ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 4-ஆசார பாதம்-4-ஸாஸ்த்ர தாத்பர்ய நிஷ்டாசாராதிகரணம்‌ -19-38-ஸூரணைகள் -ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

இனி மேல் இந்த சாஸ்திர நிஷ்டராயும்-தாத்பர்ய நிஷ்டராயும் இருக்கும் முமுஷுக்கள் படிகளைச் சொல்லுகிறது-இனி மேல்‌ ஸாஸ்த்ரோப லக்ஷிதமான பக்தி நிஷ்டனுடையவும்‌, தாத்பர்யோப லக்ஷிதமான பிரபத்தி நிஷ்டனுடையவும்‌ ப்ரதிபத்திகளைச்‌ சொல்லுகிறது 

சாஸ்திரிகள் தெப்பக் கரையரை போலே இரண்டையும் இடுக்கி பிறவிக் கடலை நீந்த -சாரஜ்ஞர் விட்டத்தில் இருப்பாரைப் போலே இரு கையும் விட்டு கரை குறுகும் காலம் எண்ணுவார்கள்-சூரணை-19-

அதாவது-ஆத்மா வா அரே த்ரஷ்டவ்யாஸ் ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்யாசி தவ்ய–ப்ருஹதாரண்யம் –
ஆத்மேத் யேவோபாசீத–ப்ருஹதாரண்யம் – ஒமித் யாத்மானாம் த்யாயத-முண்டகம் – என்று சம்சார நிவ்ருத்தி பூர்வக பகவத் பிராப்தி சாதனமாக பகவத் உபாசனத்தை விதித்து அம்ருதஸ் யைஷ சேது-முண்டகம் – பலமதே உபபத்தே-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-8– என்று பகவானே அதற்க்கு பல பிரதானனாகவும் சொல்லும் சாஸ்த்ரத்தில் நிஷ்டர் ஆனவர்கள்
ஆறு நீஞ்சுவார் தெப்பத்தை ஒரு கையிலே இடுக்கி தாங்களும் ஒரு கை துழாவுமா போலே
ஸ்வ யத்னமும் தத் சாத்திய பகவத் கிருபையும் ஆகிய உபயத்தையும் அவலம்பித்து கொண்டு -பிறவி கடல் நீந்துவார்க்கே -திருவாய் -2-8-1–என்கிற படியே சம்சார சாகரத்தை கடக்க தேட–ஸ்வ யத்ன நிஷேத பூர்வகமாக ஆத்மாவின் பகவத் ஏக உபாயத்தை பிரதி பாதிக்கிற சாஸ்திர சாரமான திரு மந்த்ரஜ்ஞர் ஆனவர்கள் ஓடம் ஏறினவர்கள் தீரகமனார்தமான ஸ்வ யத்னத்தையும் தெப்பத்தையும் கை விட்டு –கரை குறுவது எப்போது -என்று பார்த்து கொண்டு அதன் விட்டத்திலே இருக்குமா போலே சம்சார ஆர்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம் விஷ்ணு போதம் விநாநாந்யத் கிஞ்சித் அஸ்தி பாராயணம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம்-என்கிற படியே அக்கரையும் இக்கரையும் ஊடுருவ நின்று சம்சார சமுத்ரத்தை கடத்தும்
வைகுந்தன் என்பதோர் தோணியை-நாச்சியார் -5–4– சம்சார நிஸ்தாரமாகப் பற்றி-தத் ஞான சக்தியாதி அனுசந்தானத்தாலும் ஸ்வ பாரதந்த்ர்யாதி அனுசந்தானத்தாலும் நிர் பரர் ஆகையாலே இரண்டு கையும் விடுமா போலே ஸ்வ யத்ன ரூப உபாசனாதியையும் தத் சாத்திய பகவத் கிருபையையும்
அவலம்பிக்கையை விட்டு கேவல பகவத் கிருபையே உத்தாரகம் என்று அத்யவசித்து
கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ
-திருவாய் -6–9–9 -என்றும்
ஆக்கை விடும் பொழுது எண்ணே–திருவாய் -1–2–9-என்று சொல்லுகிற படியே
பகவத் பிராப்தி ஆகிய கரையை குறுகைக்கு ஈடான கால சிந்தனை பண்ணா நிற்பார்கள் என்கை-இத்தால் சாஸ்த்ரஜ்ஞர் உடையவும் சாரஜ்ஞர் உடையவும் பிரபத்தி க்ரமம் சொல்லிற்று ஆயிற்று-

ஆறு நீஞ்ச வந்தவன்‌ தெப்பத்தை ஒரு கையிலே இடுக்கியும்‌, தானும்‌ ஓரு கையாலே நீஞ்சுமாப் போலே, பக்தி நிஷ்டனும்‌, ஸ்வ யத்நமும்‌ ஸ்வ யத்ந ஸாத்‌யமான பகவத் க்ருபையையுங் கொண்டு ”புணைவன்‌ பிறவிக் கடல்‌ நீந்துவார்க்கே”‘ (திருவாய்‌, 2 – 8 – 1) என்கிறபடியே ஸம்ஸார ஸாக,ரத்தைக்‌ கடக்கத்‌ தேடும்‌. (ஸாரஜ்ஞர்‌) தாத்பர்ய நிஷ்டரான ப்ரபந்நரானவர்கள்‌. (விட்டத்திலிருப்பாரைப்‌ போலே) ஆற்றின்‌ கரையேறிப்‌ போகிறவன்‌ அதில்‌ யத்நத்தில்‌ அந்வயமற்று விட்டத்திலிருக்குமாப் போலே ; ”விஷ்ணு போதம்‌ விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்‌?’ ( ) என்கிறபடியே அக்கரையோடு உருவ நின்று நடத்துகிற ‘*வைகுந்தனென்பதோர்‌ தோணி?” (நா. திரு. 5 – 4) என்கிற விஷ்ணு போதத்திலே இருந்து அவனுடைய ஜ்ஞாந ஸக்த்யாதி, கு,ணாநுபவத்தாலும்‌ ஸ்வ பாரதந்தர் யாநுஸந்தாநத்தாலும்‌ நிர்பரராய்‌ மேல்‌ உபாயதயா கர்த்தவ்ய மில்லாமையாலே, இரு கையும்‌ விட்டு – அசேதந க்ரியா கலாபத்தையும்‌ தத் ஸாத்‌யமான பகவத் க்ருபையையும்‌ விட்டு – கேவல பகவத் க்ருபையே தங்களுக்கு உத்தாரகம்‌ என்று அத்‌யவஸித்துக்‌ கரை குறுகும்‌ காலமெண்ணுவர்கள்‌.கூவிக் கொள்ளுங்கால மின்னம்‌ குறுகாதோ” (திருவாய்‌. 6 – 9-9) என்றும்‌, “ஆக்கை விடும் பொழுதெண்ணே’” (திருவாய்‌, 1 – 2 – 9) என்றும்‌ சொல்லுகிறபடியே ப்ராப்தியைச்‌ சிந்தித்திருப்பார்கள்‌,

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-–சம்சாரம் ஆகிறது ஒரு கடல் -அது நம்மால் கடக்க அரிது -ஒரு சர்வ சக்தியைப் பற்றி கடக்க வேணும் -என்று நினைப்பார்க்கு ப்ரதி பூவாய்த் தலைக்கு கட்டிக் கொடுக்கும் சர்வ பர நிர்வாஹகன் இறே– ப்ரதி பூ விஷ்ணு போதம் என்கையாலே தெப்பம் என்னவுமாம்

என்புருகி இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4—உகந்து அருளின நிலங்களிலே புக்கு அனுபவிக்கக் கோலி அங்கு அணைத்தல் வார்த்தை சொல்லுதல் செய்யக் காணாமையாலே அப்படிப் பரிமாறின அவதாரங்களிலே போய் அவை தீர்த்தம் பிரசாதித்து போகையாலே-பரத்வத்து அளவும் சென்று அவ்விருப்புத் தானும் பெரும் கடலுக்கு ஒரு மரத் தோணி போலே யாம்படியாக அபி நிவேசம் கரை புரண்டு அதனுடைய அலாபத்தாலே படுகிற அலமாப்பு இருக்கிறபடி –

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-
–வரையாதே எல்லார்க்கும் கொடுக்கும் நிரதிசய போக்யமான திருவடிகளில் -அழைத்துக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –விஷயாந்தர தர்சன மாத்திரத்திலே முடியும் படி யானாலும் அணித்தாகாதோ -தாவி வையம் கொண்ட -என்கிறது உபாய அம்சம் –தடந்தா மரைகள் -என்கிறது உபேய அம்சம் –கூவிக் கொள்ளும் காலம்-என்று தாம் சென்று காண்கை அன்றிக்கே தானே அழைத்துக் காட்டுகை முறையாகையாலே கிட்டும் பிரகாரம் சொல்லுகிறது-

ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே
–1-2-9—ஈச்வரோஹம் என்று இருக்கை தவிர்ந்து -அவனுக்குப் பிரகாரமாக அவன் அபிமானத்துக்கு உள்ளே அந்தர்பவிக்கவே-எல்லாம் விடும்
ஒடுங்கல் -ஒடுக்கத்தை பண்ணுமவை – ஆத்மாவுக்கு சங்கோசகங்களான அவித்யாதிகள் எல்லாம் போம் –ஒடுங்கல் -வந்தேறி யாய் -ஒடுங்கிக் கிடந்தவை என்னுமாம்-ஸ்வரூபாதி ரேகியாய் ஒடுங்கிக் கிடந்த அவித்யாதிகள் எல்லாம் போம்-எல்லாம் என்கையாலே -பஜன விரோதியோடு -பிராப்தி விரோதியோடு -வாசி அற சர்வமும் நசிக்கும் என்கிறது-பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே-
பின்பு சரீர அவசானமே விளம்பம் காமிநி தன் உடம்பில் அழுக்கைக் கழற்றி போகத்திலே அந்வயிக்க அவசர ப்ரதீஷியையாய் இருக்குமா போலே சரீர அவசானத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கை

இவர்களுக்கு இவ் ஆகாரங்கள் உண்டாகுகைக்கு அடி இன்னது என்கிறது-இவர்களுக்கு அவ்வதி,காரமுண்டாகைக்கு ஹேதுவான ஸ்வரூப ஜ்ஞாந தாரதம்யத்தைச்‌ சொல்லுகிறது

இவை ஸ்வரூபத்தை உணர்ந்து உணர்ந்து உணரவும் உணர்வைப் பெற ஊர மிக உணரவும் உண்டாம்-சூரணை -20-

அதாவது சாஸ்த்ரிகள் ஆனவர்களுக்கு-உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து
உருவியந்த இந் நிலைமை உணர்ந்து உணர்ந்து உணரிலும்
–திருவாய் -1-3-6- என்கிற படியே
ஆத்ம ஸ்வரூபத்தை ஜ்ஞப்த்தி மாத்ரம் அன்றிக்கே-நித்ய ஞான குணகமாய்-அந்த ஞானத்தாலே எங்கும் ஒக்க வியாபித்து-தேஹத்தில் காட்டில் வேறு பட்டு இருக்குமதாய்-அந்த ஜ்ஞாத்ருத்வ பலாயாத கர்த்ருத்வ போக்த்ருத்வ சஹிதமாய் பகவத் சேஷமாய் இருக்கும் என்று ஸ்ரவண மனனங்களாலே சாஷாத் கரிக்கவே ஸுவ யத்னத்தாலே சம்ஸார நிஸ்தரணம் பண்ண தேடுகை யாகிற இது உண்டாம்-சாரஞ்ஸ்தஞரானவர்களுக்கு ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை தர்சிப்பைக்கு உடலாக
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதே யாம் உணர்வை பெற ஊர்ந்து -திருவாய் -8–8–3-–என்கிற படியே வைஷயிக ஞானமும் பிராணனும் சரீரமும் மற்றும் பரிசேத்யமான பிராகிருதி விகாரங்களும் , பிரக்ருதியும் ஹேயம் என்னும் அறிவை பெரும் படி நிர்ஹேதுகமாக ஈஸ்வரன் நடத்த
மெய்ம்மையை மிக உணர்ந்து-திருமாலை -38 -என்கிறபடியே-ஆத்ம ஸ்வரூபத்தை-தேஹாதி விலக்ஷணமாய் ஞான ஆனந்த ஸ்வரூபமாய் ஞாத்ருவாதி குணகமாய் ததீய சேஷத்வ பர்யந்த தத் சேஷத்வ யுக்தமாய் தத் காஷ்டையான பார தந்த்ர்ய யோக்யதை ஏக வேஷமாய் இருக்கும் என்றே உணரவே ஸ்வ பரத்தை அவன் மேல் புகட்டு ஸ்வ யத்ன ரஹிதையராய் இருக்கிற இது உண்டாம் என்கை–இத்தால் இவர்கள் உடைய ஸ்வரூப ஜ்ஞான ஆகார தார தம்யமே கீழ் சொன்ன ஆகாரங்கள் இவர்களுக்கு உண்டாகுகைக்கு ஹேது என்றது ஆயிற்று-

(உணர்ந்துணர்ந்துணரவும்‌) ‘உணர்ந்துணர்ந்திழிந்தகன்று உயர்ந்து உருவியந்த இந் நிலைமை உணர்ந்துணர்ந்துணரிலும்‌’” (திருவாய்‌. 1 – 3 – 6) என்கிறபடியே ஆத்ம ஸ்வரூபத்தை ஜ்ஞப்தி மாத்ர மன்றிக்கே நித்ய ஜ்ஞாந குணகமாய்‌ தேஹேந்தரியாதி, விலக்ஷணனாகவும்‌, ஜ்ஞாதாவாகவும்‌, கர்த்தாவாகவும்‌ பகவச் சேஷமாகவும்‌ ஸ்ரவண மநநாதிகளாலே ஸாக்ஷாத்கரித்த ஸாஸ்த்ரிகளுக்கு அந்த வ்ருத்தி உண்டாம்‌. (உணர்வைப்‌ பெறவூர மிகவுணர்வுமுண்டாம்‌)‘உணர்வுமுயிருமுடம்பும்‌ மற்றுலப்பிலனவும்‌ பழுதேயாம்‌ உணர்வைப் பெறவூர்ந்து ” (திருவாய்‌. 8. 8.3) என்கிறபடியே தேஹேந்த்‌ரியாதிகளில்‌ வ்யாவ்ருத்தமான ஆத்ம ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்கும்படி நிர்ஹேதுகமாக ஈஸ்வரன்‌ நடத்த “மெய்ம்மையை மிக வுணர்ந்து’‘ (திருமாலை 38) என்கிறபடியே ததீய ஸேஷத்வ பர்யந்தமாக உணர ப்ரபந்நனுக்கு இந்த ப்ரதிபத்தி உண்டாம் –

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும்
இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6–உணர்ந்து உணர்ந்து -ஞாத்ருத்வ ஸ்வபாவனாகையாலே என்றும் ஓக்க உணருகையே ஸ்வபாவமாக உடையனாய்
இழிந்து அகன்று உயர்ந்து -அந்த ஞானம் நிஷ்க்ருஷ்ட வேஷத்தில் அபரிச்சின்னமாகையாலே தத் த்வாரா பத்து திக்கிலும் வியாபித்து-உருவியந்த -உரு வியந்த -ரூப யோக்கியமான அசித்தில் காட்டில் வேறு பட்டு இருந்த -இயத்தால்-வேறுபாட்டால் விலக்ஷணமாய் இருத்தல்-இந் நிலைமை-இந்த ஆத்மாவின் நிலைமையை -இந்நிலைமை என்று யுக்த பிரகார வைலக்ஷண்யம் ஆத்மாவுக்கு ஒழிய இல்லை என்கிற ஸம்ப்ரதிபத்தியைச் சொல்லுகிறது –-உணர்ந்து உணர்ந்து உணரிலும் – ஸ்ரவணத்தாலே உணர்ந்து -அதுக்கு மேலே மனனத்தாலே உணர்ந்து -யோகத்தால் சாஷாத் கரித்து உணர்ந்தாலும்-இறை நிலை உணர்வு வரிது -சர்வேஸ்வரன் ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவே தன்னை மறைத்து நிற்கிற நிலை விவேகித்து அறிய அரிது–உயிர்காள்-சேதனர் ஆனபடியால் விவேகித்து அறியும் ஸ்வ பாவரானவர்களே-அரி அயன் அரன் என்னும் இவரை-அரி அயன் அரன் என்று பிரசித்த ரானவர்களை-உணர்ந்து உணர்ந்து –அவர்கள் குண விபூதியாதிகளை இட்டுப் பலகாலும் ஆராய்ந்து
உரைத்து உரைத்து –தத் ப்ரதிபாதகமான ப்ரமாணங்களையும் பலகாலும் வ்யவஹரித்துப் பார்த்துப் பார்த்து-மனப்பட்ட தொன்றே-நெஞ்சிலே ஈஸ்வரனாகப் பட்ட ஒரு வஸ்துவை – வ்யாஹரன் மாம் அநு ஸ்மரந்–என்கிறபடியே-உணர்ந்து உணர்ந்து -தத் குண விக்ரஹாதிகளைப் பலகாலும் அநு சந்தித்து
உரைத்து உரைத்து இறைஞ்சுமின் –தத் வாசகமான மந்த்ர நாமாதிகளைப் பலகாலும் வ்யவஹரித்து உபாசியுங்கோள் –

உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8
-8-3—உணர்வும்-வைஷயிக ஞானமும்
உயிரும்-பஞ்ச வ்ருத்தி பிராணனும் உடம்பும்-சரீரமும்-மற்று உலப்பினவும் -மற்றும் அபரிச்சேத்யமான மஹதாதி ப்ரக்ருதி விகாரங்களும் -ப்ரக்ருதியும்-பழுதேயாம்-உணர்வைப் பெற ஊர்ந்து–இவை ஹேயம் என்னும் அறிவை நான் பெறும்படி நடத்தி -தேரூர்ந்து என்னுமா போலே -இவை அபுருஷார்த்தம் என்னும் உணர்வு யுண்டு -மயர்வற்ற மதி -அத்தை நான் உடையேனாம் படி பண்ணி-இறவேறி-ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் அபுருஷார்த்தம் என்னும் அளவே அன்றிக்கே முடிய போய் -ஞானானந்த ஸ்வரூபனாய் -நித்யனாய் -ஸ்வதஸ் ஸூ கியாய் இருக்கிற அளவும் செல்ல அறிவித்து-யானும் தானாய் ஒழிந்தானே––அவ்வளவிலும் பர்யவசியாதே –என்னைச் சொல்லும் சொல்லாலே தன்னைச் சொல்லலாம் படி தனக்கு பிரகார தயா சேஷம் என்னும் இடத்தைக் காட்டித் தந்தான் –அஹம் புத்தியும் அஹம் சப்தமும் தன்னளவும் செல்லும் படி பிரகார தைக வேஷமாய் இருக்கிறபடியைக் காட்டித் தந்தான் –தச்சப்தம் குண விசிஷ்ட வாசியானாவோ பாதி -த்வம் -சப்தமும் -அசித் விசிஷ்ட ஜீவ அந்தர்யாமி யாம் அளவும் காட்டக் கடவது இறே –

மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம் பரிசறிந்து கொண்டு ஐம் புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே–38–மெய்ம்மையை மிக உணர்ந்து –மெய் -என்கிறது ஆத்மாவை –மெய் -எனபது ஆத்மாவைக் காட்டுமோ -என்னில் —சத்யஞ்சா ந்ர்தஞ்ச சத்ய மவபவத் -என்கிற ஸ்ருதி சாயையால் அருளிச் செய்கிறார் –-சத்ய சப்தம் அசத்திய வ்யாவர்த்தியை சொல்லுகிறது அன்று ஆத்ம ஸ்வரூபத்தின் நித்யதையைச் சொல்லுகிறது –மெய்ம்மை -என்று முழுச் சொல்லாய் – பிரத்யக் விஷயத்தைச் சொல்லுகிறது – கைம்மை பொய்ம்மை -என்னுமா போலே-ஆக மெய்ம்மை -என்று – மெய்யான தன்மை -என்றபடி –மிக உணர்ந்து –தேகமே ஆத்மா என்று இருக்கும் லோகாயதிகன் அளவன்றிக்கே –தேகாதிரிக்தமாய்-ஸூயமாய் இருக்கும் ஆத்மா என்னும் மீமாம்சகன் அளவன்றிக்கே-ஜ்ஞானம் ஆகந்துகம் -என்னும் வைசேஷிகன் அளவன்றிக்கே –1-ஸுவயம் பிரகாசனாய்-2-நித்யனாய்-3-ஜ்ஞான குணகனாய்-4-அணு வாய்-5-ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷமாய்-6-அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாக உணருகை –
அதாவது ஆத்மாவை உள்ளபடி உணருகை –ஆம் பரிசறிந்து கொண்டு--பிரக்ருத ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் -என்று அறிந்து மேலும் ஆத்மாவை உள்ளபடி உணர்ந்தால் – பின்னையும்-ஆம் பரிசு ஆவது –
கைங்கர்யமே யாய்த்து –-ஆம் பரிசு வர்த்திக்கும் படியை அறிந்து – ஆத்மா அபிமான ரூபமாக வாய்த்து வ்ருத்தி ஹேதுக்கள் தான் இருப்பது –தாசோஹம் -என்ற போது -கைங்கர்யமே வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –பிரகிருதி பிராக்ருதங்களில் சங்கோசம் போய் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தால் சஹஜ கைங்கர்யமே இறே வ்ருத்தி ஹேதுவாவது –பிரகிருதி பிராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற ஜ்ஞானமும் –
ஆத்மா பகவத் பரதந்த்ரன் என்கிற ஜ்ஞானமும் பிராப்யம் கைங்கர்யம் என்கிற ஜ்ஞானமும் இறே சேதனனுக்கு வேண்டுவது –விடுவிக்கையும் பற்றுவிக்கையும் உபாய பூதனான ஈஸ்வரன் கார்யம் இறே –

ஆக-முனிவரை இடுக்கியும் -சூரணை -17 -என்று தொடங்கி இவ் வளைவாக சாஸ்திர தாத் பர்யங்களின்
விஷய பேதமும் அதிகாரி பேதமும் அவ் அதிகாரிகளின் பிரதி பத்தி பேதமும் அதுக்கு அடியான ஜ்ஞான ஆகார தார தம்யமும் சொல்லப் பட்டது-

ஸ்வரூப ஞானம் என்றும் ஸ்வரூப யாதாத்மா ஞானம் என்றும் ஆத்ம ஸ்வரூப விஷய ஞானத்திலே தார தம்யம் உண்டு இறே -அதில் பதிம் விச்வசஸ்ய-ஸ்ரீ புருஷ ஸூக்தம்- என்றும்-யஸ்யாஸ்மி என்றும்
நஹி விஜ்ஞாதர் விஜ்ஞாதேர் விபரிலோபோ வித்யதே ஞாநாத் யேவாயம்புருஷ -ப்ருஹதாரண்யம்-6-3-10–என்றும்-ஆத்மாவுக்கு பகவத் சேஷத்வத்தையும் ஜ்ஞாத்ருத்வத்தையும் சொல்லி-அந்த ஜ்ஞாத்ருத்வ கார்யமான போக்த்ருத்வ பிரயோஜனமாக-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மண விபச்சிதா -தைத்ரியம் -என்று பகவத் அனுபவத்தையும் சொல்லுகிற சாஸ்திர முகத்தாலே ஸ்வரூபத்தை அறியும் அளவில் பகவத் சேஷத்வமும் பகவத் அனுபவ போக்த்ருத்வமும் இறே பிரகாசிப்பது-அந்த சாஸ்திர தாத் பர்யமான திரு மந்த்ரத்தில் உள் புக்கால் இறே பாரதந்திர போக்யதா ரூபமான ஸ்வரூப யாதாத்ம்யம் பிரகாசிப்பது-இதுவே ஸ்வரூப யாதாத்ம்யம் என்னும் இடத்தை அறிவிக்கிறார் மேல்-
(சேஷத்வம் -அகாரம்-லுப்த சதுர்த்தி -பரமாத்மாவுக்கே ஜீவாத்மா சேஷன் -சேஷத்வம் ஸ்வரூபம்-தாதரத்தே சதுர்த்தி- லுப்த சதுர்த்தி -போக்த்ருத்வம் மகாரம்-ஞாத்ருத்வம் -மன ஞானே–மன அவபோதனே-பாரதந்தர்யம் நம -போக்யதை-நாராயணாய நம -பிரார்த்தனா சதுர்த்தி இங்கு -அஹம் அன்னம் –அவன் -அந்நாதா –தட்டு மாறும் சீலம் காட்கரையிலே கொழிக்கும் சந்தன குசுமாதிகள் போலே நாராயணாய நம -என்றபடி )-இந்த ஸ்வரூப ஜ்ஞாநமும்‌ ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமுமாகிற இவை யிரண்டும்‌ தன்னிலொக்குமோ என்னில்‌ ; ஒவ்வாது என்கிறார்‌

சேஷத்வ போக்த்ருத்வங்கள்-போல் அன்றே-பாரதந்திர போக்யதைகள்--சூரணை -21 –

அதாவது –சேஷத்வம் ஆவது இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரம்-பாரதந்த்ர்யம் ஆவது சேஷிக்கு இஷ்டமான படியே விநியோகப் படுகை-கட்டிப் பொன் போலே சேஷத்வம்-பணிப் பொன் போலே பாரதந்த்ர்யம்-என்னக் கடவதிறே ஆகையால் சேஷ வஸ்துவை சேஷிக்கு இஷ்டமான படியே
விநியோகப் படுத்தும் அது பாரதந்த்ர்யம்
போக்த்ருத்வம் ஆவது ஜ்ஞாத்ருத்வ பலத்தாலே போக தசையிலே விளைகிற ரசங்களுக்கு தான் போக்தாவாகை-போக்யதை யாவது பதார்த்த கதமான ரச வர்ணாதிகள் போக்தாவுக்கு போக்யமாய் இருக்கும் போலே ஆத்ம கதமான ஜ்ஞானாதிகளும் ஈஸ்வரனுக்கே போக்யமாய் இருக்கை-ஆகையால் இஷ்ட விநியோக அர்ஹ மாத்ரமாய் சேஷத்வம் போல் அன்றே-இவ் வஸ்துவை சேஷிக்கு இஷ்டமான படி விநியோகப் படுத்தி கொடுக்கிற
பாரதந்த்ர்யம் போகத்தில் ஸ்வார்ததா புத்தி ஹேதுவான போக்த்ருத்வம் போல் அன்றே அந்த
போக்த்ருத்வத்தை சேஷி உடைய பிரிய உபயோகி ஆக்கிக் கொடுக்கிற போக்யதை
என்ற படி-

ஸேஷத்வமாவது – இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரம்‌. பாரதந்தர்யமாவது – அந்த ஸேஷ வஸ்துவை ஸேஷிக்கு இஷ்ட மானபடி விநியோகப் படுத்திக்‌ கொடுக்குமது. போக்த்ருத்வமாவது – ரஸாரஸங்‌களுக்குத்‌ தானே போக்தாவாகை. போக்‌யதையாவது – பதார்த்த, கதமான ரஸ வர்ணாதிகள்‌ போக்தாவுக்கே போக்‌யமா யிருக்குமாப் போலே ஆத்ம கதமான ஜ்ஞாநாதிகளும்‌ ஈஸ்வரனுக்கே போக்‌யமாயிருக்கை, ஆகையால்‌ இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரமான சேஷத்வம் போலே யன்றே, அத்தை இஷ்டமானபடி விநியோகப் படுத்திக்‌ கொடுக்கிற பாரதந்த்ர்யம்‌. ஸ்வ போகத்துக்கும்‌ ஹேதுவாயிருக்கிற போக்த்ருத்வம்‌ போலே யன்றே அந்த போக்த்ருத்வத்தை ஸேஷியினுடைய ப்ரியோப யோகி,யாக்கிக்‌ கொடுக்கிற போக்‌யதை.

இவ் அர்த்தத்தை ஸ்வரூப யாதாத்ம்ய பிரகாசமான திரு மந்த்ரத்திலே தர்சிப்பிக்கிறார்-

ஜ்ஞான சதுர்த்திகளின் மேலே இறே ஆநந்த ஷஷ்டிகளுக்கு உதயம்--சூரணை -22 –
(ஞான -மகாரம் -லுப்த சதுர்த்தி முன்னால்–போக்யதை -ஆனந்தம் -நாராயணாய அர்த்தம் -ஷ்ஷடி -நமஸ் -பாரதந்தர்யம் -சதுர்த்தி ஞானங்களுக்கு மேலே இறே ஷ்ஷடி ஆனந்தங்களுக்கு உதயம் என்று சொல்லாமல் —உத்கீத பிரணவத்தை பிரதமத்தில் மாறாடி-என்பதால் – அச்சு எழுத்து குறைவாக -அல்ப அக்ஷரம் பூர்வம் -என்பதாலும் -)

அதாவது ஆத்ம வாசியான ம காரத்திலே –மன – ஜ்ஞானே -என்கிற தாதுவிலே உதிதமாய்
போக்த்ருத்வ பிரகாசமாய் இருக்கிற ஜ்ஞானத்தின் மேலே இறே-அந்த மகார விவரண ரூபமாய் போக்யதா பிரகாசகமான சதுர்த்தியில்-ஆனந்தத்துக்கு உதயம்-பிரதம அஷரத்தில் சேஷத்வ வாசியான லுப்த சதுர்த்தியின் மேலே இறே பாரதந்த்ர்ய பிரகாசமான நமஸுக்கு உதயம் என்கை–இத்தால் ஆத்ம ஸ்வரூபத்தின் உடைய சேஷத்வ போக்த்ருத்வங்கள் உதித்து இருக்க செய்தே அதன் மேலே ஸ்வரூப யாதாத்ம்ய வேஷமாக உதித்தவை ஆகையாலே சேஷத்வ போக்த்ருத்வங்களில் -பாரதந்த்ர்ய போக்யதைகளுக்கு நெடு வாசி உண்டு என்றது ஆயிற்று–இந்த யோஜனைக்கு அல்பம் அனுபபத்தி உண்டு-ஷஷ்டி என்கிற இது -முக்ய விருத்தி யாலே ஆதல்-கௌன விருத்தியாலே ஆதல் நமஸை காட்டாமையாலே-ஷஷ்ட்யந்த பதம் என்கிறதை ஷஷ்டி என்று சொல்லிற்று ஆகாதோ என்னில்
அது சேராது –நமஸு இரண்டு பதம் ஆகையாலும் அதில் உத்தர பதமே ஷஷ்ட்யந்தம் ஆகையாலும் ..
ஆனால் செய்ய அடுப்பது என் என்னில் இன்னும் ஒரு யோஜனை சொல்லப் படுகிறது-
(ஞாத்ருத்வமும் போக்த்ருத்வமும் -தங்கள் விரோதிகளை -ஸ்வாதந்த்ரத்தையும் ஸ்வார்த்தத்தயா போக்த்ருத்வத்தையும் – உதிப்பத்தை சகிக்கும் -ஆனால் பின்பு தள்ளும் -ந -நிஷேதையாலே-
ஆகவே நமஸ் நாராயணாய நம என்று கூட்டி பொருள் என்றவாறே – சேஷத்வத்துக்கு மேலே ஸ்வாதந்தர்யம் உதிப்பதால் அது தாழ்வு –பாரதந்தர்யம் உயர்ந்தது என்றவாறு இத்தை விசாரிக்கவே ஸ்ரீ மா முனிகள் ஸ்ரீ மேல்கோட்டைக்கு எழுந்து அருளி ஸ்ரீ ஆய் ஸ்வாமிகளைக் கண்டு இருவரும் ஸ்ரீ திருக்குருகூருக்கு மீண்டார்கள் )அதாவது த்ருதிய அஷரத்திலே –மன -ஜ்ஞானே -என்கிற தாதுவிலே உதிதமாய் போக்த்ருத்வ பிரகாசமான ஜ்ஞானத்தின் மேலே இறே மகார விவரணமான சதுர்த்தியில்
சொல்லப் படுகிற போகத்தில் காகாஷி ந்யாயத்தாலே நமஸ் சப்தத்தாலே கழிக்க படுகிற ஸ்வ பிரயோஜனத்வ பிரயுக்தமான ஆனந்தத்துக்கு உதயம் பிரதம அஷரத்திலே சேஷத்வ வாசியான சதுர்த்தியின் மேலே இறே--நஜ்ஞாலே நிஷேதிக்க படுகிற ஸ்வ ரஷணே ஸ்வ பிரவ்ருத்தி ஹேது பூத
ஸ்வதந்த்ர்யா பிரகாசி யான ஷஷ்டிக்கு உதயம்
என்கை
இத்தால் சேஷத்வ பிரகாசமான சதுர்த்தியின் மேலே ஸ்வ ரக்ஷண ஹேது பூத ஸ்வதந்த்ர்ய வாசியான ஷஷ்டி உதிக்கையாலும் போக்த்ருத்வ பிரகாசமான ஜ்ஞானத்தின் மேலே போக ஸ்வார்ததா புத்தி மூலமான ஆனந்தம் உதிக்கை யாலும் சேஷத்வ போக்த்ருத்வங்கள் ஸ்வரூப விரோதி உதய சஹங்களாய் இருக்கும்-நமஸிலே பாரதந்த்ர்யம் உதித்த பின்பு ஸ்வ ரஷணே ஸ்வ யத்னம் நிவ்ருத்தம் ஆகையாலும் நமஸ் சப்த அனுக்ருஹீதையான-(நாராயணாயா நம )சரம சதுர்த்தியிலே ஈஸ்வரனுக்கு போக்யமாய் இருக்கையே ஆத்மாவுக்கு வேஷம் என்று தோற்றின பின்பு ஸ்வ பிரயோஜனம் நிவ்ருத்தம் ஆகையாலும் பாரதந்த்ர்ய போக்யதைகள் ஸ்வரூப விரோதி உதய சஹங்கள் அன்று .-ஆகையால் ஸ்வரூப விரோதி உதய சஹங்களான சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல அன்றே அத்தை சகியாத படி இருக்கும் பாரதந்த்ர்ய போக்யதைகள் என்றது ஆயிற்று-

ஆகையிறே போக்த்ருத்வ ப்ரகாஸகமாய்‌ “மந – ஜ்ஞாநே‘ என்கிற தாதுவிலே உதிதமான ஜ்ஞாநத்துக்கு மேலே அந்த மகார விவரண ரூபமாய்‌ போக்‌யதா ப்ரகாஸகமான சரம சதுர்த்தி யிலே ஆநந்தம்‌ உதித்ததும்‌, ஸேஷத்வ ப்ரகாஸகமான சதுர்த்தியின் மேலே பாரதந்த்ர்ய ப்ரகாஸகமான ஷஷ்டி, உதித்ததும்-

இப்படி ஸ்வரூப யாதாம்ய ஞான தசையில் தோற்றுகிற பாரதந்த்ர்யாதிகள் ஸ்வரூப ஞான தசையில் தோற்றுகிற சேஷத்வாதிகளை திரஸ் க்ருதமாக்கும் படி சொல்லுகிறது–இனிமேல்‌ இந்த ஸ்வரூப ஜ்ஞாநத்தினுடையவும்‌ ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்தினுடையவும்‌ அத்யந்த வைஷம்யம்‌ சொல்லுகிறது

முளைத்து எழுந்த சூர்ய துல்ய யாதாத்ம்ய சரமம் விதியில் காணும் பிரதம மத்யம தசைகளை
பகல் விளக்கும் மின்மினியும் ஆக்கும்-
–சூரணை -23 –- (பகல் விளக்கு வீண் –மின்மினி அல்பம் என்றவாறு )

அதாவது–முளைத்து எழுந்த திங்கள் தானாய்-திரு நெடும் தாண்டகம் -1—என்றும்-யதா சூர்யஸ் ததா ஞானம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6–5–62- என்றும் சொல்லப் பட்ட ஸ்வரூப சாஷத்கார ஞானத்தின் உடைய யாதம்ய அவஸ்தையான சரமம் என்று ஸ்வரூப யாதாம்ய வேஷமாக பின்பு சொன்ன பாரதந்த்ர்ய போக்யதைகளைச் சொல்லுகிறது-ஸ்வரூப சாஷாத் கார ஞானத்திற்கு சந்த்ரனை திருஷ்டாந்தமாக ஆழ்வார் அருளிச் செய்தது தமக்கு பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே அயத்ன சித்தம் ஆகையாலும் அந்த ஞானம் தான் ஆஹ்லாத கரமாய் இருக்கையிலுமாம் இறே-இங்கும் உணர்வை பெற மிக ஊர உணர்வும் உண்டாம் -சூரணை -20 என்று இந்த ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பகவத் பிரசாத லப்தமாக இறே சொல்லிற்று-யதா சூர்யா -என்கிற இதில் ஸ்வ யத்னத்தாலே வந்த க்லிஷ்டதை தோற்றிற்று ஆகிலும இவ் இடத்தில் அது அவிவஷிதம் ஞானத்தின் உடைய பிரகா அதிசயம் சொல்லுகிற மாத்திரமே அபேஷிதம்–ஏவம்பூதமாய் இருந்துள்ள சாஷாத் காரத்தின் உடைய ஞானத்தின் உடைய
யாதாத்ம அவஸ்தையிலே பிரகாசிக்கிற பாரதந்த்ர்ய போக்யதைகள் ஆகிற சரமங்கள் –
ஸ்வரூபத்தை உணர்ந்து உணர்ந்து உணரவும்
-சூரணை -20 -கீழ் சொன்ன ந்யாயத்தாலே – விதியிலே காண்பார்– திருக் குறும் தாண்டகம் -18–என்கிற படியே சாஸ்திர விதி பிரகாரேன ஸ்ரவண மனநாதிகளாலே தர்சிக்க படுகிற பிரதம தசையான சேஷத்வத்தையும் மத்யம தசையான போக்த்க்ருத்வத்தையும் – பகல் விளக்கும் மின் மினியும் போலே அப்ரயோஜனமாகவும் அல்ப பிரகாசமாகவும் பண்ணும் என்கை –பிரண வோதிதமான ஸ்வரூபத்தின் உடைய யாதாத்ம்ய யத்வேன மத்யம சரம பதங்களிலே பின்பு உதிக்கும் அவை ஆகையாலே ,பாரதந்த்ர்ய போக்யதைகளை சரமங்கள் என்கிறது பிரதம அஷரத்தில் சதுர்த்தியிலே பிரதம ஏவ சேஷத்வம் உதிக்கை யாலும்
அநந்தரம் தத் ஆஸ்ரய வாசியான சரம அஷரத்தில் உத்தர பத த்வயத்தில் பாரதந்த்ர்ய போக்யதை உதயத்துக்கு முன்னே நடுவே ஜ்ஞாத்ருத்வ பலாயாத போக்த்ருத்வம் உதிக்கை யாலும் சேஷத்வ போக்த்ருதவங்களை பிரதம மத்திய தசைகள் என்கிறது--ஆக இவ் வாக்யத்தால் ஸ்வ யதன ஸ்வ பிரயோஜன கந்த அசகங்களாய் ஸ்வ சேஷி போகாத்யந்த அனுகூலங்களாய்க் கொண்டு ஸ்வரூபத்தை நிறம் பெறுத்தும் இப் பாரதந்த்ர்ய போக்யதைகள் இவ் ஆகாரங்கள் இல்லாத சேஷத்வ போக்த்ருதவங்களை திரஸ் க்ருதமாக்கி தானே மேலாய் இருக்கும் என்ற தாயிற்று-

முளைத்தெழுந்த திங்கள் தானாய்‌’” (திருநெடு. 1) என்றும்‌, *‘யதா ஸுூர்யஸ் ததா ஜ்ஞாநம்‌”‘ (வி. பு. 6 – 5 – 62) என்றும்‌, ஆஹ்லாத கரனாயும்‌, அதி ப்ரகாஸ கனாயுமிருக்கிற சந்த்‌ராதித்யர்களை யாதாத்ம்ய சரமமான பாரதந்த்ர்ய போக்‌யதா ஜ்ஞாதங்களுக்கு த்ருஷ்டாந்தமாக்குகையாலே பகவத் ப்ரஸாத லப்‌தமாகையாலே அயத்ந ஸித்‌த,மாய்‌, அதி ப்ரகாஸகமுமான அத்யந்த பாரதந்த்ர்ய போக்‌யதா ஜ்ஞாநங்களில்‌ பாரதந்தர்யம்‌ ஸேஷத்வ லக்ஷணமான இஷ்ட விநியோக அர்ஹதையை ஸ்வயமேவ நிரவஹித்துத்‌ தலைக் கட்டுகையாலும்‌, போக்‌யதையானது அசித்‌ வ்யாவ்ருத்தி லக்ஷ்ண மாத்ரமான போக்தருத்வத்தை சேஷியினுடைய ப்ரியோபயோகி,யாக்கிக்‌ கொடுக்கையாலும்‌ விதியில்‌ காணும்‌ ப்ரதம மத்‌யம தஸைகளை ”விளக்கினை விதியில்‌ காண்பார்‌” (திருக்குறு. 18) என்கிறபடியே ஸாஸ்த்ர முக,த்தாலே வந்த ஸ்ரவண மநதநாதிகளால்‌ காணப்படுகிற ப்ரதம தஸையான ஸேஷத்வத்தையும்‌, மத்யம தஸையான போக்த்ருத்வத்தையும்‌, அந்த பாரதந்தர்ய போக்யதைகள்‌ பகல் விளக்கையும்‌ மின்மினியையும் போலே்‌ அப்ரயோஜகமாகவும்‌ அல்ப ப்ரகாஸகமாகவும்‌ பண்ணும்‌ என்கிறார் –

மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-1—விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய் –என்று –மந்தவ்ய நிதித்த்யாசிதவ்ய த்ரஷடவ்ய -என்கிற மனந நிதித்யாசன தர்சனங்களைச் சொல்லுகிறது –ஸ்ரோதவ்ய -மந்தவ்ய – நிதித்யாஸி தவ்ய -த்ரஷ்டவ்ய-ப்ருஹதாரண்யம்–விளக்கொளியாய் -முளைத்து எழுந்த திங்கள் தானாய் )முளைத்து – பர்வதாக்ரத்திலே தோன்றின சந்தரனைப் போலே தீப த்ர்ஷ்டாந்தத்தால் சொன்ன ஸ்ரவண ஜ்ஞானத்தில் காட்டிலும் பிரகாச ரூபமான மனந தசையைச் சொன்னபடி –எழுந்து – பர்வதாக்ரத்தை விட்டு ஆகாசத்தில் எழுந்த சந்தரனைப் போலே மனந அவஸ்தையில் காட்டிலும் அதி பிரகாசமான அநவரத பாவனையைச் சொல்லிற்றாயிற்று-திங்கள் தானாய் – சாஷாத் காரத்தைச் சொல்லுகிறது –
எங்கனே என்னில் – தானான திங்கள் -என்று – ஆகந்துகமான களங்கம்- இன்றியே இருக்கிற சந்த்ரனைச் சொல்லுகையாலே ஆகந்துகமான களங்கம் -பூமியினுடைய சாயை பிரதிபலிக்கையாலே –
சந்த்ர பிரபா ஸ்தானத்திலே ஆத்மாவுக்கு பிரபா ரூபமான தர்ம பூத ஜ்ஞானம் – பிரகிருதி சம்சர்க்கம் நேராக அற்று நிஷ்க்ர்ஷ்டமான ஆத்ம வஸ்துவைச் சொன்னபடி –நிஷ்க்ர்ஷ்ட ஸ்வரூபத்தைக் கண்டால் இறே- சாஷாத்காரம் சித்தித்ததாவது – சாஷாத்கார விசிசிஷ்ட ஆத்மா -சாஷாத்காரம் தந்தவன் -என்று -பரமாத்மா சாஷாத்காரம் – சந்திர த்ர்ஷ்டாந்தத்தாலே – சதி ஆஹ்லாதே -என்கிறபடியே ஆஹ்லாத ரூபம் தோற்றுகைக்காகவும் பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே அனாயாச சித்தியால் வந்த அம்லானதை தோற்றுகைக்காவும்-சந்திரனை த்ருஷ்டாந்திக்கிறார் –யதா ஸூர்யஸ் ததா ஞானம் -என்று
ஸூர்யனை த்ருஷ்டாந்தித்தது சந்திரனுக்கு ஸ்வ யத்னத்தால் வந்த க்லிஷ்டதை தோற்றுக்கைக்காக 

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18–தைல தாரை போலே அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்தான ரூபமான பக்தியை பகவத் விஷயமாகப் பண்ணி-சுடர் விட்டு தோன்றலும் – இப்படி சுடர் விட்டு தோன்றும் ஜ்ஞானத்தாலே –வேதங்களாலே ஜோதி ரூபனாக பிரதிபாதிக்கப் பட்ட விளக்கை-சாஸ்த்ரங்களில் விதித்தபடியே உபாசித்து அவனைக் காண்பார் –என்றும் உளனாய் இருக்கிற சர்வேஸ்வரனை காண வல்லரே -காண -மாட்டார் -என்றபடி –அதவா – இப்படி யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே உபாசித்துக் காண்பாருக்கு காணலாம் -என்றுமாம் –அங்க பிரபத்தி இல்லாமல் காண மாட்டார் என்றபடி

இப்படி இருந்துள்ள ஸ்வரூப ஞானத்தையும் ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞானத்தை உடையவராய் சாஸ்த்ரிகள் -சூரணை -19 –இத்யாதி வாக்யத்தில் பிரவ்ருத்தி பரராயும் நிவ்ருத்தி பரராயும் சொல்லப் பட்ட அதிகாரிகளுக்கு பிரவர்த்த நிவர்தககங்கள் இன்னது என்கிறது மேல்-இந்நாலிலும்‌ வைத்துக் கொண்டு உபாஸகனுக்கு போக்த்ருத்வம்‌ உபாய ருப ப்ரவ்ருத்தி ஹேதுவாயிருக்கும்‌ ; ப்ரபந்தனுக்கு போக்‌யதை நிவருத்தி ஹேதுவாயிருக்கும்‌ என்கிறார்‌ மேல்‌

நாலில் ஓன்று பிரவர்தகம் ஓன்று நிவர்தகம்-சூரணை -24 –

அதாவது சேஷத்வ போக்த்க்ருத்வங்களும் பாரதந்திர போக்யதைகளும் ஆகிற நாலிலும் வைத்து கொண்டு சேஷத்வ போக்த்ருத்வங்களே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்று தர்சித்த சாஸ்த்ரஜ்ஞர்களை-
போக்த்ருத்வம் ஆனது போக்தாவனவன் போக்ய சித்திக்கு யத்னம் பண்ண வேண்டாவோ என்னும் நினைவாலே போக்ய பூத பகவத் விஷய லாப அர்த்தமான உபாய பிரவர்தியிலே மூள்விக்கும்--பாரதந்த்ர்ய போக்தைகளையே ஸ்வரூப யாதாம்ய வேஷம் என்று தர்சித்த சாரஜ்ஞரை
போக்யதை ஆனது -போக்தாவான ஈஸ்வரன் அன்றோ -ஸ்வ போக்யமான இவ் வஸ்துவை பெருகைக்கு யத்னம் பண்ணுவான் –தத் போக்ய பூதமான இவ் வஸ்துவுக்கு தல் லாபத்துக்கு யத்தனிக்க பிராப்தி இல்லை என்னும் நினைவாலே உபாய பிரவர்த்தியில் நின்று மீள்விக்கும் என்கை-

உபாயத்வ அனுசந்தானம் நிவர்த்தகம் – உபேயத்வ அனுசந்தானம் பிரவர்த்தகம் –ஸ்ரீ வசன பூஷணம் –சூர்ணிகை -87—உபாயம் -நினைக்க யத்னம் நீங்கும் –செய்யும் செயல்களில் உபாய பாவனை இல்லாமல் என்றும் -ஸாத்ய உபாயம் எண்ணியும் –உபேயம் புருஷார்த்தம் என்ற நினைவால் கைங்கர்யம் -அனைத்தையும் செய்ய வைக்கும் -ஸூ சரீர தியாக -ஸூ யத்னம் தானே –பாரதந்தர்ய தூஷணம் ஆகாதோ என்ன -உபாய அதிகாரிக்குத் தான் தூஷணம் -உபேய அதிகாரிக்கு இல்லை-பற்றுவது –கத்யார்த்தா புத்யர்த்தா மானஸ கார்யம் -பிரார்த்தனா மதி சரணாகதி – உபேய அதிகாரி வழு விலா அடிமை செய்ய வேண்டுமே -சென்றால் குடையாம் இத்யாதி-தோழி -தாயார் மகள் -சம்பந்தம் -தாயார் -உபேயத்தில் துணிவு தலை மகள் பாசுரம் –தூது விட்டது உபாயமாக என்று அஞ்சுவது தாயார் –ப்ராப்ய தவரையால் பண்ணலாமே –மோக்ஷ உபாயம் தப்பு கால விளம்பம் கூடாது என்பதற்காக பண்ணலாமே உபாயத்வ அநு சந்தானம் நிவர்த்தகம் -என்றது – வைதமாய் வரும் தசையில் -தேக த்யாக ரூப பிரவ்ருத்தியில் உபாயத்வ அநு சந்தானம் நடக்கையாலே -அவ் அனுசந்தானம் இவனை சாதனதயா சம் பிரதிபன்னமான இத் தேக த்யாக ரூப பிரவிருத்தியில் நின்று மீளுவிக்கும் -என்றபடி –
உபேயத்வ அநு சந்தானம் பிரவர்தகம் -என்றதுராக பிராப்தமாய் வரும் தசையில் -இவ் விஷயத்துக்கு ஹானி வரக் கண்டு இருப்பதில் -முடிகையே நல்லது என்று –தேகத் த்யாகம் தன்னை புருஷார்த்தமாக அநு சந்திக்கையாலே -அவ் அனுசந்தானம் இவனை அதிலே மூளுவிக்கும் என்றபடி —
அன்றிக்கே – வைதமாய் வரும் போது -பகவத் விஷயத்தில் உபாயத்வ அநு சந்தானம் இதுக்கு(தேகத் த்யாகத்துக்கு ) நிவர்தகமாம் – ராக பிராப்தமாய் வரும் போது-அவ் விஷயத்தில் உபேயயத்வ அனுசந்தானம் இதுக்கு பிரவர்தகமாம் என்னவுமாம் –

ஆனால் சேஷத்வ போக்த்க்ருத்வங்கள் இவர்களுக்கும் உண்டே-அவை செய்வது என்ன என்ன சொல்லுகிறது மேல்-ஆனால்‌ இந்த ஸேஷத்வ போக்த்ருத்வங்க ளிரண்டும்‌ இவனுக்குச்‌ செய்யும்படி என்‌ என்னில்‌ ; இவனுடைய வ்ருத்திக்கு அநு ரூபமாயிருக்கும்‌ . என்னுமிடத்தைச்‌ சொல்லுகிறது மேல்‌

முற்பாடர்க்கு க்ரிய அங்கம் ஆனவை இரண்டும் செயல் தீர்ந்தார் வ்ருத்தியிலே ஸ்வ நிர்பந்தம் அறுக்கும்-சூரணை-25 –

(கர்ம யோகத்துக்கு அங்கங்களே சேஷத்வமும் போக்த்ருத்வமும்-செய்த வேள்வியர் -செயல் தீர்ந்தார்
வ்ருத்தி -கைங்கர்யம்
போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையில் கொழிக்கும்-அடுத்த திருவடியை நீட்டினாரே ஆழ்வார்-பேரக்குழந்தை காலை தாத்தா கன்னத்தில் அடித்துக் கொள்ளுமாறு –-ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ ராமானுஜர் ஐதிக்யமும் உண்டே-படியாய்க்கிடந்து பவளவாய் காண வேண்டுமே -எதிர் விழி கொடுக்கும் பாரதந்தர்யம் –-போக்த்ருவத்துக்கும் விநியோகம் உண்டே-அவன் அனுபவத்துக்கு உறுப்பாகும் -)அதாவது சாஸ்த்ரஜ்ஞர்கள் -என்று சொல்லப் பட்ட உபாசகருக்கு போக்த்க்ருத்வம் ஆனது போக்ய சித்திக்கு உடலான யத்னத்திலே மூட்டுகையாலும்-அது தான் ஆத்ம ஞான பூர்வகமாக யத்தனிக்க வேண்டுகையாலே சேஷத்வமும் அதுக்கு உறுப்பாகையாலும்-உபாசன பிரதம பாவியான -கர்மத்துக்கு உத்பத்தியிலே சக கரித்துக் கொண்டு தத் அங்கங்களாய் இருக்கிற அவை இரண்டும்
செயல் தீர சிந்தித்து வாழ்வார்-நான்முகன் -88- (போக்யம் என்று அறிந்து -சிந்தித்து செயல் தீர்ந்தார் -)-என்கிற படியே இவ் ஆத்மா செய்யக் கடவது ஒன்றும் இல்லை-எம்பெருமானே நிர்வாககன் -என்று அனுசந்தித்து உபாய ரூப ப்ரவர்தியிலே நிவ்ருத்தரான பிர பன்னருடைய கைங்கர்ய ரூப பிரவர்த்தியில் அவன் உகப்பை பின் செல்லும் அது ஒழிய தங்கள் நிர்பந்தத்தை தவிர்க்கும் என்கை-பரகத அதிசய ஆதான இச்சையா உபாதேயத்வ மேவ யஸ்ய ஸ்வரூபம் ச சேஷ (-சேஷத்வ லக்ஷணம் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூக்திகள் )- என்கிற படியே –பரகத அதிசய கரத்தவ ரூபமான சேஷத்வம்
ஸ்வ ஆஸ்ரயா இச்சையா வரும் ஸ்வ நிர்பந்தத்தை தவிர்க்கும்
இறே–இனி போக்த்க்ருத்வம் ஸ்வ நிர்பந்தத்தை தவிர்க்கை யாவது பாரதந்த்ர்ய போக்யதா ஞானம் பிறந்தவன் உடைய போக்த்க்ருத்வம்
ஆகையாலே ,ஸ்வ ரசத்துக்கு உடல் அன்றிக்கே ,சேஷி ரசத்துக்கு உடலாய் இருக்கை.
.-ஆனந்தம் அவன் ப்ரீதியை துளிர் எழுப்ப – என்கிற படியே இவனுடைய போக்த்க்ருத்வம் சேஷியானவன் ப்ரீதிக்கு வர்தகமாய் இறே இருப்பது-ஆகை இறே –அஹம் அன்னம் அஹம் அன்னம் -தைத்ரியம்-என்று ஸ்வ போக்யதையை முன்னிட்டு சேஷியை உகப்பிக்க இழிந்தவன் அஹம் அந்நாத-தைத்ரியம் -என்று ஸ்வ போக்த்க்ருத்வத்தையும் புரஸ் கரிக்கிறது-இப்படி அல்லாத போது ஒரு சேதனனோடு அனுபவித்ததாய் இராது இறே-இவற்றை எல்லாத்தையும் உள் கொண்டு ஆய்த்து — வ்ருத்தியிலே ஸ்வ நிர்பந்தம் அறுக்கும் –என்று அருளி செய்தது-

‘முற்பாடர்‌’ என்று சொல்லப்‌பட்ட உபாஸகர்க்கு (க்ரியாங்க, மானவை, இரண்டும்‌) கர்மத்துக்கு, அங்கமான ஸேஷத்வ போக்த்ருத்வங்க ளிரண்டும்‌ ; கர்மத்துக்கு யோக்‌யதாபாதகங்களான ஸேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ ; இப்படி இருக்கிற இவற்றைச்‌ சொல்லுவான்‌ என்‌ என்னில்‌ ; போக்த்ருத்வமாவது – போக்‌ய ஸித்‌திக்கு அடியான யத்நத்திலே மூட்டுகையாலும்‌, ஸேஷத்வம்‌ அதில்‌ ஆத்ம ஜ்ஞாநம்‌ முன்னாக ப்ரவர்த்திக்க வேண்டுகையாலும்‌, அந்த சேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ ஸாதந ப்ரதம பாவியான கர்மத்தினுடைய உத்பத்தியிலே ஸஹ கரிக்கையாலும்‌ அவற்றை க்ரியாங்கம்‌ என்கிறது –
இப்படிப்பட்ட ஸேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ (செயல் தீரந்தார்‌ வ்ருத்தியில்‌) “செயல்‌ தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்‌”? (நா. திருவ. 88) என்கிறபடியே உபாய ரூப ப்ரவ்ருத்தியில்‌ ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலே நிவ்ருத்தரான ப்ரபந்தருடைய, வ்ருத்தியில்‌ – கைங்கர்ய வ்ருத்தியிலே என்றபடி. (ஸ்வ நிர்பந்த, மறுக்கும்‌)-ஸ்வ போக்த்ருத்வ ப்ரதிபத்தியையும்‌, மதீயத்வ ப்ரதிபத்தியையும்‌ தவிர்க்கும்‌. எங்ஙனே என்னில்‌ ; இவனுடைய போக்த்ருத்வம்‌ அவனுடைய போகத்துக்கு வர்த்தகமாயிருக்கும்‌, * அஹமந்நம்‌ என்ற பின்பு ‘‘அஹமந்தாத.:” என்றது – போக்த்ருத்வமிறே, இப்படிச் சொல்லாத போது ஒரு சேதநனோடே அநுபவித்ததா யிராதிறே ; இவனுடைய ஸேஷத்வமும்‌ அத் தலைக்கு அதிஸய கரமாயிருக்கும்‌, “*பரகத-அதிஸய-ஆதநேச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபம்‌ ஸ ஸேஷ:”, ‘“யதேஷ்ட விநியோகர்ஹம்‌ ஸேஷ ஸப்தேந கத்‌யதே”, “ஈஸ்வரேண ஜகத் ஸர்வம்‌ யதேஷ்டம்‌ விநியுஜ்யதே” என்னக் கடவதிறே

போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும்–சூரணை -178-அதாவது
இப்படி போக்ய பூதரான ஆழ்வாருடன் கலந்து பரிமாறும் இடத்தில் – ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் –திருவாய்-9-6-7–என்றும் – ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -திருவாய்-9-6-9–என்றும் பேசும்படி அத் தலை இத் தலையாய் சேஷி சேஷ பாவம் மாறாடும் சீல குணம் –காட்கரையிலே கரை அழிக்கும்-அதாவது–திரு காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினை தொரு-திருவாய்-9-6-1- -என்று
வித்தராய்ப் பேசின திருகாட்கரையிலே கரை அழியப் பெருகும் என்கை — கரை அழிக்கும் என்கிறது -காட்கரை -என்கிற சமாதியாலே .–நம் கண்ணன் கள்வங்கள்-என்னில் முன்னம் பாரித்து என்னை முற்றம் பருகினான் –-கீழே என் உயிர் தான் உண்டான் -இங்கு பருகினான் -பெருமானுடைய உண்ணும் சோறு பருகும் நீர் இருக்கும் படி -தட்டு மாறும் சீலம் – ஆராவமுத ஆழ்வார் திருமழிசைப் பிரான் -அங்கும் தட்டு மாறிற்றே -)

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –4
-9-அநந்ய பிரயோஜனரும் – பிரயோஜனாந்தர பரரும்- அந்ய பரரும் கிடந்தது சஞ்சரியா நின்றால் ஒரு நினைவுற்று அசேதனவத் கிடக்க வேணும்-பார தந்த்ர்யத்துக்கு அசேதன சமாதியாகவும் வேணும் – அது புருஷார்த்தமாகைக்கு காணவும் வேணும்

உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போது ஓடி
அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது-88-ஆத்மா சரீரங்களை விட்டு பிராணன்களைக் கொண்டு யமபடராலே ப்ரேரிதனாய் போம் போது- ஆளிட்டு அந்தி தொழ ஒண்ணா தாப் போலே ஆஸ்ரிதரை ஆளிட்டு அழைத்துக் கொள்ளாதே- தானே ஓடி வந்து இவர்கள் தர்சனத்தாலே வந்த அறிவு கேடு முதலான துரிதங்களை எல்லாம் போக்குமவன் திரு நாமத்தை ப்ரீதியோடு சொல்லித் தனக்கு ஒரு சாத்யம் இல்லாத படி  அனுசந்தித்து வாழ்வாரே வாழ்வார்-செயல் என்று கர்மா ஆகவுமாம்
இவ்வாத்மா தான் செய்யக் கடவ ஷூத்ர சமயம் ஆகிற பந்தத்தை யுடையார் வாழ்வு வ்யர்த்தம்
துக்க ஹேதுவான அஹங்கார மமகார கர்ப்பமாகையாலே பந்தகமாய் ஷூத்ர மான கர்மாத் யுபாய பேதங்களைப் பற்றினார்க்கு ஒரு பிரயோஜனமும் இல்லை – அந்வய வ்யதி ரேகங்களாலே இவற்றுக்கு உபாயத்வம் முதலிலே இல்லை என்று உள்ளபடி யுணர்ந்து இருக்கும்-ஞானி நாமக் ரேசரர் ஆகையாலே
பந்தனையார் வாழ்வேல் பழுதென்று அவற்றில் ஒரு சரக்கற அருளிச் செய்கிறார் –
துக்க ஹேதுவான-அஹங்கார கர்ப்பம் ஆகையாலே பந்தகமாய்- ஷூத்ரமான கர்மாத் யுபாய பேதங்களைப் பற்றினார்க்கு
ஒரு பிரயோஜனமும் இல்லை –பகவத் ப்ரீதியே பலத்துக்கு உபாயம்-கண்டாகர்ணன் க்ஷத்ர பந்து பக்கலிலே பார்த்தோமே 

இந்த க்ரியா வ்ருத்தி சப்தங்களால் சொன்ன கர்ம கைங்கர்யங்கள் இவர்களுக்கு எதுக்கு அநுகுணமாய் இருக்கும் -இந்த க்ரியா வாசியான கர்மமும்‌ வ்ருத்தி வாசியான கைங்கர்யமும்‌ எதுக்கு அநுரு,ணமா யிருக்கு மென்னில்‌ மேல் சொல்லுகிறது-

கர்ம கைங்கர்யங்கள் சத்ய அசத்ய நித்ய அநித்திய வர்ண தாஸ்ய அனுகுணங்கள்-சூரணை -26 –(அதாவது கர்மம் அசத்யமாய்–அநித்யுமுமான வர்ணத்துக்கு அநுகுணமாய் இருக்கும்
கைங்கர்யம் சத்தியமாய் நித்யமுமான தாஸ்யத்துக்கு அநுகுணமாய் இருக்கும்
என்கை-)

வர்ணத்தை அசத்தியம் அநித்தியம் என்கிறது ஆத்மாவுக்கு உள்ள வேஷம் அல்லாமையாலே
சததைக ரூபம் அன்றிக்கே -ஔ பாதிகமுமாய் அநித்யமுமாய் நச்வரமான தேக அவதியாய் போருகையாலே
–தாஸ்யத்தை சத்யம் நித்யம் என்கிறது-திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் திருப்பல்லாண்டு -11– என்கிறபடியே ஆத்மாக்கு உள்ள வேஷம் ஆகையாலே சததைக ரூபமாய் யாவதாத்மா அனுவர்த்தி யாகையலே-வர்ண அனுகுணம் என்றது -வர்ணத்துக்கு சேர்ந்தது என்ற படி-
தாஸ்ய அனுகுணம் என்றதும் அப்படியே-தாஸ்யத்துக்கு சேர்ந்தது என்ற படி-(விசிஷ்ட வேஷத்தை பொறுத்தே இருக்கும் கர்மம் -அசத்திய அநித்ய வர்ணம்-கைங்கர்யம் நிஷ்க்ருஷ்ட வேஷம் பொறுத்தே இருக்கும் -சத்யமாயும் -நித்யமாயும் தாஸ்யம் திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -தாஸ்யம் பழைமை நித்யம் -அங்கும் உண்டே நிருபாதிகம் -சத்யம் )

இவை இரண்டிலும்‌ வைத்துக் கொண்டு எத்தை எதுக்கு அநுகுணம்‌ என்கிறதென்னில்‌ ; கர்மம்‌ அஸத்யமுமாய்‌, அநித்யமுமான வர்ணத்துக்கு அநு கு,ணமாயிருக்குமென்றும்‌, கைங்கர்யம்‌ ஸத்யமுமாய்‌ நித்யமுமான ஸ்வரூபத்திலே ஆகையாலே ஸத்யமுமாய்‌ நித்யமுமாயிருக்கும்

அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல் வகையாலும் பவித்ரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே –11-திருமாலே – இவ்வாத்ம வஸ்து ஒரு மிதுன சேஷம் -என்று சேஷத்வ பிரதி சம்பந்தியை சொல்லுகிறார்கள்-இத்தால் மாதா பித்ர் சேஷத்வமும் -தேவதாந்தர சேஷத்வமும் கர்ம உபாதிகம் என்கை
அதவா-தேவரீருக்கு பிராட்டி நிரூபக பூதையாய் இருக்கிறாப் போலே எங்களுக்கும் தாஸ்யம்
நிரூபகம் என்கிறார்கள் -என்றுமாம் நானும் – பிரயோஜனாந்தர பரதையாலே அநாதி காலம் அன்யார்ஹனாய் போந்த நானும் – சேஷி பக்கல் பிரயோஜனாந்தரத்தை அபேஷிக்கை யாவது -பதிவ்ரதை பர்த்தாவின் பக்கலிலே வ்யபிசாரத்தை அபேஷித்தவோபாதி இறே –உனக்குப் பழ வடியேன் – உனக்கு சேஷித்வம் அநாதி யானவோபாதி எனக்கும் சேஷத்வம் அநாதி என்கை
உனக்கு – பிரயோஜனாந்தரத்தை அபேஷித்து திருவடிகளில் கிட்டினதுவே ஹேதுவாக அநந்ய
பிரயோஜநன் ஆக்க வல்ல உனக்கு-இந்த ஸ்வரூப ஞானம் எவ் வழியாலே பிறந்தது என்னில்
சகல வேதாந்த தாத்பர்யமான மந்திர ரஹச்யத்தாலே பிறந்தது என்கிறார் மேல்-

இவை இரண்டுக்கும் பிரேரகங்கள் எவை -இவை இரண்டுக்கும்‌ ப்ரேரகர்‌ ஆர்‌ என்னில்‌ -என்ன சொல்லுகிறது-

இவற்றுக்கு விதி ராகங்கள் பிரேரகங்கள்-சூரணை -27 –

அதாவது – யஜேத -யஜுர் வேதம்-ஜூஹுயாத்–கர்ம மீமாம்சை-இத்யாதி யான சாஸ்திர விதி கர்மத்துக்கு பிரேரகம் -அசேஷ சேஷ தைகரதி யாகிற ராகம் கைங்கர்யத்துக்கு பிரேரகம் என்கை .
(பிரேரகம் தூண்டுபவை-காதல் -நின் கண் வேட்கை எழுவிப்பேனே -இசைவித்து – ஒழிவிலா காலம் எல்லாம் வழு விலா அடிமை -அசேஷ -சேஷதைக ரதி ரூபம் நித்ய கிங்கரோ பவாமி -அனுபவம் -ப்ரீதியைத் தூண்ட -அது கைங்கர்யத்தில் தூண்டும்-அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம்-இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் -மூவாறு மோசம் மோகிக்கப் பண்ணுமே ) பகவத் அனுபவ ஜனித ப்ரீதி காரிதம் இறே கைங்கர்யம் .-உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் -திருவாய் -10-8-10–என்னக் கடவது இறே- (கிரமம் படி இல்லாமல் -பணி செய்து முதலில் பாதம் பெற்றது அப்புறம் -உபாசகருக்குத் தானே கிரமம் )

“இத,ம் குரு ‘, “அநேந யஜேத” என்றும்‌ சேதநனைக்‌ குறித்துச் சொல்லுகிற ஸாஸ்த்ர விதிகள்‌ கர்மத்துக்கு ப்ரேரகம்‌. பகவதநுபவ ஜநித ப்ரீதி கைங்கர்யத்துக்கு ப்ரேரகம்‌. ““உற்றேனுகந்து பணி செய்து” (திருவாய்‌. 10- 8 – 10)என்னக் கடவதிறே.

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்

கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே கிட்டிக் கொடு நின்றேன் –ப்ரீதி ப்ரேரிதனாயக் கொண்டு -திருவாய் மொழி பாடி -உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் – –சாதகமாய் மேல் -சாத்தியமாகச் சொல்லுகிறது அன்று -இரண்டும் ஏக காலத்திலே உள்ளதாகையாலே –ஈதே இன்னம் வேண்டுவது-இது தானே மாறி மாறி யாவதாத்ம பாவியாகச் செல்லுகை இறே –பு நரா வ்ருத்தி இன்றிக்கே ஒழிகை யாவது -மீளாது ஒழிகை -விதி போலே இருக்கிறதன்றே – எந்தாய்--இவ்வனுபவம் ஸ்வரூப அனுரூபம் என்கிறது –இத்தலைக்கு சேஷத்வமும் தேவர்க்கு சேஷித்வமும் இறே ஸ்வரூபம் -இவர் அபேக்ஷித்த படியே செய்கிறோம் என்ன -ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

இவற்றுக்கு ஆஸ்ரயம் யார் என்ன சொல்லுகிறது-இவற்றுக்கு ஆஸ்ரயம்‌ ஆர்‌ என்னில்‌

மண்டினாரும் மற்றையாரும் ஆஸ்ரயம்-சூரணை -28 –

அதாவது-கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டினார்-திருக் குறும் தாண்டகம் -19– என்று உகந்து அருளின நிலங்களிலே அத்ய அபிநிவிஷ்டராய் இருக்கிற பிர பின்னர்
கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயம்-விளக்கினை விதியின் காண்பார் மெய்மையைக் காண்கிற்பாரே -திருக் குறும் தாண்டகம்-18–என்று கீழில் பாட்டில் சொன்ன மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே -திருக் குறும் தாண்டகம் -19—மற்றையரான உபாசகர் கர்மத்துக்கு ஆஸ்ரயம் என்கை-(சாஸ்திரம் – –உபாசனம்-விளக்கினை விதியில் காணும் மற்றையரான உபாசகர் -கர்மத்துக்கு ஆஸ்ரயம்-சாஸ்த்ர தாத்பர்யம் -திருமந்திரம் —பிரபன்னர் -அர்ச்சாவதார திவ்ய மங்கள விக்ரஹ கைங்கர்யம் –என்றவாறு )இத்தால் கர்ம கர்த்தாக்களையும் கைங்கர்ய கர்த்தாக்களையும் சொல்லிற்று ஆய்த்து-

(மண்டினாரும்‌ மற்றையாரும்‌ ஆஸ்ரயம்‌)-“கண்டியூர்‌” (திருக்குறு. 19) இத்யாதி,. மண்டினார்‌ என்கிறது – உகந்தருளின நிலங்களிலே அத்யபிநிவிஷ்டராயிருக்கிற ப்ரபந்நரை ; மற்றையார்‌ என்கிறது – “விளக்கினை விதியில்‌ காண்பார்‌” (திருக்குறு. 18) என்கிற உபாஸகர்‌ என்று ப்ரஸித்‌தமிறே. இத்தால்‌ கர்மத்துக்கு ஆஸ்ரயம்‌ உபாஸகர்‌, கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயம்‌ ப்ரபந்நர்‌ என்றபடி-

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை  திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே -19-–அவன் உகந்து அருளின இத் திருப் பதிகளிலே நெஞ்சு மண்டினவர்கள் உய்யல் அல்லது அல்லாதார்க்கு உஜ்ஜீவிக்க விரகு உண்டோ –

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18--சாஸ்த்ரங்களில் விதித்தபடியே
உபாசித்து அவனைக் காண்பார் –என்றும் உளனாய் இருக்கிற சர்வேஸ்வரனை காண வல்லரே -காண -மாட்டார் -என்றபடி –அங்க பிரபத்தி இல்லாமல் காண மாட்டார் என்றபடி-

இவற்றுக்கு விஷயம் ஏது என்ன சொல்லுகிறது-இவற்றுக்கு விஷயம்‌ ஏதென்னில்‌ ;

அருள் முடிய நிறுத்தி அடைய நின்றதும் நல்லதோர் அருள் தன்னாலே நன்றும் எளியன் ஆகிறதும் விஷயம்-சூரணை -29 –

அதாவது-எத் தவம் செய்தாருக்கும் அருள் முடிவது ஆழியான் பால் -நான்முகன் 2–என்கிற படியே ஆஸ்ரயண பல சித்தி தன்னுடைய பிரசாதத்தாலே யாம்படி –-தன் மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக -திருவாய் -5-2-8–என்ற படியே தனக்கு தனுபூதரான தேவதைகளை நிறுத்தி –
அவரவர் விதி வழி அடைய நின்றனர் -திருவாய்-1-1-5–என்கிற படியே ஆஸ்ரயிக்கிற சேதனர் வித்யுக்த பிரகாரேன ஆஸ்ரயித்து பலம் பெரும் படி தேவதாந்தர்யாமியாய் நின்ற இடம் கர்மத்துக்கு விஷயம்நல்லதோர் அருள் தன்னாலே காட்டினான் திரு அரங்கம் -திருமாலை -10–என்றும்-கருத்துக்கு நன்றும் எளியனாய்-திருவாய்-3-6-11- -என்று சொல்லுகிறபடியே கேவல ஸுய க்ருபையாலே அத்யந்த சுலபனாய் கொண்டு அர்ச்சாவதாரமாய் நிற்கிற இடமே கைங்கர்யத்துக்கு விஷயம் என்கை-

”எத் தவம்‌ செய்தார்க்கும்‌ அருள் முடிவதாழியான்‌ பால்‌”: (நான்‌. திருவ. 2) என்றும்‌, “’நிறுத்தி நும்‌ உள்ளத்துக் கொள்ளும்‌ தெய்வங்களும்மை உய்யக் கொள்‌ மறுத்துமவனோடே கண்டீர்‌” (திருவாய்‌. 5 – 2- 7) என்றும்‌, ”அவரவர்‌ விதி வழி அடைய நின்றனரே” (திருவாய்‌. 1 – 1 – 5] என்றும்‌ சொல்லுகிறபடியே தேவதைகளுக்கு அந்தர்யாமியாய்க் கொண்டு நின்ற விடமும்‌, ”நல்லதோரருள் தன்னாலே காட்டினான்‌ திருவரங்கம்‌”? (திருமாலை 10) என்றும்‌, “கருத்துக்கு நன்றுமெளியன்‌”’ (திரு வாய்‌. 3 – 6 – 11) என்றும்‌ சொல்லுகிறபடியே அர்ச்சாவதாரமாய்க் கொண்டு நின்ற இடமும்‌. –

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத் தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2–எல்லா சாதன அனுஷ்டானம் பண்ணினவர்களுக்கும்
அவற்றுக்கும் பலம் சர்வேஸ்வரன் பக்கலில் நின்றும் என்கை-ஏழு ஏழு  படி இங்கனே தபஸ் ஸூ பண்ணினாருக்கும் எம்பெருமான் பிரசாதத்தால் அல்லது பல பர்யந்தமாய் முடியாது-

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே

கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7—உங்கள் நெஞ்சிலே நீங்கள் நிறுத்திக் கொள்ளுகிற தேவதைகள் –த்யேய வஸ்துக்களை நிறுத்துகையும் த்யாதாவுக்கே பரம் என்கை அங்குஷ்ட மாத்ர புருஷோமத்ய ஆத்மனி திஷ்ட்ட்தி-என்கிறவன் அவசர ப்ரதீஷனாய் நிற்கிறது அன்றே -யுக்த்யா ஆபாசங்களாலும் வசன ஆபாசங்களாலும் பொரி புறம் தடவி நிறுத்துகை –உங்களை உய்யக் கொள்ளும் இடத்தில் -ரஷிக்கும் போது தாங்கள் அக்ஷமர் ஆகையால் –பேணிலும் வரம் தர மிடிக்கில்லாத தேவரை -திருவில்லாத் தேவரை –மறுத்தும் அவனொடே கண்டீர் – மீண்டும் அவனோடே சேர்த்து -அவன் பிரசாதத்தாலே கிடீர் –நீங்கள் அவர்களை ஆஸ்ரயித்ததாலும் பலம் தருவான் அவனே –
பலமத-நஹி பாலன சாமர்த்த்யம் ருதே ஸர்வேச்வரீம் ஹரீம்
– இவர்களை ஆஸ்ரயிக்க வேறே ஒருவன் பலம் தருமது எங்கே கண்டோம் என்னில் –மார்க்கண்டேயனும் கரியே- ஸ்ரீ மார்க்கண்டேய பகவான் சாக்ஷி-

இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே

மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8—ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசித கர்மங்களாலே சமாராதித்து ஸ்வ அபிலஷிதங்களை பெற்று உஜ்ஜீவிக்க-எவ் வுலகுக்குந் தன்மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக –-பின்ன ருசிகளான -அதிகாரிகளை யுடைத்தான சர்வ லோகங்களுக்கும் –தன் சரீர பூதரான தேவதைகளை சமாராத்யராக நிறுத்தினான் –ஈஸ்வரோஹம் என்று இருப்பார் தலை வணங்குகைக்காக நிறுத்தினான் –-அத் தெய்வ நாயகன் தானே-
ஆஸ்ரயிப்பார்களோடு ஆஸ்ரயணீயரோடு வாசி அற எல்லார்க்கும் நிர்வாஹகன் அவன் தானே -சேதனருடைய குண அனுரூபமாக ஆராத்யராகவும் அபிமத பலப்ரதராம் படியும் பண்ணினான்

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே 
–1-1-5—அவரவர் இறையவர் அவ்வோ தேவதைகள்-குறைவிலர்
ஆஸ்ரயிக்கிற வர்களுடைய பலம் கொடுக்கைக்கு குறை யுடையவர் அல்லர்-இறையவர்-நிருபாதிக சர்வேஸ்வரன்-அவரவர் விதி வழி யடைய-ஆஸ்ரயிக்கிறவர்கள் வித்யுக்த பிரகாரத்தாலே ஆஸ்ரயிக்கவும்-ஆஸ்ரயணீயர் அவர்களுக்கு பல பிரதானத்துக்கு சக்தராகவும்-நின்றனரே அந்தராத்மதயா நின்றார்-

நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டீரே நம்பிமீர்காள் கெருட வாகனும் நிற்கச்
சேட்டை தன் மடி யகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே–10—சத்வ பிரசுரராய் தன்னைப் பற்றும் அளவு உடையவர் அன்றிக்கே இருக்கும் ரஜஸ் தமஸ் பிரசுரர்க்கும் தேவதைகளை நாட்டினான் –
அதுக்கடி தன்னரசு போலே ஸ்வ தந்த்ரராய் மூலையடியே திரியப் புக்கவாறே ஸ்வ ஸ்வ குண அனுகூலமாக தேவதைகளை ஆஸ்ரயித்து பின்னை சேதனர் இறே – நம் வாசி அறிந்து -நம்மைப் பற்றுகிறார்கள் என்னும் நினைவாலே யாய்த்து தேவதைகளை நாட்டிற்று –உபக்நத்தை பெறாத கொடி போலே யாய்த்து ஈஸ்வரனுடைய ஆத்ம பாவத்தை ஒழியில் தேவதைகள் உடைய சத்தாதிகள் இருப்பது –சுள்ளிக் கால் நாட்டினால் போலே இருக்கிறது ஆய்த்து-நிறுத்தினான் தெய்வங்களாக -என்னக் கடவது இறே –நல்லதோர் அருள் தன்னாலே – தான் நினைத்த வழியே தன்னுடைய ஹிதம் அறிந்து போராதே
நோவு பட்டு இருந்தன ஆகாதே என்று கிருபை பண்ணினான் ஆய்த்து –நல்லதோர் அருள் –இவற்றின் உடைய கர்ம அனுகுணம் ஆதல் – ஆஸ்ரய அனுகுணம் ஆதல்-பண்ணும் அருள்போல் அன்றியே –க்ர்ப்பயா கேவலம் –என்கிறபடியே-இவற்றின் உடைய துர்கதியைக் கண்டு பண்ணும் அருள் –இவர்கள் தம் தாம் தசையை நினைந்து அனுசந்தித்து அதுக்கு அனுதபிக்கவும் அறியாதே இருக்கச் செய்தே பண்ணும் அருள் இறே-நல்லதோர் அருள் -என்கையாலே-கீழ் தேவதைகளை உண்டாக்கி வைத்ததும் அருளின் கார்யம் என்கிறது –நல்லதோர் அருள் தன்னாலே -காட்டினான் திருவரங்கம்--சிலர் எங்களுக்கு காட்ட வேண்டும் என்ன -காட்டுகை அன்றிக்கே முலைக் கடுப்பு தீர தரையிலே பீச்சுவாரைப் போலே தன் செல்லாமையினால் காட்டினான் ஆய்த்து –

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11–கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே அகவாயிலே மிகவும் பிரகாசிக்கிற படி – இவருக்கு எங்கும் இதுவே சம்ச்லேஷ விஸ்லேஷன்களுக்கு பிரயோஜம்-சம்ச்லேஷம் ஆகிறது -மானஸ அனுபவம் -விஸ்லேஷம் ஆகிறது -பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷையாலே மானஸ அனுபவத்துக்கு வரும் குலைதல்-மண் கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்-நித்ய ஸூரிகளுக்கு ஸூலபன் ஆனால் போலே-சம்சாரிகள் என்று வாசி வையாதே அர்ச்சாவதார முகத்தால் வந்து ஸூலபனானவனை-

இவ்வோ நிலைகளை விஷயமாக உடைத்தாய் ஆகையாலே கர்ம கைங்கர்யங்கள் இப்படி சொல்லப் பட்டன என்கிறார்-

இவற்றாலே சாதாரணம் அசாதாரணம் என்னும்–சூரணை -30 –

அதாவது-இப்படி தேவதா அந்தர்யாமியையும் அர்ச்சாவதார தையும் விஷயமாக உடைய இவ் ஆகாரங்களாலே சாதாரண விக்ரக விசிஷ்டனை விஷயமாக உடைய கர்மத்தை சாதாரணம் என்றும்
அசாதாரண விக்ரக விசிஷ்டனை விஷயமாக உடைய கைங்கர்யத்தை அசாதாரணம் என்றும் சொல்லும்
என்கை-

(இவற்றாலே) இந்த ப்ரமாண ப்ரகாரங்களாலே (ஸாதாரணம்‌ அஸாதாரணம்‌ என்னும்‌) ஸாதாரணமான்‌ விக்‌ரஹ விஸிஷ்டன்‌ கர்மத்துக்கு விஷயம்‌, அஸாதாரணமான விக்‌ரஹ விஸிஷ்டன்‌ கைங்கர்யத்துக்கு விஷயம்‌ என்று விஷய பேதத்தை அருளிச் செய்து, அதில்‌ அஸாதாரண விக்‌ரஹ விஷய கைங்கர்ய நிஷ்டன்‌ ஸாதாரண விக்ரஹ விஷயத்திலே ஸர்வ ஸாமாந்ய தயா கர்த்தவ்யமானவற்றில்‌ அந்வயியான்‌ என்கிறார் –

இவ் அசாதாரண சேவையிலே அதிகரித்தாருக்கு சாதாரணமான வதில் அந்யவம் தன்னடையே கழியும்படியை ச த்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார்-ஆனால்‌ பழையதாக அநுவர்த்தித்துப்‌ போந்ததுமாய்‌ வர்ணாத்‌,ய ஸாதாரணமுமான ஸத்‌வாரக விஷய ப்ரவ்ருத்தியை இப்போது இவனாலே விடப் போமோ என்னில்‌

ஜாதி ஆஸ்ரம தீஷைகளில் பேதிக்கும் தர்மங்கள் போலே அத்தாணி சேவகத்தில் பொதுவானது நழுவும்-சூரணை-31

(அசாதரண கைங்கர்யத்தில் இழியவே சாதாரணமான கர்மம் தன்னடையே கழியும் –-ஸ்ரீ லஷ்மணன் ஸ்ரீ ராம கைங்கர்யத்தில் இழியவே ஊர்மிளை உடன் கூடின தர்ம அனுஷ்டானம்
தன்னடையே கழிந்ததே –நற்செல்வன் தங்காய்-ஸ்ரீ ஆச்சார்ய கைங்கர்யத்தில் இழியவே பகவத் கைங்கர்யம் நழுவும் – ஸ்ரீ வடுக நம்பி பால் காய்ச்சி ஸ்ரீ நம் பெருமாள் சேவை விட்டாரே )-அதாவது
ஸ்வ கர்ம ப்ராஹ்மணஸ்ய -அத்யயனம் ,அத்யாபனம் ,யஜனம் யாஜனம் ,தானம் ப்ரதிக்ரஹணம்,
தாயாத்யம், சிலோஞ்ச்ச ,அந்யச்ச, அபரிக்ருஹீதம் , ஏதான் ஏவ ஷத்ரியஸ்ய அத்யாபன யாஜன பிரதிக்ரஹணாதி ,பரிஹார்யாணி ,தண்ட யுத்த தாதிகார , ஷத்ரியவத் வைச்யஸ்ய தண்ட யுத்த வர்ஜம் க்ருஷி கோரஷண வாணிஜ் யாதிகம் க்ராஹ்யம்–ஆபஸ்தம்ப ஸூத்ரம்
-என்கையாலே
அத்யயன அத்யாபன யஜன யாஜன தான பிரதிஹ்ருக -ரூப ஷட் கர்மமும் பிராமணனுக்கு கர்தவ்யமாய் ஷத்ரிய வைஸ்யர்களுக்கும் அத்யாபனாதி த்ரயம் ஒழிய அத்யயனாதி த்ரயமே கர்தவ்யமாய் , அவர்கள் தங்கள் உள்ளும் தண்ட யுத்தங்கள் ஷத்ரியனுக்கே அசாதாரணமாய் ,
க்ருஷி கோ ரக்ஷண வாணிஜ்யங்கள் வைஸ்யனுக்கு அசாதாரணமாய் , சுஸ்ருஷா சூத்ரச்ய இதரேஷாம் வர்ணானாம்-என்கையாலே சூத்ரனுக்கு திரை வர்ணிக ஸூஸ்ருஷையே தர்மமாய் ,
இப்படி தத் ஜாத்ய அனுகுணமாக ஒருவனுக்கு உபாதேயம் ஆனது ஒருவனுக்கு த்யாஜ்யமாக கொண்டு தர்மங்கள் பேதித்து இருக்கும் இறே-
–பிரமச்சாரியான தசையில் உபாதேயமான பிஷா சரண சமிதா தரணாதிகள் க்ருகஸ்தனான தசையில் த்யாஜ்யங்களாய் அக்னி கோத்ர அதிதி சத்காராதிகள் உபாதேயம் ஆகையாலும் வனஸ்தனான தசையில் – -சந்த்யஜ்ய க்ராம்யமாகாரம் சர்வஞ்சைவ பாரிசாதம்-என்கையாலே பூர்வ ஆஸ்ரமத்தில் உபாதேயமான க்ராம்யாகார பரிச்சதாதிகள் த்யாஜமாய் –
வசீத சர்வ சீரம் வா -என்று தொடங்கி சொல்லப் பட்ட சரம சீர வசனத்வ ஜடிலத்வ மச்முருச்லோம நகதாரண வன்ய ஆகாரங்கள் உபாதேயம் ஆகையாலும் சந்யாசியான தசையில் பூர்வ ஆஸ்ரம உபாதேயமான அக்நிஹோத்ர அதிதி சத்காராதிகளும் ஜடிலத்வாதிகளும் த்யாஜ்யமாய்
அநக்நிஸ் அநிகேதஸ் ஸ்யாத் -மனு ஸ்ம்ருதி -இத்யாதிப் படியே அனக்நித்வ அநிகேதத்வ
அசஹாயத்வாதிகளும் உபாதேயம் ஆகையாலும் ஆஸ்ரய தர்மம் பேதியா நின்றது இறே .-ஜியோஷிடோமாதிகளில் தீஷித்தவனுக்கு வர்ணத்ரைய ஆஸ்ரம சச்துஷ்டைய சாதாரணமாய்
அகரேண பிரத்யவா எதாய அவஸ்ய கர்தவ்யமாய் போரும் நித்ய கர்மம் அநனுஷ்டேயமாய்
ஜியோதிஷ்டோமாதி தர்மமே அனுஷ்டேயம் ஆகையாலே தீஷையிலே தர்மம் பேதித்து இருக்கும் இறே-ஆக இப்படி பிராமணாதி ஜாதிகளிலும் பிராமசார்யாதி ஆஸ்ரமங்களிலும் ஜியோதிஷ்டோமாதி தர்மாந்தர தீஷைகளிலும் பேதிக்கும் தர்மங்கள் போலே அசாதாரண விக்ரக சஹிதேஸ்வர விஷயம் ஆகையாலே அசாதாரணமாய் ,அத ஏவ –அத்தாணி சேவகம் –திருப்பல்லாண்டு -8- -என்று
அந்தரங்க சேவை யாகிற கைங்கர்யத்திலே அதிகரித்தவர்களுக்கு தேவதாந்த்ரி விஷயமாய் தத் சரீர பூத தேவதாத்வார தத் ஆராதனம் ஆகையாலே சாதாரணமாய் இருந்து உள்ள கர்மம் உறங்குவான் கை பிண்டம் போலே தன்னடைவே நழுவும் என்கை –இத்தால் வர்ணாஸ்ரம நிஷ்டர்க்கு தத் அதிகார அநுரூப தர்மம் ஒழிய அநுகுணமானது த்யாஜ்யதையா கழிக்கப் படுமா போலே ஸ்வரூப யாதாம்ய தர்சிகள் ஆனவர்களுக்கு தத் அநுரூப தர்மம் ஒழிய அனனுரூபமானது த்யாஜ்யமாய் தன்னடையே விட்டுக் கழியும் என்றது ஆயிற்று--இப்படி இருக்கச் செய்தே ,சிஷ்டர்கள் அனுஷ்டித்து போருகிறது –
ஸ்வ அனுஷ்டத்தை-அநநுஷ்டானத்தை – பின் சென்று லோகம் நசிக்க ஒண்ணாது என்று
ஆந்ரு சம்சயத்தாலே இறே-யதி ஹ்யஹம் ந வர்த்தேயம் ஜாது கரமண்ய தந்த்ரித மம வர்த்மாநுவர்த்தந்தே மனுஷ்யா பார்த்த ஸர்வஸ –ஸ்ரீ கீதை -23–உத் சீதே யுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம் சங்கரஸ்ய ச கர்த்தா ஸ்யாம் உபஹந்யாம் இமா பிரஜா –ஸ்ரீ கீதை -24- என்கிற படி பரார்தமாகவே இறே இவர்கள் அனுஷ்டிப்பது –(குல வர்ண ஆஸ்ரம தர்ம ஸங்க்ரஹம் ஆகாமைக்காக
-பரார்த்தம் பரனது ஆனந்தத்துக்கு என்றுமாம் )

ஜாதி த,ர்மமானது ஜாத்யந்தரத்திலே பேதிக்கக் கண்டோம்‌, கண்ட படி என்‌ என்னில்‌, யஜந-யாஜந-அத் யயந-அத்யாபந தாந ப்ரதி க்‌ரஹங்களாகிற ஷட் கர்மங்கள்‌ க்ஷத்ரியாதி,களில்‌ பேதியா நின்றன விறே –ஆஸ்ரம தர்மம்‌ ஆஸ்ரமாந்தரத்தில்‌ பேதியா நின்றது. இவை இத்தனையும்‌ பேதித்தாலும்‌ பேதியாத நித்ய தர்ம-நைமித்திக த,ர்மங்கள்‌ ஜ்யோதிஷ்டோமாதி, தீக்ஷைகளில்‌ பேதிக்குமாப் போலே ‘அத்தாணிச் சேவகமும்‌”’ (திருப்பல்‌. 8) என்கிற அந்தரங்க கைங்கர்யத்தில்‌ வர்ணாஸ்ரம ஸாதரண தர்மம்‌ தானே நழுவுமிறே-உறங்குகிறவன கையில்‌ எலுமிச்சம் பழம் போலே இது தனக்கு அவகாஸ மில்லை. இந்த த்‌ருஷ்டாந்த பலத்தாலே இவ் வதிகாரிக்கு அகரணே ப்ரத்யவாயமில்லை என்கிறது. கீழ்ச் சொன்னவை தன்னைப் போலே ; இப்படி இருக்கச் செய்தேயும்‌ ஸிஷ்டர்கள்‌ அநுஷ்டித்துப்‌ போருகிது ஆந்ரு ஸம்ஸ்யத்தாலே யிறே 

நெய்யிடை நல்லதோர் சோறு நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே –8-–அத்தாணி -என்று பிரியாமை –சேவகம் -என்று சேவை-ஐஸ்வர்யார்த்திக்கும் அநவரத பாவநையும் -அந்திம ச்ம்ர்த்தியும் அநந்ய பிரயோஜநோபாதி கர்த்தவ்யம் இறே–ஆனால் ஐஸ்வர்ய சாதனத்தையும் –தந்து -என்று பிரயோஜத்தோடு ஒக்க சொல்வான் என் என்னில் வெள்ளுயிர் ஆன பின்பு சொல்லுகிறார்கள் ஆகையாலே அந்த சாதனமும் ஸ்வயம் பிரயோஜனமாய் இறே இருப்பது -அநந்ய பிரயோஜனனுக்கு ஸ்வயம் பிரயோஜனமான சேவை சாதனமாக்கி கிடீர் ஷூத்தரமான ஐஸ்வர்யத்தை தந்தது என்கை

இந்த கைங்கர்ய நிஷ்டருக்கு கர்ம நிஷ்டரோடு சேர்த்தி இல்லாமையை சொல்லுகிறது மேல்-இனி கர்ம நிஷ்டனிற் காட்டில்‌ கைஙகர்ய நிஷ்ட,னுக்குள்ள வைஷம்யம்‌ சொல்லுகிறது-

சாதன சாத்தியங்களில் முதலும் முடிவும் வர்ண தர்மிகள் தாச வ்ருத்திகள் என்று துறை வேறு இடுவித்தது-சூரணை -32 –

(சாதனத்தில் முதல் வர்ண தர்மிகள் என்று துறை வேறு விடுவித்து -என்றும்-சாத்யத்தில் முடிவு தாச விருத்திகள் என்று துறை வேறு விடுவித்து -என்றும் பிரித்து பொருள்-சாதனம் -உபாசனம் முதல் படி- கர்ம யோகம் – வர்ண தர்மம் – பகவத் அனுபவம்- சாத்தியம் முடிவு தானே வ்ருத்தி கைங்கர்யம் முடிவு- தாஸ்யம் தானே சத்யம்- நித்யம்- அந்தரங்க அத்தாணிச் சேவகம்-இந்த உயர்ந்த நிலையைக் காட்டவே அது தன்னடையே கழியும் ) அதாவது சாதனத்தில் முதல் அடியான கர்மமும் முடிந்த நிலமான கைங்கர்யமும் -இந்த நெடு வாசி அறிந்தவர்களை நீங்கள் வர்ண தர்மிகள் ,நாங்கள் தாஸ வ்ருத்திகள் -என்று உறவு அறுத்து துறை வேறு இட்டு போகப் பண்ணிற்று என்கை
அதாவது – ஸ்ரீ திரு வயிந்திர புரத்திலே -ஸ்ரீ வில்லி புத்தூர் பகவர் -என்பார் ஒருவர்
எல்லாரும் ஒரு துறையில் அனுஷ்டானம் பண்ண ,தனியே ஒரு துறையில் அனுஷ்டானம்
பண்ணுவராய் -ஒரு நாள் அனுஷ்டானம் பண்ணி ,மீளா நிற்க செய்தே இருந்த பிராமணர் -ஜீயரே -எங்கள் துறையில் அனுஷ்டானம் பண்ண வாராது ஒழிகிறது என்-என்ன-விஷ்ணு தாஸா வயம் யூயம் ப்ராஹ்மணா வர்ண தர்மின–அஸ்மாகம் தாஸ வ்ருத்தினாம் யுஷ்மாகம் நாஸ்தி சங்கதி -என்று துறை வேற இட்டு போனார் ஆய்த்து-(அன்னைமீர் விடுமினோ போலே-ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ கோயிலில் உள்ள சம்சாரிகள் சென்ற பின்பே ஸ்ரீ கோயிலிலுக்குள் நுழைந்த ஐதிக்யம் ஸ்வார்த்தமான கைங்கர்யம் அங்கும் உபாசகனுக்கு -துளி ஸ்வாதந்தர்யம் ஒட்டிக் கொண்டு இருக்குமே- அவன் திரு உள்ளத்திலும் இவன் வந்த வழி பட்டு இருக்குமே )-

ஸாதநங்களில்‌ முதற் சொல்லுகிறது கர்மம்‌, கர்ம ஜ்ஞாந பக்திகளிறே ஸாதநங்கள்‌. ஸாத்‌யங்களில்‌ முடிவு கைங்கர்யம்‌பகவதநுபவம்‌, அநுபவ ஜநித ப்ரீதி, அநந்தரமிறே பீரீதி காரித கைங்கர்யம்‌, திருவயிந்திரபுரத்தில்‌ வில்லி புத்தூர்ப் பகவர்‌ என்பாரொருவர்‌ எல்லாரும்‌ ஒரு துறையிலே அநுஷ்டாநம்‌ பண்ண, தாம்‌ ஒரு துறையிலே அநுஷ்டாநம்‌ பண்ணுவாராய்‌, ஒருநாள்‌ அநுஷ்டாநம்‌ பண்ணி மீண்டெழுந்தருளா நிற்கச் செய்தே, இருந்த ப்‌ராஹ்மணர்‌ ‘ஏன்‌ ஜீயரே! எங்கள்‌ துறையில்‌ அநுஷ்டாநம்‌ பண்ண வாராதொழிவானென்‌’ என்ன, *’விஷணு தாஸா வயம்‌ யூயம்‌ ப்‌ராஹ்மணா வர்ண தர்மிண? ! அஸ்மாகம்‌ தாஸ விருத்தீநாம்‌ யுஷ்மாகம்‌ நாஸ்தி ஸங்கதி:’‘ என்று – ‘நீங்கள்‌ ப்‌ராஹ்மணார்‌, வர்ண தர்மிகள்‌; நாங்கள்‌ தாஸ வ்ருத்திகள்‌, கைங்கர்ய பரர்‌. ஆகையாலே உங்களோடே எங்களுக்கு அந்வயமில்லை” என்று துறை வேறிட்டுப் போனாரிறே

கீழ் –ஜாதியாதிகளில் பேதிக்கும் தர்மங்கள் போலே -சூரணை-31 என்ற இத்தாலே ஸூசிதமான அதிகார பேதத்துக்கும் துறை வேறு இட்டு போகும் படியான நெடு வாசிக்கும் பிரகாசகமான கர்ம கைங்கர்ய நிஷ்டர் இருவருக்கும் உண்டான ஜென்மாதி விசேஷத்தை தர்சிப்பதாக கோலி ,பிரதமம் ஜன்ம விசேஷத்தை சொல்லுகிறது மேல்-இனி மேல்‌ இவர்களிருவர்க்கும்‌ ஜந்ம நிருபக கூடஸ்தரிருக்கும்படி என்‌ என்ன; இவை இப்படிப் பட்டிருக்கும்‌ என்கிறார்‌-

வேத வித்துக்களும் மிக்க வேதியரும் சந்தஸாம் மாதாவாலும் அதுக்கும் தாயாய்த் தாயினும் ஆயின
செய்யும் அத்தாலும் பிறப்பிக்கும் அது இருவருக்கும் ஸ்ரேஷ்ட ஜன்மம் –சூரணை -33 –

அதாவது-யேச வேத விதோ விப்ர—பாரதம்-என்கிற வேத வித்துகிகளான பூர்வ பாக நிஷ்டர்
காயத்ரீம் சந்தசா மாதா – தைத்ரீயம் என்கிறபடி சந்தசுகளுக்கு மாதாவாய் இருக்கிற காயத்ரி உபதேசத்தாலே பிறப்பிக்கும் அது -கர்ம நிஷ்டருக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம் யேசாத் யாத்மவிதோ ஜனா -( ஏச அத்யாத்ம வித் )-பாரதம்-என்கிற மிக்க வேதியரான வேத தாத் பர்ய வித்துக்கள்-ரூசோ யஜூம்ஷி சாமானி ததைவா தர்வணா நிச சர்வம் அஷ்டாஷராந்தச்தம் யச்சன்யா தபி வாங்மயம் –என்று சகல வேத ஸங்க்ரஹம் ஆகையாலே அந்த காயத்ரிக்கும் மாத்ரு பூமியாய் – பெற்ற தாயினும் ஆயின செய்யும் –பெரிய திருமொழி -1-1-9-என்கிற படியே சரீர உத்பாதிகையான மாதா மாத்ரம் அன்றிக்கே
உஜ்ஜீவனத்துக்கு உறுப்பான ஞானத்தை உண்டாக்கும் திரு மந்த்ரத்தாலே பிறப்பிக்கும் அது கைங்கர்ய நிஷ்டருக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம் என்கை–சஹி வித்யாஸ் தம் ஜனயிதி தஸ் ஸ்ரேஷ்டம் ஜன்ம-ஆபஸ்தம்ப சூத்ரம் -என்கையாலே-கேவல ஜன்மம் என்னாதே ஸ்ரேஷ்ட ஜன்மம் என்கிறது ..-அது வர்ண அனுகுணமான விதி நிஷேதங்களுக்கும் தத் அநுரூப அனுஷ்டானந்தக்கும்-தத் அனுகுண பல பிராப்த்திக்கும் உறுப்பாகையாலே அவர்களுக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம் —இது ஸ்வரூப அனுரூபமான-( ஆத்ம ஸ்வரூபத்துக்கு இங்கு )- விதி நிஷேதங்களுக்கும் தத் அநுரூப அனுஷ்டானந்தக்கும்
தத் அநுரூப பல பிராப்த்திக்கும் உறுப்பாகையாலே இவர்களுக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம்-
(தாஸ்ய சத்யன் -சகல ஆகமங்களும் உன்னையே காட்டும்-அந்தராத்மதயா உபாசகன் – அவரவர் இறையவர் –விதி வழி அடைய நின்றனர் –-சகல பலாநாம் ப்ரசூதி தேசிகன் -சாஸ்த்ர தாத்பர்யத்தை பிடித்து தாஸ்யம் -அச்யுத சதகம் 17-20-ஸ்லோகத்தில்-இந்தக் கருத்தை அருளிச் செய்கிறார் )

 யே ச வேத விதோ விப்ரா” (பார. ஆர.) என்கிற. வேத வித்துக்கள்‌, ““காயத்ரீம்‌ சந்தஸாம்‌ மாதா’‘ என்கிற க,௱யத்ர் யுபதேஸத்தாலே பிறப்பிக்குமது கர்ம நிஷ்ட,னுக்கு ஸ்ரேஷ்ட ஜந்மம்‌; ‘“யே சாத்‌,யாத்ம விதோ ஜநா?” என்கிறபடியே மிக்க வேதியரான வேத தாத்பர்யம்‌ கைப்பட்டவர்கள்‌ ““ஸர்வ மஷ்டாக்ஷராந் தஸ்தம்‌”” (வ்ரு.ஹா. )என்கிறபடியே, அந்த காயத்ரி தனக்கும்‌ மாத்ரு ஸ்தாநமாய்‌, “பெற்ற தாயினுமாயின செய்யும்‌”‘ (திருமொழி–1– 1 – 9) என்கிறபடியே ஸரீரோத்பத்தி மாத்ர மன்றியிலே ஜ்ஞாந விகாஸத்‌தைப்‌ பண்ணிக் கொடுப்பதான திருமந்த்ரத்தாலே பிறப்பிக்குமது கைங்கர்ய நிஷ்டர்க்கு ஸ்ரேஷ்ட ஜந்மம்‌. “ஜந்மநா ஜாயதே ஸூத்‌ர? கர்மணா ஜாயதே த்‌விஜ? । வேதாப்‌,யாஸேந விப்ரத்வம்‌ ப்‌,ரஹ்ம வித்‌ ப்‌ராஹ்மணோ விது,” என்றும்‌, “ஸ ஹி வித்‌யாதஸ்‌“ தம்‌ ஜநயதி தச் ச்‌ரேஷ்ட,ம்‌ ஜந்ம” (ஆப.த.1 – 1 – 16) என்னக் கடவதிறே

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —9—மாதாவானவள் சரீரத்துக்கு உத்பாத யாம் அளவு இறே-ஆத்மாவுக்கு ஸ்வரூபமான ஜ்ஞான விகாசத்தை பிறப்பிப்பான் அவனே இறே-சரீரமே மாதாபிதரௌ ஜநயதே -என்று விரோதியான சரீரத்தை உத்பாதித்து விடும் அளவு இறே அவர்கள் செய்தது-சஹி வித்யா தஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் -ஜ்ஞானப் ப்ரதன் அவன் இறே-

இப்படி ஸ்ரேஷ்ட ஜன்மாக்களான இருவருக்கும் நிரூபகங்கள்–இப்படி ஸ்ரேஷ்ட ஜந்மரான இருவர்க்கும்‌ நிரூபகம்‌ ஏதென்னில்‌- இன்னது என்கிறது-

அந்தணர் மறையோர் என்றும்–அடியார் தொண்டர் என்றும்–இவர்களுக்கு நிரூபகம்-சூரணை -34 –-

(அந்தணர் -ப்ராஹ்மண்யமும் மறையோர் -வைதிகத்வமும்-அடியார் -சேஷத்வம் அடிமைத்தனம் அறிந்தவர் -தொண்டர் -கிஞ்சித் கைங்கர்யம் செய்தவர் என்றவாறு – எது எது ஏன் பணி என்னாது அதுவே ஆட் செய்யும் ஈடு )-அதாவது-சாதி அந்தணர் -திருமாலை -43–துணை நூல் மார்வில் அந்தணர் -பெரிய திருமொழி -1-5-9–தீ யோம்பு கை மறையோர்-பெரிய திருமொழி -7-9-7–நந்தா வண் கை மறையோர்– -பெரிய திருமொழி -6-7-8- என்று விசேஷண பூத சரீரத்வாரா வந்த வர்ணமும் தத் பிரயுக்தமான வைதிகவத்மமும் அவர்களுக்கு நிரூபகம்-திருமால் அடியார்-திருவாய் -5-6-11-
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார்-பெருமாள் -1-10-திரு மாலுக்கு உரிய தொண்டர்-திருவாய் -6-9-11
திரு நாரணன் தொண்டர்-திருவாய் -3-7-4- என்று ஆத்மா வஸ்துவுக்கு ஞான ஆனந்தங்களில் காட்டிலும்
அந்தரங்க நிரூபகமான சேஷத்வம் தத் பிரயுக்த கிஞ்சித் கரத்வமும் இவர்களுக்கு நிரூபகம் என்கை-

“’துணை நூல்‌ மார்விலத்தணர்‌”” (திருமொழி 1 – 5 – 9) என்றும்‌, ”தீயோம்புகைமறையோர்‌’” (திருமொழி 7 – 9 – 7) என்றும்‌ சொல்லுகிற இவை கர்ம நிஷ்டரர்க்கு நிரூபகம்‌. “வேதார்த்த அநுஷ்டாந யோக்‌யர்‌ அந்தணர்‌” என்றும்‌, ‘வேதார்த்த அநுஷ்டாந பரர்‌ மறையோர்‌’ என்றும்‌ சொல்லக் கடவது. இனி, “அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌”” (பெரு. திரு 1 – 10) என்றும்‌, “’அக மகிமும்‌ தொண்டர்‌”” (பெரு.திரு 1 – 10) என்றும்‌ சொல்லுகிறபடியே கைங்கர்ய நிஷ்டனுக்கு நிரூபகம்‌ – அடியார்‌-கிஞ்சித்கார அர்ஹர்‌. தொண்டர்‌-கிஞ்சித்கார ஸ்வபாவர்

அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே43—சாதி அந்தணர்கள் –கீழ்ச் சொன்னவை ஷத்ரிய வைஸ்யர்களுக்கும் பொது விறே – அவ்வளவு அன்றியே ஜாத்யா பிராமணராய் இருக்கை –ஏலும் –கீழ்ச் சொன்னவை ஒருவருக்கும் சித்திக்கும் அது அல்ல –சித்திக்குமே யாகிலும் – வைஷ்ணவ நிந்தையில் வந்தால் இவை எல்லாம் அசத் சமம் என்கை – துர்மானோ பஹதர்க்கு அபசார ஹேதுவுமாய் – இவை இல்லாதார் தலை மேலே கால் இட்டு திரிகைக்கு உடலாம் இத்தனை –

தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பில் அந்தணரும்
அண்டா வெமக்கே யருளாய் என்று அணையும் கோயிலருகெல்லாம்
வந்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய
தன்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-9–-கேவல ப்ராஹ்மணரும் –
வித்யா விநய சம்பந்நே ப்ராஹ்மனே -என்று பிரித்தார் இறே ஸ்ரீ பாஷ்ய காரர் 

சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும்
மாயா வெனக்கு உரையாய் இது மறை நான்கினுளாயோ
தீ யோம்புகை  மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ வுன தடியார் மனத்தாயோ வறியேனே—7-9-7–எப்போதும்  ஒக்க அக்நி கார்யத்தில் அவஹிதராய்ப் போருகிற பிராமணர் உடைய

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக்
கந்தார் களிற்றுக் கழல் மன்னர்  கலங்கச் சங்கம் வாய் வைத்தான்
செந்தாமரை மேல் அயனோடு சிவனும்  அனைய பெருமையோர்
நந்தா  வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே –6-7-8—தனித் தனியே சிருஷ்டி சம்ஹாரத்துக்கு ஷமராய் ப்ரஹ்ம ருத்ரர்களில் காட்டில் ஏற்றமான ஔதார்யத்தை உடைய
பிராமணர்
நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11—இந்த லோகத்தில் எல்லாரும் கொண்டாடும் படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை யுடையராய் ஸ்ரீ லஷ்மீ பாதிக்கு அடியாரானவர்களை ஆராதிக்கப் பெறுவார்கள் -அவர்களுக்கு ஆராதனம் ஆகிறது இவர் அநு கரித்த இப் பாசுரத்தை சொல்லுகை-தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்மாலைகள் சொன்னேன் என்ன கடவது இ றே-இவர் இவ் வநுகாரத்தாலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ப்ரியகரர் ஆனால் போலே இது கற்றாரும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிரியமான வ்ருத்தியைப் பண்ணக் கடவர் என்கை-

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10–பகவத் அனுபவத்தாலே நிரதிசய ஆனந்த உக்தரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழ-

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்

தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11–ஸ்ரீ யபதிக்கு அசாதாரணமான தாஸ்யத்துக்கு பர்யவசான பூமியான ஆழ்வார் -இவருடைய அஹம் புத்தி இருக்கிற படி -பயிலும் சுடர் ஒளிக்கு பின்பு ததீய சேஷத்வ பர்யந்தமாயிற்று -இவருடைய அஹம் அர்த்தம் இருப்பது -இவ்வளவு வருகை இறே அநந்யார்ஹ சேஷம் ஆவது

உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே
.–3-7-4–ஸ்ரீ மன் நாராயணன் –ஆபரணங்களில் அந்நிய தமமாய் இருக்கிறபடி லஷ்மீ சம்பந்தமும் ஆபரண சோபையினுடைய போக்யத்தையாலே சொல்லாது ஒழிய மாட்டார் அசங்க்யாதம் ஆகையால் பேச மாட்டார் –அந்த ஆபரண சேர்த்திக்கும் மிதுனத்துக்கும் தோற்று அடிமை புக்கவர்கள் அன்று அவர்கள் தோற்ற தோல்விக்கு அடிமை புக்கவர்கள் எனக்கு நிரந்தரமான ஜென்மத்தில் அவகாசம் தோறும் சேஷிகள் –

கேவலம் இவையோ நிரூபகம்-க்ராம குலாதி வியாபதேசங்களும் இல்லையோ —கர்ம கைங்கர்யங்களில்‌ நிஷ்டராயிருக்கும்‌ இருவர்க்கும்‌ வ்யபதேஸம்‌ ஏதென்னில்‌ — சொல்லுகிறது மேல்-

ஒரு தலையில் க்ராம குலாதி வியாபதேசம்-குலம் தரும் என்னும் மாசிற் குடி பழி என்று பதியாக கோயிலில் வாழும் என்பர்கள்-சூரணை -35 –

அதாவது
கர்ம நிஷ்டர் என்று சொல்லப் பட்ட ஒரு தலையில் சரீர அனுபந்திகளான க்ராம குலாதிகளை இட்டு
வியபதேசிக்கும் அந்த வியபதேசத்தை கைங்கர்ய நிஷ்டரான மற்றை தலையில் உள்ளவர்கள்
குலம் தரும் -பெரிய திருமொழி-1-1-9–என்கிற படியே திரு மந்திர சித்த பகவத் சம்பந்த ஜ்ஞான பிரயுக்தமாய் மாசில் குடி -மூன்றாம் திருவந்தாதி –10—என்று சேஷத்வ விரோதியான அஹங்காராதிகள் இல்லாமையாலே நிர் தோஷமாய் இருக்கிற இக் குலத்துக்கு -(கீழ் சொன்ன வியபதேசத்தை )அவத்ய கரம் என்று கருதி-வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள்–நாச்சியார் -8-9–
கோயிலில் வாழும் வைட்டணவன்—பெரியாழ்வார் 5-1-3–என்று பகவத் அன்வயம் உள்ள தேச சம்பந்தத்தை விட்டு வ்யவகரிப்பர்கள் என்கை .. இது பகவத் சம்பந்தத்தை இட்டு வ்யபதேசிக்கும் அதுக்கும் உப லஷணம்.(ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் –கதறுகின்றேன்) ஏகாந்தீ வ்யபேதேஷ்டவ்யோ நைவ க்ராம குலாதிபி விஷ்ணுனா
வ்யபேதேஷ்டவ்யஸ் தஸ்ய சர்வம் ச ஏவ ஹி—பரமைகாந்தி தர்மம்
-என்னக் கடவதிறே-

 கரம நிஷ்டரை க்ராம குலாதிகளாலே வ்யபதேஸிக்கக் கடவது; கைங்கர்ய நிஷ்டனுக்கு அந்த க்‌ராம குலாதிகளால்‌ வருகிற வ்யபதேஸம்‌ ”குலந் தரும்‌’” (திருமொழி 1 – 1 – 9) என்றும்‌, “மாசில்‌ குடிப்‌ பிறப்பு” (மூ.திருவ. 10)என்றும்‌ பகவத் ஸம்பந்த ஜ்ஞாநத்தாலே இதர வ்யாவ்ருத்தமான வைஷ்ணவ ஜாதீயனான இவனுக்கு அவத்‌யமாகையாலே நிரவத்‌யமான பகவத்‌ ஸம்பந்த ப்ராதாந்யமே தோற்றும்படியாக, ““வேங்கடத்தைப்‌ பதியாக வாழ்வீர்காள்‌” (நா.திரு.8 – 9) என்றும்‌, “கோயிலில்‌ வாழும்‌ வைட்டணவர்‌” (பெரியா.திரு. 5 – 1 .. 3) என்றும்‌ சொல்லுகிறபடியே பகவத் ஸம்பந்தமுள்ள தேஸத்தையிட்டும்‌, பகவத்‌ ஸம்பந்த தந் தன்னை யிட்டும்‌ வ்யபதேஸிக்கக் கடவது; “ஏகாந்த வ்யபதேஷ்டவ்யோ நைவ க்‌ராம குலாதி,பி। விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி நத்யாஸ் தஸ்யைவ நாமாதி, ப்ரவிஷ்டாயா யதார்ணவம்‌ ! ஸர்வாத்மநா ப்ரபந்தஸ்ய விஷ்ணு மேகாந்திநஸ் ததா”” என்னா நின்றதிறே –

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —9—ஜன்ம வருத்தங்களால் குறைய நின்றான் ஒருத்தனுக்கு பகவத் சம்பந்தம் உண்டானால் இவற்றால் உயர்ந்தான் ஒருத்தன் இவை இரண்டிலும் இவனுக்கு தாழ்வு உண்டாகவும் தான் உயர்ந்தான் ஆகவும் -நினைத்து இருக்கவும் கூட கூச வேண்டும்படி யாயிற்று பகவத் பிரபாவம் இருப்பது –
ஆனாலும் பெண் கொடுத்தல் கொள்ளுதல் செய்கிறார் இல்லை – அதுக்கடி ஜாதி நிபந்தனம் ஆகை
ஸ்லாகைக்கு நிபந்தனம் ஸ ஸ்லாக்யஸ் ஸ குணீ தந்யஸ் ஸகுலீந -என்னக் கடவது இறே –கண்ட தெல்லாம் தர்ம சந்தேஹம் பண்ணக் கடவ தர்ம புத்திரன் பகவத் ப்ரத்யாசத்தியாலும் அசரீரி வாக்யத்தாலும் விதுரரை ப்ரஹ்ம ரதத்தாலே சம்ஸ்காரம் பண்ணினான் இறே – ருஷிகள் தர்ம வ்யாதன் மாம்ஸ விக்ரயம் பண்ணி கை ஒழியும் தனையும் பார்த்து நின்று தர்ம சங்கங்கள் கேட்டுப் போனார்கள் இறே –இங்கன் அன்றாகில் பஞ்சம வேதமான மஹா பாரதத்திலே எழுதக் கூடாது இறே – கைசிக கதையிலே வந்தவாறே விலஷணனாய் இருப்பான் ஒரு ப்ரஹ்ம ராஜஸ் ஆசார வைகல்யத்துக்கு -பகவத் ஜ்ஞானம் உடையான் ஒரு பாடுவானாலே பரிஹாரம் இருந்தது இறே –ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ராவணனைப் பார்த்து -பெருமாளை சரணம் புகு-என்று சொல்ல – த்வாந்துதிக்  குல பாம்ஸநம் -என்று -நீ இக்குடிக்கு உடல் அல்ல என்றான் இறே – ராவணனுக்கு வார்த்தை சொல்லும் இடத்தில் –நிசாசர -என்று அவனை ராஷசனாகவும் தான் அல்லனாகவும் சொன்னான் – இங்கனே அன்றிக்கே -ராஷசாநாம் பல அபலம் என்று பெருமாள் தாமும் அருளிச் செய்தார் –ஆகையாலே பகவத் சம்பந்தம் ஸ்பர்ச வேதியாய் இருந்தது –

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப் பிறப்பும்   மற்றவையும்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு —-10–மதிப்பும் –பராபிபாவன சாமர்த்தியமும் -ஐஸ்வர்யமும் -வடிவு அழகும் –குற்றம் அற்ற பிறப்பும் –குற்றம் அற்ற பகவத் ப்ரத்யாசத்தியால் வரும் ஆபி ஜாத்யமும்–-அநுக்தமான அவையும் -இவை எல்லாமான நன்மைகளும்-

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள்
பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9–ஏஷ ஹ்யேவா நந்தயாதி -தைத் ஆனந்த -7-என்கிறபடியே அவன் ஆனந்திப்பிக்க ஆனந்தித்து திரிகிறி கோள் அன்றோ நீங்கள்-ஒரு விபூதியாக  அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று களிக்குமா போலே நீங்களும் திரள் திரளாக வர்த்திக்கிறிகோள் அன்றோ-வந்தேறிகளாய் திருநாள் சேவித்து போவாரைப் போலே போராதே-
அங்கே நித்ய வாசம் பண்ணப் பெறுவதே நீங்கள்
 -சேறு தோய்ந்து கழுவினவர்கள் அன்றிக்கே –
முக்தரைப் போலே அன்றிக்கே – நித்ய சித்தரைப் போலே யாய்த்து –
அங்குத்தை வர்த்தநத்தை இறே வாழ்வாகச் சொல்லுகிறது-இரண்டு ஆற்றுக்கும் நடுவில் வாசம் போலே – நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -11-5- என்னக் கடவது இறே பல நீ காட்டிப் படுப்பாயோ –திருவாய் -6-9-9- என்றும் –
புறத்து இட்டு இன்னம் கெடுப்பாயோ
 -6-9-8-என்றும் இதர விஷய ப்ராவண்யம் விநாச ஹேதுவாய் இருக்கும் – பகவத் ப்ராவண்யம் வாழ்வாய் இருக்கும்

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் -5- 1-3 –வன்மை -மிடுக்கு-ஸ்ரீ கோயிலில் வாழும் என்று புறம்புள்ள அபிமானம் குலைகையாலும் தாம் அநந்ய பிரயோஜனர் ஆகையாலும் இவருடைய ராஜ குலம் இருக்கும் படிபவத் விஷய வாஸிந -(ஸ்ரீ ராமாயணம் ) இவற்றின் புறத்தான் என்று எண்ணானோ-(திரு விருத்தம் )என்று ஸ்ரீ பகவத் அபிமானம் உள்ள தேசத்தே கிடக்கை இறே தங்களுக்கு பேறாக நினைத்து இருப்பது-

ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மா நகர் உளானே –29—வேறு எவ்வித யோக்யதையுமில்லாமற் போனாலும் ஸாளக்ராமம், கோயில் திருமலை, பெருமாள் கோயில் முதலிய திவ்யதேசங்களில் ஜந்மமாவது கிடைத்தால் அதைக் கொண்டு உய்வு பெறலாம்.-அப்படிப்பட்ட ஒரு தேசத்திலும் எனக்குப் பிறவி நேரவில்லையே!-திவ்யதேசத்தில் ஐந்மமில்லாவிடினும் உதரபோஷணார்த்தமாக ஏதாவது கொஞ்சம் க்ராம பூமிகள் ஏற்பட்டிருந்தால் அங்குப் போக வேண்டிய காலங்களில் யாத்ருச்சிகமாக இடையிலே ஒரு திவ்யதேவஸேவை கிடைக்கக்கூடும் அப்படிப்பட்ட ப்ரஸக்தி நேருவதற்கு ஒரு குழியளவு காணியுமில்லை யென்கிறார்.-இவையொன்றுமில்லையாகிலும் திவ்யதேசவாஸிகளோடு உறவு இருக்குமாகில் பந்து க்ருத்ய பரிபாலனத்துக்காகச் சிலகாலம் அங்குப்போகவும் அதடியாக பகவத்ஸேவை கிடைக்கவும் ப்ரஸக்தியுண்டு; அப்படிப்பட்ட உறவினர்களும் எனக்கில்லை.

இனி உபயர் உடையவும் கூடஸ்தரை சொல்லுகிறது-இனிமேல்‌ இருவருடையவும்‌ கூடஸ்தரைச்‌ சொல்லுகிறது-

விப்ரருக்கு கோத்ர சரண சூத்ர கூடஸ்த்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள்-பிரபன்ன ஜன கூடஸ்த்தர் பராங்குச பரகால யதி வராதிகள் .-சூரணை -36-

அதாவது
அந்தணர் மறையோர் என்கிற பிராமணருக்கு கோத்ர கூடஸ்தர் பரசராதிகள்
கோத்ரமாவது-அபத்ய சந்ததி ( பிள்ளைப்பிறப்பின் சந்ததி ) – சந்ததிர் கோத்ர ஜனன குலம் அபிஜனம் அன்வயம் -பர்யாய சொற்கள் -அமரகோசம் -என்னக் கடவதிறே-அந்த கோத்ரம் தான் அநேகமாய் தத் தத் கூடஸ்தரான வசிஷ்ட காஸ்யப பரத்வாஜ வத்ஸ ப்ரப்ருதிகள் பலர் உண்டாகையாலே பராசராதிகள் என்கிறது .-சரண கூடஸ்தர் பாராசர்யாதிகள் —சரணங்கள் ஆனவை -வேத சாகைகள் தத் அத்யாதிகளையும் கௌணமாக சரண சப்தத்தாலே சொல்லக் கடவது .-சரண சப்த காடக காலாபாதி சாகா விசேஷஷு முக்ய தத்தத் யாயிஷு புருஷே ஷு கௌண-என்கையாலே இவ் இடத்தில் சாகைகளைச் சொல்லுகிறது ..சர்வ சாகைகளுக்கும் பிரதான பிரவர்தகன் பாராசர்யனாக இருக்க செய்தேயும் பின்பு தத் தத் சாகைகளுக்கு தனி தனி பிரவர்தகரான கடக லாப கண்வராதிகளும் உண்டாகையாலே பாராசர்யாதிகள் என்கிறது-சூத்ரம் ஆவது -கர்ம அனுஷ்டான பிரதி பாதகமான கல்பம் . சீஷாயாம் வர்ண சிஷா—ஸ்ரீ ரெங்கராஜ உத்தர சதகம் -18- -என்று தொடங்கி சொல்லி வருகிற அளவிலே கல்பேனுஷ்டானம் முக்தம் -என்றது இறே ..அது தானும் பலவாய் ,தத் தத் கர்த்தாக்கள் ஆன ஆபஸ்தம்ப ஆஸ்வலாயநாதிகளும் உண்டாகையாலே போதாயானாதிகள் என்கிறது . ஆக இவர்கள் விப்ரருக்கு கூடஸ்த புருஷர்கள் அடியார் தொண்டர் -என்கிற பிரபன்ன ஜனங்களுக்கு கூடஸ்தர்
பத்யு ஸ்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞய சம்பதம்
(மயர்வற மதிநலம் அருளப்பெற்றவருக்கு மொழி பெயர்ப்பு ) பிர பன்ன ஜன கூடஸ்தம் பிரபத்யே ஸ்ரீ பராங்குசம் -ஸ்ரீ பராங்குச அஷ்டகம் -4–. என்கிற நம் ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் தொடக்கமான எல்லா ஆழ்வார்களும் ,எம்பெருமானார் முதலிய ஆச்சார்யர்களும் என்கை .-கூடஸ்தர் ஆகிறார் –மூல பூதர் இறே-உபதேச அனுஷ்டானங்களாலே பிரபத்தி மார்க்கத்தை தலை பெருத்தி வளர்த்தவர்கள் ஆகையால் இவர்களை பிர பன்ன ஜன கூடஸ்தர்கள் என்கிறது –(ப்ரஹ்ம ஞானம் அளித்தவர் ஸ்ரீ நம்மாழ்வார் – கைங்கர்யம் செய்ய உணர்த்தியவர் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –ஆச்சார்ய அபிமானம் அனுஷ்டானம் ஸ்ரீ ராமானுஜர் )

முற்பட்ட ப்‌ராஹ்மணர்க்கு பராஸர(வ்யாஸ)வஸிஷ்டாதிகள்‌ கோத்ர குருக்களுமாய்‌- போதாயநாதிகள்‌ ஸூத்ர குருக்களுமாய்‌, (தத் தச் சரண- உபயங்‌களில்‌) பூர்வ பூர்வ புருஷர்கள்‌ கூடஸ்தருமாய்‌ இருப்பர்கள்‌. ப்ரபந்ந ஜந கூடஸ்த ர்‌ ““பத்யுஸ் ஸ்ரிய? ப்ரஸாதேந ப்ராப்த ஸார்வஜ்ஞ்ய ஸம்பதம்‌ ! ப்ரபந்ந ஜந கூடஸ்தம்‌ ப்ரபத்‌யே ஸ்ரீபராங்குஸம்‌?” (பரா.௮..] என்றும்‌, ‘‘ராமாநுஜாங்க்‌ரி ஸரணோஸ்மி குல ப்ரதீபஸ் த்வாஸீத்‌ ஸ யாமுந முநேஸ் ஸ ச நாத வம்ஸ்யச । வம்ஸ்ய? பராங்குஸ முநேஸ்ஸ ச ஸோபி தேவ்யா ததாஸஸ் தவேதி வரதாஸ்மி தவேக்ஷணீய?” (வரத.ஸ்தவே 102) என்றும்‌ சொல்லுகிறபடியே  நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்‌ தொடக்கமான ஆழ்வார்‌களும்‌, உடையவர்க்கு முன்பும்‌ பின்புமுள்ள ஆசார்யர்களும்‌ என்கிறார்

சீஷாயாம் வர்ண சிஷா பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்
சந்தஸ் சந்தஸ்திதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யவ்திஷம் ரங்க நாத
கல்பே அனுஷ்டானம் யுக்தம் ஹி உசிதகமிதயோ நியாய மீமாம்சயோ ஸ்யாத்
அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதிஷு தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா –18-கல்ப ஸூத்ரத்திலே வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டிய முறைமை சொல்லப் பட்டது

பத்யு: ச்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம் |
ப்ரபன்ன ஜன கூடஸ்தம் ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம் ||-
-5-ஸ்ரீ திருமால் திருவருளால் – மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் – சர்வஜ்ஞத்வம் ஆகிற சம்பத்தைப் பெற்றவரும் பிரபன்ன ஜனங்களுக்கு தலைவருமான – ஸ்ரீ நம்மாழ்வாரைத் தஞ்சமாகப் பற்றுகிறேன்

ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ் –102–அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்-விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள் – ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்-அந்த எம்பெருமானாரோ ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்
ராமானுஜரும் –தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்று உடையன் அன்றோ –அந்த ஆளவந்தார் தாமும் வித்யா அந் வயத்தாலும் குடல் துடைக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்-பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்ற குடல் துவக்கும் உண்டே–அந்த நாதமுனிகளும் நம்மாழ்வாருடைய வம்சத்தவர்
குருகையில் வந்த குல முனிவனுடைய குலக் கொழுந்து-ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திரு வாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்க்கு இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாத முனி அன்றோ-அந்த ஆழ்வாரும் உனது பிராட்டிக்கு அடியவர்-ஆழ்வாரும் உனக்குப் படுக்கைப் பற்று அன்றோ – பங்கயத்தாள் திரு அருளும் கொண்டவர் அன்றோ–இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத் தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ–நிகமத்தில் தம்மைக் கடாக்ஷித்து அருள வேண்டுவது பேர் அருளாளனும் அவர்ஜநீயம் என்னும் இடத்தை மூதலிக்கிறார்

இனி இரண்டு தலைக்கும் பிராமணிய வைஷ்ணவத்ய சித்தி ஹேது நியமங்களை தர்சிப்பிகிறார் மேல்-இனிமேல்‌ விப்ரரூம்‌ ப்ரபந்நருமான இவர்களிருவர்க்கும்‌ ப்‌ராஹ்மண்ய ஸித்‌தி, ஹேது எது? வைஷ்ணவத்வ ஸித்‌தி, ஹேது ஏது? என்னச்‌ சொல்லுகிறார்‌ –

அத்யயன ஞான அனுஷ்டானங்களாலே பிராமண்யம் ஆகிறார் போலே சந்தங்கள் ஆயிரம் அறிய
கற்று வல்லார் ஆனால் வைஷ்ணவத்த ஸித்தி- சூரணை-37-
-(அத்யயனம் ஞானம் அனுஷ்டானம் மூன்றுக்கும் அறிய கற்று வல்லார் மூன்று சப்தங்கள் )

அதாவது
ஸ்வ அத்யாயோத்ய தவ்ய–என்கிற படியே – ப்ரதமம் வேதத்தை ஆச்சார்ய உச்சரண அனுச்சாரண முகேன அஷர ராசி க்ரஹணம் பண்ணுகை யாகிற அத்யயனத்தை பண்ணி மீமாம்ச ஸ்ரவணாதிகளாலே தத் அர்த்த ஞானம் பிறந்து தத் அனுரூபமான அனுஷ்டானமும் உண்டானால் பிராமண்யம் சித்திக்குமா போலே ,சந்தங்கள் ஆயிரம்–திருவாய்-10-9-11- என்ற படியே சந்தோ ரூபமாய் சகஸ்ர சாகையாய் இருக்கிற திருவாய் மொழியை-அறியக் கற்று வல்லார் வைட்டணவர்––திருவாய்-5-5-11-என்கிற படியே அத்யே தவ்யம் திவிஜ ஸ்ரேஷ்டை வேத ரூபம் இதம் க்ருதம்- என்கிற பிரகாரத்திலே ஆச்சர்ய உச்சாரண அனுசாரண முகேன அப்யசிக்கை யாகிற அத்யயனத்தை பண்ணி உபதேச முகத்தாலே தத் அர்த்த ஞானம் பிறந்து தத் அனுரூபமாக அனுஷ்ட்டிக்கவும் வல்லார் ஆனால் ஆய்த்து வைஷ்ணத்வம் சித்திப்பது என்கை –

அத்‌யயநமாவது – ஓதுகை. ஜ்ஞாநமாவது அதில்‌ அர்த்த பரிஜ்ஞாநம்‌. அநுஷ்டாநமாவது – அறிந்தபடியே அநுஷ்டிக்கை என்று இவற்றாலே ப்‌,ராஹ்மண்ய மாகிறாப் போலே, (சந்தங்களாயிரமும்‌) ““சந்தங்களாயிரத்திவை வல்லார்‌” (திருவா. 10 – 9 – 11) என்று சந்தோ ரூபமான ஆயிரத்தையும்‌, “அறியக்‌ கற்று வல்லார்‌ வைட்டணவர்‌”’ (திருவா. 5 – 5 – 11) என்கிறபடியே திருவாய்மொழி ஆயிரமும்‌ அத்‌யயநம் பண்ணி, ஆசார்ய முகத்தாலே அர்த்த ஸ்ரவணம் பண்ணி, அறிந்த படியே அநுஷ்டிக்கவும்‌ வல்லாரானாலாய்த்து வைஷ்ணவத்வம்‌ ஸித்‌தித்ததாவது. ‘ஸ்வாத்‌யாயோத்‌ யேதவ்ய?”‘ (தை. ஆ.2) என்கிற விதி போலே “அத்‌யேதவ்யம்‌ த்விஜ ஸ்ரேஷ்டை வேத ரூபமித,ம்‌ க்ருதம்‌?” என்று அந்த வேதாந்த தாத்பர்யமாய்‌, இந்த திராவிட வேதத்துக்கு உள்ளீடான பாகவத ஸேஷத்வ பர்யந்தமான பகவச்‌ சேஷத்வ பரிஜ்ஞாநா பாவத்தால்‌ ப்‌ராஹ்மண்ய ஸித்‌தியுமில்லை –

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-சந்தங்களை யுடைத்தான ஆயிரம் என்னுதல் -சந்தோ ரூபமான ஆயிரம் என்னுதல் -இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார் அத்தேசத்திலே பகவத் குண அனுபவம் பண்ணி -அதிலே வித்தராய் அதுக்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே இருக்குமவர்களைப் போலே யாவர் –

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.–5-5-11-பரம பதத்திலும் அவதாரங்களிலும் திருக்குறுங்குடி நிலையிலே அழகாலும் சீலத்தாலும் உண்டான ஏற்றம் அறிந்து கற்க வல்லவர்கள் -குணாதிக்யம் இறே வஸ்துவுக்கு ஏற்றம் -வியக்தமாக கற்க வல்லார்கள் என்றுமாம்-மரு பூமியான சம்சாரத்திலே -உகந்து அருளினை ஏற்றம் அறியுமவர்கள் நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள்-

அந்த வேத அத்யயனாதிகள் உடையவர்களுக்கு இந்த வேத அத்யயனாதிகள் இல்லாத அளவில் வைஷ்ணத்வ அஸித்தி ஒழிய பிராமணிய ஹானி இல்லையே என்ன சொல்லுகிறது மேல் ..அவர்களுடைய உத்பத்தியும்‌ நிரூபிக்க வேணுமென்கிறார்‌–

இந்த உள் பொருள் கற்று உணர்ந்து மேலைத் தலை மறையோர் ஆகாதாரை அயல் சதுப் பேதிமார் என்று உத்பத்தி நிரூபிக்கும்-சூரணை -38-

அதாவது
மிக்க வேதியர் வேதத்தின் உள் பொருள் -கண்ணி நுண் – 9—என்று உபநிஷத் குஹ்யமான
இந்த திராவிட வேதார்த்தத்தை –கற்று உணர்ந்த மேலை தலை மறையோர்-முதல் திருவந்தாதி -66–என்கிற படியே-ஆச்சார்ய உபதேச முகேன கற்று அறிந்து உத்க்ருஷ்டரான-வேதாந்திகள் ஆகாதவரை –அயல் சதுப் பேதிமார் -திருமாலை -39-என்று — வேத அத்யயன பிரயோஜனம் ஈஸ்வரனை உள்ளபடி அறிந்து , ஸ்வரூப அனுரூபம் புருஷார்த்தம் கைங்கர்யம் என்று இருக்கையாய் இருக்கிற இந்த ஞான பாவத்தாலே ,நாலு வேதங்களையும் அதிகரிக்கச் செய்தே அந்த வேதத்தோடு தங்களுக்கு ஒட்டு இன்றி அதுக்கு அசலானவர்கள் என்று அறுதி இட்டு –-விஷ்ணு பக்தி விஹீநோய சர்வ சாஸ்த்ரார்த்த வேத்யபி
ப்ராஹ்மண்யம் தஸ்ய ந பவேத் தாஸ் யோத்பத்திர் நிரூப்யதாம்
-பாத்ம புராணம் –என்கிற படியே
இவர்கள் பிராமணர் அல்லர் என்று உத்பத்தி ஆராயப் படும் என்கை ..-யா புத்ர பிதரம் த்வேஷ்டிதம் வித்யா தந்த்யரேசதம் -யோ விஷ்ணும் சததம் த்வேஷ்டி தம் வித்யா தந்த்யரேசதம் –என்னக் கடவதிறே..

““மிக்க வேதியர்‌ வேதத்தினுட்பொருள்‌‘” (க.நு.சி. 9) என்று உபநிஷத்‌ குஹ்யமுமான இந்த த்‌ராவிட வேதத்தினுடைய ரஹஸ்யார்த்தத்தை, (கற்றுணர்ந்து மேலைத் தலைமறை யோராகாதாரை) ““வேட்பனவும்‌” (மு.திருவ.66) என்கிறபடியே கற்றுணர்ந்தும்‌ அநுஷ்டாந பரருமாகாதாரை ““அயல் சதுப்பேதிமார்கள்‌”” (திருமாலை 39) என்று அசலிட்டு உத்பத்தி நிரூபிக்கக் கடவதிறே. ‘‘ஓளபாஸநி ஸஹஸ்‌ரேப்‌யோ ஹ்யாஹிதாக்‌நிர் விஸிஷ்யதே | ஆஹிதாக்‌நி ஸஹஸ்ரேப்‌,யஸ் ஸோமயாஜி விஸிஷ்யதே | ஸோமயாஜி ஸஹஸ்ரேப்‌,யஸ் ஸத்ரயாஜி விஸிஷ்யதே ! ஸத்ரயாஜிஸ் ஸஹஸ்ரேப்‌,யஸ் ஸர்வவேதாந்த பாரக,ீ ! ஸர்வ வேதாந்த வித்கோட்யா விஷ்ணு ப,க்தோ விஸிஷ்யதே । விஷ்ணு ப,க்தி விஹீநோ யஸ் ஸர்வ ஸாஸ்த்ரார்த்த, வேத்‌,யபி ! ப்‌,ராஹ்மண்யம்‌ தஸ்ய ந பவேத்‌ தஸ்யோத் பத்திர் நிரூப்யதாம்‌ ‘ –(பாத்ம புராணம் –)என்னக் கடவதிறே –

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9–ப்ரமாண ஸ்ரேஷ்டமான வேதத்தை நிரூபகமாக உடையவர்கள் –உளன் சுடர் மிகு சுருதியுள் -என்று ஆழ்வார் அருளிச் செய்ய கேட்டிருக்கையாலே – அநேக சாக அத்யயனம் -பண்ணினவர்கள் என்றுமாம் –சகல வேதங்களின் உடைய ரஹஸ்யார்த்தத்தை – வேதாந்த ரஹஸ்யம் –ததீய சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வம் என்று இறே-வைதிக சாஸ்திரம் நிர்ணயித்தது-துர்க்ரஹமான இந்த ரஹஸ்யார்த்தத்தை கேட்பார்க்கு பிரதிபத்தி விஷயமாம் படி –பாடி –
பரமனைப் பயிலும் திரு வுடையார் எவரேலும் -என்றும் –எம்மை யாளும் பரமர் -என்றும்-அருளிச் செய்தார் இறே-பகவத் சேஷத்வத்துக்கும் கூட மேட்டு மடையான என் நெஞ்சிலே இத்தை
ஸ்திரமாக்கினார் –-கல்லைத் துளைத்து அதிலே நீரை நிறுத்துவாரைப் போலே நிர் விவரமான என்  நெஞ்சுக்கும் இதுவே விஷயமாம் படி பண்ணினார்–இது இறே –என் தண்மையைப் பாராதே என் திறத்தே பண்ணின உபகாரம்

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக் கண்
ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர் ——66–அறிவு தலைக் கட்டினவர்கள்-பாவன பிரகர்ஷத்தாலே சாஷாத் கரிப்பனவும்-அறிவு தலை நின்றேறி அறிந்தவர்கள் பாவனா பிரகர்ஷத்தாலே சாஷாத் கரிக்க ஆசைப் படுமதுவும் –

அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப் பேதிமாரில்
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே–39–கைங்கர்யம் நமக்கு கர்த்தவ்யம் என்று இருக்கும் அவர்கள் அன்றிக்கே இருக்கை –கைங்கர்யம் ஆகிறது -சஹஜம் – அது ஒழியச் செல்லாது இருக்கை யாவது -பிராப்தம் – அது இன்றிக்கே இருக்குமவர்கள் –அடிமைக்கு அசலான சதுர் வேதிகளாய் இருப்பாரில் காட்டில் –வேதத்யயனம் -பண்ணுகிறதுக்கு பிரயோஜனம்-ஈஸ்வரனை உள்ளபடி அறிகையும்-தன்னை உள்ளபடி அறிகையும் – கைங்கர்யம் ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் என்று அறிகையும் -ஆய்த்து –அசல் ஆகையாவது – இந்த ஜ்ஞானத்துக்கு உடலாக வேத அத்யயனம் பண்ணுகிறோம் என்று அறியாது இருக்கை –-அத்யயன பலம் அர்த்த ஜ்ஞானம் என்று அறியாதவர்கள்-சதுர் வேதிகள் ஆனாலும் நிஷ் பிரயோஜனம் -என்கை –விஷ்ணு பக்தி விஹீ நோயஸ் சர்வ சாஸ்த்ரார்த்த வேத்யபி ப்ராஹ்மண்யம் தன் நபவேத் தச்யோத்பத்திர் நிரூப்யதாம் – என்னக் கடவது இறே –

ஆக கர்ம கைங்கர்யங்கள் -26-என்று தொடங்கி– இவ்வளவாக இரண்டும் இன்னத்துக்கு அனுகுணம் என்றும்-இவற்றுக்கு பிரேரக ஆஸ்ரய விஷய பேதங்களும் இவற்றின் சாதாரண அசாதாரணத்வமும்
அசாதாரண அன்வயத்தில் சாதாரண நிவ்ருத்தியும் , கைங்கர்ய நிஷ்டருக்கு கர்ம நிஷ்டரோடு பொருந்தாமையும்அதுக்கு அடியாக இருவருடைய ஜன்ம நிரூபக கூடஸ்த பேதங்களும் ,
இருவருக்கும் பிராமணிய வைஷணத்வ ஸித்தி ஹேதுக்களும் , திராவிட வேதார்த்த ஞான அபாவத்தில் ஸ்வாதீத வேதாநன்வயராய் நிஹீனத்வ புத்தயர்ஹராம் படியும் சொல்லிற்று-

சாஸ்த்ர சாஸ்த்ர தாரதம்ய பிரகரணம் முற்றிற்று

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading