பிரமேய சாரம்-3/4- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

பலம் கொண்டு மீளாத பாவம் உளதாகில்
குலம் கொண்டு காரியம் என் கூறீர் –தலம் கொண்ட
தாள் இணையான் அன்றே தனை ஒழிந்த யாவரையும்
ஆள் உடையான் அன்றே யவன்
பகவத் கைங்கர்யம் இன்றி வேற பிரயோஜனம் கொண்டால் -உலகு அளந்த திரு அடியால்

நம்மை எல்லாம் அன்றே தீண்டினான்-அனந்யார்க்க சேஷத்வம் அறிந்து அவன் கைங்கர்யம் கொள்ள வேண்டும்

பலம் -நீச பயன்–அநாதி கால பாபம்–பாவம் நினைவு ஐஸ்வர்யம் பற்றி கொண்டு நினைவு வராமல்
குலம்-சேஷ விருத்தி கூட கூடிய குலம் இருந்து என்ன பயன்–சமஸ்த லோகமும் ஸ்தலம் தலம் -கொண்ட –
அண்டம் மீது போகி-தாள் இணையான்-அன்றே -திரு விக்ரமன் தாவிய அன்றே சகலரையும் ஆள் உடையான் கொண்டானே –

திரு விக்ரமன் அவதாரம் முன்பும் சேஷ பூதர்- ஆனால் மகா பலி கோஷ்ட்டி நாம்- விலகி பொய் ச்வதந்த்ரன்- தும் மே  அவன் சொல்ல அகம் மே என்று விலகி- -சம்பந்தம் இல்லை என்று சொல்லி -ஆத்மா அபகாரம் -பெரிய திரு அடி -நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -பொருள் நல பொருள் பிறர் நல பொருள்–கள்வா-என்னது அல்லாததை என்னது என்ற நானே கள்வன் -பிள்ளை பெருமாள் ஐ யங்கார் —

பிரயோஜனாந்திர பலன் -ருசி கெட்டு-ஒழிந்து கைங்கர்யத்திலே குறியாக இருக்க வேண்டும் –எழுவார் விடை கொள்வார்–போல் இருக்காமல்

ஐஸ்வர்யம் கைவல்யம்-ஏடு நிலத்தில் இடுவதன் முன் எங்கள் குழாம் புகுந்து –குறும்பு அறுத்த நம்பி போல் அவன் திரு முகம் மலர –ஈன் துழாயானை வாழுவா வகை நினைந்து  வைகல் தொழுவார்-பகவத் அனுபவ ப்ரீதி கார்ய  கைங்கர்யத்தை பரம புருஷார்த்தம் –உபதேசித்தாலும் மீளாது சூத்திர பலனில் நிலை நின்று-கொடுத்தால் இன்னும் அதிகம் கேட்டு கொடுக்கா விடில் வைது அணுகாமல் இருந்து –ஜன்ம கர்ம வாசனை ருசி-நான்கும் படுத்தும் பாடு- மீள மாட்டாத புத்தி ருசி கொடுக்கும் -வலிய பாவம் -பாவம் என்று நினைவு-வைத்து மீளாமல் பற்றி நிற்கும் நினைவு–சம்சாரம் துவக்கு அறுத்து திரு அடியில் முயல மாட்டான் -இது போல் இருந்தால்..

ஏழு லோகமும் அளந்தான் அன்றே -சேஷத்வம் நிரூபிக்க -கதா புன -வஜ்ரா லாஞ்சனம் மதிய மூர்தனா அலங்க்ருஷ்ய – படிக்கு அளவாக நிமிர்ந்த நின் பாத பங்கயமே என் தலைக்கு அணியாய்- திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொருத்தாய் -திரு சடாரி சாதிப்பார்கள்–ஒண் மிதியில்..ஒரு கால் நிற்ப -ஒரு கால் தாமரை சீர் அவுணன் உள்ளத்து   -மக்கள் அபிப்ராயத்தால் கால் என்கிறார் தாய் குழந்தையை முதுகில் அணைப்பது போல்-வாத்சயம் மிக்கு தீண்டினான் அக்ஞானம் அந்த காரத்தால் தூங்கி -பிரார்த்திக்காமல் தன் பேறாக செய்தான் நன்றி கூட சொல்ல மாட்டோம்- அனைத்து ஜீவாத்மாவும் சொத்து என்பதால் தீண்டினான் சேஷம் ஆக கொண்டானாய்  நிலைத்து சந்துஷ்டானாக இருந்தான் –இருந்தாலும் சம்சாரத்தில் அழுந்து இருப்பது அந்ய பரனாக இருப்பதால் -பிரயோஜனாந்தர சம்பந்தம் விட வேண்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ–உனக்கு ஆள் பட்டும் இன்னும் உழல்வேனோ–அவருக்கு பிரயோஜனாந்தர சம்பந்தம் இல்லை–பாசுரம் சொல்லி சம்பாவனை கேட்டு -இருந்தால் கிட்டாதே -அர்த்தம் புரிந்து அனுஷ்டானம் வர வேண்டும்..
நான் அறிந்த வைஷ்ணவன் ஊர் அறிந்த வைஷ்ணவன்  மட்டும் இன்றி
நாராயணன் அறிந்த வைஷ்ணவன்-அடியார்க்கு அடியாராக இருக்க வேண்டும்..
சுக துக்கம் -பிறர் வீட்டு விஷயம்–போல -படாமல் இருக்க சொனதை அனைத்திலும் பட்டு சம தர்சனம் பார்ப்பது போல் இருக்க கூடாது
விலகி இருந்தால் உழல மாட்டோம்–பிரயோஜனாந்தர ருசி கிடக்க உண்டான சேஷத்வ ஞானத்தால் என்ன பலன்
பிரணவ அர்த்தம் இது வரை சொல்லி மேல் நம சப்த அர்த்தம் சொல்லுகிறார்
என் பொருட்டு நான் அல்லேன்-எனக்கு உரியவன் அல்லன் அவன் ஒருவனே உபாயம் நிர் பயம் நிர் பாரம் உடன்- பரன் நியாசம்

ரஷிக்க வேண்டிய பொறுப்பு அவனது

அநந்ய சரணத்வம் அருளுகிறார்
கருமத்தால் ஞானத்தால் காணும் வகை யுண்டே
தருமத்தால் அன்றி இறை தாள்கள் –ஒருமத்தால்
முந்நீர் கடிந்தான் அடைத்தான் முதல் படைத்தான்
அந் நீர் அமர்ந்தான் அடி –4
நீர் வைத்தே பாசுரம்-படைத்து அதில் கிடந்தான் நார -தண்ணீர் இருப்பிடம் -நாராயணன் இதனாலும் பெயர்
உபாயந்தரங்களால் கிட்ட முடியாதவன் -காட்டவே காணலாம் -சீதை பிராட்டி பற்றி  நினைத்த ஷணமே திரு அடி பிராட்டியை பார்த்தார்
பிரிய தாமரை வரித்து -கோர மா தவம் செய்து அடைகிறான்
ஒரு மத்தால் மந்தர பர்வம் கொண்டு-ஆற்று நீர் ஊற்று நீர் வேற்று நீர் –மழை நீர் –கடிந்தான்
அடைத்தான் சேது -ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து -திரு மாலை—படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
உறைந்து  கடைத்து அடைத்து உடைத்து –பெருமாள் தானே சேதுவை உடைத்தாராம்—புன்யஸ்த்லம் போக்கு வரதுக்கு இருக்க கூடாது என்று ஆழ்வார்
பவித்ரம் மங்களம் கொடுப்பதே பகவத் சம்பந்தம் இருப்பதால் தான் -பேர் உயிர் ஒ மனிசர்க்கு தேவர் போல் தேவர்க்கு தேவாவோ-ஆழ்வார்- முதல் படைத்து -அந் நீர் அமர்ந்தான் -சயனித்து வியூகம் அவதாரம்- ஆஸ்ரித ரஷணம்-படைத்ததும் கிடந்ததும் அடைந்ததும் கடைந்ததும் -திரு அடிகளை தரும் அத்தால் அன்றி -அவராக கொடுத்தால் அன்றி வேறு உபாயம் இல்லை-கருமம் ஞானத்தால் ஞான விபாக மான பக்தி யோகத்தால் காண வழி இல்லை –உபாயான்தரம் தொலைந்து அவன் திரு அடி ஒன்றையே பற்றி அவனை அடைந்து அனுபவிக்க வேண்டும்

யோகம் -மார்க்கம் /கூடி இருப்பது –இளைப்பினை –ஐம் புலன் அடக்கி -விளக்கினில் விதியினை காண்பர் மெய்மையில் காண்பிப்பாரே-காண முடியாது அவன் காட்டவே காண முடியும்- -ஞானம்-முற்றி பக்தி-சிநேகம் உடன் கூடிய தியானமே பக்தி –பக்திச்த ஞான விசேஷம் –கர்ம ஞான யோகம் பக்தி யோகத்தில் மூட்டும் –ஜனகர் கர்ம யோகத்தால் அடைந்தவர்–கீதையில் கொண்டாடினான்–ஜடபரதர் ஞான யோகம்-மன மனாநாப-மாம் ஏகம்–இவற்றின் சொரூபத்தையும் பகவான் சொரூபத்தையும் அறிந்து-இவை பலன் கொடுக்காது -மோஷ பிரதத்வம் அவன் ஒருவன் தான் இவை கிட்டே கூட்டி போகும் பலம் அருள அவனை எதிர் பார்க்க வேண்டும்..இவற்றால் அவனை காண முடியாது – இவற்றின் அங்கமாகபிர பத்தி பண்ணியே அவனை அடைய முடியும்–பிராய சித்தம் பண்ணி முடியாது என்று மீண்டும் சோக பட்ட அர்ஜுனனை -சரம ஸ்லோகம் மூலம் நீக்க அருளினான்–ரகஸ்ய த்ர்யத்தில் தான் இது அங்கம் இல்லாமல் காட்டி அருளினார்–தரும் அத தாள் அன்றி இறை -அ கார வாச்யன் தாள்கள்–உபாயம் திரு அடி பற்றியே -ஸ்தனன்ஜய பிரஜைக்கு பால் பிரவகிக்கும் மார்பில் நோக்கு போல் -பொன் தாமரை அடியே போற்றும் — பரமன் அடி பாடி ஆரம்பித்து -அடி விடாத சம்ப்ரதாயம் -ஆறு எனக்கு நின் பாதமே தந்து ஒழிந்தாய் கழல்கள் அவையே சரணாக கொண்ட சடகோபன் துயர் அடி தொழுது எழு–ஒரு மத்தால் கடலை கடிந்தான் -துர்வாசர் சாபம்-தாள்கள் தோள்கள் சமன் இல்லாது பரப்பி -கொண்டு உகந்த பெம்மான் -சீதா முக கமலா சு உல்லாச சூர்யன் தான் சேது-சூர்யன் மேல்  சூர்யன் நடந்து போய்-தினகர குல கமல திவாகரன் -நீரை கண்டவாறே ஓடும் குரங்கு கொண்டு-பரத்வம் ச்பஷ்டீகரிக்கும் நீரிலே அமிழ கடக்கும் மலை தூக்கி ஜலம் போட்டு கட்டினானே — குரலை உசத்தி பேசி பண்டிதன்-வாதம் பண்ணாமல் பொழுது போக்கி -அப்றேமேய -கடல் முன் கடல் போல் கிடந்தான் குணா கடல் ஜல கடல் முன் –முதல் படைத்தான் கரண களேபர் விதுரராய் போக மோஷ சூன்யராய் கரண களேபரம் கொடுத்து -ஆதியில் ஜலம் சிருஷ்டித்து -முதல் படைத்தான்– அந் நீர் அமர்ந்தான் -சயனித்து கூப்பாடு கேட்க்கும் இடம் அரங்க மா நகர் அமர்ந்தான் சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரென் என்று –ரஷனார்தம் வெள்ள தடம் கடலுள் விஷ நாகம் –இன்று ஆச்ரயித்த தேவர்/நித்ய ஆஸ்ரய பிராட்டி/நித்ய சம்சாரி ஆகிய நம்மை -வாசி அற அனைவரையும் மூன்று சரித்ரம் மூலம் அருளினார்.

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading