Archive for April, 2019

ஸ்ரீ திருமாலை – அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் —

April 5, 2019

காவலில் புலனை வைத்து கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்புடைமை கண்டாய் அரங்க மா நகர் உளானே -1-

அவதாரிகை –
திருநாமம் யம வஸ்யதையை தவிர்த்து தரும் என்று இதனுடைய
பாவநத்வத்தையும்
ராஜ குல மஹாத்ம்யத்தையும் சொல்லுகிறது –

வியாக்யானம் –
காவலில் புலனை வைத்து –
காவல் இல்லாதபடி இந்திரியங்களை வைத்து –
அதாகிறது -மேல் சொல்லுகிற லாபங்களுக்கு அநுகூலமாக செய்தது ஒன்றும் இல்லை
யென்கையும் –அவ்வளவே அன்றிக்கே –
நிருபசு –ஸ்தோத்ர ரத்னம் -58-மனித வடிவம் கொண்ட பசு -என்னும்படி
விஷய ப்ராவண்யன்களிலே நியதி இன்றிக்கே போந்தபடியும் –
விஹிதங்களை அனுஷ்டித்தல் -நிஷித்தங்களை கை விடுதல் செய்யாதவன் என்கை –

இதுக்கு அடியாக கொண்டு இழிந்த ஸ்ரீ விஷ்ணு தர்மத்திலும் -ராகாதி ப்ரநிர்ஜிதை என்று
அஜிதேந்திரியர் ஆனவர்களுக்கும் பகவத் பிராப்தி உபாயம் ஏது என்று இறே கேட்டது –
ஆக இப்படி சேதனன் தான் மூலையடியே திரிந்தாலும் அவன் தோஷங்களைப் போக்கி
மேல் சொல்லுகிற நன்மைகளைக் கொடுக்கும்படி யாய்த்து திருநாமம் உடைய ப்ரபாபம்-இருப்பது –
ஒருவன் விஷ தஷ்டன் ஆனால் விஷ வித்யையில் குசலனாய் இருப்பான் ஒருவன் –
நீ சுகமே எண்ணெய் வார்க்கவுமாம் -குளிக்கவுமாம் -உறங்குவுமாம் –
ஸ்வைர சஞ்சாரம் பண்ணவும் அமையும் -நான் அழகிதாப் போக்கித் தருகிறேன் என்னும் இறே –
அப்படியே யாய்த்து சம்சார விஷ தஷ்டனைக் குறித்து திருநாம பிரபாவம் இருப்பது –

வைத்து –
என்கிற இது புத்தி பூர்வகமாக அநீதியிலே மூட்டிப் போந்தேன் என்கை –
காவல் இல்லாதபடி என்றால் சப்தம் வசிக்குமோ என்னில் –
மீமாம்சகர் அபத்தத்தை நியமித்தாலும் அர்த்தத்தை முக்கியமாக கொள்ளுமா போலே –
இங்கும் அர்த்த கௌரவத்தாலே சப்தத்தை நியமித்து சொல்லுகிறோம் –
அங்கன் இன்றிக்கே –
காவலில் புலனை வைத்து என்னுமாம்
அந்த பஷத்தில் இது சாதன கோடியிலே புகக் கடவது –
அதாவது இதர விஷயங்களிலே மண்டித் திரிந்த இந்திரியங்களை திருநாமத்தை
அண்டை கொண்ட பலத்தால் சிறையிலே வைத்தபடி –
அராஜகமாய் கிடந்த காலம் குறும்பு செய்தாரை -ராஜகீயம் ஆனவாறே
ராஜாவை அண்டை கொண்டு சிறையிலே வைக்குமா போலே –

அதவா
அப்ராப்த விஷயங்களில் மண்டித் திரிந்த இந்திரியங்களை பிராப்த விஷயங்களிலே மூட்டினேன் -என்னவுமாம் –
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம் -என்னும்படியான விஷயம் ஆகையாலே –
அப்ராப்த விஷயங்களில் போகாதபடி தன் பக்கலில் ஆக்கிக் கொள்ள வல்ல வயிர உருக்கான விஷயம் இறே

கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து –
அஜிதேந்த்ரியத்வதுக்கு அடியான பாப ராசியை வாசனையோடு போக்கி –
தன்னை -என்றது –
த்ருஷ்டத்தில் விஷய பிராவண்ய ஹேது –
அத்ருஷ்டத்தில் நரக ஹேது –
பகவத் வைமுக்ய ஹேது –
தேக ஆத்ம அபிமான ஹேது –
இன்னமும் அநர்த்தங்களுக்கு அடியான கனத்தை நினைத்து
என்னை நியமித்து போந்தது தன்னையே -நான் இப்போது நியமித்தேன் என்கை –
கடக்க -என்றது –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரிலே ஒருவன் என்னலாம்படி இருக்கை
அதாவது -வந்து கழிந்தது -என்று தோற்றாதபடி இருக்கை
கலி -என்றது
கால பரமான போது க்ருதயுக புருஷர்களிலே ஒருவன் என்று சொல்லலாம்படி இருக்கை –
திருவடி சமுத்திர தரணம் பண்ணினால் போலே இவர் பாப சமுத்ரத்தை கடக்க வல்லவர் ஆனார்

நின் நாமம் கற்ற -என்ற
திருநாம வைபாவத்தாலே வந்த இத்தை தன் தலையாக வந்ததாக சொல்லுவான் என் என்னில் –
திருநாமத்துக்கு உள்ளதொரு ஸ்வபாவம் ஆய்த்து இது –
இரா மடமூட்டுவாரைப் போலே முகம் தோற்றாமல் நின்று உபகரிக்கையாலே -இவன் தானே செய்து கொண்டானாக
அபிமாநிக்க லாம்படியாய் இருக்கும் –
இனி பலம் தன்னது ஆகையாலே பாய்ந்து -என்னத் தட்டில்லை

தாம் தேக ஹம்ஸ்ருஷ்டராய் இருக்கச் செய்தேயும் இத்தைக் கடந்து என்னலாம்படி இறே பெரிய பெருமாள் இவரை விஷயீ கரித்தது

நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே –
பாப பலத்தை அனுபவிக்கும் யமனுடைய தலையிலும் -அவன் மணாட்டி தலையிலும் -அடியிட்டு சஞ்சரியா நின்றோம் –
நலிந்து போன யம படரை ஒரு பேரை இட்டுத் துகைக்கிறார் காணும் –
நாவலோ நாவல் என்றும் –
அறையோவறை என்றும் -தோற்றவர்கள் முன்னே ஜெயித்தவர்கள் சொல்லும் சொல்லு –
முன்பே யமாதிகள் பேர் கேட்க அஞ்சிக் கிடந்தவர் -திருநாமத்தை அண்டை கொண்ட பலத்தாலே
யமன் வாசலிலே சென்று அறை கூவுகிறார் -இப்போது –
வாலி பேர் கேட்க அஞ்சி சுரமடைந்து கிடந்த மகாராஜர் -பெருமாளை அண்டை கொண்ட பலத்தாலே கிஷ்கிந்தா த்வாரத்திலே
சென்று அறை கூவினாற் போலே -அங்கு நாமி பலம் -இங்கு நாம பலம் –

உழி தருகின்றோம் -என்றது
தம் மிடுக்கு தோற்ற நின்று நிர்ப்பய சஞ்சாரம் பண்ணுகிறபடி –
பாபத்துக்கு நீ எழுதி வைத்த பட்டோலையை கொண்டு வரவில்லை யாகில் புறப்படாய் என்றாற் போலே இருக்கிறது ஆய்த்து –
உழி தருகின்றோம் –என்கிற
பஹு வசனத்தாலே திருநாமம் ரசிக்க வாயிலே புறப்பட்டவாறே இவர் சத சாதகமாய்ப் பனைத்த படி –
அதவா
இதன் இயலை அபயசித்து இதில் அத்வேஷம் உடையாரையும் கூட்டிக் கொள்ளுக்கிறார் ஆய்த்து
சமுத்ரலங்கனம் முதலாக இலங்கையில் உண்டான பராக்கிரமம் எல்லாம் திருவடி தான் ஒருவனே செய்தானாய் இருக்க –
பிராட்டியைக் கண்ட ப்ரீதிக்கு போக்குவீடாக மதுவனம் அழிக்கிற பலத்திலே எல்லா முதலிகளுக்கும் அந்வயம் உண்டானாப் போலே –
ஒருவனுக்கு ராஜகுல சம்பந்தமுண்டானால் அவன் பந்துக்களும் அவனை என் என்றாரும் அடங்க வாழக் கடவது இறே –
அவ்வளவும் இல்லை யாகிறது அன்றே பகவத் சம்பந்தத்துக்கு

உழி தருகின்றோம் -என்று
பலரையும் கூட்டிக் கொள்ளும் ஆகையாலே இவர்களுக்கு எல்லாம் சஞ்சார ஸ்தலம் வேணும் என்று –
அவன் பரிகாரத்தையும் கூட்டிக் கொள்ளுகிறார் –
லோகத்தில் பாபம் பண்ணினார் தத்பல அனுபவத்துக்கு அஞ்சி யமன் பேரிடுவார் அவனுடைய லேகேகன் பேரிடுவராய் –
யமம் தர்ப்பயாமி -சித்ரா குப்தம் தர்ப்பயாமி –என்று ஆராதியா நிற்க –
திருநாமத்தை அண்டை கொண்ட பலத்தாலே அவர்கள் தலையிலே அடி இடுகிறோம் என்கிறார் இறே இவர் –
தம்மை கீழ் நலிந்த யமாதிகளை இப்போது ஒரு பேரை இட்டுத் துகைக்கிறார் காணும் –
இவர் தமக்கு விஜயமாக சொல்லுகிறார் இத்தனை போக்கி -அவன் தான் தன் தலை கண்டது
திருநாமம் கற்றார் திருவடிகளிலே வணங்க என்று ஆய்த்து இருப்பது –
பிரணாமாம் யே அபிகுர்வந்தி தேஷாம் அபி நமோ நம -என்னக் கடவது இறே

ஸ்வ புருஷ மி வீஷ்ய பாச ஹஸ்தம் ப்ரபுரஹ மன்யன் ருணாம் ந வைஷ்ணவானாம்
என்றது கேவலம் தேக போஷண பரராய் இருப்பார்க்கு காண் நிர்வாஹகனாய் இருப்பது –
மற்றைப்படியே வைஷ்ணவர்கள் எனக்கு நிர்வஹகராய் காண் இருப்பர் என்றபடி –
திறம்பேன்மின் கண்டீர் இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் -நான்முகன் திருவந்தாதி -68–
இவர்களைக் கண்டால் அனுகூல வ்ருத்திகளைப் பண்ணி தாந்தராய்ப் போரும் கோள்-என்கிறான்
இப்படி தானும் பயப்பட்டு தம் படரையும் நியமித்துக் கொண்டு இறே யமன் இருப்பது

லோகமடங்க யமபட பீதராய் இருக்க -நமன் தமர் தலைகள் மீதே நாவலிட்டு உழி தருகின்றோம் -என்கைக்கு
வந்த தன் ஏற்றம் என் -என்ற பெரிய பெருமாள் திரு உள்ளமாக –
மூவுலகுண்டு உமிழ்ந்த முதல்வ -என்கிறார் –
ப்ராதேசிகனைப் பற்றினேன் ஆகில் அன்றோ அவனுக்கு அஞ்ச வேண்டுவது –
பிரளய ஆபத்திலே சர்வ லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்து ரஷித்து -அங்கிருந்து நெருக்கு ஒண்ணாதபடி
வெளிநாடு காண புறப்பட்டு விட்ட ஜகத் காரண பூதனானவனே –
பிரளய ஆபத்திலும் ஸ்ருஷ்டி வேளையிலும்
அந்த யமாதிகளோடு என்னோடு வாசி யற சர்வ நிர்வாஹகன் ஆனவன் அல்லையோ –

நம்மைப் பற்றி உமக்கு இந்த நன்மை எல்லாம் உண்டாய்த்து என்கிறீரோ -என்ன
உன் அருகு வந்திலன் –
நின் நாமம் கற்ற ஆவலிப்பு –
உன் திருநாமத்தை கற்ற பலம் -என்னுதல் –
கர்வம் என்னுதல்
நின்னாமம் -என்றது -ஓராயிரமாய் உலகு ஏழும் அளிக்கும் பேர் அன்றோ -திருவாய்மொழி -9-3-1-
தேவரீரைப் போலேயோ திருநாமம் –
கட்டிப் பொன்னுக்கும் பனிப் பொன்னுக்கும் உள்ள வாசி போராதோ
தேவரீருக்கும் திருநாமத்துக்கும்
மறுவலிடும் பிரளய ஆபத்தில் அன்றோ தேவரீர் எடுத்தது –
சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்கும் போது தேவரீர் திருநாமம் வேண்டாவோ
நீளரவை சுற்றிக் கடைந்தான் பெயர் என்றே தொல் நரகைப் பற்றிக் கடத்தும் படை -முதல் திருவந்தாதி -81-
மந்த்ரம் என்னாது ஒழிந்தது –
கால நியமம் என்ன -அதிகாரி நியமம் என்ன -இவை தொடக்கமானவை வாராமைக்காக –
இடறினவன் அம்மே என்னும் போது ஒரு சடங்கு வேண்டாம் இறே

நஞ்ஜீயர் -அப்ரயதனாய்க் கொண்டு திரு நாமம் சொல்லலாமோ ஆகாதோ என்று -பட்டரைக் கேட்க –
கங்கா ஸ்நானம் பண்ணப் போமவனுக்கு வுவர்க் குழியிலே தோய்ந்து போக வேணுமோ –
மேலுண்டான நன்மைகளைப் பண்ணிக் கொடுக்க வற்றானது -கீழ் உள்ள அசுத்தியை போக்க மாட்டாதோ என்று அருளிச் செய்தார் –
வாயாலே திருநாமம் சொல்லுகைக்கு ஆகாதார் இல்லை –
மாத்ரு காதுகனுக்கும் கை சலித்தால் அம்மே என்ன பிராப்தி உண்டே யாய் இறே இருப்பது
கற்ற-என்றது
ஆசார்ய உச்சாரண அநு உச்சாரண க்ரமத்தாலெ வந்ததாய் இருக்கை
பெரிய பெருமாள் சொல்லுவிக்க அநந்தரம் சொன்னவர் ஆய்த்து இவர் –
கற்ற -என்றது –
ஸார்த்தம் ஆக அன்றிக்கே சப்த மாத்ரத்தை அப்யசிக்கை

ஆவலிப்புடைமை –
வைஸ்ரவணன் -என்னுமா போலே யாய்த்து திருநாம சம்பந்தத்தால் வந்த ஐஸ்வர்யம்

கண்டாய் –
இவ்வர்த்தம் உபதேசிக்க வேண்டி இருந்ததோ –
என் வடிவிலே தெரியாதோ –
ரசாயன சேவை பண்ணினாரையும் மண் தின்றாரையும் வடிவிலே தெரியாதோ
நான் பண்டையவன் என்று தோற்றா நின்றாதோ
மண் தின்ற உன் முகம் போலே இருந்ததோ என் முகமும்

அரங்க மா நகர் உளானே –
இங்கு வந்து சாய்ந்து அருளிற்று -திருநாமம் சொல்ல வல்லான் ஒருவனை
கிடைக் கவற்றோ என்னும் நசையாலே அன்றோ
சத்ய சங்கல்பர் ஆகையாலே தேவரீருடைய நினைவு சபலமாக பெற்றது இறே
மா நகர் –
ராஜா இன்ன மண்டபத்தே இருந்து நினைப்பிட்டான் என்றால் பின்னை அவன் தன்னாலும் தவிர்க்க ஒண்ணாதாய்
இருக்குமா போலே – இங்கே இருந்து விஷயீ கரித்தது என்றால் இனி தேவராலும் தவிர்க்கப் போமோ –
மா நகர்
சம்சாரிகமான துர் வ்யவஹாரம் அறும் இடம்

முன்பு அநீதியிலே கை வளர்ந்து -அசதச்யனாய் -நால்வர் இருந்த இடத்தில் சென்று ஏற மாட்டாதே இருந்தவன் –
தனக்கு-ஒரு ராஜகுல சம்பந்தம் உண்டானால்
சதச்சை மதியாதே சென்று ஏறுகையும் –
அவர்கள் சிரஸா வகிக்கையுமாய இறே இருப்பது –
அப்படியே முன்பு யமாதிகளுக்கு அஞ்சிக் கிடந்தது இடம் அறியாதே போந்தவர் –
இப்போது திருநாம சம்பந்தத்தாலே யமதிகள் தலையிலே அடி இட்டு
திரியும்படியான ராஜ குலத்தை சொல்லிற்று ஆய்த்து –

——————–

நிகமத்தில் –
குவலயா பீடத்தைப் போக்கினால் போலே-தம்முடைய பிரதிபந்தகத்தைப் போக்கின படியைச் சொல்லி –
பெரிய பெருமாள் உடைய ப்ரீதியே-தமக்கு பிரயோஜனம் என்று முடிக்கிறார் –

——————————————————————————————————————————————————————

வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்கமாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே–45–

——————————————————————————————————————————————————————-

வள வெழும் தவள மாட –
அழகு மிக்கு இருப்பதாய்
வெள்ளியாலே செய்தது போலே அதி தவளமான மாடங்களை உடைத்ததாய் -இருக்கை –
திரு அவதரித்த தன்று போகப் பெறாத இழவு தீருகிறார் –
வில் விழவுக்காக கம்சன் கோடித்த படியைச் சொல்லிற்றாகவுமாம்

வளம் -அழகு
எழுச்சி -மிகுதி

மதுரை மா நகரம் தன்னுள் –
பிரதமத்தில் வாமன ஆஸ்ரயமாய்
பின்பு ஸ்ரீ சத்ருன ஆழ்வான் படை வீடு செய்து
பின்பு ஸ்ரீ கிருஷ்ணன் திரு அவதாரம் பண்ணுகையால் உண்டான பெருமையைச் சொல்கிறது –
இப்படி பகவத் சம்பந்தம் மாறாத தேசம் ஆகையாலே ஸ்ரீ வைகுந்த மா நகரில் காட்டிலும் இது வ்யாவ்ர்த்தம் –

கவளமால் யானை கொன்ற கண்ணனை –
கவளம் கொண்டு இருப்பதாய் பெருத்து இருந்துள்ள யானையைக் கொன்ற கிருஷ்ணனை –
களபமால் -என்று எதுகைக்கு சேர பாடம் ஆன போது –
களபம் என்று உருவத்தில் பெருத்த யானை -என்றபடி –

கீழே ஆனைக்கு அன்று அருளை ஈந்த -என்றார்
இங்கே ஆனை கொன்ற என்கிறார்
இத்தால்
தேவாநாம் தானவாநாஞ்ச -என்றது அழிந்தது-

அங்கு உள்ளார் விரோதிகளைப் போக்கி தன்னை அனுபவிப்பித்தாப் போலே
இவர் தம் உடைய பிரதிபந்தங்களைப் போக்கி தம்மை அனுபவிப்பித்த படி –
திரு அவதரித்த அன்று ஒளிந்து போன ஊரிலே கண் காண வந்து விரோதியை அழியச் செய்த
ஏற்றத்தை அனுபவிக்கிறார்-

யரங்கமாலைத் –
அவதாரத்துக்கு பிற்பாடரான தம்முடைய விரோதியைப் போக்கி ஸ்ரீ கோயிலிலே வந்தார் ஆய்த்து –

மாலை
ஆஸ்ரித விஷயத்தில் பெரும் பித்தர் ஆனவரை –
விரோதி நிரசனமும்
தத் பூர்வகமான ஸ்வ அனுபவமும்
தன் பேறாய் இருக்கை-

துளவத் தொண்டைய தொல் சீர்த்-
திருத் துழாய் ஆழ்வாருக்கு அடிமை செய்யுமவர்
புருஷார்த்தத்தின் எல்லையிலே நின்றவர் –
இது தான் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எல்லாம் அடிமை செய்த படி யாதல் –

துளபத் தொண்டாய –
என்கையாலே -அபசாரம் தட்டாத கைங்கர்யம் -என்கை –
துடை ஒத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி -என்னக் கடவது இறே-

தொல்சீர் –
ஸ்வா பாவிகமான பகவத் சேஷத்வத்தின் சீமையிலே –
சஹஜ கைங்கர்யத்தின் உடைய மேல் எல்லை ஸ்ரீவைஷ்ணவ கைங்கர்யம் இறே –

தொண்டர் அடிப் பொடி சொல் –
இத்தால்
தொண்டர் அடிப் பொடி -என்ற பேரை உடையவர் –
இவருக்கு ஞான ஆனந்தங்கள் அன்று காணும் நிரூபகம்
அடிப்பொடி -என்கையாலே –
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் -என்றாப் போலே இருக்கிறது யாய்த்து –

இளைய புன் கவிதை ஏலும் –
சப்தத்தில் இனிமையும்
கவித்வத்தில் குற்றம் உண்டே யாகிலும்
இளசாய் புல்லிய கவியே யாகிலும் –

எம்பிராற்கு இனியவாறே –
எம்பிரானுக்கு இனிதாய் இருக்கும் இறே –
கிம்ம்ர்ஷ்டம் ஸூத வசனம் -என்கிறபடியே
பெரிய பெருமாள் இத்தை உகந்த படி என் என்கிறார் –
பிரஜை மழலைச் சொல்லு தமப்பனார்க்கு இனிதாய் இருக்கும் இறே –
ப்ரஹர்ஷ யிஷ்யாமி சநாத ஜீவித – என்கிறபடியே
இவ் உகப்பு தானே புருஷார்த்தம் –
இவன் சத்தை யாவது
அவன் ப்ரீதிக்கு கை தொடுமானமாகை

இப்பிரபந்தம் கற்றார்க்கு பலம் சொல்லாது ஒழிந்தது-இவ் உகப்பு தானே அவர்களுக்குப் பலம் ஆகையாலே
இவ் வாழ்வாரை உகந்தாப் போலே-இப் பிரபந்தம் கற்றாரையும் ஸ்ரீ பெரிய பெருமாள் உகந்து அருளுவார் -என்கை –
ப்ரியதே சததாம் ராம -என்று ஸ்ரீ ராமாயணம் கற்றார் உடைய பலம் போலே இப் பிரபந்தம் கற்றார் உடைய பலமும் –

—————————————————————————————————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருச்சந்த விருத்த- அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் —

April 5, 2019

அவதாரிகை –
ஆழ்வார் திருமழிசைப் பிரான் ஆகிறார்

ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் போலே ஆய்த்து பிறந்த படியும் வளர்ந்த படியும் –
யது குலத்தில் பிறந்து கோபால குலத்தில் வளர்ந்தாப் போலே
ரிஷி புத்ரராய்ப் பிறந்து -தாழ்ந்த குலத்திலே யாய்த்து வளர்ந்தது –
ஸ்ரீ கிருஷ்ணனாய் யது குலத்திலே பிறந்தாப் போலே அங்கே வளர்ந்து அருளினான் ஆகில்
ஸ்ரீ ராமோவவதாரத்தோபாதி யாம் இத்தனை என்று பார்த்தருளி -இடையரும் இடைச்சிகளும் பசுக்களும் –
நம்மிலே ஒருத்தன் -என்னும் படி தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கைக்காக வாய்த்து கோப சஜாதீயனாய் வளர்ந்து அருளிற்று –
அப்படியே ஆழ்வாரும் பகவத் அபிப்ராயத்தாலே தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கைகாக தாழ்ந்த குலத்தில் வளர்ந்து அருளினார் ஆய்த்து

இவ் வாழ்வாருக்கு சர்வேஸ்வரன் நிர்ஹேதுகமாக -மயர்வற மதி நலம் அருளி –
தன்னுடைய திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தையும் –
தத் ஆஸ்ரயமான ஞான சக்த்யாதி கல்யாண குணங்களையும் –
உபயத்துக்கும் பிரகாசமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும் –
அதுக்கு அலங்காரமான கிரீடாதி பூஷண வர்க்கத்தையும் –
அதோடு விகல்ப்பிகலாம் படியான சங்கு சக்ர திவ்ய ஆயுதங்களையும் –
இது அடங்க காட்டில் எறிந்த நிலா ஆகாமே அநுபவிக்கிற ஸ்ரீ லஷ்மீ ப்ரப்ர்தி மஹிஷீ வர்க்கத்தையும்
அச் சேர்த்தியே தங்களுக்கு தாரகாதிகளாக உடையரான பரிஜன பரிபர்ஹத்தையும்
இப் போகத்துக்கு வர்த்தகமான ஸ்ரீ பரம பததையும் சாஷாத் கரிப்பித்து
ப்ரகர்தி புருஷாத்மகமான லீலா விபூதியினுடைய ஸ்ர்ஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களை
லீலையாய் உடையனாய் இருக்கிற படியும் காட்டிக் கொடுத்து –
இப்படி உபய விபூதி நாதனான எம்பெருமான் தன் பெருமையைக் காட்டிக் கொடுக்கையாலே –
ஸ்ரீ பகவத் அனுபவ ஏக போகராய்

நோ பஜனம் ஸ்மரந நிதம் சரீரம் -என்கிறபடியே சம்சார தோஷத்தை அனுசந்திக்க இடம் இல்லாதபடி –
ஈஸ்வரன் தம்மை அனுபவிக்கையாலே -மார்கண்டேயாதிகளைப் போலே சிரகாலம் சம்சாரத்திலே எழுந்தருளி இருந்த இவர்
ப்ராப்தமுமாய் –ஸூலபமுமான விஷயத்தை சம்சாரிகள் இழக்கைக்கு ஹேது என் என்று அவர்கள் பக்கல் கண் வைத்தார்

தாம் பகவத் விஷயத்திலே ப்ரவணராய் இருக்கிறாப் போலே
ரஜஸ் தமஸ்ஸு க்களால் பிறந்த அந்யதா ஞான விபரீத ஞானங்களாலே

யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்றும் –
யுக கோடி சஹஸ்ரேஷு விஷ்ணும் ஆராத்ய பத்மபூஸ் புநஸ் த்ரைலோக்ய தாத்ர்வம்
ப்ராப்தவாநி தி சுஸ்ருமே -என்றும் –
வேதாமே பரமம் சஷூர் வேதாமே பரமம் தனம் -என்றும் –
மஹா தேவஸ் சர்வமேதே மஹாத்மா -என்றும் –
ஏக ஏவ ருத்ரச -என்றும் –
ஹிரண்ய கர்பஸ் சம வர்த்ததாக்ரே -என்றும்
இத்யாதி ப்ரசம்சா வாக்யங்களாலும் -தாமஸ புராணங்களாலும் பரதவ புத்தியைப் பண்ணி –
சேதனர் பகவத் விமுகராய் அனர்த்தப் படுகிறதை கண்டு –பர அநர்த்தம் பொறுக்க மாட்டாமையாலே
நிர்தோஷ பிரமாணங்களாலும் சம்யன் நியாயங்களாலும் -பாஹ்ய குத்ருஷ்டி நிரசன
பூர்வகமாக பகவத் பரதத்வத்தை உபதேசித்த இடத்திலும் -அவர்கள் அபி முகீ கரியாமையாலே

நாம் இவர்களைப் போல் அன்றியே -ஜகத் காரண பூதனாய் –பரமபத நிலயனான சர்வேஸ்வரனே
ப்ராப்யன் என்று அவன் ப்ரசாதத்தாலே அறியப் பெற்றோம் –
இனி இவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் -பர வியூகங்கள் தேச விப்ரக்ர்ஷ்டத்வத்தாலே
அஸ்மத்தாதிகளுக்கு ஆஸ்ரயணீயம் ஆக மாட்டாது –
அவதாரங்கள் கால விப்ரக்ர்ஷ்டதை யாகையாலே ஆஸ்ரயணீயங்கள் ஆக மாட்டாது –
இரண்டுக்கும் தூரஸ்தரான பாஹ்ய ஹீநருக்கும் இழக்க வேண்டாதபடி
அர்ச்சக பராதீநனாய் -சர்வ அபராத சஹனாய் -சர்வ அபேஷித ப்ரதனாய் -வர்த்திக்கும்
அர்ச்சாவதாரத்தின் நீர்மையை அனுசந்தித்து –
ஆகிஞ்சன்யத்தை அதிகாரமாக்கி –
ப்ரபத்தியை அதிகாரி விசேஷணமாய் ஆக்கி –
பகவத் கிருபையை நிரபேஷ உபாயம் என்று அத்யவசித்து
அவனை ஆஸ்ரயித்து -அவன் கிருபை பண்ணி முகம் காட்ட இவ்விஷயத்தை லபிக்கப் பெற்றேன் என்று
தமக்கு பிறந்த லாபத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார் –

————————————————————————————————

முதல் பாட்டு –
அவதாரிகை –
அண்டாகாரணமாய் -ஸ குணமான ப்ருத்வ்யாதி பூத பஞ்சகங்களுக்கு அந்தராத்மாவாய் நிற்கிற
நீயே ஜகத்துக்கு உபாதான காரணம் –
இவ்வர்த்தம் வேதாந்த ப்ரமேயம் கை படாத பாஹ்ய குத்ருஷ்டிகளால் நினைக்க ஒண்ணாது என்கிறார் –

பூநிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லீரே –1-

பத உரை
பூநிலாய -பூமியிலே வர்த்திக்கிற
ஐந்துமாய் -சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள் ஐந்துமாய்
புனல் கண் நின்ற -ஜலத்திலே வர்த்திக்கிற
நான்குமாய் -சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள் நான்குமாய்
தீநிலாய -அக்நியிலே வர்த்திக்கிற சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள் மூன்றுமாய்
மூன்றுமாய் -சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள் மூன்றுமாய்
சிறந்த -சேதனருக்கு ஆதாரமாய் இருக்கும் பலத்தை உடைய
கால் நிலாய -வர்த்திக்கிற
இரண்டுமாய் -சப்த ஸ்பர்சங்கள் இரண்டுமாய்
மீநிலாயது -ஆகாசத்திலே வர்த்திக்கிற
ஒன்றுமாகி -சப்த குணம் ஒன்றுமாகி
வேறு வேறு தன்மையாய் -தேவாதிகளுக்கு அந்தராத்மாவாய்
நீ-சித் அசித் சரீரி
நிலாய வண்ணம் -கார்ய காரண வர்க்கத்தில் நிற்கும் பிரகாரத்தை உடையனாய்
நின்னை -சித் அசித் விசிஷ்டமாய் கொண்டு ஜகத் உபாதான காரணமாய் நிற்கிற உன்னை
யார் நினைக்க வல்லீரே –நினைக்க வல்லார் யார்-

வியாக்யானம்-

பூநிலாய ஐந்துமாய்–
பூமியிலே வர்த்திக்கிற சப்தாதி குணங்கள் ஐந்துமாய்
பூதேப்யோண்டம் -என்றும்
கந்தவதீ ப்ரத்வீ -என்றும் –
தஸ்யா கந்தோ குணோ மதஸ் -என்றும்
ப்ர்த்வி குணம் கந்தமாய் இருக்க -சப்தாதிகள் ஐந்தும் அதுக்கு குணமாகச் சொல்லுவான் என் என்னில்
சப்தாதிபிர் குணைர் ப்ரஹ்மன் சம்யுதான் யுத்தரோத்தரைஸ் -என்கிறபடியே
காரண குண அனுவர்த்தியாலே -சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்களையும் கூட்டிச் சொல்கிறது –

புனல் கண் நின்ற நான்குமாய் –
அப்பிலே வர்த்திக்கிற சப்த ஸ்பர்ச ரூப ரசங்களுமாய்
சம்பவந்தித தோம்பாம்சி ரசாதாராணிதாநிது -என்கிறபடியே தத் குணம்
ரசமாய் இருக்க அதிலும் காரண குண அனுவர்த்தியாலே சப்த ரச ரூபங்களையும் கூட்டிச் சொல்லுகிறது

தீ நிலாய மூன்றுமாய்
ஜ்யோதி ருத்பத்ய தேவா யோஸ் தத் ரூபம் குண உச்யதே -என்கிறபடியே
அக்நி குணமான ரூபத்தோடே சப்த ஸ்பர்சங்களைக் கூட்டி –மூன்றுமாய் -என்கிறது –

சிறந்த கால் இரண்டுமாய் –
ஸ்வ சஞ்சாரத்தாலே சேதனர்க்கு ஆதாரமான பலத்தை உடைய வாயுவினுடைய குணம் இரண்டுமாய் –
பலவான் பகவசந் வாயுஸ் தஸ்ய ஸ்பர்சோ குணோ மதஸ் -என்கிறபடியே
வாயு குணமான ஸ்பர்சதோடே ஆகாச குணமான சப்தத்தையும் கூட்டிச் சொல்லுகிறது

மீநிலாய தொன்றுமாகி –
மீதிலே வர்த்திக்கிற சப்த குணம் ஒன்றுமாய் –
ஆகாசம் சப்த லஷணம் -என்கிற படியே ஆகாச குணம் ஒன்றையும் சொல்லுகிறது
உக்தமான பூத பஞ்சகங்களுக்கு காரணமான ஏற்றத்தாலும் ஸ்வ வ்யதிரிக்தங்களுக்கு
அவகாச பிரதானம் பண்ணும் ஏற்றத்தாலும் –மீது -என்று ஆகாசத்தைச் சொல்லுகிறது –

அண்ட காரணம் ப்ர்திவ்யாதி குணங்களாய் இருக்க -சப்தாதி குணங்களோடே ஸாமாநாதி கரித்தது
பரத்வ்யதிகளோபாதி தத் குணங்களும் ஸ்வாதீநமாய் இருக்கையாலே
பிருதிவி வாதி களோடு ஸாமாநாதி கரண்யம் சரீர ஆத்ம சம்பந்த நிபந்தனம்

குணங்களோடு ஸாமாநாதி கரண்யம் அவற்றின் உடைய சத்தாதிகள் ஸ்வாதீநமாய் இருக்கையாலே
அண்டத்துக்கு மஹத் அஹஙகாரங்களும் காரணமாய் இருக்க பூதங்கள் ஐந்தையும் சொல்லுவான் என் என்னில் –
தஸ்மா த்வாஸ் தஸ்மா தாத்மன ஆகாரஸ் சம்பூத -என்கிற ஸ்ருதி சாயையாலே அருளிச் செய்கிறார் –
பூதோப்யோஸ்ண்டம் -என்று ரிஷிகள் சொல்லுகிற பஞ்சீ கரணத்தாலே –
சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்ம காரணம் ஆகையாலே சித் அந்தர்பூதமான புருஷ சமஷ்டியையும் நினைக்கிறது
இவ்வளவாக பரகத ஸ்ருஷ்டி சொல்லிற்று ஆய்த்து

வேறு வேறு தன்மையாய்
அண்டாந்த வர்த்திகளாய் -ஒன்றுக்கு ஓன்று விலஷணமான தேவாதி பதார்த்தங்களுக்கும் ஆத்மாவாய்
ஆத்மாக்களுடைய ஸ்வரூபம் -ஏக ரூபமாய் இருக்க –வேறு வேறு -என்கிறது கர்மத்தால் வந்த தேவாதி ரூபங்களைப் பற்ற

நீ நிலாய வண்ணம் –
சித் அசித் சரீரியான நீ -கார்ய காரண வர்க்கத்தில் நிற்கிற பிரகாரம் -அதாகிறது
அசித் கதமான பரிணாமம் என்ன
சேதன கதமான அஞ்ஞான துக்காதிகள் என்ன
இவை உன் பக்கல் ஸ்பர்சியாதபடி நிற்கை

நின்னை
சித் அசித் விசிஷ்டமாய் கொண்டு ஜகத் உபாதான காரணமான உன்னை

ஆர் நினைக்க வல்லர்
நினைக்க வல்லார் ஆர்
பரமாணுக்கள் உபாதான காரணம் என்னும் வைசேஷிகர் நினைக்கவோ
பிரதானம் உபாதான காரணம் -சித் அசித் சம்வர்க்கத்தாலே ஜகன் நிர்வாஹம் என்னும் சாங்க்யர் நினைக்கவோ
நிமித்த உபாதனங்களுக்கு பேதம் சொல்லும் சைவர் நினைக்கவோ
சித் அசித் ஈஸ்வர தத்த த்ரயங்களும் ப்ரஹ்ம பரிணாமம் என்னும் பேத அபேதிகள் நினைக்கவோ
நிர்விசேஷ வஸ்து வ்யதிரிக்தங்கள் அபரமார்தம் என்னும் மாயாவாதிகள் நினைக்கவோ
வேதாந்த பிரமேயம் கைப்பட்டார் ஒழிய ஆர் நினைக்க வல்லர் என்கிறார் –

————————————————————————————————-

120-பாட்டு –அவதாரிகை –

உன்னபாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர் மன்ன வந்து பூண்டு –என்று வடிவு அழகிலே வந்த
ஆதரத்துக்கு அவ் வடிவே விஷயமான படியை சொன்னார் -கீழ்-
இதில் –
கிடந்தானை கண்டேறுமா போலே தாமே அவ் விக்ரஹத்தை பற்றுகை அன்றிக்கே
நிர்ஹேதுகமாக
பெரிய பெருமாள்
தம்முடைய விக்ரஹத்தை என்னுள்ளே பிரியாதபடி வைக்கையாலே
விரோதி வர்க்கத்தை அடையப் போக்கி –
அபுநா வ்ர்த்தி லஷணமாய்
நிரதிசய ஆநந்த ரூபமான
கைங்கர்யத்தைப் பெற்றேன் என்று –
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று உபகார ஸ்ம்ர்தியோடே தலைக் கட்டுகிறார் –

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே -120-

வியாக்யானம்-

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி-
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து என்கிறபடியே விச்சேதியாதே
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ஆத்மகமான பல வகைப் பட ஜன்மங்களில் நின்றும் –
அஞ்ஞனாய் -நித்ய சம்சாரியாய் போந்த என்னை மாற்ற நினைத்து –

இயக்க யறாமை யாவது –
ஒரு தேகத்துக்கு ஆரம்பகமான கர்மத்தை அனுபவிக்க இழிந்து – அநேக தேக ஆரம்பகமான
கர்மங்களைப் பண்ணுகையாலே தேக பரம்பரைக்கு விச்சேதம் இன்றி செல்லுகை –
இயக்கு -நடையாட்டம் –
இயக்கல் -என்று வல் ஒற்றாய் கிடக்கிறது –
மாற்ற நினைப்பதை –மாற்றி -என்பான் என் என்னில் –
உயிர் முதலாய் முற்றுமாய் -என்றாப் போலே –

இன்று வந்துதுயக் கொண் மேக வண்ணன் நண்ணி –
விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து-தன் பக்கலிலே பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை தரும்
காளமேக நிபச்யாமானவன் – எனக்கு நினைவு இன்றிக்கே இருக்க
இன்று நிரஹேதுக கிருபையினால் நான் இருந்த இடத்தே வந்து கிட்டி –
நண்ணுதல் -அணைதல்
நச்சு நாகணைக் கிடந்தான் -என்றும் –
பொன்னி சூழ் அரங்கமேயபூவை வண்ணா -என்றும் – சொல்லிப் போந்தவர் ஆகையாலே –
இங்கும் உய்யக் கொள் மேக வண்ணன் என்று
பெரிய பெருமாள் திருமேனியைத் தமக்கு உஜ்ஜீவன ஹேது-என்கிறார்-

என்னிலாய தன்னுளே –
அஹம் புத்தி சப்தங்கள் தன்னளவிலே பர்வசிக்கும்படி –
தனக்கு பிரகாரமான என்னுடைய ஹ்ர்த்யத்திலே –
தத்வமஸி -என்று -உபதேசித்து -அஹம் ப்ரஹ்மாசி -என்று அனுசந்தித்துப் போந்த
அர்த்தம் இறே இவர் இங்கு அருளிச் செய்கிறார் –
இந்த சரீர ஆத்ம சம்பந்தம் இங்கே சொல்லுகிறது -தன் பேறாக உபகரித்த விதுக்குக் ஹேதுவாக –

மயக்கினான் தன் மன்னு சோதி –
அபிமதமாய் -அநுரூபமாய் -ஜ்யோதிர் மயமான –
திவ்ய மங்கள விக்ரஹத்தை பிரிக்க ஒண்ணாதபடி கலந்தான் –
மயக்கம் -செறிவு –
தன்னை ஒழிய எனக்கு ஒரு ஷண காலமும் செல்லாதபடி பண்ணினான் என்கை –

ஆதலால் –
இப்படி தான் மேல் விழுந்து இவ்வளவும் புகுர நிறுத்துகையாலே

என்னாவி தான் –
தனக்கு அநந்ய சேஷமாய் -ஸ்ரீ கௌஸ்துபம் போலே -அபிமதமுமான என் ஆத்மாவானது –

இயக்கெலா மறுத்து –
அந்யோந்ய கார்ய காரண பவத்தாலே ஒழுக்கறாத -அவித்யா கர்ம வாசன ருசி ப்ரகர்தி சம்பந்தங்களை யறுத்து –
இயக்கறாத பல் பிறப்பில் -என்று காரணமான தேக சம்பந்தகளை சொல்லிற்றாய் –
தத் கார்யமான அஞ்ஞான கர்மங்கள் என்ன –
தத் ஆஸ்ரயமான வாசனா ருசிகள் என்ன –
இவற்றையும் கூட்டி -எலாம் –அறுத்து என்கிறார்

அறாத இன்ப வீடு பெற்றதே –
யாவதாத்மபாவி விச்சேதம் இல்லாத –நிரதிசய ஆனந்தமான
கைங்கர்ய ரூப மோஷத்தைப் -பெற்றது

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெருமாள் திருமொழி-அருளிச் செயலில் –பிரவேசங்கள் தொகுப்பு –

April 4, 2019

முதல் பதிகம் அவதாரிகை –

ஸ்ரீ யபதியாய் -ஜ்ஞானானந்தைக ஸ்வரூபனாய்-சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-உபய விபூதி உக்தனாய் –
சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரன் அடியாக பெருமாள் பெற்றது -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் ஆகையாலே
க்ரமத்தாலே காண்கிறோம் என்று ஆறி இருக்கலாவது தம் தலையால் வந்ததாகில் இறே-
அவன் தானே காட்டக் காண்கிறவர் ஆகையாலே அப்போதே காண வேண்டும் -படி விடாய் பிறந்தது –
பரமபதத்திலும் அனுபவிப்பது குண அனுபவம் ஆகையாலே –
அந்த சீலாதி குணங்கள் பூரணமான கோயிலிலே அனுபவிக்கப் பிரார்த்திக்கிறார்
இங்கே அனுபவிக்கக் குறை என்-பிரார்த்தனை என் என்னில் –
ஸ்வா தந்த்ர்யம் பிறப்பே உடையராகையாலே -மனுஷ்யர் நிரோதிப்பார் பலர் உண்டாகையாலே –
இங்கு வந்து அனுபவிக்க மாட்டாதே
அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை -என்றும் நம்மாழ்வார் பிரார்த்தித்துப் பெற்ற பேற்றை
இங்கேயே அனுபவிக்க ஆசைப் படுகிறார் –

பர்யங்க வித்யையில் சொல்லுகிறபடியே இறே முமுஷூ மநோ ரதிப்பது —
அத்தை இங்கே திரு வநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து கிடக்கிற இடத்திலே அனுபவிக்க மநோ ரதிக்கிறார் –
சம்சாரி முக்தனாய்ச் சென்றால் -பாதே நாத்யா ரோஹதி -இத்யாதிப்படியே எழுந்து அருளி இருக்கிற
பர்யங்கத்திலே மிதித்து ஏறினால் நீ ஆர் என்றால் -நான் ராஜ புத்ரன் என்னுமா போலே –
அஹம் பிரஹ்மாஸ்மி -என்று இறே இவன் சொல்வது–

————————–

இரண்டாம் பதிகம் –அவதாரிகை

பகவத் விஷயத்தில் கை வைத்தார்க்கு சம்பவிப்பன சில ஸ்வ பாவங்கள் உண்டு –
ஆநு கூல்ய சங்கல்ப -ப்ராதி கூலச்ய வர்ஜனம் –
ஆநு கூல்யமாவது -பாகவத விஷயத்திலும் பகவத் விஷயத்திலும் பண்ணுமவை-
பகவத் விஷயம் பூர்ணம் ஆகையாலே இவனுக்கு ஆநு கூல்யம் பண்ணுகைக்கு துறை இல்லை இறே –
இப்படி துறை இல்லை என்று இவன் கை வாங்காமைக்காக இறே இவன் உகந்த த்ரவ்யமே தனக்குத் திரு மேனியாகவும்
இவன் திரு மஞ்சனம் பண்ணின போது அமுது செய்து அல்லாத போது பட்டினியுமாம் படி இறே அவர்களுக்குத் தன்னை அமைத்து வைப்பது –
இப்படி யாய்த்து இல்லையாகில் பரி பூர்ண விஷயத்தில் இவனுக்கு கிஞ்சித் கரிக்கைக்கு துறை இல்லை இறே
ஜ்ஞாநீத் வாத்மைவமேமதம் -என்றும் –
மம பிராணா ஹி பாண்டவா –என்றும்
பத்தராவி -என்றும்
ததீய விஷயத்தில் பண்ணும் ஆநு கூலயமும் பகவத் விஷயத்திலே பண்ணிற்றாம் இறே
ஆகையால் இவரும் தமக்கு இவை இரண்டும் பிறந்தது என்கிறார் –
பகவத் விஷயத்தில் பிறந்த ஆநு கூல்யம் சொன்னார் -கீழில் திரு மொழியில்
ததீய விஷயத்தில் ஆநு கூல்யம் பிறந்தபடி சொல்லுகிறார் இத் திரு மொழியில் –

முடிய பாகவத விஷயம் உத்தேச்யம் ஆகிறதும் பகவத் விஷயத்தில் அவகாஹித்தார் -என்னுமது இறே
இன்னான் அர்த்தமுடையன் -ஷேத்ரமுடையன் -என்று ஆஸ்ரயிப்பாரைப் போலே –
பகவத் பிரத்யாசத்தி யுடையார் என்று இறே இவர்களைப் பற்றுகிறது
பகவத் விஷயத்தில் ஸ்தோத்ரம் பண்ண இழிந்தவர் ஆசார்ய விஷயத்தை ஸ்தோத்ரம் பண்ணப் புக்கு அவர்க்கு
நிறமாகச் சொல்லிற்று பகவத் விஷயத்தில் ஜ்ஞான பக்திகளை இறே ஜ்ஞான வைராக்ய ராசயே-

———————

மூன்றாம் பதிகம் அவதாரிகை –

பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேன் -என்று –
பகவத் பிராவண்யம் ததீய சேஷத்வ பர்யந்தமாய்
அவர்கள் அல்லது செல்லாமை பிறக்கும் அளவும் உண்டு –அது சொல்லிற்று கீழில் திரு மொழியில்-

எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனியவாறே -என்றும்
மானிடவர் அல்லர் என்று மனத்தே வைத்தேனே -என்றும் –
பித்தர் என்றே பிறர் கூற -என்றும் -பிறக்கும் அவஸ்தை உண்டு
பகவத் பிராவண்யத்தாலே முன்பில் அதுக்கு சங்கல்பமே யாய்த்து வேண்டுவது –
அடிமை அவர்கள் கொள்ளக் கொள்ள விறே செய்வது
ப்ராதி கூல்யத்தில் வர்ஜித்தே நிற்க வேணும்
பகவத் குணங்களோ பாதி விபூதியும் ததீயத்வ ஆகாரத்தாலே அநு பாவ்யம் சொன்ன சாஸ்திரம் தானே இறே
இத்தை த்யாஜ்யம் என்றதும்
ஜ்ஞான கார்யமாய் இறே ததீயர் உத்தேச்யம் ஆகிறதும்
தமோ குண பிரசுரரோடு சஹ வாசம் பொருந்திற்றாகில் அஜ்ஞான கார்யம் இறே –
மத்தஸ் சர்வமஹம் -என்று சாமான்ய புத்தி பண்ணின ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான்-
பூர்வ அவஸ்தையில் மத்பிது என்று அவனை ரஷிக்கப் பார்த்தவன் ப்ராதிகூல்யத்தில் விஞ்சின வாறே
அவனை விட்டுக் காட்டிக் கொடுத்தான் இறே
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ஆந்தனையும் ஹிதம் சொல்லிப் பார்த்து தன் ஹிதத்துக்கு மீளாத வவஸ்தை வானவாறே
நெருப்புப் பட்ட விடத்திலே விலக்க ஒண்ணாத போது தன்னைக் கொண்டு தான் தப்புவாரைப் போலே –
ப்ராதிகூல்யம் அசலிட்டு-தன்னளவும் வரும் என்று தன்னைக் கொண்டு தான் தப்பினான் இறே

ப்ராதி கூல்யமாகிறது –
தேஹாத்மா அபிமானிகள் ஆகையும்-
விஷய பிரவணராய் இருக்கையும் –
தேஹாத் வ்யதிரிக்த வேறொரு வஸ்து உண்டு என்று அறியாது இருக்கையும் இறே –
இப்படி இருப்பாரோடு எனக்குப் பொருந்தாது என்கிறார் இத் திருமொழியில்

—–

நாலாம் பதிகம் அவதாரிகை –

பகவத் ஜ்ஞானமும் பிறந்து –
இதர விஷய த்யாகமும் பிறந்து –
குணாதிக விஷயத்தை அனுபவிக்க வேணும் என்னும் ருசியும் பிறந்து
அந்த குணம் பூரணமாக அனுபவிக்கலாம் இடத்தே அனுபவிக்க வேணும் என்னும் ஆசையும் பிறந்து –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்னுமா போலே
அடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் -என்னும் அதுவும் பிறந்து
இப்படி பகவத் விஷயத்திலும் பாகவத் விஷயத்திலும் ஆநு கூல்யமும் –
இதர விஷய த்யாக பூர்வகமாக கண் அழிவறப் பிறக்கச் செய்தே
விரோதியும் போய்-அநந்தரம் பகவல் லாபமாகவும் காணாமையாலே
யதிவாராவணஸ் ஸ்வயம் – என்றும் –
ஆள் பார்த்துழி தருவாய் -என்றும் மேல் விழக் கடவவன் பக்கல் குறையில்லை-

இதுக்கு வேறு ஒரு ஹ்ருதயம் உண்டாக வேணும் என்று பார்த்து –
சரீர சமனந்தரம் பகவல்லாபமாகில் பரிக்ரஹித்த சரீரம் ஷத்ரிய சரீரமாய்
போகங்களில் குறை வற்று இருந்த பின்பு
சரீர அவசா நத்தளவும் போகங்களை புஜித்து பின்னை க்ரமத்தாலே பகவத் பிராப்தி பண்ணுகிறோம்
என்று நினைத்து இருக்கிறேன் என்று நினைத்து ஆறி இருந்தேனாக வேணும் என்னுமத்தை
திரு உள்ளத்திலே கொண்டு
தமக்கு க்ரம பிராப்தி பொறாமை தோன்ற –
ஒன்றியாக்கை புகாமல் உய்யக் கொள்வான் நின்ற வேங்கடம் -என்றும்
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -என்றும்
கீழே அனுபவித்த பெரிய பெருமாள் தாமே சம்சார சம்பந்தம் அறுத்துக் கொடுக்கைக்கும் –
கைங்கர்யம் கொள்ளுகைக்கும் திருமலையிலே நிற்கிறார்
ஆகையாலே திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே விழுந்து
விரோதியில் அருசியும்
கைங்கர்யத்தில் ருசியும்
பிறந்த த்வரையையும் அவிஷ்கரிக்கிறார் –

இங்குத்தை போகங்களில் காட்டில் நிலை நின்ற போகங்களுமாய்
இது போலே சாவதி யன்றியே நிரவதியுமாய் இருக்கும் இறே ஸ்வர்க்கத்தில் போகம்
அவை பெற்றால் செய்வது என்னீர் என்ன –
அவையும் கீழில் கழித்த பூமியில் போகமும் இரண்டும் கூடக் கிடக்கிலும் வேண்டா என்கிறார் –

பார தந்த்ர்யத்துக்கு உறுப்பாகப் பெறில் கீழில் கழிந்த மனுஷ்ய ஜன்மமே யாகிலும் அமையும் என்கிறார் –

மனுஷ்ய சரீரம் ராஜாவாகைக்கும் பொதுவாகையாலே-அது வேண்டா –திரு வேங்கடமுடையானுக்கு உறுப்பாம் படி
திருமலையிலே நிற்பதொரு ஸ்தாவரமாக வமையும் நான் என்கிறார்

செண்பகமானால் பரிமளத்துக்காக உள்ளே கொண்டு புகுவார்கள் என்று ஒரு பிரயோஜனத்தை கணிசித்ததாம் இறே –
அப்படியும் ஒன்றும் இல்லாத தம்பகமாகவும் அமையும் என்கிறார் –

ஸ்தாவரமானால் ஒரு நாள் உண்டாய் ஒரு நாள் இன்றியே போம் இறே -அங்கன் இன்றியே
என்றும் ஒக்க உண்டாய் இருந்த திருமலையிலே ஏக தேசமாக வேணும் நான் -என்கிறார்-

திருமலையில் அதிகாரமானால் ஏற வல்லார் அனுபவித்து -மாட்டாதார் இழக்குமதாய் இருக்கும் இறே
அப்படி இன்றியே எல்லார்க்கும் அனுபவ யோக்யமாய் இருக்கும் இருக்கும் கானாறாக வேணும் நான் என்கிறார்

கிட்டும் அளவும் வேண்டா என்கிறீர் -கிட்டின வாறே அனுபவிக்கிறீர் என்ன -அவை கிட்டினாலும் வேண்டா என்கிறார்

———————————————-

ஐந்தாம் பதிகம் அவதாரிகை –

திரு மந்தரத்தால் சொல்லிற்று யாய்த்து அனந்யார்ஹ சேஷத்வம் இறே –
இந்த அனந்யார்ஹ சேஷத்வ பிரதிபத்திக்கு விரோதி தான்
நான் என்னது -என்று இருக்கும் அஹங்கார மமகாரம் இறே –
அநாத்மன்யாத்ம புத்தியும் அச்வேஸ்வத்ய புத்தியும் இறே-
சம்சாரம் ஆகிற வர்ஷத்துக்கு பீஜம் என்று பிரமாணங்கள் சொல்லுகிறது -அது சேதனர்க்குப் பொதுவானது இறே
அப்படி இன்றிக்கே ராஜாக்கள் ஆகையாலே அஹங்கார மமகார வச்யராய் இறே இருப்பது
நிலா தென்றல் சந்தனம் என்று சொல்லுகிற இவை பதார்த்தம் ஆகாத போது ஸ்வரூப சித்தி இல்லையாம் இறே
அப்படியே இறே பரார்த்தமான வஸ்துவுக்கும் அஹங்கார மாமாகாரத்தாலே ஸ்வரூப சித்தி அழியும் இறே
இப்படி பரார்த்தம் என்னும் படிக்கு பிரமாணம் உண்டோ என்னில்
இவனை -யசயாச்மி -என்றும்
ஓதி -பதிம் விச்வச்ய -என்றும்
அவனை ஒதுகையாலே இவன் ஒன்றுக்கும் கடவன் அல்லன் –
உடையவனானவன் எல்லா வற்றுக்கும் கடவன் என்றது இறே-

அப்படி பிரமாணங்களால் சொன்ன சேஷத்வ பிரதிபத்தியாவது –
ததீய சேஷத்வ பர்யந்தமான அனந்யார்ஹ சேஷத்வம் இறே –

இப்படி தமக்குப் பிறந்து இருக்கச் செய்தே அது பல பிரதமாகக் கண்டிலர்
தான் தன கருமம் செய்கிறான் என்றாதல் –
நாம் க்ரமத்தால் செய்கிறோம் என்று ஆறி இருந்தானாதல் –
நம்முடைய த்வரைக்கு அடியான ருசியும் அறியுமவன் ஆகையால்
ருசி பாகமானால் செய்கிறோம் என்று ஆறி இருந்தானாம் அத்தனை –
நம்மைப் போல் அன்றியே செய்தது அறிந்து இருக்கும் சர்வஜ்ஞனாகையும் –
நினைத்தது தலைக் கட்ட வல்ல சர்வ சக்தனாய் இருந்து வைத்து ஆறி இருக்கும் போது
சில ஹேதுக்கள் உண்டாக வேணும் இறே என்று பார்த்து
எனக்கு நானும் இல்லை -பிறரும் இல்லை -பேற்றில் த்வரையால் துடிக்கிறேன் அத்தனை அல்லது
சாதன அனுஷ்டான ஷமனும் அல்லேன்-என்னும் இடத்தை அநந்ய கதிகளாய் இருக்கும் பதார்த்தங்களை நிதர்சனமாக இட்டு
தம்முடைய அநந்ய கதித்வத்தை-திரு வித்துவக்கோட்டு நாயனார் திருவடிகளிலே விண்ணப்பம் செய்கிறார்-

ஒருவனாலே ஹிதம் என்றும் -பலத்திலே அந்வயம் ஒருத்தனுக்கே -என்றும் -அத்யவசித்தால் ஹிதங்களையே பிரவர்த்தியா நின்றான்
என்று தோற்றினாலும்-அவனே ரஷகன் என்று கிடக்க இறே கடவது –
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையரை -பிள்ளைகள் புகை சூழ்ந்த படி -சஹிக்கப் போகிறது இல்லை -என்ன -சற்றுப் போதன்றோ
வ்யசனப் படுவது -ஸ்ரீ வைகுண்ட நாதன் திருவடிகளிலே ஸூகமாய் இருக்க வன்றோ புகுகிறது -என்றார் இறே
தான் தஞ்சமாகப் பற்றின விஷயத்துக்கு அந்யதா சித்தி பிறந்ததோ வென்று மீளும்படி இருக்கிற தசையிலே ஹேத்வந்த்ரமது
அவ்வருகில் பேற்றில் குறையில்லை என்னும் அத்யவசாயம் இருந்த படி இறே
இதிலே மஹா விஸ்வாசம் ஆகிறது -தோற்றுகிற ஆபாத பிரதிபத்தியைக் கண்டு மீளாதே இருக்குமது இறே

————————————————

ஆறாம் பதிகம் -பிரவேசம் / அவதாரிகை –

உகந்து அருளின தேசத்தை அனுபவித்தார் கீழ் –
அவ்வனுபவம் அவதாரங்களில் அனுபவ அபேஷையைப் பிறப்பித்தது –
அதில் தோள் தீண்டியான ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை அனுபவித்தவர்களுடைய பாசுரத்தாலே அனுபவிக்கிறார் –

இத்தலையால் வேறு செய்வது இல்லாமையாலே கிலாய்க்கத் தொடங்கினார் –
பகவத் விஷயத்தில் பாவ பந்தத்தில் ஊற்றம் இருந்தபடி –
பிராட்டிமார் தசையை பிராப்தராய் கூடுவது பிரிவது ஊடுவதாம் படி யானார் –
நம்மாழ்வாருக்கு -மின்னிடை மடவாரும் –
திரு மங்கை ஆழ்வாருக்கு -காதில் கடிப்பும் போலே இருக்கிறதாய்த்து
பெருமாளுக்கு இத் திருமொழி –
நம்மாழ்வார் பகவத் விஷயத்தில் நின்ற ஊற்றம் எல்லாம் தோற்ற வன்மை உடைத்தாய் இருக்கும் -மின்னிடை மடவார் –
திரு மங்கை ஆழ்வார் -தம் மார்த்த்வம் எல்லாம் தோற்றி -மென்மையை உடைத்தாய் இருக்கும் -காதில் கடிப்பு –
இவர் தம்முடைய ராஜ குலம் எல்லாம் தோற்றி இருக்கும் இத்திருமொழி
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் தோள் தீண்டி யாகையாலே –
ஒரு செவ்வாய் கிழமை முற்படப் பெற்றிலோம் -பல்லிலே பட்டுத் தெறித்தது -என்று
பஞ்ச லஷம் குடியில் பெண்களுக்கு கிருஷ்ணன் பக்கல் உள்ள விடாய் எல்லாம் தமக்கு ஒருவருக்கு உண்டாகையாலே
திருவாய்ப்பாடியிலே பெண்கள் பேச்சாலே பேசுகிறார் –

ஒரு பிராட்டி முநையில் மணலில் போய் நில்லு –
நான் அங்கே வருகிறேன் என்று சொல்லி விட –
அவள் அங்கே போய் விடியும் அளவும் நின்று –
அவன் வரக் காணாமையாலே -அவனைக் கண்ட போதே ஊடிச் சொல்லுகிற வார்த்தையாய் இருக்கிறது –
அடுத்து வேறு ஒரு பிராட்டி வார்த்தை/மூன்றாம் பாட்டு -வேறு ஒரு பிராட்டி வார்த்தை
உகந்து அருளின தேசத்தை அனுபவித்தார் கீழ் –
நாலாம் பாட்டில்-அவ்வனுபவம் அவதாரங்களில் அனுபவ அபேஷையைப் பிறப்பித்தது –
அதில் தோள் தீண்டியான ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை அனுபவித்தவர்களுடைய பாசுரத்தாலே அனுபவிக்கிறார்
ஒன்பதாம் பாட்டில் -தோல்வி தோற்றச் சொல்லுகிறார்கள் –

—————————————

ஏழாம் பதிகம் பிரவேசம் –

பிராட்டி திருவடியைக் கண்டவாறே –
பிரணய ரோஷம் தலையெடுத்து –பிதுர் வசன பரிபாலனம் பண்ணப் போந்தார் என்று இறே
பெருமாள் உங்கள் கோஷ்டியில் பிரசித்தராய் இருப்பது –
இப்பது அங்கன் அன்று காண்-தம்மை விச்வசித்துக் கை கொடுத்த என்னை கை விடுகைக்காக காண் –
ரஷிதா ஜீவ லோகஸ்ய -என்கிறதையும் விட்டார் இறே என்று கிலாய்த்தால் போலே
கிலாய்த்தார் இவரும் கீழில் திரு மொழியில் –

சர்வாத்மாக்களுக்கும் பிராட்டிமாரோபாதி பிராப்தி உண்டு என்னும் படி
பகவத் விஷயத்தில் அவஹாகித்தவர் ஆகையால் இவர் கிலாய்த்தார் –
இப்படி கிலாய்த்தத்தைக்கு பிராப்தி உண்டாய் இருக்கிற விஷயத்தை அநாதி காலம் இழந்தோம் என்கிற இழவு வந்து தலை எடுத்து
முன்பு கிருஷ்ணனைப் பெற்று வைத்து பால்ய அவஸ்தையிலே அவன் செயல்களை அனுபவிக்கப் பெறாதே இழந்திருந்து –
கம்ச வத பர்யந்தமாக முன்புள்ள விரோதிகளை எல்லாம் போக்கி
தங்கள் முகத்தில் விழித்த கிருஷ்ணனைக் கண்ட போது கீழ் அனுபவிக்கப் பெறாத இழவுகளைச் சொல்லிக் கூப்பிட்ட
தேவகியார் பாசுரத்தாலே அநாதி காலம் தாம் இழந்த இழவுகளைச் சொல்லுகிறார் -இத் திரு மொழியிலே –

எட்டாம் பாட்டில் -நான் இழந்த இழவு எல்லாம் யசோதை பிராட்டி பெற்றாள் என்கிறாள் –

—————————————-

எட்டாம் பதிகம் பிரவேசம் –

ஸ்ரீ தேவகியார் இழந்த இழவு மாத்ரமேயோ –
ஸ்ரீ கௌசல்யைத் தான் காணப் பெற்றேனோ -என்று அச் சம காலத்திலே தாம் இழக்கையாலே –
அவள் அனுபவத்தை திருக் கண்ணபுரத்திலே அனுபவிக்கிறார் –

—————————————–

ஒன்பதாம் பதிகம் பிரவேசம் –

ஸ்ரீ கௌசலையார் பெற்ற பேற்றை அனுபவித்தார் கீழில் திரு மொழியில் –
பால்ய அவஸ்தை எல்லாம் அனுபவித்து பிராப்த யௌவனர் ஆனவாறே –
அனுபவிக்கப் பெறாதே இழந்த ஸ்ரீ சக்கரவர்த்தியோ பாதியும் தமக்கு பிராப்தி ஒத்து இருக்கையாலே
அனுபவிக்கப் பெறாதே இழந்தேன் என்று அவன் சொல்லுகிற பாசுரத்தாலே தம் இழவைப் பேசுகிறார் —

———————————————

பத்தாம் பதிகம் பிரவேசம் –

அநாதி காலம் இழந்த இழவை-
ஸ்ரீ தேவகி தேவகியார் பெற்று வைத்து ஸ்ரீ கிருஷ்ணனுடைய பால சேஷ்டிதங்களை
யனுபவிக்கப் பெறாதே இழந்தவள் பாசுரத்தாலே பேசினார் -ஆல நீள் கரும்பில் –
மன்னு புகழில்-ஸ்ரீ கௌசலையையார் பெற்ற பேற்றை அனுபவித்தார் –
பால்ய அவஸ்தையிலே எல்லாம் அனுபவித்து ப்ராப்த யௌவனம் ஆனவாறே அனுபவிக்கப் பெறாதே இழந்த
ஸ்ரீ சக்கரவர்த்தியோபாதி தமக்கு ப்ராப்தி உண்டாகையாலே அவன் பாசுரத்தாலே தம் இழவைப் பேசினார் -வன் தாளில் –
இத் திருமொழி யிலே-
கீழ்ப் பிறந்த இழவுகள் எல்லாம் தீர -சக்கரவர்த்தி திரு மகன் நித்ய வாஸம் பண்ணுகிற
திருச் சித்ரகூடமாகிற திருப்பதியிலே திரு வவதாரம் தொடங்கி-அந்த திருவவதார வ்ருத்தாந்தத்தை
ஸ்ரீ வால்மீகி பகவான் பேசி அனுபவித்தால் போலே
தன்னுடைய ஜ்ஞான வைச்யத்தாலே சமகாலத்தில் போலே அனுபவிக்கிறார் –

முதல் பாட்டில் -தேவர்கள் எம்மாரும் க்ருத்தார்த்தராம் படி வந்து திருவவதாரம் பண்ணின படி சொல்கிறது –
இரண்டாம் பாட்டில்–ராஷச வதத்துக்கு எல்லாம் அடியாகவும் -ரிஷியுடைய அபிமதம் தலைக் கட்டுகைக்கும்
-தாடகா தாடகேயரை நிரசித்த படி சொல்லுகிறது —
மூன்றாம் பாட்டில் -ஸ்ரீ பிராட்டியோட்டை கலவிக்கு விரோதியைப் போக்கின படி சொல்லுகிறது

—————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரப் பெருமாள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ பெருமாள் திருமொழி- அருளிச் செயலில் உபக்ரமும் உப சம்ஹாரமும் —

April 4, 2019

அவதாரிகை –

பர்யங்க வித்யையில் சொல்லுகிறபடியே இறே முமுஷூ மநோ ரதிப்பது —
அத்தை இங்கே திரு வநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து கிடக்கிற இடத்திலே அனுபவிக்க மநோ ரதிக்கிறார் –
சம்சாரி முக்தனாய்ச் சென்றால் -பாதே நாத்யா ரோஹதி -இத்யாதிப்படியே எழுந்து அருளி இருக்கிற பர்யங்கத்திலே மிதித்து ஏறினால்
நீ ஆர் என்றால் -நான் ராஜ புத்ரன் என்னுமா போலே -அஹம் பிரஹ்மாஸ்மி -என்று இறே இவன் சொல்வது –

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இருள் சிதறிப் போம் படி ஜ்யோதிஸ்சை உடைய மணிகள் விழுக்கிற நெற்றியையும்

இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
இனமான துத்தி -அதாவது இரண்டாய்ச் சேர்ந்த திருவடி நிலை என்று சொல்லுகிறவற்றை உடைத்தான பணங்கள்
ஆயிரத்தையும் பூரணமாக யுடையனாய்

அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
நாகா ராஜா வென்னும் மகா தேஜஸ் சை யுடையனாய்
எல்லா வற்றையும் வியாபித்து நிற்கிற சர்வேஸ்வரனை விளாக்குலை கொள்ளுகிற ஸ்வரூப குணங்களை உடையவன்
ஆகையாலே அனந்தன் என்று சொல்லப்படுகிற –
ஸூ முகன் -வா ஸூ கி -தஷகன் -என்றும் உண்டு இறே
அவர்களில் காட்டில் பகவத் பிரத்யாசித்தியை உடையது என்னும் பிரசித்தியை உடையவன் –

அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
அழகு மிக்கு ஒக்கத்தை உடைத்தாய் மறுவற்ற வெள்ளப் படுக்கை யாகிற திரு வநந்த ஆழ்வானை மேவி

திரு அரங்க பெரு நகருள்
வைகுண்டேது பரே லோகே –என்று சொல்லுமது அங்கே காணும்
இவருக்கு திருவரங்கம் ஆகிற மஹா நகரத்திலே

தெண்ணீர் பொன்னி திரை கையால் அடி வருட
தெளிந்த நீரை உடைத்த காவேரி -திரையாகிற கைகளாலே திருவடிகளை வருட

பள்ளி கொள்ளும் கருமணியை –
திரு வநந்த ஆழ்வான் மேலே ஒரு நீல ரத்னம் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுகிறவனை

கோமளத்தை
கண்ணார துகைக்க ஒண்ணாத சௌகுமார்யம் உடையவன்

கண்டு கொண்டு –
கலியர் -சோற்றைக் கண்டு கொண்டு -என்னுமா போலே

என் கண் இணைகள்
பட்டினி விட்ட என் கண்கள்

என்று கொலோ களிக்கும் நாளே-
அங்கே கண்டு -அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்கும் களிப்பை
இங்கே கண்டு களிப்பது என்றோ –

திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்
கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—1-11-

அவதாரிகை –

திரு நாமப் பாட்டு –

பூவோ பூத்யை பூ புஜாம் பூ ஸூ ராணாம் திவ்யோ குப்தைஸ் ஸ்ரயசே தேவதா நாம்-ச்ரியை ராஜ்ஞாம்
சோளவம் சோத்பவா நாம் ஸ்ரீ மத் ரங்கம் சஹ்ய ஜாமாஜகாம –

திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
விளங்கா நின்ற திருக் கரையை உடைத்தாய் -காவேரி சூழ்ந்த
திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
கோயிலிலே திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற -கடல் போலே ஸ்ரமஹரமான திருமேனியை உடைய சர்வேஸ்வரனை

கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
கண்ணாலே கண்டு அனுபவிக்க வேணும் என்னும் ஆசைப் பாட்டோடு

குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள் கூடலர் கோன் –
விளங்குகிற வெண் கொற்றக் கொடையையும் வெற்றியையும் உடைய சேனையையும் -ஐஸ்வர்ய பிரகாசகமான
ஆனையையும் உடையராய் மதுரைக்கு நிர்வாஹகருமான

கொடை குலசேகரன் சொல் செய்த
கொடை மாறாதே கொடுக்கும் பெருமாள் அருளிச் செய்த –

நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
உள்ளில் அர்த்தத்தில் இழிய வேண்டாதே -பதங்கள் சேர்ந்த சேர்த்திகள் பார்க்க வேண்டாதே -இது தானே ஆகர்ஷகமாய்
இருக்கிற தமிழ்த் தொடை பத்தும் வல்லார்

நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–
சீலாதி குண பூரணராய் -சர்வ ஸ்வாமி களாய்-வத்சலராய் இருக்கும் -பெரிய பெருமாள் திருவடிகளின் கீழே
யனுபவிக்க ஆசைப் பட்டால் போலே கிட்டப் பெறுவார்கள்-

——————————

முடிய பாகவத விஷயம் உத்தேச்யம் ஆகிறதும் பகவத் விஷயத்தில் அவகாஹித்தார் -என்னுமது இறே
இன்னான் அர்த்தமுடையன் -ஷேத்ரமுடையன் -என்று ஆஸ்ரயிப்பாரைப் போலே –
பகவத் பிரத்யாசத்தி யுடையார் என்று இறே இவர்களைப் பற்றுகிறது
பகவத் விஷயத்தில் ஸ்தோத்ரம் பண்ண இழிந்தவர் ஆசார்ய விஷயத்தை ஸ்தோத்ரம் பண்ணப் புக்கு அவர்க்கு
நிறமாகச் சொல்லிற்று பகவத் விஷயத்தில் ஜ்ஞான பக்திகளை இறே
ஜ்ஞான வைராக்ய ராசயே-

தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்ட மேவி அலர்ந்து அழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே–2-1-

தேட்டரும் –
தாமே வந்து ஸூலபராம் அத்தனை அல்லது ஸ்வ யத்னத்தால் காண ஒண்ணாது என்கை-

திறல் தேனினை –
ய ஆத்ம தாபலதா-என்னுமா போலே -தன்னையும்
கொடுத்து -தன்னை அனுபவிக்கைக்கு ஈடான பலத்தையும் கொடுக்கும் தேன்-

தேனினை தென் அரங்கனை -திரு மாது வாழ் வாட்டமில் வனமாலை மார்வனை
ஸ்பர்ஹணீயமான திருவரங்கத்திலே நித்ய வாஸம் பண்ணுமவனாய்-திரு மேனியின் ஸ்பர்சத்தாலே-
ஒருக்காலைக்கு ஒரு காலை செவ்வி செவ்வி பெறுமாய்த்து இட்ட திருமாலை –

வாழ்த்தி –
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்கிறபடியே
அவளும் இவனும் சேர்ந்த சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணி

மால் கொள் சிந்தையராய்
பித்தேறின மனஸை உடையராய்

ஆட்ட மேவி –
ஆட வேணும் என்னும் கார்யா புத்யா யன்றியிலே ப்ரேமம் ஒட்டாமையாலே ஆட்டமேவி

அலர்ந்து அழைத்து
அலர்ந்து கார்யப் பாடறக் கூப்பிட்டு

அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
க்ரம பிராப்தி பெறாமையாலே -அறிவு குடி போய் பரவசராய் அநந்ய பிரயோஜனருடைய

ஈட்டம் –
இப்படி இருப்பார் உமக்கு எத்தனை பேர் வேணும் என்ன –
அடியார்கள் குழாங்களை காணப் பெறில்

கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே–
இது கூடிற்றாகில் பிரயோஜனம் கண்ணுக்கு இது அல்லது இல்லை –
த்ரஷ்ட பிரயோஜனம் இது –

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே 2-10-

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்–
ஸ்ரீ யபதியான பெரிய பெருமாளுடைய
அநந்ய பிரயோஜனராய் இருக்கும் ஸ்ரீ-வைஷ்ணவர்களுடைய
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
ஆத்ம தாச்யத்திலே என்றும் ஒக்கப் பொருந்தின திரு உள்ளத்தை உடையரோம்

கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்-
கொல்லிக்கும் மதுரைக்கும் உறையூருக்கும் -நாயகரான பெருமாள் –
பெரிய உடையாருடைய இழவாலே வந்த வெறுப்பாலே –
வனவா சோம ஹோதயா -என்று போய்-ராஜ்யாத்பரம்சோ வ நே வாச –என்று
வந்ததுக்குப் போந்து அது பிரியமாய் இருந்தவர் இவ் விழவாலே அடியிலே போந்ததுவும் எல்லாம்
தமக்கு வெறுப்புக்கு உடலானாப் போலே
ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன் -என்றும்
இவ்வரசும் யான் வேண்டேன்-என்றும்-சொல்லுகிற இவர்க்குத் ததீய சேஷத்வத்தைத் தந்த ஜன்மம் என்று
ராஜ ஜன்யம் தன்னையும் கொண்டாடுகிறார் இறே

சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் –
இனிய சப்தங்களை உடைய தமித் தொடை வல்லவர்கள்

தொண்டர் தொண்டர்கள் ஆவரே –
இவர் ஆசைப் பட்டுப் போந்த பாகவத சேஷத்வ பர்யந்தம் ஆகிற புருஷார்த்தத்தை லபிப்பார்கள் –

———————————————

மெய்யில் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இவ்
வையம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஐயனே அரங்கா என்று அழைகின்றேன்
மையல் கொண்டு ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-1-

மெய்யில் வாழ்க்கையை மெய் என கொள்ளும்
மெய் என்றும் -பொய் எனபது நில்லாமையும் -நிலை நிற்குமத்தையும் சொல்லுகிறது –
நிலை நில்லாததிலே -நித்யமான ஆத்ம வஸ்துவைப் பண்ணும் பிரதிபத்தியைப் பண்ணும் என்னுதல் –
மெய்யிலே உண்டான வாழ்க்கை – என்னுதல் –
அதாகிறது பிரகிருதியைப் பற்றி வரும் ப்ராக்ருத போகங்கள் இறே

இவ் வையம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
தேஹாத்ம அபிமாநிகளாய் இருப்பாரோடு எனக்கு ஒரு சேர்த்தி இல்லை –

ஐயனே அரங்கா என்று அழைகின்றேன்
தேஹாத்ம வ்யதிரிக்தம் வேறு ஒருவர் உண்டு -என்று அறிந்தவன் -என்கிறார்
ஐயனே –
நிருபாதிக பந்துவே
அரங்கா –
அனுஷ்டான பர்யந்தம் ஆக்கின முதலித்தாப் போலே கோயிலிலே வந்து ஸூலபனானவனே-
என்று அழைக்கின்றேன் –
கார்யப் பாடறக் கூப்பிடா நின்றேன்

மையல் கொண்டு ஒழிந்தேன் என் தன் மாலுக்கே –
அவன் எனக்குப் பித்தேறின படியைக் கண்டு நானும் அவனுக்கு பித்தனானேன் –

அங்கை ஆழி அரங்கன் அடியிணை
தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம்
கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல்
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே–3-9-

அங்கை ஆழி அரங்கன் அடியிணை-
அழகிய மணவாளப் பெருமாள் திருவடிகளிலே

தங்கு சிந்தைத்
பெருமாள் திருவடிகளுக்கு அவ்வருகு கந்தவ்ய பூமி இல்லாமையாலே அங்கே தங்கு சிந்தையை உடைய

தனிப் பெரும் பித்தனாம்
பகவத் விஷயத்திலே இவர்களோபாதி பித்தேறினார் வேறு ஒருவர் இல்லாமையும் –
சிலவரால் மீட்க ஒண்ணாமையுமான பித்தனாம்

கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல்
மேலைத் திக்குக்கு நிர்வாஹகரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்தது

இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே–
இவற்றில் வல்லவர்களுக்கு இங்கே ஏதம் ஓன்று இல்லையே
ஏதமாவது-அபாகவாத ஸ்பர்சமாதல்-
பகவத் பிராவண்யத்தில் குறையாதல் -வரும் துக்கம் போம் என்றும்
இஸ் சம்சாரத்தில் இருக்கும் நாளில்லை –
இத் துக்க பிரசங்கம் உள்ளத்து இவ்விடத்தே இறே –
இவை கற்றவர்களுக்கு இப் பிரசங்கம் உள்ள இத் தேசத்திலே இல்லை-

———————-

ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –4-1-

ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்
இந்த சரீரத்துக்கு சொல்லுகிற குற்றம் என் என்ன –
நாள் செல்ல நாள் செல்ல மாம்ஸ பிரசுரமாய் வருகையாலே
சரீரம் தடித்து -ஆத்மாதிகளுக்கு -அத்தனை -அத்தாலே வேண்டேன் என்கிறார் –
தர்மமுடைய ஸ்வரூபமும் -நித்தியமாய் இருக்கச் செய்தேயும் –
அசந்நேவ -என்கிறது ஜ்ஞான சங்கோசத்தை பற்ற விறே –
அப்படியே ஜ்ஞான சங்கோ சத்தை பிறப்பிக்குமது வாகையாலே வேண்டேன் என்கிறார் –
யான் வேண்டேன் –
தலை யறுத்துக் கொள்ளுமவர்கள் சந்தனம் பூசித் திரியுமா போலே
விழுக்காடு அறியாதான் வேணுமே என்று இருந்தானாம் அத்தனை –
விவேக ஜ்ஞானம் உடைய நான் வேண்டேன் –
சரீரத்தினுடைய ஹேயத்தையும்-
ஆத்மாவினுடைய வைலஷண்யத்தையும்
இது தான் தனக்கே சேஷம் என்னும் இடத்தையும்
அவன் தானே அறிவிக்க அறிந்த நான் வேண்டேன் –

ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்
அவன் தானே விரோதியைப் போக்கி -கைங்கர்யத்திலே -அன்வயிப்பிக்குமவன் –
நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு இடைச் சுவரான ரிஷபங்கள் ஏழையும் வென்றவன் –
மாதாவின் பக்கலிலே ஸ்நேஹத்தைப் பண்ணின பிதாவை அனுவர்த்திக்கும் புத்ரனைப் போலே
அடிமைத் திறம் அல்லால் –
அடிமையிடையாட்டம் -என்னுதல்
அஹம் சர்வம் -என்றும் –
வழு விலா அடிமை -என்றும் சொல்லுகிறபடியே அடிமைத் திறம் என்னுதல் –

கூனேறு சங்கம் இடத்தான் –
கைங்கர்ய ருசி உடையாரை நித்ய கைங்கர்யம் கொள்ளுமவன் –
ப்ராஞ்ஜலீம் ப்ரஹ்மா ஸீ நம் -என்னுமா போலே பகவத் அனுபவ செருக்காலே இளைய பெருமாளைப் போலே
காட்சிக்கு நோக்காய் இருக்கிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யாழ்வான்-
சங்கம் இடத்தான் –
இடக்கையிலே காணில்-சங்கம் இடத்தான் -என்கிறார் –
வலக்கையிலே திரு வாழி யாழ்வானைக் கண்டவர் ஆகையாலே -வலக்கை யாழி -என்கிறார்
திரு மார்வில் பிராட்டியைக் கண்டவாறே -நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கை -என்கிறார் -இவர் படி இது இறே-

தன் வேங்கடத்து –
அங்கே அடிமை கொள்ளுகைக்கு பாங்கான தேசமாகையாலே என்னது என்று இவன் விரும்பின திருமலையில் –

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –
விரஜையைப் பற்றி அமாநவ வசத்திலே வர்த்திக்குமா போலே –
கோனேரியைப் பற்றி வர்த்திக்கும் குருகாய் பிறப்பேன் -என்கிறார் –
வாழும் –
கோயில் வாஸம் போலே காணும் திருக் கோனேரி யிலே-
வர்த்திக்கும் என்கிற இடத்துக்கு வேறே வாசக சப்தங்கள் உண்டாய் இருக்கச் செய்தே –
வாழும் -என்கிற சப்தத்தை இட்டபடியாலே
அங்குத்தை வாஸம் தானே போக ரூபமாய் இருக்கும் என்கை-
குருகாய் பிறப்பேனே –
பிரகிருதி புருஷ விவேகம் பண்ணுகைக்கு உறுப்பான -மனுஷ்ய ஜன்மமுமாய் –
அதிலே பர ரஷணத்துக்கு உறுப்பும் ஆகையாலே
புண்ய சரீரமான ஷத்ரிய ஜன்மமும் வேண்டாம் -என்கிறார் –
அது துர்மான ஹேதுவாகையாலே பிரகிருதி புருஷ விவேகம் பண்ணவும் மாட்டாதே –
பர ரஷணத்துக்கும் உறுப்பும் இன்றிக்கே
பாப யோநியுமாய் இருக்கிற திர்யக்காய் பிறக்க யமையும் –
திருமலை எல்லைக்குள் பிறக்கப் பெறில் -என்கிறார் —

உடல் பிறவி யான் வேண்டேன் -என்கிறார் –
குருகாய் பிறப்பேனே -என்கிறார் –
பிறவி அன்றே போலே காணும் அங்கே பிறக்கை-

மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே 4-11-

மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன் பொன் இயலும் சேவடிகள் காண்பான்-
கண்டால் கால் வாங்க மாட்டாதே பிணிப்ப்படும்படி ஸ்ரமஹரமான பர்யந்தத்தை உடைய தமிழுக்கு எல்லையான
திருமலையை உடையவனுடைய ஸ்லாக்யமான திருவடிகளைக் காண்கைக்காக

புரிந்து இறைஞ்சி
காண வேண்டும்படி பக்தியை உடையரேத் தலையாலே வணங்கி கவி பாடினாராய்த்து

கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பிரதி பஷத்தை வெல்ல வல்லார் போலே யாய்த்து கவி பாடி இருக்கும் படியும்

பன்னிய நூல் தமிழ் வல்லார்
பரம்பின லஷணோபேதமான தமிழ்த் தொடையை வல்லவர்கள்

பாங்காய பத்தர்களே –
இங்கேயே இருந்து -அது வர வேணும் இது வர வேணும் என்னாதே
அவனுக்கு இஷ்ட விநியோஹ அர்ஹம் ஆவார்கள்

———————–

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -5-1-

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
நீயே தருகிற துக்கத்தை நீயே மாற்றாயாகில்-
தன்னாலே தனக்கு விரோதி வந்தது என்றும்
தானே சாதன -அனுஷ்டானத்தாலே அது போக்கிக் கொள்வான் என்றும் சாஸ்திரங்கள் சொல்லிக் கிடக்கச் செய்தே
இவர் அவனே துயர் தந்தான் என்பான் என் என்னில்
பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணி இருப்பார் ஒருவர் ஆகையாலே சொல்லுகிறார் –
தானே கர்மம் பண்ணினவன் தானே சாதன அனுஷ்டானம் பண்ணித் தவிர்த்துக் கொள்ளுகிறான் என்று
நம்மைப் பழியிட்டு தள்ள நினைத்தான் ஆகிலும்
நானும் தன்னைக் குறித்து பரதந்த்ரன் -நான் செய்த கர்மமும் பரதந்த்ரம் –
நான் பண்ணும் சாதன அனுஷ்டானத்துக்கு பலபிரதன் ஆகையாலே
அதுவும் தன்னைக் குறித்து பரதந்த்ரம் ஆகையாலே -தரு துயரம் -என்கிறார் –

முதலிகள் எல்லாரும் கூடப் பெரிய திரு மண்டபத்துக்கு கீழாக இருந்து ரகஸ்யார்த்தங்கள் விசாரித்து எழுந்து இருப்பார்களாய்த்து-
ஒரு நாள் நித்ய சம்சாரியாய்ப் போந்தவனுக்கு பகவத் விஷயத்தில் ருசி பிறக்கைக்கு அடி என் என்று விசாரிக்கச் செய்தே –
யாத்ருச்சிக ஸூஹ்ருதம் என்ன -அஜ்ஞ்ஞாத ஸூ க்ருதம் என்னப் பிறந்தது –
அவ்வளவிலே ஸ்ரீ கிடாம்பி பெருமாள் -நமக்கு பகவத் சமாஸ்ரயணம் போலே ஸூஹ்ருத தேவர் என்று
ஒருவர் உண்டோ ஆஸ்ரயணீயன் என்றான் –
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் ஸூஹ்ருதம் என்று சொல்லுகிற நீர் தாம் நினைத்து எத்தைக் காண் என்றார் –
அதாவது ஒன்றை ஆராயப் புக்கால் அதுக்கு அவ்வருகு வேறு ஓன்று இன்றி இருப்பது இறே –
அடியாவது –-யாதொன்று பல பிரதமானது இறே உபாயமாவது –
அல்லது நடுவே அநேக அவஸ்தை பிறந்தால் அவற்றின் அளவில் பர்யவசியாது இறே
இளைப்பாறுவது இதிலே சென்று இறே -நடுவு இளைப்பாறாது இறே -தரு துயரம் -என்னலாம் -இறே –

தடாயேல் –
நீ விளைத்த துக்கம் நீயே போக்காயாகில் –
மம மாயா துரத்யயா -என்றும் –
மா மேவயே ப்ரபத்யந்தே மாயா மேதான் தரந்திதே -என்றும் –
நம்முடைய மாயை ஒருவரால் கடக்க ஒண்ணாது காண் என்றும் –
இது கடக்க வேண்டி இருப்பவன் நம்மைப் பற்றி கழித்துக் கொள்வான் என்றும் நீயே சொல்லி வைக்கையாலே
நீயே துயர் தந்தாய் என்னும் படி தோற்றப் படுகிறது இறே –
துக்கத்தை விளைப்பான் ஒருவனும் போக்குவான் ஒருவனுமாய் அன்று இறே இருப்பது –
பண்ணினவன் தானே போக்கும் இத்தனை இறே
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் -ஒரு -குருவி பிணைத்த பிணையல் ஒருவரால் அவிழ்க்க ஒண்ணுகிறது இல்லை
ஒரு சர்வ சக்தி பிணைத்த பிணையை எலி எலும்பனான இவன் அவிழ்க்க என்று ஒரு கார்யம் இல்லை இறே –
அவன் தன்னையே கால் கட்டி போக்கும் அத்தனை இறே -என்றார்-

உன் சரண் அல்லால் சரண் இல்லை –
இவ்வளவாக விளைத்துக் கொண்ட நான் எனக்கு இல்லை
பிறர் ரஷகர் உண்டாகிலும் நான் அவர்களை ரஷகராக கொள்ள மாட்டாமையாலே அவர்களும் இல்லை –
நான் பண்ணும் சாதன அனுஷ்டானமும் எனக்கு கழுத்துக் கட்டி யாகையாலே தேவரீர் திருவடிகள் அல்லது வேறு ஒரு உபாயம் இல்லை

விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே-
பரிமள பிரசுரமான சோலையை உடைத்தான திரு வித்துவக் கோட்டிலே எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனே –
விரை குழுவும் மலர் பொழில் சூழ்-
சர்வ கந்த -என்கிற பிராப்ய வஸ்து வந்து கிட்டின இடம் என்று தோற்றி இருக்குமாய்த்து –
வித்துவ கோட்டு அம்மானே–
உபாயமாம் போது ஸூலபமாக வேணும் இறே –
அம்மானே –
பிரஜை உறங்குகிற தொட்டில் கீழே கிடக்கும் தாயைப் போலே இங்கே வந்து கிட்டினவனே-
தம்முடைய பாரதந்த்ர்யத்தாலே தம்முடைய ரஷணத்துக்கு தமக்கு ஆனவையும் சொன்னார் –
சேஷியாகையாலே தம்முடைய ரஷணத்துக்கு ப்ராப்தன் -அவன் என்கிறார் -இப்போது –
ஒருவன் பேற்றுக்கு ஒருவன் சாதனமாம் போது இத்தனை பிராப்தி உண்டானால் அல்லது ஆகாது இறே-
பிரஜை உடைய நோய்க்கு தாய் இறே குடி நீர் குடிப்பாள்
மேல் தாயை நிதர்சனமாகச் சொல்லப் புகுகிறவர் ஆகையால் இப்போது அம்மான் என்று பிராப்தி தோன்றச் சொல்லுகிறார் –

அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்
தன்
அவனே ரஷகன் என்னும் அத்யவசாயம் உண்டானாலும் -பேறு தாழ்த்தால் அவனை வெறுக்க வேண்டும்
பிராப்தி உண்டு இறே சேதனன் ஆகையாலே –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்று அசித் சாமானமாக பாரதந்த்ர்யத்தைச் சொல்லி வைத்து
எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே –என்கிறது புருஷார்த்த சித்தி சேதனனுக்கு ஆக வேண்டி இறே –
அவனைக் குறித்து சேதன அசேதனங்கள் இரண்டுக்கும் பாரதந்த்ர்யம் அவிசிஷ்டமாய் இருக்கச் செய்தே
புருஷார்த்த சித்தி இவனுக்கு உண்டாகிறது சேதனன் ஆகையால் இறே
அரி சினத்தால் –
அரிந்து போக வேண்டும் சினத்தை யுடையாளாய்க் கொண்டு
ஈன்ற தாய் –
வளர்த்த தாய் -என்னாதே-ஈன்ற தாய் -என்றத்தாலே பிராப்தம் சொல்லிற்று
அகற்றிடினும் –
அகற்றிடினும் என்கையாலே அகற்றுகை அசம்பாவிதம் -என்கிறது
ஈன்ற தாய் -என்கையாலே
பெறுகைக்கு நோன்பு நோற்கையும்-பத்து மாசம் சுமக்கையும் -பிரவச வேதனை படுகையும்-என்கிற இவை எல்லாம் உடையவள் -என்கை-
அகற்றிடினும் –
இப்படி பெறுவதுக்கு முன்புள்ள வெல்லாம் துக்கமும் பட்டவள் ஆகையாலே வருகிறதை நினைக்குமது ஒழிய அகற்ற நினையாள் இறே

அவள் தான் அகல விடினும் –
இத்தால் சொல்லிற்று யாய்த்து -நிருபாதிக தேவரீர் கை விடிலும் வேறு எனக்கு புகழ் இல்லை என்கிறார் –

மற்று அவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி –
இவள் கோபித்து விட்டாலும் வேறு ஒருவருடைய அருளை அபேஷியாது இறே பிரஜை –
அதுக்கு அடியான பிரேமத்துக்கு அவதி உண்டாகில் இறே கோபத்துக்கு அவதி உள்ளது –
ஸ்நேஹம் இல்லாமையாலே கோபமும் இல்லை இறே பிறருக்கு –
ஸ்ரீ நம்பி திரு வழுதி வள நாடு தாசரை ஸ்ரீ முதலியாண்டான் கோபித்து
கையாலும் காலாலும் துகைத்து இழுத்தவாறே திண்ணையிலே பட்டினியே ஒரு நாள் போகாதே கிடந்தார் –
ஸ்ரீ ஆண்டான் மற்றை நாள் அமுது செய்யப் புகுகிறார் -அவன் செய்தது என் என்று கேட்டவாறே
பட்டினியே வாசலிலே கிடந்தான் என்று கேட்டு அழைத்து -நீ போகாதே கிடந்தது என் -என்ன –
ஒரு நாள் ஒரு பிடி சோறிட்டவன் எல்லா படியாலும் நிந்தித்தாலும் வாசல் விட்டுப் போகிறது இல்லை –
நாத நான் எங்கே போவது -என்றார்

அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே –
வேறு சிலரால் ஆற்ற ஒண்ணாது இறே
முன்னாள் முலை கொடுத்த உபகாரத்தை நினைத்து இருக்குமதாகையாலே -அவள் தானே ஆற்ற வேணுமே
ஸிஸூஸ்தநந்தய -என்றும் –
அளவில் பிள்ளைமை -என்றும் சொல்லுகிறபடியே
அதாவது -ரக்த ஸ்பர்சம் உடையார் எல்லாரையும் அறியாதே மாதா ஒருத்தியையுமே அறியும் அளவே யாய்த்து அதி பால்யம்
அப்படியே எம்பெருமானைக் குறித்து இவ்வாத்ம வஸ்து நித்ய ஸ்தநந்த்யமாய்த்து இருப்பது
ஆகையால் இறே இவன் பேற்றுக்கு அவன் உபாயம் ஆகிறது –

வித்துவ கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்
மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
கொற்ற வேல் தானை குலசேகரன் சொன்ன
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே– 5-10-

வித்துவ கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்-
இதுக்கு என்று வந்திருக்கிற நீ என்னை உபேஷித்தாயே யாகிலும்

மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
வேறு ஒரு புகலில்லை-நான் அநந்ய கதி என்று -அவன் திருவடிகளை ஆசைப்பட்டு

கொற்ற வேல் தானை குலசேகரன் சொன்ன
பிரதிபஷத்தை பக்க வேரோடு வாங்க வற்றான வென்றியை உடைய வேலையையும் சேனையையும் உடைய
பெருமாள் சொன்னவை –
பிரதிபஷத்தை வெல்லுகைக்கு ஈடான பரிகரம் உடையரானார் போலே யாய்த்து –
பகவத் ப்ராப்திக்கு பரிகரமாக-இவருடைய அநந்ய கதித்வத்வமும்

நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே–
கடல் பேர் ஆழமாய் இருக்கச் செய்தே -உள்ளுள்ள பதார்த்தங்கள் தோற்றும்படியாய் இருக்குமா போலே
அர்த்தம் மிக்கு இருக்குமாய்த்து இத் திருமொழி –

இவை வல்லவர்கள் -நண்ணார் நரகமே –
சம்சார சம்பந்தத்துக்கு அடியான பாபத்தை பண்ணினார்களே யாகிலும் இஸ் சம்சாரத்திலே வந்து பிரவேசியார்கள் –

———————————-

அவதாரிகை –

ஒரு பிராட்டி முநையில் மணலில் போய் நில்லு -நான் அங்கே வருகிறேன் என்று சொல்லி விட -அவள் அங்கே போய் விடியும் அளவும் நின்று –
அவன் வரக் காணாமையாலே -அவனைக் கண்ட போதே ஊடிச் சொல்லுகிற வார்த்தையாய் இருக்கிறது –

ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர்
எனை பலர் உள்ள இவ் ஊரில் உன் தன்
மார்வு தழு வதற்கு ஆசை இன்மை அறிந்து அறிந்தே
உன் தன் பொய்யை கேட்டு
கூர் மழை போல் பனி கூதல் எய்தி
கூசி நடுங்கி யமுனை ஆற்றில்
வார் மணல் குன்றில் புலர நின்றேன்
வாசுதேவா ! வுன் தன வரவு பார்த்தே— 6-1-

ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர்
அழகிய மலரை உடைத்தாய் -மலருக்கும் கூட நாற்றத்தைக் கொடுக்கும் மயிர் முடியை உடைய இடைப் பெண்கள்

எனை பலர் உள்ள இவ் ஊரில் –
அநேகம் பேர் திரளான இவ் ஊரில் -திருவாய்ப்பாடியில் –

உன் தன் மார்வு தழுவதற்கு ஆசை இன்மை அறிந்து அறிந்தே-
அநேகம் பெண்கள் உள்ள ஊருமாய் -நீயும் சர்வ சாதாரணனுமானால் –
உன் மார்வை யாசைப் படக் கடவதன்று என்று அறிந்து வைத்து

உன் தன் பொய்யை கேட்டு
உன் ஸ்வரூபத்தை உணர ஒட்டாது இறே-உன் வார்த்தை –
நீ யல்லது புகல் உண்டோ -உன்னை யல்லது நான் அறிவேனோ –
என்று தாழ்ச்சி தோன்ற நீ சொல்லும் வார்த்தையைக் கேட்டு –

கூர் மழை போல் பனி கூதல் எய்தி
மிக்க மழை போலே பெய்கிற பணியால் வந்த குளிரிலே யகப்பட்டு

கூசி
யார் காண்கிறார் என்று கூசி

நடுங்கி
அச்சத்தாலும் குளிராலும் நடுங்கி

யமுனை ஆற்றில்
அது தான் ஏகாந்த-ஸ்தலத்திலேயோ -சர்வ சாதாரணமான தேசத்திலே அன்றோ –

வார் மணல் குன்றில் புலர நின்றேன்
நின்றது தான் தனியே நிற்கலாம் தேசத்திலே தான் நின்றேனோ –
போகத்துக்கு ஏகாந்த ஸ்தலத்திலே யன்றோ
எல்லாரும் வந்து சஞ்சரித்துக் காணும் போது-சர்வ சாதாரணமான தேசத்திலே வந்தாள் என்று இராமே போகத்துக்கு
ஏகாந்தமான மணல் குன்றிலே விடியும் அளவும் நின்றாள் என்னும்படி தோற்ற நின்றேன்

வாசுதேவா !
நீ அங்கே நிற்கிறது என் என்னில் -உன்னை விஸ்வசித்தன்று-
உன் பிதாவை விஸ்வசித்து-ஒரு வார்த்தை அல்லது அறியாத
ஸ்ரீ வாஸூதேவர் -பிள்ளை என்னுமத்தை விஸ்வசித்து நின்றேன் –

வுன் தன வரவு பார்த்தே—
உன்னுடைய அழகு காண வேணும் என்னும் நசையாலே –

அல்லி மலர் திரு மங்கை கேள்வன் தன்னை
நயந்து இள ஆய்ச்சிமார்கள்
எல்லி பொழுதினில் ஏமத்தூடி
எள்கி வுரைத்த வுரையதனை
கொல்லி நகர்க்கு இறை கூடல் கோமான்
குலசேகரன் இன் இசையில் மேவி
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்
சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே– 6-10-

நிகமத்தில்
அல்லி மலர் திரு மங்கை கேள்வன் தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள்
பரம பிரணயியான ஸ்ரீ கிருஷ்ணனை யாசைப் பட்டு அவனைப் போலே எறிமறிந்த பருவம் அன்றியே
பாடாற்ற மாட்டாத இள வாய்ச்சிமார்கள்

எல்லி பொழுதினில் ஏமத்தூடி-எள்கி வுரைத்த வுரையதனை
விலக்குவார் இல்லாத மத்திய ராத்ரியிலே ஊடி அத்தாலே ஈடுபட்டு –
அவ்வீடுபாடு தான் சொல்லாய் வழிந்து புறப்பட்டது என்னலாம் படியான பாசுரத்தை

கொல்லி நகர்க்கு இறை கூடல் கோமான்-குலசேகரன்
கொல்லி -என்று சோழன் படை வீடு
கூடல் என்று பாண்டியன் படை வீடு
கோழிக் கோன் என்று முன்பே சொல்லி வைத்தார்
மூன்று ராஜ்யத்துக்கும் கடவரான ஸ்ரீ குலசேகர பெருமாள்
ஸ்ரீ கோபிமார் தங்கள் ஸ்த்ரீத்வ அபிமானம் எல்லாம் அறுத்து சொன்னாப் போலே
இவரும் தம் பெரிய அபிமானம் எல்லாம் அறுத்த படி-

இன் இசையில் மேவி-சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்
பாட்யே கே யே ச மதுரம் –என்னும் படியான தமித் தொடை பத்தும்-

சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே–
இவருடைய பாவ பந்தம் இல்லை யாகிலும் இவை கற்றவர்களுக்கு பகவத் அனுபவத்துக்கு விச்சேத சங்கை பிறவாதே
நிரந்தர அனுபவமாகச் செல்லப் பெறுவார்கள்
சம்போக மத்யே பிறக்குமது இறே ஊடல் ஆவது
உன் தலை பத்து என் தலை பத்து என்று முடிய உடலாய்ச் செல்லும் அனுபவத்தை பெறுவார்கள் –

————————————–

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ
அம்புயத் தடம் கண்ணினன் தாலோ
வேலை நீர் நிறத் தன்னவன் தாலோ
வேழ போதக மன்னவன் தாலோ
ஏலவார் குழல் என் மகன் தாலோ
என்று என்று உன்னை என் வாய் இடை நிறைய
தால் ஒலித்திடும் திரு வினை இல்லாத
தாயிற் கடை யாயின தாயே –7-1-

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ
சமைய வளர்ந்த ஆலைக் கரும்பு போலே ரசேந்த்ரியத்துக்கு இனியனானவனே-

அம்புயத் தடம் கண்ணினன் தாலோ
விகாசம் செவ்வி குளிர்த்தி மென்மை யுடைய தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களைக் கொண்டு என்னை
குளிர நோக்குகிறவனே-என்று
சஷூர் இந்த்ரியத்துக்கு இனிதாய் இருக்கிற படி சொல்லுகிறார்-

வேலை நீர் நிறத் தன்னவன் தாலோ
அவயவங்களை பிரித்துச் சொல்ல வேணுமோ –
அவயவியான மேனி ஸ்ரமஹரமான கடல் போலே இருக்கிறவனே –

வேழ போதக மன்னவன் தாலோ
ஆனைக் கன்று போலே வைத்த கண் வாங்காதே பார்த்த படியே இருக்கும் படியான சரிதங்களை உடையவனே –

ஏலவார் குழல் என் மகன் தாலோ
இப்படி உபமானங்களால் சொல்ல ஒண்ணாமையாலே -என் மகன் -என்னும் அத்தனை அல்லது

என்று என்று உன்னை என் வாய் இடை நிறைய தால் ஒலித்திடும் திரு வினை இல்லாத
இப்படி பல காலும் சொல்லி வாயாரத் தாலாட்டும் சம்பத்து இல்லாத –

தாயிற் கடை யாயின தாயே –
பெறுகைக்கு நோன்பு நோற்று பெற்று வைத்து அனுபவத்தில் குறைய நிற்கையாலே பிள்ளைகளைப் பெற்று அனுபவிக்கும்
தாய் மார் எல்லாரிலும் கடையானேன் இறே நான் –

மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை
வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடி மேல்
கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்
நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே– 7-11-

மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை-வான் செலுத்தி
மிக்க சம்பத்தை உடைய ஸ்ரீ மதுரைக்கு நிர்வாஹகனான கம்சனை தானே கை தொட்டு முடிக்கையாலே
வீர ஸ்வர்க்கத்திலே பொகட்டு

வந்து ஈங்கு அணை மாயத்து எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
கம்ச வதம் பண்ணி இங்கே வந்து கிட்டின ஆச்சர்ய சேஷ்டிதங்களுக்கு அவதி இன்றியிலே இருக்கிற
ஸ்ரீ கிருஷ்ணனுடைய பால சேஷ்டிதங்களை காணாமையாலே-

தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
இவன் சேஷ்டிதங்களை அனுபவிக்கப் பெறாத இழவையும் உடையாளாய்-இவனைப் பிள்ளையாகப் பெறுகைக்கு ஈடான
பாக்யத்தைப் பண்ணின தேவகியார் புலம்பிய பாசுரத்தை-

கொல்லி காவலன்
கொல்லி என்கிற படை வீட்டுக்கு நிர்வாஹகரானவர்-

மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன
சர்வேஸ்வரன் திருவடிகளை தமக்கு முடி மேல் மாலையாக உடைய பெருமாள்

நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்
அழகிய இசையோடு கூடின தமிழ்த் தொடை வல்லவர்கள்-

நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே–
இங்கே இருந்து அவதாரத்தில் ஏக தேசத்தை அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடையாதே இருந்து புலம்பாதே
உபய விபூதி நாயகனை பரம பதத்தில் நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

—————————————-

ஸ்ரீ தேவகியார் இழந்த இழவு மாத்ரமேயோ –
ஸ்ரீ கௌசல்யைத் தான் காணப் பெற்றேனோ -என்று அச் சம காலத்திலே தாம் இழக்கையாலே –
அவள் அனுபவத்தை திருக் கண்ணபுரத்திலே அனுபவிக்கிறார் –

மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!
தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே!
என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ— 8-1–

மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!
சர்வேஸ்வரனைப் பிள்ளையாகப் பெற்றாள் -என்ற நிலை நின்ற புகழை உடைய -ஸ்ரீ கௌசலையாருடைய
அழகிய வயிற்றிலே அவளுக்குப் பிள்ளையாகப் பெற்றவனே

தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! –
இத் திரு மொழி இ றே ஸ்ரீ ராமாவதாரத்தில் மிகை -ஆகையாலே இச் சந்தை

செம்பொன் சேர் கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே!
அழிவில்லாத மதிளாலே சூழ்ந்த திருக் கண்ணபுரத்திலே எனக்கு திருஷ்டிக்கு நிர்வாஹகனாய் நிற்கிறவனே

என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ—
தேவர்கள் அமிர்தம் போல் அன்றிக்கே எனக்கு அமிர்தமானவனே-
தேவர்களுடைய அமிர்தம் உப்புச் சாறு இறே –
அது அன்று இறே இவருடைய அமிர்தம் இருந்த படி –

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே— 8-11-

நிகமத்தில் –
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
அழியாத பெரு மதிள் சூழ்ந்த திருக் கண்ணபுரத்திலே நின்று அருளின –
ஸ்ரீ கிருஷ்ணனை -அன்றியிலே ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனை யாய்த்து கவி பாடிற்று –

தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுடைய பால்ய அவஸ்தையில் ஸ்ரீ கௌசல்யார் சொன்ன பாசுரத்தை
திருக் கண்ணபுரத்திலே சொன்ன தமிழ் தொடை-

கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
வேலைப் பிடித்த பிடியிலே எல்லாரும் -வேலின் கொடுமையே -என்று சொல்லா நின்ற வேலையும்
ஐஸ்வர்ய பிரகாசகமான வெண் கொற்றக் கொடையையும் உடைய ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த

பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே—
பரம்பி -லஷணத்தால் குறைவற்ற இப்பத்தும் வல்லார்கள்
திருத் தாயாராயும் அடியாராயும் அனுபவிக்கப் பெறுவார்கள் –

———————————-

வன் தாள் இணை வணங்கி வள நகரம்
தொழுது ஏத்த மன்னனாவான்
நின்றாயை அரி அணை மேல் இருந்தாயை
நெடும் கானம் படர போகு
வென்றாள் எம்மி ராமாவோ!
உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
நன் மகனே! உன்னை நானே—- 9-1–

வன் தாள் இணை வணங்கி
தானும் ராஜ்ய பரப்பை எல்லாம் ஆண்டானாய் இருக்கச் செய்தே-
அவ்வளவன்றியே -வண் புகழ் நாரணன் திண் கழல்-என்னுமா போலே
ஆஸ்ரிதரை எல்லா அவஸ்தையிலும் விடேன் என்னும் திருவடிகளை வழிப்பட்டு

வள நகரம் தொழுது ஏத்த
திரு அபிஷேகத்துக்கு அலங்கரித்து இருக்கிற -திரு நகரியிலே அப்படி இருக்கிற திரு நகரி தொழுது ஏத்த

மன்னனாவான் நின்றாயை –
திரு அபிஷேகத்துக்கு முன்புள்ள கர்த்தவ்யங்கள் எல்லாம் தலைக் கட்டி
திரு அபிஷேகம் பண்ணுகைக்கு திருக் காப்பு நாண் சாத்தி நிற்கிற யுன்னை

அரி அணை மேல் இருந்தாயை
சிம்ஹாசனத்திலே பதஸ்தனாய் இருந்தான் என்னும் படி தோற்றச் சமைந்து இருக்கிற யுன்னை

நெடும் கானம் படர போகு வென்றாள்
இப்படி ராஜாக்கள் அல்லாதாரும் புக மாட்டாத காட்டை -தேவ நேந வனம் கத்வா -என்னுமா போலே
இவ் ஊரில் நின்றும் புறப்பட்டு வழியே போய்க் காட்டிலே புகுமது அன்றியே
காட்டிலே போம்படியாய்-நெடிய காட்டிலே இறே போகச் சொல்லிற்று

எம்மி ராமாவோ!
நினைக்கவும் -சொல்லவும் -காணவும் -தாபம் போம்படியான உம்மை இறே போகச் சொல்லிற்று

உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
திரு அபிஷேக கல்யாண வார்த்தை -ஸ்ரீ கௌசல்யையாரிலும் காட்டில் தனக்கு நான் சென்று சொல்லி
ப்ரீதி காண வேணும் என்னும்படி பெற்ற தாயாய்ப் போந்த கைகேயி வார்த்தை கேட்டு

நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
வஞ்சன பரை என்று அறியாதே தாய் என்று இவளுக்கு வார்த்தை சொல்லப் புகுந்து –
அவள் வார்த்தையிலே அகப்பட்டு பூமிப் பரப்பை எல்லாம் அழகிதாக உன்னை ஆள்வித்தேன்

நன் மகனே! உன்னை நானே—-
நான் இப்படி செய்த இடத்திலும் நீர் குணாதிகராம் படி நின்றீர் –
நான் நானாம் படி செய்தேன் –

ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய்
வனம் புக்க வதனுக்கு ஆற்றா
தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான்
புலம்பிய அப் புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல் வலவன் கோழியூர் கோன்
குடை குலசேகரன் சொல் செய்த
சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார்
தீ நெறி கண் செல்லார் தாமே–9-11-

நிகமத்தில் –
ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய் வனம் புக்க வதனுக்கு ஆற்றா-
எல்லா பிரகாரத்தாலும் பூர்ணனாய் -சர்வாதிகனான சர்வேஸ்வரன் கர்ம வச்யரோடே-
இதர சஜாதீயனாய் வந்து அவதரித்து –
கர்மவச்யரும் போகத் தகாத காட்டில் புக்கான் -என்றதுக்கு ஆற்ற மாட்டாதே

தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான் புலம்பிய அப் புலம்பல் தன்னை
அறுபதினாயிரம் ஆண்டு ராஜ்ஜியம் பண்ணுகையாலே மாலை மாறாத திண்ணியதான
மலை போலே தோளை உடைய சக்கரவர்த்தி பிரலாபித்த பாசுரத்தை –

கூரார்ந்த வேல் வலவன் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த-
கூர்மை மிக்க வேலையையும் உடையராய் -ஸ்ரீ உறையூருக்கு நியாமகருமாய் –
ஐஸ்வர்ய பிரகாசகமுமான வெண் கொற்றக் குடையும்
உடையருமான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த –

சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறி கண் செல்லார் தாமே–
பாட்யேகேயேச மதுரம் -என்று இவை பூரணமான தமிழ் தொடை வல்லவர்கள் –
பகவத் விஷயத்தை காற்கடைக் கொண்டு விஷய பிரவணர் ஆகார்கள் –

———————————-

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை
தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிர காணும் நாளே— 10-1-

அவதாரிகை –முதல் பாட்டு -தேவர்கள் எம்மாரும் க்ருத்தார்த்தராம் படி வந்து திருவவதாரம் பண்ணின படி சொல்கிறது –

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
போகய போக உபகரண போக ஸ்தானங்களை உடைத்தாய்
ஆகாச அவகாசம் எல்லாம் தானேயாம்படி நிமிர்ந்த மதிளாலே சூழப் பட்ட அயோத்யை-
அபராஜிதை என்று சொல்லுகிற பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்
என்னும் –
பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே சர்வ லோக பிரசித்தமாய் இருக்கை –

அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்-
சர்வ லோகங்களையும் தன் தேஜஸ் ஸாலே -நாராயண பரஞ்சோதி -என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது

வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
ஜகத்தில் அந்தகாரம் எல்லாம் நீக்கக் கடவ ஆதித்யன் வம்சத்திலே -அவனைப் போலே
இரவு கலவாத அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து –

விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
தன் வீர்ய குணத்தாலே தேவ ஜாதியடைய உஜ்ஜீவிப்பித்தவனை

செம் கண் நெடும் கரு முகிலை –
தேவ ஜாதி யன்றிக்கே ஜகத்தை அடைய ரஷிப்பதாக-
கடலிலே மணலே சேஷமாக பருகின காளமேகத்தினுடைய வடிவையும்
சர்வேஸ்வரத்வ லஷணமான புண்டரீகாஷத்வங்களையும் உடையவன்

ராமன் தன்னை-
வடிவு அழகாலும் கண் அழகாலும் அபிராமத்தாலும் அனுகூல பிரதிகூல விபாகம் இன்றியே தோற்ப்பிக்குமவனை –
கீழில் -வீரன் -என்கிறதும் -இங்கும் அன்வயிக்கக் கடவது -சத்யேதியாதிவத் –

தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
அவதாரத்தில் சமகாலத்தில் அனுபவிக்கப் பெறாத இழவு தீர பிற்பட்ட காலத்தில் உள்ளாருக்கும்
உதவலாம் படி சந்நிஹிதனானவனை

எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
அக்காலத்தில் அனுபவிக்கப் பெறாத எங்களை உஜ்ஜீவிப்பைக்கு ஒப்பில்லாத காரண பூதனானவனை –
வகுத்த சேஷியானவனை

என்று கொலோ? கண் குளிர காணும் நாளே—
இந்த ராஜ்ய துரந்தரையிலே அகப்பட்டு இருக்கிற நான் அன்றோ –
அவனைக் காணப் பெறாதே விடாய்த்த கண்களானவை கண்டு
விடாய் தீர்ந்து கண் படைத்த பிரயோஜனம் பெறலாவது என்றோ என்கிறார் –
என்று கொலோ என்று கால தத்வத்துக்கு ஒரு அவதி பெற்றானாகில்-இன்று கண்டதோடு ஒக்கும் கிடீர் –

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–

நிகமத்தில் –
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
பாவோ நான்யத்ர கச்சதி -என்று அங்குப் போகேன் என்ற திருவடியை விட மாட்டாமே
இங்கே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை

எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
பஹூ குணனான சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக
பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை

கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
கொலையை முயலா நின்றுள்ள வேலையை யுடையராய் –
வெற்றியையும் அழகையும் உடைய வாளையும் உடைய
கோழியர்க்குக் கோன்-கோழி -உறையூர் -சோழ ராஜாவானவன் –
வெண் கொற்றக் குடையை உடையரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த

நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–
அழகிய இயலை உடைய தமிழ் மாலை பத்தும் வல்லார் –
பரம பதத்திலே விளங்கா நின்றுள்ள சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவார் –

——————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரப் பெருமாள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ பெருமாள் திருமொழி அருளிச் செயலில் – பல ஸ்ருதிகள் தொகுப்பு –

April 4, 2019

கொடை குலசேகரன் சொல் செய்த நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–1-11-

கொடை மாறாதே கொடுக்கும் பெருமாள் அருளிச் செய்த –
உள்ளில் அர்த்தத்தில் இழிய வேண்டாதே -பதங்கள் சேர்ந்த சேர்த்திகள் பார்க்க வேண்டாதே -இது தானே ஆகர்ஷகமாய்
இருக்கிற தமிழ்த் தொடை பத்தும் வல்லார்
சீலாதி குண பூரணராய் -சர்வ ஸ்வாமிகளாய்-வத்சலராய் இருக்கும் -ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளின் கீழே
யனுபவிக்க ஆசைப் பட்டால் போலே கிட்டப் பெறுவார்கள்-

————————

சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் – தொண்டர் தொண்டர்கள் ஆவரே –2-10-
இனிய சப்தங்களை உடைய தமித் தொடை வல்லவர்கள்
இவர் ஆசைப் பட்டுப் போந்த பாகவத சேஷத்வ பர்யந்தம் ஆகிற புருஷார்த்தத்தை லபிப்பார்கள் –

———————————–

கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல் இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே–3-9-
மேலைத் திக்குக்கு நிர்வாஹகரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்தது
இவற்றில் வல்லவர்களுக்கு இங்கே ஏதம் ஓன்று இல்லையே
ஏதமாவது-அபாகவாத ஸ்பர்சமாதல்-
பகவத் பிராவண்யத்தில் குறையாதல் -வரும் துக்கம் போம் என்றும்
இஸ் சம்சாரத்தில் இருக்கும் நாளில்லை –
இத் துக்க பிரசங்கம் உள்ளத்து இவ்விடத்தே இறே –
இவை கற்றவர்களுக்கு இப்பிரசங்கம் உள்ள இத்தேசத்திலே இல்லை –

—————————————–

கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே –4-11-

பிரதி பஷத்தை வெல்ல வல்லார் போலே யாய்த்து கவி பாடி இருக்கும் படியும்
பரம்பின லஷணோபேதமான தமிழ்த் தொடையை வல்லவர்கள்
இங்கேயே இருந்து -அது வர வேணும் இது வர வேணும் என்னாதே
அவனுக்கு இஷ்ட விநியோஹ அர்ஹம் ஆவார்கள்-

——————————

நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே–5-10-
கடல் பேர் ஆழமாய் இருக்கச் செய்தே -உள்ளுள்ள பதார்த்தங்கள் தோற்றும்படியாய் இருக்குமா போலே
அர்த்தம் மிக்கு இருக்குமாய்த்து இத் திருமொழி –
சம்சார சம்பந்தத்துக்கு அடியான பாபத்தை பண்ணினார்களே யாகிலும்
இஸ் சம்சாரத்திலே வந்து பிரவேசியார்கள் –

—————————————-

இன் இசையில் மேவி-சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும் சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே–6-10-

பாட்யே கே யே ச மதுரம் –எண்ணும்படியான தமித் தொடை பத்தும்
இவருடைய பாவ பந்தம் இல்லை யாகிலும் இவை கற்றவர்களுக்கு பகவத் அனுபவத்துக்கு விச்சேத சங்கை பிறவாதே
நிரந்தர அனுபவமாகச் செல்லப் பெறுவார்கள்
சம்போக மத்யே பிறக்குமது இறே ஊடல் ஆவது
உன் தலை பத்து என் தலை பத்து என்று முடிய உடலாய்ச் செல்லும் அனுபவத்தை பெறுவார்கள் –

—————————————

மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்-நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே–7-11-

சர்வேஸ்வரன் திருவடிகளை தமக்கு முடி மேல் மாலையாக உடைய பெருமாள்
அழகிய இசையோடு கூடின தமிழ்த் தொடை வல்லவர்கள்
இங்கே இருந்து அவதாரத்தில் ஏக தேசத்தை அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடையாதே இருந்து புலம்பாதே
உபய விபூதி நாயகனை பரம பதத்தில் நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

——————————————-

கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே—8-11-

வேலைப் பிடித்த பிடியிலே எல்லாரும் -வேலின் கொடுமையே -என்று சொல்லா நின்ற வேலையும்
ஐஸ்வர்ய பிரகாசகமான வெண் கொற்றக் கொடையையும் உடைய ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த
பரம்பி -லஷணத்தால் குறைவற்ற இப்பத்தும் வல்லார்கள்
திருத் தாயாராயும் அடியாராயும் அனுபவிக்கப் பெறுவார்கள் –

——————————————

குலசேகரன் சொல் செய்த-சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறி கண் செல்லார் தாமே–9-11-

கூர்மை மிக்க வேலையையும் உடையராய் -ஸ்ரீ உறையூருக்கு நியாமகருமாய் –
ஐஸ்வர்ய பிரகாசகமுமான வெண் கொற்றக் குடையும் உடையருமான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த –
பாட்யேகேயேச மதுரம் -என்று இவை பூரணமான தமிழ் தொடை வல்லவர்கள் –
பகவத் விஷயத்தை காற்கடைக் கொண்டு விஷய பிரவணர் ஆகார்கள் –

—————————————–

நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11-
அழகிய இயலை உடைய தமிழ் மாலை பத்தும் வல்லார் –
ஸ்ரீ பரம பதத்திலே விளங்கா நின்றுள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவார் –

—————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரப் பெருமாள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார் –

April 3, 2019

நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார் –10-2-1-
நாள் தோறும் கொடிய செயலைச் செய்யக் கூடிய எமனுடைய தூதுவர்களும் வந்து கிட்டப் பெறார்கள்
ம்ருத்யுவுக்கு அந்தரங்கராய -எமனுடைய தூதுவர்கள் என்னா சர்வேஸ்வரன் உடையார் பக்கலிலே
வந்து கிட்டவோ -என்பார் -தமர்களும் -என்கிறார் –

ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாச ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிகர மது சூதன பிரபன்னான் பிரபு அஹம் அத்யன் ருணாம் ந வைஷ்ணவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-13-

தஸ்ய யஞ்ஞா வராஹச்ய விஷ்ணோ அமித தேஜச
ப்ரணாமம் யேயி குர்வந்தி தேஷாமபி நமோ நம-ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
அளவற்ற ஆற்றலை உடைய அந்த யஞ்ஞா வராக பெருமாளை எவர்கள் வணங்கு கின்றார்களோ
அவர்களை நான் பல முறை வணங்குகிறான் -என்பதே அன்றோ அக் கூற்றுவன் வார்த்தையும் -என்றது

இறைஞ்சியும் சாதுவராய் போதுமின்கள் என்றான் -நான்முகன் திருவந்தாதி -68 -என்கிறபடியே
அவர்களைக் கண்டால் -நாம் கடவோம் அல்லோம் என்று போராதே
அவர்களை கிட்டி அனுவர்த்தித்து -அணுகி வணக்கத்தைச் செய்து விட்டு செல்லுங்கள் என்கிறான் என்றபடி

ஸ்வபுருஷம் என்கிற ஸ்லோகத்தில்
எமன் தன் பரிகரம் கையும் சூலமும் நாயுமாகப் போகிற படியை பார்த்து
பாகவதர்களும் அல்லாதாரும் கலந்து இருப்பர்கள்
பாகவதர்கள் முன்னே இவன் கிட்டில் செய்வது என்-என்று துணுக் என்று -பயந்து சொல்லுகிறான்
ஸ்வ புருஷம் –
தனக்கு அந்தரங்கனாய் இருக்கையாலே தன் மேன்மை சொல்ல வேண்டும் இடத்தில்
தாழ்வு சொல்கிறானாய் ஆயிற்று தவிர ஒண்ணாமை யாலே
அபிவீஷ்யே –
அபி வி என்ற இரண்டு உபசர்க்கத்துக்கு -இவன் தான் நாலு இரண்டு ஓலை மறுக்க தர முடையனாய் இருக்கும் ஆயிற்று –
சொல் செல்லுகைக்காக இப்படி இருக்கிறவனை பார்க்கிற பார்வையிலே கார்யத்தின்
கௌரவம் எல்லாம் தோற்றும்படி பார்த்தான் ஆயிற்று –
மது சூதன பிரபன்னான் –
இவர்களை நலிந்தால் அவனுக்கு என் என்ன
இவர்கள் அவன் பக்கலிலே ந்யஸ்த பரராய் -பாரங்களை எல்லாம் போட்டவர்களாய் இருப்பர்கள் –
இவர்களுக்கு வந்தது ஒன்றுக்கு -அவன் மார்வு தட்டிக் கொண்டு வரும் -மோஷ யிஷ்யாமி -என்பானே
நன்று உனக்கு உடையோமாய் போகிற நாங்கள் வேறு
சிலர்க்கு அஞ்ச வேண்டும்படி இருந்ததாகில்
நீ பின்னை யாராய் இவ்விருப்பு இருந்து ஏவுகிறது -என்ன
பிரபு அஹம் அந்ய ந்ருணாம்
எனக்கு அடைந்த விஷயத்தில் என் சொல் செல்லாதாகில்
அன்றோ எனக்கு குறையாவது
நாம் கடவோம் அல்லாதவர்கள் இடத்தில் நாம் ஆராயா நிற்கவோ -என்றான் –

இது தன்னை திரு மழிசைப் பிரானும் அருளிச் செய்தாரே அன்றோ

திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தர் -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு –என்று

திறம்பேல்- இத்யாதி –
சொல்லுகிற வார்த்தையைத் தப்பாதே கொள்ளுங்கோள் –
திறம்பாதே கொள்ளுங்கோள் என்னும் போது நாலுபத்தோலை மறுக்கவுமாம் –
திருவடி தன நாமம் மறந்தும் புறம் தொழா –
பரிஹர மதுசூதன பிரபன்னான் -என்கிறபடியே ஸ்வாமி யினுடைய திரு நாமத்தை ஒருகால் கற்றுப்
பின்னை மறந்தார்களே யாகிலும் திரு நாமத்தை மறக்கவுமாம் –
தேவதாந்தர பஜனம் பண்ணாது ஒழிகை இவன் பிரபன்னன் ஆகையாவது –
பர்த்தாவின் பக்கல் அனுகூல்யம் கிரமத்தாலே பிறக்கவுமாம் – பர்த்ராந்தர பரிக்ரகம் இறே அவனுக்கு ஆகாமைக்கு அடி
இதர தேவதைகளை தொழாத மனுஷ்யர்களை பாபம் பண்ணினாரை தமிக்கக் கடவ யமன்
மாந்தரை –
மனுஷ்யரை –
இறைஞ்சியும் சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு –
தன்னுடைய தூதரை அழைத்துச் செவியிலே -வைஷ்ணவர்களைக் கண்டால் வணங்கி சாதுக்களாய் போருங்கள்-என்கிறான் –
செவியிலே சொல்லுகிறது தன் கோஷ்டியிலும் அகப்பட அவர்களிடையாட்டம் ராஜ தார ப்ராவண்ய நிஷேதம் போலே
சொல்லக் கடவன் அல்லாமையாலே
ஸ்வ புருஷம் அபிவீஷ்ய பாச ஹஸ்தம் வத்தி யம தஸ்ய கர்ணமூலே பரிஹர மது ஸூ தன பிரபன்னான்
ப்ரபுரஹம் அந்ய ந்ருணாம் ந வைஷ்ணவா நாம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-என்றத்தைத் தன் தூதுவரை என்கிறார் –
பாச ஹஸ்தம் -என்கிற க்ரூர வேஷத்தைத் தவிர்ந்து
விநீத வேஷராய் அஞ்சலி ப்ரணாமாதிகளை பண்ணிப் போரும்கோள்-என்கிறார் –
அவர்களை நலிந்திலோம் என்று இருக்க ஒண்ணாது-
தன் தூதுவரை-ஸ்வ புருஷம் -என்றபடி
செவிக்கு-கர்ண மூலே -என்றபடி
கூவி என்கையாலே அபி வீஷ்ய-என்கிறவையின் கருத்தை வ்யக்தம் ஆக்கின படி
சாதுவராய் -என்று பாச ஹஸ்தம் -என்றதுக்கு எதிர் தட்டு இருக்கிற படி என்றான்
வத்தி -இருக்கிறபடி –
நமனும் – யம பதத்தில் அர்த்தம் சொன்னபடி-சம இதி -என்று சொல்லப் படுகிறவனும்-ப்ரஹ்மாதிகள் உடன் சமமாக சொல்லப்படுமவன் –
அந்தரங்கருக்கு வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே-பிரகாசிக்கில் என்னாகிறதோ என்று நெஞ்சு பறை கொட்டுகிறது-
புறம் தொழா மாந்தர் -என்று –மது ஸூதன பிரபன்னான் -என்கிற பதத்தில் அர்த்தம் சொன்னபடி
பிரபன்னான் -என்கையாவது தேவதாந்திர பஜனம் பண்ணாது ஒழிகை
பர்த்தாவின் பக்கல் ஆனுகூல்யம் க்ரமத்திலே மறக்க்கவுமாம் –
பர்த்ரந்தர பரிக்ரஹம் அற்று இருக்கை பாதிவ்ரத்யத்துக்கு வேண்டுவது –

—————————————

மாறு செய்த வாள் அரக்கன் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால் நமன்
கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் என்ன வல்லனே -திருச் சந்த விருத்தம் -116-
என்கிறபடியே சக்கரவர்த்தி திருமகனார் பெயரை இவன் ஆராயவோ -என்கை

நரக ஹேதுவான பாபத்தைப் பண்ணி
நான் அத்தாலே யம வச்யராய் அன்றோ இருக்கிறது என்று திரு உள்ளத்தைக் குறித்து
நமக்கு தஞ்சமான சக்கரவத்தி திருமகனார் -தம்மோடே நம்மைக் கூட்டிக் கொண்ட பின்பு –
யமனால் நாம் செய்த குற்றம் ஆராய முடியுமோ -என்கிறார்-

நமன் கூறு செய்து கொண்டு –
செய்தார் செய்த குற்றங்களை ஆராயக் கடவ யமன் -என்னை விபஜித் கொண்டு –
ஆண் பிள்ளையான -சக்கரவர்த்தி திருமகனார் -தம்மோடு கூட்டிக் கொள்ள -யமனாலே-பிரிக்க லாமோ –
இப்பாட்டு –சக்கரவர்த்தி திருமகனைச் சொல்லுகிறது-
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி -என்று சொல்லுகிறபடியே –
யம வச்யமான ஸ்தாவர ஜங்கமங்களை இருந்தபடியே விஷயீ கரித்து -பரம பதத்துக்கு-ஏறக் கொண்டு போன ஏற்றத்தை நினைத்து –
கூறு செய்கை -பிரிக்கை –

இறந்த குற்றம் எண்ண வல்லனே
செய்து கழிந்த பாபத்தை எண்ண வல்லனோ –
கீழ்க் கழிந்த பாபமாவது -அநுதாப தசையையும் -பிராயசித்த தசையையும் கழித்து –
நரக அனுபவம் பண்ணியே கழிக்க வேண்டுமவை -என்கை
எண்ண வல்லனே -என்றது -பாபம் பண்ணினான் என்று தனி க்ரஹத்திலே இருந்து நினைக்கவும் சக்தன் அல்லன் -என்றபடி –

ஒரு திருவேட்டையிலே பட்டர் திரு ஊற்றம் கரையிலே பேர் ஒலக்கமாய் இருக்க
மாலைப் பொழுது ஆயிற்று என்று சிலர் விண்ணப்பம் செய்ய
நான் பெருமாள் அழகிலே துவக்குண்டு இன்று ஒருநாளும் செய்ய வேண்டிய கார்யத்திலே
சிறிது தாழ நின்றோம் என்றால்-இது குற்றமாக யமன் கேட்கவோ
ஒரு அரசன் இருந்து நாட்டுக் கணக்கு கேட்டுக் கொடு வாரா நின்றால்
அரசனுக்கு அந்தரங்கனாய் இருப்பான் ஒருவன் பெயரை வாசித்தால் -ஓம் காண் அது கிடக்க மேல் செல் -என்றால்
பின்னை ஒரு நாளும் அப் பெயரை எடுத்து வாசிக்கப் பெறான் காண் -என்றாராம்

இந்த விஷயத்திலே
உனக்கு ஆகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ-பெரிய திருமொழி -6-8-9-என்று அருளிச் செய்தார் –
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் -பெரிய திருமொழி -8-10-7-என்கிறபடியே
இருவர் ஒரு வழி போகப் பெறார்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா-என்றார் பட்டர் பிரான்
விழுக்காடு அறியாதே வந்து கிட்டில் செய்வது என் என்னில்
தட வரைத் தோள் சக்கர பாணீ –சாரங்க வில் சேவகனே -என்கிறபடியே
திரு ஆழி இட்டு தோளைக் கழித்தல்
ஓர் அம்பாலே தலையை உருட்டுதல் -செய்யும் அத்தனை –
வாணன் பட்டது படுதல் -இராவணன் பட்டது படுதல் -செய்யும் அத்தனை –

வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகு ஏழ் ஆண்டான் -பெரிய திரு மொழி -10-6-5-
என்கிறபடியே
யம தூதுவர்கள் நம்முடையாரை வினவப் பெறார்கள்-அதற்கு அடி என் எனில்
வேண்டாமை –
ஊர்க் கணக்கனோ கோயில் கட்டணத்திலே-அந்தப்புரத்திலே –
புக்கு படுக்கைப் பற்று -பெண்கள் இருக்கும் இடம் -ஆராய்வான்
செய்தாரேல் நன்று செய்தார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-
என்கிறவன் இவர்கள் கையில் காட்டிக் கொடானே
நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை நமன் தமர் தலைகள் மீதே
நாவல் இட்டு உழி தருகின்றோம் -எனபது திருமாலை -1-

அஹம் அமரவரார்சிதென தாத்ரா
யம இதி லோக ஹிதா ஹிதே நியுக்த
ஹரிகுரு வசக அஸ்மி ன் ஸ்வ தந்திர
ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-14-
உலக குருவான பகவானுக்கு நான் அடங்கினவனாய் இருக்கிறேன்
நான் ஸ்வ தந்த்ரன் அல்லன்
என்னைத் தண்டிப்பதற்கும் விஷ்ணுவுக்கு ஆற்றல் உண்டு என்கிறபடியே
உங்களை நியமிக்கப் போந்த என்னைப் போலே அல்லன் காண் என்னை நியமிக்குமவன்
இவ் ஓலக்கத்தில் வந்தால் அன்றோ நான் ஆராய்வது
அவன் -விஷ்ணு -எங்கும் உள்ளவன் அன்றோ –

நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார் –
பழையதாக நலிந்து போந்த வாசனை கொண்டு பகவத் விஷயத்தில்
முதலடி இட்ட இன்றும் -கிட்டவோ -கேசவா -என்றது வார்த்தை மாத்ரம் என்பதால் முதலடி –
துராசாரோபி சர்வாசீ க்ருதக்னோ நாஸ்திக புரா
சமாசரயேத் ஆதிதேவம் ஸ்ரத்தயா சரணம் யதி
நிர்த்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மன -பாரதம் –
நிர்தோஷம் வித்தி –
சாவது பிறப்பதாய் போந்தவனாவது – பரிஹாரம் -கழுவாய் இல்லாத தீ வினைகளை உடையவன் ஆவது
ஆனாலும் அவனைக் குற்றம் அற்றவன் ஆகவே புத்தி பண்ண வேணும்
குற்றங்கள் இருக்க இப்படி நினைக்க வேண்டுவான் என் -என்ன –
பிரபாவாத் –
இவனையோ பார்ப்பது-இவன் பற்றினவனைப் பார்க்க வேண்டாவோ –
இவனை ஆராய்கை யாவது -பகவானுடைய பெருமையை அளவிட்டு அறிதலாம் அன்றோ
குறுகார் எண்ணாதே குறுக -கில்லார் -என்றது
எரிகிற நெருப்பில் கிட்டுவார் உளரோ -என்றது –
நியாமகனுடைய -ஏவுகின்ற தலைவனுடைய -நியமன வாக்கியம் -ஏவலை மேற்கொண்டு கிட்டாமை அன்று
தந்தாமை வேண்டாதார் உளரோ -என்றபடி –
மேலே பெறக் கூடிய பேற்றினை -ப்ராப்யத்தை -சொல்கிறார்-

————————————

திருக்கோட்டியூர் நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிட சாதியர் பருகு நீரும் உடுக்கும் கூறையும்
பாவம் செய்தன தான் கொலோ -பெரியாழ்வார் -4-4-4-

தம்மன்னை நரகம் புகாள் -4-6-சீரணி மால் திரு நாமம் இடத் தேற்றிய பதிகம்-

சாம் இடத்து என்னைக் குறிக் கொள் கண்டாய் சங்கோடு சக்கரம் ஏந்தினான் நா மடித்து என்னை
அநேக தண்டம் செய்வதா நிற்பார் நமன் தமர்கள் -4-10-2-

எற்றி நமன் தமர் பற்றும் போது நில்லும் என்னும் உபாயம் இல்லை –அல்லல் படா வண்ணம் காக்க வேண்டும்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே –4-10-3-

சித்திர கூத்தன் எழுத்தால் தென் புலக்கோன் பொறி ஒற்றி வைத்த இலச்சினை மாற்றித் தூதுவரோடு ஒளித்தார் –
பக்தருக்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே 5-2-2-

காலநேமி காலனே கணக்கில்லாத கீர்த்தியாய் –திருச்சந்த -31-

காவலில் புலனை வைத்துக் கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து நாவல் இட்டு உழி தருகின்றோம்
நமன் தமர் தலைகள் மீதே –திருமாலை 1-

நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க நரகமே ஸ்வர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி -12-

——————————–

அங்கு வெந்நரகத்து அழுந்தும் போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து தங்கு
தாமரை என்ன பொன்னார் அடி எம்பிரானை –பெரிய திருமொழி -7-3-5-

உண்ணாது வெங்கூற்றம் ஓவாத பாவங்கள் சேரா மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்
மென் தளிர் போல் அடியினானை –தண் சேறை அம்மான் தன்னை -7-4-8–

நந்தா நரகத்து அழுந்த வகை நாளும் எந்தாய் தொண்டரானவர்க்குஇன்னருள் செய்வாய் -11-8-9–

அவுணன் ஆருயிரே யுண்ட கூற்றினை குணம் கொண்டு உள்ளம் கூறு நீ கூறுமாறே –திருக் குறும் தாண்டகம் -2-

——————————————

செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வெந்நரகத்து
என்றும் சேர்த்தால் மாறினாரே –திருவாய் -2-4-7-

சீர்மை கொள் வீடு சுவர்க்க நரகீறா ஈர்மை கொள் தேவர் நடுவா மாற்று எப்பொருட்க்கும் வேர் முதல் வித்தாய்ப்
பரந்து தனி நின்ற கார்முகில் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே 2-8-10-

நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை உம்பருகினில் யார்க்கும் உணர்வரியான் தன்னை கும்பி நரகர்கள்
ஏத்துவரேலும் அவர் கண்டீர் எம் பல் பிறப்பிடை தோறும் எம் தொழு குலம் தாங்களே -3-7-8-

இன்பமில் வெந்நரகாகி இனிய நல் வான் சுவர்க்கங்களுமாய் –பல பல மாய மயக்குகளால்
இன்புறும் இவ்விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே -3-10-7-

கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும் கோலமில் நரகமும் யானே என்னும் -5-6-10-

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய் –பல் வகையும் பரந்த பெருமான் –திரு விண்ணகர்க் கண்டேனே -6-3-1-

வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெம் கூற்றமுமாய் –திருவிண்ணகர்ச் சேர்ந்த பிரான் -6-3-8 –

கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடும் சேனை தடிந்து ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்கவரியே -7-6-10-

அசுரர் வன் கையர் கூற்றமே கொடிய புள்ளுயர்த்தாய்-8-1-8-

யானு நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால் வானுயர் இன்பம் எய்தில் என் மற்றை நரகமே எய்தில் என்
எனிலும் யானும் நீ தானாயத் தெளிதொறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் வானுயர் இன்பம் மன்னி
வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே -8-1-9-

அசுரர் வன் கையர் வெம் கூற்றை புகழுமாறு அறியேன் -8-4-8-

செழும் பனைத் திருப்புளிங்குடியாய் கூற்றமாய் அசுரர் குலம் முதல் அரிந்த கொடு வினைப் படைகள் வல்லானே -9-2-9-

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம் ஏத்தும் நம் கட்கும்
அமரர்க்கு முனிவருக்கும் இன்பன் –திருமோகூர் ஆத்தன் -10-1-6-

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார் -10-2-1-

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த வாட்டாற்று எம்பெருமானை -10-6-11-

—————————–

அவன் தமர் எவ்வினையர் ஆகிலும் எம் கோன் அவன் தமரே என்று ஒழிவது அல்லால் -நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல் பேராயர்க்கு ஆட்பட்டார் பேர் -முதல் திருவந்தாதி –55-
என்று அவர் தங்களிலே சொல்லி இருக்கும் வார்த்தை அன்றோ இது –

வினையால் அடர்ப்பட்டார் வெந்நரகில் சேரார் தினையேனும் தீக் கதிக் கண் செல்வார் –
நினைத்தற்கு அரியானைச் சேயானை ஆயிரம் பேர் செங்கண் கரியானைக் கை தொழுதக்கால் -65-

இனியார் புகுவார் எழு நரக வாசல் முனியாது மூரித்தாள் கோமின் கனி சாயக் கன்று எறிந்த தோளான்
கனை கழலே காண்பதற்கு நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு -87 –

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே
மூவாத மாக் கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர் தீக் கதிக் கண் செல்லும் திறம் -95-

தாமுளரே தம்முள்ளம் உள்ளதே தாமரையின் பூ யுளதே ஏத்தும் பொழுதுண்டே
வாமன் திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே அரு நகரம் சேர்வது அரிது -இரண்டாந் -21-

இது கண்டாய் நல் நெஞ்சே இப் பிறவியாவது இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது
இது கண்டாய் நாரணன் பேரோதி நரகத் தருகணையா காரணமும் வல்லையேல் காண்-66-

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை திறம்பா வழி சென்றார்க்கு அல்லால்
திறம்பாச் செடி நரகை நீக்கித் தாம் செல்வதன் முன் வானோர் கடி நகர வாசல் கதவு -88-

—————————————

பிரகிருதி வச்யரான பின்பு சரீர விஸ்லேஷ சமனந்தரம் நரகம் ஒருவகை தப்பாது-
ஆனபின்பு அவ்விஷயத்தை வணங்கப் பாருங்கள் என்கிறார் –
திருவடிகளிலே தலையைச் சாய்த்து யமன் தலையிலே காலை வைத்துத் திரியுங்கள் –

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்-
சரீர விஸ்லேஷ சமனந்தரம் வடிம்பிட்டு நிற்கிறது நரகம் -ஆகையாலே சம்சாரம் வடிம்பிட்டுக் கொண்டு திரிகிறபடி –
பேதுறுவீர்-
முன்னடி தோற்றாதேபாபத்தைப் பண்ணிப் பின்னை அனுதாபம் பிறந்து பேதுற்றுத் திரிகிற நீங்கள் –
முன்னால் வணங்க முயல்மினோ –
பின்னை செய்கிறோம் என்று ஆறி இருக்க ஒண்ணாது -முற்பட வணங்கிப் பின்னை தேக யாத்ரை பண்ணப் பாருங்கள் –
பால்யம் இ றே பின்னை வணங்கச் செய்கிறோம் என்னுதல்-யௌவனம் இ றே இப்போது என் என்னுதல் –
வார்த்தகம் இ றே இனி என் என்னுதல் செய்யாதே
ஒரு ஷண காலமாகிலும் முற்பட்டுக் கொண்டு ஒரு கை கால் முறிய வாகிலும் சென்று விழுங்கள் –
ஆஜகாம முஹூர்த்தேந-யுத்த -17-1-இதுக்கு பிரமாணம் என் என்னில் –
பன்னூல் அளந்தான்-
எல்லா பிரமாணங்களாலும் அளக்கப் படுபவனை –
அஷர ராசியாலே ஜிஜ்ஞாசிக்கப் பட்டவனை –
வேதைஸ்ஸ சர்வை அஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை -15-15-
சர்வ வேதா யத்ரைகம் பவந்தி -யஜூர் ஆரண்ய -3-11-
இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தான் அவன் சேவடி –
வேதைக சமதி கம்யனாய் அரிதாய் இருக்குமோ என்னில் –
வரையாதே எல்லார் தலையிலும் ஒக்க அடியை வைத்து ஸூ லபனானவனுடைய திருவடிகளை –
கார்க்கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
கருத்த கடல் சூழ்ந்த பூமியை எல்லாம் –
ஞாலத்தை எல்லாம் அளந்தான் –
சாஸ்திரம் தேட வேண்டா -ஆட்சி கொண்டு அறியலாம் –
அளந்தான் –
முயல்மினோ என்றவாறே தேவை யுண்டோ என்று இராதே அப்ரதிஷேதமே வேண்டுவது –
சேவடி –
பிரஜை ஸ்தனத்திலே வாய் வைக்குமா போலே –
முலைப் பாலுக்குக் கூலி கொடுக்க வேணுமோ –
கூலியாவது உண்கை இ றே -அல்லாவிடில் சம்பந்தம் பொயயாகாதோ-
பேதுறுவீர் –
செய்வற்றைச் செய்து இப்போதாக அஞ்சினால் லாபம் யுண்டோ –
பன்னூல் அளந்தானைக் கார்க்கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தான் அவன் சேவடி பின்னால்
அரு நரகம் சேராமல் பேதுறுவீர் முன்னால் வணங்க முயல்மினோ -என்று அந்வயம்

———————–

கொடிய நரகானுபவம் பிரத்யாசன்னம் ஆவதற்கு முன்னே நிரதிசய போக்யனாய்-பிரதிகூல ஹந்தாவானவனை விரும்பி ஏத்துங்கள் என்கிறார் –

கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்றது கூடா முன்னம் -வடி சங்கம்
கொண்டானைக் கூந்தல் வாய் கீண்டானைக் கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று–93-

கடிது கொடு நரகம் –
கொடிதான நரகம் தர்சனமே கடிது -அதுக்கு மேலே –
பிற்காலும் செய்கை கொடிது –
பின்பு அது செய்யும் செயல்களோ கடிது -ருதிர ஆறுகளிலே பொகடுகை -வாள் போன்று இருந்துள்ள கோரைகளிலே ஏறிடுகை –
பிற்காலும் செய்கை கொடிது –
அத்தைக் காண்கைக்கு மேலே -அவர்கள் செய்வன பொறுக்கப் போகாது -அன்றிக்கே
அவர்கள் வேஷம் காண்கையே போரும் -அதுக்கு மேலே -என்றுமாம் –
தென்னவன் தமர் செப்பமிலாதார் சேவதக்குவார் போலப் புகுந்து பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றி
பின் முன்னாக இழுப்பதன் முன்னம் -பெரியாழ்வார் -4-5-7-என்னக் கடவது இறே –
கொடிது என்று –
இவற்றை அனுசந்தித்து
அது கூடா முன்னம் –
அவை கிட்டுவதற்கு முன்னே –
வடி சங்கம் கொண்டானைக் –
கூரிய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கையிலே ஆயுதமாகக் கொண்டவனை -ஆயுதம் இ றே -கூர்மைக்குச் சொல்ல வேணுமோ -அன்றிக்கே –
அதுக்கு கூர்மையாவது -த்வநியிலே உகவாதார் முடிகை –அன்றிக்கே அழகாகவுமாம் –
கூந்தல் வாய் கீண்டானைக்-
கேசியின் வாயைக் கிழித்தவனை-கூந்தல் மா இறே -கூந்தல் யுடையத்தைக் கூந்தல் என்கிறது –
கொங்கை நஞ்சு உண்டானை –
பூதனையை முடித்தவனை –பருவம் நிரம்புவதற்கு முன்னே செய்த செயல் -விரோதி நிரசனம் சத்தா பிரயுக்தம் –
ஏத்துமினோ உற்று-
நெஞ்சாலே அனுசந்தித்து -வாயாலே ஸ்தோத்ரம் பண்ணுங்கோள் –
நரகம் கொடிது என்று அனுசந்திக்க -விரோதி நிரசன சீலனானவனைக் கிட்டி ஏத்தலாம் –
கடிது கொடு நரகம் –
தர்மபுத்திரன் கண்டு மோஹித்தான் இ றே
வடி சங்கம் –
ச கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம்-ஸ்ரீ கீதை -1-19-

————————————-

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான் தண் துழாய் மார்வன்
சினத்துச் செருநர் உகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன் வரு நரகம் தீர்க்கும் மருந்து –மூன்றாம் -3-

இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும் அமம் சூழ்ந்து அற விளங்கித் தோன்றும்
நமம் சூழ் நரகத்து நம்மை நணுகாமல் காப்பான் துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு -98-

நாராயணன் என்னை யாளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால்
தன் பேரான பேசப் பெறாத பிணச் சமயர் பேசக் கேட்டு ஆசைப்பட்டு ஆழ்வார் பலர் -14-

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன் ‘
ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரை கிடக்கும் உள்ளத்து எனக்கு -50-

திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர்
இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும் தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு -நான்முகன் -68-

விரைந்து அடைமின் மேல் ஒரு நாள் வெள்ளம் பரக்க கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன்
பரந்து உலகம் பாடின ஆடின கேட்டு படு நகரம் வீட்டினை வாசல் கதவு -80-

——————–

சென்று அங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட
அன்று அங்கு பார் உருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய காருருவன் தான் நிமிர்த்த கால்–பெரிய திருவந்தாதி -21-

இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன் இளைக்க நமன் தமர்கள் பற்றி இளைப்பெய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான் தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான் -23-

நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள் நாளும் தேங்கோத நீருருவன் செங்கண் மால்
நீங்காத மா கதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு நீ கதியாம் நெஞ்சே நினை -46-

வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் –சிறிய திருமடல்

முன்னை வினை அகல மூங்கில் குடி யமுதன் பொன்னம் கழல் கமலப் போது இரண்டும் என்னுடைய
சென்னிக்கு அணியாகச் சேர்த்தினேன் தென் புலத்தார்க்கு என்னைக் கடவுடையேன் யான் -இராமானுச நூற்றந்தாதி தனியன் –

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னம் நரகில் இட்டுச் சுடுமே அவற்றைத் தொடர் தரு தொல்லை சுழல் பிறப்பில்
நடுமே இனி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே விடுமே சரணம் என்றால் மனமே நையல் மேவுதற்கே -98-

ஆழ்வார்களும் அருளிச் செயல்களையும் தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் வாழ்வார்கள் என்று நினைத்து
நெஞ்சே எப்பொழுதும் நீ யவர் பால் சென்று அணுகக் கூசித்திரி -உபதேச ரத்னமாலை -35-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அருளிச் செயல்களில் பெரிய/பரமன் -பத பிரயோகங்கள் – –

April 1, 2019

ஸ்ரீ பாதுகா பட்டாபிஷேகம்-பெரியோருக்கு ஆட்பட்டால்-பெறாப் பேறு-பெறலாம் -திருவடி தீண்டப் பெற்று பெற்றதே –

பெரியார் -யான் பெரியன் -நீ பெரியை என்பதனை யார் அறிவார் –பெரிய திருவந்தாதி–75-

பெரியவர் சீர் -ராமானுஜ நூற்று அந்தாதியில் பெரியோர் பல இடங்களில்

மஹதே தெய்வம் -நாராயணன் -ஜகந்நாதன் ஸஹ விசாலாக்ஷி -பெருமாள்

பிரபத்தி ஸக்ருத் பஸ்யந்தி சதா -பெரிய உபாயம்

ஸ்தாவர பாரிஜாதம் -அர்ச்சை / ஜங்கம பாரிஜாதம் வைபவம்

“அப்ரமேயம் ஹி தத்தேஜ: யஸ்ய ஸா ஜநகாத்மஜா நத்வம் ஸமர்த: தாம் ஹர்த்தும்
ராம சாபாஸ்ரயாம் வநே”-என்பது, ஸ்ரீராமா-ஆரண். 37 : 18.
எவருக்கு, ஜனக குலத்தில் பிறந்த அந்தப் பிராட்டி மனைவியாக இருக்கின்றாளோ அந்தப் புருஷோத்தமனுடைய பராக்கிரமம்
அளவிட்டு அறிய முடியாததாக இருக்கிறது” என்கிறபடியே,
பெரியவர்களுடைய பெருமையும் தன் சம்பந்தத்தாலே யாம்படி இருக்குமவளன்றோ.
திருமகள் கேள்வனாகையாலே சர்வாதிகன்’ என்னக் கடவதன்றோ.

வாள் வலியால் கேட்க
நீ என் செவியின் வழி புகுந்து -என்கிறபடியே செவிக்கு இனிய செஞ்சொல்லாய்
ருசோய ஜூம்ஷி சாமாநி ததைவா தர்வாணா நிச சர்வம் அஷ்டாக்ஷராந்தஸ் ஸ்தம் யச்சாந் யதபி வாங்மயம் -என்றும்
சர்வ வேதாந்த சாரார்த்தஸ் சம்சார ஆர்ணவ தாரக கதிர் அஷ்டாக்ஷர அந்ரூணாம் அபுநர் பவ காங்ஷீணாம்-என்றும்
ஐஹ லௌகிகம் ஐஸ்வர்யம் ஸ்வர்க்காத்யம் பார லௌகிகம்–கைவல்யம் பகவந்தஞ்ச மந்த்ரோ
அயம் சாதயிஷ்யதி-என்றும் சொல்லுகிறபடியே -சகல வேத ஸங்க்ரஹமாய் அனந்த கிலேச பாஜனமான
சம்சார ஆர்ணவத்தின் நின்றும் கரையேற்ற வற்றாய்
ஐஹிக ஆமுஷ்மிக ஐஸ்வர்ய கைவல்ய அபுநரா வ்ருத்தி லக்ஷண பரம புருஷார்த்தம் முதலான அகிலார்த்த பிரதமாய்
ஓமித் யக்ரே வ்யாஹரேத் நம இதி பஸ்சாத் நாராயணாயேத் யுபரிஷ்டாத்
ஓம் இத் ஏக அக்ஷரம் நமே இதி த்வே அக்ஷரே நாராயணாயேதி பஞ்ச அக்ஷராணி -என்கிறபடியே
அவன் பெயர் எட்டு எழுத்தும் -என்று எட்டுத் திரு அக்ஷரமாய் -உபநிஷத் படி பத த்ரயாத்மகமாய்
அவற்றால் ஸ்வரூப உபாய புருஷார்த்த ப்ரகாசகமுமாய் -மற்றை வியாபக மந்த்ர த்வயம் போல் அன்றிக்கே
இதிலே நார சப்தம் உண்டாகையாலே சப்த பூர்த்தியும் உடைத்தாய்
பேராளன் பேர் ஓதும் பெரியோர் என்கிறபடியே சிஷ்ட பரிக்ரஹ யுக்தமாய்
மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ குஹ்யானாம் குஹ்யம் உத்தமம் பவித்ரஞ்ச பவித்ராமாம் மூல மந்த்ரஸ் சனாதன -என்கிறபடியே
உத்க்ருஷ்ட தமமாகச் சொல்லப்படுகிற மூல மந்திரமான பெரிய திரு மந்த்ரத்தை நர நாராயணனாய்த் தனக்குத் தானே
உபதேசித்துக் கொண்ட இழவு தீர கிழிச் சீரையோடே தனத்தைக் கொடுப்பாரைப் போலே
பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் என்று தம் வாயாரச் சொல்லும்படி
ஆழ்வாருடைய வலத் திருச் செவியில் உபதேசித்து அருள அநந்தரம்

காய்ச்சினப் பறவை யூர்நது பொன் மலையின் மீ மிசைக் கார் முகில் போல் -என்றும்
ஸூபர்ண ப்ருஷ்டே ப்ரபபவ் ஸ்யாம பீதாம்பரோ ஹரி காஞ்ச நஸ்ய கிரேஸ் ஸ்ருங்கே
ச தடித்தோய தோயதா -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வர்ண மயமான பெரிய திருவடி மேல் கொண்டு வந்து நீல மேக நிபமாய் கனக கிரி மீதில் கார் முகில் படிந்து உலாவுமா போலே
விளங்குகிற திவ்ய மங்கள விக்ரஹத்தை இவ் வாழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருளி சாஷாத் கரிப்பித்து அருள

நித்ய ஸூரிகளும் ஸ்வேத த்வீப வாசிகளும் இவ்வாழ்வார் வைபவத்தைக் காண்கைக்காக வந்து நிற்க அவர்களை சேவித்து
பொலிக பொலிக என்று மங்களா சாசனம் பண்ணி அவர்கள் வைபவத்தை அறிந்து அனுபவித்த தமக்கு
மாறுளதோ இம் மண்ணின் மிசையே -என்றும்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே -என்றும்
யான் பெரியன் நீ பெரிய என்பதனை யார் அறிவார் -என்றும்
எம்பெருமானோடே மார் தட்டி உபய விபூதியிலும் தமக்கு சத்ருசர் இல்லாதவராய்
ஒருவராலும் அறிய அறியதான ப்ரபாவத்தை உடையராய்

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் –
வந்து அவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து என்கிறபடியே முக்தனாய் போருமவனை ஸ்ரீ வைகுண்ட நாதன் எதிர் கொள்ளுமா போலே
ஸ்ரீ நம்பெருமாள் திருக் கைத் தலத்திலே எழுந்து அருளிப் புறப்பட்டு அழகிய மணவாளன் திரு மண்டபத்து அளவாக எழுந்து அருளி
எதிர் கொண்டு உள்ளே புகுந்து அருள ஸ்ரீ உடையவரும் விழுவது எழுவது தொழுவதாய் சேவித்து திருப் பள்ளி அறையிலே புகுந்து –
அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொள்ளும் கடல் விளங்கு கருமேனி அம்மான் தன்னைக் கண்ணாரக் கண்டு உகந்து –
மணத் தூணே பற்றி நின்று -வாயார வாழ்த்தி ப்ரேம பரவசராய் -அமலனாதி பிரான் படியே பாதாதி கேசாந்தமாக
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே என்னும்படி
ஸ்ரீ பெரிய பெருமாளை அனுபவித்து திருப் பல்லாண்டையும் அனுசந்தித்து –
நமோ நமோ வாங் மனசாதி பூமயே நமோ நமோ வாங் மனஸைக பூமயே நமோ நமோ அனந்த மஹா விபூதயே
நமோ நமோ அனந்த தயைக சிந்தவே ந தர்ம நிஷ்டோஸ்மி ந ச ஆத்மவேதீ ந பக்திமாம்ஸ் த்வத் சரணாரவிந்தே
அகிஞ்சன அநந்ய கதிஸ் சரண்ய த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்று
தம் பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்தியை அனுசந்தித்து சேவித்து நிற்க

ஸ்ரீ பெரிய பெருமாளும் ஸ்ரீ ராமானுசனை கிருபை பண்ணி அருளி
தீர்த்த ப்ரசாதங்களும் ப்ரசாதித்து -நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்கிறபடியே-
தேனே மலரும் திருக் கமல பாதமான துயரறு சுடர் அடிகளாலே இவருடைய உத்தம அங்கத்தை அலங்கரிக்க இவரும்
தாளிணைக் கீழ் வாழ்ச்சியைப் பெற்று நிரதிசய ஆனந்த நிர்ப்பரராய் சேவித்துக் கொண்டு நிற்க
ஸ்ரீ பெரிய பெருமாளும் ஸ்ரீ உடையவரை தம் தாமரைக் கண்களால் நோக்கி -சோதிவாய் திறந்து –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் -என்கிற உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் உமக்கும் உம் உடையார்க்கும் தந்தோம் –
நம்முடைய வீட்டின் கார்யம் எல்லாம் ஆராய்ந்து நடத்தும் என்று திரு உள்ளமாய் அருளி
ஸ்ரீ உடையவர் என்ற திரு நாமமும் பிரசாதித்து அருளி –
ஸ்ரீ உடையவரும் தீர்த்த பிரசாதமும் சூடிக் களைந்த தண் துழாய்
விரை நாறு கண்ணித் திரு மாலை பிரசாதமும் –
பொது நின்ற பொன் அம் கழலான ஸ்ரீ சடகோபனும் வானவர் நாட்டையும் நீ கண்டு கொள்
என்கிற உபய விபூதி ஐஸ்வர்யமும் கரதலாமலமாக ப்ரசாதிக்கப் பெற்று

ஸ்ரீ பெரிய திரு நம்பி திரு முக மண்டலத்தைப் பார்த்து அருளி பெரியாருக்கு ஆட் பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு என்று
தேவரீர் திருவடிகள் சம்பந்தத்தை இட்டு ஸ்ரீ பெருமாள் இப்படி அடியேனை வாழ்வித்து அருளினார் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பெரிய நம்பியும் கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பவிஷ்யத்தர்த்தம் ப்ரத்யக்ஷமாச்சது -என்று
அருளிச் செய்து ஸ்ரீ பெருமாள் நியமித்து அருளின கார்யம் செய்து அருளலாகாதோ என்று அருளிச் செய்து அருளினார்–

——————————-

ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செயல்களில் பெரிய பத பிரயோகம் –

பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியை சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை
வில்லிபுத்தூர் விட்டு சித்தன் –ஸ்ரீ திருப்பல்லாண்டு -12-

பரமன் தன் நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும் மருங்கும் இருந்தவா காணீரே
வாள் நுதலீர் வந்து காணீரே-ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -1-2-7–

சிற்றில் இழைத்துத் திரி தருவோர்களை பற்றி பறித்துக் கொண்டோடும் பரமன் தன் நெற்றி இருந்தவா காணீரே -1-2-19–

ஆலின் இலையதன் மேல் பையவுயோகு துயில் கொண்ட பரம் பரனே பங்கய நீள் அயனத்து அஞ்சன மேனியனே -1-5-1-

கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினை பற்றி எறிந்த பரமன் -2-5-5–

எம் புருடோத்தமன் இருக்கை கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடுவினை களைந்திட கிற்கும்
கங்கையின் கரை மேல் கை தொழ நின்ற கண்டம் என்னும் கடி நகரே -4-7-1–

புருடோத்தமன் வாழ்வு-2 -.இருக்கை -3-/-நகர் தான் -4 -/ வாழ்வு -7-/அமர்வு -8-/ இருக்கை -9-/ இருக்கை -10-/ அடி மேல் -11-

திருக் கோட்டியூர் கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா வென்று பேசுவார் அடியார்கள்
எந்தம்மை விற்கவும் பெறுவார்களே -4-4-19-

கேசவா புருடோத்தமா வென்றும் கேழலாகிய கேடிலீ என்றும் பேசுவார் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே -4-5-1–

இன்னமுதே ஏழு உலகு உடையாய் என்னப்பா –அரங்கத்து அரவணைப் பள்ளியானே -4-10-7–

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் -5-4-1-

ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5-4-11-

———————–

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செயல்களில் பெரிய பத பிரயோகம் –

பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி –ஸ்ரீ திருப்பாவை -2-

ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி -3-

அம்பரமூடறுத்து ஓங்கி யுலகளந்த உம்பர் கோமானே -17-

ஆற்றப் படைத்தாய் மகனே அறிவுறாய் ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் -21-

நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் -25-

சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான் ஆலினிலைப் பெருமான் —ஸ்ரீ நாச்சியார் -9-8-

நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர்-10-10-

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -11-3-

பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீர் ஏற்று எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான் -11-5-

அருத்தித் தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல் விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே -14-7-

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை -14-10-

கோதை சொல் மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாளுடைய பிரான் அடிக்கீழ்ப் பிரியாது என்றும் இருப்பாரே -14-10-

——————————————————————

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செயல்களில் பெரிய பத பிரயோகம் –

அரங்கன் அடியிணை தங்கு சிந்தைத் தனிப்பெரும் பித்தனாம் கொங்கர் கோன் குலசேகரன் — ஸ்ரீ பெருமாள் திருமொழி -3-9-

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா -ஸ்ரீ பெருமாள் திருமொழி -4-9-

—————————–

ஸ்ரீ திருமழிசைப் பிரான் அருளிச் செயல்களில் பெரிய பத பிரயோகம் –

என்றும் யார்க்கும் எண்ணிறந்த ஆதியாய் நின்னுந்தி வாய் அன்று நான்முகற் பயந்த ஆதிதேவன் –ஸ்ரீ திருச்சந்த -5-

ஆதியான வானவர்க்கு அண்ட மாய வப்புறத்து ஆதியான வானவர்க்கு ஆதியான வாதி நீ
ஆதியான வாணர் அந்த கால நீ யுரைத்தி ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே -8-

உலகு தன்னை நீ படைத்து உள்ளொடுக்கி வைத்தி மீண்டு உலகு தன்னுளே பிறத்தி ஓர் இடத்தை யல்லையால்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி யாதலால் உலகில் நின்னை யுள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே -12-

பரத்திலும் பரத்தை-29-

இரக்க மண் கொடுத்தவருக்கு இருக்க ஒன்றும் இன்றியே பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப பாதன்-32-

விண்ணினோடு மண்ணுமாய் ஆதியாகி யாயனாய மாயம் என்ன மாயமே -34-

வரம்பிலாத மாய மாய வையம் ஏழும் மெய்ம்மையே வரம்பிலூழி ஏத்திலும் வரம்பிலாத கீர்த்தியாய் -96-

அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதியந்தம் இல்லவன் நச்சு நாகணைக் கிடந்த நாதன் வேத கீதனே -117-

பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள் என்னதாவி என்னும் வல்வினையினுள் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர் மன்ன வந்து பூண்டு வாட்டம் இன்றி எங்கும் நின்றதே -119-

———————————————————–

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அருளிச் செயல்களில் பெரிய பத பிரயோகம் –

அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் –ஸ்ரீ திருமாலை -11-

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக்கொண்ட எந்தாய் -35-

ஆதி மூர்த்தி அரங்க மா நகருளானே -36-

———————————————————-

ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் அருளிச் செயல்களில் பெரிய பத பிரயோகம் –

உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற நிவந்த நீண் முடியன் –அமலனாதி -2-

அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் எழு மால் வரை முற்றும் உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே -6-

அரங்கத்து அமலன் முகத்து கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட வப்பெரிய வாய கண்கள் -8-

ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான் -9-

————————————————-

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அருளிச் செயல்களில் பெரிய பத பிரயோகம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பனில் –கண்ணி -1-

பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே -3-

———————————————————-

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செயல்களில் பெரிய பத பிரயோகம் –

ஓடினேன் ஓடி யுய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –ஸ்ரீ பெரிய திருமொழி -1-1-1-

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின வெல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளோடு பெரு நிலம் அளிக்கும் -1-1-9-

பணங்கள் ஆயிரமுடைய நல் அரவணைப் பள்ளி கொள் பரமா என்று
இணங்கி வானவர் மணி முடி பணி தர இருந்த நல்லிமயத்து -1-2-6-

இனமலர் எட்டும் இட்டு இமையோர்கள் பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே -1-2-7–

அருவரை இமயத்து பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று எண்ணி
இமையோர்கள் பிரமனோடு சென்று அடி தொழும் பிரிதி -1-2-8-

ஓதி ஆயிர நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல் ஏதமின்றி நின்று அருளும்
நம் பெரும் தகை இருந்த நல் இமயத்து -1-2-9-

கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று பெரிய மா சுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி -1-2-10-

தண் துழாய் கொண்டு ஆயிர நாமம் சொல்லி வலம் கொள் தொண்டர் பாடி ஆடும் வதரி வணங்குதுமே -1-3-9-

தேனுடைக் கமலத்தயனோடு தேவர் சென்று இறைஞ்சிட பெருகு வானிடை
முது நீர்க் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே -1-4-2-

தொழுது எழு தொண்டர்கள் தமக்கு பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம்பெருமான் -1-4-4-

அண்டமூடறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு அவனி யாளலமர
பெருகு மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே -1-4-9-

பேர் ஆயிரமுடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே -1-5-4-

மூவடி மண் இன்றே தா வென்று உலகு ஏழும் தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே -1-5-5-

ஓர் சந்தார் தலை கொண்டு உலகு எழும் திரியும் பெரியோன் தான் சென்று
என் எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கு அமுத நீர் திரு மார்பில் தந்தான் -1-5-8-

அமரர் நன்னாட்டு அரசு ஆள பேர் ஆயிரமும் ஓதுமின்கள் -1-5-10–

நமனார் பாடியைப் பெரிதும் பரிசு அழித்திட்டேன் பரமனே பாற் கடல் கிடந்தாய்
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் -1-6-6-

நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான் அல்லி மாதர் புளிக்க நின்ற ஆயிரம் தோளன் -1-7-9-

பாரு நீர் எறி காற்றினோடு ஆகாசமும் இவையாயினான் பேருமோர் ஆயிரம்
பேச நின்ற பிறப்பிலி பெருக்குமிடம் –திருவேங்கடம் -1-9-7–

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசிக் கேட்டிருந்தே என் நெஞ்சம் என்பாய்
எனக்கு ஓன்று சொல்லாதே –வேங்கட மலை கோயில் மேவிய ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-8-

நீரான் பேரன் நெடுமால் அவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே -2-4-6-

வென்றி கொள் வாள் அவுணன் பகராத அவன் ஆயிர நாமம்-2-4-7-

ஏனமாகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் கடந்தானை யெம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே -2-5-6-

உருகும் நின் திரு உரு நினைந்து காதன்மை பெரிது –பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது -2-7-5-

வருமா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான்
திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர் -3-2-4-

அண்டரும் வானத்தவரும் ஆயிர நாமங்களோடே திண் திறல் பாட வருவான் சித்திர கூடத்துள்ளானே -3-3-3–

ஓதி ஆயிர நாமமும் பணிந்து ஏத்தி நின்னடைந்தேற்கு -3-5-9-

தனியே நெடுமால் துணையா போயின பூங் கொடியாள் புனலாலி புகுவர்-3-7-10-

இப்பத்தும் வல்லார் உலகில் எண்ணிலாத பேர் இன்பம் உற்று இமையவரோடும் கூடுவர் -4-2-10–

நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே வலம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை -4-3-9-

சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக்குளம்பில் கணகணப்ப-4-4-8-

சேயன் என்றும் மிகப் பெரியன் நுண்ணேர்மையினாய இம்மாயை யாரும் அறியா வகையான இடம் –தென்னரங்கமே -5-4-9-

எண்ணில் பேராளன் பேர் அல்லால் பேசாள் -5-5-7-

பெரு நிலம் ஈரடி நீட்டிப் பண்டு ஒரு நாள் அளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-4-

ஒரு கால் பெரு நிலம் விழுங்கியது உமிழ்ந்த வாயனாய் -5-7-9-

என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் -5-8-6-

அணி பொழில் திருவரங்கத்து அம்மானை நீடு தொல் புகழ் ஆழி வல்லானை
எந்தையை நெடுமாலை நினைந்த பாடல் பத்து இவை -5-8-10-

பெருமான் திரு மார்பா சிறந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே –6-2-2-

தாராளன் தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன் முனியாளார் ஏத்த நின்ற பேராளன்
ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கும் மணவாளன் பெருமை -6-6-9-

அமுதம் கொண்ட பெருமான் திரு மார்பன் –நாமம் சொல்லில் நமோ நாராயணமே -6-10-3–

தேனும் பாலும் அமுதமாய் திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே -6-10-6-

தண் சேறை எம்பெருமான் உம்பர் ஆளும் பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -7-4-4-

பெரியானை அமரர் தலைவருக்கும் பிரமனுக்கும் அரியானை யுகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு அரியானை 7-6-6-

சந்தோகா பவ்ழியா தைத்ரியா சாம வேதியனே நெடுமாலே -7-7-2-

நெடியானே கடியார் கலி நம்பீ –அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே -7-7-8–

பரிமுகமாய் அருளிய எம் பரமன் -7-8-2-

பன்றியாய் மீனாகி யரியாய்ப் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் 7-8-10-

பேர் ஆயிரமுடைய பேராளன் பேராளன் என்கின்றாளால் -8-1-6-

திருக் கண்ணபுரத்து உறையும் பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாய் அரவணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே -8-3-9–

திருமாலை எம்மானை அமுதத்தைக் கடல் கிடந்த பெருமானை அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே -8-9-2-

பரமன் பரஞ்சோதி -8-9-3-

அரவு நீள் கொடியோன் அவையில் ஆசனத்தை அஞ்சிடாதேயிட அதற்குப் பெரிய மா மேனி
அண்டமூடுருவப் பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் -9-1-8-

பாரத மா பெரும் போரில் மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனருக்கு உய்த்த மா மாயன் -9-1-9-

அஞ்சன மா மலையும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா -9-2-7-

என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம் –புல்லாணியே -9-3-1-

பெருகு காதன்மை என்னுள்ளம் எய்த்தப் பிரிந்தான் இடம் –புல்லாணியே -9-3-2–

சிங்கமதாய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த பங்கய மா மலர்க்கண் பரனை எம் பரஞ்சுடரை —
திருமாலிருஞ்சோலை நின்ற நங்கள் பிரானை -9-9-4-

திருக்கோட்டியூரானை நீல மா முகில் வண்ணனை நெடுமாலை இந்த தமிழால் நினைந்த இந் நாலும் ஆறும் -9-10-10-

பற்று அறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயர் எல்லாம் ஒழித்திட்டவரைத் தனக்கு ஆக்க வல்ல பெருமான் திருமால் -10-6-6-

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த செங்கண் பெருந்தோள் நெடுமாலைப் பேர் பாடியாட-11-3-2-

ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து –11-3-8-

பெற்றாரார் ஆயிரம் பேரானை பேர் பாடப் பெற்றான் கலியன் ஒலி செய் தமிழ் மாலை -11-3-10-

பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயராகியவர் நம்மை ஆள்வர் பெரிதே -11-4-6-

உலகு அளந்த யும்பர் கோமான் பேராளன் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே -11-6-5-

செங்கண் நெடியானைச் சிந்தித்து அறியாதார் என்றும் அறியாதார் கண்டோமே -11-7-8-

ஐவாய்ப் பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதி -11-8-7-

மணியே மணி மாணிக்கமே மது சூதா பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதி -11-8-8-

—————————–

அண்டமாய் எண்டிசைக்கும் ஆதியாய் நீதியான பண்டமாம் பரம சோதி
நின்னையே பரவுவேனே –திருக் குறும் தாண்டகம் -11-

பார் இடந்து பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை யாண்ட
பேராளன் பேர் ஓதும் பெண்ணை –திரு நெடும் தாண்டகம் -20-

ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகுண்ட பெரு வாயர் இங்கே வந்து -24-

மின்னிலங்கு திருவுருவம் பெரிய தோளும் –காட்டி -25-

தண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -29-

———————————

கரந்த சில இடம் தோறும் இடம் திகழ் பொருள் தோறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே ஸ்ரீ திருவாய்மொழி -1-1-10-

பேரும் ஓர் ஆயிரம் பிற பலவுடைய எம்பெருமான்
பேரும் ஓர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே -1-3-4-

நெடுமாலார்க்கு என் தூதாய் -1-4-8-

சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசாரம் அல்லன்–1-9-6-

நிமிர்ந்து மண் கொண்ட மால் தனில் மிக்குமோர் தேவுமுளதே -2-2-3-

ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயா -2-3-2-

விண்ணவர் பெருமான் படிவானம் இறந்த பரமன் பவித்ரன் -2-3-9-

பலபலவே யாபரணம் பேரும் பலபலவே பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில் பல பல -2-5-6–

நாரணன் முழு எழு உலகுக்கும் நாதன் வேதமயன் காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை -2-7-2-

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை கண்ணனை நெடுமாலை -2-7-13-

வேர் முதல் வித்தாய் பரந்து தனி நின்ற கார்முகில் போல் வண்ணன் என் கண்ணனை -2-8-10-

பரஞ்சோதி நீ பரமாய் நின்நிகழ்ந்து பின் மற்றோர் பரஞ்சோதி இன்மையின் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே -3-1-3-

பற்பல ஆயிரம் உயிர் செய்த பரமா நின் நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே -3-2-6-

பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே கூவுகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே -3-2-8-

நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே -3-3-4-

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர்
திரு வேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை யோயுமே -3-3-8-

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதி யஞ்சோதி யுருவை
அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வனைப் பாடி -3-5-5

நீர்மையில் நூற்றுவர் வீய ஐவருக்கு அருள் செய்து நின்று பார் மல்கு சேனை யவித்த
பரஞ்சுடரை நினைந்து ஆடி -3-5-7-

மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை -3-6-2-

பரவி வானவர் ஏத்த நின்ற பரமனைப் பரஞ்சோதியை -3-6-3-

உயர நின்றதோர் சோதியாய் உலகேழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை -3-6-8-

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கரு மாணிக்கம் எனதாருயிர்
பட வரவின் அணைக் கிடந்த பரஞ்சுடர் -3-6-10–

பயிலும் சுடர் ஒளி மூர்த்தியைப் பங்கயக்கண்ணனை பயிலவினிய நம் பாற்கடல் சேர்ந்த பரமனை -3-7-1-

அடியோங்கு நூற்றுவர் வீய அன்றி ஐவருக்கு அருள் செய்த நெடியோனை
தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் -3-7-11-

பொருந்திய மா மருத்தினிடை போய எம் பெரும்தகாய் உன் கழல் காணிய பேதுற்று வருந்தி
நான் வாசக மாலை கொண்டு 3-9-10-

சேரும் கொடை புகழ் எல்லையிலானை ஓர் ஆயிரம் பேருமுடைய பிரானை அல்லால் மற்று யான் கிலேன் -3-9 7–

ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே -4-3-2–

புரைப்பிலாத பரம் பரனே பொய்யிலாத பரஞ்சுடரே 4-3-9 —

சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள் பரன் திறம் அன்றிப்
பல்லுலகீர் தெய்வம் மற்று இல்லை பேசுமினே -4-1-3-

நாமங்கள் ஆயிரமுடைய நம் பெருமான் -5-8-11-

பரஞ்சுடர் உடம்பாய் –விண்ணோர்கள் சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் -6-3-7-

மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர் பண்ணி -6-4-10-

பண்புடை வேதம் பயந்த பரனுக்கு மண் புரை வையம் கிடந்த வராகற்கு-6-6-5–

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டிகள் யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி ஏழும்-6-7-3–

அனைத்துலகுமுடைய அரவிந்த லோசனனை தினைத்தனையும் விடாள் -6-7-10-

பாயோரடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம் தாய் ஓரடியால் எல்லா உலகும் தடவந்த மாயோன் -6-9-6–

உலகமுண்ட பெரு வாயா உலகில் கீர்த்தி அம்மானே நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆர் உயிரே -6-10-1-

பொருள் பல முதல் படைத்தாய் என் கண்ணா என் பரஞ்சுடர் -7-1-9-

கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடும் சேனை தடித்து ஆற்றல் மிக்கான்
பெரிய பரஞ்சோதி புக்க அரியே -7-6-10-

ஏர்விலா வென்னைத் தன்னாக்கி என்னால் தன்னை பார் பரவி இன் கவி பாடும் பரமரே -7-9-5-

யசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்களிறே அடியனேன் பெரிய வம்மானே -8-1-3

பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த சீர் உயிரேயோ
மனிசர்க்குத் தேவர் பொல்லாத தேவர்க்கும் தேவாவோ -8-1-5-

பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு உரிய அப்பனை அமரர் அப்பனை
உலகுக்கோர் தனி அப்பன் தன்னை பெரிய வண் குருகூர் வண் சடகோபன் -8-2-11-

என்னமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் கிடந்த எம்பெருமான் -8-4-3-

பிரிதில்லை எனக்குப் பெரிய மூ உலகும் நிறையப் பேர் உருவமாய் நிமிர்ந்த குறிய மாண் எம்மான்-8-4-4-

படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம் பரன் சிவபிரான் அவனே -8-4-9-

கடிசேர் கண்ணிப் பெருமானே -8-5-3-

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீ இன்னே சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவுமாய பெருமானே -8-5-10-

பெரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த பெருமான் தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே -8-7-2-

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை அடி சேர் வகை -8-7-11-

கண்கள் சிவந்து பெரிய வாய் வாயும் சிவந்து கனிந்து -8-8-1-

படியே இது என்று உரைக்கலாம் படியான அல்லன் பரம் பரன்-8-8-2-

முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த தனி மாத் தெய்வத் தளிர் அடிக்கீழ் புகுதல் அன்றி
அவன் அடியார் நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே -8-10-7-

ஓர் ஆயிரமாய் உலகு ஏழு அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையன் காராயின
காள நன் மேனியினன் நாராயணன் நாங்கள் பிரானே -9-3-1-

மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் -9-3-4-

அரியாய வம்மானை அமரர் பிரானை பெரியானைப் பிரமனை முன் படைத்தவனை -9-4-5-

அடியான் இவன் என்று – ஆர் அருள் செய்யும் நெடியானை -9-4-10 –

திருக் கண்ண புரம் பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே –9-10-8-

ஆயிரம் பேருடை யம்மான் நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி அறியோமே-10-1-2–

திரு மோகூர் பெயர்கள் ஆயிரமுடைய வல்லரக்கர் புக்கழுந்த தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே -10-1-8-

பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து வாசமே கமழும் சோலை வயல் அணி ஆனந்தபுரம் -10-2-4-

உலகு உயிர் தேவும் மற்றும் படைத்த எம் பரம மூர்த்தி -10-2-7-

பணி நெஞ்சே நாளும் பரம பரம் பரனை -10-4-7-

பற்று என்று பற்றி பரம பரம் பரனை -10-4-11-

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன் பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே -10-5-8–

நெடியோன் அருள் சூடும் படியான் சடகோபன் -10-5-11-

பெரியாருக்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு வரி வாள் வாய் அரவணை மேல் வாட்டாற்றான் காட்டினனே-10-6-10-

கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன் -10-8-8-

முதல் தனி வித்தேயோ முழு மூ வுலகு ஆதிக்கு எல்லாம் முதல் தனி யுன்னை -10-10-9-

———————————-

கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத வண்ணன் –ஸ்ரீ முதல் திருவந்தாதி -7-

முதலாவார் மூவரே அம் மூவருள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன் முதலாய
நல்லான் அருள் அல்லால் நாமநீர் வையகத்து பல்லார் அருளும் பழுது -15-

நின்றதுவும் வேங்கடமே பேர் ஓத வண்ணர் பெரிது -39-

நினைத்தற்கு அரியானைச் சேயானை ஆயிரம் பேர் செங்கண் கரியானைக் கை தொழுதக்கால் -65-

நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன் அறம் பெரியனார் –ஸ்ரீ இரண்டாம் -52-

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் -73-

நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே –ஸ்ரீ மூன்றாம் -8-

தேசம் திறலும் திருவும் உருவமும் மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில் வலம் புரிந்த
வான் சங்கம் கொண்டான் பேரோத நலம் புரிந்து சென்று அடையும் நன்கு -10-

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால் பின் அளந்து கோடல் பெரிது ஒன்றே –
என்னே திருமாலே செங்கண் நெடியானே எங்கள் பெருமானே நீ இதனைப் பேசு -20-

நின்ற பெருமானே நீர் ஏற்று உலகு எல்லாம் சென்ற பெருமானே செங்கண்ணா -47-

பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு கரிய முகிலினிடை மின் போலே திரியுங்கால் -55-

தான் ஒரு கை பற்றி அலையாமல் பீறக்கடைந்த பெருமான் திரு நாமம் கூறுவதே யாவர்க்கும் கூற்று–ஸ்ரீ நான்முகன் -49-

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் -71-

ஆரே அறிவார் அனைத்து உலகும் உண்டு உமிழ்ந்த பேராழியான் -73-

என்றும் மறந்து அறியேன் என் நெஞ்சத்தே வைத்து நின்றும் இருந்தும் நெடுமாலை -92-

——————-

இருள் விரி சோதி பெருமான் உறையும் எறி கடலே –ஸ்ரீ திரு விருத்தம் –17-

பொங்கு முந்நீர் ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம் பிரான் கண்ணன் கோலங்களே-39 –

பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -45-

புவனி எல்லாம் நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே -69-

பார் அளந்த பேர் அரசே எம் விசும்பு அரசே எம்மை நீத்து வஞ்சித்த ஓர் அரசே அருளாய் -80-

உலகு அளந்த மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பார் இல்லா ஆணிப் பொன்னே அடியேன் ஆவி அடைக்கலமே -85

இமையோர்கள் குழாம் தொழுதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -97-

——————–

சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வத் குழாங்கள் கை தொழக் கிடந்த தாமரை யுந்தித்
தனிப் பெரு நாயக மூ வுலகு அளந்த சேவடியோயே –ஸ்ரீ திருவாசிரியம் -1-

மூ உலகம் விளைத்த யுந்தி மாயக்கடவுள் மா முதல் அடியே -4-

கற்பகக் காவு பற்பல வன்ன முடி தோள் ஆயிரம் தழைத்த நெடியோய்-5-

படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் கடவுள் -6-

ஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரும் மா மாயனை அல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே -7-

————-

கரும் ஜோதிக் கண்ணன் கடல் புரையும் செல்லப் பெரும் சோதிக்கு என் நெஞ்சு ஆள் பெற்று –ஸ்ரீ பெரிய திருவந்தாதி -4-

நெடியாய் செறி கழல் கொள் தாள் நிமிர்த்துச் சென்று உலகம் எல்லாம் -27-

திரைக் கண் வளரும் பேராளன் பேரோதச் சிந்திக்க -59-

தீ யரக்கி மூக்கும் பருச் செவியும் ஈர்த்த பரன் -63-

தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை சொல் மாலை எப்பொழுதும் சூட்டு -65-

நெடியான் நிறம் கரியான் உள்புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத் தகம் -68-

குன்று குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே புடை தான் பெரிதே புவி -74-

அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் -75-

கணை நாணில் ஓவாது தொழில் சாரங்கன் தொல் சீரை நல் நெஞ்சே ஓவாத ஊணாக உண் -78-

——————————————

மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே —–ஆடு அரவம் அளியில் அறி துயில் அமர்ந்த பரம
நின் அடி இணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையே –ஸ்ரீ திரு எழு கூற்று இருக்கை

பேர் ஆயிரமுடையான் என்றாள்—பேர் ஆயிரமுடையான் பேய்ப்பெண்டீர் நும் மகளை தீரா நோய் செய்தான் என உரைத்தாள் —
செங்கண் நெடியானைத் தேன் துழாய்த் தாரணி தாமரை போல் கண்ணானை எண்ணரும் சீர்ப் பேர் ஆயிரமும் பிதற்றி
பெரும் தெருவே ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல் –ஸ்ரீ சிறிய திருமடல்

என்னுடைய இன்னமுதை எவ்வுள் பெரு மலையை —வானவர் தம் முன்னவனை -ஸ்ரீ பெரிய திருமடல் –

——————————-

ஊழி முதல்வனையே பன்னப் பணித்த இராமானுசன் பரன் ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி –4-

தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன் இராமானுசன் எம் இறைவனே –8-

செய்யும் பசும் துலாபாத் தொழில் மாலையும் செந்தமிழ் பெய்யும் மறைத்த தமிழ் மாலையும் பெறாத சீர்
அரங்கத்து ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா மெய்யன் இராமானுசன் -13-

கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன் இராமானுசன் -14-

சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் -16-

சடகோபனை சிந்தையுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் -18-

இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன் ஈறில் பெரும் புகழே தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே -39-

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் -47-

பல்லுலகு யாவும் பரனது என்னும் நற் பொருள் தன்னை இந் நாநிலத்தே வந்து நாட்டினானே -53-

உயிர்கள் மெய் விட்டு ஆதிப்பரனோடு ஒன்றாம் என்று சொல்லும் அல்லல் எல்லாம் வாதில் வென்றான் -58-

பெரும் தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே -62-

இராமானுச எம் பெரும் தகையே -71-

பேதைமை தீர்த்த இராமானுசனைத் தொழும் பெரியோர் பாதம் அல்லால்
என் தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே -85-

கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் யாவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே -86-

இராமானுசனை இரும் கவிகள் புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூம் தொடையல் வனையார்
பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே -90-

இராமானுசனைத் தொழும் பெரியோர் எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே -105-

————————————————-

பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர்ப் பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர் –ஸ்ரீ உபதேச ரத்னமாலை -18-

உயர்வே பரன் படியை உள்ளது எல்லாம் தான் கண்டு –ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி -1-

திண்ணிதா மாறன் திருமால் பரத்வத்தை நண்ணி அவதாரத்தே நன்கு உரைத்த -12-

நம்முடைய வாழ் முதலாம் மாறன் மலர்த்தாள் இணை சூடி கீழ்மை அற்று நெஞ்சே கிளர் -19-

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய் துய்ய விபவமாய்த் தோன்றி அவற்றுள் எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதார எளிது என்றான் பன்னு தமிழ் மாறன் பயின்று -26-

பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே கண்டு எனக்கு எல்லா உறவின் காரியமும் தண்டற நீ செய்து
அருள் என்றே இரந்த சீர் மாறன் தாளிணையே உய் துணை என்று உள்ளமே ஓர் -82-

திருமால் தன் விருப்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு அருமாயத்து அன்று அகல்விப்பான் என் பெருமாள் நீ
இன்று என் பால் செய்வான் என் என்ன இடர் உற்று நின்றான் துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து -98-

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து வாழ்ந்து அங்கு
அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான் முடி மகிழ் சேர் ஞான முனி -99-

முனி மாறன் முன்புரை செய் முற்று இன்பம் நீங்கி தனியாகி நின்று தளர்ந்து நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை ஒருமை உற்றுச் சேர்ந்தான் உயர்ந்து -100-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .