எம்பெருமானின் விசேஷம் அவதாரங்களில் கர்த்தம பிரஜாபதியின் திருமடந்தையான தேவர் ஹூதிக்கு குமாரராய் அவதரித்தார் கபில மஹரிஷி. ஸாங்க்யம் என்கிற ஞான தர்ஸனத்தை தம் தாய்க்கு உபதேஸித்து, அவளுக்கு தேஹாத்ம விவேகத்தை உண்டாக்கினார் இவர். இவரின் கர்தம ஆஸ்ரமம் ஹிமய மலையின் அருகிலே உள்ளது. இவர்க்குப் பல ஸிஷ்யர்கள் உண்டு. அவர்களுள் ப்ரதான ஸிஷ்யர் ஆஸூரி மஹரிஷி. ஆஸூரி மஹரிஷியின் ஸிஷ்யர் பஞ்சயிகாசாரியார் என்று இவரின் இந்த வரலாற்றை கூறுகிறது மஹாபாரதம்; ஆஸூரி என்று வடமொழியில் கடுகுக்குப் பெயராகும். சாணக்யன் தகப்பனார் சணகர் (என்றால் கடலை), பூர்வ காலத்தில் இப்படி மலை, கொடி, தான்யம் இத்யாதிகளை பேர் இடும்படி வழக்கம் ஸ்ம்ருதி இதிஹாஸங்களில் காணலாம். ஆஸூரி முனி பாஞ்சராத்ர அநுஷ்டானம் அவலம்பித்து வந்தவர் என்றும் காணலாம். பாஞ்சராத்ரிகள் ஸிகை, யக்ஞோபவீதம், வைஷ்ணவாசரணம் உள்ளவர்கள். ஆகையால் ஆஸூரி வைஷ்ணவர்.
ஆஸுரி வம்மாத்திற்கு கோத்ரம் ஹாரீதம் (ஒரு பக்ஷி) இல்லை ஹரிதம் (என்றால் பச்சை). இரண்டையும் சேர்த்து பச்சைக் குருவி என்று சொல்லலாம். ஹாரீத கோத்ரத்துக்கு ப்ரவரர்கள் ஆங்கிரஸர், அம்பரீ ஷர், யெளவநாஸ்வர். ஆஸரி ஹாரீத கோத்ரம் ஆபஸ்தம்ப ஸூத்ரம், க்ருஷ்ண யஜுர் வேதம். ஆங்கிரஸ் என்கிற ப்ரஜாபதி சதுர்முகனின் மாநஸ புத்ரர்களில் ஒருவர். ப்ருகு, அங்கிரஸ், மரீசி, அத்ரி இவர்கள் ஒரு கூட்டம்; சித்ரஸிகண்டி என்று பேர். இவர்கள் ப்ராச்யர்கள்.
அம்பரீஷன் க்ஷத்ரியன். யெளவநாஸ்வன் அவரின் குமாரர் மாந்தாதா. இவர் இக்ஷவாகு ஸூர்ய வம்மத்தில் பெரிய ராஜாவாய் பூமியை ஆண்டவர். ஹாரீத கோத்ரம் க்ஷத்ரியம் கலந்த ப்ராம்ஹண வம்ஸம். ஹாரீதர் பூத புரியில் அநந்த தீர்த்தத்தில் காயத்ரீ யோகத்தால் ப்ராஹ்மண்யம் பெற்றார். இந்த விசாரத்தை பூத புரி மாஹாத்மியத்தில் காணலாம். இந்த வம்மத்தில் ஆஸூரி கேஸவாசாரியர் இந்த பூத புரிக்கு ராஜா, யதிராஜர் என்று கொண்டாடும்படியாய் ஸ்வாமி ராமாநுஜாசாரியர் இந்தக் குலத்தில் இவரது திருக் குமாரராய் அவதரித்தார். கருடவாஹந பண்டிதரின் திவ்ய ஸுரி சரித்திரத்தில் காணலாம். வடுகநம்பிகள் கூறியபடி எம்பெருமானாருக்கு இஷ்ட தெய்வம் காஞ்சி தேவப்பெருமாள் -இவர் தான் இவரின் நித்ய ஆராதனப் பெருமாள். எம்மான் பெம்மான் என்றால் பெருமாள் என்றும் காஞ்சி தேவராஜனைக் குறிக்கும். எம்பெருமானாருக்கு அநுஜரின் பேர் ஆஸுூரிப் பெருமாள் என்று ஸ்ரீராமாநுஜ திவ்ய சரிதத்தில் பிள்ளைலோகம் ஜீயர் விளக்கியுள்ளார். எம்பெருமானாருக்கு அவதரித்த யமளரின் பேர் எம்பெருமான் மற்றும் பெருமாள என்று நிஸ்சயித்தார். இருவர் குமாரரில் ஆஸூரிப் பெருமாள் என்று இரண்டாவது குமாரர் பின்பு ராமாநுஜரை ஆஸ்ரயித்து மேலே எம்பெருமானாரால் -74 ஸிம்ஹாஸநாதிபதிகளில் ஒருவராய் நியமிக்கப்பட்டு. கூரத்தாழ்வனிடம் அடிபணிந்து ஸகல ஸாஸ்த்ர ஸம்ப்ரதாயங்களையும் கற்றார் என்பது: இதே வம்ஸத்தில் மேலே அவதரித்த ஆஸுூரி தேவராஜர் என்கிற ஆயி ஜநந்யாசார்யரின் ஆயி அந்தாதி-ஆயி ப்ரபத்தியில் மாமுநிகளாலும் அவரின் பேரன் ஜீயர் நாயனாராலும் அநுக்ரஹிக்கப் பட்டிருக்கிறதைக் காணலாம் அதில் முதல் இரண்டு ஸ்லோகத்தால் ஆஸூரிப்பெருமாள் வைபவததைக் கூறியுள்ளார்.
ஆஸூரியிலவதரித்த இராமாநுசர்க் கிருவர் தாமாய்
கூசாத நிலையொன்னில் தாய்வயிற்றில் பிறந்தவராய்
மாசாத கூரேசர் குருவருடன் சேர்த்து வைக்க
ஆஸூரிப் பெருமாள் தாம் ஒருவராம் இராமாநுசர்க்கே (1)
இராமாநுசர்க்கே ஸரணாம் எழுபத்து நால்வர் தன்னுள்
இராப்பகலென்னாதே தன் குருவைச் சிந்தித்தேத்தி
இராகமனைத்தையும் தொலைத்து விட்டுப் பெருமாளென்னும்
இராகவனோடெம் பெருமாள் எதுகிரியைச் சென்றார்தாமே (3)
இவருக்கு ஆஸூரிப்பெருமாள். ஆஸுூரிதேவர், புண்டரீகாக்ஷர் என்றும் திருநாமம் உண்டு. இவர் எம்பெருமானாரிடம் ஆக்ஞை பெற்று திருநாராயணபுரத்துக்கு எழுந்தருளினார். இவரின் பெளத்ரர் ஆஸூரி ஸ்ரீநிவாஸாசாரியர், இவரின் பெளத்ரர் ஆஸூரி லக்ஷமணாசாரியர். இவரின் குமாரர் தான் ஆஸூரி தேவராஜர் என்னும் மேலே திருநாரணன் இவரை ஆயி ஜனனி என்று அபிமாநித்து, இவருக்கு ஆயி ஜநந்யாசாரியர் என்று பேர் ஆயிற்று. இவர் அருளிச் செய்த பல ப்ரபந்தங்கள் மற்றும் வ்யாக்யானங்களில் ஒன்று த்ராவிட ப்ரஹ்ம ஸூத்ரம் என்கிற ஆசார்ய ஹ்ருதயத்துக்கு முதல் வ்யாக்யானம். மேற்கொண்டு, இவர் ஆசார்ய ஹ்ருதயத்தின் ஸகல அர்த்தத்தையும் ஸ்வாமி மணவாளமாமுனிகளுக்கு ஸாதித்தார் என்று பிள்ளைலோகம் ஜீயரின் யதீந்த்ரப்ரவண ப்ராபவத்தில் காணலாம். எம்பெருமானாரின் புநராவதாரமான ஸ்வாமி மணவாள மாமுனிகளுக்கு ஆசார்யர் என்கிற விருதை அங்கீகரிக்காமல் அவரை குருவாக அடைய அவரிடம் ஸந்யாஸ தீக்ஷை பெற்று அவரை ஸந்யாஸதீக்ஷா குருவாய் அடைந்தார்.
ஐநநயாசார்யரது திருவம்மாத்தின் மூலபுருஷர் பகவத் ராமாநுஜருடைய விடப்பட்ட பத்நியின் கர்பத்தில் பிறந்த எம்மான், பெம்மான் என்ற இரட்டைக் குழந்தைகளில் இரண்டாம் பிள்ளையான பெம்மான் ஆஸுரிப்பெருமாள். ஆயிஸ்வாமிக்கு ஈடு வ்யாக்,யாந, ரஹஸ்யங்களுக்கு ஆசார்யர் மேல் நாடாச்சான் பிள்ளை என்று பெயர் பெற்ற தே,வராஜ நாலூராச்சான் பிள்ளை. ஆசார்யஹ்ருத,யம் என்ற திராவிட ப், ரஹ்ம ஸுத்ரத்திற்கு ஆசார்யர் கிடாம்பி நாயனார் வரத, வேங்கட ஸூரி என்ற திருமலை அய்யங்கார்; இவருக்குப் பெத்தார் என்று திருநாமம். இவர் ஆசார்ய ஹ்ருத,ய பரம்பரையில் இரண்டாம் பெத்தார். ஆயி ஸ்வாமிக்கு ஸந்யாஸ தீக்ஷா கு,ரு மணவாளமாமுனிகள். இவர் ‘கல்யாணி நாச்சியார்’ என்ற திருநாராயணபுரத் தாயாரின் திருத்தேரின் அம்ஸம், இவர் மணவாள மாமுனிகளிடம் ஸந்யாஸ ஆஸ்ரமத்தைப் பெற்று, விராகி யாகத் திருநாராயண புரத்தில் கல்யாணி புஷ்கரிணிக்கு வடக்கே திருக் குலத்துச் சேரியின் அருகே திருநந்தவநம் செய்து திருநாரணனுக்குக் கைங்கர்யம் செய்து வந்தார். இவ்வுலகில் 103 வருஷம் எழுந்தருளி யிருந்து திருநாராயண புரத்திலேயே திருநாடலங்கரித்தார். இவருடைய திருவரசு கல்யாணி புஷ்கரிணிக்கு அருகே உள்ளது; இன்றும் ஸேவிக்லாம்
ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்த, ஸகலா யேந த,ர்ஸிதா | ஸ்ரீ ஸாநு தாஸ மமலம் தேவ ராஜம் தமாஸ்ரயே ॥
ஆசார்ய ஹ்ருதயத்தின் அர்த்தங்கள் அனைத்தையும் அருளிச் செய்தவராய், ஸ்ரீஸாநுகாஸர், தேவராஜர் என்னும் திருநாமங்களை உடையவரான திருநாராயணபுரத்து ஆயை ஆஸ்ரயிக்கிறேன்
ஸ்ரீயாதவாத்ரி, திருநாராயணபுரம், அஷ்டோத்தர ஸத ஸ்தாந ஸாரம், தக்ஷிண பத்ரிகாஸ்ரமம், வைகுண்ட வர்த்தந ஷேத்ரம், இந்திராக்ஷேத்ரம், ஸம்யமி ஸார்வபெளம விஜயஸ்தாநம் என்னும் பலபல திருநாமங்களால் விளங்குகிற (மேலக்கோட்டை) திவ்ய க்ஷேத்ரத்தில், ஸேனை முதலியார் அவதரித்த ஓங்கு துலாப் பூராட நன்னாவில் உதித்து, எம்பெருமானார் தம் திருக் கைகளாலே திருவாராதநம் ஸமர்ப்பித்த திரு நாராயணப் பெருமாளுக்கும், ராம ப்ரியனும், யதிராஜ ஸம்பத்குமாரனுமான செல்வப் பிள்ளைக்கும் யஸோதா தேவியைப் போலப் பாலமுதும், ஸ்ரீமாலாகாரர், ஸ்ரீவிஷ்ணு சித்தர், ஆண்டாள் முதலானவர்களைப் போலப் புஷ்பமும் ஸமர்ப்பித்துக் கொண்டு புஷ்ப-க்ஷீர கைங்கர்ய நிரதராய், நம் தர்ஸநத்தை நிர்வஹித்துக் கொண்டு ஸத் ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகராய் விளங்கினவராய், ‘திருநாராயணபுரத்து ஆய்”, ‘திருத்தாழ்வரை தாஸர்: (ஸ்ரீஸாநு தாஸர்), “ஐநந்யாசார்யர்’, ‘மாத்ரு குரு’, ஆயி”, ‘தேவ ராஜர்: என்று ப்ரஸித்தி பெற்றவரே இம் மஹாசார்யர்
எம்பெருமானார் திருவவதரித்த வம்ஸம் ஹாரீத வம்ஸம். ‘ஆஸூரிப் பெருமாள்’, ‘ஆஸூரி தேவர்: என்று ப்ரஸித்தரான ஆஸூரி புண்டரீகாக்ஷர் இந்த ஹாரீத வம்ஸத்தில் அவதரித்து, எம்பெருமானாரை அடி பணிந்து போந்த மஹாநுபாவர். இவர் எழுபத்து நாலு ஸிம்ஹாஸநாதிபதிகளுள் ஒருவர். ”குடீங்க்ருத்வா தஸ்மிந் யதுகிரி தடே நித்ய வஸதி’” என்று எம்பெருமானார் பரமபதத்துக்கு எழுந்தருளுவதற்கு முன்பு நியமித்த ஆறு உபதேசங்களில் நான்காவதான ஸ்ரீயாதவ கிரியில் நித்ய வாஸத்தை ஆதரித்து இந்த ஆஸுூரிப் பெருமாள் திருநாராயண புரத்துக்கு எழுந்தருளி எம்பெருமானார் திருவுள்ளத்துக்கு உகப்பாக அங்கே நிலையாக நின்று பெருமாளுக்கு மங்களா ஸாஸந பரராய், தர்ஸந நிர்வாஹகராய் எழுந்தருளி இருந்தார். இவர் வம்ஸத்தில் அவதரித்தவர் ஐநநீயாசார்யர். இவர் திருத் தகப்பனார் திருநாமம் ஆஸூரி லக்ஷ்மணாசார்யர். இவர் திருக் குமாரர் ஆயி கேஸவாசார்யர். இந்த ஆயி ஸ்வாமி ஸர்வ ஸங்க பரித்யாகம் பண்ணி உத்துங்கமான ஸந்யாஸாஸ்ரமத்தை ஸ்வீகரித்தார்
நம்பிள்ளை ஸிஷ்யர்களில் ஒருவராய், அவரிடமிருந்து திருவாய்மொழி ஈட்டைப் பெற்றவர் ஈயுண்ணி மாதவர். இவருடைய ஸிஷ்ய பரம்பரையிலே ஈடு ஓராண் வழியாய் உபதேசிக்கப் பெற்று வந்தது. இவருடைய குமாரரும் -சிஷ்யருமான – ஈயுண்ணி பத்மநாபர். இவருடைய ஸிஷ்யர் நாலூர் பிள்ளை என்னும் ஸூ மந கோலேஸர். இவருடைய குமாரரும் -சிஷ்யருமான தேவராஜர் என்னும் நாலூராச்சான் பிள்ளை. இவருடைய ஸிஷ்யர்களில் முக்யமானவர் திருநாராயணபுரத்து ஆய் என்னும் ஐநந்யாசார்யர்
தேவராஜருக்கு ‘ஆய்’ என்று திருநாமம் வந்த வகையாவது – இவர் தினந்தோறும் பரிவுடன் செல்வப் பிள்ளைக்கு ரஸ விஸேஷம் குறையாமல் ஸுகோஷ்ணமாயும், ஏலா லவங்க கந ஸார குங்கும பரிமள யுக்தமாயும் பாலமுது காய்ச்சி அமுது செய்யப் பண்ணி வந்தார். ஒரு நாள் பாலமுது கொண்டு வரச் சிறிது தாழ்க்கவே செல்வப் பிள்ளை அது பொறாமல் ‘நம் ஆய் (தாய்) எங்கே? இன்னம் காணோமே?” என்று அர்ச்சக முகேந வினவின படியாலே இவருக்கு ‘ஆய்” என்றும், ‘ஐநந்யாசார்யர்’ என்றும் நிருநாமமுண்டாயிற்று என்பர்
பகவத பாகவதர்களுக்குத் தாய் போலே பரிவு காட்டி வந்தமையாலே ‘ஆய்’ என்றும், ‘ஜநநீ’ என்றும் சிறப்புப் பெயர் பெற்றவர் என்றும் கொள்ளலாம், தேவராஜர் என்பது இவருடைய இயற்பெயர்.திருநாராயண புரத்தில் அவதரித்தவராகையாலே ‘திருநாராயணபுரத்து ஆய்’ என்று அழைக்கப்படுவர். இவர் அருளிய ஸ்ரீவசந பூஷண வ்யாக்யாநமும், திருப்பாவை வ்யாக்யாநங்களான ஈராயிரப்படியும், நாலாயிரப்படியும் இப்போது உள்ளன. திருமாலைக்கு இவர் வ்யாக்யாந மிட்டருளினதாகப் பெரிய திருமுடி யடைவு கூறும். அது இப்போது கிடைப்பதில்லை
ஆயி ஸிஷ்யர் நல்லப்ப நாயன் என்பவரை பிள்ளை லோகம் ஜீயர் ”சச்சம்பிரதாயம்” (உப.ர. 58) என்ற பாட்டு வ்யாக்யாநத்தில் கூறியிருக்கிறார். ஆயி பெருமைகூறும் பின்வரும் பாடலையும் எடுத்துள்ளார்.
மாறில் முடும்பை உலகாரியன் வசனக் கலனும்
மாறன் கருத்தின் மணவாளன் வார்த்தையும் வல் விருளைச்
சீறும்படி திருத் தாழ்வரை தாதன் தெரிந்தெனக்குத்
தேறும்படி உரைத்தான் திருத்தாள்களென் சென்னியதே,
[வசனக் கலன் – வசந பூஷணம். மாறன் கருத்தின் மணவாளன் வார்த்தை – ஆசார்ய ஹ்ருதயம்] என்று பிள்ளை லோகம் ஜீயர் எடுத்துள்ள பாடல் இவரை ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ வசந பூஷண ப்ரவசநத்தில் ஈடுபட்டவராகக் காட்டுகிறது
மா முனிகளுக்கும் இவருக்கும் உள்ள ஸம்பந்தம் யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது –
(மாமுனிகள்) ஆசார்ய ஹ்ருதயத்திற்குப் பொருள் அருளிச் செய்யும் போது ”ஜ்ஞாந சதுர்த்திகளின் மேலே யிறே ஆநந்த ஷஷ்டிகளுக்குதயம்:: என்கிற வாக்யத்திற்கு அர்த்தம் ஸ்வ ரஸமாக ஆகாமையாலே இதற்கு அர்த்த மருளிச் செய்வார் ஆர்? என்று விசாரமுண்டாய், திருநாராயண புரத்தாயி பக்கலிலே இவ் வர்த்தம் கேட்க வேணுமென்னும் பேராசையோடே ஆழ்வாருக்கு விண்ணப்பம் செய்து அவரநுமதி கொண்டு திருநாராயண புரத்துக்குப் போவோம் என்று பறப்பட்டெழுந்தருளா நிற்க, ஆயியும் ஜீயருடைய ப்ரபாவம் கேட்டு இவரை ஸேவிப்பதாகத் திருநகரிக்கு ஆஸந்நமாக மார்க்க மத்யே வந்து ஸங்கதராக அவரைக் கண்டு, “எண்ணின பலம் எதிரிலே வரப் பெறுவதே!’ என்று பெரிய ப்ரீதியோடே தீர்க்க ப்ரணாமம் பண்ணி நிற்க, ஆயியும் தாளும் தடக்கையும் கூப்பி ஸேவிக்க, இருவரும் அந்யோந்யம் வந்தந பரராய் குசல ப்ரஸ்நம் பண்ணி நிற்க, இதைக் கண்டு ஜீயர் ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும் ‘பெரிய நம்பியும் எம்பெருமானாரும் எதிர்ப்பட்டாற் போலாயிற்று’ என்று மிகவும் உகந்தருளினார்கள். அநந்தரம் குன்ற மாடத் திருக்குருகூரேற எழுந்தருளி ஆயி பக்கலிலே ”ஆசார்ய ஹ்ருதயஸ் யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸரிதா? ! ஸ்ரீஸாநு தாஸ மமலம் தேவராஜம் தமாஸ்ரயே” என்று அந்த உபகார ஸ்ம்ருதிக்கு அவர் விஷயமாக ஒரு தனியன் அருளிச் செய்தருள; ஆயி தமக்கு அதில் அந்வயமற்றபடி தோற்ற,
பூதாரில் வந்துதித்த புண்ணியனோ? பூங்கமழும்
தாதாரு மகிழ் மார்பன் தானிவனோ? – தூதார
வந்த நெடுமாலோ? மணவாளமாமுனிவன் எந்தை யிவர் மூவரிலும் யார்-என்று அருளிச்செய்து, ஜீயரை அவதார விசேஷமென்று ஆதரித்துக் கொண்டு ஆழ்வாரையும் அநு திநம் ஸேவித்துக் கொண்டு ஆங்கே சில காலம் எழுந்தருளி யிருக்க; அதுவே ஹேதுவாக ‘ஆயி திருநாட்டுக்கு எழுந்தருளினார்’ என்று திருநாராயண புரத்திலுள்ள அஸூயாளுக்கள் திரு மாளிகையிலுள்ள ஸர்வஸ்வத்தையும் செல்வப் பிள்ளை அங்கிகரித்தருளும்படி ஸ்ரீபண்டாரத்தில் சேர்க்க, அக் காலத்திலே ஆயியும் மீண்டு திருநாராயண புரத்துக்கு எழுந்தருளி இச்செய்தியைக்கேட்டு ஹ்ருஷ்டராய், ”யஸ்யாநுக்ரஹமிச்சாமி தஸ்ய வித்தம் ஹராம் யஹம்”‘ [எவனுக்கு நான் அருள் புரிய விரும்புகிறேனோ அவனுடைய செல்வத்தை எடுத்துக் கொள்கிறேன்] என்னும் திருமுகப்படியே ப்ரத்யக்ஷமாகச் செல்வப்பிள்ளை இத்தைக் கைக் கொண்டருளின பின்பு நாம் இனி இரக்கத்துக்கு விஷயம் என்கிறது கிம் புநர் ந்யாய ஸித்தமிறே. ‘யஸ்யைதே தஸ்ய தத் தநம்: [மனைவி, புத்ரன், அடிமை ஆகியவர்களுடைய செல்வம் அவர்களுடைய யஜமாநனுக்கே உரியது] அன்றோ? என்று ஈடுபட்டு ஆநந்தாஸ்ருக்கள் பனிப்ப எழுந்தருளி, ஆசார்ய க்ருபால ப்தரான ஞானப் பிரானொருவரையுமே அர்த்தித்துப் பெற்று மற்றவைகளை யெல்லாம் அங்குத்தைக்கு ஸமர்ப்பித்து, யாதவ கிரி நிலயனுக்கு மால்ய ஸமர்ப்பணைக நிஷ்டராய், அங்கே ப்ரீதராய் எழுந்தருளியிருந்தார்
மாதவத்தோர் வாழ்த்தும் முடும்யை மணவாளன்
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார் – தீதற்ற
ஆசாரிய விதயம் பெற்றார் நம்மாயி யிவர்
தேசாரத் தாள்கள் நெஞ்சே! காண்-என்று ஆசார்ய ஹ்ருதய ஸம்ப்ரதாயத்தைத் தாம் (மாமுனிகள்) அநுஸந்தித்தருள, அப்படியே முதலிகளும்
மாதவத்தோன் மாறன் மனங்கூறும் மணவாளன்
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார் – நீதியினால்
ஆங்கவர் தாள் சேர் பெற்றார் ஆயி மணவாமுனி
பூங்கமலத் தாள்கள் நெஞ்சே! போற்று -என்று அநுஸந்தித்தார்கள்.
பூர்வாஷாட,அவதீர்ணாய துலாயாம் யது. பூ,த,ரே!
ஸ்ரீஸாநு தாஸ கு,ரவே தே,வராஜாய மங்களம்
(திருநாராயண புரத்தில் ஐப்பசிப் பூராடத்தில் அவதரித்தவராய்,-திருத்தாழ்வரை தாஸர் எனப்படும் தேவராஜருக்கு மங்களம்
ஸம்ஸ்ரிதாநாம் ஜநிச்சேதஹேது ஜ்ஞாநத முக்திதம் | யது புர்யாம் ஜநந் யாக்யம் லோகாநா முத்தமம் குரும் |
ஸம் ப்ரதா யார்த்தத நிகம் ஸெளம்ய ஜாமாத்ரு ஸூரயே | நிஸ்சிதார்த்த ப்ரதம் ஸ்ரீமஜ் ஜநநீ குருமாஸ்ரயே
ஆஸூரி சிங்கமாம் ஆதி குரு உலகுக்கே
மாசிலா இளையாழ்வார் மண்ணுலக மாழ்ந்தன்று
தூசரிக்கும் திருப்பாவைத் திருவருளைத் தெளிவித்துப்
பேசினார் பெம்மானைப் பின்போரை வாழ்த்திடவே
ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன் வாழியே
ஒண் மதியோன் எதிராசன் ஒண் சரணோன் வாழியே
பாங்குடனே ஞானப் பிரான் பணியுமவன் வாழியே
பஞ்சமத்தின் பொருள் தன்னைப் பரிந்துரைத்தோன் வாழியே
தேங்கு புகழ் தேவராசர் திருவருளோன் வாழியே
தென்மறையின் மனப் பொருளைத் தெளிவித்தான் வாழியே
தாங்கு திருக்கை திரிதண்டம் தரித்த வள்ளல் வாழியே
திருத்தாழ்வரை தாதர் திருவடிகள் வாழியே–
பஞ்சமம் -பஞ்சமோபாயமான ஆசார்யாபிமாதம்; தேவ ராசர் – நாலுராச்சான் பிள்ளை]
————————–
ஸ்ரீஸூரி ஸூக்தி-ப்ரஹ்ம ஸாஸ்திரம் – த,ராவிட ப்,ரஹ்ம ஸூத்ரம் -ஆசார்ய ஹ்ருத,யம்
[| திருநாராயணபுரம் அரையர் ஸ்ரீஉ வே ஸ்ரீராம சர்மா ஸ்வாமிகள் ]
இந்த கரந்தம்
த்,விக த்,வயமாகவும்,
அத்,யா ய சதுஷ்டயமாகவும்,
ஷோட,ச பாத, மாகவும்,
ஸப்த விம்சத் யதி,கரணமாகவும்
பிரிவுகளை உடையது.
(1) பூர்வ த்,விகம் – ஸூரி வைபவம் 1 முதல் 186 வது ஸூத்ரம் வரை (186)
(2) உத்தர த்,விகம் – ஸூரி ஸுக்த்தி வைபவம்– 187 முதல் 284 முடிய (48)
(1) ப்ரத, மோத், யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம் 1-38 (38)
(2) த்,விதீயோத், யாய: – க்,ரந்த, கர்த்ரு வைப,வம் 39 – 186 (148)
(3) த்ருத்யோத், யாயம் – க்,ரந்தாந்தர தார தம்ய வைப,வம் 187-207 (21)
(4) சதுர்த்தே ரத், யாயம் -கிரந்த, ப்ரதிபாத்,ய க்ரம வைப,வம் 208-284 (27)
பாத-அதிகரண க்ரம-சூர்ணைகள் -முதல் -முடிய -மொத்தம் –
1 -ஸாஸ்த்ராரம்ப, பாத. ப்ரத,ம 1-1 —–1-15
1 -ஸாஸ்த்ர ப்ரதாநாதி,கரணம்
(ஸாஸ்த்ராரப், யாதி, கரணம்) 1 – 15 —-15
2 தாத்பர்ய மூலபாத, – த்,விதீய 1 – 2 —16 –1
2 ஸாஸ்த்ர தாத்பர்ய ப்ரதாநாதி, கரணம்- 16—1
3 –விஷய பாத, – த்ருதீய 1-3— 17 – 18 —2
3 –ஸாஸ்த்ர தாத்பர்ய விஷய விஸேஷாதி, கரணம் —17 – 18 —2
4 –ஆசார பாத.; – சதூர்த்த- 1-4– 19 – 38— 20
4 ஸாஸ்த்ர தாத்பர்ய நிஷ்டாசாராதி கரணம் —19 – 38 –20-
5 –ஸூரி வைபவ பாத, – பஞ்சம– 3அதிகரணங்கள் இதில் – 1 —39 – 96— 58–
5– க்ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம் —39 – 74 –36-
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –19-
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம் 94–96—-3-
6 — ப,க்திபாதம் -ஷஷ்ட? 2-2 —97–121—-25-
8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம் 97 –117—-21 —
9-ஜ்ஞாந ப,க்த் யவஸ்தா ஸூக்தி அதிகரணம் –118-121—–3 —
7-ஒளபம்ய பாத,3 – ஸப்தம; 2 – 3 -இரண்டு அதிகரணங்கள் —122–155—34
10-ப,க,வந்நாயி கெளபம்யாத்,யதி, கரணம்–122–132– 11
11-அந்யாபதேஸ -ஸ்வாபதேஸ அதி கரணம் —-133–155– —23-
8–கு,ண பாத, – அஷ்டம: 2-4 —156–186—-31-
12 சதுர்தவ்த்யாதி, கரணம் 156 –158—-3–
13 திவ்ய தேஸ பா-அர்ச்சாவதார விஸேஷ கு,ணாதி கரணம்– 159 —186—–28–
9 –ஸ்ரீ ஸூக்தி வைப ,வ பாத, – நவம–3 – 1 –ஒரே அதிகரணம் 187–188—–2-
14 –பகவத் அநுபவ ப்ரீதி காரித ஸ்ரீ முக, ஸூக்தயதி கரணம்– 187 -188—2-
10 –ஸாம்ய பாத தஸம 3-2—189—-1–
13–பகவத் கீதாஸ்ரீ முக ஸூக்தி ஸாம்யாதி கரணம்–189—1–
11-விஸேஷ பாத : – ஏகாதஸ –3-3 –190–194—–5–
16–பகவத் கீதா ஸ்ரீமூக, ஸுத்தி விஸேஷாதி கரணம் 190–195—–5–
12 –ப்ரயோஜந பாத –த்வாதஸ –3 – 4 –195–207–13–
17–ஸ்ரீமுக, ஸூக்த் யுபதேஸ -பாத்ர-ரீதி-நீத்யர்த்த, விஸேஷா -லக்ஷண –காரண -ஸ பலத்வாதிகரணம் –195–207–13–
13 –உபதேஸ பாத :-த்ரயோதஸ — 4 – 1 –மூன்றுடன் அதிகரணங்கள் கொண்ட பாதம் — 208 –213—–6–
18– ரஹஸ்ய த்ரயார்த்த உபதேஸாதி, கரணம் —208–210—–3-
19 –அர்த்த, பஞ்சக ஸங்க்,ரஹ-விவரணாதி,கரணம் -211 -212—2
20-மங்க லாசரண-ஸத்வத் தத்த்வாதி கரணம்-213–1–
14 –விபாக, பாத. – சதுர்தஸ — 4 – 2 –இரண்டு அதிகரணங்கள்– 214 – 217—– 4–
21 ஸ்ரீ மூக,ஸுூக்தி தஸாவதார விபாகாதி, கரணம் –214 —-1–
22 ஸ்ரீமுக, ஸூக்தி ஸத தஸக பத்ய ப்ராதாந்ய-அபிப்ராய விசேஷ அதிகரணம்–215–217——3–
15 –குணாநுபவ பாத 3-பஞ்சதஸ — 4 – 3 –இரண்டு அதிகரணங்கள்– 218 – 228 ——11–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—–1-
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—–10–
16 –முக்திபாத–ஷோட்ஸ — 4-4 –மூன்று அதிகரணங்கள் -229 – 234 ———–6 –
25–ஆர்த்த ப்ரபந்ந ஸூரி ஸரீர வியோகா பாவ காரணாதி கரணம் –229—— 1
26– பர ப,க்த்யாதி, நிரூபண ஸ்தாநாதிகரணம் 230 – –233—–4–
27 –திவ்ய ப்ரபந்த, தாத்பர்ய ப,க,வத்-ப்ரஸாதாதி கரணம் –234 ———1
இதி ஸ்ரீராம நாம்நேஹ யாதவாத்ரி நிவாஸிநா
த்ராவிட ப்ரஹ்ம ஸூத்ராணாம் விபாகஸ் ஸம் ப்ரதர்ஸித
ஸ்வபாநுப பாத்ர ஸூத்தாஷ்ட மீஜ்யேஷ்டாபு,த, வாஸரே
யதாத் யயநமக்,ரே ப்ரகரணைஸ் ஸ்யாத் ப்ரபஞ்சநம்
————-
ஆசார்ய ஸ்வாந்த வக்தாரம் அபி ராமவராபிதம்!
ஸ்ரீக்ருஷ்ண தநயம் வந்தே, ஐகத் குருவராநுஜம் ॥
பணவாளரவணைப் பள்ளி பயில் பவர்க்கெவ்வுயிரும்
குண போகமென்று குருகைக் கதிபனுரைத்ததுய்ய
உணர்பாவினுட்பொருள் ஒன்றுமறியா உலகறிய
மணவாளன் மாறன் மனமூரைத்தான் வண்முடும்பை வந்தே.
மாதவத்தோன் மாறன் மனங்கூறும் மணவாளன்
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார் – நீதியினா
லாங்கவர் தாள் சேர் பெற்றார் ஆயி மணவாளமுனி
பூங்கமலத் தாள்கள் நெஞ்சே போற்று
ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸிதா: !
ஸ்ரீஸாநு தாஸ மமலம் தே,வராஜம் தமாஸ்ரயே ॥
ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரன் ““அசித,விஸேஷிதாந் ப்ரளய ஸீமநி” (ஸ்ரீர. ஸ்தவ- 2 -41) என்று சொல்லுகிறபடியே கரண களேப ரங்களை இழந்து அசித் அவிஸேஷிதமாய், அத ஏவ போக, மோக்ஷ ஸூந்யமாய்க் கிடக்கிற சேதந வர்க்கத்தை, இவற்றின் பக்கல் தனக்குண்டான ஸ்வாபாவிக ஸம்பந்தமே ஹேதுவாக “ததைக்ஷத’” (தை. ஆ. 6) என்கிறபடியே பார்த்தருளி, ‘ஸூரிகளுடைய அநுபவத்துக்கு இட்டுப் பிறந்த இச் சேதநர் இவ் வநுபவத்தை இழந்து இங்ஙனே க்லேஸிக்க வொண்ணாது” என்று ‘“கரண களேபரைர் கடயிதும் தயமாந மநா: ‘ (ஸ்ரீர. ஸ்தவ- 2 – 41) என்கிறபடியே தயமாந மநவாய்க் கொண்டு கரண களேபர ப்ரதாநம் பண்ணுவதாக “‘பஹு ஸ்யாம்”’ (தை, ஆ. 6) என்று ஸங்கல்பித்து “*தத் ஸ்ருஷ்ட்வா’” (தை. ஆ. 6) என்சிறபடியே யதா ஸங்கல்பம் இவர்களுக்குக் கரண களேபரங்களைக் கொடுத்து, அநந்தரம், “‘ததநுப்ரவிய்ய ” என்கிறபடியே அநு ப்ரவேயித்து வஸ்துத்வ நாம பாக்த்வங்களை உண்டாக்கி, “அந்த: ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா” என்கிறபடியே ஜ்ஞாந விகாஸத்தையும், ப்ரவருத்தி நிவ்ருத்தி யோக்,யதையையும் பண்ணிக் கொடுத்து இந்த ஜ்ஞாந கார்யமான தயாஜ்யோபாதே,ய விவேகத்துக்குப் பரிகரமாக ““மாநம் ப்ரதீபமிவ காருணிகோ ததாதி” (ஸ்ரீர, ஸ்தவே 2 – 1) என்கிறபடியே வேத ப்ரதாநத்தைப் பண்ணி, அநந்தரம் மந்வாதிகளுக்கு அந்தர்யாமியாய் தின்று சேதநருடைய விஸிஷ்ட வேஷ விஷயமான ஸாஸ்த்ரத்தை வெளியிட்டருளியும், அந்த ஸாஸ்த்ர ஜந்ய ஜ்ஞாநம் சிரகால ஸாத்,யமுமாய், அதிக்ருதாதி,காரமுமாய், அநேக யோக்யதா ஸாபேக்ஷமுமா யிருக்கையாலே துஷ்கரமுமாயிருக்கும் என்று, ஏவமாதி,தோஷ ரஹிதமுமாய், நிஷ்க்ருஷ்ட வேஷ விஷயமான திருவஷ்டாக்ஷர ப்,ரஹ்மவித்யைத் தானே உபதேஸித்த விடத்திலும் இதில் இழிவாரற்ற படியாலே ஓலைப் புறத்திலே செல்லாத ராஜ்யத்தை எடுத்து விட்டுச் செலுத்திக் கொள்ளும் ராஜாக்களைப் போலே ““அஜாயமாந:”’ (யஜு. ஆர. பீ – 17) என்று சொல்லப்படுகிற தானே ஸாது, பரித்ராணார்த்தமாக வந்து அவதரித்துப் போருகிற அளவிலும், இவை ஒன்றிலும் அர்த்த,க்ரியாகார்யமாகா திருக்கிற படியாலே, ‘விஸஜாதீயரான நம்மால் ஒன்றாலும் இவர்களைத் திருத்த வொண்ணாது. இனிப் பார்வை காட்டி ம்ரூகம் பிடிப்பாரைப் போலே ஸஜாதீயரைக் கொண்டே கார்யம் கொள்ளக் கடவோம்” என்று அறுதியிட்டு ““ஸுஹ்ருத.ம் ஸர்வ பூ,தாநாம்’” (கீதை 5 – 29) என்கிறபடியே ஸர்வ பூ,த ஸூஹ்ருத்தாகையாலே தன்னுடைய நிர்ஹேதுகமான ப்ரஸாதத்தாலே எங்கும் பார்த்து இலக்குக் காணாதிருக்கிற அளவிலே, அந்தப் பார்வை தானே தாஷிண்யமானவளவிலே, ““மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து”‘ (திருவாய். 2 – 6 – 8) என்கிறபடியே ஸம்ஸரிக்கிற ஆழ்வார் மேலே நிர்ஹேதுகமாகப்பட அது தானே “மா நிஷாத, ப்ரதிஷ்டாம் த்வமக,மஸ் ஸாஸ்வதீஸ் ஸமா : । யத் க்ரெளஞ்ச மிதுநாதே கமவதீ,! காம மோஹிதம்”’ (ரா. பா – 2 – 15) என்கிறபடியே ஸோகம் ஸ்லோகமாய் அவதரித்தாப் போலே ஸர்வ லக்ஷணோபேதமான ப்ரப,ந்த,மாய்த் தலைக் கட்டிற்று–
அது தானும் த்ராவிட வேதமான படியாலே பலவான அர்த்தங்களை உடைத்தாய், பரந்திருக்கையாலே இதில் தாத்பர்யம் எல்லார்க்கும் ப்ரதிபத்தி பண்ணப் போகாதென்று பார்த்து, இதில் அர்த்த, விஸேஷங்களையும், இவற்றில் இவ்வாழ்வார்க்குத் திருவுள்ளக் கருத்து இன்னபடிப் பட்டிருக்குமென்று, இவ்வாசார்ய ருசி பரிக்ருஹீதமான அர்த்தமே எல்லார்க்கும் தஞ்சம் என்னுமிடத்தையும், இவர் தம்முடைய பரம க்ருபையாலே-ஆசார்ய பரம்பரா ப்ராப்தமான அர்த்த விஸேஷங்களை எல்லார்க்கும் ப்ரதிபத்தி யோக்யமாம்படி ஸங்க்ரஹேண இவ்வாசார்ய ஹ்ருதய ப்ரபந்த முகத்தாலே அருளிச் செய்கிறார்–
இதில் முதல் சூர்ணையாலே பரம காருணிகனான ஸர்வேஸ்வரன் “*தத் ஸ்ருஷ்ட்வா” என்கிறபடியே ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணி ஸ்ருஷ்ட்யநந்தரம் அஜ்ஞாந அந்தகாரா வ்ருதரான சேதநர் ஜ்ஞாந ப்ரகாஸத்தை உடையராய் அஜ்ஞாநம் நீங்கி, வேதாந்த வேத்யனாய், நித்யனாய், ஸ்வயம் ப்ரகாஸனாய் இருந்துள்ள தன்னைக் கண்டு ஸாராஸார விவேகம் பண்ணுகைக்கு ஸகல ஸாஸ்த்ர ஸங்க்,ரஹமாய், ஸகல ஸப்தங்களும் தன்னுடைய கார்யமாகையாலே தான் காரணமாய், ஸகலார்த்த,ப்ரகாஸகமான அகாரத்தில் நின்றும் விஸ்த்ருதமான ஸாஸ்த்ரங்களைத் தன் க்ருபையாலே வெளியிட்டருளினான் என்கிறார்
———–
த்,ராவிட ஆம்நாய ஹ்ருத.யம் கு,ருபர்வ க்ரமாக,தம் ।
ரம்ய ஜாமாத்ரு தே,வேந தர்ஸிதம் க்ருஷ்ண ஸூநுதா
——
சூர்ணிகை 1..
காருணிகனான சர்வேஸ்வரன் –அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி-
பிறங்கு இருள் நீங்கிமேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு-நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை நீர்மையினால் அருள் செய்தான்–
காருணிகனான சர்வேஸ்வரன் –க்ருபா விஸிஷ்ட ஸ்வதந்த்ரன் என்றபடி
சர்வேஸ்வரன்–என்று ஈஸ ஈஸி தவ்ய ஸம்ப,ந்த,ம் சொல்லுகிறது.
இத்தால் ஸம்பந்தமே ப்ரதாநம் என்றபடி. ஸம்பந்த முள்ள விஷயத்திலே கிருபையுமாகப் பெற்றது என்கிறார். ஸ்வாதந்தர்ய விஸிஷ்டமான கிருபை என்று கிருபைக்கு ஸ்வாதந்தர்யம் உபயுக்தம் என்பாருமுண்டு. அத்தை வ்யாவர்த்திக்கிறது
அறிவிலா மனிசர் -அறிவிலா மனிசர்’ (திருமாலை – 13) என்கிறபடியே அஜ்ஞாந அந்த காரத்தாலே ஆவ்ருதரான சேதநர் –
உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி) ”உய்த்துணர் வென்னும் ஒளி கொள் விளக்கேற்றி”’ (மூ. திரு. 94) என்றும், ““ஞானச் சுடர் விளக்கேற்றினேன்” (இர, திரு, 1) என்றும் சொல்லுகிறபடியே உஜ்ஜிவந கரமுமாய், ஸ விபூ,திகனான ஸர்வேஸ்வரனை விஷயமாக உடைத்தாய், (பரஸ்மை) ஸ்வயம் ப்ரகாஸமுமாய், ஸ்கலார்த்த,ப்ரகாஸாகமுமான ஜ்ஞாந தீ,பத்தை உடையராய்
பிறங்கு இருள் நீங்கி-) ‘“பிறங்கிருள் நிறங்கெட”” (திரு மொழி 5-7 – 3) என்றும், ““பின்னிவ்வுலகினில் பேரிருள் நீங்க”” (பெரியாழ் . திரு. 1 – 9 -10) என்றும் சொல்லுகிறபடியே மிகுந்த அஜ்ஞாநம் போய்
மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு) ““வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கு!” (பெரியா. திரு-4-3 – 11) என்றும், “நந்தா விளக்கு” (திருமொழி 3 – 8-1) ”மிக்க ஞான மூர்த்தியாய வேத வீளக்கினை” (திருவாய். 4 – 7 – 10) என்றும் வேதாந்தங்களியே ஸர்வ ஸ்மாத் பரனாக ப்ரகாஸியா நிற்பானுமாய், நித்யனுமாய், வேதத்தாலே ப்ரகாஸ ஸ்வரூபனாக ப்ரதிபாத்யனுமா யிருந்துள்ள தன்னை, “என் தக்க ஞானக் கண்களாலே கண்டு”” (திருவாய்-4 -7. 10) என்கிறபடியே ஜஞாந த்,வாரா ஸாக்ஷாத்கரித்து,
நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு–) ‘“இவை யன்றே நல்ல இவை யன்றே தீய இவையன்றிவை அறிவனேலும்”’ (பெரிய திருவ. 3) என்கிறபடியே ஸாராஸார விவேகம் பண்ணுகைக்கு. அதாவது – ப,க,வத் விஷயம் நன்று, ஸம்ஸாரம் தீது – என்று அறிகைக்காக; ப,க.வத், விஷயத்தைக் கண்ட பின்பு ஸாராஸார விவேகம் பண்ணுகையாவது என் என்னில் – ப,க,வத், விஷயத்தில் வைலக்ஷண்யம் கண்ட பின்பிறே ஸம்ஸாரம் அவிலக்ஷணம் என்று அறியலாவது
மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை–மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை ” (திருமொழி -8-9-4-), துளக்கமில் விளக்கு (திருச்சந்த-4) என்று ஸகல வேத ஸங்க்ரஹ்மாய், நித்யமாய், ஸகலார்த்த, ப்ரகாஸ கமான அகாரத்தில் நின்றும் விஸ்த்ருதமான, ‘“மாநம் பரதீபமிவ காருணிகோ ததாதி” (ஸ்ரீ, ர ஸ்தவ 2 – 1) என்றும், ‘“பன்னு கலை நால் வேதப் பொருளை’ (திருமொழி 7 – 8 – 2) என்றும், ”கலைகளும் வேதமும் நீதி நூலும்”’ (திருமொழி 2 – 8 – 5) என்றும் சொல்லப்படுவதாய், த்யாஜ்யோபாதே,யார்த்த,ப்ரகாஸகமான ஸாஸ்த்ரங்களை
நீர்மையினால் அருள் செய்தான் -ஸர்வேஸ்வரன் தன் க்ருபையாலே ஸாஸ்த்ர ப்ரதாநம் பண்ணி யருளினான் என்கிறார்
*மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கு ” என்று வேதத்தையும், அகாரத்தையும் ஸர்வேஸ்வரனோடே ஸமாநாதி,கரிக்கைக்கடி ““வேதைஸ் ச ஸர்வை ரஹமேவ வேத்ய!”’ (கீ. 15 – 15) என்றும், “’ஸமஸ்த ஸப்த, முலத்வாத, காரஸ்ய ஸ்வ பாவத: । ஸ்மஸ்த வாச்ய முலத்வாத், ப்,ரஹ்மணோபி ஸ்வபாவத: ॥ வாச்ய வாசக ஸம்ப,ந்தஸ் தயோரர்த்தாத் ப்ரதீயதே”” (வாமந பு.) என்று ப்ரதிபாத்,ய ப்ரதிபாத,க பாவத்தாலும், காரணத்வ வ்யாபகத்வாதி,களான அர்த்த, ஸாம்யத்தாலே தோற்றின வாச்ய வாசக ஸம்பந்தத்தாலும். ““அக்ஷராணாமகாரோஸ்மி” (கீ. 4) என்றானிறே.
ஆக இத்தால் “ஹர்த்தும் தமஸ் ஸத.,ஸதீ ச விவேக்துமீஸோ மாநம் ப்ரதீ,பமிவ காருணிகோ ததாதி” (ர.ஸ்தவே -2-1) என்கிறபடியே ஸம்ஸாரிகள் அஜ்ஞாந நிவருத்தி பூர்வகமாக ஜ்ஞாந ப்ரகாநத்தை உடையராய் ஸாராஸார விவேகம்பண்ணி உஜ்ஜீவிக்கைக்காக ஸாஸ்த்ர ப்ரதாநம் பண்ணினதுக்கடி நிர்ஹேதுக க்ருபை என்றதாய்த்து-
- விவேக பலம் வீடு பற்று.
(விவேக பலம்) இப்படி இவன் கொடுத்த ஸாஸ்த்ர ஜந்ய ஜ்ஞாதத்தாலே ஸாராஸார விவேகம் பண்ணினதுக்கு பலம் என்னென்னில் ;
(வீடு பேறு) விடுகையும் பற்றுகையும்; இவை இரண்டையும். “*வீடுமின் முற்றவும்”” (திருவாய். 1 – 2 – 1) என்றும், “அற்றிறை பற்றே”’ (திருவாய். 1 – 2-5) என்றும் சொல்லக் கடவதிறே.
3-த்யாஜ்ய உபாதேயங்கள் ஸுக, துக்க,ங்கள்.
இனி த்யாஜ்யோபாதே.யங்கள் எவை என்னில் ; (த்யாஜ்யோபாதே,யங்கள் ஸுக, துக்க,ங்கள்) என்கிறார். “ஸுகீ, பவேயம், துக்கீ, மா பூ,வம்” என்று ஸர்வர்க்கும் துக்கம்-த்யாஜ்யமாய், ஸுக,ம் உபாதே,யமாயிறே இருப்பது.
4-இவற்றுக்கெல்லை இன்பு துன்பளி பன் மா மாயத் தழுந்துகையும், களிப்பும் கவர்வு மற்றுப் பேரின்பத் தின்புறுகையும்
இந்த ஸுக துக்கங்களுக்கு எல்லை எவை என்னில் (இன்பு துன்பளி பன் மா மாயத்தழுந்துகையும், களிப்பும் கவர்வு மற்றுப் பேரின்பத் தின்புறுகையும்)
(இன்பு துன்பளி) துன்பத்தோடே கூடின இன்பத்தைத் தருமதாய் இருக்கை.
இதுக்கு ப்ரமாணம் “அத்யந்தஸ்திமி தாங்காநாம் வ்யாயாமேந ஸுகைஷீணாம் ப்,ராந்தி ஜ்ஞாநவதாம் பும்ஸாம் ப்ரஹாரோபி ஸுகாயதே’” என்று திமிர்வாதம் பற்றின ஸரீரத்தை யுடையவர்களாய், வ்யாயாமத்தினாலே ஸுகத்திலே ஆசை யுடையவர்களுக்கு ஸரீரத்திலே குத்த, ப் ராந்தி ஜ்ஞாநத்தாலே அது ஸுகமாகிறாப் போலேயிறே.
இன்புதுன்பளி பன்மா மாயத் தமுந்துகையாவது– ‘“ஓ ஓ உலகினதியல்வே ” (திருவாசிரியம் 6) என்கிற பாட்டில் சொல்லுகிறபடியே பர ஹிம்ஸாதி, ஸாத,ந முக,த்தாலே க்ஷத்ர தேவதா ஸமாஸ்ரயணம் பண்ணி, தத் ப,லமாய் துக்க,மிஸ்ரமான க்ஷுத்ர ஸுகங்களை அநுபவிக்கைக் கீடான தேவாதி ஸரீரங்களிலே அஹமபி,மாநம் பண்ணி ஸம்ஸரிக்கை.
களிப்பும் கவர்வுமற்றுப் பேரின்பத் தின்புறுகையாவது-– “களிப்பும் கவர்வுமற்று” (திருவாய். 2 – 3 – 10) என்கிற பாட்டில் சொல்லுகிறபடியே ப்ராக்ருத பதார்த்த,ங்களினுடைய லாபா லாபங்களாலே வருகிற ஸோக ஹர்ஷங்கள் போய், ஷட்,பாவ விகாராஸ்பதமான ஸ்தூ,ல ஸூஷ்ம ரூபமான ப்ரக்ருதி ஸம்பந்த முமற்று, ”பேரின்ப வெள்ளத்தே”’ (திருவாய். 7 – 2- 11) என்று சொல்லுகிற நிரதிஸய ஆநந்த, மயமான தேஸ விஸேஷத்திலே போய், அப்ராக்ருத விக், ரஹ பரிக்,ரஹம் பண்ணி, தி,வ்யாஸ்தாந மண்டபத்திலே நிரதிஸய ஆநந்த., மக்நரான நித்ய ஸூரிகளோடே “ ௬ழி பட்டோடும் சுடர்ச்சோதி வெள்ளத் தின்புற்று (திருவாய். 8 10 – 5) என்கிறபடியே ப.கவதநுபவம் பண்ணி, ஆநந்த நிர்பரராய் இருக்கையும், அந்த ஸாஸ்தர ஜந்ய ஜ்ஞாநத்தாலே பிறந்த விவேகத்துக்கு ப்ரயோஜநம் த்யாக, ஸ்வீகாரங்களென்றும், த்யஜிக்கைக்கும் ஸ்வீகரிக்கைக்கும் ஹேது ஸுக துக்கங்களாகையாலே என்றும், இவை இரண்டுக்கும் எல்லை ஸம்ஸார ஸம்பந்தமும், பரமபதத்திலே போய் ஆநந்த நிர்பரரா யிருக்கையும் என்றதாய்த்து
5-அநந்த க்லேச நிரதிசய ஆனந்த ஹேது
மறந்தேன் அறியகிலாத உணர்விலேன் ஏணிலேன் அயர்த்து என்றும்
உய்யும் வகை நின்ற ஒன்றை நன்கு அறிந்தனன் உணர்வினுள்ளே ஆம் பரிசு என்றும்
சொல்லுகிற ஞாதவ்ய பஞ்சக ஞான -அஞ்ஞானங்கள் –
அநந்த க்லேச நிரதிசய ஆனந்த ஹேது--,) ”ஸம்ஸார ஸாக,ரம் கோரம் அநத்த கலேஸ பாஜநம்” (ஜித. 1) என்கிறபடியே அநந்த துக்காவஹமான ஸம்ஸாரத்துக்கும், நிரஸ்தாதிஸயாஹ்லாத, ஸூக, பாவைக லக்ஷணா பேஷஜம் பகவத ப்ராப்தி ரேகோந் தாத்யந்திகீ மதா” (வி.பு. 6 – 5 -59) என்கிறபடியே நிரதிஸய ஆநந்தா வஹமான மோஷத்துக்கும் ஹேது என் என்னில் மறந்தேன் -என்று தொடங்கி ”ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஸ் ச ப்ரத்யகாத்மந:। ப்ராப்த் யுபாயம் ப,லம் ப்ராப்தே! ததா ப்ராப்தி விரோதி, ச ” (வ்ருத்த,ஹாரீத, 8) என்று இத்யாதிகளில் சொல்லுகிற அர்த்த, பஞ்சக ஜ்ஞாநமும், தத் விஷயமான அஜ்ஞாநமும் என்கிறார் மேல். “மறந்தேனுன்னை முன்னம்” (திருமொழி -6- 2 – 2) என்கையாலே பர விஷயமான அஜ்ஞாநமும்
அறியகிலாத — “யானே என்னை அறியகிலாதே”’ (திருவாய் 2 – 9 – 9) என்கையாலே ஆத்ம விஷயமான அஞ்ஞாநமும்
உணர்விலேன் -”ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன்” (திருமொழி 1 – 6 – 6) என்கையாலே விரோதி விஷயமான அஜ்ஞாநமும்
ஏணிலேன் -) ”பிறவி நோயறுப்பான் ஏணிலேனிருந்தேன்” (திருமொழி 1 – 6- 1) என்கையாலே உபாய விஷயமான அஜ்ஞாநமும்
அயர்த்து என்றும்-”ஆழியங்கை யம்மானை ஏத்தாதயர்த்து” (பெரியதிரு – 82) என்கையாலே புருஷார்த்த விஷயமான அஜ்ஞாநமும்-
ஏத்துகையிறே புருஷார்த்தம். அத்தை மறக்கையாலே புருஷார்த்த, விஷயமான அஜ்ஞாநமும் என்கிறார். “*சூழ்ந்திருந்தேத்துவர்’” (திருப்பல். 12) என்றும், ““ஏதத் ஸாம் காயந் நாஸ்தே” (தை. ப்ருகு,.) என்றும் சொல்லக் கடவதிறே-
உய்யும் வகை – “உணர்ந்தேன் உண்மையாலினி யாதும் மற்றோர் தெய்வம் பிறிதறியேன்”’ (திருமொழி 6 – 3 – 6) என்கையாலே பர விஷயமான் ஜ்ஞாநமும்
நின்ற ஒன்றை -நின்ற வொன்றை உணர்ந்தேன்” (திருவாய், 8 – 8 – 5) என்கையாலே ஸ்வருப விஷயமான ஜ்ஞாநமும்
நன்கு அறிந்தனன்- ‘ அகற்ற நீ வைத்த மாய வல்லைம் புலன்களாமவை நன்கறிந்தனன்’” (திருவாய். 5 – 7 – 8) என்கையாலே விரோதி, விஷயமான ஜ்ஞாநமும்
உணர்வினுள்ளே -) *’உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவுமவனதின்னருளே”” (திருவாய். 8 – 8 – 3) என்கையாலே உ.பாய விஷயமான ஜ்ஞாநமும்
ஆம் பரிசு என்றும்– ”ஆம்பரிசறிந்து கொண்டு” (திருமாலை 38) என்கையாலே புருஷார்த்த, விஷய ஜ்ஞாநமும் சொல்லிற்று.
ஆக, கீழ்ச் சொன்ன ஸம்ஸார ஸம்பந்தத்துக்கும் மோக்ஷ ப்ராப்திக்கும் ஹேது ‘ஜ்ஞாநாந் மோக்ஷம், அஜ்ஞாநாத் ஸம்ஸாரம்’ என்று அறியப்படுமதான அர்த்த, பஞ்சக ஜ்ஞாநமும், தத் அஜ்ஞாநமும் என்றதாய்த்து.
6-இவற்றுக்குக் காரணம் இரண்டில் ஒன்றினில் ஒன்றுகைகள்.
இந்த அர்த்த,பஞ்சக ஜ்ஞாநமும், அஜ்ஞாநமுமாகிற இவற்றுக்குக் காரணம் – இரண்டில் ஒன்றினில் ஒன்றுகைகள். அதாவது இரண்டில் ஒன்றுகையும், ஒன்றினில் ஒன்றுகையும்.
இரண்டில் ஒன்றுகையாவது – ““முத்திறத்து வாணியத் திரண்டிலொன்றும் நீசர்கள்” (திரு. ச வி. -68) என்கிறபடியே ரஜஸ் தமஸ் : ப்ரசுரனாகை.
ஒன்றினில் ஒன்றுகையாவது “முக் குணத்திரண்டவை யகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ” (திருவெழு.) என்கிறபடியே ஸத்த்வ ப்ரசுரனாகை.
இத்தால் அர்த்த, பஞ்சக ஜ்ஞாநாஜ்ஞாந காரணம் ஸத்த்வாஸத்த்வ ப்ராசர்யங்கள் என்றபடி,
7-ஸத்த்வாஸத்த்வ நிதாநம் – இருள் தரும் அமலங்களாக என்னும் ஜந்ம ஜாயமாந கால கடாக்ஷங்கள்.
இப்படிப்பட்ட ஸத்த்வத்துக்கும் அஸத்த்வத்துக்கும் நிதாநம் என் என்னில் – (இருள்தரும் அமலங்களாக என்னும் ஜந்ம ஜாயமாந கால கடாக்ஷங்கள்). அவையாவன – “’இருள் தரு மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்”’ (திருவாய். 10 – 6 – 1) என்கிறபடியே அஜ்ஞாநாவஹமான ஸம்ஸாரத்திலே பிறப்பு. ““ஜாயமாநம் ஹி புருஷம் யம் பஸ்யேந் மது ஸூதந: । ஸாத்த்விகஸ் ஸ து விஜ்ஜேய: ஸ வை மோக்ஷார்த்த சிந்தக:”” (பாரதே சபா . ப. 348 -73) என்கிற ஜாயமாந காலத்தில் “அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும்” (திருவாய். 1 – 9 – 9) என்கிற பகவத் கடாக்ஷமும் –
8-இவற்றுக்கு மூலம் –இரு வல்லருள் நல் வினைகள்.
(இவற்றுக்கு மூலம்) இந்த ஜந்ம கடாக்ஷங்களாகிற இவற்றுக்குக் காரணம் என் என்னில் –
(இரு வல்லருள் நல் வினைகள்). ““சார்ந்த இரு வல் வினை ”யும், ”தொல்லருள் நல்வினை”’ யும்.-அவையாவன – ஆத்மாவுக்கு ஸஹஜம் என்னலாம்படி பொருந்தி இருந்துள்ள புண்ய பாபங்களும், ஈஸ்வரனுடைய ஸ்வாபாவிக க்ருபையும் –
9-கர்ம க்ருபா பீஜம், பொய்ந் நின்ற அருள் புரிந்த என்கிற அவித்,யா ஸெளஹார்த்த.ங்கள்.
கர்ம க்ருபா பீஜம் ) ஏவம் விதமான கர்மத்துக்கும் க்ருபைக்கும் பீஜம் – (பொய்ந் நின்ற அருள் புரிந்த என்கிற அவித்,யா ஸெளஹார்த்த.ங்கள்.- அவையாவன – ‘*’பொய்ந் நின்ற ஞானம்”! (திருவிரு. 1) என்கிற அவித்யையும், “அருள்புரிந்த சிந்தை” (இர. திருவ. 59) என்றும், ““ஈஸ்வரஸ்ய ச ஸெளஹார்த்தம்”’ ( ) என்றும் சொல்லுகிற ஈஸ்வரனுடைய ஸெளஹார்த்தமும்-
10-ஏதந் நிமித்தம் முன்னமே முதல் முன்னமேயான அசித் , அயநா நாதி, ஸ்ம்பந்தங்கள்–
(ஏதந் நிமித்தம்) இந்த அவித்,யைக்கும் ஸெளஹார்த்த,த்துக்கும் ஹேது ஏதென்னில்
[முன்னமே முதல் முன்னமேயான அசித,யநாநாதி,ஸம்பந்தங்கள்). அவை யாவன “மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே”” (திரு விரு. –95) என்கிற அநாதியான அசித் ஸம்பந்த,மும், *’அடியேனடைந்தேன் முதல் முன்னமே’ (திருவாய், 2 – 3 – 6) என்கிற அநாதி யான அயந ஸம்பந்தமும்.
11-இவை கிட்டமும் வேட்டு வேளானும் போலே ஒண் பொருள் பொருளல்லாத(வை) என்னாதே நானிலாத யானுமுளனாவன் என்கிற ஸாம்யம் பெறத் தின்றூதி அந்தமும் வாழ்வுமாகிற ஹாநி ஸத்தைகளை உண்டாக்கும்.
உபய ஸம்பந்தததினுடையவும் கார்யம் சொல்லுகிறது மேல் ; (இவை கிட்டமும் வேட்டு வேளானும் போலே ) என்று தொடங்கி.
அதில் அசித் ஸம்பந்தம் கிட்டம் போலே. ”எண் பெருக்கந் நலத்தொண் பொருள்”’ (திருவாய். 1 – 2 -10) என்கிற விலக்ஷணமான ஆத்ம வஸ்து வென்று பாராதே ”நானிலாத முன்னெலாம்”’ (திரு ச வி.- 57 என்னும்படி ஸாம்யம் பெற. *அறுத்துத் தின்று”” (திருமொழி 7 – 7. 7) என்கிறபடியே தின்று. ‘அந்தமும் வாழ்வும்” (திருமொழி 5 – 7 – 2) என்கிறதில் அந்தமாகிற ஹாநியை உண்டாக்கும். ““அஸந்நேவ ஸ பவதி”” (தை. ஆந.) என்னக் கடவதிறே. இனி அயந ஸம்பந்தம் வேட்டு வேளான் போலே *“‘பொருளல்லாத என்னைப் பொருளாக்கி (திருவாய், 5 – 7 – 3) என்கிறபடியே அவஸ்து ஸப்த,வாச்யமான இத்தை வஸ்து சப்த வாச்யமாக்கி, “உள்ள உலகளவும் யானுமுளனவனென் கொலோ ” (பெரியதிருவ. 76) என்கிறபடியே இவனும் தர்ம பூத ஜ்ஞாந த்வாரா விபு வாகையாலே ஈஸ்வரன் உள்ளவளவும் இவ்வாத்மா உண்டாம்படி ““பரமம் ஸாம்யமுபைதி” (மு. 3-1- 3) என்கிற ஸாம்யம் பெற ஊதி, வாழ்வாகிற ஸத்தையை உண்டாக்கும். ““ஸந்தமேதம் ததோ விது,” (தை. ஆந.) என்றும், ”கீட: பேஸாக்ருதா ருத்த,: குட்,யாத்ந்ரநுசிந்தயந் । ஸம்ரம்ப பய யோகே,ந விந்ததே தத் ஸரூபதாம் | ஏவம் க்ருஷ்ணே பகவதி மாயாமநுஜ ஈஸ்வரே ! கோவிந்தே, மதிமாவேஸ்ய நரஸ்ஸத்யோ விமுச்யதே'” ( ) என்றும் ‘அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான்”’ (திருமொழி 5 – 7 – 2) என்றும் சொல்லக் கடவதிறே
12-ஒன்று கூடினதாய்ப் பற்றறுக்க மீண்டொழிகையாலே பழவடியேன் என்னுமதொன்றுமே ஒழிக்க ஓழியாதது.
இந்த உபய ஸம்பந்தமும் அநாதியாய் நித்யமா யிருக்குமோ வென்னில் ; அசித் ஸம்பந்தம் வந்தேறியுமாய், கர்மோபாதி கமாகையாலே அநித்யமுமா யிருக்கும். அயந ஸம்பந்தம் அநாதியுமாய், நிருபாதிக மாகையாலே நித்யமுமாயிருக்கும் என்கிறார் மேல் (ஒன்று கூடினதாய்) என்று தொடங்கி
(ஒன்று கூடினதாய்) “பெருந் துயரிடும்பையில் பிறந்து கூடினேன்”” (திருமொழி 1 – 1 – 1) என்கையாலே அசித் ஸம்பந்தம் ஆகந்துகம். ஆனால் அசித் ஸம்பந்தம் அநாதி, என்று சொல்லுவான் என் என்னில் ; வந்தேறின காலம் பழையதாகையாலும், ப்ரமாணங்கள் தான் அநாதி, என்கையாலும். இனி ““வினை பற்றறுக்கும் விதியே” (திருமொழி 11 – 5 – 9), “அடைந்த அருவினையோ டல்லல் நோய் பாவம் மிடைந்தவை மீண்டொழிய வேண்டில்”: (மூன்றாம் திரு -59) என்றும் சொல்லுகிறபடியே ஒருநாள் வரையிலே பகவத் ப்ரஸாதத்தாலே கழியக் காண்கையாலே ஆகந்துகம் என்கிறது. ஆகையாலே ”நானுமுனக்குப் பழவடியேன்”’ (திருப்பல். 11) என்கிறபடியே ஜீவ பரர்களுக்குண்டான ஸேஷ ஸேஷி பாவ ஸம்பந்த மொன்றுமே ““உறவேல் நமக்கிங்கொழிக்க ஒழியாது ” (திருப்பாவை 28) என்கிறபடியே கழியாதது
13-இந்த உதரத் தரிப்பு த்ரை கு,ண்ய விஷயமானவற்றுக்கு ப்ரகாஸகம்.
இவ்வயந ஸம்பந்தமே கீழ்ச் சொன்ன ஸாஸ்த்ர ப்ரதாநத்துக்கு ஹேது என்கிறார் மேல், (இந்த உதரத் தரிப்பு த்ரை கு,ண்யவிஷயமானவற்றுக்கு ப்ரகாஸகம்). (இந்த உத,ரத் தரிப்பு) இந்த நாராயணத்வ ப்ரயுக்தமான குடல் துடக்கு, “’த்ரை குண்ய விஷயா வேத?” (கீதை 2 – 45) என்கிறபடியே த்ரிகுணவஸ்யரான சேதநரை விஷயமாக உடைய வேதங்களை ப்ரகாஸிப்பிக்கைக்கு ஹேது என்றபடி. தமஸ் ப்ரசுரராயும், ரஜஸ் ப்ரசுரராயும், ஸத்த்வ ப்ரசுரராயுமிறே சேதநர் இருப்பது. ஆக, இந்த உதரத் தரிப்பு த்ரைகுண்ய விஷய மானவற்றுக்கு ப்ரகாஸகம் என்கிற இத்தால் ருச்யநுரூப புருஷார்த்தங்களையும் தத் ஸாதநங்களையும் விதிக்கிற ஸாஸ்த்ர ப்ரதாநத்துக்கு அடி இந்த ஸம்பந்தம் என்றதாய்த்து.
கீழ் ‘ நீர்மையினாலருள்செய்தான்”’ (திருமொழி 1 -8 – 5) என்று சொன்ன ஸாஸ்த்ர ப்ரதாநத்துக்கு ஹேது சொல்லிற்று ஆய்த்து
14-வத்ஸலையான மாதா பிள்ளை பேகணியாமல் மண் தின்ன விட்டு ப்ரத்யெளஷதம் இடுமாப் போலே எவ் வுயிர்க்கும் தாயிருக்கும் வண்ணமான இவனும் ருசிக் கீடாகப் பந்தமும் பந்த மறுப்பதோர் மருந்தும் காட்டுமிறே.
இப்படி ஸாஸ்தர ப்ரதாநம் பண்ணுகிறது ஸம்பந்த, மடியாக வாகில் விமோசக. ஸாஸ்த்ரத்தையே வெளியிடாதே பந்தக ஸாஸ்த்ரங்களையும் வெளியிடுவான் என் என்னில்; வத்ஸலனாகையாலே சேதநருடைய ருச்யநு குணமாக வெளியிட்டான் என்கிறது மேல் (வத்ஸலையான மாதா) என்று தொடங்கி- ப்ரிய ப்ரவர்த்தகத்வத்தைப் பற்றவும் அதுக்கடியான வாத்ஸல்யத்தைப் பற்றவும் இப்போது மாதாவை த்ருஷ்டாந்தமாக்குகிறது. ““எல்லா வெவ்வுயிர்க்கும் தாயோன்” (திருவாய். 1 – 5 – 3) என்றும், “’தாயிருக்கும் வண்ணமே” (திருமொழி 11 – 6 – 6) என்றும் சொல்லுகிறபடியே இவனும் அப்படியே ஸர்வாத்மாக்கள் பக்கலிலும் மாத்ருத்வ ப்ரயுக்கமான வாத்ஸல்யத்தை உடையனாகையாலே சேதநருடைய ருசிக்கீடான “பந்தமும்” என்கிற பந்தக ஸாஸ்த்ரங்களையும், ““பந்த மறுப்பதோர் மருந்தும்” என்கிற விமோசக ஸாஸ்த்ரத்தையும் விதிக்கும் என்கிறார் –
15-அதுதானும் ஆஸ்திக்ய விவேகம் அந்ய ஸேஷத்வ ஸ்வ ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தி பாரதந்த்ர்யங்களை உண்டாக்கின வழி.
இப்படி பந்தகமாக ஸாஸ்த்ரத்தையும் கலசி விதித்தால் அது கொண்டு சேதநர் ஸம்ஸரித்தே போமித்தனையோ என்னில் ; அது தானும் விமோசக ஸாஸ்த்ரத்திலே வருகைக்கிட்ட வழி என்கிறார் மேல் (அதுதானும் ஆஸ்திக்யம்) என்று தொடங்கி, அதுதானும் -பந்தக ஸாஸ்த்ரத்தைக் கலசி விதித்தது தானும். பர ஹிம்ஸா ஸீலனாய் ஸாஸ்த்ர ஸாமர்த்யம் {ஸாஸ்த்ரத்தில் ஆஸ்திக்யம்) முதலிலே இல்லாதவனைக் குறித்து மோக்ஷத்தை விதித்தால் அது அவனுக்கு ருசியாதாகையாலே அநபரஹிம்ஸா ரூபமான அபிசார ஸாஸ்த்ரத்தை விதித்து அது அவனுக்கு பலித்தவாறே அவ் வழியாலே ஸாஸ்தரம் உண்டென்கிற் ஆஸ்திக்யத்தை ௨ண்டாக்கியும், ஆஸ்திகனானவாறே ் ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்க காமோ யஜேத” ( ) என்று இத்யாதி,களில் சொல்லுகிறபடியே ஸ்வர்க்காதி, புருஷார்த்தங்களையும், தத் ஸாதநங்களையும் சொல்லுகிற ஸாஸ்த்ரங்களையும் விதித்து, அவ் வழியாலே ப்ரகருத் யாத்ம விவேகத்தைப் பிறப்பித்தும், இப்படி ப்ரக்ருத் யாத்ம விவேகம் பிறந்தவாறே ஆத்ம லாப, ரூப புருஷார்தத்தைக் காட்டி அந்ய ஸேஷத்வத்தை நிவர்த்திப்பித்தும், அநந்தரம் பகவத் கைங்கர்ய ருப புருஷார்த்தத்தைக் காட்டி ஸ்வ ஸ்வாதந்தர்யத்தை நிவர்த்திப்பித்தும், ஆத்மா வினுடைய அத்யந்த பாரதந்தர்யத்தை உண்டாக்குகைக் கிட்ட வழி என்கிறார் –
16-சதுர் விதமான தே,ஹ-வர்ண- ஆஸ்ரம-அதிகார- ப,ல- மோக்ஷ -ஸாதந ,-கதி- யுக.- தர்ம-வ்யூஹ-ரூப-க்ரியாதிகளை அறிவிக்கிற பாட்டுப் பரப்புக்கு – பெரிய தீவினில் ஒன்பதாம் கூறும், மானிடப் பிறவியும், ஆக்கை நிலையும், ஈரிரண்டிலொன்றும், இளமையும், இசைவுமுண்டாய், புகுவரேலும் என்கிறதுக்குள்ளே விக்நமற, நின்றவா நில்லா ப்ரமாதியைக் கொண்டு அறக்கற்கை அரிதென்றிறே வேத ஸார-உபநிஷத் ஸார தர அநுவாக-ஸார தம காயத்ரியில் முதலோதுகிற பொருள் முடிவான சுருக்கைத் தெய்வ வண்டாய், அன்னமாய், அமுதம் கொண்டவன் -ஸாகை களிலும், ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும், தேனும் பாலும் அமுதுமாக எடுத்துப் பெரு விசும்பருளும் பேரருளாலே சிங்காமை விரித்தது –
இனி மேல் ஸாஸ்த்ர ப்ரதிபாத்யமான அர்த்த விமேோஷங்களை ஸங்க,ரஹேண ப்ரதிபாதியா நின்று கொண்டு ஏவம் வித,மான ஸாஸ்த்ரத்தினுடைய ௮ப்யாஸத்துக்கு ஐம்பூ, த்வீபாதி, தேஸ தேஹாதி,ஸாபேக்ஷதயா ஜ்ஞாதும் அஸக்யமாயிருக்குமென்று இப்படி ஸாபேக்ஷமன்றிக்கே, நித்ய நிரபேக்ஷமாய், அத ஏவ ஸூகரமுமாய், ஸாஸ்த்ர தாத்பர்யமுமான திருமந்தரத்தை ஸ்ரீபதரிகாஸ்ரமத்திலே வெளியிட்டருளினான் என்கிறார் (சதுர்விதமான தே,ஹ) என்று தொடங்கி. (சதுர்விதமான தேஹம்) தே,வ-திர்யங் மநுஷ்ய-ஸ்தாவர ரூபமான ஸரீர விஸேஷங்கள். (வர்ணம்) ப்,ராஹ்மண-க்ஷத்ரிய வைஸ்ய-ஷூத்ர ரூபமான வர்ண சதுஷ்டயம். (ஆஸ்ரமம்) ப்,ரஹ்ம சர்ய- கார்ஹஸ்த்ய -வாநப்ரஸ்த,-ஸந்த்யாஸங்களாகிறவை. (அதிகாரம்) “ஆர்த்தோ ஜிஜ்ஞாஸு அர்த்தார்த்தி, ஜ்ஞாநீ” (கீதை 7 – 16) என்று சொல்லுகிறவை-
இதில் ஆர்த்தனாவான் – நஷ்ட ஐஸ்வர்ய காமன். ஜிஜ்ஞாஸுவாவான் – கேவலன். அர்த்தார்த்தீ,யாவான் -அபூர்வ ஐஸ்வர்ய காமன். ஜ்ஞாநி என்கிறது பகவதநுபவ ஏக பரனை. ஆர்த்தனுக்கும் அர்த்தார்த்திக்கும் நடுவே கேவலனைச் சொல்லிற்று – அவனும் ப்ரயோஜநாந்தர பரன் என்னுமிடம் தோற்றுகைக்காக. (பலம்)“‘தர்ம- அர்த்த,- காம மோக்ஷாக்,யா:” ( ) என்று சொல்லுகிறவை. (மோக்ஷமாவது) – ஸாலோக்ய-ஸாமீப்ய ஸாரூப்ய-ஸாயுஜ்யங்கள், (ஸாதநம்) – கர்ம-ஜ்ஞாத-ப,க்தி-ப்ரபத்திகள். (கதியாவது )த்,யு:பர்ஜந்ய ப்ருதிவீ புருஷ யோஷித்துக்களான பஞ்சாக்நி வித்யையில் சொல்லுகிற படியே வருகிற கர்ப்ப,கதியும், யாம்ய கதியும், தூம்ய கதியும், அர்ச்சிராதி,கதியும். (யுக,மாவது) – க்ருத-த்ரேதா-த்,வாபர-கலியுக,ங்கள். (த,ர்மமாவது) – “த்யாயத் க்ருதே யஜந் யஜ்ஞை: த்ரேதாயாம் த்,வாபரேர்ச்சயத் | யதாப்நோதி ததாப்நோதி கலெள ஸங்கீர்த்ய கேஸவம்”’ (வி. பு. 6 – 2 – 17) என்று சொல்லுகிற த்யாந -யாக,-அர்ச்சந -சங்கீர்த்தநங்கள்-வ்யூஹமாவது – வாஸு தே,வ-ஸங்கர்ஷண-ப்ரத்யும்ந- அநிருத்தர்கள். ரூபமாவது “ரக்தம் ஸிதே தரே பீதம் சதுர்த்தா யத் க்ருதே யுகே, ! ரக்தாத்யம் ஸித நிஷ்டஞ்ச த்ரேதோயாம் ஹி மஹாமதே பீதம் க்ருஷ்ணம் ஸிதம் ரக்தம் ஸம்ப்ராப்தே த்வாபரே யுகே, ! கலெள க்ருஷ்ண ஸிதம் ரக்தம் பீதஞ்சாநுக்ரமேண து””( ) (யதாமதி ஸோத நீயம்] என்கிற படியே க்ருதாதி,களில் ஸித-ரக்த- பீத-க்ருஷ்ணாதி,களான ஸங்கர்ஷணாதிகளுடைய வர்ண சதுஷ்டயங்கள். “பாலினீர்மை”! (திரு.ச . வி. 44) இத்யாதி, க்ரிசை யாவது -ஸ்ருஷ்டி -ஸ்திதி-ஸம்ஹார-மோக்ஷ ப்ரதத்வாதி,கள். ஆதி சப்தத்தாலே மற்றும் அர்ச்சநீயரான தேவதா விஸேஷங்களைச் சொல்லுகிறது
இப்படி சதுர் வித,மான தேஹாத் யர்த்த,விஸேஷங்களுக்கு ப்ரகாஸகமான பாட்டுப் பரப்புக்கு “பாட்டும் முறையும்?” (நா. திருவ. 76) என்கிற பாட்டில் சொல்லுகிற ஸாஸ்த்ர விஸ்தரத்துக்கு. (பெரியதீவினில் இத்யாதி,) ““நாவலம் பெரிய தீவு”’ (பெரியா. தி. 3 – 6: – 1) என்கிற ஜம்பூ த்வீபத்தில் நவ கண்டையான ப்ருதிவியில் பரத கண்ட,மும். “துர்லபோ மாநுஷோ தேஹு:”” (ப,ாக,வ. 11 – 2 – 21) என்றும், “மானிடப் பிறவி அந்தோ?” (திருக் குரும் -. 6) என்றும் சொல்லுகிற மநுஷ்ய தேஹமும், ‘“தே,ஹிநாம் க்ஷண பங்கு, ர:”” என்றும், “மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்”’ (திருவாய். 1 – 2. 2) என்றும் சொல்லுகிற தாத்ருஸ தேஹங்களினுடைய ஸ்தைர்யமும். ஸாஸ்த்ர ஜ்ஞாநத்துக்கு யோக்யமான வர்ணங்களில் ப்ரதம க,ண்யமாய், ““குலங்களாய ஈரிரண்டிலொன்றிலும்”’ (திருச்ச. 90) என்கிற ப்ராஹ்மண ஜந்மமும், “கிளரொளி இளமை”” (திருவாய். 2 – 10 – 1) என்று இதினுடைய பால்யமும்–தஸ்மாத் பால்யே விவேகாத்மா’ (வி.பு. 1 – 17 – 75) என்றும் சொல்லக் கடவது இறே
அதிலும், ““யானுமென்னெஞ்சும் இசைந்தொழிந்தோம்”’ (பெரியதிருவ, 36) என்கிறபடியே இச்சையுமுண்டாய், “*வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்”’ (திரு மாலை 3) என்றும், ““ஸதாயுர்வை புருஷ:”” (யஜு. கா. 1 – 8 – 2) என்றும் சொல்லுகிற படியே மநுஷ்யர் வேதோக்தமான ஆயுஸ்ஸை உடையவரே யாகிலும் அவ்வாயுஸ்ஸுக்குள்ளே “அநந்த ஸாரம் ப,ஹு வேதி தவ்யம் அல்பஸ் ச காலோ பஹவமஸ்ச விக்,நாநி :’” ( ) என்றும், ““ஸ்ரேயாம்ஸி ப,ஹுவிக்,நாநி ப,வந்தி மஹதாம்பி”” ( ) என்றும் சொல்லுகிறபடியே ஸாஸ்த்ர ஜ்ஞாந விரோதி,யான ப்ரபல ப்ரதிபந்தகங்களும் அற்று, “நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் ” (திருமொழி 1 – 1 & 4) என்றும், “சஞ்சலம் ஹி மநஸ் : க்ருஷ்ண ப்ரமாதி, பலவத்,த்ரூடம் ! தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸதுஷ்கரம்”’ (கீதை 6 – 34) என்றும் சொல்லப்படுகிற மநஸ்ஸைக் கொண்டு ‘கலையறக் கற்றமாந்தர்”” (திருமாலை 7) என்கிறபடியே ஸாஸ்த்ரங்களைக் கரை கண்டு ”ஆமாறறிவுடையார் ஆவதரிதன்றே”’ (பெரியதிருவ. 37) என்கிறபடியே தாத்பர்ய ஜ்ஞனாகை அரிது என்றிறே
வேதஸாரோபநிக்ஷத் – (”அஸாரமல்பஸாரஞ்ச ஸாரம் ஸாரதரம் த்யஜேத் | பஜேத் ஸாரதமம் ஸாஸ்த்ரம் ரத்நாகர இவாம்ருதம்” ( )) அயதர்த்த,ப்ரதிபாத,கங்களான பாஹ்ய ஸாஸ்த்ரங்கள் அஸாரமாய், புத்ர பஸ் வந்நாத்,ய ஐஸ்வர்யஸாத,நத்தையும், ஸ்வர்க்க,ஸாத,ந ஜ்யோதிஷ்டோமாதி, களையும் விதிக்கிற முகத்தாலே ஸாஸ்தராஸ்திக்யம் ப்ரக்ருத் யாத்ம விவேகம் இவற்றைப் பிறப்பிக்கையாலே வேதத்தில் பூர்வபாகம் அல்ப ஸாரமாயிருக்கும். இங்ஙனன்றிக்கே அநந்த ஸ்திர பல ப்ரஹ்மோபபாதநமான உபதிஷத பாகம் ஸாரமாயிருக்கும்
அந்த உபநிஷத்துக்களிலும் சொல்லுகிற “பரம் ப்,ரஹ்ம பரம் ஜ்யோதி: ‘” இத்யாதி, ஸாமாந்ய வாசக ஸப்,த,ங்களாலும், விஸேஷ வாசியான சம்பு,சிவாதி ஸப்,த,ங்களாலும்,ப்ரதிபாதி,க்கப்படுகிறன் நாராயணனே என்று சொல்லுகிற நாராயணாநுவாகம் ஸார தரமாய், அதில் வ்யாபக த்ரயத்தையும் ப்ராதாந்யேந ப்ரதிபாதிக்கிற விஷ்ணு காயத்ரியில் ப்ரதமோபாத்தமான நாராயண ஸப்,த,ம் ஸார தமமாகையாலே ““ஓத்தின் பொருள் முடிவுமித்தனையே – மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு! (இர, திருவ. 39) என்கிறபடியே வேதாந்த தாத்பர்யமாய், “ருசோ யஜூம்ஷி ஸாமாநி ததைவா தர்வணாநி ச ” (வரு. ஹா.) என்று இத்யாதி,களில் சொல்லுகிறபடியே ஸகல வேத ஸங்க்ரஹமுமாய், ஸகலார்த்த,ப்ரகாஸகமுமாய் ஸர்வேஸ்வரன் தனக்குத் திருநாமமான திருமந்தரத்தை ஷட்பத,மானது ஸாகா ஸஞ்சாரம் பண்ணி மதுவை எடுக்குமாப் போலே தூவியம்புள்ளுடைத் தெய்வ வண்டானவன் ஸாகைகளில் ஸாரரூபமான திருமத்த்ரத்தை எடுத்தும், அன்னமாய் அன்றங்கருமறை பயந்தான்” (திருமொழி 5 – 7 – 3) என்கிறபடியே அன்னமானது நீரிலே பாலை எடுக்குமாப் போலே கிளர்வேதநீரிலே ஸாரமான திருமந்த்ரத்தை எடுத்தும்
அநந்தரம், ““பேணான் வாங்கி அமுதங்கொண்ட ” (திருமொழி 6 – 10 – 3) என்கிறபடியே ஸ்வேந ரூபேண, அஸூர பய பீதரான தேவர்களுடைய ரக்ஷணார்த்தமாக க்ஷீராப்தியை மதித்து அம்ருதத்தை எடுத்தாப் போலே ஸம்ஸார பய பீ,தரான சேதநருடைய ரக்ஷ்ணார்த்த,ம் ”நால்வேதக்கடலமுது?’ (பெரியா. தி. 4 – 3 – 11) என்கிறபடியே நாலு வகைப்பட்ட வேதத்திலும் ஸார பூ,தமான திருமந்த்ரத்தை எடுத்தும்.
ஆக, ஸர்வரஸமுமாய் ஸர்வாதிக ஸத்யத்தையும் தருமதான “தேனும் பாலும்
அமுதுமாய திருமால் திருநாமம் -(திருமொழி -6-10-6) என்கிற திருமந்திரத்தை அமரர் பெரும் விசும்பருளும் பேரருளாளன் ”’ திருமொழி 1 – 4.4) என்கிற பெரும் விசும்பான பரமபதத்தைக் கொடுப்பதான நிர்ஹேதுக க்ருபையாலே ““‘நரநரரணனாய் உலகத்தறநூல் சிங்காமை விரித்தவன்’‘ (திருமொழி 10 – 6 – 1) என்கிறபடியே ஸ்ரீபதரி காஸ்ரமத்திலே நர நாராயண ரூபேண வந்து அவதரித்து ஸ்வரூபஸாஸ்த்ரம் மடங்காதபடி விஸ்தரித்தருளினது அறக்கற்கை அரிதென்றிறே – இத்தைக் கொண்டு அந்வயிப்பது-
17-முனிவரை இடுக்கியும் முந்நீர் வண்ணனாயும் வெளியிட்ட ஸாாஸ்த்ர தாத்பர்யங்களுக்கு விஸிஷ்ட நிஷ்க்ருஷ்ட வேஷங்கள் விஷயம்.
ஸாஸ்த்ரத்தையும் ஸாஸ்த்ர தாத்பர்யமான திருமந்த்ரத்தையும் வெளியிட்டருளினான் என்று நின்றது கீழ் ; அவற்றை வெளியிட்ட ப்ரகாரமென் ; அவற்றுக்கு விஷயமேது” என்கிற சங்கையில் சொல்லுகிறது (முனிவரை இடுக்கியும்) என்று தொடங்கி. ““இருள்கள் கடியும் முனிவரும்” (திருவாய். 10 – 7 – 7) என்கிற ஸ்மர்த்தாக்களான வ்யாஸாதி,களுக்கு ““க்ருஷ்ண த்வைபாயநம் வ்யாஸம் வித்தி, நாராயணம் ப்ரபு,ம் | கோஹ் யந்ய: புண்ட,ரீகாஷாந் மஹா பாரத க்ருத்,பவேத்”’ (வி.பு. 3 – 4 – 5) என்கிறபடியே அந்தர்யாமியாய் நின்று தந் முகேந ப்ரவர்த்திப்பித்த ஸாஸ்த்ரங்களுக்கு விஷயம் இவர்களுடைய தேஹ விஸிஷ்ட ஸ்வரூபம் என்றும், *“கருங்கடல் முந்நீர்வண்ணன்”’ (திருமொழி 1 – 4 10) என்கிறபடியே ஸ்ரீபதரிகாஸ்ரமத்திலே ஸ்வேந ரூபேண நின்று வெளியிட்ட தாத்பர்யமான திருமந்த்ரத்துக்கு விஷயம் சேதநருடைய நிஷ்க்ருஷ்ட ஸ்வரூபம் என்றும் சொல்லப்பட்டது ; ஸாஸ்த்ரத்துக்கு தேஹத்திலே நோக்கு; தாத்பர்யத்துக்கு ஸ்வரூபத்திலே நோக்கு என்றதாய்த்து –
18-தோல்புரையேபோமதுக்குப் பழுதிலா யோக்யதை வேணும் ; மனமுடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்ஸிக்கு நானும் நமரும் என்னும்படி ஸர்வரும் அதிகாரிகள்.
ஆனால் இவை யிரண்டும் ஸர்வாதிகாரமா யிருக்குமோ? அதி க்ருதாதிகாரமா யிருக்குமோ? என்கிற சங்கையிலே சொல்லுகிறது (தோல் புரையே போமதுக்கு) என்று தொடங்கி, தேஹ விஸிஷ்ட ஸ்வரூபத்தை விஷயமாக உடைத்தாகையாலே தேஹாவஸாநமே தனக்கு அவஸாநமான ஸாஸ்த்ரத்துக்கு ”பழுதிலா ஒழுகலாற்றுப் பல சதுப் பேதிமார்கள்” ் (திருமாலை 42) என்கிறபடியே அதிகாரி ஸம்பத்தி ஸாபேக்ஷமாயிருக்கும். “மன முடையீர்” என்கையாலே * “கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்”” (திருவாய். 10 – 8 – 1) என்றும், “ந தீர்த்தம் ந ச நக்ஷத்ரம் ந க்ரஹா ந ச சந்த்ரமா: ஸ்ரத்தைவ காரணம் ந்ரூணாம் அஷ்டாக்ஷர பரிக்ரஹே”” (பாஞ்சராத்ரே) என்றும் சொல்லுகிறபடியே ஸ்ரத்தா மாத்ரமே அமைந்த ஸ்வரூப ஸ்பர்ஸியான தாத்பர்யத்துக்கு “நானும் சொன்னேன் நமருமுரைமின் நமோ நாராயணமே ‘ (திருமொழி 6 – 10 – 6) என்கையாலே அதிகாரி நியமமில்லை. இத்தால் ஸாஸ்த்ரம் அதி க்ருதாதிகாரமா யிருக்கும் ; ஸாஸ்த்ர தாத்பர்யமான திருமந்த்ரம் ஸர்வாதிகாரமென்றதாய்த்து –
19-ஸாஸ்த்ரிகள் தெப்பக் கையரைப் போலே இரண்டையு மிடுக்கிப் பிறவிக் கடலை நீந்த, ஸாரஜ்ஞர் விட்டத்தி லிருப்பாரைப் போலே இருகையும் விட்டுக் கரை குறுகும் காலமெண்ணுவர்கள்.
இனி மேல் ஸாஸ்த்ரோப லக்ஷிதமான பக்தி நிஷ்டனுடையவும், தாத்பர்யோப லக்ஷிதமான பிரபத்தி நிஷ்டனுடையவும் ப்ரதிபத்திகளைச் சொல்லுகிறது (ஸாஸ்த்ரிகள் தெப்பக் கையரைப் போலே) என்று தொடங்கி, ஆறு நீஞ்ச வந்தவன் தெப்பத்தை ஒரு கையிலே இடுக்கியும், தானும் ஓரு கையாலே நீஞ்சுமாப் போலே, பக்தி நிஷ்டனும், ஸ்வ யத்நமும் ஸ்வ யத்ந ஸாத்யமான பகவத் க்ருபையையுங் கொண்டு ”புணைவன் பிறவிக் கடல் நீந்துவார்க்கே”‘ (திருவாய், 2 – 8 – 1) என்கிறபடியே ஸம்ஸார ஸாக,ரத்தைக் கடக்கத் தேடும். (ஸாரஜ்ஞர்) தாத்பர்ய நிஷ்டரான ப்ரபந்நரானவர்கள். (விட்டத்திலிருப்பாரைப் போலே) ஆற்றின் கரையேறிப் போகிறவன் அதில் யத்நத்தில் அந்வயமற்று விட்டத்திலிருக்குமாப் போலே ; ”விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்?’ ( ) என்கிறபடியே அக்கரையோடு உருவ நின்று நடத்துகிற ‘*வைகுந்தனென்பதோர் தோணி?” (நா. திரு. 5 – 4) என்கிற விஷ்ணு போதத்திலே இருந்து அவனுடைய ஜ்ஞாந ஸக்த்யாதி, கு,ணாநுபவத்தாலும் ஸ்வ பாரதந்தர் யாநுஸந்தாநத்தாலும் நிர்பரராய் மேல் உபாயதயா கர்த்தவ்ய மில்லாமையாலே, இரு கையும் விட்டு – அசேதந க்ரியா கலாபத்தையும் தத் ஸாத்யமான பகவத் க்ருபையையும் விட்டு – கேவல பகவத் க்ருபையே தங்களுக்கு உத்தாரகம் என்று அத்யவஸித்துக் கரை குறுகும் காலமெண்ணுவர்கள்.கூவிக் கொள்ளுங்கால மின்னம் குறுகாதோ” (திருவாய். 6 – 9-9) என்றும், “ஆக்கை விடும் பொழுதெண்ணே’” (திருவாய், 1 – 2 – 9) என்றும் சொல்லுகிறபடியே ப்ராப்தியைச் சிந்தித்திருப்பார்கள்,
20-இவை ஸ்வரூபத்தை உணர்ந்துணர்ந்துணரவும் உணர்வைப் பெறவூர மிக உணர்வுமுண்டாம்.
இவர்களுக்கு அவ்வதி,காரமுண்டாகைக்கு ஹேதுவான ஸ்வரூப ஜ்ஞாந தாரதம்யத்தைச் சொல்லுகிறது (உணர்ந் துணர்ந்துணரவும் உணர்வைப் பெற வூர மிக வுணர்வுமுண்டாம்) என்று. (உணர்ந்துணர்ந்துணரவும்) ‘உணர்ந்துணர்ந்திழிந்தகன்று உயர்ந்து உருவியந்த இந் நிலைமை உணர்ந்துணர்ந்துணரிலும்’” (திருவாய். 1 – 3 – 6) என்கிறபடியே ஆத்ம ஸ்வரூபத்தை ஜ்ஞப்தி மாத்ர மன்றிக்கே நித்ய ஜ்ஞாந குணகமாய் தேஹேந்தரியாதி, விலக்ஷணனாகவும், ஜ்ஞாதாவாகவும், கர்த்தாவாகவும் பகவச் சேஷமாகவும் ஸ்ரவண மநநாதிகளாலே ஸாக்ஷாத்கரித்த ஸாஸ்த்ரிகளுக்கு அந்த வ்ருத்தி உண்டாம். (உணர்வைப் பெறவூர மிகவுணர்வுமுண்டாம்)‘உணர்வுமுயிருமுடம்பும் மற்றுலப்பிலனவும் பழுதேயாம் உணர்வைப் பெறவூர்ந்து ” (திருவாய். 8. 8.3) என்கிறபடியே தேஹேந்த்ரியாதிகளில் வ்யாவ்ருத்தமான ஆத்ம ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்கும்படி நிர்ஹேதுகமாக ஈஸ்வரன் நடத்த “மெய்ம்மையை மிக வுணர்ந்து’‘ (திருமாலை 38) என்கிறபடியே ததீய ஸேஷத்வ பர்யந்தமாக உணர ப்ரபந்நனுக்கு இந்த ப்ரதிபத்தி உண்டாம் –
21-ஸேஷத்வ போக்த்ருத்வங்கள் போலன்றே பாரதந்த்ர்ய போக்யதைகள்.
இந்த ஸ்வரூப ஜ்ஞாநமும் ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமுமாகிற இவை யிரண்டும் தன்னிலொக்குமோ என்னில் ; ஒவ்வாது என்கிறார் (-ஸேஷத்வ போக்த்ருத்வங்கள் போலன்றே பாரதந்த்ர்ய போக்யதைகள்.) என்று தொடங்கி. ஸேஷத்வமாவது – இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரம். பாரதந்தர்யமாவது – அந்த ஸேஷ வஸ்துவை ஸேஷிக்கு இஷ்ட மானபடி விநியோகப் படுத்திக் கொடுக்குமது. போக்த்ருத்வமாவது – ரஸாரஸங்களுக்குத் தானே போக்தாவாகை. போக்யதையாவது – பதார்த்த, கதமான ரஸ வர்ணாதிகள் போக்தாவுக்கே போக்யமா யிருக்குமாப் போலே ஆத்ம கதமான ஜ்ஞாநாதிகளும் ஈஸ்வரனுக்கே போக்யமாயிருக்கை, ஆகையால் இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரமான சேஷத்வம் போலே யன்றே, அத்தை இஷ்டமானபடி விநியோகப் படுத்திக் கொடுக்கிற பாரதந்த்ர்யம். ஸ்வ போகத்துக்கும் ஹேதுவாயிருக்கிற போக்த்ருத்வம் போலே யன்றே அந்த போக்த்ருத்வத்தை ஸேஷியினுடைய ப்ரியோப யோகி,யாக்கிக் கொடுக்கிற போக்யதை.
22-ஜ்ஞாந சதுர்த்தி,களின் மேலே யிறே ஆநந்த ஷஷ்டிகளுக்கு உதயம்.
ஆகையிறே போக்த்ருத்வ ப்ரகாஸகமாய் “மந – ஜ்ஞாநே‘ என்கிற தாதுவிலே உதிதமான ஜ்ஞாநத்துக்கு மேலே அந்த மகார விவரண ரூபமாய் போக்யதா ப்ரகாஸகமான சரம சதுர்த்தி யிலே ஆநந்தம் உதித்ததும், ஸேஷத்வ ப்ரகாஸகமான சதுர்த்தியின் மேலே பாரதந்த்ர்ய ப்ரகாஸகமான ஷஷ்டி, உதித்ததும்-
23-முளைத்தெழுந்த ஸூர்ய துல்ய யாதாத்ம்ய சரமம் விதியில் காணும் . ப்ரதம மத்யம தஸைகளைப் பகல் விளக்கும் மின்மினி யுமாக்கும்.
இனிமேல் இந்த ஸ்வரூப ஜ்ஞாநத்தினுடையவும் ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்தினுடையவும் அத்யந்த வைஷம்யம் சொல்லுகிறது (முளைத்தெழுந்த) என்று தொடங்கி, “முளைத்தெழுந்த திங்கள் தானாய்’” (திருநெடு. 1) என்றும், *‘யதா ஸுூர்யஸ் ததா ஜ்ஞாநம்”‘ (வி. பு. 6 – 5 – 62) என்றும், ஆஹ்லாத கரனாயும், அதி ப்ரகாஸ கனாயுமிருக்கிற சந்த்ராதித்யர்களை யாதாத்ம்ய சரமமான பாரதந்த்ர்ய போக்யதா ஜ்ஞாதங்களுக்கு த்ருஷ்டாந்தமாக்குகையாலே பகவத் ப்ரஸாத லப்தமாகையாலே அயத்ந ஸித்த,மாய், அதி ப்ரகாஸகமுமான அத்யந்த பாரதந்த்ர்ய போக்யதா ஜ்ஞாநங்களில் பாரதந்தர்யம் ஸேஷத்வ லக்ஷணமான இஷ்ட விநியோக அர்ஹதையை ஸ்வயமேவ நிரவஹித்துத் தலைக் கட்டுகையாலும், போக்யதையானது அசித் வ்யாவ்ருத்தி லக்ஷ்ண மாத்ரமான போக்தருத்வத்தை சேஷியினுடைய ப்ரியோபயோகி,யாக்கிக் கொடுக்கையாலும் விதியில் காணும் ப்ரதம மத்யம தஸைகளை ”விளக்கினை விதியில் காண்பார்” (திருக்குறு. 18) என்கிறபடியே ஸாஸ்த்ர முக,த்தாலே வந்த ஸ்ரவண மநதநாதிகளால் காணப்படுகிற ப்ரதம தஸையான ஸேஷத்வத்தையும், மத்யம தஸையான போக்த்ருத்வத்தையும், அந்த பாரதந்தார்ய போக்யதைகள் பகல் விளக்கையும் மின்மினியையும் போலே் அப்ரயோஜகமாகவும் அல்ப ப்ரகாஸகமாகவும் பண்ணும் என்கிறார் –
24-நாலிலொன்று பரவர்த்தகம் ; ஒன்று நிவர்த்தகம்.
இந்நாலிலும் வைத்துக் கொண்டு உபாஸகனுக்கு போக்த்ருத்வம் உபாய ருப ப்ரவ்ருத்தி ஹேதுவாயிருக்கும் ; ப்ரபந்தனுக்கு போக்யதை நிவருத்தி ஹேதுவாயிருக்கும் என்கிறார் மேல் (நாவிலொன்று ப்ரவர்த்தகம்) என்று தொடங்கி. உபாஸகன் தன்னை போக்தாவாக நினைத்திருக்கையாலே அந்த போக்த்ருத்வ நிபந்த,நமான கர்த்ருத்வமும் அவனுக்கே ஆகையாலே அவனை உபாய ரூப ப்ரவ்ருத்தியிலே மூட்டும் போக்த்ருத்வம்– ப்ரபந்நனுக்கு போக்யதை ஸ்வரூபமாகையாலே அத்த போக்யதை தானே தந் நிவ்ருத்தி ஹேதுவாயிருக்கும் –
25-முற்பாடர்க்கு க்ரியாங்கமானவை இரண்டும், செயல் தீர்ந்தார் வ்ருத்தியில் ஸ்வ நிர்பந்த மறுக்கும்.
ஆனால் இந்த ஸேஷத்வ போக்த்ருத்வங்க ளிரண்டும் இவனுக்குச் செய்யும்படி என் என்னில் ; இவனுடைய வ்ருத்திக்கு அநு ரூபமாயிருக்கும் . என்னுமிடத்தைச் சொல்லுகிறது மேல் (முற்பாடர்க்கு) என்று தொடங்கி. ‘முற்பாடர்’ என்று சொல்லப்பட்ட உபாஸகர்க்கு (க்ரியாங்க, மானவை, இரண்டும்) கர்மத்துக்கு, அங்கமான ஸேஷத்வ போக்த்ருத்வங்க ளிரண்டும் ; கர்மத்துக்கு யோக்யதாபாதகங்களான ஸேஷத்வ போக்த்ருத்வங்கள் ; இப்படி இருக்கிற இவற்றைச் சொல்லுவான் என் என்னில் ; போக்த்ருத்வமாவது – போக்ய ஸித்திக்கு அடியான யத்நத்திலே மூட்டுகையாலும், ஸேஷத்வம் அதில் ஆத்ம ஜ்ஞாநம் முன்னாக ப்ரவர்த்திக்க வேண்டுகையாலும், அந்த சேஷத்வ போக்த்ருத்வங்கள் ஸாதந ப்ரதம பாவியான கர்மத்தினுடைய உத்பத்தியிலே ஸஹ கரிக்கையாலும் அவற்றை க்ரியாங்கம் என்கிறது –
இப்படிப்பட்ட ஸேஷத்வ போக்த்ருத்வங்கள் (செயல் தீரந்தார் வ்ருத்தியில்) “செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்”? (நா. திருவ. 88) என்கிறபடியே உபாய ரூப ப்ரவ்ருத்தியில் ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலே நிவ்ருத்தரான ப்ரபந்தருடைய, வ்ருத்தியில் – கைங்கர்ய வ்ருத்தியிலே என்றபடி. (ஸ்வ நிர்பந்த, மறுக்கும்)-ஸ்வ போக்த்ருத்வ ப்ரதிபத்தியையும், மதீயத்வ ப்ரதிபத்தியையும் தவிர்க்கும். எங்ஙனே என்னில் ; இவனுடைய போக்த்ருத்வம் அவனுடைய போகத்துக்கு வர்த்தகமாயிருக்கும், * அஹமந்நம் என்ற பின்பு ‘‘அஹமந்தாத.:” என்றது – போக்த்ருத்வமிறே, இப்படிச் சொல்லாத போது ஒரு சேதநனோடே அநுபவித்ததா யிராதிறே ; இவனுடைய ஸேஷத்வமும் அத் தலைக்கு அதிஸய கரமாயிருக்கும், “*பரகத-அதிஸய-ஆதநேச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ ஸேஷ:”, ‘“யதேஷ்ட விநியோகர்ஹம் ஸேஷ ஸப்தேந கத்யதே”, “ஈஸ்வரேண ஜகத் ஸர்வம் யதேஷ்டம் விநியுஜ்யதே” என்னக் கடவதிறே
26-கர்ம கைங்கர்யங்கள் ஸத்யாஸத்ய-நித்யாநித்ய-வர்ண தாஸ்யாநுகுணங்கள்.
