Archive for July, 2019

ஸ்ரீ திருவாய் மொழி பத்தாம் பத்தில் –மூன்றாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

July 28, 2019

அவன் பிரிகிறான் என்ற வியஸனம்- துக்கம் சொல்லா நிற்க
அதற்கு மேலே குயில் முதலான பாதக பதார்த்தங்களின் -பொருள்களின் துன்புறுத்தும் ஒலியாலும்
அவன் நோக்காலும் தனக்குப் பிறந்த அவசாதத்தை -துன்பத்தினை தோழி மாருக்கு சொல்லுமாறு போலே
அவனுக்கு சொல்கிறாள்-

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-

—————————-

இவள் தரிப்பதற்க்காக பலகால் அணைத்து அருள –
இஸ் சம்ச்லேஷ -இச் சேர்க்கையால் வந்த ஸூகம் -இன்பம் எல்லாம் –
நீ போகக் கடவை -நீங்கக் கூடியவன் என்னும் இதனாலே-ஸ்வப்னம் -கனாக் கண்டு விழித்தால் போலேயாய்
நோவு படா நின்றேன் -என்கிறாள்-
பூர்வ வருத்தமான சம்ஸ்லேஷத்தை – முன்னர் நிகழ்ந்த கலவியையே சொல்லிற்றாகவுமாம் –

தகவிலை தகவிலையே நீ கண்ணா
தடமுலை புணர்தொரும் புணர்ச்சிக்கு ஆராச்
சுக வெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால்
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2-

————————

நீ உபேக்ஷிக்கிற -விரும்பாது இருக்க நாங்கள் ஸ்நேஹித்து இருக்கிற விரும்புகிற ஒரு தலைக் காமம்
நசிக்க வேண்டும் – என்கிறாள்-

வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு
வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன்
அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்
பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்
பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே–10-3-3-

————————

இவன் போக்கினை நினைத்து நோவு படப் புக்கவாறே – உன்னைப் பிரிகைக்கு சம்பாவனை -காரணம் உண்டோ -என்று
இப்புடையிலே தாழ்வோடு சில வார்த்தைகளைச் சொல்ல – இவை அன்றோ என்னை அழிக்கிறது -என்கிறாள் –

தொழுத்தையோம் தனிமையும் துணை புரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்
பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்–10-3-4-

——————–

நான் ஸந்நிஹிதனாய் -உன் முன்னம் இருந்து கொண்டு இருக்க நீ இப்படி படுகிறது என் என்ன –
நீ பசு மேய்க்கக் கடவனான பின்பு நீயும் போனாய் –
நீ போனால் நலியக் கடவ ஸந்த்யாதி -மாலைக் காலம் முதலிய பொருள்களால்
நலிவு படுகிற என்னை ஆஸ்வசிப்பித்து நலிவு படா வண்ணம் செய்து அருள வேண்டும் -என்கிறார்

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணி யவிழ் மல்லிகை வாடை தூவப்
பெரு மத மாலையும் வந்தின்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது
என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை யணியாய்–10-3-5-

————————

சென்ற சென்ற இடம் எல்லாம் அபிமதைகள்- காதலிமார் பலர் உளர் –உனக்கு ஒரு குறை இல்லை
நாங்கள் உன்னைப் பிரிந்து தரிக்க மாட்டு கிறிலோம்
ஆதலால் உன் போக்கு -செலவினை எங்களால் ஸஹிக்க -பொறுக்க முடியாது –என்கிறாள்

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்
ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும்
பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா
மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–10-3-6-

———————-

நாங்கள் நோவு பட உன் ஸூ குமாரமான -மெல்லிய திருவடிகள் நோவ பசு மேய்க்கப் போனால்
அங்கு அசுரர்கள் கிட்டினால் என்னாய் விளையும்-என்கிறாள்-

வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்
துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண
மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்தவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–10-3-7-

——————–

நீ சென்றால் ச பிரமாதம் -தீங்கு விளையுமோ என்று அஞ்சா நின்றேன்
உன்னைப் பிரியவும் மாட்டேன்
பசு மேய்த்தலை வ்யாஜ்யமாகக் கொண்டு காதலிமார்களை நினைத்து போகிறாய் ஆகில்
என் கண் வட்டத்திலே உன் அபிமதைகளோடே- காதலிமார்களோடு நீ சஞ்சரிக்க வேண்டும் என்கிறாள்

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று
ஆளும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து
கலவியும் நலியும் என் கை கழியேல்
வாசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர்
நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே–10-3-8-

——————–

உகக்கும் நல்லவரோடும் உழி தராய்-என்று நான் போகாமைக்கு சொன்ன வார்த்தை இத்தனை ஒழிய
உங்கள் முன்னிலையிலே நான் வேறு பெண்கள் சிலரோடு கலந்து பழகுதல்
உங்களுக்கு அநிஷ்டம் -விருப்பம் இல்லாதது அன்றோ என்ன –
எங்களோடு கலக்கும் கலவியால் உண்டாகும் இன்பத்தைக் காட்டிலும்
உன் திரு உள்ளத்தில் பிரியமே எங்களுக்கு மிகப் பெரிய இன்பமாகும்
ஆன பின்பு ச பிரமாதமான -தீமை விளையும் இடத்திற்கு போகாது ஒழிய வேணும்-என்கிறார்கள் –

மூன்றில் சுருக்கிய ஐந்தையும்
எம்மா– ஒழிவில் -நெடு -வேய் நான்கு ஸ்ரீ திருவாய் மொழிகளிலும்
புருஷார்த்த ஸ்வரூபத்தை விளக்கி இருப்பதாக அறுதி இடுகிறார்–ஆச்சார்ய ஹிருதயம் சூர்ணிகை -82-

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் – இதுவே இத் திருவாய் மொழிக்கு நிதான பாசுரம் என்பர்

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-

————————

முன் கை மிடுக்கரான அசுரர்கள் கம்சனால் ஏவப் பட்டவர்களாய்-ப்ரேரிதரராய் சஞ்சரிக்கிற –
திரிந்து கொண்டு இருக்கிற காட்டிலே ஸ்ரீ நம்பி மூத்த பிரானையும் நீங்கித் தனியே திரியா நிற்றி -என்று
மிகவும் நோவு படா நின்றேன் – என்கிறாள்-

அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர்
தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று
ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10-

————————

நிகமத்தில்
அவனை பசு நிரைமேய்க்க போக வேண்டாம் என்று நிஷேதித்த -விலக்கிய பாசுரமான இத் திருவாய் மொழியும்
மற்றைய திருவாய் மொழியைப் போன்று ஒரு திருவாய் மொழியே -என்று விஸ்மிதராகிறார் – ஈடுபடுகிறாள் –

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு
அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை
அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன
இவையும் பத்து அவற்றின் சார்வே–10-3-11-

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி பத்தாம் பத்தில் –இரண்டாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

July 28, 2019

பிரீதியாலே திரு நாமத்தைச் சொல்ல-ஸ்ரீ திருவனந்த புரத்துக்கு செல்ல விரோதி -தடையாக உள்ளவை
அனைத்தும் அழியும் அங்கே புக வாருங்கோள் -என்று அனுகூலரை அழைக்கிறார்-

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே–10-2-1-

———————

தீ வினைகள் போகைக்கு சொன்ன-திருப் பெயர் தானே -கேசவா என்ன –
ஆயிரம் வகைகளாய் பாது காவலாய் இருக்கும்-என்கிறார் –

இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2-

——————–

பிரதிபந்தகங்கள் -தீய வினைகள் போகைக்கு தேச ப்ராப்தியே அமையும் –அந்நகரத்தை அடைதலே போதியதாம்
ஆயிரம் திரு நாமங்களில் ஏதேனும் ஒன்றைச் சொல்லி அனுபவியுங்கோள்-என்கிறார்

ஊரும் புள் கொடியும் அக்தே உலகுஎல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே–10-2-3-

———————–

ஆஸ்ரயிப்பார்க்கு -பற்றுகின்றவர்க்கு ருசி பிறப்பதற்காக ஸ்ரீ திரு வனந்த புரத்திலே புக்கு அடிமை செய்கின்றவர்கள்
எத்தகைய புண்ணியம் செய்தவர்கள் -பாக்கியவான்கள் -என்கிறார் –
அன்றிக்கே
அவர்கள் பாக்யம் -புண்ணியம் செய்த படியைப் பேசுங்கோள் -என்கிறார் -என்னுதல் –

பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–10-2-4-

——————–

ஸ்ரீ திரு வனந்த புரத்தை ஆஸ்ரயிக்குமவர்கள் -அடையுமவர்கள் ஸ்ரீ நித்ய ஸூரிகள் ஆவார்கள்
ஆகையால் நீங்களும் ஆஸ்ரயியுங்கோள் -அடைமின் – என்கிறார்

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-

——————-

ஸ்ரீ நித்ய ஸூரிகளும் வந்து அடிமை செய்வது இங்கே ஆகையாலே ஸ்ரீ திரு வனந்த புரமே பரம ப்ராப்யம் –
அடையத் தக்க மேலான இடம் -அங்கே நாம் அடிமை செய்ய வேண்டும் – என்கிறார்-

சசைன்ய புத்ர சிஷ்ய சாத்ய சித்த பூசூரர் அர்ச்சனத்துக்கு முக நாபி பாதங்களை
த்வார த்ரயத்தாலே காட்டும் சாம்யம் -அனந்த சயனத்திலே -வியக்தம் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி-3-84-
அமரராய் திரிகின்றார்க்கு ஆதி -பிரமன் முதலான தேவர்கள் -திரு நாபியின் பக்கம்
அமரர்கோன் -விஷ்வக் சேனர் -நித்ய ஸூரிகளுக்கு திருமுக மண்டலம்
நமர்களோ –நாமும் போய் நணுக வேண்டும் -திருவடியே புகல்

அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே–10-2-6-

———————–

ஸ்ரீ சர்வேஸ்வரன் திருக் கண் வளர்ந்து அருளுகின்ற ஸ்ரீ திரு வனந்த புரத்திலே சென்று
அடிமை செய்யப் பெறில் ஒரு தேச விசேஷத்திலே போய் அடிமை செய்யப் பெற்றிலோம்
என்னும் துக்கம் போம் – என்கிறார் –

துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே–10-2-7-

————————

ஸ்ரீ திரு வனந்த புரத்திலே திருக் கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை
காணப் போருங்கோள் என்று அனுகூலரை அழைக்கிறார்

கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–10-2-8-

———————–

சரீரத்தின் அவசானம் முடிவு அணித்தாயிற்று-ஈண்டென ஸ்ரீ திரு வனந்த புரத்திலே புக்கு
அடிமை செய்ய –தாஸ்ய -அடிமை செய்வதற்கு விரோதியான கர்மங்கள் தாமே அழியும் –-என்கிறார்

நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9-

——————–

ஸ்ரீ திரு வனந்த புரத்திலே புக்கு அடிமை செய்கிறவர்கள் பெருமை பேச நிலம் அன்று – என்கிறார்

மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே–10-2-10-

———————-

நிகமத்தில்-இத் திருவாய் மொழி வல்லார் ஸ்ரீ திரு நாட்டில் உள்ளாருக்கு போக்யர் -இனியர் ஆவார் என்கிறார்

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-

————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி பத்தாம் பத்தில் –முதல் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

July 28, 2019

மரணமான மஹா பயத்துக்கு – நீக்குதற்கு விரோதி நிரசன சீலனான
ஸ்ரீ காளமேகம் அல்லது துணை இல்லை – என்று அவனைப் பற்றுகிறார் –

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே–10-1-1-

—————————-

போக ஹேதுவான -இன்பத்துக்கு காரணமான ஒப்பனையும்-உஜ்ஜீவன ஹேதுவான -உய்வு பெறுவதற்கு காரணமான
திருப் பெயர்களையும் உடையவனுடைய திருவடிகளை அல்லது காலம் என்னும் ஒரு பொருள் தத்வம் -உள்ள வரையிலும்
வேறு புகல் உடையோம் அல்லோம் – என்கிறார் –

இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2-

——————-

சர்வ ரக்ஷகனானவன் -மூன்று உலகங்களையும் காப்பாற்றுகின்ற ஸ்ரீ இறைவன்-வர்த்திக்கிற – எழுந்து அருளி இருக்கின்ற
ஸ்ரீ திரு மோகூரை நம்முடைய சகல துக்கமும் -எல்லா துக்கங்களும் கெடச் சென்று அடைவோம் என்கிறார் –

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே–10-1-3-

———————–

நம்முடைய ஸமஸ்த -எல்லா துக்கங்களும் கெட ஸ்ரீ திரு மோகூரிலே வந்து ஸூலபனாய் நிற்கிறவனை ஆஸ்ரயிக்க –
அடைவதற்கு வாருங்கோள் -என்று ஸ்ரீ வைஷ்ணவர்களை அழைக்கிறார்

இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே–10-1-4-

———————-

அவன் எழுந்து அருளி நிற்கின்ற ஸ்ரீ திரு மோகூரை ஆஸ்ரயித்து -அடைந்து அனுபவிக்க வாருங்கோள்
என்கிறார் –

தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5-

——————-

ஸ்ரீ திரு மோகூரிலே நின்று அருளின பரம ஆப்தன் திருவடிகள் அல்லது
வேறு ரக்ஷை -பாதுகாவல் நமக்கு இல்லை – என்கிறார் –

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6-

——————

நம்முடைய ரக்ஷணம் -நம்மை பாதுகாத்தல் தனக்கே உரியதாய்-அவர்ஜ்ஜ நீயமான உத்பாதகன் வர்த்திக்கிற –
எல்லா உலகங்களையும் படைக்கின்ற ஸ்ரீ இறைவன்
எழுந்து அருளி இருக்கின்ற ஸ்ரீ திரு மோகூரை ஆஸ்ரயிக்கவே -அடையவே நம்முடைய துக்கங்கள் அப்போதே போம் –
என்கிறார்

மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே–10-1-7-

———————-

ஸ்ரீ திரு மோகூரிலே நின்று அருளினவனான ஆண் பிள்ளையான ஸ்ரீ தசரதாத் மஜனை
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனை ஆஸ்ரயிக்க -அடைய நம்முடைய துக்கம் எல்லாம் போம் –
என்கிறார்

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-

——————-

நமக்கு அரணான ஸ்ரீ திரு மோகூரை நாம் பிராபிக்க -அடையப் பெற்றோம் என்று
தம் லாபத்தை பேசுகிறார்

மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறைபொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–10-1-9-

————————-

சர்வ ரக்ஷகன் வர்த்திக்கிற ஸ்ரீ திரு மோகூரை-நமக்கு பந்துக்களானவர்கள் –
நமர்காள் ஆதரித்து நினைத்து ஏத்துங்கோள் -என்கிறார்

நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10-

——————-

நிகமத்தில் –
பரம உதாரமான -மேலான வண்மையை உடைய ஸ்ரீ திரு மோகூருக்கு கொடுத்த
இத் திருவாய் மொழியை அப்யஸிக்க – கற்க வல்லார்க்கு துக்க நிவ்ருத்தி யுண்டாம்
என்கிறார்

ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி ஒன்பதாம் பத்தில் –ஸ்ரீ ஈட்டில் -திருவாய் மொழிகளின் சங்கதிகளின்–பிரவேசங்களின் -தொகுப்பு–

July 28, 2019

ஒன்பதாம் பத்து -முதல் திருவாய் மொழி -கொண்ட பெண்டிர் –பிரவேசம் –

முதல் பத்தால் -பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதி இட்டார் –
இரண்டாம் பத்தால் -அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார் –
மூன்றாம் பத்தால் – களை அறுக்கப் பட்ட அந்த கைங்கர்யமானது ஸ்ரீ பாகவத சேஷத்வ பர்யந்தமான ஸ்ரீ பகவத் கைங்கர்யம் -என்றார் –
நான்காம் பத்தால் -இப்படிப் பட்ட கைங்கர்யத்துக்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் -என்றார்
ஐந்தாம் பத்தால் -அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே -என்றார் –
ஆறாம் பத்தால் -விரோதிகளைப் அழிக்கும் தன்மையனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார் –
ஏழாம் பத்தால் -இப்படி ஸ்ரீ பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும்
தக்த பட நியாயம் போலே சம்சாரம் தொடருகிற படியைக் கண்டு நோவு பட்டார் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தே தக்த பட நியாயம் போலே நம்மை விடாமல் தொடருகிறது
நம்முடைய ஆத்மாவிலும் ஆத்மா சம்பந்தப்பட்ட பொருள்களிலும்
நசை அறாத படியாலே -என்று பார்த்து -அவற்றில் ஒரு நசை இல்லை -என்றார்

இந்த ஒன்பதாம் பத்தில் –
இப்படி நசை அற்ற பின்பும் பாது காவாமல் ஒழிவான் -என் என்று ஐயம் கொள்ள
நான் ஸ்ரீ நாராயணன்-எல்லா ஆற்றலோடும் கூடினவன்
உம்முடைய விருப்பங்கள் அனைத்தையும் செய்து முடிக்கிறேன் –-என்று அருளிச் செய்ய
அவனுடைய சீல குணங்களிலே ஆழம் கால் படுகிறார் –

கீழில் திருவாய் மொழியிலே
ஸ்ரீ பாகவதர்களுக்கு சேஷத்வ பர்யந்தமாக -அடிமைப் பட்டு இருத்தலை நிரதிசய புருஷார்த்தத்தை -எல்லையாக உடைய
தனக்கு மேல் ஓன்று இல்லாததான பேற்றினை – நிகில விரோதி பூர்வகமாக -யாதொரு தடையும் இல்லாதபடி அவன் காட்டிக் கொடுக்க
மிக்க ப்ரீதியோடே காட்டிக் கொடுத்த அந்த பேர் உபகாரத்தைக் கூறிக் கொண்டு-அனுசந்தித்து –
சயமே அடிமை தலை நின்றார் -என்றும்
நீக்கம் இல்லா அடியார் -என்றும் –
கோதில் அடியார் -என்றும்
பாகவதரை விரும்பினாராய் நின்றார் –

ஸ்ரீ ஆப்பான் திருவழுந்தூர் அரையர் -தாம் ஆஸ்ரியராய் அடைந்ததும் ஸ்ரீ திருவாய்மொழி கேட்டதும் ஸ்ரீ ஆழ்வான் உடன் அன்றோ –
சயமே அடிமை தலை நின்றார் -என்றது -ஸ்ரீ பரத ஆழ்வானை போல்வாரை –
நீக்க மில்லா அடியார் -என்றது -இளைய பெருமாளை போல்வாரை –
கோதில் அடியார் -என்றது -ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் போல்வாரை காணும்
என்று ஸ்ரீ ஆழ்வான் பணித்தாராக பணிப்பர் –

இப்படிப் பட்ட -ஸ்ரீ பாகவதர்களுக்கு சேஷத்வம் -அடிமை பட்டு இருத்தல் ஆகிற பேற்றின் புருஷார்த்தத்தின் -எல்லையை நமக்குத் தந்த
ஸ்ரீ சர்வேஸ்வரனே நிருபாதிக -இயல்பாக உள்ள பந்து –
அல்லாதார் அடங்கலும் சோபாதிக- ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்கள்
அவனே நிருபாதிக ஸூஹ்ருத் இயல்பாகவே அமைந்த நல்ல எண்ணத்தை உடையவன் –
அல்லாதார் பக்கல் தோன்றுகிற ஸூஹ்ருதம் சோபாதிகம் – நல்லெண்ணம் ஒரு காரணத்தைப் பற்றி வருகிற நல்லெண்ணம் -ஆகும்
என்று
பிராப்ய ஆபாசங்களைத் தவிர்த்து
அவனே பிராப்யன் என்றும் –
பிராபக ஆபாசங்களைத் தவிர்த்து -அவனே பிராபாகன் என்றும்
அறுதி இட்டு பிறந்த லாபத்தாலே உண்டான ஹர்ஷத்தாலே -உவகையாலே சேதனரை – மக்களைக் குறித்து
நீங்கள் சோபாதிக -ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்களான மற்றோரை விடுத்து
நிருபாதிக -இயல்பாகவே உள்ள பந்துவான அவனையே பற்றி உஜ்ஜீவிக்க பாருங்கோள்-என்று
பரோபதேசத்திலே ப்ரவ்ருத்தராகிறார் -மூளுகிறார்-

சர்வேஷாம் ஏக லோகாநாம் பிதா மாதா ச மாதவ
கச்சத்வம் ஏனம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -பாரதம் –
உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் ஸ்ரீ திருமகள் கேள்வரே தந்தையும் தாயுமாக இருக்கிறார் -ஓர் ஆடவர் ஏறே –
காப்பவரான அவரையே சரணமாக சென்று அடைமின் –
பூதாநாம் ய அவ்யய பிதா – சஹஸ்ரநாமம் –
மற்றையோர் தாய் தமப்பன் என்ற பேரே
நாலு நாள்கள் இருந்து மணல் கொட்டகம் போலே அழிந்து போவார்கள் –
அங்கன் இன்றிக்கே -அழியாதே என்றும் ஒக்கக் காப்பாற்றும்-ரக்ஷகனாம் – தமப்பன் அவனே ஆயிற்று –

தனக்கு ஹிதம் நலத்தை கூறிய ஸ்ரீ விபீஷணனை –
அன்யஸ்து ஏவம் விதம் ப்ரூயாத் வாக்யம் ஏதத் நிசாசர
அஸ்மின் முகூர்த்தே நபவேத் த்வாம் து திக் குலபாம்சனம் – யுத்த -16-15-
அரக்கர் குலத்துக்கு குறையை விளைவித்த உன்னை விடுகிறேன் -என்று புறப்பட விட்டான் அன்றோ ராவணன் –
அவன் தம்பியை ஒழியச் செல்லாது என்றார் அன்றோ -ஸ்ரீ பெருமாள் –

பெற்ற தமப்பன் பகையாக அவனிலும் அண்ணியனாய் வந்து உதவினான் அன்றோ ஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்கு –
ஸ்ரீ மகாராஜர் ஜ்யேஷ்டானாலே -தமையனால் நோவு பட தனிமையில் வந்து உதவினார் அன்றோ ஸ்ரீ பெருமாள் –
மாதா பிதாக்கள் கை விட்ட ஜெயந்தனுக்கு ப்ரஹ்மாஸ்த்ரத்தை தொடுத்தவர் தாமே அன்றோ புகல் ஆனார் –
ஸ பித்ராச பரியக்த ஸூ ரைச்ச ஸ மகரிஷிபி
தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -சுந்தர -38-33-
அந்த காகாசுரன் தமப்பனாலும் முனிவர்களாலும் தேவர்களாலும் விடப்பட்டவனாய் மூன்று லோகங்களிலும் நன்றாக திரிந்து
அந்த ஸ்ரீ பெருமாளையே சரணம் அடைந்தான் -என்கிற படியே
ஸ-நீரிலே புக்கு அழுந்துவாரைப் போலே
தாரகர் ஆனவரே பாதகராய்-அம்பு தொடுக்கும் படி சூழ்த்துக் கொடு நின்ற அவன் –

ஸ்ரீ த்ரௌபதி தர்மத்திலே தலை நின்றவர்களான கணவன்மார் ஐவரும் வெறும் தரையைக் கீறிக் கொண்டு இருக்க
அவர்களை ஒழிய தூரஸ்தனான -சேயனான ஸ்ரீ கிருஷ்ணனை நினைக்க –
கோவிந்தேதி யத் ஆக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாசினம்
ருணம் பிரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாத் ந அபசர்பதி -பாரதம் -உத்தியோக பர்வதம் -58-22-
அவள் ஆபத்தை அடைந்தவளாய் நம்மை நினைக்க நாம் உதவப் பெற்றிலோம் -என்று
ஸ்ரீ த்ரௌபதி யானவள் தூரத்தில் இருக்கிற என்னை ஸ்ரீ கோவிந்தா என்று அழைத்து அழுதாள் –
எனபது யாது ஓன்று உண்டோ -அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போன்று
என் மனத்தின் நின்றும் நீங்க வில்லை என்று புண் பட்டான் அவன் அன்றோ –

ஸ்ரீ அர்ஜுனன் என் அபிமதம் -கார்யங்களை என்னால் செய்து கோடல் அரிது என்று சோகிக்க
உன்னைத் தொற்றி வருவது ஓன்று பேற்றுக்கு உடலாம் அன்றே அன்றோ உனக்கு சோகிக்க வேண்டுவது –
உன்னுடைய எல்லா பாரங்களையும் நம் தலையிலே பொகட்டு -நாமே கடவோம் -என்று இரு –
உன்னுடைய விரோதி வர்க்கத்தை -பகைக் கூட்டத்தை எல்லாம் நாமே போக்கித் தருகிறோம் -என்றான் அன்றோ –

இப்படிகளாலே
அவனே நிருபாதிக பந்து
அவனையே பற்றப் பாருங்கோள் -என்று தாம் அறுதி இட்ட அர்த்தத்தை
தம்மைப் பற்றினார்க்குத் தஞ்சமாக உபதேசித்து அருளுவதாக பரோபதேசத்தில் மூளுகிறார் ப்ரவ்ருத்தராகிறார் -–

——————

ஒன்பதாம் பத்து -இரண்டாம் திரு வாய் மொழி -பண்டை நாள் -பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் -அவனை ஒழிந்தார் அடங்கலும் -ஔபாதிக -ஒரு காரணம் பற்றி வந்த உறவினர்கள்
அவன் ஒருவனுமே -நிருபாதிக -ஒரு காரணமும் பற்றாமல் இயல்பாகவே அமைந்த உறவினன் -என்றார் –
நிருபாதிக பந்துவானால் -ஒரு காரணம் பற்றாமல் அமைந்த உறவினன் ஆனால்
பின்னை பந்து கர்த்தவ்யம் -உறவினருக்கு உரிய கார்யங்களைச் செய்யாது இருக்க முடியாது அன்றோ –
ஆதலால் நிருபாதிக பரம பந்துவானவன் -ஒரு காரணம் பற்றாமல் இயல்பாகவே அமைந்த உறவினனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
திருக் கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ திருப் புளிங்குடியிலே
எல்லா வித கைங்கர்யங்களையும் பெற வேண்டும் என்று ஆசைப் பட்டு இவர் சென்று கிட்டினார் –

கிட்டின இடத்தில் -இவரை என் -என்னுதல்–திருக் கண்களாலே குளிர நோக்குதல் –ஒரு வார்த்தை சொல்லுதல்
செய்யக் கண்டிலர் –
காணாமையாலே மிகவும் அவசன்னரானார் துன்புற்றவர் ஆனார்
அத் துன்பம் அவன் உளனாக தீரும் அன்றோ –
அதற்கு மேலேயும் ஓன்று உண்டாயிற்று –அது என் எனின் –

திருமேனி அலசும்படி பல காலமாக ஏக ரூபமாக -ஒரே தன்மையாக திருக்கண் வளர்கின்றான் -என் வருகிறதோ
என்று ஒரு அச்சம் உண்டாயிற்று -திரு உடம்பு அசைய –எத்தனை காலம் கிடத்தி –
கீழே -ஆரா அமுதே -என்கிற ஸ்ரீ திருவாய் மொழியிலே
என் ஆர்த்தியை -துன்பத்தை தீர்க்கின்றிலன் -என்று இன்னாதார் ஆனார் –
இங்கே -என் ஆர்த்தியையும் துன்பத்தினையும் தன் ஆர்த்தியையும் துன்பத்தினையும் தீர்க்கின்றிலன் -என்று இன்னாதார் ஆகிறார் –
ஆக –
கொடியார் மாடம் கோளூரகத்தும் புளிங்குடியும் மடியாது இன்னே -என்று அதுவே தலை எடுத்து-பெரிய ஆற்றாமையோடே –
அங்கும் இங்கும் -ஸ்ரீ திருவாய் மொழியிலும் தன் துன்பங்களை தீர்க்காமை அருளிச் செய்தாரே –
அதனுடைய அனுபாஷனம் -இத் திருவாய் மொழி –

பெரிய ஆற்றாமையோடு என்னுடைய துன்பம் எல்லாம் தீரும்படி
திருக் கண்களாலே நோக்கி அருள வேண்டும் -தாமரைக் கண்களால் நோக்காய் –
என் தலை மேலே திருவடிகளை வைத்து அருள வேண்டும் -பாத பங்கயமே தலைக்கு அணியாய் –
ஸ்ரீ தேவரும் ஸ்ரீ பிராட்டியாரும் கூட எழுந்து அருளி இருக்கும் இருப்பை எனக்கு காட்டி அருள வேணும் –
உன் தாமரை மங்கையும் நீயும் –

யத்ர கிருஷ்னௌ ச கிருஷ்ணச சத்யபாமாச பாமி நீ -பாரதம் -உத்தியோக பர்வம் –
எந்த இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணனும் ஸ்ரீ திரௌபதியும் ஸ்ரீ அர்ஜுனனும் கோபத் தன்மை உள்ள ஸ்ரீ சத்ய பாமையும்
இருக்கிறார்களோ -என்று சொல்லுகிறபடி
அவ்விருப்பில் அன்றோ அவனை அழைத்து காட்சி கொடுத்தது -என்றது
இப்படி ஸ்ரீ சஞ்சயன் வந்தான் என்று அறிவிக்க-நமக்கு நல்லான் ஒருவன்
உகவாதார்க்கும் இவ்விருப்பைப் போய்ச் சொல்லுவான் ஒருவன்
அனுகூலனான இவனுக்கு விழிநீர் அடைத்தோம் ஆகிறோம்
உகவாதார் மண் உண்ணும்படி கார்யம் பார்த்தோம் ஆகிறோம் புகுர விடும் கோள்
என்று உள்ளே அழைப்பித்து காட்சி கொடுத்தான் -என்றபடி –
ஸ்ரீ சஞ்சயன் பெற்ற பேற்றில் எனக்கு குறைய ஒண்ணாது –
நச அபிமன்யு நயமௌ தம் தேசம் துபிஜக்மது -பாரதம் உத்தியாக பர்வம்
அவர்கள் வீற்று இருந்த அந்த இடத்துக்கு ஸ்ரீ அபிமன்யுவும் சென்றான் இல்லை
இரட்டையர்களான ஸ்ரீ நகுல ஸ்ரீ சகா தேவர்களும் போனார்கள் இல்லை -என்கிறபடியே-
தாயும் தமப்பனும் சேர இருந்த இடத்தில் குழந்தைகளுக்கு சென்று கிட்ட ஒண்ணாமை இல்லை அன்றோ –
அவர்களுக்கும் சென்று கிட்ட ஒண்ணாத படி ஆயிற்று எழுந்து அருளி இருக்கிற இருப்பு
அவ்விருப்பிலே அன்றோ அவனை அழைத்து காட்சி கொடுத்தது –
அப்படியே
ஸ்ரீ தேவரும் ஸ்ரீ பிராட்டிமாரும் எழுந்தருளி இருக்கும் இருப்பை எனக்குக் காட்ட வேண்டும் –

என்னைக் கண்ட காட்சியிலே விக்ருதனாய் -வேறுபட்டவனாய் என் முன்னே
நாலடி உலாவி அருள வேண்டும் –
பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராய் –
அனுகூலரைக் கண்டால் பிறக்கும் ஸ்மிதம் -புன்முறுவல் காண வேண்டும் -தவழ கதிர் முறுவல் செய்து
ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் -கூவுதல் வருதல் செய்யாய் –என்று இங்கனே
தாமும் அவனும் அறிந்ததாக திருவாசலை திருக் காப்புக் கொண்டு ஏகாந்தத்தில் தனி இடத்திலே
தம்முடைய மநோ ரதங்களை எண்ணங்களை எல்லாம் விண்ணப்பம் செய்து
இவற்றை இப்போதே பெற வேண்டும் என்று தவரிக்கிறார் -விரைகிறார்

ஸ்ரீ இறைவனுக்கும் உயிர்கட்கும்-உள்ள -சேஷி சேஷ ப்ராப்தியை சம்பந்தத்தை அனுபவித்தார் கீழ் ஸ்ரீ திருவாய் மொழியில் –
ப்ராப்தியின் சம்பந்தத்தின் – பலத்தை – ஆசைப்பட்டு அபேக்ஷிக்கிறார் -விரும்புகிறார் இந்த ஸ்ரீ திருவாய் மொழியில் —

———————–

ஒன்பதாம் பத்து -மூன்றாம் திருவாய் மொழி -ஓராயிரம் -பிரவேசம் –

நீர் இங்கனே அர்த்திக்க- விரும்பிக் கேட்க வேண்டுமோ
நம்முடைய குடல் துவக்கை அறியீரோ -என்ன
அதனை அனுசந்தித்து –
நினைந்தும் சொல்லியும் இனியர் ஆகிறார் –

கூவுதல் வருதல் செய்யாய் -என்று பிரார்த்தித்தார் கீழ் – –
யார் வேண்டிக் கொள்ள வேண்டியதை யார் வேண்டிக் கொள்ளுகிறார் –
உம்முடைய லாபத்துக்கு நாம் வேண்டிக் கொள்ளும்படி அன்றோ
உம்மோடு நமக்கு உண்டான ரக்த ஸ்பர்சம் – சம்பந்தம் –
ஆன பின்பு நீர் விரும்பியவை சர்வ அபேக்ஷித்ங்களையும் -அனைத்தையும் செய்யக் கடவோம்
நீர் வெறுக்க வேண்டா -என்று சமாதானம் செய்தான் –
இவரும் சமாதானத்தை அடைந்தார் –

மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ -நாச்சியார் திரு மொழி -2-4-என்னக் கடவது இ றே
ஸ்ரீ கௌசல்யார் ஏக புத்ரையான- ஒரே பிள்ளையை உடையாளான நாம் உம்மைப் பிரிந்து தனி இருக்க மாட்டேன்
கூட வருவேன் இத்தனை -என்று பின் தொடர
புரிந்து பார்த்து -அம்மையீர் நீர் என்னைப் பின் தொடருகிற இடம் தர்மத்துக்கு ஹானி -குறைவு வரும் காண் -என்று
முகத்தை பார்த்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய
மீட்பதற்குப் போன இவர் மங்களா சாசனம் செய்து மீண்டாரே அன்றோ –
இப்படி அன்றோ -அவனுடைய பார்வைகளும் -மையல் ஏற்றி -உக்திகளும் -வார்த்தைகளும் -ஸ்ரீ பெருமாள் வார்த்தைகள் -இருக்கும்படி –
அவன் வார்த்தை சொன்னால் பின்னை அவன் வழியே போக வேண்டும்படியாய் அன்றோ இருப்பது –

ஆக –
அவன் ஸ்ரீ நாராயணனாய் இருக்கிற இருப்பை அனுசந்தித்தார் -நினைந்தார் –
அந்த ஸ்ரீ நாராயண மந்த்ரத்தின் உடைய பொருளை ஆராய இழிந்தவாறே
ஒரு பொருளுக்கும் தன்னுடைய பேறு இழவுகட்கு பிரார்த்திக்க -வேண்டிக் கொள்ளுதற்கு
தனக்கு பிராப்தி -சம்பந்தம் இல்லாமலே இருந்தது –
இப்படி இருக்கிறவன் தம் பக்கலிலே விசேஷ கடாஷம் செய்த படியையும்
இந்த ஸ்ரீ நாராயண மந்த்ரத்தின் அர்த்தத்துக்கு எல்லையான அவன் சீல குணத்தையும் அனுசந்தித்தார் -நினைத்தார்
நினைந்தவாறே -இப்படி சீல குனமுடையவனை இப்பொழுதே காண வேண்டும் என்னும் அபேக்ஷை -விருப்பம் பிறந்தது
அதில் தமக்கு அவன் இருந்த இடத்தளவும் கால்நடை தராதபடிக்கு ஈடாயிற்று
அவனுடைய சீலம் முதலான குணங்களிலே ஈடுபட்டு தாம் துவக்கு உண்டபடி –

இனித்தான் இவர் போனாலும் ஒரு கைங்கர்யத்தை செய்கை மிகையாம்படி இருப்பான் ஒருவனாய் இருந்தான் அவன்
இவர் தாம் ஓன்று செய்து அனுபவிக்க வல்லவர் அன்றிக்கே இருந்தார் –
அவனுடைய சீல குணங்களிலே கால் தாழ்ந்து இருக்குமவர் ஆகையாலே –
இப்படிப் பட்டவனுடைய சீல குணத்தின் ப்ராஸுர்யத்தை -மிகுதியைச் சொல்லி
தலைக் கட்டுகிறது இத் திருவாய் மொழி-

அன்றிக்கே
கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழியிலே பிரணவத்தின் அர்த்தத்தை அருளிச் செய்தார்
அத் திருவாய் மொழியிலே முதல் இரண்டரை பாசுரங்களிலே
அகாரார்தம் -அகாரத்தின் பொருளை -அருளிச் செய்தது
மேல் ஒன்றரைப் பாசுரங்களாலே -சதுர்த்தி அர்த்தத்தையும் -நான்காம் வேற்றுமையின் பொருளையும் -அடிமைத் தன்மையும் –
மத்யம அக்ஷர அர்த்தத்தையும் -த்ருதீய அக்ஷர அர்த்தத்தையும் –
மகாரத்தின் பொருளையும் -யானும் தானாய் ஒழிந்தான் -அருளிச் செய்தார்
நன்று -இது சேஷத்வம் -அடிமையாம் தன்மை -இது அநந்யார்ஹத்வம் அவனுக்கே உரிமையாம் தன்மை –
இது அவற்றுக்கு இடமாய் இருக்கிற ஆத்மா என்று பிரித்து சொல்லாமல்
மகாரத்தின் பொருளாய் இருக்கின்ற ஆத்மாவோடு கூட்டியே அருளிச் செய்தது என் -எனில்
அவற்றைத் தனித் தனியே பிரித்து அருளிச் செய்யாதது
நான்காம் வேற்றுமையின் அர்த்தமும்-உகாரத்தின் அர்த்தமும்
ஆத்மாவை விட்டுப் பிரிந்து தனித்து இராமையாலே கூட அருளிச் செய்தார் -என்க –

அதற்க்கு மேல நான்கு பாசுரங்களாலே
மகாரத்தால் சொல்லப்படுகின்ற ஆத்மாவின் உடைய ஞான ஆனந்தங்கள் முதலிய வற்றின்
வைலக்ஷண்யத்தை -சிறப்பினை அருளிச் செய்தார்
மேல் இரண்டு பாசுரங்களாலே
இம் முறையில் பிரணவத்தின் அர்த்தத்தை நினையாத-அனுசந்தானம் பண்ணாத -பாஹ்ய –
வேதத்துக்கு புறம்பான புறச் சமயத்தாரையும்- அகச் சமயத்தார் ஆகிற குத்ருஷ்டிகளையும் மறுத்தார் –

ஆக –
கண்கள் சிவந்து -என்ற திருவாய் மொழியாலே பிரணவத்தின் அர்த்தத்தை அருளிச் செய்து –
மேல்
கருமாணிக்க மலை -நெடுமாற்கு அடிமை -என்னும்
இரண்டு திருவாய் மொழி களாலும் -நமஸ் –என்றதன் அர்த்தத்தை அருளிச் செய்தார்
எங்கனே எனின் –
சாப்தமான அர்த்தம் -சொல்லால் கிடைக்கின்ற பொருளும்
ஆர்த்தமான அர்த்தம் -பொருளால் கிடைக்கின்ற பொருளும்
என்னும் இரண்டு வகையான பொருள்களும் கூறப்படும் -நமஸ் -என்ற சொல்லுக்கு
அவற்றுள் சொல்லால் -கிடைக்கும் பொருளை -கரு மாணிக்க மலை -என்னும் திருவாய் மொழியில் அருளிச் செய்து
பொருளால் கிடைக்கும் பொருளை -நெடுமாற்கு அடிமை -என்னும் திரு வாய் மொழியில் அருளிச் செய்தார்
நமஸ் -என்பதன் சாப்தமான அர்த்தம் -சொற் பொருள் – நான் எனக்கு உரியன் அல்லேன் -என்பதே அன்றோ –
ஒரு கன்னியானால் ஒருவனுக்கேயாய் இருக்கையும்
தான் தனக்கு உரியன் அன்றிக்கே இருக்கையும்
அன்றோ ஸ்வரூபம் –
அதனை அருளிச் செய்தார் கரு மாணிக்க மலை என்ற திருவாய் மொழியில்
ஆர்த்த அர்த்தம் -பொருள் ஆற்றலால் கிடைக்கும் பொருள் -அவன் அடியார்க்கு அடிமை பட்டு இருத்தல்
அதனை அருளிச் செய்தார் – நெடுமாற்கு அடிமை -என்ற திருவாய் மொழியில்

அதற்கு மேல்
கொண்ட பெண்டிர் -என்ற திருவாய் மொழியில்
ஸ்ரீ நாராயண மந்த்ரத்தின் பொருளை -சப்தார்த்தை -அருளிச் செய்தார்
யாங்கனம் எனின் –
ஸ்ரீ நாராயண பதத்துக்கு பொருள்
ஸ்வாமித்வம் -நும்மது ஆகும் அவன் அன்றி மற்று இல்லை -தொண்டரோமாய் -பாசுரங்களால் –
வாத்சல்யம் -வண் புகழே -என்றும் -கணை ஒன்றாலே ஏழு மரமும் எய்த
உபாயத்வம் -கண்ணன் அல்லால் இல்லை கண்டீர்
உபேயத்வம்-குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே
வியாபகத்வம் -நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லை
என்னும் இவை முதலானவைகள் அன்றோ –

அதற்கு மேல்
பண்டை நாளால் -என்கிற திருவாய் மொழியில் ஆய -என்னும் சதுர்த்தி -நான்காம் வேற்றுமையும்
அர்த்தத்தை அருளிச் செய்தார்
நான்காம் வேற்றுமைக்கு பொருள் -கைங்கர்யத்தை பிரார்த்தித்தல் அன்றோ –

பிரணவத்தின் பொருளும்-நம -என்ற சொல்லின் பொருளும்-வியாபகத்வமும் –
எங்கும் பரந்து இருத்தலும் -அவியாபகத்வமும் -பரந்து இராமையும் –
ஸ்ரீ வாசு தேவன் -ஸ்ரீ விஷ்ணு -என்னும் வியாபக மந்த்ரங்களிலும் உண்டு
அதில் தாம் ஆதரித்து அருளியது -ஸ்ரீ திரு அஷ்டாக்ஷரமே -எட்டு எழுத்தே -என்னுமதனை
ஓர் ஆயிரமாய் -என்னும் இத் திருவாய் மொழியிலே அருளிச் செய்கிறார்
இங்கனம் -ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை -அருளிச் செய்வர் –

———————-

ஒன்பதாம் பத்து -நான்காம் திருவாய் மொழி -மையார் -பிரவேசம்

ஸ்ரீ ஈஸ்வர -ஸ்ரீ இறைவனுடைய ஸ்வாதந்த்ர்யத்துக்கு அடி -அவன் தானே இருக்கும்
அவனுடைய -சீலம் முதலான குணங்களுக்கு அடி -ஸ்ரீ பிராட்டியாயே இருக்கும் –
சீலம் முதலான குணங்கள் வந்தவாறே ஸ்வாதீனம் இன்றிக்கே ஒழிகிறதோ -என்னில்
நிரூபித்தால்
அந்த ஸ்வாதந்த்ரியத்தைப் போன்று இவளுடைய சேர்த்தி நித்யமாய் இருக்கையாலே –
அங்கனமாய் இராது -காரணம் பற்றி வந்தது ஆனாலும் –

ஸ்ரீ பாஷ்ய காரர் மேலே ஸ்ரீ வல்லப என்று நினைத்து
ஸ்வரூபத்தை நிரூபிக்கிற இடத்தில் ஞானம் ஆனந்தம் இவற்றுக்கு முன்பு ஸ்ரீயபதி என்றாரே அன்றோ –
ஸ்ரீயபதி நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாநாநந்த ஞான ஆனந்த ஏக ஸ்வரூப –
ஸ்வ அபிமத அநுரூப நித்ய நிரவத்ய ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாத்ய
அநவதிக அதிசய அசங்கேய கல்யாண குண கண ஸ்ரீ வல்லப-

இப்படி இருக்கிறவனுடைய சீல குணத்தையும்-அதற்கடியான
ஸ்ரீ யபதித்வத்தையும் -ஸ்ரீ திருமகள் கேள்வனாய் இருக்கும் தன்மையையும் – அடைவதும் அணியார் மலர் மங்கை தோள் –
அனுசந்தித்து அருளிச் செய்தார் கீழில் ஸ்ரீ திருவாய் மொழியிலே –

கடுக பெற வேண்டும்படி-குணாதிகனுமாய் – குணங்களால் மேம்பட்டவனுமாய்
பெறுவிப்பாரும் அருகிலே உளராய் இருக்கையாலே
இப்போதே பெற வேண்டும்படியான சாபலம் -ஆசை பிறந்தது –அப்போதே பெறக் காணாமையாலே
விஷயத்துக்கு தகுதியாக அனுரூபமாக –
விடாய்த்தார் பெற வேண்டும்படி குணாதிகனுமாய் -குணங்களால் மேம்பட்டவனுமாய்
பெறுவிப்பாரும் அருகே உளராய் இருக்கப் பெறாவிட்டால் ஆறி இருக்க போகாதே அன்றோ –
ஆகையாலே
முடியானே -என்ற ஸ்ரீ திருவாய்மொழியின் வாசனையாலே-சேதநா சமாதியாலே –
அறிவுடைப் பொருள்களைப் போன்று தனித் தனியே
கரணங்களும் விடாய்க்க -தாமும் விடாய்க்கிறார் -முதல் ஐந்து பாசுரங்களில்
வீற்று இருந்து ஏழ் உலகு -ஸ்ரீ திருவாய்மொழி வாசனை 6-7-8-
என்றைக்கும் என்னை -ஸ்ரீ திருவாய்மொழி வாசனை -9-
செஞ்சொற் கவிகாள் –ஸ்ரீ திருவாய்மொழி வாசனை –10
இது தான் எல்லா ஸ்ரீ திருவாய்மொழி களோடும் கூடி இருப்பது ஒன்றாயிற்று -என்றது
முடியானே /வீற்று இருந்து ஏழ் உலகு /என்றைக்கும் என்னை /செஞ்சொற் கவிகாள்
என்னும் ஸ்ரீ திருவாய் மொழிகளில் ஓடுகிற பாவ விருத்தியை -எண்ணங்களை உடைத்தாய் இருப்பது ஆயிற்று -என்றபடி

இப்படி இந்த்ரியங்களும் தனித் தனியே விடாய்க்க -கண்ணே -என் கருத்தே -உன்னை உள்ளும் என் உள்ளம் –
தாமும் விடாய்த படி தான் -நாம் அழைப்பேன் -பேதுறுவன்-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய துயரத்துக்கு தோற்றின- அது தான் காலம் தாழ்த்து -கிரமத்திலே வந்தான்
என்னலாம்படி-ஆற்றாமைக்கு கிரமத்திலே காலம் தாழ்த்துத் தோற்றாமல்
தூணிலே வந்து தோற்றினால் போலே -ஸ்ரீ நரசிங்கமாய் – தோற்ற வேண்டும் படி ஆயிற்று –

இப்படிப் பட்ட தம் தசையையும் -நிலையையும்-அதற்கு அடியான விடாயையும்-
விடாய் அறிந்து அதற்கு உதவ வந்து அவன் முகம் காட்டின படியையும்
நினைத்து ஹ்ருஷ்டராய் -உவகையினராய்-
நான் கிருதக் கிருத்தியன் ஆனேன்
அடிமை செய்யப் பெற்றேன்-வாழ்ந்தேன்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் எல்லாம் நான் உபகாரகனாம் படி ஆனேன்
இது ஒருவன் பெரும் பேறு இருந்தபடியே -என்று தமக்கு பிறந்த லாபத்தை நினைத்து
இனியராய்-அதனைப் பேசித் தலைக் கட்டுகிறார் –

———————

ஒன்பதாம் பத்து -ஐந்தாம் திருவாய் மொழி -இன்னுயிர் -பிரவேசம் –

தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொன்னேன் -என்று களித்தவர்
தம்முடைய பிராண ரக்ஷணத்துக்கு -உயிரைப் பாது காப்பதற்காக பறவைகளின் காலிலே விழும்படி ஆயிற்று –
தேவர்கட்கு எல்லாம் கருவாகிய ஸ்ரீ கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்னும்படி தெளிவு பிறந்த போதே-பாஹ்ய சம்ஸ்லேஷத்தில் –
புறத்திலே காண வேண்டும் என்னும் அபேக்ஷை -ஆசை பிறந்தது
இவர்க்கு இன்னம் விடாயைப் பிறப்பித்து முகம் காட்ட வேண்டும் -என்று இவர் விருப்பத்தை சடக்கென முடித்திலன் ஈஸ்வரன் –
நினைத்த போதே அபேக்ஷிதம் -விரும்பியது பெறாமையாலே தளர்ந்தார்
தளர்ந்தவர் லௌகிக – உலகப் பொருள்களில் கண் வைத்தார் –
பரம விரக்தராய் இருக்கிற இவர் லௌகிக -உலகப் பொருள்களில் கண் வைப்பான் -என் என்னில் –

லௌகிக -உலகப் பொருள்களை நினைக்கும் அனுசந்தானத்தாலே -நினைவாலே ஹ்ருதயத்தை அந்ய பரமாக்கி –
மனத்தினை வேறு ஒன்றினில்செலுத்து தரிப்போம் -என்று கண் வைத்தார் –
அன்றிக்கே
அவனுக்கு போலியான பொருள்களைக் கண்டாகிலும் தரிப்போம் என்று கண் வைத்தார் -என்னுதல்
அவை ஆஸ்வாஸ ஹேது – தரிப்புக்கு காரணம் ஆகாமல்-ஸ்மாரகமாய்
அவனுடைய நினைவினை ஊட்டுவனவாய்–பாதகமாய் – துன்பினைத் தரப் புக்கன –
யாதானும் ஒரு பொருள் தோற்றிலும்-அப்பொருளின் ஸத்பாவம் -உளதாம் தன்மை அவனை ஒழிய இல்லாமையாலே
அவனைக் காட்டிக் கொண்டே அன்றோ தோற்றுவது –

ஆக
உலகப் பொருள்கள் ஸ்மாரகமாய் -அவனை நினைப்பு ஊட்டுவனவாய் நலிய
அவற்றால் நோவு படுகிறபடியை அந்யாபதேசத்தால் பேசுகிறார் –
ஸ்ரீ எம்பெருமானோடே கலந்து பிரிந்தாள் ஒரு ஸ்ரீ பிராட்டி -தன் ஆற்றாமையாலே
அவனுக்கு போலியான பொருள்களைக் கண்டாகிலும் தரிப்போம் என்று அவ் வாற்றாமை கை கொடுக்க
உபவனமாகிய பூம் சோலைக்கு புறப்பட –
அங்கு உண்டான குயில் மயில் தொடக்கமானவை
அவனுடைய பேச்சினையும் வடிவினையும் ஸ்மாரகமாய் -நினைப்பு ஊட்டுவனவாய் நலிய
இவை நலிகைக்கு இவற்றோடு நமக்கு ஒரு பகை இல்லை-இவை நலிகைக்கு ஒரு காரணம் உண்டாக வேண்டும்
அது -அவன் -நம்மை முடிக்க வேண்டும் என்று பார்த்தான் –
அதற்கு தக்க வழி நம்மை பிரிவதே -என்று நினைந்து–பிரிவு கலவியை ஒழியக் கூடாமையாலே நம்மோடு கலந்தான் –
கலந்து நம்மைப் பிரிந்தான் –
பிரிந்த இடத்திலும் நாம் முடியாது இருந்தோம் –

பிரிந்து நோவு பட்டு இருக்கும் சமயத்தில்-நம்மோடு போலியாக இருக்கிற பொருளைக் காட்டி முடிப்போம் -என்று
பார்த்து வர விட்டான் இத்தனையே யாம் என்று கொண்டு
உங்களுக்கு நினைவு இதுவாகில் இப் பாரிப்பு எல்லாம் வேண்டுமோ என்று அவற்றைப் பார்த்து கூறி
நம்மைப் பார்த்தால் அன்றோ இப்படி நோவு பட வேண்டுவது
அவனைப் பார்த்தால் நோவு பட வேண்டா அன்றோ -என்று
அவனுடைய கல்யாண குண ஞானத்தால் -குணங்களை ஏத்துகையாலே வருந்தி தரித்து
தலைக் கட்டுகிறதாய் இருக்கிறது –

இது ஸ்ரீ எம்பெருமானார் உகந்த திருவாய் மொழி என்று ஸ்ரீ ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் அருளிச் செய்வர்-

————-

ஒன்பதாம் பத்து -ஆறாம் திருவாய் மொழி -உருகுமால் -பிரவேசம் –

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம் -என்று
தம் ஜீவனத்தில் -இருப்பில் நசை அற்றுச் சொன்ன வார்த்தை அன்றோ – கீழ்
இவ் வளவில் வந்து முகம் காட்டி இவரைப் பெறுதல் –இல்லையாகில் இழத்தல் –
செய்ய வேண்டும்படி யான தசை -நிலை ஆயிற்று –

இந் நிலையிலே ஸ்ரீ திருவடி சென்று கிட்டின போது
முன்பு பல நாள் பட்ட கிலேசமும் -துக்கமும் கிடக்கச் செய்தே-பெருமாளும் வாராது இருக்க
சமா த்வாதச தத்ர அஹம் ராகவச்ய நிவேசனே
புஜ்ஞானா மானுஷான் போகான் சர்வகாம சம்ருத்தி நீ -சுந்தர -36-11-
பன்னிரண்டு ஆண்டு ஸ்ரீ பெருமாளும் தானும் ஒருபடிப்பட கலந்த கலவி வந்து
ஸ்ரீ பிராட்டியின் நினைவுக்கு விஷயம் ஆனால் போலே –
இருத்தும் வியந்து -என்ற ஸ்ரீ திருவாய் மொழியிலே -தலை தடுமாறாக பிறந்த கலவி வந்து-ஸ்ம்ருதி –
நினைவுக்கு விஷயம் ஆயிற்று
அதற்கடி-
இவர் மேற்கொண்ட கைங்கர்யத்தை முடியச் செய்து
தலைக் கட்டுகைக்கு தகுதியான ஜீவன அதிர்ஷ்டமாவது –
அன்றிக்கே –
இவர் சொல்லக் கேட்கையிலே பாரித்துக் கொண்டு இருக்கின்ற ஸ்ரீ ஈஸ்வரனுடைய பாக்யமாவது –
அன்றிக்கே –
ஸ்ரீபகவானை அனுபவிக்கிற அனுபவத்தால் உண்டான ப்ரீதி உள் அடங்காமை வழிந்து புறப்பட
இவர் சொற்களைக் கேட்டு பகவத் விஷயத்திலே ருசி பிறக்க இருக்கிற மக்கள் உடைய பாக்கியமாவது –

இப்படி -இருத்தும் வியந்து -ஸ்ரீ திருவாய் மொழியில் பேசப்பட்ட சம்ஸ்லேஷம் -கலவி
வந்து ஸ்ம்ருதி -நினைவுக்கு விஷயம் ஆயிற்று
சமாத்வாதச -பிள்ளாய் -இன்று இங்கு வெறும் தறையாய் இருக்கிற நான்
எங்கள் மாமனார் மாளிகையிலே பன்னிரண்டு ஆண்டு ஒருபடிப்பட ஸ்ரீ ராம குணங்களை விளை நீர்
அடைத்துக் கொண்டேன் காண் என்றாள் அன்றோ –

இங்கு -இருத்தும் வியந்து -என்கிற ஸ்ரீ திருவாய் மொழியிலே
மூ வுலகும் தன் நெறியா வயிற்றில் கொண்ட சிறியேனுடைச் சிந்தையுள் நின்று ஒழிந்தான் -என்கிறபடியே
புறம்பு எங்கும் முறையிலே கார்யம் செய்தவன்
இவர் ஒருவர் அளவிலும் அன்றே -முறை கெட பரிமாறிற்று – கார்யம் செய்தது –
அப்படிப் பட்ட பரிமாற்றம் -அக் கலவி தான் இப்பொழுது
ஒரு ஸ்ம்ருதி -நினைவின் அளவில் இருக்கை அன்றிக்கே
அப்பொழுது உண்டான அக் கலவி இன்பத்தை-இப்பொழுதும் அனுபவிப்பதாக ஒரு புத்தி பிறந்தது -என்றது
அப்படியே மேன்மை உடையவன்-அம் மேன்மையும் கிடக்கச் செய்தே
தாழ நின்று கலந்த குணத்தையும்-வடிவு அழகையும் சொல்லி
அது தான் இப்பொழுதைய அனுபவமே யென்னும்படியாய் இருப்பது ஒரு புத்தி பிறந்து –
அவனுடைய சீல குணத்தை நினைக்கும் நினைவாலே சிதிலராகிறார் உருகுகிறார் -என்றபடி –

கடலைத் தரை காண்பாரைப் போலே
இருத்தும் வியந்து -என்கிற ஸ்ரீ திருவாய் மொழியின் அனுபவத்தை
இதிலே கொண்ட வந்து சேர்ப்பதே நம் ஸ்ரீ முதலிகள் -என்று வித்தராய் ஈடுபட்டு அருளிச் செய்வர் ஸ்ரீ நஞ்சீயர்
அப்ராப்தியும் கிடக்கச் செய்தே
சீல குணத்தை நினைக்கும் நினைவாலே சிதிலர் -உருகுகிறார் ஆயிற்று-அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானம் –
ப்ரீதி இன்மையை உட்கொண்ட குண அனுசந்தானம் காண்
என்று இதற்கு ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்யும் சந்தை
குணங்கள் பல ஈடுபடுத்தும் -என்பதற்கு பிரமாணங்கள் மேலே காட்டி அருளுகிறார்

தே தம் ஊசு மகாத்மானாம் பௌர ஜானபதை சஹ
பகவோ ந்ருப கல்யாணா குணா புத்ரஷ்ய சந்தி தே -அயோத்யா -2-26-
ஸ்ரீ சக்கரவர்த்தி ஸ்ரீ பெருமாளுக்கு திரு அபிஷேகம் சூட வேண்டும் என்று கோலி-
நாம் அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை கிளற இப்படி வருந்தி அடிப்படுதின ராஜ்யத்தை
இனிதரு சிறியவன் தலையில் வைத்தால் இது பொறுக்குமோ என்று பார்த்து
இதை நாட்டோடு சேர விசாரித்து செய்வோம் என்று அரசர்கள் கூட்டத்தை கூட்டின இடத்து
சநிக்தோ நுநாத சஞ்ஜஞ்ஞே நேத்ர ஹர்ஷ சமீரித
ஜனௌ கோத்குஷ்ட சந்நாதோ விமாநம் கம்பயந்நிவ-அயோத்யா -2-18-
மக்கள் ஆரவாரித்த ஆரவாரமானது அரண்மனையை கிடு கிடுக்கச் செய்தது -என்கிறபடியே
ஸ்ரீ சகரவர்த்தி மாளிகையை அழித்து செய்யும்படி ஆரவாரிக்க அதனைக் கேட்டு
நாம் நினைத்த கார்யம் பலித்தது -ஆயினும் இவர்கள் நினைவை இவர்கள் வாயால்
சொல்லக் கேட்டால் ஆகாதோ என்று நினைத்து –

கதம் நு மயி தர்மேன பிருதிவீம் அனுசாசதி
பவந்தோ த்ருஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மாஜம் –அயோத்யா -2-25-
வாரீர் கோள் -நான் அற நெறியில் தேசத்தை ஆண்டு வரும் போது இளவரசனைப் பார்க்க வேண்டும் என்று
எவ்வாறு விரும்புகிறீர்கள் -என்கிறபடியே
அறுபதினாயிரம் ஆண்டு சிறியது பெரியதை நலியாதபடியாக
பூமிப் பரப்பை அடைய நோக்கிக் கொண்டு
இதம் சரீரம் க்ருத்ச்னச்ய லோகஸ்ய சரதா ஹிதம்
பாண்டரஷ்ய ஆத்பத்ரஷ்ய சாயாயாம் சரிதம் மா -அயோத்யா -2-7-
எல்லா உலகங்கட்கும் நன்மையைச் செய்கிற என்னால் இந்த உடல் வெண் கொற்றக் குடையின் நிழலில்
கிலம் ஆக்கப் பட்டது -என்கிறபடியே
முத்தின் குடை நிழலிலே திரிந்து -எனக்கு என்று ஒரு சுகம் கோலாதே
உங்களைப் பாதுகாக்கும் தர்மத்தையே செய்து கொண்டு போந்தேன்-
நான் ஒரு வார்த்தை கேட்ட இடத்து – இப்போது நீ இருக்கச் செய்ய வேண்டாமோ
செய்ய வேண்டிய காலத்தில் செய்து கொள்ளுகிறோம் -என்னுதல்-அன்றியே
கார்யம் ஆகில் செய்ய லாகாதோ -என்று வார்த்தை சொல்லுதல் அன்றிக்கே –

ஜ்ஞான விஞ்ஞான சம்பன்ன நிதசே நிரத பிது
தாதுநாமிவ சைலேந்த்ரோ குணாநாம் ஆக்ரோ மகான் – கிஷ்கிந்தா -13-20-தாரை வாலி இடம் பேசியது
படு குலை அடித்தவனை தப்ப ஒரு அறவன் கீழே ஒதுங்க நினைப்பாரைப் போலே
என்னை விட்டு என் மகனே அமையும் என்று நீங்கள் விரும்புகைக்கு நான்
உங்களுக்கு செய்த தீங்கு என் என்ன –
நீ எங்களுக்கு செய்த தீங்கு ஒன்றும் இல்லை
உன் மகனுடைய குண அபராதங்கள் கான் இதற்கு அடி –
நீ நோக்கிக் கொண்டு போந்த படிகளில் ஒரு குறை இல்லை
குணவானாய் இருப்பான் ஒரு புத்ரனைப் பெற்று நாட்டினை படுகுலை அடித்தாய் காண் –
பஹவ -உன் அளவு அன்று காண்-காக்கும் தர்மத்தில் அவர்க்கு உண்டான பாரிப்பு

விராஜயன் ராஜ ஸூதா ராஜமார்க்கம் நரை வ்ருதம்
ஹ்ருதயானி ஆமமந்தேவ ஜனச்ய குண வத்தையா -அயோத்யா -26-2-
பொன் முதலிய தாதுக்கள் இமய மலையைப் போன்று
சௌலப்யம் முதலிய குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருப்பவன் -என்கிறபடியே
நாட்டிலே சிலரை குணம் இல்லாதவர் என்று பழித்தும்
சிலரை குணவான்கள் என்று கொண்டாடுகிறதும்
இன்ன ஆகாரத்தின் பொன் -என்று விலை பெறுமா போலே
இன்னார் இடத்திலே இருக்கிற குணம் -என்று ஆயிற்று புறம்பு விலை போவது
சிறந்த குணம் உள்ளவர் ஆகையாலே மக்களின் மனத்தினைக் கடைந்தவர் போல் ஆனார் –

—————–

ஒன்பதாம் பத்து -ஏழாம் திருவாய் மொழி -எங்கானல் -பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியிலே அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானத்தாலே -ப்ரீதியை உட்கொண்ட குணங்களின் நினைவாலே
மிகவும் ப்ரீதியை அடைந்தவர்
பாக்ய ஹானியாலே -நல் வினைக் குறையாலே ப்ரீதி இன்மையே தலையெடுத்து
அவனைப் பெற்றால் பிழைத்தல் -பெறா விடில் முடிதலாம்படி தனக்கு உண்டான தம்முடைய தசையை -நிலையினை
அந்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார் –

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து பிரிந்தாள் ஒரு ஸ்ரீ பிராட்டி
அவன் வடிவு அழகில் ஈடுபட்டு அவசன்னையாய் -துயரம் உற்றவளாய் –
தன் ஆற்றாமை கை கொடுக்க -தன் உபவனத்திலே சென்று அங்கு இருக்கிற பறவைகளைக் குறித்து
பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களம் -திரு நெடும் தாண்டகம் -10-என்கிறபடியே
தூது போவார்க்கு வருந்தி அறிவிக்க வேண்டாத படி
ஸ்ரீ திரு மூழிக் களத்திலே வந்து நின்று அருளினான்
தனக்கு நல்லாரை விட மாட்டாதவன் ஆகையாலே நம் தசை -நிலை அறியாது இருந்தான் அத்தனை –
க்ருபாவான் -அருள் உடையவன் ஆகையாலே நம் தசையை -நிலையை அறிவிக்க வரும்
உம்மைப் பிரிந்தார் தரிப்பாரோ என்று அறிவிக்க வேண்டும் என்று அவற்றை வினயத்தோடு இரக்கிறாள்-
ஒரு ஸ்ரீ பிராட்டி பேச்சாலே தம் நிலையை அருளிச் செய்கிறார் –

அஞ்சிறைய மட நாராய் -என்ற ஸ்ரீ திருவாய் மொழியிலே
நம் பக்கல் உள்ள அபராதத்தால் குற்றத்தால் வராது ஒழிந்தான் இத்தனை –
என் பிழையே நினைந்து அருளி –அபராத சஹத்வம் –
குற்றங்களைப் பொறுக்கும் அவனுடைய -அபராத சஹத்வம் -பொறை உடைமையை அறிவிக்க வருவான் –
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கே -என்று-அபராத சஹத்வம் —
பொறை உடைமையை பற்றாசாகக் கொண்டு தூது விட்டாள்-

வைகல் பூம் கழிவாய் -என்ற ஸ்ரீ திருவாய் மொழியிலே
நல்லது கண்டால்-சிறந்த செல்வம் – கால் தாழுமவன் ஆகையாலே
ஸ்ரீ திரு வண் வண்டூரில் ஸம்ருத்தியை -நிறைவினைக் கண்டு கால் தாழ்ந்தான் இத்தனை
தம் ஆர்த்தியை -துயரை அறிவித்தால் -என்னையும் உளள் என்மின்கள் –
தன் இனிமையில் நெஞ்சு வைப்பான் ஒருவன் அல்லன் –
என்று அது பற்றாசாக தூது விட்டாள் –

பொன்னுலகு ஆளீரோ-என்ற ஸ்ரீ திரு வாய் மொழியிலே
ஸ்ரீ திருக் கோளூர் ஏறப் போக -என்று
தன்னுடைய நகர உபவனத்து அளவும் சென்று மேலும் செல்லுவதற்கு பல ஹானியாலே –
வலி இல்லாமையாலே போக மாட்டாதே இருக்கிற ஸ்ரீ பிராட்டி -பின்னையும் வரக் காணாமையாலே –
யாவையும் யாவருமாய் – முன் உலகங்கள் எல்லாம் படைத்த –ஐஸ்வர்ய செல்வப் பரப்பாலே வாராது ஒழிந்தான் –
தண் துழாய் நமக்கு அல்லது நல்கான் -ஆஸ்ரிதர்களோடு அடியார்களோடு-ஏக ரசம் –
ஓன்று பட்ட இன்பத்தை உடையவன் ஆகையால் வரும் –
என்று ஐக ரஸ்யம்- ஓன்று பட்ட இன்பத்தை உடையவனாய் இருத்தலையே
பற்றாசாக தூது விட்டாள் –

இதில் தனக்கு நல்லராய் இருப்பாரை விட மாட்டாமையாலே வாராது இருந்தான் அத்தனை
தன் வடிவு அழகு அது -அக்கமலத்து இலை போலும் திரு மேனி அடிகளுக்கு –
குணங்கள் அவை -தமரோடு அங்கு உறைவார்க்கு –
ஆன பின்பு பிரிந்தார்க்குப் பிழைத்து இருக்கப் போமோ -என்று
அவன் வடிவு அழகையும் குணங்களையும் பற்றாசாக தூது விடுகிறாள் –

——————–

ஒன்பதாம் பத்து -எட்டாம் திருவாய் மொழி -அறுக்கும் வினை -பிரவேசம் –

ஸ்ரீ திருவடி சென்று ஸ்ரீ பிராட்டியைத் திருவடி தொழுது மீண்ட அநந்தரம் –
பின்னர் ஸ்ரீ பெருமாளை அடைவதற்கு முன்பு ஸ்ரீ பிராட்டிக்கு பிறந்த மநோ ரதம் -எண்ணங்கள் போலே
த்வம் சமேஷ்யசி ராமேண சசாங்கேந இவ ரோஹிணீ
ஷிப்ரம் ச தேவி சோகச்ய பராம் யாச்யசி மைதிலி -சுந்தர -39-45-
சந்த்ரனோடு ரோஹிணி சேர்வதைப் போலே நீ ஸ்ரீ ராம பிரானோடு சேர்வாய்
அதி விரைவில் சோகத்தின் உடைய முடிவை அடைவாய் –
ஸ்ரீ திருவடி வார்த்தையை எப்பொழுதும் எண்ணிக் கொண்டே இருந்த ஸ்ரீ சீதைப் பிராட்டி போலே
மேல் ஸ்ரீ திருவாய் மொழியில் விட்ட தூதுவர்கள்
அத் தலைப் பட்டு அவனைக் கொண்டு வருவதற்கு முன்பே
நடுவில் இவர்க்குப் பிறந்த மநோ ரதத்தை –
எண்ணங்களைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில் –

இப்படி தம்முடைய ஆர்த்தியை -துயரத்தை அறிவிக்கச் செய்தேயும்
அப்போதே வரக் காணாமையாலே அவசன்னரானவர் -துயர் உற்றவர்
தூது விடுகையாலும்-ப்ரேஷணத்தாலும் –
அவன் குணங்களை அனுசந்திப்பதாலும்
மனத்தின் தெளிவினாலும்
அவன் வந்து நம்மை விஷயீ கரித்து-அங்கீ கரித்து
அமர்ந்த நிலமான ஸ்ரீ திரு நாவாயிலே கொடு போகை நிச்சயம் என்று அறுதி இட்டு
க்ரமத்தில் போக பற்றாமையாலே பதறி
அங்கே புக வல்லேனே
புகும் நாள் என்றோ
அங்கே புக்கு என் கண்ணாரக் கண்டு அடிமை செய்ய வல்லேனே
என்று இப்படி அநேக மநோ ரதங்களை -பல வகையான எண்ணங்களை எண்ணுகிறார் –

உபாயமும் உபேயமும் இரண்டும் ஸ்ரீ ஈஸ்வரனே -என்று அத்யாவசித்தார்க்கு -அறுதி இட்டார்க்கு
பிராப்யத்திலே ருசி கண் அழிவு அற்றால்
விளம்பத்துக்கு காரணம் இல்லாமையால் –
பேறு சித்திக்கும் அளவும் மநோ ரதம் -எண்ணம் செல்லா நிற்கும் அன்றோ
இவ் எண்ணம் தான் இவனுக்கு தவிரதாதுமாய்
அது தான் இனியதுமாய்
இவனுடைய ஸ்வரூபத் தோடு சேர்ந்து இருப்பதுமான ஓன்று அன்றோ –

ஸ்ரீ பெரிய முதலியார் -ஸ்ரீ ஆளவந்தார் –
ப்ராப்ய சித்தியில் த்வரையாலே -பேற்றினை பெறுவதில் உள்ள விரைவாலே
எப்பொழுதும் இத் திருவாய் மொழியினைச் சொல்லிக் கொண்டே இருப்பார் –
ஆகையால் இத் திருவாய்மொழியினை ஸ்ரீ பெரிய முதலியார் திருவாய் மொழி –
என்று ஆயிற்றுச் சொல்லுவது –

அன்றிக்கே
விட்ட தூதுவர்கள் தாழ்ந்தார்கள் என்று தாமே அவன் வர்த்திக்கிற -எழுந்து அருளிய தேசத்துக்கு
ஏறப் போக ஒருப்படுகிறார் – என்பாரும் உண்டு –

————————

ஒன்பதாம் பத்து -ஒன்பதாம் திருவாய் மொழி மல்லிகை –பிரவேசம் –

படை வீட்டில் இருந்தால் மாமனார் மாமியாருக்கு கூசி ஸ்ரீ பெருமாளுடன் நினைத்த படி பரிமாறப் போகாது என்று
காட்டிலே ஏகாந்தமாக அனுபவிப்பதாக மநோ ரதித்துப் போந்த ஸ்ரீ பிராட்டியை
காந்தார மத்யே விஜ நே விஸ்ருஷ்டா பாலேவ கன்யா விலலாப சீதா என்கிறபடியே கூப்பிடப் பண்ணினாப் போலே
அது ஸ்ரீ திரு நாவாயிலே புக்கு அனுபவிப்பதாக மநோ ரதித்த இவருக்கு
பாதக வர்க்கத்துக்கு அஞ்சிக் கூப்பிடும் படியாய் விளைந்தது –

ஸ்ரீ பெற்றி ஒரு நாள் ஸ்ரீ நம்பி திருவரங்க நாராயண தாசர் என்பார் ஒருவர் என் பக்கலிலே
ஸ்ரீ திருவாய் மொழி கேட்டு அங்கே சென்றாராய்
இன்று ஸ்ரீ பிள்ளை பாடு விநோதம் என் என்று கேட்டவாறே –
அறுக்கும் வினை சாற்றினோம் -என்றாராய் –
நாளை மல்லிகை கமல் தென்றலும் மாலைப் பூசலும் என்னாய்-என்று பணித்தாராம் –

ப்ராப்ய வஸ்துவை பெறும்படியை மநோ ரதித்தார் கீழில் திருவாய் மொழியில்
மநோ ரத சமனந்தரம் பெறக் காணாமையாலே –
ஸ்ரீ திருவாப்பாடியில் உள்ளார் ஸ்ரீ கிருஷ்ணனைப் பிரிந்து ஒரு ராத்ரி பட்ட வியஸனத்தை இவர்
ஒருத்தரும் படுகிறார் என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்யும் படி என்று ஸ்ரீ திருமாலை ஆண்டான் பணிக்க –
அத்தை ஸ்ரீ எம்பெருமானார் கேட்டு அருளி –
முன்பே ஆற்றாமையால் தற்பு அற்று இருக்கிறவர் ஆகையால் அத்தனை ஆடல் கொடுக்கைக்கு வேண்டும்
ஆஸ்ரயம் போராது -ஆன பின்பு அவனைப் பிரிந்து ஒரு ஸந்த்யையில் பட்ட நோவைப் படுகிறார் –
என்று அருளிச் செய்வர் –

இது தன்னில் செய்ததாகிறது என் என்னில்
ஞானம் பிறந்த பின்பு விரோதியான சம்சாரத்தில் சம்பந்தத்தை அறுத்துத் தந்து அருள வேணும் என்று
அபேக்ஷிக்கச் செய்தேயும் இவரைக் கொண்டு சில பிரபந்தங்கள் தலைக் கட்ட வேணும் என்று
இருக்கையாலே அப்போதே அப்படிச் செய்திலன் –
அந்த விரோதியில் அருசி இவ்வளவும் வர நிலை நின்ற படி சொல்லுகிறது இறே
இங்குத் தான் செய்கிற இது வேதாந்தங்களில் போகிற கட்டளையில் என்னாவது என் என்னில்
தஸ்ய தாவதேவ சிரம்-என்கிற அர்த்தத்தை சொல்லுகிறது
தஸ்ய தாவதேவ சிரம் யாவத் நவிமோஷ்யே அத சம்பத்ஸ்யே -இறே அநந்தரம்-

முடியானேயில் தம்முடைய காரணங்களுக்கு உண்டான ஸைதில்யத்தைச் சொன்னார்
இதில் அந்த கரணங்களோடு கூட அவற்றுக்கும் ஆஸ்ரயமான அவயவி தான் ஒன்றாக அழிகிற படியைச் சொல்லுகிறது –
ஞான இந்த்ரியங்களோடே கர்ம இந்த்ரியங்களோடே வாசி அற ஒன்றாக அழிகிற படியைச் சொல்லுகிறது-

ஸ்ரீ ராமாவதாரத்தில் பதினான்கு ஆண்டு போலே ஆயிற்று
ஸ்ரீ திரு வாய்ப்பாடியில் உள்ள பெண்களுக்கு
ஸ்ரீ கிருஷ்ண விரஹத்தாலே ஒரு ஸந்த்யை மாலைப் போது-
குணாதிக விஷயத்தை -குணங்களால் மேம்பட்ட பெருமாளைப் பிரிகையாலே
அங்கு பதினான்கு ஆண்டுகளாய்க் கழியவும் கூடும்
இங்கு இவன் நீர்மையிலே கை யடி உண்டு இருக்கையாலே
தீம்பனான நீர்மையிலே ஈடுபட்டு -ஒரு பகல் அநேக -பல கல்பமாகத் தோற்றுகிறது –
விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே-திரு விருத்தம் -70
குணங்கள் தாம் கால் கட்டுவான குணங்களாய் அல்லவே
அவ்வாஸ்ரயத்தில் -ஸ்ரீ பெருமாள் இடத்தில் கிடந்தவையாய் அன்றோ
இங்கு தர்மி அதுவேயாய் -குணங்களால் மேம்பட்டதாய் –
அதற்கு மேலே தீம்பும் ஆனால்
பாடு ஆற்றப் போகாதே அன்றோ -துன்பம் பொறுக்கப் போகாது என்றது ஆயிற்று

நாட்டார் போக்யதா புத்தி -உலகத்தார் இனிமை உண்டு என்று நினைத்து இருக்கிற-சப்தாதி –
ஐம்புல விஷயங்கள் அனைத்தும் தமக்கு பாதகமாக -துன்புறுத்துவனவாக-
ப்ராப்ய வஸ்துவை பெறாதே -பெற வேண்டிய பொருளைப் பெறாமல்
ஆண் புலியான ஸ்ரீ பீஷ்மர் ஸ்ரீ அர்ஜுனன் கையிலே அம்புகளால் உளைய
ஏவுண்டு கிடந்து துடித்தால் போலே
நடுவே கிடந்தது துடிக்கிறார் –

ஸ்ரீ திரு வாய்ப்பாடியிலே பெண்கள் ஸ்ரீ கிருஷ்ணன் பசு மேய்க்கப் புறப்பட்டால்
அவன் வரும் அளவும் அவர்கள் படும் பாடு சொல்லுகிறது –
அதாவது பிராமணர்க்கு சந்த்யா வந்தனம் போலே அன்றோ
ஆயர்கட்கு பசு மேய்க்கை ஆயிற்று
அது ஜாதிக்கு உசித – உரிய தர்மம் ஆகையாலே தவிர்க்க ஒண்ணாது இருக்கும் அன்றோ –
இப்படியாலே அவனை பசுக்களின் பின்னே புறப்பட விட்டு
அவன் வரும் ஸந்த்யையை -மாலை நேரத்தை பார்த்து இருப்பார்கள் அத்தனை -ஆயிற்று

ஆக
அவன் பசு மேய்க்க போனால் பகல் பொழுதை வருந்தி ஒரு படி ஆற்றினால்
அவன் வரும் காலமான மாலைப் பொழுதும் வந்து முகம் காட்டி
பசுக்களின் முற் கொழுந்து வந்து தலை வைக்கச் செய்தேயும்
அவன் வரக் காணா விட்டால் ஆற்றப் போகாதே அன்றோ –
அதாவது
அவன் தான் முற் கொழுந்திலே வாராமல் பிற் கூழையிலே நிற்கும் ஆயிற்று
நடுவு படும் அலமாப்பு காண்கைக்காக
அவன் வரக் கூடிய காலமான ஸந்த்யை -மாலைப் பொழுதும் வந்தது
கூட வரும் பசுக்களும் வந்தன -ஆ புகும் மாலையும் ஆகின்றது –
பசுக்களும் வந்தன -மாயன் வாரான் –அவன் தான் வரக் காணா விட்டவாறே
அக்காலத்தில்
மல்லிகையின் பரிமளம்
நல்ல குறிஞ்சி இசை தொடக்கமான -அனுகூல பதார்த்தங்கள் -இன்பப் பொருள்கள்
தென்றல்
நிலா
கடல் ஓசை
அன்றில்
குழல் ஓசை
முதலானவை பாதகமாக -துன்புறுத்தத் தொடங்கின
குழல் ஓசையும் அவ்வழியே அவனுடைய குணங்களை ஸ்மரிப்பித்து – நினைவு ஊட்டி நோவு படுகைக்கு
உடலாய் இருக்கும் அன்றோ –

அப்படி இருக்கிற பாதக -துன்புறுத்துகின்ற பொருள்கள் எல்லாம்
முன்பு தனித் தனியே பருஷ பாஷணங்களை -இழி சொற்களைப் பேசி நலிந்த
ஏகாஷி ஒற்றைக் கண்ணள்
ஏக கர்ணி- ஒற்றைக் காதள்
உள்ளிட்ட ராக்ஷஸிகள் -அரக்கிகள் பின்பு
அவ்வளவிலே நில்லாதே எல்லாரும் ஒரு சேர மேல் விழுந்து
அதற்கு மேலே சில நலிவுகளைச் செய்ய நினைத்தால் போலே-பாதக வர்க்கம் அடைய –
துன்புறுத்துகின்ற பொருள்கள் எல்லாம்
தனைத் தனியேவும் திரளவும் மேல் விழுந்து நலிய
அவற்றால் நலிவு பட்டவர் எல்லாரும் கூப்பிட்ட கூப்பீட்டை
இவர் ஒருவருமே கூப்பிடுகிறார்-

———————-

ஒன்பதாம் பத்து -பத்தாம் திருவாய் மொழி -மாலை நண்ணி -பிரவேசம் –

அறுக்கும் வினையாயின -என்ற ஸ்ரீ திருவாய் மொழியிலே அவனை பெற
வேண்டும் என்ற மநோ ரதமாய் -எண்ணமேயாய்ச் சென்றது –
மநோ ரத -எண்ணின சமயத்திலே -அபேக்ஷித்தபடி விரும்பியபடி கிடையாமையாலே
மிக்க கிலேசம் -துன்பத்தை அடைந்தபடி சொல்லிற்று -மல்லிகை கமழ் தென்றல் என்ற திருவாய் மொழியில்
அது தான் இரவில் வியசனமாக நோவு பட்ட படி அன்றோ –
இப்படி எண்ணினவாறு பெறாமையாலே
நோவு படுகிற இவருடைய அவசாதத்தை அனுசந்தித்து -துன்பத்தினை நினைத்து

ஸ்ரீ சர்வேஸ்வரன்
நீரோ இப்படி மநோ ரதிப்பீரும் -எண்ணுவீரும்-அது கிடையாமல் துன்பப் படுவீரும்
உம்மைப் பெற வேண்டும் என்று எண்ணுவோரும் நாம் அன்றோ
உம்மைப் பெறாமையால் இழவு பட்டோமும் நாம் அன்றோ
உமக்கு ஒரு குறை உண்டோ
ஸ்ரீ கலங்கா பெரு நகரம் கலவிருக்கையாய் இருக்க-அவ்விடத்தை விட்டு
ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே வந்து நாம் சந்நிதி -எழுந்து அருளி இருப்பதும் உமக்காக அன்றோ
நீர் விரும்பியதை உம்முடைய சரீரத்தின் அவசானத்திலே -முடிவிலே –செய்யக் கடவோம் –
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –என்று சமாதானம் செய்ய
சமாதானத்தை அடைந்தவராய் இவரும் ஹ்ருஷ்டர் -உவகையர் ஆகிறார் –
அவன் ஓன்று செய்யக் கடவோம் -என்றால்
அப்போதே பெற்றதாக நினைத்து ஹ்ருஷ்டர் உவகையர் ஆகலாம்படி அன்றோ அவன்படி இருப்பது –

இப்படி ஹ்ருஷ்டராய் -உவகையராய் அவன் படி இதுவான பின்பு
ஸ்ரீ சர்வேஸ்வரன்-சர்வ ஸமாஸ்ரயணீயனாய்- எல்லாராலும் பற்றப்படுபவனாய்க் கொண்டு –
சரணமாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் –
தொழுது எழுமினோ தொண்டீர் –
ஸ்ரீ திருக் கண்ணபுரத்தில் அணித்தாக சந்நிதி -எழுந்து அருளி இருக்கிறான்
எல்லாரும் ஒரு சேர அவனை ஆஸ்ரயியுங்கோள் -அடையுங்கோள்
ஆஸ்ரயிக்கும் -அடையும் இடத்தில் அவன் திருவடிகளில் பக்தியைப் பண்ணுங்கோள் –
முதல் நான்கு பாசுரங்களில் பக்தி பற்றி அருளி –

மேலே பிரபத்தி பற்றி அருளி
பக்திக்கு பரிகரம் -சாதனம் இல்லாதார் பிரபத்தியை செய்யுங்கோள்
அதற்கு ஈடான அத்யாவசயம் -தகுதியான மன உறுதி இல்லாதார்
ஸ்ரீ திருக் கண்ணபுரம் -என்ற வார்த்தை மாத்ரம் ஆகிலும் சொல்லுங்கோள் -பத்தாவது பாசுரத்தில் –
அவ்வளவே கொண்டு அவன் தான் கை விடான்
ஆன பின்பு எல்லாரும் ஒரு சேர அவனை ஆஸ்ரயியுங்கோள் -அடையுங்கோள்
என்று பரோபதேசத்தில் மூளுகிறார்

மோஹித்துக் கிடப்பார் ஆகில் கிடப்பார் இத்தனை போக்கி
உணர்ந்தார் ஆகில் பிறர்க்கு ஹிதம் -நலம் சொல்லி அல்லது நிற்க மாட்டார் –

பிராரப்த கர்மங்களின் முடிவில் மோஷமாகக் கடவது -என்று அன்றோ
வேதாந்தங்களில் சொல்லப் பட்டு இருக்கின்றது
சரீரத்தின் அவசானத்தில் முடிவில் உம் அபேக்ஷிதம் -நீர் விரும்பியதை செய்யக் கடவோம்
என்று ஸ்ரீ சர்வேஸ்வரன் சொன்ன இடமும்
அதனைக் கேட்டு இவர் உவகையர் ஆன இடமும் பொருந்துமோ -என்னில்
இத் திருவாய் மொழியில் -பக்தியை செய்யுங்கோள் என்றும்
அது மாட்டாதார் பிரபத்தியை செய்யுங்கோள் என்றும் சொல்லிற்றே அன்றோ –

வேதாந்தங்களில் உபாசகன் ஆகிற அதிகாரியை நோக்கிச் சொல்கிறது
இங்குப் பிரபன்னனுக்கு சொல்லுகிறது
தஸ்ய தாவதேவ சிரம யாவன்ன விமோஷ்யே-என்கிற
வாக்கியம் அன்றோ இவ் வர்தத்தைச் சொல்லுகிறது
இந்த உபநிஷ வாக்கியம் தான் சரீரத்தின் முடிவில் மோஷம் என்பதனைச் சொல்லுகிறதோ
கர்மங்களின் முடிவில் -அவசானத்தில் -மோஷம் என்பதனைச் சொல்லுகிறதோ என்று விசாரித்து
கர்மங்களின் முடிவில் அவசானத்தில் -மோஷம் என்பதனைச் சொல்லுகிறது
என்று -ஸ்ரீ பாஷ்யகாரர்-சித்தாந்திப் படுத்தி உள்ளாரே அன்றோ
அதனோடு சரீரத்தின் முடிவில் மோஷம் என்று இங்கே சொன்னது முரண் படாதோ என்னில்

நியாய அநுக்ரஹீயதமாய் -நியாயத்தோடு கூடிய வாக்கியம் அன்றோ பொருளை அறிவிப்பதற்கு உரியது ஆவது
உபாசகனுக்கு தான் பற்றின உபாயம் முற்றுப் பெற்ற பின்னரே பலிக்க வேண்டி இருக்கையாலே
அவ்வளவும் நியாயம் நடக்கும்
பிரபன்னன் முதல் அடியிலே -என்னுடைய எல்லா பாபங்களுக்கும் நீயே கடவாய் -என்று கொண்டு
ஸ்ரீ சர்வேஸ்வரன் பக்கலிலே பர ந்யாசம் செய்தவன் அன்றோ
இவன் தான் இனி செய்கிறது என்று ஓன்று உண்டாய் அது முடிந்த பின்பு பெற வேண்டும் என்னும்
கால தாமதத்துக்கு காரணம் இல்லையே
இதனால் பர ந்யாசம் பண்ணப் பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு ஆற்றல் இல்லை
அதனால் அது விளம்பதுக்கு காரணம் ஆகின்றது என்று சொல்லுவதற்கும் இன்று –
ஆக
இப்படி நியாயங்கள் காட்டினவாறே
இவனுக்கு சரீரத்தின் முடிவிலே பேறு கிடைப்பதற்கு தட்டு இல்லை அன்றோ

இனித் தான்
அதாத்ர மாதலீ சாப தபஸ் தப்த்வா ஸூ துஷ்கரம்
பகவந்தம் பிரபன்னா ஸா பகவந்தம் அவாப ஸா – காருட புராணம் -ஸ்ரீ ரங்க மகாத்மியம் -அத்யா-3
அவள் ஸ்ரீ பகவானைச் சரண் அடைந்தாள்– ஸ்ரீ பகவானை அடைந்தாள் -என்கிறபடியே
ஸ்ரீ மாதவி சரணாகதி செய்து அநந்தரம் மோஷத்தை பெற்றாள் ஆகச் சொல்லப் பட்டுள்ளது அன்றோ

முத்கல உபாக்யானத்தில் நரக அனுபவம் பண்ணுவர்களும் ஸ்ரீ பகவந் நாம ஸ்ரவணத்தாலே அநந்தரம் முக்தர் ஆனார்கள்-
நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சுவர்க்கமாகும் நாமங்கள் உடைய நம்பி
அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அழிய மாந்தர்
கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவல்கின்றேனே -திருமாலை

அவதார ரகஸ்ய ஞானம் உடையவன் இந்த சரீரத்தின் முடிவிலே பேறு பெறக் கடவேன் –
என்றே சொல்லா நின்றது அன்றோ –
த்யக்த்வாம் தேஹம் புனர் ஜன்ம நைதிமாம் ஏதிச அர்ஜுன -ஸ்ரீ கீதை -4-9-
த்யக்த்வா தேஹம்-உபாசனனுக்கு விஷயமானாலும் கிம்புநர் நியாயத்தாலே பிரபன்னனுக்கும் சித்திக்கையாலும்
சரீரத்தின் முடிவில் மோஷம் என்பதற்கு பிரமாணம் ஆக குறை இல்லை –
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச -ஸ்ரீ கீதை –18-66-

நன்று
ஆனால் சரணாகதி செய்த உடனே ஸ்ரீ பகவானை அடைதல் வேண்டாவோ
இந்த விரோதியைப் போக்கி உன் திருவடிகளைத் தர வேண்டும் என்று அன்றோ இவன் விரும்புவது
பின்பும் தனக்கு விருப்பம் இல்லாத இச் சரீரத்தோடு இருக்கும் இருப்பு
கர்மங்கள் அனுபவித்து முடிவு பெறாமையாலே ஆவதோ
ஸ்ரீ சர்வேஸ்வரன் வைக்க இருக்கிறான் ஆவதோ -என்னில்
ஸ்ரீ சர்வேஸ்வரன் வைக்க இருக்கிறான் ஆகில் அவனுக்கு சில குற்றங்கள் உண்டாகும்
அவன் தான் நம் இரு வினைகளையும் நடுவே துண்டித்து
அவ் வருகே கொண்டு போகிறேன் என்று சொன்னதோடும் முரண்படும்
ஆன பின்பு கர்மங்கட்கு கட்டுப் பட்டவர்கள் போன்று இன்ப துன்பங்களை இவனும்
அனுபவித்து இருக்கையாலே கர்மத்தாலே யாம் இத்தனை அன்றோ –

நன்று
இனிக் கர்மம் நடையாடக் கடவது ஆனால்
பிராரப்த கர்மங்களை அனுபவித்து முடிகிற வரையிலும் போகத் தட்டு என் என்னில்
அதிகாரி விசேஷத்தாலே அது வேண்டா
யாங்கனம் எனின்
1-இவன் சரணாகதி செய்த அளவிலே முக்தனாம் ஆகில்
இது தன்னை நச்சுப் பொய்கை போன்றதாக நினைத்து அஞ்சுவார்கள் –
அதனால் ஆள் பற்றாது
2-இனி அவனை இங்கே சில நாள் வைக்கவே
ஸ்ரீ பீஷ்மரைக் கொண்டு நாட்டுக்கு வெளிச் சிறப்பைச் செய்து கொடுத்தால் போலே
இவன் சிலருக்கு உபதேசித்தும்
இவனுடைய விருத்தத்தை -ஒழுக்கைத்தைக் கண்டு திருந்துவாருமாய்
இங்கனம் சில நன்மைகளும் காரணமாக இருக்கும்
3-இனித் தான் -இவனை நமக்கு தந்த சரீரம் அன்றோ -என்று
இறுதியாக இந்த சரீரத்தை ஈஸ்வரன் தானாக உபேஷிக்கவும் மாட்டான்
சந்தாம் ச யாக் சந்ததே ப்ரஹ்மனைஷ ரமதே தஸ்மின் உத ஜீர்னே
சயாநேன ஏனம் ஜாஹாதி அஹ ஸூ பூர்வயேஷூ-யஜுர் வேதம் ஆருணம்
முதுமை அடைந்த இவன் சரீரத்தை விடாதவன் ஆகி
ஸ்ரீ இறைவன் இச் சரீரத்தில் இன்புற்று வசிக்கிறான் -பிரமாணம்
இது காறும் ஆர்த்த பிரபன்னன் விஷயமாக மூன்று விஷயங்களை அருளி

மேலே த்ருப்த பிரபன்னன் விஷயமாக ஒரு விஷயம் அருளிச் செய்கிறார்
இவன் தான் சரணாகதி செய்யும் காலத்தில்
இப்போதே இவ் உடல் நீங்கி உன் திருவடிகளை பெற வேண்டும் -என்னும் விரைவும்
இவனுக்கு உண்டாக காரணம் இல்லை
முகம் பழகினது ஆகையாலே -இச் சரீரத்தை விட -என்றால் கடுக இசையான் –
இனி வேறு ஒரு சரீரத்தை அடைதல் கர்ப்ப வாசம் செய்தல்
செய்யாது ஒழிய வேண்டும் என்னும் அளவாயிற்று இவனுக்கு உண்டாகில் உண்டாவது
ஆகையாலே -தத் க்ரது-நியாயத்தாலே எங்கனம் நினைத்தானோ அங்கனமே பலித்தல் –
அப்படியே பேறாக இருக்கும்
ஆகையால் இவனுடைய நினைவையும் நோக்கி
இவன் தான் இச் சரீரத்தில் ஆசை வைத்து இருந்தானே ஆகில் நாலு நாள் இருந்திடுவானுக்கு
என்று இருப்பன் ஸ்ரீ சர்வேஸ்வரன் –

ஆனால்
இங்கு இருக்கிற நான்கு நாள்களும் ஆதி வியாதிகளுக்கு இடம் கொடாதபடி
மற்றையோரைக் காட்டிலும் வேறுபாடு தோற்ற மிக உயர்ந்த இன்பத்தினை உடையவனாக
இவனை வையாது ஒழிவான் என் -என்ன
உலகத்து மக்களைப் போன்று ஒன்றனை இழந்த காலத்தில் துன்புற்றும்
விரும்பிய பொருள்களை பெற்ற காலத்தில் இன்புற்றும்
போரும்படிக்கு தகுதியாக வைக்கிறது என் -என்னில்
இவன் தன் சரீரத்தைப் போக்கி உன்னைத் தர வேண்டும் என்றோ அன்றோ விரும்பியது
இச் சரீரம் தான் தண்ணியது என்று அறிந்து இருக்கச் செய்தேயும் விட மாட்டாது
இச் சரீரத்தில் இன்பத்தையே அனுபவிக்குமாறு வைக்கும் அன்று இது தான் நன்றாய் இருந்ததாகில்
இன்னம் சில நாள் இச் சரீரமே தொடர்ந்து நமக்கு இருந்திடுக என்று விரும்புவான் அன்றோ
இவனுடைய இச்சைக்கு ஈடாக வைக்கும் அன்று இன்னமும் ஒரு சரீரத்திலே இவனுக்கு ருசி உண்டாகவும் கூடுமே
ஆகையால் இவனுடைய நலத்திலே நோக்கு உடையவனாய்
இவன் இருந்தபடி இருக்கிறான் என்று இருப்பான் இறைவன்
கையால் முகம் பழகின இச் சரீரம் தன்னடையே கழிய
இனி வேறு ஒரு சரீரத்திலே இவனுக்கு ருசி பிறப்பதற்கு முன்பே ஈஸ்வரனுக்கு
கார்யம் செய்து தலைக் கட்டலாய் இருக்கும்
முகம் பழகின இச் சரீரம் தன்னடையே கழிந்து கொடு நிற்கும்
மேல் வரப் புகுகிறது அறியாமையாலே அச் சரீரத்திலே ருசி இல்லை
இது தான் பொல்லாதது என்று போலியாக அறிந்தும் வைக்குமே
இவன் முதலிலே இச் சரீரத்தை நீக்கி அருள வேணும் -என்று ஒரு வார்த்தை சொல்லி வைக்கையாலே
அவன் விரும்பாதது ஒன்றை செய்தானாகவும் சொல்ல ஒண்ணாதே அன்றோ –

இனி
இறக்கும் நிலையிலே காஷ்ட பாஷாண சன்னிபனாய் இருப்பானே அன்றோ இவன் தானே
ஆகையால் முதலில் சொன்ன வார்த்தையை கொண்டு இவன் விலக்க மாட்டாத அளவில்
ஸ்ரீ ஈஸ்வரன் காரித்தைச் செய்து தலைக் கட்டுவான்-
தத தம் ம்ரியமானம்து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதம் -ஸ்ரீ வராக சரம ஸ்லோகம்
அறிவில்லாத பொருளைப் போன்று கிடக்கிறவன் தலையிலே ஒரு தேவை இடேன் –
நானே நினைக்கக் கடவேன் -என்று சொல்லி வைத்தானே அன்றோ –
இந்த இரண்டு ஸ்லோகங்களும் எம்பெருமானுடைய சர்வ ஸ்வம் -முழுச் செல்வம் -என்று சொல்லக் கடவது அன்றோ

மனஸி ஸ்திதே –
நின்றவா நில்லா நெஞ்சம் -பெரிய திருமொழி -1-1-4-ஓர் இடத்திலே நிற்பது
பட்டி நின்று திரியும் பசு உடையவனுக்கு ஓர் கார்யத்தை செய்யத் தொடங்குவதற்கு முடியாதே அன்றோ –
நெஞ்சை -மனத்தினைக் கொண்டு தொடங்க வேண்டும் அன்றோ புருஷார்த்தத்தை பெறும் போதும் –
சஞ்சலம் ஹி மன கிருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்
தச்யாஹம் நிக்னஹம் மன்யே வயோரிவ ஸூ துஷ்கரம் -ஸ்ரீ கீதை -6-34-
காற்றினைப் போன்று அம் மனத்தினை அடக்குதல் எனபது செய்ய முடியாத கார்யம் என்று
நான் நினைக்கிறேன் என்றான் அன்றோ அவனும்
த்ருஷ்ட்வைவச ஊர்வசீம் ப்ராப்தாம் லஜ்ஜாவ்ருத விலோசன
பாதாபி வந்தனம் க்ருத்வா குரு பூஜாம் ப்ரயுக்த வான் -பாரதம் ஸ்லோகம்
எந்தை பெயர் புனை யாயு எனும் பேர் முடி இறைவன்
தந்தைக்கு உயிர் நிகராகிய தளவத் திரு நகையாய்
கொந்து உற்றெழு குழலாய் குழல் நிகராகிய மொழியாய்
வந்துற்றது என என அன்னை மலர்த்தாள் களில் வீழ்ந்தான் –
வில்லி புத்தூரார் செய்யுள் -ஆரண்ய பர்வம் அர்ஜுனன் தவ நிலை சுருக்கும் -160-
உலகத்தார் ஊர்வசியின் உலகத்துக்கு செல்ல விரும்பி அதற்கு வேண்டிய சாதனங்களைச் செய்யா நிற்க
அந்த ஊர்வசியே வந்து கிட்டி நிற்க –
நீ என் தாயே அன்றோ -என்று கைகூப்பி வணங்கி கிடக்க வல்ல
விரக்தன் அன்றோ இவ் வார்த்தை சொல்கிறான்

ஸூஸ்வஸ்தே சரீரே –
பரிணாம த்ரவ்யமான -வேறுபாட்டினை அடியைக் கூடியதான இந்த சரீரமும் ஒரு நிலையிலே நிற்பது
தாது சாம்யே ஸ்திதே –
அதற்கு உறுப்பாக தாதுக்களும் ஓன்று முடங்கி ஓன்று நிமுருகை அன்றிக்கே இவை எல்லாம் சமமாய்
சரீரத்திலே ஒரு லாவகம் -நொய்ம்மை பிறந்து சத்துவம் தலை எடுத்த போதாக
நம்மை யாவன் ஒருவன் நினைக்கிறான் -என்றது
நாம் யார் -சரீரம் ஆகிற இது அசத்தாக -அறிவில்லாத பொருளாய் இருந்தது –
சரீரத்துக்கு வேறு பட்டதாய் ஒரு ஆத்மா உண்டு
அவ்வாத்மாவானது ஈஸ்வரனுக்கு சேஷ பூதன் -அடிமைப் பட்ட பொருள்
ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பெறுதல் இவ்வாத்மாவுக்கு மோஷம் ஆகிறது -என்று ஸ்மரித்து- நினைக்கிறவன் -என்றபடி –
விஸ்வ ரூபஞ்ச மாம் –
குடல் தொடக்கத்தால் முள் பாய்ந்தால் வரும் துன்பம் ஆத்மாவினது ஆமாறு போலே
இவற்றுக்கு வந்த இன்ப துன்பங்கள் தனக்கு வந்தனவாம்படி
எல்லா வற்றையும் சரீரமாக உடையனாய் இருக்கிற என்னை –
அஜம் –
இவனைப் போன்று ஜென்ம நிபந்தமான -பிறவி காரணமான கலக்கம் இன்றிக்கே இருக்கை அன்றோ –
விஸ்வ ரூபஞ்ச மாம் -அஜம் -நாராயணன்
ஸ்வாமித்வம் சௌலப்யம் வாத்சல்யம் சௌசீல்யம்
அஜம் -ஞான சக்தியாதிகள் –
தத
ஆகையாலே
தம் காஷ்ட பாஷாண சந்நிபம் ம்ரியமாணம் அஹம் ஸ்மராமி
நடையாடித் திரியும் அன்று இவனுக்கும் உண்டே அன்றோ இந் நினைவு
அசித் கல்பனாய் -அறிவில்லாத பொருளைப் போன்று கிடந்த அன்றும் இவன் நினைதிலன் -என்ற தேவை இடாதே
நான் அவனை எப்போதும் நினைத்தபடி நிற்பன்
மத் பக்தம் –
அடைகொடு பாழ் பொகடுமவனையோ அவன் பற்றிற்று -என்றது –
பல நாள்கள் பச்சை இடுவித்துக் கொண்டு காரிய காலத்தில் வந்தவாறே
பச்சை இடாத நாள்களை எண்ணி அகற்றுமவனையோ பற்றிற்று -என்றது
நயாமி பரமாம் கதிம் –
கள்வன் கொல் -பெரிய திருமொழி – 7-7-1-ஸ்ரீ பிராட்டியை அத்வாளத்தலையை-முந்தானையின் தலையில் –
இட்டு மறைத்து கொடு போனால் போலே தானே கையைப் பிடித்து கொடு போமாயிற்று -என்றது
ஸ்ரீ ஆதி வாஹிகரை வரக் காட்டி யாதல்-ஸ்ரீ பெரிய திருவடியை வரக் காட்டி யாதல்
கொடு போகை அன்றிக்கே
ஸ்ரீ ஆதி வாஹிகரில் முதன்மையான தானே கொடு போம் -என்றபடி –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி ஒன்பதாம் பத்தில் –பத்தாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

July 28, 2019

இத் திருவாய் மொழியில் சொல்லப் படும் பொருளாவது-ஆஸ்ரயணத்தை- இறைவனைப் பற்றுமின் –
என்பதனை இப் பாசுரத்தில் ஸங்க்ரஹேண- சுருங்க அருளிச் செய்கிறார்-

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின் மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-

——————–

இவ்விஷயத்துக்கு -ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு என் வருகிறதோ -என்று அஞ்சும் சாபலம் -ஆசை உடையார்-ஸூ ரஷிதமான –
காவலோடு கூடிய தேசம் என்று-நிர்ப்பயராய் – அச்சம் இல்லாதவர்களாய்-நித்தியமாக ஆஸ்ரயியுங்கோள் –
நாள் தோறும் தொழுது எழுமின் –என்கிறார்

கள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே–9-10-2-

——————-

ஸ்ரீ திருக் கண்ணபுரத்தில் நின்று அருளினவன் உபய விபூதி நாதன் ஆயிற்று
உங்கள் துயர் கெட அநந்ய பிரயோஜனராய் வேறு ஒரு பயனையும் கருதாதவர்களாய்
ஆஸ்ரயியுங்கோள் -வணங்குங்கோள் என்கிறார்

தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே-9-10-3-

————————

ஆஸ்ரயிக்கும் -அடையும் இடத்தில் ஸ்ரீ நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக ஆஸ்ரயியுங்கோள் அடைமின் –
அவன் உங்களுக்கு ரக்ஷகனாம் – –என்கிறார் –

மானை நோக்கி மடப் பின்னை தன் கேள்வனைத்
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே–9-10-4-

———————–

இப்படி பக்தி யோகத்தால் ஆஸ்ரயிக்க ஷமர் இன்றிக்கே -அடைவதற்கு தகுதி இல்லாதவர்களாகி
தன் திருவடிகளையே உபாயமாகப் பற்றினார் திறத்து அவன் செய்து அருளும் படியை அருளிச் செய்கிறார்

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-

———————-

தன்னை ஆஸ்ரயிப்பாருடைய -அடைகின்றவர்களுடைய விரோதிகளைப் போக்கி
அவர்களுக்கு மிகவும் ஸ்நேஹியாம் -அன்பன் ஆம் என்கிறார் –

அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே–9-10-6-

——————-

அநந்ய பிரயோஜனருக்கு ஸூலபனாய்-பிரயோஜனாந்தர பரருக்கு அதனைக் கொடுத்து
தான் அகல நிற்பான் என்கிறார்

மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே–9-10-7-

———————–

அவனை ஆஸ்ரயியுங்கோள் -அடையுங்கோள்- உங்கள் துக்கத்தையும் துக்கத்துக்கு ஹேதுவான சம்சாரத்தையும் –
காரணமான பிறப்பினையும் போக்கி அருளுவான் – என்கிறார்

அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே–9-10-8-

——————-

உபதேச நிரபேஷமாக -ஒருவருடைய உபதேசமும் இல்லாமலே நான் முன்னம் அவனை ஆஸ்ரயித்து –
அடைந்து ஸூகியாக இன்பத்தினை அடைந்தவன் ஆனேன் என்று ப்ரீதர் ஆகிறார்

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9-

——————–

ப்ரீதியின் அதிசயத்தாலே -மிகுதியாலே கீழ் இரண்டு திருப் பாசுரங்களாலே தமது பேற்றினைச் சொல்லி
பக்தி பிரபக்தி இரண்டுக்கும் ஷமர் -தகுதி இல்லாதவர்கள்
ஸ்ரீ திருக் கண்ணபுரம் என்ற யுக்தியை வார்த்தையினைச் சொல்லவே-ஸமஸ்த துக்கங்களும் எல்லா துன்பங்களும் போம் –
என்கிறார் –

இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10-

———————

நிகமத்தில்-பிரதிபந்தகங்கள் ச வாசனமாக – உங்களுடைய துன்பங்கள் எல்லாம் வாசனையோடு போக வேண்டி இருக்கில்
இத் திருவாய் மொழியில் ப்ரீதி பூர்வகமாக -முன்னாகச் சொல்லிக் கொண்டு அவன் திருவடியைப் பற்றுங்கோள்-ஆஸ்ரயியுங்கோள் –
என்கிறார்

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11-

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி ஒன்பதாம் பத்தில் –ஒன்பதாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

July 28, 2019

சந்த்யா -மாலைக் காலத்தில் தென்றல் தொடக்கமான பொருள்கள்
தனித் தனியே பாதகமாகிற -தன்னை வருத்துகிறபடியைச் சொல்லுகிறாள்-

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ
வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ
செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-

—————-

முன்பு தூசி ஏறின பேர்க்கு உரமாக நின்று பேரணி உறு பூசல் ஆனவாறே
திரள அமுக்குமாறு போலே தனித்தனியே நலிந்த பொருள்கள் பல ஹானி –
வலிமை குறைய குறைய பல கூடி வந்து நலியா நின்றன – என்கிறாள்
மணி தென்றல் ஆம்பல் மாலை சாந்தம் பஞ்சமம் முல்லை வாடை அனைத்தும்
திரளாக வந்து நலிகிற படியை பேசுகிறாள்–

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-

——————-

கண்களுக்கு இலக்கான பதார்த்தங்கள் அடங்க -பொருள்கள் முழுதும் துன்புறுத்த புக்கவாறே
அவற்றுக்கு அஞ்சி கண்களைச் செம்பளித்தாள்-
அகவாயிலே அவன் அழகு ஸ்ம்ருதமாய் -நினைவுக்கு வந்து நலியா நின்றது -என்கிறாள்-

மனத்தே நின்று ஈரும் -என்கையாலே கண்ணை மூடினாள் என்பது தானே போதரும்
செம்பளித்தல் -மூடுதல்

எட்ட இருந்த குருவை இறை என்று அன்று
விட்டோர் பரனை விருப்புறுதல்-பொட்டானத்தன்
கண் செம்பளித்து இருந்து கைத்துருத்தி நீர் தூவி
அம்புதத்தை பார்த்திருப்பான் அற்று -ஸ்ரீ ஞான சாரம் -38

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என்
இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து
துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான்
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பணி இரும் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3-

——————–

அகவாயில் நலிகிறது ஒழிய-ஸ்வரூபேண – நேராக வந்து நின்றும் -பெண்மை –
ஸ்பர்சம் முதலியவற்றால் வந்து நின்றும் -வாடை -போல்வன-ஸ்மாரகமாய்
நினைப்பூட்டுதலால் வந்து நின்றும் -மென் மலர்ப் பள்ளி-நலிகிற
பதார்த்தங்களை -பொருள்களைச் சொல்லுகிறாள்

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ
வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ
மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த
எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ
யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-

—————–

சகல பதார்த்தங்களும் -எல்லா பொருள்களும் ஸ்வ ஸ்வபாவங்களை -தம் தம் தன்மைகளை நீக்கி
அந்யதாவாய் -வேறு பட்டனவாக-நெஞ்சம் துணை அன்று -துணை என்னும் தோழி மாரும் மாய்வர்
அவ்வளவிலும் அவனுடைய பிரசாதம் -திருவருள் அரிதானால்–அவனுடை யருள் பெறும் போதரிதே-
தரித்து இருப்பதற்கு விரகு உண்டோ-என்கிறாள்-

யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ
அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும்
எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ
யாமுடை யார் உயிர் காக்குமாறு என்
அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5-

——————-

நித்ய அநபாயிநி -அகலகில்லேன் இறையும்-என்று நித்ய வாசம் செய்கிற ஸ்ரீ பிராட்டியோடு-அந்ய பரரான –
வேறு ஒன்றிலே நோக்கு உள்ளவர்களான பிரமன் சிவன் முதலானவர்களோடு வாசி அற
உடம்பு கொடுக்குமவனுடைய -சௌசீல்யம்-சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
என் ஆத்மாவை -உயிரை ஈரா நின்றது என்கிறாள் –

அவனுடை யருள் பெறும் போதரிதால்
அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெருமள வாவி நில்லாது
அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை
சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-

——————-

கீழ் சொன்ன பாதக – துன்புறுத்தும் பொருள்கள் எல்லாம் திரள -திரண்டு வந்து கண் பாராதே
நலியா நின்றன – என்கிறாள்

ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்
ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்
கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு
பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப்
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7-

————————-

கீழே தனித் தனியாகவும்-திரளவும் -திரண்டும் வந்த பாதகப் பொருள்கள்
ஒன்றுக்கு ஓன்று முற்கோலி நலியா நின்றன -என்கிறாள்

புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ
பொங்கிள வாடை புன் செக்கராலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம்
கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை
வ ண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்–9-9-8-

——————–

பண்டே ஸ்ரீ ஆயர் பெண்கள் நடுவே இவன் குழல் ஊதுகிற போது நடு நடுவே தன் ஆற்றாமையாலே சில யுக்தி –
வார்த்தைகளை பேசிக் கொண்டும்–சில சேஷ்டிதங்களை செயல்களைச் செய்து கொண்டும் பாடும் பாட்டை
நினைத்து ஒன்றும் தரிக்க மாட்டு கின்றிலேன் –என்கிறாள் –

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-

———————-

வருவதாக சொன்ன காலம் வந்திருக்க அவன் வருகின்றிலன்-பாதகங்கனுடைய சந்நிதியில் –
துன்புறுத்துகின்ற பொருள்களின் நடுவிலே அவனை ஒழிய தரிப்பது எங்கே –என்கிறாள்

மாலையும் வந்தது மாயன் வாரான்
மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன் நாகுகள் உகளுமாலோ
கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர் முல்லை கரு முகைகள்
மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ
என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–9-9-10-

———————

நிகமத்தில்
அவன் பக்கல் சாபல்யம் -ஆசை உடையார் இத் திருவாய் மொழியைச் சொல்லி அவனைப் பெறுங்கோள் என்கிறார்

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா
அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11–

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி ஒன்பதாம் பத்தில் –எட்டாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

July 28, 2019

ஸ்ரீ திரு நாவாயைக் குறுகைக்கு எனக்கு உபாயம் உண்டோ என்கிறார்-

அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

————————-

ஸ்ரீ திரு நாவாயிலே புகும் நாள் என்றோ என்கிறார்

கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–9-8-2-

———————–

ஸ்ரீ திரு நாவாயிலே-திரு ஓலக்கத்திலே புகும் நாள் என்று-என்று அறிகின்றிலேன் –என்கிறார் –

எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-

——————-

ஆத்மாந்த தாஸ்யம் ஆத்மா உள்ள வரையிலும் செய்ய வேண்டிய அடிமையைச் செய்யும்படி –
மீளா அடிமைப் பணி செய்ய- உன்னால் விஷயீக்ருதனான -ஏற்றுக் கொள்ளப் பட்ட நான்
ஸ்ரீ நப்பின்னை பிராட்டியோடு கூடி இருக்கிற இருப்பிலே அடிமை செய்யப் பெரும் நாள் என்று
என்று அறிகிலேன் என்கிறார்-

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-

———————–

ஸ்ரீ திருநாவாயை கண்ணின் விடாய் தீரக் கண்டு அனுபவிப்பது என்று என்கிறார்

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
வின்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5-

—————————

ஊரை அன்றிக்கே ஊரில் நின்று அருளின உன்னைக் கண்டு களிப்பது என்றோ என்கிறார்

கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–9-8-6-

——————————-

ஆஸ்ரித அர்த்தமாக -அடியார்களுக்காக ஸ்ரீ திரு நாவாயிலே நித்ய வாசம் செய்கிற தேவரீர்-அநந்ய கதி –
வேறு ஒரு கதியும் இல்லாதவன் இவன் -என்று என் பக்கலிலே கிருபை செய்து அருள வேண்டும் –என்கிறார் –

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-

——————–

கீழ் பாசுரத்திலே அருளாய் -என்றார்-அப்போதே அபேக்ஷிதம் விரும்பியதை பெறாமையாலே
அருளவுமாம்-தவிரவுமாம்-அஞ்ஞான கந்தம் -அறிவின்மை சிறிதும் இல்லாதபடி உன்னை
என் நெஞ்சிலே இருத்தும்படி-தெளிவைத் தர வேண்டும் –என்கிறார் –

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவ–9-8-8-

———————–

இப்படி சொன்ன இடத்திலும் ஒரு விசேஷ கடாஷம் செய்யாமையாலே
நான் இவ் வாசையோடு முடியா நின்றேன்
என் அபிமதம் -நான் விரும்பிய பொருளைப் பெற புகுகிற பாக்யாதிகர் –
மிக்க புண்ணியத்தை உடையவர்கள் யாரோ –என்கிறார்

தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ ––9-8-9-

—————–

உன்னைக் காணப் பெறாமையாலே நெஞ்சு அழிந்து கூப்பிடா நின்றேன் என்கிறார்

அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10-

——————–

நிகமத்தில் –
இத் திருவாய் மொழி கற்றார் ஐஹிக ஆமுஷ்மிக சகல போகங்களையும் புஜிக்கப் பெறுவர்
இவ் உலகம் அவ் உலகம் என்னும் இரண்டு உலகங்களிலும் எல்லா இன்பங்களையும்
அனுப்பிக்கப் பெறுவர் என்கிறார்

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11-

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி ஒன்பதாம் பத்தில் –ஏழாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

July 28, 2019

சில நாரைகளைக் குறித்து அவன் தன் அழகாலும் குணங்களாலும் தன்னைத் தோற்பித்த படியைச் சொல்லி
என் நிலையை அவனுக்கு அறிவித்து வந்து உங்கள் திருவடிகளை என்தலை மேலே வைக்க வேண்டும்
என்கிறாள் —

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-

——————–

சில குருகு இனங்களைக் குறித்து தாமும் தமக்கு நல்லாருமாய் இருக்கும் இருப்பை –
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே – கேளீர் –
நான் இழந்தே போம் இத்தனையோ – என்று அறிவியுங்கோள்-என்கிறாள் –

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –-9-7-2-

————————

சில கொக்கு இனங்களையும் குருகு இனங்களையும் நோக்கி -திரு மேனி அடிகளுக்கு தக்கிலமே கேளீர்கள் –
தன் அழகு காண்கைக்கு -நாங்கள் யோக்யர்- தகுதியேம் அல்லோமோ –என்று கேளீர் –என்கிறாள் –

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-

———————

சில மேகங்களை நோக்கி-என் வார்த்தையை அவனுக்கு சொன்னால் உங்களைத் தண்டிக்குமோ – என்கிறாள் –

திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-

————————–

எங்கள் வார்த்தையை அவன் அங்கீ கரிக்குமோ -என்று இருந்தனவாக
ஸ்ரீ பரம பதத்திலே செய்கின்ற ஆதரத்தை என் பக்கலிலே செய்தவன் அங்கீ காரியாது ஒழியான் –
(அம்தாமத்து அன்பு செய்பவன் அன்றோ )
ஆன பின்பு எனக்கு ஒரு வார்த்தை விண்ணப்பம் செய்ய வேண்டும் – என்கிறாள் –

தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-

——————–

சில வண்டுகளைக் குறித்து –
உங்கள் வார்த்தை விலை செல்லும்படி பிராட்டி சந்நிதியிலே சொல்லுங்கோள் என் தூது வார்த்தையை -என்கிறாள் –

தூதுரைத்தல் செப்புமின்கள் தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும் பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே–9-7-6-

——————–

சில குருகு இனங்களைக் குறித்து சிலரோடு கலந்து அவர்களைத் துறந்து
அதுவே புகழாக இருக்கப் போருமோ என்று அறிவியுங்கோள் –என்கிறாள்

சுடர் வளையும் கலையும் கொண்டு அரு வினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக் களத்து உறையும் பங்கயக் கண்
சுடர் பவள வாயனைக் கண்டு ஒரு நாள் ஒரு தூய் மாற்றம்
படர் பொழில் வாய்க் குறுகினங்காள் எனக்கு ஓன்று பணியீரே–9-7-7-

——————-

சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து அங்கு உள்ளவனுக்கு என்ன தீங்கு வருமோ -என்று
அஞ்ச வேண்டாதபடி ஸூ ரஷிதமான தேசத்திலே – காவல் உள்ள இடத்தில் அவன் இருக்கப் பெற்றோம்
இனி எனது ஆர்த்தியை -துன்பத்தை அறிவியுங்கோள் -என்கிறாள்

எனக்கு ஓன்று பணியீர்காள் இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும் வண்டினங்காள் தும்பிகாள்
கனக் கொள் திண் மதிள் புடை சூழ் திரு மூழிக் களத்து உறையும்
புனக் கொள் காயா மேனிப் பூந்துழாய் முடியார்க்கே–9-7-8-

————————

ஒரு குருகைக் குறித்து
நிரதிசய போக்யரான -எல்லை இல்லாத இனியரான தாம் போம் போது
தம்மைக் கொண்டு போகை தம்முடைய தகவுக்கு போருமோ -என்று
விண்ணப்பம் செய் -என்கிறாள் –

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் கொண்டதனால் தகவன்று என்று உரையீரே–9-7-9-

——————-

சில அன்னங்களைக் குறித்து நான் முடிவதற்கு முன்னே அவனுக்கு என் தசையை -நிலையை
அறிவியுங்கோள் -என்கிறாள்

தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10-

———————-

நிகமத்தில் –
இத் திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு -கற்பார்க்கு பிரிவுக்கு அடியான -சம்சார துரிதத்தை –
பிறப்பாகிய நோயினை இது தானே அறுத்துக் கொடுக்கும் – என்கிறார் –

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11-

————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி ஒன்பதாம் பத்தில் –ஆறாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

July 28, 2019

ஸ்ரீ திருக் காட்கரையிலே எம்பெருமானுடைய ஆச்சர்யமான பரிமாற்றங்களை -செயல்களை
நினை தொறும் என் மனம் சிதிலமாகா உருகா நின்றது – என்கிறார்-

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-

————————–

ஸ்ரீ திருக் காட்கரையிலே ஸ்ரீ எம்பெருமானைக் குறித்து உன்னோடு நான் பரிமாறின பரிமாற்றத்தை –
கலந்த கலவியை நினைக்க ஷமன் ஆகிறிலேன் -முடியாதவனாய் இருக்கிறேன் –என்கிறார் –

நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2-

————————

அடிமை கொள்ள என்று புகுந்து தன் படிகளைக் காட்டி-சர்வஸ்யபஹரணம் – எல்லா வற்றையும்
கொள்ளை கொண்ட தன்மைகளை நினைக்க முடியாதவனாக இருக்கிறேன் –என்கிறார் –

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3-

———————–

தான் சேஷியான -தலைவனான முறை தப்பாமல் எல்லாரோடும் கலக்கிறவன்-அதி ஷூத்ரனான –
மிகச் சிறியேனான என் பக்கல் பண்ணின வ்யாமோஹம் -செய்த காதல் எனக்கு அறிய நிலம் அன்று –
என்கிறார்

அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே–9-6-4-

————————-

என்னை அடிமை கொள்பவனைப் போல் புகுந்து என் உடலையும் உயிரையும் புஜித்தான் கொண்டான் –
ஒருவனுடைய வ்யாமோஹம் – கழி பெரும் காதல் -இருந்தபடி என் –என்று விஸ்மிதர் -ஆச்சர்யப் படுகிறார்

திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–9-6-5-

————–

அவன் க்ருத்ரிமன் -வஞ்சகன் என்று அறிந்தால் அதிலே கிடந்தது நெஞ்சாறல் படாமல்
நீர் அகன்றாலோ -என்ன
அவனைக் கண்டவாறே அவ் வஞ்சகனை மெய் என்று இருப்பன் -என்கிறார் –

எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே–9-6-6-

———————-

அடிமை கொள்வாரைப் போலே புகுந்து என் உயிரை நேராக புஜித்து- உண்டு
பின்னையும் புஜியாதாரை -உண்ணாதாரைப் போலே இருக்கும் -என்கிறார் –

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-

———————-

நாள் தொறும் என்னை அனுபவியா நின்றாலும் பெறாப் பேறு பெற்றால் போலே புஜிக்கிற –
அனுபவிக்கிற இவனுடைய குணத்தின் தன்மையை பொறுக்க ஒண்ணுகிறது இல்லை என்கிறார்-

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8-

————————

நீரேயோ இப்படிப் பட்டீர்
குண அனுபவத்தையே யாத்திரையாக -பொழுது போக்காக உடைய ஸ்ரீ நித்ய ஸூரிகளும் படும் பாடு இது அன்றோ -என்ன
அவர்களும் தான் நான் பட்டது பட்டார்களோ – என்கிறார் –

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-

—————–

தம்மோடு கலந்த ஸ்ரீ எம்பெருமானுக்கு தம்மிலும் அபிநிவேசம் -காதல் மிக்கு இருந்த படியை சொல்லுகிறார்

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

———————–

நிகமத்தில்
இத் திருவாய் மொழியை அப்யசிப்பார்க்கு – கற்பார்க்கு பிறவி முடிந்து
அதற்கு அடியான சம்சாரமும் நசிக்கும் –என்கிறார் –

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி ஒன்பதாம் பத்தில் –ஐந்தாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு

July 28, 2019

சில குயில் பேடைகளைக் குறித்து என்னை முடிகைக்கு இத்தனை பாரிப்பு வேண்டுமோ என்கிறாள்-

இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ண பிரானை நீர் வரக் கூவ கிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ–9-5-1-

———————–

சில அன்றில் பேடைகளைக் குறித்து உங்கள் சேவல்களும் நீங்களுமாய் ப்ரணய கூஜிதங்களாலே
காதல் குரலாலே நலிகிறது என் –என்கிறாள்

இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் உன் சேவலும் கரைந்து ஏங்குதீர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே–9-5-2-

———————–

அவ் அன்றில் பேடைகளைப் பார்த்து திரியவும் – மீண்டும் தன் செயல் அறுதியாலே இரக்கிறாள்

அவன் கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3-

———————–

சில மயில்களைப் பார்த்து நீங்கள் உச்சக் குரலிலே கூவி என்னை நலியா நின்றீர் கோள் என்கிறாள் –

கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–9-5-4-

————————-

தன் உடைமையாய் இருந்து நலிகிற பூவைகளைக் குறித்து அவன் தான் முடிக்கைக்கு நல்ல விரகு பார்த்தான் –
இனி உங்களுக்கு இங்கு விஷயம் இல்லை –என்கிறாள் –

அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5-

——————

தனது தசையை -நிலையை அறியாதே திருப் பெயரைச் சொல்லுகிற கிளிப் பிள்ளையை குறித்து
என்னால் பொறுக்கக் கூடாத நிலையில் -அஸஹ்யமான தசையில் -சொல்லவோ உன்னை வளர்த்தது -என்று
திருப் பெயரை இப்பொழுது சொல்ல வேண்டா –என்று அத்தை நிவர்த்திப்பிக்கிறாள் –

நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6-

———————-

அவன் வடிவிற்கு போலியான-மேக மாலையை -மேகங்களின் வரிசையைக் கண்டு
உங்கள் வடிவினைக் காட்டி -என்னை முடியாதே கொள்ளுங்கோள் -முடிக்காதீர்கள் –என்கிறாள்

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-

——————–

சில குயில்களைக் குறித்து திருப் பெயர்களைச் சொல்ல வேண்டா -என்று நான் இரக்க
அதனையே சொல்லி நலிந்தீர் கோள்-
உங்களை வளர்த்த தனால் வந்த பிரயோஜனம் -பயன் பெற்றேன் – என்கிறாள் –

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8-

————————

மதுபான மத்தமாய் -தேனைக் குடித்து மயங்கிப் பாடுகின்ற சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து
உங்கள் த்வனி -இசை எனக்கு துஸ்ஸஹமாய் -பொறுக்க ஒண்ணாததாய் இருந்தது
நீங்கள் பாடாதே கொள்ளுங்கோள் –என்கிறாள்

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன் குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்–9-5-9-

————————

திரள இருக்கிற நாரைக் குழாங்கள் தன்னை முடிப்பதற்கு-மந்தரிக்கின்றனவாய் –
ஆலோசிக்கின்றனவாய்க் கொண்டு நான் முடிந்தேன் –
இனி நீங்கள் திரண்டு பிரயோஜனம் பயன் என் – என்கிறாள் –

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே–9-5-10-

—————————-

நிகமத்தில்
இத் திருவாய்மொழி பாசுரங்கள் ஹிருதயத்திலே -நெஞ்சில் படில் ஆரேனுமாகிலும் தரியார்
என்கிறார்

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே–9-5-11-

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-