ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் -அவதார ஸ்தலம் ஸ்ரீ திரு உறையூர்-ஸ்ரீ நிகிளாபுரி–கோழியும் கூடலும்-மங்களா சாசனம் –
முனி வாஹனர் -ஆபாத சூடம் -பாத கமலம் -நல்லாடை -உந்தி -உதர பந்தம் -திரு மார்பு -கண்டம் -செவ்வாய் –
வாட்டமில் கண்கள் –அஷ்ட அங்க அனுபவம் -பின்பு திரு மேனி அனுபவம் –
அனுபவ பரிவாஹம் – அடியேன் என்னுமது ஒழிய இப்பிரபந்தம் தலைக் கட்டுகிற அளவிலும்
தம்முடைய ஊரும் பேரும் பேச மறக்கும் படி தாம் பெற்ற அனுபவம் –
அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-
திருக் கமல பாதம் அனுபவம் –
திருமகள் கூசிப் பிடிக்கும் மெல்லடி-போக்யத்வம் பாவானத்வம் -இரண்டும் உண்டே – –
ஸ்ரீ லக்ஷ்மீ பூம்யோ:கர ஸரஸிஜை: லாளிதம் – பாதோம் போஜம், —
1–அமலன் -பவித்ரம் -பவித்ராணாம் பவித்ரம்-
2–ஆதி -காரணம்
3–பிரான் –பிரான் உன் பெருமை பிறர் யார் அறிவார் -ஸ்ரீ பொய்கையாழ்வார்-
4–அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -புருஷார்த்த காஷ்டை –பகவத் கிங்கரத்வம் –
த்வத் பரிசாரக ப்ருத்த்ய ப்ருத்த்யஸ்ய –அடியார் அடியார் தமக்கடியார்-
லோக சாரங்க முனிவர் சொல்படி கேட்க வைத்த அருள் –
5–விண்ணவர் கோன்-
6–விரையார் பொழில் வேங்கடவன் –
7–நிமலன் –நிர்ஹேதுக அருள்
8–நின்மலன் –தனது பேறாக அருள் -அவ்விஞ்ஞாதா -அடியார் பிழைகள் நின் கருத்து அடையா –
9–நீதி வானவன் -இமையோர் தலைவன் -அயர்வரும் அமரர்கள் அதிபதி
10–நீள் மதிள் அரங்கத்து அம்மான் -சர்வவித பந்து
திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே —
என் கண்ணுள் நீங்கா, நெஞ்சுள்ளும் நீங்காவே-ஸ்ரீ நம்மாழ்வார்
ஸ்ரீ பாதாம்போஜம் ப்ரதிபலதி மே பாவநாதீர்க்கி காயாம்-ஸ்ரீ தேசிகன் —
மனக்கடலில் வாழ வல்ல மாய நம்பி -ஸ்ரீ பெரியாழ்வார் –
இங்கு திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே -என்று உபக்ரமம்
அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே -நிகமனம் –
அமரர் தம் கோனார்க்கு ஒழியக் கோவர்தனத்துக்கு செய்தான் -பெரிய திரு மொழி -4-2-3-
தனக்கு அடிமைப் பட்டவனை ததீய சேஷத்வத்தில் நிலை நாட்டி அருளினான் –
தனது அபிமானத்தில் ஒதுங்கின இடையர்களை ஸ்ரீ கிருஷ்ணன் அந்ய சேஷமாக்காதபடி நோக்கி
திருமலை ஆழ்வாருக்கு சேஷமாக்கினான் -இப்படி பகவான் செய்யும் சேமத்தை கூறி ஆழ்வார்கள் ஆனந்திக்கிறார்கள் –
விண்ணவர் கோன் –வேங்கடவன் ..அரங்கத் தம்மான் -1-
ஆடும் கருளக் கொடி உடையார் –நல் வேம்கட நாடர் வந்து -நாச்சியார் திருமொழி -10-5-
பரம பதத்தில் நின்றும் கோயில் ஏற வருகைக்கு என்று தங்குகிற தேசம் திருமலை
ஆடும் -பரம பதம் கலவி இருக்கையாய் இருக்க அத்தை விட்டு திருமலையிலே வந்து முகம் காட்டினார் –
ஸ்ரீ வில்லி புத்தூரில் போலே இருந்தது பயணம் –
நீண்ட தோள் சென்று அளந்தது -இரண்டாம் திருவந்தாதி -61
ஒரு காலும் எண் மதியம் கடந்து -என்று திருவடிக்கு வளர்த்தி சொல்ல –இருக்க -திரு முடிக்கு அருளியது
ப்ராப்தமான திருவடிகள் என்று தோற்ற- நீண்ட தோள் என்கிறார் பூதத் ஆழ்வாரும்-
————
உவந்த உள்ளத்தனாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2-
உவந்த உள்ளத்தனாய் —
பக்த பிரகலாதன் வம்ச மஹா பலியைக் கண்ட உகப்பு –
இந்திரனுக்கு இரந்து கொடுத்தோம் என்ற உகப்பு –
பிரஜைகளைத் தீண்டப் பெற்றோமே என்ற உகப்பு –
ஆழ்வார்கள் பாடல் பெற அளந்தோமே என்ற உகப்பு
உலகம் அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த
திருவடியால் அளந்தவன் ஸர்வேஸ்வரேஸ்வரன் என்று காட்டிக் கொடுக்கும் -உயர்த்திய -நிமிர்ந்த -திரு அபிஷேகம்
அன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்-காகுஸ்த வம்ச ஸ்ரீ பெருமாள் அன்றோ இங்கே சேவை –
ஸ்ரீ ராம பானமே அமோகம் -வில்லாண்டான் என்றது கோதண்டத்தை போதும் என்று ஆள்வதையே குறிக்கும் –
கடியார் பொழில் அரங்கத்தம்மான் –வண்டினம் முரலும் சோலை -மயிலினம் ஆலும் சோலை –
கொண்டல் மீது அணவும் சோலை -குயிலினம் கூவும் சோலை -அண்டர் கோன் அமரும் சோலை –
ஸ்ரீ பெரிய பெருமாள் -மரகதமலை—பச்சை மா மலை போல் மேனி அன்றோ –
மரகதகிரிமேல் மாணிக்கவொளி சூழ்ந்தாப்போல்-
அரைச் சிவந்த வாடையின் மேல்–திருப் பீதாம்பர அனுபவம் –
சென்றதாம் என சிந்தைனையே —-சிந்தனை -ஆழ்வாரைப் பிரிந்து வகுத்த இடத்தே சென்றதே –
என் -சாத்விக அஹங்காரம் –
நீண் முடியன் -2-
மலர் புரையும் திருவடி -திரு நெடும் தாண்டகம் -5-
திரு விக்ரமனின் திருமுடி விகாசத்தையும்-திருவடி விகாசத்தையும் அனுபவிக்கிறார்கள் –
—————-
மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–
மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்-அரங்கனின் வரத்து சொல்கிறது
மண்ணோரும் விண்ணோரும் தொழும் வெற்பு —
மந்தி போலவே அவயவங்கள் தோறும் அலைபடுகிறார் ஆழ்வாரும் –
விஷயாந்தரங்களில் அலைபடுகிறோம் நாம் –
அரங்கத்து அரவின் அணையான்–அரங்கத்தம்மான் கீழ் இரண்டிலும் -இங்கு அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ இங்கு அந்தி என்றது
காலை மாலை சந்திகள் இரண்டையும் -காலை சந்தி -மயர்வற மதி நலம் -ஞான உதயம்
மாலை சாந்தி -குளிர்ந்து -தாபத்ரயம் போக்கி அருளும் –
அடியேன் உள்ளத்து இன்னுயிரே–கீழே இரண்டிலும் என் கண் -என் சிந்தனை -என்றவர் இதில் அடியேன் –
இதில் உள்ளத்து இன் உயிர் என்று ஜீவாத்மாவைச் சொல்லி –
ஆத்ம தாஸ்யம், ஹரே : ஸ்வாம்யம்-என்பதால் அடியேன் –
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரினாம் -கண்டவர் தம் மனம் வழங்கும் பெருமாள் அன்றோ
எழில் உந்தி -3-
காமனைப் பயந்த காளை -திருவாய் மொழி -10-2-8-
எழில் உந்தி -என்று இளகிப் பதிக்கை-பிரசவாந்தம ச யௌவனம் -என்கிறபடி அன்றிக்கே இருக்கை-
பிரமனை உண்டாக்கிய பின்பும் ஒளியும் அழகும் மிக்கு -யோ ப்ரஹ்மானாம் விததாதி தம ஹ தேவம – விளங்குகிறான் –
பயந்த என்று பிரசவத்தை சொல்லி–காளை -என்று யௌவனத்தை கூறினார் இறே –
மூன்றாலும் ஓங்காரம் சொல்லி -அமலன் -உவந்த -மந்தி -பாவோ நான்யத்ர கச்சதி –
அடுத்த நான்கையும் சேர்த்து – அமலன் உவந்த மந்தி ச பாதுகை -அடி சூடும் அரசு-
———————
சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-
சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன்–ஓர் -அத்விதீயம்
ஒட்டி -இன்று போய் நாளை வா என்றது ஸூசகம்
ஓத வண்ணன்-கோபமாஹாரயேத் தீவ்ரம்-கோப வசமானாலும்-ஸ்வரூபம் மாறாதே -முகில் வண்ணன் அன்றோ இங்கு
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் –முகிலைக் கண்டு தானே மயிலினம் ஆலும் -வண்டினம் முரலும் –
திரு வயிற்று உதர பந்தம் —-தேட்டரும் உதர பந்தம் –அரை ஞான்- மேகலை- ஒட்டியாணம் -அனுபவம் –
அரங்கனுக்கு தேட்டரும் திறல் தேன் அன்றோ
என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே –பந்தம் என்ற பெயர் -ஆனால் உலாவுகின்றதே –
தாமோதர ஈடுபாடு எத்திறம் என்னப் பண்ணுமே-
மதுர மா வண்டு பாட மா மயில் ஆட -அமலனாதி பிரான் -4
வண்டு பலவிசை பாட மயிலாலு -பெரிய திருமொழி -3-9-3-
மயில் நடமாட வண்டு தான் இசை பாடிடும் -பெரிய திருமொழி -4-2-3-
——————–
பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-
பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன் வாரமாக்கி வைத்தான்–கானோ மறி கடலோ வானோ கண்டிலமால்
அதுக்கும் மேல் அடியார்க்கு என்னை ஆட் படுத்தி அருளினான் –
அத்துடன் இல்லாமல் மறப்பேன் என்று
வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்–என்னுள் புகுந்தான்
கீழே –
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே -என்றவர் –
இதில்
அவனே புகுந்ததை அருளிச் செய்கிறார்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான்–கீழ் பாசுரங்கள் போலே அவனது விபவ சேஷ்டிதங்கள்
எதுவும் இல்லாத பாசுரம் –
இதில் அடியேனைப் பெற அவன் செய்த கோரா மா தவத்தையே அருளிச் செய்கிறார் –
அடியாரானார்க்கு இரங்கும் அரங்கனாய பித்தன் அன்றோ இவன் –
திரு ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–ஸ்ரீ வைஜயந்தி மாலையின் பிரபாவம் அன்றோ –
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பு அன்றோ–
ஸூபாஸ்ரய மிதுன திவ்ய மங்கள விக்ரஹம் கண்ட பிரபாவத்தை அருளிச் செய்கிறார்
மற்ற ஒன்பது பாசுரத்திலும், “கவர்ந்ததுவே”, “உலாகின்றதே”, “சென்றதுவே”, “ஒக்கின்றதே”-ன்னு பாடும் இவர்…”திரு-ஆர-மார்பு” என்பதால் “ஆட்கொண்டதே” என்று பாடுவதில் தான் எத்தனை லயிப்பு!
தத்வக்ஷஸ் ஸ்தல “நித்ய” வாஸ ரஸிகாம்-பத்மாலங்க்ருத பாணி பல்லவ யுகாம்,
பத்மாசனஸ்தாம் ஸ்ரீயம்!-வாத்ஸல்யாதி குணோஜ்வலாம்,
பகவதீம்ம்ம்ம் வந்தே ஜகன் மாதரம்!
———————–
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-6-
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் -பிறையின்-துயர்–சந்திரனின் துயர்-சந்த்ர சேகரின் துயர் தீர்த்தவன்
அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்–அஞ்சிறைய மட நாராய் –இனக்குயில்காள் –
மென்னடைய அன்னங்காள்-அகன்றில்காள் -சிறு குருகே-வரி வண்டே-இளங்கிளியே -போன்ற ஆச்சார்யர்கள் –
நல்லார் வாழும் நளிர் அரங்கம் அன்றோ –
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும் உண்ட கண்டம் கண்டீர் —
ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும், –
வையம் எல்லாம் பிள்ளை வாயுள் கண்டாள்-
முற்றும் உண்ட கண்டன் -6
நீடு உலகு உண்ட திறங்கிளர்வாய -திருவாய்மொழி -6-6-3
எஞ்சாமல் வயிற்று அடக்கி -பெரிய திருமொழி -2-10-1-
சேஷ பூதனுக்கு கைங்கர்யம் தாரகமாய் இருப்பது போலே
இவற்றின் ரஷணம் இவனுக்கு தாரகமாய் இருக்கும் –
உலகு உண்ட திறங் கிளர்வாய-ரஷகத்வ ப்ரகாசகமான திரு வதரம் -வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே –
வயிற்று அடக்கி-பிரளய ஆபத்தில் உலகத்தை வாயாலே உட் கொண்டு கண்டத்தின் வழியாக திரு வயிற்றிலே வைத்து நோக்கினான் –
நிரபேஷ ரஷகத்வம் -இப்படி ஆழ்வார்கள் அனுபவிக்கிறார்கள் –
—————
கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ——-7-
கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல் மெய்யினார் -திருமேனி அனுபவம்-திவ்ய சஷுஸ்-காட்டவே கண்டார்
துளப விரையார் கமழ் நீண் முடி–நீள்முடி-2-பாசுரம் -நாற்றத்துழாய் முடி –ஸ்ரீ ஆண்டாள் –
யெம் ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார் செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே —
ஐயோ என்னப் பண்ணுகிறதே -என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தாரே–
ஆர் – நிறைந்த; நன்றாக; அழகான;
சுரி – சுழி; துளை
ஆர் சுரி சங்கு – நன்றாக சுழிந்துள்ள சங்கு;
ஆர் சுரி சங்கு – கலை அழகு மிகுந்து விளங்கும் அழகான துளை சங்கு;
ஆழி – சக்கரம்
அனலாழி – தீ உமிழும் சக்கரம்; கண்ணை பறிக்கும் ஒளியுடன் திகழும் சக்கரம்;
வரை – மலை
மெய் – உடல்
துளபம் – துளசி
துளப விரை – துளசி மணம்.
துளப விரை ஆர் கமழ் – துளசி மணம் நிறைந்து கமழும்.
அணி – அழகு, அன்பு, இனிமை; அடுக்கு; வரிசை; ஆபரணம்
அரவு – நாகம்; (இங்கு ஆதிசேஷன்)
மிசை – மேல்; மேலிடம்
மேய்தல் – உறைதல்
செய்ய வாய் – சிவந்த வாய்
கை வண்ணம் தாமரை; வாய் கமலம் போலும்; கண்ணினையும் அரவிந்தம்; அடியும் அஃதே;
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ!
அரங்கன் திருமேனியில் ஒரு தாமரைக் காடே பூத்து இருக்கு!
ஒரு தாமரை, இரு தாமரை அல்ல! பெரும் தாமரைக் காடு!
தாமரைக் காடு பூத்து = எம்பெருமான் திருமேனியில் மொத்தம் ஒன்பது தாமரைகள்!
* திரு விழிகள் = 2
* செவ்விதழ்கள் = 2
* முகத் தாமரை = 1
* பத்ம நாபம் (தொப்புள் கொடி) = 1
* திருவடிகள் = 2
* இதோடு கூடே…மலர்மாமகள், அலர்மேல்மங்கை அவன் மார்பில் = 1
இப்படி உடலெங்கும் தாமரைக் காடு பூத்துள்ளது!
——————-
பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே ————-8–
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப் பெரிய வாய கண்கள் -அப்பாஞ்சசனியம்– —
நிகரில்லாத நீல ரத்னம் போலே யிருக்கிற தாரகையின் நிறத்தாலே நீலோத்பலம் போன்று.-
ஸ்வாகதோதார நேத்ரம்-அப்பொழுதைத் தாமரைப்பூ –ஸரோஜஸத்ருசா–
ஜிதம் தே புண்டரீகாக்ஷ:-ஈச்வரோஹ மென்றிருப்பாரைத் தோற்பித்து
நமஸ்தே என்று திருவடிகளிலே விழப் பண்ணும்.
ஆதிப் பிரான் -8
மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–திருவாய் மொழி -5-3-1-
தான் முற் கோலி உபகரிக்குமவன் -பிரகலாதனுடைய விரோதியை முற் பாடனாய் சென்று
போக்கின உபகாரத்தை நினைத்து சொல்லுகிறார் -ஆதிப் பிரான் என்று –
நம்மோட்டை கலவிக்கு அவன் முற் பாடனாகச் செய்தே பிரிவில் ஆற்றாமைக்கு நான் பிற்பாடை யாகவோ –
ஆழ்வாருடைய ஆன்ம ஷேமத்துக்கு அவன் முற்பட்டமை -ஆதி -என்று கூறப் பட்டது –
——————————
ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே ——–9-
ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்–வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம் பாலம்.–அவாந்தர பிரளயம்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்–அண்டரண்ட பகிரண்டத் தொரு மாநில மெழுமால் வரை கீழே-6-பாசுரம்–
வைய மேழும் கண்டாள் பிள்ளை வாயுளே–ஒரு–அத்விதீயன்
பேயிருக்கு நெடு வெள்ளம் பெருவிசும்பின் மீதோடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக்கொண்ட –பெரிய திருமொழி -11-6–பதிகம்
முழுவதும் இதன் அனுபவம்
அகில புவந ஜந்மஸ்தேம பங்காதிலீலே —
ஆலிலை சயனம் விட்டு அரவணை துயில அன்றோ அரங்கத்துக்கு எழுந்து அருளினான்
ரக்ஷகத்வம் -காரணத்வம்-திவ்யாத்ம ஸ்வரூபம்–திவ்ய மங்கள விக்ரஹம்-மிதுன அனுபவம்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும்–கோல மா மணி ஆரமும் -கோல மா முத்துத் தாமமும்-முக்தாஹாரமும் –
முடிவில்லதோ ரெழில் நீல மேனி –நீள் வரை போல் மெய் –
முடிவு இல்லாதோர் எழில் நீல மேனியாலும் ஆரங்களாலும் -ஆபரணத்துக்கு அழகு கொடுக்கும் பெருமாள்-
பூஷாயுதை ரதிகதம் நிஜ காந்திஹேதோ–ஸ்ரீ தேவநாயக பஞ்சாசத் –
அதிகரண சாராவளி -தாத்பர்ய ரத்னாவளி -என்ற பெயர்களும் இதனாலேயே –
ஸர்வபூஷண பூஷார்ஹா–ஸ்ரீ திருவடி –
ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே –சிந்தை கவர்ந்ததுவே–7-பாசுரம் —
மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ ஐயோ! –கம்பர் —
ஐயோ! கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே. –திருவாய்மொழி–
ஐயோ —
பச்சையுடையுடுத்துத் தனக்குள்ளத்தையடையக் காட்டி, எனக்குள்ளத்தை யடையக் கொண்டான்–ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை —
பச்சை மா மலை போல் மேனி அன்றோ-
————————
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே— 10–
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்-உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை-செய்ய வாய் -7-பாசுரம் –
வெண் தயிர் தோய்ந்த செவ்வாய்-குலசேகரப் பெருமாள் –
தயிருண்டவாய் துடைத்த–
வைகலும் வெண்ணெய் கை கலந் துண்டான் பொய் கலவாதென் மெய் கலந்தானே
இதில் மட்டுமே ஸ்ரீ கிருஷ்ண அவதார அருளிச் செயல்
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்–அமுதன் என்று இல்லாமல் அமுது என்கிறார் -அனுபவிக்கப் பண்ணுவித்தானே
ஊர் பேருமரங்கமே-
இவனும் முகில் வண்ணன் அன்றோ -வெண்ணெய் முடை நாற்றம் இன்றும் உண்டே –
வண்ணம் -நிறத்துக்கும் வள்ளல் தன்மைக்கும் –
அநாலோசிதவிசேஷ அசேஷலோக சரண்ய-
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன்-என்று அன்றோ படுகாடு கிடக்கிறான் –
அடியேன் -என்று -3-5-6–பாசுரங்களில்
மற்றவற்றில் என் -என்று -சாத்விக அஹங்காரம்
ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது —
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னையாளுங் கொண்டு
கண்ட கண்கள்—-அமுதினைப் பருகிய என்று இல்லாமல் கண்ட கண்கள் –
முதல் பாசுரத்தில் கண்ணினுள்ளே ஒக்கின்றது -பார்த்தோம் –
கண்ட கண்கள் -வகுத்த விஷயத்தை அன்றோ கண்டது -கண் படைத்த பிரயோஜனம் பெற்றார் –
மற்றொன்றினைக் காணாவே.
கோவலனாய் வெண்ணெய் உண்ட -அமலனாதி பிரான் -10
நெய் பருக நந்தன் பெற்ற -பெரிய திருமொழி -5-5-3-
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தான் -10
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா -திருவாய்மொழி -5-7-6-
கோவலனாய் வெண்ணெய் உண்டானைப் போலே
கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தான் –
யசோதை பிராட்டி வெண்ணெயில் பண்ணின ஸ்ரத்தையை -என் நெஞ்சிலே பண்ணி அனுபவித்தவன்
வைத்த குறி அழியாது இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே ஆய்த்து இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போனபடி –
வெண்ணெய் விழுங்கி வெறும் கலம் ஆக்கினால் போலே -உள்ளம் கவர்ந்து வெறும் உடம்பு ஆக்கினான் –
ஏனமாய -பிரளயம் கொண்ட பூமியை மகா வராகமாய் எடுத்தாய்
ஸ்ரீ கிருஷ்ணனாய் சம்சார பிரளயம் கொண்ட என்னை எடுத்தாய் –
திருப் பாண் ஆழ்வார் திரு உள்ளத்தை மணாளன் அரங்கன் கவர்ந்தான் –
இது தனக்கு திருஷ்டாந்தம் ஸ்ரீ கிருஷ்ண நவநீத சௌர்யம்
ஆழ்வார் சம்சார ஆரணவம் அமுங்கி கிடக்க பகவான் உத்தாரணம் செய்து அருளினான்
இதுக்கு திருஷ்டாந்தம் ஸ்ரீ வராஹ பூமி உத்தாரணம் -என்றது ஆயிற்று –
—————–
பாணர் ஸ்ரீவத்ஸத்தின் அம்சம் என்பர். ஸ்ரீவத்ஸ ரென்னும் நித்ய சூரி பாணராக அவதரித்தார் போலும்.
ஸ்ரீவத்ஸத்தின் ஸ்தானம் திருமார்பு.
‘அரங்கத்தம்மான் திருவார மார்பதன்றோ அடியேனை யாட்கொண்டதே’ என்று தன் நித்ய ஸ்தானமான
திருமார்பு விஷயத்தில் மட்டும் பாடுகிறார்.
ஒன்பதாம் பாட்டில் அகண்ட நீலமேனி அனுபவத்திலும்
“கோல மாமணி யாரமும் முத்துத் தாமமும்” என்று தம் நித்ய ஸ்தான மாகிய திரு மார்பின் கண் சென்றது.
“ஆட்கொள்வது” என்பது இவ்வாழ்வார் அனுபவத்தில் திருமேனியில் வஸிப்பது.
“அடியார்க்கு என்னையாட்படுத்த விமலன்” என்றவிடத்திலும் தோளில் வஹிக்கப்பட்டது ஆட்பட்டதாயிற்று.
திருமார்பில் வஹிக்கப்படுவது இவர் பெருமாளுக்கு ஆட்பட்டது.
சேஷர்களான சக்கரத்தாழ்வான் பாஞ்சஜன்யாழ்வான் முதலியவர்கள் பெருமாள் திருத்தோள்கள் முதலிய
அங்கங்களில் வஹிக்கப் படுகிறார்கள்.
சங்காழ்வானும் சக்கரத்தாழ்வானும் பெருமாள் தோள்களிலேறி அங்கிருந்தபடியே அவருக்கு ஆட்பட்டார்கள்.
அது போலவே இவரும் லோக சாரங்கமுனி தோளிலும், ஸ்ரீவத்ஸ மாகப் பெருமாள் திருமார்பிலும் ஏறி ஆட்பட்டார்.
திருமார்பு தவிர மற்ற ஓரிடத்திலும் இப்படிப் பாடவில்லை.
அடியாரான லோக சாரங்கமுனி விஷயத்திலும் முதற்பாட்டில் இவ்விதமாக ‘ஆட் படுத்த’ என்று பாடக் காண்கிறோம்.
ஸ்ரீ வத்ஸத்தைப் பற்றி பாகவதம் தசம ஸ்கந்தம் முடிவில், ப்ருகு மஹர்ஷி பொறுமை பரீக்ஷை மூலமாய்ப்
பரத்வ பரீக்ஷை செய்த கதையொன்றுண்டு.
அடியாராகிய ப்ருகு மஹர்ஷியின் அடியடையாள மென்ற ப்ரஸித்தியோடு ஸ்ரீவத்ஸம் என்ற மரு விளங்க
வேண்டுமென்று பெருமாள் அனுக்ரஹம்.
ஸ்ரீவத்ஸத்தை ஸ்ரீதேவி வத்ஸன் போல – குழந்தையைப் போல – லாளநம் செய்ததாகவும்,
அதனால் ஸ்ரீவத்ஸம் என்று திருநாமம் என்றும் ஸ்ரீசங்கராசார்யார் விஷ்ணுபாதாதி கேசாந்த ஸ்தோத்ரத்தில் பாடுகிறார்.
திருமருவும் திருமார்பில் ப்ருகுவின் பாதம் உதைத்தது.
அந்தப் பாத சிந்ஹத்தை பகவான் நித்யமாய் ஸ்ரீவத்ஸ வ்யாஜ்யத்தால் வஹிக்கிறார்.
இது பெருமாள் தன்னை அடியார்க்காட் படுத்தும் முறையைக் காட்டின வழி.
‘திருவார மார்பதன்றோ’ என்று இவ்வாழ்வாரே, திரு மருவின மார்பில் ஸ்ரீவத்ஸத்திற்கும் இடம் கொடுத்த பெருந்தன்மையி லீடுபடுகிறார்.
லோகஸாரங்க முனியின் தோளில் எழுந்தருளுகையில், இவர் திருவடிகள் அம் முனிவர் மார்பில் தானே ஸ்பர்ஸித்திருக்க வேண்டும்!
பக்தரான ப்ருகு மஹர்ஷியின் பாதம் பெருமாள் திருமார்பில் ஸ்பர்ஸித்து ஸ்ரீவத்ஸம்போல் அபிமானமேற்பட்டது போல்,
இந்த ஸ்ரீவத்ஸாம்சர் பாதம் பக்தரான லோகஸாரங்க முனிவர் மார்பில் ஸ்பர்சித்தது.
இவர் கண்ணனைப்போல ரோஹிணீ நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்.
“காண்பனவும் உரைப்பனவும் மற்றொன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய காதற் பாண்பெருமாள்” என்றபடி,
இவரும் சடகோபரைப் போல் க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வமே வடிவெடுத்துதித்தது போல் இருந்தவர்.
தீவிர க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வம்” என்று “கடியகாதல்” என்பதால் ஸூசநம்.
முக்தி பலம் பெற்ற கடைசிப் பாசுரத்தில் “கொண்டல்வண்ணன் கோவலனாய் வெண்ணெ யுண்ட வாயன்” என்று பாடுகிறார்.
அந்தகாலேது மாமேவ ஸ்மரந் முக்த்வா களேபரம்| ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதிநாஸ்த்யத்ர ஸம்சய: என்பது கீதை.
இந்த ப்ரக்ருதி மண்டலத்தை விட்டுப் பரமபதம் பெற, பகவானுடைய அர்ச்சிராதிகதி ஸாமாந்யமான மார்க்கம்.
அர்ச்சி ஸு முதலிய அதிவாஹிக கணங்கள் பகவந் நியமநத்தால் வஹநம் செய்பவர்.
சிலருக்கு வேறு வேறு வழியாக வஹநமென்று அதிகரண ஸாராவளியில்– சைத்யாதீ நாம்– என்கிற ச்லோகத்தில் காட்டப் பட்டது.
சிசுபாலாதிகளுக்கும், அயோத்தி நகர் சராசரங்களுக்கும் வெவ்வேறு விதமாக மோக்ஷமடைய வழிகள் ஏற்பட்டன.
சிலருக்கு கருட வாஹனம், இவருக்கு முனி வாஹனம்.
“பாண்பெருமாள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுமின்கள்!
சீர்மறையின் செம்பொருள் செந் தமிழாலளித்த பாரியலும் புகழ்ப் பாண்பெருமாள் “ என்றபடி இவர் பாசுரங்கள்
வேதாந்த ஞானம் முழுமையும் உட்கொண்டவை.
யோகாப்யாஸம் செய்து செய்து பகவத் குணங்களைப் பரவச மாய்ப் பாடிப் பாடி இவர் தத்வ ஞானம் மேலும் மேலும் வளர்ந்தது.
“வேதநூற் பிராயம் நூறு” “பாதியு முறங்கிப் போகும்”. ஐம்பது வருஷம் ஸுஷுப்தி (தூக்கம்) என்கிற லயமாக இருக்கும் என்றார்.
இவர் பிராயம் ஐம்பதே. இவரது பிராயமான ஐம்பது வருஷமும் இவருக்கு யோகஸமாதி லயமாகவும் கான லயமாகவு மாகவே சென்றது.
நாரதருக்கு ஞானத்தையும் ஐச்வர்யத்தை யும் தம்மிடம் ஸ்நேஹ பாவத்தையும் கேசவன் தந்ததாக அவர்
அதான்மே ஞான மைச்வர்யம் ஸ்வஸ்மின் பாவம் ச கேசவ—ஸ்ரீபாகவதம் 1-5-39- என்று கூறினார்.
இத் திருப் பாணாழ்வாருடைய ஞானமும் ப்ரேம பாவமும் அளவற்றவை.
யோகம் அஷ்டாங்கம்: எட்டு அங்கங்களுடையது. ஆனால் எட்டாவது அங்கமாகிய ஸமாதியே அங்கி.
யமநியமாதிகளான அங்கங்கள் ஸாதகனுடைய ப்ரயத்னங்கள். திவ்யமங்கள விக்ரஹம் யோகத்திற்கு ஆலம்பநமாகும்.
ஸாலம்பநமாகச் செய்யும் பகவத் ஸ்வரூப த்யானத்தில் திவ்யமங்கள விக்ரஹம் சுபாச்ரயமான ஆலம்பநம்.
அந்த யோகாலம்பநத்தைப் பாணயோகி எட்டு அங்கங்களாக வகுத்து, அந்த த்யானத்தை அஷ்டாங்கமாக வகுத்தார்.
“பாதகமலம், நல்லாடை, உந்தி, உதரபந்தம், திருமார்பு, கண்டம், செவ்வாய், கண்கள், என்பன எட்டு அங்கங்கள்.
முதல் எட்டுப் பாட்டுக்களிலும் இந்த எட்டு அங்கங்களின் அநுபவம். ஒவ்வொன்றிலும் விக்ரஹியின்
ஸ்வரூபாநுபவமும் கலந்தது.
அங்க விசிஷ்ட ஸ்வரூபாநுபவம். ஸ்வரூபாநுபவத்தில் குணக்ரியாத் யநுபவமும் சேர்ந்தது.
“நல்லாடை” என்பது திருத்துடை முதலியவற்றின் ஆவரணம். வஸ்த்ரப்ராவ்ருதஜாநு- ந்யாயத்தை நினைக்க வேணும்.
ஜங்காஜாநு, ஊருக்களுக்கும் நல்லாடை உபலக்ஷணம். இப்படி ஓர் விலக்ஷணமான அஷ்டாங்க த்யாநாநுபவம் பண்ணி,
ஒன்பதாம் பாசுரத்தில் அகண்டமாகத் திருமேனி முழுவதையும் அனுபவிக்கிறார்.
இப்படி விசித்திரமான ஓர் அஷ்டாங்க த்யான முறையைக் காட்டுகிறார்.
அஷ்டாங்கங்களையும் அனுபவித்து, அகண்டமான திருமேனியை அனுபவித்து,
உபயவிபூதி விசிஷ்ட ப்ரஹ்மத்தை அரங்கனாகக் கண்டு,
பூம வித்யையில் கூறிய பரிபூர்ண ஸுகாநுபவம் வந்து மோக்ஷம் பெற்றார்.
ஆத்மாவில் ஜாதிபேதமில்லை. ஆத்ம ஸ்வரூபம் ஜ்ஞாநைகாகாரம்: ப்ரத்யஸ்தமித பேதம். சுத்தமான ஞான மயமான
இவரது ஆத்ம ஸ்வரூபம் அரங்கனுக்குள் ப்ரவேசித்தது யுக்தமே.
பீஷ்மர் கண்ணனைத் துதித்துக் கொண்டே அவருக்கு ஸம்பந்நராகும் போது ஜ்யோதிர் ஜ்யோதிஷி ஸம்யுதம்- என்று வர்ணித்தபடி
பீஷ்மருடைய ஆத்மஜ்யோதிஸ் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா ஜ்யோதிஸ்ஸுக்குள் புகுந்து அவிபக்தமாக
“இனி மீள்வதென்பதுண்டோ!” என்று சாச்வதமாகக் கலந்தது. அவருடைய திருமேனி மட்டும் நின்றுவிட்டது.
அதற்கு அக்னி ஸம்ஸ்காரம் செய்யப்பட்டது.
சிசுபாலனுடைய ஆத்ம ஜ்யோதிஸ்ஸும் அப்படியே கண்ணனுக்குள் கலந்தது.
“சிசுபாலனுடைய தேஹத்திலிருந்து ஒரு தேஜோக்னி கிளம்பி, தாமரைக் கண்ணனாகிய க்ருஷ்ணனை நமஸ்கரித்து,
அவருக்குள் நுழைந்த அத்புதத்தை எல்லா ராஜாக்களும் கண்டார்கள்” என்று பாரதம்.
“எல்லோர் முன்னே சிசுபால னுடைய தேஹத்திலிருந்து கிளம்பிய ஜ்யோதிஸ்ஸு வாஸுதேவனுக்குள் நுழைந்தது.
த்யானம் செய்துகொண்டே தந்மயத்வத்தை அடைந்தான்” என்று பாகவதம். அங்கும் தேஹம் கண்ணனுக்குள் நுழையவில்லை.
இங்கு நம் பாணர் தம் திருமேனியோடு அரங்கனுக்குள் நுழைந்து கலந்தார்.
பாணனுடைய திருமேனியும் பகவதவதாரத் திருமேனிகளைப்போல அப்ராக்ருதமாகவே இருந்திருக்க வேண்டும்.
சுத்த ஸத்வமயமான திவ்ய திருமேனி சுத்த ஸத்வமயத் திருமேனிக்குள் ப்ரவேசித்துக் கலந்தது.
இதனால் அவர் தேஹமும் ப்ராக்ருதமல்ல என்று தெளிவாக ஏற்படுகிறது.
காட்டவே கண்ட” (பாணன் தனியன்) என்று முதலடியில் கூறியது அரங்கன் திருமேனிக் காட்சி: அர்ச்சா விக்ரஹக் காட்சி.
மூர்த்ததிராத்யா) (ஸ்ரீஸ்துதி) என்னும் ஆதியஞ்சோதியோடு அபேதமாய் அனுபவம்.
பர, விபவ, ஹார்த்த அர்ச்சாமூர்த்திகளை ஒன்றாக அனுபவம்.
பெரிய பெருமாள் திருமேனி யிலே திருமலை முதலாகக் கோவில் கொண்ட அர்ச்சாவதாரங்களிலும்,
ராம க்ருஷ்ண வாமன வடபத்ர சயனாதிகளிலுமுள்ள போக்யதையெல்லாம் சேர அனுபவித்து என்பது முனிவாஹனபோகம்.
உபய விபூதி விசிஷ்டனாக ஜகஜ் ஜந்மாதி காரணமாக அனுபவம். உபய லிங்கானுபவம். நிர்த்தோஷ கல்யாண குணாகரத்வ,
ஆதி காரணத்வ, ரக்ஷகத்வாதி விசிஷ்ட பரிபூர்ண ப்ரஹ்மமாக அமலனாதிபிரானில் அனுபவம்.
பாட்டுக்கள் காட்சி அனுபவத்தின் பரீவாஹம். யோகமென்னும் லயத்திற்கு ஸாதகம். விரோதியல்ல.
உபய விபூதி விசிஷ்டாநு பவத்தில்
பித்யதே ஹ்ருதயக்ரந்திச்சித்யந்தே ஸர்வ ஸம்சயா: க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மிந்த்ருஷ்டே பராவரே–(முண்டகம் 2,3,9) என்றபடிக்கும்
(யத்ர நாந்யத்பச்யதி) (சாந்தோகியம் — பூமமித்யை) என்றபடிக்கும்,
பரிபூர்ண ப்ரஹ்ம தர்சநம் கிடைத்துப் பாரமாய பழவினை பற்றறுந்தது.
நான்காம் அடியில் “பாட்டினால் கண்டு வாழும்” என்றது, முக்தி தந்தருளின உபய விபூதி விசிஷ்ட பரிபூர்ண ப்ரஹ்ம தர்சனக் காட்சி.
முதல் பாதத்தில் “கண்ட” என்றது அரங்கன் திருமேனிக் காட்சி.
நம் பாண நாதர் யோகி ஸார்வ பௌமர்: பாட்டினாலும் யோகத்தினாலும் தர்சன ஸமாநா காரணமான காட்சி போன்ற
தெளிந்த அறிவாகிய ஸமாதியை அடிக்கடி ஏறுபவர். பல்கால் யோகாரூடர்.
யோகாரோஹமே இவருக்குப் பொழுதுபோக்காய் இருந்தது.
கடைசியில் இவருக்குப் பெருமாள் நியமனத்தால் கிடைத்தது யோக்யாரோஹம் முனியேறினது.
யோகாரூடராக நெடுகிலும் இருந்து வந்தவர் கடைசியில் யோக்யாரூடரானார்.
எந்த யோகிக்கும் இந்த ஏற்ற மில்லை. நம்பிகளும் இதை “முனியேறி” என்று ரஸமாக வ்யஞ்ஜனம் செய்தார்.
யோகமேறுவது யோகிமாத்ர ஸாதாரணம். ஆழ்வார்களெல்லாரும் யோகாரூடர்கள்: யோகமேறினவர்கள்.
பச்யந் யோகீ பரம்) என்று முதல் திருவாய்மொழியின் ஸங்க்ரஹ ச்லோகத்திலேயே, தாத்பர்ய ரத்னாவளீ சடகோப முனியை யோகி என்றது.
முநித்வம் மட்டிலும் எல்லாருக்கும் ஸாதாரணம். முனியேறின முனி இவரொருவரே.
————-
சீரிய நான் மறைச் செம் பொருள் செம் தமிழால் அளித்த
பாரியிலும் புகழ்ப் பாண் பெருமாள் சரணாம் பதுமத்
தாரியல் சென்னி யிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம்
காரிய வண்மை என்னால் சொல்ல ஒண்ணாது இக்கடலிடத்தே ––இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்— 11- –
பாவளரும் தமிழ்மறையின் பயனே கொண்ட
பாண்பெருமாள் பாடியதோர் பாடல் பத்தில்
காவலனும் கணவனுமாய்க் கலந்து நின்ற
காரணனைக் கருத்துறநாம் கண்ட பின்பு
கோவலனும் கோமானும் ஆன வந்நாள்
குரவைபுணர் கோவியர்தம் குறிப்பே கொண்டு
சேவலுடன் பிரியாத பேடைபோற் சேர்ந்து
தீவினையோர் தனிமையெலாம் தீர்ந்தோம் நாமே.
ஆதிமறை யெனவோங்கும் அரங்கத்துள்ளே
அருளாரும் கடலைக்கண்டவன் என் பாணன்
ஓதியதோர் இருநான்கும் இரண்டுமான
ஒருபத்தும் பற்றாக உணர்ந்துரைத்தோம்
நீதியறி யாதநிலை யறிவார்க் கெல்லாம்
நிலையிதுவே என்றுநிலை நாடி நின்றோம்
வேதியர்தாம் விரித்துரைக்கும் விளைவுக் கெல்லாம்
விதையாகும் இதுவென்று விளம்பினோமே.
காண்பனவும் உரைப்பனவும் மற்றொன் றின்றிக்
கண்ணனையே கண்டுரைத்த கடியகாதல்
பாண்பெருமாள் அருள்செய்த பாடல்பத்தும்
பழமறையின் பொருளென்று பரவுகின்றோம்
வேண்பெரிய விரிதிரைநீர் வையத் துள்ளே
வேதாந்த வாரியனென் றியம்ப நின்றோம்
நாண்பெரியோ மல்லோம்நாம் நன்றும் தீதும்
நமக்குரைப்பார் உளரென்று நாடுவோமே.
பாண் பெருமாள்–நம் பாண நாதன்–நம் பாணன்–என்று அன்றோ கொண்டாடுகிறோம் –
—————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply