ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்த, ஸகலா யேந த,ர்ஸிதா | ஸ்ரீ ஸாநு தாஸ மமலம் தேவ ராஜம் தமாஸ்ரயே ॥
ஆசார்ய ஹ்ருதயத்தின் அர்த்தங்கள் அனைத்தையும் அருளிச் செய்தவராய், ஸ்ரீஸாநுகாஸர், தேவராஜர் என்னும் திருநாமங்களை உடையவரான திருநாராயணபுரத்து ஆயை ஆஸ்ரயிக்கிறேன்
ஆசார்ய ஸ்வாந்த வக்தாரம் அபி ராமவராபிதம்!
ஸ்ரீக்ருஷ்ண தநயம் வந்தே, ஐகத் குருவராநுஜம் ॥
பணவாளரவணைப் பள்ளி பயில் பவர்க்கெவ்வுயிரும்
குண போகமென்று குருகைக் கதிபனுரைத்ததுய்ய
உணர்பாவினுட்பொருள் ஒன்றுமறியா உலகறிய
மணவாளன் மாறன் மனமூரைத்தான் வண்முடும்பை வந்தே.
ஸம்ஸ்ரிதாநாம் ஜநிச்சேதஹேது ஜ்ஞாநத முக்திதம் | யது புர்யாம் ஜநந் யாக்யம் லோகாநா முத்தமம் குரும் |
ஸம் ப்ரதா யார்த்தத நிகம் ஸெளம்ய ஜாமாத்ரு ஸூரயே | நிஸ்சிதார்த்த ப்ரதம் ஸ்ரீமஜ் ஜநநீ குருமாஸ்ரயே
ஆஸூரி சிங்கமாம் ஆதி குரு உலகுக்கே
மாசிலா இளையாழ்வார் மண்ணுலக மாழ்ந்தன்று
தூசரிக்கும் திருப்பாவைத் திருவருளைத் தெளிவித்துப்
பேசினார் பெம்மானைப் பின்போரை வாழ்த்திடவே
மாதவத்தோர் வாழ்த்தும் முடும்பை மணவாளன்
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார் தீதற்ற
ஆசார்ய ஹ்ருதயம் பெற்றார் நம்மாயி யிவர்
தேசாரத் தாள்கள் நெஞ்சே காண்
மாதவத்தோன் மாறன் மனங்கூறும் மணவாளன்
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார் – நீதியினா
லாங்கவர் தாள் சேர் பெற்றார் ஆயி மணவாளமுனி
பூங்கமலத் தாள்கள் நெஞ்சே போற்று
ஆயி அந்தாதி-ஆயி ப்ரபத்தியில் மாமுநிகளாலும் அவரின் பேரன் ஜீயர் நாயனாராலும் அநுக்ரஹிக்கப் பட்டிருக்கிறதைக் காணலாம் அதில் முதல் இரண்டு ஸ்லோகத்தால் ஆஸூரிப்பெருமாள் வைபவததைக் கூறியுள்ளார்.
ஆஸூரியிலவதரித்த இராமாநுசர்க் கிருவர் தாமாய்
கூசாத நிலையொன்னில் தாய்வயிற்றில் பிறந்தவராய்
மாசாத கூரேசர் குருவருடன் சேர்த்து வைக்க
ஆஸூரிப் பெருமாள் தாம் ஒருவராம் இராமாநுசர்க்கே (1)
இராமாநுசர்க்கே ஸரணாம் எழுபத்து நால்வர் தன்னுள்
இராப்பகலென்னாதே தன் குருவைச் சிந்தித்தேத்தி
இராகமனைத்தையும் தொலைத்து விட்டுப் பெருமாளென்னும்
இராகவனோடெம் பெருமாள் எதுகிரியைச் சென்றார்தாமே (3)
ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸிதா: !
ஸ்ரீஸாநு தாஸ மமலம் தே,வராஜம் தமாஸ்ரயே ॥
த்,ராவிட ஆம்நாய ஹ்ருத.யம் கு,ருபர்வ க்ரமாக,தம் ।
ரம்ய ஜாமாத்ரு தே,வேந தர்ஸிதம் க்ருஷ்ண ஸூநுதா
——————-
150-சேர்ப்பாரைப் பஷிகளாக்கி ஜ்ஞாந கர்மங்களைச் சிறகென்று குரு ஸப்ரஹ்மசாரி புத்ர ஸிஷ்ய ஸ்தாநே பேசும்.
இனிமேல் இவர் தூதுவிடுகிற பக்ஷி முதலானவை எவை என்னில், (சேர்ப்பாரைப் பக்ஷிகளாக்கி) பகவத் விஷயத்தில் கடகரைப் பக்ஷிகளாக்கி, (ஜ்ஞாந கர்மங்களைச் சிறகென்று) “உபாப் யாமேவ பக்ஷாப்யாமாகாமே பக்ஷிணாங்கதி: ததைவ ஜ்ஞாந கர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம:” என்கிறபடியே ஜ்ஞாந கர்மங்களைச் சிறகாக உடையரான குரு ஸப்ரஹ்மசாரி ஸிஷ்ய புத்ர ஸ்தாநீயரா யுள்ளாரைப் பக்ஷி முதலானவையாகப் பேசக்கடவது –
151-விவேக முகராய் நூலுரைத்து அள்ளலில் ரதியின்றி அணங்கின் நடையைப் பின் சென்று குடை நீழலிலே கவரி யசையச் சங்கமவை முரல் வரிவண்டிசை பாட மாநஸ பத்மாஸநத்திலே யிருந்து விதியினால் இடரில் அந்தரமின்றி இன்பம் படக் குடிச் சீர்மையிலே யாதல் பற்றற்ற பரம ஹம்ஸராதலான நயாசலன் மெய்ந்நாவன் நாத யாமுநர் போல்வாரை அன்னமென்னும்.
குண ஸாம்யத்தாலே ஆசார்ய ஸ்தாநீயரா யுள்ளாரை அன்னமென்கிற தென்கிறார், விவேக முகராய் என்று தொடங்கி. (விவேக முகராய்) அன்னமாவது நீர ஷீர விபாகம் பண்ணுமதொன்றாகையாலே ஸாராஸார விவேகோந்முகராய். (நூலுரைத்து) “அன்னமதாயன்றங்கற நூலுரைத்த” (பெரியதிருமொழி 11-4-8) என்று ஹம்ஸ ரூபியாய்க் கொண்டு ஸமாஸ்த்ர ப்ரதாநம் பண்ணினாப் போலே இவர்களும் ஸ்ரோதாக்களைக் குறித்து ஸாஸ்த்ரங்களை யுபதேஸித்து. (அள்ளலில் ரதியின்றி) “ராகாதி தூஷிதே சித்தே நாஸ்பத, மது ஸூதந: நபத் நாதி ரதிம் ஹம்ஸ: கதா சித் கர்த்த மாம்பஸி’ (விஷ்ணுதர்மம் 9-11) என்று அந்த அன்னமானது கர்தம ஜலத்திற் பொருந்தாதாப் போலே “அழுந்தார் வன் சேற்றள்ளல் பொய்ந் நிலத்தே” (திருவிருத்தம் 100) என்று ஸம்ஸார கர்தமத்திலே பொருத்த முடையரன்றிக்கே. (அணங்கின் நடையைப் பின் சென்று) “அன்னநடைய வணங்கே” (பெரிய திருமடல் 7 என்றும், “அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று” (பெரியதிருமொழி 6-5-5) என்றும் சொல்லுகையாலே அநந்யார்ஹ ஸேஷத்வாதிகளாலும், புருஷகார பாவத்தாலும் ஹம்ஸ கதியான பெரிய பிராட்டியாரைப் பின் சென்று –குடை நீழலிலே கவரி யசைய) ‘அன்னமென் கமலத் தணி மலர்ப்பீடத்து அலை புனலிலைக்குடை நீழல் செந்நெலொண் கவரி அசைய வீற்றிருக்கும்” (பெரிய திருமொழி 9-1-5) என்றும், “சங்கமவை முரலச் செங்கமல மலரை யேறி” (பெரிய திருமொழி 7-8-2) என்றும், “வரிவண்டிசைபாட அன்னம் பெடையோடுடனாடும்” (பெரிய திருமொழி 7-5-9) என்றும் மாநஸ பத்மாஸநத்திலே யிருந்து அன்னமானது மேலே எழுந்த தாமரையிலை குடையாகவும், பக்வ பலமான செந்நெல்லினுடைய அசைவுகள் கவரியாகவும் சங்குகளினுடைய த்வநி தூர்ய கோஷமாகவும் வண்டுகளுடைய மிடற்றோசை பாட்டாகவும் மாநஸ ஸரஸ்ஸில் பத்மம் ஆஸநமாகவும் அன்னம் இருக்குமாபோலே “அக்கமலத்திலை போலும் திருமேனி’ (திருவாய்மொழி 9-7-3 என்று பத்ம பத்ர நிப ஸ்யாமமான திருமேனியைத் தங்களுக்கு ஒதுங்க நிழலாக உடையராய் பரிபூர்ண ஜ்ஞாநர் அநுகூல விருத்திகளைப் பண்ண ஸூத்த ஸ்வபாவர் ஸ்தோத்ரம் பண்ண ஸாரக்ராஹிகள் ஸாமகாநம் பண்ண, “போதிற் கமல வன்னெஞ்சு’ (பெரியாழ்-திரு- 5-2-8) என்கிறபடியே ஸிஷ்யர்களுடைய மாநஸ பத்மத்தை வாஸஸ்தாநமாக உடையராய் (விதியினால் இடரில் இத்யாதி குடிச் சீர்மையிலே யாதல்) “விதியினால் பெடை மணக்கும்” (திருவாய்மொழி 1-4-3) என்றும், “இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மடவன்னங்காள்” (திருவாய்மொழி 6-1-4) என்றும், “அந்தரமொன்றுமின்றி அலர்மேலசையும்” (திருவாய்மொழி 6-8-10) என்றும் “மிகவின்பம் படமேவும் மென்னடைய அன்னங்காள்” (திருவாய்மொழி 9-7-10) என்றும் சொல்லுகிறபடியே வித்யுக்த ப்ரகாரத்திலே ஸாம்ஸாரிக ஸகல து.:க்கங்களும் தட்டாதபடியாகவும் ஒரு விச்சேதமும் வாராதபடியாகவும் மேல்மேலென ஆநந்தமபி விருத்தமாம்படி யாகவும், “குடிச்சிர்மையிலன்னங்கள்’ (திருவிருத்தம் 29) என்கிறபடியே புத்ர தாராதிகளோடே யிருந்து பகவதநுபவம் பண்ணுகிற “நளிர்ந்த சீலன் நயாசலன்” (பெரியாழ்.திரு. 4-4-8) என்று சொல்லுகிற செல்வ நம்பி, “மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன்” (பெரியாழ்.திரு. 4-9-11) என்கிற பெரியாழ்வார் போல்வாரையும், (பற்றற்ற பரமஹம்ஸரான ) “பற்றற்றார் பயிலரங்கம்” (பெருமாள் திருமொழி 1-4) என்று ஸாம்ஸாரிக ஸகல ஸங்கத்தையும் விட்டு உத்தமாஸ்ரமிகளாய் பரம ஹம்ஸராயிருக்கிற நாதமுனிகள் யாமுந முனிகள் போல்வாரை அன்னம் என்கிறது என்கிறார்-
152-என் பெறுதி யென்ன ப்ரமியாது உள்ளத்துளுறிய மது வ்ரதமாய் தூமது வாய்கள் கொண்டு குழல் வாய் வகுளத்தின் ஸாரம் க்ரஹித்துத் தேதெனவென்று ஆளம் வைத்துச் சிறுகாலெல்லியம்போது குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக் கொள்ளப் பாடித் துன்னிட்டு நெருக்க நீக்கென்று கடந்து புதம் தகைவறப் புக்கு வண்டொத்திருண்ட குழலிலே றங்கையற மருவி அருளாத யாமென்றோடி வந்து வாசமே யூதி வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும் சேமமுடை நாரதன் முனி வாஹனர் தம்பிரான்மார் போல்வாரை வண்டு தும்பியென்னும்–
(என்பெறுதியென்ன ப்,ரமியாது) ஏரார் மலரெல்லாமூதி நீ என்பெறுதி (பெரிய
திருமொழி 8-4-5) என்று நிவர்த்திப்பிக்க வேண்டாதபடி அப்ராப்த போக்யங்களிலே
ப்ரவணரன்றிக்கே, (உள்ளத்துளூறிய மது வ்ரதமாய்) “உளங்கனிந்தருக்கும் பெரிய திருமொழி 4-3-9) என்று அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனை ( பகவத் விஷயத்திலே பக்வமான ஸ்நேஹத்தை உடையராயிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருவுள்ளத்திலே ஊறியிருப்பதாய் “ஸாஹிஸ்ரீரம்ருதாரகிற மதுவை ஸதாம்” என்று நிரதிஸய போக்யமான பகவத், குணமாகிற மதுவை “தவாம்ருதஸ்யந்திநி” என்று தொடங்கி “மதுவ்ரதோ நேஷுரகம் ஹி வீக்ஷதே (ஸ்தோத்ர ரத்நம் 27) என்கிறபடியே புஜிக்கையே வ்ரதமாக உடைத்தாய். (தூ மது வாய்கள் கொண்டு) “தண்டுளவமுண்ட தூமது வாய்கள் கொண்டு” (திருவாய்மொழி 6-8-3) என்று பகவத் போக்யதையை அநுபவிக்கையாலே பரி ஸூத்தமாய் இனிதான வாயைக் கொண்டு. (குழல் வாய் வகுளத்தின் ஸாரம் க்ரஹித்து) “ஓடிவந்தென் குழல் மேல் ஒளிமாமலர் ஊதீரோ” (திருவாய்மொழி 6-8-3) என்றும், “வைகுந்த மன்னாள் குழல்வாய் விரைபோல் விண்டு கள்வாரும் மலருளவோ நும் வியலிடத்தே” (திருவிருத்தம் 55) என்றும், மணிவண்டு வகுளத்தின் மலர்மேல் வைகு” (பெரிய திருமொழி 6-6-1 என்றும், ‘நாட்கமழ் மகிழ்மாலை மார்பினன்” (திருவாய்மொழி 4-10-11) என்றும் பரத்வாதி களிலே போக்யதையையும் பரிச்சிந்ந மென்னும்படியாய் பகவதநுபவ ஜநித ப்ரீதியாலே விஸ்த்ருதமாயிருக்கிற ஆழ்வாருடைய போக்யதையை புஜித்து. (தேதெனவென்று ஆளம் வைத்து) வரி வண்டு தேதெனவென்று இசைபாடும்” (பெரிய திருமொழி 4-1-1) என்றும், “யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கம்” (பெரியாழ்.திரு. 4-8-6 என்றும் இப்படி பகவத் பாகவத குணங்களை அனுபவித்து உண்டான செருக்குக்குப் போக்குவீடாக ஆளத்தி வைத்து, (சிறுகாலெல்லியம் போது குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக் கொள்ளப் பாடி) “அறுகால் வரிவண்டுகள் ஆயிரநாமஞ்சொல்லி சிறுகாலைப் பாடும்”, (பெரியாழ்.திரு. 4-2-8) “எல்லியம்போது இருஞ்சிறைவண்டு எம்பெருமான் குணம் பாடும்” (பெரியாழ்- திரு- 4-8-8 “வண்டு குறிஞ்சி மருளிசைபாடும்” (பெரிய திருமொழி 2-1-2), “வண்டினங்கள் காமரங்களிசைபாடும்” (பெருமாள் திருமொழி 8-4), “கந்தாரமந்தேனிசைபாட” (பெரிய திருமொழி 3-8-1), “பண்கொள் தலைக் கொள்ளப் பாடி” (திருவாய்மொழி 3-5-2 என்று காலோசிதமான பண்களிலே பண்கள் தலைமேற் பொரும்படி பாடி, (துன்னிட்டு நெருக்கி நீக்கென்று ) “துன்னிட்டுப் புகலரிய வைகுந்த நீள்வாசல்” (பெருமாள் திருமொழி 4-3), “சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க” (திருப்பள்ளியெழுச்சி 7) என்றபடி திருவாசல்களிலே “நேச நிலைக் கதவம் நீக்கு” திருப்பாவை 16) என்றும் “பொன்னியலுமாடக் கவாடம் கடந்து புக்கு” (பெரியதிருமடல் 73) என்கிறபடியே தகைவறப் புக்கு (வண்டொத்திருண்ட குழலிலே மங்கையற மருவி) “நீ மருவி அஞ்சாதே நின்று” (திருநெடுந்தாண்டகம் 26) என்று பாடுமவர்களாகையாலே ஸங்கையற பகவத் ஸமீப வர்த்தியாய் மருவி (அருளாதயாமென்று ஓடிவந்து வாசமேயூதி) “அருளாத நீரருளி” (திருவாய் 1-4-6) என்றும், யாமிதுவோ தக்கவாறு (திருவாய்மொழி 6-8-4) என்றும், “ஓடிவந்தென் குழல்மேல்’ (திருவாய்மொழி 6-8-3) என்றும், துளவின் வாசமே வண்டு கொண்டு வந்தூதுமாகில்” (பெரிய திருமொழி 11-1-9) என்றும் இத்தலையிலார்த்தியை அவனுக்கறிவித்து அவனுடைய விஷயிகாரத்தை இத்தலைக்குண்டாக்க இத்தலையில் ஸெளமநஸ்யத்தைத் தாங்களநுபவித்து அத்தலையில் போக்யதையாலே இத்தலையை ஆஸ்வஸிப்பித்து (வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்) “கொங்குண் வண்டே கரியாக (பெரிய திருமொழி 9-3-4) என்று ஸாகாக்ர ஸாராஸார க்ராஹியாய் ஷட்பத நிஷ்டராய் பக்ஷத் வயத்தை உடைத்தாகையாலே அப்ரதிஹதக தியான மது கரத்தை முன்னிட்டு ௮ங்கீ கரிப்பானுமாய் ‘தூவியம் புள்ளுடைத் தெய்வவண்டு’ (திருவாய்மொழி 9-9-4) என்று வேதாந்தவேத்யனாய் “தமீஸ்வராணாம் பரமம் மஹேஸ்வர: என்கிற ஸார க்ராஹியாயிருக்கிற ஈஸ்வரனோடே சேர்க்கிற “சேமமுடை நாரதனார்’ (பெரியாழ்.திரு. 4-9-5) என்று பகவத் குணாநுபவ ஜநித ஹர்ஷத்தாலே ந்ருத்த கீத பரனாயிருக்கிற ஸ்ரீநாரத ப்ரஹ்மருஷி, முநிவாஹநரென்கிற திருப்பாணாழ்வார், திருவாய்மொழி பாடுகையே தங்களுக்கு போக்யமாயிருக்கிற தம்பிரான்மார் போல்வாரை வண்டு தும்பி என்னும் என்கிறார். இவர்களை ஸ ப்ரஹ்மசாரிகளென்கிறது அநுபாவ்ய விஷயத்தில் ஐக்யத்தினாலே
153-கண்வலைப்படாதே அகவலைப்பட்டு வளர்த்தெடுப்பார் கையிருந்து தயிர் நெய்யமர் பாலமுதுண்டு ஒருமிடறாய்ப் போற்றி ஒரு வண்ணம் திருந்த நுவலாததுக்கு என்பிழைக்கும் நீயலையே நல்வளம் துரப்பனென்னு மவற்றுக்கும் உகந்து சொல்லெடுத்துச் சோர்ந்தவாறே கற்பியா வைத்த மாற்றம் கைகூப்பி வணங்கப்பாடி ஆலியா அழையா பராபிமாநத்திலே ஒதுங்கின நம்பிக்கன்பர் தலைமீதடிப்பொடி உடையவருடையார் போல்வாரைக் கிளி பூவை குயில் மயிலென்னும்.
(கண்வலைப்படாதே அகவலைப்பட்டு) “மாதரார் கயற்கணென்னும் வலையுள் பட்டு” (திருமாலை 16 என்று இதர விஷயங்களினுடைய த்ருஷ்டியாகிற வலையிலே அகப்பட்டு அநர்த்தப்படாதே “தாமரைத் தடங்கண் விழிகளின் அகவலைப் படுப்பான்” (திருவாய்மொழி 6-2-9) என்றும் “யம் பஸ்யேத்’ என்றும் ப்ரேக்ஷ்யே கஞ்சித் கதாசந என்றும் “அமலங்களாக விழிக்கும் திருவாய்மொழி 1-9-8) என்றும் சொல்லுகிறபடியே ஸகல பாப க்ஷபண நிபுணங்களாய் ஸம்ஸார தாபமெல்லாம் ஆறும்படி செவ்வி குளிர்த்தி நாற்றங்களாலே தாமரைப் பூப்போலே யிருக்கிற பகவத் கடாஷமென்கிற வலையிலே அகப்பட்டு (வளர்த்தெடுப்பார் கையிருந்து) “வளர்த்ததனால் பயன் பெற்றேன் ‘திருநெடுந்தாண்டகம் 14) என்றும் ‘ எடுத்தவென் கோலக் கிளி” நாச்சியார் தி மொழி 5-5) என்றும், மங்கைமார்முன்பென்கையிருந்து” (திருவாய்மொழி 6-8-2 )என்றும் உபலாலித்து ரக்ஷிக்கிறவர்களுடைய கை வஸமாய (தயிர் நெய்யமர் பாலமுதுண்டு) “தயிர்ப்பழம் சோற்றொடு பாலடிசிலும் தந்து” (திருவாய்மொழி 9-5-8) என்றும் “நெய்யமரின்னடிசில் நிச்சல் பாலொடும்” (திருவாய்மொழி 6-8-2) என்றும், “இன்னடிசிலொடு பாலமுதூட்டி” (நாச்சியார் திருமொழி 5-5) என்றும் சொல்லுகிறபடியே அவர்கள் காலோசிதமாகவும், பாகாநுகுணமாகவும் “உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம்” (கீதை 4-34) என்கிறபடியே பகவத் குணங்களை ஆசார்யர்கள் அநுபவிப்பிக்க அநுபவித்து (ஒருமிடறாய்) ‘ஆசார்யர்களோடு ஏக கண்டராய், (போற்றி ஒருவண்ணமித்யாதி) போற்றியானிரந்தேன் புன்னைமேலுறை பூங்குயில்காள்’ திருவாய்மொழி 6-1-6) என்றும், “ஒருவண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை ஒண்கிளியே” திருவாய்மொழி 6-1-7) என்றும், “திருந்தக் கண்டெனக்கொன்றுரையாய் ஒண்சிறு பூவாய் ் (திருவாய்மொழி 6-1-8) என்றும் ஆதரித்துக் கொண்டு போந்த தஸையோடு, “நோயெனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்” திருவாய்மொழி 1-4-8) என்றும், என் பிழைக்கும் இளங்கிளியே யான் வளர்த்த நீயலையே” (திருவாய்மொழி 1-4-7) என்றும் இன்னாதான தஸையோடு, “சொல் பயிற்றிய நல்வளமூட்டினீர் பண்புடையீர்” திருவாய்மொழி 9- -5-8) என்றும், “நாராயணனை வரக் கூவாயேல் இங்குற்று நின்றும் துரப்பன்” (நாச்சியார் திருமொழி 5-10) என்றும் அநாதரித்து தஸையோடு வாசியற வகுத்த விஷயத்தில் நிக்ரஹாநுக்ரஹங்களிரண்டும் அங்குத்தை விநியோக,ப்ரகாரமாகையாலே இவற்றுக்கும் உகந்து, (சொல்லெடுத்துச் சோர்ந்தவாறே) “சொல்லெடுத்துத் தன் கிளியைச் சொல்லே யென்று துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே’ (திருநெடுந்தாண்டம் 13) என்று திருநாமத்தைச் சொல்ல உபதேஸித்து பல ஹாநியாலே ஒரு சொல் சொல்லும் போது மலை யெடுக்குமா போலேயாய் அதுவும் மாட்டாதே பரவஸகாத்ரை யானவாறே (கற்பியா வைத்த மாற்றங் கைகூப்பி வணங்கப்பாடி) “கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்” (திருவாய்மொழி 6-8-8) என்று ஆசார்யருசி பரிக்ருஹீதமான திருநாமங்களை, “திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே” (திருநெடுந்தாண்டகம் 14 என்று அவ்வாசார்யர் தாமே அநுஸந்திக்கும்படி ப்ரீதி ப்ரேரிதராய்ப் பாடி. (ஆலியாவழையா) “குயில் நின்றால்” (கண்ணிநுண்சிறுத்தாம்பு 10) என்றும் “ஆலியாவழையாவரங்கா” (பெருமாள் திருமொழி 3-2 என்றும் சொல்லுகிறபடியே அவ்வநுபவத்தாலே வந்த ஹர்ஷத்தை உடையராய், (பராபிமானத்திலே ஒதுங்கி) “தேவு மற்றறியேன்” (கண்ணிநுண்- 2) என்று ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கின (நம்பிக்கன்பர்) “தென்குருகூர் நம்பிக்கன்பரான (கண்ணிநுண்- 11 ஸ்ரீமதுரகவிகள். (தலைமீதடிப்பொடி) “நாவலிட்டுழிதருகின்றோம் நமன்றமர் தலைகள் மீதே” (திருமாலை 1 என்று திருநாமத்தை அண்டை கொண்ட பலத்தாலே யமாதிகள் தலையிலே அடியிடும்படியான செருக்கை உடையராய், “அடியார்க்கென்னை ஆட்படுத்தாய்’” (அமலனாதிபிரான் 1 என்கிற ஸ்ரீதொண்டரடிப்பொடிகள். (உடையவருடையார் போல்வாரை) இராமானுசனுடையார் என்று சொல்லப்படுகிற ஆழ்வான் ஆண்டான் எம்பார் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் போல்வாரான ஆச்சார்ய பரதந்த்ரராய் இருப்பாரை குயில் மயில் என்னும்)
154-ஆசறு தூவி என்னும் பாஹ்யாப் யந்தர ஸூத்தியோடே திரையுகளும் வ்யஸந வ்யதை யற்றுத் தாய் வாயிலுண்ணும் பிள்ளைக்கிரை தேடி வைகலுடன் மேய்ந்து நுங்கால் பைங்கானமென்று ப்ரஹ்மரதம் பண்ணிக் கொடுத்தவைகொண்டு நல்லபதத்தையும் வேண்டேனென்னும் தனிப்பெரும்பித்தர் நம்முதலிகள் போல்வாரை நாரை கொக்கு குருகு என்னும்
(ஆசறுதூவி என்னும் பாஹ்யாப்யந்தர ஸூத்தியோடே) “ஆசறுதூவி வெள்ளைக் குருகே” (திருவாய்மொழி 6-8-8) என்று ஆசறுகை அந்த:கரண ஸூத்தியாய், “வெள்ளைக் குருகே” (திருவாய்மொழி 6-8-8) என்று பாஹ்ய ஸூத்தியாய், “(அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபி வா ய ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தரஸ் ஸூசி: என்கிற பாஹ்யாந்தர ஸூத்தியை உடையராய், (திரையுகளும் வ்யஸந வ்யதையற்று) வாயும் திரையுகளும்” (திருவாய்மொழி 2-1-1 )என்று “கிரயோ வர்ஷ தாராபி,: ஹந்யமாநா ந விவ்யது: அபி பூயமாநா வ்யஸநைர் யதா தோ கஜ சேதஸ:” (ஸ்ரீபாகவதம் 10-2015) என்று பகவத் விஷயத்திலே நெஞ்சு ஊன்றுகையாலே ஸம்ஸார துஃக்கோர்மிகளானவை அஹமஹமிகயா மேலிடா நின்றாலும், சலியாதே. (தாய் வாயிலுண்ணும் பிள்ளைக்கிரைதேடி) “தாய்வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிறவுண்ணும்” (பெரியதிருமொழி 9-6-1 என்றும், “புள்ளுப்பிள்ளைக்கிரை தேடும்” (பெரியதிருமொழி 5-1-2) என்றும், கொக்கானது தன் பிள்ளைக்கநுகுணமாக இரைதேடி யிடுமாபோலே முறைகெடாமல் அநுபவிக்க விருக்கிற ஸிஷ்யர்களுடைய ப்ரக்ருதிக்கநுகுணமான பகவத் விஷயத்தை ஸகல ஸாஸ்த்ரங்களிலும் ஆராய்ந்து அருளிச்செய்து. (வைகலுடன் மேய்ந்து) _வைகல்பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்’ (திருவாய்மொழி 6-1-1 என்றும் காதல் மென்பெடையோடு உடன்மேயும் கருநாராய்” (திருவாய்மொழி 6-1-2 என்றும் சொல்லுகிறபடியே ஸர்வகாலமும் அநுகூலரான ஸிஷ்ய புத்ர்களோடே பகவத் குணங்களை அநுபவித்து (நுங்கால்கள் பைங்கானம் என்று ப்ரஹ்ம ரதம் பண்ணிக் கொடுத்தவை கொண்டு) “நுங்கால்கள் என் தலைமேல் ‘கெழுமீரோ நுமரோடே” திருவாய்மொழி 9-7-1) என்றும், “பைங்கானம் ஈதெல்லாம் உனதே யாகப் பழன மீன் கவர்ந்துண்ணத் தருவன் (‘திருநெடுந்தாண்டகம் 27 )என்றும் இவர்கள் பக்கல் உப ஜீவித்த ஸிஷ்யர்கள்
உபகார ஸ்ம்ருதியால் ப்ரஹ்ம ரதம் பண்ணி –ஸாரீரமர்த்தம் ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவேதயத் (விஹகேச்வரஸம்ஹிதை) என்று ஆத்மாத்மீயங்களை முகமலர்த்தியோடே கொடுக்கக் கைக்கொண்டு நல்ல பதத்தையும் வேண்டேன் என்னும் தனிப்பெரும் பித்தர் (நல்ல பதத்தால் மனை வாழ்வர்” (திருவாய்மொழி 8-10-11) என்று பாகவத கைங்கர்யத்துக்கு உறுப்பான -கார்ஹஸ்த்யத்தையும் ஸம்ஸார வெக்காயத்தாலுண்டான அச்சத்தாலே இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் (பெருமாள் -4-5) என்று உபேக்ஷிக்குமவருமாய், “அங்கை யாழி அரங்கன் அடியிணைத் தனிப் பெரும் பித்தன்” (பெருமாள்மொழி 4-5) என்று சொல்லப்படுகிற ஸ்ரீகுலஸேகரப் பெருமாள்(நம் முதலிகள் போல்வாரை) நம் முதலிகள் என்கிறது பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை, திருத்தமப்பனார் பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை, திருத்தமையனார் பிள்ளை இவர்கள் போல்வாரை நாரை கொக்கு குருகென்னும்-என்கிறார் –
155- பூண்ட நாள் சீர்க்கடலை யுட் கொண்டு திருமேனி நன்நிறம் ஒத்து உயிரளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து, ஜ்ஞாந ஹ்ரதத்தைப் பூரித்துத் தீங்கின்றி வாழ நிதி சொரிந்து, கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து, வெளுத்தொளித்துக் கண்டுகந்து , பரஸம்ருத்தியே பேறான அன்புகூரும் அடியவர், உறையிலிடாதவர், புயற்கை அருள்மாரி, குணந்திகழ் கொண்டல் போல்வாரை மேகமென்னும்.
(பூண்டநாள் சீர்க்கடலை உட்கொண்டு) “மற்பொன்ற நீண்டதோள் மால் கிடந்த நீள்கடல் நீராடுவான் பூண்டநாளெல்லாம் புகும்” (முதல் திருவந்தாதி 69) என்றும், “சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன்” (பெரியதிருவந்தாதி 69) என்றும் பகவத் விஷயத்திலே அவகாஹித்தவன்று தொடங்கி, கல்யாண குண ஸாகரத்தைப் பருகி (திருமேனி நன்னிறமொத்து) “மேகங்களோ உரையீர்திருமால் திருமேனியொக்கும் யோகங்கள்” (திருவிருத்தம் 32 )என்றும், “என்னுடைய கண்ணன் பால் நன்னிறங்கொள் கார்” (பெரிய திருவந்தாதி 85) என்றும் சொல்லுகிற படியே ஸ்வரூப குணத்தாலும் ரூப குணத்தாலும் அவனோடு ஸாம்யாபத்தியை உடையராய், (உயிரளிப்பான் தீர்த்தகரராய்) “உயிரளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து” (திருவிருத்தம் 32) என்றும் “தீர்த்தகரராமின் திரிந்து” (இரண்டாம் திருவந்தாதி 14) என்றும் “தீதில் நன்னெறிகாட்டி எங்கும் திரிந்து” (பெருமாள் திருமொழி 2-6 என்றும் சொல்லுகிறபடியே லோக ரக்ஷணார்த்தமாக எங்கும் ஸஞ்சரித்து, பகவத் குணங்களை வர்ஷித்து, எல்லாரையும் பரிஸூத்தராக்கி, (ஜ்ஞாந ஹ்ரதத்தைப் பூரித்து) “ஜ்ஞாந ஹ்ரதே, த்யாந ஜலே ராக த்வேஷமலாபஹே, ய: ஸ்நாதி மாநஸே தீர்த்தே, ஸ யாதி பரமாம் கதிம்” என்கிறபடியே ஜ்ஞாநமாகிற தடாகத்தை பகவத் கு,ணங்களாலே பூரித்து (தீங்கின்றி வாழ நிதி சொரிந்து) தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து” (திருப்பாவை 3) என்றும், வாழ உலகினில் பெய்திடாய்” (திருப்பாவை 4) என்றும், “மாமுத்த நிதி சொரியும்” (நாச்சியார் திருமொழி 8-2) என்றும் அநர்த்த கந்த மின்றியே எல்லாரும் உஜ்ஜீவிக்கும்படி பகவத் கு,ணங்களை வர்ஷித்து, (கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து வெளுத்தொளித்துக் கண்டுகந்து பர ஸம்ருத்தியே பேறான) ஒளதார்யாதிஸயத்தாலே பிறருக்குபகரித்து அத்தை நினையாதே ‘மேலும் உபகரிக்கப் பெற்றிலோம் என்று இழவாளராய் எதிர்த்தலையில் ஸம்ருத்தி யைக் கண்டுகந்த அதுலே தங்களுக்குப் பேறாக நிலைத்திருக்க (அன்புகூரும் அடியவர்)ஆங்கரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும்” (பெரிய திருமொழி 2-10-4) அடியவர்களான முதலாழ்வார்கள் (உறையிலிடாதவர்) உருவின வாள் உறையிலிடாதே ஆதி,மத்யாவஸாநம் தேவதாந்தரங்களினுடைய அவரத்வ ப்ரதிபாதந பூர்வமாக பகவத் பரத்வத்தை உபபாதிக்கிற திருமழிசைப்பிரான் (புயற்கை அருள்மாரி) “காரார் புயற்கைக் கலிகன்றி” (பெரிய திருமொழி 3-2-10) என்றும், “அருள்மாரி” (பெரிய திருமொழி 3-4-10) என்றும் ஒளதார்யத்திலே மேக ஸத்ருஸராய்க் கொண்டு க்ருபையை வர்ஷிக்கிற திருமங்கையாழ்வார் “குணந்திகழ் கொண்டல்” (இராமானுச நூற்றந்தாதி 60 )ஆன உடையவர் போல்வாரை மேகம் என்னும் என்கிறார். (இவர்தாம் தூது விடுகையாவது ப்ராப்யருசியால் வந்த விளம்பாக்ஷமத்வத்தாலே ஆசார்ய த்வாரா உபாயோபேய ப்ரார்த்தநை பண்ணுகை. “கைகள் கூப்பிச் சொல்லீர்” (திருவாய்மொழி 6-1-1, “பாதம் கைதொழுது பணியீர் (திருவாய்மொழி 6-1-2), “இரங்கி நீர் தொழுது பணியீர் (திருவாய்மொழி 6-1-3) என்றும், “திருவடிக்கீழ் குற்றேவல்” (திருவாய்மொழி 1-4-2 “வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று” (திருவாய்மொழி 1-4-9) என்றும் சொல்லக் கடவது இறே –
156-தம்பிழையும் சிறந்த செல்வமும் படைத்த பரப்பும் தமரோட்டை வாஸமும் மறப்பித்த க்ஷமா தீக்ஷா ஸாரஸ்ய ஸெளந்தர்யங்களை உணர்த்தும் வ்யூஹ விபவ பரத்வ த்வய அர்ச்சைகள் தூது நாலுக்கும் விஷயம்.
இனிமேல் இவர் இப்படித் தூது விடும்படி முகம் காட்டாதிருக்கைக்கு ஹேதுக்களையும் தூது விடுகைக்குப் பற்றாசையும் அது தனக்கு விஷயத்தையும் அருளிச்செய்கிறார் தம்பிழை என்று தொடங்கி. தம்பிழை யானது மறப்பித்த க்ஷ்மையை உணர்த்தும் ப்ரதம தூதுக்கு விஷயம் வ்யூஹம் என்கிறது ப்ரதம தூதான அஞ்சிறைய மடநாரையிலே (திருவாய்மொழி 1-4). “என்பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு” (திருவாய்மொழி 1-4-7) என்று வ்யாமோஹாதிஸயத்தாலே மேல் விழுந்து விஷயீகரித்தான்; ஸர்வஜ்ஞனாகையாலே தோஷ தர்ஸனம் பண்ணினான்; பிரிந்தவாறே இதுவோ இதினளவென்று பிரிந்திருந்தானத்தனை. எங்களபராதத்தைக் கண்டு கைவிடுமளவன்று. “என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய் சொல்” (திருவாய்மொழி 1-4-7) என்று அவர்க்கு அபராத, ஸஹத்வ மென்பதொரு குணமுண்டு அத்தை யறிவிக்கவே வரும் என்று அபராத, ஸஹத்வம் பற்றாசாக, “கடலாழி நீர்தோற்றி அதனுள்ளே கண்வளரும் அடலாழி யம்மானைக் கண்டக்கால் இதுசொல்லி விடல்” (திருவாய்மொழி 1-4-10) என்று இல்லாத வஸ்துவை உண்டாக்குகைக்காக ஏகார்ணவத்திலே கண் வளர்ந்தருளுகிறவனுக்கு உண்டாக்கின வஸ்துவுக்கு ஒரு குண தாநம் பண்ணலாகாதோ -என்று சொல்லென்று வ்யூஹத்திலே தூது விடுகிறார் –
சிறந்த செல்வமானது மறப்பித்த தீஷையை யுணர்த்தும் இரண்டாவது தூதுக்கு விபவம் விஷயம் விடுகிற விஷயம் என்கிறது வைகல் பூங்கழிவாயில் (திருவாய்மொழி 6-1. “சிறந்த செல்வம்மல்கு திருவண்வண்டுருறையும்” (திருவாய்மொழி-6-1-3- என்றும் ஆர்த்த ரக்ஷணம் பண்ணி வாரா நிற்கச் செய்தே திருவண்வண்டூரிலே போக்யதையிலே கால் தாழ்ந்து நம்மை மறந்திருத்தான் இத்தனை
மாறில் போரரக்கன் மதிள்நீறெழச் செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள்’ (திருவாய்மொழி 6-1-10), “ஏதத் வ்ரதம் மம” (ரா.யு. 18-33 என்று ஆர்த்த ரக்ஷணத்திலே தீக்ஷித்திருப்பானாய் ஆர்த்த ரஷணமொரு தரையானால் அஸ்தமிதாந்யபாவம் என்றிருப்பானொருவன் ஆகையாலே நம்முடைய ஆர்த்தியை அறிவிக்கவே வரும் என்று ஆர்த்த ரக்ஷணம் பற்றாசாக -அரக்கன் மதிள் நீறெழச் செற்றுகந்த ஏறு சேவகனார் (திருவாய்மொழி 6-1-10) என்று பிராட்டி நிமித்தமாக ராவணனுக்கு வாஸ பூமியான லங்கையை பஸ்மஸாத்தாக்கின ஏகவீரனான சக்ரவர்த்தி திருமகனுக்குச் சொல்லுங்கோளென்று விபவத்திலே தூது விடுகிறார் –
படைத்த பரப்பானது மறப்பித்த ஸாரஸ்யத்தை உணர்த்தும் மூன்றாம் தூதுக்கு பரத்வ த்வயம் விஷயம் என்கிறது பொன்னுலகாளீரில் (திருவாய்மொழி 6-8). “முன்னுலகங்க ளெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என் நலங் கொண்ட பிரான் (திருவாய்மொழி 6-8-1 )என்று விபூதி ரக்ஷணத்திலே பராக்கை உடையவனாகையாலே நம்மை மறந்திருந்தான் அத்தனை; “தன் மன்னு நீள்கழல்மேல் தண்டுழாய் நமக்கன்றி நல்கான்” திருவாய்மொழி 6-8-6) என்று ஆஸ்ரிதரோடு ஏக ரஸனாயிருக்கிற ஆகாரத்தை அறிவிக்கவே வரும் என்று ஐகரஸ்யம் பற்றாசாக, ‘ வானவர் கோனைக் கண்டு யாமிதுவோ தக்கவாறு” (திருவாய்மொழி 6-8-4) என்று பரத்வத்திலும், “எங்குச் சென்றாலும் கண்டு” (திருவாய்மொழி 6-8-5) என்றும் “யாவையுமாய் யாவருமாய் நின்ற மாயன்” (திருவாய்மொழி 6-8-7) என்றும் சொல்லுகிறபடியே அத்விதீயமுமாய் நித்யமுமாயிருக்கையாலே பரத்வ ஸத் ருஸமான அந்தர்யாமித்வத்திலும் தூது விடுகிறார். தமரோட்டை வாஸம் மறப்பித்த ஸெளந்தர்யத்தையுணர்த்தும் நாலாம் தூதுக்கு அர்ச்சாவதாரம் விஷயமென்கிறது எங்கானலில் (திருவாய்மொழி 9-7). “தமரோடங்குறைவார்க்கு” (திருவாய்மொழி 9-7-2) என்று தம்மையுகந்த பாகவதரோட்டைச் சேர்த்தியில் இனிமையாலே நம்மை மறந்திருந்தானத்தனை. “பூந்துழாய் முடியார்க்கு” என்று தொடங்கி “தாம் தம்மைக் கொண்டகல்தல் தகவன்று” (திருவாய்மொழி 9-7-9) என்று தம்முடைய ஸெளந்தர்யத்தை அநுபவித்துப் பிரிந்தார் தரிக்க வல்லார்களோ என்று ஸெளந்தர்யத்தை உணர்த்தவே வரும் என்று ஸெளந்த,ர்யம் பற்றாசாக, திருமூழிக்களத்தாருக்கு என்று அர்ச்சாவதாரத்திலே தூது விடுகிறார் –
157-பகலோலக்கமிருந்து , கறுப்புடுத்துச் சோதித்து, காரியம் மந்த்ரித்து, வேட்டையாடி, ஆராமங்களிலே விளையாடும் ராஜநீதி ஆதும் சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்த வென்னும் மூன்று முடிக்குரிய இளவரசுக்கு விண்மீதென்கிற ஐந்திலும் காணலாம்.
இப்படிப் பரத்வாதிகளிலே தூது விட்டால் இவற்றுக்கு விஷய பேதமுண்டோ என்னில், பகலிருக்கை தொடக்கமான ராஜ நீதி போலே ஸ்தல பேதமொழிய வஸ்த்வைக்யத்தினாலே விஷய பேதமில்லை என்கிறார் பகலோலக்கம் என்று தொடங்கி. (பகலோலக்கமிருந்து) ஒரு ராஜாவானால் மந்த்ரிகள் முதலான ஸர்வரும் ஸேவிக்க ஓலக்கமிருந்து, (கருப்புடுத்துச் சோதித்து) நாட்டிலுள்ள குற்றங்குறைகளாராய்கைக்குப் பிறரறியாதபடி கருப்புடுத்து நகரி ஸோதநை வந்து அந்த நாட்டில் ஸிஷை ரக்ஷைகளுக்காக வ்ருத்த, மந்த்ரிகளும் தானுமாய் கார்ய விசாரங்களைப் பண்ணியும், துஷ்ட ஸத்வ நிரஸநார்த்தமாக வேட்டையாடியும், அந்த ஸ்ரமம் தீரப் பூந் தோப்புக்களிலே விளையாடக் கடவதான ராஜநீதி (ஆதும் சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்த வென்னும் மூன்று முடிக்குரிய இளவரசுக்கு) “பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் (நாச்சியார் திருமொழி 11-3 என்றும், “இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர்” (திருவிருத்தம் 33) என்றும் உபய விபூதியிலும் ஏகதேஸமும் ஸேஷியாதபடி தன்னுடைய திவ்யாஜ்ஞையை நடத்துமவனாய், “பாரளந்த பேரரசே எம்விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே (திருவிருத்தம் 80) என்று ஸெளலப்யம் பரத்வம் ப்ரணயித்வம் என்றும் சொல்லப்படுகிற மூன்று முடிக்குரிய வானிளவரசுக்கு (விண்மீதென்ற ஐந்திலும் காணலாம்) “விண் மீதிருப்பாய்” (திருவாய்மொழி 6-9-5) “பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன்” (இரண்டாம் திருவந்தாதி- 81 )என்றும் “வைகுண்டே து பரே லோகே ஸ்ரியாஸார்த்தம் ஜகத்பதி: ஆஸ்தே விஷ்ணுர் அசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ” என்றும் ஒரு பகலான பரம பதத்திலே பிராட்டிமாரும் தானும் நித்ய முக்தர் ஸேவிக்க ஓலக்கமிருந்தும், “இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்‘ (திருவாய்மொழி 6-9-5) என்றும் “யமாத்மா ந வேத என்றும் சொல்லுகிறபடியே வ்யாப்ய பதார்த்தங்களுக்குத் தெரியாதபடி அந்தர்யாமியாய் நின்று ஆராய்ந்தும், “கடல் சேர்ப்பாய்” (திருவாய்மொழி 6-9-5) என்றும், “பாற்கடல் யோக நித்திரை சிந்தை செய்த வெந்தாய்” (திருவாய்மொழி 2-6-5) என்றும் சேதநருடைய ரக்ஷணோபாயங்களை மந்த்ரித்தும் அநந்தரம் சேதந ரக்ஷணார்த்தமாக மண்மீதுழல்வாய்” (திருவாய்மொழி 6-9-5) என்றும் “களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டையாடி வருவான்” நாச்சியார் திருமொழி 14-9) என்றும் ராம க்ருஷ்ணாதி ரூபேண அவதரித்து ஆஸ்ரித விரோதிகளான ராவண கும்ப கர்ணாதி துஷ்ட ஸத்வ நிரஸநமாகிற வேட்டையாடியும், “மலை மேல் நிற்பாய்” (திருவாய்மொழி 6-9-5) என்றும் “ஆராமம் சூழ்ந்த” (சிறியதிருமடல் 71 என்றும் அந்த விரோதி நிரஸநத்தாலுண்டான ஸ்ரமம் ஆறும்படி கோயில் திருமலை முதலான தேஸங்களிலே நிற்கையாலும் காணலாம். ஆக இத்தால் பரத்வாதிகளுக்கு ஸ்தல பேதமொழிய விஷய பேதமில்லை என்கிறார் –
158-தமருகந்த அடியோமுக்கே யென்னும் பின்னானார் வணங்குமிடத்திலே எல்லாம் பூர்ணம்.
இந்த பரத்வாதி களிலுண்டான குணங்களெல்லாம் அர்ச்சாவதாரத்திலே ப்ரகாஸிக்குமென்கிறார் இனிமேல். (தமருகந்த அடியோமுக்கே என்னும் பின்னானார் வணங்குமிடத்திலே எல்லாம் பூர்ணம்) “தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே தமருகந்தது எப்பேர் மற்றப்பேர்’ (முதல் திருவந்தாதி 44) என்று ஆஸ்ரிதருகந்த திரவயங்களே திருமேனியாகவும் அவர்கள் உகந்த திருநாமங்களைத் தனக்குத் திருநாமமாகவும் கொண்டு, “அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே’ (பெரிய திருமொழி 4-9-5) என்றும், “பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக்களத்தானாய்” (திருநெடுந்தாண்டகம் 10) என்றும் ஆஸ்ரிதாதீந ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடையனாய், அவதாரங்களுக்குப் பிற்பாடராகையாலே அநுபவிக்கப் பெறாத வாஸ்ரிதர் இழவாதபடி தன்னை அநுபவிப்பித்துக் கொடு நிற்கிற அர்ச்சாவதாரத்திலே பரத்வாதிகளில் அநுபாவ்யமான குணங்களெல்லாம் ‘ஸர்வம் பூர்ணம் ஸஹோம்’ என்கையாலே பரிபூர்ணமென்கிறார் –
159-வன்பெரு வானக முதலுய்ய இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற திருவாளன் திருப்பதி, வடிவுடை, கடலிடம், கட்கிலீ என்னுமவற்றில் இவள் திறத்தென் கொலோ வென்பிக்கிற வ்யூஹ ஸெளஹார்த்த ப்ரதாநம்.
அதில் எல்லா ஸ்தலங்களிலும் எல்லா குணங்களும் பரிபூர்ணமே யாகிலும்
கோயில் முதலான திவ்ய தேசங்களிலே பரத்வாதிகளுக்கு அஸாதாரணமான ஓரோ குணங்கள் ப்ராதாந்யேந ப்ரகாஸிக்குமென்கிறார் ‘வன்பெரு வானகமுதலுய்ய’ என்று தொடங்கி, “வன்பெரு வானகமுய்ய அமரருய்ய மண்ணுய்ய மண்ணுலகில் மனிசருய்ய” (பெருமாள் திருமொழி 1-10) என்று உபய விபூதியும் உஜ்ஜீவிக்கும்படி “திருவாளன் இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கம்” (பெரியாழ்வார் திருமொழி 4-9-10) என்றும் “தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம் திருப்பதி” (பெரியாழ்வார் திருமொழி 4-9-11) என்றும் சொல்லுகிற ஸ்ரீய:பதியான ஸர்வேஸ்வரன் திருவுள்ளமுகந்து கண் வளர்ந்தருகிற பெரிய திருப்பதியான கோயிலிலே, (வடிவுடைக் கடலிடங் கட்கிலீயென்னுமவற்றில்) “வடிவுடை வானோர் தலைவனே” (திருவாய்மொழி 7-2-10) என்றும், “கடலிடங்கொண்ட கடல் வண்ணா” (திருவாய்மொழி 7-2-7 என்றும், “கட்கலி உன்னைக் காணுமாறருளாய்” (திருவாய்மொழி 7-2-3) என்றும் “காகுத்தா கண்ணனே” (திருவாய்மொழி 7-2-3) என்றும் “திருவரங்கத்தாய்” (திருவாய்மொழி 7-2-4) என்றும் பரத்வாதிகள் ஐந்தும் ப்ரகாஸித்ததேயாகிலும் (இவள் திறத்தென் கொலோ என்பிக்கிற) “இவள் திறத்தென்செய்கின்றாய்” (திருவாய்மொழி 7-2-1 “இவள் திறத்து என் சிந்தித்தாய்’ (திருவாய்மொழி 7-2-4) “என்கொலோ முடிகின்றதிவட்கு” (திருவாய்மொழி 7-2-2) என்று ‘இவள் திறத்து தேவர் செய்தருள நினைத்ததேது? இவள் கார்யமென்னாய் முடியக் கடவது என்று கேட்கையாலே “பாற் கடல் யோக நித்திரை சிந்தை செய்த” (திருவாய்மொழி 2-6-5) என்று ஸர்வருடையவும் ரக்ஷணோபாய சிந்தை பண்ணுகிற வ்யூஹத்தில் ப்ரகாஸிக்கிற ஸெளஹார்த, குணம் ப்ராதாந்யேந ப்ரகாஸிக்குமென்கிறார் –
160-மண்ணோர் விண்ணோர் வைப்பில் போகின்ற ஏழுலகுக்குயிர் பாசம் வைத்த நிகரில் வாத்ஸல்யம் உஜ்ஜ்வலம்.
(மண்ணோர் விண்ணோர் வைப்பில்) “கண்ணாவான் என்றும் மண்ணோர்
விண்ணோர்க்கு” (திருவாய்மொழி 1-8-3) என்றும், “தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு” (நான்முகன் திருவந்தாதி 45) என்றும் உபய விபூதி யிலுள்ளார்க்கும் ஆபத் தநமாய் நிற்கிற திருமலையில் நிலையிலே (போகின்றவேழுலகுக்குயிர்) “போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய்தந்தை உயிராகின்றாய்” (திருவாய்மொழி 2-6-10 என்றும், “கண்ணாயேழுலகுக்கு உயிராய எங்கார் வண்ணனை‘ (பெரிய திருமொழி 1-9-10) என்றும் சொல்லுகிறபடியே ஸகல காலமும் ஸர்வாத்மாக்களுக்கும் ஸர்வவித பந்துவுமாய்க் கொண்டு ஸர்வர்க்கும் ஆத்ம பூதனாயிருக்கிற அந்தர்யாமித்வத்தில் ப்ரகாஸிப்பதாய் (பாசம் வைத்த நிகரில் வாத்ஸல்யம் உஜ்ஜ்வலம்) ‘ என் கண் பாசம் வைத்த” (திருவாய்மொழி 3-3-4) “நிகரில் புகழாய்” (திருவாய்மொழி 6-10-10) என்று அத்யந்தம் தண்ணியனாயிருக்கிற என் பக்கலிலே ஸங்கத்தைப் பண்ணினான் என்னும் ஒப்பிலாத புகழை உடையவனே என்று சொல்லுகிற வாத்ஸல்யம் “வேங்கடத்தெழில் கொள் சோதி” (திருவாய்மொழி 3-3-2 என்றும் “நிலவும் சுடர் சூழொளிமூர்த்தி” (திருவாய்மொழி 6-10-7) என்றும் “”பரஞ்சுடர்ச்சோதி” (திருவாய்மொழி 3-3-4) என்றும் சொல்லுகிறபடியே உஜ்ஜ்வலமாய்க் கொண்டு பிரகாஸிக்கும் என்கிறார் –
161-உபய ப்ரதாந ப்ரணவமான உறை கோயிலில் எத்தேவு மென்னும் பரே ஸத்வம் பொலியும்.
(உபய ப்ரதாந ப்ரணவமான உறை கோயிலில்) “ப்ரஹ்மணேத்வா மஹஸ ஓமித்யாத்மாநம் யுஞ்ஜீத” என்றும் “ஒங்காரோ பகவாந் விஷ்ணு: என்றும் சொல்லுகிறபடியே ப்ரணவம் ஜீவேஸ்வரர்களிருவர்க்கும் வாசகமாய்க் கொண்டு உபயருடையவும் ப்ராதாநீயம் தோற்ற விருக்கிறாப் போலே பொலிந்து நின்ற பிரானுடையவும் ஆழ்வாருடையவும் திவ்யாஜ்ஞை இருபுரிந்து நடக்கையாலே உபயருடையவும் ப்ராதாந்யம் தோற்றுவதாய் “அவன் மேவி உறைகோயில்” (திருவாய்மொழி 4-10-2 என்று ஆழ்வாரை விஷயீ கரிக்கலான தேஸமாகையாலே பரமபதத்தில் உள் வெதுப்புத் தீர்ந்து அவன் வர்த்திக்கிற திருநகரியில் நிற்கிற நிலையிலே (எத்தேவு மென்னும் பரே ஸத்வம் பொலியும்) ‘உறுவதாவதெத்தேவும் எவ்வுலகங்களும் மற்றும் தன்பால் மறுவில் மூர்த்தயோடு (இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே” (திருவாய்மொழி 4-10-10) என்றும், திருக் குருகூரதனுள் பரன்” (திருவாய்மொழி 4-10-3) என்றும் “திருக்குருகூரதனுள் ஈசன்” (திருவாய்மொழி 4-10-4) என்றும் “பொலிந்து நின்ற பிரான்” (திருவாய்மொழி 4-10-5) என்றும் சொல்லுகிறபடியே ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்தமும் தனக்கு ஸரீரமாமிடத்தில் அப்ராக்ருத விக்ரஹத்தோடொக்கும்படி தான் ஸரீரியா யிருக்கிற பரத்வத்தில் ப்ரகாஸிக்கிற நியந்த்ருத்வ குணம் அபி வ்ருத்தமாம் என்கிறார் –
162-வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீலமேனியின் ருசிஜநக விபவ லாவண்யம் பூர்ணம். (வைஷ்ணவ வாமநத்தில்) வைஷ்ணவ வாமனமான திருக்குறுங்குடியில் நிற்கிற நிலையிலே (நிறைந்த நீலமேனியின்) “நீலமேனியும் நான்கு தோளும் என்நெஞ்சம் நிறைந்தனவே” (திருவாய்மொழி 5-5-6) என்று, இவர் திருவுள்ளத்திலே ப்ரகாஸிக்கும்படியான காளமேக நிபாஸ்யமமான விக்,ரஹத்தினுடைய (ருசி ஜநக விபவ லாவண்யம் பூர்ணம் ) “செல்கின்ற தென் நெஞ்சமே” (திருவாய்மொழி 5-5-1 என்று ருசியைப் பிறப்பிப்பதாய் “பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்‘ (ரா.௮.3-29 , “ரூபவாந் ஸுபக ஸ்ரீமாந் கந்தர்ப இவ மூர்த்திமாந்” (ரா. ஸு.34-30) “ஸாக்ஷாந் மந்மத மந்மத,:” (ஸ்ரீபாகவதம் 10-32-2 என்றும் சொல்லுகிறபடியே ஸஜாதீயரையும் மடலெடுக்கும்படி பண்ண வற்றான விபவத்தில் ப்ரகாஸிக்கிற “நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி (திருவாய்மொழி 5-5-7) என்கிற லாவண்யம்-நம்பி என்கையாலே பூர்ணம்” என்கிறார் –
163-ருசி விவஸர்க்குப் பாதமே சரணாக்கும் ஒளதார்யம் வானமாமலையிலே கொழுந்து விடும்.
(ருசி விவஸர்க்கு) இப்படி லாவண்யத்தாலே பிறராலும் நிவர்த்திப்பிக்க வொண்ணாதபடி அந்த ருசியாலே பரவஸரானவர்களுக்கு, (பாதமே சரணாக்கும் ஒளதார்யம்) “ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்’ என்று திருவடிகளை உபாயமாகப் பண்ணித் தந்த ஒளதார்யம் (வானமாமலையிலே கொழுந்து விடும்) சிரீவரமங்கலநகரிலே நிற்கிற வானமாமலை பக்கலிலே “வானவர் கொழுந்து” (திருவாய்மொழி 5-7-7) என்கிறபடியே கொழுந்து விட்டு அபிவ்ருத்தமாம்” என்கிறார்-
164-களை கணற்றாரை யுருக்கும் மாதுர்யம் குடமூக்கிலே ப்ரவஹிக்கும்.
(களை கணற்றாரை) “நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்” (திருவாய்மொழி 5-7-1) என்கிறபடியே தம்முடைய பக்கலிலும் கைம்முதலற்று, “களைவாய் துன்பம் களையாதொழிவாய் களை கண் மற்றிலேன்” (திருவாய்மொழி 5-8-8) என்று ரக்ஷகாந்தர ப்ரதிபத்தி நிவ்ருத்தி பிறந்தாரை (உருக்கும் மாதுர்யம்) நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே ஆராவமுதே” (திருவாய்மொழி 5-8-1 என்று சிதிலராக்கும்படியான மாதுர்யம். (குடமூக்கிலே ப்ரவஹிக்கும்) குடமூக்கில் கோயிலாக் கொண்டு” (இரண்டாம் திருவந்தாதி 97) என்கிற கும்பகோணத்திலே ப்ரவஹிக்கும் என்கிறார் –
165-மெலிவிலும் சேமம் கொள்விக்கும் க்ருபை தென்னகரிலே நித்யம்.
(மெலிவிலும் சேமங் கொள்விக்கும் க்ருபை தென்னகரிலே நித்யம்) கீழ்ச் சொன்ன மாதுர்யாதிகளைக் கிட்டி அநுபவிக்கப் பெறாமையாலே துக்க ஸீலராய் வைகலும் வினையேன் மெலிய” (திருவாய்மொழி 5-9-1) என்று மெலிவாரையும் “அடிமேல் சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன்” (திருவாய்மொழி 5-9-11 என்றும் “தொல்லருள் நல்வினை” (திருவாய்மொழி 5-9-10) என்றும் “சேமங்கொள் தென்னகர்’ (திருவாய்மொழி 5-9-11) என்றும் சொல்லுகிறபடியே அவனே ரக்ஷகனென்று அத்யவஸிக்கலாம்படி யிருக்கிற க்ருபை தென்னகரான திருவல்லவாழிலே நிற்கிற நிலையிலே தொன்மை பழமையாய் அத்தாலே நித்யமென்கிறார்–
166-வ்யவஸாயஜ்ஞர் ரக்ஷண ஸ்தைர்யம் பம்போத்தர தேஸஸ்த்தம்.
(வ்யவஸாயஜ்ஞர் ரக்ஷணஸ்தைர்யம்) “சரணே சரண்” (திருவாய்மொழி 5-10-11 என்கிற அத்யவஸாயத்தை “ஜ்ஞாந ஸம்பந்ந:’ என்றறிகைக்கீடான ஸர்வஜ்ஞதையை உடையவனுடைய, “ஏறு சேவகனார்’ (திருவாய்மொழி 6-1-10) என்று அவர்களுடைய ரக்ஷணத்தில் “மித்ரபாவேந ஸம் ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந” (ரா.யு18-3, “ஸக்ருதேவ”(ரா.யு18-33) இத்யாதிகளிலே ப்ரகாஸிப்பதாய் அநுகூலராலும் குலைக்க வொண்ணாத படியான ஸ்தைர்யம் (பம்போத்தர தேஸஸ்தம்) “தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டுர்’ (திருவாய்மொழி 61-10) என்று விரஜைக் கரை யென்னுமா போலே திருப் பம்பை யாற்றுக்கு வடகரையிலே திருவண்வண்டூரிலே ஸுஸ்திரம் என்கிறார் –
167-விளம்ப விரோத மழிக்கும் விருத்த கடநா ஸாமர்த்யம் நன்னகரிலே விஸ்தீர்ணம்.
(விளம்ப விரோத மழிக்கும் விருத்த கடநா ஸாமர்த்யம்) இப்படி வ்யவஸிதராயிருக்கச் செய்தேயும் ஈஸ்வரன் முகம் காட்டாமல் விளம்பிக்கையாலே “போகு நம்பீ” (திருவாய்மொழி 6-2-1 என்றும் “கழகமேறேல் நம்பீ” (திருவாய்மொழி 6-2-6) என்றும் இவர்களுக்கு ப்ரணய ரோஷத்தாலே வந்த விரோதத்தை, “அழித்தா யுன் திருவடியால்” (திருவாய்மொழி 6-2-9) என்கிறபடியே அழிக்கும் படியான ‘நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்” (திருவாய்மொழி 6-3-1 என்று தொடங்கி -தன்னில் தான் சேராத தாரித்ர்யம் ஐஸ்வர்யம் என்கிற விருத்தங்களைத் தனக்கு விபூதியாமிடத்து இவற்றினுடைய விரோதங்களைத் தன் பக்கலிலே சேர்த்துக் கொள்ளும்படியான அ கடித க டநா ஸாமர்த்யம் நன்னகரான திரு விண்ணகரிலே நிற்கிற நிலையிலே “பல்வகையும் பரந்த பெருமான்” (திருவாய்மொழி 6-3-1 என்று பரக்கக் காணலாம் –
168-௧டித கடக விகடநா பாந்தவம் அவ்வூரிலே த்விகுணம்.
(கடிதகடநா பாந்தவம்) “தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர்’(திருவாய்மொழி 6-5-5) என்று பகவத் விஷயத்திலே கடிப்பித்த கடகரான மாதா பிதாக்களோடும் உமக்காசை யில்லை விடுமினோ” (திருவாய்மொழி 6-5-1, நம்மைக் கை வலிந்து என்ன வார்த்தையும் கேட்குறாள்” திருவாய்மொழி 6-5-7 என்று பொருந்தாமையைப் பிறப்பித்த அவனுடைய பாந்தவம் “தேவபிரானையே தந்தை தாய் (திருவாய்மொழி-6-5-11) என்று அவனுடைய பரம பாந்தவம் (அவ்வூரிலே த்விகுணம்.) அவ்வூர் திரு நாமம் (திருவாய்-6-5-10) என்று திருவில்லித்தொலை மங்கலமான அவ்வூரிலே-தேவபிரான் அரவிந்த லோசனன் என்றும் நின்றிருந்துறையும்” (திருவாய்மொழி 6-5-10) என்றும் இரட்டைத் திருப்பதி யாகையாலே இரட்டித்திருக்க்கும் என்கிறார் –
169-கைம்முதலிழந்தாருண்ணும் நிதியின் ஆபத் ஸகத்வம் புகுமூரிலே ஸம்ருத்தம்.
(கைம்முதலிழந்தார் உண்ணும் நிதியின் ஆபத்ஸகத்வம்) ” ஏலக்குழலி இழந்தது சங்கே (திருவாய்மொழி 6-6-1 என்று இப்பாலுண்டான ப்ராப்யாபாஸ் ப்ராபகாபாஸங்களைக் கைவிட்டவர்களுக்கு, “உண்ணுஞ் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” (திருவாய்மொழி 6-7-1 என்று தாரக போஷக போக்யங்கள் தானேயாம்படியான “வைத்தமாநிதி” (திருவாய்மொழி 6-7-1 என்று ஒருகாலும் தொலையாதபடியான நிதியாயிருக்கிறவனுடைய ஆபத் ஸகத்வம் (புகுமூரிலே ஸம்ருத்தம்) “புகுமூர் திருக்கோளூர் (திருவாய்மொழி 6-7-1 என்று இவர்களுக்கு ப்ரவேஷ்டவ்யமான திருக்கோளூரிலே நிற்கிற நிலையிலே “செல்வம் மல்க” (திருவாய்மொழி 6-7-4, 7) என்று ஸம்ருத்த மாயிருக்கும் என்கிறார்-
170-சென்று சேர்வார்க்கு உசாத் துணை யறுக்கும் ஸெளந்தர்யம் மாநகரிலே கோஷிக்கும்.
(சென்று சேர்வார்க்கு உசாத் துணை யறுக்கும் ஸெளந்தர்யம்) “தென்திருப்பேரையில் சேர்வன் சென்றே” (திருவாய்மொழி 7-3-8) என்று இப்பாலுள்ளவர்களைக் கைவிட்டுச் சென்று ப்ரவேஸிக்குமவர்களுக்கு “என் நெஞ்சினாரும் அங்கே யொழிந்தார் உழந்தினியாரைக் கொண்டென்னுசாகோ” (திருவாய்மொழி 7-3-4) என்றும், “முழங்கு சங்கக்கையன் மாயத்தாழ்ந்தேன்” (திருவாய்மொழி 7-3-4 என்றும் உசாத் துணையான நெஞ்சையும் அபஹரிக்கும்படியான “செங்கனிவாயின்” (திருவாய்மொழி 7-3-3) இத்யாதியில் சொல்லுகிற ஸெளந்தர்யத்தை “தென்திருப்பேரெயில் மாநகர்” (திருவாய்மொழி 7-3-9) என்று மஹாநகரமான திருப்பேரையில் நிற்கிற நிலையிலே “எழுந்த நல்வேதத்தொலி நின்றோங்கு” (திருவாய்மொழி 7-3-4) என்கிறபடியே அவ்வூரில் ஸாமவேத, கோஷந்தானே சொல்லா நின்ற தென்கிறார் –
171-ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆரந்த வ்ருத்தி நீணகரிலே.
(ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆநந்த வருத்தி) “தீவினை உள்ளத்தின் சார்வல்ல இத்யாதி, “என்றுமென் சிந்தனை” (திருவாய்மொழி 7-10-9) என்று அவித்யாதிகள்போய் பரமபத ப்ராப்தியிலே ஒருப்பட்டாலும் த்ரிவித கரணங்களாலும் ஸர்வரும் வந்தாஸ்ரயிக்கும்படியான திருவாறன் விளையிலே புக்கு அடிமை செய்ய வேணும் என்னா நின்றதென் நெஞ்சானது என்று தன் பக்கல் ப்ரவணமான சித்தத்தை “சிந்தை மற்றொன்றின் திறத்ததல்லாத் தன்மை” (திருவாய்மொழி 7-10-10 என்று பேருங்கூட அஸஹ்யமாம்படி பரத்வத்தையும் உபேக்ஷிக்கும்படி பண்ணவற்றான, “இன்பம் பயக்க எழில்மலர் மாதரும் தானும் இவ்வேழுலகை இன்பம் பயக்கவினிதுடன் வீற்றிருந்து” (திருவாய்மொழி 7-10-1 என்கிற ஆநந்த வ்ருத்தி நீணகரான திருவாறன்விளையிலே காணலாமென்கிறார் –
172-ஸாதரரைப் பரிசழிக்கும் சேஷ்டித ஆஸ்சர்யம் குளத்தே கொடிவிடும். (ஸாதரரைப் பரிசழிக்கும் சேஷ்டிதாஸ்சர்யம்] “கூடச் சென்றேன்‘ இத்யாதி- ஆதரித்து” கூடச்சென்றேன்’ என்று இப்படி ஆதரமுடையாரை ‘பல்வளையார் முன் பரிசழிந்தேன்‘ (திருவாய்மொழி 8-2-4) என்று பரிசழிக்கும்படியான மாயக் கூத்தென்கிற சேஷ்டிதாஸ்சர்யம் (குளத்தே கொடிவிடும்) தென் குளந்தையிலே “மாடக் கொடி” (திருவாய்மொழி 8-2-4) என்று கொடி யெடுத்து ப்ரகாஸிக்கும் என்கிறார்.
173-ஸ்ரமமனம் சூழும் ஸெளகுமார்ய ப்ரகாமம் ஆய்ச்சேரியிலே.
(ஸ்ரமமனம் சூழும் ஸெளகுமார்ய ப்ரகாமம்) பணியாவமரர் இத்யாதி. “திருநீலமணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே (திருவாய்மொழி 8-3-6) என்று அந்த சேஷ்டிதத்தாலுள்ள ஸ்ரமம் இவர் நெஞ்சிலே சூழ வரும்படியான ஸெளகுமார்யம் “ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்” (திருவாய்மொழி 8-3-3) என்று அப்ராக்ருத விக்ரஹத்தினுடைய ஸெளகுமார்ய ப்ரகாஸம்-
174-மஹாமதிகள் அச்சம் கெட்டு அமரும் சவ்ர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும்.
(மஹாமதிகள் அச்சம் கெட்டமரும் சவ்ர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும்) “ஸம்ஸ்ப்ருயந்நாஸநம் சவ்ரே: விதுர: ஸ: மஹாமதி:” (பார. உத்). இப்படி ஸர்வஸக்திக்கும் பரியும்படியான மஹாமதிகள் ஸெளகுமார்ய அநுஸந்தாநத்தாலே இவனுக்கு எங்ஙனே என்ன தீங்கு வருகிறதென்று அஞ்சுகிறவிவர் “எங்கள் செல் சார்வே” (திருவாய்மொழி 8-4-1) என்று எங்களைப் போல்வார்க்கு நிர்பயஸ்த்தா மென்று அச்சம் கெட்டு “நான்முகனை அமர்ந்தேனே (திருவாய்மொழி 8-4-10) என்று இவர் அமர்ந்து ஸுஸ்திரராம்படியான “வார்கடாவருவி” (திருவாய்மொழி 8-4-1) என்று தொடங்கி, குவலயாபீட நிரஸநாதி களாலுண்டான (சவ்ர்யாதிகள்) சவ்ர்யாதிகள் திருச்செங்குன்றூரிலே திருச்சிற்றாற்றிலே ஆறு என்கிற ஸமாதி யாலே கொழிக்கும்-என்கிறார்.
175-ஸாத்ய ஹ்ருதிஸ்த்தனாயும் ஸாதநம் ஒருக்கடுக்கும் க்ருதஜ்ஞதாகந்தம்-தாயப் பதியிலே-(ஸாத்ய ஹ்ருதிஸ்தனாயும் ஸாதநமொருக்கடுக்கும் க்ருதஜ்ஞதா கந்தம் தாயப்பதியிலே )திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர் (திருவாய்மொழி 8-6-2) என்று ஸாத்யமான ஆழ்வாருடைய திருவுள்ளம் தனக்கு இருப்பிடமாக உடையனாயிருக்கச் செய்தேயும் இவ்வா ழ்வார் திருவுள்ளத்தைப் பெறுகைக்கு ஸாதநமான திருக்கடித்தானத்தையும் -அடுத்துப் பிடித்து வர்த்திக்கும்படியான (க்ருதஜ்ஞதா கந்தம் தாயப்பதியிலே) திருக்கடித்தான நகரம் “தனதாயப்பதி” (திருவாய்மொழி 8-6-8) என்று அவனுக்கு தாயப்ராப்தமான திருக்கடித்தானத்திலே என்கிறார். கடித்தானம் வாசப் பொழில் என்றும் சொல்லுகையாலே கந்தமென்கிறது.
176-அவகாஹித்தாரை அநந்யார்ஹமாக்கும் நாயக லக்ஷணம் வளம் புகழுமூரிலே குட்டமிடும்.
(அவகாஹித்தாரை அநந்யார்ஹமாக்கும் நாயக லக்ஷணம் வளம்புகும் ஊரிலே குட்டமிடும்) “அப்பன் திருவருள் மூழ்கினளே” (திருவாய்மொழி 8-9-5) என்று இப்படித் தன்னுடைய க்ருபையிலே மறு நனைய மூழ்கினாரை “அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்” (திருவாய்மொழி 8-9-1) என்றும், “திருப்புலியூர் புகழன்றி மற்று பரவாளிவள்’ (திருவாய்மொழி 8-9-9) என்றும் “மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே” (திருவாய்மொழி 8-9-10) என்றும் சொல்லுகிறபடியே அநந்யார்ஹராக்கும் அவயவ ஸோபை, ஆபரண ஸோபை, தொடக்கமான நாயக லக்ஷணம்; “திருப்புலியூர் வளம் புகழும்” (திருவாய்மொழி 8-9-3) என்று இவர் கொண்டாடும்படியான ஐஸ்வர்யத்தை யுடைத்தான திருப்புலியூரிலே; குட்ட நாடு என்கையாலே குட்டமிடும் என்கிறார் –
177-போக்ய பாக த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம்.
( போக்ய பாக த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம்) பசித்த புருஷன் அந்நம் பக்வமாமளவும், நிற்பது, இருப்பது, கிடப்பதாமாபோலே இப்படி அநந்யார்ஹராகையாலே போக்யமான ஆழ்வார்க்கு பரமபக்தியாகிற பாகம் பிறக்குமளவும் போக்தாவான ஸர்வவேஸ்வரனுக்குண்டான த்வரை “தெளிந்த என் சந்தை” என்கிற சந்தைக்கு முன்னில் “புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று” (திருவாய்மொழி 9-2-4) என்கிற திருப்பதி மூன்றிலும் கிடப்பது இருப்பது நிற்பதாகையாலே ப்ரகடமாய்த் தோற்றுமென்கிறார் –
178-போகத்தில் தட்டுமாறும் ஸீலம் காட்கரையிலே கரையழிக்கும்.
(போகத்தில் தட்டுமாறும் சீலம் காட்கரையிலே கரையழிக்கும்) இப்படி போக்யமான ஆழ்வாரோடே கலந்து பரிமாறுமிடத்து, “ஆட்கொள்வானொத்து என் உயிருண்ட மாயன்” (திருவாய்மொழி 9-6-7) என்றும், “ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது” (திருவாய்மொழி 9-6-9) என்றும், “தான் என்னை முற்றப் பருகினான்” (திருவாய்மொழி 9-6-10) என்றும், அத்தலை யித்தலையாய் ஸேஷ ஸேஷி பாவம் மாறாடும்படியான ஸீலம் திருக்காட்கரையிலே நிற்கிற நிலையிலே, கரை என்ற ஸமாதியாலே இருகரையுமழியப் பெருகும் என்கிறார் –
179-மஹாத்மாக்கள் விரஹம் ஸஹியாத மார்தவம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் –
“தமரோடங்குறைவார்’ (திருவாய்மொழி 9-7-2) “என்றும் “ஸக்ருத்வதாகாரேத்யாதி, க்ஷணேபி தே யத் விரஹோ அதி துஸ்ஸஹ (ஸ்தோத்ர ரத்நம் 55 -என்றும் சொல்லுகிறபடியே தன்னுடைய விக்ரஹத்தை ஒருகால் காண வேணுமென்கிற ஆசையாலே போக மோக்ஷங்களையும் த்ருணீகரித்திருக்கிற மஹாத்மாக்களோட்டை விரஹம் தனக்கு அதிதுஸ்ஸஹமாம்படியான அவனுடைய மார்தவம், அதாகிறது நெஞ்சில் மென்மை. மூழிக்களத்து விளக்கினை” (பெரியதிருமடல் 129) என்கிற திருமூழிக்களத்திலே நிற்கிற நிலையிலே, களம் என்கிற ஸமாதியாலே கூடு பூரிக்கும் என்கிறார் –
180-பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணுபோதாந்ருஸம்ஸ்யம் நாவாயிலே நிழலெழும்.
(பிரிந்த துன்பவித்யாதி ) “அன்புடையாரைப் பிரிவுறுநோய் துன்பக் கடல் புக்கு” நாச்சியார் திருமொழி 5-4) என்றும், ” யஸ்த்வயா ஸஹ ஸஸ்வர்க்கோ, நிரயோ யஸ்த்வயா விநா” (ரா.௮.30-18) என்கிறபடியே தன்னைப் பிரிகையாகிற துக்க ஸாகரத்திலே அழுந்துமவர்களை “ஸம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம் விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்” (விஷ்ணு தர்மம் என்கிறபடியே அக்கரைப் படுத்துவதான விஷ்ணு போதத்தினுடைய, “ஆவாவடியான் இவனென்றருளாய்” (திருவாய்மொழி 9-8-7) என்கிற ஆந்ருஸம்ஸ்யம் திருநாவாயிலே நிற்கிற நிலையிலே நிழலெழும், “கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ்” (திருவாய்மொழி 9-8-10) என்று சோலையைச் சொல்லுகையாலே நிழலெழும் என்கிறார் –
181-ஸரண்ய முகுந்தத்வம் உத்பலாவதகத்திலே ப்ரஸித்தம்.
“சரணமாகும் தனதாளடைந்தார்க் கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்” (திருவாய்மொழி 9-10-5) என்று இப்படி ஸரண்யனான அவனுடைய மோக்ஷ ப்ரதத்வம் உத்பலாவதகே திவ்யே விமாநே புஷ்கரேக்ஷணம் சவ்ரிராஜமஹம் வந்தே, ஸதா ஸர்வாங்க ஸுந்தரம்” (திருக்கண்ணபுரம் ஸ்தலபுராணம்?) என்று திருக்கண்ணபுரத்திலே உத்பலாவதக மென்னும் பேரையுடைத்தான திவ்ய விமாநத்தில் நிற்கிற நிலையிலே ப்ரஸித்தம் என்கிறார் –
182-மார்க்க பூந்து ஸைத்யம் மோஹநத்தே மடுவிடும்.
இப்படி மோக்ஷ ப்ரதனாமிடத்தில் முக்தி மார்க்கமான அர்ச்சிராதி மார்க்கத்துக்குத் துணையான “ ஆத்தன் தாமரையடியன்றி மற்றிலம் அரணே” (திருவாய்மொழி 10-1-6) என்றும் -ஆப்த பந்துவானவனுடைய சுரிகுழல் கமலக் கண்கனிவாய் காளமேகத்தை யன்றி மற்றிலம் கதியே” (திருவாய் -10-1-1-) என்றும்,அவனடி நிழல் தடமன்றி யாமே (திருவாய்மொழி 10-1-2) என்றும் ஸாம்ஸாரிகமான தாபத்தை ஆற்றவற்றான ஸைத்யம் மோஹந க்ஷேத்ரமான திருமோகூரிலே, மரகத மணித்தடம்” (திருவாய்மொழி 10-1-8) என்கிற ஸமாதியாலே மடுவிடும் என்கிறார் –
183-ஸஸைன்ய புத்ர ஸிஷ்ய ஸாத்ய ஸித்த பூ ஸுரார்ச்சநத்துக்கு முக நாபி பாதங்களை த்வார த்ரயத்தாலே காட்டும் ஸாம்யம் அநந்தஸயநத்திலே வ்யக்தம்.
(ஸஸைந்யேத்யாதி,) (ஸஸைந்ய) “அமரர்கோனர்ச்சிக்கின்று அங்ககப் பணி செய்வர் விண்ணோர்” (திருவாய்மொழி 10-2-6) என்கிற ஸேநா ஸஹிதரான ஸேநை முதலியாராகிற ஸாத்யர், (புத்ர) உலகுயிர் தேவும் மற்றும் படைத்த” (திருவாய்மொழி 10-2-7) என்று சொல்லுகையாலே புத்ரர்களான ப்ரஹ்மாதி தேவதைகளாகிற ஸித்தர், (ஸிஷ்யர்) “நடமினோ நமர்களுள்ளீர் அனந்தபுரநகர் புகுதுமின்றே” (திருவாய்மொழி 10-2-8) என்று இவர் உபதேஸிக்கக் கேட்ட ஸிஷ்யர்களாகிற பூஸுரர் என்கிற இவர்கள் மூவரும் அர்ச்சிக்கைக்கு முக நாபி பாதங்களை திருவாசல் மூன்றாலும் காட்டுகையாலே நித்ய ஸூரிகளோடு நித்ய ஸம்ஸாரிகளோடு வாசியற முகம் கொடுக்கும் ஸாம்யம் திருவனந்தபுரத்தில் கண் வளருகிற கிடை யழகிலே ஸுவ்யக்தமாகக் காணலாமென்கிறார்–
184-மோக்ஷதாநத்தில் ப்ரணத பாரதந்த்ர்யம் வளம்மிக்க நதியிலே கரைபுரளும்.
“அருள்தருவா னமைகின்றான் அது நமது விதி வகையே’” (திருவாய்மொழி 10-6-1 என்றும், “விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே” திருவாய்மொழி 10-6-3) என்றும், இப்படி ஸர்வ ஸமனானவன் ஆஸ்ரிதர்க்கு மோக்ஷத்தைக் கொடுக்குமிடத்தில் அவர்கள் விதித்தபடியே செய்யக் கடவோமென்கிற ஆஸ்ரித பாரதந்த்ர்யம் “வளம்மிக்க வாட்டாற்றான்’ (திருவாய்மொழி 10-6-3) என்று திருவாட்டாற்றிலே நிற்கிற நிலையிலே, ஆறென்கிற ஸமாதியாலே கரை புரளும் என்கிறார் –
185-த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல்மிகு பொழிலிலே தழைக்கும்.
(த்யாஜ்யதே ஹவ்யாமோஹம்) ‘ மாய வாக்கை இதனுள் புக்கு” (திருவாய்மொழி 10-7-3) என்று ஆழ்வாருக்கு த்யாஜ்யமான தேஹத்திலே புகுந்து திருமாலிருஞ் சோலை இத்யாதிப்படியே தேஸ விஸேஷத்திலே பண்ணுமாதரத்தையும் இதிலே பண்ணி இவர் “மங்கவொட்டு” (திருவாய்மொழி 10-7-10) என்று கால் கட்டும்படி அவனுக்குண்டான வ்யாமோஹம் (மருள்கள் கடியும் மயல்மிகு பொழிலிலே தழைக்கும்) “மருள்கள் கடியும் மணி மலை” (திருவாய்மொழி 10-7-7) என்று ஸர்வருடையவும் அஜ்ஞாநத்தை ஸவாஸநமாகப் போக்குமதாய் ‘ மயல்மிகு பொழில்சூழ் மாலிருஞ்சோலை” (திருவாய்மொழி 2-10-3) என்று போக்த்தாக்கள் அடைவு கெடும்படி பிச்சேற்ற வற்றாயிருக்கிற தெற்குத் திருமலையில் நிற்கிற நிலையிலே; சோலை என்கிற ஸமாதியாலே தழைக்கும் என்கிறார்-
186-அங்கீ,கரிக்க ௮வகாஸம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெருககரிலே பேர் பெற்றது, “திருமாலிருஞ்சோலை மலை என்றேனென்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்” (திருவாய்மொழி 10-8-1 என்று இவரை விஷயீகரிக்க அவகாஸம் பார்த்து மடிமாங்காயிட்டும் விஷயீகரிக்க வேணு மென்கிற ஸ்வாமித்வம் “பெருநகரரவணை மேல்” (பெரியதிருமொழி 5-9-3) என்கிற திருப்பேர் நகரில் கண் வளர்ந்தருளுகிற விடத்தே ப்ரஸித்தம் என்கிறார் –
187-இவற்றில் ப்ராவண்யம் இவள் பரமே யென்ன வுண்டாய் ஷோடஸ கலா பூர்ணமான சந்த்ர மண்டலம் போலே பதினாறு திருநஷத்ரம் நிரம்பினவாறே தேவ போக்யமானவதில் அம்ருதம் போலன்றிக்கே என்னாத் தமிழர் இசைகாரர் முதற்பத்தர் வானவர் என்னம்மான் பார்பரவென்னும்படி ஸேஸ்வர விபூ,தி போக்யமான பாலோடமுதன்ன மென்மொழி முகம் செய்தது.
(இவற்றில் ப்ராவண்யம் இவள்பரமே என்ன வுண்டாய்) இத் திருப்பதிகளில் நிற்கிற நிலையில் இவர்க்கு உண்டான ப்ராவண்யம் “பெருமான் மலையோ திஸ்ருவேங்கடமென்று கற்கின்ற வாசகம் இவள் பரமே” (திருவிருத்தம் 60) என்று நிஷேதகரும் ஆஸ்சர்யப்படும்படி உண்டாய்-பதினாறு கலையும் நிறைந்தால் சந்த்ரன் பூர்ணனாமாப் போலே இவரும் திருவவதரித்தவன்று தொடங்கி …… த்தோடே யிருந்து பகவதநுபவத்தைப் பண்ணி அந்த பகவதநுபவத்தாலே பூர்ணராய்க் கொண்டு பதினாறு திருநக்ஷத்ரம் நிரம்பினவாறே அந்த சந்த்ரன் பக்கலுண்டான அம்ருதம் தேவர்களுக்கே போக்யமாகையாலே அதிக்ருதாதிகாரமுமாய் அந்த சந்த்ரனுக்கு வ்ருத்தி ஷயமுண்டாகையாலே பூர்ணனான காலத்திலல்லது கிடையாமையாலே ஸக்ருத் ஸேவ்யமுமாய் தேஹத்தைப் பூண் கட்டுமதாகையாலே ஸம்ஸார வர்த்தகமாயிருக்கும் அது போலன்றிக்கே -(என்னாத் தமிழர் இத்யாதி மென்மொழி முகம் செய்து ) என்நாவிலின் கவி (திருவாய் -3-9-1) என்னுமா போலே தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் (திரு -1-5-11) என்றும் தூ முதல் பத்தருக்குத் தான் தன்னைத் சொன்ன (திருவாய் -7-9-3) என்றும் கேட்டாரார் வானவர்கள் (திரு 10-6-11) என்றும்-தென்னா வென்னுமென்னம்மான்” (திருவாய்மொழி-10-7-5) என்றும் பார்பரவின்கவி’ (திருவாய்மொழி 7-9-5) என்றும் சொல்லுகிறபடியே தம்மோடு பிறரோடு ஈஸ்வரனோடு வாசியற ஸர்வஜந போக்யமாகையாலே ஸர்வாதிகாரமுமுமாய் அந்த சந்த்ரனைப் போலே விருத்தி க்ஷயங்களின்றிக்கே காதல் கடல்புரைய” (திருவாய்மொழி 5-3-4) ‘ காதல் (கடலின்) மிகப் பெரிது”(திருவாய்மொழி 7-3-6) “அதனில் பெரிய என்னவா” (திருவாய்மொழி 10-10-10) என்கையாலே விருத்தியேயாய், ஸதா போக்யமுமாய், “உயிரின் மேலாக்கை
ஊனிடையொழிவிக்குமே” (திருவாய்மொழி 3-2-11 என்று மாம்ஸாஸ்ருகாதி மயமான ஸரீர ஸம்பந்தத்தை யறுத்து ஸம்ஸார நிவர்த்தகமாமளவே யன்றிக்கே மேலை வைகுந்தத்து இருத்தும்” (திருவாய்மொழி 8-6-11) என்று அப்ராக்ருத திவ்யதேஸ ப்ராப்தியையும் பண்ணித் தரவற்றான “பாலோடமுதன்னவாயிரம்(திருவாய்மொழி 8-6-11) என்றும் “அமுதமென்மொழி‘ (திருவாய்மொழி 6-5-2) என்றும் சொல்லுகிற படியே அம்ருத ரூபமாய் அதிலும் அதிமார்த்தவத்தை யுடைத்தான சொற்களாலானவை முகோத்கமாயிற்றின’ என்கிறார் –
188-நீர் பால் நெய்யமுதாய் நிரம்பின வேரி நெளிக்குமா போலே பரபக்த்யாதி மய ஜ்ஞாநாம்ருதாப்தி நிமிகிற வாய்கரை மிடைந்து மொழி பட்டு அவாவிலந்தாதி என்று பேர் பெற்றது.
இப்படி போக்யமான ஸப்த ப்ரவ்ருத்தி மாத்ரமே யன்றிக்கே பரபக்தி ப்ரேரிதமாய்க் கொண்டு அந்த ஸப்த ஸந்தர்ப்ப ரூபமான ப்ரபந்தமாய்க் கொண்டு அவதரித்ததென்கிறார். (நீர்பால் நெய்யமுதாய்) நீர் பாலாய், பால் நெய்யாய், நெய் அம்ருதமாய், அவ் வம்ருதத்தாலே நிரம்பினதோர் ஏரி நெளிக்குமா போலே, ஜ்ஞாநம் பக்தியாய், பக்தி பரபக்தியாய், பரபக்தி பரஜ்ஞாநமாய், பரஜ்ஞாநம் பரமபக்தியாய் “அச்யுத பக்திதத்த்வ ஜ்ஞாநாம்ருதாப்தி, பரிவாஹ ஸூபை ர் வசோபி:,” (ஸ்தோத்ர ரத்நம் 3) என்கிறபடியே அந்த பரபக்த்யாதிகளாலே நிறைந்திருப்பதொரு ஜ்ஞாநாம்ருதாப்தியானது (நிமிகிற வாய்க்கரை மிடைந்து) பரீவாஹாபேககை பிறந்து “நிமியும் வாய்” (திருவாய்மொழி
6-5-2) என்கிற வாய்க்கரையை “மிடைந்த சொல் தொடை” (திருவாய்மொழி 1-7-11)
என்கிறபடியே நெருக்கி அதிக்ரமித்து “மொழிபட்டோடும் கவியமுதம்”(திருவாய்மொழி 8-10-5 என்று சொற்களாய்க் கொண்டு ப்ரவஹித்து (அவாவிலந்தாதிஎன்று பேர் பெற்றது) ‘அவாவிலந்தாதிகளால் இவையாயிரமும்” (திருவாய்மொழி-10-10-19 என்று பரபக்த்யாதிகளாலே “சொல்லப்பட்ட ஆயிரம்” (திருவாய்மொழி-8-10-11) என்று லோகத்திலே ப்ரஸித்த மாய்த்தென்கிறார் –
189-மனம்செய் எல்லையில் ஞான வின்பத்தை நின்மலமாக வைத்தவர் ஞானப் பிரானை ஞானத்து வைம்மினென்றவிது தத்வ விவேக, நித்யத்வாநித்யத்வ, நியந்த்ருத்வ, ஸெளலப்ய, ஸாம்ய, அஹங்கார, இந்த்ரியதோ,ஷபல, மந ப்ராதா,ந்ய, கரண நியமந ஸுக்ருதி பேத, தேவாஸுரவிபாக, விபூதி யோக, , விஸ்வருபதர்ஸந, ஸாங்கபத்தி, ப்ரபத்தி த்வை வித்யாதிகளாலே அன்றோதிய கீதா ஸமம் என்னும்.
தத்வதர்ஸிகளான இவர் பக்கலிலே இப்படி பகவத் குணாநுபவ ஜநித ப்ரீதி ப்ரகர்ஷ பலாத்காரத்தாலே அவதீர்ணமான இப்ரபந்தத்தில் பரதிபாதி தமான அர்த்தங்கள், தர்மஸம்ஸ்தாபநார்த்தமாக அவதரித்து கிருஷ்ணன் உபய ஸேநைக்கும் நடுவே அர்ஜுந வ்யாஜத்தாலே அருளிச் செய்த ஸ்ரீகீதையிலே ப்ரதிபாதிக்கப்பட்ட தத்த்வ விவேகாதிகளான அர்த்தங்களாகை யாலே இந்த ப்ரபந்தம் ஸ்ரீகீதையோடொக்கும் என்கிறார். (மனஞ் செய் எல்லையில் ஞான வின்பத்தை நின்மலமாக வைத்தவர்) “எல்லாப்பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்துன்பெருமை” (திருவாய்மொழி 1-5-2) என்று ஸர்வத்துக்கும் காரணமாகா நிற்கச் செய்தே தான் நிர்விகாரமாய் “எல்லையில் ஞானத்தன் ‘ (திருவாய்மொழி 3-10-8 என்று அபரிச்சேத்யமாயிருக்கிற அவனுடைய ஸங்கல்ப ரூப ஜ்ஞாநத்தையும் “சூழ்ந்ததனில் பெரிய சுடர் ஞான வின்பமேயோ’ (திருவாய்மொழி 10-10-10) என்று ப்ரக்ருதி புருஷர்களிரண்டும் தனக்குள்ளேயாம்படி வியாப்தமாய், தான் அபரிச்சேத்யமாய் விஸத தமமாய் அநந்த ரூப ஜ்ஞாநமாய் இருக்கிறவனுடைய ஸ்வரூபத்தையும் “நிறைந்த ஞானமூர்த்தியாயை நின் மலமாக வைத்து” (திருவாய்மொழி 4-7-7) என்கிறபடியே அந்த ஸ்வரூப ஸ்வபாவங்களிரண்டும் ஜ்ஞாநமாகையாலே பரிபூர்ண ஜ்ஞாந ஸ்வருபனாயிருக்கிறவனை விஸத தமமாக ஸாக்ஷாத்கரிக்கையாலே தத்த்வ தர்ஸிகளா யிருக்கிற இவர், (ஞானப் பிரானை ஞானத்து வைம்மின் என்ற இது) “இருங் கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்றெல்லாயவர்க்கும் ஞானப் பிரானை அல்லாலில்லை நான் கண்ட நல்லதுவே” (திருவிருத்தம் 99) என்று உபக்ரமித்து “உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே” (திருவாய்மொழி 4-10-9) என்று ப்ரளயார்ணவ மக்நையான ஸ்ரீபூமிப் பிராட்டியை மஹா வராஹமாய்க் கொண்டு எடுத்தவனுமாய், ஸ்லோக த்வய முகத்தாலே சரமோபாயத்தை வெளியிடுகையாலே ஜ்ஞாநோபகாரகனு மாயிருக்கிறவனை யொழிய ஸர்வர்க்கும் உஜ்ஜீவந ஹேதுவாயிருப்பதொன்று இல்லையான பின்பு அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேஸத்தை உங்கள் மாநஸ ஜ்ஞாநநத்துக்கு விஷய மாக்குங்கோளென்று இப்படி உபபாதிக்கிற இப்ரபந்த,ம் (தத்த்வ விவேகம்) திருத் தேர்த்தட்டிலே “விஸ்ருஜ்ய ஸமரஞ்சாபம் ஸோகஸம்விக்ந மாநஸம்” (கீதை 1-47) என்று பந்து ஹத்யாபீதனாய்க் கொண்டு ஸோகிக்கிற அர்ஜுநனைக் குறித்து அவனை “ஸ்திதோஸ்மி’ (கீதை 18-73) என்னப் பண்ணுகைக்காக “நத்வேவாஹம் ஜாது நாஸம் நத்வம் நேமே ஐநாதி பா: ந சைவ ந ப.விஷ்யாம: ஸர்வேவயமத:பரம்” (கீதை 2-12) என்று நீயும் நானும் இந்த ராஜாக்களும் முன்பாக இல்லாமலுமில்லை, மேலும் இல்லாமலுமில்லை என்று ஜீவ பரபேதம், ஜீவர்களுக்கு பரஸ்பர பேதம், “தேஹிநோஸ்மிந் யதா, தேஹே கெளமாரம் யெளவநம் ஜரா ததா, தேஹாந்தர ப்ராப்தி: தீரஸ் தத்ர ந முஹ்யதி” (கீதை 2-13) என்றித்யாதிகளாலே ப்ரக்ருதி புருஷர்களுக்குண்டான பேதமாகிற தத்வ விவேகம்; (நித்யத்வாநித்யத்வ நியந்த்ருத்வ) “அச்சேத்யோயமதாஹ் யோயம் அக்லேத்யோ ஸோஷ்ய ஏவ ச நித்ய: ஸர்வகதஸ்தாணுரசலோயம் ஸநாதந:” (கீதை 2-24) என்றும், “வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய நவாநி க்ருஹ்ணாதி நரோபராணி ததா, ஸரீராணி விஹாய ஜீர்ணாந்யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ’ (கீதை 2-22, “நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:’ (கீதை 2-16) இத்யாதிகளாலே சேதநாசேதநங்களினுடைய நித்யத்வா நித்யத்வம் “பூமிராபோநலோவாயு: கம் மநோ புத்திரேவ அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதி ரஷ்டதா வைன் வலவன் ப்ரக்ருதிம் வித்தி மே பராம் தீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜெகத் (கீதை7-4,5) என்று சேதநா சேதநங்களை ஸாரீரமாக வுடையனாய்க் கொண்டு, “ஸர்வஸ்யசாஹம் ஹ்ருதி, ஸந்நிவிஷ்டோ மத்தஸ்ம்ருதி: ஜ்ஞாநமபோஹநஞ் (கீ தை 15-1) என்றும், “ஈஸ்வரஸ் ஸர்வ பூதாநாம் ஹ்ருத்தே ஸோரஜ “ந திஷ்டதி ப்ராமயந் ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா (கீதை 18-61 )என்றும் ஸ்வ ஸரீரபூதமான ஸர்வ ஜந்துக்களினுடைய ஹ்ருதய ப்ரதேஸத்திலே நின்று ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் தானே பண்ணுவிக்கையாகிற அவனுடைய நியந்த்ருத்வம்; (ஸெளலப்ய) “தஸ்யாஹம் ஸுலப: பார்த்த நித்ய யுக்தஸ்ய யோகி ந:” (கீதை 8-14) என்றும், “பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே (கீதை 19-8) என்றித்யாதியாலும் பக்திமான்கள் நிமித்தமாகவும் அவதார ப்ரயுக்தமாகவும் உண்டான அவனுடைய ஸெளலப்யம்; (ஸாம்ய) ‘ஸமோஹம் ஸர்வபூதேஷ- ந மேத்வேஷ்யோஸ்தி ந ப்ரிய:” (கீதை 9-29 என்று அவனுடைய ஸர்வபூத ஸமத்வம்; (அஹங்காரதோஷ) “ப்ரக்ருதே: க்ரியமாணா நிர்குணை: கர்மாணி ஸர்வ: அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே” (கீதை 3-27) என்று அஹங்கார தோஷம்; (இந்த்ரிய பல) “இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந:” (கீதை 2-60) என்று இந்த்ரிய ப்ராபல்யம் (மந:ப்ராதாநய) “அஸம்ஸயம் மஹாபாஹோ மநோ துர் நிக்ரஹம் சலம் அப்யாஸேந து கெளந்தேய வைராக்யேண ச க் ருஹ்யதே” (கீதை 6-35) இத்யாதிகளிலே சொல்லப்பட்ட மந:ப்ராதா நீயம்; (கரணநியமந) “தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர: ஸர்வேந்த்ரியாணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச (கீதை 2-61 இத்யாதிகளாலே சொல்லப்பட்ட கரண நியமநம்; (ஸூக்ருதி பேத) “சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோர்ஜுந ஆர்த்தோ ஜிஜ்ஞாஸ ரர்த்தார்த்த ஜ்ஞாநீ ச பரதர்ஷப,” (கீதை 7-16) என்று சொல்லப்பட்ட ஸுக்ருதி பேதம்; (தேவாஸுரவிபா ௧) “த்வெள பூதஸர்கெள, லோகேஸ்மிந் தைவ ஆஸ ஏவ ச தை வீ ஸம்பத் விமோக்ஷாய நிபந்தா யாஸுரீமதா” (கீதை 16-6) இத்யாதிகளாலே சொல்லப்பட்ட தேவாஸுர விபாகம்; (விபூதி யோக,) “ப்ராதாந்யத: குரு ஸ்ரேஷ்ட, நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே” (கீதை 10-10), “ஆதித்யாநாம் அஹம் விஷ்ணு: ஜ்யோதிஷாம் ரவிரம்ஸூமாந்’ (கீதை 10-2) இத்யாதிகளாலே சொல்லப்பட்ட விபூதி யோகம்; (விஸ்வரூபதர்ஸந) “பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூத விஸேஷ ஸங்காந் ப்ரஹ்மாண மீஸம் கமலாஸநஸ்த்தம் ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச தீப்தாந் (கீதை 11-15) இத்யாதியாலே சொல்லப்பட்ட விஸ்வரூப தர்ஸநம்; (ஸாங்க பக்தி) மந்மநாபவ மத்பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே” (கீதை 18-65) என்று சொல்லப்பட்ட அங்க, ஸஹிதையான பக்தி; (ப்ரபத்தி த்வைவித்யம்) தைவீஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா மாமேவயே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே” (கீதை 7-10), “தமேவ ஸரணம் ௧ச்ச ஸர்வபாவேந பாரத (கீதை 18-62) இத்யாதியாலே சொல்லப்பட்ட அங்க ப்ரபத்தி, “ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய” (கீதை 18-66) இத்யாதி யாலே சொல்லப்பட்ட ஸ்வதந்த்ர ப்ரபத்தியாகிற இவ்வர்த்த, விஸேஷங்களை ஸ்ரீ கீதா முகத்தாலே உபபாதித்தாப்போலே,
“அடியேனுள்ளான் உடலுள்ளான்” (திருவாய்மொழி 8-8-2 என்று ஜீவ பர பேதமும், ஜீவர்களுக்கு பரஸ்பர பேதமும், “சென்று சென்று பரம்பரமாய் யாதுமின்றித் தேய்ந்தற்று நன்று தீதென்றறிவரிதாய் நன்றாய் ஞானங்கடந்ததே” (திருவாய்மொழி 8-8-5) என்று தேஹத்துக்கும் ஜீவனுக்கும் உண்டான பேதமுமாகிற தத்த்வ விவேகத்தையும், “மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்” (திருவாய்மொழி 1-1-2), “உள்ளதும் இல்லதும்”(திருவாய்மொழி 1-2-8) என்று ஆத்மாவினுடையவும் அசித்தினுடையவும் நித்யத்வாநித்யத்வங்களையும், “உடல் மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன்’ (திருவாய்மொழி 1-1-7) என்றும், “கரந்தசிலிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்” (திருவாய்மொழி 1-1-10) என்றும் அந்த சேதநாசேதநங்கள் ஸரீரமாகத் தான் ஸரீரியாய்க் கொண்டு “நின்றனர்” (திருவாய்மொழி 1-1-6) இத்யாதி யாலே ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஸ்வாதீநமாம்படி இருக்கிற அவனுடைய நியந்த்ருத்வத்தையும், பத்துடை யடியவர்க்கு எளியவன் (திருவாய்மொழி 1-3-1) என்றும், “பல பிறப்பாய் எளிவருமியல்வினன் ‘ (திருவாய்மொழி 1-3-2) என்றும் ஆஸா லேஸமுடையவர்க்கு ஸுலபன் என்றும், அவதரித்து ஸுலபனாயென்றும் சொல்லுகிற அவனுடைய ஸெளலப் யத்தையும், “முற்றவும் நின்று” (திருவாய்மொழி 1-2-6) என்று ஆஸ்ரயணீயத்வே ஸர்வஸமனாய் நின்றானென்று சொல்லப்பட்ட அவனுடைய ஸாம்யத்தையும், ‘ நீர் நுமதென்றிவை வேர்முதல் மாய்த்து” (திருவாய்மொழி 1-2-3) என்று அஹங்கார தோஷத்தையும், “விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன்” (திருவாய்மொழி 7-1-6) என்று இந்த்ரிய பலத்தையும், “என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ” (திருவாய்மொழி 3-6-3) என்று மந: ப்ராதாந்யத்தையும், “உள்ள முரை செயல் உள்ள விம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து” (திருவாய்மொழி 1-2-8) என்று கரண நியமநத்தையும், ‘பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்” (திருவாய்மொழி 4-1-1) என்கையாலே ஆர்த்தனாகிற ப்,ரஷ்டைஸ்வர்ய காமன், இறுகலிறப்பென்கையாலே ஜிஜ்ஞாஸுவான கேவலன், ‘குணங்கொள் நிறைபுகழ்மன்னர்’ (திருவாய்மொழி 4-1-8) இத்யாதியாலே அர்த்தார்த்தியான அபூர்வைஸ்வர்ய காமன் “திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ” (திருவாய்மொழி 4-1-1) இத்யாதியாலே சொல்லப்பட்ட ஜ்ஞாநியாகிற பகவச் சரணார்த்தி என்கிற ஸுக்ருதி பேதத்தையும், “தேவர்கள் தாமும் புகுந்து அரக்கரசுரர் பிறந்தீருள்ளீரேல்” (திருவாய்மொழி 5-2-5) என்று தேவாஸூர விபாகத்தையும், புகழு நல்லொருவனென்கோ திருவாய்மொழி 3-4-1) என்று தொடங்கி ‘நல்குரவும் செல்வும்” (திருவாய்மொழி 6-3-1 “மாயா வாமனனே” (திருவாய்மொழி 7-8-1 என்கிற திருவாய்மொழிகளிலே சொல்லப்பட்ட விபூதி யோகத்தையும், “நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்களிரண்டாய்ச் சிவனாய் அயனானாய்” (திருவாய்மொழி 6-9-1) என்று விங்வரூப தர்ஸனத்தையும், ‘வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறிகளைகட்டு உணக்குமின் பசையற அவனுடை உணர்வுகொண்டுணர்ந்தே” (திருவாய்மொழி 1-3-5) என்றும், “நன்றெனநலம் செய்வது அவனிடை” (திருவாய்மொழி 1-3-7) என்றும் “மேவித் தொழுதுய்ம்மினீர்கள் வேதப்
புனிதவிருக்கை நாவில் கொண்டச்சுதன் தன்னை ஞானவிதி பிழையாமே” (திருவாய்மொழி 5-2-9) என்று அங்க ஸஹிதமான பக்தி யோகத்தையும், “சரணமாகும் தனதாளடைந்தார்க் கெல்லாம்” (திருவாய்மொழி 8-10-5) என்றும் “மற்றொன்றில்லை” (திருவாய்மொழி 9-1-7) என்கிற பாட்டிலும் சொல்லப்பட்ட ப்ரபத்தி த்வைவித்யத்தையும்
ஆக இவ்வர்த்த விஸேஷங்களை ப்ரபந்தத்திலே ப்ரதிபாதிக்கக் காண்கையாலே “மாயன் அன்றோதிய வாக்கை” (நான்முகன் திருவந்தாதி 71) என்கிற ஸ்ரீ கீதையோடொக்கும் என்கிறார்.
190-அது தத்த்வோபதேஸம்; இது தத்த்வதர்ஸி வசநம்.
ஆக இதுக்குக் கீழ் ஸ்ரீ கீதையோ டொக்கத் திருவாய்மொழிக்கு ஸாம்யம் சொல்லிற்று. இனி மேல் இதற்குண்டான வக்த்ரு வைலக்ஷண்யமும் ப்ரபந்தோதய ஹேது வைஷம்யமும் உபதேஸத்தனுடைய பல வைஷம்யமும், ப்ரபந்த ப்ரதிபாத்ய அர்த்த வைஷம்யமும் சொல்லுகிறது. (அது தத்வோபதேஸம்) அந்த ஸ்ரீகீதை பரதத்த்வ பூதனான க்ருஷ்ணன் தானே உபதேஸித்தது. இந்தப்ரபந்தம் (தத்த்வதர்ஸி வசநம்) “தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா உபதேஷயந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிந: தத்த்வ தர்ஸிந:” (கீதை 4-34) என்று இது அவனும் ஆப்த தமனாக அருளிச் செய்த தத்வதர்ஸிகளான இவருடைய வார்த்தை. “அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஐகத: ப்ரபவ: ப்ரலயஸ் ததா மத்த: பர தரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய” (கீதை 7-6 என்று ஸ்வ வைபவத்தைத் தானே அருளிச்
செய்கையாலே ஸ்வப்ரமம்ஸை போலிருக்கையாலே மந்த மதிகளுக்கு விஸ்வஸநீயமல்ல. “பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே” (திருவாய்மொழி 4-10-5) என்று மத்யஸ்த்தரான இவர் அருளிச் செய்த இது ஆப்த வாக்யமாகையாலே விஸ்வஸநீயம். ஆகை யிறே அவன் தான் தத்த்வதர்ஸிகளை ப்ரஸம்ஸித்து அவர்களுபதேஸிக்குமதுவே ஜ்ஞாநம் என்கிறது –
191-அது ஐவரை வெல்வித்துப் பதிற்றைந்திரட்டி படச் சொன்னது; இது நாடாகத் தோற்றோமென்று ஐயைந்து முடிப்பான் சொன்னது.
(அது ஐவரை வெல்வித்துப் பதித்தைந்திரட்டி படச் சொன்னது) அந்த ஸ்ரீ கீதை “த்ரெளபத்யாஸ் ஸஹிதாஸ் ஸர்வே நமஸ் சக்ருர் ஜநார்த்த நம்” (பார.ஆர. 192-56) என்று ராஜ்யகாங்க்ஷிகளாய் வந்து ஸரணம் புகுந்த பாண்டவர்களைவரையும் “அன்றைவரை வெல்வித்த” (திருவாய்மொழி 4-6-1) என்கிறபடியே “ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண” (8. தை 1-32) என்ற இவனை” ஸ்திதோஸ்மி‘ ‘ (கீதை 18-73) என்னப் பண்ணி யுத்தத்திலே விஜயிகளாக்கி, “பதிற்றைந் திரட்டிப் படை வேந்தர் பட (பெரியதிருமொழி 2-4-4) என்று அவர்களுக்கு விரோதிகளான துர்யோதநாதிகளை முடிக்கைக்காகச் சொன்னது. (இது நாடாகத் தோற்றோம் என்று ஐயைந்து முடிப்பான் சொன்னது) இந்த ப்ரபந்த,ம் “தோற்றோம் மடநெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு” (திருவாய்மொழி 2-1-7) என்று வகுத்த ஸேஷியானவன் பக்கலிலே ஸர்வரும் தோற்றோம் என்று அநந்யார்ஹ ஸேஷ பூதராம்படி ஐயைந்தையும் முடிப்பான் சொன்னது. அந்த ஸேஷத்வ விரோதியான ப்ரக்ருதி ப்ராக்ருத ஸங்கத்தையும் ஆத்மாவினுடைய ஸ்வாதந்த்ர்யத்தையும் அறுத்து ஸம்ஸார பந்தத்தையும் முடிப்பான் சொன்னது ஆகையாலே அது பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் ஹேது. இது மோக்ஷ ஏக ஹேதுவாயிருக்கும் என்கிறார் –
192-அங்கு நம்பி சரணென்று தொடங்கி முடிவில் அப்ரிய மென்றது; இங்கு பரமே யென்றிழிந்து பொலிக வென்று உகந்தது.
(அங்கு நம்பிசரண் என்று தொடங்கி முடிவில் அப்ரியமென்றது) அதினுடைய உபக்ரமத்திலே “நாந்தகமேந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயற்காகி’ (பெரியாழ்வார் திருமொழி 1-9-4) என்று ‘ ஸிஷ்யஸ்தேஹம் ஸமாதி, மாம் த்வாம் ப்ரபந்நம்” (கீதை 2-7) என்று ஸிஷ்யனான அர்ஜுநனுடைய அநுவர்த்தந பூர்வகமாகையாலே ப்ரீதியோடே உபக்ரமித்து, “நூநமஸ்ரத்ததா நோஸி துர்மேதஸ்சாஸி பாண்டவ அபுதத்யா யந்ந ஜாநீஷே தந்மே ஸுமஹத ப்ரியம்” (அனுகீதை) என்று அவன் பக்கலிலே அவிஸ்வாஸத்தைக் காண்கையினாலே அப்ரீதியோடே தலைக் கட்டிற்று. (இங்கு பரமே என்றிழிந்து பொலிக என்றுகந்தது) இவருபதேஸிக்கிற விடத்தில் தாந்தராய் ஸமித் பாணிகளாய்க் கொண்டு அநுவர்த்திப்பாரின்றிக்கே விமுகரா யிருக்க க்ருபையாலே உபதேஸிக்கையாலே உபதேஸோபக்ரமத்திலே “ஏபாவம் பரமே” (திருவாய்மொழி 2-2-1) என்று அப்ரீதியோடே உபக்ரமித்து, அவ்வுபதேஸம் கேட்டு ஜகத்தாகத் திருந்துகையாலே அப்படித் திருந்தினவர்களைக் கண்டு “பொலிக பொலிக” (திருவாய்மொழி 5-2-1) என்று மங்களாஸாஸநம் பண்ணி உகப்போடே தலைக் கட்டிற்று. ஆகையாலே உபதேஸம் ஸப்ரயோஜநமாய்த்தது இதிலே என்கிறார் –
193-அதில் ஸித்த தர்மவிதியே; இதில் வித்யநுஷ்டாநங்கள்.
(அதில் ஸித்த தர்ம விதியே) அந்த ஸ்ரீகீதைக்கு தாத்பர்யார்த்தம் “மாமேகம் ஸரணம் வ்ரஜ” (கீதை 18-66 என்று ஸித்த தர்மவிதாந மொன்றுமே யாய்த்து; (இதில் வித்யநுஷ்டாநங்கள்) (இந்த ப்ரபந்தத்திலே “திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ” (திருவாய்மொழி 4-1-1 என்று விதியும் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே (திருவாய்மொழி 6-10-10) என்று அநுஷ்டாநமும் இரண்டும் காணலாம். இத்தாலே இப் ப்ரபந்தம் விதி ப்ரகாஸகமான மாத்ரம் அன்றிக்கே அநுஷ்டாந ப்ரகாஸகமும் என்கிறார் –
194-பகவன் ஞானவிதி பணிவகையென்று இவரங்கீ காரத்தாலே அதுக்கு உத்கர்ஷம்
அந்த கீதை தனக்கும் உத்கர்ஷம் இவருடைய பரிக்ரஹத்தாலே என்கிறார் (பகவன் ஞானவிதி பணிவகையென்று) “அம் பகவன் வணக்குடைத் தவநெறி” (திருவாய்மொழி 1-3-5) என்றும் “அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே (திருவாய்மொழி 5-2-9) என்றும் “பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் கமல மலர்ப்பாதம்” (திருவாய்மொழி 10-4-9) என்றும் ப்ராமாணிகரான இவர் இத்தை இப்படி ப்ரமாணமாக அங்கீ கரிக்கையாலே யாய்த்து அந்த ஸ்ரீகீதைக்கு உத்கர்ஷம் உண்டாய்த்து என்கிறார் -அல்லது புத்த முநியாயும் கபிலமுநியாயும் சொன்ன பெளத்த ஸாஸ்த்ரமும் ஸாங்க்ய ஸாஸ்த்ரமும் அவன் சொன்னது யாகிலும் அந்த ஸாஸ்த்ரங்களுக்கு ப்ராமாணிக பரிக்ரஹமில்லாமையாலே இறே அவை அப்ரமாணமாய்த்து-
195-வேத வேத்ய வைதிகோபதேஸம் ஆவித்யரளவிலே; அஜ்ஞர் ஜ்ஞாநீகள் ஜ்ஞாந விஸேஷ யுக்தர் ஸர்வஜ்ஞனென்னாமல் இவர் திருத்துவர். இனி மேல் அவனுடைய ௨பதேஸம் ஸங்குசித விஷயம்; இவருடைய உபதேஸம் அஸங்குசித விஷயமென்கிறார் வேத வேத்யனென்று தொடங்கி. (வேத வேத்ய வைதிகோபதேஸம் ஆவித்யரளவிலே) வேதமும் வேத வேத்யனும் வைதிகரான ருஷிகளுமுபதேஸிப்பது ‘ஆவித்ய: ப்ராக்ருத: ப்ரோக்த:” என்று அவித்யா ஸம்பந்திகளாய் அத ஏவ தத்த்வ ஹித புருஷார்த்த, ஜ்ஞானமின்றிக்கே இருக்கிற ஸம்ஸாரிகளுக்கே. அவ்வளவன்றிக்கே இவர் அஜ்ஞர் ஜ்ஞாநிகள் ஜ்ஞாந விஸேஷ யுக்தர் ஸர்வஜ்ஞனென்னாமல் திருத்துவர். அஜ்ஞரான ஸம்ஸாரிகளோடு தத்வ ஹித புருஷார்த்தங்களில் விஸத ஸிக்ஷை பிறந்த முமுஷுக்களோடு பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை விஸத தமமாக ஸாக்ஷாத்கரித்து அநுபவிக்கும்படி ஸாத்யதஸையிலே நிற்கிற ஜ்ஞாந விஸேஷ யுக்கரோடு “நைவ கிஞ்சித் பரோக்ஷம் தே” (ஜிதந்தே ஸ்தோத்ரம்) என்றும், யோ வேத்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யக்ஷேணே ஸதா ஸ்வத:” என்றும் சொல்லுகிறபடியே ஸர்வத்தையும் ஸர்வகாலமும் ப்ரத்யக்ஷமாக யுகபதேவ ஸ்வத: ஸாக்ஷாத்கரிக்கும் ஸர்வஜ்ஞனோடு வாசியற ஸர்வர்க்கும் இவர் ஹிதாஹிதங்கள் சொல்லித் திருத்துவர் என்கிறார் –
196-அறியாதார்க்கு உய்யப் புகுமாறும், இக்கரை யேறினார்க்கு இன்ப வெள்ளமும், நிலை அறியாதாருக்கு ஆழங்காலும் , கரையேற்றுமவனுக்கு நாலாறும் அறிவிக்க வேணும்.
திருத்துகையாவது அஜ்ஞாதஜ்ஞாபநம் பண்ணுகையிறே. அதில் இவ்வதிகாரிகளுக்கு உபதேஸிக்கும் அர்த்த விஸேஷங்கள் எவை யென்னில், (அறியாதார்க்கு உய்யப் புகுமாறும்) “அறியாதார் என்றுமறியாதார் கண்டாமே” (பெரிய திருமொழி 1-7-8) என்று முதலிலே பகவஜ் ஜ்ஞாநமில்லாத ஸம்ஸாரிகளுக்கு அஃதே வுய்யப் புகுமாறு’ (திருவாய்மொழி 4-1-11) என்று “திருநாரணன் தாள்” (திருவாய்மொழி 4-1-1 என்கிறவிதுவே உஜ்ஜீவநோபாயம் என்று ஸம்ஸாரோத்தீர்ண உபாயத்தையும், (இக்கரை ஏறினார்க்கு இன்ப வெள்ளமும்) “அக்கரை யென்னும் அனர்த்தக்கடலுளழுந்தி உன் பேரருளால் இக்கரை யேறி இளைத்திருந்தேன்” (பெரியாழ்வார் திருமொழி 5-3-7 என்று ஸம்ஸார ஸமுத்ரத்திலே அழுந்துகிறவர்களுக்கு பகவதேகோபாய ஜ்ஞாநம் பிறக்கையாவது இங்கே யிருக்கச் செய்தே அக்கரை இக்கரை என்னலாம்படி இருக்குமிறே. ஆகையாலந்த பகவதேகோபாய ஸங்கத்திலே வ்யவஸிதராகையாலே ஸ்வ ப்ரவிருத்தி நிவ்ருத்தரா யிருக்கிறவர்களுக்கு “முகில்வண்ண வானத் திமையவர் சூழ விருப்பர் பேரின்ப வெள்ளத்தே (திருவாய்மொழி 7-2-11 என்று அவர்கள் அந்த வ்யவஸாயம் குலைந்து த்வரிக்கும்படியான ப்ராப்ய வைலக்ஷண்யத்தையும், (நிலையறியாதார்க்கு ஆழங்காலும்) ஸீல குணத்தில் இழியாமையாலே அதில் நிலையறியாதவர்களுமாய் ப்ராப்ய தஸையிலே நிற்கிறவர்களுக்கு “செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்ம்மின்” (திருவாய்மொழி 10-7-1 என்று பகவத் குணாநுபவம் பண்ணுகிற நீங்கள் ஸீலகுணமாகிற ஆழங்காலில் இழியாதே கொள்ளுங்கோள் என்கிற ஆழங்காலையும், (கரையேற்றுமவனுக்கு நாலாறும் அறிவிக்க வேணும்) “ஸம்ஸார ஸாகரம் கோரமநந்த க்லேஸ பாஐநம் த்வாமேவ ஸரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண:” (ஜிதந்தே ஸ்தோத்ரம் என்று ஸம்ஸார ஸாகரத்தைக் கடத்தி அக்கரைப் படுத்துமவனுக்கு “பொங்கைம்புலன்‘ (திருவாய்மொழி 10-7-10) இத்யாதியாலே சதுர்விம்ஸதி தத்த்வங்களையும் இப்படி அறிவிக்க வேணும்-என்கிறார்-
197-அவன் முனிந்தார்க்குத் தாம் கண்டது; தம்மை முனிவார்க்குத் தம் கண்; காணாதது காண்பார்க்குக் கண்மாறும் இடம்; ராகாந்த னுக்கு மாயாதோஷம் இவர் காட்டுமவை.
இனி அவர்களுக்கு இவ்வர்த்தங்கள் ஜ்ஞாதமாகைக்கு ஹேதுவையும், இவர்களுக்கு இவ்வர்த்த விஸேஷங்களை உபதேஸிக்கைக்கு ஹேதுவையும் அவ்வர்த்த விஸேஷங்கள் தன்னையும் அருளிச் செய்கிறார். (அவன் முனிந்தார்க்குத் தாம் கண்டது) “ந க்ஷமாமி கதாசந” என்றும் ‘க்ஷிபாம்யஜஸ்ரம ஸூபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷ**‘ என்று அவன் நிக்ரஹத்துக்கு விஷயமாகையாலே அஜ்ஞராயிருக்கிற ஸம்ஸாரிகளுக்கு ஞானப் பிரானை யல்லாலில்லை நான் கண்ட நல்லது” என்றும் “பெருங்கேழலார் தம் பெருங்கண் மலர்ப் புண்டரீகம் நம்மேல் ஒருங்கே பிறழவைத்தார்‘ (திருவிருத்தம் 45) என்கிற பாட்டாலே மஹா வராஹமான ஸர்வேஸ்வரன் கடாக்ஷிக்கையாலே எனக்கு ஸத்ருஸ மில்லை; ஸம்ஸார ஸம்பந்த மும் என்னுடைய ஸம்பந்திகளுக்கும் கிட்டா தென்னும்படி தமக்கு பலித்தபடியாலே ஸர்வர்க்கும் உஜ்ஜீவநோபாயம் அந்த ஜ்ஞாந வராஹமல்லது இல்லை; இது நானறுதியிட்ட விலக்ஷணமான அர்த்தமென்றும்; (தம்மை முனிவார்க்குத் தம் கண்) “எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது” (திருவாய்மொழி 5-5-1) என்று உபாய அத்யாவசாய தசையில் நின்று துறும்பு நறுக்கில் ஸ்வரூப ஹாநியாம் என்னும் செங்கிடு குட்டைகளாய் இருக்கையாலே -ப்ராப்ய வைலக்ஷண்யம் அறியாதே ப்ராப்ய விஷயத்திலே இத்தனை அதி ப்ராவண்யமாகாதென்று தம்மைப் பொடியுமவர்களுக்கு “என்னெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே’ (திருவாய்மொழி 5-5-2) என்று ப்ராப்ய வைலக்ஷ்ண்யத்தை அவகாஹித்த என் நெஞ்சாலே பார்க்க மாட்டிகோளோ என்று தம்முடைய உட் கண்ணான ப்ராப்ய வைலஷண்ய ஜ்ஞாநத்தையும், (காணாதது காண்பார்க்குக் கண்மாறுமிடம்) “ஸர்வம் ஹ பஸ்ய: பஸ்யதி” என்று ஸர்வத்தையும் ஸாக்ஷாத்கரிக்குமவர்களாகையாலே ஸீலகுணம் பாதகம் என்றறியாதே இதிலே இழியில் செய்வதென்னென்றஞ்சி தாம் அதிலே ஈடுபட்டவராகையாலே அந்த ஸீல குணத்திலே கண் வையாதே கொள்ளுங்கோள் என்று கண் மாறுமிடத்தையும் (ராகாந்தனுக்கு மாயா தோஷம்) இவர் பக்கல் உண்டான வ்யாமோஹத்தாலே முன்னடி தோற்றாதே இவர்க்கு த்யாஜ்யமான தேஹ தோஷத்தில் கண் வைக்க அறியாதவனுக்கு “மங்கவொட்டுன் மா மாயை (திருவாய்மொழி 10-7-10) என்று ப்ரக்ருதிதோஷத்தையும் (இவர் காட்டுமவை) இவர்களுக்கு இவர் தர்ஸிப்பிக்குமவை இவ் வர்த்த விஸேஷங்கள் என்கிறார் –
198-ஸாதந ஸாத்யஸ்த, மத்யஸ்தரை விட்டு அவற்றில் கலங்கும் ஜீவேஸ்வரர்க்கு வீடுமின் நினைமின் பிடித்தேன் விடுவேனோ வைத்தெழ வூது வாடிநிற்கக் கன்மமன்று ஆன்பின் கைகழியேல் உழிதராய் என் சொற் கொள் என்று இவர் பலகாலும் ஹிதாஹிதங்கள் சொல்லுவர்.
ஆனால் அஜ்ஞர்களுக்கு உபதேஸிக்குமா போலே இவர்களெல்லார்க்கும் எப்போதுமொக்கவும் உபதேஸிப்பரோ என்னில், (ஸாதந ஸாத்ய மத்யஸ்த்தரைவிட்டு] ஸாதந தஸையிலும் ஸாத்ய தஸையிலும் நிற்கிறவர்களாய் அஜ்ஞருக்கும் ஸர்வஜ்ஞனுக்கும் நடுவே சொல்லப்பட்ட முமுஷுக்களுக்கும் நித்ய முக்தர்க்கும் காதாசித்கமாக உபதேஸித்துவிட்டு, (அவற்றில் கலங்கும் ஜீவேஸ்வரர்களுக்கு) அந்த ஸாதந ஸாத்யங்கள் இன்னதென்று அறியாதே கலங்குகிற ஸம்ஸாரி சேதநர்க்கு (வீடுமின் நினைமின்) “வீடுமின் முற்றவும்“(திருவாய்மொழி 1-2-1 என்று பகவத் வ்யதிரிக்த ஸமஸ்தங்களையும் விடுங்கோள் என்று உபக்ரமித்து ‘சுனை நன்மலரிட்டு நினைமின் நெடியானே (திருவாய்மொழி 10-5-10) என்று புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு அபரிச்சேத்ய ஸ்வரூபனான ஸர்வேஸ்வரனை த்ரிவித கரணங்களாலும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறது முடிவாகவும் ஸம்ஸாரிகளுக்குப் பலகாலும் ஹிதாஹிதங்களைச் சொல்லுவர்.
(பிடித்தேன் விடுவேனோ இத்யாதி ) (ஈஸ்வரனுக்கும்) பல காலும் ஹிதாஹிதங்களைச் சொல்லுவர். இவர் இவ்வளவிலே அயோக்யதாநுஸந்தாநம் பண்ணி யகலப்புகில் செய்வதென் என்று அதிஸங்கை பண்ணுகிற ஈஸ்வரனை “உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே” (திருவாய்மொழி 2-6-1), “உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ” (திருவாய்மொழி 2-6-10 என்று அவனை மாஸூச:” (கீதை 18-66) என்றும், ‘தோகை மா மயிலார்கள் செவியோசை வைத்தெழ ஆகள் போக விட்டுக் குழலூது’ (திருவாய்மொழி 6-2-2) என்று ஸாதந ஸாத் யங்கள்இன்னதென்றும் “ மழறுதேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம்வாடி நிற்க என் குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே (திருவாய்மொழி -6-2-5) என்றும் “கன்மமன்றெங்கள் கையில் பாவை பறிப்பது” (திருவாய்மொழி 6-2-8) என்றும் ஆன் பின் போகேல்” (திருவாய்மொழி 10-3-8) என்றும் “என் கை கழியேல் (திருவாய்மொழி 10-3-8) என்றும் (இப்படி அக்ருத்யங்களைச் செய்யாதே கொள்ளென்றும், நீயுகக்கு நல்லவரொடும் உழி தராயே” (திருவாய்மொழி 10-3-8) என்றும் அவத்தங்கள் விளையும் என் சொற் கொளந்தோ” (திருவாய்மொழி 10-3-10) என்றும் ஈஸ்வரனுக்குப் பல காலும் ஹிதா ஹிதங்களைச் சொல்லுவர் –
199-கதிர் ஞான மூர்த்திக்கு உணர்த்துவது ப்ரேமத்தாலே; தமமூடுவார்க்கு வேட்கை யெழுவிப்பது ஜ்ஞானத்தாலே.
ஆனால் இருவர்க்கும் பலகாலும் ஹிதாஹிதங்கள் சொல்லுகைக்கு ஹேது என்னென்னில், இவர்க்குண்டான ஜ்ஞாந ப்ரேமங்கள் என்கிறார். (கதிர் ஞான மூர்த்திக்கு உணர்த்துவது ப்ரேமத்தாலே) ‘பிணக்கி யாவரும் யாவையும் பிழையாமல் பேதித்தும் பேதியாததோர் கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தியினாய்’ (திருவாய்மொழி 6-2-8) என்று ஸம்ஹார காலத்திலே ஸர்வத்தையு மொக்கக் கலசி ஸ்ருஷ்டி காலத்திலே ஒருவருடைய கர்மம் ஒருவர்க்குத் தட்டாதபடி பிரித்து யுகபதேவ ஸாக்ஷாத்கார ஸமமாய் விஸத தமமான ஜ்ஞானத்தை உடையவனாகையாலே ஸர்வஜ்ஞனாயிருக்கிறவனுக்கு “உனக்கொன்று உணர்த்துவன்” (திருவாய்மொழி 6-2-5) என்று ஹிதாஹிதங்களைச் சொல்லுகைக்கடி அவன் பக்கலிலே ப்ரேமத்தாலே. (தமமூடுவார்க்கு வேட்கை யெழுவிப்பது ஜ்ஞானத்தாலே) “கொள்ளென்று தமமூடும்” (திருவாய்மொழி 4-9-4) என்று தமோபி பூதராயிருக்கிற ஸம்ஸாரிகளுக்கு “நின் கண் வேட்கை எழுவிப்பனே ‘ (திருவிருத்தம் 96) என்று பகவத் பக்தியை உபதேஸிக்கிறது பகவத் விமுகரான இவர்களும் நம்மைப் போலே பகவதநுபவம் பண்ண வேணுமென்கிற ஜ்ஞானத்தாலே என்கிறார் –
200-உயிர் மாய்தல் ஆழுமென்னாருயிர் என்னும் பர துக்கம் ஸஹியாமை இரண்டிலுமுண்டு.
இவர்களளவில் இவர்க்குண்டான ஜ்ஞாந ப்ரேமங்கள் இரண்டாலும் பர துக்கம் ஸஹியார் என்னுமிடம் சொல்லுகிறது மேல். (உயிர்மாய்தல் ஆழுமென்னாருயிர் என்னும் பரதுக்கம் ஸஹியாமை இரண்டிலுமுண்டு) உயிர்மாய்தல் கண்டாற்றேன்” (திருவாய்மொழி 4-9-3) என்று ஸம்ஸாரிகள் துக்கம் ஸஹியாமையும், “அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொலாங்கு என்றாமுமென்னாருயிர்’ (திருவாய்மொழி 10-3-8) என்று அசுரர்கள் ஒன்றாக வந்து கிட்டினார்களாகில் அங்கென்னாய் விளைகிறதோ என்று என் ஜீவனானது தரைப்படா நின்றதென்கையாலே பரனான ஈஸ்வரனுடைய துக்கம் ஸஹியாமையும் அந்த ஜ்ஞாந ப்ரேமங்கள் இரண்டிலுமுண்டு. ஆகையாலே இவையடியாக இருவர்க்கும் உபதேஸிப்பர் என்கிறார் –
201-என்னதுன்னதாவியிலே அறிவாராத்மா என்று அவன் மதம் தோன்றும்.
இன்னும் இவ்வளவன்றிக்கே ஸ்வ ஸரீரத்திலே ஸர்வர்க்கும் பரிவு நடக்கையாலே அவனுக்கு ஆத்ம பூதரான இவர் அவனுக்குப் பரியக் கடவர் என்னுமிடமும் தோன்றும் என்கிறார் மேல். (உன்னதென்னதாவியிலே (என்னதுன்னதாவியிலே?) அறிவாராத்மாவென்று அவன் மதம் தோன்றும்) “உன்னதென்னதாவி” (திருவாய்மொழி 4-3-8) என்கிற இடத்திலே “அறிவாருயிரானாய்” (திருவாய்மொழி 6-9-8) என்றும் “ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம்” (கீதை 7-18) என்று ஜ்ஞாநியானவன் தனக்கு தாரகன்; மே மதம், இது க்ருஷ்ண ஸித்தாந்தம் என்று அவனுடைய அபிப்ராயத்தாலே இவர் தம்மைத் தனக்கு தாரகராக நினைக்கிற வாகாரம் தோற்றுகையாலும் அவனுக் கிவர் பரியக் குறையில்லை யென்கிறார் –
202-இருத்துமெண்டானாய்ப் பொய் கலவாது அன்பு செய்து பற்றிலனாய் ஷூத்த்ருட் பீடித நிர்த்தநரைப் போலே கண்டு கொண்டுண்டு பருகிப் பரிஜனாதிகளோடே தன்னைத் தந்து என் செய்வன் என்றே யிருந்து அகில பரத்தையும் ஸமர்ப்பிக்க அது சுமந்து அல்லு நன்பகலும் போகு என்றாலும் அகல்வானுமல்லனாய், போகேலென்றால் உகப்பையும் தவிர்ந்து விதி வகையே நடத்துமவனே உபதேஸ ஸத் பாத்ரம்.
ஆனால் இவர் ஈஸ்வரனுக்கு உபதேஸித்தா ரென்னும்போது அவனுக்கு ஸிஷ்ய லக்ஷணம் உண்டோ என்னில், ஸிஷ்யனானவன் ஆசார்யனை ஓரிடத்திலே வைத்துத் தான் அவனுடைய மநோ ரதமாய் அவன் பக்கலிலே புரை யற்ற ஸ்நேஹத்தைப் பண்ணி,
புறம்புண்டான ஸங்கங்களை விட்டு தரித்ரன் நிதி கண்டாப் போலவும் பசித்தவன் சோறு கண்டாற் போலவும் தாஹித்தவன் தண்ணீர் கண்டாப் போலவும் ஆசார்யன் பக்கலிலே அத்யபிநிவேஸத்தைப் பண்ணி
“ஸரீரமர்த்தம் ப்ராணஞ்ச ஸத்குருப்யோ நிவேதயேத்” (விஹகேஸ்வர ஸம்ஹிதை)
என்கிறபடியே தன்னுடைய ஆத்மாத்மீயங்களை ஆசார்ய விஷயத்திலே ஸமர்ப்பித்து, “க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யாத் ந தத் துல்யம் கதஞ்சந” என்று இவன் எல்லாம் செய்தாலும் ஆசார்யன் பண்ணின உபகாரத்துக்கு ஸத்ருஸமில்லாமையாலே குறைவாளனாய் ஆசார்யனுடைய தேஹ யாத்ரைகளெல்லாம் தானே சுமந்து செய்யுமவனாய் ஆசார்யன் நிக்ரஹித்தாலும் திவா ராத்ர விபாகமற அவனைப் பிரியாதே அவனுக்கிஷ்டமானால் தனக்குகப்பான வற்றையும் விட்டு ஆசார்யன் நியமித்தபடியே நடக்குமவனே ஸச்சிஷ்யனாகையாலே இந்த லக்ஷணம் ஈஸ்வரன் பக்கலிலே உண்டாகையாலே இவனுக்கே ஸச் சிஷ்ய லக்ஷணமுள்ளதென்கிறார். (இருத்துமெண்டானாய்)இருத்தும் வியந்தென்னைத் தன்பொன்னடிக் கீழ்” (திருவாய்மொழி 8-7-1) என்று இவரை ஓரிடத்திலே இருத்தி “என்னெண்டானானான்” (திருவாய்மொழி 1-8-7) என்று இவருடைய நினைவு தானாய் (பொய்கலவா தன்பு செய்து) “பொய்கலவாதென் மெய் கலந்தானே” (திருவாய்மொழி 1-8-5) என்று இவர் திருமேனியில் பண்ணின ஸங்கத்திலே ஒரு பொய்யின்றிக்கே “அந்தாமத் தன்பு செய்து” (திருவாய்மொழி 2-5-1) என்று பரம பதத்தில் பண்ணும் வ்யாமோஹத்தை இவர் பக்கலிலே பண்ணி (பற்றிலனாய்) “‘ பற்றிலனீசனும்” (திருவாய்மொழி 1-2-6) என்று இவர் பக்கல் ஸங்கத்தாலே பரமபதத்தில் ஸங்கத்தையும் விட்டு, (ஷூத்த்ருட் பீடித நிர்த்தநரைப் போலே கண்டு கொண்டுண்டு பருகி) “இருந்தான் கண்டு கொண்டு (திருவாய்மொழி 8-7-2) என்று நிர்தநனானவன் நிதி கண்டாப் போலே கண்டு கொண்டு “என்னை முற்றவும் தானுண்டான்” (திருவாய்மொழி 9-6-8) என்றும் “தானென்னை முற்றப் பருகினான் (திருவாய்மொழி 9-6-10) என்றும் சொல்லுகிறபடியே பசி கனத்தவன் சோறு கண்டாப் போலவும் தாஹித்தவன் தண்ணீர் கண்டாப் போலவும் இவரை அபி நிவேஸத்தோடே அநுபவித்து (பரிஜநாதிகளோடே தன்னைத் தந்து) ‘ பரிஜந பரிபர்ஹா பூஷணநாந்யாயுதாநி ப்ரவர குணகணாஸ்ச ஜ்ஞாந ஸக்த்யாத யஸ்தே பரமபத மதாண்டாந்யாத்ம தேஹஸ் ததாத்மா வரத ஸகலமேதத் ஸம் ஸ்ரிதார்த்த,ம் சகர்த்த” (வரத ராஜஸ்தவம் 63) என்றும் “எனக்கே தன்னைத் தந்த கற்பகம்” (திருவாய்மொழி 2-7-11 என்றும் சொல்லுகிறபடியே தன்னையும் தன் விபூதியையும் இவர்க்குக் கொடுத்து, “உன்னடியார்க்கென் செய்வன் என்றே இருத்தி” (பெரியதிருவந்தாதி 53) என்கிறபடியே இவர்க்கு எல்லாம் செய்தாலும் தான் இழவாளனாய் (அகில பரத்தையும் ஸமர்ப்பிக்க அது சுமந்து) இவராத்மாத்மீய ஸகலபரத்தையும் இவன் பக்கலிலே ஸமர்ப்பிக்க “வேங்கடத்துறைவார்க்கு நமவென்னலாங்கடமை அது சுமந்தார்கட்கே” (திருவாய்மொழி 3-3-6) என்று “பூயிஷ்டாம் தே நம உக்திம்” (யஜுர்வேதம்! )என்கிறபடியே இவருடைய நம: என்கிற உக்தி அவனுக்கு கனத்துத் தோற்றுகையாலே இவருடைய அகில பரத்தையும் சுமந்து (அல்லு நன் பகலும் போகு என்றாலும் அகல்வானுமல்லனாய்) “அல்லு நன்பகலும் இடைவீடின்றி நல்கி யென்னை விடான்” (திருவாய்மொழி 1-10-8) என்று இவர் பக்கல் பண்ணின ஸ்நேஹத்தாலே திவா ராத்ர விபா௧ மற இவரை விடமாட்டாதே “போகு நம்பீ” (திருவாய்மொழி 6-2-2) என்று இவர் தாம் உபேக்ஷித்தாலும் “அகல்வானுமல்லனினி” (திருவாய்மொழி 2-6-7) என்று அகலமாட்டாதே (போகேல் என்றால் உகப்பையும் தவிர்ந்து) “ஆன்பின்போகேல்” (திருவாய்மொழி 10-3-8) என்று இவனுக்கு இஷ்டமானத்தையும் நிவர்த்தி என்று இவர் நியமித்தால் “திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி (திருவாய்மொழி 10-3-10) என்ற அவ் வுகப்பையும் தவிர்ந்து(விதி வகையே நடத்துமவனே) “அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே ” (திருவாய்மொழி 10-6-1 என்று இவர் விதித்தபடியே நடக்கையாலே ஸதாசார்ய விஷயத்திலே ஸச் சிஷ்யன் வர்த்திக்கும் க்ரமம் இவன் பக்கலிலே உண்டென்கையாலே இவனே உபதேஸ ஸத் பாத்ரம் என்கிறார் –
203-நண்ணாதார் மெய்யிலூன் ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய அமாநீத்வாதிகள் விஞ்சின ப்ரணிபாத அபிவாதந பரிப்ரஸ்ந ஸேவா பரர்க்கு உளங்கொள் பேசுமளவன்றென்னும் அர்த்தத்தை வம்மின் விரோதம் ஈனச் சொல் எவ்வுயிர்க்கு மறிய வென்று ௮டைவுகெட அதபஸ்கர்க்கு உபதேஸிக்கிறது ஞாலத்தார் பந்த புத்தியும் அநர்த்தம் கண்டு ஆற்றாமையும் மிக்க க்ருபையுமிறே .
ஆனால் ஸம்ஸாரிகளில் விரக்தராய் இப்படி அநுவர்த்தநமுடையார்க்கு உபதேஸிக்கும் அர்த்தத்தை பகவத் விமுகராய் ப்ரயோஜநாந்தர பரராய் தன் பக்கல் அநு வர்த்தனமும் இன்றிக்கே இருக்கிற ஸம்ஸாரிகளையும் பார்த்து இவர் மேல் விழுந்து உபதேசிப்பான் என் என்னில் அவனோடிவர்களுக்குண்டான ஸம்பந்தத்தை அறிகையாலும் இவர்கள் துக்கம் கண்டு பொறுக்க மாட்டாதே க்ருபையாலும் உபதேஸிப்பர் என்கிறார் (நண்ணாதார் மெய்யிலூனாசை நிர்வேதத்தோடே) “நண்ணாதார் முறுவலிப்ப விலும் (திருவாய்மொழி 4-9) “மெய்யில் வாழ்க்கை”யிலும் (பெருமாள் திருமொழி 5-2-5) ப்ரிய ஜநமபஸ்யந்தீம் பஸ்யந்தீம் ராக்ஷஸீ கணம் ஸ்வ கணேந ம்ருகீம் ஹீநாம் ஸ்வகணேநா வ்ருதா மிவ ரா.ஸு. 15-24) என்றும் “ந சவ்ரி சிந்தாவிமுக ஜந ஸம்வாத வைஸ ஸம்வர் ஹுதவஹ ஜ்வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்திதி:” என்றும் (சொல்லுகிறபடி யே?) சவ்ரி சிந்தா விமுகரான ஸம்ஸாரிகளோட்டை ஸஹவாஸம் ஆழ்வார் தமக்கு அஸஹ்யமானாப் போலே ஸம்ஸாரிகளோடு பொருத்த முடையார்களன்றிக்கே “ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்” (பெருமாள் திருமொழி 4-1) என்றும் “ஆசைவாய்ச் சென்ற சிந்தையர் (பெரியாழ்வார் திருமொழி 4-5-1) இத்யாதியாலும் ஆழ்வார்களுக்கு அநேக தோஷ துஷ்டமான ஸரீரமும் ஸரீர ஸம்பந்திகளும் அஸஹ்மயமானாப் போலே ஸரீரத்தினுடைய அஸ்திரத்ரத்வாதி, தோஷங்களை அநுஸந்தித்து அவற்றுடன் பொருந்தாமையை உடையார்களாய் “பரீஷ்ய லோகாந் கர்ம சிதாந் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாத் நாஸ்த்யக்ருத: க்ருதேந” (முண்டகோபநிஷத் 2-11 என்கிறபடியே கர்ம ஸாத்யங்களான லோகங்கள் அஸ்த்திரங்களாயிருந்தது, ஸ்த்திரமான லோகங்கள் கர்ம ஸாத்யமன்றிக்கே இருந்தது என்று இவற்றினுடைய நிரூபணத்தாலே வெறுப்பை உடையவர்களாய் (ஆஸ்திக்ய அமாநித்வாதிகள் விஞ்சின) “ஆஸ்திகோ தர்ம ஸ்ரீலஸ்ச ஸீலவாந் வைஷ்ணவஸ் ஸூசி: கம்பீரஸ் சதுரோ தீர: ஸிஷ்ய இத்யபி தீ யதே” என்றும் “அமாநித்வம தம்பித்வ மஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் ஆசார்யோபாஸநம் மெளசம் ஸ்தைர்யமாத்ம விநிக்ரஹ நித்யந்து ஸமசித்தத்வம் இஷ்டாநிஷ்டோபபத்திஷ மயிசாநந்யயோகே,ந பக்திரவ்யபிசாரிணீ’ (கீதை 13-7) என்றும் சொல்லப்படுகிற ஸிஷ்ய லக்ஷணங்களாலே மிக்கிருப்பாராய் (ப்ரணிபாதாபி வாதந பரிப்ரஸ்ந ஸேவா பரர்க்கு) “தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா (கீதை 4-34) என்று பக்நாபிமாநராய்க் கொண்டு அநுவர்த்தந பூர்வகமாக சிரகால ஸேவை பண்ணினவர்களுக்கு (உளங்கொள் பேசுமளவன்றென்னும் அர்த்தத்தை) “உளங் கொள் ஞானத்து வைம்மின்” திருவாய்மொழி 4-10-9) என்றும் “பேசுமளவன்றிது வம்மின் நமர் பிறர் கேட்பதன் முன் (பெரிய திருமொழி 2-4-9) என்றும் இப்படி அஷட் கர்ணமாக உபதேஸிக்க வேண்டும்படியான அர்த்த விஸேஷத்தை (வம்மின் விரோத மீனச்சொல் எவவுயிர்க்கு மறியவென்று) “வம்மின் புலவீர் நும் மெய்வருத்திக் கைசெய்தும்மினோ” (திருவாய்மொழி 3-9-6) என்றும் ” சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ (திருவாய்மொழி 3-9-1 என்றும் “ஈனச் சொல்லாயினுமாக நான் கண்ட நல்லது ஞானப்பிரானை யல்லாலில்லை” (திருவிருத்தம் 99) என்றும் “மன்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத்தெவ்வுயிர்க்கும் (திருவாய்மொழி 9-1-7) என்றும் “நாமுமக்கறியச் சொன்னோம்” (திருவாய்மொழி 10-2-9) என்றும் (அடைவு கெட அதபஸ்கர்க்கு உபேதஸிக்கிறது) முற்படச் சொன்ன அடைவன்றிக்கே “இதம் தே நாதபஸ்காய நாபத்தாய கதாசந ந சா ஸூஸ்ரூஷவே வாச்யம் நசமாம் யோப்ய ஸூயதி (கீதை 18-67) என்று உபதேஸத்துக்கு அதி காரமில்லாத தேஹ யாத்ராபரவஸராய்ப் பிறரைக் கவிபாடுவார்க்கும் அதுதானுமின்றிக்கே பஸூ ஸமராய்த் திரிவார்க்கும் ஆசார்ய ப்ரேமமில்லதார்க்கும் ஆசார்ய ஸுஸ்ரூஷை யில்லாதார்க்கும் ஸ்ரோதுமிச்சை இல்லாதார்க்கும் பகவத். விஷயத்தில் அஸூயா பரராயிருப்பார்க்கும் இவர் உபதேஸிப்பான் என் என்னில், (ஞாலத்தார் பந்த புத்தியும்) ‘ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை” (திருவாய்மொழி 4-5-8) என்று நித்யாநுபவம் பண்ணுகிற நித்ய ஸூரிகளோபாதி லீலா விபூ தியில் உள்ளார்க்கும் அவனோடு ஸம்ப ந்த முண்டாயிருக்க இவர்கள் இழக்க வொண்ணாது என்கிற ஸம்பந்த ஜ்ஞாநாநுஸந்தாநத்தாலும் (அநர்த்தம் கண்டு ஆற்றாமையும்) “கண்டாற்றேன் உலகியற்கை” (திருவாய்மொழி 4-9-3) என்று இவர்கள் ஸம்ஸாரத்திலே படுகிற அநர்த்தம் கண்டு பொறுக்க மாட்டாமலும் (மிக்க க்ருபையுமிறே) “அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே” (கண்ணிநுண் சிறுத்தாம்பு- 8) என்று இவருடைய மிக்க க்ருபையாலும் உபதேஸித்தார் –
205-க்யாதி லாப, பூஜாபேக்ஷையற மலர் நாடி ஆட்செய்ய உய்யக் கொண்டு ஆரைக் கொண்டு வாளும் வில்லும் கொண்டு என்கிற இழவுகள் தீரப்பெற்றது.
ஆனால் இப்படி விமுகராயிருக்கிற ஸம்ஸாரிகளுக்குத் தம்முடைய க்ருபையாலே இவருபதேஸிக்கிறாராகில், இவ்வுபதேஸம் பலித்தமை உண்டோ என்னில், இவர் க்யாதி லாப, பூஜா நிரபேக்ஷராய்க் கொண்டு பகவத் கைங்கர்யமாக உபதேஸிக்க ஜகத்தாகத் திருந்துகையாலே தம்முடைய தனிமைக்கும் ஸம்ஸாரிகளுடைய தனிமைக்கும் எம்பெருமானுடைய தனிமைக்கும் க்லேஸப்பட்ட இவருடைய இழவுகளும் தீரப் பெற்றதென்கிறார்.
(க்யாதி லாப பூஜாபேக்ஷயற மலர்நாடி ஆட் செய்ய) “நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ (திருவாய்மொழி 3-3-4) என்று தம்மைத் தண்மைக்கு எல்லையாக நினைத்திருக்கையாலும் “கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பாக” (திருவாய்மொழி 4-9-4) என்று ஐஸ்வர்யத்தை அக்நி ஸமமாகக் காண்கையாலும் “தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் (திருவாய்மொழி 8-9-1 என்று பா௧வத ஸேஷத்வத்தில் எல்லையிலே நிற்கிறவர்களுக்குத் தம்மை ஸேஷமாக நினைத்திருக்கையாலும் “ஓதவல்ல பிராக்கள் எம்மை ஆளுடையார்கள் பண்டே” (திருவாய்மொழி 9-1-11) என்று இப்ரபந்தத்திலே அந்வயித்தவர்களைத் தமக்கு ஸேஷிகளாக நினைத்திருக்கையாலும் க்யாதி லாப, பூஜா நிரபேஷராய்க் கொண்டு “நறிய நன்மலர் நாடி” (திருவாய்மொழி 5-5-11 என்கிறபடியே ஸேஷத்வமாகிற பரிமளத்தை உடைத்தான ஆத்ம புஷ்பங்களைத் தேடி “ஆட்செய்தாழிப்பிரானைச் சேர்ந்தவன் (திருவாய்மொழி 4-10-11 என்று கைங்கர்ய ரூபமாக உபதேஸிக்கையாலே ஐகத்தாகத் திருந்தினபடி. (உய்யக் கொண்டு ஆரைக் கொண்டு வாளும் வில்லும் கொண்டு என்கிற இழவும் தீரப்பெற்றது) “உம்மை உய்யக் கொண்டு போகுறிலே” (திருவாய்மொழி 4-10-9) என்று ஸம்ஸாரிகளுடைய அநர்த்தங்கண்டு பொறுக்க மாட்டாமல் உபதேஸிக்க அவர்கள் திருந்துகையாலே அவர்கள் தனிமை என்கிற அவ்விழவு தீரப்பெற்றது. “ஆரைக் கொண்டென்னுசாகோ” (திருவாய்மொழி 7-3-4) என்று தமக்கு உசாத்துணை யில்லை என்று சொல்லப்பட்டதுவும் ஸம்ஸாரிகளடையத் திருந்தித் தமக்கு உசாத் துணை உண்டாகையாலே அவ்விழவும் தீரப்பெற்றது. “வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை’ (திருவாய்மொழி 8-3-3) என்று ஸர்வேஸ்வரனுடைய ஸெளகுமார்ய மறிந்து பரியக் கடவார் ஒருவருமில்லை என்று இழவு பட்ட விவர்க்கு பகவத் விஷயத்துக்குப் பரிவராய் மங்களா ஸாஸநம் பண்ணப் பலருண்டாகையாலே அவ் விழவும் தீரப்பெற்றது. ஆகையாலே இவருடைய உபதேஸம் பல பர்யந்தமாய்த்து என்கிறார்-
206-ப்ரஹ்மநிஷ்டரும் ஸம்வத்ஸர வாஸிகளுமாகில் ஏ பாவம் பயனன்றாகிலும் சேராது.
(ப்ரஹ்ம நிஷ்டரும் ஸம்வத்ஸர வாஸிகளுமாகில்) இப்படி உபதேஸம் பலிக்கும்போது “பரீஷ்யலோகாந் கர்மசிதாந் ப்,ராஹ்மணோ நிர்வேத மாயாத் நாஸ்த்யக்ருத: க்ருதேந தத்விஜ்ஞா நார்த்தம் ஸகுருமேவாபி கச்சேத் ஸமித்பாணி: ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் தஸ்மை ஸவித்வாநுபஸந்நாய ஸம்யக், ப்ரஸமாந்தசித்தாய மமாந்விதாய யேநாக்ஷரம் புருஷம் வேத, ஸத்யம் ப்ரோவாச தாம் தத்வதோ ப்ரஹ்மவித் யாம்” (முண்டகோபநிஷத் 2-11) என்று ஸம்ஸாரத்தினுடைய அல்பாஸ்திரத்வாதி, தோஷாநுஸந்தாநத்தாலும் பரம ப்ராப்யமான தேஸத்தைக் கிட்டப் பெறாமையால் உண்டான வெறுப்போடே ஸம தமாத் யாத்ம குணோபேதனாய் ஸோபஹார ஹஸ்தனாய்க் கொண்டு ஸ்ரோத்ரியனாய் ப்ரஹ்ம நிஷ்டனான ஆசார்யனை பக்நாபிமாநனாய் உபஸத்தி பண்ண அவ்வாசார்யனும் “நாஸம்வத்ஸரவாஸிநே பரப்ரூயாத் என்று ஒரு ஸம்வத்ஸரம் பரீக்ஷித்து பின்னையும் உபதேஸிப்பான் என்று சொல்லுகிற ஸாஸ்த்ரக்ரமத்திலே இவரும் ஸம்ஸாரிகள் அநுவர்த்திக்க உபதேஸித்தார் ஆனாலோ என்னில், (ஏபாவம் பயனன்றாகிலும் சேராது) ஸிஷ்யனுடைய அநுவர்த்தனமுண்டாகில் “ஏபாவம் பரமே” (திருவாய்மொழி 2-2-2) என்று ஓ பாபமே எனக்கிது பரமாவதே என்று உபதேஸோபக்ரமத்திலே வெறுத்துச் சொல்லுகிற ஆசார்யோக்தியும் சேராது. ஸிஷ்யன் தன் அநுவர்த்தனத்தாலே இவ்வர்த்தத்தைப் பெற்றானாகில் “பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்’ (கண்ணிநுண். 10) என்கிற ஸிஷ்யோக்தியும் சேராது. ஆகையாலே முன்பு சொன்ன க்ரமத்திலே ஸம்ஸாரிகளுடைய அநர்த்தம் கண்டு பொறுக்க மாட்டாதே தம்முடைய க்ருபையாலே உபதேஸித்தார் என்கிறார் –
207-மெய்க்நின்று மங்கவொட்டுக்கு நடுவு அநுபவ கர்ப்போபதேஸம்.
ஆனால் அபரிச்சே,த்,யமாய் நிரதிஸயபோக்யமான பகவத் விஷயத்தை அநுப விக்கிற இவர் பரோபதேஸம் பண்ணுகிறார் என்னும்போது, இவர்க்கு அவ்வநுபவம் கூடினபடி எங்கனே என்னில், இவருடைய அநுபவ பரீவாஹ ரூபமான சொற்கள் தானே பரோபதேஸமாயிருக்கையாலே உள்ளே அநுபவமானது செல்லா நிற்கச் செய்தே பரோபதேஸமாயிருக்கும் என்கிறார். (மெய்ந்நின்று மங்கவொட்டுக்கு நடுவு) “மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே’ (திருவிருத்தம் 1 என்று உபக்ரமித்து“மங்கவொட்டுன் மாமாயை” (திருவாய்மொழி 10-7-10) என்கிறதளவாக நடுவுள்ள நாலு ப்ரபந்தமும் அநுபவம் உள்ளே செல்லா நிற்கச் செய்தே பரோபதேஸமாயிருக்கிறது; இது தான் ஸ்வாநுபவகர்ப்ப, பரோபதேஸமாய் பரோபதேஸ முகத்தாலே ஸ்வாநுபவமாயிருக்கையாலே எல்லா அவஸ்தையிலும் இவர்க்கு அநுபவத்தில் குறை யில்லை–
208-இவற்றுக்கு மந்த்ரவித்யநுஸந்தாந ரஹஸ்யங்களோடே சேர்த்தி.
ஆனால் இந்நாலு ப்ரபந்தத்தாலும் இவருபதேஸிக்கும் வர்த்தம் ஏதென்னில்
(இவற்றுக்கு மந்த்ரவித்யநுஸந்தாந ரஹஸ்யங்களோடே சேர்த்தி) ஸகல ஸாஸ்த்ர ஸங்க்ரஹமாய் இவ்வாத்மாவுக்கு தத்வ ஹித புருஷார்த்த ப்ரகாஸகமுமாய் ஸரண்யாபிமதமுமாய் ஸிஷ்ட பரிக்ருஹீதமுமாய் மந்த்ர விதி அநுஸந்தாந ரூபமான ரஹஸ்ய த்ரயத்தாலும் ப்ரதிபாதிக்கப்படுகிற அர்த்த, பஞ்சகத்தையும் இவற்றிலே ப்ரதிபாதிக்கையாலே இப்ரபந்தங்கள் நாலுக்கும் ரஹஸ்ய த்ரயத்தோடு சேர்த்தி என்கிறார் –
209-அளிப்பானடியேனடைக்கலம் சூடிய பொய் யாதானும் அழுந்தாரென்று ஸ்வரூப விரோதி நிவ்ருத்திகளையும் தாமரை யுந்திப் பெருமா மாயனாளாகவே வாழியவென்று ப்ராப்ய பலங்களையும், நெறி காட்டி மனத்துக் கொண்டு கண்ணனாலடித்துக் கண்டிலமால் யாதாகிலென்று உபாயத்தையும் சொன்னவை மந்த்ர ஸ்லோகங்களோடே சேரும்.
அவற்றில் ப்ரதிபாதிக்கிற அர்த்த பஞ்சகம் இவற்றிலே ப்ரதிபாதிதமாகிறபடி எங்ஙனே என்னில் (அளிப்பான் அடியேன் அடைக்கலம் சூடிய பொய் யாதானும் அழுந்தார் என்று ஸ்வரூப விரோதி, நிவ்ருத்திகளையும்) இதில் ப்ரதம ப்ரபந்தமான திருவிருத்தத்திலே உயிரளிப்பான் (திருவிருத்தம் -1)என்று திருமந்த்ரத்திலே ப்ரதமாக்ஷரத்தில் அவ ரக்ஷணே யென்கிற தாத்வர்த்தத்தாலே சொல்லப்பட்ட ரக்ஷகத்வத்தையும் “அடியேன்” (திருவிருத்தம் 1) என்று அவ்வகாரத்தில் லுப்த சதுர்த்தியாலும் உகாரத்தாலும் அந்த ஸர்வ ரக்ஷகனானவனுக்கு இவ்வாத்மா அநந்யார்ஹ ஸேஷமாயிருக்கும் என்னுமிடத்தையும் அந்த ஸேஷத்வாஸ்ரயமான ஸ்வரூபம் ஜ்ஞாநாநந்த மயமாயும் ஜ்ஞாந குணகமாயுமிருக்கிற மகாரார்த்தத்தையும், “அடியேனடியாவி அடைக்கலமே” (திருவிருத்தம் 85) என்று அந்த சதுர்த்தி, ‘ஸம் ப்ரதாநே சதுர்த்தி என்னுமிடத்தில் ஆத்ம ஸமர்ப்பணத்தையும் “திருமால் திருப்பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன்” (திருவிருத்தம் 100) என்று அந்த ப்ரணவத்தில் சொன்ன அநந்யார்ஹ ஸேஷத்வம் ததீய ஸேஷத்வ பர்யந்தமா யிருக்கும் என்று நமஸ்ஸில் ஆர்த்தமாகச் சொல்லப்படுகிற ததீய ஸேஷத்வத்தையும், ” பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கும் அழுக்குடம்பும்” (திருவிருத்தம் 1) என்றும் “யாதானுமோராக்கையில் புக்கு அங்காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும்” (திருவிருத்தம் 95) என்றும் அந்த நமஸ்ஸில் ‘ம:’ என்கிற ஷஷ்டியாலே சொல்லப்பட்ட அவித்யை அவித்யாகாரிதமான அஹங்கார மமகாரங்கள் அவற்றாலே உண்டான அக்ருத்யகரணாதிகள் தத் கார்யமாய் தேவ மநுஷ்யாதி ரூபமான ப்ரக்ருதி ஸம்பந்தத்தையும் சொல்லி “வன்சேற்றள்ளல் பொய்ந்நிலத்தில் அழுந்தார்‘ (திருவிருத்தம் 100) என்று அந்த நமஸ்ஸில் நிஷேத வாசியான நஞ்ஞாலே கீழ்ச் சொன்ன அவித்யாதிகளாய் ஸம்ஸார கர்தமம் எல்லையான விரோதிகளினுடைய நிவ்ருத்தியையும் சொல்லி ஆக இப்படி ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ ஸேஷமாய் ஜ்ஞாநாநந்த லக்ஷணமாய் ததீய ஸேஷத்வ பர்யந்தமான ஸ்வரூபத்தையும், தத் விரோதியான அஹங்கார மமகாரமாகிற விரோதி ஸ்வரூபத்தையும் தந் நிவ்ருத்தியையும் சொல்லுகையாலே திருவிருத்தம் ப்ரணவ நமஸ்ஸுக்கள் இரண்டினுடைய அர்த்தமாயிருக்கிறது. (தாமரை யுந்திப் பெரு மா மாயன் ஆளாகவே வாழிய வென்று ப்ராப்ய பலங்களையும்) “தெய்வக் குழாங்கள் கை தொழக் கிடந்த தாமரை யுந்தித் தனிப் பெரு நாயக” (திருவாசிரியம் 1 என்றும், “ஓராலிலைச் சேர்ந்த எம்பெரு மா மாயனை யல்லது ஒருமா தெய்வம் மற்றுடையமோ யாமே” (திருவாசிரியம் 7) என்றும் காரணத்வ ரக்ஷகத்வங்களைச் சொல்லுகையாலே காரணமுமாய் ரக்ஷகனுமாயிருக்கிறவனே பரம ப்ராப்யன்’ என்கிற நாராயண ஸப்தார்த்தமான ப்ராப்தி ஸ்வரூபத்தையும் “தனிமாத் தெய்வத்தடி யவர்க்கு ஆளாகவே இசையுங்கொல் (திருவாசிரியம் -3)என்றும் “ஊழி தோறூழி ஓவாது வாழிய வென்று யாம தொழ இசையுங்கொல் (திருவாசிரியம் 4) என்றும் அந்த நாராயண பதத்தில் பிரார்த்தநா ரூபமான சதுர்த் யர்த்தமான பல ஸ்வரூபத்தையும் சதுர்த் யந்தமான ப்ராப்தி ஸ்வரூபத்தையும் சொல்லுகையாலே அந்தத் திருவாசிரியம் சதுர்த் யந்தமான நாராயண பத்தின் அர்த்தமாய் யிருக்கிறது. (நெறி காட்டி மனத்துக் கொண்டு கண்ணனால் அடித்துக் கண்டிலமால் யாதாகில் என்று உபாயத்தையும் சொன்னவிது) பெரிய திருவந்தாதியிலே “நெறி காட்டி நீக்குதியோ” (பெரிய திருவந்தாதி 6 )என்று உபாயாந்தரங்களைக் காட்டி என்னை அகற்றப் பார்த்தாயோ என்கையாலே “ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய’ (கீதை 18-66) என்கிற உபாயாந்தரங்களினுடைய த்யாஜ்யதையையும் ‘வெங்கோட்டேறுழுடனே கொன்றானையே மனத்துக் கொண்டு” (பெரிய திருவந்தாதி 48) என்று “மாமேகம் ஸரணம் வ்ரஜ (கீதை 18-66) என்கிற மாநஸாத்யவஸாய ரூபமான உபாய ஸ்வீகாரத்தையும் “சீரார் மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோரினத் தலைவன் கண்ணனால் யான்” (பெரிய திருவந்தாதி 25) என்றும் “எம்மிறையார் தந்த அருளென்னும் தண்டாலடித்து” (பெரிய திருவந்தாதி 26) என்றும் சொல்லுகையாலே “அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” கீதை 18-66) என்று உபாய பூதன் பண்ணும் ஸர்வபாப விமோசனத்தையும் “வானோ மறிகடலோ இத்யாதி மருங்கு வன்துயரை கண்டிலமால்” (பெரிய திருவந்தாதி 54) என்று அந்த விரோதிகள் போனவிடம் தெரியாதபடி தன்னடையே விட்டுப் போய்த்ததென்கையாலே “இஷ்யாமி’ என்கிற ணிச்சாலே சொல்லுகிற அர்த்தத்தையும் “அடர்பொன் முடியான்” இத்யாதி, யாதாகில் யாதே இனி’ (பெரிய திருவந்தாதி 70) என்று “மாஸூச:” (கீதை 18-66 என்கிற பதத்தாலே பலிதமான நிர்ப ரத்வாநுஸந்தானத்தையும் சொல்லுகையாலே திருவந்தாதியாலே ஸ்லோகார்த்தமான உபாய ஸ்வரூபத்தைச் சொல்லிற்று. ஆகையாலே இவை மந்த்ர ஸ்லோகங்களோடு சேரும். ஆகத் திருவிருத்தம் திருவாசிரியம் திருவந்தாதி என்கிற மூன்றும் அர்த்த பஞ்சகத்தையும் ப்ரதிபாதிக்கையாலே அவை மூன்றும் அர்த்த பஞ்சகத்தை ப்ரதிபாதி,க்கிற திருமந்த்ரத்தினுடையவும் சரம ஸ்லோகத்தினுடையவும் அர்த்த மாயிருக்கிறது –
210-த்வயார்த்தம் தீர்க்க ஸரணாகதி யென்றது ஸாரஸங்க்ரஹத்திலே. திருவாய்மொழி த்வயத்தில் அர்த்தத்தை ப்ரதிபாதிக்கையாலே தீர்க்க ஸரணாகதி என்கிறார். த்வயத்திலே ப்ரதிபாதி க்கப்பட்ட ஸ்ரிய:பதித்வம், நாராயணத்வம், விலக்ஷண விக்ரஹ யோக,ம், அவனுடைய உபாயத்வம், உபாய பரிக்ரஹம், கைங்கர்ய ப்ரதாநார்த்தமான லக்ஷ்மீ தத் வல்லபனுடைய நித்ய ஸம்பந்த ம், ஸர்வ ஸ்வாமித்வம், நிரதிஸய போக்யத்வம், கைங்கர்ய ப்ரார்த்தனை, கைங்கர்ய விரோத நிவ்ருத்தி ஆக இப்பத்து அர்த்தத்தையும் திருவாய்மொழி பத்து பத்தாலும் ப்ரதிபாதிக்கையாலே இத் திருவாய்மொழி தீர்க்க ஸரணாகதி என்று ஸார ஸங்க்ரஹத்திலே பிள்ளை அருளிச் செய்தார்–
211-மூன்றில் சுருக்கிய ஐந்தையும் உயர் திண் அணை ஒன்று பயில் ஏறு கண் ௧ரு வீடு சொன்னால் ஒருக் கொண்ட நோற்ற நாலும் எம்மா ஒழிவில் நெடு வேய் என்கிற இருபதிலே விஸதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும் அருளினன் வீடு பெற்ற வென்கையாலே ஐந்திலுமிரண்டையும், தொழுது களித்தேன் சொல்லுப் பெற்றேன் பணிசெய்யென்கிற முக்த லக்ஷண வ்ருத்தியாலே இரண் டிலொன்றையும் இதுக்கு ப்ரமேயமென்னும். இனி மேல் திருமந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும் ஸங்க்ரஹேண ப்ரதிபாதிக்கப்பட்ட அர்த்த பஞ்சகத்தை த்வயத்திலே விவரித்தாப் போலே திருவிருத்தம் திருவாசிரியம் திருவந்தாதி என்கிற மூன்று ப்ரபந்தத்திலும் ஸங்க்ரஹேண சொல்லப்பட்ட அர்த்த பஞ்சகத்தை த்வயத்தினுடைய ஸ்தாநேயாயிருக்கிற இத் திருவாய்மொழியிலே விஸ்த்ருதமாகச் சொல்லுகையாலே அர்த்த பஞ்சகமும் இதுக்கு ப்ரமேயமென்றும் அந்த அர்த்த பஞ்சகத்திலும் வைத்துக் கொண்டு உபாயோபேயங்களிரண்டுமே இதுக்கு ப்ரமேயமென்றும் அவை தன்னிலும் உபாயமொன்றுமே இதுக்கு ப்ரமேயமென்றும் சொல்லக் கடவதென்கிறார். (மூன்றில் சுருக்கின ஐந்தையும் என்று தொடங்கி) திருவிருத்தம் திருவாசிரியம் திருவந்தாதி என்கிற மூன்று ப்ரபந்தத்தில் சுருங்கச் சொல்லப்பட்ட அர்த்த பஞ்சகத்தையும் திருவாய்மொழியில் (உயர் திண் அணை ஒன்று) முதல் திருவாய்மொழியான உயர்வற உயர் நலத்தில் ஸ்ருதிச் சாயையாலே அந்வய ரூபேண ஸ்வாநுபவ ரூபத்தாலே பரத்வத்திலே பரத்வத்தையும், திண்ணன் வீட்டில் (திருவாய்மொழி 2-2 இதிஹாஸ புராண ப்ரக்ரியையாலே அந்வய வ்யதிரேகங்கள் இரண்டாலும் பரோபதேஸ முகத்தாலே அவதாரத்திலே பரத்வத்தையும், அணைவதரவணையில் (திருவாய்மொழி 2-8 மோக்ஷ ப்ரதத்வத்தாலே வந்த பரத்வத்தையும், ஒன்றும் தேவிலே (திருவாய்மொழி 4-10) அர்ச்சாவதாரத்திலே பரத்வத்தையும் சொல்லுகையாலே, ஆக உயர்வற உயர்நலம் திண்ணன் வீடு அணைவதரவணை ஒன்றுந் தேவு என்கிற நாலு திருவாய்மொழியாலும் பர ஸ்வரூபத்தையும்; (பயிலேறு கண் ௧ரு ) பயிலும் சுடரொளியில் (திருவாய்மொழி 3-7] இவ் வாத்மாவுக்கு ஸேஷத்வமே ஸ்வரூபமாகையாலே அதினுடைய எல்லையான பாகவத ஸேஷத்வத்தையும், ஏறாளுமிறையோனில் (திருவாய்மொழி 4-8) அவன் வேண்டாத ஆத்மாத்மீயங்களை வேண்டேன் என்று இவ் வாத்மா ஸேஷமான போது உபாதேயமாய் அல்லாத போது த்யாஜ்யமென்கிற வ்யதிரேகத்தாலே ஸேஷத்வமே ஸ்வரூபமென்னுமிடத்தையும் கண்கள் சிவந்திலே “சென்று சென்று பரம் பரமாய்” (திருவாய்மொழி 8-8-5) இத்யாதி யாலே ஸேஷத்வாஸ்ரயமான ஆத்ம வஸ்துவினுடைய ப்ரக்ருதே:பரத்வ ஜ்ஞாநாநந்த அமலத்வங்களையும் கரு மாணிக்க மலையிலே அந்த ஸேஷத்வத்தினுடைய அநந்யார்ஹத்வத்தையும் சொல்லுகையாலே, ஆக பயிலுஞ்சுடரொளி ஏறாளுமிறையோன் கண்கள் சிவந்து கரு மாணிக்கமலை என்கிற நாலு திருவாய்மொழியாலும் ஸ்வ ஸ்ரூபத்தையும், (வீடு சொன்னால் ஒரு கொண்ட) வீடுமின் முற்றத்தில் (திருவாய்மொழி 1-2) ஸ்வரூப விரோதி யான அஹங்கார மமகாரங்களை த்யாஜ்யம் என்றும், சொன்னால் விரோதத்தில் (திருவாய்மொழி 3.9) உபாய விரோதியான அஸேவ்ய ஸேவை முதலானவை த்யாஜ்யம் என்னுமிடத்தையும் – ஒரு நாயகத்தில -1- ப்ராப்ய விரோதியான ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்யம் என்னுமிடத்தையும் கொண்ட பெண்டிரில் -திருவாய் -9-1-ப்ராப்தி விரோதி யான ஸரீர ஸம்பந்திகள் தொடக்கமானவை த்யாஜ்யமென்னுமிடத்தையும் சொல்லுகையாலே ஆக வீடுமின் முற்றவும் சொன்னால் விரோதம் ஒருநாயகம் கொண்ட பெண்டிர் என்கிற நாலு திருவாய்மொழியாலும் விரோதி ஸ்வரூபத்தையும் (நோற்ற நாலும்) “நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்’ (திருவாய்மொழி 5-7-1 என்று தம்முடைய ஆகிஞ்சந்ய பூர்வகமாகவும் ஆராவமுதில் “களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்” (திருவாய்மொழி 5-8-8) என்று தம்முடைய அநந்யகதித்வ பூர்வகமாகவும், மானேய் நோக்கில் “வைகலும் வினையேன் மெலிய (திருவாய்மொழி 9-9-1) என்று தம்முடைய பக்தி பாரவஸ்யதையாலும் அடி மேல் சேமங்கொள்ளென்று ஸரணம் புகுந்து, பிறந்தவாற்றில் “நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய்’ (திருவாய்மொழி 5-10-11 என்று தமக்கு அவ்வுபாயத்திலுண்டான அத்யவஸாயத்தையும் சொல்லுகையாலே, ஆக நோற்ற நோன்பு, ஆராவமுது, மானேய் நோக்கு, பிறந்தவாறு என்கிற நாலு திருவாய்மொழியாலும் உபாய ஸ்வரூபத்தையும் (எம்மா ஒழிவில் நெடு வேய் என்கிற) எம்மா வீட்டிலே (திருவாய்மொழி 2-9) கைங்கர்யத்தினுடைய ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தியை ப்ரார்த்தித்து, ஒழிவில் காலத்தில் (திருவாய்மொழி 3-3)அந்த கைங்கர்யந் தன்னை ஸர்வதேஸ ஸர்வகால ஸர்வாவஸ்தோசிதமாகச் செய்ய வேணுமென்று ப்ரார்த்தித்து, நெடுமாற்கடிமையில் (திருவாய்மொழி 8-10) அந்த கைங்கர்யம் பாகவத பர்யந்தமாக வேணுமென்றும், வேய்மருதோளிணையில் (திருவாய்மொழி 10-3) அது தான் பர ஸம்ருத்தயைக ப்ரயோஜநமாகவும் ப்ரார்த்திக்கையாலே, ஆக எம்மா வீடு ஒழிவில் காலம் நெடுமாற் கடிமை வேய்மரு தோளிணை என்கிற நாலு திருவாய்மொழியாலும் பல ஸ்வரூபத்தையும் (இருபதிலே விஸதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்) ஆக இவ் வர்த்த பஞ்சகத்தையும் இவ் விருபது திருவாய்மொழியாலும் விஸதமாக அருளிச் செய்து மற்ற எண்பது திருவாய்மொழியாலும் விஸ்த்ருதமாக்குகையாலே இத் திருவாய்மொழிக்கு இவ்வர்த்த பஞ்சகமும் ப்ரமேயமென்றும் (அருளினன் வீடு பெற்ற என்கையாலே ஐந்திலுமிரண்டையும்) “மயர்வறமதிநல மருளினன்” (திருவாய்மொழி 1-1-1 “அவாவற்று வீடு பெற்ற” (திருவாய்மொழி 10-10-11) என்று அர்த்த பஞ்சகத்துக்கும் ப்ரதாநமான உபாயோபேயங்கள் இரண்டையும் இதுக்கு ப்ரமேயம் என்றும் (தொழுது களித்தேன் சொல்லுப் பெற்றேன் பணி செய் என்கிற முக்த லக்ஷண வ்ருத்தியாலே இரண்டிலொன்றையும் இதுக்கு ப்ரமேயம் என்னும்) ‘தொழுதெழு” என் மனனே” (திருவாய்மொழி 1-1-1 என்றும், “விருப்பே பெற்று அமுதமுண்டு களித்தேனே’ (திருவாய்மொழி 10-8-6)என்றும், “மேலைத் தொண்டுகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்” (திருவாய்மொழி 10-8-7) என்றும் “சொல் பணி செய் ஆயிரம்” (திருவாய்மொழி 1-10-11 என்றும் சொல்லுகிறபடியே முக்தர்க்கு அஸாதாரண லக்ஷணமான வாசிக வ்ருத்தி இத் திருவாய்மொழி என்கையாலே அவ்வுபாயோபேயங்களிரண்டிலும் உபேயமொன்றுமே இதுக்குத் தாத்பர்யார்த்த மென்று சொல்லக் கடவதென்கிறார்.
212-ரஹஸ்யத்துக்கோரெழுத்தும் அதுக்கோருருவும் போலே யானவற்றிலே இமையோரதிபதி அடியேன் மனனே பொய் மயர்வு பிறந்தருளினன் விண்ணப்பம் தொழுதெழென்ற பஞ்சகத்தோடே அவித்யாதி ஸ்வரூப ஸ்வபாவாத்மேஸ்வர பந்த ரக்ஷண க்ரம குண விக்ரஹ விபூதி யோக ததீயாபி மாநோபதேஸ விஷய அந்யாபதேஸ ஹேத்வாதிகளும் ஸங்க்ருஹீதம்
திருமந்த்ரமும் த்வயமும் முதல் பதங்களிலே ஸங்க்ரஹமாய் ஒழிந்தவிடம் அவற்றினுடைய விவரணமா யிருக்குமா போலே திருவிருத்தமும் திருவாய்மொழியும் முதல் பாட்டுக்களிலே ஸங்க்ரஹமாயிருக்கும் என்கிறார் மேல். (ரஹஸ்யத்துக்கோரெழுத்தும் அதுக்கு ஒருருவும் போலேயான வற்றிலே) ஒரெழுத்து ஒருருவென்னும்படி திருமந்த்ரத்துக்கு ஸங்க்ரஹமான அகாரத்தையும் அதன் விக்ருதியான ப்ரணவத்தையும் போலே என்னுதல்-அன்றிக்கே த்வயத்துக்கு ஸங்க்ரஹமான அதில் ப்ரதம பதத்தையும் போலே யிருக்கிற திருவிருத்தத்தில் முதல் பாட்டிலும் திருவாய்மொழியில் முதல் பாட்டிலும் (இமையோரதிபதி அடியேன் மனனே பொய் மயர்வு பிறந்து அருளினன் விண்ணப்பம் தொழுதெழு என்ற பஞ்சகத்தோடே) “இமையோர் தலைவா” (திருவிருத்தம் 1) என்றும் “அயர்வறும் அமரர்கள் அதிபதி” (திருவாய்மொழி 1-1-1 என்றும் சொல்லுகையாலே ஸுரி ஸேவ்யமாய் ஸர்வாதிகமா யிருக்குமென்று பர ஸ்வரூபத்தையும் அடியேன்” என்றும் “என் மனனே” என்றும் சொல்லுகையாலே ஸேஷமாய் அபரிச்சேத்யாந்த:கரணமா யிருக்கும் என்று ஸ்வ ஸ்வரூபத்தையும் “பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்” என்றும் “மயர்வு” என்றும் சொல்லுகையாலே அவித்யாதிகளான விரோதி ஸ்வரூபத்தையும் “உயிரளிப்பான் எந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்” என்றும் “மதிநலமருளினன்” என்றும் சொல்லுகையாலே லோக ரக்ஷணார்த்தமாக அநேகாவதாரங்களைப் பண்ணின ஸர்வேஸ்வரனுடைய க்ருபையே உபாயமென்று உபாய ஸ்வரூபத்தையும் “அடியேன் செய்யும் விண்ணப்பமே” என்றும் “தொழுதெழு” என்றும் சொல்லுகையாலே ஸேஷி விஷயத்தில் கரண த்ரயத்தாலும் உண்டான கைங்கர்யமே புருஷார்த்தம் என்று பல ஸ்வரூபத்தையும் ஆக இவ் வர்த்த பஞ்சகத்தையும் ஸங்க்ரஹேண சொல்லி அவ்வர்த்த பஞ்சகத்தோடே கூட இந்த இரண்டு பாட்டிலும் அவித்யாதி ஸ்வரூப ஸ்வபாவங்கள் முதலான வர்த்த விஸேஷங்களும் ஸங்க்ருஹீதமென்கிறார் மேல். (அவித்யாதி ஸ்வரூப ஸ்வபாவ) “பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்” என்று அவித்யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்களினுடைய ஸ்வரூப ஸ்வபாவத்தையும்-அன்றிக்கே அவித்யாதி, ஸ்வரூப ஸ்வபாவமென்ற இவற்றை தத்வ த்ரய விஷயமாக்கி அவற்றினுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களைப் “பொய்ந் நின்ற ஞானம்” என்றும் -மயர்வு” என்றும் அவித்யையாகிற அசித் ஸ்வரூபத்தையும் ஜ்ஞாநாநுதய அத்யதாஜ்ஞாந விபரீத ஜ்ஞானங்களாகிற அவித்யா ஸ்வபாவத்தையும் அடியேன் என்று ஆத்ம ஸ்வரூபத்தையும் “என் மனனே” என்று ஆத்மாவினுடைய ஸ்வபா வத்தையும் “தலைவா” என்றும் “யவன்” என்றும் ஈஸ்வர ஸ்வரூபத்தையும்“நலமுடையவன்” என்று அவனுடைய ஸ்வபாவத்தையும் சொல்லுகிறார் என்றுமாம். (ஆத்மேஸ்வரபந்த ) “இமையோர் தலைவா” “அடியேன்” “அதிபதி”“தொழுதெழு” என்று ஜீவேஸ்வரர்களுக்குண்டான ஸேஷ ஸேஷி பாவ ஸம்பந்தத்தையும் ரக்ஷண க்ரமம் ” உயிரளிப்பான் எந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் என்றும் “மயர்வற மதிநல மருளினன்’ என்றும் ஈஸ்வரன் அநேகா வதாரங்களைப் பண்ணி ரக்ஷிக்குமென்றும் அஜ்ஞானத்தைப் போக்கி ஜ்ஞாந பக்திகளைத் தன் க்ருபையாலே தந்தானென்றும் அவனுடைய ரக்ஷண க்ரமத்தையும் (குண விக்ரஹ விபூதி யோக,) “நலமுடையவன் என்று குணத்தையும், “சுடரடி” என்று விக்ரஹத்தையும், “இமையோர்” என்றும்“அயர்வறும் அமரர்கள்” என்றும் விபூதியையும் அந்த ஸுூரிகளை முன்னிடுகையாலே ததீயாபிமானத்தையும் “மெய் நின்று கேட்டருளாய்”“தொழுதெழு என் மனனே” என்று நெஞ்சு போலே பவ்யமான ஈஸ்வரனும் அப்படி பவ்யரானார் உபதேஸத்துக்கு விஷயமென்றும் (அந்யாபதேஸ ஹேது)“நலமருளினன்’ என்று பக்தியைத் தந்தான் என்கையாலே அந்யாபதேஸ த்துக்குஹேது அந்த பக்தி என்றும்- ஆதி ஸப்தத்தாலே வேதாந்தங்களில் யாவை சில அர்த்தங்கள் சொல்லப்பட்டது அவை யெல்லாம் ஸங்க்ரஹ ரூபேண இவற்றிலே சொல்லப் பட்டதென்கிறார் –
213-அடி தொழுதெழென்ற இதிலே வஸ்து நிர்த்தேஸ நமஸ்கார ஆஸீஸுக்களும் உண்டு.
ப்ரபந்த ஆரம்பத்திலே அந்த ப்ரபந்தத்தினுடைய அவிக்ந பரி ஸமாப்த்யர்த்தமாகவும் சொல்லக் கடவதான ஆஸீர் நமஸ்க்ரியா வஸ்து நிர்தேஸம் என்கிற இவை இப் ப்ரபந்த ஆரம்பத்திலுமுண்டோ என்னில்,(அடிதொழுதெழு என்கிற இதிலே வஸ்து நிர்தேஸ நமஸ்கார ஆஸீஸ்ஸூக்களும் உண்டு) என்கிறார். “துயரறு சுடரடி” (திருவாய்மொழி 1-1-1) என்று வஸ்து நிர்தேஸத்தையும் “தொழுது” என்று நமஸ்காரத்தையும் “எழு” என்று ஆஸீஸ்ஸையும் சொல்லிற்றென்கிறார் –
214-சாது சனம் நண்ணா மயர்வற மாசறுக்கும் தெருள் கொள்ளப் பத்தராவர் அடிமையற வுரிய நோய்களறுக்கும் உடைந்து ஏற்றரும் வானின் தாளின் கீழ் அடிக்கீழின்பக்கதி பயக்கும் ஊடுபுக்கு மூவுலகும் உருகா நிற்பர் என்னும் ஸாம்யத்தாலே வாச்யம் பத்தினாய தோற்றம் போலே தோற்றங்கள் ஆயிரத்தின் பத்துப் பத்தான இதினாவிர்ப்பாவம்.
இனி மேல் “பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம் ஸ்த்தாபநார்த்தரய ஸம்பவாமி யுகே யுகே,” (கீதை 4-8) என்று ஸாது பரித்ராண துஷ்க்ருத் விநாஸநார்த்தமான பகவதவதாரம் போலே இத் திருவாய்மொழியினுடைய அவதாரமுமென்கிறார் சாது சனம் என்று தொடங்கி. (சாது சனம்) “சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஸாது, பரித்ராண துஷ்க்ருத் விநாஸநார்த்தமாக அவதரித்து மயர்வற மதிநலம் அருளினன் (திருவாய்மொழி 1-1-1 என்கிறபடியே அஜ்ஞாநத்தை வாஸனையோடே போக்கி ஜ்ஞாந பக்திகளை உண்டாக்கி (அடிமை யற) அடிமை யறக்கொண்ட (திருவாய்மொழி 4-9-6) என்கிறபடியே அநந்யார்ஹ ஸேஷமாக அங்கீகரித்து (நோய்களறுக்கும்) “நோய்களறுக்கும் மருந்தே (திருவாய்மொழி-9-3-3) என்கிறபடியே ஸம்ஸார வ்யாதி பேஷஜமாய் (ஏற்றரும்) “ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு” (திருவாய்மொழி 7-6-10) என்று ஸ்வ யத்நத்தானாலே பெற வரிதாயிருக்கிற பரம பதத்தைக் கொடுத்து (தாளின் கீழ்) “தன் தாளின் கீழ்ச் சேர்த்து” (திருவாய்மொழி 7-5-10) என்கிறபடியே தனக்கு பாதோபதாநமாக இட்டுக் கொண்டு ( இன்பக் கதி) “இன்பக் கதி செய்யும்‘ (திருவாய்மொழி 7-5-11 என்று நிரதஸயாநந்தி யாக்கி (ஊடு புக்கு) “எடுபுக்கெனதாவியை உருக்கி உண்டிடுகின்ற (திருவாய்மொழி 5-10-10) என்று தன்னுடைய போக்யதாதிஸயத்தாலே சேதநனை த்ரவ த்ரவ்யமாம்படி உருக்குமாபோலே திருவாய்மொழியும் (நண்ணா) “நண்ணா வசுரர் நவி வெய்த நல்லவமரர் பொலி வெய்த எண்ணாதனகள் எண்ணும் நன்முனிவரின்பம் தலைச் சிறப்ப பண்ணார் பாடல்” (திருவாய்மொழி 10-7-5) என்கிறபடியே ஸாது பரித்ராண துஷ்க்ருத் விநாஸநார்த்தமாக அவதரித்து (மாசறுக்கும் தெருள் கொள்ளப் பத்தராவர்) “ஒலிபுகழாயிரத்திப்பத்து உள்ளத்தை மாசறுக்கும்” (திருவாய்மொழி 5-3-11 என்று நெஞ்சுக்கு மாசான அஜ்ஞானத்தை வாஸநையோடே போக்கி “தெருள் கொள்ளச் சொன்ன ஓராயிரம்” (திருவாய்மொழி 2-10-11 என்றும் ‘தூயவாயிரத்திப் பத்தால் பத்தராவர் துவளின்றிமே” (திருவாய்மொழி 6-4-11) என்றும் சொல்லுகிறபடியே ஜ்ஞாந பக்திகளைக் கொடுத்து “உரிய தொண்டராக்கும்” (திருவாய்மொழி 6-9-11) என்கிறபடியே அங்குத்தைக்கு அநந்யார்ஹ ஸேஷமாமாக்கி (உடைந்து) “உடைந்து நோய்களை ஓடுவிக்குமே” (திருவாய்மொழி 1-7-11) என்று ஸாம்ஸாரிகமான ஸகல துரிதங்களையும் ஸவாஸநமாகப் போக்கி “வானின் மீதேற்றி அருள் செய்து” (திருவாய்மொழி 8-4-11 என்று தேஸ விஸேஷ ப்ராப்தியைப் பண்ணுவித்து, (அடிக்கீழ்) ‘அடிக்கீழிருத்தும்” (திருவாய்மொழி 8-8-1॥ என்கிறபடியே அவனுக்கு பாதோபதாநமாக்கி (பயக்கும்) “எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே” (திருவாய்மொழி 7-9-1॥ என்கிறபடியே இவனுக்கு ஆநந்தத்தை உண்டாக்கி (மூவுலகும் உருகா நிற்பர்) ஒன்பதோடொன்றுக்கும் மூவுலகும் உருகுமே” (திருவாய்மொழி 9-5-11 என்றும் ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர்” (திருவாய்மொழி 6-8-11 என்றும் சொல்லுகிறபடியே தன்னுடைய போக்யதையாலே சேதநரைத் த்ரவத்ரவ்யமாக்கி இப்படி ஸர்வேஸ்வரனோடு ஸாம்யத்தை உடைத்தாகையாலே (வாஸ்யன் பத்தினாய தோற்றம் போலே ) தனக்கு வாஸ்யனான ஸர்வேஸ்வரனுடைய பத்தினாய தோற்றம் திருச்சந்த -79)என்கிற பத்து அவதாரமே போலே ‘தோற்றங்களாயிரம் (திருவாய்மொழி 6-8-11) என்று இத்திருவாய்மொழியின் பத்துப் பத்தான ஆவிர்ப்பாவமுமென்கிறார் –
215-ஐந்தினாடொன்பதோட ஒருபத்து என்னுமவை போலே நூறே சொன்ன பத்து நூறு ஒராயிரமென்றதும் ஸாபிப்ராயம்.
இனிமேல் (ஐந்தினோடு ஒன்பதோடு ஒருபத்தும் என்னுமவை போலே) “ஐந்தினோடைந்தும் வல்லார் ் (திருவாய்மொழி 10-2-11) என்று ஐந்து பாட்டுக்கொரு அபிப்ராயம் ஐந்து பாட்டுக்கொரு அபி ப்ராயமுமானாப்போலவும் “ஒன்பதோடொன்றுக்கும்” (திருவாய்மொழி 9-5-11) என்று ஒன்பது பாட்டுக்கொரு கருத்தும் ஒருபாட்டுக்கொரு கருத்துமானாப் போலவும் “பாடலோராயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார் (திருவாய்மொழி 3-4-11 என்று பத்து பாட்டுக்கு ஒரு கருத்தானாப் போலவும் (நூறே சொன்ன பத்து நூறு ஓராயிரம் என்றதும் ஸாபிப்ராயம்) “நூறே சொன்ன ஆயிரம்” (திருவாய்மொழி 9-4-11) என்றும் “பத்து நூற்றுள் இப்பத்து” (திருவாய்மொழி 6-7-11 என்றும் சொல்லுகையாலே பத்துக்கள் தோறும் வேறு வேறு கருத்தாயும் “அவாவிலந்தாதிகளால் இவை ஆயிரமும்” (திருவாய்மொழி 10-10-11) என்று ஆயிரத்துக்கும் ஓரபிப்ராயமாயும் இப்படித் தலைக்கட்டுமென்கிறார்
216-பாட்டுக்கு க்ரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேஸப்பத்து. (பாட்டுக்குக் க்ரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேஸப்பத்து) அதாவது ஒரு பாட்டு “தொழு தெழு” (திருவாய்மொழி 1-1-1 என்று ஒரு க்ரியையோடே தலைக் கட்டுமாப் போலவும் பத்து பாட்டு பரத்வம், பஜநீயத்வம், ஸெளலப்யம், அபராத ஸஹத்வம் என்றாப் போலே ஒரு கருத்தோடே தலைக் கட்டுமா போலவும், நூறு பாட்டு பரோபதேஸமா யிருப்பதொரு திருவாய்மொழியோடே தலைக்கட்டுமென்கிறார் –
217-பகவத் பத்த பரங்கள் ஆஸ்ரயண விதி, ஸேஷங்கள். இவற்றில் பகவத் பக்த பரங்களாய் வருமவற்றுக்குத் தாத்பர்யம் ஏதென்ன, அவற்றுக்குத் தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார். (பகவத் பக்தபரங்கள் ஆஸ்ரயண விதி ஸேஷங்கள்) “பயிலும் சுடரொளி” (திருவாய்மொழி 3-7) “நெடுமாற்கடிமை” (திருவாய்மொழி 8-10) என்ற பாகவத பரங்களான திருவாய்மொழிகளுக்குக் கருத்து என்னென்னில், ‘ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்க காமோ யஜேத” (யஜுஸ் ஸம்ஹிதை 2-5-5) என்று ஸ்வர்க்க காமனானவன் ஜ்யோதிஷ்டோமத்தைப் பண்ணுவான் என்கிற விதிக்கு “ப்ரயாஜைர் யஜேத” இத்யாதி விதிகள் ஸேஷமாய் அவற்றினுடைய அநுஷ்டானத்தோடே பல பர்யந்தமாய்த் தலைக் கட்டுமா போலே ‘திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ” (திருவாய்மொழி 41-1) “நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் பலமுந்து சீரில் படிமின் ஓவாதே” (திருவாய்மொழி 2-8-4) என்கிற ஆஸ்ரயணம் பாகவத ஸமாஸ்ரயணத்தோடொழிய தலைக் கட்டாமையாலே அவ்வாஸ்ரயண விதிக்கு ஸேஷமென்கிறார். அன்றிக்கே பகவத் பக்த பரங்கள் என்கிற இதுக்கு பகவத் பரமாயும் தத் பக்த பரமாயும் வருமவை என்று பொருளான போது (பாட்டு க்ரியையிலே முடியுமாபோலேயும் )பத்துப் பாட்டு நிதாநம் சொல்லும் பாட்டிலே முடியுமா போலேயும் பத்துத் தோறும் உபதேஸம் உண்டாகையாலே) பகவத் குணங்களையும் தத் பக்தனான ஜீவனுடைய குணங்களையும் சொல்லுகிற விடங்களை ஆஸ்ரயண விதிக்கு ஸேஷமென்கிறார். அன்றிக்கே பகவத் பக்த பரமாம்படி ஒருங்க விட்டு பரோபதேஸம் பண்ணுகிற திருவாய்மொழியில் என்று இதற்குத் தாத்பர்யமாகக் கடவதென்று ஏக வாக்யமாகச் சொல்லவுமாம் –
218-பரத்வ, காரணத்வ, வ்யாபகத்வ, நியந்த்ருத்வ, காருணிகத்வ, ஸரண்யத்வ, ஸக்தத்வ, ஸத்யகாமத்வ, ஆபத்ஸகத்வ, ஆர்த்தி ஹரத்வ விஸிஷ்டன் மயர்வை யறுக்க, தத்த்வவேதந மறப்பற்று ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து, மோக்ஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து, புருஷார்த்த, பலாந்யருசி யொழிந்து, விரக்தி பல ராகம் கழியமிக்கு, ப்ரேமபலோபாயத்தே புகுந்து, ஸாதந பலோபகாரக் கைம்மாறின்றி, க்ருதஜ்ஞதாபல ப்ரதி க்ருதமானத்தை யுணர்ந்து, ஆத்மதர்ஸந பல ப்ராப்தி மரணாவதியாகப் பெற்று, காலாஸத்தி பல திக்குத் துணை கூட்டின தம் பேற்றைப் பிறரறியப் பத்துத் தோறும் வெளியிடுகிறார்.
இனி மேல் திருவாய்மொழியில் பத்துப் பத்தாலும் பரத்வாதி, குண விஸிஷ்டனான ஸர்வேஸ்வரன் தமக்குப் பிறப்பித்த தஸா விஸேஷங்களை வெளியிடுகிறார் என்கிறார். பரத்வ காரணத்வாதி, ஸர்வ ஸ்மாத் பரனாயிருந்த பரத்வ லக்ஷணம் காரணத்வத்தாலே யாகையாலே ஸர்வ காரண பூதனாயிருந்த காரணத்வம் நாட்டிலுள்ள காரண கார்யங்களைப் போலே ப்ருதக் ஸித்தனா யிருக்கை யன்றிக்கே கார்ய வஸ்துக்களிலே வ்யாபித்திருக்கையாலே ஸர்வ வ்யாபகனாய் அந்த வ்யாப்தி தான் ஆகாஸ வயாப்தி போலன்றிக்கே நியந்த்ருத்வேந வாகையாலே ஸர்வ நியந்தாவாய் இப்படி இருக்கிற பரத்வாதிகளைக் கண்டஞ்ச வேண்டாதபடி பரம காருணிகனாய் இப்படிப் பரம காருணிகனாகையாலே ஸர்வ ஸரண்யனாய் இப்படி ஸர்வ ஸண்யனாம் போது அநிஷ்ட நிவ்ருத்தி பூர்கமான இஷ்ட ப்ராப்தியைப் பண்ணிக் கொடுக்க வேண்டுகையாலே அதுக்கு ஈடான ஸர்வ சக்தித்வத்தை யுடையனாய் அந்தப் ஸக்தி தன்னாலே கற்ப்பிக்கப்பட்ட நித்ய போகத்தை யுடையவனாகையாலே ஸத்யகாமனாய் இப்படி நித்யபோகத்தை யுடையவனாய்க் கொண்டிருக்கையாலே லீலா விபூதியை நோவு பட விட்டு இருக்குமோ என்னில் அதனுடைய பிரளய ஆபத்தில் உதவி ரக்ஷிக்குமவனாகையாலே ஆபத் சகனாய் -இப்படி ஆபத் சகனாகையாலே ஸம்ஸார தாப ஆர்த்தரான ஆஸ்ரிதர்களுடைய ஆர்த்தியைப் போக்குமவனாகையாலே ஆர்த்தி ஹரனாய் -ஆர்த்திஹரனாய் ஆக இப்படி பரத்வ காரணத்வ வியாபகத்வ நியந்த்ருத்வ காருணிகத்வ சரண்யத்வ சக்தத்வ ஸத்ய காமத்வ ஆபத் சஹத்வ ஆர்த்தி ஹரத்வ விஸிஷ்டன் -இப்படி பத்துப் பத்தாலும் பிரதி பாதிக்கப்பட்ட பரத்வாதிகளான பத்துக் குணங்களுடன் கூடியிருக்கிற சர்வேஸ்வரன் (மயர்வை அறுக்க தத்வ வேதந மறப்பற்று )மயர்வற மதிநலம் அருளினன் -மயர்வற என் மனத்தே மன்னினான் -1-7-4-என்றும் சொல்லுகிறபடியே அஜ்ஞாநத்தை ஸ வாஸநமாகப் போக்கி ஜ்ஞாநத்தைக் கொடுக்க “மறப்பனோ இனி யான் என் மணியையே” (திருவாய்மொழி 1-10-10) என்று விபூதியிலில்லாதபடியான தத்வ ஜ்ஞாநத்தை யுடையராய் (ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து) அந்த தத்வ ஜ்ஞாந பலமான மோக்ஷத்தை “நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து”” (திருவாய்மொழி 2-9-1) என்று ஸ்வரூபாநுரூபமாக “தனக்கேயாக” (திருவாய்மொழி 2-9-4) என்று நிஷ்கர்ஷித்து (மோக்ஷ பல விருத்தி செய்ய அர்த்தித்து) அந்த ஸ்வரூபாநுரூபமான மோக்ஷத்துக்கு பலமான வ்ருத்தியை “வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” (திருவாய்மொழி -3-3-1) என்று அர்த்தித்து (புருஷார்த்த, பலாந்ய ருசியொழிந்து) அந்த புருஷார்த்தத்துக்குப் பலம் தத் வ்யதிரிக்தங்களில் ருசியை “‘ஐங்கருவிகண்ட இன்பம் சிற்றின்பமொழிந்தேன்‘ (திருவாய்மொழி 4-9-10) என்று தவிர்ந்து ( விரக்தி பல ராகம் கழிய மிக்கு) அந்த விரக்தி விஷய வைராக்யத்துக்குப் பலமான பகவத் விஷயத்தில் ராகம் “கழிய மிக்கதோர் காதலளிவள்” (திருவாய்மொழி 5-5-10) என்று அதிஸயித்து (ப்ரேம பலோபாயத்தே புகுந்து) இப்படி நிரதியய ப்ரேம பலமான விளம்ப அக்ஷமத்வத்தால் வந்த த்வரையாலே “அலர் மேல் மங்கை உறை மார்பா அடிக்கீழமர்ந்து புகுந்தேனே” (திருவாய்மொழி 6-10-10) என்று உபாய வரணம் பண்ணி (ஸாதந பலோபகாரக் கைம்மாறின்றி) இப்படி ஸித்த ஸாதந பரிக்ரஹம் பண்ணின இவர் அந்த ஸாதந பலமான க்ருதஜ்ஞதையாலே ப்ரத்யுபகாரமாக ஆத்மாவை ஸமர்ப்பிக்கத் தேடி “அதுவுமற்றாங்கவன் தன்னது எதுவுமொன்றுமில்லை செய்வதிங்குமங்கே” (திருவாய்மொழி 7-9-10) என்று அவ்வாத்மா அவனுக்கு அநந்யார்ஹ ஸேஷம் என்றிருக்கையாலே ப்ரத்யுபகாரம் காணாதே தடுமாறி (க்ருதஜ்ஞதா பல ப்ரதி க்ருதமா னத்தை உணர்ந்து) அந்த க்ருதஜ்ஞதா பலமான ப்ரத்யுபகாரம் பண்ணத் தேடி ஆத்ம ஸ்வரூபத்தை “நின்றவொன்றை உணர்ந்தேன்” (திருவாய்மொழி 8-8-4) என்று தேஹேந்த்ரியாதி களில் விலக்ஷணமாய் பகவத நந்யார்ஹ ஸேஷமாயிருக்கிற ஆகாரத்தை அறிந்து (ஆத்மதர்ஸந பலப்ராப்தி மரணாவதி யாகப் பெற்று) அந்த ஆத்ம தர்ஸநத்துக்குப் பலமான பகவத் ப்ராப்தியை “மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்” (திருவாய்மொழி 9-10-5) என்கிறபடியே ஸரீராவஸாநத்திலே பண்ணித் தருகிறோம் என்று அவன் நாளிட்டுத் தர பெற்றுடையராய் (காலாஸத்தி பல கதிக்குத் துணை கூட்டின) அணித்தாக நாளிட்டுக் கொடுக்கையாலே அதுக்கு பலம் அர்ச்சிராதி, மார்க்கத்தாலே போகையிறே, ஆகையாலே அவ் வர்ச்சிராதி கதிக்கு “காளமேகத்தையன்றி மற்றொன்றிலம் கதியே” (திருவாய்மொழி 10-1-1 என்றும் “ஆத்தன் தாமரையடியன்றி மற்றிலம் அரணே” திருவாய்மொழி 10-1-6) என்றும் சொல்லுகிறபடியே ஆபத் தநமான அவன் தன்னை இவருக்குத் துணையாக்க அவனைத் துணையாக உடையராய் (தம் பேற்றைப் பிறரறியப் பத்துத்தோறும் வெளியிடுகிறார்) இப்படி ஈஸ்வரன் தமக்குப் பண்ணிக் கொடுத்த தஸைகளைப் பத்துப் பத்தாலும் வெளியிடுகிறார்.
————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply