மின் இலங்கு திரு வுருவம் பெரிய தோளும்
கரி முனிந்த கைத் தலமும் கண்ணும் வாயும்
தன்னலர்ந்த நறும் துழாய் மலரின் கீழே
தாழ்ந்து இலங்கும் மகரம் சேர் குழையும் காட்டி
என்னலனும் என்னிறைவும் என் சிந்தையும்
என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு
பொன்னலர்ந்த நறும் செருந்தி பொழிலி னூடே
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே–25-
அவன் இடம் இருந்ததை காட்டினான் –
தன் இடம் பரி கொண்டதையும் சொல்கிறாள் –
ஆத்ம குணம் ரூபம் அனைத்தையும் சொல்கிறாள் —
ஆத்மாவை தன் திருவடியில் கொண்டு– அபிமானம் தொலைத்து -தலை குனிய வைத்து
சரண் அடைத்து மோஷம் கைங்கர்யம் பெறுவதை சொல்கிறார் —
ஈச்வரோஹம் என்றும் -அஹம் போஹி என்றும் திரிந்து -அபிமான பங்கம் -அடைந்து –
ஆழ்வார் பெண்மை ஸ்த்ரீத்வம் -அபிமான பங்கமாய் வந்து ஆண்டாள் சொன்னது போல –
பெண் ஆணை தேடிப் போக கூடாது –அவன் வந்து கை கொள்ளட்டும் —
அழகை அழித்து– அவன் கரியன் நான் செய்யாள் என்ற செருக்கு அழித்து –
புழுதி அளைந்த மேனி அவனது என்று இறுமாந்து இருக்க -பிராப்தி பிரதி பங்கம் தீர்ந்து சேர்த்துக் கொள்ளப் பறிக்கிறான்–
தன் அழகைக் காட்டி -தான் ஸ்வாமி ஈச்வரன் என்று பெருமை காட்டி சேர்த்துக் கொள்கிறான் –
பொழிலின் ஊடே –
நடுவில் எங்கும் தட்டி கட்டி புறப்பாடு காண்பது போல —
பின்னை மரம் -திரு வாலி திரு நகரி -தொடங்கி திரு அரங்கம் வரை-
காள மேகம் திரு மோகூர் ஆத்தன் கூப்பிட்டு செல்லும் பொழுது மலர் தூவி இருக்கும் அர்ச்சிராதி மார்க்கம் போல –
திரு உருவம்- தோள் காட்டி- யானை கோபித்து அடித்த கைத் தலம் திரு கண் வாய் காட்டி-
திரு -அவயவம் நறும் துழாய் அலர-வன மாலை -ஒப்பனை அழகு காட்டி –
என்னையும் கொண்டு அடிமை கொண்டான் –அவனை மட்டும் இழக்க வில்லை
அத் தலையில் உள்ளதை எல்லாம் நேராகக் காட்டி இத் தலையில் உள்ளதை எல்லாம் கொண்டு போனான் –
சாஸ்திரம் அவதாரம் ஆழ்வார் கொண்டு திருத்த முடியாததை தன் அழகால் திருத்தி பணி கொள்கிறான் —
தருணவ் ரூப சம்பனவ் சுகுமாரவ் மகா பலவ் புண்டரீக விசாலாஷா –
உண்ண வந்து வாயை மறப்பார் போல —
ராம கமல பத்ராஷ- -ஒரு நாள் முகத்தில் விழித்தாரை வடி வழகு படுத்தும் பாடு–
ராமனே வந்தார் இங்கு பரகால நாயகியைக் கொள்ள —
மின் வெட்டா நிற்கும் திரு மேனி அழகு -லாவண்யம்-சமுதாய சோபை-முதலில் சௌந்தர்யம் —
கார் வண்ண திரு மேனி முன்பு சொல்லி
கரு முகில் ஒப்பர் வண்ணம் என்றும் சொல்லி -ஒவ்தார்யம் ஸ்ரம ஹரம்-
இங்கு மின் இலங்கு திரு உருவம் என்றது -ஸ்ரீ தேவி மின்னல் -பார்த்தோம் அவனையே மின்னல் -பற்ற- கிட்ட முடியாத தன்மை சொல்ல –
மேகம் அணுக முடியுமே –தைர்யமாக பார்க்கலாமே –புறப் பட்டு போகிறானே -அதை சொல்ல வந்ததால் –
திரு மேனி -திரு ஆழி தேஜஸ் -காள மேகம் சிவந்த கிரணத்தால் வார்த்தது போல –
அந்தியம் அம் போதில் அரி உருவாகி–செக்கர் வானம் செக்கர் மா முகில் போல திரு ஆடை –
சிவப்பு சூர்யன் ரத்த சிகப்பு பொன் பெயரோன் ஆகம் -கருத்த திரு மேனி சூழ -அது போல –
திரு ஆழி தேஜஸ் சூழ —
ஆண்டாள் நரஸிம்ஹர் அவதாரமும் செவ்வாய் கிழமை-மங்கள வாரம் -அவதாரம்
திரி விக்ரமனும் திரு வேம்கடத்தானும் திங்கள் கிழமை அவதாரம் –
கோடி சூர்யர் ஒத்த தேஜஸ் ஒக்க பரவி –மின் இலங்கு -வடி வார் சோதி வலத்து உறையும் ஆழி–
சிவந்து பள பளப்பு ஏறி தோன்றும் —
ஒரு கையில் சங்கு மற்று ஒரு கையில் சக்கரம் முன்பு சொன்னாரே –
தமஸ பரமோ தாதா சங்கு சக்கர கதா தரா– இருட்டுக்கு மேல் பட்ட்டவன் –
மூல பிரகிருதி தாண்டினவன் அவன் -ஸ்ரீ வைகுண்ட நாதன் –மேன்மையைக் காட்டினான்–
கிட்டின போது பெரு வயிற்ற கரு முகிலே என்றவள் —
கிளம்பும் பொழுது -அஸ்திரம் தோன்ற பள பளத்து தோன்றின படி —
அடுத்து பெரிய தோளும் –
அவன் திரு மேனி அழகில் தோற்று விழுந்த எனக்கு தெப்ப கட்டை போல விழாமல் தரிக்க –
அதுவும் வழுக்குப் பாறை போல –கால தத்வம் உள்ள அளவும் அனுபவித்து முடிக்க முடியாத கற்பக கா என நற் பல தோள்கள் –
கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்கள் ஒய்வு எடுக்க கிளைகள் போல தோள்கள் —
போக்யதை- தோள் கண்டார் தோளே கண்டார் –
காவல் துடிப்பையும் சொல்கிறது–
மல்லாண்ட திண் தோள்கள்–ஒதுங்குவாருக்கு நிழல் மிக்கு இருக்கை–
வீர சின்னம் போக சின்னம் இரண்டும் கொண்ட தோள்கள் –
திரு வடி – துன்பினை துடைத்து ….இன்பினை கொடுக்கும் தேவரோ தாம் —
கண் எச்சில் படுமே திரு ஆபரணம் போட்டு மூடி வைத்து இருக்கலாமே–
ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் –
நீச தமன் திருத்த முழு அழகையும் காட்டணுமே–சர்வ பூஷண பூஷண —
நாண் பட்டு சுர சுரப்பு வீர சின்னம் –
சகா சதம் ஜா கிண..கரண பூஷண அழகா பந்தம் விமர்த்த -ஆள வந்தார் —
கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் –நான்கு தோளும் –கீழ் பாசுரத்தில் விரோதி தொலைத்தது ரஷகத்வம் சொல்லி —
அநிஷ்டம் சொல்லி அடுத்து – கண்டேன் நான்கு தோளும் இஷ்ட பிராப்தம் –
போக்யத்வம் இரண்டையும் காட்டும் தோள்கள் —
பெரிய –ஜீவாத்மா சமூஹம் அனைத்துக்கும் நிழல் கொடுக்க /
கரி முனிந்த கைத் தலம்-
அட்ட இல்லை –கோபித்தான் —
வேண்டாம் என்று நினைப்பிட்ட திரு கையும் –கம்சன் முஷ்டிக-பண்ணிய வியாபாரம் வேண்டாம் —
இத்தால் வீர போக சின்னம் உள்ள திரு கைகள்–
நுகர்ச்சி யுருமோ மூவுலகின் வீடு பேறு தன் கேழில் புகர் செம் முகத்த –
களிறு அட்ட பொன் ஆழி கை என் அம்மான் -மோதிரம் சாத்தி கொண்ட அம்மான் –
பொன் ஆழி போக்யத்வம் களிறு அட்ட ரஷகத்வம்–ஆனை காத்து ஆனை கொன்ற -பஷ பாதன் ஆஸ்ரிதர்–
எய் வண்ணம் வெம் சிலையே துணையா
ரஷகத்வம் கை வண்ணம் தாமரை போக்யத்வம் —
கண்ணும் கிட்டினாரை ஈர்த்து பிரிந்தால் தரிக்க முடியாத படி பண்ணும் திரு கண்கள் –
கண் இணையும் அரவிந்தம் -வாயும் –
அனந்யார்ஹை ஆகிய பின் அவருக்கு தான் அடிமை என்று சொல்லும் திரு வாய் —
வாய் கமலம் –
இனி அலங்காரம் ஒப்பனை அழகை -தன் அலர்ந்த -தன் நிலத்தில் காட்டில் செவ்வி கொண்ட திருத் துழாய் –
அலங்கரிக்க பட்ட -வைத்த வளையம் -கீழே வரை – திரு தோள் அளவும் தாழ்ந்து –
பர பாக ரூபம் -கொண்ட மகர குண்டலங்கள் சேர்த்தி அழகு —
தோளுக்கா- தலை குழலுக்கா –காதுக்கா -ஆழ்வான் இந்த மூன்றுக்கும் இல்லை –
இதை சேவிக்கும் மனசுக்கே ஆபரணம் கூரத் ஆழ்வான்–
சாரிகை வந்து ஏசல் கண்டு -திருவடி திரு தோள் மேல் ஏறி தன் உள்ளது அனைத்தையும் காட்டி
நான் கொண்டதை எல்லாம் கொண்டான் –
சர்வஸ்வ தானம் பண்ணும் படி வந்து -சர்வஸ்வ அபஹாரம் பண்ணினான் –
சௌந்தர்யம் –சர்வ கந்தம் -சௌவ்குமார்யம் -ரூப குணம் –
நலன் ஆத்ம குணம்-அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு இவையும் நலம் –
குணம் ஒருவனால் அழிக்க ஒண்ணாத நலம் –எதிர் தலையை அழிக்க கூடிய குணம் நிறைவு –
ஸ்த்ரீத்வம் எதிர் தலை புருஷத்வம் அழிக்க கூடியது அதையும் அழித்தான் –
நிறைவு -அடக்கம் அதையும் அழிந்தான் என் சிந்தையும் அதுக்கு அடியான மனசும் வளையும் கொண்டு
ஆசுவாச ஹேதுவான வளையும் கொண்டு —
என்னை ஆளும் கொண்டு– அடிமை ஆக்கிக் கொண்டு –
அதை ஆசை பட்டால் இஷ்ட பிராப்தி தானே இது —
சுமையாக என்னை இவற்றை ஏற்றி கொள்ள –அவனோடு கலந்த பரி மாற்றம் -காதலோடு அனுபவம் அடிமை தனம் —
என்று நினைத்து கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தனுக்கு குற்றேவல் போல —
சர்வ சொத்தையும் அபஹரித்து போகும் பொழுது -அவன் கொடுத்து வைத்த சொத்தை தானே கொண்டு போவது போல —
என் உடையது என்ற நினைவு இல்லாமல் அனந்யார்ஹை ஆக்கி கொண்டான் —
-சத்தை உடன் இருக்க ஊரை சொல்லிப் போந்தான் -திரு அரங்கம் என்று –
ஏற்ற படி சோலைகள் நடுவிலே புகுந்து போனான் –
பொன் -வளர்ந்தது போல நறு மணம் கொண்ட புன்னை-
திரு நகரி முதல் திரு அரங்கம் வரை பொழில் -காள மேகம் வர்ஷித்து போனால் பொழில் வளர கேட்க்க வேண்டுமா -பட்டர்-
தளிரும் முளிருமாக பசு பசுத்து இருக்கும் –
பிரிந்தார் இரங்கும் நிலம் செருந்தி மரம் இருக்கும் –
போயினாரே -பின் அழகைச் சேவித்தேன் –
பறித்துப் போனாலும் -காதல் மிக்கு -ஆழ்வார்கள் அவனை -விட்டுக் கொடுக்காமல் அனுபவிப்பார்கள் –
முன்னிலும் பின் அழகிய பெருமாள்– திரு நாராயண புரம் செல்லப் பிள்ளை -சேவை இன்றும் உண்டு–
வா போ வந்து ஒரு கால் கண்டு போ சொல்லி தசரதன் வயசு குறைந்து மகிழ்ந்தானே —
புனல்- தண்ணீர் வாய்ப்பு ஸ்ரம ஹரம் —
நித்ய சம்ச்லேஷம் பண்ணும் தேசம் பரம பந்துவாய் இருந்து —
கூடக் கொண்டு போகாமல் –இங்கே இருக்காமல் -போயினாரே —
புஷ்பம் பறிக்கவும் ஜல கிரீடை பண்ணவும் ஏற்ற இடம் —
பொழிலின் ஊடே புனல்-
மேல் பின்னை மரம்- கீழ் நீர் -நடுவில் போனான் —
நடந்த அழகையும் பின் அழகையும் காணாமல் இழந்தாய் –
உணங்கல் கெட கழுதை உதடு ஆட்டம் கண்டு என்ன பலன் —
தேறியும் தேறாமலும் அவன் என்றே கிடக்கும் இத் திரு —
ஐதீகம் சொல்லி தலை கட்டுகிறார்–
விக்கிரம சோழ தேவன் வைஷ்ணவ சைவ கவிகள் தோழி பிரிந்து இருக்க ஆற்றாமை –
எலும்பும் சாம்பலும் உடையவன் என்றால் மின் இலங்கு திரு உருவம் என்றால் —
தன் காலில் துவை உண்ட அவனை தோழிக்கு சொல்லும் பொழுதும்
திரு உரு என்பதே பிரணயித்வம் தெரிந்தவள்-
அவள் பிணம் தின்னி என்ன-கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்கள் தான்-
பிர பன்ன குல தலைவிகள் பர கால பராங்குச நாயகிகள்
———————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply