இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம்!
இலங்கு ஒலி நீர் பெரும் பௌவம் மண்டி வுண்ட
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்
பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி
உலகுண்ட பெரு வாயர் இங்கே வந்து என்
பொரு கயல் கண் நீர் அரும்ப புலவி தந்து
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே–24–
தாச -சக -ஆசனம் –சென்றால் குடையாம் –அனைவரும் க்ருஹணிக்கு அன்றோ ஓலை எழுதி கொடுப்பது-
கைங்கர்யம் மிதுனத்துக்கு தானே –பவாம்ச்து சக வைதேக்யா கிரி-லஷ்மணனும் அஹம் சர்வம் கரிஷ்யாமி சொன்னானே
முன் பின் வாக்கியம் இரண்டிலும் மிதுனம்—
நீ ஏவி இருந்தாலும் கருடன் கேட்டு இருப்பாரே தோழி கேட்க
நான் வாய் அடைத்து இருந்தேன்-
ஒருவர் மட்டும் இல்லை அனந்த விஷ்வக்சேன -அனைவரும்
திரு ஆழி திரு சங்கு ஆழ்வார்கள் பரி கரகங்கள் அனைவரும் சூழ புறப் பாடு கண்டு
தான் பராத் பரன் என்று புரிந்து -ஆச்சர்யம் –
சங்கு அவன் இடம் இருப்பதே
என் சங்கம் கழல தானே உணர்ந்தேன் —
முகில் வண்ணன் அருகில் வந்தான் சமுத்திர ஜலம் போல என் அழகை உண்டான் இந்த மேகம் –
இலங்கு ஒளி நீர் பெரும் பவ்வம் மண்டி உண்ட பெரு வயிறு-
கரு முகில் ஒப்ப –பெரும் தவத்த அரும் தவத்தர்
கைங்கர்ய அனுபவ பரர் சூழ -துக்கம் கொடுத்து -வளைகள் கழல புனல் அரங்கம் போயினானே–
பெரிய திருவடி கொண்டு போனான் என்னில்–
பார்யா தாஸ்ய ததா சுதா மூவரும் உடையவனுக்கு அடிமைகள் –
அவன் தான் பவ்யன் ஆகில் -தத் இங்கித பராதீனன் –
சிருஷ்டியே உன் புருவ நெறிப்பு படி தானே –
அவனுக்கு சேஷ பூதனான பெரிய திரு வடியும் உனக்கும் -அவன் மூலம் சம்பந்தம் –
நீ பட்ட மகிஷி உரிமையால் ஸ்வரூபத்தாலே தாச பூதன் தானே –
தாசன் -சகா -ஆசனம் -த்வஜம்- வாகனம் வேத மயன் வேதாத்மா –போகல் என்று நியமிக்க குறை என் என்ன –
அவன் ஒருவன் இல்லை—
சிலையே துணையா இருவராய் வந்தார்–
பின் தொடர்ந்து வந்து இருப்பார்கள்– புறப்பாடுக்கு அனைவரும் வேண்டுமே –
நித்ய விபூதி உள்ளவர் அனைவரும் வந்தார்கள்–
நித்ய மண்டலம் எல்லாம் திரு மணம் கொல்லை வந்தார்கள்–
முன்பு தேவன் அஞ்சினேன் சௌலப்யம் காட்டும் பொழுது- இப் பொழுது –அவர் தான் பண்டு போல் அன்றியே —
அர்ஜுனன் விஸ்வ ரூபத்தில் அனைவரையும் கண்டது போல –பயந்து –
வடிவில் ஒளி சூழ்ந்து மேன்மை தோற்று அணுக ஒண்ணாத படி இருக்க சென்று கிட்டவும் வார்த்தை சொல்ல முடியாது இருந்தது-
தாம் போகை அன்றி தாம் போனால் ஆசுவாசம் படுத்தும் படி இருந்த வளையும் கொண்டு போனான் —
வைத்த மா நிதி பெருமாள் -தன் ஜீவனம் தேடி போக என் ஜீவனம் வேற கொண்டு போனான் –
அது போல இவன் கொண்டாடிய வளை-கையில் சங்கு நில்லா -போன உடனே ஆற்றாமை சூழ்ந்தது
கண்ணன் புறப் பட்டதும் கடல் சூழ்ந்தது போல வளை அவனுக்கு முன் போனதே —
சீதை பழக்கம் அறிந்து கொண்டதாம் பர கால நாயகி வளைகளுக்கு
சீதைப் பிராட்டி தாம் முன் போக –ராமன் பின் வராதே சொன்னதால்- முன் சென்றாள்-
வளை இருந்தது அவன் சம்பந்தத்தால் தானே அதனால் போனது முன் —
கை இளைத்ததால் வந்ததோ என்று அடுத்த கை பார்க்க –
இரு கையில் சங்கு நில்லா -அதுவும் முன் போனதே -இவை நில்லா —
அவன் நிற்காதது புரிகிறது இவை கூட நிற்க வில்லையே —
சேஷி அவன் போகிறான் –சேஷமான இவையும் போகணுமா–
சேதநனோ அசேதநனோ விபாகம் அன்றி எல்லாம் அவன் என்று புரிந்து கொண்டேன்–
அவன் பரம ஞானி என் இடம் குறை கண்டு அவன் போய் இருக்கலாம் இவை –
இறங்கி விழக் காரணம் புரிய வில்லையே –ராமன் மே அநு கதா துருஷ்ட்டி
கடல் கொண்ட வஸ்து கிடைக்காதே -கண் நடக்க கூட பண்ணுமா —
சேதனம் பற்றி சைதன்யம் -அவனே ஸ்வாமி அனைவருக்கும் அதனால் பின் போனதே —
துக்கம் வரும் பொழுது கண்ண நீர் பாய்ச்ச வேண்டாதா அவனே கூட இருப்பார் –
தேவர் கோலத்தொடும் திரு சக்கரம் சங்கினொடும் வந்து ரஷித்தானே –
ஸ்வாமி ராமானுஜரை தேவ பெருமாளும் பெரும் தேவியார்– வந்து கலந்து அவன் போனான் –
என் உடன் சகஜமாய் இருக்கும் இவையும் போகணுமா-
ஆழ்வாருக்கு சாதனா சாத்திய பக்தி இல்லை — சகஜ பக்தி–
கூடவே இருக்கும் சகஜமாக இருந்த வளைகளும் போகணுமா
அவன் கைக்கு அடங்காதவன் போனான் கைக்கு அடங்கிய இவைகளும் போகணுமா –
அவன் நின்றாலும் இவை நில்லா -போகலாமா என்று கூட்டிப் போயின-
என் நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார் இனி யாரை கொண்டு உசா –
போகா இல்லை நில்லா -என்கிறாள்–
மறு படியும் போட முயல மீண்டும் மீண்டும் நிற்காமல் விழுந்து விழுகையே ஸ்வாபம்-
அவனும் போக மாட்டேன் என்று போவது போல– பல பல காலும் போட்டுக் கொண்டாலும் நிற்காமல் இவையும் போயின —
யாமி -போய் விட்டு வருகிறேன் சொன்னதும் வளைகள் கழன்று போக-
நயாமி ந யாமி–உன்னையும் கூட்டிப் போகிறேன் நானே போக வில்லை -மீதி வளைகளும் உடைந்து -உடல் பூரித்து –
சங்கு தங்கை முன்கை நங்கை -சீரார் வளை ஒலிப்ப –
பெருமை விட்டு பிரியாமல் நித்ய அநபாயினி அகலகில்லேன் இறையும் என்று–
சித் அசித் சம்பந்தம் அற அனைத்தும் துக்கம் -என்னது என்பதால் உன் செய்கை என்னை நைவிக்கும்
அது இது உது எனபது இல்லை போல என் சம்பந்தம் எல்லாம் துக்கம் கொடுக்கத்தான் –
என்னது என்று எதை சொன்னாலும் —
அவன் உதாவாமல் போனதற்கும் சம்பந்தமே அடி எல்லே பாவம்–
அவன் ஸ்வதந்த்ரன்–என்னது என்ற வளையலும் போனதே –
அவன் புண்ணியம் அவதி இல்லை போல என் பாவம் அவதி இல்லை
கலப்பதற்கு முன்னும் ஆனந்தம்- அவனுக்கு கிருஷி பண்ணுவதால்
கலந்த பின் பலன் கிட்டியதே என்று ஆனந்தம் அவாப்த சமஸ்த காமன் –
முன் சேவை கிடைக்க வில்லை துக்கம்–
இன்று கலந்தவன் பிரிந்தான் துக்கம் —
தானே வந்து கலந்தவன் பிரிந்தானே –இரட்டிப்பு துக்கம் -பாவம் —
என் உடைய கழல் வளையே கழலும் வளை ஆக்கினாரே —
வேம் எனது உயிர் அழல் மெழுகில் ஒக்கு வளை மேகலை கழன்று வீழ …
நீ போய் ஆ நிரை மேய்க்க போகல் -ஆழ்வார் —
இலங்கு ஒளி நீர் –தன்னைக் கலந்து பிரிந்த பொழுது -புது கணிப்பு –
இத் தலை வெறும் தரையாக -மண்டி உண்டான்-
ஆழியில் புக்கு முகந்து -சமுத்ரம் -தண்ணீர் -சரீரம் மட்டுமே இங்கு சௌந்தர்யம் அழகு எல்லாம் பருகி கொண்டான்–
இலங்கு ஒளி- விளங்கும் தேஜஸ்– உப்பு இல்லாத நீரை உண்ட சுத்த ஜலம் உண்ட காள மேகம் –
கம்பீரமான கலக்க முடியாத அழகிய சமுத்ரம் -போகிற நடை -ஒளி வளையும் மா நிறமும் கொண்டார்—
அழகு இரட்டிப்பு அவன் இடம்
பாபம் இரட்டிப்பு என் இடம் —
பெரும் பவ்வம் மண்டி உண்ண–
சப்த தீபம் சூழ்ந்து இருக்கிற சுத்த ஜலம் –கள் கருப்பம் சாறு நெய் தயிர் பால் சுத்த 64 லஷம் —
ஆழமாக உண்ட -மண்டி -அபிநிவேசதுடன் ஆழ்ந்து உண்டார்–
மேல் விழுந்து கலந்து -சௌந்தர்ய சாகரம் வற்று அடித்து —
என் செய்ய தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான் –
முன் செய்ய மாமை இழந்து –வண்ணமும் பொன் நிறம் ஆவது ஒழியுமே–
மேனி மெலிவு எய்தி– ஆஸ்ரயமும் ஒழித்து -இனி மேலும் வர்ணம் வராமல் இருக்க –
என் செய்ய வாயும் கரும் கண்ணும் –
அவன் சொன்ன சகஸ்ர நாமம் இருந்த படி—-
என் செய்யும் ஊரவர் கவ்வை இனி நம்மை –நிறை =அடக்கம் –
பெரும் வயிறு–இத் தலையில் உள்ளது அனைத்தும் பருகியும் ஆசை அபிநிவேசம் -அடங்காது —
ஆரா வயிற்றோடு ஆற்றாதான் –
கேட்டு ஆரார வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே —
கரு முகிலே ஒப்பர் வண்ணம்–இத்தால் ஸ்வரூபம் மேக வண்ணம் சொல்ல வில்லை–
புதிதாக வந்த அழகு –என் அழகு சேர்ந்த அழகை-அவிகாராய தத்வம் மாற்றக் கூடிய ஆழ்வார் வைபவம் —
என் தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அற விலை செய்தனன் சோதி தோழி -ஆழ்வார் –
தாவி அன்று உலகம் எல்லாம் தலை விழா கொண்ட எந்தாய் சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செம் கண் மால் –
இந்த செம் கண் மால் ஆழ்வார் கிடைத்த ஆனந்தம் அடியாக வந்த செம் கண் –
ஆவியே அமுதே தொண்டர் அடி பொடி ஆழ்வார் பிரிய அவரை பெற தன் சேஷ்டிதம் எல்லாம் சொல்லி —
மின்னல் வெட்டிய மேகம் போல அழகு இரட்டித்து இருந்தது —
மலை மேல் மேகம் -அரங்கன் ஆதி சேஷன் -அருள் மழை நம்மை நனைக்கட்டும்
மின்னல் போலே ஸ்ரீ தேவி -செய்யாள் -இந்திர ஜாலம் வானவில் ஹாரம் -நீல தோயதா மத்யஸ்தா-
அவன் அழகை வாங்கிக் கொள்ளாமல் கொடுத்து இழந்தேனே -பாவியேன்
மேகம் முகக்கும் கடல் ஆகாமல் பெய்யும் நிலம் ஆகாமல் போனேனே —
பரி கரத்வம் சூழ -வடிவிலே அழகு -பெரும் தவத்தவர் மேன்மை சொல்லும் அரும் தவத்தவர் மூன்றும் —
அமிர்தம் அமரர்கள் சூழ்ந்து கொண்டது போல
இவனைச் சூழ்ந்து என்னை அசுரர் கோஷ்டியில் தள்ள பட்டேன் —
நம் பெருமாள் அமிர்தம் பெரிய பெருமாளும் ஆதி சேஷனும் கிடந்து
நாச்சியார் மார்களும் கருடனும் அமர்ந்து சூழ்ந்து இருந்தது போல —
பக்தர் பாகவத சக– இப் பொழுது திரு மணம் கொல்லையில் பார்த்தேன் —
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்–ஆழ்வார் –பரத லஷ்மணர் போல குண கைங்கர்ய நிஷ்டர் —
முனிவர் யோகிகள் -ஆண்டாள் -பெரும் தவத்தர் –பகவத் பிரேமத்தால் அதிசயத்து
கைங்கர்யம் வணக்குடை தவ நெறி -பக்தி –தபஸ் சப்தம்–
அரும் தவத்து -அவனும் அவர்களும் பரிமாறும் இதை பார்த்து மகிழும் -சூழ்ந்து பரிவராய் இருந்து –
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு–
ஒரு கையில் சங்கு–
பரி கரத்தில் நீந்திக் கிட்டினாலும் -சோதி வெள்ளத்தில் உள்ளே எழுவதோர் உரு —
திரு மேனி முழுவதும் ஒளி வட்டம் —
குழுமி தேவர் குழாம்-கை தொழ சோதி வெள்ளத்தில் எழுவதோர் உரு யாருக்கும் அறிவது அரிதே —
மேன்மைக்கு எல்லை -சங்கு சக்கரம் ஏந்தி –
வடி வார் சோதி வலத்து உறையும் பல்லாண்டு பெரியாழ்வார் போல சேர்த்தி அழகை -மங்களா சாசனம் பண்ணும் —
என் கையைப் பிடித்த கையும்- காலைப் பிடித்த கையும் அவர்களுக்கு பிராப்யம் ஆயின-
அக் கைகளுக்கு என் கை பிராப்யம் –
சங்கு சக்கரம் இவன் கை பிராப்யம்-
வரும் எளிமை எல்லை இல்லை –
போகும் பொழுதும் மேன்மைக்கு எல்லை இல்லை —
கைத் தலம் பற்றக் கனா கண்டேன் — அம்மி மிதிக்க கனா கண்டேன் –
பாகவத ஸ்பர்சம் பட்ட பகவான் மூலம்–தொட்டாரை தொட்டு–சங்கு சக்கரம் ஆனந்தம் –
காப்பு நாண் கட்ட கனாக் கண்டேன் தோழி நான் —
இங்கும் தொட்டாரைத் தொட்டு -எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கொள்– மெய் காட்டிக் கொள் –
பாகவதர் திரு மேனி தீண்டுவது —
உலகு உண்ட பெரு வாயர்-
ஆபத் சகன் கதை சொல்ல வல்ல –பிரளய கால கதை சொல்ல வல்லை —
அவனை விட்டு பிரிந்தால் வாழ்வு இல்லை தன் படி சொல்கிறாள் —
வந்து கலந்தவன் சக்கரவர்த்தி திரு மகன் தானே -இவன் பிரளயம் காத்தவன் இல்லை — –
ஜகத்துக்கு தம்மை விட்டு செல்ல ஒண்ணாத படி -அவனும் என்னை விட்டு செல்ல ஒண்ணாத படி-
நான் ஏது சொல்லி வந்தான் பிரிந்த பின் நான் அப்படி சொல்ல வைத்து விட்டு போனான் –
இங்கே வந்து –திரு மணம் கொல்லை -அவர் வரவாலே அவரை அனுபவிப்பது
உபாயமும் பிராப்யமும் அவனே -விஷயீகரிக்கையும் போகமும் அவன் பரம் —
பொரு கயல்–ஒன்றுக்கு ஓன்று சீறு பாறு தோற்ற -கலந்த படியால் கண்கள் சுற்றித் தேட –பொரு கின்ற மீன் போல —
ஒன்றுக்கு ஓன்று உபமானம் –சம்ச்லேஷ ஆனந்தம் கண் சுற்ற பொரு கயல்-
நீர் அரும்ப
பொழிய இல்லை -சோகம் துக்கம் அரும்ப
விரக அக்னியால் வற்றி உள் உலர்ந்து –
தன்னைக் கிட்டினாரை வீவில் இன்பம் கொடுப்பன்- எனக்கு புலவி தந்தான் –
தந்து –
கிழிச் சீரை உடன் தனம் கொடுப்பாரை போல தந்து —
பெற்ற தனம் இது தான் –
பஹுமானம் போல தன் இடம் உள்ள தனம்-
உற்ற நல நோய்– பிரிந்து துடிப்பது –நிர்ஹேதம்-அதுவும் அவனது இன் அருளே –
புலவி தந்து
நாம் பிரயத்தனம் பட்டு சம்பாதிக்க வில்லை –
இது கூட சாத்திய உபாயம் இருக்கக் கூடாது –
அவன் ஒவ்ய்தார்யத்தால் பெற்றது– மயர்வற மதி நலம் அருளினவன் தானே புலவியும் அருளினான் –
கேள்வி கேட்கத் தூண்டிய அவனே தான் -என் இடம்- இங்கு உளன் என்றானே பிரகலாதன் -அதே போல் -துடிக்க கூடாது என்று
நம் ஊர் கோவில் -புனல் அரங்கம் என்று சொல்லி விட்டு போனான்-
————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply