..61..”nadantha kaalkal nonthavo”=vulahu allantha thiru adikal nontha thanaalo…”nadunga gjalam yenamaay”=boomi piraatti, thammai yedukka vallavar yaarum ellai yentru baadallathil vuru maaynthu eruntha kaalathil,maha varaaha moorthiyaay..”edantha mey kulungavo”=boomiyai viduvitha siramam theeravo..”vilangu maal varai “=neer peruha thadaiyaha eruntha perutha maaikalaiyum..”suram”=paalai nilam pontra aru vazlikallaiyum..”kadantha kaal parantha kaaviri karai “=vehathaal kadanthu vanthu..visdaramana vaaykaal vudaiya kaaviri karai methu”…”kudanthaiyul kidanthavaaru ezlunthu erunthu pesu vaazli kesaney”…”vadivu ennai ellaa malarmahal matrai nila mahal pidikum melladi” …vulahallantha vidaay theeravaa?.. allathu yenamaay vulahu edantha vidaay theeravaa ?.. yethanaal vantha aayaasam?…mallaikallaiyum nilangallaiyum kadanthu kaaviri seetho vubasaram panna oodi varukiraall….ezlunthirukkum pothu vunndahum seshdithangal kaannavum, aruli seyum pothu svarathai ketkavum aasai..chitra koodathil sethai piraatti ezluppiya pinbu anudabapattathu pola evarum vunnarnthu vaazli yenkiraar..Aaraa amudan ezlunthu erunthu pesa muyalum pothu, aazlvaar archavadara samaathi kulaiya koodaathu yentru vaazli yenkirar..Uddaana sayanam ..
நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –61-
நடந்த கால்கள் நொந்தவோ-உலகு அளந்த திருவடிகள் நொந்ததாலோ
நடுங்க ஞாலம் ஏனமாய்-பூமிப் பிராட்டி தம்மை எடுக்க வல்லவர் யாரும் இல்லை என்று பாதளத்தில் உரு மாய்ந்து இருந்த காலத்தில் மகா வராஹ மூர்த்தியாய்
இடந்த மெய் குலுங்கவோ -பூமியை விடுவித்த சிரமம் தீரவோ
விலங்கு மால் வரைச் -நீர் பெருக தடையாய் இருந்த பெருத்த மலைகளையும்
சுரம்-பாலை நிலம் போன்ற ஆறு வழிகளையும்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்-வேகத்தால் கடந்து வந்து விஸ்தாரமான கால்வாய்கள் உடைய காவேரி கரை மீது
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே-வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலம் மகள் பிடிக்கும் மெல்லடி
உலகளந்த விடாய் தீரவோ -அல்லது என்னமாய் உலகு இடந்த விடாய் தீரவோ -எதனால் வந்த ஆயாசம்-
-மலைகளையும் நிலங்களையும் கடந்து காவேரி சீதோ உபசாரம் பண்ண ஓடி வருகிறாள்
எழுந்து இருக்கும் போது உண்டாகும் சேஷ்டிதங்கள் காணவும் அருளிச் செய்யும் போது ஸ்வரத்தை கேட்கவும் ஆசை
சித்ர கூடத்தில் சீதா பிராட்டி எழுப்பிய பின்பு அனுதாபப் பட்டது போலே இவரும் உணர்ந்து வாழி என்கிறார்
ஆராவமுதன் எழுந்து இருந்து பேச முயலும் போது ஆழ்வார் அர்ச்சாவதார சமாதி குலைய கூடாது என்று வாழி என்கிறார் -உத்தான சயனம் –
————————————————————————
..62..”karanndam aadu poyhaiyull”=neer kaakkaikal erukkum poyhaiyil..”karu panai peru pazlam puranndu vizla”=kariya,periya,panam pazlangal vizlunthu puralla,(athai paarthu neer kakkaikal yentru piramithu meenkal anjina)..”vaallai paay kurum kudi nedum thahaay “=meenkal thulli oodi ollikintra thiru kurum kudiel ezlunthuarulm mahaanubaavaney..”thirannda tholl eranniyan sinam koll aaham ontrai eranndu kooru seythu vuhanda singam yenbathu vunnaiyey”…suhumarana vunnai muratu singam yennalaamaa?..eppothum antha poyhai “karanndam aadu poyhai” yentra peyar vunndu..athan karaiyil thiru panai maram nambiyin kadaashamey tharahamaha eintrum erukirathu..
கரண்ட மாடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடும் தகாய்
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் எனபது உன்னையே –62
கரண்ட மாடு பொய்கையுள்
நீர் காக்கைகள் இருக்கும் பொய்கையுள்
கரும் பனைப் பெரும் பழம் புரண்டு வீழ
கரிய பெரிய பனம் பழங்கள்விழுந்து புரள
அத்தைப் பார்த்து நீர்க் காக்கைகள் என்று என்று பிரமித்து மீன்கள் அஞ்சின
வாளை பாய் குறுங்குடி நெடும் தகாய்
மீன்கள் துள்ளி ஓடி ஒளிகின்ற திருக் குருங்குடியில் எழுந்து அருளும் மஹானுபாவனே
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும் இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் எனபது உன்னையே
.ஸூ குமாரமான உன்னை முரட்டு சிம்ஹம் என்னலாமா இப்போதும் இங்கே பொய்கையின் பெயர் கரண்ட மாடு பொய்கை . ..-அதன் கரையில் திரு பனை மரம் நம்பியின் கடாஷமே தாரகமாக கொண்டு இன்றும் உண்டே
————————————————————————
..63..”nantru erunthu”=yoga payirchikku vuriyathu pola aasanathil muraipadi niaithu erunthu …….””yogam neethi nannuvaarkal sinthaiyull sentru erunthu”…….”the vinaikal theertha deva devaney “……..”kuntru eruntha needa maadam baadahathum “=malaikalai konndu serthu vaithathu pola vulla maadangal vudaiya thiru badahathilum..”vuoorahathum nintru erunthu vehhannai kidanthathu yenna neermaiyey”..prahladanuku yentru muratu singamaha vanthathu pola..samsaarikallai kadaithera eppadi nintrum ,erunthum, kidakiraay yenkiraar..veha vannai vehha aanathu..yadothakaari sannithi..vulahallantha perumal sannithi vuoraham..
நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த தேவ தேவனே
குன்று இருந்து மாட நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே –63-
நன்று இருந்து
யோக பயிற்சிக்கு உரியது போலே ஆசனத்தில் முறைப்படி நன்று இருந்து
யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள் சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த தேவ தேவனே
குன்று இருந்து மாட நீடு பாடகத்தும்
மலைகளைக் கொண்டு சேர்த்து வைத்தது போலே மாடங்கள் உடைய திருப் பாடகத்திலும்
ஊரகத்தும் நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே
பிரகலாதனுக்கு என்று முரட்டு சிங்கமாக வந்தது போலே சம்சாரிகளை கடைத்தேற இப்படி நின்றும் இருந்தும் கிடக்கிறாய் என்கிறார்
வெக்கணை-வெக்கா-யதோத்தகாரி சந்நிதி
ஊரகம் -உலகளந்த பெருமாள் சந்நிதி
—————————————————————————
..64..”nintrathu yenthai vuoorahathu”…”erunthathu yenthai baadahathu’…”antru vehhannai kidanthathu”…”yen elaada mun yelaam”=naan piravaada mur kaalathil…”antru naan piranthileyn”=appothu naan gjana janmam pera villai…”pirantha pin maranthileyn”…”nintrathum,erunthathum, kidanthathum ,yen nenjulley”…kainkarya kadanai petru kolla “kadanai theerthaal allathu pohamaatteyn “yentru nintru, erunthu, kidanthu ..yellam avan meley rusi pirakka..entha rusi pirappathu saadyam-palan.. atharkku saadanam evan pannuvathu-nirpathu,erupathu,kidapathu-..palan kidaithavaarey..ethai thavirthu “aravath amalliyinodum ,azlahiya paarkadalodum,aravinda paavaiyum,thaanum,aham padi vanthu puhunthu”antha seyalkall yellaam namathu nenjiley pannukiraan..”naan elada mun elaam” yentru arulaamal yen elada mun elaam” yentrathu”appanai yentru marappeyn yennaahiyey”yentra thiruvaay mozli pola..
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே –64-
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
நான் பிறவாத முன் காலத்திலே
அன்று நான் பிறந்திலேன்
அப்பொழுது நான் ஜ்ஞான ஜன்மம் பெற வில்லை
பிறந்த பின்பு மறந்திலேன்-நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே
கைங்கர்ய கடனைப் பெற்றுக் கொள்ள -கடனைத் தீர்த்தால் அல்லது போக மாட்டேன் என்று நின்று இருந்து கிடந்து-எல்லாம்
அவன் மேல் ருசி விளைவிக்க -ருசி பிறப்பது சாத்தியம் -பலன் கிடைத்தவாறே இத்தத் தவிர்த்து
அரவத் தமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து –
அந்த செயல்கள் எல்லாம் நமது நெஞ்சிலே பண்ணுகிறான்
நான் இலாத முன் எலாம் என்று அருளாமல் என்னை இழந்த முன் எல்லாம் என்றது அப்பனை என்று மறப்பேன் என்னாகியே -திருவாய் மொழி போலே
—————————————————————————-
..65..”nirpathum oer verpahathu “=nintra sevai oppatra thiruvemkadathil..”eruppathu vinn”=veetru eruppathu parama padathil..”kidappathum nal peru thirai kadalull”=kidapathu nalla periya allaikallai vudaiya thiru paarkadalil..”naan elaada mun elaam”=naan murai ariyaamal asathaay eruntha kaalathil..eppozlutho yentraal..”arpudan,ananda sayanan,aadi boodan, maadavan”..”nirpathum,erupathum,kidapathum yen nenjulley”..
நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே –65-
நிற்பதும் ஓர் வெற்பகத்து
நின்ற சேவை ஒப்பற்ற திருவேங்கடத்தில்
இருப்பும் விண்
வீற்று இருந்த சேவை பரம பதத்தில்
கிடப்பதும் நற் பெரும் திரைக் கடலுள்
கிடப்பது நல்ல பெரிய அலைகளை உடைய திருப் பாற் கடலிலே
நான் இலாத முன்னெலாம்
நான் முறை அறியாமல் அசைத்தாய் இருந்த காலத்திலே
இப்பொழுதோ என்றால்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே
————————————————————————–
..66..”eintru saadal”=pirantha vudan saavathu..”nintru saadal”=sila kaalam eruntha pin saavathu..”antri”=ethu eranndum ellamal..”yaarum vaiyahathu ontri nintru vaazlthal einmai kanndu”…”neesar”..”antru paar allanda bothai vuni sentru ,vaanil mel sentru ,devar aay erukilaada vannam yen kolo”….antru vulahallantha thiruvadi thamaraiyai ninainthu ,aasrayithu,archiraadi maargathil sentru ,nithya soorikaludan erukka muyalvar yaarum ellaiyey yenkiraar…
இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என் கொலோ
அன்று பாரளந்த பாத போதை யொன்றி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே –66-
இன்று சாதல் நின்று சாதல்
பிறந்த உடன் சாவது -சிறிது காலம் இருந்த பின் சாவது
அன்றி யாரும் வையகத்து ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் நீசர் –அன்று பாரளந்த பாத போதை யொன்றி
வானின் மேல் சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே என் கொலோ
இவை இரண்டும் இல்லாமல் அன்று உலகு அளந்த திருவடித் தாமரையை நினைந்து ஆஸ்ரயித்து அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று
நித்ய ஸூ ரிகளுடன் இருக்க முயல்வார் யாரும் இல்லையே என்கிறார்
————————————————————————————————–
..67..”sanndan manndalathinoodu sentru”=soorya manndala madya margathiley poey..”veedu petru”=parama padam adainthu angey..”mel kanndu veedu elaada kaadal enbam naallum yeythuvar”=azlivilla bakthiyin palanaha ,kainkarya enbam ,nithyamaha pera viruppam vudaiyavarkaley…mumushukkaley..”punndareeha paadan punnya keerthy”..”num sevi maduthu ,vunndu”..”num vuru vinai thuyarull neengi vuymin”..ethu mudal namakku vubadesam pannukiraar..
சண்ட மண்டலத்தினூடு சென்று வீடு பெற்று மேல்
கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர்
புண்டரீக பாத புண்ணிய கீர்த்தி நுஞ் செவி மடுத்தி
உண்டு நும் உறுவினைத் துயருள் நீங்கியுய்மினோ –67-
சண்ட மண்டலத்தினூடு சென்று -சூர்ய மண்டல மத்திய மார்கத்திலே போய்
வீடு பெற்று
பரம பதம் அடைந்து அங்கே
மேல் கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர்
அழிவில்லா பக்தியின் பலனாக கைங்கர்ய இன்பம் நித்யமாக பெற விருப்பம் உடையவர்களே –
முமுஷூக்களே
புண்டரீக பாத புண்ணிய கீர்த்தி நுஞ் செவி மடுத்தி உண்டு நும் உறுவினைத் துயருள் நீங்கியுய்மினோ
இந்த பாசுரம் முதல் நமக்கு உபதேசம் பண்ணி அருளுகிறார்
————————————————————————————————-
..68..”muthirathu”=saadviha,raajasa,daamasa yentra moovahai patta..”vaanniyathu”=palankallukkul..”eranndil”=saadviham ozlintha mattra eranndin palankallil..”ontrum “=viruppam vudaiyavarana..”neesarkal”..”madaraay mayangu hintrathu”=dehamey atma yentru mohithu..”ettu athil eranthu poonthu”=antha lohathil antha karuma palankallai ozlithu,athai anubavikkum sareeram mudithu,(marupadiyum karba vaasam vazliyey)boolohathil vanthu…”ethirathu vuyathuoer vubaayam ellai”=vujeevano vubaayam evvazliyilum ellai..pala pala janmaakkal thaan edupaarkal..”vuykuril “=vuyya venum yentra viruppam erunthaal..”thothu erutha thann thuzlaay nal maalai vaazlthi vaazlmin”..punathullaay maalaiyanai aasrayithu vujeevanam adaiyanum..
முத்திறத்து வாணியத்தில் இரண்டில் ஓன்றும் நீசர்கள்
மத்தராய் மயக்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து
எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை யுய்குறில்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ –68-
முத்திறத்து-சாத்விக ராஜச தாமஸ-என்ற மூ வகைப் பட்ட
வாணியத்தில் இரண்டில் ஓன்றும் நீசர்கள்
பலன்களுக்குள் சாத்விகம் ஒழிந்த மற்ற இரண்டின் பலன்களில் விருப்பம் உடையீரான நீசர்களே
மத்தராய் மயக்குகின்றது
தேகமே ஆத்மா என்று மோஹித்து
இட்டு அதில் இறந்து போந்து
அந்த லோகத்தில் அந்த கர்ம பலன்களை ஒழித்து அத்தை அனுபவிக்கும் சரீரம் முடித்து -மறுபடியும் கர்ப்ப வாசம்-வழியே பூ லோகத்தில் வந்து –எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை-உஜ்ஜீவன உபாயம் எவ்வழியிலும் இல்லை -பல பல ஜன்மங்கள் தான் எடுப்பார்கள்
யுய்குறில்
உய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தால்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ
புனத் துழாய் மாலையானை ஆஸ்ரயித்து உஜ்ஜீவனம் அடைய வேணும் –
———————————————————-
..69th..”kaannilum vuru polaar”=kanndaalum vihaara vuruvam vudaiyavar..”sevikku einaada keerthiyaar”..kadinamana vaarthaikal vudaiyavar..”pennilum”=eppadi erunthaalum, aasrayithaal..”varam thara midukku elaada devarai”….”aannam yentru”=sarannam yentru..”adainthu vaazlum aadarkaall”=avatrai adainthu kettu pohum kurudarkalley..”yem aadhi paal”…”penni num pirappu yenum pinnakku arum kittrirey”…devaandarangallai paarkavey koodaathu..avatrin ayogyathaikallai nantraha solli…jagad kaaranna boodanai patri muktar aahanum yenkiraar..
காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கிலாத தேவரை
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்
பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே —69-
காணிலும் உருப்பொலார் -கண்டாலும் விஹார உருவம் உடையவர்கள்
செவிக்கினாத கீர்த்தியார்
கடினமான வார்த்தைகள் உடையவர்
பேணிலும் -எப்படி இருந்தாலும் ஆஸ்ரயித்தால்
வரந்தர மிடுக்கிலாத தேவரை-ஆணம் என்று அடைந்து-சரணம் என்று அடைந்து கேட்டுப் பெரும் குருடர்களே
வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்-பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே-
தேவ தாந்த்ரங்களை பார்க்கவே கூடாதே -அவற்றின் அயோக்யதைகளை சொல்லி -ஜகத் காரணனைப் பற்றி முக்தர் ஆகணும் என்கிறார்
———————————————————————————–
..70th..”kundamodu soolam velkall thomarangal thanndu vaall”=yeetti, soolam,velaayudam,eruppu vulakkai, gathai, vaall evatrudan erukkum..”pandamaana devarkal”.=koottam kootamay eruntha rudraadi devathaikal .”paranthu”=pala thisaikallilum sithari poey..”vaanaham vura”=thangal erupidam sentru sera..”vanda vaannan yeer einooru thollkalai thunnitha naall”….”antha antha aahulam amarey arivar”..aahulam=vyaahulam pattathu.. rashamaha venndiya aayudangal yellaam kaal kattu pola aayina ..raavananin vil pola.. eruntha varai pozlintha Raamanin ambukkal vizlunthathum nintrathu pola..
குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள்
பந்தமான தேவர்கள் பரந்து வானகமுற
வந்த வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
அந்தவந்த வாகுல மமரேரே யறிவரே –70-
குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள்
ஈட்டி சூலாயுதம் வேலாயுதம் இரும்பு உலக்கை கதை வாள் இவற்றுடன் இருக்கும்
பந்தமான தேவர்கள்-கூட்டம் கூட்டமாக இருந்த ருத்ராதி தேவர்கள்
பரந்து வானகமுற
பல திசைகளிலும் சிதறிப் போக -தங்கள் இருப்பிடம் சென்று சேர
வந்த வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்-அந்தவந்த வாகுல மமரேரே யறிவரே
ஆகுலம் — வியாகுலம் பட்டு
ரஷகமாக வேண்டிய ஆயுதங்கள் எல்லாம் கால் கட்டு போலே ஆயின
ராவணன் கையில் வில் போலே -இருந்த வரை அடி பட்டான் -வெறும் கை வீரன்
——————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்