நம்மை எல்லாம் அன்றே தீண்டினான்-அனந்யார்க்க சேஷத்வம் அறிந்து அவன் கைங்கர்யம் கொள்ள வேண்டும்
திரு விக்ரமன் அவதாரம் முன்பும் சேஷ பூதர்- ஆனால் மகா பலி கோஷ்ட்டி நாம்- விலகி பொய் ச்வதந்த்ரன்- தும் மே அவன் சொல்ல அகம் மே என்று விலகி- -சம்பந்தம் இல்லை என்று சொல்லி -ஆத்மா அபகாரம் -பெரிய திரு அடி -நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -பொருள் நல பொருள் பிறர் நல பொருள்–கள்வா-என்னது அல்லாததை என்னது என்ற நானே கள்வன் -பிள்ளை பெருமாள் ஐ யங்கார் —
ஐஸ்வர்யம் கைவல்யம்-ஏடு நிலத்தில் இடுவதன் முன் எங்கள் குழாம் புகுந்து –குறும்பு அறுத்த நம்பி போல் அவன் திரு முகம் மலர –ஈன் துழாயானை வாழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்-பகவத் அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யத்தை பரம புருஷார்த்தம் –உபதேசித்தாலும் மீளாது சூத்திர பலனில் நிலை நின்று-கொடுத்தால் இன்னும் அதிகம் கேட்டு கொடுக்கா விடில் வைது அணுகாமல் இருந்து –ஜன்ம கர்ம வாசனை ருசி-நான்கும் படுத்தும் பாடு- மீள மாட்டாத புத்தி ருசி கொடுக்கும் -வலிய பாவம் -பாவம் என்று நினைவு-வைத்து மீளாமல் பற்றி நிற்கும் நினைவு–சம்சாரம் துவக்கு அறுத்து திரு அடியில் முயல மாட்டான் -இது போல் இருந்தால்..
ரஷிக்க வேண்டிய பொறுப்பு அவனது
யோகம் -மார்க்கம் /கூடி இருப்பது –இளைப்பினை –ஐம் புலன் அடக்கி -விளக்கினில் விதியினை காண்பர் மெய்மையில் காண்பிப்பாரே-காண முடியாது அவன் காட்டவே காண முடியும்- -ஞானம்-முற்றி பக்தி-சிநேகம் உடன் கூடிய தியானமே பக்தி –பக்திச்த ஞான விசேஷம் –கர்ம ஞான யோகம் பக்தி யோகத்தில் மூட்டும் –ஜனகர் கர்ம யோகத்தால் அடைந்தவர்–கீதையில் கொண்டாடினான்–ஜடபரதர் ஞான யோகம்-மன மனாநாப-மாம் ஏகம்–இவற்றின் சொரூபத்தையும் பகவான் சொரூபத்தையும் அறிந்து-இவை பலன் கொடுக்காது -மோஷ பிரதத்வம் அவன் ஒருவன் தான் இவை கிட்டே கூட்டி போகும் பலம் அருள அவனை எதிர் பார்க்க வேண்டும்..இவற்றால் அவனை காண முடியாது – இவற்றின் அங்கமாகபிர பத்தி பண்ணியே அவனை அடைய முடியும்–பிராய சித்தம் பண்ணி முடியாது என்று மீண்டும் சோக பட்ட அர்ஜுனனை -சரம ஸ்லோகம் மூலம் நீக்க அருளினான்–ரகஸ்ய த்ர்யத்தில் தான் இது அங்கம் இல்லாமல் காட்டி அருளினார்–தரும் அத தாள் அன்றி இறை -அ கார வாச்யன் தாள்கள்–உபாயம் திரு அடி பற்றியே -ஸ்தனன்ஜய பிரஜைக்கு பால் பிரவகிக்கும் மார்பில் நோக்கு போல் -பொன் தாமரை அடியே போற்றும் — பரமன் அடி பாடி ஆரம்பித்து -அடி விடாத சம்ப்ரதாயம் -ஆறு எனக்கு நின் பாதமே தந்து ஒழிந்தாய் கழல்கள் அவையே சரணாக கொண்ட சடகோபன் துயர் அடி தொழுது எழு–ஒரு மத்தால் கடலை கடிந்தான் -துர்வாசர் சாபம்-தாள்கள் தோள்கள் சமன் இல்லாது பரப்பி -கொண்டு உகந்த பெம்மான் -சீதா முக கமலா சு உல்லாச சூர்யன் தான் சேது-சூர்யன் மேல் சூர்யன் நடந்து போய்-தினகர குல கமல திவாகரன் -நீரை கண்டவாறே ஓடும் குரங்கு கொண்டு-பரத்வம் ச்பஷ்டீகரிக்கும் நீரிலே அமிழ கடக்கும் மலை தூக்கி ஜலம் போட்டு கட்டினானே — குரலை உசத்தி பேசி பண்டிதன்-வாதம் பண்ணாமல் பொழுது போக்கி -அப்றேமேய -கடல் முன் கடல் போல் கிடந்தான் குணா கடல் ஜல கடல் முன் –முதல் படைத்தான் கரண களேபர் விதுரராய் போக மோஷ சூன்யராய் கரண களேபரம் கொடுத்து -ஆதியில் ஜலம் சிருஷ்டித்து -முதல் படைத்தான்– அந் நீர் அமர்ந்தான் -சயனித்து கூப்பாடு கேட்க்கும் இடம் அரங்க மா நகர் அமர்ந்தான் சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரென் என்று –ரஷனார்தம் வெள்ள தடம் கடலுள் விஷ நாகம் –இன்று ஆச்ரயித்த தேவர்/நித்ய ஆஸ்ரய பிராட்டி/நித்ய சம்சாரி ஆகிய நம்மை -வாசி அற அனைவரையும் மூன்று சரித்ரம் மூலம் அருளினார்.
—————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –