உடையவராக மலரடிக் காட்படுவோர்க் கரும் பொன்
உடையவராக ரந்தந்தளிப்பானுறும் வாதியர் வாழ்வு
உடையவராகந் துறந்து முக்கோல் கைக் கொண்டோங்கி நற்பேர்
உடையவராக விங்கெய்து எதிராசனை யுன்னு நெஞ்சே.
அம் பெருமானார் வயிற்றினாங் கருவி னாடாமல்
எம் பெரு மானார் இணை யடியை–நம்பாத்
துதித்திருப்பாய் நின்றன் றொழிலால் இடர்கள்
விதித்திருப்பாய் நின்ற நெஞ்சமே.
யதிக் கோன் கருணைக் கிலக்காகி முத்தி
பதிக் கோவலனடியைப் பற்ற–விதிக்கு
மறை யந்த வாசிரியர் வண் பதஞ்சேர்ந் துய்வோத்
துறை யந்த வாசிரியத் தான்.
பர சமய மெனும் வெய்ய கண்டக தருக்குலம் பாழ்பட நிலத்திலங்கைப் பற்று ௬டர் வடிவாய பரசு வெனவும் பரம பாவனமுடைக் கமல மானரசனுயர் மதநிலை பெறச்செய்து எடுத்ததொரு வம் பொன் வெற்றித் துவசமே யாமெனவும் ஓளிர் துய்ய திரிவேணு தண்டமு மகன் மார்பி’ னுருவொடுற்றூ
விரவுமெழின் மறை நாலெனத் திகழ கிற்குமுப வீதமுஞ் சிகையு நேராய்
விரி புண்டரக் குறியும் வேறுதய வாதித்த விசயமென வார்த்த செம்மைப்
புரியாடையும் பொருவி லெதிராசரிரு சரண புண்டரிகமும் பணிகுவாம்
புகரிலா வரியைக்க ணலர் மீது மங்கை யடி புனைதமிழ் நிதந் தழையவே.
ஈடரிய வியாச முனி தேர்ந்து ரைக்கு மிலகு வேதாந்த ஸூத் திரங்களுக்குத்
தேடரிய பாடியந் தான் றமிழ் வேதத்தின் செழும் பொருள்கள் நேர்மை யுடன் ஆய்ந்த ளித்தோன்
பீடமையுங் கண்ண பிரானருளிச் செய்த பிறங்கு திருக் கீதைக்குப் பாடியத்தை
வீடளிக்கு மத் தமிழ் வேதத்தி னாலே மிலைச்சியரு ளுடையவர் தா டொழுது வாழ்வாம்.
தேசமெல்லாம் உகந்திடவே பெரும் பூதூரில் சித்திரையில் ஆதிரை நாள் வந்து தோன்றிக்
காசினி மேல் வாதியரை வென்று அரங்கர் கதியாக வாழ்ந்தருளும் எதிராசா! முன்
பூசுரர் கோன் திருவரங்கத் தமுதனார் உன் பொன்னடி மேல் அந்தாதி யாகப் போற்றிப்
பேசிய நற் கலித் துறை நூற்றெட்டுப் பாட்டும் பிழை யறவே எனக் கருள் செய் பேணி நீயே.
காலன் குறுகான் கடும் பிறவி சாராது
மாலின் தனிச் சுகத்தின் மன்னிடலாம்-சீலமுறும்
பாவமிலா நெஞ்சே !நீ பண் பனி ராமாநுசனாம்
நாவலன் செந் தாமரைத்தாள் நாடு.–தனியன்
தத்துவங்கண் மூன்றுந் தனி மந்திர மூன்றும்
இத்தகைய வென்றுணர்ந்த வென்னெஞ்சே! –நித்த நித்தம்
சாற்றுதி ராமாநுசனாஞ் சாந்த குண நாவன் சீர்
போற்றுதி யன்னான் சரணப் பூ.-தனியன்
உலகாக்கியே யுணவாக்கியே யுலை வாக்கியே யுலவா நலத்
தல மாக்கியே தணவாத வைந் தாகும் பொரு டகையோ துறும்
கலை யாக்கியே காத்தாளுவான் கவி நாதவென் கடு வாணவ
வலை நீக்கியே வழி காட்டியாள் வர யோகியே வர யோகியே. –காப்பு
என் சந்த மீசன் சந்த மா விருள் சந்த மவ் விருணீக்குறும்
மன் சந்தமீ மகிழ் சந்தமும் மறை மத்தமும் மது வித்தையைத்
தன் சந்தமார் தயை விம்மலாற் றரை வீசு தாயானான் மிளிர்
தென் சந்தமார்ந்திட வேத்தினேன் திருக் கோவலூர் திருக் கோவலூர்—காப்பு
பூமாநிறம் பொரு மா முதற் பொன்னாரவிந்தப் பூ நலம்
நாமாறிலா வகை யுற்றுற நாராயணன் தனையும் விடுத்
தாமாறி லோதிட வந்த பூதூரானை நீ யகமுன்னலில்
ஏமாறிடாதே நெஞ்சமே! யெதிராசனே யெதிராசனே.–1-
ஆருயிர முக மாறி யீராறாயிர நாமாறிவான்
பேராயிரம் பெம்மானதாம் பேறாக்கிட வந்தானவன்
சேராயிரம் பேராசைதே வற்றாரிலாச் சேறாழ்ந்தனம்
ஏராயிர மெணியேத்துவா யெதிராசனே யெதிராசனே–2-
மூலத்துமா யாவாணவ முதுநோயினான் மொத்தாடினாம்
சாலத்துமா பதி காணருந் தண்டாமஞ்சார்ந் துறவாயினாம்
ஆலத்துவாய் பவன் மெல்லணை யாகும் பிரா னெனினந் தமக்கு
ஏலத் துய ரென்னெஞ்சமே! யெதிராசனே யெதிராசனே.–3-
கடன் வெஃகுமா கமலைக் கிணை யாகக் கழ றுதலுக் கிணைத்
திடன் மண்டு நூல் கடன் மாந்தினோன் றெளி யாதவப் பிரகாசனென்-
றிடு மன்னவ னிடமோதினா னிரண்டென்றவ னிருள் நீக்கினான்
எடல் வேறு சீரினை நெஞ்சமே யெதிராசனே யெதிராசனே–4-
காத்தூட்டுவான் பொறி மாவுடன் கலந்தோடியோர் காட்டிற்குளே.
நாத்தூக்குதே நாரம்மிலேம் நாமென்செய்கே மெனவந்தவர்
தீர்த்தங்கொளத் தினமீய்ந்தனை திருவாதிரைத் தினம் வந்தனை
ஏத்தற்கெனா லெண்ணாசுதீ ரெதிராசனே யெதிராசனே.–5-
புகை புக்கினும் போகாக்குறும் பொறை சூழுமா விந்தத்திலே
பகை புக்குணு மாயாமதப் பாவக்குழு விற்கெட்டிடா
வகை புக்கி யெம் மவர் வாழ்ந்திட வரதன் வழி வந்தாண்டவன்
எகை புக்கு நீ தொழு நா துதி யெதிராசனே யெதிராசனே.–6-
பரவாதிக ளேவற்பசா சங்கட்கெலாம் படுதொண்டராப்
புரமோதிடப் போவேற்கெலாம் புணையாகிமீப் புரமேற்றினாய்
குருவேகுரு பரனேபரன் குளிர்வாசமாங் கோயிற்பிரான்
எருதேறினான் காணானடிக் கெதிராசனே யெதிராசனே.–7-
மன்னாவிகண் மாயாச்சுக மதுபெற்றிடப் பேயின்றலைத்
தன்னாரவிந் தம்மிட்டனை தகையாமண மகனாயினை
பன்னாளும் வெந் தவமாற்றினாம் பலியாத நின். பத தாமரை
என்னாமன்மூ கற்காக்கிளை யெதிராசனே யெதிராசனே.–8-
முக் கோலமா முநியாயினை முநி யிந்திர னென வோங்கினை
அக் கோல மாயாவாதிகோ லடியுண்ணுமுக் கோலீந்தனை
செக் கோலக்கூறைக் கட்டினாய் திருக்கச்சி நம் பிக்கன்பினாய்
எக்காலுமெற் கேயத்தமா-மெதிராசனே யெதிராசனே.-9-
அன்பென்பதோ ரணுவும் மிலே ன துசொல்லவு மருளும்மிலேன்
துன்பென்பதோ தொலையாவிலேன் தொலையாயெனச் சொலவும்மிலேன்
முன்புள்ளவா ணவநீக்கியுன் முத்தர்க்கடிப் பொடி யாக்குவாய்
என்னின்பமே யென்றெய்வமே யெதிராசனே யெதிராசனே.–10-
தன் கண்ணுளே னானாற்பவந் தணியேனென வென்றம்பிரான்
‘நின் கண்ணுளே யுறவாக்கினா னீயாரிய னிலைகாட்டினாய்
மன் கண்ணுள மநுவிட்டுமென் வடிவின்னதாம் வழி காட்டியும்
என் கண்ணுள நவை நீக்கிலே னெதிராசனே யெதிராசனே.–11-
உன் சொல்லையா முறுதிக்கொளா துலைவாகுவோ மென்றோவருள்
மன் சொல்லினோ ராறுப் பொருண் மா கச்சி நம்பிக்கண்கொடுப்
பின் சொல்லு பா டியமாதியாற் பேணிப் புர நீ தருண் மாதவ
என் சொல்லி யானிசை கூறுகே னெதிராசனே யெதிராசனே.-12
ஏனித்தனை நாளாவெனை யெண்ணாதபா தகனாயினை
நீ நித்தமென் றிடின்யான்புரி நிலை யுற்ற தீ நெறி யெண்ணியே
நானித்தனை நாணாகினே னனிபீதியா லொளி வெய்தினேன்
ஈனத்தன் யா னென்செய்குவே னெதிராசனே யெதிராசனே.–13-
கலை மாது வாழ்த் தெடு பாடியக் கவிநாத செந் தமிழ் வேதமாம்
அலை மீதெழு மம்மான் விழு மதிமோக மெல்லணை யாகிய
தலைவாகுருத் திரளுக்கெலாந் தழலேமதத் தூலக்கெலாம்
இலையாயருட் கெதிராயினே னெதிராசனே யெதிராசனே.–14-
அருளாளனீய்ந் தருள் வித்தமே யதியாள வந்த வரத் தமே
தெருளா மலர்ந் திடவாக்கிய தெளி வேத வேதிய கோட்டியூர்
பெரியோனிடங் கழலோய்ந்திடம் பெயர்ந்தேமநுப் பெற்றப்பினர்
எரி வீழ்கிலா தருள் செய்தனை யெதிராசனே யெதிராசனே.–15-
வட வேங்கடத் தப்பற்கு நல் வளை யாழி தந்தனை தென்குறுங்
குடி நாரணக் கோமாற்கு மந் திரமோதி வான் குறை நீக்கினை
செடி தீரு நா ரணனைக் களிச் செல்வச் சுதனாப் பெற்றனை
இடி சேரு தீப் பெறுவானரு ளெதிராசனே யெதிராசனே.–16-
நாயெத்தனைத் துதி கூறினு நன்றாகுமோ நாயேன்றுதி
பேயத்தனைப் பெண் கொண்டவன் புவியத்தனைப் பிழை கொண்டவன்
காயத்தனைத் தாணென்றவன் காண் பூப் பொனே கதி யென்றவன்
ஏயத்தினை யுருவானவ னெதிராசனே யெதிராசனே.–17-
பத்தாறுவே டத்தானுமே பற்றாமன்மாழ் குறுவான்மகி
ழத் தானு வெண் கோடிப் புனைந் தகன் மா நிலத் தாவிக் குழு
வைத் தாழ்விலா வின்பாகுவை யத்தான் மகிழுற வீந்தருள்
எய்த்தேன் விடா தெனையாள்குவா யெதிராசனே யெதிராசனே.–18-
பல்லாயிரங் கலை தேர்ந்தவ ராசீவக மத பண்டித
வல்லாருட னோர்வேலையே வலியாயிர வதநங் கொடோர்
சொல்லாடி வென்ற மணக் குழுச் செக்கிற்றிரித் தரசன் முனே
எல்லாருங்கண் டிறும் பூ துறு மெதிராசனே யெதிராசனே.–19-
முகமொன்றிலா யிரவாநந முந்தக் கொடோர் பலபாடையால்
அகமொன்று நா நா பேதமா வறையும்மதத் தவரீட்டமிக்
ககமொன்று நீட் கழு மாமரங் கவ்விக் கிடந் திடவா துவெல்
இகமொன்று வானக மீந்தரு ளெதிராசனே யெதிராசனே–20-
இன்தென்கலை யினிதோதின தெதுவோவது வன்றோமுனோ
மன்நின்பமா நூற்றெட்டென வழங்கும் பதி யவை மாசற
நன்றின்பமாப் புதிதாக்கிட நாடெங்கினு மோடோடிவா
தென்றெங்கு நன் றீவானெழு மெதிராசனே யெதிராசனே–21-
திருமாமுத லடியார் பவந் தொலை யக்குலை தேவில்லெலாம்
ஒருமா முதற் காமாறு நன்றுறவாக்கியே யொரு தேவனைத்
தெரியாது பற் பல வெண்ணி மாழ் குநர்க்கு உண்மையைத் தெளிவாக்கிய
எரி நாளில் வந் தவன் றம்பியே யெதிராசனே யெதிராசனே–22-
சைவப் பெருஞ் சைலாசநி சமணப் பனி தணி ஞாயிறு :
பொய்யொப்பிலா மாயா மதப் பொதி சுட்டெரி தீப் புண்ணியர்
கை யொப்பிலா புத்தப் பணி கருகும்பெருங் ககராட்டென
எய்தற்கரும் பேறானவா வெதிராசனே யெதிராசனே.–23-
பொறியைப் பொலி யாதாக்கினாய் புலனைச் சலி யாதாக்கினாய்
வெறியைச் செயுங் கரணக் கரி வீவட்புலி வீறாக்கினாய் ்
கறியைச் செயுங் காமாதிகால் கடி துண்ணு கட் செவியாயினாய்
எறியைச் செயு மெனையாண்டரு ளெதிராசனே யெதிராசனே.–24-
பன் மா மத மாயாவிருள் பாறச் சிவப் புடை சுற்றியே
கன் மா மனம் வாக்காக்கையை கலித்தாமெனு முக்கோல் கொடு
தன் மா மலர்ப் பதஞ் சார்குவார் சதிரான விண்ணாடேறுவார்
என்னாதனே பொன்னாதனா ரெதிராசனே யெதிராசனே–25-
உனை யேத்திலார் பவமோ யுமோ வுனை வாழ்த்திலார் நரகோயுமோ-
தனையே தனக் கிணையானவன் றரைவானுன தாணைக்குளே
நினையே நினைந் தீந்துள்ளது நெறி தேர்ந்தவர் நினை வுள்ள காண்
எனை யேன்று கொண்டுன்பத்தியீ யெதிராசனே யெதிராசனே.–26-
காமக் கொடுங் கண்மாந்தினேன் கதமாகுவெந் தடி மேவினேன்
வாமப் பெரு மத மச்சர மாகுங் கலைப் பூண் மேவினேன்
சீமத் தன் மாக் களவாடி தீத் திறனானவ னக மேறினேன்
ஏமத்தனென் றிகழா தரு ளெதிராசனே யெதிராசனே–27-
ஆசாரமோ சரகுண்ணி நல் லநுட்டானமோ வூர்க்கோலமாம்
காசாசையோ நீரட்டையாங் கனியாசவே சரியேசரி
பாசாசரோ பகர்தற் கொணொப் பர தேசிகா பரிவோடெனை
ஏசாதுகாத் தருள் பூதூர்வா ழெதிராசனே யெதிராசனே–28-
எல்லே யிளங் கிளியேயெனு மெமதம்மையா நீ தம்மண்ணரே
அல்லும் பகலும் மாழ்கிவீ ழாழ்வார் விடும் வரி வண்டரே
சொல்லாது கொண்மின் காணெனாச் சொன்னார் தமெம் பெருமா வுனை
யில்லாதவ ரில்லாதவ ரெதிராசனே யெதிராசனே–29-
வஞ்சத்திலோ கடலானவன் வளர் பொய்யிலோ மலையானவன்
பஞ்சத்தினும் பதருந்தராப் பழிலோபகாஞ் சிரமானவன்
நஞ்சத்தினு நனிதீயன்யா னானும் பிறப்பற வெண்ணினேன்
எஞ்சத்துளே னெனை யாள்குவா யெதிராசனே யெதிராசனே–30-
ஒன்றேனுநன் றுணராதவ னொரு போதுமே பணியாதவன்
பொன்றாத மூ வாசைச் சுழிப் புரண்டாடு புன் புலையர்க்குளேன்
நன்றீ துதீ தென்றோதுநூ னனி யோதிலேனினை யோதிலேன்
என்றாலு நீ யெனை விட்டிடே லெதிராசனே யெதிராசனே-31
பெண்ணாயினார் கண்ணோயினும் பிறழன்னரல் குன்னோயினும்
அண்ணாந்தெழுங் குயநோயினு மவர் வாயழகுடனோயினும்
பண்ணா வுடல் பல கோடியான் படு பீழை பாரதமாகுமே
எண்ணாதெனை யினிதாளுவா யெதிராசனே யெதிராசனே–32-
என் போல யா ரியானென்றவ னென்போல யா ரென தென்றவன்
என் போல யார் பழி செய்தவ னென் போலயார் நன்றற்றவன்
இன் பாநல மொன்றேனு நன் றியலோடு தேர்ந் திலனையனே
என் பாவமோ வென் சன்மமோ வெதிராசனே யெதிராசனே–33- .
என்றீமைகண் டெமன்வெள்கினா னெழுத்தாடுவான் கழுத்தாடினான்
நன்றாம் விதி குன்றாயினா னாராயண னலிவெய்தினான்
நின்றாகுமைந் தாம்பூதமு நெடு மூச்சு விட் டுடல் சேர்ந்தன
இன்றாகு நின் னடி வந்தநா ளெதிராசனே யெதிராசனே–34-
மண்ணுற்றவான் நழையாவிகண் மகன்றந்தைமா துலனாயினேன்
கண்ணுற்றகா தலனாதியாக் கழறும் பிறப் பினிலோய்ந்தனன்
எண்ணற்றதாய் பெற்றேங்கின ளினிதீனுவா ளெவளும்மிலேன்
எண்ணற்க வென் பிழையாரிய வெதிராசனே யெதிராசனே-35-
நானோ நினை நினைவிட்டிலே னாராயண னடியார்களா
நீ நோவு செய் யுபகாரமே நினையாதவன் பதையாதவன்
ஆனாலு நின் னடியாரெனை யட பையலே யென்றார்கள் காண்
ஏனோ நின தாளெற்கிலை யெதிராசனே யெதிராசனே–36-
செய்ந் நன்றிகொன் றுளனாயினேன் திருமாலடி யரை நோக்கிடின்
கைந் நின்றுகூம் பிக்கால் விழாக் கடையீனனாய்க் கழுதைப் பிறப்
பைந் நின்ற நன் றென்னே யுளே னருளாழியா ரியநாதனே
எந்நின்ற சீர் நிறை வேதனே யெதிராசனே யெதிராசனே–37-
வட வேங்கடத் தவன் றொண்டனா வான் கானிலே யமுதங் கொடுன்
னிடம் வந்தனத் துடன் பாத்தளித் தினிதே கிடச் சென்மாதவ
கடனஞ்சினுங் கடையேனெனைக் கை விட்டிடிற் கதி விட்டனன்
எடலென் பிழை யருள் செய்குவா யெதிராசனே யெதிராசனே–38-
ஈரொன்பது நாள் வாது செய் யிகலெக்கிய னிகல்பட்டரோ
நீரென்பதே நிசமாகுமந் நிமலற்குமிச் சீவற்குமே
சீரொன்றிரண் டெனுமின்மினிற் றிகழ் வாக்கியஞ் சிதை வாதலில்
ஏரொன்றினை யார் தேர்குவ ரெதிராசனே யெதிராசனே–39-
நியோ பரன் பாயாகியே நிலை காலமு நிற்கின்றனை
நாயேங்களவ் வேதச் சிர நல் வாக்கியப் பொருடேர்துமோ
ஆயாதுவே தாந்தப் பொரு ளகம் வந்தவா றலறிச் சொனார்
ஏயாதவ கிரி வாசனே யெதிராசனே யெதிராசனே–40-
ஒன்றே யுல கென்றாரதி னுட்டோன்றுறு பொருடேர்கிலார்
ஒன்றே யுல காதற்குள வேதென்னெனி லதுவுஞ் சொல்வார்
அன்றாதியா மரவாகிய வையாவெழுந் தருளாயெனில்
இன்றேனு நன் னெறி தேர்கிலே மெதிராசனே யெதிராசனே–41–
பரமே பெருஞ் சதமாயிடின் பதமேதெதிற் பதிவாரெவர்
சிரமாகிய சுருதிப் பொரு டெரிவாரெவர் தெரியாரெவர்
வரமாகுபத் திகளே துநீ வனை பாடிய மலையாவிடின்
இரவேது நற் பகலேது காணெதிராசனே யெதிராசனே–42-
நீயேயவ தரியாவிடி னிகிலத்துளே நிறை சீவர்கள்
ஓயா துதந் தமையேபர மென்றெண்ணியோ வாமாலராய்
‘ஆயாவிர ணியராகியே ழாகக்கணி நிரயத்திலே
ஈயாவிழுந் தெரியாகுவா ரெதிராசனே யெதிராசனே–43-
ஈசோகமென் பவர்யாருமி ராமாநுசற் கினிதாகியே
தாசோகமென் பவராக்கிமுத் தாபத்தினைத் தணிவித்தனை
ஆசாறிடு மைந்தாம் பொரு ளறிவித்திடுந் திருமந்திரம்
ஏசாறிடா தீந்தாய் கொலெ மெதிராசனே யெதிராசனே–44-
அட்டாக்கரப் பொருணீசொலா யானாலெமைப் பரனைத் துணைக்
கட்டானதைப் பகையானதைக் கதியானதைத் தெளிவேங்கொலோ
சிட்டாதிபா சித்தாதிபா செறிபன்மத விருளாதவா
இட்டாவெனை விட்டாலிலே னெதிராசனே யெதிராசனே–45-
உன்னன்பர்கள் வைராகமு முறுபத்தி ஞாநக் கோவையும் .
பொன்னன்பர்பால் மனமுள்ளவர் புரி நீதியும் பொல்லாக்கொடு
மன்னானவன் வழி போகலு மகியார் தெளி வுற வெண்கலை
என்னே யசைத் தனை யோதுமி னெதிராசனே யெதிராசனே–46-
உறங்கா விலிப் பரிசத்தினா லுடல் பூக்கு நல் லொளி யோங்கலே
கறங்கா மனப் பொன்னாச்சியார் கனி வெண்ணியே களி கன்னலே
பிறங்காத வெம் பார்க்கின்னிருளே காந்தமின் றெனப் பேணி வாழ்
விறங்காது காத் தருணாதனே யெதிராசனே யெதிராசனே–47-
அளவற்ற சங்கர வாதிய ரளவற்ற மாயா வாதியர்
அளவற்ற காபில வாதிய ரளவற்ற கெளமாராதியர்
அளவற்ற வஞ்ஞாநங்கெடுத் தரவிந்த நின் னடி மேவினர்
இளவர்க்குளே னேதும்மிலே னெதிராசனே யெதிராசனே–48-
முன்னாரியர் பத தாமரை முடி கொண்ட யான் முடி பெற்ற பின்
என் பாதசம் பந்தம்முளோ ரவர் பாதமே யினர்பின்னரும்
மன்னாகுபே ரின்பீசுக மலிவீடுறற் கென்மாசுள :
என்றோது நங் கருணாகர வெதிராசனே யெதிராசனே–49-
வடுகா வெனு நின்றாசனார் வழி பட்டு வாழ்த் துறுதேவனே
படுகாடெனுங் காளத்தி சேர் பத்தர்க்கு நல் லமுதேயிலைத்
தொடுவேன் கொலோ வென்றேங்கினார் தூங்கோங்கு தாமரைத் தாளனே
எடுவேம் பிறப் பினில் விட்டிடே லெதிராசனே யெதிராசனே–50-
தன்னாரியன் வெள்ளாட்டியாச் சமைந்தானுணுந் தற்போதமே
தென்னன் கிழிச் சென்றான் மக டெளிவாகுபா வைக்கானவா
பன்னாளுமத் திரு நாரணப் பதி மேவி யாண் டருடந்தவா
என் னாதனே யென் தேவனே யெதிராசனே யெதிராசனே–51-
அந்தோ பல வாஞ்சீவரு மம்மானடிக் கேயன் றியில்
சிந்தாகுலத் தோடே பல தெய்வங்களைத் தொழுதோய்ந்தனர்
முந்தாகிய முறைமைப்படி முன்றொண்டரா கிடவைத்தனை
எந்தா யெனை யேனீக்குதி யெதிராசனே யெதிராசனே–52-
ததி தொண்டையூர் கொண்டிக்கு விண் டாரும்மெனத் தன் கையினால்
பதி கொண்டதோர் முறி போக்கினை பரனாகு வேங் கட நாதனும்
விதி கொண்டனன் வீடு ஈந்தனன் விழை மங்கையும் வீடுற்றனள்
எதி நாதனே கதி நீ யெனக் கெதிராசனே யெதிராசனே–53-
மண் மா மலர் மகிழீசனு மகிழாதுனைத் தருமீசனும்
தண் மா முநி போகங்கொளுந் தனியீசனுந் தடை யின்றியே
விண் மா நிலச் செல்வங்கணின் விதி நிற்பவா வெளியிட்டனர்
எண் மா பத கன்னென்னையா ளெதிராசனே யெதிராசனே–54-
குரு பூர்த்தியா வரு மூர்த்தி யெங் குடியாவுநின் னடியே யுள
ஒரு பூர்த்தியா வுறு ஞாநமு மோரார்த்தியா யுறு பத்தியும்
தரு பூர்த்தியாம் வைராகமுஞ் சாராததோர் சடன் மேதை கூழ்
எரு பூர்த்தியா விட்டாள்குவா யெதிராசனே யெதிராசனே–55-
போகத்திலே பொலி தீயன் யான் பொதி வேத வேதாந்தத் துறும்
யோகத்திலே கண்டுற்றதோ ரொளி மசுகப் பொருளுற்ற நின்
பாகத்திலே படியாத யான் பரமாகுமப் பொருணச்சலெற்
கேகத்திலே நாணுக்குதே யெதிராசனே யெதிராசனே–56-
கழி ஞாநமாஞ் சடகோபனார் கலியுங் கெடுங் காண்மின்னெனாப்
பழி ஞாநமில் பதிகத் தினாற் பரிவாக நின் படி பாடினார்
வழிபாடு செய் துய்வாக நின் வடிவாக்கியாள் விழியாக்கியே
இழி வாக்கிடா தெமை யாட்கொளா யெதிராசனே யெதிராசனே–57-
ஒரு மூலமந் திரவாச்சிய னோவாவவா வதிகாரங்கண் :
யுரு மூல மந் திரமீந்த நீ யெற்கோவருள் செய்வாயெனப்
பெரு மாசையா லென் மாசினாற் பெட் புற்று பேதுற்றோய்ந்தனன்
இரு மாசை முற்றுற நோக்கியா ளெதிராசனே யெதிராசனே -58-
சுரு வஞ்ஞனா லாகாத விச் சகமுற்றுநின் றாளேத்திட
ஒரு வஞ்சமு மில்லாமலே யொளி வேத மந் திர மோதினை
கருமஞ்செயாப் பிரபத்தியே கழியாச் சுக நெறி யென்றனை
இரு மஞ்சிலா வெற்கஞ்சலீ யெதிராசனே யெதிராசனே–59-
முது சாம மா மறை யுச்சியின் மொழியின் படிப் பர சீவர்கள்
பொதுவாகுமா நந்தத்திலெப் போதுந்தகா தொருபேதமென்
பதுவாகுமவ் வசியின்பதம் பரிந்தன்னதே பண்பென் றனை
இது யாவருந் தெளிவுற்றன ரெதிராசனே யெதிராசனே–60-
தத்தொம்பதப் பொருளாய் கிலார் தானே பர மென்றாய் கிலா
வித்தைக்குளாய்ப் பிறரேளன வேதைக்குளாய் வெள்குற்றனர்
தத்தென்னிறற் பரமென்றனை தொம்மென்னிறா சனையென்றனை
இத் தன்மையா ரிசை செய்குவ ரெதிராசனே யெதிராசனே–61-
நீயே குரு பரனென்றவர் நினை தாளினைப் பணியாதவன்
நாயேனை நாரணன்றொண்டெனி னானாவனோ வென்றேங்குவன்
தாயேயரு டந்தாயொரு தானானவென்ற நமானவா
ஏயேயென விகழாதரு ளெதிராசனே யெதிராசனே–62-
மன்னாகுதி நினை நன்றென மதியென்றவா சகமெண்ணியே
தன்னாகுமுண் மையை நாடியச் சாமிக்கு நாஞ் சொத்தாகுதும்
என்னா நினைந் தின்பெய்திடா திறையானென விழிவெய்தினர்
இன்னாவிலா துன் பாதமீ யெதிராசனே யெதிராசனே–63-
மாயாமத வலைசிக்கியே மாய்ந்தார் பலர் மதி சூடியை
நீயோ துதற் பரமென்றெணி நீராய் நிலத் தவிந்தார் சிலர்
ஈயாதிழி பல தேவரை யிறையோனெனா விறந்தார் சிலர்
ஏயாதவாத் திரிவாசவா வெதிராசனே யெதிராசனே–64-
எம்மான்றரி சநமோங்கவே யென்னென்னவோ வினல்மேயினை
அம்மானு நின் னாட்சிக்குளே யானா துவைத் தனனாதலால்
சும்மா விருந் திடினாயினேன் சுகிக்கற்கொரு சூட்சிக்கிலேன்
இம் மானிட னினை யேத்தல் செய் யெதிராசனே யெதிராசனே–65-
அத்தா நினக் கடியோமென வடியோமடிக் குடிலுய்ந்தன
பித்தானவன் பிழை செய்தவன் பெரியோரை நிந்தனை யிட்டவன்
மொத்தாடுமைம் புலவாசையே மூவாத பேறாக் கொண்டவன்
எத்தாலுமீ டேறற்கிலே னெதிராசனே யெதிராசனே–66-
ஒரு நாளு நின் பேர் வேண்டிலே னொரு நாளு நின் னூர் போற்றிலேன்
ஒரு நாளு நின் னருவெண்ணிலே னொரு நாளு நின் குணம் பன்னிலேன்
ஒரு நாளு நின் விசயஞ் சொலி யுற்றாருட னுடல் பூத்திலேன்
இரு நாளு நின் னொருபத்தியீ யெதிராசனே யெதிராசனே–67-
அருளாளனார் தந்தாளும் பேரருளாளனார் தந் தேசிகா
இருளாகு முத் தடை மேவினே னிதினாலென தியானாயினேன்
ஒரு நாளு மீ தொழிவாகிலே னுன் காருணி யத்தாலென
திருணீங்கிட வருள் செய்குவா யெதிராசனே யெதிராசனே–68-
மெய் வந்திலா நாவானினை மெய் போலவே துதி செய்தனன்
கைவந்திலாக் கயவன்னெனைக் கடுத்தே விடிற் றடுப்பாரிலை
ஐவந்த நின் னடியார்கள் கண் ணெச்சிற் கழு விட வென்றனை
எய்யாது வைத் தருள் செய்குவா யெதிராசனே யெதிராசனே–69-
நின் பாத மெண் ணி மலர்க்குளே நெடு நீசன் யானிற்கின்றது
புன்பாலதாம் பைங்கூழ்க்குளேர் புல்லாடவன் போலாகுவேன் :
அன்பாலெனை யவரேளன மாடிக்களித் திடவாக்குவாய்
என்பாவவாக் காற் போற்றினே னெதிராசனே யெதிராசனே–70-
அருளென்ப தோ ரணுவும் மிலே னடியார் முனந் தடி போலவே
மருளென்பது மாமய்ப்பானெணி மகிழோடு சேவித்தும்மிலேன்
தெருளேது மற் றவனாகிடம் பத்துக்குளே தெளிவெய்தினன்
இருளேது மற் றவனாக்கியா ளெதிராசனே யெதி ராசனே–71-
நின் னாமமாந் துவயத்தையே நீரன்னமா நிலை கொள்ளுநா
ளெந்நாளெனா வேங்குங்குணத் தெம்மான் களென்றனையும் மொருச்
சின்னானெனச் சிறு புன்னகை செய்வாரெனி லுய்வேனையா
எந் நாளு நீ யே காப்பு காணெதிராசனே யெதிராசனே–72-
நான் வேண்டியா நீ யாள்குவாய் நாய் வேண்டியா மழை பெய்வது
தான் வேண்டி வந் தவனீ தலத் தவராண வந் தமை நீக்கியே
வான் வேண்டியீந் தவனீயெனை வாங்காணொனா தகல் வாய் கொலோ
ஏன் வேண்டலென் னன்னாய் மிகை யெதிராசனே யெதிராசனே–73-
சித் அசித்தெனுந் திரு மேனியுட் டிகமும் பிரான் றிருநாதனென்
றிதமுற்றவே தாந்தம் மெலா மிசைவிப்பதை யறிவிப்பதாய்
பதமுற்ற பாந் தட்காதியாம் பர நீ யெழுந் தருளாயெனில்
எது முற்றவோர்ந் துலகுய்யுமா லெதிராசனே யெதிராசனே–74-
ஐந்தாகு பேதத்தாவிக ளைந்தாகு மெம்மான் மேனிகள்
ஐந்தாறதா மவனைப் பெற வவையுட்கடை யாறே நலம்
நந்தாதிர்கோள் பவ சாகர நமரங்காளென் றருள் செய்தனை
எந்தாய் பிறந் துய்ந்தோமிலை யெதிராசனே யெதிராசனே–75-
அனை யாற்றகி லாப்பாவமே யடியேன்புரிந் துளனாதலில்
உனை யொப்புளா ரெவரென்பவ மொழிக்குந்திற முடையாரையா
புனை மாதவ னிந் நாளெனைப் புரந்தே யருள் புரிவானெணி
எனை யுன்னிடம் விட்டானரு ளெதிராசனே யெதிராசனே–76-
அடியேனடி யேனென்ற சொ லறிவேனதன் படியே யிலேன்
செடியே யுள னொரு நாளுமச் செய்கைக் கிணங்கிலன் றீயன்யான்
படியாக் கிடந் துன்னாணை நான் பார்ப்பேன் கொலோ வென்பேனலால்
எடுதீயனென் வடிவாக்கியா ளெதிராசனே யெதிராசனே–77-
சுக சாரணர் போலேவயி ணவவேடனா கினனேயலால்
அகமாரகத் தோடேநலோ ரகம்வேம்வினை யுடையேனையா
மகனாகிடி லென்செய்குவார் மாதாபிதா மகன் றீயனேல்
இகம் யாவும் வானகம் யாவுமீ யெதிராசனே யெதிராசனே–78-
உயிர் பாரதந் திர சேடமே யுரு வென்ற மந் திரமோ வறிந்
தயர் வெய்திடா தறிந்தே யுள னநுட்டானமோ வறியேனையா
பயமற்றவன் பவமற்றவன் பரிவற்றவன் பரனே யிதென்
இயலுற்றிட வருடந்தரு ளெதிராசனே யெதிராசனே–79-
என்னாலடி யார்க்கேற்ற நன் னடை மேவிட வியலாது காண்
உன்னால் வரு வித்தாள் கருணைக்கொப்பிலா வொரு மாதவா
பன்னாளுமுன் பதம் விட்டிலார் பார்த்தார் குளிர் நோக்காலெனை
இன்னாதுள முதலூதிய மெதிராசனே யெதிராசனே–80-
தக்கானல னே யாயினுந் தண் வெண் மணி லுன் போலவே
பொக்காக்குள மிட்டுண் மடிப் பொறி மாவுடன் பெருமானை யான்
எக்காலுமி.லக்காகவே விடும்பாக்கிய முடையேனையா
இக்காலெனை நீங்காதரு ளெதிராசனே யெதிராசனே–81-
இடும்பாக்கிய முடையேனெனு மிழிஞன் சொலை யெண்ணேலெணி
விடும்பாக்கிய னாக்காதுயிர் விமலக் குணம் மிளிர்வானருள்
தொடும்பாக்கிய னாக்கிப் பெரு நீ தொண்டர்க் கடி யானாக்கியே
எடும்பாக்கிய னாதற்கரு ளெதிராசனே யெதிராசனே–82-
நம வென்ற சொற் சொலவுந் தகா நரனாயினு மதனுட்பொதி
தமதென்ற துந் தாமென்றதந் தகுமா வெனதீ தடிந்தாவது
உமதன்பினா லுறுமென்ற வுத் தமராய் மொழி யுலவாதுளேன்
எமன் வெள்கிட வெனையாக்கியா ளெதிராசனே யெதிரஈசனே–83-
நானுங்கரை மரஞ்சேறலுன் னளினப்பத நாவாயினைத் .
தானுஞ் சொல லாற்றான்மகிழ்ந் துளன் காண்டமி யேனையனே
வானும் புவி தானும் மறை யோனும் வழுத் திடுமாப்புக
வீனுங் குண கணனே யரு ளெதிராசனே யெதிராசனே–84-
எழு பத்து நான் கெனும் தூம்பினா லியன் மந்திர வமுதானதைத்
தொழு பத்துறுந் தொண்டர்க்கு வீடாக்கிக் களி துகளற்றவா
வழு வத்தனை யேனும் மிலா வாரித் தட வருண்மாரியே
இழி வெத்தனை யுளனாண்டருளே யெதிராசனே யெதிராசனே–85-
ஆழ்வார்கள் செந் தமிழ் வேத நூ லருளும் பொருள் அறிவித்திலர்
ஊழ் வாங்கிட வரங்கத்தமா னுன் சீடனா வுற வெண்ணியாம்
வாழ்ந்தோங்குற வர யோகியாய் வந்தே தமிழ் மறையின் பொருள்
ஈந்தாண்டருள் தந்தாய் கொல் எம் எதிராசனே யெதிராசனே–86-
இதமாம் வட கலை வேத நூ லிலகும் பொரு ளெல்லாமு நின்
பதமாகிட வுன் பாடிய நூலாதியிற் பகர்ந்தாய் பினர்ச்
சிதமாகிடா வெம் போலி கட் கினிதாம் வர முநி யோகியாய்
இதமாகு தென் கலை யீந்தரு ளெதிராசனே யெதிராசனே–87-
உயர் மாக்குலத் தவர்க் காரண முரை ஸூத்திரப் பொருள் யாவையும்
அயல் மாழ்குற மா பாடிய மதனாலருள் செய்தாய் கொடும்
மயல் மாய்ந்துள வாழ்வார் மறைப் பிரசாதமே மகிழ்ந் துண்ணுவான்
இயலீடுக ளீவானருளெ திராசனே யெதிராசனே–88-
எம்போலிய ரீடேற வென் றியலுங் கரு ணையினான் மணத்
தம்போருகத் தாயாரடிக் கடியார் மறைப் பொருளைச் சொலச்
செம் பாகுவே செங் கன்னலே செங் கண்டுதே னே பாலதே
எம் மா முநி யெனையாண்டரு ளெதிராசனே யெதிராசனே.(89)
உலகாரிய னருணூநீபொரு ளோதாரெனின் முன்னூற்றமி
ழிலகாரணங் கடலிற் கரை யின்கன்னல தாகும் மெனா
அலவாவதன் பொருட்டெங்குல வடிகாளென வடியோந் தொழ
எலமாக வந் தருள் செய்தனை யெதிராசனே யெதிராசனே. (90)
சமக்காரமாத் திரமீந்துமுன் றமிழாரணப் பொருள் யாவையும்
எமக்கேனரு ளீந் தாயிலை யென்றான் கொலவ் வீசன் மிகத்
தமக்காகவோர் தனியன் செய வவற்கோதினை தமிழின் பொருள்
எமக்கான வெங் குல தெய்வமே யெதிரஈசனே யெதிராசனே–91-
தென்னாரணங் கொண்டாடிடு சீர் பெற்ற தன்றோ திவ்வியம்.
என் போத மா தவமற்றவை யின்பாகநன் றாக்கிக்களி
அன்பே யெம தருளே யுணு மமுதே மறைக் கதிராசனாம்
இன்பே யெமை யெற்றா தரு ளெதிராசனே யெதிராசனே–92–
திரு மா மலைக் கேகுந் தடங் காட்டேற்றமா ரவனைக்களி
பெரு மா வுப காரன்னெனாப் பேணிப் பெருங் களி தூங்கினை
வரு மா வுறங் காவில்லிகைப் பரிசத்துமா மகிழ்வெய்தினை
இரு மாவுற வருளையனே யெதிராசனே யெதிராசனே–93-
உனையுங் கொல நஞ்சிட்ட விவ் வுலகென்றிடி விதன் கண்ணினே
புனை ஞாநவை ராகத்தினிற் பொலிவாரெவ ரருளையனே
நினை நிற்கப ராதம் புரி நிருபன்புழு நெளியாயினான்
எனையோரிக முற மாண்டன ரெதிராசனே யெதிராசனே–94-
இம் மாதரி சநத்திற்குயிர் கண்ணீந்திடு பெரியாரருள்
தம் மா மதத் தருமம் மெணிதீ தாசன் செயாச் சடன் யானையா
அம்மா விவ னென்னாதுத னருண் மேவினர் சரணத் துகள்
எம் மா வினை யிறுவானரு ளெதிராசனே யெதிராசனே–95-
முதன் மூன்று நல் லாழ்வார்கள் செய் முன்னூல் படித் தறியேனினம்
இதன் மீதவ ரருளுங் கலை யென வோவது தெளியேனினம்
மதன்விண்டிடு கலவிக்குமா மறவெவ்வினை மாலைக்குமே
இதமாகிடு கடையேனையா ளெதிராசனே யெதிராசனே–96-
நாலாயிர மென்பாரத னாலாகிட லெனவோ சொலேன்
மேலார் வழி கேட்டன்னவை விள்வான்வழி மேவேனலேன்
ஆலால மன் னார் கேண்மையி லன்பாயினே னாண்டாண்டெலாம்
ஏலாதழிந் தொழிந்தேனரு ளெதிராசனே யெதிராசனே –97-
பலதேரினும் பத்தர்க்குகப் பாகும் பணி யொன்றும்மிலேன்
நலமாகிடு மென்றேனொரு நாளுஞ்செயே னானாயினேன்
அலதேலொரு வகையேனுநல் லவனாகிட வெண்ணற்கிலேன்
இலையென்செய வல்லேனையா வெதிராசனே யெதிராசனே—98-
உன்றாண்மல ருறுகேசர னெனையாட்கொளா யெனில் யானையா
நின்றாகிட வலனென்பது நீயுஞ் சொல லாகாயையா
கன்றாகவென் ௧றை யுண்டுநின் காந்றாமறைத் தேன்வாக்கியே
இன்றாகிட வேனும்மரு ளெதிராசனே யெதிராசனே–99-
சீருற்றொளி ரிராமாநுச செயஞாநவா ரியனார் சரண்
தாருற்றொளிர் பரன் கையினிற் றருதாதவென்று எனை யாண்டருள்
நீருற்றொளிர் திருக் கோவலூர் நில வெம்பெரு மானாரவர்
ஏருற்றொளிர்ந் திடவோதினா ரெதிராசனே யெதிராசனே–100–
இனிதாகு நின் பத தாமரை யினையூரிடை யுடை வாழியே
தனிதான்றகு முக்கோல்தடங் கையஞ்சலி கைவாழியே
பனிதான்பர மன் வாழ் விழி யகடாநந முடி வாழியே :
எனையோதி யென் றிடு மாபர னினியாரொடென் றும் வாழியே–101-
பின்முனா முத்தர் நித்தர்கள் வாழியே
பேணு நூற்றெட்டெம் மான்றாயர் வாழியே
தன்முன்றானெனு மாதியிலாத் தமிழாரணங் கடழைப்புடன் வாழியே
என் முன்னின்ற விறை வெண்மண்வாழியே
இலகு மஞ்சட் பொடி மணி வாழியே
பொன் முன்றந்த மநு மூன்றைந்தேதி விபூதிரண்டும் பொலிவுற வாழியே–102-
———-
ஸ்ரீ ராமானுஜ மாலை–
இராமாநுஜ னடியை யென்றென்றும் போற்றும்
இராமாநுஜன் றன்னை யேத்த–வராதார
நற் சீனி வாசனையே நாடீச்சம் பாடிகுரு
நற் சீனி வாசனையே நத்து. –தனியன்
இன்பம் பமுதெனவே யெண்ணிறந்தோ ரிப்புவியி
லன்போடு செப்பு மறநெறியைத்–துன்னு
மிராமா நுஜன்மே லியம்புபா மாலைக்
கராமா னளி படைகள் காப்பு. –காப்பு.
பூவிற் றிகழ் மாது புட்கரமாய்ச் சேர் மாலைப்
பாவிற் புகழோங்கப் பாடினா–னாவிற்கு
நற்சுவையு நற்கதியு நல்குமிரா மாநுஜன் செம்
பொற் பதத்தை நெஞ்சே புகல்.–1-
நள்ளிருளி னெஞ்சே நண்ண விடா வென் குருவைக்
கொள்ளாரி னின்று குறையறவே–கொள்ளுகின்ற
அன்பனிரா மாநுஜனல் லம் புயமாம் பாதங்க
ளன்றித் துதியா தறி. –2
நெஞ்சே யடி பணிந்தே னின்னை யென்றும் பேய்ப் பிறவி
யஞ்சப் புலர்த்தி யருளவே–விஞ்சு புக
ழாரிய னிராமா நுஜ முனிக் கன்பு செயுஞ்
சீரியர் காற் கீழிற் செறி–3-
என்னைப் பொருளா யிருளா னது சுரந்த
முன்னை வினை வேர றுக்கு முன்னவனைப்–பன்னப்
பணித்த விராமா நுஜன்பரன் பாதங்
கணித்துத் துதி மனமே காண்–4-
எனக்குற்ற செல்வ மிராமா நுஜனென்
மனத்துற்றுப் போற்றுதற்கு மாயா–தெனக்குற்ற
அன்பனவ னாமத்தை யாதரவாய் நன்னெஞ்சே
துன்பணுகா வென்றே துணி–5-
இயலும் பொருளு மிசைவாகச் சேர்த்து
மயல் கொண்டு வாழ்த்தி மதித்துப்–பயிலுங்
கவி யிரா மாநுஜன் மேற் காதலித்து நெஞ்சே
புவி மாயம் விட்டுப் புகல்–6-
மொழியும் புகமுடையான் முக் குறும்பாம் வஞ்சக்
குழியைக் கடக்கு நங் கூரன்–வழி கூடுஞ்
சீரிரஈ மாநுஜணனொண் செங்கமல மல்லாமற்
சேரிரா நெஞ்சே திறம்–7-
வருத்துகின்ற மா விருளை மாற்று சீர் வேதக்
குருத்தையுஞ் செந்தமிழுங் கூட்டி -யருத்தத் திரித்தன் றெரித்தத் திரு விளக்கை நம்மி
லிருத்துமிரா மாநுஜனை யேத்து–8-
இறையவனைக் காண விதயத்தி னுள்ளே
நிறை தீப மேற்றற்கு நெஞ்சத் துறைய வைத்
தாளுமிரா மாநுஜனா மாரியனை வாழ்த்திமெத்த
நாளுந் துதியவனை நன்று–9-
மன்னிய பேரிருளை மாற்றின பின் மா மலரா
டன்னோடு காட்டுந் தமிழ்த்தலைவன்–பொன்னடியைப்
போற்றுமிரா மாநுஜன்றாட் பூண்டவர்க டம்பெருமை
யேற்றற்கு நெஞ்சே யிசை–10-
சீரிய நான்மறையைச் செந்தமிழா லாதரித்தப்
பாரியலும் பாண் பெருமாள் பாதமலர்த் -தாரியலைச்
சூடுமிரா மாநுஜனைச் சூழ்ந்தவர் தங் காரியங்க
ணாடுதற் கேலா நமக்கு–11-
சீர்த்தித் திரு மழிசைச் சேர் கோனின் றாளகத்தி
லார்த்தி கெட வாழ்த்துகின்ற வான்றவன் சீர்ப் பாதம்
போற்று மிரா மாநுஜன் செம் பொன்னடியை யெந்நாளு
மேற்றுவாய் நெஞ்சே யினி–12-
பசுந் துளவத் தேன் மாலைப் பைந் தமிழிற் பெய்யும்
பசு மறையின் பாமாலைப் பாதத்–திசையுறவே
சாத்துமிரா மாநுஜன் றண்கமலச் சேவடியை
யேத்துபவர் தம் பதமே யெண்ணு.–13–
கதியி னிலைக்கவெங் கானங்கள் யாவுங்
கொதிக்கத் தவஞ்செய்வர் கூடிப்–பதிக்குத்
தருமிரா மாநுஜனற் றாட் கமல மேத்தும்
பெருமிதமாத் தாசர்கடாள் பேணு–14-
காதற் பெருஞ்சுழியிற் காதலித்துப் பேணாத
தாதரடி சேரத் தருசிந்தை-யாதரவா
யோதும் ராமாநுஜன் சீ ரோங்கு நறை கமலப்
போது தொழு நெஞ்சே புரிந்து–15-
தலமனைத்து மோங்கு கலி தாவுகின்ற நாளிற்
பலங்கொடு காக்கும் பதுமன்–மலர் சூடு
மாதி னருளை மதி யிரா மாநுஜனா
மாதவனை நெஞ்சே வழுத்து–16-
முனியார் துயரங்கண் முந்தியு மின்பங்
கனியா ரவர்மன மாதே–தனியானைத்
தண்ணிரா மா நுஜனைச் சார்ந்தவர் தஞ் செங்கமல
நண்ணுதற்கு நன்னெஞ்சே நாடு–17-
அரிய திருமறையை யன்புடனே யீந்த
பெரிய குருகூரன் பேணி–யுரிமையொடு
பாதமேற் சாத்திப் பரப்பிரம மாலடியை
யோதுமிரா மாநுஜனை யோர்ந்து–18-
தென் குருகை நாதன் திருவாய் மலர்ந் தருளுந்
தென்றமிழை யாதரித்துச் சேவை செயப் –பன்னரியத்
துன்பமது வந்தணுகாத் துய்ய விரா மாநுஜன் றண்
ணின்புதரு பாத மிறைஞ்சு–19-
பெருஞ்செல்வந் தந்தையொடு பேணு நற் றாயு
மரு குருவு மாகி வரு மாறன்–றருமறையை
நீணிலத்தோர் தங்கட்கு நேருமிரா மாநுஜன்றான்
வாணிலத்து மாயுமே வண்டு–20-
யதிகளுக்கு நாதன் யமுனைத் துறைவன்
கதி தன்னைக் கற்பிக்குங் கர்த்த–னதி யுசித .
பாதனிரா மாநுஜனைப் பன்னு மறையவர் தம்
பாதங்க ணெஞ்சே பணி–21-
கார்த்திகை வீரனொடு கக்குகனன் முக்கண்ணா ்
மூர்த்தியு மோட முதுகிட்டுத் –தார்க்கியன் மேற்
பாவும் பரனைப் பணி யிரா மாநுஜனைத்
தாவுமே யென் மனதிற் றான்–22-
வைப்பாய வான் பொருளை வைத்து மனத்தகத்தே
யெப்போது மேத்துகின்ற வென் குருவை–யொப்பா
ரிரு நிலத்தி லில்லா விராமா நுஜன் றன்
பெரு நெறியை நெஞ்சே பெறு–23-
தீவினையாற் பற்பலவாந் தேகங்க ளெய்தினதா
னோவினையிற் பட்டுமிக நொந்திருக்கும்- வீவினையை
நீக்குமிரா மாநுஜன்றா னீணிலதீதிற் றோற்றின பின்
போக்குவித்தான் பொய்ச் சமயப் பூட்டு–24-
கருணை யிரா மாநுஜ விக் காண்டஞ்சூழ் பூவிற் :
றரு நின் னருளினது தன்மை–யொருவருமே
நோக்கொணொா வல்லமையை நூல் வல்லோர் செப்புதற்கு
நாக்கு கடா மேலுமோ நன்கு–25-
திக்குற்ற கீர்த்தி யிரா மாநுஜனைச் செய் வினையா
மெய்க் குற்ற நீக்க நினை மேவு நல்லோ–ரெக்குற்ற
வாளராய்த் தோன்றி வரு பிறப்பை மாய்ப்பதற் :
காளரா யெண்ணுவரே யாய்ந்து–26-
இரங்கி யிரா மாதுஜன்றா ளென்றனது நெஞ்சந்
திரங் கொண்டு பாவத் திகைக்க–வரங்கொண்டு
சேதிக்க வந்தெழுந்த செம்மலடி யல்லாது
வாதிக்க வாகா மதித்து–27-
நெஞ்சிற் கறை கொண்ட நீசன் றனைக் காய்ந்து
தஞ்சமெனப் போற்றி நிதஞ் சார்ந்தவர்கட்–கஞ்சலென
நங்கள் பெருமா ணவிலுமிரா மாநுஜன்றான் :
கங்கில் புக ழாளனெனக் காண்–28-
கூட்டும் விதி யென்று கூடுமோ தென் குருகைப்
பாட்டென்னும் வேதப் பசுந்தமிந்தா–னாட்டமுடன் ்
வீட்டின் கண் வைக்கு மிரா மாநுஜன் சொன் மெய் யுணர்ந்தோ
ரீட்டங்க ளெய்திடுவ ரின்பு. —29-
இன்பந் தருமோக்க மெய்திடுவை யெண்ணிறந்த
துன்பந் தரு நிரயத் தொல்லுலகின்–மன் பல்
லுயிர்கட் கிறை யிரா மாநுஜனென் றோத
வுயிர்த் துணையா நெஞ்சே யுணர்–30-
ஆண்டுகனா டிங்களிலே யாய் நிகழுங் காலமதி
லீண்டூ பல யோனி யுழ லின் நிமனங்–காண்டகுதோ
ளண்ணலடி சேருமிரா மாநுஜனை யண்டினவர்க்
கெண்ணரிய பேரின்ப மேத்து–31-
பொருந்தும் பொறையும் புகழு நற் றேசுந்
திருந்திய செல்வமுஞ் சேர–வருந்தவன்றன் .
வண்மையினா லீய வருமிரா மாநுஜன்றான்
றிண்ண நமக் கென்றே தெளி–32-
அலர் மகளின் கேள்வன்றன் னாழி படர் தண்டு
மில கொளி சேர் சங்குடனே யேன்ற–பல படையும்
பூதலக் காப்பினொடு போற்று மிரா மாநுஜனை
யாதரவாய்ப் பன்ன வறி–33-
இராமா நுஜனை யிரவு பக னித்த
மராவுமதி பெற்றவர்க ளன்பிற் –றராதவற்றை
விண்ணினொடு மண்ணினும் வேண்டா திரு நெஞ்சே
நண்ணிடுவை யின்ப நமக்கு–34-
அடலுறு நல் லாழிகர னாருயிர்த்தே, வின்சொற்
கடல் போல நற்பொருளைக் காட்டி–விடலரிய
தீ நெறிக் கண் வீழ்விக்காத் திண்ணி ரா மாநுஜன்றன்
பா நெறிக் கண் ணெஞ்சே பரசு–35-
நானிலத்து மானுடத்தை நாடா னொரு தெய்வ
மானித்துப் போற்ற மனமில்லான்–றானித்தம்
பொன்னரங்க மென்றே புகலி ரா மாநுஜன் சொல்
லென்னரங்கங் கொள்ள விசை–36-
படியிற் புகழ் பெற்ற பண்புடையார் கூறக்
குடி கொண்டு வாழுங் குணத்தன்–கடி கொண்ட
மா மலர்த்தாள் வைத்தி ராமாநுஜனைப் போற்றுபவர்க்
காமலத்தைப் போக்குமே யாய்ந்து–37-
புண்ணியர்க ணித்தம் புரளாது நற்றுளபக்
கண்ணி யிடு மால் பதத்தைக் கண்டு தொழும்–பண்டையர்கள்
போற்று மிராமாநுஜ நின் பூ மலர்த் தாள் சென்னியில் வைத்
தேற்ற மனத் துள்ள விசை–38-
ஆர் தரமோ விந்த வயர் தரு மாவுலகிற்
சேரிருளின் வெந்துயரஞ் சேதிக்கத் –தார் மருவு
மீறிலிரா மாநுஜனை யென்றுந் துதித்தவர்க்குக்
கோ றிடுவன் பாவக் குணம்–39-
அங்கையி னெல்லி யருங்கனி போற் றோற்றுவிக்கு
நங்கை மலர் சூடுகின்ற நாதன்றன்–பொங்கு புகழ்ச்
செம்மலி ராமாநுஜனாஞ் சேம வைப்பை. நித்த நித்தந்
தம்மிலிடு வார் பவம் போந் தான்–40-
பொருளொடு தன் மக்களுடன் பூங்குழலாட் பூவு
மருள் கொண்டிளை நெஞ்சே மற்று–மிருள் கொண்ட
வெந் துயர நீங்குமிரா மாநுஜன்றன் மெய்ப்பதமு
வந்து தரி னென்றே மதி–41-
வீடுடனே சொற் பொருளு மேவு நல வின்ப சுகந்
தேடுந் தருமந் திகழ் கண்ணன்–றாடமக்கா
மென்றுரைத்த வள்ளலி ராமாநுஜனா மிந்நிலத்தி
லென்று மின்ப மீகுவனென் றேத்து–42-
மண் மிசையே யோனிகளில் வந்து பிறந் தெங்களிறை
கண்ணுற்று நிற்கினுமே காண்கில்லா–மண்ணிலத்தோர்க்
கண்ணலிரா மாநுஜன்வந் தாதரித்துப் பின்பவர் தா
ளண்ணடுமை கொண்டார் நலம்–43-
ஆயிழையார் கொங்கை யெனு மாரளற்றிற் றங்கு மிக
மாயு நல் லாவிக்கு வாழ்வு தர– நாயகனா
யெல்லா வுயிர்கட்கு மேலுமிரா மாநுஜனாத்
தொல்லோ னருளினது தோய்வு–44-
௬ரக்குந் திருவுடனே சொல்லு முணர்வும்
பறக்கு மிரு வினையின் பற்றுந் –தரைக்கு
ளுறு கலியைப் போக்கு மிரா மாநுஜனென் றோதப்
பெறு வரிவை மெய்யெனவே பேசு–45-
நல்லார் பரவுமிரா மாநுஜன் றன் னாமநம்பிக்
கல்லா ரகலிடத்துக் காமிப்பா–ரல்லாது
சொல்லார் திரு மொழியைச் சோதித் தவற்கு நிதம்
பல்லார் பல் லாண்டு பரிந்து–46-
பேறொன்று மற்றில்லைப் பேசுஞ் சரணன்றி
யாறொன்று மின்றி மற்றச் சரணந்–தேறுமவர்க்
கெற்கு முனை தந்த வெழிலிரா மாநுஜனைக்
கற்குபவர்க் கில்லை பவங் காண்–47-
கூறுஞ் சமயங் குலையக் குவலயத்தே
மாறன் மறை தேர் மதியுள்ளான்–றேற
மனத்திற் புக விரா மாநுஜனை யென்றுங்
கனத்திற் கருதிடுவாய் காண்–48-
நாடா தெனது மன நாடா தெனது கர
நாடா தெனது புய நானிலத்தி–னாடத்
தெரிக்கு மிரா மாநுஜன்றான் செய்த கவி யொன்றிற்
கரிக்கும் பவங்கள் கனிந்து–49-
இறைஞ்சப் படு பொருள் ஈசனரியென்
றறத்தை மொழியு நல் லண்ணற்–றிறத்த
விரு வினையைப் போக்கி யிதயத்தி னுள்ளே
வரு மிரா மாநுஜனை வாழ்த்து–50-
மாதவர்க ணித்தம் வணங்கு திரு மாதின் _
காதலனை நற்றோழி காமுறுவேற்–கேதமில்லாத்
தேன்றுளப மாலை தரத் தென் குருகை நாதன் மகிழ்க்
கோன்றிரு ராமாநுஜற்குக் கூறு–51-
நிகரின்றி நின்ற நின தருளை யன்றி
புகலொன்று மில்லை புகற் புன்மை–யகலு நெறிச்
செப்பு மிராமாநுஜற்குச் சேர்ந்தடுமை யானபின் 3
றப்பும் பொருளென்னோ சாற்று–52-
குலத்தின் கட் டோன்றின து தர்ம்ம நெறி புன்மைப்
பலத்த மதங்கள் பறந்து–குலைந்திடவே
வந்துதித்த வெங்களி ராமா நுஜனைக் கண்ட பின் :
னெந்த வித மாயிற்றோ வெண்ணு–53-
தாழா தெனது சென்னித் தாழா தென துகரத்
தாழா தெனது தோட் டாரணியிற் –றாழ
மற்றொன்றும் வேண்டா மதியிரா மாநுஜன் றன்
பொற்றாளை வைத்தாளப் போற்று–54-
இராமா நுஜன் றன் னிணையடிகள் பற்றா
தராதி மனங்க ளகன்று–பராகமா
யார் கலியிற் றேங்கி யரு நரகில் வீழ்வர் கொலோ
பார் மகட்குப் பாரமெனப் பார்த்து–55-
அடியைத் தொழுத நல் லைவர்கட் காக
முடியப் பரித்தேரை முன்ன–மடிய விட்
டாதரித்தக் கண்ணனடி யண்டுமி ராமாநுஜ வெற்
காதரித்தக் கண்டிரா தாக்கு–56-
பார்த்தா னறு சமையம் பாரிற் பதைத்து விடப்
போர்த்தான் புகழைப் புகுந்தெமது –தீர்த்தா
னிரு வினைக ளெம் மிராமாநுஜன் றாட் செய்யும்
பெருமிதமா மற்புதத்தைப் பேசு–57-
பற் பல் லுயிர்களுடன் பல்லுலகி யாவுமே
சொற் பரன்றா மென் றவிந்தச் சோதனையைத் -தொல்லுலகி
னாட்டு மிரா மாநுஜனை நானிலத்திற் சேர்ந்தவர்கட்
கோட்டுமே தீ நெறியை யுன்னு–58-
நாட்டுஞ் சமய நசிந்தனவே நாரணனைக்
காட்டு மறையுங் களித்தனவே–வாட்டமிலாத்
தென் மறைகள் வாழ்ந்தனவே செப்புமிரா மாநுஜன் செய்க்
கன்மடப் போக்கியல்பு கண்டு–59-
தொண்டர் குலாவு மிரா மாநுஜனைத் துய்ய மறை
யண்டங்க மஞ்சிட் டனனாகி–மண்டலத்திற்
றோற்றிக் கதிர் விடவே சூழ்பவன்றன் கட்பார்வைக்
காற்றுகைம் மாறென் னறி –60-
கோக்குலத்து மன்னர்களைக் கூர் மழுவா லிவ் வுலகிற்
போக்கிய தேவனைப் போற்று நல–மாக்கிய வண்.
கீர்த்தி யிரா மாநுஜனைக் கேட்க மன மற்றவர் தஞ் :
சீர்த்தி யுரை யாதெனவே செப்பு–61-
மற்றொரு பேறு மதியா தரங்கனடி
யுற்றவரே தனக் குற்றவராய்ப்–பெற்றவனை
நற்றவர்கள் போற்று மிரா மாநுஜனை நானிலத்தே
பெற்ற பின் னல்லவோ பேழ்–62-
தேடரிய வேதச் சுடரொளியா லஞ்ஞான
மோடத் துரத்தினா னோங்காரங்–கூடாரைச்
செற்று மிரா மாநுஜன் றன் செவ்வை தரு நற் கமலம்
பற்றுபவர் நெஞ்சே பணி–63-
கொழுந்து விட் டோடு வெங் கோள் வினைக ளெம்மை
யழுந்தி விடா தாட் கொள்ளு மன்பன்–தொழு தவத்தோ
னெம் மிரா மாநுஜன் றா னின்போடு வீற்றிருந்
தெம் பொருளாய் நின்றவனை யேற்று–64-
பெருந் தேவரைப் பரவப் பேணு நல் லெண்ணத்
திருந்தே னிரு வினைக ளேகப்–பொருந்தா
நிலை யுடைய புல்லரிட நின்று பிரி நெஞ்சே
நிலை யிரா மாநுஜற்கு நேர்–65–
உணருடைய ஞானிக ளுய்யு திரு தென் சொன்
மணந்தரு மின்னிசை கண் மன்னப்–புணர்ந்த பொன்
மார்பன் பொருந்து பதி வாழ்த்தி யிறைஞ்சி நிற்கு
மார்க்க மிரா மாநுஜன் றன் வாழ்வு–66-
பிடியைக் களிறு போற் பின் பற்றி யானின்
னடியைத் தொடர வளிப்பாய்ப்–படியி
லறு சமயப் பூண்டதனை யாளுமவர் சிந்தைப்
பெறு மிரா மாநுஜ நற் பேறு–67-
பண்டரு மாறன் பசுந் தமிழ்கள் பாழ் மதங்கள்
விண்டிட்டு மெய்ம்மை விளங்கிடவே–யண்டத்து
வேதக் கொழுந்தேந்த மேதினியில் வீற்றிருக்கு
நாதனி ரா மாநுஜனை நற்று–68-
வாழ்வற் றது தொல்லை வாதியர்க்கு மன்னு மறை
தாழ்வற் றது மிக்கத் தாரணியிற்-. -கூழற்
றது குற்ற மெல்லா மறத்தைத் தருமென்
னது விரா மாநுஜன் றண் ணன்பு–69-
சரண மடைந்தவர் தஞ் சத்துருவை முன்ன
மரண மடைவித்த மாயன்–முரகரியை
வாழ்த்தக் கரணங்கண் மாநிலத்தி லென்றென்றுந்
தாழ்த்துமிரா மாநுஜனைச் சாற்று–70-
யாரு மெனக்கு நிக ரின்றென்று பாண்டவர் தந்
தேரினின்று சொன்ன செழும் பொருளைப்–பாருலகிற்
செப்பு மிரா மாநுஜனைச் சென்று தொழ வாவி கிந்தைத்
தப்புவிக்கு மார் நரகந் தான்–71-
சிந்தை கரணஞ் சிதைந்தனவே யென்று முனா
ளந்தமின்றித் தாழ வவையேற்குத்-தந்தருள
வெந்தை யிரா மாநுஜனா யீங்குதித்த பேரடியைச்
சந்ததமுஞ் சிந்தை தனிற் சார்–72-
என்னியல்பைப் பார்த்து மிக வெண்ணில்லாப் பற் குணத்தா
யென்னை யினி நோக்கி யெனக்கு நலந்–தன்னை
யளியாத தென் னென்பா ராருலகி னல்லோர்
களி யிரா மாநுஜனைக் கண்டு–73-
சார்ந்த தென் சிந்தை யுன் தாளிணைக் கீழன்பு மிகக்
கூர்ந்தது நின் பாதக் குணங்களுக்குத் தீர்ந்ததென்
செய்கை யிரா மாநுஜன் றாட் சேவடிக்கு முன் வினையு
முய்கையரி தன் றனவே யுன்னு–74-
சமயக் கலகரைச் சாய்த்து மிக வுய்ய
வமையு மறையு மளித்துத்–தமரவன்ற
னுள்ளங்க ணெய்த் தேத்த வோங்கு புகழ் தரு மா
வள்ளலிரா மாநுஜனை வாழ்த்து–75-
தேரார் மறையின் நிற மறியாத் தீயவரைக்
கூராழி கொண்டு குறை. கோபால–னேரார்
குணத்திரா மாநுஜன்றான் கொள்ளு மெழின் மறையின் மணத் திருந் தாரை மதி–76-
ஈந்தனனே யின்னருளா லெண்ணின் மறைப் பொருளை
யேய்ந்தனனே கீர்த்தி தனை யிப்படியிற் –காய்ந்தனனே
யென் வினைகள் வேர் பறிய வீங்கி ரா மாநுஜன் றன்
னன்மை தரு பாதமே நச்சு–77-
பொய்ப் பொருளை யென்னிற் பொருந்தாம லுன்றனது
மெய்ப் பொருளைப் போற்றி விசுவமதி–லுய்யு
மருத்துந் தரு மிரா மாநுஜ நின் சேவடியாற்
கருத்தினது கள்ளங் கழற்று–78-
நல்லார் பரவு மிரா மாநுஜன் றன் னாம நம்ப
வல்லார் திறத்தை மறந்திடார்க்–கெல்லா
விடத்தினு மென்று நித மெத் தொழும்புஞ் செய்யத்
திடத்திருக்கு நெஞ்சே தெளி–79-
சோர்வின்றி நின் றனக்குத் தொண்டு பட் டார்களிடஞ்
சார்வின்றி நின்ற வெற்குத் தாளிணைகள்–பேர்வின்றி வாய்ப்பக் கருணை யிரா மாநுஜன் றண் ணேரடிகட்
கேய்ப்ப தொன் நின்றே யினி–80-
தெரிவரிய ஞானத்தைச் சேர்ந்தொமுகப் பேணாத்
திரு வற்ற வஞ்ஞானஞ் சேரு–மரு வினையைப்
போக்கு மிரா மாநுஜனைப் போற்றினா னன்னெஞ்சே
யாக்கிடுவ னற் பதவி யாய்ந்து–81-
சீர் கொண்ட பேரறத்தைச் செய்பவர் தம் புண்ணியத்தாற்
பார் கொள்ளு முன் றன் பதயுகமா–மேர் கொண்ட
வீட்டை யிரா மாநுஜன்றான் மேன்மை பெற வீகுமவன் பாட்டை யறி மனமே பார்த்து–82-
கண் டுகொண்டே னுன் றன் கருணை தனை நித்த நித்தந்
தொண்டு கொண்டேன் றொண்டரது துய்யத்தாள்
விண்டு கொள வன்பவந்தா னெம்மிரா மா நுஜனை யேத்திட்டா
லென்னுலப்பு நெஞ்சே யினி–83-
ஓதிய வேதத்தி னுச்சியின் மீதிலகு
சோதியை நாதனெனச் சூழாதப்–பேதமையைத்
தீர்த்த விரா மாநுஜனைச் சேர்ந்தொழுகு தொண்டர் துகள்
போர்த்து நித நன்னெஞ்சே போற்று–84-
பற்றாத மாநுடரைப் பற்றிய தீப் பற்றை விடா
துற்றா ரெனவுழன் றோடாது–கற்றார்
பரவு மிரா மா நுஜனைப் பற்றுபவர் பெற்றா
லரணமக்கு நெஞ்சே யறி–85-
பெரியவர்க ணன் மொழியைப் பெட்புடனே சொல்லற்
குரிய மனதீதோ டிணங்கத்–தெரிவரிய
மானத் தரு மிரா மாநுஜன் றண் ணற் பதத்தைத்
தானமாய் புன்னெஞ்சே சாற்று–86-
தென் மொழியை யுண்டு திறந் தேர்ந்து தடித்ததனா
லன்பு மிகச் சீயமிரா மாநுஜன் றன்–னின்மொழிக்கு
வாதியராம் வேங்கை கடம் வாதனை கணிக்க வந்த
பாதநித நெஞ்சே பணி–87-
மாட்சித் தரு மிரா மாநுஜனே நின்னை யன்றிச்
சாட்சியொடு சாற்றுதற்குத் தாழ்வில்லா–வாட்சி பெறு
மேற்ற மென்றே கொண் டிருக்கு மென் சிந்தை தனக்
காற்று திறந் தந்தளிப்ப தார்–88-
நினையார் பிறவி தம்மை நீக்குகின்ற நாத
னெனை யாள வந்த விறையைப்–புனையா
ரிராமா நுஜன்மே லின்பு தரு பாக்க
ளராவும் பவமதனை யாய்ந்து–89-
ஆகமத்தார் கூறு மவப் பொருள்க ஞண்மை யுள
தாக மிகப் பயவா தண்டத்துக்–காகநதிச்
சேரு மரங்கனெனச் சீவர்க்குச் செப்பு பொருள்
பாரு மிரா மாநுஜன் றன் பண்பு–90-
புண்ணிய நோன்பு பொருந்துமிலேன் போற்றி செய
நுண்ணருங் கேள்வி நுவன்றுமிலே–னெண்ணரிய
கீர்த்தி யிரா மாநுஜ நீ கேள்விகண் ணெஞ்சில் புகுந்
தார்த்தி கெட வந்தருள்வை யாய்ந்து–91-
கட்டப் பொருளாங் கயவர் சொலும் புன் மறையின்
பெட்டைக் கெடுத்தவர் தம் பேதமையை– வெட்டிப்
பவத்தை யிரிக்கு மிரா மாநுஜன் றன் பாதத்
துவமித்தற் கூடொணா வுய்த்து–92-
தவந் தருஞ் செல்வந் தகவுந் தரு மெம்
பவந் தருந் தீ வினைகள் பாற்றித்–திவந்தருந்
தீதிலிரா மா நுஜனைச் சேர்ந்தவர் க டம்பதத்தை
யோதிடுவாய்:நெஞ்சே யுணர்ந்து–93-
உண்ணின் நுயிர்கடமக் குற்றனவே செய் துயர்வு
பண்ணும் பரனும் பரிவுடனே–யெண்ணு நன்
மாடளிப்பன் றண்ணி ரா மாநுஜனிம் மேதினி யிற்
றேடரிய வேததந் தெரித்து–94-
வளரும் பிணி கொண்ட வல் வினையான் மிக்கக்
கிளருந் துணிவுங் கெடுத்துத்–தளரு நிலை
யாய்ந்திரா மாநுஜன்று னன்போ டுவந்து பவஞ்
சாய்ந்திரா தென் கொலோ சாற்று–95-
போந்த தென் னெஞ் சென்னும் பொன் வண் டுனதடியிற்
காந்தெளி தேனுண் டகங்களிக்க–வீந்தருள
வேண்டு மிரா மாநுஜனே வேறொன்று காட்டி மயக்
காண்டிடினுஞ் செல்லா தறி–96-
மயக்கு மிரு வினையாம் வல்லி தனைப் பூண்டு
துயக்கும் பிறவித் துயரி–லுயக் கொண்டு
நல்க விரா மாநுஜவித் நானிலத்தி னின்னை யுன்ன
லல்லா திழுக்கெனவே நாட்டு–97-
உன் றன் குணங்களையே யுன்னி யென் னாவிருந்
தென்று மிரா மாநுஜவென் றேத்த நித–நன்று தர
கையுந் தொழுங் கண் கருதிடுமே காணுதற்க
வைய மதனின் மதித்து–98-
இருக்குமிடம் வைகுந்தம் வேங்கடமெண் சோலைப்
பொருப்பிட மா மாயனுக்குப் போற்றி –யிருக்குமிட
மாயனி ரா மாநுஜ நின் மா மனத் தின்றவன்றான்
றாயகமா யென்னகத்திற் சார்வு–99-
அங்கயல் சூழு மணி யரங்க நாதனொடு
பங்கயமாம் பாவைப் பழிச்சுதுந்– துங்கமதாய்தீ
தங்கிய பத்தித் தலை மிசையே கீர்த்தி மிகப்
பொங்கு மிரா மாநுஜன் றண் பூ–100-
பூதலமுந் தான் வாழிப் பூ மகளுந் தான் வாழி
வேதமுதன் மற்றெவையும் வீறுதற்கு–நாதனருட்
பெற்ற விரா மாநுஜனும் பெட்பொடு சொன் மாலைக்
கற்றவரும் வாழி நிதங் காண்–101-
வாழி யிரா மாநுஜனும் வாழி யவன் பாமாலை
வாழியதைக் கற்ற வரு மாநிலத்தில்–வாழியவன்
நற்றவரும் வாழி யரு ணண்ணினரும் வாழி யவன்
சொற்ற மொழி வாழித் தொடர்ந்து–102-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-