ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்த, ஸகலா யேந த,ர்ஸிதா | ஸ்ரீ ஸாநு தாஸ மமலம் தேவ ராஜம் தமாஸ்ரயே ॥
ஆசார்ய ஹ்ருதயத்தின் அர்த்தங்கள் அனைத்தையும் அருளிச் செய்தவராய், ஸ்ரீஸாநுகாஸர், தேவராஜர் என்னும் திருநாமங்களை உடையவரான திருநாராயணபுரத்து ஆயை ஆஸ்ரயிக்கிறேன்
ஆசார்ய ஸ்வாந்த வக்தாரம் அபி ராமவராபிதம்!
ஸ்ரீக்ருஷ்ண தநயம் வந்தே, ஐகத் குருவராநுஜம் ॥
பணவாளரவணைப் பள்ளி பயில் பவர்க்கெவ்வுயிரும்
குண போகமென்று குருகைக் கதிபனுரைத்ததுய்ய
உணர்பாவினுட்பொருள் ஒன்றுமறியா உலகறிய
மணவாளன் மாறன் மனமூரைத்தான் வண்முடும்பை வந்தே.
ஸம்ஸ்ரிதாநாம் ஜநிச்சேதஹேது ஜ்ஞாநத முக்திதம் | யது புர்யாம் ஜநந் யாக்யம் லோகாநா முத்தமம் குரும் |
ஸம் ப்ரதா யார்த்தத நிகம் ஸெளம்ய ஜாமாத்ரு ஸூரயே | நிஸ்சிதார்த்த ப்ரதம் ஸ்ரீமஜ் ஜநநீ குருமாஸ்ரயே
ஆஸூரி சிங்கமாம் ஆதி குரு உலகுக்கே
மாசிலா இளையாழ்வார் மண்ணுலக மாழ்ந்தன்று
தூசரிக்கும் திருப்பாவைத் திருவருளைத் தெளிவித்துப்
பேசினார் பெம்மானைப் பின்போரை வாழ்த்திடவே
மாதவத்தோர் வாழ்த்தும் முடும்பை மணவாளன்
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார் தீதற்ற
ஆசார்ய ஹ்ருதயம் பெற்றார் நம்மாயி யிவர்
தேசாரத் தாள்கள் நெஞ்சே காண்
மாதவத்தோன் மாறன் மனங்கூறும் மணவாளன்
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார் – நீதியினா
லாங்கவர் தாள் சேர் பெற்றார் ஆயி மணவாளமுனி
பூங்கமலத் தாள்கள் நெஞ்சே போற்று
ஆயி அந்தாதி-ஆயி ப்ரபத்தியில் மாமுநிகளாலும் அவரின் பேரன் ஜீயர் நாயனாராலும் அநுக்ரஹிக்கப் பட்டிருக்கிறதைக் காணலாம் அதில் முதல் இரண்டு ஸ்லோகத்தால் ஆஸூரிப்பெருமாள் வைபவததைக் கூறியுள்ளார்.
ஆஸூரியிலவதரித்த இராமாநுசர்க் கிருவர் தாமாய்
கூசாத நிலையொன்னில் தாய்வயிற்றில் பிறந்தவராய்
மாசாத கூரேசர் குருவருடன் சேர்த்து வைக்க
ஆஸூரிப் பெருமாள் தாம் ஒருவராம் இராமாநுசர்க்கே (1)
இராமாநுசர்க்கே ஸரணாம் எழுபத்து நால்வர் தன்னுள்
இராப்பகலென்னாதே தன் குருவைச் சிந்தித்தேத்தி
இராகமனைத்தையும் தொலைத்து விட்டுப் பெருமாளென்னும்
இராகவனோடெம் பெருமாள் எதுகிரியைச் சென்றார்தாமே (3)
ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸிதா: !
ஸ்ரீஸாநு தாஸ மமலம் தே,வராஜம் தமாஸ்ரயே ॥
த்,ராவிட ஆம்நாய ஹ்ருத.யம் கு,ருபர்வ க்ரமாக,தம் ।
ரம்ய ஜாமாத்ரு தே,வேந தர்ஸிதம் க்ருஷ்ண ஸூநுதா
——————-
87-அணைய ஊர புனைய அடியும் பொடியும் பட பர்வத பவநங்களிலே ஏதேனுமாக ஜதநிக்கப் பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜந்மங்களைப் பெரு மக்களும் பெரியோரும் பரிக்ரஹித்து ப்ரார்த்திப்பர்கள்.
இனி மேல் பகவத் விநியோகார்ஹமாயும், பகவத் ஸம்பந்தத்தை உடைத்தாயு மிருக்கிற திர்யக் ஸ்தாவரங்களே யாகிலும் மிகவும் உத்க்ருஷ்டங்களென்னுமிடத்தை ““வாசிகை பக்ஷி மிருகதாம் மாநஸைரந்த்ய ஜாதிதாம் | ஸாரீரஜை: கர்ம தோஷைர்யாதி ஸ்தாவரதாம் நர” (மநு) என்று வாசிக காயிக பலமாய்க் கொண்டு அல்லாதார்க்கு வரக் கடவதான திர்யக் ஸ்தாவர ஜந்மங்கள் போலன்றிக்கே, பகவத் விநியோகார்ஹமாய், பகவத் ஸம்பந்தத்தை உடைத்தாயுமிருக்கிற திர்யக் ஸ்தாவரங்களே உபாதேயமென்று மஹாத்மாக்களாலே பரிக்ரஹிக்கவும் ஆதரிக்கவும் படுகையாலே தந் முகேந ப்ரகாஸிப்பிக்கிறார் (அணைய இத்யாதி,).
*அணைவதரவணைமேல்” (திருவா.2 – 8 – 1) விடாயர் மடுவிலே சேர்ந்தாப் போலே ஸ்ரம ஹரமாய், அதாவது – “பூம்பாவை யாகம் புணர்வது” என்று நாச்சிமாரோட்டைச் சேர்த்தியோடே விகல்பிக்கலாம் படியான ஸூக ஸ்பர்ஸத்தை உடையனாகையாலே ஸர்வேஸ்வரன் கண் வளர்ந்தருளுகைக்குப் பாங்காயிருப்பதான திருவனந்தாழ்வானாயும், “ஊரும் புட்கொடியுமக்தே”” (திருவா. 10 – 2 – 3) என்கிறபடியே வேதாந்த வேத்யத்வத யோதகமான கருட வாஹநன் கருட த்வஜன் என்று சொல்லப்படும்படி அவனுக்கு வாஹநமாயும் த்வஜமாயுமிருக்கும் பெரிய திருவடியாயும், “தாளிணை மேலும் புனைந்த” (திருவா, 1 – 9 – 7), ““புனையுங் கண்ணி”” (திருவா. 4 – 3 – 2) என்கிறபடியே ஸர்வேஸ்வரத்வ ஸூூசகமான தனி மாலையாய், ”மலர்த் துழாய் மாட்டே நீ மனம் வைத்தாய்” (திருவா. 3- 1 & 4) என்கிறபடியே அவன் திருவுள்ளத்தைக் கொள்ளை கொள்ளவற்றான திருத் துழாயாழ்வாராயுமிருக்கிற திர்யக் ஸ்தாவர ஜந்மங்களைப் “பெரு மக்களுள்ளவர்’” (திருவா. 3 – 7 – 5) என்னும்படி மஹாத்மாக்களாயும், ஸத்தையே பிடித்து மோஷத்வ ஜ்ஞாந திரோதாந மில்லாமையாலே “’அஸந்நேவ’”, ‘“ஸந்தமேநம்”’ (தை.ஆ.) என்ன வேண்டாதபடி இருக்கையாலே நித்யரான ஸூரிகள் பகவத் விநியோகார்ஹமாக ஸ்வேச்சையாலே பரிக்ரஹித்தார்கள்.
(அடியும் பொடியும் பட) ““பத்யு? ப்ரஜாநாமைஸ்வர்யம் பஸூநாம் வா ந காமயே அஹம் கதம்போ பூயாஸம் குந்தேரா வா யமுநா தடே”’ என்று ப்ரஜாபதி பஸூ பதிகளுடைய ஐஸ்வர்யத்தையும் வேண்டேன்; ”பூத்த நீள் கடம்பேறி”’ (நா. தி. 4 – 4] என்றும், ‘“பூங்குருந்தேறி யிருத்தி” (நா. தி. 3 – 3) என்றும் சொல்லுகிற க்ருஷ்ணனுடைய திருவடிகளோட்டை ஸ்பர்ஸத்துக்கு விஷயமான குருந்தாதல், கடம்பாதல் ஆவேனாக வேணும் என்றும், ““ஆஸாமஹோ சரண ரேணு ஜுஷாமஹம் ஸ்யாம் ப்,ருந்ததாவநே கிமபி குல்மல தெளஷதீநாம் । யா து ஸ்த்யஷம் ஸ்வஜ ந மார்ய பதஞ்ச ஹித்வா பேஜுர் முகுந்த பதவீம் ஸ்ருதிபிர் விம்ருக்யாம்”‘ (பாக,.10) என்று வேதங்களாலும் தேடவரிய க்ருஷ்ணன் போன வழியை ஸ்வ ஜநத்தையும் குலாசாரத்தையும் அதிக்ரமித்து யாவர் சில பெண்கள் பின் தொடர்ந்தார்கள், அந்த க்ருஷ்ணனுடையவும், பெண்களுடையவும் பாத ரேணுவை தரித்திருக்கும் ப்ருந்தா வநத்தில் சிறு செடிகள் கொடிகள் ஓஷதிகள் இவையாவேனாக வேணும் என்றும்,
(பர்வத) “கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே’‘ (பெருமா. தி. 4 – 1) என்றும், “திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதி யுடையே னாவேனே”‘ (பெருமா.தி, 4 2) என்றும் “‘தம்பகமாய் நிற்கும் (பெருமா. தி. 4 – 5) , “*செண்பகமாய் நிற்கும்‘” (பெருமா. தி. 4 – ச்) , “கானாறாய்ப் பாயும்”(பெருமா. தி. 4 – 7), எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனுமாவேனே”'(பெருமா. தி. 4 – 10) என்றும் திருமலை யாழ்வாரோட்டை ஸம்பந்தமுடைய திர்யக் ஸ்தாரவரங்களில் ஏதேனுமொன்றாகப் பெறுவேனாக . வேணும் என்றும்,
(ப,வநங்களில்]) “தவத,ஸ்ய ஸுகைக ஸங்கிநாம் பவநேஷ் வஸ்த்வபி கீடஜந்ம மே”? (ஸ்தோ.ர. 55) என்று – தேவரீருடைய தாஸ்ய ஸுக மொன்றிலுமே ஸங்கத்தை உடையரான ஸ்ரீவைஷ்ணவர்கள் திருமாளிகைகளிலே உத்பத்தி விநாஸங்களிரண்டும் அங்கேயாம் படியான கீட ஜத்மமே எனக்கு உண்டாக வேணும் என்றும்; இப்படி பகவத் பாாகவத ஸம்பந்தங்களை யுடைய திர்யக் ஸ்தாவர ஜந்மங்களை *பேராளன் பேரோதும் பெரியோரான ஸ்ரீஸூக ப்ரஹ்மர்ஷி, ஸ்ரீகுலசேகரப் பெருமாள், பெரிய முதலியார் தொடக்கமான முமுஷுக்கள் ப்ரார்த்தித்தார்கள்.
ஆக இத்தால் பகவஜ் ஜ்ஞாந ரஹிதமான உத்க்ருஷ்ட வர்ணாதிகள் ஸத்துக்களுக்கு அநாதரணீயமென்றும், பகவத் விநியோகார்ஹமான திர்யக் ஸ்தாவர ஜந்மங்கள் ஆதரணிய மென்னுமிடத்தையும் சேர அருளிச் செய்தார் –
88-ஸேஷத்வ பஹிர்பூத ஜஞாநாநந்த மயனையும் ஸஹியாதார் த்யாஜ்யோபாதியை ஆதரியார்களே.
இனி மேல் ஸேஷேத்வத்துக்குப் புறம்பான ஆத்மாவையும் அநாதரிக்கிறவர்களுககு ஓளபாதிகமான வர்ணாதிகளை அநாதரிக்கச் சொல்ல வேணுமோ? என்கிறார் (ஸேஷத்வேத்யாதி ,), “ந தேஹம் ந ப்ராணாந் ந ச ஸுக,மஸேஷாபி லஷிதம் ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஸேஷத்வ விப்வாத் ! பஹிர்பூ,தம் நாத க்ஷணமபி ஸஹே யாது ஸததா விநாஸம் தத் ஸத்யம் மது மதந விஜ்ஞாபநமித,ம்”” (ஸ்தோ, ர. 57) என்று – தேவரீருடைய ஸேஷத்வத்துக்குப் புறம்பான தேஹாதிகள் ஒன்றையும் ஸஹியேன்; அவ்வளவே யன்றியிலே ஜ்ஞாநாநந்த,மயமான ஆத்ம வஸ்துவையும் ஸஹியேன்; அது ஸததாவாக விநாஸத்தை அடைவதாக. இது – அஹ்ருதயமன்று ஸத்யம்- இது அஸத்யமாகில் தேவரீர் ஸந்நிதி யில் அஸத்யம் சொன்ன மது பட்டது படக் கடவேன்-என்று ஸேஷத்வத்துக்குப் புறம்பான போது ““ஜஞாநாநந்த மயஸ்த்வாத்மா” (பாஞ்ச) என்று ஜ்ஞாநாநந்த மயனையும் ஸஹியாதவர்கள், ஸேஷத்வ ஜஞாந விரோதியான அஹங்காரத்துக்கு ஹேதுவாகையாலே த்யாஜ்யமாய், காமமடியாக வருவதொன்றாகையாலே ஓளபாதிகமான வர்ணத்தை ஆதரியார்க ளென்னுமிடம் சொல்ல வேணுமோ ? என்கிறார் –
89-இதின் ஓளபாதிகத்வம் ஒரு ராஜா தன்னை மறை முனிவனாக்கினவன் நீசனாக்குவித்த ராஜாவை வாரே உறுப்பாக யதிப்பித்து ஸ்வர்க்க மேற்றின போதே தெரியும்.
இந்த வர்ணத்தினுடைய ஓளபாதிகத்வத்தை உதாஹரண முகத்தாலே வெளியிடுகிறார் (ஒரு ராஜா என்று தெடங்கி). ருஷிக வம்ஸ உத்பவனாய் ராஜாவான விஸ்வாமித்ரன் ப்ரஹ்ம ரிஷித் வத்தை ஆசைப்பட்டு நெடுங்காலம் தபஸ்ஸு பண்ணின தன்னை ‘‘மந்திரங் கொள் மறை முனிவன்” (பெருமா.தி.10 – 2) என்னும் படி ப்ரஹ்ம ரிஷியாக்கின வஸிஷ்டன் தன்னுடைய வார்தாதிலங்கநம் பண்ணின த்ரி ஸங்குவைத் தன் புத்ரர்களுடைய ஸாபத்தாலே மார்விலிட்ட யஜ்ஞோபவீதந் தானே வாராம்படி சண்டாளனாக்கு விக்க, அந்த த்ரிஸங்குவையும் அந்த வாரே யஜ்ஞாங்கமான உறுப்புத் தோலாம் படித் தன்னுடைய தபோ பலத்தாலே யஜிப்பித்து ஸ்வர்க்காரோஹணம் பண்ணுவித்த போதே வர்ணம் கர்மோபாதிகம் என்னுமிடம் ஸுவ்யக்த மென்கிறார்,-ஆக இத்தால் ஒரு க்ஷத்ரியன் ப்ரஹ்ம ரிஷியானானென்றும், ஒரு க்ஷத்ரியன் சண்டாளனானானென்றும், அந்த சண்டாளனானவனை அந்த ப்ரஹ்ம ரிஷியானவன் தபோ பலத்தாலே ஸ்வர்க்க மேற்றினான் என்றும் சொல்லுகையாலே வர்ணம் ஓளபாதிகம் என்னுமிடம் ஸுஸ்திரமாய்த்து –
90- மாவுருவில் கள்ள வேடம், திருந்து வேதமலமான மானிடம் பாடல், ஸர்வ வர்ண ஸூத்ரத்வம், காடு வாழ் சாதியில் கடல் வண்ணன் வேடம், தென்னுரையில் ஹரி கீர்த்தி, ஸ்வபசரில் பத்தி பாசனமும் அறிவார் ஆரார் அமரரென்ன ஏற, அறியாதார் சாதி யந்தணர்களேலும் தகர விழுவர்.
ஆக கீழ் பகவத் ஸம்பந்த, ஜஞாந ரஹிதமான உத்க்ருஷ்ட ஜந்மம் அபக்ருஷ்ட மாகையாலே அதினளவிலே நிற்கிற ப்ரமாதாக்கள் அநுபாதேயரென்றும், பகவத் ஸம்பந்த ஜ்ஞாந முகத்தாலே அபக்ருஷ்ட ஜந்மம் உத்க்ருஷ்ட ஜந்மமாகையாலே அதிலே நிற்கிற ப்ரமாதாக்கள் உபாதேயரென்றும் சொல்லா நின்றது. இனி மேல் ப்ரமாதாக்களளவே யன்றிக்கே ப்ரமாண-ப்ரமேய-ப்ரமாதாக்கள் மூன்றிலும் த்யாஜ்யமுமுண்டு, உபாதேயமுமுண்டு; அப்படி உபாதேயமான ப்ரமாண-ப்ரமேயங்களோடு விகல்பிக்கலாம் படியான அந்த ப்ரமாதாக்களுடைய வைபவத்தை ப்ரமாணங்களும் ப்ராமாணிகரும் சொல்லா நிற்க, அத்தை அறியாதே மந்த மதிகளாய்க் கொண்டு ஜந்ம நிரூபணம் பண்ணுமவர்கள் அத பதிப்பர்களென்று கீழே ““வீட்டின்ப வின்பப்பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண ஸமம் இன்பமாரியிலாராய்ச்சி” என்று உபக்ரமித்த அர்த்தத்தை நிகமிக்கிறார் (மா வுருவில் கள்ள வேடம் என்று தொடங்கி].
“எம்மா வுருவும் வேண்டு மாற்றாலாவா யெழிலேறே”’ (திருவா. 5 – 8 – 2) “எவ் வுருவும் மாவுரு’ என்று அவன் பரிக்ரஹித்த விக்ரஹமெல்லாம் அப்ராக்ருதமா யிருக்குமென்றும், “இச்சா க்ருஹீதாபி மதோருதேஹா “” (வி.பு. 6 – 7 – 84) என்று இச்சையாலே பரிக்ருஹீதமா யிருக்குமென்றும் சொல்லுகிற விக்ரஹங்களில் வைத்துக்கொண்டு “கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்கவாறும்”” (திருவா. 3 – 10 – 4) என்று, “யாதா ஹி சோரஸ்ஸ ததா ஹி புத்தா (ரா. ஆ. 109 – 73) என்று வேதத்துக்கு அப்ராமாண்யம் சொல்லுகிற புத்த முனியான விக்ரஹமும்,
(திருந்து வேதம்) ஸகல ஸப்தங்களும் ஸத்வாரகமாகவும், அத்வாரகமாகவும் ஸர்வேஸ்வரனை ப்ரதி பாதிக்கையாலே கட்டளைப் பட்ட வேதத்தில் (மலமான மானிடம் பாடல்) *’ஓர் மானிடம் பாடலென்னாவதே” (திருவா. 3 – 9 – 4) என்றும், “ந ஸ்மர்த்தவ்யோ விஸேஷேண வேத மந்த்ரோப்ய வைஷ்ணவ:? ! காவ்யாலாபோபி ஜப்யோஸெள யத்ர ஸங்கீர்த்ய தேச்யுதா ” என்றும் சொல்லுகிறபடியே ஹேயரான க்ஷேத்ரஜ்ஞரை ப்ரஸம்ஸிக்கிற வாக்யங்களும்,
(ஸர்வ வர்ண ஸூத்ரத்வம்) “ந ஸூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா? | ஸர்வ வர்ணேஷு தே ஸூத்ரா யே ஹ்ய பக்தா ஜநார்த்தநே” என்று பகவத் பக்தனல்லாதவன் எல்லா வர்ணங்களிலும் ஸூத்ரனென்றும், ப்ரமாண-ப்ரமேய -ப்ரமாதாக்கள் மூவரிலும் த்யாஜ்யரையும் சொல்லி இனி மேல் உபாதேயரையும் சொல்லுகிறது-
(காடு வாழ் சாதியில் கடல் வண்ணன் வேடம்] ““கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்”” (நா.திரு. 12 – 8) என்று கோபாலனாய்க் கொண்டு காட்டிலே பசுக்களின் பின்னே ”கறையினார்” (திருவா. ச – 8 – 4) என்னும் படி பேணாதே திரியச் செய்தேயும் ‘‘கடல் வண்ணன் வேடத்தை வந்து காணீர்”” (பெரியா… 3 – 3 – 1) என்னும்படி பிறர்க்கும் அழைத்துக் காட்ட வேண்டும்படி த்ரஷ்டவ்யமான க்ருஷ்ண லிக்ரஹமும், (தென்னுரையில் ஹரி கீர்த்தி) த்ராவிட பாஷா பரிகல்பிதமான ப்ரபந்தங்களில் வைத்துக் கொண்டு *ஹரி கீர்த்திம் விநைவாந்யத் ‘ ” (மாத்ஸ்யே) இத்யாதிப்படியே பகவத் ப்ரதிபாதக மானவையும் (ஸ்வபசரில்) ஸ்வபரோபி மஹீபால் விஷ்ணு பக்தோ த்விஜாதி க” (பாஞ்ச. என்று ஸ்வபாகரே யாகிலும், (பத்தி பாசனமுமறிவார்) “பெறற்கரிய நின்ன பாத பத்தியான பாசனம்” (திருச்ச, விரு. 100) என்று சொல்லுகிறபடியே ஸ்வ யத்நத்தாலே பெறுதற்கரிதான பகவச் சரணார விந்தங்களில் பக்தியைத் தங்களுக்கு தநம் என்று அறியுமவர்களுமாகிற ப்ரமாண -ப்ரமேய-ப்ரமாதாக்கள் மூன்றும் -உத்க்ருஷ்ட தமம் என்றும் சொல்லி இந்த உத்க்ருஷ்ட -தமமான ப்ரமாண-ப்ரமேயங்களோடு விகல்பிக்கும்படியான இந்த ப்ரமாதாக்கள் வைபவத்தை (ஆராரமாரென்ன) “நீரார் முகில் வண்ணன் பேராரோதுவார் ஆராரமரரே”” (திருவா. 10 – 5 – 8) என்று விலக்ஷண விக்ரஹ யுக்தனான ஸர்வேஸ்வரனுடைய திரு நாமங்களை அநுஸந்திக்க வல்லவர்கள் ஏதேனுமொரு ஐந்ம வ்ருத்தங்களை உடையரே யாகிலும் அவர்கள் நித்ய ஸூரிகள் என்றும், (ஏற) ”இலங்குவான் யாவரூமேறுவர் சொன்னாலே”” (திருவா. 3 – 8 – 11) என்று பகவத விஷயத்தில் அந்வயித்தவர்கள் ஆரேனுமாகிலும் தேஸ விஸேஷ ப்ராப்தி பண்ணுவர்கள் என்றும், இப்படி ஸர்வோத்க்ருஷ்டராகச் சொல்லா நிற்க (அறியதார்) ஜந்மாதிகளால் வந்த அஹங்காரத்தாலே மந்த மதிகளாய்க் கொண்டு அவர்கள் வைபவத்தை அறியாதே ஜந்ம நிரூபணம் பண்ணுமவர்கள் (சாதி யந்தணர்களேலும் தகர விழுவர்) ‘அமரவோரங்கமாறும்”’ (திருமாலை 43) என்கிற பாட்டின் படியே ““அநாசாராந் துராசாராந் அஜ்ஞாத்ரூதந் ஹீந ஜந்மந? । மத் பக்தாந் ஸ்ரோத்ரியோ நிந்தந் ஸத்யஸ் சண்டாளதாம் வ்ரஜேத்”” என்றும் சொல்லுகிறபடியே உத்க்ருஷ்ட ஜந்மத்திலே பிறந்து அங்க ஸஹிதமான நாலு வேதங்களையும் அதிகரித்து பகவத் பக்தரா யிருந்தார்களே யாகிலும் ஜந்மாதிகளால் குறைய நின்று பகவதீயரா யிருப்பாருடைய ஜந்மத்தை காதா சித்கமாக வாகிலும் நிரூபித்தார்களாகில் அந் நிலையிலே அவர்கள் சண்டாளராவர் என்கையாலே பின்னை ஒரு காலும் உஜ்ஜிவந மில்லாதபடி அத, பதிப்பர்க ளென்கிறார். “ஸூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ஸ்வபசம் ததா | ஈக்ஷதே ஜாதி ஸாமாந்யாத் ஸ யாதி நரகம் நர- என்றும், “ப்ரத்யக்ஷிதாத்மநாதாநாம் நைஷாம் சிந்த்யம் குலாதிகம்” என்றும் சொல்லா நின்றதிறே –
91-தமிழ் மா முனி திக்கு ஸரண்ய மென்றவர்களாலே க்வசித் க்வசித் என்று இவராவிர்பாவம் கலியும் கெடும் போலே ஸூசிதம்.
இப்படி பாகவத ஸாமாந்யத்தாலே ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபிக்கலாகாது என்கிற மாத்ர மன்றிக்கே, ஆழ்வாருடைய அவதாரம் வ்யாஸ ஸூகாதி களாலும் ப்ரகாஸிப்பிக்கப் பட்ட தென்கிறார் மேல். (தமிழ் மா முனி திக்கு ஸரண்ய மென்றவர்களாலே) “வண்டமிழ் மாமுனி”’ (பெருமா.தி. 10 – 5) தக்ஷிணாதிக் க்ருதா யேந ஸரண்யா புண்ய கர்மணா”’ (குருகா மாஹாத்ம்யம்) என்று த்ராவிட ஸாஸ்த்ர ப்ரவர்த்தகனான அகஸ்த்யன் நின்ற திக்கு ஸர்வர்க்கும் புகலிடம் என்ற வ்யாஸ ஸூகாதிகளாலே (க்வசித் க்வசித் என்று இவர் ஆவிர்பாவம்) *’கலெள கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா: | க்வசித் கவசிந் மஹா பாகா த்ராவிடேஷு ச பூயாஸ ? தாம்ர பர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ । காவேரி ச மஹா பாகா ப்ரதீசீ ச மஹாநதீ, । யே பிபந்தி ஜலம் தாஸாம் மநுஜா மநுஜேஸ்வர ! தேஷாம் நாராயணே பக்திர் பூயஸீ நிருபத்ரவா”’ (வி.பு.) என்றும்,
“க்ரூரே கலியுகே, ப்ராப்தே நாஸ்திகைச கலுஷீக்ருதே ॥ விஷ்ணோரம்ஸாம் ஸ ஸம்பூதோ வேத வேதார்த்த ஸாரவித் | ஸ்தோத்ரம் வேத மயம் கர்த்தும் த்ராவிட்யா ஸ ச பாஷயா ஜநிஷ்யதி ஸதாம் ஸ்ரேஷ்டோ லோகாநாம் ஹித காம்யயா ! கஸ்சிந் மநுஷ்ய ரூபேண க்ருபயா தத்ர வை முநி? । ப்ரயாஸ்யதி புநஸ்ஸோபி ஸாயுஜ்யம் பரமாத்மநா அத் யேதவ்யம் த்விஜஸ் ஸ்ரேஷ்டைர் வேத ரூபமிதம் க்ருதம் ! ஸ்த்ரீபிஸ் , ஸூத்ரா திபிஸ் சைவ தேஷாம் முக்தி? கரே ஸ்திதா’” (குருகாமா.) என்றும், ““கலெள புந பாபரதாபி பூதே ஸ உத் பபூ வாஸ்ரித வத்ஸலத்வாத் ! பக்தாத்மநா ஸர்வ ஜநாந் ஸு கோப்தும் விஸ்வாதி கோ விஸ்வ மயோ ஹி விஷ்ணு?” என்றும் இவ் வாழ்வாருடைய ஆவிர்பாவம் கர்ம மூலமன்றிக்கே பகவதவதாரம் போலே ஜகத் ரக்ஷணார்த்தமாக பகவதிச்சையாலே உண்டான தாகையாலே ஆவிர்பாவம் என்கிறது –அந்த ஆவிர்பாவம் ““கலியும் கெடும்”” (திருவா. 5 – 2 – 1) என்று இவர் தாம் திருமங்கையாழ்வார், உடையவர் போல்வார் வந்துதித்து கலியுக, ஸ்வபாவம் கெடும் என்று அருளிச் செய்தாப் போலே அவர்களாலே ஸசிப்பிக்கப்பட்ட தென்கிறார் –
92–அத்ரி-ஜமதக்நி-பங்க்திரத,-வஸு-நந்த, ஸூநுவானவனுடைய யுக,-வர்ண-க்ரமாவதாரமோ? வ்யாஸாதி வத் ஆவேஸமோ? மூதுவர் கரை கண்டோர் சீரியரிலே ஒருவரோ? முன்னம் நோற்ற அனந்தன் மேல் புண்ணியங்கள் ப,லித்தவரோ? என்று ஸங்கிப்பர்கள்,
இப்படி அருளிச் செய்கிற இவருடைய அவதார வைபவத்தைப் பார்த்து பகவதவதாரங்களில் ஸ்வருபேண அவதாரமோ? ஆவேஸாவதாரமோ? நித்யரோ? முக்தரோ? ஸித்தரோ? தம்முடைய ஜந்மாந்தர ஸஹஸ்ர புண்ய ஸஞ்சயங்களாலே வந்தவரோ? ஈஸ்வரனுடைய பாக்ய பலத்தாலே வந்தவரோ? என்று அதி ஸங்கிப்பர்கள் என்கிறார் (அத்ரி ஐமதக்நி என்று தொடங்கி ) க்ருத யுகத்திலே அத்ரி ஜமதக்நிகள் பக்கலிலே தத்தாத்ரேயராயும், பரஸூராமனாயும்-த்ரேதா யுகத்திலே ஷத்ரியனான தஸரத சக்ரவர்த்தி பக்கலிலே வந்தவதரித்தும்-த்வாபர- யுகத்திலே க்ஷத்ரியரில் தண்ணியராகையாலே வைஸ்ய ப்ராயரான வஸுதேவ ஸூநுவாயும், ‘“க்ருஷி கோரக்ஷ வாணிஜ்யம் வைஸ்யம் கர்ம ஸ்வபாவஜம்” (கீ. 18 – 44) என்று கோ ரக்ஷண தர்மத்தை உடையராகையாலே வைஸ்யரான ஸ்ரீநந்தகோபர்க்குப் புத்ரராயும், யுக க்ரமத்திலும் அடைவே வர்ண த்ரயத்திலே வந்து அவதரித்துப் போந்த ஸர்வேஸ்வரன் கலியுகத்திலே நாலாம் வர்ணத்திலே ஆழ்வாராய்த் திருவவதரித்தானோ என்றும்,
““க்ருஷ்ண த்வைபாயநம் வ்யாஸம் வித்தி, நாராயணம் ப்ரபும்” (விபு. 3 – 4-5) என்கிறபடியே வேதங்களை வ்யஸிக்கைக்காக வ்யாஸாதிகள் போல் வந்தவதரித்தானோ ? என்றும், ”கரை கண்டோர்”” (திருவா. 8 – 3 – 10)என்று ஸம்ஸாரத்தைக் கரை கண்ட முக்தரிலே ஒருவர் அப்படியே அவதரித்தாரோ? ““பாம்பணை மேல் பன்ளி கொண்டருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே” (திருவிரு. 79) என்றும், .““முக்தாநாம் லக்ஷணம் ஹ்யேதச்ச் வேத த்வீப நிவாஸிநாம்?” (பர. ரா. 337 – 40) என்றும் நித்ய முக்தரோடொக்கச் சொல்லலாம்படி இருக்கிற பவேதத்,வீபவாஸிகளான ஸித்தரிலே ஒருவரோ? “முன்னம் நோற்ற விதி கொலோ” (திருவா. 6 – 5 – 7) என்கிற படியே ஜந்மாந்தர ஸஞ்சிதமான தம்முடைய பாக்யத்தாலே பிறந்தவரோ? “அனந்தன் மேல் கிடந்த வெம் புண்ணியா?” (திருச்ச. 45) என்று அநந்தஸாயியான ஸர்வேஸ்வரனுடைய பாக்யத்தாலே பிறந்தவரோ? என்று சங்கிப்பர்கள் என்கிறார் –
93-இதுக்கு மூலம் – யான் நீ என்று மறுதலைத்து வானத்து மண் மிசை மாறும் நிகருமின்றி நிலயிடம் தெரியாதே தெய்வத்தினம் ஒரு வகைக் கொப்பாக இனத் தலைவன் அந்தாமத்தன்பு செய்ய, சேர்ந்தமைக் கடையாளம் உளவாக உகந்துகந்து திமிர் கொண்டாலொத்து நாட்டியல் வொழித்து ஸடரை யோட்டி மதாவலிப்தர்க்கு அங்கு மிட்டு நடாவிய கூற்றமாய், தீயன மருங்கு வாராமல் கலி யுகம் நீங்கிக் கித யுகம் பற்றிப் பட்டெழுபோதறி யாதிருந்த ப்ரபாவம்.
இப்படி இவர்கள் சங்கிக்கைக்கு ஹேது என்னென்னில், இவருடைய ப்ரபாவம் கண்டு என்கிறார் மேல். (இதுக்கு மூலம்) இப்படி இவர்கள் சங்கிக்கைக்கு ஹேது. (யான் நீ என்று மறுதலைத்து) “’புவியும் இரு விசும்பும் நின்னகத்த, நீ என் செவியின் வழி புகுந்தென்னுள்ளாய், அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை என்பதனை யாரறிவார், ஊன் பருகு நேமியாய் உள்ளு”” (பெரிய திரு. 75) என்று – உபய விபூ,தியையும் உன் ஸங்கல்பைக தேஸத்திலே வைத்து என் ஸ்ரவண த்வாரா நெஞ்சிலே புகுந்து விச்சேதமின்றியிலே நித்ய வாஸம் பண்ணா நின்ற பின்பு, நானோ, நீயோ பெரியாய்? ஆரென்று ஸர்வாதிகனான நீயே விசாரி – என்று ஸர்வேஸ்வரனோடே விகல்பிக்கலாம் படியாய்,(வானத்து மண்மிசை மாறும் நிகருமின்றி) ““இனி யாவர் நிகரகல் வானத்தே’” (திருவா. 4 5 – 8) என்றும், ““மாறுளதோ இம் மண்ணின் மிசையே”’ (திருவா. 6 – 4 – 9) என்றும் ‘ உபய விபூதி யிலும் எனக்கு ஸத்ருஸருண்டோ என்னும்படி த தாஸ்ய ஹ்ருஷ்டோக்தியை உடையராய் (நிலையிடம் தெரியாதே) ““வைகுந்தமோ வையமோ நும் நிலையிடம்”” (திருவிரு -75) என்று – இந்த விபூதிஸ்தரோ? நித்யவிபூதிஸ்தரோ? என்று அறுதியிட ஒண்ணாதபடி இருக்கையாலே உபய விபூ,தியிலும் வ்யாவ்ருத்தராய்,
(தெய்வத்தினம் ஒருவகைக் கொப்டாக) “*தெய்வத்தினமோரனையீர்களாய்” (திருவிரு. 23) என்று நித்யஸூரிகளெல்லாரும் கூடினாலும் தம்முடைய ஒருவகைக் கொப்பாக உடையராய், (இனத் தலைவன் இத்யாதி,) ”வானோரினத் தலைவன்”’ (பெரியதிரு. 25) என்று அப்படிப்பட்ட ஸூரி ஸமூஹத்துக்கு நிர்வாஹகனான ஸர்வேஸ்வரன், ““அந்தாமத்தன்பு செய்து”‘ (திருவா. 2 – 5 – 1) என்று விலக்ஷணமான பரம பதத்தில் பண்ணும் வ்யாமோஹத்தை இவர் பக்கலிலே பண்ண-(சேர்ந்தமைக் கடையாளமுளவாக) “திருவருள்களும் சேர்ந்தமைக் கடையாளம் திருந்தவுள”’ (திருவா. 8 – 9 – 6) என்று ஸர்வேஸ்வரனுடைய க்ருபையாலே விஷயீ க்ருதரானமைக்கு ஸுவ்யக்தமாக லாஞ்சநமான ராகத்தை வாய்க் கரையிலே உடையராய் கேவலம் வாய்க் கரையில் ராக மாத்ர மன்றிக்கே “‘உகந்துகந்துள் மகிழ்ந்து குழையுமே”’ (திருவா. 6 – 5 – 4) என்று பாஹ்யாப் யந்தர ஹர்ஷத்தாலே ஸிதிலராய், “’திமிர கொண்டாலொத்து நிற்கும் ”” (திருவா. 6 – 52) என்று அநுஸந்தா நத்தாலுண்டான ஆதராதிஸயத்தாலே ““ஸ்தப்தோஸ்யுத தமாதேஸம ப்ராக்ஷ்ய?”” (சா. 6 – 1 – 3) என்று ஸர்வ நியாமகமான ப்ரஹ்ம ஸ்வரூப ஸாக்ஷாத்காரம் பிறந்தாரைப் போலே ஸ்திமிதராய்,(நாட்டியல்வொழிந்து) ““நாட்டாரோடியல் வொழிந்து”‘ (திருவா. 10 – 6 – 2) என்று ஸம்ஸாரிகளோட்டை ஸங்கத்தை விட்டு (ஸடரையோட்டி) ஸட கோபராகையாலே ப்ரமாணாநு குணமாக தர்க்கம் சொல்லுகை யன்றிக்கே ஸ்வ மநீஷையாகக் கற்பித்துக் கொண்டு, ஷூஷ்க தர்க்கங்களாலே அர்த்த ஸ்தாபநம் பண்ண விருக்கிற ஸடரைத் தம்முடைய உக்தி ஸ்ரவண மாத்ரத்தாலே தம்முடைய ஸந்நிதாநத்தில் நில்லாதபடி பண்ணி,
(மதா வலிப்தர்க்கு அங்குஸ மிட்டு) பராங்குஸ ராகையாலே ‘வித்யா மதோ தந மத,ஸ்த்ருதியோபி ஜநோ மத, | ஏதே மதா வலிப்தாநாம் ஏத ஏவ ஸதாம் தம?”’ என்று அபிஜந வித்யா வ்ருத்தங்களாகிற மத,த்ரயங்களினாலே தூஷிதரா யிருக்கிறவர்களை ஸ்வோக்தி ரூபமான அங்குஸங்களாலே நிர்மதராம்படி பண்ணி, (நடாவிய கூற்றமாய்) “பறவையின் பாகன் மதன செங்கோல் நடாவிய கூற்றங் கண்டீர்”” (திருவிரு. 6) என்று வேத, வேத்யத்வ ஸூசகமான கரூட வாஹநனான ஸர்வேஸ்வரன் விஷயத்திலே, “நின் கண் வேட்கை எழுவிப்பனே”” (திருவிரு. 96) என்கிறபடியே எல்லார்க்கும் பக்தியை உண்டாக்கி நடத்துமவராய் கூற்றம் என்கையாலே தம்முடைய தர்ஸநஸ்தருடைய ஸாம்ஸாரிகமான ருசிக்கு விநாஸகரராய். (தீயன மருங்கு வாராமல்) **கொன்றுயிருண்ணும் விசாதி பகை பசி தீயன வெல்லாம்”’ (திருவா. 5 – 2 – 6) என்று சேதநரை முடித்து ப்ராணாபஹாரம் பண்ணக் கடவதான ஆதி வ்யாதி ரூபமான தோஷங்களும் “வானே மறி கடலோ”’ (பெரியதிரு. 54) இத்யாதி,ப்படி ஸாம்ஸாரிக து,:க ஹேதுவான பாபங்களும் பார்ஸ்வத்திலும் வாராதபடியாய்,
(கலியுகம் நீங்கிக் கிதயுகம் பற்றி) “திரியும் கலியுகம் நீங்கி!” (திருவா. 5 – 2 – 9) என்று ‘“பவிஷ்யத்யத ரோத்தரம்”‘ (பார.சா .மோ) என்கிறபடியே பதார்த்த ஸ்வபாவங்கள் வேறுபட்டு வருகிற கவியுக தோஷமும் நீங்கி, ““பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருக) (திருவா. 5 – 2 – 3) என்று ஆதி க்ருத யுகத்தை யொக்க மஹத்தான ஆநந்த ஸாகரம் அபி வ்ருத்தமாக, “பட்ட போதெழு போதறியாள் விரை மட்டலர் தண்டுழா யென்னும்”‘ (திருவா. 2 – 4 – 9) என்று பகவத் விஷயத்தில் போக்யதாநுஸந்தாநத்தாலே “‘தந்தந்த் யுதித ஆதித்யே நந்தந்த் யஸ்தமிதே ரவெள”’ என்றும், ‘ப்ராதர் மூத்ர புரீஷாப்,யாம் மத்யாஹ்நே ஷூத் பிபாஸயா । ஸாயம் காமேந படத்யந்தே ஜந்தவோ நிமி நித்ரயா” என்கிறபடியே ஸம்ஸாரிகளுக்குப் புறம்பே கால க்ஷேப ஹேதுவான திவா ராத்ர விபாக மறியாதே அகால கால்யமான தேஸ விஸேஷத்திற் போலே பகவதநுபவைக பரராய்ப் போந்த இவருடைய ப்ரபாவம் கீழ் அப்படி சங்கிக்கைக்கு ஹேது என்கிறார்-
94-இதுக்கு ஹேது – ஊழி தோறும் சோம்பாது ஒன்றிப் பொருளென்றளி மகிழ்ந்து முற்றுமாய் நின்று நூலுரைத்து யோகு புணர்ந்து கண் காண வந்து ஆள் பார்க்கிறவன் உலகினதியல்வை நல்வீடு செய்ய இணக்குப் பார்வை தேடிக் கழறலர் ஞானமுருவின மூழுதுமோட்டின பெருங் கண் எங்குமிலக்கற்று அன்பொடு தோக்கான திசையிலே ஆக்கையில் புக்குழன்று மாறிப் படிந்து துளங்குகிறவர் மேலே படப் பக்க நோக்கறப் பண்ணின விஸேஷ கடாக்ஷம்.
இவர்க்கு இந்த ப்ரபாவமுண்டாகைக் கடி என் என்னில், ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே ஸம்ஸாரிகளுடைய உஜஜீவநத்துக்கு கிருஷி பண்ணுகிற ஈஸ்வரன் ஸஜாதீயரைக் கொண்டு இவர்களைத் திருத்த வேணு மென்று பார்த்து அதுக்காளாவாரை ஸம்ஸாரத்தில் கிடையாத தஸையிலே தேவ மநுஷ்யாதி சரீரங்களிலே பரவேஸித்து, ததநுஸாரிகளாய்க் கொண்டு ஜந்ம பரம்பரைகளிலே இழிந்த ஸம்ஸார ஸாகர மத்யஸ்தரான இவர் பக்கலிலே நிர்ஹேதுகமாகப் பண்ணின விஸேஷ கடாக்ஷமென்கிறார் (இதுக்கு ஹேது ஊழி தோறும் என்று தொடங்கி). இதுக்கு ஹேது – கீழ் ப்ரஸ்துதமான ப்ரபாவத்துக்கு ஹேது.
“ஊழி தோறும். தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்துழலும்”’ (திருவா. 10 – 7-9) என்றும், ”சோம்பாதிப் பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா”” (பெரியதிரு. 18) என்றும், ”ஒன்றி யொன்றி உலகம் படைத்தான்”” (திருவா. 3 – 9 – 10) என்றும், ‘“பொருளென்றிவ் வுலகம் படைத்தவன்”’ (திருவா. 2 – 10 – 11) என்றும், அளிமகிழ்ந்துலக மெல்லாம் படைத்தவை” (திருவா. 3 – 4 – 8) என்றும் சொல்லுகிறபடியே கர்ஷகனானவன் ஒரு போகம் பதறி(ரி)ற்றென்னா, கை வாங்காதே மேலே மேலே க்ருஷி பண்ணுமாப் போலே கல்பந் தோறும் ஸ்ருஷ்டிக்கச் செய்தேயும், அது ஸபலமாகாதிருக்கச் செய்தேயும், பின்னையும் முசியாதே ப்ரயோஜநமாம், ப்ரயோஜநமாம் என்று திருவுள்ளத்தில் க்ருபையாலே வந்த உகப்போடே அடுத்தடுத்து ஸ்ருஷடித்து,
(முற்றுமாய் நின்று) ““தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநு ப்ராவிஸத்”’ (தை. 2 – 6 – 1) என்கிறபடியே ஸ்ருஷ்டமான ஜகத்திலே அவற்றினுடைய வஸ்துத்வ-நாம பாக்த்வங்களுக்காக அவற்றைச் சொல்லுகிற ஸப்தங்கள் தன்னளவிலே பர்யவஸிக்கும்படி வ்யாப்தனாய்க் கொண்டு ப்ரகாரியாய் நின்று, “‘அன்னமதா யிருந்தங்கற நூலுரைத்த ‘” (திருமொழி 11 – 4 – 8) என்கிறபடியே ஸாராஸார விவேகோந்முகமான ஹம்ஸ ரூபியாய்க் கொண்டு ஸாஸ்த்ர ப்ரதராநத்தைப் பண்ண (யோகு புணர்ந்து) ““தன் கோலச் செந்தாமரைக் கண் உறைபவன் போலவோர் யோகுபுணர்ந்த ஓளிமணிவண்ணன்”’(திருவா. 3 – 10 – 2) என்று க்ஷீராப்தியில் யோக நித்ரா வ்யாஜத்தாலே சேதநருடைய ரக்ஷண உபாயசிந்தை பண்ணி,
சிந்தா ஸமநந்தரம் தோற்றின உபாயாநுகு, ணமாக (கண் காண வந்து) “துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து”’ (திருவா. 3 – 10 – 6) என்கிறபடியே ”ந மாம்ஸ சஷுரபி வீக்ஷதே தம்”, “ந சக்ஷுஷா பஸ்யதி கஸ்ச நைநம்””, “என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுரு” (பெரியதிரு. 28) என்றும் சொல்லுகிற தான் துக்க பஹுளரான மநுஷ்யரோடே ஸஜாதீயராய்க் கொண்டு வந்து பிறந்து அவர்களுடைய மாம்ஸ சக்ஷுஸ்ஸுக்கு விஷய பூ,தனாய், “‘ஆள்பார்த்துழிதருவாய்”? (பெரியதிரு. 60) என்று அப்ராக்ருத விக்ரஹ விஸிஷ்டனாய், நிரங்குசா ஸ்வதந்த்ரனாய், நிரபேக்ஷனான தான் உற்றாரா யிருப்பார் உருமாறி நின்று ஆராயுமாப் போலே *தமருகந்த இத்யாதிப்படியே அர்ச்சகர் உகந்த திரவ்யத்தைத் திருமேனியாகக் கொண்டு அவர்களுக்கு அத்யந்த பரதந்த்ரனாய், அவர்களிடுகிற பத்ர புஷ்பாதிகளிலே ஸா பேக்ஷனாய்க் கொண்டு கோயில்களிலேயும், க்ருஹங்களிலேயும் நின்றருளி நம்முடைய விஷயீகாரத்துக் காளாவார் ஆர் என்று ஆள் பார்க்கிறவன்.
(உலகினதியல்வை நல்வீடுசெய்ய) “ஓ ஓ உலகினதியல்வே”’ (திருவாசிரி. 6) என்கிற படியே ஸர்வ ப்ரகார ரக்ஷகனான தன்னை விட்டு ஷூத்ர தே,வதைகளை பர ஹிம்ஸாதி ஸாதந முகத்தாலே வலித்து, ஷூத்ர ப்ரயோஜநங்களைப் பெற்று அவற்றை அநுபவிக்கைக்காக தேவாதி சரீர ப்ரவேஸம் பண்ணி, ஆஸ்சர்ய பூதையான ப்ரக்ருதி வஸ்யரான ஸம்ஸாரி சேதநர் ஸ்வபாவத்தை “யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்”” (திருவிரு. 95) என்று ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில் ஏதேனுமொன்றைப் பற்றத் தன்னை விட்டு நீங்குகையே ஸ்வபாவமான விரதத்தை ஸவாஸநமாகப் போக்குகைக்காக,
(இணக்குப் பார்வை தேடி) ஸஜாதீய புத்தியாலே தன்னோடு இணக்க வற்றான பார்வை மானை வைத்து ம்ருகம் பிடிப்பாரைப் போலே ஸஜாதீயரைக் கொண்டு திருத்த வேணும் என்று பார்த்து, அதுக்காளாவார் ஆரோ என்று தேடி, (கழறலர் ஞானமுருவின மூழுதுமோட்டின பெருங்கண்) ““கழறலம்” (திருவிரு. 58) என்கிற பாட்டில் சொல்லுகிற படியே ஜகத்திலே வ்யாப்தமான ஜ்ஞாநத்தையும் அதிக்ரமித்து, ”மண்முழுது மகப்படுத்து நின்ற””, ”மேலைத் தண்மதியும் கதிரவனும் தவிரவோடி”’ (திருநெடு. 5) என்று ஸகல லோகங்களையும் ஆக்ரமிக்கும்படி வ்யாபிக்கப் பெற்ற திருவடிகளிலும் முற்பட்ட ்அழறலர் தாமரைக் கண்ணன் ” (திருவிரு. 58) என்றும், ““பெருங் கேழலார் தம் பெருங்கண் மலர்ப் புண்டரீகம்”” (திருவிரு. 45) என்கிற திருக் கண்களானவை, (எங்குமிலக்கற்று) விஷயீகாரத்துக்கு அநுகுணமான நன்மை சேதநர் பக்கல் காணாமையாலே எங்கும் இலக்கற்று,
(அன்பொடு நோக்கான திசையிலே) *’அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளி கொள்ளும்”’ (பெகுமா.தி. 1 – 10) என்கிறபடியே இவர்கள் பக்கல் நன்மை பெறாத வளவிலும் இவர்கள் பக்கல் தனக்குண்டான சாபலத்தாலே ஸ ஸ்நேஹமாக கடாஷித்த திசையிலே, (ஆக்கையில் புக்கு) ”யாதானு மோராக்கையில் புக்கு”’ (திருவிரு. 95) என்றும், ““ஆக்கையின் வழி யுழல்வேன்”’ (திருவா. 3 – 2 – 1) என்றும், “மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து (திருவா. 2 – 6 – 8) என்றும், “’பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்” (திருவா. 3 – 2 – 2) என்றும், ““பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க”” (திருவா. 5 – 1 – 9) என்றும் சொல்லுகிறபடியே தேவாதி சரீரங்களிலே புக்கு“தேவோஹம் மநுஷ்யோஹம்’ என்கிறபடியே அவற்றிலே பக்தராய், அவற்றின் வழியே போய் தத் பலமான ஜந்ம பரம்பரைகளிலே தோள் மாறி அவற்றிலே அவகாஹித்துத் தரை காண ஓண்ணாத ஸம்ஸார ஸமுத்ர மத்யஸ்தராய்க் கொண்டு நடுங்குகிற இவர் மேலே படும்படி,
“எங்கும் பக்க நோக்கறியான்”’ (திருவா, 2 – 6 – 2) என்கிறபடியே நாச்சிமார் வந்து திருமுலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும் புரிந்து பாராதே ““நாஸெள புருஷ காரேண ந சாப்யந்யேந ஹேதுநா | கேவலம் ஸ்வேச்ச யைவாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசந”” (பாஞ்ச.), ““நிர்ஹேதுக கடாக்ஷேண மதீயேந மஹாமதே ! ஆசார்ய விஷயீகாராத் ப்ராப்நுவந்தி பராங்கதிம்”” (பாஞ்ச.) என்றும் சொல்லுகிறபடியே ஸ்வேச்சையாலே நிர்ஹேதுகமாகப் பண்ணப்பட்ட விஸேஷ கடாஷம் என்கிறார்
ஆக இத்தால் கீழ்ச் சொன்ன அவருடைய ப்ரபாவத்துக்கு ஹேது பகவத் கடாக்ஷம் என்றதாய்த்து.
95-ஸ்ரமணீ-விது,ர-ருஷிபத்நிகளைப் பூதராக்கின புண்ட,ரீகாக்ஷ்ன நெடுநோக்கு சாபமிழிந்தென்னப்பண்ணுமிறே.
நித்ய ஸம்ஸாரியாய்ப் போந்தாரொருவர்க்கு ப,க,வத் கடாக்ஷத்தாலே ஸாம்ஸாரிக ஸகல பாபங்களும் போய் இந்த ப்ரபாவமெல்லாம் உண்டாகக் கூடுமோ என்னில்; ஸபரி முதலானாரை பரி ஸூத்,த,மாக்கின ஸர்வேஸ்வரனுடைய தி,வ்ய கடாக்ஷம் அவஸ்ய மநுபோக்தவ்யமான ஸகல பாபங்களையும் நஸிப்பிக்குமிறே என்கிறார் (ஸ்ரமணிவிது,ர என்று தொடங்கி). (ஸ்ரமணிவிது,ர) ““ஸ்ரமணிம் த.ர்ம நிபுணாம்”’ (ரா. ஆ. 1 – 56) என்கிறபடியே வேடுவிச்சியாயிருக்கிற ஸபரியை *சக்ஷுஷா தவ ஸெளம்யேந பூதாஸ்மி ரகு,தந்த,ந । பாத,மூலம் க,மிஷ்யாமி யாநஹம் பர்யசாரிஷம்”‘ (ரா. ஆ. 74 – 12) என்று அவள்தானே “தேவரீருடைய அழகிய கடாக்ஷத்தினாலே என்னுடைய ப்ராப்தி ப்ரதிப,ந்த,கங்களெல்லாம் நிங்பேஷமாகப் போகையாலே பரிஸுத்,தை,யானேன்’ என்று சொல்லும்படி பண்ணியும்,
ஸ்ரீவிது,ரரை ‘“பீ,ஷ்மத்,ரோணாவதிக்ரம்ய மாஞ்சைவ மது,ஸூ௫த.ந । கிமர்த்த_ம் புண்ட,ரீகாக்ஷ பு,க்தம் வ்ருஷலபே,ஜநம்”” (பார. உத்.) என்று எதிரியானவன் சீறிச் சொல்லா நிற்கச் செய்தேயும் ”புண்ட,ரீகாக்ஷ”” என்னும்படியான திருக்கண்களாலே அவரை பரிஸூத்,த, ராம்படி பண்ணியும்,
(ருஷி பத்நிகளை) “*வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடிசி லுண்ணும் போது ஈதென்று பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும்” (நா. திரு. 12 – 6) என்கிறபடியே தன்னுடைய நெடு நோக்காலே ப,க்த விலோசநத்தில் ருஷி பத்நிகளிலே ஒருத்தியை “கத்ரைகா வித்,ருதா ப,ர்த்ரா ப,க,வந்தம் ய தாஸ்ருதம் । ஹ்ருதேரபகூ,ஹ்ய விஜஹெள தேஹம் கர்மநிப,ந்த,நம்”” (ப,ாக,. 10 – 28 – 34) என்று தன் பக்கல் ப்ராவண்யத்தாலே-அப்போதே முக்தையாம்படிபண்ணியும், அதிலே சிலர் தன்னை அதுப,விக்கும்படியாகவும் பண்ணின விஷோேஷ கடாக்ஷமானது, (சாபமிழிந்தென்னப் பண்ணுமிறே) “திங்களு மாதித்தியனுமெழுந்தாற் போல் அங்கணிரண்டுங்கொண்டெங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபமிழிந்து ”” (திருப்பாவை 22) என்கிறபடியே ஆஹ்லாத,கரத்வத்தையும், அதிப்ரகாஸகத்வத்தையும் உடைத்தாகையாலே சற்த்.ராதி.த்யர்களிருவரும் உதித்தாற்போலேஇருக்கிற அழகிய திருக்கண்களாலே எங்களைப் பார்த்தருளினாயாகில் ஸசாபோபஹதரைப்போலே, அநுப,வித்தல்லது நமமியாத ஸாம்ஸாரிக ஸகல துரிதங்களும் நிவ்ருத்தமாம் என்று சொல்லும்படி ஸகல பாபக்ஷபணத்தில் நிபுணங்களாயிறே இருப்பது என்கிறார்-
96-கோவ்ருத்திக்கு நெரிஞ்சியைப் புல்லாக்கினவன் ஐகத்திதார்ததமாக “எனக்கே நல்லவருள்கள்” என்னும்படி ஸர்வ ஸெளஹார்த்த,ப்ரஸாதத்தை ஒரு மடை செய்து இவரைத் தன்னாக்க, லோகமாகத் தம்மைப் போலாக்கும்படி யானார்.
ஸர்வேஸ்வரன் இவரை இப்படி நிர்ஹேதுகமாக கடாக்ஷித்ததுக்கு ப்ரயோஜநம் என் என்னில், லோக ஹிதார்த்தமாக என்கிறார் (கோவ்ருத்திக்கு நெரிஞ்சியைப் புல்லாக்கினவன் என்று தொடங்கி). “*திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி” (திருவா, 10 – 3 10) என்று ஸ்வ ரக்ஷணத்தில் அந்வயமில்லாத கோ ரக்ஷணத்திலே திருவுள்ளம் உகந்திருக்கையாலே அவற்றினுடைய அபிவ்ருத்திக்காக “ப்ருந்தாவநம் பகவதா க்ருஷ்ணேநாக்லிஷ்ட கர்மணா ! றாபே,ந மநஸாத்,யாதம் கவாம் வருத்தி மபிப்ஸதா”’ (வி.பு. 5 – 6 – 28) என்று நெரிஞ்சிக் காட்டை பர ஸம்ருத்த்யேக ப்ரயோஜநமாகத் திருவுள்ளத்தாலே **உத்பந்நநவபாஷ்பாட்யம்”’ (வி.பு. 5 – 6 – 37) என்கிறபடியே அவற்றுக்கு போக்யமாக ஸங்கல்பித்தவன். “நமோ ப்ரஹ்மண்யதே வாய கேரா ப்ராஹ்மண ஹிதாய ச ।ஜகத்தி தாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம?” (பாரதம்) என்று பசுக்களினுடைய ரக்ஷணத்தோபாதி ஜகத்தினுடைய ரக்ஷ்ணத்துக்குக் கடவன் அவனாகையாலே அந்த ஜகத்தினுடைய ஹிதார்த்தமாக.
(எனக்கே நல்ல வருள்கள் என்னும்படி) ‘எதிர்சூழல் புக்கெனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய – எம்மான் திருவிக்கிரமனை – விதி சூழ்ந்தது”‘ (திருவா. 2 – 7-6) என்று – அநேக ஜந்மங்கள் நான் பிறந்த ஐந்மங்களுக்கு எதிரே பிறந்து வந்து என்னை விஷயீகரிக்ரும்படி ஸர்வேஸ்வரனை க்ருபை கால் கட்டிற்று என்றும், ‘நல்ல வருள்கள் நமக்கே உகந்தருள் செய்வான்’” (திருவா. §-6- 1) என்றும் தன் பேறாக க்ருபை பண்ண!], “பிராட்டி திருவநந்தாழ்வான் தொடக்கமானார்க்குக் கூறுகொடாதே எனக்கும் என்னோடு ஸம்பந்தமுடையார்க்கும் தருகிறவன்” என்று இவர் பெறும்படி.
(ஸர்வ ஸெளஹார்த்த, ப்ரஸாதத்தை ஒரு மடை செய்து) “ஸுஹ்ருதம் ஸர்வ பூதாநாம் ஜ்ஞாத்வா மாம் .ஸாந்திம்ருச்சதி‘” (கீதை 5 – 29) என்கிறபடியே ஸர்வ பூதங்கள் பக்கலிலும் நடக்கிற தன்னுடைய ஸெளஹார்த்தத் தாலுண்டான ப்ரஸாதத்தை-இவரொருவர் பக்கலிலே ஒரு மடைப் படச் செய்து விஷயீகரித்து. (இவரைத் தன்னாக்க) ““என்னைத் தன்னாக்கி”” (திருவா. 7 – 9 – 1) என்கிறபடியே இவரைத் தன்னோடொத்த ஜ்ஞாந பக்திகளை உடையராகவும், அநந்யார்ஹ ஸேஷபூதராகவும் பண்ண- அவனாலே விஷயீ க்ருதரான இவரும் லோகமாகத் தம்மைப் போலே ஆக்கும்படி ஆனார். “ஊரும் நாடுமுலகமும் தன்னைப் போல்” (திருவா. 6 – 6 – 2) என்கிறபடியே தாம் அவதரித்த திருநகரி, அத்தோடே சேர்ந்த திருவழுதிவளநாடு, அத்தோடே சேர்ந்த பூ, லோகம், அவற்றிலுள்ளாரடையத் தம்மைப் போலே பகவதநுபவைக பரராகப் பண்ணும்படி ஆனார் என்கிறார்.
97-அதாவது மயர்வற மதிநலமருளுகை.
(அதாவது மயர்வறமதிநலமருளுகை) அதாவது – தன்னாக்குகையாவது என்றபடி. தன்னாக்குகையாவது – தான் “*மயர்வறமதிநலமருளினன்” என்று தாமே அருளிச் செய்யலாம்படி அஜ்ஞாநத்தை ஸவாஸநமாகப் போக்கி பக்திரூபாபந்ந ஜ்ஞாதத்தைத் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே கொடுக்கை
98-இருள் துயக்கு மயக்கு மறப்பு என்கிற அநுதய-ஸம்மய-விபர்யய-விஸ்ம்ருதிகளற்று, மலர்மிசை எழுகிற ஜ்ஞாநத்தைக் காதல் அன்பு வேட்கை அவா என்னும் ஸங்க-காம-அநுராக,ஸ்நேஹாத்,யவஸ்தா நாமங்களோடே பரமபக்தி தஸை யாக்குகை.
அஜ்ஞாநத்தைப் போக்கி பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநத்தைக் கொடுக்கையாவது – பகவஜ் ஜ்ஞாந விரோதியான நாலு வகைப்பட்டிருக்கிற அஜ்ஞாநம் போய் ஜ்ஞாந ப்ரஸரண த்வாரமான மநஸ்ஸு அவித்யாதி களாலே திரோஹித மாகையாலே குண்டிதமாய், தந் நிவ்ருத்தியிலே விகஸிதமாய்க் கொண்டு மேல் நோக்கிக் கிளருகிற ஜ்ஞாநத்தை பரம பக்தி பர்யந்தமாக வளர்க்கை என்கிறார்.
(இருள் துயக்கு மயக்கு மறப்பென்கிற) ”இருளார் வினை கெட”‘ (திருவிரு. 33), துயக்கின்றித் தொழுதுரைத்த’” (திருவா. 3 – 1 – 11), “மயக்குடை மாயைகள்” (திருவா. 1 – 3 – 10), “மறப்பற என்னுள்ளே மன்னினான்”” (திருவா. 1 – 10 – 10) என்கிற ஜ்ஞாநாநுதயமென்ன, ‘ஸ்தாணுர்வா புருஷோ வா’ என்று வஸ்துவை யதாவாக க்ரஹிக்க வொட்டாதிருக்கிற ஸம்ஸமயமென்ன, ரஜ்ஜுவில் ஸர்ப்ப புத்தியும், ஸ்தாணுவில் புருஷ புத்தியும் போலே வஸ்துவை விபரீதமாக க்ரஹிக்கை யாகிற விபர்யயமென்ன, அநுபூத விஷய ஜ்ஞாந திரோதாந ரூபமான விஸ்ம்ருதி யென்ன, இப்படிச் சொல்லுகிற அஜ்ஞாநத்தை வாஸனையோடே போக்கி.
(மலர்மிசை எழுகிற ஜ்ஞாநத்தை) “’மனனகமலமற மலர்மிசை எழுதரும்” (திருவா, 1 1 – 2) என்று ஜ்ஞாந ப்ரஸரண த்வாரமான மநஸ்ஸைப் பற்றிக் கிடக்கிற “’காம ச க்ரோதஸ் ச லோப,ய்ச ஹர்ஷோ மாநோ மதோ க்ரூணா । விஷாதஸ்சாஷ்டம? ப்ரோக்த இத்யேதே மநஸோ மலா?” என்று சொல்லப்படுகிற காம க்ரோதாதி ரூபமாய் அஷ்டவிதமான மல நிவ்ருத்தியாலே விகஸிதமாய்க்கொண்டு மேல் நோக்கிக் கிளருகிற ஜ்ஞாநத்தை. (காதல் அன்பு வேட்கை அவா என்னும்) ““நொந்தாராக் காதல்’” (திருவா. 2 – 1 – 9) என்றும், ‘“ஆரா வன்பு”’ (திருவா. 6 – 10- 2) என்றும், “பெருகு மால் வேட்கை” (திருவா. 9 – 6 – 1) என்றும், “அதனில் பெரிய என்னவா?” (திருவா. 10 – 10 – 10) என்றும் சொல்லப்படுகிற – வஸ்து தர்ஸநத்திலே ப்ரதம பாவியாய், ஸ்நேஹாங்குரரூபமான ஸங்கமென்ன, ‘“ஸங்காத் ஸஞ்ஜாயதே காம?” (கீதை 2 – 62) என்கிற அதினுடைய பரிபாகமான காமமென்ன; அதினுடைய அவிச்சேத,ரூபமான அநுராகமென்ன, அநந்தரம் அவ் வஸ்துவை அநுபவித்தல்லது நிற்க வொண்ணாத அபி நிவேஸ ரூபமான ஸ்நேஹமென்ன, இவை தொடக்கமான இப்படி அவஸ்தராநுரூுபமான நாமங்களை உடைத்தாய்க் கொண்டு பரம பக்தி பர்யந்தமாக அபி,வ்ருத்தமாம்படி பண்ணுகை என்கிறார். ஆக- இதுக்குக் கீழ், பகவத் கடாக்ஷமடியாக இவருக்கு அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாய்க் கொண்டு உண்டான பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநம் பரமபக்தி பர்யந்தமாக அபி வ்ருத்தமான படி சொல்லிற்று
99-ஜந்மாந்தர ஸஹஸ்ர நற்றவங்களாலே க்யாத குலங்களிலே பிறந்து, எழுதி வாசித்து தத்த்வஜ்ஞராய், குளித்து ஓதி உருவெண்ணும் அந்தி, ஐ வேள்வி அறு தொழில்களால் மிக்கு, ஊன் வாடப் பொருப்பிடைத் தாம் வருந்தி, துன்ப வினைகளை விடுத்து, விவேகமாமாதிகள் வளர, எட்டு நீக்கி, எட்டுமிட்டு, எட்டினாய பேதப் பூவில் சாந்தொடு தேவ- காரியம் செய்து உள்ளம் தூயராய், வாரிப் புன்புலவகத்தினுள் இளைப்பினை அடைவே விளக்கினைக் கண்டு, யோக நீதி நண்ணி, அறந்திகழுமறையோர் மனந்தன்னுள் அமர்ந்துறையும் அரும்பெரும் சுடரை *கண்கள் சிவந்திற்படியே மனவுட்கொண்டு நிரந்தரம் மறவாமை துடக்கறா ஸ்ம்ருதியாய், கனவில் மிக்க தர்ஸந ஸமமாய், ஆகத்துப் புல்கும் அத்யர்த்த,ப்ரியமாய், வைகும் சிறப்பு விட்டுக் குற்றேவல் என்னாதே அநந்ய ப்ரயோஜநமாய், வேதந-உபாஸந- ஸேவா-த்யாநாதிகள் என்று சொல்லுமது ஸாத்ய ஸாதந பக்தியாக ஸாஸ்த்ர ஸித்,த,ம்.
இனிமேல் இவருடைய இந்த பக்தி கர்ம ஜ்ஞாந ஸாத்யையாய், உபாஸந ரூபையான ஸாதந பக்தியோ? அன்றிக்கே ஸித்த,ஸாதந பரிக்ரஹம் பண்ணினவர்கள் கைங்கர்யோப கரணமாக அபேஷித்துப் பெற்ற பக்தியோ? என்னில்; உபயமுமன்று, ஸஹஜையாய், ஸத்தா ப்ரயுக்தையான வ்ருத்த்யுபகரண பக்தி என்கிறார்-(அதில்-ஜந்மாந்தர ஸஹ்ஸ்ர நற்றவங்களாலே) என்கிற சூர்ணையாலே உபாஸந ரூபையான பக்தி வுடைய வேஷத்தை அருளிச் செய்கிறார்.
(ஜந்மாந்தர ஸஹஸ்ர நற்றவங்களாலே) “’ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஜ்ஞாந ஸமாதிபி,ச | நராணாம் க்ஷீண பாபாதாம் க்ருஷ்ணே பக்தி? ப்ரஜாயதே“‘ (லக்வத்ரி ஸ்ம்ருதெள) என்றும், ‘“ஒன்றி நின்று நற்றவம் செய்தாழியூழிதோறெலாம்” (திருச்ச. 75) என்றும், “அநேக ஜந்ம ஸம்ஸித்த,?”’ (கீதை 6 – 45) என்றும் சொல்லுகிறபடியே ஜந்மாந்தர ஸஹஸ்ரங்களிலே பலாபிஸந்தி ரஹிதமாய், பகவத் ஸமாராதந ரூபமான ஸத் கர்மங்களாலே, (க்யாத குலங்களிலே பிறந்து) “*ஸூசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோக,ப்ரஷ்டோ அபி,ஜாயதே” (கி,தை 6 – 41) என்றும், “ஜநித்வாஹம் வம்ஸே மஹதி ஜகதிக்யாத யமஸாம் ஸூசீநாம் யுக்தாநாம் குண புருஷ தத்த்வஸ்தி,திவிதாம்”‘ ( ஸ்தோ, 7.61) என்றும் சொல்லுகிறபடியே தத்த்வஜ்ஞாநிகளாய், பரமயோகிகள் என்றும் ப்ரஸித்தரானவர் ஸ்தலங்களிலே வந்து பிறந்து.
(எழுதி வாசித்து தத்த்வஜ்ஞராய்) “தெரித்தெழுதி வாசித்தும் கேட்டும்”” (நான்.திரு. 63) என்று ஸாஸ்த்ராப்யாஸத்துக்கு யோக்யமான அக்ஷர ஸிக்ஷையென்ன, அந்த அக்ஷர ராஸி க்ரஹண ரூபமான வேத அப்யாஸமென்ன, அந்த வேதத்தினுடைய அர்த்த,விஜ்ஞாநத்துக்குறுப்பான ஸாஸ்த்ராப்யாஸமென்ன, உபயத்தினுடையவும் அர்த்த ஸ்ரவணமென்ன; அவற்றாலே பிறந்த தத்த்வ ஜ்ஞாநத்தை யுடையராய். (குளித்து) உபாஸந அங்கமான நித்யகர்மாநுஷ்டாநத்துக்கு உபயுக்தமாக காய ஸூத்த், யர்த்த,மான ஸ்நாநத்தைப்பண்ணி. (ஓதி உருவெண்ணுமந்தி ஐவேள்வி) ஸந்த்யாவந்தந காயத்ரீ ஜப-பஞ்ச மஹா யஜ்ஞங்களைப்பண்ணி. (அறுதொழில்களால்மிக்கு) “அறுதொழிலந்தணர்” (திருவெழுகூ.)என்று யஜந-யாஜத-அத்யயந–அத்யாபந-தாந-ப்ரதிக்ரஹங்களென்கிற ஷட்கர்மங்களாலே பூர்ணராய்
-“ஊன்வாட உண்ணாதுயிர்காவலிட்டு”” (திருமொழி 3 – 2 – 1) என்று அவிகலமான நித்யகர்மாநுஷ்ட,ாநத்தாலே தபம்சர்யைக்கு யோக்,யமானவாறே தத,ர்த்த, மான காயபோஷணார்த்த_மாக நிராஹாரராய், அவ்வளவிலும் ப்ராணத,ரணார்த்த, மாக அப், க்ஷ்ணவாயுப,க்ஷணங்களைப்பண்ணி. (பொருப்பிடைத்தாம் வருந்தி) ”பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்க” (மூ.திருவ. 76) என்றும், ‘‘வீழ் கனியுமுழிலையுமென்னுமிவையே நுகர்ந்துடலம் தாம் வருந்தி” (பெ.திருமடல்) என்றும் சொல்லுகிறபடியே க்,ரீஷ்மகாலங்களில் பர்வதாக்,ரத்திலே நின்றும், பஞ்சாக,நிமத்,யே நின்றும், பபீதகாலங்களிலே அறாக்கயமான தடாகங்களிலே மூழுகிக்கிடந்தும், ஜீர்ணபர்ணப,லாரநராயும் இப்படி தபஸ்சர்யையாலே மாரீரத்தை ஸோஷிப்பித்து. (துன்ப வினைகளை விடுத்து) ““மேவுதுன்பவினைகளை விடுத்தும்”” (திருவா. 3 – 2 – 8) என்று கீழ்ச்சொன்ன கர்மாநுஷ்டாநத்தாலே ”திலதைலவத்,தாருவஹ்நிவத்’” (ஸர.க.த்,யம்) என்கிறபடியே ஆத்மாவோடு பிரிக்கவொண்ணாதபடி பொருந்திக் கிடக்கிற து,2க,ஹேதுவான பாபங்களை “த,ர்மேண பாபமபநுத,தி” (தை. உப.) என்கிறபடியே க்ஷயிப்பித்து.
(விவேகமாமாதிகள் வளர) இப்படி பாப விமோசநம் பிறந்தவாறே மநோ நைர்மல்ய ஹேதுவான விவேக-விமோகாப்,யாஸ க்ரியா கல்யாணாநவஸா தநுத்த,ர்ஷங்களும், ““ஸமதம நியதாத்மா ஸர்வ பூதாநுகம்பீ விஷய ஸுக விரக்தோ ஜ்ஞாந த்ருஷ்டி ப்ரபந்ந ச । அநியதநியதாந்தோ நைவ ருஷ்டோ ந ஹ்ரூஷ்டச ப்ரவஸித இவ கேஹே வர்த்ததே யஸ்ஸ முக்தச”” என்கிற ஸமாதி,களும் அபி,வ்ருத்தமாக.
இதில் விவேகமாவது – “’ஜாத்யாஸ்ரய நிமித்தாது,ஷ்டாத,ந்நாத் காயமாத்திர் விவேக” (போதாயந) என்கிற காய ஸூத்திக்கடியான அந்ந ஸூத்தி,.-விமோகமாவது – காமாநபி,ஷ்வங்க,ம். அப்,யாஸமாவது -““ஆரம்பண ஸம்ஸபீலநம் புந புநரப்யாஸ?”’ என்று த்,பாநாலம்பநவஸ்துவிலே பலகாலும் பரிஸீலநம் பண்ணுகை. க்ரியையாவது “பஞ்சமஹாயஜ்ஞாத்,யநுஷ்டாநம் ஸக்திதா க்ரியா?” என்று நித்ய கர்மங்களை வல்லவளவும் அநுஷ்டிக்கை, கல்யாணமாவது – ““ஸத்யார்ஜவத யாதாநா ஹிம்ஸாநபி,த்,பா கல்யாணாநி” என்கிற ஸத்யார்ஜவத, யாத,நா ஹிம்ஸாதி,கள். அநவஸாத,மாவது **ஸோக ஹேதுஷு மநஸ? கேத,ராஹித்யம் அநதவஸாத,” என்கிறபடியே ஸோகஹேதுக்கள் உண்டானாலும் நெஞ்சு தளராதிருக்கை. அநுத்தர்ஷமாவது – ““தத் விபர்யயஜா துஷ்டி: – உத்தர்ஷச தத்,விபர்யய? – அநுத்த.ர்ஷ?’” என்று ஹர்ஷ ஹேதுக்கள் உண்டானாலும் அதி ப்ரீதனாகாதொழிகை –
(எட்டு நீக்கி) ‘ஈனமாய எட்டு நீக்கி” (திருச்ச. 114) என்கிறபடியே ஆத்மாவுக்குப் பொல்லாங்கைப் பண்ணக் கடவதான ‘காம-க்ரோத,- லோப, -மோஹ-மத, -மாத்ஸர்ய-அஜ்ஞாத-அஸூயைகள் என்கிறவற்றை விட்டு. (எட்டுமிட்டு) “கந்தமாமலரெட்டுமிட்டு” (திருமொழி 3 – 5.- 6), “இனமலரெட்டுமிட்டு’” (திருமொழி 1 – 2 – 7) என்கிறபடியே “அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம் புஷ்பமிந்த்ரிய நிக்ரஹ?। ஸர்வபூததயா புஷ்பம் க்ஷமா புஷ்பம் விஸேஷத: । ஜஞாநம் புஷ்பம் தப? புஷ்பம் தயாநம் புஷ்பம் ததைவ ச ! ஸத்யமஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரீதிகரம் பவேத்” என்கிறபடியே அஹிம்ஸாதிகளான அஷ்டவித, புஷ்பங்களை இட்டு. இந்த அஹிம்ஸாதிகள் திருவுள்ளத்துக்கு உகப்பாகையாலே புஷ்பமென்கிறது -(எட்டினாய பேதம்) ““எட்டினாய பேதமோடிறைஞ்சி’* (திருச்ச. 77) என்கையாலே “மநோ புத்தி அபிமாநேந ஸஹ ந்யஸ்ய தராதலே ! கூர்மவச் சதுர ச பாதந் ஸிரஸ் தத்ரைவ பஞ்சமம்” என்றும், “*உரஸா ஸிரஸா த்ருஷ்ட்யா வசஸா மநஸா ததா ॥ பத்ப்யாம் கராப்யாம் ஜாநுப்யாம் ப்ரணா மோஷ்டாங்க, ஈரித?‘ என்றும், பக்நாபிமாநனாய் விழுகையும், மநோ புத்திகளுக்கு ஈஸ்வரனையே விஷயமாக்குகையும், பாணித்வயமும், பாத த்வயமும், ஸிரஸ்ஸும் பூமியிலே பொருந்துகையாகிற அஷ்டாங்க ப்ரணாமத்தைப் பண்ணி. (பூவில் சாந்தொடு தேவ காரியம் செய்து) “பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து ” (திருவா. 5 – 2 – 9), “சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து தொண்டு” (திருவா. 10 – 2 – 10) என்று ஸமாராதநோபகரணங்கள் மிகுத்துக் கொண்டு அநந்ய ப்ரயோஜநராய், ““தேவ காரியம் செய்து” (பெரியா. திரு. 4 – 4 – 1) என்கிறபடியே பகவத் ஸமாராதநத்தைப் பண்ணி -(உள்ளம் தூயராய்) ““ஒன்றி நின்று நற்றவம் செய்தூழியூழி தோறெலாம் நின்று நின்றவன் குணங்களூள்ளி உள்ளம் தூயராய்” (திருச்ச. 75) என்கிறபடியே நித்யகர்மாநுஷ்டாநம் முதலாக பகவத் ஸமாராதந மெல்லையாக பல சங்க கர்த்ருத்வ த்யாக பூர்வகமாக உண்டான கர்மாநுஷ்டாநத்தாலும் பகவத் குணாநுஸந்தாநத்தாலும் ““கஷாயே கர்மபிர் பக்வே ததோ ஜ்ஞாநம் ப்ரகாஸதே”” என்கிறபடியே கர்மாநுஷ்டாநத்தாலே ம்ருதிதகஷாயனானவாறே ஜ்ஞாந விகாஸத்துக்கடியான மநோ நைர்மல்யத்தை உடையராய்-
(வாரிப்புன்புலவகத்தினுள்) “வாரிசுருக்கி மதக்களிறைந்தினையும் சேரி திரியாமல் செந்நிரீ, ‘ (மூ.திருவ. 47) என்றும், ““புன்புலவழியடைத்தரக்கிலச்சினை செய்து நன்புல வழி திறந்து ஞானநற்கூடர் கொளீஇ”” (திருச்ச. 76) என்றும், ”ஐம்புலனகத்தினுள் செறுத்து” (திருவெழு.) என்றும், ”ப்ரசீர்ணே விஷயாரண்யே ப்ரத வந்தம் ப்ரமாதிநம் ! ஜ்ஞாநாங்குஸேந க்ருஹ்ணியாத் வஸ்யமிந்த்ரிய தந்திநம்”” என்கிறபடியே இந்த்ரியங்களாகிற மமூதிதமான ஆனைகளை த்யாஜ்யோபாதேய விவேக ஜ்ஞாநமாகீற அங்குஸத்தாலே வணக்கி, விஷயங்களாகிற சேரியில் திரியாதபடி பகவத் விஷயமாகிற யதா ஸ்தாநமாகிற தறியிலே சேர்த்தென்றும், இந்த்ரியங்களை ஷூத்ர விஷயங்களிலே போகாதபடி வாஸனையோடே விடுவித்து ப்ராப்த விஷயத்திலே மூட்டி ஜ்ஞாநமாகிற ப்ரகாஸமான தீபத்தைக் கொளுத்தி. இப்படி நிக்ருஹீதேந்த்ரிய க்ராமராய், (இளைப்பிணை யடைவே விளக்கினைக் கண்டு) “இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன்னிமையைக் கூட்டி அளப்பிலைம்புலனடக்கி அன்பவர் கண்ணே வைத்துத் துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டாங்கே விளக்கினை விதியிற்காண்பார்‘” (திருக்குறு. 18) . என்றும் சொல்லுகிறபடியே யோகாப்யாஸ விரோதியாயிருந்துள்ள யாதாயாதங்களை மாற்றி ஓர் ஆஸந விஸேஷங்களிலே இருந்து நாஸாக்ரந்பஸ்த லோசநனாய், இந்த்ரியங்களை நியமித்து த்யேய வஸ்துவின் பக்கலிலே நிரதிஸயமான ஸ்நேஹத்தைப் பண்ணி ததநந்தரம் ஸ்வயம் ப்ரகாஸமாய்க் கொண்டு தோற்றுகிற ஆத்ம ஸ்வரூபத்தை ஸாஸ்த்ரோக்த ப்ரகாரத்திலே ஸாக்ஷாத்கரித்து.
(யோக நீதி நண்ணி) என்று யோகம் தலை நின்று. (அறந்திகமும் மறையோர் மனந்தன்னுள் அமர்ந்துறையும் அரும்பெருஞ்சுடரை) ‘*மறந்திகழு மனமொழித்து வஞ்சமாற்றி ஐம்புலன்களடக்கி இடர்ப்பாரத்துன்பம் துறந்து இருமுப்பொழுதேத்தி எல்லை யில்லாத தொன்னெறிக் கண் நிலை நின்ற தொண்டரான அறந்திகழு மனத்தவர்தம் கதியை” (பெருமாள் திரு. 1 – 7) என்றும், “மறையோர் மனந்தன்னுள்” (திருமொழி 7 – 8 – 7) என்றும், ““மாதவமானவர் தங்கள் சிந்தை”’ (திருமொழி 2 – 1 – 1) என்றும், ”ஆரமார்வனரங்கனென்னுமரும்பெருஞ்சுடரொன்றினைச் சேரும் நெஞ்சினராகி’” (பெருமாள்திரு. 2 – 7) என்றும் சொல்லுகிறபடியே பரமயோகி,களுடைய ஹ்ருதயங்களிலே அதி ப்ரகாபமமான விக்ரஹத்தோடே எழுந்தருளியிருக்கிற ஸர்வேஸ்வரனை.
(கண்கள் சிவந்திற் படியே மனவுட் கொண்டு) ““கண்கள் சிவந்து’ (8-8 -1)-என்கிற பாட்டின் படியே அவயவ ஸோபையோடும் ஆபரண ஸோபையோடும் கூடி காளமேக நிபஸ்யாமமாயிருக்கிற விலக்ஷண விக்ரஹத்தை ““கற்றவர் தந்தம் மனவுட் கொண்டு” (திருமொழி 7 – 3 – 1) என்கிறபடியே ஹ்ருதய கமலத்திலே த்யாநம் பண்ணி. (நிரந்தரம் மறவாமை) “நிரந்தரம் நினைப்பதாக”’ (திருச்ச. 101) என்றும், “மன்னு சேவடிக்கே மறவாமை” (திருமொழி 3 – 5 – 7) என்றும் சொல்லுகிறபடியே அந்த த்யாநத்துக்கு விஸ்ம்ருதியும் விச்சேதமுமின்றிக்கே. (துடக்கு ஸ்ம்ருதியாய்) “சோர்விலாத காதலால் துடக்கறா மனத்தராய்”’ (திருச்ச. 78) என்கிறபடியே ஸர்வ காலமும் விஷயாந்தரங்களால் அபஹ்ருதமாகாத ப்ரேமத்தை உடையராகையாலே தத் ஸம்ஸ்லேஷ வியோகைக ஸூக துக்கராய், பகவத் ஸ்ம்ருதி ஸந்ததி ரூபேண செல்லா நின்றால் விச்சேதமில்லாத த்ருவாநு ஸ்ம்ருதி ரூபமாய், “ஸத்த்வாத் தெள த்ருவா ஸ்ம்ருதி: ஸ்ம்ருதிலம்பே, ஸர்வக்ரந்தீ நாம் விப்ரமோக்ஷி’‘ (சாந் 7 – 26 – 2) என்னக் கடவதிறே. (கனவில் மிக்க தர்ஸந ஸமமாய்) “கனவில் மிகக்கண்டேன்’” (இ. திருவ. 81) என்கிறபடியே அந்த ஸ்ம்ருதி ப்ரத்யக்ஷ ஸமாநாகாரையாய். (ஆகத்துப் புல்கும் அத்யர்த்த ப்ரியமாய்) ஆகத்தணைப் பாரணைவரே” (மு.திருவ. 32) என்றும், “ஆர்வம் புரிய பரிசினால் புல்கில்” (மூ.திருவ. 50) என்றும் சொல்லுகிறபடியே அந்த தர்சந ஸமாநாகாரையான ஸ்ம்ருதிதான் அந்த த்யேய வஸ்துவை ஹ்ருதயகமலத்திலே அணைக்கும்படி ஸ்மர்த்தவ்ய விஷய ஸாரஸ்யத்தாலே தானும் அத்யர்த்த, ப்ரிய ரூபையாய்
(வைகும் சிறப்பு விட்டுக் குற்றேவ லென்னாத அநத்ய ப்ரயோஜநமாய்) “’நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்றினிதோ நீ அவர்க்கு வைகுந்தமென்றருளும் வான்?” (பெரியதிருவ. 53) என்றும், “’உலகு படைத்துண்ட வெந்தை”” (திருவாசி.2) என்று தொடங்கி, ”அமுத வெள்ளத்தானாம் சிறப்புவிட்டு ஒருபொருட்கசைவோரசைக நல்வீடு பெறினும் கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே” என்றும், “மேலால் பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவலன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு’* (பெரியதிரூவ. 58) என்றும் சொல்லுகிறபடியே இவ்வநுஸந்தாந ரஸத்தாலே தேஸா விஸேஷத்திலநுபவத்தை உபேஷிக்கும்படி தானே பர மப்ரயோஜநமாம்படி இருக்கையாலே அநந்ய ப்ரயோஜநமாய்..
(வேத,ந-௨ பாஸந-ஸேவா-த்யாநாதி களென்னுமவை) வேதநம், உபாஸநம், ஸேவை, த்யாநம், த்ருவாநுஸ்ம்ருதி, தர்சந ஸமாநாகாரம், பக்தி என்றும் சொல்லப்படுகிறவை யாகையாலே இந்த ப,க்தி ஸாத்ய ஸாதந பக்தியாக ஸாஸ்த்ர ஸித்தம். ‘உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய ஐகாந்திகாத்யந்திக பக்தியோகைகலப்ய”(ஆத்மஸித்தி,) என்று கர்ம ஜ்ஞாந ஸம்ஸ்க்ருதாந்தா கரணனுக்குப் பிறக்கும தொன்றாகையாலே ஸாத்,யமாய், பகவத் ப்ரஸாதநோபாயமாகையாலே ஸாதநமான பக்தி என்று ஸாஸ்த்ரங்களாலே சொல்லப்பட்டதென்கிறார். ஆக இத்தால் சேதநனாலே ஸாத்யமாய், உபாய ரூபமான பக்தி விஸேஷம் சொல்லிற்று –
100-ஸ்வீக்ருத ஸித்த ஸாதநர் இத்தை ஸாத்யமாக இரக்க ப்ராப்திக்கு முன்னே ஸித்திக்கும்.
இனி உபேயமான கைங்கர்யோப கரணமாய், ப்ரார்த்யமான பக்தி விஸேஷம் சொல்லுகிறது மேல் (ஸ்வீக்ருத ஸித்த ஸாதநர் என்று தொடங்கி). (ஸ்வீக்ருத ஸித்த ஸாதநர்) *’த்வத் பாத மூலம் ஸரணம் ப்ரபத்யே”” (ஸ்தோ,ர.22) என்றும், ‘“ஸ்ரீமந் நாராயண சரணாரவிந்த,ம் ஸரணமஹம் ப்ரபத்யே”” (ஸ -கத்யம்) என்றும், “லோக விக்ராந்த சரணென ஸரணம் தே அவ்ரஜம் விபோ ”” (ப,வி.பு.) என்றும் சொல்லுகிறபடியே இப்படி ஸித்த ஸாதந ஸ்வீகாரம் பண்ணினவர்கள் இத்தை ஸாத்யமாக இரக்க, இந்த பக்தி கைங்கர்யோபகரணமாய்க் கொண்டு ப்ராப்யாந்தர் கதமாகையாலே “‘பகவத் பக்திமபி ப்ரயச்ச, மே!” (ஸ்தோ.ர.) என்றும், ‘பரபக்தி பரஜ்ஞாந பரமபக்த்யேக ஸ்வபாவம் மாம் குருஷ்வ”’ (ர.கத்யம்) என்றும் சொல்லுகிறபடியே இந்த பக்தியை ஸாத்யமாக அவன் பக்கலிலே அபேஷிகிக்க, ப்ராப்திக்கு முன்னே ஸித்திக்கும், இது கைங்கர்யத்துக்கு பூர்வபாவியாகையாலே பகவத் பிராப்திக்கு முன்னே ஸித்திக்கும் என்கிறார்.
101-இது உபயமுமின்றிக்கே அறியாக் காலத்துள்ளே ஓக்கப் பிறந்து தழுவி நின்று கட்டமே நோயா யுலர்த்தி வீழ்ந்தலப்பாய் த்யாக ஸ்வீகார நிஷ்டா ஹாநிகளாக்கி ஸத்தா போக வ்ருத்த் யுபகரணமான ஒன்று.
(இது உபயமுமின்றிக்கே) இவருடைய பக்தி உபாஸகர் கர்ம ஜ்நாநங்களாலே ஸாதித்து பகவத் ப்ரஸாதத்துக்கு ஸாதநமாகக் கொள்ளுகிற பக்தியுமன்றிக்கே, ஸித்த ஸாதந பரிக்ரஹம் பண்ணினவர்கள் கைங்கர்யோபகரணமாக அபேஷித்துப் போருகிற பக்தியுமன்றிக்கே; (அறியாக் காலத்தே ஒக்கப் பிறந்து] ‘அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து’” (திருவா. 2 – 8 – 3) என்றும், ““பால்யாத் ப்ரப்ரதி ஸுஸ்நிக்த.”” (ரா.] என்றும் சொல்லுகிறபடியே அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத அதிபால்யத்திலே கைங்கர்யத்தைப் பெற்றல்லது நிற்க வொண்ணாத அதிமாத்ர ப்ராவண்யத்தை விளைத்தான் என்று சொல்லும்படி ”ஸஹஜ பக்திரஸ்மாகம்”‘ என்று ஸஹஜையாய், *‘தழுவி நின்ற காதல் ”” (திருவா. 4 – 7 -11) என்று உடன் வந்தியாய், கட்டமே காதல்” (திருவா. 7 – 2 – 4) என்றும், ““வேட்கை தோய் கூர” (திருவா. 9 – 6 7) என்றும் அபி, நிவேஸாநுகுணமாக அநுபவம் ஸித்தியாமையாலே இது கஷ்டம் என்று சொல்லும்படி வ்யாதி ரூபமாகையாலே பாத,கமாய், ““வேவாரா வேட்கை தோய் மெல்லாவி உள்ளுலர்த்த”” (திருவா. 2 – 1 – 10) என்றும், “உன்னைக் காணுமவாவில் வீழ்ந்து” (திருவா. 5 – 7 – 2) என்றும், ““உன்னைக் காண்பான் நானலப்பாய்”” (திருவா. 5 – 8 – 4) என்றும் அஸோஷ்யமான ஆத்ம வஸ்துவை ஸோஷிப்பித்து, அபி நிவேஸத்திலே ஆழ்ந்து, காண வேணுமென்று அலமாக்கப் பண்ணி. (த்யாக ஸ்வீகார நிஷ்டா ஹாநிகளாக்கி) த்யஜித்த உபாயத்திலே மூட்டி, த்யாக நிஷ்டையைக் குலைத்து, ஸக்ருத் ஸ்வீகாரம் அமைந்திருக்க *நோற்ற தோன்பு தொடங்கி, அடுத்தடுத்து ப்ரபத்தி பண்ணுகையாலே ஸ்வீகாரத்தில் நிஷ்டையைக் குலைத்து. (ஸத்தா போக வ்ருத்த் யுபகரமானதொன்று) ““நாகிஞ்சித்குர்வதஸ் ஸேஷத்வம்”’ (வேதாஸம்) என்று ஸேஷத்வைக நிரூபணீயமான இவருடைய ஸத்தை கிஞ்சித்காரத்தாலே யாகையாலே இவருடைய ஸத்தா ஹேதுவாய், “’தனக்கேயாக”’ (திருவா. 2 – 9 – 4) என்றும், “உன்தன் திருவுள்ள மிடர்கெடுந்தோறும்”” (திருவா. 10 – 3 – 9) என்றும் “*கதாத், ரக்ஷ்யதி மாம் பதி” (ரா.ஸு.) என்றும், ”கதா ப்ரஹர்ஷயிஷ்யாமி” (ஸ்தோ.ர. ) என்றும், “உன்னாகமுற்றுமகத்தடக்கி ஆவி யல்லல் மாய்த்ததே”” (திருவா. 4 – 3 – 3) என்றும் ஸர்வேஸ்வரனை பலியாகச் சொல்லுகையாலே அவனுக்கு போகமாயிருக்கிற கைங்காயத்துக்கு உபகரணமாயிருப்பதொரு பக்தி என்கிறார். ஆக, இதுக்குக் கீழ் இவருடைய பரபக்தி ஸாதித்துப் பெற்ற பக்தியுமன்று, அபேக்ஷித்துப் பெற்ற பக்தியுமன்று, ஸஹஜையாய், ஸத்தா ப்ரயுக்தையான பக்தி என்றார் –
102-இடகிலேன் நோன்பறிவிலேன் கிற்பன் கீழ் நாள்கள் என்கையாலே ஸாதந த்ரய பூர்வாப்யாஸ ஜமல்ல.
இவருடைய பரபக்தி ஜந்மாந்தரங்களிலே கர்ம ஜ்ஞாநாதிகளை அநுஷ்டித்து தத் பலமாய்க் கொண்டு வந்ததானாலோ என்னில், ஜந்மாந்தரங்களில் அவை தமக்கு இல்லை என்னுமிடம் தாமே அருளிச் செய்தார் என்கிறார் (இடகிலேன் இத்யாதி, ). ““இடகிலேன் ஒன்றட்டகில்லேன் ஐம்புலன் வெல்லகில்லேன் கடவனாகிக் காலந் தோறும் பூப்பறித்தேத்த கில்லேன்’” (திருவா. 4 – 7 – 9) என்று பகவத் விபூதி பூதர் என்று அந்ந பாநாதிகளை பூதங்களுக்கு இட்டுக்கொடுபோரில் கர்ம யோகத்திலே நிவேஸிப்பிக்கலாம், இந்த்ரிய ஜயம் பண்ணினேனகில் ஜ்ஞாந யோகத்திலே நிவேஸிப்பிக்கலாம். ஸாஸ்த்ரோக்தமான ப்ரகாரங்களிலே புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு பகவத் ஸமாராதநம் பண்ணினேனாகில் பக்தி யோகத்திலே நிவேஸிப்பிக்கலாம். இவை இத்தனையும் செய்யப் பெற்றிலேன் என்றும், ”நோற்ற தோன்பிலேன நுண்ணறிவிலேன்”’ (திருவா. 5 – 7 – 1) என்று பலத்தோடே வ்யாப்தமாய் இருப்பதொரு கர்மத்தை அநுஷ்டிக்கப் பெற்றிலேன்; ஆத்ம யாதாத்ம்ய ஜ்ஞாந பூர்வகமான பகவஜ் ஜ்ஞாநத்தை உடையேனல்லேன்- ஆக இவை இல்லாமையாலே உபய ஸாத்யமான பக்தியை உடையேனல்லேன் என்றும். (கிற்பன் கீழ்நாள்கள் என்கையாலே) “கிற்பன் கில்லேன் என்றிலன் முனநானால்”’ (திருவா. 8 – 2 – 6] விஹிதததைச் செய்து அவிஹிதத்தைத் தவிர்’ என்கிற விடத்தில் அப்படிச் செய்கிறேன் என்னாதே விஹிதத்தைத் தவிரந்து அவிஹிதத்தைச் செய்து போந்தேன் நெடுங் காலம் என்றும்-‘”ஆழியங்கை அம்மானை ஏத்தாதயர்த்து – தீவினையேன் வாளா விருந்தொழிந்தேன் கீழ் நாள்களெல்லாம்’” (பெரியதிருவ. 82) என்றும், ஸர்வாதிகனான ஸர்வேஸ்வரனை மங்களாஸாஸநம் பண்ணாதே விஸ்மரித்து அநாதி காலம் வ்யர்த்தமே இருந்தேன் என்கையாலும், இப்படி ஜந்மாந்தரங்களில் தமக்கு கர்ம ஜ்ஞாநாதிகளில் அந்வயமில்லை என்று அருளிச் செய்கையாலே. (ஸாதந த்ரய பூர்வாப்யாஸ ஜமல்ல) ஐத்மாந்தரங்களில் கர்ம ஜ்ஞாந பக்த்திகளை அநுஷ்டி,த்து தத்பலமாய் வந்த பக்தியன்று என்கிறார் –
103-இப் பிறப்பே சில நாளில் என்ற போதே இரண்டும் கழியும்.
ஜந்மாந்தரங்களிலே ஸாதித்துப் பெற்றதன்றாகிலும் இந்த ஜந்மத்திலே சில தாள் ஸாதித்துப் பெற்றதானாலோ என்னில், அதுவுமல்ல என்கிறார் (இப் பிறப்பே சில நாளில் என்று). ““குறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய்தவமும் கிறிக் கொண்டிப் பிறப்பே சிலநாளிலெய்தினன் யான்” (திருவா. 2 – 8 – 8) என்று யம நியமாத்யவஹிதராய்க் கொண்டு ஸம்பாதிக்க வேண்டும் வேதந-த்யாந-உபாஸநாத், யவஸ்தா விஸேஷங்களான ஜஞாநங்களாலே அநேக கல்பம் கூடி ஸ்ரவணாமாய், மநநமாய்-த்ருவாநுஸ்ம்ருதியாய், வரக்கடவதான தப பலத்தை ஒரு யத்நமின்றியிலே இருக்க நல் விரகனான அவனாலே இஜ் ஜந்மத்திலே, அது தன்னிலும் அல்ப காலத்திலே பெற்றேனென்கைஃ யாலே ஐந்மாந்தர ஸாத்யமுமல்ல; இஜ் ஜந்மத்திலும் ஸாதித்து வந்ததுமல்ல என்கிறார் –
104-பெரும்பாழில் ஷேத்ரஜ்ஞன் பெருஞ்செய் கலியாரேவ ஆளும் வன் குறும்பர் குடியேறிப் பெருங்குடியும் தங்கள் கருத்துள்ளே யாக்கிப் படிந்துண்ணும் போகத்தே தூராதே யொறுக்கெணுப் போகத்துக்குக் காவல் செய்து குமைத்துத் திரித்து வீழ்த்து வலித்தெற்றி அருவியறுத்துக் கடனாயின இறுப்பிக்கப் பாழ்த்த விதி யானவாறே தன்பால் மனம் வைப்பிப்பதாகத் தேய்ந்தற மன்னி ஒள் வாளுருவி வினைத் தூற்றை வேரறுவித்துத் தீக் கொளீஇக் கவ்வை எருவிட்டு அமுதவாறு தலைப் பற்றி ஈரியாய்க் கசிந்ததிலே ஈரநெல் வித்தி எழுநாற்றுக்களையையும் வேர் முதல் மாய்த்துப் பட்டிச் சேவதக்கி மீதுகொள்ளாமல் குறிக்கொள்வித்துக் கடல்புரைய விளைந்து தலை வணக்கினவாறே நாளுநாள் கோட்குறையாக நின்றாரறியாமல் குணங்கொண்டு ஆராமை யுண்டு காலக்கழிவாலே திலத்துகாமல் பற்றறுத்துத் தண்டாலடித்துப் பதரறுத்துப் போர்த்த தோல் விடுத்து ஸுக்ஷ்மவொட்டும் நீரிலே கழுவி வேறோர் கலத்திட்டு பைந்தொடி மடந்தையரைக் கொண்டு ஷட் குண்ரஸாந்நமாக்கி வானோர்க்காரா வமுதானவாறே முற்றுமுண்ண முன்னம் பாரித்து உழுவதோர் நாஞ்சில் கொண்டு பெருக முயலும் பத்தி யுழவன் க்ருஷி பலமிறே-
ஆனால் இவர்க்கு இந்த ப,க்தி உண்டாகைக்கு ஹேது ஏதென்னில் பல போக்தாவான ஸர்வேஸ்வரனுடைய க்ருஷிபலம் என்னுமிடத்தை க்ஷேத்ரமும், கர்ஷகனும், க்ருஷியும், தத்பலமுமான வேஷத்தாலே அருளிச் செய்கிறார் (பெரும்பாழில் க்ஷேத்ரஜ்ஞன் என்று தொடங்கி]. (பெரும்பாழில் க்ஷேத்ரஜ்ஞன்) “முடிவில் பெரும்பாழேயோ”” (திருவா. 10 – 10 – 10) என்று அபரிச்சேத்,யமாய், சேதநர்க்கு போக மோக்ஷங்களை விளைத்துக் கொள்ளுகைக்கு நிலமான மூல ப்ரக்ருதியிலே பத்தனான சேதநன், “நெஞ்சப் பெருஞ் செய்யுள்” (திருவா. 5 – 3 – 4) என்று பகவத் பக்திக்கு விளை நிலமான சேதநருடைய நெஞ்சாகிற பெரும் செய்யிலே-(கலியாரேவ) ““ஏவினார் கலியார் நலிக’” (திருமொழி 1 – 6 – 8) என்று கலியுகமாகிற வறியன் தன் படரான இந்த்ரியங்களை ப்ரேரிக்க. (ஆளும் வன் குறும்பர்) “’மனமாளுமோரைவர் வன்குறும்பர்”’ (பெ.திருவ.51) என்று ப்ரதாந கரணமான மநஸ்ஸையும் தங்கள் வஸமாக்கிக் கொண்டு ஆளுமவர்களுமாய் முன்கை மிடக்கருமாய் அநியாம்யருமான அத்விதீயரை வரும் ““பொய்யாலைவரென் மெய் குடி யேறி”” (திருமொழி 7 7 – 9) என்கிறபடியே குடியேறி
(பெருங்குடியும் தங்கள் கருத்துள்ளே யாக்கி) ““ஐம்புலன்கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை?” (திருமொழி 1 – 1 – 8) என்கிறபடியே ப்ரதாந கரணமான மநஸ்ஸாகிற பெருங்குடியும் தங்கள் கருத்துள்ளேயாம்படிபண்ணி. (படிந்துண்ணும் போகத்தே தூராதே) *’புலம்படிந்துண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன்’ (திருமொழி 1 – 6 – 2) என்று ஸப்தாதி விஷயங்களிலே அவகாஹித்து பஜிக்கிற போகத்தை அபி வ்ருத்தமாக்கி. “’தூராக்குழி”’ (திருவா. 5 – 8 – 6) என்கிறபடியே அத்தால் ஒருகாலும் பர்யாப்தி பிறவாதே. (பொறுக்கொணுப் போகத்துக்குக் காவல் செய்து) ”பொறுத்துக் கொண்டிருந்தால் பொறுக் கொணாப் போகமே நுகர்வான் புகுந்து” (திருமொழி 7 – 7 – 7) என்று சேதநனாலே பொறுக்கப் போகாத ஸப்தாநுபவத்துக்கு, “கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த”” (திருமொழி 7 – 7 – 8) என்று நெஞ்சில் க்ரெளர்யத்தை உடையராய், பதிக்க பாதிக்க மேலே இளகிப் பதித்து வருகிற அந்த விஷயங்கள் {இந்த்ரியங்கள்] கீழே சொன்ன போகத்துக்கு விருத்,த,மான பகவத் ஸம்ரம்பமாகிற் ராஜபரிகரம் புகுராதபடி காவல்செய்து.
(பைந்தொடி மடந்தையரைக் கொண்டு ஷட்குண ரஸாந்நமாக்கி] ‘அணைவர் போயமருலகில் பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோளிணை”’ (திருவா. 10 – 2 -11) என்று “ஸதம் மாலா ஹஸ்தா?” (கெளஷீதகீ) இத்யாதியாலே சொல்லப்படுகிற திவ்யாப்ஸரஸ்ஸுக்களைக் கொண்டு பகவத் போக யோக்யமாம்படி அலங்கரித்து, “ஸ்வேந ரூபேணாபி நிஷ்பத்யதே”‘ என்று ஸ்வ ஸ்வரூபாவிர்பாவத்தைப் பெறுவிக்கையாலே ஸ்வருப கதமாயிருக்கச் செய்தே முன்பு திரோஹித மாயிருக்கிற ஜஞாந ஸக்தயாதிகளும், அபஹத பாப்மத்வாதிகளும் ப்ரகாஸித்து இவை ஸேஷவஸ்துகதமாகையாலே ஸேஷி விநியோகத்துக் குறுப்பாகையாலே அந்த குண விஸிஷ்டமான ஆத்ம வஸ்துவைத் தனக்கு போக்,யமாக்கி(வானோர்க் காராவமுதான வாறே) நித்ய ஸூரிகளுக்கும் போக்யமானவாறே. (முற்றுமுண்ண முன்னம் பாரித்து) “என்னை முற்றுமுயிருண்டு” (திருவா, 10 – 9 -10) என்றும், “என்னில் முன்னம் பாரித்து”’ (திருவா. 9 – 6 -10) என்றும் சொல்லுகிறபடியே இவனை புஜிப்பதாக இவனிலும் முன்னே பாரித்து(உழுவதோர் நாஞ்சில்கொண்டு பெருக முயலும் பத்தி யுழவன் க்ருஷிபலமிறே) “உழுவதோர் படையும்” (பெரியா. தி. 4 – 7 – 5), “ஒற்றைக் குழையும் நாஞ்சிலும்”” (திருமொழி 8 – 8 – 9) என்று க்ருஷி ஸாதநத்தைக் கொண்டு, ‘“அரியதெளிதாகுமாற்றலால் மாற்றிப் பெருக முயல்வாரைப்பெற்றுல்” (இ.திருவ. 22) என்று அரிதான பகவத் ப்ராப்தியும் எளிதாம்படி இவனுடைய உஜ்ஜீவநத்துக்கு மிகவும் க்ருஷி பண்ணுகிற *பத்தி யுழவன்”‘ (நா. திருவ. 23) என்கிற பக்திக்கு க்ருஷி பண்ணுகிற ஸர்வேஸ்வரனுடைய க்ருஷி பலமாய்க் கொண்டு உண்டாய்த்து இவருடைய பக்தி என்கிறார். ஆக இத்தால் இவருடைய பக்தி போக்தாவான ஸர்வேஸ்வரனுடைய க்ருஷி பலம் என்றதாய்த்து-
105-கோஸல கேகுல சராசரம் செய்யும் குணமொன்றின்றியே அற்புதமென்னக் கண்டோம்.
இப்படி இத்தலையில் ஒரு நன்மை யின்றிக்கே யிருக்க ஈஸ்வரனுடைய கிருஷி பலித்தவிடமுண்டோ வென்னில், கோஸல தேஸத்திலுண்டான ஸ்தாவர ஜங்கமங்களையும் கோகுலத்திலுண்டான சராசரங்களையும் ஸ்வ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷைக ஸுக துக்கராம்படி பண்ணக் கண்டோமிறே என்கிறார் (கோஸலமென்று தொடங்கி). “த்வாமாமநந்தி கவய? கருணாம்ருதாப் தே, ஜ்ஞாந க்ரியா பஐந- லப்யமலப்யமந்யை
ஏதேஷு கேந வரதோரத்தர கோஸல ஸ்தா பூர்வம் ஸதூர்வ- மப ஜந்த ஹி ஜந்தவஸ்த்வாம்’” (வரத,.ஸ்த. 69) என்றும், “அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் – ஒன்றின்றியே நற் பாலுக்குய்த்தனன்” (திருவா. 7 – 5 – 1) என்றும் கோஸல தே,ஸத்திலுண்டான சராசரங்களடைய “அபி வ்ருக்ஷாச பரிம்லாநாஸ் ஸ புஷ்பாங்குர கோரகா? உபதப்தோதகா நத்ய பல்வலாநி ஸராம்ஸி ச ப பரிஸூஷ்க பலாஸாநி வநாந் யுபவநாநி ச (ரா. ௮. 59 – 8), ““விஷயே தே மஹாராஜ ராம வ்யஸந கர்ஸிதா?”, என்றும், “அகால பலிநோ வ்ருக்ஷா ச” (ரா. யு. 127 – 18) என்றும், “ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாமபவந் கதர? ! ராமபூ,தம் ஜகத பூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி”? (ரா. உ.) என்றும் ஒரு ஹேது வின்றியிலே ஸ்வ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷைகஸுக துக்க ராகவும்.
கோகுலங்களிலுண்டான சராசரங்களிலே சைதந்ய ப்ரஸரண மில்லாத வ்ருக்ஷங்களும், “அவனொருவன் குழலூதின போது மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே” (பெரியா.தி. 3 – 6 – 10) என்றும், சைதந்ய லேஸமுடைய திஸ்ர்யக்குக்களும் “மருண்டு மான் கணங்கள் – கால் பரப்பிட்டுக் கவிழ்ந்திரங்கிச் செவி யாட்டகில்லாவே”” (பெரியா. தி, 3 – 6 – 6) என்று திர்யக் ஸ்தாவரங்கள் அந்யோந்யம் ஸ்வபாவங்கள் மாறாடும்படி பண்ணி, “நங்கைமீர்களிதோரற்புதம் கேளீர்” (பெரியா-3 – 6 – 1) என்று இதோராஸ்சர்யமென்று விஸேஷஜ்ஞர் சொல்லும்படியாகக் கண்டோமிறே என்கிறார். ஆக இத்தால், சைதந்யாசைதந்யங்களிரண்டும் தன்னில் பதார்த்த வைஷம்யத்துக்கு ஹேதுவாமித்தனை யொழிய பகவத் விஷயீகாரத்துக்கு ஹேதுவாகக் காணாமையாலே இவர்க்குப் பிறந்த பக்தி பகவந் நிர்ஹேதுக விஷயீகாரத்தாலே என்றதாயிற்று.
106-பட்டத்துக்குரிய ஆனையும் அரசும் செய்யுமவை ஆராயாது.
ஆனால் ”ஸமோஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய?” (கீதை 9 – 26) என்கிறபடியே ஸர்வ ஸமனுமாய், பரதுக்கம் ஸஹியாதபடியான பரம க்ருபையை உடையனான ஸர்வேஸ்வரன் ஸர்வரோடும் தனக்கு ஸம்பந்தம் ஒத்திருக்க, அவர்களிலே ஒருவனை நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான் என்றால் அவனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராதோ என்னில் நிருபாதிக ஸர்வ ஸேஷியுமாய், ஸ்வதந்த்ர ஸ்வாமியுமாய், அத ஏவ உபய விபூதியையும் ஸ்வாதீநமாகவும், ஸ்வார்த்தமாகவும் உடைய ஸர்வேஸ்வரன் ஸ்வகீயமான வற்றிலே ஒன்றை ஸ்வ விநியோகார்த்தமாக இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரிக்கும் போது வைஷம்ய நைர்க்ருண்யங்களை யிட்டு நிவாரகர் இல்லை என்னும் அர்த்தத்தை லோக த்ருஷ்டாந்த த்வாரா அருளிச் செய்கிறார்.
(பட்டத்துக்குரிய ஆனையும் அரசும் செய்யுமவை ஆராயாது) தான் செய்தது தான் இட்ட வழக்காம்படி நிரங்குஸ ஸ்வதந்த்ரமான ஆனை, யாரேனுமொருவனை எடுக்க, அவனே ராஜாவாகவும் அந்த ராஜா பரிக்ரஹித்தவளே ராஜ மஹிஷியுமா மிடத்தில் இப்படி ஆவானென்? என்று ஆராய்வாரில்லை யிறே. அப்படியே-“’ரூபப்ரகார பரிணாம க்ருத வ்யவஸ்த,ம் விஸ்வம் விபர்யஸிதுமந்யத ஸச்ச கர்த்தும் | ஷாம்யந் ஸ்வபாவ நியமம் கிமுதீ க்ஷஸே த்வம் ஸ்வாதந்த்ர்ய மைஸ்வர மபர்யநு யோஜ்யமாஹு ” (வை.ஸ்த. 55), ““படுநைக வராடிகேவ க்லுப்தா ஸ்தலயோ? காகணிகா ஸுவர்ண கோட்யோ | பவமோக்ஷ்ண்யோஸ் த்வயைவ ஐந்து கரியதே ரங்க நிதே, த்வமேவ பாஹி”’ (ர. ஸ்த. உ. 88) என்று உபயமும் தானிட்ட வழக்காம்படி நிரங்குச ஸ்வதந்தரனானவன் செய்யுமவை ஆராயப் படாதிறே என்கிறார் –
107-முந்நீர் வாழ்ந்தார் சூட்டும் கோவை ஆழி என்கிற ஸாக்ஷாத்க்ருத ஸ்வ பர வ்ருத்தாந்தர்க்கு யாத்ருச்சிகாதிகள் உண்டாகில் தோன்றும்.
அப்படிச் சொல்லுவானென்? இவர் தமக்கு ஜ்ஞாத ஸுக்ருதமன்றோ இல்லை என்றது? யாத்ருச்சிகாதிகளான அஜ்ஞாந ஸுக்ருதமடியாக அவன் விஷயீகரித்தானாகத்தட்டென் ? என்னில், ஸ்வ பர விபாகமற ஸர்வத்தையும் ஸாக்ஷாத்கரித் தருளிச் செய்தவர்க்கு யாத்ருச்சிகாதிகள் உண்டாகில் ப்ரகாஸிக்குமிறே. இவர்க்கு அஜ்ஞாதமாவது பூர்வாவஸ்தையிலிறே. உத்தராவஸ்தையிலும் அஜ்ஞாதமாகில் மயர்வற மதிநலம் அருளப் பெற்றாரில்லையாவரிறே. (முந்நீர் வாழ்ந்தார் தொடங்கி) “முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே” (திருவா. 3 – 2 – 1) என்று தொடங்கி அவன் சேதநருடைய உஜ்ஜீவநார்த்தமாக ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வ்யாபாரங்களைப் பண்ணின படியையும், தாம் அவன் கொடுத்த தேஹத்தைக் கொண்டு அதன் வழியே ஒழுகி ஸம்ஸரித்துப் போந்த படியையும், “வாழ்ந்தார்கள் வாழ்ந்தது”” (திருவா. & – 1 – 6) என்கிற பாட்டிற்படியே முன்பு ஜீவித்தவர்களாகச் சொல்லுமவர்கள் ஜலபுத்புதம் போலே நஸித்து அதே கதியிலே போனார்கள் என்னுமதொழிய ஒருபடிப்பட ஜீவித்துப் போந்தார்கள் என்னுமர்த்தம் இல்லை என்னுமதுவும், “‘சூட்டு நன் மாலைகள்’” (திருவிரு. 20) என்று தொடங்கி – ஒரு விபூ,தியாக ஸமாராதநோந்முகராய் உப கரணங்களைக் கொண்டு நில்லா நிற்கச் செய்தே அத்தை உபேஷித்துத் திருவாய்ப்பாடியில் திரண்ட வெண்ணெயை அசிந்திதமாக புஜிக்கையிலுண்டான இச்சையாலே கருஷ்ணனாய் வந்தவதரித்து நப்பின்னைப் பிராட்டிக்காக ருஷபங்கள் ஏழையும் அடர்த்தான் என்றும்-““கோவை வாயாள் பொருட்டு”’ (திருவா. 4 – 3 – 1) என்று தொடங்கி -ராமக்ருஷ்ணாத் யவதாரங்களைப் பண்ணி விரோதி நிரஸநம் பண்ணுகிற தஸைகளிலே உதவி ஸிஸிரோபசாரம் பண்ணப் பெற்றிலேனாகிலும் என்னுடைய ஸத்தாதிகளெல்லாம் தனக்கு போக உபகரணமாகக் கொள்ளும்படி என் பக்கலிலே வ்யாமுக்தனானானென்றும். ““ஆழியெழச்சங்கு’” (திருவா. 7 – 4- 1) என்று தொடங்கி – அவனுடைய த்ரைவிக்ரமாபதாநம்-அம்ருதமதநம், பூம்யுத்தரணம், மஹா ப்ரளயவ்ருத்தாந்தம், ஹிரண்ய நிரஸநம், ராவண வத,ம், பாணனுடைய பாஹாுவநச்சேதந ப்ரகாரம், ததநந்தரம் ஜகத் ஸ்ருஷ்டி ப்ரகாரம், கோவர்த்தநோத்தரணம் இப்படிப் பத்தும் பத்தான விஜய பரம்பரைகளையும், இப்படி ஸ்வ பர விபாகமற ஸர்வத்தையும் ஸாக்ஷாத்கரித்துப் பேசின இவர்க்குத் தம்மை விஷயீகரித்தது யாத்ருச்சிகாதி, ஸுக்ருதமடியாக என்னுமது உண்டாகில் ப்ரகாஸிக்குமிறே என்கிறார்
108-செய்தநன்றி தேடிக் காணாதே கெடுத்தாய் தந்தாய் என்ற அத்வேஷாபிமுக்,யங்களும் ஸத் கர்மத்தாலல்ல.
இப்படி அங்கீ காரத்துக்கு ஹேதுவாயிருப்பதொரு ஸுக்ருதமில்லையே யாகிலும், அத்வேஷாபிமுக்,யங்கள் ஸுக்ருதமடியாக ஆனாலோ என்னில், அந்த அத்வேஷாபிமுக்யங்களும் அவனாலே உண்டாய்த்தென்று இவர் தாமே அருளிச் செய்தாரிறே. (செய்த நன்றி தேடிக் காணாதே என்று தொடங்கி) ”வாட்டாற்றார்க்கெந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழ்வதுவே” (திருவா. 10 – 8 – 8) என்று ஸர்வேஸ்வரன் தம்மை விஷயீகரித்ததுக்கு ஹேது தேடிக் காணாதே. (கெடுத்தாய் தந்தாய் என்று) “என்னைத் தீ மனங்கெடுத்தாய்”” (திருவா. 2 – 7 – 8), “மருவித் தொழும் மனமே தந்தாய்” (திருவா. 2 – 7 – 7) என்று சொல்லுகிற அத்வேஷாபிமுக்யங் களிரண்டும் அவனாலே உண்டாய்த் தென்று தாமே அருளிச் செய்கையாலே அவையும் ஸத் கர்ம மடியாக வந்ததன்று என்கிறார்
109-எண்ணிலும் வரும் கணனைக்கு எண்டானுமிலீலை.
ஆனால் பரமபக்திக்கு முகம் காட்டுமாப் போலே பரிகணனைக்கும் முகம் காட்டும் என்றாரிறே இவர் தாமே-ஆகையாலே அந்த பரிகணனை இவர்க்கு உண்டாய்த்தானாலோ என்னில், அதுவுமில்லை என்று தாமே அருளிச்செய்தாரிறே என்கிறார் மேல். (எண்ணிலும் வரும் கணனைக்கு எண்டானுமில்லை) “எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்”” (திருவா, 1 – 10 – 2) என்று பரமபத்தி யுக்தர்க்கு முகம் காட்டுமாப் போலே பரிகணனைக்கு முகம் காட்டும் என்னுமிடம் ஈஸ்வரனுடைய குணாதிக்யம் சொல்லிற்றத்தனைபோக்கி, அந்த பரிகணனையும் தமக்கில்லை என்னுமிடத்தை “கருமங்கள் வாய்க்கின்று ஒரெண்டானுமின்றியே வந்தியலுமாறு – கண்டாயே” (திருவா. 1 – 10- 5) என்று – கார்யங்கள் ஸித்திக்குமிடத்தில் ”எண்ணிலும் வரும்” என்றது தானும் மிகையாம்படி ‘“ஓரெண்டானுமின்றியே”” என்று அந்த எண் தானுமின்றியே பலித்துக் கொடு நின்றபடி கண்டாயே என்று அதுவுமில்லை என்று தாமே பேசினாரிறே–
110-மதியால் இசைந்தோம் என்னும் அநுமதி-இச்சைகள் இருத்துவம் என்னாத என்னை இசைவித்த என்னிசைவினது.
ஆனால் தமக்கு அநுமதீச்சைகள் உண்டாக அருளிச் செய்தாரே- அவைதான் ஹேதுவானாலோ என்னில், அவையும் அவனாலே உண்டானவையாகையாலே ஹேது அன்று என்கிறார் (மதியால் இசைந்தோம் என்று தொடங்கி) வைத்தேன் மதியால் எனதுள்ளத்தகத்தே”” (திருவா. 8 – 7 – 10) என்றும், “யானுமென்னெஞ்சு மிசைந்தொழிந்தோம் (பெ.திருவ. 26) என்றும், அனுமதி மாத்ரத்தாலே அவனை என் தெஞ்சுக்குள்ளே வைத்தேன் என்றும், விரோதியைப் போக்குவானாக யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம் என்றும் தமக்கு அநுமதீச்சைகள் உண்டாகச் சொன்னாரே என்னில்; அந்த அநுமதீச்சைகளும் ”யானொட்டி என்னுள் இருத்துவமென்றிலன்‘ (திருவா. 1 – 7- 7) என்று, நான் அவனை என்னுள்ளே இருக்க வொட்டேன் என்று ப்ரதிஜ்ஞை பண்ண, தான் “அத்ய மே மரணம் வாபிதரணம் ஸாகரஸ்ய வா”’ (ரா. யு. 21 – 87) என்று ப்ரதிஜ்ஞை பண்ணினாப் போலே ப்ரதிஜ்ஞை பண்ணி, ஸ்வதந்த்ரமான நெஞ்சை அபஹரித்து ஸரீரத்தோடே கலந்து, பின்பு ஆத்மாவோடே கலந்து, இப்படி யத்நம் பண்ணி, ““இசைவித்சென்னை” (திருவா. 8 – 8 – 9) என்று என்னை இசையும்படி பண்ணினான் என்றும், இசைவித்த மாத்ரமே யன்றியிலே, ‘“என்னிசைவினை”” (திருவா. 1 – 7 – 4) என்று இசைவு தானும் தானேயாய் நின்றவனுடைய க்ருஷி பலம் என்கிறார் –
111-மாதவன் மலை நீர் நிழல் என்றேறிடுமது, வ்யாவ்ருத்த் யுக்தி, அந்யார்த்தம், அபுத்தி பூர்வகம், அவிஹிதம், பலவிஸத்ருஸம், பலாந்தரஹேது.
ஆனாலும் இவர் தம்முடைய ப்ரபந்தத்திலே ஹேது ஸூசகமாகச் சில உக்திகள் உண்டாயிரா நின்றதே என்னில், அவையும் ஹேது அன்றென்னுமிடத்தைப்பல படியாலும் உப பாதிக்கிறார் ( மாதவன் என்று தொடங்கி). “மாதவனென்றதே கொண்டு என்னை யினி இப்பாற் பட்டது’” (திருவா. 2 – 7 – 3) என்றும், “திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்னத் திருமால் வந்தென் தெஞ்சு நிறையப் புகுந்தான் (திருவா. 10- 8- 1) என்றும் இப்படி அந்தப்புரத்திலுள்ளார் சொல்லும் பாசுரத்தை அஹ்ருதயமாகச் சொன்ன வளவிலே இத்திருநாமத்துக்கும் அல்லாத திருநாமத்துக்கும் வாசி யறியாத என்னை விஷயீகரித்து என் விரோதிகளைப் போக்கினான் என்றும், திருமலையின் பேரைச் சொன்னேனாக ஸ்ரீய பதியான ஸர்வேஸ்வரன் என்னுடைய அஹ்ருதயமான உக்தியையே பற்றாசாகக் கொண்டு விஷயீகரித்தான் என்றும்.
(நீர் நிழல் என்று) “என்னடியார் விடாயைத் தீர்த்தாய் அவர்களுக்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய்” என்றாப் போலே இவை விஷயீகார ஹேது வானாலோ என்னில்; மாதவன், மலை என்றது இரண்டும் வ்யாவ்ருத்த் யுக்தி- அதாவது – இந்தத் திருநாமத்துக்கும் அல்லாத திருநாமங்களுக்கும் வாசி அறிந்து ஸ்ரீயப்பதியுடைய திருநாமம் என்று சொன்னதன்று-இப் பேருககும் அப்பேருக்கும் வேறுபாடு சொன்ன மாத்ரம். ”திருமாலிருஞ்சோலைமலை”’ என்றது – ஸர்வேஸ்வரனுக்கு இது வஸ்தவ்ய பூ,மி என்று சொன்னதன்று; ஒரோ தேஸங்களில் மலைகளைச் சொல்லுவார், “கொல்லி மலை”, *குலை மலை’ என்று சொல்லுவாரைப் போலே இம் மலைக்கும் அம் மலைக்கும் வேறுபாடு தோற்றச் சொன்னவித்தனை.
(நீர் நிழல் என்னுமவை அந்யார்த்த,ம்) அதாவது – தன் பயிருக்காக ஏற்றமிரைத்தும் சூதுச துரங்கத்துக்காக விரிவுண்டாக அகம் கட்டியும் செய்கிறானத்தனைபோக்கி, பாகவதர்கள் விடாய் தீருகைக்கும், ஒதுங்குவார் ஓதுங்குகைக்குமன்றிறே; ஒரு வைஷ்ணவன் அந்நீரிலே துளி நீர் அள்ளக் காணுதல், அந்நிழலிலே ஒருவன் ஒதுங்கக் காணுதல் செய்யில் தடியிட்டு விலக்குவர்களிறே. இவை யெல்லாம் சேர அபுத்தி பூர்வம் இந்த உக்தி வ்ருத்திகளிரண்டும் இவர்க்கு புத்தி பூர்வமல்ல. (அவிஹிதம்) இவை தான் மோக்ஷ ஹேதுக்களென்று ஸாஸ்த்ர விதியுமில்லை. (பல விஸத்ருஸம்) பகவத் விஷயீகார மஹா பலத்துக்கு இவை ஸத்ருஸமுமன்று. (பலாந்தரஹேது] இவை உண்டாயிற்றாகில் இப் பாலுண்டான அல்ப ப்ரயோஜநத்துக்கே ஹேதுவாமித்தனை போக்கி, அந்த மஹாபலத்துக்கு ஹேதுவாகவும் மாட்டாது. ஆகையால் இவை ஹேதுவாகமாட்டாது –
இவன் நடுவே அடியான் என்று ஓலைப்படா ப்ரமாணம் பக்ஷபாதி ஸாஷி வன் களவில் அநுபவமாகிற இந்திர ஞாலங்கள் காட்டிக் கொள்ள காப்பாரற்று விதி சூழ்ந்தது.
இவற்றை ஹேதுவாக நினைத்திருந்தாராகில் ““மதிநல மருளினன்?” (திருவா. 1 – 1 – 1) என்றும், “ஓஒ? எண்டானுமின்றியே வந்தியலுமாறு’” (திருவா, 1 – 10 – 5) என்றும், ““எனதாவி யுள் கலந்த”” (திருவா. 2 – 3 – 4) என்றும், ”நீசனேன் நிறை வொன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி” (திருவா. 3 – 3 – 4) என்றும், ‘“அதுவுமவனதின்னருனே” (திருவா. 8 – 8 – 3) என்றும், “வெறிதே அருள் செய்வர்”” (திருவா. 9 – 7 – 8) என்றும், “ இன்றென்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள் வைத்தான்”? (திருவார். 10 – 8 – 8) என்றும், “‘பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்” (திருவா. 5 – 7 – 3) என்றும், “நடுவே வந்துய்யக் கொள்கின்ற நாதன்” (திருவா. 1 – – 3) என்றும், ‘“என்னைத் தீ மனங் கெடுத்தாய்”’ (திருவா. 2 – 7 – 8) என்றும், மருவித் தொழும் மனமே தந்தாய்?” (திருவா. 2 – 7 – 7) என்றும், ““வரவாறொன்றில்லையால் வாழ்வினிதால்”” (பெ.திருவ. 56) என்றும் இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான் என்றருளிச்செய்த ஸ்வ வாக்யங்கள் பலவற்றோடும் வ்யாஹதமாமே.-இப்படி இவரை அஹேதுகமாக விஷயிகரிக்கnவேண்டுவானென் என்னில் “த்வம் (ம அஹம் மே” என்று ஸம்பந்தத்தை ஏறிட்டு இவரை வலியப் பிடிக்க, இவர் இறாய்த்த விடத்திலும் வழக்குப் பேசி, அவ்வளவிலும் அகப்படாதொழிய, மஹாபலிக்குத் தன் வடிவழகைக் காட்டி வஸீ கரித்து லோகத்தை அதிக்ரமித்துக் கொண்டாப் போலே தன் வடிவழகைக் காட்டி இவரை வாய் மாளப் பண்ணி விஷயீகரிக்கும்படி அவனை க்ருபை கால் கட்டிற்று என்கிறார் (இவன் நடுவே அடியான் என்று தொடங்கி). “நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன்” (திருவா. 1 – 7 – 5) என்றும், ”அடியானிவனென்றெனக்காரருள் செய்யும்” (திருவா. 9 – 4 – 10) என்றும் நாதனாகையாலே நிர்ஹேதுகமாக வந்து இவர்க்கிசைவின்றிக்கே இருக்கச் செய்தே “இவன் என் அடியான்” என்று பிடிக்க, அதுக்கு, இவர் இசையாதொழிய, இவர் இசைகைக்காக ‘“பதிம் விஸ்வஸ்ய” இத்யாதிகளைக் காட்ட, அது எழுதா மறையாகையாலே அது ஓலைப் படா ப்ரமாணம் என்று அத்தையும் இவர் அந்யதாகரிக்க, இவர் அடியானானமைக்கு தத்த்வ தர்மிகளான ஜ்ஞாநிகள் ஸாக்ஷியாக உண்டீ என்ன; அவர்களும் உனக்கு பக்ஷபாதிகள் என்று ப்ரதி வசநம் பண்ண, ஆனால் “இவ் வஸ்து உம்மதானபடி எங்ஙனே?” என்று பகவதபிப்ராயமாக, “அநுபவவிபவாத்”” என்கிறபடியே “அஹம் மம” என்று அநாதி, காலம் அநுபவித்துப் போந்தேன் என்று ப்ரபல ப்ரமாணமான அநுபவத்தைக் காட்ட, ப்ரமாண ஸாக்ஷிகளும் ஆக்ரோஸ முண்டாயிருக்கச் செய்தே அநுபவித்துப் போந்த இது ““வன்கள்வனேன்” (திருவா. 5 – 1 – 4) என்று ஸர்வஜ்ஞனானவனையும் க்ருத்ரிமித்துப் போந்தேன் என்று விஷயீகாராநந்தரம் தாமே பேசும்படி இவர் க்ருத்ரிமத்திலே அநுபவித்தாராம்படி ‘*இந்திர ஞாலங்கள் காட்டி இவ்வேழுலகுங்கொண்ட. நந்திரு மார்வன்”! (திருவா. 9 – 5 – 5) என்று ஐந்த்ரஜாலிகம் காட்டுவாரைப் போலே சிறுப்பது பெருப்பதான வடிவழகைக் காட்டி, மன்னை மனங்கொள்ள வஞ்சித்து தெஞ்சுருக்கி’ ” (பெ. மடல் ) என்கிறபடியே ஆஸூர ப்ரக்ருதியான மஹாபலியை வாய் மாளப் பண்ணி ஸகல ஜகத்தையும் ஆக்ரமித்துக் கொண்டாப் போலே, வடிவழகைக் காட்டி வாய்மாளப் பண்ணி விஷயீகரிக்கும்படி, (காப்பாரற்று) ”விதிவாய்க்கின்று காப்பாரார் – ஐயோ கண்ண பிரான் அறையோ இனிப் போனாலே”’ (திருவா. 5 – 1 – 1) எனறு – கிருபை பெருகுமிடத்தில் க்ருபா பரதந்த்ரனான நீ காக்கவோ? க்ருபா ப்ரேரிகையான அவள் காக்கவோ? க்ருபா விஷயமான நான் காக்கவோ? இந்த கருபையைத் தப்பி நீ போனாயாகில் “அறையோ அறை” என்று நிவாரகரில்லாதபடி விதி சூழ்ந்தது. ”எதிர் சூழல் புக்கெனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய – அம்மான் திருவிக்கிரமனை விதி சூழ்ந்தது”” (திருவா. 2 – 7 – 6) என்று அநேக ஜந்மங்கள் இவர் பிறவிகளுக்கு எதிரே பிறந்து கொடு வந்து இவரை விஷியீகரிக்கும்படி விரோதி நிரஸந ஸீலனான ஸர்வேஸ்வரனை, இவரை விஷயீகரித்தல்லது நிற்க வொண்ணாத படியான க்ருபை கால் கட்டிற்று என்கிறார்
113-வரவாறில்லை, வெறிதே என்று அறுதி யிட்டபின் வாழ் முதல் என்கிற ஸுஹ்ருதமொழியக் கற்பிக்கலாவதில்லை.
ஆகையாலே இவர் தாமே “நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான்’ என்று அர்த்தத்தை அறுதியிட்ட பின்பு விஷயீகார ஹேதுவான ப்ரதம ஸுஹருதமும் அவனை யல்லதில்லை என்கிறார் மேல் (வரவாறில்லை என்று தொடங்கி). “வரவாறொன்றில்லையால் வாழ்வினிதால்”” (பெ. திருவ. 56) என்று பேற்றுக்கு ஒரு ஹேதுவின்றியிலே இருக்கச் செய்தே அப்பேறு மிகவும் இனிதாயிருந்ததென்றும், ““வெறிதே அருள் செய்வர் செய்வார்கட்குகந்து”” (திருவா. 8 – 7 – 8) என்று ”செய்வார்களுக்கு உகந்து வெறிதே அருள் செய்வர்’‘ என்கையாலே தான் அங்கீகரிக்க வேண்டினார்க்குத் திருவுள்ளத் தோடே உகந்து நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணுமென்று இப்படி இவ் விஷயீகாரம் திர்ஹேதுக மென்று தாமே அறுதி யிட்டபின் (வாழ்முதல் என்ற ஸுஹ்ருதமொழியக் கற்பிக்கலாவதில்லை) இவ் விஷயீகாரத்துக்கு ஹேதுவான மூல ஸூஹ்ருதம் *‘பொழிலேமழுமேனமொன்றாய் நுனியார் கோட்டில் வைத்தாய் – தனியேன் வாழ் முதலே”’ (திருவா. 2 – 3 – 5) என்று ப்ரளயார்ணவ மக்னையான ஸ்ரீபூமிப்பிராட்டியை நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு உத்தரிப்பித்து, தனியே ஸம்ஸாரார்ணவ மக்நனாய் ஒரு கைம்முதலில்லாத என்னுடைய உஜ்ஜீவநத்துக்கு ப்ரதம ஸுஹ்ருதமானவனே என்று அருளிச்செய்த ஞானப்பிரானை யொழிய வேறு கல்பிக்கலாவதில்லை என்கிறார்.
ஆக, இதுக்குக்கீழ் இவருடைய ப்ரபாவத்தையும், ப்ரபாவத்துக்கடி பகவந் நிர்ஹேதுக கடாக்ஷம் என்னுமிடத்தையும், அந்த கடாக்ஷமடியாக இவர்க்குண்டான பக்தியினுடைய வ்யாவ்ருத்தியையும், அந்த பக்தி தான் கர்ம ஜ்ஞாந ஸாத்யையுமல்ல, அதுக்கடியான யாத்ருச்சிகாதிகளுமில்லை, கேவல நிர்ஹேதுக க்ருபையாலே உண்டாயிற்றென்னுமிடத்தையும் அருளிச் செய்து தலைக்கட்டினாராய்த்து –
114-நலமருளினன் என்கொல் என்று ஆமூலசூட.ம் அருளால் மன்னுமிவர்க்கு அன்புக்கடியானதுவே அடி சேருகைக்கு ஸாதநம்.
ஆனால், உபாஸகனுக்கு கர்ம ஜ்ஞாநங்களாலே ஸாத்யையான பக்தி பகவத் ப்ராப்திக்கு ஸாதநமாகக் கண்டோம், இவர்க்கு நிர்ஹேதுக க்ருபையாலே பக்தி உண்டாயிற்றாகில் பகவத் ப்ராப்திக்கு இது ஸாதநமானாலோ என்னில், அந்த பக்த் யுத்பத்தி ஹேதுவான க்ருபை தானே ப்ராப்திக்கும் ஸாதநம் என்கிறார் மேல் (நலமருளினன் என்று தொடங்கி). “மயர்வற மதிநலமருளினன் ”‘ (திருவா. 1 – 1 – 1), “ஆவா வென்றருள் செய்து” (திருவா. 5 – 1 – 9), “’தானே இன்னருள் செய்து” (திருவா. 5 – 1 – 10), ‘“அதுவுமவனதின்னருளே”‘ (திருவா. 0 – ப – 3), ”என்கொலம்மான் திருவருள்கள்”‘ (திருவா, 10 – 7 -4) என்று ஜஞாந தஸையோடு, உபாயதஸையோடு, ப்ராப்தி தஸையோடு வாசியற ஆமூலசூடம் அருளால் ”மன்னு குருகூர்ச் சடகோபன்”’ (திருவா, 1 – 5 -11) என்று தொடங்கி – ஸுகுமாரராயிருப்பார் பிடி தோறும் ‘நெய்’ என்னுமாப் போலே அவனுடைய அருளை யொழியச் செல்லாத இவர்க்கு. (அன்புக் கடியானதுவே அடி சேருகைக்கும் ஸாதநம்) ““அறியாக் காலத்துள்ளே அடிமைக் கணன்பு செய்வித்து’” (திருவா. 2- 3 – 3) என்று அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத அதி பால்யததிலே அன்பை விளைத்தானென்றும், ““ஆராவன்பிலடியேனுன்னடி சேர் வண்ணமருளாயே” (திருவா. 6 – 10 – 2) என்கையாலே அந்த பக்திக்கடியான கிருபையே பகவத் ப்ராப்திக்கு சாதநம் என்கிறார் –
115-புணர்தொறுமென்னக் கலந்து பிரிந்து ஜ்ஞாந பக்திகளை வளர்த்தது கனங்குழையிடக் காது பெருக்குதலும், மாஸோபவாஸி போஜநப் புறப்பூச்சும் போலே ஆற்ற நல்ல் மாபோகச் சிரமமாக.
இப்படி பரம க்ருபாவானானவன் இவர்க்கு ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களினாலே ஸோக ஹர்ஷங்களை விளைவித்ததுக்கு ப்ரேயாஜநம் என் என்னில், இவர்க்கு தேஸ விஸேஷத்தில் அநு பவம் ஸாத்மிக்கைக்காக ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களினாலே ஐஞாந பக்திகளை வளர்த்து ஸ்ரமம் செய்வித்தபடி என்கிறார் (புணர்தொறும் என்று தொடங்கி), “புணர் தொறும்” (திருவா. 10 – 3 – 2) என்கிற பாட்டில் ஸம்ஸ்லேஷிக்குந் தோறும் அந்த ஸ்ம்ஸ்லேஷ்த்தின் அளவல்லாத ஸுக ஸாகரம், அபரிச்சிந்நமான ஆகாயத்தையும் கடந்து அது தானும் இதுக்குள்ளேயாம்படியான இவருடைய ஜஞாநமும் தனக்குள்ளேயாம்படி வ்யாப்தமான அந்த ஸுகம், அவனுடைய விஸ்லேஷத்திலே பெருக்காறு அடிச்சுடுமாப் போலே ஸ்வப்ந ஸமமாய்ப் போய் அந்த ஸுகம் போனவிடமெல்லாம் வ்யாப்தமாய்க் கொண்டு அணு பரிமாணமான ஆத்மாவின் அளவல்லாத அபிநிவேஸம் பெருகிற்றென்று சொல்லும்படி ஸம்ஸ்லேஷித்து ஜ்ஞாநத்தை வளர்த்து, விஸ்லேஷித்து பக்திகளை வளர்த்தது. (கனங்குழையிடக் காது பெருக்குதலும் மாஸோபவாஸி போஜநப் புறப் பூச்சும் போலே) கனத்த பணிகளிடுகைக்குக் காது பெருக்குவாரைப் போலேயும், மாஸோபவாஸிகளுக்கு அப்போதே அஸநத்தை இடில் ஸாத்மியா தென்று ஸரீரத்திலே அந்நத்தை அறைத்துப் பூசியும் கஞ்சியைக் கொடுத்தும், குழம்பு கொடுத்தும் ஸாத்மிப்பிப்பாரைப் போலேயும்-
(ஆற்றநல்ல மா போகச் சிரமமாக) “*ஆற்ற நல்ல வகை காட்டுமம்மான் ” (திரு-4-5-5) என்றும், அர்ஜுநனுக்கு ஸாத்மிக்க ஸாத்மிக்க அர்த்தம் அருளிச் செய்தாப் போலே எனக்கும் ஸாத்மிக்க ஸாத்மிக்கத் தன்னுடைய பரத்வாதிகளை அநுபவிப்பித்தான் என்று இவர் அருளிச் செய்தபடியே பகவதநுபவம் என்று கனாக் கண்டறியாத இவர்க்கு “எம்மா வீடு”’ (திருவா. 2 – 9 – 1) என்றும், “மா போகம்”’ என்றும் சொல்லுகிறபடியே எல்லாப்படியாலும் விலக்ஷணமாய், ““கொள்ள மாளா இன்ப வெள்ளம்”” (திருவா. 4 – 7 – 2) என்கிறபடியே அதிஸயித ஜ்ஞாந ஸக்திகரான நித்ய ஸூரிகளாலும் துலைத்தநுபவிக்க வொண்ணாதபடி அபரிச்சேத்யமாயிருக்கிற தன்னோட்டை அநுபவத்தை முதலிலே ப்ரகாஸிப்பிக்கில் இவரைக் கிடையாதென்றும், அவ்வநுபவம் ஸாத்மிக்கைக்காகச் சிரமம் செய்வித்தபடி என்கிறார்-
116-இவற்றால் வரும் ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாகிறன எளியனாய் நிற்கும் அரியனாய் எய்தான் என்கிற தர்ஸந ஸமமான மாநஸாநுஸந்தாநமும் திண் கொள்ளப் பெறாத மநஸ் ஸைதில்யமும்.
இவர்க்கு இங்கு ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாகச் சொல்லுகிறவை எவை என்னில், ப்ரத்யக்ஷ ஸமாநாகாரமான மாநஸாநுபவமும், அவ்வநுபவத்தை பாஹ்ய ஸம்ஸ்லேஷாபேக்ஷை பண்ண, அது கிடையாமையாலே மாநஸாநுபவத்துக்கு வந்த கலக்கமும் என்கிறார் மேல் (இவற்றால் வரும் ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாகிறன- அந்த ஜஞாந பக்திகளை வளர்த்தத்தால் வரும் ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாகிறனவை எவை என்னில், (எளியனாய் நிற்கும் அரியனாய் எய்தான் என்கிற தர்ஸந ஸமமான மாதஸாநுஸந்தாநமும்) “கருத்துக்கு நன்றுமெளியனாய்”‘ (திருவா. 8 – 6 – 11), “நிற்கும் முன்னே வந்து”‘ (திருவா-7 – 2 – 6), “கண்கள் காண்டற்கரியனாய்”’ (திருவா. 3 – 6 – 11), ““கைக்குமெய்தான்” (திருவா. 3 – 6 – 11) என்றும் சொல்லுகையாலே என்னுடைய ஹ்ருதயத்திலே மிகவும் எளியனாய்க் கொண்டு என் முன்னே நிற்கும் என்றும், என் கண்ணுக்கு அவிஷயமாய்க் கொண்டு கையாலே அணைக்கைக்கு எட்டுகிறிலன் என்றும் சொல்லுகிற ப்ரத்யக்ஷ ஸமாநாகார மாநஸாநுஸந்தாநமும், (திண் கொள்ளப் பெறாத மநஸ் ஸைதில்யமும்) அந்த மாநஸாநுபவ வைஸத்யத்தாலே “என் கண்கட்குத்திண்கொள்ள ஒருநாள் அருளாயுன் திருவுருவே”’ (திருவா. 5 – 10 – 7) என்று பாஹ்ய ஸம்ஸ்லேஷாபேக்ஷை பண்ணி அது கிடையாமையாலே அம் மாநஸாநுபவத்துக்கு வரும் குலைதலும் ் என்கிறார்.-
117-புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவை அவை சரித்தவர்க்கு ப்ரிய ஹித பரன் தான் துளக்கற எங்கும் தழைக்க நடத்தும்.
அபிமத விஷயத்தில் ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களிரண்டும் நாட்டார்க்கு புண்ய பாப பலமாயன்றோ உண்டாகிறதென்னில்; அந்த பாபங்கள் வாஸனையோடே போகப் பெற்ற இவர்க்கு ப்ரிய ஹித பரனான ஈஸ்வரன் தானே நடத்தும் என்கிறார். (புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவை) “புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்றிவையாய்”’ (திருவா. 6 – 3 – 4) என்று நாட்டார்க்கு புண்ய பாப பலமாய்க் கொண்டு வருகிற ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களை, (அவை சரித்தவர்க்கு ) சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து மாயப் பற்றறுத்து”‘ (திருவா. 1 – 5 – 10) என்று ஆத்மாவோடே பிரிக்க வொண்ணாதபடி சேர்ந்திருக்கிற புண்ய பாப ரூபமான ப்ரபல கர்மங்களை விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாப் போலே ஒருகாலே வாஸனையோடே போம்படி ஈஸ்வரன் போக்குகையாலே அவை இல்லாத இவர்க்கு, (ப்ரிய ஹித பரன் தான் துளக்கற எங்கும் தழைக்க நடத்தும்) ப்ரிய பரனாய்க் கொண்டு ஜ்ஞாநத்தை வர்த்திப்பித்தும் ஹித பரனாய்க் கொண்டு பக்தியை வர்த்திப்பித்தும் போருகிற ஈஸ்வரன் தானே.[சிக்கென இத்யாதி,]துளக்கற்றமுதமாய்க் கொண்டு “எங்கும் பக்க நோக்கறியான்”” (திருவா, 2 – 6 – 2) என்று விபூதி வ்யாபாரத்தை ஒருங்க விட்டுக் கொண்டு வந்து என்னுள்ளே சிக்கெனப் புகுந்து அத்தாலே விகஸித ஸஹஜ ஸார்வஜ்ஞ்யனுமாய், “விஜ்வர?? (ரா. பா. 1 -85) என்கிறபடியே உள் நடுக்கம் தீர்ந்து நிரதிஸய போக்யனுமாய் நாச்சிமாரையும் புரிந்து பராமல் என்னளவிலே நிரந்தரமாக கடாக்ஷிக்கையாலே திருக் கண்களும் செவ்வி பெற்று இப்படி என்னுள்ளே இருந்தான் என்றும், *‘தழை நல்ல இன்பம் தலைப்பெய்தெங்கும் தழைக்கவே” (திருவா. 9 – 5 – 10) என்று ‘விஸ்லேஷ வ்யஸநத்தாலே நான் முடியா நின்றேன், என்னுடைய க்லேஸம் கண்டு ஜகத்து கலேஸிக்க வேண்டாவே” என்றும், தீப்பாய்வார் “நாடு வாழ, நகரி வாழ ‘ என்று வாழ்த்துமாப் போலே “ஜகத்தெங்கும் ஆநந்தமானது அபிவ்ருத்தமாயிருக்க‘ என்று தாம் முடிகையிலே வ்யவஸிதராயும் இப்படித் தாமே பேசும்படி நடத்திக் கொண்டு போரும் என்கிறார்.
118-ஜ்ஞாநத்தில் தம் பேச்சு, ப்ரேமத்தில் பெண் பேச்சு.
ஆனால் இவர்க்கு இந்த ஜ்ஞாந தஸையில் பேச்சேது? ப்ரேம தஸையில் பேச்சேது? என்னில், ஜ்ஞாநத்தில் தம் பேச்சு, ப்ரேமத்தில் பெண் பேச்சு என்கிறார் –
119-தேறும் கலங்கி என்றும் தேறியும் தேறாதும் ஸ்வரூபம் குலையாது.
பேச்சில் வைஷம்யமொழிய ஸ்வரூபத்தில் மாறாட்டமில்லை என்கிறார் (தேறும் கலங்கி என்று). “சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்’” (திருவா. 7 – 2 – 5), “கலங்கிக் கை தொழும் நின்றிவள்” (திருவா. 2 – 4 – 4) என்றும், ‘‘தேறியும் தேறாது மாயோன் திறத்தனளே இத் திருவே” (திருவா. 4 – 4- 7) என்றும் பிண்டத்வ-கடத்வ-கபாலத்வ காபாலிகத்வாத்,-யவஸ்தைகளில் ம்ருத்தான ஆகாரம் அநுவர்த்திக்குமாப் போலே தெளிந்த (தேறின – பா. போதோடு கலங்கின போதோடு வாசியற இரண்டவஸ்தையிலும் அஞ்ஜலி ஹஸ்தையாய்க் கொண்டு “அவனை யல்லதறியாள்” என்கையாலே ஜ்ஞாந தஸையில் தாமான தன்மையோடு ப்ரேம தஸையில் பிராட்டிமார் பேச்சான அவஸ்தையோடு வாசியற சேஷத்வத்தில் கலக்கமற்று ஏக ரூபமாயிருக்கு மென்கிறார் –
120-அடியோம் தொடர்ந்து குற்றேவல் அடிச்சியோம் அடிக் கீழ்க் குற்றேவலாகை அவஸ்தாந்தரம்.
ஆனால் பின்னை அவஸ்தாந்தரம் கூடின படி என் என்னில் (அடியோம் தொடர்ந்து குற்றேவல் அடிச்சியோம் அடிக்கீழ்க் குற்றேவலாகை அவஸ்தாந்தரம்) ஸ்வரூபத்திலும் ஸ்வரூபாநுரூபமான வ்ருத்தி ப்ரார்த்தனையிலும் வாசியில்லை. தம் பேச்சும் பிராட்டிமார் பேச்சுமான இவ்வளவே அவஸ்தாந்தரம்-
121-வித்யை தாயாகப் பெற்று பாலுமமுதுமான திருநாமத்தாலே திருமகள் போல வளர்த்த தஞ்சமாகிய தந்தை மற்றொருவர்க்குப் பேச்சுப் படாமல், விஸ்வபதி லோக பர்த்தா என்னும் மணவாளரை நாலிரண்டிழை கொண்டு முப்புரியான ப்ரஹ்ம ஸூத்ர பந்தத்தோடே வரிப்பிக்கப் பரம் புருடன் கைக்கொண்ட பின் சதுர்த்தியுள் புக்கு இடையீடு நடுக் கிடக்கும் நாள் கழித்து ஜந்ம பூமியை விட்டகன்று சூழ்விசும்பிற் படியே உடன்சென்று குடைந்து நீராடி வியன் துழாய் அஞ்சனத்தின் நீறு நானப் பொடி பீதக வாடை பல்கலன் கொண்டு நோக்கி அலங்கரித்துப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்ய நிறை குட விளக்கமேந்தி இளமங்கையர் எதிர் கொள்ள வைகுந்தம் புக்கிருந்து வாய் மடுத்துப் பெரும் களிச்சியாக வானவர் போகமுண்டு கோப்புடைய கோட்டுக்கால் கட்டில் மிதித்து ஆரோஹித்து பரத-அக்ரூர-மாருதிகளை பரிஷ்வங்கித்த மணி மிகு மார்விலே குரு மா மணி யாயணையும் வஸ்துவுக்கு மணிவல்லிப் பேச்சு வந்தேறியன்று.
வியன்துழாய் அஞ்சனத்தின் நீறு என்று தொடங்கி) ““வியன்துழாய்க்கற்பென்று சூடும்” (மூ.திரூவ. 69), “’ஆராரயில் வேற்கணஞ்சனத்தின் நீறணிந்து’‘ (சி.மடல்),, “மெய்திமிரு நானப்பொடி “” (பெரியா.தி. 1-49), ‘“பெருமானரையில் பீதக வண்ணவாடை” (நா.தி. 13 – 1), “பல்கலனும் யாமணிவோம்”’ (திருப்பாவை 27) என்றும்,
“தம் பஞ்சஸ தாந்ய ப்ஸரஸாம் ப்ரதிதா வந்தி மதம் மாலா ஹஸ்தா? ஸதம் சூர்ண ஹஸ்தா? தம் வாஸோ ஹஸ்தா?”’ (கெளஷீ- உப.) என்று குளக்கரையிலே பர்த்தாவினுடைய பந்துக்கள் வந்து அலங்கரிக்குமாப் பாலே திவ்யாலங்காரோப கரணங்களை ஏந்திக் கொண்டு மானேய் நோக்கிகளான ஐந்நூறு திவ்யாப்ஸரஸ்ஸூக்கள் எதிரே வந்து “தம் ப்,ரஹ்மாலங்காரேணா லங்குர்வந்தி” (கெளஷீ- உப.) என்கிறபடியே பர விநியோகார்ஹமாம்படி அலங்கரித்து.(பல்லாண்டிசைத்துக் கவரி செய்ய) இவர்கள் விஷயத்தில் சாபலத்தாலே மங்களாஸாஸநம் பண்ணிச் சாமரமிட. (நிறைகுட விளக்கமேந்தி இளமங்கையரெதிர் கொள்ள] “நிதியும் நற்சுண்ணமும் நிறைகுடவிளக்கமும் மதிமுக மடந்தையர்”‘ (திருவா. 10 – 9-10) என்று மங்களாவஹமான மங்கள தீப பூர்ண கும்பங்களையும் தரித்துக் கொண்டு. “சதிரிளமங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள”” (நா.தி. 6 – 5) என்று நித்ய நவயெளவந ஸ்வபாவைகளான வேறே சில திவ்யாப்ஸரஸ்ஸுக்கள் எதிர் கொள்ள.
(வைகுந்தம் புக்கிருந்து) ‘“மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பார்” (நா.தி. 3 10) என்று ஸ்ரீயபதியான ஸர்வேஸ்வரனோடே தேஸ விஸேஷ ப்ராப்திபண்ணி. (வாய் மடுத்துப் பெருங் களிச்சியாக வானவர் போகமுண்டு) பின்பு பர்த்ரு க்ருஹத்திலே தம்பதிகளும் மற்றுமுள்ள பந்துக்களும் பெருங்களிச்சி யுண்ணக் கடவரிறே; அப்படியே ““அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேன்” (திருவா. 2 – 3 – 9) என்றும், ““கட்டெழில் வானவர் போகமுண்பாரே”” (திருவா, 6 – 6 – 11) என்றும் நித்ய ஸூரிகளுடைய போகத்தை அவர்களோடொக்க முழு மிடறு செய்து ““ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதா’‘ (தை. உப.) என்கிறபடியே புஜித்து.
(கோப்புடைய கோட்டுக்கால் கட்டில் மிதித்து ஆரோஹித்து) பின்பு பர்த்ரு ஸம்ஸ்லேஷத்துக்குப் படுக்கையிலே ஏறக் கடவதிறே; அப்படியே ““கோப்புடைய சிங்காசனம்” ( திருப்பாவை 23) என்றும், ““குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் – மெத்தென்ற பஞ்ச சயனத்தின்மேலேறி”” (திருப்பாவை 19) என்றும் சொல்லுகிறபடியே உபய விபூ,தியும் தொழிலாக வகுப்புண்ட ஸர்வாஸ்சர்ய மயமான சீரிய சிங்காசனத்திலே “’தமேவம் வித்பாதே,நாத், யாரோஹதி” (கெளஷீ. 1 – 5) என்கிறபடியே பாத பீடத்திலே அடியிட்டேறி,(பரதாக்ரூரமாருதிகளைப் பரிஷ்வங்கித்த மணிமிகுமார்விலே) “அங்கே பரதமாரோப்ய முதித பரிஷஸ்வஜே”’ (ரா. யு. 130 – 41) என்றும், “ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா । ஸம்ஸ்ப்ருஸ்யாக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸுகாட,ம் பரிஷஸ்வஜே”” (வி.பு. 5 – 18 – 2) என்றும், ““ஏஷ ஸர்வஸ்வபூ,தஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத?”’ (ரா. யு. 1 – 13) என்றும், ஸ்ரீபரதாழ்வானையும், அக்ரூரனையும், திருவடியையும் அணைத்த மணி மிகு மார்விலே – ஸ்ரீகௌஸ்துப,மும் நிறம்பெறும்படி அழகுமிக்க திருமார்பிலே, (குருமாமணியாயணையும் வஸ்துவுக்கு) ஸ்லாக்யமாய், ஸர்வேஸ்வரத்வ சிஹ்நமான அந்த ஸ்ரீகெளஸ்துபத்தோபாதி அவனுக்கு போக்யமுமாய், தேஜஸ்கரமுமாய்க் கொண்டு அணைகிற ஆத்ம வஸ்துவுக்கு. (மணிவல்லிப் பேச்சு வந்தேறியன்று) ““வண்பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம்”’ (திருவிரு. 9) என்று உதாரமாய், அழகு மிக்கதாய், ஸ்லாக்யமான கொடி போன்றவள் என்கிற ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமாய் வருகிற பேச்சு வந்தேறி யன்று, ஸ்வாபாவிகம் என்கிறார்.
122-இன்பும் அன்பும் முற்படுவது கொழுந்து விடுவதாகிறது கடிமா மலர்ப் பாவையோடுள்ள ஸாம்ய ஷட்கத்தாலே.
கேவலம் ஸ்த்ரீத்வ ஸாம்யமே யன்றிக்கே பரிஸூத்தமான ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்யத்துக்குப் பெரிய பிராட்டியாரோடு அநந்யார்ஹத்வாதிகளாலே ஸ்வரூப ஸாம்யம் உண்டென்கிறார் (இன்பும் அன்பும் என்று தொடங்கி). (இன்பும் அன்பும் முற்படுவது கொழுந்து விடுவதாகிறது) “நமக்கும் பூவின் மிசை நங்கைக்குமின்பனை”’ (திருவா. ச – 5 – 8) என்று – இன்று ஆஸ்ரயித்த நமக்கும் நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகாய், ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் பரிபூர்ணை யாயிருக்கிற பெரிய பிராட்டி யார்க்கும் இன்பனாமிடத்தில் “இங்கே இன்பனாயாய்த்துப் பின்னே அவளுக்கு ஸ்நேஹிப்பது’ என்று பிராட்டிக்கு முன்னே தன்பக்கல் இன்பனாவது, ‘*கோல மலர்ப் பாவைக்கன்பாகிய என் அன்பேயோ?‘” (திருவா. 10 -10 -7) என்று – நிரதிஸய போக் யதைக வேஷையான பெரிய பிராட்டியாருக்கு அன்பனாகையாலே அவள் பரிக்ரஹமான என் பக்கலிலும் அன்பனானவன் என்று பெரிய பிராட்டியார் பக்கல் அவனுக்குண்டான அன்பு தம்மளவாக வர்த்திப்பதாய், இப்படி இன்பு முற்படுவது, அன்பு கொழுந்து விடுவதாகிறது. (கடி மா மலர்ப் பாவையோடுள்ள ஸாம்ய ஷட்கததாலே) “காவியங் கண்ணி யெண்ணில் கடி மாமலர்ப்பாவை யொப்பாள்” (திருமொழி 3 – 7 – 9) என்றும், “காவி?” என்று செங்கழுநீராய், செவ்வரியாலும், கடைக் கண்ணில் சிவப்பாலும் செங்கழுநீர் போன்ற கண்ணழகை உடையள் என்கையாலே ராகோத்தரமான ஜ்ஞாநத்தை உடையள் என்றபடி.-இத்தால் மேற் சொல்லப்படுகிற அநந்யார்ஹ ஸேஷத்வ ஜ்ஞாநாதி ஷட்கத்துக்கும் உப லக்ஷணம். அது என் என்னில், ”கடிமாமலர்ப்பாவை யொப்பாள்”’ என்று – இவளை ஆராயில் பரிமள ப்ரசுரமான தாமரையை இருப்பிடமாக உடையளாய், நிருபாதிகமான ஸ்த்ரீத்வத்தை உடையளாகையாலே ரூப குணத்தாலும், ஆத்ம குணத்தாலும் பூர்ணையாய்க் கொண்டு நிரதிஸய போக்யையாயிருக்கிற பெரியபிராட்டியாரோடொக்கச் சொல்லலாம்படியான அநந்யார்ஹ
ஸேஷத்வமும், அநந்ய ஸரணத்வமும், அநந்ய போக்யத்வமும், ஸ்ம்ஸ்லேஷத்தில் தரிக்கை, விஸ்லேஷத்தில் தரியாமை, ததேக நிர்வாஹ்யத்வம் என்கிற ஆறு ப்ரகாரத்தாலே என்கிறார்; இனி அபிமதத்வம், அநுகூலத்வம், நிருபகத்வம், ஸேஷத்வ ஸம்பந்த த்வாராபாவம், புருஷகாரத்வம், ப்ராப்ய பூரகத்வம் என்கிற இவை முதலான ஸ்வபாவ விஸேஷங்கள் பெரியபிராட்டியாருக்கே அஸாதாரணமா யிருக்குமிறே–
123-உண்ணாது கிடந்தோர் மாயையினால் என்னும் வீறுடைய முடிக்குரியாரோடு இத்திருமண்ணேரன்ன ஒண்ணுதல் பின்னை கொல் என்கிற ஒப்பு தென் பால் நெடு மாடம் கடுஞ்சிலை அம்பெரியூட்டி நீறைழவெரித்த பெருந்தோற்றத் தாருயிர்க் காகுத்தன் ஆதியங்கால மண்புரை பொன்மாதின் துகளாடி எருதேழ்தழீஇச் சறையினார் என்னுமவற்றிலே தோன்றும்.
இப்படிப் பெரியபிராட்டியாரோடு ஸாம்யம் சொன்னவளவன்றிக்கே நிரதிஸய போக்யதையை உடைய பிராட்டிமார் மூவரோடும் இவர்க்கு ஸாம்யம் உண்டு என்னுமாகாரம் இவருடைய பாசுரங்களிலே ப்ரகாஸிக்குமென்கிறார் (உண்ணாது என்று தொடங்கி). ‘“உண்ணாதுறங்கா தொலி கடலை ஊடறுத்துப் பெண்ணாக்கை ஆப்புண்டு தாமூற்ற பேது” என்றும், “’ந மாம்ஸம் ராகவோ பு,ங்க்தே ந சாபி மது ஸேவதே”’ (ரா. ஸு, 36 – 41), ”அநித்ரஸ்ஸதம் ராமஸ் ஸுப்தோபி ச நரோத்தம: (ரா.ஸு. 36 – 44), “நைவ தம்ஸாந் ந மஸகாதந் ந கீடாந்த ஸரீஸ்ருபாந் ! ராகவோபநயேத், கத்ராத் தவத் கதேநாந்தராத்மநா” (ரா.ஸு., 36 -42) என்கிறபடியே தீரோதாத்த நாயகனான சக்ரவர்த்தித் திருமகனையும் தன்னுடைய விஸ்லேஷத்தில் ஊணுமுறக்கமுமற்று, கடித்ததும், ஊர்ந்ததும் அறியாதபடி பண்ணவல்ல வைலக்ஷ்ண்யத்தால் வந்த வீறுடையளாய், ஸர்வேஸ்வர ஸாம்ராஜ்யத்தில் அவனோடொக்க அபிஷிக்தை யாகையாலே முடிக்குரியளா யிருக்கிற ஜநக குல ஸுந்தரியான பெரிய பிராட்டியாரோடும், “கிடந்திருந்து நின்றளந்து ” (திருவா. 2 – 8 – 7) என்கிற பாட்டின் படியே ஸர்வஜ்ஞனான ஸர்வேஸ்வரனையும், பஹு ப்ரகாரமாகத் தன்னை அநுபவித்தாலும் பர்யாப்தனாகாதபடி பிச்சேற்ற வல்ல வைலக்ஷண்யத்தை உடையளாய்ப் பெரிய பிராட்டியாரோபாதி முடிக்கு உரியளான ஸ்ரீபூமிப் பிராட்டியாரோடும்.(ஓர் மாயையினால் இத்யாதி,) நித்ய ஸூரிகள் ஸமாராதந பரராய் நிற்க, அவர்களையும் உபேக்ஷித்துத் தாழ்வுக் கெல்லையான இடைக் குலத்திலே க்ருஷ்ணனாய் வந்து பிறந்து, அவள் தன்னைப் பெறுகைக்கு ஸூல்கமாக இட்டு ம்ருத்யு ஸமங்களான ருஷபங்களின் கொம்பிலே கருமாறிப் பாய்ந்தாப் போலே தன்னைப் பேணாமல் சென்று விழும்படி அவனைப் பிச்சேற்ற வல்ல வைலக்ஷண்யத்தை உடையளாய் அவர்களோபாதி முடிக்குரியளான நப்பின்னைப் பிராட்டியோடும்.
(இத்திரு மண்ணேரன்ன பின்னைகொல் என்கிற் ஒப்பு) “’தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத்திருவே”’ (திருவா. 4 – 4 – 7), “மண்ணேரன்ன ஒண்ணுதலே ”’ (திருவிரு. 50), “பின்னை கொல் நில மா மகள் கொல்’‘ (திருவா. 6 – 5 – 10) என்று தேறின தஸையோடு தேறாத தஸையோடு வாசியற ““அநத்யா ராக, வேணாஹம்”” (ரா. ஸு. 21 – 16) என்கிறபடியே அவனை யல்லது அறியாள் இத்திரு என்றும், ஸ்ரீபூ,மிப்பிராட்டி யாரோடொத்த வைலக்ஷ்ண்யத்தை உடையாள் என்றும், ‘நப்பின்னைப் பிராட்டியாரோ? ஸ்ரீபூமிப்பிராட்டியாரோ? பெரிய பிராட்டியாரோ?’ என்று விகல்பிக்கலாம்படி இவர்க்குண்டான ஸாம்யம்-(தென்பால் இத்யாதி, ) “தென்பால்”’ (திருவிரு. 77), “இலங்கைக்குழா நெடுமாடம் இடித்தபிரானார் கொடுமைகளே”‘ (திருவிரு. 36), ““காயுங்கடுஞ்சிலை என் காகுத்தன் வாரானால்”‘ (திருவா. 5 – 4- 3), “இலங்கைநகர் அம்பெரி உய்த்தவர்” இத்யாதி, (திருவா. 4-2- 8), ‘தீழுற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த யாமுற்றதுற்றுயோ? (திருவா. 2 – 1 – 3), “மாறில் போரரக்கன்’” இத்யாதி, (திருவா. 6 – 1 – 10) ”கினிமொழியாள் காரணமா?’ இத்யாதி, (திருவா. 4 – 8 – 5), ““என்னாருயிர்க் காகுத்தன்” இத்யாதி, (திருவா. 9 – 5 – 6) என்று சக்ரவர்த்தித் திருமகனான அவ் வவதாரத்தையும், அவ் வவதாரத்திலுண்டான அபதாநங்களையும் அநுபவிக்கவேணும் என்று ஆசைப்பட்டுப் பேசின இப்பாசுரங்களிலும் -(ஆதியங்காலம் இத்யாதி,) ““ஆதியங் காலத்தகவிடங் கீண்டவர்”” (திருவா. 4 – 2 – 6), “மண்புரை” இத்யாதி, (திருவா. 6 – 6 – 5), “மண்ணளந்த – செவ்வாய் ”” இத்யாதி, (5 4 – 4), ““ஞாலப் பொன் மாதின் மணாளன்” இத்யாதி, (திருவிரு. 50), “ஏனமொன்றாய் மண்துகளாடி”’ இத்யாதி, (திருவிரு. 55) என்று ஸ்ரீவராஹ ப்ராதுர் பாவத்தையும் அதில் அபதாநங்களையும் அநுபவிக்க ஆசைப்பட்டுப் பேசின இவர் பாசுரங்களிலேயும்.-(எருதேழ்தழீஇச்சறையினார் இத்யாதி,) ““எருதேழ்தழீஇ” (திருவா. 4 – 2 – 5) என்று தொடங்கி *‘நாளு நாள் நைகின்றதால்”” என்றும், ‘“நிறைவினால் குறைவில்லா” (திருவா, 4 – 8 – 4) என்று தொடங்கி *’சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே”” என்று நப்பின்னைப் பிராட்டியார் ஆசைப்பட்ட க்ருஷ்ணாவதாரத்தையும், அதில் அபதாநங்களையும் அநுபவிக்க ஆசைப்பட்டுப் பேசின இப் பாசுரங்களிலேயும் ப்ரகாஸிக்குமென்கிறார்-
124-இவர்கள் தேடி நிற்கப் பொய்கை முதுமணல் முற்றம் முல்லைப் பந்தல் வாரிச் சிதைத்துப் பறித்துக் கிழித்து மச்சொடு மாளிகை அவ்வவ்விடம் புக்கு கோயின்மை குறும்பு செய்து அல்லல் விளைத்துக் கவரும் உகக்கு நல்லவர் மூழுசி ஆவரென்னும் தேன் மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும் நகர ஸ்த்ரீகள் நரகனைத் தொலைத்துக் கவர்ந்த பதினாறு பல்லாயிரம் எண்ணிரந்தார் பாவம் கடல் ஞாலம் மின்னிடை மல்லிகை வேய்மரு பேய்முலை முனிந்து மற்பொரு விறற்கஞ்சனை மங்கநூற்ற வாயும் தீர்ப்பாரென்னுமவற்நிலே தோன்றும்.
அவ்வளவே யன்றிக்கே, ப்ரதாந மஹிஷிகளான இவர்களையும் உபேக்ஷித்து வந்து மேல் விழும்படியான வைலக்ஷண்யத்தை உடையரான திருவாய்ப்பாடியில் பெண்களுடைய பாவமும், அவர்களையும் தங்கள் பேச்சழகாலே மறப்பிக்கும் படியான ஸ்ரீமதுரையில் பெண்களுடைய பாவமும், நரகவத,அநந்தரம் பரிக்ரஹித்த “கோப ஸ்த்ரீ ஸஹஸ்ராணி” (வி. பு. 5 – 31 – 18) என்கிற ஸ்ரீமத் த்வாரகையில் பதினாறாயிரம் தேவிமார்களுடைய பாவமும் இவர்க்குண்டான ஆகாரம் இவர் பேச்சிலே தோன்றும் என்கிறார் (இவர்கள் தேடிநிற்க என்றுதொடங்கி)–“தேடித் திருமாமகள் மண்மகள் நிற்ப”? (திருமொழி 10 – 8 – 9) என்று இப்படி ப்ரதாந மஹிஷிகளான இவர்களும் தேடி நிற்கும்படி இவர்களை உபேஷித்து வந்து, (பொய்கை முது மணல் முல்லைப் பந்தல் முற்றம் மச்சொடு மாளிகை அவ்வவ்விடம் புக்கு வாரிச் சிதைத்துப் பறித்துக் கிழித்துக் கோயின்மை குறும்புசெய்து அல்லல் விளைத்துக் கவரூமூகக்கும் நல்லவர்) (பொய்கை) !”இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்”: (நா. தி. 3 2), “மூத்தவை காண முதுமணற்குன்றேறி”” (பெரியா. தி. 1 – 10 – 8) , “முல்லையின் பந்தர் நீழல் மன்னி அவளைப் புணரப் புக்கு”” (பெருமா.தி. 6 – 8), “முற்றத்தூடு புகுந்து நின்முகங்காட்டிப் புன்முறுவல் செய்து”? (நா. தி. 2 – 9), “மச்சொடு மாளிகையேறி’” (பெரியா. தி. 2 – 7 – 3), “அவ்வவ்விடம் புக்கவ்வாயர் பெண்டிர்க் கணுக்கனாய்”’ (பெரியா. தி. 3 – 2 – 5) என்று அவர்கள் ஜலக்ரீடை பண்ணுமிடம், அவர்கள் விளையாடுமிடம், அவ்வோவிடங்களிலே புக்கு-“துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும்”” (திருமொழி 3 – 8 – 8), ““பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறி” (திருமொழி 10 – 7 – 5) என்றும் அவர்களுடைய துகிலை வாரியும், அவர்களுடைய லீலா ஸ்தாநங்களை அழித்தும், அவர்களுடைய வீலோபகரணங்களைப் பற்றிக் கொண்டும், ‘“கோயின்மை செய்து கன்மமொன்றில்லை” (திருவா. 6 – 2 – 6), “குறும்பு செய்வானோர் மகனைப்பெற்ற”? (நா. தி. 12 – 3), ‘“கொள்ளை கொள்ளிக் குறும்பனை”’ (நா. தி, 13 – 8) என்றும், அராஜகமாய், ஸ்வதந்த்ரமான செயலைச் செய்து, “அல்லல் விளைத்த பெருமான்?” (தா. தி. 13 – 10) என்கிறபடியே ஆரவாரத்தை விளைத்து-“முன்கைவளை கவர்ந்தாய்”” (திருமொழி 10 – 9 – 2), “நீ உகக்கு நல்லவரொடுமுழிதந்து “‘ (திருவா. 6 – 2 – 6) என்றும் அவன் இப்படி மேல் விழ வேண்டும்படியான வைலக்ஷ்ண்யத்தை யுடைய திருவாய்ப்பாடியில் பெண்களுடைய பாவம். (கடல் ஞாலம் மின்னிடை மல்லிகை வேய் மரு பேய் முலை முன்னின்று) என்று – “துஷ்ட காளிய திஷ்டராத்ர க்ருஷ்ணோஹமிதி சாபரா”’ (வி. பு. 5 – 13 – 27), “க்ருஷ்ணோஹமேஷ லலிதம் வ்ரஜாம்யாலோக்ய தாம் கதிர” என்று அவர்கள் அநுகரித்தாப் போலே ““கடல் ஞாலம் செய்தேனும் யானே யென்னும்”” (திருவா. 5 – 6 – 1) என்று இவரும் அநுகரிக்கையாலும், *மின்னிடை மடவாரிலே அவனோடே ஊடுகையாலும், *மல்லிகை கமழ் தென்றலிலே பகல் போதெல்லாம் பசுமேய்க்கப் போன க்ருஷ்ணனைப் பசுக்களின் முற்கொருந்தில் காணாதே பிற்கழையிலே வருமளவில் பற்றாமல் ஒரு ஸந்த்யையில் திருவாய்ப்பாடியில் பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களுடைய ஆற்றாமையை இவரொருவரு முடையராய்க் கொண்டு பேசுகையாலும், *வேய்மருதோளிணையில் ராத்ரியெல்லாம் க்ருஷ்ண ஸம்ஸ்லேஷம் ப்ரவ்ருத்தமாய் அவன் பசு மேய்க்கப் போகிற ப்ராதசகாலம் வந்தவாறே அவன் அணைத்துக் கொண்டிருக்கச் செய்தேயும், அவன் விஸ்லேஷித்தானாக அதிசங்கைபண்ணி அவனுடைய முகத்தைப் பார்த்துத் தம்முடைய ஆற்றாமையைப் பேசுகையாலும், *“பேய்முலை யுண்டு சகடம் பாய்ந்து” (திருவா. 5 – 3 – 8), “முனிந்து சகடமுதைத்து”” (திருவா. 7 – 3 – 5) என்கிற பாட்டுக்களிலே பூதநா சகட யமளார்ஜுநாதிகளை நிரஸித்த க்ருஷ்ணனை கிட்டுவதென்றோ என்றும், அப்படிப்பட்ட க்ருஷ்ணனுக்கு என்னுடைய ஸ்த்ரீத்வத்தைத் தோற்றேன் என்றும் சொல்லுகிற பேச்சுக்களிலே இவர்க்கு உண்டென்னுமாகாரம் தோன்றும்.
(முழுசியாவரென்னும் தேன்மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும் நகர ஸ்த்ரீகள் என்று) க்ருஷ்ணன் ஸ்ரீமாலாகார க்ருஹ்த்திலே திருமாலை சாத்தி, கூனி பக்கலிலே சாந்து சாத்தி, ராஜ மார்க்கத்தாலே எழுந்தருளி, குவலயாபீட நிரஸநம் பண்ணி நின்றருளின போது, ““முழுசி வண்டாடிய தண்டுழாய்”’ (திருமொழி 2 – 8 – 7), ““ஆவரிவை செய்தறிவார் (திருமொழி 3 – 3 – 7) என்கிற பாட்டுக்களில் சொல்லுகிறபடியே “ஸக்ய பஸ்யத க்ருஷ்ணஸ்ய முகமத்யருணே க்ஷணம் ! கஜயுத்த க்ருதாயாஸஸ் வேதாம்பு கணிகாசிதம்’” (வி. பு. 5 – 20 – 54) என்று ஒப்பனை யழகிலும், வடிவழகிலும், குவலயாபீட நிரஸநமாகிற சேஷ்டிதத்திலும் தோற்று, “மழறு தேன் மொழியார்கள்’” (திருவா. 6 – 2 – 8) என்று அந்யோந்யம் தங்களிலே பேசுகிற மழலைத் தேன் போலே இனிதான பேச்சுக்களினாலே ““மதுராம் ப்ராப்ய கோவிந்த கதம் கோகுலமேஷ்யதி ! நகர ஸ்த்ரீகலாலாபமது ஸ்ரோத்ரேண பாஸ்யதி” (வி. பு. 5 – 18 – 14) என்று கோகுலத்தில் பெண்கள் தானே பேசும்படி அவனை அந்த கோகுலத்தை மறக்கும்படி பண்ணும் ஸ்ரீமதுரையில் பெண்களுடைய பாவம்.
(மற்பொரு விறல் கஞ்சனை)”மற்பொரு தோளுடை – மாயப் பிரானுக்கு” (திருவா. 6 – ப – 10) இத்யாதி – சாணூர முஷ்டிக நிரஸநம் பண்ணின ஆஸ்சர்ய பூதனான க்ருஷ்ணனுககு அறிவை யுடையளான என்னுடைய பெண் பிள்ளை எல்லாத்தையும் இழந்தாள் என்றும், ““விறற் கஞ்சனை வஞ்சனை செய்தீரும் மைத்தஞ்சமென்றிவள் பட்டனவே”’ (திருவா. 2 4 – 8) என்று பெரு மிடுக்கனான கம்ஸனை நிரஸித்த உம்மைத் தஞ்சமென்று விஸ்வஸித்த இவளை நீர் இப்படிப் படுத்துவதே என்றும், சாணூர முஷ்டிகரையும் கம்ஸனையும் நிரஸித்து நின்ற க்ருஷ்ணனை ஆசைப்படுகையாலே இவர்க்கு உண்டென்னுமாகாரம் தோன்றும்.
(நரகனைத் தொலைத்துக் கவர்ந்த பதினாறு பல்லாயிரம் எண்ணிறந்தார் பாவம்) ‘நரகனைத் தொலைத்த கரதலத்த மதியின் கருத்தோ?” (திருமொழி 10 – 9 – 4), மன்னு நரகன் தன்னைச் சூழ் போகி வளைத்தெறிந்து கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்த கடல் வண்ணன்”? (பெரியா. தி. 4 – 3 – 4) என்றும், ‘“பதினாறாமாயிரவர் தேவிமார் பணிசெய்ய” (நா. தி. 7 – 9), “பல்லாயிரம் பெருந்தேவிமார்” (பெரியா. தி. 4- 1 – 6) என்று நரகாஸூரவத அநந்தரம் பரிக்ரஹித்த பதினாறாயிரம் தேவிமார் பாவமும். (மங்க நூற்ற வாயும் தீர்ப்பாரென்னுமவற்றிலே தோன்றும்) ““நூற்றுவரை அன்று மங்க நூற்ற” (திருவா. 7 – 3 – 10) இத்யாதி, – துர்யோதநாதிகள் மண்ணுண்ணும்படி மந்த்ரித்த க்ருஷ்ணன் என் நெஞ்சை அபஹரித்தான் என்றும், ‘“குரரி விலபஸி த்வம் வீத நித்ரா ந ஸேஷே ஸ்வபதி ஜகதி ராத்ர்யா மீஸ்வரக் ரஸ்த போதே, ! வயமிவ ஸகி, கச்சித் காட நிர்விண்ண சேதா நளிந நயந ஹாஸோதார லீலே க்ஷணேந ” (பாக,.10) இத்யாதிகளால் ஸ்ரீமத் த்வாரகையில் பெண்கள் க்ருஷ்ண விஷயத்திலே பேசினாப் போலே *வாயுந்திரையுகளிலே நாரை அன்றில் தொடக்கமானவற்றுக்கு தாவள்யாதி ஸ்வபாவங்கள் நியதம் என்றறியாதே அவையும் தம்மைப் போல் நோவு படுகிறனவாகக் கொண்டு தாம் நோவு படுகையாலும், *தீர்ப்பாரை யாமினியிலே ‘*தேர்ப்பாகனார்க்கிவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே ” (திருவா. 4 – 6 – 1) என்று அவனுடைய ஸாரத்ய வேஷத்தில் அகப்பட்டு இவள் நெஞ்சு கலங்கினாள் என்று தொடங்கி, ““’வண்டுவராபதி மன்னனை ஏத்துமின்” (திருவா. 4 – 6 10) என்று ஸ்ரீமத் த்வாரகைக்கு நிர்வாஹகனானவனை மங்களா ஸாஸதம் பண்ணவே இவர் வ்யாதி பரிஹ்ருதமாம் என்று தலைக் கட்டுகையாலே இவர்க்கு உண்டானமை தோன்றும்.
125–இரானெனில் ந ச வாகக் குழைத்தவன் பின் தொடர விருந்த வன் சிறையிலும் விதி,தன் புணை என்று ஜீவிதாதிகளால் குறைவின்றி மாயும் வகை விஷ ஸஸ்த்ரங்கள் தேடி வில் வலவா ஹா என்று இரக்கமெழாக் கொடுமைகள் ஸங்கித்து என்னையும் ஜீவந்தீம் என்று ஆள் விட்டுச் சுடரை யடைந்து அகலகில்லா முற்றுவமை பெருமகளோடே.
ஆகக் கீழ், ப்ரதாந மஹிஷிகளான மூவரோடும் மற்றும் பகவத் பரிக்ரஹ முடையாரோடும் ஆழ்வாருக்கு ஸாம்யமுண்டென்று சொல்லிற்றாய்த்து. இவர்களெல்லாரும் இவர்க்கு ஒரு புடைக்கு ஒப்பாய் ஸர்வதா ஸாம்யமுள்ளது ஜநக குல ஸுந்தரியான பெரிய பிராட்டியாரோடே என்கிறார் (இரானெனில் ந ச ஆக என்று தொடங்கி). ‘“மராமர மெய்த மாயவன் என்னுளிரானெனில் பின்னை யானொட்டுவேனோ ”‘ (திருவா. 1- 7- 6) என்றும், ““ந ச ஸீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ ! மூஹூரர்த்தமபி ஜீவாவோ ஜலாந் மத்ஸ்யா விவோத் த்ருதெள’* (ரா. ௮.) என்று சக்ரவர்த்தித் திருமகனைப் பிரியில் ஜலாதுத த்ருதமான மத்ஸ்யம் போலே முடியும்படியான பிராட்டியைப் போலே, இவரும் அவனைப் பிரியில் தாம் உளராகாதபடி “*இலங்கை செற்றாய் உன்னை என்னுள்ளே குழைத்த வெம் மைந்தா”” (திருவா. 2 – 6 – 9) என்று இவரோடு ஏக தத்த்வ மென்னலாம்படி ஸம்ஸ்லேஷித்த சக்ரவர்த்தித் திருமகன் லங்கா த்வாரத்தளவும் அவளைத் தேடிப் பின் தொடர்ந்தாப் போலே *““எதிர் சூழல் புக்கு’ (திருவா. 2 – 7 – 6) என்று இவர் பிறந்த ஜந்மங்கள் தோறும் தானும் பின் தொடரும்படி அவள் ராவண பவநத்திலே சிறை யிருந்தாப் போலே இவரும் “வன்சிறையில் அவன் வைக்கில்’” (திருவா. 1 – 4 – 1) என்று ஸம்ஸாரத்திலே சிறையிருந்த விடத்தில் ப்ரதிகூலனான ராவணனுக்கு “‘விதிதஸ்ஸ ஹி தர்மஜ்ஞஸ் சரணாகத வத்ஸல:। தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சஸி”’ (ரா. ஸு. 21 – 20) என்று ஹிதம் சொன்னாப் போலே இவரும் ப்ரதிகூலரான ஸம்ஸாரிகளுக்கு புணைவன் பிறவிக் கடல் நீந்துவார்க்கே’‘ (திருவா. 2 – 8 – 1) என்று ஹிதமருளிச் செய்கையாலும்.(ஜீவிதாதிகளால் குறைவின்றி)“ந ஹி மே ஜீவிதே நார்த்தோ நை வார்த்தைர் ந ச பூஷணை??’ (ரா. ஸு.)என்று மஹா ரதரான சக்ரவர்த்தித் திருமகனை யொழிய ராக்ஷஸிகள் நடுவே இருக்கிற எனக்கு என் ஆத்மாத்மீயங்களால் என்ன ப்ரயோஜநம் உண்டென்று பிராட்டி அவற்றை உபேக்ஷித்தாப் போலே ”மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே”” (திருவா. 4 – 8 – 1) என்று தொடங்கி, ”உயிரினால் குறைவிலமே””, (திருவா. 4 – 8- 10), “உடம்பினால் குறைவிலமே”‘ (திருவா, 4 – 8 – 9 9) என்று இவரும், அவனுக்குறுப்பல்லாத நானும் என்னுடைமையும் வேண்டா என்று ஆத்மாத்மீயங்களை உபேக்ஷிக்கையாலும். (மாயும் வகை விஷ ஸஸ்த்ரங்கள் தேடி) “மாயும் வகை யறியேன் வல் வினையேன்”? (திருவா-4 – 8 – 1) என்றும், ‘“விஷஸ்ய ததா ந ஹி மேஸ்தி கஸ்சித் ஈஸ்த்ரஸ்ய வா வேஸ்மநி ராக்ஷஸஸ்ய ”” (ரா.ஸு.) என்று உயிர்க் கொலையாக்கி வைத்த ராவண க்ருஹத்திலே நற் கொலையாக்குவ தித்தனை விஷம் தருவாரில்லையோ? விஷம் போலே நின்று கொல்லுகை யன்றிக்கே அப்போதே முடிப்பதொரு ஸஸ்த்ரம் தருவாரில்லையோ? என்று பிராட்டி முடியும் வகை தேடினாப் போலே இவரும் மாயும் வகை தேடுகையாலும் (வில் வலவா ஹா என்று) ”புணரா நின்ற மரமேழன்றெய்த ஒரு வில் வலவாவவோ”? (திருவா. 6 – 10 – 5) என்று – “ஹா ராம ஹா லக்ஷ்மண ஹா ஸுமித்ரே ஹா ராம மாதஸ் ஸஹ மே ஜநந்யா । ஹா ராம ஸத்ய வ்ரத தீர்க்க, பாஹோ ஹா பூர்ண சந்த்ர ப்ரதிமாந வக்தர”’ (ரா.ஸு.), “ஹா ஜிவ லோகஸ்ய ஹித ப்ரியஸ்ய வத்யம் ந மாம் வேத்ஸி ஹி ராக்ஷஸாநாம்”” (ரா. ஸு.) என்று பிராட்டி பெருமாளுடைய சவ்ர்யாதிகளைச் சொல்லிக் கூப்பிட்டாப் போலே இவரும் கூப்பிடுகையாலும்.(இரக்கமெழாக் கொடுமைகள் ஸங்கித்து) ”க்,யாத: ப்ராஜ்ஞ க்ருதஜ்ஞஸ்ச ஸாநுக்ரோஸஸ் ச ராகவ? | ஸத் வ்ருத்தோ நிரதுக்ரோ ஸஸ்ஸங்கே மத் பாக்ய ஸங்ஷயாத்” (ரா.ஸு.]என்று பெருமாளை நிர்க்ருணாராக ஸங்கியா நின்றேன், என்னுடைய பாக்ய ஹாநியாலே என்று பிராட்டி அப்படி ஸங்கித்தாப்போலே, இவரும் ”இரக்கமெழீரிதற்கென்செய்கே ன்” (திருவா. 2 ௨4 – 3) என்றும், ‘“இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே?”? (திருவிரு. 36) என்றும், ”அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் ‘‘ (திருவா. 9 – 1 – 4) என்றும் சொல்லுகிறபடியே அவரை நிர்க்ருணராக ஸங்கிக்கையாலும், (என்னையும் ஜீவந்திமென்று ஆள்விட்டு) ”ஜீவந்திம் மாம் யதா ராமஸ் ஸம்பா வயதி கீரத்திமாந் | தத்த்வயா ஹநுமந் வாச்யோ வாசா தர்மமவாப்றுஹி’” (ரா.ஸு.) என்று தம்முடைய ரக்ஷ்ய வர்க்க,த்திலே நானுமொருத்தி உளேனாகப் பெருமாளுக்கு விண்ணப்பம் செய் என்று பிராட்டி ஆள்விட்டாப் போலே, இவரும் ‘“மாறில் போரரக்கன் மதிள் நீறெழச் செற்றுகந்த ஏறு சேவகனார்க் கென்னை யுமுளளென்மின்கள்’” (திருவா. 6 1 – 10) என்று ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்தவர்க்கு ஆர்த்தரிலே நானும் ஒரு ஆர்த்தை யுளேனாகச் சொல்லுங்கோள் என்று பிராட்டியைப் போலே சதுஷ்பாத்தா யிருப்ப தொன்றைத் தூதுவிடுகை யன்றிக்கே ஷட் பத,ங்களாய், பக்ஷ பாதத்தை உடையனவாய், ஸாகா ஸஞ்சாரிகளாய், மதுகர வ்ருத்திகளுமாய், அத ஏவ ஸாரக்ராஹிகளாயிருப்பார் பலரையும் தூது விடுகையாலும். (சுடரை யடைந்து) “ அநந்யா ராகவேணாம் பாஸ்கரேணே ப்ரபாயதா” (ரா.ஸ. 21 – 15) என்று பிராட்டி தன்னை அநந்யையாகப் பேசினாப் போலே, இவரும் “அரக்கியை மூக்கீர்ந்தாயை சுடரை – அடியே னடைந்தேன் முதல் முன்னமே”’ (திருவா. 2 – 3 -6) என்று தம்மை அநந்யார்ஹமாகப் பேசுகையாலும்.-(அகலகில்லா)’அகலகில்லலே னிறையுமென்றலர்மேல் மங்கை யுறை மார்பா”‘ (திருவா. 6 – 10 – 10) என்று பெரிய பிராட்டியார் அவனுடைய திருமார்வைப் பறறி அகல ஸக்தை யல்லே னென்னுமாப் போலே, “அடியேனுனபாத மகலகில்லேன்” (திருவா. 6 – 10 -9) என்று இவரும் அவன் திருவடிகளைப் பற்றி அகல ஸக்தனல்லேனென்கையாலும் முற்றுவமை *பெரு மகள் பேதை மங்கை தன்னோடே என்கிறார். அவள் மார்வைப் பற்றி அகலகில்லேனென்னும்; இவர் தாளைப் பற்றி அகலகில்லேனென்பர். இதுவே இருவர்க்கும் வாசி. ஆனாலும் அவளைப் பற்ற இவர்க்குக் கால் கூறு ஏற்றமுண்டிறே –
126-பிரியிவிலேனுக்கு இளங்கோவும் அக் குளத்தில் மீனிறே.
இனிமேல், மற்றும் பகவத் ப்ரத்யாஸத்தியை யுடையரான லக்ஷ்மண-பரத-ஸத்ருக்ந-தஸரத,-யஸோதா – ப்ரஹ்லாத-விபிஷண-மாருதி-அர்ஜுநன் என்கிற இவர்களோடு ஸாம்யமுண்டென்கிறார்.-(பிரியிலிலேனுக்கு) அவனைப் பிரியுமளவில் ‘‘நின்னலாலிலேன் காண்”” (திருவா. 2 – 3 – 7) என்று இவரைப் போலே ஸத்தை அழிகைக்கு (இளங்கோவும்) “*நேரிழையுமிளங்கோவும்’‘ (பெருமா.தி. 9 – 2) என்றும், “ந சாஹமபி ராகவ”’ (ரா.அ.53-31) என்று – பிராட்டியோ டொக்கத் தம்மை ஏக ப்ரக்ருதியாகச் சொன்ன இளைய பெருமாளும். (அக் குளத்தில் மீனிறே) கீழ் ப்ரஸ்துதமான ஜலாந் மத்ஸ்யமிறே.-இத்தால் அவனைப் பிரியில் தரியாமைக்குப் பிராட்டியும் இளைய பெருமாளும் இவருமொக்குமென்றபடி. இத்தால் இளைய பெருமாள் ஸாம்யம்-
127-அழுந்தொழும் ஸ்நேஹ பாஷ்பாஞ்ஜலியோடே ருசிர-ஸாநுக்களில் கூவிக் கொள்ளும் பிரியா வடிமைக்குச் சரணே சரண் என்று வாளும் வில்லுங் கொண்டு பந்துவும் பிதாவுமவரே என்கையும், அன்னை யென் செய்யிலென் ராஜ்யமும் யானே என்று பெருஞ் செல்வமும் இச்சியாமல் வேண்டிச் சென்று திருவடியே சுமந்து விரைந்து வருமளவும் கண்ண நீர் பங்கமாக நிலந் துழாவிக் குடிக் கிடந்த கையறவும் கோதிலடிமை உறுமோ என்பித்த புலங்கொள் நித்ய ஸத்ரு விசிந்தநமுமான ப்ராதாக்கள், அப்பொழுதைக்கப் பொழுது போனாய் என்னும் மாதா பிதாக்கள், செந்தீ தண் காற்று இள நாகம் முதலான பகையறச் சிந்தை செய்து எங்குமுளனென்னும் பள்ளிப் பிள்ளை, முற்றவிட்டு மற்றிலேனென்னும் தர்மாத்மா வாளி பொழிந்த நிர்குண விஸ்வாத்மா உள்ளே உறைய ஊக வீர சரிதம் கற்பார் பாவம் மற்றிலேன் என்னும் ராம தாஸன் பல்வகையும் கண்டு வெண் சங்கேந்தின ரூபபரனான ஸ்வேதன் முதலானார் படிகளும் காணலாம்.
அழுந் தொழும் ஸ்நேஹ பாஷ்பாஞ்ஜலியோடே) ”பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்த(ரா. பா, 18 – 27) என்றும், ”பாஷ்பபர்யாகுலமுக,?”‘ (ரா. ௮. 33 – 1) என்றும், ‘*ப்ரஹ்வாஞ்ஜலிபுடம் ஸ்திதம்” (ரா. ௮. 16 – 26) என்றும் இளைய பெருமாள் பெருமாளைப் பிரியில் தரியாத ஸ்நேஹத்தாலே கண்ணும் கண்ண நீருமாய், அஞ்ஜலி ஹஸ்தராய்க் கொண்டு ‘‘குருஷ்வ மாமநுசரம் வைதர்ம்யம் நேஹ வித்யதே’‘ (ரா. ௮. 31 – 24) என்றும், ““ஸ்வயந்து ருசிரே தேஸே கரியதாமிதி மாம் வத,” (ரா. ஆ, 785 – 7) என்றும், “பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே ! அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதஸ்ச தே” (ரா. அ. 31 – 27) என்றும் சொல்கிறபடியே என்னை அநு சரனாகப் பண்ண வேணுமென்று ப்ரார்த்தித்துச் செய்கிற அடிமைக்கு உபாயமாக “’ஸ ப்ராதும் சரணெள காடம் நிபீட்ய ரகுநந்தநச । ஸீதாமுவாசாதியஸா ராகவஞ்ச மஹா வ்ரதம்’ ் (ரா. அ. 31 – 2) என்று நாச்சியார் புருஷகாரமாகத் திருவடிகளைக் கட்டிக் கொண்டு ”அக்ரத? ப்ரயயெள ராமஸ் ஸீதா மத்யே ஸுமத்யமா। ப்ருஷ்டதஸ்ச தநுஷ்பாணி: லக்ஷ்மணோநுஜகாம ஹூ”? (ரா. ஆ. 11 – 1) என்று ஸாயுதராய்க் கொண்டு அவரைப் பின் சென்று “‘ப்ராதா பர்த்தா ச பந்து,ர்ீச பிதா ச மம ராகவ?”‘ (ரா.௮.58-34) என்று பெருமாளை எல்லா உறவுமாகப் பற்றினாப் போலே,
இவருமப்படியே (அழுந் தொழுமித்யாதி, – பிரியா வடிமைக்கு) ”அழுந்தொழும்”் (திருவா. 7 – 2- 8) என்று அழுவது தொழுவதாய், “திருவேங்கடத்தெழில்கொள்சோதி எந்தை தந்தை தந்தைக்கு – ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும் நாம்”’ (திருவா, 3 – 3 – 1) என்று திருமலையிலே நின்றருளின பரம ஸ்வாமிக்கு ஸர்வதேஸ ஸர்வ கால-ஸர்வாவஸ்தோசிதமான ஸர்வஸேஷ வ்ருத்திகளையும், “முகப்பே கூவிப் பணி கொள்ளாய்‘” (திருவா, 8 – 8 – 7) என்கிறபடியே ஏவி அடிமை கொள்ள வேணுமென்று ப்ரார்த்தித்து, ““பிரியா வடிமை என்னைக் கொண்டாய்?! (திருவா. 5 – 10 – 11) என்று விச்சேதியாதபடியான கைங்கர்யத்துக்கு (சரணே சரணென்று) ““நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் தமக்கு ‘” (திருவா. )என்று அவன் திருவடிகளை உபாயமென்று அத்யவஸித்து“வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை’‘ (திருவா. 8 – 3 ஃ- 3) என்று அவற்றைக் கொண்டு தாம் பின்னே திரிய ஆசைப்பட்டு. (பந்துவும் பிதாவும் அவரே என்கையும்) ““சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே இனியாவார்” (திருவா. 5 – 1 – 8) என்று ஸர்வேஸ்வரனே எல்லா உறவு முறையாகப் பற்றுகையாலும்
(அன்னை என் செய்யிலென் இத்யாதி.) ஸ்ரீபரதாழ்வான் பெருமாளுடைய திருவபிஷேகத்தைக் கைகேயி விலக்கின சீற்றத்தாலே “*ஹந்யாமஹமிமாம் பாபாம் கைகேயீம் துஷ்டசாரிணீம்” (ரா. அ. 78 – 22) என்கிறபடியே கைகேயியைச் சீறி உபேக்ஷித்து “’ராஜ்யஞ்சாஹஞ்ச ராமஸ்ய’” (ரா. அ. 82 – 12) என்று – ராஜ்யமும் நானும் பெருமாளுக்கு ஸேஷமென்றும், “ம்ருதே து தஸ்மிந் பரதோ வஸிஷ்ட ப்ரமுகைர் த்விஜைச ! நியுஜ்யமாநோ ராஜ்யாய நைச்சத்,ராஜ்யம் மஹாபலா ”? (ரா. படா. 1 – 33) என்றும் வஸிஷ்டாதி,புரோஹிதர் ராஜாவாக வேணுமென்று அபேக்ஷிக்க, ““இக்ஷ்வாகூணாமியம் பூமிஸ் ஸ ஸைல வந காநநா ।”” (ரா. கி. 18 – 6) என்கிற மஹதைஸ்வர்யத்தை இச்சியாதே, ‘அயாசத்,ப்ராதரம் ராமமார்ய பாவ புரஸ்க்ருதச” (ரா. பதா, 1 – 35) என்று பெளர ஜநங்களோடே பெருமாள் திருவடிகளிலே சென்று மீண்டெழுந்தருளவேணும் என்றபேக்ஷிக்க, ““பாதுகே சாஸ்ய ராஜ்யாய ந்யாஸம் தத்த்வா புந புந” (ரா. பா 1 -37) என்று அவரும் அப்படிச் செய்யாதே திருவடி நிலையைக் கொடுத்துவிட.-““பாதுகே தே புரஸ்க்ருத்ய’‘ (ரா. யு. 124 – 4) என்று அத் திருவடி நிலையை முன்னிட்டுக் கொண்டிருந்து, ““பமிரஸா யாசதோ யஸ்ய வசநம் ந க்ருதம் மயா”‘ (ரா. யு. 121 – 19) என்கிற இழவு திருவுள்ளத்திலே கிடக்கையாலே ““ந மே ஸ்நாநம் பஹுமதம் வஸ்த்ராண்யாபரணாநி ச (தம் விநா கைகயீ புத்ரம் பரதம் தர்ம சாரிணம்”’ (ரா. யு. 121 6) என்று – நாம் பிள்ளை பரதனை யொழியக் குளித்தல் ஒப்பித்தல் செய்யக் கடவோமல்லோமென்று பெருமாள் த்வரையோடே மீண்டு வருமளவும் ”பங்கதிக்தஸ்து ஜடில?”’ (ரா. யு. 124 -4 ) என்று கண்ணீராலுண்டான சேற்றிலே தரைக் கிடை கிடந்து இக்ஷ்வாகு குல மர்யாதை தப்பாமலிருந்து, “க்ருதம் தஸ குணம் மயா” (ரா. யு. 127 – 56) என்று பெருமாளுடைய திவ்யைஸ்வர்யத்தை ஒன்று பத்தாகப் பெருக்கி, ”ஸ காம மநவாப்யைவ”’ (ரா.ப.. 1 – 38) என்று தாம் ஆசைப்பட்ட பொருள் கைப்படாத இழவோடே இருந்தாப் போலே-இவரும் அப்படியே “அன்னை என் செய்யிலென்”’ (திருவா. 5 – 3 – 6) என்று – தாயார் முடியிலென்? பிழைக்கிலென்? என்று உபேக்ஷித்து (ராஜ்யமும் யானே என்று) யானே நீ என்னுடைமையும் நீயே”” (திருவா. 2 – 9 – 9) என்று ஆத்மாத்மீயங்கள் அவனுக்கு சேஷமென்று. (பெருஞ்செல்வமும் இச்சியாமல்) ““கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பு?” (திருவா, 4 – 9 – 4) என்று ஐஸ்வர்யத்தை அக்நி ஸமமாகக் கண்டு, “’ஜங்கருவிகண்ட இன்பம் – ஓழிந்தேன் ”” (திருவா. 4- 9 – 10) என்கிறபடியே உபேஷித்து. (வேங்கடவாணனை வேண்டிச் சென்று) அவனை அநுபவிக்க வேணுமென்று வேண்டிச் சென்று இவர் அபேக்ஷித்தபடி கிடையாமையாலே. (திருவடியே சுமந்து) “திருவடியே சுமந்துழலக் கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை’” (திருவா. 4 – 9 – 9) என்று அவன் திருவடிகளை ஸிரஸா வஹிப்பிக்க ஸிரஸா வஹித்து. (விரைந்து வருமளவும்) வீடு திருத்துவான்போய் விண்ணுலகம் தருவானாய் விரைந்து வருமளவும். (கண்ணநீர் பங்கமாக்கி) *“கண்ணநீர் கைகளாலிறைக்கும்”’ (திருவா. 7 – 2 – 1) என்று கண்ணநீர் வெள்ளமிட இருந்து. (நிலந்துழாவி) ”இருநிலம் கைதுழாவிருக்கும்”” (திருவா. 7 – 2 – 1) என்று ஆற்றாமையாலே நிலம் துழாவி (குடிக்கிடந்த) ““குடிக்கிடந்தாக்கம் செய்து” (திருவா. 9 – 2 – 2) என்கிறபடியே ப்ரபந்ந குலத்தில் செய்து போருகிற மர்யாதையைத் தப்பாமலிருந்து. (கையறவும்) “காமுற்ற கையறவோடு”” (திருவா. 2 – 1 – 3) என்று ஆசைப்பட்ட பொருள் கைபுகுராத இழவோடே இருக்கையாலும். (கோதிலடிமை உறுமோ என்பித்த) ஸ்ரீஸத்ருக்நாழ்வான் “கச்சதா மாதுல குலம் பரதேந ததா அநக,சத்ருக், நோ நித்ய சத்ருக்நோ நீத: ப்ரீதி புரஸ்க்ருத”” (ரா. அ. 1 – 1) என்று – ““அநக’, “*நித்ய சத்ருக்ந'” என்று ஸ்ரீபரதாழ்வானுடைய பாவநத்வ போக்யத்வங்களிலே கால் தாழ்கையாலே “பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்”‘ (ரா. அ. 3 – 29) என்று ஸஜாதீயரையும் ஈடுபடுத்தவற்றான பெருமாளுடைய விக்ரஹத்திலே துவக்குண்ணாதே, அந்த வடிவழகுதான் பரதாநுவ்ருத்தியில் போகாதபடி துவக்க வற்றாகையாலே நித்ய ஸத்ருவாக நினைக்கிறாப் போலே.
இவரும் ““கோதிலடிமை”’ (திருவா. 8 – 10 – 9) என்று சொல்லப்படுகிற பாகவத ஸேஷ்த்வ ரஸம் (உறுமோ என்பித்த) ““அவனடியார் சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரிய – அதுவன்றி உலக மூன்றுமுடன் நிறைய சிறுமாமேனி நிமிர்த்த என் செந்தாமரைக் கண் திருக்குறளன் – நறுமா விரை நாண் மலரடிக்கீழ்ப் புகுதல் – பாவி யேனுக்குறுமோ’” (திருவா. 8 – 10 – 3) என்னும்படி பண்ண அந்த பாகவத ஸேஷத்வ ரஸத்தாலே. (புலங்கொள் நித்ய சத்ரு விசிந்தநமும்) ““புலங்கொள் வடிவு’” (திருவா. 8 – 10 – 4) என்று ஸர்வேந்த்ரி யாபஹார க்ஷமமான வடிவழகையும் உபேக்ஷிக்கையாலும். (ஆன ப்ராதாக்கள்) இப்படியிருந்துள்ள இளையபெருமான், ஸ்ரீபரதாழ்வான், ஸ்ரீஸத்ருக்நாழ்வான் என்கிற ப்ராதாக்கள்.
(அப்பொழுதைக்கப்பொழுது போனாய் என்னும் மாதா பிதாக்கள்) “ந ததர்ப்ப ஸமாயாந்தம்”” (ரா. ௮. 3 – 30) என்று பெருமாளை ஸர்வ காலமும் அநுபவியா நிற்கச் செய்தேயும் பர்யாப்தனாகாத சக்ரவர்த்தியைப் போலே இவரும் ”அப்பொமுதைக்கப்பொழுதென் ஆராவமுதம்” (திருவா. 2 – 5 – 4) என்று ஸர்வ காலமும் அநுபவியா நிற்கச் செய்தேயும் பர்யாப்தி பிறவாத அபிநிவேஸத்தை உடையராகையாலும், “போனாய் மா மருதின் நடுவே”’ (திருவா. 5 – 1 – 2) என்று யமளார்ஜநங்களின் நடுவே போன போது யஸோதைப் பிராட்டி வயிறெரிந்தாப் போலே இவரும் அதீத காலமாயிருக்கச் செய்தேயும் ஸம காலத்திற் போலே வயிறு பிடிக்கையாலும்.
(செந்தீ தண்காற்று இத்யாதி, ) ““நாக்நிர்தஹதி தைவாயம் மஸ்தரைஸ்சிந்நோ மஹோரகை.। க்ஷயம் நீதோ ந வாதேந ந விஷேண நக்ருதயயா”‘ (வி. பு. 1 – 19-59), “ஸத்வாஸக்தமதி: கருஷ்ணே தஸ்ய மாநோ மஹோரகை, ! ந விவேதாத்மநோ காத்ரம் தத்ஸ்ம்ருத் யாஹ்லாத,ஸம்ஸ்தித?’” (வி. பு. 1 – 17 – 39) என்று அக்நி முதலான பாதக பதார்த்தங்களும் தன்னை பாதியாதபடி **ஸர்வ பூதாத்மகே தாத ஜகந்நாதே, ஜகந்மயே । பரமாத்மநி கோவிந்தே, மித்ராமித்ரகதா குத?” (வி. பு. 1 – 19 – 37) என்று ஸர்வத்தினுடையவும் பகவதாத்மகத்வாநு ஸந்தாநத்தாலே ஸத்ரு மித்ர விபாகமற ஸர்வமும் தனக்கு அநுகூலமாக அநுஸந்தித்து, “எங்குமுளன் கண்ணன்” (திருவா. 2 8 – 9) என்கிறபடியே ‘“உர்வ்யாமஸ்தி”” என்று தொடங்கி ““ஸர்வத்ராஸ்தி’‘ என்று பிறர்க்கு உபதேஸிக்கவும் வல்லனாய், “’பள்ளியிலோதி வந்ததன் சிறுவன்”, “பிள்ளையைச் சீறி” (திருமொழி 2 – 8 -8) என்று சொல்லப்படுகிற பள்ளிப் பிள்ளையான ஸ்ரீப்ரஹ்லாத ஆழ்வானைப் போலே.
இவரும் (செந்தீ தண்காற்று இத்யாதி, பகையறச்சிந்தைசெய்து) ”அறியும் செந்தீயைத் தமுவி அச்சுதனென்னும் மெய்வேவாள் எறியும் தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தனென்னும்”” (திருவா. 4 – சீ – 3), ““போமிள நாகத்தின் பின் போய் அவன் கிடக்கை ஈதென்னும்’” (திருவா. 4 – 4- 5) என்றும் அப்படியே அக்நி முதலான பாதக பதார்த்தங்களும் பகவதாத்மகத்வாநுஸந்தாநத்தாலே அநுகூலமானபடி, “என் முன்னைக் கோளரியே – உன்னைச் சிந்தை செய்துசெய்து – என் முன்னைத் தீவினைகள் முழுவேரரிந்தனன் – முடியாததென் எனக்கேலினி”’ (திருவா. 2 – 6 – 6) என்று அதுஸந்தித்து, “’கரந்தசிலிடந்தொறுமிடந்திகழ்பொருள் தொறும் கரந்தெங்கும் பரந்துளன்”’ (திருவா. 1 – 1 – 10) என்று அவனுடைய ஸர்வகதத்வத்தை அருளிச் செய்கையாலும் (முற்றவிட்டும் மற்றிலேன் என்னும் தூர்மாத்மா) ‘பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச | பவத் கதம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸுகாநி வை”’ (ரா. யு. 19 – 5), “த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ம்ச ராகவம் ஸரணம் ௧த ச'” (ரா. யு. 17 – 16) என்றும் லங்கையோடே கூட புத்ர தாராதிகளான ஸர்வத்தையும் விட்டு எல்லாம் சக்ரவர்த்தித் திருமகனாகப் பற்றின ‘“விபீஷணஸ்து தர்மாத்மாந து ராக்ஷஸ சேஷ்டித?’”” (ரா. ஆ. 17 24) என்ற, “ராமோ விக்,ரஹவாந் தர்ம?” (ரா. ஆ. 37 -13) என்று தர்ம ஸ்வரூபமான சக்ரவர்த்தித் திருமகனைத் தனக்கு தரரகமாக உடையனாகையாலே தர்மாத்மா என்று சொல்லப்படுகிற ஸ்ரீவிபீஷணப் பெருமாளைப் போலே இவரும். (முற்றவிட்டு) “பாதமடைவதன்பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு” (திருவா. 8 – 2 – 11) என்று ஸாம்ஸாரிகமான ஸகல ஸங்கத்தையும் ஸவாஸநமாக விட்டு. (மற்றிலேன் என்று) தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே”’ (திருவா. 3 – 6 – 8) என்று சக்ரவர்த்தித் திருமகனையே தஞ்சமாகப் பற்றுகையாலும்.
(வாளிபொழிந்த இத்யாதி, ) “நிர்குண பரமாத்மாஸெள தேஹம் தே வ்யாப்ய திஷ்ட,தி”’ (பா. ஆ. 147 – 8) என்று – ஏறிட்ட நாணை இறங்கிட்ட சக்ரவர்த்தித் திருமகனைத் தனக்குள்ளே உடையனாய், “*ஸோத்ரைவ ஹந்த ஹநுமாந் பரமாம் விமுக்திம் புத்த்யா விதூய சரிதம் தவ ஸேவதேஸெள”’ (அதிமாநு. 32) என்று அந்த சக்ரவர்த்தித் திருமகனுடைய வீரசரிதத்தை போக்யமாக உடையனாய், “ஸ்நேஹோ மே பரமோ ராஜம் ஸ்த்வயி நித்யம் ப்ரதிஷ்டித | பக்திஸ் ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி” (ரா.௨.40-16) என்று சக்ரவர்த்தித் திருமகனுடைய வீர சரிதத்தை போக்,யமாக உடையனான திருவடியைப் போலே.
இவரும் (கற்பார் பாவம் மற்றிலேன்) ““கற்பாரிராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ”’ (திருவா. 7 – 5 – 1) என்று ப்ரிய ஹிதங்களிலொன்றைக் கற்குமவர்களைப் பற்ற உன்னைக் கற்குமவர்கள் சக்ரவர்த்தித் திருமகனை யொழியப் பரத்வாதிகளையும், அவதாராந்தரங்களையும் கற்பரோ என்று தமக்கு இவ்விஷயத்திலுண்டான ப்ராவண்யத்தாலே “சிந்தை மற்றொன்றின் திறத்ததல்லா’” (திருவா. 7 – 11 – 10) என்று பரத்வத்தின் பேருங்கூட அஸஹ்யமாம்படி “தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே”’ (திருவா.3 – 6 – 8) என்று அந்த சக்ரவர்த்தித் திருமகனையே தஞ்சமாகப் பற்றுகையாலும்.
(பல்வகையுங்கண்டு வெண் சங்கேந்தின ரூபபரனான ஸ்வேதன்) *“பண்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிபேஷஸங்காந் ! ப்ரஹ்மாணமீஸம் கமலாஸநஸ்த ம்ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச தீப்தாந்”” (கீதை 11 – 15) என்று விஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரித்த அநந்தரம் தன்னால் அமைத்தநுபவிக்க வொண்ணாமையாலே *’க்ருதாஞ்ஜலிர்வேபமாநச கிரீடீ”” (கீதை 11 – 35) என்று பீ.தியாலே நடுங்கி அஞ்ஜலி ஹஸ்தனாய்க்கொண்டு ““கிரீடிநம் கதிநம் சக்ர ஹஸ்தமிச்சாமி த்வாம் த்ரஷ்டு மஹம் ததைவ । தேநைவ ரூபேண சதுர்புஜேந ஸஹஸ்ர பாஹோ பவ விஸ்வமூர்த்தே”’ (கீதை 11 – 46) என்று ஸங்க சக்ர கதா தரமாய் அஸாதாரணமான உன்னுடைய விக்ரஹத்தைக் காட்ட வேணுமென்று அவ்வடிவிலே தத் பரனாய் அபேக்ஷித்த அர்ஜுநனைப்போலே.
இவரும் “நல்குரவும்” (திருவா. 6 – 3 – 1) என்று தொடங்கி “’பல்வகையும் பரந்த பெருமானை – திருவிண்ணகர்க் கண்டேன்’” என்று விருத்த விபூதி யுக்தானானவனைக் கண்டு. (வெண் சங்கேந்தின) “நீராய் நிலனாய்”’ (திருவா. 6 – 9 – 1) என்று தொடங்கி, *“சிவனாயயனானாய்” என்று கார்ய காரணங்களிரண்டையும் ஸரீரமாகக் கொண்டு நீ ஜகச் சரீரனா யிருந்தாயே யாகிலும், அத்தால் நான் பெற்றது “விபூதி என்னதுமல்ல, பிறரதுமல்ல; உன்னதே” என்கிற ப்ரதிபத்தி யொழிய எனக்கு-அநுபாவ்யமாகிறதில்லை. ஆனபின்பு எனக்கு அநுபாவ்யமாம்படி “கூராராழிவெண்சங்கேந்தி – வாராய்”’ (திருவா. ‘ 6 – 9 – 1) என்று சங்க,சக்ர கதா தரனான உன்னுடைய அஸாதரண விக்ரஹத்தோடே வரவேணுமென்று அபேக்ஷிக்கையாலும்,-இப்படி இளையபெருமாள் முதலானவர்களெல்லாரோடும் ஸாம்யம் சொல்லிற்று.
128-குழவில் நெஞ்சும் அருகவில் சுவையுமான இவர் அவர்களளவல்லர்.
இனிமேல் இவர்களெல்லார்க்கும் இவரோடு ஏகதா ஸாம்யமல்லது ஸர்வதா ஸாம்யமில்லை என்று அவர்களில் இவருக்குண்டான வ்யாவ்ருத்தியை அருளிச்செய்கிறார் (குழலில் நெஞ்சும் அருகலில் சுவையுமான இவர் அவர்களளவல்லரேன்று ). குழற்கோவலர் மடப்பாவையும்”’ (திருவிரு. 3) என்கிற பாட்டிற்படி மஹிஷீ த்ரயத்துக்கும் வல்லபனாய் பூஷணாயுத, விஸிஷ்டனாய்க் கொண்டு ஸர்வ ஸ்வாமியாய், கருடவாஹநனான ஸர்வேஸ்வர விஷயத்தில் அவகாஹித்த என்னுடைய நெஞ்சானது அவனுடைய பரத்வத்தைக் கண்டு மீளுமோ? போக்யதையையும், ஸெளலப்யத்தையும் கண்டு நிற்குமோ? என்னும்படியான நெஞ்சை யுடையராய், அத்தால் *அப்புள்ளின் பின் போன தனிநெஞ்சமே”’ (திருவிரு. 4) என்கையாலே இவருடைய திருவுள்ளம் ப்ரமாணாநுஸாரியாய்க்் கொண்டு ப்ரமாண ஸார ப்ரதிபாத்,யமான ஸ்வாராதத்வ ரக்ஷகத்வ- போக்யத்வங்களிலே கால் தாழ்ந்து மேன்மை முதலாக நீர்மை ஈறாக அவகாஹித்ததென்றபடி. ‘அருகவிலாய”’ (திருவா. 1 – 9- 3) என்கிற பாட்டிற்படி ஹேய ப்ரத்ய நீகனாய், கல்யாண குணங்களை யுடையனாய், நித்ய ஸூரிகளுடைய ஸத்தாதிகளுக்கெல்லாம் காரண பூதனாய், விலக்ஷண விக்ரஹ யுக்தனாய், புண்டரீகாக்ஷனாய், கருடவாஹநனாய், ஸ்ரீய:பதியான ஸர்வேஸ்வரன், பிராட்டி நித்ய ஸூரிகளெல்லாரோடும் ஓரோ வகைகளாலே பரிமாறும் பரிமாற்றமெல்லாம் என்னொருவனோடே பரிமாறி அத்தால் வந்த ரஸத்தை எனக்குத்தந்து பின்னையும் விட க்ஷமனாகிறிலன் என்னும்படியான ரஸத்தை யுடையராய், இப்படிப்பட்ட சுவையையும் நெஞ்சையுமுடைய இவர், பகவத் விஷயத்தில் ப்ராவண்யம் காதசித்கமாய், புறம்பே பரந்த நெஞ்சை யுடையராய், விஷயாந்தரங்களிலும் ரஸஜ்ஞராய்ப் போருகிற இவர்களளவல்லர் என்கிறார். ஆக இதுக்குக் கீழ் பகவத் ப்ரத்யாஸந்நரான லக்ஷ்மணாதிகளோடு இவ்வாழ்வாருக்கு ஸாதர்ம்ய வைதர்ம்யங்களிரண்டும் சொல்லிற்றாய்த்து –
129-எற்றைக்கும் என்றது தோன்றப் பிறந்து ஒப்பித்து வீசிக் காப்பிட்டுக் காட்டுக்கு முற்பட்டு தூமம் சொல்லிக் கேட்டு ஸிஷ்யா -தாஸீ-பக்தைகளாய்ப் பாடி வருடி இன்று வந்தென்பாரையும் சென்றாலூரும் நிவாஸ-தாஸ-பேதம் கொள்வாரையும் தாம் அவனாக பாவிப்பர்.
இப்படி ஸாம்யம் சொல்லுகிற மாத்ரமே யன்றிக்கே தம்முடைய பாவத்தாலும் வ்ருத்திகளாலும் பிராட்டிமாரையும், திருவடி திருவநந்தாழ்வான் தொடக்கமானவர்களையும் தாம் அவர்களாக பாவிப்பர் என்கிறார் (எற்றைக்கும் என்று தொடங்கி). ‘“எற்றைக்குமேழேழ் பிறவிக்குமுன்றன்னோடுற்றோமேயாவோம்”‘ (திருப்பாவை 29) என்று அபேக்ஷித்தமை தோன்ற “‘ராகவத்வேபவத்ஸீதா ருக்மிணீ க்ருஷ்ணஜந்மநி । அந்யேஷு சாவதாரேஷு விஷ்ணோரேஷாநபாயிநீ”’ (வி.பு. 1 – 9 – 144) என்கிறபடியே அவன் வந்தவதரித்த அவதாரங்கள் தோறும் தாமுமவதரித்து. (ஒப்பித்தென்று) ‘திருவபிஷேக மஹோத்ஸவத்துக் கீடாம்படி பெருமாளை அலங்கரித்து. (வீசி) ‘“ஸ்திதயா பார்றவதஸ்சாபி வாலவ்யஜதஹஸ்தயா ! உபேதம் ஸுதயா பூயஸ்சித்ரயா ஸஸிநம் யதா” என்று திருவெண்சாமரம் பரிமாறி. (காப்பிட்டு) ““பதிஸம்மாநிதா ஸீதா பர்த்தாரமஸிதேக்ஷ்ணா । ஆத்வாரமநுவவ்ராஜ மங்களாந்யபிதத்யுஷீ”, ““பூர்வாம் திஸம் வஜ்ரதரோ தக்ஷிணாம் பாது தே யம? । வருண? பஸ்சி மாமாஸம் தநேசஸ்தூத்தராம் திஸம்”” என்று பெருமாள் வைலக்ஷண்யத்தைக் கண்டு இவ்வழகு தமக்குத் தொங்கப் புகுகிறதோ என்னும் வயிறுபிடியாலே மங்களாஸாஸநம் பண்ணி.
(காட்டுக்கு முற்பட்டு) “அக்ரதஸ்தே கமிஷ்யாமி ம்ருத்,நந்தீ குஸ கண்டகாந்” என்று பெருமாள் வநத்துக்கு எழுந்தருளுகிறபோது தான் முற்பட்டு. (தர்மம் சொல்லி) பெருமாள் தண்டகாரண்யத்திலே கையும் வில்லுமாய்க் கொண்டு நின்ற நிலையைக் கண்டு இவர் ஸாயுத,ராய் நிற்கில் ஆரேனையும் மேல்விழுந்து ப்ரமாத,ம் விளையக்கூடுமென்று பயப்பட்டு, பெருமாளைப் பார்த்து “நாயன்தே, தர்மமூலமாயிருக்கும் ஸர்வமும், ஆன பின்பு தேவரீர் ஆயுதத்தை வைத்து தாபஸ வேஷத்தோடே தர்மத்தை அநுஷ்டிக்க அமையும்” என்று தர்மோபதேஸ த்தையும் பண்ணினாள் பிராட்டி.
(தர்மம் கேட்டு) ஸ்ரீபூ,மிப்பிராட்டியார் ஸகலதர்மங்களையும் ஸ்ரீவராஹ நாயனார் பக்கவிலே கேட்டு. (ஸிஷ்யா தாஸீ பக்தைகளாய்) “அஹம் ஸிஷ்யா ச தாஸீ ச பக்தா ச த்வயி மாதவ | மத் க்ருதே ஸர்வபூதாதாம் லகூபாயம் வத ப்ரபோ ‘ என்று ஸிஷ்யா தாஸீ பக்தையாய் விஸேஷ தர்மத்தையும் கேட்டு.
(பாடி) “பாடிப் பறைகொண்டு”’ (திருப்பாவை 27) என்கிறபடியே க்ருஷ்ணனைப் பாடுவதும் செய்தாள். (வருடி) இவர்களிருவரும் ”ஒருமதிமுகத்து மங்கையரிருவரும் மலரன அங்கையின் முப்பொழுதும் வருட” (திருவெழு.), ”செங்கமலத்திருமகளும் புவியும் செம்பொன்திருவடியினிணை வருட ” (திருமொழி 7 – 8 – 1) என்று இருவரும் திருவடியை வருடினார்கள். ‘“இன்றுவந்தித்தனையும் அமுதுசெய்திடப்பெறில் நான் ஒன்று நூறாயிரமாகக் கொடுத்துப் பின்னுமாளும் செய்வன்”’ (நா. தி. 8 – 7) என்று தம்மைக்கொண்டு கைங்கர்யம் கொண்டால் அதுக்கு ப்ரத்யுபகாரமும் பண்ணுவர் என்கிறார்.
(சென்றால் ஊரும் நிவாஸ)திருவநந்தாழ்வான் ‘“சென்றால் குடையாம்’” (மூ.திருவ. 59) என்கிறபடியே ““நிவாஸ ஸய்யாஸந பாதுகாம் ஸூகோபதாந வர்ஷாத பவாரணாதி.பிர் ஸாரீரபேதை ஸ்தவ ஸேஷதாம் க,தைர்ய தோசிதம் ஸேஷ இதீரிதே ஜநை?”’ (ஸ்தோ. ர.40) என்று ஸர்வேஸ்வரனுடைய விநியோகத்துக்கு அநுகுணமாக ஸாரீர பேதங்களைக் கொண்டு அஸேஷ ஸேஷவ்ருத்திகளையும் பண்ணினார். “ஊரும் புட்கொடியுமக்தே” (திருவா. 10 – 2 -3) என்றும், ”தாஸஸ்ஸகா வாஹநமாஸநம் த்வஜோ யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய? । உபஸ்திதம் தேந புரோ கருத்மதா த்வதங்க்ரி ஸம்மர்த்த, கிணாங்கஸோபிநா’? (ஸ்தோ. ர.41) என்று பெரியதிருவடி நாயனார் வாஹந த்வஜாதி முகத்தாலே ஸகலவித, கைங்கர்யங்களையும் பண்ணினார். அப்படியே இவரும் ““பிறந்திட்டாள்”” (திருவா. 6 – 5- 10) என்கிறபடியே பிறந்து அந்த நாச்சிமார் மூவரையும் திருவநந்தாழ்வானையும், பெரியதிருவடியையும் தாமவர்களாகப் பாவிப்பர் என்கிறார்
130-எழுவதோருரு அழிக்க, செய்கிற வழுவிலா அடிமைக்குப் பாஞ்சாலி படுத்துமதும் கெளஸல்யாதநுவ்ருத்தியும் ஓப்பாக்குகை பரிசு.
இவர்க்கு இந்த நாச்சிமாருடைய பாவமும் இந்த விருத்தி பேதத்தில் அபி, நிவேஸமு முண்டானபடி எங்ஙனே என்னில், அப்ராக்ருதமான விக்ரஹம் பும்ஸ்த்வத்தை அழித்து ஸ்த்ரீத்வத்தை உண்டாக்கினதுக்கும், அநுரூப ப்ராப்தமான அவ் விஷயத்திலுண்டான வ்ருத்த்யபி நிவேஸத்துக்கும், ப்ராக்ருதமாய் ஓளபாகிகமா யிருக்கிற விஷயங்களிலுண்டானவற்றை த்ருஷ்டாந்தமாக்குகை ஸ்தூலம் என்கிறார் (எழுவதோருரு என்று தொடங்கி). (எழுவதோருரு அழிக்க) *’சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு (திருவா. 5 – 5 – 40) என்று தேஜஸ்தரங்கங்களுக்கு நடுவே உந்நேயமான ‘‘பும்ஸாம் த்ருஷி சித்தாபஹாரிணம்”” (ரா.௮. 3 – 29) என்று ஸஜாதீயரையும் விஜாதீயராக்க வற்றான அப்ராக்ருத விக்ரஹம் இவருடைய பும்ஸ்த்வத்தை அழிக்க, இவர்க்குண்டான ஸ்த்ரீத்வத்துக்கும். (வழுவிலா அடிமைக்கு) ஸ்வரூப ப்ராப்தமான அவ்விஷயத்தில் இவர்க்கு உண்டான வ்ருத்தி பேதங்களுக்கும் (பாஞ்சாலி படுத்துமதும்) ”பாஞ்சால்யா: பத்ம பத்ராக்ஷ்யா: ஸ்நாயந்த்யா ஜகநம் ௧நம் । யா ஸ்தரியோ த்ருஷ்டவத்யஸ்தா: பும்பாவம் மநஸா யயு: ” என்று ப்ராக்ருதமாய், பூதிகந்தியாய், மாம்ஸாஸ்ருகாதி மல மயமான த்ரெளபதி,யினுடைய ஸரீரம் ஸஜாதீயருடைய ஸ்த்ரீத்வத்தை அழித்து பும்பாவத்தை அடைவித்தத்தையும். (கெளஸல்யாநுவ்ருத்தியும்) ““யதா யதா ஹி கெளஸல்யா தாஸீவச்ச ஸ்கீவச பார்யாவத் பகி நீவச்ச மாத்ருவச்சோபதிஷ்டதி” (ரா.அ. 12 – 68) என்று கெளஸலையார் ஓளபாதிகமான பர்த்ரு விஷயத்தில் தத்ததாவஸ்த அநுகு,ணமாகப் பண்ணின அநுவ்ருத்தியையும் த்ருஷ்டாந்தமாக்குகை அதில் ஸ்தூலம் என்கிறார் –
131-பெருக்காறு பலதலைத்துக் கடலை நோக்குமாப் போலே நெக்கொசிந்து கரைந்து அலைந்து இடிந்து உடையப் பெருகு காதல் கடலிடங்கொண்ட கடலை பஹுமுகமாக அவகாஹிக்கும்.
ஆனால் தாமான தன்மையும் பிராட்டிமார் தஸையுமுண்டான இதில் தாமான தன்மையில் அபிநிவேஸம் அளவு பட்டிருக்குமோ? என்னில்; ஆறு பெருகா நின்றால் பல வாய்த்தலை களிலும் போரா நிற்கச்செய்தே, தானும் கடலில் போரும் அம்ஸம் குறையாதிருக்குமாப் போலே பிராட்டிமார் தஸையோடும், தாமான தன்மையோடும் வாசியற அபி நிவேவம் கரை புரண்டு பகவத் விஷயத்தை அவகாஹிக்கும் என்கிறார் (பெருக்காறு என்று தொடங்கி), (பெருக்காறு பல தலைத்துக் கடலை நோக்குமாப்போலே நெக்கொசிந்து கரைந்து அலைந்து இடிந்து உடையப் பெருகு காதல்) ““நினைந்தென்னுள்ளே நின்று நெக்கு”! (பெரியா. தி. 5 – 4 – 8), ”நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையும்”? (திருவா. 6 – 5- 2), ”என் மனம் உடைவதும் அவர்க்காகவே”‘ (திருவா. 9-3 – 6) என்று அபிநிவேஸத்துக்குக் கரைப் பற்றான நெஞ்சானது விட்டுச் சரிந்து கரைந்து அலைந்து இடிந்து உடைந்து ஸிதிலமாய்ப் போம்படி “*பெருகு காதலடியேன்”’ (திரு மொழி 5 – 2 – 9) என்று இவருடைய அபரிச்சேத்யமான பக்தியான ஆறானது. (கடலிடங்கொண்ட கடலை) க்ஷீராப்திஸாயியாய், ஸர்வேஸ்வரனாய், ஸ்ரமஹரமான வடிவை யுடைய பெரியபெருமாளாகிற கடலைப் பலமுகமாக அவகாஹிக்கும் என்கிறார் –
132-அச்சேத்யமென்னுமது ஈரும் வேம் ஈரியாய் உலர்த்த என்னப்பட சித்தம் சித்தாய் அல்லேனென்று நீங்க கரணங்கள் முடியானேயிலவையாக உடலம் ஆத்மதர்மம் கொள்ள காற்றும் கழியும் கட்டி யழக் கொண்ட பெருங் காதலுக்குப் பத்திமை நூல் வரம்பில்லையே.
இப்படி இரா நிற்கிற இவருடைய பக்தி தான் ஸக்ரமமாயிருக்கமோ? என்னில், இவருடைய பக்திக்கு “ந ஸாஸ்த்ரம் நைவ ச க்ரம:‘” என்கிறபடியே தேஸ விஸேஷத்தில் பக்தி போலே இதுவும் வைதமல்லாமையாலே க்ரமாபேக்ஷை இல்லை என்கிறார் (அச்சேத்யமென்று தொடங்கி). **௮ச்சேத்யோ யமதாஹ்யோயமக்லேத்யோ ஸோஷ்ய ஏவ ச?” (கீ,. 2 – 24) என்று சேதந-தஹந-ப்லாவந-ஸோஷணாதிகளுக்கு அயோக்யமா யிருக்கிற ஆத்ம வஸ்து. (ஈரும் வேம் ஈரியாய் உலர்த்த என்னப்பட) “சிவனொடு பிரமன் வண்திருமடந்தை சேர் திருவாக மெம்மாவி ஈரும்” (திருவா. 9 – 9- 6), ‘‘வேம் எமதுயிரழல் மெழுகிலுக்கு”” (திருவா. 10 – 3 – 6) ”கண்ணனுக்கென்றீரியாயிருப்பாள்”‘ (திருவா. 6 – 3 – 6), “’வேவாரா வேட்கை நோய் மெல்லாவி உள்ளுலர்த்த”‘ (திருவா. 2 -.1 – 1) என்று அவனுடைய ஸீல கு,ணம் என் ஆத்மாவை ஈரா நின்றது என்றும், அக்நி ஸகாஸத்துக்குள்ளே புகுந்த மெழுகு போலே என் ஆத்மாவானது தக்தமாகா நின்றது என்றும், விலக்ஷண பதார்த்தங்களைக் காணில் கண்ணனுக்கு என்று த்ரவீ பூதையாகா நின்றாள் என்றும், ப்ரேம வ்யாதியானது என் ஆத்மாவைக் குருத்து பற்றாக உலர்த்தா நின்றது என்றும், இப்படி சேதநாதிகளுக்கு யோக்யமாய்த் தென்று இவர் தாமே சொல்லும்படியாக ஆத்ம வஸ்து பாஹ்ய பதார்த்தங்களாலே சேதநாதிகளுக்கு அயோக்யமென்றது இத்தனை போக்கி, தன்னிலும் அச்சமான பகவத் குணங்கள் புக்கழிக்க, அழியாதாகில் இதுதான் ஜ்ஞாந-. த்ரவ்யமன்றியிலே ஒழியுமிறே-
(சித்தம் சித்தாய் அல்லேனென்று நீங்க) என்னெஞ்சென்னை நின்னிடையே னல்லேனென்று நீங்கி” (திருவா, 8 – 2 – 10) என்று அசேதநமான சித்தமானது சேதந ஸமாதியாலே இவரை ““ஸந்ந்யஸ்தம் மயா”’ என்று விட்டு நீங்க, (கரணங்கள் முடியானேயிலவையாக) “முடியானேயிற்படியே சேதந ஸமாதியாலே விடாய்த்த கரணங்களை உடையராய். (உடலம் ஆத்மதர்மம் கொள்ள) ‘“அடியேனுடலம் நின்பாலன்பாயே நீராயலைந்து கரைய”’ (திருவா. 5 – 8 – 1) என்று த்ரவ்யமிருந்த குஹை உருகுமாப் போலே ஆத்மா பகவத் ப்ரேம வஸ்யதையாலே ஸிதிலமாகாதபடி கட்டின கரையான ஸரீரமானது அந்தராத்மாவைப் போலே பகவத் ப்ராவண்யத்தை உடைத்தாய் கொண்டு ஸிதிலமாக.
(காற்றும் கழியும் கட்டியழ) “கடலும் மலையும்” இத்யாதி, (திருவா. 2-1. 4), “எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை’: (திருவா, 2 – 1 – 7) என்று வாயுவுக்கு ஸதத கதித்வம் ஸ்வாபாவிகமென்றும், கழிக்கு ஏறுதல் வடிதல் செய்கை ஸ்வாபாவிகமென்றும், மற்றும் நாரை தொடக்கமானவற்றுக்கு அவ்வோ ஸ்வபாவம் நியதமென்றும் அறியாதே தம்மைப் போலே பகவத் விஸ்லேஷத்தாலே இவையும் நோவு படுகிறனவாக இவற்றோடே க்லேஸிக்கும் படியாகக் கொண்ட பெருங்காதலுக்கு, ”அலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட என் காதல்” (திருவா. 7 – 3 – 8) என்று இப்படியிருக்கிற இவருடைய அபரிச்சேத்யமான பக்திக்கு.
(பத்திமை நூல் வரம்பில்லையே) ”ந ஸாஸ்த்ரம் நைவ ச க்ரம:’‘ என்று தேஸ விஸேஷத்தில் அநுபவோபகரணமான பக்தி போலே இவருடைய பக்திக்கு, ஸாதந பக்திபோலே வைதமாகையும் க்ரமாபேஷையும் இல்லையிறே.
ஆக இதுக்குக் கீழ் –ஜ்ஞாந தஸையில் தாமான தன்மையிலே பேசுவர்; ப்ரேம தஸையில் ஸ்த்ரீ ஸ்வபாவத்தாலே பேசுவர் என்றும், அந்த ஸ்த்ரீத்வம் இவர்க்கு ஸ்வாபாவிகம் என்றும், ஸ்த்ரீத்வந்தான் ஸாமான்யமன்றிக்கே அநந்யார்ஹ ஸேஷத்வாதிகளாலே பிராட்டியோடொப்பர் என்றும், மற்றுமுண்டான பிராட்டிமார் பகவத் பரிக்ரஹமுடை யாரெல்லாரோடும் ஒப்பர் என்றும் ஸர்வதா ஸாம்யமுன்ளது பெரிய பிராட்டியாரோடே என்றும், மற்றும் பகவத் ப்ரத்யாஸந்நரான லக்ஷ்மணாதிகள் படியும் இவர்க்கு உண்டென்றும், அவர்களிலும் வ்யாவ்ருத்தர் என்றும், அவர்களோடு ஸாம்யமன்றிக்கே அவர்களைத் தாமாக பாவிப்பர் என்றும், இந்த பாவ வ்ருத்திகள் இவர்க்கு உண்டாகைக்கு நிதாநம் இன்னதென்னுமிடத்தையும், இந்த பாவ வ்ருத்திகளுக்கு அடியான பக்தி ப்ரகாரங்களையும் சொல்லி நின்றது கீழ். ஆக இத்தால் பக்தி தஸையில் இவர் பேச்சிருக்கும் படி சொல்லிற்று-
133-ஸம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி துணிவு பதற்றமாகிற ப்ரஜ்ஞா வஸ்தைகளுக்குத் தோழி தாயார் மகள் என்று பேர்.
ஆனால் பக்தி தஸையில் பெண் பேச்சாகில் பிராட்டி ஒருத்தியாகப் பேசுகை ப்ராப்தம், தோழி தாய் மகள் என்கிற த்ரைவித்யமான பேச்சுக்கு தாத்பர்யம் என் என்னில், இந்த அதி ப்ராவண்யத்துக்கு ஸஹகாரியாயும், நிரோதகமாயுமிருக்கிற ஸம்பந்த உபாயங்களில் ஜ்ஞாந வ்யவஸாயங்களென்ன, அந்த ப்ராவண்யத்துக்கு விஷயமான உபேயத்தில் த்வரை யென்ன இவற்றைத் தோழி தாயார் மகள் என்கிறார் (ஸம்பந்தமென்று தொடங்கி). (ஸம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி துணிவு பதற்றமாகிற ப்ரஜ்ஞாவஸ்தைகளுக்குத் தோழி தாயார் மகள் என்று பேர்) தோழியாவாள் நாயகநாயகிகளை இணக்கிச் சேர்க்குமவளாகையாலே திருமந்தரத்தில் ப்ரதம பதமான ப்ரணவத்தில் அகாரத்தாலே சொல்லப்பட்ட, காரணமாய் ரக்ஷகமாய் ஸேஷியாய் ஸ்ரீய: பதியாயிருக்கிற பகவத் ஸ்வரூபத்துக்கும், தத் ப்ரதி ஸம்பந்தியாய், கார்யத்வ- ரஷ்யத்வ ஸேஷத்வங்களை ஸ்வரூபமாக உடைத்தாய், ப்ரக்ருதே: பரமாய், ஜ்ஞாநாநந்த மயமாய், ஞாந குணகமாயிருக்குமென்று மகாரத்தாலே சொல்லப்பட்ட ஆத்ம ஸ்வரூபத்துக்கும் சதுர்த்தியாலும் உகாரத்தாலும் சொல்லப்பட்ட நிருபாதிக ஸேஷத்வ-அநந்யராஹ ஸேஷத்வாதி,ஸம்பந்தத்தை விஷயீகரித்த ஜ்ஞாநத்தைத் தோழி என்றும்,
தாயாராவாள் நாயகன் பக்கலிலே அதி மாத்ர ப்ராவண்யம் பெண் பிள்ளைக்கு உண்டானாலும் நாயகன் தானே வந்து பரிக்ரஹித்துக் கொண்டு போமதொழியப் படி கடந்து புறப்படுகை குல மர்யாதைக்குப் போராதென்று அவளை நிஷேதித்து அவன் வரவு பார்த்திருக்குமவளாகையாலே, ஸம்பந்த ஜ்ஞாந ஸமநந்தரம் ஸம்பந்தாநுரூபமான பரிமாற்றத்திலே த்வரை உண்டானாலும், ஸ்வ ப்ரவ்ருத்தியில் இழிகை நமஸ்ஸில் சொன்ன பாரதந்த்ர்யத்துக்கு விருத்தமாகையாலே அத்தை நிவர்த்திக்க, அதில் ஸாப்தமாகவும், ஆர்த்தமாகவும் சொல்லுகிற பகவதேகோபாயத்வத்தாலே ப்ராப்ய ஸித்தி, என்கிற அத்யவஸாய ஜ்ஞாநத்தைத் தாயார் என்றும், தலைமகளாவாள், இயற்கையிலே புணர்ந்து நாயகன் வைலக்ஷண்யத்திலே ஈடுபட்டு, குல மர்யாதைகளையும் பாராதே கிட்டியல்லது தரியேன் என்னும் பதற்றத்தை உடையாளொருத்தி யாகையாலே, நாராயண பதத்தாலே சொல்லப்பட்ட ஸேஷியாய், ஸரண்யனானவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளால் வந்த வைலக்ஷண்யத்தை அநுபவித்து அத்தால் வந்த விளம்ப அக்ஷமத்வத்தாலே ததேகோபாயத்வாத் யவஸாயத்தையும் அதிக்ரமித்துக் கிட்டி, அநுபவித்து அநுபவ ஜநித ப்ரீதிகாரிதமான கைங்கர்யத்தை இப்போதே பெற வேணுமென்கிற த்வராஜ்ஞாநத்தைத் தலைமகள் என்றும் சொல்லும்,
““ஸ்ம்ருதிர் வ்யதீத விஷயா மதிராகாமி கோசரா ! புத்திஸ் தாத்காவிகீ ப்ரோக்தா ப்ரஜ்ஞா துரைகாலிகீ மதா” என்று அதீத-அநாகத-வர்த்தமாந-விஷய ஜ்ஞாநத்தை ஸ்ம்ருதிமதி-புத்தி, என்று சொல்லுகையாலே பூர்வமேவ உண்டாயிருக்கிற ஸம்பந்தத்தை விஷயமாக உடைத்தா யிருக்கிற ஜ்ஞாநத்தை ஸ்ம்ருதி என்றும், மேல் வரக் கடவதான கைங்கர்யத்தில் த்வராஜ்ஞாநத்தை மதி என்றும், ஸம்பந்த, ஜ்ஞாந ஸமநந்தரம் யாவத் பல ப்ராப்தி நடக்கக் கடவதான உபாயத்வாத் யவஸாயத்தை புத்தி என்றும் சொல்ல வேண்டி யிருக்க, ப்ரஜ்ஞாவஸ்தைகள் என்பானென்? என்னில், மூன்றும் ஏக காலிகமாக நடக்கையாலே ஓரொன்றினுடைய ப்ராதாந்யம் தோற்றப் பேசுகையாலே ப்ரஜ்ஞாவஸ்தைகள் என்றது.
ஆக இப்படி ஸ்வ ஸ்வரூப-பரஸ்வரூப -ஸம்பந்த ஜ்ஞாநம், ஈஸ்வரைகோபாயத்வத்தில் வ்யவஸாயம், பலமான கைங்கர்யத்தில் த்வரை இவையாகிற ப்ரஜ்ஞாவஸ்தைகளுக்குத் தோழி தாயார் மகள் என்று சொல்லுகிறது என்கிறார்-
134- ஸகி, வெறி விலக்கி ஆசை யறுத்து அறத்தொடு நின்ற மூன்றில் அநந்யார்ஹத்வமும், வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக் கட்டிழந்தகன்று சார்வதே வலித்தமை ஸாதநமாமோ என்று மாதா அஞ்சி முறைப்பட்டு முறை யிடுகிற ஏழில் அத்யவஸாயமும், புத்ரி பலகால் ஆள் விட்டு ஆற்றாமை சொல்லிக் கவராதவை விட்டு, இரைக்க மடலெடுத்துக் கண் புதையப் போக்கற்று, உருதெஞ்சுள்ளெழக் கூடுதாள்தேடித் தாழ்த்ததுக்கு ஊடி, உசாத் துணேயற்றுச் சூழவும் பகைமுகம் செய்யத் தடை நில்லாதே புயக்கற்று மாலையும் காலையும் பூசலிடுகிற பதினேழில் த்வரையும் தெரியும்.
இனிமேல் மூன்று தஸையின் பேச்சினுடைய ப்ரகாரங்களையும் அவ்வோ தஸைகளில் திருவாய்மொழி இன்னதென்னுமத்தையும் அருளிச் செய்கிறார் (ஸகி, வெறி விலக்கி என்று தொடங்கி). வெறி விலக்காவது – இயற்கையிலே புணர்ந்து பிரிந்த தலைமகள் மோஹங்கதையாய்க் கிடக்க, அவளுடைய பந்துக்கள் இது க்ஷுத்ர தேவதைகளால் வந்ததோ என்று ஸங்கித்து இத்தை பரிஹரிப்பதாக வெறியாடலுற அவ்வளவில் இவள்-ப்ரக்ருதியறிந்த உயிர்த்தோழியானவள் “இது க்ஷுத்ர தேவதைகளால் வந்ததன்று; இது ஒரு விஷயத்தில் ஸங்கத்தாலே வந்தது” என்று அத்தை விலக்கி, அதுக்கு யோக்யமான பரிஹாரத்தைச் சொல்லுகை,-இத்தால் ஸம்ஸாரகாந்தாரத்திலே ஸப்தாதிகளாகிற போக்யோபஜீவதத்துக்காக ஸ்வர்க்க -நரக-கர்ப்பங்களாகிற போக ஸ்தலங்களிலே ஸஞ்சரிக்கிறவனுமாய், பாரதந்ர்த்ர்ய- போக்யதா-அநந்யார்ஹத்வங்களாலே ஸ்த்ரீத்வத்தை உடையனான ஆத்மாவை அவ் விடத்திலே ஆத்ம ம்ருக யாத்ரா வ்யாஜத்தாலே ஸஞ்சரிக்கிற ஈஸ்வரன் “ஏவம் ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே, ப்ராம்யமாணே ஸ்வ கர்மபி,: | ஜீவே துக்கா குலே விஷ்ணோ: க்ருபா காப்யுபஜாயதே?” என்றும், ““நாஸெள புருஷ காரேண”’ இத்யாதியிற்படியே கடகரும், ஜ்ஞாபகருமன்றியிலே உபயருடையவும் தர்ம ப்ரயுக்தமாக கடாக்ஷிக்க, அத்தாலே இத்தலைக்கு முண்டான க்ரம ப்ராப்தி பற்றாத அதி ப்ராவண்யத்தாலே வந்த கலக்கத்தாலே ததேகோபாயத்வாத்யவஸாயம் குலைந்து ‘இந்த ப்ராவண்ய ஹேது எது? ப்ராவண்ய கார்யமான கலக்கத்தை பரிஹரிக்கலாவது எத்தாலே?’ என்று தேவதாந்தர்யாமி பரமான கர்ம கலாபங்களாலே பரிஹரிக்கலாமோ என்று ஸங்கிக்க, ஸம்பந்த ஜ்ஞாநம், ‘அநத்யார்ஹமான இவ்வஸ்துவிலுண்டான இந்த ப்ராவண்யம் நிர்ஹேதுக க்ருபா கார்யமாகையாலே ததேகோபாயத்வத்தாலே பரிஹரிக்கலா மத்தனை யல்லது தத் வ்யதிரிக்தங்கள் பரிஹாரமாகாத வளவேயன்றிக்கே அநத்யார்ஹ ஸேஷத்வாதி ஸம்பந்தங்களுக்கு விருத்தமாகையாலே ஸ்வரூபத்துக்கு நாஸகமாகையாலே இவை நிவர்த்யங்கள்” என்று அந்ய ஸ்பர்ஸத்தை நிவர்த்திப்பிக்கிற வெறி விலக்காகிற *தீர்ப்பாரை யாமினியிலும்.
(ஆசை யறுத்து)திருத் தொலை வில்லி மங்கலத்திலே அதி ப்ரவணையாயிருக்கிற இவளை மீட்கப் பார்க்கிற தாய்மாரைக் குறித்துத் தோழியானவள் ‘நீங்களே யன்றோ திருத் தொலை வில்லி மங்கலத்திலே கொடு புக்கு அதி ப்ராவண்யத்தை விளைத்திகோள்; இனி உங்களால் ப்ராப்த விஷய ப்ரவணையான இவளை மீட்கப் போகாது; ஆன பின்பு இவள் பக்கல் நீங்கள் ஆசை யறுங்கோள்’ என்று ஆசை யறுக்கிறது.
இத்தால் உபாயாத்யவஸாயமானது உபேய வைலக்ஷண்யத்தை முன்னிட்டுக் கொண்டல்லது இராமையாலே அந்த உபேய வைலக்ஷண்யத்தை விஷயீகரித்த ப்ராவண்ய கார்யமான த்வரை உபாயத்திலே அந்வயிக்கிறதோ என்னும் அதி ஸங்கையாலே அந்த ப்ராவண்யத்தை வ்யவஸாயம் நிவர்த்திப்பிக்கத் தேட இந்த ப்ராவண்யம் ஸேஷ வஸ்துகதமாகையாலே ஸேஷியினுடைய ப்ரியோபயோகியாமத்தனை யல்லது உபாயத்தில் அந்வயியாதென்கிற ஸங்கையை நிவர்த்திப்பிக்கிறது-ஸம்பந்த ஜ்ஞாநம்.–இத்தால் ப்ராப்த விஷய வைலக்ஷண்யாதீநமாக உண்டான அந்த ப்ராவண்யத்தை, “இது ஸ்வரூபாதிரேகியாய்க் கொண்டு ஸாதநத்திலே அந்வயிக்குமாகில் “தத் தஸ்ய ஸத்ருஸம் பவேத்”” (ரா.ஸு.. 39 -30) என்றிருக்கிற ஸ்வரூபத்துக்கு விருத்தமாம்; ஆகையாலே இது நிவர்த்யம்” என்று இந்த ப்ராவண்யம் ஸ்வ நிவர்த்யம் என்று தடுக்க, இவ்வுபாயாத்யவஸாயத்தில் ஸ்வாதீநதாப்ரதிபத்தியை பரேச்சாநுகுண விநியோகார்ஹதா ரூபமான ஸேஷத்வ ஜ்ஞாந மானது, ஸேஷ வஸ்துகதமாய், ஸேஷியினுடைய வைலக்ஷண்யாதீநமான இது ஸேஷிக்கு அதிஸயகரமாகையாலே ஸ்வரூபாதிரேகியன்று; தாரகமாகையாலே ஸ்வ நிவர்த்யமுமன்று. இத்தை ஸ்வ நிவர்த்யமாக நினைத்திருக்கையாகிற ஸ்வாதந்த்ர்யம் கீழ்ச் சொன்ன ஸ்வரூபத்தோடு விருத்தமாகையாலே த்யாஜ்யம் என்று ஸ்வ ஸ்பர்ஸத்தை நிவர்த்திப்பிக்கிற *துவளில் மா மணியிலும். (அறத்தொடு நின்ற) அறத்தொடு நிற்கையாவது – தலைமகளுடைய பருவத்தையும், வடிவில் வேறுபாட்டையும் கண்ட பந்துக்கள் ஸ்வயம்வரத்துக்கு ராஜ லோகத்தைத் திரட்டுகைக்கு மணமும் செறிவிக்க, இவளுடைய உயிர்த் தோழியானவள் கேட்டு, “இது இவள் செவிப்படில் இவளைக் கிடையாது இத்தை ஏற்கவே பரிஹரிக்க வேணும்” என்று இவளுடைய பந்து ஜநங்களைப் பார்த்து “இவளுக்குத் திருப்புலியூர் நாயனாரோடே ஸங்கம் உண்டு போலே இரா நின்றது; ஆன பின்பு நீங்கள் செய்கிறது தர்மமல்ல” என்ன, “ஆனால் இவளுக்குத் தக்க அவயவ ஸோபை தொடக்கமான நாயக லக்ஷணங்கள் அவனுக்குண்டோ” என்ன, ‘அவை எல்லாத்தாலும் ஒரு குறையில்லை. அவையொன்று மில்லையே யாகிலும் இவள் அவனுக்கு அநந்யார்ஹையானாள் என்னுமிடத்துக்கு அடையாளம் ஸுவ்யக்தமாகக் காணலாம். ஆன பின்பு நீங்கள் செய்கிற விது அதர்மம்” என்று மத்யஸ்தையாய்க் கொண்டு தர்மம் சொல்லுகிறாளாய் அந்த மணத்தை விலக்குகை.
ஆக இத்தால் ப்ராப்ய த்வரையினுடைய பரிபாகத்தை அநுஸந்தித்த உபாயாத்யவஸாயம், “இந்த த்வரை அப்ராப்த விஷயாவலம்பியோ?” என்று அதி ஸங்கை பண்ண, ஸம்பந்த,ஜ்ஞாநம், “இது ப்ராப்தனான ஸேஷி விஷயீகாரத்தாலே உண்டானது, இதுக்கு அப்ராப்த விஷய ஸங்கையும் ஸ்வரூப நாஸகரம்; இனி அந்த ஸேஷியினுடைய போக்யதையாலும், அந்த போக்யதை ஒழியவே நிருபாதிக ஸேஷித்வத்தாலும் இவ் வஸ்து அவனுக்கு அநந்யார்ஹம்” என்று அந்த அதி ஸங்கையை நிவர்த்திப்பிக்கிற *கரு மாணிக்க மலையிலும், ஆகத் தோழிப் பேச்சான மூன்று திருவாய்மொழியிலும் இவ் வாத்மா தர்மி தர்ம விபாகமற அந்ய ஸேஷமுமன்று; ஸ்வஸேஷமுமன்று;பகவத் அநந்யார்ஹ ஸேஷமாயிருக்குமென்று ஸம்பந்த ஜ்ஞாந தஸையில் பேச்சாயிருக்கிறது.
(வாடி மெலிந்து என்று தொடங்கி) – (எழில் அத்யவஸாயமும்) *ஆடியாடியில் “வாடி வாடுமிவ்வாணுதல்”’ (திருவா. 2 – 4 – 1) என்று ஆஸ்ரயத்தை ஓழிந்த தளிர் போலே வாடா நின்றாளென்றும், *பாலனாயேழுலகில் ”பொன் செய்பூண் மென்முலைக்கென்று மெலியும்” (திருவா. 4 – 2 – 10) என்று பகவத் போக்யதையை அநுபவிக்க வேணுமென்று மெலியா நின்றாளென்றும், *மண்ணை யிருந்து துழாவியில் ““என் பெண் கொடி யேறிய பித்தே”’ (திருவா. 4 – 3 – 7) என்று என் பெண் பிள்ளை அவனோடு ஸத்ருஸ பதார்த்தங்களையும் ஸம்பந்தி பதார்த்தங்களையும் அவனாகச் சொல்லும்படி பிச்சேறினாள் என்றும், *கடல் ஞாலத்திலே ““ஈசன் வந்தேறக்கொலோ”’ (திருவா. 5-0 1) என்று ஆற்றாமையாலே அநுகரிக்கிறாள் என்று அறிய மாட்டாதே ஸர்வேஸ்வரன் இவள் பக்கலிலே ஆவேஸித்தாப் போலே பேசா நின்றாள் என்றும், *மாலுக்கு வையத்தில் “கற்புடை யாட்டி இழந்தது கட்டே”’ (திருவா. 6 – 6 – 10) என்று அறிவுடையாளான இவள் ஸர்வேஸ்வரனை ஆசைப்பட்டு ஸர்வத்தையும் இழந்தாள் என்றும், உண்ணும் சோற்றிலே ““எனக்குதவாதகன்ற இளமான்” (திருவா. 6 – 7 – 6) என்று தன்னைப் பிரிந்து க்லேஸப்படுகிற இவ்வாபத் தஸையில் எனக்குதவாதே அகன்றாள் என்றும், *கங்குலும் பகலில் ‘“சந்தித்துன்சரணம் சார்வதே வலித்த தையல்” (திருவா. 7 – 2 – 5) என்று உன் திருவடிகளைக் கிட்டி உன் முன்னே முடிய வேணுமென்று வ்யவஸிதையானாள என்றும் சொல்லுகிற இவளுடைய விரஹ கார்யத்தையும், அந்த விரஹக்லேஸத்தாலே அடைவு கெடப் பேசுகையும், பெற்றல்லது தரியாத அதிமாத்ர ப்ராவண்யமும், உபாஸகனுக்கும் உபாயாநுஷ்டாந துஷ்கரதையாலும், பக்தி பாரவஸ்யத்தாலும் ப்ராப்த வைலக்ஷண்யாநுஸந்தாநத்தாலும் அவை உண்டாகுமாகையாலே இவளுக்கும் இவை ஸாதநத்திலே அந்வயிக்கில் ததேகோபாயத்வத்துக்கு விருத்தமா மென்று மாதா அஞ்சி, “முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில்வண்ணனே”’ (திருவிரு. 60) என்று தேவர் க்ருபை யொழிய இவள்பக்கல் உள்ளவை யோன்றும் ஹேது வல்ல; ஆனபின்பு இவளை இப்படித் துடிக்கவிட்டிருக்கை தேவரீருடைய க்ருபைக்கும், ரக்ஷகத்வத்துக்கும் போருமோ என்று சொல்லிக் கூப்பிடுகிற தாய்ப் பேச்சான. ஏழு திருவாய்மொழிகளிலும் உடாயாத்யவஸாயமான தஸையில் பேச்சுத் தோன்றும்.
(புத்ரி) தலைமகளானவள், (பலகால் ஆள்விட்டு) *அஞ்சிறைய மடநாரை (திருவா. 1 4), *வைகல் பூங் கழிவாய் (திருவா. 6 – 1), *பொன்னுலகாளீரோ (திருவா. 6 – 8), *எங் கானல் (திருவா. 9 – 7) என்கிற நாலு திருவாய்மொழிகளிலும் க்ரம ப்ராப்தி பற்றாமல் தூது விட்டு, (ஆற்றாமை சொல்லி) *’ஆற்றாமை சொல்லி அழுவோமை”’ (திருவா. 2 – 1 7) என்று *வாயும் திரையுகளிலே ஸகல பதார்த்த,ங்களும் பகவதலாபத்தாலே நோவு படுகிறனவாக க்லேஸித்து, (கவராதவை விட்டு) *ஏறாளுமிறையோனிலே “மாறாளன் கவராத மணி மாமை குறைவிலமே”‘ (திருவா. 4 – 8 – 1) என்று அவன் விரும்பாத ஆத்மாத்மீயங்கள் வேண்டா என்று உபேக்ஷித்து, (இரைக்க மடலெடுத்து) *மாசறு சோதியிலே ““யாமடலூர்ந்தும் … நாடுமிரைக்கவே”” (திருவா, 5 – 3 – 10) என்று ஜகத் க்ஷோபம் பிறக்கும்படி மடலூரக்கடவேனென்று, (கண் புதையப் போக்கற்று) *ஊரெல்லாம் துஞ்சியிலே ‘“பின்னின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால் முன்னின்றிராவூழி கண்புதைய மூடிற்றால்”” (திருவா, 5 – 4- 6) என்று ப்ரேம வ்யாதியும், ராத்ரியாகிற கல்பமும் க்ருத ஸங்கேதிகளாய்க்கொண்டு சூழப் பொருகையாலே போக்கடியற்று.
(உருநெஞ்சுள்ளெழ) *எங்ஙனேயோவிலே “*சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு என்னெஞ்சுள்ளெழும்” (திருவா. 5 – 5- 10) என்று தேஜஸ்தரங்க மத்யே உந்நேயமான அப்ராக்ருத விக்ரஹம் நெஞ்சிலே ப்ரகாஸிக்கும்படியான உருவு வெளிப்பாட்டாலே ப்ரீத்ய ப்ரீதி ஸமமாய், (கூடுநாள் தேடி) *மானேய் நோக்கியிலே ““திருவல்லவாழுறையும் கோனாரை அடியேனடி கூடு வதென்று கொலோ”” (திருவா. 5 – 9 – 1) என்று அவன் திருவடிகளைக் கிட்டும் நாளை ப்ரார்த்தித்து (தாழ்த்ததுக்கு ஊடி) இப்படி ப்ரார்த்திக்கச் செய்தேயும் தாம் தாழ்த்தவாறே *மின்னிடை மடவாரிலே ”போகு நம்பி’‘ (திருவா. 6 2 – 2) என்று ப்ரணய ரோஷத்தாலே ஊடி-(உசாத் துணையற்று) *வெள்ளைச் சுரி சங்கிலே ““என்னெஞ்சினாருமங்கே ஒழிந்தார் ஆரைக் கொண்டென் னுசாகோ”’ (திருவா. 7 – 3 – 4) என்று அபஹ்ருத சித்தையாகையாலே உசாத் துணையுமின்றிக்கே, (பகைமுகம்செய்ய) *ஏழையராவியிலே “கண்ணன் கோளிழை வாண்முகமாய்க் கொடியேனுயிர் கொள்கின்றதே’‘ (திருவா. 7 – 7 – 8) என்று உரு வெளிப்பாட்டாலே பாதக வர்க்கங்களெல்லாம் ஒருமுகமாய் நலியத் தேட நில்லாதே, *நங்கள் வரிவளையிலே ”காலம் பல சென்றும் காண்பதாணை உங்களோடெங்களிடையில்லை”’ (திருவா. 8 – 2 – 7) என்று அதிமாத்ர ப்ராவண்ய மாகாதென்று நிஷேதிக்கிற தோழிமாரையும் தாமரையும் அதிக்ரமித்து -புயக்கற்று –இன்னுயிர் சேவலிலே -இழை நல்ல வாக்கையும் பையவே புயக்கற்றது (திருவாய் -9-5-10) என்றும் முடிகையிலே வ்யவசிதையாய் (மாலையும் காலையும் பூசலிடுகிற ) மல்லிகை கமழ் தென்றலிலும் -வேய் மரு தோளிணையிலும் -சந்த்யா காலத்தில் கிருஷ்ணனைப் பசுக்களின் முற் கொழுந்தில் வரக் காணாமையாலும்-அக்காலத்தில் பாதக பதார்த்தங்களாலும் பார்த்து, “நீ பசுமேய்க்கப்போனால் நலியக்கடவதான டாத, க பதார்த்தங்களும் நோவு பட்டுக் கூப்பிட்டும் ப்ராத காலத்திலே கிருஷ்ணன் பசு மேய்க்க்கப் போனானாக அதி சங்கை பண்ணி கிருஷ்ணன் முகத்தைப் பார்த்து நீ பசு மேய்க்கப் போனால் நலியக் கடவதான பாதக பதார்த்தங்களும் நலியாநின்றது” என்று கூப்பிட்டும், இப்படித் தலைமகள் பேச்சான பதினேழு திருவாய்மொழியிலும் க்ரம ப்ராப்தி பற்றாதபடியான அதிமாத்ர ப்ராவண்ய கார்யமான ப்ராப்ய த்வரை தோன்றும்–
135-தோழிமார் அன்னையர் என்கிற பன்மை ரக்ஷகத்வாதி, பந்த வாத்ஸல்யாதி வ்யவஸாய புத்தி பேதத்தாலே.
ஆனால் தோழி என்றும், தாய் என்றும் சொல்லுகிறது ஸம்பந்த ஜ்ஞாநத்தையும் உபாயாத்யவஸாய ஜ்ஞாநத்தையுமாகில் இவற்றினுடைய பன்மைக்கு தாத்பர்யம் என் என்னில்; அந்த ஸம்பந்த உபாயங்களினுடைய வித பேதங்களை விஷயீகரித்த ஜ்ஞாந வ்யவஸாயங்களினுடைய பேதத்தாலே சொல்லுகிறதென்கிறார் (தோழிமார் அன்னையர் என்று தொடங்கி), ‘ஊரென் சொல்லிலென் தோழிமீர்”’ (திருவா, 5 – 3 – 9), எங்னேயோ அன்னைமீர்காள்”’ (திருவா. 5 – 5 4 1), ”அன்னையரும் தோழியரும்” (திருவா, 8 – 4-5), “ஏலமலர்க் குழலன்னைமீர்காள்”’ (திருவா. 8 – 2 – 3); ““என்னுடைத் தோழியர்காள்”” (திருவா. 8 – 2 – 7) என்று தோழிமாரையும், தாய்மாரையும் பலவாகச் சொல்லுகிறது – ரக்ஷகத்வாதி,பந்த வாத்ஸல்யாதி வ்யவஸாய புத்தி பேதத்தாலே; ‘ரஷக ரக்ஷ்ய ஸம்பந்தம், சேஷ சேஷி ஸம்பந்த,ம், பித்ரு புத்ர ஸம்பந்தம், பர்த்ரு பார்யா ஸம்பந்தம், ஜ்ஞாத்ரு ஜ்ஜேய ஸம்பந்தம் ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம், ஸாரீர ஸரீரி ஸம்பந்தம், ஆதார ஆதேய ஸ்ம்பந்தம், நியந்த்ரு நியாம்ய ஸம்பந்தம் , போக்த்ரு போக்ய ஸம்பந்தம்’ என்று இவை முதலான ஸம்பந்தங்களை விஷயீகரித்த ஜ்ஞாநங்கள் பலவாகையாலே அவற்றையும், வாத்ஸல்யம், ஸ்வாமித்வம், ஸெளஸீல்யம், ஸெளலப்யம், ஜ்ஞாநம், பக்தி, க்ருபை, ப்ராப்தி, பூர்த்தி என்கிற குண அநுஸந்தாநத்தாலே அந்த வ்யவஸாய புத்திகளும் பலவாகையாலே பன்மையாகச் சொல்லுகிறதென்கிறார்–
136-அபிலாஷா-சிந்தந-அநு ஸ்ம்ருதி-இச்சா -ருசி-பர- பரம பக்திகளிலே பேதை முதலான பருவம் கொள்ளும்.
தலைமகளுக்கும் இந்த பக்தியினுடைய அவஸ்தா பேதங்களினாலே பேதை முதலான பருவங்கள் உண்டென்கிறார் (அபிலாஷை என்று தொடங்கி). அபிலாஷையாவது ப்ரதம தர்ஸநத்தில் பிறக்கும் ஆசை. சிந்தனையாவது – த்ருஷ்டமான விஷயத்தில் உண்டான ஸ்மரணம். அநு ஸ்ம்ருதியாவது – அந்த ஸ்மரணம் இடை விடாமல் நடக்கை. இச்சையாவது – அவ் விஷயத்தை அவஸ்யம் அநுபவிக்க வேணுமென்கிற ஆசை. ருசியாவது – ரஸாந்தரத்தால் மாற்ற வொண்ணாதபடி அந்த ஆசை முதிருகை. பரபக்தி யாவது – அந்த வஸ்துவினுடைய ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களே ஸூக துக்கங்களாகை. பரமபக்தி யாவது – அவ்வஸ்துவினுடைய விஸ்லேஷத்தில் ஸத்தை கிடையாதொழிகை. ஆகையாலே இந்த அவஸ்தா பேதங்களினாலே பேதை முதலான் பருவம் கொள்ளக் கடவது என்கிறார்.
137-மயில் பிறை வில் அம்பு முத்து பவளம் செப்பு மின் தேர் அன்னம் தெய்வவுரு விகாஸ ஸூத்தி, தாந்தி ஜ்ஞாநாநந்தாநுராக,.பக்த் யணுத்வ போக்யதா கதிகளை யுடைய அகமேனியின் வகுப்பு.
மேல் அந்தத் தலைமகளுக்குச் சொல்லுகிற அவயவ வைலக்ஷண்யம் இவ் வாத்மாவினுடைய ஜ்ஞாந விகாஸாதிகளாகக் கடவதென்கிறார் (மயில் பிறை என்று தொடங்கி]. ““தோகைமாமயிலார்கள்”் (திருவா. 6 – 2 – 2) என்று ஸ்த்ரீகளை மயில் என்பது – அளகடாரத்தினுடைய விஸ்த்ருதியைப் பற்றவாகையாலே, ஆத்மாவினுடைய ஜ்ஞாந விகாஸத்தைச் சொல்லுகிறது. ““பிறை யுடை வாணுதல்” (திருமோழி 2 – 9 – 9) என்று ஸ்தரீகளுடைய நெற்றியைப் பிறையாகச் சொல்லுகையாலே, அதினுடைய தாவள்யத்தையிட்டு அந்த ஜ்ஞாநத்தினுடைய ஸூத்தி யோகத்தைச் சொல்லுகிறது. ““விற் புருவக் கொடி”‘ (திருவா. 6 – 6 – 6) என்று புருவத்தின் வளைவாலே வில்லாகச் சொல்லுகையாலே, அது கொண்டு ஜ்ஞாநத்தினுடைய தாந்தி ரூபதையைச் சொல்லுகிறது. ”அம்பன்ன கண்ணாள்” (திருமொழி 6 – 8 – 6) என்று கண்ணை அம்பாகச் சொல்லுகிறது – லக்ஷ்யபாதியாகையாலே, அத்தாலே விஷய க்ராஹியான ஜ்ஞாநத்தைச் சொல்லுகிறது,
முத்தன்ன வெண் முறுவலை முத்தாகச் சொல்லுகிறது – அதினுடைய ஒளியையும், நீர்மையையும் இட்டாகையாலே, ““முத்ப்ரீதி ப்ரமதோ ஹர்ஷ?” என்று அந்த ஜ்ஞாநத்தினுடைய ஆநந்த ரூபதையைச் சொல்லுகிறது. “பவள வாயாள்”‘ (திருமொழி 4 – 8 – 1) என்று அதரத்தை ப்ரவாளமாகச் சொல்லுகிறது – சிவப்பை யிட்டாகையாலே, பகவத்,விஷயத்தில் அந்த ஜ்ஞாநத்தினுடைய அநுராகதையைச் சொல்லுகிறது. “செப்பன்ன மென்முலை”” (திருப்பாவை 20) என்று முலைகளைச் செப்பாகச் சொல்லுகையாலே, ஸேஷிக்கு போக்யமாம்படி அந்த ஜ்ஞாநம் பக்தி ரூபாபந்நமானமையைச் சொல்லுகிறது. “மின்னனைய நுண் மருங்குல்”’ (திருமொழி 3 – 9 – 5) என்று இடையின் நுண்மையையிட்டு மின்னாகச் சொல்லுகையாலே ஆத்மாவினுடைய அணுத்வம் சொல்லுகிறது. ““தேரணங்கல்குள்” என்று நிதம்பத்தினுடைய விஸ்த்ருதியைச் சொல்லுகையாலே ஆத்மாவினுடைய போக்யதையைச் சொல்லுகிறது. “பெடையன்ன மென நடந்து” (திருமொழி 3 – 7 – 5), “தூவிசேரன்னமன்ன நடையாள்”’ (திருமொழி 3 – 7 – 9) என்று நடையை யிட்டு அன்னமாகச் சொல்லுகையாலே, ஆத்மாவினுடைய ஸேஷத்வாநுரூபாநுஷ்டாநத்தைச் சொல்லுகிறது.
ஆக இத்தால், “என் தெய்வ வுருவில் சிறுமான்”’ (திருவா. 4 – 4 – 2) என்று அப்ராக்ருத ஸ்வபாவமாய், *“’அகமேனியொழியாமே” (திருவா. 9 – 7 – 10) என்று ஸர்வேஸ்வரனுக்கு அந்தரங்க, ஸரீரமான ஆத்மாவுக்கு அவயவ பூதமான ஜ்ஞாநத்தினுடைய பிதைகள் என்கிறார் –
138-சூழ்ச்சி அகற்றினீர் என்னும் பழி, இணக்கி எங்ஙனே என்னும் மேலெழுத்து, முன்னின்றாய் இவளை நீரென்னும் இருபடை மெய்க் காட்டு, நீரென்னேயென்னு முடன்பாடு, இடையில்லை யென்னுமுதறுதல், இருந்திருந்து நடந்தாளென்னும் கொண்டாட்டம் அவஸ்தா த்ரய வ்ருத்தி.
இனி மேல் கீழ்ச் சொன்ன அவஸ்தா த்ரயத்தினுடைய வ்ருத்தியைச் சொல்லுகிறது (சூழ்ச்சி அகற்றினீர் என்று தொடங்கி). ‘“தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்”” (பெரியா. திரு. 3 – 7 – 4) என்று தாயார் தோழிமார் மேலே பழியிட, * அமுத மென் மொழியாளை நீருமக்காசை யின்றியகற்றினீர்”” (திருவா. 6 – 5- 2) என்று தோழி தாய்மார் மேல் பழியிட, ““இணக்கி எம்மை யெம் தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை”‘ (திருவா. 6 – 2 – 8) என்றும், ‘‘எங்ஙனேயோ அன்னைமீர்காளென்னை மூனிவது நீர்?” (திருவா. 5 – 5 – 1) என்றும் தலைமகள், “உங்களாலே யன்றோ எனக்கு இந்த ப்ராவண்யம் உண்டாய்த்து‘ என்று பழி இரண்டுக்கும் மேலெழுத்திட. (முன்னின்றாய் இத்யாதி, – மெய்க்காட்டு) ”முன்னின்றாயென்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்”” (திருவா. 5 – 5 – 9) என்று தோழி தாய்மாரொடே கூடி நின்று தலைமகளைப் பொடிந்தும், **தொலை வில்லி மங்கலம் தொழுமிவளை நீரினி அன்னைமீர் உமக்காசையில்லை விடுமினோ”? (திருவா. 6 – 5 – 1) என்று தோழி, தாய்மார்க்கு கார்யோபதேஸம் பண்ணுவாரைப் போலே தலைமகளுக்கும் ஸஹகரித்தும் இப்படி(இருபடை மெய்க்காட்டு.)
(நீரென்னேயென்னு முடன்பாடு) ““அன்னையரும் தோழியரும் நீரென்னே யென்னாதே நீளிரவும் துஞ்சுவரால்”‘ (திருவா. 5 – 4 – 8) என்று தலைமகள் தாய்மாரொடும் தோழிமாரோகும் உடன்பாடாக வார்த்தை சொல்ல; (இடை யில்லை யென்னு முதறுதல்) அவர்கள், “நீ எங்கள் வார்த்தை கேட்கில் மீளவமையும்’ என்ன, ”உங்களோடு எங்களிடையில்லையே”’ (திருவா. 8 – 2 – 7) என்று ‘நீங்கள் இவ் விஷயத்தினின்றும் மீட்கத் தேடில் உங்களுக்கும் எனக்கும் ஒரு ஸம்ப,ந்தமில்லை” என்று அவர்களை அதிக்ரமிக்க, (இருந்திருந்து நடந்தாள் என்னும் கொண்டாட்டம்) ‘“இருந்திருந் தரவிந்தலோசன என்றென்றே தைந்திரங்குமே” (திருவா. 6 – 5 – 8) என்று தோழி கொண்டாட்டமும், “நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே”” (திருவா. 6 – 7 – 9) என்று தாயார் கொண்டாட்டமுமான இவை அவஸ்தா த்ரய வ்ருத்தி.
இத்தால் இந்த வ்ருத்திகளினுடைய அவஸ்தா த்ரயத்துக்கும் ஸ்வாபதேஸம் – “சூழ்ச்சி அகற்றினீர்’ என்று அந்யோந்யம் பழியிடுகிற வித்தால் சேஷத்வ ஜ்ஞாநம் ஸேஷ வ்ருத்தி பர்பந்தமா யல்லதிராமையாலே அந்த ஸம்பந்த ஜ்ஞாநம் ப்ராப்ய ருசிக்கு ஹேது என்றும், உபாயாத்யவஸாயம் உபேய வைலக்ஷண்யத்தை முன்னிட்டுக் கொண்டல்லதிராமையாலே அந்த அத்யவஸாயம் உபேய ருசிக்கு ஹேது வென்றும், மேலெழுத்து என்று ப்ராப்ய த்வரை தன்னை நிரூபித்தாலும் இது ஸம்பந்த உபாயங்களிரண்டாலும் வந்ததென்று சொல்லுகிற வித்தாலும், ஸம்பந்த ஜ்ஞாநமும் உபாயாத்யவஸாயமும் ப்ராப்ய த்வரைக்கு ஹேது வென்று அந்த ஸம்பந்த உபாயங்களிரண்டினுடையவும் ப்ராதாந்யம் தோற்றி நிற்கிறது.
ப்ரதம தஸையில் – வ்ருத்தி இருபடை மெய்க்காட்டென்கிற வித்தால் ஸம்பந்த ஜ்ஞாநமானது ஸேஷத்வம் ஸ்வரூபமான பின்பு அந்த ஸேஷி தானே வந்து விஷயிகரிக்கக் கண்டிருக்கு மத்தனை யல்லது தான் த்வரிக்கை ஸ்வரூப விருத்தம் என்று உபாயாத்யவஸாயத்துக்கு ஸஹ்கரித்தும், ஸேஷத்வம் வ்ருத்தி பர்யந்தமாகையல்லது ஸித்தியாதென்று அந்த வ்ருத்தியில் ருசியை விளைக்கையாலே ப்ராப்ய த்வரைக்கு ஸஹகரித்தும், உடன்பாடென்கிற வித்தால் ப்ராப்யம் ஸம்பந்தாநுகுணமாகவும் வேண்டுகையாலே ப்ராப்ய த்வரை இவை யிரண்டும் கூடி நின்ற படி சொல்லிற்று.
ஆக இருபடை மெய்க்காட்டு உடன்பாடென்கிற இரண்டாலும் ஸம்பந்த ஜ்ஞாநம் உபாய வ்யவஸாயம் உபேய ருசி என்கிற இவற்றில் சேர்ந்து நின்றது மத்யம தஸையில் வ்ருத்தி-உதறுதல் கொண்டாட்டம் என்கிற இரண்டாலும் ப்ராப்ய த்வரையானது ஸம்பந்த உபாயங்களை அதிக்ரமிக்க, பலதஸையில் ஸ்வரூபம் ப்ராப்யாநுகு,ணம் என்னுமிடத்தையும், ‘“எம்மை யொன்றும் நினைத்திலளே”” (திருவா. 6 – 7 – 9) என்று உபாயாத்யவஸாய ஸத்பாவம் இல்லை யென்னுமிடத்தையும் சொல்லுகிறது, சரம தஸையில் வ்ருத்தி; ஆக அவஸ்த_த்ரய வ்ருத்தி –
139-தாயார், ஏதலர் உற்றார்கள் என்னும் ஸாத்ய ஸித்த ஸாதந நிஷ்டரை; மகள், நம்முடை ஏதலர் யாமுடைத் துணை என்னும் ஸித்த ஸாதந ஸாத்ய பரரை.
(தாயார் ஏதலர் இத்யாதி,) தாயாரான உபாயாத்யவஸாய தஸையில் ஸ்வரூபம் ப்ராப்யாநுகு,ணம் என்னுமிடத்தையும், ”எம்மை யொன்றும் நினைத்திலளே ” (திருவா. 6-9- 7) என்று உடாயாத்யவஸாய ஸத் பாவமில்லை என்னுமிடத்தையும் சொல்லுகிறது ஆரை என்னில், ஸித்த ஸாதநத்துக்கு எதிர்த் தட்டான உபாயாந்தர நிஷ்டரையும், அநுகூலரான ஸித்த ஸாதந நிஷ்டரையும் சொல்லுகிறது. (மகள் நம்முடை ஏதலர் யாமுடைத் துணை என்னும்) மகள் என்று சொல்லுகிற ப்ராப்ய த்வரா தஸையில் “நம்முடை ஏதலர் முன்பு நாணி?” (திருவா. 8 – 2 – 1) என்று அந்த விரோதிகளாகவும்,யாமுடைத் துணையென்னும் தோழிமாரும்”’ (திருவா. 9 – 9 – 5) என்று தன்னோடு ஸம ஸுக துக்கிகளான பந்துக்களாகவும் சொல்லுகிறது ஆரை என்னில், தன்னைப் போலே பகவத் விஷயமொன்றிலும் இழிந்திருக்கச் செய்தேயும் அத்தை ப்ராப்யம் என்று கொள்ளாதே ப்ராபகம் என்று கொள்ளுகிற ஸித்த ஸாதந நிஷ்டரையும், தன்னைப் போலே ப்ராப்யமென்றிருக்கிற ஸாத்ய பரரையும் சொல்லுகிறது –
140-நாலயலார் அயற்சேரியார் உபாய சதுஷ்டயாந்தர்யாமித்வ பரர்.
(நாலயலார் இத்யாதி, அந்தர்யாமித்வபரர்) ”நாலயலாருமறிந்தொழிந்தார்] (நா.தி.12 – 2) என்றும், “*அயற்சேரியுள்ளாருமெல்லே” (திருவா. 6 – 7 – 4) என்றும் நாலசலாகவும், அயல் தெருவாகவும் சொல்லுகிறது ஆரை என்னில், கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்தி என்கிற நான்கு உபாய நிஷ்டரையும், பரத்வம் முதலான மற்றை நாலிடத்திலும் உறவற்று கேவலம் ஸ்வரூபாந்தர்யாமியளவிலே உறைத்திருக்குமவர்களையும் சொல்லுகிறது –
141-கீழை மேலை வடக்கிலவை புறம்பாகத் தன்பற்றுள்ளசல்.
ஆனால் ப்ரபத்தி நிஷ்டரையும் அசலாகச் சொல்லுமோ என்னில், (கீழை மேலை வடக்கிலவை புறம்பாகத் தன் பற்றுள்ளசல்) என்கிறார். ““கீழையகத்துத் தயிர் கடைய”* (பெரு.தி. 6 – 2) இத்யாதி யாலே சொல்லுகிற கர்ம நிஷ்டரையும், ‘“மேலையகத்து நங்காய் வந்து காண்மின்கள்” (திருமொழி 10 – 8 – 2) என்று சொல்லுகிற ஜ்ஞாந யோக நிஷ்டரையும், ““வடக்கிலகம் புக்கிருந்து மின் போல் நுண்ணிடையாளொரு கன்னியை வேற்றுருவம் செய்து வைத்த அன்பா” (பெரியா. தி. 3 – 1 – 2) என்றும் சொல்லுகிற பக்தி யோக நிஷ்டரர்க்கும் ஸித்த ஸாதந நிஷ்டரர்க்குப் புறவாசலாகையாலும் இவ் விஷயத்திலே இழிந்திருக்கச் செய்தேயும் தன் பற்றை உபாயமென்றிருக்குமவர்கள் உள்ளசலாயிருக்கையாலும் சொல்லுகிறது
142-ஊரார் நாட்டார் உலகர் கேவல ஐஸ்வர்ய காம ஸ்வதந்தரர்.
(ஊரார் நாட்டார் உலகர்) ”ஊரும் நாடுமுலகமும்”‘ (திருவா, 6 – 7 – 2) என்றும், “ஊரவர் கவ்வை” (திருவா, 8 – 3 – 4) என்றும், ”நாட்டாரோடியல் வொழிந்து ”* (திருவா, 10 – 6 2) என்றும், ““எங்கள் கண் முகப்பே உலகர்கள்”‘ (திருவா. 9 – 2 8) என்றும் சொல்லுகிற இது – ஊரார் என்று கேவலரையும், நாட்டார் என்று புத்ர பங்வந்நாதிகளான ஐஹலெளகிக ஐஸ்வர்ய காமரையும், உலகத்தவர் என்று ஸ்வர்க்காதி பர லோக ஐஸ்வர்ய காமரான ஸ்வதந்த்ரரையும் சொல்லுகிறது.
143-இறுகலிறப்புக்கும் இறந்தால் தங்குமூரொக்குமே.
கேவலனையும் ஓரூராகச் சொல்லுவானென் என்னில், (இறுகலிறப்புக்கும் இறந்தால் தங்குமூரொக்குமே) ““எல்லாம் விட்ட இறுகலிறப்பு’” (திருவா. 4 – 1 – 10) என்று ஐஸ்வர்யத்தையும் -பகவதநுபவத்தையும் விட்டு ஆத்மாநுபவ மாத்ரமான ஸங்கோசத்தை மோக்ஷமென்று சொல்லுகிற கேவலனுக்கு அவ் வநுபவம் நித்யமாம் போது “ஜரா மரண மோக்ஷாய”‘ (கீதை) என்று அதுக்கு விரோதி யான ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களுக்கு கர்மீ பவிக்கைக் கடியான ப்ரக்ருதி ப்ராக்ருத ஸம்பந்தம் அற வேண்டுகையாலே ““யோகிநாமம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம ஸந்தோஷ காரிணாம்”” என்கிறபடியே “இறந்தால் தங்குமூரண்டமே கண்டு கொண்மின்”” (திருமொழி 10 – 2 – 10) என்று அவனுக்கு வஸ்தவ்யம் தேஸ விஸேஷமாக வேண்டுகையாலே ஊர் என்கிறார் –
144-சிறு சீரார் சுளகுகள் உபய விவேக பரிகரம்
(சிறு சீரார் சுளகுகள் உபய விவேகபரிகரம்) ”சிறு சுளகும் மணலுங் கொண்டு”’ (நா.தி. 2 – 8) என்று சிறு சுளகாவது – பெரு மணலையும் நுண் மணலையும் பிரிப்பதொன்றாகையாலே தேஹாத்ம விவேகத்துக்கு பரிகரமான ப்ரமாணம், ”சீரார் சுளகில் சில நெல் பிடித்தெறியா” (சிறியதிரு மடல்) என்று தொடங்கி ““பேராயிரமுடையானென்றாள்”’ என்று இவளுக்கு இவ் வ்யாமோஹத்தை விளைத்தான் ஸர்வேஸ்வரனாகையாலே, சீரார் சுளகென்பது ஆத்ம பரமாத்ம விவேகத்துக்கு பரிகரமாய்ப் போருகிற ப்ரமாணம் –
145-மாலை கங்குல் காலை பகல் ரஜஸ் தமஸ் ஸத்த்வ ஸூத்த-ஸத்தவ ஜ்ஞாநங்கள்.
(மாலை கங்குல் இத்யாதி, – ரஜஸ் தமஸ் ஸத்த்வ ஸாத்த ஸத்தவ ஜ்ஞாநங்கள்) “மாலையும் வந்தது ” (திருவா. 9 – 9 – 10) என்றும், ”செங்களம்பற்றி நின்றெள்கு புன் மாலை ”? (திருவிரு. 77) என்றும் சொல்லுகையாலே, மாலையாவது – ஸந்த்யை; அது ராகோத்தரமா யிருப்ப தொன்றாகையாலே ராஜஸ ஜ்ஞாநம், “கங்குல் நாழிகை ஊழியில்” (திருமொழி 9- 5 – 3) என்றும், ”செல்கின்ற கங்குல்வாய்”” (திருவா. 5 – 4 – 10) என்றும் கங்குல் என்பது – மத்ய ராத்ரி; அது தமோ பூதமாயிருக்கையாலே தாமஸ ஜ்ஞாதம். ““காலையெழுந்திருந்து” (நா.தி. 9 – 8) என்று காலையாவது – ப்ராத காலம்; அது ப்ராஹ்ம முஹுர்த்தமாய் ஸத்த்வோத்தர காலமாகையாலே ஸாத்த்விக ஜ்ஞாநம். ““பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன்”‘ (இ.திரு. 71) என்று, பகலாவது – ஸகல பதாார்த்தங்களையும் யதா தர்ஸநம் பண்ணுவிப்பதொரு காலமாகையாலே குண விக்ரஹ விபூதி விஸிஷ்டனான ஸர்வேஸ்வரனை யதாவாக ஸாக்ஷாத் கரிக்கிற ஸூத்த ஸத்த்வ ஜ்ஞாநம். இத்தால் அந்யதா ஜ்ஞாநம், விபரீத ஜ்ஞாதம், யதாஜ்ஞாதம், தத் பலமான ஸாக்ஷாத்கார ஜ்ஞாநம் என்கிற இவற்றைச் சொல்லுகிறது –
146-நிலா முற்றம் ப்ரஜ்ஞா ப்ராஸாத மென்னு மெல்லை நிலம்.
(நிலா முற்றமித்யாதி, – எல்லை நிலம்) *“நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்” (திருமொழி 8 – 2 – 2) என்று நிலா முற்றமாகச் சொல்லுகிறது – “’ப்ரஜ்ஞா ப்ராஸாத, மாருஹ்யா ஸோச்யஸ் ஸோசகாந் ஜநாந் ! பூமிஸ்தாநிவ ஸைலஸ்தோ ஹ்யஜ்ஞாந் ப்ராஜ்ஞ ப்ரபஸ்யதி’‘ என்று சொல்லுகிறபடியே “காணுமோ கண்ண புரமென்று ‘காட்டினாள்”’ (திருமொழி 8 – 2 – 2) என்று சொல்லுகையாலே ததீயரை ப்ராப்யர் என்கிற எல்லை நிலமான புருஷார்த்த ஜ்ஞாநத்தை என்கிறார் –
147-கலை வளை அஹம் மம க்ருதிகள்.
(கலை வளை என்று தொடங்கி – மம க்ருதிகள்) ‘“கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கனமகரக் குழை யிரண்டும் நான்கு தோளும்”’ (திருநெடு. 22) என்றும், ““கலையாளாவகலல்குல் கன வளையும் கையாளா என்செய்கேன் நான்” (திருமொழி 5 – 5 – 2) என்றும் கலை வளையாகச் சொல்லுகிறது – பகவதநுபவ விரோதியான அஹங்கார மமகாரங்களை-
148-பட்டம் சூடகமாவன பராவர குருக்கள் பூட்டும் ஆத்ம பூஷணங்கள்.
(பட்டம் சூடகமாவன – பூஷணங்கள்) ”பட்டங்கட்டிப் பொற்றோடு பெய்திவள் பாடகமும் சிலம்பும் இட்டமாக வளர்த்து” (பெரியா. திரு. 3- 7 – 6) என்றும், “சூடகமே தோள் வளையே” (திருப்பாவை 27) என்று தொடங்கி இவற்றாலே சொல்லுகிற ஆபரணங்களாவன – ‘“க்ருஷ்ணாங்கரி துளஸீ மெளளி: பட்டம் க்ருஷ்ணாபிவந்தநம் ! குண்டலே க்ருஷ்ண சரித ஸ்ரவணம் கங்கணோஞ்ஜலி:” என்கிறபடியே ப்ரதமத்திலே இவளை அங்கீகரித்த ஆசார்யன் உண்டாக்குமவை. இவ் வாத்மாவுக்கு அலங்காரமா யிருக்கிற நாம ரூபங்களும், பகவத் வந்தநாதிகளும், பின்பு அவ்வாசார்ய வைபவத்தை உணர்த்தினவன் உண்டாக்கின ஸேஷத்வ ஜ்ஞாநாதிகளும் என்கிற இவை –
149-பந்து கழல் பாவை குழமணன் யாழ் தென்றல் மதியம் அடிசில் சாந்தம் பூண் அகில் சிற்றில் தூதை முதலாவன குண த்ரய விசித்ர கர்ம ஸுூத்ரத்தாலே கட்டி லீலையாக ப்ரேரிக்க விழுந்தெழுந்தும் சுழன்றுழன்றும் பறிபட்டும் அற்பசாரமாமவையுமாய், மதீயமென்னில் விட்டகலவும் ததீயமென்னில் இகழ்வறவும் முனிவதும் இக் காலம் ஈதோ என்னப்படும் பொங்கைம்புலனில் போக்யாதி ஸமூஹம்.
(பந்து கழல் இத்யாதி, – போக் யாதி, முதலானவை] போக உபகரணமாகவும் சொல்லப்படுகிறவற்றுக்கு ஸ்வாபதேஸம் அருளிச் செய்கிறார். ”பந்தும் கழலும் தந்து போகு நம்பீ”: (திருவா. 6 – 2 – 1) என்று பந்து கழல் என்பது – போக ஸ்தாநமாகிற ஸ்தூல ஸூக்ஷ்ம ஸரீரங்களை- ““கன்மமன்றெங்கள் கையில் பாவை பறிப்பது?” (திருவா. 6 – 2- 7) என்றும், ”குழகி யெங்கள் குழமணன் கொண்டு”” (திருவா. 6 – 2 – 6) என்றும் சொல்லுகையாலே பாவை குழமணன் என்பது – போக்த்ரு வர்க்கமான ஸ்த்ரீ புருஷ விபாகத்தை. ““சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு” (திருவா. 9 – 9- 7) என்றும், “தைவந்த தண் தென்றல்’” (திருவா. 5 – 4 – 8) என்றும், ‘“மேவு தண் மதியம்” (திருவா. 9 – 9 – 4)-என்றும், “இன்னடிசிலொடு பாலமுதூட்டி ”’ (நா.தி. 5 – 5) என்றும், “சாந்தமும்” பூணும் சந்தனக் குழம்பும்”” (திருமொழி 2 – 7 – 3) என்றும் சொல்லுகிற யாழ் தென்றல் மதியம் அடிசில் சாந்தம் பூண் அகில் என்கிறவை ஸப்தாதிகளான போக்யங்கள். சிற்றில் ‘ என்பது – போக ஸ்தாநம், தூதை என்பது – பதார்த்தங்களை இட்டு வைப்பதொன்றாகையாலே போக உபகரணங்களுக்கு உப லக்ஷணம்,
(குண த்ரய விசித்ர கர்ம ஸூத்ரத்தாலே கட்டி) பந்தானது – வெண்ணூல் செந்நூல் கருநூலாலே கட்டியிருப்ப தொன்றாகையாலே, ப்ரக்ருதியும், ‘‘லோஹித ஸுக்ல க்ருஷ்ணாம்”’ (தை.௨..) என்று ஸத்த்வ ரஜஸ் தமஸ்ஸூக்களாலே விசித்ரமாய். “த்வம் ந்யஞ்சத் பீருதஞ்சத், பிர் கர்ம ஸூத்ரோபபாதி,தைச | ஹரே விஹரஸி க்ரீடா கந்து, கைரிவ வஸ்துபி?”’ என்கிறபடியே கர்ம ஸூத்ரத்தாலே கட்டி. (வீலையாக ப்ரேரிக்க விழுந்தெழுந்தும் சுழன்றுழன்றும்) ““அஜ்ஞோ ஜந்துர நீஸோய மாத்மநஸ்ஸுக துக்கயோ ச | ஈஸ்வர ப்ரேரிதோ கச்சேத் ஸ்வர்க்கம் வா ஸ்வ ப்ரமேவ வா’” என்கிறபடியே அஜ்ஞனாய் அஸக்தனா யிருக்கிற இவன் கர்மாநுகுணமாக ஈஸ்வரன் ப்ரேரிக்க, ் யமாலய மஹாஸூலே மாதுர் ஜடர தோல்பதா ! யாதா யாத ஸஹஸ்ராணாம் முநே ஜீவஸ்ய ஸாதநம் 1! க்வசித் கதஈசித் ஸ்வர்க்கஸ்ய புநாபதந துர்கதோ ‘‘ என்கிறபடியே ஸ்வாக்க, -நரக-கர்ப்பங்களிலே தட்டித் திரிந்து பறிபட்டு, ““பந்து பறித்து”” என்கிறபடியே ஈஸ்வரன் தன்னுடைய போக விரோதி, என்று விடுவிக்க விட்டும்.
(அற்ப சாரமாமவையுமாய்) ““அற்ப சாரங்களவை சுவைத் தகன்று ஓழிந்தேன்”’ (திருவா. 3 – 2- 6) என்கிறபடியே ஸப்தாதிகள் பகவத் விஷயத்தினின்றும் அகற்றுமதொழியத் தன் பக்கல் புஜிக்கலாவ தொன்றில்லாதபடி அல்ப ஸாரங்களாய். (மதீயமென்னில் விட்டகலவும்) இவற்றை பகவதீயத்வாகார மொழிய மதீயமென்று பார்த்த போது “சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற செழுங்கோதை”” (திருமொழி 3 – 7 – 8) என்கிற படியே த்யாஜ்யங்களாய். (ததீயமென்னில் இகழ்வறவும்) ததீயத்வாகாரத்தாலே கண்ட போது ““இகழ்விலிவ்வனைத்துமென்கொ?” (திருவா. 3 – 4 – 1) என்கிறபடியே கட்டடங்க உபாதேயங்களாயும்.
(முனிவதுமிக்காலமீதோ என்னப்படும்) “அன்னை முனிவதும் அன்றிலின் குரலீர்வதும் இத்யாதி, (திருமொழி 11 – 2 – 5), இக்காலமிவ்வூர்ப் பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்தெரி வீசும்” (திருவிரு. 5) என்கிறபடியே அவனை யொழியக் கண்டபோது ப்ரதிகூலங்களாயும், ““அவ்வாடை ஈதோ வந்து தண்ணென்றதே”” (திருவிரு. 27) என்று அவனோடே சேர்த்துக் கண்ட போது அநுகூலங்களாயுமிருக்கிற. (பொங்கைம் புலனில் போக்யாதி ஸமூஹம்) “பொங்கைம்புலன் என்கிற பாட்டிற் சொல்லுகிற போக்ய-போக்த்ரு வர்க்க, -போக உபகரண-போக ஸ்தாநங்களைச் சொல்லுகிறதென்கிறார்.
| இரண்டாம் ப்ரகரணம் முற்றிற்று
————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply