Archive for the ‘Stotrams/Slokams’ Category

ஸ்ரீ நடதூர் அம்மாள் அருளிச் செய்த ஸ்லோஹங்கள் -வைராக்ய பஞ்சகம் -ஸ்வாமி தேசிகன் —

December 30, 2015

ஸ்ரீ நடதூர் அம்மாள் அருளிச் செய்த-ப்ராதர் நித்ய அனுசந்தேய ஸ்லோஹங்கள்

வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஐந பூஷணம்
பாஷ்ய அம்ருத ப்ரதாநாத் யஸ் சஞ்ஜீவயதி மாமபி

சத் சங்காத் பவநிஸ் ஸ்ப்ருஹோ குருமுகாத் ஸ்ரீசம் பிரபத்யாத் மவான்
பிராரப்தம் பரிபுஜ்ய கர்மசகலம் ப்ரஷீண கர்மாந்தர
நயாச தேவ நிரங்குசேஸ்வர தயா நிர்லூ நமாய அந்வய
ஹார்த அனுக்ரஹ லப்த மத்யதமநித்வாரா பஹிர் நிர்க்கத –1-

முக்தோர்ச்சிர் தின பூர்வ பஷ ஷடு தங் மாசாப் தவாதம் சுமத்
க்லௌ வித்யுத் வருணேந்திர தாத்ரு மகிதஸ் சீமாந்த சிந்த்வாப்லுத
ஸ்ரீ வைகுண்டம் உபேத்ய நித்ய மஜடம் தஸ்மின் பர ப்ரஹ்மண
சாயுஜ்யம் சமவாப்ய நந்ததி சமம் தேநைவ தன்ய புமான் –2-

ப்ராதர் நித்ய அனுசந்தேயம் பரமார்த்தம் முமுஷூபி
ஸ்லோகத்வயேன சம்ஷிப்தம் ஸூவ்யக்தம் வரதோப்ரவீத்–3-

————–

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விஷயமாக ஸ்ரீ நடதூர் அம்மாள் அருளிச் செய்த இரண்டு ஸ்லோகங்கள்

க்ராஹ் க்ரஸ்தே கஜேந்த்ரே ருவதி சரபசம் தார்ஷ்ய மாருஹ்ய தாவன்
வ்யாகூர்ணந்மால்ய பூஷா வசன பரிகரோ மேக கம்பீர கோஷ
ஆபி ப்ராணோ ரதாங்கம் சரமசிபயம் சங்க சாபௌ சகேடௌ
ஹஸ்தை கேள மோதகீ மப்யவது ஹரிரசௌ அம்ஹசாம் சம்ஹதேர் ந–1-

நக்ராக் ராந்தே கரீந்த்ரே முகுலித நயனே மூல மூலேதி கின்நே
நாஹம் நாஹம் ந சாஹம் ந ச பவதி புநஸ் தாத்ருசோ மாத்ருசேஷூ
இத்யேவம் த்யக்த ஹஸ்தே சபதி ஸூரகணே பாவ சூன்யே சமஸ்தே
மூலம் யா பிராது ராசீத் ச திசது பகவான் மங்கலம் சந்ததம் ந –2-

—————————–
ஸ்ரீ நடதூர் அம்மாள் அருளிச் செய்த பரத்வாதி பஞ்சகம் –

பரத்வம்
உத்யத் பா நு சஹஸ்ர பாஸ்வர பர வ்யோமாஸ் பதம் நிர்மல
ஜ்ஞாநா நந்தக நஸ்வரூபம் அமலஜ்ஞா நாதிபிஷ் ஷட் குணை
ஜூஷ்டம் ஸூரிஜநாதிபம் த்ருத ரதாங்கப்ஜாம் ஸூ பூஷோ ஜ்ஜ்வலம்
ஸ்ரீ பூ சேவ்யம நந்த போகி நிலயம் ஸ்ரீ வா ஸூ தேவம் பஜே–1-

விபவ நிலை
ஆமோதே புவநே பிரமோத உத சம்மோதே ச சங்கர்ஷணம்
பிரத்யும்நஞ்ச ததா ந்ருத்தம்பி தான் ஸ்ருஷ்டிஸ் தி தீ சாப்யயம்
குர்வாணான் மதி முக்கய ஷட் குண வரைர் யுக்தான் த்ரியுக் மாத்மகை
வ்யூஹா திஷ்டித வா ஸூ தேவமபி தம் ஷீராப்தி நாதம் பஜே –2-

விபவ நிலை
வேதான் வேஷண மந்தராத்ரிபரண ஷ்மோத்தாரண ஸ்வாசரித
ப்ரஹ்லாதா வன பூமி பிஷன ஜகத் விக்ராந்தயோ யத்க்ரியா
துஷ்ட ஷத்ர நிபர்ஹணம் தச முகாத் யுன்மூலநம் கர்ஷணம்
காளிந்த்யா அதிபாப கம்ஸ நிதநம் யத்க்ரீடிதம் தம் நும –3-

அந்தர்யாமி நிலை –
யோ தேவாதி சதுர்விதேஷூ ஜநிஷூ ப்ரஹ்மாண்ட கோசாந்த்ரே
சம்பக்தேஷூ சராசரேஷூ ச விசன் நாஸ்தே சதாந்தர் பஹி
விஷ்ணும் தம் நிகிலேஷ் வணுஷ் வணு தரம் பூயஸ் ஸூ பூயஸ்தாம்
ஸ்வாங்குஷ்ட பிரமிதஞ்ச யோகிஹ்ருத யேஷ் வாஸீ நமீசம் பஜே –4-

அர்ச்சாவதார நிலை
ஸ்ரீ ரங்க ஸ்தல வேங்கடாத்ரி கரிகிர் யாதௌ சதேஷ்டோத்தரே
ஸ்தானே பௌம நிகேத நேஷ்வபி சதா சாநித்தியமாசே துஷே
அர்ச்சா ரூபிண மர்ச்சகா பி மதித சவீ குர்வதே விக்ரஹம்
பூ ஜாஞ்சா கில வாஞ்சிதான் விதாதே ஸ்ரீ சாய தஸ்மை நம –5-

ப்ராதர் விஷ்ணோ பரத்வாதி பஞ்சகஸ் துதி முத்தமாம்
படன் ப்ராப் நோதி பகவத் பக்திம் வாத நிர்மிதாம் —

——————————————

வைராக்ய பஞ்சகம் -ஸ்வாமி தேசிகன் —

ஷோணீ கோண சதாம்ச பாலன கலா துர்வார கர்வா நல
ஷூப்யத் ஷூத்ர நரேந்திர சாடு ரசநா தன்யான் ந மன்யா மஹே
தேவம் சேவிதுமேவ நிச்சி நு மஹே யோ சௌ தயாலு புரா
தா நா முஷ்டி முசே குசேல முநயே தத்தேஸ்ம வித்தேச தாம் –1-

அல்ப பிரபுகளை புகழ் வதனால் செல்வம் பெருகின்றவர்களை ஒரு பொருளாக மதிக்க மாட்டேன் –
-முஷ்டி அளவு அவல் கொடுத்த குசேலருக்கு அருளிய பரம புருஷனை அடி பணிவதற்கே உறுதி பூண்டேன்
உனக்குப் பணி செய்து இருக்கும் தவமுடையேன் -இனிப் போய் ஒருவன் தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை யழிவு கண்டாய் –
அடிமை என்னும் அக் கோயின்மையாலே அங்கங்கே அவை போதரும் கண்டாய்

சீலம் கிம நலம் பவேத் அநலம் ஔதரம் பாதிதம்
பய பர ஸ்ருதி பூரகம் கிமு ந தாரகம் சாரசம்
அ யதன மல மல்லகம் பத்தி படச்ச்சரம் கச்ச்சரம்
பஜந்தி விபுதா முதா ஹ்யஹஹ குஷித குஷித –2-

ஜடராக்னியைத் தீர்க்க கதிர் பொருக்கி ஜீவிக்கலாமே -சிறாங்கை குளத்து தண்ணீர் போதுமே
-கந்தை துணி கோமணமாக கொண்டால் போதுமே அரசர்களை புகழ வேண்டுமோ

ஜ்வலது ஜலதி க்ரோட கிரீடத் க்ருபீட பவப்ரபா
ப்ரதிபட படுஜ்வாலா மாலா குலோ ஜடர அ நல
த்ருணமபி வயம் சாயம் சம்புல்ல மல்லி மதல்லி நா
பரிமல முசா வாசா யாசா மஹே ந மஹீச்வரான்— 3-

பாடபாக்னி -கடலில் வர்த்திக்கும் என்பர் -எவ்வளவு கொடிய பசி வாட்டினாலும்
-மல்லிகைப் பூவின் நறு மணம் வீசும் நாக்கால் அரசர்கள் இடம் சிறு புல்லைக் கூட யாசிக்க மாட்டோம்

துரீச்வரத் வார பஹிர் விதர்த்திகா துராசிகாயை ரசிதோய மஞ்ஜலி
யதஜ்ஞ ஞாபம் நிரபாய மஸ்தி மே தனஞ்ஞய ஸ் யந்தன பூஷணம் தனம் –4

அர்ஜுனன் தேருக்கு அலங்காரமான கண்ணபிரான் செல்வம் இருக்க அஹங்காரம் வடிவு எடுத்த கேட்ட
பிரபுக்கள் அடைய வாசல் திண்ணையில் துவண்டு இருக்க வேண்டுமோ

சரீரபத நாவதி பிரபு நிஷேவணா பாதா நாத்
அபிந்தன நஞ்ஜய பிரசமதம் தனம் தந்தனம்
தனஞ்ஜய விவர்த்த நம தநமூதூட கோவர்த்த தனம்
ஸூ ஸாத நம பாத நம் ஸூ ம நசாம் சமாரா தனம் –5

அர்ஜூனனை அபிவிருத்தி செய்த -கோவர்த்தனம் கொற்றக் குடையாக தாங்கி நின்ற -தேவதைகளுக்கு பரம திருப்தி
அளிக்க வல்ல சித்த சாதனம் -திருவுக்கு திருவாகிய செல்வம் இருக்க யாவஜ்ஜீவனம் ஸ்வரூப நாசகம் விளைக்கும் படி
அரசர்கள் காலில் விழுந்து இருக்கவா
அபீந்தன தனஞ்சய -ஜாடாராக்னி சோறும் தண்ணீரும் எதிர் பார்க்கும் அக்னி
தனஞ்ச -அக்னிக்கும் அர்ஜுனனுக்கும் -தனம் சப்தம் ஏழு -எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்
துணையான தனம் திருவுக்கும் திருவாகிய செல்வம் என்றபடி -கொள்ள மாளா இன்ப வெள்ளம் இது

நாஸ்தி நமே பித்ரார்ஜிதம் கிஞ்சித் ந மயா கிஞ்சிதார்ஜிதம்
அஸ்தி மே ஹஸ்தி சைலாக்ரே வஸ்து பைதாமஹம் தநம் –6

திரு ஹஸ்திகிரி மலையில் பிதாமஹர் ஆர்ஜித்த செல்வம் உண்டே -மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை போக்கலாகாமை நிச்சித்து இருந்தேனே

-புஷ்கரணியில் சயனித்து இருக்கும் அத்தி வரதர் ஜூலை 1979 ஒரு மாசம் சேவை சாத்தி அருளினார் –

———————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நடதூர் அம்மாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

புராதான ஸ்லோகங்கள் —

May 7, 2015

ஏக ஸ்லோக ஸ்ரீ மத் ராமாயணம் –

பூர்வம் ராமோ தபோவனானு கமனம் கத்வாம்ரு காஞ்சனம்
வைதேகி கரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ சம்பாஷணம்
வாலி நிக்ரஹணம் சமுத்திர சரணம் லங்காபுரி தகனம்
பட்சாத் ராவண கும்பகர்ண நிதானம் ஏதத் ராமாயணம் —

——————————————————————————————

ஏக ஸ்லோக ஸ்ரீ மத் பாகவதம் –

ஆதவ் தேவக தேவ கர்ப்ப ஜனனம் கோபி  ஹ்ருதே மர்த்தனம்
மாயா பூதன தேவ தாப கரணம் கோவர்த்தனோ தாரணம்
கம்ச சேதன கௌரவாதி கரணம் குந்தி ஸூதா பாலனம்
பட்சாத் பீஷ்ம சுயோதனாதி கரணம் ஏவம் மஹா பாகவதம் –

——————————————————————————————

ஸ்ரீ பட்சிராஜ ஸ்தோத்ரம் –

அம்ருத கலச ஹஸ்தம் காந்தி சம்பூர்ண காத்ரம்
சஹல விபூத வந்த்யம் வேத சாஸ்திர வந்த்யம்
ருஷிர விபூத பக்த்யம் வேத்யமான் ஆண்ட கோலம்
சகல விஷ்வ   நாசம் சிந்தையே பட்சி ராஜம்-

——————————————————————————————-

எம்பெருமான் திவ்ய வடிவு அழகு சேவை –

திருத் துழாயும் மகிழம் பூவும்
கவசமும் முத்தா கிரீடமும்
நெற்றியில் தீஷண கஸ்தூரி திலகமும்
மதனவில் போல் வளைந்த புருவமும்
கடை சூழ்ந்து செவ்வரி தாழ்ந்து கருமுகில் மிகுந்து அகன்று  நிமிர்ந்த செந்தாமரைக் கண்களும்
கூர்மையான கொடி மூக்கும்
செங்கனி வாயும்
மல்லிகை மலர்ந்தால் போல் பொன் சிரிப்பும்
தாமரை மலர்ந்தால் போ திரு முக மண்டலமும்
கரி வண்டு கவித்தால் போல் கரும் குழல் காற்றையும்
இரு சூரியன் உதித்தால் போல் மணி மகரக் குண்டலமும்
கபோலம் என்றும் கவை என்றும் கஞ்ச மலர்க் கையான் அஞ்சாதே என்று அடியார்களுக்கு அளித்த அபயச்த கரமும்
சந்திர ஸூரிய மண்டலமும் சேர்ந்து அமைந்தால் போல் பாஞ்ச சந்யமும்
திருத் தோள் அம்புறாத் துணியும்
திரு வரையிலே தங்கப் பிடி வைத்த நாந்தகக் கத்தியும்
கிளிவசை மாலையும் -மகிழம்பூ மாலையும் –தாழம்பூ மாலையும் திருத் துழாய் மாலையும் –
குங்குமம் கஸ்தூரி குமுகுமு என்ன பளபள என்ன குளிர்ந்த திருமேனி தேஜஸ் ஸாய் இருக்கிற
என் அப்பனே
ஸ்ரீ ரங்க நாதனே
கண்ணனே
தாமரைக் கண்ணனே
தூ மணி வண்ணனே
தோளுக்கு இனியானே
பத்ம நாபனே
பவள வாயனே
சிறு புலி மார்பனே
செங்கோல் உடையானே
கத்தியும் கேடையமும் கதையும் தரித்தோனே
ஆநிரை மேய்த்தோனே
அவன் உடம்பு பிழந்தோனே
கோனேரி காத்தோனே
கோவர்த்தன குடையானே
சிங்கம் போல் நடையானே
பீதக வாடை யுடையானே
பேய்முலை  யுண்டானே
பதினாறு லோகமும் ஆண்டானே
பச்சைத் திருத் துழாய் மாலை அணிந்தோனே
அரி அச்சுதனே
ஆராவமுதனே
சிந்திக்கத் தித்திக்கும் செவ்வேங்கடத்தானே
திருவேங்கடத்தானே
எம்மானே
எம்பெருமானே
இங்கே கண்டேனே –
ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி

—————————————————————————————————————-

ஸ்ரீ நரசிம்ஹ அஷ்டகம் -ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்தது –

ஸூந்தர ஜாமாத்ரு முனே ப்ரபத்யே சரணாம் புஜம்
சம்சாரார்ணவ சம்மக்ன ஜந்து சந்தார போதகம் –தனியன் –

ஸ்ரீ மத கலங்க பரிபூர்ண சசிகோடி ஸ்ரீ தர மநோ ஹர  சடா படல காந்த
பாலய க்ருபாலய பவாம்புதி  மக்நம் தைத்ய வர கால நரசிம்ஹ நரசிம்ஹ

பாத கமலா வநத பாதகி ஜநாநாம்  பாதகதவாநல பதத்திரி வர கேதோ
பாவந பாராயண பவார்த்தி ஹரயாமாம் பாஹி க்ருபயைவ நரசிம்ஹ நரசிம்ஹ

துங்க நக பங்க்தி தலதா ஸூர வராஸ்ருக் பங்க நவ குங்கும விபங்கில மநோ ஹர
பண்டித நிதாந கமலாலய நமஸ்தே பங்கஜ நிஷண்ண நரசிம்ஹ நரசிம்ஹ

மௌலிஷூ விபூஷணமிவ அமரவராணம் யோகி ஹ்ருதயேஷூ ச சிரஸ்ஸூ நிகமா நாம்
ராஜதர விந்த ருசிரம் பதயுகம் தே தேஹி மம மூர்த்தி நரசிம்ஹ நரசிம்ஹ

வாரிஜ விலோசன மதந்திம தசாயாம் க்லேச விவசீக்ருத சமஸ்த கரணாயாம்
ஏஹி ரமயா சஹ சரண்யா விஹகா நாம் நாதமதி ருஹ்ய நரசிம்ஹ நரசிம்ஹ

ஹாடக கிரீடவர ரசனா மகர குண்டல மணீந்த்ரை
பூஷி தமசெஷா நிலையம் தவ வபுர்  சேதசி சகாச்து நரசிம்ஹ நரசிம்ஹ

இந்து ரவி பாவக விலோசன ரமாயா மந்திர மஹா புஜ லேசாத் வர ரதாங்க
ஸூ ந்திர சிராய ரமதாம் த்வயி மநோ மே நந்தித ஸூ ரேச நரசிம்ஹ நரசிம்ஹ

மாதவ முகுந்த மது ஸூ தன முராரே வாமன நருசிம்ஹா சரணம் பவ நதானாம்
காமத க்ருணின் நிகில காரண நயேயம் கால மாமாரேச நரசிம்ஹ நரசிம்ஹ

அஷ்ட கமிதம் சகல பாதக பயக்நம் காமதம் அசேஷ துரிதாமய சரிபுக்னம்
யா படதி ஸந்ததம சேஷ நிலயம் தே கச்சதி பதம் ஸ நரசிம்ஹ நரசிம்ஹ —

———————————————————————————————–

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம்
நருசிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும்ருத்யும்  நமாம்யஹம்

ஓம் வஜ்ரா நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பராசுர பட்டர் அருளிய அஷ்ட ஸ்லோகி –

December 19, 2014

ஸ்ரீ பராசார பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச புரோகித
ஸ்ரீ வத்சாங்க சுத ஸ்ரீ மான் ஸ்ரேயசே மேஸ்து பூயசே

ஸ்ரீ யபதி ஸ்வரூபம் முதலான அர்த்த பஞ்சக ஞானம் -விவரணமே -ரகஸ்ய த்ரய ஞானம் –
அதன் முதல் விவரணம் ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த அஷ்டஸ்லோகி
முதல் நான்கும் திருமந்தரம் விவரணம்
மேல் இரண்டு ஸ்லோகங்கள் த்வயம் விவரணம்
அடுத்த இரண்டும் சரம ஸ்லோக விவரணம் –

பெரிய கனக வரையை சிறிய கடுகினில் அடைத்து வைப்பன் -திருவரங்கக் கலம்பகம் –
ஸூர்ய உதயம் –ஸூர்யோதயம் -போலே ஓங்காரம் -அகாரம் உகாரம் மகாரம் -என்று பிரியும் –
————————————————————————————————————————————————-

ஸ்லோகம் -1-
அகாரத்தோ விஷ்ணுர் ஜகத் உதய ரக்ஷா பிரளய க்ருத்
மகார்த்தோ ஜீவஸ் ததுபகரணம் வைஷ்ணவமிதம்
உகாரோ நந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ
த்ரயீ சாரஸ் த்ரயாத்மா பிரணவ இமமர்த்தம் சமதிசத்-

அகாரத்தோ விஷ்ணுர் ஜகத் உதய ரக்ஷா பிரளய க்ருத்
பிரணவத்தில் உள்ள அகாரத்தின் பொருள்
சர்வ வ்யாபக சர்வேஸ்வரன்
சகல லோகங்களுக்கும் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களை செய்து அருளுபவன் –

மகார்த்தோ ஜீவஸ் ததுபகரணம் வைஷ்ணவமிதம்-
மகார்த்தோ தத் இதம் -மகாரத்தின் பொருள்
-மேற்சொன்ன இந்த ஜீவாத்மா வஸ்துவானது
தத் இதம் -ந பும்சக லிங்கம் -அசேதன நிர்விசேஷமாக இருந்து சேஷப் படக் கடவது என்று காட்ட  –
வைஷ்ணவம் உபகரணம் -எம்பெருமானுக்கே உரித்தான சேஷ வஸ்து -என்பதே லுப்த சதுர்த்தியின் பொருள் –

உகாரோ நந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ
உகார -பிரணவத்தில் இடையில் உள்ள யுகாரமானது
பிரணவத்தில் இடையில் யுள்ள உகாரமானது
சம்பந்த மநயோ-இந்த ஜீவாத்மா பரமாத்மாக்களுக்கும் யுண்டான சம்பந்தத்தை
அநந்யார்ஹம் நியமயதி–பதி பத்நீ பாவம் ஆகிற சம்பந்தம் போல்
ஐகாந்திகமாக கட்டுப்படுத்து கின்றது-

த்ரயீ சாரஸ் த்ரயாத்மா பிரணவ இமமர்த்தம் சமாதிசத்-
இமமர்த்தம் -ஆக இங்கனே விவரிக்கப் பட்ட பொருளை
த்ரயீ சாரஸ்-மூன்று வேதங்களின் யுடைய சாரபூதமாயும் –
த்ரயாத்மா-மூன்று அஷரமும் மூன்று பதமுமாய் இரா நின்ற
ஓங்காரம்
சமதிசத்–தெரிவித்தது –

ஒமிதி ஏக அஷரம்-சம்ஹிதாகாரத்தில் நோக்கு -சாந்தி பெற்ற ஆகாரம் -மூலம் ஒரே அஷரம் -ஒரே பதம்
அசம்ஹிதாகாரம் -சந்திபெறாத  -ஆகாரத்தால் மூன்று அஷரம் மூன்று பதம் –

—————————————————————————————————

ஸ்லோகம் -2-
மந்திர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸ ஸ்வரூபம் கதிர்
கம்யம் சிக்ஷிதமீ க்ஷிதேன புரத பச்சாதபி ஸ்தானத
ஸ்வா தந்த்ர்யம் நிஜரக்ஷணம்  சமுசித வ்ர்த்திச்ச நாநியோசித
தச்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ச்வாச்யபி நார்ஹம் தத-2-

மந்திர ப்ரஹ்மணி மத்யமேன –
மிகச் சிறந்த மந்த்ரம் ஆகிய திரு அஷ்டாஷரத்தில் இடையில் யுள்ளதாய்

நமஸா –
நமஸ் ஆனது

பும்ஸ ஸ்வரூபம் –
ஜீவாத்மாவின் ஸ்வரூபமானது

கதிர்கம்யம் சிக்ஷிதமீ க்ஷிதேன புரத பச்சாதபி ஸ்தானத-
சிஷிதம் -நன்றாக சிஷிக்கப் பட்டது –

புரத ஈஷிதேன நமஸா –
முன்னே யுள்ள பிரணவத்தை நோக்கி அத்தோடு சேர்ந்த தான நமஸ்சினால்-

ஸ்தானத   ஈஷிதேன நமஸா-
ஸ்வ ஸ்தானத்திலேயே ஆவ்ருத்தி பெற்ற நமஸ்சினால் –

கதிர் சிஷிதா –
உபாயம் சிஷிக்கப் பட்டது –

பச்சாத் அபி ஈஷிதேன நமஸா –
பின்னே யுள்ள நாராயண பதத்தோடு சேர்ந்த நமஸ்சினால் –

கம்யம் சிஷிதம் –
உபேயம்-பலன் -சிஷிப்பப் படுகிறது –

இத்தால் தேறின பொருள்கள் என் என்னில்

ஸ்வா தந்த்ர்யம்
நிஜரக்ஷணம் -ஸ்வ ரஷணம்
சமுசித வ்ர்த்திச்ச -சேஷத்வத்துக்கு இணங்கின கைங்கர்ய வருத்தி –

நாநியோசித-
அன்யோசித   ந -மற்றையோர்க்கு யுரியவர் அல்ல –

தச்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ச்வாச்யபி நார்ஹம் தத
தஸ்ய ஹரே ஏவ -அந்த எம்பெருமானுக்கே உரியவை
இதி -இவ்வண்ணமாக
விவிச்ய கதிதம் –
வகுத்துக் கூறப் பட்டதாயிற்று
தத -ஆதலால்
ஸ்வஸ்ய அபி அர்ஹம் ந –
கீழ்ச் சொன்ன மூன்றும் அந்யருள் அந்ய தமனான தனக்கும் சேர்ந்தவை அல்ல -எனபது தேறிற்று –
நமஸ் -பிரித்து -சகண்ட நமஸ் -ந -ம் -எனக்கு நான் உரியேன் அல்லேன்
பிரிக்காமல் அகண்ட நமஸ் -ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதி
ஓம் நம -நம நம -நாராயண நம –

————————————————————————————————————————-

ஸ்லோகம் -3
அகாரத்தாயைவ ஸ்வ மஹ மத மஹ்யம் ந நிவஹா
நராணாம் நித்யா நாமய நமிதி நாராயண பதம்
யமா ஹாஸ்மை காலம் சகலமபி சர்வத்ர சகலாஸூ
அவஸ்தா ஸ்வாவிஸ் ஸ்யுர் மம சஹஜ கைங்கர்ய விதய

அகாரத்தாயைவ ஸ்வ மஹ மத மஹ்யம் ந நிவஹா
அஹம் அகார்த்தாய ஏவ ஸ்வம்-
மகார வாச்யனான நான் அகார வாச்யனான நாராயணனுக்கே சேஷ பூதன் -பிரணவார்த்தத்தை
அத
அதற்க்கு மேலே
அஹம் மஹ்யம் ந –
நான் எனக்கு உரியேன் அல்லேன் -நம பதார்த்தத்தை அனுவதித்தபடி-

அகாரம் லுப்த சதிர்த்தி உகாரம் மகாரம் நான்கினுடைய அர்த்தமும் அடைவே பொருந்தி இருக்கும் படி அருளிச் செய்கிறார்
நராணாம் நித்யா நாமய நமிதி நாராயண பதம்
நாராயண பதம் -நாராயண பதமானது
நராணாம் நித்யா நாம் -நிவஹா -தேஷாம் -அய நம் இதி
-நித்ய வஸ்துக்களின் திரளுக்கு ஆதாரபூதன் -தத் புருஷ சமாசம்
நராணாம் நித்யா நாம் -நிவஹா யஸ்ய அயனம் –
நித்ய வஸ்துக்களின் திரளை ஆதாரமாக யுடையவன் -பஹூ வ்ரீஹி சமாசம்-

யமா ஹாஸ்மை காலம் சகலமபி சர்வத்ர சகலாஸூ-
யாம் ஆஹ-அவஸ்தா ஸ்வாவிஸ் ஸ்யுர் மம சஹஜ கைங்கர்ய விதய-
யாவன் ஒரு எம்பெருமானைச் சொல்லுகிறதோ
அசமி -இந்த எம்பெருமானுக்கு
காலம் சகலம் அபி -எல்லா காலங்களிலும்
சர்வத்ர -எல்லா இடங்களிலும்
சகலா ஸூ அவஸ்தா ஸூ -எல்லா அவச்தைகளிலும்
மம-என்னுடைய
சஹஜ கைங்கர்ய விதய -இயற்கையான அடிமைத் தொழில்
ஆவிஸ் ஸ் யு -விளையக் கடவன
சரமபதத்தின் அர்த்தத்தை அனுவதித்தபடி –

—————————————————————————————-

ஸ்லோகம் -4
தேக ஆசக்த ஆத்மபுத்திர் யதி பவதி பதம் சாது வித்யாத் த்ருதீயம்
ஸ்வாதந்த்ர்ய அந்தோ யதி ஸ்யாத் ப்ரதம மிதர சேஷத்வதீச் சேத த்வதீயம்
ஆத்மத்ராண உந்முகச் சேத நம இதி ச பதம் பாந்தவா பாசலோலா
சப்தம் நாரயணாக்க்யம் விஷய சபலதீச் சேத சதுர்தீம் ப்ரபன்ன-4-

தேக ஆசக்த ஆத்மபுத்திர் யதி பவதி பதம் சாது வித்யாத் த்ருதீயம்
தேக ஆசக்த -ஆத்மபுத்தி -பவதி யதி-
தேஹத்திலே ஊன்றின ஆத்மபுத்தி -தேகாத்ம ப்ரமம் யுடையவனாகில் –
த்ருதீயம் பதம் சாது வித்யாத் –
பிரணவத்தில் மூன்றாவது பதமான மகாரார்த்தை நன்கு நோக்கக் கடவன்-
ஸ்வாதந்த்ர்ய அந்தோ யதி ஸ்யாத் ப்ரதம மிதர சேஷத்வதீச் சேத த்வதீயம்
ஸ்வா தந்த்ர்ய அந்த ச்யாத்யாதி-
ஸ்வ தந்திர ஆத்ம ப்ரமம் யுடையவனாகில்
பிரதம பதம் வித்யாத் –
முதல் பதமான லுப்த சதுர்த்தியோடு கூடின அகாரார்த்தை நோக்கக் கடவன்
இதர சேஷத்வதீ சேத்-
அந்ய சேஷத்வ ஜ்ஞானம் யுடையவன் ஆகில்
த்வதீயம் பதம் வித்யாத்
இரண்டாவது பதமாக உகாரத்தை நோக்கக் கடவன் –
ஆத்மத்ராண உந்முகச் சேத நம இதி ச பதம் பாந்தவா பாசலோலா-சப்தம் நாரயணாக்க்யம்-
ஆத்மத்ராண உந்முக சேத் –
ஸ்வ ரஷணத்தில் ஊக்கம்  யுடையவன் ஆகில்
நம இதி பதம் வித்யாத் –
நம என்ற நடுப்பதத்தை நோக்கக் கடவன் –
பாந்த ஆபாஸ லோல –
ஆபாஸ பந்துக்களின் இடத்தில் ஆசக்தி யுடையவன்
நாராயணாக்யம் சப்தம் வித்யாத்
நாராயண பதத்தை நோக்கக் கடவன் –

விஷய சபலதீச் சேத சதுர்தீம்
சப்தாதி விஷயங்களில் ஊன்றின புத்தியை யுடையவனாகில்
நாராயண பதத்தின் மேல் யுள்ள
வ்யக்த சதுர்த்தியை நோக்கக் கடவன்

ப்ரபன்ன
இப்படி எல்லாம் நோக்கக் கடவனான அதிகாரி யார் என்னில்
பிரபன்ன அதிகாரி –

திருமந்தரம் சப்த சக்தியாலும் அர்த்த சக்தியாலும் ரஷணம் செய்து அருளும் –
உபாசனர் ஜபம் -செய்து சப்த சக்தியால் பெறுவார்
பிரபன்னர் எம்பெருமானே உபாயம் உபேயம் – என்
முமுஷூப்படி -எம்பிரான் எந்தை என்கையாலே –
நான் பிறர்க்கான அன்றும் அவன் நமக்காக இருக்கும் –
இரா மடமூட்டுவாரைப் போலே உள்ளே பதி கிடந்தது சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் –
நாராயண -கரேன வ்யுத்பத்தியும் கர்மணி வ்யுத்பத்தியும் சாஸ்திர சித்தம்
ஈயதே அசௌ இதி அயநம்-என்கிற இது கர்மணி வ்யுத்பத்தி  -உபேயத்வம் பலிக்கும்
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -சர்வபிரகார விசிஷ்டமாய்
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் –என்னுடை வாணாள் -திருமங்கை ஆழ்வார் –

—————————————————————————————

ஸ்லோகம் -5

நேத்ருத்வம் நித்யயோகம் சமுசித குணஜாதம் தநுக்யாப நம் ச
உபாயம் கர்த்தவ்யபாகம் த்வத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரசித்தம்
ஸ்வாமித்வம் ப்ரார்த்த நாஞ்ச பிரபலதர விரோதி ப்ரஹாணம் தசைதான்
மந்தாரம் த்ராயதே சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட-5-

நேத்ருத்வம் நித்யயோகம் சமுசித குணஜாதம் தநுக்யாப நம் ச
நேத்ருத்வம் –
புருஷகாரத்வத்தையும்
நித்யயோகம்-
ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரியாத நித்ய சம்ச்லேஷத்தையும்
சமுசித குணஜாதம் –
இன்றியமையாத  திருக் குணங்களின் திரளையும்
தநுக்யாப நம் ச-
திரு மேனியைக் காட்டுதலையும் –
உபாயம் கர்த்தவ்யபாகம் த்வத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரசித்தம்-
உபாயம் –
உபாயத்தையும் –
கர்த்தவ்யபாகம் –
சேதனன் செய்ய வேண்டிய தான அத்யாவசாயத்தையும்
த்வத மிதுநபரம் ப்ராப்யம் –
இருவருமான சேர்த்தியை விஷயீ கரித்ததான கைங்கர்யத்தையும்
மேவம் ப்ரசித்தம்-
இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-

ஸ்வாமித்வம் ப்ரார்த்த நாஞ்ச பிரபலதர விரோதி ப்ரஹாணம் தசைதான்
ஸ்வாமித்வம் –
சர்வ சேஷித்வத்தையும்
ப்ரார்த்த நாஞ்ச –
கைங்கர்ய பிரார்த்தனையையும் –
பிரபலதர விரோதி ப்ரஹாணம் –
மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்
தசைதான்

மந்தாரம் த்ராயதே சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட-
மந்தாரம் –
மனனம் செய்கிற உத்தம அதிகாரியை
த்ராயதே இதி
காப்பாற்றுகின்றது என்று
சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட
அயம்
அந்த த்வயம் மந்த்ரமானது
ஏதான் தச
இந்த பத்து அர்த்தங்களையும்
அதிகத நிகம
வேத ப்ரதீதமாயும்
த்வீ கண்ட
இரண்டு கண்டங்களை யுடையதாயும்
ஷட்பத
ஆறு பதங்களை யுடையதாயும்-

த்ராயதே இதி
காப்பாற்றுகின்றது என்று
ஏவம் ப்ரசித்தம்-
இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-
1-ஸ்ரீ –நேத்ருத்வம் -ஸ்ரீயதே -ஸ்ரேயதே -ச்ருணோதி -ச்ராவயதி -ஸ்ருணாதி -ச்ரீணாதி
2- மத்-நித்ய யோகத்வம்
3- நாராயண -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌசீல்யம் ஜ்ஞானம் சக்தி-சமுசித குணஜாதம்
4- சரனௌ-திவ்ய மங்கள விக்ரஹம் -த நுக்யாபனம் –
5-சரணம் -உபாயம் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும்
6-பிரபத்யே -கர்த்தவ்யபாகம் -வாசிக காயிக மானசீகங்கள் -கர்த்தவ்யம் புத்யர்த்தம்
7-ஸ்ரீ மதே-மிதுன பரம் பிராப்யம் -கைங்கர்ய பிரதி சம்பந்த தத்வேன அன்வயம்
8-நாராயண -ஸ்வாமித்வம்
9-ஆய -ப்ரார்த்த நாஞ்ச -கைங்கர்ய பிரார்த்தனையையும் –
10-நம-பிரபலதர விரோதி ப்ரஹாணம் -மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்-
கடகவல்லி நிகமத்தில் வேதபாகத்தில் உள்ளதே -அதிகத நிகம-

————————————————————————————————————————————————

ஸ்லோகம் –6

ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்ய அநபாயாம் ச்ரியம்
சம்ச்ரித்ய ஆஸ்ரயணோசித அகில குணச்ய அங்க்ரீ ஹரே ஆஸ்ரயே
இஷ்ட உபாயதயா ச்ரியா ச சஹிதாய ஆத்மேச்வராய அர்த்தயே
கர்த்தும் தாஸ்யம் அசேஷம் அப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம-6-

ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்ய அநபாயாம் ச்ரியம்
ஈசாநாம் ஜகதாம் -ஜகதாம் ஈசா நாம்
உலகங்களுக்கு
அதீச தயிதாம் –
சர்வேஸ்வரனுக்கு பிராண வல்லபையுமாய்
நித்ய அநபாயாம் –
ஒரு பொழுதும் விட்டுப் பிரியாத வளாய் இருக்கின்ற –
ச்ரியம்-
பெரிய பிராட்டியாரை-

சம்ச்ரித்ய ஆஸ்ரயணோசித அகில குணச்ய அங்க்ரீ ஹரே ஆஸ்ரயே-இஷ்ட உபாயதயா-
சம்ச்ரித்ய –
புருஷகாரமாகப் பற்றி
ஆஸ்ரயணோசித அகில குணச்ய –
சரண வரணத்துக்கு   பாங்கான சகல குணங்களையும் யுடைய
அங்க்ரீ ஹரே –
எம்பெருமானுடைய திருவடிகளை
ஆஸ்ரயே இஷ்ட உபாயதயா –
இஷ்ட உபாயதயா ஆஸ்ரயே –
இஷ்ட சாதனமாகப் பற்றுகிறேன்
ஆக பூர்வ கண்டார்த்தம் அனுசந்தித்த படி –

ச்ரியா ச சஹிதாய ஆத்மேச்வராய -கர்த்தும் தாஸ்யம் அசேஷம் அப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம-
பெரிய பிராட்டியாரோடு கூடி இருந்துள்ள
சர்வ சேஷியான நாராயணனுக்கு
அஹம் நிர்மம-
கைங்கர்யத்தில் களையான மமகாரம் சிறிதும் இல்லாத அடியேன் –
தாஸ்யம் அசேஷம் –
அசேஷம் தாஸ்யம் –
சகலவித கைங்கர்யத்தையும்
அப்ரதிஹதம் நித்யம் –
இடையூறின்றி நித்யம்
அர்த்தயே கர்த்தும் –
செய்யும் பொருட்டு பிரார்த்திக்கிறேன் –

கீழ் பதார்த்த விவரண ஸ்லோஹம்
இது  வாக்யார்த்த  பிரதிபாதாக ஸ்லோஹம்
சர்வலோக ஈஸ்வரி -பித்தர் பனிமலர் பாவைக்கு -கால நியமம் வேண்டாம் ருசி ஒன்றே வேண்டுவது -மூன்று விசேஷணங்கள்
அபராத பயத்தாலே பிராட்டியை முன்னிட்டே பற்ற வேண்டுமே
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்
ஆஸ்ரய கார்ய ஆபாத குணங்கள்
சத் சம்ப்ரதாய சாராம்சம் –

—————————————————————————————-

ஸ்லோகம் –7

மத் ப்ராப்தி அர்த்ததயா மயா உக்தம் அகிலம் சம்த்யஜ்ய தர்மம் புந
மாம் ஏகம் மநவாப்தயே சரணம் இத்யார்த்தோ வஸாயம் குரு
த்வாம் ஏவம் வ்யவசாய யுக்தம் அகில ஞானாதி பூர்ணோ ஹ்யஹம்
மத் ப்ராப்தி ப்ரதிபந்த கைர் விரஹிதம் குர்யாம் சுசம் மா க்ருதா-

மத் ப்ராப்தி அர்த்ததயா மயா உக்தம் அகிலம் சம்த்யஜ்ய தர்மம் புந மாம் ஏகம்-
மத் ப்ராப்தி அர்த்ததயா –
என்னைப் பெருகைக்கு யுபாயமாக
மயா உக்தம் –
உன் மனத்தை சோதிப்பதாக என்னாலே சொல்லப் பட்ட
அகிலம் சம்த்யஜ்ய தர்மம் –
சகல தர்மங்களையும் விட்டு
புந மாம் ஏகம் –
மாம் ஏகம் புன –
என் ஒருவனையே குறித்து-

மநவாப்தயே சரணம் இத்யார்த்தோ வஸாயம் குரு
மநவாப்தயே சரணம் இத் யார்த்தோ வஸாயம்-
ஆர்த்தி மிகுந்தவனாய்
என்னைப் பெறுகைக்கு நானே உபாயம் என்கிற அத்யவசாயத்தை
குரு-
செய்வாயாக –

த்வாம் ஏவம் வ்யவசாய யுக்தம் அகில ஞானாதி பூர்ணோ ஹ்யஹம்
த்வாம் ஏவம் வ்யவசாய யுக்தம் –
ஏவம் விவசாய யுக்தம் த்வாம் -இத்தகைய அத்யாவசாயத்தோடே கூடிய என்னை
அகில ஞானாதி பூர்ணோ ஹ்யஹம்-
ஞானம் முதலிய குணங்கள் நிறைந்த நான் –

மத் ப்ராப்தி ப்ரதிபந்த கைர் விரஹிதம் குர்யாம் சுசம் மா க்ருதா-
மத் ப்ராப்தி ப்ரதிபந்தகைர் விரஹிதம் குர்யாம் –
என்னைப் பெறுகைக்கு இடையூறாய் யுள்ள
பாபங்கள் அற்றவனாய் செய்யக் கடவேன்
சுசம் மா க்ருதா-
துக்கம் கொள்ளாதே-

————————————————————————————–

ஸ்லோகம் –8

நிச்சித்ய த்வத் அதீந தாம் மயி சதா கர்மாதி உபாயான் ஹரே
கர்த்தும் த்யக்தும் அபி பிரபத்தும் அநலம் ஸீதாமி துக்காகுல
ஏதத் ஞானம் உபேயுஷே மம புநஸ் சர்வ அபராத ஷயம்
கர்த்தா ஸீதி த்ருடோச்மி தே து சரமம் வாக்யம் ஸ்மரன் சாரதே-8-

நிச்சித்ய த்வத் அதீந தாம் மயி சதா கர்மாதி உபாயான் ஹரே
நிச்சித்ய த்வத் அதீந தாம் மயி சதா
மயி சதா த்வத் அதீந தரம் நிச்சித்ய –
அடியேன் எப்போதும் தேவரீருக்கே அதீனமான
ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்திகளை யுடையவன் என்பதை நிச்சயித்து –
கர்மாதி உபாயான் –
கர்மாதி உபாயான் -கர்ம யோகம் முதலான் உபாயங்களை
ஹரே-
எம்பெருமானே-
கர்த்தும் த்யக்தும் அபி பிரபத்தும் அநலம் ஸீதாமி துக்காகுல
கர்த்தும் த்யக்தும் அபி –
செய்வதற்கும் விடுவதற்கும்
பிரபத்தும் –
பிரபத்தி பண்ணுவதற்கும் –
அநலம் ஸீதாமி துக்காகுல-
அசமர்த்தனாய் -மிகவும் துக்கப்படா நின்றேன்-

ஏதத் ஞானம் உபேயுஷே மம புநஸ் சர்வ அபராத ஷயம்-கர்த்தா ஸீதி –
ஏதத் ஞானம் உபேயுஷே மம –
பகவானே உபயம் என்று துணிந்து இருக்கை யாகிற
இந்த அத்யாவசாயத்தை பெற்று இருக்கும் அடியேனுக்கு
புநஸ் சர்வ அபராத ஷயம்-கர்த்தா ஸீதி –
சகல பாப  நிவ்ருத்தியையும்
தேவரீரே பண்ணித் தர வல்லீர் என்று கொண்டு-

த்ருடோச்மி தே து சரமம் வாக்யம் ஸ்மரன் சாரதே-
த்ருடோச்மி-த்ருட அஸ்மி –
துக்கம் அற்று நிர்ப்பரனாய் இருக்கின்றேன்
தே சாராதே –
பார்த்த சாரதியாய் நின்ற தேவரீருடைய
து சரமம் வாக்யம் ஸ்மரன் சாரதே
கடைசியான வாக்யத்தை ஸ்மரித்துக் கொண்டு –

நெறி காட்டி நீக்குதியோ நின்பால்
மார்விலே கை வைத்து உறங்க பிராப்தம்
பிரபத்தும் அபி அநலம்-
ஸ்வரூப அனுரூபத்வம்
சுக ரூபத்வம்
நிரபாயத்வம்
சித்தத்வம்
ச்வத பல சாதனத்வம்
நிரபேஷத்வம்
அவிளம்பித பலபிரதத்வம்
ஏகத்வம்
முதலானவற்றாலே சுகரமாய் இரா நின்ற உபாயமானது
சோக நிவ்ருத்திக்கு சொல்லப் பட்டு இருந்தாலும்
அதற்கு அங்கமாக விதிக்கப்பட்ட சர்வ தர்ம த்யாகம் பண்ணப் போகாமையாலும்
ஆர்த்தி இல்லாமையாலும்
ஆகிஞ்சன்யம் இல்லாமையாலும்
மகா விசுவாசம் இல்லாமையாலும்
சர்வதர்ம த்யாகத்தை அங்கமாக யுடைய பிரபத்தியையும் செய்ய அசக்தனாய்-அசமர்த்தனாய் -இருக்கிற நான் –
துக்காகுல சீதாமி –
சோக விசிஷ்டனாய் தளரா நின்றேன்-

பூர்வார்த்தத்தில் சீதாமி -என்றும்
உத்தரார்த்தத்தில் த்ருடோச்மி-என்றும் சொன்ன இவற்றால்
தன்னை நோக்கும் அளவில் அவசாதமும்
எம்பெருமானை நோக்கும் அளவில் தந் நிவ்ருத்தி பூர்வகமான நிர்பரத்வ அனுசந்தானமும்
இவ்வதிகார்க்கு யாவாஜ் ஜீவனமும் அனுவர்த்திக்கும் -என்றது ஆயிற்று –

———————————————————————————–

ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ கோதா சதுஸ்லோகி –ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி -ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்தவை –

December 14, 2014

தனியன் –

சக்ரே கோதா சதுச்லோகீம் யோ வேதார்த்த பிரகர்ப்பிதம்
ஸ்ரீ வேங்கடேச சத்பக்தம் தம நந்தகுரும் பஜே-

——————————————————————————————————-

நித்யா பூஷா நிகம சிரஸாம் நிஸ் சமோத்துங்க வார்த்தா
காந்தோ யஸ்யா கசவிலு லிதை காமுகோ மால்ய ரத்னை
ஸூ க்த்யா யஸ்யா சுருதி ஸூ பகயா ஸூ ப்ரபாதா தரித்ரீ
சைஷா தேவீ சகல ஜனனீ சிஞ்சதாம் மாமபாங்கை–1

யஸ்யா-எந்த பிராட்டியினுடைய

நித்யா பூஷா நிகம சிரஸாம் –
உபநிஷத் துக்களுக்கு நித்ய பூஷணம்
யதுக்த்ய  ச்த்ரயீகண்டே யாந்தி மங்கள ஸூ த்திரம் -போலே

நிஸ் சமோத்துங்க வார்த்தா –
ஈடு இணை யற்ற ஒப்பு இல்லாத ஸ்ரீ ஸூ க்திகள்-

காந்தோ யஸ்யா –
யாவளுடைய காதலன் -கண்ணன் -எம்பிரான் –

கசவிலு லிதை காமுகோ மால்ய ரத்னை –
இவள் குழல்களில் சூடிக் களைந்ததால் பரிமளிதமான பூச் சரங்கள் அவனை பிச்சேற்ற வல்லவை –

ஸூ க்த்யா யஸ்யா சுருதி ஸூ பகயா –
வேதம் ஒதுபவனுடைய நலனைப் பேணும் இனிய சுபமான ஸ்ரீ ஸூ க்தி
திருப்பாவை ஜீயர் உகந்து நித்யம் அனுசந்திக்கும் ஸ்ரீ ஸூ கதிகள் –

ஸூ ப்ரபாதா தரித்ரீ-
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -அஜ்ஞ்ஞான இருளைப் போக்கும் ஸ்ரீ ஸூ கதிகள்

சைஷா தேவீ -சகல ஜனனீ -சிஞ்சதாம் மாமபாங்கை–
இத்தகு அகில ஜகன் மாதா உடைய குளிர்ந்த கடாஷத்தால் பிறக்கும் அமுத வெள்ளத்தில் நனைந்து
சகல தாபங்களும் போகப் பெற்றவனாக வேணும்

————————————————————————————————

மாதா சேத்துலசி பிதாயதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹான்
ப்ராத சேத் யதி சேகர  ப்ரியதம ஸ்ரீ ரெங்க தாமா யதி
ஜ்ஞாதார ஸ்தனயாஸ் த்வதுக்தி சரச ச்தன்யேன சம்வர்த்திதா
கோதா தேவி கதம் த்வமன்ய ஸூ லபா சாதாரணா ஸ்ரீ ரசி –2-

மாதா சேத்துலசி-
த்வ மாதா துளசி –
மே ஸூ தா -வேயர் பயந்த விளக்கு
ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கல்ப வல்லீ-

பிதாயதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹான்-
ஆழ்வார் திரு மகளாரார் ஆண்டாள்
பிராமண பாகவத உத்தமர் மஹான்  –

ப்ராத சேத் யதி சேகர –
நம் வார்த்தையை மெய்ப்ப்பித்தீரே கோயில் அண்ணரே
பெரும் பூதூர் மா முனிக்கு பின்னானாள்  வாழியே –

ப்ரியதம ஸ்ரீ ரெங்க தாமா –
அத்யந்த பிரியமானவன் அரங்கத்து அரவின் அணை அம்மான் -செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் –

ஜ்ஞாதார-
தத்வ ஹித புருஷார்த்தங்களை தெளிய அறிந்த பாகவத உத்தமர்கள்  –

ஸ்தனயாஸ்-
உமது மக்கள்
வாய் சொல் அமுதத்தையே தாய்ப்பாலாக பருகி வளர்ந்த ஜ்ஞானவான்கள்

தவ உக்தி ரச-
ரசம் மிகுந்த செவிக்கு இனிய செஞ்சொல் –

ச்தன்யேன –
ஆழி சங்குத் தமர்க்கு   என்று உன்னித்து எழுந்த தட முலைகள்
இவற்றின் நின்றும் பெருகிய வேதம் அனைத்தைக்கும் வித்தான திருப்பாவை –

சம்வர்த்திதா –
இந்த அமுத வெள்ளத்தை பருகி அத்தாலே வளர்ந்த –

கோதா தேவி கதம் த்வமன்ய ஸூ லபா சாதாரணா ஸ்ரீ ரசி-
ஒப்பில்லாத பெருமை படைத்த  நீர்
உம்முடைய வாக் ரசத்தை பருகி வளர்ந்தவர் அல்லாத மற்றையோர்க்கு
எப்படி கிட்டி உய்யும்படி சாதாரணமான எளிய புகலாவீர் –
கோதை தமிழ் ஐ யானதும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பே -ஸ்ரீ யை இழந்தவர்கள்
அன்றிக்கே
மற்றவர்க்கும் எளிதான புகலாய் இருக்கிறீர் எங்கனம் -வியப்பாகவுமாம்-

—————————————————————————————————-

கல்பாதௌ ஹரிணாஸ்வயம் ஜனஹிதம் த்ருஷ்ட்வேவ சர்வாத்மநாம்
ப்ரோக்தம் ஸ்வச்யச கீர்த்தனம் பிரபதனம் ஸ்வச்மை பிர ஸூ நார்ப்பணம்
சர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிசம் ஸ்ரீ தன்வி நவ்யே புரே
ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாமுதாராம் ஸ்துமே–3-

கல்பாதௌ –
நடக்கும் ஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில்

ஹரிணாஸ்வயம் –
பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் இடந்த எம்பெருமான் தன்னால்
ஸ்ரீ வராஹ நாயனாராக
மானமிலா பன்றியாய்
தன காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு ஹிதத்தை அருளிச் செய்ய வேண்ட
அவர்களுக்காக பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராதே-என்று
பிரசித்த மானவற்றை சொல்லுகிறது –

ஜனஹிதம் த்ருஷ்ட்வேவ சர்வாத்மநாம் ப்ரோக்தம் –
உலக மக்கள் உஜ்ஜீவனதுக்காக நாச்சியார் இடம் நல் வார்த்தையாய் அருளிச் செய்தவை –

ஸ்வச்யச கீர்த்தனம் பிரபதனம் ஸ்வச்மை பிர ஸூ நார்ப்பணம்
அஹம் ஸ்மராமி மாத பக்தம் –நயாமி பரமாம் கதிம் –
பரிவதில் ஈசனைப்பாடி –புரிவதுவும் புகை பூவே
அவன் பேரைப்பாடி
பூவை இட்டு
வணங்குதல்
புஷ்பம் பத்ரம் பலம் தோயம்
யேனகேநாபி பிரகாரேன-ஈரம் ஒன்றே வேண்டுவது
ஆராதனைக்கு எளியவன் –

சர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிசம்
சர்வேஷாம் அநிசம் பிரகடம் விடாதும் -யாவர்க்கும் தெரியச் சொன்ன –

ஸ்ரீ தன்வி நவ்யே புரே ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாமுதாராம் ஸ்துமே–
ஜாதாம் -வந்து திருவவதரித்தபடி
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை –
பண்ணு நான்மறையோர் புதுவை மன்னன் பட்டர்பிரான் கோதை –
வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் கோதை –
உதாராம் கோதாம்-
பாட வல்ல நாச்சியார் ஆக திருவவதரித்து பாட்டின் பெருமையை நாட்டுக்கு உபகரித்து அருளி
மாயனை –வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகம்
பங்கயக் கண்ணானைப் பாட
கோவிந்தா உந்தன்னைப் பாடி பறை கொண்டு
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய  ஔதார்யம்
ஸ்துமே-ஸ்துதித்துப்   பாடுவோம்– தொழுது வணங்குவோம்-

—————————————————————————————————-

ஆகூ தஸ்ய பரிஷ்க்ரியா மநுப மாமா சேஸ நம் சஷூ ஷோ
ஆனந்தச்ய பரம்பராம நுகுணாம் ஆராம சைலேசிது
தத்தோர்மத்ய க்ரீடகோடி கடித  ச்வோச்சிஷ்ட கஸ்தூரிகா
மால்யாமோத சமேதாத்ம விபதாம்   கோதாமுதாராம் ஸ்துமே –4-

ஆகூ தஸ்ய –
அவனுக்கு இஷ்டத்தைச் செய்து நிரதிசய ப்ரீதியை விளைவிப்பவள்

பரிஷ்க்ரியா மநுப மாமா சேஸ நம் சஷூ ஷோ –
அனுபமாம் -பரிஷ்க்ரியாம் -அழகு அலங்காரங்களால்
கண்களுக்கு நிரதிசய ஆனந்தத்தை விளைவிப்பவள் –

ஆனந்தச்ய பரம்பராம நுகுணாம் ஆராம சை
அணி மா மலர்ச் சோலை நின்ற
பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப குண-
ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா-

தத்தோர்மத்ய க்ரீடகோடி கடித  ச்வோச்சிஷ்ட கஸ்தூரிகா
மால்யாமோத
மத்ய -என்று திரு மார்பு –
திரு மங்கை தங்கிய சீர் மார்வற்கு-என்னாகத்து இளம் கொங்கை
விரும்பித் தாம் நாள் தோறும் பொன்னாகம் புல்குதற்கு
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து –
இவள் சூடிக்கொடுத்த பூ மாலையிலே திரு முடியிலே தரித்து
ஸூ க ஆனந்த பிரவாஹத்தில் மூழ்கி –

சமேதாத்ம விபதாம்   கோதாமுதாராம் ஸ்துமே
அவனைப் பிச்சேற்றி மகிழச் செய்வதால் இவள் பெருமை வளர்ந்து -சமேதிதம் –
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தேவியை ஸ்துதிக்கிறேன்-

———————————————————————————————-
இத்தால்
ஜனனியான தாய் மகிழ்வுற
அது கண்ட மாதவன் நம்மை உகந்து ஏற்பான் –

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூ ந்த்ர்யை கோதாயை நித்ய மங்களம் –

ச்வோச்சிஷ்ட மாலிகா பந்த கந்த பந்துர ஜிஷ்ணவே
விஷ்ணு சித்த தனுஜாயை  கோதாயை நித்ய மங்களம் –

மாத்ருசா கிஞ்சன த்ராண பத்த கங்கண பாணயே
விஷ்ணு சித்த தனுஜாயை  கோதாயை நித்ய மங்களம் –

——————————————————————————————–

ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி –

அநிசம் பஜதாம் அநந்ய பாஜாம் சரணாம் போருஹ மாதரேண  பும்ஸாம்
விரதந்நியதம் விபூதி மிஷ்டாம் ஜய ராமானுஜ  ரங்க தாம்நி நித்யம் –1-

தேவரீர் திருவடிகளைப் பற்றி வேறு புகல் இல்லாத அடியவர்களுக்கு
கேட்ட  விபூதியை அளித்துக்  கொண்டு
திருவரங்கம் பெரிய கோயிலிலே விஜய ஸ்ரீ யாக விளங்கக் கடவீர்
விஷயீ பவ ஸ்ரீ ராமானுஜ –

——————————————————————————————–

புவி நோவி ம்தான் த்வதீய ஸூ க்தி குலிசீ பூய குத்ருஷ்டி பிச்சமேதான்
சகலீகுருதே விபச்சிதீட்யா ஜய ராமானுஜ சேஷ சைல ஸ்ருங்கே –2-

தேவரீர் ஸ்ரீ ஸூ க்திகள் வஜ்ராயுதம் போலே குத்ருஷ்டிகள் போன்ற எதிரிகளை பொடி படுத்த –
வேதாந்த சங்க்ரஹம் -தேவரீர் அருளிச் செய்ததால் –
தேவரீர் திரு வேங்கட மா மலை உச்சியில் பல்லாண்டு விஜயீயாக விளங்க வேணும்
விஜயீபவ ஸ்ரீ ராமானுஜ-

——————————————————————————————–

ஸ்ருதி ஷூ ஸ்ம்ருதி ஷூ பரமான தத்வம்
க்ருபயா லோக்ய வி ஸூ த்தயாஹி புத்த்யா
அக்ருதாஸ்  ச்வத ஏவஹி பாஷ்ய ரத்னம்
ஜய ராமானுஜ ஹஸ்தி தாம்நி நித்யம் –3

ஸ்ருதி ஸ்ம்ருதி ஆராய்ந்து ஸ்ரீ பாஷ்யம் அருளி
ஸ்ரீ ஹஸ்தி கிரியில் நித்ய ஸ்ரீ யாக விளங்க வேணும்
ஜய விஜயீ பவ ஸ்ரீ ராமானுஜ –

———————————————————————————————

ஜய மாயி மதாந்தகார பாநோ
ஜய பாஹ்ய பிரமுகாட வீ க்ருஸா நோ
ஜய சம்ஸ்ரித சிந்து சீத பாநோ
ஜய ராமானுஜ யாதவாத்ரி ஸ்ருங்கே –4

பாஹ்யர்கள் மதத்தை எரித்து ஒழித்து அருளி
அடியார்கள் மனங்களை குளிரச் செய்து அருளி
யாதவாத்ரியில் நித்ய ஸ்ரீ யை வளரச் செய்து அருள்
ஜய விஜயீ பவ ராமானுஜ –

———————————————————————————————–

ராமானுஜ சதுஸ்லோகீம் யப்படேன் நியதஸ் சதா
ப்ராப் நுயாத் பரமாம் பக்திம் யதிராஜ பதாப்ஜயோ –

பல ஸ்ருதி
மேன்மேலும் பக்தி வளரப் பெறுவார்
ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் என்பதால் தக்க பலம் அடைவர் –

————————————————————————————————

ஸ்ரீ அநந்தார்யா மஹா குரவே நம–

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி -ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்த ஸ்லோகம்-

August 26, 2014

ஸ்ரீ திருமலைக்கு நித்ய புஷ்ப கைங்கர்யம் செய்து
ஸ்ரீ அனந்தாண் பிள்ளை என்கிற விருதும் பெற்று
ஸ்ரீ எம்பெருமானார் உடைய விஸ்லேஷம் பொறுக்க மாட்டாமல்
அருளிச் செய்த ஸ்லோகங்கள் –
கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயண புரம் ஆகிய
நான்கு திருப்பதிகளிலும் எம்பெருமானார் உடைய வெற்றிக்கு பல்லாண்டு பாடுவான இவை-

—————————————————————————————————————————————–

அநிசம் பஜதாம நன்ய பாஜாம்
சரணாம் போருஹ மாதரேண பும்ஸாம்
விதரன் நியதம் விபூதி மிஷ்டாம்
ஜய ராமாநுஜ ரங்க தாம்நி நித்யம்–1-

ஹே ராமாநுஜ –
எம்பெருமானாரே
உமது

 அநிசம் பஜதாம நன்ய பாஜாம்-சரணாம் போருஹ மாதரேண
சரணாம் போருஹம் ஆதரேண அநிசம் பஜதாம் அநந்ய பாஜாம்
திருவடித் தாமரையை அன்போடு
எப்போதும்
ஆஸ்ரயித்து இருக்கின்ற
அநந்ய கதிகளான அடியார்களுக்கு –
தேவு மற்று அறியேன் -போல்வாருக்கு

பும்ஸாம் இஷ்டாம் விபூதிம் நியதம் விதரன் சந ரங்க தாம்நி நித்யம் ஜய –
எந்த விபூதி இஷ்டமோ
அந்த விபூதியை திண்ணமாக அளித்துக் கொண்டு
பொன் உலகம் ஆளீரோ-என்றாப் போலே
திருஷ்ட அத்ருஷ்டங்களில் எதை வேண்டினாலும்
அதை அளித்துக் கொண்டு
திருவரங்கம் பெரிய கோயிலிலே
எஞ்ஞான்றும் வாழக் கடவீர் –
தந்தே ரங்கீ நிஜமபி பதம் தேசிகாதேச காங்ஷீ –நயாச திலகம் -தேசிகன் படியே
ஸ்வாமி நியமனம் இருந்தால் ஒழிய எம்பெருமான் முக்தி அளிக்க வல்லன் அல்லனே-

—————————————————————————————————————————————-

புவி நோ விமதான் த்வதீய ஸூக்தி
குலசீ பூய குத்ருஷ்டிபிஸ் சமேதான்
சகலீ குருதே விபச்சி தீட்யா
ஜய ராமாநுஜ சேஷ சைலச்ருங்கே–2-

ஹே ராமா நுஜ –
எம்பெருமானாரே –

விபச்சித் ஈட்யா த்வதீய ஸூக்தி –
வித்வான்கள் போற்றத் தக்க தேவரீரது ஸ்ரீ ஸூக்தி யானது

குலிசீ பூய குத்ருஷ்டிபி சமேதான் ந விமதான் சகலீ குருதே –
வஜ்ராயுதம் போன்று இப் பூமியில் உள்ள
குத்ருஷ்டிகளுட்பட
நமது பிரதி பஷிகள் யாவரையும் பொடி படுத்துகின்றது
பாஹ்யா குத்ருஷ்த்யா இதி த்விதயேபி-ஆழ்வான்-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
இருவகைப் பட்ட விபர்ஷர்களையும் தமது திவ்ய
ஸூக்தி களால் கண்டித்து ஒழித்து அருளா நின்ற ஸ்வாமி

சேஷ சைல ச்ருங்கே ஜய –
இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த ஸ்ரீ ஸூக்திகளை அருளிய தேவரீர்
திருவேங்கட மலை யுச்சியில் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக
பல்லாண்டு பல்லாண்டாக வாழ்ந்து  அருள வேணும் –

—————————————————————————————————————————————–

ஸ்ருதிஷூ ச்ம்ருதிஷூ பிரமாண தந்த்வம்
க்ருபயா லோகய விசுத்ததயா ஹி புத்த்யா
அக்ருதாஸ் ச்வத ஏவ பாஷ்யரத்னம்
ஜய ராமாநுஜ ஹஸ்திதாம்நி நித்யம்–3-

ஹே ராமானுஜ –
எம்பெருமானாரே –

ஸ்வத ஏவ க்ருபயா –
நிர் ஹேதுக கிருபையினாலே –

விசுத்தயா புத்த்யா ஸ்ருதிஷூ ச்ம்ருதிஷூ -பிரமாண தத்தவம் ஆலோக்ய பாஷ்ய ரத்னம் அக்ருதா –
சுருதி ஸ்ம்ருதி பிரமாண
உண்மையை யாராய்ந்து
மாசற்ற மதியினால்
மிகச் சிறந்த ஸ்ரீ பாஷ்யத்தை
அனுக்ரஹித்து அருளிற்று –

நித்யம் ஹஸ்திதாம்நி ஜய –
இப்படிப் பட்ட தேவரீர் ஸ்ரீ ஹஸ்திகிரியில்
நித்ய ஸ்ரீ யாக விளங்க வேணும்
தென் அத்தியூர் கழலிணைக் கீழ்
பல்லாண்டு பல்லாண்டாக விளங்கி அருள வேணும்
என்றார் ஆயிற்று-

—————————————————————————————————————————————–

ஜய மாயிம தாந்த காரபாநோ
ஜய பாஹ்ய பிரமுகாட வீக்ருசாநோ
ஜய சம்ச்ரித்த சிந்து சீத பாநோ
ஜய ராமாநுஜ யாதவாத்ரி ச்ருங்கே –4-

மாயிமத அந்தகார பா நோ –
மாயா வாதிகளின் மாதங்கள் ஆகிற
இருளுக்கு இரவி போன்றவரே

பாஹ்ய பிரமுக அட்வீ க்ருசாநோ –
பாஹ்யர்கள் முதலானவர்கள் ஆகிற
காட்டுக்குத் தீ போன்றவரே –

ஸம்ச்ரித சிந்து சீத பாநோ –
அடியார்கள் ஆகிற கடலுக்கு
சந்தரன் போன்றவரே –
கடல் சந்த்ரனைக் கண்டு பொங்குவது போலே
அடியார்களும் ஸ்வாமியை சேவித்தவாறே
வருத்தம் எல்லாம் தீர்ந்து மகிழ்ந்திடுவார்கள்

ராமானுஜ –
எம்பெருமானாரே –

யாதவாத்ரி ச்ருங்கே ஜய ஜய ஜய ஜய –
தேவரீர் யாதவாத்ரியில்
நித்ய ஸ்ரீ யாக
நீடூழி விளங்க வேணும்-

—————————————————————————————————————————————–

ராமாநுஜ சதுச்ச்லோகீம் யா படேன் நியதஸ் சதா
ப்ராப்நுயாத் பரமாம் பக்திம் யதி ராஜ பதாப் ஜயோ-

நித்ய அனுசந்தேயமாக நிருமிக்கப் பட்ட
இந்த ராமாநுஜ சதுச் ச்லோகியையை
நியமத்துடன் நித்ய அனுசந்தானம் பண்ணுவார்க்கு
எம்பெருமானாரது திருவடித் தாமரைகளிலே
பக்தி மிகுதியே
கை கண்ட பலனாம் என்று
பயன் உரைத்துத்
தலைக் கட்டினார் ஆயிற்று –

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தாடி பஞ்சகம்-

August 26, 2014

ஸ்ரீ எம்பெருமானார் உடைய வெற்றிச் செல்வத்தை
பேசுகின்ற ஐந்து ஸ்லோகங்கள்
கூரத் ஆழ்வான் அருளிச் செய்தது என்பர் சிலர்-
ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலான ஐவர் அருளிச் செய்தவை என்பார் சிலர் –

————————————————————————————————————————-

பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹாநச் சார்வாக சைலாசநி
பௌத்த த்வாந்த நிராச வாசரபதிர் ஜைநே பகண்டீரவ
மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் தரை வித்ய சூடா மணி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமாநுஜோயம் முநி–1-

1-பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹாந-
பாஷண்டர்களாகிற வ்ருஷ சமூஹங்களுக்குக் காட்டுத் தீ போன்றவரும் –

2-சார்வாக சைலாசநி –
சார்வாக மதஸ்தர்களாகிற மலைகளுக்கு இடி போன்றவரும் –

3-பௌத்த த்வாந்த நிராச வாசரபதிர்-
பௌத்தர்கள் ஆகிற இருளுக்கு இரவி போன்றவரும் –

4-ஜைநே பகண்டீரவ –
ஜைனர்கள் ஆகிற யானைகளுக்கு சிங்கம் போன்றவரும் –

5-மாயாவாதி புஜங்க பங்க கருடஸ்-
மாயாவாதிகள் ஆகிற சர்ப்பங்களுக்கு கருடன் போன்றவரும்-

6-த்ரை வித்ய சூடா மணி –
பரம வைதிகர்களுக்கு சிரோமணி யானவரும் –

7-ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமாநுஜோயம் முநி –
ஸ்ரீ ரெங்க நாதனுடைய சர்வாதிசயங்களையும் சேமித்து அருளினவருமான
இந்த ஸ்ரீ ராமா னுச முனிவர்
சர்வ உத்கர்ஷ சாலியாக
விளங்குகின்றார் –

ஏழு விசேஷணங்கள்-
அறுசமயச் செடியதனை யடி யறுத்தான் வாழியே
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்
சூனிய வாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம் யெம்மிராமானுச முநி போந்த பின்னே –

பரம நாஸ்திகர்கள் -பாஷண்டர்கள்
மேலே விசேஷித்து
சார்வாகர் ஜைனர் மாயாவாதிகள்
சார்வாகர் -கண்ணால் கண்டது ஒன்றே பிரமாணம் -என்பர்
கதிரவன் குண திசைச் சிகரம் வந்து அணைந்தான் -என்றவாறே கனவிருள் அகன்றதே
ஸ்வாமி திருவவதரித்த பின்பு பௌத்த மதம் தொலைந்ததே
வலி மிக்க சீயம் -ஜைன மத யானைகளை மாய்த்து ஒழித்தார்

மாயாவாதி –
பிரபஞ்சம் எல்லாம் மாயா விலசிதம் –
த்ருச்யம் மித்தா திருஷ்டி கர்த்தாச மித்தா தோஷா மித்தா –
கருத்மான் நிழல் பட்டு அரவங்கள் மாய்ந்து போம் போலே –
பரம வைதிகர்கள் குலாவும் பெருமான் ராமானுஜர் -பரமை காந்திகளுக்கு சிரோ பூஷணம்
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் வுவந்திடு நாள்
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யை அனுதினம் அனுபத்ரவமாக சேமித்து அருளி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜம் என்று விருது சாற்றப் பெற்றவர் –
ஆக இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த
எம்பெருமானார்
பல்லாண்டு பல்லாண்டாக
வாழ்ந்து அருளா நின்றார் -என்றது ஆயிற்று-

—————————————————————————————————————————————–

பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா
ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா
வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா
ராமாநுஜஸ்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா —-2-

1-பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா –
பாஷண்டத் திரள்கள் ஆகிற
மலைகளைக் கண்டிப்பதில்
வஜ்ர தண்டம் போன்றவையும் –

2-ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா –
வைதிக மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்கிற
ப்ரசன்ன பௌத்தர்களாகிற-
கடல்களை கலக்குவதற்கு உரிய-மந்தர மலை போன்ற –
மாத் தடிகள் போன்றவையும் –

3-வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா –
வேதாந்த சாரப் பொருள்களை
எளிதாகக் காட்டும் தீப தண்டங்கள் போன்றவையுமான –

4-ராமாநுஜஸ்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா –
எம்பெருமானாரது த்ரி தண்டங்கள்
அழகியவாய் விளங்குகின்றன –

சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
எம்பெருமானார் பக்கலிலே சொல்ல வேண்டிய
பெருமையையே
த்ரி தண்டத்தின் மேல் ஏற்றிச் சொல்லுகிறது –
சங்கர பாஸ்கர  யாதவ பாட்ட பிரபாக ராதிகள்
ப்ரசன்ன பௌத்தர்கள் எனப் படுகிறார்கள்
அவர்கள் பிரகாச பௌத்தர்கள்
இவர்கள் ப்ரசன்ன பௌத்தர்கள்
சங்கல்ப சூர்யோதத்தில் –யதி பாஸ்கர யாதவ ப்ரகாசௌ-என்று தொடங்கி-
சொன்ன ஸ்லோகம் இங்கே அனுசந்தேயம்
ஸ்வாமி இவர்களை எல்லாம் பாற்றி அருளினார் –

நாராயணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது-
வேதாந்த தத்வ அர்த்தங்களை எல்லாம்
உள்ளவாறு கண்டு வெளியிட்டு அருளினார்-

பிள்ளை பெருமாள் ஐயங்கார்-ஐங்கோலும் ஒரு கோலும் நீர்க்கோலம் போல் –ஆக்கி
பஞ்ச பாணனுடைய ஆஜ்ஞ்ஞையும்
ஏக தண்டிகளுடைய ஆரவாரத்தையும்
ஒழித்து செங்கோல் செலுத்தி விளங்கா நின்றது
என்றது ஆயிற்று-

—————————————————————————————————————————————–

சாரித்ரா உத்தார தண்டம் சதுர நய பத அலங்கரியா கேது தண்டம்
சத்வித்யா தீப தண்டம் சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம்
த்ரயந்த ஆலம்ப தண்டம் த்ரிபுவன விஜயச்சத்ர சௌவர்ண தண்டம்
தத்தே ராமா நுஜார்யா ப்ரதிகதக சிரோ வஜ்ர தண்டம் த்ரிதண்டம் –3-

1-சாரித்ரா உத்தார தண்டம் –
நன்னடத்தைகளை உத்தாரம்
செய்ய வல்ல வேத்ர தண்டம் போன்றதும் –
உலகில் உபாத்த்யாயர்கள் சிஷ்யர்களுக்கு
ஞான அனுஷ்டானங்களை சிஷிப்பதற்கு
கையிலே வேத்ர தண்டத்தை வைத்து இருப்பது உண்டே –

2-சதுர நய பத அலங்கரியா கேது தண்டம்
நல்ல நீதி மார்க்கத்தை
அலங்கரிக்க வல்ல த்வஜ தண்டம்
போன்றதும் –
நியாய மார்க்க பிரதிஷ்டாபகர் –
உபய மீமாம்சை நியாயங்கள் எல்லாம் சிறிதும் நிலை குலையாமல் ஸூ ரஷிதம் ஆக்கி அருளினவர்

3-சத்வித்யா தீப தண்டம் –
சத்வித்யா முதலான -ஆஷி வித்யா -வைச்வா நர வித்யா -உபகோசல வித்யா போன்ற
வேதாந்த வித்யைகளை நன்கு காண்பதற்கு உரிய
தீப தண்டம் போன்றதும்
அன்றிக்கே
சத்வித்யா -மிக வுயர்ந்த வித்யையான உபநிஷத்தை சொன்னதாகவுமாம்
மோஷ சாதனமான வித்யை தானே சத்வித்யை -சா வித்யா யா விமுக்தே –

4-சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம் –
சகலவித கலி கோலாஹலங்களையும்
சம்ஹரிப்பதற்கு உரிய
யம தண்டம் போன்றதும் —
கலியும் கெடும் கண்டு கொண்மின் –
கடலள்வாய திசை ஏட்டின் உள்ளும் கலி இருளே மிடை தரு காலத்திலேயே
மிக்க நான்மறையின் சுடர் ஒளியால் அவ்விருளைத் துரந்தவர் நம் ஸ்வாமி

5-த்ரயந்த ஆலம்ப தண்டம் –
தளர்ந்த வேதங்களுக்கு கைப்பிடி கொடுக்க வல்ல
தடி போன்றதும்

6-த்ரிபுவன விஜயச்சத்ர சௌவர்ண தண்டம் –
மூ வுலகங்களையும் வென்று
தாங்குகின்ற
கொற்றக் குடைக்கு ஸ்வர்ண தண்டம் போன்றதும் –
மூ வுலகங்களையும் தன திருவடிக் கீழ் இட்டுக் கொண்டமைக்கு ஈடாக
தாங்கி நிற்கும் கொற்றக் குடைக்கு இட்ட மணிக் காம்பு போன்றது
7-ப்ரதிகதக சிரோ வஜ்ர தண்டம்-
பிரதிவாதிகளின் தலை மேலே விழும்
வஜ்ர தண்டம் போன்றதுமான –

தத்தே ராமா நுஜார்யா -த்ரிதண்டம்
திவ்ய த்ரி தண்டத்தை
ஸ்வாமி தம் திருக் கையிலே ஏந்தி உள்ளார் –
முக்கோல் பிடித்த முநி
ஆக இப்புடைகளில் உல்லேகிக்கும் படி அமைந்த
த்ரிதண்டத்தின் பெருமை கூறிற்று-

—————————————————————————————————————————————–

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் த்ரியுக பத யுக ஆரோஹண அவலம்ப ஸூத்ரம்
சத்வித்யா தீப ஸூத்ரம் சகல கலிகதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம்
ப்ரஜ்ஞா ஸூத்ரம் புதாநாம் ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம்
ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்–4-

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் –
1-வேத மாதுக்கு மங்கள ஸூ த்ரம் போன்றதும் –
ஜகத் அநீஸ்வரம் அன்று அநேகஸ்வரமும் அன்று ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே ஈஸ்வரன் -என்று நிர்ணயித்து அருளினாரே

2-த்ரியுக  பத யுக ஆரோஹண அவலம்ப ஸூத்ரம்-
ஷாட் குணிய பரி பூர்ணனான பகவானுடைய அடி இணையைச் சென்று
கிட்டுவதற்கான அவலம்ப ஸூ த்ரம் போன்றதும் –
த்ரியுகன் -எம்பெருமான் திரு நாமம் உண்டு இறே
ஞான சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ்
அவன் பாதாரவிந்தங்கள் அடைய இவரைப் பற்ற வேணும் இறே
த்ரியுகபத -அர்ச்சிராதி கதி என்னவுமாம்
த்ரியுக யுக பத என்ற பாட பேதம்
த்ரியுக =6
அத்தை இரட்டித்து 12
முக்தோர்ச்சிர் தின பூர்வ பஷ-என்றும்
நடை பெற வாங்கி பகல் ஒளி நாள் -என்றும்
அர்ச்சிராதிகள் 12 உண்டு இறே –

3-சத்வித்யா தீப ஸூத்ரம் –
உபநிஷத் ஆகிற திரு விளக்கு எரிவதற்கான
திரி நூல் போன்றதும் –

4-சகல கலிகதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம் –
சகல கலி கோலா ஹங்களையும்
மாய்ப்பதற்க்கான கால பாசம்
போன்றதும் –

5-புதாநாம் ப்ரஜ்ஞா ஸூத்ரம் –
பண்டிதர்கள் உடைய மேதையை வளர்க்கும்
மீமாம்ஸா ஸூத்ரம் போன்றதும் –
முப்புரி நூலும் மார்புமான அழகாய் சேவித்தவாறே
அடியார்களுக்கு ப்ரஜ்ஞா விகாசம் உண்டாகும்
பிரஜ்ஞ்ஞா -என்கிற இடத்தில்
ச்ம்ருதிர் வ்யதீத விஷயா மதிராகாமி கோசரா புத்திஸ் தாத்காலிகீ
ப்ரோக்தா ப்ரஜ்ஞா த்ரைகாலிகீ மாதா -ஸ்லோகம் அனுசந்தேயம்

6-ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம் –
யோகிகளின் உள்ளம் ஆகிற தாமரையோடைக்கு நாள ஸூத்ரம் போன்றதும் –
எம்பார் அருளாள பெருமாள் எம்பெருமானார் போல்வார் –
திரு உள்ளத்தில் சிந்திக்குமது ஸ்வாமியின் யஜ்ஞ ஸூத்ரம் –என்றது ஆயிற்று

7-ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்
யஞ்ஞா ஸூத்ரமானது ஸ்வாமியின் திரு மார்பிலே திகழா நின்றது
உபவீதிந மூர்த்வ புண்ட்ரவந்தம்-என்றும்
விமலோபவீதம் -என்றும்

ஸ்வாமி ப்ரஹ்ம ஸூத்ரம் அணிந்து கொண்டு இருக்கும் அழகைச்
சிந்தித்த மாத்ரத்திலே வீடு பெறுவார்கள் என்றது ஆயிற்று-

—————————————————————————————————————————————–

பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி
ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ
ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ—5

1-பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி –
பாஷண்டர்களாகிற கடலின்
கொந்தளிப்பை யடக்கும்
விஷயத்தில்
பாடபாக்நி போன்றவரும் –
அவர்களுடைய பொங்குதலை அடக்கி ஒழித்தவர்
படபா –என்று பெண் குதிரைக்கு பெயர்
கடலின் இடையிலே ஒரு பெண் குதிரை இருப்பதையும்
அதன் முகத்திலே நெருப்பு ஒரு காலும் அவியாது இருப்பதையும்
மழை நீர் முதலியவற்றால் கடல் பொங்காத படி
அதிகமாய் வரும் நீரை அது உறிஞ்சி நிற்பதாகவும்
அதுவே பிரளய காலத்துக் கடலில் நின்றும் வெளிப்பட்டு
உலகங்களை எரித்து அளிப்பதாகவும்
புராணங்கள் கூறும் –

2-ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ –
ஸ்ரீ ரங்க நாதனுடைய
திருவடித் தாமரைகளிலே
பரம பக்தி யுக்தரும் –

3-ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள
திரு மா மணி மண்டபத்தைச் சேரும்
வழியைத் தந்து அருள்பவரும் –

4-ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ –
யதிகளுள் மிகச் சிறந்தவருமான
எம்பெருமானார்
சர்வ உத்கர்ஷ சாலியாக விளங்கா நின்றார்

தென்னரங்கன் கழல் சென்னி வைத்து
நீசச் சமயங்களை நீக்கி
அடியார்க்கு உஜ்ஜீவன உபாயம் காட்டி
அருளா நின்ற எம்பெருமானார்
சகல வைபவங்களும் பொலிய வாழ்ந்து அருளா நின்றார் என்றது ஆயிற்று –

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எம்பார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலி ஆண்டான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத் ஆழ்வான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பராங்குசாஷ்டகம்–

August 26, 2014

ஸ்ரீ கூரத் ஆழ்வான் -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் அருளியவை முதல் இரண்டு ஸ்லோகங்கள்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில் அருளியது மூன்றாவது ஸ்லோகம்
அடுத்த நான்கு ஸ்லோகங்கள் பூர்வருடைய முக்தங்கள்-விடுதி ஸ்லோகங்கள்
இறுதி ஸ்லோஹம் ஸ்ரீ மணவாள மா முனிகளின் பூர்வாச்ரம திருப் பேரரான
ஆச்சார்ய பௌத்ரர் என்றே பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜீயர் நாயனார் அருளிச் செய்தது -நக்ஷத்ர மாலிகா ஸ்லோகம் –

நாதனுக்கு நாலாயிரம் அருளினான் வாழியே -823-நாத முனிகள்
மணக்கால் கிராமம்-லால்குடிக்கு அருகில் –
இடைச்சங்க காலம் –5000-ஆழ்வார்கள் -முதல் சங்கம் -1000-/ கடைச்சங்கம் -2000-வருஷங்களுக்கு முன்
இடைப்பட்ட காலம் இருளான காலம் -3600–நாலாயிரம் நடையாடாமல் –
அனுபவம் முக்கியம் உபதேசம் இரண்டாம் பக்ஷம் ஆழ்வார்களுக்கு –
உபதேசம் பிரதானம் -அனுபவம் இரண்டாம் பக்ஷம் ஆச்சார்யர்களுக்கு
யோகாசனம் -யோகம் ஆத்மாவுக்கு ஆசனம் தேகத்துக்கு -பதஞ்சலியும் ஆதி சேஷன் அம்சம்
வகுள மாலை -தாமம் துவளமோ வகுளமோ -நான்கு கேள்விகளில் இதுவும் ஓன்று –

சேமம் குருகையோ செய்ய திருப் பாற் கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோ
தோளும் இரண்டோ நான்கும் உளதோ பெருமாள் உனக்கு –
தாமம் துளவமோ வகுளமோ

ஸ்ரீ வடிவு அழகிய நம்பி திருக் குறுங்குடி நம்பியே அன்றோ இவர் -இது அன்றோ இச் சங்கைகளுக்கு அடி
மகிழ் மாலை மார்பினன் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -உபகார வஸ்து கௌரவம் -சஜாதீயர் –
சபரி கொடுத்ததை பெருமாள் மறுக்க முடியாமல் ஸ்வீகரித்தது ஆச்சார்யர் நியமனம் படி கொடுத்ததாலே தானே –
உறாமை யோடே உற்றேன் ஆகாமைக்கு இந்த பக்தாம்ருதம் வழங்கி அருள தானே –
நாடு திருந்த -பிரபந்தம் தலைக்கட்ட -நச்சுப் பொய்கை ஆகாமைக்கா -ருசி வளர்க்க -காதலை பெருக்க வேண்டுமே
ஆர்த்தி அதிகார பூர்த்தி-தன் குழந்தையை பட்டினி போட்டு தொண்டர்க்கு அமுது உண்ண அருளப் பண்ணி –
துணைக் கேள்வி இன்பம் பயக்க எழில் மாதரும் தானும் -ஸ்ரீ ராமாயணம் -ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் போலே தனிக் கேள்வி இல்லையே
அவனாலே அவனைத் தானே அடைதல் -அருளிச் செயல் சாரம் –

—————————————————————————————–

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பத்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத் வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் சம்ஸ்ரயேம வகுளா பரணாங்க்ரி யுக்மம் –1-

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத் –
யாதொரு நம் ஆழ்வார் திருவடி இணையானது
பரம வைதிகர்களுடைய-வேதாந்திகள்-மதுர கவி ஆழ்வார்-நாத யமுன யதிவராதிகள்- போல்வார் –
முடிக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ –
(ஸ்ரீ சடகோபருடைய சடாரி -ஸ்ரீ ராமானுஜன் சாதியுங்கோள் பிரார்த்தனை-ஆழ்வார் திருநகரில் –
மாறன் அடி பணிந்து உய்ந்தவர் என்பதால் மற்ற இடங்களில் ஸ்ரீ மதுரகவி சாதியுங்கோள் பிரார்த்தனை
ஸ்ரீ முதலியாண்டான் சாதிக்க பிரார்த்தனை -ஸ்ரீ ராமானுஜர் சடாரிக்கு எங்கும் –
திருவேங்கடத்தில் மட்டும் ஸ்ரீ அனந்தாழ்வான் சாதிக்க பிரார்த்தனை )

சம்பத்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம் யத்
யாதொரு திருவடி இணையே சர்வ காலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமுமாக இருக்கின்றதோ –
உரு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும் -செந்தமிழ் ஆரணமே என்று –இத்யாதி

யத் வா சரண்யம் அசரண்ய ஜனச்ய
யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றில்லாதவர்களுக்குத் தஞ்சமாய் இருக்கின்றதோ –

புண்யம் தத் சம்ஸ்ரயேம வகுளா பரணாங்க்ரி யுக்மம் –
அப்படிப் பட்ட பரம பாவனமான ஸ்ரீ நம் ஆழ்வாரது திருவடி இணையை ஆஸ்ரயிக்கக் கடவோம்

ஸ்ரீ ஆளவந்தார் -மாதா பிதா யுவதய -ஸ்லோகத்தில் சர்வ ஸ்வ மாகத் துதித்து
அவற்றை ப்ரணமாமி மூர்த்தா -என்று தலையால் வணங்குவதாக அருளிச் செய்த படியே முதல் பாதம்

தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று -என்றதை
நோக்கி இரண்டாவது பாதம் பணித்தது

சர்வ லோக சரண்யனான ஸ்ரீ எம்பெருமானாலும் கை விடப் பட்டவர்களுக்கு
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே தஞ்சம் என்கிறது மூன்றாவது பாதம் –
(நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் கை விட்ட அதுவே காரணமாக –புன்மையாக கருதுவார்கள் ஆதாலால் –
கைப்பிடித்து அருளினார் )

————————————————————————–

பக்தி பிரபாவ பவத் அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சார ரசௌக பூர்ண
வேதார்த்த ரத்ந நிதி அச்யுத திவ்ய தாம
ஜியாத் பராங்குசபயோதி அஸீமபூமா-–2-

பக்தி பிரபாவ பவத் அத்புத பாவ பந்த சந்துஷித ப்ரணய சார ரசௌக பூர்ண –
பக்தியின் கனத்தால் உண்டாகிய
ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப் பட்ட
சிறந்த ப்ரணயம் ஆகிற
தீர்த்த பிரவாஹத்தாலே
நவரச சமூஹத்தாலே
நிறைந்ததாயும் –
காதல் -வேட்கை -அன்பு -அவா /-பர பக்தி பர ஞானம் பரம பக்தி -பிரணயம் -அவஸ்தைகள் –
ஞாதும் த்ரஷ்டும் பிரவேஷ்டும் -ஸ்ரீ கீதை /-ஞானம் தர்சனம் பிராப்தி -நாயனார் –
காதல் கடல் புரைய விளைத்த காரமர் மேனி –பேர் அமர் காதல் -பின் நின்ற காதல் -கழிய மிக்கதோர் காதல் -5-3/4/5-
அவா -சூழ்ந்து -பாழ்-பிரகிருதி -அதனில் பெரிய -பர நல் மலர் ஜோதி -சுடர் ஞான இன்பம் மூன்றையும் விஞ்சி

சிருங்கார -வீர- கருணை -அத்புத ஹாஸ்யம் -பாயா நகம் -ரௌத்ரம் – பீபஸ்த -சாந்தி- பக்தி -நவ ரச சமூஹத்தாலே-
பக்திஸ்த ஞான விசேஷம் -பக்தி ரூபா பன்ன ஞானம் / மதி நலம் -ஞானம் முதிர்ந்த பக்தி அருளி
ப்ரபன்னனுக்கு கர்மம் கைங்கர்யத்தில் புகும் / ஞானம் ஆத்ம ஸ்வரூபத்தில் புகும் / பக்தி பிராப்பிய ருசியில் புகும்
காற்றையும் கழியையும் கட்டி அழ கொண்ட பெரும் காதலுக்கு பக்தி வரம்பு இல்லையே
சிருங்கார ரசம் -பிரணய ரோஷம் -என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ
அத்புத ரசம் – மாயா வாமனனே – -வியந்து -கண்ணனை கூவுமாறு அறிய மாட்டேன் -பால் என்கோ
பயம் -ஐவர் திசை திசை வலித்து எத்துகின்றனர்

வேதார்த்த ரத்ந நிதி அச்யுத திவ்ய தாம ஜியாத் பராங்குசபயோதி அஸீமபூமா –
வேதப் பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும்
ஸ்ரீ எம்பெருமானுக்கு திவ்யமான
அளவில்லாத பெருமையை யுடைதாயும் இருக்கிற
ஸ்ரீ நம் ஆழ்வார் ஆகிற கடல் நெடுநாள் வாழ வேணும்-
மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளம் –புகுந்து கல்லும் கனை கடலும் புல்லென்று ஒழியும் படி –
வாய்க்கும் குருகை திரு வீதி எச்சில் உண்ட நாய்க்கு பரம பதம் -இந்த பேய்க்கும் இடம் அளித்தால் பழுதோ-ஞானத் தமிழ் கடலே –
இந்த பிரார்த்தனை ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் இடம் இல்லை -ஸ்ரீ நம்மாழ்வார் இடம் –
பெருமான் மகுடம் சாய்க்கும் வண்ணம் பாடும் -இன்பம் பயக்க -இத்யாதி-மிதுனத்தில் கேள்வி

பக்தாம்ருதம் -தனியனில்
நமாம் யஹம் திராவிட வேத சாகரம் -என்று
ஸ்ரீ திருவாய்மொழியைக் கடலாகக் கூறினார் முன்னோர்
நதி நாம் சாகரோ கதி -பல நதிகளும் கடலிலே சேருவது போலேயும்
ரத்னங்கள் நிறைந்த கடல் போலேயும்
பக்தின் கனத்தால் தோன்றிய அற்புதமான அபிப்ராய விசேஷங்கள் கொண்டு
பல பல படியாக பேசும் முகத்தாலே
நவ ரசங்களும் பொதிந்து இருப்பார்

சிருங்கார வீர கருண அத்புத ஹாஸ்ய பயாநக ரௌத்ர பீ பத்ஸ பக்தி ரஸங்களாலே பூர்ணர்

உயர்வற உயர் நலம் -வீடுமின் முற்றவும் -பத்துடை அடியவர்க்கு எளியவன் -பிறவித் துயர் அற -பொரு மா நீள் படை –பக்தி ரஸம்
அஞ்சிறைய மட நாராய் -மின்னிடை மடவார் -வேய் மரு தோளிணை -இவற்றில் அத்புத பாவ பந்த சந்துஷித ப்ரணய ரஸம்
நவ ரசங்களுள் ஸ்ருங்கார வீர கருண அத்புத ஹாஸ்ய பயாநக சாந்தி ரௌத்ர பீ பத்ஸ பக்தி ரஸங்களாலே
பிரதானமாகப் பொதிந்து மறைய நின்றும் உள்ள பல திருவாயமொழிகள் உண்டே

மாயா வாமனன் -புகழு நல் ஒருவன் -நல் குரவும் செல்வமும் –அத்புத ரஸம் பொலிந்து இருக்குமே
உண்ணிலாய ஐவரால் -பயாநக ரஸம்
ஊர் எல்லாம் துஞ்சி -வாயும் திரை யுகளும் -ஆடியாடி அகம் கரைந்து இத்யாதிகளில் கருணா ரஸம்
குரவை ஆய்ச்சியாரோடு -வீற்று இருந்து ஏழு உலகம் -வீர ரஸம்
இவ்வாறு ரஸவ்க பரிபூர்ணராய் ஆழ்வார்

த்ரை குண்ய விஷயா வேதம் போல் இல்லாமல்
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது ஸூத பிரான் அடி மேல் -சார தர்மமான பொருள்களே பொதிந்த ரத்ன நிதி

அஸீம பூமா -ப்ருஹத்வம் —ப்ருஹத்வஞ்ச ஸ்வரூபேண குணைச் ச -ஆகாரத்தாலும் குணத்தாலும் த்விதம்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -கிருபா குணம் ஒன்றின் பெருமையே போதுமே

கடல் ரத்னாகாரம்
ஸ்ரீ ஆழ்வார் வேதப் பொருள்கள் ஆகிற ரத்னங்களுக்கு பிறப்பிடம்–
கடல் ஸ்ரீ எம்பெருமான் உறைவிடம்
ஸ்ரீ ஆழ்வாரும் -ஒண்  சங்கதை வாழ் ஆழியான் ஒருவன் அடியேனுள் உள்ளானே -என்கிறபடி
தம்முள் ஸ்ரீ எம்பெருமானைத் தாங்கி நிற்பவர் –
கடல் அளவு கடந்த பெருமை யுடையது -அது ஆகார வைபுல்யம்
ஸ்ரீ ஆழ்வார் சிறந்த குணங்களால் பெருமை வாய்ந்தவர்
ஆக இப்படிகளாலே கடல் என்னத் தகுந்த ஸ்ரீ ஆழ்வார் வாழ்க-

————————————————————————————————-

ருஷிம் ஜூஷாமஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவ உதிதம்
சஹஸ்ர சாகாம் யோத்ராஷீத் த்ராமிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம்–3-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -6-ஸ்லோகம்

ருஷிம் ஜூஷாமஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவ உதிதம்
யாவவொரு முனிவர் – ஆயிரம் பாசுரங்களை யுடையதான திராவிட ப்ரஹ்ம சம்ஹிதையை
சாஷாத் கரித்தாரோ-மந்த்ர த்ரஷ்டா ரிஷி
ஸ்ரீ கிருஷ்ண பக்தியே வடிவு எடுத்து அவதரித்தது என்னலாம் படியான
அந்த ஸ்ரீ சடகோப முனிவரை சேவிக்கிறோம்-
தத் குண சாரத்வாத் தத் குண விபதேசாத் -த்யாஜ்ய தேக வ்யாமோஹம் காட்டி அருளினான்
முனி மனன சீலர் /ரிஷி மந்த்ர த்ரஷ்டா -ரகஸ்ய த்ரயம் கண்டு அறிந்து உபதேசம் /கவி கிராந்தி தர்சி -தூரப் பார்வை

சஹஸ்ர சாகாம் யோத்ராஷீத் த்ராமிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம்
ஆயிரம் சாகைகள் உள்ள சாம வேதம் போலே ஆயிரம் பாசுரங்கள் கொண்ட ஸ்ரீ திருவாய்மொழி-
யோத்ராஷீத்-யகா அத்ராஷீத் -சாம வேதம் கண்டு அருளிச் செய்தார் அன்றோ
தஸ்ய உதித நாம- உத் கீதா விவரணம் -ஸ்ரீ திருவாய் மொழி -உயர்வற -பிறந்தார் உயர்ந்தே

வேங்கடத்துக்கு உறைவார்க்கு நம என்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே -திருமந்த்ரார்த்தம்
அகலகில்லேன் -த்வயார்த்தம்
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற –அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்-சரம ஸ்லோகார்த்தமே ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செயல்
வெண்ணெய் -ஸ்ரீ ஆழ்வார் -இரண்டு இடங்களிலும் -ஸ்ரீ கிருஷ்ணன் அபி நிவேசம்
குரவை ஆய்ச்சியர் -பதிகம் அனுபவம் -யாவர் எனக்கு நிகர் –
யுவ வர்ண க்ரமம்-அத்ரி–ஸ்ரீ தத்தார்யர் ப்ராஹ்மணர் / -ஸ்ரீ ஜமதக்கினி -ஸ்ரீ பரசுராமன் -ப்ராஹ்மண க்ஷத்ரியர் /
ஸ்ரீ ராமன் -ஷத்ரியன் / ஸ்ரீ கண்ணன் ஷத்ரியன் வைசியர் /கலி-நான்காவது யுகமும் நான்காவது வர்ணமும் வேளாளர் –

——————————————————————————————————

யத் கோ சஹஸ்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம்
நாராயணோ வசதி யத்ர ச சங்க சக்ர
யன் மண்டலம் ஸ்ருதி கதம் பிரணமந்தி விப்ரா
தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய—4-

யத் கோ சஹஸ்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம்
சூர்யனுடைய ஆயிரம் கிரணங்கள் வெளி இருளைப் போக்குவது போலே
யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் உடைய ஆயிரம் பாசுரங்கள்
பும்ஸாம் -சேதனர்களுடைய -சகல சேதனர்களுடையவும்
அகவிருளைத் தொலைக்கின்றனவோ -கோ -ஒளிக் காற்றை / பாசுரம்

நாராயணோ வசதி யத்ர ச சங்க சக்ர —
சூர்யன் இடத்தில்  நாராயணன் சங்கு சக்கரங்களோடு கூடி விளங்குவது போல்
அப்பெருமான் யாவறொரு ஸ்ரீ ஆழ்வார் இடத்தில்
அவ்விதமாகவே உறைகின்றானோ-
ஒண் சங்கதை — அடியேன் உள்ளான் அந்தாமத்து அன்பு செய்து -1-8-
திருவடி தொழும் உத்சவம் எங்கும் -திரு முடி சேவை திரு குருகூரில் மட்டும் விசேஷம் —
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீ ஆழ்வார் உச்சியில் –
ஒக்கலை நெஞ்சு தோள் கண் நெற்றி உச்சில் உளானே –1-9 -கிரமமாக
அத்யயன உத்சவத்தில் -திருவடி தொழும் உத்சவம் எங்கும் -ஆழ்வார் திரு நகரியில் மட்டும் திருமுடி சேர்ந்து சேவை உண்டே –
பொலிந்து நின்ற பிரான் -கைத்தல சேவை -ஆழ்வார் திருமுடிக்கு மேலே -திரு முடி சேவை –

ஆசு இல் அருளால் அனைத்து உலகும் காத்து அளிக்கும்
வாச மலராள் மணவாளன் -தேசு பொலி
விண்ணாட்டில் சால விரும்புமே வேறு ஒன்றை
எண்ணாதார் நெஞ்சத்து இருப்பு — ஸ்ரீ ஞான சாரம்-9-
அப்ராக்ருதமான தேச விசேஷத்தில் காட்டில் இவர்கள் ஹிருதயத்தில் இருப்பு தனக்கு அத்யந்த ரசாவஹமாய்
இருக்கையாலே இதிலே அத்யாதரத்தைப் பண்ணும் என்றதாயிற்று
யோ அநந்ய மனஸஸ் ஸூத்தா யேதா சயைக மநோ ரதா தேஷாம் மே
ஹ்ருதயம் விஷ்ணோர் வைகுண்டாத் பரமம் பதம் –என்று தானே அருளிச் செய்தான் இறே –

யன் மண்டலம் ஸ்ருதி கதம் பிரணமந்தி விப்ரா –
வேத ப்ரதிபாத்யமான சூர்ய மண்டலத்தை -விப்ரா-அந்தணர்கள் வணங்குவது போலே
யாவரொரு ஸ்ரீ ஆழ்வார் யுடைய திவ்ய ஸ்தலம்-மண்டலம்-திருக்குருகூர்- சேவிப்பட்ட யுடனே
பரம பாகவதர்கள் கை எடுத்துக் கும்பிடுகிறார்களோ –
தெற்கு திசை வீறு பெற்றதே ஆழ்வார் திருவவதாரத்தாலே
மண்டலம் -ஸ்ரீ நவ திருப்பதி பெருமாள் ஸ்ரீ ஆழ்வாரை சுற்றி –
ஜாமாதா-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் தானே பத்தாவது க்ரஹம்
இவன் இட்ட வழக்கு தானே –

தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய –
அப்படிப்பட்ட
ஸ்ரீ நம் ஆழ்வார் ஆகிற சூர்யனுக்கு வணக்கமாகுக–

ஆதித்ய
ராம திவாகர
அச்யுத பானுக்களுக்குப்
போகாத
யுள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகசியாத போதில் கமலம்
அலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே –ஆச்சார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்தி –

சூர்யன்
த்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்திய வர்த்தி
நாராயணஸ் சரசி ஜாசத சந்நிவிஷ்ட
கேயூரவான் மகர குண்டலவான்
கிரீடி ஹாரி
ஹிரண்யமயவபூர்
த்ருத சங்க சக்ர –
திவ்ய ஆபரண திவ்யாயூத பூஷிதனான நாராயணனை தன் பால் கொண்டவன்

ஸ்ரீ ஆழ்வாரும் –
கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண் பல் இலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேனுள் உள்ளானே –
அப்படிப்பட்ட ஸ்ரீ எம்பெருமானைத் தம்மிடத்தே கொண்டவர்-

ஸ்ருதி கதம்-
முச்சந்தியும் சந்த்யா வந்தன பிரகரணத்தில் அந்தணர்கள் வணங்குகின்றார்கள்
சுருதி -காது
ஸ்ரீ திருவழுதி வள நாடு -ஸ்ரீ திருக் குருகூர்
சொல்லக் காதில் விழுந்தவாறே
பாகவதர்கள் அனைவரும் கை கூப்பி வணங்குவார்கள் இறே
ஆக
இவ்வகைகளால் பாஸ்கரன் என்னத் தக்க ஸ்ரீ ஆழ்வாரை வணங்குவோம் -என்றதாயிற்று-

——————————————————————————————–

பத்யுச் ஸ்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம்
ப்ரபன்ன ஜன கூடஸ்தம் ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம்—–5-

பத்யுச் ஸ்ரிய பிரசாதேன
ஸ்ரிய பத்யு பிரசாதேன –
திருமால் திருவருளால் –
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் –
பெரும் கேழலார் -ஒருங்கே -எங்கும் பக்க நோக்கம் அறியாமல் அன்றோ ஆழ்வார் மேலே –
பெரும் கண் புண்டரீகம் பிறழ வைத்து அருளினார்
பண்டை நாள் -உன் திருவருளும் பங்கயத்தாள் திரு அருளும் பெற்றவர் அன்றோ

ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம் –
சர்வஜ்ஞத்வம் ஆகிற சம்பத்தைப் பெற்றவரும்-
அர்ச்சிராதி கதியையும் அன்றோ காட்டி அருளுகிறார்-ஞான பக்தி வைராக்யம் தானே சம்பத்து

ப்ரபன்ன ஜன கூடஸ்தம் –
பிரபன்ன ஜனங்களுக்கு தலைவருமான –
விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர்
பராசர பாராசர்யா போதாய நாதிகள்-
பிரபன்ன ஜன கூடஸ்தர்-மாதா பிதா இத்யாதி –
பராங்குச பரகால யதிவராதிகள் –ஆச்சார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூக்தி

ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம் –
ஸ்ரீ நம் ஆழ்வாரைத் தஞ்சமாகப் பற்றுகிறேன் –

————————————————————-

சடகோப முநிம் வந்தே சடாநாம் புத்தி தூஷகம்
அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம் திந்த்ரிணீ மூல சம்ஸ்ரயம்–6-

சடகோப முநிம் வந்தே –
ஸ்ரீ நம் ஆழ்வாரை வணங்குகின்றேன்

சடாநாம் புத்தி தூஷகம் –
குடில புத்திகளுடைய துர்ப்புத்தியைத் தொலைப்பவரும் –
தீ மனத்தவர்களுடைய தீ மனத்தை கெடுத்து

அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம் –
அறிவில்லாதவர்களுக்கு நல்லறிவை நல்குமவரும்
அறிவிலிகளுக்கு மருவித் தொழும் மனமே தந்து –
தீ மனம் கெடுத்து மருவித் தொழும் மனம் தந்து உய்யப் புகும் ஆறு உபதேசம்
கரை ஏற்றுமவனுக்கும் நாலு ஆரும் அறிவிப்பார்

திந்த்ரிணீ மூல சம்ஸ்ரயம் –
ஸ்ரீ திருப் புளி யாழ்வார் அடியிலே வீற்று இருப்பவருமான –
இங்குத்தை வாழ்வே தமக்கு நிரூபகமாகக் கொண்ட ஸ்ரீ நம் ஆழ்வாரை தொழுகிறேன் -என்கை-

————————————————————————————————————

வகுளா  பரணம் வந்தே ஜகதா பரணம் முநிம்
யச் ஸ்ருதேருத்தரம் பாகம் சக்ரே திராவிட பாஷயா–7-

வகுளா  பரணம் வந்தே ஜகதா பரணம் முநிம்
உலகுக்கு எல்லாம் அலங்கார பூதரான – ஸ்ரீ நம் ஆழ்வாரை –

யச் ஸ்ருதேருத்தரம் பாகம் சக்ரே திராவிட பாஷயா –
யாவரொரு ஆழ்வார் வேதத்தின் உத்தர காண்டம் ஆகிய உபநிஷத்தை
தமிழ் மொழியினால் வெளியிட்டு அருளினாரோ
அந்த ஸ்ரீ நம் ஆழ்வாரை வணங்குகின்றேன் –
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் பெய்தற்கு அருளினார் –
ச ப்ரஹ்ம ச சிவா சேந்த்ர –பரம ஸ்வ ராட் –அவனே அவனும் அவனும் அவனும்
சதேவ சோம்ய ஏகமேய அத்விதீயம் – வேர் முதலாய் வித்தாய் -த்ரிவித காரணம் –

——————————————————————————————————–

வகுளா லங்க்ருதம் ஸ்ரீ மத் சடகோப பதத்வயம்
அஸ்மத் குல தனம் போக்யம் அஸ்து மே மூர்த்நி பூஷணம்-8

மகிழ மலர்களினால் அலங்கரிக்கப் பட்டதும்
எமது குலச் செல்வமும்
பரம போக்யமுமான
ஸ்ரீ ஆழ்வார் திருவடி இணையானது
எனது சென்னிக்கு
அலங்காரம் ஆயிடுக-

———————————————————————————-

நமத ஜநச்ய சித்த பித்தி பக்தி சித்ர தூலிகா
பவாஹி வீர்ய பஞ்ஜநே நரேந்திர மந்திர யந்த்ரணா
பிரபன்ன லோககைரவ பிரசன்ன சாரு சந்த்ரிகா
சடாரி ஹஸ்த முத்ரிகா ஹடாத் துநோது மே தம—–9-

நமத ஜநச்ய சித்த பித்தி பக்தி சித்ர தூலிகா-
தம்மை வணங்குமவர்களுடைய
ஹ்ருதயம் ஆகிற
சுவரிலே
பக்தியாகிற சித்திரத்தை எழுதும்
கருவியாகவும் –
காலை மாலை கமல மலர் இட்டு -இத்யாதி உபதேசித்து

பவாஹி வீர்ய பஞ்ஜநே நரேந்திர மந்திர யந்த்ரணா-
சம்சாரம் ஆகிற சர்ப்பத்தின் உடைய/-பாவ + அஹி-சம்சார பாம்பு –
வீர்யத்தைத் தணிக்கும் விஷயத்தில்
விஷ வைத்தியனுடைய-நரேந்திர -விஷ வைத்தியன்-மந்திர பிரயோகச் சிடிகை போன்றதையும்
நரகத்தை நகு நெஞ்சே -மாறன் சொல் நேராகவே விளையும் வீடு –
வழி நின்ற வல் வினை மாள்வித்து அழிவின்று ஆக்கம் தரும்

பிரபன்ன லோககைரவ பிரசன்ன சாரு சந்த்ரிகா –
பிரபன்ன ஜனங்கள் ஆகிற
ஆம்பல் மலர்களை விகசிப்பிக்க வல்ல-கைரவம் -ஆம்பல்
அழகிய நிலாப் போன்றதையும் இருக்கிற –

சடாரி ஹஸ்த முத்ரிகா ஹடாத் துநோது மே தம –
ஸ்ரீ நம் ஆழ்வாருடைய திருக் கைத் தல முத்ரையானது-உபதேச முத்திரை
என்னுடைய அகவிருளை எப்படியாவது தொலைத்து அருள வேணும் —

ஸ்ரீ ஆழ்வாருடைய ஸ்ரீ ஹஸ்த முத்ரையை வர்ணிக்கும் ஸ்லோகம்
சம்சார போகி சந்தஷ்ட ஜீவா ஜீவாது
பக்த ஜனங்களின் பக்தியை ஊட்ட வல்லதாயும்
சம்சார ஸ்ப்ருஹதையை அறுக்க வல்லதாயும்
பிரபன்னர்களைப் பரமானந்த பரவசராக்க வல்லதாயும்–இரா நின்ற ஸ்ரீ ஆழ்வார் உடைய
ஸ்ரீ ஹஸ்த முத்தரை யானது
நம்முடைய அகவிருளை அகற்ற வேணும் -என்றார் ஆயிற்று –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சார்யபௌத்ரர் –ஸ்ரீ ஜீயர் நாயனார் -திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பூர்வாச்சார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத் ஆழ்வான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

ஸ்ரீ தேவ ராஜ பஞ்சகம் –ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமி அருளிச் செய்தது –

August 25, 2014

அவதாரிகை –

தக்கானைக் கடிகைத் தடம் குன்றின் மிசை இருந்த
அக்காரக் காபியை அடைந்து உய்ந்து போனேனே –
சோள சிம்ஹ புரத்தில்-
எழுந்து அருளி இருந்த மகா வித்வச் சிகாமணி
காஞ்சி கருட சேவை சென்று சேவிக்க ஷமர் அன்றிக்கே
அதியூரான் புள்ளை ஊரான் -பாசுரம் சிந்தித்து
வாயார ஏத்தி இருக்கையிலே
பேரருளாளன் இவர் பரம பக்திக்கு உகந்து தக்கான் திருக்குளத்திலே சேவை சாதித்து அருளே
அந்தானுபவ பரீவாஹ ரூபமாக திரு அவதரித்தது
இந்த தேவாதி ராஜ பஞ்சகம் –

ஐந்து ஸ்லோகங்களும் பெரிய திருவடி வாகனத்தின் பெருமை ஒன்றே பேசும் –

———————————————————————-

பிரத்யூஷே வரத பிரசன்ன வதன ப்ராப்த ஆபி முக்யான் ஜனான்
ஆபத்தாஞ்ஜலி மஸ்தகான் அவிரலான் ஆபாலம் ஆனந்தயத்
மந்த உட்டாயித சாமர மணி மய ஸ்வேத ஆத பத்ர சனை
அந்தர் கோபுரம் ஆவிராச பகவான் ஆருட பஷீஸ் வர—1-

பிரத்யூஷே –பின் மாலையிலே
பிரசன்ன வதன -தெளிந்ததான திரு முக மண்டலத்தை யுடைய
வரத -பேர் அருளானான தேவப் பெருமாள்
ப்ராப்த ஆபி முக்யான் ஜனான்–தன்னைக் கண்டு களிக்க எதிர் நோக்கி யுள்ளவர்களாயும்
ஆபத்தாஞ்ஜலி மஸ்தகான் -தங்கள் தலை மேல் உயர்த்திக் கூப்பிய கைகளையும் யுடையவர்களாயும்
அவிரலான் ஜ நாந் –எண்ணற்ற ஸமூஹமாயுள்ள ஜனங்களை
ஆபாலம் ஆனந்தயத்–பாலர்களை முதல் கொண்டு மகிழ்விக்குமவராய்
ஆருட பஷீஸ் வர–பெரிய திருவடி வாஹனம் மேலே ஏறி இருந்தவராய்
மந்த உட்டாயித சாமர -மெதுவே மேல் தூக்கி வீசப்பட்ட சாமரங்களை யுடையவராய்
மணி மய ஸ்வேத ஆத பத்ர -ரத்ன மணி மயமான வெண் கொற்றக் குடை பிடிக்கப் பட்டவராய்
சனை -மெதுவாக -மெல்ல மெல்ல
அந்தர் கோபுரம் ஆவிராச -ராஜ கோபுரத்தூடே தோன்றி அருளினார் –

பிரத்யூஷே வரத பிரசன்னவதன –வரத-பகவான்-
ஸூ ப்ரபாத காலத்தில்
ஸூ பிரசன்னமான திரு முக மண்டலத்தை யுடைய
பேரருளாள் பெருமாள்

ப்ராப்த ஆபி முக்யான் -ஆபத்தாஞ்ஜலி மஸ்தகான் அவிரலான்-ஜனான் –
அபி முகர்களாயும்
மத்தகத்திடைக் கைகளைக் கூப்பினவர்கலாயும்
இடைவெளி இல்லாமல் நெருங்கி இருப்பவர்க்களுமாய் உள்ள
ஜனங்களை –

ஆபாலம் ஆனந்தயத் –
சிறுவர் முதல் கொண்டு சந்தோஷப் படுத்துமவராய்

மந்த உட்டாயி தசாமர –
மெதுவாக வீசப் பட்ட சாமரங்களை யுடையவராய்

மணி மய ஸ்வேத ஆத பத்ர சனை-
ரத்ன மயமான வெண் கொற்றக் குடைய யுடையவராய் –

அந்தர் கோபுரம் ஆவிராச ஆருட பஷீஸ் வர
பெரிய திருவடியை வாகனமாகக் கொண்டவராய்
மெல்ல மெல்ல திருக் கோபுரத்தினுள்
தோன்றி அருளினார்-

தேவப் பெருமாள் உடைய பெரிய திருவடி திரு நாளை
பிரதம பரிச்பந்தமே பிடித்து அனுபவிக்கிறார்
அருணோதய வேளையில்
அபிமத ஜன தர்சன ஆனந்த வேகத்தாலே
அர்ச்சாவதார சமாதியைக் கடந்து விம்மி வெளி விழுகின்ற
அவ்யக்த மதுர மந்த ஹாச விலாசத்தோடு
கூடின திரு முக மண்டலம் பொலிந்த தேவப் பெருமாள்
சிரச் அஞ்சலி மாதாய -என்றும்
மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி -என்றும் சொல்லுகிறபடியே
உச்சி மிசைக் கரம் வைத்து தொழும் அவர்களாய்
அஹமஹமிகயா வந்து நெருக்குவார் இடையே
அகப்பட்டுத் துடிப்பவர்களான அடியார்களை
சிறியார் பெரியார் வாசி இன்றிக்கே
ஜநி தர்மாக்களை எல்லாம் உகப்பியா நின்று கொண்டு
காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார் முகில் போல் -என்கிறபடியே
பறைவை ஏறு பரம் புருடனாய்
திரு வெண் கொற்றக் குடை பிடிக்கும் அழகும்
சாமரை வீசும் அழகும்
பொழிய
திருக் கோபுர சேவை தந்து அருளுமாறு எழுந்து அருளின அழகு என்னே
என்று ஈடுபடுகிறார்-

—————————————————

முக்தாத பத்ர யுகளே உபய சாமராந்தர்
வித்யோதமான விநத தனய அதிரூடம்
பக்த அபயப்ரத கராம் புஜம் அம்புஜாஷாம்
நித்யம் நமாமி வரதம் ரமணீய வேஷம் —-2-

முக்தாத பத்ர யுகளேவ்–வெண் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட இரு குடைகளோடும்
உபய –இரு மருங்கும் இரண்டு
சாமராந்தர்-வீசப்பட்ட சாமரங்களின் இடையே
வித்யோதமான -பொலிந்து நிற்கும்
விநத தனய அதிரூடம்–விநதையினுடைய திருமகனாரன பெரிய திருவடிக்கு மேல் ஏறி அமர்ந்து இருப்பவரும்
பக்த அபய ப்ரத -தன் அடியார்களுக்கு அஞ்சேல் என்று காட்டி அருளும்
கராம் புஜம் -தாமரையை ஒத்த திருக்கைகளை யுடையவரும்
அம்புஜாஷாம்-தாமரையை ஒத்த திருக்கண்களை யுடையவரும்
ரமணீய வேஷம் -பொலிந்து தோன்றும் மனத்தைக் கவரும்படியான அழகிய தோற்றம் யுடையவருமான
நித்யம் நமாமி வரதம் –வரப் பிரதரான பேர் அருளாளனை எப்பொழுதும் இறைஞ்சுகிறேன் –

முக்தாத பத்ர யுகளே –
இரண்டு முத்துக் குடைகள் என்ன –

உபய சாமராந்தர் –
இரண்டு சாமரங்கள் என்ன
இவற்றின் உள்ளே –

வித்யோதமான விந்தா தனய அதிரூடம் –
விளங்கா நின்ற வைனதேயனான
பெரிய திருவடியின் மீது ஏறி
வீற்று இருப்பவனும் –

பக்த அபயப்ரத கராம்புஜம்-
அடியார்களுக்கு அபயம் அளிக்கும்
திருக் கைத் தாமரையை யுடையவனும் –

அம்புஜாஷாம் –
செந்தாமரைக் கண்ணனும் –

நித்யம் நமாமி வரதம் ரமணீய வேஷம் –
மநோ ஹராமான திவ்ய அலங்காரங்களை யுடையனுமான
பேரருளாளனை
இடையறாது வணங்குகின்றேன் —

———————————————————–

கேசித் தத்வ விசோதநே பசு பதௌ பாரம்ய மாஹூ பரே
வ்யாஜஹ்ரு கமலாசநே நயவிதாம் அன்யே ஹரௌ சாதரம்
இத்யேவம் சலசேதஸாம் கரத்ருதம் பாதாரவிந்தம் ஹரே
தத்வம் தர்சயதீவ சம்ப்ரதி ந்ருணாம் தார்ஷ்ய ச்ருதீ நாம் நிதி —3-

கேசித் தத்வ விசோதநே -பரதத்வ விஷய விசாரத்தில்
நயவிதாம்-ஸாஸ்த்ர விசார கண்ணோட்டம் யுடையவர்களுக்குள்ளே
கேசித் -சிலர்
பசு பதௌ -பசுபதியான முக்கண்ணன் இடத்தில்
பாரம்ய மாஹூ -பரதத்வத்தைத் தெரிவித்தனர்
பரே-வேறே சிலர்
கமலாசநே-தாமரையில் வீற்று இருப்பவராக நான்முகன் இடத்தில்
(பாரம்யம் )வ்யாஜஹ்ரு -பரதத்வத்தைப் பேசினார்கள்
அன்யே -மற்றும் சிலர்
(பாரம்யம் )ஹரௌ சாதரம் ஆஹு -ஆதாரத்தோடு பாபங்களை நசிக்கிற ஸ்ரீ மன் நாராயணன் இடத்தில்
பரதத்வத்தை வெளியிட்டார்கள்
இத்யேவம் சல சேதஸாம் ந்ருணாம்-இப்படியாக சஞ்சல புத்தியுடைய மநுஷ்யர்கள் விஷயத்தில்
ச்ருதீ நாம் நிதி -வேதங்களின் பொக்கிஷம் எனப்படும்
தார்ஷ்ய -பக்ஷி ராஜரான கருடாழ்வார்
சம்பிரதி -இப்பொழுது -இந்த மூன்றாம் நாளிலே
கரத்ருதம் -தம்முடைய உயர்த்திய திருக்கரங்களால் தாங்கப்பட்ட
ஹரே -ஹரியாகிய பரமபுருஷனுடைய
பாதாரவிந்தம்–தாமரை அடிகளை
தத்வம் -பரதத்வமாக –
அஹம் ஏவ பரம் தத்வம் என்று ஆறு வார்த்தைகளால் தாமே அருளிச் செய்தபடியே
தர்சயதீவ த்ருஸ்யதே -புலப்படுத்திக் காட்டுவது போல் சேவை யாகிறது –

கேசித் தத்வ விசோதநே நயவிதாம்-
பரதத்வம் இன்னது என்று
ஆராயும் அளவில்
சாஸ்திரம் அறிந்தவர்களுக்குள்ளே

பசு பதௌ பாரம்யம்-
சில மதஸ்தர்கள்
ருத்ரன் இடத்தில்
பரத்வத்தைக் கூறினார் –

ஆஹூ பரே வ்யாஜஹ்ரு கமலாசநே -பாரம்யம்-
வேறு சிலர் நான் முகக் கடவுளிடத்தில்
பரத்வம் உள்ளதாக பகர்ந்தார்கள் –

அன்யே ஹரௌ சாதரம்-பாரம்யம்-
மற்றையோர்கள் ஆதாரத்தோடு கூட
ஸ்ரீ மன் நாராயணன் இடத்தில் பரத்வம்
உள்ளதாக சொன்னார்கள் –

இப்படி பலரும் பலவாறாக சொல்லுகின்றார்களே
ஒரு விதமான நிஷ்கர்ஷம் இல்லையே
என்று தளும்பின நெஞ்சை யுடையரான மனிசர்க்கு
தெள்வு பிறப்பிக்க வேண்டி –

இத்யேவம் சலசேதஸாம் கரத்ருதம் பாதாரவிந்தம் ஹரே
தத்வம் தர்சயதீவ சம்ப்ரதி ந்ருணாம் தார்ஷ்ய ச்ருதீ நாம் நிதி –
வேதங்களுக்கு நிதியான பெரிய திருவடியானவர்
இப்போது
இத் திரு நல நாளிலே
தம்முடைய கைத் தளத்திலே தாங்கப் பட்ட
எம்பெருமான் உடைய திருவடித் தாமரையை
பரதத்துவமாகக் காட்டுகின்றார் போலும்-

வேதாத்மாவான விஹகேச்வரன்
சந்தேக விபர்யாயம் அற
பரதத்வத்தை
ஸ்ரீ மன் நாராயணன் உடைய இந்தத் திருவடித் தாமரையே காணீர் பரதத்வம் -என்று
கரஸ்தமாக்கிக் காட்டுகிறாப் போலே உள்ளது -என்றார் ஆயிற்று
பஷி காட்டி விட்டால் இதையே தத்வமாக விஸ்வசிக்க விரகு உண்டோ
என்கிற சங்கைக்கு இடம் இன்றி –
ச்ருதீ நாம் நிதி -என்று கருத்மானுக்கு விசேஷணம் இட்டார்
வேதாத்மா விஹகேச்வர -என்று ஆளவந்தாரும் அருளிச் செய்தார் இறே –
ஸூபர்ணோசி கருத்மான் த்ரிவ்ருத்தே சிர -இத்யாதி வேத வாக்கியம் உண்டே-

———————————————————-

யத் வேத மௌலி கண வேத்யம் அவேத்யம் அந்யை
யத் ப்ரஹ்ம ருத்ர ஸூ ர நாயக மௌலி வந்த்யம்
தத் பத்ம நாப பத பத்ம மிதம் மனுஷ்யை
சேவ்யம் பவத் பிரிதி தர்சய நீவ தார்ஷ்ய–4-

பத்ம நாப-தாமரை யுந்திப் பெருமானுடையதான
யத் பத பத்மம் -எந்தத் தாமரைத் திருவடியானது
வேத மௌலி கண -வேதாந்த -உபநிஷத் -தொகுப்புக்களாலே –
வேத்யம் -அறியப்பட வேண்டியதும்
அவேத்யம் அந்யை-அவைத்யர்களான மற்றோர்களால் அறியப்பட முடியாததும்
யத் ப்ரஹ்ம ருத்ர ஸூ ர நாயக -ப்ரஹ்மாதிகளும்
மௌலி வந்த்யம்-தங்கள் முடி தாழ்த்தி வணங்கக் கூடியதுமான
தத் இதம் -அப்படிப்பட்டதான இந்த திருவடியே
தத் பத பத்ம மிதம் மனுஷ்யை
சேவ்யம் பவத் பிர் இதி -மனிதர்களான உங்களால் சேவிக்கத் தகுந்தது என்று
தர்சய நீவ தார்ஷ்ய–விநத குமாரனான கருத்மான் காணத் தகுந்ததாகக் காட்டுகிறார் போலே தோற்றம் அளிக்கிறது –

ஒ வைதிக ஜனங்களே
எம்பெருமான் யுடையதான எந்தத் திருவடியானது
வேதாந்தங்களுக்கே அறியக் கூடியதோ
வைதிகர்கள் அல்லாத மற்றியோர்க்கு அறியக் கூடாததோ
யாதொரு திருவடியானது
பிரமன் சிவன் இந்த்ரன் ஆகிய இவர்கள் முடி தாழ்த்தி
வணக்கக் கூடியதோ
அப்படிப் பட்ட இந்தத் திருவடியானது
உங்களால் சேவிக்கத் தகுந்தது
என்று கருத்மான்
கையிலே ஏந்தி காட்டி அருளுகின்றான் போலும் –

———————————

பிரத்யக் கோபுர சம்முகே தின முகே பஷீந்த்ர சம்வாஹிதம்
ந்ருத்யச் சாமர கோரகம் நிருபமச் சத்ர த்வயீ பாஸூரம்
ஸாநந்தம் த்விஜ மண்டலம் விதததம் சந்தாஹ சிஹ்நாரவை
காந்தம் புண்ய க்ருதோ பஜந்தி வரதம் காஞ்ச்யாம் த்ருதீயோத்சவே–5-

காஞ்ச்யாம் த்ருதீயோத்சவே–திருக்கச்சி திவ்யதேசத்திலே தேவாதி ராஜப்பெருமானின் மூன்றாம் உத்சவத் திருநாள் அன்று
தின முகே-தினத்தின் துவக்கமாக பின் மாலை வேளையிலே
பஷீந்த்ர -பக்ஷி ராஜரான கருடாழ்வாராலே
சம்வாஹிதம்-தனது திருத்தோள்கள் மேல் அமர்த்தப்பட்டு நன்கு தாங்கப்பட்டவரும்
ந்ருத்யச் சாமர கோரகம்-தாமரை மொட்டுக்கள் போலே அசைந்து ஆடுகிற கவரிகளான சாமரங்களால் வீசப் படுபவரும்
நிருபமச் சத்ர த்வயீ -ஒப்பற்ற இரண்டு திருக்குடைகளின் நிழலில்
பாஸூரம்-பொலிந்து இருப்பவரும்
சந் நா ஹ -திரு வீதி உலா புறப் பாட தயார் என்பதைத் தெரிவிக்கின்ற
சிஹ்நாரவை-திருச்சின்னம் என்னும் காகள ஒலியினாலே
த்விஜ மண்டலம் –கோஷ்டியாக எழுந்து அருளி இருக்கும் இருமுறை ஓதும் ஸ்ரீ வைஷ்ணவ அந்தணர் குழாமை
ஸாநந்தம் விதததம் —மகிழ்வு ஊட்டுபவரும்
காந்தம் –பொலிந்த அழகு பொருந்தியவருமான
வரதம் -அபீஷ்ட வரங்களை ஈந்து அருளும் பேர் அருளாளப் பெருமாளை
புண்ய க்ருதோ –புண்யவான்களான பாகவத அடியர்கள்
பிரத்யக் கோபுர சம்முகே -மேல் திசை திருக்கோபுர வாசலிலே
பஜந்தி -போற்றி பாடி வணங்கி வழிபடுகிறார்கள்

பிரத்யக் கோபுர சம்முகே –
மேலைத் திருக் கோபுர வாசலிலே

தின முகே –
ஸூ ப்ரபாத வேளையில் –

பஷீந்த்ர சம்வாஹிதம் –
பெரிய திருவடியினால்
தாங்கப் பட்டவரும்

நருத்யச் சாமர கோரகம் நிருபமச் சத்ரத்வ யீபாஸூரம் –
சாமர முகுளம் வீசப் பெற்றவரும்
ஒப்பற்ற இரண்டு திருக் குடைகளின் இடையே
விளங்கா நிற்பவரும் –

ஸாநந்தம் த்விஜ மண்டலம் வீ தததம் சந்தாஹ சிஹ்நா ரவை –
புறப்பாடு சித்தமாயிற்று என்று
தெரிவிக்கிற திருச் சின்ன ஒலியினால்

காந்தம் புண்ய க்ருதோ பஜந்தி வரதம் –
மறையவர் திரளை மகிழச் செய்பவரும்
மிக அழகு போருந்தியவருமான
பேரருளாள பெருமாளை
பாக்ய சாலிகள் பார்க்கப் பெறுகிறார்கள் –
எங்கே எப்பொழுது என்றால் –

காஞ்ச்யாம் த்ருதீயோத்சவே –
திருக் கச்சி மா நகரில்
மூன்றாவது உத்சவ
நல நாளிலே

தன்யா பஸ்யந்தி மே நாதம் -என்று பிராட்டி வருந்தி சொன்னது போலே
இங்கும் புண்ய க்ருதோ பஜந்தி -என்று
தம் இழவு தோற்றச் சொல்லி இருக்கையாலே
இந்த மஹோச்த சேவை
தமக்கு பிராப்தமாக பெறாத காலத்திலே
பணித்தது இந்த ஸ்லோஹ பஞ்சகம் என்று
விளங்குகின்றதே –

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தொட்டயாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரும் தேவி தாயார் சமேத பேரருளாளன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நரசிம்ஹாஷ்டகம் –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள சீயர் அருளிச் செய்த ஸ்லோஹம் –

August 25, 2014

ஸ்ரீ ஸூந்தர ஜாமாத்ரு முனே ப்ரபத்யே சரணாம் புஜம்
சம்சாரார்ணவ சம்மக்ன ஜந்து சந்தார போதகம் –

பிறவிக் கடலுள் நின்று துளங்கும் பிராணிகளைக் கரை மரம் சேர்ப்பதற்கு
உரிய தோணி போன்றதான அழகிய மணவாள சீயர் உடைய
திருவடித் தாமரைகளை
தஞ்சமாக பற்றுகிறேன்
என்றவாறே –

பெருமாள் கோயில் கரிகிரியின் கீழ்க் காட்சி தந்து அருளா நிற்கும்
அழகிய சிங்கர் விஷயம் என்றும்
திரு வல்லிக் கேணி தெள்ளிய சிங்கர் விஷயமாகவும்
பணித்து அருளிய ஸ்லோகம் –

———————————————————————————————————————————————

ஸ்ரீமத் அகலங்க பரிபூர்ண சசி கோடி
ஸ்ரீதர மநோஹர ஸ்டா படல காந்த
பாலய க்ருபா ஆலய பவ அம்புதி நிமக்நம்
தைத்ய வரகால நரசிம்ஹ நரசிம்ஹ—————1-

—————————————-

ஸ்ரீமத் அகலங்க பரிபூர்ண சசி கோடி -ஸ்ரீதர மநோஹர ஸ்டா படல காந்த
அழகியவாயும்
களங்கம் அற்றவையுமாயும் உள்ள
பல வாயிரம் பௌர்னமி சந்திரர்களின்
சோபையைத் தாங்குகின்ற
மநோ ஹரமான
உளை மயிர் திரள்களினால் -சடாபடலம் -உளை மயிர்க் கற்றை – களாலே
அழகியவரே -அழகியான் தானே அரி யுருவன் தானே –

பாலய க்ருபா ஆலய பவ அம்புதி நிமக்நம் தைத்ய வரகால நரசிம்ஹ நரசிம்ஹ –
கருணைக்கு இருப்பிடமானவரே
ஆசூர வர்க்கங்களுக்கு யமன் போன்ற
அழகிய சிங்கப் பெருமாளே –
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ் புக நின்ற செங்கண்மால் -திருவாய் மொழி -3-6-6-
தைத்யவர் -இரணியன் போன்ற ஆசூர பிரக்ருதிகள்
காலன் -மிருத்யு
சம்சாரக் கடலில் வீழ்ந்த
அடியேனை ரஷித்து அருள வேணும் –
நரசிம்ஹ நரசிம்ஹ -இரட்டிடித்துச் சொல்லுகிறது
ஆதார அதிசயத்தினால் –

பிறவிக் கடலுள் நின்று துளங்கும் அடியேனுக்கு
தேவரீர் உடைய திருவருள் அல்லது
வேறு புகல் இல்லை
என்றார் -ஆயிற்று-

———————————————————————————————————————————————————————————————-

பாத கமல அவந்த பாதகி ஜநா நாம்
பாதக தவா நல பதத்ரிவரகேதோ
பாவந பராயண பவார்த்தி ஹரயா மாம்
பாஹி க்ருபயைவ நரசிம்ஹ நரசிம்ஹ–2

—————————————-

பாத கமல அவந்த பாதகி ஜநா நாம் –
தனது திருவடித் தாமரைகளில்
வணங்கின பாபிஷ்ட ஜனங்களின் உடைய
பாபங்களுக்கு

பாதக தவா நல –
காட்டுத் தீ போன்றவனே

பதத்ரிவரகேதோ –
பஷி ராஜனான பெரிய திருவடியைக்
கொடியாக யுடையவனே –

பாவந பராயண –
தன்னைச் சிந்திப்பார்க்கு
பரகதியாய் யுள்ளவனே -உபாயமும் உபேயமுமாக இருப்பவனே

பவார்த்தி ஹரயா மாம் -பாஹி க்ருபயைவ –
சம்சாரத் துன்பங்களைப்
போக்க வல்ல
உனது
கருணையினாலேயே அடியேனைக் காத்தருள வேணும்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
க்ருபயைவ -என்பதால்
ஏவ காரத்தால்
என் பக்கலில் ஒரு கைம்முதல் எதிர் பார்க்கலாகாது
என்கிறது –

நரசிம்ஹ நரசிம்ஹ
அழகிய சிங்கப் பெருமானே-

——————————————————————————————————————————————————————-

துங்க நக பங்க்தி தளிதா ஸூ ரவரா ஸ் ருக்
பங்க நவ குங்கும விபங்கில ம்ஹோர
பண்டித நிதான கமலாலய நமஸ் தே
பங்கஜ நிஷண்ண நரசிம்ஹ நரசிம்ஹ——3-

———————————

துங்க நக பங்க்தி தளிதா ஸூ ரவரா ஸ் ருக் பங்க நவ குங்கும விபங்கில ம்ஹோர –
நீண்ட திரு வுகிற் வரிசைகளினால் பிளக்கப் பட்டவனான
ஹிரன்யாசூரனுடைய
உதிரக் குழம்பாகிற
புதுமை மாறாத
கும்குமச் சாறு தன்னால் வ்யாப்தமாய் இருக்கிற
அகன்ற திரு மார்பை
யுடையவரே –

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆளரியாய் அவுணன்
போன்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் -என்றும் –

போரார் நெடு வேலோன் பொன் பெயரோன் ஆகத்தை
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு குடல் மாலை
சீரார் திரு மார்பின் மேல் கட்டிச் செங்குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா வெழுந்தான் அரி யுருவாய் -என்றும் சொல்லுகிறபடியே

பண்டித நிதான
அறிஞர்கட்கு நிதி போன்றவரே
வைத்த மா நிதி இ றே
நிதியானது உள்ளே பத்தி கிடந்தது
ஒரு கால விசேஷத்திலே
பாக்யவாங்களுக்கு வெளிப்படுமா போலே –

கமலாலய –
பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமானவரே –
கமலை கேழ்வனே-
நரசிங்க வுருக் கொண்ட போது மூவுலகும் அஞ்சிக் கலங்கிப்
போகும்படியான சீற்றம் உண்டானது கண்டு
அதனைத் தணிக்க
ஸ்ரீ மகா லஷ்மி வந்து குடி கொள்ள
லஷ்மி நருசிம்ஹான் ஆண்மை இங்கு நினைக்கத் தக்கது

பங்கஜ நிஷண்ண –
ஆசன பத்மத்திலே எழுந்து அருளி இருப்பவரே –
தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமான் -என்றபடி –

நரசிம்ஹ நரசிம்ஹா –

நமஸ் தே
உமக்கு வணக்கமாகுக –

————————————————————————————————————————————————————————–

மௌலிஷூ விபூஷண மிவாமரவராணாம்
யோகி ஹ்ருதயேஷூ ச சிரஸ் ஸூ நிகமா நாம்
ராஜ தரவிந்த ருசிரம் பதயுகம் தே
தேஹி மம மூர்த்நி நரசிம்ஹ நரசிம்ஹ—————–4-

————————————————————————————————-

மௌலிஷூ விபூஷண மிவாமரவராணாம்-
அமரவராணாம் மௌலிஷூ விபூஷண –
சிறந்த தேவர்களின் முடிகளின் மீதும்
அமரர்கள் சென்னிப் பூ இ றே

யோகி ஹ்ருதயேஷூ –
யோகிகளின் உள்ளத்திலும் –

ச சிரஸ் ஸூ நிகமா நாம் –
வேதாந்தங்களிலும் –
வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கு

மௌலிஷூ விபூஷண
சிறந்த தொரு பூஷணம் போன்று விளங்குகின்ற –
விபூஷணம் எனபது சப்தம் எந்த பதங்கள் எல்லாவற்றிலும் அந்வயிக்கக் கடவது

ராஜ தரவிந்த ருசிரம் பதயுகம் தே தேஹி மம மூர்த்நி –
தாமரை போல் அழகிய
தேவரீருடைய திருவடி இணையை
என் சென்னி மீது
வைத்து அருள வேணும் –

கோல மாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -என்றும்
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் யாழி யம் கண்ணா வுன் கோலப் பாதம் -என்றும்

நரசிம்ஹ நரசிம்ஹ-

——————————————————————————————————————————————————————

வாரிஜ விலோசன மதநதி மதசாயம்
க்லேச விவ சீக்ருத சமஸ்த கரணாயாம்
ஏஹி ரமயா சஹ சரண்ய விஹகா நாம்
நாதமதி ருஹ்ய நரசிம்ஹ நரசிம்ஹ———————5-

————————————————

 

வாரிஜ விலோசன –
செந்தாமரைக் கண்ணரே –
கிண் கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுத் சிறிதே எம்மேல் விழித்து அருள வேணும்

சரண்ய-
அடியேன் போல்வார்க்குத் தஞ்சமானவரே –

மதநதி மதசாயம் –
என்னுடைய சரம அவஸ்தையிலே

க்லேச விவ சீக்ருத சமஸ்த கரணாயாம் –
சமஸ்த கரணங்களையும் -செவி வாய் -கண் -முதலான –
க்லேசத்துக்கு வசப்படுதுமதான
அந்த சரம அவஸ்தையிலே –

எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -என்றும்

மேல் எழுந்ததோர் வாயுக் கிளர்ந்து மேல் மிடற்றினை யுள் எழ வாங்கி
காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறிக் கண் உறக்கமதாவது -என்றும்

வாய் ஒரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர்க் குழிக் கண்கள் மிழற்றத்
தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலற்ற -என்றும் –

காஷ்ட பாஷான சந்நிபம் அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் -என்றும்
ஏஹி ரமயா சஹ விஹகா நாம் நாதமதி ருஹ்ய –
ரமயா சஹ விஹகாநாம் நாதம் அதிருஹ்ய ஏஹி
பிராட்டியோடு கூடப் பெரிய திருவடி மேல் எரிக் கொண்டு
அடியேன் பால் வந்து அருள வேணும் –

பறவை ஏறு பரம் புருடனாய்ப் பிராட்டியோடும் கூட எழுந்தருளி
பாவியேனைக் கை கொண்டு அருள வேணும்
என்று பிரார்த்திக்கிறார்
ஆயிற்று

நரசிம்ஹ நரசிம்ஹ-

————————————————————————————————————————————————————————-

ஹாடக கிரீட வரஹார வநமாலா
தார ரசநா மகர குண்டல ம ணீந்த்ரை
பூஷிதம சேஷ நிலயம் தவ வபுர் மே
சேதசி சகாஸ்து நரசிம்ஹ நரசிம்ஹ–6-

——————————

ஹாடக கிரீட –
பொன்மயமான சிறந்த மகுடம் என்ன

வரஹார வநமாலா –
வைஜயந்தி என்னும் வனமாலை என்ன

தார ரசநா –
முத்து மயமான அரை நாண் என்ன –
தாரம் -என்று முத்துக்குப் பெயர்
நஷத்ரவடம் என்கிற திரு ஆபரணத்தை சொல்லிற்றாகவுமாம்

மகர குண்டல ம ணீந்த்ரை –
திரு மகரக் குழைகள் என்ன –

மணீந்த்ரை –
ரத்னா வாசகமான இந்த சப்தம் லஷண்யா ரத்ன பிரசுர பூஷண வாசகம் ஆகலாம் –

பூஷிதம –
ஆகிய இத் திரு ஆபரணங்களினால்
அலங்கரிக்கப் பட்டதும் –
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ ஆழிகளும் கிண் கிணியும்
அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவோடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல வைம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியுமான
திரு வாபரனங்கள் அணிந்த திரு மேனியே தமது திரு உள்ளத்தில் திகழ வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று –

அசேஷ நிலயம் –
எங்கும் வ்யாபித்ததுமான
அசெஷத்தையும் நிலையமாக வுடைத்தான -என்கை
நிலய சப்தம் நித்ய பும்லிங்கம் ஆகையாலே இங்கு பஹூ ரீவ்ஹியாகக் கடவது

தவ வபுர்-
தேவரீர் உடைய திரு மேனி

மே சேதசி சகாஸ்து –
என் நெஞ்சின் உள்ளே விளங்க வேணும்

நரசிம்ஹ நரசிம்ஹ –
அழகிய சிங்கப் பெருமாளே-

———————————————————————————————————————————————————————————–

இந்து ரவி பாவக விலோசன ரமாயா
மந்திர மஹா புஜ லசத்வர ரதாங்க
ஸூந்தர சிராய ரமதாம் த்வயி மநோ மே
நந்திதித ஸூரேச நரசிம்ஹ நரசிம்ஹ—7-

————————————————

இந்து ரவி பாவக விலோசன –
சந்தரன் சூர்யன் அக்னி
இவர்களை திருக் கண்ணாக
யுடையவரே –
தீப் பொறி பறக்கும் நெற்றிக்கண் உண்டே -அதனால் அக்னியை சேர்த்து அருளுகிறார்

ரமாயா மந்திர –
பெரிய பிராட்டியாருக்கு
திருக் கோயிலாக இருப்பவரே –
அந்த நெற்றிக் கண்ணை அவிப்பதற்காக
பிராட்டி வந்து திரு மேனியில் வீற்று இருந்த படியாலே
ரமாயா மந்திர -என்றார் –

மஹா புஜ லசத்வர ரதாங்க
தடக்கையிலே விளங்கும்
சிறந்த திரு ஆழி ஆழ்வானை யுடையவரே –

மஹா புஜ லசத் தரரதாங்க -என்றும்பாடபேதம்
தரம் -என்று சங்குக்குப் பெயர் ஆதலால்
சங்கு சக்கரம் இரண்டையும் சேரச் சொன்னபடி ஆகவுமாம்

ஸூந்தர –
அழகு பொலிந்தவரே-

சிராய ரமதாம் த்வயி மநோ மே-
அடியேனுடைய மனமானது
தேவரீர் இடத்தில்
நெடும்காலம் உகப்பு கொண்டு இருக்க வேணும்

நந்திதித ஸூரேச –
அமரர் கோணத்த துயர் தீர்த்தவரே –

நரசிம்ஹ நரசிம்ஹ-

———————————————————————————————————————————————————–

மாதவ முகுந்த மது ஸூதன முராரே
வாமன நருசிம்ஹ சரணம் பவ நதா நாம்
காமத கருணின் நிகில காரண நயேயம்
காலமமரேச நரசிம்ஹ நரசிம்ஹ——8-

——————————————————————————————————–

மாதவ –
திருமாலே –

முகுந்த –
முக்தி அளிக்கும் பெருமானே –

மது ஸூதன –
மது கைடபர்களை மாய்த்தவனே

முராரே –
நரகா ஸூ ரவதத்தில் -முரணைக் கொன்றவனே

வாமன-
குறள் கோலப் பெருமானே

நருசிம்ஹ –
நரம் கலந்த சிங்கமே –

சரணம் பவ நதா நாம் –
அடி பணிந்தவர்களுக்குத் தஞ்சமாவாய் –

காமத
அபேஷிதங்களை எல்லாம் அளிப்பவனே –

கருணின் –
தயாளுவே –

நிகில காரண –
சகல காரண பூதனே

காலம் நயேயம் –
யமனையும் அடக்கி யாளக் கடவேன் -பொருள் சிறவாது
உன்னை வாழ்த்தியே வாழ் நாளைப் போக்கக் கடவேன் –

அமரேச –
அமரர் பெருமானே

நரசிம்ஹ நரசிம்ஹ –
இங்கனே உன் திரு நாமங்களை வாயார வாழ்த்திக் கொண்டே
என் வாழ் நாளைப் போக்கக் கடவேன்

க்ரோசன் மதுமதன நாராயண ஹரே முராரே கோவிந்தேதி
அனிசமப நேஷ்யாமி திவசான் -பட்டர்

——————————————————————————————————————————————————–

அஷ்டகமிதம் சகல பாதக பயக்தம்
காம தம சேஷ துரி தாம யரி புக்நம்
ய படதி சந்ததம சேஷ நிலயம் தே
கச்சதி பதம் ஸ நரசிம்ஹ நரசிம்ஹ–9-

——————————————————–

அஷ்டகமிதம் –
எட்டு ஸ்லோகங்களினால் அமைந்த
இந்த ஸ்தோத்ரத்தை –

சகல பாதக பயக்தம் –
சகல பாபங்களையும்
சகல பயன்களையும்
போக்கடிப்பதும்
பாதகம் -மஹா பாதகங்களை -குறிக்கும்

காம தம –
சகல அபேஷிதங்களையும் அளிப்பதும்

சேஷ துரி தாம யரி புக்நம் –
சகல விதமான பாபங்களையும்
பிணிகளையும்
பகைவர்களையும்
நிரசிப்பதுமான –
துரிதம் -உபபாதகன்களை

ய படதி சந்ததம சேஷ நிலயம் தே கச்சதி பதம் ஸ –
யாவன் ஒருவன் கற்கின்றானோ
அவ்வதிகாரி
அனைவருக்கும் ப்ராப்யமான
தேவரீர் உடைய திவ்ய ஸ்தானத்தை
அடைந்திடுவான்

நரசிம்ஹ நரசிம்ஹ –

இதனால் இந்த ஸ்தோத்ரம் கற்றாருக்கு பலன்சொல்லித் தலைக் கட்டுகிறார்
அநிஷ்ட நிவாரணம்
இஷ்ட ப்ராபணம் ஆகிற இரண்டுக்கும்
கடவதான இந்த ஸ்தோத்ரத்தை
நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வர்
என்று பேறு கூறித் தலைக் கட்டினார் ஆயிற்று

தெள்ளிய சிங்க பெருமாள் அக்காராகனி திருவடிகளே சரணம்

————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாளச் சீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தேவ ராஜ மங்களம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த ஸ்லோகங்கள் -ஸ்ரீ பேர் அருளாளன் கோயில் ஸேவா கிரம ஸ்லோகமும் ஸ்ரீ காஞ்சி திவ்ய தேச முக்த ஸ்லோகமும் –

August 25, 2014

ஸ்ரீ கோயில் திருமலை ஆழ்வார் -திருவாய் மொழிப்பிள்ளை -நாலூர் ஆச்சான் பிள்ளை
ஈடு சாதித்த விருத்தாந்தம் –
திருவாய் மொழிப்பிள்ளை திருவரங்கத்தில் இருந்து பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளியதால்
இப்படி விளிச்சொல் அவருக்கு நன்றி காட்டி அருளவே இந்த மங்களாசாசனம் -12–ஸ்லோகங்கள்
ஸ்ரீ தேவ ராஜ பெருமாளுக்கு மங்களா சாசனத்துக்காகவே அருளிச் செய்த ஸ்லோகம் இது

ஆலம்பனம் -ச துலம் -துலா மாச மூலம் —
அனைத்துக்கும் மூலம் –
சடாரி முக -தொடக்கமான ஆச்சார்ய ஸ்ரீ ஸூக்திகள் அறியும் மூலம் –
பிறவி பயன் பெற மூலம்

—————————

அப்பிள்ளை அருளிச் செய்த தனியன் –

யச் சக்ரே தேவராஜஸ்ய மங்களா சாசனம் முதா
தம் வந்தே ரம்யா ஜாமாத்ரு முநிம் விசத வாக் வரம்-

முதா -ஆனந்தம் பொங்க அருளிச் செய்த
சக்ரே -அருளிச் செய்தவர் –
ஜாமாதா -மணவாளன் — ரம்ய -அழகிய –முனிம் -மனன சீல-முனி –

பதற்றத்துடன் என் வருமோ -அதி சங்கையால் பல்லாண்டு பெரியாழ்வார்
இவரோ ஆனந்தத்துடன் மங்களா சாசனம்
பண்ணி அருளிய உபகார சிந்தனையால் ஆனந்தம் –
கண்டவாற்றால் தானே என்று நின்று அருளும் இவரைப் பார்த்து அதி சங்கையும் பண்ணவும் வேண்டாமே –
இவருக்கு அதிக ஈடுபாடே பிள்ளை லோகாச்சார்யார் தானே -இவரே அவராக அன்றோ

————————————————————————–

பல்லாண்டு -தொடங்கிய பெரியாழ்வார் போல் மங்களம் பாதத்தால் இங்கும் தொடக்கம் –
எந்த பேர் அருளாளன் கிருபை லேசத்தால் -தயா நிதிம் -தயைக்கு இருப்பிடம் –
ஆளவந்தார் ஸ்லோகம் -செவிடன் கேட்க்கிறான் -நொண்டியும் ஓடுகிறான் -ஊமையும் பேசுகிறான் –
குருடன் பார்க்க -மலடி பிள்ளைப் பேறு

மங்களம் வேதஸோ வேதி மேதிநீ க்ருஹமேதிநே
வரதாய தயா தாம்நே தீரோ தாராய மங்களம்-1

——————————

மங்களம்-பல்லாண்டு

வேதஸோ
பிரமனுடைய –

வேதி மேதிநீ –
உத்தர வேதி ஸ்தலத்தை –
நான் முகன் செய்த அஸ்வமேத யாகத்திலே
உத்தர வேதியில் திருவவதரித்து அருளினார்
புராண பிரசித்தி

க்ருஹமேதிநே –
இருப்பிடமாகக் கொண்டவருமான –

க்ருஹமேதிநே —
பெரும்தேவி மணவாளன் -என்றுமாம்
கமலா க்ருஹமேதிநம் -என்றார் ஸ்ரீ தேசிகன்

வரதாய-தயா தாம்நே –
அருளுக்கு இருப்பிடமான -என்றபடி-
வரம் ததா தீய -வேண்டிய மங்களங்கள் எல்லாம் அருளும் பேர் அருளாளன் – இறே-

தீரோ தாராய –
தைரியமும்
ஔதார்யமும் யுடையவர் -என்கை –
திருமங்கை ஆழ்வாருக்கு -வேகவதி மண்ணை அளந்து தானம் கொடுத்து –தங்க நெல் மணியாக மாறினதே —

மங்களம்-
பல்லாண்டு –
விரையார் பொழில் வேங்கடவன் -அரங்கனைப் பாட வந்த பொழுது -எங்கு இருந்து வந்தான் என்பதை உள்ளி மங்களா சாசனம் –
வடக்கு வாசல் வழியாக வந்து கண் வளர்ந்து அருளுகிறார் அன்றோ –
அதே போலே இங்கும் ஆவிர்பாவம் சொல்லி –மங்களாசானம் பண்ணி அருளிச் செய்கிறார் –

———————————————————————————————————–

வாஜிமேத வபா ஹோமே தாதுருத்தர வேதித
உதிதாய ஹூதாதக்நேர் உதாராங்காய மங்களம்–2-

வாஜிமேத -அஸ்வமேத யாகம்
வபா ஹோமே-ஹவிர் பாகம்
தாதுருத்தர வேதித-யாக குண்டம் யாக வேதிகை -உத்தர வேதிகை
உதிதாய ஹூதாதக்நேர் உதாராங்காய மங்களம்—ஆவிர்பவித்து -உதாராங்காய மங்களம் அழகிய திரு மேனியுடன் –
கீழே வரத்தை சொல்லி இங்கு அழகிய திரு ரூபம் –
வள்ளல் தன்மை -உதாரன்-அழகை நேராக காட்டி -நாமும் இன்றும் சேவிக்கும் படி திரு முகத்தில் வடுக்கள் உடன்
அநந்தம் பிரதம ரூபம் –சாலைக் கிணறு –உயர்ந்த ரத்னம் அரங்கன் தன்னிடமே கொள்ளுவான் —
அரையர் தாளம் இசைத்து -அருளிச் செயல்களை -சாதித்து -கச்சிக்கு வாய்த்தான் மண்டபம் –
அத்தியூரான் புள்ளை யூர்வான் -நம் இராமானுஜனை தந்து அருள வேணும்
கெட்டேன்-ராமன் த்வரி ந பாஷதே -தந்தோம் -தியாகம் -இவருக்கே உரிய தனிச் சிறப்பு –

பிரமனுடைய அயமேத வேள்வியில் வபையை எடுத்து
ஹோமம் பண்ணின யுடனே
உத்தர வேதியில் நின்றும்
ஹோம குண்டலத்தில் இருந்து உதித்து அருளினவரும்
அழகிய திரு மேனியை யுடையவருமான
பேரருளாளப் பெருமாளுக்கு பல்லாண்டு-

—————————————————————

யஜமாநம் விதிம் வீஷ்ய ஸ்வயமான முகச்ரியே
தயமாந த்ருசே தஸ்மை தேவராஜாய மங்களம்-3-

விதிம்-ப்ரம்மா
ஸ்வயமான முகச்ரியே–சிரித்த முகத்துடன்
தயமாந த்ருசே தஸ்மை
தேவராஜாய மங்களம்-

தாதாம் ஆவீர் பூத் ஸவ்ரி ஸ்வயமான முகாம்புஜ பீதாம்பரத ஸ்ரக்வீ -சாஷாத் மன்மத மன்மத-

கோபிமார்கள் –ஆனந்தம் சாத்மிக்க-மறைய -துக்கம் -மிக்கு -அத்தை போக்க சங்கு சக்கர -பீதாம்பர காட்சி கொடுப்பதை –
தாதாம் ஆவீர் பூத் ஸவ்ரி–முதல் பாதம் -விவரணம் முன் பாசுரம் –
ஸ்வயமான–இரண்டாம் பாதம் -இப்பாசுரம்
பீதாம்பர -பட்டு பீதாம்பரம் -ஸ்ரக்வீ -வனமாலை -திருத் துழாய் மாலைகள் உடன்
சாஷாத் மன்மத மன்மத –ஆறாவது ஸ்லோகத்தில் காட்டுவார் –

தம்மை சாஷாத் கரிக்கும் பொருட்டு
வேள்வி செய்த பிரமனை நோக்கிப்
புன்முறுவல் செய்து கொண்டு
அருள் நோக்கம் தந்து அருளின
தேவப் பெருமாளுக்கு பல்லாண்டு

—————————————————

வாரித ஸ்யாம வபுஷே விராஜத் பீத வாஸஸே
வாரணா சல வாஸாய வாரி ஜாஷாய மங்களம்–4-

வாரித ஸ்யாம வபுஷே –
கரு முகில் போல்வதோர் திருமேனி யுடையவரும்

விராஜத் பீத வாஸஸே –
பீதக வாடை திகழும்
திருவரையை யுடையவரும்

வாரணா சல வாஸாய –
திரு வத்தி மா மலையைத்
தன்னிடமாகக் கொண்டவரும்

வாரி ஜாஷாய –
செந்தாமரைக் கண்ணருமான
தேவப் பெருமாளுக்கு
அக்ஷன் கண் -வாரி நீர் -வாரி ஜ நீரில் வந்த தாமரை

மங்களம் –
பல்லாண்டு-

வாரித ஸ்யாம வபுஷே -வாரி –மேகம் -ஸ்யாமளா-திருமேனி –கறுத்த-பத்து மஞ்சள் –
கருணை நிறம் கருப்பு -கோபம் சிகப்பு –செய்யாள் -திருக்கண் திருமேனி -மாறி –
விராஜத் பீத வாஸஸே-பீதாம்பரம் –
வாரணா சல வாஸாய -சலம் -வாரணம் -யானை மலை -ஹத்திகிரி வாசம் -ஐராவதம் கைங்கர்யம் —
வாழைத்தண்டு விளக்கு –அனைவருக்கும் அருள் புரிய
வாரிஜா ஷாய மங்களம்- வாரி – ஜலம் –தாமரை -அக்ஷன் கண் -தாமரைக் கண்ணன்

————————————————————

அத்யாபி சர்வ பூதாநாம் அபீஷ்ட பல தாயிநே
பிரணதார்த்தி ஹராயாஸ்து ப்ரபவே மம மங்களம்-5-

நான்முகனுக்கு அபேஷித சம்விதானம் செய்து அருளினது போலவே
இன்றைக்கும்
சகல பிராணி வர்க்கங்களுக்கும்
அபேஷிதங்களான பலன்களை அருளிச் செய்பவரும்
ஆஸ்ரிதர்கள் அநிஷ்ட நிவ்ருத்திகளையும் செய்து அருள்பவரும்
எனக்குத் தலைவருமான
தேவப் பெருமாளுக்கு
பல்லாண்டு-

அத்யாபி சர்வ பூதாநாம் -அனைவருக்கும் -இன்றும் கூட -நான் முகனுக்கு -திரு மங்கை ஆழ்வாருக்கு –
ராமானுஜரை ரஷித்து -தேசிகனுக்கு அருளி -நமக்கும் இன்றும் –
தமக்கும் திருவாயமொழிப்பிள்ளை மூலம் ஈடு கொடுத்து அருளினார்-
அபீஷ்ட பல தாயிநே-அனைத்தையும் அருளும்
பிரணதார்த்தி ஹராயாஸ்து- ப்ரபவே மம மங்களம்-5-
தேசிகன் -உஞ்ச வ்ருத்தி செய்து-கால ஷேபம்– ஸ்ரீ ஸ்துதி -தங்க மழை பொழிய -பிரம்மச்சாரி பிள்ளைக்கு கல்யாணத்துக்கு –

—————————————————————

திவ்ய அவயவ சௌந்தர்ய திவ்ய ஆபரண ஹேதயே
தந்தாவள கிரீசாய தேவராஜாய மங்களம்–6-

திவ்யமான அவயவ சௌந்தர்யத்தை யுடையவரும்
திவ்யமான ஆபரணங்களை யுடையவரும்
ஸ்ரீ ஹஸ்திகிரி நாதருமான
தேவப் பெருமாளுக்கு
பல்லாண்டு
தந்தா வளம் =என்று யானைக்கு பெயர்-

திவ்ய அவயவ சௌந்தர்ய –லாவண்யமும் சௌந்தர்யமம் உண்டே –
திவ்ய ஆபரண ஹேதயே-கிரீட மகுட –சங்கு சக்கர இத்யாதி -கழுத்தில் பெரும் தேவியார் கை வளையல் தழும்பு –
தந்தாவள கிரீசாய –யானை மலை தலைவன்
தேவராஜாய மங்களம்–
க்ளைவ்ஹாரம்–Robert Claiv -கருட சேவைக்கு -பெருமாள் எழுந்து அருள -திரு ஒத்து வாடை சமர்ப்பிக்க -வியர்க்குமா -கேட்டானாம் –
பிழிந்து காட்ட -சாஷாத் -என்று உணர்ந்தானாம் -அர்ச்சாவரதாரம் உயிர் உண்டு விஸ்வசிப்பவனே ஸ்ரீ வைஷ்ணவன் என்பாராம் நம்பிள்ளை
அவன் கொடுத்த ஹாரம் –கருட சேவை பொழுது இன்றும் சாத்துவார்கள் –

——————————————————————

புருஷாய புராணாய புண்ய கோடி நிவாஸிநே
புஷ்பிதோ தார கல்பத்ரு கமநீயாய மங்களம்—7

புருஷாய புராணாய-
அநாதி சித்த புருஷரும்

புண்ய கோடி நிவாஸிநே –
புண்ய கோடி விமானத்திலே எழுந்து அருளி இருப்பவரும்

புஷ்பிதோ தார கல்பத்ரு கமநீயாய –
பூத்து அழகிய கல்ப வருஷம் போல்
ஸ்ப்ருஹணீயமான
தேவப் பெருமாளுக்கு
கமநீய -விரும்பத் தக்கவர்

மங்களம் –
பல்லாண்டு-

புருஷாய புராணாய–உத்தம புருஷன் -புருஷோத்தமன் -மனசை வசிப்பதால் புருஷன் -புரி-சேதியதி புருஷ
நெஞ்சமே நீள் நகர் -இதுவே தலை நகர் அவனுக்கு –
மனத்துள்ளான் -மா கடல் நீர் உள்ளான் –பேயாழ்வார் முதலில் –
புரு பஹு சனோதியதி புருஷ -கொடுப்பவர் -என்றுமாம் -உயர்ந்த பரம புருஷார்த்தம் அருளுபவர் –
அதமன் -மத்யமன் -உத்தமன் -புருஷோத்தமன் –ராமானுஜரை அனைவரும் அனுபவிக்க கொடுத்து
புராணாயா -தொல்லை மால் –மற்றவை நவீனம் -சரபர் -கற்பனை -ப்ரத்யங்கிரா தேவி -ப்ரத்யங்கிங்கிரா மேலும் வரும் –
புரா அபி நவி புராணம் -அந்த அந்த சனத்துக்கு புதிதாக -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம் இவனே –
புண்ய கோடி நிவாஸிநே–விமானம் -சாயை நிழலில் செய்யும் புண்ய கார்யம் கோடி மடங்கு –
இதனால் தான் ப்ரம்மா இங்கே அஸ்வமேத யாகம்
ஆனந்த நிலையம் -திருமலை –எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –
கமநீயாய மங்களம்-பொன்னே போலே அனைவரு விரும்பி பொக்கிஷம் போலே கொள்ளும்
தாமரைக்காடு -பூத்தால் போலே அன்றோ -கண்ணனையும் தாமரை –அடியும் அஃதே –

—————————————————————–

காஞ்ச நாசல ச்ருங்காக்ர காளமேகா நுசாரிணே
ஸூபர்ண அம்ஸ அவதம்ஸாய ஸூர ராஜாய மங்களம்–8-

காஞ்ச நாசல ச்ருங்காக்ர காளமேகா நுசாரிணே –
பொன் மயமான தொரு மலையின் உச்சியிலே
காளமேகம் திகழ்வது போலே

ஸூ பர்ணாம் ஸாவதம் ஸாய ஸூ ரராஜாய மங்களம் –
பெரிய திருவடியின்
திருத் தோளுக்கு
அலங்காரமாகி நின்ற
தேவப் பெருமாளுக்குப்
பல்லாண்டு-

ஸூபர்ண -கருடன்

காய்ச்சின பறவை யூர்ந்து பொன்மலையின் மீ மிசைக் கார்முகில் போல் -திருவாய்மொழி
அத்தியூரான் புள்ளை யூர்வான் -பூதத் தாழ்வார்
வையத்தெவரும் வணங்கும் பெரிய திருவடி சேவை -பிரசித்தம் இறே-

காஞ்ச நாசல ச்ருங்காக்ர -ஸ்வர்ணமே மலையாக -உச்சி மேலே
காளமேகா நுசாரிணே–காள மேகம் –
ஸூபர்ண அம்ஸ அவதம்ஸாய -கருடன் ஸ்வர்ண மலை போலே -வைகாசி விசாகம் -கருட சேவை காண கண் கோடி வேணுமே
அடியார் தோள்களில் மிதந்து வரும் படி -தொட்டாச்சார்யார் சேவை பிரசித்தம் –தக்கான் குளம் –
ஸூ ரராஜாய மங்களம்–தேவ ராஜர் -அமரர்கள் அதிபதி -இமையோர் தலைவா –

————————————————————————–

போகா பவர்க்க யோரேகம் வாஞ்சத்ப்யோ தத்தே த்வயம்
ஸ்ரீ மத் வராத ராஜாய மஹோதாராய மங்களம்–9-

இருள் தரும் மா ஞாலம் ஆகிய இவ் வுலகத்தில் போகம் என்றும்
நலமந்த மில்லதோர் நாடாகிய நித்ய விபூதியில் போகம் என்றும்
போகம் -இருவகைப் படுமே
ஐஹிகத்தை விரும்புவார் சிலர்
ஆமுஷ்மிகத்தை விரும்புவார் சிலர்
இங்கனே ஓர் ஒன்றை விரும்பினாலும் கூட
தம்முடைய ஔதார்ய விசேஷத்தாலே-
இரண்டையும் அளித்து அருள்பவர்
பேரருளாள பெருமாள்
என்கிறார் –

அவன் நாடு நகரமும் நான்குடன் காண
நலனிடை யூர்தி பண்ணி
வீடும் பெறுத்தித்
தன் மூ வுலகுக்குத் தரும் ஒரு நாயகமே -போலே –

போகா பவர்க்க யோரேகம் வாஞ்சத்ப்யோ தத்தே த்வயம்
போகம்-ஐஸ்வர்யம் – -அபவர்க்கம் -முக்தி –
கூரேச விஜயம் -நாலூரானுக்கும் அருளி –
ஸ்ரீ மத் வராத ராஜாய மஹோதாராய மங்களம்–

———————————————————————————–

மதங்க ஜாத்ரி துங்காக் ரச் ருங்கச் ருங்கார வர்ஷ்மணே
மஹாக்ருபாய மத்ர ஷா தீஷி தாயாஸ்து மங்களம்–10-

ஸ்ரீ ஹஸ்த கிரியின் மிக வுயர்ந்த உச்சிக்கு
அலங்காரமான திரு மேனியை யுடையவரும்
என் போல்வாரைக் காத்து அருள்வதில் தீஷை கொண்டவருமான
பேரருளாள பெருமாளுக்கு
பல்லாண்டு
வர்ஷம் -திருமேனி

மதங்க ஜாத்ரி-யானை மலை
துங்காக் ரச் ருங்கச் ருங்கார வர்ஷ்மணே-அழகன் அழகிய திரு மேனி உடன் சிகரத்தில் சேவை சாதித்து
மஹாக்ருபாய மத்ரஷா தீஷி தாயாஸ்து மங்களம்–ரக்ஷண தீக்ஷை
மணல் பாக்கத்து நம்பி -ரகஸ்யார்த்தம் கேட்க -ஸ்வப்னத்திலே -அருளி —தூங்கிண்டே கால ஷேபம் கேட்ப்பாராம்
-மீதி இரண்டு ஆற்றங்கரை நடுவில் கேட்டு -உபய காவேரி வட தென் காவேரி நடுவில் காட்டு அழகிய சிங்கர் சந்நிதி –
கூற நாராயண ஜீயர் -யானைகள் தீங்கு வராமல் இருக்க சிங்க பெருமாள் பிரதிஷ்டை செய்து அருளினாராம் –
பிள்ளை லோகாச்சார்யார் -தொடர்ந்து அருள -அவரோ நீர் -என்றாராம் –
மா முனிகள் வியாக்யானம் பண்ணும் படி அருளிய தீக்ஷை -மஹா கிருபாய -மத் ரஷா தீக்ஷை

—————————————————————————–

ஸ்ரீ காஞ்சீ பூர்ண மிஸ்ரேண ப்ரீத்யா சர்வாபி ஷிணே
அதீதார்ச்சாவ்ய வஸ்தாய ஹஸ்த்யத்ரீசாய மங்களம்–11

அர்ச்சாவதார சமாதியைக் கடந்து
திருக் கச்சி நம்பிகளோடு
பரம ப்ரீதி யுடன் வார்த்தையாடி யருளின
தேவப் பெருமாளுக்கு பல்லாண்டு
நம்பிகள் -ஆறு வார்த்தை பிரசித்தம் இறே
அநவரதம்-வார்த்தை யாடினது -என்பதால் சர்வாபி பாஷிணே-என்கிறார்-

ஸ்ரீ காஞ்சீ பூர்ண மிஸ்ரேண -திருக் கச்சி நம்பி உடன்
ப்ரீத்யா சர்வாபி ஷிணே-அன்புடன் -பேசி –
பணிவிடை -ஆலவட்டம் –காவேரி அரங்கன் -குளிர் அருவி வேங்கடம் -இவன் தானே அக்னி குண்டத்தில் -இருந்து –
கூரத் ஆழ்வான் திரு மாளிகை கதவு மணி சப்தம் -ஆறு வார்த்தை அஹம் ஏவ பரத்வம்
பேதமே தர்சனம் -உபாயம் திருவடி பிரபத்தி -அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம்
தேகாவசேனா முத்தி –
பூர்ணாஸ்சார்யம் ஸமாஸ்ரய –
கேசவ சோமயாஜுலு கேட்க புத்ர காமாஷ்ட்டி யாகம் திரு வல்லிக் கேணியில் செய்ய சொல்லி அருளினார் –
வீசினேன் -பேசினேன் -மோக்ஷம் ஆச்சார்ய சம்பந்தம் அடியாக தானே -ஆறு மாச காலமாவது கைங்கர்யம் செய்தே-
பேசினவர்க்கு யார் கைங்கர்யம் கொடுப்பார் -அதனால் -இடையராக திருக் கோஷ்ட்டியூர் நம்பிக்கு கைங்கர்யம் செய்தாராம் –
அதீதார்ச்சாவ்ய வஸ்தாய- ஹஸ்த்யத்ரீசாய மங்களம்-அர்ச்சை நிலையை குலைத்து பேசினீரே பல்லாண்டு

———————————————————————-

அஸ்து ஸ்ரீஸ்தந கஸ்தூரீ வாஸநா வாஸி தோரஸே
ஸ்ரீ ஹஸ்தி கிரி நாதாய தேவ ராஜாய மங்களம்—12-

கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து
ஒரு நாள் தங்கு மேல் என்னாவி தங்கும் என்று உரையீரே -என்று
ஆண்டாளைப் போலே பாரிக்க வேண்டாமல்
பெரிய பிராட்டியார் அநவரதமும் திரு மார்போடே
அணைந்து இருக்கையாலே
அளளுடைய திருமுலைத் தடத்தில் சாத்தின கஸ்தூரிக்குப் பின்
நறுமணம் கமழா நின்ற
திரு மார்பை யுடையவரான
ஸ்ரீ ஹஸ்திகிரி நாதற்குப்
பல்லாண்டு-

ஸ்ரீ ஹஸ்தி கிரி நாதாய தேவ ராஜாய மங்களம்-திரு மார்பில் சந்தனம் அவள் இடம்
அவள் திரு மார்பில் கஸ்தூரி இவன் இடம்

———————————————————————————-

மங்களா சாசன பரை மாதாசார்ய புரோகமை
சர்வைஸ் ச பூர்வைரா சார்யை சத்க்ருதாயாஸ்து மங்களம் -13

பல்லாண்டு பாடுவதையே தொழிலாகக் கொண்ட
அஸ்மத் ஆச்சார்யர் முதலான
சகல பூர்வ ஆச்சார்யர்களாலும் போற்றப் பெற்ற பெருமானுக்கு
பல்லாண்டு –

முன்னோர்கள் உடைய முறைமையை பின் பற்றியே அடியேனும்
இந்த ஸ்துதியினால்
பல்லாண்டு பாடினேன் -என்று
அருளிச் செய்து தலைக் கட்டினார் ஆயிற்று-

—————————————————————-

மணவாள மா முனிகள் திவ்ய தேச யாத்ரை யடைவில்
முதல் பர்யாயமாக
பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளின போது
அருளிச் செய்தவை –

ஸ்ரீ மத் த்வாரம் மஹத்தி பலி பீடாக்ர்யம் பணீந்த்ராஹ் ரதம்
கோபி நாம் ரமணம் வ்ராஹவபுஷம் ஸ்ரீ பட்ட நாதம் முநிம்
ஸ்ரீ மந்தம் சடவைரிணம் கலிரிபும் ஸ்ரீ பக்திசாரம் முநிம்
பூர்ணம் லஷ்மண யோகிநம் முநிவரான் ஆத்யான் அத த்வாரபௌ
ஸ்ரீ மன் மஜ்ஜ ந மண்டபம் சரசி ஜாம் ஹேதீச போகீஸ்வரரௌ
ராமம் நீல மணிம மஹா ந சவரம் தார்ஷ்யம் நருசிம்ஹாம் ச்ரியம்
ஸே நாநயம் கரி பூதரம் ததுபரி ஸ்ரீ புண்ய கோட்யாம் ஹரிம்
தன் மத்யே வரதம் ரமா சஹசரம் வந்தே ததீயைர் வ்ருதம்

1-திருக் கோயில் வாசல்
2-மஹா பலி பீடம்
3-திரு வநந்த புஷ்கரணி -அநந்த சரஸ
4-வேணு கோபாலன்
5- ஞானப் பிரான்
6- பட்டர் பிரான் -பெரியாழ்வார்
7-நம் ஆழ்வார்
8-கலியன்
9-திருமழிசைப் பிரான்
10-எம்பெருமானார்
11-முதல் ஆழ்வார்கள்
12-த்வார பாலகர்கள்
13- அபிஷேக -திருமஞ்சன -திரு மண்டபம்
14-பெரும் தேவித் தாயார்
15-திருவாழி ஆழ்வான்
16- திரு வநந்த வாழ்வான்
17-சக்கரவர்த்தி திருமகன்
18- கருய மாணிக்கப் பெருமாள்
19-திரு மடைப் பள்ளி
20-பெரிய திருவடி
21- அழகிய சிங்கர்
22-சூடிக் கொடுத்த நாச்சியார்
23- சேனாபதி ஆழ்வான்
24- திருவாத்தி மா மலை
25- அதன் உச்சியில் புண்ய கோடி விமானத்தில்
அடியார்கள் புடை சூழ காட்சி தரும்
பெரும் தேவி மணாளன் பேரருளாள்ன்
ஆக இவர்களை எல்லாம் தொழுது மங்களா சாசனம் செய்து அருளின படி சொல்லும் ஸ்லோஹம்-

———————————————————————–

ஸ்ரீ காஞ்சி புரியில் உள்ள அஷ்டாதச திவ்ய தேசங்கள் மங்களா சாசனம் செய்து அருளின ஸ்லோகம்

தேவாதீச நருசிம்ஹா பாண்டவ மகாதூத பிரவாலப்ரபான்
ஸ்ரீ வைகுண்டபதிம் த்ரிவிக்ரமஹரிம் நீரேசமேகேச்வரௌ
நீலவ்யோமவிபும் மகோரகஹரிம் ஜ்யோத்ஸ் நேந்து முகுந்தாஹ்வையம்
காமா வாசபதிம் நருகேசரிவரம் தீபப்ரகாசப்ரபும்
ஸ்ரீ யுக்தாஷ்ட புஜாச்பதேச மநகம் ஸ்ரீ மத்ய தோக்தக்ரியம்
இத்யஷ்டா தச திவ்ய மங்கள புர்தேவான் சரோயேகிநா
ஸாகம் நிஸ் துல காஞ்ச்ய பிக்ய நகரீ நாதான் நமா மஸ் சதா

1-தேவப்பெருமாள்
2-அழகிய சிங்கர்
3-பாண்டவ தூதர்
4-பவழ வண்ணர்
5-வைகுண்ட நாதன் -பரமேஸ்வர விண்ணகரம்
6-உலகளந்த பெருமாள்
7-நீராகத்தான்
8-காரகத்தான்
9-கார் வானத்துள்ளான்
10-ஊரகத்தான்
11-நிலாத் திங்கள் துண்டத்தான்
12-கள்வர்
13-உள்ளுவார் உள்ளத்தான்
14-முகுந்தப் பெருமாள்
15- வேளுக்கை -ஆள் அழகிய சிங்கர்
16-விளக்கொளி எம்பெருமான்
17-அட்ட புயகரத்தான்
18-சொன்ன வண்ணம் செய்த பெறுமா -திரு வேக்கா
ஆக 18 பெருமாள்களையும்
பொய்கை ஆழ்வாரையும்
எஞ்ஞான்றும் இறைஞ்சுகிறோம்
என்றது ஆயிற்று-

——————————————————–

முக்தகம் –

ஆளவந்தார் பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளின காலத்தில்
யாதவ பிரகாசர் பக்கலிலே வேதாந்தம் அதிகரித்துக் கொண்டு இருந்த உடையவர்
விரைவில் சித்தாந்த ப்ரவர்த்தகராக ஆகவேணும் என்று
தேவப் பெருமாள் திருவடிகளிலே
இந்த ஸ்லோஹம் அனுசந்தான பூர்வகமாக
பிரபத்தி பண்ணினார் என்றும்
அப்போதாக அவதரித்த ஸ்லோஹம் –

யஸ்ய பிரசாத கல்யா பதிர ச்ருணோதி
பங்கு ப்ரதாவதி ஜாவேந ச வக்தி மூக
அந்த ப்ரபச்யதி ஸூ தம் லபதே ச வந்த்யா
தம் தேவ மேவ வரதம் சரணம் கதோஸ்மி-

பேரருளாள பெருமாள் உடைய அனுக்ரஹ லேசத்தினால்
செவிடனும் செவி பெறுவான்
முடவனும் விரைந்தோடுவான்
ஊமையும் பேச வல்லவனாவான்
குருடனும் காணப் பெறுவான்
மலடியும் மக்கள் பெறுவாள்
இப்படிப் பட்ட அனுக்ரஹம் செய்தருள வல்ல
பேரருளாளப் பெருமாளைத் தஞ்சமாகப் பற்றுகின்றேன்
என்றவாறே-

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரும் தேவித் தாயார் சமேத பேரருளாளப் பெருமாள் திரு வடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்