Archive for the ‘Srirengam’ Category

ஸ்ரீ ரெங்கம் பற்றி அறிய வேண்டியவை —

August 30, 2022

ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சந்நதிக்கு வெளியே இருக்கும் ஐந்து குழி மூன்று வாசல் பற்றிய விளக்கம்

பலர் இந்த இடத்தில் தாயார் தன் ஐந்து விரல்களை வைத்து பெருமாள் தாயார் சன்னதி நோக்கி எழுந்தருள்வதை ஆவலுடன் பார்கிறாள் என கூறுவது வழக்கம். ஆனால் இந்த இடத்தின் தாத்பர்யம் வேறு:

1. ஸ்ரீரங்கம் தாயார் படி தாண்டாப் பத்தினி. எனவே வெளியே வந்துபார்த்திருக்கச் சாத்தியமில்லை.

2. பெருமாள் இவ்வழியில் தாயார் சன்னதிக்கு வருவது வழக்கம் இல்லை. ஒருநாள் மட்டுமே இந்த வழியாக எழுந்தருள்வார். மற்ற நேரங்களில் ஆழ்வான் திருசுற்று (5வது பிரகாரம்) வழியாகத்தான் எழுந்தருள்வார்.

இந்த ஐந்து குழி அர்த்தபஞ்சக ஞானத்தைக் குறிப்பதாகும். மூன்று வாசல் தத்வத்ரயத்தைக் குறிப்பதாகும்.

இந்த ஐந்து குழிகளில் ஐந்து விரல்களை வைத்துத் தெற்குப் பக்கம் பார்த்தால் பரமபதவாசல் தெரியும்.

ஒரு ஜீவாத்மா, பரமாத்மாவை இந்தத் தத்துவங்களைக் கொண்டு அடைந்தால் அந்த ஜீவாத்மாவுக்குப் பரமபதம் நிச்சயம் என்பதுதான் இதன் பொருள்.

————

தாயார் சந்நிதியில் சேவை செய்து வைக்கும்போது மூன்று தாயார்கள் – ரெங்கநாயகி , ஸ்ரீதேவி , பூதேவி எனக் கூறுவார். ஆனால் மூலவர் இருவரும் ஒருவரே.

ஸ்ரீரங்கம் உலுஹ்கான் படையெடுப்பினால் கிபி 1323 இல் முழுவதுமாக சூறையாடப்பட்டு பெருமாளும் கோவிலைவிட்டு வெளியேறி கிபி 1371 மீண்டும் திரும்பினார். இந்த படையெடுப்பின்போது மூலவர் சந்நிதி கல்திரை இடப்பட்டது. இதனால் பின்னால் இருக்கும் தயார் மறைக்கப்பட்டுவிட்டார்

கோவிலை விட்டு துலுக்கர்கள் வெளியேறியபின் ( 20 – 30 ஆண்டுகள்) உள்ளூர் மக்கள் மூலவர் தயார் காணவில்லை என நினைத்து புதிதாக ஒரு மூலவரை ப்ரதிஷிட்டை செய்தனர். அவரே இப்போது முதலில் இருக்கும் மூலவர்.

பிற்காலத்தில் அரையர் ஒருவர் தாலம் இசைத்து பாசுரம் சேவித்தபோது ஜால்ராவின் ஓசை வித்தியாசமாக வருவதை உணர்ந்து மூலவருக்குப் பின்னால் ஏதோ ஒரு அரை உள்ளது எனக் கூறினார். இதன் பின்னர் அதைத் திறந்து பார்த்தபொழுது பழைய மூலவர் இருப்பது தெரிந்தது. அன்று முதல் இரண்டு மூலவர்கள் உள்ளனர்.

————

காவேரி விராஜா சேயம் வைகுண்டம் ரெங்க மந்திரம் 
ஸ வாஸூதேவோ ரங்கேஸே ப்ரத்யக்ஷம் பரமம் பதம்–

விமாநம் ப்ரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மஹாத்புவம்
ஸ்ரீரெங்கசாயீ பகவான் ப்ரணவார்த்த ப்ரகாஸஹா-

ப்ரணவாகார விமானம் ஓம் என்னும் வடிவத்தில் இருக்கும்.ஓம் எனும் சப்தத்தில் 3 (அ ,உ,ம) எழுத்துக்கள் உள்ளன. உட்சாஹ சக்தி (அ) , ப்ரபூ சக்தி (உ), மந்திர சக்தி (ம) ஆகிய 3 சக்திக்களுடன் பெரியபெருமாள் பிரகாசிக்கிறார்.

இந்த விமானத்தில் கிழக்கு மேற்காய் 4 கலசங்களும், தெற்கு வடக்காய் 4 மற்றும் 1 கலசம் முன்னதாக மொத்தமாக 9 கலசங்கள் இருக்கும். இந்த 9 கலசங்களும் நவக்கிரகங்கள் ஆராதிப்பதாகக் கூறுவர்.

தர்மவர்மா திருச்சுற்று (முதல் பிராகாரம்/ திருவுண்ணாழி பிரதக்க்ஷணம்) இதில்தான் காயத்ரி மண்டபம் உள்ளது. ஏன் இந்த மண்டபத்திற்கு இந்தப் பெயர்?

காயத்ரி மந்திரத்தில் 10 சப்தங்கள் – இந்த 10 சப்தங்கள்தான் விமானத்தின் 10 திக்குகள்

காயத்ரி மந்திரத்தில் 24 எழுத்துக்கள் – இந்த மண்டபத்தில் 24 தூண்கள்

இந்த மண்டபத்தின் 24 தூண்கள் – 24 தேவதைகள் ஆவாகனம் (கேசவாதி த்வாதச நாமங்கள் 12 தூண்களுக்கு,வாசுதேவ – சங்கர்ஷண – பிரத்யும்ன – அநிருத்த ஆகிய நால்வரின் 3 நிலைகள் = 12)

காயத்ரி மந்திரத்திற்குப் பின்னால் வரும் ஸ்லோகத்தின் 9 சப்தங்கள் 9 கலசங்கள்

உள்ளே உள்ள 2 திருமணத்தூண்கள் ஹரி எனும் 2 எழுத்துக்கள் ப்ரணவாகார விமானத்தைத் தாங்குகின்றது.

காயத்ரி மண்டபத்தின் நடுவில் இருப்பது அமுது பாறை. பெருமாள் மூலஸ்தானிலிருந்து புறப்பாடு கண்டருளும்போது இங்கிருந்துதான் கிளம்புவார். இந்தத் திருச்சுற்றின் வாசலின் பெயர் அணுக்கன் திருவாசல்.

அமுதுபாறையின் இருபுறமும் கண்ணாடிகள் உள்ளன. பெருமாளுக்கு அலங்காரம் சாற்றி அர்ச்சக்கரகள் இந்த கண்ணாடிகளில் பெருமாள் திருமேனி அழகைக் கூட்டுவர். அமுது பாறை பொதுவாக பெருமாள் அமுது செய்யும்போது பிரசாதம் வைக்கும் இடம்.

அடுத்தமுறை மூலவர் சேவித்தபின்னர் தீர்த்தம் கொடுக்கும் இடத்தில் 2 நிமிடங்கள் நின்று தீர்த்தம் கொடுப்புவருக்கு பின்னால் சற்று பார்க்கவும். அப்போது 3 விஷயங்கள் தெரியும்:

1) பெருமாள் திருவடி வெளிப்புற தங்க கவசம்

2) மேலே ப்ரணவாகார விமானம்

3) கீழே சிறிய அகழி (3 அடி ஆழம்)

பெருமாளுக்குப் பின்னால் இருக்கும் இந்த பிரகாரம் யாருக்கும் அனுமதியில்லை. இந்தத் திருச்சுற்றின் 2 மூலைகளில் வராகரும், மற்ற மூலைகளில் வேணுகோபாலனும், நரசிம்மனும் சேவைசாதிப்பர். பெருமாளுக்கு வலதுபுறம் விஷ்வக்க்ஷேனரும் இடதுபுறம் துர்கையும் விமானத்தின் சுவற்றில் கீழே சுவற்றில் சேவைசாதிப்பர்.

விமானத்தின் கீழே இருக்கும் சிறிய அகழியின் சிறப்பு:

ராமானுஜர் பெரிய ஆசாரியன் மற்றும் இல்லை. அவர் தலைசிறந்த நிர்வாகி மற்றும் பெருமாளின் திருமேனியின் மீது பறிவுகொண்ட மகான். கீழ்வரும் கைங்கரியம் அவர் ஆரம்பித்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது: (செவிவழி செய்தி)

கோடைக் காலத்தில் பெருமாளை வெப்பத்திலிருந்து பாதுகாக்க செய்யப்பட்டதுதான் இந்த அகழி. கோடைக் காலத்தில் தினமும் இந்த அகழியில் தண்ணீர் நிரப்பினால் அது விமானம் மற்றும் பெருமாளை சுற்றியுள்ள சுவற்றின் வெப்பத்தை இழுத்து பெருமாளை குளிர்விக்கும் (இயற்கை குளிர்சாதனம்). ஆனால் தினமும் இங்கு அவ்வளவு தண்ணீர் எப்படி கொண்டுவருவது?

இரண்டாம் திருச்சுற்றில் விமானத்தின் பின்னால் ஒரு சிறிய கிணறு உள்ளது. அந்த கிணற்றிலினருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு ஒரு குழாய் (உள்ளே செல்ல மற்றும் வெளியே வர ஒரே குழாய்) மூலம் விமானத்தின் கீழேயிருக்கும் அகழி தினமும் மதியம் நிரப்பப்பட்டு இரவு அரவணைக்கு பிறகு வெளியேற்றப்படும்.

இந்த கைங்கரியத்தின் பெயர் #கோடைஜலம்

இந்தக் கிணற்றில் கீழே ஒருவரும், நடுவில் ஒருவரும், மேலே ஒருவரும் மண் பானைகளில் தண்ணீர் எடுத்து (கயிறு இல்லாமல் கையில்) ஒரு அண்டாவில் தினமும் 1008 பானைகள் அளவு நிரப்புவர். அதை சிறுவர்கள் எடுத்து மேலேயுள்ள தொட்டியில் ஊற்றுவர். அந்தத் தண்ணீர் முதல் திருச்சுற்றின் அகழியில் நிரம்பும். இந்த கைங்கர்யம் பூச்சாற்று உற்ஸவம் தொடக்கத்தன்று (சித்ராபௌர்ணமிக்கு பத்து நாட்கள் முன்னால்) தொடங்கி 48 நாட்கள் நடக்கும்.

இந்த கைங்கரியம் சிறுவர்களுக்கு அரங்கனிடம் ஈடுபாட்டுக்கு ஆரம்பக்கட்டம். அடியேனுக்கும் இந்த கைங்கரியத்தை செய்ய ரெங்கன் அருளினார்.

—————-

அரங்கன் திருபாதரக்க்ஷையும் (செருப்பு) மற்றும் சக்ளியன் கோட்டைவாசலும்

கலியுகத்தில் அரங்கன் பாமரர்கள் கனவில் தோன்றி அருள்பாலிக்கும் அற்புத சம்பவம்!!!

இந்த காலணிகள் சமுதாயத்தில் அடித்தட்டு மக்களாகிய காலணி செய்து வாழும் மக்களின் சமர்ப்பணம்.

அடுத்தமுறை அரங்கநாதன் கோயிலுக்கு செல்லும்போது 4ஆம் திருச்சுற்றில் (ஆரியப்படாள் வாசலுக்கு முன்னர் இடதுபறத்தில்) இருக்கக்கூடிய திருக்கொட்டாரத்திர்கு செல்லவும்.

என்ன பக்தி இருந்தால் இந்த பாகவதருக்கு பெருமாள் கடாக்க்ஷம் அருளியிருப்பர்🙏

பக்தருக்க்கு அரங்கநாதன் சொப்பனத்தில் இட்ட கட்டளை:

1. பாதரக்க்ஷை அளவு-2. அதன் வர்ணம்3. செலுத்தும் நாள் 4. கோவிலுக்கு வரவேண்டிய வாசல்

மேற்கு சித்திரை வீதிக்கும் மேற்கு உத்திரை வீதிக்கும் இடையில் இருக்கும் கோபுரத்தின் பெயர் சக்லியன் கோட்டை வாசல். பெருமாள் திருபாதரக்க்ஷை இந்த வழியாகத்தான் எடுத்து வரும்படி ஆணையிட்டான்.

எப்ரல் 2017ல ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் சுமார் 78 ஆண்டுகளுக்கு பிறகு அரங்கன் கனவில் வந்து சொல்லி இதை செய்து கொண்டுவந்தாதாக சொல்லுகிறார்கள்.

இதில் மற்றொரு அதிசயம் உண்டு. சில சமயங்களில் பெருமாள் தனது இரு பாதங்கள் அளவை இருவேறு பக்தர்களுக்கு அளித்து இருவரும் ஓரே நாளில் வந்து சமர்ப்பிக்கவும் செய்வார்.

நாம் ஒவ்வொருவரும் அரங்கனின் அருள் மற்றும் கருணை மழையை அறிந்து உணர தூய பக்தி மட்டுமே போதும் என்றும் அதற்குக் சாதி பேதம் இல்லை என உணர்த்தும் சம்பவம் இது 

——————-

பரமன் திருமண்டபம் மற்றும் சந்தனு மண்டபம்-யார் இந்த பரமன்?-எந்த ராஜ்ஜியத்தின் அரசன் – சேரனா? சோழனா? பாண்டியனா? ஹொய்சாலனா? விஜயநகர அரசனா?பரமன் இந்த மண்டபத்தை தயார் செய்த தச்சனின் பெயர்.-

பரமன் திருமண்டபம் மிகுந்த மர வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டிருக்கும் மண்டபம். எட்டு தூண்களுடன் மூன்று அடுக்குகளுடன் தேரின் மேல் பகுதி போல் காணப்படும் மண்டபம் விஜயநகர ஆட்சியில் கட்டப்பட்டது.

வாலநாதராயர் எனும் விஜயநகர அரசின் பிரதானி தச்சன் பரமனை கொண்டு கட்டியது. அவரது வேலைப்பாடுகள் எல்லாரும் அறிய , அந்த அரசர் தனது பெயரை விடுத்து, ஒரு தச்சனின் பெயரை சூட்டினார்.

சந்தனு மண்டபத்தின் தெற்கு பக்கத்தில் மூன்று அறைகள் உள்ளன.தென் மேற்கு மூலையில் இருப்பது கண்ணாடி அறை.பெருமாள் தை பங்குனி மற்றும் சித்திரை மாத உத்சவத்தின் போது பத்து நாட்கள் தினமும் இங்கு தான் எழுந்தருள்வார்.இந்த கண்ணாடி அறை விஜயரங்க சொக்கநாதர் (இராஜ மகேந்திரன் திருசுற்றில் கண்ணாடி கூண்டில் இருக்கும் நான்கு சிலைகளுள் ஒருவர்) ஆட்சியில் சமர்ப்பிக்க பட்டது.

நடுவில் இருக்கும் அறையில் சன்னதி கருடன் எழுந்தருளியுள்ளார். கருட விக்கிரகம் வாலநாதராயரால் முகலாய படையெடுப்பிற்கு பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மூன்றாவது அறை (தென் கிழக்கு மூலையில் இருப்பது) காலி அறை. இந்த அறையில் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பிரதிஷ்டை செய்த பொன் மேய்ந்த பெருமாள் (தங்கச் சிலை) விக்கிரகம் முகலாய படையெடுப்பின் போது பறிகொடுத்தோம்.

சந்தனு மண்டபம் அணுக்கன் திருவாசலுக்கு வெளியே இருக்கும் பெரிய திருமண்டபம். ஆகும சாஸ்திரத்தின்படி மகாமண்டபம்.–

அழகியமணவாளன் திருமண்டபம் என்ற பெயரும் இந்த மண்டபத்தைத்தான் குறிக்கும்.

பெரிய திருமண்டபத்தில்தான் பெருமாள் தினமும் பசுவும் யானையும் த்வாரபாலகர்கள் முன்னே நிற்க விஸ்வரூபத்துடன் காலை நமக்கு சேவைசாதிக்க தொடங்குகிறார்

இந்த மண்டபத்தின் மற்ற தகவல்கள்

•தென்மேற்க்கே மரத்தினாலான பரமன் மண்டபம்

•கிழக்கு – மேற்காக இருபுறமும் 10க்கும் மேற்பட்ட படிகளுடன் உயர்த்து நிற்கும் மண்டபம் ( நம்பெருமாள் கிழக்குக்கு / கீழ்ப்படி படியேற்ற சேவை காணொலியில் பரமன் மண்டபம் மற்றும் சந்தனு மண்டபத்தை காணலாம்)

•தென்புறத்தில் மூன்று அறைகள் – கண்ணாடி அறை, சன்னதி கருடன், மற்றும் காலி அறை

•இந்த மண்டபம் ஐந்து வரிசைகளில் ஆறு தூண்களுடன் விஜயநகர கட்டிடக்கலையில் அமைந்திருக்கும் மண்டபம்

நம்பெருமாள் பரமன் திருமண்டபத்தில் வருடத்திற்கு இரு முறை எழுந்தருள்வார்:-1) தீபாவளி-2) யுகாதி

இவ்விரு நாட்களிலும் பெருமாளுக்கு நேர் எதிராக கிளி மண்டபத்தில் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் எழுந்தருள்வர். அமாவாசை, ஏகாதசி, கார்த்திகை ஆகிய நாட்களில் இந்த பெரிய திருமண்டபத்தில் பெருமாள் எழுந்தருள்வார்.

இதே திருமண்டபத்தில் தான் நம்பெருமாள் மணவாள மாமுனிகளை ஈடு காலக்ஷேபம் செய்ய பணித்து ஓர் ஆண்டு காலம் தினமும் கேட்டருளினார். இதனால் தான் இந்த படம்  இப்போதும் வைக்கப்பட்டுள்ளது. இந்த வைபவம் 16.09.1432 முதல் 09.07.1433 வரை நடைபெற்றது.

——————-

பெரிய பெருமாளுக்கு முன் இருக்கும் உற்சவர் அழகிய மணவாளன். அடுத்த முறை ரங்கநாதரை சேவிக்கும் போது சற்று கூர்ந்து அவரின் திருவடியை சேவித்தால், அங்கே மற்றொரு உற்சவர் சேவை சாதிப்பார். இவர் உற்சவ காலங்களில் யாக சாலையில் எழுந்தருளி இருப்பார்.

பொதுவாக எல்லா திவ்ய தேசங்களிலும் யாகபேரர் (யாக சாலை பெருமாள்) சிறிய மூர்த்தியாக இருப்பார். இங்கோ இவர் அழகிய மணவாளனின் நிகரான உயரத்தில் இருப்பார்.

யார் இந்த உற்சவர்? எப்போது திருவரங்கத்திற்க்கு எழுந்தருளப்பட்டார்?-இவரின் திருநாமம் திருவரங்கமாளிகையார்

இந்த சரித்திரத்தை அறிய நாம் 640 ஆண்டுகள் பின்னே செல்ல வேண்டும். 1323ஆம் ஆண்டு பங்குனி உற்சவம் எட்டாம் திருநாள் முகலாய அரசன் உலுக் கான் திருவரங்கத்தின் மேல் படையெடுத்து 12000 ஸ்ரீவைஷ்ணவர்களை வதம் செய்தான். முகலாய படையெடுப்பிலிருந்து அழகிய மணவாளனை பாதுகாக்க பிள்ளை லோகாச்சாரியர் உற்சவரை தெற்கே எழுந்தருள செய்து திருவரங்கத்தை விட்டு வெளியேறினார்.

அதற்கு முன்பு மூலஸ்தானத்தில் பெரிய பெருமாளுக்கு கல் திரை சமர்ப்பித்து தாயார் வில்வ மரத்தின் கீழ் புதைத்து விட்டு சென்றார். இதே சமயத்தில் தான்  தேசிகன் அந்த 12000 ஸ்ரீவைஷ்ணவர்களின் சடலங்களுன் இருந்து ஷருத்தபிரகாசிகை (பிரம்ம சூத்திரத்திற்க்கு விளக்கம் அருளிய சுவடி) மற்றும் பட்டரின் குழந்தைகளை காப்பாற்றி மைசூர் அருகே இருக்கும் சத்யகலத்திற்க்கு சென்று விட்டார்.

அழகிய மணவாளன் ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி மதுரை வழியாக கேரளா சென்று பின்னர் மைசூர் வந்து திருமலைக்கு சென்றார். கடைசியாக செஞ்சிக்கோட்டைக்கு வந்து பின்னர் மீண்டும் திருவரங்கத்திற்க்கு வந்து சேர்ந்தார்.

1323ஆம் ஆண்டு பங்குனி மாதம் திருவரங்கத்தை விட்டு வெளியேறிய பெருமாள் 48 ஆண்டுகள் கழித்து மீண்டும் 1371ஆம் ஆண்டு வைகாசி மாதம் 17ஆம் தேதி வந்தடைந்தார். (இதற்கு சான்று இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கல்வெட்டு)

கல்கல்வெட்டில் கூறப்படும் சக ஆண்டு 1293. சக ஆண்டிற்க்கும் நம் நாட்காட்டிக்கும் 78 ஆண்டுகள் வித்தியாசம். எனவே 1293+78 = 1371.

கொடவர் (பெருமாளை பல ஆண்டுகளாக பாதுகாத்தவர்) அழகிய மணவாளனுடன் வந்தார். பெருமாளை மீண்டும் திருவரங்கம் எழுந்தருள செய்த முயற்சியில் கோபன்ன உடையார் பங்கு சிறந்தது.

இந்த 48 ஆண்டுகளுக்குள் அழகிய மணவாளன் உற்சவ மூர்த்தி என்ன ஆனார் என்று தெரியாததால் ஒரு புதிய உற்சவரை பிரதிஷ்டை செய்து விட்டனர்.(எந்த ஆண்டு என்று குறிப்பு இல்லை).

48 ஆண்டுகள் கடந்து விட்டதாலும் அழகிய மணவாளனை, சேவித்த குடிமக்கள் இறந்து போய்விட்டதாலும், அதற்குப் பிறகு வந்தவர்கள் திருமேனியைச் சேவித்து அறியாதவர்களானதாலும், அழகிய மணவாளனைக் கோயிலில் எழுந்தருள மறுத்து விட்டனர். பழைய அழகிய மணவாள பெருமாளை சேவித்தவர் யாரும் எஞ்சி இல்லாததால் இரண்டு உற்சவர்களுள் எவர் முன்னால் இருந்த அழகிய மணவாளன் என்று சர்ச்சை எழுந்தது.

அப்போது மிக வயதான ஒருவர் தான் பழைய அழகிய மணவாளனை சேவித்தது உண்டு என்றும் ஆனால் அவருக்கு கண் பார்வை போய் விட்டது என்றும் கூறினார்.

அழகிய மணவாளனும் புதிதாக எழுந்தருளப்பட்ட உற்சவரும் காண்பதற்கும் உயரத்திலும் அங்க முத்திரைகளிலும் ஒரே போல் இருப்பர் என்பது வியப்பான ஒன்று.இந்த முதியவர் தன்னை ஒரு ஈரங்கொல்லி (வணத்தான்) கண் பார்வை இல்லாமையால், திருமேனி சேவிக்கவில்லை என்றாலும், அழகிய மணவாளன் சாற்றியிருந்த ஈரவாடை தீர்த்தம் (திருமஞ்சனம் போது சாற்றப்படும் வஸ்த்திரம்) சாப்பிட்டுக் கைங்கர்யம் பண்ணி பழகி இருப்பதைச் சொல்லி, அதன்மூலம் அழகிய மணவாளனைக் கண்டறிய முடியும் என்றார். அதன்படியே, அழகிய மணவாளன் திருமேனிக்கும், திருவரங்கமாளிகையார் திருமேனிக்கும், திருமஞ்சனம் செய்து, ஈரவாடை தீர்த்தம் சாதிக்குமாறு சொன்னார்.

அதனால் இரண்டு உற்சவ மூர்த்திகளுக்கும் திருமஞ்சனம் செய்து தமக்கு தீர்த்தம் தருமாறு வேண்டினார். ஊர் பெரியோர்களும் அவ்வாறே செய்தனர்.

அனுமன் சீதையை கண்ட பின்னர் “கண்டேன் சீதையை!!” என ராமரிடம் கூறியது போல் அழகிய மணவாளப் பெருமாள் ஈரவாடை தீர்த்தம் பெற்றதும் “கண்டேன் பெருமாளை” என்றும் “இவரே நம்பெருமாள்” என்றும் கூறினார்.

அன்று முதல் அழகிய மணவாளன் என்ற திருநாமத்தை விட நம்பெருமாள் என்ற திருநாமமே பிரசித்தம் ஆனது. புதிதாக வந்த உற்சவருக்கு “திருவரங்க மாளிகையார் ” என்று திருநாமம் ஏற்பட்டது. பின்னர் அந்த ஸ்ரீவைஷ்ணவ வன்னாத்தனுக்கு மரியாதை சமர்ப்பிக்கப்பட்டது.

————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திவ்ய தேச ப்ரஹ்மோத்சவ விவரணம் —ஸ்ரீ திவ்ய தேச கருட சேவைகள்

May 4, 2022

ஸ்ரீ ரெங்கம் விருப்பன் திருநாள் – 21.04.22 முதல் 01.05.22 முடிய

திருமுளை 19.04.22
நகரசோதனை – 20.04.22

21.04.22 – முதல் திருநாள் – காலை: துவஜாரோஹணம்
மாலை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பாடு .

22.04.22 – இரண்டாம் திருநாள் – காலை: பல்லக்கு
மாலை : கற்பகவிருட்சம்.

23.04.22 – மூன்றாம் திருநாள் – காலை: சிம்ம வாகனம்
மாலை : யாளி வாகனம்

24.04.22 – நான்காம் திருநாள் -காலை : இரட்டை பிரபை
மாலை : கருட சேவை.

25.04.22 – ஐந்தாம் திருநாள் – காலை : சேஷ வாகனம்
மாலை : ஹனுமந்த வாகனம்.

26.04.22 – ஆறாம் திருநாள் – காலை : தங்க ஹம்ஸ வாகனம்
மாலை : யானை.

27.04.22 – ஏழாம் திருநாள் – மாலை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன்
திருச்சிவிகையில் புறப்பாடு. (பூந்தேர்)

28.04.22 – எட்டாம் திருநாள் – காலை : வண்டலூர் சப்பரம்.
வெள்ளி குதிரை வாகனம்.
மாலை : தங்க குதிரை வாகனத்தில் வையாளி…

29.04.22 – ஒன்பதாம் திருநாள் – காலை : திருத்தேர். .

30.04.22 – பத்தாம் திருநாள் – மாலை : சப்தாவரணம்.

01.05.22- பதினோராம் திருநாள் இரவு : ஆளும் பல்லக்கு

———–

நாலாம் நாள் மாலை கருட உத்சவம்
மாசி கருடன் வெள்ளி கருடன்
மற்ற தங்க கருடன்
தங்க ஹம்ச வாஹனம் சித்திரை -விருப்பம் திரு நாள் -ஆறாம் நாள்
வெள்ளிக்குதிரை சித்திரை
ஒரே நாள் இரண்டு குதிரை வாஹனம் எட்டாம் நாள் -தங்க குதிரை வாஹனம்
வையாளி தங்க குதிரையில்
திரு ஆபரணங்கள் சாத்தி வெள்ளிக்குதிரை வாஹனம்
காலையில் வெள்ளிக் குதிரை வாஹனம் மாலையில் தங்க குதிரை வாஹனம்

பங்குனி ப்ரஹ்மோத்சவம் விபீஷணன் மட்டும் எழுந்து அருளி மிருத ஸங்க்ரஹம்
மற்றவற்றில் திருவடியும் சேர்ந்து எழுந்து அருளிச் செய்வார்
ஐப்பசி திருவோணத்தில் திருப்பாற்கடலில் தோன்றியவர்
முன்பும் ஐப்பசி ஸ்ரவண ப்ரஹ்மோத்சவமும் பிள்ளை லோகாச்சார்யார் காலம் வரை நடந்து வந்ததாம்

ஐப்பசி திருவோணம் -திருப்பாற்கடலில் ஆவிர்பாவம்
முன்பு ப்ரஹ்மோஸ்த்வம் நடந்ததாம்
ரோஹிணி -பிரதிஷடை -பங்குனி ரோஹிணி தொடங்கி உத்தரம் முடியும்
தீர்த்தவாரிக்கு அடுத்த நாள் திருத்தேர்
சித்திரை ரேவதி தீர்த்தவாரி-திருத்தேர் -மீண்டும் பிரதிஷ்டை 1371 வைகாசி ரேவதி
தண்டோரா போட்டு துலா பாரம் -செய்து பொருள் சேர்த்து 12 வருஷம் சரிப்படுத்தி
60 வருஷம் கழித்தே நடந்ததாம் –
வெங்கல திருத்தேர் தட்டு -குண்டு சார்வன் காட்டியது -அங்கு எழுந்து அருளி கொடி ஏற்றம் நடக்கும்
தை புனர்வசு -பூபதி ராஜா நக்ஷத்ரம் -1413 தொடங்கி நடக்கிறது –
மா முனிகள் வந்த இதே வருஷம் -மா முனிகள் அனுமதி உடன் தொடங்கிற்றாம்
கதிர் அலங்காரம் தாயார் சந்நிதியில் -நடக்கும் –

————

கோயில் என்று அழைக்கப்படும் திருவரங்கத்தில்– இன்று ஸ்ரீராமநவமி….

ஸ்ரீரங்கம் அரங்கனாதருக்கு ஏழு நாச்சிமார்கள்…
1) ஸ்ரீதேவி.,
2) பூதேவி.,
3) துலுக்க நாச்சியார்.,
4) சேரகுலவல்லி நாச்சியார்.,
5) கமலவல்லி நாச்சியார்.,
6) கோதை நாச்சியார்.,
7) ரெங்க நாச்சியார் ஆகியோர்….

இன்று சித்திரை வளர்பிறை, நவமி….
ஸ்ரீராமபிரான் அவதார திருநாள்.
இன்று தான்
ஸ்ரீரங்கம் பெரிய கோவிலில் ஸ்ரீராம நவமி கொண்டாடப் படுகிறது.
(மற்ற திவ்ய தேசங்களிலும் கோவில்களிலும் பங்குனி மாதத்திலேயே கொண்டாடப் படுகிறது)

இன்றைய சேர்த்தி ஸேவையில் அரங்கனும் சேரகுலவல்லித் தாயாரும்……!!!*

அரங்கனோடு அற்புதமாகச் சேர்ந்தவர்கள்…

பெரிய பிராட்டியார் ஸ்ரீரங்கநாயகித் தாயார்
உறையூர் கமலவல்லித் தாயார்
சேரகுலவல்லி நாச்சியார்
பூமிப்பிராட்டி ஆண்டாள்
துலுக்கநாச்சியார்
மற்றும் திருப்பாணாழ்வார் ஆகியோர்.
குலசேகராழ்வாரின் திருமகள்
சேரகுலவல்லி நாச்சியார்

ஸ்ரீராமபிரான் ஒருவரையே சதா சிந்தனையில் நிறுத்தி அரசாட்சி செய்தவர் குலசேகர ஆழ்வார் .
இவர் இராமபிரானின் ஜன்ம நட்சத்திரமான புனர்வசு அன்று அவதரித்தவர். இவரது இராமபக்தி அளவற்றது.
இராமாயணம் கேட்கும் போதெல்லாம் நெகிழ்ந்து விடுவார்.சில கட்டங்களில் மெய்ம்மறந்து,கொதித்தெழுந்து
தன் சேனைகளுடன், இராவண சேனையுடன் யுத்தம் செய்யப் புறப்பட்டிருக்கின்றார்.
இத்தனைக்கும் இவருக்கு திடவ்ரதன் என்று பெயர்.. மாமன்னன்..!
சோழ, பாண்டிய அரசுகள் மீது படையெடுத்து அவர்களை ஓட ஓட விரட்டியிருக்கின்றார்.

இராம என்னும் நாமம் இவரை மெய்மறக்கச் செய்தது. அனைத்தையும் மறந்து, அவர் ஒருவரை மட்டுமே
சிந்தையில் நிறுத்துபவர்கள் நெகிழத்தான் செய்வார்கள்.
இவர்கள் அந்தந்த அனுபவங்களோடு சிந்தையில் கலந்தவர்கள்.
இவரது அளவற்ற ஈடுபாட்டினால் இவரது பாசுரங்கள் பெருமாள் திருமொழி என்றே அழைக்கப்படுகின்றது.

இராமன் மீது இவ்வளவு அன்பு கொண்டவர்க்கு இராமன் ஆராதித்த அரங்கன் மீது எவ்வளவு ஆசையிருக்கும்!
மற்ற ஆழ்வார்க்கு இல்லாத பெருமாள்’ என்னும் பேரினைப் பெற்றவர் இந்த குலசேகரப் பெருமாள்!
இவர் பாடிய முதல் பாசுரமே அரங்கன் மீது தான்!

இருளரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தியணிபணம் ஆயிரங்களார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி அனந்தனென்னும்
அணிவிளங்கும் உயர்வெள்ளை
அணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி
திரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு
என்கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே?

(மிகவும் தெளிந்து விளங்கும் நீரினையுடையகாவிரியானது, தனது அலைகள் என்ற கைகளால்
இதமாகத் திருவடிகளைப் பிடித்து விடும்படி தழுவி ஓடும் இடமான திருவரங்கம் என்னும் பெரிய நகரத்தில்,
இருளானது சிதறி ஓடும்படி, ஓளி வீசும்,
மாணிக்கக் கற்கள் பொருத்தியுள்ள நெற்றி யினையும், மிகவும் நேர்த்தியான ஆயிரம் படங்கள் கொண்டு
நாகங்களுக்கு அரசன் என்னும் மிகுதியான கம்பீரத்தையுடைய ஆதிசேஷனாகிய அழகுள்ள வெண்மை
நிற படுக்கையில் கண்வளர்கின்ற நீல ரத்னக்கல் போன்ற பெரியபெருமாளை,
என்னுடைய கண்கள் குளிர்ந்து வணங்கி நான் மகிழ்வுறும் நாளானதுஎந்நாளோ? என்றவாறு
அரங்கனைநினைத்து ஏங்குகிறார். அரங்கனை அடைவதற்கு இந்த ஏக்கம் மிக முக்யம்.

இந்த தாபம்/பாரிப்பு இருந்தால் போதும்…
பெருமாள் அழைத்துக் கொள்வார்.

ஆழ்வாரின் திருமகள் சேரகுல வல்லி நம்பெருமாளையே ஸ்ரீராமபிரானாக வரித்து
ஆழ்ந்த பக்தியில் லயித்திருந்தார்.

(ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திலும்,
நம்பெருமாளை ஸ்ரீராமராகவும்
பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாளை
ஸ்ரீகிருஷ்ணராகவும் வழிபடும் வழக்கம் உள்ளது)

அரங்கனை அனுதினமும் தரிசித்த குலசேகராழ்வார் கண்கள் மட்டும் பேறு அடையவில்லை.
யாரை எண்ணி எண்ணி, அவரும் அவரது மகளான சேரகுலவல்லியும் ஏங்கினார்களோ
அவரையே மாப்பிள்ளையாக அடையும் பேறு பெற்றார்.
அரங்கன் மனமுவந்து ஏற்ற பக்தை இந்த சேரகுலவல்லி!

நம்பெருமாள்-சேரகுலவல்லித் தாயார் சேர்த்தி:

ஸ்ரீராமநவமியன்று இவரை மணந்தார் அரங்கன்.
இன்று கோயில் ஸ்ரீராமநவமியன்று இருவருக்கும் ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சுன மண்டபத்தில் சேர்த்தி! 🙏

அரையர்கள் பெருமாள் திருமொழி சேவிக்க, அடியார்கள் சூழ்ந்திருக்க, இருவருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று
ஏக ஆசனத்தில் பக்தர்களுக்கு அனுக்ரஹிப்பார்கள்!
சேரகுலவல்லி நாச்சியார் சந்நிதி அர்ச்சுன மண்டபத்தின் வலது(மேற்குப்) புறத்தில் உள்ளது.

நம்பெருமாள் வருடத்தில் மூன்று சேர்த்தி கண்டருள்கிறார்

1-பங்குனி ஆயில்ய நட்சித்திரத்தில் உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி
2-பங்குனி உத்திரத்தில் பெரியபிராட்டியாருடன் சேர்த்தி
3-சித்திரை ஸ்ரீராமநவமியில் சேரகுலவல்லி நாச்சியாருடன் சேர்த்

————

ஸ்ரீ ரெங்கநாதப்பெருமாள் திருக்கோயில் திருநீர்மலை

முதல் நாள் -மாலை அங்குரார்ப்பணம் –
ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் போல் சித்திரை திருவோணம் தீர்த்தவாரி

இரண்டாம் நாள் –
காலை துவஜ ஆரோஹணம்
காலை -தோளுக்கு இனியான்
இரவு -தோளுக்கு இனியான்

மூன்றாம் நாள்
காலை -ஸிம்ஹ வாஹநம்
மாலை -ஹம்ஸ வாஹநம்

நான்காம் நாள்
காலை -பல்லக்கு
மாலை -ஹனுமந்த வாஹநம்

ஐந்தாம் நாள்
காலை -பல்லக்கு
மாலை -சேஷ வாஹநம்

ஆறாம் நாள்
காலை -பல்லக்கு -நாச்சியார் திருக்கோலம்
மாலை -கருட சேவை

ஏழாம் நாள்
காலை -சூர்ண உத்ஸவம்
மாலை -யானை வாஹநம்

எட்டாம் நாள்
காலை -திருத்தேர்

ஒன்பதாம் நாள் –
காலை -பல்லக்கு
மாலை -திருமஞ்சனம்
மாலை -குதிரை வாஹநம்

பத்தாம் நாள்
காலை -பல்லக்கு -தீர்த்த வாரி
மாலை -த்வஜ அவரோஹணம்

பதினோராம் நாள்
மாலை -தோளுக்கு இனியான் -துவாதச ஆராதனம்

பன்னிரண்டாம் நாள்
மாலை -விடையாற்றி உத்ஸவம்

———-

சித்திரை திருவோணம்
ஸ்ரீ மாதவப்பெருமாள் திருக்கோயில் -மயிலாப்பூர்
த்வஜ ஆரோஹணம்

————-

ஸ்ரீ பார்த்தசாரதி ப்ரஹ்மோத்சவம்

முதலில் இரவில் -செல்வர் உத்சவம் -புஷ்ப பல்லாக்கு
அடுத்த நாள் -மாலை -அங்குரார்ப்பணம் –சேனை முதன்மையார்

முதல் நாள்
காலை –தர்மாதி பீடம்
மாலை –புன்னை மர வாஹனம்

இரண்டாம் நாள்
காலை –சேஷ வாஹனம் –பரமபத நாதன் திருக்கோலம்
மாலை -ஸிம்ஹ வாஹனம்

மூன்றாம் நாள்
காலை -கருட சேவை
பகல் -ஏகாந்த சேவை
மாலை -ஹம்ஸ வாஹனம்

நான்காம் நாள்
காலை –ஸூர்ய ப்ரபை
மாலை –சந்த்ர ப்ரபை

ஐந்தாம் நாள்
காலை -பல்லக்கு -நாச்சியார் திருக்கோலம்
மாலை -ஹனுமந்த வாஹனம்

ஆறாம் நாள்
காலை -ஸூர்ணாபிஷேகம்
காலை -ஆனந்த விமானம்
மாலை -யானை வாஹனம்

ஏழாம் நாள்
காலை –திருத்தேர்
இரவு –தோட்டத் திருமஞ்சனம்

எட்டாம் நாள்
காலை -வெண்ணெய் தாழிக் கண்ணன்
மாலை -குதிரை வாஹனம்

ஒன்பதாம் நாள் -சித்திரை திருவோணம்
காலை -ஆளும் பல்லாக்கு
மதியம் -தீர்த்தவாரி
மாலை -கண்ணாடி பல்லாக்கு

பத்தாம் நாள்
மதியம் -துவாதச ஆராதனம்
இரவு -சப்தாவரணம் -சிறிய தேர்

பிரதி தினம் மாலை -பத்தி உலாத்தல்

விடையாற்று உத்சவம் -பத்து நாள்கள்

————–

ஸ்ரீ கனக வல்லி ஸமேத ஸ்ரீ வீர ராகவ பர ப்ரஹ்மணே நம

வீஷாவநே விஜய கோடி விமான மத்யே வேதாந்தம் ருக்யமபி நித்யம் அசேஷ த்ருஸ்யம்
ஹ்ருத் தாப நாஸந ஸரஸ் தடே பாரிஜாதம் ஸ்ரீ வீர ராக்வம் அஹம் சரணம் ப்ரபத்யே
ஸ்ரீ பூமிலாலித பதம் ஸ்ரித சேஷ தல்பம் கல்பாந்த யோக்ய புவந யோக நித்ரம்
ஸ்ரீ சாலி ஹோத்ர சிரஸா த்ருத ஹஸ்தம் ஸ்ரீ வீர ராகவா விபும் ஸ்ரயதாம் மநோ மே

முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைக்க
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர் கோன்
தனியன் சேயன் தான் ஒருவனாகிலும் தன்னடியார்க்கு இனியன்
எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே –

சுபக்ருத் வருஷம் சித்திரை -23-வெள்ளிக்கிழமை ஆரம்பம்
வைகாசி மாதம் -1-ஞாயிற்றுக்கிழமை
முதல் நாள்-
6-5-2022– மே -வெள்ளி – –
காலை 4-45- மேஷ லக்கினம் த்வஜ ஆரோஹணம்
தங்கச்சப்பரம் காலை 5 மணிக்குப் புறப்பாடு
பக்தி உலா காலை 9-30-
திருமஞ்சனம் காலை -11 -00
இரவு
பக்தி உலா -மாலை 5 மணி
புறப்பாடு -ஸிம்ஹ வாஹனம் -7 மணி

இரண்டாம் நாள் காலை -ஹம்ஸ வாஹனம் -5-00 மணி
பக்தி உலா காலை 8-00 மணி
திருமஞ்சனம் -காலை 9-30 மணி
இரவு
பக்தி உலா -மாலை 5 -00 மணி
புறப்பாடு -7-00 மணி -ஸூர்ய பிரபை

மூன்றாம் நாள்
காலை 4-00 மணி கோபுர தர்சனம்
கருட சேவை புறப்பாடு -காலை 5-30-மணி
திருமஞ்சனம் 12-00 மணி

பக்தி உலா -5-00-மணி
புறப்பாடு -7-30- மணி ஹநுமந்த வாஹனம்

நான்காம் நாள்
காலை -புறப்பாடு -5-00 மணி சேஷ வாஹனம்
பரமபத நாதன் திருக்கோலம்
பக்தி உலா -8-00 மணி
திருமஞ்சனம் -காலை -10-00 மணி

இரவு –
பக்தி உலா மாலை -5-00 மணி
புறப்பாடு –7-00 மணி -சந்த்ர பிரபை –

ஐந்தாம் நாள்
புறப்பாடு -காலை 4-00 மணி நாச்சியார் திருக்கோலம்
திருமஞ்சனம் -காலை 10-30 மணி
ஸ்ரீ ராம நவமி ஆஸ்தானம்

இரவு
பக்தி உலா -மாலை 5-00 மணி
புறப்பாடு -7-00 மணி -யாளி வாஹனம்

ஆறாம் நாள்
வேணுகோபாலன் திருக்கோலம்
சூர்ணாபிஷேகம் காலை 5-00 மணி
புறப்பாடு -காலை -6-00 மணி வெள்ளி சப்பரம்
திருமஞ்சனம் -காலை -11 மணி

இரவு
பக்தி உலா -மாலை 5-00 மணி
புறப்பாடு -யானை வாஹனம் -7-00 மணி

ஏழாம் நாள்
காலை திருத்தேர்
மீனா லக்கினம் -காலை 4-00 மணிக்கு தேருக்கு எழுந்து அருளுதல்
7-30 மணி திருத்தேர் புறப்பாடு

மாலை 5-00 திருத்தேரில் இருந்து எழுந்து அருளுதல்
திருமஞ்சனம் -மாலை 6-30-மணி
கோயிலுக்கு பெருமாள் எழுந்து அருளுதல் இரவு 9-30 மணி

எட்டாம் நாள்
காலை 9-30 மணி திருமஞ்சனம்
திருப்பாதம் சாடி
திருமஞ்சனம் மாலை -3-00 மணி
பக்தி உலா மாலை 4-30 மணி
புறப்பாடு -இரவு 7-30 மணி குதிரை வாஹனம்

ஒன்பதாம் நாள்
காலை -4-00 ஆள் மேல் பல்லக்கு
தீர்த்தவாரி -காலை -10-30 மணி
திருமஞ்சனம் -காலை 9-30 மணி
பக்தி உலா 5-30-
புறப்பாடு 7-00 மணி விஜயகோடி விமானம்
திருவாய் மொழி சாற்றுமுறை

பத்தாம் நாள்
காலை 9-30 திருமஞ்சனம்
துவாதச ஆராதனம் -காலை -10-30
பக்தி உலா -இரவு 7-00 மணி
புறப்பாடு கண்ணாடி பல்லக்கு-9-0 மணி
த்வஜ அவரோஹணம் -இரவு 11-30மணி

————–

ஸ்ரீ வைகுண்டம் –
ஸ்ரீ திருக்கோஷ்டியூர் –
உத்தமர் கோயில்
ஆராவமுதாழ்வான்
திருப்புல்லாணி கல்யாண ஜெகந்நாதப்பெருமாள்
இதே சமயத்தில் ப்ரஹ்மோத்சவம்

—————–

ஸ்ரீ திவ்ய தேச கருட சேவைகள்

வையம் கண்ட வைகாசி திருநாள்-

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக புகழ் பெற்றிருக்கும் நகரம் காஞ்சி, ‘நகரேஷு காஞ்சி’ என்பர்.
‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகாபுரி த்வராவதி சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற
வாக்கியத்தின்படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற
ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும்.
பெண்கள் இடையில் அணியும் ஒரு அணிகலனுக்கு காஞ்சி என்று பெயர்.
இந்த நகரம், அந்த அணிகலன் வடிவில் இருந்ததால் காஞ்சி என்ற பெயர் ஏற்பட்டது.
காஞ்சி ஒரு புண்ணிய பூமி.
தொண்டை மண்டலத்தில் உள்ள 22 திவ்ய தேசங்களில் 14 திவ்ய தேசங்களை காஞ்சியிலே காணலாம்.

பெரிய காஞ்சியில் 9 திவ்ய தேசங்களும்
(திருப்பாடகம், திருநிலாத்திங்கள் துண்டம், திரு ஊரகம், திரு நீரகம், திருக்காரகம்,
திருக்கார்வானம், திருக்கள்வனூர், திருப்பவளவண்ணம்-திருப்பச்சைவண்ணன், திருப்பரமேச்சுர விண்ணகரம்)
சின்னக் காஞ்சியில் 5 திவ்ய தேசங்களும்
(திருக்கச்சி, திருஅட்டபுயகரம், திருத்தண்கா, திருவேளுக்கை, திருவெஃகா ) உள்ளன.

அனைவருக்கும் கேட்கும் வரமெல்லாம் கொடுப்பதால் எம்பெருமானுக்கு வரதர் என்னும் திருநாமம் ஏற்பட்டது.

தேவலோகத்தில் உள்ள ஐராவதம் என்ற யானையே மலை வடிவம் கொண்டு எம்பெருமானைத் தாங்கி நின்றதால்,
இதற்கு அத்திகிரி என்ற பெயர் ஏற்பட்டது.

ஐராவதம் என்பது வெள்ளை நிற யானை என்பதால் ஸ்வேதகிரி என்றழைக்கப்பட்டு வேதகிரி என மருவியது.

மலை மீது காட்சி தருவதால், மூலவருக்கு மலையாளன் என்ற திருநாமுமம் உண்டு.

இவர் பல யுகம் கண்ட எம்பெருமான்.
கிருத யுகத்தில் பிரம்மனும்,
திரேதாயுகத்தில் கஜேந்திரனும்,
துவாபர யுகத்தில் பிருஹஸ்பதியும்,
கலியுகத்தில் அனந்தனும் வழிபட்டு பல நற்பலன்களை அடைந்தனர்.
பிரம்மனே இங்கு நேரில் வந்து எம்பெருமானை வழிபடுவதாகஐதீஹம்.
அதே போல் திருவனந்தாழ்வான் எனப்படும் ஆதிசேஷனுமும் இங்கு வந்து வழிபடுவதாக சொல்லப் படுகிறது.

வாரணகிரி, அத்திகிரி என்ற ஒரு சிறிய மலைகளால் ஆனது இந்த திருத்தலம்.
வாரணகிரி என்ற முதல் தளத்தில் நரசிம்ம அவதார அமர்ந்த திருக்கோலத்தில் அழகிய சிங்கர்
ஹரித்ரா தேவித் தாயாருடன் எழுந்தருளி உள்ளார்.
இரண்டாவது தளமான அத்திகிரியில் தேவப்பெருமாள் எழுந்து அருளி உள்ளார்.

இங்குள்ள அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்கள் உள்ளன.
அதில் தெற்கில் உள்ள மண்டபத்தில் அத்திவரதர் என்றழைக்கப்படும் அத்தி மரத்தால் ஆன
எம்பெருமானை 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியே எடுத்து பூஜை செய்து அடியார்கள் தரிசனத்திற்குப்
பிறகு மீண்டும் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்திலேயே எழுந்தருள செய்கிறார்கள்.

இந்த குளக்கரையில் உள்ள சுதர்சன ஆழ்வார் என்று அழைக்கப்படும் சக்கரத்தாழ்வார் சன்னதி மிகவும் விஷேசமானது.
மிக பெரியவடிவில், பதினாறு திருக்கரங்களுடன், காட்சி அளிக்கும் இந்த சக்கரத்தாழ்வாரை சுற்றி உள்ள
அலங்கார வளைவில் 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாயார் புறப்பாடு,
ஒவ்வொரு ஏகாதசியும் எம்பெருமான் புறப்பாடு.
இரண்டும் சேர்ந்து வந்தால், இருவருக்கும் சேர்ந்து புறப்பாடு என்று அடியவர்களுக்கு ஆனந்தம்.

இங்கு நடைபெறும் வைகாசி விசாக கருட சேவை (3ம் நாள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இதனை வையம் கண்ட வைகாசி திருநாள் என்று கொண்டாடுவர்.
இந்த கருட சேவையை குறிப்பிட்டு சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் கீர்த்தனை பாடி உள்ளார்.

உடையவர் திருமாளிகை என்று இராமானுஜர் இளமை காலத்தில் வாழ்ந்த இல்லம் இன்றும் இங்கு உள்ளது.
இந்த கோவிலின் பிரகாரத்தில் தான் ஸ்ரீஆளவந்தார் என்ற ஆச்சாரியார், இராமானுஜரை முதன் முதலில் கண்டு
ஆம், முதல்வன் இவன் என்று அருளியது.
ஸ்வாமி இராமானுஜரை திருவரங்கத்திற்கு தந்தருளியதும் இந்த தேவப்பெருமாள் தான்.

ஸ்தல வரலாறு

ஒரு முறை பிரம்மா எம்பெருமானிடம் தான் ஓர் அஸ்வமேதயாகம் நடத்த வேண்டும் என்று கேட்க,
அதற்கு எம்பெருமான், பிரம்மாவை சத்தியவ்ரத க்ஷேத்திரமான இந்த திருக்கச்சிக்கு வந்து யாகம் செய்ய சொன்னார்.
ப்ரம்மா சரஸ்வதி தேவி இல்லாமல் இந்த யாகத்தை காயத்திரி தேவியுடன் தொடங்கினார்.
இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, இந்த யாகத்தைத் தடுக்க பல தடைகளை உருவாக்கினார்.
ஒவ்வொரு முறையும் எம்பெருமான் அந்த தடைகளை உடைத்து,
பிரம்மாவின் யாகத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற காரணமாக இருந்தார்.

சரஸ்வதி, இருள்மயமாக, யாக குண்டத்தை மாற்றியபோது,
திருத்தண்கா தீப பிரகாசராக (விளக்கொளிபெருமாள்) எம்பெருமான் வந்தார்.
சரஸ்வதி அரக்கர்களை அனுப்பி வைத்தார்.
அப்பொழுது எம்பெருமான் அஷ்டபுஜகரத்தானாக ஆதிகேசவ பெருமாளாக வந்து அரக்கர்களை விரட்டி அடித்தார்.

தொடர்ந்து, சரஸ்வதி யானைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பி வைத்து இந்த யாகத்தை தடை செய்ய முயற்சித்த போது,
எம்பெருமான் வேளுக்கை யோகநரசிம்மராக வந்து யானைகளை விரட்டினார்.

சரஸ்வதி வேகவதி என்ற நதியில் வெள்ளமாக வந்தபோது,
சொன்ன வண்ணம் செய்த பெருமாளாக வந்து நதியின் குறுக்கே படுத்துக்கொண்டார்.

இப்படி, இங்குள்ள திவ்யதேச எம்பெருமான்கள் ஒரே காரணத்திற்காக ஒரே காலத்தில் எழுந்தருளி உள்ளனர்.

இப்படி எல்லா தடைகளையும் தாண்டியபின்,
பிரம்மாவின் யாககுண்டத்தில் இருந்து புண்ணியகோடி விமானத்துடன் தோன்றியவர் தான் இந்த திருக்கச்சி தேவப்பெருமாள்.
யாககுண்டத்தில் இருந்து அக்னி ஜுவாலைகளுக்கு மத்தியில் இருந்து வந்ததால் தான் இன்றும்
எம்பெருமானின் திருமுகத்தில் அக்னி வடுக்கள் இருப்பதை நாம் காணலாம்.
பிரம்மா அத்தி மரத்தால் வடித்த ஒரு எம்பெருமானை இங்கே அத்தி வரதர் என்ற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்தார்.

ஸ்ருங்கிபேரர் என்ற முனிவரின் இரண்டு சிஷ்யர்கள், குருவிற்கு எடுத்துவைத்த தீர்த்தத்தில் பல்லி ஒன்று விழுந்து
இருந்ததை கவனிக்காததால், முனிவர் கோபம் கொண்டு அவர்கள் இருவரையும் பல்லியாக மாற சபித்தார்.
அவர்கள் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்க, முனிவர் இந்திரன் திருக்கச்சிக்கு வரும்வரை காத்து இருந்தால்,
அவர்கள் மீண்டும் பழைய நிலை அடைவார்கள் என்று கூற அவர்களும், பல்லிகளாக திருக்கச்சியில் காத்து இருந்து,
பின் கஜேந்திரன் என்ற யானையாக இந்திரன் இங்கு நுழைந்த போது,
இருவரும் சாபம் தீர்ந்து பழைய நிலை அடைந்தார்கள் என்பது வரலாறு.
அந்த பல்லிகளே இன்று தங்க, வெள்ளி பல்லிகளாக பிரகாரத்தில் உள்ளன.
இவற்றை தரிசித்தால் எல்லா நோய்களும் அகலும் என்று நம்பிக்கை.

வைகாசி விசாக கருட சேவையைப் பற்றி ஒரு நிகழ்ச்சி.
சோளிங்கரில் வசித்த தொட்டாச்சார்யார் என்ற பக்தர் தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் இந்த தரிசனத்தை காண்பார்.
ஒரு வருடம் உடல் நலம் குன்றியபோது அவரால் காஞ்சி வந்து இந்த திவ்ய சேவையை காண இயலவில்லை.
அதனால் அவர் சோளிங்கரில் உள்ள குளக்கரை அருகே வந்து நின்று எம்பெருமானிடம் உருகி
தன்னுடைய நிலையை சொல்லி வருந்தினார். எம்பெருமான் அவருக்கு உடனே அங்கேயே கருட சேவை காட்சியைக் கொடுத்தார்.
அதனால் இன்றும், காஞ்சியில் இந்த கருட சேவை போது, எம்பெருமானை ஒரு வினாடி குடைகளால் மூடி
அந்த அடியவருக்கு காட்சி கொடுத்ததை நடத்தி காண்பிப்பார்கள்.

பூதத்தாழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதியில் (96), அத்தியூரான் புள்ளை ஊர்வான் என்று பாடி இருப்பது,
இந்த திவ்யதேச எம்பெருமானான பேரருளாளன், கருட சேவையை முன்னிட்டு என்பதால் இன்றும் வரதனின் கருடசேவை பிரசித்தம்.

பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதியில் (26), நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும் என்று திருக்கச்சிக்கு நிரந்தசீர் என்று
சிறப்பு அடைமொழி கொடுத்து உள்ளார்.
இதற்கு உரையாசிரியர், நிறைய திவ்யதேசங்களை உடைய காஞ்சி என்று விளக்கம் கொடுத்து உள்ளார்.

இங்கு வாழ்ந்த திருக்கச்சி நம்பிகள் இந்த எம்பெருமானுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்தார்.
அதாவது பெருமாளுக்கு விசிறி வைத்து காற்று வீசுவார். திருக்கச்சி நம்பிக்கு காஞ்சி பூர்ணர் என்ற சிறப்பு பெயர் உண்டு.
எம்பெருமான், திருக்கச்சி நம்பிகள் தன்னுடன் நேரடியாக உரையாடும் அளவுக்கு அவருக்கு அருள் புரிந்து இருந்தான்.

ராமானுஜர், தம் முதல் குருவான யாதவப்பிரகாசருடன் வடநாட்டு யாத்திரை சென்ற போது, அவருக்கு எதிரான சதி,
அவரின் சித்தி பிள்ளை கோவிந்தபட்டர், (பின்னாளில் எம்பார் என்ற ஆச்சார்யர்) மூலம் தெரிய வந்ததால்
யாருக்கும் தெரியாமல் விந்திய மலையிலேயே தங்கிவிட்டார்.
பிறகு ஒரே இரவில், தேவப்பெருமாளும், பெரிய பிராட்டியும், வேடன், வேடுவச்சி வேடம் புனைந்து
ராமானுஜரை காஞ்சிக்கு அருகில் உள்ள சாலைக்கிணறு என்ற இடத்தில கொண்டு விட்டார்கள்.

தமக்கு உதவி புரிந்தது தேவப்பெருமாளும் தாயாரும் என்று உணர்ந்து கொண்ட ராமானுஜர்,
திருக்கச்சி நம்பிகளை ஆச்சாரியனாக ஏற்றுக்கொண்டு, சாலைக் கிணற்றிலிருந்து தேவப்பெருமாளுக்கு
திருமஞ்சனத்திற்குத் தீர்த்தம் கொண்டு வரும் கைங்கர்யத்தை மேற்கொண்டார்.
சுவாமி ராமானுஜருக்கு ஆரம்ப காலத்தில், நம் சம்பிரதாயத்தில் எழுந்த சந்தேகங்களுக்கு தேவப்பெருமாளுடன் பேசி,
தேவப்பெருமாள் அருளிய ஆறு வார்த்தைகளை ராமானுஜருக்கு சொல்லியவர் திருக்கச்சி நம்பி ஆவார்.

இராமானுஜருக்கு அருளிய அந்த ஆறு வார்த்தைகள்.

1-அஹமேவ பரம்தத்வம் ஸ்ரீமந் நாராயணனே எல்லாவற்றிக்கும் தத்துவமாய் விளங்கும் பரம்பொருள்
2-தர்சனம் பேத ஏவச ஜீவாத்மா, பரமாத்மா இரண்டும் வெவ்வேறானவை.
3-உபாயேஷு ப்ரபத்தி ஸ்யாத் மோட்சம் அடைய சரணாகதியே சிறந்தவழி
4-அந்திமஸ்ம்ருதி வர்ஜனம் இறுதி காலத்தில் எம்பெருமானை நினைக்க முடியாவிட்டால் தவறில்லை
5-தேஹாவஸானே முக்திஶ்யாத் அவனை உபாயமாகக் கொண்டவர்களுக்கு, பிறவி முடிந்ததும் மோக்ஷம் தருகிறார்.
6-பூர்ணச்யார்ய ஸமாச்ரய பெரிய நம்பியை ஆச்சார்யராக ஏற்றுக் கொள்ளத்தக்கது

ஸ்ரீ இராமானுஜருக்காக கிருமி கண்ட சோழ மன்னனிடம் தன்னுடைய கண்களை இழந்த
கூரத்தாழ்வான், ராமானுஜரின் ஆணைப்படி வரதராஜ ஸ்தவம் என்ற ஸ்தோத்ரத்தை இந்த எம்பெருமானுக்குகாக எழுதி,
அவர் முன்னே சொல்ல, உடனே இந்த எம்பெருமான் அவருக்கு மீண்டும் கண் பார்வையை அருளினார்.

வேதாந்த தேசிகரிடம் ஒரு ஏழை பிரம்மச்சாரி பையன் தன் திருமணத்திற்காக நிதி உதவி கேட்க,
அவர் பெருந்தேவி தாயார் சந்நிதியில், ஸ்ரீ ஸ்துதி என்ற இருபத்திஐந்து ஸ்லோகங்களை பாட,
தாயாரின் மனதை தொட்ட ஸ்லோகங்கள், அங்கே ஒரு பொன்மழையை கொட்ட செய்து அந்த பையனின் துயரைத் தீர்த்தது.
இது கனகதாரா ஸ்தோத்திரத்தின் மூலம் ஆதி சங்கரர் ஓர் ஏழைப் பெண்ணிற்காக தங்கமழை பெய்வித்ததைப் போலவே
இந்த திவ்யதேசத்தில் நடந்த சரித்திர நிகழ்ச்சி. இதனால் இந்த தாயாருக்கு தங்கத்தாயார் என்ற திருநாமமும் உண்டு.

———–

24 கருட சேவை
மூன்று திவ்ய தேசப் பெருமாள் கோயில் உட்பட 24 கோயில்களைச் சேர்ந்த கோயில்களைச் சேர்ந்த உற்சவ மூர்த்திகள்
வெண்ணாற்றங்கரையிலிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி
ஆகிய வீதிகளில் எழுந்தருளுகின்றனர். கருட சேவைக்கு அடுத்த நாள் நவநீத சேவை கொண்டாடப்படுகிறது.

————

12 கருட சேவை தரிசனம்

கும்பகோணத்தில் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது 12 கருட சேவை தரிசனம்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3-வது திதியான
அட்சய திருதியை தினத்தில் கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோயில்களிலிருந்து 12 கருட வாகனங்களில்
உற்சவப் பெருமாள் சுவாமிகள் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் பொதுமக்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

12 பெருமாள் சுவாமிகளையும் ஒரு சேர ஒரே இடத்தில் கருட வாகனத்தில் தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாகும்.
ஆண்டுக்கு ஒருமுறை ஒரே இடத்தில் இந்த தரிசனம் காண கண் ஆயிரம் வேண்டும் என்பார்கள்.

விதியை மாற்றும் சக்தி திதிக்கு உண்டு. அந்த திதிகளில் சிறப்பானது அட்சய திருதியை என்று கருதப்படுகிறது.
இந்த திதியில் எந்தச் செயலை செய்தாலும் வெற்றி கிட்டும்.
எட்டு வகை லட்சுமிகளையும் இல்லத்திற்கு வரவழைக்கும் நாள் என்பது புராணம் கூறும் ஐதீகம்.
குசேலன், குபேரன் ஆனதும் இந்த தினத்தில் தான்.
எனவே இந்த தினத்தில் தங்கம், வீடு, மனை, துணிகள் என எது வாங்கினாலும் இல்லத்தில் தங்கும் என்பது
பொதுமக்களிடையே சமீப காலமாக அதிகரித்து வரும் நம்பிக்கையாகும்.

அதன்படி அட்சய திருதியை நாளான மே-9 ம் தேதி கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில்
சாரங்க பாணி,
சக்கரபாணி,
ராமசுவாமி,
ராஜகோபாலசுவாமி,
ஆதிவராகபெருமாள்,
பட்டாபிராமர்,
சந்தான கோபாலகிருஷ்ணன்,
நவநீதகிருஷ்ணன்,
வேணு கோபாலசுவாமி,
வரதராஜபெருமாள்,
பட்டாச்சாரியார் தெரு கிருஷ்ணன்,
சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய
12 கோயில்களிலிருந்து பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்திலும்,
இந்த சுவாமிகளுக்கு நேரெதிரே ஆஞ்சநேயர் சுவாமியும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

————-

ஒரே இடத்தில் 11 திவ்ய தேச பெருமாள்

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில்
ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை நடைபெறும்.

ஒரே இடத்தில் 11 திவ்ய தேச பெருமாள்

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயம் இருக்கிறது.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை நடைபெறும்.
108 வைணவத் தலங்களில் நாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 ஆலயங்கள் இருக்கின்றன.
மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில், 11 ஆலயங்களின் சுவாமிகளும் தங்க கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள்.

108 வைணவத் தலங்களில் திருநாங்கூரில் மட்டும் 6 திவ்ய தேசங்கள் உள்ளன.
தவிர இந்த ஊரைச் சுற்றி சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மேலும் 5 திவ்ய தேசங்கள் இருக்கின்றன.
நாங்கூர் மணிமாடக் கோவில் நாராயணப் பெருமாள்,
அரிமேய வின்னகரம் குடமாடு கூத்தர்,
செம்பொன்னரங்கர்,
பள்ளிகொண்ட பெருமாள்,
வண்புருடோத்தம பெருமாள்,
வைகுந்தநாதன்,
திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள்,
திருமேனிக்கூடம் வரதராஜப் பெருமாள்,
கீழச்சாலை மாதவப்பெருமாள்,
பார்த்தன் பள்ளி பார்த்தசாரதிப் பெருமாள்,
திருகாவாளம்பாடி கோபாலன் ஆகிய தலங்களே, அந்த 11 திவ்ய தேசங்கள் ஆகும்.

ஸ்ரீமன் நாராயணன், தன் திருப்பெயரையே அஷ்டாட்சர மந்திரமாக்கி, அதை உபதேசம் செய்தார்.
அதாவது தானே ஆசானாகி, தன் நாமத்தையே மந்திரமாக்கி, தன்னையே சீடனாக்கி,
தனக்கே உபதேசம் செய்து கொண்ட அற்புதம் அந்த நிகழ்வு.
அதன் மூலம் உலகின் அனைத்து ஜீவராசிகளிலும் நானே நிறைந்திருக்கிறேன் என்பதை நாராயணர் உரைக்கிறார்.

பிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்ததால், சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.
அது நீங்க சிவபெருமானை கோகர்ணம் என்ற தலத்தில் திருமாலை நோக்கி தவம் இருந்தார்.
அவர் முன்பாக தோன்றிய திருமால், சிவபெருமானை பலாச வனத்தில் உள்ள நாங்கூர் திருத்தலம் சென்று,
11 ருத்ர தோற்றங்கள் கொண்டு அஸ்வமேத யாகம் செய்யும் படி கூறினார்.

சிவபெருமானும் 11 ருத்ர தோற்றம் கொண்டு, யாகம் செய்தார்.
அதன் நிறைவு சமயத்தில் நாராயணர், பிரணவ விமானத்தில் தோன்றி சிவபெருமானின் தோஷத்தைப் போக்கினார்.
அதுவும் 11 ருத்ர தோற்றத்திற்கும், 11 பெருமாள்களாக தோன்றி திருமால் காட்சி தந்தார்.
அப்படி பெருமாள் கொண்ட 11 கோலங்களே, திருநாங்கூரில் அமைந்துள்ள 11 திவ்ய தேசங்களாக இருக்கின்றன என்பது தல வரலாறு.

திருநாங்கூர் மணிமாடக் கோவிலில், தை அமாவாசைக்கு மறுநாள், 11 திவ்ய தேச பெருமாள்களும்,
மதியம் 1 மணி முதல் மாலை 6 மணிக்குள், ஒவ்வொருவராக தங்க கருட வாகனத்தில் வந்து சேருவார்கள்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெறும்.
பின்னர் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வீதி உலா புறப்படுவர்.
பின்னர் ஒவ்வொரு பெருமாளுக்கும், மங்களாசாசனம் செய்யப்பட்டு, கற்பூர ஆரத்தி காட்டப்படும்.

மறுநாள் அதிகாலை 5 மணிக்கெல்லாம், அந்தந்த பெருமாள்கள் மீண்டும், தங்களது கருட வாகனத்தில்
தங்களின் திவ்ய தேசத்திற்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.

இந்த வைபவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, மறுபிறவி கிடையாது என்று சொல்லப்படுகிறது.
அதே நேரம் இந்த வைபவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 11 திவ்ய தேச பெருமாள்களை வழிபட்ட பேறும் கிடைத்து விடுகிறது.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அரவின் அணையான் தான் ஸ்ரீ திருவேங்கடத்தான் என்று ஸ்ரீ ஆழ்வார்கள் அனுபவித்த படி –

April 19, 2022

ஸ்ரீ திருவோணத் திரு விழாவில் அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை–தர்மி ஐக்கியம்

திருவோணத் திருவிழவில் –
விசேஷித்து திரு நஷத்ரம் சொல்லாத இடத்துக்கு எல்லாம் இதுவே திரு நஷத்ரமாக கடவது –
திருவோணம் என்கிறது ஜன்ம நஷத்ரம் என்னில் -உகவாதார் அறிந்து அபிசரிப்பர்கள் என்று
அஞ்சி -திருவோணம் என்கிற திரு நாளிலே என்று மறைத்து சொல்லுகிறார்

——–

திருவோணத் திரு விழவில் படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே –தர்மி ஐக்கியம்

திருவோணத் திரு விழவில் –
ஏவின கார்யத்தை குறை யறச் செய்த அளவிலும் பர்யாப்தி பிறவாமையாலே
திருவவதரித்து அருளின திருவோணம் ஆகிற மங்கள திவசத்திலே என்ன தீங்கு
வருகிறதோ என்று மங்களா சாசனம் பண்ணி வர்த்திக்குமவர்கள்
படுத்த இத்யாதி –
அதிலும் பர்யாப்தி பிறவாமையாலே
திரு வநந்தாழ்வான் மேலே சாய்ந்த போதை அழகுக்கு கண் எச்சில் வாராமைக்கு
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் -படுக்கப்பட்டு ஸ்வ சம்ச்லேஷத்தாலே விகசிதமாக
நின்றுள்ள பணைத்தை உடையனாய் -மென்மை -குளிர்த்தி -நாற்றம் என்கிறவற்றை
பிரக்ர்தியாக உடைய திரு வநந்தாழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளுகிற
அழகுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் -ஸ்வதஸ் சர்வஞ்ஞனையும் மயங்கப்
பண்ணும் படுக்கை -அவன் ஸ்வ ஸ்பர்சத்தாலே விக்ர்தனாகப் பண்ணும்
இவனுடைய வடிவும் -அவனுடைய வடிவும் -கிடந்ததோர் கிடக்கை -என்கிறபடியே
பரிச்சேதிக்க ஒண்ணாத அழகு இ றே கண் வளர்ந்து அருளுகிற போதை அழகு –
ஒரு வெள்ளி மலையிலே காள மேகம் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுகிற போதை-பரபாக ரசத்தை அனுசந்தித்தால் மங்களா சாசனம் ஒழியச் செல்லுமோ என்கிறார்கள்

————

நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவர் அடியார் ஆகுவரே–நாச்சியார் –8-10-

நாகத்தின் அணையானை நன்னுதலாள்
நீங்கள் செய்து அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது –
அத் தலையில் ஒரு குறையும் இல்லை
நம் வரவுக்கு உறுப்பாக படுக்கை படுத்து சாய்ந்து கிடந்தான்-வேங்கடக் கோன் என்கையாலே

நன்னுதலாள்
அப் படுக்கையிலே துகைத்து ஏறத் தகும் அவயவ சோபை உடையவள்

நயந்து உரை செய்-
ஆசைப் பட்டுச் சொன்ன விண்ணப்பம்

மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
ராமாவதாரத்தில் ஐந்தர வியாகரண பண்டிதனைத் தூதாக விட்டது
இங்கே திருமலையிலே மேகங்களை தூதாக விடா நின்றாள்
இதுவே வாசி
அங்கு நின்று வந்தாரையே விடுகை இரண்டு இடத்திலும் ஒக்கும்
அவ் வதாரத்தில் பிற்  பாடர்க்கு இழக்க வேண்டாத படி -திருமலையிலே வந்து தூது விடுவார் ஆரோ என்று
அவசரம் பார்த்து இரா நின்றான் யாய்த்து –

———–

செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட வுயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று
எழுந்து இருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக் கொழும்
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –-திருச்சந்தவிருத்தம் –60-

——-

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——அமலனாதிபிரான்–1-

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே––அமலனாதிபிரான்–3

பைத்த பாம்பணையான் திருவேம்கடம் -திருவாய் மொழி -3-3-10-

உலகம் அளந்த பொன்னடியே அடைந்து –திரு வரங்கத்து அம்மானே -5-8-9-

உலகம் அளந்து –அரங்கத்தம்மான் -என்கிறார் –

அன்று ஞாலம் அளந்த பிரான் சென்று சேர் திருவேங்கடம் –திருவேங்கடமுடையான் திருவடிகளை அடைய பாரிக்கும் ஸூரிகளும்
எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு-என்று பிரார்த்திக்க –
தாள் பரப்பி மண் தாவிய ஈசன் -பூமியை அடைய தன் திருவடிகளால் ஆக்கிரமித்து
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -என்று தனது திருக்கையாலே
உலகம் அளந்த பொன்னடியைக் காட்டி -தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடம் –
அவன் தானும் இங்கே கண் வளர்ந்து அருளும் பெரிய பெருமாள் -நீள் மதிள் அரங்கம்
என்று திருப் பாண் ஆழ்வார் அருளிச் செய்ததை கேட்டு திரு மங்கை ஆழ்வார் திரு மதிள் செய்து அருளியது –

திருப் பாண் ஆழ்வார் பாசுரம் ஒட்டியே துளங்கு பாசுரத்தில் திரு வேங்கடமுடையான் சரித்ரத்தை கூறி
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே -என்று
திருவரங்கன் திருவடிகளை சரணாக பற்றுகிறார் -இருவரும் கார்த்திகை மாதத்தில் அவதரித்த சேர்த்தியும் உண்டு இறே –
திரு நஷத்ரங்களும் அடுத்து அடுத்து நஷத்ரங்கள் இறே-

கட்டு எழில் சோலை நல் வேங்கட வாணனை -கட்டு எழில் தென் குருகூர் சடகோபன் சொல்
கட்டு எழில் ஆயிரம் -என்றும் -முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரம் -என்றும் –
இறே நம் ஆழ்வாரும் அருளிச் செய்கிறார் –

திரு வேங்கடத்து என்னானை –உளனாகவே என்னாவில் இன் கவி யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன் -என்றார் ஆழ்வார் –

வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்
ஈன்ற முதல் தாய் சடகோபன் -என்றார் ஸ்ரீ பராசர பட்டர் –

பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-2-

பள்ளியாவது பாற்கடல் அரங்கம் –நாடொறும் தெள்ளியார் வணங்கும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே -1-8-2-

எண் திசைகளும் ஏழு உலகமும் வாங்கிப் பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆலிலைப் பள்ளி கொண்டவன் பான் மதிக்கிடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாய் அவன் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-6-

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-

நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏரால மிளந்தளிர் மேல் துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மா மலை மேய
ஆராவமுதே அடியேற்கு அருளாயே–1-10-3-

உண்டாய் உறி மேல் நறு நெய்யமுதாக
கொண்டாய் குறளாய் நிலமீரடியாலே
விண டோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே-1-10-4-

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —10–

மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6-

மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன்னாக்கித் தன்னினருள் செய்யும் தன்னை
மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய
என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே–1-10-6-

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம் பெருமான் உளனாகவே–3-9-1-

திருவேங்கடவன் வடவானை -திருவரங்கன் குடபாலானை -இருவரும் ஒருவரே –

திருவுடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் -2-7-2-

நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேங்கத்து எந்தாய் -2-7-3-

குலமுடைக் கோவிந்தா கோவிந்தா -இவனே திருவேங்கடத்தான் -என்று அழைத்தக்கால்
நலமுடை நாரணன் -இவனே ஜகந்நாதன் -பெரிய பெருமாளானார்-நம்மன்னை நரகம் புகாள்-4-6-5-

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன் அன்றோ திருவேங்கடமுடையான் –
திருவாளர் திருப்பதியே திருவரங்கம் – 4-8-10-

சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் உலகு தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா -5–4–1-
கொண்டல் வண்ணன் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுது அன்றோ – அமலனாதி -10-

நல் வேங்கடத்துள் நின்ற அழகப்பிரானார் -11-8-
நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர்-11-10-

விரையார் பொழில் வேங்கடவன் -நிமலன் நின்மலன் -நீதி வானவன் -நீள் மதிள் அரங்கத்தம்மான் -அமலனாதி -1-

மந்தி பாய் வட வேங்கட மா மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்-அமலனாதி –3-

பள்ளியாவது பாற்கடல் அரங்கம் –நாடொறும் தெள்ளியார் வணங்கும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே –பெரிய திருமொழி -1-8-2 —

வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
மருவாள் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே–5-5-1-

வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும்-9-
சேலுகளும் வயல்புடை சூழ் திருவரங்கத்தம்மானைச் சிந்தை செய்த -10-

சிந்தனையைத் தவநெறியைத் திருமாலைப் பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டார்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே-5-6-7-

துளங்கு நீண்முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழுடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்தவாறு அடியேன் அறிந்து
உலகம் அளந்த பொன்னடியே யடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-9-

வம்பார் புனல் காவிரி அரங்கமாளி என்னாளி விண்ணாளி–தாமரைக் கண்ணனுக்கு அன்றி
என் மனம் தாழ்ந்து நில்லாதே -7-3-4-
உம்பர்க்கு அணியாய் நின்ற வேங்கடத்து அரியை –தீம் கரும்பினை தேனை
நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே -5-

அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ -8-2-3-

புனை வளர் பூம் பொழிலார் பொன்னி சூழ் அரங்க நகரில் முனிவனை–
கனை கழல் காணும் கொலோ கயல் கண் எம் காரிகையே -9-9-2-
பொழில் வேங்கட வேதியனை நணுகும் கொல் என் நன்னுதலே -9-9-9-

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற விவை யென்ன மாயங்கள்
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க வவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே–11-3-7-

—————————–

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற மெய்ம்மையை விரிந்த சோலை
வியன் திருவரங்கம் மேய செம்மையைக் கருமை தன்னைத்
திருமலை ஒருவனையானை தன்மையை நினைவார் என் தன் தலை மிசை மன்னுவாரே–திருக் குறும் தாண்டகம் -7-

உலகம் ஏத்தும் தென்னானாய் வடவானாய் குடபாலனாய் குண பாலமதயானாய்–திரு நெடும் தாண்டகம் -9-

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்ற மரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே–16-

உலகமுண்ட பெருவாயா–திருவேங்கடத்தானே –உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து
என் பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து புனல் அரங்கமூர் என்று போயினாரே-24-

—————————————————-

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15-

—————–

என் அமுதம் கார்முகில் போலும் வேங்கட நல் வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரன் -திருவாய்மொழி -2-7-11-

—————————————————-

வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் நான்கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமா மிடர் –-ஸ்ரீ பொய்கை ஆழ்வார்–77-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் –ஸ்ரீ பொய்கை ஆழ்வார்–99-

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ——இரண்டாம் திருவந்தாதி——-28-

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —இரண்டாம் திருவந்தாதி–46-

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார் ——மூன்றாம் திருவந்தாதி–26–

கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —–61-

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு ——62-

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவரங்கம் பெரிய மண்டபம் – அமுது படிகள் விவரம் —

January 6, 2022

பரமன் திருமண்டபம் மற்றும் சந்தனு மண்டபம்
சந்தனு மண்டபம் அணுக்கன் திருவாசலுக்கு வெளியே இருக்கும் பெரிய திருமண்டபம்.
ஆகம சாஸ்திரத்தின்படி மகாமண்டபம்.

அழகிய மணவாளன் திருமண்டபம் என்ற பெயரும் இந்த மண்டபத்தைத்தான் குறிக்கும்.

பெரிய திருமண்டபத்தில்தான் பெருமாள் தினமும் பசுவும் யானையும் த்வாரபாலகர்கள் முன்னே நிற்க
விஸ்வரூபத்துடன் காலை நமக்கு சேவைசாதிக்க தொடங்குகிறார்

இந்த மண்டபத்தின் மற்ற தகவல்கள்

•தென்மேற்க்கே மரத்தினாலான பரமன் மண்டபம்

•கிழக்கு – மேற்காக இருபுறமும் 10க்கும் மேற்பட்ட படிகளுடன் உயர்த்து நிற்கும் மண்டபம்

•தென்புறத்தில் மூன்று அறைகள் – கண்ணாடி அறை, சன்னதி கருடன், மற்றும் காலி அறை

•இந்த மண்டபம் ஐந்து வரிசைகளில் ஆறு தூண்களுடன் விஜயநகர கட்டிடக்கலையில் அமைந்திருக்கும் மண்டபம்

யார் இந்த பரமன்?

எந்த ராஜ்ஜியத்தின் அரசன் – சேரனா? சோழனா? பாண்டியனா? ஹொய்சாலனா? விஜயநகர அரசனா?

பரமன் இந்த மண்டபத்தை தயார் செய்த தச்சனின் பெயர்.

பரமன் திருமண்டபம் மிகுந்த மர வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டிருக்கும் மண்டபம்.
எட்டு தூண்களுடன் மூன்று அடுக்குகளுடன் தேரின் மேல் பகுதி போல் காணப்படும் மண்டபம் விஜயநகர ஆட்சியில் கட்டப்பட்டது.

வாலநாதராயர் எனும் விஜயநகர அரசின் பிரதானி தச்சன் பரமனை கொண்டு கட்டியது.
அவரது வேலைப்பாடுகள் எல்லாரும் அறிய , அந்த அரசர் தனது பெயரை விடுத்து, ஒரு தச்சனின் பெயரை சூட்டினார்.

சந்தனு மண்டபத்தின் தெற்கு பக்கத்தில் மூன்று அறைகள் உள்ளன.தென் மேற்கு மூலையில் இருப்பது கண்ணாடி அறை.
பெருமாள் தை பங்குனி மற்றும் சித்திரை மாத உத்சவத்தின் போது பத்து நாட்கள் தினமும் இங்கு தான் எழுந்தருள்வார்.
இந்த கண்ணாடி அறை விஜயரங்க சொக்கநாதர் (இராஜ மகேந்திரன் திருசுற்றில் கண்ணாடி கூண்டில் இருக்கும்
நான்கு சிலைகளுள் ஒருவர்) ஆட்சியில் சமர்ப்பிக்க பட்டது.

நடுவில் இருக்கும் அறையில் சன்னதி கருடன் எழுந்தருளியுள்ளார்.
கருட விக்கிரகம் வாலநாதராயரால் முகலாய படையெடுப்பிற்கு பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மூன்றாவது அறை (தென் கிழக்கு மூலையில் இருப்பது) காலி அறை.
இந்த அறையில் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பிரதிஷ்டை செய்த பொன் மேய்ந்த பெருமாள்
(தங்க சிலை) விக்கிரகம் முகலாய படையெடுப்பின் போது பறிகொடுத்தோம்.

நம்பெருமாள் பரமன் திருமண்டபத்தில் வருடத்திற்கு இரு முறை எழுந்தருள்வார்:

1) தீபாவளி

2) யுகாதி

இவ்விரு நாட்களிலும் பெருமாளுக்கு நேர் எதிராக கிளி மண்டபத்தில் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் எழுந்தருள்வர்.
அமாவாசை, ஏகாதசி, கார்த்திகை ஆகிய நாட்களில் இந்த பெரிய திருமண்டபத்தில் பெருமாள் எழுந்தருள்வார்.

இதே திருமண்டபத்தில் தான் நம்பெருமாள் மணவாள மாமுனிகளை ஈடு காலக்ஷேபம் செய்ய பணித்து
ஓர் ஆண்டு காலம் தினமும் கேட்டருளினார். இதனால் தான் இந்த படம் இப்போதும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வைபவம் 16.09.1432 முதல் 09.07.1433 வரை நடைபெற்றது.

———–

அரங்கனின் ஒன்பது தீர்த்தங்கள்
திருவரங்கம் தான் பிரம்மத்தின் சரீரம்(உடல்) என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்க மஹாத்மியம் தசாத்யாயி (பிரம்மானந்த புராணம்) மற்றும் ஷதாத்யாயி ஆகிய புராணங்களில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

பரபிரம்மம் ஸ்ரீமன்நாராயனனின் சரீரம் ஸ்ரீரங்கம்

தலை – பிரணவாகார விமானம் (ஸ்ரீரங்க விமானம்)

இரண்டு கைகள் – வடத்திருக்காவிரி மற்றும் தென்திருக்காவிரி

ஹ்ருதயம் – சந்திர புஷ்கரனி

பிரம்மத்தின் திருவடிகள் தான் எட்டு திசைகளில் உள்ள எட்டு புஷ்கரனிகள்.

திருவரங்கத்திர்க்கும் தீர்த்தத்திர்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
ஆழ்வார்களின் பாசுரங்களிலும் நீர்நிலைகள் பற்றிய குறிப்புகள் உண்டு.

திருசந்தவிருத்தம் (பாடல் 50) – திருமழிசை பிரான்

வெண் திரைக் கருங்கடல் சிவந்துவேவ முன்ஓர்நாள்
தின் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேரும் உளர்
எண் திசைக் கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர்
வண்டிரைத்த சோலைவேல் மன்னுசீர் அரங்கமே.

எட்டு திசைகளிலும் இருந்து வரும் பக்தர்கள் தீர்த்தமாடுகிற (குளிக்கிற) எட்டு புஷ்கரனியை குறித்தும்
அதனால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்று குறிப்பிடுகின்றார்.

நடுவே அமைந்திருக்கும் சந்திர புஷ்கரனி அனைத்து பாவங்களையும் போக்க வல்லது.
சந்திரனின் ஷகவரோக பாவத்தை தவம் செய்து போக்கிக் கொண்டார்.ஆகையால் அவரது பெயரிலேயே இந்த புஷ்கரணி உள்ளது.

எட்டு புஷ்கரணிகளின் பெயர்:

கிழக்கு – பில்வ தீர்த்தம்
தென்கிழக்கு – ஜம்பு தீர்த்தம்/அச்சுத தீர்த்தம்
தெற்கு – அஸ்வத்த தீர்த்தம்/ அஸ்வ தீர்த்தம்
தென்மேற்கு – பலாச தீர்த்தம்
மேற்கு – புன்னாக தீர்த்தம்
வடமேற்கு – வகுள தீர்த்தம்
வடக்கு – கதம்ப தீர்த்தம்
வடகிழக்கு – ஆம்ர தீர்த்தம்

தீர்த்தவாரி நடைபெறுவது இரண்டு வகை உண்டு. ஒன்று தீர்த்த பேரருக்கு தீர்த்தவாரி நடக்கும்
மற்றொன்று ஸ்ரீசடாரிக்கு நடக்கும் தீர்த்தவாரி.

சந்திர புஷ்கரனி மற்றும் கொள்ளிடத்தில் நடக்கும் தீர்த்தவாரிகள் தீர்த்த பேரருக்கு நடக்கும்.
மற்ற அனைத்து இடங்களிலும் நடக்கும் தீர்த்தவாரி ஸ்ரீசடாரிக்கு நடக்கும்.

இந்த தீர்த்த பேரர் மூல ஸ்தானத்தில் நம்பெருமாளுக்கு அருகே எழுந்தருளியிருப்பார்.
இவரை செல்வர் என்றும் அழைப்பது உண்டு. இவரே தற்போது தினமும் இரவு தாயார் சன்னதிக்கு பள்ளியறை செல்லும் பெருமாள்.

ஒரு தாமரையின் எட்டு இதழ்களும் எட்டு தீர்த்தங்கள் போலவும் அதன் நடுப்பகுதி சந்திர புஷ்கரனி போலவும் அமைத்துள்ளது.
இந்த தீர்த்தங்கள் எங்கு உள்ளது என்றும், அதன் சிறப்புகளும், தீர்த்தமாடினால் போக்கும் பாவங்களும்,
பெருமாள் என்று அங்கெல்லாம் எழுந்தருள்வார் என்றும் விரிவாக காண்போம்.

1) திக்கு – கிழக்கு

தீர்த்தம் – பில்வ தீர்த்தம்
இருக்கும் இடம் – திருச்சி-நாமக்கல் சாலை, திருவாசி கிராமம்.
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள்- பங்குனி 8ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் – இந்த தீர்த்தம் பிரம்மஹத்தி தோஷத்தை போக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது

சரித்திரம்– வாமன அவதாரத்தின் போது, அசுர குரு சுக்ராச்சாரியர் மகாபலி சக்கரவர்த்தி தானம் கொடுக்கும் போது தடுத்தார்.
அப்போது அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
அதைப் போக்கிக் கொள்ள இந்த பில்வ தீர்த்த கரையில் தவம் செய்து தோஷத்தை நீக்கிக் கொண்டார்.

பெருமாள் நாமம் – ஸ்ரீனிவாசன்
மரம் – பில்வ வ்ருக்ஷம்
இன்றைய நிலை: இந்த குளம் எல்லை கரை மண்டபம் அருகே இருக்கிறது
(திருச்சி-சென்னை புறவழிச்சாலை கொள்ளிடம் பாலம் முன்பு)
30 ஆண்டுகள் முன்னர் வரை பெருமாள் இங்கு சென்று தீர்த்தவாரி நடந்தது.
தற்போது இந்த தீர்த்தவாரி எல்லை கரை ஆஸ்தான மண்டபத்தில் நடந்து வருகிறது.

2) திக்கு – தென்கிழக்கு

தீர்த்தம் – ஜம்பு தீர்த்தம்/அச்சுத தீர்த்தம்
இருக்கும் இடம் – திருவானைக்கோவில் மூன்றாம் பிரகாரம்
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள்- பங்குனி மாதம் 8ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் –
சரித்திரம் – சிவன் தவம் செய்து அவருடைய மோக சாஸ்திரத்தினால் ஏற்பட்ட தோஷத்தை போக்கிக் கொண்டார்.
பெருமாள் நாமம் – அச்சுதன்
மரம் – ஜம்பு வ்ருக்ஷம்
இன்றைய நிலை: கிபி1400 பின்னர் சைவ வைணவ சண்டைகளால் பெருமாள் இங்கு செல்வதில்லை.
ஆனால் பங்குனி எட்டாம் திருநாள் வெங்கடேசா தியேட்டர் அருகே ரோட்டில் இந்த தீர்த்தவாரி நடக்கிறது.

3) திக்கு – தெற்கு

தீர்த்தம் – அஸ்வத்த தீர்த்தம்/அஸ்வ தீர்த்தம்
இருக்கும் இடம் – பங்கஜம் மருத்துவமனை அருகே ஸ்ரீரங்கம் காந்தி ரோட்டில் , வித்யா மெடிக்கல் எதிரே இருக்கும் குளம்.
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள் – பங்குனி மாதம் 8ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் – வெபிசார தோஷம்
சரித்திரம் – இந்திரன் அகல்யையிடம் தவறு செய்து அவள் ராமனின் பாதம் பட்டு சாப விமோசனம் பெற்றாள்.
இந்திரன் இந்த குளத்தில் நீராடி தவம் செய்து தகாத சேர்க்கையின் பாவ விமோசனம் பெற்றான்.
பெருமாள் நாமம் – அனந்தன்
மரம் – அஷ்வத்த மரம்
இன்றைய நிலை – பெருமாள் எழுந்தருளி ஸ்ரீசடாரி தீர்த்தவாரி கண்டு பின்னர் கோஷ்டி நடந்து வருகிறது.

4) திக்கு – தென்மேற்கு

தீர்த்தம் – பலாச தீர்த்தம்
இருக்கும் இடம் – திருச்சி கரூர் ரோட்டில் இருக்கும் ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தின் எதிரே இருக்கும் தீர்த்தம்.
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள் – பங்குனி மாதம் 3ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் – சம்சர்க தோஷம், கூடாச்சேர்க்கை
சரித்திரம் – முருகன் தவம் செய்து இங்கு தான் வேலை வரமாக பெற்றார்
பெருமாள் நாமம் – கோவிந்தன்
மரம் – பலாச மரம்
இன்றைய நிலை – பெருமாள் ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்திற்கு எழுந்தருளும் முன் தீர்த்தவாரி கண்டு பின்னர் கோஷ்டி நடந்து வருகிறது.

5) திக்கு – மேற்கு

தீர்த்தம் – புன்னாக தீர்த்தம்
இருக்கும் இடம் – மேலூர் கிராமம். மேலூரில் இருந்து பட்டர்ஃப்ளை பார்க் செல்லும் ரோட்டில் இருக்கும் வ்ருக்ஷி மண்டபம்.
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள்– பங்குனி மாதம் 3ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் – பரஸ்த்ரிகமன தோஷம்
சரித்திரம் – அக்னி கிருத்திகா தேவியிடம் அபச்சார பட்டார்.அந்த குற்றத்தை இந்த குளத்தில் நீராடி தவம் செய்து போக்கிக் கொண்டார்.
பெருமாள் நாமம் – ஸ்ரீபதி
மரம் – புன்னாக மரம்
இன்றைய நிலை – பங்குனி மாதம் 3ஆம் திருநாள் ஜீயபுரம் செல்லும் வழியில் இந்த தீர்த்ததிற்கு எழுந்தருளி
தீர்த்தவாரி கண்டு பின்னர் கோஷ்டி நடந்து வருகிறது

6) திக்கு – வடமேற்கு

தீர்த்தம் – வகுள தீர்த்தம்
இருக்கும் இடம் – திருச்சி-நாமக்கல் சாலை, திருவாசி கிராமம்.
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள் – பங்குனி மாதம் 3ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் – பசுவதம் / ஸ்தீரி வதம் இதனால் வரும் தோஷம்
பெருமாள் நாமம் – மாதவன்
மரம் – வகுள மரம்
இன்றைய நிலை – 1994வது வருடத்திற்கு பின்னர் பெருமாள் ஜீயபுரம் செல்லும் போது
கொள்ளிடம் ஆற்றை கடந்து செல்வது நின்று விட்டது.
அது முதல் இந்த தீர்த்தவாரி நடப்பதில்லை. தற்போது குளம் உள்ளது.

7) திக்கு – வடக்கு

தீர்த்தம் – கதம்ப தீர்த்தம்
இருக்கும் இடம் – திருச்சி-நாமக்கல் சாலையில்ஏ உத்தமர் கோயில் திவ்யதேசத்தின் அருகே இந்த குளம் உள்ளது.
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள் – மாசி 5ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் – தானம் வாங்கியதால் வரும் தோஷங்கள் நீங்கும்
சரித்திரம் – ஜனகர் இங்கு தான் யாகம் செய்து கர்ம யோகத்தை பெற்றார்.
பெருமாள் நாமம் – உத்தமர்
மரம் – கதம்ப மரம்
இன்றைய நிலை: பெருமாள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் தாளக்குடி மண்டபத்திற்கு செல்வதில்லை.
இந்த தீர்த்தவாரி தாளக்குடி மண்டபத்திற்கு செல்லும் வழியில் நடந்து வந்ததால் இப்போது நின்று விட்டது.
இந்த குளத்தில் தற்போதும் உத்தமர் கோயில் புருஷோத்தமர் சித்திரை பிரம்மோற்சவத்தில் தேர் முடிந்து
தீர்த்தவாரி கண்டருளிகிறார்

8) திக்கு – வடகிழக்கு

தீர்த்தம் – ஆம்ர தீர்த்தம்
இருக்கும் இடம் – திருச்சி – லால்குடி சாலையில் தாளக்குடி எனும் கிராமம் உள்ளது.
இங்கு பெருமாள் ஆஸ்தான மண்டபம் உள்ளது. அதற்கு அருகில் இருக்கும் குளம்.
பெருமாள் தீர்த்தவாரி நடக்கும் நாள் – மாசி மாதம் 5ஆம் திருநாள்
தீர்த்தமாடினால் போக்கும் தோஷம் – பித்ரு தோஷம் ஏதும் தாக்கியிருந்தால் போக்கும்
பெருமாள் நாமம் – ருஷிகேஷன்
மரம் – ஆம்ப மரம்
இன்றைய நிலை: பெருமாள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தாளக்குடி மண்டபத்திற்கு செல்வதில்லை.
ஆனால் குளம் உள்ளது.

———-

திருவரங்கநாதனுக்கு தினப்படி 3 வேளை திருவாராதனம் & 6 வேளை அமுது படிகளும் சமர்ப்பிக்கப்படுகின்றன.

காலை முதல் பிரசாதம்:
கோதுமை ரொட்டி(பெருமாளுக்கு 11, தாயாருக்கு 6), வெண்ணை, கும்மாயம் (குழைந்த பாசிப்பருப்பு),
பச்சைப் பால் (2 லிட்டர்).
ரொட்டியும் & பருப்பும் வடநாட்டு உணவு. துலுக்க நாச்சியாருக்காக முதல் அமுதாக நடைபெறுகிறது.

ரொட்டி செய்யப்படும் முறை:

வெல்லத்தை நைசாகத் தேய்த்து இழைக்கணும். அந்த ஈரப்பதத்தோட கோதுமை மாவு போட்டு பிசையணும்.
வெல்லமும் மாவும் இரண்டறக் கலந்ததும் உருண்டைகளாகப் பிடிச்சு கையில தட்டணும். அதனை நெய்யில் போட்டு எடுக்கணும்.

இந்த அமுது படிகள் முடிந்த பின்னர் காலை திருவாராதனம் நடைபெறும்.

காலை இரண்டாவது பிரசாதம்:
பொங்கல், வடிசல் (சாதம்), தோசை, புத்துருக்கு நெய் (தினமும் புதிதாக மண் பானையில் காய்ச்சப் பட்டது)
கூட்டு, கறியமுது, ஊறுகாய் & ஜீரண மருந்து – சுக்கு, வெல்லம், சீரகம் & ஏலக்காய். இதுதவிர சில அதிகப்படி தளிகைகள்.
வெண் பொங்கல் – பாசிப்பருப்பு, பச்சரிசி & நெய் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படும்.
பச்சரிசி உளுந்து தோசை – பெருமான் அமுது செய்யும் தோசை சற்று தடிமனாக இருக்கும்.

காலை தணிக்கைகள் அமுது செய்யப் படும் நேரம்: 7.45 – 9.15

மதியம் பெரிய அவசரம் அதனுடன் திருவாராதனம்:
வடிசல் (சாதம் – 18 படி ) கூட்டு, கறியமுது, சாத்தமுது (தக்காளி சேர்க்காமல் புளி, மிளகு, சீரகம்),
திருக்கண்ணமுது (அரிசி, பாசிப்பருப்பு, பால் & வெல்லம்) மற்றும் அதிரசம்-11

கோயிலோ பெரிய கோயில்!

பெருமாளோ பெரிய பெருமாள்!

தளிகையோ பெரிய அவசரம்!!

பெரிய அவசரத்தில் 50 ஆண்டுகள் முன்னர் வரை கூட்டு, கரியமுது என்பது
செடி 5 & கொடி 5 என்ற வகையில் 10 காய்கறிகள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
தற்போதைய காலங்களில் ஒரு கறியமுது மற்றும் ஒரு கூட்டு என்று குறைந்திருப்பதை நாம் அறிகிறோம்.

கொடியில் காய்க்கும் காய் கறிகள் – அவரை, புடலை, பூசணி, பாகற்காய், வெள்ளரிக்காய்.
செடியில் காய்க்கும் காய்கறிகள் – கொத்தவரை, வாழைக்காய் & கிழங்கு வகைகள்

ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபத்துக்கு அருகே, அமைந்துள்ள,”மதுரகவி திருநந்தவனத்தில்” இருந்து
மதுரகவி சுவாமிகளால் மேற்கொள்ளப்பட்ட ஊறுகாய் சேவை நடந்து வருகிறது.
பெருமாளுக்குத் தினமும் 10 எலுமிச்சம்பழங்களும் தாயாருக்கு 5 எலுமிச்சம் பழங்களும்
நந்தவனத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

மாலை ஷீராண்ணம் தளிகை:
ஷீராண்ணம் (அரை தித்திப்பாக இருக்கும் பொங்கல்), கறியமுது, திருமால் வடை, அப்பம்,
தேன்குழல், தோசை மற்றும் அதிகப்படி தளிகைகள்

பெருமாளுக்கு அமுது செய்யப்படும் பணியாரங்கள் –
பெரிய அப்பம் (6), பெரிய வடை (11) & பெரிய தேன்குழல் (6) ஆகியவை எண்ணிக்கை குறைவு தான்.

தாயாருக்கு மட்டும் ஷீராண்ணத்துடன், பச்சரிசிப் புட்டு தினமும் மாலையில் அமுது செய்யப்படும்.

இரவு செலவு சம்பா திருவாராதனம்: வடிசல் (சாதம்) மற்றும் பாசிப்பருப்பு.
இந்த திருவாராதனத்தில் செல்வர் எழுந்தருளி பலி சாதித்து வருவதால் இதற்கு செல்வர் சம்பா என்ற பெயர் ஏற்பட்டது.
காலப்போக்கில் இதுவே செலவு சம்பா என்று மருவியது.

இரவு கடைசி தளிகை – அரவணை & சுண்டக் காய்ச்சிய பசும்பால்
அரவணை (ஒருவிதமான சக்கரை பொங்கல்), கறியமுது மற்றும் காய்ச்சிய பால்.
இரவு 10 முதல் 11 மணி ஆகும். (ஜீயபுரம் செல்லும் நாளில் மட்டும் மாலை 6 மணிக்கு அமுது செய்வார்).

தாயார் சன்னதியில் அரவணையுடன் கீரை சேர்த்து செய்யப்படும்

இந்தப் பால் காய்ச்சப்படும் முறை ஒரு சிறப்பான முறை. அதாவது மண்பானையில் முதலில் தண்ணீரை ஊற்றி காய்ச்சி
அதன் மூலம் பானை சற்று இறுகிவிடும். அதன் பின்னர் பச்சை பாலை சுண்டக் காய்ச்சி அதனை சூடு போக ஆறவைத்து
அதற்குப் பின்னர் குங்குமப்பூ, ஏலக்காய் & வெல்லம் சேர்த்து அமுது செய்யப்படும்.

உடையவரும் கஷாயமும்:

ஸ்வாமி ராமானுஜர் ஒருமுறை பெருமாளின் முகம் வாடி இருப்பது கண்டு,
முதலியாண்டானை பார்த்து பெருமானுக்கு என்ன அமுது செய்யப் பட்டது என்று கேட்டார்.
அதற்கு தயிர்சாதமும் & நாவல் பழமும் என்று முதலியாண்டான் சொன்னாராம்.
உடையவர் உடனே அரங்கன் ஒரு குழந்தை போல! அவருக்கு ஜலதோஷம் வந்து விடும் என்று சொல்லி
அதற்காக கஷாயம் தன்வந்திரி சன்னதியிலிருந்து தயார் செய்து பெருமாளுக்கு அமுது படைக்க சொன்னாராம்.
இதுவே உடையவருக்கு இருந்த பரிவை நமக்குக் காட்டுகின்றது.

முன்னர் அரவணையுடன் கஷாயம் அமுது நடந்ததாகவும் அது தன்வந்திரி சந்நிதியில் இருந்து வந்ததாகவும் செய்தி உண்டு.

திருவரங்கநாதனுக்கு தளிகை செய்வது தினமும் புது மண்பானையில் தான்.
மற்ற கோவில்களை போல் இங்கு பாத்திரங்களைக் கொண்டு தயார் செய்யப் படுவதில்லை.

வெள்ளிக்கிழமை புனுகாப்பு புளியோதரை:
பெரிய பெருமாளுக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் திருமார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு புனுகு தைலம் சாத்தப்படும்.
இந்த தைலம் சாற்றிய பின் விசேஷத் தளிகையாக புளியோதரை அமுது செய்வார்.
உத்ஸவங்கள் இருப்பின் இந்த வைபவம் நடைபெறாது.

பூச்சாற்று உற்சவத்தில் பானகம்
பூச்சாற்று உற்சவத்தில் தினமும், பூச்சூடிய பின் 5 பானைகளில் சிறப்பு பிரசாதமாக பானகம் மற்றும்
வடை பருப்பு (பயத்தம் பருப்பு) அமுது செய்யப்படும்.
அதன் பின்னர் இந்த பானகம் கோஷ்டி பிரசாதமாக விநியோகம் செய்யப்படும்.

வசந்த உற்சவ சாற்றுமுறை பால் மாங்காய்
வசந்த உற்சவ சாற்றுமுறை நாளன்று பாலில் மாங்காய் மற்றும் சில பழங்கள், சேர்த்து தயார் செய்யப்படும் ஒரு வகையான பிரசாதம்.
இதை ராக்ஷச கறியமுது என்று சொல்லும் வழக்கமும் உண்டு. பொதுவாக இது வைகாசி விசாகத்தன்று வரும்.

ஆனி ஜேஷ்டாபிஷேக பெரிய திருப்பாவாடை
ஆனி மாதம் கேட்டை நட்சத்திரம் (ஜேஷ்டா) தினத்தன்று ஆண்டுதோறும் பெரிய திருமஞ்சனம் நடைபெறும்.
உற்சவர் நம்பெருமாளுக்கு கவசங்கள் கழற்றி திருமஞ்சனமும் பெரிய பெருமாளுக்கு திருமேனி முழுவதும் தைலம் சாத்தும் வைபவம் நடைபெறும்.

இதற்கு அடுத்த நாள் அன்னகூட உற்சவம் என்று அழைக்கப்படும் பெரிய திருப்பாவாடை அமுது செய்யப்படும்.
108 படி அன்னம் தயார் செய்யப்பட்டு, பெருமானுக்கு முன்னே சேர்க்கப்பட்டு அமுது செய்யப்படும்.

ஆகமங்களின் படி தினசரி நித்தியப்படி அமுதுபடிகளில் ஏதேனும் குறை இருந்தால்,
அதனை நிறைவு செய்வதற்காக நடத்தப்படும் திருப்பாவாடை உற்சவம் என்ற குறிப்பும் உண்டு.

மார்கழி பெரிய திருநாள் சிறப்பு அமுது படிகள் –
சம்பார தோசை, செல்வரப்பம் மற்றும் உருப்படி
சம்பார தோசை – பெரிய திருநாளில் தினம் பெருமாளுக்கு சம்பார தோசை எனும் தடிமனான பெரிய தோசை அமுது செய்யப்படும்.
அரைக்கால் தோசையை சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும்!

செல்வரப்பம் – மார்கழி பெரிய திருநாளில் தினமும் இந்த செல்வரப்பம் அமுது செய்வார்.
தட்டை போல் சிறிய வட்டமாக இருக்கும்.

உருப்படி – மார்கழி பெரிய திருநாளின் கடைசி நாள் சாற்றுமுறை அன்று உருப்படி என்னும் சிறப்பு பணியாரம் அமுது செய்வார்.
இது தட்டையை விட தடிமனாகவும், சிறிய அளவில் இருக்கும்.

சாற்றுமறை அன்று இந்த பணியாரங்கள் நூற்றுக்கணக்கில் அமுது செய்வார்.

தை, பங்குனி & சித்திரை உற்சவம் கொடியேற்ற தின அப்பம்
தை பங்குனி மற்றும் சித்திரை கொடியேற்றம் நடைபெறும் அன்று காலை சிறப்பு அமுதாக பெருமாள் அப்பம் அமுது செய்வார்.
இந்த கொடியேற்றப்பம் பெருமாள் ஏளப்பண்ணும் வேற்று ஆட்களுக்கு கிடைக்கும் பிரசாதம்.

வாகன வடை
உற்சவ காலங்களில் வாகனத்தில் புறப்பாடு கண்டருளும் போது அரிசி மாவு வடை சிறிதாக இருக்கும்.
இந்த வடை வாகனத்தில் எழுந்தருளிய உடன் அமுது செய்வார்.

மாசி வெள்ளி கருடன் – கொழுக்கட்டை பிரசாதம்
மாசி மாதம் தெப்ப உற்சவம் நாலாம் திருநாளன்று வெள்ளி கருட வாகனம் நடைபெறும்.
அன்று பெருமாள் வீதி எழுந்தருளி வாகன மண்டபம் அடைந்த பின்னர் சிறப்பு பிரசாதமாக பெரிய கொழுக்கட்டை அமுது செய்வார்.

மாசி தெப்பம் சிறப்பு பிரசாதம்
தெப்பத்தன்று பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து கிளம்பும் முன்னர் சர்க்கரைப் பொங்கல், சீயம் போன்ற அமுது படிகளை அமைத்து செய்வார்.
இவை முன் காலங்களில் தெப்பத்தில் எழுந்தருளிய பின்னர் நடுவே இருக்கும் மைய மண்டபத்தில் அமுது செய்யப்பட்டதாக செவிவழிச் செய்தி.

பங்குனி மாத சேர்த்தி உற்சவம் அக்காரவடிசல்
உறையூர் நாச்சியார் சேர்த்தி மற்றும் பெரிய பிராட்டியார் பங்குனி உத்திர சேர்த்தி நடைபெறும் இரண்டு நாட்களிலும்,
பெருமாள- தாயார் ஏகாந்தம் முடிந்து அமுது செய்யப்படும். பலரும் அதிகப்படி தளிகையாக அக்கார அடிசல் சமர்பிப்பார்கள்.

வாகனங்களுக்கு அமுது
பெருமாள் வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா முடிந்து நான்முகன் கோட்டைவாசல் நுழைந்த பின்னர்
கூரத்தாழ்வான் சன்னதி முன்னர் இரண்டு நிமிடங்கள் நிற்பார்.
அப்போது வாகனங்களுக்கு ஏற்றார்போல் அமுது படிகள் சமர்ப்பிக்கப்படும்.
உதாரணமாக சேஷ வாகனம், அம்ச வாகனம் & கற்பக விருட்சம் போன்றவற்றுக்கு
பால், குதிரை வாகனத்திற்கு கொள்ளு, கருடனுக்கு கொழுக்கட்டை போன்ற பிரசாதங்கள் வாகனங்களுக்கு அமுது செய்யப்படும்.

வழிநடை உபயங்கள்
வழிநடை உபயங்கள் இரண்டு வகை உண்டு. ஒன்று பானகம் & வடை பருப்பு (பயத்தம் பருப்பு).
பெருமாள் எழுந்தருளி பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம் , புளியோதரை போன்ற விதவிதமான பிரசாதங்கள் அமுது செய்வார்.

கோவிலுக்கு உள்ளே நடைபெறும் வசந்த உற்சவம், பவித்திர உற்சவம், ஊஞ்சல் உற்சவம் மற்றும் பூச்சாற்று உற்சவம்
ஆகிய உற்சவங்களில், பெருமாள் மண்டபத்திற்கு எழுந்தருளியபின் சிறப்பு தளிகை அமுது செய்வார்.

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மணவாள மா முனிகள் தன்னுடைச் சோதி எழுந்து அருளுதல் -ஸ்ரீ ரெங்க திவ்ய தேச மஹிமை -ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ மாமுனிகளுக்கு பின்னுள்ள ஸ்ரீ ஆசார்ய ஶ்ரேஷ்டர்கள் திருவவதாரம் —

January 2, 2022

குருரேவ பரம ப்ரஹ்ம குருரேவ பரம் தனம்
குருரேவ பர:காமோ குருரேவ பராயணம்
குருரேவ பராவித்யா குருரேவ பரா கதி:
யஸ்மாத் தது தேஷ்டாஸௌ தஸ்மாத் குருதரோ குரு:

குருவே மேலான ப்ரஹ்மம். குருவே மேலான தனம். குருவே மேலான காமம். குருவே மேலான ப்ராப்யம்.
குருவே மேலான கல்வி. குருவே மேலான ப்ராவகம். அப் பரம் பொருளையே உபதேசிப்பதால் குரு அதைக் காட்டிலும் உயர்ந்தவர்.

———

ஆச்சார்யஸ்வ ஹரி சாக்ஷாத் சர ரூபி ந ஸம்ஸய:
ஆச்சார்யனே நேரே நடமாடும் பரம புருஷன். இதில் ஐயமில்லை.

————

ஆசிலாசாரிய பதந்தான் தனியே ஒன்றாம் ஆங்கதுதான்
தேகப் பொலிந்த எதிராசர்க்கன்றி எவர்க்கும் சேராதால்
நேசத்துடனத் திறமறிந்து நின்று கடந்து கிடந்திருந்து
பேசப்படுநும் உரை யெல்லாம் இராமாநுசர்பேர் பிதற்றுதரேல் -ஸ்ரீஇராமானுஜ வைபவம்: வடிவழகிய தாஸர்-

————

மாசில்லாத மணவாள மாமுனிகள் மாசி கிருஷ்ண பக்ஷம் துவாதசியன்று திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

அவர் வசித்து வந்த திருமலை யாழ்வார் கூடம் நிரம்பி வழிந்தது. உத்திர வீதிகளெங்கும் நெற்றியில் பளீரென
திருமண், திருச்சூர்ணம் துலங்க ஸ்ரீவைஷ்ணவர்கள் அலைப் பொங்கியது.

ஜீயர் நாயனார் மன்னுலகு சிறக்க வந்த மாமுனிகளின் சரம கைங்கர்யத்திற்கு பொறுப்பேற்கின்றார்.

சீடர்கள் குழாமுடன் திருக்காவேரி எழுந்தருளி நீராடி பெரிய திருமஞ்சனக் குடத்தில் கங்கையிற் புனிதமான காவிரியின்
நன்னீர் சேந்தி சகலவிதமான மங்கள வாத்யங்கள் முழங்க, அலங்காரமாக திருமஞ்சன குடத்தினைக் கொண்டு வருகின்றனர்.

ஜீயரின் விமல சரம திருமேனியினை திருமஞ்சன வேதிகையில் எழுந்தருளப் பண்ணுகின்றனர்.

நான்கு உத்திர வீதிகளிலும் அலைப்போன்று ஆர்ப்பரித்து நின்ற ஸ்ரீவைணவர்கள் புருஷ ஸூக்தத்தினை
தழுதழுத்தக் குரலுடன் பாராயணம் செய்கின்றனர்.

அந்த சந்தர்ப்பத்திற்கேற்ப வானம் மூட்டமிட்டு கதிரவன் சற்றே மறைந்து மெல்லிதாக பூமாரி பொழிகின்றது.

திருமஞ்சனம் முடிந்து திருவொற்று வாடையினால் திருமேனியை ஒரு குழந்தை குளித்து முடித்த பின்பு
துவட்டுவது போன்று கவனமாக ஒத்தி ஒத்தி துவட்டுகின்றனர்.

திருப்பரிவட்டம் சாற்றுகின்றனர்.

த்வாதசோர்த்வ புண்டரங்களை திருமேனியில் சாற்றுகின்றனர்.
காந்தி வீசும் விசாலமான நெற்றியில் விசாலமான அத்திருமண்காப்பும். ஸ்ரீ ஸூர்ணமும் தேஜஸ்ஸோடு விளங்கியது.

ஜீயரை திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்தருளப் பண்ணுகின்றனர்.
அனைத்து ஸ்ரீவைணவர்களும்‘எம்பெருமானாரை சேவியாத குறையெல்லாம் இவரையடைந்து தீர்ந்தோம் நாம்!
இப்போது இவ்வவதாரமும் தீர்த்தம் பிரஸாதித்துப் போவதே!”
என்று மிகவும் துக்கித்து கண்ணீர் மல்க கதறுகின்றனர்.

ஒவ்வொருவராக அவர்தம் திருவடியினை தம் தம் சிரஸ்ஸிலும் நெஞ்சிலும் ஒற்றிக் கொள்கின்றனர்.

‘அத்தன் மணவாள யோகி அடியிணையைச் சித்தப் பெருங்கோயில் கொண்டருளி” என்றபடி
அவரது திவ்யமங்கள சொரூபத்தினை தம் தம் திருவுள்ளங்களில் கடைசி முறையாக தேக்கிக் கொண்டு
வைத்தக் கண் வாங்கதே விமல சரம விக்ரஹ அனுபவத்திலே விக்கித்தவாறு இருக்கின்றனர்.

உத்தம நம்பி மூலமாக அரங்கன், ‘தாம் அரைச்சிவக்கச் சாற்றிக் கழித்த பீதக வாடையான சிகப்புப் பட்டினையும்,
அவன் திருமார்பணிந்த வனமாலையையும்’ ஒரு பொற் தட்டிலே வைத்து கோயில் மரியாதையுடனே,
சகல வாத்ய கோஷங்களுடனே, சகல பரிகரர்களையும் உடன் அனுப்பி, மடத்து வாசலுக்கு அனுப்பி,
கோயிலின் மூலஸ்தானத்தில் தான் மட்டும் தனித்திருந்து துக்கித்து அதனால் அவனது திருமேனி கறுத்து வாடியபடியிருக்கின்றான்.

மாமுனிகளின் மடத்து வாசலில் ஜீயர் நாயனார் உட்பட அனைத்து முதலிகளும் அரங்கனிடமிருந்து வந்த
கோயில் மரியாதையினை எதிர்கொண்டு, சாஷ்டாங்கமாக வீழ்ந்து சேவித்து அங்கீகரித்து
‘உடுத்து களைந்த பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு தொடுத்துழாய் மலர் சூடிக்களைந்தன சூடுமித் தொண்டரான
ஜீயருக்கு அவற்றைச் சூட்டி அலங்கரிக்கின்றனர்.

கோயிலார்கள் அனைவருமே சோகார்த்தராய் ஜீயரை சேவிக்கின்றனர்.

திருச்சூர்ண பரிபாலனம் நடக்கின்றது.

பின்பு எண்ணெய் சுண்ணங்கொண்டாடுகின்றனர். (சிறிது எண்ணெய் அவரது சிரஸ்ஸில் தேய்த்து, தேய்த்த கையிலுள்ள
மீதமுள்ள நல்லெண்ணையை கொப்பரையிலுள்ள எண்ணெயோடு கலந்து அனைவருக்கும் பிரஸாதிப்பது)

நறுமணம் வீசும் அனைத்து ஜாதி புஷ்பங்களினாலும் பல்லக்கை அலங்கரித்து அதனில் அவரது திருமேனி ஏறியருளப் பண்ணுகின்றனர்.
அரங்கனது ஸ்ரீமாந்தாங்குவோர் அனைவரும் காவி வண்ண ப்ரபன்ன பாகையுடன் கவனமுடன் பல்லக்கினை எழுந்தருளப் பண்ணுகின்றனர்.

சத்ர, சாமர, தாள வ்ருந்தாதிகள் பணிமாற, மத்தளங்கள், சங்க, காஹள பேரிகள் தொடக்கமான ஸகல வாத்யங்களும் ஒரு சேர முழங்க,

பொய்யில்லாத பெரிய ஜீயர் – கர்வம் அறியாத கர்மவீரன் – சாத்வீகமே உருவெடுத்த சத்தியன் –
அரங்கனே அடியவனாய் வந்தும் அகங்காரம் சற்றும் கொள்ளாத அழகிய மணவாளன் –
கைங்கர்யத்திற்காகவென்ற சம்ஸாரம் துறந்து சந்நியாசம் மேற்கொண்ட ஸௌம்ய ஜாமாத்ரு முனி, பூவுலகு நீங்கி புறப்படுகின்றார்.
அவரது விமல சரம திருமேனி வருகையையொட்டி உத்திர வீதி, சித்திரை வீதியெங்கும் கொடிகள் அழகாக
ஒரு சீரான க்ரமத்தில் நாட்டப்பட்டு நடுநடுவே மகரதோரணம் போன்று தோரணங்கள் கட்டப்பட்டு, வீதியெங்கும் நீர் தெளித்து,
சுத்தமாக மொழுகி, கோலமிடப்பட்டு, நடுநடுவே புஷ்பங்களை சொரிந்து, அங்காங்கு கமுகு, குலையுடன் கூடிய வாழைமரங்கள் நட்டு,
மஹாஞானியின் கடைசி வருகைக்காகக் காத்திருந்தது.

அடியார்கள் சூழ அரங்கநகரே பிரிவாற்றமையினால் அழுதது. மாமுனிகளின் புஷ்பக விமானம் ஊர்ந்தது.

பின்னால் ஸ்ரீவைணவர்கள் அனைவரும் கையில் கரும்புடன் இராமானுஜ நூற்றந்தாதி முதலாக அனுசந்திக்கின்றனர்.
ஜீயரின் திருமேனி முன் பொரியும் புஷ்பமும் சிதறுகின்றது.
‘தர்ஸநத்திலே மணவாளமாமுனிகள் திருநாட்டுக்கு எழுந்தருளினார்;” என்று ஒற்றை திருச்சின்னம் பணிமாற,
ஸூமங்கலிகள் அனைவரும் கையில் மங்கள தீபமேந்தி நிற்க,
எட்டு திருவீதிகளிலும் மாமுனிகள் கடைசியாக அனைவருக்கும் ஸேவை தந்து வலம் வருகின்றார்.

வடக்கு வாசல் வழியே தவராசன் படுகையிலே ‘மகிழாதிகேசவன் தன்னடிக் கீழாக” என்கிறபடியே
அங்குள்ள ஆதிகேசவ பெருமாளின் திருவடிக் கீழாக தென்பாலில், ஆளவந்தார், இராமானுஜர் ஆகியோருக்கு
செய்த கிரமம் போன்று யதிஸம்ஸ்கார விதியடங்க திருப்பள்ளிப் படுத்துகின்றனர்.

பூமிதேவியானவள் ஜனகனின் திருமகளான சீதையை தம் மடியிலே வைத்து அணைத்துக் கொண்டு ஆதரித்தாற்போன்று,
மாமுனிகளான இவரையும் தம் மண்ணால் மூடி தம் மடி மீது கிடத்தி அணைக்கின்றாள்.

சீயரெழுந்தருளி விட்டார் செகமுழுதும்
போயிருள் மீளப் புகுந்ததே தீய
வினை நைய வெம்புலனா வீடழிந்து மாய்வோ
ரனைவார்க்குமேதோ வரண்?

என்று சிஷ்யர்கள் அனைவரும் மிகவும் துக்கித்து, தங்களுடைய திருமுடியினை விளக்குவித்துக் (தலைச்சவரம்) கொண்டு,
வடதிருக்காவிரியில் நீராடி மீண்டும் மடத்துக்கு எழுந்தருளுகின்றனர்.

நம்மாழ்வார் மோட்சம் முடிந்து நம்பெருமாள் ஆஸ்தானம் அடைந்த பின் வெறிச்சோடும் திருமாமணி மண்டபம் போன்று,
ஜீயரின்றி வெறித்துப் போய் கிடந்த திருமலை யாழ்வார் கூடம் கண்டு மீண்டும் அழுகின்றனர்.

நானெதென்னும் நரகத்திடை யழுந்திப்
போன விந்த காலமெல்லாம் போதாதோ? – கான மலர்
மாலை யணி திண்டோன் மணவாள மாமுனியே
சால நைந்தேன் உன் பாதம் தா!–என்றும்

புண்ணாராக்கை தன்னுள் புக் குழலும் தீவினையேன்
தண்ணாருமென் கமலத்தாளணைவதென்று கொலோ
பண்ணரு நால் வேதம் பயின்றுய்யும் பண்டிதனே
மண்ணாள வந்த மணவாள மாமுனியே

என்று மண்ணுலகம் சிறக்க வந்த மாமுனிகளை நினைத்து நினைத்து திருமிடறு தழுதழுப்ப விண்ணப்பஞ்செய்து,
தமக்குத் தானே ஒருவாறு தேறி ஜீயரின் திருவத்யனன கைங்கர்யத்தினைப் பெருக்கச் செய்கின்றனர்.
தீர்த்த பிரஸாதங்களை ஸ்வீகரித்து ஜீயர் அவரவர்க்கிட்ட பணி செய்ய திரும்புகின்றனர் அனைவரும்.

பெரியபெருமாள், ஜீயர் நாயனாருக்கு தீர்த்தம் பிரஸாதம் திருப்பரிவட்டம் ஸ்ரீசடகோபம் எல்லாம் சாதித்து,
ஜீயர் நாயனாரை ”ஸ்ரீரங்கராஜரையும் மடத்தையும் நோக்கிக்கொண்டு போரும்” என்று நியமிக்கின்றார்.

இத்தைக் கண்டு ஜீயருடைய அபிமாந அந்தர்பூதரெல்லோரும் சற்றே ஆறுதலடைந்தவர்களாய்,
ஜீயர் நாயனாரை பெரிய ஜீயரைக் கண்டாற் போல கண்டு அநுவர்த்தித்து, ஆஸ்ரயித்து ஸேவித்துக் கொண்டிருந்தார்கள்.

வரவரமுநி: பதிர்மே தத்பதயுகமேவ சரணமநுரூபம்
தஸ்யைவ சரண யுகளே பரி சரணம் ப்ராப்யமிதி நநுப்பராப்தம்

மணவாளமாமுனிகளே அடியேனுக்கு ஸ்வாமி.
அவருடைய திருவடித் தாமரைகளே பேற்றுக்கநுருபமான உபாயம்.
அவருடைய திருவடித் தாமரைகளில் கைங்கர்யமே மேலான உபேயம்.– -எறும்பியப்பா.

அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ
சடகோபன் தண்டமிழ் நூல் வாழ – கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மாமுனியே!
இன்னுமொரு நூற்றாண்டிரும்!.

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே
ஸ்ரீரங்க வாஸிநே பூயாத் நித்யஸ்ரீர் நித்ய மங்களம்.

———–

நான் முகன் கோபுரம் நுழைந்தவுடன் இடதுபுரம் சுவற்றில் 4(நான்கு) பளிங்கு கல் வெட்டுகள்
பதிக்கப் பெற்றுள்ளதில் குறிக்கப்பெற்றுள்ளன.

எல்லாமே இங்கு பெரியது தான்

1. பெரிய கோவில்
2. பெரிய பெருமாள்,
3. பெரிய பிராட்டியார்
4. பெருமாளுக்கு ஆண்டாளை தந்த மாமனார் – பெரியாழ்வார்,
5. பெரிய திருவடி,
6. பெருமாளின் புகழ் மேலோன்ற தமிழ் மறைகள்,
7.பெருமாள் பகவத் விஷயம் கேட்பதற்குத் தாமே தேர்தெடுத்த ஆசிரியர் – பெரிய ஜீயர்

கோவினுள் 51 சுற்றுக் கோவில்களையும் 108 மண்டபங்களையும் தன்ணகத்தே கொண்டது.

ஆஞ்சநேயருக்கு நேர் எதிரே சுவர் ஓவியம் கருடன் ஆகம விதிப்படி வரையப்பட்டது கண்டு மகிழலாம்.

ஊஞ்சல் மண்டபத்திற்கு கிழக்கே நெய் கிணறு உள்ளது. இப்பொழுது அங்கு நெய் இருப்பதில்லை.

அடுத்த ரெங்க விமானத்தை மிக அருகே காண மாடிப்படிகள் உள்ளன.
இங்குள்ள மண்டபத்திற்கு அணி அரங்கன் திருமுற்றம் என அழகிய பெயர் உள்ளது.

நடுவே பொன் முலாம் பூசிய துவஜஸ்தலம் பலிபீடம் கண்டு இந்த பொன் முலாம் பூசிய துவஜ ஸதம்பம் (கொடிமரம்)
முன்பாக நமக்கு இடப்புரமாக ஓர் அழகிய பறவை விளக்குச்சிலை இருப்பதையும்
எப்பொழுதும் தீபம் எறிந்து கொண்டே இருப்பதையும் காணலாம்,
இது மிகவும் சிறந்த வேலைப்பாடுடன் கூடிய திருவிளக்கு இதன் தலை அலங்காரத்தையும் சடைபின்னலையும்
ஆடை அணிகலன் களையும் பார்த்துக் கொண்டிருக்கலாம். தோளின் மீதி ஓர் கிளி அமர்ந்துள்ளது

சேனை முதலியார் சந்நிதியில் சேனை முதலியார், ஆஞ்சநேயர் விபீடணன் உள்ளனர்.

அடுத்து அரங்கன் ஸ்ரீபாதம் தனிசந்நதி கிழக்கே அர்ச்சுன மண்டபத்தில் துலுக்க நாச்சியார் இவருக்கு மேற்கில்
கோகுல வல்லி தாயார் சந்நதிகள் உள்ளன.

கிளி மண்டபம் இம் மண்டபத்திற்கு வடக்கே ரேவதி மண்டபம் அதாவது அர்ச்சன மண்டபத்திற்கும் கிளிமண்டபத்திற்கும்
இடையில் ரேவதி மண்டபம் உள்ளது.

அடுத்து கிருஷ்ணன் சந்நதி இங்கே கிருஷ்ணன் கையில் சங்கு வைத்திருப்பதைக் காணலாம்.

அடுத்து நிலைக்கண்ணாடி.

அடுத்து இவருக்குக் கிழக்கே சுவற்றில் திருகுறும்பறுத்த நம்பிகள் படம் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது.

திரு அணுக்கன் திருவாசல் வழியாக வெள்ளிக் கதவுகள் தாண்டி காயத்ரி மண்டபம் இதில் 24 தூண்கள் கொண்டது.
சுற்றி வந்து சேவிக்கிறோம். பட்டர் சுவாமிகள் கற்பூர ஆரத்தி ஜோதியில் சிரம் முதல் பாதம் வரியில் சேவையாகிறது
அங்கு தீர்த்தம் துளவம் சடகோபம் சார்த்தப்படுகிறது.

உற்சவர்கள் மூவர் உள்ளனர். ஒருவர் உலா வருவார் மற்றவர் யாக சாலையிலேயே இருப்பார். இன்னொருவர் கர்பக் கிரகத்திலேயே இருப்பர்

ஆசியாவிலேயே மிக உயர்ந்த பிரமாண்ட ராஜகோபுரம் கொண்டது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.
13 நிலைகளையும் 14 மங்கலக் கலசங்களையும் கொண்டு 236 அடி உயரத்தில் காட்சி தருகிறது.ஸ்ரீர‌ங்க‌ம்

நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும்
21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது.

மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள
மதுரகவி நந்த வனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது.
பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய சமைப்பதற்கு மடப்பள்ளியில் மண்பாத்திரங்களே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது.

மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை. அதற்கு பதில் கோயில் பணியாளரை கொண்டு
ஆண்டுக்கு இருமுறை கோயில் ஊழியர்களால் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலம் பூசப்பட்டு(தைலக்காப்பு)
உலர்ந்தபின் நீக்கப்பட்டு மெருகூட்டப்படுகிறது.

ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் “ஆடிப் பெருக்கு’ உற்சவம் கொண்டாடப் படுகிறது

கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை
ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது

ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார்.
அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார்.
இவருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது.
வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும்
துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு.

மருத்துவக் கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, கரம், அமிர்த கலசம்
மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் இவர்.
தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள்.
வெள்ளிக் கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது.
தினமும் சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக் கலவையையும் படைக்கின்றனர்.
சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்த கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம்.

முதல் சுற்று திருவுண்ணாழி திருச்சுற்று,
2வது சுற்று ராஜமகேந்தின் சுற்று,
3வது சுற்று குலசேகரன் திருச்சுற்று,
4வது சுற்று ஆலிநாடான் திருச்சுற்று,
5வது சுற்று அகளங்கன் திருச்சுற்று,
6வது சுற்று திருவிக்ரமன் திருச்சுற்று(உத்திர வீதி),
7வது சுற்று கலியுக ராமன் திருச்சுற்று(சித்திரை வீதிகளில் குடியிருப்புகளும்,வணிக வளாகங்களும் கொண்ட பகுதிகளாக விளங்குகிறது).
இந்த ஏழு திருச்சுற்றுக்களையும் உள்ளடக்கி 156 ஏக்கர் பரப்பளவில் அடையவளஞ்சான் திருச்சுற்று எனப்படும்
8வது சுற்று மதில்சுவர் அமைந்து உள்ளது.

நான்காவது திருச்சுற்றில் தன்வந்திரி சன்னதிக்கு வடபுர கோபுர வாசலின் பாறையில் 5 குழிகள் உண்டு.
இவ்விடத்திற்கு மூன்று வாசல்கள் வழி வரமுடியுமாதலால் இதற்கு ஐந்து குழி மூன்று வாசல் என்பது பெயர்.
இங்கு தாயார் அரங்கன் வருகிறாராவென்று இந்த ஐந்து குழிகளிலும் தன்கை விரல்களை வைத்து
மூன்று வாசல்கள் வழியாகவும் பார்ப்பாராம்.

இந்த ஐந்து குழிகளில் ஐந்து விரல்களை வைத்து பரமபதவாசலை பார்ப்பது என்பது ஒரு வழக்கமாகும்.

ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நதி இங்கு திருமால் அறுகோணத்தின் நடுவே சக்கர வடிவினறாய் எட்டுகரங்களுடன் எழுந்தருளியுள்ளார்.
இங்கே விஜயவல்லித்தாயாரும் உள்ளே இருக்கிறார். பிரதஷணம் வரும் பொழுது திருவரங்க அமுதனார் சந்நதி உள்ளது.
சக்கரத்தாழ்வர் பின்புறம் யோகநரசிம்மரைக் காணாலாம்,
இந்த சக்கரதாழ்வார் சந்நதியில் ஹொய்சள தளபதிகள் திருப்பணி செய்துள்ளனர்.
இதற்கு சான்று சந்நதி முகப்புவாயிலிலும் பின்புறமும் வரிசைக்கு 4 தூண்களாக ஆக எட்டு தூண்கள் வித்யாசமான தூண்களாக பகிர்கின்றன.
இந்த தூண்கள் அமர்ந்த நிலையில் உள்ள யாளியின் சிரசில் தாங்குவதாக அமைக்கப் பெற்றுள்ளன.
இவ்வாலயதிலுள்ள எல்லா தூண்களும் மாறுபட்டவைகளாக இருக்கின்றன

கருட மண்டபத்தில் இடதுபுறம் நம்மாழ்வர், மதுரகவி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் மூவருக்கும் தனிச் சந்நதி உள்ளன.

ஆர்யபடாள் கோபுரத்தினுள் நுழைகிறோம். இடது பக்கம் பவித்ரோத்சவ மண்டபம்.
இம்மண்டபத்திற்கு பின்புறம் ஹயக்ரீவர் சன்னதியும், சரஸ்வதி சன்னதியும், தசமூர்த்திகள் சன்னதியும் உள்ளன.
இதன் கிழக்கே ஊஞ்சல் மண்டபம். இங்கு பெருமாள் ஊஞ்சல் விழா கண்டருளுவார்.

திருக்கொட்டாரத்தின்னுள்ளே பெருமாளுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய பாத அணிகள் {செருப்புகள்} வைக்கப்பட்டுள்ளன.
பெருமாளின் பாத அணிகள் சுமார் 30-40 அடி உயரம் கொண்ட ஒரு மனிதருக்கானதைப் போன்று உள்ளதைக் கண்டு வியக்கின்றோம்.
ஒவ்வொரு செருப்புகளும் சுமார் 2-3 அடி நீள கொண்டுள்ளது.
ரெங்கநாதருக்கு ஆண்டிற்கு ஒரு தடவை அருந்ததியார்(செருப்பு தைக்கும் தொழிலாளர்) பாதரஷை
ஒன்று மட்டும் தயாரித்து வழங்குவது உண்டு
அவர்கள் அந்த நாளில் ஆலயம் வந்து பாதரஷையினை கொடுத்து விட்டு தீர்த்தப் பிரசாதம் பெற்று
மாலை மரியாதைப் பெற்றுத் திரும்புவர். அந்த பாதரஷை திருக்கொட்டாரத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
இதற்கு சம்பந்தப்பட்ட அருந்ததியார் குடும்பத்தாருக்கு பெருமாள் கனவில் தோன்றி மணலில் அளவுக்காட்டி மறைவதாகவும்
அதனை ஏற்று பாதரஷை செய்து கொண்டு வந்து அளிப்பார்களாம்.

திருகொட்டாரத்திற்கு அருகிலேயே ஸ்ரீ மஹாலட்சுமி சன்னதி, ஸ்ரீ செங்கமல நாச்சியார், ஸ்ரீ கிருஷ்ணர்,
ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ ராமர் சன்னதி ஆகியன உள்ளன.

1000 கால் மண்டபம் ஹொய்சாள தளபதிகள் நிர்மானித்ததாக அறியப்படுகிறது
வைகுண்ட ஏகாதசி விழா சமயம் தான் பிரவேசம் அனுமதிக்கப்படும்.
எதிரே சேஷராயர் மண்டபம் காண வேண்டிய ஒன்று வெளிநாட்டவர் கண்டு வியத்தகு அற்புத சிலைகளை கொண்டது.

மொட்டை கோபுரம்-விஜயநகர மன்னர்கள் வரிசையில் வந்த அச்சுதராயன் (1530-1542) எனும் மன்னனால் முற்று பெறாத நிலையில்
முதல் நிலையிலேயே நிறுத்தப்பட்டது இந்த ஆலயத்தின் ராஜகோபுரமாகும்.
1979ம் ஆண்டு வரை ஏறத்தாழ 430 ஆண்டுகளாக மொட்டை கோபுரம் என்றே அழைக்கப்பட்டு வந்தது.

மொட்டை கோபுரம் என்று பெயரைத் தாங்கிய தெற்கு கோபுரம் 13 நிலைகளுடன் கூடிய ஒரு முழுமையான கோபுரமாக
மாநில அரசின் உத்தரவின் பேரில் ஸ்ரீ அகோபில மடம் 44வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர் ஜீயர் சுவாமிகளால்
அவருடைய நேரடி பார்வையில் நன்கொடைகளைக் கொண்டே நிர்மாணித்தப் பெருமையைப் பெற்றோர்கள்.

இந்த மொட்டை கோபுர முதல் தள நிலையைக் கொண்ட கற்கட்டடமாக இருந்தது.
இதனை ஒழுங்குபடுத்தி திருப்பணி துவக்க விழா 20.05.1979 ல் ஆரம்பிக்கப்பட்டது.

இக்கோபுரத்தில் சுதைச்சிற்ப உருவங்கள் குறைவுதான். தற்சமயம் 13 நிலைகளுடன் 236 அடி (கலசங்கள் உள்பட)
உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளது. இதை கட்டி முடிக்க 7 வருடங்கள் 10 மாதங்கள் 8 நாட்கள் ஆகியது.
இது தென் கிழக்கு ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் ஆகும்.

கோபுர உச்சியில் 13 செப்பு கலசங்கள் அலங்கரிக்கின்றன. கோபுர திருப்பணி நிறைவு பெற்று குடமுழுக்கு 25-03-1987ம் நாள்
இந்திய குடியரசு துணைத்தலைவர், மாநில ஆளுனர், மாநில முதலமைச்சர், அமைச்சர்கள் பிரமுகர்கள்
மற்றும் பலர் முன்னிலையில் நடந்தது. திருவரங்கம் அதற்கு இரண்டு தினங்களாக விழாக் கோலம் பூண்டதையாரும் மறக்க இயலாது.

கோபுரத்திற்கு அழகு சேர்க்கும் 13 கலசங்கள் ஒவ்வொன்றும் தாமிர உலோகத்திலானது.
6 பகுதிகளைக் கொண்டு இணைக்கப்பட்டு. 10.5 அடி உயரம் கொண்டது
கலசங்கள் ஒவ்வொன்றின் உயரம் 10.5 அடி, விட்டம் 5 அடி. எடை 135kg,
இக்கலசங்களுக்குள்ளும் 1 அடி விட்டமும் 16 அடி உயரமும் உள்ள தேக்கு மர உருட்டுகள் நடப்பட்டு (இவை யோக தண்டு எனப்படும்)
இவைகளைச் சுற்றி கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளன (இக்கலசங்கள் ஆறு பாகங்களைக் கொண்டது கழற்றி மாட்டி விடலாம்)
இடைவெளியில் மொத்தத்தில் சுமார் 100 மூட்டை வரகு தானியம் நிறப்பப்பட்டுள்ளன.
கோபுரத்தின் உச்சியில் மூன்று இடி தாங்கிகள் பொருத்தப்பட்டன. இக்கலசங்கள் வரை செல்ல படிகள் உள்ளன.
மொத்ததில் இந்த ராஜ கோபுரத்திருப்பணிக்கு செலவிடப்பட்ட நிதியின் மதிப்பு 1,46,36,000 ரூபாய் ஆகும்.
அதாவது ஒரு1 கோடியே 46 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்கள் என்று அறியப்படுகிறது. ஒரு பிரம்மாண்ட திருப்பணி நிறைவுற்றது.

முதல்நாள்;-
கொடியேற்றம் நடைபெரும் மாலையில் நம்பெருமாள் உபயநாச்சியாருடன் வீதி வலம் வருவார்.
பின் யாகசாலை சென்று திருமஞ்சனம் கண்டருளி கண்ணாடி அறை சேர்தல்.

இரண்டாம் நாள் :-
காலை வீதி வலம் வந்து உபயதார் மண்டபம் செல்வது. பின் கற்பக விருகூத்தில் புறப்பட்டு கண்ணாடு அறை சேர்தல்.

மூன்றாம் நாள்
சிம்ம வாகனத்தில் புறப்பாடு உபயதாரர் மண்டபம் அடைதல் பின் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு
இரட்டை பிரபையில் வீதி வலம் உபயதார் மண்டபம் சேர்தல். பின்னர் மாலையில் ஆஞ்சநேயர் வாகனத்தில் புறப்பாடு வீதிவலம்.

ஆறாம் நாள்:-
காலை ஹம்ஸ வாகனத்தில் புறப்பட்டு வீதிவலம் வந்து பின் பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி
உபயதார் மண்டபம் சேர்தல் பிறகு தோளுக்கினியனில் பட்டு யானை வாகன மண்டபம் சேர்ந்து
யானை வாகனத்தில் புறப்பட்டு வீதிவலம் வருவார்
உள் ஆண்டாள் சந்நதியில் மாலை மற்றி கண்ணாடி அறையில் பொதுஜனசேவை மாலையில் நம்பெருமாள்
உபயநாச்சியாருடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல் அளவு கண்டு வீதிவலம் வருதல் இரவு தாயார் சந்நதியில் திருமஞ்சனம் கண்டருளல்.
இந்த ஆலயத்தில் பெருமாளுடன் உபயநாச்சியாராக இருவரும் அமர்ந்த கோலத்தில் இருப்பார். மற்றைய ஆலயங்களில் நின்றகோலம்தான்.

எட்டாம் திருநாள்:-
காலை வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதிவலம் வருதல் பின் ரெங்கவிலாச மண்டபம் அடைந்து
மாலையில் தங்கக் குதிரை வகனதில் புறப்பட்டு வீதிவலம் வருதல் தேரடியில் வையாளிகண்டருளல் கண்ணாடி அரைசேர்தல்

ஒன்பதாம் திருநாள்:
திருத்தேருக்குப் புறப்படுவது ஏதோற்சவம் முடிந்து பிறகு ரதம் சென்றபாதை சரியாக உள்ளதா என பார்ப்பதற்காக
உலாவருவதாக ஒரு ஐதீகம் மேலே குறிப்பிட்ட ஒன்பது நாட்களும் சித்திரை மாதம் நடக்கும் ஏதோற்சவதிற்கு சம்பந்தப்பட்டது.

ஏகாதசி திருவிழா சமயம் முலவருக்கு விலைமதிப்பற்ற முத்துக்களால் வெல்வெட் துணியில் தயாரிக்கப்பட்ட முத்தங்கி சாத்தப்படும்
இதணை செய்தளித்தவர் நாயக்க மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர். முத்துக்கள் பதித்த மேலாடை முத்தாங்கியாகும்.

சித்திரை மாதம்:
விருப்பன் திருநாள் என்ற பெயரில் சித்திரை தேர்விழா.
ரதோற்சவதற்கு முன் தினம் எம்பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தேரடியில் வையாளி , கோணவையாளி
அதாவது குதிரை மிரண்டு தாறுமாறாக ஓடுவது போன்று நடை காண்பது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும்.
இம்மாதம் சித்ரா பௌர்ணமி அன்று பெருமாள் காவிரி அம்மா மண்டபம் படித்துறை அடைந்து திருமஞ்சனம் கண்டருளி கஜேந்திர மோஷம் நடக்கும்.

வைகாசி மாதம் :
வசந்தோற்சவம். 10 நாட்கள் உற்சவம் நடைபெறும். சக்கரத்தாழ்வார் சந்நதிக்கு வடக்கே உள்ள மண்டபத்தில் நடைபெறும்.

ஆனி மாதம்:
ஜ்யேஷ்டாபிஷேகம். அன்றைய தினம் உற்சவர் அங்கி (பொன் அங்கி) கழற்றப்பட்டு ஆலய அதிகாரிகள் முன்னிலையில்
சுத்தி செய்யப்பட்டு மறுபடியும் சாத்தப்படும்.
இது போல தாயார் சந்நதியிலும் ரெங்கநாயகி தாயார் அங்கியும் கழற்றப்பட்டு சுத்தி செய்யப்பட்டு சாத்தப்படும்,
பின்னர் வெவ்வேறு நாட்களில் 1008 கலசங்கள் கொண்டு திருமஞ்சனம் நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து தனித்தனியே திருப்பாவாடை அன்று 1808படி அரிசி அளவில் சாதம் (அன்னம்) பொது ஜனங்களுக்கு
விநியோகிக்கப்படும். இவ்வமுதில் பல் வகை பழங்களும் இடம் பெறுவது உண்டு.

அன்றைய தினம் மூலவருக்கு புணு சட்டம் சாத்தப்படும். தாயார் சந்நதியில் திருப்பாவாடை அன்று 1008 படி அரிசி
அளவு சாதம் அமுது செய்விக்கப்பட்டு பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

ஆவணி மாதம்:
இம்மாத சுக்லபஷ ஏகாதசியன்று பவித்ரோத்சவம். பவித்ரோத்சவ மண்டபத்தில் நடக்கும்.
மணி நூல்களாகக்கட்டி மந்திரங்களால் உருஏற்றி யாகபூசையில் வைத்து பெருமானுக்கு அணிவிக்கப்படுகிறது,
அன்று அரங்கர் ஸ்ரீபண்டார மண்டபம் சென்று திருமஞ்சனம் கண்டருளுவார்.
மறுநாள் தெற்கு வீதி பாதாள கிருஷ்ணன் கோவிலுக்கு அருகில் உரியடி விழா கொண்டாடப்படும்.

புரட்டாசி மாதம்:
இம்மாதம் தாயார் சந்நதியில் நவராத்திரி உற்சவம் நடக்கும்(இது மகரநவமி விழா) நாள் முடிவில்
கோவில் யானை நொண்டியடித்துக் கொண்டு “ரெங்கா ரெங்கா” எனப் பிளிரி ஆலய அதிகாரியிடமிருந்து பழங்கள் பெற்றுச் செல்வதைக் காணலாம்.
இம்மாதம் விஜயதசமி அன்று எம்பெருமான் காட்டழகிய சிங்கர் கோவில் சென்று மாலையில்
வன்னிய அசுரனை சம்ஹாரம் செய்வதான ஐதீகத்தில் வன்னி மரத்தில் பெருமாள் அம்பு எய்வதைக் காணலாம்.

ஐப்பசி மாதம்:
இம்மாதம் முதலிலிருந்தே தினமும் பொற்குடத்தில் திருமஞ்சனத்திற்கு காவிரியாற்றிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்படுகிறது.
சந்நதியில் இம்மாதம் பூராவும் பொற்கலசங்கள் தான் உபயோகத்திலிருக்கும். டோலோத்சவம் (ஊஞ்சல்) விழாவும் இம்மாதத்தில் தான்
தீபாவளி நாளன்று அரங்கன் திருமஞ்சனம் கண்டருளி மாலையில் ஆழ்வார்களுக்கும் புத்தாடைகள் அளிப்பார்.
இம்மாதம் பூராவும் உற்சவர் சாளக்கிராமமாலை சாத்தியிருப்பார்.

கார்த்திகை மாதம்:
இம்மாதம் சொக்கப்பனை கொளுத்துவது நடைபெறும்
குறிப்பிட்ட நாளில் கார்த்திகை கோபுரவாசலுக்கு முன்பு 20 அடி உயரத்திற்கு பனை ஓலைகள் கொண்டு சுடலை அமைத்து,
அதைக் கொளுத்துபவர், வாய்கரிசி பெற்று தீ பந்தத்துடன் ஊடே சென்று மேலே நான்கு திசைகளிலும்
தீ பற்ற வைத்துவிட்டு இறங்கி விடுவார். இதனை பெருமாள் அன்று நீலோத்பவமலர் மாலை அணிந்து பார்வையிடுவார்.
பின்னர் எம்பெருமான் கர்ப்பக்கிரகம் செல்லும் பொழுது கைத்தலமாக எடுத்துச் செல்லப்படுவார்.
திருக்கார்த்திகை நாளில் ஆலயம் பூராவும் ஆயிரக்கணக்கில் மாலையில் அகல் விளக்குகள் பிரகாசிப்பதைக் காணலாம்.

மார்கழி மாதம்:
குளிர்காலம் 22 நாட்கள் விழா நடப்பதுண்டு நாலாயிர திவ்யபிரபந்தம் பூராவும் எம்பெருமானுக்கு முன்பு, அரையர்கள் சாற்றுவார்கள்.
இது இத்தலத்திக்கே உரிய தனிச்சிறப்பு சேவையாகும். அரையர் அபிநயம் காணவேண்டிய ஓன்று.
அரையர் சேவை ஆரம்பம் முதல் முடிவு வரை காணவேண்டும்.
இவ்விழாவில் எம்பெருமான் 10ம் நாள் மோகினி அலங்காரம் காணக்கிடைக்கப் பெற்ற காட்சியாக அமையும்.
அன்று பெருமாள் சர்வ அலங்காரங்களுடன் பெண் உருவில் வெண்பட்டாடை உடுத்தி காட்சியளிப்பார்.

அதற்கு அடுத்த நாள் வைகுண்ட ஏகாதசி விழாநாள். அன்று விடியற்காலை எம்பெருமாள் நம்பெருமாளாக சொர்க்கவாசல்
வழியாக கதவுகள் திறக்கப்பட்டு அதன் வழியாக இடையில் அமைந்த மண்டபங்களில் நின்று
அப்படியும் இப்படியும் அசைந்து சேவை சாதித்து ஆயிரங்கால் மண்டபம் அடைவார்.
இதற்கு முன் ஆயிரங்கால் மண்டப முன் அலங்காரக் கொட்டகையில் ஆழ்வார்களுக்கு சேவை சாதிப்பதும் பத்தி உலாவுவதும் நடக்கும்.

அன்று நம்பெருமாள் ரத்னங்கி அணிந்து மிகப்பிரகாசமாக காட்சியளிப்பார். நம்பெருமாளை முன்புரம் பார்த்து விட்டால் மற்றும் போதாது.
பக்தர்கள் அவசியம் பின் அழகையும் கண்டு தரிசிக்க வேண்டும். முன்புரம் பெருமாள் மாலை அதாவது கிளி மாலை சாத்தியிருப்பார்.
பக்கத்திற்கு மூன்று கிளிகள் ஒய்யாரமாக அமர்ந்து பெருமாளை நோக்கிய வண்ணம் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
பக்தர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்து நீங்க மனமின்றி திரும்புவர்.
ஆனால் அக் கிளிகளோ அன்று முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கும்.
அக்கிளிகளின் அமைப்பு மிக அழகாக பச்சை கலைகளினாலும் செவந்திபூவினால் வடிக்கப் பெற்றுள்ளதைக் காணலாம்.
மாலைகாரரின் கைவண்ணத்தை அங்கு காணலாம். இவைகள் கண் நிறைந்த காட்சியாக அமையும். கண்டவர் அநுபவிக்கலாம்.
பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்ற ஆவல் மேலிடும்.

விழா இறுதிநாள் ஆழ்வார் மோஷம். அன்று அதிகாலை திருமாமணி மண்டபத்தில் நம்பெருமாள் முன்பு,
சிறப்பாக தயாரிக்கப்பட்ட திண்பண்டங்களை அனைத்தும் வைக்கப்படும். பின்னர் நம்மாழ்வார் பெருமாள் திருவடி தொழுதல்.
இந்த விழா சமயம் ம் நாள் நம்மாழ்வார் நாயகி கோலத்தில் அமர்ந்திருப்பார்
சர்வ அலங்காரத்துடன் அணிமணிகள் துலங்க கிளிமாலையுடன் காணப்படுவார் இவருக்கு நம்பெருமாள் காணுவார்.

நடைபெறும் அது பொழ்து நம்மாழ்வார் ஆடை அணிகலங்கள் களையப்பெற்று நம்பெருமாள் திருவடிக்கீழ்
சரண்புகுவது போல் கிடத்தப்படுவார். அவருக்கு அருள் பாவிப்பது போன்று துளவம் மாலை மலையாக சாத்தப்பெறும்.
இவையாவும் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும். இதற்கு முன்தினம் நம்பெருமாளை தோளுக்கிளியனில்
கண்டவர்கள் பிரதம பட்டர் சுவாமிகள் அவர்கள் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு
எல்லாருக்கும் சேவை சாதிப்பது சிறப்பு சேவையாகும் கைத்தல சேவை எனப்படும்.

தை மாதம்:
பூபதி திருநாள் எனக் கூறுவதுண்டு. விழாவின் 9ம் நாள் தைத்தேர் உற்சவம் இது உத்திரவீதியில் நடைபெறும்.
தை மாதம் (ரதோத்ஸவம்) மூன்றாம் நாள் விழா சமயம் பெருமாள் காலை தாயார் சன்னதிக்குக் கிழக்கே அமைந்துள்ள
கருத்துரை மண்டபத்திற்கு எழுந்தருளுவார் சேவை நடக்கும்.
இதில் ஓர் விசேடம் பெருமானை சேர்ந்தாள் ரெங்கநாயகி தாயார் சென்று சேவிக்கும் பொழுது எதிரே
பெருமானையும் அர்சித்திருந்தபடியே எதிர் எதிர் சேவிக்களாம் இதை பட்டர் அறிவிக்கிறார்.
அடுத்தமாதம் பெருமானையும் தாயாரையும் சேர்த்து சேத்திமண்டபத்தில் சேவிக்களாம்.
இவ்விரு சேவைகளும் மனதிற்கு நிறைவையளிப்பவையாக அமைவதாகும்.

மாசி மாதம்:
நம்பெருமாளை தெப்பத்தில் வைத்து சுற்றி வரச் செய்து சேவை செய்யலாம் திரும்பும் சமயம் வழி
நடை உபயங்களை கண்டருளி யதாஸ்தானம் சேர்வார்.
மறுநாள் மாலையில் பந்தக்காட்சி அநேக தீப்பந்தங்கள் தீவட்டிகள் கொளுத்தப்பட்டு
அவைகளின் ஒளியில் நம்பெருமானை சேவிக்கலாம். இது சித்திரை வீதியில் உலா வருவார்.

பங்குனி மாதம்:
ஆதி பிரம்மோத்சவம் எம்மாதம் ரெங்கநாதர் உறையூர் சென்று கமல ர்ல்லி நாச்சியாருடன் சேர்த்தியிலிருந்து பிறகு
திருவரங்கம் அடைந்து ரெங்கநாயகி தாயாருடன் முரண்பாடு ஏற்பட்டு சமாதானமாகி சேத்தி இருந்து
சேவை சாதித்து திருமஞ்சனம் கண்டருளி சித்திரை வீதியில் கோரதத்தில் உலாவருவார்.

———-

ஸ்ரீ ஆழ்வார்கள் அவதாரம்
ஸ்ரீ ஆழ்வார்கள்
கலியுக வருஷம்
ஆங்கில வருடம் BCE
காலம்

ஸ்ரீ பொய்கையாழ்வார்
த்வாபரயுகம்-8,60,900, ஸித்தார்த்தி௵, ஐப்பசி௴, திருவோணம்
6202 – 3077
3125

ஸ்ரீ பூதத்தாழ்வார்
த்வாபரயுகம்-8,61,902, ஸித்தார்த்தி௵, ஐப்பசி௴, அவிட்டம்
6202 – 3077
3125

ஸ்ரீ பேயாழ்வார்
த்வாபரயுகம்-8,61,902, ஸித்தார்த்தி௵, ஐப்பசி௴, சதயம்
6202 – 3077
3125

ஸ்ரீ திருமழிசையாழ்வார்
த்வாபரயுகம்-8,61,902, ஸித்தார்த்தி௵, தை௴, மகம்
5200 – 2900
2300

ஸ்ரீ நம்மாழ்வார்
ப்ரமாதி௵, வைகாசி௴, விசாகம்
3102 – 3067
35

ஸ்ரீ மதுரகவியாழ்வார்
த்வாபரயுகம்-8,63,100 விக்ரம௵, சித்திரை௴, சித்திரை
4002 – 3187
815

ஸ்ரீ குலஶேகராழ்வார்
28-ப்ரபாவ௵, மாசி௴, புனர்பூஶம்
3074 – 3007
67

ஸ்ரீ பெரியாழ்வார்
47-க்ரோதன௵, ஆனி௴, ஸ்வாதி
3055 – 2970
85

ஸ்ரீ ஆண்டாள்
97-ஆடி௴, பூரம்
3005 – 2999
6

ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார்
108-ப்ரபவ௵, மார்கழி௴, கேட்டை
2994 – 2889
105

ஸ்ரீ திருப்பாணாழ்வார்
120-துர்மதி௵, கார்த்திகை௴, ரோஹிணி
2982 – 2932
50

ஸ்ரீ திருமங்கையாழ்வார்
207-நள௵, கார்த்திகை௴, கார்த்திகை
2985 – 2880
105

ஸ்ரீ முதலாழ்வார்கள் மூவர் மற்றும் திருமழிசையாழ்வார் யுகாந்தரத்தில் அவதரித்தவர்கள் என்பது ஜகத்ப்ரஸித்₃த₄ம்.
அவர்கள் யோக மஹிமையினால் நெடுங்காலம் வாழ்ந்தார்கள் என்றறிக.

———–

ஸ்ரீ ஆசார்ய கு₃ருபரம்பரை
ஓராண்வழி ஸ்ரீ ஆசார்யர்களும், ஸ்ரீ ஆசார்ய ஶ்ரேஷ்டர்களும்
கலியுக வருஷம்
ஆங்கில வருடம் CE
காலம்
ஶ்ரீமந்நாதமுனிகள்:
3124-சோபக்ருது௵, ஆனி௴, அநுஷம்
823 – 917

ஸ்ரீ உய்யக்கொண்டார்
3027-ப்ரபாவ௵, சித்திரை௴, கார்த்திகை
886 – 975

ஸ்ரீ குருகைகாவலப்பன்
தை௴, விசாகம்

ஸ்ரீ மணக்கால்நம்பிகள்
3900-விரோதி௵, மாசி௴, மகம்
929 – 1006

ஸ்ரீ ஆளவந்தார்
4007-தாது௵, ஆடி௴, உத்திராடம்
916 – 1042

ஸ்ரீ பெரிய நம்பிகள்
ஹேவிளம்பி௵, மார்கழி௴, கேட்டை
997 – 1087

ஸ்ரீ பெரிய திருமலை நம்பிகள்
சித்திரை௴, ஸ்வாதி

ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பிகள்
ஸர்வஜித்௵, வைகாசி௴, ரோஹிணி
987 – 1077

ஸ்ரீ திருமாலையாண்டான்
ஸர்வதாரி௵, மாசி௴, மகம்
988 – 1078

ஸ்ரீ திருவரங்கப்பெருமாள் அரையர்
பிங்கள௵, வைகாசி௴, கேட்டை
1017 – 1097

ஸ்ரீ மாறனேர் நம்பிகள்
ஆடி௴, ஆயில்யம்

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள்
ஶோபக்ருத்௵, மாசி௴, மிருகசீர்ஷம்
1009 – 1100

ஸ்ரீ எம்பெருமானார்
4119-பிங்கள௵, சித்திரை௴, திருவாதிரை
1017– 1137

ஸ்ரீ கூரத்தாழ்வான்
ஸௌம்ய௵, தை௴, ஹஸ்தம்
1009 – 1127

ஸ்ரீ முதலியாண்டான்
ப்ரபவ௵, சித்திரை௴, புனர்பூசம்
1027– 1132

ஸ்ரீ எம்பார்
துர்மதி௵, தை௴, புனர்பூசம்
1021 – 1140

ஸ்ரீ கந்தாடையாண்டான்
ஸ்வபானு௵, மாசி௴, புனர்பூசம்
1104 – 1209

ஸ்ரீ திருவரங்கத்தமுதனார்
பங்குனி௴, ஹஸ்தம்

ஶ்ரீபராசரபட்டர்
சுபக்ருத்௵, வைகாசி௴, அநுஷம்
1122 – 1174

ஸ்ரீ நஞ்சீயர்
விஜய௵, பங்குனி௴, உத்தரம்
1113 – 1208

ஸ்ரீ நம்பிள்ளை
ப்ரபவ௵, கார்த்திகை௴, கார்த்திகை
1147 – 1252

ஸ்ரீ வடக்குத் திருவீதிப்பிள்ளை
ஸர்வஜித்௵, ஆனி௴, ஸ்வாதி
1167 – 1264

ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை
ஸர்வஜித்௵, ஆவணி௴, ரோஹிணி
1167 – 1262

ஸ்ரீ பிள்ளைலோகாசார்யர்
க்ரோதன௵, ஐப்பசி௴, திருவோணம்
1205 – 1311

ஸ்ரீ அழகியமணவாளப் பெருமாள் நாயனார்
மார்கழி௴, அவிட்டம்
1207 – 1309

ஸ்ரீ நாயனாராச்சான்பிள்ளை
ஆவணி௴, ரோஹிணி
1227 – 1327

ஸ்ரீ வாதிகேஸரி அழகிய மணவாள ஜீயர்
ஆனி௴, ஸ்வாதி
1242 – 1350

ஸ்ரீ கூரகுலோத்தமதாஸர்
ஐப்பசி௴, திருவாதிரை
1265 – 1365

ஸ்ரீ வேதாந்ததேசிகர்
விபவ௵, புரட்டாசி௴, திருவோணம்
1268 – 1369

ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளை
விக்ருதி௵, வைகாசி௴, விசாகம்
1290 – 1410

ஸ்ரீ மணவாளமாமுனிகள்
4371-ஸாதாரண௵, ஐப்பசி௴, திருமூலம்
1370 – 1443

———-

ஸ்ரீ மாமுனிகளுக்கு பின்னுள்ள ஸ்ரீ ஆசார்ய ஶ்ரேஷ்டர்கள்

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர்
ரக்தாக்ஷி௵, புரட்டாசி௴, புனர்பூசம்–1384 – 1482

ஸ்ரீ ஏட்டூர் சிங்கராசார்யர் (பெரிய ஜீயரின் சிஷ்யர்)
ஆடி௴, உத்திரட்டாதி

ஸ்ரீ திருக்கோவலூர் ஒன்றான ஶ்ரீமத் எம்பெருமானார் ஜீயர்
ஶ்ரீமுக௵, தை௴, மிருகசீரிஷம்
1452 – 1569

ஶ்ரீமத் பிள்ளைலோகஞ் சீயர்
சித்திரை௴, திருவோணம்
1550 – 1650

ஸ்ரீ திருழிசை உ.வே. ஶ்ரீஅண்ணாவப்பங்கார் ஸ்வாமி
வ்யயநாம௵, ஆனி௴, அவிட்டம்
1766 – 1817

ஶ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஶ்ரீபெரும்பூதூர் எம்பார் ஜீயர்
ஜய௵, ஆவணி௴, ரோஹிணி
1834 – 1893

ஶ்ரீ காஞ்சீ உ.வே. ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்ய ஸ்வாமி
விக்ருதி௵, பங்குனி௴, விசாகம்
1891 – 1983

புத்தூர் உ.வே. ஶ்ரீ க்ருஷ்ணஸ்வாமி ஐயங்கார்
1924 – 2011

வேளுக்குடி உ.வே. ஶ்ரீ க்ருஷ்ணன் ஸ்வாமி
1961

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீரங்கநாதர் கோயில் ஸ்ரீ மதுரகவி ஸ்வாமிகள்– ஸ்ரீ மதுரகவி திருநந்தவன வைபவம்

December 30, 2021

ஸ்ரீ பூலோக வைகுந்தமான ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயில் வித்தியாசமான ஒரு நடைமுறை சுமார் 150 ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது.
ஸ்ரீரங்கநாதர் கருவறையில் பிரமாண்டமாகக் காட்சி தரும் ஸ்ரீரங்கநாதருக்கும் தனிச் சன்னிதித் தாயாரான ஸ்ரீரங்க நாச்சியருக்கும்
புஷ்பங்கள் எதையும் சார்த்த மாட்டார்கள். அதே சமயம் ஸ்ரீரங்கநாதரின் திருமேனிக்குக் கீழே தாயார்களுடன்
உத்ஸவர்களாகத் தரிசனம் தரும் நம்பெருமாள் (அழகிய மணவாளன்) மற்றும் தாயார் சன்னிதியில் தரிசனம் தரும்
ஸ்ரீரங்க நாச்சியார் ஆகியோருக்குக் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் புத்தம் புது மாலைகளை அணிவிப்பார்கள்.

ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபத்துக்கு அருகே பிரமாண்டமாக அமைந்துள்ள மதுரகவி திருநந்தவனத்தில் இருந்து தொடுத்து வரும்
பூமாலைகள் மட்டுமே இந்த உத்ஸவர் விக்கிரகங்களுக்குத் தினமும் சார்த்தப்படும்.
இங்கிருந்து செல்லும் மாலைகள்தான் பெருமாளையும் பிராட்டியையும். பஞ்ச ஆயுத புருஷர்களுள் ஒருவரான ஸ்ரீசுதர்சன ஆழ்வாரையும் அலங்கரிக்கின்றன.
(வருடா வருடம் கோடை காலத்தின் போது நடக்கும் பூச்சாற்று உத்ஸவத்தின்போது மட்டும்
பக்தர்கள் தரும் மலர்மாலைகள் பெருமாளையும் தாயாரையும் அலங்கரிக்கும்).
மற்ற பக்தர்களோ, அதிகாரிகளோ, முக்கிய பிரமுகர்களோ மாலைகளைக் கொண்டு கோயில் அர்ச்சகர்களிடம் சேர்ப்பித்தால்.
அவை இந்த உத்ஸவ விக்கிரகங்களின் திருமேனிக்குப் போகாது. திருவடியில்தான் சார்த்தப்படும். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

ஆம்! இந்த நந்தவனத்தில் மலருகின்ற பூக்கள் அனைத்தும் ஸ்ரீரங்கம் அரங்கனுக்கே உரியவை.
இந்த பூக்களை வெளியே விலைக்கு விற்கக் கூடாது. ஸ்ரீரங்கம் விழாக் காலங்களில் பயன்படுத்துவதற்கு,
இந்தப் பூக்கள் போதவில்லை என்றால் வெளியில் இருந்து வாங்கிக்கொள்ளலாம்.
மலர்மாலைகள் கட்டுவதற்குப் பயன்படுத்தியது போக, எஞ்சி இருக்கும் பூக்களை காவிரி ஆற்றில் கொட்டி விடவேண்டும்
என்று மதுரகவி நந்தவனத்து ஆவணம் சொல்கிறது.
ஆழ்வார்களின் சேவைக்கு இணையாக இந்தத் தொண்டு இன்று வரை மதிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கம் பெருமாளுக்குப் பூக்கட்டும் இந்தப் பணிக்கு பிரம்மச்சாரிகள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவர் இது ஒரு சேவை.
அதனால், இவர்களுக்கு சம்பளம் கிடையாது. தினமும் இரண்டு வேளை சாப்பாடு இவர்களுக்கு உண்டு.
தவிர டிபன், காபி, டீ போன்ற எதையும் சாப்பிடக்கூடாது. இன்றைய தினம் வரை இறைவனின் சேவையாக
சில பிரம்மச்சாரிகள் இதைத் தொடர்ந்து செய்து வருவது பாராட்ட வேண்டிய விஷயம்.

ஸ்ரீரங்கம் கோயில் இருக்கும் அதிகாரிகளும் பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்யும் அர்ச்சகர்களும் இந்த சேவையின்
மதிப்பையும் அந்தஸ்தையும் உணர்ந்து மதுரகவி நந்தவன அன்பர்களைப் போற்றி வருகிறார்கள்.
இப்படி உயர்ந்த ஒரு சேவை ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயில் இன்றைக்கும் நடந்து வருகிறதென்றால்,
அதற்குக் காரணமாக இருப்பவர் மதுரகவி சுவாமிகள் என்பவர்.
வாழ்நாள் முழுதும் பிரம்மச்சாரியாகவே இருந்து ஸ்ரீரங்கநாதருக்கு மாலைகளைத் தயார்செய்தல், ஸ்ரீரங்கம் தங்க விமானத்தைப் புதுப்பித்தல்
என்று ஸ்ரீரங்கம் சம்பந்தப்பட்ட பணிகளையும், இன்ன பிற ஆன்மிகப் பணிகளையும் ஆற்றித் தன் வாழ்நாளைச் செலவழித்தார்.
இந்த மகானின் திருவரக (திருச்சமாதி) நந்தவனத்துக்கு எதிரிலேயே அமைந்துள்ளது.
மலர்மாலைகளைத் தயார் செய்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அனுப்பும் இந்தக் கைங்கர்யப் பணி எப்படி மதுரகவி சுவாமிகளுக்கு வந்தது?

சுவாமிகளின் அவதாரத்தில் இருந்தே வருவோம். 1846-ஆம் வருடம் தைப்பூரத்தன்று ஸ்ரீரங்கம் வீரேஸ்வரத்தில்
அரங்கப் பிள்ளை- ரங்கநாயகி அம்மாள் தம்பதிக்குப் புதல்வனாக அவதரித்தார் சுவாமிகள்.
வைணவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட குடும்பம் என்பதாலும். ஸ்ரீரங்கம் அருகே அவதரித்தாலும்,
திருவரங்கத்தில் உறையும் ஸ்ரீரங்கநாதர் மீது அளவில்லா பிரியம் கொண்டிருந்தார்.
மதுரகவி சுவாமிகள். சுமார் ஒன்பது வயதான காலத்திலேயே, இந்த பக்தி அவருக்குள் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.
தெருவில் ஸ்ரீரங்கநாதர் உலா வந்தால் போதும்–அதில் இரண்டறக் கலந்து விடுவார் மதுரகவி.
ஊர்வலத்தின் பின்னாலேயே பெருமாளுக்குத் துணையாக உடன் செல்வார்.
அவ்வப்போது பெருமாளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பார்.
ஸ்ரீரங்கனின் கம்பீரமான அழகும் கண்களைக் கூசச் செய்யும் நவரத்தின ஆபரணங்களும், திருமேனியில் நறுமணம் வீசும்
மலர் மாலைகளும் சிறுவனான மதுரகவியை ரொம்பவும் பரவசப்படுத்தின.
கிட்டத்தட்ட பெருமாளுடன் பேசவும் கூடிய ஒரு பாக்கியத்தைப் பெற்றார் மதுரகவி. தலையில் துலங்கும் கம்பீரமான மகுடத்திலும்
முன் நெற்றியில் பளிச்சிடும் கறுமையான கஸ்தூரிப் பொட்டும். அபயம் அருளும் வலது திருக்கரமும் கதையைத் தாங்கிப் பிடித்திருக்கும்
இடது திருக்கரமும் கொண்டு அந்த மாலவன் ஸ்ரீரங்க வீதிகளில் வலம் வரும்போது பித்துப் பிடித்தாற்போல் அவனைப் பின்தொடர்ந்தே செல்வார் மதுரகவி.

அது ஒரு வைகுண்ட ஏகாதசி காலம், கோயிலில் இருந்து புறப்பட்ட உத்ஸவர், வீதி உலா வரும்போது தன் தாயார் ரங்கநாயகியின் கைப்பிடித்து,
ஸ்ரீரங்கத்தின் மன்னரான அந்தப் பெருமாளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் மதுரகவி.
பெருமாளிடம் இருந்து நகர மனம் இல்லாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார்.
டேய்ய்…. வாடா…. கோயிலுக்குப் போய் முத்தங்கி சேவையில் பெருமாளை சேவிக்க வேண்டும். கூட்டம் நெக்கித் தள்ளிவிடும்.
வரிசையில் இடம் பிடிக்க வேண்டும். சீக்கிரம் வா என்று மகனின் கையைப் பற்றி இழுத்தார் ரங்கநாயகி.
மதுரகவியின் கையைப் பற்றிக்கொண்டு கிட்டத்தட்டட சாலைகளில் பெருமாளின் உலாவுக்குப் பின்னே ஓட ஆரம்பித்தார் ரங்கநாயகி.
முத்தங்கி சேவை முக்கியம் ஆயிற்றே! அது என்னவோ, தெரியிவில்லை…
பெருமாள் கடந்து வந்த வெற்றுத் திருவீதிகளையே ஏக்கத்துடன் திரும்பித் திரும்பிப் பார்த்தார் மதுரகவி. என்ன தேடுகிறார் மதுரகவி?
வெற்றுச் சாலைகளில் என்ன பொக்கிஷம் இருக்கும்? திடீரென மதுரகவியின் முகத்தில் கோடி சூரிய பிரகாசம்.
வெடுக்கென்று அன்னையின் கைப்பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். நடந்து வந்த பாதையில் திரும்பி ஓடினார்.
சாலையில் கிடக்கும் அந்த ஒற்றை இருவாட்சிப் பூங்கொத்தைச் சட்டென்று குனிந்து எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டார்.
தலைமேல் வைத்துக்கொண்டார். ஆனந்தக் கூத்தாடினார். இது நடந்த வருடம் 1855.

பெருமாளுக்கு அணிவிக்கப்படும் மாலைகளின் மேல் மதுரகவிக்கு ஈடுபாடு வந்த இன்னொரு கதை…
அன்றைய தினம் உத்ஸவர் புறப்பாட்டுக்காகப் பெருமாள் வெளியே மணல்வெளியில் அமர்ந்து அலங்காரம் தரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஸ்ரீரங்கன் உறையும் கருவறைக்குச் சென்றார் மதுரகவி. கருவறையில் அன்று கூட்டமே இல்லை.
ஒரே ஒரு அர்ச்சகர் மட்டும் சன்னிதியில் இருந்து வருகின்ற பக்தர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தார்.
ஓட்டமாக ஓடி வந்த மதுரகவி, அங்கே மூலவர் திருமேனியின் முன் நின்றார். அர்ச்சகர் பார்த்தார்.
அடேய் பையா…. நம்பெருமாளின் ஆபரண அழகையும் அவனுடைய புன்னகை சொரூபத்தையும். மணம் வீசும் திருமாலைகளின்
திவ்ய திருக்கோலத்தையும் காண பக்தர்கள் மணல்வெளியில் திரளாகக் குவிந்திருக்கும்போது, நீ மட்டும் இங்கே ஏன் வந்தாய்? என்றார் அர்ச்சகர்.
ஸ்வாமி….. எனக்குப் பிரசாதம் வேண்டும்…… மதுரகவி.
கல்கண்டு முந்திரியும்தானே… தாராளமாகத் தருகிறேன் கண்ணா என்று வெள்ளிக் கிண்ணத்தில் இருந்து அவற்றை எடுத்து
மதுரகவிக்கு அர்ச்சகர் தர முற்படும்போது. அவன் முகத்தில் மலர்ச்சி இல்லை.
அர்ச்சகர் வியந்தார். ஏனடா…. கல்கண்டும் முந்திரியும் உனக்குத் திருப்தி இல்லையோ? என்று கேட்டார்.
ஆம் என்பது போல் தலையை மேலும் கீழும் ஆட்டினார் மதுரகவி.

வேறென்ன வேண்டும்?- குழம்பிய நிலையில் கேட்டார் அர்ச்சகர். அதோ…. அதுதான் எனக்கு வேண்டும் –
மதுரகவியின் விரல்கள் நீண்ட பக்கம், ஒரு மூலையில் நம்பெருமாளின் நிர்மால்யம் கிடந்தது.
இவன் ஸ்ரீரங்கத்தானின் தீவிர பக்தன் போலும் என்பதைப் புரிந்துகொண்ட அர்ச்சகர்.
ஓ…. உனக்குப் பெருமாளின் பழைய மாலை வேண்டுமா? தந்தேன் என்றபடி வண்ண மலர்கள் கோத்துக் கட்டி இருந்த
அந்த வாடிய மாலையை மதுரகவியிடம் எடுத்துத் தந்தார் அர்ச்சகர்.
தன் இரு கரங்களால், அதைப் பெறும்போது மதுரகவியின் முகத்தில் தென்பட்ட பரவசம் இருக்கிறதே…
கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்தாலும், அந்த சந்தோஷம் இருக்காது. அப்படி ஒரு சிலிர்ப்பு, பரவசம்,
அந்த மாலையைத் தன் கைகளில் வைத்து அழகு பார்த்தார். கழுத்தில் போட்டுக்கொண்டு கர்வப்பட்டார்.

பிறகு, ஸ்வாமி… ஒரு கேள்வி கேட்கலாமா? என்றார் மதுரகவி.
கேள் மகனே…. கேள். இந்தச் சிறு வயதிலேயே இறையருள் பெற வேண்டும் என்று விரும்புகிறாயே…. உனக்கு இறை இன்பம் வழங்குவதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. பெருமாள் அணியும் இந்த மாலைகளை எல்லாம் தொடுத்துத் தருவது யார்?- மதுரகவி.
இதோ…. இங்கிருந்து ஓரிரு காத தூரம் நடந்தாயானால். காவிரி வரும்.
அதன் கரையை ஒட்டி. வேங்கடாசல ராமானுஜதாஸர் திருநந்தவனம் இருக்கும். அங்கு வசித்து வரும் திருநந்தவனக் குடிகள்
என்று அழைக்கப்படுகிற ஏகாங்கிகள்தான் இத்தகைய மாலைகளைத் தினமும் தொடுத்து, பெரும் சேவையாகப் பெருமாளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏகாங்கி என்பவர் யார்? – மதுரகவி தன் சந்தேகத்தைக் கேட்டார்.

உன் அப்பனைப் போலும். என்னைப் போலும் அல்லாதவரே ஏகாங்கி அதாவது, கட்டை பிரம்மச்சாரி. திருமணம் கூடாது.
சிந்தையை ஸ்ரீரங்கத்தானிடம் மட்டுமே வைக்கவேண்டும். தினமும் நந்தவனத்தில் பூப்பறிப்பது. பின் அதை மாலையாகத் தொடுப்பது.
அவற்றைச் சேகரித்துக் கொண்டு இந்த கோயிலில் சேர்ப்பது – இவையே ஏகாங்கிகளின் வேலை. இறைவனின் அடியவர்கள் அவர்கள். –
அர்ச்சகர் அவனுக்குப் புரிய வைத்தார்.

ஸ்வாமி….. நானும் ஏகாங்கி ஆக முடியுமா? – ஏக்கத்தோடு கேட்ட மதுரகவியை.
இனம் புரியாமல் பார்த்து, நீயெல்லாம் இல்லறத்தில் வாழப் பிறந்தவன். உன் அப்பா-அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால்.
ஏதோ நான்தான் உன் மனதைக் கெடுத்துவிட்டதாகச் சொல்லிவிடுவார்கள். உடனே இங்கிருந்து புறப்படப்பா என்று
மதுரகவியை விரட்டாத குறையாக அனுப்பி வைத்தார்.

பெருமாளுக்குப் பூக்கட்டும் பாக்கியமும் மதுரகவி சுவாமிகளுக்கு ஒரு தினம் வந்தது.

ஸ்ரீரங்கம் கோயிலில் பந்தம் பிடிப்போர். கட்டியம் கூறுவோர் போன்றோர் இருந்தனர். இவர்களை சாத்தாத வைணவர்கள் என்று அழைப்பர்.
அதாவது, உடலில் பூணூல் சாத்தி இருக்க மாட்டார்கள். இவர்கள் வசித்து வந்த வீதி சாத்தாத (சாத்தார) வீதி என்றே அழைக்கப்பட்டு வந்தது.
பெருமாளுக்குப் பூமாலைகள் அனுப்பும் உரிமம். துவக்கத்தில் இவர்களிடம்தான் இருந்து வந்தது.
பூச்சந்தை வைத்து இந்தத் தர்மப் பணிகளைச் செய்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் நொடித்துப் போக….
இந்தக் கைங்கர்யம் நின்று போய்விடுவதாக இருந்தது. அந்த வேளையில்தான், மதுரகவி சுவாமிகள் ஐயாயிரம் ரூபாயைக் கொடுத்து,
அவர்களிடம் இருந்து இந்த உரிமையை எழுதி வாங்கிக் கொண்டார்.

அதன் பின், மதுரகவி சுவாமிகளின் முழு உழைப்பால் உருவானதே இந்த நந்தவனம்.
மதுரகவி சுவாமிகளுக்குப் பதினேழு வயது இருக்கும்போது அவரது பெற்றோர். சுவாமிகளுக்குப் பெண் பார்க்கத் தொடங்கினர்.
தனக்குத் திருமணம் வேண்டாம் என்றும், பெருமாள் சேவையில் என்றென்றும் தான் திளைத்திருக்கப் போவதாகவும் சொல்லி,
தன் திருமணத்துக்கு என்று பெற்றோர் சேர்த்து வைத்திருக்கும் தொகையான இருநூறு ரூபாயைப் பெற்றுக்கொண்டார்.
இந்தத் தொகைக்கு பத்து பவுனில் கடலைக்காய் மணி வாங்கித் தாயாருக்கு சார்த்தி அழகு பார்த்தார் மதுரகவி.
பெற்றோரிடம் இருந்து தனக்கு வரவேண்டிய சொத்து கைக்கு வந்ததும். இந்த நந்தவனத்தில் விதம் விதமான பூச்செடிகளை வளர்த்தார்.
ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு உண்டான கைங்கர்யம் தடை இல்லாமல் நடைபெறத் துவங்கியது.

ஸ்ரீவானமாமலை ஜீயரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டார். ஸ்ரீபிள்ளை லோகாச்சார்யா சன்னிதி சாமி ஐயங்காரிடம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம் போன்ற வைணவ நூல்களைக் கற்றறிந்தார். நந்தவனத்தை மேலும் விஸ்தரிக்கும்பொருட்டு
சீனிவாச ராமானுஜதாசர். வேங்கடாஜல ராமானுஜதாசர் போன்ற அன்பர்களின் உதவியுடன் திருச்சி, சென்னை போன்ற
நகரங்களுக்குச் சென்று பஷ்ப கைங்கர்யத்துக்கு மாத சந்தாவாக ஒரு தொகை வசூலித்தார்.
பெருமாள் அபிமானிகள் மற்றும் சில அன்பர்களின் உதவியோடு சோழமாதேவி கிராமத்தில் சில நிலங்களை வாங்கினார்.
நந்தவனத்தை அடுத்து சில தோட்டங்களையும் வாங்கி, புஷ்ப கைங்கர்யத்தை விரிவுபடுத்தினார்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்துக்கு அருகில் காணப்படும் இந்தத் திருநந்தவனமும் சுவாமிகளின் திருவரசும் தரிசிக்க வேண்டியவை.

மலர்த் தோட்டங்களுக்குள் செருப்பணிந்து செல்லக் கூடாது. மலர்களுக்கு விடுவதற்கென்றே இருக்கும்.
நீரில் வாய் கொப்பளிக்கக் கூடாது- இப்படிச் சில நிபந்தனைகளை இன்றளவும் காத்து வருகிறார்கள்.
மஞ்சள். சிவப்பு, வெள்ளை, பச்சை என அனைத்து நிறங்களிலும் இங்கே மலர்கள் மலர்கின்றன.
துளசி, விருட்சி, சம்பங்கி, மாசிப்பச்சை, நந்தியாவட்டை, துளசி, பட்டு ரோஜா, மனோரஞ்சிதம், மகிழம்பூ குருக்கத்தி, பாதிரி
என்று எண்ணற்ற பூ வகைகள். பட்டு ரோஜாவின் முள் அதிகம் இருக்காது. பெருமாளுக்கு சிரமம் இருக்கக் கூடாது.
என்பதற்காக இந்தப் பட்டு ரோஜாவைப் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள்.

தினமும் அதிகாலை வேளையில் சுமார் பத்து பிரம்மச்சாரிகள் மாலை கட்டும் இந்த மண்டபத்துக்கு வந்துவிடுகிறார்கள்.
அவர்களில் சிலர் பூக்குடலை எடுத்துச் சென்று பூப்பறித்து வருகிறார்கள்.
மளமளவெனப் பணிகள் முடிந்த பின் அரங்கனின சன்னிதிக்கு அவை செல்கின்றன.
தினமும் சுமார் பதினாறு மாலைகள். இரு வேளைகளில் – அதாவது மொத்தம் முப்பத்திரண்டு மாலைகள் ஸ்ரீரங்கம் செல்கின்றன.
இதெல்லாம் சாதாரண நாட்களில். விசேஷ நாட்களில். மதுரகவி நந்தவனத்தின் பங்கு ரொம்ப அதிகம்.
சித்திரை, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களில் நடக்கும் திருவிழாக் காலங்களில் (மொத்தம் 44 நட்கள்) அலங்காரமான மாலைகள் செல்லும்.
தெப்ப உத்ஸவத்தின்போது திருநந்தவனக் குடிகள் தயாரிக்கும் தெப்ப மாலைகள், பிரமாண்டமானவை; பெருமளவில் பேசப்படுவை.
தவிர ஆழ்வாராதிகளின் திருநட்சத்திரத்தன்றும் விசேஷ மாலைகள் செல்லும்.

மதுரகவி சுவாமிகளால் மேற்கொள்ளப்பட்ட ஊறுகாய் சேவையும் ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்து வருகிறது.
பெருமாளுக்கு மதிய பிரசாதமாக (பெரிய வசரம் என்பர்) வெள்ளைச் சாதம், ரசம், கீரை, ஊறுகாய் போன்றவை நிவேதனம் செய்யப்படும்.
இதில் ஊறுகாய்க்காக பெருமாளுக்குத் தினமும் பத்து எலுமிச்சம்பழங்களும் தாயாருக்கு ஐந்து எலுமிச்சம் பழங்களும்
நந்தவனத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சேவைகள் மட்டுமல்ல…. ஜீரணமாகிப் போயிருந்த தன் தங்கக் கூரையையும் புதுப்பிக்க ஸ்ரீரங்கம் பெருமாள்,
மதுரகவியைத்தான் தேர்ந்தெடுத்தார். 1891-ல் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்த அர்ச்சகர்கள், சுவாமி…… ஸ்ரீரங்கநாதனுடைய
விமானங்களிலும் பத்மத்திலும் போட்டிருந்த பொன் தகடுகள் மிகவும் ஜீரணம் ஆகிவிட்டன. தாங்கள்தான் முயற்சி எடுத்து,
இதைப் புதுப்பித்துத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். முதலில் பயந்து போன சுவாமிகள். அதற்கெல்லாம் நான் ஆளில்லை.
எனக்கு புஷ்ப கைங்கர்யம் மட்டும்தான் தெரியும். இதற்கெல்லாம் பணம் வசூல் பண்ண வேண்டும்.
அவ்வளவு பெரிய தொகை எல்லாம் என்னை நம்பி யார் கொடுப்பார்கள்? என்னால் ஆகாது என்று மறுத்துவிட்டார் மதுரகவி.

விடுவாரா அரங்கன்? அன்றிரவே மதுரகவியின் கனவில் தோன்றி ஏன் உன்னால் முடியாதா?
கையில் காசு இல்லை என்றால், திருப்பணி செய்ய மறுத்துவிடுவாயோ? நீதான் ஆரம்பிக்க வேண்டும் இது என் பணி.
என் பெயரால் பணியைத் துவங்கு தானாக முடியும் என்று சொல்லி, தன் திருக்கரத்தை மதுரகவியின் சிரசில் வைத்து ஆசி வழங்கி மறைந்தார்.
மறுநாள் தன் குருநாதரான குவளைக்குடி சிங்கம் ஐயங்காரைச் சந்தித்து விமானத் திருப்பணியையும்,
அரங்கன் கனவில் வந்த விஷயம் பற்றியும் சொன்னார். பெருமாளின் திருவுளப்படியே திருப்பணியைத் துவங்கு இதோ,
முதல் உபயம் நான்தான் என்று சொல்லி, ஒரு பித்தளைக் குடத்தில் பத்து ரூபாயைப் போட்டுக் கொடுத்தார்.
ஐந்தே வருடங்களில் தேசம் முழுக்க அலைந்து எண்பதாயிரம் ரூபாய் திரட்டி,
விமானத் திருப்பணிகள் நடந்து. 1903-ல் மிகப் பெரிய குடமுழுக்கும் நடந்தேறியது.
அந்தக் காலத்தில் எண்பதாயிரம் ரூபாய் என்பது சாதாரணம் அல்ல என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

இதற்கு அடுத்த ஆண்டு (1904) குரோதி வருடம் ஐப்பசி மாதம் நம்பெருமாள் ஊஞ்சல் உத்ஸவத்தின் ஏழாம் நாள்….
நந்தவன கோஷ்டிகளுக்குப் பிரசாதம் விநியோகிக்கப்பட்டன. மதுரகவி சுவாமிகளும் அதை ஏற்றுக்கொண்டார்.
அன்றைய தினம் இரவு சுமார் பதினொரு மணிக்கு ஆச்சார்யனின் திருவடியை அடைந்தார்.

மதுரகவி சுவாமிகளின் திருச்சன்னிதிக்கு மதுரை சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம் உட்பட எண்ணற்ற ஆன்மிக அன்பர்களும்
பின்னர் வந்த காலத்தில் திருப்பணிகள் செய்துள்ளார்கள்.
காவிரிக் கரையை ஒட்டிக் காணப்படும். இந்த நந்தவனமும் திருவரசும் பக்தர்கள் அனைவரும் சென்று வணங்க வேண்டிய ஒன்று.
ஸ்ரீரங்கம் கோயில் ஆண்டாள் சன்னதிக்கு அருகில் மதுரகவி சுவாமிகளைப் பற்றிய வரலாறு.
ஒரு கல்வெட்டாக – அவரது சேவையின் சாட்சியாக இன்றைக்கும் இருக்கிறது.

மதுரகவி நந்தவன டிரஸ்ட் அன்பர்கள் நம்மிடம் சொன்னார்கள். மதுரகவி சுவாமிகள் சொல்லி இருந்தபடி அவரின் திருநந்தவனத்தையும்
புஷ்ப கைங்கர்யப் பணிகளையும் இன்று வரை திறம்படச் செய்து வருகிறோம்.
பெருமாளின் திருவருளாலும், சுவாமிகளின் குருவருளாலும் நந்தவனப்பணிகள் இன்றைக்கும் நன்றாகவே நடந்து கொண்டிருக்கின்றன.
இதைவிட வேறு என்ன பெருமை எங்களுக்கு?
உயர்ந்த சேவையை நடத்தி வரும் இந்த அன்பர்களை வாழ்த்துவதில் பெருமை கொள்வோம்!

மதுரகவி சுவாமிகள் திருவரசு. திருநந்தவனம் எங்கே இருக்கிறது?: திருச்சி மாம்பழச் சாலையில் இருந்து
அம்மா மண்டபம் செல்லும் சாலையில் இருக்கிறது. மதுரகவி சுவாமி திருவரசு மற்றும் திருநந்தவனம். தி
ருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ.! சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு.

எப்படிப் போவது?: திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து
ஸ்ரீரங்கம் மார்க்கமாகச் செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளும் மாம்பழச் சாலை வழியாகச் செல்லும்.
இங்கே இறங்கிக்கொண்டால், அரை கி.மீ. தொலைவு நடை, ஆட்டோ வசதி உண்டு.
ஸ்ரீரங்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் இந்த நந்தவனம் வழியாகச் செல்லும்.

தொடர்புக்கு: ஸ்ரீமான் மதுரகவி சுவாமிகள் நந்தவன டிரஸ்டி,
ஸ்ரீமான் மதுரகவி சுவாமிகள்,
நந்தவன பிரஸிடென்ட்,
போன்: 0431-2432328,

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரிய திருவடி பிரபாவம் /ஸ்ரீ திருவரங்கன் ஸ்ரீ நம்மாழ்வார் உலா —

December 1, 2021

ஸ்ரீ ஆழ்வார் திருநகரியில் ஸ்ரீ பெரிய திருவடிக்குத் தனி ஏற்றம்.
இங்கு கோவில் மதில் மேல் வடகிழக்கு மூலையில் உள்ள கருடாழ்வாருக்கு ஒவ்வொரு மாதமும்
சுவாதி நட்சித்திரத்தன்று திருமஞ்சனம் நடக்கும்
அந்த வடகிழக்கு மூலையில் தனியாக கருடருக்கு என சந்நிதி உள்ளது
அங்கே கருடனுக்கு இரண்டு உயரமான தீப ஸ்தம்பங்கள் உள்ளன

முற்காலங்களில் நித்யமும் அந்த தீபஸ்தம்பங்களில் தீபம் ஏற்றுவார்களாம்
இக்காலத்தில் எப்போதாவது தான் ஏற்றுகிறார்கள்
சுவாதி நட்சத்திரம் அன்று கண்டிப்பாக ஏற்றுவார்கள்

இந்த வடகிழக்கு மூலையில் உள்ள கருடனுக்கு தினமும் ஆறு காலப் பூஜையும் நடக்கிறது

ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருடனின் அவதார உற்சவம்
இங்கு 10 நாட்கள் விமர்சையாக நடக்கும்

இங்குள்ள கல்மண்டபத்தில் அந்த
10 நாட்களும் ஶ்ரீவைஷ்ணவ திவ்ய பிரபந்த சேவாகால கோஷ்டி நடைபெறும்

அந்த வேளைகளில் பக்கத்துக் கிராமங்களிலிருந்து ஆண்பெண் என பல்லாயிரக்கணக்கான மக்கள் 10 நாட்கள்
தீவீரமாக விரதமிருந்து இந்த கருடனுக்குப் பால்குடம் எடுத்து வருவார்கள்
அதுமட்டுமல்லாமல் தினமும் பலரும் வந்து நேர்த்திகடனாக சிதறு தேங்காய் உடைக்கின்றனர்
அதாவது சிதறு தேங்காய் உடைத்து பிரார்த்தனகளை நிறைவேற்றும் பக்தர்களின் கோரிக்கையை
நிறைவேற்றும் வரப்பிரசாதி இந்த கருடன் என்கின்றனர்
(மக்கள் உடைத்து சிதறும் தேங்காயை எடுத்து உலர்த்திக் கொப்பரை/எண்ணெய் செய்வதற்காகவே
தனியாக பணியாட்களும் ஒரு தனி கொட்டகையும் ஊரில் உள்ளது)

அது சரி மற்ற பெருமாள் கோவில்களைக் காட்டிலும் இந்த கோவில் கருடனுக்கு மட்டும் ஏன் இத்தனை விசேஷம்?

பல நூற்றாண்டுகளுக்கு முன் தென்னிந்தியாவில் முகமதியர்களின் படையெடுப்பின் போது
திருக்குருகூர் நம்மாழ்வாரைக் காப்பாற்ற அக்கோவிலின் அர்ச்சகர்கள்
ஆழ்வார் விக்ரஹத்தை எடுத்துக்கொண்டு பல்வேறு ஊர்களுக்கு பயணம் சென்றனர்

அந்த சமயத்தில் நம்மாழ்வார் விக்ரகம் இருமுறை காணமல் போக ஒவ்வொரு முறையும்
கருடன் பறவையாக வந்து ஆழ்வார் விக்ரஹத்தை காட்டிக் கொடுத்தாராம்

அதாவது

அர்சகர்கள் விக்ரஹத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லும் போது கேரளாவில் திருக்கணாம்பி
இன்றய கோழிக்கோடு பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் நம்மாழ்வாரை வைத்துப் பூஜை செய்து வந்தனர்

ஶ்ரீரங்கததின் மீது முஸ்லீம் மன்னன் ஊலுக்கான் நம் சோ சொல்லும் முகமது பின் துக்ளக் என்னும் மன்னன் படையெடுத்து வந்ததால்
ஶ்ரீரங்கத்தில் உள்ள நம்பெருமாளையும் உபய நாச்சிமார் களையும் காப்பாற்ற வேண்டி
பிள்ளைலோகாசார்யர் என்னும் ஶ்ரீவைஷ்ணவர் எடுத்துக் கொண்டு தெற்கு திசை நோக்கி வந்தார்

அப்படி வந்த சில காலங்களிலேயே ஜோதிஷ்குடியில் லோகாசார்யர் பரம பதம் எய்தினார்

அதனால் அவருடைய சீடர்கள் நம்பெருமாளையும் நாச்சியார்களையும் எடுத்துக்கொண்டு
ஊர் ஊராக செல்லும் வழியில் கேரளாவின் திருக்கணாம்பி வந்து சேர்ந்தனர்

இந்த இடத்தில் தான் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு தம் வட்ட மனையையும் முத்துச் சட்டையையும் அளித்தார்

இரண்டு கோவில் மனிதர்களும் மீண்டும் தங்களது விக்ரங்களை எடுத்துக் கொண்டு செல்லும் வழியில்
திருக்குருகூர அர்சகர்கள் இனி பயணம் தொடர்வது ஆபத்தானது என்று கருதி நம்மாழ்வாரை
கேரளாவின் முத்திரிப்பூ மலை அடிவாரத்தில் ஓரிடத்தில் பத்திரமாக மண்ணில் பத்திரப்படுத்தி
வைத்துவிட்டுத் திருநகரிக்கு திரும்பி விட்டனர்

போர் மேகம் மறைந்த பின் ஆழ்வாரை மீட்டு ஆழ்வார் திருநகரிக்குக் கொண்டுவரச்
சென்ற அந்த அர்சகர்களுக்கு ஆழ்வாரை மறைத்து வைத்திருந்த இடம் தெரியாமல் தவித்தனர்

அப்போதும் ஆழ்வார் மறைந்திருக்கும் இடத்தின் அருகிலிருந்து ஒரு கருடபட்சி கூவி அர்சகர்களுக்கு காட்டிக்கொடுத்தது

அர்சகர்கள் மிகுந்த சிரம ப்பட்டு மீண்டும் ஆழ்வாரை எடுத்து கொண்டு ஆழ்வாரின் திருநகரிக்கு வந்தனர்

இதனிடையே ஆழ்வார் திருநகரி முகமதியர் படையெடுப்பில் சீரழிந்து உரு மாறி ஒரே வனமாகி விட்டது
அங்கு பல விதமரங்களும் அதனுடன் பல புளிய மரங்களும் வளர்ந்து விட்டன
ஆழ்வார் 16 ஆண்டுகள் தவம் இருந்த புளியமரம் எது என்று திருவாய்மொழிப்பிள்ளை மற்றும் அவர்களது
சிஷ்யர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை

அந்த நேரத்திலும் ஒரு கருடபட்சி வந்துதான் உறங்காபுளியை வனத்தில் வட்டமிட்டு காட்டிக் கொடுத்தது
அதன் மூலம் வனத்தில் இருந்த கோவிலையும் கண்டுபிடித்து கோவிலை புணர்நிர்மாணம் செய்து
நம்மாழ்வார் விக்ரகத்தையும் பிரதிஷ்டை செய்து மறுபடியும் முறைப்படி வழிபாடு செய்ய ஆரம்பித்தனர்.

கருடாழ்வார் நம்மாழ்வாரை மீண்டும் ஆழ்வார் திருநகரிக்குக் கொண்டு வந்து சேர்க்க பேருதவி புரிந்ததால்
அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று
இவ்வூரில் கருடனுக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது

நம்மாழ்வார் திருநட்சித்திரம்-வைகாசி விசாக உற்சவத்தின் ஐந்தாம் திருநாள்
அன்று இரவு நவ திருப்பதி திவ்ய தேசங்களின் எம்பெருமான்கள் அவரவர் கருட வாகனத்தில் எழுந்தருள்வது
கண்கொள்ளாத தரிசனம் ஆகும்.
நம்மாழ்வார் ஹம்ச வாகனத்திலும்,
அவரது உத்தம சீடர் மதுரகவி ஆழ்வார் பிறங்கி நாற்காலியிலும் எழுந்தருள்வார்கள்.

திருக்குருகூரும் திருப்பதியை போல் ஒரு புராதனமான வராக ஷேத்திரம்
இந்த ஊரில் ஆதியில் வந்து கடாட்சித்தவர் லட்சுமி வராகரான ஞானப்பிரான் ஆவார்.
அவருக்குப் பின்னால் இவ்வூருக்கு வந்தவர் தான் ஆதிநாதப் பெருமாள் (பொலிந்து நின்ற பிரான்)
திருமலை போல பின்னால் வந்த ஆதிநாதபெருமாள் இவ்வூரில் பிரபலமடைந்தார்
எனவே இக்கோவில் ஆதிநாதப் பெருமாள்/ஆழ்வார் கோவில் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
கோவிலில் ஆதிநாதருக்கு வலப்புறம் ஞானப்பிரான் சந்நிதி உள்ளது

ஞானப்பிரான் சந்நிதிக்கு எதிரில் உள்ள கோவிலின் சந்நிதிக் கருடன் நான்கு கரங்களுடன் இருக்கிறார்
இரண்டு கரங்களில் சங்கு சக்கரங்களை ஏந்தியவாறும் இடது பக்க கீழ்க்கரம் அபயஹஸ்தமாகவும்
வலது கீழ்க்கரத்தில் நாகனை ஏந்தியவாரும் காட்சி தருகிறார்

பொதுவாக அனைத்து திவ்யதேச மற்றும் உள்ள பெருமாள் கோவில்களிலும் கருடன்
இரு கரங்களையும் கூப்பி அஞ்சலி செய்தவாறு இருப்பார்
ஒரு சில கோவில்களில் கரங்களில் சங்கு சக்கரம் தரித்திருந்தாலும் பொதுவாக
இரு கரங்களையும் அஞ்சலி செயத்வாறே தான் பெருமாள் கொவில்களில் இருப்பார்
இந்த ஒரு கோவிலில் மட்டுமே இவ்வாறு நான்கு கரத்தானாக காட்சி தந்துள்ளார்
காரணம்:-

பெருமாள் வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்க கடலுக்குள் செல்லும் முன் தம் சங்குசக்கரங்களை
கருடனிடம் கொடுத்ததால் கருடன் அவற்றை ஏந்திக்கொண்டு இங்கு வராகப்பெருமாள் முன் நிற்கிறார் என்பர்
நமக்கு சந்தர்பம் கிடைத்தால் ஒரு முறை சுவாதி யன்று ஆழ்வார்திருநகரி சென்று கருடனை ஆழ்வாரை
உறங்காபுளியை ஆதிநாதரை ஞானப்பிரானை சேவித்து ஆசிகளைப் பெறுவோம்

———–

கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் வந்து நமக்கு வெற்றி வாழ்த்து சொல்வதற்கு சமம் ஆகும்.
கார்க்கோடகன் பெயரைச் சொன்னால் ஏழரைச்சனியினால் ஏற்படும் கஷ்டம் விலகும் என்கிறது நளசரித்திரம்.
அந்தக் கார்க்கோடகனை ஹாரமாக அணிந்திருப்பவர் கருடன்.
நவ நாகங்களில் ஆதிசேஷனை இடது கால் நகத்திலும்,
குளிகனை கழுத்தின் பின்புறத்திலும்,
வாசுகியை பூணூலாகவும்,
தட்சகனை இடுப்பிலும்,
பதுமம் மற்றும் மகாபதுமம் எனும் நாகர்களை இரண்டு காதணிகளாகவும்,
சங்கசூடனை தலைமுடியிலும் அணிந்திருப்பார் கருடன்.

ராம ராவண யுத்தத்தில் பெருமாளையும், இளைய பெருமாளையும் நாகபாசத்தில் இருந்து விடுவித்தவர் இவர் தான்.
பாற்கடலைக் கடையும்போது திருமாலின் கட்டளைப்படி மந்திர மலையைத் தன் முதுகில் சுமந்து வந்து
பாற்கடலில் வைத்தவரும் கருடன் தான்.
கருடனே பெருமாளுக்கு ஆசனம், கருடனே பெருமாளுக்கு வாகனம்,
அதுவும் தவிர அவரே தான் பெருமாளுக்கு வெற்றிக் கொடியும் ஆவார்.
கோவில் நுழைவாயிலுக்குள் சென்றவுடன் த்வஜ ஸ்தம்பம் உள்ளதே அது தான் கருடக் கொடி

வாகனமாக இருக்கும் தன்மையால் கருடன் பெரிய திருவடியாகிறார்.
பறவைகளில் நான் கருடனாக உள்ளேன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.

இவர் ஆவணி மாதம் வளர்பிறைப் பஞ்சமி திதியும் சுவாதி நட்சத்திரமும் கூடிய அன்று அவதரித்தார்.
அந்த நாளே கருட பஞ்சமி என்று கொண்டாடப் படுகிறது.
சோதிட சாஸ்திரம் சுவாதி நட்சத்திரத்தைப் பற்றி மிக உயர்வாகக் குறிப்பிடுகிறது.
பகவான் ஸ்ரீ நரசிம்மரும் ,பெரியாழ்வாரும் அவதரித்தது சுவாதி நட்சத்திரத்தன்று தான்.
தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கஸ்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன்.
அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு.

கருட் என்றால் சிறகு எனப்பொருள். இதிலிருந்து கருடன் என்ற பதம் வந்துள்ளது.
ஒரு முறை கருடன் மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு தவத்தில் இருந்த வாலகில்ய முனிவர்களை காப்பாற்றியதால்,
எதையும் எளிதில் சுமப்பவன் என்ற பொருளில் கருடன் எனப் பெயர் சூட்டினர்.

ஸ்ரீ கருட பகவானுக்கு இரண்டு மனைவியர் அவர்கள் ருத்ரா மற்றும் சுகீர்த்தி.

கருடன் பிறந்தபோது, அவரது தாய் வினதை அடிமை வாழ்வில் இருந்தார்.
சொந்த சகோதரியான கத்ரு தான், அவரை அடிமையாக வைத்திருந்தாள்.
இந்திரனிடம் உள்ள அமிர்தத்தை கொண்டு வந்தால், வினதையை விடுவிப்பதாக கூறினாள் கத்ரு.
எனவே தேவலோகம் சென்று, இந்திரனுடன் போரிட்டு அமிர்தத்தைக் கொண்டு வந்தார் கருடன்.
இதையடுத்து வினதை விடுவிக்கப்பட்டார். வினதை விடுதலையானதும்,
கத்ருவிடம் இருந்த அமிர்தத்தை எடுத்துச் சென்று மீண்டும் தேவலோகத்திலேயே ஒப்படைத்துவிட்டார் கருடன்.
தன் கையில் அமிர்த கலசம் கிடைத்தும் சுய நலத்திற்காக பயன்படுத்தாமல்,
தன் தாயை மட்டும் விடுவித்து மீண்டும் தேவர்களிடம் ஒப்படைத்தவர் கருடன்.

கருடனுக்கு 8 விதமான திருஷ்டிகள் (பார்வை) உண்டு.
கருட த்ருஷ்டிகளும் அவற்றின் விதமும்:-

1.விசாலா -புன்னகை பூத்த பார்வை
2.கல்யாணி – மான் போன்ற பார்வை
3.தாரா – குருக்குப்பார்வை
4.மதுரா – அருளும் பிரேமையும் வழங்கும் பார்வை
5.போகவதி -தூக்ககலக்கமான பார்வை
6.அவந்தீ – பக்க வாட்டுப் பார்வை
7.விஜயா – கணவன் மனைவியிடையே நேசத்தைப் பூக்கச் செய்யும் பார்வை
8.அயோத்யா – வெற்றியைத் தரும் பார்வை

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரங்க மன்னர் ஆண்டாளுடனும் கருடனுடனும் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது
வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு.
இப்படி இங்கு கருடனுக்கு தனிமரியாதை கொடுப்பதன் காரணம்
கருடன் பெரியாழ்வாராக அவதரித்ததால் மாமனார் ஸ்தானம் ஆகிறது.

கருடனால் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வைரமுடி என்கிற அணிகலன்
தற்பொழுது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்னும்
திருநாராயணபுரத்து பெருமாளுக்கு சூட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி இன்றும் ஒவ்வொரு பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

கருட பகவான் வைகுண்டத்திலிருந்து திருப்பதிக்கு சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை கொண்டு வந்ததாகவும் புராணம் கூறுகிறது.

தாயை விடுவிக்க அமிர்தக் குடத்தை எடுத்துவர தேவலோகம் சென்ற கருடன்,
அங்குள்ள தர்பைப் புல்லையும் பூலோகத்திற்குக் கொண்டு வந்தார்.
அமிர்தத்துடன் தர்ப்பையையும் கொண்டு வந்ததால் அதனை அமிர்தவீர்யம் என்ற பெயரில் அழைக்கின்றனர்.

ஒரு காலத்தில் சுவேதத் தீவில் இருந்த பாற்கடலின் பால் கட்டிகளை தன்னுடைய சிறகு முழுவதும் அப்பிக் கொண்டு
வந்து எங்கும் உதறினார் கருட பகவான். அவற்றையே ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமண் என்று அணிந்து கொள்கின்றனர்.

நம்பாடுவான் என்ற ஹரிஜன வைணவ பக்தனுக்காக கருடாழ்வாரும்,
கொடி மரமும் சற்று விலகி உள்ள தலம் திருக்குறுங்கடி.

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ கருடபகவான் நின்ற திருக்கோலத்தில் நாமக்கல் ஆஞ்சநேயரைப்போல
மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார்.

பாண்டி நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல்லில் (திருத்தண்கால்) கோவிலில்
கருடாழ்வார் சர்ப்பத்துடனும்,அம்ருத கலசத்துடனும் காட்சியளிக்கிறார்.

கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோயிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் உள்ளது.
இத்தலத்தில் எழுந்தருளும் ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான ஸ்ரீனிவாச பெருமாளையும்,
கஷ்டங்கள் தீர்க்கும், கவலைகள் தீர்க்கும் கல் கருட பகவானையும் சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.
இவர் தான் பெருமாளுக்கும் தாயாருக்கும் இங்கு திருமணம் நடத்தி வைத்தார்.
இத்தலத்தில் கல் கருடன் சாளக்கிராம சிலை வடிவில் பெருமானின் மூலஸ்தானத்துக்குக் கீழ் உள்ள
மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார்.
உற்சவ காலங்களில் கல் கருடன் வாகன மண்டபத்திற்கு வரும் போது கருடனைச் சுமப்பவர் நால்வர் மட்டுமே.
வெளியில் வந்தவுடன் எடை கூடி 16 பேர் தூக்குவார்களாம்.
சிறிது தொலைவு சென்ற பிறகு 32 பேர் கருடனை சுமப்பார்களாம்.
கோயில் வாயிலை அடைந்ததும் 64 பேர் சுமப்பார்களாம். பெருமானைத் தாங்கி வரும் கல் கருடனுக்கு வியர்த்துக் கொட்ட,
வஸ்திரங்கள் அனைத்தும் வியர்வையால் நனைத்து விடும்.
கருட சேவை முடிந்து கல் கருடன் தனது சன்னதிக்கு வரும் போது படிப்படியாக கருடனின் எடை குறைந்து விடும்.
இந்த கல் கருடனுக்கு 7 அல்லது 11 வியாழக்கிழமைகள் 3 நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட
கடுமையான சர்ப்ப தோசங்கள் நிவர்த்தியாகும். கனவுகளில் சர்ப்பங்கள் வருவது நிற்கும்.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3-வது திதியான
அட்சய திருதியை அன்று கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோவில்களிலிருந்து
உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பட்டு டி.எஸ்.ஆர். பெரியதெருவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும்
அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் பொதுமக்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
இந்த உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளியவுடன் அந்த பெருமாள்களுக்கு முன்பு
திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வாரும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
இது ஒரு கண்கொள்ளா காட்சியாகும்.
இதைமுன்னிட்டு
சாரங்கபாணிசுவாமி,
சக்கரபாணிசுவாமி,
ராமசுவாமி,
ஆதிவராகசுவாமி,
ராஜகோபாலசுவாமி,
பாட்ரசாரியார் தெரு கிருஷ்ணசுவாமி,
வெங்கடராயர் அக்ரகாரம் பட்டாபிராமசுவாமி,
சோலையப்ப முதலியார் அக்ரகாரம் ராமசுவாமி,
மல்லுகச்செட்டித்தெரு சந்தான கோபாலகிருஷ்ணசுவாமி,
புளியஞ்சேரி வேணுகோபால்சுவாமி,
கொட்டையூர் நவநீத கிருஷ்ணசுவாமி,
மேலக்காவேரி வரதராஜ பெருமாள் சுவாமி,
அகோபிலமடம் லட்சுமி நரசிம்ம சுவாமி ஆகிய கோவில்களின் உற்சவ பெருமாள்கள்
கருட வாகனத்தில் எழுந்தருள
நேர் எதிரே ஆஞ்சநேய பெருமாளும் எழுந்தருளி 12 கருட சேவை நடைபெறும்.

ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் மயிலாடுதுறை மாவட்டம்,
சீர்காழி அடுத்துள்ள நாங்கூர் மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில் 11 கருட சேவை
உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.
108 திவ்ய தேசங்களில் நாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 ஆலயங்கள் இருக்கின்றன.
மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில், 11 ஆலயங்களின் சுவாமிகளும்
ஆண்டுக்கொரு முறை தங்க கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள்.

கருட காயத்ரி மந்திரம்:

‘ஓம் தத் புருஷாய வித்மஹே ஸூவர்ண பட்சாய தீமஹி தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்’

பரம புருஷனை அறிந்து கொள்வோம். சொர்ணத்தைப் போல் ஒளிவீசும் அவன் மீது தியானம் செய்வோம்.
கருட பகவானான அவர் நம்மை காத்து அருள் செய்வார்.

இவருக்குரிய இன்னொரு ஸ்லோகம்:

அம்ருத கலச ஹஸ்தம் காந்தி ஸம்பூர்ண தேஹம்
ஸகல விபுத வந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்
விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்
ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்.
க்ஷிப ஓம் ஸ்வாஹா:

அமிர்த கலசத்தை தன் கையில் ஏந்தியவரே, அனைத்து தேவ, தேவியர்களால் வணங்கப்படுபவரே,
இவரின் பெருமையை யாராலும் விவரிக்க முடியாதவராக விளங்குபவர்.
பட்சிராஜனான கருட பகவானை நான் சிந்தையில் நிறுத்தி ஆராதிக்கிறேன்.

———–

ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம்
திருஆணை நின் ஆணை கண்டாய் போல்
பக்திசா நியதா வீர திருவடி மேல் ஆணை
உம்முடைய அருளாலும் பெருமாள் அருளாலும் கடலைத் தாண்டுவேன் -கார்ய சித்திக்காக ஜாம்பவான் மேல் ஆணை
பல்லாண்டு கைங்கர்ய சித்திக்காக ஜடாயு -ஆயுஷ்மன் -மேல் ஆணை
தொழும் காதல் யானை -கஜேந்திரன் ஆணை

———–

1323-1371-48 வருஷம் ஸ்ரீ ரெங்கநாதன் உலா
பரிகாபி வருஷம் வைகாசி -17 -திருவரங்கம் திரும்பி வந்த நாள் -கோபணார்யர் -விஜயநகர செய்து அருளிய கைங்கர்யம்
1323-மார்ச் ஸ்ரீ ரெங்கத்தில் இருந்து
1323 ஏப்ரல் முதல் ஜூலை வரை மதுரை யானைமலை அருகிலுள்ள ஜ்யோதிஷ்குடி
1323-1325-திருமாலிருஞ்சோலை
1325-1326-கோழிக்கோடு
1326-1327-திருக்கணாம்பி -திருக்கடம்பபுரா இப்பொழுது இதற்குப் பெயர்
1327-1328-1343-புங்கனூர் வழியாக மேலக்கோட்டை சென்று 15 ஆண்டுகள் அங்கேயே
1344-1370-திருமலையில் -26-ஆண்டுகள்
1371- செஞ்சி -அழகிய மணவாள கிராமம் -ஸ்ரீ ரெங்கம் –

ஸ்வஸ்தி ஸ்ரீ பந்து ப்ரியே சகாப்தே ஆநீயா நீல ஸ்ருங்கத் யுதி ரசித ஜகத்
ரஞ்ச நாதஞ்ஜ நாத்தரலே செஞ்ச்யாம் ஆராத்ய கஞ்ஜித் ஸமய மத நிஹத்யோத்
தனுஷ்கான் துலுஷ்கான் லஷ்மீப்மாப்யாம் உபாப்யாம் ஸஹ் நிஜ நகரே ஸ்தாபயந்
ரெங்கநாதம் ஸம்யக் வர்யாம் ஸபர்யாம் புநரக்ருத யசோ தர்பனோ கோபணார்யா -கல்வெட்டு சொல்லும்-

புகழ் நிறைந்த கோபணார்யார் -கறுத்த கொடி முடிகளின் தேஜஸ்ஸாலே உலகை ஈர்க்கும் திருமலையில் இருந்து
ரெங்கநாதனை எழுந்து அருளப் பண்ணி வந்து தனது தலைநகரான செஞ்சியில் சிறிது காலம் ஆராதித்து
ஆயுதம் ஏந்திய துலுக்கர்களை அழித்து ஸ்ரீ தேவி பூ தேவி உபயநாச்சியார்களோடே கூட
திருவரங்கப் பெரு நகரில் ப்ரதிஷ்டை செய்து சிறந்த திருவாராதனங்களை மறுபடியும் முன் போலவே நடத்தி வைக்கச் செய்தார் –

தேசாந்திரியாக எழுந்தருளிய அழகிய மணவாளப் பெருமாள் மறுபடியும் தம்முடைய யதாஸ்தானமாகிய
திருவரங்கத்துக்கு எழுந்தருளிய விவரம் பற்றி, கோயில் ராஜமஹேந்திரன் திருச்சுற்றின் கிழக்குப் பகுதியில்
உள்ள கல்வெட்டுச் செய்தி (கல்வெட்டு எண்: 286)பின்வருமாறு தெரிவிக்கிறது.

முகமதியர்களின் படையெடுப்பின் காரணமாக பிள்ளைலோகாசார்யரால் தெற்கு நோக்கி எழுந்தருளச் செய்து கொண்டு
செல்லப்பட்ட அழகிய மணவாளப் பெருமாளின் அர்ச்சா திருமேனி, விஜயநகர மன்னரான வீரகம்பண்ணன் காலத்தில்
செஞ்சியை ஆண்டு வந்த மன்னனான கோபணார்யன் என்பவரால், திருமலையிலிருந்து செஞ்சிக்குக் கொண்டு வரப்பட்டு,
அங்கிருந்து பரிதாபி வருடம் வைகாசி மாதம் 17-ம் நாள் (பொ.ஆ.1371) திருவரங்கத்துக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு
பிரதிஷ்டை செய்து திருவாராதனங்களும் நடைபெறச் செய்தார்”..!

விஸ்வேசம் ரெங்கராஜம் வ்ருஷப கிரி தடாத் கோபனோ ஹோணி தேவ
நீத்வா ஸ்வாம் ராஜதா நீம் நிஜ பல நிஹ தோத் ஸிக்த
தவ்லுஷ்க ஸைந்ய க்ருத்வா ஸ்ரீ ரெங்க பூமிம் க்ருத யுக சஹிதாம் —
ஸம்ஸ் தாப்யாம் ஸரோஜோத்பவ இவ குருதே ஸாது சர்யாம் ஸபர்யாம் –கல்வெட்டு

புவிக்கு அரசனான கோபணன் உலகுக்கு அரசனான ரெங்க ராஜனை திருமலைத் தடத்தில் இருந்து
தனது தலை நகருக்கு எழுந்து அருள்ச செய்து தனது சேனைகளால் துலுக்கர் சேனையை அடித்து விரட்டியவனாய்
கிருதயுகத்தில் பிராமணாள் ஆராதிக்கப்பட்ட போது இருந்தது போல்
ப்ரதிஷ்டை செய்து நல்ல திருவாராதனங்களை செய்வித்தான் –

பரீதாபி ஆண்டு வைகாசி 17ஆம் நாள் சேரனை வென்றான் மண்டபம் எனப்படும்
தற்போதைய பவித்ரோத்ஸவ மண்டபத்தில் தான் அழகிய மணவாளன் எழுந்தருளி யிருந்தார்.
(ஒவ்வொரு ஆண்டும் வைகாசி 17ஆம் நாள் சேரனை வென்றான் மண்டபத்தில் நம்பெருமாளை எழுந்தருளப் பண்ணி
நாம் மங்களாசாஸனம் செய்யலாமே. இதில் ஒன்றும் தவறில்லையே. ஏன் இதைச் செய்யக் கூடாது?
பொது மக்கள் ஒன்று கூடி அதிகாரிகளிடம் முறையிடலாமே?)
திருவரங்க மாளிகையாரும் அப்போது எழுந் தருளியிருந்ததால் யார் உண்மையான அழகிய மணவாளன் என்பதைத்
தெள்ளத் தெளிவாக அங்கு கூடியிருந்தோரால் அறுதியிட இயலவில்லை.
(ஆயிரக் கணக்கானோர் 1323ஆம் ஆண்டு நடந்த படையெடுப்பின் போது கொல்லப்பட்டதால் 1371ஆம் ஆண்டு
முன் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூறுவார் யாருமில்லை.
அப்போது வயது முதிர்ந்த ஈரங்கொல்லி ஒருவன் (வண்ணான்) அழகிய மணவாளனின் ஈரவாடை தீர்த்தத்தை
(திருமஞ்சனம் செய்த பிறகு அழகிய மணவாளன் உடுத்தியிருந்த கைலியைப் பிழிந்து பிரஸாதமாகக் கொடுக்கப்படும் புனித நீர்)
சுவைத்து முன்பு எழுந்தருளியிருந்த அழகிய மணவாளனே “நம்பெருமாள்” என்று அழைத்தான்.
அவன் இட்ட பெயரே இன்று வரை வழங்குகிறது. நம்பெருமாள் என்ற பெயர் ஒரு பாமரன் அன்புடன் இட்ட பெயராகும்.

——————

ஸ்ரீ சடகோபன் உலா

நம்பெருமாள் கோழிக்கோட்டில் எழுந்தருளி இருந்தபோது
அருகிலிருந்த திவ்யதேசத்து எம்பெருமான்களும் நம்மாழ்வாரும் நம்பெருமாளுடன் வந்தனர்.
நம்மாழ்வாரை நம்பெருமாள் பெருமகிழ்ச்சியோடு கண்டு அவரைத் தம்மோடும் நாச்சிமாரோடும்
ஒரே ஆசனத்தில் எழுந்தருளப் பண்ண அர்ச்சகருக்கு நியமித்தார்.

நம்பெருமாள் ஆழ்வாருக்குத் தமது முத்துச் சட்டையையும் பிற பஹுமானங்களையும் உவந்தளித்தார்.
பெருமாள் ஆழ்வாரோடு இருப்பதை பெரிதும் உகந்தார்.
பின் அவர்கள் கோழிக்கோட்டை விட்டு நீங்கி தேனைக்கீடாம்பை (திருக்கணாம்பி) சென்று சேர்ந்தனர்.
அங்கிருந்து புறப்படும்போது நம்பெருமாள் ஆழ்வாரை அங்கேயே இருந்துவிட்டு,
அங்கிருந்து ஆழ்வார் திருநகரிக்குப்போகும்படி ஆணையிட்டார்.

ஆழ்வாரின் கைங்கர்யபரர்கள் அவரை இன்னமும் கேரளாவின் உட்பகுதிக்குத் தென்மேற்குப் பகுதிக்குப் பாதுகாப்பாக
எழுந்தருள பண்ணி சிறிது தூரம் சென்றபின் ஒரு மலைத் தாழ்வரையில் ஒரு பெட்டியில் வைத்து
அந்தப் பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டனர்.
இது நடந்தபின் கொள்ளையர் வந்து இந்த கைங்கர்ய பரர்களைக் தாக்கி கொள்ளையடித்து சென்றனர்.

இக் கைங்கர்யபரர்களில் தோழப்பர் என்பார் ஒருவர் இருந்தார். இவர் ஆழ்வாரிடம் பேரன்பு கொண்டவர்.
மற்றவர்கள் தப்பி சென்றபின் தோழப்பர் திருமலை ஆழ்வாரிடம் சென்று (அப்போது அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததால்)
அவரிடம் ஆழ்வார் செய்திகளைக் கூறினார். உடனே திருமலை ஆழவார் கேரள அரசனுக்குத் தகவல் தந்து,
கேரளா மன்னன் அரசு மரியாதைகளோடு தோழப்பரை வரவேற்று அவரோடு சில சைன்யங்களையும் அனுப்பினான்.
தோழப்பர் கீழே பள்ளத்தில் ஒளித்துப் பாதுகாக்கப் பட்ட ஆழ்வாரை மேலே எழுந்தருளப் பண்ண இறங்கினார்.
இந்த உயர்ந்த குணத்தாலே தோழப்பர் ஆழ்வாரோடு ஒக்க மரியாதை செய்யப்பட வேண்டும்.
ஆழ்வார் தோழப்பர் என்னப்பட வேண்டும். தினமும் வகுளாபரண பட்டரோடு திருமஞ்சனம் காண வேணும்.
தோழப்பர் ஆழ்வார் தோழப்பர் என்று அழைக்கப் படுவதோடு
அவர்க்கு ஆழ்வார் திருமஞ்சனக் காலங்களில் அருளப்பாடு மரியாதையும் ஏற்படுத்தப் பட்டது.

சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒரு மரப் பலகையில் அமர்ந்து கீழே இறங்க,
மலை முகட்டில் அடியார்கள் அவரை ஆழ்வாரோடு மேலே தூக்க நின்றார்கள்.
தோழப்பர் ஆழ்வார் அங்கு ஆழ்வார் இருந்த பெட்டியைக் கண்டு, அங்கு தான் கண்டதை ஒரு ஓலையில் எழுதி,
அப்பெட்டியையும் ஓலையையும் வைத்து மேலே அனுப்பினார்.
பின்பு இரண்டாம் முறை சங்கிலியைக் கீழே இறக்க, தான் அதில் ஏறி அமர,
பலகை மேலே ஏறும்போது துரதிர்ஷ்டவசமாக அந்தச் சங்கிலி அறுபட்டு தோழப்பர்
அப்படியே அந்தப் பள்ளத்தாக்கில் விழுந்து பரமபதித்தார்.
தோழப்பரின் திருமகனார் இது கண்டு மிகவும் கலங்கி நிற்க, அங்கிருந்த கைங்கர்யபரர்கள் அவரைத் தேற்றி,
“இனி நீர் ஆழ்வாரின் ப்ரிய புத்ரர் ஆவீர், உமது தந்தையாருக்கு ஏற்பட்ட அனைத்து கௌரவங்களையும் பெறுவீர்” என்றனர்.
ஆழ்வார் முந்திரிப்பு எனும் இடம் சேர்ந்து அவர்க்கு ஸம்ப்ரோக்ஷணைகள் நடந்து ஐந்து நாள்கள் அங்கேயே எழுந்தருளி இருந்தார்.

ஆழ்வாரின் மாஹாத்ம்யம் அறிந்து கள்ளர்கள் தாம் கொள்ளை கொண்டதைத் திரும்பவும் சமர்பித்தார்கள்.
கைங்கர்யபரர்களும் திரும்ப வந்தபின் ஆழ்வார் திருக்கணாம்பி சேர்ந்து சில நாள்கள் அங்கேயே எழுந்தருளி இருந்தார்.
திருமஞ்சனம், திருவாராதனம், உத்ஸவாதிகள் மிக விமரிசையாக நடந்தன.
திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருவட்டாறு போன்ற திவ்ய தேச நம்பூதிரிகளும் போத்திகளும்
அடிக்கடி வந்து சேவித்து ஆழ்வாரைப் பிரிய மனமில்லாதவர் ஆயினர்.

இவ்வளவில் திருமலை ஆழ்வார் பிள்ளை லோகாசார்யர் மங்களாசாசனத்தில், கூர குலோத்தம தாசர் ஆசியால்
ஸம்ப்ரதாயத் தலைமை ஏற்று இருக்கும்போது ஆழ்வார் திருக்கணாம்பியில் இருப்பது அறிந்து
அவரை சேவிக்கவும் ஆழ்வார் திருநகரிக்கு மீட்டு வரவும் மிக்க ஆசை உள்ளவரானார்.

திருநகரி காடு மண்டியது கண்டு வருந்தி ஆழ்வார் கிளம்பியபோது பலரும் ஊரை விட்டு வெளியேறியதால்
இவரே காடு திருத்தி நாடாக்கும் பணியும் மேற்கொண்டு ஆழ்வார் திருநகரி ஊர், கோயில் சுற்றுப்புறங்கள் யாவும்
நன்கு நிர்மாணம் செய்து காடு வெட்டி குரு என்று புகழ் பெற்றார்.
பிறகு ஆழ்வாரை ஆழ்வார் திருநகரிக்கு மீண்டும் எழுந்தருளப் பண்ணி திருப்புளி அடியில் அவர் சந்நிதி ஏற்படுத்தி
ஆழ்வாராலேயே சடகோப தாசர் என்று அன்போடு அழைக்கப் பட்டார்.
திருமலை ஆழ்வாரும் அதை ஏற்று அன்போடு திருவாய்மொழிப் பிள்ளை எனும் பெயரும் பெற்றார்.
மேலும் திருநகரியின் மேற்குப் பகுதியில் பவிஷ்யதாசார்யன் ஸன்னிதியை நிர்மாணித்து,
அதைச் சுற்றி ராமானுஜ சதுர் வேதி மங்கலத்தையும் (நால் வேத விற்ப்பன்னர்கள் கொண்ட திருவீதிகள்) நிர்மாணித்தார்.

இந்த பவிஷ்யதாசார்யன் விக்ராஹமே மதுரகவி ஆழ்வார் தாமரபரணி ஆற்று நீரைக் காய்ச்சிய போது
கிடைத்த எம்பெருமானார் விக்ரஹமாகும்.
அவர் எதிர் பார்த்தது உபதேச முத்திரையோடு ஆழ்வார் விக்ரஹமாதலால் அஞ்சலி முத்திரையோடு கிடைத்த திருவுருவம் வியப்பளிக்க,
ஆழ்வார் சனாதன தர்மத்தை மீண்டும் நிலை நாட்ட வரப்போகும் ஆசார்யன் இராமானுசன் இவரே என அறுதியிட்டார்.
ஆழ்வார் தம் திருநகரியை விட்டு வெளியேறியபோது இவ்விக்கிரஹம் திருப்புளியாழ்வாரடியில் மண்ணில் புதையுண்டது,
திருவாய்மொழிப் பிள்ளையாலே புனருத்தாரணத்தின் போது கண்டெடுக்கப்பட்டது..

ஸம்ப்ரதாயத் தலைமை ஏற்று திருவாய்மொழிப் பிள்ளை மீண்டும் ஊர் திருத்தியபின் ஆழ்வார் புனர் பிரவேசம் செய்தார்.

இவ்வாறாக நம்மாழ்வார் கோழிக்கோடு சென்று திருநகரி திரும்பி,
திருவாய்மொழிப் பிள்ளையின் அரிய பெரிய கைங்கர்யத்தால் சம்ப்ரதாயம் பாக்கியம் பெற்றது.

————-——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஶ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்திலேயே ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி வைபவம்–

November 29, 2021

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம்

தேய்பிறை, வளர்பிறை என மாதத்திற்கு இரண்டு முறை ஏகாதசி வரும்.
அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு அடுத்ததாக 11-ம் நாள் வருவது ஏகாதசி திதி.
ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும்.
சில வருடங்களில் ஒரு ஏகாதசி அதிகமாகி 25 ஏகாதசிகளும் வருவதுண்டு.

ஸ்ரீ பெருமாளை வழிபட உகந்த திதியாக ஏகாதசி இருக்கிறது.
அதிலும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி ‘ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது.
இதனை ‘மோஷ ஏகாதசி’ என்றும் அழைப்பார்கள்.
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி அன்று, அனைத்து ஸ்ரீ விஷ்ணு ஆலயங்களிலும் பரமபத வாசல் என்ற
ஸ்ரீ சொர்க்கவாசல் திறப்பு விழா நடத்தப்படும்.

ஸ்ரீ திருமங்கையாழ்வாரின் பக்தியிலும் திருப்பணியிலும் மகிழ்ந்தும் நெகிழ்ந்துமாகி நின்ற ஸ்ரீரங்கநாதர்
அவர் முன்தோன்றி, “என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டாராம்.
அதற்கு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் பரமபதம் அடைந்த நாளான மார்கழி வளர்பிறை ஏகாதசியைப்
பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும்.
ஸ்ரீ நம்மாழ்வாரின் ஸ்ரீ திருவாய் மொழிக்காகத் திருவிழா நடைபெற அருள வேண்டும் என்று வரம் கேட்டார்.
அதை ஏற்றுக் கொண்ட ஸ்ரீ ரங்கநாதரும் அப்படியே ஆகட்டும் என அருளினார்.
அதன்படி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறுகிறது.

இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா,
வரும் டிசம்பர் 3-ந்தேதி திருநெடுங்தாண்டகத்துடன் தொடங்குகிறது.
மறுநாள் 4-ந்தேதி திருமொழி திருநாள் தொடக்கம் (பகல்பத்து உற்சவத்தின் முதல்நாள்) விழாவின்
முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு டிசம்பர் 14-ந்தேதி நடைபெற உள்ளது.
அன்றைய தினம் அதிகாலையில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும்.
ஸ்ரீ நம்பெருமாள் பரமபத வாசலை கடந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ஸ்ரீரங்கம் கோவிலை பொறுத்தவரை, “ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமம்’ முறைப்படி,
நாள், நட்சத்திரம், திருவிழாக்கள் கணிக்கப்படுகின்றன.
ஸ்ரீரங்கம் கோவிலில் கார்த்திகை மாதம் முன்கூட்டியே வரும் ஏகாதசி, “கைசிக ஏகாதசி’ என அழைக்கப்படுகிறது.
மார்கழியில் வரும் ஏகாதசி, “வைகுண்ட ஏகாதசி’ எனப்படுகிறது.
பொதுவாக, மார்கழி மாதத்திலேயே பகல் பத்து உற்சவமும், ராப்பத்து உற்வசமும் கொண்டாடப்படும்.

சிலவேளை, மார்கழி மாத கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், மறுநாள் தைத் திருநாளும் வந்தால்,
தை பிரம்மோற்சவம் கொண்டாட ஏதுவாக, வைகுண்ட ஏகாதசி உற்சவம்
கார்த்திகை மாதத்துக்கு மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற உள்ளது.
கார்த்திகை மாதத்தில் தான் பரமபத வாசலும் திறக்கப்படுகிறது.
இது 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும்.

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்காக பிரதமை முதல் தசமி முடிய பத்து நாட்களும்
பக்தர்கள் ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்களைப் பாடுவார்கள்.
இந்த பத்து நாள் உற்சவம் அத்யயனோத்ஸவம் என்று அழைக்கப்படும்.
பகலில் நடப்பதால் பகல் பத்து உற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த பகல் பத்து உற்சவம் அரையர் சேவையுடன் டிசம்பர் மாதம் 4-ந்தேதி தொடங்குகிறது.
டிசம்பர் மாதம் 24-ந்தேதி ஸ்ரீ நம்மாழ்வார் மோஷம் நடக்கிறது.

ஸ்ரீ நம்மாழ்வாருக்கு பெருமை சேர்த்த ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு பெருமை சேர்க்கும் பொருட்டு
ஸ்ரீ நாதமுனி காலத்தில் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களின் தொகுப்பான ஸ்ரீ திருமொழிப்பாடல்களையும்,
மற்ற ஆழ்வார்கள் பாடிச்சென்ற பாடல்களையும் பெரிய பெருமாள் கேட்டருளும் விதமாக
பகல்பத்து மற்றும் ராப்பத்து உற்சவம் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

———-

108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும்
ஸ்ரீரங்கத்தில் வருடம்தோறும் மார்கழி மாதம் இறுதியிலும் தை மாதம் முதல் நாட்களிலும்
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி விழா நடப்பது வழக்கம்.
ஆனால் இந்த வருடம் ஶ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்திலேயே ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறுகிறது.

விஜயநகர பேரரசு காலத்தில் தைத் திருநாள் ( தை பிரம்மோற்ஸவம்) ஏற்படுத்தப்பட்ட போது
மார்கழி கடைசியில் வைகுண்ட ஏகாதசியும் தை முதல் பகுதியில் தை திருநாளும் வந்தால்
எதைக் கொண்டாடுவது எப்படிக் கொண்டாடுவது என கேள்வி எழுந்து உள்ளது.
இதை அடுத்து ஸ்ரீ மணவாள மாமுனிகளின் நியமனத்தின்படி 19 வருடங்களுக்கு ஒருமுறை
இந்த ஸ்ரீ வைகுண்டஏகாதசி (பகல்பத்து, ராப்பத்து) திருவிழாவை கார்த்திகையில்
ஸ்ரீ பெரிய பெருமாளின் திருவுள்ளம் அறிந்து மாற்றியமைத்து ஏற்படுத்தினார்.

அன்று முதல் 19 வருடங்களுக்கு ஒருமுறை கார்த்திகை மாதத்திலேயே
வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த வருட வைகுண்ட ஏகாதசி திருவிழா காண முகூர்த்தக் கால் நிகழ்வு
ஸ்ரீரங்கம் கோயில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் நடைபெற்றது.

இந்த வருட வைகுண்ட ஏகாதசி அட்டவணை-

தமிழ் மாதம் கார்த்திகை 17ஆம் தேதியும் ஆங்கில மாதக் கணக்கின்படி டிசம்பர் மாதம் 3 ஆம் தேதியில்
திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்குகிறது.

அதனை தொடர்ந்து
04.12.2021 – பகல்பத்து (திருமொழித் திருநாள்),
13.12.2021 – மோகினி அலங்காரம்
14.12.2021 அன்று வைகுந்த ஏகாதசியின் முக்கிய விழாவான சொர்க்க வாசல் திறப்பு என அழைக்கப்படும்
பரமபதவாசல் திறப்பு அதிகாலை 4.45 மணி ( திருவாய்மொழித் திருநாள்) திறக்கப்பட்டு
எம்பெருமான் பக்தனுக்கு காட்சி அளிக்க உள்ளார்.
19.12.2021 – திருக் கைத்தல சேவை – மாலை 6.00 – 6.15 மணி
21.12.2021 – திருமங்கை மன்னன் வேடுபறி – மாலை 5.30 – 6.00 மணி
23.12.2021 – தீர்த்தவாரி – காலை 11.00 மணி
24.12.2021 – நம்மாழ்வார் மோக்ஷம் – காலை 6.00 – 7.00 மணியுடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடைகிறது.

————

ஏகாதசி-மார்கழி-வளர்பிறை-வைகுண்ட ஏகாதசி பலன்-

ஜாங்காசுரன் என்ற முரன் பெண்களுக்கும் முனிவர்களுக்கும் துன்பம் இழைத்து வந்தான்.
அவனது துன்பங்கள் தொடரவே ஸ்ரீ மாகாவிஷ்னுவிடம் முறையிட
அவருக்கும் அசுரன் முரனுக்கும் 1000 ஆண்டுகள் வரை போர் நீடித்தது.
ஒருநாள் களைப்படைந்தது போல் நடித்த திருமால் அருகில் இருந்த ஸ்ரீ பத்ரிகாசிரமத்தில் ஓய்வெடுப்பது போல் பாசாங்கு செய்தார்.
அவர் உறங்குவதாக நினைத்த முரன் வாளால் வெட்ட வர ஸ்ரீ விஷ்ணுவின் உடலிலிருந்த சக்தி வெளிப்பட்டு
தன் பார்வையாலேயே அசுரனை எரித்தது.
அன்று தனுர்மாத சுக்லபட்ச ஏகாதசியில் நீ என்னுள்ளிருந்து அவதரித்ததால் இந்த திதி உனக்குரியதாகும்.
உன்பெயர் இனி ஏகாதசி என்பதாகும் என்றார்.
தூக்கமின்றி விழிப்புடன் பெருமாளைக் காத்தது போல் கண் விழித்து பெருமாள் நாமத்தை
ஏகாதசியன்று உச்சரித்து விரதம் இருப்போர்க்கு வைகுண்ட முழு பலன்.

ஸ்ரீ சொர்க்கவாசல்-
திரேத யுகம் முடிந்து கலியுகம் பிறந்ததும் வைகுண்டத்தின் வயில் காப்போர்களான ஜெயனும் விஜயனும்
வைகுண்ட வாயிலை மூடி கலியுகம் பிறந்துவிட்டதால்
பொய் புரட்டு வஞ்சம் ஆகியன நிறைந்து உயிர்கள் ஏதும் ஸ்ரீ வைகுண்டத்திற்கு வராது என்பதால் கதவை மூடிவிட்டோம் என்றனர்.
கலியுகத்தில் நம்மாழ்வார் போன்ற ஞானிகளும் அவரைப் பின்பற்றி பக்தர்களும் வருவார்கள்
அவர்களுக்குகாக கதவை திறந்து வையுங்கள் என்றார் விஷ்ணு.
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியன்று உங்களது அர்ச்சாவதார மேனியுடன் சொர்க்கவாசல் புகுந்து வருபவர்களுக்கு
ஸ்ரீ வைகுண்டத்தின் கதவுகள் திறந்தே இருக்கும்.
இதற்கு நீங்கள் அருள் புரிய வேண்டும் என ஜெய, விஜயர்கள் வேண்ட அவர்கள் விருப்பபடி
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பதால் ஏகாதசி விரதமிருந்து
ஸ்ரீ சொர்க்கவாசல் வழி சொல்வோர் வைகுண்ட பாக்கியம் பெறுவர்.

ருக்மாங்கதன் என்ற அரசன் தன் நாட்டு மக்கள் இக, பர வாழ்வு இரண்டிலும் நிம்மதிகாண வேண்டும் என்று
ஆவல்கொண்டு அதற்கு வழி வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பது என்று முடிவு கொண்டு
தன் நாட்டு மக்கள் மாதா மாதம் ஏகாதசி விரதமும், ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி விரதமும்
கண்டிப்பாய் அனுஷ்டிக்க வேண்டும் என்று சட்டம் போட்டான்.
அதனால் மக்கள் அனைவரும் விரதமிருந்ததால் பூமியில் மக்கள் அனைவரும் ஸ்ரீ வைகுண்டம் சென்றனர்.
முன் ஜன்ம கர்ம வினைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு அவரவர் தலை யெழுத்தை எழுதுகின்றேன்.
ஆனால் இங்கு அனைவரும் விரதமிருந்து அந்த வினைகளைக் களைந்து விடுகின்றனர்.
ஒருவர் கூட நரகத்திற்கு செல்லவில்லையாததால் பூமியின் சமநிலை இவ்வாறு பாதிப்பது நல்லதல்ல
என்று ஸ்ரீ பிரம்மன் ஸ்ரீ விஷ்ணுவிடம் வேண்டினார்.
ஸ்ரீ விஷ்ணு ருக்மாங்கதனிடம் உன் எண்ணம் நன்மையானதுதான்.
ஆனால் யாருக்கு சொர்க்கம் செல்ல வேண்டும் என்றிருக்கின்றதோ அவர்கள் மட்டும்
விரதங்களை அனுஷ்டிக்குமாறு நீ சட்டத்தை மாற்று என்றார்.
மக்கள் அவரவர் விருப்ப்ப்படி விரதமிருந்து சொர்க்கம் சென்றதால் பூமியில் சமநிலை ஏற்பட்டது.

இவ்வளவு சக்தி வாய்ந்த ஏகாதசி விரதங்கள் கடைபிடிப்போருக்கு
வெற்றி, செல்வம், ஆரோக்கியம், நிம்மதி கிடைத்து பாவ வினைகள் அழிந்து ஸ்ரீ வைகுண்டப் பதவி கிட்டும்.

வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும்
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன்களைத் தரும்.
மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால்
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி ஸ்ரீ முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.
ஏகாதசி அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப்பதவி அளிப்பதாகவும் கூறி அருளினார்.
அந்த தினமே ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியாக ஸ்ரீ பெருமாள் ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

——-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவரங்கத்தில் ‘சாளி உற்சவம்’–

November 6, 2021

அமுதினில் வரும் பெண்ணமுது க்ருத யுகம்
வையம் தகளி -அனபே தகளி -தீப வரிசைகளும் உண்டே

ராவண வதம் -த்ரேதா யுகம்

நரகாசுர வதம் -த்வாபர யுகம்

திவ்ய தேசங்களிலும் உத்சவங்களும் உண்டே

—————-

ஸ்ரீ திருவரங்கத்தில் ‘சாளி உற்சவம்’

திருவரங்கத்தில் அரங்கநாதன் ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்.
தீபாவளிக்கு முந்தைய நாள் மாலை, மேள தாளங்கள் முழங்க, மூலவரான பெரிய பெருமாள் எண்ணெய் அலங்காரம் செய்து கொள்வார்.
கோயிலில் கைங்கரியம் செய்வோர்களுக்கும் அன்று பெருமாளின் சார்பாக எண்ணெய், சீகைக்காய் உள்ளிட்டவை வழங்கப்படும்.
அன்று இரவு, உற்சவரான நம்பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படும்.

அதன்பின், கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் ஆகியோரின் சந்நதிகளுக்கெல்லாம்
எண்ணெய், சீகைக்காய், மஞ்சள் உள்ளிட்டவற்றைப் பெருமாள் அர்ச்சகர் மூலம் அனுப்பி வைப்பார்.
அவ்வாறே ரங்கநாயகித் தாயார் சந்நதிக்கும் எண்ணெய் அனுப்பி வைக்கப்படும்.
தீபாவளித் திருநாளன்று அதிகாலையில் ரங்கநாயகித் தாயாருக்கும், ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கும் எண்ணெய் அலங்காரம் செய்யப்படும்.
அனைவரும் புத்தாடையும் மலர் மாலைகளும் அணிந்து கொள்வார்கள்.
அதன்பின், ஆழ்வார்களும் ஆசார்யர்களும் தத்தம் சந்நதிகளில் இருந்து புறப்பட்டு,
கருவறைக்கு முன்னிருக்கும் சந்தனு மண்டபத்துக்கு எதிரிலுள்ள கிளி மண்டபத்துக்கு வந்து
நம்பெருமாளின் வருகைக்காகக் காத்திருப்பார்கள்.

காலை பத்து மணியளவில் சந்நிதியில் இருந்து புறப்படும் நம்பெருமாள், சந்தனு மண்டபத்தில் எழுந்தருளித் திருமஞ்சனம் கண்டருள்வார்.
அதன்பின் சிறப்பு அலங்காரத்தோடு பக்தர்களுக்கு அருள்புரிவார்.
தீபாவளி என்றால், மாமனார் மாப்பிள்ளைக்குச் சீர் செய்வது வழக்கமல்லவா?
அந்த வகையில், சூடிக் கொடுத்த சுடர்கொடியான ஆண்டாளை அமுதனாம் அரங்கனுக்கே மணம் முடித்துத் தந்து,
அரங்கனுக்கு மாமனார் ஆனவர் விஷ்ணுசித்தரான பெரியாழ்வார்.
குருவுக்குச் செலுத்தப்படும் அதே மரியாதையை மாமனாருக்கும் செலுத்த வேண்டும் என்பது மரபு.

அந்த வகையில், ஒவ்வொரு வருடமும் நம்பெருமாள் பெரியாழ்வாருக்கு மரியாதை செய்து,
அவரிடமிருந்து தீபாவளிச் சீரைப் பெற்றுக் கொள்கிறார். இந்நிகழ்ச்சி சந்தனு மண்டபத்தில் நடைபெறும்.
பெரியாழ்வாரின் சார்பில் அரையர்கள் பெருமாளின் திருவடிகளைச் சுற்றி நாணய மூட்டைகளைச் சீராக வைப்பார்கள்.
வேத பாராயணமும் மங்கல வாத்தியங்களும் முழங்க இந்த வைபவம் நடைபெறும்.
நாணய மூட்டைகளுக்குச் சாளி என்று பெயர்.
நாணய மூட்டைகளை தீபாவளிச் சீராகப் பெரியாழ்வார் சமர்ப்பிப்பதால், ‘சாளி உற்சவம்’ என்று
அழைக்கப்பட்ட இந்த உற்சவம், நாளடைவில் ‘ஜாலி உற்சவம்’ என்றாகிவிட்டது.

தனது மாமனாரான பெரியாழ்வார் தனக்கு அளித்த இந்த தீபாவளிச் சீரை அனைவருக்கும் காட்டி,
மாமனாரின் பெருமையைப் பறைசாற்றுவதற்காக அந்த நாணய மூட்டைகளோடு இரண்டாம் பிராகாரத்தில் அரங்கன் வலம் வருவார்.
மாலையில் கிளி மண்டபத்துக்கு எழுந்தருளும் நம்பெருமாள் அங்கே காலைமுதல் காத்திருக்கும்
ஆழ்வார் ஆச்சாரியார்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்களுக்குப் புத்தாடை, சந்தனம், வெற்றிலைப் பாக்கு, புஷ்பங்கள், பழங்கள்
உள்ளிட்டவற்றைத் தீபாவளிப் பரிசாகத் தந்து கௌரவிப்பார்.

தீபாவளி என்றாலே மாப்பிள்ளை களுக்குக் கொண்டாட்டம் தான்.அதுவும் புது மாப்பிள்ளை என்றால் கேட்கவே வேண்டாம்.
அப்படியிருக்க ஒருவர் என்றும் அழகான,இளமையான,புது மாப்பிள்ளையாக இருந்தால்
கொள்ளை இன்பம்.அதுவும் இந்த மாப்பிள்ளை மற்ற மாப்பிள்ளைகளைப் போலன்றி தாம் எதையும் பெற்றுக் கொள்ள மாட்டார்.
ஆனால் அனைவருக்கும் வேண்டியதைக் கொடுப்பவர்.யார் இவர்?
இவர் பெயரே அழகிய மணவாளன் (மாப்பிள்ளை).பூலோக வைகுண்டம் என்று போற்றப் படும் ஸ்ரீரங்கத்தில்,
எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமாள் ஸ்ரீரங்கநாதர்/அழகிய மணவாளன்/நம்பெருமாள்.இவர் பெரியாழ்வாரின் மாப்பிள்ளை.
ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கநாதர் தீபாவளி கொண்டாடும் விதம் அலாதியானது.
தீபாவளியை முன்னிட்டு முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம், மேளதாளத்தோடு பெரிய பெருமாளுக்கு கண்டருளப் பண்ணு வார்கள்.
மேலும் கோவில் சிப்பந்திகளுக்கு நல்லெண்ணெய், சீகைக்காய் தூள் ஆகியவற்றை பெருமாள் சார்பாக வழங்குவார்கள்.
தீபாவளிக்கு முந்தைய இரவு உற்சவர் நம்பெருமாளுக்கும் எண்ணெய் அலங்காரம் நடைபெறும்.

அதைத் தொடர்ந்து கோவிலில் அருள்பாலிக்கும் ஆழ்வார், ஆசார்யர் சந்நிதிகளுக்கு
நல்லெண்ணெய், சீகைக்காய்த் தூள்,விரலிமஞ்சள் ஆகியவை பெருமாள் சார்பாக அந்தந்த சந்நிதிகளில் உள்ள அர்ச்சகர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தீபாவளியன்று அதிகாலை தாயார் மற்றும் ஆழ்வார், ஆசார்யர் சந்நிதிகளில் எண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டு
திருமஞ்சனம் நடைபெறும்.அதைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்குப் புத்தாடை, மலர் மாலை அணிவித்து அலங்காரம் செய்வார்கள்.
அலங்காரம் முடிந்ததும் ஆழ்வார்கள், ஆசார்யர்களின் உற்சவமூர்த்திகள் அனைவரும் புறப்பட்டு,
பெரியபெருமாள் மூலஸ்தானத்துக்குக்கிழக்கில் உள்ள கிளிமண்டபத்துக்கு வந்து பெருமாள் வருகைக்காகக் காத்திருப்பார்கள்.

அப்போது பெருமாளின் மாமனார்- பெரியாழ்வாரும் மாப்பிள்ளை (பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை,ஆண்டாளை மணம் புரிந்ததால்)
ஸ்ரீரங்கநாதருக்காக தீபாவளி சீர் தருவதற்காகக் காத்திருப்பார்.உற்சவர் நம்பெருமாள் காலை பத்து மணியளவில்
மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, சந்தனு மண்டபத்திற்கு எழுந்தருள்வார்.
அங்கு அவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றதும், சிறப்பு அலங்காரத் துடன் பக்தர்களுக்கு அருள்புரிவார்.

இந்த நிகழ்ச்சியெல்லாம் முடிந்தபின் ஸ்ரீரங்கநாதரை மாப்பிள்ளையாக அடைந்த பெரியாழ்வார் தீபாவளி சீர் தரும் நிகழ்ச்சி நடைபெறும்.
பெரியாழ்வாரின் பிரதிநிதிகளாக அரையர்கள் சீர் வழங்கும் வழக்கம் இன்றுவரை மிகச்சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
நம்பெருமாள் திருவடிகளைச் சுற்றி சீர்வரிசையான நாணய மூட்டைகள் வைக்கப்படும்.
அப்போது வேதபாராயணங்கள் முழங்க, மங்கள வாத்தியம் வாசிக்கப்படும்.
இதை ஜாலி (சாளி) அலங்காரம் என்பர்.

ஜாலி அலங்காரம் என்பது, ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு புது கைலிகளில் மூட்டையாகக் கட்டி,
பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பது. இந்த நிகழ்ச்சி நடைபெற்றதும், பெருமாள் கோவிலின் இரண்டாம் பிராகாரத்தில்
வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். மீண்டும் சந்தனு மண்டபம் திரும்பி,
மாலை ஆறு மணி முதல்எட்டு மணி வரை பக்தர் களுக்குக் காட்சி கொடுத்து அருள்வார்.
அதன்பின், கிளி மண்டபத்தில் காத்திருக்கும் ஆழ்வார்கள், ஆசார்யர்கள் அனைவரும் ஒவ்வொருவராக
பெருமாள்முன் எழுந்தருளி, பெயர் சொல்லி அழைக்கப்படுவார்கள்.
அப்போது பெருமாள், அவர்களுக்குப் புதுவஸ்திரம், சந்தனம், தாம்பூலம், மலர், பழங்கள் ஆகியவற்றை தீபாவளிப் பரிசாகக் கொடுத்துக் கௌரவிப்பார்.
பெருமாளிடம் தீபாவளிப் பரிசு பெற்ற ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்கள், பெருமாளிடம் விடை பெற்றுக் கொண்டு, தங்கள் சந்நிதிக்குத் திரும்புவார்கள்.
இந்தத் திருக்காட்சியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால் ஆடை களுக்கும் பணவரவுக்கும் தட்டுப்பாடு உண்டாகாது என்பது நம்பிக்கை.

(நேரில் செல்ல இயலாதவர்கள் அவரை நினைத்து,
மனக்கண்ணில் தரிசித்து அவரை ஸ்தோத்திரம் செய்யலாம்)

“குடதிசை முடியை வைத்துக்,குணதிசை பாதம் நீட்டி,
வடதிசை பின்பு காட்டித்,தென்திசை இலங்கை நோக்கி,
கடல்நிறக் கடவுள் எந்தைஅரவணைத் துயிலுமா கண்டு,
உடல் எனக்கு உருகுமாலோ? என்செய்கேன்?உலகத்தீரே!!!”

————————————

**ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் :
திருக்கோயில் யானைகள் ஆண்டாள் மற்றும் லட்சுமி குளிப்பதற்காக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை சாலையில்
கோயிலுக்கு சொந்தமான “உடையவர் தோப்பில்” 56அடி நீளம் 56 அடி அகலம் , 6.5 அடி உயரத்தில் 3 லட்சம் லிட்டர்
கொள்ளவு கொண்ட புதிய நீச்சல் குளம் கட்டப்பட்டது

———–

திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும்,
தமிழகத்தின் மிக உயர்ந்த கோபுரம் கொண்ட ஆலயமாகவும் திகழ்வது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம்.
இந்த ஆலயத்தில் மேலும் பல பெருமைகளும் இருக்கின்றன.
திருமாலின் அவதாரங்களில் சிறந்ததாக கருதப்படும் ஸ்ரீராமபிரான் பூஜித்த பெருமை கொண்டது, இந்த ஸ்ரீரங்கம்.

ராமாவதாரம், திருமாலின் 7-வது அவதாரம் என்பது சிறப்பு.
ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில், ஏழு பிரகாரங்கள், ஏழு திருமதில்கள் கொண்டது ஸ்ரீரங்கம் ஆலயம்.
அதேபோல் தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தின் 30 நாட்கள் மட்டும்,
யானை மீது வைத்து தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வரப்படும்.

ஸ்ரீரங்கம் ஆலயத்தில் மேலும் பல ‘ஏழு’ சிறப்புகள் இருக்கின்றன.
ஸ்ரீரங்கம் ~ ஏழின் சிறப்பு…!!!

01. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன்.,
ஏழு மதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.

02. ஏழு பெரிய பெருமை உடைய….
1) பெரிய கோவில்.,
2) பெரிய பெருமாள்.,
3) பெரிய பிராட்டியார்.,
4) பெரிய கருடன்.,
5) பெரியவசரம்.,
6) பெரிய திருமதில்.,
7) பெரிய கோபுரம்.,
இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்….

03. ஸ்ரீரங்கம் அரங்கனாதருக்கு ஏழு நாச்சிமார்கள்….
1) ஸ்ரீதேவி.,
2) பூதேவி.,
3) துலுக்க நாச்சியார்.,
4) சேரகுலவல்லி நாச்சியார்.,
5) கமலவல்லி நாச்சியார்.,
6) கோதை நாச்சியார்.,
7) ரெங்க நாச்சியார் ஆகியோர்….

04. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாஹனத்தில் எழுந்தருளுவார்….
1) விருப்பன் திருநாள்.,
2) வசந்த உற்சவம்.,
3) விஜயதசமி.,
4) வேடுபரி.,
5) பூபதி திருநாள்.,
6) பாரிவேட்டை.,
7) ஆதி பிரம்மோத்சவம்.,
ஆகியவை….

05. ஸ்ரீரங்கம் கோவிலில் வருஷத்திற்கு ஏழு முறை (மாதங்கள்) நம்பெருமாள்
திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்….
1) சித்திரை.,
2) வைகாசி.,
3) ஆடி.,
4) புரட்டாசி.,
5) தை.,
6) மாசி.,
7) பங்குனி….

06. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் ஏழாம் திருநாளன்று வருஷத்திற்கு
ஏழு முறை (மாதங்கள்) நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார்….
1) சித்திரை.,
2) வைகாசி.,
3) ஆவணி.,
4) ஐப்பசி.,
5) தை.,
6) மாசி.,
7) பங்குனி….

07. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்திரி உற்சவத்தில் ஏழாம் திருநாளன்று
ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

08. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் (30 நாட்களும்)
தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

09. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் ஏழாவது அவதாரமாகும்.

10. இராப்பத்து ஏழாம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்.
1) கோடை உற்சவம்.,
2) வசந்த உற்சவம்.,
3) ஜேஷ்டாபிஷேகம்., திருப்பாவாடை.,
4) நவராத்திரி.,
5) ஊஞ்சல் உற்சவம்.,
6) அத்யயநோத்சவம்.,
7) பங்குனி உத்திரம்….

12. பன்னிரண்டு ஆழ்வார்களும் ஏழு சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
1) பொய்கையாழ்வா., பூதத்தாழ்வார்., பேயாழ்வார்.,
2) நம்மாழ்வார்., திருமங்கையாழ்வார்., மதுரகவியாழ்வார்.,
3) குலசேகராழ்வார்.,
4) திருப்பாணாழ்வார்.,
5) தொண்டரடிப் பொடியாழ்வார்.,
6) திருமழிசையாழ்வார்.,
7) பெரியாழ்வார்., ஸ்ரீஆண்டாள்….

13. இராப்பத்து ஏழாம் திருநாள் நம்மாழ்வார் பராங்குச நாயகி அலங்காரத்தில் வருவதால் அன்று மட்டும்
ஸ்ரீஸ்தவம் மற்றும் ஸ்ரீகுணரத்ன கோசம் சேவிக்கப்படும்….

14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் ஏழு கோபுரங்கள் உள்ளன.
1) நாழிகேட்டான் கோபுரம்.,
2) ஆர்யபடால் கோபுரம்.,
3) கார்த்திகை கோபுரம்.,
4) ரங்கா ரங்கா கோபுரம்.,
5) தெற்கு கட்டை கோபுரம் – I.,
6) தெற்கு கட்டை கோபுரம் – II.,
7) ராஜகோபுரம்….

15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார்.
1) வசந்த உற்சவம் ~ நீராழி மண்டபம்.,
2) சங்கராந்தி ~ சங்கராந்தி மண்டபம்.,
3) பாரிவேட்டை ~ கனு மண்டபம்.,
4) அத்யயநோற்சவம் ~ (தெரிந்தவர்கள் கூறுங்கள்)
5) பவித்ர உற்சவம் ~ பவித்ர உற்சவ மண்டபம்.,
6) ஊஞ்சல் உற்சவம் ~ ஊஞ்சல் உற்சவ மண்டபம்.,
7) கோடை உற்சவம் ~ நாலுகால் மண்டபம்….

16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டு களிக்கும் சேவைகளாகும்….
1) பூச்சாண்டி சேவை.,
2) கற்பூர படியேற்ற சேவை.,
3) மோகினி அலங்காரம்., ரத்னங்கி சேவை.,
4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்.,
5) உறையூர்., ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை.,
6) தாயார் திருவடி சேவை.,
7) ஜாலி சாலி அலங்காரம்….

17. திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார்….
1) நவராத்ரி மண்டபம்.,
2) கருத்துரை மண்டபம்.,
3) சங்கராந்தி மண்டபம்.,
4) பாரிவேட்டை மண்டபம்.,
5) சேஷராயர் மண்டபம்.,
6) சேர்த்தி மண்டபம்.,
7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம்….

18. திருக்கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள் உள்ளன.

19. ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள் அமையப் பெற்றுள்ளன.

20. திருக்கோயில் வளாகத்தில் ஏழு ஆச்சார்யர்களுக்கும் தனி சன்னதி உள்ளது….
1) ராமானுஜர்.,
2) பிள்ளை லோகாச்சாரியார்.,
3) திருக்கச்சி நம்பி.,
4) கூரத்தாழ்வான்.,
5) வேதாந்த தேசிகர்.,
6) நாதமுனி.,
7) பெரியவாச்சான் பிள்ளை….

21. சந்திர புஷ்கரிணியில் ஆறு முறையும்., கொள்ளிடத்தில் ஒருமுறையும் இப்படியாக
ஏழு முறை சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார்….
1) விருப்பன் திருநாள் ~ சித்திரை மாதம்.,
2) வசந்த உற்சவம் ~ வைகாசி மாதம்., (3) பவித்ரோத்சவம் ~ ஆவணி மாதம்.,
4) ஊஞ்சல் உற்சவம் ~ ஐப்பசி மாதம்.,
5) அத்யயன உற்சவம் ~ மார்கழி மாதம்.,
6) பூபதி திருநாள் ~ தை மாதம்.,
7) பிரம்மோத்சவம் ~ பங்குனி மாதம்….

22. நம்பெருமாள் மூன்று முறை எழுந்தருளும் ஏழு வாஹனங்கள்….
1) யானை வாஹனம் ~ சித்திரை., தை., மாசி.,
2) தங்க கருடன் வாஹனம் ~ சித்திரை., தை., பங்குனி.,
3) ஆளும் பல்லக்கு ~ சித்திரை., தை., பங்குனி.,
4) இரட்டை பிரபை ~ சித்திரை., மாசி., பங்குனி.,
5) சேஷ வாஹனம் – சித்திரை., தை., பங்குனி.,
6) ஹனுமந்த வாஹனம் – சித்திரை., தை., மாசி.,
7) ஹம்ச வாஹனம் ~ சித்திரை., தை., மாசி….

23. மாசி மாதம் நடைபெறும் திருப்பள்ளியோடம் திருவிழாவில் நம்பெருமாள்
ஏழு வாஹனங்களில் மட்டும் உலா வருவார்.

24. கற்பக விருட்சம்.,
ஹனுமந்த வாஹனம்.,
சேஷ வாஹனம்.,
சிம்ம வாஹனம்., ஒற்றை பிரபை ஆகிய இந்த ஐந்து வாஹனங்கள் தங்கத்திலும்
யாளி வாஹனம்., இரட்டை பிரபை ஆகிய இந்த இரண்டு வாகனங்கள் வெள்ளியிலும் ~
ஆகிய ஏழு வாஹனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்கள் வெள்ளியிலோ அல்லது தங்கத்திலோ ஆனது.

25. மற்ற கோவில்களில் காண முடியாதவை….
1) தச மூர்த்தி.,
2) நெய் கிணறு.,
3) மூன்று தாயார்கள் ஒரே சன்னதியில்.,
4) 21 கோபுரங்கள்.,
5) நெற்களஞ்சியம்.,
6) தன்வந்தரி.,
7) நான்கு திசைகளிலும் ராமர் சன்னதி….

கொடுக்கப்பட்டுள்ள 25ல் ~ இரண்டையும்., ஐந்தையும் கூட்டினால் வருவது ஏழு (2 + 5 = 7)

—————-

ஸ்ரார்த்த உத்சவம் -பக்த வத்சலன் -லஷ்மீ நாராயணன் -அந்திம சம்ஸ்காரம் -சிறுவன் ரூபத்தில்
பூணலை மாத்தி சேவை அர்ச்சகருக்கு -பித்ரு கார்யம்
மனித கார்யம் -மாலையாக சாத்தி -மேலே சட்டை
ராஜ கோபுர கைங்கர்யம் செய்தவர்
ராஜ கோபுர ஹஸ்யம் -உண்டே

லட்சுமி நாராயண ஸ்வாமி என்னும் பக்தர் சார்ங்கபாணியின் மீது தீவிர பக்தி கொண்டு இருந்தார்.
இறுதிக்காலம் வரையில் சேவை செய்தார். இக்கோயிலின் கோபுரத்தை கட்டியவரும் இவரே. அவருக்கு குழந்தை இல்லை.
ஒரு தீபாவளியன்று அவர் பெருமாளின் திருவடியை அடைந்தார்.
ஸ்ரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால் நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால்
தனக்கு சேவை செய்த தன் பக்தருக்கு தானே மகனாக இருந்து இறுதி சடங்குகள் செய்தார் சாரங்கபாணி.
இது நடந்த மறுநாள் கோவிலை திறந்து பார்த்த போது பெருமாள் ஈரவேட்டியுடன் மாற்றிய பூணூலுடன்
தர்ப்பைகளுடன் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சி அளித்தார்.
அதாவது
பெருமாளே தன்பக்தனுக்காக ஈமக்கிரியை செய்து வைத்து கருணைக் கடலாக விளங்கினார்.
தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது.
ஆனால் பக்தர்கள் பார்க்க முடியாது.

————–

தொட்டித் திருமஞ்சனம் -அழகர் திரு மஞ்சனம் -திருமாலை ஆண்டான் திருநாடு எழுந்து அருளின திதி ஐப்பசி சுக்ல பக்ஷம் துவாதசி
மாசி அம்மாவாசை நம்பிள்ளைக்காக நம்பெருமாள் திரு மஞ்சனம் கண்டு அருளுகிறார்
திருக்கச்சி நம்பி திரு நாடு எழுந்து அருளிய திதி கார்த்திகை சுக்ல பக்ஷம் சதுர்த்தசி தேவப்பெருமாள் திருமஞ்சனம் கண்டு அருளுகிறார் –

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவரங்கம் பெரியகோயில்

October 30, 2021

|”காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்
ஸ்வாஸூ தேவோ ரங்கேச வேத ஸ்ருங்கம் பரமம் பதம்
விமாநம் ப்ரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மஹாத்புதம்
ஸ்ரீரங்கசாயி பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாசக”|

இங்கு பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாள் வேத ஸ்வரூபன் என்னும் விமானத்தை
ப்ரணவாகார விமானம் என்றும்,
கலசங்களை வேத ஸ்ருங்கக்ளெனவும் அழைப்பர்.
காவிரியும் கொள்ளிடமும் ரங்கநாதனுக்கு மாலை போல் அமைந்துளளன.

காயத்ரி மண்டபத்தில் காணப்படும் 24 தூண்கள் காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களைக் குறிப்பிடுகின்றன.

“ஸப்த ப்ராகார மத்யே ஸரஸி ஜமுகுளோத் பாஸமானே விமானே
காவேரி மத்ய தேஸே ம்ருதுதரபணிராட் போக பர்யங்க பாகே!
நித்ரா முத்ராபிராமம் கடிநிகிட ஸிர: பார்ஸ்வ வின்யஸ்த ஹஸ்தம்!
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம்!!”

காவிரிநதியின் நடுவில் ஏழு மதில்களால் சூழப்பட்ட கோவிலில் வீற்றிருப்பவரே!
ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டவரே! இடது கையை இடுப்பில் வைத்து யோக நித்திரையில் இருப்பவரே!
ஸ்ரீதேவி, பூதேவி தாயாரால் வணங்கப்படும் திருப்பாதம் கொண்டவரே!
ஸ்ரீரங்கநாதரே! உம்மை வணங்குகிறேன்.

” விபிஷனோபி தர்மாத்மா ஸஹ தைர் நைர்ருதைர்ஷபை
லப்தவா குலதனம் ராஜா லங்காம் ப்ராயாந்த மஹாயா”
(• வால்மீகி இராமாயணம் யுத்த காண்டம் 128 வது ஸர்க்கம், 87 வது சுலோகம்.)

——————–

ஸ்ரீ காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட , உலகின் மிகப் பெரிய ஸ்ரீஅரங்கநாதஸ்வாமி திருகோயிலின்
ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்.
இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது.

இக்கோயிலானது ஏறத்தாழ 156 ஏக்கர் அதாவது 6,31,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக,
( சுமார் 6,31,000 சதுர மீட்டர் (6,790 சதுர அடி) பரப்பளவும் 4 கிமீ (10,710 அடி) சுற்றளவும் கொண்டது)
நாட்டிலேயே மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக உள்ளது. இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும்.
இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் ஏழு மதில் சுற்றுக்களையும் ஏழு உலகங்கள் என்று கூறுவர்.
• மதில் சுற்றுகள் (ஏழு உலகங்கள்)
1.மாடங்கள் சூழ்ந்துள்ள திருச்சுற்று( பூலோகம்)
2.திரிவிக்ரம சோழன் திருச்சுற்று (புவர்லோகம்)
3.அகளங்கனென்னும் கிளிச்சோழன் திருச்சுற்று (ஸுவர்லோகம்)
4.திருமங்கை மன்னன் திருச்சுற்று (மஹர்லோகம்)
5.குலசேகரன் திருச்சுற்று (ஜநோலோகம்)
6.ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று (தபோலோகம்)
7.தர்ம வர்ம சோழன் திருச்சுற்று (ஸத்யலோகம்)
ஏழு திருமதில்களை அடைவதற்கு முன்னால் 8வது திருச்சுற்று ஒன்று
தற்போது ஏழு மதில்களை உள்ளடக்கியதாய் அடைய வளையப்பட்டுள்ளது.

• இதற்கு ‘அடைய வளைந்தான் திருச்சுற்று’ என்று பெயர். சப்த பிரகாரங்கள்
எனப்படும் ஏழு பிரகாரங்களுக்குள் இது அடங்காது.
இந்த 8வது அடையவளைந்தான் திருச்சுற்றில் தற்போதுள்ள மிக உயர்ந்த ராயர்கோபுரமான தெற்கு கோபுரமே
இந்தச் திருச்சுற்றின் நுழைவாயிலாகும். இந்த ‘ராயர்கோபுரம்’ கிருஷ்ண தேவராயர் (கி.பி.1509–1529)
காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகும்.
வைணவ சம்பிரதாயத்தில் ஈடுபாடு கொண்ட இவரால் ஒரே சமயத்தில் நாடெங்கும் ) 96 திருக்கோவில்களில் கோபுரம் கட்டும் பணியை
மேற்கொண்டார் என்று கூறுவர். தலைக்கோட்டை யுத்தத்தில் இவர் ஆட்சி முறியடிக்கப்பட்டதும்
பல கோபுரங்கள் பூர்த்தி அடையாமல் பாதியளவிலேயே நின்று விட்டன.
அச்சுதராயன் (கி.பி.1530-1542) எனும் மன்னனால் முயன்று முற்று பெறாத நிலையில் முதல் நிலையிலேயே நிறுத்தப்பட்டது
இந்த ஆலயத்தின் ராஜகோபுரமாகும். 1979ம் ஆண்டு வரை ஏறத்தாழ 430 ஆண்டுகளாக மொட்டை கோபுரம் என்றே அழைக்கப்பட்டு வந்தது.

அடைய வளைந்தான் திருச்சுற்றில் பாதியளவில் நின்று போயிருந்த ராயர் கோபுரத்தில் திருஷ்டிப் பரிகாரத்திற்கென்று முனிக்கு அப்பனான
ஸ்ரீனிவாசனை எழுந்தருளச் செய்திருந்தனர். இந்த ஸ்ரீனிவாசனுக்கு நித்ய வழிபாடுகளும் நடைபெற்றன.
இந்தக் கோபுர வாசலை முனியப்பன் கோட்டை வாசல் என்றும் அழைத்தனர்.
இந்த ராயர் கோபுரந்தான் இன்றைய இந்தியாவின் பெருமைக்கு சிகரம்
வைத்தாற்போன்று ஆசியாவிலேயே பெரிய கோபுரமாகக் கட்டப்பட்டு
திருப்பொலிவோடு செம்மாந்து நிற்கிறது. இவ்வளவு உயரமான கோபுரம் வேறெந்த திவ்யதேசத்திலும் இல்லை.

அகோபில மடத்தின் 44 வது ஜீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் கட்டுமான பணிகள் 1979ல் தொடங்கி 8 ஆண்டுகள்
தொடர்ந்து நடைபெற்று 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
(இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.)
மொட்டை கோபுரம் என்று பெயரைத் தாங்கிய தெற்கு வாசல் இராஜகோபுரம் 13 நிலைகளுடன் கூடிய
ஒரு முழுமையான கோபுரமாக மாநில அரசின் உத்தரவின் பேரில் ஸ்ரீ அகோபில மடம் 44வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர்
ஸ்ரீ வண்சடகோப ஸ்ரீ வேதாந்த தேசிக யதீந்திர மகா தேசிகன் ஜீயர் சுவாமிகளால் அவருடைய நேரடி பார்வையில்
நன்கொடைகளைக் கொண்டே நிர்மாணித்தப் பெருமையைப் பெற்றோர்கள்.

இந்த மொட்டை கோபுர முதல் தள நிலையைக் கொண்ட கற்கட்டடமாக இருந்தது.
இதனை ஒழுங்குபடுத்தி திருப்பணி துவக்க விழா 20.05.1979 ல் ஆரம்பிக்கப்பட்டது.
இக்கோபுரத்தில் சுதைச்சிற்ப உருவங்கள் குறைவுதான்.
தற்சமயம் 13 நிலைகளுடன் 236 அடி (கலசங்கள் உள்பட) உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளது.
இதை கட்டி முடிக்க 7 வருடங்கள் 10 மாதங்கள் 8 நாட்கள் ஆகியது. இது தென் கிழக்கு ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் ஆகும்.
கோபுர உச்சியில் 13 செப்பு கலசங்கள் அலங்கரிக்கின்றன. கோபுர திருப்பணி நிறைவு பெற்று குடமுழுக்கு 25-03-1987ம் நாள்
இந்திய குடியரசு துணைத்தலைவர், மாநில ஆளுனர், மாநில முதலமைச்சர், அமைச்சர்கள் பிரமுகர்கள் மற்றும் பலர் முன்னிலையில் நடந்தது.
திருவரங்கம் அதற்கு இரண்டு தினங்களாக விழாக்கோலம் பூண்டதையாரும் மறக்க இயலாது.
இது பொழுது பல நிறுவனங்கள் பொது மக்களுக்கு அன்னதானம் செய்தது. பல ஆன்மிக சொற்பொழிவுகளும் நடந்தன.

இந்த ராஜ கோபுர திருப்பணியினால் ஸ்ரீமத் அகோபில மடம் ஜீயர் சுவாமிகள், ஸ்ரீரங்கம் ஆலய வரலாற்றில்
நீங்கா இடம் பெற்று விட்டார்கள் எனக் கூறினர். அதுதான் உண்மை. மன்னர்கள் செய்யாததை மட அதிபதி (முனிவர்)
நன்கொடையிலேயே சிறப்பான முறையில் செய்து விட்டார்கள்.
இராஜகோபுரம் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள்:

1.7 கோடி செங்கற்கள்
20,000 டன் மணல்
1,000 டன் கருங்கல்
12 ஆயிரம் டன் சிமெண்ட்
130 டன் இரும்பு கம்பிகள்
8,000 டன் வர்ண பூச்சு
ராஜகோபுரத்தின் மொத்த எடை ஒரு இலட்சத்து 28 ஆயிரம் டன்கள்

கோபுரத்திற்கு அழகு சேர்க்கும் 13 கலசங்கள் பற்றி சிறிது அறியலாம்.
இவைகள் ஒவ்வொன்றும் தாமிர உலோகத்திலானது. 6 பகுதிகளைக் கொண்டு இணைக்கப்பட்டு. 10.5 அடி உயரம் கொண்டது
கலசங்கள்:- ஒவ்வொன்றின் உயரம் 10.5 அடி, விட்டம் 5 அடி. எடை 135kg,
இக்கலசங்களுக்குள்ளும் 1 அடி விட்டமும் 16 அடி உயரமும் உள்ள தேக்கு மர உருட்டுகள் நடப்பட்டு (இவை யோக தண்டு எனப்படும்)
இவைகளைச் சுற்றி கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளன (இக்கலசங்கள் ஆறு பாகங்களைக் கொண்டது கழற்றி மாட்டி விடலாம்)
இடைவெளியில் மொத்தத்தில் சுமார் 100 மூட்டை வரகு தானியம் நிறப்பப்பட்டுள்ளன.
கோபுரத்தின் உச்சியில் மூன்று இடி தாங்கிகள் பொருத்தப்பட்டன. இக்கலசங்கள் வரை செல்ல படிகள் உள்ளன.
மொத்ததில் இந்த ராஜ கோபுரத்திருப்பணிக்கு செலவிடப்பட்ட நிதியின் மதிப்பு 1,46,36,000 ரூபாய் ஆகும்.
அதாவது ஒரு1 கோடியே 46 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்கள் என்று அறியப்படுகிறது. ஒரு பிரம்மாண்ட திருப்பணி நிறைவுற்றது.

————

ஏழாம் சுற்றான தெற்குச் சித்திரை வீதி புறமுள்ள கட்டைக் கோபுரம் வழியாக நுழைய
பூர்ணன்,புஷ்கரன் என்னும் துவாரபாலகர்கள் இருவரை வணங்கி உள்ளே செல்வோம் .
கோபுரத்தின் எதிர்புறமுள்ள நான்கு கால் மண்டபத்தில் வலப்புறக் கம்பத்தின் கீழ் பாதாள கிருஷ்ணன் சன்னிதி உள்ளது.

பாவனாச்சார்யர் திருமாளிகை, தாத்தாச்சாரியர் திருமாளிகை, ஆஞ்சநேயர் திருக்கோவில்,
ஸ்ரீஹயக்ரீவர் தேசிகர் சந்நதி,ஆயனார் திருமாளிகை,
கபிஸ்தலம் ஸ்வாமி திருமாளிகை,பகுகுடும்பி ஸ்வாமி திருமாளிகை,
திருவரங்கத்தமுதனார் திருமாளிகை, சித்திரைத்தேர் முட்டி, பெரியநம்பி திருமாளிகை,
கூரத்தாழ்வான் திருமாளிகை,முதலியாண்டான் திருமாளிகை
வானமாமலை மடம் ஆகியனவற்றை நான்கு சித்திரை வீதிகளைச் சுற்றி வந்து காணலாம்.

————

• மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம்
மூர்த்தி (இறைவன்), தலம் (ஊர்), தீர்த்தம் (புனித நீர்), விருட்சம் (கோயில் மரம்) ஆகிய நான்கும்
தலபுராணங்களில் சிறப்பாகக் கூறப்படும் பொருள்களாகும்.

திருவரங்கம் பெரியகோயிலின் புராண மரபுகளான ஸ்ரீரங்க மாஹாத்ம்யத்தை கருடபுராணத்தில் உள்ள
‘சதாத்யாயீ’ (108 அத்யாயம்) மற்றும் ப்ரம்மாண்ட புராணத்தில் அமைந்துள்ள ‘தசாத்யாயீ’ (10 அத்யாயம்) ஆகிய
இரு புராணங்கள் கொண்டு அறிய முடிகிறது.
மேற்க்கண்ட தசாத்யாயீயில் 11வது அத்யாயமாக ஸ்ரீரங்க விமான ப்ரதஷிணம் என்ற அத்யாயயமும் சேர்த்து
பாப்பாக்குறிச்சி கிருஷ்ணய்யங்கார் 1908-ம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்.
(பத்துஅத்தியாயம் போலே சிவன் நாரதருக்கு சொல்லுகிற க்ரமமாயிராமல்,
ப்ரம்மா ஸநத்குமாரருக்கு சொல்லுவதியிருப்பதால், இது 11ம் அத்யாயம் ஆகாது)

• ஸ்ரீரங்க ப்ரஹ்ம வித்யை ப்ரம்மாண்ட புராணத்தில் நாரதரால் பிரகலாதனுக்கு உபதேசிக்கப்பட்டது.
ஒரே அத்யாயம் கொண்டது இந்த ஸ்ரீரங்க ப்ரஹ்ம வித்யை ஆகும்.

• பாரமேஸ்வர ஸ்ரீரங்க மாஹாத்ம்யம்
ஸ்ரீரங்கம் கோயிலுக்காக ஏற்ப்பட்ட பௌஷ்கர ஸம்ஹிதையின் 10ம் அத்தியாயத்தில் 387 ஸ்லோகங்களில்
ஸ்ரீரங்க மாஹாத்ம்யம் சொல்லப்படுகிறது.

——————

• மூலவர்(மூர்த்தி)
ஸ்ரீரெங்கநாதன், பெரிய பெருமாள்
(ஆதிசேடன் மேல் பள்ளி கொண்டு தெற்கே திருமுகம் காட்டிய புஜங்க சயனம் )

• உற்சவர்
நம் பெருமாள்
அழகிய மணவாளன் என்னும் திருப்பெயரும் உண்டு

• தாயார்
ஸ்ரீரங்க நாச்சியார்

• தீர்த்தம்
(இங்கு மொத்தம் 9 தீர்த்தங்கள் உள்ளன)- நவ தீர்த்தம்

1.சந்திர புஷ்கரணி
2.வில்வ தீர்த்தம்
3.சம்பு தீர்த்தம்
4.பகுள தீர்த்தம்
5.பலாச தீர்த்தம்
6.அசுவ தீர்த்தம்
7.ஆம்ர தீர்த்தம்
8.கதம்ப தீர்த்தம்
9.புன்னாக தீர்த்தம்

• தலவிருட்சம்
புன்னை
• விமானம்
ப்ரணா வாக்ருதி விமானம்
• காட்சி கண்டவர்கள் (பிரத்யட்சம்)
வீடணன், தர்மவர்மன், கிள்ளிவளவன், சந்திரன். ஆழ்வார்,ஆச்சார்யர்கள்

————-

||திருவிக்கிரமன் திருவீதி||

• 6வது திருச்சுற்று
சக்கரம்,சங்கம் என்னும் துவார பாலகர்களை வணங்கி விட்டு ‘புவர்லோகம்’ என்று
அழைக்கப்படும் 6 வது திருச்சுற்றாகிய ‘திருவிக்கிரமன் திருவீதி’ என்று அழைக்கப்படும் ப்ராகாரத்தினுள் நுழைவோம்.
இந்த வீதியில் பெருமாள் திருவாகனங்கள் உலாப் போகும் காரணத்தால் இதற்கு
உள் திருவீதியென்றும் உத்திரவீதி என்றும் பெயர்.
திருக்கோயிலின் உள்துறை நிர்வாகிகள் தங்கும் வீதியாக ‘உள்துறை வீதி’ என்றும் கூறப்படுகிறது.

யானைகட்டும் மண்டபம்,உத்தராதிகள் (பாங்கூர்) சத்திரம், தைத்தேர் நிற்குமிடம், அர்ச்சகர்களின் திருமாளிகை,
ஸ்ரீஉத்தம நம்பி திருமாளிகை, மேலக்கட்டைகோபுரம்
(இதன் வழியாக வெளியே வந்தால், 7வது மேற்கு திருச்சுற்று மற்றும் தெப்பக்குளத்தை அடையலாம்),
ஸ்ரீபுத்தங்கோட்டம் ஸ்வாமி திருமாளிகை, ஸ்ரீஎம்பார் திருமாளிகை, வடக்கு கட்டை கோபுர வாசல்
( இவ்வழியே 7வது வடக்குச் சுற்று,
வடதிருக்காவேரி, திருமங்கை மன்னன் படித்துறை, தசாவதாரன் சந்நதி ஆகியவற்றை காணச் செல்லலாம்)
தாயார் சந்நதிக்கு செல்லும் வடபுறக்கோபுர வாசல், அதன் எதிரே ஸ்ரீராமானுஜர் தங்கியிருந்து
ஸ்ரீரங்கத்து நிர்வாகத்தைக் கவனித்த மடமாகிய ‘ஸ்ரீரங்கநாராயண ஜீயர் ஸ்வாமி மடம்’ என்ற பெயரில்
தொன்று தொட்டு ஜீயர்கள் பரிபாலனத்திலேயே இருந்து வருகிற மடம்
அஹோபில மடம்,
ஆஞ்சநேயர் சந்நதி,(பெரிய பெருமாள் திருவடி இங்குள்ளது)

கீழக்கட்டை கோபுர வாசல் ( இதன் வழியே 7வது கிழக்கு திருச்சுற்று, காட்டழகிய சிங்கர் கோயில் ஆகியவற்றிற்கு செல்லலாம்.
அஞ்சாவது கிழக்கு திருச்சுற்றிலுள்ள ஆயிரம் கால் மண்டபம், சேஷராயர் மண்டபம் கண்டுகளிக்க வழியான வெள்ளைக்கோபுரம்
இந்த 6வது வீதியில் உள்ளது. அரையர்கள் திருமாளிகை, கோயில் கந்தாடைஅண்ணன் ஸ்வாமி திருமாளிகை,
மணவாள மாமுனிகள் மடம் போன்றனவும் இதில்தான் உள்ளது.
மணவாள மாமுனிகள் தமது அவதார ரகசியத்தை உத்தம நம்பி என்னும் தமது சீடருக்கு இங்குதான் காட்டியருளினார்.
இம்மடத்தின் தூண்களில் இந்நிகழ்ச்சி செதுக்கப்பட்டுள்ளது.
பெரியபெருமாளின் திருப்பார்வை படும் இடம் ‘மணவாளமாமுனிகள் மடம்’ ஆகும் என்பது ஐதீகம்.

மார்வாரி சத்திரம் ஆகியன உள்ளன. 5வதுதிருச்சுற்று நுழைவதற்கான நான்முகன் கோபுரம் (அ) ஸ்ரீரங்கா ரங்கா ரங்கா கோபுரமும்
இந்த (தெற்கு) உத்தர வீதியில் உள்ளது.

அகநானூறிலும் (அகம் 137 பாலை உறையூர் முதுகூத்தன்னார்) திருவரங்கம் பெரியகோயிலில் நடக்கும்
‘பங்குனி உத்திரம்’ திருவிழா பற்றி குறிப்புள்ளது.

——————-

• திருவரங்கம் பெரியகோயிலில் வரலாற்று கால கல்வெட்டுகள்
சுமார் 800க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.
Archaeological survey of India; Annual epigraphic Volume XXIV -ல் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் South Indian Temple Inscription என்ற தொகுப்பு நூலிலும் காணலாம்.
செப்பேடுகளைப் பற்றிய செய்திகள் Epigraphia indica களில் வெளிவந்தன.

• கி.பி. 10ம் நூற்றாண்டு – இது சோழர்கள் தமிழ்நாட்டின் ஆட்சியுரிமையில் சிறந்திருந்த காலம்.
ஏறத்தாழ 181 சோழர் கல்வெட்டுகள் திருவரங்கம் பெரியகோயிலில் உள்ளது.

• முதலாம் ஆதித்த கரிகாலன் (கி.பி.871-907) காலத்திய கல்வெட்டுகள் இரண்டு (A.R.E.No.69 & 70 of 1892)
நான்காம் திருச்சுற்றான ஆலிநாடன் திருச்சுற்றில் அமைந்துள்ள கொட்டாரத்தின் தரைப்பகுதியில் உள்ளன.

• முதலாம் பராந்தகச்சோழன் (கி.பி. 907- 955) காலத்து எட்டு கல்வெட்டுகள்
(A.R.E.No. 71,72,73,95,345,415,417,418 of 1961-62) திருவரங்கம் பெரிய கோயிலில் உள்ளன.
கி.பி. 953 ல் முதலாம் பராந்தக சோழனின் 17ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்று (A.R.E.No. 72 of 1892)
இம்மன்னன் இக்கோவிலுக்கு ஒரு வெள்ளி மற்றும் தங்கத்திலான குத்துவிளக்கு
அளித்ததையும் அதற்கு , பட்டுத்திரி, நூல், நெய்யோடு சேர்த்து எரிப்பதற்காக ‘பீமஸேனி கற்பூரம்’ வாங்குவது உட்பட அதன்
நிலையான செலவினங்கட்கு 71 கழஞ்சு பொற்காசுகள் வழங்கியதையும் தெரிவிக்கிறது.

• இரண்டாம் பராந்தகன் எனும் சுந்தரச்சோழன் காலத்தைய (கி.பி. 957 -970) கல்வெட்டு(A.R.E.No.416 of 1961-62)
ஒன்று மட்டும் சந்தன மண்டபத்தின் இடது பக்கம் அமைந்துள்ளது.

• உத்தமசோழன் (கி.பி.973-985) காலத்திய கல்வெட்டு (A.R.E.No.65 of 1938-39) ஒன்று இரண்டாம் திருச்சுற்றிலுள்ள
சந்தன மண்டபத்தில் உள்ளது. அதில் ‘பீமஸேனி கற்பூரம்’ கலந்த நெய்யைக் கொண்டு திருவிளக்கு ஏற்றும் நடைமுறை கூறப்படுகிறது.
கோயில் விளக்குகளிலே சேர்க்கப்படும் நெய்யை கோயில் ஊழியர்கள் தங்களது சொந்த உபயோகத்திற்கு
பயன்படுத்தாதிருக்க பீமஸேனி கற்பூரம் நெய்யுடன் சேர்த்து எரிப்பது அக்கால வழக்கம் ஆகும்.

• முதலாம் ராஜராஜன்(கி.பி.985-1014) மற்றும் முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012-1043) காலத்திய
பத்து கல்வெட்டுகள் (A.R.E.No.19 of 1948-49 327,328,331,341,342,343,344,344a,370) உள்ளன.

• முதலாம் ராஜாதிராஜன்(கி.பி. 1018-1054) காலத்திய கல்வெட்டுகள் இரண்டு (A.R.E.No.333,334 of 1952-53)
சக்கரத்தாழ்வார் சந்நிதி முன் அமைந்துள்ள மண்டப தாழ்வாரத்தில் உள்ளது.

• இராசமகேந்திர சோழன் (கி.பி. 1058-1063) திருவரங்கம் பெரியகோயிலில் பல திருப்பணிகளைச் செய்துள்ளதை
‘கோயிலொழுகு’ (இராசமகேந்திர சோழன் கைங்கர்யம்) மூலம் அறியலாம். இங்குள்ள இரண்டாம்
பிரகாரத்தில் முதலாம் பிராகாத்திற்கான திருமதிலை கட்டினான்.
இரண்டாம் திருச்சுற்றினை திருப்பணி செய்தவன் இவனே. அதனால் ‘இராசமகேந்திரன் திருவீதி’
என்றே இன்றும் வழங்கப்படுகிறது.

• இராஜேந்திரச் சோழனின் மகன் வீர ராஜேந்திரன் அவன்மகன் அதிராஜேந்திரன் (கி.பி. 1068-71) காலத்திய
கல்வெட்டு ஒன்று மட்டும் நாழிகை கேட்டான் வாசலின் நுழைவு வாசல் பக்கச்சுவரில் உள்ளது.

• திருவரங்கம் பெரியகோயிலில் காணப்படும் சோழர்காலக் கல்வெட்டுகளில் முதலாம் குலோத்துங்கச்சோழனின் (கி.பி.1070-1122)
கல்வெட்டுகளே மிகுதியானவை ஆகும். ஸ்ரீரங்கம் கல்வெட்டு எண். 26 தொடங்கி 108 முடிய உள்ள
இவனது கல்வெட்டுகள் மூன்றாம் திருச்சுற்றான குலசேகரன் திருச்சுற்றில் அமைந்துள்ளன.

• ஸ்ரீஇராமானுஜர் (கி.பி.1020-1137) காலத்திலே நடந்த நிகழ்வுகள் ஸ்ரீரங்க வரலாற்றின் ‘பொற்காலம்’ என்றே கூறலாம்.
இவரின் அரிய சேவைகளை ‘கோயிலொழுகு’ என்னும் நூல் சிறப்பித்துப் பேசுகிறது.
அவற்றை சமய மரபில் விரிவாக காணலாம்.
முதலாம் குலோத்துங்க சோழன் இராமானுஜருக்குப் பல கொடுமைகள் விளைவித்ததாகவும் இதனால் ராமானுஜர் சிலகாலம்
(சுமார் 13 ஆண்டுகள்) ஒய்சாளப் பேரரசின் மைசூர்பகுதியில் உள்ள மேல்கோட்டை- திருநாராயணபுரத்தில் தங்கியிருந்தார்
எனவும் கோயிலொழுகின் மூலம் அறிய முடிகிறது.

• விக்ரமச்சோழன் (கி.பி.1118-1135) ஆட்சிகாலத்திய. கல்வெட்டுகளை (A.R.E.No27,28,31,33,37,38,39,112,115,127,438,340,339)
மூன்றாம் திருச்சுற்றுகளில் காணலாம்.

• இரண்டாம் குலோத்துங்கச்சோழன் ( கி.பி. 1133-1150) காலத்திய
இரு கல்வெட்டுகள் (A.R.E.No.55,56 of 1936-37) நான்காம் திருச்சுற்றுகளில் உள்ளன.

• இரண்டாம் இராஜராஜச்சோழன் ( கி.பி. 1133-1150) காலத்திய கல்வெட்டுகள் (A.R.E.No.68 of 1936-37
122 of 1947-48) நான்காம் திருச்சுற்றுகளில் உள்ளன.

• இரண்டாம் இராஜாதிராஜச்சோழன் ( கி.பி. 1163-1178) காலத்திய கல்வெட்டுகள் (A.R.E.No.63,73 of 1936-37
267,268,269 of 1930) நான்காம் திருச்சுற்றில் உடையவர்சந்நதி எதிரில் உள்ளன.

• மூன்றாம் குலோத்துங்க சோழன்(கி.பி.1178-1218) காலத்தில் இத்தலத்தின் நிர்வாகம் இவனது நேரடிக் கவனத்தின் கீழ் கொண்டுவரப்
பட்டது. காலத்திய கல்வெட்டுகள் (A.R.E.No.50,51 of 1948-49 61,75,76,89, of 1936-37 ; 17,18,119,120,113,148, of 1938-39
63,66,67,of 1892; 364 of 1953-54; 157,158, 335 of 1951-52;) நான்காம்,ஐந்தாம் திருச்சுற்றில் உள்ளன.
இவன் சைவ- வைணவ சமயப் பூசல்களைத் தீர்த்து வைத்ததாகவும் அறிய முடிகிறது.

• மூன்றாம் இராஜராஜன் (கி.பி.1216-1256) காலத்திய கல்வெட்டுகள்
(A.R.E.No.71,72 of 1936-37; 102,133,134,147 of 1938-39 156 of 1956-57;30,52 of 1948-49;
156,157,158 of 1951-52;363 of 1953-54; 30,35 of 1936 -37;) ஆகியன 3,4,5 திருச்சுற்றுகளில் உள்ளன.

• கி.பி.1223-1225 திருவரங்கம் கோவில் கங்கர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டது. கோவில் நிர்வாகம் சீர் குன்றியது.

• மூன்றாம் ராஜேந்திரன் (கி.பி. 1246-1279) காலத்தைய (A.R.E.No.148 of 1938-39;
64,65 of 1892; 317 of 1952-53; 368 of 1953-1954; கல்வெட்டுகள் 5,4,3 திருச்சுற்றுகளில் காணலாம்.
இவனது ஆட்சிக்குப்பிறகு காலத்தில் சோழநாடு பாண்டியர்களுடைய நாடாக மாற்றம் அடைந்தது.
நான்காம் திருமதிலைக் கட்டியவர் ‘திருமங்கை ஆழ்வார்’ என்கிறது கோயிலொழுகு.
ஏழாம் திருமதில் பிரகாரத்திலும், நான்காம் திருமதில் பிரகாரத்திலும் ஆண்டாளுக்கு எனத் தனிப்பட்ட சந்நிதிகள்
தென்மேற்கு மூலையில் ஏற்படுத்தியுள்ளனர் . இதில் ஏழாம் திருமதில் பிரகாரத்தில் உள்ள
வெளி ஆண்டாளின் திருச்சந்நிதி ‘பிற்காலப் பாண்டியர்கள்’ காலத்தில் ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டும் எனத் தெரிய வருகிறது.
கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டிற்குள் அது கட்டப்பட்டிருக்கும் என
அந்தச் சந்நிதி பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் கட்டப்பட்டிருப்பதில் இருந்து தெரிய வருகிறது.
இதைத் தவிர நான்காம் திருமதில் பிரகாரத்தில் இருக்கும் உள் ஆண்டாள் சந்நிதி கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம்.

திருவரங்கம் பெரிய கோயிலின் கல்வெட்டுகள் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இருந்து கிடைத்துள்ளது.

சோழமன்னர்கள் கல்வெட்டுக்களில் பழமையானதாகச் சொல்லப்படுவது முதலாம் பராந்தகனின் கல்வெட்டு ஆகும்.
இவனுக்கு அடுத்து மன்னன் இரண்டாம் ராஜேந்திரனின் மகன்களில் ஒருவனான ராஜமஹேந்திர சோழனின்
கி.பி. பதினோராம் நூற்றாண்டில் அதாவது கி.பி. 1060—1063 ஆம் ஆண்டில்
இங்குள்ள முதல் பிரகாரத்தின் திருமதிலைக் கட்டியதால் இது ‘ராஜமஹேந்திரன் திருவீதி’ என வழங்கப் படுகிறது.

சோழகுல மரபில் முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன் காலத்தியக் கல்வெட்டும்,
‘ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம்’ சோழர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருந்து வந்ததைச் சொல்கிறது.
தமிழ்நாட்டின் அப்போதைய காலநிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
• திருவரங்கம் பெரியகோயிலில் சுந்தரபாண்டியனான மானாபரணன்(கி.பி. 1104-31) கல்வெட்டே
A.R.E.No. 117 of 1937-38) பாண்டியர்களின் திருவரங்கக் கல்வெட்டில் பழமையானது. அதற்கடுத்து
• பிற்காலப் பாண்டிய சாம்ராஜ்யத்தின் அரசனான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216—1238) கல்வெட்டானது
(இரண்டாம் திருச்சுற்று கிழக்குப்பக்க சுவர் -A.R.E.No. 53 of 1982) குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இவனது 9வது ஆட்சியாண்டில் 28-03-1225 ஆம் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் அவன் திருவரங்கத்தில் மேற்க்கொண்ட
நிர்வாஹ சீர்திருத்தத்தைப் பற்றிஅறிய முடிகிறது. இந்தக் கல்வெட்டில் தான், எம்பெருமானார் திருவடிகளை ஆச்ரயித்திருக்கும்
ஸ்ரீவைஷ்ணவர்கள் என்ற சொற்றொடர் முதனே முதலாக வருகிறது. கோயில் உள்துறை நிர்வாகத்தினர் ராஜமகேந்திரன்
திருச்சுற்று மேலைப்பகுதியில் கூடி இருந்து எடுத்த முடிவினை அக்கல்வெட்டு கூறுகிறது.
இக்கல்வெட்டில் 2000 எழுத்துக்கள் உள்ளதாக கல்வெட்டுக்குறிப்பே கூறுகிறது.
திருவரங்கத்திலிருந்து கிடைக்கும் வீரசோமேஸ்வரனின் கல்வெட்டு (மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் – A.R.E.No. 362 of 1953-54 )
முதலாம் சடையவர்மன் விக்கிரமபாண்டியனின் (கி.பி. 1241-1254) நாலாவது ஆட்சியாண்டு 270ம் நாளில்
‘விக்கிரம சதுர்வேதிமங்கலம்’ என்ற ஊரை திருவரங்கம் பெரியகோயிலுக்கு தானமாக அளித்தது பற்றி கூறுகிறது.
முதலில் ஸ்வஸ்திஸ்ரீ போஜள வீர சோமேஸ்வர தேவர் என்று தொடங்கும்.
பின்பு 2வது வரியிலிருந்து ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடை பன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீவிக்கிரம பாண்டியத்தேவர் என்று தொடரும்.
இதன் மூலம் பாண்டிய அரசு போஜள வீரசோமேஸ்வரனின் மேலாதிக்கத்தை ஏற்றிருந்ததை அறிய முடிகிறது.
வீரசோமேஸ்வரனது மற்றொரு கல்வெட்டு (மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் – A.R.E.No. 361 of 1953-54 ) இவனது
22வது ஆட்சியாண்டு(02-11-1252)நந்தவன தானம் பற்றிக் குறிக்கிறது.
வீரசோமேஸ்வரன் 6வது ஆட்சியாண்டில் பட்டத்து ராணி சோமலா தேவியார் தந்த தானம் பற்றிய மற்றொரு கல்வெட்டும்
(மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் – A.R.E.No. 68 of 1892) உள்ளது.

• கி.பி.1262 வரை ஆட்சி புரிந்த சோமேசுவரனுக்குப் பின்னர் வந்த ஹொய்சள மன்னன் இராமநாதர் என்பார்(கி.பி.1263—1297) வரை ஆட்சி புரிந்தார்.
இவர் படைத்தலைவர்களாகிய இரு சகோதரர்கள் கோயிலுக்குப் பல வகையான தானங்கள் வழங்கியுள்ளனர்
என்பதைக் கோயில் வரலாற்று நூல் கூறுவதாக அறிகிறோம்.
வீரராமநாதனது இரண்டாம் ஆட்சியாண்டு (04-02-1256)கல்வெட்டு
(மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் – A.R.E.No. 67 of 1892) அழகிய மணவாளருக்கு
திருமாலைகள் சமர்பித்திட நந்தவன கைங்கர்யத்திற்காக நிலதானம் தரப்பட்ட குறிப்பு உள்ளன.

வீரராமநாதனுடைய மூன்றாம் ஆட்சியாண்டில் (கி.பி.1257) இவன் தந்தருளின திருமுகப்படி
சிங்கண்ண தண்டநாயகரால் எடுத்த கை அழகியநாயனார் (மேட்டு அழகிய சிங்கர்) திருக்கோபுரத்திற்கு மேற்குப் பகுதியில்
“ஆரோக்ய சாலை” ஒன்றினை ஏற்படுத்திப் பராமரிப்பதற்காக ஸ்ரீபண்டாரத்தில் 1100 பொற்காசுகள் சேர்ப்பிக்கப்பட்டு
வைத்ததை ஒரு கல்வெட்டு (A.R.E.No. 80 of 1936-37) கூறுகிறது.
சந்திர புஷ்கரணியிலிருந்து ஐந்து குழி மூன்று வாசல் செல்லும் நடை பாதையில் இக்கல்வெட்டை இன்றும் காணலாம்.
தந்வந்தரிசந்நிதியை நெடுநாள் பராமரித்து வந்த ‘கருடவாகன பண்டிதர்’ இந்த ஆரோக்ய சாலையையும் நிர்வகித்து வருவார்
என்றும் கல்வெட்டு குறிக்கிறது. மேலும் இவனது காலத்திய கல்வெட்டுகளாக
(A.R.E.No.64,65,70,74, of 1936-37) (A.R.E.No.372,377 of 1953-54)
(A.R.E.No. 52 of 1892) ஆகியனவற்றை திருவரங்கம் கோயிலில் காணலாம். ஸ்ரீரங்கவிலாஸத்தின் மேற்குப் பகுதியில்
இவனது ஆட்சி காலத்தில் தான் மிகவும் அழகு வாய்ந்த ‘வேணுகோபால கிருஷ்ணர் சந்நிதி’ கட்டப் பட்டது.
இவனது 15வது ஆட்சிகாலக் கல்வெட்டு (A.R.E.No.74 of 1892)’திருக்குழல் ஊதும் பிள்ளை சந்நிதி’ என்று குறிக்கிறது

• முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் இந்த கல்வெட்டிற்குப் பிறகு இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
(கி.பி. 1238-1255) காலத்து கல்வெட்டு (A.R.E.No. 77 of 1936-37) ஒன்று
இவனது அமைச்சர்களான அய்யன் மழவராயன், சக்கரபாணி நல்லூர் பல்லவராயன் என்பவர்கள் வேண்டுகோளுக்கிணங்க
குதிரை வியாபாரியான குளமூக்கு நாவாயன் கொண்ட நம்பி என்பான் திருவரங்கம் கோயிலுக்கு தானமாக கொடுத்த
‘குமாரநம்பி நல்லூர்’ என்ற கிராமத்தை (கடமை ற்றும் அந்தராயம் ஆகிய) வரிகள் நீக்கிய கிராமமாக
கொள்வதற்கு மன்னன் பிறப்பித்த ஆணை பற்றி கூறுகிறது.

• போசள வீரசோமேஸ்வரனுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே இருந்த நட்பு அல்லது பகை வெகு நாட்கள் நீடிக்கவில்லை.
கி.பி. 1250-இல் முடிசூடிய ‘இரண்டாம் மாறவர்மன் விக்கிரம பாண்டியன்’ போசள மன்னனுடன் பகைமை கொண்டான்.
‘கர்நாடக யானைக்கு சிங்கம் போன்றவன்’ (கர்நாடக கரிகல்ப கந்திரவ) என்று தன்னைக் கல்வெட்டுகளில் கூறிக்கொண்டான்.
அவனது தம்பியான முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1264- இல் வீரசோமேஸ்வரனைப் போரில் கொன்று,
பாண்டிய நாட்டில் இருந்த போசளர் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டு வந்தான்.

————-

திருவரங்கம் பெரியகோயிலின் பொற்காலம்:-

-|முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1251 – 1271) ஆட்சி|-

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த ‘பாண்டிய பேரரசன்’ ஆவான்.
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான்.

இவன் பல கட்டிடங்களை திருவரங்கம் பெரியகோயிலில் எழுப்பியுள்ளான் என்பதோடு
பல்வகையான அலங்காரங்களையும் செய்ததோடு தாராளமாக நன்கொடைகளையும் வழங்கினான்.
இதனால் அவன் புகழ் மிகவும் பெரிய அளவில் பேசப்படுகின்றது என்பதோடு அவன் காலத்துக் கல்வெட்டுக்களும்
(இரண்டாம் திருச்சுற்று வடக்குப் பக்கச்சுவர் – A.R.E.No. 45 of 1891),
(சந்தனமண்டபம் -A.R.E.No. 60 of 1892)
அவன் ஸ்ரீரங்கம் கோயிலைப் பொன்மயமாகச் செய்தான் என்று பாராட்டுகிறது.

• திருவரங்கநாதர் சந்நிதி, விஷ்வக்சேனர் சந்நிதி, மஹாவிஷ்ணு சந்நிதி, விஷ்ணு நரசிம்மன் கோபுரம்,
மூன்று விமானங்கள், திருமடைப்பள்ளி ஆகியவை இவனால் கட்டப்பட்டதாக அறிகிறோம்.
இந்தக் கட்டிடங்களும், இரண்டாம் பிரகாரமும் பொன்னால் வேயப்பட்டதாகவும் அறிகிறோம்.
இத்தோடு நில்லாமல் ஆதிசேடன் திருவுருவம், பொன்னாலாகிய பிரபை, பொன்னாலான பீடம், பொன் மகர தோரணம்,
பொன் கருட வாகனம் ஆகியனவும் பொன்னாலேயே அவனால் வழங்கப் பட்டிருக்கிறது.
ஒரிசா எனப்படும் கலிங்க நாட்டரசனைப் போரில் எதிர்கொண்டு வெற்றி பெற்று அவனுடைய கருவூலத்தில் இருந்து கைப்பற்றிய
பல பொருள்களைக் கொண்டு ஸ்ரீரங்கநாதருக்கு மரகத மாலை, பொன் கிரீடம், முத்தாரம், முத்து விதானம், பொன் பட்டாடை,
பொன் தேர், பொன்னால் நிவேதனப் பாத்திரங்கள், குவளைகள் போன்றவற்றை வழங்கியுள்ளான்.
விலையுயர்ந்த பட்டாடைகளாலும், ஆபரணங்களாலும் திருவரங்கத் திருமேனியை அலங்கரித்து மகிழ்ந்திருக்கிறான்.

• காவிரியில் இரு படகுகளை விட்டு தனது பட்டத்து யானையை ஒரு படகில் ஏற்றி அதன் முதுகில் மன்னன் அமர்ந்தான்.
மற்றொரு படகில் ஏராளமான ஆபரணங்களும், அணிமணிகளும், பொற்காசுகளும் அவனால் நிரப்பப்பட்டுக் குவிந்து கிடந்தன.
தன்னுடைய படகினது நீர்மட்டத்திற்கு மற்றொரு படகும் வரும் வரையில் அந்தப் படகில் பொன்னைச் சொரிந்து கொண்டே இருந்தான்.
பின்னர் அப்பொன்னையும், அணிமணிகளையும் இக்கோயில் கருவூலத்திற்குத் தானமாக வழங்கினான்.
தன்னுடைய எடை அளவிற்குத் தங்கத்தினாலே திருவரங்கநாதரின் விக்ரஹம் செய்து அதையும் தன் பெயரால் (ஹேமச்சந்தன ஹரி)
வழங்க வைத்துக் கோயிலுக்கு அளித்தான். இவ்வாறு அவன் செய்த பல திருப்பணிகளை ‘கோயில் ஒழுகு’ நூல் கூறுகின்றது.
‘பொன்வேய்ந்த பாண்டியன்’ என்று புகழப்பட்ட ‘ஹேமச்சந்தன ராஜா’வால் எடுப்பிக்கப்பெற்ற அரங்கனது தங்க விமானம்,
கருடன் சந்நிதி,தங்கமணி மயமான மண்டபம் ஆகிய விமானங்களும் திருவரங்கனுக்கே அணிவித்த கிரீடம் போல விளங்கின.

• இவனது ஆட்சிகாலத்தில் நடுவிற்கூற்றத்து துஞ்சலுடையான் வரந்தருவான் எடுத்தகை அழகியான் என்கிற பல்லவராயன் என்பான்
திருவிக்கிரமன் திருவீதியில் தன்னுடைய மன்னன் நலம் வேண்டி,
முக்கோல் பகவர்களான ஸ்ரீவைஷ்ணவ ஸந்நியாஸிகள் தங்கியிருப்பதற்காக ‘சுந்தரபாண்டியன் மடம்’ என்று
தன் மன்னனின் பெயரிலேயே மடம் ஒன்றைக் கட்டியுள்ளான்.
இரண்டு மீன்சின்னங்கள் பொறிக்கப்பட்டு சுதர்சன சக்கரத்தோடு காணப்படுகிற திருவாழிக்கல் கல்வெட்டு (A.R.E.No.99 of 1936-37)
விக்கிரமசோழன் திருவீதியாகிய தெற்கு உத்திர வீதியில் தென்கிழக்கு மூலையிலுள்ள சுந்தரபாண்டியன் மடமாகிய
ஸ்ரீமணவாளமாமுனிகள் சந்நிதி முன்பு இன்றும் காணலாம்.
மேலும் இவனதுஆட்சிகால கல்வெட்டு (A.R.E.No.81,82,83,84,89 of 1938-39)
கல்வெட்டு (A.R.E.No.43 of 1948-49)
கல்வெட்டு (A.R.E.No.338 of 1952-53) ஆகியன திருவரங்கம் சந்தன மண்டபத்தில் உள்ளன.

————–

சடையவர்மன் சுந்தர பாண்டியனின் கைங்கர்யங்கள்
(கோயிலொழுகு தரும் தகவல்)

திருவரங்கத்தில் பல ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் மற்றும் பல அரசர்களும் கைங்கர்யங்கள் செய்து உள்ளனர்.
இதில் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் (எ) சடையவர்மன் சுந்தர பாண்டியனுக்கு மட்டும் தனி சிறப்பு உண்டு.
‘சுந்தரபாண்டியம் பிடித்தேன்’ என்ற அருளப்பாடு உண்டு.
இரண்டு முறை “சுந்தரபாண்டியம் பிடித்தேன்” என்று அருளப்பாடு சாதிப்பதுண்டு.
பெருமாளுக்கு கண்ணாடி காட்டும் போது (வெள்ளி கண்ணாடி)
அர்க்யம்,பாத்யம் ஆசமணீயம் சேர்க்கும் படிக்கம் பிடிப்பதற்க்கும் உண்டு.

சுந்தரபாண்டியம் பிடித்தேன் அருளப்பாடு
இதனை அனைவரும் அனுபவிக்க வேண்டுமென்றால் நம்பெருமாள் வெளி மண்டபங்களில்
(பூச்சாற்று மண்டபம், வசந்த மண்டபம், பவித்ர மண்டபம், ஊஞ்சல் மண்டபம்) திருவாராதனம் நடைபெறும் போது காணலாம்.
‘சுந்தரபாண்டியம் பிடித்தேன்’ என்ற அருளப்பாடு 800 ஆண்டுகளுக்கு மேல் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

இந்த அருளப்பாடுக்கு ஒரு காரணம் உள்ளது.
“ஒரு முறை அரசன் சுந்தரபாண்டியன் பெருமாள் திருவாராதனம் நடைபெறும் போது சேவித்து கொண்டு இருந்தான்.
அப்போது பெருமாள் கைங்கர்யபாரர் பெருமாளின் படிக்கம் (தீர்த்தம் சேர்க்கும் பாத்திரம்) கொண்டு வர மறந்து விட்டார்.
அரசன் சுந்தரபாண்டியன் தனது கிரீடத்தை எடுத்து பெருமாளின் தீர்த்தத்தை பிடித்தான்.
இந்த காரணத்தினால் இன்றளவும் தீர்த்தம் சேர்க்கும் படிக்கத்தின் வடிவம் அரசனின் மகுடம் தலைகீழாக வைத்தது போல் இருக்கும்.

சுந்தரபாண்டியன் திருவரங்கத்தில் எண்ணற்ற கைங்கர்யங்களைச் செயதார்.
அவற்றுள் தலைசிறந்தது பிரணவாகார விமானத்திற்கு பொன்வேய்ந்த கைங்கர்யம்.
சுந்தர பாண்டியன் தங்கத்தினால் பல கைங்கர்யங்கள் செய்ததனால்
“பொன்மேய்ந்த பெருமாள் சுந்தரபாண்டிய தேவர்” என்று சிறப்பு பெயர் பெற்றார்.
சுந்தர பாண்டிய அரசனின் மற்றொரு கைங்கரியம் நம்பெருமாள் பொதுவாக அணிந்து கொள்ளும் “பாண்டியன் கொண்டை”
வைகுண்ட ஏகாதசி அன்றும் உபயநாச்சியார்களோடு திருச்சி வகையில் எழுந்தருளும் போதும் இந்த பாண்டியன் கொண்டை சாற்றப்படும்.
இந்த பாண்டியன் கொண்டையை பெருமாள் இரண்டு விதமாக சாற்றி கொள்வார் .
(இந்த பாண்டியன் கொண்டையில் மூன்று பகுதிகள் இருக்கும் (தத்வ த்ரயம் நிலை)
1) அடி பகுதி
2) வட்ட வடிவம் கொண்ட நடு பகுதி
3) குமிழ் பகுதி)
இந்த பாண்டியன் கொண்டை 19ஆம் நூற்றாண்டு பழுதாகி “வேங்கடாத்ரி ஸ்வாமிகள்” என்ற அடியவர் புனர்நிர்மானம் செய்த செய்தியும் உண்டு.

• சுந்தர பாண்டிய அரசனின் மற்றொரு கைங்கரியம்
சுந்தர பாண்டியன் வடக்கே ஆந்திர மாநிலம் நெல்லூர் முதல் தமிழகத்தில் இருந்த சோழ ஹொய்சள மற்றும்
கேரளத்தை ஆண்ட சேர அரசர்களையும் வெற்றி கொண்டதனால் “எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள்” என்ற
சிறப்பு பெயருடன் விளங்கி வந்தார்.
தற்போது நம்பெருமாள் பவித்ர உற்சவம் கண்டருளும் மண்டபத்தின் பெயர் “சேரனை வென்றான்(சேனை வென்றான்) மண்டபம் ஆகும்.
இந்த மண்டபம் சுந்தரபாண்டியன் சேர அரசனை வென்றதன் நினைவாக கட்டியது.
(சேரனை வென்றான்) பவித்ர உற்சவம் மண்டபத்தில் நம்பெருமாள் துலா புருஷ மண்டபம் பெயர் காரணம்:

“திருமுகத்துறையிலே ஒரு நிறையாக இரண்டு ஓடம் கட்டி அதில் ஒரு ஓடத்தில் தச்சுமுழத்திலே ஏழு முழம் இருக்கிற
பட்டத்தானையின் மேலே தானும் தன்னுடைய ஆயுதங்கலோதேனிருந்து ஒரு ஓடத்திலே அந்த மட்டத்துக்சரியான
ச்வேர்ணம் முத்து முதலான நவரத்னங்கள் ஏற்றி யானை யானை துலாபுருஷந தூக்கி …..”
ஒரு தச்சு முழம் = 33 inch
தச்சுமுழத்திலே ஏழு முழம் இருக்கிற பட்டத்து யானை (33 × 7 = 231 inch)
19 அடி உயர யானையை ஒரு படகின் மேல் ஏற்றி அதற்கு மேல் அம்பாரியில் தானும் தனது ஆயுதங்களுடன் ஏறி அமர்ந்து கொள்வார்.
அதன் அருகில் மற்றொரு படகை நிறுத்தி தான் அமர்ந்த படகு எத்தனை ஆழம் இறங்குறதோ அதே அளவுக்கு இறங்க
அந்த படகில் தங்கம், முத்து, நவரத்தினம் ஆகிய தனங்களை ஏற்றி துலாபாரம் போல் சமநிலையாக இருக்க வைத்து
அந்த தனங்களை கொண்டு நான்கு கால் மண்டபம் கட்டியதால் இதற்கு துலா புருஷ மண்டபம் என்று பெயர்.

சுந்தரபாண்டியன் 24 நான்கு கால் மண்டபங்கள் கட்டினார்.இந்த நான்கு கால் மண்டபங்களுக்கு துலா புருஷ மண்டபம் என்று பெயர்.
இந்த மண்டபங்கள் இரண்டாம் திருசுற்று (ராஜ மகேந்திரன் திருவீதி) முதல் ஐந்தாம் திருசுற்று (அகனங்கன் திருவீதி) வரை
பல்வேறு இடங்களில் அமைய பெற்றுள்ளன.

பெருமாள் செல்வங்களை ஏற்க மறுத்தது:
“அந்த த்ரவ்யத்தை கைங்கர்யம் பண்ண உத்யோகிக்குமளவில் அந்தத்ரவ்யம் ஸபரிகரரான ஸ்வாமிக்குத் திருவுள்ளமாகாதபடியினாலே
இரண்டு வருஷம் மறிபட்டுக் கிடந்தது….”
அரசன் தான் சமர்ப்பிக்கும் தனம் என்று பெருமையுடன் கொடுத்தபோது பெருமாள் இந்த தனங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து
ஆரியப்படால் வாசலின் வெளியே இரண்டு ஆண்டுகள் கிடந்தன. தங்கம், வெள்ளி, வைரம், முத்து, பவளம் என செல்வங்கள்
பெருமாள் மறுத்த படியினாலே திருவரங்க வாசிகள் எவரும் தொடாமல் சீந்துவாரற்று கிடந்தது.

• பெருமாள் செல்வங்களை ஏற்றுக்கொண்டது:
“அநந்தரம் அவனுடைய ஆர்த்தியாலேயும் அனுஸரணத்தினாலேயும் ஸபரிகரரான பெருமாள் திருவுள்ளமானவந்தரம்
அந்த த்ரவயயத்தை கருவு கவத்திலே முதலிட்டு பண்ணின கைங்கர்யத்துக்கு…”
[விவரம் – கோயிலொழுகு]
இரண்டு ஆண்டுகள் பின்னர் சுந்தரபாண்டியன் இது பெருமாளின் சொத்துக்கள் என்றும் அவருடையதை அவரே
எடுத்துக்கொள்ள வேண்டியது. தான் இதில் ஏதும் செய்யவில்லை என்று சரண் அடைந்த பிறகு பெருமாள் மனமுவந்து ஏற்றார்.

• சரஸ்வதி பண்டார நூலகம்:
சுந்தர பாண்டியன் திருவரங்கம் கோவில் திருப்பணிகள் செய்ததோடு இல்லாமல் பழங்கால சுவடிகளையும் பாதுகாத்து வந்தார்.
கோவிலில் சரஸ்வதி பண்டார நூலகத்தில் பூர்வாசார்யர்கள் அருளிச்செய்த நூல்களின் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பாக வைத்து
அதற்கு பணியாளர்களை நியமித்து அனைவருக்கும் ஓலைச்சுவடிகள் கிடைக்க ஆவன செய்தார்.
இந்த சரஸ்வதி பண்டாரம் நூலகம் மூன்றாம் திருச்சுற்றில் இருந்தது.
சரஸ்வதி மற்றும் ஹயக்ரீவர் சன்னதிகள் அமைந்துள்ள பவித்ர மண்டபத்திற்கும் பூச்சாற்று உள்கோடை மண்டபத்திற்கும்
இடையில் அமைந்துள்ள நடைமாளிகையில் இடது புறத்தில் அமைத்திருந்தது.

—————

தெற்கே திருமோகூருக்கு அருகில் யானைமலை அடிவாரத்தில் ‘ஜ்யோதிஷ்குடி’ (யா. கொடிக்குளம்) என்ற கிராமத்தில்
பெருமாளையும் நாச்சிமார்களையும் ஒரு குகையில் மறைவாக எழுந்தருளச் செய்து திருவாராதனம் செய்து வந்தனர்.
அக்ஷய வருடம் (கி.பி.1323) ஆனிமாதம் ஜ்யேஷ்ட சுத்த துவாதசியில் 118வது (118 வயதில்) திருநக்ஷத்திரத்தில்
பிள்ளைலோகாச்சாரியார் பரமபத்திற்கு எழுந்தருளினார். அவரது சரமத் திருமேனியை (பூத உடலை) அலங்கரித்து
ஜ்யோதிஷ்குடியில்(யா. கொடிக்குளம்) மலையடிவாரத்தில் திருப்பள்ளிப்படுத்தி திருவரசும் கட்டிவைத்தார்கள்
என்கிற தகவலை கோயிலொழுகின் மூலம் அறிகிறோம்.

பிள்ளை லோகாச்சார்யரின் மறைவுக்குப்பிறகு,
பாதுகாப்பு கருதி’அழகிய மணவாளப்பெருமாள்’ மதுரை அழகர் திருமலையில் (திருமாலிருஞ்சோலை – அஞ்சினான் கோட்டை)
ஒரு வருடம் மலைப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தார். அப்போது அழகர்மலை அழகாபுரிக்கோட்டையை ஆட்சி செய்தவன் ‘
கங்கைகொண்ட சூரியத்தேவன் வாணாதிராயன் காளிங்கராயன்’ எனும் பாணர்குலச் சிற்றரசன் ஆவான்.
அவனது பெரும் உதவியுடன் பிள்ளைலோகாச்சாரியார் சிஷ்யர்கள் அழகியமணவாளரின் திருமஞ்சனம் மற்றும்
திருவாராதனங்களுக்காக ‘அழகியமணவாளன் திருக்கிணறு’ ஒன்றையும் உருவாக்கினார்கள்.
(அழகர்மலையில் நூபுரகங்கைக்குச் செல்லும் வண்டிப்பாதையில் கோயிலின் மேற்கு மதில்சுவருக்கு அருகே இன்றும் அக்கிணறு உள்ளது.)

பிறகு கோழிக்கோடு(கேரளம்), தமிழ்நாடு-கர்நாடகம்-கேரளா மாநிலம் சங்கமிக்கும் இடத்தில் இருக்கும்
திருக்கணாம்பியில் சில காலம், பிறகு மேல்கோட்டை திருநாராயணபுரம் பிறகு திருவேங்கடமலைக் காடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தார்.
பின்பு யாதவராயனால் கி.பி.1360ல் திருமலைக் கோயிலில் கட்டப்பட்ட ரங்க மண்டபத்தில் அழகியமணவாளப்பெருமாள் எழுந்தருளியிருந்தார்.
கிபி. 1336 ஆம் ஆண்டில் ஹரிஹரர் மற்றும் புக்கர் எனும் யாதவ சகோதரர்கள் விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்தார்கள்.
குமார கம்பணன் புக்கரின் மகன் ஆவார். இவர் கிபி 1362 இல் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு
தொண்டை நாட்டை ஆண்ட இராஜநாராயணச் சம்புவராயனுடன் போரிட்டு வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றினார்.
பின்னர் மதுரை சுல்தானகம் மீது படையெடுத்து அங்கு சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்.
கி.பி. 1364 ஆம் ஆண்டளவில் மகமதியர்களின் ஆட்சி நிலை குலையத்தொடங்கி கி.பி. 1378 வரை போராட்டம் நடைபெற்றது.
குமார கம்பண்ணன் கோயில் அறநிலையங்களினைப் பாதுகாப்பதனையும் கடமையாகக் கொண்டு போர் புரிந்து
பல தலைவர்களை பாண்டிய நாட்டின் பொறுப்புகளில் அமர்த்தினான்.
[மதுரை படையெடுப்பின் போது உடனிருந்த இவரது மனைவி கங்கதேவி மதுரை முற்றுகையையும், வெற்றிகளையும்
‘மதுரா விஜயம்’ என்ற தனது சமஸ்கிருத நூலில் பதிவு செய்துள்ளார்]

• 1336 ஆம் ஆண்டு விஜயநகர் சாம்ராஜ்யம் இறைஅருளால் தென்னிந்தியாவில் ஏற்பட்டதைத் தொடர்ந்து,
‘அழகியமணவாளப் பெருமாள்’ திருமலையில் இருந்தபோது செஞ்சியை ஆண்டுகொண்டு இருந்த கோபண்ண உடையார்
திருமலையில் வருகை தந்து அரங்கநாதனை திரிசித்து விட்டு ஸ்ரீரங்கத்தில் திரும்பவும் அவரை எழுந்தருளப்பண்ண சித்தம் கொண்டார்.
அழகியமணவாளப்பெருமாளை செஞ்சிக்கு அருகேயுள்ள ‘சிங்கபுரம்’ என்கிற ஊரில் எழுந்தளுப்பண்ணி
பல காலம் ஆராதித்து வரும் காலத்து ஸ்ரீரங்கத்தில் இருந்து சிங்கபிரானுடைய குமாரர் திருமணத்தூண் நம்பி
(திருமணல்தூண் நம்பி என்றும சில குறிப்புகள் சொல்லுகின்றன) அன்றைய கோவில் அதிகாரியான உத்தம நம்பியை
செஞ்சிக்கு அனுப்பி கோபண்ண உடையாருக்கு கண்ணனூரில் உள்ள துலுக்கன் படை பற்றிய செய்திகளை சொல்லி அதனை வென்று,
கி.பி.1371 பரீதாபி வருஷம் வைகாசி மாசம் 17 ஆம் நாள் அழகியமனவாளனையும் உபய நாச்சிமார்களையும்
ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பித்தான். இதற்கான கல்வெட்டு ஒன்று (A.R.E.No.55 of 1892)
ஸ்ரீரங்கம் கோவிலில் ராஜமகேந்திரன் திருச்சுற்று கிழக்குப்பகுதியில் காணப்படுகிறது.
(கி.பி.1324 முதல் 1370 வரை சுமார் 48வருடம் அழகியமணவாளர் வனவாசம் அல்லது உலா சென்றார்)

அழகியமணவாளப்பெருமாள் திருவரங்கத்திற்கு எழுந்தருளுவதற்கு முன்பு கொள்ளிடக்கரையின் வடகரையில்
‘அழகியமணவாளம்’ எனும் கிராமத்தில் தங்கியிருந்து, பிறகு கி.பி.1371 பரீதாபி வருஷம் வைகாசி மாசம் 17 ஆம் நாளில் திருவரங்கம் வந்தார்.
மூன்றாம் திருச்சுற்றில் சேரனை வென்றான் மண்டபத்தில் எழுந்தருள பண்ணப்பட்டனர். 48 வருடமாகியதால் இவர் தான்
அழகியமணவாளனா? என்று திருவரங்க மக்கள் சந்தேகமுற்றனர். ஈரங்கொல்லி எனப்படும் ஒரு வண்ணானால் உண்மை அறியப்பட்டது.
அந்த வண்ணானால் திருவரங்கம் அழகிய மணவாளப்பெருமாளுக்கு சூட்டப்பட்ட திருநாமமே “நம்பெருமாள்” என்பதாகும்.
கி.பி.1371 ம் ஆண்டு தொடங்கி அழகிய மணவாளனுக்கு நம்பெருமாள் என்ற திருநாமமே வழங்கப்பட்டு வருகிறது.

——————

விஜயநகரப் பேரரசு கி.பி.1336 ஆம் ஆண்டில் சங்கம மரபைச் சேர்ந்த முதலாம் ‘ஹரிஹரர்’ மற்றும் ‘முதலாம் புக்கராயர்’
ஆகியோரால் நிறுவப்பட்டது. இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது.
இந்திய வரலாற்றில் ‘விஜயநகர பேரரசு ஒரு முக்கிய இடம்’ கொண்டுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.
விஜயநகர பேரரசு உண்மையில் பார்த்தால் ஒரே மன்னர் வம்சம் கிடையாது,
அது 1336 – 1485 வரை சங்கம வம்சம், 1485-1491 வரை சாலுவ வம்சம், 1491-1542 வரை துளுவ வம்சம்
மற்றும் 1542 – 1646 வரை ஆரவிடு வம்சம் என 4 வம்சங்களால், சுமார் 310 வருடங்கள் விஜயநகரத்தை தலைநகரமாக கொண்டு ஆளப்பட்டது.
இப்பேரரசின் அழிபாடுகள் இன்றைய கர்நாடகத்தில் உள்ள ‘ஹம்பி’யைச் சுற்றிலும் காணப்படுகின்றன.

கிருஷ்ண தேவராயரின் ஆமுக்த மால்யதா, கங்காதேவி எழுதிய மதுராவிஜயம், அல்லசானி பெத்தண்ணாவின் மனுசரிதம்
போன்ற பல விஜயநகர சமகால இலக்கிய நூல்களில் இருந்து விஜயநகர பேரரசின் வரலாறு பற்றிய பல முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன.

ஸ்ரீரங்க அழகியமணவாளன் திருவேங்கடமலையில் ரங்கமண்டபத்தில் இருந்தபோது செஞ்சியை ஆண்டு கொண்டு இருந்த
கோபண்ண உடையார் திருமலைக்கு வருகை தந்து அழகியமணவாளனனை தரிசித்து விட்டு
திருவரங்கத்தில் திரும்பவும் அவரை எழுந்தருளப்பண்ணச் சித்தம் கொண்டு அவரது பெரு முயற்சியால்
அழகியமணவாளனையும் உபய நாச்சிமார்களையும் ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பித்தான்
அப்போது (கி.பி. 1371 பரீதாபி ஆண்டு வைகாசி 17ஆம் நாள்) தற்போதைய பவித்ரோத்ஸவ மண்டபத்தில் தான்
அழகியமணவாளன் எழுந்தருளியிருந்தார்.
திருவரங்க மாளிகையாரும் அப்போது எழுந்தருளியிருந்ததால், யார் உண்மையான ‘அழகியமணவாளன்’ என்பதைத்
தெள்ளத் தெளிவாக அங்கு கூடியிருந்தோரால் அறுதியிட இயலவில்லை.
கி.பி.1323ஆம் ஆண்டு நடந்த படையெடுப்பின் போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதால் 1371ஆம் ஆண்டில் 48 வருடத்திற்கு முன்
நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூறுவார் யாருமில்லை. அப்போது வயது முதிர்ந்த கண்பார்வையற்ற ஈரங்கொல்லி
ஒருவன் (வண்ணான்) அழகிய மணவாளனின் திருமஞ்சனம் செய்த பிறகு அழகியமணவாளன் உடுத்தியிருந்த
கைலியைப் பிழிந்து பிரஸாதமாகக் கொடுக்கப்படும் புனிதநீரை
(ஈரவாடை தீர்த்தம்) சுவைத்து முன்பு எழுந்தருளியிருந்த அழகிய மணவாளனே “நம்பெருமாள்” ஆவார் என்று உறுதி செய்தார்.
அவன் இட்ட “நம்பெருமாள்” என்ற பெயரே இன்றுவரை வழங்குகிறது

நம்பெருமாள் (கி.பி.1371ல்) ஆஸ்தானம் எழுந்தருளிய போது மூலஸ்தானம் முழுதுமாக பாழ்பட்டு கிடந்தது.
வெயிலிலும் மழையிலும் மூலவர் ரங்கநாதர் காய்ந்தும் நினைந்தும் கிடந்திருக்கின்றார். ஆதிசேஷனின்
சேஷபடம் அவரது திருமுகத்தினை மட்டும் பாதுகாத்தபடியிருந்திருக்கின்றது.
சுந்தரபாண்டியனால் வேயப்பட்ட தங்கவிமானம், தங்கத்தினால் ஆனக் கொடிக்கம்பம், தங்கத்தினால்
செய்த சேரகுலவல்லி, அணிகலன்கள், சிம்மாசனங்கள் அனைத்தும் சுத்தமாக கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இந்த சமயத்தில் உத்தமநம்பி வம்சத்தரான ‘கிருஷ்ணராய உத்தமநம்பி’ செய்த கைங்கர்யங்கள் முக்யத்துவமானது. மகத்தானது.
இவர் வீரகம்பண்ண உடையாரையும், அவரது உறவினரான விருப்பண உடையாரையும் விஜயநகரம் சென்று
ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வந்துள்ளார். கம்பண்ணரும், விருப்பண்ண உடையாரும் திருவிடையாட்டமாக
பல கிராமங்களை கோவிலுக்கென்று அர்ப்பணித்து திருப்பணி வேலைகளை மேற்கொள்கின்றனர்.
கோவிலின் ஸ்தலத்தார்களும், உத்தமநம்பிகளும், கோவிலார்களும் வெகுவாக அரசர்களுடன் சேர்ந்து பாடுபட்டு
ஸ்ரீரங்கத்தினை புனர்நிர்மாணம் செய்கின்றனர்.

சித்திரையில் விருப்பண உடையார், கோவிலின் நிதிநிலைமையை சீர்செய்யும் பொருட்டும், கோவிலில் ஆராதனைகள் சீராக
நடைபெறுவதற்கு தானியங்களை பெருக்குவதற்கும் அருகிலுள்ள அனைத்து கிராம மக்களையும் அரவணைத்து அன்போடு அழைத்து,
அரங்கனுக்கு ஒரு தேரோட்டத்துடன் ‘பிரம்மோற்சவம்’ ஒன்றை கொண்டாடுகின்றார்.
கிராமத்து மக்கள் அனைவரும் தாங்கள் விளைநிலங்களில் விளைந்த தானியங்களை அரங்கனுக்குக் காணிக்கையாக்கி உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
அரங்கனது நித்யபடி பூஜைகளுக்குக் குறைவின்றி தானியங்கள் குவிந்தன.
அன்று தொடங்கிய இவ்விழா இன்றும் அன்று போன்றே குறைவற நடந்து வருகின்றது.
இந்த விழாவிற்கு ‘விருப்பண் திருநாள்” என்று பெயர்.
(விஜயநகர பேரரசின் சங்கமகுல மன்னன் இரண்டாம் ஹரிஹரன், அவருடைய புதல்வரான விருப்பண்ண உடையார்
பெயரில் கி.பி.1383ல் ஏற்படுத்தப்பட்டத் திருவிழா சித்திரை பிரம்மோத்ஸ்வம் ஆகும்.)

இதில் கோபண்ணவுடையாருடன் வந்த ‘குண்டு சாளுவயர்’ அணியரங்கன் திருமுற்றத்திலே பாண்டியன் கைங்கர்யமான
பொன்னாலான ‘திருக்கொடித்தட்டு’ (த்வஜஸ்தம்பம்-கொடிமரம்) துலுக்கனழித்ததால் வெண்கல வார்ப்பாகத்
திருக்கொடித்தட்டு பண்ணி நாட்டுவித்தார். (தற்போது அந்த வெண்கல கொடிமரத்திற்கு பொற்கவசம் பூட்டியுள்ளனர்).
அதன் அருகே கிழக்கே பெரிய கிருஷ்ணராய உத்தமநம்பி, ஹரிஹரராயரின் குமாரர் உத்தரவுப்படி துலாபுருஷ மண்டமும் கட்டி வைத்தனர்.
அந்த ராயர் குமாரர் விருப்பண்ண உடையாரும் வந்து, “துலாபுருஷங்கட்டி தாரைவார்க்கையில்,
பொன்னும், குட்டிக்கோயில் விமானமும் பொன் மேய்ந்து, இந்த ராயர் காணிக்கை இரண்டு பொற்குடம் உள்பட
ஒன்பது பொற்குடமும் வைப்பித்து, பெருமாள் பஹுநாளைக்காக எழுந்தருளினபடியாலே நாநாதேசத்திலும் வந்த,
பரிஜனங்களுக்கு ஸேவிக்கும்படி, விருப்பண்ண உடையார் பேரிலே சித்திரைத்திருநாள் த்வாஜாரோஹணத் திருநாள் நடத்துகையில்….”
என்று விருப்பண்ண உடையார் கைங்கர்யம் பற்றி கோயிலொழுகு விவரிக்கிறது.

கிருஷ்ணதேவராயர் (கி.பி.1509 – 1529) ஆட்சி:-
ஸ்ரீகிருஷ்ணதேவராயனின், தந்தை நரச நாயகன், உண்மையில் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாய் கொண்டவர் இல்லை,
கர்நாடகத்தில்(தற்போதைய கூர்க்) துளு என்ற மொழியை தாய்மொழியாய் கொண்டவர்,
அவர் தலைமை தளபதியாக வேலை பார்த்த கடைசி சாலுவ வம்ச மன்னனான நரசிம்ம ராயனுக்கு வாரிசு இல்லாத காரணத்தால் மன்னன் ஆனார்.
கிருஷ்ணதேவராயர் இந்து வீரர்களுடன், முஸ்லீம் படைவீரர்களையும் தனது படைதுறைகளில் சேர்த்து வளுவான படையணிகளை உருவாக்கினார்.
பத்தாண்டுகளில் தன் போர்த் திறமையால் வடக்கில் இருந்த தக்காணச் சுல்தான்களின் ஆக்கிரமிப்புகளை வென்றார்.
கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக் காலத்தில் விஜயநகரப் பேரரசு நாற்புறங்களிலும் விரிவாக்கப்பட்டு, புகழின் உச்சத்தில் இருந்தது.
தக்காண சுல்தான்களின் வடக்கு, கிழக்குப் பகுதிகளையும் மற்றும் கலிங்க நாட்டையும் கைப்பற்றி விஜயநகரப் பேரரசில் இணைத்தார்.
கி.பி.1520ல் நடைபெற்ற ராய்ச்சூர் போரில் கிருஷ்ணதேவராயர், பீஜாப்பூர் சுல்தானகத்தை வெற்றி கொண்டார்.
போரின் முடிவில் பிஜப்பூர் சுல்தான் கிருஷ்ண நதியின் அப்பாலுக்கு விரட்டியடிக்கப்பட்டார்.
ராயர் மிகுந்த இறை நம்பிக்கை உடையவராகவும் இருந்தார் .

இன்றைய ஆந்திராவில் உள்ள திருவேங்கடமலைக்கு (திருப்பதி ) சென்று, தங்கம் வைடுரியங்களால் ஆன பொருட்களை தானமாக வழங்கினான்.
மேலும் திருப்பதி கோயிலுக்கு பல தானங்கள் செய்து, கடைசியாக, தன் இரு பட்டத்து ராணிகளுடன் தன் சிலையையும்
(சென்னாதேவி, திருமலாதேவி) சேர்த்து மூன்று பேரும் அங்கு வேங்கடவனை நோக்கி வணங்குவது போல சிலைகளைச் செய்து வைத்தான்.
இன்றும் திருவேங்கடமலையில் சென்றால் இவர்கள் மூவரின் வெண்கல சிலைகனை பார்க்கலாம்.
கிருஷ்ணதேவராயர் தாம் வைணவராக இருந்தபோதிலும் அனைத்து சமயங்களையும் மதித்து நடந்தார்.
கலை இலக்கியப் புரவலராகவும் அவர் திகழ்ந்தார். எனவே ‘ஆந்திரபோஜர்’ என்று அவர் அழைக்கப்பட்டார்.

•அஷ்டதிக்கஜங்கள் என்ற எட்டு சிறந்த அறிஞர்கள் அவரது அவையை அலங்கரித்தனர்.
அவர்களின் முதன்மையானவர் அல்லசானி பெத்தண்ணா. ஆந்திரகவிதாபிதாமகர் என்று அவர் புகழப்பட்டார்.
அவரது முக்கிய படைப்புகள் மனுசரிதம் மற்றும் ஹரிகதாசாரம் என்பதாகும். பிங்கலி சூரண்ணா, தெனாலி ராமகிருஷ்ணா இருவரும்
சிறந்த அறிஞர்களாகத்திகழ்ந்தனர். ஆமுக்தமால்யதம் என்ற தெலுங்கு மொழி நூலையும், ஜாம்பவதி கல்யாணம், உஷாபரிணயம் என்ற வடமொழி நூல்களையும் கிருஷ்ண தேவராயர் இயற்றியுள்ளார்.
• ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் மீது மிகுந்த ஈடுபாடு உடைய ராயர் ஆண்டாளை மையக்கருவாகக் கொண்டு
“ஆமுக்த மால்யதா’ என்ற நுலை எழுதினார். இந்த நூல் தெலுங்கு இலக்கிய உலகில் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாக கருதப் படுகிறது.

•ஸ்ரீகிருஷ்ணதேவராயர் திருவரங்கம் பெரியகோயிலுக்கு சக ஆண்டு 1438 (கி.பி.16-02-1517) தாது வருஷம் மாசி மாதம் 11ம் நாள்
திங்கட்கிழமை வருகை தந்து, அன்றே பல விலையுயயர்ந்த ஆபரணங்களையும், நவரத்னங்களையும் திருக்கோயிலுக்கு நன்கொடையாகவும்,
சில கிராமங்களைத் தானமாகவும் தந்தது பற்றிய தெலுங்கு மொழிக் கல்வெட்டு
(A.R.E.No.341 of 1950-51 – இரண்டாம் திருச்சுற்று மேற்குப் பக்கச் சுவர் அடித்தளப்பகுதியில்) கூறுகிறது.
மேலும் இவரது பெயரால் மாசி மாதம் தேரோட்டத்துடன் கூடிய ‘மாசி பிரம்மோத்ஸவம்’ நடைபெற்றதாக இரு தமிழ் கல்வெட்டுக்களின்
(A.R.E.No.42 of 1938-39)(A.R.E.No.265 of 1930) மூலம் அறியமுடிகிறது.
தற்போது மாசி தெப்போத்ஸவம் மட்டுமே நடைபெறுகிறது

மாபெரும் விஜயநகரத்தை கட்டமைத்து ஒட்டுமொத்தத தென்னிந்தியாவையே ஆட்சி செய்த
ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் இடம் வரலாற்றில் சிறப்பானது மட்டும் அல்ல, தனித்துவமானதும் கூட!. திருவரங்கம் பெரியகோயிலில்
ஸ்ரீகிருஷ்ணதேவராயர் காலத்தைய 34 கல்வெட்டுக்கள் உள்ளன. ஸ்ரீகிருஷ்ணதேவராயரால் இயற்றப்பட்ட ‘ஞானசிந்தாமணி’யைப்
பெரியபெருமாள் கேட்டுமகிழும் வண்ணம் அதைப் படிப்பதற்காக பண்டிதர்களை நியமித்து அதற்காக
ஸ்ரீபண்டாரத்தில் (கோயிற் கருவூலம்) 105 பொன் செலுத்தியது பற்றிய கல்வெட்டு
(இரண்டாம் திருச்சுற்று மேற்குத் தாழ்வரை பகுதி – A.R.E.No 295 of 1950-52) கூறுகிறது.

விஜயநகருக்கு கட்டுப்பட்டு செஞ்சி, காளஹஸ்தி, தஞ்சாவூர், மதுரை ஆகிய நகரங்களை தலைநகராக் கொண்டு
‘நாயக்கர் ஆட்சி’ தமிழகத்தில் ஏற்பட்டது.
• தஞ்சையில் கி.பி. 1532-இல் நாயக்கர் ஆட்சி தொடங்கியது;
• செஞ்சியில் கி.பி. 1526-இல் தொடங்கியது;
• மதுரையில் கி.பி. 1529-இல் தொடங்கியது.
• இதில் மதுரை நாயக்கர்களே நீண்ட காலம் ஆட்சி செய்தவர்கள். 1529-ஆம் ஆண்டு தொடங்கி கி.பி. 1736-ஆம் ஆண்டு வரை
(மதுரையில் மட்டும் 207 ஆண்டுகள்) இவர்கள் ஆட்சி நிலவியது.

•• முதல் ஐந்து மதுரை நாயக்கர்களும் விஜயநகரப்பேரரசுக்கு விசுவாசமாக அதற்கு அடங்கியே இருந்தார்கள்.
ஆறாவதாக 1609 தொடக்கம் 1623 வரை மதுரையை ஆண்ட நாயக்கரான முத்துவீரப்ப நாயக்கர்,
அக்காலத்தில் வலுவிழந்திருந்த விஜயநகரத்துக்குத் திறை கொடுப்பதை நிறுத்திக்கொண்டார்.
இவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர் காலம் “மதுரை நாயக்கர்களின் பொற்காலம்” எனலாம்.
திருமலை நாயக்கருக்குப் பின்னர் இவ்வம்சத்தைச் சேர்ந்த மேலும் அறுவர் ஆட்சி செய்தனர்.
இவர்களுள் ‘இராணி மங்கம்மாள்’ குறிப்பிடத்தக்கவர்.
இறுதியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் இராணி மீனாட்சி. 1732 இல் நாயக்க மன்னர் ‘விஜயரங்க சொக்கநாத நாயக்கர்’
வாரிசு இல்லாமல் இறந்தபோது அவனது மனைவி மீனாட்சிக்கு ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது.
எனினும் அரசுரிமைப் போட்டியில் அவருக்கு உதவி செய்யும் சாக்கில் தலையிட்ட கர்நாடக நவாப்பின் மருமகனான
‘சந்தா சாகிப்’ அவரை சிறைப்பிடித்து மதுரை அரசையும் கைக்கொண்டார்.
இதன் மூலம் ‘மதுரை நாயக்கர் வம்சம்’ ஒரு முடிவுக்கு வந்தது

——————-

திருமலை நாயக்கர் ஆட்சி:- (கி.பி.1623-1659):-
மதுரை நாயக்க மன்னர்களில் மிகவும் புகழ்பெற்ற திருமலை நாயக்கர்
முத்துக் கிருஷ்ணப்பருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் ஆவார்.
திருமலை நாயக்கரின் முழுப்பெயர் “திருமலை சவுரி நாயுனு அய்யுலுகாரு” என்பதாகும்.
• ஏழாவதாக பட்டத்துக்கு வந்த திருமலை நாயக்கருக்கு முன்னாலும் அறுவர்; பின்னாலும் அறுவர்
ஆட்சி செய்தபோதிலும் “நாயக்கர் வம்சம்” என்றாலே நமக்கு நினைவுக்கு வருகிறவர் திருமலை நாயக்கர் மட்டும் தான்

|| மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள் பட்டியல் ||
• 1. விசுவநாத நாயக்கர்
(கி.பி.1529 – 1564)
• 2.முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1564 – 1572)
• 3. வீரப்ப நாயக்கர் (கி.பி.1572 – 1595)
• 4. இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி1595 – 1601)
• 5.முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் [இரண்டாம்கிருஷ்ணப்ப நாயக்கரின் சகோதரர்
விசுவப்ப நாயக்கரின் மகன்] (கி.பி.1601 – 1609)
• 6. முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் [முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் மூத்த மகன்]
(கி.பி. 1609 – 1623)

• 7. திருமலை நாயக்கர் (கி.பி.1623 – 1659)
• 8. இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் (கி.பி.1659 )
• 9. சொக்கநாத நாயக்கர் [இராணிமங்கம்மாள் கணவர்] (கி.பி.1659 – 1682)
•10.அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் (கி.பி.1682 – 1689 )
•11.இராணி மங்கம்மாள் [சொக்கநாதரின்
மனைவி] (கி.பி.1689 – 1706)
•12.விஜயரங்க சொக்கநாத நாயக்கர் [சொக்கநாதரின் மகன்]
(கி.பி.1706 – 1732 )
•13.இராணி மீனாட்சி [விஜயரங்கநாதரின் மனைவி] (கி.பி.1732 – 1736 ) ஆகியோர்கள் ஆவார்கள்.

———

•மதுரை நாயக்க ஆட்சியில் ஏழாவது மன்னரான புகழ்பெற்ற திருமலைநாயக்க மன்னர் (கி.பி.1623-1659) ஆட்சியை
ஏற்றபோது அவருக்கு வயது 39 இருக்கும் என்பர்.
திருமலை நாயக்கரின் காலத்தில் மதுரைப் பெருநாடு, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி,
திருவனந்தபுரத்தில் ஒரு பகுதி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர்
ஆகிய பகுதிகளைக் கொண்ட பெரும் பரப்புடைய நாடாய் இருந்தது.
தன் ஒப்பற்ற கலை ஆர்வத்தால் மதுரை நகரைக் கலையழகு கொஞ்சும் நகரம் ஆக்கினார்.
நூற்றுக்கணக்கான கோயில்களை புதுப்பித்துக் கட்டி பெரும் கோபுரங்களை எழுப்பியிருக்கிறார்.
சரிந்த தொப்பையும் கூப்பிய கரங்களுமாக திருமலைநாயக்கர்
தன் இரு ராணிகளுடன் இவரது திருப்பணி பெற்ற திருக்கோயில்களில் நிற்கக் காணலாம்.

————–

திருமலை நாயக்கரின் கலைப் பணிகள்:-
திருமலை நாயக்கர் ஒரு தலைசிறந்த “கலாரசிகர்” ஆவார்.
மதுரையில் அவர் எழுப்பியுள்ள கட்டடங்கள் இன்றும் நின்று அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.
“திருமலை நாயக்கர் மஹால்” இவர் கட்டிய கட்டடங்களுள் புகழ்பெற்றதும், பெரியதுமாகும்.
“தென்னிந்தியாவின் தாஜ்மஹால்” என வரலாற்று ஆய்வாளர்களால் நாயக்கரின் மஹால் போற்றப்படுலது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இம்மஹாலில் உள்ள மிகப் பெரிய தூண்கள் காண்போர் கண்ணைப் பறிப்பனவாகும்.
ஒவ்வொரு தூணும் சுமார் 40 அடி உயரமும், மூவர் அல்லது நால்வர் சேர்ந்தணைத்தாலும் அணைக்க முடியாத அளவு
பருமனும் கொண்டு விளங்குவதை, அம்மஹாலின் முற்றத்தில் இன்றும் காணலாம்.
இந்து, இஸ்லாமிய கட்டிடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த ‘இந்தோ சரசனிக் பாணி’ என அழைக்கப்படும்
கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப் பட்ட இந்த நாயக்கர் அரண்மனை, 58 அடி உயரம் கொண்டது. 248 பிரமாண்டமான
பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன
இந்த அரண்மனை இரண்டு பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது.
ஒன்று ‘சொர்க்க விலாசம்’ என்றும், மற்றொன்று ‘ரங்க விலாசம்’ என்றும் அழைக்கப்பட்டது.
சொர்க்க விலாசத்தில், திருமலை நாயக்கரும், ரங்கவிலாசத்தில் அவரது தம்பி முத்தியாலு நாயக்கரும் வசித்து வந்துள்ளனர்.

அந்த ரங்க விலாசத்தின் தூண்கள் தான் தற்போதுள்ள ‘பத்துத் தூண்கள்’ ஆகும்.
ரங்க விலாசத்தின் மற்றைய பகுதிகள் மறைந்துவிட்டன.
[திருவரங்கம் பெரியகோயிலில் ‘ஸ்ரீரங்கவிலாசம்’ என்ற மண்டபம் முதலில் நம்மை வரவேற்கிறது.]

——————

திருமலை மன்னர் காலத்தில் ‘பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்’
(அழகிய மணவாளதாசர் எனவும் ‘திவ்வியகவி’ என்ற பெயராலும் இவரை அழைத்தனர்) இயற்றிய
எட்டு நூல்களின் தொகுதியை அஷ்டபிரபந்தம் குறிப்பிடத்தக்க இலக்கியமாகும்..
(“அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன் ஆவான்” என்பது தமிழறிஞர்கள் கூறுவர்.)
திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்த இவர் பின்னர்
இறைத்தொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
அஷ்டபிரபந்தம் என எட்டு சிற்றிலக்கியங்களை இயற்றிய இவர் இருமொழி புலமைப் பெற்றவர்.
நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்குப் பிறகு வைணவ சமயச் சார்பாக எழுந்த இத்தொகுதியைத் “திவ்விய பிரந்த சாரம்” எனக் கூறுவர்.
சொல்லணிகளான யமகம், திரிபு, சிலேடை முதலியவை இதில் சிறந்து விளங்குகின்றன.
• அஷ்ட பிரபந்தங்கள்
1.திருவரங்கக் கலம்பகம்
2.திருவரங்கத்து மாலை
3.திருவரங்கத்து திருவந்தாதி
4.சீரங்கநாயகர் ஊசல்
5.திருவேங்கட மாலை
6.திருவேங்கடத்தந்தாதி
7.அழகர் அந்தாதி
8.நூற்றெட்டுத் திருபதி அந்தாதி.
இந்த எட்டுநூல்களும், ‘அஷ்டப்பிரபந்தம்’ எனவும், ‘ஐயங்கார் பிரபந்தம்’ எனவும் வழங்கப்பட்டன.

இதில் முதல் நான்கு நூல்கள் ‘திருவரங்கம் பெரியகோயில்’ புகழ் பாடும் நூல்களாகும்.
இவர் திருவேங்கடமாலை முதலிய நூல்க ளியற்றியதைக் குறித்து ஒருசாரார் வழங்குவதொரு கதை பின் வருமாறு:-
இவர் ஸ்ரீரங்கநாதனுக்கே தொண்டராகி அப்பெரியபெருமானையன்றிப் பிறிதொரு தெய்வத்தை மறந்துந் தொழாத மனவுறுதியுடையவராய்,
அப்பெரியபெருமாள் விஷயமாகவே அந்தாதியும் மாலையும் கலம்பகமும் ஊசலும் பாடியபொழுது,
திருவேங்கடமுடையான் இவர் வாயால் தாம் பிரபந்தம் பாடப்பெற விரும்பித் தமது உண்மை வடிவத்துடன் இவரது கனவில் தோன்றி
‘நம் வேங்கடத்தின் விஷயமாகச் சில பிரபந்தம் பாடுக!’ என்று கட்டளையிட,
இவர் அதற்கு இணங்காமல் “அரங்கனைப் பாடிய வாயாற் குரங்கனைப் பாடேன்!” என்றுகூறி மறுக்க,

திருவேங்கடமுடையான் எங்ஙனமாவது இவர்வாயாற் பாடல்பெற அவாக் கொண்டதுமன்றி,
எல்லாத் திருப்பதிகளிலும் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் ஒருவனே யென்று இவர்க்குத் தெரிவித்து
இவர் கொண்டுள்ள பேதபுத்தியை அகற்றவுங் கருதியதனால், இவர்க்கு உடனே கண்டமாலையென்னுங் கொடியநோய் உண்டாகும்படி செய்ய,
அந்த வியாதியால் மிகவருந்திய இவர் அதன் காரணத்தை உணர்ந்து கொண்டு அப்பெருமான் பக்கல் தாம் அபசாரப்பட்ட அபராதம் தீருமாறு
உடனே ‘திருவேங்கடமாலை’, ‘திருவேங்கடத்தந்தாதி’ என்னும் பிரபந்தங்களை இயற்றி அப்பெருமானைத் துதிக்க,

அது பற்றித் திருவுள்ளமுவந்த திருவேங்கடமுடையான் உடனே இவரெதிரில் எழுந்தருளிக் காட்சிதந்து அநுக்கிரகிக்க,
அதனால் இவர் அப்பொழுதே அந்நோய் நீங்கப் பெற்றவராகி,
பின்பு, அவ்வடமலைக்கு ஈடான தென்மலையின் விஷயமாக ‘அழகரந்தாதி’ பாடி,
அப்பால் தமது பேதபுத்தி யொழிந்தமை நன்கு விளங்க ‘நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி’ பாடினார் என்பர்.

• திருவேங்கடமுடையான் [ஸ்ரீநிவாசன்] ஐயங்கார்க்குச் சேவைசாதித்த இடம் –
திருவரங்கம் பெரியகோயிலில் சலவைக்கல் மண்டபப்பிராகாரமென்கிற உட்பிரகாரத்தில் தென்கிழக்குப்பக்கத்தில் என்பர்.
(அதாவது ராஜமகேந்திரன் திருச்சுற்றின் தென்கிழக்கு பகுதியில் தற்போது உள்ள திருவேங்கடமுடையான் சித்திரம் அருகாமையில் என்பர்.)

——————-

திருவரங்கம் ஸ்ரீவைஷ்ணவர்களிடையே 17ம் நூற்றாண்டில் தென்கலை வடகலை பிரிவுகளின் முரண்பட்ட சச்சரவுகள் நிகழ்ந்தன.
‘ஸ்ரீரங்கம் கோயில் தென்கலையாருக்கே உரிய கோயில்’ என்பதை நிலைநாட்ட போராடிய நிகழ்ச்சி
திருமலை நாயக்கர் திருச்சியில் இருந்த போது நடந்தது.
திருமலை சௌரி மன்னர் திருச்சியிலிருந்த போது தீவிரமான ஸ்ரீவைஷ்ணவ சமயத்தை பின்பற்றியவராக
‘பிரணதார்த்திஹர வாதூல தேசிகரான கோயிலண்ணர்’ எனும் ஆச்சார்யன் திருவடி சம்பந்தம் பெற்றிருந்தார்.
கி.பி. 1630 ஆம் ஆண்டு விஜயநகர அரசரான மூன்றாம் வேங்கவனுடைய (கி.பி 1630-42) குலகுருவான
‘ஏட்டூர் திருமலை குமார தாத்தாச்சார்யர்’ (அல்லது) கோடிகன்யாதானம் தாத்தாச்சார்யர், திருமலை வேங்கத்துறைவனை வழிபட்டு,
ஆனந்த நிலையம் விமானத்திற்கு பழுது பார்த்து பொன்வேய்ந்து திருப்பணி செய்து, காஞ்சி வரதராசரையும் வழிபட்டு
மேற்படி திருப்பணிகளையே செய்த பிறகு திருவரங்கம் நோக்கி வந்தார்.
விஜயநகர மன்னரான மூன்றாம் வேங்கடவன் திருவரங்கம் பெரியகோயிலுக்கு ‘கோடிகன்யாதானம் தாத்தாச்சார்யர்’ வருவதற்கு
முன்பே திருமலை மன்னருக்கு குருவின் வருகையை தூதனுப்பி தெரிவித்து விட்டார்.
அக்காலகட்டத்தில் திருவரங்கத்தில் பட்டர் திருமலாசார்யர்,உத்தம நம்பி, அண்ணங்கார் ஆகியோரிடையே நிலவி வந்த
பகைமை உணர்ச்சி வலுத்திருந்தது. இதற்கான காரணத்தை கோயிலொழுகு (முதற்பாகம்) இறுதியில் கூறுகிறது

“உத்தமநம்பிக்கும் பட்டர் திருமலாசார்யருக்கும் உண்டாற கலஹம்” எனும் பகுதியில் உள்ளது.
தனது குருவான அண்ணங்காரைச் சந்தித்த திருமலை சௌரி (கோயிலொழுகு நாயக்கரை அவ்வாறே கூறுகிறது)
விஜயநகர மன்னரின் விருப்பப்படி, திருவரங்கம் வருகை தரும் தாத்தாச்சார்யருக்கு தகுந்த மரியாதைகளை அளித்திடுமாறு வேண்டிக் கொண்டான்.
வடகலையாரான தாத்தாச்சாரியாருக்கு தென்கலையாருக்குரிய கோயில் மரியாதைகளை அளிப்பதற்கு அண்ணங்கார் உடன்படவில்லை.
சிஷ்யரான தன்னுடைய. இந்த வேண்டுகோளை ஏற்காவிட்டால் அண்ணங்கார் பல ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும்
என்று அச்சுறுத்திய போதிலும், அவர் மன்னனுடைய விருப்பத்திற்கு இணங்கவில்லை.
திருவரங்த்தில் நிலவியிருந்த சூழ்நிலையை தாத்தாச்சார்யருக்கு தெரியப்படுத்தினான்.

இதனால் சினங்கொண்ட தாத்தாச்சார்யர் மன்னரிடம் ” காஞ்சிபுரத்தில் தென்கலையார்கள் ஒன்றுகூடி
இத்தகைய இடர்பாடுகளைச் செய்யமுனைந்தனர். அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை.நீ மன்னனாக இருக்க தகுதியற்றவன்.
இதுபற்றி நான் விஜயநகர பேரரசரிடம் தெரிவிக்கப்போகிறேன்” என்று கோபத்துடன் கூறினார்.
திட்டமிட்ட படி வந்த தாத்தாச்சார்யரை ஸ்தலத்தார்கள் யாரும் மரியாதை தரவில்லை.
திருவரங்கம் ப்ரணவாகார விமானத்திற்குப் பொன் வேய்வதற்காக கொண்டு வந்த தங்கத்தினை, ‘திருமாலிருஞ்சோலை’
சோமச்சந்த விமானத்திற்குப் பொன் வேய்ந்து விட்டு, தாத்தாச்சார்யர் வடநாட்டு யாத்திரையை மேற்க்கொண்டார்.
விஜயநகரபேரரசன் தன் குருவுக்கு நேர்ந்த அவமானத்தை அறிந்து, பின்னர் கிருஷ்ணராயர், விட்டலராயர் ஆகியோரை
திருவரங்கத்திற்கு அனுப்பி வைத்து நடந்த நிகழ்ச்சிகளை உள்ளபடி ஆராய்ந்து தேவைப்பட்டால்
திருமலை சௌரி நாயக்கனின் தலையைக் கொய்து தனக்கு அனுப்பி வைத்திடுமாறு பணித்தான்.

திருமலை சௌரி குற்றமற்றவர் என்பதை அவர்கள் தீரவிசாரித்து அறிந்து விஜயநகர பேரசனுக்கு தெரியப்படுத்தினர்.
திருமலை சௌரியும் விஜயநகர மன்னருக்குத் தங்கத்தாலான தனது தலையையும், பல்லாயிரம் பொற்காசுகளையும் காணிக்கையாக அனுப்பி வைத்தாராம்.
தனது கோரிக்கையை ஏற்காத ஸ்ரீரங்கத்து ஸ்தலத்தார்களில் ஒருவரான
தனது குரு ப்ரணதார்த்திஹர வாதூல தேசிகர் (அண்ணங்கார்) மீது வெறுப்பு மேலிட்டது.
இதன் விளைவாக அவருடன் ஏற்பட்டிருந்த ஆச்சார்ய சிஷ்ய உறவை அறுத்துக் கொண்டு
‘திருவானைக்காவல்’ ஸ்தலத்தில் இருந்த “அய்யங்காள் ஐயன்” என்ற சைவரிடம் தீட்சை பெற்றுக் கொண்டார்.
பிறகே தனது தலைநகரை மதுரைக்கு மாற்றினார் என்கிறவாறு கோயிலொழுகு கூறுகிறது.

———————-

• திருவரங்கம் பெரியகோயிலில் திருமலை நாயக்கர் காலத்தில்
திருமலை மன்னன் பெயரிலோ அல்லது விஜயநகரமன்னர் பெயரிலோ எந்தக் கல்வெட்டும் பொறிக்கப்படவில்லை.
மாறாக மண்டலாதிகாரிகள், சேனைத்தலைவர்கள், தனிகர்கள் ஆகியோருடைய பெயர்களில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

விஜயரங்க சொக்கநாத நாயக்கர்(கி.பி.1706-31)ஆட்சிக் காலம் :-
உரிய பருவம் அடைந்த பின் விஜயரங்கசொக்கநாத நாயக்கன் (கி.பி 1706ல்) மதுரை நாயக்க மன்னனாக முடிசூட்டிக்கொண்டான்.
இவனுடைய காலத்திலேயே மதுரை நாயக்கர் ஆட்சி சரிவை நோக்கிச் சென்றது.
அரசாள்வதில் நாட்டமில்லாத இந்த நாயக்க மன்னன் அரசாளும் பொறுப்பினை தன்னுடைய மந்திரிகளிடமும் விட்டு வைத்திருந்தான்.
இதனால் நாட்டில் பல முறைகேடுகள் தொடங்கின.
பல முறை பல தலங்களுக்கு தீர்த்தயாத்திரைகளும் சென்றான். இவன் ஸ்ரீரங்கம் கோயிலை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டான்.
இவனுடைய ஆட்சியில் கி.பி.1710 -1720 ம் ஆண்டுகளில் நாட்டில் பஞ்சம் நிலவியதால் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாயினர்.
இயல்,இசை,நாடகம் ஆகிய மூன்று துறைகளிலும் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் புலமை பெற்றிருந்தார்.
இவர் தெலுங்கு மொழியில் “ஸ்ரீரங்க மாஹாத்ம்யம்” மற்றும் “துலாகாவேரி மாஹாத்ம்யம்” ஆகிய நூல்களைப் படைத்தார்.

•• இம்மன்னர் பற்றிய ஓர் கதை :- விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஓர் சமயம் கைசிக ஏகாதசி சமயம்
‘கற்பூரப்படியேற்றம்’ காண சற்று தாமதித்து வந்தார். இடையில் பெருமாள் மூலஸ்தானம் சென்றிருந்தார்.
அது கண்டு நாயக்க அரசர் மீண்டும் ‘கற்பூரப்படியேற்றம்’ காண விழைந்தார்.
நிர்வாகிகள் இனி அடுத்த வருடம் தான் கற்பூரப்படியேற்ற சேவை. பெருமாள் மூலஸ்தானம் சென்று விட்டால்,
பிறகு திரும்புவது கிடையாது, என்பதும் அரசருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனால் மனம் வருந்திய அரசர் அடுத்த வருடம் வரை திருவரங்கத்திலேயே தங்கியிருந்து
அக்கற்பூரப்படியேற்ற சேவையைக் கண்டு பேரானந்தமடைந்தார் என்று ஒரு கதை கூறுவர்.
இதனை நினைவூட்டும் வகையில் இரண்டாம் திருச்சுற்றான ராஜமகேந்திரன் திருச்சுற்று மேற்குப்பகுதியில்
நாயக்க அரசரும் அவர் குடும்பத்தாரும் தந்தத்தால் ஆன சிலாரூபமாக கருவூல மண்டபத்தில்
கண்ணாடி பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். அதற்கான அறிவிப்பு பலகையும் அருகில் உள்ளது.

விஜயரங்கநாத சொக்கநாத நாயக்கர் பற்றிய கோயிலொழுகு குறிப்புகள்:-
• விஜயரங்க சொக்கநாத மன்னர் கைசிக ஏகாதசியன்று நம்பெருமாளுக்குச் சாற்றுவதற்காக 360 பீதாம்பரங்களைச் சமர்பித்தார்.
ஸஹஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுவதற்காக ஆயிரம் செப்புக்குடங்களையும் இவர் காணிக்கையாக சமர்ப்பித்தார்.
திருவரங்கத்திலேயே பலநாட்கள் தங்கியிருந்து நாள், பக்ஷ, மாத, திருவிழாக்களை இவர் கண்டுகளித்து வந்ததாகக் கோயிலொழுகு தெரிவிக்கிறது.

• கி.பி.1707ம் ஆண்டு துரை ரங்காச்சார்யருடைய மகனான ஸ்ரீநிவாஸ தேசிகர் மன்னனுடைய பொருளுதவி கொண்டு
“திருவாராதன காலத்தில் உபயோகத்தில் கொள்ளும்படி தங்கத்தாலான வட்டில்கள், தங்கத்தட்டுகள், படிக்கம்,
காவிரி நீரினைச் சுமந்து வருவதற்கான தங்கத்தாலான குடம் மற்றும் பல பொருட்களோடு,
நம்பெருமாளும், உபயநாச்சிமார்களும், ஸ்ரீரங்கநாச்சியாரும் விசேஷ நாட்களில் அணிந்து கொள்ளும் பொருட்டு,
வைரமுடி, விலையுயயர்ந்த ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி ஆகியவை சமர்ப்பிக்கப்பட்டன.
விஜயரங்கசொக்கநாதன் காலத்தில் தான் தற்போதைய ‘கண்ணாடி அறை’ நிர்மாணிக்கப்பட்டது.
சேரனை வென்றான் மண்டபத்திற்கு வடக்கு நோக்கி, துரை ரங்காச்சார்யர் மண்டபத்திற்குச் செல்லும் நடைபாதை சீரமைப்பு செய்யப்பட்டது.

நம்பெருமாளுடைய திருவடி நிலைகளுக்கு கீழே அமைந்துள்ள தங்கத்தகட்டில் விஜயரங்க சொக்க நாயக்கருடைய
உபயம் என்ற தெலுங்கு மொழி (A.R.No.353 of 1950-51)வாசகங்கள் உள்ளன.

• உமிழ் நீரை ஏந்தும் தங்கத்தாலான வட்டில்கள் மூன்றினில் இவை விஜயரங்க சொக்கநாத நாயக்கனால்
கஸ்தூரி ஸ்ரீரங்கநாதனுக்கு ஸமர்ப்பிக்கப்பட்டவை என்று (A.R.No.354 of 1950-51)தெலுங்கு மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன.

• தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகளால் ஆன தங்கப்பபல்லக்கு இம்மன்னராலேயே நம்பெருமாளுக்கு (A.R.No.348 of 1952-53)
சமர்ப்பிக்கப்பட்டதாக தெலுங்கு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
(இப்பல்லக்கு 1813ல் ஜார்ஜ் பிரான்சிஸ் எனும் ஆங்கிலேய கலெக்டரால் பழுது பார்க்கப்பட்டது)

• பெருமாளுக்கு இரவில் பால் சமர்ப்பிக்கப்படும் தங்கக்கிண்ணம் இம்மன்னராலேயே தரப்பட்டதாக (A.R.No.353.1 of 1950-51)
அதிலுள்ள தெலுங்கு வாசகங்கள் மூலம் அறியமுடிகிறது.

நம்பெருமாள் புறப்பாட்டிற்கென தங்கக்குடை ஒன்றும் இம்மன்னரால் (A.R.No.348 of 1950-51) சமர்ப்பிக்கப்பட்டது.
தங்கக்குடையின் பிடியில் 02-04-1734 ஆம் நாளன்று பொறிக்கப்பட்ட வாசகங்கள் ” ஆனந்த வருஷம், சைத்ரமாதம்,
சுக்ல பக்ஷ தசமியன்று ஜிட்டு விசுவநாத நாயனி, விஜயரங்க சொக்கநாத நாயக்கரால் இந்தத் தங்கக்குடை சமர்ப்பிக்கப்பட்டது”
மேலும் இதன் பிடியில் இந்தக் குடை1927ம் ஆண்டு டிசம்பர் மாதம் பழுது பார்க்கப்பட்டதாகவும் பொறிக்கப்பட்டுள்ளது.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பத்மாவதித் தாயார் ஸமேத ஸ்ரீ வேங்கடேஸ்வரர் பூவார் கழல்களே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்