இந்த க்ரியா வாசியான கர்மமும் வ்ருத்தி வாசியான கைங்கர்யமும் எதுக்கு அநுரு,ணமா யிருக்குமென்னில் ; (கர்ம கைங்கர்யங்கள் ஸத்யாஸத்ய-நித்யாநித்ய-வர்ண தாஸ்யாநுகுணங்கள்) என்கிறார். இவை இரண்டிலும் வைத்துக் கொண்டு எத்தை எதுக்கு அநுகுணம் என்கிறதென்னில் ; கர்மம் அஸத்யமுமாய், அநித்யமுமான வர்ணத்துக்கு அநு கு,ணமாயிருக்குமென்றும், கைங்கர்யம் ஸத்யமுமாய் நித்யமுமான ஸ்வரூபத்திலே ஆகையாலே ஸத்யமுமாய் நித்யமுமாயிருக்கும்–
27-இவற்றுக்கு விதி, ராக,ங்கள் ப்ரேரகங்கள்.
இவை இரண்டுக்கும் ப்ரேரகர் ஆர் என்னில் (இவற்றுக்கு விதி, ராக,ங்கள் ப்ரேரகங்கள்]). “இத,ம் குரு ‘, “அநேந யஜேத” என்றும் சேதநனைக் குறித்துச் சொல்லுகிற ஸாஸ்த்ர விதிகள் கர்மத்துக்கு ப்ரேரகம். பகவதநுபவ ஜநித ப்ரீதி கைங்கர்யத்துக்கு ப்ரேரகம். ““உற்றேனுகந்து பணி செய்து” (திருவாய். 10- 8 – 10)என்னக் கடவதிறே.
28-மண்டினாரும் மற்றையாரும் ஆஸ்ரயம்.
இவற்றுக்கு ஆஸ்ரயம் ஆர் என்னில், (மண்டினாரும் மற்றையாரும் ஆஸ்ரயம்)-“கண்டியூர்” (திருக்குறு. 19) இத்யாதி,. மண்டினார் என்கிறது – உகந்தருளின நிலங்களிலே அத்யபிநிவிஷ்டராயிருக்கிற ப்ரபந்நரை ; மற்றையார் என்கிறது – “விளக்கினை விதியில் காண்பார்” (திருக்குறு. 18) என்கிற உபாஸகர் என்று ப்ரஸித்தமிறே. இத்தால் கர்மத்துக்கு ஆஸ்ரயம் உபாஸகர், கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயம் ப்ரபந்நர் என்றபடி-
29-அருள் முடிய நிறுத்தி அடைய நின்றதும் நல்லதோரருள் தன்னாலே நன்றுமெளியனாகிறதும் விஷயம்,
இவற்றுக்கு விஷயம் ஏதென்னில் ; ”எத் தவம் செய்தார்க்கும் அருள் முடிவதாழியான் பால்”: (நான். திருவ. 2) என்றும், “’நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்களும்மை உய்யக் கொள் மறுத்துமவனோடே கண்டீர்” (திருவாய். 5 – 2- 7) என்றும், ”அவரவர் விதி வழி அடைய நின்றனரே” (திருவாய். 1 – 1 – 5] என்றும் சொல்லுகிறபடியே தேவதைகளுக்கு அந்தர்யாமியாய்க் கொண்டு நின்ற விடமும், ”நல்லதோரருள் தன்னாலே காட்டினான் திருவரங்கம்”? (திருமாலை 10) என்றும், “கருத்துக்கு நன்றுமெளியன்”’ (திரு வாய். 3 – 6 – 11) என்றும் சொல்லுகிறபடியே அர்ச்சாவதாரமாய்க் கொண்டு நின்ற இடமும். –
30-இவற்றாலே ஸாதாரணம் அஸாதாரணம் என்னும்.
ஆக (இவற்றாலே) இந்த ப்ரமாண ப்ரகாரங்களாலே (ஸாதாரணம் அஸாதாரணம் என்னும்) ஸாதாரணமான் விக்ரஹ விஸிஷ்டன் கர்மத்துக்கு விஷயம், அஸாதாரணமான விக்ரஹ விஸிஷ்டன் கைங்கர்யத்துக்கு விஷயம் என்று விஷய பேதத்தை அருளிச் செய்து, அதில் அஸாதாரண விக்ரஹ விஷய கைங்கர்ய நிஷ்டன் ஸாதாரண விக்ரஹ விஷயத்திலே ஸர்வ ஸாமாந்ய தயா கர்த்தவ்யமானவற்றில் அந்வயியான் என்கிறார் –
31-ஜாத் யாஸ்ரம தீஷைகளில் பேதிக்கும் த,ர்மங்கள் போலே அத்தாணிச் சேவகத்தில் பொதுவானது நழுவும்.
ஆனால் பழையதாக அநுவர்த்தித்துப் போந்ததுமாய் வர்ணாத்,ய ஸாதாரணமுமான ஸத்வாரக விஷய ப்ரவ்ருத்தியை இப்போது இவனாலே விடப் போமோ என்னில் – அது தானே நழுவும் என்கிறார்–எங்ஙனே என்னில் ; ஜாதி த,ர்மமானது ஜாத்யந்தரத்திலே பேதிக்கக் கண்டோம், கண்ட படி என் என்னில், யஜந-யாஜந-அத் யயந-அத்யாபந தாந ப்ரதி க்ரஹங்களாகிற ஷட் கர்மங்கள் க்ஷத்ரியாதி,களில் பேதியா நின்றன விறே –ஆஸ்ரம தர்மம் ஆஸ்ரமாந்தரத்தில் பேதியா நின்றது. இவை இத்தனையும் பேதித்தாலும் பேதியாத நித்ய தர்ம-நைமித்திக த,ர்மங்கள் ஜ்யோதிஷ்டோமாதி, தீக்ஷைகளில் பேதிக்குமாப் போலே ‘அத்தாணிச் சேவகமும்”’ (திருப்பல். 8) என்கிற அந்தரங்க கைங்கர்யத்தில் வர்ணாஸ்ரம ஸாதரண தர்மம் தானே நழுவுமிறே-உறங்குகிறவன கையில் எலுமிச்சம் பழம் போலே இது தனக்கு அவகாஸ மில்லை. இந்த த்ருஷ்டாந்த பலத்தாலே இவ் வதிகாரிக்கு அகரணே ப்ரத்யவாயமில்லை என்கிறது. கீழ்ச் சொன்னவை தன்னைப் போலே ; இப்படி இருக்கச் செய்தேயும் ஸிஷ்டர்கள் அநுஷ்டித்துப் போருகிது ஆந்ரு ஸம்ஸ்யத்தாலே யிறே –
32-ஸாதந ஸாத்யங்களில் முதலும் முடிவும் வர்ண தர்மிகள் தாஸ வ்ருத்திகள் என்று துறை வேறிடுவித்தது.
இனி கர்ம நிஷ்டனிற் காட்டில் கைஙகர்ய நிஷ்ட,னுக்குள்ள வைஷம்யம் சொல்லுகிறது (ஸாதந ஸாத்யங்களில்) என்று தொடங்கி, ஸாதநங்களில் முதற் சொல்லுகிறது கர்மம், கர்ம ஜ்ஞாந பக்திகளிறே ஸாதநங்கள். ஸாத்யங்களில் முடிவு கைங்கர்யம். பகவதநுபவம், அநுபவ ஜநித ப்ரீதி, அநந்தரமிறே பீரீதி காரித கைங்கர்யம், திருவயிந்திரபுரத்தில் வில்லி புத்தூர்ப் பகவர் என்பாரொருவர் எல்லாரும் ஒரு துறையிலே அநுஷ்டாநம் பண்ண, தாம் ஒரு துறையிலே அநுஷ்டாநம் பண்ணுவாராய், ஒருநாள் அநுஷ்டாநம் பண்ணி மீண்டெழுந்தருளா நிற்கச் செய்தே, இருந்த ப்ராஹ்மணர் ‘ஏன் ஜீயரே! எங்கள் துறையில் அநுஷ்டாநம் பண்ண வாராதொழிவானென்’ என்ன, *’விஷணு தாஸா வயம் யூயம் ப்ராஹ்மணா வர்ண தர்மிண? ! அஸ்மாகம் தாஸ விருத்தீநாம் யுஷ்மாகம் நாஸ்தி ஸங்கதி:’‘ என்று – ‘நீங்கள் ப்ராஹ்மணார், வர்ண தர்மிகள்; நாங்கள் தாஸ வ்ருத்திகள், கைங்கர்ய பரர். ஆகையாலே உங்களோடே எங்களுக்கு அந்வயமில்லை” என்று துறை வேறிட்டுப் போனாரிறே–
33- வேத வித்துக்களும் மிக்க வேதியரும் சந்தஸாம் மாதாவாலும், அதுக்கும் தாயாய்த் தாயினுமாயின செய்யுமத்தாலும் பிறப்பிக்குமது இருவர்க்கும் ஸ்ரேஷ்ட ஜந்மம்.
இனி மேல் இவர்களிருவர்க்கும் ஜந்ம நிருபக கூடஸ்தரிருக்கும்படி என் என்ன; இவை இப்படிப் பட்டிருக்கும் என்கிறார் (வேதவித்துக்களும்) என்று தொடங்கி. ‘ யே ச வேத விதோ விப்ரா” (பார. ஆர.) என்கிற. வேத வித்துக்கள், ““காயத்ரீம் சந்தஸாம் மாதா’‘ என்கிற க,௱யத்ர் யுபதேஸத்தாலே பிறப்பிக்குமது கர்ம நிஷ்ட,னுக்கு ஸ்ரேஷ்ட ஜந்மம்; ‘“யே சாத்,யாத்ம விதோ ஜநா?” என்கிறபடியே மிக்க வேதியரான வேத தாத்பர்யம் கைப்பட்டவர்கள் ““ஸர்வ மஷ்டாக்ஷராந் தஸ்தம்”” (வ்ரு.ஹா. )என்கிறபடியே, அந்த காயத்ரி தனக்கும் மாத்ரு ஸ்தாநமாய், “பெற்ற தாயினுமாயின செய்யும்”‘ (திருமொழி–1– 1 – 9) என்கிறபடியே ஸரீரோத்பத்தி மாத்ர மன்றியிலே ஜ்ஞாந விகாஸத்தைப் பண்ணிக் கொடுப்பதான திருமந்த்ரத்தாலே பிறப்பிக்குமது கைங்கர்ய நிஷ்டர்க்கு ஸ்ரேஷ்ட ஜந்மம். “ஜந்மநா ஜாயதே ஸூத்ர? கர்மணா ஜாயதே த்விஜ? । வேதாப்,யாஸேந விப்ரத்வம் ப்,ரஹ்ம வித் ப்ராஹ்மணோ விது,” என்றும், “ஸ ஹி வித்யாதஸ்“ தம் ஜநயதி தச் ச்ரேஷ்ட,ம் ஜந்ம” (ஆப.த.1 – 1 – 16) என்னக் கடவதிறே
34-அந்தணர் மறையோர் என்றும், அடியார் தொண்டர் என்றும் இவர்களுக்கு நிரூபகம்
இப்படி ஸ்ரேஷ்ட ஜந்மரான இருவர்க்கும் நிரூபகம் ஏதென்னில் (அந்தணர் இத்யாதி, ). “’துணை நூல் மார்விலத்தணர்”” (திருமொழி 1 – 5 – 9) என்றும், ”தீயோம்புகைமறையோர்’” (திருமொழி 7 – 9 – 7) என்றும் சொல்லுகிற இவை கர்ம நிஷ்டரர்க்கு நிரூபகம். “வேதார்த்த அநுஷ்டாந யோக்யர் அந்தணர்” என்றும், ‘வேதார்த்த அநுஷ்டாந பரர் மறையோர்’ என்றும் சொல்லக் கடவது. இனி, “அணியரங்கன் திருமுற்றத்தடியார்”” (பெரு. திரு 1 – 10) என்றும், “’அக மகிமும் தொண்டர்”” (பெரு.திரு 1 – 10) என்றும் சொல்லுகிறபடியே கைங்கர்ய நிஷ்டனுக்கு நிரூபகம் – அடியார்-கிஞ்சித்கார அர்ஹர். தொண்டர்-கிஞ்சித்கார ஸ்வபாவர்
35-ஒரு தலையில் க்ராம குலாதி வ்யபதேஸம் குலந்தரும் மாசில் குடிப்பழி என்று பதியாகக கோயிவில் வாழுமென்பர்கள்.
கர்மகைங்கர்யங்களில் நிஷ்டராயிருக்கும் இருவர்க்கும் வ்யபதேஸம் ஏதென்னில் (ஒரு தலையில் க்ராம குலாதி வ்யபதேஸம் என்று தொடங்கி). கரம நிஷ்டரை க்ராம குலாதிகளாலே வ்யபதேஸிக்கக் கடவது; கைங்கர்ய நிஷ்டனுக்கு அந்த க்ராம குலாதிகளால் வருகிற வ்யபதேஸம் ”குலந் தரும்’” (திருமொழி 1 – 1 – 9) என்றும், “மாசில் குடிப் பிறப்பு” (மூ.திருவ. 10)என்றும் பகவத் ஸம்பந்த ஜ்ஞாநத்தாலே இதர வ்யாவ்ருத்தமான வைஷ்ணவ ஜாதீயனான இவனுக்கு அவத்யமாகையாலே நிரவத்யமான பகவத் ஸம்பந்த ப்ராதாந்யமே தோற்றும்படியாக, ““வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்” (நா.திரு.8 – 9) என்றும், “கோயிலில் வாழும் வைட்டணவர்” (பெரியா.திரு. 5 – 1 .. 3) என்றும் சொல்லுகிறபடியே பகவத் ஸம்பந்தமுள்ள தேஸத்தையிட்டும், பகவத் ஸம்பந்த தந் தன்னை யிட்டும் வ்யபதேஸிக்கக் கடவது; “ஏகாந்த வ்யபதேஷ்டவ்யோ நைவ க்ராம குலாதி,பி। விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி நத்யாஸ் தஸ்யைவ நாமாதி, ப்ரவிஷ்டாயா யதார்ணவம் ! ஸர்வாத்மநா ப்ரபந்தஸ்ய விஷ்ணு மேகாந்திநஸ் ததா”” என்னா நின்றதிறே –
36-விப்ரர்க்கு கேரத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராஸர பாராஸர்ய போதாயநாதி,கள்; ப்ரபந்ந ஜந கூடஸ்தர் பராங்குசா பரகால யதிவராதிகள்.
இனிமேல் இருவருடையவும் கூடஸ்தரைச் சொல்லுகிறது (விப்ரர்க்கு என்று தொடங்கி). முற்பட்ட ப்ராஹ்மணர்க்கு பராஸர(வ்யாஸ)வஸிஷ்டாதிகள் கோத்ர குருக்களுமாய்- போதாயநாதிகள் ஸூத்ர குருக்களுமாய், (தத் தச் சரண- உபயங்களில்) பூர்வ பூர்வ புருஷர்கள் கூடஸ்தருமாய் இருப்பர்கள். ப்ரபந்ந ஜந கூடஸ்த ர் ““பத்யுஸ் ஸ்ரிய? ப்ரஸாதேந ப்ராப்த ஸார்வஜ்ஞ்ய ஸம்பதம் ! ப்ரபந்ந ஜந கூடஸ்தம் ப்ரபத்யே ஸ்ரீபராங்குஸம்?” (பரா.௮..] என்றும், ‘‘ராமாநுஜாங்க்ரி ஸரணோஸ்மி குல ப்ரதீபஸ் த்வாஸீத் ஸ யாமுந முநேஸ் ஸ ச நாத வம்ஸ்யச । வம்ஸ்ய? பராங்குஸ முநேஸ்ஸ ச ஸோபி தேவ்யா ததாஸஸ் தவேதி வரதாஸ்மி தவேக்ஷணீய?” (வரத.ஸ்தவே 102) என்றும் சொல்லுகிறபடியே நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் தொடக்கமான ஆழ்வார்களும், உடையவர்க்கு முன்பும் பின்புமுள்ள ஆசார்யர்களும் என்கிறார்
37-அத்யயந ஜ்ஞாநாநுஷ்டாநங்களாலே ப்ராஹ்மண்யமாகிறாப் போலே சந்தங்களாயிரமும் அறியக் கற்று வல்லரானால் வைஷ்ணவத்வ ஸித்தி,.
இனிமேல் விப்ரரூம் ப்ரபந்நருமான இவர்களிருவர்க்கும் ப்ராஹ்மண்ய ஸித்தி, ஹேது எது? வைஷ்ணவத்வ ஸித்தி, ஹேது ஏது? என்னச் சொல்லுகிறார் (அத்யயந ஜ்ஞாதாநுஷ்டாநங்களாலே என்று தொடங்கி). அத்யயநமாவது – ஓதுகை. ஜ்ஞாநமாவது அதில் அர்த்த பரிஜ்ஞாநம். அநுஷ்டாநமாவது – அறிந்தபடியே அநுஷ்டிக்கை என்று இவற்றாலே ப்,ராஹ்மண்ய மாகிறாப் போலே, (சந்தங்களாயிரமும்) ““சந்தங்களாயிரத்திவை வல்லார்” (திருவா. 10 – 9 – 11) என்று சந்தோ ரூபமான ஆயிரத்தையும், “அறியக் கற்று வல்லார் வைட்டணவர்”’ (திருவா. 5 – 5 – 11) என்கிறபடியே திருவாய்மொழி ஆயிரமும் அத்யயநம் பண்ணி, ஆசார்ய முகத்தாலே அர்த்த ஸ்ரவணம் பண்ணி, அறிந்த படியே அநுஷ்டிக்கவும் வல்லாரானாலாய்த்து வைஷ்ணவத்வம் ஸித்தித்ததாவது. ‘ஸ்வாத்யாயோத் யேதவ்ய?”‘ (தை. ஆ.2) என்கிற விதி போலே “அத்யேதவ்யம் த்விஜ ஸ்ரேஷ்டை வேத ரூபமித,ம் க்ருதம்?” என்று அந்த வேதாந்த தாத்பர்யமாய், இந்த திராவிட வேதத்துக்கு உள்ளீடான பாகவத ஸேஷத்வ பர்யந்தமான பகவச் சேஷத்வ பரிஜ்ஞாநா பாவத்தால் ப்ராஹ்மண்ய ஸித்தியுமில்லை –
38–இந்த உட்பொருள் கற்றுணர்ந்து மேலைத் தலைமறையோ ராகாதாரை அயல் சதுப்பேதிமார் என்று உத்பத்தி நிரூபிக்கும்.
அவர்களுடைய உத்பத்தியும் நிரூபிக்க வேணுமென்கிறார் (இந்த உட்பொருள் கறறுணர்ந்து என்று தொடங்கி). ““மிக்க வேதியர் வேதத்தினுட்பொருள்‘” (க.நு.சி. 9) என்று உபநிஷத் குஹ்யமுமான இந்த த்ராவிட வேதத்தினுடைய ரஹஸ்யார்த்தத்தை, (கற்றுணர்ந்து மேலைத் தலைமறை யோராகாதாரை) ““வேட்பனவும்” (மு.திருவ.66) என்கிறபடியே கற்றுணர்ந்தும் அநுஷ்டாந பரருமாகாதாரை ““அயல் சதுப்பேதிமார்கள்”” (திருமாலை 39) என்று அசலிட்டு உத்பத்தி நிரூபிக்கக் கடவதிறே. ‘‘ஓளபாஸநி ஸஹஸ்ரேப்யோ ஹ்யாஹிதாக்நிர் விஸிஷ்யதே | ஆஹிதாக்நி ஸஹஸ்ரேப்,யஸ் ஸோமயாஜி விஸிஷ்யதே | ஸோமயாஜி ஸஹஸ்ரேப்,யஸ் ஸத்ரயாஜி விஸிஷ்யதே ! ஸத்ரயாஜிஸ் ஸஹஸ்ரேப்,யஸ் ஸர்வவேதாந்த பாரக,ீ ! ஸர்வ வேதாந்த வித்கோட்யா விஷ்ணு ப,க்தோ விஸிஷ்யதே । விஷ்ணு ப,க்தி விஹீநோ யஸ் ஸர்வ ஸாஸ்த்ரார்த்த, வேத்,யபி ! ப்,ராஹ்மண்யம் தஸ்ய ந பவேத் தஸ்யோத் பத்திர் நிரூப்யதாம் ‘ –(பாத்ம புராணம் –)என்னக் கடவதிறே –
“39-“எவ்வுலகத் தெவ்வெவையும்’” என்கையாலே வேதம் பஹு வித ம். வேத அத்,யயந விதி, போலே இப் ப்ரப,ந்த,அத்,யயநமும் விதி, என்பது, இதினுடைய அர்த்த, பரிஜ்ஞாநா பாவத்தில் உத்பத்தி நிரூபிக்க வேணு மென்பதாய்க் கொண்டு வேதத்தோ டொக்கச் சொல்லா நின்றீர். இதுவும் பிற்றை வேதமோ என்னில் ; இதுவும் வேதம்; இது என்ன வேதம் என்ன; “‘வேதா வா ஏதே । அநந்தா வை வேதா ச’” (யஜு. கா.) என்றும், ‘“ஓதுவாரோத்தெல்லாம் எவ்வுலகத் தெவ்வெவையும்”* (திருவா. 3 – 1- 6) என்றும் சொல்லுகிறபடியே அத்யேதாக்களுடைய பேதத்தாலும், லோக பேதத்தாலும் வேதம் ப,ஹு வித,ம் என்கிறார் –
40-இதில் ஸம்ஸ்க்ருதம், த்ராவிடம் என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே.
ஆனால் அது ஸம்ஸ்க்ருதமாய், இது த்ராவிடமாய்ப் பிரிந்திராறின்றதீ என்ன, சொல்லுகிறது மேல். (இதில்) இந்த வேதத்தில். (ஸம்ஸ்க்ருதம் த்ராவிட,ம் என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே என்று) வேதங்கள் தான் ஒன்று போலேயோ மற்றது? ஸம்ஸ்க்ருத வேதந்தான் ரூக்,யஜுஸ் ஸாம அத,ர்வணங்களாய்ப் பிரிந்தாப் போலே வேதந்தான் ஸம்ஸ்க்ருத ரூபமாயும், த்ராவிட ரூபமாயும் பிரிந்ததென்கிறார் –
41-செந்திறத்த தமிழென்கையாலே ஆகஸ்த்யமும் அநாதி..
ஆனாலும் அந்த ஸம்ஸ்க்ருத பாஷைதான் அநாதியாயிரா நின்றதே என்ன ; (செந்திறத்த தமிழென்கையாலே ஆகஸ்த்யமும் அநாதி,) ““செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி’ (திருநெடு. 4) என்று ஸம்ஸ்க்ருதத்தோடே ஸஹபடிக்குமிடத்தில் ‘“செந்திறத்த தமிழோசை” என்றதுக்குப் பின்பிறே “வட சொல்லாகி’” என்றது. ஆகையாலே இரண்டும் அநாதி யிறே-
42-வடமொழி மறை என்றது தென்மொழி மறையை நினைத்திறே.
ஆனால் அந்த பாஷை அநாதி யாகிறது; திருவாய்மொழிக்கு வேதத்வமுண்டாக வேணுமென்கிற நிர்பந்த, முண்டோ என்னில்; (வடமொழிமறை என்றது – தென்மொழி மறையை நினைத்திறே) வேதம் என்னாதே ஸம்ஸ்க்ருத வேதம் என்கையாலே த்ராவிட, வேதமுமுண்டாக வேணுமென்கிறார்-
43-வேத,சதுஷ்டய-அங்கோபாங்க,ங்கள் பதினாலும்போலே, இந் நூலுக்கும் இருந் தமிழ் நூற் புலவர் பனுவலாறும், மற்றை எண்மர் நன் மாலைகளும்.
அங்கோபாங்க ஸஹிதத்வம் இதுக்குமுண்டோ என்ன, உண்டென்கிறார் மேல் (வேத,சதுஷ்டயாங்கோபாங்க,ங்கள் என்று தொடங்கி), ““அங்காநி வேதாஸ் சத்வாரோ மீமாம்ஸா ந்யாய விஸ்தர? ! புராணம் த,ர்ம ஸாஸ்த்ரஞ்ச வித்,யா ஹ்யேதாஸ் சதுர்தஸ -என்கிறபடியே சதுர்தஸ வித்யாஸ்தாந வேதம் போல் இங்கும் இவருடைய ப்ரபந்தங்கள் நாலும் நாலு வேதத்தினுடைய ஸ்தாநேயாய், “இருந் தமிழ் நூற் புலவன் மங்கை யாளன்?” (திருமொழி 1 – 7 – 10) என்றும், ““கலியன் வாயொலி செய்த பனுவல் ” (திருமொழி 1 – 4 – 10) என்றும் சொல்லுகிற திருமங்கை யாழ்வாருடைய ப்ரபந்தங்களாறும், அங்கங்களினுடைய ஸ்தாநத்திலேயாய், மற்றை எட்டு ஆழ்வார்களுடைய ப்ரபந்தங்களும் உபாங்கங்களா யிருக்கும் –
44-ஸகல வித்யாதிக வேதம் போலே இதுவும் திவ்ய ப்ரபந்த, ப்ரதாநம்.
ஸகல வித்யைகளிலும் வைத்துக் கொண்டு அங்கியான வேதம் அதிகமாயன்றோ இருப்பது என்னில், (ஸகல வித்யாதிக வேதம் போலே) அந்த ஸகல வித்யைகளிலும் அதிகமான வேதம் ப்ரதாநமானாப் போலே இதுவும் திவ்ய ப்ரபந்தங்களில் ப்ரதாநமாயிருக்கும்.
45-வேத நூல், இருந் தமிழ் நூல், ஆஜ்ஞை, ஆணை, வசையில், ஏதமில், ௬ருதி, செவிக்கினிய, ஓதுகின்றதுண்மை, பொய்யில் பாடல், பண்டை, நிற்கும், முந்தை, அழிவில்லா என்னும் லக்ஷணங்கள் ஓக்கும்.
ஆனால் வேதத்துக்குச் சொல்லுகிற ”வேத ஸாஸ்த்ராத் பரம் நாஸ்தி” (ஹரிவம்ஸே ) என்கிற ஸாஸ்த்ரத்வமும், ““ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா” என்கிற பகவதாஜ்ஞா ரூபத்வமும், ப்ரம விப்ரலம்பாதி, தோஷ ரஹிதத்வமும், பூர்வ பூர்வோச்சாரண க்ரமத்தாலே உத்த ரோத்தரோச்சார்யமாணத்வம், நித்யத்வம், ஸத்யத்வம் தொடக்கமான லக்ஷணங்கள் இத்திருவாய்மொழிக்குமுண்டோ என்னில், உண்டென்கிறார் (வேதநூல் என்று ் தொடங்கி). “வேதநூல்?” (திருச்ச.72) என்றாப் போலே ““இருந்தமிழ்நூல் ‘” (திருமொழி 1 – 7 – 10) என்று ஸாஸ்த்ரத்வமும், ”ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா’” என்றாப்போலே ஆணை யாயிரத்து”” (திருவா. 6 – 3 – 11) என்று பகவதநுஸாஸந ரூபமாய், “வசையில் வேதம்”” (திருமொழி 5 – 3 – 2) என்றாப் போலே ““ஏதமிலாயிரம்” (திருவா. 1 – 0 – 11) என்று ப்ரம விப்ரலம்பாதி, தோஷ ரஹிதமாய், “*சுடர் மிகு சுருதி”’ (திருவா. 1 – 1 – 7) என்றும், *’செவிக்கினிய செஞ்சொல்?” (திருவா. 10 – 6 – 11) என்றும் ஸ்ராவ்யமாய், ““வேத நூலோதுகின்றதுண்மை?” (திருச்ச.72) என்றாப் போலே ‘“பொய்யில் பாடலாயிரம்”? (திருவா. 4 – 3 – 11) என்று இதில் சொல்லுகிற அர்த்தங்களில் ஒரு பொய் இன்றியிலே இருப்பதாய், ‘“பண்டைநான்மறை” (திருமொழி 5 – 7 – 3), “நிற்கும் நான்மறை”! (திருவா. 6 – 5 – 4) என்றாப் போலே ‘‘முந்தை யாயிரம்’‘ (திருவா. 6 – 5 – 11) என்றும், “அழிவில்லா ஆயிரம்”’ (திருவா. 9 – 7 – 11) என்றும் ஆத்யந்த ரஹிதமாய், அதிற் சொல்லுகிற லக்ஷணங்கள் இதுக்குமுண்டென்கிறார் –
46-‘“சொல்லப்பட்ட”” என்றதில் கர்த்ருத்வம் “ஸ்ம்ருதி – அத்தை ஸ்வயம்பு படைத்தான்’ என்றது போலே
ஆனால் “சொல்லப்பட்ட ஆயிரத்துள்” (திருவா. 8 – 10 – 11) என்று இவர் தம்மாலே சொல்லப்பட்டது என்கிற இதில் கர்த்ருத்வத்தால் நித்யத்வ-அபெளருஷேயத்வ-ஹாநி வாராதோ என்னில், வாராதென்கிறார். அது என் போல வென்னில், “முன்னம் திசை முகனைத் தான் படைக்க, மற்றவனும் முன்னம் படைத்தனன் நான்மறைகள்”! (பெ.திருமடல்) என்றும், ““அநாதி நிதாநா ஹ்யேஷா வாகுத்ஸ்ருஷ்டா ஸ்வயம்பு வா?‘ (பார-சபா ) என்றும் சொல்லுகிறபடியே, ஸ்ம்ருதி, “ப்ரஹ்மா வேதங்களைப் படைத்தான் ‘ என்ற இடத்தில், அந்த ப்,ரஹ்மாவால் வந்த கர்த்ருத்வத்தால் அவறறினுடைய நித்யத்வ-அபெளருஷேயத்வங்களுக்கு ஹாநி வாராதாப் போலே இதுக்கும் நித்யத்வ அபெளருஷேயத்வ ஹாநி வாராது –
47-நால் வேதங்கண்ட புராண ருஷி-மந்த்ர தர்மிகளைப் போலே இவரையும் ருஷி, முனி, கவி என்னும்.
(நால் வேதங் கண்ட இத்யாதி, ) ”நால் வேதங் கண்டானே”’ (திருமொழி 9 – 10 – 1) என்கிறபடியே நாலு வேதங்களைக் கரை கண்ட வர்களையும் அஷ்டாதஸ புராண கர்த்தாக்களையும் “*சதுர் வேத தர்ஸநாத் ருஷி:‘” என்கிறபடியே ருஷிகளென்றும், ”ஜிதந்தே”” இத்யாதி, ஜிதந்தா- மந்த்ர தர்ஸிகளான சவ்நகாதிகளை முனிகளென்றும், இதிஹாஸ கர்த்தாக்களான ஸ்ரீ வால்மீகி பகவான் போல்வாரை கவிகளென்றும் சொல்லுமாப் போலே இவரையும் ““ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்த்வமிவோதிதம் | ஸஹஸ்ர ஸாகாம் யோ த்ராஷீத், த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம்” (பரா.௮.) என்றும், ““ஸட,கோபமுநிம் வந்தே, ஸடாநாம் புத்தி தூஷகம் | அஜ்ஞாநாம் ஜ்ஞாந ஜநகம் திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம்””’ (பரா. அ) என்றும், “உலகம் படைத்தான் கவி” (திருவா. 3 – 9 – 10) என்றும் சொல்லுகையாலே இவரையும் ருஷி முனி கவி என்னும் என்கிறார் –
48-“படைத்தான் கவி” என்ற போதே இதுவும் யதா பூர்வ கல்பதமாமே.
‘ஒன்றி யொன்றி உலகம் படைத்தான் கவியாயினேற்கு’” (திருவா. 4 – 10 – 10) என்று அடுத்தடுத்து ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணினவனுக்குக் கவி யானேன் என்கையாலே “ஸுூர்யா சந்தரமஸெள ததா யத பூர்வ மகல்பயத்?” (தை. உ.) என்று ஸ்ருஷ்டி தோறும் ஸூர்யா சந்த்ரமாக்கள் உண்டானாப் போலே ஸ்ருஷ்டி தோறும் இந்த ப்ரபந்தமும் உண்டென்னுமிடம் தோற்றுகிறது. இத்தாலும் இதினுடைய அநாதித்வம் சொல்லுகிறது.
49-உறக்கம் தலைக் கொண்ட பின்னை மறை நான்குமுணர்ந்த தங்களப்பனோடே ஓதின சந்தச் சதுமுகன் சலங்கலந்த வெண் புரி நூல் மானுரி திரிதந்துண்ணும் காமனுடல் இருக் கிலங்கு ஜயேஷ்ட புத்ராதிகளுக்கு மறை பயந்தாப் போலே ஆதுமில் காலத் தெந்தையான வாய் முதலப்பன் பிரம குருவாய் இராப் பகல் முன் சொல்லக் கற்றனமே என்ற இவரும் நாவினால் நன்மையால் என்று ஓத வல்ல பிராக்களை **கண்மின்கள்’” என்று சொல் பயிற்ற, வேதம் ஓதுவாரோத்தாகையாலே அதர்வணாதிகள் போலே இதுவும் பேர் பெற்றது.
ஆனால் அதிகாரிகள் ஸம்ஹ்ருதராக வேதம் நித்யமானபடி என் என்னில், ஸர்வஜ்ஞனான ஸர்வேஸ்வரன் நித்யனாகையாலே அவன் திருவுள்ளத்திலே வாஸனை கிடந்து ஸூப்த ப்ரபுத்த, ந்யாயத்தாலே ஸம்ஹாராநந்தரம் “யோ ப்,ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச பரஹிணோதி தஸ்மை” (ஸ்வே.6 – 18) என்கிறபடியே ப்,ரஹ்மாவை உண்டாக்கி, அநந்தரம் அவனுக்கு வேத ப்ரதாநத்தைப் பண்ண, ஸர்வேஸ்வரனோடே அத்யயநம் பண்ணின அந்த ப்ரஹ்மாவானவன் ஜ்யேஷ்ட புத்ரனான ருத்ரன் தொடக்கமானாரை ஒதுவித்தாப் போலே ஸர்வேஸ்வரன் இந்த த்ராவிட வேத ஸம்ஸ்காரத்தைத் திருவுள்ளத்திலே வைத்து இவரை ஓதுவிக்க, இவரும் தம் பக்கலில் க்ருதஜ்ஞரான ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை அத்யயநம் பண்ணுவிக்க, இதுவும் இவரை யிட்டு நிரூபிக்கும்படி யாய்த்து என்கிறார் (உறக்கம் தலைக் கொண்ட பின்னை என்று தொடங்கி). “உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட பின்னை”’ (பெ. திருமடல்) என்கிறபடியே “ந ப்ரஹ்மா நேஸாநோ நேமே த்யாவாப்ரூதிவீ ந நக்ஷத்ராணி”’ (மஹோபநிஷத்) என்றும், ““ப்ருதி வ்யப்ஸு ப்ரலீயதே” என்று தொடங்கி, “மஹாநவ்யக்தே லீயதே அவ்யக்தம் அஷரே லியதே அக்ஷரம் தமஸி லீயதே தம? பரே தேவ ஏகீ பவதி” ‘(ஸு.உ.), “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்” (ம.உ.) என்றும், ““ஒன்றுந் தேவுமுலகுமுயிரும் மற்றும் யாதுமில்லாவன்று”” (திருவா. 4 – 10 – 1) என்றும் சொல்லுகிறபடியே ஸகல தத்த்வங்களும் அவர் பக்கலிலே ஏகீபவித்து ‘அப்ரஜ்ஞாதமலக்ஷணம்”‘ (மநு. 1 – 5) என்கிறபடியே நாம ரூப விபாகா நர்ஹமாய் அவனை யிட்டு நிரூபிக்க வேண்டும்படி அவனெருவனுமேயாய் மேல் ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே சேதநருடைய ரக்ஷண ப்ரகாரங்களைத் திரு வுள்ளத்தோடே கூட்டுகிற தஸை யிறே ஸம்ஹாரமாவது.
பின்னை ஸம்ஹாராநந்தரம் யோக, நித்ராஸமா ரூடனாய் ஸ்ருஷ்ட் யுந்முகனான காலத்தில் ““உணர்ந்தாய் மறை நான்கும்’” (இ.திருவ.48) என்கிறபடியே நாலு வேதங்களையும் ஸ்மரித்த “திசை முகனார் தங்களப்பன்” (திருமொழி 2 – 2- 7) என்கிறபடியே தனக்குப் பிதாவான ஸர்வேஸ்வரனோடே அத்யயநம் பண்ணின.–முன்புள்ளவையை யிறே அத்யயநம் பண்ணலாவதும்-ஸ்மரிக்கலாவதும்- ”சந்தச் சதுமுகன்” (பெரியா. 2 – 5 8) என்கிறபடியே ப்,ரஹ்மாவானவன் ”சலங் கலந்த செஞ்சடை”, (திருச்ச. 113) “வெண் புரிநூல் மார்வன்”’(மு.திரூவ. 46) , ““மானுரியதளுமுடையவர்‘ (திருமொழி 10 9 – 5) , ““பிறர் மனை திரி தந்துண்ணும்”’ (திருக்குறு. 19) , ““காமனுடல் கொண்ட தவத்தான்”’ (நா.திருவ.. 79) , ““இருக்கிலங்கு திருமொழி வாய் எண்டோளீசர்”’ (திருமொழி 6 – 6 – 9) என்றும், நித்ய ஸ்நாந யஜ்ஞோபவித க்ருஷ்ணாஜிந தாரணமும், பிக்ஷாசரணமும், ஜிதேந்த்ரியத்வமும், ஸதா அத்யயந பரத்வமுமாகிற ப்ரஹ்மசர்ய லக்ஷணத்தை உடையனாய், “ப்ரஹ்மண? புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய”’ என்கிறபடியே ஜ்யேஷ்ட புத்ரனான ருத்ரன் முதலானார்க்கு ‘சரணா மறை பயந்த தாமரையான்’‘ (மூ.திருவ. 60) என்று புருஷார்த்த, தத் ஸாதந ஜ்ஞாந ஸாதநமான வேதத்தை ஓதுவித்தாப் போலே ““ஆதுமில் காலத்தெந்தை”’ (திருவா. 3 – 4 – 4) என்கிறபடியே-சேதநாசேதநாத்மகமான ஸகல பதார்த்தங்களும் வஸ்துத்வ-நாம பாக்த்வங்களை இழந்த காலத்தில் இவற்றைத் தன் பக்கலிலே ஏறிட்டுக் கொண்டு நோக்கி, “என்கை” என்கிற படியே ஸ்வாமியா யிருக்கிறவன். “என் வாய் முதலப்பன்’‘ (திருவா. 7 – 9 – 3) எனக்கு வாய்த்த ப்ரதமோபகாரகன் என்கிற. ““பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி’” (பெரியா. 5 – 2 – 8) என்கிறபடியே ஸர்வேஸ்வரன் தானே இவர் தமக்கு ஆசார்யனாய் வந்து ““எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகலோதுவித்து”’ (பெரியா. 5 – 2 – 3) என்கிறபடியே திவா ராத்ரமோதுவித்து. இப்படி ஓதுவிக்குமிடத்தில் “என் முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே”’(திருவா. 7 – 9 – 2) என்கிறபடியே ஈஸ்வரன் முன்னுருச் சொல்ல, “’திருநாமச் சொல் கற்றனமே” (திருவிரு. 64) என்று அநூச்சாரணம் பண்ணினேன் என்று அவனோடே ஓதின இவரும். “‘நாவினால் நவிற்றின்பமெய்தினேன்”’ (க.நு.சி. 2) என்று தொடங்கி ““குருகூர் நம்பிப் பாவினின்னிசை பாடித் திரிவன்”” என்றும், “நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவரா” ம்படியான “என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன்’‘ (க.நு.சி,4) என்கிற ப்ரதிபத்தியை யுடைய *ஓத வல்ல பிராக்களான ஸ்ரீமதுரகவிகள் போல்வாரை ““கன்மின்களென்றும்மை யான் கற்பியா வைத்த மாற்றம்” (திருவா, 6 – 8 – 6) என்கிறபடியே இப் ப்ரபந்தத்தை அப்யஸியுங்கோள் என்று ““சொல் பயிற்றிய நல் வளமூட்டினீர்”” (திருவா. 9 – 5 – 8) என்கிறபடியே சொல்லிச் சொல்லுவிக்க, வேதமானது “’ஓதுவாரோத்தெல்லாம் ‘? (திருவா, 3 – 1 – 6) என்கிறபடியே அத்யேதாக்களை யிட்டு, அதர்வணமென்றும், தைத்திரீயம் என்றும் பேர் பெற்றாப் போலே இதுவும் “சட கோபன் சொல்”” என்கையாலே ‘திருவாய்மொழி’ என்று பேர் பெற்றது –
50-இயற்பா மூன்றும் வேத த்ரயம் போலே; பண்ணார் பாடல் பண்புரை இசை கொள் வேதம் போலே. :
கீழே இவருடைய ப்ரபந்தங்கள் நாலும் வேத சதுஷ்டயம் போலே என்றது, எந்த ப்ரபந்தம் எந்த வேத ஸ்தாநத்திலே என்னில், (இயற்பா மூன்றும் என்று தொடங்கி). இயற்பாவா யிருக்கிற திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி என்கிற ப்ரபந்தங்கள் மூன்றும் ருக், யஜூர் அதர்வணம் என்கிற மூன்று வேத ஸ்தாநத்திலே; ”பண்ணார் பாடல்”’ (திருவா, 10 – 7 – 5) என்கிற திருவாய்மொழி “பண்புடை வேதம்”, (திருவா. 6 – 6 – 5) ‘இசை கொள் வேதநூல்” (திருமொழி 5 – 3 – 2) என்றும் சொல்லுகிற காந ப்ரதாநமான ஸாம வேதம் போலே என்கிறார் –
51-ருக்கு ஸாமத்தாலே ஸ ரஸமாய், ஸ்தோப,த்தாலே பரம்புமாப் போலே சொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரமாயிற்று.
இதில் ருக்கு ஸாமமாகப் பாடப்படுகிறாப் போலே ருக் வேத ஸ்தாநே யாயிருக்கிற திருவிருத்தம் திருவாய்மொழியாகப் பாடப்படும் என்கிறார் (ருக்கு ஸாமத்தாலே என்று தொடங்கி). ஸாம ஸங்க்,ரஹம் ருக்கு; ருக் விவரணம் ஸாமம். அப்படியே திருவிருத்தமும் திருவாய்மொழியும். (ருக்கு ஸாமத்தாலே ஸரஸமாய்) ருக்கு ஸாமத்தோடேகூடி ரஸ ஸஹிதமாய். (ஸ்தோப,த்தாலே பரம்புமாப்போலே) ஸ்தோப,ம் என்கிறது ருக் வேதங்களை யொழிந்த “*ஹாவு ஹாவு ஹாவு”” இத்யாதிகளாலே பாட, ஒன்று பத்தாக விஸ்த்ருதமாமாப் போலே *சொல்லார் தொடையலான இந் நூறு பாட்டும் ““இசை கூட்டி வண் சடகோபன்”‘ (திருவா. 2 – 4 – 11) என்கிறபடியே இசையிலே கூட்டினவாறே “அமர் சுவையாயிரம்”’ (திருவா. 1 – பி – 11)என்கிறபடியே ஸரஸமான ஆயிரமாயிற்று-
52-சந்தோகனென்று ஸாமாத்யமாகாமல் முதலிலே பிரித்து யாழ் பயில் காந ஸ்வரூபியை *பாலையாகி”” என்று விஸேஷிக்கையாலே வேத கீதச்சாமி நானென்ன ஸாமந் தோன்ற உத் கீத ப்ரணவத்தை ப்ரத மத்திலே மாறாடி சரமகதி முடிவாகத் தொண்டர்க்கமுதென்ன தேவாந்நமாக்கி மஹா கோஷ நல் வேத வொலி போலே மஹாத்,யயந மென்னப் பாடுகையாலே இத்தை சாந்தோக்ய ஸமமென்பர்கள். ஸாமந்தான் ஆயிரமாய் அநேக விதமாயிருக்குமே. எந்த ஸாமத்தோடே ஓப்பாகிறது என்னில், சாந்தோக்ய ஸமமாயிருக்கும் என்கிறார் மேல் (சந்தோகன்) என்று தொடங்கி. ““சந்தோகன் பெளழியன் ஐந்தழலோம்பு தைத்திரியன் சாமவேதி”” (திருமொழி 5 – 5 9) என்கிற விடத்தில் ““’ஸாமவேதி” என்று ஸாம ஸாமாந்யமாகாமல் ““சந்தோகன்”” என்று முதலிலே பிரித்து “’முன்னல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர்சுவை”’ (திருவா 2-5 – 7) என்கிற காந ரூபியை காந ரஸமானவனை; ““யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி”’ (திருமொழி 7 – 3 – 7) என்று கொண்டு காந ஸ்வரூபி என்று ஸமுதாயமாக்காமல், “பாலை?””, “யாழ்” என்கிற பண்ணை யிட்டு விஸேஷிக்கையாலே “சாம வேத கீதனாய”” (திருச்ச. 14) என்றும், “’வேதா நாம் ஸாமவேதோஸ்மி?” (கீதை 10 – 22) என்றும் அவன் தன்னோடொக்க ஸமாநாதி, கரிக்கும் படியான சந்தோக ஸாமம் இத்திருவாய் மொழி என்னுமிடம் தோற்ற ‘“உத் கீத மேதத் பரமநுப்ரஹ்ம””, ““ஓங்காரோத் கீத மேவ”, “ஓமித் யேததக்ஷர முத் கீத முபாஸீத”‘(சா. 1 – 1 – 1) என்று சொல்லுகிற உத் கீத ப்ரணவத்தை ப்ரதமத்திலே மாறாடி. இப் ப்ரபந்தத்துக்கு உத்கீதம் என்கிற இது ப்ரதாநம் என்னுமாகாரம் தோன்ற ப்ரணவத்தை ப்ரபந்த ஆதியிலே “உயர்வற-மயர்வற, அயர்வறும்”” என்று மாறாடி “உயர்ந்தே” என்று சரம கதி முடிவாக அகார மகாரங்களிரண்டினுடைய சரமமான நடு தகாரம் அத்தைத் திருவாய்மொழிக்கு முடிவாக்கி {அகார-உகாரங்களின் சரமமான தகாரத்தைத் திருவாய்மொழிக்கு முடிவாக்கி!.
அன்றிக்கே அர்ச்சிராதி,யை முடிவாக்கி என்னவுமாம். அதுக்கடி – முடிவிலே சூழ் விசும்பணிமுகிலாகையாலே. “’தொண்டர்க்கமுதுண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்”’ (திருவா. 9 – 4 – 9) என்று இப் ப்ரப,ந்த,த்தை ““ஹாவு ஹாவு ஹாவு” என்று தொடங்கி, “அஹமந்நாதோரஹமந்நாதோரஹமந்நாத,?‘” என்று தேவ போக்யமானாப் போலே,
ப,க,வத்,விஷயத்தில் சபலரானார்க்கு போக்யமாக்கி.““ஸர்வேப்யோபி ஹி வேதேப்ய: ஸாம கோஷோ மஹாநபூத் | அந்வ கோஷய தத்யர்த்த,ம் தேந ப்ரஹ்மாண்ட,மண்டபா ” என்று (மஹாகோஷம்) பெரிய ஆரவாரத்தை உடைத்தாயிருப்பது ஸாம கோஷமிறே. “எழுந்த நல்வேதத்தொலி”* என்றும், *“ஸாமத்வநி” என்றும் சொல்லுமாப் போலே இப்ப்ரபந்தத்தையும் மஹாத்யயநமென்னப் பாடுகையாலே பெரிய திருவத்யயந மென்னக் கடவதிறே. ஆகையாலே இத்தை சாந்தோக்ய ஸமமென்பர்கள் என்கிறார்
53-புரவியேழொரு காலுடைய தேரிலே திருச் சக்கர மொத்து கால சக்கரச் செங்கோல் நடாவி ஜ்யோதிஸ் சக்ரவொளி சுருக்கி அக்நீஷோமீய தோஜோம்ருதத்துக் கூற்றும்- மந்தேஹர்க்குச் செந்தீயும், முக்தி மார்க்கத் தலை வாசலும், கண்ணாவான் கண்ணில் பிறந்த கண்மணியும், த்ரயீ மயமுமான மண்டலத்திலே தண்டாமரை சுமக்க தோள் வளையும் குழையும், திருச் செய்ய முடியும் ஆரமும் படையும், திகழும் பொன் மேனியும், செஞ்சுடர்த் தாமரைக் கண்ணுமாய், அணி நிற மூர்த்தி ஈதென்னும்படி இரண்டையும் தன்னிறமாக்குகிற செய்யாளான வித்யையோடே அருக்கன் மேவின ஸதாத்யேய தேஜஸ்ஸின் ஸாம ரஸோத் காந நாமமுள்ளுறையான ஆத்யந்தங்களாலே ஓராயிரமாமவற்றிலே ஒன்றை ஆயிர முகத்தினா லருளின தீர்த்தம் போலே தீர்த்தங்களாயிரமுமாக விஸ்தரிக்கிறாரென்று வேத குரூபதேஸம்
அதிலே சொல்லுகிற அந்தராதித்யவித்யை தொடக்கமான வற்றையும் இதிலே சொல்லுமென்று கொண்டு முற்பட்ட யோஜனையை அருளிச் செய்கிறார் மேல் (புரவி ஏழொரு காலுடைய தேரிலே என்று தொடங்கி]. “காரார் புரவியேழ்”’ (சி. திருமடல்) என்றும், ““ஓருகாலுடைய தேரொருவன்”” (திருமொழி 5 – 7 – 8) என்றும், “ஸப்த யுஞ்ஜந்தி ரத மேக சக்ரம்”” (அருணம் 3) என்றும், “ஏகோ அஸ்வோ வஹதி ஸப்தநாமா‘ (அருணம் 3) என்று ஸப்தநாமா வாயிருப்பதொரு அஸ்வத்தாலே வஹிக்கப்படுவதாய், ஏக சக்ரியுமாயிருக்கிற தேரிலே-திருமால் திருக்கைத் திருச் சக்கரமொக்கும்”’ (திருவிரு. 86) என்கிறபடியே திருவாழி யாழ்வானோடே ஒப்புச் சொல்லலாய், (கால சக்கரச் செங்கோல் நடாவி) ““கால சக்கரத்தாய்” (திருவா. 7 – 2 – 7), ‘தனி வளர் செங்கோல் நடாவுதிர்’” (திருவிரு, 13) என்கிறபடியே கால சக்ர நிர்வாஹகமுமாய், (ஜயோதிஸ் சக்ரவொளி சுருக்கி) “துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி” (திருப்பள்ளி. 3) என்கிறபடியே நக்ஷத்ர தேஷஸ்ஸுக்கு ஸங்கோசத்தைப் பண்ணுமதாய்.
(அக்நீஷோமீய தேஜோம்ருதத்துக்கு ஊற்றும்) அக்நியினுடைய தேஜஸ்ஸூக்கும் சந்தரனுடைய அம்ருத கலைக்கும் உத்பத்தி ஸ்தலமுமாய். பூர்வாபரங்களாகிற பக்ஷ த்வயத்திலும் சந்த்ர கலையானது போவது வருவதாவது ஆதித்யன் பக்கல் நின்றுமிறே.
(மந்தேஹர்க்குச் செந்தீயும்)மந்தேஹரென்று – ஆதித்யனோடே உத,யாஸ்தமய ஸமயங்களிலே யுத்தம் பண்ணுவார் சில அசுரர்கள். அவர்களை ‘“எரிகொள் செந்தீ வீழ்” (திருவிரூ. 82) என்கிறபடியே தப்தமாக்குகைக்கு ஒரு அக்நி ஜ்வாலையுமாய்,
(முக்தி மார்க்கத் தலை வாசலும்)“’நக்ஷத்ராதாதித்யம்” என்று முக்தி மார்க்க த்வாரமுமாய்,-“ஸம்வத்ஸராதாதித்யம்‘”’ என்று ஆதித்யனைக் கூட்டி “’தத் பித்வா ஸூர்ய மண்ட,லம்”” என்றும், “தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு” (சி.திருமடல்) என்றும் சொல்லுகிறபடியே ஆதித்ய மண்டலத்தை பேதித்தே முக்தனுக்குப் போக வேண்டுகையாலும், மற்றவை யெல்லாம் கிட்டுமளவேயாய் ௮ண்ட பேதம் பின்பே (அண்ட பேதத்துக்கு முன்பே )யாகையாலே முக்தி மார்க்கத் தலை வாசலும் என்கிறார்.
(கண்ணாவான் கண்ணில் பிறந்த கண் மணியும்) *“’கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்கு’‘ (திருவாய். 1.- 8 – 3) என்றும், ““சஷுர் தேவாநாமூத மர்த்யாநாம்” (யஜு. ஸம். ச் – 6) என்றும் சொல்லுகிறபடியே தேவர்களுக்கு நேத்ர பூதனான ஸர்வேஸ்வரனுடைய “’சக்ஷோஸ் ஸூர்யோ அஜாயத’” (பு.ஸூ .) என்கிறபடியே திவ்ய சக்ஷுஸ்ஸைப் பிறப்பகமாக உடைத்தாய்-
”ஜக தேக சக்ஷுஷே”’ என்கிறபடியே ஜகத்துக்கு த்ருஷ்டி பூதமாய், (த்ரயீ
மயமுமான மண்டலத்திலே) ““தரயீ மயாய” என்கிறபடியே வேத மயமுமான ஆதித்ய மண்டலத்திலே (தண்டாமரை சுமக்க) ”தண்டாமரை சுமக்கும் பாதப் பெருமான்”” (திருவாய். 4 5 – 8) என்றும், “த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாரயாணஸ் ஸரஸி ஜாஸந ஸந்நிவிஷ்டா கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மயவபுஸ் த்ருத சங்க சக்ர” என்றும், ““மங்கல வைம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும்” (பெரியா.திரு, 1 – 8 -9) என்றும், ”திருச் செய்ய முடியுமாரமும் படையுந் திகழ” (திருவாய். 8 – 4 – 7) என்றும், ‘‘நீண்ட பொன் மேனியோடும்’” (திருவாய். 5- 5- 7), *“செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும்”’ (திருவாய். 5 – 4 – 9) என்றும் சொல்லுகிற படியே பாஹு-வலய-மகர குண்டல-அபிஷேக-ஹார-கேயூர- சங்க, -சக்ராதி, திவ்ய பூூஷணங்களாலும் விளங்கா நிற்பதுமாய், ““ருக்மாபம் ஸ்வப்ந தீ கம்யம் வித்யாத்து புருஷம் பரம்” (மநு. 12 – 122) என்றும், “’ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண?”‘ (சா. 1 – 6 – 6) என்றும் சொல்லுகிற ஸ்ப்ருஹணீயமான திவ்ய விக்ரஹத்தையும், “யதா கப்யாஸம் புண்டரீக மேவ மக்ஷிணீ”” (ச,ா.) என்கிறபடியேஆதித்ய கிரணத்தாலே அலர்த்தப்பட்டு சிவந்த தேஜஸ்ஸை யுடைய திருக் கண் மலரையுமுடைத்தாய்,
““அருக்கனணிநிறமும் கண்டேன்” (மூ.திரு. 1) என்றும், ““செய்யதோர் நாயிற்றைக் காட்டிச் சிரீதரன்மூர்த்தி”” (திருவாய். 4 – சீ – 2) என்றும் சொல்லுகிறபடியே ஆதித்ய தேஜஸ்ஸு போலே யிருக்கிற பகவத் விக்ரஹத்தையும், ப்ரபா -ப்ரபாவான்௧ளுடைய சேர்த்தியாலே ஸ்ரியப் பதித்வத்துக்கு ஸ்மாரகமு மாயிருக்கிற ஆதித்ய மண்டலத்தையும்,இவை யிரண்டையும் தன்னிறமாக்கும்படியான ““கமலமலர் மேல் செய்யாள்” (திருவாய். 9 – 3 – 1) என்கிறபடியே ஹிரண்ய வர்ணையாய், *“வித்யா ஸஹாயம்” “ஆதித்ய ஸம்ஸ்தம் வித்யாப்ரபாவகம் (ப்ரஸாதகம்)’” என்கிறபடியே வித்யை என்கிற திருநாமத்தை உடையளாயிருக்கிற பெரிய பிராட்டியாரோடே.-“வானிடை அருக்கன் மேவி நிற்பார்க்கு’” (பெ.திருமொழி 2 – 1 – 7) என்கிறபடியே ஆதி,த்யாந்தர் வர்த்தியாய், ஸதாத், த்யேய தேஜோ ருபமாயிருக்கிற இவரை ப்ரதிபாதி,க்கிற . “ஸாம்ந உத்கீதோரஸ?” (சாந்) என்று ஸாமத்துக்கு ரஸமாய், ““தஸ்யோதிதி நாம”‘ (சாந்த ] என்கிறபடியே அவர்க்குக் திருநாமமாயிருக்கிற உத்காந நாமத்தை உள்ளுறையாக உடைத்தாகையாலே * ‘உத்’” என்கிற விதில் உகார தகாரங்களை ஆதி யந்தங்களில் உடைத்தாயிருக்கிற இப் பரபந்தத்தை.
ஓராயிரமா யுலகேழளிக்கும் பேராயிரம்”” (திருவாய்;9 – 3 – 1) என்கிறபடியே ஒரோ திருநாமமே அநேக பிரகாரமாக ரக்ஷிக்கும் படியான திருநாமங்களில் வைத்துக் கொண்டு ஆதித்யாந்தர வஸ்திதனான வனுக்குத் திருநாமமான ”உத்” என்கிற உத்துக்கு பர்யாயமான நாராயண ஸப்தத்தை “’ஆயிர முகத்தினாலருளி மந்தரத் திழிந்த கங்கை” (பெரிய. திரு. 1 – 4 – 7) என்கிறபடியே கங்கை லோக பாவநார்த்தமாக ஸஹஸ்ர முகமாக ப்ரவஹித்தாப் போலே “’தீர்த்தங்களாயிரத்து”’ (திருவாய். 7 – 10 – 11) என்கிறபடியே லோக பாவநார்த்தமாக ஆயிரம் பாட்டாக விஸ்தரிக்கிறார் என்று வேதாசார்ய ப,ட்டர் அருளிச் செய்யும்படி
ஆக, ‘“எவ்வுலகத்தெவ்வெவையும்”’ என்று தொடங்கி, இவ் வாழ்வார் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் நாலுக்கும் வேத ரூபத்வமும், அங்கோபாங்க ஸஹிதத்வமும், ஸாஸ்த்ரதவம் முதலான வேத லக்ஷணங்களும் இவற்றினுடைய நித்யத்வ-அபெளருஷேயத்வமும், இந்நாலு ப்ரபந்தங்களுக்கும் நாலு வேத ஸ்தாநேயான ப்ரகாரத்தையும், அதில் திருவாய்மொழி ஸாம ஸாமாந்ய மன்றிக்கே, சந்தோக,ஸாமோபநிஷத் தாயிருக்கிற ப்ரகாரத்தையும், அதில் விசேஷ லக்ஷணங்களையும் சொல்லுகையாலே இப்ப்ரபந்தத்துக்கு வேத,ஸாம்யம் சொல்லா நின்றது –
54-அன்றிக்கே, ஸ்வரூப கு,ண விபூ,தி சேஷ்டிதங்களை விஸமமாக்குகிற பஞ்சராத்ர புராணேதிஹாஸங்கள் போலே நீலபாரூபோக்தி தெரியச் சொன்ன வேத உப ப்ருூம்ஹணமென்பர்கள்.
இனி மேல் ஸ்வரூபாதிகளை விஸத, மாகச் சொல்லுகிற ஸ்ரீபாஞ்சராத்ராதிகளைப் போலே விக்ரஹத்தை விஸதமாகச் சொல்லுகிற வேதத்துக்கு இப் ப்ரபந்தம் விவரண ரூபமாயிருக்கும் என்பாரு முண்டென்கிறார் (அதவா வேத ஸாம்ய முண்டான மாத்ரமே யன்றிக்கே ஸ்வரூப ரூப கு,ண விபூதி சேஷ்டிதங்கள் என்று தொடங்கி) ஸ்வரூப ரூப கு,ண விபூதி சேஷ்டிதங்களித்தனையும் வேதத்திலே சொல்லும்-ஸ்வருபத்தையும், குணத்தையும் விஸதமாகச் சொல்லும் ஸ்ரீபாஞ்சராத்ரம்-விபூதியை விஸதமாகச் சொல்லும் புராணங்கள்-அவனுடைய திவ்ய சேஷ்டிதங்களுக்கு பிரகாஸகமாயிருக்கும் இதிஹாஸங்கள், அவை போலே “’நீல தோயத மத்யஸ்த வித்யுல்லேகேவ பாஸ்வரா”‘ (தை.நா.) என்றும், பாரூபஸ் ஸத்ய ஸங்கல்ப ” (முண்டக 2- 27) என்றும் விக்ரஹ பரமான வே வாக்யங்களை “*“தெரியச் சொன்ன ஓராயிரம்” (திருவாய். 6 – 9 -11)என்கிறபடியே விஸதமாக்குகிற வேத உப ப்ரும்ஹணம் என்பாருமுண்டென்கிறார்.
55-கல்பாதி,யில் தோற்றிற்று வர்ணிக்கும் சதுர்முகன் சந்தஸ்ஸும் மோஹ ஸாஸ்த்ர ப்ரவர்த்தகன் பிணச்சுடலை வெந்தார் அக்கும் ஆறும் அணிந்து ஏறேறிச் சுழன்றாடும் ஆலமமர் பிச்சுத் தெளிந்து தான் வணங்குமாறுரைக்கக் கேட்ட ஸஜாதீயர் ப்ரஸாதமும் ஆர்ஷ மூலம்.
கீழ்ச் சொன்ன புராணேதிஹாஸ கர்த்தாக்களான ருஷிகளாலே சொல்லப்பட்ட ஆர்ஷங்களுக்கு மூலமெது; இவர் திருவாய்மொழி பாடுகைக்கு மூலமெது என்ன; கல்பாதியிலே உத்ரிக்த குணாநுகுணமாகச் சொல்லும் ப்ரஹ்மாவின் ப்ரஸாதமும், ரஜஸ் தமஸ் ப்ரசுரனான ருத்ரன், அவை தலை சாய்ந்து ஸத்த்வம் தலை யெடுத்த போது அத்யாத்மம் சொல்லக் கேட்ட ஸப்ரஹ்மசாரிகளான ப்ரூகு-புலஸ்த்ய-மார்க்கண்டேய வாமதேவாதி,கள் என்று சொல்லப்படுகிறவர்கள் ப்ரஸாதமும் ஆர்ஷத்துக்கு மூலம்-ப்,ரஹ்ம ருத்ராதிகளுக்கு அந்தர்யாமியாய்க் கொண்டு அவர்களுக்கு ஜ்ஞாந ப்ரதாநம் பண்ணினவன் தானே ஸ்ரீ யப்பதியாய், பரம ஸத்த்வ ஸமாஸ்ரயமான திவ்ய விக்ரஹ யுக்தனுமாய் நின்று செய்த ப்ரஸாதம் இவர்க்கு மூலம் என்கிறார் (கல்பாதியில் தோற்றிற்று வர்ணிக்கும் என்று தொடங்கி) (கல்பாதி,யில்) ‘“யஸ்மிந் கல்பே து யத் ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணா புரா ! தஸ்ய தஸ்ய து மாஹாத்ம்யம் தத் ஸ்வரூபேண வர்ண்யதே ॥ அக்நேஸ் ஸிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்யதே । ரஜஸேஷு ச மாஹாத்ம்யம் அதிகம் ப்ரஹ்மணோ விது | ஸாத்த்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்யம் அதிகம் ஹரே -தேஷ்வேவ யோக ஸம் ஸித்தாக,மிஷ்யந்தி பராம் க,திம்”” (மாத்ஸ்யே) என்று குண த்ரய வஸ்யனாகையாலே கல்பாதியிலே தனக்குத் தோற்றின குணாநுகுணமாக தமஸ்ஸு தலையெடுத்த போது ருத்ராக்நி மாஹாத்ம்யமும், ரஜஸ்ஸு தலையெடுத்த போது ஸ்வ வர்ணநமும், ஸத்த்வம் தலையெடுத்த போது பகவத்,வர்ணநமும் சொல்லக் கடவனான ப்,ரஹ்மாவினுடைய ““மச்சந்தா தேவ தே ப்ரஹ்மந் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ?” (ரா. பா. 2 – 31) என்கிற நினைவும். ““சந்தஸ்ஸு” என்றது நினைவென்றபடி-
(மோஹ ஸாஸ்த்ர ப்ரவர்த்தகன்”) “தவம் ஹி ருத்ர மஹா பாஹோ மோஹ ஸாஸ்த்ராணி காரய ! மாஞ்ச கோபய யேந ஸ்யாத் ஸ்ருஷ்டிரேஷோத்தரோத்தரா | த்ரய்யாமபி ச ஸாமாந்ய வாதஸ்சித்த விபே,த,த₹ ॥ கிம்புநர் லோக மோஹார்த்த,ம் ப்ரவ்ரூத்தம் ருத்ர ஸாஸநம் | மயாநுமிஷ்டோ ருத்ரஸ்து மோஹ ஸாஸ்த்ரம் வ்யதாத் ஸ்வயம்”’-என்கிறபடியே பகவந் நியோகத்தாலே மோஹ ஸாஸ்த்ர ப்ரவர்த்தகனான ருத்ரன்- (பிணச்சுடலை இத்யாதி, ) ”பிணங்களிடுகாடதனுள்”’ (திருமொழி 2 – 6 – 9) என்றும், “சுடலையில் சுடு நீறன்’” (திருமொழி 10 – 1 – 5) என்றும், ““வெந்தாரென்பும் சுடு நீறும்” (திருமொழி 1 – 5 – 8) என்றும், ““அக்கும் புவியினதளுமுடையர்” (திருமொழி 9 – 6 – 1) என்றும், “ஆறும் பிறையுமரவமும் அடம்பும் சடைமேலணிந்து”” (திருமொழி 6 – 7 – 9) என்றும், “வேறேறிப் பட்டவிடுசாபம்”” (இர.திருவ. 63) என்றும், “’தன்னினுடனே சுழலச் சுழன்றாடும்”’ (பெ.திருமடல்) என்றும், “’ஆலமமர் கண்டத்தரன்”’ (மு.திருவ. 4] என்றும், ““ஆல் மேல் வளர்ந்தானைத் தான் வணங்குமாறு – மேலை யுகத்துரைத்தான்’” (நா. திருவ, 17) என்றும் சொல்லுகிற இவற்றாலே ருத்ரன் தமஸ்ஸு தலை மண்டை யிட்டு பகவத் விமுகனய் ப்ரமித்து, பிணங்களிடுகாடுகள்தோறும் ஸஞ்சரியாநின்றுகொண்டு, “தீ பாக்நிம் தீ பதைலஞ்ச பஸ்ம சாஸ்திம் ரஜஸ் வலாம் ॥ ப்ரமாதாத் ஸ்பர்ஸநாத், விப்ரஸ்ஸவாஸா ஜலமாவிஸேத்’” என்று தர்ஸந-ஸ்பர்ஸந-அநர்ஹங்களான பஸ்மாஸ்திகளைத் தரித்து வ்யாக்ர சர்மவஸநனாய், நதீ சந்த்ரர்களை ஜடையிலே தரித்து, ஸாபோபஹதனாய், க்ருத்யாக்ருத்ய விவேக ஸூந்யனாய் விஷத்தை தரித்து, சக்ர ப்ரமம் போலே ப்ரமிக்கிறவன்,
அதுக்கு மேலே ஸத்த்வம் தலை யெடுத்து, ஸத்த்வம் விஷ்ணு ப்ரகாஸகமாகையாலே, அகடிதகடநா ஸாமர்த்யத்தை யுடைய ஸர்வேஸ்வரனே உபாஸ்யனென்று தான் அவனை உபாஸிக்கும் ப்ரகாரத்தை உபதேஸிக்கக் கேட்டு ஸத்த்வஸ்தராய், ருஷித்வத்தால் ஸாஜாத்யத்தை யுடையரான புஸஸ்த்ய ப்ருகு. மார்க்கண்டேய-வாம தேவாதிகளுடைய ப்ரஸாத,ம் ஆர்ஷங்களான புராணேதிஹாஸங்களுக்கு காரணமென்றதாய்த்து. புலஸ்த்யாதிகளுக்கு பராஸரனோடே ருஷி ஸாஜாத்யமுண்டாகையாலே ஸஜாதீயர் என்றது.
56-பரம ஸத்த்வத்தோடே உள்ளி உரைக்கும் நிறை ஞானத்தயனாம் சிவனாம் திருமாலருள் கொண்டு இவர் பாடினார்.
இனி (பரம ஸத்த்வம்) என்று தொடங்கி – “பரம ஸத்த்வஸமாஸ்ரய: கஸ் (ஸ்தோ.ர. 12) என்கிறபடியே ரஜஸ் தமஸ்ஸூக்கு ஆஸ்ரயமன்றிக்கே பரம ஸத்வ ஸ்மாஸ்ரயனாய், அவர்களைப் போலே தோற்றிற்றுச் சொல்லுகை யன்றிக்கே “நெறி யுள்ளி யுரைத்த ” (திருவா. 1 – 3 – 8) என்கிறபடியே இவன் சொல்லிற்றொன்று வேதர்த்தமாயிருக்கச் செய்தேயும், இச் சேதநர் பக்கல் க்ருபாதிஸயத்தாலே விசாரித்துச் சொல்லலாம்படி ஆப்தனுமாய், ““நிறை ஞானத்தொரு மூர்த்தி”” (திருவா. 4 – 9 – 6) என்கிறபடியே அதுக்கடியான ஸார்வஜ்ஞ்யத்தை யுமுடையனாய், *’அயனாய் சிவனானாய் திருமாலாலருளப்பட்ட சடகோபன்”’ (திருவா. 8 – 8- 11) என்கிறபடியே ப்ரஹ்ம ருத்ராதி களுக்கும் அந்தர்யாமியாய் நின்று அவர்களை ப்ரவர்த்திப்பித்தாப் போலே ஸ்ரீயப் பதியாய் அஸாதாரண விக்ரஹ யுக்தனான ஈஸ்வரனுடைய க்ருபை இவர் திருவாய்மொழி பாடுகைக்கு மூலமென்கிறார் –
57–கருவுள் வேறலாமை அரன் அயன் எனச் செய்யுமவை போலே மூவுருவாம் முதல்வன் துப்பரவாலே பரம கவிகளால் பாடுவியாது நேர் படச் சொல்லும் நீர்மையிலா என்னைத் தன்னாக்கி என் நா முதல் வந்து புகுந்து தப்புதலறத் தன்னை வைகுந்தனாகத் தன் சொல்லால் தானே துதித்து மலக்கு நாவியல் மொய்ய சொல்லால் சொல்ல வல்லேனென்று நானும் சொல்லி நாடும் கையெடுக்கும்படி என் சொல்லால் யான் சொன்ன இன் கவி யென்பித்தா னென்றாரிறே.
அவர்களுடைய ப்ரஸாதம் ஆர்ஷத்துக்கு மூலமென்னுமிடம் பரமாண ப்ரஸித்தமா யிருந்தது. இவருடைய பரபந்தத்துக்கு பகவத் ப்ரஸாதம் மூலமென்னுமிடம் அறிந்தபடி என் என்னில், அவர் தம்முடைய வசநங்கள் ப்ரமாணமென்கிறார் (கருவுள் வேறலாமை என்றுதொடங்கி).“ஸ்ருஷ்டி ஸ்தித் யந்தகரணீம் ப்ரஹ்ம விஷ்ணு ஸிவாத்மிகாம் | ஸ ஸம்ஜ்ஞாம் யாதி பகவாந் ஏக ஏவ ஜநார்த்தநா ”” (வி.பு.1 – 2) என்றும், “ஸ்ருஷ்டிம் தத? கரிஷ்யாமி த்வாமாவிஸ்ய ப்ரஜாபதே”’, “கல்பாந்தே ருத்ரரூபீ யோ க்ரஸதே ஸகலம் ஜகத் ! தமாத்யம் புருஷம் விஷ்ணும் ப்ரணதோஸ்மி ஜநார்த்தநம்”’, “’விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்யாமித தேஜஸ । தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம் ஸவிஷேஹோ மஹேஸ்வர?” (பார. கர்ண. 29) என்றும், ”திசைமுகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்’” (திருவா. 5 – 10 – 8) என்றும், ‘“வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்”” (திருவா. 5 – 10 – 4) என்றும் சொல்லுகிறபடியே ப்ரஹ்மாதிகளுக்கு அந்தர் யாமியாய் ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணா நிற்கச் செய்தேயும் ‘அரனயனென உலகழித்தமைத்துளன்”’ (திருவா. 1 – 1 – 8) என்கிறபடியே ப்ரஹ்மா ஜகத்தை ஸ்ருஷ்டித்தான்; வேதங்களை உபதேஸித்தான்; ருத்ரன் ஜகத்தை ஸம்ஹரித்தான்; த்ரிபுரங்களை தஹித்தான்” என்று லோகத்தார் சொல்லும்படி செய்தாப் போலே ““மூவுருவாம் மூதல்வன்” (திருவா. 7 – 9- 2) என்கிறபடியே ப்ரஹ்மாதிகளுக்குத் தானே காரணமானாப் போலே தனக்குத் தானே அடியாயிருக்கிறவன்,-*திறத்துக்கே துப்பரவாம்”‘ (திருவா. 7 – 9 – 9) என்கிறபடியே யாதொன்றைக் கொண்டு யாதொரு கார்யம் கொள்ள நினைத்தான், அத்தைக் கொண்டே அக் கார்யம் கொள்ள வல்ல ஸாமர்த்யத்தை உடையனாகையாலே, தன்னைக் கவி சொல்லுவித்துக் கொள்ள நினைத்தால் ‘“இன் கவிபாடும் பரம கவிகளால் தன் கவி தான் தன்னைப் பாடுவியாது” ‘ (திருவா. 7 – 9 – 6) என்கிறபடியே வ்யாஸ-பராஸர-வால்மீகிகளைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுதல், முதலாழ்வார்களைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுதல் செய்யாதே. (நேர் படச் சொல்லும் நீர்மையிலா என்னைத் தன்னாக்கி) “நேர் பட யான் சொல்லும் நீர்மையிலாமையில்”” (திருவா. 7 – 9 – 5) என்கிறபடியே தன்னைக் கவி பாடுகைக்குத் தகுதியான ஜ்ஞாந சக்த்யாதிகளின்றிக்கே இருக்க, “என்னைத் தன்னாக்கி”” (திருவா, 7 – 9 – 1) என்கிறபடியே என்னைத் தனக்கு அநந்யார்ஹமாக்கி என்னுதல்; என்னைத் தன்னோடொத்த ஜஞாந சக்த்யாதிகளை உடையனாம்படி பண்ணி, “என் நா முதல் வந்து புகுத்து’” (திருவா. 7 – 9 – 3) என்கிறபடியே ஜ்ஞாநாதிகளை உண்டாக்கித் தான் தூரஸ்தனாயிராதே என்னுடைய ஜிஹ்வாக்ரத்திலே வந்து புகுந்திருந்து–தப்புதலின்றித் தனைக் கவி தான் சொல்லி?” (திருவா. 7 – 9 – 4) என்கிறபடியே என்னை உபகரணமாகக் கொண்டு கவி பாடா நிற்கச் செய்தே என்னுடைய ஸ்பர்ஸத்தால் வந்த தோஷம் தட்டாத படி பண்ணி, *’தன்னை வைகுந்தனாகப் புகழ வண் தீங்கவி’‘ (திருவா, 7 – 9- 7) என்கிறபடியே நான் கவி பாடின பின்பு தன்னை ஸ்ரீவைகுண்ட நாதனாகவும் அவ் விபூதியில் ஐஸ்வர்யம் தான் பெற்றானாகவும் நினைத்து, *‘தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன்” (திருவா. 7 – 9 – 2) என்கிறபடியே சொல்லும் தன்னதாய், சொன்னானும் தானாய், சொல்லிற்றும் தன்னையாய், “தன்னைத் தானே துதித்து” (திருவா. 10 – 7- 2) என்கிறபடியே எனக்கு அந்தர்யாமியாய் நின்று தன்னைத் தானே ஸ்துதியா நிற்கச் செய்தேயும்–‘மலக்கு நா வுடையேற்கு”’ (திருவா. 6 – 4- 9) என்றும்,“நாவியலாலிசை மாலைகளேத்தி”’ (திருவா. 4 – 5 – 4) என்றும், ‘மொய்ய சொல்லாலிசை மாலைகளேத்தி”” (திருவா. 4 – 5 2) எனறும், ‘‘வானக் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு”” (திருவா. 4 – 5 – 9) என்றும் இப்படி நானும் சொல்லி, *’சடகோபன் சொல்”” என்றவாறே நாடும் அஞ்ஜலி பண்ணும் படி பண்ணி, *“என்சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து”’ (திருவா. 7- 9- 2) என்று – சொல் என்னதாகவும், சொன்னேன் நானாகவும், அது தான் எனக்கு இனிதாகவும் சொல்லுவித்தான் என்கிறாரிறே. ஆகையால் இவருடைய உக்திகளால் ஸர்வேஸ்வரனருளாலே திருவாய்மொழி பாடினார் என்னுமிடம் ஸித்தம் –
58-தர்ம வீர்ய ஜ்ஞாநத்தாலே தெளிந்து ஹ்ருஷ்டராய் மேலே மேலே தொடுப்பாரைப் போலன்றே அருளின பக்தியாலே உள் கலங்கிச் சோகித்து, மூவாறு மாஸம் மோஹித்து, வருந்தி, ஏங்கித் தாழ்ந்த சொற்களாலே நூற்கிற விவர்.
இதுக்குக் கீழ் ப்ரபந்த, மூல வைலக்ஷண்யம் சொல்லிற்று. இனி மேல் வக்த்ரு வைலக்ஷண்யம் சொல்லுகிறது (தர்ம வீர்ய ஜ்ஞாநத்தாலே என்று தொடங்கி). “ஹஸிதம் பாஷிதஞ்சைவ கதிர்யா யச்ச சேஷ்டிதம் | தத் ஸர்வம் தர்ம வீர்யேண யதாவத் ஸம் ப்ரபஸ்யதி?” (ரா. பாடி – 4) என்கிறபடியே தந்தாமுடைய தபோ பலத்தாலே லப்தமான ஜ்ஞாநத்தாலே “கண்டும் தெளிந்தும்’” (திருவா. 7- 5- 7) என்கிறபடியே கண்டு தெளிந்து ஹ்ருஷ்டராய், மேலே மேலே ஸப்தங்களைத் தொடுக்கும் ருஷிகளைப் போலன்றே அருளின ப,க்தி ரூபமான ஜ்ஞாநமெல்லாம் அடி மண்டியோடே கலங்கி யதா மநோரதம் பகவதநுபவம் பண்ணப் பெறாமையாலே ஸோகித்து, “’தாம்நா சைவோதரே பத்த்வா ப்ரத்யபத் நாதுலூகலே யதி ஸக்நோஷி கச்ச த்வம் அதி சஞ்சல சேஷ்டித” என்றும், “‘உரலினோடிணைந் திருந்தேங்கிய எளிவு எத்திறம்’” (திருவா, 1 – 3 1) என்றும், “போனாய் மா மருதின் நடுவே ” (திருவா. 5 – 1 – 2) என்றும், ““பிறந்தவாறும் வளர்ந்தவாறும்”’ (திருவா. 8 – 10 – 1) என்றும், “ஸர்வஜ்ஞனாய் ஸர்வ ஸக்தியா யிருக்கச் செய்தே இப்படி ஓரபலை கையாலே கட்டுண்பதே! இதென்ன ஆஸ்ரித வ்யாமோஹந்தான்!’ என்கிற ஆஸ்ரித வ்யாமோஹாநுஸந்தாநமும்,
இவர் பக்தி பாரவஸ்யத்தாலே கலங்கி ஸர்வஜ்ஞத்வாதிகளை மறந்து விரோதம் பண்ணுவதாக நின்ற இரண்டு மருதுக்கும் நடுவே தவழ்ந்து சென்றதை அநுஸந்தித்து, உலகங்கட்கெல்லாம் ஒருயிரான வஸ்துவுக்கு ஒரு தீங்குவரில் செய்வதென்?” என்கிற ப்ரேமாதிஸயமும், ‘ஜநந ஹேதுவான கர்ம ஸ்பர்ஸ மில்லாத வஸ்து “’ததஸ் ச த்வாதஸே மாஸே”? (ரா.படா. 10 – 8) என்கிறபடியே பன்னிரண்டு மாஸம் கர்ப்பவாஸம் பண்ணி ஸத்ரு க்ருஹத்திலே இருளிலே வந்து அவதரிப்பதே!” என்றும், ஓரொன்றில் மூவாறு மாஸம் மோஹித்து, ““வருந்தி நன் வாசக மாலை கொண்டு” (திருவா. 3 – 8 – 10) என்கிற படியே ஒரு சொல் எடுக்கும் போது ஒரு மலை எடுத்தாப் போலே வருந்தி, (ஏங்கி) “என்றென்றேங்கி அழுதக்கால்”” (திருவா. 8 – 5 – 3) என்கிறபடியே அவன் திருநாமங்களைச் சொல்லப் புக்கு பல ஹாநியாலே நடுவு நடுவே ஏங்குவது இளைப்பதாய். (தாழ்ந்த) “அங்கே தாழ்ந்த சொற்களால்”” (திருவா. 8 – 5 – 11) என்கிறபடியே சொல்லப் புக்குச் சொல்ல மாட்டாதே தரைப்பட்டு கத்கத ஸ்வரத்தோடே ““வண்டமிழ் நோற்க நோற்றேன்”” (திருவா. 4 – 5 – 10) என்று நூற்கிற விவர் என்கிறார் –
59-ஸ்வாத்,யாய யோக,ங்களைக் கற்றும் தெளிந்தும் கண்டமை மைப்பாலே ஓதி உணர்ந்தவர் இன்றும் ஆஸா பாஸ பத்தர்.
இனி மேல் இந்த ருஷிகளிற் காட்டில் இவர்க்கு ஸம்ஸாரத்தில் நசை யறுகையாலுண்டான வைலக்ஷண்யம் சொல்லுகிறது (ஸ்வாத்யாய யோகங்களைக் கற்றும் தெளிந்தும் என்று தொடங்கி). வேதங்களைக் கற்றும் அதில் அர்த்தத்தைத் தெளிந்தும் யம நியமாத்,யஷ்டாங்க, யோகத்தாலேயும் அவனைக் கண்ட மைமைப்பாலே – ஸ்வ ப,ஹு பலாரா்ஜிதமான ஸாஸ்த்ர ஜந்ய ஜ்ஞாதத்தாலே தாங்கள் காண்கிறதாகையாலே மெய்ம்மை யற்றிருக்கும்; அவிஸத மாயுமிருக்கும். அத்தாலே ““ஓதி யுணர்ந்தவர் முன்னா” (திருவா. 3 – 5- 5) என்கிறபடியே வேத ஸாஸ்த்ரங்களை ஓதி, த்யாஜ்யோபாதேயங்களை உணரந்திருக்கிற ருஷிகள் இன்றும் “ஆஸா பாஸ ஸதைர் பத்தா காம க்ரோத,பராயணா ”” என்கிறபடியே ஸாம்ஸாரிக ஸங்க பாஸ பத்தர். இவர்க்கோ வென்னில் 2- (அவன் வழங்கும் திவ்ய சக்ஷுஸ்ஸாலே) “அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும்” (திருவா. 1 – 9 – 9) என்றும், ““திவ்யம் ததாமி தே சஷு பஸ்ய மே யோக,மைஸ்வரம்”‘ (கீதை 11 – 8) என்றும் சொல்லுகிற படியே இவரை அமலராம்படி கடாக்ஷித்து, அவனாலே தத்தமான திவ்ய சஷுஸ்ஸாலே “நேரே கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ணனடிக் கமலந் தன்னை அயன்”” (மூ.திருவ. 56) என்றும், ““கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான்’” (தா.திருவ. 73) என்றும், “*நீறாடி தான் காண மாட்டாத-தாரகல சேவடி ” (நா. திருவ. 27) என்றும், *“கட்கரிய பிரமன் சிவனிந்திரனென் றிவர்க்கும் கட்கரிய கண்ணன்’‘ (திருவா. 7 – 7 – 11) என்றும், ”விதி ஸிவ ஸநகாத், யைர்த் யாதுமத்யந்த தூ,ரம்”’ (ஸ்தோ.ர. 47) என்றும் சொல்லுகிறபடியே தங்களைப் போரப் பொலிய நினைத்திருக்கும் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் காண வரிதாயிருக்கிற ““அரும் பொருளாய் நின்ற அரங்கனே?” (நா. திருவ. 60) என்கிற படியே பெறுதற்கரிய ப்ரயோஜநமாய் பரத்வ- ஸெளலப்ய விஸிஷ்டனான ஸர்வேஸ்வரனை “கண்டேன் கமல மலர்ப் பாதம்” (திருவா. 10 – 4- 9) என்கிறபடியே கண்ட போதே ““பொய்ந் நின்ற ஞானமும் ” (திருவிரு. 1) என்று தொடங்கி, “’இனி யாமுறாமை”” (திருவிரு. 1) என்று – ‘அவித்யாதிகளை விடுவித்தருளவேணும்” என்று இவர் தாமே அவனைக் கால்கட்டி அபேக்ஷிக்கும்படி இவர்க்கு வேறொருவரால் விடுவிக்க அரிதான ‘“மற்ற வன் பாசங்கள்”’ (திருவா. 6 – 2 11) என்கிறபடியே ஸாம்ஸாரிக ஸகல பாபயங்களும் “பாசங்கள் நீக்கி” (திருவா. 7 – 8 5) என்கிறபடியே அவன்தானே போக்குகையாலே நீங்கிற்று; நேராக நிவ்ருத்த மாய்த்தென்கிறார்-
60-அவர்களுக்குக் காயோடென்னுமவையே தாரகாதிகள்; இவர்க்கு எல்லாம் கண்ணனிறே.
இனி மேல் அவர்களுக்கும் இவர்க்கும் தாரகாதிகளும் வேறுபட்டபடி சொல்லுகிறது. “காயோடு நீடு கனியுண்டு”” (திருமொழி 3 – 2 – 2) என்றும், ““வீழ் கனியுமூழிலையு மென்னு மிவையே நுகர்ந்து ”” (பெ.திருமடல்) என்றும் சொல்லுகிறபடியே பல-மூலபத்ர-வாயு- தோயங்களே அவர்களுக்கு தாரக போஷக போக்யங்கள். இவரையும் “ருஷி” என்று கீழே சொல்லிற்றிறே. அது இவர்க்கும் ஒவ்வாதோ என்னில், ஒவ்வாது. “உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ணன்” (திருவா. 6 – 7 – 1) என்கிறபடியே தாரகாதிகளுமெல்லாம் ஸர்வ ஸுலபனான ஸர்வேஸ்வரனிறே இவர்க்கு.
61-அழுநீர் துளும்பக் கடலும் மலையும் விசும்பும் துழாய் திருமால் என்று “எங்கே காண்கேன்!* என்னுமிவரலமாப்பு அவர்களுக்கு புத்ர வியோகத்திலே.
ஆகில் இவர்க்கு ஸம்ஸாரத்தில் நசையற்ற தென்றும், அவர்களுக்கு நசையற்ற தில்லை என்றும் சொல்லிற்றே, அதறிந்தபடி என் என்னில், அத்தைச் சொல்லுகிறது,-“அழுநீர் துளும்ப அலமருகின்றன (திருவிரு. 2) என்றும், ‘‘கடலும் மலையும் விசும்பும் துழாய்” ் (திருவா. 2 -1- 4) என்றுதொடங்கி, * ‘சிந்தை கலங்கித் திருமால் என்றழைப்பன் (திருவா. 9 – 8 – 10) என்றும், ”எங்கே காண்கேன் ஈன் துழாயம்மான் தனனை ” (திருவா, 8-5-11) என்றும், “‘உன்னைக் காண்பான் நானலைப்பாய்”” (திருவா, 5 – 8 – 4) என்றும் சொல்லுகிறபடியே பகவத் விஸ்லேஷ வ்யஸநத்தாலே கண்ணும் கண்ணீருமாய் அபரிச்சேத்யமான கடலோடு, நிர்விவரமான மலையோடு, அச்சமான ஆகாஸத்தோடு வாசியற, எங்கும் தேடி ‘ஸ்ரீயப் பதியே!’ என்று கூப்பிட்டுப் படுகிற இவருடைய அலமாப்பு – (அவர்களுக்கு புத்ர வியோகத்திலே) வஸிஷ்ட வ்யாஸாதிகளான அவர்களுக்கு ஸக்தி ஸூகாதிகளாகிற புத்ர வியோகத்திலே காணலாம் –
62-பல ஸாதந தேவதாந்தரங்களில் இவர்கள் நினைவு பேச்சிலே தோன்றும்.
பல ஸாதந தேவதாந்தரங்களில் இவர்களிருவர்க்கும் நினைவு ஒக்குமோ என்னில், அவற்றிலுண்டான வாசி பேச்சிலே தெரியுமென்கிறார். எங்ஙனே என்னில், ““பேஷஜம் பகவத் ப்ராப்தி?”‘(வி. பு. 6 – 5 – 59) என்று பகவத் ப்ராப்தி பலமாகவும், அதுக்கு ஸாதநம் கர்ம ஜ்ஞாந பத்திகள் என்றும், இந்த்ராதி, தேவதாந்தர்யாமியாய்க் கொண்டு ஈஸ்வரன் உபாஸ்யனா யிருக்கு மென்றுமிறே அவர்கள் சொல்லுவது. இவரோ வென்றால் ““தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே”’ (திருவா. 2- 9-4) என்றும், *“வழு விலா வடிமை செய்ய வேண்டும் நாம்”’ (திருவா. 3 – 3- 1) என்கிற கைங்கர்யம் புருஷார்த்தமாகவும், அதுக்கு ஸாதநம் ““நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு”’ (திருவா. 5 – 19 – 11) என்றும், *’அடிக் கீழமர்ந்து புகுந்தேன்” (திரூவா. 6 – 10 – 10) என்றும் சொல்லுகிற ப்ரபத்தி என்றும், தேவதாந்தரங்களை ‘‘உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள்‘ (திருவா. 4 – 6 – 10) என்றுமிறே இவரருளிச் செய்வது –
63-ராமாயணம் நாராயண கதை என்று தொடங்கி கங்கா காங்கேய ஸம்பவாத்ய ஸத் கீர்த்தநம் பண்ணின எச்சில் வாய் ஸூத்தி பண்ணாமல் ““திருமாலவன் கவி’” என்ற வாயோலைப் படியே மாற்றங்களாய்ந்து கொண்டு உரிய சொல் வாய்த்தவிது – வேதாதிகளில் பெளருஷ-மாநவ-கீ,தா- வைஷ்ணவங்கள்-போலே அருளிச் செயலில் ஸாரம்.
ஆக, இதுக்கு கீழ் வக்த்ரு வைலக்ஷண்யம் சொல்லிற்று – இனி மேல் ப்ரபந்த,வைலக்ஷண்யம் சொல்லுகிறது. அவர்கள் ப்ரபந்தங்களுக்கு கதாந்தர ப்ரஸ்தாவமுண்டு; இதுக்கில்லை என்னா நின்றுகொண்டு இதினுடைய ஸார தமத்வம் சொல்லுகிறார் (ராமாயணம் நாராயண கதை என்று தொடங்கி). “காவ்யம் ராமாயணம் கருத்ஸ்நமீத்ருஸை கரவாண்யஹம்”‘ (ராபா. 2 – 42), “நமோ பகவதேதஸ்மை வயாஸாயாமித தேஜஸே | யஸ்ய ப்ரஸாதாத்,வஹ்யாமி நாராயண கத மிமாம்” (ப.ர.ஆதி;) என்றும் சொல்லுகிறபடியே இதிஹாஸ ஸ்ரேஷ்டமான ஸ்ரீராமாயணம் நாராயண கதை என்று தொடங்கி, கங்கையினுடைய வர்ணநமும், ஸுப்ரஹ்மண்ய கதையும், புஷ்பக வர்ணநமூமாய், ஸ்ரீமஹாபாரதத்தில் நாராயண கதை என்று தொடங்கி, கங்கையினுடையவும் ஸ்ரீபீஷ்மருடையவும் உத்பத்தி முதலான பூசல் பட்டோலையாய், *அஸத் கீர்த்தந காந்தார பரிவர்த்தந பாம்ஸுலாம்” (ஹரிவம்பே) என்கிறபடியே அஸத் கீர்த்தநம் பண்ணின எச்சில் வாயானது “வாசம் சவ்ரிகதா லாபகங்கயைவ புநீமஹே”’ என்று ஸூத்,தி, பண்ண வேண்டிற்றிறே அவர்களுக்கு. “ஸா ஜிஹ்வா யா ஹரிம் ஸ்தெளதி”’ (வி.த,ர்மே 1) என்றும், “வாயவனை யல்லது வாழ்த்தாது”” (மு.திரு11) என்றும் சொல்லுகிற இவர் நாக்குக்கு பகவத் வ்யதிரிக்தமான வர்ணநம் உச்சிஷ்டமிறே.
இவருடைய ப்ரபந்தத்தில் அப்படி எச்சில் வாய் ஸூத்தி பண்ண வேண்டாதே திருமாலவன் கவி யாது கற்றேன்’‘( திருவிரு. 48) என்று வாயோலை யிட்டாப் போலே மாற்றங்களாய்ந்து கொண்டு”’ (திருவா. 6 – 8- 11) என்கிறபடியே எல்லாச் சொற்களும் புறம்பு அந்ய பரங்களாயிராதே ஸர்வமும் *“உரிய சொல்லாலிசை மாலைகளேத்தி’* (திருவா. 4 – 5 – 6) என்கிறபடியே அவனுக்கு ப்ராப்தமான சொல்லாய் “*வாய்த்த வாயிரத்துள்”’ (திருவா. 2 – 2 – 11) என்கிறபடியே வாச்யனுக்கு வாய்த்த ப்ரபந்தம்; (வேதாதிகளில்) வேத ஸாஸ்த்ரேதிஹாஸ புராணங்களில் வைத்துக் கொண்டு “வேதேஷு பெளருஷம் ஸூக்தம் தர்மமமாஸ்த்ரேஷு மாநவம் ! பாரதே பகவத் கீதா புராணேஷு ச வைஷ்ணவம்”’ என்கிறபடியே வேதத்தில் ஸாரமான ஸ்ரீபுருஷ ஸூக்தம் போலேயும், தர்ம ஸாஸ்த்ரத்தில் மநு ப்ரணீதமானது ஸாரமானாப் போலேயும், ஸ்ரீமஹா பாரதத்தில் கீதை ஸாரமானாப் போலவும், புராணங்களில் வைத்துக் கொண்டு ஸ்ரீவிஷ்ணுபுராணம் ஸாரமானாப் போலவும், அருளிச்செயலில் வைத்துக் கொண்டு இத் திருவாய்மொழி ப்ரபந்தத்தினுடைய ஸார தமத்வம் சொல்லிற்று –
64-குரு சிஷ்ய க்ரந்த,விரோதங்களை பரமதாதிகளாலே பரிஹரியாமல் செஞ் சொல், செந்தமிழ், இன் கவி, பரவி, அழைக்கும் என்று அந்யோத்யம் கொண்டாடிப் பேசிற்றே பேசும் ஏக கண்டரில் “என்னில் மிகு” என்னுமிவருரை கொளின்மொழி கொண்டு ஸாஸ்த்ரார்த்தங்கள் நிர்ணயிக்க வேண்டுகையாலே வலங் கொண்ட இதுக்குச் சேராதவை மநு விபரீதங்கள் போலே.
ஆனால் இவ்வாழ்வார்களுடைய ப்ரபந்தங்களும் பரஸ்பர விருத்தங்களாயிருக்குமோ என்ன, இவர்களெல்லாரும் ஏக கண்டராகையாலே எல்லாம் ஏகரர்த்த ப்ரதிபாதகங்களுமாய், எல்லா ப்ரபந்தங்களும் இவருடைய ப்ரபந்தத்தைப் பின் செல்லும்படியான வைபவத்தை உடைத்தாய், இத்தோடு சேராத ஸாஸ்த்ரங்களெல்லாம் த்யாஜ்யங்களா யிருக்குமென்று இதினுடைய ப்ராமாண்யம் சொல்லுகிறது ( குரு சிஷ்ய க்ரந்த விரோதம் எனறு தொடங்கி). ருஷிகளில் குரு ஸிஷ்யர்களான வ்யாஸ ஜைமிநிகளில் குருவான வியாஸனுடைய க்ரந்தமான ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு ஸிஷ்பனான ஜைமிநி க்ரந்தமான கர்ம ஸூத்ரத்தில் நிரீஸ்வர வாதத்தால் வந்த விரோத,த்தை வ்யாஸன் தானே “’ஜைமீிநி ராசார்யோ மந்யதே”’ என்று ஆப்தமாக எடுக்கையாலே இருவரும் ஏக கண்டர்; இனி நிரீஸ்வர வாதம் சொன்னது – வைதிக க்ரியைகளை நாஸ்திவாதம் பண்ணுகிற பாஹ்யரை நிராகரிக்கைக்காக பர மதத்தை அதிஷ்டித்துச் சொன்னானென்று பரிஹரிக்க வேண்டிற்று அங்கு. இதுக்கு அப்படிப் பரிஹரிக்க வேண்டாதபடி ”சென்சொற் கவிகாள்’” (திருவா. 10 – 7 – 1) என்றும், ‘‘செந்தமிழ் பாடுவார்தாம்”” (திருமொழி 2 – 8 – 2) என்றும், “இன்கவி பாடும் பரம கவிகள்” (திருவா. 7 – 9 – 6] என்றும், “பாலேய் தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரம்”’ (திருவா. 1 – 5- 11) என்றும், ““பரவித்தொழும் தொண்டர் தமக்குக்கதி?’ [திருமொழி 7 – 1 – 7) என்றும், *’அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன பிழைப்பில் பெரும் பெயரே பேசி” (இ. திருவ. 50) என்றும், * அரங்கவோ என்றழைக்கும்?” (பெரு. தி, 2 – 2) என்றும் சொல்லுகிறபடியே அந்யோந்யம் கொண்டாடி “பேசிற்றே பேசலல்லால்“‘ (திருமாலை 22) என்று ஏக கண்டராகையாலே ஏகார்த்த ப்ரதிபாதகரான இவர்களில் வைத்துக் கொண்டு, ‘ “என்னில் மிகு புகழார் யாவரே?” (பெ. திருவ. 4) என்கிறபடியே தாஸ்ய ஹ்ருஷ்டோக்தியை உடையரான இவருடைய “உரை கொளின்மொழி’” (திருவா. 6 – 5 – 9) என்கிறபடியே “அது அது’ என்று வாய் புலற்றும் படியாகப் பேச்சுக்கு அவிஷயமாய்-மாற்று முறையு மற்றிருப்பதாய், ஸ்ரீராமாயணத்திலுங் காட்டில் இனிமையை உடைத்தாயிருக்கிற இவருடைய உக்திகளைக் கொணடு தத்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரதிபாதி,க்கிற வேதாந்த ஸாஸ்தரங்களில் ஸம்ஸயித்தவற்றை நிர்ணயிக்க வேண்டும்படி இருக்கையாலே “சொல் வலங்கொண்ட” (திருவா. 53. 9. 11) என்கிறபடியே அர்த்த ப்ரதிபாதந ஸாமர்த்யத்தை உடைத்தான இப் ப்ரபந்தத்தோடு சேராதவை யாவை சில ஸமாஸ்த்ரங்கள், அவை, **மந்வர்த்த விபரீதா து யா ஸ்ம்ருதிஸ்ஸா ந ஸஸ்யதே” என்று மநு விபரீதமான ஸ்ம்ருதிகளைப் போலே கழிக்கப்படுகிறது-
65- பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ர வாக்யங்கள் ஒருங்கவிடுவர்.-ஆகையாலே பாஷ்யகாரர் இப் ப்ரபந்தங் கொண்டு ஸூத்ர வாக்யங்கள் ஒருங்கவிடுவர்” என்கிறார்
66-அதுக்கு மூலம் ““விதயஸ்ச’” என்கிற பரமாசார்ய வசநம்.
வேதாந்த ஸூத்ரங்களைக் கொண்டு இதிலர்த்தங்களைக் கடிப்பியாதே இப் ப்ரபந்தத்தைக் கொண்டு வேதாந்த ஸூத்ரங்களை கடிப்பிப்பானென் என்னில், அதுக்கடி “விதயஸ்ச?” (ஸ்தோ. ர. 20) என்கிற பரமாசார்ய வசநமென்கிறார். *“வைதிகா: வித யஸ்ச த்வதீய கம்பீர மநோநு ஸாரிண?”” என்று கொண்டு ‘இத,ம் குர்யாத் இதம் ந குர்யாத்”, “விஜ்ஞாய ப்ரஜ்ஞாம் குர்வீத”” (ப்,ரூ. 6 – 4 – 21), “த்யாயத,”‘ (மூ. 2- 2- 6), “‘உபாஸீத” (கா. 1 – 1 – 1) என்கிற வைதிக ஸாஸ்த்ரங்களானவை ஐஸ்வர்ய கைவல்யங்களால் கடக்க ஓண்ணாதபடி கம்பீரமான த்வதீயருடைய மஸ்ஸைப் பின் செல்லுமென்று கொண்டு பரமாசார்யரான ஆளவந்தார் அருளிச் செய்கையாலே –
67-ஆப்திக்கு இவர் “சுருதி, மார்க்கண்டேயன், பார்த்தன்” என்கிற இவை வ்யாஸ மநு ப்,ரஹ்மவாதிகளை வேதம் சொல்லுமாப் போலே.
ஆனால் பாஷ்யகாரருட்பட ப்ரஹ்ம ஸூத்ரங்களில் ஸந்தேஹார்த்தங்களையும் இது கொண்டு நிர்ணயிக்கும்படியான ஆப்தியை யுடைய இப் ப்ரபந்தத்துக்கு இவர் வேறே சிலரை ஆப்தராக எடுப்பானென் என்னில்; வேதந் தான் ஆப்ததமமா யிருக்கச் செய்தேயும் ஆப்திக்கு ”ஸஹோவாச வ்யாஸ? பாராமர்ய?” (யஜு. அரு.), ‘“யத் வை கிஞ்ச மநுரவதத் தத் பேஷஜம்”” (யஜு. 2 – 2 – 10) என்றும், ““ப்ரஹ்மவாதி நோ வதந்தி!” (யஜு. 1 – 7 – 1) என்றுமெடுத்தாப் போலே இவரும், “உளன் சுடர் மிகு சுருதியுள்’* (திருவா. 1 – 1 – 7) என்றும், ““மார்க்கண்டேயனும் கரியே”’ (திருவா. 5 – 2 7) என்றும், ““பார்த்தன் தெளிந்தொழிந்த”’ (திருவா. 2 – 8 – 6) என்றும் ஆப்த யதிஸயத்துக்காக எடுத்தார் என்கிறார்-
68-பாரத கீதைகளின் வேதோபநிஷத்த்வம் போலே இதுவும் வ்யாக்யை யானாலும் வேத ரஹஸ்யமாம்.
கீழே இதுக்கு வேத ரஹஸ்யத்வம் சொல்லிற்று; இப்படி யிருக்க இத்தை கரந்தஸ்தமாக்கி வ்யாக்யாநம் பண்ணப்படா நின்றது (இது உப ப்ரும்ஹண ஸமமானால் வேத வ்யாக்யாநமாம் – பா] அப்போது வேதத்வத்துக்கும் ரஹஸ்யத்வத்துக்கும் கொத்தை வாராதோ என்னில், ப்ரஸித்த,-லிகித-படித- பாடங்களான மஹா பாரதத்துக்கும் ஸ்ரீகீதைக்கும் ‘“வேதாநத்யாபயாமாஸ மஹாபாரத பஞ்சமாந்”’ (வி.பு) என்றும், “பகவத் கீதாஸு உபநிஷத்ஸு’”'(கீ. 1) என்றும் சொல்லுகிறபடியே இவை யிரண்டுக்கும் வேதத்வ-உபநிஷத்த்வங்கள் உண்டானாப் போலே இதுவும் விகித-படிதங்களாய்ப் போந்ததே யாகிலும் வேத,த்வமும் ரஹஸ்யத்வமும் உண்டாம் -என்கிறார் –
69-உதாத்தாதி -பத-க்ரம-ஜடா-வாக்ய-பஞ்சாதி-பாத-வ்ருத்த ப்ரஸ்ந -காண்ட,-அஷ்டக-அத்யாய- அம்ஸ -பர்வாத் யலங்காரங்கள் போலே, எழுத்து, அசை, சீர், பந்தம், அடி, தொடை, நிரைநிரை, ஒசை, தளை, இனம், யாப்பு, பா, துறை, பண், இசை, தாளம், பத்து, நூறு, ஆயிரம் முதலான செய் கோலம் இதுக்குமுண்டு.
ஆக, இப்ப்ரபந்த,ம் வேதத்தோடும், உப ப்ரும்ஹணத்தோடும் துல்யமென்றீர், அவை யிரண்டுக்குமுன்ள உதாத்தாதிகளான வேத லக்ஷணங்களும், அத்யாய அம்ச பர்வாதிகளான உப ப்ரும்ஹண லக்ஷணங்களும் இதுக்குமுண்டோ என்னில், த்ரமிடோபநிஷத் விஹிதங்களாய், “’செய்கோலத் தாயிரம்” (திருவா. 4 – 1 – 11) என்கிறபடியே ‘எழுத்து, அசை, சீர்’ என்று இத்யாதிகளான அலங்காரங்கள் இதுக்குமுண்டென்கிறார் (உதாத்தாதி, என்று தொடங்கி] பாஷாநுகுணமாயும், வேதா அநு குணமாயுமிறே லக்ஷணங்களிருப்பது, ஆகையாலே அந்த பாஷாநுகுணமான லஷணங்களை அருளிச் செய்தது.
70-அதவா வேத வேத்ய ந்யாயத்தாலே பரத்வபரமுது வேதம் வ்யூஹ வ்யாப்த் யவதரணங்களில் ஓதின நீதி கேட்ட மநு படுகதைகளாய் ஆக மூர்த்தியில் பண்ணிய தமிழானவாறே வேதத்தை த்ராவிடமாகச் செய்தாரென்னும்.
ஆக இதுக்குக் கீழ் வேதத்தினுடையவும், தது,பப்ரும்ஹணத்தினுடையவும் ஸ்தாநத்திலே யாக்கி அவற்றினுடைய ஸப்த லக்ஷணங்களும் அர்த்த லக்ஷணங்களும் அருளிச் செய்தார். இனி மேல் ப்ரமேய பூதனான ஸர்வ ஸ்மாத் பரனுடைய அவதார டரம்பரையில் எல்லையான அர்ச்சாவதாரம் போலே ப்ரமாண வேதாவதாரத்தினுடைய எல்லை இத் திருவாய்மொழி என்கிறார் (அதவா வேத வேத்ய ந்யாயத்தாலே என்று தொடங்கி). (அதவா) என்றது – கீழ்ச் சொன்ன யோஜனை யொழிய யோஜநாந்தர மென்கை. “வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தஸரதாத்மஜே ! வேதா ப்ராசேத ஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா”” (ரா. பா.) என்கிறபடியே வேத வேத்யனான பரம புருஷன் தஸரத புத்ரனாய் வந்தவதரித்த விடத்தில் அபெள்ருஷேயமான வேதமும் ஸ்ரீவால்மீகி பகவான் பக்கலிலே ஸ்ரீராமாயணமாய் வந்தவதரித்த தென்கிற ந்யாயத்தாலே. (பரத்வபரமுதுவேதம்) “’முதுவேத முதல்வனுக்கு?” (திருவா. 1 – 6 – 2) என்கிற ப்ரத்வ ப்ரதிபாதகமான பழைய வேதம். இத்தால் நித்ய நிர்தோஷமாய், அபெளருஷேயமாய் ப்ரம விப்ரலம்பாதி, தோஷ ரஹிதமான வேதம் என்றபடி.
அந்த பரத்வம் தானே வ்யூஹீபவித்த அவஸ்தையில் அந்த வேதந்தானே “பஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணஸ் ஸ்வயம்”” (பர. மோ.) என்றும், ““ஓதினாய் நீதி”‘ (இ, திருவ.48) என்றும் சொல்லுகிறபடியே அவனருளிச் செய்த ஸ்ரீபாஞ்சராத்ர ஸாஸ்த்ரமாய் வந்தவதரித்தும்,
அந்தர்யாமியான அவஸ்தையில் “கேட்ட மனுவும்” (நா.திருவ. 76) என்கிறபடியே ஆசார வ்யவஹார ப்ராயஸ் சித்தங்களுக்கு ப்ரகாஸ கமான மந்வாதி ஸ்ம்ருதிகளாயும்,
ராம க்ருஷ்ணாத் யவதாரங்களில் வந்தவாறே ”பாட்டும் முறையும் படு கதையும்‘” (நா. திருவ. 76) என்கிறபடியே வேதங்கள் தான் இதிஹாஸாதிகளானாப் போலேயும்,
”ஆகமூர்த்தியாய வண்ணம்”” (திருச்ச, 17) என்கிறபடியே ஸர்வேஸ்வரன் ஆஸ்ரித ஹ்ருதயாநுகுணமாக “’தமருகந்ததெவ்வுருவம்”'(மூ.திரூவ. 45) என்கிறபடியே த்ரவ்ய-நாம-ரூப-ஆஸந-ஸயந-தேஸ – கால-அதிகாயு-போஜநாதீ ஸகல வ்யாபாரங்களையும் ஆஸ்ரித ஹ்ருதயாநுகுணமாக்கிக் கொண்டு ஸர்வ ஸுலபமான அர்ச்சாவதாரமான விடத்தில் ப்ரமாணமும் அப்படியே ப்ரமேயம் போலே ஸர்வ ஸுலபமாய் ஸர்வாகதிகாரமாம்படி த்ரவிட ஸம்ஹிதையாக ப்ராப்த மாகையாலே **பண்ணிய தமிழ் மாலை”” (திருவா. 2 – 7 – 13) என்கிறபடியே வேதத்தைத் திருவாய்மொழியாகச் செய்தருளினார் என்னவுமாம் என்கிறார். அந்த வேதம் முதலானவை எல்லாத்திலும் எல்லாம் சொல்லிற்றே யாகிலும் ஒன்றுக் கொன்றிலே நோக்காகக் கடவது –
71-மண்ணாடின ஸஹ்ய ஜலம் தோதவத்திச் சங்கணித் துறையிலே துகில் வண்ணத் தெண்ணீராய் அந்தஸ்தத்தைக் காட்டுமாப் போலே அல்ப ஸ்ருதர் கலக்கின ஸ்ருதி நன்ஞானத்துறை சேர்ந்து தெளிவுற்று ஆழ் பொருளை அறிவித்தது.
ஆனால் இப்படி பரத்வ ப்ரதிபாதகமான வேதம் அவஸ்தாந்தர பாக்காயுள்ள வளவில் ப்ரமேய ப்ரகாஸகமாக வற்றோ என்ன, இவ் வவஸ்தையிலே யதாவாக ப்ரகஸிக்கும் என்னுமிடத்தை த்ருஷ்டாந்த முகத்தாலே பேசுகிறார் (மண்ணாடின ஸஹ்ய ஜலம் என்று தொடங்கி), மண்ணாடின ஸஹ்ய ஜலமாவது – ‘*தோதவத்தித் தூய் மறையோர் துறை படிய”’ (பெரியா. 4 – 8 – 1) என்றும், “பொருநல் சங்கணி துறை ”” (திருவா. 10 – 3 – 11) என்றும் சொல்லுகிற துறைகளிலே ‘ ‘துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்’‘ (திருவா. 7 – 211) என்றும், “தெண்ணீர்ப் பொன்னி” (பெருமா. தி. 1 – 1 ) என்றும் சொல்லுகிறபடியே தெளிந்த நீராய்த் தனக்குள்ளே கிடக்கிற பதார்த்தங்களை ப்ரகாஸிப்பிக்குமாப் போலே, அல்ப ஸ்ருதர் கலக்கின ஸ்ருதி – ”இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸமுபப்ரும்ஹயேத் பிபேத் யல்ப ஸ்ருதாத் வேத-மாமயம் ப்ரதரிஷ்யதி” (பர. ஆதி.) என்கிறபடியே அல்ப ஸ்ருதராயிருக்கு மவர்கள் ஒரு ஸ்ருதி வாக்யத்தைப் பிடித்து இதுக்குப் பொருள் த்வைதமென்றும், அத்வைதமென்றும், த்வைதாத்வைதமென்றும் இப்படி பஹு ப்ரகாரமாகக் கலக்க, கலங்கின ஸ்ருதியானது – (நன் ஞானத்துறை சேர்ந்து) ‘“ரமணீயம் ப்ரஸந் நாம்பு, ஸந் மநுஷ்யமதோ யத (ரா. பரா. 2 – 5) என்றும், ““காலை நன் ஞானத்துறை”: (திருவிரு. 93) என்றும் சொல்லுகிறபடியே ஞானத் துறையான இவ்வாழ்வார் பக்கலிலே சேர்ந்து, (தெளிவுற்று ஆழ் பொருளை அறிவித்தது) *’தெளிவுற்ற வரயிரம் ” (திருவா, 7 – 5 – 11) என்கிறபடியே ப்ரஸந்ந கம்பீரமான ஆயிரம் பாட்டாய், ““அறிவித்தேன் ஆழ்பொருளை ” (நா. திருவ. 1) என்கிறபடியே அகதமாய் பரம ரஹஸ்யமான அர்த்த விஸேஷங்களை யெல்லாம் யதா தர்ஸநம் பண்ணுவிக்கும் என்கிறார் –
72-மேகம் பருகின ஸமுத்ராம்பு போலே நூற் கடல் சொல் இவர் வாயனவாய்த் திருந்தினவாறே ஸர்வதா ஸர்வோபஜீவ்யமாமே.
இனிமேல் அந்த ப்ரதாநமான வேதத்திற் காட்டிலும் இதினுடைய அவதார ரூபமான திருவாய்மொழிக்கு இவருடைய ஸ்பர்ஸத்தாலே வந்த ஏற்றம் சொல்லுகிறது (மேகம் பருகின என்று தொடங்கி) ஸமுத்ர ஜலம் விரஸதையை யுடைத்தாய் ததந்தர்கதமான பதார்த்தங்களுக்கே உபஜீவ்யமாய், புறம்புள்ளார்க்கு உப ஜீவ்யமன்றியிலே இருப்பதாய், அபர்வணி ஸ்பர்ஸிக்கைக்குக் கால நியதியையு முடைத்தாயிருக்கும். அந்த ஸமுத்ர ஜலத்தை மேகமானது பாநம் பண்ணி ஐகத்திலே வர்ஷிக்க அந்த மேக, ஸ்பர்ஸத்தாலே அதினுடைய விரஸ்தையும், ஸ்பர்ஸ கால நியதமும் போய், ஸர்வ ஜந போக்யமுமாமாப் போலே, பகவத் ஸ்வரூபாநுரூப குண விபூ,திகளை ப்ரதிபாதிக்கிற வேதம் பகவத் விபூதி பூ.தரான தேவதாந்தரங்களை ப்ரதிபாதிக்கை யாகிற விரஸதையை உடைத்தாய், வேதாதிகாரிகளான த்ரை வர்ணிகர்க்கே அத்யேதவ்யமாகையாலே அதி க்ருதாதி காரமுமாய் அத்யயந-அநத்யயந-கால நியதியையு முடைத்தா யிருக்கும். ‘“நூற் கடல்’” (மூ. திருவ, 92) என்கிறபடியே அபரிச்சேத்யமான அந்த வேதமாகிற ஸாஸ்த்ரத்திலுண்டான அர்த்த விஸேஷங்கள் ‘‘இவள் வாயனகள் திருந்தவே” (திருவா. 6 – 5- 7) என்கிறபடியே இவருடைய வாக் கதமாய்க் கொண்டு கட்டளைப் பட்டவாறே பகவத் வ்யதிரிக்த ப்ரஸம்ஸா பரதையாகிற விரஸதையும் போய் “அத்யேதவ்யம் த்விஜ ஸ்ரேஷ்டைர் வேத ரூபமிதம் க்ருதம் । ஸ்த்ரீபிஸ் ஸூத்ராதி பிஸ்சைவ தேஷாம் முக்தி: கரே ஸ்திதா” (பாஞ்ச.) என்கிறபடியே ஸர்வாதி காரமுமாய் ஸர்வ காலாத் யேதவ்யமுமா யிருக்கும்-
73-ம்ருத் கடம் போலன்றே பொற்குடம்.
ஸமுத்ர ஜலத்தையும் தத்கார்யமான மேகம் பருகின ஜலத்தையும் அதி க்ருதாதிகாரமான வேதத்துக்கும் தத் கார்யமான திருவாய்மொழிக்கும் த்ருஷ்டாத்தமாக்கினால் காரணம் போலே கார்யமும் அதிக்ருதாதிகாரமா யிருக்குமோ என்னில், அப்படியிராது–ஸர்வாதிகாரமாய், ஸ்லாக்யமாய்,ஸ்ப்ருஹணீயமா யிருக்குமென்கிறார் (ம்ருத் கடம் போலன்றே பொற்குடம் என்று). ம்ருத் கடமானது தொடுமவர்களே தொடுமித்தனை போக்கி எல்லார்க்கும் தொட வொண்ணாதிறே. அங்ஙனன்றிக்கே பொற் குடம் பார்த்திவமா யிருக்கச் செய்தேயும் எல்லார்க்கும் ஸ்பர்ஸிக்கவுமாய, ஸ்லாக்யமுமாய், ஸ்ப்ருஹணீய முமாயிருக்கும். ஆகையாலே அதி க்ருதாதிகாரமான வேதந் தான் திருவாய்மொழியான அவஸ்தையை பஜித்தாலும் ஸர்வாதிகாரமுமாய், ஸ்ப்ருஹணீயமுமா யிருக்குமென்கிறார்-
74-பெரும் புறக் கடலும், ஸ்ருதி ஸாக,ரமும் அலைத்தாழ்ந்து ஓடுமிடங்களில் அயோக்யர்க்குச் சமைத்த மடுவும், சாய் கரகமும் மாந மேய சரமம்.
ஸர்வ ஸுலபமாய் ஸர்வாதிகாரமான அர்ச்சாவதாரத்தையும் திருவாய் மொழியையும் கீழ் ‘“பரத்வபரமுது வேதம்” என்று ப்ரஸ்துதமான ப்ரமாண ப்ரமேயங்களை “‘பெரும்புறக் கடலும்” ““ஸ்ருதி ஸாகரமும் என்று பராமர்ஸித்து, அவற்றினுடைய எல்லையான அர்ச்சாவதாரமும் திருவாய்மொழியும் கீழ்ச் சொன்ன பரத்வாதிகளுக்கும் வேதம் முதலான ஸாஸ்த்ரங்களுக்கும் அயோக்யரானார்க்கும் அநுபாவ்யமாம்படி சரமமாயிருக்கும் என்கிறார்.
( பெரும் புறக்கடலும் ஸ்ருதி ஸாகரமும்) அபரிச்சேத்யமான ப்ரமாண ப்ரமேயங்கள்; அவை யாவன – பரத்வமும் பரத்வ ப்ரதி பாதகமான வேதமும்-அவற்றுக்குடலானால் அலையக் கடவதிறே -அலைகையாவது – பர வாஸுதேவர் பக்கல் நின்றும் பிறந்த ஸங்கர்ஷண ப்ரத்யும்நாதிகளான வ்யூஹமூம் தத் ப்ரதிபாதகமான ஸ்ரீபாஞ்சராத்ர ஸாஸ்த்ரமும்-(ஆழ்ந்து) “யமாத்மா ந வேத,” (ப்,௬. 5 – 7 – 22) என்று சொல்லுகிற அந்தர்யாமித்வமும், தத் பரமான மந்வாதி ஸ்ம்ருதிகளும். (ஓடுமிடம்) ராம க்ருஷ்ணாத் யவதாரங்களும் தத் ப்ரகாஸகங்களான இதிஹாஸங்களும்;-இவை தேஸ -கால -இந்திரிய -விப்ரக்ருஷ்டங்களாகையாலே பரத்வாதிகளை அநுபவிக்க யோக்யரல்லாதவர்களுக்கு அப்படி தேஸ கால விப்ரகர்ஷமு மின்றிக்கே பெருகின ஆற்றில் மடுப் போலே ஸர்வ ஸுலப,முமாய், ருசி ஜநகமூமாய், ஸ்ரமஹரமுமாய், ஸர்வ ஜந போக்யமுமாய், ஸர்வாபாஸ்ரயமுமான அர்ச்சாவதாரமும், வேதாதி களுக்கு யோக்யரா யிருக்கிறவர்களுக்கு சாய் கரகம் போலே ஸுகரமுமாய், ஸர்வாதிகாரமுமான திருவாய் மொழியும் ப்ரமாண ப்ரமேயங்களினுடைய சரம மென்கிறார். ஆக, இத்தால் **பரத்வபரமுதுவேதம்’” என்று தொடங்கின அர்த்தங்களை உபபாதி,த்து அவ் வர்த்தத்துக்கெல்லை அர்ச்சாவதாரமும் திருவாய்மொழியுமென்று நிகமித்தாராய் ஆய்த்து –
75-வீட்டின்ப-இன்பப் பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூுபண ஸமம் இன்பமாரி யிலாராய்ச்சி,
ஆக, ப்ரமாண ப்ரமேயங்களை ஸஹ படித்து இந்த ப்ரஸங்கத்திலே இவற்றோடே சேர்த்து ப்ரமாத்ரு வைபவத்தை அருளிச் செய்கிறார் (வீட்டின்பமென்று தொடங்கி). மேலெல்லாம் இதில் ப்ரமாண ப்ரமேயங்களினுடைய எல்லையான அர்ச்சாவதாரத்தினுடையவும், திருவாய்மொழியினுடையவும் த்ரவ்ய பாஷா நிரூபணத்தோடொக்கு மென்று இவற்றை ஸித்தவத் கரித்து இவற்றோடொக்கும் ப்ரமாதாக்களின் ஜந்ம நிரூபணம் என்கிறார் (வீட்டின்பமித்யாதி,). ““கனிவார் வீட்டின்பமே”’ (திருவா. 2 – 3 – 5) என்கிறபடியே அவன் என்றால் உள் கனிந்திருக்கிற வர்களுடைய க்ருஹங்களிலே வந்து இன்பத்தை அளிக்கும் அர்ச்சாவதாரத்தினுடையவும், ““அந்தமிழினின்பப் பாவினை”” (பெருமா.திரு, 1 – 4) என்றும் சொல்லுகிற ரஸாவஹமான திருவாய்மொழியினுடையவும் த்ரவ்ய நிருபணத்தோடும் பாஷா நிரூபணத்தோடும் ஓக்கும் என்றும், ““அடியார்க்கின்பமாரி?? (திருவா. 4 – 5 – 10) என்கிறபடியே ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் திருவாய்மொழி முகத்தாலே ஆநந்தாவஹமான பகவத் குணங்களை வர்ஷிக்கும் மேகமான ஆழ்வாருடைய திருவவதாரத்தில் ஆராய்ச்சியு மென்கிறார். அர்ச்சாவதாரத்தில் த்ரவ்ய நிரூபண நிஷேதம் பஹு ப்ரமாண ஸித்தம். அத்தோடே சேர்த்துச் சொல்லுகையாலே திருவாய் மொழியினுடைய பாஷா நிரூபணம் பண்ணலாகாதென்னுமிடம் ஸித்தமாய்த்து. ““ஹரிகீர்த்திம் விநைவாந் யத் ப்ராஹ்மணேந நரோத்தம । பாஷா காநம் ந காதவ்யம் தஸ்மாத் பாபம் த்வயா க்ருதம்” (லைங்கே, ௨, 3 – 44) என்றிறே மநுவும் சொன்னது. அப்படியாகிறது – அர்ச்சாவதாரத்தில் த்ரவ்ய நிரூபண நிஷேதத்துக்கு ப்ரமாணமென் என்னில்; ““அர்ச்சாவதாரோபாதாநம் வைஷ்ணவே ஜாதி சிந்ததம் | மாத்ரு யோநி பரீக்ஷா யாஸ் துல்ய மாஹுர் மநீஷிண?” (பாஞ்ச.) என்றும், “யோ விஷ்ணோ? ப்ரதிமாகாரே லோஹ பாவம் கரோதி வை । யோ குரெள மாநுஷம் பாவம் உபவ் நரக பாதிநெள”” (பகவச் சாஸ்த்ரே) என்றும் சொல்லக் கடவதிறே–
76-பேச்சுப் பார்க்கில் கள்ளப் பொய்ந் தூல்களும் க்ராஹ்யங்கள்; பிறவி பார்க்கில் அஞ்சாமோத்தும் அறு மூன்றும் கழிப்பனாம்.
ஆகிலும் திராவிட பாஷையாயிரா றின்றதே, அது க்ராஹ்யமாம்படி எங்ஙனே என்னில்; (பேச்சுப் பார்க்கில்) பாஷா மாத்ரமே அங்கீகார-அநங்கீகார ஹேதுவாகில், (கள்ளப் பொய்ந் நூல்களும் க்ராஹ்யங்கள்) ‘*வெள்ளியார் பிண்டியார் போதியாரென்றிவர் ஓதுகின்ற கள்ளநூல் தன்னையும்’” (திருமொழி 9 – 7- 9) என்றும், “’பொய்ந்நூலை மெய்ந் நூல்’ (திருமொழி 3 – 5 – 2) என்றும் சொல்லுகிற பாஹ்ய ஸாஸ்த்ரங்களும் குத்ருஷ்டி ஸாஸ்த்ரங்களும் அங்கீ கரிக்கப்படும். அவற்றுக்கு அப்படி ஸிஷ்டாசார மில்லாமையாலும், இத்தை ஸிஷ்டரானவர்கள் பரிக்ரஹிக்கையாலும் பாஷாவதி மாத்ரமே பரிக்,ராஹ்ய-அபரிக்ராஹ் யதா ஹேதுவாக ஒண்ணாது –
ஆனாலும் ப்ரபந்த கர்த்தா சதுர்த்த வர்ணாதிகாரி யாயிரா நின்றாரே? ப்ரபந்தமும் ப்ரதிபாத்ய வஸ்துவும் விலஷணமே யாகிலும் கர்த்ரு மாந்த்யத்தாலே ப்ரபந்த மாந்த்யமும் பிறக்குமே என்ன (பிறவி பார்க்கில் அஞ்சாமோத்தும் அறு மூன்றும் கழிப்பனாம்) என்கிறார். (பிறவி பார்க்கில்) இதுக்கு வக்தாவான ஆழ்வாருடைய ஜந்மத்தை யிட்டுக் கழிக்கப் பார்க்கில், வலைச்சி வயிற்றிலே பிறந்த வ்யாஸன் சொன்ன பஞ்சம வேதமான மஹா பாரதமும், இடைச்சேரியிலே பிறந்த கருஷ்ணனருளிச் செய்த ஷ்ட்க த்ரயாத்மகமான ஸ்ரீகீதையும் கழியுண்ணும் –
77–கிருஷ்ண க்ருஷ்ண த்வைபாய நோத்பத்திகள் போலன்றே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்த்வ ஜந்மம்.
ஆக, இதுக்குக் கீழ் கருஷ்ண த்வைபாயநனான வ்யாஸனோடும், க்ருஷ்ணனேடும் உண்டான ஜந்ம ஸாதர்ம்யம் சொல்லி, “‘க்ருஷ்ண க்ருஷ்ண த்வைபாய நோத்பத்திகள் போலன்றே’‘ என்று – இனி மேல் வைதர்ம்யம் சொல்லுகிறது, எங்ஙனே என்னில்; இடைச்சி வயிற்றிலே பிறந்த க்ருஷ்ணனுடையவும் வலைச்சி வயிற்றில் பிறந்த கருஷ்ணாத்வைபாயநனுடையவும் (உத்பத்தி போலன்றே, இவர் திருவவதாரம் இவ்வளவேயோ, இவ்வாழ்வாருடைய திருவவதாரத்தையும் அவர்களுடைய ஜந்மத்தையும் நிருபித்தால் இத்தோடு அவை நேர் நில்லாது. ஆகையால் இவர்க்கு அவர்கள் ஸத்ருஸரல்லர்-
78-பெற்றும் பேறிழந்தும் கன்னிகை யானவளும் எல்லாம் பெற்றாளாயும், தத்துக் கொண்டாள் என்பர் நின்றார் என்னுமளவும் நெடுங் காலமும் நங்கைமீர் என்னுமிவர்க்கு நேரன்றே.
இவர்களுடைய உத்பத்தி ப்ரகாரங்களையும் ஸ்தலங்களையும் விசாரித்தால் அவையும் வாசா மகோசரம் என்கிறார் மேல் (பெற்றும் பேறிழந்தும் என்று தொடங்கி), “தேவகி பெற்ற” (பெரியா. 1 – 8 – 17) என்கிறபடியே ஸ்ரீதேவகிப் பிராட்டி க்ருஷ்ணனைப் பெற்று வைத்து, ”திருவிலேனொன்றும் பெற்றிலேன்”’ (பெருமா.தி.7 – 5) என்கிறபடியே அவனுடைய பால்ய ரஸம் அநுபவிக்கப் பெற்றிலளிறே. வ்யாஸனைப் பெற்ற அநந்தரம் “புந கந்யா பவிஷ்யதி?” (பார ) என்று ஸ்ரீபராஸர பகவான் சொல்ல மீண்டும் கந்யகையான மத்ஸ்யகந்தியும் அவனுடைய பால்ய ரஸம் அநுபவிக்கப் பெற்றிலள். (எல்லாம் பெற்றாளாயும்) “எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே’‘ (பெருமா.தி. 7 – 5) என்கிற யசோதையும் க்ருஷ்ணனுடைய பால்ய சேஷ்டிதங்களெல்லாம் அநுபவிக்கப் பெற்றாளே யாகிலும், “’தத்துக் கொண்டாள் கொலோ”’ (பெரியா.2 – 1 7) என்றும், “உன்னை என் மகனே என்பர் நின்றார்” (பெரியா. 3 – 1 – 3) என்றும் – தானும் பிறரும் ஸங்கிக்கும் படியாயிருக்கும். இவருடைய உத்பத்தி – அங்ஙனன்றிக்கே “நெடுங் காலம் கண்ணன் நீண் மலர்ப் பாதம் பரவிப் பெற்ற”’ (திருவிரு. 37) என்றும், “நங்கைமீர் நீருமோர் பெண் பெற்று நல்கினீர்” (திருவா. 4 – 2 – 9) என்றும் சொல்லுகிற படியே பரிபூர்ணைகளான நீங்களும் சில பெண்களைப் பெற்று வளர்த்தி கோளல்லிகோளோ, பகவல் லாஞ்சநாதிகளை திவா ராத்ர விபாகமற வாய் புலற்றும்படியான என் பெண் பிள்ளைக்கு ஸத்ருஸமுண்டோ என்கையாலே இவர்க்கும் அவர்களுக்கும் அத்யந்த வைஷம்யம் சொல்லிற்று –
79-மீந நவநீதங்கள் கந்திக்குமிடமும் வெறி கொள் துழாய் கமழுமிடமூம் தன்னிலொக்குமோ. *
மத்ஸ்ய கந்தத்தையுடைய வ்யாஸன் பிறந்த விடமும் நவநீத கந்தியான க்ருஷ்ணன் பிறந்தவிடமும் – ‘“வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற”’ (திருவா. 4 – 4 – 9) என்கிற பகவத் ஸம்பந்த கந்தியான் ஆழ்வார் திருவவதரித்த இடத்துக்கு ஸத்ஸருமன்றே-
80-ஆற்றில் துறையில் ஊரிலுள்ள வைஷம்யம் வாசா மகேசரம்.
வ்யாஸனுக்கு உத்பத்தி ஸ்தலமான அஸிஷ்ட பரிக்ரஹமுடைய கங்கா நதிக்கும், அதில் ஓடத் துறைக்கும், அவ் விடத்தில் வலைச் சேரிக்கும், க்ருஷ்ணோத்பத்தி ஸ்தலமான க்ருஷ்ண ஜல ப்ரவாஹமான யமுநா நதிக்கும், காளிய விஷ தூஷிதமான அதில் துறைக்கும், “கறவைகள் பின் சென்று ” என்கிறபடியே ‘பசுக்கள் தான் ஸர்வஜ்ஞம்’ என்னும்படி அறிவு கேடரான இடையர் வர்த்திக்கிற இடைச் சேரிக்கும் ஆகிய இவற்றுக்கும், முக்தா பல ப்ரஸவோந்முக ஸங்க ஸமூஹங்களுக்கு வாஸஸ்தாநமான தாம்ரபர்ணி நதிக்கும் ஸூத்த ஸ்வபாவமாயிருக்கிற அந்த ஸங்கங்கள் சேருகிற திருச் சங்கணித் துறைக்கும், “நல்லார் நவில் குருகூர்” (திருவிரு, 100) என்கிறபடியே ஸத்துக்களாலே கொண்டாடப் படுமதாய் ““சயப் புகழார் பலர் வாழும் தடங் குருகூர்” (திருவா, 3 – 1 11) என்கிறபடியே ஸம்ஸாரத்தை ஜயித்த புகழை உடையராய், பகவதநுப,வம் பண்ணி வாழ்கிற ஜ்ஞாநாதிகர் பலரும் வர்த்திக்கிற திருக்குருகூர்க்கு முண்டான வைஷம்யம் பேச்சுக்கு அவிஷயமா யிருக்கும். ஆக, க்ருஷ்ணக்ருஷ்ணத்வைபாயநோத்பத்தி என்று தொடங்கி, இவ்வளவாக, அவர்களவதாரத்தோடு இவருடைய அவதாரத்துக் குண்டான ஸாதர்ம்ய வைதர்ம்ய, தர்ம்யங்கள் சொல்லிற்று
81-தேவத்வமும் நிந்தை யானவனுக்கு ஒளி வரும் ஜநிகள் போலே ப்ரஹ்ம ஜந்மமும் இழுக்கென்பார்க்குப் பண்டை நாளில் பிறவி உண்ணாட்டுத் தேசிறே.
இனி மேல், இப்படி ஆழ்வார் தாழ்ந்த வர்ணத்திலே அவதரித்தாரே யாகிலும், மிகவும் தேஜஸ்ஸு உண்டாமென்கிறார். எங்ஙனே என்னில், ஸர்வேஸ்வரன் லோக ஸம்ரஷணார்த்தமாக அவதரித்த விடத்தில் பரத்வ ஸங்கையும் அஸஹ்யமாம்படி தாழ்ந்தவதரிக்க, தேஜஸ்ஸு அதிஸயித் திருக்குமாப் போலே பாகவதத்வ ரஹிதமான உத் க்ருஷ்ட ஜந்மமும் அவத்யம் என்றிருக்கிறவர்களுக்கு ஜந்மாதிகளால் வருகிற அஹங்கார மின்றிக்கே கைங்கர்யமே நிரூபகமான குலங்களில் ஜந்மம் நித்ய விபூதியிலும் தேஜஸ் கரம் என்கிறார் (தேவத்வம் என்று தொடங்கி).-(தே,வத்வமும் நிந்தை யானவனுக்கு) ராவண வதாநந்தரம் ப்ரஹ்மாதிகள் “பவாந் நாராயணோ தேவ?” (ரா.யு. 120 – 13) என்றவது – திருவுள்ளத்துக்கு அஸஹ்யமாய், “ ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தஸரதராத்மஜம்”’ (ரா. யு. 120 – 11) என்றும், கோவர்த்ந தோத்தரணாநந்தரம். அந்த அதிமாதுஷ சேஷ்டிதங் கண்டு ஆச்சா்யப்பட்ட இடையர் *““பாலத்வஞ்சாதி வீர்யஞ்ச ஐந்ம சாஸ்மாஸ்வ ஸோபநம் ॥ தேவோ வா தாநவோ வா த்வம் யக்ஷோ கந்தர்வ ஏவ வா! (வி. பு. 5 – 13 – 7) என்று ஸங்கிக்க, “ஷணம் பூத்வா த்வஸெள தூஷ்ணீம் கிஞ்சித் ப்ரணய ரோஷவாத்” என்று அது அஸஹ்யமாய், ”நாஹம் தேவோ ந கந்தர் வோ ந யஷோ ந ச தாநவ ! அஹம் வோ பாந், வோ ஜாத? நைதச்சிந்த்ய மதோந் யதா ‘” (வி. பு. 5 – 13 – 12) என்று இப்படி பரத்வ ஸங்கையும், அஸஹ்யமாம்படி ஸீலாதிகனா யிருக்கிறவனுக்கு.
(ஒளிவரும் ஜநிகள்் போலே) ““ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந” என்றும், “பல் பிறப்பாய் ஒளி வரு முழு நலம்”’ (திருவா. 1 – பீ – 2) என்றும் சொல்லுகிறபடியே ஆநந்தாதி கல்யாண குணங்கள் ஒனி பெற்று வரும் அவதாரங்கள் போலே.-(ப்ரஹ்ம ஜத்மமும் இழுக்கென்பார்க்கு) ‘இதராவஸதேஷு மா ஸ்ம பூதபி மே ஜந்ம சதுர்முகாத்மநா’” (ஸ்தோ. ர. 55) என்கிறபடியே அபாாகவத க்ருஹ்ங்களில் ப்ரஹ்மாவாய்ப் பிறக்கையும் அவத்யமாம்படி பகவத் தாஸ்யமே ரஸித்த ஜ்ஞாநாதிகர்க்கு (பண்டை நாளில் பிறவி) “பண்டை நாள்” (திருவா. 9 – 2 – 1) என்கிற பாட்டின் படியே லக்ஷ்மீ-தத் வல்லபருடைய கடாக்ஷமடியாகக் கைங்கர்யமே நிரூபகமாக உடைத்தாய், தாஸ்ய விரோதி ஜந்மாதிகளால் வரும் அஹங்கார ரஹிதமான குலங்களில் ஜந்மமும்.(உண்ணாட்டுத் தேசிறே) புற நாடான வீலாவிபூதி போலன்றிக்கே பகவதாநுகூல்யைக போகராலே நெருங்கி பகவானுக்கு போக விபூ,தியாகையாலே அந்தரங்கமா யிருக்கிற பரமபதத்தில் தேஜஸ்ஸன்றோ என்கிறார்
82-ஜநக-தஸரத,-வஸுதேவ-குலங்களுக்கு மூத்த பெண்ணும், நடுவில் பிள்ளையும், கடைக் குட்டியும் போலே இவரும் பிறந்து புகழும் ஆக்கமும் ஆக்கி அஞ்சிறை யுமறுத்தார்
இப்படிப்பட்ட இவருடைய அவதாரம் ஜநக குல ஸுந்தரியான நாச்சிமார் முதலானாரூடைய அவதாரம் போலே ஸர்வோபகாரகம் என்கிறார் (ஜநகேத்யாதி,) ஜநக குலத்துக்கு மூத்த பெண்ணான நாச்சியார் திருவவதரித்து. “ “ஸீதா பர்த்தாரமாஸாத்ய. ராமம் தஸரதாத்மஜம் | ஜநகாநாம் குலே கீர்த்திம் ஆஹரிஷ்யதி மே ஸுதா”'(ரா. பரா. 67 – 21) என்று தான் பிறந்து ஜநக குலத்துக்குக் கீர்த்தியை உண்டாக்கினாப் போலவும்,
தஸரத குலத்துக்கு நடுவில் பிள்ளையான ஸ்ரீபரதாழ்வான் பிறந்து ‘விலலாப ஸப மத்யே ஜகர்ஹே ச புரோஹிதம் ! ராஜ்யஞ் சாஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்து மிஹார்ஹஸி”’ (ரா. ௮. 82 – 10) என்றும், “‘ஜடிலம் சீர வஸநம் ப்ராஞ்ஜலிம் பதிதம் புவி?” (ரா. ஆ. 102 – 1) என்றும், ““குடிக் கிடந்தாக்கம் செய்து” (திருவா. 9 – 2 – 2) என்றும் சொல்லுகிற படியே மூத்தாரிருக்க இளையார் முடிசூடக் கடவதன்று என்கிற குல மர்யாதையை நடத்தின வளவன்றிக்கே, ஜயேஷ்டரான பெருமாளுடைய விஸ்லேஷத்தில் ஜடை புனைந்து, வல்கலை சாத்தி, கண்ணநீராலுண்டான சேற்றிலே தரைக் கிடை கிடந்து அக்குலத்துக்கு முன்பில்லாத ஏற்றங்களை உண்டாக்கினாப் போலேயும்,
வஸாுதேவ குலத்துக்கு “‘மக்களறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து நின்றாய்” (பெரியா. தி. 5 – 3 – 1) என்று சொல்லுகிறபடியே கடைக் குட்டியான க்ருஷ்ணன் பிறந்து ““தந்தை காலில் பெரு விலங்கு தாளவிழ”‘ (திருமொழி 7 – 5 – 1) என்கிறபடியே தங்களாலே விடுவித்துக் கொள்ள வொண்ணாத மாதா பிதாக்களுடைய கட்டை அறுத்தாப் போலேயும்,
இவரும் திருவவதரித்து ““மலி புகழ் வண் குருகூர்’‘ (திருவா. 4 – 2 – 11) என்றும், “ஏற்கும் பெரும்புகழ் வண் குருகூர்‘” (திருவா. 3 – 9 – 11) என்றும் சொல்லுகிறபடியே தாம் திருவவதரித்து அந்நகரிக்குக் கீர்த்தியை உண்டாக்கி, “*குடிக்கிடந் தாக்கம் செய்து” (திருவா. 9 – 2 – 2) என்கிறபடியே அங்குள்ளார்க்கு ஜ்ஞாந வர்த்தகரான மாத்ரமே யன்றியிலே ப்ரேம வர்த்தகராயும், ”அறுவர் தம் பிறவி அஞ்சிறையே”’ (திருவா. 1 – 311) என்கிறபடியே தம்முடைய ப்ரபந்தாப்யாஸ முகத்தாலே ஸம்ஸாரிகளுடைய அறவைச் சிறையையு மறுத்தார் –
83–ஆதித்ய-ராம திவாகர-அச்யுத பாநுக்களுக்குப் போகாத உள்ளிருள் நீங்கி, சோஷியாத பிறவிக் கடல் வற்றி, விகஸியாத போதில் கமல மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கரோதயத்திலே.
அவ்வளவே யன்றிக்கே அஜ்ஞாந அந்தகார நிரஸநாதிகளாலே ஆதித்ய ராம க்ருஷ்ணர் களில் வ்யாவ்ருத்தர் என்கிறார் (ஆதித்யேத்யாதி,). பாஹ்யமான அந்த காரத்தைப் போக்கிக் கொண்டு உதிக்கிற ஆதித்யனுக்குப் போகாத உள்ளிருளான அஜ்ஞாந அந்தகாரமும்,
தமோ பாஹ்யம் விநஸ்யேத்து பாவக ஆதித்ய ஸந்நிதெள ந பாஹ்யாப், யந்தரஞ்சைவ விஷ்ணு பக்தார்க்க ஸந்நிதெள”’ என்கிறபடியே நீங்கி, ‘ஸரஜாலாம் ஸூமாந் ஸூர கபே ராம திவாகர:। ஸத்ருரஷோமயம் தோயம் உபஸோஷம் நயிஷ்யதி”‘ (ரா.ஸு. 37 – 16) என்று ஸரஜாலங்களாகிற கிரணங்களை உடையனாய்க் கொண்டு ஸத்ரு ராக்ஷஸராகிற ஸமுத்ரத்தை வற்றப் பண்ணுகிற ராம திவாகரர்க்கு வற்றாத ஸம்ஸாரஸமுத்ரம் “பிறவி என்னும் கடலும் வற்றி” (பெரியா, தி, 5 – 4 – 2) என்கிறபடியே வற்றி,
*“ததோகில ஜகத் பத்மபோதாய அச்யுத பாநுநா ! தேவகீ பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா”’” (வி.பு. 5- 3 – 2) என்று ஜகத் பத்மம் விகஸிதமாம்படி தேவகி யாகிற பூர்வ ஸந்த்யையிலே ஆவிர்பூதனான அச்யுத பாநுவான் க்ருஷ்ணனுக்கு விகஸியாத ”போதில் கமல வன்னெஞ்சம்”‘ (பெரியா. தி. 5 – 2- 8) என்கிற ஹ்ருத் பத்மம் விகஸிதமாயிற்று,
“யத், கோ ஸஹஸ்ர மபஹந்தி தமாம்ஸி பும்ஸாம் நாராயணோ வஸதி யத்ர ஸ சங்க, சக்ரா | யந் மண்டலம் ஸ்ருதிகதம் ப்ரணமந்தி விப்ரா? தஸ்மை நமோ வகுள பூ,ஷண பாஸ்கராய”” (பரா. ௮.) என்றும் திருவாய்மொழி ஆயிரமாகிற கிரணங்களை உடையராய், மஹிஷீ பூக்ஷணாயுத விஸிஷ்டனான நாராயணனை *கண்கள் சிவந்திற்படியே உள்ளே உடையராய், வேத வித்துக்களான ஸர்வ ஸிஷ்டர்களும் ப்ரணாமம் பண்ணும்படியான வைபவத்தை உடையராய், வகுள பூஷணரான ஆழ்வாராகிற பாஸ்கரோதயத்திலே என்கிறார். கீழ்ச் சொன்ன ஆதித்ய திவாகர பாநு சப்தம் போலன்றிக்கே இவர் பக்கவிலே பாஸ்கர சப்த ப்ரயோகம் பண்ணுகையாலே **ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போல் (திருவா. 6 – 7- 2) என்கிறபடியே தம்மோடு ஸம்பந்த, முடையா ரெல்லார்க்கும் தம்மோடொத்த ப்ரபாவத்தை உண்டாக்குமவர் என்னுமிடமும் தோற்றுகிறது –
84-வம்ஸ பூ,மிகளை உத்தரிக்கக் கீழ்க் குலம் புக்க வராஹ கோபாலரைப் போலே இவரும் நிமக்நரை உயர்த்தத் தாழ இழிந்தார்.
இப்படி மஹாப்ரபாவத்தை உடையரான இவர் அத்ரைவர்ணிகத்திலே தாழ இழிவானென் என்னில், க்ஷத்ரியரில் வைத்துக் கொண்டு ஹீநமான யது குலத்தை உத்தரிக்கைக்காக ”அங்கோராய்க் குலம் புக்கு?” (திருவா. 6 – 4 – 5) என்றும், அயம் ஸ கத்யதே ப்ராஜ்ஞை? புராணார்த்த,விஸாரதை, ! கோபாலோ யாதவம் வம்ஸம் மக்ந மப்யுத்தரிஷ்யதி’‘ (வி. பு. 5 – 20 – 49) என்றும் சொல்லுகிறபடியே அறிவு கேடர்க்கு எல்லையான இடையரோடு ஸஜாதீயனாய்க் கொண்டு கோபாலனானாப் போலவும், ப்ரளயார்ணவ மக்னையான ஸ்ரீ பூமிப் பிராட்டியை எடுக்கைக்காக ““உத்த்ருதாஸி வராஹேண க்ருஷ்ணேந ஸத பாஹுநா”’ (தை. உ.) என்றும், “‘நமஸ் தஸ்மை வராஹாய லீலயோத்தரதே மஹீம் | குரமத்யக,தோ யஸ்ய மேரு கணகணாயதே”’ (வராஹபு.) என்கிறபடியே வராஹ ஸஜாதீயனாய்க் கொண்டு ““கேழலாய்க் கீழ்ப் புக்கு (திருவா. 2 8 – 7) என்கிறபடியே பாதாளத்திலே தாழ இழிந்த வராஹ ரூபியைப் போலவும், ஸம்ஸாரார்ணவ மக்நரான ஸகல ஜந்துக்களையும் அதில் நின்றும் எடுக்கைக்காக அத்ரைவர்ண்யத்திலே தாழ இழிந்தார் என்கிறார்.-அல்லது த்ரைவர்ண்யத்திலே நின்று ப்ரபந்தீ, கரித்தாராகில் வேதமும் ததுப ப்ரும்ஹணங்களும் போலே அதி க்ருதாதி காரமாமிறே,
ஆக, வீட்டின்பமென்று தொடங்கி, இவ்வளவும் வர மந்த மதிகளுடைய ஸங்கா நிராகரணார்த்த மாக ‘ப்ரமாண ப்ரமேயங்களினுடைய சரமாவதியான அர்ச்சாவதாரத்தினுடையவும் திருவாய்மொழியினுடையவும் த்ரவ்ய பாஷா நிரூபணத்தோடொக்கும் ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபணமும்’ என்று இவருடைய உத்பத்தி நிரூபணத்தால் வரும் ப்ரத்யவாயத்தையும், வ்யாஸாதிகளைப் பற்ற இவருடைய அவதார வைலக்ஷண்யத்தையும், அவதாரம் பரார்த்த,ம் என்னுமிடத்தையும், இப்படி மஹா ப்ரபாவரான இவர் தாழ அவதரிக்கைக்கு ஹேதுவையும் அருளிச்செய்தார்–
85–ம்லேச்சனும் பக்தனானால் சதுர்வேதிகள் அநுவர்த்திக்க அறிவு கொடுத்து, குல தைவத்தோ டொக்கப் பூஜை கொண்டு பாவந தீர்த்த, ப்ரஸாதனாம் என்கிற திருமுகப் படியும், விஸ்வாமித்ர -விஷ்ணுசித்த -துளஸீ ப்ருத்யரோடே உள் கலந்து தொழு குலமானவன் நிலையார் பாடலாலே ப்ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும், கீழ் மகன் தலை மகனுக்கு ஸம ஸஹாவாய்த் தம்பிக்கு முன் பிறந்து வேலும் வில்லுங் கொண்டு பின் பிறந்தாரைச் சோதித்துத் தமையனுக்கு இளையோன் ஸத் பாவம் சொல்லும்படி ஏக குலமானமையும், தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய ஸம்யக் -ஸகுண-ஸஹ போஜநமும், ஒரு பிறவியிலே இரு பிறவியானா ரிருவர்க்கு தர்ம ஸூநு ஸ்வாமிகள் அக்ர பூஜை கொடுத்தமையும், ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் ஸந்தேஹியாமல் ஸஹஜரோடே புரோடாஸமமாகச் செய்த புத்ர க்ருத்யமும், புஷ்ப த்யாக போக மண்டபங்களில் பணிப் பூவும் ஆல வட்டமும் வீணையுங் கையுமான அந்தரங்கரை முடி மன்னவனும் வைதிகோத்தமரும் மஹா முனியும் அநுவர்த்தித்த க்ரமமும், யாக,அநுயாக உத்தர விதிகளில் காய அந்ந ஸ்தல ஸூத்தி பண்ணின வ்ருத்தாசாரமும் அறிவார்க்கிறே ஜந்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது.
இனிமேல் ஆழ்வாருடைய வைபவத்துக்கு உறுப்பாக ஸாமாந்யேந பாகவத வைபவத்தைப் பல உதாஹரணங்களாலும் அருளிச் செய்கிறார். அதில், அவர்கள் ஐத்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால் குறைய நின்றார்களே யாகிலும் பகவத் பக்தரானார்களாகில் அவர்கள் ஸர்வ உத்க்ருஷடரென்றும், அவர்கள் உத்க்ருஷ்ட ஜந்மாக்களாலே அநுவர்த்த நீயரென்றும், அவர்களுடைய ஸம்பந்தமே உத்தாரக மென்றும், அவர்கள் விஷயத்தில் பகவானுடையவும், பகவதீயருடையவும் ஆதர ப்ரகாரத்தையும், அநு வர்த்த நீயரான ப்ரகாரத்தையும்,- அவர்களுடைய ஸ்பர்ஸாதிகளே பாவநம் என்னுமிடத்தையும், ப்ரமேய பூதனுடையவும், ப்ரமாதாக்களினுடையவும், உக்த் யநுஷ்டாநங்களாலே வெளியிடுகிறார்.
(ம்லேச்சனும் பக்தனானால்) “மத் பக்த ஜந வாத்ஸல்யம் பூஜாயாஞ்ச அநுமோதநம் ! ஸ்வயமப்யர்ச்சதஞ்சைவ மதர்த்தே டம்ப வர்ஜநம் |) மத் கதா ஸ்ரவணே ப்ரீதி ஸ்வர நேத்ராங்க விக்ரியா । மமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோபஜீவதி । பக்திரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சேபி வர்த்ததே’* (பகவச் ஸாஸ்த்ரே) என்று பாகவத விஷயத்தில் வாத்ஸல்யம் முதலான அஷ்டவிதையான பக்தி ம்லேச்சன் பக்கலிலே உண்டாயிற்றாகிலும். (சதுர்வேதிகள் அநுவர்த்திக்க அறிவு கொடுத்துக் குல தைவத்தோ டொக்கப் பூஜை கொண்டு பாவந தீர்த்த ப்ரஸாதனா மென்கிற திருமுகப்படியும்) ““ஸ விப்ரேந்தரோ முநிஸ் ஸ்ரீமாறந் ஸ யதிஸ்ஸ ச பண்டித:। தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம்-ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம் । தத் பாதாம் ப்வதுலம் தீர்த்தம் ததுச்சிஷ்டம் ஸுஃபாவநம் | ததுக்தி மாத்ரம் மந்த்ராக்ர்யம் தத் ஸ்ப்ருஷ்ட மகிலம் ஸூசி?” (பகவஸ் ஸாஸ்த்ரே) என்று – அவர்கள் ஜந்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால் உத்க்ருஷ்டர். அவர்கள் உத்க்ருஷ்ட ஜந்மாக்களாலே அநுவர்த்தநீயர். அவர்கள் வித்யோபஜீவநத்துக்கு விஷய பூதர். அவர்கள் என்னைப் போலே யாகிலும் பூஜ்யர், அவர்கள் தீர்த்த ப்ரஸாதாதிகள் பரம பாவநம்” என்கிற திருமுகமான பகவதுக்தியும், ”பழுதிலா ஒழுகலாற்று”” (திருமாலை 42) இத்யாதியான திருமுகப்படியும்.
(விஸ்வாமித்ர-விஷ்ணுசித்த-துளஸீ ப்ருத்யரோடே உள் கலந்து) ““கெளஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்,யா ப்ரவர்த்ததே । உத்திஷ்ட, நரஸார்தூ,ல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்”” (ரா. படா, 23 – 2) என்று பெரிய பெருமாளைத் திருப்பள்ளி உணர்த்தின விஸ்வாமித்ரனோடும், “ அரவணையாய் ஆயரேறே அம்மமுண்ணத் துபிலெழாயே”” (பெரியா. தி.2-2-1) என்று க்ருஷ்ணனைத் திருப்பள்ளி உணர்த்தின பெரியாழ்வாரோடும், ”அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே”’ (திருப்பள்ளி.) என்று பெரியபெருமாளைத் திருப்பள்ளி உணர்த்தின துளவத் தொண்டாய ஸ்ரீதொண்டரடிப்பொடி ஆழ்வாரோடும் ஸகேத்ரிகளாய்க் கொண்டு திருப்பள்ளி உணர்த்தி, **வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணி வண்ணர்க்காளென்று உள் கலந்தாரடியார்’‘ (திருவா. 3 – 7 – 9) என்கிறபடியே வலவருகே தரிக்கப் பட்ட திருவாழியையும் அதுக்குப் பரபாகமான நீலமணி போலே இருக்கிற திருமேனியை யுமுடைய ஸர்வ ஸ்வாமிக்கு அநந்யார்ஹ ஸேஷ பூதரென்று கொண்டு ஸேஷத்வ ஜ்ஞாந பூர்வகமான வ்ருத்தியிலே அந்வயித்து, “எம் தொழு குலம் தாங்களே” (திருவா. 3- 7 – 8) என்று ஜ்ஞாதாக்களாலே அநுவர்த்த நீயருமாய், ஸேஷத்வ ஜ்ஞாநாநுகுணமான குலத்திலே பிறந்தவர்-
(நிலையார் பாடலாலே ப்ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும்) சரக வம்ஸத்திலே பிறந்த ஸோம ஸர்மாவான ப்ராஹ்மணன் வைதிகமான யாகத்தை உபக்ரமித்து அதில் மந்த்ர-க்ரியா-த்ரவ்ய-தஷிணா-லோபத்தாலே யாக மத்யே ம்ருதனாய் ப்ரஹ்ம ரக்ஷஸ்த்வத்தை அடைந்து வந்தவன், கைஸிக வ்ருத்தாந்தத்தில் வந்த ஸ்ரீ வைஷ்ணவரைக் கண்டு -த்வம் வை கீத ப்ரபாவேந நிஸ்தாரயிதுமர்ஹஸி ஏவமுக்த்வாத, சண்டாளம் ராக்ஷஸ ஸ்ரவணம் ௧,த2 | ப்ரஹ்ம ரக்ஷோ வசஸ் ஸ்ருத்வா ஸ்வபாகஸ் ஸம்ஸிதவ்ரத ! பாட, மித்யேவ தத் வாக்யம் ப்ரஹ்ம ராக்ஷஸ சோதிதம் । யந் மயா பஸ்சிமம் கீதம் ஸ்வரம் கைஸிக முத்தமம் । ப,லேந தஸ்ய பத்ரம் தே மோக்ஷயிஷ்யாமி கில்பிஷாத் । ஏவம் தத்ர வரம் க்ருஹ்ய ராக்ஷஸோ ப்ரஹ்ம ஸம்ஜ்ஞீத: | யஜ்ஞ ஸாபாத், விநிர்முக்தஸ் ஸோமஸர்மா மஹா யஸா” (கை. பு.) என்று அவன் ஸரணம் புக, (நிலையார் பாடலாலே) கைஸிகம் என்கிற பண்ணில் தாம் பண்ணின கீத ப்ரபாவத்தாலே அவனுடைய ப்ரஹ்ம ரக்ஷஸ்த்வத்தை விடுவித்து உஜ்ஜீவிப்பிக்கையாலே அந்த யாகக் குறையும் தலைக் கட்டினாரானமையும்.
(கீழ்மகன்) “ஏழை ஏதலன் கீழ்மகன்” (திருமொழி 5 – 8 – 1) என்று ஜந்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால் குறைய நின்ற ஸ்ரீகுஹப் பெருமாள் ”வானோர் தலைமகன்”” (திரு விருத்த-53 )என்கிறபடியே தலைமகனான சக்ரவர்த்தித் திருமகனோடே “உகந்து தோழன் நீ?” (திருமொழி 5 – 8 – 1) என்னும்படி ஸமஸஹாவாய், (தம்பிக்கு முன் பிறந்து) “என் தம்பி உன் தம்பி‘ என்கையாலே அவருடைய தம்பியாரான இளைய பெருமாளுக்கும் முற்பாடராய், (வேலும் வில்லுங் கொண்டு பின் பிறந்தாரைச் சோதித்து) இளையபெருமாள் பெருமாள் பக்கல் ஸெளகுமார்யா நுஸந்தாநத்தா லுண்டான பரிவாலே அநிமிஷ த்ருஷ்டியாய்க் கொண்டு இவரையும் அதி ஸங்கை பண்ணி ஸாயுதராய்க் கொண்டு நோக்கும்படி பெருமாள் பக்கல் பரிவை யுடையராய்–
(தமையனுக்கு இளையோன் ஸத் பாவம் சொல்லும்படி ஏக குலமானமையும்) ‘*ஆசசக்ஷேத ஸத் பாவம் லக்ஷ்மணஸ்ய மஹாத்மந: | பரதாயா ப்ரமேயாய குஹோ கஹந கோசர?” (ரா. ஆ. 86 – 1) என்று அளவிறந்த வைபவத்தை உடையரா யிருக்கிற ஸ்ரீபரதாழ்வானுக்கு இளைய பெருமாள் கைங்கர்ய ஸ்ரீயாலே உளராயிருக்கிற படியை இவர் உபதேஸிக்கும்படி இஷ்வாகு வம்ஸ்யரோடு ஏக குலமானமையும்.
(தூதுமொழிந்து) ““முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து” ‘ (திருமொழி 2 – 2 3) என்று பிராட்டி பக்கல் திருவடியோடே தூத வாக்யத்தை அருளிச் செய்துவிட்ட பெருமாள் “ ஸ பர்யா பூஜிதஸ் ஸம்யக், ராமோ தஸரதாத்மஜ?’‘ (ரா. பா. 1 – 58) என்று ஸபரி கையாலே ஸம்யக்காக பூஜிதரான பின்பு அழகு நிலைபெற்ற படியையும், (நடந்து) குடைமன்னரிடை நடந்த தூதா’” (திருமொழி 6 – 2 – 9) என்று பாண்டவ தூதனான க்ருஷ்ணனுடைய ““புக்தவத்ஸு த்விஜாக்ர்யேஷு நிஷண்ண? பரமாஸநே ! விதுராந்நாநி புபுஜே ஸூசீநி குணவந்தி ச ” (படர. உத்,.) என்று பாவநத்வ போக்யத்வங்களை உடைத்தா யிருக்கிற விதுராந்த போஜநத்தையும், (வந்த) ”தூது வந்த குரங்கு?” (திருமொழி 10 – 2 – 6) என்கிறபடியே ”த்ருஷ்டா ஸீதா” (ரா.பா. 1 – 78) என்ற திருவடியோடே ““உபகாராய ஸுக் ரீவோ ராஜ்யகாங்க்ஷி விபிஷண? ! நிஷ் காரணாய ஹநுமாந் தத் துல்யம் ஸஹ போஜநம்” (பாத்மோத்தரே) என்றும்; “உடனே உண்பன் நானென்ற ஒண் பொருள்?” (திருமொழி 5 – 8 – 2) என்கிறபடியே பெருமாள் ஸஹ போஜநம் பண்ணின படியும்.
(ஒரு பிறவியிலே இரு பிறவியானா ரிருவர்க்கு] யது குலத்திலே பிறந்து கோப குலத்திலே வளர்ந்த கிருஷ்ணனுக்கும், ருஷி கர்ப்பமாய்க் கொண்டு போந்த விடத்திலே வளர்ந்த திருமழிசைப் பிரானுக்கும், (தர்ம ஸுநு ஸ்வாமிகள் அக்ர பூஜை கொடுத்தமையும்- தர்ம புத்ரரும், பெரும்புலியூரடிகளும் தங்கள் யாகங்களிலே அக்ர பூஜை கொடுத்தமையும்.
(ஐவரில் இத்யாதி,) ஐவரில் முற்பட்ட தர்ம புத்ரர் ஸ்ரீவிதுரர்க்கு ஜ்ஞாநாதிக் யத்தையும் அசரீரி வாக்யத்தையம் கொண்டு ஸந்தேஹியாமல் புத்ர க்ருத்யம் பண்ணினமையும், நால்வரில் முற்பட்ட சக்ரவர்த்தித் திருமகன் ஸஹஜரான இளைய பெருமாளோடே கூட “ததஸ்தேநைவ ஸோகேந க்ருத்ரம் தக்த்வா ஜடாயுஷம்”’ (ரா.பா.1 – 54) என்கிற படியே பெரிய உடையார்க்குப் புத்ர க்ருத்யம் அநுஷ்டித்தபடியும், மூவரில் முற்பட்ட . பெரிய நம்பி மாறனேரி நம்பிக்குப் புரோடாஸமமாகப் புத்ர க்ருத்யம் அநுஷ்டித்தபடியும்
(புஷ்ப த்யாகேத்யாதி,) “சிந்து பூ மகிமும் திருவேங்கடத்து”” (திருவா. 3 – 3 – 2) என்கிற படியே புஷ்ப மண்டபமான திருமலையிலே பணிப் பூவுங் கையுமாய்த் திருவுள்ள மறியப் பறிமாறுகையாலே திருவேங்கடமுடையானுக்கு அந்தரங்கரான குறும்பறுத்த நம்பியை ““துளங்கு நீண் முடி அரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன்”’ (திருமொழி 5 – 8 – 9) என்கிற அபிஷிக்த க்ஷத்ரிய புத்ரரான தொண்டை மான் சக்ரவர்த்தி அநுவர்த்தித்த க்ரமமும், ““வேகவத் யுத்தரே தீரே புண்ய கோட்யாம் ஹ்ரிஸ் ஸ்வயம் । வரதஸ் ஸர்வ பூதாநாம் அத்யாபி பரித்ரு்ஸ்யதே”” (ஹஸ்திகிரி மாஹா.) என்கிறபடியே த்யாக மண்டபமான பெருமாள் கோயிவிலே திருவாலவட்டமும் கையுமாய்ப் பெருமாளுக்கு அந்தரங்கராய் நின்ற திருக்கச்சி நம்பியை வைதிகோத்தமரான உடையவர் அநுவர்த்தித்த க்ரமமும், ““தெண்ணீப்பொன்னி திரைக் கையாலடி வருடப் பள்ளி கொள்ளும்”’ (பெருமாள் தி, 1 1) என்கிறபடியே போக மண்டபமான கோயிலில் வீணையுங் கையுமாய்ப் பெரிய பெருமாளுக்கு அந்தரங்கரான திருப்பாணாழ்வாரை லோக ஸாரங்க மஹாமுனிகள் அநுவர்த்தித்த க்ரமமும்.
(யாகா நுயாகேத்யாதி,) யாகம் என்று – திருவாராதநமாய், அதுக்குப் பிள்ளை யுறங்கா வில்லி தாஸர் ஸ்பர்ஸத்தாலே காய ஸூத்தி, பண்ணின உடையவருடையவும், அநு யாகம் என்று – பகவத் ஸமாராதநாநந்தரம் பண்ணப் படுகிற ப்ரஸாத ஸ்விகாரம். அதுக்குப் பிள்ளை ஏறு திருவுடையார் தாஸருடைய கர ஸ்பர்ஸத்தாலே அந்ந ஸூத்தி, பண்ணின நம்பிள்ளை யுடையவும், உத்தர வீதி குடி புகுருகைக்கு “ஆலோக்ய ராஜநகரீ மதி, ராஜஸூநு ராஜாநமேவ பிதரம் பரிசிந்த்ய பூ,ப ! ஸூக்ரீவ மாருதி விபீஷண புண்ய பாத ஸஞ்சார பூத பவநம் ப்ரவிவேஸ ராம?” என்று பெருமாள் ஸ்தல ஸூத்தி பண்ணினாப் போலே, உத்தர வீதி குடி புகுருகிற காலத்திலே பிள்ளை வானமாமலை தாஸருடைய ஸஞ்சாரத்தாலே ஸ்தல ஸூத்தி பண்ணின நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டருடையவும் அநுஷ்டாந ப்ரகாரங்களையும் அறிவார்க்கிறே ஐந்மத்தினுடைய உத்க்ருஷ்ட அபக்ருஷ்டத்வம் தெரிவது-
ஆக கீழ் ஜந்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால் குறைய நின்றார்களேயாகிலும் பகவதீ யரானார்களாகில் அவர்கள் ஸர்வோத்க்ருஷ்டராய்க்கொண்டு உபாதேயரென்னு மிடத்தைச் சொல்லிற்று–
86-அஜ்ஞர் ப்ரமிக்கிற வர்ணாஸ்ரம வித்யா வ்ருத்தங்களை கர்த்தப ஜந்மம், ஸ்வபசாதமம், ஸில்பநைபுணம், பஸ்மாஹுதி, ஸவவிதவா லங்காரமென்று கழிப்பர்கள்.
இனிமேல் பகவஜ் ஜ்ஞாநமின்றியிலே இருக்கிற அஜ்ஞர் ப்ரமிக்கிற கேவல வர்ணாதிகள் வ்யர்த்தமாகையாலே த்யாஜ்ய மென்னுமிடத்தை ஸ ப்ரமாணமாக அருளிச் செய்கிறார் (அஜ்ஞர் ப்ரமிக்கிற என்று தொடங்கி), அஜ்ஞர் – பகவச் சேஷத்வ ஜ்ஞாதமில்லாதவர்கள், உத்தம வர்ணமென்றும், உத்தமாஸ்ரமமென்றும், ஸத்வித்யை என்றும்,ஸத் வ்ருத்தமென்றும் கேவலம் உத்க்ருஷ்டமாக ப்ரமிக்கிற இவற்றை.
(கர்த்தப ஜந்ம மித்யாதி,) ”சதுர்வேத தரோ விப்ரோ வாஸு தேவம் ந விந்த,தி । வேத பாரபராக்ராந்தஸ்ஸ வை ப்ராஹ்மண கர்த்தப”” என்கிறபடியே ஸகல வேதத்தையும் அதிகரித்து வைத்து ““வேதைஸ் ச ஸர்வைரஹமேவ வேத்ய” (கீதை 15 – 15) என்கிறபடியே ஸகல வேத,ப்ரதிபாத்யன் ஸர்வேஸ்வரன் என்றறியாதவர் குங்குமம் சுமந்த கமுதையோ பாதி என்றும், ‘“விஷ்ணு பக்தி விஹீநஸ் சேத் யதிஸ்ச ஸ்வபசாதம?’‘ என்று யதியே யாகிலும் பகவத் பக்தி இன்றிக்கே இருக்குமாகில் அவன் ஸ்வபாகனிற் காட்டில் தண்ணிய னென்றும், “’தத் கர்ம யந்ந பந்தாய ஸா வித்யா யா விமுக்தயே ! ஆயாஸாயாபரம் கர்ம வித்யாந்யா ஸில்பநைபுணம்” (வி.பு. 1 – 19) என்று மோக்ஷார்த்த,மான ஜ்ஞாநமே ஜ்ஞாநம்; அல்லாத ஜ்ஞாநம் செருப்புக்குத்தக் கற்றவோபாதி என்றும், ”ஆம்நாயாப்யபஸ நாந்யரண்யருதி,தம் வேத வரதாந் யந்வஹம் மேத,ஸ்சேத,ப,லாநி பூர்த்த விதய? ஸர்வே ஹுதம் பஸ்மநி | தீர்த்தா நாம வகாஹதாநி ச கஜஸ்நாதம் விநா யத்பத த்வந்தவாம் போருஹ ஸம்ஸ்ம்ருதீர் விஐயதே தேவஸ் ஸ நாராயண??‘ (முகுந்தமாலை 25) என்றும் பகவஜ் ஜ்ஞாதமில்லாதவர்களுடைய கர்மாதிகளெல்லாம் பஸ்மா ஹுதி போலே நிஷ் ப்ரயோஜநமென்றும்,
“தேசவா? புருஷா லோகே யேஷாம் ஹ்ருதி, ந கேஸவ? । கேஸவார்ப்பித ஸர்வாங்கா ந பாவா ந புநர்ப வா?”, “யஸ்யாகி லாமீவஹபிஸ் ஸுமங்கலைர் வாசோ விமிஸ்ரா குண கர்ம ஜந்மபி ! ப்ராணந்தி ஸூம்பந்தி புநந்தி வை ஜகத்யாஸ் தத் வியுக்தா ஸவ ஸோபநா மதா?” என்று பகவஜ் ஜ்ஞாநமில்லாதவர்கள் ஜீவந்ம்ருதராகையாலே அவர்கள் ஸவ ப்ராயரென்றும், ““ப்ராதுர் பாவைஸ் ஸுர நர ஸமோதே வதேவஸ் ததீயா ஜாத்யா வ்ருத்தைரபி ச குண தஸ்தாத் ருஸோ நாத்ர கர்ஹா கிந்து ஸ்ரீமத் புவநப வந த்ராணதோந்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி வித வாகல்பகல்ப? ப்ரகர்ஷூ” என்று பகவஜ் ஜ்ஞாநமில்லாத வர்களுடைய வித்யாதி,கள் பகவத் ஸம்பந்த ஜ்ஞாந மென்கிற ஸெளமங்கல்ய மில்லாமையாலே விதவால்ங்காரமென்று இந்த ஜந்மாதிகளை ப்ரமாணிகரான ஜ்ஞாதாக்கள் அநாதரிப்பர்க ளென்கிறார். பகவஜ் ஜ்ஞாநமில்லாத ஜந்மாதிகள் தயாஜ்யமென்னுமிடம் சொல்லிற்று–
முதல் ப்ரகரணம் முற்றிற்று
————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-