Archive for the ‘இராமானுச நூற்றந்தாதி’ Category

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –92-புண்ணிய நோன்பு புரிந்துமிலேன்- இத்யாதி —

May 31, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

சேதனர் இவ் விஷயத்தில் அல்ப அனுகூல்யத்தாலே உஜ்ஜீவிக்கலாய் இருக்க —
ஜென்மாதி துக்கங்களை அனுபவிக்கிறபடியையும் -இவர்களுக்கு உஜ்ஜீவன அர்த்தமாக -ஸ்ரீ எம்பெருமானார் செய்த
க்ருஷியையும் அனுசந்தித்தார் -கீழ் -இரண்டு பாட்டாலே –
இப்பாட்டில் –தாம் அறிய ஒரு ஹேது அன்றிக்கே -இருக்க -தம்மை அங்கீ கரித்து அருளுகைக்கும் –
அங்கீகரித்து அருளி பாஹ்யாப் யந்தர கரண விஷயமாய் -எழுந்து அருளி இருக்கிறபடியையும்-
அத்தை அனுசந்தித்து -வித்தராய் -இதுக்கு காரணம் இன்னது என்று –அருளிச் செய்ய வேணும் –என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரியாத கர்ப்ப நிர்பாக்யரை நிந்தித்தும் சமயக் ஞான ஹீனராய்-நிஷித்த மார்க்க நிஷ்டர் ஆனவர்களுடைய
துர் உபதேசத்தாலே அவசன்னராய் போந்த சேதனருடைய-அஞ்ஞானத்தை மாற்றி சர்வருக்கும் ஸ்ரீ ய பதியே சேஷி என்று உபதேசித்த
பரம தார்மிகர் ஸ்ரீ எம்பெருமானார்-என்று சொல்லிப் போந்தார் கீழ் இரண்டு பாட்டுக்களிலும் –
இதிலே
ஸ்ரீ எம்பெருமானார் உடைய திருமுக மண்டலத்தைப் பார்த்து -அடியேன் இவ்வளவும் நான் அறிந்ததாக ஒரு சத் கர்மமும் பண்ணினேன் அல்லேன் –
அப்படியே உத்தாரகமாய் இருப்பதோர் சூஷ்மமான விசேஷார்த்தத்தை கேட்பதாக பிரசங்கிப்பித்தும் செய்திலேன் –
இது என் ரீதியாய் இருக்கச்
சாஸ்திர ப்ரவர்த்தகரானவர்களுக்கும் தொகை இட்டு சொல்ல வரிதான குணவத்தா-பிரதையை உடையரான
தேவரீர் இவ்வளவும் வெறுமனே இருந்து -இன்று என்னுடைய சமீபத்திலே பிரவேசித்து
உட் கண்ணுக்கும் கட் கண்ணுக்கும் விஷயமாய் நின்றீர் -இதுக்கு ஹேது தேவரீரே சொல்ல வேணும் என்று-விண்ணப்பம் செய்கிறார்

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

தம்மிடம் உள்ள மூன்று கரணங்களுள் -ஏதேனும் ஓன்று கொண்டு -எளிதில் மாந்தர் உய்வுற வழி இருந்தும் –
பிறப்பிற்குள்ளாகி வருந்துவதையும் -அத்தகையோரும் உய்வதற்காக ஸ்ரீ எம்பெருமானார் அருள் சுரந்து –மெய்ப் பொருள் சுரந்து –
உபகரித்ததையும் -கீழ் இரண்டு பாட்டுக்களாலே அனுசந்தித்தவர் –
இப்பாட்டில் –
தாமறியத் தம்மிடம் ஒரு ஹேதும் இல்லாத போது – தம்மை ஏற்று அருளுகைக்கும் -பின்னர்
கண் என்னும் வெளிக் கரணத்திற்கும் -நெஞ்சு என்னும் உட் கரணத்திற்கும் விஷயமாய் -நிலை நின்று எழுந்து அருளி இருப்பதைக் கண்டு –
மிக்க ஈடுபாட்டுடன் -இதனுக்கும் காரணம் -இன்னது என்று -அருளிச் செய்ய வேணும் என்று -ஸ்ரீ எம்பெருமானார் இடமே கேட்கிறார் .

புண்ணிய நோன்பு புரிந்துமிலேன் அடி போற்றி செய்யும்
நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் செம்மை நூற் புலவர்க்
கெண்ணரும் கீர்த்தி இராமானுச ! இன்று நீ புகுந்ததென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே – – 92– –

புண்ணிய நோன்பு -நல்லதொரு விரதத்தை
புரிந்தும் இலேன் -அனுஷ்டிப்பதும் செய்திலேன்
அடி போற்றி செய்யும் -திருவடிகளை ஆஸ்ரயித்து- மங்களா சாசனம் செய்வதற்கு உறுப்பாகும்
நுண் அரும் கேள்வி-சூஷ்மமாய் அருமைப் பட்ட கேள்வி யறிவைப் பற்றி
நுவன்றும் இலேன் -பேச்சு எடுப்பதும் செய்திலேன்
செம்மை நூல் புலவர்க்கு -செம்மை வாய்ந்த சாஸ்திர வடிவில் கவி இயற்றும் வல்லமை படைத்தவர்களுக்கும்
எண் அரும் கீர்த்தி இராமானுச -இவ்வளவு என்று என்ன இயலாத புகழ் படைத்த ஸ்ரீ எம்பெருமானாரே
நீ -தேவரீர்
இன்று -எதிர்பாராத -இன்றைய நாளிலே
புகுந்து -தாமாகவே உள்ளே வந்து
எண் கண்ணுள்ளும் -அடியேனுடைய கண்ணுக்குள்ளேயும்
நெஞ்சு உள்ளும் -நெஞ்சுக்கு உள்ளேயும்
நின்ற -புலனாய் எழுந்து அருளி இருக்கிற
இக்காரணம் -இந்தக் காரணத்தை
கட்டுரை -இன்னது என்று -அருளிச் செய்ய வேணும் .

வியாக்யானம் –
இப் பேற்றுக்கு உறுப்பாக ஒரு புண்ய வ்ரதத்தை யனுஷ்டிப்பதும் -செய்திலேன் –
திருவடிகளை யாஸ்ரயிக்கைக்கு உறுப்பான சூஷ்ம மாய்-துர்லபமான ஸ்ரவணத்தை ஸ்ரவியாத-அளவு அன்றிக்கே –
ஸ்ரவிக்க வேணும் என்று பிரசங்கிப்பதும் செய்திலேன் –
அநந்ய-ப்ரயோஜனராய் -சாஸ்திர ரூபமான -கவிகளை சொல்ல வல்லவர்களுக்கு பர்ச்சேதிக்க வரிதான-கீர்த்தியை உடையவரே –
இப்படி நிரதிசய -பிரபாவரான தேவரீர் அநாதி காலம் செய்யாமல்-இன்று புகுந்து –
என்னுடைய கட் கண்ணுக்கும் உட் கண்ணுக்கும் விஷயமாய் –நின்ற இதில்-ஹேதுவைத் தேவரீர் தாமே அருளிச் செய்ய வேணும் .

கட்டுரை -என்றது -சொல்ல வேணும் -என்றபடி-
கட்டுரை என்று -ஒரு முழுச் சொல்லு –
புரிதல்-செய்தல்
நுவல்தல் -சொல்லுதல்
செம்மை-செவ்வை –இத்தால் அநந்ய பிரயோஜ நதையை சொன்னபடி .
பகர்தல் -கட்டுரைத்தல் —கட்டுரைக்கில் தாமரை –ஒவ்வா —
நுவன்றுமிலேன் –ஆச்சார்ய அபிமானம் உத்தாராகம் -சொல்பவர்கள் இடம் கேட்க ஆசையும் இல்லாமல் –
இன்று -பொருளாக்கி வைத்தாய் அன்று புறம் போக்க வைத்தாய் -உரிமையுடன் கேட்ப்பார்கள்
பெற்ற பேற்றுக்கு சத்ருசமாக ஒன்றும் செய்ய வில்லையே என்றே கருத்து –

18 -தேவரீர் நடந்தது போலே இல்லையே -செம்மை நூலுக்கும் புலவருக்கு -தெளிவு படுத்தும் –அனன்யா பிரயோஜனர் –
நிர்ஹேதுக கிருபையால் செய்தீரே –குற்றம் இன்றும் முன்பும் -விலக்காமையே வாசி -என்றபடி –
கண் நெஞ்சு -வாக்குக்கும் உப லக்ஷணம் -பிரபந்தம் செய்து அருளுகிறார் –
கேள்வி -அரும் கேள்வி -நுண் அரும் கேள்வி-ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதே நுண் அரும் கேள்வி
செம்மை நூல்-எளிய தெளிந்த நூல் -செம்மை புலவர்கள் -எளிய -தெளிந்த ஆர்ஜவம் –
அநந்ய பிரயோஜனர் -க்யாதி லாபம் பூஜைக்கு என்று இல்லாமல் –
இரண்டுக்கும் எண்ணரும் கீர்த்தி -செம்மை நூல் புலவர்க்கும் -சிறப்பு உம்மை தொக்கி -மறைந்து –
வர்ணாஸ்ரமம் – பகவத் ஆராதனம் – பிரிய கைங்கர்யம் -அடியார்களுக்கு செய்யும் கைங்கர்யம் -இப்படி மூன்றையும் -புண்ணியம் -/
நெஞ்சுள்ளான் கண்ணுள்ளான் -பிரதமபர்வத்தில் க்ரமத்தால்-நினைந்த பின்பு தானே பார்ப்போம் – –
இங்கு நீ புகுந்து -அக்ரமமாக கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் –

புண்ணிய நோன்பும் புரிந்தும் இலேன் –
புண்ணியமாவது -1-ஐஹிக ஆமுஷ்மிக சுக துக்க ஹேதுவாய்-சாஸ்த்ரீயமான வர்ணாஸ்ரம நியதமான கர்ம விசேஷம் –
இப்படிப்பட்ட வ்ருத்தத்தை பண்ணினேன் அல்லேன் –
புரிதல் -செய்தல் -நோற்ற நோன்பிலேன் -ந தர்ம நிஷ்டோச்மி -என்னக் கடவது இறே –
புண்யா நாம பி புண்யோ ஸௌ-என்கையாலே –

புண்ய சப்தம்-2- பகவத் வாசகமாய் அந்த பகவானை உத்தேசித்து தத் ஆராதன ரூபமாய்-பண்ணப்படும் சத் கர்மத்தை என்னுதல் –
யத் த்வத் ப்ரியம் ததிஹா புண்யம் -என்கிறபடியே -சர்வேஸ்வரனுக்கு பிரிய தமமாய் –
மமபக்த-பக்தேஷூ ப்ரீதிராப்யதி காபவேத் -தஸ்மாத் மத்பக்த பக்தாச்ச பூஜா நீயா விசேஷதே – என்று–3-அவன் தன்னால்
நியமிக்கப்பட்ட ததீய விஷயமான கிஞ்சித் காரத்தை -என்னுதல் –
அடியேன் இடத்தில்-இப்படிப்பட்ட நோன்பு ஒன்றும் இல்லை-மூன்று அர்த்தங்கள் -புண்ணியத்துக்கும் நோன்புக்கும் –

புண்ணிய –நுவன்றுமிலேன் –
தேவரீரே தாமாக ஏற்றருளி-கண்ணுக்கும் நெஞ்சுக்கும் புலனாய் நிற்பதற்கு எவ்வளவு புண்ணியம்-பண்ணி இருக்க வேண்டும் –
நான் ஒரு புண்ணியமும் பண்ண வில்லையே -இப் பெரும் பேறு-எனக்கு எங்கனம் கிடைத்தது என்று -வியப்புறுகிறார் –
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வினிதால் -ஸ்ரீ பெரிய திருவந்தாதி – 56- என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார்-திவ்ய ஸூக்தியை இங்கே நினைவு கூர்க-
புண்ணிய நோன்பு என்பதனை –
இருபெயரொட்டு பண்புத் தொகையாக மட்டும் கொள்ளாமல் -புண்ணியனாகிய ஸ்ரீ கண்ணனைப் பற்றிய நோன்பு என விரித்து –
பகவத் ஆராதன ரூபமான நல்ல காரியத்தைக் கூட செய்தேன் இல்லை -என்று உரைப்பதும் உண்டு –

அடி போற்றி செய்யும் நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் –
தேவரீர் உடைய திருவடிகளை ஆஸ்ரயியைக்கு உறுப்பாய் -சூஷ்மம் என்றும் -சர்வம் குஹ்ய தமம் பூரா-ப்ரவஷ்யாமி என்றும்
நசா ஸூ ஸ்ருஷவே வாச்யம் -என்றும் சொல்லுகிறபடியே –
ஸூ சூஷ்மமாய்-பரம ரகஸ்யமாய் -அநாதிகாரிகளுக்கு உபதேசிக்க அரிதான மந்த்ரத்தை ஸ்மரிக்கை அன்றிக்கே –
ஸ்மரிக்கை வேணும் என்று பிரசங்கிப்பதும் செய்திலேன் என்னுதல் –

தேவரீர் பதினெட்டு தரம்-ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி பக்கலிலே சென்று சார தமமாக சரம ஸ்லோக அர்த்தத்தை யாசித்தால் போலே–
(ஸ்ரீ எம்பெருமானார் சென்றது ஸ்ரீ சரம ஸ்லோகார்த்தம் பெற -ஸ்ரீ நம்பி அருளியது ஸ்ரீ திருமந்த்ரார்த்தம் -மீண்டு ஒரு தடவை நம்பி
ஸ்ரீ சரம ஸ்லோகார்த்தம் அருளி – அத்தை ஸ்ரீ கூரத் ஆழ்வானுக்கும் ஸ்ரீ முதலியாண்டானுக்கும் தரக் கூடாது –
சிச்ருஷை பெற்று அதிராமம் பெற்ற பின்பே அருள வேணும் என்றாரே )-

அடியேன் யாசித்தேன் அல்லேன் -என்னுதல் –
(ஸ்ரீ ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் சரம உபாய நிஷ்டை -ஸ்ரீ எம்பெருமானார்க்கு அருளிச் செய்தார் –
சந்தனம் மஞ்சள் -சமர்ப்பித்து -சர்வத்தையும் கொள்ளை கொள்ள தந்தீரோ என்றாராம் -)-

நுவலுதல் -அபேஷித்தல்-

நுண்ணறிவிலேன் -ந சாத்மவேதி -என்னக் கடவது இறே –

ஸ்ரீ நம் ஆழ்வாரைப் போலே பேற்றுக்கு உடலாக -நோற்ற நோன்பிலேன் -என்றவர் –
அவர் போலவே நுண்ணறிவு தமக்கு இல்லாமையை அடுத்து –-
நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் -என்கிறார் –

அடி போற்றி செய்தல்-
ஆசார்யன் திருவடிகளை ஸ்வயம் பிரயோஜனமாக அடைந்து -பொங்கும் பரிவாலே -அவற்றுக்கு மங்களா சாசனம் செய்தல் –
ஆசார்யன் திருவடிகளை அணுகிப் பேணி-மங்களா சாசனம் செய்தல் –
சகல சாஸ்த்ரங்களின் தாத்பர்ய பொருளாதலின் அது-நுண்ணியதாக அருமைப் பட்டதாய் -கேள்வி அறிவின் முதிர்ச்சியினால்
வருவது என்பது தோன்ற –நுண்ணரும் கேள்வி -என்றார் –
தேவரீர் திருவடிகளை ஆஸ்ரயித்து வாழ்த்துப் பாடுகைக்கு-உறுப்பாக கேள்வி அறிவும் எனக்கு இல்லையே -என்கிறார் .
கேள்வி அறிவு இல்லாதது -கேளாமையினால் மாத்ரம் அன்று –
கேட்க வேண்டும் என்னும் எண்ணம் இல்லாமையினால் அதனைப் பற்றிய பேச்சே இல்லாமையினாலே-
என்னும் கருத்துப் பட –நுவன்றுமிலேன் -என்றார் –

செம்மை நூல் புலவர்க்கு எண்ணரும் கீர்த்தி –
பிரதம பர்வம் என்றால் சிலர்-ச குணம் என்றும் -சிலர் -நிர்க்குணன் என்றும் -சிலர் ஹரி என்றும் சிலர் ஹரன் என்றும் –
இப்படி அவர் அவர்-புத்திக்கு அநு ரூபமாக சொல்லுககைக்கு உறுப்பாக இருக்கும் –
இது சரம பர்வம் ஆகையாலே அந்த தோஷங்கள் ஒன்றும் இன்றிக்கே இருந்தது என்று -அநந்ய பிரயோஜனராய் கொண்டு –
அநேக பிரகாரமாக சாஸ்திர ரூபமான-கவிகளை சொல்ல வல்ல வித்வாக்களுக்கு –
(செம்மை நூல் புலவருக்கும் பாடுவதே ஸ்வயம் புரயோஜனமாக கொண்ட )-
இவ்வளவு ஏவம் விதம் என்று பரிசேதித்து சொல்ல தலைக் கட்ட-அரிதான கீர்த்தியை உடையரான

செம்மை நூல் புலவர்க்கு எண்ணரும் கீர்த்தி –
நூல் -சாஸ்திரம்-மேலே கீர்த்தி பேசப் படுவதால் -கீர்த்தியைப் பற்றிய சாஸ்திரமாய் அமைந்த கவி வடிவிலான-
பிரபந்தங்களை அது கருதுகிறது .
நூற் புலவர் -நூலை யாக்கும் புலவர்
ஏனைய கவி வாணர்கள் போலக் கவி பாடிப் பரிசில் பெறுவார் அல்லர் இப் புலவர் –
வேறு பயன் கருதாது கவி பாடுதலையே பயனாக கருதுமவர் இவர் .
அது தோன்ற –செம்மைப் புலவர் -என்றார் .

செம்மையாவது –
வேறு பயனைக் கருதாது மனம் கவி பாடுதலிலேயே ஈடு பட்டு இருத்தல் -இத்தகைய மனப் பான்மை யினால்
கீர்த்தியை ஆராய்வதிலேயே நோக்கம் கொண்ட புலவர்க்கும்-எண்ணிக் கணக்கிடுவதற்கு அரிய கீர்த்தி –
ஸ்ரீ எம்பெருமானார் உடைய கீர்த்தி -என்கிறார் .

இனி செம்மையை நூலோடு இயைத்தலுமாம்-
நூலுக்கு செம்மையாவது –
கருதிய பொருளை அருமை யின்றி ஸ்வ ரசமாய் காட்டும் சொற்களோடு-பொருள் விளங்கு நடையாய் அமைந்து இருத்தல்
இத்தகைய நூல்களை யாக்கும் அறிவாளரும்-எண்ணுதற்கு இயலாதது ஸ்ரீ எம்பெருமானார் கீர்த்தி -என்றபடி .
ஆள் அற்றமையின் என்னை நீர் ஏற்று அருளுனீர்-என்று நினைப்பதற்கு இடம் இல்லை
பல புலவர் தேவரீரை போற்றுவராய் உள்ளனர் –
இனி என்னை ஏற்பதனால் கீர்த்தி பெருகும் என்று நினைத்து -என்னை ஏற்றீர் என்னவும் ஒண்ணாது –
அது இயல்பாகவே எண்ணற்றதாய் உள்ளது ..
புலவர்க்கு -சிறப்பும்மை தொக்கியது

இராமானுச –
ஸ்ரீ எம்பெருமானாரே –

செம்மை -செவ்வை -இத்தால் அநந்ய-பிரயோஜநதையை சொன்னபடி –
நூல் -சாஸ்திரம்
புலவர் -வித்வாக்கள் –

இன்று நீ புகுந்து –
இத்தனை நாளும்-காணா கண் இட்டு இருந்து இப்போதாக தேவரீர் அடியேன் உடைய சமீபத்தில் பிரவேசித்தது-

என் கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற இக்காரணம் கட்டுரையே –
நித்ரா பிரமாத கலுஷீக்ர்தமா ந சஸ்ய தத்ராபி சக்திரிஹமேன-என்கிறபடியே
இவ்வளவும் தேவரீர் கண் வட்டத்தில் இருந்தும்-ஆநு கூல்யம் இல்லாத தோஷத்தால் வணங்கா முடியாய் போந்த அடியேன் உடைய
பாஹ்ய கரணங்களுக்கும்-அந்த கரணத்துக்கும் இலக்காய் –
இந்த வீட்டில் இருப்புக்கு ஒரு ஹேதுவை தேவரீரே விசாரித்து-அருளிச் செய்ய வேண்டும் –

கண்ணுள்ளும் என்றது வாக்காதிகளுக்கும் உப லஷணம் –
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நிற்கை யாவது -கண்ணுக்கும் நெஞ்சுக்கும் விஷயம் ஆகை –

கட்டுரை என்றது-சொல்ல வேணும் என்றபடி –கட்டுரை –என்று ஒரு முழு சொல்லு –

நீ –
இத்தகைய மேன்மை வாய்ந்த தேவரீர்

இன்று புகுந்து –
இத்தனை நாளும் இல்லாது -எண் வேண்டுகோளை வேண்டாது -தாமாகவே என்னிடம் புகுந்து –
வர வேணும் என்று வரவேற்க வில்லை- சமயம் பார்த்து உள்ளே நுழைந்தார் –
இதனால் தம்மை ஸ்ரீ எம்பெருமானார் அங்கீ கரித்ததை சொன்னபடி –

எண் கண்ணுள்ளும் –கட்டுரை
புகுந்தவர் வெளியே போக வில்லை-உள்ளேயே இடம் பிடித்துக் கொண்டு விட்டார்
கண்ணுக்கு உள்ளேயே நிற்கிறார் -அதாவது –
எப் பொழுதும் அவர் என் கண்ணுக்கு தோற்றம் அளிக்கிறார் –
நேரே அவரைக் காணாத போதும் -உரு வெளிப்பாட்டினாலே அவர் கண் எதிரிலேயே தோன்றுகிறார் –
அங்கனம் தோன்றுதற்கு காரணம் நெஞ்சிலே உறைந்தமை -நெஞ்சுள்ளும் நிலையாக நிற்கிறார் அவர் .

என் கண்ணுள்ளும் –
உலகியல் இன்பத்தில் நாட்டம் கொண்ட எண் கண்ணுக்கும் என் நெஞ்சுக்கும்-தன்னை விஷயமாகக் காட்டி அருளுவதே -என்கிறார் .
கமலக் கண்ணன் என்கண்ணின் உளான் -ஸ்ரீ திருவாய் மொழி – 1-9 8- –
மாயன் என் நெஞ்சின் உள்ளான் -ஸ்ரீ திருவாய் மொழி -1 9-5 – – என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவம்
ஸ்ரீ அமுதனாருக்கு-ஸ்ரீ எம்பெருமானார் விஷயத்தில் கிடைக்கிறது .

இன்று புகுதலுக்கும் -கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நிற்றலுக்கும் காரணம் எனக்கு தெரிய வில்லை –
தேவரீர் தான் அருளிச் செய்ய வேண்டும் -என்கிறார் .
கட்டுரை –
காரணம் இல்லாமையின் சொல்ல இயலாது என்னும் கருத்துடன் தேவரீர் தான் சொல்ல வேணும் -என்கிறார் –
திருமாலே கட்டுரையே -ஸ்ரீ திருவாய் மொழி – 3-1 1- – என்பது போலே இதனையும் கொள்க –
நிர் ஹேதுகமான தேவரீர் கிருபை தவிர வேறு காரணம் இல்லை -என்பது கருத்து –

இன்று என்னை பொருள் ஆக்கி –அன்று புறம் போக வைத்தது என்-

என் நெஞ்சில் திகழ்வதே–திரு மால் வந்து நெஞ்சுள் புகுந்தான்–வரவாறு என்–
வரவாறு ஓன்று இல்லையேல்-வெறிதே அருள் செய்வார் செய்வார்களுக்கு உகந்து-
கோர மாதவம் செய்தனன் கொல்-
வெறிதே-சகாயம் இன்றி –1-தானே -அனுக்ரகம்-2-பாரமாய -பழவினை பற்று அறுத்து வேரோடு-வாசனை இன்றி—
3-என்னை தன் வாரமாக்கி வைத்தான்–ஹாரம் அருகிலே—4- வைத்தது அன்றி-என் உள் புகுந்தான்-
நான்கு பெருமைகள்–

சாத்திய ஹ்ருத்ச்யனாயும் சாதனம் ஒருக்கடிக்கும் தாய பதி- திரு கடித்தானும் என் உடைய சிந்தையும்–
நின்றதும் இருந்ததும் -கிடந்ததும் என் நெஞ்சு உள்ளே-

———————

இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழலுளானே–1-9-1-
அவன் என் அருகலிலானே–1-9-2-
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஓக்கலையானே –1-9-4-
ஈசன் மாயன் என் நெஞ்சி னுளானே–1-9-5-
என்னுடைத் தோளிணையானே–1-9-6-
என்னுடை நாவினுளானே–1-9-7-

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியல் நால் தடந் தோளன் பொரு படை ஆழி சங்கு ஏந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணி னுளானே–1-9-8-

கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் மவன் மூர்த்தி
கமலத்து அயன் நம்பி தன்னைக் கண்ணுதலானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகம் ஆக்கி என் நெற்றி யுளானே–1-9-9-

எனது உச்சி யுளானே–1-9-10-

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவருக்குக் கண்ண பிராற்கு
இச்சையில் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச் சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே–1-9-11–

முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ !
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ !
படிச் சோதி ஆடை யொடும் பல் கலனாய் நின் பைம்பொன்
கடிச் சோதி கலந்ததுவோ ! திருமாலே ! கட்டுரையே–3-1-1-

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா;
சுட்டுரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது;
ஒட்டுரைத்து இவ் உலகுன்னைப் புகழ்வு எல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ!–3-1-2-

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட் டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கல நகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே–5-7-1-

கருளப் புட்கொடி சக்கரப் படை வான நாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–-பெரிய திருவந்தாதி-56—

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்––நான்முகன் திருவந்தாதி–18-

என் நெஞ்சமேயான் இருள் நீக்கி எம்பிரான்
மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் -என்னெஞ்சு
மேயானை இல்லா விடையேற்றான் வெவ்வினை தீர்த்து
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு –58 –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –91-மருள் சுரந்தாகம வாதியர் கூறும் அவப் பொருளாம் இருள்- இத்யாதி —

May 31, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இவர்கள் இப்படி இருக்கச் செய்தே இவர்களுடைய உஜ்ஜீவனார்த்தமாக
ஸ்ரீ எம்பெருமானார் செய்தருளின க்ருஷியை யனுசந்தித்து அவரைக் கொண்டாடுகிறார்

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே நித்ய சம்சாரிகளாய் இருக்குமவர்களையும் -அல்ப அநு கூலமுடையாரையும் -ஒக்க உத்தரித்த
சர்வோத்தமரான ஸ்ரீ எம்பெருமானாரை அநு வர்த்தியாதே -கர்ப்ப நிப்பாக்யராய் போந்தார்கள்-என்று
அவர்கள் படியை அடைவே சொல்லி –
இதிலே -தமோ குண முஷித சேமுஷீகராய்-ருத்ர ப்ரோக்தமான ஆகமத்தை உத்தம்பகமாகக் கொண்டு
பௌ த்த்யாத்த சாரங்களாய் ருத்ர பஷ பாதிகளான பாசுபதர்-சொல்லுகிற துஸ் தர்க்கங்கள் ஆகிற அந்தகாரத்தை
பூ லோகத்தில் நின்றும் அகன்று போம்படி பண்ணி அருளின ஸ்ரீ எம்பெருமானார் –
தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையை ஒரு பாட்டம் மழை-பொழிந்தால் போல் லோகத்தில் எங்கும் ஒக்க ப்ரவஹிப்பித்து –
சகல ஆத்மாக்களுக்கும் சுலபனாய்-கண்ணுக்கு இலக்காய் இருக்கிற ஸ்ரீ பெரிய பெருமாளே வகுத்த சேஷி என்னும் அர்த்தத்தை
நமக்கு எல்லாம்-பூரி தானம் பண்ணினார் ––இவர் எத்தனை தார்மிகரோ என்று -அவர் உபகரித்த உபகாரத்தை அனுசந்தித்து-
அவர் தம்மை கொண்டாடுகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

இன்னும் பிறப்பில் வருந்தும் மாந்தர் உய்வதற்காக ஸ்ரீ எம்பெருமானார் கைக் கொண்ட முயற்சியை-
நினைவு கூர்ந்து அவரைக் கொண்டாடுகிறார்

மருள் சுரந்தாகம வாதியர் கூறும் அவப் பொருளாம்
இருள் சுரந் தெய்தவுலகிருள் நீங்கத் தான் ஈண்டிய சீர்
அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 –

பத உரை –
மருள் சுரந்து -அறியாமை மிகுந்து
ஆகம வாதியர் -ஆகமத்தையே தமக்கு பிரமாணமாக கொண்டு வாதம் புரியும் பாசுபத மதத்தினர்கள்
கூறும் -சொலும்
அவப் பொருளாம் -தவறான பொருள்கள் ஆகிற
இருள் சுரந்து -இருட்டு-தமோ குணம் -மிகுந்து
எய்த்த –அதனால் களைத்துப் போன
உலகு –உலகத்தினுடைய
இருள் -அந்தகாரம்
நீங்க -போகும்படி
தன் -தன்னுடைய
ஈண்டிய சீர் -திரண்ட சிறப்பினை உடைய
அருள் சுரந்து -கிருபை கூர்ந்து
எல்லா உயிர் கட்கும் -எல்லா ஆத்மாக்களுக்கும்
நாதன் -தலைவன்
அரங்கன் -ஸ்ரீ பெரிய பெருமாளே
என்னும் பொருள் -என்கிற பொருளை
சுரந்தான் -உணர்வுறுத்தி உதவினார்
எம் இராமானுசன் -எங்களுடைய ஸ்ரீ எம்பெருமானார்
மிக்க புண்ணியன் -பேரறம் புரிபவர் ஆவர் .

வியாக்யானம் –
அஞ்ஞானம் எல்லாம் ஒருமுகமாகத் திரண்டு -ருத்ர ப்ரோரக்தமான ஆகமத்தை பிரமாணமாக-அவலம்பித்துக் கொண்டு நின்று
வாதம் பண்ணா நின்றுள்ள பாசுபாதிகள் ருத்ர பரத்வ- ஸ்தாபன அர்த்தமாக -அநேக உபபத்திகளை கல்பித்து கொண்டு –
சொல்லா நின்றுள்ள -நிஹினதரமான அர்த்தங்களாகிற தமஸு மிக்கு –
அத்தாலே –
அவசன்னமாய் போன லோகத்தினுடைய அந்தகாரமானது போம்படியாக தம்முடைய
ஆஸ்ரித ரஷணங்கள் ஆகிற திரண்ட வைலஷண்யத்தை உடைய கிருபை ஒரு மடை கொண்டு-
சகல ஆத்மாக்களுக்கும் சேஷி ஸ்ரீ பெரிய பெருமாள் என்னும் அர்த்தத்தை உபகரித்தார் –
இவ் அர்த்தத்தை எமக்கு வெளி இட்டு அருளின ஸ்ரீ எம்பெருமானார் பரம தார்மிகர் -கிடீர் .
அன்றிக்கே –
மிக புண்ணியனான எம் இராமானுசன் பொருள் சுரந்தான் -என்று க்ரியை யாகவுமாம்-

அவப் பொருள் -பொல்லாத பொருள்
ஆகம வாதியர் கூறும் மறப் பொருள் – என்று பாடமான போது –
ஆகமவாதிகள் சொல்லுகிற காதுகமான அர்த்தம் -என்கை-
காதுகம் என்கிறது -ஆத்மா நாசகம் ஆகையாலே

அன்றிக்கே –
ஆகம வாதியர் கூறும் மறைப் பொருள் -என்ற பாடமான போது –
தைச் சப்ரசித்த சமூலதாயை க்ராஹ்யா த்ரயீ-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2 – என்கிறபடியே –
ஆகம முகேன தாங்கள் சொல்லுகிற அர்த்தத்துக்கு மூல பிரமாணமாக-
த்ரய்யா மபிச சாமான்ய வாதச் சித்த விபெதாக -என்கிற-
பிரசம்சாபரமான வேத வாக்யங்களை பரிக்ரகித்து கொண்டு -வேதமும் இப்படியே சொல்லிற்று என்று –
ஆகம வாதிகள் சொல்லுகிற வேதார்த்தம் என்ற படி –

இருள் சுமந்தெய்த்த-என்றும் பாடம் சொல்லுவார்கள் –
அப்போது -இருளை பறித்து அத்தாலே -அவசன்னமான -என்கை –

ஈண்டுதல்-திரளுதல்
சீர் -அழகு
புண்ணியன் -என்று -தார்மிகன் -என்றபடி
இராமானுசன் என்னும் புண்ணியன் -என்றும் பாடம் சொல்லுவார்கள்
அதுவும் இரண்டாம் யோஜனைக்கு சேரும் –

பரதேவதா பாரமார்த்யம் ஸ்தாபித்தார் -முதல் அடி -இதுவே -பின்பு தான் அவனை அடைய உபாயங்களை பற்றி -அரிய வேண்டும் –
வேர் முதல் வித்து -ஊழி முதல்வன் -பத்ம நாபன் –நின்ற ஆதி தேவன் -பூவில் நான் முகனைப் படைத்த தேவன் –
தமஸ் -அஞ்ஞானத்தில் மூட்டுமே-அவப்பொருள்-பசு -பதி -பாசம் -அர்த்த பஞ்சகம் -மூன்றும் பசுபதி ஆகமம் -சொல்லும் –
சிவனுக்கு பரத்வம் -சொல்லும் -பசு -அணுக்கள் – ஜீவன் –
பாசம் -தடுக்கும் ஐந்து -ஷட் -ஆறு தரித்து விலக்க – இத்தை நிரசித்து –
ப்ரத்யக்ஷமாக திருக்கரங்கள் மூலம் நாதன் நானே என்று காட்டி அருளும் அரங்கன் -காட்டி –
இதுவே தார்மிகர் புண்ணியன் -எம்மிராமாநுசன் –
மருள் சுரந்த ஆகமம் -ஆகமத்திலியே மருள் -பாசுபதி பவிஷ்யாகார அதிகாரம் -தேசிகர் –
ச ப்ரஹ்ம சேனேச-இதிலும் ச ஹரி சேர்த்து -சந்தஸ் சேராமல் -சொருகி –
காயானே வாசா -நாராயண –ஸ்ரீ மன் சேர்க்க முடியாதே –
அருளாலே மருளை நீக்கி -ஸ்ரீ அரங்கன் சேஷி என்று உணர்த்தி இருள் போக்கினார்-

மருள் சுரந்த ஆகம வாதியர் கூறும் –
நாராயணா க்ருஷ்ண வாசுதேவா கேசவா ஹ்ருஷிகேசா-அச்யுதா அனந்தாதி திவ்ய நாமங்களுக்கு வாச்யன் ஆகையாலே –
த்ரிவித சேதன அசேதன வர்க்கத்துக்கும்-தாரகத்வ -வ்யாபகத்வ -நியந்தர்த்வ -த்ரிவித பரிச்சேத ரஹித்வ –
அவ் யயத்வாதி தர்மங்களோடு கூடி இருந்தவனே-சர்வ ஸ்மாத் பரன் என்று அறிய மாட்டாதே –
பூர்வ பாப சங்காதம் எல்லாம் படிந்து கடலிலே ஒரு காளகூடம்- விஷம் -உண்டானாப் போலே –
அஞ்ஞானம் எல்லாம் ஒரு முகமாக திரண்டு -அத்தாலே வ்யாப்தராய் –சர்வ லோக சாஷிகமான-
பிரகலாத கஜேந்திர ரஷண கதைகளையும் -மூன்று ஆபத்து ஸ்ரீ எம்பெருமானுக்கு -என்பர் ஸ்ரீ நஞ்சீயர் –
ப்ரஹ்லாதன் -கஜேந்திரன் -திரௌபதி –-

யதஸ் சைத ச் சராசரம் -என்கிற மைத்ரேயருடைய சாமான்ய பிரச்னத்துக்கு-
விஷ்ணோஸ் சகாஸா துத்பூதம் -இத்யாதியான பராசுர பகவானுடைய விசேஷோத்தரம் முதலான அர்த்தங்களையும்-அநாதரித்து-
தமஸ் த்வஞா கஜம் வித்தி மோகனம் சர்வே தேஹிநாம் பிரமாதா லஸ்ய நித்ராபி தன் நிபத்னாதி பாரத -என்கிறபடியே
பந்த ஹேதுவான அஞ்ஞானத்தை எல்லாம் தன்னிடத்திலே கண் வைத்த மாத்ரத்திலே-கொடுக்க கடவ –
சிவ யோக சாஸ்திரம் –முதலான துராகமங்களிலே நிஷ்டராய் -அத்தை பிரமாணமாக
அவலம்பித்துக் கொண்டு -நின்று துர்வாதங்களை பண்ணா நின்றுள்ள பாசுபதாதிகளை சொல்லுகிறது –

மருள் சுரந்து —உலகிருள் நீங்க –
ஆகம வாதியர் ருத்ரன் சொன்ன ஆகமத்தை பிரமாணமாகக் கொண்டு –அவ்வளவிலே நின்று –
மறையை முற்றும் ஆராயாது –மறைப் பொருள் கூறுவாரோடு – வாதம் புரிந்து வரும் பாசுபதர் முதலிய சைவர்கள் –
அவர்கள் பலவகைப்பட்டு ஒருவருக்கு ஒருவர் முரண்பட்ட -நடவடிக்கைகளும் -கொள்கைகளும் உடையவர்களாய் இருப்பினும் –
வேதத்துக்கு விபரீதமாக சிவனையே பரம் பொருளாகவும்
குடத்துக்கு குயவன் போலே உலகினுக்கு இவன் நிமித்த காரணமாக மட்டும் இருப்பவனாகவும் கொள்ளும் தன்மையில்
மாறுபாடு இன்றி இருத்தலின் எல்லோரையும் சேர்த்து –ஆகம வாதியர் -என்றார் .
மருள் சுரந்தமை அவப் பொருள் கூறுவதற்கு ஹேது என்க –

இனி மருள் சுரந்த ஆகமம் என்று பிரித்து –
பெயர் எச்சத்தின் ஈறு கெட்டு மருள் சுரந்தாகமம்-என்றாயிற்று என்று உரைத்தலுமாம் ..
தான் மேன்மை அடைய வேண்டும் என்னும் கொண்டமையினால் சிவபிரான் –
அன்யம் தேஹி வரம் தேவ பிரசித்தம் சர்வ ஜந்துஷூ மர்த்யோ பூத்வா பவா நேவா மாமாராதய கேசவ-
மாம் வஹஸ்வ ச தேவேச வரம் மத்தோ க்ருஹானச யேநாஹம் சர்வ பூதானாம் பூஜயாத் பூஜ்ய தரோ பாவம் –
தேவ தேவனே -கேசவனே -நீயே மனிதனாகி எல்லாருக்கும் தெரியும்படி என்னை ஆராதிக்க வேண்டும்-
தேவர்கட்குத் தலைவனே -என்னை வாகனமாக நின்று சுமக்கவும் வேண்டும்-என்னிடம் இருந்து வரம் வாங்கிக் கொள்ளவும் வேண்டும்
எத்தகைய வரத்தினாலே எல்லாருக்கும் பூசித்தற்கு உரியார் ஆயினும் -மிகவும் பூசித்தற்கு-உரியேன் ஆவேனோ
அத்தகைய வரத்தை நீ நல்க வேண்டும் –என்று ஸ்ரீ எம்பெருமானை நோக்கி வரம் கேட்க –
மணி கர்ணன் -கண்டா கர்ணன் தம்பி -என் மேல் த்வேஷம் -எனக்கு ப்ரீதி உண்டு என்றானே கண்டா கர்ணன் –
இருவருக்கும் முக்தி கொடுத்து அன்றோ வரம் கேட்கப் போனான் –
கள்வா என்றானே ருத்ரனும்

தற் பெருமையில் அவனுக்கு ஆர்வம் இருப்பதைக் கண்டு-ஸ்ரீ எம்பெருமான் –
தத்வமச ருத்ர மகா பாஹோ முஹ சாஸ்தராணி காரைய -நீண்ட கை படைத்த ருத்ரனே –
நீயும் மோஹ சாஸ்த்ரங்களை செய்விக்க வேண்டும் -என்று கட்டளை இட -அதனை ஒரு-காரணமாக கொண்டு –
மோஹ சாஸ்திரமாகிய ஆகமத்தை அவன் சொன்னதாக புராணம் கூறுவதை அடி யொற்றி –
மருள் சுரந்த ஆகமம் –என்றார் -மோஹா சாஸ்திரம் என்றபடி -மருள் -மோஹம்
தெருள் சுரந்த ஆகமம் ஆதலின் பிரமாணமாக கொள்ளப்படும் பாஞ்சராத்திரம் போன்றது அன்று-இம்மருள் சுரந்த ஆகமம் -என்க –

இனி மருள் சுரந்த -என்னும் எச்சம் வாதியர் என்னும் பெயரோடு முடித்தலுமாம் –
அப்பொழுது -கௌதமருடைய சாபத்தாலே வேத நெறிக்கு புறம்பான கொடுங்கோலும் செயலும் கொண்டு-
கண்டபடி மோஹம் அடைந்து திரிபவர்க்காக –அவரது சாபத்தை மெய்ப்பிக்க கருதி –
சிவ பிரானால் -அவர்களுக்கு ஏற்பச் செய்யப்பட்டது ஆகமம் என்று வராஹா புராணம் கூறுவதற்கு ஏற்ப-
வாதியாரை மருள் சுரந்தவர்களாக கூறினார் -என்க –

இவ் வரலாற்றினை-கைதவ மொன்று கந்தவரைக் கடிய சாபம் கதுவியதால் அதன் பலத்தை கருதி
பண்டை வேத நெறி யணுகாது விலங்குதாவி வேறாக விரித்துரைத்த விகற்பமெல்லாம் -என்று-ஸ்ரீ பரமதபங்கம் -41 ஸ்ரீ வேதாந்த தேசிகன்
அருளிச் செய்துள்ளமை காண்க –

அவப் பொருளாம் இருள் சுரந்து –
ஜடாகலாப பச்ம ருத்ராஷ லிங்க தாரணம் தொடக்கமான-நிஷித்தார்த்தங்கள் ஆகிற அந்தகாரமானது வியாபித்து —
அவப் பொருள் -பொல்லாத பொருள் –

ஆகம வாதியர் கூறும் மறைப் பொருள் -என்ற பாடமான போது –
ருத்ர ஹரத்ர்யம் பக ஸ்த்தாணு விருபாஷாதி-சப்தங்களாலே நிஷித்த தர்ம ப்ரவர்த்தனான ருத்ரனுடைய
வ்யாப்யத்வத்தை தெரிய மாட்டாதே வேதத்தில் –
ச ப்ரஹ்மா ச சிவா -இத்யாதிகளாலே -அவனே அவனும் அவனும் அவனும் – சாமானாதி கரண்யேன
உக்த வாக்யங்களினுடைய தாத்பர்யத்தையும் -உபக்ரமோபா சம்ஹாரத்தையும் பராமர்சியாதே –
ப்ரசம சாபரங்களாயும்-அப்ரசித்தார்த்தங்களாயும் இருந்துள்ள-சூத சம்ஹிதாதிகளுக்கு அனுகூலமாக –
அதுக்கு சொன்ன அவப் பொருளாகிற அந்த காரத்தை என்னவுமாம் –

அன்றிக்கே –
கூறும் அறைப் பொருள் என்று பதச் சேதமாய் –
அவர்கள் சொல்லுகிற காதுகமான அர்த்தவத்தை -என்க-
காதுகம் என்கிறது ஆத்மா நாசகம் ஆகையாலே –

அங்கனும் அன்றிக்கே
அறை என்று த்வநியாய் –கடலோசை யோபாதியான பொருள் என்னவுமாம் –

அவப்பொருள் –
பரம் பொருளைக் கீழ்ப் படுத்தியும்-கீழ்ப் பொருளைப் பரம் பொருளாக்கியும்-
உலகினுக்கு உபாதான காரணமாக பிரகிருதி தத்த்வத்தையும் நிமித்த காரணமாக மட்டும் பரம் பொருளையும் சொல்லுவது –
வேதப் பொருள் ஆகாமையின்-அவப் பொருளாம் –
ஸ்ரீ நாராயணனே முதல் பெரும் கடவுள்
பிரமன் ருத்ரன் முதலியோர் படைப்புக்கு உள்ளானவர்களே -என்பதும் –
உலகமாக அப் பெரும் கடவுளே மாறுதலின் -உலகினுக்கு உபாதான காரணமும் நிமித்த காரணமும் அவனே என்பதும்
வேத நூல் ஓதும் உண்மைப் பொருள் என்று அறிக –

அவப் பொருளாம் இருள் –
இருள் எனபது இங்கே தமோ குணத்தை
அது விபரீத உணர்வுக்கு ஹேது ஆதலின் -காரியமாகிய அவப் பொருளை காரணமாகவே-உபசார வழக்காக கூறினார் –
சத்தவ குணத்தை வெளிச்சமாகவும் தமோ குணத்தை இருளாகவும் கூறுவது மரபு –
கொள்ளென்று தமமூடும் -திரு வாய் மொழி – 4-9 4- – – என்றார் ஸ்ரீ நம் ஆழ்வாரும் .

ஆகமவாதியர் கூறும் மறப் பொருள் -என்றும் ஒரு பாடம் உண்டு .
அப்பொழுது மறம் எனபது அறத்திற்கு எதிர் சொல்லாய் படு நாசத்துக்கு உள்ளாக்கும் கொடிய பொருள்-என்று உரைக்க –
இறைவனுக்கே உரிய ஆத்ம வஸ்துவை அங்கன் ஆக ஒட்டாது-அழித்தலின் அப் பொருள் மறப் பொருளாயிற்று என்க

ஆகம வாதியர் கூறும் மறைப் பொருள் -என்று மற்றும் ஓர் பாடம் உண்டு
அப்பொழுது ஆகமத்தில் தாம் கூறும் பொருளுக்கு சான்றாக -சம்பு -சிவன் -முதலிய வேதத்தில் உள்ள பொதுச் சொற்களையும்
புகழுரைகளாய் அமைந்த சில வாக்யங்களையும் கொண்டு-வேதமும் இப்படியே சொல்கின்றது என்று
ஆகம வாதியர்கள் சொல்லுகிற வேதார்த்தம்-என்று பொருள் கொள்ள வேண்டும் .

எய்த்த உலகு இருள் நீங்க –
தமஸ் த்வஜ்ஜா நஜம் வித்தி – என்னும்படியான அஞ்ஞானம் ஆகிற-அந்தகாரத்திலே –
சத் அசத் விவேகம் அற்று -அவிவிவேகராய் போந்த சேதனருடைய அந்தகாரமானது -நீங்கிப் போகும்படியாக –
எய்த்தல் -இளைத்தல் –

எய்த்த உலகு –
இருள் சுரந்தமையால் நேர் வழியைக் காண மாட்டாது வீணாகக் கரடு முரடான வழியே நடந்து-
தடுமாறி -தளர்ச்சி உற்றது இவ் உலகம் -என்க –
மதி இழந்து அரனார் சமயம் புக்குத் தழல் வழி போய்த் தடுமாறி தளர்ந்து வீழ்ந்தீர் -பரமதபங்கம் -42 -என்னும்
வேதாந்த தேசிகன் ஸ்ரீ ஸூக்தியை இங்கே நினைக்க

இருள் சுமந்தெய்த்த -என்றும் பாடமுண்டு .
அப்பொழுது இருள் சுமையை சுமந்து அதனால் எய்த்த -என்றபடி .
இருள் நீங்க –
இங்கனம் அல்வழியே செல்வதனால் தடுமாறி உலகு எய்ததற்கு காரணம் அஞ்ஞானம்
அதனையே இங்கு –இருள் -என்கிறார் –
இருள் நீங்குவது வெளிச்சத்தாலே -அஞ்ஞான அந்தகாரம் நீங்குவது ஞானப் பிரகாசத்தாலே-
அந்த ஞானப் பிரகாசத்தை தமது அருளாலே ஸ்ரீ எம்பெருமானார் உண்டு பண்ணியதை அருளிச் செய்கிறார் .

தன் ஈண்டிய சீர் அருள் சுரந்து –
அந்த காரத்தைப் போக்கும் ஆதித்யன்-அநேகம் ஆயிரம் கிரணங்களை ஒருக்காலே லோகத்தில் எல்லாம் பிரசரிப்பிக்குமா போலே –
சீரார் செந்நெல் -ஸ்ருஷ்டத்வம் வனவாசம் போலே கைங்கர்யம் செய்யவே –-
பொய் இல்லையே பொலிந்து நின்ற பிரான் நிற்க –தம்முடைய-ஆஸ்ரித பாரதந்த்ரியங்களால் திரண்ட வைலஷண்யத்தை உடைய
கிருபை எல்லாம் லோகம் எங்கும்-வியாபித்தது -ஸ்ரீ ராமானுஜ திவாகர –
ஈண்டுதல்-திரளுதல்
சீர் -அழகு –
தத்ர சத்வம் நிர்மலத்வாத் பிரகாசகமநாமயம் –ஸூ க சங்கே ந பத்-நா திஞ்ஞா நசங்கே நசா ந -என்கிறபடியே
இவருடைய விஷயீ காரத்தால் உண்டான சத்வோத்தேரேகத்தாலும்-
அஞ்ஞா நதி மிராந்தச்ய ஜ்ஞானாஜ் ஜன சலாகயா -சஷூருன்மீலிதம்யேன தஸ்மை சத்குரவே நம -என்கிறபடியே
இவர் தம்முடைய உபதேசத்தாலும் -அநாதி காலமே பிடித்து தொடர்ந்த அஞ்ஞான அந்தகாரம்-எல்லாம் வாசனையோடு முடிந்து போம் இறே –

எல்லா உயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தான் –
பதிம் விச்வச்ய -உதாம்ர்தத் வச்யேசான -லோக நாதம் புராபூத்வா –முழு ஏழு உலகுக்கும் நாதன் –என்றும்-சொல்லுகிறபடி
சகல ஆத்மாக்களுக்கும் வகுத்த சேஷி -நமக்கு எட்டாத நிலத்தில் அன்றிக்கே –
நாம் இருந்த ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் -என்கிற விசேஷ அர்த்தத்தை-
லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்கும்படி உபதேசித்தார் –

தன் ஈண்டிய சீர் அருள் சுரந்து –சுரந்தான் –
தன்னை அண்டி வேண்டினவர்களுக்கு மட்டும் ஜ்ஞானப் பிரகாசத்தை வழங்காமல் -அனைவருக்கும் வழங்குவது அருளினால் அன்றோ –
ஏனையோர் அருளை விட இவ்வருள் மிக்க சீர்மை கொண்டது என்று -ஈண்டிய சீர் அருள் -என்று கொண்டாடுகிறார் .
சீர் –அழகு –
அருளுக்கு அழகு தனக்கு இலக்கு ஆகும் அவர்களை காப்பாற்றுதல்
அத்தகைய காப்பாற்றுதல்கள் பலவாய் இருத்தலின் –ஈண்டிய சீர் அருள் –என்கிறார் –
ஈண்டிய -திரண்ட-

இனி -சீர் -என்பதற்கு குணங்கள் என்று பொருள் கொண்டு –
அருள் உள்ள இடத்தில் பல குணங்களும் அருளுக்கு-இலக்கு ஆயினார் .
வேண்டியதை நிறைவேற்றி கொடுத்தற்கு உறுப்பாக திரளுதல் பற்றி-ஈண்டிய சீர் அருள் -என்றதாகவுமாம்-
அறிவு முன்னர் வழி காட்ட -ஆற்றல் முதலியன பின்னர் தன் வழியை-பின் பற்ற அருள் என்னும் அணங்கு நடை போடுவதாக
ஸ்ரீ வேதாந்த தேசிகன் அருளிக் செய்து உள்ளமை-ஸ்ரீ தயா சதகம் -14 – இங்கு உணரத் தக்கது .

இனி அருள் சௌசீல்யம் -தாழ்ந்தவரோடு பழகும் இயல்பு –
சௌலப்யம் -காண்டதற்கு எளியவனாய் இருத்தல் -முதலிய குணங்களை உண்டு பண்ணித் தனக்கு இலக்கானார்
பற்றுதற்கு வாய்ப்பாய் அமைதலினால்-ஈண்டிய சீர் -என்றார் ஆகவுமாம் –
இதுவும் ஸ்ரீ வேதாந்த தேசிகனால் -ஸ்ரீ தயா சதகத்தில் – 45-
சீலோபஜ்ஞம் சாரதி பவதீ சீதளம் சத்ருணவ் கம -சீலம் முதலான குளிர்ந்த நற் குண ப்ரவாஹத்தை அருள் என்னும்-
கரும் கொண்டலாகிய நீ பொழிகின்றாய் -என்று வருணிக்கப் பட்டுள்ளது .

எல்லா உயிர் –பொருள் சுரந்தான்
பசுபதி உட்பட எல்லாரும் ஜீவாத்மாக்களே .-அனைவருக்கும் தலைவன் -சேஷி ஒருவனே –
அவனே தன் சேஷித்வம் தோற்றச் சேஷ தற்பத்திலே ஸ்ரீ திருவரங்கத்திலே -பள்ளி கொண்டு இருக்கிறான்-என்னும்
மெய்ப் பொருளை ஸ்ரீ எம்பெருமானார் உணர்த்தி யருளினார் -என்றபடி .
தமோ குணம் அடியாக சொன்ன அவப் பொருள்-தூய சத்தவ குணம் அடியாக சொன்ன நற் பொருளாக மாற்றப் பட்டது -என்க .
உலகு இருளை தன்னுடைய ஞானப் பிரகாசத்தாலே நீக்கி அனைவரும் உணர்ந்து எழச் செய்தார் ஸ்ரீ ராமானுஜ திவாகரன் -என்கிறார் .

இங்கு நாராயணன் நாதன் -என்னாதது குறிப்பிடத் தக்கது .
மறை நெறிக்கு மாறுபட்டு சைவாகம வழியே போய் எய்த்தவர்களை நோக்கி மெய்ப் பொருள்-சுரக்கும் இடம் இது வாகையாலே –
சொந்த மதியை -இழந்து -அவப் பொருளால் மந்த மதியை -உடையீராய்-ஆகம வழியே நடந்து உழலும் நீங்கள்
சந்த-வேத நெறியின் சாரமாய் அமைந்த-நல் ஆகமமான ஸ்ரீ பாஞ்ச ராத்ரத்தின் படி –
முடிய இடர் இலா வழியே -களி நடை நடந்து -ஸ்ரீ அரங்கனை வழி பட்டு -அந்தமிலா ஆனந்த கடலில் ஆழ முழுகுங்கள் என்று-
ஸ்ரீ பாஞ்ச ராத்ர வழியில் உலகினை நடத்தும் கருத்துடன் ஸ்ரீ அரங்கனை -எல்லா-உயிர் கட்கும் நாதன் -என்கிறார் –
ஸ்ரீ வைகுண்டத்தின் கண் உள்ள ஸ்ரீ பர வாசு தேவனான-ஸ்ரீ நாராயணன் ஸ்ரீ அரங்கனே -என்பது ஸ்ரீ எம்பெருமானார் கொள்கை .
வடிவுடை வானோர் தலைவனே – 7- 2- 10- – – என்று ஸ்ரீ நம் ஆழ்வார் குறிப்பிடுவதும் காண்க .

ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் அர்ச்சா மூர்த்தியின் வழி பாட்டினைப் பேசுவதாதலின்-அர்ச்சா மூர்த்தியான-ஸ்ரீ அரங்கனை நாதனாக குறிப்பிட்டார் -என்க .
ஸ்ரீ பாஞ்ச ராத்ர பகவான் திருவடிகளையே உபாயமாக புகலுகின்றது-
அரங்கனாம் –
ஸ்ரீ பெரிய பெருமாளும் -நீட்டிய திருக் கரத்தாலே -தன் திருவடிகளையே உபாயமாகப் பற்றும்படி காட்டிய வண்ணமாய்
பள்ளி கொண்டு இருப்பதனால் –ஸ்ரீ பாஞ்ச ராத்ரப் பொருளை விளக்கும் நிலையில் இருப்பதைப் பொறுத்து ஸ்ரீ அரங்கனைப் குறிப்பட்ட தாகவுமாம்-

எம் இராமானுசன் –
அஸ்மத் ஸ்வாமியான ஸ்ரீ எம்பெருமானார்-

மிக்க புண்ணியனே –
பரம தார்மிகர் கிடீர் –

ராமானுசன் என்னும் புண்ணியன் -என்றும் பாடம் சொல்லுவார்கள் –
இப்படி உபகரிக்கையாலே ஆசந்த்ரார்கமாக தார்மிகர் கிடீர் -என்றபடி –
மிக்க புண்ணியனான எம் இராமானுசன் -பொருள் சுரந்தான் -என்று அங்கு அன்வயிக்க்கவுமாம் –

பக்தி ரூபாபன்ன ஞானம் என்கிற மை கொண்டு அஞ்ஞானம் போக்கி-
நவ ரத்னம் என்கிற அஞ்சனம்–முழு ஏழு உலகுக்கும் நாதன் -லோக நாதன்-பரன் -எட்டாத நிலம் இல்லை –ஸ்ரீ அரங்கன் –
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது போகிறோம் என்று கிடக்கிறான்-இவனே நாதன் என்று காட்டிக் கொடுத்தார் ஸ்ரீ ஸ்வாமி-

எம்மிராமானுசன் மிக்க புண்ணியன் –
ஸ்ரீ அரங்கனை நாதனாய் குறிப்பிட்டு காட்டி தமக்கு உபகரித்தமையின் –எம் இராமானுசன் –என்கிறார் .
மிக்க புண்ணியன் -பெரிய தர்மாத்மா-இருள் நீங்கப் பொருள் சுரந்தான் -என்று முடிக்க –
மேலுள்ள சொற்றொடர் தனி வாக்கியம் –-புண்ணியன் -என்பது பெயர்ப் பயனிலை –

இனி மிக்க புண்ணியன் இராமானுசன்-இருள் நீங்கப் பொருள் சுரந்தான் -என்று ஒரே வாக்யமாக முடித்தலுமாம்.
இராமானுசன் என்னும் புண்ணியனே -என்றும் ஒரு பாடம் உண்டு -அப்பொழுது ஒரே வாக்யமாக முடித்தல் வேண்டும் –

——————

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணிவண்ணா! உன கழற்கே வரும் பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே –4-9-4-

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூர தனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மா மதிள் சூழ்ந்து அழகாய திருக் குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கி யர்க்கே?–4-10-4-

புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர் தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8-

ஏ பாவம் பரமே ஏழு உலகும் ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் யார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய் கோபால கோளரி ஏறு அன்றியே -2-1-2–

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

மையல் செய்து என்னை மனம் கவர்ந் தானே! என்னம்’ மா மாயனே!’ என்னும்;
‘செய்ய வாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திரு வரங் கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பை கொள் பாம்பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே–7-2-6-

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான் முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே–7-2-10-

கள்வா எம்மையும் ஏழு உலகும் நின்-உள்ளே தோற்றிய இறைவ என்று-
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்-புள்ளூர்த்தி கழல் பணிந்து யேத்துவரே -திரு வாய் மொழி -2 -2 -10 –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –90-நினையார் பிறவியை நீக்கும் பிரானை- இத்யாதி —

May 30, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இவர் -அஞ்சுவன் -என்றவாறே இவர் பயம் எல்லாம் போம்படி குளிரக் கடாஷிக்க
அத்தாலே நிர்பீகராய் -கரண த்ரயத்திலும் -ஏதேனும் ஒன்றால்-இவ் விஷயத்தில் ஓர் அநு கூல்யத்தை பண்ணி-
பிழைத்து போகலாய் இருக்க சேதனர் ஜன்ம கிலேசத்தை அனுபவிப்பதே என்று இன்னாதாகிறார்-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டில் ஸ்ரீ எம்பெருமானார் உடைய மதிப்பையும் -அவரை ஸ்தோத்ரம் பண்ணாமைக்கு-தமக்கு உண்டான
அயோக்யதையும் அனுசந்தித்து -இவ் விஷயத்திலே -நான் ஸ்துதிப்பதாக போர சாஹாச-கார்யத்துக்கு உத்யோகித்தேன்
என்று அணாவாய்த்து -இவர் அஞ்சினவாறே -ஸ்ரீ எம்பெருமானார் –
இவருடைய அச்சம் எல்லாம் தீரும்படி குளிர கடாஷிக்க -அத்தாலே நிர்பரராய் -ஸ்தோத்ரம் பண்ண ஒருப்பட்டு –
இதில் லௌகிகர் படியை கடாஷித்து –
ஸ்ரீ எம்பெருமானார் யோக்யா அயோக்யா விபாகம் அற சர்வரையும்-கடாஷிக்கைக்காக வந்து அவதரிக்கச் செய்தே –
இந்த லௌகிகர் தம்மை ஒருக்கால் ப்ராசுரிகமாக-நினைத்தவர்களுடைய -சோஷியாத பவக்கடலை சோஷிப்பிக்குமவரான –
இவரை நினைக்கிறார்கள் இல்லை –
என்னை ரஷிக்கைக்காக நான் இருந்த இடம் தேடி வந்த இவரை -ஈன் கவிகளால் ஸ்துதிக்கிரார்கள் இல்லை –
அப்படி ஸ்துதிக்கைக்கு அதிகாரம் இல்லை என்றாலும் ஸ்துதிக்கும் அவர்களுடைய திருவடிகளை-ஆராதிக்கிறார்கள் இல்லை –
ஐயோ இவற்றுக்கு எல்லாம் உறுப்பான ஜென்மத்தை பெற்று இருந்தும் அறிவு கேட்டாலே
ஜன்ம பரம்பரைக்கு அது தன்னை ஈடாக்கி கிலேசப்பட்டு போனார்களே என்று இன்னாதாகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ எம்பெருமானார் கடாஷத்தாலே அச்சம் தீர பெற்ற ஸ்ரீ அமுதனார் –மூன்று கரணங்களுள் ஏதேனும் ஓன்று கொண்டு –
ஸ்ரீ எம்பெருமானார் திறத்தில் அநு கூலமான-செயலில் ஈடுபட்டு உய்யலாமே –
அங்கன் உய்யாமல் மாந்தர் பிறந்து படும் துன்பத்தில்-அழுந்துகிறார்களே -என்று பிறருக்காக வருந்துகிறார்

நினையார் பிறவியை நீக்கும் பிரானை இந்நீணிலத்தே
எனையாள வந்த விராமானுசனை இருங்கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே – – 90-

பத உரை –
மாந்தர் -மக்கள்
பிறவியை -நினைப்பவர்களுடைய பிறப்பை
நீக்கும் -போக்கடிக்கும்
பிரானை-உபகாரம் புரியுமவரான இவரை
நினையார் -நினையாது உள்ளனர்
எனை யாள -என்னை ஆட் கொள்ள
இந் நீள் நிலத்தே -இந்த நீண்ட பூ மண்டலத்தே
வந்த -நான் இருக்கும் இடம் தேடி -எழுந்து அருளின –
இராமானுசனை -ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றி
இரும் கவிகள் -பெரிய கவிகளை
புனையார் -தொடுத்து ஏத்தாதவர்களாய் உள்ளனர்
புனையும் -அவரைப் பற்றி கவி தொடுக்கும்
பெரியவர் -பெருமை வாய்ந்தவர்களுடைய
தாள்களில் -திருவடிகளில்
பூம் தொடையல் -பூ மாலைகளை
வனையார் -சமர்ப்பிக்காதவர்களாய் உள்ளனர்
மருள் சுரந்து -அந்த மாந்தர் அறிவு கேடு மிகுந்து
பிறப்பில் -பிறப்பினால் நேரும் இன்னல்களில் அழுந்தி –
வருந்துவர் -துன்புருவர்களாய் உள்ளனரே

வியாக்யானம் .- –
தம்மை நினைத்தவர்களுடைய ஜன்மத்தைப் போக்கும் உபகார சீலரான இவரை நினைக்கிறார்கள் இல்லை
நிகரின்றி நின்ற நீசதையை – 48- உடைய என்னை அங்கீகரித்து-
தம்முடைய குணங்களுக்கு தேசிகனாய் வாசகம் இடும்படி பண்ணி -இப்படி யாளுகைக்காக –
இப் பூமி பரப்பு எல்லாம் கிடக்கச் செய்தே -நான் கிடந்த விடம் தேடி வந்த ஸ்ரீ எம்பெருமானாரைத்-
தத் குண பிரகாசமான பெரிய கவிகளை தொடுக்கிறார்கள் இல்லை .
தாங்கள் கவி புனைய மாட்டுகிறிலர்கள் ஆகில் அவர் விஷயமாக கவிகளைத் தொடுக்கும்-மகா ப்ராபாவருடைய திருவடிகளிலே
பூ மாலைகள் சமர்ப்பிக்கிறார்கள் இல்லை .
இத்தனைக்கும் யோக்யமான ஜென்மத்தை பெற்று இருக்கிறவர்கள் -அறிவு கேடு மிக்கு
ஜன்ம மக்னராய் துக்கப்படா நின்றார்கள் -ஐயோ -இவர்கள் பாக்ய ஹீநதை யிருந்த படி என் – என்று கருத்து –

நினைவார் பிறவியை நீக்கும் பிரானை -என்று பாடம் சொல்லுவார்கள்
புனைதல் -தொடுத்தல்
வனைதல்-செய்தல் -இத்தால் சமர்ப்பிக்கைக்கையை சொன்னபடி –
வருந்துதல்-துக்கித்தல்

ஸ்ரீ அமுதனார் அருளிச் செய்த இந்த பிரபந்தத்தை நினைத்தாலே போதுமே -தம் பெருமை மறை முகமாக சொல்லிக் கொள்கிறார்-
என்னை ஆளவே வந்தார் -என்னைக் கொண்டு இப்பிரபந்தம் பாடுவிக்கவே -ஆவிர்பவித்தார் –கடாஷித்தே -ஆள்பட வைத்து அருளினார் –
மாந்தர் -மந்த புத்தி –
நினைவார் பிறவியை நீக்கும் பிரான் –பிறவியை நீக்கும் பிரானை நினையார் -என்றுமாம் –
நினைத்தாலே -ஒன்றை நூறாக்கி -அருளும் பிரான் அன்றோ –
நிகர் இன்றி இருந்த நீசனை ஆண்டு -அவனே அவதரித்து வந்தாலும் கலங்க வைக்கும் பிரகிருதி -இந்த நீணிலத்தே –
கங்கணம் கட்டி வந்து என்னை ஆள் கொண்டாரே-நீணிலத்தே -ஆளுவதன் அருமை –சொல்லிற்று -இருள் தரும் மா ஞாலம் –
பண்டங்கள் கிடக்குமா போலே கிடந்தேன் -கிடந்த இடம் -அரங்கன் கிடந்த இடம் -இருந்த இடமாக்கி –
ஆச்சார்யர் இருந்த இடத்துக்கு மாற்றி அருளி -இரும் கவி -பெரிய கவி -உண்மையான கவி -உன்னைப் பாடுவதால் -உயர்ந்ததாக ஆகுமே –
ஸ்ரீ ஸ்வாமி புஷ்கரணி -நீராடுவாரையும் ஸ்வாமி ஆக்கும் -ஸ்ரீ பெரும் தேவி -ஸ்ரீ பெருமாளுக்கு தக்க -அதே போலே குணம் காட்ட வல்ல கவி –
ஸ்ரீ ராமானுஜ சம்பந்தம் அடைய பல வகைகள் உண்டே -ஸ்ரீ பாஷ்யம் கற்று கற்றுவிப்பது மட்டும் இல்லையே –
பஞ்ச சம்ஸ்காரம் போதுமே -அடியேன் -ராமானுஜ தாசன் சொன்னாலே போதுமே
தெருளுற்ற வர்களாக ஆகாமல் மருளுற்று பிறவியில் அழுந்துகிறீர்களே -கர்ப்ப ஸ்ரீ மான்களாக இருக்க வேண்டியர்கள் —

நினையார் பிறவி நீக்கும் பிரானை –
நம்மை ஒருக்கால் நினைக்கை யாகிற ஆபிமுக்யத்தை பண்ணினார்கள் ஆகில் –
பக்த தரனுப்யுபா ஹ்ர்தம் ப்ரேம்னா பூர்யேவமேபவேத் -என்று சொல்லப் படுகிறவனைப் போலே-அத்தை ஓன்று நூறாகி –
பபாத்வாந்த ஷயாயச -என்கிறபடியே அவர்களுடைய ஜன்ம மரண ஆதி துக்கங்களை-அவர்கள் அருகே செல்லாதபடி
நீக்கும் உபகாரகரான இவரை அறிந்து நினைக்கிறார்கள் இல்லை –
காமாதி தோஷ ஹரமாத்ம பதாஸ்ரிதானாம் -என்று அருளிச் செய்தார் இறே ஸ்ரீ ஜீயரும்-

நினையார் பிறவியை நீக்கும் பிரானை –
நினைத்த அளவில் பிறவியை நீக்குமவராய் இருக்க -மாந்தர் நினையாது இருக்கின்றனரே –
ஆயாச ஸ்மாரனே கோச்ய-இவன் நினைப்பதில் என்ன ச்ரமம்-என்றபடி –
ச்ரமம் இல்லாது நினைந்து இருக்க -பிறவாமை என்னும் பேற்றைப் பெறலாமாய் இருக்க -இழக்கின்றனரே –
இது என்ன பாக்யமின்மையோ -என்று வருந்துகிறார் .
பிறவியை நீக்குதல் -மோஷம் அளித்தல் –
பிரான் -உபகரிப்பவர்
ஏதேனும் ஒரு வகையில் தம்மோடு தொடர்பு உடையோர் அனைவருக்கும் வீடு கருதி –
ஸ்ரீ பெரிய பெருமாளை சரணம் அடைந்து -கருதிய வரத்தை -பெற்று உள்ளமையின் -வீடு அளிப்பாராக –
தம்மை நினைவாருக்கு எல்லாம் -பிறவியை நீக்கும் -உபகாரத்தை -செய்ய வல்லவரானார் ஸ்ரீ எம்பெருமானார் -என்கை –

நினைவார் பிறவியை நீக்கும் பிரானை -என்றும் பாடமுண்டு
ஸ்ரீ பெரிய பெருமாளை சரணம் அடைந்து -கருதிய வரத்தை -பெற்று உள்ளமையின் -வீடு அளிப்பாராக –
தம்மை நினைவாருக்கு எல்லாம் -பிறவியை நீக்கும் -உபகாரத்தை -செய்ய வல்லவரானார் ஸ்ரீ எம்பெருமானார் -என்கை –

இந் நீணிலத்தே எனை யாள வந்த இராமானுசனை –
நிகரின்றி நின்ற நீசதையை உடைய அடியேனை-அபிமானித்து -தம்முடைய குணங்களுக்கு தேசிகனாய் வாசகமிட்டு
குண அனுகுணமாக ஸ்தோத்ரம் பண்ணி –
அது தன்னை பிரபந்தீகரிக்கும்படி அமைத்து கொண்டு -என்னை இப்படி ஆளுகைக்கு ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து-அவதரித்தாலும்
அவனையும் கூட மோகிப்பிக்குமதாய் விச்தர்தமான இருள் தரும் மா ஞாலத்திலே –
ஏக லஷ்யமாக -அடியேனை ஒருவனையுமே ரஷிக்க வேண்டும் என்று க்ரத தீஷிதராய் –
இந்த பூமிப்-பரப்பு எல்லாம் கிடக்கச் செய்தே அடியேன் இருந்த இடம் தேடி வந்து –
ஸ்ரீ கோயிலிலே அடியனை அகப்படுத்திக் கொண்ட ஸ்ரீ எம்பெருமானாரை –

இந் நீள் நிலத்தே எனை யாள வந்த இராமானுசனை –
இவ்வகன்ற நிலப் பரப்பிலே ஸ்ரீ எம்பெருமானார் -மற்ற எந்த இடத்திற்கும் போகாதே –
தாம் உள்ள-ஸ்ரீ திருவரங்கத்திற்கு எழுந்து அருளியது -தம்மை ஆட் கொள்வதற்காக தான் -என்று கருதுகிறார் -ஸ்ரீ அமுதனார் .
நிகரின்றி நின்ற நீசனான தன்னை இவ்விருள் தரும் மா ஞாலத்திலே ஆள்வதில் உள்ள அருமை தோற்ற-
இந் நீள் நிலத்தே –என்றார் ஆகவுமாம்-
நிகரின்றி நின்ற நீசனான தான் -ஸ்ரீ எம்பெருமானார் அருளுக்கு இலக்காகி பண்டைய அந்நிலை தவிர்ந்து-
அவர் குணங்களை அனுபவிக்க வல்லனாய் அவ அனுபவத்தை இந்நூல் வடிவத்தில்-அடிவத்து தரும்படி பண்ணினதை நினைந்து –
எனை ஆள –என்கிறார் .

இரும் கவிகள் புனையார் –
இவருடைய விஷயீ காரத்தை பெற்ற பின்பு ஸ்தோத்ர-நிர்மாணத்தில் தங்களுக்கு அதிகாரம் உண்டாய் இருக்கச் செய்தேயும் –
செஞ்சொல் கவிகாள் -என்கிறபடியே-அதி போக்யங்களாய் -தத் குணங்களை சுருக்க மொழிய
பிரதிபாதிக்குமவையான கவிகளை தொடுக்கிகிறார்கள்-இல்லை –
அவருடைய கல்யாண குணங்களை விஸ்தரித்து ஸ்தோத்ரம் பண்ணுகை யாகிற
வாசா கைங்கர்யத்தையும்-பண்ண மாட்டிற்று இலர் -என்றபடி –
புனைதல் -தொடுத்தல் –

இரும் கவிகள் புனையார் –
இரும் கவிகள் -பெரும் கவிகள்
கவிக்கு பெருமை யாவது -துதிக்கப் படுவதன் கண் உள்ள குணங்களை உள்ளபடியே புலப்படுத்தலாம் .
புனைதல் -தொடுத்தல்
புனைதலாக கூறவே கவிகள் பூக்கள் எனபது பெற்றோம்
இது ஏக தேச உருவகம்
மகிழ்வு ஊட்டுவதாலும் மென்மையாலும் கவிகள் பூக்களாக உருவகம் செய்யத் தக்கன -என்க.

புனையும் பெரியவர் தாள்களில் பூம் தொடையல் வனையார் –
தாங்கள் கவி புனைய மாட்டிற்று இலர்கள் ஆகிலும்-
வாசா யதீந்திர மனசா வபுஷாச யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம் –
கூராதி நாத குருகேச முகாத்யு பும்ஸாம்-பாதானு சிந்தனபர -என்கிறபடி கரண த்ரயத்தாலும் அவர் பக்கலிலே அதி பிரவணராய் கொண்டு –
நசேத் ராமானுஜேத் ஏஷா -என்றும் –
புண்யம் போஜ விகாசாய -என்றும் –
நம பிரணவ மண்டனம் -என்றும் –
எதி ராஜோ ஜகத் குரு -என்றும் இத்யாதிகளான கவிகளைத் தொடுக்கும் மகா பிரபாவத்தை உடையவர்களான-
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ ஆச்சான் முதலானவர்களுடைய திருவடிகளிலே பரிமள பிரசுரமான புஷ்பங்களை
கொண்டு வந்து மாலைகையாக தொடுத்து சமர்ப்பிக்கிறார்கள் இல்லை –
புனைதல் –செய்தல்-இத்தால் சமர்ப்பிக்கையை-சொன்னபடி –
கூராதி நாத குருகேச முகத்யு பும்ஸாம் பாதா நு சிந்தன பரஸ் சத்தம் பவேயம்-என்றும் –
யதீஸ்வர சரஸ்வதீ ஸூரபிதா சயானாம் சதாம் வஹாமி சரணாம் புஜம் ப்ரணத சாலிந மௌலிந -என்னக் கடவது இறே –

புனையும் பெரியவர் தாள்களில் பூம் தொடையல் வளையார் –
கவித் தொடையல் புனைதற்கு இயலாதவர்கள் பூம் தொடையலாவது சமர்ப்பிக்கலாமே –
அதுவும் செய்யாது இருக்கின்றனரே என்கிறார் .
கவித் தொடையல் -புனைதல் தானே இயல்பாக சிலர்க்கு மட்டும் அமைவது ஒன்றாதலின் –
எல்லாருக்கும் இயல்வது ஓன்று அன்று –
பூம் தொடையல் வனைவதாயின்-யாவர்க்கும் எளிதே -அது கூடச் செய்யலாகாதா -என்கிறார் .

நினைத்தலும் புனைதலும் ஸ்ரீ எம்பெருமானார் திறத்து செய்ய வேண்டியவைகளாகவும்
பூம் தொடையல் வளைதல் -ஸ்ரீ எம்பெருமானாரை கவி பாடும் பெரியவர் திறத்து செய்ய வேண்டியதாகவும்
ஸ்ரீ அமுதனார் அருளிச் செய்வது குறிக் கொள்ளத் தக்கது .
உத்தாரகரான ஆசார்யர் ஸ்ரீ எம்பெருமானார் ஒருவரே ஆதலின் பிறவியை நீக்குவதற்காக அவரே நினைக்க தக்கவர் ஆகிறார் ..
ஸ்ரீ எம்பெருமானார் காலத்தில் மற்றவர்கள் தங்களைப் பற்றி இரும் கவிகள் புனைதற்கு இசையார்கள் ஆதலின் –
அவர் ஒருவரைப் பற்றியே இரும் கவி புனைய வேண்டியது ஆகிறது

பூம் தொடையல் ஸ்ரீ எம்பெருமானார் தாள்களிலே வனையலாமாயினும் –
ஸ்ரீ திருவரங்கத்தில் அன்றி மற்ற-மற்ற இடங்களில் இருப்பவர்களுக்கு அது இயலாதாய்–
எல்லா இடத்திலும் ஸ்ரீ எம்பெருமானாரை கவி புனையும் பெரியவர் இருத்தல் கூடுமாதலின் –
அவர்கள் தாள்களிலே மாந்தர் அனைவரும் வனைதல் கூற வேண்டிய தாயிற்று .

இங்குப் புனையும் பெரியவரை மட்டும் கூறி நினையும் பெரியவரை குறிப்பிடாதது கவனித்தற்கு உரியது
நினைத்தால்- பிறர் அறியாது தனித்து செய்யப் படுவதாதலின் நினையும் பெரியவரை-அறிதல் அரிதே –
புனையும் பெரியவரையோ அவர்கள் இரும் கவியே காட்டும் ஆதலின் அவர் தாள்களில்-பூம் தொடையல் வளைவது
யாவர்க்கும் எளிதாகி விடுகிறது .

இங்கு நினைத்தல்- புனைதல்- வனைதல்கள் -முறையே
மனம் வாக்கு காயம் என்று மூன்று-கரணங்களின் செயல்களாக கூறப்பட்டு உள்ளன
இம் மூன்று செயல்களில் ஏதேனும்-ஓன்று போதும் மாந்தர் பிறப்பில் வருந்தாமைக்கு -அது தோன்ற –
நினையார் -புனையார் -வனையார் -என்று தனித் தனியே பயனிலையோடு வாக்கியங்கள் அமைக்கப் பட்டன என்று அறிக .

இங்கே ஸ்ரீ எம்பெருமானாரை நேரே நினைப்பவர்க்கும் -நேரே கவிகளை புனைபவர்க்கும் –
ஸ்ரீ எம்பெருமானாரை கவி புனையும்-பெரியவர் தாள்களில் பூம் தொடையல் வனைவாருக்கும்
பிறப்பினில் வருந்துவது இல்லை –என்பது தோன்ற ஸ்ரீ அமுதனார் அருளிச் செய்தமையால் –
ஸ்ரீ எம்பெருமானாரோடு நேர் தொடர்பு உடையார்க்கும் மற்றவர் வாயிலாக-தொடர்பு உடையார்க்கும் பேற்றில்
வேறுபாடு இல்லை எனபது தெரிகிறது .
முக் கரணங்களின் செயல்களில் ஏற்றத் தாழ்வு இருப்பினும் பேற்றினில் ஏற்றத் தாழ்வு இல்லை-
அதற்கு காரணம் இவை பேற்றுக்கு ஹேது வாகாமை-பேற்றுக்கு அடி ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்தமே -என்று உணர்க –

பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே –
அஞ்ஞானத்தாலே ஆவ்ர்த்தராய்-கொண்டு த்யாஜ்ய உபாதேய விவேகம் இல்லாதே ஜன்மாதிகளிலே அநாதியாக கிலேசப்படா நின்றார்கள் –
வருந்துதல் -துக்கித்தல் –
அஞ்ஞானே நாவ்ர்தம் ஜ்ஞானம் ததோ முஹ்யந்தி சந்தவ -என்னக் கடவது இறே –
ஐயோ இத்தனையும் பண்ணுக்கைக்கு யோக்யமான ஜென்மத்தை பெற்று இருந்தும் இது எல்லாம்-தெளிய மாட்டாதே
அறிவு கேடு மிக்கு -ஜன்ம மக்னராய் -துக்கப்படா நின்றார்கள் –
இவர்களுடைய-கர்ப்ப நிர்பாக்யதை இருந்த படி எங்கனே -என்று இன்னாதார் ஆகிறார் காணும் –
துர்லபோ மானுஷோ-தேஹோ தேஹினாம் ஷன பங்குர -தத்ராபி துர்லபம் மன்யே வைகுண்ட ப்ரிய தர்சனம் -என்றும் –
ந்ர்த்தேஹமாத்யம் பிரதி லப்ய துர்லபம் ப்லவம் ஸூ லயம் குரு கர்ணதாரம்-மயாநுகூலேந ந பஸ்வ-தேரிதே –
புவான் பவாப்த்திம் நதரேத்ச ஆத்மஹா -என்னக் கடவது இறே –
மாயவன் தன்னை வணங்க வைத்த-கரணமிவை -என்று இவர் தாமே அருளிச் செய்தார் இறே –

பிறப்பினில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்து
மாந்தர் மருள் சுரந்துய் பிறப்பினில் வருந்துவர் -என்று இயைக்க
மாந்தர் -நினைத்தற்கும் புனைதற்கும் வனைதற்கும் தகுதி வாய்ந்த மானிடப் பிறவி பெற்றவர்கள் .
மருள் சுரந்து பிறப்பினில் வருந்துவர்
மழை பெய்து நெல் விளைந்தது என்பதில் போல காரணப் பொருளில் செய்தென் எச்சம் வந்ததாக கொள்க
மருள் சுரந்தமையின் -பிறப்பினில் வருந்துவர் -என்றது ஆயிற்று
மருள்-விபரீத உணர்வு
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு -என்னும் குறளை-இங்கு நினைவு கூர்க
பிறப்பு -பிறப்பினாலாகிய இன்னலுக்கு காரண ஆகு பெயர்-

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்- முக் கரணங்களால் ஸ்ரீ பகவத் ஆச்ரண்யம் வேண்டும்-
ஸ்ரீ ஆச்சர்யரை ஒன்றாலே பெறலாம்
சிந்தையாலும் செய்கையாலும் நினைவாலும் -மூன்றும் வேண்டும்-அங்கு-
தூ மலர் தூவி தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க-மூன்றும் பண்ணி எதிர் பார்த்து இருக்க வேண்டும் அங்கு–
இங்கு ஸ்ரீ ஸ்வாமி சம்பந்ததாலே தான் மோஷம் என்பதால் ஏதானும் ஒன்றாலே நிச்சயம் கிட்டும்

எனை ஆள வந்த -அன்னையாய் அத்தனாய்-என்னை ஆண்டிடும் தன்மை-
அளியல் நம் பையல் -என்று அபிமானித்து -இது தான் ஸ்ரீ ஸ்வாமி பண்ணிய உபகாரம்-ஸ்ரீ அமுதனாருக்கு-
ஸ்ரீ ஆழ்வான் திருவடிகளில் காட்டி கொடுத்து-இங்கு சரம பர்வத்தில் ஆழ்வான் மூலம் பெறுவதே ஏற்றம்-
தூமணி துவளில் மா மணி-போல நல்லவற்றை அடியவர்க்கு காட்டி கொடுத்து அருளினார்

—————–

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–-இரண்டாம் திருவந்தாதி-42–

நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள் நாளும்
தேங்கோத நீருருவம் செங்கண் மால் -நீங்காத
மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
நீ கதியாம் நெஞ்சே நினை –பெரிய திருவந்தாதி–46-

மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக்கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-

பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும்
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் -மறப்பெல்லாம்
ஏதமே என்றல்லால் எண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்–80-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –89-போற்றரும் சீலத்து இராமானுச– இத்யாதி —

May 30, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

போற்றுவன் -என்று புகழ்வதாக ஒருப்பட்டவர் -அது நிமித்தமாக
தமக்கு உண்டான பலத்தை ஸ்ரீ எம்பெருமானார் தமக்கு விண்ணப்பம் செய்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே
வேத ப்ரதாரகராய் -லோகத்தார் எல்லாரையும் விபரீத ஞானராக பிரமிப்பித்து
நசித்துப் போந்த குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளை -பக்னர் ஆக்குக்கைக்கு அவதரித்த -வலி மிக்க சீயமான
ஸ்ரீ எம்பெருமானாரை -ஸ்துதிக்கிறேன் என்று ஸ்வ அத்யாவசாயத்தை ஆவிஷ்கரித்து –
இதிலே –தம்முடைய
பூர்வ வ்ர்த்ததை அனுசந்தித்துக் கொண்டு -புகழ்ந்து தலைகட்ட வரிதான சீல குணத்தை உடையரான
ஸ்ரீ எம்பெருமானார் உடைய திரு முக மண்டலத்தை பார்த்து -மகா பிரபாவம் உடைய தேவரீரை –
அத்யந்த அதமனான நான் ஸ்துதிக்கை தேவரீருக்கு அவத்யமாய் தலைக் கட்ட கடவது ஆகையாலே
ஸ்துதியாது ஒழிகையே தேவரீருக்கு அதிசயம் இறே –
ஆனாலும் ஸ்தோத்ரம் பண்ணாது ஒழியில் என் மனசு ஆறி இராது –
இப்படி ஆன பின்பு -மூர்க்கு பேசுகின்றான் இவன் -என்று தேவரீர் திரு உள்ளத்தில் என்ன வோடுகிறதோ என்று
நான் அத்தை நினைத்து எப்போதும் பீதனாய் நின்றேன் என்று விண்ணப்பம் செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

போற்ற முற்பட்டவர் -தகுதி யற்ற நான் புகழின்-தேவரீர் புகழ் மாசூணாதோ என்று தவிர்ந்து புகழின்
ஏற்றத்தை நிலை நிறுத்தலே நல்லது என்று தீர்மானித்தாலும் -என் மனம் தாங்குகிறது இல்லை .
போற்றியே யாக வேண்டி இருக்கிறது –
தேவரீர் நினைப்பு இவ் விஷயத்தில் எத் தகையதோ -என்று பயமாய் இருக்கிறது -என்று
தம் நிலையை ஸ்ரீ எம்பெருமானார் இடத்தில் விண்ணப்பம் செய்கிறார்

போற்றரும் சீலத்து இராமானுச நின் புகழ் தெரிந்து
சாற்றுவனேலது தாழ்வது தீரில் உன் சீர் தனக்கோர்
எற்றமென்றே கொண்டிருக்கிலும் என் மனம் ஏத்தி யன்றி
ஆற்ற கில்லாது இதற்கென்னினைவா என்றிட்டஞ்சுவனே – – -89 – –

பத உரை –
போற்றரும் சீலத்து -துதித்து தலைக் கட்ட அரிதான சீல குணத்தை உடைய
இராமானுச -ஸ்ரீ எம்பெருமானாரே
நின் புகழ்-தேவரீருடைய கல்யாண குணங்களை
தெரிந்து -சீரியவை என்று பகுத்து அறிந்து
சாற்றுவனேல்-நாடறியப் பேசினால்
அது -அவ்விதம் பேசுவது
தாழ்வு -தேவரீர் குணங்களுக்கு இழிவாகும்
அது -அங்கனம் பேசுவதை
தீரில்-தவிர்ந்தால்
உன் சீர் தனக்கு -தேவரீர் கல்யாண குணங்களுக்கு
ஓர் ஏற்றம் -ஒரு சிறப்பு
என்றே -என்பதாகவே
கொண்டு -எண்ணிக் கொண்டு
இருக்கிலும் -துதிக்காமல் இருந்தாலும்
என் மனம் -என்னுடைய உள்ளம்
ஏத்தி அன்றி -துதி செய்து அல்லது
ஆற்றகில்லாது -தவிக்க மாட்டாதாய் உள்ளது
இதற்கு-இவ்விஷயத்தை பற்றி
என் நினைவாய் என்றிட்டு -என்ன நினைத்து அருளுகிறீர் என்பதை முன்னிட்டு
அஞ்சுவன் -பயப்படுகிறேன்

வியாக்யானம் –
நாளும் என் புகழ்கோ வுன சீலம் -ஸ்ரீ திருவாய் மொழி -9- 3-10 – -என்னுமா போலே –
புகழ்ந்து தலைக் கட்ட-வரிதான சீலகுணத்தை உடையவரே –
தேவரீருடைய கல்யாண குணங்களை விவேகித்து லோக பிரசித்தமாம்படி பேசுவேன் ஆகில் –
வசிஷ்ட குணங்களை சண்டாளன் வர்ணித்து பேசுகை -அவற்றுக்கு அவத்யமாய்த் தலைக் கட்டுமா போலே –
அது இழிவாக நிற்கும் ..
அப்படி பேசுகிறதைத் தவறில் -தேவரீர் குணங்கள் தனக்கு உத்கர்ஷமாய் இருக்கும் என்று கொண்டே-இரா நிற்கச் செய்தேயும் –
என்னுடைய மனச்சானது -தேவரீர் குணங்களை ஸ்தோத்ரம் பண்ணி ஒழிய தரிக்க மாட்டுகிறது இல்லை –
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் யேலும் என் நாவினுக்கு ஆற்றேன் –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -5 1-1 – –
என்னுமா போலே யிரா நின்றது -என்னுடைய தசை –
இதுக்கு தேவரீர் ஏது திரு உள்ளம் பற்றுகிறது என்று -பீதனாகி நின்றேன் –

சாற்றுதல்-பிரகாசமாக சொல்லுதல்-

அனைத்து உலகும் உய்ய வந்த ஸ்ரீ ராமானுசா -உய்ய ஒரே வழி ஸ்ரீ உடையவர் திருவடி –
ஆவியையை அரங்க மாலை –அழுக்கு உடம்பு எச்சில் வாயால் தூய்மை இல்லாத -தொண்டனேன் பாட
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அஞ்சுவன் என் வசம் அன்று -ஸ்ரீ பெரிய ஆழ்வார்-
மாதவா சொன்னதும் வாக்கு தூய்மை பெற்றது பாடினேன் என்றார் இவர்
திருவடி பற்றினாரை தம்மைப் போலே ஆக்கும் சீர் –
த்ருணீக்ருதி ஸ்ரீ அச்சுதன் -திருவடி உமக்கு -உமது திருவடி உம் அடியார்க்கு

போற்றரும் சீலத்து இராமானுச –
எத்தனையேலும் தரம் உடையார்க்கும் ஸ்துத்துதித்து தலைக் கட்ட அரிதான –சீல குணத்தை உடைய ஸ்ரீ எம்பெருமானாரே –
இவருடைய சௌசீல்யம் ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் – ஊமை -முதலானவர்கள் இடத்தில் காணப்பட்டது இறே –
நாளும் என் புகழ் கோ வுன சீலமே -என்றும் சீல ஏஷா -என்றும் சொல்லப்படுகிற ஸ்ரீ சர்வேஸ்வரன்
உடைய சீல குணத்தை புகழ்ந்து தலைக் கட்டிலும் –
இவருடைய சீல குணத்தை புகழ்ந்து தலைக்கட்ட அரிதாய் இருக்கும் என்று காணும் என்பதே -இவர் திரு உள்ளத்தில் ஓடுகிறது –

போற்றரும் –இராமானுச –
சீலம் எல்லை இல்லாதவர் ஆதலின் -அக்குணம் புகழ்ந்து தலைக் கட்ட அரிதாய் ஆயிற்று –
ஸ்ரீ ஆழ்வானும் ஆசைப் படும் வகையில் -ஊமை ஒருவனோடு பழகி -தம் தாளை அவன் மத்தகத்திலே வைத்து –
உய்வித்த வரலாற்றினால் -ஸ்ரீ எம்பெருமானார் சீலம் -எல்லை கடந்தமை அறியலாம் –
ஸ்ரீ பகவானுடைய சீல குணத்தை -நாளுமென் புகழ் கோ உன சீலமே – என்று ஸ்ரீ நம் ஆழ்வார் போற்ற அரிதாக கூறினார் –
ஸ்ரீ பகவான் மனிசர் பிறவி யிற்றொன்றி கண் காண வந்ததை –
சீல க ஏஷ-இது என்ன சீலமோ -என்று போற்ற அரிதாக கூறினார் ஸ்ரீ ஆழ்வான்
அவர் சரண் கூடிய ஸ்ரீ அமுதனாரோ ஸ்ரீ எம்பெருமானார் சீலத்தை போற்ற அரிதாக அருளிச் செய்கிறார் .

போற்றரும் சீலத்து ராமானுச-
நேராக முகத்தை பார்த்து அருளும் படி உள்ள சீல குணம்

நின் புகழ் தெரிந்து சாற்றுவனேல் –
தத்வே ந யஸ்யம ஹி மார்ணவ ஸீ கராணுஸ் சக்யோ நமாதுமபிசர்வ பிதா மஹாதயை – என்றும் –
யச்யாச்தேமே ஹிமானமாத்மான இவ த்வத் வல்லோ பிப்ரபு -நாலம் மாது மியத்தயா –என்றும் சொல்லப்படுகிற
தம் பதங்களைப் போலே –
சேஷோவா சைன்ய நாதோவா ஸ்ரீ பதிர் வேத்தி சாத்விகை விதர்க்யாய – என்கிறபடியே
ஸ்ரீ அநந்த அவதாரர் ஆகையாலே பெரு மதிப்பை உடையராய் –
நமத் ப்ரணம மண்டனம் நவ காஷாயா கண்டாம்பரம் த்ரிதண்ட பரிமண்டிதம் த்ரிவித தத்வ நிர்வாஹம்
த்யாஞ்சித த்ர்கஞ்சவம் தனிதவாதி வாக்வைபாவம் சமாதிகுண சாகரம் சரணமேமி இராமானுஜம் –என்கிறபடியே
சர்வோத்தாரகரான தேவரீர் உடைய சௌசீல்ய சொவ்லப்யாதி கல்யாண குணங்களை
நன்றாக தெளிந்து அவற்றை எல்லாரும் அறியும்படி பிரகாசமாய் ஸ்துதிப்பேன் ஆகில் –

தேர்தல் -ஆராய்தல் –
சாற்றுதல்-பிரகாசமாக சொல்லுதல் –

அது தாழ்வு –
வசிஷ்டர் குணங்களை சண்டாளன் வர்ணித்துப் பேசினால் அது அவனுக்கு அவத்யமாய் தலைக் கட்டுமா போலே –
நான் பண்ண ஒருப்பட்ட அந்த ஸ்துதி தேவரீருக்கு அவத்யமாய் தலைக் கட்டும் –
இமையோர் பலரும் முனிவரும் புனைந்த கண்ண நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் -உன் பெருமை
மாசூணாதோ மாயோனே -என்று பிரதம பர்வத்தில் ஸ்ரீ ஆழ்வாரும் இப்படி அருளிச் செய்தார் இறே –

ஹந்தத்வதக்ரமகம நஸ்ய யதீந்திர நார்ஹா -என்று ஸ்ரீ ஜீயரும் வ்யதிரேக முகேன இவ்வர்த்தத்தை அருளிச் செய்தார் இறே –

நின் புகழ் தெரிந்து –அது தாழ்வு ––
புகழ்-குணங்கள்
தெரிதல்-புகழின் தனித் தன்மையை விவேகித்து பார்த்தல்
ஸ்ரீ எம்பெருமான் புகழினும் -ஸ்ரீ எம்பெருமானார் புகழின் வீறுடமை யை உணர்ந்து பேசினேன் ஆயின்
அது அக் குணங்களுக்கு தாழ்வாய் தலைக் கட்டும் -என்றபடி .
தூயவர் குணங்களை வாக்கு தூய்மை இல்லாத தீயவனாகிய நான் பேசிடில் என் சம்பந்தத்தினாலே
அக் குணங்களும் சிறப்பினை இழந்து இழிவுறுமன்றோ – –
சாற்றுவனேல் என்பதனால் சாற்றுதலில் உள்ள அருமை தோற்றுகிறது –
சாற்றுதல்-பறை சாற்றுதல் என்பது போல உலகு அரிய சொல்லுதல் .
ஏகாந்தமாய் சொல்லிடில் பிறர் அறியாமையாலே குணங்கள் இழிவுறா-
சாற்றிடிலோ இழிவுறுதல் தப்பாது -என்பது கருத்து –

சாற்றுவனே-பறைதல்- லோகம் எல்லாரும் தெரியும் படி ஸ்ரீ பிரபன்ன காயத்ரியாக பாட வந்தேனே-
புலிங்க விருத்தாந்தம் புலி வாய் மாமிசம் சாப்பிட்டு கொண்டே பறவை சாகாசம் பண்ணாதீர் என்று சொல்வது போல-
மனம் செய் ஞானத்துன் பெருமை மாசூணாதோ மாயோனே-என்றால் போலே-

அது தீரில் –
உமக்கு அவத்ய அவஹமான அந்த ஸ்துதியை நான் பண்ணாது ஒழியில் –
தீருகை -தவிருகை –

உன் சீர் தனக்கு ஓர் ஏற்றம் என்றே கொண்டு இருக்கிலும் –
த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி நிரந்குச விபூதய –ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண சாலி ந-என்கிறபடி
ஸ்வ ஆஸ்ரிதரான சேதனரை-
ததிரராணி த்ர்னாயமேனே- என்னும்படியான தேவரீர் தம்முடைய சாம்யத்தை கொடுக்கக் கடவ –
மகா பிரபாவத்தை உடைத்தான தேவரீர் உடைய கல்யாண குணங்களுக்கு ஓர் அதிசயமாய் இருக்கும் என்று
இவ்வர்த்ததிலே வ்ய்வசிதனாய் இருந்தேன் ஆகிலும்

அது தீரில் —கொண்டிருக்கிலும்
நான் துதிப்பதனால் குணங்களுக்கு ஏற்றம் ஏற்படப் போவதில்லை
துதிப்பதை விட்டு விட்டால் இழிவினின்றும் தப்பி அவைகட்கு ஒரு மேன்மை உண்டாகும்
என்று துதிக்காமல் இருந்தாலும் -என்றபடி –
கொண்டிருத்தல்-கருத்துக் கொண்டு வாழா இருத்தல்-
மெய் வார்த்தை ஸ்ரீ விட்டு சித்தர் கேட்டு இருப்பார்–கேட்டு அதன் படி அனுஷ்ட்டிப்பர்–
அது போல இங்கும்- ஏற்றம் என்று கொண்டு இருக்கிலும்-வாழா இருக்கிலும் என்று கொள்ள வேண்டும்.

என் மனம் ஏத்தி யன்று ஆற்ற கில்லாது –
சஞ்சலம் ஹி மன -என்றும் –
நின்றவா நில்லா நெஞ்சு -என்றும் சொல்லுகிறபடியே
அதி சஞ்சலமாய் அதி சபலமாய் -தேவரீர் உடைய பிரபாவத்தை உள்ள படி அறிய மாட்டாத என் மனசானது –
நாம் இவ்விஷயத்தை புகழுகை -உபசாரா பதேசெனப் பண்ணும் அபசாரம் என்று அறிய மாட்டாதே –
தேவரீர் உடைய குணங்களை அடைவு கெட ஸ்தோத்ரம் பண்ணி ஒழிய தரிக்க மாட்டுகிறது இல்லை –

என் மனம் –ஆற்றகில்லாது
நான் துதிப்பதை விட்டு விட்டாலும் என் மனம் துதிக்காமல் இருப்புக் கொள்ள மாட்டாதாய் உள்ளது .
தேவரீர் இடம் ஈடுபட்டு -துதிக்க முற்படும் என் மனத்தை என்னாலேயே கட்டுப் படுத்த முடியவில்லை –
அத்தகைய முறையில் -பள்ள மேடையில் நீர் பாய்வது போலே -என் மனம் தேவரீர் விஷயத்தில் பாய்கிறது என்பது கருத்து .
குணங்களுக்கு ஏற்படும் இழிவு கருதி துதியினின்றும் மீளுகிறேன் –
துதித்தால் அன்றித் தரியாத மனம் என்னால் அடக்க ஒண்ணாமையின் மீண்டும் துதியில் மூளுகிறேன்
என் கருவி மனம் -என் வசத்தில் இல்லை –
கருவியின் வசத்திலேயே நான் உள்ளேன் என்கிறார் .

இதற்க்கு என் நினைவாய் என்று இட்டு –
இப்படிப்பட்ட என்னுடைய சாஹாச உத்தியோகத்துக்கு தேவரீர் திரு உள்ளத்தில் என்னதாக நினைப்பு இடுகிறதோ என்று கருத்து –

அஞ்சுவனே –
தேவரீர் உடைய மேன்மையையும் -என்னுடைய தண்மையையும் அடைவே பார்த்து அஞ்சா நின்றேன் –
மூர்க்கு பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும் என் நாவினுக்கு ஆற்றேன் – என்னுமா போலே இரா நின்றது
என்னுடைய தசை –
இதுக்கு தேவரீர் ஏது திரு உள்ளம் பற்றுகிறதோ என்று பீதனாக நின்றேன் என்றது ஆய்த்து –

இதற்கு என் நினைவாய் –அஞ்சுவனே
வேண்டாம் என்று இருப்பினும் மனம் கட்டுக்கு அடங்காமையாலே நான் பேச முற்படுவதான உண்மை நிலை நெஞ்சில் படாது –
சாற்றுவனேல் அது தாழ்வு -என்பதும் –
ஏத்தி இன்றி என் மனம் ஆற்ற கில்லாது -என்பதும் முரண்பட்ட பேச்சுக்கள்
இவை மூர்க்கத் தனத்தினால் பேசுபவை என்று கருதி முனிதரோ என்று பயபடுகின்றேன் என்றபடி –
ஸ்ரீ பெரியாழ்வார் வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன்-
நாக்கு நின்னை யல்லால் லறியாது நனதஞ்சுவன் என் வசமன்று
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் யேலும் என் நாவினுக்கு ஆற்றேன் — 5-1 1-என்று
அருளிச் செய்தது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது —

சிறகுகின் கீழ் அடங்காத பெண்ணை பெற்றேன்-ஸ்ரீ பராங்குச நாயகி தாயார் புலம்ப -பெண் அவன் பின்னே போனாள் அங்கு-
ஸ்ரீ ராமன் பின் சென்றது ஸ்ரீ தசரதன் கண்களும்
அது போலே ஸ்ரீ அமுதனாரும் மனமும் போனது ஸ்ரீ எம்பெருமானார் சீல குணங்களின் பின்னே–
போற்ற அரியவனே-மூவர் அனுபவம் -பெண் / கண் / மனஸ் பின்னே போனதே–

—————–

வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன்
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும் என் நாவி னுக்காற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே -5-1 1-

ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே
நண்ணி நான் உன்னை நாள் தோறும் ஏத்தும் நன்மையே அருளு செய்யும் பிரானே -5 1-8 –

சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே –11-

இன்னை என்று சொல்லலாவது இல்லை யாதும் இட்டிடைப்
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்
பின்னையாய கோலமோடு பேருமூரும் ஆதியும்
நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே –13-

நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலிற் சிதையாமே
மனஞ்செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே–1-5-2-

உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக் கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
புரைப்பு இலாத பரம் பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்–4-3-9-

யானும் ஏத்தி, ஏழ் உலகும் முற்றும் ஏத்தி, பின்னையும்
தானும் ஏத்திலும், தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்?
தேனும் பாலும் கன்னலும் அமுது மாகித் தித்திப்ப,
யானும் எம்பிரானையே ஏத்தினேன்,யான் உய்வானே–4-3-10-

என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதி யாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1-

தூ நீர் முகில் போல் தோன்றும் நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்
தே நீர்க் கமலக் கண்களும் வந்தென் சிந்தை நிறைந்த வா
மாநீர் வெள்ளி மலை தன் மேல் வண் கார் நீல முகில் போலே
தூ நீர்க் கடலுள் துயில்வானே எந்தாய் சொல்ல மாட்டேனே—8-5-4-

சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதித் திருப் பாதம்
எல்லையில் சீரிள நாயிறு இரண்டு போல் என் னுள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழு துண்ட மா நீர்க் கொண்டல் வண்ணனே–8-5-5-

தாள தாமரையான் உன துந்தியான்
வாள் கொள் நீள் மழு வாளி உன் னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ் கோ உன சீலமே–-திருவாய் மொழி-9-3-10-

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு –மூன்றாம் திருவந்தாதி—21-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –88-கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமாள்- இத்யாதி —

May 30, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமானார் உபகரித்த ஜ்ஞானத்தில் அந்வயம் இல்லாதாரை கலி தோஷம் நலியும் என்றார் கீழே .
அந்த ஜ்ஞானத்தை வுபகரிக்கைக்காக அவர் வந்து அவதரித்த படியை யனுசந்தித்து –
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற சிம்ஹம் குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளை நிரசிப்பதாக-லோகத்திலே வந்த பிரகாரத்தை சொல்லி
ஸ்தோத்ரம் பண்ணக் கடவேன் -என்கிறார் -இதில் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டில் ஸ்ரீ எம்பெருமானார் உபதேசித்த ஞானத்தில் அந்வயம் இல்லாதவரை கலி
பிரயுக்தமான தோஷம் ஆக்கிரமித்து நலியும் என்று சொல்லி -இதில் -அந்த ஞானத்தை லோகத்தார் எல்லாருக்கும்
உபதேசிக்கைக்காக –அவர் விண்ணின் தலை நின்றும் -மண்ணின் தலத்து உதித்தபடியை அனுசந்தித்து –செந்நெல்
விளையா நின்றுள்ள வயல்களை உடைய ஸ்ரீ திருக் குறையலூருக்கு ஸ்ரீ ஸ்வாமியான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாருடைய
திவ்ய பிரபந்தமாகிற ஸ்ரீ பெரிய திரு மொழியை அனுபவித்து களித்து – பிரதி பஷிகளுடைய கந்தத்தையும் சகிக்க மாட்டாதே –
பிரபலமான சிம்ஹம் போலே இருக்கிற எம்பெருமானார் –வேத பாஹ்யர் போல் அன்றிக்கே -வேதத்தை பிரமாணமாக
இசைந்து -அதுக்கு விபரீத அர்த்தங்களை சொல்லி –லோகத்தை நசிப்பித்த குத்ருஷ்டிகள் ஆகிய புலிகள்
தன்னரசு நாடாக கொண்டு தடையற நடமாடா நின்ற -அவர்களுடைய மதங்களை நிரசிக்கைக்காக அவர்கள்
நடையாடும் இந்த பூமியிலே வந்து அவதரித்த பிரகாரத்தை ஸ்துதிக்க கடவேன் என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை

ஸ்ரீ எம்பெருமானார் மறை தேர்ந்து அளிக்கும் நல் ஞானத்தில் சேராதாரைக் கலி நலியும் என்றார் கீழ் –
யாவரும் சேர்ந்து கலியை விலக்கலாம் படியான –அத்தகைய நல் ஞானத்தை உபகரிப்பதற்காக-அவர் இவ் உலகில் வந்து
அவதரித்த படியை அனுசந்தித்து -அதனால் இத்தகைய வைதிக ஞானம் உலகினருக்கு கிடைக்க ஒண்ணாதபடி
வேதத்திற்கு -அவப் பொருள் கூறும் குத்ருஷ்டிகள் தொலைந்தமை கண்டு –
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற சிம்மம்-குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளைத் தொலைப்பதற்காக
இவ் உலகில் வந்ததாக உருவகம் செய்து -அவரது அவதாரத்தை ஸ்தோத்ரம் பண்ணுவேன் -என்கிறார் –

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமாள்
ஒலி மிக்க பாடலைக் வுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன் மறைவாதியராம்
புலி மிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே – – 88- –

பத உரை –
கலி மிக்க -ஆரவாரம் மிகுந்த
செந்நெல் -செந்நெற்கள் விளையும்
கழனி -வயல்களை உடைய
குறையல் -திருக் குறையலூருக்கு தலைவரும்
கலைப் பெருமாள் -சாஸ்திர நூல்களாய்-அமைந்ததிவ்ய பிரபந்தங்களை அருளி செய்யும்
பெருமை வாய்ந்த வருமான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாருடைய
மிக்க -மிகுந்த
ஒலி -ஓசையை உடைய
பாடலை -பாசுரங்களை
உண்டு -அனுபவித்து
தன் உள்ளம் -தனது திரு உள்ளம்
தடித்து -பூரித்து
அதனால்-அந்தக் காரணத்தினால்
வலி மிக்க -பலம் மிகுந்த
சீயம் -சிம்மமாக ஆன
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
மறை -வேதத்தில் கூறும் பொருள்களில்
வாதியராம் -அவப் பொருள் சொல்லி வாதம் செய்கிற குத்ருஷ்டிகள் ஆகிற
புலி மிக்கது என்று -புலிகள் நிறைந்து விட்டன என்று
இப்புவனத்தில் -இந்த உலகத்தில்
வந்தமை -அவதரித்த படியை
போற்றுவன் -புகழுவேன் .

வியாக்யானம்
உழுவது -நடுவது -அறுப்பதாக செல்லுகிற ஆரவாரத்தால் மிக்க செந்நெற்கள் விளையா நின்றுள்ள
வயல்களை உடைய -ஸ்ரீ திருக் குறையலூருக்கு நிர்வாஹகராய் –
இரும் தமிழ் நூல் புலவராகையாலே -பெரிய திரு மொழி -1- 7-10 -சாஸ்திர ரூபமான
பிரபந்தங்களை செய்து அருளின வைபவத்தை வுடையரான -ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் உடைய –
ஒலி கெழு பாடல்-ஸ்ரீ பெரிய திரு மொழி -11-4 10- -என்னும்படி மிக்க த்வனியை உடைத்தான
ஸ்ரீ திருமொழியை தாரகமாகவும் -போக்யமாகவும் -அனுபவித்து –
தம்முடைய திரு உள்ளம் பூரித்து -அத்தாலே
பிரதி பஷ தர்சநத்தை சஹியாதபடி – – அதி பிரபலமான சிம்ஹம் போலே இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் –
பாஹ்யரைப் போல் அன்றிக்கே -வேதங்களை அங்கீகரித்துக் கொண்டு நின்று – வாதங்களைப் பண்ணி –
லோகத்தை நசிப்பிக்கிற குத்ருஷ்டிகள் ஆகிற புலிகள் மிக்கதென்று -சாது மிருகங்களை நலியா நின்றுள்ள –
துஷ்ட மிருகமான புலி மிக்க காட்டிலே அவை தன்னை நிரசிக்க வற்றான தொரு சிம்ஹம் வந்து தலைப் படுமாலே –
சன்மத தூஷகரான குத்ருஷ்டிகள் வர்த்திக்கிற இந்த பூமியிலே தன்மத தூஷகராய் வந்து அவதரித்த
பிரகாரத்தை ஸ்துதிக்க கடவேன்

கலி -ஆரவாரம் -மிடுக்குமாம்-
அப்போது பூ சரத்தை சொல்லுகிறது
கழனி -வயல்
சீயம் -சிம்ஹம்
போற்றுதல் -புகழ்தல்–
ஒலி மிக்க பாடல் கலியன் -கலி மிக்க -புலிகளை ஓட்ட ஸ்ரீ ராமானுஜ சிம்மம் –
கலை -சாஸ்திரம் –நாலு கவி பெருமாள் –

வேழம்-ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ ஸூக்திகளால் -/ கஜ சிம்ம கதி விசாரம் –
ஸ்ரீ மாறன் பசும் தமிழ் ஸ்ரீ எம்பெருமானாரை மத வேழம் ஆக்கியது என்றார் கீழே –
இங்கே ஸ்ரீ கலைப் பெருமாள் பாடல் அவரை வலி மிக்க சீயம் ஆக்கியதாக அருளிச் செய்கிறார் –
அடையார் சீயத்தின் பாடல் ஸ்ரீ ஸ்வாமியை வலி மிக சீயம் ஆகிற்று –
மறை வாதியர்களை மறையும் படி -மறையை கொண்டே-மறைத்தார் ஸ்ரீ ஸ்வாமி-
நர சிம்ஹம் ராகவா சிம்ஹம் யாதவ சிம்ஹம் ஸ்ரீரங்கேச சிம்ஹம் போல- பராங்குச சிம்ஹம் பரகால சிம்ஹம் யதிராஜ சிம்ஹம் –
ஸ்ரீ குறையல் பிரான் அடி கீழ் இன்றும் ஸ்வாமி சேவை ஸ்ரீ திருவாலி திருநகரி
திருவடி வந்ததை கண்டே மகிழ்ந்த முதலிகள் போலே -இந்த சிம்மம் வந்தமை கண்டு போற்றுவோம் –
ஸ்ரீ மாறன் கலை உணவாகப் பெற்றோம் -ஸ்ரீ மா முனிகள்
பசும் தோல் போர்த்திய புலிகள் குத்ருஷ்டிகள் -ஆம்னாய சர்ச்சா கவசம்-கோ முகம் -ஸ்ரீ சங்கல்ப சூரியோதயம் -ஸ்ரீ தேசிகன் –
மறை -மறைத்து சொல்வதால் -தப்பாக -அருளிச் செயல்கள் இப்படி இல்லையே -பிரசன்ன புத்தன் வேஷத்தை கொண்டு –
சர்வ சூன்யத்தில் -சின் மாத்ர ப்ரஹ்மம் மட்டும் சொல்லும் அத்வைதிகள் போல்வார் –
உபய வேதாந்த ஐக கண்டம் -இது கொண்டே ஸூத்ரங்களை ஒருங்க விடுவார் –

கலி மிக்க செந்நெல்
கழனி -உழுவது நடுவது அறுப்பதாய் கொண்டு சர்வ காலத்திலும் செல்லுகிற
ஆரவாரத்தாலே மிக்க செந்நெல்லை உடைத்தான கழனி களுடைய –
கலி–ஆரவாரம் –
அன்றிக்கே –கலி -என்று மிடுக்காய்-சாரவத்தானே பூமியிலே விளைந்த செந்நெல் என்னுதல் –

கழனி –
வயல் –

குறையல் கலை பெருமான் –
இப்படிப் பட்ட செந்நெல் களோடு கூடின வயல்களை உடைத்தாய் ஆகையாலே –
மன்னிய சீர் தேங்கும் ஸ்ரீ குறையலூர் –என்கிறபடியே
சகல சம்பத்துக்களையும் உடைத்தான ஸ்ரீ திருக் குறையலூருக்கு நிர்வாஹராய் –
இரும் தமிழ் நூல் புலவன் –என்கிறபடியே
சாஸ்திர ரூபங்களான திவ்ய பிரபந்தங்களை செய்து அருளி -உபகரித்த மகா உபகாரரான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் உடைய
குறையல் பிரான் அடிக் கீழ் -என்று
இப் பிரபந்தத்திலேயும் இவருடைய உபகாரத்தை அனுசந்தித்தார் இறே –
செய்த வம்சத்தில் கிருதஜ்ஜராய் போருகிறவர் இவரும் அவருமே
(அமுதனாரும் ராமானுஜரும்-/ராமானுஜரும் கலியனும் / கலியனும் நம்மாழ்வாரும் ) காணும்

ஒலி மிக்க பாடல் –
இம்மாகா உபகாரத்தால் அருளிச் செய்யப்பட திரு மொழி -திரு குறும் தாண்டகம் திரு நெடும் தாண்டகம் -தொடக்கமான
திவ்ய பிரபந்தங்களை –
இன்பப் பாடல் -என்கிறபடியே
அனுசந்திக்கப் புக்கவர்களுக்கு -அர்த்த ரசத்தாலும் போக்யதையாலும் ஆனந்தம் மிகுதியாய் கரைபுரண்டு இருக்கையாலே மிகுந்து –
கலியனது ஒலி மாலை -என்கிற படியே
பெரு மிடறு செய்து அனுசந்திக்க வேண்டுகையாலே மிக்க த்வனி யை உடைத்தான திவ்ய பிரபந்தங்கள்
மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூறுவதாக பண்ணி அருளின திவ்ய பிரபந்தங்கள் என்றபடி –
ஒலி த்வனி -அந்த பிரபந்தங்களை தாரகமாகவும் போஷகமாகவும் போக்யமாகவும் நினைத்துக் கொண்டு
முற்றூட்டாக அனுபவித்து –

தன்னுள்ளம் தடித்து –
அந்த அனுபவ ஜனித ப்ரீதியாலே தம்முடைய திரு உள்ளம் பூரித்து –
இவ் வனுபவத்தாலே காணும் பிரதி பஷ நிரசனத்துக்கு தகுதியான மிடுக்கு அவருக்கு உண்டானது –
தடித்தல் -பூரிக்கை-

அதனால் வலி மிக்க சீயம் –
அந்த பரி பூர்ண ஞானம் ஆகிற மிக்க பலத்தை உடையராய் -சிம்ஹம் போலே இருக்கிற

கலிமிக்க —வலி மிக்க சீயம்
ஸ்ரீ திருக் குறையலூர் ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் அவதரித்த ஸ்தலம் .-அங்குள்ள வயல்களில் கலி மிகுந்து உள்ளதாம் –
கலி-ஆரவாரம்
உழுவதாலும்-நடுவதாலும் -அறுப்பதாலும்-உண்டாகும் ஆரவாரங்களில் ஏதேனும் ஓன்று அவ் வயல்களில் மிகுந்து உள்ளது -என்க –
கலி -பலமாகவுமாம்-வயல்களுக்கு பலம் பூமியின் சாரம் -என்க –
செந்நெல் கழனி –
செந்நெற்கள் பயிராகி விளைகின்ற வயல் .
பூமியின் சாரத்தினால் செந்நெற்பயிர்கள் நன்கு விளைவது போலே –
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு நிலத்தின் மாண்பினால் ஸ்ரீ திரு மங்கை யாழ்வார் ஆகிற பயிர் நன்றாக விளைந்த இடம் ஸ்ரீ திருக் குறையலூர் -என்க .

கலைப் பெருமான் –
கலைகளை வழங்கிய பெருமை உடையவர் என்றபடி -கலை -சாஸ்திரம்
இரும் தமிழ் நூல் புலவன் -பெரிய திருமொழி – 1-7 10- -என்றபடி
இரும் தமிழ் நூலாகிய திருவாய் மொழி -முதலிய திவ்ய சாஸ்த்ரங்களில் புலவர் ஆகையாலே அவற்றை விளக்குமவையான
சாஸ்த்ரங்களாய் அமைந்த பெரிய திருமொழி முதலிய திவ்யப் பிரபந்தங்களை அருளிச் செய்த பெருமை வாய்ந்தவர் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -என்க –

இரும் தமிழ் நூல் புலவர் ஆகையாலே -அவர் அருளிச் செய்த சாஸ்திரங்களும் தமிழாய் அமைந்தன –
இரும் தமிழ் நூல் என்பது-ஸ்ரீ திருவாய் மொழி முதலிய ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய திவ்ய பிரபந்தங்களையே -.இதனை
என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து –திருவாய் மொழி – 10- 6-4 –
என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் திருவாக்கினால் அறியலாம் –
அறியவே -நம் ஆழ்வாருடைய திவ்ய பிரபந்தங்கள் ஆகிய சாஸ்த்ரங்களில் புலமை பெற்றவரான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –
அவற்றை விளக்கும் வகையில் தமிழ் சாஸ்த்ரங்களான திவ்ய பிரபந்தங்களை அருளிச் செய்த பெருமை உடையராய் இருப்பது புலனாம் .

தமிழ் மறை நாம் ஆழ்வார் திவ்ய பிரபந்தங்கள் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அவற்றை விளக்குமவைகளாக அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள் அவற்றுக்கு அங்கமான சாச்த்ரங்களாக அமைந்தன –
வேதங்கள் நான்கு -அங்கங்கள் ஆறு –
தமிழ் மறைகளும் நான்கு -திரு விருத்தம் -திருவாசிரியம் -பெரிய திருவந்தாதி -திருவாய் மொழி -என்பவை அவை .
அவற்றின் அங்கங்களும் -பெரிய திருமொழி தொடங்கி-திரு நெடும் தாண்டகம் ஈறாக ஆறு .
அவை ஆறும் கலைகள் –
அவற்றை அருளிச் செய்த பெருமை தோற்ற –கலைப் பெருமாள்-என்கிறார் .

வட மொழி மறையின் அங்கங்களை –கலை -என்னும் சொல்லாலே வழங்கி உள்ளார் ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –
பன்னு கலை நூல் வேதப் பொருள் எல்லாம் -பெரிய திருமொழி -7 8-2 என்பதையும் –
பரம்பின கலைகளை உடைத்தான நால் வகைப் பட்ட வேதங்கள்-என்னும் அதன் வியாக்யான ஸ்ரீ ஸூக்தி யையும் காண்க – –
பரம்பின கலைகளை உடைத்தான -என்பது விரிவான சாஸ்திர ரூபங்களான அங்கங்களை உடைத்தான -என்றபடி .
அமுதனார் அதனை அடி ஒற்றி -அங்கங்களான திவ்ய பிரபந்தங்களை –கலை –என்னும் சொல்லாலே குறிப்பிடுகிறார் .

ஒலி மிக்க பாடல் –
மிகுந்த ஒலியை உடைய பாடல் -என்றபடி -ஒலி -ஓசை
துள்ளலோசை முதலியவை இவருடைய பாடலில் மிகுந்து இருப்பதைக் காணலாம்
நிலையிடமெங்குமின்றி – 11-4 –என்னும் ஸ்ரீ திரு மொழியில் இவ்வோசை மிகுந்து இருப்பதனால்
ஒலி கெழு பாடல் -11 4-10 –என்று அவரே குறிப்பிட்டு இருப்பது கவனிக்கத் தக்கது .

உண்டு தன் உள்ளம் தடித்து –
பாடலை உணவாக கூறினமையின் -அதுவே ஸ்ரீ எம்பெருமானாருக்கு தாரகம் -என்றது ஆயிற்று-
மாறன் கலை உணவாகப் பெற்றோம் -என்றார் ஸ்ரீ மணவாள மா முனிகள் –
உண்டு உள்ளம் தடித்ததாக -மகிழ்ச்சியினால் மனம் பூரித்ததாக -கூறினமையின் அதன் இனிமை தோற்றுவதால்
பாடல் போக்யமாய் இருத்தலும் புலனாகின்றது –

அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன் –
பீம சேனன் துர்யோதனனால் கங்கையில் போடப் பட்டு -பாதாள லோகம் சென்று –
கலசம் கலசமாக அம்ருத பானம் பண்ணினதன் பயனாக பதினாயிரம் யானையின் வலுவைப் பெற்றது போலே
ஸ்ரீ எம்பெருமானாரும் -நல்ல அமுதமான ஒலி மிக்க பாடல்களை ஆயிரக் கணக்கில் உண்டு -அதன் பயனாக
வலு மிகுந்த சீயமாய் விளங்குகின்றார் -என்க –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –
பிரதி பஷ தர்சனத்தை சகியாதே அவர்களை பக்னராய் பண்ணுமவர் ஆகையாலே –வலி மிக்க சீயம் –என்கிறார்
வலி -பலம் -சீயம் -சிம்ஹம் –

மறை வாதியராம் –
வேத அப்ராமான்ய வாதிகளான பௌத்தாதிகளை போல் அன்றிக்கே -வேதத்தை பிரமாண மாக அங்கீ கரித்து வைத்து –
அதுக்கு அபார்த்தங்களை சொல்லி -இவற்றைக் கொண்டு துர்வாதம் பண்ணி லோகத்தார் எல்லாரையும் பிரமிக்க பண்ணி
நசிப்பித்து கொண்டு போகிற குத்ர்ஷ்டிகள் ஆகிற –

புலிமிக்கதென்று –
புலிகள் மிக்கது என்று -நிவாரகர் இல்லாமையாலே அவை தனிக்கோல் செலுத்தா நின்றன என்று –

இப்புவனத்தில் வந்தமை-
சாது ம்ர்கங்ககளை நலியா நின்றுள்ள துஷ்ட ம்ர்கமான புலி மிக்க காட்டிலே
அவை தன்னை நிரசிக்க வற்றான தொரு சிம்ஹம் வந்து தலைப்படுமா போலே –
சந்மத தூஷிகரான குத்ர்ஷ்டிகள் வர்த்தித்து தனிக்கோல் செலுத்துக்கிற இந்த பூமியிலே தன்மத தூஷகராய் கொண்டு –

விண்ணின் தலை நின்று –
வந்து அவதரித்த பிரகாரத்தை

போற்றுவனே –
ஸ்துதிக்க கடவேன் –
போற்றுதல் -புகழ்தல் –
குரும் பிரகாச எத்தீ மான் – என்கிறபடியே
அவர் தம்முடைய குண–கலை -சாஸ்திரம் –நாலு கவி பெருமாள் –சேஷ்டிதங்களை புகழக் கடவேன்
என்று அருளிச் செய்தார் ஆய்த்து –

மறை வாதியராம் புலி –போற்றுவன் –
இயல்பினில் மிகவும் கொடியவைகளான புலிகள் மிகுந்து சாதுவான ஏனைய மிருகங்கள் நலிந்து திரியா நிற்க –
வலி மிக்க சீயம் வந்து வனத்தை காக்க முற்படுவது போலே –
மிகவும் கொடியவர்களான மறைவாதியர் என்னும் புலிகள் மிகுந்து -சாதுக்களான உலகினரை நலிந்து திரியா நிற்க
அப் புலிகளை தொலைக்க வல்ல – வலி மிக்க சீயமாய் வந்து புவனத்தை காக்க முற்படுகின்றார் ஸ்ரீ எம்பெருமானார் -என்க –

மறையைப் பிரமாணமாக மதிக்காத புறச் சமயிகள் போல் அல்லாமல் – அதனை பிரமாணமாக ஏற்று இருந்தும் –
அம்மறை கூறும் நேரிய பொருளை ஏற்காமல் – அவப் பொருள் சொல்லி வாதம் புரிந்து -சாதுக்களான உலகினரை கலங்கச் செய்து –
மறை நெறிக்கண் நடந்து உய்ய விடாது நலிகின்றமையின் மறை வாதியார் கொடியவர்கள் ஆயினர் -என்க –
மறை வழி ஒழுகும் மாந்தர் புறச் சமயிகளின் நின்றும் எளிதில் தப்பலாம் –
மறை வாதியரின் மாற்றம் ஏமாற்றம் விளைவிப்பதாய் இருத்தலின் பசுத்தோல் போர்த்த புலி போன்ற அவர்கள் இடம் இருந்து
தப்ப வழி இன்றிப் படு நாசத்திற்கு உள்ளாக நேரிடுகின்றது .
இங்கனம் தப்ப வழி இன்றி மறை முகமாக பாய்ந்து மாய்ந்து போகும்படி செய்தலினால் -மறைவாதியர் -புலி யாயினர் -என்க .

இங்கு ஸ்ரீ சங்கல்ப சூர்யோதயத்தில் –2 36- –
அந்யைராம் நாயா சர்ச்சா கவசத்ருதி கனத் கோமுகைர் த்வீபிபிச்ச -என்று
வேதத்தை பற்றிய ஆராய்ச்சி என்னும் கவசம் அணிந்தமையினால் விளங்குகின்ற பசுவின் முகம் கொண்ட மற்றவர்கள் ஆகிற –
மறை வாதியர்களாகிற – புலிகளினாலும் -என்று வேதாந்த தேசிகன் வருணித்து இருப்பது நினைத்தற்கு உரியது
பசு முகமாய் இருப்பதில் ஏனைய பசுக்கள் தம்மில் ஒன்றாக கருதி -அவற்றைக் கிட்டுகின்றன –
அவை அவற்றை உண்மையில் புலி யாதலின் நலிகின்றன –
இங்கனமே மறையும் ஆராயும் மாண்புடையோர் என்று மயங்கி தம்மிடம் வந்த உலகினரை கலங்க வடித்து -நலிகின்ற்றனர்
மறை வாதப் புலிகள் -என்க –

மறை வாதியர் -சங்கர பாஸ்கர யாதவ பாட்டப் பிரபாகரர் -மதத்தை சார்ந்தவர்கள் –
புலிகள் மிக்கு இருப்பினும் –வலி மிக்க ஒரு சீயம் அவற்றை தொலைத்து விடுவது போலே –
எம்பெருமானார் என்றும் ஒரு சீயம் -மறை வாதியராம் புலிகள் மிக்கு இருப்பினும் அவற்றைத் தொலைப்பதாயிற்று
மறை வாதியர்கள் மீண்டும் தலை எடுக்க ஒண்ணாதபடி –
அவர்கள் மதங்களைக் கண்டித்து -ஒழித்து அருளுவாராய் -இவ் உலகத்தில் அவதரித்தமையை அனுசந்தித்தபடி –

இவ்வாறு மறை வாதியரை வெல்லும் வலி -கலை பெருமான் பாடல்களினால் மிகுந்ததாம் .
ஸ்ரீ எம்பெருமானாருக்கு –ஆரண சாரம் அல்லவோ அப்பாடல்கள்-அடையார் சீயம் –பெரிய திரு மொழி – 3-4 10- –
பாடல் வலி மிக்க சீயமாக்கிற்று–
இப்பாடல்களினால் மறைப் பொருள் இது தான் என்னும் முடிவுக்கு வந்து மறை வாதியரையும்-அம்முடிவுக்கு வரச் செய்து –
அவர்களை வென்று அருளினார் -என்பது கருத்து .

ஸ்ரீ மாறன் பசும் தமிழ் ஸ்ரீ எம்பெருமானாரை மத வேழம் ஆக்கியது என்றார் கீழே –
இங்கே ஸ்ரீ கலைப் பெருமாள் பாடல் அவரை வலி மிக்க சீயம் ஆக்கியதாக அருளிச் செய்கிறார் –
தமிழ் மறையும் ஆறு அங்கங்களும் -வட மொழி மறையின் பொருளை தெளிவுற உணர்த்துவனவாய் அமைந்துள்ளன –
இங்கனம் மறை வாதியரை மறைந்து ஒழிய செய்து மறைப் பொருளை நிலை நிறுத்துமாறு –
எம்பெருமானார் அவதரித்த விதத்தை போற்றுவேன் -என்கிறார் —

—–

மின் உருவாய் முன் உரு பொன் உரு -வேதம் நான்காய் -தத்வ த்ரயங்களையும் காட்டினார் இத்தால்-
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் -மெய் மதிக் கடல் –

மூன்று முக்ய உத்சவங்கள்-

தாம் உகந்த உத்சவம் -மங்களாசாசன -கருட சேவை-உத்சவம்

தமர் உகந்த உத்சவம் -வேடு பரி உத்சவம்

தானான உத்சவம் -திருக் கார்த்திகை உத்சவம்

செங்கமலத் தயன் அனைய மறையோர் காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை
அங்கமலத் தடம் வயல் சூழ் ஆலிநாடன் அருள்மாரி யரட்டமுக்கி யடையார்சீயம்
கொங்குமலர் குழலியர் கோன் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்க முத்தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலக்குக்கு தலைவர் தாமே–பெரிய திருமொழி–3-4-10-

கொலை கெழு செம்முகத்த களிறொன்று கொன்று கொடியோன் இலங்கை பொடியா
சிலை கெழு செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமாலை வேலை புடை சூழ
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலி கன்றி சொன்ன பனுவல்
ஒழி கெழு பாடல் பாடி யுழல் கின்ற தொண்டரவர் ஆள்வர் உம்பர் உலகே -பெரிய திருமொழி–11-4-10-

முன்னிவ் வுலகேழும் இருள் மண்டி யுண்ண முனிவரோடு தாநவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நாலு வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அருளிய வெம்பரமன் காண்மின்
செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் சங்க மவை முரலச் செங்கமல மலரை ஏறி
அன்னமலி பெடையோடு மமரும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த யமரர் கோவே -பெரிய திருமொழி–7-8-2-

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே—பெரிய திருமொழி–1-7-10-

என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே—திருவாய் மொழி -10-6-4-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –87-பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும்- இத்யாதி —

May 29, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

சேதனருடைய ஜ்ஞான வ்யவசாயங்கள் கலங்கும்படி ஆக்ரமியா நின்றுள்ள கலி காலத்திலே – உமக்கு இந்த வ்யவசாயம்
ஒருபடிப் பட நில்லாது இறே-என்ன –
அது ஆக்கிரமிப்பது ஸ்ரீ எம்பெருமானாராலே உபக்ருதமான ஜ்ஞானத்திலே அனந்விதராய் இருந்துள்ளவர்களை -என்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

அவர் எம்மை நின்று ஆளும் என்று ததீயர் விஷயமாக உமக்கு உண்டான ப்ராவண்யத்தை சொன்னீர்
ஆனால் சேதனருடைய ஜ்ஞான வ்யவஸாய பிரேமங்கள் கலங்கும்படி ஆக்ரமியா நின்றுள்ள இந்த கலி காலத்திலேயே
உமக்கு இப்படிப்பட்ட அத்யாவசியம் என்றும் ஒக்க ஒருபடி பட்டு இருக்கக் கூடுமோ என்று அருகே இருப்பார் சிலர் கேட்க –
பரத்வ ஸுவ்லப்யாதி குண பரிபூர்ணர் ஆகையாலே –
அளவுடையாராயும் அறிவிலிகளாயும் இருக்கிற அதிகாரிகள் ஸ்தோத்ரம் பண்ணப் புக்கால் -அவர்களுடைய அதிகாரத்துக்கு தகுதியான
பேச்சுக்களாலே பேசுகைக்கு ஈடான ஸ்வரூப ரூப குண விபூதிகளை உடையரான ஸ்ரீ எம்பெருமானாராலே உபகரிக்கப்பட்ட விலஷண
ஞானத்தை பெறா இருந்தவர்களை அந்த கலி காலம் ஆக்கிரமித்து ஞான பிரசாதத்தை பண்ணும் இத்தனை ஒழிய
அந்த ஞானத்தை பெற்ற என்னை ஆக்ரமிக்க மாட்டாது –
ஆகையாலே எனக்கு இந்த வ்யவசாயம் யாதாத்ம பாவியாக நடக்கத் தட்டில்லை என்று திரு உள்ளமாக அருளிச் செய்கிறார்

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

யாவரையும் கலக்குறும் இக் கலி காலத்திலே-குல கோத்ரம் பாராது –
ஸ்ரீ இராமானுசனை கருதும் உள்ளம் பெற்றவரை -ஆளும் பெரியவராக ஏற்கும் துணிபு நிலை நில்லாதே -என்பாரை நோக்கி –
ஸ்ரீ எம்பெருமானார் -உபதேசித்த ஞானம் வாய்க்காதவர்களுக்குத் தான் கலியினால் கேடு உண்டாகும் என்கிறார்

பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணம் கட்கு
உரிய சொல்லென்றும் உடையவன் என்று என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி யிராமானுசன் மறை தேர்ந்து உலகில்
புரியு நன் ஞானம் பொருந்தாதவரைப் பொரும் கலியே – – 87- –

பத உரை –
பெரியவர் -பேர் அறிஞர்கள்
பேசிலும் -துதித்தாலும்
பேதையர் -மிக்க அறிவிலிகள்
பேசிலும் -துதித்தாலும்
தம் குணம் கட்கு -அவரவர்கள் உடைய அறிவுடைமை -அறிவின்மை எனபது போன்ற குணங்களுக்கு
உரிய -ஏற்ற
சொல் -ஸ்வரூபம் -வடிவம் -பண்பு முதலியதை கூறும் சொற்களை
என்றும் -எப்பொழுதும்
உடையவன் -உடையவராய் இருப்பவர்
என்று என்று -என்று பல காலும் அனுசந்தித்து
உணர்வில் மிக்கோர் -அறிவில் சிறந்தவர்கள்
தெரியும் -பகுத்துப் பார்க்கும்
வண் கீர்த்தி -அழிகிய புகழ் வாய்ந்த
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
மறை-வேதத்தை
தேர்ந்து -ஆராய்ந்து
உலகில் -உலகத்திலே
புரியும் -உபதேச வடிவில் வழங்கும்
நன் ஞானத்தில் -நல்ல ஞானத்திலே
பொருந்தாதவரை -சேராதவர்களை
கலி -கலி காலம்
பொரும் -பாதிக்கும்

வியாக்யானம்-
பேசுகைக்கு ஈடான ஜ்ஞான சக்திகளை உடையராய் இருக்கும் பேரளவுடையார் சொல்லிலும் –
அஞ்ஞான அசக்திகளுக்கு எல்லையாய் இருக்கும் அளவிலிகளானவர்கள் சொல்லிலும் –
அவர்களுடைய ஜ்ஞான சக்திகளால் எல்லை காண ஒண்ணாத படியாய் –
இவர்களுடைய அஜ்ஞான அசக்திகளால் நமக்கு பூமி யன்று என்று மேலே வேண்டாத படியாய் –
இப்படி தங்கள் குணங்களுக்கு ஈடாக பேசலாம்படி இருக்கிற தம்முடைய ஸ்வரூபாதிகளுக்கு வாசகமான சப்தங்களை –
சர்வ காலத்திலும் உடையவராய் -இருக்குமவர் என்று-
ஜ்ஞாநாதிகரானவர்கள் பல காலும் விவேகித்து -அனுசந்தியா நின்றுள்ள திவ்ய கீர்த்தியை உடையரான ஸ்ரீ எம்பெருமானார் –
வேதத்தை ஆராய்ந்து லோகத்திலே உபகரித்து அருளின விலஷணமான ஜ்ஞானத்தில் சேராதவர்களை கலி வந்து மேலிட்டு நலியும் –
அந்த ஜ்ஞானத்தில் சேர்ந்தவர்களை நலிய மாட்டாது -என்று கருத்து .

குணம் கட்கு உரிய சொல் ஒன்றும் உடையவன் -என்ற படமான போது-
தங்களுடைய ஜ்ஞான சக்திகளும் அஜ்ஞான அசக்திகளும் ஆகிற குணங்களுக்கு ஈடாக பேசும் சப்தம் இத்தனை எல்லாம் மிகை என்றாதல் .
இது போராது என்றாதல் -சேராச் சேர்த்தியாய் இராதே –
அபரிசேத்யமஹிமாவாலும் அளவிறந்த சௌசீல்ய த்தாலும் -சேரும்படியாய் இருக்கும் -ஸ்ரீ ஸ்வாமி -என்று பொருளாக கடவது .
ஒன்றுதல்-கூடுதலாய் -சேர்த்திக்கு வாசகமாகிறது .-

தம் குணம் கட்கு -என்றும் பாடம் சொல்லுவார்கள் .
அப்போது பெரியவர் பேசிலுமாம்,பேதையர் பேசிலுமாம்- அவரவர் அளவுக்கு ஈடாக பேசலாம்படி
தம்முடைய குணம்களுக்கு ப்ராப்தமான சொல்லை என்றும் உடையராய் இருக்குமவர் என்று பொருளாக கடவது .

உரிய -என்றது -தக்க என்றபடி
தெரிதல் -விவேகித்தல்
வண்மை -அழ்கு
தேர்தல்-ஆராய்தல்
புரிதல்-கொடுத்தல்
பொருந்துதல் -சேருதல்

தம் தம் குணங்களுக்கு ஏற்ப –பரத்வ ஸுலப்யாதிகள் கொண்டவர் -ஊமைக்கும்-கருணைக் கடல் காரேய் கருணை ராமானுசா –
கொண்டல் -ஸ்ரீ யதிராஜா தயாம்புராசே/தம் குணம் / தன் குணம் –பாட பேதம்
உரிய சொல் என்றும் உடையவன் -ஓன்று உடையவன் -பாட பேதம் -/ ஒன்றுதல் இசைத்தல் ஒருங்க விடுவது –
சேரா சேர்க்கை -ஸ்ரீ திரு நரசிம்மர் போலே ஸ்வாமி எளிமை பெருமை சேர்ந்தே –
சொல் ஒன்றும் உடையவர் -பாட பேதம் -சொல் என்றும் உடையவர்
ஸ்ரீ ராமானுஜ ஒரே சொல்லில் வேத மார்க்கப் பிரதிஷ்டாச்சார்யார் -ஸ்ரீ எம்பெருமானுக்கு அப்பால் -எமக்கும் கூட ஸ்ரீ பெருமான் -ஒரே சொல் இருவருக்கும்
பத்தர் பித்தர் பேதையர்-கம்பர் -விஷய ஏற்றத்துடன் ஒப்பிட்டால் நாம் எல்லாரும் பேதையர் தானே –
யானைக்கு குதிரை வைத்தல் போலே அன்றோ தம்மை அமைத்து -ஆர்ஜவம்
உணர்வில் மிக்கோர் -மதி நலம் அருள பெற்றவர் -தெரியும் வண் கீர்த்தி -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
ஸ்ரீ ராமானுஜர் சிஷ்யர் ஸ்ரீ உய்யக் கொண்டார் -வித்வான் -ஆனால் பகவத் அனுக்ரஹம் இல்லாமல் அடியார்கள் பிரபாவம் இல்லையே –
பொருந்தாதவர்கள் உண்டே-பொருந்தி விட்ட படியால் என்றும் என்னை ஆளும் பெரியவர் என்றபடி
சல்லடை போலே இல்லாமல் -முறம் -தேவையானவற்றை கொண்டு வேண்டாதவற்றை தள்ளும் –
அது போலே சார தமமான–ரஹஸ்ய த்ரயம் காட்டிக் கொடுக்கும் ஞானம் -நல் ஞானம் -பிரபத்தி –

பெரியவர் பேசிலும் –
ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு ஈடான ஞான சக்திகளை உடையராய் இருக்கும் பேரளவுடையார் ஸ்தோத்ரம் பண்ணினாலும் –

பேதையர் பேசிலும் –
ஸ்தோத்ரம் பண்ணாதே கை வாங்கி இருக்கைக்கு ஈடான அஞ்ஞான அசக்திகளுக்கு ஈடாக நிற்கும் அறிவிலிகள் ஸ்தோத்ரம் பண்ணினாலும் –

ஞானாதிகாரானவர்கள் தம் தாமுடைய ஞான சக்தியாதிகளாலே எல்லை காண ஒண்ணாத வைபவத்தை உடையார் என்று –
ஸ்தோத்ரத்தில் நின்று மீள வேண்டும்படியையும்
அஞ்ஞரானவர்கள் தங்களுடைய அஞ்ஞான அசக்திகளை அனுசந்தித்திக் கொண்டு அவருடைய வைபவம் எங்கே –
அஞ்ஞரான நாங்கள் எங்கே -அவர் வைபவத்தை நாங்கள் ஸ்துதிக்கை வசிஷ்டரை சண்டாளன் ஸ்தோத்ரம் பண்ணுகிற படி என்று
ஸ்தோத்ரத்தில் நின்றும் மீள வேண்டி இராத படி –

பெரியவர்–சொல்லுடையவன்
பெரியவர் எனபது பேதையருக்கு எதிர் சொல்லாய் –அமைதலின் பேசுதலில் அறிவும் ஆற்றலும் உடையோரைக் கூறுகிறது
ஆசார்யனைப் பற்றியது ஆதலின் –
இங்கே பேசுதல்-துதித்தல்
பேசிற்றே பேசலல்லால் -திரு மாலை – 22- என்றும்
பேசினார் பிறவி நீத்தார் -திருக் குறும் தாண்டகம் –17 – என்னும் பிரயோகம் காண்க

துதிப்பவர் பெரியவராய் இருப்பின் –
அவர்களுடைய அறிவாற்றல் களாலே -எல்லை காண ஒண்ணாமையாலே – முழுதும் துதிப்பது எப்படி -என்று மீள வேண்டாதபடி –
தம் தம் குணங்களாகிய அறிவாற்றல்களுக்கு ஏற்ப –பேசலாம் படியான -ஸ்வரூபம் வடிவம் முதலியவற்றை கூறும் சொற்களை உடையவராய்
இருக்கிறார் ஸ்ரீ எம்பெருமானார் -என்றபடி –
கடலை எல்லை அளவும் கடந்து செல்ல முடியாவிடினும் – தன் திறமைக்கு ஏற்ப -இயன்ற அளவும் -செல்வது போல் –
ஸ்ரீ எம்பெருமானார் பெருமையை முழுதும் வழுத்துவது இயலாத செயல் ஆயினும் -தம் தகுதிக்கு ஏற்ப -பெரியவர்கள்
ஸ்வரூபம் முதலியவைகளை -வருணிக்கும் சொற்களை கொண்டு துதிப்பதற்கு தக்கவராய் அமைந்துள்ளார் அவர் எனபது இதன் கருத்து ..

இங்கனம் துதிப்பவர் பேதையராய் இருப்பின் -அவர்களுடைய அறியாமை இயலாமை என்னும் குணங்களினாலே –
அறிவாற்றல் வாய்ந்தவர் செய்ய வேண்டிய துதித்தல் இயலாத செயல் என்று மீள வேண்டாதபடி –
தமது குணங்களாகிய -அறியாமை இயலாமை கட்கு ஏற்ப – உலக நடையில் வழங்கும்படியான-ஸ்வரூபம் முதலியவற்றைக் கூறும்
சொற்களை உடையவர் -என்க –
கடலில் செல்ல இயலாவிடினும் -தன் சுத்திக்காக கரை ஓரத்தில் மூழ்கி எழுவாரைப் போலே –
அறிவாற்றல் கொண்டு பேச முடியாவிடினும் -தன் சத்தைக்காக தான் இருப்பது சபலம் ஆவதற்காக -சொல்லும் துதிச் சொற்களுக்கு தக்கவராக
அமைந்துள்ளார் -ஸ்ரீ எம்பெருமானார் என்பது -இதன் கருத்து .

இவற்றால் பெரியவர் பேசும்படியான அறிவாற்றல் முதலிய வற்றால் வந்த மேன்மையும் -பேதையர் பேசும்படியான
ஏற்றத் தாழ்வு நெஞ்சில் படாதபடி -அவர்களுடன் பழகும் எளிமையும் ஸ்ரீ எம்பெருமானார் இடம் உள்ளமை காட்டப் பட்டது .
இவை ஏதோ ஒரு வேளையில்-உள்ளன வல்ல –இயல்பாய் எப்பொழுதும் அமைந்தன என்னும் கருத்துடன் –
என்றும் உடையவன் -என்கிறார் .

இனி
பெரியவர் பேச்சிலும் பேதையர் பேச்சிலும் எல்லை இல்லாத மகிமை வாய்ந்தவர் அவரவர் தகுதிக்கு ஏற்ப -பேசலாம்படி –
அவர்கள் சொல்லுக்கு விஷயமாக தம்மை அமைத்து கொண்டு இருத்தலின் -இரண்டினாலும்
தாழ்ந்தாரோடு பழகும் சீல குணமே – சொல்லப் பட்டதாகவுமாம்-

தன் குணம் கட்கு -என்றும் ஒரு பாடம் உண்டு –
அப்பொழுது பெரியவர் பேசும் போது அவர்களுடைய அறிவாற்றல்களின் அளவிற்கு ஏற்ப –
ஸ்ரீ எம்பெருமானார் இடம் அமைந்த மேன்மைக் குணங்களும் .
பேதையர் பேசும் போது அவர்களுடைய அறியாமை இயலாமை களின் அளவிற்கு ஏற்ப
ஸ்ரீ எம்பெருமானார் இடம் அமைந்த எளிமை குணங்களும் பொருளாகின்றன .
இங்கு -பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே வடிவு -21-என்னும் ஸ்ரீ பேய் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியும் –
செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் -ஸ்ரீ திருவாய் மொழி -5 -8-4- – –என்னும் ஸ்ரீ ஸூக்தியும் ஒப்பு நோக்கத் தக்கன .

ஸ்ரீ எம்பெருமானார் மகிமை எல்லை காண ஒண்ணாமல் இருப்பதற்கு காரணம்-சீரிய விஞ்ஞானம் பலம் இவைகட்கு உறைவிடமாய்
கண்தர்வாப்சரசஸ் ஸித்தா சகிந்நர மகோரகா நாந்தம் குணாநாம் கச்சந்தி தேனா நந்தோய முச்யதே -என்று
கிந்நரர் பெரிய நாகர்கள் இவர்களோடு கூடியவர்களான கந்தர்வர்களும் -அப்சரச்சுக்களும் – சித்தர்களும் –
குணங்களின் எல்லையை கண்டவர்கள் இல்லை -அதனால் இவன் ஸ்ரீ அநந்தன் என்று சொல்லப்படுகிறான் -என்றபடி –
அளவில்லாக் குணங்கள் வாய்ந்தமையால் ஸ்ரீ அநந்தன் எனப்படுமவனான ஸ்ரீ ஆதி சேஷனுடைய அவதாரமாய் இருத்தல் -என்று அறிக –

தன் குணங்கட்கு உரிய சொல் என்றும் உடையவன் –
அவ்விருவருடைய ஞான சக்தியாதிகளுக்கும் அஞ்ஞான அசக்தியாதிகளுக்கும் தகும்படி தம்மை அமைத்து வைத்து –
அவற்றுக்கு தகுதியாக அவ்விருவரும் ஸ்துதிக்கலாம் படி இருக்கிற தம் உடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளுக்கு
தனித் தனியாக வாசக சப்தங்களை சர்வ காலமும் உடையவர் –
சஹஸ்ர முகமாக சர்வ வித்யைகளையும் சிஷித்து கொண்டு போந்த மகாத்ம்யத்தை உடையவர் ஆகையாலே –
எத்தனையேனும் ஞான சக்திகள் உடையாரும் அவருடைய வைபவத்துக்கு ஈடாக பாசுரமிட்டு சொல்ல மாட்டார்கள் –
இப்படியான பின்பு அஞ்ஞான அசக்திகள் உடையாருக்கு சொல்ல வேண்டா இறே –
ஆனாலும் அவர்கள் தம் தாமுடைய பக்தி பலாத்காரத்தாலே ஸ்துதிக்கப் புக்கால்
அவர்கள் ஸ்துதிக்கு தக்கபடி தம்மை அமைத்து விஷயம் ஆக்கின சௌசீல்ய குண நிதி -என்ற படி-

என்று -என்றது –
இப்படி சொல்ல என்றபடி –
தம் குணங்கட்கு உரிய சொல் ஓன்று என்ற பாடமானது –
தம் தாமுடைய ஞான சக்திகளுக்கும்-அஞ்ஞான அசக்திகளுக்கும் ஆகிற குணங்களுக்கு ஈடாக பேசும் சப்தம் இத்தனை –
மிகை என்றாதல் -இது பொறாது என்றாதல் -சேராச் சேர்த்தியாய் இராதே –
அபரிசேத்ய மகிமாவாலும் அளவிறந்த சௌசீல்யத்தாலும் சேரும்படி இருக்கும் ஸ்ரீ ஸ்வாமி என்று பொருளாக கடவது –

ஒன்றுதல்-கூடுதலாய் -சேர்த்திக்கு வாசகமாகிறது –
இதுவே யதார்த்தம் விஸதர்சமாக சொன்னார்கள் அல்லர் என்று அவர்கள் பண்ணும் ஸ்தோத்ரங்கள் உடைய
சமீசீன் யதையை ஸ்தாபிக்கை என்றபடி –

உரிய என்றது தக்க என்றபடி –
உடையவர் என்றது ஸ்ரீ ஸ்வாமி என்றபடி –
தம் குணங்கட்கு என்றும் பாடம் சொல்லுவர் –
அப்போது பெரியவர் பேசிலுமாம் பேதையர் பேசிலுமாம்-அவர்கள் தம் தாமுடைய அளவுக்கு ஈடாக
பேசலாம்படி தம்முடைய குணங்கட்கு ப்ராப்தமான சொல்லை என்றும் உடையவர் என்று பொருளாக கடவது –

தம் குணங்கட்கு உரிய சொல் ஓன்று முடையவன் –என்றும் பாடம் ஓதுதல் உண்டு .
அப்பொழுது தங்கள் குணங்களுக்கு ஏற்பப் பேசும் சொற்கள் பொருந்தும் ஸ்வாமி என்று பொருள் கொள்ளல் வேண்டும் ..
பெரியவர் பேசில் –
இது மிகை பட கூறலாய் இருக்கிறது என்ன ஒண்ணாதபடி அளவிடற்கு அரிய மகிமை உடையவராய் இருத்தலால் –
அவர்-பெரியவர் -சொன்ன சொற்கள் பொருந்துவன ஆகின்றன ..
இங்கனம் பேதையர் பேசில்
இது எம்பெருமானார் பெருமைக்கு போதாது -என்ன ஒண்ணாதபடி – அளவிடற்கு அரிய சீல குணம் -எளியவரோடு ஏற்றத் தாழ்வு
தோன்றாத படி பழகும் இயல்பு – உடையவராய் இருத்தலால் அவர் -பேதையர் -சொன்ன சொற்கள் -பொருந்துவன ஆகின்றன –
ஆக எவர் பேசினாலும் சேராச் சேர்த்தி யாய் இல்லாமல் -சேரும்படியாய் இருக்கும் ஸ்வாமி என்றது ஆயிற்று .

ஒன்றும் -சேரும் -பொருந்தும்
உடையவன்-ஸ்ரீ ஸ்வாமி
உரிய -தகுந்த

உணர்வில் மிக்கோர் –
ஞான சக்திகளில் வந்தால் இவர்களே சர்வஞ்ஞர்கள் இவர்களே சர்வாதிகர்கள்
என்னும்படி மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்கள் –

தெரியும் வண் கீர்த்தி –
தெளிந்து கொண்டு -கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்னும்படி
ஸ்ரீ பவிஷ்யதாசார்யா விக்ரகத்தை கொடுக்கும்படியாய் இருக்கிற அழகிய கீர்த்தியை உடையரான –
தெரிதல்-விவேகித்தல்-
வண்மை -அழகு –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –

மறை தேர்ந்து உலகில் –
கம்பீராணா மக்ர்தககிராம் -என்கிறபடி தன்னுடைய உட் பொருளை தெரிய புக்கார்க்கு தான் அதி கஹநமாய் இருக்கையாலே
வேதத்துக்கு மறை என்று பேர் ஆய்த்து -இப்படிப்பட்ட வேதத்தை
இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுப பிரமயேத் -என்கிற படியே உப ப்ரஹ்மத்தை கொண்டு
அர்த்த விரோதிகள் ஒன்றும் வாராதபடி பராமர்சித்து –
ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹ ஸ்ரீ கீதா பாஷ்யாதிகளை பண்ணி யருளின என்றபடி –
தேர்த்தல் -ஆராய்தல் –

உலகில் புரியும் நன் ஞானம் –
இந்த அஞ்ஞான பிரசுரமான லோகத்திலே அவற்றை வியாக்யானம் பண்ணி –
ஆசேது ஹிமாசல மாக எல்லாருக்கும் உபகரித்த விலஷணமான ஞானத்திலே –
புரிதல்-கொடுத்தல் –

என்றென்று –வண் கீர்த்தி இராமானுசன்
என்று என்பதை இரு கால் கூறியது -உணர்வில் மிக்கோர் -இந்நிலையை மீண்டும் மீண்டும் அனுசந்திப்பதை உணர்த்திற்று –
தெரிதல்-விவேகித்துப் பார்த்தல்
உணர்வில் மிக்கோர் மீண்டும் மீண்டும் அனுசந்தித்து -இதன் தனி சிறப்பை -பகுத்துப் பார்த்தலின் –
இந்நிலை உண்மையானது என்றும் -மிகவும் இனிதானது என்றும் -தோன்றுகிறது .
பேசும் பெரியவர் திறத்தும் பேதையர் திறத்தும் அவர்கள் திறமைக்கு ஏற்ப சொல்லும் சொல்லுக்கு உடையவரான எம்பெருமானாருக்கு –
இயல்பாக உண்டாகும் உணர்ச்சியினை –பாம்பின் கால் பாம்புக்கு தெரியும் -என்னும் முறையிலே உணர்வின் மிக்கோரே
தெரிந்து கொள்ள வல்லவர் -என்க
(ஆதி சேஷன் மகிமையை விஷ்வக்சேனர் உணர்வார் -எம்பெருமானார் மஹிமையை நம்மாழ்வார் அறிவார் என்றவாறு )

தெரியும் வண் கீர்த்தி –
உணர்வில் மிக்கோர் பலகாலும் ஆராய்ந்து -இதன் வீறுடைமையை விவேகித்து காண்டலின் – வண் கீர்த்தி –எனப்பட்டது –
வண்மை -சீர்மை -அழகுமாம் .
மறை தேர்ந்து உலகில் புரியும் நன் ஞானம் –
தேர்தல் -ஆராய்தல்
புரிதல்-கொடுத்தல்

வேதத்தை ஆராய்ந்து -வைதிகமான நல்ல ஞானத்தை கொடுத்து அருளினார் எம்பெருமானார் –
புரியும் நன் ஞானத்தின் அருமையினைக் காட்டற்கு –மறை தேர்ந்து -என்றார் .
வேதம் எளிதினில் தான் கருதியதைக் காட்டாமல் -மறைப்பது பற்றி -மறை-எனப்படுகிறது .
அது கருதியதைக் கண்டு கொள்வதற்கு முன்னும் பின்னும் உள்ள வாக்கியங்களை கொண்டும் பல யுக்திகளைக் கொண்டும் –
ஆராய வேண்டி இருத்தலின் -மறை தேர்ந்து -என்றார் .

எல்லாம் அறிந்தவரான எம்பெருமானார் -ஆராய்ந்து எடுத்து ஞானத்தைக் கொடுக்க வேண்டுமா –கொடுத்தது ஞானமாய் இராதோ –
வேத சாஸ்திரம் என்னும் தேரில் ஏறினவர்களும்- ஞானம் என்னும் கத்தி ஏந்தியவருமான-அந்தணர் விளையாட்டுக்காயினும்
ஏதேனும் சொல்வது பரம தர்மமே கருதப் படுகிறது .-என்னும் பொருள் கொண்ட –
வேத சாஸ்திர ரதா ரூடா -ஞான கட்கதரா த்விஜா க்ரீடார்த்த மபியத் ப்ரூயு சதர்ம பரமோ மத -என்னும் ஸ்லோகத்தின் படி –
வாய் திறந்து -சொல்வது எல்லாம் ஞானம் ஆகாதோ – மறையை ஆராய வேண்டுவான் என் —எனில் -கூறுதும் .
உண்மை தான் –
சொல்வது நன் ஞானமே ஆயினும் அறியாதார் -ஆராயாது வாயில் வந்தபடி -சொன்னார் என்று இகழக் கூடும் -இழக்கவும் கூடும் –
அது செய்யாமைக்காக –மறை தேர்ந்து -நன் ஞானம் புரிந்தார் -என்க –
எல்லாம் அறிந்த பகவானும் -கீதையை -நெறி உள்ளி -உரைத்தது போலே இதனையும் கொள்க –

எம்பெருமானார் மறை தேர்ந்து அளிக்கும் ஞானம் ஆதலின் -அது நல் ஞானம் -எனப்பட்டது .
நல் ஞானம் என்கிறது – வைதிக ஞானம் என்றபடி –
இனி
பகவானே உபாயம் உபேயமும் அவனே – என்னும் ஞானமும் ஆகவுமாம்-
நம் ஆழ்வார் -காலை நன் ஞானத் துறை படிந்தாடி -திரு விருத்தம் – 93- என்று
இந்த நல் ஞானம் ஆகிற தீர்த்தத்தின் துறையில் காலையில் நீராடுவதாக அருளிச் செய்து உள்ளார் –
ஞான தீர்த்தத்துக்கு அவர் துறையாக சொன்னது ஆசார்யனை –
காலை என்றது -சத்துவ குணம் தலை தூக்கி நிற்கும் வேளையை –
ஆக -சத்துவ குணம் உள்ளவனால் ஆசார்யன் வாயிலாக பேரும் விதிக்க ஞானத்தில் ஒருவன் நிற்றலை ஞானஸ்தானம் -என்றார் ஆயிற்று ..
எம்பெருமானார் என்னும் ஆசார்யன் ஆகிற துறையிலே -சத்துவ குணம் தலையெடுத்து -ஞானஸ்தானம் செய்தவர்கள்
மிகத் தூயராய் இருப்பதனால் -கலி அவர்களை நலிய இயலாது ..
அசுத்தி சிறிதேனும் காணப்படில் அன்றோ -கலியினால் ஆக்ரமிக்க முடியும் –

பொருந்தாதவரை –
இப்படி சர்வருக்கும் உபதேசித்து போந்தாலும்-
ஸ்ரீ உய்யக் கொண்டாரைப் போலே விசுவாச மாந்தையாலும் கர்ப்ப நிர்பாக்யதையாலும் அன்வயியாதவர்களை –
உபதேசத்துக்கு உட்படாதவர்களை என்றபடி –
பொருந்துதல்-சேர்த்தல் –

பொரும் கலியே –
கலி தோஷம் வந்து ஆக்ரமிக்கும் –
கலி வந்து மேலிட்டு நலியத் தொடங்கும் என்றபடி –
ஆகையால் ஸ்ரீ எம்பெருமானார் உடைய விஷயீ காரத்தாலே அந்த விலஷண ஞானத்தை பெற்று இருக்குமவர்கள்
எவர்களே யாகிலும் அவர்களை கலி நலிய மாட்டாது என்றது ஆய்த்து –
காவலில் புலனை வைத்து கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து –நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே -என்று
இவ்வர்த்தத்தை ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் அருளிச் செய்தார் இறே –
ந கலு பாகவதாய மவிஷ்யம் கச்சந்தி -என்று ஸ்ருதியும் –
பரிஹர மது சூதன ந பிரபன்னான் பிரபு ரஹ மன்ய நிர்னாம்ந வைஷ்ணவானாம் -என்றும்
த்யஜ பட தூரத ரேனதா ந பாபான் – என்றும் நமனும் தன் தூதுவரைக் குறித்து சொன்னான் இறே –

நள மகா ராஜனை தூய நிலையில் தொடர மாட்டாத கலி புருஷன் –கால் அலம்பும் போது -சிறிது விட்டுப் போனமையால் –
வந்த அசுத்தியைக் கண்டு – அவனை நலிய முற்பட்டதாக கூறும் இதிகாசம் இதனை வழி வுறுத்தும்
ஆக ஸ்ரீ எம்பெருமானார் கொடுக்கும் ஞானத்திலே சேர்ந்து -அதன்படி நில்லாதவர்களையே
கலி நலியும் -அதனையே ஸ்ரீ அமுதனார் மேலே கூறுகிறார் .

பொருந்தாதவரைப் பொரும் கலியே
பொருந்துதல் -சேர்ந்து இருத்தல்
பண்டைய ஸ்ரீ இராமானுசன்-ஸ்ரீ கண்ணன் -தன் திருவடி ஸ்பர்சம் உள்ள அளவும் கலிக்கு-சில இடங்களை
தங்குவதற்கு-ஒதுக்கிக் கொடுத்தது போலே –
இந்த ஸ்ரீ இராமானுசனும் -தன் உபசரிக்கும் ஞானத்தில் சேராதவர்கள் உள்ள இடத்தை ஒதுக்கிக் கொடுத்தார் -என்க –
இது தன்னையே -ஸ்ரீ நம் ஆழ்வார் –கலியும் கெடும் -என்று குறிப்பால் உணர்த்தினார் -என்று உணர்க –
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே -தன்னடியார்க்கு அருள் செய்கை -இரண்டு ஸ்ரீ இராமானுசர்க்கும் ஒத்த தன்மை -என்க .

ஸ்ரீ எம்பெருமானார் பேதையர் பேசும்படி தம்மை அமைத்து உள்ளமையின்
அவர் உலகில் புரியும் நன் ஞானம் பெரியவர் போல -பேதையனாகிய அடியேனும் சேரும்படி பயன் படுவது ஆயிற்று
படவே -அந்த நல் ஞானத்தில் சேர்ந்து இருப்பவர்களைக் கலி நலியாதாதலின் அவர்கள் கோஷ்டியில் சேர்ந்த எனக்கு –
ஸ்ரீ இராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் எவராயினும் -அவர் எம்மை ஆளும் பரமர் -என்னும் துணிபு
கலியினால் குலைவு பெறாது –என்பது கருத்து —

————–

பேசிற்றே பேசலல்லால் -திரு மாலை – 22-

பேசினார் பிறவி நீத்தார் -திருக் குறும் தாண்டகம் –17 –

பேசுவார் எவ்வளவு பேசுவார் அவ்வளவே வாச மலர்த் துழாய் மாலையான் –மூன்றாம் -21-

செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!–5-8-4-

காலை நன் ஞானத் துறை படிந்தாடி -திரு விருத்தம் – 93-

சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் -1-9-7-

கண்ணனைக் கூவுமாறு அறிய மாட்டேன் -3-4-2-

ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே–3-9-11-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –86-பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே உற்றார் என உழன்றோடி நையேன் இனி- இத்யாதி —

May 29, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ இராமானுசனைத் தொழும் பெரியோர் பாதம் அல்லால் என் தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லை –
என்ற அநந்தரம் –
முன்பு அப்ராப்த விஷயங்களை பற்றி இருப்பாரை பந்துக்களாக நினைத்து -அவர்கள் அளவிலே தாம் ப்ராவண்யராய்
போந்த படிகளை யனிசந்தித்து -இனி அது செய்யேன் –
ஸ்ரீ எம்பெருமானாரை சிந்திக்கும் மனச்சு உடையார் ஆரேனும் ஆகிலும் அவர்கள் என்னை யாள உரியவர் என்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ இராமானுசனை தொழும் பெரியோர் பாதம் அல்லால் என் தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று
இல்லையே -என்று தம்முடைய நிஷ்டையை சொன்னார் –
இப்பாட்டிலே –
முற் காலம் எல்லாம் அப்ராப்த விஷயங்களை தங்களுக்கு அபாஸ்ர்யமாக பற்றிக் கொண்டு -போந்து
அவர்களை பந்துக்களாக நினைத்து -அவர்கள் அளவில்
தாயே தந்தை என்னும் தாரமே கிளை மக்கள் என்கிற படியே தாம் அதி மாத்ரா ப்ரவனராய் போந்த படிகளை அனுசந்தித்து
பீத பீதராய் அப்படி செய்யக் கடவேன் அல்லேன் –
தத்வ ஹித புருஷார்த்தங்களை உள்ளபடி அறியக் கடவரான பெரியோர்களாலே ஸ்துத்திக்கப் படுகிற ஸ்ரீ எம்பெருமானாரை
சிந்திக்கும் மனசை -நிதி பெற்றால் போலே லபித்தவர்கள் ஆரேனும் ஆகிலும் அவர்களே என்னை ஆள உரியவர்கள் என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ இராமானுசனை தொழும் பெரியோர் பாதம் அல்லால் வேறு எதுவும் பற்று இல்லாத நிலை எனக்கு இன்றையது –
முன்போ –
வேறு விஷயங்களில் ஈடுபட்டு ஒன்றுக்கும் உதவ மாட்டாத அற்ப மனிசர்களை அண்டி -அந்நிலையை விட மாட்டாது –
அவர்களை உறவினராக நினைத்து -அவர்கள் மிக பரிவு கொண்டு இருந்த நிலை .
இனி
அந்நிலை எனக்கு மீளாது -எம்பெருமானார் இடம் ஈடுபடும் உள்ளம் படைத்தவர்
எவராயினும் -அவர் -மேல் உள்ள காலம் எல்லாம் -என்னை ஆள்வதற்கு – உரிய பெரியவர் ஆவார் -என்கிறார் –

பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே
உற்றார் என உழன்றோடி நையேன் இனி ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம்
பெற்றார் யவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே – – 86- –

பத உரை –
பற்றா -ஒன்றுக்கும் பற்றாத -எதனுக்கும் திறமை அற்ற
மனிசரை-அற்ப மனிதர்களை
பற்றி -அண்டி நின்று
அப் பற்று -அவ்வண்டி நிற்றலை
விடாது -விட்டு விடாமல்
அவரே -அவர்களையே
உற்றார் என -உறவினர் என்று கருதி
உழன்று -அலைந்து கஷ்டப் பட்டு
ஓடி -அவர்களைக் காண வேண்டும் என்று ஓடி
இனி நையேன் -இனி மேல் நிலை குலைந்து போக மாட்டேன்
ஒள்ளிய -உண்மையை புலப்படுத்துவதான
நூல் கற்றார் -சாஸ்த்ரங்களை கற்று அறிந்தவர்கள்
பரவும் -துதிக்கும்
இராமானுசனை -ஸ்ரீ எம்பெருமானாரை
கருதும் உள்ளம் -இடைவிடாது நினைக்கும் மனத்தை
பெற்றார் -பெற்றவர்கள்
யவர் –எவர்களோ
அவர் -அவர்கள்
எம்மை-எங்களை
நின்று -நிலையாக என்றும் இருந்து
ஆளும் -ஆட் கொள்ளும்
பெரியவர் -பெருமை உடையவர் ஆவார் .

வியாக்யானம் –
ஒன்றுக்கும் பற்றாத சூத்திர மனுஷ்யரை ஆஸ்ரயித்து
அந்த ஆஸ்ரயணம் விடாதே நிற்கிறவர்களையே பந்துக்கள் என்று -அனுசந்தித்து –
அவர்கள் பின்னே திரிந்து -உழன்று –
அவர்கள் விஷயமான ப்ராவண்யத்தாலே -அவர்கள் முகத்திலே விழிக்க பெறுவது -எப்போது-என்று ஓடி –
அவர்கள் உடைய சம்ச்லேஷ விச்லேஷங்களில் உண்டான ஹர்ஷ சோகங்களாலே –
இனி சிதிலன் ஆகேன் –
தத்வ ஹித புருஷார்த்தங்களை ஸூ வ்யக்தமாக பிரகாசிக்கும் சாஸ்த்ரங்களை அதிகரித்து இருக்குமவர்கள் –
தங்கள் கல்விக்கு பிரயோஜனம் இது என்று – பிரேமத்தாலே அடைவு கெட ஸ்தோத்ரம் பண்ணா நின்றுள்ள
ஸ்ரீ எம்பெருமானாரை அனுசந்திக்கையே யாத்ரையாய் இருக்கும் மனசை நிதி பெற்றால் போலே-
லபித்தது இருக்குமவர்கள் -யாவர் சிலர் –
அவர்கள் குல சரண கோத்ரங்கள் ஏதேனுமாக வமையும் –
அவர்கள் நம்மை இவ்வாத்மா உள்ளளவும் ஒருபடிப்பட அடிமை கொள்ளும் மகானுபாவர்

அதவா –
பற்றா மனிசர் -இத்யாதிக்கு –
சூத்திர மனுஷ்யரை ஆஸ்ரயித்து -அந்த ஆஸ்ரயணம் விடாதே அவர்களையே உத்தாரகராக அனுசந்தித்து –
உழன்று -ஓடி -நையேன் -என்னவுமாம்

ஓடினேன் ஓடி –வாடினேன் வாடி -முன்னம் -நான் கண்டு கொண்டேன் ஸ்ரீ நாராயணா என்னும் நாமம் -ஸ்ரீ கலியன்
நான் கண்டு கொண்டேன் ஸ்ரீ ராமானுசா என்னும் நாமம் -என்கிறார் –
உள்ளம் உடையார் இல்லாமல் பெற்றார் -நிதி பெற்றால் போலே -ஸ்வ பாவிகம் இல்லாமல் –
மனம் பெற்றார் -சம்பாதித்தார் இல்லை -அவர் கிருபையால் பெற்றமை தோன்ற –
இத தாய் ஸ்ரீ ராமானுசன்-ஸ்ரீ பட்டர்-ஏய்ந்த பெரும் கீர்த்தி-ஸ்ரீ அனந்தாழ்வான் –அனுசந்திப்பதே கால ஷேபம்–
குலம் தாங்கு -எவரேலும் அவர் கண்டீர்-அவர் எம்மை நின்று ஆளும் பரமரே
எங்கே இருந்தாலும் எப்படிப் பட்டவர்கள் ஆகிலும் ஸ்ரீ ராமானுசரே என்று இருப்பார் என் ஸ்வாமி –
அவர்கள் நம்மை இவ் ஆத்மா உள்ள அளவும்–நம்மை- அனைவரையும் எம்மை என்று நம்மையும் சேர்த்துக் கொள்கிறார்-

பற்றா மனிசரைப் பற்றி –
பெரியேனான பின் பிறர்க்கே உழைத்து ஏழை யானேன் -என்றும் –
பாந்தாவாபாச லோலா -என்றும் சொல்லுகிறபடியே
சம்பதி சர்வச்வாப ஹாரிகளாய் ஆபதி அரஷகராய் இருக்கையாலே-ஒன்றுக்கும் பற்றாத சூத்திர மனுஷ்யரை
ஸ்வரூப நாசகரமான அடிமைத் தொழில் செய்வதாக ஆஸ்ரயித்து –

அப்பற்று விடாதவரே –
அந்த ஆஸ்ரயணத்தை விட மாட்டாதவரே –

உற்றார் என உழன்று –
இப்படி ஆபாச பந்துக்கள் ஆனவர்களை -மாதர் பித்ர் பௌத்ராதியான சர்வ வித பந்துக்கள் என்றும் –
நிர்வாகார் என்றும்-ரஷகர் என்றும் – பிரமித்து அவர்கள் பின்னே திரிந்து –
அவர்களை பார்க்கும் அளவும் நிற்கிற இடத்தில் நிற்க ஒட்டாதே
அதி மாத்ர ப்ராவண்யத்தாலே -அவர்கள் இருந்த இடம் தேடிக் கொண்டு ஓடி –
அவர்கள் தன்னிலும் தண்ணியர் என்று அறிய மாட்டாதே -அவர்களாலே என் தனக்கு
ஒரு புருஷார்த்த சித்தி உண்டு என்று அவர்கள் க்ரஹங்களுக்கு பல படியாலும் ஓடி -ஓடி -ஓடிபோய் என்றபடி –

நையேன் இனி –
ஸ்ரீ எம்பெருமானார் விஷயீ-காரத்தை பெற்ற பின் இப்படி செய்து சிதிலன் ஆகேன் –
அவர்களுடைய சம்ச்லேஷ விச்லேஷங்களில் உண்டான ஹர்ஷ சோகங்களாலே- சிதிலன் ஆகேன் என்ற படி –

அன்றிக்கே –பற்றா மனிசரை -இத்யாதிக்கு –
சூத்திர மனுஷ்யரை ஆஸ்ரயித்து -அந்த ஆஸ்ரயணம் விடாதே அவர்களை உற்றாராக அனுசந்தித்து
உழன்று ஓடி-நையேன் -என்று பொருள் ஆகவுமாம்-
துரீஸ் வரத்வார பஹிர் விதர்த்திகா துராசி காயை ரசிதொயமஞ்சலி – என்கிறாப் போலே
அவர்களுக்கு ஒரு நமஸ்காரம் என்கிறார் -காணும் –

பற்றா மனிசரை –ஓடி நையேன் இனி —
முன்பு நான் பற்றி நின்றது -ஒன்றுக்கும் பற்றாத மனிசரை –
துயரில் மலியும் மனிசர் -திருவாய் மொழி – 3-10 6- – என்றபடி
தாங்கள் துயரத்திலே அழுந்துகின்றவர்கள் தங்களை அண்டினவர்களை துயரை எவ்வகையிலே
துடைக்க வல்லவர் ஆவார்கள் என்னும் கருத்துடன் மனிசர் -என்கிறார் .

இனி பற்றா மனிசர் -என்பதற்கு
ஸ்ரீ எம்பெருமானையோ -ஸ்ரீ எம்பெருமானாரையோ -பற்றா மனிசர் என்னலுமாம் .-
இப்பொழுது பற்றினவராய் இருப்பின் அவரைப் பற்றுவதற்கு பயன் உண்டு –
பற்றாமையால் -என் சவிப்பார் மனிசரே -திரு வாய் மொழி – 3-5 5- – என்றபடி
உண்மையில் மனிசர் ஆகாத அன்னாரைப் பற்றுதற்கு பயன் ஏது-என்று கருத்து ஆகிறது .

இனி நம்மைப் பற்றுகிறவர்கள் இடம்
கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதுமில்லை -திரு வாய் மொழி – 9-1 1- – என்றபடி
பற்று -காதல்-இல்லா மனிசர் -என்று உரைப்பினுமாம் .
உலக நிலையைப் பற்றிய சான்றோர் உபதேசத்தாலும் -தமது லோக அனுபவத்தாலும் –
இப் பற்றினுடைய விட மாட்டாத திண்மை தோற்ற -அப்பற்று விடாது -என்கிறார் .
அவரே உற்றார் -பற்றப்பட்ட அப் பற்றா மனிசரே உறவாளர்

இனி
அப்பற்று விடாதவரே உற்றார் என -என்பதற்கு
பற்றா மனிசரைப் பற்றிய அப் பற்றை விடாமல் இருப்பவர்களை உற்றாராக நினைத்து என்ற பொருள் கூறலுமாம் –
பற்றா மனிசரை உறவாக கொண்டமை முந்தின பொருளிலும்
அவரைப் பற்றினவர்களை உறவாக கொண்டமை பிந்தின பொருளிலும் தோன்றும் .

உற்றார் என உழன்று –
உறவினர் என்று அவர்கள் பின்னே திரிந்து உழன்று உற்றாருக்காக உழன்று -என்னாமல் –உற்றார் என உழன்று -என்றது
உற்றார் எனபது உழல்கின்ற எனது நினைப்பே அன்றி உண்மையில் அவர் உற்றார் அல்லர் எனபது பட நின்றது .
ஓடி
அவர்கள் திறத்து பேரன்பினால் முகத்திலே விளிக்கப் பருவத்து எப்போதோ என்று ஓடி
இனி நையேன்
அவர்களோடு கூடி நிற்கில் களிப்பின் மிகுதியாலும்-பிரிந்திடில் பிரிவாற்றாமையாலும் உருக் குலைந்து போக மாட்டேன் –
இது காறும் நைந்தது போதும் .இனி மேல் உழன்று ஓடி நிலை குலையும் நிலையே எனக்கு ஏற்படாது -என்கிறார் .

தாயே தந்தை என்னும் தாரமே கிளை மக்கள் என்னும் -நோயே பட்டு ஒழிந்தேன்–
ஏவ காரம் ஒருவரே போதும்-அபயம் -சேர்ந்து இருந்தால்/பிரிந்தால் பயம்–

ஒள்ளிய நூல் கற்றார் பரவும் –
ரிசோ யசூஷி சாம நிததைவாதர்வணா நிச -சர்வம் அஷ்டாந்தராஸ் த்த்யம் யச் சாந்யதபி வான்மயம்-என்றும்
ஸ்வ ஞானம் ப்ரபாகஞ்ஞானம் ப்ராப்யஞானம் முமுஷூபி -ஜ்ஞானத் த்ரயம் உபாதேயம் ஏதத்அநயம் ந கிஞ்சன -என்றும் –
சுடர் மிகு சுருதி -என்றும் -சொல்லுகிறபடி –
சகல வேத சங்க்ரஹமாய் தத்வ ஹித புருஷார்த்தங்களை உள்ளபடி பிரகாசிப்பதுமான ஸ்ரீ ரகஸ்ய த்ரயத்தை –
ஸ்வ ஆசார்யரான ஸ்ரீ எம்பெருமானார் உடைய பிரசாதத்தாலே பெற்று –

அதுக்கு ஆந்தர ப்ரமேயமாய் -தத் யாதாம்ய ரூபமாய்-சார தமமாய் இருந்துள்ள அர்த்தம் –
ஆச்சார்யா தேவோ பவ -தேவ மிவ ஆச்சார்யா முபாசீதே -என்றும்
யஸ்ய தேவே பரா பக்திர் யதே தேவே ததா குரவ் -என்றும் -தேவ வத்ச்யாதுபாச்ய -என்றும் –
தஸ்மின் ராமானுஜார்யே குருரிதி சப்தம்பாதி நாந்யத்ரா-என்கையாலே
ஸ்ரீ எம்பெருமானாரே என்று-தெளிந்து நிலை பெற்று இருக்குமவர்கள் –
தம் தாமுடைய கல்விக்கு பிரயோஜனம் இதுவே என்று-பிரேமத்தால் அடைவு கெட ஸ்தோத்ரம் பண்ணா நின்று உள்ள –

இராமானுசனை –
ஸ்ரீ எம்பெருமானாரை –

ஒள்ளிய நூல் கற்றோர் பரவும் இராமானுசனை
பக்தியோடு முறைப்படி ஆசார்யனிடம் கற்று -உணர்ந்தமையின் -நூல் ஒள்ளிய நூல் ஆயிற்று .
எவனுக்கு தேவன் இடத்திலும் -ஆசார்யன் இடத்திலும் பரபக்தி உள்ளதோ -அவனுக்கு சொன்னவைகளும்
சொல்லப் படாதவைகளுமான பொருள்கள் எல்லாம் பிரகாசிக்கும் .-என்னும் பிரமாணம் காண்க .
ஒள்ளிய -பிரகாசித்த –
நூல் பிரகாசித்தல் ஆவது -அதன் பொருள் தெளிவாக தெரியும்படி இருத்தல் –
நூல்களின் பொருள்கள் தத்த்வமும் -ஹிதமும் -புருஷார்த்தமும் ஆகும் .
அவைகள் உள்ளபடியே தெளிவாக தெரிதலால் கற்றார் தமது கல்விக்கு கருத்து பொருளாம்
எல்லை நிலமான புருஷார்த்தம் இதுவே எனக் கருதி -ஆச்சார்யர் ஆகிய ஸ்ரீ எம்பெருமானாரை பரிவுடன் பரவுகின்றனர் -என்க .

கருதும் உள்ளம் பெற்றவர் யவர் –
ஸ்ரீ ராமானுசைய சரணவ் சரணம் பிரபத்யே -என்றும் –
சரணமேமி ஸ்ரீ ராமானுஜம் – என்றும் –
ஸ்ரீ ராமானுச முனிவன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் -என்றும் –
இதத்தாய் ஸ்ரீ ராமானுசன் -என்றும் – சொல்லுகிறபடியே அனுசந்திக்கையே யாத்ரையாய் இருக்கும் திரு உள்ளத்தை உடையவர் –

யவர்
எக்குற்றவாளர் எது பிறப்பு எது இயல்வாக நின்றோர் -என்கிறபடியே
உருவற்ற ஞானத்தையும் -தண்ணி யாக ஜென்மத்தையும் நிஷித்த வியாபாரத்தையும் உடையார் ஆகிலும் –

கருதும் உள்ளம் பெற்றார் –
ஸ்ரீ எம்பெருமானாரை இடைவிடாது தம் கருத்திலே இருத்தும் பாக்கியம் படைத்தவர்கள் -என்றபடி .
கருதும் உள்ளம் –
ஓர் இடத்தில் செவ்வையாய் -நின்றவா நில்லாத உள்ளம்-ஸ்ரீ எம்பெருமானாரையே கருதும் உள்ளம் ஆயிற்று .
தவம் புரிபவன் வாயு பஷணம் பண்ணிக்கிறான் என்றால் – காற்றையே சாப்பிடுகிறான் -என்று பொருள் படுவது போலே –
ஸ்ரீ இராமானுசனை கருதும் உள்ளம் பெற்றார் -என்பதற்கு –ஸ்ரீ இராமானுசனையே கருதும் உள்ளம் பெற்றார் –என்று பொருள் கொள்க .
உள்ளம் உடையார் -என்னாது பெற்றார் -என்றார் –புதையல் பெறுதல் போலே இது பெறாப் பேறு-என்று தோற்றற்கு-

கருதும் உள்ளம் பெற்றார்-ஞானம் இருக்க வேண்டும் என்பது இல்லை-மனசு இருந்தாலே போதும்-

அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே –
அப்படிப் பட்ட குற்றத்தையும் இயல்பையும் பிறப்பையும் உடையவர்களே நமக்கு சேஷிகளாய் –
நம்மை யாவதாத்மா பாவியாக அடி பேராதே ஒருப்படி நின்று யதேஷ்ட விநியோக அர்ஹராம் படி –
ஆளா நின்று உள்ள மகாத்மாக்கள் –
யவரேலும் அவர் கண்டீர் – அவர் நின்றாளும் பெரியவரே -என்று ஸ்ரீ நம் ஆழ்வாரும் அருளிச் செய்தார் இறே –

ஸ்வப சோபி மஹீ பால விஷ்ணு பக்தோத் விஜாதிக -ந சூத்ரா பகவத் பக்தாவிப்ரா பாகவதாஸ் ஸ்மர்த்தா –
பக்திரஷ்ட விதாஹ்யேஷா யஸ்மின் மிலேச்சேபி வர்த்ததே சவிப்ரேந்த்ரோ முநிஸ் ஸ்ரீ மான் சயதிஸ்-சை பண்டித –
தஸ்மை தேயம் ததோராக்யம் சைபூஜ்யோ யதாஹ்யஹம் -ஸ்வ பசோபி ஹரேர் நாம யஸ்ய வாசி –
சக்ர்தப்ய வசாத்வி நிர்க்கதச்செத் குலதைவவம் மம தஸ்ய பாத தூளி -அனுவ்ரஜாம் யஹம் நித்யம் பூய யேத் யன்க்ரி-ரேணுபி –
தாஸ் சர்வாஸ் சிரசா தேவ பிரதி கிரகணாதி வைச்வயம் -என்ன கடவது இறே –

யவர் அவர் எம்மை நின்றாளும்
பரமனை பயிலும் திருவுடையர் எவரேனும் அவர் கண்டீர் எம்மை ஆளும் பரமர் -ஸ்ரீ திரு வாய் மொழி – 3- 7-1
என்று ஸ்ரீ நம் ஆழ்வார் திருவாய் மலர்ந்தது போலே –
கருதும் உள்ளம் பெற்றார் யவர் அவர் எம்மை யாளும் பெரியவர் – என்கிறார் .
குலம் முதலியன எப்படி இருப்பினும் அமையும் எனபது கருத்து ..

எம்மை ஆளும் பெரியவர்
ஸ்ரீ இறைவனைப் போலே எல்லாரையும் ஆளூம் பரமனாய் இராமல் –
சர்ம பர்வத்தின் எல்லை நிலத்தின் கண் உள்ள என் போன்றோரை ஆளும் பெரியவராய் உள்ளனர் -என்றவாறு .
நின்று –
நிலை நின்று -நிரந்தரமாக பாகவத சேஷத்வம் நிலை நிற்கும் ஆத்மா தர்மம் ஆதலின் -ஆத்மா உள்ள அளவும் ஒருபடிப்பட ஆளுவர் -என்றபடி .
ஆளுதல்-அடிமை கொள்ளுதல் –
ஸ்ரீ இறைவன் சேதனரை ஆளுவது –
ஒருகால் தரு துயரம் தடாததும் -ஒரு கால் சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து அந்தம் -லயம்-உரைச் செய்வதும் –
மற்றொரு கால் காயம் கழித்து தன் தாளிணைக் கீழ் வாழ்ச்சியை அளிப்பதுமாய் – பல படிப் பட்டு இருக்கும் .
பெரியவர் ஆளுவதோ
என்றும் அடிமை இன்பம் ஒன்றையே தருவதாய் இருத்தலின் ஒருபடிப் பட்டு இருக்கும் -என்க .

அற்ப மனிசரைப் பற்றினாரை உற்றார் எனக் கொண்டு உழன்று ஓடி நைந்து போன -என்னை –
ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றிய பெரியவர் -நாம் பையல் எனக் கொண்டு -தாமாகவே முன் போல் உழன்று ஓடி நைய விடாது ஆள்கின்றனர் .
என்னே என் நிலை அடியோடு மாறின படி -என்கிறார் .
அற்ப மனிசரைப் பற்றி அவரை உற்றாரஎன உழன்று ஓடி நைந்தேன் – இது நானாக தேடிக் கொண்ட கேடு
இன்று பெரியவர் என்னை அபிமானித்து அங்கன் நைய விடாது ஆள்கின்றனர் .
இது ஹேது எதுவும் இன்றி எனக்கு கிடைத்த பேரும் பேறு -என்ற வியந்து பேசுகிறார் .

————

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே—1-9-1-

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாய்த் தாய் தந்தையும் அவரே யினி யாவரே -திருவாய் -5-1-8- என்றும்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய் நீ நின்றவாறு -திருவாய் -7-8-1-என்கிறபடியே
உன்னையே சகல வித பந்துக்களாகக் கொள்ள வேண்டு இருக்க-அது செய்யாதே –

தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேனாயின பின் பிறர்க்கே வுழைத்து ஏழை யானேன்
கரிசேர் பூம் பொழில் சூழ் கனமா மலைவேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-7-

பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன்–1-9-9-

எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே -4-9-9-

கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-

துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
அணைய வந்த வாக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர்
கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த எம் கார் முகிலை
புணை என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே–9-1-2-

பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில் என்னே என்பாருமில்லை–9-1-3-

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப் பதற்கு
ஆதி அம் சோதி உருவை அங்குவைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா என் சவிப்பார் மனிசரே?–3-5-5-

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற் கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திரு வுடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடைதோறு எம்மை ஆளும் பரமரே–3-7-1-

ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
தோளும் ஓர் நான்குடைத் தூ மணிவண்ணன் எம்மான் தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே–3-7-2-

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடையார்களே–3-7-3-

சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே–3-7-7-

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம் மடியார் எம் அடிகளே–3-7-9-

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப் படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம் மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் மடியார் அடியோங்களே–3-7-10-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –85-ஓதிய வேதத்தின் உட் பொருளாய் அதன் உச்சி மிக்க சோதியை – இத்யாதி —

May 29, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ இராமானுசன் தன்னைக் கண்டு கொண்டேன் —அவன் தொண்டர் பொற்றாளில் தொண்டு கொண்டேன் -என்றீர் –
இரண்டில் உமக்கு ஊற்றம் எதிலே என்ன –
ஸ்ரீ எம்பெருமானாருக்கே அனந்யார்ஹ்யமாய் இருப்பார் திருவடிகள் ஒழிய
என் ஆத்மாவுக்கு வேறு ஒரு பற்று இல்லை -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ இராமானுசன் –தன்னை கண்டு கொண்டேன் -என்றும் –
அவர் தொண்டர் பொற்றாளில் தொண்டு கொண்டேன் -என்றும் தத் விஷயத்திலும் ததீய விஷயத்திலும் ஈடுபடா நின்றீர் –
ஆனால் இவ்விரண்டிலும் வைத்துக் கொண்டு உமக்கு எந்த விஷயத்தில் ஊற்றம் அதிசயித்து இருக்கும் -என்ன –
அருகே இருந்து கேட்டவர்களைக் குறித்து –
தாம் அதிகரித்துப் போந்த வேதத்தின் உடைய பொருளாய் கொண்டு -அந்த வேத ஸ்ரச்சுக்களான வேதாந்தங்களிலே
ப்ரதிபாத்யனான அவனே நமக்கு வகுத்த சேஷி என்று அறிய பெறாதே
அப்ராப்த விஷயங்களிலே தொண்டு பட்டும் கதாகதங்களாலே இடர் பட்டும் போருகிற சம்சாரி ப்ராயருடைய அறிவு கேட்டை
விடுவித்த ஸ்ரீ எம்பெருமானாருக்கு அனந்யார்ஹரர் ஆனவர்களுடைய திருவடிகளை ஒழிய
என் ஆத்மாவுக்கு வேறு ஒரு அபாஸ்ர்யம் இல்லை என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ இராமானுசன் தன்னைக் கண்டு கொண்டேன் -என்றும்
அவன் தொண்டர் பொற்றாளில் தொண்டு கொண்டேன் -என்றும் சொன்னீர்
இவ்விரண்டு விஷயங்களிலும் உமக்கு எதனில் ஈடுபாடு அதிகம் -என்பாரை நோக்கி –
ஸ்ரீ எம்பெருமானாரை தொழும் பெரியோர்கள் திருவடிகளைத் தவிர
என் ஆத்மாவுக்கு வேறு ஒரு பற்று இல்லை -என்கிறார் –

ஓதிய வேதத்தின் உட் பொருளாய் அதன் உச்சி மிக்க
சோதியை நாதன் என வறியாது உழல்கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த விராமானுசனைத் தொழும் பெரியோர்
பாத மல்லால் என்தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே – – 85- –

பத உரை
ஓதிய -தாங்கள் அத்தியயனம் செய்த
வேதத்தின் உட் பொருளாய் -வேதத்தினுடைய கருத்துப் பொருளாய்
அதன் உச்சி -அந்த வேதத்தின் முடிவான உபநிஷத்திலே
மிக்க சோதியை -மிகுந்த பிரகாசத்துடன் விளங்குபவனை
நாதன் என அறியாது -நமக்கு -ஸ்ரீ நாதன் -என்று தெரிந்து கொள்ளாமல்
உழல்கின்ற தொண்டர் -கண்ட கண்ட விஷயங்களில் தொண்டு பட்டு உழல்கின்ற வர்களுடைய
பேதைமை தீர்த்த -அறியாமையை போக்கி யருளின
இராமானுசனைத் தொழும் பெரியோர் -ஸ்ரீ எம்பெருமானாரைத் தொழுவதாகிய பெருமை வாய்ந்த வர்களுடைய
பாதம் அல்லால் -திருவடிகளைத் தவிர
என் தன் ஆர் உயிர்க்கு – எனது அருமை வாய்ந்த ஆத்மாவுக்கு
யாது ஒன்றும் -வேறு ஏதேனும் ஒன்றும்
பற்று இல்லை -ஆஸ்ரயிக்கும் இடம் இல்லை

வியாக்யானம் –
நாங்கள் அதிகரித்து இருக்கிற வேதத்தின் உடைய ஆந்தர ப்ரமேயமாய் –
சுருதி சிரஸிவிதீப்தே -ஸ்ரீ பாஷ்யம் -என்கிறபடியே -அந்த வேத சிரச்சிலே நிரவதிகமாக பிரகாசித்து இருக்கிறவனை
நமக்கு -நாதன் -என்று அறியாதே –வ்யத்ரிக்த விஷயங்களிலே –தொண்டு பட்டு உழன்று –
(தொண்டர் -இங்கு அடியவர் என்று உயர்ந்த அர்த்தத்தில் இல்லை -)-திரிகிறவர்கள் உடைய அப்ராப்த விஷய பஜனத்துக்கு
அடியான -அஞ்ஞானத்தை போக்கி யருளின – ஸ்ரீ எம்பெருமானாரைத் தொழுகையே நிரூபகமாம் படி யான பெருமையை
உடையவர்களுடைய திருவடிகளை ஒழிய -என் ஆத்மாவுக்கு வேறு ஏதேனும் ஒரு அபாஸ்ரயமில்லை –
பேதைமை தீர்க்கும் -என்றும் பாடம் சொல்லுவார்கள் .

ஆர் உயிர்க்கி யாதொன்றும் -என்கிற இடத்தில்
ககரத்தின் மேல் ஏறின இகரமும் குற்றியலிகரம் ஆகையாலே -பல்லுலகியாவும் – 56- என்ற இடத்தில்
போலே வண்ணம் கெடாமைக்கு கழித்து-பூர்வாபர பாதங்களுக்கு ஒக்கப் பதினாறு எழுத்தாக எண்ணக் கடவது –

பெரியோர் -தொழுகையே காரியமாக கொண்ட பெரியோர் -முற்பட்ட –
பெரியவர் தொழுவார் -தொழுது பெரியோர் ஆனவர் பிற்பட்டவர்கள்
பேதைமை -அல் வழக்குகள் பல உண்டே -புண்யம் போக விகாசாயா -ஸ்ரீ ராமானுஜ திவாகரன்

ஓதிய வேதத்தினுட் பொருளாய் –
அஷ்ட வர்ஷம் ப்ராஹ்மன முபநயீத –ஸ்வாத் யாயோத்யதவ்ய —வேத மநூச்யா சார்யோந் தேவாசி நம நுசாச்தி –
ஸ்வாத் யாயா ந் மாப்ரமத -என்கிறபடியே
அத்யயன விதி பரதந்த்ரராய் கொண்டு தாம் அதிகரித்த வேதத்தின் உடைய அவாந்தர ப்ரமேயமாய் –
பஜேத் சார தமம் சாஸ்திரம் -என்றும் –
சர்வதஸ் சார மாதத்யாத் -என்றும் சொல்லுகிறபடி சார தமமாய் –

அதன் உச்சி மிக்க சோதியை நாதன் என அறியாது –
வேதைஸ் ச சர்வை ரஹ மேவ வேத்ய –என்றும் –
வேத வேத்யே பரே பும்சி -என்றும் –
வேதே ராமாயனே புண்யே -என்றும்
ஆதவ் மத்யே ததான் தேச விஷ்ணுஸ் சர்வத்ர கீயதே -என்றும் –
உளன் சுடர் மிகு சுருதியுள் -என்றும் -ஸ்ருதி ஸ்ரசி விதீப்தே–என்றும் சொல்லுகிறபடியே-

வேத சிரச்சுகளால் கட்டடங்க பிரதி பாத்யனாய் –
ஜ்யோதிஷாம் ஜ்யோதி -தேஜசாம் ராசிமூர்ஜிதம் – என்கிறபடியே
நிரவதிகமாக பிரகாசிக்கிற சர்வேஸ்வரனை –
பதிம் விச்வச்ய -என்கிறபடியே -நமக்கு பிராப்த சேஷி என்று அறிய மாட்டாதே –

ஓதிய வேதத்தின் உட் பொருளாய் –
மறையாய் நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே -ஸ்ரீ திருவாய் மொழி – -3 -1 -10 -என்றார் ஸ்ரீ நம் ஆழ்வாரும் .
ஓதிய வேதம் -என்றமையின்
முறைப்படி -ஸ்ரீ ஆசார்யன் இடம் இருந்து -கற்றமை புலனாகிறது .
கற்ற நூல் மறையாளர் -ஸ்ரீ பெரிய திரு மொழி -8 -1 8- -என்னும் இடத்தில்
விடு ஈடு எடுத்துக் கொண்டு அறிதல் -புஸ்தகம் பார்த்து அறிதல் -செய்வார் இல்லை -என்று வியாக்யானம் செய்துள்ள படி
முறை தவறாது -ஆசார்ய உச்சாரண அநு உச்சாரண க்ரமத்தாலே கற்ற வேதம் -என்றது ஆயிற்று .

வேதம் என்பது
கட்புலன் ஆகாதவைகளும் -அனுமானத்தால் அறிய ஒண்ணாதவைகள் -சாத்திய தர்மம் எனப்படும் ஸ்ரீ இறைவனது வழி பாட்டினையும்
சித்த தர்மம் -எனப்படும் வழி பாட்டுக்கு உரிய ஸ்ரீ இறைவனையும் -ஓதுவாருக்கு தெரிவித்தலின் வந்த பெயராகும் .
ஆயின் மேலே -அதன் உச்சி -என்று
வழி பாட்டிற்கு உரிய இறைவனைக் கூறும் வேதாந்தம் எனப்படும் உபநிஷத்துக்களை தனித்து குறிப்பிடுதலின் –
ஸ்ரீ இறைவனது வழி பாட்டின் வடிவமான கர்மங்களை பற்றிக் கூறும் பகுதியையே
ஸ்ரீ அமுதனார் இங்கு வேதம் என்னும் சொல்லினால் குறிப்பிடுகிறார் –
இந்த பகுதியிலேயே இறைவன் உட் பொருளாய் நிற்கிறான் ..
வழிபாட்டிற்கு உரியவைகளாக அக்நி-இந்திரன் -முதலிய தேவதைகள் ஓதப்பட்டு இருப்பினும் –
அவற்றின் உள்ளே அந்தர்யாமியாய் –
ஆத்மாவாக எழுந்து அருளி இருக்கும் -ஸ்ரீ இறைவனே ஒதப்-பட்டு இருப்பதாக கொள்ளல் வேண்டும்
அந்த ப்ரஹ்மமே அக்நி -அது வாயு -அது சூர்யன் -அது தான் சந்திரன் –
என்னும் உபநிஷத் வாக்கியத்தினால் -இது அறியப்படுகிறது
ஆக அக்நி -இந்திராதி ரூபமாக ப்ரஹ்மம்-கருதப் படுதலின் -அது வேதத்தின் உட் பொருளாயிற்று -என்றபடி-

அதன் உச்சி மிக்க சோதியை –
அதன் உச்சி -அந்த வேதத்தினுடைய உச்சி -மறை முடி -எனப்படும் -வேதாந்தம் -என்றபடி –
வேதாந்தத்தில் மிகுந்த சோதியாய் -பிரகாசிப்பவன் ஸ்ரீ இறைவன் –
வேதத்திலோ அங்கன் விசேடித்துப் பிரகாசியாமல் ஸ்ரீ இறைவன் அக்நி இந்திரன் முதலிய வடிவத்தில் மறைந்து தோற்றுகிறான் –
சுருதி சிரஸி விதீப்தே -வேதத்தின் உச்சியில் விசேஷித்து விளங்குவது-என்னும் ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்தியை அடி ஒற்றின படி –

உழல்கின்ற தொண்டர் –
கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரஷ்டாரம் அச்யுதம் நார்ச்ச யிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோப ஹதா ஜனா -என்றும் –
நமாம் துஷ்க்ர்தினோ மூடா பிரபத்யந்தே நராதமா -காமைஸ் சதஸ் தைர்கர் தாஜ்ஞான ப்ரபத்யந்தே ந்யதேவதா -என்றும் –
நாதேன புருஷோத்தமே த்ரிஜகதாமே காதிபெசெதசா-சேவ்யே ஸ்வ ச்யபதஸ் யதாதரி ஸூ ரே நாராயனே திஷ்டதி –
யம் கஞ்சித் புருஷாதமம் கதிபயக்ராமே சமல் பார்த்ததம் சேவா சயம்ர்கயா மகோநா மகோ மூகா வரா காவயம்-என்றும் சொல்லுகிறபடி –
அநாதி பாப வாசனையாலே
சூத்திர தேவதைகளுக்கும் சூத்திர மனுஷ்யருக்கும் தங்களுக்கும் என்றும் ஒக்க சேஷ பூதராய் –
அந்த சேஷ வ்ருத்தி தன்னாலே –
அதஸ் சொர்த்தஸ் வஞ்சப் ப்ரஸ்ர்தா -தஸ்ய சாகா குணா பிரவ்ர்த்தா விஷயே ப்ரவணா – என்றும்
கதா கதம் காம காமாலபந்தே -என்றும் சொல்லுகிறபடியே
கர்ப்ப ஜன்ம யாமா தூமாதி மார்கங்களிலே சஞ்சரித்து பஞ்சாக்னி வித்தையில் சொல்லுகிறபடியே
தேவாதி யோனிகள் தோறும் மாறி மாறி பல பிறப்பும் பிறந்து-திரியா நிற்கிற சபலர் உடைய –

நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர் –
வேதத்தின் உட் பொருளும் -அதன் உச்சியில் மிகவும் பிரகாசிக்கும் ஸ்வயம் பிரகாசமான வஸ்த்வுமான ஸ்ரீ இறைவனை
வேதியர்கள் ஓதி இருந்தும் -அவர்களால் ஓதப்படுவது ஸ்ரீ இறைவனைத் தெரிவிக்கும் நூலாய் இருந்தும் –
நமக்கு -ஸ்ரீ நாதன் -என்று அவ் இறைவனை அறியாது புறம்பே தொண்டு பட்டு உழல்கின்றனரே என்று வருந்துகிறார் .
பிரதானம் ஆகிய அசித்துக்கும் -ஷேத்ரஞ்ராகிய சித்திற்கும் -அவனே பதி என்று அறியாமையாலே
புறம்பான உலகியல் இன்பங்களிலே உள்ளம் ஈடுபட்டு -அதற்காக கண்ட கண்ட வர்களுக்கு தொண்டு பட்டு
உள்ள வேண்டியதாயிற்று -வேதம் கற்றது பயன் அற்றதாய் ஆயிற்று –

ஸ்ரீ இறைவன் நாதன் -நாம் சேஷப்பட்டவர் -என்று அறிந்து -அவன் நல் தாள் தொழ வில்லையானால் –
கற்றதனாலாய பயன் என் கொல் –
சதுர்வேத தரோ விப்ரோ வாசுதேவம் நவிந்ததி வேதபார பராக்ராந்த சவை ப்ராஹ்மண கரதப -என்று
எந்த பிராமணன் நால் வேதங்களையும் நெஞ்சில் தாங்கி கொண்டு இருப்பினும்
ஸ்ரீ வாசுதேவனை அறிய வில்லையோ –
அவன் வேதச் சுமையின் பழுவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பிராமணக் கழுதை யாவான் -என்றபடி
குங்குமம் சுமந்த கழுதை போல் ஆயினரே –இது என்ன பேதமையோ-என்கிறார் .

தொண்டர் –
தகுதி யற்ற விஷயங்களில் இழி தொழில் செய்யும் சபலர் –
கொற்றப் போராழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே -ஸ்ரீ பெரிய திரு மொழி -11 -6 3- – என்று
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் இத்தகைய தொண்டர்களுடைய சிறுமையையும் கொடுமையையும் கூறியது காண்க .
ஷூத்ரமான பயன்களை விரும்புதலால் சிறுமையையும் –
அதன் பயனாக இறைவனது உறவையும் -உபகாரத்தையும் பற்றிய சீரிய அறிவுச் செல்வத்தை
பறி கொடுத்து –கவலை இன்றி -செய்நன்றி கொன்று நிற்றலால் கொடுமையும் உள்ளன –என்க–

காமைஸ் தைச்தைர் ஹ்ருதஜ்ஞானா பிரபத்யந்தேன்ய தேவதா தம் தம் நியம மாச்த்தாய
பிரக்ருதயா நியதாஸ் ச்வயா–ஸ்ரீ கீதை – 7-20 – என்று
உலகியலில் ஈடுபட்டோர் அனைவரும் தமது பிராக்ருத பொருளை பற்றிய பண்டைய வாசனையினால் இணைக்கப் பட்டவர்களாய் –
அவ்வந்த வாசனைகளுக்கு ஏற்ப -விரும்பப்படும் பலனான -பிராக்ருதப் பொருள் களினாலே
ஸ்ரீ இறைவனைப் பற்றிய அறிவு இழந்தவர்களாய் -தாம் விரும்பின பயனை பெறுவதற்காக வேறு தேவதைகளை –
அந்தந்த தேவதைகளுக்கு உரிய நியமத்தை கைக் கொண்டு பற்றுகிறார்கள்-என்று
ஸ்ரீ கண்ணன் அற்பப் பயனைக் கோரினவர்-தன்னைப் பற்றிய அறிவை இழந்து –
கோரிய பயனைப் பெறுவதற்காக -பல தேவதைகளுக்கு தொண்டு படுவதாக கூறியது -காண்க –

உழல்கின்ற தொண்டர்
விரும்பப் படுமவை பலவாதலின் அவ்வவற்றை பெற பல பேர்களுடைய காலிலே
விழுந்தாக வேண்டி இருப்பதால் –உழல்கின்ற தொண்டர் –என்றார் .
தேவர்கள் இறைவன் அல்லரோ -வேண்டிற்று எல்லாம் தருதற்கு – இன்னார் தொண்டர் என்ன ஒண்ணாது –
ஓர் இடத்தில் நிலை இல்லாமையாலே – பிறர் திறத்து தொண்டு இன்பம் தராது உழல்கையே தருவதாயிற்று –
உழல்கின்ற தொண்டர் -தொண்டால் உழல்கின்றவர் -என்று மாற்றுக

பேதைமை தீர்த்த-
தேஷா மேவா நு கம் பார்த்த மகாமஞ்ஞான ஜம் தம -நாசயாமி -என்கிற ஸ்ரீ கீதாசார்யனைப் போலே
பாப த்வான் தஷயாயச ஸ்ரீ மான் ஆவிர்பூதவ் ராமானுஜ திவாகர -என்றும்
அஞ்ஞான அந்தகார நிவாகரர் ஆகையாலே அப்ராப்த விஷய பஜனத்துக்கு அடியான அஞ்ஞானத்தை
வாசனையோடு போக்கி அருளினார் – என்கிறார் –

பேதைமை தீர்த்த இராமானுசனை
வேதம் ஓதியவரும் தொண்டு பட்டு உழல்வதற்கு ஹேது அறியாமை –
அதனை தீர்க்க அறிவு ஊட்டுதல் வேண்டும் .
அவர்கள் ஓதிய வேதத்தில் ஸ்ரீ இறைவன் உட் பொருளாய் இருப்பதையும் –
அதன் உச்சியில் மிக்க சோதியாய் இருப்பதையும் -காட்டி –
அவன் ஒருவனே நீங்கள் தொண்டு பட வேண்டிய ஸ்ரீ நாதன் என்னும் அறிவை -ஊட்டி -அறியாமை தீர்த்து
அருளினார் ஸ்ரீ எம்பெருமானார் -என்க –

இவர்களுக்கு ஸ்ரீ இறைவன் எல்லாரையும் அந்தர்யாமியாய் நியமிக்கிறான் –-அதனால் அவன் அனைவருக்கும் ஆத்மா –
நாம் அனைவரும் அவனுக்கு சரீரமாய் சேஷப் பட்டு இருப்பவர்கள்
என்னும் அறிவு இல்லாமையே பிறருக்கு தொண்டு பட -ஹேதுவாயிற்று -என்று
அவ் அறிவினை அவர்கள் ஓதிய வேதத்தின் மூலமே ஊட்டி அருளினார் -என்க —

வேதத்தில் இந்திரன் அக்நி முதலிய சொற்களாலே அவர்களுக்கு ஆத்மாவாக இறைவன் பேசப்படுவதாலும் –
வேதாந்தத்தில் மிக சோதியாய் -ஜீவாத்மாவிலும் வேறுபட்ட -ஸ்வயம் பிரகாசனான ஸ்ரீ இறைவன் –
ஷரம் -என்னும் அசேதன பொருள்களையும் –
ஆத்மா என்னும் சேதனப் பொருள்களையும் –
ஒரு தேவன் நியமிப்பதாக -ஓதப்படுவதால் -பொருள்கள் அனைத்துக்கும் ஆத்மாவாக விளங்குவதாலும் –
ஆத்மா சரீரம் -என்று பரி சுத்த ஆத்மாவும்
ப்ருதிவீ சரீரம் -என்று பூமி முதலிய அசேதன பொருள்களும் -அவ் இறைவனுக்கு சரீரமாய் ஓதப்படுவதாலும் –
வேதத்திலும் -வேதாந்தத்திலும் -சரீரம் ஆத்மா என்னும் சம்பந்தம் காட்டப் பட்டு இருப்பதால்
உடல் உயிருக்கே சேஷப் பட்டு இருப்பது போலே –நாம் அனைவரும் நமது ஆத்மாவான
ஸ்ரீ இறைவனுக்கே சேஷப் பட்டவர்கள் ஆகிறோம் -என்னும் உபதேசத்தினால் அறிவை ஊட்டி
ஸ்ரீ எம்பெருமானார் பேதைமை தீர்த்து அருளினார் –என்க .

பேதைமை தீர்க்கும் இராமானுசன் -என்பதும் ஒரு பாடம் .

இராமானுசை தொழும் பெரியோர் பாதம் அல்லால் –
இப்படி சர்வோத்தராரான ஸ்ரீ எம்பெருமானாரை தம் தாம் உகந்து ரஷகராக அத்யவசித்து இருக்கும்
மகாத்மாக்களுடைய பிராப்யமான திருவடிகளை ஒழிய-
பெரியோர் –
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ பிள்ளான் தொடக்கமானவர் என்றபடி –

தொழும் பெரியோர்-அடியைத் தொடர்ந்து
எழும் ஐவர்கள் -என்று சொல்ல வேண்டும்படி அவனை ஆஸ்ரயித்து இருந்த பாண்டவர்கள் -சிறியார் -என்கிறபடி
உருவற்ற ஞாநியராய் போந்தார்கள் –
இவரை ஆஸ்ரயித்தவர்களுக்கு அப்படிப்பட்ட குறைகள் ஒன்றும் இன்றிக்கே
அத்தாலே இப்படிப் பட்ட பெருமை ஒன்றுமே காணும் முற்பட உண்டாவது –

தொழும் பெரியோர்
ஸ்ரீ பேராளன் பேரோதும் பெரியோர் அல்லர் –
அவர்களிலும் சீரியர் ஸ்ரீ இராமானுசனை தொழும் பெரியோர் .
செயற்கரிய செய்வார் பெரியார் .
ஸ்ரீ எம்பெருமானாரைத் தொழுகை செயற்கு அரிது -இதற்க்கு நல்ல மனத் துணிவு வேண்டும்
அவர்களுக்கு வேறு பெயர் கிடையாது -ஸ்ரீ இராமானுசனைத் தொழுவார் -என்பதே அவர்கள் பெயர் .
தொழுகையே அவர்களுக்கு நிரூபகம் -இத்தகைய பெருமை வாய்ந்தவர்கள் என்றபடி –
ஸ்ரீ ஆழ்வான் -ஸ்ரீ ஆண்டான் போல்வார்கள் –

கைங்கர்யமே நிரூபகம்–ஸ்ரீ வேங்கடத்தை பதியாக வாழ்வீர்காள்-மேகத்தை ஸ்ரீ ஆண்டாள் கூறுவது போலே –
மேகம் தன் – ஸ்ரீ நாதன் -ஸ்ரீ பதி என்று தெரிந்து கொண்டதே-

என் தன் ஆர் உயிர்க்கு –
அவன் தொண்டர்-பொற்றாளில் தொண்டு கொண்டேன் -என்னும்படியான அத்யாவசத்தோடே போந்து இருக்கிற
என்னுடைய விலஷணமான ஆத்மாவுக்கு –

யாதொன்றும் பற்று இல்லையே –
வேறு ஒரு அபாஸ்ரயம் இல்லை –
வாசா யதீந்திர -என்கிற ஸ்லோகத்தாலே இவ் வர்த்தத்தை ஸ்ரீ ஜீயரும் அருளிச் செய்தார் இறே –

பாதம் அல்லால் –பற்று இல்லை –
என் தன் ஆர் உயிர்க்கு பாதமே பற்றுக் கோடு-பிறிது ஒன்றும் இல்லை -என்கிறார் .
ஸ்ரீ எம்பெருமானார் அளவோடு நிற்காமல் அவனைத் தொழும் பெரியோர் அளவும் சேஷத்வத்தின்
எல்லை நிலத்தில் வந்து நிற்றலால் தமது ஆத்மாவை அருமைப் பட்டது என்று கொண்டாடுகிறார்
உயிர் -ஆத்மா
ஸ்ரீ மணவாள மா முனி அமுதனார்க்கு வாய்ந்த இந்நிலைமை தமக்கும் கிடைக்க வேண்டும் என்று
வாசாய தீந்த்ர மனசா -என்று தொடங்கும் ஸ்லோகத்தில் ஸ்ரீ எம்பெருமானார் இடம் பிரார்த்திக்கிறார் .
ஆர் உயிர் க்கியாதொன்றும் -என்னும் இடத்தில் குற்றியலிகரம் அலகு பெற வில்லை அலகிடலாகாது–

என் தன் ஆர் உயிர்-
ததீயர் பற்றியதால் ஆர் உயிர் என்று கொண்டாடுகிறார் தம் மனசை-விலக்ஷண ஆத்மா-
கண்டு கொண்டேன் எம் ராமானுசன் தன்னை சொன்னது உபாயமாக கொண்டு-
அவன் தொண்டர் பொன் தாளில் தொண்டு கொண்டேன் என்பதே பிராப்யம் என்கிறார்.

————–

ஓதிய வேதத்தின் உட் பொருளாய் அதன் உச்சி மிக்க சோதியை

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே!
முறையால் இவ் வுலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்தளந்தாய்;
பிறை ஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறை யாதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே!–3-1-10-

நாவியல் கலைகள் என்கோ! ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ணனையே–3-4-2-

பால் என்கோ! நான்கு வேதப் பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி இசை என்கோ! இவற்றுள் நல்ல மேல் என்கோ!–3-4-6-

கொற்றப் போராழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே –11-6-3-

கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ 8-1-1-

கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-8

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –84-கண்டு கொண்டேன் எம் இராமானுசன் தன்னை- இத்யாதி —

May 29, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

மேல் பெரும் அம்சம் கிடக்கச் செய்தே இதுக்கு முன்பு தான் பெற்றவை தனக்கு
ஒரு அவதி உண்டோ -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே பிரதம பர்வ கோஷ்டியிலே அந்வயியாதே இருக்கிற என்னை சரம பர்வமான ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளை
பரம ப்ராப்யமாக இவர் அத்யவசித்து இருக்கிறார் என்று லோகத்தார் எல்லாரும்அறியும் படி பண்ணி யருளினார் என்று சொல்லி –
இதிலே –
எனக்கு வகுத்த சேஷியான ஸ்ரீ எம்பெருமானாரை கண்ணாரக் கண்டு -அந்த காட்சி கொழுந்து விட்டு ஓடிப் படர்ந்து –
ததீய பர்யந்தமாக வளருகையாலே-
அவர்கள் திருவடிகளில் அடிமைப் பட்டு அதி குரூரமான துஷ் கர்மங்களை கட்டடங்க விடுவித்துக் கொண்டு –
அவருடைய கல்யாண குணாம்ர்தத்தை வாயார அள்ளிக் கொண்டு பருகா நின்ற நான் –
இன்னமும் பெற்றவற்றை சொல்லப் புக்கால் –
மேல் பெற வேண்டுமவற்றுக்கு ஒரு தொகை இன்றிக்கே இருக்கச் செய்தே
இவை தன்னை ஒரு வாசகம் இட்டு என்னால் சொல்லித் தலைக் கட்டப் போகாது என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ எம்பெருமானார் வள்ளன்மையாலே இனிமேல் பெற வேண்டியவை ஒரு புறம் இருக்க –
இதற்கு முன்பு பெற்றவை தாம் -ஒரு கணக்கில் அடங்குமோ – என்கிறார் .

கண்டு கொண்டேன் எம் இராமானுசன் தன்னை காண்டலுமே
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்
றுண்டு கொண்டேன் இன்னுமுற்றனவோ தில் உலப்பில்லையே – -84 – –

பத உரை –
எம் இராமானுசன் தன்னை -எங்கள் ஸ்வாமியான ஸ்ரீ எம்பெருமானாரை
கண்டு கொண்டேன் -உள்ள படி கண்டு கொண்டேன்
காண்டலுமே -கண்ட வுடனேயே
அவன் தொண்டர் பொன் தாளில் -அவருடைய அடியார்களின் விரும்பத் தக்க திருவடிகளில்
தொண்டு கண்டேன் -அடிமை பட்டேன்
என் தொல்லை வெந்நோய் -என்னுடைய பண்டைய கொடிய கர்மங்களை
விண்டு கொண்டேன் -நீக்கிக் கொண்டேன்
அவன் சீர் வெள்ள வாரியை -அவருடைய குண பிரவாஹம் ஆகிய சமுத்ரத்தை
வாய் மடுத்து -கையினால் அன்றி வாயை மடுத்து
விடாயர் விடாய் தீர மடுவிலே வாய் மடுத்து பருகுவது போலே
இன்று உண்டு கொண்டேன் -இப்பொழுது அனுபவித்துக் கொண்டேன்
இன்னம் -இன்னமும்
உற்றன -நான் பெற்றவைகளை
ஓதில் -சொன்னால்
உலப்பு இல்லை -முடிவே இல்லை

வியாக்யானம் –
இவர் நம்மோடு சஜாதீயர் அல்லர் –
நம்மை உத்தரிப்பிக்க வந்தவர் என்று
அஸ்மத் ஸ்வாமியான ஸ்ரீ எம்பெருமானாரை உள்ளபடி கண்டு கொண்டேன் .
(ஜென்ம கர்மம் மே திவ்யம் யோ வேத்தி தத்வதக -உண்மையாக )
இப்படி தர்சித்த அளவிலே -அவர் தம் அளவிலே -நின்று விடாதே
அவர்க்கு அநந்யார்ஹர் ஆனவர்களுடைய அழகிய திருவடிகளிலே அடிமைப்பட்டேன் –
என்னுடைய அநாதியாய் -அதிக்ரூரமான கர்மங்களை நீக்கிக் கொண்டேன் –
அவருடைய குண பூரமாகிற சமுத்ரத்தைப் பெரு விடாயர் மடுவிலே வாய் மடுத்து
பருகுமா போலே பெரிய அபிநிவேசத்தொடே இன்று புசித்து கொண்டேன்-
(வெள்ள வாரியை குடிக்க வேண்டுமே -புசித்தல் என்றது -எல்லை -தெரியாது -த்ரவ்யமா கடின பொருளா தெரியாதே –
குணங்களை எப்படி என்று அறியேன் என்பதற்கு த்ருஷ்டாந்தம் இந்த சொல் -பெற்ற பாக்யம் ஒன்றே அறிவேன் என்றவாறு )
இன்னமும் நான் பெற்றவற்றை சொல்லில் அதுக்கொரு முடிவு இல்லை

காண்டலுமே -என்றது கண்ட அளவிலே என்றபடி
தொண்டு கொண்டேன் -என்று ஒரு முழுச் சொல்லு -அடிமையைக் கைக் கொண்டேன் என்னுதல்
விள்ளுதல்-நீங்குதல்
வாரி -சமுத்ரம்
உலப்பு -முடிவு–

நான்கு விஷயங்கள் -கண்டு -தொண்டு பட்டு -வினைகள் கழிந்து -கல்யாண குணங்கள் பருகி –
நான்கு படிகள் -அறம் பொருள் இன்பம் வீடு இல்லை -இந்த நான்கும் -குண அனுபவமே புருஷார்த்தம் –
சேஷவா –விஷ்வக் சேனரோ —
வெள்ள வாரி -பாலே போல் சீர் –கூடிய சமுத்திரம் -அர்ச்சை – அருளி செயல்- சமைத்த மடு-
அதிலே தேங்கின மடு போல அர்ச்சா அவதாரம்–அருளி செயல் – சாய் கரம்-கொட்டிண்டே இருக்கும்–

கண்டு கொண்டேன் –
காஷாய ஸோபி கமநீய சிகா நிவேசம் தண்டத்ரய யோஜ்வலகரம் விமலோபவீதம் -உத்யத்தி நேச நிப முல்லச
தூர்த்த்வ புண்டரம் ரூபம் தவாஸ்து யதிராஜ திரிசோர் மம அக்ரே –
பத்மம் என திகழும்– தமிழ் பாசுரம் போலே -என்று
பிரார்த்தித்து பெற வேண்டிய வடிவு அழகை ஆகஸ்மிகமாக கண்ணாரக் கண்டு கொண்டேன் –-
கண்டோம் கண்டோம்-கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் –
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் -இத்யாதிப் படியே-
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ததீயரைக் கண்டால் போலே சாஷாத் கரித்தது என்றபடி-

நீர் தாம் கண்ட பிரகாரம் எது என்னில் –
என் இராமானுசன் தன்னை –
கலவ் ராமானுஜஸ் ச்ம்ர்த -என்றும்
சேஷோவா சைன்ய நாதோவா ஸ்ரீ பதிர் வேதி சாத்விகை விதர்க்காய மகா ப்ராஜ்ஜை எதிராஜாயா -என்று சொல்லுகையாலே
இவர் நம்முடைய கோடியிலே ஒருவர் அல்லர் –என்னை சம்சாரத்தில் நின்றும் உத்தரிக்கைக்காக பரம பதத்தில் நின்றும் –
நான் இருந்த இடம் தேடி -வந்தவர் என்று அத்யவசித்துக் கொண்டு –
அஸ்மத் ஸ்வாமியான ஸ்ரீ எம்பெருமானாரை உள்ளபடி கண்டேன் என்றபடி —

கண்டு கொண்டேன் எம்மிராமானுசன் தன்னை–
இவர் நம்மைப் போன்ற சாதாரண மனிதர் அல்லர் -நம்மை உய்விப்பதற்காக விண்ணின் தலை ஸ்ரீ பரம பதத்தில் -நின்றும்
மண்ணின் தலத்து உதித்தவர் என்று உள்ளபடி கண்டு கொண்டேன் -என்றபடி .

காண்டலுமே தொண்டு கொண்டேன் அவர் தொண்டர் பொற்றாளில் –
இப்படி தர்சித்த அளவிலே -அந்த ப்ரீதியானது மேன்மேலும் பெருகி வந்து தம்மளவில் சுவறிப் போகாதே –
அவருக்கு அனந்யார்ஹரான ததீயரைத் தொடர்ந்து –
அவர்களுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளில் எல்லா அடிமைகளும் செய்வதாக அடிமைப் பட்டேன் –
காண்டலுமே -என்றது -கண்ட அளவிலே -என்றபடி –
தொண்டு கொண்டேன் -என்றது –தொண்டு பட்டேன் என்று ஒரு முழுச் சொல்லு -அடிமையை கொண்டேன் என்னுதல் –
த்வத் தாஸ தாஸ கண நா சரமாவதவ் யஸ் த்வத் தாசதைகர சதா விரதாமமச்து -என்று ஸ்ரீ ஜீயரும் அபேஷித்து அருளினார் இறே –

காண்டலுமே –தொண்டர் பொற்றாளில்-
கண்ட மாத்திரத்திலே -அவர் அளவோடு நில்லாது அவர்க்கு ஆட்பட்டாருடைய
அழகிய திருவடிகளில் அடிமைப் பட்டு விட்டேன் -என்கிறார் .

என் தொல்லை வெந்நோய் விண்டு கொண்டேன் –
இப்படி தாச்யத்திலே அந்வயிக்கவே
அநாதி கால ஆர்ஜிதங்களாய்-ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய– ஷிபாமி -ந ஷமாமி -க்கு உடலாய் அதி க்ரூரங்களான
கர்மங்களினுடைய பலமான என்னுடைய ஆத்யாத்மிகாதி துக்கங்களை எல்லாம் கட்டடங்க விடுவித்துக் கொண்டேன்
விள்ளுதல் -நீங்குதல் –

என் தொல்லை விண்டு கொண்டேன் –
எனது அநாதியான கொடிய பாபங்கள் நீங்கப் பெற்றேன் .
நோய் -நோய்க்கு காரணமாக கர்மத்தைக் கூறுகிறது உபசார வழக்கு .
விள்ளுதல்-நீங்குதல்
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே யொழிந்த வினையாயின எல்லாம் – ஸ்ரீதிருவாய் மொழி -10 4-9 – – என்று
ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு பிரதம பர்வத்தில் ஏற்பட்ட அனுபவம் இங்கு நினைவிற்கு வருகிறது .

அவன் சீர் வெள்ள வாரியை –
அந்த ஸ்ரீ எம்பெருமானாருடைய கல்யாண குணங்கள் ஆகிற மகா சமுத்ரத்தை
பிரவஹியா நிற்கிற சமுத்ரத்தை -என்றபடி –
அவருடைய கல்யாண குணங்கள் அசங்க்யேயங்கள் ஆகையாலே அவற்றுக்கு நிஸ் சலமாய் கொண்டு பரித்ர்சயமானமான
சமுத்ரத்தை போலியாக சொல்ல ஒண்ணாது என்று கரை புரண்டு பிரவஹியா நிற்கிற சமுத்ரத்தை போலியாக சொல்கிறார் –
(அபூத உவமை அக்காரக்கனி போலே -சக்கரை விதையாக வைத்து வளர்ந்த மரத்தில் கனி போலே )-
விஷயம் அனுபூதமாய் இருக்கிறாப் போலே இதுவும் அனுபூதமாய் காணும் இருப்பது –

அன்றிக்கே –
அவருடைய கல்யாண குண பூரமாகிற சமுத்ரத்தை-என்னுதல் –
வாரி -சமுத்ரம் –

வாய் மடுத்து இன்று உண்டு கொண்டேன் –
ஆதித்ய கிரணங்களாலே தப்தனாய் –
த்ர்ஷார்த்தனானவன் மடுவிலே புக்கு வாய் மடுத்து அந் நீரை பருகுமா போலே
ஸ்ரீ அமுதனாரும் இவருடைய விஷயீ காரத்தை பெரும் அளவும் சம்சாரிக்க துக்க தாபதப்தர் ஆகையால் அந்த விடாய் எல்லாம் தீரும்படி
இவருடைய விஷயீ காரத்தை பெற்று –
இவர் தம் அருகே சென்று அந்த கல்யாண குணாம்ர்த்தத்தை பெரிய அபிநிவேசத்தொடே வாய் மடுத்து அனுபவித்து களித்தேன் என்கிறார் –
ஷீராதி ரஸ்ய பதார்த்தங்கள் நமக்கு ரசித்து இருக்கிறாப் போலே காணும் –
பாலேய் போல் சீர்- என்னும்படியான அவருடைய கல்யாண குணங்கள் இவருக்கு ரசிக்கிறபடி –

வாய் மடுத்து உண்கையாவது –
வாயைத் திறந்து அவற்றுக்கு வாசகமான சப்த ராசியை இட்டு அவை தன்னையே ஸ்துதிக்கை-
(இதுதானே இந்த ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி பிரபந்தம் )

அவன் சீர் —உண்டு கொண்டேன்
சீர் -குணம் அது வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து கடலாய் தோற்றுகிறது –
விடாய் தீர அக்குணக் கடலையே வாய் மடுத்து உண்டு கொண்டேன் என்கிறார் –
சீர்க் கடலை உட் பொதிந்த சிந்தனையேன் -என்று ஸ்ரீ நம் ஆழ்வார் திரு மால் குணக் கடலை- உண்டதாகக் கூறினார் ..

வாய் மடுத்து உண்டு கொண்டேன்
அடியேன் வாய் மடுத்து பருகிக் களித்தேனே -ஸ்ரீ திருவாய் மொழி -2 -3 -9 -என்று ஸ்ரீ நம் ஆழ்வாரும் –
உடலுருகி வாய் திறந்து மடுத்துன்னை நிறைத்துக் கொண்டேன் -ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -5 -4 -4 -என்று
அருளிச் செய்து இருப்பது இங்கு நினைவு கூரத் தக்கது .

இன்னம் உற்றன –
இவ்வளவும் சொல்லிப் போந்த இவை அன்றிக்கே இன்னமும் அவர் தம்மாலே நான் பெற்ற பேற்றை –

ஓதில் –
சொல்லப் புக்கால் –

உலப்பு இல்லை –
முடிவு இல்லை –
நான் பெற்றவற்றுக்கு ஒரு தொகை இல்லாமையாலே கணக்கிட்டு சொல்ல மாட்டிற்று இலேன் என்கிறார் –
உலப்பு -முடிவு –

இன்னம் -உலப்பு இல்லையே
இனி மேலும் நான் பெற்றவைகளை சொல்லிக் கொண்டே போனால் ஒரு முடிவே இல்லை -என்கிறார் –

உலப்பிலானை எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி உலப்பு-எல்லை-

——————–

ஸ்ரீ அருளிச் செயல்களில் –கண்டு கொண்டேன் -போன்ற -பாசுரங்கள்

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –ஸ்ரீ பெரிய திருமொழி–1-1-1-

தூவிசேர் அன்னம் துணையொடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்—-1-1-2–

காமனார் தாதை நம்முடை அடிகள் தம்மடைந்தார் மனத்து இருப்பார்
நாமம் நான் உய்யக் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —1-1-3–

பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —1-1–4–

செம்புலாஞ் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —1-1-6–

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —1-1-9-

கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்
காத்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே—2-5-4-

அப்பொய்யறை வாய்ப்புகப் பெய்த மல்லர் மங்கக்
காய்ந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே—2-5-5-

இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-6-

உள்ளுவார் உள்ளத்தே யுறைகின்றானை
காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே-2-5-7-

இலங்கொளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானை கண்ணாரக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-8-

ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கமாறும்
கண்டானை தொண்டனேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லத்தை தல சயனத்தே-2-5-9-

திட மொழி மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-3-

திசை முகனனை யோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
உயர் மணி மகுடம் சூடி நின்றானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே—4-3-4-

தேமலர்ப் பொழில் சூழ் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே
காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே —4-3-5–

செல்வ நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
அல்லி மா மலராள் தன்னோடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-6–

செஞ்சொல் நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-7–

செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சனக் குன்றன் தன்னை அடியேன் கண்டு கொண்டேனே –7-6-5-

அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடி பணியும்
கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே –7-6-6-

அருவாய் நின்றவனைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே -7–6-7-

அலையாரும் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கலையார் சொற்பொருளைக் கண்டு கொண்டு களித்தேனே —7-6-8-

ஆராவின்னமுதைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9-

கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-9-

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை–7-10-10-

கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —8-8-1-

விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை
கலங்கல் முந்நீர்க் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே–8-8-2-

கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3-

பிளந்து வளைந்த வுகிரானைப் பெரும் தண் செந்நெல் குலை தடிந்து
களம் செய் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-4-

உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு பால் முல்லை முகையோடும்
கழு நீர் மலரும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-5-

குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-6-

செய்த வெம்போர் நம்பரனைச் செழும் தண் கானல் மண நாறும்
கைதை வேலிக் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-7-

செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்ப
கற்ற மறையோர் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-8-

விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ —8-9-9-

மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே–திருக் குறும் தாண்டகம் –1-

கண்டு கொண்ட –
நான் கண்டு கொண்டேன் -என்று திரு அரசடியிலே காட்டிக் கொடுத்த காட்சி
ஏது செய்தால் மறக்கேன் -என்று மறந்து விட ஒண்ணாதபடி இறே மனசிலே புகுந்து காட்டிக் கொடுத்தது –
கண்டு கொண்ட –
கேட்டது கண்டால் போலே இருக்கிறது காணும்
ஸ்வரூப ஞானம் பிறந்தவர் ஆகையாலே -பண்டே வுண்டாய் – இழந்தது கண்டால் போலே இருக்கிறது –

தலைப் பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப் பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம் அகலக்
கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு
நிலைப் பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடு உயிரே–3-2-10-

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-

என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!
உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?–7-6-5-

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே–8-7-1-

இருந்தான் கண்டு கொண்டே என தேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே—8-7-2-

உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–9-4-8-

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி—இரண்டாம் திருவந்தாதி67-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –83-சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் – இத்யாதி —

May 28, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

பொருவற்ற கேள்வியனாக்கி -நின்றேன் -என்ன-
உம்முடைய ஸ்ருதத்துக்கு வ்யாவ்ருத்தி எது -எல்லார்க்கும் ஒவ்வாதோ சரணாகதி -என்ன –
நான் பிரபத்தி பண்ணி ஸ்ரீ பரமபதம் பெறுவார் கோடியில் அன்று –
தேவரீர் திருவடிகள் ஆகிற மோஷத்தை -தேவரீர் ஔதார்யத்தாலே பெருமவன் – என்கிறார் —

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டில் இவர் தம்முடைய ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக –பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் – என்று சொன்னவாறே –
அத்தைக் கேட்டருளி –உபமான ரஹீதமான ஸ்ருதத்தை உடையனாம்படி பண்ணி யருளினார் என்று நீர் நம்மை ச்லாகித்தீர் –
உம்மை ஒருவரையோ நாம் அப்படி பண்ணினது –ஒரு நாடாக அப்படி பண்ணி பரம பத்தில் கொண்டு போகைக்கு
பக்த கங்கணராய் அன்றோ நாம் அவதரித்தது –
(இன்றும் கங்கணம் திருக்கையிலே சேவிக்கிறோம் -முக்தியே சிலரது சொத்து என இருக்கையில் -அனைவருக்கும் அருளி –
தரணி தவம் பெற்றதே உம்மால் -)-ஆகையாலே உமக்கும் உம்மை ஒழிந்தாருக்கும் தன்னிலே வ்யாவ்ருத்தி ஏது என்று –
ஸ்ரீ எம்பெருமானாருக்கு திரு உள்ளமாக –இவர் அவர் திரு முக மண்டலத்தைப்-பார்த்து
நான் என்னை ஒழிந்தார் எல்லாரையும் போலே ஸ்ரீ பகவத் சரணாகதியைப் பண்ணி ஸ்ரீ பரம பதத்தை பிராப்பிப்போம்
என்று இருந்தேன் அல்லேன் காணும் –
தேவரீர் திருவடிகளாகிற மோஷத்தை தேவரீர் ஔதார்யத்தாலே கிருபை-பண்ணப் பெறக் கடவேன் -என்று நேரே விண்ணப்பம் செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

பொருவற்ற கேள்வி -என்று உமது கேள்வி அறிவை சிறப்பிப்பான் என் –ஏனையோரும் கேள்வி அறிவு பெற்றிலரோ என்ன –
ஏனையோர் கேள்வி அறிவு பிரதம பர்வத்தை பற்றியதாதலின் -ஸ்ரீ பகவானிடம் பிரபத்தி பண்ணி
ஸ்ரீ பரம பதத்தை அடைவராய்-நின்றனர் அவர் –
நானோ சரம பர்வத்தின் எல்லை நிலையான ஆசார்யராகிய தேவரீரைப் பற்றிய கேள்வி அறிவு உடையவனாக ஆக்கப்பட்டமையின் –
அவர் கூட்டத்தில் சேராது –
தேவரீர் திருவடிகளையே பரம பதமாய் கொண்டு –அதனை தேவரீர் வள்ளன்மையால் பெறுமவனாய் உள்ளேன் –
இது என் கேள்வி யறிவினுடைய பொருவற்றமை -என்கிறார்

சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் என்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன் உன் பத யுகமாம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமானுச ! இது கண்டு கொள்ளே – – 83- –

பத உரை –
இராமானுசா -ஸ்ரீ எம்பெருமானாரே –
சீர் கொண்டு -சமம் தமம் முதலிய நன்மைகள் உடையவர்களாய் கொண்டு
பேர் அறம் -பெரிய தர்மமாகிற ப்ரபத்தியை
செய்து -பண்ணிக் கொண்டு
நல் வீடு -நல்ல மோஷத்தை
செறிது என்னும் -சேருவோம் என்னும்
பார் கொண்ட -பூமியை தனக்குள் கொண்ட
மேன்மையர் -பிரபாவம் வாய்ந்த பகவத் பிரபன்னர்களுடைய
கூட்டன் அல்லேன் -கூட்டத்தில் சேர்ந்தவன் அல்லேன்
உன் பத யுகமாம் -தேவரீருடைய திருவடி இணையாகிற
ஏர் கொண்ட -அழகு – வீறுடைமை-வாய்ந்த
வீட்டை -மோஷத்தை
எளிதினில் -சுலபமாக
எய்துவன் -அடைவேன்
அதுக்கு ஹேது
உன்னுடைய -தேவரீருடைய
கார் கொண்ட -மேகத்தை வென்ற
வண்மை -வள்ளல் தன்மையாம்
இது -இவ் விஷயத்தை
கண்டு கொள் -தேவரீர் கண்டு கொள்ள வேணும் –
நான் சொல்ல வேணுமோ -என்று கருத்து .

வியாக்யானம் –
சமதமதாதிகள் -ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்கள் ருசி விச்வாசங்கள் -ஆகிய ஸ்வபாவ விசேஷங்களை வுடையராய் –
பரம தர்மம் ஆகிற ப்ரபத்தியை பண்ணி –ஆத்மா அனுபவம் மாத்ரமான கைவல்யம் போல் அன்றிக்கே –
பரம புருஷார்த்த லஷண மோஷத்தை ப்ராப்பிப்போம் என்னும் பூமி எங்கும் வ்யாப்தமான பிரபாவத்தை உடைய
ஸ்ரீ பகவத் பிரபன்னருடைய திரளுக்கு உட்பட்டவன் அல்லேன் –
தேவரீருடைய திருவடிகள் இரண்டும் ஆகிற சர்வ விலஷணமான மோஷத்தை – அநாயாசேன ப்ராபிப்பேன் -அதுக்கு ஹேது –
சர்வ விஷயமாக சர்வ காலத்திலும் உபகரிக்கையாலே – மேகத்தை ஜெயித்து இருக்கும் தேவரீருடைய ஔ தார்யம் .
இது நான் சொல்ல வேணுமோ ?
அனுஷ்டனத்தால் கண்டு கொள்ள மாட்டீரோ ?

நல் வீடு பெறுதும்-என்றும் பாடம் சொல்லுவார்கள் –
பார் கொண்ட மேன்மை -விசேஷஜ்ஞ்ஞாரோடு அவிசேஷஜ்ஞ்ஞாரோடு வாசி யற பூமியில்-உள்ளார் எல்லாராலும்
கைக் கொள்ளப் பட்ட உத்கர்ஷம் என்னவுமாம் .

ஏர் கொண்ட வீட்டில் -என்ற பாடமான போது –
தேவரீர் திருவடிகள் இரண்டுமாகிற விலஷண மோஷத்திலே-அநாயாசேன சேர்வன் -என்றபடி –
ஏர் -அழகு
கொள்கை -உடைத்தாகை
திருவடிகளை மோஷமாக சொல்லிகிறது -ஆனந்தாவஹத்வத்தாலே –
முக்திர் மோஷோ மகா நந்த -என்னக் கடவது இறே –

ஸ்ரீ பெருமாளை பற்றி -பிரயோஜனாந்தரங்கள் – கைவல்யம்- இல்லாமல் அவனையே பற்றுவது பிரதம பர்வ நிஷ்டை
ஸ்ரீ ஆச்சார்யன் பற்றி அவனை அடையாமல் ஸ்ரீ ஆச்சார்யர் திருவடிகளில் -சரம பர்வ நிலை
நல் வீடு –பிரதம பர்வம் —சீர் கொண்ட பேர் அறம் செய்ய வேண்டும் -ஆனால் இங்கே
ஏரார் இடை -ஏர் கொண்ட வீடு -சரம பர்வ -எளிதினில் எய்துவேன் -உம் வண்மை பிரத்யக்ஷம் -கண்ணாடியில் கண்டு கொள்ளும்
இருப்பிடம் –வைகுந்தம் -அனைவரும் உம் திரு உள்ளம் -உம்மை உம்மால் பெற்றால் -வேறே என்ன-வேண்டும் –
நிர்ப்பயம் நிர்ப்பரம்–இங்கே தானே –
சபரி பாத மூலம் -அடைவேன் -உன் பாதம் பெற்று கொடுத்த என் ஸ்ரீ ஆச்சார்யர் திருவடிகள் -மதங்கரை அடைந்தாள்
இவரே இங்கேயே எளிதில் கொடுக்க -வேறே வேண்டுமோ-
மேன்மையர் கூட்டனல்லேன்-ஸ்ரீ வடுக நம்பி -ஒப்பாக்கலாமோ என்னில் நல்லவர் -நானோ நீசன் -நிறை ஒன்றும் இலேன் –
பெறக் கடவன் -பெற்றேன் என்று சொல்ல வில்லை –

சீர் கொண்டு –
சாந்தோதாந்த -இத்யாதிகள் சொல்லப்படுகிற சம தம தாதிகள் என்றும் –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -என்றும் –
என் நான் செய்கேன் யாரே களை கண்-என்னை என் செய்கின்றாய் -என்றும் சொல்லப்படுகிற
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்கள் என்ன –
பிரியோஹி ஜ்ஞானி நோத்யர்த்தமஹம் -என்றும்
ரஷிஷ்ய தீதி விஸ்வாச -என்றும் சொல்லப்படுகிற ருசி விச்வாசங்கள் என்ன –
இது தொடக்கமான அதிகாரி விசேஷ ஸ்வ பாவங்களை உடையவராய் –

கொள்கை -உடைத்தாகை –
பேர் அறம் செய்து -நியாச மேஷாம் தபஸா மதி ரிக்த மாஹூ -என்றும் –
சர்வ குஹ்ய தமம் பூத -என்றும் சொல்லுகிறபடியே
பரம குஹ்ய தமமாய் -பரம தர்மமாய் -ஸ்வ ரூப-அனுரூபமான ப்ரபத்தியை பண்ணி -அதாகிறது –
ந்யச்யத்வத் பாத பத்மேவாத நிஜ பரம் நிர்ப்பரோ நிரபயோச்மி-என்கிறபடியே
ஆத்மா ஆத்மீயங்கள் உடைய ரஷண பரத்தை-அவன் பக்கலிலே பொகட்டு-ஸ்த நந்த பிரஜையோபாதி நிர்ப்பரராய் இருக்கை –

(பரந்யாசம் -சொல்ல வில்லை -அதற்காக த்ருஷ்டாந்தம் -பால் குடிக்கும் குழந்தை -சொல்லிவிட்டு பேசாமல் கிடக்குமா –
பேசாமல் கிடக்குமா -அதே போலே நாமும் -)-
பலத்துக்கு-ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமும் வேண்டுவது -என்று பிள்ளையும் (பிள்ளை லோகாச்சார்யார் )-
(விலக்காமை -சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்கு )அருளிச் செய்தார் இறே-பேர் –

பெருமை
அறம் -தர்மம் –

நல் வீடு செறிதும் என்னும் –
வீடு -மோஷம் -ப்ராப்ய ஸ்தானம் -அதாவது -ஸ்வாத் மா நு பூதிரிதி யாகில
முக்திருக்தா -என்கிறபடியே கைவல்யமும் மோஷம் யாகையாலே -தத் வ்யாவ்ர்த்யர்த்தமாக –நல்வீடு -என்று அத்தை விசேஷிக்கிறார் –
வீட்டுக்கு நன்மையாவது –
ஸ்வ ஆத்ம மாத்திர அனுபவமான கைவல்யம்போலே அல்பமாயும் ஸ்வார்த்தமாயும் இருக்கை யன்றிக்கே –
நலம் அந்தமில்லதோர் நாடு – என்கிறபடியே அபரிமித ஆனந்த ரூபமாய் –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்கிறபடியே பகவத் ஏக போகமாய் இருக்கை –

செறிதும் என்னும் –
இப்படிப் பட்ட பரம புருஷார்த்த லஷணமான மோஷத்தை ப்ராபிப்போம் என்னும் —

நல் வீடு பெறுதும் -என்றும் பாடம் சொல்வார்கள் – –
ஆகிலும் அர்த்த பேதம் இல்லை –
யோகிநாம் மிர்தம் ஸ்தானம் -என்றும்
யத்வை பஸ்யந்தி சூரய -என்று ஸ்வ ஆத்ம அனுபவரூப கைவல்ய மோஷத்தையும் –
ஸ்ரீ பகவத் ப்ராப்தி ரூபா பரம புருஷார்த்த லஷண மோஷத்தையும் –
ஸ்தான-பரம -சப்தங்களாலே பசித்து ஸ்ரீ கீதாசார்யனும் அருளிச் செய்தான் இறே –

சீர்கொண்டு –கூட்டன் அல்லேன்
நல் வீடு செறிதலுக்காக செய்யும் பேரறம் என்பது இங்கு பிரபத்தியை -என்று உணர்க .
பக்தி யோகமும் நல் வீடு செறிதலுக்கு கைக் கொள்ளப் படுவதாயினும் -அதனை பேரறம் ஆகாது என்று விலக்குக–
ந்யாசம்-எனப்படும் பிரபத்தியே -தனக்கு மேல் இல்லாத அதிரிக்தமான தபசாக ஓதப்படுதலின் பிரபத்யே பேரறம் ஆகும் -என்க –

மேலும் ஸ்ரீ எம்பெருமானார் கோஷ்டியில் பக்தி மார்க்கத்தைக் கைக் கொண்டு
நல் வீடு செறிதும் என்று இருப்பார் எவருமே இலர் ஆதலின் – அவர்கள் கூட்டத்தில் சேர்ந்தவன் அல்லேன் -என்று
தம்மை ஸ்ரீ அமுதனார் சொல்லிக் கொள்வது பொருந்தாது .
ஸ்ரீ எம்பெருமானார் தாமும் பிரபத்தி செய்து -மற்றவர்களையும் அதனை கைக் கொள்ளுமாறு செய்தலின் அந்த பிரபத்தியினாலே
நல் வீடு செறிதும் என்று இருப்பார் பலர் உண்டு .
அந்தக் கோஷ்டியில் தான் சேர்ந்தவன் அல்லேன் என்பது நன்கு பொருந்துகிறது –

பேரறமாகிய பிரபத்தி -மாமேகம் சரணம் வ்ரஜ –என் ஒருவனையே உபாயமாகப் பற்று -என்றபடி –
ஸ்ரீ கண்ணனையே உபாயமாய் வரிப்பதாக அமைந்து இருத்தலின் -தான் உபாயமாக மாட்டாது –
ஆதலின் அதனைச் செய்வதற்கு வேறு எதனையும் அங்கமாகக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை .
ஆயின் சீர் கொண்டு பேரறம் செய்து -என்று
ஸ்ரீ அமுதனார் கூறுவதன் கருத்து யாதோ -எனின் –
பிரபத்தி செய்வோருக்கு சில நல்லியல்புகள் தாமே அமைந்து இருக்கும் –
அச் சீரிய இயல்புகளை உடையவர்களாய்-பேரறம் செய்கிறார்கள் -என்கிறார் ஸ்ரீ அமுதனார் என்று கொள்க .

அவ்வியல்புகளாவன-
சமம் தமம் முதலியனவும் –
அகிஞ்சந்ய -வேறு வழி இல்லாமை -அநந்ய கதித்வம் -வேறு புகல் இல்லாமைகளும் –
ருசி-பேற்றினில் வேட்கை -விஸ்வாசம் -பேறு தப்பாது -என்ற துணிபு போன்றவைகளும் –
சமம்-மனத்தை அடக்குதல் தமம் -வெளி இந்திரியங்களை அடக்குதல் –மாறிக் கொள்வதும் உண்டு .
இவ் இயல்புகள் பிரபத்தி செய்வதற்கு உறுப்பாக வந்தவைகள் அல்ல –
பிரபத்தி செய்வோரிடம் நேரிடும் இயல்புகள் என்றுணர்க –

இனி –சீர் கொண்டு -என்பதற்கு
மற்ற உபாயங்களை கை கொண்டோரினும் சீர்மை உடையவராய் கொண்டு -என்று பொருள் உரைத்தலுமாம் .
நார்ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடி தமீமபி -பிரபத்தி செய்தவனுடைய சீர்மையில்
கோடியில் ஒரு பங்கு கூடப் பெற மற்ற உபாயங்களை கைக் கொண்டவர்கள் தகுதி அற்றவர்கள் –என்பது காண்க –-

பார் கொண்ட மேன்மையர் –என்னும் இடத்தில் –
உலகு எங்கும் பரவின பிரபாவம் பேசப்படுகிறது -இங்கே உபாயாந்தரங்களை கைக் கொண்டவர்களினும் பிரபத்தி செய்வோருடைய
சீர்மை செப்பப் படுகிறது .
பிரபத்தி செய்த பிறகு -பேற்றுக்கு செய்ய வேண்டியது யாதொன்றும் இல்லாமையினால்
நல் வீடு பெறப் போகின்றோம் என்று -அதனை எதிர் நோக்கி நிற்கின்றனர் –பேரறம் செய்தோர் –
அவர்கள் எதிர்பார்ப்பது -நல்ல வீட்டை –
புல்லிய வீட்டை அன்று .
புல்லிய வீடு-கைவல்யம் எனப்படும் மோஷம் ஆகும் .
சிறிய மின்மினி பூச்சி போலே மிளிரும் அணுவான தன் ஆத்மா ஸ்வரூபத்தை தேக சம்பந்தம் அறவே நீங்கின ஜீவாத்மா
தானே அனுபவித்து -அவ்வளவோடு ப்ரஹ்ம அனுபவத்தை இழந்து நிற்றல் கைவல்யம் எனப்படும் .
ப்ரஹ்ம அனுபவத்தையும் அதன் விளைவான கைங்கர்யத்தையும் கோரி பிரபத்தி செய்பவர்கள் ஆதலின் –
நல் வீடு செறிதும் -என்று இருக்கிறார்கள் –
நல் வீடு -என்று கைவல்யத்தை விலக்குவதனால் கைவல்யத்துக்கும் மோஷம் வீடு -என்னும் வழக்கு உண்டு என்று தெரிகிறது –
ஸ்வ ஆத்மா அநுபூதி ரீதி யாகில முக்தி ருக்தா -தன் ஆத்மாவைத் தானே அனுபவித்தல் என்னும் யாதொரு முக்தி கூறப் பட்டதோ –
என்று ஆழ்வான் கைவல்யத்தை முதி என்னும் சொல்லால் வழங்குதல் காண்க
நல் வீடு பெறுதும் -என்றும் பாடம் உண்டு

பார் கொண்ட மேன்மையர் –
பூமி எங்கும் ஒக்க-வ்யாப்தமான பிரபாவத்தை உடையவர் -என்னுதல் –
விசேஷஞ்ஞாரோடு அவிசேஷஞ்ஞாரோடு வாசி அற பூமியில் உள்ள எல்லாராலும் கைக் கொள்ளப்பட்ட
உத்கர்ஷத்தை உடையவர் என்னுதல் –

கொள்கை –
வ்யாபிக்கையும் ஸ்வீகரிக்கையும் –

கூட்டன் அல்லேன் –
இப்படி பட்ட ஸ்ரீ பகவத் பிரபன்னருடைய கோஷ்டியிலே உள்பட்டவரில் ஒருவனாய்-இருக்கிறவன் அல்லேன் –
ஆகில் உம்முடைய படி எங்கனே என்ன சொல்லுகிறார் –

பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லன் –
பாரினை யடங்கக் கொண்ட மேன்மை-பூமி எங்கும் பரவின மேன்மை -என்றபடி –
இனி பாரில் உள்ள மேலோர் கீழோர் அனைவரும் கைக் கொண்ட மேன்மை என்னலுமாம் –
இத்தகைய பேரறம் செய்வோர் மேன்மை பாரடங்க பரவி இருப்பினும் அன்றி –
பாரில் உள்ளோர் அனைவரும் கைக் கொண்டு இருப்பினும் –
அம் மேன்மையில் மயங்கி -நான் அவர்கள் கூடத்தில் சேர்ந்து விட வில்லை -என்று தமது உறுதிப்பாட்டினை காண்பிக்கிறார் –
பேரறம் செய்து நல் வீட்டினை எதிர் பார்க்கின்றனர் அவர்கள் .
நானோ யாதொன்றும் செய்யாது -அந் நல் வீட்டினும் வீறுடைய பரம விலஷணமான வீட்டினை எளிதில் அடைபவனாய் உள்ளேன் –
நான் அவர்கள் கூட்டத்தில் எங்கனம் சேருவேன் ?-என்கிறார் மேல் .

உன் பத யுமாம் ஏர் கொண்ட வீட்டை-
தேவரீர் திருவடிகள் இரண்டும் ஆகிற விலஷண மோஷத்தை –
குருரேவ பராயணம் -குருரேவ பராகதி –பாத மூலம் கமிஷ்யாமி யாநகம் பர்யசாரிஷம் –
நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம் -என்றும்-சொல்லுகிறபடியே –
சர்வ பிரகார லஷணமான மோஷத்தை –
ஏர் -அழகு -எளிதினில் எய்துவன் -வருத்தம் அற ப்ராபிப்பேன் –

உன்பத யுகமாம் ஏர் கொண்ட வீட்டில் -என்ற பாடமானபோது-
தேவரீர் திருவடிகள் இரண்டும் ஆகிற விலஷண மோஷத்தில் என்றபடி –
இவர் இப் பெறாப்பேறு பெற்ற-பின்பு -ஸ்ரீ பகவல் லாபத்தையும் ஒரு பொருளாக நினைக்க மாட்டார் காணும் –
திருவடிகளை-மோஷமாக சொன்னது ஆனந்த அவஹத்வத்தாலே –
இப்படி சொன்னால் உமக்கு இந்த ப்ராப்யம் எத்தாலே-அத்தை சொல்லி காணீர் என்ன –

உன் பத யுகமாம் ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் –
தேவரீருடைய திருவடிகள் இரண்டுமே கீழ்ச் சொன்ன நல் வீட்டிலும் விலஷணமான மோஷமாக அடியேனுக்கு அமைந்து உள்ளன –
முக்திர் மோஷோ மகா நந்த -என்னும் நிகண்டுவின் படி பேரின்பமே மோஷம் ஆதலால் தாஸ்ய மகா ரசத்தை தருதல் பற்றி –
பேரின்பம் தரும் வைகுண்டத்தை மோஷம் என்பது போலே தமக்கு பேரின்பம் விளைவிக்கும் திருவடிகளை மோஷமாகவே கூறினார் .
ஏர் –அழகு -இங்கே வீறுடைமை-

ஏர் கொண்ட வீட்டில் என்பதும் ஓர் பாடம் –
அப்பொழுது தேவரீர் திருவடிகள் இரண்டுமாகிற வீறுடைய வீட்டில் எளிதில் சேர்வேன் -என்று பொருள் ஆகிறது .
ஸ்ரீ ஆச்சார்ய அபிமானத்தில் ஒதுங்கினவர்-பகவான் இடம் பிரபத்தி பண்ணினவர்கள் போலே
ஸ்ரீ பகவானது தாளிணைக் கீழே வாழ்ச்சியை ஒரு பேறாக மதிக்காது -ஸ்ரீ ஆசார்யர் பொன்னடியை மேவி நிற்பதையே தாம்
பெரும் பேறாக மதிப்பவர் ஆதலின் ஸ்ரீ எம்பெருமானார் பத யுகத்தை
ஏர் கொண்ட வீடு -என்கிறார் .
ஸ்ரீ சபரி எந்த ஸ்ரீ ஆசார்யருக்கு நான் பணிவிடை புரிந்தேனோ அவன் திருவடி வாரத்துக்கு தான் போவதாக மோஷம் அடையும் போது
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனை நோக்கிக் கூறியதை இங்கு நினைவு கூர்க-
இம்மையிலும் மறுமையிலும் ஸ்ரீ ஆசார்யன் திருவடிகளே சரணம் –உபாயமும் உபயமும் –என்றார் ஸ்ரீ ஆள வந்தாரும் –

ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -பகவானை ஏத்துமவர்களை விட ஸ்ரீ ஆச்சார்ய அபிமான நிஷ்ட்டர் சீரியர் என்பதனை –
மாறாய தானவனை -என்னும் பாசுரத்தில் -ஸ்ரீ நான் முகன் திருவந்தாதி -18 – அருளிச் செய்தார் .
வேறாக ஏத்தி இருப்பார் ஸ்ரீ பெரியாழ்வார் போல்வார் –
சாத்தி இருப்பார் ஸ்ரீ ஆண்டாள் போல்வார் -என்பது அவ்விடத்தில் வியாக்யானம் .

பழுதாக ஓன்று அறிந்தேன் -ஸ்ரீ நான் முகன் திருவந்தாதி -89 – என்னும் பாசுரத்தில் ஸ்ரீ ஆசார்யனைப் பற்றினவன்
விண் திறந்து வீற்று இருப்பார் மிக்கு -90-என்று வீறு கொண்ட பேற்றினை பெறுதல் அந்த
ஸ்ரீ திரு மழிசைப் பிரானாலேயே அருளிச் செய்யப் பட்டு இருப்பதும் இங்கு அறியத் தக்கது .

ஸ்ரீ ஆசார்யனை தானே பற்றுகிறவனுக்கும்
ஸ்ரீ ஆசார்யனாலே நம்முடையவன் என்று அபிமானப் படுகிறவனுக்கும்
பேற்றிலே எத்தகைய வேறு பாடும் இல்லை என்று உணர்க .
யாதொரு முயற்சி இன்றி ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவதற்கு ஹேது என் -என்ன விடை இறுக்கிறார்

உன்னுடைய கார் கொண்ட வண்மை –
அதுவும் அவனது இன்னருளே -என்றபடி-தேவரீர் ஔதார்யமே அதுக்கு சாதனம் என்கிறார் –
கார் கொண்ட வண்மை – -நீரே உம்மை அருள வேணும் –
விசேஷணத்தாலே மேகத்தில் நின்றும்-கிருபைக்கு உண்டான வ்யாவ்ர்த்தியை சொல்லுகிறார் –
மேகமானது நாலு மாசம் வர்ஷிக்க கடவதாய் -அப்போதும் அபேஷித்த இடங்களில் வர்ஷியாதே –
சமுத்ரத்திலும் பர்வதத்திலும் அரண்ய பிரதேசத்திலும்-வர்ஷிக்கும் -இவருடைய ஒவ்தார்யம் அப்படி இன்றிக்கே —
கொள்ள குறைவற்று இலங்கி கொழுந்து-விட்டு ஓங்கி இருப்பதாகையாலே –
சர்வ காலத்திலும் -சர்வர்க்கும் -சர்வ பலங்களையும் -கொடுத்துக்-கொண்டு இருந்து –
மகா வ்ர்ஷம் போல் இருக்கிற மகா மேகத்தை பராஜிதமாக்கி -என்னை ஸ்வா தீனமாக-எழுதிக் கொண்டது -என்றபடி –
இப்படிப் பட்ட தேவரீர் உடைய பரம கிருபா பூர்வகமாக இந்த ஒவ்தார்யம்-ஒன்றுமே அந்த பலத்துக்கு பிராபகம் என்றபடி —

இராமானுச –
எம்பெருமானாரே –

இது கண்டு கொள்ளே –
இது-தான் சொல்ல வேணுமோ –
கை இலங்கு நெல்லிக் கனி போல் இருக்கிற இவ் அர்த்தத்தை தேவரீர் கண்டு கொள்ள-மாட்டீரோ –
அடியேன் சொல்ல கேட்டருள வேணும் என்னும் ஒரு நிர்பந்தம் உண்டோ –

ஸூலபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் உபாசதே பத்தம் த்யக்த்வா தனம் மூடோ குப்தமன்வேஷ தேஷி தவ்-என்னக் கடவது இறே –

உன்னுடைய கார் கொண்ட வண்மை
தேவரீர் வள்ளல் தனத்தினால் வழங்க -நான் அதனை அடைய எளிதாய் முடிந்தது என்கிறார் .
ஸ்ரீ எம்பெருமானாருடைய வண்மை கார் கொண்டது -அதாவது மேகத்தை வென்றது –
சிலருக்கு சில காலத்திலே மழை பொழிவது கார்
எல்லாருக்கும் எல்லா காலத்திலும் பயன் படுவது வண்மை-ஆதலின் காரை வென்றது வண்மை

இது கண்டு கொள்
தேவரீர் வழங்க நான் பெற்றமை -வழங்கின தேவரீருக்கு தெரியாதோ –
ஏற்றம் என் வாயாலே சொல்லிக் கேட்க வேணுமா என்கிறார் .
நான் கேள்வியினால் பிரபத்தி செய்து ஸ்ரீ பகவானை அடைவார்கள் கூட்டத்தில் சேர்ந்திலேன்-
பொருவற்ற கேள்வியினால் ஸ்ரீ ஆசார்யனுடைய அபிமானத்திற்கு பாத்ரமாகி ஸ்ரீ எம்பெருமானார்-திருவடிகளையே பெரும் பேறாக
பெறுமவன் ஆனேன் –என்பது கருத்து –

தேவரீர் ஒவ்தார்யத்தாலே பெருமவன் நான் என்கிறார் –
இவ் வார்த்தை கொண்டு—இரு கரையர் -என்று ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ ஆழ்வான் இருவரையும் பரிகசிப்பார் -ஸ்ரீ வடுக நம்பி-
நம்மை நம் பையல் என்று ஒதுங்குவது மூன்றாம் நிலை-ஸ்ரீ பெருமாளை பற்றும் பொழுது
பர கத ச்வீகாரம் ஏற்றம் ஸ்ரீ ஈஸ்வரன் திரு உள்ளத்தில் மகிழ்வானாம்-
உன் அபிமானத்தில் ஒதுங்கி உன் திருவடி அடைந்தேன் –என்கிறார்-உணர்வினில் நிறுத்தினேன் அதுவும் அவனின் இன் அருளே -போலே-

————–

நல் வீடு -ஏர் கொண்ட வீடு -மிக்க நல் வீடு அன்றோ –

உம்முயிர் வீடுடையான் இடம் வீடு செய்ம்மினே -1-2-1-
ஒளி வரும் முழு நலம் முதலில கேடில வீடாம் –1-3-2-
திண்ணன் வீடு முதல் முழுதுமாய் -2-2-1–
கனிவார் வீட்டு இன்பமே-2-3-5-
நல்லமுதம் பெறர்கு அறிய வீடுமாய்-2-5-9–
இணைவனாம் எப்பொருட்க்கும் வீடு முதலாம் -2-8-1–
துயரில்லா வீடு முதலாம் 2-8-2–
சேண் பாலா வீடோ -2-8-2-
சீர்மை கொள் வீடு சுவர்க்கம் 2-8-10-
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் 2-9-1–
சிறப்பில் வீடு சுவர்க்கம் -2-9-5-
இப்பத்தும் கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே -2-9-11–
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே -3-3-7-
நாடு நகரமும் நன்குடன் காண நலனிடை யூர்தி பண்ணி வீடும் பெறுத்தித் தன் மூ உலகுக்கும் தரும் ஒரு நாயகமே -3-10-11-
எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே -4-10-6-
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும் 5-6-10–
பொன் உலகு ஆளீரோ-6-8-1–
ஏற்ற யரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு -7-6-10-
பசை அற்றால் அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே 8-8-6-
அதுவே வீடு வீடு பேற்று இன்பம் தானும் அது தேறி –
எதுவே தானும் பற்றி இன்றி ஆதும் இலிகளா கிற்கில்
அதுவே வீடு வீடு பேற்று இன்பம் தானும் அது தேறாது
எதுவே வீடு ஏது இன்பம் என்று எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே-8-8-7–
நுகர்ச்சி யுறுமோ மூவுலகின் வீடு பேறு-8-10-6-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-