Archive for March, 2011

திரு நெடும் தாண்டகம்–28-தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாள-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 2, 2011

தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாள
சென்று உலகம் மூன்றினையும் திரிந்தோர் தேரால்
மன்னிலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த
வரை வுருவின் மா களிற்றை தோழி! என் தன்
பொன்னிலங்கு முலை குவட்டில் பூட்டிக் கொண்டு
போகாமை வல்லேனாய்ப் புலவி எய்தி
என்னிலங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த
எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே—28-

பிரணய ரோஷம் —
முடிந்து பிழைக்கப் போகிறேன் –
மாற்றி ஆனந்தமாக சேர்ப்பித்துக் கொள்ளப் போகிறான் அடுத்த இரண்டு பாசுரங்களில் ..
வைகல் பூம் கழிவாயில் தூது விட்டார் ஆழ்வார்
திரு வண்  வண்டூர் ரக்ஷணம் -விசுவாசம் -கொண்டு விட
அடுத்து  பிரணய ரோஷம் காட்டியது போல
என் உடைய பந்தும் கழலும் தந்து போ என்றது போல —
மேகம் தூது விட்டாள்-ஆண்டாள் –
சகுனம் வேற வருவது காட்ட –தவிக்க விட்டவனை ஊட வேண்டும் —
சேர வருவான் சம்ச்லேஷம் -பிரிவான் அடுத்து ஆனந்தம் குறைக்க —
கீழே சேர்ந்து பிரிந்தது தெரியுமே —
சேராமல் முகம் காட்டாமல் இருந்தால் –
சேஷத்வ பார தந்த்ர்யம் போகும் ஸ்வரூப நாசம் –
நாமே இல்லை துக்கமும் போகுமே -இருந்து துக்கப் பட வேண்டாமே —
முடிந்து பிழைப்போம் –இந்த நிலை –தூது விட்டோம் கட்டாயம் வருவான் என்பதே அடிப் படைக் கருத்து

தூது விடுகைக்கு அடுத்த தசை இது –பிரணய ரோஷம் –
கலங்கி இருந்தார் இது வரை- இடி விழுந்து தெளிந்தார்–சுப நிமித்தம் தெரிகை —
என் சினம் தீர்வன் நானே அரையர் அபிநயம் காட்ட-எம்பார் சொல்லி கர ஸ்பர்சம் இன்றி -முகம்  திருப்பி காட்டச் சொல்லி –
இதுவே சினம் தீர்க்க வழி –இதற்க்கு ஹேது என் என்னில் –
முடிந்து பிழைக்கக் கடவோம் –
ஸ்வரூப நாசம் முடிவது — -இதைக் கண்ட தோழி -பிரணய ரோஷம் எதிர் பார்த்து இருக்க —
தெளிந்து இருப்பதைக் கண்டு பயப்பட –
நெஞ்சில் ஓடுவது என் வினவ

அவன் வந்தால் பண்டு போல் முகம் காட்டாமல் –
கெடுவாய் மலை உடன் பொருதும் மல்லர் உண்டோ–
உபய விபூதி நாயகன் சர்வ  சக்தி  யுக்தன் -அபலை -தொளிக்கும் ரோஷம் உண்டு தலை மகளை காக்க சொல்கிறாள் —
பரனுக்கு காலன் நான்
ஈஸ்வர விபூதியை அழிக்க வல்ல திறமை உடையவள்  நான்-இதற்க்கு பதிலாக  —
பிரபு உடன் ஊடலாமா
பிரணயித்வம் தெரியாதவன் என்றேன் என்கிறாள் தோழி – –
இவர் பிரபுத்வம்- நாடு ஆளும் திறமையும்- படப் போகும் பாடு பார் என்றாள்–
தோழி  யோசித்து -ஆஸ்ரிதர்க்கு  கட்டாயம் அனுக்ரஹிப்பாரே –
கதைகள் பல பெண்ணுக்கு– சீதை காத்து இருந்தாளே -இது எல்லாம் பகட்டு —
கைக் கூலி கொடுத்து வால்மீகி வியாசரை எழுதி வைக்கச் சொன்னவன் —
நான் முடிகை தவிரேன் என்கிறாள் —
கடகர் ஆச்சார்யர் -பெருமாள் முகம் காட்டா விடில் அவன் மேலே கோபம் கொள்ளுவார் –
துஷ்க்ருதாம் க்ருதவான் ராம -திரு வடி நினைத்தாரே சீதை பிராட்டி பார்த்ததும் —
பெருமாளும் இவர் இடம் கணை ஆழி கொடுத்ததே இவர் எண்ணம் அறிந்து தானே —
இன்னும் உயிர் உடன் இருக்கிறாரே என்ற எண்ணம் -வால்மீகி -வைராக்ய சிகாமணி கோபம் கொண்டு இப்படி  எழுதும் பொழுது –
ப்ரணியத்வம் அறியாமல் யானை ஏற்றம் வில் வித்தை அறிந்து என்ன பலன்–
குறி அழியாமல் இருக்கிறாரே பெருமாள் —

ஸ்ரீ ராம திருவிக்கிரம கிருஷ்ண  மூன்று விருத்தாந்தம்  சொல்ல –
எல்லாம் பகட்டு – வேஷம் முடிந்தே தீருவேன் என்கிறாள் தலைவி —
தென் இலங்கை- யானை  வியாபாரம் பேசுகிறாள் —
மா களிற்றை -போன்றவனை -தருவித்துக் கொண்டு– அவனைக் கட்டி வைத்து –
என்னில் அங்கம் எல்லாம் –அவன் இடம் முன்பு  போன அங்கம் எல்லாம் -திரும்பி வந்து –
இன்பம் எய்த =உயிரை விட –துக்கம் போவதே இன்பம் எய்த –
தென் இலங்கை-
தர்சநீயமான -திருவடி மதித்த ஐஸ்வர்யம்–
பர காலன் முன்பு வீரன் ஆகையாலே அதை வீரம் படிந்த விருத்தாந்தம் –
பாடிய வாளன் படி துறை -திரு மங்கை ஆழ்வார் -சம்பந்திகள் அனைவருக்கும் மோஷம் வாள் வீசி எறிய
அது குத்திட்ட பாடிய வாளன் படி துறை —
தவராசன் படி துறை –ஸ்வாமி ராமானுஜர்-கேசவ பெருமாள் சந்நிதி சுற்றி காவேரி கரை அருகில் வாழ்ந்தார்கள் முன்னோர் —
அரண் பார்த்து தானும் தகப்பன்  வாயுவும் கருடனும் மட்டுமே இரவில் புக முடியும் என்றாரே —
திருவடி நெஞ்சு உளுக்கும் படி அரண் இருந்த படி–

சிதறி-
சுருக்கி -மண் வீடு கட்டி விளையாடி கலைத்தால் போல –
கிள்ளிக் களைந்தானை–அனாயாசமாக -இடறி இல்லை -நிறைய இருந்ததால் சிதறி–
தண்ணீரில் வீடு அடித்து போவது போல அனைவரும் அழிவார்கள்
விபீஷணன் தவிர மற்ற அனைவரும் வெள்ளம் மணல் கட்டடம் அழிவது போல –அவுணன் -வெம்  அசுரர் குலம் களைந்த வேந்தே –
ராக்ஷசர் -சென்ற -வந்த வரவால் பிராணன் போனதாம்-
யானை நடந்து போகும் பொழுது துவம்சம் பண்ணி போவது போல
கர தூஷணன்  நிரசித்து -மூல பலம் -தன்னை வாலிலே கட்டி திரிந்த வாலி  முடித்து –
கார்த்த வீர்ய அர்ஜுனன் பூச்சி போலே கட்டி வைத்தானே ராவணனை -அங்கதன் ராவணன் இடமே இதை எல்லாம் சொன்னானே —–
அனைத்தையும் முடித்து –
கடலை அரண் செய்து –
ஒரு பிராட்டிக்கு -உண்ணாது உறங்காது –ஒலி கடலை-தோழி சொல்ல —
செய்த கார்யம் -அபலையாய் இருப்பார் அகப் படுத்த செய்த கதை தான் இது —

அடுத்து திரி விக்ரமன்–
அபேஷா நிரபேஷமாக தலை தீண்டியவன் –
பாத பங்கயமே தலைக்கு அணியாய் -பிரார்திக்காமலே தீண்டி –
தாய் குழந்தையை அணைத்துக் கொள்வது போலே–உன்னையும் விட மாட்டான் –
கண்ட பேருக்காகா உதவினவன் —
மதம் பிடித்த யானை போல -திரிந்து -விமுகர் தலையிலும் அந்ய சேஷத்வ பரர் அனைவருக்கும்
வஞ்ச முக் குறும்பு உள்ளவருக்கும் –விசேஷஞ்சன் காண் —
விமுகர் தலைவில் வைப்பான் ஒழிய- எம்பெருமான் ஒழிய வேறு எங்கும் போகாத எனக்கு முகம் காட்ட மாட்டான் —

அடுத்து கண்ணன் பெண்களுக்கு அன்று தேர் கடாவிய பெருமான் —
மாயப் போர் தேர் பாகன்–சித்திர தேர் வலவா–
தனம் -கோவர்த்தனம் தரித்த தனம்-
தூது போகல்  சொல்ல வில்லையே -தேராலே அழித்தான் –
சங்கல்ப சக்தி யாலே முடிக்கிறவன் –
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையன்
கொல்லா மாகொல் —
கொலை செய்து –அதி ரதன்– பிணமும் கண் காணாத படி தேரை நடாத்தி தூசி யாலே —
ஆடிய மா நெடு தேர்–நர்த்தனம் போலே இருந்ததாம் —
தேர் காலில் துகை உண்டு போம் படி ஆனதாம் –
திரௌபதிக்கு பண்ணிய -இவன் உனக்கு பண்ணுவானே –
ஒருத்தி குழலை முடிக்க -நட்டாரை மயப்பிக்க –
நம்பி -கெட்டுப் போக -தன்னை ஒழிய செல்லாதார் குழலை விரிக்கச் செய்பவன் –
யானை திண்மை செருக்கு மலை போலே —
ஆஸ்ரித விரோதி நிரசனம் திண்மை —
ஆஸ்ரிதம் கார்யம் பண்ணி முடித்த செருக்கு –தோழி-கூப்பிடுகிறாள்
என் கையால் அவன் பட போகும் பாடு பாராய் —

சுக்ரீவன் ராமன் – ஏகம் சுகம் துக்கம் –சொன்னது போல -என் துக்கம் பங்கு போடத் தடுக்காதே –அடுத்து கெஞ்சுகிறாள் —
படட்டும் விளக்காமல் /
என் உடைய திரு பொன் இலங்கு முலை அவன் மோவாய் எழுந்தால் போலேயோ என் முலை
பக்தி என் ஸ்த்ரீத்வம் அவன்- புருஷோத்தமன்– குறி அழியாமல் –
அவன் உண்டு அறியாமல் உறக்கம் பேணாமல் –சதைக ரூபா ரூபாயா அவனை ஸ்தம்பத்தில் சேர்த்து கட்ட போகிறேன்
பக்தி யால் கட்டுவது-
பக்தியால் ஏற்படும் ஆற்றாமை வெளி படுத்துவது —
போகாமல் பூட்டிக் கொண்டு – பர கால நாயகி முகம் காட்டாமல்  இருக்க –
அவன் போக முற்படுவான் -பட்ட பாடு எல்லாம் தெரியப் படுத்துவேன் –
முலை குவட்டில் பூட்டிக் கொண்டு-
வரை போன்ற களிறு –
மலையை மலையில் சேர்க்க -வல்லேனாய் சக்தி வேண்டும் –
அழகில் ஆழம் கால் பட்டால் முடியாதே –
நெஞ்சம் நிறைந்தன–இது ஓன்று தான் குறை —
மனசு சகாயம்  பண்ண வேண்டும் /
நெஞ்சு மேல் விழுந்து ஒழியாமல் இருக்க வேண்டும் –
தோழி நீ தடுக்காமல் இருக்க வேண்டும் –ஆச்சார்யர் போல் நீ —

புலவி எய்தி -அவனை பிரிந்து படும் துன்பம் அவன் சந்நிதியில் படுவேன் —
அவன் துடிப்பான்
அதவா
நான் படும் பாட்டை  அவன் பண்ணும் படி பண்ணுவேன் —
என்னில் அங்கம் எல்லாம் -வந்து –
இன்னொரு விச்லேஷத்துக்கு இலக்கு ஆகாத படி முடிந்து பிழைப்பேன் –
பிழைக்கும் பிள்ளை பிறந்த அன்றே போய் இருக்கும் இருந்தால் தானே துக்கம்–
இது ஒரு முலை இருந்த படி என் –
இது ஒரு அதரம் இருந்த படி என் —
அவன் கொண்டாடிய அங்கங்கள் எல்லாம் முடிந்தால் தானே அவன் வருந்துவான் –
ச குடும்பமாய் ஆற்றில் முடிவது போல –
அவயவங்கள் உடன் கூடி முடிய கடவேன் –
வந்து –
கன்றும் தாயும் ஒன்றாய் இருக்க வேண்டும் –
பரதன் கைகேயி போலே கருத்து வேறு பாடு படுத்தி பிரித்தான் –
ஞானம் அங்கம் எல்லாம் கொடுத்து பிரிந்து போயின
அவை அங்கு நின்று மீண்டு ஆஸ்ரித பூதனான என் இடம் வந்து சேர்ந்து முடிய வேண்டும் –
முடிகை தான் பரம பதம் —
எப் பொழுதும் நினைந்து உருகி —
வந்து நின்றதும் மேல் விழுவாய்-தோழி சொல்ல –
அத் தசையிலும் முடிவேன் –என்கிறாள் —
ஆசைப் பட்டு சேராமல் போனாலும் விதித்து
சேஷி சேஷன் -சொன்னாலும் முடியக் கடவேன் –
நினைந்து உருகி –நின்றால் எனக்கு ஆபத்து –
ஸந்நிஹிதன் ஆகி என்னை விட்டு இல்லை
சாகாச பேச்சு பேசுவான் – வந்து நின்றதும் நினைந்த மாத்ரம் முடிவேன் –
மனோ ரதித்த மாத்ரத்திலே முடிவேன்-
சௌவ்குமார்யம் –ஆழ்வார் -பிரணய ரோஷம் மதிள் கட்ட –
அவனும் புகுர முடியாமல் கிரமத்தால் செல்லாமை காட்டி
பிரணய ரோஷம் அழித்தான் -ஆழ்வாரை  சேர்த்து கொண்டான் —
நானே –பக்தி முதிர்ந்த நிலை பிரணய ரோஷம் முதிர்ந்த நிலை –
மதிர் மம /நான் கண்ட நல்லதுவே போல
அண்ணிக்கும் அமுதூரும்  என் நாவுக்கே போல நானே என் நிலை –
நம் ஆழ்வாரை போல இல்லை -சங்கல்பித்த உடனே அழிய கூடியவள் நான் என்கிறாள்

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திரு நெடும் தாண்டகம்–27-செம் கால மட நாராய்! இன்றே சென்று-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 1, 2011

செம் கால மட நாராய்! இன்றே சென்று
திருக் கண்ண புரம் புக்கு என் செம் கண் மாலுக்கு
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்
இது வொப்பது  எமக்கு இன்பம் இல்லை நாளும்
பைம் கானம் மீது எல்லாம் உனதே யாகப்
பழன மீன் கவர்ந்து உண்ணத்  தருவன் தந்தால்
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்
இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே–27

ஸூர சௌரி ஜநேச்வராக -சூரன் பிள்ளை கண்ணன் சௌரி பெருமாளையே குறிக்கும் பட்டர் —
64 சதுர யுகம் கண்ட பெருமாள் -கீழை வீடு என்பர்-
இதை  ஆண்டாள் -காட்டில் வேம்கடம் கண்ண புர நகர் சேர்த்து –
மன்னு குறுங்குடியாய்- வெள்ளறையாய்- சோலை மலைக்கு அரசே கண்ண புரத்து அரசே  –
காலை மாலை கமல மலர் இட்டு ஆழ்வார் – –உடம்பின் முடிவில் -மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பெருமாள்-
சரண்ய முகுந்தத்வம் -மோஷ பூமி பிரதன் –
பித்தேறிக் கொடுக்கிறான் -அவனைத் தான் செம் கண் மால் என்கிறார் இவரும் இங்கு —

கடகர் -சேர்த்து வைப்பவர் -திருக் கண்ண புரம் நோக்கி –
அத்யாவசியம் ஆழ்வாருக்கு- கிளம்பு- வண்டுகளையும் கூட்டி வருவான் —
கடலும் கடலை சார்ந்த இடமே பிரிந்தவர் இருக்கும் இடம் –
அது எல்லாம் உனக்கு தருவேன் -இருள் தரும் ஞாலத்தில் இங்கேயே ஸ்ரீ வைகுண்ட அனுபவம் எய்தலாம் –
இன்றே புறப்பட வேண்டும் –திவ்ய தேச ஆசையால் அங்கு அங்கு இருப்பான்–
அயோதியை கிளம்பி திரு அரங்கம் தங்கினவன் –
தடி போட்டு கிளப்பணும்-
தேர் அழுந்தூரில்  நிற்பான் -கருவறை போல் நின்றான் –
பிரயோக சக்கரம் கொண்டு நிற்கிறான் –
என் துணைவருக்கு உரைத்தியாகில் –இன்பம் வேற ஒன்றும் இல்லை-அறிவிப்பே அமையும் —

வண்டுகள் சென்று சொல்லி மறு மாற்றம் கொண்டு வரும் வரை தரிக்க சக்தி இல்லை —
சீதை ராமன் காத்து இருந்தார்கள்–இவர் அத்வீதியம் —
நாரையை -கண்டவற்றை அடைய ஏவுகிறாள்
பக்ஷி ஜாதி சீர்மை பெற்றது ஆழ்வார்களால் —
காம தேவனை ஆண்டாள் தொழுதாள் முதலில் —
அயோத்யா வாசிகள் அனைவர் காலிலும் விழுந்தது போல –
குயில் காலில் விழுந்தாள்–
கூடிடு கூடலே அசேதனம் கூட–
செம் கால மட நாராய்-சிவந்த காலை பார்த்ததும் —
சம்ச்லேஷ திசையில் அவன் திரு வடி பிடித்தும் -தன் காலை அவன் கொண்டாடி இருந்தானே —
ஆச்சார்யர் திருவடியே உத்தேசம்–
இது ஒரு காலும் சிகப்பும் இருந்த படி என் -சிவந்த கால் உடன் வாசனை உண்டு இவளுக்கு —
கரு முகை மாலையை சும்மாடு வைத்தது போல –
இந்த அழகிய கால் கொண்ட உம்மை தூது விடவோ–பார்த்து கொண்டே இருக்கலாம்-
அஷ்ட புய கரம் வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு-சொன்ன வாயின் அழகை பார்த்து பேச்சு கேட்க்க வில்லை —
ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் —
அவன் காலோடு ஒக்கச் சொன்னதை தப்பைச் சொன்னேன்-
தன் காலை தரும் அத்தனை அவனுக்கு-
தன் காலையும் தந்து அவனையும் கொடுக்கும் ஏற்றம் –
ஆச்சார்யர் தம்மையும் தந்து அவனையும் கொடுப்பாரே –
சிந்தை யினோடு –தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து -அமுதனார்–
பாட்டு கேட்க்கும் இடமும் —எல்லாம் வகுத்த  இடமே இருக்க கடவன் –ஐந்தும் ஆச்சார்யர் தானே —
தானும் சுலபனாய் இருந்து அவனையும் சுலபனாய் ஆக்கும் பிராட்டி ஆச்சார்யர் போலே

அறிவு இழந்து முறை கெட பரி மாறும் -மட நாராய் —
ப்ரணியத்வம் தெரிந்த –
மடப்பம்-ஸ்த்ரீத்வம் பெருமை- என் இழவு போகும் பூரணத்வம் உண்டு —
நாலையும் சொல்வதற்கு உப லஷணம் அச்சம் நாணம் மடப்பம் பயிர்ப்பு —
சாஸ்திரம் கண்டு அச்சம் /பெருமாள்  மோஷ மண்டலம் கை காட்டி உடையவருக்கு கொடுக்க –
நம்மை கண்டு வெட்கி உபதேசம் —
அம்மே என்பாரை போலே நாராய் என்கிறாள் —
போக்கிடம் அற்று –வழி பறி கொடுத்து கலங்கி இருக்கும் பர கால நாயகி இதை தெப்ப கட்டை போல –
எங்கே சீதை தேடி போன பெருமாளுக்கு-கோதாவரி சொல்ல வில்லை-
சபரி கண்டதும் சுக்ரீவன் இருக்கும் இடம் சொல்ல  -திருவடி ஸந்நிஹிதன் ஆனதும் –அம்மே என்றார் போலே –
தசரதன் பிள்ளை- இந்த அலைச்சலுக்கா புத்திர காமோஷ்டி யாகம் பண்ணிப் பெற்றார் –
அவர் தோன்றிய ஆனந்தம் திருவடி கண்டதும் ஹா -வால்மீகி சில இடத்தில் ஹா சப்தம்–
நாராய் -சுரத்துடன் ஆற்றாமை எல்லாம் தோற்ற  நாராய் என்கிறாள் –
ஆடி ஆடி அகம் கரைந்து பாடி பாடி கண்ணீர் மல்கி –சிந்திக்கும் திசைக்கும் -இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் —
எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும் கட்டமே காதல் என்று மூர்சிக்கும் –
எரிகிற விளக்கு பிரகாசமாய் போல எழுந்த உடன் பயம் -எம்பார்-
சிந்த்கிக்கும் திசைக்கும் தேறும்  -தேற்றி கொண்டு எழ -ஆடி ஆடி நினைத்து நினைத்து –
அது போல ஆற்றாமை இசையிலே தோன்ற-பட்ட மகிஷி  –கைக் கூலி செய்து தானே கார்யம் செய்வது இருக்க –
இவள் பிரார்த்திக்க வேண்டி இருகிறதே

இன்றே -முதலில் –
எங்கே சொல்வதை விட இன்றே சொல்வது இவளுக்கு முக்கியம்
ஷிப்ரம்-விபீஷணன் –
நில்லவா நில்லா நெஞ்சம் -ராமனே வந்து ரஷித்து விடுவான்
நீங்கள் பேறு இழப்பீர்கள்  –
அவன் ஸ்வரூபம் பார்த்தாலும்
இன்றே –
நானும் அநந்யார்ஹ சேஷ பூதை —
ஷண நேரம் இருக்க முடியாமல் துடித்த ராமன் படி- ந ஜீவேயம் ஷ்ணம் அபி- -ஜலாம் மத்ஸ்யம் என் படி  –
நீர் பசை அற்று மீன் உயிர் விடுவது போல —
ரிஷிகளும் அல்லாத ஆழ்வார்களும் -சொல்வது போல இல்லை இவர்
திருக் கண்ண புரம்-பாவ பந்தம் -ஸ்வாபாகிகம் –
அனந்தாழ்வான் -திரு வேம்கடம் உடையான்//
பட்டர் -அழகிய மணவாளன் /
ஆழ்வார் -திரு தொலை வில்லி மங்கலம்/
சோமாசி ஆண்டான் -எம்பெருமானார் —
பாடு வித்த முக்கோட்டை–
புக்கு —
அங்கே விடாமல் இங்கே விடுவான் என் –
திரு அழுந்தூரில் தரிக்க மாட்டான் -23 மாரி யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள்–
யோசிக்க– மகா பலி யாக சாலை நடந்தாயே –
இலங்கை நடந்தாயே- நினைக்க -வேகமாக அவன் வர வைத்து போசிக்க வேண்டிய திரு வடியை நடக்க வைத்தோமே என்று
போற்றி பாடினாள்-நினைவு ஒன்றுமே வேண்டும் –
கிளம்பி வேகமாக வந்து கொண்டு இருப்பான் –
ராஜ பாட்டை போகாமல் வயல் வழியே போ —
வண்டும் தானும் அரை குலைய தலை குலைய எதிரே வருவான்-கருடன் உடன் கஜேந்த்ரனை ரஷிக்க கூட்டி வந்தானே –

என் செம் கண் மாலுக்கு —
மால் உபய விபூதியும் தான் இட்ட வழக்காய் இருகிறவன்–
என் மால்-பவ்யன் –
என்னை எதற்கு தூது விடுகிறார் –
ஆச்சார்ய பதவி உனக்கு என்பதால்-வாய்ப்பு உண்டு –
என் அபிமானத்தில் ஒதுன்கினவன்-நினைக்க நினைக்க அதற்க்கு பதில் இஷ்வாகு குல குணம் –
யார் வந்தாலும் அங்குள் அக்ரேண–இச்சன்னு கரி கணேஸ்வர-
குரங்கு கூட்ட தலைவா–என்றானே பெருமாள்–
தூதன் திருவடிக்கு பெயர் கொடுக்க –கண் அழகை காட்டி ஜெயித்தவன் ஜிதந்தே புண்டரீகாஷா —
பிரிகையால் உறக்கம் இன்றி கண் குதறி சிவந்து இருக்கும் –
சாரூப்ய மோட்ஷம் -திருக் கண்ண புரம் –பெரும் பித்தர்-
தம் பித்தை காட்டி நம்மை பித்தேற்றியவன்–
மயல் மிகு-பிச்சேறி இருக்கையும்
எதிரி  தலையை பிச்சேற்றதுவதும் அவனுக்கு இரட்டை வேலை–
மாலாய் பிறந்த நம்பி மாலே செய்யும் மணாளன் —
மாலும் அது -வாஞ்சை திரு வாய் மொழி நூற்று அந்தாதி மாலே மாய பெருமானே —-
தானும் பித்தன் பனி மலர் பாவைக்கு —

என் காதல் –
இது அவன் உடைய காதல் இல்லை -என்று சொல்லச் சொல்ல –
மின் இலங்கு திரு உருவம் குறி அழியாமல்–
பொன்னார்- பசலை -உடன் இருக்கும் என் காதல்-
முக்தர் காதல் போல் அன்று —
விஷயாந்திர ஆசை சம்சாரிகள் போல உன் மேல் இருக்கும் அன்பு வேண்டும் பிரகலாதன்-அது போல என் காதல்-
நாட்டார்  காதல் போல் அன்று —
ஞானம் பிறந்தவாறே காதல் விடுவார் சம்சாரிகள் — சுகம் கொடுக்க காதல்  முக்தர் உடையது –
எனக்கு துக்கம் கொடுக்கும் காதல்–
என் துணைவர்க்கு –துணைவனா -பிரிந்தவனை–பைத்தியம் தானே வார்த்தையிலே தேறியும் -துணைவன் எண்ணம் மாறாது

விட்டு பிரிய முடியாத பந்து —
எல்லா அவஸ்தையிலும் –ஈஸ்வரனை ஒழிந்தவர் ரஷகர் இல்லை
விமுகராய் இருந்த பொழுது சத்தையை நோக்கி
ஆபி முக்கியம் திரும்பி பார்க்க பற்றுதல் அனுபவம் கொடுத்து
பிரிந்த பின்பும் சத்தை கொடுத்து
புனல் அரங்கம் என்று சொல்லி போனானே —
ஆறு படிகள் – ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -அத்வேஷம்- ஆபி முக்கியம்- சாது சமாகம்- மகா க்ரமம் படிக் கட்டுகள் வைத்து –
துணையாய் இருக்க ஆசை உண்டு–
ஆற்றாமை போக்க அவன் ஒருவனே –
உரைத்தியாகில்–சொன்னால்–
கடகரை  நியமிக்க வில்லை பிரார்த்தனை–
ஆகில்–
அவர் அழகில் கால் தாழ்ந்து–
போன கார்யம் மறந்து –
உண்ணப் புக்கு வாயை மறப்பர் – மறந்து இருப்பாய்–
ஒருவரையும் நின் ஒப்பார் இல்லை -என் தசையை அறிவிப்பாரில்-
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்  தாழ்ந்தது ஓர் துணை காணேன்  –
மா கடல் கரிய கண்ணன் —
ஸ்ரீ ரெங்கனுக்கு நீர் இருக்க -தூது சொல்லாமல் -தூது விட்ட பிழை -பிள்ளை பெருமாள் ஐயங்கார் —
திரும்பி வருதல் இன்றி என்னையும் மறந்து  தன்னையும் மறந்ததே —
தடை தாண்டி என் தசை அறிவிப்பீர் ஆகில்–
இது ஒப்ப எனக்கு இன்பம் இல்லை–சொல்வதே சுகம்–
அறிவிப்பே அமையும்
விளம்பம் இதுவே —
அவனால் காத்து இருக்க முடியாது அவன் மனசு இன்னு வரவில்லையா துடித்து கொண்டு இருக்கிறான்

வரவு தப்பாது –புருஷோத்தமன் –
நாளும் –உபகாரம் பண்ணி– போய் விடாமல் நான் பண்ணும் கிஞ்சித்கார ஸம்ருத்தியும் கொள்ள வேண்டும் –
காட்டிக் கொடுத்த ஆச்சர்யனுக்கு கைங்கர்யம் பண்ணிக் கொண்டே இருக்க வேண்டும்–
அவனுக்கு பிரியமானதைக் கொடுக்க வேண்டும் -யாவத்தா ஆயுஷும் —
உபய விபூதியும் நான் இட்ட வழக்கு போல வைத்து இருக்கிறானே —
பரப்பை உடைத்தான கடலுள் சோலை அடைய –
பிரிந்தார் இரங்கும் இடம்  நெய்தல் -ஈது எல்லாம் கண்ணால் காணும் அளவும் —
உபய விபூதிக்கும் -பொன் உலகம் ஆளீரோ புவனம் ஆளீரோ–
நான் கிட்டிய பின் வேற இடம் அவனுக்கு வேண்டாம்-
நீ காட்டின இடத்தில் இருப்போம் —
உனதே ஆக —
எனக்கும் உனக்கும் பொதுவாக இல்லை–
பழன மீன் –
இடம் மட்டும் இல்லை –
மத்ஸங்களும் யானைக் கன்று போல இருக்கும்- கொழும் கயலாய்  –
இளந்த பழம் அடை கொடுத்தான் தசரதனுக்கு –
தனக்குப் பிடித்ததை அவனுக்கு கொடுக்கலாம் –ஆச்சர்யருக்கு பிடித்ததை கொடுக்க வேண்டும் –
அவருக்கு உகந்ததை தேடி கொடுக்க வேண்டும் –கவர்ந்து உண்ண –
கொத்தி கொண்டு மேல் விழுந்து புஜிக்க வேண்டும் படி இருக்கும் —
தருவன் –
என் கண் முன்னே இருந்து  புஜிக்க வேண்டும்-
வந்து -அவனை போலே உபகரித்து  -பின்பு வாராது ஒழியாதே —
உன் பெடையும் நீயும் –
ஏ காங்கியாய்  இல்லை –
உனக்கு அபிமத விஷயம் கூட்டி கொண்டு —
திரு வாய் மொழி துணைக் கேள்வி–
அந்தமில் பேர் இன்பம்-நலம் இங்கேயே அனுபவிக்கலாம்–
அனந்த கிலேச பாஜன சம்சாரத்தில் நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டீர் மக்கள் வாழப் பெறலாம் —
சரீர சம்பந்த திசை என்பதால் ஆச்சர்யர் பிரியமானதை கொடுத்து  வர்த்திக்கும் ஏற்றம் –
தெள்ளியீர்  அனுபவம் இங்கு தான் உண்டு -வையத்து நீடு நிற்பார்களே —

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திரு நெடும் தாண்டகம்–26-தேமருவு பொழில் இடத்து மலர்ந்த போதைத்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 1, 2011

தேமருவு பொழில் இடத்து மலர்ந்த போதைத்
தேனதனை வாய் மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த
அறுகால சிறு வண்டே! தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த அமரர் கோமான்
அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது
நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே –26

தேவாதி ராஜன் கோ சகன் ஆ மருவி அப்பன் திரு மங்கை ஆழ்வார் மட்டுமே மங்களா சாசனம் செய்த 47 திவ்ய தேசங்களில் ஓன்று /
தூது ருக்மிணி பிராட்டி பிராமணரை–
பெருமாள் திரு வடியை–
கண்ணன் தானே பாண்டவ தூதன் —
ஆண்டாள் மேக விடு தூது –நான்கு பதிகம் ஆழ்வார் தூது —நான்கே பாசுரம் பர கால நாயகி தூது –
ஒ மண் அளந்த நாடாளா -நேராக பேசினார் -உம் அடியாரோடு ஒக்க எண்ணி இருந்தீரோ -என்பார்

ஐந்து பாசுரங்களில் தோழி கேட்க பதில் சொல்லி வந்தாள் பர கால நாயகி —
இதில் மீண்டும் பழைய நினைவு வர ஆற்றாமை மிகுந்து தூது விடுகிறாள் –
பிரிந்து போனவன் திரு அரங்கம் போய் சேர முடியாமல் வழியிலே தேர் அழுந்தூரில் இருப்பான் என்று அங்கு தூது விடுகிறார் –
அன்றிக்கே திரு அரங்கம் –போக மண்டபம் சென்று பெரிய  பிராட்டி  இவனை பர காலை நாயகி உடன் போக -திரும்பி அனுப்ப
வந்து கொண்டு இருக்கிறவனை பிடிக்க –
மாம் அஹமின் அர்த்தம் இரண்டும் காட்டும் திவ்ய தேசம் —
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் பிரமன் மாடு கன்றுகளை மறைக்க -தேடி வந்தான் கண்ணன்-
கோகுலம் போல இருக்க -இங்கே தங்கி சேவை
பிரமன் பிரார்த்தனை — தேவாதி ராஜன் ஆ நிரை -இடையவன் -கோ சகன் –
அமரர் கோன் ஆயர் வேந்தன் –
தேர் அழுந்த உபரி சரவஸ்-பிரக லாதன் கருடன் காவேரி தாயார் உடன் சேவை —
பிரகலாத வரதன்-பிரியங்கர உருவம் ஆ மருவி அப்பன்-நரசிம்கனே விபவம் அவதாரமே கண்ணனாக சேவை —
கருடன் விமானம் திரு முடி- வைன முடி செல்லப் பிள்ளைக்கு –
இங்கு கருட விமானம் தரிசன புஷ்கரணி –
திரு வுக்கும் திரு ஆகிய செல்வா 45 பாசுரங்கள் –
முதலில் தேவாதி ராஜன் என்று திரும்பி போக புஷ் கரணி வரை வந்தவர் கால் தளர –
ஆ மருவி அப்பன் சேவை  தர -பசு கன்று உடன் சேவை –
கம்பர் பிறந்த இடம் –மன்னார் குடியில் கன்றுகள் உடன் சேவை போல —

நின் நயந்தாள் பிரியம் வைத்ததே குற்றம் என்று போய் சொல் —
இரண்டும் சேர்ந்த- பொறிகள் உடைய அறு கால சிறு வண்டே –
அமரர் கோமான் -இன்று ஆ மருவி நிரை மேய்த்தான் -கண்ணனே அர்ச்சையாக தேர் அழுந்தூரில் நிற்கிறார் –
இன்றே சென்று -மருவி-அஞ்சாதே –
அகம்பனன் ராவணன் இடம் பேசினது போல –
ஒரு மாது அத்வதீயம்- திரு மணம் கொல்லையில் கலந்த பெண் –
வார்த்தை பேசிப் பார்த்தால் போதும் வார்த்தை முடிக்கும் முன் கிளம்பி விடுவான் —
கிருஷி  பலம் விரக அக்னியில் துடிக்க அதில் முகம் மலர்ந்து கடக்க நிற்க /
தாயார் -மேல் எழுத்து இட்டாளே-ஹிதம் சொல்லி பலிக்க வில்லை –
முன்பு ஸ்லாகித்து கொண்டாடி கடந்து நின்றாள் –தோழி-
தான் ஆசுவாச படுத்த விரகு பூர்வ விருத்தம் கேட்டாள்-
அதனால் விருத்த கீர்த்தனம்-தரித்து இரண்டு பாட்டால் 21/22 பாசுரத்தில் சொன்னாள்–
பிரியும் பொழுது பவ்யன் என்பதால் போகாதே சொல்ல கூடாதோ –
23 பாசுரத்தில் கேட்க்க அதுவும் சொன்னேன் பர பிரதன் என்பதால் –
கொண்டு போனவனை நியமிக்கக் கூடாதோ — ஓர் இருவரோ நித்ய சூரி  மண்டலம் எல்லாம் சொல்லி -24–
அதை நிகமித்தாள்-அடுத்து 25 பாசுரம் என் சத்தை காக்க ஊரின் பெயரை சொல்லி போனான்

புஷ்பம் உடன் பிரியாமல் இருக்கின்றன —
ஆத்ம சாம்யம் தான் பிரிந்து இருப்பதால் அனைவரையும் –
வெள்ளி சொம்பு கிணற்றில் காலியாக இருக்கு இடுக்கி தான்  அதனால் திருடன் கொண்டு போக மாட்டான் என்று சொன்னது போல — –
வெம் மலர் பள்ளி வெம் பள்ளியாக இருக்குமே-
பட்டு உடுக்கும் பாவை பேணாள்–
அக்னி படுக்கையில் படுகிறீர்களே என்கிறாள் —
அக்னி ஸ்தம்பனம் வித்தை மிதுனமாய் இருப்பதே –
படுக்கை பொருந்தாமல் தரையில் கிடக்கும் என்னை சேர்த்து வைத்தால் தானே உங்களுக்கு இது பொருந்தும் —
குத்து விளக்கு எரிகிறதே– கோட்டுக் கால் இருகிறதே– நப்பின்னை பிராட்டியை தனக்கு உதவச் சொல்லும் ஆண்டாள் போல —
ஸ்ரம ஹரமாய் போக  ஸ்தானமாகவும்– மது போக்யமாகவும் பூ படுக்கையாகவும்
தம்பதிகள் சேர இருக்கவும் பெற்றதே ஆச்சர்யம் —
இனிது அமர்ந்து– சுக ரூபமாய் சம்ச்லேஷித்து —
எனக்கு துக்கம் கலந்த கலவி–
இரண்டு விபூதி போல நித்ய விபூதி உங்களுக்கு லீலா  விபூதி எனக்கு —
உங்கள் சுகம் என் துக்கம் போக்கி தானே இன்பமாக இருக்கும் —

பொறி ஆர்ந்த -புள்ளி மிக்கு —
சம்ச்லேஷத்தால் வடிவில் வந்த புகர் —
ஆச்சார்யர் திரு மேனியும் உத்தேசம் என்று –
யுவா குமார -யுவதிச்த குமராணி –
உபவாச க்ரிசையாய் இளைத்து -அன்று அவை எனக்கு பட்டினி நாளே –
பூஷணம் இன்றி இழந்து -அவன் தானே பூஷணம் இவளுக்கு —

அறு கால சிறு வண்டே –
வேகமாக போக முன்னோர்  நிர்வாகம் —
வண்டுக்கு காலால் போக வேண்டாம் என்பதால் பட்டர் சிறகால் போகும் –
தொழுகைக்கு -தொழுதேன் உன்னை-தலையில் வைக்க ஆறு கால் தலை முழுவதும் தரிக்க —
சிறு வண்டே –
திருவடி சிறியவராக சுருக்கிக் கொள்ள வேண்டி இருந்ததே-
ஆண்டாள் விஞ்சி நிற்கும் தன்மை ஜன்ம ஸ்த்ரீத்வம் உண்டே ஏறிட்டுக் கொள்ள வேண்டாமே —
ஆச்சார்யர் பத்னி குமாரர் திரு வடிகள் ஆறு -வண்டு-
குரங்கு ஜன்மம் இல்லை–மாலை தலை புஷ்பம் கழுத்து எங்கும் இருந்து வார்த்தை சொல்லலாமே —

ஆர்த்த தொனி பட்டவாறே -துடித்து -கஜேந்த்திரன் குரல் கேட்டதும் அவன் துடித்து வந்தது போல –
அக்நி கணங்கள் பட்டது  போல எட்டிப் பார்த்தன —
உடனே காலம் தாழ்த்தாமல் தொழுதேன் உன்னை — என்றார்-
கடகர்களை நமஸ்கரிக்க வேண்டும் —
அவனைத் தொழ வில்லை சரம பர்வ நிலை-
அவன் பொகட்டு போனாலும் சேர விட இருக்கிற உம்மையே தொழ வேண்டும் —
அவனும் உண்டாய் நானும் உண்டாய் இருக்க சேர விடும் உன்னையே தொழ வேண்டும்-
இவர் உடைய அத்ர பரத்ர சாபி இருந்தவாறு-
ஆளவந்தார் பிராப்ய பிராபகம் இருந்தவாறே —

யார் இடம் -கேட்டதும் முதலில் அமரர் கோமான்-
அயர்வறும் அமரர்கள் அதிபதி- தேவாதி ராஜன் என்று சொல்ல
நாங்கள் கிட்ட முடியுமா-
ஆ மருவி நிரை மேய்த்த –
பொருந்தி ரஷித்தவன் –
நித்ய சூரிகள் தன்னை ஒழிய தரிக்க முடியாத படி அவனுக்கு பசுக்கள் இன்றி தரிக்க முடியாத படி–
வாசி உண்டு-தான் தரிக்க தான் –
அது பின்னை ஒரு காலத்தில்  அன்றோ என்ன –
அணி அழுந்தூர்–
நித்ய ஸந்நிஹிதன்-பசு போன்ற நம்மை ஞான ஹீனராய் இருக்கிற சம்சாரிகள் –
ரஷிக்க இருக்கிற –
நின்றான் –
நம் போல  ஜந்துகளை ரஷிக்கv தானே ஸ்வாமி ராமானுஜர் –ஜனன மாதுரஸ்ய ரக்ஷணி-
பிறந்தகம் விட்டு ஸ்ரீ ரெங்கம் நித்ய வாசம் நம்மை போன்ற  ஜந்துகளை ரஷிக்கத் தானே பட்டர் —
அவனுக்கு பிரிய இஷ்டம் இல்லை– முடிய போக மாட்டாமல் திரு அழுந்தூரில் பிற் காலித்து நிற்பான் –
போக மண்டபம் நான் இன்றி இருக்க மாட்டான்–
சேர்ந்து இருந்தால் தானே அனுபவம்-
வந்து கொண்டு இருப்பான் அங்கெ சொல்லுங்கோள்-
நின்றான் -ஸ்தாவர பிரஷ்டயாய் நின்றான் என்னுதல்

வருகிறவன் –தூது வருகிறார்களா காத்து நின்றான் –
தேவாதி ராஜன் தானே –தான் மேல் விழ மாட்டாமையால் —
இன்றே சென்று –ஷிப்ரம் நிவேதயதே போல —
நாளைக்கு நான் இல்லை என்கிறாள்–
நான் இல்லை என்பதால் அவனும் இல்லை –
நான் உன்னை அன்றி இல்லை  நீ என்னை அன்றி இல்லை —
இரு தலையும் பிழைக்க இன்றே போய்ச் சொல்ல வேண்டும் —
இரண்டு தலையும் அழிந்தால் ஜகமே இருக்காதே —

நீ மருவி -ஆ மருவி நிரை மேய்த்தான்
திர்யக் ஜாதிகளை உள்ளே விடுவான் —
நீ மருவு என்னை போல-தேவாதி ராஜன் -பார்க்காமல் தேவர் என்று அஞ்சி -அதச்மின் தத் புத்தி பண்ணாமல்-
சீல குணம் ஒன்றையே கண்டு  –
அஞ்சாமல் நின்று –
தரித்து நின்று –நீ பர கால நாயகி-என் விடு தூதாய் சென்றக்கால்
ஆண் விடு தூது வாலில் நெருப்பு–
பெண்  விடு தூது ஆலிங்கனம் –
மகிஷி விட்ட தூது பெருமிதம் தோன்ற பேசு —
பெருமிதம் தோன்ற பேசினாலே அவன் பர கால நாயகி  இடம் இருந்து வந்து இருக்கிறாய் என்று உணர்வான் —
ஒரு மாது பேர் சொல்ல வேண்டாம்-
அந்தரங்கம் -ஏகாந்தம் –
ஒருத்தி -ஒரு காட்டிலே ஒரு மான் அம்பு பட்டு துடிக்க வேடன் -எய்தவன் -உணர்வான் –
ஓர் மாது அத்வீதியை –
பராங்குச நாயகி இல்லை –
பர கால நாயகி-
சம்சாரிகள் முக்தர் முமுஷு போல் அன்றியே –
பின்னை கொல் நிலா மா மகள் மலர் மகள் கொல்   பிறந்திட்டாள்-
விதியினால் பெடை –ஒருத்தி மதி எல்லாம் —
ஒருத்தி உருகும் –
நின் நயந்தாள்-சென்றே போதே அறியும் வார்த்தை சொல்ல வேண்டியது இல்லை –
ஓர் மாது  போதும்-
இதுவும் போராது என்றால் படு கொலை பட்டாள் கொல்
ஒரு கா புருஷனையோ ஆசை பட்டது
புருஷோத்தமனை ஆசை பட்டேன் —
நாயகி பிரிந்தால் துடிப்பானே-
நின் -தேர் அழுந்தூர் பெருமான் –
பர வியூக விபவம் இல்லை –
இறையே -சிறிது அளவே –
முடிய சொல்ல விட மாட்டான் –
ஓடத் தொடங்குவான் என்னை நோக்கி
அவன் தான் உன்னை கொண்டாடுவான் காண்-
ஓர் மாது சொன்னதுமே விஷயம் புரிந்து– போதும் போதும் சொல்வான்–
சொல்ல முடியாது–  சொல்லிப் பாரு —
என்னால் பார்க்க முடியாத திரு மேனியை நீ பார்–
கடன் பட்டோம்- ராமன்  திருவடியை ஆலிங்கனம் பண்ணி கொண்டது போல  —
இரண்டு உயிர் காத்தீர்- ஓர் உயிர் தான் கொடுக்கிறேன் என்றானே பெருமாளும் –காணே –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திரு நெடும் தாண்டகம்–25-மின் இலங்கு திரு வுருவம் பெரிய தோளும்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 1, 2011

மின் இலங்கு திரு வுருவம் பெரிய தோளும்
கரி முனிந்த கைத் தலமும் கண்ணும் வாயும்
தன்னலர்ந்த நறும் துழாய் மலரின் கீழே
தாழ்ந்து இலங்கும் மகரம் சேர் குழையும் காட்டி
என்னலனும் என்னிறைவும் என் சிந்தையும்
என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு
பொன்னலர்ந்த நறும் செருந்தி பொழிலி னூடே
புனல் அரங்கம்  ஊர் என்று  போயினாரே–25-

அவன் இடம் இருந்ததை காட்டினான் –
தன் இடம் பரி கொண்டதையும் சொல்கிறாள் –
ஆத்ம குணம் ரூபம் அனைத்தையும் சொல்கிறாள் —
ஆத்மாவை தன் திருவடியில் கொண்டு– அபிமானம் தொலைத்து -தலை குனிய வைத்து
சரண் அடைத்து மோஷம்  கைங்கர்யம் பெறுவதை சொல்கிறார் —
ஈச்வரோஹம் என்றும் -அஹம் போஹி என்றும் திரிந்து -அபிமான பங்கம் -அடைந்து –
ஆழ்வார் பெண்மை ஸ்த்ரீத்வம் -அபிமான பங்கமாய் வந்து ஆண்டாள் சொன்னது போல –
பெண் ஆணை தேடிப் போக கூடாது –அவன் வந்து கை கொள்ளட்டும் —
அழகை அழித்து– அவன் கரியன் நான் செய்யாள் என்ற செருக்கு அழித்து  –
புழுதி  அளைந்த மேனி அவனது  என்று இறுமாந்து இருக்க -பிராப்தி பிரதி பங்கம் தீர்ந்து சேர்த்துக் கொள்ளப் பறிக்கிறான்–
தன் அழகைக் காட்டி -தான் ஸ்வாமி ஈச்வரன் என்று பெருமை காட்டி சேர்த்துக் கொள்கிறான் –

பொழிலின் ஊடே –
நடுவில் எங்கும் தட்டி கட்டி புறப்பாடு காண்பது போல —
பின்னை மரம் -திரு வாலி திரு நகரி -தொடங்கி திரு அரங்கம் வரை-
காள மேகம் திரு மோகூர் ஆத்தன் கூப்பிட்டு செல்லும் பொழுது மலர் தூவி இருக்கும் அர்ச்சிராதி மார்க்கம் போல –
திரு உருவம்- தோள் காட்டி- யானை கோபித்து அடித்த கைத் தலம் திரு கண் வாய் காட்டி-
திரு -அவயவம் நறும் துழாய் அலர-வன மாலை -ஒப்பனை அழகு காட்டி –
என்னையும் கொண்டு அடிமை கொண்டான் –அவனை மட்டும் இழக்க வில்லை

அத் தலையில் உள்ளதை எல்லாம் நேராகக் காட்டி இத் தலையில் உள்ளதை எல்லாம் கொண்டு போனான்  –
சாஸ்திரம் அவதாரம் ஆழ்வார் கொண்டு திருத்த முடியாததை தன் அழகால் திருத்தி பணி கொள்கிறான் —
தருணவ் ரூப சம்பனவ்  சுகுமாரவ்  மகா பலவ் புண்டரீக விசாலாஷா –
உண்ண வந்து வாயை மறப்பார் போல —
ராம கமல பத்ராஷ- -ஒரு நாள் முகத்தில் விழித்தாரை வடி வழகு படுத்தும் பாடு–
ராமனே வந்தார் இங்கு பரகால நாயகியைக் கொள்ள —
மின் வெட்டா நிற்கும் திரு மேனி அழகு -லாவண்யம்-சமுதாய சோபை-முதலில் சௌந்தர்யம் —
கார் வண்ண திரு மேனி முன்பு சொல்லி
கரு முகில் ஒப்பர் வண்ணம் என்றும் சொல்லி -ஒவ்தார்யம் ஸ்ரம ஹரம்-
இங்கு மின் இலங்கு திரு உருவம் என்றது -ஸ்ரீ தேவி மின்னல் -பார்த்தோம் அவனையே மின்னல் -பற்ற- கிட்ட முடியாத தன்மை சொல்ல –

மேகம்  அணுக முடியுமே –தைர்யமாக பார்க்கலாமே –புறப் பட்டு போகிறானே -அதை சொல்ல வந்ததால் –
திரு மேனி -திரு ஆழி தேஜஸ் -காள மேகம் சிவந்த கிரணத்தால் வார்த்தது போல –
அந்தியம் அம் போதில் அரி உருவாகி–செக்கர் வானம் செக்கர் மா முகில் போல திரு ஆடை –
சிவப்பு சூர்யன் ரத்த சிகப்பு பொன் பெயரோன் ஆகம் -கருத்த திரு மேனி சூழ -அது போல –
திரு ஆழி தேஜஸ் சூழ —
ஆண்டாள் நரஸிம்ஹர் அவதாரமும் செவ்வாய் கிழமை-மங்கள வாரம் -அவதாரம்
திரி விக்ரமனும் திரு வேம்கடத்தானும் திங்கள் கிழமை அவதாரம் –
கோடி சூர்யர் ஒத்த தேஜஸ்  ஒக்க பரவி –மின் இலங்கு -வடி வார் சோதி வலத்து உறையும் ஆழி–
சிவந்து பள பளப்பு ஏறி தோன்றும் —
ஒரு கையில் சங்கு மற்று ஒரு கையில் சக்கரம் முன்பு சொன்னாரே –
தமஸ பரமோ தாதா சங்கு சக்கர கதா தரா– இருட்டுக்கு மேல் பட்ட்டவன் –
மூல பிரகிருதி தாண்டினவன் அவன் -ஸ்ரீ வைகுண்ட நாதன் –மேன்மையைக் காட்டினான்–
கிட்டின போது பெரு வயிற்ற கரு முகிலே என்றவள் —
கிளம்பும் பொழுது -அஸ்திரம் தோன்ற  பள பளத்து  தோன்றின படி —

அடுத்து பெரிய தோளும் –
அவன் திரு மேனி அழகில் தோற்று விழுந்த எனக்கு தெப்ப கட்டை போல விழாமல் தரிக்க –
அதுவும் வழுக்குப் பாறை போல –கால தத்வம் உள்ள அளவும் அனுபவித்து முடிக்க முடியாத கற்பக கா என நற் பல தோள்கள் –
கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்கள் ஒய்வு எடுக்க கிளைகள் போல தோள்கள் —
போக்யதை- தோள் கண்டார் தோளே கண்டார் –
காவல் துடிப்பையும் சொல்கிறது–
மல்லாண்ட திண் தோள்கள்–ஒதுங்குவாருக்கு நிழல் மிக்கு இருக்கை–
வீர சின்னம் போக சின்னம் இரண்டும் கொண்ட தோள்கள் –
திரு வடி – துன்பினை துடைத்து ….இன்பினை கொடுக்கும் தேவரோ தாம் —
கண் எச்சில் படுமே திரு ஆபரணம் போட்டு மூடி வைத்து இருக்கலாமே–
ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் –
நீச தமன் திருத்த முழு அழகையும் காட்டணுமே–சர்வ பூஷண பூஷண —
நாண் பட்டு சுர சுரப்பு வீர சின்னம் –
சகா சதம் ஜா கிண..கரண பூஷண அழகா பந்தம் விமர்த்த -ஆள வந்தார் —

கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் –நான்கு தோளும் –கீழ்  பாசுரத்தில் விரோதி தொலைத்தது ரஷகத்வம் சொல்லி —
அநிஷ்டம் சொல்லி அடுத்து – கண்டேன் நான்கு தோளும் இஷ்ட பிராப்தம் –
போக்யத்வம் இரண்டையும் காட்டும் தோள்கள் —
பெரிய –ஜீவாத்மா சமூஹம் அனைத்துக்கும் நிழல் கொடுக்க /
கரி முனிந்த கைத் தலம்-
அட்ட இல்லை –கோபித்தான் —
வேண்டாம் என்று நினைப்பிட்ட திரு கையும் –கம்சன் முஷ்டிக-பண்ணிய வியாபாரம் வேண்டாம் —
இத்தால் வீர போக சின்னம் உள்ள திரு கைகள்–
நுகர்ச்சி யுருமோ மூவுலகின் வீடு பேறு தன் கேழில்  புகர் செம் முகத்த  –
களிறு அட்ட பொன் ஆழி கை என் அம்மான் -மோதிரம் சாத்தி  கொண்ட அம்மான் –
பொன் ஆழி போக்யத்வம் களிறு அட்ட ரஷகத்வம்–ஆனை காத்து  ஆனை கொன்ற -பஷ பாதன் ஆஸ்ரிதர்–
எய் வண்ணம் வெம் சிலையே துணையா
ரஷகத்வம் கை வண்ணம் தாமரை போக்யத்வம் —
கண்ணும் கிட்டினாரை ஈர்த்து பிரிந்தால் தரிக்க முடியாத படி பண்ணும் திரு கண்கள் –
கண் இணையும் அரவிந்தம் -வாயும் –
அனந்யார்ஹை ஆகிய பின் அவருக்கு தான்   அடிமை என்று  சொல்லும் திரு வாய் —
வாய் கமலம் –

இனி அலங்காரம் ஒப்பனை அழகை -தன் அலர்ந்த -தன் நிலத்தில் காட்டில் செவ்வி கொண்ட திருத் துழாய் –
அலங்கரிக்க பட்ட -வைத்த வளையம் -கீழே வரை – திரு தோள் அளவும் தாழ்ந்து –
பர பாக ரூபம் -கொண்ட மகர குண்டலங்கள் சேர்த்தி அழகு —
தோளுக்கா- தலை குழலுக்கா –காதுக்கா -ஆழ்வான் இந்த மூன்றுக்கும் இல்லை –
இதை சேவிக்கும் மனசுக்கே ஆபரணம் கூரத் ஆழ்வான்–
சாரிகை வந்து ஏசல் கண்டு -திருவடி திரு தோள் மேல் ஏறி தன் உள்ளது அனைத்தையும் காட்டி
நான் கொண்டதை எல்லாம் கொண்டான்  –
சர்வஸ்வ தானம் பண்ணும் படி வந்து -சர்வஸ்வ அபஹாரம் பண்ணினான் –
சௌந்தர்யம் –சர்வ கந்தம் -சௌவ்குமார்யம் -ரூப குணம் –
நலன் ஆத்ம குணம்-அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு இவையும்  நலம் –
குணம் ஒருவனால் அழிக்க ஒண்ணாத நலம் –எதிர் தலையை அழிக்க கூடிய குணம் நிறைவு –
ஸ்த்ரீத்வம் எதிர் தலை புருஷத்வம் அழிக்க கூடியது அதையும் அழித்தான் –
நிறைவு -அடக்கம் அதையும் அழிந்தான் என் சிந்தையும் அதுக்கு அடியான மனசும் வளையும் கொண்டு
ஆசுவாச ஹேதுவான வளையும் கொண்டு —
என்னை ஆளும் கொண்டு– அடிமை ஆக்கிக் கொண்டு –
அதை ஆசை பட்டால் இஷ்ட பிராப்தி தானே இது —
சுமையாக என்னை இவற்றை ஏற்றி கொள்ள –அவனோடு கலந்த பரி மாற்றம் -காதலோடு அனுபவம் அடிமை தனம் —
என்று நினைத்து கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தனுக்கு குற்றேவல் போல —
சர்வ சொத்தையும் அபஹரித்து போகும் பொழுது -அவன் கொடுத்து வைத்த சொத்தை தானே கொண்டு போவது போல —
என் உடையது என்ற நினைவு இல்லாமல் அனந்யார்ஹை ஆக்கி கொண்டான் —

-சத்தை உடன் இருக்க ஊரை சொல்லிப் போந்தான் -திரு அரங்கம் என்று –
ஏற்ற படி சோலைகள் நடுவிலே புகுந்து போனான் –
பொன் -வளர்ந்தது போல நறு மணம் கொண்ட புன்னை-
திரு நகரி முதல் திரு அரங்கம் வரை பொழில் -காள மேகம் வர்ஷித்து போனால் பொழில் வளர கேட்க்க வேண்டுமா -பட்டர்-
தளிரும் முளிருமாக பசு பசுத்து இருக்கும் –
பிரிந்தார் இரங்கும் நிலம்  செருந்தி  மரம் இருக்கும் –
போயினாரே -பின் அழகைச் சேவித்தேன் –
பறித்துப் போனாலும் -காதல் மிக்கு -ஆழ்வார்கள் அவனை -விட்டுக் கொடுக்காமல் அனுபவிப்பார்கள் –
முன்னிலும் பின் அழகிய பெருமாள்– திரு நாராயண புரம் செல்லப்  பிள்ளை -சேவை இன்றும் உண்டு–
வா போ வந்து  ஒரு கால் கண்டு போ சொல்லி தசரதன் வயசு குறைந்து மகிழ்ந்தானே —
புனல்- தண்ணீர் வாய்ப்பு ஸ்ரம ஹரம் —
நித்ய சம்ச்லேஷம் பண்ணும் தேசம் பரம பந்துவாய் இருந்து —
கூடக் கொண்டு போகாமல் –இங்கே இருக்காமல் -போயினாரே —
புஷ்பம் பறிக்கவும் ஜல கிரீடை பண்ணவும் ஏற்ற இடம் —
பொழிலின் ஊடே புனல்-
மேல் பின்னை மரம்- கீழ் நீர் -நடுவில் போனான் —
நடந்த அழகையும் பின்  அழகையும்  காணாமல் இழந்தாய் –

உணங்கல் கெட கழுதை உதடு ஆட்டம் கண்டு என்ன பலன் —
தேறியும் தேறாமலும் அவன் என்றே கிடக்கும் இத் திரு —
ஐதீகம் சொல்லி தலை கட்டுகிறார்–
விக்கிரம சோழ தேவன் வைஷ்ணவ சைவ கவிகள் தோழி பிரிந்து இருக்க ஆற்றாமை –
எலும்பும் சாம்பலும் உடையவன் என்றால் மின் இலங்கு திரு உருவம் என்றால் —
தன் காலில் துவை உண்ட அவனை தோழிக்கு சொல்லும் பொழுதும்
திரு உரு என்பதே பிரணயித்வம் தெரிந்தவள்-
அவள் பிணம் தின்னி என்ன-கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்கள் தான்-
பிர பன்ன குல தலைவிகள் பர கால பராங்குச நாயகிகள்

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திரு நெடும் தாண்டகம்–24-இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 1, 2011

இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம்!
இலங்கு ஒலி நீர் பெரும் பௌவம்  மண்டி வுண்ட
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்
பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி
உலகுண்ட பெரு வாயர் இங்கே வந்து என்
பொரு கயல் கண் நீர் அரும்ப புலவி தந்து
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே–24–

தாச -சக -ஆசனம் –சென்றால் குடையாம்  –அனைவரும் க்ருஹணிக்கு அன்றோ ஓலை எழுதி கொடுப்பது-
கைங்கர்யம் மிதுனத்துக்கு தானே –பவாம்ச்து சக  வைதேக்யா கிரி-லஷ்மணனும் அஹம்  சர்வம் கரிஷ்யாமி சொன்னானே
முன் பின் வாக்கியம் இரண்டிலும் மிதுனம்—
நீ ஏவி இருந்தாலும் கருடன் கேட்டு இருப்பாரே தோழி கேட்க
நான் வாய் அடைத்து இருந்தேன்-
ஒருவர் மட்டும்  இல்லை அனந்த  விஷ்வக்சேன -அனைவரும்
திரு ஆழி திரு சங்கு ஆழ்வார்கள் பரி கரகங்கள் அனைவரும் சூழ புறப் பாடு கண்டு
தான் பராத் பரன் என்று புரிந்து -ஆச்சர்யம் –
சங்கு அவன் இடம் இருப்பதே
என் சங்கம் கழல தானே உணர்ந்தேன் —
முகில் வண்ணன் அருகில் வந்தான் சமுத்திர ஜலம் போல என் அழகை உண்டான் இந்த மேகம் –
இலங்கு ஒளி நீர் பெரும் பவ்வம் மண்டி உண்ட பெரு வயிறு-
கரு முகில் ஒப்ப –பெரும் தவத்த அரும் தவத்தர்
கைங்கர்ய அனுபவ பரர் சூழ -துக்கம் கொடுத்து -வளைகள் கழல புனல் அரங்கம் போயினானே–
பெரிய திருவடி கொண்டு போனான் என்னில்–
பார்யா தாஸ்ய ததா சுதா  மூவரும் உடையவனுக்கு அடிமைகள் –
அவன் தான் பவ்யன் ஆகில் -தத் இங்கித பராதீனன் –
சிருஷ்டியே உன் புருவ நெறிப்பு படி தானே –
அவனுக்கு சேஷ பூதனான பெரிய திரு வடியும் உனக்கும் -அவன் மூலம் சம்பந்தம் –
நீ பட்ட மகிஷி உரிமையால் ஸ்வரூபத்தாலே தாச பூதன் தானே –
தாசன் -சகா -ஆசனம் -த்வஜம்- வாகனம் வேத மயன் வேதாத்மா –போகல் என்று நியமிக்க குறை என் என்ன –
அவன் ஒருவன் இல்லை—
சிலையே துணையா இருவராய் வந்தார்–
பின் தொடர்ந்து வந்து இருப்பார்கள்– புறப்பாடுக்கு அனைவரும் வேண்டுமே –
நித்ய விபூதி உள்ளவர் அனைவரும் வந்தார்கள்–
நித்ய மண்டலம் எல்லாம் திரு மணம் கொல்லை வந்தார்கள்–
முன்பு தேவன் அஞ்சினேன் சௌலப்யம் காட்டும் பொழுது- இப் பொழுது –அவர் தான் பண்டு போல் அன்றியே —
அர்ஜுனன் விஸ்வ ரூபத்தில் அனைவரையும் கண்டது போல –பயந்து –
வடிவில் ஒளி சூழ்ந்து மேன்மை தோற்று அணுக ஒண்ணாத படி இருக்க சென்று கிட்டவும் வார்த்தை சொல்ல முடியாது இருந்தது-
தாம் போகை அன்றி தாம் போனால் ஆசுவாசம் படுத்தும் படி இருந்த வளையும் கொண்டு போனான் —
வைத்த மா நிதி பெருமாள் -தன் ஜீவனம் தேடி போக என் ஜீவனம் வேற கொண்டு போனான் –
அது போல இவன் கொண்டாடிய வளை-கையில் சங்கு நில்லா -போன உடனே ஆற்றாமை சூழ்ந்தது
கண்ணன் புறப் பட்டதும் கடல் சூழ்ந்தது போல வளை அவனுக்கு முன் போனதே —
சீதை பழக்கம் அறிந்து கொண்டதாம் பர கால நாயகி வளைகளுக்கு

சீதைப் பிராட்டி தாம் முன் போக –ராமன் பின் வராதே சொன்னதால்- முன் சென்றாள்-
வளை இருந்தது அவன் சம்பந்தத்தால் தானே அதனால் போனது முன் —
கை இளைத்ததால் வந்ததோ என்று அடுத்த கை பார்க்க –
இரு கையில் சங்கு நில்லா -அதுவும் முன் போனதே -இவை நில்லா —
அவன் நிற்காதது புரிகிறது இவை கூட நிற்க வில்லையே —
சேஷி அவன் போகிறான் –சேஷமான இவையும் போகணுமா–
சேதநனோ அசேதநனோ விபாகம் அன்றி எல்லாம் அவன் என்று புரிந்து கொண்டேன்–
அவன் பரம ஞானி என் இடம் குறை கண்டு அவன் போய் இருக்கலாம் இவை –
இறங்கி விழக் காரணம் புரிய வில்லையே –ராமன் மே அநு கதா துருஷ்ட்டி

கடல் கொண்ட வஸ்து கிடைக்காதே -கண் நடக்க கூட பண்ணுமா —
சேதனம் பற்றி சைதன்யம் -அவனே ஸ்வாமி அனைவருக்கும் அதனால் பின் போனதே —
துக்கம் வரும் பொழுது கண்ண நீர் பாய்ச்ச வேண்டாதா அவனே கூட இருப்பார் –
தேவர் கோலத்தொடும் திரு சக்கரம் சங்கினொடும் வந்து ரஷித்தானே –
ஸ்வாமி ராமானுஜரை தேவ பெருமாளும் பெரும் தேவியார்– வந்து கலந்து அவன் போனான் –
என் உடன் சகஜமாய் இருக்கும் இவையும் போகணுமா-
ஆழ்வாருக்கு சாதனா சாத்திய பக்தி இல்லை — சகஜ பக்தி–
கூடவே இருக்கும் சகஜமாக இருந்த வளைகளும் போகணுமா
அவன் கைக்கு அடங்காதவன் போனான் கைக்கு அடங்கிய இவைகளும் போகணுமா –
அவன் நின்றாலும் இவை நில்லா -போகலாமா என்று கூட்டிப் போயின-
என் நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார் இனி யாரை கொண்டு உசா –

போகா இல்லை நில்லா -என்கிறாள்–
மறு படியும் போட முயல மீண்டும் மீண்டும் நிற்காமல் விழுந்து விழுகையே ஸ்வாபம்-
அவனும் போக மாட்டேன் என்று போவது போல– பல பல காலும் போட்டுக் கொண்டாலும் நிற்காமல் இவையும் போயின —
யாமி -போய் விட்டு வருகிறேன் சொன்னதும் வளைகள் கழன்று  போக-
நயாமி ந யாமி–உன்னையும் கூட்டிப் போகிறேன்  நானே போக வில்லை -மீதி வளைகளும் உடைந்து -உடல் பூரித்து –
சங்கு தங்கை முன்கை நங்கை -சீரார் வளை ஒலிப்ப –
பெருமை விட்டு பிரியாமல் நித்ய அநபாயினி அகலகில்லேன் இறையும் என்று–
சித் அசித் சம்பந்தம் அற அனைத்தும் துக்கம் -என்னது என்பதால் உன் செய்கை என்னை நைவிக்கும்
அது இது உது எனபது இல்லை போல என் சம்பந்தம் எல்லாம் துக்கம் கொடுக்கத்தான் –
என்னது என்று  எதை சொன்னாலும் —

அவன் உதாவாமல் போனதற்கும் சம்பந்தமே அடி எல்லே பாவம்–
அவன் ஸ்வதந்த்ரன்–என்னது என்ற வளையலும் போனதே –
அவன் புண்ணியம் அவதி இல்லை போல என் பாவம் அவதி இல்லை
கலப்பதற்கு முன்னும் ஆனந்தம்- அவனுக்கு கிருஷி பண்ணுவதால்
கலந்த பின் பலன் கிட்டியதே என்று ஆனந்தம் அவாப்த  சமஸ்த காமன் –
முன் சேவை கிடைக்க வில்லை துக்கம்–
இன்று கலந்தவன் பிரிந்தான் துக்கம் —
தானே வந்து கலந்தவன் பிரிந்தானே –இரட்டிப்பு துக்கம் -பாவம் —
என் உடைய கழல் வளையே கழலும் வளை ஆக்கினாரே —
வேம் எனது உயிர் அழல் மெழுகில் ஒக்கு  வளை மேகலை கழன்று வீழ …
நீ போய் ஆ நிரை மேய்க்க போகல் -ஆழ்வார் —
இலங்கு ஒளி நீர் –தன்னைக் கலந்து பிரிந்த பொழுது -புது கணிப்பு –
இத் தலை வெறும் தரையாக -மண்டி  உண்டான்-
ஆழியில் புக்கு முகந்து -சமுத்ரம் -தண்ணீர் -சரீரம் மட்டுமே இங்கு சௌந்தர்யம் அழகு எல்லாம் பருகி கொண்டான்–

இலங்கு ஒளி- விளங்கும் தேஜஸ்– உப்பு இல்லாத நீரை உண்ட சுத்த ஜலம் உண்ட காள மேகம் –
கம்பீரமான கலக்க முடியாத அழகிய சமுத்ரம் -போகிற நடை -ஒளி வளையும் மா நிறமும் கொண்டார்—
அழகு இரட்டிப்பு அவன் இடம்
பாபம் இரட்டிப்பு என் இடம் —
பெரும் பவ்வம் மண்டி உண்ண–
சப்த தீபம் சூழ்ந்து இருக்கிற சுத்த ஜலம் –கள் கருப்பம்  சாறு நெய் தயிர் பால் சுத்த 64 லஷம் —
ஆழமாக உண்ட -மண்டி  -அபிநிவேசதுடன் ஆழ்ந்து உண்டார்–
மேல் விழுந்து கலந்து -சௌந்தர்ய சாகரம் வற்று அடித்து —
என் செய்ய தாமரைக்  கண்ணன் என்னை நிறை கொண்டான் –
முன் செய்ய மாமை இழந்து –வண்ணமும் பொன் நிறம் ஆவது ஒழியுமே–
மேனி மெலிவு எய்தி– ஆஸ்ரயமும் ஒழித்து -இனி  மேலும் வர்ணம் வராமல் இருக்க –
என் செய்ய வாயும்  கரும் கண்ணும் –
அவன் சொன்ன சகஸ்ர நாமம் இருந்த படி—-
என் செய்யும் ஊரவர் கவ்வை இனி நம்மை –நிறை =அடக்கம் –
பெரும் வயிறு–இத் தலையில் உள்ளது அனைத்தும் பருகியும் ஆசை அபிநிவேசம் -அடங்காது —
ஆரா வயிற்றோடு ஆற்றாதான் –
கேட்டு ஆரார வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே —
கரு முகிலே ஒப்பர் வண்ணம்–இத்தால் ஸ்வரூபம் மேக வண்ணம் சொல்ல வில்லை–
புதிதாக வந்த அழகு –என் அழகு சேர்ந்த அழகை-அவிகாராய தத்வம் மாற்றக் கூடிய ஆழ்வார் வைபவம் —
என் தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அற விலை செய்தனன் சோதி  தோழி -ஆழ்வார் –
தாவி  அன்று உலகம் எல்லாம் தலை விழா கொண்ட எந்தாய் சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செம் கண் மால் –
இந்த செம் கண் மால் ஆழ்வார் கிடைத்த ஆனந்தம் அடியாக வந்த செம் கண் –
ஆவியே அமுதே தொண்டர் அடி பொடி ஆழ்வார் பிரிய அவரை பெற தன் சேஷ்டிதம் எல்லாம் சொல்லி —
மின்னல் வெட்டிய மேகம் போல அழகு இரட்டித்து இருந்தது —

மலை மேல் மேகம் -அரங்கன் ஆதி சேஷன் -அருள் மழை நம்மை நனைக்கட்டும்
மின்னல் போலே ஸ்ரீ தேவி -செய்யாள் -இந்திர ஜாலம் வானவில் ஹாரம் -நீல தோயதா மத்யஸ்தா-
அவன் அழகை வாங்கிக் கொள்ளாமல் கொடுத்து இழந்தேனே  -பாவியேன்
மேகம் முகக்கும் கடல் ஆகாமல் பெய்யும் நிலம் ஆகாமல் போனேனே —
பரி கரத்வம்  சூழ -வடிவிலே அழகு -பெரும் தவத்தவர் மேன்மை  சொல்லும் அரும் தவத்தவர் மூன்றும் —
அமிர்தம் அமரர்கள் சூழ்ந்து கொண்டது போல
இவனைச் சூழ்ந்து என்னை அசுரர் கோஷ்டியில் தள்ள பட்டேன் —
நம் பெருமாள் அமிர்தம் பெரிய பெருமாளும் ஆதி சேஷனும்  கிடந்து
நாச்சியார் மார்களும் கருடனும்  அமர்ந்து சூழ்ந்து இருந்தது போல —
பக்தர் பாகவத சக– இப் பொழுது திரு மணம் கொல்லையில் பார்த்தேன் —
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்–ஆழ்வார் –பரத லஷ்மணர் போல குண கைங்கர்ய நிஷ்டர் —
முனிவர் யோகிகள் -ஆண்டாள் -பெரும் தவத்தர் –பகவத் பிரேமத்தால் அதிசயத்து
கைங்கர்யம் வணக்குடை தவ நெறி -பக்தி –தபஸ் சப்தம்–
அரும் தவத்து -அவனும் அவர்களும் பரிமாறும் இதை பார்த்து மகிழும் -சூழ்ந்து பரிவராய் இருந்து –
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு–

ஒரு கையில் சங்கு–
பரி கரத்தில் நீந்திக் கிட்டினாலும் -சோதி வெள்ளத்தில் உள்ளே எழுவதோர் உரு —
திரு மேனி முழுவதும் ஒளி வட்டம் —
குழுமி தேவர் குழாம்-கை தொழ சோதி வெள்ளத்தில் எழுவதோர் உரு யாருக்கும் அறிவது அரிதே —
மேன்மைக்கு எல்லை -சங்கு சக்கரம் ஏந்தி –
வடி வார் சோதி வலத்து உறையும் பல்லாண்டு பெரியாழ்வார் போல சேர்த்தி அழகை -மங்களா சாசனம் பண்ணும் —
என் கையைப் பிடித்த கையும்- காலைப் பிடித்த கையும் அவர்களுக்கு பிராப்யம் ஆயின-
அக் கைகளுக்கு என் கை பிராப்யம் –
சங்கு சக்கரம் இவன் கை பிராப்யம்-
வரும் எளிமை எல்லை இல்லை –
போகும் பொழுதும் மேன்மைக்கு எல்லை இல்லை —
கைத் தலம் பற்றக்  கனா கண்டேன் — அம்மி மிதிக்க கனா கண்டேன் –

பாகவத ஸ்பர்சம் பட்ட  பகவான் மூலம்–தொட்டாரை தொட்டு–சங்கு சக்கரம் ஆனந்தம் –
காப்பு நாண் கட்ட கனாக் கண்டேன் தோழி நான் —
இங்கும் தொட்டாரைத் தொட்டு -எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கொள்– மெய் காட்டிக் கொள் –
பாகவதர் திரு மேனி தீண்டுவது —
உலகு உண்ட பெரு வாயர்-
ஆபத் சகன் கதை சொல்ல வல்ல –பிரளய கால கதை சொல்ல வல்லை  —
அவனை விட்டு பிரிந்தால் வாழ்வு இல்லை தன் படி சொல்கிறாள் —
வந்து கலந்தவன் சக்கரவர்த்தி திரு மகன்  தானே -இவன் பிரளயம் காத்தவன் இல்லை — –
ஜகத்துக்கு தம்மை விட்டு செல்ல ஒண்ணாத படி -அவனும் என்னை விட்டு செல்ல ஒண்ணாத படி-
நான் ஏது சொல்லி வந்தான் பிரிந்த பின் நான் அப்படி சொல்ல வைத்து விட்டு போனான் –
இங்கே வந்து –திரு மணம் கொல்லை -அவர் வரவாலே அவரை அனுபவிப்பது
உபாயமும் பிராப்யமும் அவனே -விஷயீகரிக்கையும் போகமும் அவன் பரம் —

பொரு கயல்–ஒன்றுக்கு ஓன்று சீறு பாறு தோற்ற -கலந்த படியால்  கண்கள் சுற்றித் தேட –பொரு கின்ற மீன் போல —
ஒன்றுக்கு ஓன்று உபமானம் –சம்ச்லேஷ ஆனந்தம் கண் சுற்ற பொரு கயல்-
நீர் அரும்ப
பொழிய இல்லை  -சோகம் துக்கம் அரும்ப
விரக அக்னியால் வற்றி உள் உலர்ந்து –
தன்னைக் கிட்டினாரை வீவில் இன்பம் கொடுப்பன்- எனக்கு புலவி தந்தான் –
தந்து –
கிழிச் சீரை உடன் தனம் கொடுப்பாரை போல தந்து —
பெற்ற தனம் இது தான் –
பஹுமானம் போல தன் இடம்  உள்ள தனம்-
உற்ற நல நோய்– பிரிந்து துடிப்பது –நிர்ஹேதம்-அதுவும் அவனது இன் அருளே –
புலவி தந்து
நாம் பிரயத்தனம் பட்டு சம்பாதிக்க வில்லை –
இது கூட சாத்திய உபாயம் இருக்கக் கூடாது –
அவன் ஒவ்ய்தார்யத்தால் பெற்றது– மயர்வற மதி நலம் அருளினவன் தானே புலவியும் அருளினான் –
கேள்வி கேட்கத் தூண்டிய அவனே தான் -என் இடம்- இங்கு உளன் என்றானே பிரகலாதன் -அதே போல் -துடிக்க கூடாது  என்று
நம் ஊர் கோவில் -புனல் அரங்கம் என்று சொல்லி விட்டு போனான்-

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திரு நெடும் தாண்டகம்–23-உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 1, 2011

உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து என்
ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
தெள்ளூரும் இளம் தெங்கின் தேறல் மாந்தி
சேலுகளும் திரு வரங்கம் நம் மூர் என்ன
கள்ளூறும் பைம் துழாய் மாலையானை
கன விடத்தில் யான் காண்பான் கண்ட போது
புள்ளூரும் கள்வா ! நீ போகேல் என்பன்
என்றாலும் இது நமக்கோர் புலவி தானே–23

தோழி மீண்டும் கேட்க சமாதானம் சொல்கிறாள் அடுத்து —
கருட வாகனம் போகும் வஞ்சகனே -சிலையே துணையா வந்தானாம் –
கருடனை தோட்டத்தில் மறைந்து -புறப் படும் பொழுது  –
வான் இள வரசு வைகுண்ட குட்டன் கிளப்ப -கடுக புறப்பட்டு போனான்-
போகேல் என்றேன் –இது நமக்கு புலவி-துக்கம் தான்-மனசு வியாதி கொடுத்து போனான்-
எனக்கே தந்து –தோஷம் அவன் பேரில் இல்லை கருடன்- நிலம் அல்லா நிலத்தில் இருக்க கூடாது –
ஆண்டாள் போற்றி சொல்லி வேல் போற்றி கண் எச்சில் என்றால் போல –
பெரிய திருவடி கூட்டிப் போனார் -அவன் எது செய்தாலும் தப்பு இல்லை-சர்வ ரஷகன் எது செய்தாலும் ரஷகம் தான் —
ஆனந்தம்  குறைத்து அருளினான் -சீறி அருளாதே –சுய ரஷணம் –
நம சப்த அர்த்தம் மனசில் பட்டு கூட துடிக்கிறாள்
நாராயண அர்த்தம்–அலம் புரிந்த தடக் கையன் தந்து போனது என் என்ன கேட்க –
வேட்கை நோய் -பசலை நோய் கொடுத்து போனான்-
இது காண் -காட்டு கிறாள்
ரிஷிகள் ராக்ஷஸர்கள் தின்ற உடம்பைக் காட்டிப் போனது போல —
உள்ளின் நோய் -விரக நோய் -உள்ளே ஊரும் நோய் -பாஹ்ய நோய் கண் கொண்டு தீர்க்கலாம்
சர்ப்பம் சஞ்சரிக்கும் போல்-உள் ஊரும் சிந்தை நோய்–இடம் இடம் பரவும் நோய்–

காதல் நோய் அழுது போக்க முடியாது –மனோ வியாதி சிந்தை நோய்–பரிகாரம் பண்ண முடியாத –
வைத்யனுக்கே வந்த நோய் போல–நெஞ்சு தெளிந்து இருந்தால் கர்மா கழிந்தது நோய் என்று சந்தோஷ படலாம் —
நெஞ்சில் வியாதிக்கு பரி காரம் இல்லையே –பிரேமத்தால் தான் நோய்—
புருஷார்தமாய் இருக்கும் பக்தி முதலில் ..
பக்தி அனுபவம் வளர்க்கும்
பிரிவின் பொழுது விரக நோய் கொடுக்கும் –
ஸ்வரூப ஞானம் ஏற்பட்டால் புருஷார்தமாய் இருக்கும் —
ஞானி தசையில் இல்லை-பிரேம தசை-போக உபகரணமாய் இருக்கும் –
நிலா -ஆனந்தம் கலவி பொழுது –அக்நி விரகத்தில் –கலவி இருவருக்கும் பொது-
பிரிந்த  வருத்தம் எனக்கே தந்து –
அவன் ஸ்வதந்த்ரன்  பிறர் முகம் பார்க்க வேண்டாதபடி–
தோழி- அவனுக்கும்  வருத்தம் இல்லை என்று எப்படி தேறியும் என்று கேட்க –

ராமன்  சீதை விட்டு பிரிந்து வருந்தினானே-தெரியாதோ தோழி கேட்க – —
ராமன் காதல் அதிகம் ஒரு மாதம் தான் அவள் சொல்ல இவனோ ஒரு வினாடி என்றானே —
கீழே மாறினது பார்த்தோம் -வளை அவன் இடம் போனதே -அவஸ்தை மாறி துடிப்பு –
ஆற்றாமை வர தான் அவன் கிருஷி பண்ணிக் கொண்டு இருந்தான்–
பெரியவன் அனைத்தையும் கொடுத்துப் போனான்-
தன் இடம் உள்ள எல்லாம்- ஆபரணம் -எனக்கே தன்னை தந்த கற்பகம்-
எல்லாம் நீயே வைத்து கொள் என்று -வஞ்ச புகழ்ச்சி–என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார்-
நோயைக் கொடுத்து –ஆசுவாச உபகரணம் கொண்டு போனார்–குணம் ஆக கூடாது என்று —
அனுபவிக்க வரும் பொழுது இதை கொண்டாடி போனான் –
அதை பார்த்தாவது விரக நோய் குறைத்து கொண்டு போய் இருப்பேன் —
என் உடையது என்று ஒன்றும் இல்லை–நிஜம் ஆக்கி –
ஸ்வரூப யாதாத்மிக ஞானம் வேண்டும் என் அபிமானம்–
என் பந்தும் கழலும் தந்து போகு நம்பி ஆழ்வார் அபிமானிக்கலாமா –அவன் பார்த்து அபிமானத்த படியால்—
இவள் சொல்கிறாள் — மம காரம் விட்டவன் உடைய மம காரம் போல ஞான ஆதிக்கத்தால் அகங்கரிக்கலாம்–
ஆழ்வார் பந்தை கீழே போட வைக்க என் என்றார் வெறுத்து போடுவான் என்று —
அவனோ ஆழ்வார் ஞானம் அறிந்தவன் என்பதால் இன்னும் மார்பில் அணைத்து கொண்டான் —

அவனுக்கு ஆசை என்பதால் இவளுக்கு ஆசை —
ஸ்லாக்கியமான நிறமும் கொண்டார் நான் வழி பறி கொண்ட இடம்–
நான் வழி பறிக்க வந்து வழி பறி கொடுத்து போனேன்–
திரு மணம் கொல்லை- இங்கே இருவராய்  வந்தார் நிதி எடுத்த இடம் அங்கு —
என் செய்யும் ஊரவர் கவ்வை –முன் செய்த மாமை ஒளி இழந்து ஆழ்வார் —
ஊர் எது நான் கேட்க வில்லை பிரிவில் தரித்து இருக்க அவனே சொல்லிப் போனான் —
தெளிந்து பாயும் இளம் -தெங்கு- தேக விசேஷம் இளம் தெங்கு–நித்யர் அங்கு போல என்றும் இளமை–
தேன் கொட்டி வீதியில் ஓடி வர -சேல்கள் பருக –
தேட்டறல் திறல் தேன் தென் அரங்கன்–மீன்கள் ஆனந்தம் இங்கு நித்யர் போல–
செங்கயல் பாய் நீர் திரு அரங்கத்தை நாரம் பற்றியது வாழ்ந்து போக அயனம் பற்றிய ஆழ்வார்-பராங்குச நாயகி  தாழ்ந்து போனாள்–
தேனை நுகர்ந்து களித்தது ஜன்ம பூமி விட்டு புக்ககம் விரும்பும் -முக்தர் போல —
முக்தன் சம்சாரம் நினைக்கும் பொழுது தான் மீன்கள் தண்ணீரை நினைக்குமாம் —
நித்யர் முக்தரை பார்த்து -நித்ய அனுபவம் கொடுப்பது போல தேனை கொடுக்கிறதாம் –
ஆற்றில் பிறந்து வளர்ந்த மீன்களுக்கு –கொடுத்தனவாம் —
திரு அரங்கம் என் ஊர் உன் ஊர் சொல்லாமல்-பாரதந்த்ர்யம் ஏற்றுவது போல ஆகும் –
உன்னை விட்டு தனி ஊர் இல்லை -அதனால் நம் ஊர் என்கிறாள் —
நந்த கோபாலன் கோவில் கீழ் -உன் கோவில் அப்புறம்  பல பாசுரம் கழித்து ஆண்டாள் சொன்னாள்–
திரு மந்த்ரம் போல இருவருக்கும் பொதுவான கோவில் –
முன் என்று பார்த்தல் அவனுக்கு ஏற்றம் உபதேசம் நமக்கு தானே அதனால் உபய பிரதானம் தேர் தட்டு போல —

ஆண்மின்கள் வானகம் –என்று நித்யர் முக்தருக்கு சொல்வது போல–
தென்னை நித்யம்-ஸ்தாவர பிரதிஷ்ட்டை-ஸ்ரீ ரெங்கத்தில் -மீன்களுக்கு தேனை கொடுக்குமாம் —
மீண்டும் ஜன்ம இடம் என்று ஆற்றை நினைத்து போகாமல்- —
எனக்கு தேசம் என்னில்- எல்லாம் பக்தருக்கு என்று சொன்னதால் சொல்லக் கூடாது –
உன் தேசம் என்றால் பரதன் அழ ஆரம்பித்தான் –பொதுவாக நம் தேசம்–
அந்தர்யாமி ஸ்ரீ வைகுண்டம் திரு பாற்கடல் அவனுக்கு அர்ச்சை நமக்கு திரு அரங்கம் பொதுவாக இருப்பதால்–என்கிறாள்-
அவன் சொன்னத்தை தோழிக்கு சொல்கிறாள்-
-16 நந்த கோபாலன் கோவில் 23 மாரி மழை முழைஞ்சில்  –
உன் கோவில் நின்ற -நந்த கோபாலன் கோவிலிலே உனக்கு அன்வயம் உன் கோவிலிலே அனைவருக்கும் அன்வயம்

இருவருக்கும் சேர திரு அரங்கம் பொது –
ராச மண்டலம் தேர் தட்டு திரு மந்த்ரம் போல –உபய பிரதானம் -திரு குருகூர் -ஆழ்வார் ஆதிநாதர் தேவஸ்தானம்–
விஷய அர்திகள் இருவரும் தனம் தேடி- ரஷகன் தேடி ஆழ்வாரும் ரஷக வர்க்கம் தேடி அவனும்–
கள் ஊரும் -தோளிலே இட்ட தனி மாலையும் தானுமாய் -வந்த வரவை நீ காணப் பெற வில்லையே —
சர்வ கந்தன்-தான் உகந்த படியே அலங்காரம் பண்ணி கொண்டு வந்தான் -பரகால நாயகிக்கு  பிடித்த படி-
அவன் ஊர் பட்டது  அத்தனையும் அது காண் அவன் திரு மேனி–ஸ்ரீ ரெங்கம்  சர்வ சக —
தாமரை தேன்–துளசி தேன் -திரு மார்பில் வந்த பின் செவ்வி பெற்றது —
பிறந்தகம் திரு அரங்கம் புக்கககம் திரு மார்பு- பைம் துழாய் குளிர்ந்து அணைக்கையாலே
கண்டேன் பைம் துழாய் தண் தெரியல் பட்டர் பிரான்–தாரார் -கை அளவும் உள் நீட்டி-கோவில் சாந்து பானையில் ஈச கண்டாள் யசோதை பிராட்டி

கனவிடம்-அஸ்திரம் -சொப்பனம் -தாமும் அங்கு இருக்க அவனும் அங்கு இருக்க –
தேகம் தேசம் அஸ்திரம் தேசாந்திரம் ஸ்திரம் -கலந்தது கல்வியே கனவு என்கிறார்–
அனுபவம் முன்பு நடந்ததால் கனவு போல என்கிறார்–
யான் காண்பான்-அவனை விட்டுப் போக முடியாத ஆற்றாமை உள்ள நான் காண்பான் —
சம்ச்லேஷத்தில் குறை இல்லை –அத் தசையில்-சம்ச்லேஷத்தில் –
கை ஆளன் ஆக இருந்து இருப்பானே போகாதே கொல் என்று சொல்லி விலங்கு இட்டு இருக்கலாமே —
பெரிய திருவடியை -பதுக்கி வைத்து-பதி படையாக – -வந்து -தோர் பித்து -அசேதனம் தேர் ஓட்டுவது போல –
புள் ஊரும் கள்வா -வஞ்சனை- அக்ரூரர்  கண்ணனை பிரித்து போனதால்–க்ரூரர் என்றால் போல —
சிலையே துணையா சொல்லி பெரிய திருவடி கூட்டி வந்தார் பொருந்துமா –
அபிமத விஷயம் பார்க்க ராஜா கருப்பு உடை கொண்டு போவது போல-
மந்த்ரிகள் வந்து கூட்டிப் போவது போல–வந்த கார்யம் தலை கட்டிய பின் –
ராமனை -ராவண வத அநந்தரம் ப்ரம்மா திரும்பி வர சொன்னது போல–

புள் ஊரும் -ஆரோகணிக்கும் என்று சொல்லாமல் பார்த்தன் தன் தேர் ஊரும் போல
சேதனமும் அசேதனமும் குழை சரக்கு தான் அவனுக்கு –வேகமாக போனான் —
பெரிய திருவடி சிறகிலும் திரு அனந்தாழ்வான் மடியிலும் சேனை முதலியார் பிரம்பிலும்
பிராட்டி கடாஷத்தாலும் வளர்கிற வஸ்து -தத்வம் -தானே பர தெய்வம் –தான் நினைத்த படி செல்லப் போகாதே —

அஹம் பக்த பராதீனன்–கரு மணியை கோமளத்தை –வான் இளவரசு வைகுண்ட குட்டன்–
நீ போகேல் என்பன்–உன்னை கண்ணாடி புறத்தில் கண்டு அறிய வில்லையா நீ போனால் தரிக்க மாட்டேன் என்று அறிய –
துஷ் க்ருதம்   க்ருதவான் ராமன் -திருவடி நினைத்தாரே –
நீ போகல்–பிராணனே நீ தான்–போகாதே -மட்டும் தனித்து போக கூடாது –என்பன்-
நிஷ் பிரயோஜனமான வார்த்தை சொன்னேன் –
அவன் ஸ்வரூபம் சேரும் வார்த்தை சொல்ல வில்லை –
என் ஸ்வரூபம் சேரும் வார்த்தை சொல்ல வில்லை–
அவன் ஸ்வரூபம் பிரணயித்வம் – காதல் –
என் ஸ்வரூபம் பாரதந்த்ர்யம் இரண்டுக்கும் விரோதம்–இட்ட வழக்காய் இருந்து இருக்க வேண்டும் –
பலிப்பதை சொல்ல வில்லை–
பரதன் சரணாகதி பலிக்க வில்லை-
யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்- 23 வந்த கார்யம் 29 பாசுரத்தில் வைத்தாள்-
பெண் வார்த்தை புருஷ வார்த்தை பரதன் போல அசட்டு வார்த்தை இல்லை சரண்ய ஹ்ருதய அனுசரனாக பேச வில்லை–
தடுப்பது பிரணயித்வத்துக்கு சேராது –
போகாதே என்று சொல்வது என் ஸ்வரூபத்துக்கும் சேராது —
ராமனையே எதிர் பார்த்து இருந்தாள் சீதை பிராட்டி –என்றாலும் –
இப்படி சொன்ன பின்பும் இது நமக்கு ஓர் புலவி தானே
அத்வீதியமான வியாதி –சம்ச்லேஷம் ஆற்றாமைக்கு உறுப்பு ஆனது —
அவனைப் பேணினேன் அல்லேன்
என்னை பேணினேன் அல்லேன்
சிறப்பை தேடி கொடுக்க வில்லை —
ஆசை உடன் வழி அனுப்பி வைப்பாள் என்று சொல்லிவிட்டு வந்தான் —
இன்று என்னை பொருள்  ஆக்கி  நேற்று புறம் போக்க வைத்தாய்- ஆழ்வார் சம்வாதம்
என்னைத் –தீ மனம் கெடுத்தாய் –மருவி தொழும் மனமே தந்தாய் — —
என் நெஞ்சும் உயிரும்  அவை உண்டு -தானே யான் என்பான் ஆகி தன்னை தான் துதித்து –
நீயே அந்தர்யாமியாய் இருந்து அனைத்தும் பண்ணிக் கொண்டாய் —
தலை குனிய-புது மண பெண் காலால் தரையிலே கொடு கிழித்து கொண்டு நின்றான்–
தப்பைச் சொன்னோம் தப்பைச் செய்தோம் -ஆழ்வார் அருளியது போல –பராங்குச நாயகி பேணினாள் இங்கு –
இத்தால் துக்கமே மிச்சம் —
அவன் அபிமதம் கிடைத்தது என்று மகிழ்ந்து போனான்–
நான் துக்கமே பெற்று போனேன் —
நாட்டாருக்கு சுக ஹேது -அது துக்க ஹேது ஆனதே —
நிகர் அற்ற புலவி–பிரிந்த துக்கம் ஸ்வரூப ஹானி வேற —
துக்கம் இரட்டித்து இருக்கையாலே அத்வதீயம் —
இடுப்பில் வேஷ்ட்டி இல்லாதவன் இடம் வேஷ்ட்டி தானம் கேட்டு கொடுக்க முடியாத துக்கம் வேற அவனிடம் இல்லை என்ற துக்கம் போல —
தேவதாந்த்ரங்கள் இடம் பரம பதம் கேட்ப்பது போல —

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-