Archive for the ‘Srirengam’ Category

ஸ்ரீ திருவரங்க சிலேடை மாலை –ஸ்ரீ அபி நவ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் —

October 28, 2021

நூறு வெண்பா பாடல்கள் –
முதல் இரண்டு வரிகளால் திருவரங்க சிறப்பையும்
பின் இரண்டு வரிகளால் திரு அரங்க நாதனின் சிறப்பையும் சொல்லும்

ஐந்து பாடல்களுக்கு ஒரு முறை 20 பாடல்களில் மூன்று சிலேடைகளும்
பத்து பாடல்களுக்கு ஒரு முறை பத்துப் பாடல்களில் நான்கு சிலேடைகளும்
நூறாவது வெண்பாவில் மா மணி மகுடம் போல் ஐந்து சிலேடைகளும் கொண்ட திவ்ய பிரபந்தம்

ஸ்ரீ ஸ்வாதி திருநாள் அரச கவிஞரான ஸ்ரீ தென் திருப்பேரை வாசி யான ஸ்ரீ குழைக்காத ஐயங்காரின்
திருப்புதல்வரான கவி ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ ஐயங்காருக்கும்
அவரது அருமைத் தேவியாரான ஸ்ரீ குழைக்காத நாய்ச்சியாருக்கும் -1869-திரு அவதரித்த ஸ்வாமி இவர் –
ஸ்ரீ அனந்த கிருஷ்ண ஐயங்கார் -இயல் பெயர் -இவருக்கு
ஸ்ரீ வானமா மலை -25 பட்ட ஜீயர் இவருக்கு அபிநவ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்ற
பட்டப்பெயர் சூட்டி அபிமானித்து அருளினார்

ஸ்ரீ பத்ம நாப ஸ்வாமி சந்திரகலா மாலை
ஸ்ரீ திருப்பேரைக் கலம்பகம்
ஸ்ரீ தனிப்பா மஞ்சரி போன்ற பல நூல்களையும் இயற்றி உள்ளார்

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் குலத்தரான இவரை கருவிலே திருவுடையவர் என்றும்
ஸ்ரீ மதுரகவி என்றே புகழ வேண்டும் என்பர்

———-

அணி அரங்க மாலை அடி பணிந்து அம் நல் தாளுக்கு
அணி அரங்க மாலை அணிந்தான் -தணிவில்
அனந்த வளத்து தென் பேரையான் றலவ காரன்
அநந்த க்ருஷ்ண பேர்க் கவிஞன் ஆய்ந்து –ஸ்ரீ உ வே சுவாமிநாத ஐயர் –1900-

ஆலை யுறு வான் தாட்க்கு அரங்கச் சிலேடை வெண்பா
மாலை யன்பாய்ச் சூட்டி இசை மன்னினான் -ஆலையுடன்
தென்ன நந்த மாவருக்கை சேரும் திருப்பேரை
மன்னன் அநந்த கிருஷ்ண கவி மான் –இராம நாத புரம் ஸமஸ்தான வித்வான் ப்ரஹ்ம ஸ்ரீ பிச்சு ஐயர் அவர்கள் -1904-

————-

திருவரங்க மாலுக்குச் சிலேடைத் தார் சாத்திப்
பெரு வரங்கள் நாளும் பெறவே –வரு கவிகள்
கொம்பேறித் தாவும் குருகூர் மகிழ் மாறன்
அம்போ ருகத்தாள் அரண் –1-காப்பு வெண்பா

சிலேடைத் தார்-சிலேடை மாலை
கவிகள் -குரங்குகள்
குருகூர் -ஆழ்வார் திரு நகரி
மகிழ் -மகிழம்பூ மாலையை யுடைய
மாறன் -நம்மாழ்வார்
அம்போருகம்–தாமரை
அரண் -காப்பு –

அம்போ ருகத்தாள் –தாமரையில் வீற்று இருப்பவள் –திருமகள் -கலைமகள் இருவருக்கும் பொருந்தும்
அரண் -நம்மாழ்வார் -திரு மக்கள் காலை மக்கள் மூவருமே காப்பாவார்கள்
குருகூர் மகிழ் மாறன் -மால் -தன் -அம்போ ருகத்தாள் -ஆழ்வார் திருநகரியை உகந்து கொண்டு அருளிய
ஸ்ரீ ஆதி நாதராது பாதார விந்தம் என்றுமாம் –

——————

மன்னும் இதயத்தில் வைத்தேன் சிலேடை யதாய்
உன்னு பதங்கள் உதிக்கவே –மின்னும்
மதிள் மருவு தண் அரங்க மாலின் அருள் வாய்ந்த
பதின்மர் அரும் பூம் பதம் –2-பதின்மர் வெண்பா

பதங்கள் -சொற்கள்
பதம் -திருவடி
பதின்மர் பதங்களையும் இதயத்தில் வைத்தலால் –
உன்னிய பதங்கள் எல்லாம் -பல பொருள் தரும் சிலேடையாய் உதிக்கும் என்கிற நயம் காண்க
பதின்மர் -ஆழ்வார் மதுரகவியார் நீங்கலாக உள்ள ஆழ்வார்கள்

———-

நாடியே நான் பணிந்தேன் நன்கு அருள்வாய் மல்லி வள
நாடியே கோதாய் நறுங்குழல் நீ -சூடிய நன்
மாலை அணி அரங்க மா மணவாளற்கு உவந்து
மாலை சொல நின் தாள் மலர் –3-ஆண்டாள்

மல்லி வள நாடி–மல்லி வள நாட்டுக்கு உரியவள் -வில்லி எனும் வேடனது தாயான மல்லி என்பவள்
ஆண்ட நாடு மல்லி நாடு எனப் பெயர் பெற்றது
ஆண்டாள் நீ சூடிய மாலையை ஏற்றவன் ஆதலின் நின் தாள் மலர் பணியும் நான் உவந்து சூடும்
இப் பா மாலையை ஏற்றுக் கொள்வான் என்று ஆசிரியர் கூறும் பொருள் நயம் காண்க –

————-

இக் கோன் பிதாவாம் எழில் அரங்கர் அண்டர் இறைஞ்ச சு
இக் கோன் அடி புனையும் இம் மாலை -தக்கோர்
மதுர கவி என்றே மதிப்பான் அமைத்தேன்
மதுர கவியாரை மனத்து –4-மதுர கவி யாழ்வார்

இக் கோன் பிதா-இக்கு -கரும்பு -வில்லை யுடைய மன்மதனுக்குப் பிதா -சாஷாத் மன்மத மன்மதன்
இக்கோன் -இந்தப்பெருமான்
அண்டர்-தேவர் என்றும் இடையர் என்றும்
அண்டர் இறைஞ்சு இக் கோன் –ஆயர் வணங்கும் இவ்வாயர் தலைவன்
மதுர கவி என்றே மதிதித்து தக்கோர் எல்லாம் பாராட்ட மதுர கவி ஆழ்வாரை மனத்து அமைத்தேன்-என்கிறார்

———

சீர் அங்கம் ஒன்றும் தெரியா மட நெஞ்சே
சீர் அரங்கற்கு இம் மாலை செப்ப எணில் -தூர
மதித் தலைவன் தாழை வளர்ந்து ஓங்கும் பூதூர்
எதித் தலைவன் தாளை இறைஞ்சு –5–உடையவர்

சீர் அங்கம் -சிறப்பு வாய்ந்த ஆறு அங்கங்கள் –சீர் முதலிய யாப்பின் உறுப்புக்கள் என்றுமாம் –
தூரமதித் தலைவன் தாழை வளர்ந்து ஓங்கும் பூதூர் -வெகு தூரத்தில் உள்ள சந்திரனிடம் பொருந்துமாறு
தாழை வளர்ந்து ஓங்கும் ஸ்ரீ பெரும்பூதூர்
எதித் தலைவன் தாளை இறைஞ்சு –எதிராஜர் உடையவர் இணை அடிகளையே ஸ்துதித்துப் போ

————-

அல்லும் பகலும் அனுதினமும் என்னெஞ்சே
சொல்லரிய பேர் இன்பம் தோய்வதற்கா -நல்ல
குணவாள மாந்தர் குழாம் ஏத்தும் எந்தை
மணவாள மா முனியை வாழ்த்து –6- மா முனிகள்

————-

சென்னிக்கு அணி மலராம் சிந்தை அளிக்கு அம்புயமாம்
மன்னு பவக் கடற்கோர் வங்கமதாம் –தன்னின்
பதியோடு அலர் மங்கை பற்று வர மங்கைப்
பதி வாழ் எதியின் பதம் –7- ஆச்சார்ய ஸ்துதி

அம்புயமாம் –தாமரை மலராம்
வங்கமதாம் –மரக்கலமாம்
அலர் மங்கை தன் இன் பதியோடு பற்று வர மங்கைப் பதி -மிதுனமாய் உகந்து வீற்று இருந்து அருளும்
ஸ்ரீ வரமங்கை பதி -ஸ்ரீ நான்கு நேரி –
வாழ் எதியின் பதம் –எதி ஸ்ரீ வானமா மலை ஆதீன கர்த்தரும் இந்நூல் ஆசிரியரின் ஞான ஆச்சார்யரான
ஸ்ரீ ராமானுஜ ஸ்வாமிகள் -அஷ்ட திக் கஜங்களில் முதல்வர்

எதியின் பதம் சிரத்தில் சூடும் மலராகவும்
மனமாகிய வண்டுக்கு ஏற்ற தாமரையாகவும்
பாவமாகிய கடலைக் கடத்தற்கு ஏற்ற மரக்கலமாகவும் -விளங்கு கின்றது -என்கை –

———-

நூல் அருமை சற்றும் நுகராத புன் மதியேன்
கோலச் சிலேடை வெண்பாக் கூறுவது –பாலகர் தாம்
பாண்டி வரைந்து பரவையை வட்டாடும் கால்
தாண்டுவது போலாம் தலத்து –8- அவை அடக்கம் –

பாண்டி வரைந்து வட்டாடுதல் -பாண்டி ஒரு வித விளையாட்டு –
அவ்விளையாட்டுக்கு உரிய அரங்கினை வகுத்து -அதில் கண்ட வாய் -சமுத்திரம் -காடு எனப்பெயர் இட்டு வட்டு ஆடுதல்
அரங்கு இன்றி வட்டாடி அற்றே -திருக்குறள்
அல்ப மதியையுடைய நான் அழகிய சிலேடை வெண்பாக்களைக் கூறி விடுவேன் என்பது
பாலகர் பாண்டி வரைந்து விளையாடுகையில் சமுத்திரம் தாண்டினேன் என்று கூறுதலை ஒக்கும் -என்று அடக்கத்தை அறிவிக்கிறார் –

————-

திங்கள் நுதல் ஆயிழையார் தேங்கூந்தல் கொங்கை நடை
அங்கனமே நேரும் அரங்கமே –துங்க வகிச்
சக்கரத்தான் அனத்தான் தனி வாரி சக்கரத்தான்
சக்கரத்தான் அனத்தான் தலம் –1-மூன்று சிலேடைகள்

திங்கள் நுதல் ஆயிழையார் -சந்திரனை ஒத்த நெற்றியை யுடைய பெண்கள் உடைய
தேங்கூந்தல் அங்கனமே நேரும் -அம் கனமே நேரும் – -அழகிய கூந்தலானது ஜலத்தை யுடைய மேகத்தை ஒக்கும்
கொங்கை அங்கனமே நேரும்–அழகிய பாரத்தைப் பொருந்தும்
நடை அங்கனமே நேரும்–அங்கு அனமே நேரும் -அனம்-அன்னம் – -நடையோ அன்னத்தை நிகர்க்கும்
துங்கம் -உயர்வு
வகிச் சக்கரத்தான் அனத்தான்-அகி சேஷம் -சக்கரம் -மலை –சேஷாசலத்தை இருப்பிடமாகக் கொண்டு அருளுகிறவன்
தனி வாரிசக் கரத்தான் –ஒப்பற்ற -வாரிசாம் -தாமரை போன்ற திருக்கரங்கள் யுடையவன்
சக்கரத்தான் நத்தான் –சக்ராயுதமும் சங்கும் ஏந்தியவன் –
தலம் –இடம்

—————-

செம் பொன் மதிள் புறத்தும் தேர் வீரர் தூணியிலும்
அம்பு அகழி சேரும் அரங்கமே -பைம் பொழில் வாய்
செல் நகரான் குன்றான் திருக் குருகையான் குடந்தைப்
பொன்னகரான் குன்றான் புரம் –2-

செம் பொன் மதிள் புறத்தும் அம்பு அகழி சேரும்-நீர் நிறைந்த அகழி
தேர் வீரர் தூணியிலும் அம் பகழி சேரும்-அழகிய பாணங்கள் சேரும்
அரங்கமே –
பைம் பொழில் வாய் செல் நகரான் குன்றான் -சோலையின் இடத்து மேகம் சஞ்சரிக்கும் ரிஷப கிரியை யுடையவன்
திருக் குருகையான்
குடந்தை பொன்னகரான் குன்றான் -திருக்குடந்தைப் பதி குறையாதவன்
புரம் –பட்டணம்

——————

கொங்கு ஏய் தடத்துக் குமுத மலர் ஒண் புரிசை
அம் கேழ் மருவும் அரங்கமே -மங்கா
இருக்கு அந்தரத்தார் எழில் கந்த ரத்தார்
உருக் கந்தரத்தார் உவப்பு –3–

கொங்கு ஏய் தடத்துக் -வாசனை பொருந்திய தடாகம்
குமுத மலர்
ஒண் புரிசை -அழகிய மதிள்
அம் கேழ் மருவும் -அழகிய நிறத்தைப் பொருந்தும்
அரங்கமே –
இருக்கு அந்தரத்தார் -இருக்கு -வேதம்
எழில் கந்த ரத்தார் –காந்தாரம் -கழுத்து
உருக் கந்தரத்தார் -திரு மேனி மேகத்தை ஒத்தவர் -கந்தரம் -மேகம்

————–

செம்மைத் தெருவினிலும் சேயிழையார் கைகளிலும்
அம்மனைகள் காணும் அரங்கமே -இம்மகியில்
வில்லாண்டு வந்தார் விமலன் புதுவையர் கோன்
பல்லாண்டு உவந்தார் பதி–4–

தெருவினிலும் அம்மனைகள் காணும்–தெருவினில் அழகிய வீடுகள் காணப் பெறும்
சேயிழையார் கைகளிலும் அம்மனைகள் காணும்–கைகளில் அம்மனைக் காய்கள் காணப் பெறும்

————

சித்திர நற் கோபுரங்கள் செல் வரிலம் மாதரிடை
அத்தம் திகழும் அரங்கமே -பத்தர் உளம்
தங்க விமானத்தார் தனிச் சீர்ப் ப்ரணவமாம்
தங்க விமானத்தார் தலம்–5- மூன்று சிலேடைகள்

கோபுரங்கள் அத்தம் திகழும்-ஹஸ்த நக்ஷத்ரத்தை அளாவி நிற்கும்
செல்வர் இல்லம் அத்தம் திகழும்-பொருள் செல்வத்தால் பிரகாசிக்கும்
மாதரிடை அ தந்து இகழும் –மென்மையினால்-நுட்பத்தால் – பஞ்சு நூலையும் பழிக்கும்
பத்தர் உளம் தங்கு அவிமானத்தார்-அபிமானத்தை யுடையவர்
ப்ரணவமாம் தங்க விமானத்தார் –தங்க மயமான ப்ரணவகார விமானத்தை யுடையவர்

————

மங்காத பொன்னறையில் மா மணி மின் மாட மதில்
அங்கே தனம் சேர் அரங்கமே –இங்கு ஏழு
திண்ண விடை முன் பொறுத்தார் சிற்றனையால் வற் கலையை
வண்ண விடை முன் பொறுத்தார் வாழ்வு –6-

மங்காத-குறையாத
பொன்னறை–பொக்கிஷம்
பொன்னறையில் அம் கேதனம் சேர் மின் மாட மதில் –மின்னுகிற மாடங்களிலும் மதில்களிலும் கொடி சேர்ந்து -கேதனம் -கொடி
ஏழு திண் அம் விடை முன் பொறுத்தார் -நப்பின்னைப் பிராட்டிக்காக ஆன் ஏறு ஏழு வென்றான்
முன்பு ஓறுத்தார் –வலிமை அழித்தார்
வற் கலை-மரவுரி
சிற்றனை-கைகேயி
வண்ணம் இடை முன் பொறுத்தார் -அழகிய இடுப்பிலே தரித்து அருளினார்

————-

கஞ்ச மலர் சேர் கழனியிலும் வேள் இடத்தும்
அஞ்சம் படுக்கும் அரங்கமே –வஞ்சகர்கள்
வந்திக்கத் தாமதியார் மா நிலத்தில் அன்பரிடம்
சந்திக்கத் தாம் மதியார் சார்பு –7–

கஞ்சம் -தாமரை
கழனி-வயல்
வேள் -மன்மதன்
கழனியிலும் அஞ்சம்-அன்னம் -படுக்கும்
வேள் இடத்தும் அஞ்சு அம்பு அடுக்கும் -பஞ்ச பாணங்கள்
வந்திக்க–வணங்க -தாம் மதியார்
தாமதியார் -தாமஸிக்க மாட்டார் -விரைந்து எழுந்து அருள்வார்

————

அங்க மறை யோது முதிர் அந்தணரும் ஆடவரும்
அங்கயனை மானும் அரங்கமே –பொங்கும்
அரங்கிலே சங்கெடுத்தான் ஐவருக்க நேகந்
தரங்கிலே சங்கெடுத்தான் சார்பு –8–

அங்க மறை யோது-ஆறு அங்கங்களையும் வேதங்களையும் யோதும்
முதிர் அந்தணரும் -அறிவால் முதிர்ந்த வேதியர்
அந்தணரும் அங்கயனை மானும் -பிரம தேவனை ஒக்கும்
ஆடவரும் அங்கயனை மானும் -ஆடவரும் அங்கசனை -மன்மதனை ஒக்கும்
அரங்கமே –யுத்த அரங்கம் -போர்க் களம்
சங்கெடுத்தான்-பாஞ்ச ஜன்யத்தை முழங்கியவன்
ஐவர் -பாண்டவர் ஐவர்
அநேகம் தரம் கிலேசம் கெடுத்தான்-பல தடவைகள் துயரங்கள் தீர்த்து அருளிய பஞ்ச பாண்டவ ஸஹாயன்

——————

ஊனமிலா முல்லையரும் ஒண் செல் வருமன்பால்
ஆனை வளர்க்கும் அரங்கமே –தானவரை
கொன்றவிரும் செங்கதையான் கோ மகனா வந்து வனம்
சென்ற இரும் செங்கதையான் சோர்வு –9-

ஊனமிலா -குற்றம் இல்லாத
முல்லையரும் –முல்லை நிலத்திற்கு உரிய ஆயர்
மன்பால் ஆனை வளர்க்கும் –மிகுதியான பாலைத் தரும் பசுவை வளர்க்கும்
ஒண் செல்வரும் அன்பால் ஆனை வளர்க்கும் – அழகிய செல்வந்தர்களும் யானையை வளர்க்கும்
அரங்கமே —
தானவரை –அஸுரரை
கொன்று அவிரும் செங்கதையான் –ஸம்ஹரித்து விளங்கா நிற்கும் இரத்தம் தோய்ந்த சிவந்த கதை ஆயுதத்தை யுடையவன்
கோ மகனா வந்து -சக்கரவர்த்தி திருமகனாய் திரு அவதரித்து அருளி
வனம் சென்ற இரும் செங்கதையான் –தண்டகாரண்யம் சென்ற பெரிய அழகிய வரலாறு -ஸ்ரீ ராமாயணம்-

——————

மங்கையர் தம் மார்பு கரம் வாழ் உயிர் மேலோர் ஆயுள்
அங்கம் சுகம் கொள் அரங்கமே –இங்கு இணையில்
மா சுபத்திரைக்கு அணனார் வண் தாமரைக் கணனார்
மாசு பத்திரைக் கணனார் வாழ்வு –10- நான்கு சிலேடைகள்

மார்பு அம் கஞ்சுகம்-கச்சு கொள்ளும்
கரம் அங்கு அஞ்சுகம் -கிளியைக் -கொள்ளும்
வாழ் உயிர் –ஸ்ரீ ரெங்கத்தில் நித்ய வாசம் செய்யும் நாள் பேறு பெற்ற பிராணிகள் -அங்கம் சுகம் கொள்ளும் -தேக ஆரோக்யத்தைப் பொருந்தும்
மேலோர் ஆயுள் -ஞானிகளின் பிராயம் -அங்கம் சுகம் கொள் -அங்கு அஞ்சு யுகம் கொள்ளும்
இணை -உவமை
மா -அழகு -சுபத்திரைக்கு அண்ணனார்
வண் தாமரைக் கண்ணனார்
மா சுபம் திரைக் கண்ணனார் -பெரிய மங்களகரமான ஷீராப்தியை யுடைய கண்ண பிரான்
கண்ணனார் -கடல் இடமாகக் கொண்டவர்

———-

பொன்னார் புரிசைகளும் பூம் பொழிலும் நீரகழும்
அன்னாக மேவும் அரங்கமே -ஒன்னாருக்கு
அஞ்சாம கானத்தான் அன்று அடைந்த கானத்தான்
அஞ்சாம கானத்தான் ஆர்வு –11–மூன்று சிலேடைகள்

புரிசைகளும் அன்னரக மேவும்-அம் நரக மேவும் -மதிள்கள் வானத்தை அளாவும்–புரிசைகள் மலையை ஒக்கும் எனவுமாம்
பொழிலும் அன்னாக-அந் நாகம் – மேவும்-சோலைகளும் அழகிய புன்னை மரங்களைப் பெற்று இருக்கும்
நீர் அகழும் அன்னரக-அ நாக – மேவும்-மதில்களைச் சூழ்ந்த கிடங்கும் -பாம்பு -சர்ப்ப லோகமாகிய பாதாளம் ஆகும்
ஒன்னார் -பகைவர்
அஞ்சாம கானத்தான்-அஞ்சா மகான் நத்தான் -மகான் -பெரியோன் -நத்தான் -சங்கை ஏந்தினவன் -நந்து -சங்கு -வலித்தல் விகாரம் பெற்றது
அன்று அடைந்த கானத்தான்-காட்டை யுடையவன்
அஞ்சாம கானத்தான்-அழகிய சாம வேத கீதத்தை யுடையவன்

————

பண்டை வயலில் பயிரிடு முன்னும் பின்னும்
அண்ட சங்கள் வைகும் அரங்கமே –கண்ட கர்க்குத்
தாங்கைச் சரச மன்னார் தண் புதுவை மான் கமலத்
தேங்கைச் சரச மன்னார் சேர்வு–12–

பயிரிடு முன்னும் அண்டு அசங்கள் வைகும் -நெருங்கிய ஆடுகள் தங்கும்-
வயலில் உரத்துக்காக ஆட்டுக் கிடைகள் வைத்தல் வழக்கம்
பயிரிடு பின்னும் அண்டசங்கள்-பறவைகள் – வைகும்
கண்டகர்க்குத்-அசுரர்களுக்கு – தாம் கைச்ச -கைத்த -ரசம் அன்னார்
புதுவை மான்-ஆண்டாள் – கமலம் தேம் கை சரச மன்னார் –ரெங்க மன்னார்

————-

சிங்கார நல் வணிகர் செல்வர் துயில் இடங்கள்
அங்காடி மேவும் அரங்கமே -வெங்கானில்
சேர்ந்த விரதத்தினார் திண் விசயன் சாரதியா
ஊர்ந்த விரதத்தினார் ஊர் –13-

வணிகர் அங்காடி-கடைவீதி -மேவும்
துயில் இடங்கள் அங்கு ஆடி-நிலைக் கண்ணாடி – மேவும்
வெங்கானில் சேர்ந்த விரதத்தினார் -ஸ்ரீ ராம அவதாரம்
விசயன் சாரதியா ஊர்ந்த ரதத்தினார்-ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்

————

வாசமுறு யோகியரும் வாழ்த்து மறை ஒலியும்
ஆசை யகலும் அரங்கமே -வாச யுரங்
கூடு திருப்பாவை யினான் கோதை எனும் சோழியப் பெண்
பாடு திருப்பாவை யினான் பற்று –14-

வாசமுறு யோகியரும் ஆசை யகலும்-ஆசை மூவாசைகள் நீங்கும்
வாழ்த்து மறை ஒலியும் ஆசை யகலும்–வேத கோஷமும் திக்குகளை வியாபிக்கும்
வாச யுரங் கூடு திருப்பாவை யினான் -உரம் வாசம் கூடும் -துளவ சந்தனாதி மணம் பொருந்திய உரத்தில் கூடு
திரு மார்பின் கண் வசித்தலைப் பொருந்திய திரு மகள் ஆகிய அழகிய பெண்ணை யுடையவன்
கோதை எனும் சோழியப் பெண்-ஆண்டாள் -சோழியர் குலத்தில் உதித்த பெண்
பாடு திருப்பாவை யினான் பற்று -பாடிய திருப்பாவை எனும் திவ்ய பிரபந்தத்தை யுடையவன் விரும்பும் இடம்

————-

வாழு மடவார் கரம் தேர் வண்கா விரி நதி பொன்
ஆழி மருவும் அரங்கமே -பாழி மிகும்
தானவரை முன் பரித்தார் தண்ட டத்தில் அன்று அழைத்த
தானவரை முன் பரித்தார் சார்பு –15–மூன்று சிலேடைகள்

மடவார் கரம் பொன் ஆழி-தங்க மோதிரம் – மருவும்
தேர் பொன் ஆழி -அழகிய சக்கரங்கள் – மருவும்
நதி பொன் ஆழி-திரு மகள் பிறந்த கடலை – மருவும்
பாழி-வலிமை
தானவரை முன் பரித்தார் -முன்பு அரித்தார் -அசுரரை வலி அழித்தார் -முற்காலத்தில் ஸம்ஹரித்தார்
தண் தடத்தில் அன்று அழைத்த தான வரை-ஸ்ரீ கஜேந்திராழ்வானை-
தானம் வரை -மத ஜலத்தை சொரிகின்ற மலையாகிய யானை
முன் பரித்தார் -அந்நாளில் காத்து அருளினார் –

————-

மங்குல் தவழ் சோலையிலும் மாளிகை சார் பஞ்சரத்தும்
அங்கிளைகள் மேவும் அரங்கமே -பொங்கும்
பயமா மலைக்குடையான் பண்டாய ரேத்து
நயமா மலைக்குடையான் நாடு –16–

மங்குல் -மேகம்
சோலையிலும் அங்கிளைகள்-கோப்புகள் – மேவும்
பஞ்சரத்தும் -பஞ்சரம் கூடு கிளிக்கூண்டு -அங்கிளைகள் -அழகிய கிளிகள் -மேவும்
பயமாம் அலைக்குடையான்–பயம் பால் -அலை கடல் –திருப்பாற் கடலுக்கு உரிமை யுடையவன்
ஆயர் -இடையர்
நயம் மா மலை குடையான் -அழகான கோவர்த்தன மலையைக் குடையாக யுடையவன் –

———–

வஞ்சியர் தம் கண்ணிணையும் மாடமுறு மந்திரமும்
அஞ்சனங்கள் ஆரும் அரங்கமே -தஞ்சிகையில்
தோய்ந்த கலா பத்தார் துகள் மாதுலனான் முன்
வாய்ந்த கலா பத்தார் மனை –17–

வஞ்சியர் -வஞ்சிக் கொடி போன்ற மகளிர்
மந்திரம்-மாளிகை
கண்ணிணையும்–அஞ்சனங்கள்-மை – ஆரும்-பொருந்தும்
மந்திரமும் அஞ்சனங்கள்-அம் ஜனங்கள் – ஆரும் -நிறையும்
சிகை -குஞ்சி
தோய்ந்த கலா பத்தார் -அணியப்பெற்ற மயில் இறகை யுடையவர்
மாதுலனால் -கம்சனால்
முன் வாய்ந்து அகல் ஆபத்தார்–முதலில் ஏற்பட்டுப் பின் எளிதில் நீங்கிய ஆபத்துக்களை யுடையவர் –

———-

தங்க நெடும் கேதனமும் சாரும் பல தருவும்
அங்கனி யோடேயும் அரங்கமே -துங்க
அருவரை முன் அங்கு எடுத்தார் அன்று மல்லரான
இருவரை முன்னம் கெடுத்தார் இல் –18-

கேதனம்–துகில் கொடி
கேதனமும்-அங்கனி யோடே-கன்யா ராசியோடு —
தருவும் அங் கனி யோடே-அழகிய பழங்களுடன்
துங்கம் -உயர்வு
வரை -கோவர்த்தன கிரி -முன் அங்கு எடுத்தார் -குடையாகப் பிடித்தவர்
மல்லர் இருவர் -சாணூர முஷ்டிகர் -இருவரை முன்னம் கெடுத்தார்-ஸம்ஹரித்தார்

————

பேரா விலங்கையர் கோன் பீமன் நளன் நேர் மடையர்
ஆரா தனம் செய் அரங்கமே -சீர் ஆயர்
வின் மந்திர முடையார் வெண்ணெய் யுண்டார் எஞ்ஞான்றும்
தன் மந்திரமுடையார் சார்பு –19–

பேரா -அழியாத
விலங்கையர் கோன் –விபீஷணன் -ஆரா தனம் செய் அரங்கமே
பீமன் நளன் நேர் மடையர்-மடைப்பள்ளிக் காரர்
பீமன் நளன் இருவரும் பாக ஸாஸ்த்ர விற்பன்னர்
ஆராதனம் -திரு அமுது வகைகள்
வில் -ஒளி
மந்திரம் –வீடு
முடை நாற்றம் ஆர் வெண்ணெய் யுண்டார்
தன்மம் -தர்மம்
திரம் யுடையார் -ஸ்திரமாக யுடையார்

————–

ஓங்கு பெரும் செல்வர் ஒண் மஞ்சம் காவிரி நெல்
ஆங்கு திரை மேவும் அரங்கமே –பூங்கமல
வாசமா தங்கத்தான் வந்தருள் மா தங்கத்தான்
வாசமா தங்கத்தான் வாழ்வு –20—நான்கு சிலேடைகள்

செல்வர்-ஆம் குதிரை மேவும்
ஒண் மஞ்சம் -ஆங்கு திரை-திரைச்சீலை – மேவும்
காவிரி ஆங்கு திரை -அலை -மேவும்
நெல் ஆம் குதிர் ஐ மேவும்-குதிர் -நெல்லைச் சேமித்து வைக்கும் குலுக்கை
பூங்கமல வாசம் மாது அங்கத்தான்
வந்தருள் மா தங்கத்தான் –இரங்கிக் காத்து அருளப் பெற்ற கஜேந்திரனை யுடையவன்
வாசம் -வஸ்திரம் -மா தங்கத்தான் -அழகிய பீதாம்பரத்தை யுடையவன் –

—————

மச்சமுறும் பண்ணை மத வாரணம் இரதம்
அச்சங்கள் தரும் அரங்கமே –இச்சை கொளும்
அம் பவள வாயினான் அம் புதியில் மீனுருவா
அம் பவள வாயினான் அயர்வு –21-

பண்ணை அச்சங்கள் தரும்- அச் சங்கு அடரும் -நெருங்கும்
மத வாரணம் -மத யானை -அச்சங்கள் தரும்
இரதம் அச்சங்கள் தரும் –அச்சு அங்கு அடரும் –
அம் பவள வாயினான்
அம் புதியில் மீனுருவா -கடலில் மத்ஸ்ய அவதாரம்
அம் பவள வாயினான் -அம்பு அ அளவு ஆயினான் -தண்ணீரின் அளவாய் வளர்ந்தவன் –

—————

வாம் பரி செல் வீதி வணிகரும் நூல் ஆய்வோரும்
ஆம் பொருளை எண்ணும் அரங்கமே -சாம்பன் கைக்
காவனவின் முன்பு ஓசித்தான் அன்று அமுது மா விதுரன்
பாவனவின் முன்பு ஓசித்தான் பற்று –22–

வாம் பரி செல் வீதி -தாவுகின்ற குதிரைகள் செல்லுகின்ற வீதிகளில்
வீதிகளில் வணிகரும் ஆம் பொருளை எண்ணும்-தேடும் பொருள்களை ஓன்று இரண்டு என்று என்னும் வீதிகளில்
நூல் ஆய்வோரும் ஆம் பொருளை எண்ணும் -நூலில் பொருந்திய விழுமிய கருத்துக்களை சிந்திக்கின்ற
சாம்பன் -சிவன்
கைக்கு ஆ வன வில் முன்பு ஓசித்தான் –வனம் அழகு -ஒசித்தல் -முறித்தல் -சிவ தனுஸ்ஸை முறித்தவன்
ஆம் பொருளை எண்ணும் அரங்கமே -சாம்பன் கைக்
மா விதுரன் பாவன இல் முன் அன்று அமுது பொசித்தான் -புசித்தவன் –
பற்று –

————–

ஊரிலுறும் பொன்னளியும் ஊடு மட வாரணியும்
ஆர மதில் மின்னும் அரங்கமே -சேரன்
விருத்தங்களுள்ளான் மெல்லடி போற்றாதார்
வருத்தங்களுள்ளான் மனை –23–

பொன்னளியும் -அழகிய வண்டுகளும்
ஆர மதில் மின்னும்-ஆடவரும் மகளிரும் அணிந்த பூ மாலைகளிலே விளங்கும்
மட வார் அணியும் ஆர மதில் மின்னும் -மிகுதியாக மதிள்களிலே பிரகாசிக்கும்
சேரன் விருத்தங்களுள்ளான் -குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த பெருமாள் திருமொழி விருத்தப் பாக்களின் கண் எழுந்து அருளி உள்ளவன்
மெல்லடி போற்றாதார் வருத்தங்கள் உள்ளான் -நினையாதவன்

———-

செம்பொன் நெடும் கோட்டைகளும் கிண் தனுக்கை வேட்டுவரும்
அம்புலியை நாடும் அரங்கமே -உம்பர்
உரக மட மானார் ஒருங்கே யுவப்ப
வரக மட மானார் மனை –24-

கோட்டைகளும் அம்புலியை நாடும் -சந்திரனை அளாவும்
வேட்டுவரும் அம் புலியை நாடும்-தேடித் திரியும்
உரக மட மானார்-நாக கன்னியர்
உம்பரும் மானாரும் ஒருங்கே யுவப்ப
வர கமடம் ஆனார் -மேன்மை வாய்ந்த கூர்மாவதாரம் எடுத்து அருளினார் -கமடம் -ஆமை

————-

தம்புரத்தில் ஆசை யற்றோர் சார்ந்த கொடி கோபுரங்கள்
அம்பர மேனாடும் அரங்கமே -வம்பு மலர்க்
காமனைக் கண் முன்னட்டான் கையேற் பொழித்தான் விண்
காமனைக் கண் முன்னட்டான் காப்பு –25- மூன்று சிலேடைகள்

தம்புரத்தில் -தம் சரீரத்தில்
ஆசை யற்றோர் -தவ முனிவர்
அம்பர மேனாடும்-அம் பரம் மேல் நாடும் -அழகிய பரலோகத்தின் மேல் விருப்பத்தைச் செலுத்தும்
கொடி -அம்பரம் துணி மேல் நாடும்
கோபுரங்கள் அம்பரம் -ஆகாயம் – மேல் நாடும்
வம்பு -வாசனை
காமனைக் கண் முன் அட்டான் -மன்மதனை நெற்றிக்கண்ணால் சுட்டு எரித்த சிவன்
கையேற்பு -கையினால் யாசித்தால்
விண் கா -பாரிஜாத விருக்ஷம்
மனை கண் முன்னட்டான் -ஸ்ரீ சத்யபாமா தேவி திரு க்ரஹத்தின் முன் நட்டு அருளினவன் –

———-

ஏறு இரதப் பொன் நேமி ஏர் விரசைக் காவிரியாம்
ஆறு அச்சு உழி மேவு அரங்கமே -பேறு மிகும்
தேசு அங்கம் மழிசையார் சீரப்பாவார் வேய் தனில் வாய்
வாசம் கமழ் இசையார் வாழ்வு –26-

ஏறு இரதப் பொன் நேமி -உருளை -ஆறு அச்சு உழி மேவு -வழிகளில் அச்சின் கண் மேவு
ஏர் விரசைக் காவிரியாம் ஆறு அச்சு உழி மேவு -அ சுழி மேவு
தேசு அங்கம் மழிசையார் –திருமழிசை ஆழ்வார்
வேய் -மூங்கில்
வாய் வாசம் கமழ் இசையார் -வேணு கானத்தை யுடையவர்

———-

சாலத் திகழ் மணத்துத் தையலர் கையும் பொழிலும்
ஆலத்தி காணும் அரங்கமே –பாலத்
துருவனை முன்னம் களித்தார் தொல் வீடணனைச்
செருவனை முன்னம் களித்தார் சேர்வு –27–

சால-மிகுதியாக
தையலர் கையும் ஆலத்தி-நீராஞ்சனம் – காணும்
பொழிலும் ஆலத்தி -ஆல் அத்தி -ஆல் அத்தி மரவகைகள் – காணும்
பாலத் துருவனை முன்னம் களித்தார்
தொல் வீடணனைச் -செருவனை முன்னம் -போர் புரிவதன் முன்னம் -களித்தார்-அபயம் அளித்து ரஷித்தார் –

—————-

காரண முன்னூலினரும் கா முகரும் என்றும் சீர்
ஆரணம் கைக் கொள்ளும் அரங்கமே -பார் அளந்து
பீன வடிவானார் பிரமற்குக் காட்டினார்
ஏன வடிவானவர் இடம் –28-

முன்னூலினரும் -பழைய ஸாஸ்த்ரங்களை உணர்ந்த பெரியோர்
நூலினரும் என்றும் சீர் ஆரணம் -வேதம் -கைக் கொள்ளும்
கா முகரும் என்றும் சீர் ஆரணங்கைக்-அழகிய மகளிரைக் கொள்ளும்
பீன அடி வான் ஆர் பிரமற்குக் காட்டினார் -பெரிதான தம் திருவடியை ஸத்ய லோகத்தில் பொருந்திய பிரம தேவனுக்குக் காட்டி அருளியவர்
ஏன வடிவானவர் –ஸ்ரீ வராஹ வடிவானவர்

—————–

வந்தனமே செய்ய வரும் மன்னவரும் வீணைகளும்
அந்தந்தி மேவும் அரங்கமே -சிந்து பதி
மாண்டவன் வானாக வத்தான் வாழக் கதிர் மறைத்தான்
தாண்டவன் வானாக வைத்தான் சார்பு –29–

மன்னவரும் அம் தந்தி-யானை – மேவும்
வீணைகளும் அந்தந்தி-நரம்பு – மேவும்
சிந்து பதி –ஜயத்திரதன்
மாண்டு அவன் வானாக–இறக்க –
அத்தான்-அத்தையின் புத்திரனான அர்ஜுனன்
வாழக் கதிர் மறைத்தான் –சக்கரத்தால் ஸூர்யனை மறைத்து அருளியவன்
தாண்டவன் –சிவன்
வான் ஆகவம் -பெரிய யுத்தம்-பாணாசூர யுத்தம்
ஆக வத்தான் –யுத்தத்தை யுடையவன்

—————

பொங்கேரி யிக்கு வனம் பூந்தண்டலை வீதி
அங்கே கயம் சேர் அரங்கமே -செங்கீதை
ஓர் விசயன் பாற் பணித்தார் உற்றானும் தாம் என்றே
ஓர் விசை அன்பால் பணித்தார் ஊர் –30- நான்கு சிலேடைகள்

பொங்கு ஏரி அங்கே கயம்-ஆழம் – சேர்
யிக்கு வனம் -அங்கே கயம் -யானை – சேர்
பூந்தண்டலை-பூஞ்சோலையில் – அம் கேகயம்-மயில் – சேர்
வீதி அங்கு ஏகு அயம்-குதிரை – சேர்
செங்கீதை -சிறந்த ஸ்ரீ பகவத் கீதை
ஓர் விசயன் -ஒப்பற்ற விஜயனுக்கு
பணித் தார் உற்றான் -நாக ஆபரணங்களை யுடைய ருத்ரன்
அன்பால் -ருத்ராணாம் சங்கர ச அஸ்மி -என்று கீதையில் உபதேசம் பண்ணி அருளினவன்
ஓர் விசை –ஒரு தடவை

———–

பம்பு வரி நெல் பருந்தரளம் காவேரி
அம்பணை வாய் மேவும் அரங்கமே -நம்பியே
பண்டு அழைத்த வாரணத்தார் பாணி தனில் வாரணத்தார்
பண்டு அழைத்த வாரணத்தார் பற்று –31–மூன்று சிலேடைகள் –

நெல் அம்பணை -வயல் -வாய் மேவும்
தரளம் -முத்து -அம்பணை-மூங்கில் – வாய்-கணை – மேவும்
காவேரி அம்பு-நீர் – அணை வாய் -அணைக்கட்டுகளிலே -மேவும்
அம்பணை வாய் மேவும்
பண்டு அழைத்த வாரணம் -ஸ்ரீ கஜேந்திராழ்வான்
பாணி -திருக்கரம்
வாரணம் -மூங்கில் -புல்லாங்குழல்
பண் தழைத்த ஆரணம் -சாம வேதம்

———

வார் அணிந்த கொங்கை மடவார் விழி சாயல்
ஆரு மயின் மானும் அரங்கமே -நேரில்
அரு கமல யுந்தியினான் அன்று அயனை ஈன்ற
ஒரு கமல யுந்தியினான் ஊர் –32-

மடவார் விழி–ஆரும் அயில் -வேல் -மானும்
மடவார் சாயல் -ஆரும் மயில் மானும்
நேரில் -நிகரற்ற
அருகு அமல யுந்தியினான்-சமீபத்தில் -இரு பாலும்-பரிசுத்த நதியை யுடையவன் -உந்தி- நதி
ஒரு கமல யுந்தியினான்-ஒப்பற்ற நாபி கமலத்தை யுடையவன் –

—————

தும்பை புனை யரசர் தூணிகள் மின்னார் அளகம்
அம்பதிக நேரும் அரங்கமே -வம்பு மலர்த்
தாது திரு மாலையார் தாசரடித் தூள் ஆழ்வார்
ஒது திருமாலையார் ஊர் –33–

தும்பை -போருக்குச் செல்லுவோர் அணியும் மாலை
தூணிகள்—அம்பு புட்டில் –அம்பு அதிகம் நேரும்-பொருந்தும்
மின்னார் அளகம்–பெண்கள் கூந்தல்
அம்பதிக நேரும்
புனை யரசர் தூணிகள் மின்னார் அளகம்
அம் -அழகிய -பதிகம் -சைவலம் -நீர்ப்பாசி — நேரும் -ஒக்கும்
வம்பு -வாசனை
தாது உதிரும் மாலையார்-மகரந்தம் சிந்துகின்ற துளப மாலையை யுடையவர்
தாசரடித் தூள் ஆழ்வார் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
ஒது திருமாலையார்–திருமாலை பிரபந்தம் அருளிச் செய்தவர்

————-

தூய மறையாளர் சொல்லின்ப நாவலர் சீ
ராய மகம் செய் அரங்கமே -பேயினது
கொங்கை அங்கம் சுவைத்தார் கொற்றம் பெறு படைகள்
செங்கை அங்கு அஞ்சு வைத்தார் சேர்வு –34–

மறையாளர் சீராய மகம் -யாகம் -செய்
நாவலர் சீரா யமகம்–ஒரு விதச் சொல்லணி – செய்
கொங்கை அங்கம்–ஸ்தானமாகிய உறுப்பை – சுவைத்தார்
கொற்றம் -வெற்றி
செங்கை அங்கு –படைகள் அஞ்சு வைத்தார்

————-

மங்கல நற் பாலிகைகள் மாந்தர் இரும் புரவி
அங்குரங்கள் மேவும் அரங்கமே –செங்கமல
மாது வசம் அன்புள்ளார் வானவரும் கண்டு தொழு
மாது வசம் அன்புள்ளார் வாழ்வு –35–மூன்று சிலேடைகள்

பாலிகைகள்–முளைப் பாலிகைகள் – அங்குரங்கள்-முளைகளை – மேவும்
மாந்தர் -அங்கு உரம் -வலிமை -கண் மேவும்
புரவி -அம் குரங்கள் -குரம் -குளம்பு -மேவும்
செங்கமல மாது வசம் அன்புள்ளார்
மா துவசம்–அழகிய கொடியாக – மன் புள்ளார் -பக்ஷி ராஜனாகிய கருடனை யுடையவர்

————-

சீரார் பொன் கொள்வோரும் தேர் புலவரும் கலையே
ஆராய்ந்து உரை செய் அரங்கமே –வாரார்
முரசு அங்கன் தூதினான் மோது ஆகவத்தால்
வர சங்கு அன்று ஊதினான் வாழ்வு –36–

பொன் கொள்வோரும் கலையே -கல்லையே -உரை கல்லையே -ஆராய்ந்து உரை செய்-உரைத்துப் பார்க்கின்ற
தேர் புலவரும் கலையே -ஸாஸ்திரங்களையே -ஆராய்ந்து உரை செய் -ஸம்பாஷிக்கின்ற
முரசு அங்கன் தூதினான்–முரசு அடையாளக் கொடியை யுடைய தருமனுக்காக கௌரவர் இடம் தூது சென்றவன்
மோது ஆகவத்தால் -ஆகவும் போர் -வர சங்கு-மேன்மையான பாஞ்ச ஜன்யம் அன்று ஊதினான்

—————

சாலை தனில் தீம் பலவைச் சாடு குரங்கும் கரும்பும்
ஆலை மருவும் அரங்கமே –வாலி தனைத்
துஞ்சக் கரந்து அரித்தான் தொண்டரையே காப்பதற்காச்
செஞ்சக்கரம் தரித்தான் சேர்வு –37–

தீம் பலவை–தித்திப்பான பலா மரத்தை
குரங்கும் -ஆலை -மரத்தை -மருவும்
கரும்பும் ஆலை இயந்திரத்தை – மருவும்
வாலி தனைத் துஞ்சக்–சாகக் – கரந்து -மறைந்து -அரித்தான்-அழித்தவன்
தொண்டரையே காப்பதற்காச் செஞ்சக்கரம்-செம் சக்கரம் – தரித்தான் -தாங்கியவன் –

————-

ஊக முற்ற வேதியரும் உள் ததி சேர் தாழியும் மோர்
ஆகமத்தைக் கொள்ளும் அரங்கமே –மா கரிக்கு
மோக்கந் தரத்தான் முனம் வந்து இடங்கர் உயிர்
போக்கந் தரத்தான் புரம் –38–

ஊகம் -யூகம்-ஞானம்
வேதியரும் ஓர் ஆகமத்தைக் கொள்ளும்
உள் ததி-தயிர் – சேர் தாழியும் மோரக மத்தைக் கொள்ளும்
மா கரி-கஜேந்திரன் -மா கரிக்கு மோக்கந் தரத்-மோக்ஷம் தர -தான் முனம்-முன்னே – வந்து
இடங்கர்–முதலை – உயிர் போக்கு அந்தரத்தான் –ஆகாய மார்க்கத்தை யுடையவன்

————-

கொம்பார் தருக்களிலும் கூடு திரை வாவியிலும்
அம் பார்ப்பு மேவும் அரங்கமே -நம் பாணர்
பாட்டினை முன் கேட்டார் பகை யரசர் பாலைவர்
நாட்டினை முன் கேட்டார் நகர் –39–

கொம்பார்-கிளை ஆர்ந்த – தருக்களிலும்
அம் பார்ப்பு -அழகிய பறவைக் குஞ்சு -மேவும்
திரை -அலை -கூடு வாவியிலும் -தடாகத்திலும்
அம்பு ஆர்ப்பு -ஜலத்தின் ஆரவாரம் -மேவும்
பாணர் -திருப்பாண் ஆழ்வார்
பாட்டினை முன் -முற் காலத்திலே -கேட்டார் -திருச்செவியின் மாந்தினவர்
பகை யரசர் -கௌரவர் -பால் ஐவர் -பாண்டவர் -நாட்டினை முன் -முன் நின்று கேட்டார் -இரந்தவர்

———–

அங்கனையார் மார்பு கயம் அந்தணர் கை நூல் உணர்வோர்
அங்குசத்தைக் கொள்ளும் அரங்கமே -வெங்கபடர்
பாலார் கலி யுடையார் பைம்பொன் கலி யுடையார்
பாலார் கலி யுடையார் பற்று –40–நான்கு சிலேடைகள் —

அங்கனையார் –பெண்கள்
மார்பு- அங்குசத்தைக் -குசம் -ஸ்தானம் -கொள்ளும்
கயம்-யானை அங்குசத்தைக்-அடக்கும் கருவியைக் – கொள்ளும்
அந்தணர் –அங்குசத்தைக் -தர்ப்பையைக் -கொள்ளும்
நூல் உணர்வோர் –அங்குசத்தைக்–அங்கு சத்தைக் சாரத்தைக் – கொள்ளும்
வெங்கபடர் பால் –வஞ்சகர் பால்
ஆர் -நிறைந்த -கலி-பாவத்தை – யுடையார் -தகரார்
பைம்பொன் கலி–வஸ்திரம் பீதாம்பரம் – யுடையார் -தரித்தவர்
பாலார் கலி யுடையார்-பால் ஆர் கலி -கடல் -உடையார்

———–

பூ மேவு கான் மதகு பூங்குழலார் ஆகம் உளம்
ஆ மோதஞ் சாரும் அரங்கமே –சீ மூத
வண்ணத்தான் ஆகத்தான் மாயத்தா னேயத்தான்
வண்ணத்தான் ஆகத்தான் வாழ்வு –41–மூன்று சிலேடைகள் –

பூ மேவு கான்-கால் -ஆற்றுக்கால் – மதகு -ஆ மோதஞ்-ஆம் ஓதம் -நீரின் ஒலி – சாரும்
பூங்குழலார் ஆகம் ஆமோதஞ்–பரிமளம் – சாரும்
உளம் ஆ மோதஞ்–ஸந்தோஷம் – சாரும்
சீ மூத வண்ணத்தான் –மேக வண்ணத்தான்
நாகத்தான் -பரம பதத்தை யுடையவன்
வண்ணத்தான்–வண் அழகிய நத்தான்-சங்கை ஏந்தியவன்
நாகத்தான் –ஆதி சேஷனை யுடையவன்

———–

கும்பு பொறி வண்டு மணிக் குண்டலங்கள் மாதரார்
அம்புயத்து மின்னும் அரங்கமே -கொம்பனையார்
அற் பரதத்துக் கினியான் ஆசை கொளா தாட் கொள்வான்
நற் பரதத்துக் கினியான் நாடு –42–

கும்பு -கும்பல்
பொறி வண்டு மாதர் -அழகு -ஆர் அம்புயத்து-தாமரையினிடத்து – மின்னும்
மணிக் குண்டலங்கள்-மாதரார் -பெண்களின் -அம் புயத்து–தோள்களிலே மின்னும்
கொம்பனையார் -மகளிர்
அற்ப ரதத்துக்கு -சிற்றின்பத்துக்கு -இனி யான் ஆசை கொளாது ஆட் கொள்வான்
நற் பரதத்துக்கு -பரத நாட்டியதுக்கு – இனியான் -இனிமை யுடையவன்

————

மங்காத வெப்பொருளும் மா மணம் செய்வோர் அகமும்
அங்கா வணம் சேர் அரங்கமே -இங்கார்ந்தோர்
வாச மருந் தூணினார் வந்து தொழ வார்த்து வந்த
தேச மருந் தூணினார் சேர்வு –43–

எப்பொருளும் அங்கு ஆவணம்-கடை வீதி சேர்
மா மணம் செய்வோர் அகமும் -அம் காவணம் -பந்தர் -சேர்
வாச மருந்து ஊணினார்-மணம் பொருந்திய அம்ருதத்தை உண்ட தேவர்
ஆர்த்து வந்தது -ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரத்தில்
தேச மருந் தூணினார்-தேசு அமரும் ஒளி பொருந்திய மணித்தூணை யுடையவர்

—————

தாண்டு வராற் பண்ணைகளும் சன்ம வுயிர் யாவும் சீர்
ஆண்டு முத்திக் கேயும் அரங்கமே -பாண்டவர் பால்
கட்டுப்பட்டா விளைத்தான் கா வெனத் துரோபதைக்குப்
பட்டுப் பட்டா விளைத்தான் பற்று –44–

பண்ணைகளும் –வயல்களும்
ஆண்டு சீர் முத்து இக்கு ஏயும் -அவ்விடத்து அழகிய முத்துக்களை சொரியும் கரும்புகளைப் பொருந்தும்
சன்ம வுயிர் யாவும்-இகத்தில் – சீர் ஆண்டு -சிறப்புக்களை அனுபவித்துப் பின் முத்திக்கு -மோக்ஷத்துக்கு -ஏயும் -பக்குவத்தை அடையும்
பாண்டவன் -சகாதேவன் -கட்டுப்பட்டு ஆ -உயிர் – இளைத்தான்–மெலிவுற்றான்
கா வென –காப்பாற்றுவாய் என்று அரற்ற
பட்டுப் பட்டா விளைத்தான் -பட்டுப் புடவையை ஒன்றன் பின் ஒன்றாக விளைந்து கொண்டே இருக்கும் படி அருள் செய்தான்

————–

சேறுமதற் கம்பு மலர் தேங்குழலார் கஞ்ச மிறை
ஆரு மஞ்சஞ்சாரும் அரங்கமே -வீர விற் பூ
அம்புருவ நோக்கினான் அன்று ஏழ் மரம் துளைத்தவ்
வம்புருவ நோக்கினான் வாழ்வு –45–மூன்று சிலேடைகள்

மதற்கு -மன்மதனுக்கு
அம்பு மலர் -புஷ்ப பாணம்
இறை ஆரும் அஞ்ச அஞ்ச ஆரும் -கடவுளர் எவரும் அஞ்சத்தக்க அஞ்சு பாணம் பொருந்தும்
தேங்குழலார் -மகளிர் -இறை-கணவன் – ஆரும் மஞ்சம் -சப்ரமஞ்சம் -சாரும்
கொஞ்சம் -தாமரை -இறை -சிறகு -ஆரும் அஞ்சம் -அன்னம் -சாரும்
வீர விற் –வீரம் பொருந்திய வில்லும்
பூ -தாமரைப் பூவையும்
முறையே உவமையாகக் கொண்ட
அம்புருவம் நோக்கினான் -அழகிய புருவங்களை கண்களையும் யுடையவன்
அன்று -ஸ்ரீ ராமாவதார காலத்தில்
ஏழ் மரம் துளைத்து அவ் வம்பு உருவ -ஊடுருவச் செல்ல -நோக்கினான் –

———–

கங்குலிலே காமுகர்கள் காவலர்பால் நா வலர்கள்
அங்கணிகை மேவும் அரங்கமே -பொங்கமரில்
நாணுதலின் மான்மதத்தார் நால் வாயின் கோடி டந்தார்
வாணுதலின் மான்மதத்தார் வாழ்வு –46–

காமுகர்கள் அங்கணிகை-வேசிகை – மேவும்
நா வலர்கள் அங்கு காவலர்பால்-அணிகை -ஆபரணங்களை -மேவும் அடையும்
நாணுதல் இல் மால் மதத்து ஆர் நால் வாயின்-குவலயா பீடம் என்னும் யானையின் – கோடு இடந்தார் -தந்தத்தை முறித்து அருளியவர்
வாணுதலின்-நெற்றியில் மான்மதத்தார்-கஸ்தூரி திலகத்தை யுடையவர் -மான்மதம் -கஸ்தூரி

————-

தேசு மணி மாடம் சீர் மாரன் பாணி மலர்
ஆசுகம் கண் நீங்கா அரங்கமே -காசிபனில்
வாய்ந்த வட பத்திரத்தான் மாவா மனனானான்
ஏய்ந்த வட பத்திரத்தான் இல் –47-

மலர் ஆசுகம்–பூங்காற்று – கண் நீங்கா
மாரன்-மன்மதன் – பாணி-கை -மலர் ஆசுகங்கள் -புஷ்ப்ப பானங்கள் நீங்கா
காசிபன் இல்-மனைவியாக வாய்ந்தவள் -அதிதி – தபம் திரத்தால் -வலிமையால் மா வாமனன் -வாமநவதாரம் ஆனான்
ஏய்ந்த வட பத்திரத்தான் –ஆலிலைப் பள்ளி யுடையவன் –

————

மாறன் அடியாராம் வைணவர் நாமம் பொன்னி
ஆறு இரண்டாக் காணுமே அரங்கமே -தேறி யணை
ஆய் மா தரங்கத்தார் ஆனந்த மாத் துயில
வாய் மா தரங்கத்தார் வாழ்வு –48-

மாறன்–மால் தன் அடியாராம் வைணவர் இடும் – நாமம்-திருமண் காப்பு –
ஆறு இரண்டாக்-பன்னிரண்டாக –
பொன்னி–காவேரி – ஆறு இரண்டாக்–கொள்ளிடம் காவேரி என்று இரண்டு கிளையாக -காணுமே
யணை ஆய் மாதர் -கோபிகா ஸ்த்ரீகள் -அங்கத்தார்–சரீரத்தை யுடையவர்
ஆனந்த மாத் துயில வாய் – பொருந்திய -மா தரங்கத்தார் –திருப்பாற் கடலை யுடையவர் –

————-

தற் பரனை எண்ணித் தவம் புரிவோர் நூல் உணர்வோர்
அற் பகலை ஓரா அரங்கமே –பொற் பணிகள்
பூண்டவியப் பண்ணினார் பூ பார மன்னவரை
மாண்டவியப் பண்ணினார் வாழ்வு –49-

தற் பரனை -ஸர்வேஸ்வரனை
எண்ணித்
தவம் புரிவோர் -அற் பகலை-அல் பகலை -இரவு பகல் என்று ஓரா -உணராத
நூல் உணர்வோர் அற்ப -சொற்பமான -கலை-சாஸ்திரங்களை ஓரா -ஆராய்ச்சி செய்யார்
பொற் பணிகள் பூண்ட வியப்பு அண்ணினார் -பொருந்தியவர்
பூ பார மன்னவரை -பூமிக்குப் பாரமாகப் பொருந்திய அரசரை
மாண்டவியப் பண்ணினார் -பாரத யுத்தத்தில் இறந்து ஒழியப் பண்ணினவர்

————

எப்புறத்தும் மா மரத்தும் ஏரியிலும் பாடிடத்தும்
அப்பணிலம் சேரும் அரங்கமே -இப்புவியோர்
உண்ணும் பலத்தார் உடன் பலத்தார் முன் சவரி
உண்ணும் பலத்தார் உவப்பு –50- நான்கு சிலேடைகள்

எப்புறத்தும் -அப்பணிலம் -அப்பு அண் நிலம் -நீர் வளம் பொருந்திய நன்செய்கள் -சேரும்
மா மரத்தும் -அப்பணிலம் சேரும் -அப்பு அணிலம் -பற்றுகின்ற அணில்கள் -சேரும்
ஏரியிலும் அப்பணிலம்-அ பணிலம் -சங்குகள் – சேரும்
பாடிடத்தும் அப்பணிலம்–அ பண்ணில் அம் அழகு சேரும்
உண்ணும் பலத்தார் -உள் நம்பு அலத்தார் -அலம்-கலப்பை -ஏந்தியவர் -பல ராமர்
உடன் பலத்தார் -சகோதர பலமாக யுடையவர்
முன் சவரி உண்ணும்–உண் அம் – பலத்தார் -பழத்தை யுடையவர் –

————-

கொண்டல் நிகர் பூங்குழலார் கொங்கை யிதழ் நற்றொரு பொன்
அண்டு வரை யொப்பாம் அரங்கமே -பண்டு
படுகள முன் சேதித்தார்ப் பார்த்திபன் முத்தாரம்
படுகள முன் சேதித்தார்ப் பற்று –51–மூன்று சிலேடைகள்

கொண்டல் நிகர் –மேகத்தை ஒத்த -பூங்குழலார் கொங்கை -பொன் அண்டு வரை -மேரு மலைக்கு -யொப்பாம்
யிதழ் -பொன் அம் துவரை -அழகு வாய்ந்த பவளத்தை -யொப்பாம்
நல் தெரு பொன் அம் துவரை –ஸ்ரீ லஷ்மீகரம் பொருந்திய ஸ்ரீ மத் த்வாரகா புரியை –யொப்பாம்
படு கள முன் -ரண களத்தில்
சேதித்தார்ப் பார்த்திபன்-சிஸூ பாலன் உடைய
முத்தாரம் படு களம் -முத்து மாலை அணிந்த கழுத்தை – முன் சேதித்தார்–அறுத்து அருளியவர்

————–

சுத்த மணி மேடையில் நூல் சொல்வோர் தின மணியால்
அத்த மன மோரும் அரங்கமே -பத்தன்
தரும வலை யுண்ணே ரார் தண் கரத்தார் என்னைக்
கரும வலை யுண்ணே ரார் காப்பு –52–

சுத்த மணி -குற்றமற்ற ரத்னம்
மேடையில் தின மணியால் -ஸூர்யனால் -கடிகாரத்தால் –
அத்த மனம் -அஸ்தமனம்
ஓரும்
நூல் சொல்வோர்-தினம் அணியால்–அலங்கார ஸாஸ்த்ரத்தால்
அத்தம் -பொருள் நூல் கருத்துக்களை -மனம் ஓரும்
அரங்கமே –
பத்தன் -குசேலர்
தரும் அவலை யுண் ணேர் -அழகு ஆர் தண் கரத்தார்
என்னைக் கரும வலை யுள் நேரார் –பொருந்தச் செய்யாதவர் –

—————

வீசு திரைக் காவிரியும் மின்னாரும் தம் கொழுநர்க்கு
ஆசை முத்த நல்கும் அரங்கமே –வாச மலர்க்
கையில் கலப்பை யுளான் காதல் இளையோன் போற்றார்
மெய்யில் கலப்பை யுளான் வீடு –53-

காவிரியும் ஆசை -திக்குகள் எல்லாம் -முத்த–முத்துக்களை – நல்கும்
மின்னாரும்-மகளிரும் – தம் கொழுநர்க்கு ஆசை முத்தம் -அன்பு கனிந்த முத்தங்கள் – நல்கும்
கையில் கலப்பை யுள்ளான் -பலராமன் -காதல் இளையோன்
போற்றார் மெய்யில்-சரீரத்தில் – கலப்பை -சேர்ந்து இருத்தலை -யுள்ளான்–விரும்பாதவன்

————

பூண்ட புகழ் மன்னவரும் புத்தேளிரும் வலமா
ஆண்டு வரு நல் அரங்கமே -வேண்டும்
விர காலன் பாவார் மிளிரு முனை வேற் கைப்
பரகாலன் பாவார் பதி –54–

பூண்ட புகழ் மன்னவரும் வலமா -வெற்றியாக
ஆண்டு வரும் -அரசாட்சி செய்யும்
புத்தேளிரும்-கடவுளரும் ஆண்டு வலமா –பிரதக்ஷிணமாக -வரும்
நல் அரங்கமே –
வேண்டும் விர கால் –பிரார்திக்கின்ற உபாயத்தினாலே அன்பு ஆவார்
மிளிரும் முனை –கூர்மை -வேற் கைப் பரகாலன்-திருமங்கை ஆழ்வார் பாவார் -திருப்பாசுரங்களை யுடையவர்

—————

மஞ்சு தவழ் மாடம் மக வான் இகல் வீரர்
அஞ்சசி யோடேயும் அரங்கமே -வஞ்சகர் பால்
மெய்யான அன்பிலான் மேதினி நூறு எண் பதிக்குள்
மெய்யான வன்பிலான் வீடு –55–மூன்று சிலேடைகள்

மஞ்சு தவழ் மாடம் -அஞ்சசி யோடேயும்-அம் சசியோடே -சந்திரனோடு -ஏயும்
மக வான் இந்திரன் -அஞ்சசி யோடேயும்-இந்திராணியோடே ஏயும்
இகல் -வலிமை வீரர் -அஞ்சசி யோடேயும்-அஞ்சு அசியோடே -வாளோடு -ஏயும்
மெய்-சரீரம் -யான அன்பிலான்
மேதினி -பூமி
நூறு எண் பதிக்குள் -108 திவ்ய தேசங்கள்
மெய்யான-அழிவில்லாத – வன்பிலான் -அன்பில் திவ்ய தேசத்தை யுடையவன் – —

————

நம் பாரில்லறத்தை நாடினரும் குஞ்சரமும்
அம்பாரி மேவும் அரங்கமே -வெம் பாந்தள்
ஏந்த லமளியார் எண்ணார்க்கு வைகுந்தந்
தாந்த லமளியார் சார்பு –56–

நாடினரும்-விரும்பியவர் -அம்பாரி-அழகிய பத்தினி – மேவும்
குஞ்சரமும் -யானையும் -அம்பாரி மேவும்
பாந்தள் -பாம்பு -ஏந்தல்-ஆதி சேஷன்
அமளி-படுக்கை -யார் எண்ணார்க்குத் தாம் வைகுந்தம் தலம் அளியார்

————–

கொங்கு மலர்ப் பூங்குழலார் கொங்கையிலும் வீதியிலும்
அங்கள பஞ்சாரும் அரங்கமே -எங்குமவன்
தன் திருப்பேரையான் சாற்றிடினும் இன்னருள் செய்
தென் திருப்பேரையான் சேர்வு –57–

கொங்கையிலும் -அங்கள பம் -கலவைச் சந்தானம் -சாரும்
வீதியிலும் அங்களயம் -யானைக்குட்டி -சாரும்
எங்குமவன் தன் திருப்பேரை -திரு நாமத்தைச் -சாற்றிடினும் இன்னருள் செய் தென் திருப்பேரையான்

ஆசரியரது ஜென்ம தேசமும் அதுவே

————

நந்தாப் பெரும் செல்வர் நன் மனையும் நா வலரும்
அந்தாதி காணும் அரங்கமே -வந்தார் கை
நங்கோ வியர் கொண்ணார் நாயகர் தம் மேர் எழுத
இங்கோ வியர் கொண்ணார் இல் –58–

நன் மனையும் -அழகிய மாளிகைகளும் -அம் தாதி -பணிப்பெண்டிர் காணும்
நா வலரும் அந்தாதி-ஒருவகை பிரபந்தம் – காணும்
நந்து -சங்கு வளை -ஆர் கை நம் கோவியர்க்கு -கோபிகா ஸ்திரீகளுக்கு – ஓண்-ப்ரகாசகமான -நார்-அன்பு நாயகர்
தம் ஏர் எழுத இங்கு ஓவியர்க்கு -சித்ர காரருக்கு – ஓண்ணார்-இயலாதவர் –
ஓவியத்து எழுத ஒண்ணாத உருவத்தார் என்கை –

————-

வாதமிடு பண்டிதரும் மா மயிலும் என்று மதி
யாதரவைக் கோரும் அரங்கமே –காதவுணர்
ஊனின் மணவாளர் ஓங்கு வளப்புதுவை
மானின் மணவாளர் வாழ்வு –59-

வாதமிடு பண்டிதரும் என்று மதி-மதிக்கத்தக்க -ஆதரவை -துணியை – கோரும்-விரும்பும்
கற்றோரைக் கற்றாரே காமுறுவர்
மா மயிலும் என்று மதியாது -அரவைக்-பாம்பைக் – கோரும் -அழகிலே கோத்திக் கோர்த்துத் திரியும்
அரங்கமே —
காது -மோதுகின்ற -அவுணர்-அசுரர் – ஊனின் மணம் வாளர் –தசை நாற்றம் பொருந்திய நாந்தகம் என்னும் வாளை ஏந்தியவர்
ஓங்கு வளப்புதுவை மானின்-ஆண்டாளின் -மணவாளர் -கணவர் –

————-

சங்க மடு மா மறுகு சான்றோர் தம்முள்ள மிடை
அங்கலைகள் ஆரும் அரங்கமே -மங்கை நல்லார்
அந்தப்புரத்தார் அநந்த புரத்தார் திரு வாழ்
அந்தப்புரத்தார் அகம் –60- நான்கு சிலேடைகள்

சங்க மடு அங்கு அலைகள் ஆரும்
மா மறுகு அம் கலைகள்-மான்கள் – ஆரும்
சான்றோர் தம்முள்ளம் அம் கலைகள்-ஸாஸ்த்ரங்கள் – ஆரும்
இடை -அவர்கள் இடுப்பு -அம் கலைகள்-வஸ்த்ரங்கள் – மங்கை நல்லார் அந்தப்புரத்தார் -ராஜ ஸ்த்ரீகள் வாழும் இடம்
அநந்த புரத்தார்
திரு வாழ் -ஸ்ரீ மஹா லஷ்மி தாயார் நித்யவாஸம் செய்து அருளும் அந்தப்புரத்தார் -அழகிய சரீரத்தை யுடையவர்

————–

வம்பு மலர்த் தண்டலையும் மா நதியும் கெண்டைகளும்
அம் புளின மேவும் அரங்கமே –நம்பும்
அரிய மா மண்டலத்தா ராராலும் எண்ணற்க்கு
அரிய மா மண்டலத்தார் ஆர்வு –61- மூன்று சிலேடைகள்

வம்பு-வாசனை – மலர்த் தண்டலையும்-சோலையும் – அம் புளின மேவும் -புள் இனம் மேவும்
மா நதியும் அம் புளின மேவும் -புளினம் -மணல் மேடுகள் -மேவும்
கெண்டைகளும் அம் புளின மேவும் -அம்புள் நீரில் இனம் -கூட்டமாக -மேவும்
அரிய மா -ஸூரியன் -மண்டலத்தார்–ஸூர்ய மண்டலா மத்ய வர்த்தி
மண் -பெரிய பூமியின் இடத்து – எண்ணற்க்கு அரிய தலத்தார் -பல ஸ்தலங்களை யுடையவர் –

———-

மா சீடர் தம்மிடத்தும் மன்றுளும் நூலாரியர் முன்
ஆசீர்வாதம் செய் அரங்கமே -மா சீற்ற
வாசித் திருந்தார் மனம் கொதிப்ப வீடணனை
நேசித் திருந்தார் நிலம் –62–

நூலாரியர்–மா சீடர் தம்மிடத்தும் முன் ஆசீர்வாதம் செய்
நூலாரியர்–மன்றுளும்-சபைகளின் இடத்தும் – முன்னா -சிந்தித்து – சீர்-சிறப்பான -வாதம் செய்
மா சீற்ற வாசித் -குதிரைப்படையை யுடைய -திருந்தார்-பகைவர் – மனம் கொதிப்ப
வீடணனை நேசித்து இருந்தார் –

————–

காம்பு மலர்களிலும் கந்தரம் சேர் சோலையிலும்
ஆம் பிரம்பரம் சேர் அரங்கமே -வாம் பிறை நீர்
வாசம் செய்யச் சடையான் மா வரம் கொள் தானவரை
நாசம் செய்யச் சடையான் நாடு –63-

மலர்களிலும்-ஆம் பிரம்பரம்-வண்டு -சேர்
கந்தரம்-மேகம் சேர் சோலையிலும் -ஆம்பிர மரம் -தேமா மரம் -சேர்
வாம் பிறை நீர் வாசம் செய் யச் சடையான்–சடா பாரத்தை யுடைய சிவன்
மா வரம் கொள் தானவரை நாசம் செய்யச் சடையான்–சலிப்பு அடையான் –

—————-

சங்கு ஆரும் கையார் தனங்களிலும் வேதியிலும்
அங்கார மேவும் அரங்கமே –சிங்காரப்
பூவின் மகிழ் மாறன் போற்று திருவாய் மொழியாம்
பாவின் மகிழ் மாறன் பற்று –64-

சங்கு -வளையல்கள் -ஆரும் கையார் தனங்களிலும் -அங்கார மேவும்-அங்கு ஆறாம் மேவும்
வேதியிலும் -யாக மேடையிலும் -ஓம குண்டங்களிலும் -அங்காரம் -தீக்கனல் மேவும்
சிங்காரப் பூவின் மகிழ் மாறன்-வகுளாபரணர் – போற்று திருவாய் மொழியாம்
பாவில் – மகிழ் -மாறன்-மால் தன் பற்று –

————-

செப்பார்ந்த மென் முலையார் சீர் விழி சொல் காவேரி
அப்பால் நலம் காட்டு அரங்கமே –இப்பாரில்
அங்கதனைப் பெற்றான் அமர் களத்திலே துதிக்க
அங்கதனைப் பெற்றான் அகம் –65–மூன்று சிலேடைகள் —

செப்பார்ந்த மென் முலையார் சீர் விழி -அப்பால் நலம் காட்டு-அப் பானல் -நீலோற் பல மலர் -அம் -அழகு -காட்டு –
சொல் -பால் நலம் காட்டு
காவேரி அப்பால்-தன் தீர்த்த மஹிமையால் -மூழ்குவோர்க்கு – நலம்-மோக்ஷம் – காட்டு
இப்பாரில் அங்கதனைப் பெற்றான் -வாலி அமர் களத்திலே துதிக்க
அங்கு அதனைப்-தான் விரும்பிய மோக்ஷத்தை – பெற்றான் –அடையச் செய்தவன் –

————–

சீர் மருவு சாதகமும் திண்ணியவா விக்கரையும்
ஆர் மழைக்கு அங்காக்கும் அரங்கமே –ஓர் மருங்கில்
தங்க நக வில்லான் தனை வைத்தான் அன்பரக
அங்க நக வில்லான் அகம் –66–

சீர் மருவு சாதகமும் –சாதகப் பட்சியும் –ஆர் மழைக்கு அங்காக்கும்-அண்ணாந்து இருக்கும் –
திண்ணிய வாவிக் கரையும் ஆர் மழைக்கு அங்காக்கும் –ஆர் மழை கம் -ஜலம் -காக்கும்
அரங்கமே —
ஓர் மருங்கில்-பாகத்தில்
தங்க நகம் -பொன் மலை -மேரு மலை – வில்லான்–சிவன் –சிவனை ஒரு பாகத்தில் வைத்தவன்
அன்பர் அகம் அங்கு அநகம் இல்லான்
அநக இல் தோஷம் அற்ற வீடு
அம் கநக இல்லான் -அழகிய பொன்மயமான வீட்டை யுடையவன் என்னவுமாம் –

————-

நல்ல கதிரினையே நாற் புறத்துப் பண்ணைகளும்
அல் இறைவனும் காட்டு அரங்கமே -கல்லினை முன்
நாரி வடி வாக்கினான் நன்னயமா மின்னமுத
வாரி வடி வாங்கினான் வாழ்வு –67–

நாற் புறத்துப் பண்ணைகளும் -வயல்களும் -நல்ல கதிரினையே-நெற் கதிர்களையே -காட்டு
நாரி -பெண் -அகலிகை —
நாரி வடிவு ஆக்கினான்
இன்னமுத வாரி-கடல் – வடி வாக்கினான் —

————-

மங்குல் எனும் கூந்தல் மடவார் களம் இரு கண்
அங்கம்பு மானும் அரங்கமே -பொங்கும்
பய வேலையை மதித்தான் பார்த்தன் தேரோட்டும்
நய வேலையை மதித்தான் நாடு –68–

மடவார் களம்–கழுத்து – அங்கம்பு-சங்கு – மானும்
மடவார் இரு கண் அங்கு அம்பு மானும்
பய வேலையை மதித்தான்-பாற் கடலைக் கடைந்தான்
பார்த்தன் தேரோட்டும்
நய வேலையை மதித்தான் –அழகிய தொழிலைப் பெரிதாகக் கொண்டான்

————–

மிக்கார் திரு மொழியும் மேவும் அரன் கந்தரமும்
அக்கார நேரும் அரங்கமே –தக்கார்
திரு நாட்டிருப்பினார் செத்தவனை யாசற்
கொரு நாட்டிருப்பனார் ஊர் –69–

மிக்கார் -அழகு மிக்க மகளிர் திரு மொழியும்
மிக்கார் திரு மொழியும்–ஆழ்வார்களது அருளிச் செயல்கள் -அக்கார-வெல்லப்பாகு – நேரும்-ஒக்கும்
அரன் கந்தரமும் -கழுத்தும் -அக்கு ஆரம் -ருத்ராட்ச மாலைகளைப் பொருந்தும்
தக்கார் திரு நாட்டு இருப்பினார் -முக்தர்கள் வாழும் பரமபதத்தில் எழுந்து அருளியவர்
ஆசான் -சாந்தீபினி
செத்தவனை -அவன் குமாரனை
ஓரு நாள் –ஒரு காலத்தில்
திருப்பினார் -உயிருடன் மீளச் செய்தவர் –

———–

செம்மை விழியார் வேந்தர் சீரியர் நூல் மா மாடம்
அம்மணிகள் மேவும் அரங்கமே -தம் மனையை
ஆகத் திருத்தினான் அச் சாந்தக் கூனியை நேர்
ஆகத் நிறுத்தினான் ஆர்வு –70–நான்கு சிலேடைகள் –

செம்மை விழியார் -அழகிய கண்களை யுடைய மகளிர் -அம் அணிகள்–ஆபரணங்கள் – மேவும்
வேந்தர் -அம் அணிகள்-படைகள்
சீரியர் நூல் —அம் அணிகள்-அலங்காரங்கள் -மேவும்
மா மாடம் –அம்மணிகள்–நவ ரத்தினங்கள் -கடிகாரங்கள் – மேவும்
அரங்கமே –
தம் மனையை -ஸ்ரீ லஷ்மீ தேவியை -ஆகத்து -திரு மார்பில் – இருத்தினான்
கூனியை நேர் ஆகத் திருத்தினான் -கூன் நிமிர்ந்து நேராம்படி திருந்தச் செய்தவன் –

———–

ஈகையரும் பாடகரும் ஏத்தவரும் ஐங்கரனும்
ஆகு மிசை யாரும் அரங்கமே –சாகரமா ப்
பா வருணனைக் கடுத்தார் பைந்தமிழ் பராங்குசனார்
பா வருணனைக் கடுத்தார் பற்று –71-மூன்று சிலேடைகள்

ஈகையரும் -கொடையாளிகளும் –ஆகும் இசை -புகழ் –யாரும் –
பாடகரும் -ஆகும் -இராகம் – யாரும்
ஐங்கரனும் -விநாயகனும் –ஆகு–பெருச்சாளி – மிசை யாரும்
சாகரமாப் பா வருணனைக் –கடல் வடிவாய் பரவியுள்ள வருண தேவனை -கடுத்தார்-கோபித்தார்
பைந்தமிழ் பராங்குசனார் பா வருணனைக்கு அடுத்தார் –

—————

தப்பித மில்லார் இடத்தும் சந்திரப் பேர் வாவியிலும்
அப்பு நிதம் நீங்கா அரங்கமே –இப்புவியில்
போர் காது வணத்தார் பூம் பொழில் தென் பேரையில் வாழ்
வார் காது வணத்தார் வாழ்வு –72-

தப்பித மில்லார் இடத்தும்-அப் புநிதம்-பரி சுத்தம் – நீங்கா
சந்திரப் பேர் வாவியிலும்-சந்த்ர புஷ்கரணியிலும் அப்பு நிதம் நீங்கா
அரங்கமே —
இப்புவியில் போர் காது- மோது -உவணத்தார்-கருட வாகனத்தை யுடையவர்
பூம் பொழில் தென் பேரையில் வாழ்வார் காது வண்ணத்தார் -மகர நெடும் குழைக்காதர் –

———

மஞ்சார் பொழில் தனிலும் மன்னர் மருங்கினிலும்
அஞ்சா மரை சேர் அரங்கமே –துஞ்சாச் சீர்
பொய்கையார் பாற் கவியார் போத நல்லார் தாம் பழிக்கும்
செய்கையார் பாற் கவியார் சேர்வு –73–

மஞ்சார் பொழில் தனிலும் அஞ்சா மரை-ஒரு வகை மான் – சேர்
மன்னர் மருங்கினிலும் அஞ் சாமரை -அம் சாமரம் -சேர் அரங்கமே —
துஞ்சாச் சீர் பொய்கையார் பாற் கவியார் -பால் போல் இனிய கவியை யுடையவர்
போத நல்லார் தாம் பழிக்கும் செய்கையார் பாற் கவியார் -மனம் கவியாதவர் –

—————-

கொம்பு வளர் மா மரத்தும் கோதில் தெருக்களிலும்
அம்பலங்கள் காணும் அரங்கமே -கும்ப முனி
ஆச்சிரமத்து ஒன்றினான் அம்புதியை முன் கடைந்த
மாச்சிரமத்து ஒன்றினான் வாழ்வு –74–

கொம்பு வளர் மா மரத்தும் –அம்பலங்கள் –கனிகள் -காணும்
கோதில் தெருக்களிலும் அம்பலங்கள்-மன்றங்கள் – காணும்
அரங்கமே –
கும்ப முனி -அகத்தியன் -ஆச்சிரமத்து-பர்ணசாலையிலே – -ஸ்ரீ ராமனாக ஒன்றினான்
அம்புதியை-கடலை – முன் கடைந்த மா சிர மத்து ஒன்றினான் -பெரிய சிகரங்களை யுடைய மந்த்ர மலையாகிய மத்து ஒன்றை உடையவன் –

————–

ஏற்றின் இனம் புள்ளின் இனம் ஏரார் வராலின் இனம்
ஆற்றலை மன்னும் அரங்கமே –போற்ற மரர்க்கு
இட்ட மருந்தா ரத்தர் ஏடு பொரும் தாரத்தர்
இட்ட மருந்தாரத்தர் இல் –75–மூன்று சிலேடைகள் —

ஏற்றின் இனம் –ஆற்றலை-வலிமையை மன்னும் –
புள்ளின் இனம் -ஆற்றலை-ஆல் தலை -ஆலமரத்தில் – மன்னும்
ஏரார் வராலின் இனம் -ஆற்றலை-ஆற்று அலை – மன்னும்
அரங்கமே –போற்ற
அமரர்க்கு இட்ட மருந்து -அமிர்தம் -ஆர் அத்தர்–திருக்கரத்தை யுடையவர் –
ஏடு பொருந்து ஆரத்தர் –பூ இதழ்கள் பொருந்திய மாலையை யுடையவர்
இட்ட-இஷ்ட – அரும் தாரத்தர் –அரிய பிரிய நாயகியை யுடையவர் –

————

பாரில் விளையாடும் பாலரும் பார்ப்பாரு மணல்
ஆரிடத்தை நாடும் அரங்கமே –போரைத்
தொடுத்த விராவணனார் தொல் இளையோன் போற்றப்
படுத்த விராவணனார் பற்று –76–

பாரில் விளையாடும் பாலரும் மணல் ஆரிடத்தை நாடும்
பார்ப்பாரும் அண்ணல் ஆரிடத்தை-ஆர்ஷம் -வேதம் – நாடும்
அரங்கமே —
போரைத் தொடுத்த விராவணனார் தொல் இளையோன் -விபீஷணன் -போற்றப்
படுத்த -ஸ்ரீ ரெங்கத்திலே பள்ளி கொண்டு அருளும்
விரா வண்ணனார்-இரவு போலும் கறுமை நிறத்தை யுடையாரைப் பற்று —

————-

பூ மாட்டுச் சந்தைகளில் பூரண கும்பங்களில் சீர்
ஆ மா விலை கொள் அரங்கமே –தே மாலை
அக்கனுடன் முன் பிசைந்தார் அம்புயம் உற்றார் அமர்க்கு
நக்கனுடன் முன் பிசைந்தார் நாடு –77-

பூ மாட்டுச் சந்தைகளில் சீர்-அழகிய -ஆ-பசு – மா விலை கொள் –
பூரண கும்பங்களில் சீர் -ஆ மாவிலை கொள் –
அரங்கமே —
தே மாலை அக்கனுடன்-அஷன் -இராவண குமரன் முன்பு இசைந்தார் -ஹனுமான்
அம்புயம் உற்றார் அமர்க்கு -பாணாசூர யுத்தத்தில் -நக்கனுடன் முன்பு இசைந்தார் —

———-

தண் தட நற் கோயிலையும் தாழித் ததியினையும்
அண்டர் மதிக்கும் அரங்கமே -அண்டினிமை
ஓங்குதிரைக் கந்தரத்தார் ஒண் புவியில் பின்புதிக்கும்
வாங்குதிரைக் கந்தரத்தார் வாழ்வு –78–

தண் தட நற் கோயிலையும் -அண்டர் மதிக்கும் -தேவர் போற்றுகின்ற
தாழித் ததியினையும் அண்டர் மதிக்கும் -இடையர் கடைகின்ற
இனிமை ஓங்கு திரைக்கு-திருப்பாற் கடலுக்கு – அந்தரத்தார்
பின்பு -இனி வரும் காலத்தில்
வாம் குதிரைக் -தாவும் குதிரை -கந்தரத்தார்-கழுத்தை யுடையவர் – —
கல்கி திரு அவதாரம் -ஹயக்ரீவர் திரு அவதாரம் -வாசித்தலை மருவும் மால் இவர்களே –
தனிப்பா மஞ்சரி –இதே ஆசிரியர் திரு வாக்கு –

———

கோங்கு அமையும் சோலையிலும் கோதில் நரர் இடத்தும்
ஆங்கு தரு மஞ்சார் அரங்கமே -ஓங்கு இசையால்
பேறாக்கு வித்தான் பெரும் காலயவனனை
நீறாக்கு வித்தான் நிலம் –79–

கோங்கு அமையும் சோலையிலும் -ஆங்கு தரு -தருவில் -மஞ்சார்
கோதில் நரர் இடத்தும் ஆங்கு தருமம் சார்
தரு மஞ்சு -மழையைத் தரும் மேகம் என்னவுமாம்
அரங்கமே –
ஓங்கு இசையால் பேறு ஆக்–பசுக்கூட்டம் – குவித்தான்
பெரும் காலயவனனை நீறாக்கு வித்தான் நிலம் –முசுகுந்தனைக் கொண்டு காலயவனைக் கொன்று ஒழித்தான்

——————-

தேங்குழலார் மெய்யுமிலும் செய்களிலும் பொன்னியிலும்
ஆங்கலங்கள் மேவும் அரங்கமே -தூங்குமிடம்
அந்தரங்கம் ஓதுவார் அம்புதியார் பூ மகளார்க்கு
அந்தரங்கம் ஓதுவார் ஆர்வு –80-நான்கு சிலேடைகள் — 80-

தேங்குழலார் -மகளிர் -மெய்யும் -ஆங்கலங்கள்- ஆபரணங்கள் – மேவும்
இல்லும் ஆம் கலங்கள்-பாத்திரங்கள் – மேவும்
செய்களிலும் ஆங்கு அலங்கள்-கலப்பைகள் – மேவும்
பொன்னியிலும் ஆம் கலங்கள்-தோணிகள் – மேவும்
அம் தரங்கம்-அலை -மோதுவார் அம்புதியார்–கடல்
பூ மகளார்க்கு -ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமா தேவி -இருவருக்கும் அந்தரங்கம் ஓதுவார் ஆர்வு —

———-

மை யணி கண்ணார் கை மருங்கு மருத்துவர்கள்
ஐயம் கொடுக்கும் அரங்கமே -வெய்ய விடக்
கண்டத்தான் அம்புயத்தான் காண்பரியான் இப்பரத
கண்டத்தான் அம்புயத்தான் காப்பு –81–

மை யணி கண்ணார் கை ஐயம் -பிச்சை -கொடுக்கும்
மருங்கு-இடை – ஐயம்-சந்தேகம் – கொடுக்கும்-உண்டோ இல்லையோ என்னும்படி நுட்பமாய் இருக்கும்
மருத்துவர்கள்- ஐ கபம் அங்கு ஓடுக்கும்
அரங்கமே –
வெய்ய விடக் கண்டத்தான்-விக்ஷம் தங்கிய கழுத்தை யுடைய சிவன் – அம்புயத்தான் -பிரமன் -காண்பரியான்
இப்பரத கண்டத்தான் -ஏழு உலகுக்கும் அதிபதி என்றாலும் விசேஷித்து இப் பரத கண்டத்துக்கு தலைவன்
அம் புயத்தான்-அழகிய திருத்தோள்கள் ஸூந்தர பாஹு -யுடையவன் – காப்பு —

————-

ஒப்பு மடைப் பள்ளியிலும் ஊசல் அமளியிலும்
அப்பம் சமைக்கும் அரங்கமே -இப்புவனம்
உண்ட திரு நாவாயார் உற்ற குகன் நாவாயார்
வந்த திரு நாவாயார் வாழ்வு –82–

ஒப்பு மடைப் பள்ளியிலும் அப்பம் சமைக்கும்
ஊசல் அமளியிலும்-படுக்கையிலும் – அ பஞ்சு அமைக்கும்
அரங்கமே –
இப்புவனம் -பூமி -உண்ட திரு-அழகிய – நாவாயார் -நாவுடன் கூடிய திரு வாயை யுடையவர்
உற்ற குகனது நாவாயார் -தோணியை யுடையவர்
வண்டு அதிரும் -சங்கு முழங்கும் -திரு நாவாயார் –திவ்ய தேசத்தை யுடையவர் –

————

மங்காப் புற நகரில் வாசி வரு வீதிகளில்
அங்கா விலகும் அரங்கமே -சிங்காரப்
பூதத்தார் மா கவியார் பொற் கலை முகத்து நட்ட
சீதத்தார் மா கவியார் சேர்வு –83-

மங்காப் புற நகரில்-அங் கா -சோலை -இலகும்
வாசி-குதிரை – வரு வீதிகளில்- அங்கு ஆ விலகும்
சிங்காரப் பூதத்தார் மா கவியார்
பொற் கலை முகத்து -ருசியா முக பர்வதத்திலே
நட்ட -ஸ்நேஹித்த
சீத தார் மா கவியார் –பெருமை வாய்ந்த ஸூக்ரீவன் என்னும் வானர வேந்தை யுடையவன் –

———–

பேதமுறு எந்தப் பிராணிகளும் இல்லு மதி
யாதிரையை நாடும் அரங்கமே -கோதை
மணவாளாராக் கொண்டார் வாய்ந்தவனார் தூங்கப்
பணவாளராகக் கொண்டார் பற்று –84-

பேதமுறு எந்தப் பிராணிகளும் மதி யாது இரையை நாடும்
இல்லும் -மாளிகைகளும் – மதி -சந்திரன் –யாதிரையை -திருவாதிரை நக்ஷத்ரம் நாடும்
அரங்கமே –
கோதை மணவாளார் ஆக்கு ஒண் தார் வாய்ந்த அன்னார் -ஆண்டாள் தன் நாயகனாகச்
செய்வித்தற்காக சூடுகின்ற மண மாலையை யுடைய அப்பெருமான்
தூங்கப் பணம் படம் வாள் அரா-பாம்பு – கொண்டார் —

————

கூடு பெரும் செல்வர் இலம் கோதில் கடை காணம்
ஆடக மாடம் சேர் அரங்கமே -நாடி யுமை
சாரங்க வத்தத்தான் தாமரையான் போற்று விறல்
சாரங்க வத்தத்தான் சார்பு –85—மூன்று சிலேடைகள்

கூடு பெரும் செல்வர் –காணம் ஆடக மாடம் சேர் –காண் அம் ஆடக -பொன் மாளிகை சேர்
இலம்-இல்லம் – காணம் ஆடக மாடம் –காண் அம் ஆடு -மேஷ ராசி -அக மாடம் -சேர்
கோதில் கடை காணம் -கொள்ளு ஆடகம் துவரை – மாடம்-உளுந்து – சேர் –
அரங்கமே -நாடி
யுமை சாரங்க வத்தத்தான் -சார் அங்க அத்தத்தான் -உமா தேவி பொருத்தப்பெற்ற பாதி உடலை உடையவன்
தாமரையான் -நான்முகன்
போற்று விறல் சாரங்க வத்தத்தான் -சார்ங்கம் என்னும் வில்லை ஏந்திய கையை யுடையவன்
சார்பு —

————–

பக்கமொடு பாமாலை பார்ப்போரும் மன்னவரும்
அக்கரம்பி ரிக்கும் அரங்கமே –மிக்க புகழ்
மன் பேயார் தீம் கவயார் வாய்ந்து தமைப் பணியும்
அன்பேயார் தீம் கவியார் ஆர்வு –86–

பக்கம் -பக்ஷம் –
பாமாலை பார்ப்போரும் -அக்கரம்பி ரிக்கும்-அக்ஷரம் பிரிக்கும்
மன்னவரும் அக்கரம்பி ரிக்கும் -அ கரம் -தீர்வை -பிரிக்கும்
அரங்கமே –மிக்க
புகழ் மன்–நிலை பெற்ற
பேயார் தீம் கவயார் வாய்ந்து தமைப் பணியும்
அன்பேயார் -அன்பு ஏயார் -பொருந்தாத கசடர் -தீம் கவியார் -தீங்கு அவியார் –

——–

போற்ற வருவோர் புகைச் சகட்டால் தோணிகளால்
ஆற்றைக் கடக்கும் அரங்கமே -சீற்ற மிகும்
துட்டக் கரனார் தொலையச் சரம் தொட்ட
எட்டக் கரனார் இடம் –87–

போற்ற வருவோர் புகைச் சகட்டால் -ரயிலாலும் -ஆற்றைக் –வழியைக் -கடக்கும்
அவர்கள்
தோணிகளாலும் -காவேரி – ஆற்றைக் கடக்கும்
அரங்கமே –
சீற்ற மிகும் துட்டக் கரனார் –துஷ்ட கரன் என்னும் அரக்கன் ன்-
தொலையச் சரம் -பாணம் -தொட்ட எட்டக் கரனார்-அஷ்டாக்ஷர த்தை யுடையவர் இடம் —-

—————

நம்பும் எழில் ஆடவர் எந்நாளும் இரவும் பகலும்
அம்பரி அங்கம் சார் அரங்கமே –தம்ப மதில்
பேர் அரவம் காட்டினார் பீதி தரு மை மடுவில்
ஓர் அரவம் காட்டினார் ஊர் –88–

நம்பும் எழில் ஆடவர் எந்நாளும் –
இரவும் -அம் பரியங்கம்-காட்டில் சார்
பகலும் அம் பரி-குதிரை – அங்கம் சார்–சவாரி செய்கின்ற – அரங்கமே —
தம்பம் -தூண் மதில் பேர் அரவம்-பெருத்த ஆரவாரம் – காட்டினார் -ஸ்ரீ நரஸிம்ஹ திரு அவதாரத்தில்
பீதி-அச்சம் – தரு மை மடுவில் -விஷம் பொருந்திய குளம் –
ஓர் அரவம்–காளியன் -அங்கு ஆட்டினார் ஊர் —

——————-

நேர்ந்த விரும்பதரை நெற் பகர்வோரும் புகையே
ஆர்ந்த சகடும் போக்கரங்கமே –சார்ந்த கலை
இந்து வரையார் எழில் வேங்கட வரையார்
நந்து வரையார் நகர் –89–

நெற் பகர்வோரும் இரும் பதரை போக்கு
புகையே ஆர்ந்த சகடும்–ரயிலும் -இரும்பு அதரை -இருப்புப் பாதையிலே போக்கு
போக்கரங்கமே –சார்ந்த கலை
இந்து வரை -சந்த்ர மண்டலம் வரை -ஆர் –பொருந்திய எழில் வேங்கட வரையார்
நம் துவரையார்-துவாரகா பூரி —

—————–

மிஞ்சு மதன் மன்னவர்கள் வேற்றூரார் பண்ணவர்கள்
அஞ்சத் திரமே அரங்கமே -கஞ்சன் என்போன்
ஆரப் புரந்து வைத்தான் அவ்வீடணனை யரசு
ஆரப் புரந்து வைத்தான் ஆர்வு –90-நான்கு சிலேடைகள்

மிஞ்சு மதன் –அஞ்சத் திரமே-அஞ்சு அஸ்திரம் -மேவு
மன்னவர்கள் -அஞ்சத் திரமே-அம் சத்திரம் -குடை -மேவு
வேற்றூரார் -அஞ்சத் திரமே-அம் சத்திரம் -தங்கும் இடம் -மேவு
பண்ணவர்கள்-தேவர்கள் -அஞ்சத் திரமே-அம் சத்திரம் -யாகம் -மேவு
கஞ்சன் என்போன் ஆரப் புரந்து வைத்தான் –ஆர் அ புரம் -சரீரம் துவைத்தான் -நசுக்கி அழித்தவன்
அவ்வீடணனை யரசு ஆரப் புரந்து -காப்பாற்றி வைத்தான் -சிரஞ்சீவியாக வைத்தான் –

—————–

தாமப் பொதுவரிலம் தண் வாவி கோபுரம் சீர்
ஆமை மருவும் அரங்கமே -தாமமெனு
மாவா ரண வரையார் வண் கையில் ஆழிக்கு அஞ்ச
மாவா ரண வரையார் வாழ்வு –91–மூன்று சிலேடைகள்

தாமப் பொதுவரிலம் -இடையர் மனை -சீர் ஆமை –அழகிய பசுக்களும் ஆடுகளும் -மருவும்
தண் வாவி -குளம் -சீர் ஆமை-கமடம் – மருவும்
கோபுரம் சீரா மை -மேகம் -மருவும்
தாமமெனும் -இருப்பிடமாகிய
ஆவா ரண வரையார் -ஹஸ்தி கிரியார்
வண் கையில் ஆழி வரை -சக்கர ரேகை – கஞ்ச வரை -பத்ம ரேகை –
மா வாரண வரை–சங்க ரேகை -யுடையார் வாழ்வு —

————-

பொங்கு மத கரிகள் புள்ளிக் கலை யினங்கள்
அங்கரிணி மேனாடு அரங்கமே –தங்கு ததி
தொட்டுண்ட கையினார் தூயவனை தாம்பு அதனால்
கட்டுண்ட கையினார் காப்பு –92–

மத கரிகள்-யானைகள் -அங்கரிணி -பெண் யானைகள் -மேல் நாடும்
புள்ளிக் கலை யினங்கள் -புள்ளி மான் கூட்டங்கள் -அங்கரிணி-பெண் மான் -மேல் நாடு
தத்தி -தயிர்
தூய அன்னை யசோதை
கட்டுண் தகையினார் -கட்டுண்ட பெருமையுடைய தாமோதனார்

————

வாணுதலார் சேர்ந்து இலகு மஞ்சமதில் மாலைகளும்
ஆண் அழகரும் தூங்கு அரங்கமே -வாணன்
கரக்கப் பரிந்தார் கனி மா வலி பால்
இரக்கப் பரிந்தார் இடம் — 93–

மஞ்சமதில் மாலைகளும் தூங்கு -தொங்குகின்ற
மஞ்சமதில் ஆண் அழகரும் தூங்கு -கண் வளர்ந்து அருளுகின்ற
வாணன்-பாணாசுரன் – கரம் கப்பு -கைக்கூட்டம் – அரிந்தார் -அறுத்து அருளியவர்
மா வலி பால் இரக்கப்–யாசிக்கப் – பரிந்தார்–மனம் உவந்தவர் – இடம் —

————

தாண்டு வடவைகளும் தண் பொழில் வாய் மஞ்ஜைகளும்
ஆண்டுரகம் தேடும் அரங்கமே -காண்டவனம்
அங்கிக் களித்தார் அடவியில் நீர்த்தோர் இடத்துத்
தங்கிக் களித்தார் தலம் –94–

தாண்டு வடவைகளும்–பெண் குதிரைகளும் -ஆண்டுரகம் –ஆண் துரகம் -குதிரை தேடும் –
தண் பொழில் வாய் மஞ்ஜைகளும்-ஆண்டுரகம்–ஆண்டு உறக்கம் -பாம்பு – தேடும்
காண்டவனம் அங்கிக் களித்தார் -அங்கி -அக்னி பகவான் -அங்கிக்கு அளித்தார்
அடவியில் -காட்டில் -நீத்தோர் –ரிஷிகள்- இடத்து-ஸ்ரீ ராமனாகத் தங்கிக் களித்தார் –

—————-

தக்க புராணம் படிப்போர் தார் வேந்தர் வேதியர் கை
அக்கதைகள் மேவும் அரங்கமே –மிக்க வருள்
செய்ய கலம்பகத்தான் சீர்த்தரசன் அன்றுரைத்த
செய்ய கலம்பகத்தான் சேர்வு –95–மூன்று சிலேடைகள்

தக்க புராணம் படிப்போர் –அக்கதைகள்-சரித்திரங்கள் – மேவும்–
தார் வேந்தர் –அக்கதைகள்–கதாயுதம் – மேவும்–
வேதியர் கை அக்கதைகள்-அக்ஷதைகள் – மேவும்
அரங்கமே —
மிக்க வருள் செய் யகல் அம்பகத்தான் -அம்பகம் -கண் –
சீர்த் தாசன் –ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -என்ற ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
அன்றுரைத்த
செய்ய கலம்பகத்தான் –ஸ்ரீ திருவரங்க அலம்பகம் -என்ற அழகிய ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தை யுடையவன் –

————

வம்பு மலர் வாவி மாட முறு மடவார்
அம்பினலை வாரும் அரங்கமே –பம்பு மணச்
சாந்தப் புரத்தார் தரணியில் எப்போர் தனிலும்
தாந்தப் புரத்தார் தலம் –96–

வம்பு -வாசனை மலர்
வாவி –அம்பின் அலைவு ஆரும்-
மாட முறு மடவார் -அம் பின்னலை வாரும்
அரங்கமே —
பம்பு -நிறைந்த -மணச் சாந்து அப்பு உரத்தார் -திரு மார்பை யுடையவர்
தரணியில்-பூமியில் எப்போர் தனிலும் -தாம் தப்பு உரத்தார் -வலிமையை யுடையவர் —

—————-

கண்டு மொழி யார் நடனம் காண்போர் வருவி புதர்
அன்டுறக்கம் விட்ட அரங்கமே -கண்டு தொழா
மான வருடம் பெய்தார் மாதர் நிரை யுவப்பக்
கான வருடம் பெய்தார் காப்பு –97–

கண்டு மொழி யார் -கற்கண்டு போலும் இனிய சொல்லை யுடைய மகளிர்
நடனம் காண்போர் –அன்டுறக்கம் விட்ட-
வரு விபுதர் -தேவர் -அன்டுறக்கம் விட்ட –அண்-பொருந்திய -துறக்கம் -சுவர்க்கம் -விட்ட
அரங்கமே –
கண்டு தொழா மான வருடம் பெய்தார் -மானவர் -மானிடர் உடம்பு எய்தார்
மாதர் நிரை –மாதரும் ஆ நிரையும்
யுவப்பக் கான வருடம்-வேணு கானம் ஆகிய மழை – பெய்தார் –

————–

சீர் அணுகு வேதியர்கள் தேரோடு நல் வீதி
ஆரவாரம் மோதரங்கமே -ஏரிறகு
வாய்த்த விருந்தா வனத்தார் வந்து தொழா வானிரை முன்
மேய்த்த விருந்தா வனத்தார் வீடு –98-

ஆர -மிகுதியாக வாரம் ஒது
வீதி ஆரவாரம் மோது
வாரம் -வேதம் ஓதும் ஒரு முறை
ஏரிறகு வாய்த்து அவிரும் தாவு அனத்தார் -பிரமன்
ஆன் நிரை -பசுக்கூட்டம்
மேய்த்த விருந்தா வனத்தார் –பிருந்தாவனத்தை யுடையவர் வீடு –

————

மண்டலத்து மானிடரும் வண் புட் குழாமும் சீர்
அண்டத் துதிக்கும் அரங்கமே –அண்டர் இலம்
சென்று உயரம் தாங்கு உறி ஆர் தீம் ததி யுண்டார் நினையார்
வன்று உயரம் தாங்கு உறி ஆர் வாழ்வு –99–

மானிடரும் சீர் அண்ட- துதிக்கும்
வண் புட் குழாமும் சீர் அண்டத்து உதிக்கும்
சென்று உயரம் தாங்கு உறி ஆர்
நினையார் வன் துயரம் தாம் குறியார் -கருதார் –

———

நம் மானிட வீரர் நாலு புறம் சூழி குயில்
அம்மா வின் மேவும் அரங்கமே –வெம்மான் எய்
வைய மருங்கோலத்தர் மண்ணிடந்த கோலத்தர்
வைய மருங்கோலத்தர் வாழ்வு –100–ஐந்து சிலேடைகள் —

நம் மானிட வீரர் –அம்மா வின் -அம் மா வில் -மேவும்
நாலு புறம் -அம்மா வின்–அம் மா இல் – மேவும்
சூழி -அம்மா வின் -அம் மாவில்- யானையில் -மேவும்
குயில் அம்மா வின் மேவும்-அம் மாவில் -மா மரத்தில் -மேவும்
அம்மா வின் -அம மா திரு மகள் இல் -மேவும்
அரங்கமே —
வெம்மான் –மாரீசன் -எய் வை–கூர்மை -யமரும் -கோல் -பாணம் -அத்தர்–திருக்கரத்தை யுடையவர்
மண்ணிடந்த கோலத்தர் -ஸ்ரீ வராஹ ரூபத்தை யுடையவர்
வையம் அருமை கோலத்தர்–அரிய ஸுந்தர்யத்தை யுடையவர் –
வாழ்வு —

——————————-

ஆனைக்கும் கோபுரத்துக்கும் சிலேடை வெண்பா

கும்பம் மருவிடலால் கோவை அணுகிடலால்
இம்பர் ஏறும்படி இருக்கையால் –வம்பு மலர்த்
தேன் அனைய இன் சொல் திரு வேங்கடத்தானே
ஆனை நிகர் கோபுரமே யாம்

கும்பம் மருவிடலால் –யானை மத்தகத்தைப் பொருந்தி இருப்பதாலும் கோபுரங்கள் ஸ்தூபிகளைப் பொருந்தி இருப்பதாலும்
கோவை அணுகிடலால் -யானை அரசரைச் சேர்ந்து இருப்பதாலும் கோபுரங்கள் ஆகாயத்தை அளாவி இருப்பதாலும்
இம்பர் ஏறும்படி இருக்கையால் –இவ்வுலகோர் யானை மேல் ஏறிச் செல்லும்படி இருப்பதாலும் -ஏறுமாறு படிந்து கொடுப்பதாலும்
கோபுரங்கள் மனிதர்கள் ஏறும்படி படிக்கட்டுகள் உடன் பொருந்தி இருப்பதாலும்
வம்பு மலர்த் தேன் அனைய இன் சொல் திரு வேங்கடத்தானே ஆனை நிகர் கோபுரமே யாம்

———–

நம்மாழ்வாருக்கும் திருத்தேருக்கும் சிலேடை வெண்பா

எட்டு எழுத்தினைத் தேர் இரண்டின் மகிமை தேர்
மட்டில் சரம கவி மான்மியந்தீர் -சிட்ட்ரைத் தேர்
ஏர் மாறன் மா மதம் தேர் என்று முழக்கம் காட்டும்
சீர் மாறன் ஏறி வரும் தேர்

தேர் -தெளியுங்கோள் என்னும் பொருளில்
இரண்டு த்வயம்
சரம கவி மான்மியம் -சரம ஸ்லோக மஹிமை
ஏர் மாறன் மால் தன் மா மதம்-ஸ்ரீ வைஷ்ணவ மதம்
மாறன் ஏறி வரும் தேர் தேர் என முழக்கம் காட்டும்

————-

ஸ்ரீ ரெங்கநாதன் பேரில் நீரோட்டக வெண்பா

அரங்கத் தகி யிணையில் அண்டியே யண்டர்
தரங்கக் கடற்றார் அணியார் –சிரங்களினால்
ஏத்திட நன்னித்திரை செய் எந்தாய் அடியேனை
காத்திடலே நின் தன் கடன்

அகி அணை -ஸ்ரீ சேஷ சயனம்
அரங்கம் -ஸ்ரீ ரெங்க விமானம்
உதடு ஒன்றோடு ஓன்று ஒட்டாமலும் குவியா மலும் உள்ள எழுத்துக்கள் ஆகிய
உ ஊ ஓ ஒ ஒவ் –மேற்படி -உயிர் மெய் எழுத்துக்கள் -ம ப வ -எழுத்துக்கள்
வராமல் பாடுவது நீரோட்டகம் ஆகும் –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அபி நவ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அநத்யயன காலமும் அத்யயன உத்ஸவமும்–ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் ஸ்வாமிகள் / ஸ்ரீ உ ,வே ,S , P, புருஷோத்தமன் ஸ்வாமிகள் —

September 7, 2021

ஸ்ரீ திருப்பாணாழ்வார் உள்ளத்தினைக் கவர்ந்த கள்வனான ஸ்ரீ அரங்கன், கள்வனாக மாறிய
ஸ்ரீ திருமங்கையாழ்வார் மனதினையும் கவருகின்றார்.
அரங்கன் கள்ளனுக்கெல்லாம் கள்ளன். இவரது இயற்பெயர் நீலன். கள்ளர் குலத்தவர். சோழபேரரசின் தளபதி.
இவர் திருவாலி என்னும் ஊரில் குறையலூர் என்ற சிற்றூரில் ஆலி நாட்டு பெரிய நீலன் என்ற படைத்தளபதிக்கும்
வல்லித்திரு எனும் நற்குண மங்கைக்கும் மகனாகப் பிறந்தார். போரில் எதிரிகளை கலங்கடித்தவர்.
பின்னர் சோழமன்னன் அவரை ‘திருமங்கை’ என்னும் சிற்றரசுக்கு அரசனாக்கினான்.

வீர இளைஞனான நீலன் திருவெள்ளக்குளம் என்ற ஊரிலுள்ள ஸ்ரீநிவாஸர் கோவிலில் குமுதவல்லி எனும்
கபிலமுனியின் சாபத்தினால் மானுடவாழ்வெடுத்த தேவமகளை, தேவதையை, அழகு என்ற சொல்லுக்கே இலக்கியமானவளை,
மஹாஞானியை பார்க்கின்றாh. தன் மனதினை பறிக்கொடுக்கின்றார். குமுதவல்லி இரண்டு கட்டளையிடுகின்றார்.

1) பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு திருமாலடியவனாய் மாறவேண்டும்.
2) அடியார்கள் அனைவருக்கும் தினமும் அன்னதானம் செய்ய வேண்டும்.
பஞ்ச சம்ஸ்காரம் யாரிடம் செய்து கொள்வது?. என்றும் உயர்ந்ததையே நாடும் நீலன் அன்று
திருநறையூர் ஸ்ரீநிவாஸனையே தேர்ந்தெடுத்தார் குருவாக.
மன்னன் சித்தம் கேட்ட பட்டர் செய்வதறியாது திரைசேர்த்து வெளியேறினார்.

கருவறையில் ஸ்ரீநிவாஸன் எதிரே நீலன்!
பிடிவாதமாக அவர்தான் தமக்கு பஞ்சசம்ஸ்காரம் செய்ய வேண்டுமென்று கண்மூடி அசையாது அவரையே தியானித்துக் கொண்டிருந்தார்.
சிறிது நேரம்தான் என்றாலும் கடுமையான தபஸ் அது.
மெய்யுருகி நின்றால் வெண்ணையுண்டவாயன் தான் உருக ஆரம்பித்து விடுவான்.
ஸ்ரீநிவாஸனின் சக்கரக்கையும் சங்கக்கையும் நீலனின் புஜங்களை தீண்டியது. நெற்றியில் ஊர்த்வபுண்டரமிட்டது.
பரகாலன் என்று நாமமிட்டு அழைத்தது. திருமந்திரத்தை உபதேசித்தது. நீலனின் களை மாறியது. தேஜஸ் ஒளிர்ந்தது.
புனித குமுதவல்லியுடன் திருமணம் இனிதே நடந்தது. அன்னதானம் ஆலிநாட்டில் சிறப்பானது.
ஆலிநாடே அதிசயபட்டது. மன்னன் பரகாலன் புகழ் எட்டுதிசைகளிலும் பரவியது.

கப்பம் கட்டாத பரகாலனுடன் போரிட்டு வெல்லமுடியாது என்றறிந்த சோழமன்னன் தந்திரமாக அவனை ஒரு கோவிலில் சிறை வைத்தான்.
மூன்று நாட்களாக உண்ணாவிரதமிருந்த பரகாலனின் கனவில் பேரருளாளன் அத்திகிரி அருளாளப் பெருமாள் வரதன் தோன்றினான்.
காஞ்சிக்கு வரப் பணித்தான். கடனைத் தீர்ப்பதாக அறிவித்தான். அருளாளின் ஆணையை அரசிற்குத் தெரிவித்தார் பரகாலன்.
பரகாலன் சத்தியம் தவறாதவர் என்று நன்குணர்ந்த அரசன் ஒரு சிறு குழுவினை அவரோடு காஞ்சி அனுப்பி வைத்தார்.
மீண்டும் பரகாலன் கனவில் தோன்றிய அருளாளன் ஒரு புதையல் இருக்கும் இடத்தைக் காண்பித்துக் கொடுத்தார்.
வேகவதி ஆற்றங்கரையில் தோண்டினார் பரகாலன். பெரும் புதையலை கண்டெடுத்தார்.
அரசுக்கு செலுத்தவேண்டிய கப்பம் செலுத்தினார். மீதமானதை அன்னதானத்திற்கு எடுத்து வைத்தார்.
திருமங்கை விளைச்சலில் அரசுக்கு சேரவேண்டிய நெல்லைக் கேட்டனர் குழுவினர். அருளாளனின் மீது பாரத்தை போட்டுவிட்டு கண்ணை
மூடிக்கொண்டு உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஆற்று மணலைக் காட்டினார் பரகாலன்.
என்ன ஆச்சர்யம்! அவர் காட்டிய இடமெல்லாம் மணல்துகளனைத்தும் நெல்மணிகளாயின!
பரகாலன் பெருமையினை, தெய்வம் துணை நின்றதையறிந்த அரசன் தவற்றுக்கு வருந்தினான்.
அவரை சுதந்திரமாக திருமங்கையை ஆளவிட்டார்.

நீலன் மனப்பூர்வமாக வைணவனாக உறுதி பூண்டார். திருநறையூர் நம்பி அருள் புரிந்தார் இவரின் உறுதி கண்டு!.
அன்னதானத்தின் பயன் அருளாளன் வரதன் அருள்புரிந்தார்.

ஆலிநாட்டின் பொருளாதாரம் வலுவிழந்தது. வளமுள்ளவரிடத்து கொள்ளயடித்தாவது இந்த கைங்கர்யத்தைச் செய்ய துணிபு பூண்டார் பரகாலன்.
வழிப்பறிக் கொள்ளையனாய் மாறினார்.
வயலாளி மணவாளனும் தாயாரும் புதுமணத் தம்பதியனராய் மாறினர். இவர்களின் ஆபரணங்கள் அனைத்தும் கொள்ளையடித்த
பரகாலனால் நம்பெருமாள் கால்விரலில் அணிந்திருந்த விரலணியை கழற்ற இயலவில்லை.
பரகாலன் பல்லால் கடித்தாவது கழற்ற முயலுகின்றார். அவரின் தலை இறையின் பாதங்களில் முட்டுகின்றது.
பல்லினால் கடிக்கின்றார். தீண்டிய வேகத்தில் மெய்வண்ணம் உணர்கின்றார். திருமந்திரம் மீண்டும் உபதேசித்து பேரொளியாய் மறைகின்றான் மாயவன்.

கவி பிறக்கின்றது கள்வனுக்கு!

பொய் வண்ணன் மனத்தகற்றி புலனைந்தும் செலவைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை
மை வண்ணம் கருமுகில் போல் திகழ் வண்ண மரதகத்தின்
அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே

பொய்கள் போன்ற பலவிதமான பாவச் செயல்களை மனதிலிருந்து நீக்கி, ஐந்து புலன்களையும் தகாத வழிகளில்
போகாத வண்ணம் நிலைநிறுத்தி, ஆத்மாவுடன் சேர்ந்து முழு உள்ளத்துடன் தன்னை வணங்குபவர்களுக்கு,
தனது உண்மையான குணங்கள் முழுவதும் காண்பிப்பவனை, கண் மைப் போன்ற கரிய நிறமும், கரியமேகம் போல் ஒளிவீசும் நிறமும்,
மரகதம் என்ற ரத்தினத்தினைப் போன்ற பச்சை நிறமும் உடைய பெரியபெருமாளை, நான் திருவரங்கத்தில் கண்டு வணங்கினேன்.

திருமங்கையாழ்வார் பரம பாக்யசாலி. பகவானால் பஞ்சசம்ஸ்காரம் செய்யப்பட்ட ஒரே வைணவர் இவர்தான்!.
இவர் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செய்த பல கைங்கர்யங்கள் கணக்கிலடங்கா! ஆனால் இந்த கைங்கர்யத்தினை நிறைவேற்ற இவர்
கையாண்ட முறை வித்யாசமானது! எது வேண்டுமானாலும் பகவத் கைங்கர்யத்திற்காக துணிவோடு செய்வார்.
இவர் செய்த கைங்கர்யங்களுள் சாட்சியாகயிருப்பது இவரால் கட்டப்பட்ட மதில்களும், விமான, மண்டப, கோபுரங்களும்
இவர் பாடிய பாசுரங்களும்தாம். திருவரங்கம் திருச்சுற்றில் நான்காவது திருச்சுற்று ஆலிநாடன் திருச்சுற்று என்றே
திருமங்கை மன்னன் திருப்பணியை நினைவுகூறும் வகையில் அமைந்துள்ளது.

நாகப்பட்டினத்தின் அருகேயுள்ள ஒரு புத்தர் கோவிலிலுள்ள சொர்ணத்தினாலான, எளிதில் திருடவே முடியாத, ஒரு புத்தர் சிலையை
வெகு சாமர்த்தியமாகக் கொள்ளையடித்தார். பயணக்கப்பல் ஒன்றில் தன் பரிவாரங்களோடு பயணமும் செய்து பொய்வழக்காடி
அந்த கப்பல் முதலாளியிடமிருந்து நிறைய தனத்தினைப் பெற்றார். இவையனைத்தையும் திருப்பணிக்காக செலவழித்தும்
ஊழியர்களுக்கு சம்பளபாக்கி!. அவர்களனைவரையும் ஒரு ஓடத்தில் ஏற்றினார்.
அக்கரைச் சேர்ந்தவுடன் தருகிறேன் என்று கூறி கொள்ளிடம் நடு ஆற்றில் ஓடத்தைக் கவிழ்த்து அவர்கள்தம் பிறவிக்கடனை இவர் கழித்தார்.
அவரவர் உறவினர் இவரை மடக்க, இவரது ஸ்வப்னத்தில் (இங்குமா!?), அரங்கன் எழுந்தருளி உறவினர்களளனைவரையும்
காவேரி ஸ்நானம் செய்து அழகிய மணவாளன் திருமண்டபத்திலே நின்று அவரவர் உறவினர் பெயரைக் கூப்பிட்டு காத்திருக்கச் சொல்லி மறைந்தார்.
அவ்வாறே ஆழ்வாரும் ஏற்பாடு செய்தார். மாண்டோர் அனைவரும் மீண்டனர். அவர்களனைவரும் அவர்கள்தம் உறவினர்களிடத்து
‘ஆழ்வாருடைய நிர்ஹேதுக பரம க்ருபையுண்டானபடியினாலே நாங்கள் பெரியபெருமாள் திருவடிகளையடைந்தோம்!
நீங்கள் ஆழ்வார் திருவடிகளிலே அபசாரப்படாதீர்கள். சிலகாலம் இந்த ஸம்ஸார வாழ்க்கையினைக் கழித்து விட்டு
ஆழ்வார் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்!’ என்று விண்ணப்பித்து மீண்டுபோனார்கள்.

இந்த க்ஷணம் அடியேன் சிலகாலம் முன்பு என் மனதில் போட்டு வைத்திருந்த ஒரு கேள்விக்கு அரங்கன் பதிலளித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் கோவிலில் முகலாயர்கள் படையெடுப்பின் போது ஆயிரக்கணக்கான வைணவர்கள் இறந்தார்களே?
கோவில் வளாகத்திற்குள்ளேயே இறந்து போனார்களே? அப்பொழுதெல்லாம் ஏன் அரங்கன் அவர்களைக் காப்பாற்றவில்லை?
அரங்கனுக்கு அவர்களைக் காப்பாற்றக் கூடிய சக்தியில்லையா? என்றெல்லாம் தோன்றியது.
என்றாவது ஒரு நாள் பதில் தருவான் என்று மனதின் ஒரு மூலையில் கிடத்திய இக்கேள்விக்கு இன்று பதில் கிடைத்துள்ளது.
அரங்கனுக்குக் கைங்கர்யம் பண்ணிய அடியார்களை ஆற்றில் மூழ்கடித்தார் திருமங்கைமன்னன்.
நம் பார்வைக்கு அநியாயமாகக் கொல்லபட்ட அவர்களை அரங்கன் ஆட்கொண்டான்.
அவர்கள் பெரியபெருமாள் திருவடிகளடைந்ததை பிரத்யட்சமாக அழகிய மணவாளன் மண்டபத்தில் மீண்டு வந்து உணர்த்தினார்கள்.

இதை நாம் பிரமாணமாகக் கொள்ள வேண்டும்! அரங்கநகரப்பனைக் காக்கும் பொருட்டு தன் இன்னுயிர் துறந்தவர்களை சும்மாவா விடுவான் அரங்கன்?
அவர்களைனைவரையும் அரங்கனே அவர்களது ஊழ்வினையறுத்து தம் திருவடிகளில் சேர்த்துக் கொண்டுள்ளார்.
உயிர் கூட்டினை விட்டு சாமான்யர்களின் உயிர்பறவை பிரிவதென்பது வலிதான். இவர்களனைவரும் சற்று கடுமையான வலியினைத் தாங்கியுள்ளனர்.
எவர் மூலமோ கொடுவாள் எடுத்து ஊழ்வினையறுத்து, அவனது நிர்ஹேதுக கிருபையினால் அவன் திருவடிகளையடைந்துள்ளனர்.
அவனது திருவடிகளடைந்து பரமபதம் சென்றாலும் அவர்கள் அவ்வப்போது திருவரங்கமும் வந்து சென்று அரங்கனை தரிசிக்கின்றார்கள்.
இதனை நான் சொல்லவில்லை. ஆழ்வாரே அறிவிக்கின்றார்! இதோ அவர் பாடல்!

ஏனமீனாமையோடு அரியும் சிறுகுறளுமாய்
தானுமாய தரணித்தலைவனிடமென்பரால்
வானும் மண்ணும் நிறையப்புகுந்து ஈண்டி வணங்கும்- நல்
தேனும் பாலும் கலந்தன்னவர்சேர் தென்னரங்கமே!

பரமபதத்தில் உள்ளவர்களும், இந்த பூமியிலுள்ளவர்களும் ஊர் முழுவதும் நிறைந்துள்ளது போல் இங்கு வந்து ஒன்றாகத்
திரண்டு வணங்கும் இடமும், சுவையும் மதுரமும் உள்ள தேனும் பாலும் இரண்டற ஒன்றாகக் கலந்தது போல்
இங்கு உள்ள அடியார்கள் சேர்ந்து நிற்கவும் ஆகிய திருவரங்கமானது – வராகமாகவும், மீனாகவும், ஆமையாகவும்,
நரசிம்மமாகவும், வாமனனாகவும் அவதாரங்கள் எடுத்துப் பின்னர் தானே ஒரு பூர்ணமான அவதாரம் எடுத்தப் பூமியின் தலைவனும்,
சக்ரவர்த்தித் திருமகனாம் ஆகிய இராமபிரானின் இடமாகும்.

திருமங்கையாழ்வார் தொண்டரடிப்பொடியாழ்வாரைச் சந்தித்திருக்கிறார். திருமதிள் அமைக்கும் போது இவரது நந்தவனத்திற்கு
எந்த ஊறும் ஏற்படாவண்ணம் திருமதிளை நந்தவனத்தை வளைத்துக் கட்டியுள்ளார். இதனைக் கண்டு மகிழ்ந்த தொண்டரடிப்பொடிகள்
அவரை வாழ்த்தி, தான் பூக்களைப் பறிக்கும் சிறுகத்தி போன்ற ஆயுதத்திற்கு,
திருமங்கைமன்னனின் மற்றொரு பெயரான ‘அருள்மாரி’ என்ற பெயரை வைத்துள்ளார்.

திருமங்கையாழ்வார் அரங்கனிடத்து சில வரங்களை யாசிக்கின்றார். அவற்றுள் சில

– தசாவதாரங்களையும் தரிசிக்க வேண்டும்
– திருமங்கைமன்னன் படித்துறைக்கு (மயானம்) எந்தவித தோஷங்களும் கூடாது.
அது எப்போதும் தோஷற்றதாக விளங்க வேண்டும்.

அரங்கன் ஆழ்வாரது கோரிக்கையை சந்தோஷமாக ஏற்கின்றான். எம்பெருமானின் தசாவதாரங்களையும் பாடிக் கொண்டிருந்த
திருமங்கையாழ்வாருக்கு அந்த அவதாரங்களை தானும் ஸேவிக்க மிகுந்த ஆசையுண்டாயிற்று.
ஆழ்வார்கள் வேண்டி அரங்கன் ஏதும் மறுப்பானோ? ஆழ்வார் உய்ய, அவர் பொருட்டு நாம் உய்ய அர்ச்சாரூபமான (சிலா ரூபத்தில்)
தசாவதாரங்களையும் காண்பித்தருளினான். அப்போதே திருமங்கையாழ்வார் விக்ரஹத்தையும் தோன்றச் செய்தார்.
இவருக்குக் காட்சியளித்த விக்ரஹங்களனைத்தையும் இன்றும் ஸ்ரீரங்கத்தில் அஹோபில மடத்தின் கட்டுப்பாட்டிலுள்ள
‘தசாவதார ஸந்நிதியில்’ அதிவிசேஷமாகக் காணலாம்.
(இத்திருக்கோவில் ஒரு காலத்தில் கோயிலண்ணன் கட்டுப்பாட்டிலிருந்ததாகவும், 18ம் பட்டம் அழகியசிங்கர் காலத்தில் கைமாறியதாகவும் சொல்லுவர்).
இங்குள்ள திருமங்கையாழ்வார் விக்ரஹம்தான் ஸ்ரீரங்கத்தில் அத்யயன உற்சவத்தின் போது எழுந்தருளப் பண்ணியதாகவும்,
இந்த உற்சவம் முழுவதும் வடக்குச் சித்திரை வீதியிலுள்ள ஒரு மண்டபத்தில் தங்கியிருந்ததாகவும் சொல்லுவர்.
அடுத்தமுறை ஸ்ரீரங்கம் வரும்போது இந்த ஸந்நிதியினை ஸேவிக்கத் தவறாதீர்கள்!

இக்கலியனை மிகவும் கவர்ந்த திவ்யதேசங்கள் திருநறையூர், திருக்கண்ணபுரம், திருவரங்கம், திருவேங்கடம், திருக்குடந்தை
ஆகிய திவ்யக்ஷேத்திரங்களாகும். இவர் நாலுகவிப் புலவராவார். அவையாவன ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, விஸ்தாரகவி என்பதாகும்.
திருவரங்கத்தில் ஆழ்வார்களின் தீந்தமிழுக்கு, திருவாய் மொழித் திருநாள் ஏற்படுத்தி, பெருவிழா எடுத்த முதல்வர் இவர்தான்.
திருக்குடந்தை ஆராவமுதன் குறித்து இவர் இயற்றிய ‘திருவெழுக்கூற்றிருக்கை” ஒரு அற்புத சித்ரகவியாகும்.
காடு, மேடு, ஆறுகள், குன்றுகள் பலவற்றைக் கடந்து எண்பதிற்கும் மேலான திவ்யதேசத்து எம்பெருமான்களைப் பற்றி பாடியுள்ளார்.
அதிக திவ்யக்ஷேத்திரத்து எம்பெருமான்களை பாடிய பெருமை இவரையேச் சாரும்.
இவரது வாழ்க்கையும், பாக்களும் மிகவும் சுவாரசியமானவை. பாசுரங்கள் காந்தம் போன்று மனதினை கவர்ந்துவிடும்.

ஏழை ஏதலன் கீழ்மகனென்று எண;ணாது
இரங்கி மற்றவற்கு இன்னருள் சுரந்து
மாழை மான்மட நோக்கி உன் தோழி
உம்பியெம்பியென்றொழிந்தில்லை – உகந்து
தோழன் நீ எனக்கு இங்கொழியென்ற
சொற்கள் வந்து அடியேன் மனந்திருந்திட –
ஆழிவண்ண! நின்னடியினையடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்தம்மானே!

ஞானமில்லாதவன், பகைவன், தாழ்ந்த பிறவியுடையவன் என்று சிறிதும் நினைக்காமல் மனதில் இரக்கம் கொண்டு,
அதற்கும் மேலே அந்த குகனுக்கு உனது இனிய அருளையும் கொடுத்தாய். கள்ளம் கபடம் இல்லாத மானுடைய
இனிமையான பார்வை போன்று கனிவான பார்வையுடைய ‘இந்த சீதை உனக்கு தோழியென்றும்,
என்னுடைய தம்பியான இலக்குவன் உனக்கும் தம்பியாவான்’ என்று கூறினாய்.
இதோடு நிற்காமல் மிகவும் உவகையுடன், ‘நீ எனக்குத் தோழன்’ என்று குகனைப் பார்த்துக் கூறினாய்.
உனது தம்பியான பரதன் ஆட்சி செய்யும் காலத்தில் அவனுக்குப் பாதுகாப்பாக இருக்க எண்ணி ‘நீ அங்கேயே இரு’ என்றாய்.
இவ்விதமான நீ அருளிய சொற்கள் பெரியோர்கள் மூலம் அடியேன் காதில் விழுந்து எனது மனதிலேயே தங்கிவிட்டது.
கடல் போன்ற நிறமும் மனதும் உடையவனே! அழகான சோலைகளை உடைய திருவரங்கப் பெரிய பெருமாளே!
உனது திருவடிகளே சரணம் என்று நான் வந்தேன்.

நம் தேகமே ஆத்மா, ஆத்மா நம்முடையது, நாம் சுதந்திரமானவர்கள் என்று எண்ணுகின்றோமே அதுதான் ஒரு பெரிய களவு.
எப்போது மெய்ஞானம் தோன்றி அரங்கனிடத்து ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகின்றோமோ அன்றுதான் நமக்கு விடுதலை!

———–

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவ ஸத் ஸம்ப்ரதாயம் உபய வேதாந்தத்தைச் சார்ந்துள்ளது.
உபய என்றால் ‘சேர்ந்து’ அல்லது ‘இரண்டும் சேர்ந்து’ என்றும்,
அந்தம் என்றால் முடிவு அதாவது வேதத்தின் முடிவு பகுதியே வேதாந்தம் என்றும் காண்கிறோம்.

ஸம்ஸ்க்ருத மொழியிலுள்ள ரிக், யஜுர், ஸாம அதர்வண வேதங்களும்,
உபநிஷத்துகளான வேதாந்தமும் சேர்ந்தே காண்பது போல்,
தமிழில் த்ராவிட வேதம் என்றழைக்கப்படும் திவ்ய ப்ரபந்தமும்,
அவற்றின் வ்யாக்யானமாக தமிழ் வேதாந்தத்தையும் சேர்த்தே நம் பூர்வாசார்யர்கள் போற்றினார்கள்.

உபய வேதாந்தமும் இரண்டு கண்களாகக் கருதப்படுகின்றன.
எம்பெருமானால் ‘மயர்வற மதிநலம் அருளப் பெற்ற’ ஆழ்வார்கள், அற்புதமான திவ்ய ப்ரபந்தத்தை அருளிச் செய்து,
அதன் மூலம் ஸம்ஸ்க்ருத வேதத்தின் ஸாரார்த்தத்தை தெளிவாக்கி, இவ்வுலகோர் உய்ய வழி காட்டியருளினார்கள்.
அவர்கள் மீது நம் ஆசார்யர்களும், நாமும் ப்ரேமத்தோடே பேணி அநுஸந்திக்க இதுவே காரணமாகத் தட்டில்லை.

அத்யயனம் என்றால் கற்றுக்கொள்வது, படிப்பது, பலமுறை சொல்லிப் பார்ப்பது.
வேதத்தை நாம் ஆசார்யரிடமிருந்து செவிவழி கேட்டு, மறுபடியும் மறுபடியும் சொல்லிப் பார்த்து கற்றுக் கொள்வது.
பிறகு நித்யாநுஷ்டான முறையில் கற்றுக்கொண்ட வேதத்தை அனுதினமும் ஒத வேண்டும்.

அநத்யயனம் என்றால் அத்யயனம் செய்யாமல் இருத்தல். வருடத்தில் சில காலங்கள் நாம் வேதம் ஒதுவதில்லை.
இந்த சில காலங்களில் ஸ்ம்ருதி, இதிஹாஸ புராணங்கள் முதலியவற்றைக் கற்றுக்கொள்வர்கள் .
மேலும், அமாவாசை, பௌர்ணமி, ப்ரதமை போன்ற நாட்கள் வேதம் கற்றுக் கொள்ள ஏற்றவையல்ல.

த்ராவிட வேதமும் ஸம்ஸ்க்ருத வேதத்திற்கு இணையாகக் கருதப்படுவதால், இதற்கும் அநத்யயன காலம் உள்ளது.
த்ராவிட வேதத்திற்கு எவ்வாறு இந்த அநத்யயன காலம் ஏற்பட்டது என்பதைப் பற்றி மேலே காண்போம்.

அநத்யயன காலத்திலேயே நாம் அத்யயன உத்ஸவம் கொண்டாடுவது வழக்கம்.
நம்மாழ்வார் பரமபதம் சென்ற நாளை அத்யயன உத்ஸவமாக போற்றிக் கொண்டாடுவது நம் ஸம்ப்ரதாய வழக்கம்.
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் இவற்றுக்கு உண்டான விசேஷ தொடர்பு பற்றி
பெரியவாச்சான் பிள்ளை ‘கலியன் அருள் பாடு’ என்ற க்ரந்தத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.

இந்த க்ரந்தத்தின் விரிவுக்கஞ்சி, நம் தலைப்பிற்குத் தொடர்பான சில முக்கிய விஷயங்களை மட்டும் நாம் மேலே பார்க்கலாம்.
பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணன், தன் நிர்ஹேதுக க்ருபையால் சகல ஜீவாத்மாக்களும் ஸம்ஸாரம் என்ற கரையைக் கடக்க,
பரமபதத்திலிருந்து இறங்கி வந்து அர்ச்சாவதார திருமேனியுடன் அதாவது,
எளியவர்களும் பார்க்கும்படியாகவும், கைங்கர்யம் செய்ய ஹேதுவாகவும் கோயில், திருமலை, பெருமாள் கோயில் என்று
ப்ரஸித்தமாக போற்றப்படும், ஸ்ரீரங்கம், திருவேங்கடம், காஞ்சிபுரம் போன்ற இடங்களில் அவதரித்து அருள் செய்கின்றான்.

ஆழ்வார்களுள் கடைசியாக அவதரித்த திருமங்கையாழ்வார், எம்பெருமானால் திருத்திப் பணிகொள்ளப்பட்டு,
பகவானின் அர்ச்சா மூர்த்திகளில் ஆழ்ந்து, மங்களாசாசனம் செய்து, ஸ்ரீரங்கம் சென்று சேர்ந்து பல கைங்கர்யங்களில்
தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இருந்தமிழ் நூல் (திருவாய்மொழி) புலவன் மங்கையாளன் என்று தன்னைப் பற்றிக் கூறியவர்,
ஆழ்வாரின் பாசுரங்களில் மிகவும் ஆழ்ந்து அநுபவித்து, ஸேவித்து வந்தார்.

பொதுவாக நாம் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நக்ஷத்ரத்தில், பௌர்ணமி திதி அன்று திருக்கார்த்திகை தீபம் கொண்டாடுகின்றோம்.
அப்படி ஒரு திருக்கார்த்திகை அன்று, நம்பெருமாளும் ஸ்ரீதேவி பூதேவி நாச்சிமார்களும் திருமஞ்சனம் கண்டருளி,
ஸ்ரீ வைஷ்ணவ பக்த கோஷ்ட்டியில் எழுந்தருளியிருக்கும் காலத்தே,
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம் என்ற ப்ரபந்தத்தை இயற்றி, எம்பெருமானுக்கு இசையோடு பாடிக் காண்பித்தார்.
மேலும், திருவாய்மொழியிலிருந்தும் சில பாசுரங்களை திவ்யமான இசையோடு பாடினார்.

இதைக் கேட்ட நம்பெருமாள் மிகவும் உகந்து, உமக்கு ஏதேனும் விருப்பம் இருந்ததாகில் கேளும்
அதை நாம் நிறைவேற்றி அருளுவோம் என்று திருமங்கையாழ்வாரிடம் கூறினார்.

திருமங்கையாழ்வார் தனக்கு இரண்டு விருப்பங்கள் என்று மேலே விண்ணப்பிக்கிறார்:
1-எம்பெருமான் வைகுண்ட ஏகாதசி,
அதாவது, மார்கழி மாதம் சுக்ல பக்ஷம் அன்று அத்யயன உத்ஸவம் கொண்டருளும்போது
வேத பாராயணத்துடன், திருவாய்மொழியை முழுவதுமாக கேட்டு அநுபவிக்க வேண்டும்.
2-திருவாய்மொழியை உலகோர் உணர ஸம்ஸ்க்ருத வேதத்திற்கு இணையானது என்று அறிவிக்க வேண்டும்

எம்பெருமான் திருவுள்ளம் உகந்து இரண்டு விருப்பங்களையும் நிறைவேற்றினார்.
கலியன் தொடர்ந்து பாடியதால் அவருடைய குரல்வள சிரமத்தைக் கண்ட எம்பெருமான்,
திருக்கார்த்திகை தீபமன்று தன் திருமேனியில் சார்த்தியது போக உள்ள எண்ணெயை
அவருக்கு கொடுக்க வேண்டும் என்று உடனடியாக உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், ஆழ்வார் திருநகரியில் உள்ள அர்ச்சா ரூபத்திலுள்ள ஸ்வாமி நம்மாழ்வாருக்குத் திருமுகம் (தகவல்) அனுப்பப்பட்டு,
அவர் உடனடியாக கிளம்பி ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்.

திருமங்கையாழ்வார், வைகுண்ட ஏகாதசி தொடக்கமாக தொடர்ந்து பத்து நாட்கள்,
காலையில் வேத பாராயணமும், மாலையில் திருவாய்மொழி கோஷ்டியும் நடந்தேற வழி செய்தார்.

உத்ஸவத்தின் கடைசி நாளன்று, ஆழ்வார் திருவடி தொழல், அதாவது, நம்மாழ்வார் நம்பெருமாளின் திருவடியைத்
தன் திருமுடியால் தீண்டும் நன்னாளை பக்தியுடன் கொண்டாடும் ஸம்ப்ரதாயத்தை அன்று ஏற்படுத்தினார்.
பிறகு, நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரிக்கு புறப்பட்டுச் செல்கிறார். இப்படிச் சிலகாலம் சென்றது.

கலியுகத்தின் கோலம், காலப் போக்கில் திவ்ய ப்ரபந்தம் தாற்காலிகமாக மறைந்து,
ஆழ்வாரும் ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளுவது நின்றது.
நாதமுநிகள் அவதரித்து, எம்பெருமானின் க்ருபையால், ஆழ்வாரைப் பற்றியும் திவ்ய ப்ரபந்தத்தைப் பற்றியும் அறிந்து,
ஆழ்வார் திருநகரி அடைந்து, மதுரகவியாழ்வாரின் ஆசார்ய பக்தி தெள்ளத் தெளிவாகத் தோற்றும்
கண்ணி நுண் சிறுத் தாம்பை கற்றுக் கொண்டு, அதன் மூலம் நம்மாழ்வாரின் பரம க்ருபையைப் பெற்று,
நாலாயிரமும் ஸம்ப்ரதாய அர்த்தத்துடன் கற்று நம்மையெல்லாம் உய்வித்தார்.

நாதமுநிகள் தன் சிஷ்ய கோடிகளுக்கு அத்யயனம் செய்து வைத்து,
ஸ்ரீரங்கத்தில் மறுபடியும் அத்யயன உத்ஸவத்தை ஆரம்பித்து வைத்தார்.
திவ்ய ப்ரபந்தத்தின் ஏற்றத்தையும், ஆழ்வார்களின் பெருமைகளையும் நம்மாழ்வார் மூலம் அறிந்த ஸ்ரீமந்நாதமுநிகள்,
நம்மாழ்வார் ஸ்ரீரங்கம் எழுந்தருளும்படி வழி செய்தார்.
வேதத்திற்கு இணையானது திருவாய்மொழி என்ற எம்பெருமானின் நியமனத்தை அநுசரித்து,
நாதமுநிகள் திருவாய்மொழிக்கும் மற்ற ப்ரபந்தங்களுக்கும் அநத்யயன காலத்தை ஏற்படுத்தினார்.

திவ்ய ப்ரபந்தங்களுக்கு, அநத்யயன காலம் திருக்கார்த்திகை தீப நாளிலிருந்து தொடங்கி
அத்யயன உத்ஸவ நாளுக்கு முன்பாக முடியும்.
அத்யயன காலம் அத்யயன உத்ஸவ முதல் நாளில் தொடங்கித் திருக்கார்த்திகை தீபமன்று முடியும்.
நாதமுனிகள் நின்று போயிருந்த அத்யயன உத்ஸவத்தைத் தொடங்கும் பொருட்டு,
எம்பெருமானிடம் இருந்து ஆழ்வாருக்கு ஸ்ரீமுகம் (தகவல்) செல்லும்படியும்,
பெரிய பெருமாள் ஆழ்வார் பாசுரங்களை அத்யயன உத்ஸவத்தில் கேட்டு முடிக்கும் வரை
ஸ்ரீவைஷ்ணவர்கள் அவற்றை நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழியாமல் இருக்கும்படிக்கும் ஏற்பாடு செய்தார்.

மேலும், திருக்கார்த்திகை தீபம் அன்று எம்பெருமானுக்குச் சாத்திய எண்ணெய்க்காப்பு சேஷத்தை
நம்மாழ்வார் தொடக்கமான மற்றைய ஆழ்வார் ஆசார்ய்களுக்குச் சாத்தி
அந்த சேஷத்தை ஸ்ரீவைஷ்ணவர்களுக்குக் ப்ரசாதிக்குமாறு செய்தார்.

நம்மாழ்வாரின் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி நான்கு வேதங்களுக்கு ஸமமாகவும்
மற்றைய ஆழ்வார்களின் திவ்ய ப்ரபந்தங்கள் வேதத்தின் அங்க (சீக்ஷா, கல்பம், வ்யாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜ்யோதிஷம்)
உபாங்ககளாகவும் கருதப்படுகிறது. இந்த ப்ரபந்தங்கள் திருமந்திரம், த்வயம் மற்றும் சரம் ச்லோகத்தின் அர்த்தங்களையும் விளக்குகின்றன.

மேலும், நாதமுனிகள் பின்வரும் நியமனங்களைச் செய்தார்.
அத்யயன உத்ஸவத்தின் முதல் 10 நாட்கள் (அமாவாஸ்யை தொடங்கி வைகுண்ட ஏகாதசி வரை)
முதலாயிரம் (திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி,
திருச்சந்த விருத்தம், திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமனாதிபிரான், கண்ணிநுண் சிறுத் தாம்பு),
பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் ஆகியவை) சேவிக்கப்படும்.

வைகுண்ட ஏகாதசி அன்று, திருவாய்மொழி தொடக்கம் செய்யப்படும்.
10 நாட்களும், காலையில் வேத பாராயணமும் மாலையில் திருவாய்மொழியும் (ஒரு நாளைக்கு ஒரு பத்து வீதம்) சேவிக்கப்படும்.
கடைசி நாள் நம்மாழ்வார் திருவடி தொழல் உயர்ந்த சாற்றுமுறையுடன் கொண்டாடப்படும்.

21ஆம் நாள் இயற்பா (முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, நான்முகன் திருவந்தாதி,
திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்) பூர்த்தியாகச் சேவிக்கப்படும்.

(குறிப்பு: இராமானுச நூற்றந்தாதி நம்பெருமாளின் ஆணையின் பேரில் எம்பெருமானார் காலத்திலேயே இயற்பாவில் சேர்க்கப்பட்டது.
21ஆம் நாள் அன்று இரவு புறப்பாட்டில் சேவிக்கப்படும்).

மேலும், நாதமுனிகள் எப்படி ப்ராஹ்மணன் தவறாமல் வேதம் கற்றுக் கொள்கிறானோ,
அது போல ப்ரபந்நர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் திவ்ய ப்ரபந்தங்களை அவசியம் கற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்று நியமிக்கிறார்.

மேலும், மார்கழி மாதத்தில், அதிகாலையில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளியெழுச்சியும்
ஆண்டாளின் திருப்பாவையும் சேவிக்கப்படுகிறது (அநத்யயன காலமாக இருந்தாலும் இந்த இரு ப்ரபந்தங்களும்
முறையே பகவானையும் பாகவதர்களையும் துயிலெழுப்புவதால், இவற்றைச் சேவிக்கத் தடை ஏதும் இல்லை).

இவ்வாறு உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், பெரிய நம்பி மற்றும் எம்பெருமானாரின் காலம் வரை சென்றது.
எம்பெருமானார் காலத்தில் ஒரு முறை ஏதோ சில காரணங்களினால் நம்மாழ்வார் ஸ்ரீரங்கம் எழுந்தருள முடியவில்லை.
எம்பெருமானார் நம்மாழ்வாரின் அர்ச்சா திருமேனியையும் மற்றைய ஆழ்வார்களின் திருமேனிகளையும்
எல்லா திவ்ய தேசங்களிலும் ப்ரதிஷ்டை பண்ணும்படி நியமித்தார்.
திருமலையே எம்பெருமானின் திருவுடம்பாகக் கருதப்படுவதால் ஆழ்வார்களை திருவேங்கட மலையடிவாரத்தில் ப்ரதிஷ்டை பண்ணச் செய்தார்.
மேலும் அனைத்து திவ்ய தேசங்களிலும் அத்யயன உத்ஸவம் சிறப்பாகக் கொண்டாடும்படி நியமித்தார்.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் எம்பெருமானாரின் நியமனத்துடன் திருவாய்மொழிக்கு ஒரு வ்யாக்யானம் எழுதி அவரிடம் சமர்ப்பிக்கிறார்.
எம்பெருமானார் மிகவும் உகந்து அனைவரும் ஸ்ரீ பாஷ்யத்துடன் இதையும் கற்கும்படி நியமிக்கிறார்.
எம்பெருமானார் ஸ்ரீரங்கத்தில் பலகாலம் ஸ்ரீவைஷ்ணவர்களின் பெருந்திரளில் வாழ்ந்தார்.
அவர்களுக்கு ஸாரார்த்தங்களை விளக்கிக் கொண்டும் பெரிய பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்து கொண்டும் வாழ்ந்தார்.

எம்பெருமானார் பரமபதத்துக்கு எழுந்தருளிய பிறகு, ஆழ்வானின் திருக்குமாரரும் பெரிய பெருமாள் மற்றும் பெரிய பிராட்டியின்
ஸ்வீகார புத்ரரான பட்டர், எம்பெருமானாரின் அபிமான புத்ரரான பிள்ளான், அருளாளப் பெருமாள் எம்பெருமானார், எம்பார்,
கந்தாடை ஆணடான், முதலியவர்கள் கூடி எம்பெருமானின் ஆணைக்கேற்ப எம்பெருமானாரின் அர்ச்சா விக்ரஹத்தை
அனைத்துலகின் வாழ்ச்சிக்காக ஏற்படுத்தி வைத்தனர். இது போல அனைத்து திவ்ய தேசங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டது.

நாதமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பின் ஏற்றத்தை அறிந்து 4000 திய்வ ப்ரபந்தத்தில் அதைச் சேர்த்தார்போல்
எம்பெருமானும் இராமானுச நூற்றந்தாதியை 4000 திவ்ய ப்ரபந்தத்தில் சேர்க்கும்படி ஆணையிடுகிறான்.
எப்படி ப்ராஹ்மணன் அநுதினமும் காயத்ரி ஜபம் செய்வது அவசியமோ அது போல ப்ரபந்நன் அநுதினமும் ப்ரபந்ந காயத்ரி
என்று போற்றப்படும் இராமானுச நூற்றந்தாதியை ஒரு முறையேனும் சொல்லுதல் அவசியம்.

இவ்வாறு பிற்பட்ட ஆசார்யர்கள் எம்பெருமானார் உரைத்த ஸாரார்த்தங்களை அனைத்துலகும் வாழ உபதேசித்துப் போந்தார்கள்.
இவ்வாறாக கலியன் அருள் பாடு என்னும் க்ரந்தம் முடிவடைகிறது.

பின்பு, பராசர பட்டர் திருநாராயணபுரத்துக்குச் சென்று வேதாந்தியிடம் வாதம் செய்து,
வாதத்தில் ஜெயித்து அவரை சிஷ்யராக ஏற்றுக் கொள்கிறார்.
வேதாந்தியும் பட்டரைத் தன் ஆசார்யனாக ஏற்றுக்கொண்டு சந்யாஸம் பெற்றுக் கொள்கிறார்.
பிற்காலத்தில் நஞ்ஜீயர் என்று ப்ரசித்தமாக அழைக்கப்படுகிறார்.
பட்டர் வேதாந்தியை வாதத்தில் வென்று அத்யயன உத்ஸவத்தின் முதல் நாள் ஸ்ரீரங்கத்தை அடைகிறார்.
பெரிய பெருமாள் பட்டரிடம் வாதத்தைப் பற்றி விசாரிக்க பட்டர் வேதாந்தியை திருமங்கை ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகம்
திவ்ய ப்ரபந்தத்தை வைத்து வென்றேன் என்கிறார்.
பெரிய பெருமாள் மிகவும் திருவுள்ளம் உகந்து பட்டரை மிகவும் பெருமைப்படுத்தவேண்டும் என்று நியமிக்கிறார்.
மேலும் ஸ்ரீரங்கத்தில் அத்யயன உத்ஸவம் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்க வேண்டும் என்று நியமிக்கிறார்.
இவ்வாறு நம் ஸத் ஸம்ப்ரதாயத்தின் அத்யயன உத்ஸவத்தைச் சுருக்கமாக அனுபவித்தோம்.

பொதுவாக, பல திவ்ய தேசங்களில் அத்யயன உத்ஸவம் 21 நாட்களாகக் கொண்டாடப் படுகிறது.
எம்பெருமான், நாச்சியார்கள், ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்கள் 21 நாட்களும் பெரிய ஓலக்கத்தில் (சபையில்) எழுந்தருளியிருப்பர்கள்.
எம்பெருமானும் நாச்சியார்களும் ஓலக்கத்தின் நடுவில் வீற்றிருப்பர்கள்.
ஆழ்வார்களும் ஆசார்யர்களும் எம்பெருமானுக்கு இரு புறமும் எதிரெதிராக வீற்றிருப்பர்கள்.
பல திவ்ய தேசங்களில், நம்மாழ்வார் ஆழ்வார் கோஷ்டிக்கு முதல்வராக இருப்பார்.
அவருடன் திருமங்கை ஆழ்வாரும் எம்பெருமானாரும் எழுந்தருளியிருப்பர்கள்
(ஸ்ரீவைஷ்ணவ ஸத் ஸம்ப்ரதாயத்திற்கு இவர்கள் செய்த பேருபகாரத்தை நினைவில் கொண்டு இவர்கள் முதலில் எழுந்தருளிருப்பர்).
மற்றைய ஆழ்வார் ஆசார்யர்கள் தொடர்ந்து எழுந்தருளிருப்பர்.

வானமாமலை திருக்குறுங்குடி போன்ற சில திவ்ய தேசங்களி நம்மாழ்வாருக்குத் தனியாக அர்ச்சா விக்ரஹம் இல்லாததால்
கலியனும் எம்பெருமானாரும் கொண்டாட்டங்களை முன்னின்று நடத்திப் போவர்கள்.

ஸ்ரீபெரும்பூதூரில் எம்பெருமானாருக்கு முக்கியத்துவம் உள்ளதாலும், ஆண்டாள் நாச்சியார் எம்பெருமானாரை
“நம் கோயில் அண்ணர்” என்று அழைத்துத் தன் அண்ணனாக ஏற்றுக் கொண்டதாலும்,
அவர் எம்பெருமானாருக்கு அடுத்து ஆழ்வார் கோஷ்டியில் முதன்மையாக எழுந்தருளுகிறார்.
வைகுண்ட ஏகாதசி தொடங்கி மாலை வேளையில் பரமபத வாசல் திறக்கப்படும்.
நம்மாழ்வார் பரமபத வாசலுக்கு வெளிப்புறம் நின்று, வாசல் திறக்கும்போது எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்து
பின்பு எம்பெருமானுடன் புறப்பாடு கண்டருள்வர்.
சில திவ்ய தேசங்களில், மற்றைய ஆழ்வார் ஆசார்யர்களும் பரமபத வாசல் சேவைக்கு எழுந்தருளுகின்றனர்.

பகல் பத்து மற்றும் திருமொழித் திருநாள் எனப்படும் முதல் 10 நாட்கள் முதலாயிரமும் பெரிய திருமொழியும் சேவிக்கப்படும்.
திருவீதிப் புறப்பாடு இருக்கும் திவ்ய தேசங்களில் புறப்பாட்டின்போது உபதேச ரத்தின மாலை சேவிக்கப்படும்.
வைகுண்ட ஏகாதசி அன்று தொடங்கி 10 நாட்கள் இரவில் திருவாய்மொழி சேவிக்கப்படும்.
இந்தப் பத்து நாட்கள் இராப்பத்து என்றும் திருவாய்மொழித் திருநாள் என்றும் போற்றப்படுகிறது.
இருபதாவது நாள் ஆழ்வார் திருவடித் தொழல் மற்றும் திருவாய்மொழி சாற்றுமுறையுடன் இனிதே முடியும்.
திருவடித் தொழலின் போது நம்மாழ்வார் அர்ச்சகர்கள் நம்மாழ்வாரைக் கைத்தலமாக எம்பெருமானிடம்
எழுந்தருளப் பண்ணிக் கொண்டு சென்று எம்பெருமானின் திருவடியில் ஆழ்வாரின் திருமுடி படும்படிச் சேர்த்து விடுவர்.
பின்பு ஆழ்வார் திருத்துழாயால் முழுவதும் மூடப்படுவர்.

21ஆம் நாள் மாலை – இயற்பா சேவிக்கப்படும்
இரவு – இராமானுச நூற்றந்தாதி கோஷ்டி மற்றும் இயல் சாற்றுடன் வீதி புறப்பாடு.

22ஆம் நாள் – திருப்பல்லாண்டு தொடக்கம். இன்று முதல் ஸந்நிதிகளில் 4000 திவ்ய ப்ரபந்தம் சேவித்தல் ஆரம்பம்.

ஓரொரு திவ்ய தேசங்களில் அத்யயன உத்ஸவதில் சில விசேஷ அம்ஸங்கள் காணப்படுகின்றன.
அவற்றில் சிலவற்றை இப்பொது காண்போம்.

ஸ்ரீரங்கம்
22 நாட்கள் கொண்டாட்டம் – பகல் பத்துக்கு முந்தைய நாள் திருநெடுந்தாண்டகம் சேவிக்கப்படும்.
தொடர்ந்து 21 நாட்கள் அத்யயன உத்ஸவம்.
பாசுரங்களை அரையர்களே அபிநயத்துடன் நாட்டிய நாடகம் போல நம்பெருமாள், நாச்சியார்கள் மற்றும்
ஆழ்வார் ஆசார்யர்களின் ஓலக்கத்தில் சேவிக்கின்றனர்.
அரையர் ஸேவையின் போது நம்பெருமாளும் நாச்சியார்களும் உயர்ந்த மண்டபத்தில் வீற்றிருக்க
ஆழ்வார் ஆசார்யர்கள் நம்பெருமாளை நோக்கிக் கொண்டு எழுந்தருளியிருப்பர்கள்.

—————-

ஆழ்வார் திருநகரி
அபிநயத்துடன் அரையர் சேவை. முதல் நாள் அரையர் சேவிப்பதை மறுநாள் அத்யாபகர்கள் கோஷ்டியாகச் சேவிப்பர்கள்.
பகல் பத்தில் 10ஆம் நாள் வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய தசமி அன்று
நம்மாழ்வாரும் எம்பெருமானாரும் சேர்ந்து அற்புதமான ஒரு சேவை –
நம்மாழ்வார் அழகிய மணவாளனாக சயன திருக்கோலத்திலும் எம்பெருமானார் ஸ்ரீ ரங்க நாச்சியாராக
ஆழ்வாருடைய திருவடித் தாமரைகளிலும் எழுந்தருளியிருப்பர்.

இராப்பத்து சாற்றுமுறை அன்று அனைத்து திவ்ய தேசங்களிலும் திருவடித் தொழல்
அதாவது நம்மாழ்வார் எம்பெருமானின் திருவடித் தாமரைகளில் சென்று சேர்தல்.
ஆனால் இங்கு மட்டும் திருமுடித் தொழல் அதாவது
அர்ச்சகர்கள் எம்பெருமானைக் கைத்தலமாக எழுந்தருளப் பண்ணிக்கொண்டு சென்று
ஆழ்வாரின் திருமுடியில் எம்பெருமானின் திருவடியைப் பதிப்பர்கள்.
கண்கொள்ளாக் காட்சியான இது நம் ஸம்ப்ரதாயத்திற்கு உயிரான பரகத ஸ்வீகாரத்தை நேரே தெளிவாக உணர்த்துகிறது.
பரகத ஸ்வீகாரமாவது எம்பெருமான் தான் விரும்பி ஜீவாத்மாவை தன்னுடன் சேர்த்துக் கொள்வது.

22 நாட்கள் கொண்டாட்டம் – கடைசி நாளான்று “வீடு படைத் திருமஞ்சனம்” நடக்கும்.
இந்த நாளன்று, பொலிந்து நின்ற பிரான் நம்மாழ்வாரை அனைத்துலகின் உஜ்ஜீவனத்திற்காக
லீலா விபூதியிலேயே இருக்குமாறு பணிக்கிறான்.

இதன் பின்பு வரும் முதல் திருவிசாகத்தன்று திருப்பல்லாண்டு தொடக்கம் செய்யப்படும்.

—————

திருத்துலைவில்லி மங்கலம்
நம்மாழ்வார் திருவாய்மொழியில் தேவபிரான் எம்பெருமானே தனக்குத் தன்தை மற்றும் தாய் என்று கூறுகிறார்.
அவருக்கு தேவபிரானிடம் மிகுன்த ஈடுபாடு.
முற்காலங்களில் ஆழ்வார் ஸ்ரீரங்கத்தில் இருந்து திரும்பும்போது துலைவில்லி மங்கலத்தை அடைந்து
மாசி விசாகத்தின் வரை இங்கே இருந்துவிட்டு பின்பு ஆழ்வார் திருநகரிக்குத் திரும்புவர் என்று சொல்லப்படுகிறது.

இதன் நினைவாக, இன்றளவும் நம்மாழ்வார் மாசி விசாகத்தன்று
(மாசி மாதம் 13 நாட்கள் ஆழ்வார் திருநகரியில் கொண்டடப்படும் உத்ஸவத்தின் இறுதியில்) இங்கே எழுந்தருளுகிறார்.
எம்பெருமானுடன் அன்று முழுதும் கூடி இருந்து திருமஞ்சனம், கோஷ்டி முதலியவை கண்டருளி மாலையில்
எம்பெருமானிடம் பிரியா விடை பெற்றுச் செல்கிறார்.

இதன் மறுநாள் இங்கே திருப்பல்லாண்டு தொடக்கம் (அது வரை இங்கு அநத்யயன காலமே).

————

திருவாலி/திருநகரி மற்றும் திருநாங்கூர் திவ்ய தேசங்கள்

பொதுவாக திருக்கார்த்திகை தீபமும் கலியன் திருநக்ஷத்ரமான கார்திகையில் கார்திகையும் சேர்ந்தே வரும்.
ஆனால் சில சமயங்களில் கார்த்திகை மாதத்தில் இரு முறை கார்த்திகை நக்ஷத்ரம் இருந்தால்
இரண்டாவது கார்த்திகையே திருமங்கை ஆழ்வார் திருநக்ஷத்ரமாகக் கொண்டாடப்படும்.
மற்றைய திவ்ய தேசங்களில் திருக்கார்த்திகை தீபத்தன்று அநத்யயன காலம் தொடங்கினாலும்,
இங்கே திருமங்கை ஆழ்வார் திருநக்ஷத்ரம் முடிந்த பிறகே தொடங்கப்படுகிறது.
ஆழ்வார் திருநக்ஷத்ரத்துக்கு 4000 திவ்ய ப்ரபந்தம் சேவித்து சிறப்பாகக் கொண்டாடவே இந்த ஏற்பாடு.

————-

திருமெய்யம்
மற்றைய திவ்ய தேசங்களில் நடக்கும் 21 நாட்கள் கொண்டாட்டத்துக்கு மேலாக,
பகல் பத்தின் கடைசி நாள் கலியன் திருவடித் தொழல் உத்ஸவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

———–

ஸ்ரீபெரும்பூதூர்
குரு புஷ்யம் தை மாதம் பூசம் அன்று முடியும்படி 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீபெரும்பூதூரில் எம்பெருமானார் அர்ச்சா திருமேனி ப்ரதிஷ்டை பண்ணப்பட்ட நாளே இது.
இது இங்கே முக்கியத்துவம் வாய்ந்தது.
அத்யயன உத்ஸவமும் குரு புஷ்யமும் சேர்ந்து வந்தால் அத்யயன உத்ஸவம் முன்னதாகக் கொண்டாடப்படும்.

————–

திருச்சேறை, திருமழிசை முதலிய திவ்ய தேசஙளிலும் ப்ரஹ்மோத்ஸவமோ ஆழ்வார் உத்ஸவமோ
அத்யயன உத்ஸவ சமயத்தில் வந்தால் அத்யயன உத்ஸவம் முன்னதாகக் கொண்டாடப்படும்.

————-

பொதுவாக கோயில்களில் இயற்பா சாற்றுமுறைக்கு மறுநாள் திருப்பல்லாண்டு சேவித்து
வழக்கமான திவ்ய ப்ரபந்த சேவாகாலம் தொடங்கப்படும்.
பல திவ்ய தேசங்களில் மேலும் பல விசேஷ அநுஷ்டானங்கள் காணப்படுகிறது.
க்ருஹங்களில் அநத்யயன காலத்தில் திவ்ய ப்ரபந்த சேவாகால க்ரமம் திவ்ய தேசத்துக்கேற்ப மாறுபடுகிறது.

———-

பல திவ்யதேசங்களில், க்ருஹங்களின் சேவாகாலம் கோயில் க்ரமத்தையே பின்பற்றுகிறது.
அதாவது கோயில்களில் அநத்யயன காலம் தொடங்கிய பின் க்ருஹங்களில் திவ்ய ப்ரபந்தம் சேவிக்கப்ப் படுவதில்லை.
கோயில்களில் என்று திருப்பல்லாண்டு தொடக்கம் ஆகிறதோ
அன்றிலிருந்து க்ருஹங்களிலும் மீண்டும் திவ்ய ப்ரபந்தம் சேவிக்கப் படுகிறது.

கூரத்தாழ்வான் திருநக்ஷத்ரமான தை ஹஸ்தத்துக்குப் பிறகே க்ருஹங்களில் திய்வ ப்ரபந்தம் சேவிக்கப் படவேண்டும்
என்று சிலர் கருதுகின்றனர். இதன் காரணம் – முற்காலங்களில் ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் ஸ்ரீரங்கத்தில் சென்று
நம்பெருமாள் மற்றும் ஆழ்வாருடன் இருந்து அத்யயன உத்ஸவத்தைச் சேவித்து வருவர்.
உத்ஸவம் முடிந்து அவர்கள் தங்கள் க்ருஹங்களுக்குத் திரும்ப பல நாட்கள் ஆகும்.
இதன் நினைவாக, க்ருஹங்களில் தை ஹஸ்தத்தன்று திவ்ய ப்ரபந்தம் சேவித்தல் தொடக்கம் என்ற ஏற்பாடு.
அவரவர் தங்கள் தங்கள் பெரியோர்களிடம் கேட்டறிந்து தங்கள் திவ்ய தேசம் மற்றும் குடும்ப வழக்கத்தை நடைமுறைப் படுத்துதல் சாலச் சிறந்தது.

——————–

அநத்யயன காலத்தில் என்ன கற்றுக் கொள்ள மற்றும் சேவிக்க?
சில உபயோகமான குறிப்புகள்:
பொதுவாக கோயில்களில் அநத்யயன காலத்தில், திருப்பாவைக்கு பதில் உபதேச ரத்தின மாலையும்
கோயில் திருவாய்மொழி மற்றும் இராமானுச நூற்றந்தாதிக்கு பதில் திருவாய்மொழி நூற்றந்தாதியும் சேவிக்கபடும்.
மார்கழி மாதத்தில், திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருப்பாவை சேவித்தல் தொடரும்.

கோயில்களில், அத்யயன உத்ஸவத்தின் போது, 4000 பாசுரங்களும் ஒரு முறை பூர்த்தியாகச் சேவிக்கப்படும்.
க்ருஹங்களில் அநத்யயன காலத்தில் திருவாராதனத்தின்போது, 4000 திவ்ய ப்ரபந்த பாசுரங்கள் சேவிப்பதில்லை
(மார்கழி மாதத்தில் கோயில்களில் போல திருப்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி சேவிக்கலாம்).

கோயில் ஆழ்வார் திருக்காப்பு நீக்கும்போது (திறக்கும் போது),
ஜிதந்தே ஸ்தோத்ரம் (முதல் 2 ச்லோகங்கள்), “கௌஸல்யா ஸுப்ரஜா ராம” ச்லோகம், “கூர்மாதீந்” ச்லோகம்
(இவை எல்லா காலங்களிலும் சேவிக்கப்படுகிறது) ஆகியவை சேவித்துக் கொண்டு திருக்காப்பு நீக்கவும்.
கதவைத் திறக்கும்போது ஆழ்வார்கள் பாசுரங்களை வாயால் சொல்லுவதில்லையே
ஆயினும் மனதால் நினைக்கலாம் த்யானிக்கலாம்.

திருமஞ்சன காலங்களில், பொதுவாக ஸூக்தங்களை சேவித்தபின் “வெண்ணெய் அளைந்த குணுங்கும்” பதிகமும்
சில பாசுரங்களும் சேவிப்பது வழக்கம். ஆனால் அநத்யயன காலத்தில் ஸூக்தங்களுடன் நிறுத்திக் கொள்ளவும்.

பொதுவாக மந்த்ர புஷ்பத்தின்போது, “சென்றால் குடையாம்” பாசுரம் சேவிக்கப்படும்.
அநத்யயன காலத்தில், “எம்பெருமானார் தரிசனம் என்றே” பாசுரம் சேவிக்கப்படும்.

பொதுவாக சாற்றுமுறையில், “சிற்றம் சிறுகாலே“, “வங்கக் கடல்” மற்றும் “பல்லாண்டு பல்லாண்டு” பாசுரங்கள் சேவிக்கப்படும்.
அநத்யயன காலத்தில், உபதேச ரத்தின மாலை மற்றும் திருவாய்மொழி நூற்றந்தாதி சாற்று பாசுரங்களைச் சேவிக்கவும்.
தொடர்ந்து “ஸர்வ தேச ஸதா காலே…” என்று தொடங்கி வாழி திருநாமங்கள் வரை சேவிக்கவும்.

பூர்வாசார்ய ஸ்தோத்ர க்ரந்தங்களையும் அவர்களின் தமிழ் ப்ரபந்தங்களான ஞான ஸாரம், ப்ரமேய ஸாரம், ஸப்த காதை,
உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி முதலியவைகளையும் கற்கவும் சேவிக்கவும் நல்ல சமயம்.
மேலும் பூர்வாசார்யர்களின் தனியன்கள் மற்றும் வாழி திருநாமங்களை கற்கவும் சேவிக்கவும் நல்ல சமயம்.
ரஹஸ்ய க்ரந்தங்களை கற்றுத் தேறவும் இது நல்ல சமயம்.

அநத்யயன காலத்தில் அருளிச் செயல் அந்வயம் இல்லாவிடினும் ஆனந்தப்படக்கூடிய (பகவத்) விஷயங்கள் பல உள்ளன.
சிலவற்றை இங்கே காண்போம்:
அனைவராலும் எதிர்பார்க்கப்படும் அதி அற்புதமான அத்யயன உத்ஸவம் –
இதுவே ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் தலையான உத்ஸவம் – இருபதுக்கும் மேற்பட்ட அற்புதமான பகவத் அனுபவம் நிறைந்த நாட்கள்
அனைவராலும் எதிர்பார்க்கப்படும் அழகான மார்கழி மாதம் மற்றும் ஆண்டாள் நாச்சியாரின் அருளால் கிடைக்கும் திருப்பாவை அனுபவம்
சாஸ்த்ரத்தின் ஸாரார்த்தங்களை மிக எளிமையாக வெளியிடும் பூர்வாசார்யர்களின் ஸம்ஸ்க்ருத மற்றும் தமிழ் ஸ்ரீ ஸூக்திகளை கற்றுத் தேற ஒரு அரிய வாய்ப்பு.

நம்மாழ்வாரின் பெருமைகளும் திருவாய்மொழியின் பெருமைகளும் உச்சத்தை எட்டியது மணவாள மாமுனிகளின் அவதரித்த பின்னே.
திவ்ய ப்ரபந்தங்களில் உள்ள ஸாரமான அர்த்தங்களைப் பிறர்க்கு எடுத்து உரைத்து அனைவரையும் உஜ்ஜீவிப்பதிலேயே
தன்னுடைய பொழுதைப் போக்கினார் மாமுனிகள்.
அது மட்டுமல்லாமல் ஆழ்வார் ஆசார்யர்களின் உயர்ந்த ஸ்ரீ ஸூக்திகளின் படி நடந்து ஒரு ஸ்ரீவைஷ்ணவன் எப்படி
இருக்க வேண்டும் என்று வாழ்ந்தும் காட்டியுள்ளார்.
இதனாலேயே நம்பெருமாள் தானே மாமுனிகளின் உயர்ந்த நிலையை அங்கீகரித்து,
திருவாய்மொழிக்கு உண்டான நம்பிள்ளை ஈடு மற்றும் இதர வ்யாக்யானங்களையும் கொண்டு
பகவத் விஷய காலக்ஷேபம் தன்னுடைய ஸந்நிதியின் முன்னே ஒரு வருட காலம் செய்யும்படி மாமுனிகளை நியமித்தார்.
காலக்ஷேப சாற்றுமுறை தினமான சிறந்த ஆனித் திருமூலத்தன்று, ஸ்ரீ ரங்கநாதன் ஒரு பாலகனாகத் தோன்றி
மிக ஆச்சர்யமான “ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்” தனியனைச் சமர்ப்பித்து மாமுனிகளைத் தன் ஆசார்யனாக ஏற்றுக் கொண்டான்.

————–

நாச்சியார் கோயில் அத்யயன உத்சவம் -தை மாதம் –
மஞ்சள் குளி உத்சவத்துக்கு பின்பே நடக்கும்
திரு மங்கை ஆழ்வார் தானே தனது ஆச்சார்யருக்கு நடத்துகிறார்
திருவரங்கம் -ஆரம்பித்து வைத்ததுடன் இங்கேயே வருஷம் தோறும் இவரே வந்து நடத்துகிறார்

மஞ்சள் குளியல் -பாசுரம் திருநறையூர்
புலை யார்ந்த –திருநறையூர் — நிலை யார நின்றவன் தன நீள் கழலை அடைமின்களே
திருவாலி திருநகர் வரை நீண்ட திருவடிகள்

110 பாசுரங்கள் ஒரே ஆழ்வார் ஒரு திவ்ய தேசத்துக்கு அதிகம்
பெருக்காறு போல்
திருவிண்ணகர் பதிகத்திலும் பொதிந்து காட்டும்

நாச்சியார் கோயில் கட்டிய கோச்செங்கணான் சோழன் -அவனுக்கும் பத்து பாசுரம்
மதிள் கட்ட வேண்டாம் மடல் பாடும் எனக்கு என்று பாட்டுப்பிச்சன் கேட்டும் மறுத்து திரு நறையூருக்கு
யானை வராமல் மணிமாடக்கோயில்

திருக்கண்ணபுரம் -104 பாசுரம் –
அந்த திவ்ய தேசப்பாசுரங்களிலும் நாச்சியார் கோயில் பாசுரம் உண்டே

6-8- நான் சென்று நறையூரில் கண்டேனே -எல்லாப்பெருமாள்களையும் ஆச்சார்யர் இடமே காணலாமே
எல்லாம் வகுத்த இடம் தானே
பரிபூர்ணனைக் காட்டி அருளி -பாட்டினாலே காட்டி அருளி

கறவா மட நாகு -கன்று -போல் இவருக்கும் நறையூர் நம்பிக்கும் ஈடுபாடு
அத்தா -பித்தா என்று பேசுகிறார் –பித்தா உன்னை நான் எங்கனம் விடுகேன
எம்மானும் –ஒழிந்த பின்பு –அம்மானும் நம்பி -அடியேனுக்கு -தாய் தந்தை ஆச்சார்யர் இவனே
தனக்கு செய்த உபகாரத்தை தானே பாடிக் காட்டுகிறார்

பெரிய திருமடலில் தாயார் வடிவு அழகு வர்ணனை
மன்னு திருநறையூர் – வஞ்சிக்கொடி போன்று –அன்னம் போல் நடை -மான் பார்வை -மயில் சாகை –
மின்னல் இடை –சந்தேகம் -வடமொழி இடைக்கு –
கெண்டை திருக்கண்கள் திரு உருவம் –

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ ,வே ,S , P, புருஷோத்தமன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ அர்ச்சாவதாரத்தில்-இருந்தும், கிடந்தும்,நின்றும்—–

April 10, 2021

1-பரமபதத்தில் இருந்தான்—அமர்ந்தான் (அமர்ந்த –உட்கார்ந்த திருக்கோலம் )
2-திருப்பாற்கடலில் கிடந்தான்-கூப்பாடு கேட்கும் இடம்.

3-ஸாளக்ராமத்தில் —–வந்து நின்றான்—–
ஸ்ரீ மூர்த்திப் பெருமானாக -முக்திநாராயணனாக நின்றான்
வடக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் ஸ்ரீ தேவியுடன் நின்றான்.
கண்டகி நதி எனப்படும் ”சக்ர ”தீர்த்தக்கரையில்-கனக விமானத்தின் அடியில் நின்றான்

4-திருவதரியில் வந்து அமர்ந்தான்
திருவஷ்டாக்ஷர அவதார க்ஷேத்ரமாகையால், இங்கு அமர்ந்தான்.
பத்ரிநாராயணனாக இருந்தான்-கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் இருந்தான்.
அரவிந்தவல்லித் தாயாருடன் இருந்தான்-தப்த குண்டத்தில் அருகில் இருந்தான்
தப்தகாஞ்சன விமானத்தின் அடியில் இருந்தான்-”நரனு”க்குப் ப்ரத்யக்ஷமாகி இருந்தான்.

5.திருப்பிரிதியில் ( ஜோஷிமட் –நந்த ப்ரயாக் ) கிடந்தான்.
ஜோஷிமட்டில் கிடந்தான்-புஜங்க ஸயனமாகக் கிடந்தான்
கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் கிடந்தான்.-பரமபுருஷனாகக் கிடந்தான்
பரிமளவல்லி நாச்சியார் அருகே இருக்கக் கிடந்தான்.
இந்த்ர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானஸ ஸரஸ் அருகே கிடந்தான்.
கோவர்த்தன விமானம் அடியில் கிடந்தான்
இங்கு ஸ்ரீ ந்ருஸிம்ஹனும் ,வாஸுதேவரும்தான் எழுந்தருளி இருக்கிறார்கள்;

6.தேவப் பிரயாகையில் வந்து நின்றான்
திருக்கண்டமென்னும் கடிநகரில் வந்து நின்றான்
நீலமேகப் பெருமானாக நின்றான்
கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் நின்றான்
புண்டரீக வல்லித் தாயாருடன் நின்றான்
அளகானந்தா –பாகீரதி சங்கமம் ஆகி கங்கை எனப் போற்றப்படும் நதிக்கரையில் நின்றான்
மங்கள விமானத்தின் அடியில் நின்றான்
ப்ரஹ்மாவுக்கும், பரத்வாஜருக்கும் ப்ரத்யக்ஷமாகி நின்றான்
பெரியாழ்வார் பாட, குதூகலித்து நின்றான்

7.த்வாரகையில் நின்றான்
கல்யாண நாராயணனாக நின்றான்
த்வாரகாதீசனாக நின்றான்
மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நின்றான்
ஸ்ரீ லக்ஷ்மி , ருக்மிணீ ,அஷ்ட மஹிஷிகள் சூழ நின்றான்
கோமதி நதி, சமுத்ரத்தில் சங்கமிக்கும் இடத்தில் நின்றான்
ஹேமகூட விமானத்தின் அடியில் நின்றான்
திரௌபதிக்குப் ப்ரத்யக்ஷமாகி நின்றான்
நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார், ஸ்ரீ ஆண்டாள், திருமங்கை ஆழ்வார்
மங்களாசாஸனம் செய்ய , ராஜாவைப்போல நின்றான்

8.வடமதுரையில் நின்றான்
ப்ருந்தாவனம் கோவர்த்தனம் சேர்ந்த மதுராவில் நின்றான்
பாலக்ருஷ்ணனாக நின்றான்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நின்றான்
ஸத்யபாமாவுடன் நின்றான்
யமுனா நதிக்கரையில் நின்றான்
கோவர்த்தன விமானத்தின் அடியில் நின்றான்
ப்ரஹ்மாவுக்கும் ,இந்த்ராதி தேவர்களுக்கும், தேவகி வஸுதேவருக்கும் ப்ரத்யக்ஷமாகி நின்றான்
நம்மாழ்வாரும், பெரியாழ்வாரும் தொண்டரடிப் போடி ஆழ்வாரும் ஸ்ரீ ஆண்டாளும் திருமங்கை ஆழ்வாரும் பாடப்பட,
தன்னுடைய அவதார பூமி என்கிற பெருமிதத்துடன் நின்றான்

9.திருவாய்ப்படிக்கு வந்து நின்றான்
திருவாய்ப்பாடியாகிய கோகுலத்தில் நின்றான்
நவ மோஹன க்ருஷ்ணனாக நின்றான்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நின்றான்
ருக்மிணி, ஸத்யபாமாவுடன் நின்றான்
யமுனா நதி தீரத்தில் நின்றான்
ஹேமகூட விமானத்தின் அடியில் நின்றான்
நந்தகோபருக்குப் ப்ரத்யக்ஷமாகி நின்றான்
பெரியாழ்வாரும் ஸ்ரீ ஆண்டாளும், திருமங்கை ஆழ்வாரும் பாடல்களால் துதிக்க நின்றான்

10.திருவயோத்திக்கு வந்து இருந்தான் ( அமர்ந்தான் )
ஸ்ரீ ராமனாக இருந்தான்
ஸ்ரீ ரகுநாயகனாக இருந்தான்
ஸீதா தேவியுடன் இருந்தான்
வடக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் இருந்தான்
ஸரயூ நதிக்கரையில் இருந்தான்
புஷ்கல (புஷ்பக) விமானத்தின் அடியில் இருந்தான்
ராமனாக அவதரித்த பூமி இது என்கிற பூரிப்புடன் இருந்தான்
தேவர்களுக்கும் ,முனிவர்களுக்கும் பரதனுக்கும் ப்ரத்யக்ஷமாகி இருந்தான்
நம்மாழ்வாரும் பெரியாழ்வாரும் , குலசேகர ஆழ்வாரும் ,தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும்
மங்களாசாஸனம் செய்ய மந்தஹாஸத்துடன் இருந்தான்

11. நைமிசாரண்யத்தில் நின்றான்
ஸ்ரீ ஹரி என்கிற தேவராஜன் என்கிற திருநாமம் ஏற்று நின்றான்
ஸ்ரீ ஹரிலக்ஷ்மியுடன் நின்றான்
கோமுகி , சக்ர தீர்த்தம், அருகில் நின்றான்
ஆரண்யமாகி நின்றான்
இந்த்ரன் ,சந்த்ரன், வேதவ்யாஸர் ,ஸூத புராணிகர்களுக்கு ப்ரத்யக்ஷமாகி நின்றான்
திருமங்கை ஆழ்வார் பத்துப் பாசுரங்களால் பாட, திருப்தியுடன் நின்றான்

12. அஹோபில ந்ருஸிம்ஹர்களாக வந்து அமர்ந்தான் –வந்து இருந்தான்
சிங்கவேள் குன்றத்தில், சீரிய சிங்கமாக அமர்ந்தான்–இருந்தான்
ஜ்வாலா ஹோபில மாலோல க்ரோடா காரஞ்ச பார்க்கவ : |
யோகானந்த : சத்ரவட : பாவநோ நவமூர்த்தய :-என்பதாக நவ நரசிம்மர்களாக இருந்தான்
ப்ரஹ்லாத வரதனாக இருந்தான்
ஸ்ரீ லக்ஷ்மி , அம்ருதவல்லி ,செஞ்சுலக்ஷ்மி ஸமேதராய் இருந்தான்
பவநாசினி போன்ற தீர்த்தக்கரைகளில் இருந்தான்
ப்ரஹ்லாதனுக்கும் ,கருடனுக்கும் ப்ரத்யக்ஷமாகி இருந்தான்
திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள் பாடிக் கொண்டாட இருந்தான்

13.திருவேங்கட மாமலையில் நின்றான்
மலை குனிய நின்றான்
தேவாதி தேவர்களை—ஸேவிக்க வாருங்கள் என்று கூறி ,மேலேயிருந்து கீழே வரச் செய்து நின்றான்
பூலோகத்து மானிடரை, ஸேவிக்க வாருங்கள் என்று கூறி , கீழேயிருந்து மேலே வரச் செய்து நின்றான்
திருவேங்கடமுடையானாகி நின்றான்
ஸ்ரீநிவாஸனாக நின்றான்
மலையப்ப ஸ்வாமியாக நின்றான்
ஸப்தகிரி வாஸியாக நின்றான்
கிழக்கே திருமுக மண்டலத்துடன் நின்றான்
பத்மாவதி நாயகனாய் நின்றான்
பதினான்கு தீர்த்தப் ப்ரியனாக நின்றான்
நித்ய கல்யாணப் பெருமாளாக நின்றான்
ஆனந்த நிலையத்தின் அடியில் நின்றான்
நித்யோத்ஸவ ,பக்ஷோத்ஸ்த்வ , மாஸோத்ஸவ , ஸம்வரோத்ஸவ ஸ்ரீநிவாஸனாய் நின்றான்
தொண்டைமான் அரசருக்குத் ப்ரத்யக்ஷமாய் நின்றான்
நம்மாழ்வாரும், பொய்கை பூதம் பேயாழ்வாரும் , பெரியாழ்வாரும் ஸ்ரீ ஆண்டாளும்
குலசேகர ஆழ்வாரும், திருமழிசையும் திருப்பாணாழ்வாரும் ,திருமங்கை ஆழ்வாரும்
பலப்பலப் பாசுரங்களால் ,பக்திச் சுவை சொட்டப் பாடியதைக் கேட்டு, பரம ஆனந்தத்துடன் நின்றான்

————–

பகவான் வடநாட்டிலிருந்து, தொண்டை நாடு வந்தான் ;தொண்டை நாடு, சான்றோருடைத்து—
இருந்தும், நின்றும் அலுத்தவன்,

14. திருவள்ளூரில் கிடந்தான்
திருஎவ்வுள் என்கிற வீக்ஷாரண்ய க்ஷேத்ரத்திலே புஜங்க சயனத்தில் கிடந்தான்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் கிடந்தான்
ஸ்ரீ கனகவல்லி ஸமேதனாய்க் கிடந்தான்
ஹ்ருத்தாபநாசினி புஷ்கரணிக் கரையில் கிடந்தான்
விஜயகோடி விமானத்தின் அடியில் கிடந்தான்
ப்ரஹ்மாவுக்கும், ருத்ரனுக்கும், சாலிஹோத்ர ரிஷிக்கும் ப்ரத்யக்ஷமாகிக் கிடந்தான்
திருமழிசை ஆழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாஸனம் செய்யக் கிடந்தான்

15.திருநின்றவூரில் ,பக்தவத்ஸலனாகக் கிழக்கு நோக்கி நின்றும்,
16.திருவல்லிக்கேணியில் ,வேங்கடக்ருஷ்ணனாக —-பார்த்தஸாரதியாக கிழக்கு நோக்கி நின்றும்,
17.திருவிடவெந்தையில் ,லக்ஷ்மி வராஹனாகக் கிழக்கு நோக்கி நின்றும்,
18.திருக்கடல்மல்லையில், ஸ்தலசயனப் பெருமாளாகக் கிழக்கு நோக்கிக் கிடந்தும்,
19.திருக்கடிகையில் யோகந்ருஸிம்ஹனாகக் கிழக்கு நோக்கி அமர்ந்தும் –இருந்தும்
20.திருநீர்மலையில், நீர்வண்ணனாகக் கிழக்கு நோக்கி நின்றும்,
21.திருப்புட்குழியில் விஜயராகவனாகக் கிழக்கு நோக்கி அமர்ந்து இருந்தும்
22.திருப்பரமேச்வர விண்ணகரத்தில் பரமபதநாதனாக, மேற்கு நோக்கி அமர்ந்து இருந்தும்
23.திருப்பவளவண்ணத்தில், பவளவண்ணனாக, மேற்கு நோக்கி நின்றும்,
24.திருக்கள்வனூரில் ஆதிவராஹனாக மேற்கு நோக்கி நின்றும்,
25.திருக்காரகத்தில், கருணாகரனாக, தெற்கு நோக்கி நின்றும்,
26.திருப்பாடகத்தில் ,பாண்டவதூதனாகக் கிழக்கு நோக்கி அமர்ந்து–இருந்தும்
27.திருவேளுக்கையில், அழகிய சிங்கனாகக் கிழக்கு நோக்கி நின்றும்
28.அட்டபுயகரத்தில்ஆதிகேசவனாக, கஜேந்த்ரவரதனாக– எட்டுத் திருக்கரங்களுடன் மேற்கு நோக்கி நின்றும் .
29.திருக்கார்வானத்தில்,நவநீதசோரனாக மேற்கு நோக்கி நின்றும்.
30.திருவெஃகாவில் யதோத்தகாரியாக மேற்கு நோக்கிக் கிடந்தும்,
31. திருநிலாத்திங்கள் துண்டத்தில் சந்த்ரசூடனாக மேற்கு நோக்கி நின்றும்,
32திருஊரகத்தில் த்ரிவிக்ரமனாக மேற்கு நோக்கி நின்றும் .
33. திருநீரகத்தில், ஜெகதீசனாக,கிழக்கு நோக்கி நின்றும்,
34.திருத்தண்காவில் ,தீப ப்ரகாசனாக மேற்கு நோக்கி நின்றும்

இவ்வாறாக, தொண்டை நாட்டுத் திவ்ய தேசங்களில், பல ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்ய,
ப்ரார்த்தித்தவர்களுக்குப் ப்ரத்யக்ஷமாகி , அருளி,
14 திவ்ய தேசங்களில் நின்றும், 2 திவ்ய தேசங்களில் கிடந்தும், 3 திவ்யதேசங்களில் அமர்ந்து இருந்தான்

35. திருக்கச்சியில் வரதனாக நின்றான்
பேரருளாளனாக நின்றான்
தேவாதிராஜனாக நின்றான்
அத்தியூரானாக நின்றான்
புள்ளூர்ந்து நின்றான்
மேற்கே திருமுக மண்டலத்துடன் நின்றான்
பெருந்தேவித் தாயாருடன் நின்றான்
அநந்த ஸரஸ் அருகில் நின்றான்
புண்யகோடி விமானத்தின் அடியில் நின்றான்
சாலைக்கிணறு தீர்த்தத்தை விரும்பி நின்றான்
ப்ருஹ்மா ,ஆதிசேஷன், நாரதர், கஜேந்த்ரன் ,ப்ருகு —இவர்களுக்குப் ப்ரத்யக்ஷமாகி நின்றான்
பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார் மங்களாசாஸனம் செய்ய, அத்திகிரியில் நின்றான்
ஸ்ரீ உடையவருக்கு அருளிப் பேரருளாளனாக நின்றான்
திருக்கச்சி நம்பிகளுக்கு ஆறு வார்த்தைகள் அருளி நின்றான்
ஸ்வாமி தேசிகன் , துதித்துக் கொண்டாடப் , புன்முவலுடன் நின்றான்

————

தொண்டை நாட்டிலிருந்து ,நடுநாடு வந்தான்

36.திருக்கோவிலூரில் உலகளந்து நின்றான்

வலது திருவடி ,வானத்தை அளக்க,நின்றான்
வலது திருக்கரத்தில் சங்கமும், இடது திருக்கரத்தில் ஆழியுமாக நின்றான்
முதல் மூன்று ஆழ்வார்களின் சங்கத்தில் ,இடைகழிக்குச் சென்று நெருக்கி நின்றான்
திருவிக்ரமனாகி நின்றான்
கோபாலனாகி நின்றான்
தேஹளீசனாக நின்றான்
புஷ்பவல்லித் தாயாருடன் நின்றான்
பெண்ணை நதிக்கரையில் நின்றான்
ஸ்ரீகர விமானத்தின் அடியில் நின்றான்
முதல் மூன்று ஆழ்வார்களுக்குப் ப்ரத்யக்ஷ்மாகி நின்றான்
முதல் மூன்று ஆழ்வார்களும், திருமங்கை ஆழ்வாரும் பன்னிப்பன்னிப் பாசுரமிடப் பரசவசத்துடன் நின்றான்
நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை ,இங்கிருந்து பெருகச் செய்யத் திருவுள்ளம் கொண்டு நின்றான்
உடையவர் ஸ்தாபித்த 74 ஸிம்ஹாசனாதிபதிகளில் ,திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் ,வழிவழியாகக் கொண்டாட நின்றான்
ஸ்வாமி தேசிகன் ,சதகமிட்டுத் தோத்தரிக்க, சந்தோஷமாய் நின்றான்

37.திருவயிந்திரபுரத்தில் நின்றான்

மூவராகி நின்றான்
மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்து நின்றான்
வினை தீர்த்த மன்னவனாக நின்றான்
ஏழிசைநாதப் பெருமாளாக நின்றான்
மேவுசோதியாக நின்றான்
தேவநாதனாக நின்றான்
அடியவர்க்கு மெய்யனாக நின்றான்
ஹேமாப்ஜவல்லித் தாயாருடன் நின்றான்
கருடநதிக்கரையில் நின்றான்
ஒளஷதகிரி அருகே நின்றான்
ஸுத்வ ஸத்வ விமானத்தின் அடியில் நின்றான்
இந்திரன், ருத்ரன், ஆதிசேஷன், கருடன்,சந்த்ரன் ,ப்ருகு ,மார்க்கண்டேயருக்குப் ப்ரத்யக்ஷமாகி நின்றான்
திருமங்கை ஆழ்வார் ,பாசுரமிடக் கேட்டுப் பூரித்து நின்றான்
ஸ்வாமி தேசிகனை,ராமானுஜ தயாபாத்ரமாக்கி நின்றான்
ஸ்வாமி தேசிகனை ஞான வைராக்ய பூஷணமாக்கி நின்றான்
ஸ்வாமி தேசிகனை, கிளியைப் பழக்குவிக்குமாப்போலே
பழக்குவித்து நின்றான்
ஸ்வாமி தேசிகனை,சதகம், பஞ்சாசத் , கோவை, மாலை என்று பலபடியாகத் தன்னைப் பாடச் செய்து நின்றான்
ஸ்வாமி தேசிகனை மஹாசார்யனாக உலகுக்குக் கொடுத்து நின்றான்

—————-

சோழநாட்டுக்கு வந்தான்

38. திருச்சித்ரகூடத்தில் , கிடந்தான்; இருந்தான் (சத்யாக்ரஹம் செய்வதைப்போல)
மூலவர், கோவிந்தராஜனாக ,போக சயனத்தில் கிடந்தான்
உத்ஸவர் தேவாதிதேவனாக, பார்த்தசாரதியாக அமர்ந்தான்–இருந்தான்
புண்டரீகவல்லித் தாயாருடன் இருந்தான்
ஸாத்விக விமானத்தின் அடியில் கிடந்தான், இருந்தான்
குலசேகர ஆழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்ய இருந்தான்

39.திருக்காழிச் சீராம விண்ணகரம் சீர்காழியில், இடது திருவடி உலகளக்கும் தாடாளனாக வந்து நின்றும் ,
40.திருத் தலைச் சங்க நாண்மதியமான தலைச் சங்காட்டில் வெண்சுடர்ப் பெருமாளாக நின்றும்,
41.சிறுபுலியூரில் க்ருபாஸமுத்ரனாகப் புஜங்கசயனமாகக் கிடந்தும்
42.திருவாலி, திருநகரியில், வயலாளி மணவாளனாக லட்சுமி ந்ருஸிம்ஹனாக இருந்தும்,
திருநாங்கூர் 11 திருப்பதிகளில்,
முதலில்,
43.திருமணிமாடக்கோயிலில் நந்தாவிளக்கு என்றும், நாராயணன் திருநாமத்துடன் இருந்தும்
44.அரிமேயவிண்ணகரத்தில் குடமாடு கூத்தனாக இருந்தும்,
45.திருவண் புருஷோத்தமத்தில் புருஷோத்தமனாக நின்றும்,
46.திருச் செம்பொன்செய்கோயிலில் பேரருளாளன், செம்பொன்னரங்கர் என்று நின்றும்
47.திருவைகுந்த விண்ணகரத்தில் வைகுந்த நாதனாக இருந்தும்,
48.திருத்தெற்றியம்பலத்தில் ரங்கநாதன், லக்ஷ்மீரங்கர் என்கிற திருநாமங்களுடன் கிடந்தும்
49.திருமணிக்கூடத்தில், வரதராஜனாக நின்றும்
50.திருக்காவளம்பாடியில் கோபாலக்ருஷ்ணனாக நின்றும்,
51.திருத்தேவனார்தொகை என்கிற கீழச்சாலையில் தெய்வநாயகனாக நின்றும்
52.திருவெள்ளக்குளம் என்கிற அண்ணன் கோயிலில் ஸ்ரீநிவாசன் என்கிற அண்ணன் பெருமாளாக நின்றும்
53.திருப்பார்த்தன் பள்ளியில், பார்த்தசாரதியாக நின்றும்

ஒவ்வொரு வருடமும்,தைமாத அமாவாசைக்கு மறுநாள்,
திருநாங்கூர் 11 திவ்யதேசங்களில் முதன்மையான மணிமாடக்கோயிலில்,
இந்தத் திவ்ய தேச எம்பெருமான்கள் , யாவரும் எழுந்தருளி திருமஞ்சனம் ஆகி,
திருமங்கை மன்னனால் மங்களாஸாசனம் செய்யப்பெற்று, அன்று ராத்ரி, இந்த 11 அர்ச்சாமூர்த்தி
எம்பெருமான்களும் தனித் தனி கருட வாகனத்தில் ஆரோகணித்து சேவை சாதிக்க
திருமங்கை மன்னனும், குமுதவல்லி நாச்சியாரும் அன்று ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளி
ஸ்ரீ மணவாள மாமுனிகள் தோளுக்கு இனியானில் எழுந்தருளி சேவை சாதிக்க

54.திருஇந்தளூருக்கு வந்து வீரசயனமாகிப் பரிமள ரங்கநாதனாகக் கிடந்தும் ,
55.திருவழுந்தூர் என்கிற தேரழுந்தூரில் எல்லை இல்லா அழகுடன் பசுங்கன்று அருகிருக்க,ஆமருவியப்பனாக நின்றும்
56.திருநாகையில் (நாகப்பட்டிணம் ),நீலமேகனாகவும் ,ஸௌந்தரராஜனாகவும் நின்றும்
57.திருக்கண்ணபுரத்தில் சௌரிராஜனாக நின்றும்,
58.திருக்கண்ணங்குடியில் தாமோதரநாராயணனாக நின்றும்,
59.திருக்கண்ணமங்கையில் பக்தவத்ஸலனாக நின்றும்,
60.திருச்சேறையில் ஸாரநாதனாக நின்றும் ,
61.திருநறையூர் என்கிற நாச்சியார் கோயிலில் திருநறையூர் நம்பி ஸ்ரீநிவாஸனாக விவாஹ திருக்கோலத்தில் நின்றும்
62.திருவிண்ணகர் என்கிற உப்பிலியப்பன் கோயிலில், ஸ்ரீநிவாஸனாக நின்றும்,

63.திருக்குடந்தை என்கிற கும்பகோணத்தில்,
காவிரியும் அரசலாறும் இருபுறமும் சாமரங்கள் வீசுவதைப் போல் உபசரிக்க, சாரங்கபாணியாக , உத்தான சயனத்தில் கிடந்தான்.
ஆராவமுதனாக ,அழகுத திருமேனியுடன் நின்றான்
கோமளவல்லித் தாயாருடன் நின்றான்
பொற்றாமரைப் புஷ்கரணி அருகே நின்றான்
வேத, வைதீக விமானத்தின் அடியில் கிடந்தான்;நின்றான்
திருமழிசை ஆழ்வாருக்காக , கிடந்தவாறு எழுந்தான்
ஸ்ரீமந் நாதமுனிகள், திவ்ய ப்ரபந்தப் பாசுரங்களைத் தொகுக்கக் காரணமானான் ;
”ஆராவமுதாழ்வான் ” ஆனான்
பூமியில் எங்கும் காண இயலாத ”சித்திரைத்தேரில் ” பவனி வர நின்றான்
நம்மாழ்வாரும், பூதத்தாழ்வாரும், பேயாழ்வாரும் பெரியாழ்வாரும், திருமழிசை ஆழ்வாரும் ஸ்ரீ ஆண்டாளும் திருமங்கை ஆழ்வாரும்
51 பாசுரங்களால் பாட ,திருச் செவி சாத்தினான்
இவ்வளவு அருமையும் பெருமையும் வாய்ந்த ஆராவமுதனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணப்போமோ —

64. பகவான் திருநந்திபுர விண்ணகரம் என்கிற நாதன் கோயிலில்,ஜெகந்நாதனாக இருந்தும் ,
65. திருக்கூடலூரில் ஜகத் ரக்ஷகனாக நின்றும் ,
66. திருக்கவித்தலத்தில் (கபிஸ்தலம்) கஜேந்த்ர வரதனாகக் கிடந்தும் (புஜங்க சயனம் ),
67.திருவெள்ளியங்குடியில் கோலவில்லி ராமனாக புஜங்க சயனமாகக் கிடந்தும்
68.திரு ஆதனூரில் ஆண்டளக்கும் அய்யனாகக் கிடந்தும் ( இங்கும் புஜங்க சயனம் ),
69.திருப் புள்ளம்பூதங்குடியில், வல்வில் ராமனாகக் கிடந்தும் (இங்கும் புஜங்க சயனம் ),
70.திருக்கண்டியூரில் ஹர சாப விமோசனப் பெருமாளாக நின்றும்
71.தஞ்சை மா மணிக் கோயிலில் நீலமேகப் பெருமானாக,மணிக் குன்றப் பெருமாளாக,ந்ருஸிம்ஹனாக இருந்தும்
72.திருப்பேர் நகரில் அப்பக்குடத்தானாக–புஜங்க சயனமாகக் கிடந்தும்,
73.திரு அன்பிலில் , வடிவழகிய நம்பியாகப் புஜங்க சயனமாகக் கிடந்தும் அருள் புரிய

திருமெய்யத்தில் வந்து நின்றான்
74.திருமெய்யம்

குடைவரைக்கோயிலில் கிடந்தான்
ஆதிசேஷன் ,அரக்கர்களை அண்டவிடாது இருக்கக் கிடந்தான்
ஸத்யமூர்த்தியாக நின்றான்
மெய்யப்பனாக நின்றான்
உய்யவந்த நாச்சியாருடன் நின்றான்
சத்ய தீர்த்தம் அருகில் நின்றான்
சத்யகிரி விமானம் அடியில் நின்றான்
திருமங்கை ஆழ்வார் மங்களாசாஸனம் செய்ய நின்றான்
நாம் உய்ய வந்தவன் என்று இந்த மெய்யப்பனை நினைத்தாரில்லை

75.திருமோகூரில் காளமேகப் பெருமாளாக நின்றும்
76.திருமாலிருஞ்சோலையில்,சொக்கத் தங்கமாக, கள்ளழகராக சுந்தர்ராஜப் பெருமானாக நின்றும்
77.திருக்கூடல் என்கிற மதுரையில், கூடலழகராக இருந்தும்,
78.திருத் தண்காலில் நின்ற நாராயணனாக நின்றும்,
79.ஸ்ரீ வில்லிபுத்தூரில் வடபத்ர சாயீயாகக் கிடந்தும் ,
80.திருக்கோட்டியூரில் உரகமெல்லணை கிடந்தும், ஸௌம்ய நாராயணனாக நின்றும்,
81.திருப்புல்லாணியில் தர்ப்ப சயன ராமனாகக் கிடந்தும், ஆதி ஜெகந்நாதனாக நின்றும்,
82.திருப்புளிங்குடியில் காய்சின வேந்தனாகக் கிடந்தும்,
83.திருத்தொலைவில்லி மங்கலம் என்கிற இரட்டைத் திருப்பதியில்,ஸ்ரீநிவாஸனாக நின்றும், அரவிந்தலோசனனாக இருந்தும்
84.திருச்சிரீவரமங்கலம் என்கிற வானமாமலையில் தோதாத்ரிநாதனாக இருந்தும்,
85.திருக்கோளூரில் வைத்தமாநிதியாகக் கிடந்தும்,
86.திருக்குறுங்குடியில் ,திருப்பாற்கடல்நம்பி என்று கிடந்தும் இருந்த நம்பியாகவும் நின்ற நம்பியாகவும், மூன்று நிலையிலும் ஸேவை ஸாதித்தும் ,
87.திருக்குளந்தையில் பெருங்குளம் மாயக்கூத்தன் , ஸ்ரீநிவாசன் என்று நின்றும்,
88.திரு வர குணமங்கையில் விஜயாஸனப் பெருமாளாக இருந்தும்,
89.தென்திருப்பேரையில் மகரநெடுங்குழைக் காதனாக இருந்தும்,
90.திருவைகுண்டத்தில் வைகுண்டநாதனாக கள்ளபிரானாக நின்றும்,

91.திருக்குருகூரில் ஆதிநாதனாக, பொலிந்து நின்ற பிரானாக நின்றும் , ஸ்ரீநம்மாழ்வாரைக்
கோயில்கொள்ளச் செய்தும் , அரையர்களைச் சேவை செய்யச் செய்தும்,
இப்படி ”நவ திருப்பதிகள்” எனப்படும்,
ஸ்ரீவைகுண்டம்,
வரகுணமங்கை
திருப்புளிங்குடி
இரட்டைத் திருப்பதி என்கிற தொலைவில்லி மங்கலம்
திருக்குளந்தை
திருக்கோளூர்
திருப்பேரை
திருக்குருகூர்
என்கிற 9 திவ்ய தேசங்களில்,
கிடந்தும், இருந்தும், நின்றும் சேதனர்களை ஈர்க்க முயற்சித்து,
திருக்குறுங்குடியில் ,கிடந்தும், இருந்தும் நின்றும் கூப்பிட்டு-

உடனே, சேர நாடு என்கிற மலைநாட்டுக்குப் போனாலாவது,நம் குழந்தைகள் நம்மைத் தேடி வரமாட்டார்களா என்று எண்ணி
திருக்கடித்தானம் வந்தான்

92.திருக்கடித் தானத்தில்,அத்புத நாராயணனாக நின்றும்
93.திருக்காட்கரையில் காட்கரை யப்பனாக நின்றும்,
94.திருச்செங்குன்றூரில் ,இமையவரப்பனாக நின்றும்
95.திருநாவாயில், நாவாய் முகுந்தன்–நாராயணனாக நின்றும்,
96.திருப்புலியூரில் ,மாயப்பிரானாக நின்றும்,
97.திருமூழிக்களத்தில் அப்பன் –ஸ்ரீஸூக்திநாதப்பெருமாளாக நின்றும் ,
98.திருவண்பரிசாரத்தில்,திருக்குறளப்பன்–திருவாழ்மார்பனாக இருந்தும் ,
99.திருவண்வண்டூரில் கமலநாதனாக நின்றும்,
100.திருவல்லவாழில் கோலப்பிரான் –ஸ்ரீவல்லபனாக நின்றும்
101.திருவித்துவக்கோட்டில் ,உய்யவந்தப் பெருமாளாக நின்றும்,
102.திருவாறன்விளையில் ,திருக்குறளப்பனாக நின்றும்
103.திருவாட்டாற்றில் ஆதிகேசவப் பெருமானாகக் கிடந்தும்
நின்று, நின்று திருவடிகள் நோக,
ஒரு திவ்ய தேசத்தில் அமர்ந்து இருந்து, திருவாட்டாற்றில் கிடந்து,
ஜீவாத்மாக்களாகிய சேதனர்கள் , தன்னைத் தேடி வரவில்லையே என்கிற ஆதங்கத்தில்.
104.திருவனந்தபுரத்தில் கிடந்தான்
அனந்த பத்மநாபனாகக் கிடந்தான்
ஸ்ரீஹரிலக்ஷ்மியுடன் கிடந்தான்
மிகப் பெரிய திருமேனியுடன்,மூன்று வாசல் வழியே தரிசிக்குமாறு கிடந்தான்
ஹேம கூட விமானத்தின் அடியில் கிடந்தான்.
ஏகாதச ருத்ரர்களுக்கும் இந்த்ரனுக்கும், சந்த்ரனுக்கும் ப்ரத்யக்ஷமாகிக் கிடந்தான்
நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்யக் கிடந்தான்
சேதனர்கள் , மிகப் பெரிய திருமேனியைப் பக்தியுடன் சேவித்தாலும்,
பன்னிரு ஆழ்வார்களில் ,ஒருவர்தான் மங்களாசாசனம் செய்திருக்கிறார் என்று இவரை விடுத்துப் போந்தனர்

காவிரி பாயும் ,கன்னலும், செந்நெல்லும் சூழும் , திவ்ய தேசமே தகும் என்று திருவுள்ளம் பற்றி,
105-திருவெள்ளறை வந்தான்

புண்டரீகாக்ஷனாக நின்றான்.கிழக்கே திருமுக மண்டலத்துடன் நின்றான்
செண்பகவல்லி என்கிற பங்கஜவல்லி ஸமேதனாக நின்றான்
ஏழு தீர்த்தங்கள் அருகிருக்க நின்றான்
விமலாக்ருதி விமானத்தின் அடியில் நின்றான்
உத்தராயண வாசல், தக்ஷிணாயன வாசல் இருக்க ,அவற்றின் மூலம் ஸேவை ஸாதித்து நின்றான்
உய்யக்கொண்டார் , இங்கு அவதரிக்க நின்றான்
எங்களாழ்வான் இங்கு அவதரிக்க, நின்றான்
ஸ்ரீ உடையவர், பலகாலம் இங்கு வசித்துப் போற்ற, நின்றான்
பெரியாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாஸனம் செய்யப் பூரித்து நின்றான்.
திவ்ய பிரபந்தங்களுக்கு , அர்த்த விசேஷங்களைத் தினவடங்கச் சொல்லும் சோழியர்கள் பக்கலில் இருக்க நின்றான்

106. உத்தமர்கோயிலில் கிடந்தான்
திருக்கரம்பனூர் என்கிற திவ்ய தேசத்தில், புஜங்க சயனனாகக் கிடந்தான்
திருவெள்ளறையில் நின்று பார்த்தவன் ,இங்கு வந்து ”படுத்தான்”
புருஷோத்தமனாகக் கிடந்தான்
பூர்ணவல்லித் தாயாருடன் கிடந்தான்
கதம்ப தீர்த்தக் கரையிலே கிடந்தான்
உத்யோக விமானத்தின் அடியிலே கிடந்தான்
ருத்ரனின் ப்ரஹ்மஹத்தி தோஷம் நீங்க, தாயாரை அவருக்குக் கைக் கபாலத்தில்
பிக்ஷை இடச் செய்து , அநுக்ரஹம் செய்து, இங்கே கிடந்தான்
திருமங்கை ஆழ்வார் ,ஒரு பாசுரத்தில் மங்களாசாசனம் செய்யக் கிடந்தான்

காவிரியைத் தாண்டித் தெற்கே போவோம் என்று எண்ணி, திருப்பாணாழ்வாரின் அவதார ஸ்தலமான
107 உறையூர் வந்தான்
சோழமன்னனின் திருமகள்–கமலவல்லி, இங்கு விரதமிருந்து , விவாஹம் செய்து கொள்ள,
அழகிய மணவாளப் பெருமாளாக நின்றான்
இவன்தான் ஸ்ரீ ரங்கநாதன்—ஒவ்வொரு வருடமும் ”பங்குனி உத்ரத்துக்கு” முன்பாக , 6ம் திருநாளில்,
நம்பெருமாளாக இங்கு எழுந்தருளி, கமலவல்லி நாச்சியாரை விவாஹம் செய்து கொண்டான்
குலசேகரரும், திருமங்கைமன்னனும் மொத்தமே இரண்டு பாசுரமிட நின்றான்
இந்த விவாஹ வைபவத்தைத் தரிசிக்க வந்தவர்கள் ஸ்ரீரங்கம் செல்லவே ,அவர்களுடன் கூடவே
8ம் திருநாளில்,

108. ஸ்ரீரங்கம் வந்தான்

9ம் திருநாளில், பெரிய பிராட்டியாரின் ஊடலால் ஏற்பட்ட ”பிரணயக் கலகம்” நம்மாழ்வாரால் ,தீர்க்கப்பட மகிழ்ந்து நின்றான்.
அன்றே பெரிய பிராட்டியாரின் திருஅவதார தினமான பங்குனி உத்ரத்தில், சேர்த்தியில்
எழுந்தருளி இருக்கும்போது, ஸ்ரீ உடையவர் , ”கத்யத்ரயம்” சமர்ப்பித்து, சரணாகதி செய்ய,
சேதனர்கள் , இந்த ”பவிஷ்யதாசார்யரை ” அடியொற்றி, சரணாகதி செய்து , நம்வீடு வருவார் என்று குதூகலித்தான்

*இதுவே பூலோக வைகுண்டம் என்றான்
*வைகுண்டத்தில் இருக்கும் ”வ்ரஜா” நதியே காவேரி நதி.
*வைகுண்டத்தில் இருக்கும் ஸ்ரீ வாஸுதேவனே ,ஸ்ரீரங்கநாதன் .
*விமானமே, ப்ரணவம்
*விமானத்தின் நான்கு கலசங்களே நான்கு வேதங்கள்
*விமானத்தினுள்ளே பள்ளிகொண்ட பெரிய பெருமாளே, ப்ரணவம் விவரிக்கும்”பரமாத்மா”
*காவிரியையும், கொள்ளிடத்தையும் மாலையாக்கிக் கொண்டான்
* தானே ”இக்ஷ்வாகு குலதனம்” என்றான்
”ஸதம்வோ அம்பா தாமானி ஸப்தச்ச —”என்று ப்ரஹ்மாவுக்குச் சொல்லி,
பரமபதத்தையும் சேர்த்து நூற்றெட்டுத் திவ்ய தேசங்களிலும் ”நானே” என்றான் ‘
*சந்த்ர புஷ்கரணி எனதே என்றான்
*படமெடுத்த ஆதிசேஷன் படுக்கையிலே படுத்திருக்கும் ”பெரிய பெருமாள்” நானே என்றான்
*.ப்ரணவாகார விமானத்தின் அடியில் சயனித்திருப்பது ”நானே” என்றான்
*விமானத்தின் மீது ”பரவாஸுதேவனாக ” இருப்பதும், நானே என்றான்
*ரங்க மண்டபத்தை , காயத்ரீ மண்டபம்” என்றும் ,
அங்குள்ள 24 தூண்களையும் காயத்ரீ மந்த்ரத்தின் 24 அக்ஷரங்கள் என்றும் பூர்வாசார்யர்கள் புகழ, ஆமோதித்தான்
*ஏழு உலகங்களையும் , ஏழு ப்ராகாரங்களாக்கினான்
*வேத ஸ்வரூபன் —பெரிய பெருமாள்
*வேதச்ருங்கம்— ப்ரணவாகார விமானத்தின் சிகரமாகியது
*வேதப்ரணவம் –ப்ரணவாகார விமானமாகியது
*வேதாக்ஷரமே –காயத்ரி மண்டபமாகியது

அர்ச்சாவதார ,முதல் அவதாரமாகினான் *அண்டர்கோன் அணியரங்கனானான்
*திருப்பாவை முப்பதும் செப்பினாளை உயர் அரங்கனாகிய தனக்கு,கண்ணி உகந்து அளித்தவளை
பெரியாழ்வார் பெற்றெடுத்தவளைத் , தன்னிடம் பேதைமை கொண்டவளை , மாலையிட
பெரியாழ்வார் கனவில் தோன்றி, கோதையைத் திருவரங்கம் அழைத்து வரச் சொன்னான்
இங்கு பட்டர்,கோவில் பரிசனங்களிடம் ,அப்படியே தோன்றி,
அழகிய பூப்பல்லக்கில் ,கோதையை சந்நிதிக்கு அழைத்துவரச் சொன்னான்.
அவனின் திருவுளப்படி ஆண்டாள் திருமணத்தூண் அருகே வந்து
அரங்கனுக்கு மாலையிட,
அரங்கனும் மாலையிட.
மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனனாகிய ரங்கநாதன் வந்து
ஆண்டாள் கைத்தலம்பற்றி , தீவலம் செய்து,
பொரி முகம் தட்ட , செம்மை உடைய தன்னுடைய திருக்கரத்தால்,
கோதையின் தாள் ( திருவடி )பற்றி , அம்மி மிதித்து,
வாய்நல்லார் நல்ல மறை ஓதும் மந்திரம் முழங்க ,
பெரியாழ்வார், கோதையைக் ”கன்யாதானம்” செய்ய,
நம்பெருமாளாகிய ஸ்ரீரங்கநாதன், கோதா மணாளனாக ஆனான்.

*துலுக்க நாச்சியாரின் , இஷ்ட மணாளனானான்
*சேரகுலவல்லியின் , வீர மணாளனானான்
*குலசேகரன், படியாய்க் கிடக்கப் பவள வாய்க் காட்டிப் பரிவுகொண்டான்
*.பெரிய திருவடி அனவரதமும் அமர்ந்து இருந்து அஞ்சலி செய்ய , அருள் புரிந்தான்
*திருவிண்ணாழித்திருச் சுற்றில், பூமிக்கு அடியில் சாளக்ராம எம்பெருமான்கள்
ஏராளமாக வாசம் செய்ய, அங்கு பக்தர்கள் ,மண்டியிட்டு வலம் வருவதை ,வழக்கமாக்கினான்
*திருமங்கை ஆழ்வார் பிரார்த்தனையை ஏற்று, ”திருவத்யயன உத்ஸவத்தில்” , வேதங்களோடு
திருவாய்மொழியையும் திருச்செவி சாற்றத் திருவுள்ளம் கொண்டான்
*விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தி திருவர்மார்பன் கிடந்த வண்ணனானான்
*நம்மாழ்வாரும், பொய்கை ஆழ்வாரும் பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் பாசுரமிட கிடந்தான்;நின்றான்
*திருமழிசை ஆழ்வாரும், பெரியாழ்வாரும் குலசேகர ஆழ்வாரும் போற்றிப் புகழ நின்றான்.
*தொணடரடிப் பொடி ஆழ்வாரும், திருப்பாணாழ்வாரும், ஆண்டாளும், திருமங்கை ஆழ்வாரும் பாசுரங்கள் ,
பல இசைத்துப் பாட,பரவசப்பட்டான்;
கிடந்தான்;நின்றான்
*மொத்தமாக 247 பாசுரங்களில்,பக்திரஸம் பரிணமிக்க, ரங்கராஜனாக ஆனான்
*நம்மாழ்வாரும், பொய்கை ஆழ்வாரும் பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் பாசுரமிட கிடந்தான்;நின்றான்
*திருமழிசை ஆழ்வாரும், பெரியாழ்வாரும் குலசேகர ஆழ்வாரும் போற்றிப் புகழ நின்றான்.
*தொணடரடிப் பொடி ஆழ்வாரும், திருப்பாணாழ்வாரும், ஆண்டாளும், திருமங்கை ஆழ்வாரும்
பாசுரங்கள் ,பல இசைத்துப் பாட,பரவசப்பட்டான்;
கிடந்தான்;நின்றான்
*மொத்தமாக 247 பாசுரங்களில்,பக்திரஸம் பரிணமிக்க, ரங்கராஜனாக ஆனான்

*இவன் சேர்த்தி ஸேவை தரும் ரங்கன்
*சித்ரா பௌர்ணமி அன்று, காவேரித் தாயாருடன் சேர்த்தி
*சித்திரையில், சேரகுல வல்லியுடன் சேர்த்தி
*பங்குனி ஆயில்யத்தில் , உறையூரில் கமலவல்லியுடன் சேர்த்தி,
*பங்குனி உத்ரத்தில் ,பெரிய பிராட்டியாருடன் சேர்த்தி

*இவனே, காவேரி ரங்கன்
*இவனே கஸ்தூரி ரங்கன்
*இவனே பரிமள ரங்கன்
*இவனே க்ஷீராப்தி ரங்கன்
*இவனே இக்ஷ்வாகு குல ரங்கன்
*இவனே பெரியபெருமாள் ரங்கன்
*இவனே நம்பெருமாள் ரங்கன்
*இவன் கருமணி ரங்கன்
*இவன் கோமள ரங்கன்
*இவனே கோதையின் ரங்கன்
*இவனே வைபோக ரங்கன்
*இவனே முதன்முதலில், அரையர் ஸேவை கொண்டருளிய ரங்கன்
*இவனே தினமும், வெண்ணெய் அமுதுண்ணும் ரங்கன்
*இவனே ”திறம்பா ”வழிகாட்டும் ரங்கன்
*இவனே”கபா”அலங்கார ரங்கன்
*இவனே ”கோண வையாளி ”நடைபோடும் ரங்கன்
*இவனே ஐப்பசியில் ,யாவும் தங்கமான ரங்கன்
*இவனே ,தாயின் பரிவுடன் ”பல்லாண்டு” பாடப்பெற்ற ரங்கன்
*இவனே பங்குனியில் காவிரிக்கரையில்,தயிர்சாதமும், மாவடுவும் விரும்பி ஏற்கும் ரங்கன்
* இவனே , அடியார்களை அரவணைக்கும் ரங்கன்
* இவனே வைணவத்தின் ”ஆணி வேரான ”அரங்கத்தின் அப்பன், ரங்கன்
* இவனே அடியார்க்கு ஆட்படுத்தும் ரங்கன்
* இவனே, தானே முக்தனாக இருந்து, வைகுண்ட ஏகாதசியன்று, பரமபதத்தைக் காட்டும் ரங்கன்
* இவனே பணியைப் பத்துகொத்தாக்கிப் பணிகொள்ளும் ரங்கன்
* இவனே இராமானுசரை,”நெடுநாள் தேசாந்திரம் சென்று ,மிகவும் மெலிந்தீரே” என்று தாயைவிட, அதிகப் பரிவு காட்டிய ரங்கன்
*இவனே ப்ரஹ்மாதி ராஜன்
*இவனே இந்திராதி ராஜன்
*இவனே நித்யஸூரிகளின் ராஜன்
*இவனேமுக்தர்களின் ராஜன்
*இவனே ராஜாதி ராஜன்
*இவனே வைகுண்ட ராஜன்
*இவனே ஸுர ராஜ ராஜன்
*இவனே அகிலலோக ராஜன்
*இவனே ஸ்ரீரங்க பத்ரன்
*இவனே ஆனந்தரூபன்
*இவனே நித்யானந்தரூபன்
*இவனே ரமணீயரூபன்
*இவனே ஸ்ரீரங்கரூபன்
*இவனே லக்ஷ்மிநிவாஸன்
*இவனே ஹ்ருத்பத்ம வாஸன்
*இவனே க்ருபாதி வாஸன்
*இவனே ஸ்ரீரங்க வாஸன்
*இவனே ,எல்லாமும், எல்லா எம்பெருமான்களும்
ஏனெனில்,
எல்லா திவ்யதேச எம்பெருமான்களும் ,இவனிடம் தினமும் சாயரக்ஷையில் க்ஷீரான்ன நைவேத்யத்தின்போது,
, 108 சர மாலைகளைச் சாற்றிக் கொண்டு ”தர்பார் ஸேவை ”நடக்கிறது—

*இவனை ஸ்தோத்தரிக்க , ஆதிசங்கரர் வந்தார்
*இவனை ஸ்தோத்தரிக்க ஸ்ரீ மத்வர் வந்தார்
*இவனுக்கு கைங்கர்யம் செய்த ஆசார்யர்கள்,கணக்கிலடங்காது.

ஸ்ரீரங்க வாஸம் செய்து, பற்பலக் கைங்கர்யங்கள் செய்த சில ஆசார்யர்கள்
*ஸ்ரீமன் நாதமுனிகள்,
*உய்யக்கொண்டார் ,
*மணக்கால் நம்பி,
*ஸ்ரீ ஆளவந்தார்,
*திருவரங்கப் பெருமாள் அரையர்
*பெரிய நம்பிகள்,
*எம்பெருமானார் என்கிற ஸ்ரீ உடையவர்
*முதலியாண்டான்
*கந்தாடையாண்டான்,
*கூரத்தாழ்வான்,
*திருக்குருகைப் பிரான் பிள்ளான்,
*எம்பார்,
*திருவரங்கத்தமுதனார்
*ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன்
*பட்டர்,
*நஞ்சீயர் ,
*நடாதூரம்மாள்
*பராங்குசதாஸர்
*பிள்ளை அமுதனார்,
*பிள்ளை உறங்காவில்லி தாஸர்
*பிள்ளை லோகாசார்யர்
*பெரியவாச்சான் பிள்ளை
*மாறனேரிநம்பி
*வங்கிபுரத்தாச்சி
*வடக்குத் திருவீதிப்பிள்ளை
*வடுக நம்பி
*நம்பிள்ளை,
*அநந்தாழ்வான்
*ஈச்வர முனிகள்
*எங்களாழ்வான்
*கூரநாராயண ஜீயர்
*சொட்டை நம்பிகள்
*திருக்கச்சிநம்பி
*திருக்கண்ணமங்கையாண்டான் ,
*திருக்கோட்டியூர் நம்பி,திருமலை நம்பி,
*திருமாலையாண்டான்,
*திருவாய்மொழிப்பிள்ளை
*பின்பழகிய பெருமாள் ஜீயர்
*பெரிய ஆச்சான் பிள்ளை,
*அழகியமணவாளப் பெருமாள் ஜீயர் ,
*கூர குலோத்துங்க தாசர் ,
*திருவாய்மொழிப்பிள்ளை ,
*பெரிய ஜீயர் என்கிற ஸ்ரீ மணவாள மாமுனிகள்

இப்படி எண்ணிலா ஆசார்யர்கள் , இவனிடம் மோகித்து, பக்தி மேலிட்டு,
வாசிக, காயிக , லிகித கைங்கர்யங்கள் செய்துள்ளனர்
தியாகாஜ ஸ்வாமிகள், பஞ்சரத்னமே பாடி இருக்கிறார்

இவைகளை எல்லாம், கேட்டுப் பரவசமான ஜீவாத்மாக்கள் –சேதனர்கள் ,
”ரங்கா—ரங்கா—” என்று மெய்சிலிர்க்கக் கூவினர்; ஆடினர்;
ரங்கனின் புகழ் பாடினர்
ரங்கனை அடைய ஆவல் கொண்டனர் ; அவன் திருவடி நிழலில் இளைப்பாரத் தாபப்பட்டனர்
பெரிய பெருமாள் , ஆதிசேஷனின் அரவணையில் , இவை அறிந்து ஆனந்தமடைந்தான்
நம்பெருமாளோ,
இருந்தும், கிடந்தும், நின்றும் –இங்கேயே பல்லாண்டாக நின்றும்–அதன் பயனாக,
நம்பிள்ளைகளைத் திரும்பப் பெறுவோம் என்கிற ஆனந்தத்தில் ஸேவை சாதித்தான்

ஸ்ரீரங்கமதுலம் க்ஷேத்ரம் ஸ்ரியா ஜூஷ்டம் சுபாஸ்தம்
யத்கத்வா ந நரோ யாதி நரகம் சாப்யதோகதிம்

செல்வங்களும் மங்களங்களும் நிறைந்த ஒப்பற்ற திவ்யதேசம் ஸ்ரீரங்கம்
அதை அடைந்த மனிதன், நரகத்தை அடைவதில்லை;தாழ்ந்த நிலையையும் அடைவதில்லை.

காவேரி வர்த்ததாம் காலே காலே வர்ஷது வாஸவ : |
ஸ்ரீரங்கநாதோ ஜயது ஸ்ரீரங்க ஸ்ரீஸ்ச வர்த்ததாம் ||

எழுநூறு சந்யாசிகள் ,எழுபத்துநான்கு ஆசார்யர்கள், பன்னீராயிரம் ஏகாங்கிகள் ,
முன்னூறு கொற்றியம்மைமார்கள் , அரசர்கள், சாற்றாத ஸ்ரீவைஷ்ணவர்கள் ,
இவர்களால் நிரம்பப்பெற்று , காவேரி , பயிர்களுக்கு வேண்டிய காலங்களில் பெருகட்டும்.
வேண்டிய சமயங்களில் மழை பொழியட்டும்.
ஸ்ரீரங்கநாதன் வெற்றியுடன் வாழட்டும்; ஸ்ரீரங்க ஸ்ரீ என்கிற திருவரங்கச் செல்வம் எப்போதும் வளரட்டும்

———————————————————————————————————————-

அர்ச்சாவதாரத்தில், இருந்தும் கிடந்தும் நின்றும் பகவான் ஸ்ரீமந் நாராயணன்,
அவன் குழந்தைகளாகிய நம்மைத் திரும்பப் பெறுவதில் வைகுண்டத்தில்
தொடங்கிப் பல திவ்யதேசங்களில்,முயற்சித்தாலும், அவனது திருவுள்ள வேட்கை
பூலோக வைகுண்டத்தில் –திருவரங்கத்தில், வெற்றி அடைந்தது

ஸ்ரீமந் ஸ்ரீரங்கச்ரியமநுபத்ரவாம் அநுதினம் ஸம்வர்தய |
ஸ்ரீமந் ஸ்ரீரங்கச்ரியமநுபத்ரவாம் அநுதினம் ஸம்வர்தய |\

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலினே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம :

———————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருவரங்கம் திருக் கோயிலின் பெருமை மிகு வரலாறு–ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணாமாசார்யர் ஸ்வாமிகள்–

February 24, 2021

திருவரங்கத்தை பெரிய கோயில் என்றே குறிப்பிடுவர் பெரியோர்கள்.
இங்கே பள்ளி கொண்டு அருள்பவன் “பெரிய பெருமாள்” என்று அழைக்கப்படுகிறார்.
அவர் பத்தினியும் “பெரிய பிராட்டியார்” என்று அழைக்கப்படுகிறார்.
மதியம் ஸமர்ப்பிக்கப்படும் தளிகைக்கு “பெரிய அவசரம்” என்று கூறுகின்றனர்
இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு “பெரிய திருநாள்” என்ற பெயர் வழங்குகிறது.
இராமானுசருக்கு பிறகு திருக்கோயில், நிர்வாகம் முறையை சீரமைத்த ஸ்ரீமணவாள மாமுனிகளை “பெரிய ஜீயர்” என்று கொண்டாடுகிறோம்.

ஏழு திருச்சுற்றுகளையும், அடைய வளஞ்சான் திருமதிலையும் உடைய ஒரே கோயில் திருவரங்கமே ஆகும்.
அடையவளந்தான் திருசுற்றின் நீளம் 10,710 அடிகள் ஆகும்.
அனைத்து மதிள்களின் மொத்த நீளம் 32592 அடிகள் அல்லது 6 மைல்களுக்கும் மேல் ஆகும்.
திருவரங்கம் பெரிய கோயில் மொத்தம் 156 சதுர ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.
திருவரங்கநாதன் திருவடிகளில் காவிரி ஆறு திருவரங்கத்தின் இரு மருங்கிலும் பாய்ந்து சென்று திருவடியை வருடிச் செல்கின்றது.
தென்கிழக்கு ஆசியாவிலேயே 216 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் 13 நிலைகள் கொண்டது இந்த திருத்தலத்தில் தான் அமைந்துள்ளது.

18 தொகுப்புகள் கொண்டதும், 7200 பக்கங்கள் நிறைந்துள்ளதுமான கோயிலொழுகு
திருவரங்க கோயிலுக்கு ஓர் அரணாக அமைந்துள்ளது. திருவாய்மொழியும், ஸ்ரீராமாயணமும் ஆகிய இரு நூல்கள்
இருக்கும் வரை ஸ்ரீவைஷ்ணவத்தை யாரும் அழிக்க முடியாது,
‘என் அப்பன் அறிவிலி’ என்று 2-ம் குலோத்துங்கனின் (ஆட்சி ஆண்டு 1133-1150) மகனான 2-ஆம் ராஜராஜன் (ஆட்சி ஆண்டு 1146-1163) கூறினானாம்.
இவனுக்கு வீழ்ந்த அரிசமயத்தை மீண்டெடுத்தவன் என்ற விருது பெயர் அமைந்து உள்ளது.
அதுபோல 7200 பக்கங்கள் கொண்ட கோயிலொழுகு இருக்கும் வரை வரலாற்றிற்கு புறம்பாகவோ,
குருபரம்பரை செய்திகளை திரித்தோ, திருவரங்கம் பெரியகோயிலின் வரலாற்றை அவரவர் மனம் போனபடி திரித்துக் கூறமுடியாது.

கி.பி. 1310-ல் மாலிக்காபூர் திருவரங்கத்தின் மீது படையெடுத்தான். அதற்குக் காரணம் 2-ஆம் சடையவர்மன்
சுந்தர பாண்டியன் (ஆட்சி ஆண்டு 1277-1294) தனது ஆட்சிக் காலத்தில் ப்ரணாவாகார விமானத்திற்கு பொன்வேய்ந்தான்.
பொன் வேய்ந்த பெருமாள் மற்றும் சேரகுல வல்லி ஆகியோருடைய பொன்னாலான விக்ரஹங்களை
சந்தன மண்டபத்தில் பிரதிஷ்டை செய்திருந்தான்.

இரண்டாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் பொன்னாலான கொடிமரம் மற்றும் கொடியேற்ற மண்டபத்தில்
அமைந்துள்ள மரத்தாலான தேருக்கு பொன் வேய்ந்தான். இவற்றைத் தவிர பெருமாளுக்கும், தாயாருக்கும்
துலாபாரம் (கஜதுலாபாரம்) சமர்ப்பித்து ஏராளமான தங்க நகைகளை அளித்து இருந்தான்.

வ்யாக்ரபுரி என்றழைக்கப்படும் சிதம்பரத்தை கொள்ளையடித்த மாலிக்காஃபூரிடம் சில ஒற்றர்கள் திருவரங்கத்தில்
ஏராளமான செல்வம் குவிந்து கிடப்பதாக கூறினர். நாகப்பட்டினம் வழியாக மேற்கு கடற்கரைக்கு செல்லவிருந்த
மாலிக்காஃபூர் தன் திட்டத்தை மாற்றிக்கொண்டு யாரும் எதிர்பாராத வேளையில் கோயிலைத் தாக்கினான்.
அளவிட முடியாத அளவிற்கு செல்வத்தை சூறையாடினான். அப்போது வெள்ளையம்மாள் என்ற தாஸி மாலிக்காஃபூரின்
படைத்தலைவனை தன் அழகால் மயக்கி தற்போதைய வெள்ளைக் கோபுரத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்று
அந்த படைத்தலைவனை கீழே தள்ளிக் கொன்றாள். அவளும் கீழே விழுந்து உயிர் விட்டாள்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வெள்ளை வண்ணத்தில் கோபுரம் மாற்றம் பெற்று “வெள்ளைக் கோபுரமாயிற்று”.

புராதனமான யுகம் கண்ட பெருமாளான அழகிய மணவாளன் மீண்டும் திருவரங்கத்திற்கு எழுந்தருளியதால்
அவருக்குப் பதிலாக திருவாராதனம் கண்டருளிய புதிய அழகிய மணவாளன் திருவரங்க மாளிகையார்
என்ற பெயரில் யாக பேரராக இன்றும் அழகிய மணவாளனுக்கு இடது திருக்கரப் பக்கத்தில் இன்றும் எழுந்தருளி உள்ளார்.
யாக சாலையில் ஹோமங்கள் நடைபெறும் போது யாக பேரரான திருவரங்க மாளிகையார் எழுந்தருள்வதை இன்றும் காணலாம்.
அர்ச்சுன மண்டபத்திற்கு அழகிய மணவாளன் எழுந்தருளும் போதெல்லாம் துலுக்க நாச்சியாருக்கு
படியேற்ற ஸேவை அரையர் கொண்டாட்டத்துடன் நடைபெறும். இது துளுக்க நாச்சியாருக்காக நடைபெறும் ஓர் மங்கள நிகழ்ச்சியாகும்.

கி.பி. 1310 ஆம் ஆண்டு படையெடுப்புக்குப் பிறகு கி.பி. 1323ஆம் ஆண்டு முகமது பின் துக்ளக் என்று
அறியப்படும் உலூக்கானுடைய படையெடுப்பு நடைபெற்றது. கோயிலொழுகு தரும் செய்திகளின் அடிப்படையில்
அந்த நிகழ்ச்சிகள் தொகுத்து அளிக்கப்படுகின்றன. அழகிய மணவாளன் பங்குனி ஆதி ப்ருஹ்மோற்சவத்தில் 8ஆம் திருநாளன்று
கொள்ளிடக் கரையில் அமைந்திருந்த பன்றியாழ்வார் (வராகமூர்த்தி) ஸந்நிதியில் எழுந்தருளி இருந்தார்.
உலூக்கான் படைகளோடு திருவரங்கத்தை நோக்கி வருவதை ஒரு ஈரங்கொல்லி (சலவைத் தொழிலாளி)
பிள்ளைலோகாச்சாரியரிடம் தெரிவித்தான்.

உலூக்கானுடைய படைவீரர்கள், மருத்துவமணையாய் இயங்கி வந்த தன்வந்த்ரி ஸந்நிதியை தீக்கிரையாக்கினர்.
இதன் நோக்கமாவது மருத்துவர்கள் யாரும் காயம் அடைந்த திருமாலடியார்களுக்கு உரிய மருத்துவ பணியை
மேற்கொள்ளக் கூடாது என்பதாகும். தன்வந்த்ரி ஸந்நிதி தீக்கிரையாக்கப்பட்ட செய்தியும்,
தன்வந்த்ரி ஸந்நிதி புனர் நிர்மாணம் செய்யப்பட்டதையும், அங்கே ஆதூரசாலை (மருத்துவமணை) செயல்பட துவங்கியதையும்,
16ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட இறந்த காலம் எடுத்த உத்தம நம்பி காலத்து கல்வெட்டு எண்
(வீரராமநாதன் காலத்திய கல்வெட்டு எண் – 226 (அ.கீ. Nணி: 80 ணிஞூ -1936-1937) தெரிவிக்கின்றது.

திருவாய்மொழிப்பிள்ளை தனது ஆசார்யனான கூரக்குலோத்தும தாஸரை திருப்பள்ளிப்படுத்தி,
‘திருவரசு’ என்ற நினைவு மண்டபமும் கட்டி வைத்தார்.
சிக்கில் கிடாரம் செல்பவர்கள் கூரக்குலோத்துமதாஸர் திருவரசை கண்டு ஸேவிக்கலாம்.
மேலும் திருவாய்மொழிப்பிள்ளை வாஸம் செய்த திருமாளிகையின் மிகப் பெரியதான அடித்தளத்தைக் காணலாம்.
இந்த சிக்கில் கிடாரத்தில் தான் ஸ்ரீமணவாள மாமுனிகளின் திருத்தகப்பனாரான திருநாவீருடைய தாதர் அண்ணர் வாஸம் செய்து வந்தார்.

முந்திரிக்காடு என்னும் பள்ளத்தாக்கில் மிக ஆழமான பள்ளம் தோண்டி அந்த நிலவறைக்குள்
அழகிய மணவாளனையும், நம்மாழ்வாரையும் எழுந்தருளப் பண்ணி அங்கேயே திருவாராதனம் கண்டருளினர்.
அந்தப் பள்ளத்தின் மேலே மரப்பலகைகளை வைத்து, செடி, கொடிகளை அதன்மேல் இட்டு, சில ஆண்டுகள்
அழகிய மணவாளனையும், நம்மாழ்வாரையும் காப்பாற்றி வந்தனர்.
நம்மாழ்வாருடன் முந்திரிக் காட்டிற்கு வந்த தோழப்பர் என்பார் ஒருநாள் நிலவறைக்கு சென்று திருவாராதனம் ஸமர்ப்பித்த பிறகு
மேலிருந்து கீழே விடப்பட்ட கயிற்றினை பிடித்துக் கொண்டு மேலே வரும்போது கயிறு அறுந்து கீழே விழுந்த தோழப்பர் பரமபதித்தார் (இறந்தார்).
இந்த செயலின் அடிப்படையில் தோழப்பர் வம்சத்தவர்களுக்கு ஆழ்வார் திருநகரியில் “தீர்த்த மரியாதை” அளிக்கப்படுகிறது.
சில ஆண்டுகள் கழித்து அழகிய மணவாளனையும், நம்மாழ்வாரையும் திருக்கணாம்பி என்ற மலைப்பிரதேசத்திற்கு எடுத்துச் சென்றன.
அங்கே இருந்த வரதராஜ பெருமாள் திருக்கோயிலினுள் எழுந்தருளப் பண்ணினர்.
சுமார் 10 ஆண்டுகள் திருக்கணாம்பியில் அழகிய மணவாளனும், நம்மாழ்வாரும் எழுந்தருளி இருந்தனர்.
இந்தத் திருக்கணாம்பி எனும் ஊர் தற்போதைய மைசூர் சத்தியமங்கலம் மலைப்பாதையில் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.
நம்மாழ்வார் எழுந்தருளிய இடத்தை வட்டமணை இட்டு, இன்றும் அடையாளம் காண்பிக்கிறார்கள்.

திருவாய்மொழிப்பிள்ளை ராமானுஜ சதுர்வேதி மங்கலத்தை நிர்மாணித்து அங்கே இராமானுசரை ப்ரதிஷ்டை செய்தார்.
வேதம் வல்ல திருமாலடியார்களை அந்த சதுர்வேதி மங்கலத்தில் குடியமர்த்தினார்.
எம்பெருமானார் ஸந்நிதியில் கைங்கர்யங்களை மேற்பார்வை செய்வதற்காக ஜீயர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.
இந்த எம்பெருமானார் ஜீயர்மடத்தின் 7வது பட்டத்தை அலங்கரித்த ஜீயர் ஸ்வாமியிடம் கி.பி. 1425ஆம் ஆண்டு
ஸ்ரீமணவாள மாமுனிகளின் சந்நியாஸ ஆச்ரமத்தை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஹோபில மடத்தை அலங்கரித்த முதல் ஜீயரிடம் ஸ்ரீமணவாள மாமுனிகள் துறவறத்தை ஏற்றுக் கொண்டார்
என்று கால ஆராய்ச்சியின் அடிச்சுவடு கூட தெரியாதவர்கள் கூறி வருகிறார்கள்.
அஹோபில மடம் விஜயநகர துளுவ வம்சத்து, கிருஷ்ணதேவராயர் காலத்தில் தான் தோன்றியது.
கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலம் 1509-1529 ஆகும். மணவாள மாமுனிகள் சந்நியாஸ ஆச்ரமம் ஏற்றுக்கொண்டது 1425.
ஆகவே அஹோபில மடத்தின் முதல் ஜீயர் ஸ்ரீமணவாள மாமுனிகளுக்கு சந்நியாஸ ஆச்ரமம் அளித்தார் என்பது உண்மைக்குப் புறம்பான செய்தியாகும்.

கி.பி. 1323ஆம் ஆண்டு நடந்த உலூக்கான் படையெடுப்பின் விளைவாக தமிழகம் முழுவதும்
காஞ்சிபுரத்தைத் தவிர முகமதியர்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.
உலூக்கான் தனது அந்தரங்கத் தளபதியான ஷரீப் ஜலாலுதீன்அஸன்ஷாயிடம் தமிழகத்தை ஆட்சி செய்யும் பொறுப்பை
ஒப்படைத்து விட்டு டில்லிக்கு விரைந்து சென்றான்.
48 ஆண்டுகள் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர் மதுரை சுல்தான்கள்.
அவர்களை எதிர்த்துப் போரிட்ட ஹொய்சாள மன்னனான வீர வல்லாளன் போரில் கொல்லப்பட்டான்.
அவனது இறந்த உடலில் வைக்கோலைத் திணித்து மதுரையில் உள்ள தனது கோட்டை வாசலில் தொங்க விட்டான்.
சுல்தான்களை எதிர்ப்பவர்கள் இந்த கதியைத் தான் அடைவார்கள் என்று முரசு கொட்டி தெரிவித்தான்.
மதுரை செல்பவர்கள் கோரிப்பாளையம் என்ற பேருந்து நிறுத்தத்தை காண்பார்கள்.
அங்கே தான் சுல்தான்களின் அரண்மனை இருந்தது. வீரவல்லாளனின் உடல் தொங்க விடப்பட்டிருந்ததால்
அந்த இடம் கோரிப்பாளையம் என அழைக்கப்படலாயிற்று. (கோரி என்ற ஹிந்தி சொல்லுக்கு காணச் சகிக்க இயலாத என்பது பொருள்).

தமிழகம் முழுவதும் மதுரை சுல்தான்களுடைய கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வந்தது.
கி.பி. 1336ஆம் ஆண்டு துங்கபத்திரை நதிக்கரையில் சங்கம குலத்தைச் சார்ந்த ஹரிஹரர் அவருடைய தம்பி புக்கர்
ஆகிய இருவரும் சிருங்கேரி சாரதா பீடத்தைச் சார்ந்த வித்யாரண்யர் என்பாருடைய ஆசியுடன் விஜயநகரப் பேரரசை தோற்றுவித்தனர்.
அவர்களிடம் இருந்தது ஒரு சிறு படையே. இந்த படைபலத்தைக் கொண்டு மதுரை சுல்தான்களை எதிர்த்துப் போராடமுடியாது
என்ற எண்ணத்துடன் தமது படைபலத்தை பெருக்கலாயினர்.
விஜயநகர பேரரசின் தோற்றத்திற்குப் பிறகு சில ஆண்டுகளில் ஹரிஹரர் இறந்து விட்டார்.
அவருக்குப் பிறகு அவரது தம்பியான முதலாம் புக்கர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்.
முதலாம் புக்கரின் மூத்த குமாரன் வீரக்கம்பண்ண உடையார் ஆவர். புக்கரின் ஆணைப்படி கி.பி. 1358ஆம் ஆண்டு 36 ஆயிரம்
படை வீரர்களோடு தெற்கு நோக்கிப் புறப்பட்டான் வீரக்கம்பண்ண உடையார்.
இதனிடையே திருப்பதிக் காடுகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த அழகிய மணவாளனை செஞ்சி மன்னனான கோபணாரியன்
திருமலையில் ஸ்ரீவெங்கடேச பெருமாள் ஸந்நிதியில் முகப்பு ராஜகோபுரத்திற்கு உட்புறம் உள்ள மண்டபத்தில் கொண்டு சேர்த்தான்.
திருமலையிலிருந்து திருவரங்கம் நோக்கி புறப்பட்ட போது செஞ்சிக்கு அண்மையில் உள்ள
சிங்கபுரத்திற்கு (தற்போதைய பெயர் சிங்கவரம்) அழகிய மணவாளன் எழுந்தருளினார்.
அங்கே அழகிய மணவாளனுக்கு அத்யயன உத்வசத்தை கொண்டாடினர்
திருமலையில் அழகிய மணவாளன் எழுந்தருளியிருந்த மண்டபமே தற்போது “ரெங்க மண்டபம்” என்று அழைக்கப்பட்டு வருகிறது.

செஞ்சி மன்னனான கோபணாரியரின் தலைமையில் ஒரு சிறு படையோடு திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டார்.
அப்போது, சுல்தான்களுடனான போர் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டு இருந்ததால்
சில நாட்கள் கொள்ளிடம் வடகரைக்கு வடக்கே ஒரு கிராமத்தில் எழுந்தருளியிருந்தார்.
அந்த கிராமமே தற்போது அழகிய மணவாளன் கிராமம் என்று அழைக்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பழுதுபட்ட நிலையில் சில நாட்கள் அழகிய மணவாளன் தங்கியிருந்த திருக்கோயில்
புனர் நிர்மாணம் செய்யப்பட்டு சம்ப்ரோஷணமும் (கும்பாபிஷேகம்) செய்யப்பட்டது.
இந்த ஊரில் ஓடும் ராஜன் வாய்க்கால் கரையில் பல நூற்றாண்டுகளாக திருமாலடியார்கள் 1323ஆம் ஆண்டு
படையெடுப்பின் போது உயிர்நீத்த திருமாலடியார்களுக்கு எள்ளும், நீரும் இறைத்து பொதுமக்கள் “தர்ப்பணம்” செய்கிறார்கள்.
தர்ப்பணம் எனும் நீத்தார்கடனை செய்து வருகின்றனர் ஊர் பொதுமக்கள்.

கண்ணனூர் போரில் வீரக்கம்பண்ணர் வெற்றிக்கொண்ட பின் 48 ஆண்டுகள் கழிந்து அழகிய மணவாளன்
உபயநாச்சிமார்களோடும், ஸ்ரீரங்க நாச்சியாரோடும் திருவரங்கம் திருக்கோவிலை சென்று அடைந்தார்.
அந்த நாள் கி.பி. 1371ஆம் ஆண்டு பரீதாபி வருடம் வைகாசி மாதம் 17ஆம் நாள் ஆகும்.
(வைகாசி 17 என்பது ஜூன் மாதம் 2 அல்லது 3ஆம் தேதியைக் குறிக்கும்.)

அழகிய மணவாளனை தற்போது பவித்ரோற்சவம் கண்டருளும் சேரனை வென்றான் மணடபத்தில்
கோபணாரியன், சாளுவ மங்கு போன்ற படைத்தலைவர்கள் எழுந்தருளப் பண்ணினர்.
திருவரங்க மாநகரில் பலர் கொல்லப்பட்டதாலும் மற்றும் ஆசார்ய புருஷர்களும், முதியோர்களும் அச்சம் கொண்டு
திருவரங்க மாநகரைத் துறந்து, வெளி தேசங்களுக்குச் சென்று வாழ்ந்து வந்தனர்.
பராசர பட்டர் வம்சத்வர்களும், முதலியாண்டான் வம்சத்தவர்களும் வடதிசை நோக்கி அடைக்கலம் தேடிச்சென்றனர்.
பெரிய நம்பி வம்சத்தவர்கள் தெற்கு நோக்கி அடைக்கலம் தேடிச் சென்றனர்.
தற்போது திருவரங்க நகரை வந்தடைந்த அழகிய மணவாளன் உடன் 1323ஆம் வருடம் அழகிய மணவாளன்
உடன் சென்றவர்களில் மூவரே மிஞ்சியிருந்தனர். அவர்களாவர் திருமணத்தூண் நம்பி, திருத்தாழ்வரை தாஸன் மற்றும் ஆயனார்.

அழகிய மணவாளனுக்கு திருமஞ்சனம் ஸமர்ப்பிக்கப்பட்டு அந்த ஈரங்கொல்லிக்கு ஈர ஆடை தீர்த்தம்
ஸாதிக்கப்பட்டது (கொடுக்கப்பட்டது). அதைப் பருகியவுடன் அந்த ஈரங்ககொல்லி
“இவரே நம்பெருமாள், இவரே நம்பெருமாள்” என்று கூவினான்.
அன்றிலிருந்து அழகிய மணவாளனுக்கு “நம்பெருமாள்” என்ற பெயர் அமையப்பெற்றது.
ஈரங்கொல்லி நம்பெருமாள் என்று மகிழ்ச்சி பொங்க கூறிய இந்த பெயர் நிலைத்து விட்டது.

நம்பெருமாள் திருவரங்கத்திற்கு மீண்டும் வந்து ப்ரதிஷ்டை கண்டருளிய நிகழ்ச்சியை மீண்டு வந்து
ப்ரதிஷ்டை கண்டருளிய நிகழ்ச்சியை ராஜ மகேந்திரன் திருச்சுற்றின் மேற்குப் பகுதியில் காணலாம்.
இந்தக் கல்வெட்டை தொல்லியல் துறை படியெடுத்து. ”South Indian Temple Inscription Volume 24″ – À R number 288 (A.R. No. 55 of 1892).

ஸ்வஸ்திஸ்ரீ: பந்துப்ரியே சகாப்தே (1293)
ஆநீயாநீல ச்ருங்கத் யுதி ரசித ஜகத் ரஞ்ஜநாதஞ்ஜநாத்ரே:
செஞ்ச்யாம் ஆராத்ய கஞ்சித் ஸமயமத நிஹத்யோத்தநுஷ்காந் துலுஷ்காந்
லக்ஷ்மீக்ஷ்மாப்யாம் உபாப்யாம் ஸஹநிஜநகரே ஸ்தாபயந் ரங்கநாதம்
ஸம்யக்வர்யாம் ஸபர்யாத் புநரக்ருத தர்ப்பணோ கோபணார்ய:

(புகழ் நிறைந்த கோபணார்யர் கறுத்த கொடுமுடிகளின் ஒளியாலே உலகை ஈர்க்கும் திருமலையிலிருந்து
ரங்க நாதனை எழுந்தருளப் பண்ணி வந்து தன் தலைநகரமான செஞ்சியில் சிறிதுகாலம் ஆராதித்து
ஆயுதமேந்திய துலுக்கர்களை அழித்து ஸ்ரீதேவி பூதேவிகளாகிய உபயநாச்சிமார்களோடு கூட
திருவரங்கப் பெருநகரில் ப்ரதிஷ்டை செய்து, சிறந்த திருவாராதனங்களை மறுபடி தொடங்கி வைத்தார்.)
இந்தக் கல்வெட்டை பிள்ளைலோகம் ஜீயர் தம்முடைய “யதீந்த்ர ப்ரணவ ப்ரபாவம்” என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

திருவரங்கத்தின் மீதான மூன்றாம் படையெடுப்பு கி.பி. 1328ஆம் ஆண்டு குரூஸ்கான் என்பவனால் நிகழ்த்தப்பட்டது.
ஏற்கெனவே கொள்ளையடிக்கப்பட்ட திருவரங்க மாநகரில் உலூக்கானால் எடுத்துச் சொல்லப்படாத பொருட்கள்
இவனால் கொள்ளையடிக்கப்பட்டன. இவனுடைய படையெடுப்பைப் பற்றிய மேலும் விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

அழகிய மணவாளன் 1371ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் நாள் திருவரங்க நகருக்கு 48 ஆண்டுகள் கழித்து
திரும்ப எழுந்தருளியதை ஒரு பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும்

————

திருவரங்கம் திருமதில்கள்:

1.பெரிய கோயிலின் ஏழு திருச்சுற்றுகட்கு அமைந்த பெயர்களையும் அவற்றை நிர்மாணித்தோர்
அல்லது செப்பனிட்டோர் பற்றிய குறிப்பினை இந்தப் பாடல் கூறுகின்றது.

மாட மாளிகை சூழ் திரு வீதியும் மன்னு சேர் திரு விக்கிரமன் வீதியும்
ஆடல் மாறன் அகளங்கன் வீதியும் ஆலி நாடன் அமர்ந்துறை வீதியும்
கூடல்வாழ் குலசேகரன் வீதியும் குலவி ராசமகேந்திரன் வீதியும்
தேடரிய தர்ம வர்மாவின் வீதியும் தென்னரங்கர் திருவாவரணமே.

இந்தப் பாடலை இயற்றியவர் யார் என்று அறிவதற்கில்லை.
கோயிலொழுகு “பூர்வர்கள் திருவரங்கம் திருப்பதியை இவ்வாறு அனுபவித்தார்கள்” என்று குறிப்பிடுகிறது.
திருக்கோயில் அமைப்பில் உத்தமோத்தம லக்ஷணமாக ஏழு பிரகாரங்கள் கொண்ட கோயிலைக் கொள்கிறார்கள்.
எந்த திருக்கோயிலுக்கும் அமைந்திராத பெருமை ஸ்வயம்வ்யக்த (தானாகத்தோன்றின) க்ஷேத்திரங்களுள்
தலைசிறந்ததான திருவரங்கம் ஸப்தபிரகாரங்களைக் கொண்டிருப்பது அதன் பெருமையைக் காட்டுகின்றது.

வரலாற்று அடிப்படை கொண்டு நோக்கின் அவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக அமைந்து உள்ளது.
ஆனால், புராதனமாக அமைந்திருந்த திருவீதிகளைப் பழுதுபார்த்துச் செப்பனிட்டவர்கள் பெயரால்
வழங்கப்படுகிறது என்று கொள்ள வேண்டும். இந்தப் பாடல் ஏழாம் திருச்சுற்றுத் தொடங்கி,
முதலாம் திருச்சுற்று வரை அமைந்துள்ள திருச்சுற்றுக்களின் பெயர்களைக் கூறுகின்றது.

ஏழாம் திருச்சுற்று – மாடமாளிகை சூழ்த் திருவீதி:
இந்தத் வீதிக்கு தற்போதைய பெயர் சித்திரை வீதி.
இந்த வீதியினைக் கலியுகராமன் திருவீதி என்றும் அழைப்பர். கலியுகராமன் என்று பெயர்கொண்ட
மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி.1297-1342) இந்த வீதியைச் செப்பனிட்டான் என்று அறியப்படுகிறது.

ஆறாம் திருச்சுற்று – திருவிக்கிரமன் திருச்சுற்று,
ஐந்தாம் திருச்சுற்று, அகளங்கன் திருச்சுற்று – முதலாம் குலோதுங்கனுடைய மகன் விக்ரமசோழன் (கி.பி.1118-1135)
இவன் பெயரிலே இந்தத் திருவீதி அமைந்துள்ளது.
அடுத்த ஐந்தாம் திருச்சுற்றுக்கு அகளங்கன் திருவீதி என்று பெயரிடப்பட்டுள்ளது.
விக்கிரம சோழனுக்கு வழங்கிய சிறப்புப் பெயர்களில் அகளங்கன் என்பதுவும் ஒன்றாகும்.
இவனுக்கே உரியவையாய் வழங்கிய இரண்டு சிறப்புப் பெயர்கள் கல்வெட்டுகளிலும் விக்கிரம சோழன் உலாவிலும் காணப்படுகின்றன.
அவை, ‘தியாக சமுத்திரம்,’ ‘அகளங்கன்’ என்பனவாகும்.
இம்மன்னன் தன் ஏழாம் ஆட்சியாண்டில் திருவிடைமருதூர் சென்றிருந்த போது, அந்நகரைச் சார்ந்த
‘வண்ணக்குடி’ என்ற ஊரைத் தியாக சமுத்திர சதுர்வேதி மங்கலம் என்று பெயர் மாற்றித்
திருவிடை மருதூர் கோயிலுக்கு இறையிலி நிலமாக அளித்தான் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகிறது.
(ARE 272, 273 of 1907, 49 of 1931) (விக்கிரம சோழன் உலாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. Ula-II, 431, 632.)

‘அகளங்கன்’ என்னும் சிறப்புப்பெயர் ஜயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணியில் காணப்படினும்
அதன் பாட்டுடைத் தலைவனான முதலாம் குலோத்துங்கனை குறிப்பதன்று.
(The Kalingattupparani calls Kulantaka Virudarajabhayankara, Akalanka, Abhaya and Jayadhara. Ref: The Colas – K.A.N.Sastri, p.330).
அது விக்கிரம சோழனுக்கே வழங்கிய சிறப்புப் பெயர் என்பது கல்வெட்டுகளால் நன்கு தெளிவாகிறது.
கல்வெட்டுகளில் குலோத்துங்கனுக்கு அப்பெயர் காணப்படவில்லை.
ஒட்டக் கூத்தர் தனது ‘விக்கிரமசோழன் உலாவில்,’ 152, 182, 209, 256, 284, முடிவு வெண்பா ஆகிய கண்ணிகளில்
விக்கிரமனை அகளங்கன் என்று கூறியிருப்பது கொண்டு, அப்பெயர் இவனுக்கே சிறப்புப் பெயராக வழங்கியது என்பதை அறியலாம்.
‘எங்கோன் அகளங்கன் ஏழுலகும் காக்கின்ற செங்கோல் கொடுங்கோல் சிலர்க்கென்றாள்’ என்று அவர் குறிப்பிடுவதால்
விக்கிரம சோழனே அகளங்கன் ஆவான். இவனது சிறப்புப் பெயரில் ஒரு திருச்சுற்றும்,
இயற்பெயரில் ஒரு திருச்சுற்றும் இவனே நிறுவினான் என்றும் கொள்வதே பொருத்தமுடையது.

திருவரங்கம் கோயிலில் விக்ரமசோழன் காலத்துக் கல்வெட்டுகள் பதினான்கு அமைந்துள்ளன.

பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த திருந்நெடுந்தாண்டகம் வியாக்யானத்தில் விக்ரமசோழனைப் பற்றிய
குறிப்பொன்று அமைந்துள்ளது – திருநெடுந்தாண்டகம் 25-ஆம் பாட்டு ‘மின்னிலங்கு’.
“விக்கிரம சோழ தேவன் எனும் அரசன் தமிழிலக்கியங்களில் மிகவும் ஈடுபாடுடையவன்.
சைவ வைணவப் புலவர்கள் பலர் அவனது சபையில் இருந்தனர். அவ்வப்போது அவரவர்களுடைய சமய இலக்கியங்களைப்
பற்றிக் கூறச் சொல்லிக் கேட்பதுண்டு. ஒரு சமயம் அவன், ‘தலைமகனைப் பிரிந்த வருத்தத்தோடு இருக்கிற
தலைமகள் கூறும் பாசுரங்கள் சைவ வைணவ இலக்கியங்களில் எப்படி இருக்கிறது? என்று கூறுங்கள் கேட்போம்” என்றான்;
உடனே சைவப் புலவர், சிவனாகிய தலைமகனைப் பிரிந்த நாயகி “எலும்பும் சாம்பலும் உடையவன் இறைவன்” என்று வெறுப்புத் தோற்ற,
சிவனைப் பற்றிக் கூறும் நாயன்மார் பாடல் ஒன்றைக் கூறினார்.
வைணவப் புலவரோ, எம்பெருமானைப் பிரிந்த வருத்தத்தில் பரகாலநாயகி கூறுகின்ற ‘மின்னிலங்கு திருவுரு’ என்ற
திருநெடுந்தாண்டகப் பாசுரத்தைக் கூறினார்.
இரண்டையும் கேட்ட விக்கிரமசோழ தேவன், ‘தலைமகனைப் பிரிந்து வருந்தியிருப்பவள், கூடியிருந்தபோது
தன் காலில் விழுந்த தலைமகனைப் பற்றிக் கூறும்போதும், ‘மின்னிலங்கு திருவுரு’ என்று
புகழ்ந்து கூறியவளே சிறந்த தலைமகள். ‘எலும்பும் சாம்பலும் உடையவன்’ என்று கூறிய
மற்றொரு தலைமகள் பிணந்தின்னி போன்றவள்” என்றானாம்.

இவனுடைய திருவரங்கக் கல்வெட்டுகளில் சிதம்பரத்தில் நடராஜருடைய விமானத்திற்குப்
பொன்வேய்ந்ததைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் இராசேந்திரன் புதல்வி மதுராந்தகியே முதலாம் குலோத்துங்கனின் மனைவி.
முதலாம் குலோத்துங்கனுடைய ஏழு புதல்வர்களில் விக்கிரமசோழன் நான்காமவன். (Ref: The Colas by K.A.N.Sastri, p.332).

நான்காம் திருச்சுற்று – ஆலிநாடன் திருச்சுற்று:
திருமங்கையாழ்வார் ஆடல்மா என்ற குதிரையின் மீதேறிச் சென்று பகைவர்களை வென்றார்.
பல திவ்யதேசங்களை மங்களா சாஸனம் செய்தருளி திருவரங்கத்திலே பல ஆண்டுகள் எழுந்தருளியிருந்து
திருமதில் கைங்கர்யங்களைச் செய்து வந்தார். அவரால் ஏற்படுத்தப்பட்ட திருமதிலுக்கு உட்பட்ட திருச்சுற்றிற்கு
ஆலிநாடன் திருவீதி என்று பெயர். பாட்டின் இரண்டாம் அடியில் ஆடல்மாறன் அகளங்கன் என்னும் சொற்றொடரில்
உள்ள ஆடல்மா என்ற சொல் ஆலி நாடன் அமர்ந்துறையும் என்ற சொல்லோடு கூட்டிக் கொள்ள வேண்டும்.

மூன்றாம் திருச்சுற்று – குலசேகரன் திருச்சுற்று :
குலசேகராழ்வார் தமது பெருமாள் திருமொழியில் முதன் மூன்று பத்துக்களாலே (30 பாசுரங்கள்) கொண்டு
திருவரங்கனை மங்களாசாஸனம் செய்துள்ளார்.
அணியரங்கன் திருமுற்றத்தை குறிப்பிடும் குலசேகராழ்வார், மூன்றாம் திருச்சுற்றான குலசேகரன் திருச்சுற்றினை
அமைத்தார் என்று கொள்வது பொருத்தம்.
மூன்றாம் பிரகாரத்தில் சேனை வென்றான் மண்டபம் கட்டி அந்தப் பிரகாரத்தினை நிர்மாணம் செய்தார்.

இரண்டாம் திருச்சுற்று – இராசமகேந்திரன் திருச்சுற்று:
இவன் முதலாம் இராசேந்திரனுடைய மூன்றாவது மைந்தன். இவனுடைய ஆட்சிக்காலம் கி.பி.1058-1062.
மும்முடிச் சோழன் என்ற பெயர் பெற்றவன்.
இராசமகேந்திரன், ஆகமவல்லனை (முதலாம் சோமேƒவரன்) முடக்காற்றில் புறமுதுகிட்டு ஓடும்படி
செய்த பெருவீரன் என்று, அவன் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் உணர்த்துகின்றன
பாடரவத் தென்னரங்கமே யாற்குப் பன்மணியால் ஆடவரப்பாயல் அமைத்தோனும்” என்னும்
விக்கிரம சோழன் உலா (கண்ணி – 21) அடிகளால் இவன் திருவரங்கநாதரிடம் அன்பு பூண்டு,
அப்பெருமானுக்குப் பொன்னாலும் மணியாலும் அரவணை ஒன்று அமைத்தான் என்பதும் அறியப்படுகின்றது.

முதலாம் திருச்சுற்று – தர்மவர்மா திருச்சுற்று: தர்மவர்மா என்ற சோழமன்னன் இந்தத் திருச்சுற்றினை அமைத்தான்
என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த மன்னனைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் நமக்கு கிடைக்கவில்லை.

———-

ஸ்ரீரங்கராஜஸ்வதவம் பூர்வ சதகத்தில் (35) ஸ்ரீபராசர பட்டர் கோயிலைச் சுற்றி ஸப்த பிரகாரங்கள் இருப்பது
ஸப்த சாகரங்களை ஒக்கும் என்று அருளிச் செய்துள்ளார்.

ப்ராகாரமத்யாஜிரமண்டபோக்த்யா ஸத்வீபரத்நாகர ரத்நசைலா
ஸர்வம்ஸஹா ரங்கவிமாநஸேவாம் ப்ராப்தேவ தந்மந்திரமாவிரஸ்தி >

(யாதொரு ஸ்ரீரங்க மந்திரத்தில் திருமதிள்கள், இடைகழி, திருமண்டபங்க ளென்னும் வியாஜத்தினால்
ஸப்த த்வீபங்களோடும் ஸப்த ஸாகரங்களோடும் மஹாமேருவோடுங் கூடின பூமிப் பிராட்டியானவள்
ஸ்ரீரங்கவிமான ஸேவையை – அடைந்தனள் போலும்; – அந்த ஸ்ரீரங்க மந்திரம் கண்ணெதிரே காட்சி தருகின்றது.)
ஸ்ரீரங்கமந்திரம் பூமிப்பிராட்டி போன்றிருக்கிறதென்கிறார். ஸ்ரீரங்க விமானத்தை ஸேவிப்பதற்காகப்
பூமிப்பிராட்டி தன் பரிவாரங்களோடு இங்கு வந்து சேர்ந்திருக்கிறாள் போலும்.
கடல்களும் கடலிடைத்தீவுகளும் சிறந்த மலைகளும் பூமிப்பிராட்டியின் பரிவாரங்களாம்.
கோயிலைச்சுற்றி ஸப்தப்ராகாரங்கள் இருப்பது ஸப்த ஸாகரங்களை ஒக்கும்;
ஒவ்வொரு திருமதிலுக்கும் இடையிலுள்ள ப்ரதேசம் ஸப்த த்வீபங்கள்போலும். திருமண்டபங்கள் ரத்நபர்வதங்கள் போலும்.
ஆக இப்பரிவாரங்களுடனே பூமிப்பிராட்டி வந்து சேர்ந்து ஸ்ரீரங்க விமானஸேவையைப் பெற்றிருப்பதுபோல்
மந்திரம் தோன்றுகின்ற தென்றாராயிற்று.

————-

நிஹமாந்த மஹா தேசிகன் அருளிச் செய்துள்ள ‘ஹம்ஸஸந்தேஸம்’ என்னும் நூலில்
‘ஸ்ரீரங்கம் என்னும் பெயர் பெரிய பெருமாள் இங்கு எழுந்தளிய பிறகு ஏற்பட்டது.
அவர் இவ்விடத்திற்கு வருமுன் சேஷபீடம் என்ற பெயர் இவ்வூருக்கு வழங்கி வந்தது.
சந்திரபுஷ்கரணிக்கு அருகில் அச்சேஷபீடம் அமைந்திருந்தது. ஸ்ரீரங்க விமானம் அங்கு வந்ததற்குப் பின்
ஸ்ரீரங்கம் என்ற பெயர் ஏற்பட்டது” போன்ற செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

————-

ஸ்ரீ ராமாநுஜரைப் பற்றி தனிப்பாடல்கள் –

திக்கு நோக்கித் திரும்பித் திரும்பியே தேவராசர் தம் கோயிலை நோக்கியே
செக்கர் மேனி மிகப் பெருங் கைகளால் சோர்ந்த கண்கள் பனி நீர் தெளித்திட
மிக்க கோயில் பெருவழி தன்னிலே வேதம் வல்ல மறையோர்கள் தம்முடன்
புக்ககத்துக்குப் போகிற பெண்கள் போல் போயினார் பெரும் பூதூர் முனிவனார்

சந்ததியில்லா மனைமகள் போலே தடமுலையில்லா மடமகள் போலே
செந்தணலில்லா ஆகுதி போலே தேசிகனில்லா ஓதுகை போலே
சந்திரனில்லாத் தாரகை போலே இந்திரனில்லா உலகம் போலே
எங்கள் இராமானுசமுனி போனால் இப்புவி தான் இனி எப்படி யாமோ?

———–

1.மார்கழி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி – உத்பத்தி ஏகாதசி
2.மார்கழி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – வைகுண்ட ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி)
3.தை மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – ஸபலா ஏகாதசி
4.தை மாத சுக்லபக்ஷ ஏகாதசி – புத்ரதா ஏகாதசி
5.மாசி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – ஷட்திலா ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி)
6.மாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – ஜயா ஏகாதசி
7.பங்குனி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – விஜயா ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி)
8.பங்குனி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – ஆமலகி ஏகாதசி
9.சித்திரை மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – பாபமோசனிகா ஏகாதசி
10.சித்திரை மாத சுக்லபக்ஷ ஏகாதசி – காமதா ஏகாதசி
11.வைகாசி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – வரூதினி ஏகாதசி
12.வைகாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – மோஹினி ஏகாதசி
13.ஆனி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – அபரா ஏகாதசி
14.ஆனி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – நிர்ஜலா ஏகாதசி
15.ஆடி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – யோகினி ஏகாதசி
16.ஆடி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – சயன ஏகாதசி( ஸ்ரீ மஹா விஷ்ணு சயனிக்கும் நாள்)
17.ஆவணி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி -காமிகா ஏகாதசி
18.ஆவணி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – புத்ரதா ஏகாதசி
19.புரட்டாசி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – அஜா ஏகாதசி
20.புரட்டாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – பத்மநாப ஏகாதசி
21.ஐப்பசி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – இந்த்ர ஏகாதசி
22.ஐப்பசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – பாபாங்குசா ஏகாதசி
23.கார்த்திகை மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – ரமா ஏகாதசி
24.கார்த்திகை மாத சுக்லபக்ஷ ஏகாதசி – பிரபோதினி ஏகாதசி
25.கமலா ஏகாதசி

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணாமாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

ஸ்ரீ அழகிய மணவாளன்–ஸ்ரீ கோபுரப்பட்டி ஸ்ரீ பால சயனப் பெருமாள்-

February 24, 2021

ஸ்ரீ அழகிய மணவாளன்’ எனப் பெயர்பெற்ற அரங்கன் தான் சிறுவன் வடிவில் சென்று பிரசாதம் வழங்கியுள்ளான்
என உணர்ந்து கொண்ட ராமாநுஜர்,“நான் யாரையும் அனுப்பவில்லை.
‘பூதப்ருத்’ என்ற திருநாமத்துக்கு எல்லா உயிர்களுக்கும் உணவளிப்பவன் என்று பொருள்.
‘பூதப்ருதே நம:’ என ஜபம் செய்த உமக்கு ‘பூதப்ருத்’ ஆன அரங்கன், தானே வந்து சத்துள்ள உணவளித்து
மெலிந்திருந்த உங்களை இன்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வைத்திருக்கிறான்!” என அந்த ஏழையிடம் சொல்லி,
அரங்கனின் லீலையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.
“பூதப்ருதே நம:” என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ஆறாவது திருநாமத்தை ஜபிக்கும்
அடியார்களுக்கெல்லாம் அரங்கனே நல்ல உணவளித்து அவர்களைச் சத்துள்ளவர்களாக ஆக்கிடுவான்.
இதுவே ராமாநுஜர் காட்டிய சத்துணவுத் திட்டம்.

————

காவேரி-கொள்ளிடத்திற்கு இடையே ரங்கன் அனந்த சயனத்தில் இருப்பது போலவே மாற்றொரு ரங்கன்
பெருவளவன்-கம்பலாறு தீப கற்பத்தில் பள்ளி கொண்டிருக்கிறான்.
பெருவளவனாறு இப்போது பெருவளை வாய்க்காலாக சுருங்கி விட்டது.
கொல்லி மலையிலிருந்து புறப்பட்டு பெருக்கெடுத்து ஓடிய கம்பலாறு தடம் மாறி இன்று தடயம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது.
தற்சமயம் அங்கு தென்படுவது புள்ளம்பாடி வாய்க்கால் என அழைக்கப் படுகிறது.
கல்வெட்டுக்களில் புதுக்கிடையில் ஜல சயனத்துப் பெருமாள் ஸ்ரீ ஆதி நாயகப் பெருமாள் என்று இந்த ரங்கன்
அறியப்படுவதில் இருந்து பழைய கிடைக்கை திருவரங்கம் என்பதை உணர முடிகிறது.
இத்தலம் இருக்கும் ஊர், அழகிய மணவாளத்திற்கு அருகாமையில் உள்ள கோபுரப்பட்டி.
இந்த இரண்டு சிற்றூர் களுக்கிடையே சரித்திர தொடர்புகள் உண்டு.
இங்கு சலசலத்துக் கொண்டிருக்கும் பெருவள வாய்க்காலின் கரையில் தான் 12,000 பேர்களுக்கு ஒருசேர
ஆடி அமாவாசை அன்று திதி கொடுக்கப் பட்டு ஆதி நாயகப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் இன்றும் நடக்கிறது.

மணச்சநல்லூரை கடந்து திருப்பைஞ்சலி செல்லும் வழியில் தற்செயலாக அழகிய மணவாளம் எனும் ஊரில் காரை நிறுத்தினேன்.
அது பல வகையில் மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். அதிகம் வீடுகள் இல்லாத அந்த கிராமத்தில்
பதினெட்டு அடி உயரத்தில் சுந்தர ராஜ பெருமாளின் திருமுக மண்டலம். இரண்டு அடிக்கு கீழே இரு தாயர்களும்.
குறுக்கு வழியில் நடந்து போனால் பத்து நிமிடத்தில் அடையக்கூடிய தொலைவில் தான் கோபுரப்பட்டி.
அளக்கும் படியை தலைக்கு வைத்து பால சயனத்தில் ரங்கன். ஆதி நாயகப் பெருமாள் எனும் திரு நாமம்.

திருவரங்க சரித்திரத்தின் ஏடுகளில் இடம் பெற்றவை இவ்விரு ஊர்களும்.
1323ல் உலுக் கான் படையெடுப்பில் ரங்கனை காக்கும் பணியில் உயிர் நீத்த பன்னிரண்டு ஆயிரம் வீர வைஷ்ணவர்களுக்கு
இங்கிருக்கும் ஓடைக் கரையில்தான் ஒவ்வொரு ஆடி அமாவாசை அன்று ஒரு சேர திதி கொடுக்கப் படுகிறது.
அது மட்டும் இந்த சிற்றூர்களின் புகழுக்கு காரணமல்ல. இங்கு தான் சுல்தான் படைகளின் வெறியாட்டத்திலிருந்து
தப்பி வந்தவர்கள் குடியேறி நாற்பத்தி எட்டு வருடங்களுக்கு பின்னால் மிக அசாத்தியமான கார்யங்களை செய்தார்கள்.
தம் முன்னோர்களின் அர்பணிப்புகளை நினைத்தும் வருவோரிடம் எடுத்துரைத்தும் இன்றும் பெருமை கொள்கிறது இக்கிராமங்கள்.

யார் இந்த 12,000 பேர்? எதற்காக ஒரே நாளில் பிதுர் கிரியை?
இதை அறிய சுமார் 700 ஆண்டுகள் பின் நோக்கி செல்ல வேண்டும். வாருங்கள், போவோம்.

1323ம் வருடம்-திரு அரங்கம் அரண்டு கிடக்கிறது. புயலென சீறிப் பாய்ந்து வரும் டெல்லி சுல்தானின் படைகள்
வழி எங்கும் எதிரிப் போர் வீரர்கள் மட்டுமல்லாது சாதாரண மக்களையும் ரத்த வெறி கொண்டு வேட்டையாடி,
ரத்தினங்களை கொள்ளையடித்து, மாபெரும் நகரங்களை நிர்மூலமாக்கி, தீக்கிரையிட்டு இடும் காடுகளாக்கி
இப்போது ரங்க செல்வத்தை குறி வைத்து வந்து கொண்டிருப்பதாக செய்திகள் வந்ததே அதற்கு காரணம்.

ரங்கன் கோவில் வாசலில் கூட்டம். பிள்ளை லோகாச்சார்யர் தலைமை.
‘குலசேகரன் வழியின் மேல் கல் சுவர் எழுப்பி கருவறையில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கனை மறைத்து விடுவோம்.
நான், உற்சவர் அழகிய மணவாளனை எடுத்துக் கொண்டு தெற்கு நோக்கி செல்கிறேன்.
விருப்பம் இருப்பவர்கள் என்னுடன் வரலாம். சிறு குழுவாக புறப்படுவோம். நிலைமை சரியானவுடன் அரங்கம் திரும்புவோம்.
என்ன சொல்கிறீர்கள்?’. ‘வாழ்வோ, சாவோ எதுவாயினும் சரி, ரங்கனை பிரியோம், ரங்கத்தை விட்டு செல்ல மாட்டோம்’ என
சூளுரைத்து ஒரு கூட்டம் சேருகிறது. (கட கட வென்று பெரிதாகி அடுத்த சில தினங்களில் 12,000 பேர் அங்கேயே தங்கி விடுகின்றனர்).
‘சரி, இந்த இரு பிரிவிலும் சேராத குடும்பங்கள்
திருப்பாச்சில், கோவர்த்தனக்குடி, திருவரங்கப்பட்டி, அழகிய மணவாளம், கோவிந்தபுரம் ஆகிய பகுதிகளில் குடியேரட்டும்’ என முடிவாகிறது.

ரங்கன் கோவிலை காக்கும் பணியில் போரிட்டு மடிந்த அந்த 12,000 பேருக்கே
ஆடி அமாவாசை அன்று பெருவளை வாய்க்காலின் கரையில் ஒன்றாக திதி கொடுக்கப்படுகிறது. எப்பேர்பட்ட தியாகம் !

1311ல் மதுரை, சிதம்பரம், ஸ்ரீரங்கத்தை சூறையாடினானே கில்ஜியின் பிரதிநிதியான மாலிக் கபூர்
அவன் இயற் பெயர் என்ன தெரியுமா? – சந்த் ராம்.
திருவரங்கத்தை தாக்கி செல்வத்தையெல்லாம் கொள்ளை அடிக்கிறான். அதில் ரங்கன் சிலையும் உண்டு.
டில்லி சுல்தானுக்கு நாடு பிடிக்கும் ஆசையெல்லாம் கிடையாது. அவனுக்கு தெரியும்,
ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து ஒரு ராஜ்ஜியத்தை ஆள முடியாதென்று.
அவனுடைய நோக்க மெல்லாம் பொக்கிஷங்களை சூறையாடுவது தான். மாலிக் கபூர் டில்லி திரும்புகிறான்.
(நிற்க. இக்கட்டுரை பூலோக வைகுந்தமான ரங்கத்தை மட்டுமே மையமாக வைத்து எழுதப்பட்டது.
ஆகவே, மாலிக் கபூர் மற்றும் உல்லு கான் தரை மட்டமாக்கிய காஞ்சி, மதுரை போன்றவை இதில் சேர்க்கப்படவில்லை).
அலாஉதின் கில்ஜி அவற்றை பங்கிட்டு கொடுக்கும் போது ஒரு சிற்றரசனிடம் ரங்கன் சிலை சேருகிறது.
அவனுடைய புதல்வி சுரதானிக்கு ரங்கனை மிகவும் பிடித்து விடுகிறது.

இங்கு, திருக்கரம்பனூர் பெண் ஒருத்தி ரங்கனை காணாமல் உணவு உட்கொள்வதில்லை எனும் விரதத்தை மேற்கொண்டு வருகிறாள்.
சுல்தானியப் படைகளுடன் சென்று உளவறிந்து ரங்கம் திரும்பி செய்தி சொல்கிறாள்.
நாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற குழுவொன்று டில்லி செல்கிறது. பாதுஷா அவர்களின் திறமைகளில் மகிழ்ந்து நிறைய பரிசுகள் கொடுக்கிறார்.
அவர்கள், அவை வேண்டாம் ரங்கன் சிலைதான் வேண்டும் என்று சொல்கிறார்கள். பாதுஷாவும் அதற்கு அனுமதி தருகிறார்.
அந்தப் புரத்தில் நுழையும் அந்நாட்டிய பெண்கள், சுரதானி ரங்கன் பிரேமையில் இருப்பதை கண்டு
அவளுக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்து சிலையை கவர்ந்து செல்கின்றனர். மயக்கம் தெளிந்த சுரதானி அழுது புலம்புகிறாள்.
பாதுஷா நாட்டியக் குழுவை பிடித்து சிலையை மீட்டு வரச் சொல்கிறார். இதை முன்பே ஊகித்திருந்த அவர்கள் மாற்று வழியில் செல்கின்றனர்.
ரங்கம் வரை வந்த சுரதானி சிலையை காணாமல் மனமொடிந்து உயிர் விடுகிறாள்.
அதன் பின் ரங்கன் சிலை திருவரங்கம் திரும்புகிறது.
சுரதானியின் நினைவாக அவள் ஓவியம் இரண்டாவது பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் தீட்டப்பட்டு
இன்றும் அவள் துளுக்க நாச்சியாராக வணங்கப் படுகிறாள்.

(இச்சம்பவத்தை வைணவத்தை சீரமைத்த பிரதம ஆச்சார்யர் ராமனுஜரோடு இணைத்தும் கூட கதைகள் உண்டு.
ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில் டில்லி சுல்தானோ, தென்னக படையெடுப்போ கிடையாது).

அபரஞ்சி தங்கத்தால் ஆன அழகிய மணவாள உற்சவ விக்ரஹத்தையும், பொக்கிஷங்களையும் பத்திரமாக எடுத்துக் கொண்டு
ஒரு குழு ரங்கத்தை விட்டு போய்விட்டதென அறிந்த சுல்தான் படை உபதளபதி கண்ணில் பட்டவர்களையெல்லாம்
வெட்டி வீழ்த்துமாறு கட்டளை இட்டு அக்கூட்டத்தை பிடித்து வரவும் ஏற்பாடு செய்தான்.
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த எம்பெருமான் அடியார்களில் ஒருத்தியான வெள்ளாயி அவன் முன்னே
பல மணி நேரங்கள் ஆடி அவனை மயக்கி, தனியில் காதல் மொழி பேசி, போதை கொள்ள வைத்து பின்னர்
கிழக்கு கோபுரத்திற்கு மேலே கூட்டிச் சென்று கீழே தள்ளி கொன்று தானும் குதித்து தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.
நாற்பத்தியெட்டு ஆண்டுகளுக்கு பின் ரங்கத்தில் முதல் முறையாக, வெற்றி வீரனாக காலடி எடுத்து வைத்த
விஜய நகர அரசன் கம்பணா அவள் செய்த த்யாகத்தையும் வீர சாகசத்தையும் போற்றி
அந்த எம்பெருமான் அடியாளின் நினைவாக அக்கோபுரத்துக்கு அவள் பெயரையே சூட்டினான்.

இவையெல்லாம் நடந்து முடிந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின்னரே
காக்கத்திய மன்னன் பிரதபருத்திரனை அடக்கும் பொருட்டு உல்லு கான் தலைமையில் ஒரு பெரும் படை
வாரங்கல் கோட்டையை தாக்கி அப்போரில் வெற்றில் பெற்ற களிப்பில் மீண்டும் தமிழகத்தில் நுழைந்தது.

பிள்ளை லோகாசார்யரும், ஸ்வாமி வேதாந்த தேசிகரும் இச்சமயத்தில் தான் ரங்கனை காக்கும் பணியில் ஈடு பட்டனர்.
வேதாந்த தேசிகருக்கு அடுத்ததாக வருபவரே மணவாள மாமுனிகள்.

சுதர்சன ஆச்சார்யர்’தேசிகரே, யாம் பெற்ற செல்வங்கள் மூன்று. அதோ, தூணுக்கு பின்னால் இருளில்
மறைந்து நிற்கிறார்களே இரு சிறுவர்கள், அவர்கள் எம் புதல்வர்கள்.
மூன்றாவது, என் வஸ்திரத்தில் ஒளித்து வைத்திருக்கும் சுருதப் பிரகாசிகை*. இம்மூன்றையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்’
என்று கேட்டுக் கொள்கிறார். அவரது உயிர் கூட்டை விட்டு பிரிந்து ரங்கனின் திருவடிகளை அடைகிறது.

*சுருதப் பிரகாசிகை : பிரம்ம சூத்திரத்துக்கு ராமானுஜர் வடமொழியில் எழுதிய உரை தான் ஸ்ரீ பாஷ்யம்.
அந்நூலுக்கு நடாதூர் அம்மாள் எழுதிய விளக்கம் தான் சுருதப் பிரகாசிகை.
ரங்கனுக்கு நைவேத்யம் செய்யப்படும் பாலை சூடு சரியாக இருக்கிறதா என்று கொஞ்சம் தொண்டையில் இட்டுப் பார்ப்பாராம் அவர்.
அதன் காரணமாகவே அவருக்கு அப்பெயர் வந்ததாம்.

ஸ்வாமி தேசிகர் சுதர்சன ஆச்சார்யருக்கு ஈமக் கிரியைகளை செய்ய முடியாமல் போனதே என்ற வருத்தத்துடன்
அந்த இரு இளம் தளிர்களை தம்முடன் கூட்டிக் கொண்டு சுல்தான் படைகளின் கண்ணில் படாமல் நடந்தே
கொங்கு நாட்டின் சத்யமங்கல காட்டுப் பகுதிக்குள் சென்று விட்டார்.
அவர் ரங்கன் தரிசனத்திற்கு மேல்கோட்டை வருவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும்.

ரங்கன், மதுரையை கடந்து, திருக்குருகூர் (நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் அவதாரத் தலம்) வழியாக
நாகர்கோவில் சென்றடைந்து, பின் திரு அனந்தன் புரம் எழுந்தருளி, கோழிக்கூட்டில் நம்மாழ்வாரை சந்தித்து,
திரு நாராயண புரம் (மேல்கோட்டை) – சத்தியமங்கலம் – திரு நாராயண புரம் வந்தடைந்து,
இதோ இப்போது நாம் அறியா பாதை வழியே திருமலைக் காடுகளில் புகுந்து விட்டார்.
பத்தொன்பது ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு, இன்னும் பல இடங்களில் தங்கி 1371ல் தான்
மறுபடி அரங்கம் எழுந்தருளப் போகிறார்.

இந்த கடைசி பத்து ஆண்டுகள் ஒரு பிரசித்தி பெற்ற சாம்ராஜ்யத்தின் ஏடுகளில் மிக முக்கிய மானவை.
அதில் சில தாள்கள் (ஓலைகள்) கங்கா தேவியால் எழுதப்பட்டு 1916ல் திரு அனந்தன் புரத்தின் ஒரு நூலகத்தில்
வேறு ஏடுகளுக்கு இடையே கிடைக்கப் பெற்றவை. யார் இந்த கங்கா தேவி? அந்த ஓலைகளில் என்ன எழுதப்பட்டிருந்தது?

ஹரிஹரனும், புக்கனும். அவர்கள் தோற்றுவித்த சாம்ராஜ்ஜியம் தான் விஜய நகரம்.
அவர்களின் குருவான வித்யாரண்யர் தான் அந்த சாராத பீட ஆச்சார்யர்.
அவர் பெயராலேயே – வித்யா நகரம் – ஸ்தாபிக்கப்பட்டு பின்னாளில் அது மருவி மிகப் பொருத்தமாக விஜய நகரம் ஆயிற்று
ஹரிஹரன் தான் அதன் முதல் மன்னன். அவன் இறந்ததும் புக்கன் ராஜ்ஜிய பாரத்தை தன் தோள்களில் ஏற்றுக் கொண்டான்.
அவனுடைய புதல்வனே கம்பணன். முள்வாய் (முல்பாகல்) பட்டண அரசன்.
அவனுடைய சர்வ சைன்யாதி பதியே கோபணா.
இவர்கள் தான் பின்னாளில் அரங்கத்தை மீட்டு அழகிய மணவாளனை மறுபடி அவன் இருப்பிடம் கொண்டு சேர்க்கப் போகிறவர்கள்.
இவர்களின் வீர சாகசங்களை மதுர காவியமாக படைத்தவளே கங்கா தேவி, கம்பணனின் மனைவி.

இன்றைக்கு சுமார் அறுநூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்னால் கம்பணாவின் மனைவி கங்கா தேவியினால்
‘மதுரா விஜயம்’ நூலில் எழுதப்பட்டவை. அவள் எழுதிய ஏடுகள் 1916ம் ஆண்டு திரு அனந்தன் புரத்தில்
ஒரு தனியார் நூலகத்தில் வேறு முக்கியமில்லாத ஓலைகளுக்கு இடையே கண்டு எடுக்கப் பட்டவை.
கங்கா தேவி தன் கணவனுடனேயே போர்க்களம் சென்று தன் கண்ணால் கண்டதை வீர கம்பராய சரித்திரமாக தொடுத்ததுதான் ‘மதுரா விஜயம்’.

அகிலாண்டேஸ்வரி மீனாக்ஷி பேச ஆரம்பித்தாள்.
கம்பணா , இதோ இந்த குறுவாளை பெற்றுக்கொள். இது விஸ்வகர்மாவினால் சிவபிரானிடம் கொடுக்கப்பட்டது.
அவர் இதனை பாண்டியர்களிடம் கொடுத்தார்.
அவர்களும் இதை வைத்துக்கொண்டு காலத்தால் அழிக்க முடியாத கீர்த்தியை அடைந்தார்கள்.
ஆனால், அவர்கள் புகழ் மங்குவதை உணர்ந்த அகத்திய மாமுனி இக்குறுவாளை உனக்கு கொடுத்துள்ளார்.
நீ, இயல்பிலேயே தைர்யசாலி. இவ்வாள் உன்னிடம் இருந்தால் நீ பராக்ரமசாலியாவாய்.
இதை தரித்திருக்கும் வரையில் எந்த ஆபத்தும் உன்னை அணுகாது. உனக்கு தோல்வி ஏற்படாது.
கடவுளர்கள் கூட உன்னை எதிர்க்க முடியாது. நீ, உடனே மதுரைக்கு புறப்படு.
அன்று வட மதுரையில் கண்ணன் கம்சனை கொன்றது போல் நீ அந்த யவன அரசனை கொல்வாய்.
துருக்கியர்களை விரட்டியடித்து தர்மத்தை நிலை நிறுத்துவாய். அவர்கள் ரத்தத்தை ஆறாய் ஓடவைப்பாய்.
சேதுக்கரைக்கு சென்று ஜய ஸ்தம்பம் நாட்டுவாய். தமிழ் பேசும் நாட்டை ஆளத் தொடங்குவாய்.
உன் ஆட்சியில் காவேரி பழக்கப்பட்ட யானை போல் அமைதியாய் ஓடுவாள். ஜய விஜயீ பவ’.

கருணை பொங்கும் அகன்ற விழிகளுடன் கம்பணாவை ஆசிர்வதித்த படியே அந்த சர்வேஸ்வரி அவன் புறக் கண்களிலிருந்து
மறைந்து ஹ்ருதயத்துக்குள் உறைந்தாள். சுற்றிலும் இருள் சூழினும் தன் அகத்தினுள்ளே பிரகாசத்தை உணர்ந்தான் கம்பணா.

371. பரிதாபி ஆண்டு, வைகாசி திங்கள் 17ம் நாள். ரங்க நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
நாற்பத்தியெட்டு வருடங்களுக்கு முன்னால் தன் இருப்பிடத்திலிருந்து அவசரஅவசரமாய் வெளியேறிய அழகிய மணவாளன்
காவிரியின் தென்கரையை அடைந்து, பின் தொண்டைமான் காட்டிற்குள் புகுந்து, திருக்கோஷ்டியூர், திருமால் இருஞ்சோலை,
யானைமலை, மதுரை, திருக்குருகூர், நாகர்கோவில், திருஅனந்தன்புரம், கோழிக்கூடு, திருநாராயணபுரம்,
திருமலைக் காடுகள், திருமலை, செஞ்சி, அழகிய மணவாளம் வழியாக தென் தேசங்களை பிரதக்ஷணம் செய்து
இப்போது காவிரியின் வடகரை கடந்து ரங்கத்திற்குள் மீண்டும் பிரவேசிக்கிறார்.
கேட்க வேண்டுமா ரங்கத்தினர் உற்சாகத்திற்கு? வீட்டு வாசல்கள் தெளிக்கப்பட்டு மாக்கோலங்கள். வாழைகள்.
மாவிலைத் தோரணங்கள். பூ மாலைகள். மேள தாளத்துடன் மங்கல இசை. விண்ணைப் பிளக்கும் வேத கோஷங்கள்.
தமிழ் மறை பிரபந்தங்கள். போரில் வெற்றி கண்ட கம்பண, கோபணருக்கு ஜய கோஷங்கள்.
வீதியெங்கும் மகிழ்ச்சி கூத்தாடல்கள். பல்லக்கில் நெஞ்சு நிறைந்து பவனி வரும் ரங்கனுக்கும்,
அதை சுமக்கும் விஜய நகர அரசன், படைத் தளபதிகளுக்கு ஆரத்திகள், அவர்கள் அனைவரின் மீதும் வாரி இறைக்கப் படும் பூக்கள்,
கொட்டும் முரசுகளின் பேரொலிகள் என திருவரங்கம் அதிர்ந்து கொண்டிருந்தது.

இக்கொண்டாட்டங்களை எல்லாம் பார்த்துக் கொண்டும், குழுமி இருந்த ஜன சமுத்திரத்தின் ‘ரங்கா, ரங்கா’
(அரை நூற்றாண்டுகளுக்கு முன்னால் இதே ரங்கா, ரங்கா முழக்கத்தோடு அவனுக்காக உயிர் துறந்த
ரங்க வீரர்களின் வம்சா வழி வந்தவர்களே இவர்கள்) எனும் சந்தோஷ கூச்சல்களை கேட்டுக் கொண்டும்,
அவர்களின் ஊடே புன்னகை தவழும் முகத்துடன் ஊர்வலமாய் சென்று தன் சாம்ராஜ்ஜிய பீடத்தில்
ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக புளகாங்கிதமாய் எழுந்தருளினார் அரங்கன்.
(காணாமல் போன நாச்சியார் உற்சவ பேரங்கள் இப்போது எப்படி வந்தன?
இவ்விக்ரஹங்கள் வேறு. இவை, அழகிய மணவாளர் திருமலையில் தங்கி இருந்த போது சந்திரகிரி அரசர் யாதவராயரால் செய்து வைக்கப் பட்டவை).

இச்சமயத்தில்தான் விஜய நகரத்தார் போரில் வெற்றி பெற்றதை ஸ்வாமி வேதாந்த தேசிகரிடம் நேரில் கூறி
அவரை திருவரங்கம் அழைத்து வந்திருந்தனர். எவர் முன்னிலையில் நாற்பத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்னால்
மூலவரை மறைக்கும் வகையில் குலசேகரன் வாயிலில் சுவர் எழுப்பப்பட்டதோ, நூறு பிராயத்தை கடந்திருந்த அவரே
இப்போது முன் நின்று அக்கற்தடுப்பை தகர்த்து ரங்கனை மீண்டும் உலகத்தாருக்கு வெளிப்படுத்தினார்.
அரங்கனை முதன் முறையாய் தரிசித்தவர்கள் பரவசமாகி ‘ரங்கா, ரங்கா’ என கூக்குரலிட்டனர்.
பலரின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர். பிறகு, ரங்கனுக்கு முறைப்படி வெகு விமர்சையாக பூஜைகள் நடந்தது.
ஸ்வாமி தேசிகர், சுல்தானுக்கு எதிரான போரில் விஜய நகர படைகளுக்கு தலைமை வகித்து வெற்றி கண்ட
கோபணரை போற்றி ஒரு ஸ்லோகம் எழுதினர். அது கல்லில் பொறிக்கப்பட்டு இன்றும் காணக் கிடைக்கிறது.

ரங்கன் மட்டும் அல்ல, நாச்சியாரும் கூட, தற்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டவரும்,
வில்வ மரத்தின் கீழே புதைக்கப்பட்டு இப்போது வெளியே எடுக்கப்பட்டவருமாக இருவராயினர்.
மறுபடி விவாதம். கடைசியில், இருவரையுமே வைத்துக் கொள்ளலாம் என முடிவாயிற்று.

கோபுரப்பட்டி பால சயனப் பெருமாள்: இப்பகுதி ‘மேல் தலைக்காவிரி பூம்பட்டினம்’, ‘ராஜராஜ வள நாடு’, ‘புராதன புரி’
என்று பல்வேறு பெயர்களால் அறியப்பட்டது. 1342ல், வீர வள்ளாலன் கண்ணூர் கொப்பத்தை முற்றுகை இட்ட போதும்,
பின்னர் 1498ல் இலங்கை உலகன் என்ற தோழப்பானாலும் திருப்பணிகள் செய்யப் பட்டுள்ளது.
இக்கோவில் மூலவர் புதுக்கிடையில் ஜலசயனத்து பெருமாள் என்று கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுவதால்
பழைய கிடை திருவரங்கம் என தெளிவாகிறது.

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் —

ஸ்ரீரங்கம் –25 வகையான ஏழின் சிறப்பு–

February 8, 2021

*ஸ்ரீரங்கம் ~ ஏழின் சிறப்பு..!*

*01.* ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் *ஏழு பிரகாரங்களுடன்.,
ஏழு மதில்களை* கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.

*02.* ஏழு *பெரிய* பெருமை உடைய….
1) பெரிய கோவில்.,
2) பெரிய பெருமாள்.,
3) பெரிய பிராட்டியார்.,
4) பெரிய கருடன்.,
5) பெரியவசரம்.,
6) பெரிய திருமதில்.,
7) பெரிய கோபுரம்.,
இப்படி அனைத்தும் *பெரிய* என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்….

*03.* ஸ்ரீரங்கம் அரங்கனாதருக்கு ஏழு நாச்சிமார்கள்….
1) ஸ்ரீதேவி.,
2) பூதேவி.,
3) துலுக்க நாச்சியார்.,
4) சேரகுலவல்லி நாச்சியார்.,
5) கமலவல்லி நாச்சியார்.,
6) கோதை நாச்சியார்.,
7) ரெங்க நாச்சியார் ஆகியோர்….

*04.* ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள்
தங்க குதிரை வாஹனத்தில் எழுந்தருளுவார்….
1) விருப்பன் திருநாள்.,
2) வசந்த உற்சவம்.,
3) விஜயதசமி.,
4) வேடுபரி.,
5) பூபதி திருநாள்.,
6) பாரிவேட்டை.,
7) ஆதி பிரம்மோத்சவம்.,
ஆகியவை….

*05.* ஸ்ரீரங்கம் கோவிலில் வருஷத்திற்கு ஏழு முறை (மாதங்கள்) நம்பெருமாள்
திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்….
1) சித்திரை.,
2) வைகாசி.,
3) ஆடி.,
4) புரட்டாசி.,
5) தை.,
6) மாசி.,
7) பங்குனி….

*06.* ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் ஏழாம் திருநாளன்று
வருஷத்திற்கு ஏழு முறை (மாதங்கள்) நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார்….
1) சித்திரை.,
2) வைகாசி.,
3) ஆவணி.,
4) ஐப்பசி.,
5) தை.,
6) மாசி.,
7) பங்குனி….

*07.* ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்திரி உற்சவத்தில் *ஏழாம் திருநாளன்று*
ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

*08.* தமிழ் மாதங்களில் *ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும்* (30 நாட்களும்)
தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

*09.* ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.
*ராமாவதாரம் ஏழாவது* அவதாரமாகும்.

*10.* இராப்பத்து *ஏழாம் திருநாளன்று* நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

*11.* ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்.
1) கோடை உற்சவம்.,
2) வசந்த உற்சவம்.,
3) ஜேஷ்டாபிஷேகம்., திருப்பாவாடை.,
4) நவராத்திரி.,
5) ஊஞ்சல் உற்சவம்.,
6) அத்யயநோத்சவம்.,
7) பங்குனி உத்திரம்….

*12.* பன்னிரண்டு ஆழ்வார்களும் *ஏழு சன்னதிகளில்* எழுந்தருளி இருக்கிறார்கள்.
1) பொய்கையாழ்வா., பூதத்தாழ்வார்., பேயாழ்வார்.,
2) நம்மாழ்வார்., திருமங்கையாழ்வார்., மதுரகவியாழ்வார்.,
3) குலசேகராழ்வார்.,
4) திருப்பாணாழ்வார்.,
5) தொண்டரடிப் பொடியாழ்வார்.,
6) திருமழிசையாழ்வார்.,
7) பெரியாழ்வார்., ஸ்ரீஆண்டாள்….

*13.* இராப்பத்து *ஏழாம் திருநாள்* நம்மாழ்வார் பராங்குச நாயகி அலங்காரத்தில் வருவதால்
அன்று மட்டும் ஸ்ரீஸ்தவம் மற்றும் ஸ்ரீகுணரத்ன கோசம் சேவிக்கப்படும்….

*14.* பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் *ஏழு கோபுரங்கள்* உள்ளன.
1) நாழிகேட்டான் கோபுரம்.,
2) ஆர்யபடாள் கோபுரம்.,
3) கார்த்திகை கோபுரம்.,
4) ரங்கா ரங்கா கோபுரம்.,
5) தெற்கு கட்டை கோபுரம் – I.,
6) தெற்கு கட்டை கோபுரம் – II.,
7) ராஜகோபுரம்….

*15.* ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார்.
1) வசந்த உற்சவம் ~ நீராழி மண்டபம்.,
2) சங்கராந்தி ~ சங்கராந்தி மண்டபம்.,
3) பாரிவேட்டை ~ கனு மண்டபம்.,
4) அத்யயநோற்சவம் ~ *(தெரிந்தவர்கள் கூறுங்கள்)*
5) பவித்ர உற்சவம் ~ பவித்ர உற்சவ மண்டபம்.,
6) ஊஞ்சல் உற்சவம் ~ ஊஞ்சல் உற்சவ மண்டபம்.,
7) கோடை உற்சவம் ~ நாலுகால் மண்டபம்….

*16.* ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டு களிக்கும் சேவைகளாகும்….
1) பூச்சாண்டி சேவை.,
2) கற்பூர படியேற்ற சேவை.,
3) மோகினி அலங்காரம்., ரத்னங்கி சேவை.,
4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்.,
5) உறையூர்., ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை.,
6) தாயார் திருவடி சேவை.,
7) ஜாலி சாலி அலங்காரம்….

*17.* திருக்கோயில் வளாகத்தில் உள்ள *ஏழு மண்டபங்களில்* நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார்….
1) நவராத்ரி மண்டபம்.,
2) கருத்துரை மண்டபம்.,
3) சங்கராந்தி மண்டபம்.,
4) பாரிவேட்டை மண்டபம்.,
5) சேஷராயர் மண்டபம்.,
6) சேர்த்தி மண்டபம்.,
7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம்….

*18.* திருக்கோவிலில் உள்ள *ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள்* உள்ளன.

*19.* *ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள்* அமையப் பெற்றுள்ளன.

*20.* திருக்கோயில் வளாகத்தில் *ஏழு ஆச்சார்யர்களுக்கும்* தனி சன்னதி உள்ளது….
1) ராமானுஜர்.,
2) பிள்ளை லோகாச்சாரியார்.,
3) திருக்கச்சி நம்பி.,
4) கூரத்தாழ்வான்.,
5) வேதாந்த தேசிகர்.,
6) நாதமுனி.,
7) பெரியவாச்சான் பிள்ளை….

*21.* சந்திர புஷ்கரிணியில் *ஆறு முறையும்.,* கொள்ளிடத்தில் *ஒருமுறையும்* இப்படியாக
*ஏழு முறை* சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார்….
1) விருப்பன் திருநாள் ~ சித்திரை மாதம்.,
2) வசந்த உற்சவம் ~ வைகாசி மாதம்., (3) பவித்ரோத்சவம் ~ ஆவணி மாதம்.,
4) ஊஞ்சல் உற்சவம் ~ ஐப்பசி மாதம்.,
5) அத்யயன உற்சவம் ~ மார்கழி மாதம்.,
6) பூபதி திருநாள் ~ தை மாதம்.,
7) பிரம்மோத்சவம் ~ பங்குனி மாதம்….

22. நம்பெருமாள் *மூன்று முறை எழுந்தருளும் ஏழு வாஹனங்கள்*….
1) யானை வாஹனம் ~ சித்திரை., தை., மாசி.,
2) தங்க கருடன் வாஹனம் ~ சித்திரை., தை., பங்குனி.,
3) ஆளும் பல்லக்கு ~ சித்திரை., தை., பங்குனி.,
4) இரட்டை பிரபை ~ சித்திரை., மாசி., பங்குனி.,
5) சேஷ வாஹனம் – சித்திரை., தை., பங்குனி.,
6) ஹனுமந்த வாஹனம் – சித்திரை., தை., மாசி.,
7) ஹம்ச வாஹனம் ~ சித்திரை., தை., மாசி….

23. மாசி மாதம் நடைபெறும் திருப்பள்ளியோடம் திருவிழாவில் நம்பெருமாள்
*ஏழு வாஹனங்களில் மட்டும்* உலா வருவார்.

24. கற்பக விருட்சம்.,
ஹனுமந்த வாஹனம்.,
சேஷ வாஹனம்.,
சிம்ம வாஹனம்.,
ஒற்றை பிரபை ஆகிய இந்த ஐந்து வாஹனங்கள்
தங்கத்திலும் யாளி வாஹனம்., இரட்டை பிரபை ஆகிய இந்த இரண்டு வாகனங்கள் வெள்ளியிலும் ~ ஆகிய
*ஏழு வாஹனங்களை தவிர* மற்ற அனைத்து வாகனங்கள் வெள்ளியிலோ அல்லது தங்கத்திலோ ஆனது.

25. மற்ற கோவில்களில் காண முடியாதவை….
1) தச மூர்த்தி.,
2) நெய் கிணறு.,
3) மூன்று தாயார்கள் ஒரே சன்னதியில்.,
4) 21 கோபுரங்கள்.,
5) நெற்களஞ்சியம்.,
6) தன்வந்தரி.,
7) நான்கு திசைகளிலும் ராமர் சன்னதி….

கொடுக்கப்பட்டுள்ள 25ல் ~ இரண்டையும்., ஐந்தையும் கூட்டினால் வருவது ஏழு (2 + 5 = 7)

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அணி அரங்கத்து அம்மானும் ஸ்ரீ அயோத்தியர்க் கோனும்–ஸ்ரீ மடேஸ்வரன் —

January 21, 2021

அபய ஹஸ்தம் காட்டி அழகிய மணவாளன் சதா ஸ்ரீரங்கத்தில் வாழ்கிறான்.
அவனுக்கு அதனால் ”அபயப்ரதராஜன்” – அன்பர்களுக்கு அபயம் அளிப்பதில் ப்ரதானமானவன் என்று திருப்பெயர் உள்ளது.

ஸ்ரீராம நவமி தொடங்கி ஆரம்பித்த அரங்கேற்றம் தாயார் சன்னிதி முன் உள்ள ஆறு தூண் மண்தபத்தில்
ஓராண்டு அரங்கேற, அழகிய மணவாளன் தன் உத்சவத்தை நிறுத்திக் கொண்டான்.
யுத்த காண்ட முடிவில் சீதையை த்ரிஜடை அலங்கரிக்கும் செய்யுள் அழகைக் கேட்ட ஸ்ரீரங்க நாச்சியார்,
அர்ச்சகர் மேல் ஏவி வந்து, தன்னை சகல ஆபரணங்களாலும் அலங்கரித்து, பல்லக்கில் இருத்தி வாசல் வரை
இட்டுச் செல்ல ஆணை இட, அவ்வாறே புறப்பாடும் ஆக, ஜனங்கள் காண, அவள்,
”கம்பரே! சீதையாய் இருந்த போது கூட நான் இவ்வளவு அழகாக இல்லை! உன் தமிழ் என்னை ஈர்க்கிறது,
மீண்டும் நீ வர்ணிக்கும் அழகில் சீதையாக மாற மனம் விரும்புகிறது….நீ கவிச்சக்ரவர்த்தி ஆகுக!” என்று பட்டம் அளித்தாள்.
உலகின் மற்ற இலக்கிய மேதைகளுக்கு எல்லாம் மன்னர்களும் மக்களும் பட்டம் அளித்தனர்,
கம்பனுக்கோ சாட்சாத் ஸ்ரீமஹாலக்ஷ்மியே பட்டம் அளித்தாள்.

கோயில்
கோ + இல் = கோயில் [அரசனின் வீடு]
அயோத்தியர்க் கோன் ஸ்ரீராமனின் வீடு, அவனது குலதெய்வம் ஸ்ரீரங்கநாதனின் வீடு.
ஸ்ரீ – மஹாலக்ஷ்மி
ரங்கம் – பொதுவிடம், உலகம்

”வெள்ளத்து அமர்ந்த வித்து” என்று கோதை இவரையே பதிவு செய்தாள்.

1960களில் மிகக் கொடிய மூலஸ்தானத் தீ விபத்து உண்டாகி மூலவர் திருமேனி அதிகம் சேதம் ஆனது.
அப்போது அன்றைய நேபால் அரசன் பல ஆயிரம் சாலக்ராமக் கற்களை அனுப்பி மீண்டும் ரங்கனைப் புதுப்பிக்க உதவினார்.
ஸ்ரீரங்கத்தில் மூலவருக்குப் ”பெரிய பெருமாள்” என்று பெயர்.உத்சவருக்கு அழகிய மணவாளன், நம் பெருமாள் என்று பெயர்கள் .
மூலவரை ஸ்ரீக்ருஷ்ணனாகவும் நம்பெருமாளை ஸ்ரீராமனாகவும் பாவிப்பது சமூஹ வழக்கம்.

எட்டு மனைவியர் மகிழும் அழகிய மணவாளன்
ஹ்ருதய லக்ஷ்மி, ஸ்ரீதேவி, பூமி தேவி, ஸ்ரீரங்கநாயகி, ஸ்ரீஆண்டாள் [பாண்டிய குல வல்லி],
சோழ குலவல்லி உறையூர்க் கமலவல்லி, குலசேகர ஆழ்வாரின் மகன் சேரகுல வல்லி, துலுக்க நாச்சியார்
பீபீ சுரதானி பேகம் ஆகிய எட்டு மனைவியர் அழகிய மணவாளனுக்கு உண்டு.இவர்கள் எட்டு லக்ஷ்மிகளின் குறியீடே.
ப்ரயோகச் சக்கரம்
இவரது சக்கரம் – சுழலும் பாவனையில் இருக்கும்.இதற்கு ப்ரயோகச் சக்கரம் என்று பெயர்.
ரங்கனுக்கும் அழகருக்கும் மட்டுமே இவ்வடிவம் காணப்படுகிறது.

கஸ்தூரி கமழும் திருநுதல்
வெள்ளிக்கிழமை தோறும் அழகிய மணவாளன் கஸ்தூரித் திலக நாமம் சார்த்திக் கொள்வார்.
மூலஸ்தானத்தில் இடது பக்கம் அவருக்கு அதைத் தயாரிக்கத் தனி அறை உண்டு,
அவரது திவ்ய ஆபரணங்களுக்கும் ஆடைகளுக்கும் தனி அறை உண்டு.

தைலப் பூச்சால் பாதுகாப்பு
ஆண்டுக்கு ஒரு முறை மிக உயர்ந்த அகில், சந்தனம், சாம்பிராணி ஆகியன அரைத்துக் காய்ச்சிய தைலம் மூலவருக்குப் பூசிமெழுகப்படும்.
வாரம் தோறும் வெள்ளி அன்று புனுகுத் தைலம் பூசிமெழுகப்படும்.அன்று முகத்தை மட்டும் தான் காட்டுவர்.
கடு சர்க்கரை என்ற மூலிகையால் உருவான திருமேனிக்கு இத்தகைய மெழுகல் அவசியம்

மந்த ஹாஸப் புன்னகை
காலத்தால் தேய்ந்து போன முகம், குழி விழுந்த புன்னகை பூத்த இதழ்கள் அவரது trade mark.

லக்ஷ்மணன்
எப்போதும் உடன்பிரியாமல் இருக்கும் தமையன் லக்ஷ்மணனாய் அவரது ஆதிசேஷக் குடை.
பரதன்
ரங்கனின் ஸ்ரீபாதக்குறியீடுகளான சடாரியே
சத்ருகனன்
செங்கோல் வடிவில் அவனை வணக்குவர்.
”செங்கோலுடையத் திருவரங்கச் செல்வனார்” என்று ஆண்டாள் பதிவு செய்த பொன் செங்கோல்.

தசரதன்
அழகிய மணவாளன் மூலஸ்தானத்தில் அமரும் இருக்கை ”தசரத மடி பூபாலம்” எனப்படும்.
[”தசரதன் தன் மகனை மடி இருத்தி அடிக்கடி உச்சிமுகர்ந்து ஆனந்திப்பான்” – வால்மீகி]
கெளசல்யா தேவி
மணவாளன் உண்ணும் வெள்ளிக் கிண்ணம் கெளசல்யா என்ற பரிபாஷையால் அழைக்கப்படும்.
அதில் உண்ணும் போது கண்ணாடி காட்டி நிலாவை ராமனுக்கு அவள் காட்டிச் சோறூட்டுவதாக வால்மீகியும் துளஸிதாஸும் கூறுவர்.
கைகேயி
கைகேயின் சார்பில் ”பொன் அரங்கம்” மூலஸ்தானத்தின் வெளியில் உள்ளது.
அதில் அவள் சந்தன மரத்தால் ஆன அலங்காரப் பந்தலையும் தன் குலமூர்த்திக்கு அளித்தாள்.
கைகேயியை மன்னிக்கும் வகையில் தானோ அதிகம் மணவாளன் இம்மண்டபத்தில் அபிஷேகம் காண்பன்.

நவரத்ன கவசம்
வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் நவரத்ன கவசம் சார்த்தப்படும்.
விலை மதிக்கவே இயலாத மணிகள் அனைத்தும் லவ-குசர்களின் இஷ்வாகு குல க்ரீடத்தில் இருந்ததே.

மார்பில், ராவணனை வதம் செய்த பின் அவனது அந்தப்புரக் கதவில் இருந்த நீலநாயகக்கற்களை ராமன் கொண்டு
வந்து தன் மணிமார்பில் வீரப்பதக்கமாகச் சார்த்தினான்.பின்னர் அதை அழகிய மணவாளனுக்கு அளிக்க,
தானே ஸ்ரீராமன் என்ற தோரணையில் நித்தம் நீலநாயகப் பதக்கம் தாங்கும் ஸ்ரீ உறையும் மார்பனாய் விளங்குகிறார்.

ரங்க விமானப் பதக்கம் –
சில சமயம் ரங்கவிமானப் பதக்கம் சார்த்திக் கொள்வார்.அது ஸ்ரீரங்க விமானத்தின் miniature.
தன் குல தெய்வத்தின் உருவம் பொதிந்த பதக்கத்தை மன்னர்கள் அணிவது மரபு.
அதன்படி ரங்க விமான பதக்கத்தை இஷ்வாகு மன்னர்கள் பயன்படுத்தினர்.
சோழன் தர்மவர்மா காவிரிக் கரையில் கோயிலை அமைக்க இது உதவியது.

வைரமுடி, முத்துக் கொண்டை, சோழன் காசு மாலை என எத்தனை எத்தனை ஆபரணங்கள்.
கன்னட அரசன் விஷ்ணு வர்த்தனன் அளித்த கொடகு தேசத்துச் சந்த்ர ஹாரம் அடிக்கடி இவன் சார்த்துவன்.
இவற்றுள் பல ஸ்ரீராமன் – சீதை வாழ்நாளில் பயன்படுத்தியவை.

ஸ்ரீரங்க நாயகி உருவ-ஆடை-ஆபரண வைபவம்
ராதை அளித்த முத்து மாலை
ராதைக்குக் கண்ணன் காதல் பரிசாய், மதுராவில் கம்சனின் குவலாயபீட யானையைக் கொன்று அதன் தந்தத்தில்
சுற்றி இருந்த உயர்ந்த முத்துக்களைக் கோர்த்து அளித்தான்.அதை அவள் தாயாருக்குப் பின்னர் அனுப்பிச் சார்த்தினாள்.
பட்டத்து ராணி மாங்கல்யம்
இஷ்வாகு பட்டத்து அரசிகள் அணியும் உயர் குல ராஜமகிஷி மாங்கல்யமே இன்றும் தாயாரின் ஸ்தனங்களை,
இல்லறத்தின் தர்மத்தைக் குறித்து மின்னுகிறது.
இஷ்வாகு குலப் பதக்கச் சங்கிலி
ஸ்ரீராமன் அணிந்திருந்த இஷ்வாகு குலப் பதக்கச் சங்கிலியைத் தாயார் அணிகிறாள்.
ஆரண்ய காண்ட மனோச்சிலைப் பொட்டு
காட்டில் வாழ்ந்த காலத்தே, மனோச்சிலை என்ற வாசனை மூலிகையை அரைத்து ஸ்ரீராமன் தன் தேவிக்கு த்ருஷ்டிப் பொட்டு வைப்பானாம்.
அதே பாவனையில் இன்றும் தாயார் த்ருஷ்டிப் பொட்டு வைத்துக் கொள்கிறாள்.
நாசிகாபரணங்கள்
சீதையின் வைர மூக்குத்தியும் உயர் ரக முத்து பேசரியும் இன்றும் தாயாரின் நாசியில் மின்னுவதைக் காண்க.
சீதையின் நீண்ட கருங்கூந்தல் ஜடைவளை தான் நவராத்ரியில் தாயாருக்குச் சார்த்தப் படும்.
சீதையின் கைவளைகள் சில இன்றும் நவராத்ரியில் ஏழாம் திருநாள் திருவடி சேவையின் அலங்காரத்தின் போது தாயார் அணிவாள்.
[ஆண்டாளின் ஆறு பொன் வளைகளைக் கள் அழகர் தன் தோள்களில் நித்தம் சார்த்தி இருப்பதை அழகர் கோயில் போனால் காண்க]

சுகந்த களாபச் சந்தனம்
இவள் ஸ்தனம் ஸ்பரிசித்த சுகந்த களாபச் சந்தனம் காலையில் அழகிய மணவாளன் சார்த்துவார்.
அன்று மாலை அவரது மணிமார்ப்புச் சந்தனம் தாயார் ஸ்தனத்தில் கம்பீரமாய் அமரும்.

செண்பக ப்ரியை
சீதைக்கு செண்பகம் மிகவும் ப்ரீதம்! [ஆரண்யத்தில் ரகுராமன் தன் மனைவிக்கு ஆசை ஆசையாய் செண்பக மலர்கள்
கொய்து சரம் தொடுப்பான் – வால்மீகி] அதனால் தான் மாங்கல்யத்துடன் அதைச் சுற்றி இன்றும் செண்பகத்தோடு சார்த்துவார்கள்.
குடும்ப ஒற்றுக்கும் மாங்கல்ய பலத்துக்கும் இன்றும் தம்பதிகள் செண்பகத் தோட்டுச் சரம் வாங்கிச் சார்த்துவர்.

அஷ்ட ஐஸ்வர்யப் பதக்கம்
மனித வாழ்க்கைக்குத் தேவையான எட்டு செல்வங்களின் குறியீடான அஷ்ட ஐஸ்வர்யப் பதக்கம் தாயாரின் தாலியுடன் விளங்குவதைக் காண்க.

தாயார் சுயம்பு.மிக அதிகமான சேதாரம் அவள் திருமேனியில் இருக்கிறது.
அதனால் வருடத்தில் ஐந்து முறைதான் அவளுக்கு அபிஷேகம்.
அவற்றுள் பங்குனி உத்திரத்தன்று, நள்ளிரவில் அவள் அழகிய மணவாளனுடன் சேர்த்தித் திருமஞ்சனம் காண்பாள்.
அன்று தான் அவள் நீராட்டத்தைக் காண முடியும்.

சீதையின் அந்தப்புரத்தில் இருந்த ஊஞ்சல், வஸந்த மண்டபம், சேர்த்தி இருக்கை, கொலு மண்டபம், துளசி மாடம்,
கொற்றவை என அனைத்தும் replica ஆக ஸ்ரீரங்கநாச்சியாரின் சன்னிதியில் இடம் பெறுவதைக் காண்க.

திருவடி சேவை
நவராத்ரி ஏழாம் நாள் மாலை இவளது பாதங்கள் தெரிவது போல் அலங்காரம் ஆகும்.
ஸ்ரீராமன் போன வழியில் இவள் சென்றாள் என்பதை அது உணர்த்தும்.

சந்த்ர புஷ்கரணியும் பழங்கால மருத்துவக்கூடமும்
அயோத்யாவின் அரண்மனையின் ரீ மேக்கிங் தான் ஸ்ரீரங்கம்.வால்மீகி பதிவு செய்த அதே தோற்றத்துடன் கோயில் அமைகிறது.
சீதை – ராமனின் அந்தப்புரங்களுக்கு இடையே குளமும், மகிழமரமும் ஊஞ்சலும் இருந்ததை வால்மீகி
சுட்டுவதைக் கருத்தில் கொண்டே இன்றும் பெருமாள்-தாயார் சன்னிதிகளுக்கு இடையே சந்த்ர புஷ்கரணி அமைகிறது.
இதன் கரை எதிரில் உள்ள தந்வந்த்ரி சன்னிதியில் தான் காலை சுக்குக் கஷாயம் தயார் ஆகும்.
மேலும் கி.பி 10ஆம் நூற்றாண்டில் இச்சன்னிதியில் மருத்துவமனையும், அறுவை சிகிச்சைத் துறையும் விளங்கியதைக் கல்வெட்டு பகர்கிறது.

பங்குனி உத்திரம்
இந்நாளே சீதா கல்யாணம் ஆன திருநாள்.
அன்று தான் இருவரும் மதியம் சுமார் இரண்டு மணி முதல் விடிய விடிய சேர்ந்து உத்திர மண்டபத்தில் எழுந்தருள்வர்.

[”இன்று பங்குனி உத்திரம்! இன்று தான் எனக்கும் வைதேஹிக்கும் கல்யாணம் ஆனது,
எனவே அவளை மீட்க இன்றே சேது அணை கட்ட ஏற்பாடு செய்க” – யுத்த காண்டம் – வால்மீகி] – சேது பந்தனம் கட்ட ஆரம்பித்த நாள்.

வட தேசத்து பாஷை
கோயிலின் பரிபாஷையில் அக்காலம் தொட்டு அயோத்தியா பாஷா கலந்து உள்ளது.
சில பூஜைகளில் சடங்குகளில் அவ்வார்த்தைகள் இன்றும் புழக்கத்தில் உள்ளன.
டபர் – குல்லாய்
வாரியே – சற்று விலகுக
கபாய் – குளிர்கால ஷால்
நாரிசாவல் – தேங்காய்த் துருவல் கலந்த சாதம்
போக் – பத்து வகைக் காய்கறிகள் கொண்ட சாதம்
ம்ருதுசந்த் – களாப சுகந்த சந்தனம்

சமையல் அறையில் கமழும் தூய தமிழ்
அமுது – சாதம்
கறி அமுது – பொறியல்
கண் அமுது – தயிர் சாதம்
சாற்று அமுது – ரசம் சாதம்
அக்கார அடிசில் – சர்க்கரைப் பொங்கல்
கறித் திருத்தம் – காய்களை அரிதல்
மதுவூறல் – தேன்

ரங்கவிமான ரகஸியம்
திருமங்கை மன்னன் நாகப்பட்டிணம் தங்க புத்த விக்ரஹத்தை உருக்கி வேய்ந்த பொன் விமானமே
இன்றும் காணப்படும் பொன் ரங்க விமானம்.

நான்கு வேதங்கள் நான்கு கலசங்கள் – தெற்கு – வடக்கில்
ஐந்து கலசங்கள் – ஐம்பூதங்கள் – கிழக்கு – மேற்காக
ஆய கலைகள் 64கும் தாமரை இதழ்களாகக் காட்டப்படுகின்றன.
மூலஸ்தானத்தின் வெளியே காயத்ரி மந்த்ரத்தை உணர்த்தும் வகையில் அதன் 24 சப்தங்களைக் கொண்ட 24 கற்றூண்கள் உள.

அழகிய மணவாளன் உத்சவத்துக்குக் கிளம்பும் போது அருகில் உள்ள விபீஷணனுக்குச் சொல்லியபின்
அவன் சன்னிதி வாசலில் தன் மூலஸ்தான சாவியை வைத்து விட்டே வெளியேறுவார்.அருகில் சுக்ரீவன் இருக்கிறார்.
மூலஸ்தானத்தைச் சுற்றி மொத்தம் 27 ராமர் சன்னிதிகள் உள்ளன.
தேவகி வசுதேவருடன் ஸ்ரீக்ருஷ்ணன் இவ்வூரை தரிசித்தான்.அவர்தம் சன்னிதி அர்ஜுன மண்டபத்தில் உள்ளது.

நெற்களஞ்சியம்
சீதையின் அரண்மனைக்கு அருகில் தான் உணவுக்கூடம் அமைந்திருந்ததைக் கருத்தில் கொண்டு
தாயார் சன்னிக்குப் போகும் வழியில் மேற்குப் புறத்தில் தான்யலக்ஷ்மி சன்னிதியுடன் கூடிய நெல் கொட்டாரம் இன்றும் செயல்படுகிறது.

அனைத்து ஜாதிகளுக்கும் இட ஒதுக்கீடு செய்த கோயில்.[வழிவழியாக இச்சாதியினரின் குடும்பங்கள் இன்றும் பணியில் உள] –
ஸ்ரீமத் ராமானுஜரின் சமூஹப் பணி.
1. குயவன் – தினமும் புதிய மண் கலங்கள் தர வேண்டும்.
2. தச்சன் – மணவாளனின் எவ்வித மரச்சாமான வேலையையும் செய்வான்.
3. தையல் காரன் – திருச்சிக்குப் போய் அவன் தான் ஆடைத்துணிகள் வாங்குவான்
4. பூந்தோட்டம் பராமறிப்பு – தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அமைத்த வயலில் தோட்டம் இட்டு இன்றும் பராமறிக்கிறான்.
தயவு செய்து மாலைகள், பூச்சரங்கள் மணவாளனுக்கு வாங்க வேண்டாம், அவன் ஏற்பதில்லை,
ஆண்டாளின் மாலைக் குறியீடாகத் தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரின் தோட்டத்தில் வளரும் பூக்களின் மாலையை மட்டுமே ஏற்பன்.
கோடை விழாவின் போது மட்டும் மல்லிகை, செண்பகம், மகிழம் சரங்கள் ஏற்பன்.
5. பூமாலை கட்டுவோன் – மாலைகள், கண்ணிகள் முடிப்பான்
6. பொற்கொல்லன் – ஆனிக் கேட்டை நாளில் ஆபரணங்களையும் தங்கக் கவசங்களையும் கழற்றிச் சீரமைப்பான்
7. இரும்புக் கொல்லன் – பிற உலோக வேலைகள் செய்வான்
8. ஓவியன் – மணவாளன், தாயார் சாயும் திண்டின் மீது அலங்காரம் செய்வான்
9. இசைக் கலைஞர் – அரையர்கள், ஆழ்வார்களின் பாடல்களை, உரையுடன் விளக்கி அபிநயம் செய்வர்.
[ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிப்புத்தூர், ஆழ்வார்த்திருநகரி ஆகிய மூன்றே ஸ்தலங்களில் இவர்கள் உண்டு –
பெரிய கோயிலில் அரங்கனின் அருகிலேயே இவர்கள் சதா கைத்தாளத்துடன் இருப்பர்]
10. உழவர் – தானிய அளவு சோதிப்பான், விறகு வெட்டிகள் இன்றும் பணியில் உண்டு.
11. ஓலை வேய்வான் – மணவாளன் உத்சவம் காணும் போது ஓலைப் பந்தல் அமைப்பான், அதில் பூச்சர அலங்காரம் செய்வான்
12. கோலமிடுவோர் – தற்போது ஸ்ரீரங்கத்துப் பெண்களே இப்பணியை மேற்கொள்கின்றனர்.
13. பந்தம் தாங்குவான்
14. எண்ணெய்ச் சட்டி தாங்குவான்
15. தாம்பூலக்காரன் – வெற்றிலை பாக்கு [ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு, சீவல், பச்சைக்கற்பூரம்] கலந்து அளவாகச் சுண்ணாம்பு வைத்து மடித்து அளிப்பான்.
16. கட்டியம் சொல்வான் – மணவாளன் எழுந்தருளும் போது, மிக சத்தமாக அவன் அயோத்தியாவில் பவனி வரும் போது சொல்லும் கட்டியத்தைக் கூறுவான்.
17. பட்டி அடிப்பான் – மணவாளன் எழுந்தருள்வதற்கு முன் அயோத்யாவில் தெருக்களில் மக்களைச் சீராக நிற்க வைக்கும் படி
எச்சரிக்கை செய்பவரின் குறியீடு, மான் தோலால் ஓங்கித் தரையைத் தட்டிச் சுத்தம் செய்து
[ஜாவோ ஜாவோ – வட பாஷை] என்று கூறிச் செல்வான்.
18. களாபம் அரைப்பான் – அரபு தேசத்து, காஷ்மீரக் குங்குமப்பூ சேர்த்த சந்தனம் அரைப்பான்.
[கோடையில் ராமனின் உடை சந்தனக் குழம்பால் ஈரமாகும்-வால்மீகி.]
மணவாளனைக் கோடையில் தேஹம் முழுக்க சந்தனக் குழம்பால் பூசி மெழுகுவர்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்குக் கோடையில் உடல் முழுவதும் களாப பரிமள அகில் சந்தனக் குழம்பை அப்பி மூடி
அதன் மீது ஆடை சார்த்தி, அதன் மீது பன்னீர் தெளித்து, அதன் மீது கவரி வீசுவது இன்றும் வழக்கம்.
19. செந்தூரக்குழம்பு சார்த்துவான் – [ஸ்ரீராமனின் தோளின் சீதை செந்தூரக் குழம்பு பூசி மகிழ்வாள் – வால்மீகி].
இன்றும் ஹோலி அன்று தாயார் சன்னிதியில் தயார் ஆன செந்தூரக் குழம்பு – [குலால் பொடி] இருதோள்களிலும் பூசப்படும்.
20. அலங்காரப் பட்டர் – மணவாளனைத் தொட்டு அலங்காரம் செய்பவர்கள், பூஜிக்க அனுமதி இல்லை.
21. வஸிஷ்ட குலமுனி – அயோத்யாவின் ராஜ குரு. அவரே தினமும் காலை மணவாளனுக்குப் பஞ்சாங்கம்,
அன்றாட நிகழ்ச்சிகள் என்னென்ன என்று உரக்கக் கூறுவார்.
22. கோ சாலையன் – பரி காரன் – யானைப்பாகன் –
[ஸ்ரீராமன் தினமும் காலை பசு, குதிரை மற்றும் யானைகளை மங்கலமாகப் பார்த்து தரிப்பான் – வால்மீகி]என்ற படி
இன்றும் காலையில் இம்மூன்றும் மணவாளன் முன் நிற்கச் செய்து பூஜிக்கப் படும்.கோ சாலை – பசுமாடுகள் காப்பகம்.
23. வீணைக் காரன் – [தினமும் இரவில் ஸ்ரீராமன் வீணை இசைக் கேட்டே கண்துயில்வான் – வால்மீகி]
தினமும் இரவில் எத்தனை நேரம் ஆகி உத்சவம் கழியினும் மணவாளன் வீணை இசை கேட்டே உறங்குவார்.
”வீணைக் கொடி உடைய ராவணனின் வீணை என்னைப் பாடும்” என்று ஸ்ரீராமன் சபதம் செய்வதை அத்யாத்ம ராமாயணம் கூறும்.
அதன்படி ராவணன் தானே வீணை இசைத்து அடிமை ஏவல் செய்வதாக விபீஷணன் ஏற்பாடு செய்ததாகவும் கருத இடமுண்டு.
24. குலப்பாவத்தைக் கொன்ற ஈரம் கொல்லி – எத்தனை அழகான தமிழ்ப்பெயர் பார்?!ஈரத்தைக் கொல்பவன் – வண்ணான்.
அபிஷேகம் ஆகித் தீர்த்தம் கைக்கொண்டு சுவைத்த வண்ணான், ”இவரே நம்பெருமாள்” என்று
உரக்கக் கூறியதால் அன்று முதல் அவர் நம்பெருமாள் ஆனார்.

குழந்தைக்குக் குளிப்பாட்டுவதை விட மென்மையாக மணவாளனை அபிஷேகத்தின் போது தொடுவர்,
மிகத் தொன்மையான மேனி அல்லவா, பல கலசத் தீர்த்தங்கள் பாதாரவிந்தங்களிலேயே ஊற்றப்படும்.
களாபச் சந்தனம், கஸ்தூரி மஞ்சள் கலந்த வெது வெதுப்பான நீரில் தான் மணவாளன் குளிப்பான்.

திருமஞ்சனக் கைலி
[ஸ்ரீராமன் சிவப்புக் கட்டம் போட்ட பருத்தித் துணியைக் கட்டித் தான் நீராடுவான் – வால்மீகி] –
இன்றும் மணவாளன் அதே மாதிரித் துணியைத் தான் உடுத்துவது வழக்கம்,
அபிஷேகம் ஆனபின் ஈரம் கொல்லி துணிகளை எடுத்துச் சென்று விடுவான், அவனுக்கு இன்றும் தீர்த்தம் தரப்படுகிறது.

சில வகை ஆடைகள்
a. இரவுகளில் மணவாளன் தட்டாடை – அதாவது நாம் கட்டுவது போல் லுங்கிச்சேலை உடுத்துவான்.
b. பருவகாலத்துக்கு ஏற்ப ஆடைகள் மாறும்.கோடையில் அதிகம் பட்டு கிடையாது.மெல்லிய பருத்தி ஆடைகளே தரப்படும்.
c. குளிர் காலத்தில் வெல்வெட், கம்பளி ஆகியன ஷால், குல்லாய், கையுறை என அணிவிக்கப்படும்.
d. குதிரை வாஹனம் அன்று மத்திய ப்ரதேஷ் பாணியில் குர்த்தா அணிவான்.
e. சில நாட்களில் ராஜஸ்தான் பாணியில் குர்த்தாச்சேலை அணிவதும் உண்டு.
f. பொதுவாக ஆறு முழ வேட்டியில் பஞ்ச கச்சம், இடுப்பில் அதன் மீது சுற்றிய இரண்டு முழ உத்தரீயத் துண்டு,
யோக வேட்டி எனப்படும் மேல் துண்டையே மணவாளன் அணிவான்.
g. ஜிகு ஜிகு சரிகை போட்ட அடர்த்தியான நிறங்கள் கொண்ட வடதேசம் துணி வகைகள் அதிகம் அணிவான்.
என்ன இருந்தாலும் அவன் அயோத்யாவில் வாழ்ந்தவன் அல்லவா?
h. வசந்த காலத்தில் புஷ்ப அங்கியும் அதன் மீது களாபச் சந்தனமும் பூசிக் குளிரக் குளிர நடு வீதிகளில் நின்று பானகம் லெமன் குடிப்பான்.
ஹோலி அன்று வெள்ளை வஸ்த்ரம் அணிவான், அதன் மீது செந்தூரப்பொடிகளைத் தூவிக் கரை ஏற்படுத்தி விடுவர்.
i. சித்திரை அக்னி நக்ஷத்ர வேளையில் தினமும் இருவேளை அபிஷேகம் உண்டு,
மாலையில் அயோத்யாவில் தன் மாளிகையில் உள்ளதைப் போல் நீர் நிரம்பிய சிறு மண்டபத்தின் நடுவில்,
வெட்டிவேர்ப் பந்தலில், பன்னீர் தெளிக்க அது A.C போல் குளிரும், அதனுள் மிக மிக மெல்லிய பருத்தி ஆடை அணிந்து
இளநீர் குடிக்க அமர்வான்.[வசந்த மண்டபம்]
j. மிக்க உஷ்ணம் இருப்பின், மிகக் குளிர்ந்த நீரால் பாதத்துக்கு மட்டும் இரவிலும் அபிஷேகம் உண்டு.
[ஏகாதசி, அமாவாசை, ரேவதி [ஸ்ரீரங்கனை அயோத்யாவில் இஷ்வாகு குலம் ப்ரதிஷ்டித்த நக்ஷத்ரம்,
சில உத்சவ வேளைகளில் மட்டும் அபிஷேகம் உண்டு.]
k. உத்சவம் முடிந்து மூலஸ்தானம் சேர்ந்ததும்
[அயோத்யாவில் ஸ்ரீராமன் நகர்வலம் கண்டு வந்தால், சீதை பாதம் பிடித்து ஒத்தடம் செய்வாள் – வால்மீகி]
இளஞ்சூட்டு நீரால் பருத்தித்துண்டு கொண்டு மென்மையாக மணவாளன் ஒத்தடம் கொள்வது இன்றும் வழக்கம்.

தீபாவளியில் மணவாளன்
ஸ்ரீராமனும் சீதையும் பதினான்கு ஆண்டுகள் கழித்து ஐப்பசி அமாவாசை மாலை அயோத்யாவுக்குள் நுழைந்தனர்.
அதையே தீபாவளி என இன்றும் மத்திய – உத்திர ப்ரதேஷ் மக்கள் கடைப்பிடிக்கிறார்கள்.
ஸ்ரீராமன் காலத்தில் ரங்கன் தென்னாடு வந்தபின் ஆண்டு தோறும் தன் குலத்துடன் ஸ்ரீரங்கம் வந்தான்.
தீபாவளி அன்று அதிகாலை மணவாளன் பசும் நெய் தேய்த்து, சீகக்காய் அரைத்துச் சேர்த்து அபிஷேகம் செய்து கொள்வதும்,
புத்தாடை அணிந்து மத்தாப்புக் கொளுத்தியபின் ஸ்ரீரங்கவாசிகள் எண்ணெய்க் குளியல் செய்வதும் இன்றும் வழக்கம்.
மணவாளன் தீபாவளி ஸ்நானம் செய்தான் என்பதை உணர்த்த பெரிய வேட்டு வெடிப்பர்.
அன்று மாலை அயோத்யாவில் செய்ததைப் போல் அவன் பாதங்களில் புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்களையும் காசுகளையும்
பட்டுத்துணியில் முடித்துக் கொண்டு வந்து கொட்டுவர்.அதை அவன் மீது வாரி இறைப்பர்,
பின் கோயில் பணியாளர் அனைவருக்கும் தருவர்.இதையே ”சாலி அலங்காரம்” என்பர், சாலி – வளம்.
[இஷ்வாகு மன்னர்கள் தீபாவளி அன்று அயோத்யாவாசிகள் அனைவருக்கும் நாணயம் வழங்கினர்-வால்மீகி]
தீபாவளி அன்று தங்கள் ஊர் இறைவனுடன் அரசனுடன் கொண்டாட இன்றும் வடதேசத்து அன்பர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிவது கண்கூடு!
”ஹமாரா ராம்ஜி தேவ், அயோத்யா தேவதா ஹே!” என்று இன்றும் வடதேசத்து அன்பர்கள் மணவாளனுக்கு அருகில்
வரும் போது உருகிக் கூறுவதும், ”ஜெய் ஸ்ரீராம் கி ஜே, ஸ்ரீராம் கி ஜே” என்பதையும் காண்கிறோம்.

நமக்குத் தெரிந்த பட்டர்கள் சிலர் வடதேசத்து அன்பர்கள் மணவாளன் அருகில் வருங்கால்,
”தும் அயோத்யா நகரீ மஹராஜ் ரங்நாத்ஜி” என்று மணவாளனை அறிமுகம் செய்வதைப் பலமுறை கண்டுள்ளேன்.
சிலர், ”வா வா உங்க ஊரு பெருமாள் தான் இங்க வந்து இருக்கார்” என்று தமிழிலேயே உறவு சொல்வதையும் கேட்டு இருக்கிறேன்.
தாயாரைக் காணுங்கால், ”சீதா மாதா மஹராணி கி ஜே!” என்று மிக்க மரியாதையுடன் கிழவன் கிழவிகள் கூட
தலையில் முக்காடு இட்டுத் தம் பவ்யத்தைத் தம் அரசிக்குச் செலுத்துவதைக் காணலாம்
இன்று அயோத்யாவில் தமிழர்கள் ரங்கநாதர் ஆலயம் அமைத்துள்ளனர்.

திருக்கைத்தல சேவை
365 நாட்களில் மணவாளன் 225 நாட்கள் விழாக் காண்கிறார்.
பத்து நாள் விழாவில் ஒரு நாள் ”திருக்கைத்தல சேவை” என்ற விழா வரும்.
அன்று இஷ்வாகு மன்னன் தன் கைகளில் மணவாளனைத் தாங்கிக் கொண்டு மூலஸ்தானத்துக்குள் வைக்க வேண்டும்
என்கிறது வால்மீகியின் பதிவு.அதையே இன்றும் செய்வர்.
”அயோத்தியர்க் கோமான், தசரதன் பிள்ளை அழகிய மணவாளனைக் கைத்தலம் ஏந்தித் தாங்குவார்……” என்று
அறிக்கை விட, ராமனின் ப்ரதிநிதியாய் ஓர் அர்ச்சகர் மணவாளனைத் தூக்குவார்.

கற்பூரப் படியேற்றம்
தீபாவளியை ஒட்டி வரும் உத்சவத்தில் மணவாளன் மீண்டும் மூலஸ்தானம் ஏறிச் செல்லும் போது
பச்சைக்கற்பூரமும் குங்குமப்பூவும் தூவப்படும்.
[ஸ்ரீராமன் அரண்மனை திரும்பும் போது, பச்சைக்கற்பூரமும் குங்குமப்பூவும் தூவி வரவேற்பர்-வால்மீகி]

அயோத்யாவில் தன் அரண்மனையை விட்டு ஸ்ரீராமன் எப்படி வெளியே வருவான் என்று வால்மீகி பதிவு செய்துள்ளாரோ
அதை ஒத்தே, இன்றும் நம்பெருமாள் புறப்பாடு ஆகிறது.
மூலஸ்தானத்தில் அலங்காரம் ஆனவுடன், லக்ஷ்மணனின் ப்ரதிநிதி அதை உரக்கச் சொல்ல,
ஸ்ரீபாதம் தாங்கிகள் என்ற ஊழியர்க் கூட்டம் ”ரகுநாத் மஹராஜ், நாயேன் வந்தேன்” என்று கூறிச் செல்வர்.
மணவாளன் படிகளில் இறங்கும் முன் தன்னை ஒரு முறை நிலைக்கண்ணாடியில் பார்த்துக் கொள்வார்.
சிம்ம நடை, ரிஷப நடை, சர்ப நடை என்று மூன்று வித நடைகளில் அவன் தெருக்களில் செல்வான், இன்றும் காணலாம்.
வெயில் அடிக்காத வண்ணம் திரையிட்ட ஓலைத் தட்டி தாங்குவோர் நிழலாய் முன் செல்வர்.
லக்ஷ்மணன் [குடை வடிவம்] பின்னால் இல்லாமல் ரங்கன் ஒரு அடி கூட முன்வைப்பதில்லை!
உலா முடிந்து மீளுங்கால் த்ருஷ்டி எடுப்பது வழக்கம். [ஸ்ரீராமனுக்குக் கெளசல்யா கண்ணேறு கழித்தே அரண்மனைக்குள் அழைப்பாள் – வால்மீகி]

காவேரிக்கு உயர் மரியாதை
தனக்கு இடம் தந்த காவேரிக்கு ஆடி 18அன்று மணவாளன் மரியாதை செய்வது வழக்கம்.
ராணி மங்கம்மாளின் அம்மா மண்டபத் துறைக்குச் சென்று புடவை, மாலை, சந்தனம், தாலி, வளை ஆகியன காவேரிக்கு அளிப்பான்.

வெள்ளம் இழுத்துச் சென்ற அரங்கன்
எழுநூறு ஆண்டுகட்கு முன் ஆடி உத்சவத்தில் மணவாளன் தேவியருடன் படகில் காவேரியில் செல்வதுண்டு.
ஒரு விழாவில் வெள்ளம் அபாயமாகப் படகைச் சாய்க்க, அது முதல் சுந்தர பாண்டியன் வெட்டிய தெப்பக் குளத்தில் அவ்விழா நிகழ்கிறது.

தில்லையில் கூரைக்குப் பொன், ஸ்ரீரங்கத்தில் திருமேனிக்குப் பொன்
இன்றைய முதல்வர் புகழ் பெற்ற ஒரு ஜுவல்லரி மூலம் மணவாளனை 7 கிலோ பொன்னால் பூசி மெழுகிட உதவினார் [2013].
அவரே அதே கட்டத்தில் கள் அழகருக்கும் 20 கிலோ பொன் தந்து பூசிமெழுகினார்.

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
கி.பி 12ஆம் நூற்றாண்டில் சோழர் வசம் இருந்து மதுரையை மீட்டான் சுந்தர பாண்டியன்.
அவன் மணவாளனுக்கு எடைக்கு எடை பொன் கொடுத்தான்.அதுவே ஹிரண்ய கர்ப்பம்.
அவன் தன் பொன் முடியை உருக்கி அதே போல் மணவாளனுக்கு முடி சூட்டினான்.
அதற்கு ”சுந்தர பாண்டியன்” என்றே பெயர்.அடிக்கடி மணவாளன் அதையே சிரத்தில் சூடுவது வழக்கம்.

எச்சில் தாங்கிய பாண்டியன்
மணவாளன் எச்சில் உமிழும் பாவனையில் ஒரு பொன் பாத்திரம் உண்டு.அதற்கும் அவன் தன் பெயரையே வைத்துத்
தானே மணவாளனின் வாயூறலை ஏற்பதாகக் காட்டினான்.இன்றும் புறப்பாட்டின் போது, ”சுந்தரபாண்டியனை எடுத்தாச்சா?” என்றே கேட்பர்.

ஆண்டாளும் பெரிய கோயிலும்
ஆண்டாள் தன் தந்தை விஷ்ணுச்சித்தருடன் ஸ்ரீரங்கத்தில் தங்கிய இடம் தோப்பு ராமன் சன்னிதி.
அவளது பாதச் சுவடு ஆதிசேஷன் மீது பதிந்துள்ளதாகக் கூறுவர்.

ஆண்டாள் வைத்திருந்த கண்ணன்
ஆண்டாள் அரங்கனுடன் கலந்தபடியால் சேர்த்தி இல்லை.மாலை மாற்றும் இல்லை.
ஆனால் ஆடிப்பூரம் அன்று மட்டும் அரங்கனின் மாலையை அவள் ஏற்பது வழக்கம்.
அவள் வைத்து விளையாடிய வ்ருந்தாவனத்தில் அவள் அப்பா வாங்கித் தந்த தவழும் கண்ணன் விக்ரஹம்
அவளுக்கு அருகில் உட்கார்ந்து உள்ளது. [வடமதுரை மைந்தன் என்று அவனுக்குப் பெயர்]

மதுரையில் கள் அழகர் அடிக்கும் punch dialogue
அழகர் ஆற்றில் இறங்கும் முன் ”கோதை மாலை இல்லையேல், மதுரை போவது இல்லை!” என்று
punch dialogue பேசுவதாக நடித்துக் காட்டுவது வழக்கம்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் மாலை அழகருக்குக் கொண்டு வரப்பட்டு அதைச் சார்த்தியே ஆற்றில் இறங்கப் போவார்.

திருமலைக்குப் பூமாலை
புரட்டாசி ப்ரஹ்மோத்சவத்தில் ஏழுமலையப்பனுக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் மாலை விமானம் மூலம் தற்போது போகிறது.
மூலவர் திருவேங்கடம் உடையான் அதைச் சேர்த்திக் கொள்கிறார்,
பின் கருட வாஹனத்தின் போது அம்மாலை மலையப்ப ஸ்வாமிக்கு சூட்டப்படும் [திருமலை உத்சவர்]

நைவேத்யங்கள்
தந்த சுத்தி – பல் விளக்கும் சடங்கு
சுக்குக் கஷாயம்
வெற்றிலைத் தாம்பூலம்
வாய் கொப்பளித்தல் சடங்கு
கோதுமை ரொட்டி, பருப்பு, பசும் வெண்ணெய்
கோடையில் இளநீர், பானகம், நீர்மோர்
முளை கட்டிய பயறுகள் – உத்சவம் புறப்படும் போது
மதியம் – சாதம், தயிர், கோதுமை ஹல்வா, முறுக்கு, மிளகு அடை
க்ருஷ்ண ஜெயந்தி அன்று – 12,000 இனிப்புப் பனியாரங்கள்
தீபாவளி – பல விதமான இனிப்புகள்
பொங்கல் – சர்க்கரை, வெண் மிளகு சாதம்
மழைக்கால மாலை வேளை – குங்குமப்பூ போட்டுக் காய்ச்சிய பனங்கல்கண்டு பசும்பால்
இரவில் ஆதிசேஷனுக்கு – பாலில் வேக வைத்த சாதம் – அரவணை [சொல்லி வைத்துப் பெறுதல் வேண்டும்]
தாயாருக்கு தினமும் இரவில் – மிளகு சேர்த்த புளிக்குழம்பு
இரவில் – மிளகு தோசை, அப்பம், அதிரசம்
சித்திரைக் கனி அன்று – முக்கனிகள் கலந்த பால் அன்னம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் கோபுரமே தற்போது தமிழகத்தில் உள்ள பழமையான கோபுரம் [கி.பி 11].
அது பன்னிரண்டு நிலைகள் கொண்டது.அவளின் உத்தரவை கேரள ப்ரசன்னம் மூலம் பெற்ற பின் தான்
ஸ்ரீரங்கம் கோபுரம் பதிமூன்று நிலைக்கு உயர்ந்தது. ஏழாம் நிலைக் கட்டியவர் இசைஞானி இளையராஜா.

மிகப்பெரிய கருடனைக் கட்டியவர் விஜய ரங்க சொக்க நாத நாயக்கர்.

அர்ஜுனன் த்ரெளபதியுடன் சேர்ந்து, பாரதப் போருக்குப் பின் பொன் கொடுத்து எழுப்பிக் கொடுத்த மண்டபமே
மூலஸ்தானத்தின் வலது புறம் உள்ள அர்ஜுன மண்டபம்.

பங்குனி உத்திர ப்ரஹ்மோத்சவத்தில் ஏழாம் நாள் ஆயில்யம் அன்று மணவாளன் காவேரி தாண்டி உறையூர் கமலவல்லியிடம் செல்கிறார்.
அன்று திருச்சியே அங்கு சேரும் சேர்த்தி காண.ஸ்ரீரங்கநாயகியின் திவ்ய ஆபரணங்கள் உறையூர்க் கமலவல்லிக்குச் சார்த்தப்படும்.
மறுநாள் அவர் ஸ்ரீரங்கம் மீள்வார்.
பங்குனி உத்திரம் அன்று அவர் தாயார் சன்னிதி வரும் போது மிக நுட்பமான சங்க இலக்கிய வசங்கள் கொண்டு அர்ச்சகர்கள் நடிப்பர்.
மணவாளனைத் தயிர், தேங்காய் மட்டை ஆகியன வீசி எறிந்து அவமதித்து வெளியே தள்ளி, தாயார் சன்னிதி கதவை அடைத்து விடுவர்.
வெயிலில் வேண்டும் என்றே மணவாளனை நிற்க வைப்பர்.
உணர்ச்சி மேலீட்டால் பல அன்பர்கள் மணவாளன் அவமானம் கொள்வதைக் கண்டு அழுவதை இன்றும் காண முடியும்.
இதைப் பற்றி உடனே ராமானுஜர் சன்னிதியிலும் நம்மாழ்வார் சன்னிதியிலும் சில அர்ச்சகர் சென்று சொல்வர்,
அவர்கள் விக்ரஹங்கள் உடனே தாயார் சன்னிதி வரும்.
இருவரும் முடிந்தவரை சமாதானம் செய்ய முற்படும் அழகிய மருதத் திணை நாடகத்தை
மைக் வைத்தே பேசுவதை அழகாக இன்றும் கேட்டு, பார்த்து ரசிக்கலாம்.

மணவாளன்: தேவி நம்மைப் பங்குனி மாத வெயிலில் வதைப்பது ஏனோ? ஸ்ரீரங்கத்தார் ஏளனம் செய்வது கேவலம் அன்றோ? அயோத்யாவில் இப்படி இருந்தாயோ?

ஸ்ரீரங்கநாயகித் தாயார்: அவ்வூர்ப் பெயரைக் கூற யோகிதை இல்லை ஐயா! காவேரி மணல் வெளியில் கிடைத்த உன் கல்யாண மோதிரம் அதைச் சொல்லும்.

ம: கல்யாண மோதிரமா அது என்னிடம் பத்திரமாக உள்ளதே!

தா: அது பத்திரமாக உறையூரில் ஒருத்தி கையில் இருக்குதய்யா!

ம: ஓ அவளா? அவள் என் பக்தை, முக்தி தரச் சென்றேன்

தா: பக்தைக்கு முக்தி படுக்கையிலோ?

ம: வீண் பழி பாவம் சுமத்தாயே தேவி!

தா: என் ஆபரணங்கள் எங்கே? உன் மாலையில் நீண்ட முடி உள்ளதே?
உன் மேனியில் நகக்கீரல்களும் பட்டாடையில் மஞ்சள் பூச்சும் உன் அழகைக் காட்டுதே!
நாம் ஸ்ரீரங்க ஸ்தலம் விட்டு நம் பாற்கடலுக்கே செல்கிறோம்!
நீரும் உறையூர் ஆசைக் காதலியை நம் சன்னிதிக்குள் குடி வைத்துக் கொண்டு சுகமாய் வாழும்!

ம: உண்மை! தன்யனேன்! என் தவற்றை ஏற்கிறேன், நீ இன்றி எம்மால் அணுக்கணமும் இயங்க முடியுமோ? என்னை மன்னிக்கும்!

தா: ”ராமா என்று வந்தவருக்கு அபயம் உண்டு” என்ற உமக்கு என்னிடம் அபயம் இல்லை ஐயா!

ம: கலியுகத்தில் நம் பிள்ளைகள் நீ இன்றி கஷ்டப்படுவார்களே!

தா: அயோத்தியில் நாம் பூமியின் மடி சேரும் போது இந்த அக்கறை எங்கே போனது ஐயா!

ம: என்னை மன்னியும்! ஹே ரங்கநாயகீ…..அந்த ஸ்ரீயும் பூமியும் சீதையும் ராதையும் கோபியரும் ருக்மிணியும் கோதையும் அனைத்தும் நீ தானே!

தா: சரி! மன்னிப்பது தாயின் குணம் என்று கூறுவதால், உன்னை ஏற்கிறேன், தோழிகளே நம் அழகிய மணவாளனை உள்ளே வரச்சொல்லுக!

இந்த அழகிய ஊடல் நாடகம் ஆன பின், திவ்யத் தம்பதிகள் ஓர் ஆண்டு கழித்துப் பார்த்துக் கொள்வதால்,
திரையிடப்பட்ட கொலு மண்டபத்துள் சுமார் இரண்டு மணி நேரம் இருப்பர்.

சுமார் மாலை மூன்றானதும் இருவரும் பங்குனி உத்திர மண்டபம் சேர்வர், கூட்டம் அலை மோதும்.

மணவாளனின் மாலையைத் தாயார் சார்த்தி இருப்பள்.

இரவில் பன்னிரண்டு மணிக்கு ஊர் காண அபிஷேகம் ஆகும்.அப்போது உண்மையிலேயே ”பத்ம முகீம்” [தாமரையை ஒத்த முகத்தினள்]

அதிகாலை மணவாளன் சேர்த்தி ஆகி விடை பெறும் போது, அவள் முகம் கருத்து இருப்பதைக் கண்கூடாக நாம் காணலாம்,
வண்ணம் மாறிவிடும்.அன்று மாலை வரை அவள் தன் கதவை சாத்திக் கொள்வாள்.

அக்காலத்தில் ஸ்ரீரங்க வாசிகள் உத்திரத்தில் தான் புத்தாடை எடுப்பராம், அதை பத்திரமாக மடித்து வைப்பராம்.

அஸ்வமேத யாகம் செய்ய ஸ்ரீராமன் அயோத்யாவில் பொன்னால் சீதையை உருவாக்கினான்.
அச்சிலை இன்றும் திருவள்ளூர் விஜயராகவனின் தேவியாக அருள் பாலிக்கிறது.

ரங்க விமானம்
மூலஸ்தானம், ரங்க விமானம் எல்லாம் தர்மவர்மா என்ற கிளிச்சோழன் கட்டியதே!

அகநானூறு, கலித்தொகை மற்றும் சிலப்பதிகாரம் தெளிவாக ஸ்ரீரங்கம் பற்றிப் பதிவு செய்கின்றன.

சப்த ப்ரகாரங்களும் அயோத்யாவும்

ஏழு ப்ரகாரங்கள் போல் அயோத்யாவில் இன்றும் கனக பவனைச் சுற்றி ஏழு பெரிய வீதிகள் உள.
கனக பவன் – தசரதன் ஆசைக் கைகேயிக்குக் கட்டியது.ஸ்ரீராமன் கல்யாணம் ஆனபின் சீதைக்கு அவள் அதைக் கொடுத்தாள்.
இன்றும் அயோத்யாவில் கனக பவன் ராமனே மிகவும் ப்ரஸித்தியானவன்.மாலை வேளையில் இங்கு நிகழும் ஆரத்தி மிக ப்ரஸிதம்.

1-ராஜமகேந்திரன் வீதி

அரங்கத்தில் மூன்றாம் சுற்று மதிலைத் திருமங்கை மன்னன் கி.பி 9ல் எழுப்பினான்,
அதை ராஜமகேந்திர சோழன் கி.பி 1060-1063ல் மீண்டும் புதுப்பித்துத் தன் பெயரால் ”ராஜமகேந்திரன் வீதி” என்று கல்வெட்டில் பதித்தான்.
உருப்படியாகவும் சீரழிந்தும் அரங்கத்தில் 644 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டு உள.
ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆழ்வார்களின் பாசுரங்களை ஸ்ரீமத்நாதமுனிகள் தொகுத்து
அரங்கத்தில் இருந்து தான் தமிழகத்துக்குப் பரப்பினார்.

கி.பி 1228 வரை மூன்றாம் குலோத்துங்கன் அரங்கத்தைக் கைக்கொண்டு அடக்கியே வைத்தான்.
கி.பி 10 வரை வேற்றுமையில்லா சமயங்கள் சுயநலம் கொண்டு அரசின் பலத்தைப் பெற போட்டி போட்டன.
கி.பி 1311 – மாலிகாஃபூர்
கி.பி 1323 – டில்லி முகமதிபின் துக்ளக்
கி.பி 1781 – மைசூர் ஹைதர் அலி
கி.பி – 1790 – மைசூர் திப்பு சுல்தான் – இவர்கள் செய்த அட்டூழியங்கள் அதிகம்!
கி.பி 1810ல் வேல்ஸ் மூலம் தான் கிழக்கு இந்தியக் கும்பினி மூலம் நல்ல காலம் மீண்டும் பிறந்தது.
கும்பினி மிக விரைவில் வரலாற்றை, சொத்தைப் பதிவாக்கி 1845ல் தர்மகர்த்தாவைத் தன் ஆளுமையின் கீழ் நியமித்து ஒழுங்கு செய்தார்.

1-மனுநீதிச் சோழன் அமைத்த முதல் திருச்சுற்று
முதல் சுற்றை மூலஸ்தானத்தை ஒட்டி, மனுநீதிச் சோழன் அமைத்துள்ளான், அவனுக்கே ”தர்ம வர்மா” என்ற பெயருண்டு.
கிள்ளி மண்டபம்
உறையூர் நலங்கிள்ளி எழுப்பிய மண்டபமே கிள்ளி மண்டபம்.மூட மக்கள் பிற்காலத்தில் கிளி மண்டபம் ஆக்கிவிட்டனர்.
மூன்றாம் நான்காம் சுற்றைக் குலசேகராழ்வாரும் திருமங்கை மன்னனும் எழும்பினர் என்பதை விட முன்னம் இருந்த
மதில்களை அவர்கள் சீரமைத்தனர் என்பதே பொருந்தும்.

திருமேனிப் பாதுகாப்பு
மணவாளனின் திவ்யத் திருமேனி மீது பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, சில வெளி சொலாத மூலிகைகள் அரைத்துப் பூசி,
பருத்திப்பட்டால் சுற்றப்பட்டு layer layer ஆக மூடப்பட்டுப் பொன் கவசம் சார்த்தப்படும்.
இதுவே அவன் மேனியைப் பாதுகாக்கும் தன்மை.தாயாருக்கும் அவ்வாறே!

மிகப் பெரிய கருடனை நாயக்க மன்னர்கள் உருவாக்கினர்.ஆனால் ஹனுமான் மிகச் சிறிய வடிவில் கோயிலின் வெளியில் உள்ளார்.

த்யாகராஜர் பாடிய அரங்கன்
ஒரு சித்திரை விழாவில் த்யாகராஜர் ஸ்ரீரங்கம் சேர்ந்து தன் குழாமுடன் தரிசனம் செய்து தங்கி இருந்தார்.
குதிரை வாஹனம் கண்டு மணவாளன் வருங்கால், த்யாகராஜர் மிக பவ்யமாக முனுமுனுத்துக் கொண்டு பாடினார்.
மணவாளன் அர்ச்சகர் மீது இறங்கி, ”த்யாகராஜரே! நாம் தந்த ராமனைத் தான் பாடுவீரோ? உரக்கப் பாடும்!” என்று கூற,
”ஓ ரங்க சாயீ” என்று த்யாகராஜர் உருகிப் பாடிய பின்னரே மணவாளன் நகர்ந்தான்.

முத்துசாமி தீக்ஷிதர் பாடிய மணவாளன்
தீக்ஷிதர் ஸ்ரீரங்கம் சேர்ந்த போது, இரவில் அவரை வீணை வாசிக்கச் சொல்லிக் கேட்டனர் கோயில் அன்பரும் அரங்கனும்.
”ஸ்ரீரங்கபுரவிஹாரா” என்று மிக அத்புதமாக ஸ்ரீராமாவதாரம் செய்த மணவாளனாகப் புனைந்து பாடுகிறார்.

ஸ்வாதித் திருநாள் ஏங்கிய அரங்கன்
ஸ்ரீராமாயணத்தை முழுக்க ஒரு கீர்த்தனை மூலம் புனைந்தார் ஸ்வாதித்திருநாள் மஹராஜ்.அதுவே ”பாவயாமி ரகுராமம்”
மிக மிக ப்ரஸித்தி பெற்ற கீர்த்தனை.அதை ரங்கன் சன்னிதியில் பாட மிகவும் ஏங்கினாராம், ஆனால் ஆயுள் கொடுத்து வைக்கவில்லை.

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ரெங்க மஹிமை -ஸ்ரீ முரளீ பட்டர்-

December 25, 2020

ஸ்ரீ ரங்க விமானத்தின் மேல் மண்மூடி காடாய் போன-ஒரு கிளி ஒன்று விடாமல்

“காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்
ஸ வாஸுதேவோ ரங்கேஸ: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்!
விமாநம் ப்ரணவாகாரம் வேதஸ்ருங்கம் மஹாத்புதம்
ஸ்ரீரங்கசாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாஸக: !!”

ஸ்ரீ வைகுந்தத்தில் ஓடுகின்ற விரஜை நதிதான் காவேரீ! ஸ்ரீ ரங்கவிமானமே வைகுந்தமாம்!
ஸ்ரீ வாஸுதேவனே ஸ்ரீ அரங்கன்! ப்ரணவமே விமாநம்! விமானத்தின் நான்கு கலசங்கள் நான்கு வேதங்கள்!
உள்ளே கண்வளரும் ஸ்ரீ அரங்கனே ப்ரணவத்தினால் விவரிக்கப்படும் பரம்பொருள்

என்று சொன்னதையே எப்போதும் சொல்லிக் கொண்டிருந்ததாம். அப்போது அரசாண்ட சோழ மன்னன் கவனத்திற்கு இது வந்து,
அதே சமயம் ஸ்ரீ அரங்கன் தான் இங்கு பள்ளி கொண்டிருப்பதை அவனுக்கு உணர்த்த, ஸ்ரீரங்கம் மீண்டும் மகோன்னதமானது.
கிளியினால் இது உணர்த்தப் பெற்றமையினால் இன்றும் அரங்கன் திருமுற்றத்தில் ஒரு மண்டபத்திற்கு “கிளி மண்டபம்” என்றே பெயர்.

—————

திருக்கமலபாதம்’ என்பதை மூன்றாகப் பிரிக்கின்றார்.

1. திருப் பாதம்: ‘துயரறு சுடரடி” இது துயர் போக்கும் பேரருளாளன் காஞ்சி வரதனைக் குறிக்கும்.

2. கமலப் பாதம்: ”பூவார் கழல்கள்” – புஷ்பம் போல் தரிசித்த மாத்திரத்தில் மனதிற்கு ஹிதத்தைத் தரக்கூடிய
திருவேங்கடமுடையானுடைய கமலப்பாதம்.

3. திருக்கமலப்பாதம்: ”பொது நின்ன பொன்னங்கழல்’
சமஸ்த லோகத்திற்கும், அனைவரையும் உஜ்ஜீவிக்கச் செய்யக் கூடியதான, எல்லாருக்கும் பொதுவான பாதங்கள்.
இது ஸ்ரீரெங்கநாதனுடையது!

———

‘பஸூர் மநுஷ்யா பக்ஷீவாயேச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா:
தேநைவதே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்”

”நாற்கால் விலங்காயினும் மனிதனாயினும் பறவையாயினும் இவை ஒரு வைஷ்ணவனைச் சார்ந்தனவாயின்
அந்த வைஷ்ணவ சம்பந்தத்தாலே அந்த விஷ்ணுவினுடைய பரமபதத்தை அடைகின்றன” என்கிறது பாரத்வாஜ ஸ்மிருதி.

”யம்யம் ஸ்ப்ருஸதி பாணிப்யாம் யம்யம் பஸ்யதி சக்ஷூஷா
ஸ்தாவராண்யபி முச்யதே கிம்புநா பாந்தவாஜநா:”

”பாகவதன் தனது கரங்களால் எதை எதைத் தொடுகின்றானோ, எதை எதைக் கண்களால் பார்க்கின்றானோ,
அவைகள் நிலையியற்பொருள்கள் ஆயினும் மோக்ஷத்தையடைகின்றன. அப்படியிருக்க,
அவனுக்கு உற்றாரைப்பற்றி கூறவும் வேண்டுமோ?” என்கிறது பராசரஸ்மிருதி.

————

தினசரி சாயங்காலம் க்ஷீரான்னத்தின் போது அரங்கன் 108 சரமாலைகள் சாற்றிக்கொள்வான்.
அதற்கும் மேல் வெள்ளை மாலை அதற்கும் மேல் வர்ணமாலை. இதற்கு ‘தர்பார் ஸேவை’ என்று பெயர்.
எதனால் இந்த பெயர்? தர்பார் என்றால் பல முக்யமான பேர்கள் கூடும் சபை.
இந்த க்ஷீரான்னத்தின் போது 108 திவ்யதேச பெருமாள் அனைவரும் ஸ்ரீரங்கத்தில் வந்து அரங்கனுடன் ஐக்யமாகி விடுவார்களாம்.
இந்த நேரத்தில் அரங்கனை ஸேவி்ப்பது 108 பெருமாளையும் ஸேவித்த பலன்!.

————–

ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் பெரியாழ்வாருடனும், சகல பரிஜனங்களுடன் வந்துறங்கிய இடம் இன்றும்
மேல அடையவளைஞ்சான் தெருவில் ‘வெளி ஆண்டாள்’ ஸந்நிதியாகயுள்ளது.
இங்கு ஆண்டாள் மூலவர் விக்ரஹம் கம்பீரமாக அமர்ந்த கோலம்.
இவள் வரப்பிரஸாதி. அரங்கனும் சரி ஆண்டாளும் சரி! இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்பு அலாதியானது.
ஸ்ரீரெங்கநாயகித் தாயாருடனும் உறையூர் கமலவல்லியிடனும் அவரவர் சேர்த்தி தினத்தில் வருடத்திற்கொரு முறைதான்
மாலை மாற்றிக் கொள்கிறார்.. ஆனால் ஆண்டாளுடன் அவள் ஸந்நிதி வழியே செல்லும் போதெல்லாம் மாலை மாற்றிக் கொள்கின்றார்

—————

தும்மினாலும், இருமினாலும், கேவினாலும், வழுக்கினாலும், தடுக்கினாலும், கொட்டாவி வந்தாலும்
‘ரங்கம், ரங்கம்” என்றே கூறுவர். அந்தளவுக்கு இவன் எல்லாருக்கும் ‘அந்தரங்க’னாகின்றான்.

” ரங்கம் ரங்கம் இதி ப்ரூயாத் க்ஷுதப்ரஸ்கலநாதிஷு
விஷ்ணு லோகம் அவாப்நோதி ஸத்ய: பாபக்ஷயாந்தர:”

தும்மல் வந்தாலும், இருமல் வந்தாலும், தடுக்கினாலும், அழுதாலும், கேவினாலும், கொட்டாவி வந்தாலும்
“ரங்கம், ரங்கம்” என்றே கூறவேண்டும். இவ்விதம் கூறினால், பாவங்கள் அழிவதுடன், அதனால் விஷ்ணுலோகம் கிட்டுகிறது.

——————

ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு இடத்தில் அரங்கன் மிக மிக ஸர்ந்நித்யத்துடன் இருப்பதாகக் குறிப்பிடுகின்றார்.
அர்ச்சுன மண்டபம் கூட அர்ச்சுனால் ஸ்தாபிதம் செய்யப்பட்டதாகக் கூறுவர்.

ஸ்ரீமத் பாகவதம் (ஸ்கந்தம் 10: அத்யாயம் 79: ச்லோகம் 14)

காமகோஷ்ணீம் புரீம் காஞ்சீம் காவேரீம் ச ஸரித்வராம்
ஸ்ரீரங்காக்யம் மஹாபுண்யம் யத்ர ஸந்நிஹிகோ ஹரி:

(பலராமன்) காமகோடி எனப்படும் புண்ணிய நகரான காஞ்சீபுரத்தையும், நதிகளில் சிறந்த காவேரியையும்,
எங்கு ஸ்ரீஹரி மிகவும் ஸாந்நித்யமாக உள்ளானோ அந்த மஹாபுண்ய க்ஷேத்ரமான ஸ்ரீரங்கத்தையும் அடைந்தார்.

————-

குருரேவ பரம ப்ரஹ்ம குருரேவ பரம் தனம்
குருரேவ பர:காமோ குருரேவ பராயணம்
குருரேவ பராவித்யா குருரேவ பரா கதி:
யஸ்மாத் தது தேஷ்டாஸௌ தஸ்மாத் குருதரோ குரு:

குருவே மேலான ப்ரஹ்மம். குருவே மேலான தனம். குருவே மேலான காமம். குருவே மேலான ப்ராப்யம்.
குருவே மேலான கல்வி. குருவே மேலான ப்ராவகம். அப் பரம் பொருளையே உபதேசிப்பதால் குரு அதைக் காட்டிலும் உயர்ந்தவர்.

ஆச்சார்யஸ்வ ஹரி சாக்ஷாத் சர ரூபி ந ஸம்ஸய:
ஆச்சார்யனே நேரே நடமாடும் பரமபுருஷன். இதில் ஐயமில்லை.

—————-

ஸ்ரீரங்கமதுலம் க்ஷேத்ரம் ஸ்ரியா ஜூஷ்டம் சுபாஸ்பதம்
யத் கத்வா ந நரோ யாதி நரகம் சாப்யதோகதிம்
(செல்வம் நிறைந்ததாய், மங்களங்களுக்கு இருப்பிடமான ஸ்ரீரங்கம் ஒப்பற்ற க்ஷேத்ரமாகும்.
அதையடைந்த மனிதன் நரகத்தையும் தாழ்ந்த கதிகளையும் அடைவதில்லை)

———–

ஸ்ரீரங்கத்திலிருந்து இளையாழ்வாரை வைணவத் தலைமைப் பொறுப்பேற்று நடத்துமளவுக்கு தகுதியுள்ளவராக்கி
அவரை ஸ்ரீரங்கம் அழைத்து வரவேண்டும் என்கிற ஒரு ஆவலோடு பெரியநம்பியும் அவரது மனைவியும் கச்சி நோக்கி புறப்படுகின்றனர்.

இவர்கள் இருவரும் மதுராந்தகத்தில் ராமர் ஸந்நிதியில் தரிசனத்திற்காக சென்றபோது சந்திக்கின்றனர். பேரானந்தப்படுகின்றனர்.
இளையாழ்வார் பெரியநம்பிகளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து தன்னை அவரது சீடராக்கி ப
ஞ்ச சம்ஸ்காரம் செய்து வைக்கும்படி பிரார்த்திக்கின்றார். பெரியநம்பிகள் ஆளவந்தாரையே குருவாக தியானிக்கும்படியும்,
தாம் ஒரு கருவியே என்றும், ஆளவந்தாரை தியானித்தபடியே மதுராந்தகத்திலேயே இளையாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் நடக்கின்றது.
இளையாழ்வாருக்கு அப்போது வயது 27. தாரண ஆண்டு ஆவணி வளர்பிறை பஞ்சமி.
இந்நாளை கொண்;டாடும் வகையில் இன்றும் த்வயம் விளைந்த பூமியான மதுராந்தகத்தில் ‘பஞ்சசம்ஸ்கார உற்சவம்’ நடந்து கொண்டிருக்கின்றது.

————

இருள்தருமாஞாலத்திலே கலியும் கெடும் கண்டுகொள்மின் என்கின்றபடியே கலியிருள் நீங்கி பேரொளி பெருகும் வண்ணம்,
ஆதி சேஷனின் அம்சமாக ஒரு தெய்வீகக் குழந்தை கலியுகம் 4119 பிங்கள சித்திரை 12ம் நாள் வளர்பிறை பஞ்சமி
வியாழக்கிழமை திருவாதிரை நட்சத்திரத்தன்று (04.04.1017) ஆஸூரி கேசவப்பெருமாளுக்கு தேசமெல்லாம் உகந்திடவே
ஒரு திருமகன் அவதரித்தார். பெரிய திருமலை நம்பிகள் குழந்தையை உச்சி முகர்ந்து குளிர கடாக்ஷிக்கின்றார்.
காந்தியுடன் கூடிய அந்த தேஜோமயத்தினைப் பார்க்கின்றார்.

‘உலகெல்லாம் துதிக்கும் கருணைக்கடலோ! ஓங்கும் ஆனந்த மாக்கடலோ !
அலகிலா இன்ப அமுதமாக் கடலோ? ஆசறு கமையருள் கடலோ?
மலமிலா நிலைசேர் போதவான் கடலோ? என்றென்று மதலையைக் கண்டார்
பலபல பகரப் பாலனாய் கிடந்தான் பங்கயக் கண்ணனுக்கு இளையான்” -வடிவழகிய நம்பிதாஸர் ஸ்ரீராமானுஜ வைபவம் – 272-

பெரியதிருமலைநம்பியின் இளைய சகோதரி பெரியபிராட்டியாருக்கும் கமலநயனபட்டருக்கும்
குரோதன வருஷம் தைமாஸம் பெளர்ணமி திங்கட்கிழமை புனர்வசு நட்சத்திரத்தில் ஒரு குழந்தை
மலர்ந்த தாமரை போன்ற அழகுடன், தேஜஸூடன் பிறந்தான். அக்குழந்தைக்கு ‘கோவிந்தன்’ என்று திருநாமமிட்டு மகிழ்ந்தார்.

————-

வடுகநம்பி, நம் பாவங்கள் தொலைய, மோட்சமாகிய பேரின்பத்தினைப் பெற ஒரு எளிய உபாயத்தினைக் கூறுகின்றார்.

ஆசிலாசாரிய பதந்தான் தனியே ஒன்றாம் ஆங்கதுதான்
தேகப் பொலிந்த எதிராசர்க்கன்றி எவர்க்கும் சேராதால்
நேசத்துடனத் திறமறிந்து நின்று கடந்து கிடந்திருந்து
பேசப்படுநும் உரையெல்லாம் இராமாநுசர்பேர் பிதற்றுதரேல் -ஸ்ரீஇராமானுஜ வைபவம்: வடிவழகிய தாஸர்-

குற்றமற்ற ஆச்சார்யனது திருவடிதான் ஒப்பற்ற ஒன்றாகும். அங்கே அதுவும்தான்
ஒளி பொருந்திய எதிராசர்க்கு அல்லாமல் வேறு எவருக்கும் பொருந்ததாகும். பக்தியுடன் அத்தன்மையையறிந்து
நிற்கும் போதும், நடக்கும் போதும், படுக்கும் போதும், உட்காரும் போதும், பேசப்படுகின்ற உங்கள் வார்த்தையெல்லாம்
இராமானுசர் பெயரையே சொல்லவேண்டும்!.

————–

அர்ச்சைத் திருமேனி ‘தானுகந்த திருமேனி’ என்ற புகழ்பெற்றது. கி.பி.1136 நள ஆண்டு தைமாதம்
புஷ்ய நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டைச் செய்யப்பட்டது.
(இந்த பிரதிஷ்டைச் செய்யப்பட்டவுடனேயே உடையவருக்கு திருமேனியில் தளர்ச்சி ஏற்பட்டது என்று சிலர் கூறுவர்).

————-

”பரத்வம் நாமே! பேதமே தர்ஸநம்! உபாயமும் ப்ரபத்தியே! அந்திம ஸ்ம்ருதியும் வேண்டா!
சரீராவஸாநத்திலே மோக்ஷம்! பெரியநம்பி திருவடிகளிலே ஆஸ்ரயிப்பது!”

1. நாமே பரம்பொருள்
2. ஜீவாத்மா வேறு. பரமாத்மா வேறு.
3. என்னை சரணடைவதே முக்திக்கு வழி
4. என்னை சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்க தேவையில்லை.
5. என் அடியார்களுக்கு சரீர முடிவில் மோக்ஷம் கொடுப்பேன்
6. மஹா பூரணராம் பெரியநம்பிகளைக குருவாகக் கொள்.–என்று கூறினார்.

”செப்புகின்ற பரத்துவமும் யாமேயென்ன செப்புதி வேறு
ஒப்பிலாதாய்! தரிசனமும் பேதம் என்றே உரைத்திடுக!
தப்பிலாத உபாயமதும் பிரபத்தியென்றே சாற்றிடுக!
அப்ப! புகல்க இவையன்றி நினைவும் வேண்டா! அந்திமத்தில்
இந்த சரீர அவதானம் தன்னிலிசையும் மோக்கமது!
அந்தமில்லாக் குணத்தினனுக்கு ஆசார்யனும் பெரியநம்பி!
சிந்தையுள்ளே இவையெல்லாம் தெளிந்து நோக்கி இளையாழ்வான்
முந்த நினைத்தான் இவை இவையே மொழிந்து வருக போயென்றான்” -வடிவழகிய தாஸர்-ஸ்ரீராமானுஜ வைபவம்-

————

‘ஆராமஞ்சூழ் ரங்கர்தமை மலர்மாமகளையடியிறைஞ்சித்
தாரீர் சரணந்தனையென்னத் தந்தோமெனலு மெதிராசன்,
பாரோர் பரவும் பாகவதர் பிரிவால் பரிவில் படர்கூரச்,
சீரார் திருநாடடைந்திருந்த சீடனுடனே சேர்ந்தனனால்”–என்றபடியே

ஜீர்ணமிவ வஸ்த்ரம் ஸூகேநேமாம் ப்ரக்ருதிம் ஸ்தூலஸூக்ஷமரூபாம் விஸ்ருஜ்ய”
ஸ்தூலசரீரமாகவும் சூக்கும ஸரீரமாகவுமிருக்கும் ப்ரகிருதியை – பழைய வஸ்திரத்தினைக் கழிக்குமாபோலே சிரமமில்லாமல் விட்டு
என்றபடியே ஒருவித சிரமமும் படாமல் தமது திருமேனியிலிருந்து தம் உயிரினை மண்ணுலம் வருந்த, விண்ணுலகம் மகிழ, பிரிக்கின்றார்

தமது 120வது வயதில் (கி.பி. 1137) தாம் அவதரித்த அதே பிங்கள ஆண்டில் மாசி மாதம் வளர்பிறை தசமிதிதியில்,
திருவாதிரை நட்சத்திரத்தில், சனிக்கிழமை நண்பகலில், பகவத் சாயுஜ்யம் அடைகிறார் உடையவர்.

—————

நம்பெருமாள் (கி.பி.1371ல்) ஆஸ்தானம் எழுந்தருளிய போது மூலஸ்தானம் முழுதுமாக பாழ்பட்டு கிடந்தது.
வெயிலிலும் மழையிலும் மூலவர் ரங்கநாதர் காய்ந்தும் நினைந்தும் கிடந்திருக்கின்றார்.
ஆதிசேஷனின் சேஷபடம் அவரது திருமுகத்தினை மட்டும் பாதுகாத்தபடியிருந்திருக்கின்றது.

சுந்தர பாண்டியனால் வேயப்பட்ட தங்க விமானம், தங்கத்தினால் ஆனக் கொடிக்கம்பம், தங்கத்தினால்
செய்த சேரகுலவல்லி, அணிகலன்கள், சிம்மாசனங்கள் அனைத்தும் சுத்தமாக கொள்ளை யடிக்கப் பட்டிருந்தன.
இந்த சமயத்தில் உத்தம நம்பி வம்சத்தரான கிருஷ்ணராய உத்தம நம்பி செய்த கைங்கர்யங்கள் முக்யத்துவமானது.
மகத்தானது. இவர் வீரகம்பண்ண உடையாரையும், அவரது உறவினரான விருப்பண உடையாரையும் விஜயநகரம் சென்று
ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
கம்பண்ண உடையாருடன் அவரது மனைவி கங்காதேவியும் உடன் வந்துள்ளாள்.
இவள் வடமொழியில் சிறந்த பாண்டித்யம் உடையவள். தாம் கண்ட நிலைமையனைத்தையும் ‘மதுரா விஜயம்’ என்று தொகுத்துள்ளாள்.
இதிலிருந்து அன்றைய ஸ்ரீரங்கத்தின் நிலைமையை நாம் தெளிவாக அறிய முடிகின்றது. அதில் அவள் குறிப்பிடுகின்றாள்.

கோயில் மண்டபங்களில் செடிகள் முளைத்து மரக்கதவுகளைக் கரையான் தின்கின்றன.
இனிமையான மிருதங்க ஒலி கேட்டவிடமெல்லாம் ஊளையிடும் நரிகள் உலா வருகின்றது.
அணைகளும் கரைகளும் உடைந்து ஊரே வெள்ளக்காடாகயுள்ளது.
அக்ரஹாரங்களில் உள்ள யாக குண்டங்களில் முகமதியர்களால் மாமிசம் சுட்டெரிக்கப்பட்டு அதனுடைய துர்கந்தம் வீசுகின்றது.
தென்னைஞ்சோலைகள் மறைந்து கழுமரங்கள் கட்டப்பட்டு அதில் மனிதர்களை கொன்று மனிதர்களின் மாமிசம்
அக்கழுமரங்களில் ஆங்காங்கே திட்டுதிட்டாய் காணப்படுகின்றது.
இவ்வாறு பலவற்றைக் குறிப்பிடுகின்றாள்.

கம்பண்ணரும், விருப்பண்ண உடையாரும் திருவிடையாட்டமாக பல கிராமங்களை கோவிலுக்கென்று அர்ப்பணித்து
திருப்பணி வேலைகளை மேற்கொள்கின்றனர்.
கோவிலின் ஸ்தலத்தார்களும், உத்தமநம்பிகளும், கோவிலார்களும் வெகுவாக அரசர்களுடன் சேர்ந்து பாடுபட்டு
ஸ்ரீரங்கத்தினை புனர்நிர்மாணம் செய்கின்றனர்.
சித்திரையில் விருப்பண உடையார், கோவிலின் நிதிநிலைமையை சீர்செய்யும் பொருட்டும், கோவிலில் ஆராதனைகள்
சீராக நடைபெறுவதற்கு தானியங்களை பெருக்குவதற்கும் அருகிலுள்ள அனைத்து கிராம மக்களையும் அரவணைத்து
அன்போடு அழைத்து, அரங்கனுக்கு ஒரு தேரோட்டத்துடன் பிரம்மோற்சவம் ஒன்றை கொண்டாடுகின்றார்.
கிராமத்து மக்கள் அனைவரும் தாங்கள் விளை நிலங்களில் விளைந்த தானியங்களை அரங்கனுக்குக் காணிக்கையாக்கி
உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
அரங்கனது நித்யபடி பூஜைகளுக்குக் குறைவின்றி தான்யங்கள் குவிந்தன.
அன்று தொடங்கிய இவ்விழா இன்றும் அன்று போன்றே குறைவற நடந்து வருகின்றது.
இந்த விழாவிற்கு ‘விருப்பண் திருநாள்” என்று பெயர்

————

அரங்கன் 1371ம் ஆண்டு வைகாசி மாதம் 17ம் தேதி (ஜூன் மாதம்) ஏறத்தாழ 59-1/2 ஆண்டுகளுக்குப் பிறகு
திருவரங்கத் திருப்பதியினில் மீண்டும் கால் பதிக்கின்றார்.

அழகிய மணவாளன் கோயிலிலிருந்து வெளிச்சென்று ஏறத்தாழ 60 வருடங்களானபடியாலும், இந்த
காலக் கட்டத்தில் நம்பெருமாளோடு நெருக்கமாயிருந்த அனைவருமே பரமபதித்த படியாலும், அரங்கனது
அர்ச்சாத் திருமேனியை ஸேவித்து அறியாதவர்களே ஸ்ரீரங்கத்தில் இருந்தனர்.

அரங்கனின் ஈரவாடை தீர்த்தம் வண்ணானுக்கு அருளப்பட்டது.

பல வருடங்களாய் சுவைத்து, நடுவில் 60 வருடங்களாய் இத் தெய்வீகச் சுவை விடுபட்டு, ஏங்கியிருந்த
அவன் நாவு இந்த அமிர்தத்தை யுணர்ந்தது!
நாவின் உணர்வு நரம்புகள், உடலில் மின்சாரம் போன்று பாய்ந்தது!
உணர்வு பிழம்பானான் வண்ணான். ஆர்ப்பரித்தான்!

‘இவரே நம் பெருமாள்! இவரே நம்பெருமாள்” என்று கதறியழுதான்!.
கண்களில் கண்ணீர் பெருக்க மூர்ச்சையானான். தெளிந்தான்! மீண்டும் அழுதான்! மீண்டும் மயக்கமடைந்தான்!

கொடவரும் உணர்வுகள் கொந்தளிக்க, ‘ரங்கா! ரங்கா!’ என்று கதறியழுதார்.
அழகிய மணவாளன் வண்ணானால் ‘நம்பெருமாள்” ஆனான்!.

நம்பெருமாள் என்ற பெயர் – அந்த வண்ணான் வைத்தப் பெயர் தான், இன்றும், அவனுக்கும் நமக்கும் உகப்பாகயிருக்கின்றது!.
அவன் நம்மோடு கலந்தவன்! நம்மோடு நம்பக்கம் இருப்பவன்!. நம்மை உகப்பவன்!. நம்மை காப்பவன்!.
நம் நலம் விரும்புபவன்!. நம் வீட்டுப் பிள்ளை!. நம் குழந்தை!. நம் ஜீவன்!. நம்மை ஆள்பவன்!.

இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகுற்கும் தெய்வம்
இனியறிந்தேன் எம்பெருமான்! உன்னை – இனியறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ – நற்கிரிசை
நாரணன் நீ நன்கறிந்தேன் நான்.—நான்முகன் திருவந்தாதி-96-

அரங்கன், தனியொருவராக தம்மை ஆராதித்து பாதுகாத்த வ்ருத்தரான அந்த கொடவரை அருகில் அழைக்கின்றான்.
அவரை ‘திருத் தாழ்வாரை தாஸர்” என்று அருளப்பாடிட்டு உகக்கின்றான்.
வண்ணானுக்கு ‘ஈரங்கொல்லி” என்று அருளப்பாடிட்டு அழைத்து, மன்னன் மூலமாக பஹூமானங்கள் பல செய்து கௌரவிக்கின்றான்!
அரையருக்கு ‘இசையறியும் பெருமாள் கூட்டத்தார்” என்று அருளப்பாடிட்டு கௌரவிக்கின்றான்

ஸ்ரீரங்கத்திலிருந்து சுல்தான் தளபதியை கண்ணனூருக்கு அழைத்துச் சென்று, ஸ்ரீரங்கத்திற்கு மேலும் சேதம் வராமல்
தம் கற்பைக் கொடுத்துக் காப்பாற்றிய தாஸியினை அழைக்கின்றார்.
போர உகந்தருளி ”உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்று திருவாய் மலர்கின்றார்.

தாஸி ஒரு வரம் கேட்கின்றாள். ‘தம்முடைய வர்க்கத்தார்களில் யாரேனும் திருநாடு அலங்கரிப்பாராகில் (இறப்பார் ஆகில்)
நம் கோவில் திருமடைப் பள்ளியிலிருந்து தாங்களை தகனம் செய்வதற்கு நெருப்பும், திருக்கொட்டாரத்திலிருந்து வாய்க்கரிசியும்,
அரங்கனது திருமாலையும், எந்த காலத்திலும் சாதிக்க வேண்டும்” என்று தனக்காக ஏதும் வேண்டாது,
தன்னலம் கருதாது தம் வர்க்கத்தார்களின் நலத்திற்காக அரங்கனிடத்து யாசித்தாள்.
அரங்கன் உளம் குளிர்ந்து ‘அப்படியே ஆகட்டும்” என்று ஆசீர்வதிக்கின்றான்.

(இந்த வரத்தால் 1953ம் ஆண்டு தாஸிகள் ஒழிப்புச் சட்டம் அமுல் படுத்திய நாள் வரை, திருவரங்கத்து தாஸிகள்
யாரும் பரமபதிப்பார்களாகில், இந்த மரியாதைகள் செவ்வனே நடைபெற்று வந்தது)

அரங்கன் அன்றிரவு சோழ மன்னனின் கனவில் தோன்றி, நடந்த வ்ருத்தாந்தங்களை சாதித்தருளினான்.

—————–

உன்னிகிருஷ்ணன் பணிக்கர் பிரஸன்னம் சொல்லும் போது, ”இந்த கோவிலிலும் நவக்கிரஹங்கள் இரண்டு இடத்தில் உள்ளன” என்றார்.
எங்களுக்குப் புரியவில்லை.
ஆர்யபடாள் வாசலில் நிலைப்படிக்குக் கீழேயும், நாழிகேட்டான் வாசல் நிலைப்படிக்குக் கீழேயும் 12 இராசிகள் பொறிக்கப்பட்டிருந்தன.
”இதைத்தான் அந்தந்த இராசிக்கு சொந்தமான கிரஹங்கள் சூக்குமாக இந்த சின்னங்கள் மூலமாய் குடி கொண்டுள்ளன” என்றார்.
எதற்காக…..? என்று வினவியபோது
‘அவைகள் அனைத்தும் தம் பாவங்களைத் தொலைத்துக் கொள்ள பரம ஸ்ரீவைணவர்களின் ஸ்ரீபாததுளிகள்
தம் தலை மேல் விழுவதற்காக வணங்கி காத்திருக்கின்றன’ என்றார்.
உண்மைதான். ஸ்ரீவைணவரின் பாதத்துளி எல்லாவற்றையும் ஸ்ரேஷ்டமானதுதான்!.

———

காவேரீ வர்த்ததாம் காலே காலே வர்ஷது வாஸவ:
ஸ்ரீரங்கநாதோ ஜயது ஸ்ரீரங்க ஸ்ரீஸ்ச வர்த்ததாம் -ஸ்ரீராமாயண பாராயணக்ரமம்-

திருக்காவேரியானது (பயிர்களுக்கு) வேண்டிய காலங்களில் பெருகட்டும். வேண்டிய காலங்களில்
இந்திரன் மழை பொழியட்டும். ஸ்ரீரங்கநாதன் வெற்றிபெற்று வாழட்டும். திருவரங்கச் செல்வம் வளரட்டும்!

————–

ஸவஸ்தி ஹஸ்திகிரி மஸ்தஸேகரஸ் ஸந்தநோது மயி ஸந்ததம் ஹரி: !
நிஸ்ஸமாப்யதிகமப்யதத்தயம் தேவமௌபநிஷதீ ஸரஸ்வதீ !!–வரதராஜஸ்தவம

உபநிஷத் வாக்கானது எந்த தேவனை ஒக்காரும் மிக்காரும் இல்லாதவனாக ஓதுகின்றதோ,
அத்திகிரியின் சிகரத்திற்கு ஆபரணமான அந்த ப்ரணதார்த்திஹர வரதன் அடியேனுக்கு எப்போதும் நன்மையை மிகுதியாக அருளுவானாக!.

நீலமேகநிபமஞ்ஜநபுஞ்ஜ ஸ்யாம குந்தலமநந்தஸயம் த்வாம் !
அப்ஜபாணிபதமம்புஜ நேத்ரம் நேத்ரஸாத்குரு கரீஸ ஸதாமே!!

அத்திகிரியப்பனே! கருமுகில் போன்றவனாய், மைவண்ண நறுங்குஞ்சிக்குழலையுடையவனாய்,
திருவனந்தாழ்வான் மீது சயனிப்பவனாய், தாமரைப் போன்ற திருக்கைகளையும், திருவடிகளையும் உடையவனாய்,
தாமரைப்போன்ற திருக்கண்களையுடையவனான உன்னை எப்போதும் என் கண்ணுக்கு இலக்காக்குவாயாக!.

————-

‘நான் பெற்ற பெருஞ்செல்வம் நாலூரான் பெறும் வரம் வேண்டும்
ஊன் பெற்றுக் கிடைத்த பலம் அடியேனுக்குறுதி நின்னைத்
தான் பெற்றேன் இனிப் பேறு வேறுண்டோ தனிமுதலே
தேன் பெற்ற துழாய் மாலை வேண்டி விரும்பி அணிபவனே திருமாலே!
என்று அழகாய் வர்ணிக்கின்றார் ஸ்ரீராமானுஜ வைத்தில் ஸ்ரீவடிவழகிய நம்பி தாஸர்.

————-

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோ வை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை!
தம் ஹ தேவமாத்ம புத்திப்ரகாசம்
முமுக்ஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே !!
(எவன் ப்ரம்மனை முன் படைத்தானோ, எவன் வேதங்களையும் அவனுக்கு உபதேசித்தானோ, அப்படிப்பட்ட தேவனும்,
தன் விஷயமான ஞானத்தினைப் பிரகாசிப்பிப்பவனுமான பரம புருஷனை, மோக்ஷமடைய விரும்பும் நான் சரணமடைகின்றேன்.)

தஸ்மாந் ந்யாஸமேஷாம் தபஸாமதிரிக்தமாஹூ:
ஆகையால் ந்யாஸத்தை(சரணாகதியை) இந்த தபஸ்களுள் மேலானதாகச் சொல்லுகிறார்கள்

—————

ஆனைமலைத் தொடரின் கிழக்கு அடிவாரத்திலுள்ள ஏகாந்தமான ஒருவிடத்தில் அரங்கன்,
ஸ்ரீரங்கத்திலுள்ள அகண்ட திருமண்டபங்களையெல்லாம் மறந்து, ஒரு சிறு குகையினுள் தங்குகின்றான்
பிள்ளைலோகாச்சாரியார் திருமலையாழ்வாரின் திருத்தாயாரை அழைத்து “நம்பெருமாளுக்கு வியர்க்கும் விசிறி கொண்டு விசிறி விடு” என்கிறார்.
திருமலையாழ்வாரின் தாயார் விசிறி கொண்டு அருகில் சென்ற போது, அரங்கனின் அருள்முகத்தில்
அரும்பரும்பாய் வியர்வைத்துளிகள். அதிர்ந்தாள் அவ்வம்மை.
”ஸ்வாமி! திவ்யமான திருமேனியும் புழுங்குமோ?” என்று வினவுகின்றார்.
பிள்ளைலோகாச்சாரியார், ஆழ்வார் திருமகளாம் ஆண்டாளின் நாச்சியார் திருமொழியை (12-6)
”வேர்த்து பசித்து வயிறசைந்து” எனும் பாசுரத்தினை மேற்கோள் காட்டி,
அம்மையே புழுங்கும் காண் – ஆண்டாளும் ஓதினாள் காண்” என்றருளுகின்றார்.
திருமலையாழ்வாரின் திருத்தாயார் சற்றே விசிறியவுடன் நம்பெருமாளின் வியர்வையும் அடங்கியது.
இதனைக் கண்ட அவ்வம்மையார் பரவசமடைந்து பலமணி நேரம் தன்னிலை மறந்தாள்.

———–

ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரம்படி, 32000படி, என்கின்றோமே, இந்த ‘படி’ என்றால் என்ன?

படி என்றால் அளவு. உயிர்மை எழுத்து உயிரெழுத்து ஆகிய இரண்டும் சேர்த்து 32 அட்சரம் கொண்டது ஒரு க்ரந்தம்.
ஒரு க்ரந்தம் என்பது தமிழில் ஒரு படி.
6000 க்ரந்தம் கொண்டது விஷ்ணு புராணம்.
குருபரம்பரை ஆறாயிரப்படியும், விஷ்ணுபுராணமும் ஏட்டில் சம அளவில் இருந்தமையால் ‘குருபரம்பரை ஆறாயிரப்படி ‘ என்றழைக்கப்பெற்றது.
இதே போன்று இராமாயணம் 24000 க்ரந்தம். இதுவும் பெரியவாச்சான் பிள்ளை 24000 படியும் சம அளவில்
இருந்ததால் பெரியவாச்சன் பிள்ளை 24000படி என்றழைக்கப்பெற்றது.
சுதப்பிரகாசிகை 36000 க்ரந்தம். இதுவும் ஸ்ரீபாஷ்யமும் ஒரே அளவில் இருந்தமையால் ஸ்ரீபாஷ்யம் ஈடு 36000படி என்றழைக்கப்பெற்றது.

—————

இனி ஸ்ரீரங்கத்தில் நாம் நிம்மதியாக வாழமுடியாது என்றெண்ணிய மீதமுள்ள வைணவக் குடும்பங்கள்
ஸ்ரீரங்கத்தினை விட்டு, தோழப்பர் என்ற ஒரு ஆச்சார்யனைத் தலைமையாகக் கொண்டு அருகிலுள்ள
கிராமங்களான பாச்சூர், கோவர்த்தனக்குடி (தற்போது கோவத்தக்குடி என்றழைக்கப்படுகின்றது),
திருவரங்கப்பட்டி, கோபுரப்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கலாயினர்.
இவர்களால் பெரியபெருமாளையும், நம்பெருமாளையும் விட்டு பிரிந்து வாழ முடியவில்லை.
அருகிலுள்ள கண்ணனூர் எனும் சமயபுரத்தில் ஹொய்சாள சிற்ப கலைஞர்கள் நிறைய வாழ்ந்து வந்தனர்.
உலுக்கானின் படையெடுப்பு இவர்களையும் பாதித்தது. இவர்களும் தப்பிப்பிழைத்து இந்த கிராமங்களில் குடியேறினர்.

இவ்விரு குழுவினரும் சேர்ந்து ஒரு அழகான ரங்கநாதர் கோவிலைக் கோபுரப்பட்டியில் கி.பி 1323ம் ஆண்டு கட்டத்தொடங்கினர்.
கோபுரப்பட்டியும் ஒரு புறம் பெருவள வாய்க்கால், மறுபுறம் கம்பலாறு ஆகிய இரு நீரோட்டத்திற்கு நடுவே
ஸ்ரீரங்கத்தினை நினைவுப்படுத்துவது போலிருந்தது சற்றே இவர்களுக்கு ஆறுதலையளித்தது.
இருக்கின்ற குறைந்தபட்ச நிதிஆதாரங்களினால் இந்த கோவில் அஸ்திவாரமே அமைக்கப்படாமல் கட்டப்பட்டது.
(இது தற்சமயம் இக்கோவிலில் புனருத்தாரணம் செய்து வருவதால் தெரியவருகின்றது).
இக்கோவிலிலுள்ள ஒரு கல்வெட்டு இக்கோவிலை ‘புதுக்கிடக்கை‘ என்று குறிப்பிடுகின்றது.
இதன்மூலம் பழைய கிடக்கை ஸ்ரீரங்கம் என்பதனை அறிவிக்கின்றனர். ஹொய்சாள சிற்பக் கலைஞரின்
அற்புத கைவண்ணத்தினால் சிறப்புறக் கட்டப்பெற்று வழிப்பட்டு வந்தனர்.
இங்குள்ள பெரியபெருமாளின் மூலவிக்ரஹம் ஹொய்சாளர்களின் சிற்பக்கலையின் உன்னதமாகும்.
இங்குள்ள அனைத்து வைணவர்களும் ஸ்ரீரங்கத்தில் இறந்த 12000 பேர்களுக்கும் திதி, தர்ப்பணம் முதலானவைகளை
பெருவளவாய்கால் கரையில் செய்துள்ளனர். ஆடி அமாவாசை வழிபாடு சிறப்புற நடந்திருக்கின்றது.
இதனை இந்த கோவிலின் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
கி.பி 1342ம் ஆண்டு ஒரு முறையும், கி.பி1498ல் இலங்கைஉலகன் என்று அறியப்பட்ட தோழப்பன் என்பவரால்
மறுமுறையும் திருப்பணி நடந்து குடமுழுக்கு நடைபெற்றதையும் விவரிக்கின்றது இக்கோவிலுள்ள கல்வெட்டுகள்.

———–

ஐந்து ஆயுதங்களும், ஓளபகாயணர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஞ்சாயனர் என்று
ஐந்து ரிஷிகளாக அவதரித்து ஐந்து ராத்ரிகளில் ரங்கநாதனை ஆராதிக்கும் முறையினை பகவானாலேயே
உபதேசிக்கப் பெற்று ‘பாஞ்சராத்ரம்” என்னும் ஆகம முறையினைத் தோற்றுவித்தனர்.

பின்னர் இந்த ஐந்து ஆயுதங்களும் ஆழ்வார்களாகவும் அவதரிக்கப் பெற்று பெருமாளின் புகழைப் போற்றிப் பரவினர்.

———-

ஜயதுயஸஸாதுங்கம்ரங்கம் ஜகத்த்ரயமங்களம்
ஜயதுஸூசிரம் தஸ்மிந்பூமா ரமாமணி பூஷணம்
வரதகுருணார்த்தம் தஸ்மை ஸூபாந்யபிவர்த்தயந்
வரவரமுநி: ஸ்ரீமாந்ராமானுஜோ ஜயதுக்ஷிதௌ

பெருமையினால் உயர்ந்து மூவுலகுக்கும் மங்களாவஹமான திருவரங்கமானது பெருமையுற்று விளங்கவேணும்.
அத்திருப்பதியிலே பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீகௌஸ்துபத்தையும் திவ்யாபரணமாகவுடையனான எம்பெருமான்
பல்லாண்டாக விளங்கவேணும். அவ்வெம்பெருமானின் பொருட்டு வரதகுருவுடன் மங்களங்களை
மேலும் மேலும் உண்டாக்குபவரான ஸ்ரீராமானுஜர் அவதாரமான மணவாளமாமுனிகள் இப்புவியில் விளங்கவேணும்.

————

வரவரமுநி: பதிர்மே தத்பதயுகமேவ சரணமநுரூபம்
தஸ்யைவ சரணயுகளே பரிசரணம் ப்ராப்யமிதி நநுப்பராப்தம்

மணவாளமாமுனிகளே அடியேனுக்கு ஸ்வாமி.
அவருடைய திருவடித் தாமரைகளே பேற்றுக்கநுருபமான உபாயம்.
அவருடைய திருவடித் தாமரைகளில் கைங்கர்யமே மேலான உபேயம்.
-எறும்பியப்பா.

அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ
சடகோபன் தண்டமிழ் நூல் வாழ – கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மாமுனியே!
இன்னுமொரு நூற்றாண்டிரும்!.

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே
ஸ்ரீரங்க வாஸிநே பூயாத் நித்யஸ்ரீர் நித்ய மங்களம்.

————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முரளீ பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ உலகு அளந்த உத்தமன்- சேர்த்தி அனுபவ -அருளிச் செயல்கள் ஸ்ரீ ஸூக்திகள்–

December 7, 2020

ஸ்ரீ பெரியாழ்வார் -35-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -14-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -31-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -55-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் 10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -73-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் மங்களாசாசனம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் 4-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்

மொத்தம் –247–பாசுரங்கள் மங்களாசாசனம்

——–

ஸ்ரீ பெரியாழ்வார்-ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ உலகு அளந்த உத்தமன்- சேர்த்தி அனுபவம்-

குறள் பிரமசாரியாய் மாவலியை குறும்பதக்கி அரசு வாங்கி
இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த வெம்மான் கோயில்
எறிப்புடைய மணி வரைமேல் இள நாயிறு எழுந்தால் போல் அரவணையின் வாய்ச்
சிறப்புடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே -4 9-7 –

தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-

——-

ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ உலகு அளந்த உத்தமன்- சேர்த்தி அனுபவம்-

பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால்நீர் ஏற்று
எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே–11-5-

———

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ உலகு அளந்த உத்தமன்- சேர்த்தி அனுபவம்-

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-

———

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்-ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ உலகு அளந்த உத்தமன்- சேர்த்தி அனுபவம்-

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே –35-

————–

ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் -ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ உலகு அளந்த உத்தமன்- சேர்த்தி அனுபவம்-

உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2

———-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ உலகு அளந்த உத்தமன்- சேர்த்தி அனுபவம்-

பண்டு இவ் வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர்
கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்
வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே —5-4-3-

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —5-4-8-

வளர்ந்தவனைத் தடம் கடலுள் வலி யுருவில் திரி சகடம்
தளர்ந் துதிற யுதைத்தவனைத் தரியாதன்றி ரணியனைப்
பிளந்தவனைப் பெரு நிலம் ஈரடி நீட்டி நீட்டிப் பண்டு ஒரு நாள்
யளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-4-

சிந்தனையைத் தவ நெறியைத் திருமாலைப் பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டார்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-7-

முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே –திரு நெடும் தாண்டகம்–14

——————-———————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவ -அருளிச் செயல்கள் ஸ்ரீ ஸூ க்திகள்–

December 6, 2020

ஸ்ரீ பெரியாழ்வார் -35-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -14-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -31-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -55-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் 10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -73-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் மங்களாசாசனம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் 4-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்

மொத்தம் –247–பாசுரங்கள் மங்களாசாசனம்

——————-

ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8-8-

தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-

———-

ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–11-8-

———

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-

————-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —5-4-8-

ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலமும் பெரு விசும்பும்
தானாய பெருமானைத் தன் அடியார் மனத்து என்றும்
தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால்
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே—5-6-3-

————–

ஸ்ரீ நம்மாழ்வார் –ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

‘என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-

———————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்