ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்
துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).
ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே
ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).
குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே
(மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)
—
ஜீயர் நாயனார் திரு வவதாரம்.
இப்படி ஸம்பந்த ஸம்பந்திகளும் உத்தாரகராம்படி வைபவமுடைய ஜீயர் தர்சநம் நிர்வஹிக்கிற காலத்திலே ஜீயருடைய பூர்வாஸ்ரமத்தில் குமாரரான நம்மையனிராமானுசன் திருநகரியிலே வளர்ந்தருளி அங்கே திருக்கல்யாணஞ் செய்தருளி சில காலத்துக்கு மேல் அவருக்குக் குமாரர் திருவவதரிக்க, அவருக்கு – அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்?’ என்று ஜீயர் திருநாமம் சாத்தி
யருளினார். பின்பு அவர் ஸ்ரீவில்லிபுத்தூரிலே யெழுந்தருளியிருக்க பின்னுமொரு குமாரர் திருவவதரிக்க, அவருக்குத் திருநாமமேதென்று ஜீயர் ஸந்நிதியிலே கேட்டு வரக் காட்ட, ஸ்ரீவில்லிபுத்தூரிலே பிறந்த பிள்ளைக்கு பெயரேதென்று கேட்டு வர விடுவதென்! பெரியாழ்வார் திருநாமம் சாத்துங்கோள்” என்று அருளிச்செய்து போகவிட, அப்படியே ‘பெரியாழ்வாரையன்”” என்று திருதாமஞ் சாத்தி யருளினார். அவர்களும் வளர்ந்து உபநீதநான பின்பு ஜீயர் திருவடிகளிலே வந்தாஸ்ரயித்தார்கள். அவ்விருவரும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஜீயர் திருவடிகளைப் பிரியாது ஆட்செய்து ஸேவித்திருந்தார். ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும் ஸ்வ புத்ரர்களுக்கு நாயனார் என்று திரு நாமம் சாத்துகையாலே இவருக்கும் *’ஜீயர் நாயனார்” என்றே நிரூபகமாயிருக்கும். இவரும் ‘ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு ஆளவந்தாரைப் போலே தமக்குப் பெளத்ரரான இவரை தர்சந ப்ரவர்த்தகாரம்படி விசேஷ கடாக்ஷம் செய்தருளினார். ஆசார்ய பெளத்ரரான அவரும் தீபாதுத்பந்ந ப்ரதீபம் போலே மிகவும் ப்ரகாச மாநராயிருத்தார்.-இத்தைக் கொண்டு ஸ்ரீபாதத்து முதலிகள் அஸ்மாஸு வத்ஸல தயா க்ருபயாச பூய:
ஸ்வச்சாவதீர்ணமிவ ஸெளம்ய வரம் மூநீந்த்ரம்
ஆசார்ய பெளத்ர மபிராமவராபிதாநம்
அஸ்மத் குரும் குணநிதிம் ஸததம் ஸ்ரயாம: ॥
நம்மிடம் வாத்ஸல்யத்தாலும் பரம க்ருபையாலும் தமதிச்சையாலே மணவாளமாமுனிகள் மீண்டுமவதரித்தாரோ என்னலாம்படி யுள்ளவரும் நற் குணங்களுக்கு நிதி போல விருப்பிடமும்,
ஆசாரியர் திருப் பேரனாரும், அபிராமவரர் (அழகிய மணவாளர்) என்ற திருநாம முடையவருமான ஜீயர் நாயனாரான அஸ்மதசார்யரை எப்போதும் அடி பணிகிறேன்- என்று அநுஸந்தித்துப்
போந்தார்கள்.
ஜீயர் ஆழ்வார் திருநகரி யேற எழுந்தருளுதல்
அநந்தரம் -எமரேழெழு பிறப்பும் கேசவன் தமரானார்கள் என்னும்படி ஆழ்வாரபிமாநாந்தர்ப் பூதரில் அக்ர கண்யரான ஜீயரும்-பகவந் பவதுத்பவஸ்தலீ பவது ஸ்ரீநகரீகரீயஸீ” –கல்யாண குண பரி பூர்ணரே! தேவரீருடைய அவதார ஸ்தலமான திருகரியானது எல்லா விடங்களிலும் உயர்ந்து விளங்கட்டும்–என்று சொல்லுகிற படியே, ஜீயர் தமக்குப் பிறந்தகமான ஆழ்வார் திருநகரியிலே சென்று ஆழ்வாரைத் திருவடி தொழ வேணுமென்று திருவுள்ளமாய், குருகூர்நம்பி! முயல்கின்றேனுன் தன் மொய் கழற்கன்பயே -என்றபடியே உத்ஸாஹத்தை யுடையராய், நம்பெருமாளை ஸேவித்து அநுமதி கொண்டு நம்மாழ்வாரை ஸேவிக்கப் புறப் பட்டருளி அரங்கத் துறையுமின் துணைவனே வழித்துணையாக எழுந்தருளி, திருவாய்மொழிப்பிள்ளை திருவவதார ஸ்தலமான குந்தீ நகரத்திலே த்ரிராத்ர மெழுந்தருளி யிருந்து,
சித்தந் திருமால் மேல் வைத்தருளும் சீர் மன்னர்
நத்தமிது காணு நாந் தொழில்–முத்தராய்ப்
போனாரே யாகிலும் பூங் கமலத்தாள் கடனைத்
தாமார வைத்தார் தலம்-என்றநுஸந்தித்து, ஸேவித்துப் புறப்பட்டருளி,
யாநி யாநிச திவ்யாநி தேஸே தேஸே ஜகந்திதே: |
தாநிதாநி ஸமஸ்தாநி ஸ்த்தாநாநி ஸமஸேவத ॥
அவ்வோ இடங்களில் எம்பெருமானுக்கு எந்தெந்த உகந் தருளின திவ்யதேசங்கள் உண்டோ அந்தந்த ஸ்தலங்கள் எல்லாவற்றையும் திருவடி தொழுதார்–என்றும் தானுகந்தவூரெல்லாம் தன் தாள் பாடி -என்றுஞ் சொல்லுகிறபடியே வழியிலுண்டான திருப்பதிகளை யெல்லாம் திருவடி தொழுது அவ்வவ் விடங்களிலே தத் ஸ்தலோசிதமான மங்களசாஸநங்களைப் பண்ணி ஸேலித்தருளி,
வைகுண்டநாத விஜாயஸந பூமி பாலாந் தேவேஸ பங்கஜ விலோசந சோர நாட்யாந் |
நிக்ஷிப்த வித்த மகராலய கர்ண பாஸாந் நாதம் நமாமி வகுளாபரணேந ஸார்த்தம் ॥
ஸ்ரீவைகுண்டநாதன், விஜயாஸநர், பூமிபாலர் தேவபிரான்,(புளிங்குடி ) ‘ அரவிந்தலோசநர் (துலை வில்லி மங்கலம்), சோரநாட்யர் (மாயக் கூத்தர்), வைத்த மா நிதி, மகர நெடுங் குழைக் காதர், வகுளாபரணரான ஆழ்வாருடன் ஆதிநாதரையும் திருவடி தொமூகிறேன்- என்கிறபடியே அஷ்டதளம் போலவே யிருக்கிற ஸ்ரீவைகுண்டம் முதலான திருப்பதிகளை ஸேவித்து, தத்கர்ணிகை போலிருதந்துள்ள திருநகரியை திருக்குருகூரதனைப் பாடி யாடிப் பரவிச் சென்மின்கள் என்று அத்யந்தம் ஹர்ஷ ப்ரஹர்ஷத்துடன் சென்று கிட்டி திருத் தாமிரபரணிச் சங்கணித் துறையிலே நீராடி–சேசவன் தமரில்படியே திரு த்வாதச நாமங்களையும் சாத்தியருளித் தாமும் முதலிகளுமாக குயில்நின்றார் பொழில்களையும், செந்தாமரைத் தடங்களையும், அதிலே அறுகால வரிவண்டிசைபாட-அன்னமென் கமலத் தணி மலர்ப் பீடத்து அலை புனலிலைக் குடை நீழல் செந்நெல் ஓண் கவரி யசைய வீற்றிருக்கும் (திருமொழி 9-1-5) படியையும் செம் பொன் மாடங்களையும், உயர்ந்த திருமாளிகைகளையும் சிரங்களாலமரர் வணங்கும் திருக்குருகூர் என்ற ஊரையும் அனுபவித்து
புக்ககத்தினின்றும் பிறந்தகத்தில் போந்தது போல்
தக்க புகழ்த் தென்னரங்கந் தன்னினின்றும்–மிக்க புகழ்
மாறன் திருநகரி வந்தோம் அரங்கன் தன்
பேறன்றோ? நெஞ்சே! இப்போது–
என்றநுஸந்தித்துக் கொண்டு எழுந்தருளி யிருக்கிற வளவிலே-நல்லார் பலர் வாழ் திருக்குருகூரிலுண்டான ஸத்துக்களெல்லாரும் குழாங் குழாமாக வந்து திருவடிகளிலே ஸேலிக்க, அவர்களையும் கிருபை பண்ணி யருளி, அவர்களுடனே கூட வெழுந்தருளி,
பிரதமம் எம்பெருமானாரை ஸ்ரீமாதவாங்கரி என்று தொடங்கி,
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா*(யதிராஜ விம்சதி-1) என்று ஸேவித்தருளி, அதி ப்ரீதியடனே தீர்த்தம் ப்ரஸாதப்பட்டு, அங்கு நின்றும் புறப்பட்டு, பிள்ளை (திருவாய்மொழிப்பிள்ளை ) திருமாளிகை யேற வெழுந்தருளி தண்டன் ஸமர்ப்பித்து உள்ளே புகுந்து இனவாயர் தலைவனையும் மங்களாசாஸநஞ் செய்தருளி,-நம: ஸ்ரீஸைல நாதாய என்றநுஸந்தித்து, பிள்ளை எழுந்தருளி யிருந்து வ்யாக்யானஞ் செய்தருளின ஸ்தலத்தையும் ”தம்மை விஷயீகரித்த இடமன்றோ!” என்று ஸேவித்து, அங்கு நின்றும் புறப்பட்டு,குன்றம் போல் மணி மாடங்களையும் “செம் பொன் மாடங்களையும் ஸேவித்துக் கொண்டு போய் உபய ப்ரதாந ப்ரணவமான உறை கோயிலிலே புக்கு, ‘வகுளாபரணம் தேவம் ஸ்வ குலாபரணம் யயெள” -தமது குலத்துக்கு பூஷணமான பூஜ்யரான நம்மாழ்வாரைக் கிட்டினார்-ஆஸ்ரயித்தார் – என்கிறபடியே முந்துற நாட் கமழ் மகிழ் மாலை மார்பனான ஆழ்வார் திருவடிகளைச் சென்று கிட்டி, மாதா பிதா என்று தொடங்கி -வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா என்றநுஸந்தித்து ஸேவித்தருளி, கண்ணி நுண் சிறுத் தாம்பை யநுஸந்தித்து, அன்னையாய் யத்தனாய் என்கிற பாட்டின்படியே ஸர்வவித பந்து விசேஷங்களெல்லாம் தமக்கு ஆழ்வாரே யென்று தோற்றும்படி அதி ப்ரேமத்துடனே அநுபலித்துக் கொண்டு அஞ்ஜலித்து நிற்க, ஆழ்வாரும் தேசாந்தர கதனான புத்ரனைக் கண்ட மாதா பிதாக்களைப்
போலே காரிமாறப் பிரானார் தாம். இவரைக் சுண்டு கொண்டிருந்து , பின்பு தீர்த்த ப்ரஸாதங்களையும் ப்ரஸாதித்து ஸ்ரீராமாநுஜனையும் ப்ரலாதித்தருள. *செல்வச் சடகோபர் தேமலர்த் தாட் தேய்த்தினிய –பாதுகமாமெந்தை யிராமானுசனை வாய்ந்தெனதுநெஞ்சமே வாழ்” என்றும், “வகுளாலங்க்ருதம் ஸ்ரீமச் சடகோபபத் த்வயம். அஸ்மத் குல தநம் போக்யமஸ்துமே மூர்த்நி பூஷணம் ‘-மகிழ மலர் மாலையால லங்கரிக்கப்பட்ட செல்வச் சடகோபரின் (ஆழ்வாரின்) இனிய திருவடியிணை அடியேனுக்கு சிரோ பூஷணமாய் அமையட்டும் என்று மநுஸந்தித்து ஹ்ருஷ்டராய், அநந்தரம் திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரிய கோலத் திவுருக் காண்பன் நான் என்கிறபடியே அவருகந்த விஷயமான பொலிந்து நின்ற பிரானையும் மங்களாசாஸனம் பண்ணிப் பு.றப்பட்டருளி மடமே யெழுந்தருளி அங்கே சிறிது காலம் எழுந்தருளியிருந்தார்
அங்குண்டானவர்களெல்லாம் இவரை அவதார விசேஷ மென்றறிந்து இவர் திருவடிகளிலே ஆஸ்ரயித்தார்கள். அவர்களை க்ருபை பணணி யருளி மாஹப்ரபாவரா யெழுந்தருளி யிருக்கிற காலத்திலே
சுருதித் தமிழ் மொழியுஞ் சடகோபர் தம் பாதத்தைக்
கருதிப் பரவு மெதிராசராசன் கவியமுதம்
வருதிக் கறிந்துரை செய்யுமோ மா முனிவன் புகழ் போய்ப்
பருதிக் கதிர் செல்லு மண்டலமேறப் பரந்ததுவே
என்னும் படியான இவர் வைபவங்களெல்லா வற்றையும் அறிந்து இருக்கிறவர்களுக்கு ஆழ்வார்களின் திவ்ய ப்ரபந்தங்களின் அர்த்த மருளிச் செய்து கொண்டிருக்குங் காலத்திலே;
திருநாராயணாபுரத்தாயி யுடன் ஸமாகமம்
ஆசார்ய ஹ்ருதயத்திற்குப் பொருள் அருளிச் செய்யும் போது ‘ஜ்ஞாந சதுர்த்திகளின் மேலே யிறே ஆநந்த ஷஷ்டிக்குதயம்।” என்கிற வாக்கியத்திற்கு அர்த்தம் ஸ்வ ரஸமாக வாகாமையாலே
இதற்கு அர்த்த மருளிச் செய்வாராரென்று விசாரமுண்டால் திரு நாராயண புரத்தாயி பக்கலிலே இவ் வர்த்தம் கேட்க வேணும் என்னும் பேராசையோடே ஆழ்வாருக்கு விண்ணப்பஞ் செய்து அவரநுமதி கொண்டு திருநாராயணபுரத்துக்குப் போவோ மென்று புறப்பட்டெழுந் தருளா நிற்க, ஆயியும் ஜீயருடைய ப்ரபாவங் கேட்டு இவரை ஸேவிப்பதாகத் திருநகரிக்கு ஆஸந்தமாக, மார்க்க மத்யே வந்து ஸங்கதராக, அவரைக் கண்டு எண்ணின பலம் எதிரிலே வரப் பெறுவதே” என்று பெரிய ப்ரீதியோடே தீர்க்க ப்ரணாமம் பண்ணி நிற்க, ஆயியும் தாளுந் தடக்கையுங் கூப்பி ஸேவிக்க, இருவரும் அந்யோந்யம் வந்தந பரராய் குசல ப்ரஸநம் பண்ணி நிற்க, இத்தைக் கண்டு ஜீயர் ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும் ‘பெரிய நம்பியும் எம்பெருமானாரும் எதிர்ப்பட்டாப் போலே யாயிற்று” என்று மிகவும் உகந்தருளினார்கள். அநந்தரம் குன்ற மாட திருக்குருகூரேற வெழுந்தருளி ஆயி பக்கலிலே ஆசார்ய ஹ்ருதய ரஹஸ்யார்த்தங்களை யெல்லாம் கேட்டருளி,
ஆசார்ய ஹ்ருதயஸ் யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸிதா: |
ஸ்ரீஸாநுதாஸ மமலம் , தேவ ராஜம் தமாஸ்ரயே ॥
[எவரால் ஆசார்ய ஹிருதயத்தின் எல்லா வர்த்தங்களும் விளக்கமாகக் காட்டப்பட்டதோ, தோஷமற்ற திருத் தாழ்வரைதாஸர் என்ற அந்த தேவராஜரை (ஆயியை) அடி பணிகிறேன் -என்று (ஸ்ரீ ஸாநு தாஸம் என்று தெலுங்குப் பதிப்பில் பாடம்-ஆயிஸ்வாமிக்கு திருத்தாழ்வரை, தாஸர் என்று திருநாமமுள்ள
படியால் [௨. ர. மாலை 58ம் பாசுர வ்யாக்யாநம் காண்க ] ஸ்ரீஸாநு தாஸர் என்ற பாடமே ஆதரணீயம், ஸாநு-தாழ்வரை. –கிரிஸாது ஷுரம்ஸ்யஸே-அஹாம் ஸர்வம் கரிஷ்யாமி*‘ எ்ன்று இளைய பெருமாள் திருத்தாழ்வரை தாஸரானார். )அந்த உபகார ஸ்ம்ருதிக்கு அவர் விஷயமாக ஒரு தனியன் அருளிச் செய்தருள; ஆயி அதில் தமக்கந்வய மற்றபடி தோற்ற,
பூதூரில் வந்துதித்த புண்ணியனோ? பூங் கமழும்
தாதாரு மகிழ் மார்பள் தானிவனோ–தூதூர
வந்த நெடுமாலோ? மணவாள மா முனிவன்
எந்தை யிவர் மூவரிலும் யார்?
என்றருளிச் செய்து ‘ஜீயரை அவதார விசேஷமென்று ஆதரித்துக் கொண்டு அங்கே சிலகால மெழுந்தருளி இருக்க; அதுவே ஹேதுவாக, ‘ஆயி திருநாட்டுக் கெழுந்தருளினார்’ என்று திரு நாராயண புரத்திலுளள அஸுயாளுக்கள் அவர் திருமாளிகையிலுள்ள ஸர்வஸ்வத்தையும் செல்வப் பிள்ளை அங்கீ கரித்தருளும்படி ஸ்ரீபண்டாரத்தில் சேர்க்க அக்காலத்திலே ஆயிவும் மீண்டும் திருநாராயணபுரத்தேற எழுந்தருளி இச் செய்தியைக் கேட்டு ஹ்ருஷ்டராய் “யஸ்யாநுக்ரஹ மிச்சாமி தஸ்ய வித்தம் ஹராம்யஹம்’” -நான் எவன் விஷயத்தில் அநுக்ரஹம் பண்ண விரும்புகிறேனோ அவன் தனத்தை அபஹரிக்கிறேன்-என்னுந் திருமுகப்படியே ப்ரத்யக்ஷமாகச் செல்வப் பிள்ளை இத்தைக் கொண்டருளிய பின்பு நாம் இரக்கத்துக்கு விஷயமென்பது கிம் புநர் ந்யாய ஸித்தமிறே, ”யஸ்யைதே தஸ்ய தத் தநம்-. உடையவன் உடைமையை ஸ்வீகரிக்கை ப்ராப்தமிறே” என்று ஈடுபட்டு
ஆநந்தாஸ்ருக்கள் பனிப்ப எழுந்தருளி ஆசார்ய க்ருபா லப்தரான ஞானப் பிரான் ஒருவரையுமே அர்த்தித்துப் பெற்று மற்றவைகளை யெல்லாம் அங்குத்தைக்கு ஸமர்ப்பித்து யாதவ கிரி நிலயனுக்கு
மால்ய மமர்ப்பணைக நிஷ்டராய் அங்கே ப்ரீதராய் எழுந்தருளி யிருந்தார்.
அநந்தரம் திருநகரியிலே பெரிய ஜீயரும்,
மாதவத்தோர் வாழ்த்தும் முடும்பை மணவாளன்
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார்–தீதற்ற
ஆசாரியவிதயம் பெற்றார் நம்மாயி யிவர்
தேசாரத்தன் கண் நெஞ்சே காண்-என்று ஆசார்ய ஹ்ருதய ஸம்ப்ரதாயத்தைத் தாமநுஸந்தித்தருள-அப்படியே முதலிகளும்
மாதவத் தோன் மாறன் மனம் கூறும் மணவாளன்
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார்- நீதியினால்
ஆங்கவர் தாள் சேரப் பெற்றாராயி மணவாள முநி
பூங்கமலத் தாள்கள் நெஞ்சே! போற்று.என்றநுஸந்தித்தார்கள்.
திருநகரியில் ஜீயர் மடம் தீக்கிறையாதல்.
இப்படி பெரிய ஜீயர் ஜ்ஞாந ஸம்ருத்தியுடனே திருநகரியிலே வாழ்ந்தருளுங் காலத்திலே, இத்தைக் கண்டு ஸஹிக்க மாட்டாதசில அஸுயாளுக்கள் ஆஸூர ப்ரக்ருதிகளாய் மஹா பாபிகளாய்க்
கொண்டு கூரை மேய்ச்சலா யிருக்கிற மடத்திலே ஜீயர் எழுந்தருளி யிருக்க, அர்த்தராத்ரியிலே அக்நி ப்ரஷேபணம் பண்ண, அத்தசையிலே ஜீயர் தம்முடைய ப்ரபாவத்தாலே அவ்வழல் தட்டாதபடி
சேஷாக்ருதியாய்க் கொண்டு அனைவருங் காணப் புறப்பட்டு; மடம் வேகிறபடியைக் கண்டு விஷண்ணராய் சோகார்த்தரா யிருக்கிற முதலிகள் திரளிலே வந்து புகுந்து நிற்க, இந்த அத்புதத்தைக் கண்ட முதலிகளெல்லாருங் கண்டு மிகவும் ஸந்துஷ்டராயிருத்தார்கள், இந்தச் செய்தியை அந்த தேசாதிபதியான ராஜா கேட்டு ப்ரச்சந்ந சாரிகளான அவர்களைக் கண்டு பிடித்து தண்டிக்கத் தேட
ஸாபராதைகளான ஏகாக்ஷி ஏககரணி தொடக்கமானவர்களையுமுட்பட திருவடியோடே மறுதலித்து, :’பாபாநாம் வா சுபாதாம் வா ”, ‘*த்ராஹி த்ராஹி’‘ இத்யாதிப்படி ரக்ஷித்த ஜநக குல ஸூந்தரியைப் போலே ஸுந்தர வர முநியான இவரும், தேவீ லக்ஷமீர்ப் பவஸி தயயா வத்ஸலத்வேந சத்வம்” [தயையாலும் வத்ஸல்யத்தாலும் தேவரீர் லக்ஷ்மீ தேவியாகிறீர்– வர. சத்கம்-14], என்னும்படியான தம்முடைய பரம க்ருபையாலும் வாத்ஸல்யத்தாலும் அவர்களையும் அப்படியே ரக்ஷித் தருளினார். பின்பு அநேக காலத்திற்கு மேல் அவர்கள் ஸாந்தா நிகரா யுள்ளவர்கள் கருணாம்ருத
ஸிந்துவான காந்தோ பயந்த்ரு முநிவர்ய கமநீய சரண கமலங்களை வந்தாஸ்ரயித்து அபராத ஷாமணம் பண்ணிக் கொண்டார்கள்.
திருக் குருகூரிலும் திருக் குறுங்குடியிலும் கைங்கர்யங்கள்
அநந்தரம் அத் தேசத்துக்கு அதிபதியா யிருப்பானொருவன் ஜீயருடைய ஜ்ஞாநாநுஷ்டான பூர்த்தியையும் ஸர்வஜ்ஞத்வாதி களையுங் கண்டு அத்யந்தம் ப்ரவணனாய்த் திருவடிகளிலே ஆஸ்ரயிக்க அவனுக்கு சடகோப தாஸர் என்று தாஸ்ய நாமம் ப்ரஸாதித்தருளி, அவனைக் குறித்து அத்ருஷ்டத்திலே முக்காற் கூறு ருசியும் – அத்ருஷ்டாநுகுணமான தருஷ்டத்திலே காற் கூறு ருசியும பண்ணிக் கொண்டு போரும்” என்று நியமித்தருள அவனும் அபப்டியே செய்து கொண்டு வர்த்தித்து, காளமேகன் திரு மண்டபம் தொடங்கித் திரு வீதிகள், திரு மதிள்கள், திரு வெல்லைகள் முதலான அனேக கைங்கர்யங்களை ஆழ்வாருகந்தருளும்படி பண்ணி அழகிய மணவாளன் திரு மண்டபத்தையும் உண்டாக்கினான்.
அநந்தரம் ஜீயர் திருக் குறுங்குடியிலே சென்று அங்கே திரு வேங்கடமுடையான் என்றொரு ப்ராஹ்மணனை க்ருபை பண்ணி யருளி அவருக்குத் திருவேங்கட தாஸர் என்று தாஸ்ய நாமம் ப்ரஸாதித்தருளி அவருக்குத் திருக் குறுங்குடியில் கைங்கர்யத்தை என்று நியமித்தருள–ஸ்ரீ வாரஹ புராண அவர் நின்ற நம்பி இருந்த நம்பி, கிடந்த நம்பி ப்ரஸித்தமான நம்பிகள மூவருக்கும் (திருப்பாற்கடல் நம்பி, மலை மேல் நம்பி என்று நம்பிகள் ஐவர்க்கும் தனித்தனியே திரு விருப்புக்களும்) தனித் தனியே திரு விருப்புகளையும் திரு மண்டங்களையு முண்டாக்கி ஸேவித்துக் கொண்டிருந்தார் இப்படி திருக் குருகூர் நம்பிக்கும் திருக் குறுங்குடி நம்பிக்கும் அனைத்தழகும் கண்டருளப் பண்ணி, மற்றும் அத் தேசத்திலுண்டான திருப்பதிகளுக்கெல்லாம் அதிசயத்தை யுண்டு பண்ணத் தக்க ஆஸ்ரிதரையும் கற்பித்தருளி, பின்பு,
ஜீயர் மீண்டும் கோயிலே எழுத்தருளல்
பிறந்தகத்திற் சீராட்டுப் பெற்றாலும் தன்னைச் –
சிறந்துகக்கும் சீர் கணவன் தன்னை-மறந்திருக்கப்
போமோ மணவாளர் பொன்னடியை விட்டிருக்க
லாமோ கல்வி யறிந்தால்,
என்றநுஸந்தித்து அப்போதே ஆழ்வாரநுமதி கொண்டு கோயிலேறப் புறப்படெழுந்தருளி பெருமாளை ஸேவித்துக் கொண்டு இதர மத நிரஸந பூர்வகமாக ஸ்வமதஸ்த்தாபநம் பண்ணிக்
கொண்டு சேஷாவதார மென்னுமது தோற்ற பெரிய பெருமாள் பரிஸரத்திலே ஸுகமே வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்திலே அப்பிள்ளாரென்றொரு வித்வான் வாதிகளை ஜயிக்கப் போய் வடதேசத்திலுள்ளாரை ஜயித்து எறும்பியில் அப்பாவுடனே தர்க்கிக்க வேணுமென்று புக, அப்பாவுடைய ப்ரபாவத்தைக் கண்டு வித்தராய் அவரை யநுவர்த்தித்துக் கொண்டு மூன்று நாளிருந்து ஜ்ஜாதவ்யாம்சங்களைக் கேட்டறிந்து, அனுப்புவித்துக் கொண்டு புறப்பட, வழிவிட வெழுந்தருளின அப்பாவும் இப்பால் நீர் இனி எங்குப் போக வேண்டுவது?” என்று கேட்க, ஸ்ரீரங்க ஸ்தலத்திலேஜீயரென்றொருவர் ப்ரஸித்தரா யிருக்கிறார்; அவரைக் கண்டு வாதிக்கவேணும்.’” என்ன, அப்பாவும் அத்தைக் கேட்டு இவருக்கு ஹிதமாய் ”நீரிப்படி செய்ய வொண்ணாது; ஜீயருடைய ப்ரபாவம் நானறிவேன்; பெருமாள் கோயிலிலே கிடாம்பி நாயனார் பாடே ஸ்ரீபாஷ்யம் ஸ்ரவித்தார்; நாயனாரும் (கிடாம்பி நாயனார் பாடே பாஷ்யம் கேட்ட போது சிந்தனை பண்ணுவித்தவர் திருநாமம் ஐயைகளப்பா (பக். 81) என்றுள்ளது. இங்குள்ளது மேல் வரும் விருத்தாந்தத்துடன் சேரவில்லை: )நம்மை அவருடனே சிந்தனைக் கிருக்கச் சொல்ல இருந்தேன்; அவர் ஸகலார்த்தங்களையும் யுகபத் ஸாக்ஷாத்கரித்து உபந்யஸிப்பர்; அவருடனே வாதிக்க ஒருவர்க்கும் க்ஷமமன்று; அதுக்கு மேலே அவர் யதீசஸ்வரர், ஸ்ரீவைஷ்ணவ தர்சநத்திற்கு அபி வ்ருத்திரர், அவரிடத்திலே நமக்கெல்ளாம் ப்ரதி பத்தி க்ரமம் வேறே.இருக்கிறது, ஸமய ப்ராப்தே சொல்லுகிறேன்”என்றருளிச் செய்து அனுப்பி யருளி மீண்டும் எறும்பியிலே எழுந்தருளினார்.
எறும்பியப்பா ஜீயரிடம் ஆஸ்ரயித்தல்
அநந்தரம் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் கோயிலினின்றும் திருமலைக்கு எழுந்தருளுவதாக எறும்பியிலே வர, அப்பா கண்டுஅவரை யழைத்தருளி ஆதரித்து, கோயில் விருத்தாந்தங்களையும் ஜீயருடைய விருத்தாத்தங்களையுங் கேட்டருள, அவர், ‘கந்தாடையண்ணன் முதலான கந்தடையய்யங்கார்களும் மற்றும் திருவாழியாழ்வார்பிள்ளை முதலான பெரியோர்களும் ஸ குடும்பமாகவும் மற்றும்
அநேகம் ஸ்ரீவைஷ்ணவர்களும் ஜீயர் திருவடிகளில் ஆஸ்ரயித்தார்கள்;-ஜீயருடைய வைபம் உத்தரோத்தர்ம் அதிசயமாக நடக்கிறது” என்று விண்ணப்பஞ்செய்ய, திருவுள்ளமுகந்தருளி,
அவருக்கு பஹுமாநஞ் செய்தருளி அற்றைக்கு அவரை நிறுத்திக் கொண்டு, நீர் சொன்னதெல்லாம் ஸாமாந்யமாகக் கேட்டிருந்தோம்; அந்த வ்ருத்தாந்தங்களையும், ஜீயர் திருநகரிக் கெழுந்தளி திரும்பி யெழுந்தருளின: செய்தியையும் விஸ்தாரமாக வருளிச்செய்யும்” என்று கேட்டருளி. அவரை, பிற்றை நாள் திருவேங்கடமுடையானை ஸேவித்து சீக்கிரமாக வரச் சொல்லி நியமித்து நாமும் பயணமாயிருக்கிறோம், கூடப் போவோம்” என்றருளிச் செய்து விட. பின்பு தமது திருத் தமப்பனாருக்கு இச் செய்தியை யறிவிக்க’ அவரும், ”ஜீயர் திருவடிகளில் ஆஸ்ரயிக்க வேணுமென்று
ருசி யுண்டு போலே யிருக்கிறது; இனி மேல் அது நன்றன்று போலே தோற்றுகிறது; வேணுமாகில் அவரிடத்தில் ப்ரதிபத்தி பண்ணி ஜ்ஞாதவ்யாம்ச முண்டானால் அநுவர்த்தித்துக் கேட்டு, ஸ்ரீபாத தீர்த்த தளிகை ப்ரஸாத ஸ்லீகாராதிகளைப் பண்ணி வாரும்’” என்ன, அந்த ஸ்ரீவைஷ்ணவரும் திருமலையில் நின்றும் வர,
அவரைக் கூட்டிக் கொண்டு எறும்பியப்பா கோயிலேற வெழுந்தருளி நம்பெருமாளைத் திருவடிதொழுது, பெரிய கந்தாடை அண்ணன் ஆப்த பந்துவாகையாலே அவர் திருமாளிகையிலே அமுது செய்தருளி அவருடனே ஜீயர் ஸந்நிதிக் கெழுந்தருள, ஜீயரும் இவரைப் பெரிய வித்வான் என்றறிந்து, பரத்வ ப்ரதிபாதகமான உயர்வற வுயர்நல ப்ரவேசத்தை ௨பந்யஸித்துக் காட்டி யருள. அப்பா அது கேட்டு ஆஸ்சர்யப்பட்டு ‘ஜீயருக்குத் தமிழொழிய ஸம்ஸ்க்ருதத்தில் மிகவும் பரிசயமில்லை யென்று கேட்டிருந்தோம்; இவர் உபய வேதாந்தத்திலும் மிக நிபுணரயிருக் கிறார்?” என்று போர ப்ரீதராயிருக்க ஜீயர் இவரை மடத்தில் அமுது செய்ய ப்ரார்த்திக்க, அவரும்,
யத் யந்நம் பதிபாத்ரஸ்தம் யதிநா ப்ரேஷிதம்ச யத் |
அந்ந த்ரயம் ந போக்தவ்யம் புக்த்வா சாந்த்ரயணம் சரேத் ॥
ஸந்யாஸி களுடைய அந்நமும், ஸந்யாஸிகளுடைய பாத்ரத்திலுள்ள அந்நமும், ஸந்யாஸிகளால் அனுப்பப்பட்ட அந்நமும்-இப்படி மூன்றும் புசிக்கத் தக்கவை யன்று , அப்படி புசித்தானாகில்
சாந்த்ராயண வ்ரதத்தை யநுஷ்டிக்கக் கடவன் -என்கிற ஸாமாந்ய சாஸ்த்ரைக நிரதராய், ‘தருவரேல் (திருமாலை-41),“ப்ரார்த்தயேத்’‘ என்கிற விசேஷ சாஸ்த்ர ஜ்ஞாத ரஹிதராய் ஜீயர் திருவடிகளிலாஸ்ரயியாமல் மறுத்தெழுந்தருளி அண்ணனைப் போர வெறுத்து அவர் திருமாளிகைக் கெழுந்தருளாமல் அப்போதே கோயிலிலிருந்து புறப்பட்டுத் தம்மூரேற வெழுந்தருளி
தமது திருவாராதநமான சச்ரவர்த்தி திருமகனாரைத் திருவடி விளக்குவதாகக் கோயிலாழ்வாரைத் திருக்காப்பு நீக்கப்புக; அது அவிசால்யமாய், ஸக்லோபாயங்களாலும் நீக்கப் போகாமையாலே மிகவும் து:கிதராய் அமுது செய்யாமலே கண் வளர்த்தருள அவ்வளவில் அப்பாவின் ஸ்வப்நத்திலே
ஸேஷ: ஸ்ரீமாநஜநிஹி புரா ஸெளம்ய ஜாமாத்ரு யோகீ
போகீ பூதஸ் ததநு பகவாந் ராகவஸ்யாநு ஜந்மா |
பூத்வாபவ்யோ வரவர முநிர் பூபஸாபா ஸமாந:
ரக்ஷத்யஸ்மாந் ரகுகுல பதே ராஸ்திதோ பத்ர பீடம் ॥
பூத்வாபவ்யோ வரவர முநிர் போகிநாம் ஸார்வ பெளம:
ஸ்ரீமத் ரங்கே வஸதி விஜயீ விஸ்வ ஸம் ரக்ஷணார்த்தம் |
தத்வம் கந்தும் வ்ரஜ ஸரண மித்யாதி ஸத் ராகவோயம்
ஸ்வப்நே ஸோயம் வரவர குருஸ் ஸம்ஸ்ரயோ மாத்ரு ஸாநாம் –
இந்த மணவாள மாமுனிகள் முதன் முதலில் கைங்கர்ய ஸ்ரீயை யுடைய திருவனந்தாழ்வானாக இருந்தார். அவ்வரவரசனே பின்பு இராம பிரானுடைய தம்பியான லஷ்மண பகவானாகப் பிறந்தான் -பின்பு ஆஸ்ரித ஸுலபரான மணவாள மா முனிகளாக அவரே அவதாரம் செய்து சக்ரவர்த்தி திருமகனுடைய மங்களமான ஸிம்ஹாஸனத்தில் வீற்றிருந்து நம்மை ரக்ஷிக்கிறார்-
திருவனத்தாழ்வான் ஆஸ்ரித ஸூலபரான மணவாள மா முனிகளாக அவதரித்து லோகத்தை ரஷிப்பதற்காக ஸ்ரீரங்கத்தில் எல்லோரினும் மேம்பட்டு வாழ்கிறார். தத்வ ஜ்ஞானம் பெறுவதற்காக அவரை நீர் தஞ்சமாகப் பற்றுவீராக” என்று இந்த சக்ரவர்த்தி திருமகன் அப்பாவுக்கு ஸ்வப்நத்திலே உத்தரவிட்டருளினார். அப்படிப்பட்ட. மணவாள மாமுனிகள் நம்மைப் போன்றவர்களுக்கு சரணமடையத் தக்கவராகிறார் -என்கிறபடியே, அவர் திருவாராதநமான சக்ரவர்த்தி திருமகன்,நீர் சேஷாவதாரமான ஜீயர் திருவடிகளிலே அபசாரப்பட்டு. வந்தீர்; பகவத் பக்த ஸம்புக்த பாத்ர சிஷ்டோதநாதராத்–கோபி தாஸீ ஸுதோப்யாஸீ தம்ருதோ வை நாரதோ அபவத்–பகவத் பக்தரொருவர் அமுது செய்த பாத்திரத்தில் மிச்சமான ப்ர்ஸாதத்தை அன்போடு உண்டதனால்,, வேசியின் மகனொருவன் கூட தான் இறந்த பின்பு மறு பிறவியில் நாரதராகப் பிறந்தான்-என்று ஸ்ரீநாரதபகவான் உத்பத்தி கேட்டறியீரோ? ஜீயர் திருவடிகளிலே ஆஸ்ரயித்து அபராத ஷாமணம் பண்ணிக் கொண்டு வந்தாலொழிய உம்முடைய கையினாலே நாம் திருவராதநம் கொள்ளக் கடவோமல்லோம்; சடக்கெனப் போகீர்” என்று நியமித்தருள; அப்பாவும் திருக் கண்களை விழித்து விஸ்மிதராய் ஸ்வப்நத்தை விச்வஸித்து -அப்போதே புறப்பட்டுக் கோயிலேறச் சென்று புக்கு, ”அங்கே கவேர கந்யாயாஸ் துங்கே புவந மங்களே ..ரங்கே தாம்நி ஸுகாஸீநம் வந்தே வரவரம் முதிம்”– திருக்காவேரி மத்யத்தலே, உலகங்களுக்கு மங்களாவஹமாய் விளங்கும் திருவரங்கத் திருப்பதியில் இனிதாக வெழுந்தருளியுள்ள மணவாள
மா முனிகளை அடி பணிகிறேன்-என்றநுஸந்திக் கொண்டு செல்ல; அவ்வளவிலே ஜீயரும் பெருமாளை ஸேவிப்பதாகப் புறப்பட்டு எதிரே எழுந்தருளக் கண்டு அத்யாதரத்துடனே ‘தண்டவத் ப்ரண
மேத்பூமாவு பேத்ய குருமந்வஹம்”-நாடோறும் ஆசாரியனைக் கிட்டி தரையில் தடி போல் விழுந்து ஸேவிக்கக் கடவன்-என்கிறபடியே திருவடிகளிலே தண்டன் ஸமர்ப்பிக்க, ஜீயரும் அவரை “லோசநாப்யாம் பிபந்நிய’ என்கிறபடியே நிரீஷண ஸுதாஸந்து ஷிதாரம்படி குளிர நோக்கிக் கொண்டு நிற்க, அப்பாவும் அப்போது தம்மை விஷயீகரிக்கப் புறப்பட்டருளின ஜீயரின் திவ்ய மங்கள விக்ரஹம ஸெளந்தர்யத்திலே யீடுபட்டு, ”மயி ப்ரவிதி ஸ்ரீமந் ‘ என்று தொடங்கி மயி ப்ரஸாத ப்ரவணம்” (பூர்வ தின சர்யை -என்னுமளவாக அநுஸந்தித்துக் கொண்டு நிற்க–
ஜீயரும் இவருடைய உஜ்ஜீவநத்திலே யூன்றிப் போமவராகையாலே மீண்டும் உள்ளே புக்கு, ஆத்ம லாபத்தைப் பார்க்கிலும் வேறொரு உயர்ந்த லாபமில்லை யென்றறுதியிட்டு, இவரை யங்கீ கரிக்கையிலுள்ள நசையாலே மதுரோதார பாஷணம் பண்ணி யிருந்து, ஸ்ரீபாதத்து முதலிகளை ‘-பெருமாளை ஸேலித்து வாருங்கோள்’என்றனுப்பியருள, அவர்களும் பெருமாளை ஸேவித்து மீண்டு வர ஜீயரும்; அவர்களுடனே ‘பெருமாள் இன்னவொப்பனையோடே யெழுந்தருளியிருக்கிறார்; இன்னபடி, அமுதுசெய்ததருளினார்” என்றருளிச் செய்ய, அவை ஒத்திருக்கையாலே, எல்லாரும் ஜீயருடைய ஸர்வஜ்ஞதையைக் கண்டு விஸ்மயப்பட்டார்கள். அப்பா,நெடுந்தூரத்திலிருந்து வந்தவராகையாலே வழியிலுண்டான விடாயெல்லாந்தீர பசியன் சோற்றைக் கண்டாப்போலே பவந்தமேவ நீரந்த்ரம் பச்யந்வச்யேந சேதஸா” -தேவரீரையே, அடியேன் வசப்பட்ட மனத்தோடு, இடை விடாமல் ஸேவித்துக் கொண்டு- என்றபடியே வைத்த கண் வாங்க மாட்டாதே தாரக போஷக போக்யங்களெல்லாம் ஜீயருடைய திவ்ய மங்கள விக்ரஹாநுபவமேயாக அநுபவித்துக் கொண்டு போந்தார் .
மற்றை நாள் அபரராத்திரியிலே அண்ணன் முதலாவனார்கள் ஜீயர் திருப்பள்னியறை வாசலிலே எழுந்தருளி
ரவிருதயத்யதாபி நவிநஸ்யதிமே திமிரம்
விகஸதி பங்கஜம் ஹ்ருதய பங்கஜமேவ நமே |
வரவரயோகி வர்ய! வரணீய குணைக நிதே
ஐயஜயதேவ! ஜாக்ரஹி ஜநேஷு நிதேஹி த்ருஸம் ॥
சூரியன் உடுத்த போதிலும் அடியேனுடைய அக விருள் நீங்க வில்லை;-குளங்களில்* தாமரை மலர்கள் மலரா நின்றன;-அடியேனுடைய மனமான தாமரை மலரவில்லை; விரும்பத் தக்க கல்யாண குண நிதியே! ஸ்வாமிந்! மணவாள மமுனியே ! விஜயியா யெழுந்தருளி யிருக்க வேணும்; திருப்பள்ளி உணர்ந்தருளவேணும்; ஆஸ்ரித ஜனங்களைக் கடாக்ஷித்தருள வேணும்- என்று திருப்பள்ளி யுணர்த்த, திருப்பள்ளி யுணர்ந்து, குருபரம்பரா பூர்வகமாக ரஹஸ்ய த்ரயத்தையும் அநுஸந்தித்தருளி அதில் பர வ்யூஹாந்தர்யாமி குணங்களைத் திருமந்த்ரத்தாலும், விபவ லெளலப்யாதி குணங்களை சரம ஸ்லோகத்தாலும், அர்ச்சாவதார குண பூர்த்தியை த்வயத்தாலும் அநுஸந்தித் தருளி பின்பு,
அயபம்புநஸ் ஸ்வயம் வ்யக்தாந வதாரா கநுத்தமாலந் |
நிதாய ‘ஹ்ருதிநீ ரந்தரம் நித்யாயந் ப்ரத்யபுத்யத ॥
விஸேஷேண ஸிஷேவேச ஸேஷபோக விபூஷணம் |
அமேயமாதிமம் தாம ரமேஸம் ரங்கஸாயிநம் ॥
த்யாயம் த்யாயம் வபுஸ் தஸ்ய பாயம் பாயம் தயோததிம் |
காயம் காயம் குணுநுச்சைஸ் ஸோயம் தத்பூய ஸாந்வயூத்
இம் மணவாள மாமுனிகளோவென்னில் ஸ்வயம் வ்யக்தங்களான அர்ச்சாவதாரங்களை முறையே சிந்தையில் வைத்து இடைவிடாமல் த்யானித்துக் கொண்டே திருக்கண் விழுத்தருளினார்.
சிறப்பாக, திருவனந்தாழ்வானுடைய திருமேனிக்கு ஆபரணமும் அளவிடற்கரியதும் ஸ்ரீரங்கத்தில் துயில் கொண்டிருப்பதுமான ஸ்ரீய:பதியென்னும் உயர்ந்த தேஜஸ்ஸை த்யானம் செய்தருளினார்,-அத் திருவரங்க நாகனுடைய திரு மேனியை த்யானித்துக் கொண்டும் அவனுடைய கருணையாகிய கடலைப் பருகிக் கொண்டும் அவன் குணங்களைப் புகழ்ந்து பாடிக் கொண்டும் இம் மாமுனிகள் முற்கூறிய தேஜஸ்ஸாகிய ஸ்ரீரங்கநாதனை மறுபடியும் மறுபடியும் அனுபவித்தார்-என்கிறபடியே, அர்ச்சாவதாரத்துக்கு வேர்ப்பற்றான பெரிய பெருமாளுடைய விக்ரஹ குணங்களை விசேஷித் தநுஸந்தித்தருளி அதினுடைய பராகாஷ்டையான யதீந்த்ர சரணத்வத்த்வ ப்ராவண்யத்தோடே நீராடி நித்யா நுஷ்டானங்களையுஞ் செய்தருளித்- திருமண் காப்புச் சாத்தி யருளி; தம்முடைய திருவாராதனமான ஸ்ரீரங்கராஜர் திருமுன்பே எழுந்தருளி, தண்டன் ஸமர்ப்பித்து
ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்யம் ஆசார்யாதீந தைவயத் |
ஆம்நாயாராம் ரஹஸ்யந்த தகிலேப்ய: ப்ரகாஸயந் ॥
ஸர்வம் யதிபதேரேவ குர்வந் நாதேஸ பூர்வகம் |
க்ருத்யாக்ருத்யேஷு கர்த்ருத்வம் க்ருதீகிமபி நஸ்ப்ருபுஸக் ॥
ததஸ் தஸ்ய முகோல்லாஸம் சிகீர்ஷந் நேவ கேவலம்
யாதொரு ஆத்ம ஸ்வரூபத்தின் உண்மையாண தன்மையானது ஆசார்யனுக்கே பரதந்த்ரமா யிருப்பதோ, ஸ்ருதிகளில் ரஹஸ்ய மாயுள்ள அந்த ஆசார்ய பாரதந்த்ர்யத்தை ப்ரகாசிப்பிப்பவராய்,கேவலம் அவ்வாசார்யருடைய(எம்பெருமானாருடைய) முக மலர்த்தியையே விரும்பிச் செயல்படுபவரரய் அவ் யதீந்த்ரரின் நியமனப்படியே எல்லா விதமான கைங்கர்யங்களையுஞ் செய்து கொண்டு ‘கார்யாகார்யங்களில் நாம் செய்தோம்” என்ற எண்ணம் சிறிதுமில்லாதவராய் தந்யராய் எழுந்தருளியிருந்தார் -என்கிறபடி தம்முடைய பாரதந்தர்யத்துக்குச் சேர்ந்த ப்ரதிபத்தியுடனே திருவாராதநத்தையும் செய்தருளி;
அநந்தரம் -ஸந்நிதிஸ் நம்பமூல பூதல பூஷணமாய் எழுந்தருளி யிருக்க, அவ் வளவிலே அப்பாவும் அண்ணனைப் புருஷகாரமாகக் கொண்டு” அடியேனை அங்கீகரித்தருள வேண்டும்” என்றபேக்ஷிக்க அப்படியே அங்கீ கரித்தருளி, திருவிலச்சினை முதலான பஞ்ச ஸம்ஸ்காரங்களையும் ப்ரஸாதித்து விசேஷ கடாக்ஷம் ‘செய்தருளி, திருவடிகளாலே அவருடைய திருமுடியை யலங்கரித்தருளி,பின்பு அத்தலைக்கு மங்களாசாஸன பரராக வேணுமென்னும் திருவுள்ளக் கருத்தோடே மந்த்ர த்ரயத்தையும் ப்ரஸாதித்தருளி; அவரையும் அந்தரங்கராக்கிக் கொண்டு அவருடன் கூட பெருமாளை மங்களாசாஸனம் பண்ணுவதாகப் புறப்பட்டருளி நான்முகன் தண்டன் ஸமர்ப்பித்து மெள்ள வெழுந்தருளி உள்ளே புக்கு
தேவீ கோதாயதிபதி ஸடத்வேஷிணெள ரங்க ஸ்ருங்கம்
ஸேநா நாதோ விஹக வ்ருஷபஸ் ஸ்ரீநிதிஸ் ஸிந்து கந்யா |
பூமா நீளா குருஜந வ்ருத: பூரூஷஸ் சேத்யமீஷாம்
அக்ரே நித்யம் வரவர முநே ரங்க்ரி யுக்மம் ப்ரபத்யே
ஆண்டாள், எம்பெருமானார், நம்மாழ்வார், ஸ்ரீரங்கவிமானம், சேனை முதலியார், பக்ஷி ராஜனாம் பெரிய திருவடி ஸ்ரீரங்கநாதீன், ஸ்ரீரங்கநாச்சியார். பூமிதேவி, ஸ்ரீதேவி நீளாதேவி ஆழ்வார்கள் ஆகியவர்களால், சூழப்பட்ட பரமதநாதன். என்னும் க்ரமத்திலே மங்களாசாஸனார்த்தமாசு எழுந்தருளி ஸேவை ஸாதித்தருளும் மணவாள மா முனிகளின் இணை யடிகளை தினமும். தொழுகின்றேன்-என்கிற அடைவிலே ஸேவித்து – தத்தத் ஸ்தலோசித மங்களாசாஸனங்களைப் பண்ணி, பெரிய.பெருமாளையும் நம்பெருமாளையும் திருவடி தொழுது அநந்தரம்
உபேத்ய புநரப்யேஷி நிஜமேவ நியவேஸநம் |
நிவேத்ய நிகிலம் தத்ர யதீந்த்ராய நமஸ்யயா ॥
இந்த மணவாளமாமுனிகள் மீண்டும் தமது மடத்துக்கெழுந்தருளி அங்கு கோயில் கொண்டெழுந்தருளியுள்ள யதிராஜரிடம் நடந்ததை யெல்லாவற்றையும் தெண்டனிட்டு விஜ்ஞாபித்து-என்கிறபடியே மீண்டும் மடமே யெழுந்தருளி அங்கு எழுத்தருளியிருக்கும் உடையவர் ஸந்நிதியிலே ஸர்வமும் விஜ்ஜாபித்து, திருமலையாழ்வாரிலே தத் பாதச் சாயையாக ப்ரதிபத்தி பண்ணிக் கொண்டு எழுந்தருளியிருந்து, இவர்க்கு [எறும்பியப்பாவுக்கு]
ஸம்சார நிவர்த்நகமாயிருக்கிற ஸ்வ திவ்ய சரணாம் போஐ
ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸெளரபமான ஸ்ரீபாத தீர்த்தத்தையும் ப்ரஸாதித்தருளி
அத மாத்யாஹ்நிகம் க்ருத்யம் க்ருத்வா ஸத்வோத்தரம் முநி . |
ஆராத்ய விதிவத் தேவமந்வபூத் ரங்க பூஷணம் ॥
ததஸ்தந் முக ஸம்ஸ்பர்ஸரஸேந ஸுகந்திநா |
ஸூசிநா ஸுகுமாரேண ஸத்வஸம் ஸூத்தி ஹேதுநா ॥
பக்தி பூர்வம் ப்ரபூதேந போஜ்யேந பகவத் ப்ரியாந் |
தத்பரஸ் தர்ப்ப யாமாஸ ததீய ப்ரேம வ்ருத்தயே
ஆத்மாநமாத்மநாபஸ்யந் போக்தாரம் புருஷம்பரம் ॥
அநுயாகம் யதாயோகம் நிஸ்ஸங்கோ நிரவர்த்தயத் |
பிறகு பரம ஸாத்விகரான மணவாளமாமுனிகள், மத்யாஹ்ந அநுஷ்டானங்களை முடித்து ஸ்ரீ அரங்கநகரப்பனுக்கு முறைப்படி திருவாராதனம் கண்டருளப்பண்ணி, குணாநுபவம் பண்ணிக் கொண்டிருந்தார். பின்னர் அவ்வெம்பெருமானுடைய திருப்பவள ஸம்பத்தத்தினால் அமுதமாய், பரிமளிதமாய் துயதாய், மென்மை யுடைத்தாய், ஸத்வ ஸ்வபாவத்துக்கும் மனத்தூய்மைக்கும் முக்கிய காரணமாயிருப்பதான, ஸம்ருத்தமான பகவத் ப்ரஸாதத்தால் எம்பெருமானடியார்களை ததீயபக்தி பூர்வமாக , தத் கைங்கர்ய பரராக அவர்களிடம் ப்ரேமம் வளர்வதற்குறுப்பாக ஆராதித்தார்; தாம் (ப்ரஸாதத்தை) அமுது செய்தருளுவதனால் தம் மூலமாத அந்தர்யாமியான பரம புருஷனையே போக்தாவாக அத்யவஸித்து அமுது செய்வதில் நேரே தொடர்பில்லாத மனதுடன் பிஷை யேற்றருளினார் -என்கிறபடியே பெருமாளமுது செய்தருளின அநந்தரம் தாமும் அமுது செய்தருளி, போனகஞ் செய்த சேடந் தருவரேல் புனிதமன்றே” என்னும்படி ஸுபாவனமான திருத்தளிகை
ப்ரஸ்தம் ப்ரஸாதிக்கப் பெற்று இவர் (அப்பா) க்ருதார்த்தரா யெழுந்தருளி யிருக்க; பின்பு,
ததஸ் ஸஜ மூல ஜீதஸ்யாம கோமள விக்ரஹே |
பீத கெளஸேய ஸம்வீதே பீந வ்ருத்த சதுர் புஜே ॥
ஸுங்க சக்ர கதா தாரே துங்க ரத்ந விபூஷணே |
கமலா கெளஸ்து போரஸ்கே விமலாயத லோசநே ॥
அபராத ஸஹே நித்யம் தஹ ராகாஸ கோசரே |
ரேமே தாம்நி யதாகாஸம் யுஞ்ஜாநோத்யாந ஸம்பதா ॥
ஸதத்ர நிஸா சலம் சே த, சிரேண விநிவர்த்தயஙந் |
பிறகு நீர் கொண்ட மேகம் போல கருமையா யழகான திருமேனியில் பீதாம்பர மணிந்தவனாய, பருத்து திரண்ட நான்கு திருத் தோள்களை யுடையனாய், திருவாழி திருச்சங்கு கதைகளுக்கு
இருப்பிடமாய், சிறந்த ரத்ந மயமான திருவாபரணங்களாலலங்கரிக்கப் பட்டவனாய், பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீகெளஸ்துபத்தையும் திரு மார்பில் தரித்தவனாய் நிர்மலமான நீண்ட
பெரியவாய கண்களை யுடையனாய், ஆஸ்ரிதாபரதங்களைப் பொறுப்பவனாய் எப்போதும் சேதந ஹ்ருதய மத்யத்தில் வாஸம் செய்பவனாய் பரம ப்ராப்யனான பரம்புருஷனிடம், தமது த்யான
ஸம்ருத்தியினால் ஒன்று பட்டு லயித்து யதாவகாசம் தமது மட த்தில் மகிழ்ந்திருந்தார். அப் பெருமானிடத்தில் ஸ்திரமாயிருந்த தமது மனஸ்ஸை வெகுகாலம் கழித்து மீட்டு–என்கிறபடியே
ஸூபாஸ்ரயமான அந்தர்யாமி விஷயத்திலே நிமக்ந ஹ்ருதயத்தை யுடையராய் அத்தை ஒருபடி மீட்டு, யதீந்த்ர ப்ரவணமாக்கி, யதிராஜ விம்சதியை யநுஸந்தித் தருளி, பின்பு ஸ்ரீவசநபூஷண வாக்யங்களுக்கு வ்யாக்யாநம் ப்ரஸாதித்தருளி,ஸாயங்காலமானவாறே ஸர்வாநுஷ்டானங்களையும் முன்பு போலவே செய்தருளி, மீளவும் ஸந்நிதயிலே யெழுந்தருளி எல்லா வுபசாரங்களையும் கண்டருளப் பண்ணி, திருப் பல்லாண்டை யநுஸந்தித்து மங்களாஸசாநம் பண்ணி, பின் கண் வளர்ந்தருளுவதற்காக ்
தத:.கநக பர்யங்கே தருணத் யுமணி த்யுதெள |
ரத்ந தீபத்வ யோதஸ்த மஹதஸ் ஸ்தோமஸ மேதிதே ॥,
ஸோபதாநே ஸுகாஸீநம் ஸுகுமாரே வாரஸநே |:
அநந்ய ஹ்ருதயைர்த் தந்யை ரந்தரங்கைர் நிரந்தரம் ॥,
ஸூஸ்ரூஷமாணை; ஸூசிபி; த்வித்ரைர் ப்ருத்யை ருபாஸிதம் |
ப்ராசாமாசார்ய வர்யாணாம் ஸூக்தி வ்ருத் த்யநு வர்ணநை : ॥
வ்யாச ஷாணம் பரம் தத்வம் வ்யக்தம் மந்ததியாமபி |
பிறகு உச்சிப்பட்ட சூரியன் போல ப்ரகாசமுடைத்தாய், ரத்ந மயமான இரு தீபங்களினின்றும் உண்டான ஒளியினால் மிக விளங்கா நின்ற பொன்னாலான கட்டிலில் தவையணையுடன் கூடிய மென்மையான அழகிய ஆஸனத்தில் இனிதே யெழுந்தருளி யிருப்பவரும். அந்த மாமுனிகளள்லது வேறிடத்தில் செல்லாத மனதை யுடையராய் பாக்யமுடையரான அந்தரங்கராய் கைங்கர்ய பரரான இரண்டு மூன்று சிஷ்யர்களால் இடைவிடாமல் ஆட் செய்யப்படுமவராய், பூர்வாசாரியர்கஞ்டைய ஸ்ரீஸூக்திகளையும் அநுஷ்டான க்ரமங்களையும் அருளிச் செய்வதால் மந்த மதிகளுக்கும் பர தத்வத்தை தெளிவா யருளிச் செய்து கொண்டிருக்கும் மாமுனிகளை–என்றபடியே திருப்பள்ளி யறையிலே புக்கு ‘திருப் படுக்கையிலே சாய்ந்தருளி எல்லார்க்கும் தெரியும்படி பூர்வாசாரியர்கள் போதமனுட்டானங்கள் கூறுவாராக வெழுந்தருளி யிருக்கற, போக்யதையை அநுபலித்து அவ் வனுபவத்துக்குத் தேசிகரானவர்களோடே கூட அஸ்தாநே பய சங்கிகளாய்
மங்களம் ரம்ய ஜாமாத்ரு முநி வர்யாய மங்களம் |
மங்களம் பந்ந கேந்த்ராய மர்த்ய ரூபாய மங்களம் ॥
ஏவம் மங்கள வாணீபி ரேநம் ஸாஞ்ஜலி பந்தநா; |
ஸத் க்ருத்ய ஸம் ப்ரஸீ தந்தம் ப்ரணேமு; ப்ரேம நிர்ப்பரா; ॥
ஆசார்ய ஸ்ரேஷ்டரான மணவாள மா முனிகளுக்கு மங்களம் மங்களம், மனித வுருவில் அவதரித்துள்ள திருவனந் தாழ்வானான மா முனிகளுக்கு மங்களம், மங்களம்; இப்படி மங்கள வார்த்தைக்ளால் ப்ரஸந்நரான இந்த மணவாள மா முனிகளை பக்தி நிறைந்த சிஷ்யர்கள் கை கூப்பிக் கொண்டு ஸேவித்தார்கள்-என்கிறபடியே மங்களாஸாசனம் பண்ணி ஸாஞ்ஜலி ஹஸ்தராய் ஸாஷ்டாங்க தீர்க்க ப்ரணாமாதிகளைப் பண்ணிப் ப்ரேம நிர்ப்பரராய் ஸேவித்துக் கொண்டிருக்க, அதப்ருத்யாநநுஜ்ஞாப்ய’” என்கிறபடியே அவர்ளை விடை கொடுத்தனுப்பியருளி
ததஸ் ஸஜ்ஜீக்குருதம் ப்ருத்யை; ஸூயநீ யம் விபூஷயந் |
யுயோஜ ஹ்ருதயம் தாம்நி யோகித்யேய பதத்வயே ॥
பிறகு சிஷ்யர்களால் ஸித்தப்படுத்தப்பட்ட படுக்கையில் சயனித்து, யோகிகளால் த்யானிக்கத் தக்க திருவடிகளை யுடைய பரம புருஷனிடத்தில் மனதை சேர்ப்பித்தார்- என்கிறபடியே
படுத்த பைந் நாகணையாயிருக்கிற தாமும் ஒரு படுக்கையைப் பற்றிக் கண் வளர்ந்தருளுவதற்காக யோகீ த்யேயமுமாய் -ரங்காஸ்ரயம் மம ஸூபாஸ்ரய மாஸாயாணி” என்னும்படி ஸூபாஸ்ரயமுகமாய் –அணைப்பார் கருத்தனுவானான வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை மணவாள யோகியான தாம் மனத்திற் கொண்டு நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானாய் ஸூ ப்ரதிஷ்டிதஞ் யெழுந்தருளி யிருக்கிற சேஷசாயியான ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே வைத்த இத் தயை யுடையராய் நிர்ப் பரராய் கண் வளர்ந்தருளப் புக்கார்.
இத்தம் திநே திநே குர்வந் வ்ருத்திம் பத்யு, ப்ரஸாதிநீம் |
க்ருதீர் கடாபதம் சக்ரே ப்ராக்தநீம் தத்ர வர்த்தநீம் 1
இத்தம் திநே திநே குர்வந் வ்ருத்தம் பர்த்து; ப்ரஸாதிகீம் |
க்ருதி கண்டா பதஞ்சக்ரே ப்ராக்த்நீம் தத்ர வர்த்தநீம் 1
இப்படி ஸ்வாமியான மணவாள மா முனிக்கு திரு யுள்ளத்துக்கு உகப்பான கைங்கர்யத்தை நாடோறும் செய்து கொண்டு அவ்விடத்தில் திநசர்யையை. க்ரந்தமாகச் செய்தருளி அதன் மூலமாம் அந்த கிரந்தத்தை எல்லோரும் அனுஸந்திக்கும்படி ராஜ மார்க்கம் போலே ப்ரஸித்தமாக்கினார்- என்கிறபடியே எழுந்தருளி யிருக்கற நாளிலே நாடோறும் ஸந்நிதியிலே கைங்கர்யம் பண்ணிக்
கொண்டு செய்து கொண்டு அப்பா எழுந்தருளி யிருக்க; பின்பு
வரவர முநி வர்ய பாத யுக்மம் வரத குரரோ; கர பல்லவ த்வயேந |
ரஹஸி ஸீரஸிமே நிதீயமாநம் மநஸி நிதம்ய நிதாநவாந் பவாமி ॥
கந்தாடை யண்ணனுடைய இருதளிரன்ன கைகளாலும் ஏகாந்தத்தில் அடியேனுடைய சிரஸில் வைக்கப்பட்ட மணவாள மாமுனிகளின் திருவடித் தாமரைகளை மனதில் கொண்டு ஸத்தை
பெற்றவனாகிறேன்- என்று இவர் ஹ்ருஷ்டராம்படி தம் திருவடிகளைப் ப்ரஸாதித்து , ”ஊரேறப் போம்” என்று விடை கொடுத்தருள அப்பாவும் பெரு வருத்தத்தோடே ஊரேற வெழுந்தருளினார்
நாயனார் ஸப்த கோத்ர வ்யவஸ்தை செய்தருளியது
இவர்க்கு அநுபந்திகளுமாய் கந்தாடை யண்ணனுக்கு ஸம்பந்திகளுமாயிருப்பார், கந்தாடை நாயன் தேவிகளைப் பிறந்தகத்தினின்றும் புக்ககத்திற்கு அழைத்துக் கொணடு வருமளவில் அப்ராப்த வாஹநத்திலே ஏற்றிக் கொண்டு வர, அப்பா அத்தைக் கண்டு ஜீயர் ஸந்நிதியிலே விண்ணப்பஞ்செய்ய, திருவுள்ளங் கலங்கி உடனே ௮ண்ணனை அழைத்தருளி இப்படியாகாது, அவர்களையும் பெண்ணையும் த்யஜிக்கிறது தகுதி ” என்ன -அவர்களுக்கு ஸ்வரூபசிஷா பூர்வகமாக ஹிதோபதேசம் செய்யலாகாதோ? என்ன,-அப்படியாகாது, எம்பாவுக்கு ஆப்த ஸம்பந்திகளான துர்மாதிகள்!” என்ன, ஆகில்விடும்:’ என்ன, பின்பு முதலியாண்டான் திரு வம்ஸ்யரான கந்தாடை யண்ணன் முதலான கந்தாடைஅய்யங்கார்களையும் அவர்களுடைய ஸம்பந்திகளையும் கூட்டி விசாரித்து அவர்களை க்ருபை பண்ணி யருளி ஹிதோபதேசஞ் செய்தருளி, ஸப்த கோத்ர வ்யவஸ்தை செய்தருளி-இந்த ஸப்த பர்வஸ்த்ருக்கும் பரஸ்பர ஸம்பந்தங்களும் அப்யவஹாராதிகளுமாம்படி மர்யாதை கட்டி இன்ன கோத்ரத்தாரின்னரென்று பட்டோலை கொண்டு திருமங்கைமன்னன் திருமாளிகையில் சிலா சாஸனமுமிடுவித்து விசேஷித்து கந்தாடையய்யங்கார்களுக்கு விலஷண ப்ரவரமும் ஸாதித்து அப்பா திருவுள்ளம் மிகவும் ப்ரஸந்நமாம்படி, செய்தருளி எழுந்தருளி யிருக்கிற காலத்திவே ஜீயர் திருவடிகளிலே ஆநுகூல்யமில்லாமை மாத்ரமன்றிக்கே ப்ரதிகூலித்து வாக் துருக்திகளும் பண்ணினவாகள் , தரித்ரராய் அபக்யாதி பாரீத்ர பூதரர்ய் அநர்த்தப்பட்டுப் போனார்கள் –
பின்பு ஜீயரும் முதலிகளும் ஒரு நாள் ஆலின் மேலமர்ந்தான் என்கிற பாட்டுக்கு அர்த்த சிந்தநம் பண்ணிக்கொண்டிருக்கிற வளவிலே, ஒன்று ஆல வ்ருக்ஷமாய், மற்றதற்கு பத்ர பரமாய் அர்த்தம்
சொல்ல, !’ஆல் என்று இலையைச் சொல்லாது” ‘ என்று ஜீயரரருளிச் செய்ய; பாலராய் ஒத்த பருவத்தாரோடே க்ரீடா ஸக்தராயிருக்கிற கத்தாடை நாயன் ”ஜீயா! ஆலாங்கட்டி யென்றன்றோ வ்யவஹாரம் ‘” என்ன, அவரை யழைத்து மடி மேலே வைத்துக் கொண்டு நீர் தொழு குலமன்றோ?” என்று உகந்தருளி தர்சந ப்ரவர்த்தகராம்படி நன்றாக வாழ்த்தி யருளினார்
அப்பிள்ளை, ‘அப்பிள்ளார் ஜீயர் திருவடிகளில் ஆஸ்ரயித்தல்
அநந்தரம் அப்பா சகுந விருத்தமென்று மீண்டு தண்டன் ஸமர்ப்பிக்க, ஜீயரும் இவ் விடத்திலே ஒரு அதிசயமுண்டாக வேணும், ஒரு நல்ல நாளிலே பயணப் படுத்துவோம்” என்று உகப்புடனே அருளிச் செய்ய, இது கேட்டுப் பெரியோர்கள் ‘“ஸ்ரீஸூக்தி யில் மோகமாவது ஒன்றுமில்லையே: ஏதோ அதிசயமுண்டாம்’ என்று ஒருவருக் கொருவர் அருளிச் செய்து கொண்டிருக்க, அவிளம்பேந அக்காலத்தே அப்பிள்ளை அப்பிள்ளார் இருவரும் ஜீயர் திருவடிகளீலே ப்ராவண்யமின்றிக்கே பெருமாளை ஸேலிக்க வேணு மென்று திருக் காவேரிக் கரையிலே வந்திறங்கி இரண்டு நாளிருந்து ஜீயருடைய ஸ்த்திதிகதிகளையும் அவருடைய வாக் சாதுர்யத்தையும்,ஆராய்ந்து கந்தாடை யண்ணன் முதலானோர் ஆஸ்ரயித்த படிகளையும் ஸ ப்ரகாரமாகக் கேட்டு ‘இதுவென்”என்று விஸ்மிதராயிருந்து, அப்பிள்ளை அப்பிள்ளாரை யழைத்து -இது ஸம்பவிக்குமோ” என்று கேட்க , இவர்: ‘“எறும்பி யப்பா ஸகல ஸாஸ்த்ர வல்லபர், அதிக்ருத பரமார்த்தர்; அவரிப்படிச் செய்யார்; நாம் விசாரித்து வருகிறோம்” என்று போய் மடத்துக்கு ஸமீபத்திலே யிருந்து, தமக்கு அந்தரங்கராய் ஸமர்த்தரா யிருப்பாரொவரை யமைத்து ”நீர் போய் அப்பிள்ளான் வந்திருக்கிறான் ” என்றறிவியும் -அந்த எறும்பியப்பாவே யாமாகில் உடனே எழுந்தருளுகிருர்; அன்றிக்கே மற்றொருவராகில் அப் பிள்ளானை யாரறிவார்? என்கிறார் என்று விட, அவர் சென்று எறும்பியப்பாவைக் கேட்டறிந்து கொண்டு தண்டனிட்டு – அப்பிள்ளார் வத்து தெருவிலேயிருக்கிறார், தேவரீருக்குத் தெரிவிக்கச் சொன்னார்” என்ன. அப்பா, ௨கந்தருளி “அவருக்கு நல்விடிவு” என்றருளிச் செய்து கொண்டு தாம் புறப்பட்டெழுந்தருள, அப்பிள்ளார் அவருடை புஜ மூலங்களிலே யிருக்கிற சிஹ்நங்களைக் கண்டு ஒரு தெளிவு பிறந்து அவர் திருவடிகளிலே தீர்க்க ப்ரணாமம் பண்ணி நிற்க, அப்பா குசல ப்ரச்நங்களுடன் ஆதரித்து இருவரும் கூடி ஒரு திண்ணையிலே இருந்து பெருமாள் தம்மை உஜ்ஜீவிப்பிக்க ஜீயர் திருவடிகளிலே சேர்த்த ப்ரகாரத்தை முந்துற அப்பா அருளிச் செய்யக் கேட்டுத் தெளிந்து ஸ்வாத்மோஜ்ஜீவநபரராய் , அப்பாவை அநுவர்த்தித்து, அப்பிள்ளை முதலானார் திருக்காவேரிக் கரையிலிருக்கிற செய்தியையும் அவ்விடத்தே அப்பா எழுந்தருள வேணும் என்னும் காரியத்தையும் அறிவிக்கக் கேட்டருளி திரும்பி மடத்துக்கு எழுந்தருளி இச்செய்தியை வான மாமலை ஜீயருக்கு அறிவித்து நாம் அவர்களைத் திருத்திக் கொண்டு வரலாம் படி கடாஷித்து அருள வேண்டும் என்று புறப்பட்டு அப்பிள்ளாரைக் கூட்டிக் கொண்டு அப்பிள்ளை பாடே எழுந்தருளி அவருக்கு ஹிதமருளிச் செய்து ஆஸ்திக்யாதரங்கள் விஞ்சி வரப் பண்ணிக் கொண்டிருக்க, வானமாமலை ஜீயர், ஜீயர் ஸந்நிதியிலே எழுந்தருளி, ”அப்பிள்ளை அப்பிள்ளார் என்பவர்கள் ப்ரஸித்தர் அவர்கள் திருக்காவேரிக்கரையிலே இரண்டு நாளாக விருக்கிறார்கள்; அவர்களுக்கு
ஈஸ்வரஸ்யஸ்ய ஸெளஹார்தம் யத்ருச்சா ஸுக்ருதம் ததா விஷ்ணோ. கடாக்ஷமத்வேஷமாபிமுக்யம்ச ஸாத்விகை: ஸம்பாஷணம் ஷடேதாநி.-யன்றோ? ஸாத்விக ஸம்பாஷணம் ப்ராப்தமாயிற்று- எறும்பியப்பா அங்கே எழுந்தருளியிருக்கிறார்; இப்படி ஆசார்ய ப்ராப்தி ஹேதுக்களெல்லாமுண் டானபடியினாலே தேவரீர் திருவடிகளிலே ஸம் பந்தம் லபிக்கிறது; ஆத்மலாபாத்பரம் கிஞ்சிதத்யத் நாஸ்தி” என்றன்றோ தேவரீர் திருவுள்ளமிருக்கும்; ஆசார்யன் இருவருக்கும் உபகாரகன் என்றன்றோ இருக்கிறது; அவர்கள் விஷயத்தில் இரங்கி யருள வேணும்; அப்பாவுடையவும் அடியேனுடையவும் மநோ ரதம் நிறைவேறும்படி ‘ஸூபேந மநஸாத்யாதம்” என்கிறபடிய திருவுள்ளம் பற்ற வேணும்’ ‘ என்று விண்ணப்பஞ் செய்ய, ஜீயரும் “எம்பெருமானார் அப்படியே திருவுள்ளமாயருளினாய் , ஒருவருக்கு
எம்பெருமனார் திருநாமம்’* என்று அருளிச் செய்தருள, வானமாமலை ஜீயர் ௨கந்தருளி *அவர்களை எதிர் கொண்டு ஆதிரிப்பதற்காக அடியேனுக்கு விடை ஸாதிக்க வேணும்”என்ன அப்படியே
அனேகம் ஸ்ரீவைஷணவர்களைக் கூட்டி அனுப்பி யருளப் புறப்பட்டு எழுந்தருளா நிற்க, இவர்கள் வருகிற செய்தியை அப்பிள்ளாருக்கறிவிக்க , அவரெழுந்திருந்து அந்த கோஷ்டியைக் கண்டு ஸாஷ்டாங்க ப்ரணாமம் பண்ணி அஞ்சலி ஹஸ்தராய் வைத்த கண் வாங்காதே ஸேவித்துக் கொண்டு -தமக்கத்யந்த மபிமதமாயிருக்கிற பட்டுப் பச்சை வடத்தை இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் கையிலே கொடுத்து நீங்கள் அதி த்வரையாகச் சென்று அவர்களெழுந்தருளுகிற வழியிலே அகலமெல்லாம் படுத்து அத்தை நாலண்டையும் எல்லாரு மெழுந்தருளும்படி பண்ணி, அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸ்ரீபாதரேணுவை ஸாவதாநமாகக் கொண்டு
வரச் சொல்லி விட்டு, அடைக்காய்த் தட்டும் பழத் தட்டும் மத்யையில் வைத்து எறும்பியப்பாவை முன்னிட்டுக் கொண்டு எதிரே சென்று ஜீயர் திருவடிகளிலே தீர்க்க ப்ரணாமம் பண்ணி ஸ்வ ஜதங்களை யெல்லாம் காட்டி, அடியோங்களெல்லாரையும் கற்றுவிப்பித்தருள வேணுமென்று ஸ்ரீபாத ரேளியை எல்லோரும் சிரஸா வஹித்து நிற்க, ஜீயர் குசல ப்ரச்நம் செய்தருளி உபலாளித்தருளி பெருங்கூட்டமாக அண்ணன் திருமாளிகைக் கெழுந்தருள, அண்ணன் எதிர் கொண்டு ஆதரித்தருளி உள்ளே அழைத்துக் கொண்டு சென்று திருவோலக்கமாயிருந்து, தாம் முன்னிருந்த இருப்பையும், நிர்ஹேதுகமாக எம்பெருமானார் க்ருபையால் வந்த மஹா லாபத்தையும், ஜீயர் யதிபுநரவதாரமென்பதையும் பஹு முகமாக அருளிச் செய்யக் கேட்டுத் தாம் ஜீயர் திருவடிளை ஸேவிக்க த்வரிக்க, அப்படியே திருமுன் காணிக்கையையும் பட்டுப்படாவளிகளையும் பச்சையையும் முன்னே பிடித்துக் கொண்டு மடத்திலே சென்று திருமலை யாழ்வாரிலே ஜீயர் கோஷ்டியாக எழுந்த ருளியிருக்கக் கண்டு மிகவும் ஈடுபட்டு,
“அபூர்வ ருப ஸம்ஸ்தாதம் தேஜஸாம் ராஸ்மி மூர்ஜிதம்‘-எங்கும் கண்டறியாத நிறத்தோடு கூடிய அவயவ ஸந்நிவேசமுடையவரும் த்ருடமான தேஜோ ராசி போலிருப்பவருமான வரை என்று
கொண்டு திருவடிகளிலை தீர்க்க ப்ரணாமம் பண்ணி உபஹாரங்களையும் ஸமர்ப்பிக்கத் தக்க மரியாதையுடனே ஸமர்ப்பித்து நிற்க, ஜீயர் அவர்களுடைய வைதுஷ்யங்களுக் கநுரூபமாகச்
சிறிது ஸ்ரீஸூக்கிகளை யருளிச் செய்ய, அவர்களும் வித்தராய் ஸமாஸ்ரயணத்துக்கு ப்ரார்த்தித்து த்வரைப்பட, தாப புண்ட்ர:’ இத்யாதிப்படியே பஞ்ச ஸம்ஸ்காரங்களையுஞ் செய்தருளி
கோயிலுக்குப் புறப்பட்டு ‘தேவீகோதா’ இத்யாதிப்படியே அவர்களோடே மங்களாசாஸனஞ் செய்தருளி மீண்டு மடத்திலே யெழுந்தருளி ததீயாராதநமும் நடந்து, ‘குரோருச்சிஷ்டம் புஞ்ஜீத, போனகஞ் செய்த சேடந் தருவரேல் புனிதமன்றே-என்கிறபடியே ஸுபாவநமான தளிகை ப்ரஸாதத்தையும் ப்ரஸாதித்தருளி திருவடிகளுக்கு அந்தரங்கராக்கி உஜ்ஜீப்பித் தருளினார். அப்பா திருத் தமப்பனா எறும்யியிலே அப்பாவைக் காண வேணுமென்று ஜீயருக்குக் குறித்து வரக் காட்ட, பின்பு ஜீயர் தாமே அப்பாவை ஊருக்குப் போம்” என்று விடை கொடுக்கப் பெரு வருத்தத்தோடே ஊரேற எழுந்தருளினார்.
பெரிய பெருமான் உத்தம நம்பியைத் திருத்துதல்
பின்பொரு நாள் ஜீயர் பெருமாளை மங்களாசாஸநம் பண்ண எழுந்தருளினவளவிலே ஏகாந்த ஸேயையாய் திருத்திரை பரிமாறித் திருவாராதநங் கொண்டருளா நிற்க, இவரும் உள்ளே சென்று திருவடி தொழுது நிற்க, அவ்வளவிலே திருவாலவட்டம் ஸேவித்துக் கொண்டிருந்த உத்தமநம்பியும்,-வெள்ளிப் பெருமலைக் குட்டரான ஜீயரூடைய “க்ஷீர ஸங்காத கெளரம்‘ என்றபடியே -பாலின்
நீர்மை போலிருக்கிற விக்ரஹ வைலஷண்யத்தைக் கண்டு பாப வாஸனையாலே அந்யதா சங்கை பண்ணி ஜீயரை -நெடும்போதிருக்க வேண்டா”’ என்ன, இவரும் அபிப்ராயமறிந்து ‘மஹாப்ர
ஸாதம்”” என்று புறப்பட்டு மடமே யெழுந்தருளினார். அவ்வளவிலே திருவால வட்டம் ஸேவித்துக் கொண்டிருந்த உத்தம நம்பியும் தரங்கிப் பலகணிக் கதவிலே சாய்ந்திருக்க, –அரவினணை மிசை மேய
மாயனாரான பெரிய பெருமாளும் இவர் கனாவில் வந்து,’திருப்பவளச் செவ்வாய் முறுவல் தோன்ற,-௮ணி விளங்குமுயர் வெள்ளை யணையான திருவநந்தாழ்வானைத் தொட்டுக்காட்டி, ‘ இவர் கிடீர் ஜீயராக வந்து, அவதரித்தருளினார்; அவருடைய நிறம் வெளுப்பு:விஸ்வஸித்திரும்” எனறருளிச்செய்ய, அவரும் அத்யந்தம் பீதராய்,அப்போதே மடமேற வந்து ஜீயர் திருவடிகளை ஸேவித்து இச் செய்தியை விண்ணப்பஞ்செய்து அபராத ஷாமணம் பண்ணிக் கொண்டு திருவடிகளுக் கந்தரங்கராய்ப் போந்தார், அது பற்றி-அனந்தாவதாரர் வரயோகி யென்பது தென்னரங்கள், மனந்தானறியும் மற்றாரறிவார் “என்று பின்புள்ளாரும் சொல்லும் படி யாயிற்று,
ஒரு ஸாத்விகைக்கு ஜீயர்தமது நிஜாகாரத்தைக் காட்டியருளல்
அநந்தரம் ஸாத்விகைகளில் சடகோபக் கொற்றி யென்னும்திருநாமத்தை யுடையளாயும் ஆச்சியார் பாடே திவ்ய ப்ரபந்தம் நாலாயிரத்வையும் ரஹஸ்யங்களையும் அதிகரித்தவளாயும் திருவடிகளுக்கு மிகவும் அந்தரங்கையாயு மிருப்பாளொரு அம்மையார் ஒரு நாள் திருவோலக் கங்குலைந்த வநந்தரம் மத்யாஹ்நத்திலே திருமலை யாழ்வாராகிற வ்யாக்யாந மண்டபத்திவ ஏகாந்தமாகத் திருக் காப்பு சேர்த்துக் கொண்டு தக்க மா மணி வண்ணனடியிலே வைத்த சிந்தையராய் எழுந்தருளி யிருக்க, அப்போது கதவுப் புரையிலே ஸேவிக்குமளவில் ஆயிரம் பைந் தலையனான திருவநந்தாழ்வானாக ஸேவை ஸாதிக்கக் கண்டு திடுக் குற்றிருக்க,ஜீயர் அத்தைக் கண்டு திருக்காப்பு நீக்கிக் கொண்டு, புறப்பட்டு வந்து சிரித்தரூளி அம்மையாரை நடந்தபடி யென்னென்று கேட்டருள, அவள் அப்போது ஸேவித்தபடியை விண்ணப்பஞ் செய்ய, ‘ஆகில் ஒருவர்க்கும் சொல்லாதே கொள்” என்று நியமித்தருளினார். இப்படி ஜீயர் அவதார விசேஷமென்பது எல்லார்க்கும் ப்ரத்யஷமிறே –
ஜீயர் வ்யாக்யானங்கள் அருளிச் செய்தது.
பூத்வா பூயோ வரவர முநிர் போகிநாம் ஸார்வபெளம
ஸ்ரீமத் ரெங்கேவஸதி விஜயீ விஸ்வ ஸம்ரக்ஷணார்த்தம்” [ஆதி சேஷன் உலகைக் காப்பதற்காக மறுபடியும் மணவாளமாமுனிகளாக அவதரித்து ஸ்ரீரங்கத்தில் மிகவும் மேம்பட்டு வாழ்கிறார்] என்கிறபடி ஜகத் ரஷணார்த்தமாக அவதரித்தவராகையாலே ஜகத்தை யெல்லாம் உஜ்ஜீவிப்பிக்கும்படி ஸகல ஜீவாதுவாகப் பிள்ளை லோகாசாரியர் அருளிச் செய்த ரஹஸ்யங்களுக்கெல்லாம் வ்யாக்யாநம்
“செய்தருள்வதாகத் திருவுள்ளம் பற்றி
ரஹஸ்ய க்ரந்த தத்வேஷு ரமயாமாஸ தத் ப்ரியம் |
வாக்ய ஸங்கதி வாக்யார்த்த தாத்பர்யாணி யதா ச்ருதம் ॥
வ்யாகுர்வந்நேவ பூர்வேஷாம் வர்த்தமாந: பதே பதே |
ஸ்வமநீஷாகதாம் நைவ கல்பயந் கிஞ்சிதப்யயம் ॥
குப்தாம ஸர்வைர் குருத்வேந கூடாநர்த்தாந தீதிஸத் |
தேஸிகாநாம் நிடந்த்ரூணாம் தர் | ஸ்யங்நேக கண்டதாம். ॥
வாக்யாலங்கார வாக்யாநி வ்யாசக்ஷாணோ விசஷண: |
ஸுதீய:ஸ்வாதயாமாஸ;ஸ்வ ஸ்வ ரூபம் ஸுதுர்க்ருஹம் ॥
இந்த மணவாள மாமுனிகள் முன்னோர் மொழிந்த முறைகளில் நிலை நின்றவராய் ஒவ் வொரு சொல்லுக்கும் தந் தெஞ்சில் தோற்றினதே சொல்வதைச் சிறிதும் பண்ணாமல் ஆசார்ய முகமாய்க் கேட்ட அர்த்தாநுகுணமாக வாக்யங்கள், ஸங்கதிகள் வாக்யார்த்தங்கள் பாவார்த்தங்கள் இவற்றை விசேஷமாக அருளிச் செய்து கொண்டு, ஸகல பூர்வாசாரியர்களாலும் அர்த்த கெளரவம் பற்றி மறைத்து வைக்கப்பட்ட ரஹஸ்யமான விசேஷார்த்தங்கலையும் தமது க்ருபையால் வெளியிட்டார். இப்படி. ரஹஸ்ய க்ரந்தங்களில் ஈடுபட்டவர்களை அவற்றின் தத்வார்த்தங்களில் மகிழச் செய்தார். மேலும் வேதங்களென்ன வேதாந்தங்களான உபநிடதங்களென்ன, இவற்றை யுட் கொண்டு பேசப் பட்ட ஸ்ம்ருதிகளென்ன, ஸ்ரீராமாயணாதி இதிஹாஸங்கள் என்ன , ஸ்ரீபாஞ்சராத்ரமென்ன, இந்த ப்ரமாணங்களால்-பல க்ரந்தங்களை: யருளிச் செய்துள்ள ஆசாரியர்களின் ஒருபடிப்பாட்டைக் காட்டியருளி, நிபுணராய் ஸ்ரீவசன பூஷண சூர்ணிகை வாக்யங்களை வியாக்யானம் செய்தருளுமவராய் அறிய வரிதான ஆத்ம ஸ்வருப யாதாத்ம்யத்தை ஞானிகளுக்கு அநுபவிப்பித்து மகிழ்வித்தார் ] என்றிப்படி ப்ரதமம் தத்வ ரஹஸ்யங்களுக்கு வ்யாக்யாநம் செய்தருளி அநந்தரம் அசேஷார்த்த ப்ரதிபாதகமுமாய் ஆழ் பொருள்களை யுமுடைத்தான ஸ்ரீவசனபூஷணத்திற்கு மெச்சும்
வியாக்கியை யென்று விலக்ஷண பரிக்ரஹமாம்படி வயாக்யாநஞ்செய்தருளி, தாமும்
ஸ்ரீ வசன பூஷணமாந் தெய்வக் குளிகை பெற்றோம்
பார் தன்ளைப் பொன்னுலகாப்பார்க்க வல்லோம்-தேரில் தமக்
கொப்பாரினியா ருலகாசிரியனருள்
தப்பாம லோதிய பின் தான்
என்று இதினுடைய வைபவத்தை அநுஸந்தித்துப் ப்ரீதராயருளினார்.-முதலிகளு மப்படியே
வாக் பூஷணம் வகுள பூஷண ஸாஸ்த்ர ஸாரம்
யோ மாத்ருஸாஞ்ச ஸுகமம் வ்யவ்ருணோத்தயாளூ |
ரம்யோ பயந்த்ரு முநயே யமிநாம் வராய
தஸ்மை நமஸ் ஸமதமாதி குணார்ணவாய
(வகுளாபரணரான நம்மாழ்வாரின் அருளிச் செயலான திருவாய்மொழி எனும் சாஸ்தரத்தின் ஸாரமான ஸ்ரீவசனபூஷணத்தை மந்தர்களான நம் போல்வாருக்கும் எளிதில் அறியும்படி எந்த மணவாளமாமுனிகள் விவரித் தருளினாரோ, சமம், தமம் முதலான கல்யாண குணக் கடலாய் யதி ஸ்ரேஷ்டரான அம் மணவாள மா முனிவருக்கு வணக்கம்) என்றும்,
மேஷந்த வத்து வரயோகி யிட்ட வியாக்கியையால்
தேவுந் திகைக்கும், நற்றீந்தத்துவ ரகஸ்யத்துடனே
தாவும் பெரும் புகழாசாரிய விதயத்திற்குமா .
தாவும் பொருள் செறி சொல்லாபரணச் சுருதிக்குமே-என்றும் இப்படி உபகரித்தமையை அநுஸந்தித்தார்கள்.
அநந்தரம் ஸ்ரீவசனபூஷணத்திற்கு அடியாய் சரம பர்வ நிஷ்டா கிரமங்ளை ப்ரதிபாதிக்கிற இராமானுச நூற்றந்தாதிக்கும் ஞான ஸார ப்ரமேய ஸாரங்களுக்கும் வியாக்யாளஞ்செய்தருளி (மற்றை ரஷஸ்யங்களுக்கும் ஈட்டுக்கும் ப்ரமாணத் திரட்டு ஸங்க்ரஹித்து அருளியும் கீதைக்கு தாத்பர்ய தீபமென்றொரு வ்யாக்யானமும் இட்டருளி உடையவரருளிய நித்ய திருவாராதன க்ரமத்தையும் ஸுக்ரஹமாகவும் ஸுவ்யக்தமாகவும் ஸர்வவாத்மோஜ்ஜீவந தனமாகச் செய்தருனாரிறே )திருவாய்மொழி முதலான அருளிச் செயல்களை யெல்லாவற்றையும் ப்ரவர்த்திப்பித்து, தர்சநத்துக்குப் பண்டில்லாத அதிசயங்களையும் உண்டாக்கிக் கொண்டு எழுத்தருளி யிருக்கிற காலத்திலே, திருவாய்மொழி விஷயமாக திருப் பவளத்தாலே ஏதேனுமொரு ப்ரபந்தம் அருளிச் செய்ய வேணும்’ என்று முதலிகளெல்லாரும் அபேஷிக்க, திருவாய்மொழி நூற்றந்தாதியை யருளிச் செய்து தத்வ த்ரயத்திற்கும் ஈட்டுக்கும் ப்ரமாணத் திரட்டு ஸங்க்ரஹித்தருளி ஆசாரியர்களுடைய உபதேச பரம்பரா ப்ராப்தமாய் வந்த தர்சந தாத்பர்யங்களை யெல்லாம் உபதேச ரத்தின மாலை என்கிற
ப்ரபந்த முகேந ப்ரதிபாதித்து, உடையவர் நித்யத்தை ஸுக்ரஹமாகவும் பண்ணி யருளி இப்படி ஞான வர்த்தகராய் எழுந்தருளி யிருக்கிற காலத்திலே
தம்முள் விரோதப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்களைத் திருத்தியது.
இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் அஹங்காரத்தாலே அந்யோந்யம் விவாதம் பண்ணிக் கொண்டு போர, அப்போது நிஹீத ஜந்துக்களுக்கு விவாதமுண்டாக (நாய்களுக்குள் சண்டை மூள), ஜீயர்
அத்தைக் கண்டு ‘ நீங்களும் இவர்களைப் போல ஸ்ரீவசன பூஷணாதிகாரிகளோ அஹங்காரம் நடையாடி விவாதம் பண்ணுகைக்கு–என்ன, அவர்கள் இத்தைக் கேட்டு லஜ்ஜா புரஸ்ரமாக அதில்
நின்றும் நிவ்ருத்தரானார்கள்.
பொருளில் பற்றின்மை
பின்பு வட தேசத்தினின்றும் சில திரு நாமதாரிகள் சில த்ரவ்வம் மடத்திற்கு வரக்காட்ட, அத்தை நிரூபித்துப் பார்த்த வளவில் அநுகூலமன்றியிலே யிருக்க, அது த்யாஜ்யமென்று கழிக்க, அநந்தரம் மடத்துக்கு ஷேத்ரமுண்டாய் (விளை நிலம் சேர்ந்ததால்) தத்த்வாரா வந்த குடிகள் மடத்தில் புஜித்துப் போக அவ்விடம் கோ மயத்தாலே சுத்தி பண்ணி ஈரமாயிருக்க, யாத்ருச்சிகமாகப் புறப்பட்டருளினவர் அத்தைக் கண்டு ஈரமேதென்று கேட்டருள,அங்கிருந்தவர்கள் அக் காரணத்தை விண்ணப்பஞ் செய்ய அப்போதே அந்தப் பங்கை பெருமாளுக்கு சமர்ப்பித்து அந்தக் கை யோலையையும் ஸ்ரீபண்டாரத்திலே அர்த்த ராத்திரியி?லே போகவிட்டருளி எழுந்தருளி யிருக்கிற காலத்திலே,
கிழட்டணிலாகிலும் மரமேற வல்லதன்றோ?
அதி வ்ருத்தையாயிருப்பாள் ஒரம்மையார் ஒரு நாள், ராத்திரி மடத்தை விட்டுப் போக மாட்டாமையாலே சயநிக்க அவளைக் கண்டு அர்த்த ராத்திரியில மடத்தினின்று புறப்பட விட்டு(கேட்டவர்களுக்கு) “கிழட்டாணிலாகிலும் மரமேற வல்ல தொன்றன்றோ? உகவாதார் அபவாதம் சொல்ல இது போறுமே’-என்றருளிச் செய்து இப்படி யோக்யதை யில்லாத விடத்திலும்-பிணமெழுந்து கடிக்கிறதோ!’ வென்று அதி சங்கையும் போரா நிற்க –
சிலருக்கு ஸ்வரூப சிக்ஷை
ஒரு ஸ்ரீவைஷ்ணவர் தூதுளங் கீரை கொண்டு வந்து தளிகைக்குச் செய்கிற (தளிகைக்குச் செய்தலாவது-தளிகை கு உபயோகமாகக் கறியமுது திருத்துதல் முதலியன செய்தல் )அம்மையார் கையிலே ‘இத்தைப் பாங்காச் செய்து ஸமர்ப்பியும்” என்று கொடுக்க, அவர் அத்தை உதாசித்துச் செய்யாமலிருக்க, பின்பு அமுது செய்தருளும் போதுஅந்த ஸ்ரீவைஷ்ணவர் அம்மையார் முகத்தைப் பார்க்க, ஜீயரும் அத்தைக் கண்ட ருளி இதென்னென்று கேட்டருள அவர் உண்மையை விண்ணப்பஞ்செய்ய அத்தைக் கேட்டருளி அம்மையாரை ‘“ஆறுமாஸம் தளிகைக்குப் பண்ண வேண்டாம்” என்று வெறுத்தருளிப் பின்பு பாகவதாவமானம் பண்ணினதற்கு ஷாமணம் பண்ணுவித்து பின்பு பூர்வம் போலே நியமித்தருளி நடந்து செல்லுகிற நாளிலே!
ஸ்ரீவைஷ்ணவர்கள் தனி வழி வரக் கூடாது :
வரந் தரும் பெருமாள் பிள்ளை ”ஜீயர் திருவடிகளை ஸேவிக்க வேணும்” என்ற ஆதாரதிசயத்தாலே தனித்துப் புறப்பட்டு அதி த்வரையுடனே வந்து திருவடிகளிலே ஸேவிக்க, இப்படி ஸ்ரீவைஷ்ணவ ஸஹவாஸ மின்றிக்கே தனியே ஸாஹஸித்து வருவதே,!”என்று வெறுத்து அவரை ஆறு மாஸம் புறத்திண்ணையிலே யிருக்கும்படி உபேஷித்து பின்பு அங்கீ கரித்தருளி ஏதத்விஷயமாக
1-பஷிதம் ஹி, விஷம் ஹந்தி ப்ராக்ருதம் கேவலம் வபு: |
மந்த்ரெளஷத மயீ தத்ர பவத்யேவ ப்ரதிக்ரியா,
தர்ஸந ஸ்பர்ஸ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷ ஸ்ரவணாதபி |
அப்ரதிக்ரிய மாத்மைவ ஹந்யதே விஷயைர் த்ருடம் ॥
இத்த முத்கோஷயந் தோஷாந் விஸ்தரேண ஸாுதுஸ்தராந் |
தூரம் நிர்வாஸ யாமாஸ வாஸநா விஷயேஷ் வஸெள ॥ என்றும்-
உட் கொள்ளப் பட்ட விஷம் ப்ரக்ருதமான உடலை மட்டும் அழியச் செய்கிறது; அவ் விஷயத்தில் ‘மந்த்ர ரூபமாயும் ஒளஷத ரூபமாயும் பரிஹாரம் இருக்கிறது ஸித்தம், -ஜீவாத்மாவோ(அவற்றை) காண்பதாலும், தொடுவதாலும் அவற்றுடன் கூடுவதாலும் அவற்றைப் பிரிவதாலும், கேட்பதாலும்-பரிஹாரம் பண்ண வொண்ணாதபடி விஷயங்களால் நன்றாக அழிக்கப் படுகிறது- இந்த மணவாளமாமுனிகள் எவ் விதத்திலும் நிவர்த்திக்க முடியாத விஷய தோஷங்களை விரிவாக நன்றாக வெளிக் காட்டி ,அவற்றில் வாஸனையை மீண்டும் அணுக வெண்ணாபடி, ஸ மூலமாக
போக்கினர்)
2, நிதாநம் ஸர்வ தோஷாணாம் நிதாநம் க்ரோத மோஹயோ; |
மாந எவ,மநாம் ஸ்யேஷாம் நித்ய முந்மூல யத்யஸெள ॥ என்றும்
(ஸ்வாபிமாநமே (அஹங்காரமே) எல்லா தோஷங்களுக்கும் காரணம்-கோப மோஹங்களுக்கும் காரணம்,இவ் வபிமானமானது சேதநருடைய மதத்தை எப்போதுமாக அடியோடு அழித்து விடுகிறது. )
3-அர்த்த ஸம்பத் விமோஹாய விமோஹோ நரகாயச |
தஸ்மா தர்த்த மார்த்தாக்யம் ஸ்ரேயோர்த்தீ தூரதஸ் த்யஜேத் ॥
யஸ்ய தர்மார்த்த மர்த்தேஹா தஸ்ய நீஹைவ ஸோபநா |
ப்ரஷாள நாத்தி பங்கஸ்ய தூராத ஸ்பர்ஸநம் வரம் ॥ என்றும்
(பொருட் செல்வமானது மோஹத்துக்குக் காரணமாகிறது. மோஹம் நரக ஹேதுவாகறது. ஆசையால் நன்மையைக் கோருபவன் அநர்த்தம் என்ற பெயருடைய செல்வத்தைக் கிட்ட வொண்ணாமல் விலக்கக் கடவன்’ எவனுக்குத் தருமஞ் செய்வற்காகப் பொருளில் ஆசை யுண்டாகிற்தோ அவனுக்குப் பொருளில் ஆசை யில்லாமையே நல்லது. சேற்றைக் காலிலிருந்து அலம்புவதை விட, தூர நின்று அதைக் காலில் பட விடாதிருப்பது நலம்.)
4–ப்ருத்யோஹம் விஷ்ணு பக்தாநாம் ஸாஸிதாரஸ்த ஏவமே |
க்ரேதும் விக்ரேதுமபிமாமீ ஸதேதே யதேப்ஸிதம் ॥
இதி யஸ்ய மதம் நித்ய மயமேவாத்ம வித்தம: ॥
ஸ்வரூப ஸித்திஸ் ஸர்வேஷாம் ஸ்வோஜ்ஜீவந மபி த்ருவம் |
ஸ்ரேயஸீ தேஸிகாநாஞ்ச ஸித்யதி ப்ரத்யுபக்ரியா ॥ என்றும்
அடியேன் ஸ்ரீவைஷணவர்களுக்கு தாஸ பூதன். அவர்களே அடியேனுக்கு நியந்தாக்கள்-அவர்கள் அடியேனை தங்களிஷ்டப்படி விற்கவும் வாங்கவும் உரியவர்கள். இப்படி எத்த சேதனனுக்கு
அத்யவஸாயம் நித்தியமாய்ச் செல்லுமோ அவனே ஆத்ம ஸ்வரூப முணர்ந்தவரில் முதல்வன். இதனால் எல்லாருக்கும் ஆத்ம ஸ்வரூபம் நிலை பெறுகிறது.-தமதுஜ்தீவநமும் ஸித்திக்கிறது, ஆசாரியர்களுக்கும் மேலான ப்ரத்யுபகாரமானது ஸித்திக்கிறது.
5-ஆசார்யவத் தேவதாவத் மாத்ருவத் பித்ரு வத்ததா
த்ரஷ்ட வ்யாஸ் ஸந்த இத்யா திர்த்ருஷ்ட: ஸாஸ்த்ரேஷுவிஸ்ராத் ॥ என்றும்
ஆசார்யனைப் போலவும் தேவதையைப் போலவும்,தாயைப் போலவும். தந்தையைப் போலவும் ஸத் புருஷர்கள் அபி மானிக்கத் தக்கவர்கள் என்று இது போன்ற நல் வழிகள் சாஸ்தரங்களில் விரிவாகக் காட்டப்பட்டுள்ளன.,
6-ஸுஸீலஸ் ஸுலபஸ் ஸ்வாமீ ஸ்ரீமாந பிக்குபாநிதி:
அணோரபி மஹத்த்வேஷா தத்த்யந்தாம் யாதி விக்ரயாம்
பாவநீ மஹதாம் த்ருஷ்டி: ப்ரச்யுதா நபி மோசயேத் |
அமர்ஷ; புநரல் போபி நித்யாநபி நிபாதயேத் ॥ ._
ப்ரியாத் ப்ரிய தரம் சவ்ரேஸ் ஸஜ் ஜநாநாம் ஸபாஜநம் |
அப்ரியாத ப்ரியஸ் தேஷா மவ மாநோ மநாகபி ॥ என்றும்
ஸர்வ ஸ்வாமியான எம்பெருமான் ஸ்ரீமானாயினும், யாவருடனும் கலப்பவனாயினும், எளியனாயினும், பரமகாருணீகனாயினும், மஹான்களிடம் பண்ணப்பட்ட சிறிது அபசாரத்தாலும் மிகவும் மனக் கலக்கம் (சீற்றம்) அடைகிறான், யாவரையும் பரிசுத்தராக்க வல்ல மஹான்௧ளுடைய கடாஷமானது எம்பெருமானிடமிருந்து நழுவியவரையும் உயர்த்த வல்வது, அவர்களின் மனக் கலக்கம் சிறிதாயினும் நித்யர்களையுங் கூட நழுவப் பண்ண வல்லது, அந்த மஹான்களுக்கு நேரிட்ட அவமானமானது சிறிதாயினும்,எம்பெருமானுக்கு-தனக்கு நேரிடும் அநிஷ்டத்தைக் காட்டிலும் மிகவும் அநிஷ்டமா யிருக்கும்.
7-ஸஜ்ஜநாதிக்ரம க்ரெளர்யம் ஸாஸ்த்ரைரர்த்தம் ப்ரதர்ஸயகந் |
ஸூக்தி பிர்யுக்தி யுக்தாபிஸ் ஸர்வாந் ஸமுத ஜீவயத் -என்றும்
ஸத் புருஷர்கள் விஷயத்தில் பண்ணுமபசாரத்தின் (பாகவதபாசாரத்தின்) கொடுமையை இப்படி சாஸ்த்ர முகத்தாலும் யுக்திகளுடன் கூடிய திரு வாக்குக்களாலும் எடுத்துக் காட்டி யாவரையும் உய்வித்துப் பேந்தார்]-என்றும் இத்யாதிகளாலே
இவற்றினுடைய ஸாஹித்ய ராஹித்யங்களா லுண்டான குண தோஷங்களைத் தம்முடைய தீர்க்க தர்ஸித்வத்தாலே தர்ஸிப்பித்தருளி ஸர்வரையும் உஜ்ஜீவிப்பித்துக் கொண்டு போருகிற காலத்திலே
ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் காட்டித் தருதல்,
இவருடைய உக்த யநுஷ்டானங்களை யெல்லாம் உத்தர தேசத்திலே வைஷ்ணவ ப்ரபுவாயிருப்பா ரொருவர் கேட்டு, தம்முடைய உஜ்ஜீவநத்திற் குடலாக ஸகல சாஸ்த்ர தாத்பர்யங்களையும்
ஸங்க்ரஹ ரூபேண அநுஷ்டேயமா யிருப்பதொரு படி அடியேனுக்கு அருளிச் செய்து வரக் காட்டி யருள வேண்டும்” என்று குறித்து வரக் காட்ட, ஜீயரும் அப்படியே ‘ பகவத் தாஸ்ய ரஸம் புருஷார்த்தமென்று தெளிந்த அதிகாரிக்கு கேவலம் பகவத் தாஸ்யரணம் புருஷார்த்தமன்று; கேவலம் பகவல் லாஞ்சந தாரண மாத்ரமும் போராது; கேவலம் பகவத் ஸமாராதந நிஷ்ட்டா மாத்ரமும் போராது; கேவலம் ஆசார்ய பர தந்த்ர யதிகார மாத்ரமும் போராது; கேவல பாகவதாநுவர்த்தந மாத்ரமும் போராது; பின்னை எங்ஙனே யென்னில்; யதோசித கைங்கர்யைக நிரதகனாய் ஸ்வ கீயமான க்ருஹத்திலே ஸ்ரீவைஷ்ணவர்கள் நிஸ் ஸங்கமாக ப்ரவேஸித்திப் பாங்காக வர்த்திக்கத் தன்னை அத் தலைக்காகவே வைத்துத் தலைக்கட்டும்-அடியார்க் கென்னை ஆட் படுத்த, *எம் தம்மை விற்கவும் பெறுவார்களே என்னும் நிலை யுண்டாக வேணுமிறே,-இப்படி இவ்வர்த்தம் அநுஸத்தித்து அநுஷ்டியானாகில் தனக்கு ப்ரதிபத்தி ஸெளபாக்யைஸ்வர்யங்கள்’ கை கூடாது.
“ந்ய க்ரோத பீ்ஜ வடவத் ப்ரணவே ஸப்த ஜாலவத்;
ஸித்தே ததீய ரோஷத்வே ஸர்வார்த்தாஸ் ஸம்பவந்தி ஹி”-
ஆலம் விதையில் பல கிளைகளை யுடைய ஆல மரம் போலவும், ப்ரணவத்தில் பல சப்த ராசிகள்(அஷரங்கள், பதங்கள்) போலவும் பாகவத ஸேஷத்வம் அநுஷ்டாந ஸித்தமானால் எல்லா ஸத் ஸம்ப்ரதாய அர்த்தங்களும் தன்னடையே கை புகும்] என்கிறபடியே சரமார்த்த விசேஷம் கை புகுத்ததாகில் விவிதங்களாய் விசித்ரங்களாய் அநந்தங்களா யிருந்துள்ள பகவத் ரஹஸ்ய விசேஷங்களெல்லாம் அறிய வேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை, இவ் விசேஷா நுஷ்டாந மின்றிக்கே செல்லுகிற ஜ்ஞாந அநுஷ்டாந ப்ரதி பாதநமும் பகவத் ரஹஸ்ய விசேஷங்களும் வேஸ்யை சொல்லுற பதி வ்ரதா தர்மம் போலே வ்யர்த்தமாகி விடும்-
பூஜநாத் விஷ்ணு பக்தாநாம் புருஷார்த்தோஸ்தி நேதர:; தேஷு
வித்வேஷத: கிஞ்சித் நாஸ்தி,நாஸக மாத்மநாம்”’
எம்பெருமானிடம் பக்தி யுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களை ஆராதிப்பதிற் காட்டில் வேறு உயர்ந்த புருஷார்த்தமில்லை, அவர்களிடம் த்வேஷம் பண்ணுவதைக் காட்டில் ஆத்ம நாசம் பண்ணுவது வேறொன்றில்லை-என்கிறபடியே திருமந்த்ரார்த்தமான சரமார்த தந் நிஷ்டையை ஸ்வ திவ்ய ஸூக்தி விசேஷத்தாலே தர்சிப்பித்து எழுதிப் பேச விட்டருள,அவரும் அப்படியே ததீயாராதநத்திலே நிஷ்ட்டராய் :
தஸ்யை நித்யம் ப்ரதி ஸததிஸே தஷிணஸ்யை நமஸ்யாம்”
[அந்த தெற்குத் திசைக்கு எப்போதும் நமஸ்காரம் செய்யுங்கள் ] என்றும்,
‘திஸே வாபி நமஸ் குர்யாத் யத்ராஸெள வஸதி ஸ்வயம்”
[இவ் வாசாரியர் தாம் எத் திசையில் வசிக்கிராரோ அத் திசைக்காவது நமஸ்கரிக்கக் கடவன்] என்றுஞ் சொல்லுகிறபடியே ஜீயரெழுந்தருளி யிருக்கிற திக்கை நோக்கி , –தொழுமத் திசை யுற்று நோக்கியே (திருவாய் 6-5 5) என்கிறபடியே நாடோறும் ஸேவித்துச் கொண்டு தம்முடைய வர்ணாநு குணமான கைங்கர்யத்தையும் மடத்திற்கு நடத்திக் கொண்டு போந்தார்.
அக் காலத்திலே கோயிலிலே யிருக்கிற பட்டர் பெருமாள் திருவோலக்கத்திலே ஜீயரை ஸேவித்து உம்முடைய சிஷ்யர்கள் நம்மை தண்டனிடாமல் அவமதி பண்ணிப் போரா நிற்பர்கள்-என்று அறிவிக்க, ஜீயரும் மடத்திற்கெழுந்தருளி அவர்களை யழைத்து நீங்கள் இப்படி செய்வானென்?”‘ என்று கேட்டருள, அவர்கள், அவரிருக்கற இருப்பை விண்ணப்பஞ் செய்து, அவரை யநுவர்த்திக்க எங்களுக்கு மனமில்லை’* என்ன, ‘ஆகில், பெருமாளும், பிராட்டியும் திவ்ய ஸிம்ஹாஸநத்திலே எழுந்தருளி யிருக்கிறதாக ப்ரதி பத்தி பண்ணி ஸேவித்துக் கொண்டு போருங்கோள்” என்று அருளிச் செய்து, இப்படி தோஷமுள்ள விடத்திலும் குண ப்ரதிபத்தி நடக்கும்படியான பகவத் ப்ராவண்யத்தை யுடையவராய், பின்பு வ்ருத்தாசாரங்களை அறிந்தருளு மவராகையாலே வேதகப் பொன்னான விலக்ஷண விஷயங்களையும் ஆதரித்துக் கொண்டு,அவர்கள் விஷயத்திலே பூர்வர்கள் அநுஷ்டித்துப் போரும் சேஷ வ்ருத்திகளெல்லாம் அநுஷ்டாந பர்யவஸாயியாம்படி அநுஷ்டித்தருளி;
எக் குணத்தோ ரெக்குல்த்தோ ரெவ் வியல் வோராயிடினும்
அக் கணத்தே நம்மிறைவராவரே-மிக்க புகழ்க்
காரார் பொழிற் கோயிற் கந்தாடை யண்ணனெனும்
பேராளனை யடைந்த பேர்
என்று அநுஸூந்திந்தருளி, இப்படி விலஷணமான ஜ்ஞாந அனுஷ்டாநங்களோடே கூடி ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீ யுடனே எழுந்தருளி யிருக்கிற காலத்திலே –
வேடலப்பையைக்கொண்டு குத்ருஷ்டியை நிரஸித்தல்
குத்ருஷ்டி மதாவலம்பியா யிருப்பானொருவன் கோயிலிலே வந்து ஸ்வமதாபந்யாஸம் பண்ணிக் கொண்டு இறுமாந்திருக்க-ஸர்வஜ்ஞரான ஜீயரும் அவனுடனே தர்க்கிக்கைக்கும் ப்ரஸங்கத்தாலே அவனை வாய் மூடப் பண்ணுகைக்கும் ஸாமர்த்யமுண்டா யிருக்கச் செய்தேயும் -கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோ தாம் -என்கிறபடியே அவனை த்ருண வத்கரித்து அநாதரித்துக் கொண்டு ”பகவதநுபவ விரோதியான இவனை ஊரோடு ஒட்டக் கடவோம்” என்று ஸங்கல்பித்து, முன்னே அவன், வாதூல வம்ஸ்யரான வேடலப்பையை ஆஸ்ரயித்திருந்தவன், ஸஹவாஸ தோஷத்தாலே கலங்கி ப்ரசந்ந பெளத்தரான விரோதிகளோடே கூடிக் கொண்டு மதாந்தர ப்ரவிஷ்டனானாகையாலே, திரிசங்குவைப் போலே கர்ம சண்டாளனான அவனை ஆலோசித்து வார்த்தை யருளிச் செய்யக் கூசி வேடலப்பையைக் கொண்டு நிரஸிக்க வேணுமென்று திருவுள்ளம் பற்றி அவரை அழைப்பித்தருள; அவரும் லந்து ஜீயரை ஸேவித்து கோயிலிலே அவனைக் கண்டு ‘“மாணீ! இவ் விடம் கொண்டயோ?” என்ன, அவனும் அவரைக் கண்டு கருடனைத கண்ட ஸர்ப்பம் போல மிகவும் பீதனாய் ஸேவித்து அங்கு நின்றும் புறப்பட்டு ஒடிப் போனான். அப்பை யுடைய வித்வத ப்ரதிம ப்ரபாவத்தை ஜீயர் கண்டருளி விஸ்மயப் பட்டு அப்பையை, “தேவரீர் இங்கே யெழுந்தருளியிருக்க வேணும் என்று மிகவும் ஆதரிக்க,அவரும் ஜீயர் நியமித்தபடி செய்யாமல் தம் தேஹ யாத்ராசேஷமான லெவ்கிக கார்யங்களையும் அபிஜந வித்யாவ் வருத்தங்களையும் நினைத்து ப்ரக்ருதி பரவசராய் பர்யுஷிதாந்நத்தையும மாஹிஷ ததியையும் நினைத்து அங்கு நிற்க மாட்டாதே ஸ்வ க்ராமத்தை
நோக்கி எழுந்தருளினார்.
மணவாள மாமுனிகளால் வித்யா பூர்த்தியை யிட்டு மதிக்கப் பட்டவரும், முதலியாண்டான் திருவம்ஸ்யருமான வித்வானைக் குறித்து இந்த பரிஹாஸோக்திகள் பொருந்தவில்லை.
தமது வயது முதிர்ந்த பருவத்தை யுத்தேசித்து தம்மை யொத்த ஒரு வித்வானான தமது சிஷ்யரான தாசரதி ஆச்சானை ஜீயர் ஸந்நிதியிலிருக்கும்படி நியமித்து ஸ்வ க்ராமம் எழுந்தருளியதாகப் பழ நடை விளக்கம் ‘ என்னும் நூல் கூறுகிறது. அதிலுள்ள விவரங்கள் வருமாறு –
ஸ்ரீமான் திருமழிசை கோயில் கந்தாடை அண்ணா வப்பங்கார் ஸ்வாமி அருளிச் செய்த பழநடைவிளக்கம்
பின்பு க்ருஷ்ணாநந்தி யென்கிற ஏக தண்டி ஸந்யாஸி கோயிலிலே வந்து தன்னோடே சாஸ்த்ர வாதம் பண்ணச் சொல்ல, பெரிய ஜீயரும், ‘இவனோடே வாதம் பண்ணும் போது மங்களாசாஸந விரோாதமாமே! வாதம் பண்ணாவிட்டால் விரோதி நிரஸனம் ஸித்தியாதே! என்ன செய்வோம்?என்று சிந்தித்துக் கொண்டிருக்கச் செய்தே, பெரிய பெருமாள் நியமனத்தாலே வேடலப்பைக்குப் பெரிய பெருமாள் ஸ்ரீமுகத்தை வனுப்ப, முதலியாண்டான் திருவம்ஸ்யராய், மஹா வைபவ முடையரான வேடலப்பையும் ஸ்ரீமுகத்தை சிரஸா வஹித்து, தம்முடைய ஸந்நிதியிலே சாஸ்த்ரங்களையும் அதிகரிதது மஹா வித்வானாகிய தாசரதி யாச்சானையும் கூட்டிக்கொண்டு கோயிலுக் கெழுந்தருளி நம் பெருமாளை மங்களாசாஸனம் செய்தருளி ஸகல வரிசைகளையும் விசேஷ கடாக்ஷங்களையும் பெற்று, ஸ்ரீரங்க நாயகியாரை மங்களாசாஸநம் செய்தருளி அவருடைய ப்ரிபூர்ண கடாக்ஷம் பெற்று, ஸம்மானமும் பெற்று, வில்வ வ்ருக்ஷத்திற்கு ஸமீபமாக வெழுந் தருளச் செய்தே அப்போது அவ் விடத்தில் ஜபம் பண்ணிக் கொண்டிருக்கிற ஏக தண்டியானவன் இவர்களைக் கண்டெழுந்திருந்து, தனக்கு ஸகல சாஸ்த்ரங்களும் படிப்பித்த வேடலப்பையை தண்டனிட்டு நின்றான். வேடலப்பையும் அவனைப் பார்த்து குசல ப்ரச்நம் பண்ணினார். அவனும் தான் வந்த காரியத்தை வேடலப்பைக்குச் சொன்னான் வேடலப்பையும் -அதற்கள்றோ நாமிங்கே வந்தது’-என்றருளிச் செய்தார்.-ஆனால் அபசாரப்பட்டேன்” என்று பயப்பட்டு தண்டனிட்டு நின்றான். வேடலப்பையும் அண்ணன் திருமாளிகைக்கெழுந்தருளி, அண்ணனும் வேடலப்பையும் தாசரதி யாச்சானும் அமுது செய்தருளி, க்ருஷ்ணாநந்தி இவர்களுடைய ப்ரஸாதத்தை அர்த்தித்தானாகையால் ஒரு பரிசு ப்ரஸாதத்தை அவனுக்கு ப்ரஸாதித்தார்கள். அவனுமிவர்கள் அநுமதி கொண்டு புறப்பட்டுப் போய் விட்டான்-பின்பு வேடலப்டையும் தாசரதி யாச்சானையுங் கூடசக் கூட்டிக் கொண்டு அண்ணனும், பெரிய ஜீயர் ஸந்நிதியிலே யெழுந்தருளி தண்டன் ஸமர்ப்பித்து க்ருஷ்ணாநந்தி போய் விட்ட செய்தியை விண்ணப்பஞ் செய்ய, பெரிய ஜீயரும் அண்ணனையும் வேடலப்யையையும் தாசரதி யாச்சானையுங் கடாக்ஷித்து மிகவுமுகந்து”உகப்பினுடைய வதிசயத்தால் முதலியாண்டான் திருவம்ச விஷயமாக இரண்டு ஸ்லோகம் அருளிச் செய்து பரிபூர்ணாநுக்ரஹம் செய்தருளி வேடலப்பையையும் தாசரதி யாச்சானையும் ஸந்நிதியிலே நித்யவாஸம் பண்ணும்படி நியமித்தருள- வேடலப்பையும் வார்த்தகமான படியினாலே தாசரதி யாச்சானை யங்கே யிருக்கும்படி நியமித்து தாம் பெரிய ஜீயர் ஸந்நிதியிலே அநுமதி பெற்று மிகவும் உபலாளனம் பெற்று வேடலுக்கு எழுந்தருளினார்
ப்ரதிவாதி பயங்கர மண்ணா வருத்தாந்தம் (இந்த வ்ருத்தாந்தம் தெலுங்குப் பதிப்பில் வேறு விதமாக உள்ளது. அதுவும் பின்னர் இப் பதிப்பில் வெளியிடப்படுகிறது, )
இனி இதற்காவாராரென்று சிந்தித்திருக்க, அவ் வளவிலே -ஹஸ்திகிரிநாதரண்ணா வென்னும் திருதாமத்தை யுடையராய் தர்சந விரோதிகளான வாதிகளை ஜெயித்து ‘ப்ரதிவாதி பயங்கரர்’ என்று
விருதிடும்படியான ப்ரபாவத்தை யுடையராய் ‘ லோகே வேதேச பண்டித; லெளகிகே ஸமயாசாரே க்ருத கல்போ விஸாரத;” இத்யாதிப்படியே லௌகிக வைதிகங்களிவே அத்விதீயராய் பெருமாள் கோயிலிலே சில நாள் வஸித்து திருப் பதியிலே நித்ய வாஸமாக எழுத்தருளி யிருக்கிற காலத்திலே அவருக்கு மூன்று குமாரர்கள் திருவவதரித்திருந்து அவர்கள் அதி மேதாவிகளாகவும். தேவிகள் கூரத்தாண்டளோ டொத்திருப்பவள் ஓருத்தியும் இப்படி யிருக்கிற ப்ரதிவாதிபயங்கரமண்ணா கூரத்தாழ்வானைப் போலே ப்ராப்ய விரோதி யென்று ஐச்வர்யத்தில் ஜிஹாஸை பிறந்து கேவலம் ஸத்வ நிஷ்டராய் ”அர்த்த ஸம்பத் விமோஹாய”” இத்யாதிகளை யநுஸத்தித்து -முற்றவும் வீடு செய்து எல்லாவற்றையும் பகவத் பாகவத ஸ்வம் க்கி, தமக்கு: பரம ஸேஷி விஷயத்தில் கைங்கர்யமே புருஷார்த்தம் என்றறுதியடடு திருவேங்கடமுடையான் திருவடிகளிலே ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்ய வேணும் என்றுநிற்க, திருமலை தோழப்பர்
உகந்தருளி –அந்யத் பூர்ணாத பாம்கும் பாதந்ய த் பதாவநே ஜநாத் அந்யத் குஸல ஸம் ப்ரஸ்நாந்ந சேச்சதி ஜநார்த்தந:’‘-ஐநார்த்தனனாகிய கண்ண பிரான் பூர்ண கும்பமோ -திருவடி விளக்குதலோ குசலப்ரஸ்னமோ இவற்றில்-ஒன்றைத் தவிர வேறொன்றையும் ஆசைப் படமாட்டான் என்று வெள்ளிக் குடத்தை ஸாதித்து ”ஆகாச கங்கையினின்றும் திருமஞ்சநம் கொண்டு வந்து பூர்ணமாக ஏலாதி ஸம்ஸ்க்ருத மாக்கி நீரே ஸமர்ப்பித்து வாரும்!’ என்று நியமிக்க, அண்ணா-நாயன்தே, நாயன்தே” என்று குடத்தை வாங்கிக் கொண்டு அதி ஸந்துஷ்டராய் :“இவ்வளவாகிலும் சேஷத்வ ஸித்தி யுண்டாயிற்றே’” என்று நித்யமாக நடத்திக் கொண்டு போர, ஒரு ஸ்ரீவைஷ்வணர் கோயிலினின்றும் அப்பனை ஸேவிக்க வந்து நிற்க , அவரை ஸேவிக்கப் பண்ணி வைத்து, வரிசை பெறுவித்துத் தாமும்
ஸத்கரித்து அற்றைக்கு தம்முடைய அண்டையிலே வைத்துக் கொண்டு கோயில் விருத்தாந்தங்களையும் பெருமாளமுது, செய்கிற வரிசைகளையும் உத்ஸவங்களையும் அழகிய மணவாள மா முனி யுடைய அப்ததிம வைபவத்தையும் கேட்டுக் கொண்டிருந்து பிற்றை நாள் தாம் திருமஞ்சனத்திற் கெழுந்தருளுகிற போது அவரரையுங் கூட்டிக் கொண்டு ”ஸ்ருணோம் யஹம் ப்ரீதி கரம் மமதா தஸ்ய கீர்த்தநம்’* [எனக்கு ப்ரீதியை யுண்டு பண்ணும் என் நாதனுடைய கதையைக் கேட்கிறேன்] என்றபடியே அழகிய மணவாள மா முனியினுடைய திநசர்யையையும் அத்புத வைபவங்களையும் சொல்லுமென்று ததேக சித்தராய் திருமஞ்சநங் கொண்டு வந்து, ஏலாலவங்க கர்ப்பூராதிகளைப் பரிமாறுவதற்காகத் திருத்த, அப்போது ஒரு ஏகாங்கி ஓடி வந்து குடத்தை யெடுத்தக் கொண்டு திருவாராதந ஸமயத்திற்கு உதவ வேணுமென்று கொண்டு போகா நிற்க , ‘-திருமஞ்சந த்ரவ்யங்கள் இன்னும் பரிமாற வில்லையே” -என்ன அதை அவர் கேளாமல் கொண்டு போய் சமர்ப்பிக்க எப்போதும் போல் திருவாராதநம் கொண்டருளா நிற்க அண்ணா, “அபசாரம் வந்ததே” எனறு ஏலாதிகளை வட்டிலிலே கொண்டு நிற்க அர்ச்சகர், அவசராய் ‘இத்தனை நாளைக் காட்டிலும் பரிமள த்ரவ்யங்கள் விஞ்சி, திருமஞ்சன வாஸனை அதிகமாயிருக்கிறதே’! என்ன அண்ணா பாவஜ்ஞராகையாலே ‘இது வெறுமன்று; ௨கப்பு விஞ்சி யிருக்கிறது; இதற்கு ஹேது ஜீயருடைய வைபவ ஸ்ரவணமாக வேணும்”’ என்று எண்ணி, அந்த ஸ்ரீவைஷ்ணவரை யழைத்து “நீர் அழகிய மணவாளமாமுனி , வைபவமான ஐதிஹ்யங்களை அருளிச் செய்ய அடியேன் கேட்டபடியினாலே க்ருதார்த்தனானேன்; அப்பன் திருவுள்ளம் ப்ரஸன்னமாயிற்று;, அழகிய மணவாளமா முனியை ஸேவிக்கப் பெறுதேனாகவேணும்‘ என்ன; அப்பனும் உகந்து அவரை ஸத்கரித்து அனுப்பி யருளினார்.
பின்பு தாம் எப்போதும் போலே சில நாள் திருமஞ்சந கைங்கர்யஞ் செய்தருளி, அப்பனுடைய நியமனத்தினாலே ஸ குடும்பமாகக் கோயிலுக்கும் புறப்பட்டருளி, பயண கதியிலே திவ்ய நகரத்தைத்
தண்டன் ஸமர்பித்து வைத்த கண் வாங்காமல் ஸேவித்துக் கொண்டு நீராடி திருமண் காப்புச் சாத்தி யருளி ஸ்ரீரங்க நாராயண ஜீயர் மடத்திலே எழுந்தருளி பின்பு பெரிய பெருமாளை மங்களா சாஸநம் பண்ணுவதாக ஸேவா க்ரமத்திலே யெழுந்தருள சித்ர மண்டபத்திலே ஜீயர் கோஷ்டியாக எழுந்தருளியிருந்து -ஒன்றுந் தேவு ப்ரவேசம் நடத்த அந்த கோஷ்டியைக் கண்டு ஹர்ஷ பர வசராய் தண்டன் சமர்ப்பித்து நிற்க, ப்ரதிவாதி பயங்கரர் அண்ணா’” என்று ஜீயர் கேட்டருளி குசல ப்ரச்நம் செய்தருளி-இத்தனை நாளைக்காக இன்று ஸேவிக்கப் பெற்றேன்” என்று தழுவிக் கொண்டு பின்பு அவரையும் கூட வைத்துக் கொண்டு கால ஷேபம் நடத்த மூன்று பாட்டாய் நாலாம் பாட்டுத்தருவாய் நிறுத்தின வளவிலே ப்ரதிவாதி பயங்கர அண்ணா ‘ இப்படி ஆழ்வார் பர தத்வ நிர்ணயஞ்:செய்தருளி வைத்த படியை தேவரீர் திருவடிகளிலே ஸம்பந்த முண் டானாலல்லது ஆர்க்குமறியப் போகாது””என்று வித்தராயிருக்க அவர் திருக்கைகளைப் பிடித்துக் கொண்டு பெருமாளைத் திருவடி தொழப் புக, தீர்த்தம் ஸ்ரீசடகோபன் முதலான வரிசைகளெல்லாம் ப்ரஸாதித்து, பெருமாள் அர்ச்சக முகேந-வாரீர் ப்ரதிவாதி பயங்கராசார்யரே! என்று அவர் கையைப் பிடித்துக் கொண்டு ‘ திருமலை யிலே போரத் திரு மஞ்சந கைங்கர்யம் பண்ணினீரே: ஒரு நாள் திருமஞ்சநங் கொண்டு வரும்போது அழகிய மணவாளமாமுனி வைபவங் கேட்டுக் கொண்டு வர அதினாலே தீர்த்த ருச்யாதிக்யமும் பரிமளாதிக்யமுமுண்டாய்
தாம் உகந்த படியை நினைத்து வந்தீர்; உமக்கு விலக்ஷண ஸம்பந்தம் தந்தோம்” என்று ஜீயர் திருக்கையிலே இவரைக் காட்டிக் கொடுக்கப் புறப்பட்டு மடமே யெழுந்தருள;
அநந்தரம் அண்ணா கந்தாடை யண்ணன் திருமாளிகைக் கெழுந்தருளுவதாகப் புறப்பட்டருள, அண்ணன் எதிர் கொண்டு, “வைஷ்ணவோ லைஷ்ணவம் த்ருஷ்ட்வா தாண்டவத் ப்ரணமேத் புவி” என்கிற படியே அந்யோத்ய வந்தந பரராய் சேஷத்வ புரஸ் ஸரமாக குசல ப்ரச்நங்களுடனே திருமாளிகையிலே எழுந்தருள, அங்கே யாத்ருச்சிகமாய் வானமாமலை ஜீயரெழுந்தருளி யிருக்கக் கண்டு, “அருள்கொண்டாடுமடியவரன்றோ தேவரீர்!’* என்று திருவடிகளிலே தீர்க்கப் ப்ரணாமம் பண்ண ஜீயர், ப்ரணாம பூர்வமாகத் தழுவிக் கொண்டு மூவருங் கூடி யிருந்து ஜீயருடைய யதி புநரவதாராது வைபவங்களை யெல்லாம் அந்யோந்யம் அநுஸந்ததித்துக் கொண்டு, மடத்திலே எழுந்தருளி; சிறட்பும் திருமுன் காணிக்கையும், ஸமர்ப்பித்தருளி தேவிகள் குமாரர் எம்பெருமானாரப்பன், அநந்தய்யன் அப்பை, திருவாய்மொழிப் பெருமாள் நாயனார் முதலானாரெல்லாரைங் கூட்டிக் கொண்டு திருவடிகளிலே ஆஸ்ரயித்தருளி க்ருதார்த்தராய் ஸ்ரீபாத தீர்த்தமும் தளிகை ப்ரஸாதமும் ஸ்வீகரித்துத் திருவடிகளுக்கு அந்ததரங்கராய் வாழ்ந்தருளினார், ஜீயருடைய ஸம்பந்த முடையராய் -அடங்கெழில் சம்பத்து என்கிறபடியே கட்டடங்க விலஷணமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை அடங்கக்கண்டு என்கிறபடியே கார்த்ஸ்ந்யேத கண்டு –அடங்கெழில் என்றபடியே பந்நகாதீஸரான அழகிய மணவாளமாமுனிகளுடைய நிரவதிக விலக்ஷண ஸ்ரீயிலே அஃதென் நடங்குக வுள்ளே-என்கிறபடியே தாமுமொன்றென்று அந்தர்பவித்து, ‘‘ப்ரஸித்த:பரகோஷ்டீஷு ப்ரவாதி பயங்கர:; ஸ்ரீவைஷ்ணவா நாம்
கோஷ்டீஷு தத்தாஸ இதி விஸ்ருத: [ஸ்ரீவைஷ்ணவரல்லாத புறம்பான கோஷ்டிகளில் பிரதி வாதிபயங்கரரென்று பிரஸித்தரானாலும் ஸ்ரீ வைஷ்ண கோஷ்டிகளில் அவர்களுக் கடியவர் என்று நன்கறியப்ப்ட்டவர்] என்று ஸ்வ சேஷத்வாநுஸந்தாநத்துடனே ஜீயர் திருவடிகளுக் கந்தரங்கராய் வாழ்ந்தருளினார்.
தெலுங்குப் பதிப்பிலுள்ளபடி. ப்ரதிவாத பயங்கர மண்ணா வ்ருத்தாந்தம்-(வேடலப்பை ஸ்ரீரங்கத்தில் நித்ய வாஸத்துக்கு இசையாமல் அகன்று போக ‘இனி இதற்கு ஆவாரர்?” என்று சிந்தித்துப் பெருமாள் கோயிலில் ‘ப்ரதிவாதி பயங்கரர்’ என்று திருநாம முடையராய் விதேசேஷ்வபி விக்யாதராய்ப் போருகிற ஹஸ்தி கிரிதாதரண்ணாவின் பக்கல் திருவுள்ளம் குடி போய் –ஆம் முதல்வனிவன் என்று அபிமானித்தருளி அவரை ஸ்ரீவைஷ்ணவ தாஸராக்க வேணும்” என்று ௧ருதித் தன் திருவடிகளுக் கந்தரங்கர்களான ஸ்ரீவைஷ்ணவரிருவர் கையிலே தம்முடைய திருமுகமெழுதிக் கொடுத்து அவர்பக்கல் போக விட்டருள, அவர்களும் ப்ரதிவாதி பயங்கர மண்ணாவைக் கிடடித் திருமுகத்தையும் கொடுத்து ஜீயர் அனுப்பின விருத்தாந்த்தையும் அறிவிக்க, அண்ணாவுங் கேட்டு அதி ப்ரீதராய்த் திருமுகத்தை சிரஸா வஹித்துக் கொண்டு; முன்பே திராவிட வேதாந்தார்த்த ஸ்ரவண ஸ்ரத்தா யுக்தரானவர் இதுவே இடமாமென்று கருதி தத் ஷணமே புறப்பட்டு –தாய் நாடு கன்றே போல் என்றும் * வத்ஸோவா மாதரம்”’ என்றுஞ் சொல்லுகிறபடியே ஸ்ரீவத்ஸ குல திலகராய் ஸ்ரீவத் ஸிஹ்ந மிச்ர துல்யரான இவரும் ஸ்ரீரங்காபிமுகராய் -ஆஜகாம முஹூர்த்தேநல்-என்கிறபடியே பயண கதிகளை அர்ச்சிராதி கதியாக மநோ ரதித்துக் கொண்டு ::மணவாளமாமுனிவன் பாத கமலங்கள் காண வேணும்” என்ற பேராசையுடனே திருவரங்கப் பெரு நகரிலே சென்று-காவேரீ விரஜா ஸேயம்’‘ என்கையாலே அந்த வைகுந்த நாட்டிலே விரஜை தானான தன்மை யுடைய திருக் காவேரியிலே நீராடி நதீ நிஸ்தரணாநந்தரம் ப்லவ பரித்யாகம் போலே, சேதனன் வாஸநா ரேணுவைக் கழிக்குமா போலே அநுவாதரீதியாகிற வாஸநா ரேணுவைக் கழித்து கேசவாதி த்வாதசோர்த்வ புண்டரங்களையும் தரித்துக் கொண்டுஸ்ரீவைஷ்ணவாலங்கார முடையராய் திவ்ய நகர ப்ரவேச யுக்தராயிருக்க;
அவ்வளவிலே அவரண்டைக்குப் போக விட்ட வைஷ்ணவர்களும் ஜீயருக்கு இவர் எழுந்தருளின வ்ருத்தாந்தத்தை விண்ணப்பம் செய்ய, ஜீயருங் கேட்டு -பக்வமாய்ப் பலிக்குமோ?”’ என்
அவர்களை வினவி யருள அவர்களுலம் தேவரீருடைய அமோக ஸங்கல்பம் பழுது போமோ? அங்கோல தைலம் போலேஅப்போதே பல பர்யந்தமாய் பலித்தது” என்ன, போர வுகந்தருளி,
இவர்க்கு அபிமுகமாக கோயிலனைத்துப் பரிகரத்துடனே தம் ஸந்நிதி ஸ்ரீவைஷணவர்களைப் போக விட்டருள, இவரும் அணியரங்கன் திருமுற்றத்தடியார் தங்களின்பமிகு பெருங்குழுவு கண்டு கொண்டு ஸேவித்து ஹ்ருஷ்டராய் நிகில ஜந ஸுஹருத்துக்களானவர்களுடனே கூட திருவரங்கத் திருப்பதியிலே ப்ரவேசித்து, “அவர்கள் முன்னிலையாகப் பெருமாள் ஸேவாகிரமந்தப்பாமல் ஸேவித்துமீண்டு வரயோகி மடத்திலே சென்று ‘‘ரங்கேதாம்நி ஸுகாஸீநம்- வந்தே வர வர முநிம்!’ என்கிறபடியே விசேஷாதிஷ்டாதமாக ஸ்வாங்கீகாரோந் முகராய் எழுந்தருளி யிருக்கிற ஜீயர் திருவடிகளிலே ‘*அகிஞ்சநோ அநந்யகதி ஸயரண்ய த்வத்பாத மூலம் சரணம் ப்ரபத்யே” என்கிறபடியே ஆகிஞ்சந்ய அநந்யகதித்வ பூர்வமாகத்,தாளுந் தடக்கையுங் கூப்பி ஸாஷ்டாங்க ப்ரணாமம் பண்ணா நிற்க; ஜீயரும் க்ருபை செய்து, “லோசநாப்யாம் பிபநத்திவ – என்னும்படியே குளிர நோக்க, –வசஸா ஸாந்தவயித்வைநம்”என்னும்படி குசலப்ரஸநம்பண்ணி இருத்திக் கொண்டு அப்போது நடக்கிற *ஒன்றுந்தேவின் ப்ரவேசத்தை உபந்யஸித்துக் காட்ட இவருங்கேட்டுப் போர வாச்சர்யப்பட்டு, திருவாய் மொழியிலு மருளிச்செயலிலு மொழிய ஸம்ஸ்க்ருத்தில் பரிசயமில்லை” என்று கேட்டிருந்தோம்; இவர் உபய வேதாந்தத்துலும் மிகவும் நிபுணரா யிருந்தார்’” என்று ஜீயரிடத்தில் அத்யாதரம் பண்ணி, இனி,-அடியேனை யாட் கொண்டருள வேணும்” என்ன, ஜீயரும், “நீர் ப்ரதிவாதி பயங்கரர்; நாம் ஸா து; எங்ஙனே கூடுகிறது? என்ன, அண்ணுவும் ஜீயரைக் குறித்து ”ப்ரஸித்த. பர கோஷ்டீஷு பரவாதி பயங்கர:, ஸ்ரீவைஷ்ணவாநாம் கோஷ்டீஷு தத் தாஸ இதி விஸ்ருத:” என்று அடியேனுக்கு இங்ஙனே இரண்டு ப்ரஸித்தி யுமுண்டு”’ என்ன அத்தைக் கேட்டு ஜீயரும் உகந்த திருவுள்ளத்தை யுடையராய் பஞ்ச ஸம்ஸ்காரங்களையும் ப்ரஸாதித்து, –பலரடியார் முன்பருளிய என்றும் ‘பஹுமாநேந மஹதா?’ என்றுஞ்
சொல்லுகிறபடியே விசேஷாபிமானம் செய்தருளி, ஐந்மாத் யுத்க்ருஷ்ட தாதிகளால் “உண்டான அபிமானம் போம்படி-“அடியார்க்கென்னை யாட்படுத்த விமலன் என்கிறபடியே ஆத்ம தாஸ்யமாக ஸ்ரீவைஷ்ணவ தாஸன்” என்று ஆர்க்கும் ஸித்தியாத தாஸ்ய நாமத்தையும் ததீய சேஷத்வமே நிலை நின்ற நிரூபகமாம் படி ப்ரஸாதித்தருளி, “காந்தோ பயந்த்ருயமிந: கருணைக பாத்ரம்” என்னும்படியான அண்ணாவைக் குறித்து ”இதர மத நிராகரண பூர்வமாக ஸ்வ மதமான ஸ்ரீராமாநுஜ ஸித்தாந்தத்யே
ரக்ஷித்துக் கொண்டு விசிஷ்ட பஷத்திலேயே நிஷ்டராய்ப் போரும்” என்று நியமித்தருள, இவரும் ஒரு பிறவியிலே இரு பிறவியாய் ஸத்தா மூலமான மூல ஸ்பர்ஸமுள்ள தொன்றைப் பற்றி ”ஸந்தமேநம் -என்னும்படி ஸத்தையும் பெற்று க்ருதார்த்தராய், உடையவர் திருவடிகளுக்கு ஆழ்வானைப் போலே அந்தரங்கராய், ஸகல வ்யாக்யான நிர்மாண ஸஹ காரியாய் தத் பாதாப்த ஸேவைக தாரகராய் வாழ்ந்து கொண்டு ஜீயருக்கு உகப்பாகப் பெருமாளையும் ஸேலித்து அரிய அருளிச் செயற்பொருளை யெல்லாங் கேட்டு ஆதரித்துக் கொண்டு எழுந்தருளி யிருத்தார். பின்பு ”தஸ்மாத் பார்யாதய: புத்ராஸ்தமேகம் குருமாப்நுயு: [அண்ணா ஆசரயித்த படியால் அவருடைய புத்ரர்களும் பத்நீ முதலானவர்களும் அம் மா முனிகளொருவரையே ஆச்சார்யராக ஆஸ்ரயித்தார்கள்] என்னும் படி தத் ஸம்பத்திளான அப்பா முதலானவர்களும் ஜீயர் திருவடிகளில் ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்தார்கள். அந்த அப்பாவிறே அஸ்மத் தேசிகராயிருக்கிற சடகோப தேசிகரை ப்ரதமம் கடாக்ஷித்தருளினார்.
ஜீயர் மீளவும் திருமலை யாத்ரை செய்தருளல்.
அநந்தரம் ஜீயர் மீளவும் திருமலை முதலான திவ்ய தேசங்களைத் திருவடி தொழ வேணுமென்று திருவுள்ளமாய், “ப்ரதீதைரபி தத் ப்ருத்யை ப்ரதிவாதி பயங்கரை: (ப்ரதிவாதி பயங்கரம் அண்ணாவுடனும் பிரசித்தர்களான அவருடைய அடியார்களுடன் )என்கிறபடியே ப்ரதிவாதி பயங்கர அண்ணா முதலான அனேக ஸ்ரீவைஷ்ணவர்களுடனே திருக்காவேரி வடக்கு நோக்கினாப்போல புறப்பட்டருளி-அதவிலோகந லோகதமேநுதம் த்வதவலோகந துங்க குதூஹலம் | த்விரத ஸைல ஸிரோக்ரஹ மேதிநம் வரத முத்தர வேதி பூஷணம் (பின்னர் தமது கடாக்ஷத்தாலே ஐநங்களு டைய அஜ்ஞான இருளைஅடியோடு போக்குமவராய் தேவரீரை கடாக்ஷிப்பதில் மிகவும் குதூஹல முடையவராய் திருவத்தி மலை யுச்சியில் நித்யா வாஸம் செய்தருள்பவராய் உத்தர வேதியான யாக சாலைக்கு அலங்காரபூதரான பேரருளாளனை) என்கிறபடியே அர்த்திதார்த்த பரிதானத்தில் அவஸர ப்ரதீஷாரயெழுந்தருளி யிருக்கும் பேரருளாளரைத் திருவடி தொழுவாராக ப்ரதமம் பெருமாள் கோயிலேற எழுதந்தருள, அங்குண்டான ஸ்ரீ வைஷ்ணவர்களெல்லாரும் எதிர் கெண்டு வந்து ஸேவிக்க அவர்களை க்ருபை பண்ணி அவர்கஞடனே எழுந்தருளி கோயிலுக்குள்ளே புக்கு.
1-ஸ்ரீ மந் த்வாரவரம் மஹத்தி பலிபீடாக்ர்யம் பணீந்த்ரஹ்ரதம்கோபீநாம் ரமணம் வராஹ வபுஷம் ஸ்ரீபட்டநாதம் ததா |
ஸ்ரீமந்தம் சட வைரிணம் கலிரிபும் ஸ்ரீபக்தி ஸாரம் முநிம் பூர்ணம் லக்ஷமண யோகிநம் முநிவரிராநாத்யா த்வாரபவ்
ஸ்ரீமந் மஞ்ஜந மண்டபம் ஸரஸிஜாம் ஹேதீஸ போகீஸ்வரெள ராமம் நீல மணிம் மஹாந ஸவரம் தார்க்ஷ்யம் ந்ரு ஸிம்ஹம் ப்ரபும்
ஸே நாந்யம் கரிபூதரம் ததுபரி ஸ்ரீ புண்யகோடிம் ததா தந் மத்பே வரதம் ரமாஸஹசரம் வந்தே ததீயைர் வ்ருதம் ॥
நித்யஸ்ரீயுடன் விளங்கா நின்ற பெரிய திருக் கோபுர வாயிலையும் பலி பீடத்துக்கு முன்புள்ள திருவநத்த ஸரஸ்ஸையும், கோபீ ரமணனான ஸ்ரீவேணு கோபாலனையும, ஞானப் பிரானையும், அப்படியே பட்டர்பிரானையும், ஸ்ரீமானான சடகோபனையும், திருக்கலிகன்றியான திருமங்கையாழ்வாரையும், திருமழிசைப் பிரானையும் பெரியநம்பியாரையும், எம்பெருமானாரையும், முதலாழ்வார்களையும், பிறகு திருவாசல் காக்கும் முதலிகளையும், திருவபிஷேக மண்டபத்தையும், தாமரையாளான ‘பெரும் தேவித் தாயரையும், திருவாழி யாழ்வானையும், திருவநந்தாழ்வானையும் சக்கரவர்த்தி திருமகனையும், கரிய மாணிக்க வரதரையும். திருமடைப் பள்ளியையும், பெரிய திருவடி நாயனாரையும், ஸ்வாமியான அழகிய சிங்கரையும், சேனை முதல்வரையும், திருயத்திமாமலையையும் அதன்மேல் ஸ்ரீபுண்ய கோடி விமானத்தையும் அதன் மத்தியில் ஸ்ரீதேவி பூதேவி முதலானாரால் சூழப்பட்ட திருமகள் கேள்வனான தேவப் பெருமானையும்: அடிபணிகிறேன்..
2-கமல நிவேஸி தாங்க்ரி கமலம் கமலாபரணம் கந மணி பூஷணத்யுதி கடாரித காத்தருசிம் |
அபயகதா ஸூதர்ந ஸரோருஹ சாருகரம் கரிகிரி ஸேகரம் கிமபி சேதஸி மேநிததே ।
ஆஸந பத்மத்தில் அழுதியிட்ட திருவடித் தாமரைகளை யுடையனாய் லஷ்மீ வல்லபனாய் உயர்ந்த மணிமயமான திருவாபரணரங்களின் ஒளியினால் பொன் வண்ண மாக்கப்பட்ட திருமேனி
சோபை யுடையனாய் அஞ்சேலென்று காட்டும் முத்திரை யென்ன கதை சங்கம் சக்ரம் இவ்வாழ்வார்களென்ன இவற்றை தரிக்கும் திருக்கைகளாலே அழகாக விளங்கா நின்ற அத்திகிரிக்கு சிரோ பூஷணமான அநிர்வசநீயனான பேரருளாளனான எம் பெருமானை எனது மனதில் த்யாநிக்கிறேன்) என்கிற படியே அடைவே ஸேவித்தருளி வைய மாளிகையிலே ஏறி யருளி பேரருளாளரைத் திருவடி தொழுது
“மங்களம் வேதஸோ வேதி மேதிநீ க்ருஹமேதிநே வரதாயதயா தாம்நே தீர்ரேதாராய மங்களம் ”--பிரமனுடைய யாக பூமியில் எழுந்தருளி யிருப்பவராய், க்ருபா நிதியாய், ஆஸ்ரிதாபேக்ஷிதங்களைத் தருவதில் நிலை நின்றவரான பேரருளாளருக்கு மங்களம்,
மங்களம்-என்று தொடங்கி மங்களாசாஸனம் பணணி எழுந்தருளி நிற்க திருவடிக்கீழவர்கள் தீர்த்த ப்ரஸாதங்களும் ஸ்ரீ சடகோபனும் ப்ரஸாதிக்க ஸ்வீகரித்தருளி தண்டன் ஸமர்ப்பித்துப் புறப்பட்டருள, அங்குண்டானவர்கள்எழுந்தருளியிருக்கும்படி அங்கே ஒரு மடத்தைக தற்பிக்க.
கதி ஸித்திநாநி கரிஸைல வாஸிந கமலா ஸகஸ்ய நயநாதுதா பவந |
நிஜ பாத பங்கஜ ரஜோபி ஷேச நைரகிலாஸ்ரிதாந் விமலாயக்நு வாஸை : ॥
(அம் மணவாளமா முனிகள்: சில நாட்கள் ஹஸ்தி கிரியில் தித்யவாஸியாய் ஸ்ரீ யபூதியான பேரருளாளனுடைய கடாக்ஷத்திற்கு இலக்காகி, அங்கு எல்லா ஆஸ்ரிவதகளையும் தமது திருவடித்
தாமரைகளின் ஸ்பர்சத்தால் சுத்த ஸ்வபராகச் செய்து கொண்டு எழுந்தருளி யிருந்தார்) என்கிறபடியே அங்கேயே அவர்களுக்கு உகப்பாக நாலாறு நாள் எழுந்தருளி யிருக்க, அநந்தரம் திரு வைசாகத் திருநாள் தொடங்கி நடக்க, முன்றாந் திருநாளன்று பெருமாள ஒப்பித்துக் கொண்டு
ஆரூட : பதகேந்த்ர மஸ்ய கரயோரங்க்ரி த்வயீ மர்ப்பயந்
திவ்யை ரம்பர பூஷணைர் திந க்ருதோ தீப்திம் திவா தீபயத் |
முக்தேந்து ஸ்மிதீரோ சிஷா மதுரயந் முக்தாத பத்ர ச்ரியம்
விஸ்வம் பஸ்யதி சக்ஷுஷா விகஸதா வீதீ விஹாரீ ஹரி!
(தேவப் பெருமாள் பெரிய திருவடியின் மேலே எழுந் தருளி அவருடைய கைகளிலே இரு திருவடிகளையும் வைத்துக் கொண்டு, திவ்யமான திருப் பரியட்டங்களாலும் திருவாபரணங்களாலும்சூரியனுடைய ஒளியைப் பகல் விளக்காக்குமவராய், அழகிய வெண் மதி போன்ற புன்முறுவலுடைய காந்தியான திரு முத்துக் குடைகளின் சோபையை விளங்கச் செய்பவராய், திருவீதிகள் தோறும் பவநி எழுந்தருளி, திருக் கண்ணோக்கினால் யாவரையும்குளிரக் கடாக்ஷித் தருளுகிறார்) என்கிறபடியே பெரிய திருவடி மேற்கொண்டு திரு வீதியிலே புறப்பட்டருள ஜீயரும் பெருமாளை ஸேவித்துக் கொண்டு கங்கை கொண்டான் மண்டபத்தேற வெழுந்தருள);
எறும்பியப்பா ஜீயரை ஸேவித்தல்
எறும்பியப்பாவும் சில ஸ்ரீவைஷ்ணவர்களும் திருநாள் ஸேவிக்க எழுந்தருளி னவர்கள் அங்கே அசித்திதமாக ஜீயரை ஸேவித்து
ஆருஹ்ய பதக வ்ருஷபமா யாந்தம் வரத மாதராத் த்ரஷ்டும். |
கத்வாத தக்ர பூமிம் நாத்ர நஷம் தத்ர தேசிகம் த்ருஷ்ட்வா
(பெரிய திருவடியின் மேல் ஏறி யருளி எழுந்தருஞம் தேவப் பெருமாளை ஸேவிக்க ஆதரத்துடன் சென்று அவ் விடத்தில் ஆசார்யரை-மணவாளமாமுனிகளை-ஸேவித்து அங்கு ஈடுபாட்டினால்-அதற்கு மேலே எதையும் பார்க்க வில்லை) என்னும்படி அப்பா விஸ்மித ஹ்ருதயராய் மோஹித்து ஜீயர் திருவடிகளில் ஆதராதிசயத்தாலே விழுந்து தத் விக்ரஹாநுபவம் பண்ணிக் கொண்டு ”சிரேண ஸம்ஜ்ஞநம் ப்ரதி லப்ய சைவ விசிந்தயா மாஸ விஸால நேத்ரா””. வெகு காலம் கழித்துத் (சீதை] தன்னினைவடைந்து மேலும் மலர்ந்த திருக் கண்களை யுடையளாய் சிந்திக்கலானாள்-என்கிறபடியே மூன்று நான்கு நாழிகைக்கு மேலே தெளிந்து-பின்பு திரு நாளென்றறிந்து ஜீயரை ஸேவித்துக் கொண்டு போய் –குமிறு மோசை விழவொலி தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு(திருவாய் 2-4-2] என்றும் (இழைகொள் சோதிச் செந்தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர் [திருவாய் 5-5] என்றுஞ்
சொல்லுகிறபடியே ஸேவித்தருளி (என்கிறபடியே ஜீயர் புருஷகாரமாக ‘ஸெளம்யோ பயந்த்ரு முநிசா மம தர்ஸிதெள தெள ஸ்ரீ தேவராஜ சரணெள சரணம் ப்ரபத்யே ” என்கிற படியே ஸேவித்தருளி)பின்பு ஜீயரும் பெரிய திருவடியோட்டைச் சேர்த்தியை
ஸேவித்தருளி
ஸூபர்ண ப்ருஷ்ட ரமாரூடஸ்ஸ யாம: பிதாம் புரோ ஹரி: |
காஞ்சநஸ்ய கிரேஸ் ஸருங்கே ஸ தடித்தோ யதோ யதா ॥
(பெரிய திருவடி நாயனாரின் முதுகிலே எழுந்தருளி யிருக்கும் நீல மேக ஸ்யாமளனும் பீதக வாடைப் பிரானுமான தேவப் பெருமாள் திரு பொன்மலையின் மேலே மின்னலுடன் கூடிய மேகம் போலே
விளங்கினார்.) என்கிறபடியே மஞ்சுயர் பொன் மலை மேலெழுந்த மா முகில் போன்ற வடிவை அநுபவித்தருளி –
தரசழுந்து மணி தவள நற் பவள மருண ரத்ந வகை சாத்தியயே
சங்கு சக்ராமுமங்கையில் திகழ மங்ஸக பாகனரனேத்தவே
நரகு மொத்தமரர் திரளு மேத்தும் நரவாகவனன் வருணனிந்திரன்
நடுவு நான்மறை கொள் முனிவர் வானவர் குணாலமிட்டு நடமாடவே
வரைகளிற் பெரிய வட கிரிக்குமிசை மரதகக் குவடு போலவே
வரதர் கச்சிநகர் வரு தனித் தெருவில் வடகலைக்கழகு பொழியவே
அரவுதித்த மணி மகுட முற்றவொரு வணி பிணக்குடன் மிழற்றவே
கநகமொத்த தொரு வடிவமொத்தி வரு கருடனிற் பவனி வருவரே
என்றநுபவித்து அதற்குப் பாசுரமிட்டருளி ஹ்ருஷ்டரா யெழுந்தருளியிருந்து மற்றைத் திருநாள்களையும் ஸேவித்தருளி எழுந்தருளி யிருக்க.
அப்பாச்சியாண்ணாவைக் கச்சியில் நித்ய வாசம் பண்ண நியமித்தல்
ஸ்தலத்திலுள்ள பெரியோர்கள் எல்லோரும் கூடி யெழுந் தருளி-ஜீயர் மங்களாசாஸநஞ் செய்தருளுகையாலே இந்த விசை திரு வைசாக மஹோத்ஸவம் அதி விலஷணமாகக் கண்டருளினார்” என்று உகந்தருளக் கேட்டருளி, ஜீயர் அவர்களை ஆதரித்தருளி- கர்த்தவ்யாசாரபாகங்களையும் பரஸ்பர சேஷத்வ ஸெளஹார்தாவஸ் யாகத்வத்தையும் திவ்ய ப்ரபந்த வாஸநாத்யாவஸ் யகத்தையும்
அவர்களுக்கு உத்தரோத்தரம் அதிசயமாக வேணுமென்று அருளிச் செய்ய, எல்லோரும் அப்படியே யாக வேணும்; இவற்றிற்க் கெல்லாம் ஒருவரைக் கற்பித்தருளி’ அடியோங்களைத் திருத்திப் பணி கொள்ளும்படி அந்த ஸ்தலத்திலே நித்ய வாஸமாக நியமித்தருள வேண்டும்” என்ன ஜீயரும் போர வுகந்தருளி வானமாமலை ஜீயரை இட்டு நம்முடைய அப்பாச்சியாரண்ணாவை அழைத்து
வாரும்” என்று நியமிக்க அவருமப்படியே செய்தருள, அப்பாச்யாரண்ணாவை எல்லார்க்குங் காட்டி யருளி, இவரை தம்முடைய மர்யாதையாக வெண்ணி க்ருபை பண்ண வாருங்கோள்” என்றருளிச் செய்து அவரையும் நீர் முதலியாண்டான் திரு வம்சத்திலேஅவதீர்ணரா யிருக்கையாலே ஆண்டான், தோழப்பர், முதலானார்க்கு உகப்பாக நம்முடைய வாக்யாநுவிதாயியாய் இவர்களுக் கெல்லாம்-ஹித ப்ரவர்த்தகராய்ப் பேரருளாளருக்கு மங்களாசாஸந பரராய் நித்ய வாஸம் பண்ணும்
ஸ்ரே யாம்ஸி கரி ஸைலேந்த்ர। கருணா வருணால்ய: |
தோதுஹ்யாத் வரதஸ் ஸ் ரீமா நர்த்திநாம் நிதிரவ்யய: ॥
யாசிப்பவர் களுக்குக் குறையாத நிதியாய்க் கருணைக் கடலாய் ஹஸ்திகிரி நாதனாய் ‘ஸ்ரீமானான வரந் தரும் பெருமாள் நன்மைகளை(உமக்குச்) சுரந்தருளுவாராக] என்று ஆஸீர்வதித்தருளினார்-
ஜீயர் திருக்கடிகை, எறும்பி வழியாகத் திருமலை எழுந்தருளல்.
அநந்தரம் அப்பாவையுங் கூட்டிக் கொண்டு திருப்புட்குழி வழியாக எழுந்தருளி அங்கே புட்குழி அம் போர் ஏற்றையும் ஸேவித்துப் புறப்பட்டு,
கடிகாசல ஸேகரம் ததோ நரஸிம்ஹம் நயநேந நிர்விஸந் |
உதஜீவய தர்ஸ்ரிதைர ஜநைரவநீம் தாம பநீத பந்தநை: ॥
(பிறகு கடிகைத் தடங் குன்றுக்கு சிரோ பூஷணமா யெழுந்தருளியுள்ள நரசிங்கப்பிரானைத் திருக் கண்களாலே பூர்ணமாயநுபவித்து, தம்மை யாஸ்ரயித்தவர்களாய் அறுக்கப்பட்ட ஸம்ஸார பந்தத்தையுடைய சில மனிதர்களுடன் அந்த நாட்டை அநுக்ரஹித்தருளினார்) என்கிறபடியே வண்டு வளங் கிளரும் நீள் சோலை வண் பூங் கடிகைத் தடங் குன்றேற வெழுந்தருளித் தக்கானையும் திருவடி தொழுது க்ராமாந்தரங்களினின்றும் அநுகூலராய் வந்து ஆஸ்ரயித்தவர்களையும் க்ருபை பண்ணி யருளி, அநந்தரம் கடிகைத் தடங் குன்றின் மேல் ஏறி யருளி -மிக்கார் வேத விமலர் விழுங்கும் அக்காரக் கனியை யநுபவித் தருளி, அந்தியம் போதிலரியுருவாகி யரியை யழித்தவனைப் பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதும் -என்கிறபடியே மங்களாசாஸனம் பண்ணி-அங்கே யெழுந்தருளி நின்று எறும்பியைக் கடாஷித்தருளி ‘வட திருவரங்கம்” என்று ஊருக்குத் திருநாமஞ் சாத்தி யருளி-அங்குண்டானவர்களெல்லாரையும் அழகிய மணவாள தாஸரென்று அபிமானித்தருளி அண்ணல் மலை யருகே அரங்க மா நகராக்கி அநந்தரம் -வண் பூங் கடிகைக்கு பண்டெல்லாம் வேங்கடம் என்று திருமலையோடே சேர்த்தி யுண்டாகையாலே பொன்மணியை அணி யார்ந்ததோர் மின்னை வேங்கடத்துச்சியில் கண்டு இப்படி ஸ்ரீதிதி யாகிற பொருள் படைப்பாரரக ஒண்ணுதல் மாமை
யின்படியே மநோ ரதத்தை யுடையராய் தேவம் திவ்யம் ஸேஷஸைலே வஸந்தம் தத்பாதாப்ஜம் வீக்ஷிதும்’-என்று வேங்கடத்து உச்சியில் கோயில் கொண்டுள்ள தேவனின் திருவடி தொழுவாராக திருவடிவாரமான திருப்பதியிலே முந்துற வெழுந்தருள அங்குள்ள் ஆசார்ய புருஷர்கள் முதலானாரனைவரும் எதிர் கொண்டு சேவிக்க-
அவர்களுடன் கூட கோவிந்த ராஜப் பெருமாளைத் திருவடி தொழுவதாக எழுந்தருளி ப்ரதமம் எம் பெருமானாரைத் திருவடித் தொழுது, அவருகந்து எழுந்தருளப் பண்ணினவரென்று அத்
யாதரத்துடனே ஸ்ரீகோவிந்த ராஜப் பெருமாளையும் –கையினார் சுரி சங்கனலாழியர் என்கிற படியே அத்யா தரத்துடன் ஸேவித்தருளி கோவிந்தன் குணம் பாடி மங்களசாளனம் பண்ணி யருளி கோவிந்தன் தன்னடியாரா யிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களுடனே புறப்பட்டருளி திருமலையடிவாரத்திலே எழுந்தருளி யிருக்கிற : நம் மாழ்வார் முதலான ஆழ்வார்களையும் *உலகுய்ய மால் நின்ற என்று தொடங்கி மகிழ் மாறன் தாளிணையே ௨ன் சரணாய் நெஞ்சமே யுள் (திருவாய் நூற்-60) என்றும் ஓழிவில் காலம் என்று தொடங்கி -மிக்க நலஞ்சேர் மாறன் பூங் கழலை நெஞ்சே புகழ்
(திருவாய் நூற்-23) என்றும் அநுஸந்தித்து ஸேவித்தருளி அன்றைக்கு அங்கே எழுந்தருளி யிருந்து அங்குண்டான வர்களையும் க்ருபை பண்ணி யருளி, பிற்றை நாள் திலத முலகுக்காய் நின்ற
திருவேங்கடத்தைச் சென்று வணங்கி, அநந்தரம் மொய்த்த சோலை மொய் பூந் தடந் தாழ்வரே (திருவாய் 3-3-10) என்றும் -தேனேய் பொழில் சூழ்) திருவேங்கடமாமலை (திருமொழி 11-9-2) என்றும்-அப்ராக்ருதமமே யஞ்ச ஸர்வ ரத்ந மயம் கிரிம், ஹிரண்மய மஹா ஸ்ருங்கம் பஞ்ச உபநிஷதாத் மகம்:” (பஞ்சோபநிஷ மயமாய் அப்ராக்ருதமாமய் அளவிடற்கு அரியதாய் ஸகல மணி மயமாய் பொன்
மயமான பெரிய சிகரத்தை யுடைத்தான திருமலையை என்கிறபடியே அப்ராக்ருத திவ்ய வபுஸ்ஸையுடைய திருமலை யாழ்வாரை யடைந்து வணங்கி, அப்பால் பரம பதத்துக்குப் படியொழுங்கு போலே யிருக்கிற திருமலையிலே *தம்பாதே நாத்யாரோ ஹதி (கெளஷீடக் 1-5) என்னும் ப்ரதிபத்தியுடன் ஏறி எழுந்தருளி காட்டு அழகிய சிங்கரையும் திருவடி தொழுது -தேனாறு பாயுத் திரு வேங்கடத்தி லுண்டான கானாறுகளையும் -கண்டு களித்து கொண்டு அவ் வருகே எழுந்தருளு கிறவர் விண்ணின் மீதி யன்றே வேங்கடத்திலுண்டான விலங்கல் குடுமிகளையும் மின் திகழ் குடுமிகளையும் கோல் தேன் பாய்ந்தொழுகும் குளிர் சோலை சூழ்ந்த வழகையும் கல் தேன் பாய்ந்தொழுகும் கமலச் சுளைகளையும் செப்பார் திண் வரையையும் ஸேவித்துக் கொண்டு அப்பாலே எழுந்தருளி
காட்டில் வேங்கடத்திலுண்டான காட்டையும் வைகுந்த நாட்டுக் கொப்பான வட வேங்கட நாட்டையுமநுபவித்து –மாலுகந்தவூரான ஊரருகே யெழுந்தருளி -நன் மணி வண்ணன் (நான்திரு, 47)
என்ற பாட்டின் படியே அங்குண்டான ‘ அபூர்வங்களை யெல்லாம் ஆஸ்சர்யத்துடனனே அநுபவித்து,-கண்ணன் விண்ணூரைத் தொழுது ஊரருகே, ஸேவித்துக் கொண்டு நிற்க அவ்வள வில் -வேங்கடத்தைப் பதியாக வாழுகிற கோயில் கேள்வி ஜீயர்களும் ஏகாங்கி ஸ்ரீ வைஷ்ணவர்களும் மற்றெல்லாரும் வந்தெதிர் கொண்டு ஸேவிக்க, அவர்களை –நிகரிலமரர் முனிக் கணங்கள் என்று ப்ரதிபத்தி பண்ணி யருளி அவர்களுடனே கூடத் திருவேங்கட நகரை ப்ரவேசித்து அவ் வருகே வைகுந்தன் திருவாசல், அவாவறச் சூழ்ந்தான் திருவாசல், என்கிற திரு வாசல்களையும் தண்டன் ஸமர்ப்பித்து ப்ரதஷிணமாக வெழுந்தருளி அங்கே அநந்தாழ்வான் கைங்கர்யமான ‘இராமானுசன்”’ என்கிற திரு நந்தவனத்தையும் மற்றுமுண்டான திருநந்தவனங்களையும் திருப் பூ மண்டபங்களையும் ஸேவித்து திருவுள்ளமுகந்தருளி, பின்பு திருக் கோனேரியிலே நீராடி-த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களையும் தரித்தருளி-மேலொரு நாள் மண் கோட்டுக் கொண்டான் மலை (மூன்றாம் -திரு-45) என்கிறபடியே-எறிதர வையம் முற்றும் ஏனத்துருவா யிடந்த ஷேத்ராதிபயான ஞானப் பிரானையும் ஸேவித்து ஊனேறு!செல்வத்தை (பெரு. திரு .4) அநுஸந்தித்து அங்குண்டான திர்யக் ஸ்தாவர ஜந்மங்களை ப்ரார்த்தியா நின்று கொண்டு கோனேரி வாழுங் கிருகு தொடக்கமான பஷி ஸங்கங்களையும் தம்பகலாய் நிற்கும் தவமுடையாரையும் அநுபவித்துக் கொண்டு, பெரிய திருக்கோபுரத்துக் கருகே தண்டன் ஸமர்ப்பித்து உள்ளே புகுந்து, நம் பெருமாள் எழுந்தருளி யிருந்த அழகிய மணவாளன் திரு மண்டபத்தையும் ஸேவித்தருளி
1-ஸ்ரீமதி மஹிதித்வரார சிஞ்சாம் காஞ்சந மயஞ்ச பலிபீடம் |
ஸ்தாந மதயாமுநேயம் சம்பக தரு ஸம்பதம் ப்ரதீ ஹாரம் ॥
விநதா தநய மஹாநஸ மணி மண்டபம் கநக மய விமாநவரம் |
ப்ருதநாபதி யதி துர்யெள நரஹரி மதந மத ஜாநகீ ஜாநிம் ॥
பெரிய திரு வாயிலிலே அந்தாணிப் புளிபையும் பொன் மபமான பலி பீடத்தையும் அதன் பின்னர் யமுனைத் துறைவர்’ என்கிற புஷ்ப மண்டபத்தையும் செண்பக வ்ருக்ஷ ஸம்பத்தை யுடைய செண்பகத் திரு வாசலையும் பெரிய திருவடி நாயனாரையும் திருமடைப் பள்ளி யையும் திருமாமணி மண்டபத்தையும், தங்கத்தால் சமைந்த ஆநந்த நிலய விமானத்தையும், சேனை முதல்வரையும், யதிராசனாரை யும், நரசிங்கப் பிரானையும் பின்னர் இராம பிரானையும் வணங்கக் கடவீராக.
2-அதபுநர நக மணி த்யுதி கவசித கமலா நிவாஸ புஜ மத்யம் |
கலயத கமல விலோசந மஞ்ஜந கிரிநிதி மநஞ்ஜநம் புருஷம் ॥
பின்னர் தோஷமற்ற மணிகளின் காந்தியால் வியாபிக்கப் பெற்றதாய்ப் பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமான திருமார்பை யுடையனாய் செந்தாமரையை யொத்த திருக் கண்களை யுடையனாய் அஞ்சன கிரி நிதியாய் ஹேய ப்ரதிபடனாய் பரம புருஷனான திருவேங்கடமுடையானை கண்ணாரக் கண்டு களிக்கக் கடவீர்கள்
3-ஸரணமய மித்யங்க்ரிம் நிர்திஸ்ய தக்ஷிண பாணிநா
கரகிஸலயம் ஸவ்யம் ஸவ்யோரு ஸீம்நி ஸமர்ப்பயந் |
மணி கண மஹோ மக்நே வக்ஷஸ் ஸ்தலெ தததிந்திராம்
பவதபிமத ஸ்ரீமாநஸ் மாகமஸ்து பரம்பதம்॥
இந்தத் திருவடிகளே உங்களுக்கு மோக்ஷோபாயம் என்று வலது திருக் கையால் காட்டிக்கொண்டு, தளிர் போன்ற இடது திருக் கையை இடது திருத் தொடை ப்ரதேசத்தில் வைத்திருப்பவராய், ரத்நங்களின் ஒளியில் மூழ்கின திரு மார்பில் பெரிய பிராட்டியாரைத் தரிக்குமவனாய் உங்களுக்கு ப்ரிய தமனுமான திருவேங்கடமுடையான் ஸ்ரீநிவாஸன் நமக்கு மேலான ப்ராப்ய ஸ்தானமாக ஆகக் கடவன்]
என்கிறபடியே திருவேங்கடமுடையானைத் திருவடி தொழுவதாக ஸேவா க்ரமத்தில் அடைவே அத்தாணிப் புளி, ஸ்ரீபலி பீடம், யமுனைத் துறைவனென்கிற திருப் பூ மண்டபம், செண்பகத் திருவாசல், பெரிய திருவடி, திருமடைப் பள்ளி, திருமாமணிமண்டபம், திவ்ய விமானம், முதலானவற்றையும் ஸேவித்தருளி, அநத்தரம் சேனை முதலியாரையும் திருவடி தொழுது -நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற் குன்றமும் என்றும்-இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் என்றும் இத்யாதிகளை அநு ஸந்தித்து எம்பெருமானாரையும் ஸேவித்து அவருடைய அநுமதியோடே புறப்பட்டருளி தூணாயதனூடரியாய் என்றநுஸந்தித் தருளி -திருவேங்கடத் தரியையும் ஸேவித்து, வென்று மாலை யிட்டான் திருமண்டபத்தே யெழுந்தருளி தாயே தந்தை என்று தொடங்கி -நாயேன் வந்தடைந்தேன் நல்கி யாளென்னைக் கொண்டருளே என்று தண்டன் சமர்ப்பித்து உள்ளே புக்கு, பின்பு-மிடைந்த ஏழ் மரங்களுமடங்க வெய்து வேங்கட மடைந்த மாலான சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளை யடைந்து, அப்பால் அவன் தாளிணைக் கீழ்ப் புகுங் காதலை யுடையராய்க் குலசேகரன் படி
யருகே சென்று -அகலகில்லேன் என்று பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே-அடிக்கீழமர்ந்து புகுந்து நின்று ஸேவித்தருளி, அநத்தரம் -செங்கமலக் கழலில் படியே,
திருமகள் மருவு மிருபதமலரு முழந்தாள்களுங் குறங்கும் தாங்கு
செக்கரம் மா முகில் போலத் திருவரைச் செம்பொனம்பரமும்
அருமை சேர் சீராவு மயனைத் தந்த தோருந்தியு மமுதமாருதர பந்தமும்
அலர் மேல் மங்கை யுறை திருமார்வமு மாரமும் பதக்க கன்னிரையும்
பெருவரை யனைய புய மொரு நான்கும் பிறங்கடலாழியுஞ் சங்கும்
பெறு திவமென்று காட்டிய கரமும் பிடித்ததோர் மருங்கினிற்கறமும்
ஒருமதி யெனவே சோதி சேர் முகமு முயர் திருவேங்கடத் துறையு
மொப்பிலா வப்பன் கருணை சேர் விழியு மென்னுளெலாம் நிறைந்து நின்றனவே
என்று பாதாதி கேசமாக அநுபவித்தருளி அலங்கல் துளப முடியையும் திருத்தியகோறம்பையும் சுற்றுமொளி வட்டஞ்சூழ்ந்து சோதி பரந்த கோளிழைவாள் முகத்தையும் அதில் தன் முகத்துச் சுட்டியையும், திரு நெற்றியில் சாத்தின முத்தின் திருநாமத்தையும் “வெண்ணெ யுண்டான் திருமூக்கு” என்று ப்ரத்யபிஜ்ஞை பண்ணலாம்படி புழுகிலே முழுகி யிருக்கிற கோல நீள் கொடி மூக்கையும் தாமரை கட் கனி வாயையும், வார் காதிலே சாத்தின இலகு மகர குண்டலங்களையும் உலகமுண்ட பெரு வாயாலே அண்டமுநாடுமடங்க விழுங்கிய கண்டத்தையும் அத் திருக் கழுத்தினில் காறையையும் -அலர் மேல் மங்கை யுறை மார்வையும், அதில் பவள வாய்ப் பூமகளும் பன் மணிப் பூணாரமுமான சேர்த்தியையும்,அத்தோடு சேர்த்த வெண் புரி நூலையும் வட வேங்கட வனுடைய மல்லார் தோள்களையும் அதிலே சாத்தின தண்டுமாய் விரை நாறு கண்ணியையும் திருக் கைகளிலே தரித்த வலம்புரி ஆழியையும் அவற்றிற்குப் பரபாகாவஹமான வண்ணமருள் கொளணி மேக வண்ணத்தையும், உய்ய வுலகு படைத்துண்ட மணிவயிற்றையும் அதில் திரு வுதர பந்தநத்தையும், அதுக்கநந்தரபாவியாய் உடையார் கனமணி யோடொண் மாதுளம்பூ இடை விரவிக் கோத்த வெழில் தெழ்கனோடும் பொன்ரை நாணொடு மாணிக்கக் கிண் கிணியையும் -பெருமானரையில் பீதக வண்ண வாடை என்று ப்ரணயினிகள் வாய் புலற்றும் படியான அந்தி போல் நிறத்தாடையையும் -பல்லி நுண் பற்றாகச் சாத்தின உடை வாளையும், புரிந்து மலரிடுறை புண்டரீகப்பாதமான பூவார் கழல்களையும் அதில் அதிர் கழல் சதங்கைகளையுமுடைய திருவேங்கடமுடையானை எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே ‘ என்கிறபடியே கேசாதிபாதாந்தமாக அநுபவித்தருளி ப்ரீதராய்த் திருப் பல்லாண்டு தொடங்கி அநுசந்தித்து, மங்களாசாஸனம் பண்ணி, பர்யாப்தி பிறவாமையாலே.
மங்களம் மாநுஷே லோகே வைகுண்டமதி திஷ்டதே | ஸேஷஸைல நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம் ॥-மானிட வுலகில் ஸ்ரீவைகுண்டமான திருமலையில் எழுந்தருளி யிருக்கிற திருவேங்கடவனுக்கு மங்களமுண்டாக வேணும்; என்று மங்களாசாஸநம் பண்ணியருளி.
ஸெளம்யோ பயந்த்ரு முநிநா மம தர்ஸி தெளதே |
ஸ்ரீ வேங்கடேஸ சரணெள சரணம் ப்ரபத்யே ॥
ஆசார்யரான ஸ்ரீ மணவாள மா முனிகளாலே அடியேனுக்குப் புகலாகக் காட்டி யருளப்பட்ட ஸ்ரீவேங்கடேச பாத கமலங்களைப் புகலாகப் பற்றுகிறேன் என்கிறபடியே எல்லார்க்கும்புகலாக அடிக்கீழம்ர்ந்துபுகுந்து அடியீர்வாழ்மின் என்று திருவடியைக் காட்டி யருள அவனும் மலை மேல் தான்’நின்று என் மனத்துளிருந்தான் என்கிறபடியே இவர் திருவுள்ளத்தைக் கணிஸித்துக்
கொண்டிருந்து இப்போது இவரைப் பெற்றவாறே ‘ஸ்ரீமத் ஸூந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிதே’ என்னும்படி. இவர் திருவுள்ளத்தைத் தனக்கு ஆவாஸ ஸ்தாநமாக விரும்ப, –எந்தாய்-வந்தாய்
(திருவாய் 2-6-9, திருமொழி 1-10-9) என்கிற பாட்டுக்களின் படியே இனி யெங்குப் போகின்றதே , நிகரில் புகழான வாத்ஸல்யாதி குணங்களுக்குத் தோற்று அதிலே ஈடுபட்டு, ஒழிவில்காலம்-என்கிறபடியே உத்தர-வாக்யத்தில் கைங்கர்ய ப்ரார்த்தனையையும் பண்ணி யருளா நிற்கிற வளவிலே, தீர்த்தம், ப்ரஸாதம், ஸ்ரீசடகோபன், பூவார் கழல்கள் முதலான வரிசை களெல்லாம் ப்ரஸாதிக்கப் பெற்று க்ருதார்த்தராய் புறப்பட்டருளி :கதி சந திவஸாநி தாம்நி தஸ்மிந் சுமல விலோசந மேந மீஷமாண;,’- இல
நாட்கள் செந்தாமரைக் கண்ணனான இவ் வெம்பெருமானை ஸேவித்துக் கொண்டு அவ் விடத்தில் எழுந்தருளி யிருத்தார் என் கிறபடியே அங்கே சிறிது நாளெழுத்தருளி யிருந்து அங்குண்டான
வர்களையும் அபிமானித்தருளி இது விண்ணோர் வெற்பாயிருக்கிறது என்றருளிச் செய்து அங்குள்ள வைபவங்கனை வைபவங்களை எல்லாம் ஸேவித்தருளிப் புறப்பட்ட வளவிலே அங்தள்ளார் ‘“இங்குத்தைக்குப் பரிவரா யிருப்பாரொருவரைக் கற்பித்தருள வேணும்” என்ன,எம்பெருமானார் ஜீயரைக் கற்பித்தருளினார்.
திருவேங்கடவனுடைய ஐஸ்வர்யங்களை ரஷித்து நிர்வஹிக்க பகவத் ராமாநுஜர் ஸ்ரீ ஸேநாபதி ஜீயர்- என்ற பட்டப் பெயருள்ள ஏகாங்கியை நியமித்ததாக கி அநந்தார்யர் அருளிச் செய்த வேங்கடாசல இதுஹாஸ மாலை கூறுகிறது. பின்னர்அவ் விராமாதுஜரே அந்த ஏகாங்கித்கு ஸந்யாஸாஸ்ரமம் தந்து “அப்பன் திருவேங்கட சடகோபஜீயர்” என்ற திரு நாமத்துடன் கோயில் கார்ய நிர்வாஹகராக நியமித்து அவருக்குத் துணையாக நாலு ஏகாங்கிகளை ஏற்படுத்தியாக இதிஹாஸ மாலை கூறுகிறது. இவருக்குக் ”கோயில் கேள்வி ஜீயர் என்ற பிருதும் உண்டு. பின்னர் பெரிய கேள்வி ஜீயர் என்றும் சிறிய கேள்வி ஜீயர் என்றும் இரண்டு ஜீயர் ஸ்வாமிகள் பெரியவருக்கு சிறியவர் இளவரசாக நியமனம் பெற்றதாகத் தெரிகிறது. மணவாளமா முனிகள் ”சிறிது காலம்” திருமலை-திருப்பதியில் தங்கி யிருந்ததாக யதீந்த்ர ப்ரவண ப்ரபாவமாகிற இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.-இந்த சிறிது காலம் ஒன்றிரண்டு ஆண்டுகள் இருக்கலாம் பிள்ளைலோகாசாரியர் காலத்துக்குப் பின்னர் ராமாநுஜார்ய திவ்யாஜ்ஞஜை என்று திருவரங்கம் திருவேங்கடம் முதலான இடங்களில் நடந்து வந்த கட்டுக்கோப்பு கலக கலாபாங்கள் காரணமாகக் குலைந்து, பின்னர் மா மாமுனிகள் காலத்தில் ராமாநுஜார்ய திவ்யாஜ்ஜஞை வரவர முநி திவ்யாஜ்ஞையாக நிலை நாட்டப்பட்டது. “கோயில் கேட்கும் எம்பெருமானார் ஜீயர் என்பவர் [கி பி] 1445ம் ஆண்டு திருப்பதி திருமலை கல்வெட்டில் பேசப்படுகிறார், 1370-1443-என்ற காலத்தில் வாழ்ந்திருந்த மணவாள மாமுனிகள் நியமித்த ஜீயர் இவரே என்பது தெளிவாகிறது. இவர் திருமங்கையாழ்வார் கோயிலுக்கு தரும கர்த்தரான படியால் இவர் சின்ன ஜீயரே
யாவர் என்று கல்வெட்டுச் சான்றுகளிலிருந்து ஊகிக்க முடிகிறது திருமலை திருப்பதி தேவஸ்தான வெளியீடான திருப்பதி, 1953] திருமலை யொழுகு”‘ என்ற திருமலை திருப்பதி ஐதிஹ்ய மாலையில்
-சகாப்தம் 379 விகாரி வருஷம் தை மாசம் அப்பன் சடகோப ஜீயரை பகவத் ராமாநுஜர் கோயில் கேள்வி ஜீயராகப் பட்டாபிஷேகம் செய்வித்ததாகவும் அவரும் 45 ஆண்டுகள் கைங்கர்யத்துக்குப் பின் ஐய வருஷத்தில் தமக்கு இளவரசாக அழகிய மணவாள ஜீயர் என்பவரை தியமித்ததாகவும் காணப் படுகிறது [பக்.123], இதே நூலில் (பக் 104) காண்பது: “முன்னாளில் ஸ்ரீராமா நுஜ தரிசந ப்ரவர்த்தகரான மணவாள மாமுனியானவர் திருப்பதிக் கெழுந்தருளித் தேசாதிபதியை ஆஸீர்வதித்து ஸ்தலத்திலே மதாந்தரஸ்தராலே உபத்ரவம் வராதபடிக்கு ஒரு உத்தமாஸ்ரமியை ஸ்தலாதிபதியாக்க வேணுமென்று சிந்தித்து, தம்முடைய சிஷ்டராய்,கோயிலில் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் ஸ்ரீபண்டாரத்துக்கு நிர்வாஹகராய் இருக்கிறாப் போலே திருமலைக்கு உத்தாரகராய் நிக்ரஹ அனுக்ரஹ ஸமர்த்தரான ஒரு ஜீயரைக் ”கோயில் கேள்வித் திருவேங்கட ஜீயர்” என்று திருநாமம் சாத்தி தேசாதிபதி அனுமதி கொண்டு அர்ச்சகர் முதலான ஸமஸ்த பரிகரங்களையும் ஸ்தல நிர்வாஹகரான ஆழ்வார் கோவிந்த ஜீயர் என்ற ஏகாங்கி ஸ்ரீவைஷ்ணவரையும் திருவேங்கட ஜீயர் அதீனமாக்கி இவர்களெல்லாருக்கும் இவர் சிஷகராயும் ரஷகராயும், திருவேங்சடச் செல்வத்துக்கு வர்த்தகராயும் தேசாதிபதிக்கு பகவத் தர்மோபதேஷ்டாவாயும் கல்பித்து, எம்பெருமானார் திருமேனி முத்ரையாக ஓரு முத்ரை மோதிரத்தைப் பண்ணி ஜீயரைத் தரிக்கச் சொல்லிக் கொடுத்து விஷ்வக்ஸேந முத்ரா ஸுசிதமாக எம்பெருமானார் நியமன ஸித்தமாய் ஏகாங்கி பரம்பரா ப்ராப்தமான கண்டா, கடாரி, ஹநுமத் த்வஜங்களையும் அவர் ‘வசம் பண்ணி, கைங்கர்ய யாத்ரா காலங்களிலே கண்டா நாத ஹநுமத் த்வஜ புரஸ் ஸராமாக ஸஞ்சாரம் பண்ணுமென்று நியமித்து: ஸ்ரீராமாநுஜபுரத்திலே ஜீயருக்கு ஒரு மடமும் ஸங்கல்பித்துக் கொடுத்து திருவேங்கட ஜீயர் ஜ்ஞாந ஸந்தான பரம்பராந்தர்பூதரான ஏகாங்கி ஸ்ரீவைஷ்ணவர்களில் தானே திருமலை ஸ்தானத்துக்கு தத் தத் காலங்களிலே உத்தமாஸ்ரமியாய் மடாதிபதியாய்த்
திருவேங்கட நாட்டுக்கும் திருவேங்கடச் செல்வத்துக்கும் கர்த்தாவாகவும் நியமித்துக் கோயிலுக்கு எழுந்தருளினார்.’ இதுவரை திருமலை யொழுகு நூலில் காண்பவை.
எம்பெருமானார் நியமித்த ஸ்தலாதிகாரி ஜீயருக்கு திருவடி [அனுமான் ] முத்ரையாக ஒரு முத்ராங்குளீயகத்தை தரிக்திருக்கும்படி எம்பெருமானார் நியமநம் [திருமலையொழுகு, பக்,
42] மணவாளமாமுனிகள் நியமித்த ஜீயருக்கு எம் பெருமனார் முத்ரையுள்ள அங்குளீயகம் என்று சொல்லி யுள்ளபடியால் இவர் எம்பெருமானார் ஜீயர் என்று அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இவரே சின்ன ஜீயர் என்றும் தெரிய வருகிறது.
–==-
ஜீயர் திருவாலி திருநகரியில் திருமங்கை யாழ்வரை லேவித்தது:-அநந்தரம் :
அஹி ராஜ ஸைலமபிதோ நிரந்தரம் ப்ருதநாஸதே நஸ விலோகயந் தத; |
அவருஹ்ய திவ்யநகரம் ரமாஸ்பதம் புஜகேஸயம் புநருபேத்யபூருஷம் ॥
அந்த மணவாளமா முனிகள் தாம் சிஷ்ய ஜந பரிவாரத்துடன் திருமலைக்கு நான்கு புறத்திலும் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டே அம் மலையினின்றும் இறங்கி திவ்ய நகரமான கீழத் திருப்பதியை அடைந்து மறுபடியும் பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமாய்த் திருவநந்தாழ்வான் மேல் பள்ளி கொண்டிருக்கிற பரம புருஷனான கோவிந்த ராஜனை ஸேவித்தார்.-என்கிறபடியே அங்கு
நின்றுமிறங்கி யெழுந்தருளி-ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும்
குளிரருவி வேங்கடத் தென் கோவிந்தன் குணம் பாடுவாராய் அநுபவித்துப் புறப்பட்டருளி, திருவெவ்வளூர், திருவல்லிக்கேணி முதலான திருப்பதிகளெங்கும் திருவடி தொழுது பெருமாள் கோயிலேற வெழுந்தருளி பேரருளாளரையும் திருவடி தொழுது, அங்கு நின்றும் அவரநுமதியுடனே புறப்பட்டருளி மண்ணில் பெரிய மதுராந்தகத்தேற எழுந்தருளி
மருமலர் கமழ் சோலை மதுரை மாநகர் வந்தெய்தி
அருள் பொழி பெரியநம்பி யன்றெதிராசராசற்கு
அரும் பொருள் வழங்கு மெங்களேரி காத்தருள்வார் கோயில்
திருமகிழடியிற் செல்வீர் தீ வினை தீருமாறே-என்று அங்கேற வெழுந்தருளி,-
இதுவோ கிளியாறிவ்வூரோ திரு மதுரை
இதுவோ திருமகிழுங் கோபுரமு- மிதுவோ
பெரியநம்பி தாமுகந்து பின்னு மெதிராசர்ச்குத்
துயமளித்த தூயப் பதி- என்று அங்கே தண்டன் ஸமர்ப்பித்து அத்யந்த ஹ்ருஷ்டராய் அற்றைக்கங்கே எழுந்தருளி யிருந்து
பிற்றை நாள் புறப்பட்டு திருச்சித்திர கூடத்தேற வெழுந்தருளி கோவிந்த ராஜரையும் திருவடிதொழுது- அநந்தரம் சோழ மண்டலத்திலுண்டான திருப்பதிகளைத் திருவடி தொழுவாராக மநோ ரதித்துக் கொண்டு புறப்பட்டருளி அப்படியே வழியிலுள்ள திவ்ய தேசங்களையும் மங்களாசாஸநம் செய்தருளி, பின்பு திருவாலி திருதகரி யேற வெழுந்தருளித் திருமங்கை யாழ்வாரைத் திருவடி தொழுது
உறைகழித்த வேலை (வாளை )யொத்த விழி மடந்தை மாதர் மேல்
உறைய (உருக )வைத்த மனமொழித்தவ் வுலகளந்த நம்பிமேல்
குறையை வைத்து மடலெடுத்த குறையலாளி திருமணங்
கொல்லை தன்னில் வழி பறித்த குற்றமற்ற-.செங்கையான்
மறையன் வைத்த (மறை யுரைத்த )மந்திரத்தை மாலுரைக்க வவன் முன்னே
மடி யொதுக்கி மன மொடுக்கி வாய் புதைத்தல் வொன்னலார்
கறை குளித்த வேலணைத்து நின்ற விந்த நிலைமை யென்
கண்ணை விட்டகன்றிடாது கலியம் ஆணையாணையே– என்றும்
அணைத்த வேலும்! தொழு கையும், அழுந்திய திரு நாமமும்
ஓமென்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,
பரந்த விழியும், இருண்ட குழலும், சுருண்ட வளையமும்,
வடித்த காதும், மலர்ந்த காதுகாப்பும், தாழ்ந்த செவியும்
செறிந்த கழுத்தும், அகன்ற மார்பும், திரண்ட தோளும்
நெளித்த முதுகும் குவிந்த இடையும், அல்லிக் கயிறும்
அழுந்திய சீராவும், தூக்கிய கருங்கோவையும்’
தெங்கலுந் தனி மாலையும்,சாத்திய திருத் தண்டையும்,
சதிரான வீரக் கழலும் குந்தியிட்ட கணைக் காலும்.
குளிர வைத்த திருவடி மலரும், மருவலர் தமுடல் துணிய
வாள் வீசும் பரகாலன் மங்கை மன்னரான வடிவே –என்றும்
ஐயனருள் வாழி செய்ய வடிவிணைகள் வாழியே
அந் துகிலும் சீராவுமணையுமரை வாழியே
மையிலகு வேலணைத்த வண்மை மிக வாழியே
மாறாமல் அஞ்சலி செய் மலர்க் கரங்கள் வாழியே
செங்யகலனுட னலங்கல் சேர் மார்பும் வாழியே
திண் புயமும் பணிர்ந்த திருக் கழுத்தும் வாழியே
மையல் செய்யு முக முறுவல் மலர்க் கண்கள் வாழியே
மன்னு முடித் தொப்பாரம் வலயமுடன் வாழியே–என்றும் ஈடுபட்டு,
வேலணைத்த மார்வும் விளங்கு திரு வெட்டெழுத்தை மாலுரைக்கத் தாழ்த்த வலச் செவியும்–காலணைத்த தண்டையும் வீரக் கழலும் தார்க் கலியன் வாண் முகமும் கண்டு களிக்கு மென் கண்.–என்று அவர் மந்த்ர லாபத்துக்கு நின்ற நிலையிலே மக்ந மநாவாய் அநுபவித்து மங்களாசாஸனஞ் செய்தருளி பரகாலர்க்கு பரம ப்ரீதி கரரான வயலாவி மணவாளரையும் ஸேவித்துப் புறப்பட்டுத் திருமணங் கொல்லை யேற வெழுந் தருளி
ஈதோ திருவரசு? ஈதோ!மணங்கொல்லை
ஈதோ எழிலாலி என்னுமூர்–ஈதோ தான்
வெட்டுங்கலியன் வேலை வெட்டி நெடுமால்
ஈட்டெழுத்தும் பறித்த விடம்!-என்று அவ்விடத்தையும் ஸேவித்துப் புறப்பட்டருளி,
நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்,
காணுமோ கண்ணபுரமென்று காட்டினாள்-என்கிறபடியே திருக் கண்ண புரத்திலே திருவுள்ளஞ் சென்று –இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு- என்கிறபடியே அதி த்வரையுடனே அங்கேற வெழுந்தருளி கருவரை போல் நின்றானையும் ஸர்வாங்க ஸுந்தரரான செளரி ராஜனையும் ஸேவித்தருளி கண்ணபுரத் தடியன் என்றதுவே நிரூபகமான திருமங்கை யாழ்வாரையும் அங்கே யேறி யருளப் பண்ணி, காலின் மணி கரை யலைக்கும் கணபுரத்தினின்றும் போந்து வாவித் தடஞ்சூழ் மணி முத்தாற்றின் நறையூர் நெடு மாலான நம்பியையும் நாய்ச்சியாரையும் ஸேவித்துப் புறப்பட்டு
செழு மா மணிகள் சேரும் திருக் குடந்தையிலே சேர்ந்து ஆராவமுதாழ்வாருடைய ஏரார் கோலத் திரு வுருவையும் திருவடி தொழுது, அங்கு நின்றும் புறப்பட்டருளி, திருமால் சென்று சேர்விடமான தென்திருப்பேரையில் சென்று திருப்பேர் நகரானையும் திருவடி தொழுது அங்கு நின்றும் புறப்பட்டருளி மாமலராள் புணர்ந்த பொன் மார்வன் பொருந்தும் பதிதொறும் புக்கு நிற்கும்-என்றும்,
திவ்யாநி தத்ர நகராணி திகந்தராளேர் தேவே நயாநி ஹரிணு விஷயீ க்ருதாநி
ஸத்யம் த்வ தீஷண ஸம்ர்த்த மஹோத்ஸ வாநி தங்யாநி தாநி ஜகதஸ் ஸமயம் த்வகாநி
அவ்விடத்தில் திங் மத்யத்தில் எந்த திவ்ய தேசங்கள் எம்பெருமானாலே ஆஸ்ரயிக்கப்பட்டனவோ, தேவரீருடைய கடாக்ஷத்தால் ஸம்பூர்ணமான விஷோத்ஸவங்களை யுடையனவாய். தந்யங்களான அந்த திவ்ய தேசங்கள் லோகங்களுடைய ஸகல பாபங்களையும் போக்கக் கடவன]என்றுஞ் சொல்லுகிறபடியே மற்றுமுண்டான திருப்பதிகளையும் மங்களாசாஸநம் பண்ணி யருளி, தையல் நல்லார் குழல் மாலையும் மற்றவர் தட முலைச் செய்ய சாந்தும் கலந்திழி புனல் சூழ் தென்னரங்கத்தே சென்று பெரிய பெருமாளையும் ”ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்தி கரீஷ்மே ஸீதமிவ ஹ்ரதம்” [இந்த நான் க்ரீஷ்ம காலத்தில் குளிர்ந்திருக்கிற மடுவில் போல் பர ப்ரஹ்மத்தில் மூழ்கினவனாகிறேன் ] என்றும்,பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்-என்றும் சொல்லுகிறபடியே விடாய் கெட படிந்து குடைந்தாடி யநுபவிந்து தீர்த்த ப்ரஸாதம் பெற்று ஹ்ருஷ்டராய்ப் புறப்பட்டு।
அப்பாச்சியா ரண்ணாவை பெருமாள் கோயிலுக்கு நியமித்தது
தமக் கிருப்பான திருவரங்கன் திருப்பதியிலே யெழுந்தருளி பெருமாளை ஸேவித்து,
சித்ராணி தீப்ததர ரத்ந விபூஷணாநி சத்ராணி சாமர யுகம் வ்யஜ நாஸநாநி |
தக்நா மலாஞ்சக யுதாநி ததெள ததைவ ரங்காதிபாய தயிதா ஸஹிதாய தஸ்மை ॥
[அந்த அழகிய மணவாளனுடைய திரு நாமத்துடனும் சங்கு சக்கரம் முதலிய அடையாளங்களுடனும் கூடி யிருக்கிற-ஆச்சர்யகரமாய் மிகவும் ப்ரகாசியா நின்ற ரத்ந மயமான திருவாபரணங்களையும் திரு வெண் கொற்றக் குடைகளையும் திரு வெண் சாமரங்களையும் திருவாலவட்டங்களையும் சித்ராஸநங்களையும், பெரிய பிராட்டியாருடன் கூடி யிருக்கிற அந்த அழகிய மணவாளன்பொருட்டு அப்போதே ஸமர்ப்பித்தார்.]’ என்னும்படி தாம் கொண்டெழுந்தருளின திருவாபரணங்கள், திரு வெண் கொற்றக்குடை. திரு வெண் சாமரம்,- திருவாலவட்டம், ரத்ந கம்பளம், திருமெத்தை முதலான வஸ்துக்களெல்லா வற்றையும் ஸமர்ப்பித்து மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு எழுந்தருளி யிருக்க-
பெருமாளும் மிகவுமுகந்தருளி, தீர்த்தம், ஸ்ரீசடகோபன் முதலான வரிசைகளையும் ப்ரஸாதித் தருளி உத்தம நம்பி பிள்ளையை கோயில் பரிகர மனைத்துக் கொத்துடான் வரிசையாக ஜீயரை மடத்திலே விட்டுவரவென்று அருள் பாடிட்டருள, அவரும் அப்படியே அஷ்டாதச வாத்யங்களுடனே மஹோத்ஸவமாக மடத்திலே எழுந்தருளப் பண்ணினார். நம் பெரிய ஜீயரும், மடத்திலே யெழுந்தருளி
யிருக்கிற அப்பிள்ளை, திருவாழி யாழ்வார் பிள்ள தொடக்கமான பெரியோர்களையும் மற்றும் கைங்கர்ய பரராய் எழுந்தருளி யிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களையுபம் க்ருபை பண்ணி யருளி திருமலை பெருமாள் கோயில் தொடக்கமான திவ்ய தேசங்களினின்றும்
கொண்டெழுந்தருளின தீர்த்த ப்ரஸாதங்களையும் விநியோகம்செய்தருளி;
அப்பாச்சியாரண்ணாவை அழைத்தருளி முன் நியமனப் படிக்கு பெருமாள் கோயிலுக்கு நியமித்தருள, அவரும் ‘இந்த ஸேவையையும் கோஷ்டியையும் விட்டு விடை கொள்ள வல்லேனோ?’” என்று
வ்யாகுலப்பட, ஜீயர் அவர் கையைப் பிடித்துக் கொண்டு ஸந்நிதியிலே யெழுந்தருளி தாம் அடி தொடங்கி ‘இராமானுசன்’* என்று திருநாமம் சாத்தி பஹுநாளாண்டதாய் ஜீர்ணமாயிருக்கிற தீர்த்தச் செம்பு ஸ்வாமி யுடைய ப்ரஸாதமென்று வானமாமலை ஜீயர் அணை கையவனாள் தமது திருமண் கூடையிலே வைத்து ஸேவித்துக் கொண்டிருச் கிறதைக் கொண்டு வரச் சொல்லி திருக்கையிலே வாங்கிக் கொண்டு: முன்னிருந்த இராமானுசன் என்கிற விலாஸமும், திருவாழி
திருச்சங்கு, திருமண் ஸ்ரீசூர்ணம் எல்லாம் பரிமுஷிதமாயும் ஜீர்ணமுமாயு மிருப்பதனாலே, தம்மைப் போலிருக்கிற இரண்டு விக்ரஹங்கள் இத்தை யிட்டு உண்டாக்க ‘உம்முடைய ஆசாரியருக்கு ஒரு விக்ரஹமும் உமக்கு ஒரு விக்ரஹமுமாகக் கொள்ளும்” என்று ஸாதித்தருளி, கோயிலாழ்வாரிலே எழுந்தருளி யிருக்கிற “என்னைத் தீ மனங் கெடுத்தார்” ஆட்கொண்டவில்லி ஜீயர் திருவாராதனமாய் எழுந்தருளி யிருந்தவராகையாலே, அவர் திருவடிகளுக்கு அந்தரங்கரான கந்தாடை யாண்டான் திருவம்சமாக அவருடைய கைங்கர்யம் போலே நீரும் கைங்கர்யம் பண்ணத் தக்கவராகையாலே உமக்கு இவர் திருவாரதனம் என்று உகந்து ஸாதித்தருளி கோஷ்டியிலே எழுந்தருளி
ஸ்ரீ தீர்த்த தேவ ராஜார்ய தநயாம்பேதி விஸ்ருதா |
தஸ்யாஸ் தநூஜோ வரத: காஞ்சீ நகர பூஷண: ॥
[திருமஞ்சனம் அப்பா என்ற தேவ ராஜார்யரின் குமராத்தியாய் ஆய்ச்சி–அம்பா என்று அறியப்பட்டவரின் குமாரரான வரதாசாரியர் (அப்பாச்சியாரண்ணா) காஞ்சீ நகரத்துக்கு ஆபரணமானவர்] என்று பேரருளாளரே ஆச்சியாருக்கக் குமாரராக அவதரித்தருளினார்?” என்று ப்ரீத் யதிசயத்தாலே அருளிச் செய்து பெருமாள் கோயிலிலே நித்ய வாஸம் பண்ணிக் கொண்டு ஸுகோத்தரராயிரும்’” என்று விடை ஸாதித்தருளினார்.
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-