின்றது. எல்லா விதைகளும் பூமியில் ஒடுக்க வேண்டும்.
இந்த ஸ்தூல பூமியானது சூட்சும பூமியோடு ஒடுங்குகின்றது.

அப்ஸு ப்ரலீயதே க3ந்த4 ஆபஶ்ச ஸ்வகு3ணே ரஸே |
லீயதே ஜ்யோதிஷி ரஸோ ஜ்யோதீ ரூபே ப்ரலீயதே || 23 ||

சூட்சும பூமியானது நீரில் ஒடுங்கிவிட்டது. நீரானது அக்னியில் ஒடுங்குகின்றது. ஸ்தூல அக்னியானது சூட்சும அக்னியோடு ஒடுங்குகின்றது.
சூட்சுமமான அக்னியானது ஸ்தூல வாயுவிடமும், ஸ்தூல வாயு சூட்சும வாயுவிடமும் ஒடுங்குகின்றது.
இந்திரியங்கள் தன்னுடைய காரணமாக இருக்கின்ற ரஜோ குணத்தோடு ஒடுங்குகின்றது.

ரூபம் வாயௌ ஸ ச ஸ்பர்ஶே லீயதே ஸோऽபி சாம்பரே |
அம்ப3ரம் ஶப்3த3தன்மாத்ர இந்த்ரியாணி ஸ்வயோனிஷு || 24 ||

சூட்சுமமான ஆகாசமானது தமோ குணத்தினுடைய அகங்காரத்திற்குள் ஒடுங்குகிறது. நம்முடைய மனமும் அதற்குரிய தேவதைகளும்
அகங்காரத்தின் சத்துவ குணத்தில் இருந்து தோன்றியதால் அதற்குள் ஒடுங்குகின்றது. அகங்காரம் மஹத் தத்துவத்தில் ஒடுங்குகின்றது.

யோனிர்வைகாரிகே ஸௌம்ய லீயதே மனஸீஶ்வரே |
ஶப்3தோ பூ4தாதி3மப்யேதி பூ4தாதி3ர்மஹதி ப்ரபு4: || 25 ||

அகங்காரத்தை விராட் என்று சொல்லலாம். அதேபோல மகத் தத்துவத்தை ஹிரண்யகர்ப்பன் என்றும் சொல்லலாம்.
ஹிரண்யகர்ப்பத்தில் எல்லா குணங்களும் வெளிப்படாமல் இருக்கின்றது.
இந்த மகத் தத்துவம் எல்லா குணங்களையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறது.
இது தன்னுடைய குணம் அதனுடைய நிலையோடு ஒடுங்குகின்றது. சூட்சுமமான மகத் தத்துவம் அவ்யக்தமான பிரகிருதியுடன் ஒடுங்குகின்றது.
அவ்யக்தம் என்பது ஸ்ருஷ்டிக்கு தயாராக இருக்கும் பிரகிருதியை குறிக்கின்றது.
இந்த அவ்யக்தம் அமைதியாக இருக்கின்ற பிரகிருதியான மாயையுடன் ஒடுங்குகின்றது.

ஸ லீயதே மஹான்ஸ்வேஷு கு3ணேஸு கு3ணவத்தம: |
தேऽவ்யக்தே ஸம்ப்ரலீயந்தே தத்காலே லீயதேऽவ்யயே || 26 ||

அவ்யக்தமான மாய தத்துவமான காலமானது ஈஸ்வரனிடம் லயமடைகிறது. மாயையை தன் கட்டுக்குள் வைத்திருப்பவர் ஈஸ்வரன்.
இதில் ஜீவஹ என்ற வார்த்தைக்கு ஈஸ்வரன் என்ற பொருள் கொள்ள வேண்டும்.
எல்லா ஜீவர்களுக்கும் உணர்வு சக்தியை கொடுத்து கொண்டிருப்பவர்

காலோ மாயாமயே ஜீவே ஜீவ ஆத்மனி மய்யஜே |
ஆத்மா கேவல ஆத்மஸ்தோ2 விகல்பாபாயலக்ஷண: || 27 ||

கடைசியில் ஈஸ்வரனையே பிறப்பற்ற பிரம்ம தத்துவத்தில் ஒடுக்கிவிட வேண்டும்.
சாஸ்திரத்தையும், குருவையும் கூட இதில் ஒடுக்கி விட வேண்டும்.
ஆத்மா கேவல லக்ஷணஹ – ஆத்மா இரண்டற்றதாக தன்னிடத்திலே இருக்கின்றது
விகல்ப அபாய லக்ஷணஹ – இத் பிளவற்ற தன்மையுடையதாக இருக்கின்றது
ஞானியும் எப்பொழுதும் தன்னிடத்திலேதான் மகிழ்ந்திருப்பான். இது ஆத்மஞான நிலையை எடுத்துக் காட்டுகின்றது.

ஏவமன்வீக்ஷமாணஸ்ய கத2ம் வைகல்பிகோ ப்4ரம: |
மனஸோ ஹ்ருதி3 திஷ்டே2த வ்யோம்னீவார்கோத3யே தம: || 28 ||

இவ்விதம் ஞானம் அடைந்துவிட்டால் சம்சாரியாக இருக்க முடியாது. இவ்வாறு ஆத்மாவை விசாரம் செய்து
அதை அறிந்து கொண்டவனுக்கு எப்படி இருமையினால் துயரம் வரும். மனதிலிருக்கும் இந்த சம்சாரமானது இதயத்திற்குள் எப்படி வரும்.
இது ஆகாயத்தில் சூரியன் வந்தவுடன் இருள் நீங்கிவிடுவது போல சம்சாரமும் ஆத்மஞானம் வந்தவுடன் மறைந்து விடும்.

ஏஷ ஸாங்க்2யவிதி4: ப்ரோக்த: ஸம்ஶயக்3ரந்தி2பே3த3ன: |
ப்ரதிலோமானுலோமாப்4யாம் பராவரத்3ருஶ மயா || 29 ||

இந்த ஆத்மஞானம் என்னால் உபதேசிக்கப்பட்டது. காரண-காரியமான அனைத்தையும் சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்கின்ற
என்னால் அத்யாரோப-அபவாதம் என்ற முறையில் உபதேசிக்கப்பட்டது. இந்தப் பாதையானது மனதிலிருக்கும் மோகத்தை அழிக்கக்கூடியது.
இந்த ஞானத்தை நன்கு புரிந்து உணர்ந்து கொள்வதற்கு மனமாற்றம் தேவை.
மனதிலுள்ள ரஜோ,தமோ குணத்தை நீக்கி சத்துவ குணத்தை மட்டும் வைத்திருக்க வேண்டும்.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -17–திதிக்ஷாவின் பெருமையும், முக்கியத்துவம்-

May 23, 2020

ஶ்ரீபா3த3ராணிருவாச
ஸ ஏவமாஶம்ஸித உத்தவேன பா4க3வதமுக்2யேன தா3ஶார்ஹமுக்2ய: |
ஸபா4ஜயன்ப்4ருத்யவசோ முகுந்த3ஸ்தமாப3பா4ஷே ஶ்ரவணீயவீர்ய: || 1 |

பாகவத முக்யேன் – உத்தமமான பக்தனான
ஸ ஏவம் அஶம்ஸிதஹ – உத்தவரால் இவ்வாறு பிரார்த்திக்கப்பட்டதும்
யது குலத்தில் மேலானவராக இருக்கின்ற கிருஷ்ண பகவான் உத்தவருடைய உயர்ந்த, சிறப்பான கேள்வியை பாராட்டி,
அங்கீகரித்து அவருக்கு பதிலளித்தார்.
ஶ்ரவனீய வீர்யஹ – பகவானைப் பற்றியும், அவரது வார்த்தைகளையும் கேட்க தகுந்தவைகள்

ஶ்ரீபகவானுவாச
பார்ஹஸ்பத்ய ஸ நாஸ்த்யத்ர ஸாது4ர்வைது3ர்ஜனேரிதை: |
து3ரக்தைர்பி4ன்னமாத்மானம் ய: ஸமாதா4துமீஶ்வர: || 2 ||

பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்.
பிரஜாபதியின் சீடனான உத்தவா! தீயமனிதர்களால் அவமதிக்கப்பட்ட சொற்களாலும், நடத்தைகளாலும் உடைந்த,
தாக்கப்பட்ட மனதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும் சக்தியுடைய சாதுவை இந்த உலகத்தில் பார்ப்பது மிகவும் அரிது.

ந ததா2 தப்யதே வித்3த4: புமான்பா3ணைஸ்து மர்மகை3: |
யதா2 துத3ந்தி மர்மஸ்தா2 ஹ்யஸ்தாம் புருஷேஷவ: || 3 ||

உடலில் அதிக வலி கொடுக்ககூடிய இடத்தில் எயத அம்பு கொடுக்கும் வலியை விட யாராவது சுடு வார்த்தைகளால் திட்டினால்
அதனால மனதில் ஏற்படும் வலியானது அதிகமாக இருக்கும்.
தீயினால் சுட்ட புண் உள்ளாறுமே ஆறாது நாவினால் சுட்ட வடு.என்ற வள்ளுவரின் வாக்கை இதனுடன் ஒப்பிட்டு பார்த்து மேலும் விளக்கம் பெறலாம்..

கதயந்தி மஹத்புண்யமிதிஹாஸமிஹோத்4த4வ |
தமஹம் வர்ணயிஶ்யாமி நிபோ3த4 ஸுஸமாஹித: || 4 ||

உத்தவா! இதை பற்றிய ஒரு கதை இருக்கின்றது. மேலான, சிறந்த இதிகாசம் அது.
ஒருவனுடைய புண்ணியமான கதையை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கதையை நான் உனக்கு சொல்லப்போகின்றேன்.
ஒருமுகப்படுத்தப்பட்ட மனதுடன் கேட்டு பயனடைவாயாக.

கேனசித்3பி4க்ஷுணா கீ3தம் பரிபூதேன து3ர்ஜனை: |
ஸ்மரதா த்4ருதியுக்தேன விபாகம் நிஜகர்மணாம் || 5 ||

யாரோ ஒரு சந்நியாஸியைப் போன்ற ஒருவரால் உபதேசிக்கப்பட்ட கருத்து இருக்கிறது. அவன் எப்படி இருந்து பிறகு சந்நியாஸியாக
உயர்ந்தான் என்பதையும் சொல்கிறேன். தீய ஜனங்களால் தாக்கப்பட்டு கொண்டிருந்தவரைப் பற்றி சொல்கிறேன்.
இந்த அனுபவங்கள் கொடுக்கும் அறிவைக் கொண்டும், உறுதியான மனதைக் கொண்டும் எப்படி தாங்கிக் கொண்டான் என்பதையும்,
பிராரப்த பலனை எப்படி அனுபவித்தான் என்பதையும் கூறுகிறேன். நம்மை சுற்றியிருப்பவர்கள் நம்மை சரியாக புரிந்து கொள்ளாமல் இருப்பார்கள்.
தன்னுடைய பிராரப்த பலனை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு பிக்ஷூவின் கதை இது.
விபாகம் – துக்கம்,
துக்கம் இரண்டு வகையாக இருக்கிறது அவைகள்
1. பரிஹர்த்ய துக்கம் – பொறுமையுடன் அனுபவிக்க வேண்டும்., 2.அபரிஹாரம் துக்கம் – சகித்துக் கொள்ள வேண்டியது.
அதாவது 1. நம்மாலே நீக்கி கொள்ளக்கூடிய துயரங்கள், 2. நம்மாலோ நீக்க முடியாத துயரங்கள்.
த்ருதியுக்தேன – கர்மபலனை உறுதியான மனதுடன் சகித்துக் கொண்டு இருத்தல்
ஸ்மரதா – சாஸ்திரத்திலிருந்து அடைந்த அறிவுடன் இந்த நிலையை அனுபவித்துக் கொண்டிருத்தல்
இப்படிபட்ட சாதுவின் உபதேசத்தைக் கூறப்போகிறேன்.

அவந்திஷு த்3விஜ: கஶ்சிதா3ஸீதா3ட்4யதம: ஶ்ரியா |
வார்தாவ்ருத்தி: கத3ர்யஸ்து காமீ லுப்3தோ4ऽதிகோபன: || 6 ||

அவந்தி என்கின்ற தேசத்தில் யாரோ ஒரு பிராமணன் இருந்தார். பெரும் செல்வந்தராக இருந்தார். இவர் வியாபாரம், விவசாயம்
செய்து கொண்டிருந்தார். அதேசமயம் அவர் தன்னைச் சார்ந்தவர்களான மனைவி, பிள்ளைகளை, நல்லவர்களை, வேலைக்காரர்களை,
விருந்தினரை துன்புறுத்திக் கொண்டிருந்தார். தேவதைகளையும் திட்டிக் கொண்டிருந்தார். மேலும் பேராசையுடையவராகவும்,
பொருளாசையுடையவராகவும், அதிக கோபக்காரனாகவும், விதவிதமான சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசைப்படுபவராகவும் வாழ்ந்து வந்தார்.

ஞாதயோ தித2யஸ்தஸ்ய வாங்மாத்ரேணாபி நார்சிதா: |
ஶூன்யாவஸத2 ஆத்மாபி காலே காமைரனர்சித: || 7 ||

இவர் உறவினர்களுக்கும், விருந்தினர்களுக்கும் எந்தவிதத்திலும் உதவியும் செய்யவில்லை, நன்மையும் செய்யவில்லை.
நல்ல வார்த்தைகளை கூறி உபசரிக்கவுமில்லை. இவன் வசிக்கும் இடம் சூன்யமாக இருந்தது. லட்சுமிகரமாக இல்லை,
களையாக இல்லை. தன்னுடைய மகிழ்ச்சிக்காக எதையும் கொடுக்கவில்லை, தானும் மகிழ்ந்திருக்கவில்லை.

து3ஹஶீலஸ்ய கத3ர்யஸ்ய த்3ருஹ்யந்தே புத்ரபா3ந்த4வா: |
தா3ரா து3ஹிதரோ ப்4ருத்யா விஷண்ணா நாசரன்ப்ரியம் || 8 ||

இவரது தீய குணத்தினால் எல்லோரையும் இம்சைப் படுத்திக் கொண்டிருந்தால் இவரது பிள்ளைகள், மனைவி, உறவினர்கள்
அவரிடம் வெறுப்பைத்தான் காட்டிக் கொண்டு இருந்தார்கள். அன்பை கொடுக்கவில்லை, வெறுத்தார்கள்.
மனைவியும் மகன்களும, வேலையாட்களும் இவனால் வேதனை அடைந்தவர்களாக இருப்பதால்
அவர்களும் இவனிடத்தில் அன்பாக நடந்து கொள்ளவில்லை.

தஸ்யைவம் யக்ஷவித்தஸ்ய ச்யுதஸ்யோப4யலோகத: |
த4ர்மகாமவிஹீனஸ்ய சுக்ருது4: பஞ்சபா4கி3ன: || 9 ||

அவன் தான் சேர்த்த பணத்தை பூதத்தைப்போன்று பாதுகாத்து கொண்டிருந்தான். அதில் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தான்.
இகலோகத்தில் அன்பையும், இன்பத்தையும், பரலோக இன்பத்தையும் இழந்தவனாக இருந்தான். தர்மமும், பற்றற்ற மனநிலையும்
இவனிடத்தில் இல்லாததால் இந்த நிலையை அடைந்திருந்தான். ஐந்து பேர்களுடைய அன்பையும், ஆசிர்வாதத்தையும், இழந்தவன்.
அவர்களுடைய வெறுப்பை மட்டும் பெற்றுக் கொண்டிருந்தான்.
ஐந்து பேர்கள் என்பது இறைவன், ரிஷிகள், பித்ருக்கள், மனிதர்கள், விலங்குகள்-பறவைகள் ஆகியவர்களாகும்
யக்ஷவித்தன் – கருமி

தத3வத்4யானவிஸ்ரஸ்த புண்யஸ்கந்த4ஸ்ய பூ4ரித3 |
அர்தே2ऽப்யகச்ச2ன்னித4னம் ப3ஹவாயாஸபரிஶ்ரம: || 10 ||

அதிக தானங்கள் செய்து கொண்டிருக்கின்ற உத்தவா! ஐந்து தேவதைகளையும் மதிக்காததால், அவர்களுக்கு செய்ய வேண்டிய
கர்மங்களை செய்யாததால், புண்ணியத்தை இழந்து விடுகிறான். இவனிடமிருந்த செல்வங்களும் கூட சென்று விட்டது.
மனைவி, மக்கள், உறவினர்களும் விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். ஆனால் கஷ்டங்கள் மட்டும் இருந்து கொண்டிருந்தது.

ஞாத்யோ ஜக்3ருஹு: கிஞ்சித்கிஞ்சித்3த3ஸ்யவ உத்தவ |
தை3வத: காலத: கிஞ்சித்3ப்3ரஹ்மப3ந்தோ4ர்ந்ருபார்தி2வாத் || 11 ||

உறவினர்களால் கொஞ்சம் கொஞ்சமாக செல்வமும் களவாடப்பட்டுவிட்டது. திருடர்களால் கொஞ்சம் திருடப்பட்டுவிட்டது.
இயற்கையாக கொஞ்சம் அழிந்துவிட்டது. காலத்தை சரியாக பயன்படுததாத காரணத்தால் சிறிது அழிந்துவிட்டது.
மீதியுள்ள செல்வங்களை அரசாங்கத்தாலும், மற்றவர்களாலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஸ ஏவம் த்3ரவிணே நஷ்டே த4ர்மகாமவிவர்ஜித: |
உபேக்ஷிதஶ்ச ஸ்வஜனைஶ்சிந்தாமாப து3ரத்யயாம் || 12 ||

அவனிடமிருந்து இவ்வாறெல்லாம் செல்வம் கரைந்தவுடன் இன்பமும், தர்மமும் அவனை விட்டு சென்று விட்டன.
சுற்றியிருக்கின்ற உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இவனை விட்டு விலகிவிட்டார்கள்.
இந்த நிலையில் தாங்கமுடியாத வேதனையில் ஆழ்ந்துவிட்டான்.

தஸ்யைவம் த்4யாயதோ தீர்க4ம் நஷ்டராயஸ்தபஸ்வின: |
கி2த்3யதோ பா3ஷ்பகண்ட2ஸ்ய நிர்வேத3: ஸுமஹானபூ4த் || 13 ||

இவ்வாறு அதிக காலம் வேதனைபட்டு கொண்டிருந்த இவனுக்கு அதைப்பற்றியே சிந்தனையிலே இருந்து கொண்டிருந்தான்.
அனைத்து செல்வத்தையும் இழந்தவனாக இவன் தீராத துன்பத்தில் இருந்து கொண்டு சிந்திக்கலானான்.
ஆழ்மனதில் வேதனைப்பட்டூக் கொண்டு கண்ணீர் விட்டுகொண்டிருந்தான். குரல் ததும்ப ஆரம்பித்தது.
பிறகு இவனுக்கு மிக உயர்ந்த விரக்தி ஏற்பட்டுவிட்டது.

ஸ சாஹேத3மஹோ கஷ்டம் ப்ருதா2த்மா மேऽனுதாபித: |
ந த4ர்மாய ந காமாய யஸ்யார்தா2யாஸ ஈத்3ருஶ: || 14 ||

அவன் இவ்விதம் தனக்குள் பேசிக் கொண்டான். அய்யோ! என்னுடைய ஆத்மா, உடல், மனம் எந்தவித பயனில்லாமல்
வேதனைப்படுத்தப்பட்டது தர்மமும் செய்யவில்லை. எந்தவிட இன்பத்தையும் அனுபவிக்கவில்லை.
இப்படிப்பட்ட நிலையிலுள்ள நான் செல்வத்தை கஷ்டப்பட்டு சேர்த்து எதற்கும் பயனில்லாமல் கஷ்டங்களைத்தான் அனுபவித்தேன்.

ப்ராயேணாதா2: கத3ர்யாணாம் ந ஸுகா2ய கதா3சன |
இஹ சாத்மோபதாபாய ம்ருதஸ்ய நரகாய ச || 15 ||

பொதுவாக கருமிகளில் கையில் இருக்கின்ற செல்வம் அவர்களின் சுகத்திற்காகவும், இன்பத்திற்காகவும், பயன்படாது.
மற்றவர்களுக்கும் பயன்படாது. இந்த லோகத்தில் இருக்கும்போது இந்த உடல் செல்வத்தின் வசத்தில் இருப்பதனால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும்.
இறந்தபிறகு நரகத்திற்குத்தான் செல்ல நேரிடும். இவ்வுலகத்தில் அந்த செல்வம் துயரத்தைத்தான் கொடுத்து கொண்டிருக்கும்.

யஶோ யஶஸ்வினாம் ஶுத்3த4ம் ஶ்லாக்4யா யே கு3ணினாம் கு3ணா: |
லோப4: ஸ்வல்போऽபி தான்ஹந்தி ஶ்வித்ரோ ரூபமிவேப்ஸிதம் || 16 ||

ஶுத்தம் யஶஹ – நேர்மையோடு அடைந்த புகழானது
ஶ்லாக்யா குணாஹா – நற்குணங்கள்
ஒருவனுக்கு தகுதியுடைய புகழிருந்தால் அதை லோபம் (பகிர்ந்து கொடுக்காத குணம் ) நாசம் செய்து விடும்.
நம்மிடத்தே உள்ள லோபமானது சிறிது வந்தாலும் கூட புகழையும், நற்பண்புகளையும் அழித்து விடும்.
தோலுக்கு வரும் நோயானது ஒருவனுடைய உடலழகை அழித்து விடுகின்றது போல இந்த லோபம்
பணத்தின் மீது உள்ள ஆசை புகழையும், நற்குணத்தையும் அழித்துவிடும்.

அர்த2ஸ்ய ஸாத4னே ஸித்3தே4 உத்கர்ஷ ரக்ஷேணே வ்யயே |
நாஶோப்போ4க3 ஆயாஸஸ்த்ராஸ்ஶ்சிந்தா ப்4ரமோ ந்ருணாம் || 17 ||

பணத்தை சம்பாதித்துக் கொண்டிருக்க வேண்டும். பணம் வந்தடைந்தாலும் மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும்.
சரியாக செலவு செய்தால் அழிந்து போகும், சுகத்தை அனுபவித்தலுக்கு பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு பணத்தை அடைவதற்கு நன்றாக உழைக்க வேண்டும். இதனால் காலமும், உடல் நலமும் செலவழிந்து விடும்.
மேலும் தன்னை விட்டு போய்விடக்கூடாது என்ற பயமும் வந்து விடும். பணத்தையே நினைத்துக் கொண்டிருந்தால்
அதனை பெருக்க வேண்டும் என்றும், பாதுகாக்க வேண்டும் என்றும் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருப்பான்.
எப்படி செலவு செய்ய வேண்டும் என்று சிந்திக்க வைக்கும். இந்த பணம் ஒருவனுடைய புத்தியை செயல்பட விடாமல்
மதிமயக்கத்தை கொடுத்து விடும். இவ்வாறெல்லாம் பணவிஷயத்தில் நிகழ்கின்றன.

ஸ்தேயம் ஹிம்ஸாந்ருதம் த3ம்ப4: காம: க்ரோத4: ஸ்மயோ மத3: |
பே4தோ3 வைரமவிஶ்வாஸ: ஸம்ஸ்பர்தா4 வ்யஸனானி ச || 18 ||

ஏதே பஞ்சத3ஶானர்தா2 ஹ்யர்த2மூலா மதா ந்ருணாம் |
தஸ்மாத3னர்த2மர்தா2க்2யம் ஶ்ரேயோऽர்தீ2 தூ3ரதஸ்த்யஜேத் || 19 ||

பணம் என்னென்ன காரியங்கள் செய்யும் என்பது கூறப்படுகிறது. இது பதினைந்து வகையான அசுர குணங்களை
கொண்டு வந்து சேர்த்துவிடும்.
அவைகளில் ஆறு குணங்கள் பணத்தை அடைய வேண்டும் என்ற முயற்சிக்கும் போது வந்தடைவது.
அடுத்த ஒன்பது குணங்கள் பணத்தை அடைந்த பிறகு அடையும் குணங்கள்.
பணம் சம்பாதிக்கும் முயற்சியில் உள்ளவர்களிடையே இருக்கும் அசுர குணங்கள்
1. ஸ்தேயம் – திருடுதல், பிறருடைய பணத்தை, உழைப்பை, காலத்தை அபகரித்தல்
2. ஹிம்சை – மற்றவர்களை துன்புறுத்தல்
3. அநிருதம் – பொய்கூறுதல், ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம் செய்தல்
4. தம்பஹ – பணத்துக்காக நடித்தல், இல்லாததை இருப்பதாக காட்டுதல், இருப்பதை பெரிதுபடுத்திக் கூறுதல்
5. காமஹ – ஆசை
6. க்ரோதம் – கோபம்
பணம் வந்தபிறகு வந்து சேர்கின்ற குணங்கள்
1. ஸ்மயஹ – உயர்வு மனப்பான்மை, மனதுக்குள் தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வத்துடன் இருத்தல்
2. மதஹ – மற்றவர்களை சொல்லாலும், செயலாலும் அவமதித்தல்
3. பேதஹ – யாருடனும் ஒத்துப்போகாமல் இருத்தல், தான் நினைப்பதுதான் சரி என்ற ஆணவம், யாருடைய ஆலோசனையையும் கேட்காத குணம்
4. வைரம் – பகைமையை வளர்த்துவிடும்
5. அவிஶ்வாஸம் – நம்பிக்கையின்மையை வளர்த்துவிடும். யார் மீதும் நம்பிக்கை வைக்காத குணம்
6. ஸம்ஸ்பர்தா – போட்டி, பந்தயம்
7. மதுவுக்கு அடிமையாகி விடுதல்
8. மாதுவுக்கு அடிமையாகி விடுதல்
9. சூதுவுக்கு அடிமையாகி விடுதல்
மேற்கண்ட பதினைந்து தீய குணங்கள் பணத்தையே மூலமாக கொண்டுள்ளது. பணம் என்கின்ற ஒன்று தீமையைத்தான் கொடுக்கிறது.
தனக்கு மேலான நன்மை வர வேண்டும் என்று விரும்புபவன் பணத்தை அடைய வேண்டும் ஆசையிலிருந்து வெகு தூரம் விலகி நிற்க வேண்டும்.
இது உடலாரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டையும் கெடுத்துவிடும் தன்மையுடையது

பி4த்3யந்தே ப்4ராதரோ தா3ரா: பிதர: ஸுஹ்ருத3ஸ்ததா2 |
ஏகாஸ்னிக்3தா4: காகிணினா ஸத்3ய: ஸர்வேऽரய: க்ருதா: || 20 ||

பித்யந்தே – உடைந்துவிடும்
சகோதர, சகோதரிகள், மனைவி, பங்காளிகள், உறவினர்கள், நண்பர்கள் போன்ற உறவுகளிடத்தில் உள்ள அன்பை கெடுத்துவிடும்.
யாரோ ஒருவரிடத்தில் நல்ல நட்பு இருந்திருந்தாலும் அதுவும் செல்வம் கெடுத்துவிடும். சிறிதளவு பணமே இவ்வளவையும் செய்து விடும்.
விரைவிலேயே முன்சொல்லிய அனைவரும் பகைவர்களாகி விடுவார்கள்

அர்தே2னால்பீயஸா ஹயேதே ஸ்ம்ரப்3தா4 தீப்தமன்யவ: |
த்யஜந்த்யாஶு ஸ்ப்ருதோ4 க்3னந்தி ஸஹஸோத்ஸ்ருஜ்ய ஸௌஹ்ருதம் || 21 ||

அதிகமான செல்வம் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். நாமே பகைவர்களை உருவாக்கிக் கொள்வோம்.
சிறிதளவு பணமே சிலருக்கு நம் மீது கோபத்தை ஏற்படுத்திவிடும். எனென்றால் பணத்தினால் அவர்களுடைய மனதை புண்படுத்தி
விடுவதால் இவ்வாறு நேரிடும். அவர்களும் உடனே நம்முடைய அன்பை விட்டுவிட்டு பகைவர்களாக மாறி கொலை செய்யவும் துணிந்துவிடுவார்கள்.

லப்3த்4வா ஜன்மாமரப்ரார்த்2யம் மானுஷ்யம் தத்3த்3விஜாக்3ர்யதாம் |
தத3னாத்3த3த்ய யே ஸ்வார்த2ம் க்4னந்தி யாந்த்யஶுபா4ம் க3திம் || 22 ||

சரீரத்தின் மேன்மை புகழப்படுகிறது.
அமர ப்ரார்தயம் – தேவர்களாலும் அடைய வேண்டும் என்று விரும்பப்படுகின்ற
ஜன்ம மானுஷ்யம் லப்த்வா – மனித உடலை அடைந்து
தத் த்விஜாக்ர்யதாம் – ஒரு பிராமண குலத்தில் பிறந்தும்
ஸ்வார்தம் தத் அனாத்3த3த்ய – மனித சரீரத்தினால் மட்டும் அடையக்கூடிய லட்சியத்தை அடையும் முயற்சி செய்யாமல்
யே ஸ்வார்தம் க்னந்தி – அந்த லட்சியத்தை கொலை செய்துவிட்டு,
யாந்த்யஸுபாம் கதிம் – இகலோகத்திலும், பரலோகத்திலும் துயரமான நிலையையே அடைகிறார்கள்

ஸ்வர்கா3பவர்க3யோத்3வாரம் ப்ராப்ய லோகமிமம் புமான் |
த்ரவிணே கோ னுஷஜ்ஜேத மர்த்யோऽனர்த2ஸ்ய தா4மனி || 23 ||

ஸ்வர்காபர்கய்த்வாரம் – தர்மத்தை பின்பற்றி வாழ்வதால் கிடைக்கும் புண்ணியத்தால் சொர்க்கத்திற்கும், மோட்சத்திற்கும் வாயிலாக இருக்கின்ற
இமம் லோக ப்ராப்ய – இந்த உலகத்தில் மனிதப்பிறவி அடைந்து, கர்மயோகப்படி வாழ்ந்து மோட்சத்தை அடைவதற்கு தகுதிஅடைகின்றனர்
அனர்த்தஸ்ய தாமனி – அழிவுக்கு இருப்பிடமாக இருக்கின்ற
த்ரவனே- பொருட்களுக்காக, பணத்துக்காக
நஹ அனுஷஜ்ஜேத – எந்தவொரு அறிவுடையவன் பணத்துக்காக சொர்க்கத்தையோ, மோட்சத்தையோ அடையும் வாய்ப்பை இழப்பான்

தே3வர்ஷிபித்ருபூ4தானி ஞாதீன்பந்தூ4ம்ஶ்ச பா4கி3ன: |
அஸம்விப4ஜ்ய சாத்மானம் யக்ஷவித்த: பதத்யத4: || 24 ||

எந்தவொரு மனிதனும் பஞ்சமகா யக்ஞத்துடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். அவைகள்
1. ஈஸ்வர வழிபாடு,
2. ரிஷிவழிபாடு – ரிஷிகளின் நூல்களை படித்தல், அதன்படி வாழ்தல்,
3. பித்ரு யக்ஞம் – நம்முடைய முன்னோர்களை வழிபடுதல்,
4. பூதானி – மற்ற உயிரினங்களை போற்றுதல்,
5. மனுஷ்ய யக்ஞம் – மனிதர்களை போற்றுதல்
இந்த ஐந்து பேர்களுக்கும் நாம் ஒவ்வொருவரும் கடன்பட்டிருக்கின்றோம். தனக்கு செய்ய வேண்டியவைகளை செய்து கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாமல், கொடுக்க வேண்டியதை கொடுக்காமல், பணத்தை சம்பாதித்துக் காப்பாற்றிக் கொண்டு
வருபவன் கீழே விழுகின்றான், தாழ்ந்த நிலைக்கு சென்று விடுவான்.

வ்யர்த2யார்தே2ஹயா வித்தம் ப்ரமத்தஸ்ய வயோ ப3லம் |
குஶலா யேன ஸித்4யந்தி ஜரட2: கிம் நு ஸாத4யே || 25 ||

சில அறிவுடையவர்கள் மூன்றுவிதமான ஐஸ்வர்யங்களான செல்வம், வயது, சக்தி வைத்து பயன்படுத்தி நல்ல நிலையுடன் இருக்கின்றார்கள்.
என்னைப்போன்ற சிலர் இவைகளை இழந்து எதை சம்பாதிக்க முடியும். பணத்தின் மீதுள்ள ஆசையானது எனக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை.
இப்படிபட்ட பைத்தியக்காரனான நான் இந்த மூன்றையும் இழந்து விட்டேன். அளவுக்கு மீறி எதன் மீதும் பற்று வைக்கக்கூடாது.
அப்படி வைத்தால் அது நம்மை விட்டு சென்றுவிடும். அறிவுடையவர்கள் இந்த மூன்றின் துணைக் கொண்டு,
மூன்றுவிதமான ஐஸ்வர்யங்களை பயன்படுத்தி சாதிக்கின்றார்கள், நல்ல நிலையை அடைகிறார்கள்.
வயோதிகனான எனக்கு இந்த மூன்று நிலைகளும் இப்போது கிடையாது. என்னால் எதை அடைய முடியும்?

கஸ்மாத்ஸங்க்லிஶ்யதே வித்3வான்வ்யர்த2யார்தே2ஹயாஸக்ருத் |
கஸ்யசின்மாயயா நூனம் லோகோऽயம் ஸுவிமோஹித: || 26 ||

செல்வத்தால் சுகம் வருவதில்லை. ஒருவனுடைய இன்ப-துன்பத்திற்கு பணம் காரணமில்லை. இது மனநிறைவுக்கும் காரணமில்லை.
இதை மற்றவர்களிடம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அனைவரும் பணத்தை அடைய வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த மோகத்துக் காரணம் பகவானுடைய மாயைதான். யாரை சரணடைந்தால் இந்த மோகத்திலிருந்து விடுபட முடியுமோ
அவரை சரணடையாமல் செல்வத்தினால் பாதுகாப்பையும், சுகத்தையும் அடையலாம் என்று எண்ணிக் கொண்டு அதை அடைய பேராசைப்படுகிறார்கள்.
படித்தவர்கள் கூட பணத்தின் மீது பற்று வைத்து அதை அடைவதற்கு மிகவும் கஷ்டத்துடன் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
பணத்தின் மீதுள்ள பேராசையினால் எந்த பலனையும் கிடைக்காது என்று தெரிந்திருந்தும் அதையே மீண்டும் மீண்டும் நாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கண்டிப்பாக (நூனம்) யாரோ ஒருவனுடைய மாயையினால் இந்த உலகம் மோகத்துள்ளாக்கப்பட்டிருக்கிறது.

கிம் த4னைர்த4தனதை3ர்வா கிம் காமைர்வா காமதைருத |
ம்ருத்யுனா க்3ரஸ்யமானஸ்ய கர்மபி4ர்வோத ஜன்மதை: || 27 ||

கிம் த4னைஹி – பணத்தினால் என்ன பலன்? அது வந்தாலும், வராவிட்டாலும் எனக்கென்ன?
தனைஹி வா கிம் – பணத்தைக் கொடுப்பவனாக இருந்தாலும் என்ன பயன்?
காமை வா காமதைஹி வா – இன்பத்தைக் கொடுக்கும் பொருளினால் என்ன பயன்?
இன்பத்தைக் கொடுக்கும் மனிதர்களால் என்ன பயன்?
ம்ருத்யுனா க்ரஸ்யமானஸ்ய – இவைகளனைத்தும் மரணத்தின் பிடியில் இருக்கின்றது.
கர்மபிஹி உத ஜன்மதைஹி- நாம் செய்யும் தர்ம செயல்களனைத்தும் புண்ணியத்தைக் கொடுக்கும்,
அதனால் என்ன பயன்? பிறப்பு, இறப்பு காரணமாக இருக்கின்ற புண்ணிய கர்மங்களால் பயனொன்றுமில்லை.

நூனம் மே ப4க3வாம்ஸ்துஷ்ட: ஸர்வதே3வமயோ ஹரி: |
யேன நீதோ த3ஶாமேதாம் நிர்வேத3ஶ்சாத்மன: ப்லவ: || 28 ||

நூனம் மே பக்வாம் துஷ்டஹ – நிச்சயமாக பகவான் என்னிடம் மகிழ்ந்திருக்கிறார்
ஸர்வ தேவமயோ ஹரி: – எல்லா தேவதைகளாகவும் இருக்கின்ற ஸ்ரீஹரி பகவான்
யேன நீதய தஶாமேதாம் – என்மீது வைத்தன் அன்பினால்தான் நான் இந்த நிலைக்கு வந்திருக்கின்றேன்
நிர்வேதஶ்சாத்மனஹ ப்லவஹ – உலகிலுள்ள இன்பத்தைக் கொடுக்கின்ற பொருட்களின் மீதுள்ள வைராக்கியம்தான்
ஜீவனுக்கு சம்சாரக் கடலை கடக்க உதவும் படகாகும்.

ஸோऽஹம் காலாவஶேஷேண ஶோஷயிஷ்யேऽங்க3மாத்மன: |
அப்ரமத்தோऽகி2லஸ்வார்தே2 யதி3 ஸ்யாத்ஸித்3த4 ஆத்மனி || 29 ||

ஸஹ அஹம் – இந்த நிலையை அடைந்த நான்
கால அவஶேஷேண – மீதியிருக்கின்ற காலத்தில்
யத் ஸ்யாத் – எனக்கு வாழும் காலமிருந்தால்
ஆத்மனி ஸித்த – யாரையும் குறைகூறாமல் என்னிடத்திலே மகிழ்ச்சியுடன் இருப்பேன்
ஆத்மன அங்கம் – என்னுடைய மனதையும், உடலையும்
ஸோஷயிஷ்யே – தவத்தில் ஈடுபடுத்திக் கொள்வேன்
அப்ரமத்தஹ அகில ஸ்வார்த – இனிமேல் மிகவும் கவனமாக இருந்து கொண்டு
ஸித்த ஆத்மனி – என்னுடைய முக்கியமான புருஷார்த்தமான லட்சியத்தில் இருப்பேன்.

தத்ர மாமனுமோதே3ரந்த்3தேவாஸ்த்ரிபு4வனேஶ்வரா: |
முஹூர்தேன ப்3ரஹ்மலோகம் க2ட்வாங்க3: ஸமஸாத்4யத் || 30 ||

த்ரிபுவனேஶ்வரா தேவா – மூன்று உலகத்திலும் இருக்கும் ஈஸ்வரனும், எல்லா தேவதைகளும்
தத்ர மாமனுமோதே3ரன் – இந்த நிலையிலுள்ள இந்த நேரத்தில் எனக்கு வழிகாட்டுவார்கள், உதவுவார்கள், அனுக்கிரஹம் செய்வார்கள்.
கத்வாங்கஹ – கட்வாங்கன் என்ற அரசன்
முஹுர்தேன ப்ரஹ்மலோகம் – குறுகிய காலத்தில் பிரம்மலோகத்தை
ஸமஸாத்யத் – அடைந்து அங்கிருந்து கிரம முக்தி அடைந்தார்.
ஒரு முகூர்த்த காலத்திலே கட்வாங்க ராஜா மோட்சத்தை அடைந்ததைப் போன்று எனக்கிருக்கும் மீதியுள்ள காலத்தில் நானும்
முயற்சி செய்து மோட்சத்தை அடைவேன் என்று தன்னம்பிக்கை கொண்டுள்ளார் என்று இதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

ஶ்ரீபகவான் உவாச
இத்யபி4ப்ரேத்ய மனஸா ஹ்யாவந்த்யோ த்3விஜஸத்தம: |
உன்முச்ய ஹ்ருத3யக்3ரந்தீ2ன்ஶாந்தோ பி4க்ஷுரபூ4ன்முனி: || 31 ||

ஸ்ரீபகவான் கூறுகிறார்.
இதி அபிப்ரேத்ய மனஸா – இவ்விதம் மனதில் சிந்தனையை மேற்கொண்ட
அவந்த்ய த்விதஸத்தம– அவந்தி தேசத்தை சேர்ந்த உத்தமனான இந்த பிராமணன்
உன்முச்ய ஹ்ருத்யக்ரந்தீ – இதயத்திலுள்ள முடிச்சுக்களான ராக-துவேஷங்களை முழுவதும் நீங்கப்பெற்று, அகங்காரம், மமகாரம்
இவைகளெல்லாம் நீங்கப்பெற்று, சம்சாரத்தை கொடுக்கின்ற எண்ணங்கள் யாவையும் நீக்கிவிட்டு
ஶாந்தஹ – மனவமைதியை, மனநிறைவை அடைந்தவனாக
பிக்ஷுஹு அபூ4த் முனிஹி – சந்நியாஸ வாழ்க்கை முறையை ஏற்றுக் கொண்டான்.

ஸ சசார மஹீமேதாம் ஸம்யதாத்மேந்த்ரியானில: |
பி4க்ஷார்த2ம் நக3ரக்3ராமானஸங்கோऽலக்ஷிதோऽவிஶத் || 32 ||

சந்நியாஸம் இருவகையாக இருக்கிறது. ஆத்மஞானத்தை அடைந்தபிறகு எடுத்துக் கொள்கின்ற சந்நியாஸம்,
ஆத்மஞானத்தை அடைவதற்கு எடுத்துக் கொள்கின்ற சந்நியாஸம்.

ஸஹ சார மஹீம் ஏதாம் – இந்த உலகத்தில் அந்த சந்நியாஸி சஞ்சரித்துக் கொண்டு இருந்தார்.
ஸம்யத் ஆத்ம் இந்திரிய அனில – உடலையும், புலன்களையும், பிராணன்களையும் (உணவு கட்டுப்பாடு), தன்னுடைய
கட்டுக்குள் வைத்துக் கொண்டு வாழ்ந்திருந்தான்
பிக்ஷார்தம் நகர கிராமன் – நகரத்துக்கும், கிராமத்துக்கும் உணவுக்காகத்தான் சென்றான்
அஸங்கஹ – எதனோடும், யாரோடும் பற்றில்லாமல் இருந்து கொண்டு
அலக்ஷிதஹ – யாரையும் கண்டுகொள்ளாமல் அலட்சியத்துடனும், யாருக்கும், எதற்கும் முக்கியத்துவம் கொடுக்காத நிலையில்
இருந்து கொண்டு, தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாமல் இருந்து கொண்டு
அவிஶதஹ – மக்களிடைய சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.

தம் வை ப்ரவயஸம் பி4க்ஷுமவதூ4தமஸஜ்ஜனா: |
த்3ருஷ்ட்வா பர்யப4வன்ப4த்3ர ப3ஹுவீபி4: பரிபூ4திபி4: || 33 ||

நம்மை பலர் அவமதிப்பதற்கு காரணம் நாம் ஏதாவது ஒரு தவறு செய்து இருக்கின்றோமா என்று சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
நம்முடைய தவறாக இருந்தால் அதை திருத்திக் கொள்ளவேண்டுமே தவிர அவர் மீது கோபமோ, எரிச்சலோ கொள்ளக் கூடாது.
அதுவே நம்முடைய தவறல்ல என்று இருந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று இதில் கூறப்பட்டிருக்கிறது.
பர்யபவன்பத்ர – உத்தவா!
அஸத் ஜனாஹா – தீய மனிதர்கள், பண்பாடற்ற மக்கள், சந்நியாஸியின் பெருமையை அறியாதவர்கள்
தம் வை ப்ரவயஸம் பிக்ஷு அவதூதம் – அந்த வயதான சாதுவான, சந்நியாஸியை
த்ருஷ்ட்வா – பார்த்து
பஹுவீபி: பர்பூதிபி: – அவரை பலவிதமாக அவமதித்தனர், பரிகாசம் செய்தனர்.

கேசித் த்ரிவேணும் ஜக்3ருஹுரேகே பாத்ரம் கமண்டலும் |
பீட2ம் சைகே க்ஷஸூத்ரம் ச கந்தா2ம் சீராணி கேசன || 34 ||

சிலர் அவர் கையிலுள்ள தடியை பிடுங்கிக் கொண்டார்கள். அவரிடம் உள்ள பிக்ஷை பாத்திரத்தையும், கமண்டலத்தையும்,
உட்காருவதற்கு வைத்திருந்த இருக்கையையும், ஜபமாலையையும் பிடுங்கிக் கொண்டார்கள்.
அவரது கிழிந்த உடையை இழுத்து பிடித்து விளையாடினார்கள்

ப்ராதா3ய ச புனஸ்தானி த3ர்ஶிதான்யாத3 துர்முனே: |
அன்னம் ச பை4க்ஷ்யஸம்பன்னம் பு4ஞ்ஜானஸ்ய ஸரீத்தடே || 35 ||

மூத்ரயந்தி ச பாபிஷ்டா: ஷ்டீவந்த்யஸ்ய ச மூர்த4னி |
யத்வாசம் வாசயந்தி தாட்3யந்தி ந வக்தி சேத் ||| 36 ||

அவரிடமிருந்து பிடுங்கியவற்றையெல்லாம் மீண்டும் கொடுத்து விடுவது போல கொடுத்து மீண்டும் பிடுங்கிக் கொள்வார்கள்.
ஆற்றங்கரையோரத்தில் அமர்ந்து கொண்டு பிட்சையெடுத்த உணவை சாப்பிடும் போது தொந்தரவு கொடுப்பார்கள்.
அவர்மீது எச்சிலை துப்புவார்கள். அவர் தூய்மைப்படுத்தி வைத்திருந்தை இடத்தில் மூத்திரத்தை பெய்து அசுத்தப்படுத்துவார்கள்.
இவ்வளவையும் சகித்துக் கொண்டு அமைதியாக இருந்தார். இவரை எவ்வாறேனும் பேச வைக்கவேண்டுமென்று மேலும்
மேலும் துன்பத்தைக் கொடுத்தார்கள். பேசாமல் இருந்தால் ஏதாவது ஒரு பொருளை எடுத்து அவர்மீது எறிந்து துன்பத்தைக் கொடுத்தார்கள்

தர்ஜயந்த்யபரே வாக்3பி4: ஸ்தேனோऽயமிதி வாதி3ன: |
ப3த்4னந்தி ரஜ்ஜ்வா தம் கேசித்3ப3த்4யதாம் ப3த்4யதாமிதி || 37 ||

கடும் வார்த்தைகளால் அவரை திட்டினார்கள், விமர்சித்தார்கள், மிரட்டினார்கள். அவரைத் திருடன் என்று பழி சுமத்தினார்கள்.
கயிற்றால் கட்டிவைத்தார்கள். சிலர் இவன் திருடன் கயிற்றால் கட்டிப்போடுங்கள் என்று கூச்சலிட்டனர்.

க்ஷிபந்த்யேகேऽவஜானந்த ஏஷ த4ர்மத்4வஜ: ஶட: |
க்ஷீணாவித்த இமாம் வ்ருத்திமக்3ரஹீத்ஸ்வ ஜனோஜ்38 ||ஜி2த: || 38 ||

கடினமான சொற்களால் அவரை அவமதித்தனர். இவன் தர்மத்தை பின்பற்றுகிறேன் என்று கூறிக்கொண்டு எல்லோரையும்
ஏமாற்றுகிறான் என்றும் விமர்சித்தார்கள். இவன் பணத்தை இழந்துவிட்டதால்தான் இந்த சந்நியாஸ வாழ்க்கையை எடுத்துக் கொண்டான்.
இவனுடைய உறவினர்களும் இவனை விரட்டி அடித்துவிட்டார்கள்

அஹோ ஏஷ மஹாஸாரோ த்4ருதிமாங்கிரிராடி3வ |
மௌனேன ஸாத4யத்யர்த2ம் ப3கவத்3த்3ருட4நிஶ்சய: || 39 ||

இவன் மிகவும் சக்தி வாய்ந்தவன், உயர்ந்த மலையைப் போல மனவுறுதியுடையவன் இவன் பேசாமல் இருந்து கொண்டு
அனைத்தையும் சாதித்துக் கொள்கிறான். கொக்கைப் போல பொறுமையாக இருந்து லட்சியத்தை அடைந்து சாதிக்கிறான்.
சிலபேர் கோபத்திலும் அமைதியாக இருப்பார்கள், ஆனால் உள்ளுக்குள் மன உளைச்சலுடனும், ஆத்திரத்துடனும்,
பழிவாங்கும் சமயத்தை எதிர்பார்த்து கொண்டு இருப்பார்கள். சிலர் உண்மையிலே மன அமைதியுடம் மௌனமாக இருப்பார்கள்.

இத்யேகே விஹஸந்த்யேனமேகே து3ர்வாதயந்தி ச |
தம் ப3ப3ந்து4ர்னிருருது4ர்யதா2 க்ரீட3னகம் த்3விஜம் || 40 ||

இவ்விதம் சிலர் இவரைப்பார்த்து பரிகாசம் செய்தார்கள். கடும் சொற்களால் அவமரியாதை செய்தார்கள்.
இந்த சாதுவை பறவையை கட்டும் வலையால் கட்டிப் போட்டும் விளையாடினார்கள்.

ஏவம் ஸ பௌ4திகம் து3:க2ம் தை3விகம் தை3ஹிகம் ச யத் |
போ4க்தவ்யமாத்மனோ தி3ஷ்டம் ப்ராப்தம் ப்ராப்தமபு3த்4யத || 41 ||

இந்த உலகம் கொடுக்கும் அனுபவத்தை எப்படி எடுத்துக் கொண்டால் அதன் பாதிப்பிலிருந்து விடுபடமுடியும் என்று இதில் கூறியிருக்கிறார்.
உலகமானது அனுபவங்களை ஒரே மாதிரியாகத்தான் எல்லோருக்கும் கொடுத்து கொண்டிருக்கும்.
ஆனால் அதை எவ்வாறு ஒருவனால் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பதை வைத்து அவனைப் பற்றி அறியலாம்.
ஏவம் ஸஹ – இவ்விதமாக அவர்
பௌதிக துக்கம் – விலங்குகளாலும், மனிதர்களாலும் அனுபவிக்கப்படுகின்ற துயரங்கள்
தைவிக துக்கம் – இயற்கையிலிருந்து வருகின்ற துயரங்கள்
தைஹிகம் துக்கம் – நம்முடைய உடலிலிருந்து வருகின்ற துயரங்கள்
போக்தவ்யமாதமனஹ திஷ்டம் – இவைகள் என்னுடைய கர்மபலனாக வந்துள்ளது. ஆகவே இந்த துயரங்களை
அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்று ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை அடைந்து
ப்ராப்தம் ப்ராப்தம் அபுத்யத – இந்த மாதிரியான துக்கங்களை எப்பொழுது வந்தாலும் அவைகளை ஏற்றுக் கொண்டார்.

பரிபூ4த இமாம் கா3தா2மகா3யத நராத4ர்மை: |
பாதயத்3பி4: ஸ்வ த4ர்மஸ்தோ2 த்4ரிதிமாஸ்தாய ஸாத்த்விகீம் || 42 ||

தீய மனிதர்களால், சந்நியாஸ தர்மத்தில் நிலையாக இருப்பவருக்கு துன்பத்தைக் கொடுத்து அதிலிருந்து விலகிவிட செய்ய வேண்டும்
என்று விரும்புவர்களால் அடைகின்ற துன்பங்களை சாத்விகமான மனதுடனும், உறுதியாக இருந்து கொண்டும்,
பழிவாங்கும் எண்ணமேயில்லாமல், எரிச்சலும் அடையாமல் அமைதியான மனதுடன் இருந்து கொன்டு
இனிவரப் போகின்ற கருத்துக்களை உபதேசக்க ஆரம்பித்தார்

பிக்ஷு கீதா துவக்கம் ( 43-58)
த்3வீஜ உவாச
நாயம் ஜனோ மே ஸுக2து3:க2ஹேதுர்ன தே3வதாத்மா க்3ரஹகர்மகாலா: |
மன: பரம் காரணமாமனந்தி ஸம்ஸாரசக்ரம் பரிவர்தயேத்3யத் || 43 ||

நம்மிடமிருக்கும் பணம்தான் நம்முடைய சுக-துக்கங்களுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
மனதில் இருக்கும் சில தோஷங்கள்தான் இவைகளுக்குக் காரணம். அவைகள்
1. மனதின் பலவீனமானது அது எப்போதும் நம்மிடத்தில் இருப்பதில்லை, வெளிவிஷயங்களையேத்தான் நாடிக் கொண்டிருக்கும்.
2. மனதிற்கு எதையாவது அபிமானித்தல் என்கின்ற ஒரு குணம் உண்டு. அதுதான் சரீரத்தை நான் என்று நினைக்க வைக்கின்றது.
நான், என்னுடையது என்ற அபிமானத்துடன் இருக்கின்றது. அகங்காரம், மமகாரம் என்ற தன்மையுடையதாக இருக்கிறது
நாயம் ஜனோ மே சுக-துக்க ஹேது – நாம் அனுபவிக்கின்ற சுக-துக்கங்களுக்கு காரணம் மற்ற மனிதர்கள் அல்ல.
அவைகளுக்கு காரணம் இப்பொழுது என்னைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் இந்த மனிதர்களால் அல்ல
ந தேவதா – எந்த தேவதைகளும் காரணம் அல்ல
ந ஆத்மா – என்னுடைய ஆத்மாவும் காரணம் அல்ல
ந க்ரஹகர்மகாலா: – கிரகங்களோ, கர்மவினைகளோ, காலமோ காரணம் அல்ல
மனபரம் காரணம் ஆமணந்தி – மனம்தான் முக்கிய காரணம் என்று வேதங்கள் கூறுகின்றது.
ஸம்ஸாரசக்ரம் பர்வர்தயேத்யத் – சம்சார சக்கரத்தை சுழலவைக்கின்ற மனம்தான் எல்லா இன்ப-துன்பங்களுக்கும் காரணமாகும்.

மனோ கு4ணான்வை ஸ்ருஜதே ப4லீயஸ்த்தஶ்ச
கர்மாணி விலக்ஷணானி |
ஶுக்லானி க்ருஷ்ணான்யத2 லோஹிதானி தேப்4ய:
ஸவர்ணா: ஸ்ருதயோ ப4வந்தி || 44 ||

மனம் எப்படி சம்சாரத்திற்கு காரணம் என்று இதில் புரிய வைக்கப்படுகிறது. நம்முடைய மனதில் ஓடும் எண்ண ஓட்டங்கள்
எந்த விதத்தில் இருக்கும். எப்படி முடிவு செய்கின்றது என்பதையும் சொல்லப்படுகிறது.
வெளிசூழ்நிலைகள், சம்பவங்கள், நம்முடைய செயல், அணுகுமுறை, இது மூன்றுவித குணங்களின் அடிப்படையில் இருப்பது.
மேலும் புருஷார்த்தமான அந்த நிலையில் நாம் எடுக்கும் முடிவுகள் இவை மூன்றும் சேர்ந்து ஒருவித எண்ணவோட்டத்தை ஏற்படுத்துகிறது.
வாசனையுடன் கூடிய பலமான மனமானது, சாத்விக, ராஜஸம், தாமஸம் என்ற குணங்களில் ஏதொவொன்றை சார்ந்து
எண்ணவோட்ட‘ங்களை உருவாக்குகிறது (ஸ்ருஜதே). செயலில் ஈடுபடுத்தும் அளவுக்கு வலிமை வாய்ந்த
எண்ணங்களைத்தான் இங்கு குறிப்பிடப்படுகின்றது.
ததஶ்ச கர்மாணி விலக்ஷணானி – செயலில் ஈடுபடுத்தும் எண்ணத்தை தொடர்ந்து பலவிதமான செயல்கள் நம்மிடமிருந்து உருவாகின்றது
ஶுக்லானி கர்மாணி – சாத்விகமான செயல்கள்
க்ருஷ்ணானி கர்மாணி – தாமஸமான செயல்கள்
லோஹிதானி கர்மாணி – ராஜஸமான செயல்கள்
நம்மிடமிருந்து உருவாகலாம்
ஸவர்னா ஸ்ர்தயோ பவந்தி – அதற்கேற்றவாறு சம்சாரமானது அனுபவிக்கப்படுகிறது.

அனீஹ ஆத்மா மனஸா ஸமீஹதா ஹிரண்மயோ
மத்ஸக உத்3விசஷ்டே |
மன: ஸ்வலிங்க3ம் பரிக்3ருஹ்ய காமான்ஜுஷன்னிப3த்4தோ4
கு3ணஸங்க3தோऽஸௌ || 45 ||

மனதில் அனுபவிக்கின்ற சம்சாரத்திற்கு காரணங்களாக பரவசம், அறியாமை என்று இரண்டு குறைகள் இருக்கின்றது.
பரவசமென்பது சுகத்திலே கட்டுண்டு இருத்தல் இது ஒரு பெரிய பலவீனமாகும். இந்த ஸ்லோகத்தில் ஆத்ம ஸ்வரூபம் கூறப்படுகிறது.
அனீஹ ஆத்மா – ஆத்மா செயலற்றது, அகர்ம ஸ்வரூபமானது
ஹிரண்மயஹ – சைதன்ய ஸ்வரூமானது, அறிவு ஸ்வரூபமானது
மனஸா ஸமீஹதா – மனதிற்கு மிக அருகில் இருந்துகொண்டு அதை பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. மனதில் பிரதிபலித்து,
வியாபித்து அதை அறிவுபூர்வமாக செயல்பட வைக்கின்றது
மத்ஸகஹ – மனம் ஆத்மாவுக்கு நண்பனை போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது
உத்விசஷ்டே – இது அனைத்து செயல்களையும் சாட்சியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது
மன:ஸ்வலிங்கம் பரிக்ருஹ்ய – மனமானது ஆத்மாவை அறிவதற்கு ஒரு உபகரணமாக, அடையாளமாக இருக்கின்றது.
ஆனால் சுபாவமான தன்னை நான் என்று அபிமானித்துக் கொள்கின்றது
காமான் ஜுஷன் – எல்லா ஆசைகளையும் அனுபவித்துக் கொண்டு
குணஸங்கஹ அஸௌ – மூன்று குணங்களை சார்ந்திருக்கின்றதுமான மனதால், பலவீனமாக இருக்கின்ற மனதால் மனிதன்
நிபத்தஹ – துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான், சம்சாரியாக இருக்கின்றான்

தா3னம் ஸ்வத4ர்மோ நியமோ யமஶ்ச ஶ்ருதம்
ச கர்மாணி ச ஸத்3வ்ரதானி |
ஸர்வே மனோ நிக்3ரஹலக்ஷணாந்தா: பரோ ஹி
யோகோ3 மனஸ: ஸமாதி4: || 46 ||

நம்முடைய சம்சாரத்திற்கு முதல் காரணம் மனமேதான். மனமே சம்சாரத்திற்கு காரணமாக இருப்பதால்
அதை அழிக்க முயற்சி செய்யக் கூடாது. அதிலிருக்கின்ற துயரத்தை கொடுத்து கொண்டிருக்கின்ற
இரண்டு தோஷங்களைத்தான் நீக்க முயற்சி செய்ய வேண்டும். முதல் குறையான பலவீனத்தை ஞானயோகத்தை தவிர
மற்ற யோகங்களான கர்மயோகம், பக்தியோகம் போன்றவைகளால் நீக்கிவிட வேண்டும்.
இரண்டாவது குறையான அபிமானித்தல் என்பதை ஞானயோகத்தை பின்பற்றி நீக்கி விடலாம்.
எதை நான் என்று அறியாமலிருக்கும்வரையில் துயரங்களை அனுபவித்து கொண்டிருப்போம்.

மனதில் எழும் எண்ணங்கள் அந்த நேரத்தில் செயலுக்கு வருகின்ற சம்ஸ்காரங்கள், சூழ்நிலைகளை பொறுத்து அமைகின்றது.
இதன் அடிப்படையில்தான் செயல்கள் உருவாகின்றது. அதற்கு தகுந்த சம்சாரம் கிடைக்கின்றது.
மனம் புலன்களுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விடுதலை பெறவேண்டும். மனம் உண்மையில் ஆத்மாவை நான் என்று சொல்ல வேண்டும்.
இந்த மனமே ஆத்மாவை அறிவதற்கு உதவி செய்கின்ற கருவியாக கொள்ள வேண்டும.
ஆனால் இப்படிபட்ட மனதை உலகத்திலுள்ள விஷயங்களில் அபிமானம் கொள்ளவைத்து துயரப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இதில் மனதிலுள்ள முதல் குறையை நீக்குவதற்கான வழியை கூறுகின்றார். மோட்சத்தை அடைவதற்கு யோகத்தின் பங்கு என்ன?
யோகம் என்பதெது, அது எதுவரை கொண்டு செல்லும்?. இதனால்தான் முதல் குறையை நீக்க முடியும்.
ஞானயோகத்தை தவிர மற்ற அனைத்து யோகங்கள்தான் முதல் குறையை நீக்க முடியும்.
இந்த யோகம் நம்மிடமிருந்து வருகின்ற செயல்களைக் குறிக்கின்றது. எல்லா செயல்களும் பலன்களை கொடுக்க கூடியது.
பாவ-புண்ணியங்களானது நம் உடலிலிருந்து செய்யப்படும் செயல்களிலிருந்து அடைவது.
இந்த பலனை நாம் எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது சுகத்தை அனுபவிக்கலாம்,
மோட்சத்தை அடைவதற்குரிய சாதனமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுவே முழுமையாக அந்த பலனை அனுபவித்தலாகும்..
மனதிலுள்ள முதல் குறைய போக்குவதற்கு பயன்படுத்துவதே அந்தப்பலனை முழுமையாக அனுபவித்து விடுவதற்கு சமமாகும்.
இந்த யோகங்கள் மனதை எதற்கும் அடிமையாகிவிடாமல் பலப்படுத்தினால் மனம் ஆத்மாவை தேடும் முயற்சியில் ஈடுபட ஆரம்பிக்கும்.
மனம் ஒருவன் இறக்கும்வரையில் பலத்துடன் இருக்குமாறு பகவான் படைத்திருக்கிறார்.

தானம் – இருப்பதை தேவையுள்ளவர்களுக்கு, தகுதியுடையவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தல். இதை செய்வதனால் மனம் பலமடையும்
ஸ்வதர்ம – நாம் செய்கின்ற அனைத்து செயல்களையும், வர்ணாசிரம அடிப்படையில் நமக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை
அதன் பலனில் பற்றுக் கொள்ளாமல் செய்து கொண்டிருக்க வேண்டும். நம்முடைய மன ஆரோக்கியமாக இருப்பதற்குதான்
நாம் அனைத்து செயல்களையும் செய்ய வேண்டும்.
நியமஹ – செய்ய வேண்டிய செயல்களை செய்தல்
யமஹ – செய்யக்கூடாத கர்மங்களை செய்யாதிருத்தல்
ஸ்ருதம் – சாஸ்திரத்தை கேட்டல், சாஸ்திர மந்திரங்களை ஓதுதல்
கர்மாணி – விதவிதமான தவங்களை செய்தல் – மன ஆரோக்கியத்தை லட்சியமாக கொண்டு தவங்களை செய்தல்
ஸத்வரதானி – நல்ல நல்ல விரதங்களை கடைபிடித்தல், சாத்விகமான விரதங்களை மேற்கொள்ளல்,
விரதங்கள் மனதையும்,உடலையும் பலப்படுத்துபவைகளாக இருக்க வேண்டும்
ஸர்வே – மேற்கூறிய எல்லா சாதனங்களும்
மனோ நிக்ரஹ லக்ஷணாந்தாஹ – மனதை பக்குபடுத்துவதில்தான் நிறைவடைகிறது. மனதை நெறிப்படுத்த வேண்டும்,
முறைப்படுத்த வேண்டும். எதற்கும் அடிமையாகாத நிலையுடையதாக பக்குவபடுத்துதல்
ஆகியவற்றிற்குத்தான் பயன்படுத்த உதவுகிறது.
பரோ ஹி யோகஹ மனஸஹ ஸமாதிஹி – எல்லா யோகங்களும் மனதை அமைதி படுத்துவதற்குத்தான் பயன்படுகின்றது.
மனம் அமைதியடைந்துவிட்டால் இழப்பதற்கும், இனிமேல் அடைவதற்கும் ஒன்றுமிருக்காது.
மனம் எப்பொழுதும் இன்பத்தையோ, சுகத்தையோ அடைவதற்கு வழியை தேடிக் கொண்டிருக்கும்.
இந்த சுபாவத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அதை சாதனமாக பயன்படுத்த பழக்க வேண்டும்.
கிடைக்கின்ற நேரத்தில் ஆத்மவிசாரத்தில் ஈடுபடுத்த வேண்டும்.
சில சாதனங்களை பயன்படுத்தி பலன் அடைந்ததும் அதை விட்டுவிட வேண்டும்.

ஸமாஹிதம் யஸ்ய மன: ப்ரஶாந்தம் தானாதி3பி4:
கிம் வத3 தஸ்ய க்ருத்யம் |
அஸம்யதம் ய்ஸ்ய மனோ வினஶ்யத்3
தா3னாதி3பி4ஶ்சேத3பரம் கிமேபி4: || 47 ||

யஸ்ய மனஹ – யாருடைய மனமானது அமைதியை அடைந்து விட்டதோ,
ஸமாஹிதம் ப்ரஶாந்தம் – முழுமையாக அமைதியடைந்து விட்டதோ, தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதோ. அவர்களுக்கு
தானாதிபிஹி கிம் வத3 தஸ்ய க்ருத்யம் – தானம் முதலிய சாதனங்களால் இனி ஆக வேண்டியது ஒன்றுமில்லை, அடைய வேண்டியது ஒன்றுமில்லை.
நற்காரியங்களை செய்வதனால் வரும் புண்ணியத்தையும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்ட நிலையில் அவைகளை மீண்டும் செய்ய தேவையில்லை.
எல்லா சாதனங்களாலும் முறைய கடைப்பிடித்துக் கொண்டிருந்தாலும் மனம் அமைதி அடையவில்லையென்றால்
அந்த சாதனங்களை பின்பற்றிக் கொண்டிருப்பதனால் எந்த பயனும் கிடையாது
அஸம்யதம் யஸ்ய மனஸஹ – யாருடைய மனம் கட்டுபாடில்லாத நிலையில் இருக்கின்றதோ
வினஶ்யத் – மோட்ச மார்க்கத்திற்கு செல்லும் சக்தியை இழந்த மனம், நல்லதை கேட்கின்ற, சிந்திக்கின்ற, செயல்படுத்துகின்ற சக்தியிழந்த மனம்
தானாதிபிஹி ச அபரம் கிம் அபிஹி – இத்தகைய மனதைக் கொண்டு எல்லா சாதனங்களும் பின்பற்றி செயல்படுவதினால் எந்தவித பயனும் கிடைக்காது.

மனோவஶேன்யே ஹ்யப4வன்ஸ்ம தேவா
மனஶ்ச நான்யஸ்ய வஶம் ஸமேதி |
பீ4ஷ்மோ ஹி தே3வ: ஸஹஸ: ஸஹீயான்யுஞ்ஜ்யாத்3வஶே
தம் ஸ ஹி தே3வதேவ: || 48 ||

மனமானது சக்தி வாய்ந்ததாக இருப்பதனால் அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். எனவே கடும் முயற்சி செய்துதான்
அதை கட்டுபடுத்த வேண்டும். அவ்வாறு அதை வென்றவன்தான் ஜீவன் முக்தியை அடைய முடியும்.
மனம் ஒரு சேதனமான கருவியாக இருக்கின்றது நாம் செய்ய நினைப்பதை மனம்தான் செயல்படுத்த வேண்டும்.
மனதை முறையாகத்தான் நம் வசத்திற்கு படிபடியாகத்தான் கொண்டுவர வேண்டும்.
மனோவஶே அன்ய்யே தேவ அபவன்ஸ்ம – மற்ற தேவர்கள் மனதின் வசத்தில் இருக்கின்றார்கள்.
எல்லா இந்திரியங்களும் மனதின் வசத்தில்தான் இருக்கிறது.
மனஸ்ச நான்யஸ்ய வஶம் ஸமேதி – ஆனால் வேறொன்றின் கையில் மனம் சுலபமான வசப்படாது.
மற்ற புலன்களின் வசத்திலும், புத்தியின் வசத்திலும் மனம் இல்லை.
பீஷ்மோ ஹி தேவ – இந்த மனமானது பயங்கரமானது
ஸஹஸஹ – பலமானதாக படைக்கப்பட்ட தத்துவங்களிலே மிக பலமானதாக மனம்
ஸஹியா – இருக்கின்றது
யுஞ்ஜ்யாத்வஶே தம் – இப்படிபட்ட மனதை தன் வசத்திற்குள் கொண்டு வரவேண்டும்
ஸஹ தேவதேவ – அப்படி வசப்படுத்தியவன் தேவர்களுக்கெல்லாம் தேவன்.

தம்து3ர்ஜயம் ஶத்ருமஸஹயவேக3மருந்துத3ம்
தன்ன விஜித்ய கேசித் |
குர்வந்த்யஸத்3விக்3ரஹமத்ர மர்த்யைர்மித்ராண்யு-
தா3ஸீனரிபூன்விமூடா4: || 49 ||

மேற்கூறியபடி மனதை நம் வசத்துக்குள் கொண்டுவராவிட்டால் எந்தவிதமான சம்சாரத்திற்குள் வைத்திருக்கும் என்பதை இதில் கூறியிருக்கிறார்.
தம் துர்ஜயம் ஶத்ரும் – இந்த மனமானது வெற்றி கொள்வதற்கு கடினமான பகைவன்
அஸஹய வேகம் – அதனுடைய வேகத்தை சுலபத்தில் கட்டுப்படுத்த முடியாது
அருந்ததம் – மனதில் ஓடும் தீய எண்ணங்களின் விளைவாக உடலிலுள்ள சில உயிரிவாழ உதவும் முக்கியமான உறுப்புக்கள் பாதிக்கப்படும்.
தத்ர ந விஜித்ய கேசித் – இப்படிபட்ட மனதை கட்டுப்படுத்தாமல், ஒழுங்குபடுத்தாமல் வைத்திருந்தால்,
இது துயரமான சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறது.
அருந்ததம் =மனதில் ஓடும் சிலவித எண்ணங்களால், கோபம், பழிவாங்குதல் போன்ற எண்ணங்களால் உடலின் முக்கிய உறுப்புக்கள்,
மர்ம ஸ்தானங்கள், இதயம் போன்ற முக்கிய உறுப்புக்களின் செயல்பாட்டை பாதிக்கும்.
இப்படிபட்ட மனதை கட்டுபடுத்தாமல் விட்டுவிடக்கூடாது. அப்படி விட்டுவிட்டால் துயரமான சூழ்நிலையை உருவாக்கிவிடும்
குருவந்த்யஸத் விக்ரஹம் அத்ர மர்த்யை– மற்றவர்களிடம் தேவையற்ற சண்டையில் ஈடுபட வைக்கின்றது.
நம் மனதிலுள்ள நிறைவின்மை பலவிதத்தில் வெளிப்படும். இந்த இடத்தில் நம் மனதானது கட்டுப்படாமல் இருப்பதால்
தேவையில்லாமல் மற்றவர்களிடம் வீண் வாதத்தில், சண்டையில் ஈடுபடுத்த வைத்துவிடும்.
அஸத் விக்ரஹம் – எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் பயனற்ற சண்டையில் ஈடுபடவைத்துவிடும்
நமக்குள்ளேயிருக்கும் பகைவர்களான காம, க்ரோதம், லோபம் போன்றவைகளை வென்று விட்டால்
வெளியே எந்த பகைவர்களும் நமக்கு இருக்கமாட்டார்கள். அப்படி உள்ளேயிருக்கும் பகைவர்களை
வெற்றி கொள்ளாமல் விட்டுவிட்டால் வெளியேயும் பகைவர்களை உருவாக்கி கொள்வோம்.
மித்ர உதாஸீன நிபூன் விமுடாஹ – இப்படி மனதைக் கட்டுபடுத்தாத மூடர்கள், வெளியே உள்ளவர்களை, நண்பனாகவும்,
கண்டு கொள்ளாதவனாகவும், பகைவனாகவும் பிரித்து வைத்துக் கொள்கிறார்கள். அதனால் சம்சார துயரத்தில் விழுந்து இருக்கின்றார்கள்.

தே3ஹம் மனோமாத்ரமிமம் க்3ருஹீத்வா
மமாஹமித்யந்த3தீ4யோ மனுஷ்யா: |
ஏஷோ ஹமன்யோ யமிதி ப்4ரமேண து3ரந்தபாரே
ஹமஸி ப்3ரமந்தி || 50 ||

மனதிலுள்ள இரண்டாவது குறையை நீக்குவதற்கான வழியை 50-58 ஸ்லோகங்களில் விளக்குகின்றார்.
இதுவே ஞானயோகம், மனதிற்கு அறிவை கொடுத்தல், மூன்று படிகளில் இந்த ஆத்ம ஞானமானது அடையப்படுகிறது. அவைகள்
1.த்ருக்-த்ருஷ்ய விவேகம் – நான் அல்லாத விஷயங்களிலிருந்து விடுபடுதல்.
பார்க்கப்படுவது, அனுபவிக்கப்படுவது அனைத்தும் நானல்ல என்று அனாத்மாக்களை நீக்குதல்
2.அவஸ்தா த்ரய விவேகம் – நான் எல்லா அவஸ்தைகளிலும் தொடர்ந்து இருக்கின்றேன்.
சத்யமாக இருந்து கொண்டு இவைகளை பிரகாசிக்கிறேன் என்ற அறிவை அடைவது
3.பிரம்மனுடன் ஐக்கியம் – ஆத்மாவாகிய நானே பிரம்மன் என்று உணர்தல்

மனுஷ்யா – மனிதர்கள்
தேஹம் – இந்த ஸ்தூல சரீரத்தை
மனோமாத்ரம் இமம் – அறியாமையினால் மனதில் மட்டும்
க்ருஹித்வா – நான் என்று நினைத்து கொண்டு
மம அஹம் இதி அந்த தியோ – தவறான அறிவால் இந்த உடலை நான் என்றும், உடலுடன் சம்பந்தபட்டவைகளனைத்தும்
என்னுடையது என்று தவறாக நினைத்துக் கொண்டு
ஏஷஹ அஹம் அன்யே அயம் இதி பிரேமண – இந்த உடல்தான் நான் என்றும் மற்றவைகள் எதுவும் நானில்லை
என்ற குழப்பத்தில், மோகத்தில் இருக்கிறார்கள்
துராந்தபாரெ – இந்த மோகத்தை கடக்க முடியாமல்
தமஸி ப்ரமந்தி – மனிதர்கள் அறியாமை என்ற இருளில் உழன்று கொண்டு இருக்கிறார்கள்

ஜனஸ்து ஹேது: ஸுக2து3:க2யோஶ்சேத்கிமாத்மஶ்சாத்ர
ஹி பௌ4மயோஸ்தத் |
ஜிஹவாம் க்வசித்ஸந்த3ஶதி ஸ்வத3த்3பி4ஸ்தத்3வேத3னாயாம்
கதமாய குப்யேத் || 51 ||

51-56 நான் என்ற சொல்லுக்கு ஆத்மாதான் பொருள் என்பதை விளக்குகின்றார்

என்னுடைய துயரத்திற்கு காரணமாக இருப்பவர்கள் என்னை சுற்றியிருப்பவர்கள் என்ற எண்ணத்தை நீக்குகின்றார்.
நானே ஆத்மா என்று உணர்ந்திருந்தால் எனக்கு எப்படி மற்றவர்கள் துயரத்தை கொடுக்க முடியும், துயரத்திற்கு காரணமாக இருப்பார்கள்

ஜனஸ்து ஹேது: சேத் ஸுக து:க2 – நாம் அனுபவிக்கும் இன்ப-துன்பங்களுக்கு மனிதர்கள் காரணமாக இருந்தால்
கிம் ஆத்மனஹ ச அத்ர – ஆத்மாவாகிய எனக்கு ஒன்றுமில்லை
பௌமயோஹ தத் – பஞ்சபூதத்தினிலான இந்த உடலை வேறொரு பஞ்சபூத உடலினால் ஏதோ நடந்திருக்கிறது, பாதித்திருக்கின்றது
ஜிஹவாம் க்வசித்ஸந்த3ஶதி ஸ்வ – என்னுடைய நாக்கை பற்களால் கடித்துக் கொண்டால்
த3த்3பி4ஸ்தத்3வேத3னாயாம் – அந்த துன்பத்திற்காக
கதமாய குப்யேத் – யாரிடம் கோபித்து கொள்ள முடியும்
ஞானம் அடையாதவர்கள் எப்படி இந்த சூழ்நிலையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் மற்றவர்கள் நமக்கு துன்பம் கொடுக்கும்போது
அவரை மன்னித்துவிட வேண்டும் அல்லது அவர் அறியாமையினால்தான் இவ்வாறு நடந்து கொள்கிறார் அல்லது
என்னுடைய கர்மபலனை அனுபவித்து தீர்ப்பதற்கு உதவி செய்கின்ரார் என்று சகித்துக் கொள்ள வேண்டும்.

து3:க2ஸ்ய ஹேதுர்யதி3 தே3வதாஸ்து
கிமாத்மனஸ்தத்ர விகாரயோஸ்தத் |
யத3ங்க3மங்கே3ன நிஹன்யதே க்வசித்க்ருத்4யேத
கஸ்மை புருஷ: ஸ்வதே3ஹே || 52 ||

நமக்கு துன்பம் கொடுப்பவர்கள் தேவதைகள்தான் என்று நாம் நினைக்கின்றோம்.
கண்ணுக்கு தேவதை சூரியன், மனதுக்கு தேவதை சந்திரன் போன்று நம்முடைய ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு தேவதை அதிஷ்டானமாக இருக்கின்றது.
கைவிரலால் கண்ணைக் குத்திக் கொண்டால் கையிலுள்ள அதிஷ்டான தேவதை, கண் தேவதையை துன்புறுத்தி விட்டது என்று
ஞானம் உள்ளவன் எடுத்துக் கொள்வான். இதிலிருந்து நன் உடலுக்குப்பால் சாட்சியாக இருந்து கொண்டு இருக்கும் ஆத்மா நான்,
எனவே எனக்கு யாரும் எவ்விதமான சுக-துக்கங்களை கொடுக்க முடியாது என்ற நிலையை அடைந்திட வேண்டும்.
து3:க2ஸ்ய ஹேதுர்யதி3 தே3வதாஸ்து – என்னுடைய உடலுக்கும், மனதிற்கும் வரும் துன்பத்திற்கு காரணம் ஏதோ ஒரு தேவதை என்றால்
கிமாத்மனஸ்தத்ர – இதில் எனக்கு என்னவாகப் போகிறது!
விகாரயோ: தத் – இது இரண்டு தேவதைகளுக்கும் இடையே நடக்கும் சண்டை, ஆத்மாவாகிய எனக்கு ஒன்றுமில்லை
யத3ங்க3மங்கே3ன நிஹன்யதே – என்னுடை உடலிலுள்ள ஒரு அங்கம் வேறொரு அங்கத்தை துன்புறுத்திவிட்டால்
க்வசித்க்ருத்4யேத கஸ்மை – யாரிடத்தில் கோபித்துக் கொள்ள முடியும்
புருஷ: ஸ்வதே3ஹே – மனிதன் எந்த அங்கத்திடம் கோபப்பட முடியும்.

ஆத்மா யதி3 ஸ்யாத்ஸுக3து3:க2ஹேது;
கிமன்யதஸ்தத்ர நிஜஸ்வபா4வ: |
ந ஹ்யாத்மனோ ன்யத்3யதி3 தன்ம்ருஷா
ஸ்யாத்க்ருத்3யேத கஸ்மான்ன ஸுக2ம் ந து3:க2ம் || 53 ||

சிலர் தான் அடையும் இன்பத்திற்கு ஆத்மாவே காரணம் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த கருத்தை தவறு என்று சுட்டிக் காட்டுகின்றார்

ஆத்மா யதி3 ஸ்யாத்ஸுக3து3:க2ஹேது: ஒருவேளை ஆத்மா சுக-துக்கங்களுக்கு காரணமாக இருக்கிறதென்றால்
கிமன்யதஸ்தத்ர நிஜஸ்வபா4வ: – இவைகள் உன்னுடைய இயற்கையான சுபாவமாகி விடும் எனவே அது உன்னுடைய
ந ஹி ஆத்மன: அன்யத்3 – ஆத்மாவுக்கு வேறாக எதுவும் இல்லை
யதி3 தன்ம்ருஷா ஸ்யாத் – ஆத்மாவுக்கு வெளியே உள்ளவைகள் பொய் என்று ஏற்றுக் கொள்கின்றாய்.
க்ருத்3யேத கஸ்மான் – யாரிடம் கோபித்துக் கொள்வாய்
ந ஸுக2ம் ந து3:க2ம் – எனவே இன்பமும், இல்லை துன்பமும் இல்லை
இதிலிருந்து நீ அனுபவிக்கும் இன்ப-துன்பங்களுக்கு யாரையும் குறை சொல்ல முடியாது.

க்3ரஹா நிமித்தம் ஸுக2து3:க2யோஶ்சேத்கி-
மாத்மனோऽஜஸ்ய ஜனஸ்ய தே வை |
க்3ரஹைர்க்3ரஹஸ்யைவ வத3ந்தி பீடா3ம்
க்ருத்4யேத கஸ்மை புருஷஸ்த்தோऽன்ய: || 54 ||

க்3ரஹா நிமித்தம் ஸுக2து3:க2யோஶ்சேத் – என்னுடைய சுக-துக்கங்களுக்கு கிரகங்கள்தான் காரணமென்றால்
கிம் ஆத்மனா அஜஸ்ய – பிறப்பற்ற ஆத்மாவாகிய எனக்கு ஒன்றுமில்லை, கிரகங்களால் எந்தவிதமான பாதிப்பும் எனக்கு கிடையாது
ஜனஸ்ய தே வை – பிறந்தவைகளுக்குதான் கிரகங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்
க்3ரஹை க்3ரஹஸ்ய ஏவ வத3ந்தி பீடா3ம் – ஒருசில கிரகங்கள் வேறொரு கிரகத்திற்கு பாதிப்பு கொடுக்கலாம்,
நான் என்கின்ற ஆத்மாவிடம் இது நடக்காது
க்ருத்4யேத கஸ்மை புருஷஸ்த்தோऽன்ய: – இந்த உடலுக்கு வேறான ஆத்மாவாகிய நான் யாரிடத்தில் கோபப்படுவேன்.

கர்மாஸ்து ஹேது: ஸுக2து3:க2யோஶ்சேத்கி
மாத்மனஸ்த்த்3தி4 ஜடா3ஜட3த்வே |
தே3ஹஸ்த்வசித்புருஷோ யம் ஸுபர்ண: க்ருத்4யேத
கஸ்மை ந ஹி கர்மமூலம் || 55 ||

கர்மாஸ்து ஹேது: ஸுக2து3:க2யோஶ்சேத் – கர்மபலன்கள்தான் நமது சுக-துக்கங்களுக்கு காரணம் என்று எடுத்துக் கொண்டால்
கிம் ஆத்மன: – ஆத்மாவாகிய எனக்கென்ன!!
தத்3தி4 ஜட3 அஜட3த்வே – அகங்காரத்தைத்தான் இது பாதிக்கும்.
தே3ஹ அத்வசித் – இந்த உடல் ஜடம்
புருஷ: அயம் ஸுபர்ண: ஆத்மாவாகிய நான் சைதன்ய ஸ்வரூபம்
க்ருத்4யேத கஸ்மை ந ஹி கர்மமூலம் –யாரிடத்து நான் கோபித்துக் கொள்ள முடியும்.
அகங்காரமே பொய் என்றாகும்போது கர்மபலன்களும் பொய்யாகின்றது
கர்மபலன்களால் இந்த தேகத்திற்கும், மனதிற்கும்தான் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆத்மாவாகிய என்னை இவைகளால் ஒன்றும் செய்ய முடியாது

காலஸ்து ஹேது: ஸுக2து3:க2யோஶ்சேத்கி-
மாத்மனஸ்தத்ர த தா3த்மகோऽஸௌ |
நாக்3னிர்ஹி தாபோ ந ஹிமஸ்ய தத்ஸ்யாத்க்ருத்4யேத
கஸ்மை ந பரஸ்ய த்3வந்த்3வம் || 56 ||

சுக-துக்கங்களுக்கு காலம்தான் காரணமென்றால் ஆத்மாவாகிய எனக்கு ஒன்றும் இல்லை. இந்த காலமானது ஆத்மாவாகிய
என்னிடத்திலிருந்துதான் தோன்றி இருக்கின்ற பொய்யான ஒன்று. உஷ்ணமானது நெருப்பை ஒன்றும் செய்ய முடியாது,
குளிரானது பனிக்கட்டியை ஒன்றும் செய்ய முடியாது. அதுபோல காலம் என்னை ஒன்றும் செய்ய முடியாது.
நான் யாரிடத்து கோபித்துக் கொள்ள முடியும். ஆத்மாவாகிய என்னிடத்திலே இருமைகளே கிடையாது

ந கேனசித்கவாபி கத2ஞ்சனாஸ்ய த்3வந்த்3வோபராக3: பரத: பரஸ்ய |
யதா2ஹம: ஸம்ஸ்ருதிரூபிண: ஸ்யாதேவம் ப்ரபு3த்தோ4 ந பி3பே4தி பூ4தை: || 57 ||

யாராலும் எந்தவிதத்திலும், எந்த ரூபத்தினாலும் இந்த அகங்காரத்திற்கு மேலாக இருக்கின்ற ஆத்மாவுக்கு இருமைகளால் பாதிப்பும் இல்லை.
ஆனால் இந்த சம்சார ஸ்வரூபமாக இருக்கின்ற அகங்காரத்திற்கு இருமைகளால் தாக்கும் நிலையென்றும் இருக்கும்.
இவ்விதம் ஆத்மஞானத்தை அறிந்தவன் உலகத்தில் உள்ள எந்த பொருட்களை கண்டும் பயப்படமாட்டான்

ஏதாம் ஸ ஆஸ்தா2ய பராத்மனிஷ்டா2மத்4யாஸிதாம் பூர்வதமைர்மஹர்ஷிபி4: |
அஹம் தரிஷ்யாமி து3ரந்தபாரம் தமோ முகுந்தா3ங்க்4ரி நிஷேவயைவ || 58 ||

இப்படிபட்ட நான் இப்படிபட்ட பரமாத்மாவில் நிலைபெறுகின்ற பிரம்ம ஞானத்தை எடுத்துக் கொண்டேன்.
இதற்குமுன் வாழ்ந்த ரிஷிகள் சென்ற பாதையானது பின்பற்றபட்ட இந்த அறிவை ‘நான் எடுத்துக் கொண்டேன்.
நான் கடக்க முடியாத சம்சாரக் கடலை கடந்துவிட்டேன். கிருஷ்ணபகவானின் பாதத்திற்கு பணிவிடை செய்ததினால்
நான் இந்த நிலையை அடைந்தேன். அவருடைய அருளால்தான் இது எனக்கு சாத்தியமானது.

பிக்ஷு கீதை முடிவடைந்தது

ஶ்ரீபகவான் உவாச
நிர்வித்3ய நஷ்டத்ரவிணே க3தக்லம: ப்ரவ்ரஜ்ய கா3ம் பர்யடமான இத்த2ம் |
நிராக்ருதோ ஸத்3பி4ரபி ஸ்வத4ர்மாத3கம்பிதோऽமூம் முனிராஹ கா3தா2ம் || 59 ||

சரியான அறிவை நன்கு அடைந்து பொருட்களையெல்லாம் இழந்து, எதிர்காலத்தை எந்த பயமும் இல்லாதவனாக,
துறவற வாழ்க்கையை மேற்கொண்டு பிக்ஷை எடுத்துக் கொண்டு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது இப்படிபட்ட உபதேசத்தை செய்தார்.
அகிம்சையிலிருந்து இவரை வெளியே கொண்டுவர இந்த உலகம் முயற்சி செய்தது. ஆனால் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு
மனம் தளராமல் முயற்சி செய்து ஞானத்தை அடைந்த பிறகு இந்த உபதேசத்தை செய்தார்

ஸுக2து3:க2ப்ரதோ3 நான்ய: புருஷஸ்யாத்மவிப்4ரம: |
மித்ரோதா3ஸீனரிபவ: ஸம்ஸாரஸ்தமஸ: க்ருத: || 60 ||

நம்முடைய சுக-துக்கங்களுக்கு காரணம் வேறெதுவுமில்லை, தன்னைப் புரிந்து கொள்ளாததினால் அவைகளை அனுபவிக்கிறோம்.
சம்சாரம் என்பது நண்பர்கள், பகைவர்கள் என்று நாமே உருவாக்கி கொள்வதுதான். இது தமோ குணத்தில் இருந்து உருவாக்கப்படுகின்றது

தஸ்மாத்ஸர்வாத்மன தாத் நிக்3ருஹாண மனோ தி4யா |
மய்யவேஶிதயா யுக்த ஏதாவன்யோக3ஸங்க்3ரஹ: || 61 ||

ஆகவே, அறிவின் துணைக் கொண்டு மனதை முழுமையாக வசப்படுத்துவாயாக, பலப்படுத்துவாயாக, தூய்மையாக்குவாயாக.
என்னிடம் மனதை செலுத்தி என்னை உணர்ந்து கொள்வாயாக. இவ்வளவுதான் அனைத்து சாதனங்களுடைய முடிவும்.

ய ஏதாம் பி4க்ஷுணா கீ3தாம் ப்3ரஹ்ம நிஷ்டா2ம் ஸமாஹித: |
தா4யரஞ்ச்2ரவயஞ்ச்2ருண்வந்த்3வந்த்3வைர்னிவாபி4பூ4யதே || 62 ||

இந்தப் பிக்ஷு கீதையை படிப்பதினால் அடையும் பலனை இதில் கூறுகின்றார்.
யாரொருவன் இந்த சந்நியாஸியால் உபதேசிக்கப்பட்ட பிரம்மத்தில் நிலைபெறுகின்ற இந்த தத்துவத்தை மன ஒருமுகத்துடனும்,
சிரத்தையுடனும் கேட்கின்றானோ, அல்லது மற்றவர்களுக்கு எடுத்து சொல்கின்றானோ, அந்த அறிவை தன்னிடத்தில் நிலை நிறுத்தி
கொள்கின்றானோ அவன் இந்த உலகத்தினால் எந்த பாதிப்பும் அடைவதில்லை, இருமைகளால் துயரமடைவதில்லை.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-