189-
காவலில் புலனை வைத்து -இச்சுவை
திருக் கமல பாதம்
நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் -பண்டை வல்வினை பாற்றி அருளினன்
பரம பாவநத்வ போக்யத்வங்களை அருளின படி –
காவலில் புலனை வைத்து–சேதனன் தான் மூலையடியே திரிந்தாலும் அவன் தோஷங்களைப் போக்கி
மேல் சொல்லுகிற நன்மைகளைக் கொடுக்கும்படி யாய்த்து-திருநாமம் உடைய ப்ரபாபம் இருப்பது –
நின்னாமம் -என்றது –
ஓராயிரமாய் உலகு ஏழும் அளிக்கும் பேர் அன்றோ -திருவாய்மொழி -9-3-1–தேவரீரைப் போலேயோ திருநாமம் –
கட்டிப் பொன்னுக்கும் பனிப் பொன்னுக்கும் உள்ள வாசி போராதோ-தேவரீருக்கும் திருநாமத்துக்கும்
மறுவலிடும் பிரளய ஆபத்தில் அன்றோ தேவரீர் எடுத்தது –
சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்கும் போது தேவரீர் திருநாமம் வேண்டாவோ
நீளரவை சுற்றிக் கடைந்தான் பெயர் என்றே தொல் நரகைப் பற்றிக் கடத்தும் படை -முதல் திருவந்தாதி -81-
முன்பு-யமாதிகளுக்கு அஞ்சிக் கிடந்தது இடம் அறியாதே போந்தவர் –
இப்போது-திருநாம சம்பந்தத்தாலே யமாதிகள் தலையிலே அடி இட்டு-திரியும்படியான ராஜ குலத்தை சொல்லிற்று ஆய்த்து –
திரு நாமத்தின் உடைய பாவநத்வமும்-அது கற்கையாலே தமக்கு பிறந்த ராஜ குலமும் சொல்லிற்று
இச்சுவை-இதில்-திரு நாமத்தின் உடைய போக்யதையைச் சொல்லுகிறது
ஆனால் போக்யதையைச் சொல்லி-பாவனத்வத்தைச் சொன்னாலோ -என் என்னில் –
பயம் போனால் இறே ரஸ்யதையிலே இழிவது-ஜ்வரம் அனுவர்த்தியா நிற்க பால் ரசிக்குமோ –
முன்பு பாபத்தை கூடு பூரித்து யம பீதனாய் இருக்கிறவனுக்கு-அந்த பயம் நிவர்த்தம் ஆனால் அல்லது
போக்யதையிலே நெஞ்சு செல்லாது இறே
இத் திரு நாமம் தான்
பிரயோஜநாந்த பரருக்கு பிரயோஜனத்தைக் கொடுக்கும் –
உபாயாந்தர நிஷ்டருக்கு உபகரணமாய் இருக்கும் –
பிரபன்னருக்கு தேக யாத்ரை சேஷமாய் இருக்கும் –
இச்சுவை தவிர –
இந்த ரசத்தை விட்டு
சுவை -ரசம் –
கைப்பட்டதை விட்டு இவ் அறு சுவைக்கு வேறு ஒரு சுவை இருந்த இடம் தேடித் போகச் சொல்லுகிறாயோ –
இவருடைய அறு சுவை இருக்கிறபடி –
திரு நாமத்தை உம் நாக்கிலே இட்டுப் பாராமை இறே-நான் உபதேசிக்க வேண்டி இருக்கிறது –
அச்சுவை –இச்சுவை
அது ஸ்ருதி பிரசித்தம் –இது பிரத்யஷ சித்தம் –
அது கேட்டார் வாய் கேட்டுப் போமது –இது கைப்பட்டது –
இத்தால் சொல்லிற்று ஆய்த்து –
இங்கே இருந்து திரு நாமம் அனுபவிக்கும் இனிமைக்கு-பரம பத அனுபவமும் சத்ருசம் அன்று என்னும்படி
தமக்கு திரு நாமம் ரசித்த படியை சொல்லிற்று ஆய்த்து-
திருக் கமல பாதம்-பெரிய பெருமாள் திருவடிகளில் அழகு மேல் விழுந்து தம்மை அடிமை கொண்டது என்கிறார் –
ஆகாசத்தின் நின்றும் சஹ்யத்திலே வர்ஷித்து
அங்கு நின்றும் காவேரி யாறாய்ப் போய் இழிந்து
கால்களாய்ப் புகுந்து போய்
நாட்டாருக்கு உப உக்தமாமா போலே
பரமபதம் ஆகிற பரம வ்யோமத்தின் நின்றும்
திருமலையிலே வந்து இழிந்து
தெற்கு நோக்கி வந்து
பள்ளநாலியான கோயிலிலே தேங்கி
கீழ் மேலாக கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் ஆகிற
மதுரவாற்றின் இடைப் புகுந்து ஓடுகிற காலை அனுபவிக்கிறார் –
திருக் கமல பாதம் –
செவ்வி குளிர்த்தி விகாசம் பரிமளம் தொடக்கமானவை
ஆதித்யனைக் கண்டால் இறே தாமரை அலருவது –
இத்தாமரைக்கு ஆதித்யன் இவர் –
பிராட்டி திருமுலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொள்ளும் திருவடிகள்
இவருடைய தளிர் புரையும் திருவடிகள் இருக்கிற படி
அம்மான் திருக் கமல பாதம் –
தொடர்ந்து வருகைக்கு ப்ராப்தி –
திருக் கமல பாதம் –
பெரும் காற்றிலே யிழிவார் தெப்பம் கொண்டு இழியுமா போலே -ஒரு தாமரைப் -பூவை
திருஷ்டாந்தம் -ஆக்குகிறார் -செவ்வி குளிர்த்தி நாற்றம் விகாசம் -இவை தாமரைப் பூவைப் போலே இருக்கையாலே –
ஆதித்ய சன்னதியிலே அலறும் தாமரை போலே ஆஸ்ரித சன்னதியிலே அலறும் தாமரை யாயத்து -திருவடிகள்-
பிராட்டி திருமுலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொள்ளும் திருவடிகள்
இவருடைய தளிர் புரையும் திருவடிகள் இருக்கிற படி
அம்மான் திருக் கமல பாதம் –என்கையாலே ப்ராப்தமுமாய் ப்ராப்யமுமாய் ஆன திருவடிகள் -என்கை-நாராயண சரணங்கள் –என்றபடி
திருக் கமல பாதம்
பாவநத்வ போக்யத்வங்களாலே சுபாஸ்ரயமான திருவடிகள் –
திருவுக்கு லீலா கமலம் போலே இருக்கிற பாதம் -என்னவுமாம்-
திருவடிகளினுடைய பாவனத்வத்தையும் போக்யத்வத்தையும் தான் அநாயாசமாக அநந்ய த்ருஷ்டிகளாகக் கொண்டு அனுபவிக்கப் பெற்ற படியையும்
முன்னிட்டு ஸ்ரீ ய பதியினுடைய பராகாஷ்டாப்ராப்த குண ப்ரகர்ஷங்களை அனுசந்தித்தார்-
நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும்-என்றக்கால் அண்ணிக்கும் –என்று ப்ரஸ்துதமானத்தை யனுபாஷிக்கிறார் -அதில்
உண்டான ஆதார அதிசயத்தாலே –
முதல் -பாட்டில் ஆழ்வார் -என்றால் தமக்கு ரசிக்கிற படியை சொன்னார் –
-இப்பாட்டில் அவருடைய பாசுரமே தேக யாத்ரையாம் படி-தாரகமான படியை சொல்லுகிறார் –
நாவினால் நவிற்று –-மனஸ் சஹ காரம் இல்லை என்கிறார் –
பகவத் விஷயத்தில் உபகாரகரை ஸ்தோத்ரம் பண்ணக் கடவ நாவைக் கொண்டு-அந்த கார்யதைக் கொள்ளப் பெற்றேன் -என்னவுமாம்
ஈஸ்வர ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் கொள்ளப் பெற்றேன் -நான் ஒருவனே என்கிறார்-
இன்பம் எய்தினேன் –வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் மேவி -என்று ஆழ்வார் அவ் விஷயத்தில் பெற்ற பேற்றை -இவ் விஷயத்திலே பெற்றேன் என்கிறார் –
சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் -என்று கரண த்ரயத்தாலும் அவ் விஷயத்தை ஆஸ்ரயித்தவர் பெற்ற பேற்றை உக்தி மாத்ரத்திலே பெற்றேன் –
அநாதி காலம் நரகத்திலே ஸ்ருஷ்டியும் -நரகத்திலே சம்ஹாரமும் ஆம்படி பண்ணின பாபத்தை-பண்ணிப் போந்த நாவால் -நிரதிசய ஆநந்தத்தை ப்ராபித்தேன் -என்னவுமாம் – (வையத்து வாழ்ச்சி போலே நாக்காலே இன்பம் -என்றபடி )-
பண்டை வல்வினை பாற்றி அருளினன்
பண்டை பல்வினை –
1-அநாதி காலம் சஞ்சிதமாய் -விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவான பாபம்
2-சூர்ப்பணகையை போலே -வகுத்த விஷயத்தை பற்றுகைக்கு வழி யல்லா வழியே இழிகைக்கு ஈடான பாபம் –
3-பிரதம அவதியான பகவத் விஷயமே புருஷார்த்தம் -என்கிற புத்திக்கு அடியான பாபம்
இவை யாயிற்று பண்டை பல் வினை யாவது –
வல் வினை
பிராய சித்த சாத்தியமும் அன்றிக்கே-அனுபவ விநாச்யமே அன்றிக்கே -இருக்கை-
பாற்றி யருளினான் –
த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கிறபடி-சும்மனாதே கைவிட்டோடி தூறுகள் சாய்ந்தனவே -என்று சொல்லும் பிரகாரங்கள் அன்றிக்கே-உரு மாய்ந்து போம் படி பண்ணினான் –தன் புகழ் ஏத்த அருளினான் என்றபடி தம்மையே வாய் புலத்தும்படி பண்ணினார் –
——————-
190-
நாட்டினான் தெய்வம் எங்கும் –காட்டினான் திருவரங்கம் -10
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான் -திருவாய்மொழி -4-5-5
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் -திருவாய் மொழி -5-2-8-
சத்வ ப்ரசுரராய் தன்னை பற்றுமபவர்களுக்கும்
ரஜஸ் தமஸ் பிரசுரர்களுக்கும் -சுள்ளிக் கால் நடடினால் போலே –
முதல் தன்னிலே இவற்றை முமுஷு ஸிசு ருஷியா சிருஷ்டித்து
வேத சஷுசையும் கொடுத்தருளி குண அனுகூலமாக தேவதையை ஆஸ்ரயித்து
அவற்றின் ஸ்வா பாவத்தையும் -தனது வாசியையும் அறிந்து
தனது பக்கலிலே வருகிறன என்றது ஆய்த்து -இது அவன் அருளின கார்யம்
திருவரங்கத்தை காட்டினது நல்லதோர் அருள் தன்னாலே
தேவதாந்தர முகமாக தச் சரீரியை ஆராதிக்கையும் உஜ்ஜீவன பிரகாரம் ஆனாலும்
அது அதிக்ருதா அதிகாரம்
கோயிலை வந்து ஆஸ்ரயிக்கை சர்வாதிகாரம்
இப்படி எவ் உயிர்க்கும் தாயான பகவான் செய்யும் ஷேம க்ருஷி பரம்பரை
அருள் முடிய நிறுத்தி அடைய நின்றதும் -நல்லதோர் அருள் தன்னாலே
நன்றும் எளியன் ஆகிறதும் விஷயம் -ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூக்தி-
ஆற்ற அமைய -பொறுக்க பொறுக்க -குளப்படியிலே கடலை மடுத்தால் போலே அன்றிகே
சாத்மிக்க சாத்மிக்க தனது கல்யாண குணங்களை அனுபவிக்க பண்ணி –மாதா நாராயண -இறே
நாட்டினான் தெய்வம் எங்கும் –காட்டினான் திருவரங்கம் -10
தேச காலத்தால் வந்த குறை தீர ஸ்ரீ கோயிலிலே வந்து ஸ்ரீ பெரிய பெருமாளே கண் வளர்ந்து அருளுகிறார்
அங்கே ஆஸ்ரயிங்கோள்
அவரை ஒழிய மோஷார்தமாக வேறு தேவதைகளை ஆஸ்ரயிக்கை யாவது
அ ஸ்ரீ வாசலிலே ஐஸ்வர்யம் வேண்டி இருப்பாரோபாதி கிடி கோள் -என்கிறார்-
நாட்டினான் –
சத்வ பிரசுரராய் தன்னைப் பற்றும் அளவு உடையவர் அன்றிக்கே இருக்கும் ரஜஸ் தமஸ் பிரசுரர்க்கும் தேவதைகளை நாட்டினான் –
அதுக்கடி
தன்னரசு போலே ஸ்வ தந்த்ரராய் மூலையடியே திரியப் புக்கவாறே ஸ்வ ஸ்வ குண அனுகூலமாக தேவதைகளை ஆஸ்ரயித்து
பின்னை சேதனர் இறே – நம் வாசி அறிந்து -நம்மைப் பற்றுகிறார்கள் என்னும் நினைவாலே யாய்த்து தேவதைகளை நாட்டிற்று –
நாட்டினான் –
உபக்நத்தை பெறாத கொடி போலே யாய்த்து-ஈஸ்வரனுடைய ஆத்ம பாவத்தை ஒழியில்-தேவதைகள் உடைய சத்தாதிகள் இருப்பது –
சுள்ளிக் கால் நாட்டினால் போலே இருக்கிறது ஆய்த்து-நிறுத்தினான் தெய்வங்களாக -என்னக் கடவது இறே –
தெய்வம் எங்கும் –
ஐயன் -என்றும்
எழு மூர்த்தி -என்றும்
இது எல்லையாக ஆ சண்டாள மாஸ்ரயணீ யரைக் கற்ப்பித்தான் –
விஷ்ணு ராத்மா பகவத -என்றும்
இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே –என்றும் சொல்லக் கடவது இறே –
முதல் தன்னிலே இவற்றை –
முமுஷூ ஸிஸ்ர்ஷயா-ஸ்ர்ஷ்டித்து -பின்னை-வேத சஷூசையும் கொடுத்து விட்டால்
குண அனுகூலமாக தேவதையை ஆஸ்ரயித்து
அவற்றின் உடைய ஸ்வ பாவங்களையும்-தன் வாசியையும் அறிந்து நம் பக்கலிலே வருகிரன என்று ஆய்த்து
தேவதைகளை ஸ்ர்ஷ்டித்தது –
அது போய் கொள் கொம்பு மூடப் படர்ந்து-அவர்கள் பக்கலிலே ஆதாரத்தை பண்ணி-தன் பக்கலிலே வைமுக்யத்தை பண்ணும்படியாய் விட்டது –
நல்லதோர் அருள் தன்னாலே –
தான் நினைத்த வழியே தன்னுடைய ஹிதம் அறிந்து போராதே-நோவு பட்டு இருந்தன ஆகாதே என்று கிருபை பண்ணினான் ஆய்த்து –
நல்லதோர் அருள் –
இவற்றின் உடைய கர்ம அனுகுணம் ஆதல் –-ஆஸ்ரய அனுகுணம் ஆதல் பண்ணும் அருள்போல் அன்றியே –க்ர்ப்பயா கேவலம் -என்கிறபடியே
இவற்றின் உடைய துர்கதியைக் கண்டு பண்ணும் அருள் –
இவர்கள் தம் தாம் தசையை நினைந்து அனுசந்தித்து=அதுக்கு அனுதபிக்கவும் அறியாதே இருக்கச் செய்தே பண்ணும் அருள் இறே
நல்லதோர் அருள் -என்கையாலே–கீழ் தேவதைகளை உண்டாக்கி வைத்ததும் அருளின் கார்யம் என்கிறது –
அருள் தன்னாலே -காட்டினான் திருவரங்கம்-
சிலர் எங்களுக்கு காட்ட வேண்டும் என்ன -காட்டுகை அன்றிக்கே-முலைக் கடுப்பு தீர தரையிலே பீச்சுவாரைப் போலே
தன் செல்லாமையினால் காட்டினான் ஆய்த்து –
இருந்த கிழிச் சீரையோடே ரத்னத்தை கொடுப்பாரைப் போலே-கோயிலோடு கூட வாய்த்து தன்னைக் காட்டிக் கொடுத்தது –
இவர்களோடு இவர்கள் ஆஸ்ரயிகிற தேவதைகளோடு வாசி அற-தம் தாம் நிலையை உணர்ந்து
ரஷக அபேஷை உண்டான வன்று நாம் யோமாக ஒண்ணாது என்று-ரஷகனான தான் தன்னை சந்நிஹிதன் ஆக்கி வைத்தான் –
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான் -திருவாய்மொழி -4-5-5
ஆற்ற –
அமைய : பொறுக்கப் பொறுக்க என்றது, ‘குளப்படியிலே கடலை மடுத்தால் போலே யன்றிக்கே,–
சாத்மிக்க சாத்மிக்க (பொறுக்கப்பொறுக்க ) ஆயிற்றுத் தன் கல்யாண குணங்களை அனுபவிப்பித்தது’ என்றபடி.
‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்ற அனந்தரத்திலே (அதன் பின் )
‘வீற்றிருந்து ஏழ் உலகு’ என்ற திருவாய் மொழியின் அனுபவத்தை அனுபவிப்பித்தானாகில்,
என்னைக் கிடையாது கிடீர் ( நான் உளேன் ஆகேன் ஆன்றோ?’ ) என்கிறார் என்றவாறு.
நல்ல வகை காட்டும் –
தன்னுடைய குணங்களையும் சேஷ்டிதங்களையும் (செயல்களையும் )அனுபவிப்பிக்கின்ற.
அம்மானை –
உடையவன் உடைமையின் நிலை அறிந்தன்றோ நடத்துவான்-
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் -திருவாய் மொழி -5-2-8-
இறுக்கும் இறை இறுத்து உண்ண தன்மூர்த்தி தெய்வங்களாக எவ்வுலகுக்கும் நிறுத்தினான்-
செய்த பயிருக்குக் கடமை இறுக்குமாறு போன்று, உங்களுடைய புண்ணிய பாவங்களுக்குத் தகுதியாக
அவ்வவ் தேவதைகளுக்குக் கொடுக்கும் திரவியங்களைக் கொடுத்து ஜீவிக்கைக்காக,
எல்லா உலகங்களிலும் தனக்குச் சரீரமாக இருக்கிற தேவதைகளை நிறுத்தினான். என்றது,
ராஜாக்கள் ஊர்தோறும் கூறு செய்வார்களை வைக்குமாறு போன்று நிறுத்தி வைத்தான் என்பார் ‘நிறுத்தினான்’ என்கிறார்.
அத்தெய்வ நாயகன் தானே –
இவ்வுலகிலுள்ளாரோடு அந்தத் தேவர்களோடு வேற்றுமை யற எல்லார்க்கும் ஒக்க நியமிக்கின்றவனாய் இருக்கிற தானே.
———————————————————-
191
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோறு -14
வினைகளை வேரற பாய்ந்து -திருவாய் மொழி -3-2-1-
திருவரங்கம் என்னாத மூர்க்கர் -வழி யல்லா வழியில் அபஹரித்து ஜீவித்து உண்கிறார்கள் –
பாய்ந்து– சர்வ சக்தன் சர்வேஸ்வரன் வினைகளை போக்கும் பொழுது பாய்ந்து -போக்குகிறான் சினம் தோற்றுகிறது
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோறு -14-திருவரங்கம் என்னா மிண்டர்-
அவன் தங்களுக்காக வந்து கண் வளரா நிற்க –
அவன் இருந்த தேசத்தை வாயாலே சொல்லவும் கூட மாட்டாத மூர்க்கர் –
மூர்க்கர் -ஆகிறார் –விழுக்காடு அறியாதவர்கள்-அதாகிறது
நரக வாசம் கர்ப்ப வாசம் -முதலானவை பிடரியைப் பிடித்துக் கொண்டு நிற்க
கேவலம் தேக போஷண பரராய் இருக்குமவர்கள் –
பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே
திருவரங்கம் என்ன மாட்டாத மூர்க்கராய் இருப்பார் ஜீவிக்கிறது
வழி அல்லா வழியே அபஹரித்து ஜீவிக்கிறார்கள் இத்தனை –அத்தை விலக்கி நாய்க்கு இடும்கோள்
தங்களை உத்தேசித்து வந்து கண் வளர்ந்து அருளுகிற அந்த உபகாரத்தை அறியாத க்ருதக்னர் ஜீவிக்கிற ஜீவனத்தை விலக்கி
ஒரு நாள் ஒரு பிடி சோறு இட்டவன் வாசலைப் பற்றிக் கிடக்கும் அத்தனை க்ருதஞ்ஞமான நாய்க்கு இடும் கோள்-
இது தான் –
யோ சாதுப்யோர்த்தமாதாய சாதுப்ய ஸ்சம்ப்ரயச்சதி -என்னும் நிர்வாஹகரைக் குறித்து இறே சொல்லிற்று –
வினைகளை வேரற பாய்ந்து -திருவாய் மொழி -3-2-1-
வினைகளை வேர் அறப் பாய்ந்து எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவன் –
ராக்ஷஸா நாம் ஷயம் க்ருத்வா ஸூதயித்வாச ராவணன் லங்காம் உன்மூலிதாம் க்ருத்வா கதா த்ரஷ்யதி மாம் பதி
(‘என் கணவர், இராக்கதர்களுக்கு அழிவினைச் செய்து, இராவணனையும் கொன்று, இலங்கையையும் வேரோடு அழித்து,
எப்பொழுது என்னைப் பார்ப்பார்?’ என்று பிராட்டி கூறியது போன்று) இவரும் மநோ ரதித்து
விஸ்லேஷ வ்யசனத்துக்கு அடியான அவித்யாதிகளை வாசனையோடே போக்கி எந்நாள் இனி வந்து கூடுவன்?’ என்கிறார்
‘பாய்ந்து’ என்பதில்-சினம் தோற்றுகிறது. ‘ஒரு சர்வ சத்தி செய்யுமதனை யான் செய்யவோ?’ என்கிறார். .
எந்நாள் –எனக்கு இப்போதே பெறவேண்டும்’ என்னும் விருப்பமில்லை;
இன்ன நாள் பெறக்கடவை’ என்று ஒரு நாளிட்டுத்தர அமையும். –
பூர்ணே சதுர்தசே வர்ஷே -பதினான்கு வருடங்கள் நிறைந்திருக்க, பஞ்சமி திதியன்று’ என்னுமா போலே , ‘
யான் –நீ தந்த கரணங்களை இதர விஷயப் பிராவண்யத்துக்கு உடலாக்கி அநர்த்தத்தைச் சூழ்த்துக் கொண்ட யான்.
உன்னை –‘நான் விளைத்துக்கொண்ட அநர்த்தத்துக்குப் போக்கடி சொல்லாய்’ என்று வளைக்கலாம்படியாயிருக்கிற உன்னை.
இனி –நீ தந்த கைம்முதலை அழித்துக்கொண்ட பின்பு.
இனி வந்து கூடுவனே –
‘இனி வந்து கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்று நிராசராகிறார் என்று முன்புள்ள முதலிகள் அருளிச்செய்வர்.
எம்பெருமானார் ‘நிராசர் ஆனால் பின்னை முடிவார் ஒருவர்;
ஒன்பதாம் பாட்டில் – நிராசராக, பத்தாம் பாட்டில் – அவன் வந்து சமாதானம் பண்ணினானாக அமையும்’ என்று அருளிச்செய்வர்.
ஆதலால், இப்பாசுரத்தில் ‘நான் வந்து உன்னைக் கிட்டுவேனாக நீ பார்த்து வைத்த நாளைச் சொல்லாய்,’ என்கிறார் என்றபடியாம்-
———————————————————-
192-
சோற்றை விலக்கி நாய்க்கு இடுமினீரே -14
சோற்றினை வாங்கி புல்லைத் திணி மினே -பெரியாழ்வார் திருமொழி -4-4-5-
தங்களை உத்தேசித்து வந்து கண் வளருகிற அந்த உபகாரத்தை அறியாத க்ருதக்னர்
க்ருதஞ்ஞமான நாய்க்கு இடுமின்
மனுஷ்ய யோநியிலே பிறந்து வைத்து அறிவிலிகளாக -ஞானம் இல்லாதவர் பசுக்களுக்கு சமானம்
இப்படி இருவரும் அருளிச் செய்தது -இது தன்னை கேட்டாகிலும்
லஜ்ஜா பயங்கள் உண்டாகி பகவத் விஷயத்திலே நெஞ்சு புரிவார்களோ என்கிற நசையாலே –
சோற்றை விலக்கி நாய்க்கு இடுமினீரே -14–தங்களை உத்தேசித்து வந்து கண் வளர்ந்து அருளுகிற அந்த உபகாரத்தை
அறியாத க்ருதக்னர் ஜீவிக்கிற ஜீவனத்தை விலக்கி
ஒரு நாள் ஒரு பிடி சோறு இட்டவன் வாசலைப் பற்றிக் கிடக்கும் அத்தனை-க்ருதஞ்ஞமான நாய்க்கு இடும் கோள்-
சோற்றினை வாங்கி புல்லைத் திணி மினே -பெரியாழ்வார் திருமொழி -4-4-5-
பூமி பாரங்கள்
இப்படி பகவத் ஸ்மரண கந்த ரஹிதர் ஆகையாலே -விஸ்வம்பரையான பூமியாலும்
பரிக்க ஒண்ணாத பாரமாய் இருந்துள்ள பாபிகள் ஆனவர்கள் –
தாங்கள் அறியாது இருக்க செய்தேயும் -தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக
தங்களை ரஷித்து கொண்டு திரியும் ஈஸ்வர விஷயத்தில் க்ர்தக்னர் ஆனவர்களை இறே பூமி பாரம் என்கிறது
உண்ணும் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணி மினே
மனுஷ்ய யோனியில் பிறந்து வைத்தே அறிவிலிகள் ஆகையாலே -அந்த ஜன்ம பலம் இல்லாத
உங்களுக்கு -மனுஷ்யர் ஜீவிக்கிற ஜீவனம் எதுக்கு -என்று பறித்து -அறிவில்லாத பசுக்கள்
தின்கிற ஜீவனமான புல்லைக் கொண்டு திணியும் கோள்
ஆகார நித்ராதி சதுஷ்டயமும் (ஆதி -வம்ச விருத்தி )-பசுக்களுக்கும் மனுஷ்யருக்கும் சமமாய் இருக்க
ஞானம் இறே பசுக்களை காட்டிலும் இவர்களுக்கு அதிகமான விஷயம் –
அந்த ஞானம் இல்லாதார் பசு சமர் இறே -அத்தை பற்ற மனுஷ்யர் ஜீவிக்கிற சோற்றை தின்னாதபடி-
பசுக்கள் தின்கிற புல்லை திணியும்
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமினீரே-என்று
தங்கள் திறத்தில் அவன் செய்கிற உபகாரத்தை அறிந்து –
அவன் எழுந்து அருளி இருக்கிற தேசத்தை வாய் புலத்த வேண்டி இருக்க –
அது செய்யாதே க்ர்த்கனராய் முண்டடித்து பலத்தாலே ஜீவித்து திரிகிறவர்கள் ஜீவிக்கிற சோற்றை விலக்கி
ஒரு நாள் ஒரு பிடி சோறு இட்டவன் வாசலைப் பற்றி கிடக்கும் க்ர்த்க்ஞமான நாய்க்கு இடுங்கள் நீங்கள் –
என்றார் இறே தொண்டர் அடி பொடி ஆழ்வார்
இவர்கள் இப்படி திணிமின் – இடுமின் -என்கிறது ஆரைக் குறித்து என்னில் –
விசேஷஞ்சராய் இது செய்கைக்கு ஈடான சக்திமான்களாய் இருப்பவரைக் குறித்து -இறே
இப்படி இவர்கள் தான் அருளிச் செய்தது
இது தன்னைக் கேட்டாகிலும் லஜ்ஜா பயங்கள் உண்டாய் –
பகவத் விஷயத்தில் நெஞ்சு புரிவார்களோ என்னும் நசையாலே இறே
——————————————————————
193-
சூதனாய் கள்வனாகி -16
களவும் சூதும் -திருவாய்மொழி -2-10-10-
சூதாவது பச்யதோஹரத்வம் -சத்வ வ்ருத்தனாய் இருப்பான் ஒருவன் –
பர சேஷமாய் கொண்டு ஆத்ம ஸ்வரூபம் உண்டு -சேஷியான ஈஸ்வரனும் உண்டு –
என்று இருப்பவனைக் கண்டு இவை யெல்லாம் பொய் என்று அவனை விப்ரலம்பித்து தன் படி யாக்கிக் கொள்கை –
களவாவது பர த்ரவ்யத்தை தனது என்று இருக்கை
பிரமாண விஷயமான அர்த்தத்தை இல்லை என்கை
களவாகிறது ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவை தனது என்று இருக்கை
சூதனாய் கள்வனாகி -16-
சூதாவது –பஸ்யதோஹரத்வம்
களவாவது –பர த்ரவ்யத்தை என்னது என்று இருக்கை –
பிரமாண விஷயமான பரத்வத்தை இல்லை என்கை –
இனி காஷ்ட அபஹாரம் பண்ணினவனுக்கும்-ரத்ன அபஹாரம் பண்ணினவனுக்கும்
அபஹாரம் ஒத்து இருக்கும்
த்ரவ்ய வைஷம்யத்தாலே தோஷமும் நெடு பட்டு இருக்கும்
சண்டாள த்ரவ்யத்தை அபஹரித்தார்க்கும்-வசிஷ்ட த்ரவ்யத்தை அபஹரித்தார்க்கும்
த்ரவ்யம் ஒன்றானாலும் ஸ்வ வான்களுடைய வைஷம்யத்தாலே தோஷமும் நெடு பட்டு இருக்கும்-
இத் த்ரவ்யம் ஸ்ரீ கௌஸ்துபம் போலே ஈஸ்வரனுக்கு-ஸ்ப்ருஹ ணீ யமான ஆத்ம த்ரவ்யம்
உடையவனும் சர்வேஸ்வரன் ஆகையாலே தோஷத்துக்கு அவதி இல்லை என்கை –
ஆக-களவாகிறது –-ஈஸ்வர சேஷமான ஆத்மவஸ்துவை என்னது என்று இருக்கை –
சூதாவது-பஸ்யஹோரத்வம் –
அதாவது
சத்வர்த்தனாய் இருப்பன் ஒருவன் பர சேஷமாய்க் கொண்டு ஆத்ம ஸ்வரூபம் உண்டு -சேஷியான ஈஸ்வரனும் உண்டு –
தர்ம அதர்மங்கள் உண்டு என்று அறிதல் –
இவை எல்லாம் பொய் காண் என்று அவனை விப்ரலம்பித்து தன் படி யாக்கிக் கொள்ளுகை –
களவும் சூதும் -திருவாய்மொழி -2-10-10-
சூது என்று களவும் சூதும் செய்யாதே-
நமக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது என்று சூதும் களவும் செய்யாமல்.
சாஸ்திரங்கள் இவற்றை நிஷேதிக்கையாலே ‘செய்தல் ஆகாது’ என்று இவ்விரண்டனையும்
விலக்குகின்றமையால், ‘சூதும் களவும் செய்யாதே’ என்கிறார்.
இனி, களவாவது, சோரேண ஆத்ம அபஹாரிணா ‘ஆத்துமாவைத் திருடின திருடன்’ என்கிறபடியே,
ஆத்துமாவைத் திருடுதல் என்றும்;
சூதாவது, ஸாத்விகனாய்ப் பிராமாணிகனாய் இருப்பான் ஒருவன், ‘சர்வேஸ்வரன் ரக்ஷகன் ’ என்று விஸ்வஸித்து- நம்பி இருந்தால்,
‘காண்கிற சரீரத்துக்கு அப்பால் ஓர் ஈஸ்வரனாவது என்? ஆத்மா வாவது என்?’ என்று
காணக் காணக் கொள்ளை கொள்ளுதல்-அபஹரிக்கை – என்றும் கூறலுமாம்.
———————————————————————-
194
பாதம் நீட்டி -19
நீள் கழல் -திருவாய்மொழி -1-9-11
ஆழ்வார் அளவும் நீட்டின திருவடிகள்
திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள் -ஒக்கின்றன
திரு முடிப்பக்கம் குட திசை மேற்கு
திருவடிப் பக்கம் குணதிசை கிழக்கு
திரு மண்டங்குடி கோயிலுக்கு கிழக்கே இறே இருப்பது –
துர்யோதன ஸ்தானம் வாழ்ந்து போனால் அர்ஜுனன் இருப்பு வாழ சொல்ல வேண்டா இறே
ஆளவந்தார் திருவடி தொழ எழுந்து அருளினால் துரியோதன ஸ்தானம் என்று
திரு முடிப் பக்கத்தில் ஒரு நாளும் எழுந்து அருளி அறியார் -திரு வாசலுக்கு கிழக்கே எழுந்து
அருளி இராத பிரதேசம் இல்லை -என்று பட்டர் அருளிச் செய்வர் –
ஆசாலேசம் உடையார் இருந்த இடத்திலே செல்ல வளர்ந்த திருவடி -நீள் கழல்
அடியார் அளவும் வளர்ந்த திருவடிகளை இப்படி ஆழ்வார்கள் அனுபவிக்கிறார்கள்
பாதம் நீட்டி -19
குண திசை பாதம் நீட்டி –
மூ உலகும் தொழுது ஏத்தும் சீரடியான் -என்கிறபடியே
சகல லோகங்களும் வாழ்வதற்கு இழி துறையான திருவடிகளை கீழைத் திக்கு வாழும்படியாக நீட்டி
நீட்டி -என்றது-என்னளவும் நீட்டின திருவடிகள் என்கை –
துர்யோ ஸ்தானம் இங்கனே வாழ்ந்து போனால்-அர்ஜுனன் இருப்பு வாழச் சொல்ல வேண்டா இறே
ஆளவந்தார் திருவடி தொழ எழுந்து அருளினால்
துர்யோதன ஸ்தானம் என்று திருமுடிப் பக்கத்தில் ஒரு பிரதேசத்தில் ஒரு நாளும் எழுந்து அருளி அறியார் –
திரு வாசலுக்கு கிழக்கு எழுந்து அருளி இராத பிரதேசம் இல்லை -என்று பட்டர் அருளிச் செய்வர் –
நீள் கழல் -திருவாய்மொழி -1-9-11
எம்பிராற்கு நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே–
எம்பிராற்கு விண்ணப்பம் செய்ய நிச்சலும் நீள் கழல் சென்னி பொருமே-
தனக்குப் பாங்கான சமயத்தில் ஒரு கால் விண்ணப்பம் செய்ய நாள் தோறும் ஆசாலேசம் உள்ளார் இடத்திலே
செல்ல வளரும் திருவடிகள் சென்னியோடே சேரும்
எம்பிரான் என்றது –
இப்படி சாத்மிக்க சாத்மிக்கவும் -இலவு மறக்கவும் அனுபவிப்பித்த உபகாரகன் என்றபடி
ஸ்ரீ ஆழ்வார் க்ரமத்திலே உச்சி உளானே என்ற பேறு-இது கற்றற்கு முதல் அடியிலே உண்டாம்
பொரு -என்று ஒப்பாய் -ஒப்பாவது -சேருகையாய் -சேரும் என்றபடி –
உச்சியுள்ளே பெரும் என்று இவர் பெற்றதுவே பேறாகக் கடவது –
திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள் -ஒக்கின்றன
திருக் கமல பாதம் –
செவ்வி குளிர்த்தி விகாசம் பரிமளம் தொடக்கமானவை-ஆதித்யனைக் கண்டால் இறே தாமரை அலருவது –
இத்தாமரைக்கு ஆதித்யன் இவர் –
பிராட்டி திருமுலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொள்ளும் திருவடிகள்
இவருடைய தளிர் புரையும் திருவடிகள் இருக்கிற படி
அம்மான் திருக் கமல பாதம் –தொடர்ந்து வருகைக்கு ப்ராப்தி –
வந்து –
த்விபாந்தரத்தில் சரக்கு சேர வேண்டினால் பாதிப் பாதி வழி யாகிலும் –
வருதல் -ஒருதலைப் பற்றுதல் செய்ய வேணும் இறே -அங்கன் இன்றியே –
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்கிறபடி
வழி வந்தானும் -தானே பற்றினானும் தானே -என்கிறது-
திருக் கமல பாதம் –
பெரும் காற்றிலே யிழிவார் தெப்பம் கொண்டு இழியுமா போலே -ஒரு தாமரைப் -பூவை
திருஷ்டாந்தம் -ஆக்குகிறார் -செவ்வி குளிர்த்தி நாற்றம் விகாசம் -இவை தாமரைப் பூவைப் போலே இருக்கையாலே –
ஆதித்ய சன்னதியிலே அலறும் தாமரை போலே ஆஸ்ரித சன்னதியிலே அலறும் தாமரை யாயத்து -திருவடிகள்-
பிராட்டி திருமுலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொள்ளும் திருவடிகள்
இவருடைய தளிர் புரையும் திருவடிகள் இருக்கிற படி
அம்மான் திருக் கமல பாதம் –என்கையாலே ப்ராப்தமுமாய் ப்ராப்யமுமாய் ஆன திருவடிகள் -என்கை
நாராயண சரணங்கள் –என்றபடி
வந்து –என்று அவனுடைய உபாய பூர்த்தி -சொல்லுகிறது
விதிஸி வசனகாத் யைர்தத் யாது மத்யந்த தூரமான திருவடிகள் கிடீர் என்னளவும் வந்து விஷயீ கரித்தது
த்விபாந்தரத்தில் சரக்கு சேர வேண்டினால் பாதிப் பாதி வழி யாகிலும் –
வருதல் -ஒருதலைப் பற்றுதல் செய்ய வேணும் இறே -அங்கன் இன்றியே –
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்கிறபடி-வழி வந்தானும் -தானே பற்றினானும் தானே -என்கிறது-
————————————————————————-
195
கடல் நிறக் கடவுள் எந்தை -19
ஈசன் வானவர்க்கு –என் கண் பாசம் -திருவாய்மொழி -3-3-4-
நித்ய ஸூரிகளுக்கு நித்ய ஆ காங்க்ஷிதமான வடிவை உடைய பரதேவதை கிடீர் –
நித்ய சம்சாரியைக் குறித்து சாபேஷமாக கிடக்கிறது -தாழ்வுக்கு எல்லை நிலமான என்னளவும் வரும்படி வெள்ளம் கோத்தது –
என் கண் பாசம் வைத்த -அவர்கள் சத்தை உண்டாக்க- அவர்களோடு கலந்து -தான் சத்தை பெற என்னோடு கலந்தான் –
நெஞ்சும் உடம்பும் எனக்கு தந்து- ஜீவனம் வைப்பாரோ பாதி அவர்கள் பக்கலில் –
கடல் நிறக் கடவுள் எந்தை -19-
கடல் நிறக் கடவுள் –
நித்ய ஸூரிகளுக்கு நித்ய காங்ஷிதமான வடிவை உடைய பர தேவதை கிடீர்
ஒரு சம்சாரியைக் குறித்து சாபேஷமாய்க் கிடக்கிறது –
கடல் போலே கண்டார்க்கு ஸ்ரமஹரமாய்த்து வடிவு இருப்பது –
கடல் வர்ணத்துக்கு போலியாம் இத்தனை போக்கி-அப்ராக்ருத வஸ்துவுக்கு ஒப்பாக மாட்டாது இறே –
எந்தை –
அவ்வடிவைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன் –பழம் கிணறு கண் வாருகிறது என் –
பிரகிருதி வச்யனாய் தாழ்வுக்கு எல்லையான என் அளவும் வர அன்றோ வெள்ளம் கோத்தது –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதிக்கே -என்னக் கடவது இறே –
ஈசன் வானவர்க்கு –என் கண் பாசம் -திருவாய்மொழி -3-3-4-
வானவர்க்கு ஈசன் என்பன் –நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகன் என்று சொன்னேன்.
என்றால் –நான் இப்படிச் சொன்னால்.
அது திருவேங்கடத்தானுக்குத் தேசமோ –
திருமலையிலே வந்து ஸூலபனாய் நிற்கிறவனுக்கு ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்று இருக்கிற இது ஓர் ஏற்றமாயிற்றதோ?
‘ஸ்ரீவைகுண்ட நாதனுக்கு ஏற்றம் சொல்லுகிறேனாக மயங்கினேன்;
கானமும் வானரமும் வேடுமானார் ஓலக்கம் கொடுக்க நிற்கிறவனுக்கு நித்ய ஸூரிகள் ஓலக்கம் கொடுக்க நிற்கிறது ஓர் ஏற்றமோ?’ என்றபடி,
‘பரமபதத்தை விட்டு இங்கே வந்து இந்நிலத்தையிட்டு நிரூபிக்க வேண்டியிருக்கிறவன்’ என்பார், ‘திருவேங்கடத்தானுக்கு’ என்கிறார்.
‘ஆக, முடி சூடி அரசு செலுத்துமவனுக்கு ஏற்றம் சொல்லும் போது தட்டியிலிருந்த காலத்தின் தன்மையையிட்டு
ஏற்றம் சொல்ல ஒண்ணாதே,’ என்கிறார் என்றவாறு. ‘
(முடி சூடி அரசு செலுத்தும் நிலை, திருவேங்கடத்தில்; தட்டியில் இருக்கும்-நிலை, பரமபதத்தில். தட்டி – சிறைக்கூடம்.)
ஆயின், திருவேங்கடத்தானுக்கு ஏற்றஞ்சொல்லலாவது யாங்ஙனம்?’ எனின்,
‘‘நீசனேன் நிறைவொன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ என்ன வேண்டும்;
இது கிடக்க அதனையோ சொல்லுவது?’ என்கிறார்.
நிறைவொன்றுமிலேன் –
தாழ்வினையும் நிறைவில்லாமையையுங்கூட்டி இங்ஙனம் ஆழ்வாராகப் பண்ணிற்று என்கிறாராயிற்று.
அமர்யாத ந்ருபசு-என்னுமா போலே ஜனனிக்கு ‘தாய்க்கும் -மற்றொரு பொருளுக்கும் வேற்றுமை வையாது செயல் புரியும் ஜென்மம்;
சாஸ்திரங்கள் ‘ஆகாதன’ என்று விலக்கியனவற்றைச் செய்து அவற்றினின்றும் மீளமாட்டாமல் போந்தேன்;
ஷூத்ர ‘சாஸ்திர மரியாதையைத் தப்பி நிற்றல் ஆகாது காண்’ என்று ஒருவன் சொன்னால்,
அதனைக் கைக்கொள்ளுந்துணை நெஞ்சில் அறிவில்லாதானொருவன்;
சல மதி -அப்படியின்றி, சொல்லுவாரையும் பெற்று, அது நெஞ்சில் படவும் பெற்றதாகில், அதுதன்னை நம்புதல் செய்யாது
‘நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்’ ஆனவன்;
அஸூயா பிரசவபூ-ஹிதம் – நன்மை சொன்னவனுடைய-உத்கர்ஷம் – உயர்வினைப் பொறாதவன்;
க்ருதக்ந -உபகரித்த விஷயத்திலே அதனை இல்லை செய்து அபகாரங்களைச் செய்து போந்தவன்;
துர்மாநீ– அபகாரங்களைச் செய்து போதலேயன்றி -ஹிதம் -நன்மை சொன்னவர்களுக்கும் மேலாக என்னை நினைத்துப் போந்தவன்;
ஸ்மர பரவச -அறிவுடையார்க்கு மேலாகவும் காமுகர்க்குக் கீழாகவும் நினைத்திருப்பவன்;
வஞ்சன பர -புறம்பே பறித்துக்கொண்டு வந்து ஒரு பெண் பக்கலிலே சேர்த்து அங்கே திரண்டவாறே அவ்விடந்தன்னில் நின்றும் அபகரிப்பவன்;
ந்ருசம்ச ‘நம்மை விரும்பினவர்களிடத்தில் வஞ்சனையைச் செய்தோம்’ என்ற இரக்கமுமின்றியிருப்பவன்;
பாபிஷ்ட்ட– இவை தாம் உருவச் செல்லும்படி மேன்மேலெனக் காரியம் பார்ப்பவன்’
பாபத்திலே யாயிற்று ஊன்ற அடியிட்டு இருப்பது என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.
‘இது ஆளவந்தார் அருளிச்செய்ததேயாகிலும், நான் என் வாயால் இப்பாசுரம் சொல்லமாட்டேன்,’ என்பராம் அனந்தாழ்வான்.
(அழகர், கிடாம்பியாச்சானை அருள்பாடிட்டு, ‘நீ ஒன்று சொல்’ என்ன, ‘அபராத ஸஹஸ்ர பாஜனம்’ என்று தொடங்கி ‘அகதிம்’ என்ன,
‘நம் இராமாநுஜனையுடையையாயிருந்து வைத்து, அகதி என்னப் பெறாய்’ என்று அருளிச்செய்தாராம்)
ஆக, ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்றதனால்,-
அநாத்ம- ஆத்மாவிற்குத் தகுதியில்லாத குணங்களே என் பக்கல் உள்ளன; ஆத்ம குணங்கள் ஒன்றுமில்லை என்பதனைத் தெரிவித்தபடி.
‘என் தண்மையும் நிறைவு இல்லாமையுமன்றோ நான் இவ்வார்த்தை-ஈசன் வானவர்க்கு என்பன் – சொல்லிற்று
என்கிறார்’ என்பராம் பிள்ளை திருநறையூர் அரையர்.
வானவர்க்கு ஈசன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதி –
‘நித்யஸூரிகளுக்கு ஈசனாயிருந்தான்; என் பக்கலிலே பற்றை-சங்கத்தை – வைத்தான்.
அவர்களுக்கு-சத்தை – இருப்பு உண்டாகைக்காக அவர்களோடே கலந்தான்:
தன்-சத்தை – இருப்பைப் பெறுகைக்காக என்னோடே வந்து கலந்தான்;
பிராதம்யத்துக்கும் பழிக்கும் செங்கல் சீரைக்கும் ஜீவனம் வைப்பாரைப் போன்று அவர்கள் பக்கல்; நெஞ்சும் உடம்பும் தந்தது எனக்கு’ என்கிறார்.
(பிராதம்யம் – முதன்மை. செங்கல் சீரை – காஷாயம்.–முதன்முதல் விவாகம் செய்துகொள்ளப்பட்டவள் என்பதற்காகவும் ‘முதல் மனைவிக்கு
ஜீவனம் கொடுக்கவில்லை’ என்று உலகத்தார் கூறும் பழிச்சொற்களுக்காகவும், காஷாய வஸ்திரம் தரித்துப் பிச்சை புக்காளாகில் தனக்கு மானக்கேடு
உண்டாகுமே என்ற எண்ணத்தாலும் முதல் மனைவிக்கு ஜீவனோபாயத்துக்குச் சிறிது பொருள் கொடுப்பாரைப் போன்று
‘பரஞ்சுடர்ச் சோதி’ என்றதனால் உடம்பு தந்தது சொல்லிற்று)
இனி,என்கண் பாசம் வைத்த’ என்பதற்கு,-தன் பக்கலிலே சங்கம் உண்டாம்படி -பண்ணினான் -‘
என்னிடத்தில்-ஸ்வ விஷய பாசத்தை – தன் சம்பந்தமான அன்பை உண்டாக்கினான்’ என்று பொருள் கூறுவாருமுளர்.
இனி,அஹ்ருதயமாக இருக்கச் செய்தே – மனத்தொடு படாமலிருக்கவும் மனசுக்காகக் கலந்தானாயிருத்தலன்றி,
ச ஹ்ருதயமாக -மனம் முன்னாகக் கலந்தானென்னுமிடத்தை வடிவிற்பிறந்த புகர் காட்டாநின்றதாதலின், ‘சுடர்ச்சோதி’ என்றும்,
கலந்த பின்னர்-உஜ்வலனாய் முன்பில்லாத புகரெல்லாம் வடிவிலே உண்டாயிராநின்றதாதலின், ‘பரஞ்சுடர்’ என்றும்
அருளிச்செய்கிறார் என்னுதலுமாம்.
‘பிராட்டியோடே கலந்தாற் போலே பேரொளிப் பிழம்பாய் இராநின்றான்’ என்றபடி.
——————————————————————————–
196
பள்ளி கொண்ட மாயனார் -20
அரவின் அணை மிசை மேய மாயனார் -அமலனாதி -7-
கண் வளர்ந்து அருளும் போதைக்கு அழகின் ஆச்சர்யம்
சாய்ந்தவாறே மற்றயோர்க்கு பொல்லாங்கு தெரியும் இங்கே பழைய அழகும் நிறம் பெரும் –
இன்று நாம் சென்று அனுபவிக்கப் பார்த்தாலும் -ஒருக்கடித்து என்ன ஒண்ணாதே மல்லாந்து
என்ன ஒண்ணாதே இருக்கும் ஆச்சர்யம் –
பள்ளி கொண்ட மாயனார் -20
பள்ளி கொண்ட மாயனார் –
கண் வளர்ந்து அருளும் போதை அழகு ஆச்சர்யமாய்த்து இருப்பது –
சமயா போதிதச் ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தப-என்னக் கடவது இறே –
நிற்றல் இருத்தல் செய்தார் ஆகிலும் அகலலாம் கிடீர்
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் -என்றும்
ஆனையில் கிடந்த கிடக்கை கண்டிடப் பெற்றிலேன் -என்றும் சொல்லக் கடவது இறே –
ஆனையில் கிடக்கை -ஆனை போல் கிடக்கை –
அரவின் அணை மிசை மேய மாயனார் -அமலனாதி -7-
அரவின் அணை மிசை –ரத்னங்களை எல்லாம் தங்கத்திலே புதைத்துக் காட்டுமா போலே
தன் அழகு தெரிய திருவநந்தாழ்வான் மேல் சாய்ந்து காட்டுகிற படி
மேய மாயனார் –மின் மினி பறக்கிற படி –
ஸ மயா போதித ஸ்ரீ மான் -எல்லாருக்கும் ஒன்றிலே சாய்ந்தவாறே பொல்லாங்குகள் தெரியும்
இங்கு பழைய வழகுகளும் நிறம் பெறும்
அரவின் அணை மிசை மேய மாயனார் –இவ்வளவேயோ உள்ளது –
யத்ர ராம ஸ லஷ்மண-என்றும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்றும் சொல்லுகிறபடியே புருஷகார பலமும் உண்டு என்கிறார்
அரவின் அணை மிசை மேய –ரத்னங்களை சாடியிலே பதித்துக் காட்டுமா போலே-தன் அழகு தெரியாதார்க்கு திருவந்தாழ்வான் மேல் சாய்ந்து காட்டின படி
அரவின் அணை மிசை மேய -தான் புருஷகாரமாக சிலரைக் காட்டிக் கொடுத்தால் அவர்களை அவன் ரஷியாதே விடில் தானும் அவனை எடுத்து உதறிப் போக்கும்
அரவின் அணை மிசை மேய மாயனார் –ஸ மயா போதிதா ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தப–என்கிறபடியே தான் எழுந்து இருந்து ஒரு வ்யாபாரம் பண்ண வேணுமோ
புலி கிடந்த தூறு என்றால் மிருகங்கள் எல்லாம் காடு பாய்ந்து போமா போலே
ஆஸ்ரிதர் உடைய விரோதி வர்க்கம் அடைய தான் கிடக்கிற படியைக் கண்ட போதே
கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -என்னும்படி கிடக்கிற ஆச்சர்ய பூதன் –
மாயனார் -மின் மினி பறக்கிறபடி
ஸ மயா போதித ஸ்ரீ மான் -எல்லாருக்கும் ஒன்றிலே சாய்ந்தவாறே பொல்லாங்குகள் தெரியும்
இங்கு பழைய வழகுகளும் நிறம் பெறும்
மாயனார் –
அங்கன் அன்றிக்கே கிடந்ததோர் கிடைக்கை கண்டும் -என்கிறபடியே இன்று
நாமும் சென்று அனுபவிக்கப் பார்த்தாலும் -ஒருக்கடித்து என்ன ஒண்ணாதே -மல்லாந்து
என்ன ஒண்ணாதே யிருக்கிற ஆச்சர்யத்தை சொல்லிற்று ஆகவுமாம்
————————————————————————————
197
மனமதொன்றி -21
பூசும்சாந்து என் நெஞ்சமே -திருவாய்மொழி -4-3-1
மனஸ் என்றது மநோ வ்ருத்தியை சொல்லுகிறது
நெஞ்சமே -நெஞ்சின் கார்யமான ஸ்ம்ருதியை சொல்லுகிறது
மட நெஞ்சால் குறைவிலமே -4-3-2-என்கிற இடத்தில் -நாயகன் வரவு தாழ்த்தான் என்று அவன் முன்னே
சாந்தை பரணியோடே உடைப்பாரைப் போலே என் நெஞ்சம் எனக்கு வேண்டா என்கிறார் -ஈட்டு ஸ்ரீ ஸூ க்தி
நெஞ்சு சாந்து பரணியாகவும் -அதில் உள்ள ஸ்ம்ருதி சாந்தாகவும் விவஷிதம் -அரும் பத உரை –
பூசும் சாந்து என் நெஞ்சமே பாசுர அவதாரிகையிலும் ஈட்டில் -காரண கார்யமான ஸ்ம்ருதி உள்ளது –
ஆக இருவரும் மநோ வ்ருத்தியை மனம் என்கிறார்கள் –
மனமதொன்றி -21-
பணிவினால் மனமது ஒன்றிப் –பணிவதாக வந்து ஒருப்பட்டு
இதர விஷயங்களில் நின்றும் இவ் விஷயத்திலே மனஸை பணிவதாக ஒன்றி –
ஒன்றுகை -ஒருப்படுகை –-இதர விஷயங்களில் போகிற நெஞ்சை அவற்றின் நின்றும் மீட்டு
ப்ராப்த விஷயத்தில் பிரவணம் ஆக்குவோம் என்னும் உத்யோக மாத்ரமே யாய்த்து-இவ் விஷயத்துக்கு வேண்டுவது –
இங்கு மனஸ் -என்கிறது-மன வ்ருத்தியை –
பகவத் வ்யதிரிக்த விஷயங்களில் பணிவு தான் உண்டாகிலும் இரங்குகை பாஷிகம் –
இரக்கம் உண்டானாகிலும் பலிப்பது இல்லை –
பகவத் விஷயத்தில் ந நமேயம் -என்கிற பிரதிஞ்ஞை குலையும் மாத்ரமே அமையும் –
சேதனன் உடைய ஆபிமுக்யத்துக்காக ஸ்ருஷ்டி அவதாரங்களைப் பண்ணிப் போந்த ஈஸ்வரனுக்கு
விஷயீ ஸூசக மாத்ரமே அமையும் –
பிரணாமம் தன்னைப் பண்ணினாலும் அது வன்றே பல ப்ரதம் –-ஈஸ்வரன் உடைய இரக்கம் இறே –
இவன் பண்ணுகிற வியாபாரங்கள் அங்கு பலிப்பது ஓன்று இன்றியே இருக்க அவனுடைய இரக்கத்துக்கு ஹேதுவான படி என் என்னில்
ஒருத்தனை ஒருவன் கை ஓங்குவது எதிரி ஸ்பர்சிப்பது ஓன்று இன்றியே
இருக்க உள்ளதனையும் என்னைப் பரிபவிக்க வந்தான் என்று இருக்கைக்கு ஹேதுவாகா நின்றது இறே –
இவ்வோபாதி –
அஞ்சலியும் எல்லா வற்றையும் கொடுத்து பின்னையும் – நஜாதுஹேயதே-என்னும் படி பிரிய விஷயமாய் இறே இருப்பது –
ஏகோபி க்ர்ஷ்னே ஸூ க்ர்த ப்ரணாம –
அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதி நீ –
பூசும் சாந்து என் நெஞ்சமே -திருவாய்மொழி -4-3-1-
மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே – திருமேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமாய் விடுவதே!
ஆவியோர் காத்ர சத்ருசம் -என்கிறபடியே -நம்பி மூத்த பிரானும் தானுமாக ஸ்ரீ மதுரையில் போய்ப் புக்கவாறே
கூனியைக் கண்டு, ‘அண்ணர்க்கும் நமக்கும் பூசலாம்படி சாந்து இட வல்லையோ?’ என்ன,
வழக்கனாய் இருக்கிற சாந்தைக் கொடுத்தாள்;
‘இது உனக்காய் இருந்தது’ என்ன, அதற்குமேல் தரமாய் இருப்பது ஒன்றனைக் காட்டினாள்;
‘இது கம்சனுக்கு ஆம்’ என்ன, அதற்கு மேல் தரமாய் இருப்பது ஒன்றனைக் காட்டினாள்;
‘நிறமே இதில் கொள்ளக் கூடியது’ என்ன, இப்படி அருளிச் செய்தவாறே,
‘வெண்ணெய் நாற்றத்திலே பழகினார் இளம் பருவமுடையார் இருவர்-இரண்டு முஃதர் சாந்தின் வாசி அறிந்தபடி என்?’ என்று,
அதனால் வந்த உவகை தோன்றப் புன்முறுவல் ஸ்மிதம் செய்தாள்;
ருசிரா நநே ‘நல்ல சாந்து இடுக்கைக்காக இது ஒரு முகம் இருந்தபடி என்தான்!’ என்கிறான். ஆக,
ஆவயோர் காத்ர சத்ருசம் தீயதாம் -‘நற்சரக்குப் பரிமாறுவார். அது கொண்டு விநியோகம் பயன் கொள்ளுவார்
உடம்பின் வாசி அறிய வேண்டுங்காண்; நம் அண்ணர் உடம்புக்கும் நம் உடம்புக்கும் ஈடான சந்தனம் தா,’ என்று,
இப்படித் தரம் இட்டுப் பூசப்படுகின்ற திருமேனிக்கு பூசும் சாந்து என் ஹிருதயமாய் விடுவதே –
என்பதனைத் தெரிவிக்கும்பொருட்டு, ‘மேனி’ என வேண்டாது கூறுகிறார்.
—————————————————————————————-
198
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி -34
சிந்தையினால் செய்வது தான் அறியாதன இல்லை –திருவாய்மொழி -7-10-10-
நினைவுக்கு வாய்த்தலை பற்றி இருப்பதாலே –
அவன் நினைத்தால் இவன் அநந்தரம் நினைக்க வேண்டும்படி இருக்க அவன் அறியாதன உண்டோ –
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி -34-
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று –நினைவுக்கு வாய்த் தலையைப் பற்றி இருக்கையாலே
அனுசந்திப்பார் அனுசந்திக்கும் எல்லாவற்றையும் கூட இருந்து அறுதி என்று –
ஏகோ ஹமஸ் மீதி சமன்ய சேத்வம் -இத்யாதி-சர்வஞ்ஞனாய் – சர்வ நியந்தாவாய் இருக்கிற நீ உடனே இருக்கவா
நான் இவ்வமணக் கூத்து எல்லாம் ஆடிற்று -என்கிறார் –
சிந்தையினால் செய்வது தான் அறியாதன இல்லை –திருவாய்மொழி -7-10-10-
சிந்தையினால் செய்வது தான் அறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை –
அவன் நினைத்தால் இவன் அனந்தரம் -பின்னர் நினைக்க வேண்டியிருக்க, அவன் அறியாதது உண்டோ?
உள்ளுவார் உள்ளத்தெல்லாம் உடனிருந்து அறியுமவன் அன்றோ?
அவன் நினைப்பிட்டால் அன்றோ இவனுக்கு நினைக்கலாவது?
நெஞ்சால் செய்யப் படுவனவற்றில் அவன் அறியாத வஞ்சனங்கள் ஒன்றும் இல்லை.
——————————————————————————————-
199
செங்கண் மாலே -35
உன் பவள வாய் -பெருமாள் திருமொழி -4-9-
இவர் சிக்கென என்றவாறே திரு உள்ளம் பிரசன்னமாய் -உள்ளடங்காமல்
திருக்கண் சிவந்ததை செங்கண் மால் என்கிறார் -வ்யாமோஹத்தால் குதறிச் சிவந்த திருக் கண்கள் –
படியாய் கிடந்தது என்றவாறே அசித் போன்ற பாரதந்த்ர்யம் உணர்ந்தவர் என்ற வ்யாமோஹத்தால்
திருவேம்கடமுடையான் சோதி வாய் திறந்து சிரிக்க –உன் பவள வாய் என்கிறார் –
வ்யாமோஹம் -கடாஷம் புன்னகை அனுபவித்தபடி –
செங்கண்மாலே-இது ஸ்வ பாவ கதனம் அன்று-தாத் காலின விசேஷணம்-
இவர் சிக்கென -என்றவாறே-திரு உள்ளம் இவர் பக்கலிலே பிரசன்னமாய்
இவர் பக்கல் வ்யாமோஹம் உள் அடங்காமையாலே கண் வழியே புறப்பட்டு பிரகாசிக்கிறபடி –
செங்கண் மாலே –
வ்யாமோஹத்தாலே குதறிச் சிவந்த கண்களை உடையவனே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானைக் குறித்து மகா ராஜர் –வத்யதாம் -என்ற போது-பெருமாள் திரு உள்ளம் அழிந்தால் போலே ஆய்த்து-
பின்பு திருவடி –அத ராம பிரசன்னாத்மா -என்று பெருமாள் உளரானால் போலே ஆய்த்து –
திருவடி –அவதாரத்தில் –மாஸூச -என்றான்
இவர் –அர்ச்சாவதாரத்தில் -மாஸூச -என்கிறார் –
செங்கண் மாலே –
என் ஸ்வரூப லாபத்துக்கு முகம் வரும்படி வ்யாமுக்தரான-தேவரீரை ஒழிய புறம்பு எங்கே போவேன் –
உன் பவள வாய் -பெருமாள் திருமொழி -4-9-
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து -இயங்கும் படியாய் கிடந்து –
அநந்ய பிரயோஜனரும் –பிரயோஜனாந்தர பரரும்-அந்ய பரரும் கிடந்தது சஞ்சரியா நின்றால்
ஒரு நினைவுற்று அசேதனவத் கிடக்க வேணும்
உன் பவள வாய் காண்பேனே –
பார தந்த்ர்யத்துக்கு அசேதன சமாதியாகவும் வேணும் –-அது புருஷார்த்தமாகைக்கு காணவும் வேணும்
—————————————————————————————–
200
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே -36
ஆனைக்கு அன்று அருளை ஈந்த -44
மழை -ஆனை என்று பொதுவாக கூறப்பட்டாலும் கோவர்த்தன தாரணம்
கஜேந்திர மோஷம் -திரு உள்ளம் பற்றி அருளிச் செய்தார் என்பதை
வயவஸ்திதமாய் ஆய்த்து இவர்கள் கோஷ்டி இருப்பது –பெரியவாச்சான் பிள்ளை வியாக்யான ஸ்ரீ ஸூ க்தி-
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே -36
ஆனைக்கு அன்று அருளை ஈந்த -44
——————————————————————————————
201-
வரை முன் ஏந்தும் -36
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -திரு விருத்தம் -21
ஏழு திரு நஷத்திரத்திலே மலையை எடுத்த இடத்திலே ஒரு பூ பந்தை எடுத்தாப் போலே வருத்தம் அற்று –
சேஷி மலை எடுத்தது சேஷ பூதர் சூட்டு நன் மாலைகள் ஏந்தினாப் போலே –
வரை முன் ஏந்தும் -36–வரை –இந்த்ரன் ஏவ சம்வர்த்தக மேக கணம் வர்ஷிக்க உத்யோகித்த வாறே
திரு ஆழியை நியமிக்க அவசரம் இல்லாமையாலே கைக்கு எட்டிற்று ஒரு மலையை எடுத்து ரஷித்தான் ஆய்த்து
இத்தால் ‘
இன்னதை பரிகரமாகக் கொண்டு இன்னதை ரஷிக்க வேணும் -என்னும் நியதி இல்லை -என்கை –
என்னுடைய ரஷணத்துக்கு பரிகரம் உதவப் பார்த்து இருக்க வேணும் என்னும் குறை இல்லை -என்கை
முன்- மழையில் பசுக்கள் நோவு படுவதற்கு முன்பே –ஏற்கவே ரஷித்த படி
பஹுதா சந்தத துக்க வர்ஷினி -என்கிறபடியே துக்க வர்ஷத்தில் நோவு பட்டு-கூப்பிடவும்-பேசாது இருப்பதே –
ஏந்தும்-ஏழு திரு நஷத்த்ரத்திலே மலையை எடுத்த இடத்தில் ஒரு பூம் பந்தை எடுத்தால் போலே வருத்தம் அற்று இருந்தபடி –
ரஷண தர்மத்தில் உனக்கு வருத்தம் உண்டாய்த் தான் இழக்கிறேனோ –
சேஷ பூதர் –சூட்டு நன் மாலைகள் –ஏந்தினால் போலே ஆய்த்து – சேஷி மலை ஏந்தின படி –
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -திரு விருத்தம் -21
சூட்டு–சிரோ பூஷணமாய் இருப்பது ஒன்றுக்கு பேர்
ஆஸ்ரிதர் காலில் -காலால் – இட்டாலும் ,-கிருஷ்ணாதி சிரசா ஸ்வயம்-என்றபடி யாலே
ஏற்பது தன் தலையால் இருக்கையாலே
பிள்ளை உறங்கா வல்லி தாசர் பொன் நாச்சியாருக்கு அருளிச் செய்த வார்த்தை–
பத்ரம் புஷ்பம் கீதை -9-26–இலை ,மலர் ,தண்ணீர் என எதனை அன்புடன் அளித்தாலும்
ஏற்பேன் என்று அருளியதை சொல்லிக் காட்டினார்–
அஸ்நாமி-என்னுமா போலே-
(பொன் ஆச்சியார் கேட்டதுக்கு தாஸர் பதில்
எத்தைக் கொடுத்தாலும் உண்ணுவது போல் போக்யமாகக் கொள்ளுபவன் )
நன் மாலைகள் — இவன் ஆதரிக்கும் என்னா-எருக்கும் தும்பையுமாக தேடி இடும் அளவு இன்றிக்கே ,
இங்குத்தைக்கு சத்ருசமாய்- ஸ்ப்ருஹணீயமாய் இருக்கும்
(பத்ரம் புஷ்ப்பம் பலம் தோயா -என்றும் –
கள்ளார் துழாய் -என்றும்
நூறு தடா வெண்ணெய் நூறு தடா அக்கார வடிசில் சொல்லுவது எவ்வாறு பொருந்தும்
அந்யத் பூர்ணத்துக்கும் அதமம் -அவனைப் பார்த்தால் )
மாலைகள் —
ஈரம் கொல்லியை கொன்று திரு பரியட்டம் சாத்தி-ஸ்ரீ மாலாகாரர் கிருகத்திலே எழுந்து அருளி- திரு பள்ளி தாமம் சாத்தி ,
சாந்து சாத்த அபேஷிதமான தசையிலே கூனி சாந்து கொண்டு போகா நிற்க ,–
இடு சாந்து கொண்டு வா என்ன –
பெண்டாட்டி ஆகையாலே மறுக்க மாட்டாதே – இடை பிள்ளைகளுக்கு முடை நாற்றத்தோடு கூடின வடிவுகளுக்கு ஏதேனும்
வழக்கான சாந்தை இட்டு ,மருட்டுகிறோம் – என்று தண்ணிய சாந்தை கொடுக்க ,
முன் கையை நீட்டி மோந்து பார்த்து ,- சுகந்தமேதத் – இது உனக்காய் இருந்தது என்ன-
அதற்க்கு மேல் தரமாய் இருந்ததொரு சாந்தைக் காட்ட –
ராஜார்ஹம்– இது உம் கண் ஆயனார்க்காய் இருந்தது — அதற்க்கு மேல் தரமாய் இருப்பதோர் சாந்தை காட்ட –
ருசிரம்- நிறம் அழகியதாய் இருந்தது – கந்தத்தாலே நன்றாம் இது நிறம் அழகிது என்கை
அதுக்கு உறுப்பு அன்று இறே –
ருசிரானனே – இடை பிள்ளைகள் சாந்தின் வாசி அறியார் என்று என்று இருந்தோம் ..
இது இவர்கள் வாசி அறிந்த படி என் என்று ஹிருதயத்தில் கிடந்த பிரியம் முகத்திலே தோற்றி இருந்த படி
ஒரு சாந்து இட வேணுமோ – ஒரு முகம் இருந்த படி என் என்று ஏத்துகிறான்–
கம்சனுக்கு வைத்த சாந்து இடுகைக்காக- ஆவயோர்காத்ர சத்ரு சந்தீயதா மனுலேபனம் —
நல் சரக்கு பரிமாறுகிற நீ உடம்பின் வாசி அறிய வேண்டாமோ-
அண்ணர் உடம்புக்கும் நம் உடம்புக்கும் சத்ருசமான சாந்து நீயே அறிந்து தா-
தூயன — அநந்ய பிரயோஜனர் இடுமதாய் இருக்கை– கெண்டை ஒண் கண் இத்யாதி
(மிக்க சீர் தொண்டர் இட்ட
தொண்டர் -லௌகிக ப்ரயோஜனாந்தரர்
சீர் தொண்டர் -மோக்ஷம் உபாசகர்
மிக்க சீர் தொண்டர் -ஸ்வயம் பிரயோஜனம் )
ஏந்தி–
தன்னை அங்குத்தைக்கு உறுப்பாக்கி , இருக்கும் அதுக்கு மேற் பட வில்லையாய் இருக்கை
அங்குற்றைக்கு இஷ்ட விநியோக அர்ஹத்வமே ஸ்வரூபம் என்கிற படி —
மஞ்சளும் செம்கழு நீரும் வாசிகையும்–பெரியாழ்வார் திரு மொழி -2-4-4–என்கிறபடி
(கொண்டு வைத்தேன் -இதுவே நம் கர்தவ்யம்
ஏற்றுக் கொள்வது அவன் இச்சை-இஷ்ட விநியோக அர்ஹத்வமே ஸ்வரூபம் )
—————————————————————————————————
202-
உழைக் கன்றே போலே நோக்குடையார் வலை -36
அகப்பட்டேன் மணி வண்ணன் வாசுதேவன் வலை உள்ளே -திருவாய்மொழி -5-3-6-
அப்ராப்த விஷயத்தில் அகப்பட்ட சேதனன் பிராப்த விஷயத்தில் அகப்பட்டு உஜ்ஜீவித்த படியை அருளினபடி –
உழைக் கன்றே போலே நோக்குடையார் வலை -36-
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையில் பட்டு உழைக்கின்றேற்கு –
ஸ்திரீகள் உடைய நோக்காகிற வலையுள்ளே அகப்பட்டு நோவு படுகின்ற்றவன் அன்றோ நான் –
முக்தமான மானின் உடைய விழி போலே-அகவாயில் ஒன்றும் இன்றிக்கே இருக்க
அஹ்ருத்யமாக-அநந்ய பிரயோஜனைகளைப் போலே-தங்கள் செல்லாமை தோற்ற நோக்குகிறவர்கள் உடைய
வலையிலே அகப்பட்டு துடிக்கிற என்னை –
உழை -மான்
வலை யாகிறது –அகப்படுத்திக் கொள்ள வற்றாய்-கால் வங்கிப் போக ஒண்ணாத படி பண்ணுமதாய் –
அது தன்னில் பிரயோஜனம் அன்றிக்கே இருக்கும் –
அது இறே
பகவத் விஷயத்தில் போகாமே-துவக்குகைக்கு வேண்டுவது உண்டாய் அது தன்னிலே அந்வயம் இன்றிக்கே இருக்கை –
அகப்பட்டேன் மணி வண்ணன் வாசுதேவன் வலை உள்ளே -திருவாய்மொழி -5-3-6-
அகப்பட்டேன்–
இப்போது ‘ஹிதம்’ என்கிற புத்தியாலே ஒரு வார்த்தை சொன்னோமே யாகிலும், ஊரார்க்கும் தாய்மார்க்கும்
இவ்வருகே எங்களிடத்தில் ஒரு வாசி நினைத்திருக்க வேண்டாவோ உனக்கு” என்ன,
அது அப்படியே, அதில் குறை இல்லை; என்னைக் கடல் கொண்டது காணுங்கோள், நான் என் செய்வேன் என்கிறாள்.
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதிமன்னன் –
“சிறியார் பெரியார்’ என்ற வாசி இன்றிக்கே எல்லாரையும் ஒரு சேர ஆழப் பண்ணும் கடலிலே அன்றோ நான் அகப்பட்டது.
ரூப ஒளதார்ய குணை:”-ரூபம் என்றது, வடிவழகை. ஒளதார்யம் என்றது, அதனை எல்லாரும் அநுபவிக்கலாம்படி
தன்னை முற்றக் கொடுத்துக் கொண்டிருக்கையை.
“குணம்” என்றது, கொள்ளுகிறவனைக் காட்டிலும் தாம் தாழ நின்று கொடுக்கும் சீலத்தை.
தன் மேன்மை தோற்ற இருந்து கொடுக்கும் அன்று ஆள் பற்றதே அன்றோ;
அதற்காகத் தாழ நின்றாயிற்றுத் தன்னைக் கொடுப்பது.
“பும்சாம்” – அந்த அழகும் கொடையும் சீலமும் வயிர உருக்கானவாம்; என்றது, பலம் அற்ற பெண்கள் படுமதனை
வன்னெஞ்சரையும் படுத்த வல்லனவாம் என்றபடி.
அன்றிக்கே, “பிரகிருதி புருஷர்கள்” என்றால் போலேயாய், அசித்துக்கு வேறுபட்டவர்கள் எல்லாரையும்
ஈடுபடுத்த வல்லன என்னவுமாம்.
“திருஷ்டி சித்தாபஹாரிணம்”-கண்களுக்கு மனத்தின் துணை வேண்டாமலே, கண்களைப் பின் செல்லுமத்தனை நெஞ்சு.
தாய் வேறு, கன்று வேறு ஆக்கும் விஷயம் அன்றோ என்றபடி.
(மனத்தினைத்‘தாய்’ என்றும், மற்றைக் கரணங்கள் மனத்தினைப் பின் செல்லுவன ஆதலின், அவற்றைக் ‘கன்று’ என்றும்
அருளிச்செய்கிறார். ஸ்ரீ பரதாழ்வானையும் கைகேசியையும் வேறாக்கின விஷயம் அன்றோ இது என்பது, தொனிப் பொருள்,)
யத்ருஷ்ய பிரதமஜாயே புராணா “எந்தப் பரம பதத்தில் எல்லாவற்றையும் காண்கிறவர்களும், எப்பொழுதும் உள்ளவர்களும்,
பகவானுடைய அநுபவத்தில் எப்பொழுதும் ஒருபடிப் பட்டவர்களும்” என்னும்படி இருக்கிறவர்கள்
ஆகையாலே ‘முன்னை அமரர்’ என்கிறது.
நித்ய ஸூரிகளுக்கும் சத்தைக்குக் காரணமாயிருக்கிற மேன்மையுடையவன் ஆதலாலே முதல்வன்’ என்கிறது.
அன்றிக்கே, அப் பொழுதைக்கு அப் பொழுது ஆசைப் படக்கூடிய-நித்ய ஸ்ப்ருஹா- விஷயமானவன் என்னுதல்.
ஆக, அத்தகைய விஷயத்திலே அன்றோ நான் அகப்பட்டது என்பதனைத் தெரிவித்தபடி.
வண் துவராபதி மன்னன்’
என்றதனால், முதன்மை தோற்ற ஓலக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிற துறை அல்லாததிலேயோ நான் இழிந்தது’
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னுமதில் நாயகராக வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில்”
என்கிறபடியே பெண்களுக்கு உடம்பு கொடுத்துக் கொண்டிருக்கிற நம் துறையிலே அன்றோ இழிந்தது
என்பதனைத் தெரிவிக்கிறாள்.
அன்றிக்கே, ‘மன்னன்’ என்றதனால் மேன்மை தோற்ற ஓலக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிற இடமே நன்றாய் விட்டது
நீர்மை தோற்ற இருக்கிற இடத்தில் விழுகிற பிரம்புகளிற் காட்டில் என்பதனைத் தெரிவிக்கிறாள் ஆதலுமாம்.
மணி வண்ணன்-
அவ் விரண்டும் இல்லையே யாகிலும் விட ஒண்ணாததாயிற்று வடிவழகு.
காதலி துவக்குண்பது வடிவழகிலே அன்றோ.
வாசுதேவன்–
வடிவழகு இல்லையாகிலும் விட ஒண்ணாததாயிற்றக் குடிப் பிறப்பு.
ஸ்னுஷா தசரதஸ் யாஹம் -நான் தசரத சக்கரவர்த்தியினுடைய மருமகள்” என்கிறபடியே,
பிராட்டி தனக்குப் பேற்றுக்கு உடலாக நினைத்திருப்பது ‘சக்கரவர்த்தி மருமகள்’ என்னும் இதனையே காணும்.
ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹாநாம் முக்யஸ்ய விதிதாத்மந: ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ருசைந்ய பிரதாபிந:”– சுந். 33 : 15, 16
சத்ரு சைன ப்ரதாபி ந -எதிரியின் படையினை வருந்தச் செய்யுமவர்” என்கிறபடியே,
எங்கள் மாமனார் உளராகில் எனக்கு இவ்விருப்பு இருக்க வேணுமோ? பகைவர்களும் ஜீவிக்க, ஜீவித்தவரோ அவர்.
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன்-
அவனுடைய நைர் க்ருண்யத்தோடே -அருள் அற்ற தன்மையோடு நீர்மையோடு,
ஊராருடைய பழியோடு புகழோடு வாசி அற்றால் போலே,
அவன் மேன்மையோடு சௌலப்யத்தோடு வாசி அற இரண்டும் ஆகர்ஷகமாய் -மனக் கவர்ச்சியாய் இருக்கிறதாயிற்று இவளுக்கு.
வலையுள் . . . அகப்பட்டேன் –
அந்தப் பொதுவானதில் அன்றிக்கே, அவன் என்னைக் குறித்து நோக்கின நோக்கிலும் புன் முறுவலிலும் அன்றோ நான் அகப்பட்டது.
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் வலையாக அபிநயித்துப் பாடா நிற்க,
எம்பெருமானார் திருக் கண்களைக் காட்டி யருளினார்,
“கமலக்கண் என்னும் நெடுங்கயிறு” எனக் கடவதன்றோ.
அநுகூலம் போலே இருந்து தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன்-
————————————————————————————————
203-
அம்ம ஒ கொடியவாறே -37
சிறு தொண்டர் கொடியவாறே -பெரிய திருமொழி -11-6-3
பெருமான் கடாஷம் அருளாததை கொடுமை என்றும்
சேதனன் பகவத் குண அனுசந்தானம் பண்ணாததை கொடுமை என்றும் அருளுகிறார்கள் –
அம்ம ஒ கொடியவாறே –ஆர்த்த த்வனி கேட்டால் எழுந்திருக்க வேண்டாவோ –
ஆர்த்த த்வனி கேட்டும் இவர் கண் உறங்குவதே – இவர் திரு உள்ளம் இங்கனே கொடிததாய் ஆகாதே
அம்மே-இவர் ஸ்வ பாவம் இருந்தபடி என் –என்கிறார்
கொற்றப் போராழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே –11-6-3
ஐஸ்வர்ய ஸூசகமாய்-எதிரிகளை முடிக்க வற்றான திரு வாழியை உடையவன் உடைய குணங்களை
அடைவு கெடச் சொல்லாத தண்ணிய ஷூத்ரங்களை-சஹிக்க அரிதாய் இருக்கிறவவர்கள் க்ரௌர்யம் இருந்த படி என் –
—————————————————————————————–
204-
ஆம் பரிசு -38
உறுவது இது சீரியது என்று -திருவாய் மொழி -9-4-4-
இரண்டாலும் கைங்கர்யம் அருளுகிறார்கள்
ஆம் பரிசறிந்து கொண்டு–பிரக்ருது ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் -என்று அறிந்து
மேலும்-ஆத்மாவை உள்ளபடி உணர்ந்தால் –
பின்னையும்
ஆம் பரிசு ஆவது –கைங்கர்யமே யாய்த்து –ஆம் பரிசு வர்த்திக்கும் படியை அறிந்து –
ஆத்மா அபிமான ரூபமாக வாய்த்து வ்ருத்தி ஹேதுக்கள் தான் இருப்பது –
தன்னை திர்யக்காக அபிமானித்த போது -தர்ண சமூஹம் ஆய்த்து வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –
மனுஷ்யோஹம் -என்று அபிமானித்த போது-அன்னம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –
தேவோஹம் -என்று அபிமானித்த போது -அம்ருதம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –
தாசோஹம் -என்ற போது -கைங்கர்யமே வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –
பிரகிருதி பிராக்ருதங்களில் சங்கோசம் போய்-ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தால்
சஹஜ கைங்கர்யமே இறே வ்ருத்தி ஹேதுவாவது –
அறிந்து கொண்டு –நிதி எடுத்துக் கொண்டு -என்னுமா போலே
பிரகிருதி பிராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற ஜ்ஞானமும் –
ஆத்மா பகவத் பரதந்த்ரன் என்கிற ஜ்ஞானமும்
பிராப்யம் கைங்கர்யம் என்கிற ஜ்ஞானமும்-இறே சேதனனுக்கு வேண்டுவது –
விடுவிக்கையும்-பற்றுவிக்கையும்-உபாய பூதனான ஈஸ்வரன் கார்யம் இறே –
மேம் பொருள்
மெய்ம்மை
ஆம்பரிசு
என்கிற இவை அவ்வவோ பதார்த்தங்களுக்கு வாசகம் அன்றிக்கே இருக்க
தத் தத் ஸ்வ பாவ வாசியான சப்தங்களால் மறைத்து அருளிச் செய்கிறார் –அர்த்த கௌரவத்தாலே –
உறுவது இது சீரியது என்று -திருவாய் மொழி -9-4-4- –சீரியது அடிமை செய்யும் இது -என்று
உனக்கு ஆட்பட்டு – உனக்கு அடிமை புகுந்து -ஆத்ம ஸ்வரூபம் சேஷத்வம் -பாரதந்தர்யம் -என்று அறிந்தால் சீரிய பிரயோஜனம் -பயன்
கைங்கர்யமே அன்றோ –
————————————————————————————
அங்கமாறும் வேதம் நான்கும் -15
அமரவோர் அங்கமாறும் வேதமோர் நான்கும் -திருமாலை -43–
அங்கமாறு வேத நான்கு மாகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணைத் தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வா மல்கு சீரினாய்
சங்க வண்ண மன்ன மேனி சாரங்க பாணி யல்லையே –15-
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று –
சீஷாத் யங்கங்கள் யாறும் –
சீஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம்
அஷரங்களை உச்சரிக்க வேண்டியதை சீஷை சொல்லும்
பிரகிருதி பிரத்யாயங்களை பாகுபடுத்தி வியாகரணம் சொல்லும்
அர்த்த விவேகம் நிருக்தம் சொல்லும்
காலங்களை ஜ்யோதிஷமும்
வைதிக கர்மங்களை அனுஷ்டிக்க வேண்டிய முறைகளை கல்பமும் சொல்லும்
அங்கியான வேதங்கள் நாலும் -ஆகிற இவற்றுக்கு பிரவர்தகனாய் நின்று
அவற்றுளே தங்குகின்ற தன்மையாய் –
சாங்கமான வேதங்களினுள்ளே ப்ரமேயமாய் வர்த்திக்கிற ஸ்வபாவங்களை உடையவனே –
ஆகி நின்று அவற்றுளே –
நிர்தோஷ பிரமாணமாய் நின்றவற்றுள் என்னவுமாம்
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம்
ஸோஅஸ்னுதே ஸர்வான் காமாந்சஹ ப்ரஹ்மணோ விபஸ்ஸிதேதி
(தைத்ரியம் ஆனந்த வல்லி -1-2)
வேத ப்ரதிபாத்யமான ஸ்வபாவங்கள் ஆவன -சத்யம் ஞானம் -இத்யாதிகளில் சொன்ன சர்வாதிகத்வம் என்ன –
யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித் யஸ்ய ஜ்ஞாநமயம் தப:
(முண்டக உபநிஷத் -1-1-10)
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -இத்யாதிகளில் சொன்ன கல்யாண குணங்கள் என்ன –
யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ருயதே அபிவா
அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித
(தைத்ரியம் நாராயண ஸூக்தம் -11)
வ்யாப்ய நாராயணஸ் ஸ்திதி -இத்யாதிகளில் சொன்ன உபய விபூதி நாதத்வம் என்ன –
மகாரஜதம்வாஸ -இத்யாதிகளில் சொன்ன விக்ரஹ யோகம் என்ன –
யாஷோந்தராதித்ய ஹிரண்மய புருஷ -இத்யாதிகளில் சொன்ன அவதாரங்கள் என்ன –
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய
திவீவ சக்ஷூராததம்
தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாம்ஸஸ் ஸமிந்ததே
விஷ்ணோர்யத் பரமம் பதம் (ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் )
தத் விஷ்ணோ பரமம் பதம் -இத்யாதிகளில் சொன்ன நித்ய விபூதி யோகம் என்ன –இவை
அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே –
அமர ஓர் அங்கம் ஆறும்-
அத்விதீயமான ஷட் அங்கங்களையும் அழகிதாக பாடங்களையும் தரித்து
அர்த்தத்தையும் தரிக்குமவர்கள் ஆகை –
அங்கங்களுக்கு அத்விதீயம் ஆவது
ஓர் அங்கத்தில் ஜ்ஞானம் குறைவு அற உண்டானால்
லோகத்தார் அவனை சர்வஞ்ஞன் என்று சொல்லும்படி இருக்கை –
சீஷாயாம் வர்ண சிஷா -இத்யாதி –
வேதம் ஓர் நான்கும் –
வேதங்களுக்கு அத்விதீயம் அபௌருஷேயத்வம் –
பௌருஷேய சப்தங்களில் காட்டில் வ்யாவர்த்தி யாதல் –
தனித் தனியே விநியோக பேதத்தால் வந்த வ்யாவர்த்தி யாதல் –
ஓதித் –
அங்கங்களோடு
வேதங்களோடு
வாசி யற
ஆச்சார்ய உச்சாரண அனுச்சாரண முகத்தாலே கிரஹிக்கை –
இப்படிகளிலாலே -எம்பெருமானை உள்ளபடி அறிபவர்கள் ஆகை –
—————————
205-
பெண்ணுலாம் சடையினானும் -44
திருமால் என்னை ஆளுமால் –சிவனும் காணாது -திருவாய்மொழி -10-7-6
பிரம ருத்ராதிகளுக்கும் அரியன்
ஆனை ஆழ்வார்களுக்கு எளியன் என்றார்கள் –
பெண்ணுலாம் சடையினானும் –
கங்கையானவள் உள்ளே சஞ்சரிக்கும்படி ஜடையை உடையவள் –-கங்கையை ஜடை மேலே அடக்கினேன் என்னும் பிடாரைக் கொண்டு சர்வேஸ்வரனை காணலாமோ –
ஆறு சடைக் கரந்தான் -இத்யாதி –
திருமால் என்னை ஆளுமால் –சிவனும் காணாது -திருவாய்மொழி -10-7-6–திருமால் –ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் –
என்னை ஆளுமால் – என்னை அடிமை கொள்ளுகைக்காக பிச்சுத் தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவன் –
மாலை என்னாமல் மால் -என்கிறார் –
சிவனும் பிரமனும் காணாது அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே –
பிரமன் சிவன் முதலான தேவர்கள் காணப் பெறாமையாலே
நிரதிசய எல்லை இல்லாத பக்தியை உடையராய்-திருவடிகளை அடைவு கெட ஏத்த
அவர்களுக்கு முகம் தோற்றாமே கடக்க நின்று-அருள் செய்கின்ற சர்வேஸ்வரன்
எனக்கு கண்களுக்கு இலக்காம்படி-திருமலையிலே வந்து நின்று-என்னை அடிமை கொள்ளுகையில் பெரும் பித்தன் ஆனான்
——————————————————————————–
206-
இறையவர் பதினொரு விடையரும் இவரோ -திருப் பள்ளி எழுச்சி -6
வெள்ளேறன் நான்முகன் –புள்ளூர்தி கழல் பணிந்து -திருவாய் மொழி -2-2-10
ராஜ சேவை பண்ணுவார் -தம் தாம் அடையாளங்கள் உடன் சட்டையும் பிரம்புமாய் சேவிக்குமா போலே –
சர்வேஸ்வரன் இவர்களை உண்டாக்கி அதிகாரமும் அடையாளமும் தந்தமை கூறுகிறார்கள்-
இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ இறையவர் பதினொரும் விடையரும் இவரோ
இரவியர்-நெடு மணி தேர்– சிறந்த பெரிய 12ஆதித்யர்கள்
இறையவர்-சம்சார நிர்வாககர் –விடை-ரிஷபம் 11 ருத்ரர்கள்–திரு நாங்கூர் திவ்ய தேசம் சுற்றி 11 ருத்ரர்-
இவரோ-கை காட்டுகிறார்-
முற் கோலி கொண்டு வந்தார்கள்
தேவரீர் பணிக்கு அடைத்த – ஆதித்யன்-கதிரவன்-தவிர மற்றும் சோம்பி இருக்கிற ஆதித்யர்களும் வந்த பின்பு-
முன்பே கதிரவன் குண திசை வந்ததை சொல்லி –
இங்கு சோம்பி கிடக்கும் இவர்கள் -இவர்களே வந்த பின்பு நீர் பள்ளி எழுந்து அருள வேண்டாமோ –
ருத்ரன்-தமோ குணம்-அவர்களே வந்த பின்பு
இறையவர்-
ஜகன் நிர்வாகர்- இறையவர்-பசு அகம் மேவ பசு பதி-
பசு-பிராயர் மக்களுக்கு அதி பதி இருக்க வேண்டும் என்று
வரம் பிரார்த்தித்து கேட்டு பெற்றான்-ரோதநாத் அழுகிறார் குதிக்கிறார்
ருத்ரன் ஸ்தாணு சம்பு சிவா –எட்டு தரம் அழுது எட்டு பேர் வாங்கி கொண்டார்-
பிரார்த்தனை கோடி காட்ட இறையவர் என்கிறார் ஆழ்வார்
சர்வேஸ்வரன் போலே ஸ்வாபாவிகமாக இல்லையே இவன் –
அவர்கள் தேர் ரிஷபம் விட்டு இறங்க–அவர்கள் இறங்கி இழியவும் கூடும் –
இறைவ –வெள்ளேறன் நான்முகன் –புள்ளூர்தி கழல் பணிந்து -திருவாய் மொழி -2-2-10
இறைவனே!’ என்பார்கள். ‘இங்ஙனே சொல்லுகிறவர்கள் தாம் யார்? என்னில்,
வெள் ஏறன் நான்முகன் இந்திரன் வானவர் –
சிவன் முதலானோர். ‘ஆயின், கடவுளை வணங்குகின்றவர்கள் வாகனத்தோடு வருதல் பொருந்துமோ?’ எனின்,
இராஜ சேவை செய்வார் தம் தமது அடையாளங்களோடே சட்டையும் பிரம்புமாய்ச் சேவிக்குமாறு போன்று,
இவர்களும் தத்தம் அடையாளங்களோடே வந்து சேவிக்கிறார்கள்.
(அவன் கொடுத்த வரிசையோடே வந்தால் விரோதம் இல்லை -என்றபடி )
சகல தேவர்களும்-ஜகத்து நிர்வாஹகர்களாக -நாட்டினனான் அன்றோ இவர்களை —
நாட்டினான் தெய்வம் எங்கும் –அபிமத சித்யர்தமாக ஆஸ்ரயிக்க வந்து நின்றார்கள்-
புள் ஊர்தி கழல் பணிந்து ஏத்துவர் –
சர்வேஸ்வரன் பெரிய பிராட்டியாரும் தானுமாய் இருக்கிற இருப்பில் புக முடியாமையாலே,
திருப்பாற்கடலுக்கு இவ்வருகே கூப்பிட்டால்,
இவர்கட்குக் காட்சி கொடுக்கைக்காகத் திருவடி திருத்தோளில் ஏறிப் புறப்படுவான்,
அப்பொழுது ஆட்டத்து வெளியில் யானைக் காலில் துகை யுண்ணா நிற்பார்கள்-
————————————————————————————
207-
இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை –திருப் பள்ளி எழுச்சி-4
அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -திருப்பாவை -13
வாட்டுகை -நிச் சேஷமாக முடிக்கை -கரி யாக்குகை
வீர பத்னி யாகையாலே -கிள்ளிக் களைந்தானை -என்கிறாள் –
இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை –திருப் பள்ளி எழுச்சி-4–இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை வானவர் ஏறே-ராக்ஷஸ வர்க்கம் -மூல பலம் அனைத்தும் அழித்து–சார்ங்கம் பிடித்த அயோத்தி அம் அரசு -பிரதி நிதியாக உள்ள நம் பெருமாள் வானவர் ஏறு
துர் வர்க்கத்துக்கு புகலிடமாய்-இலங்கை-நிர்வாகனான இராவணன் குலத்தை ச பரிகரமாக மாய்த்த –
நல்லோர் ஓர் இருவர் இருந்தாலும் கேட்காத-நிரசித்த சார்ங்கம் –-பெருமாள் வேண்டாம் -சார்ங்கமே போதுமே –
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் – வில்லாலே தான் எல்லாம் செய்தான்–கோல் எடுத்தால் தான் குரங்கு ஆடும் –
சமுத்திர ராஜன் பணிந்தான் -வில்லால் சேது -ஸ்ரீ சார்ங்கத்தை உடையவராய் –
ப்ரஹ்மாதிகள் அபேக்ஷிதம் முடித்தோம் -செய்யப் பெற்றோமே -என்று –
மேனாணிப்பும் உடையராய் -அஹங்காரம் இங்கு இவன் இடம் இருக்க வேண்டுமே –செய்து முடித்து அகங்காரம் கொண்டு–
விசுவாமித்திரர் யாகத்துக்கு விக்ந கர்த்தாக்கள் -ராவண வதத்துக்கு அடியானை -தாடகை தாடகாதிகள் –
அருணோதயம் போலே இது அதுக்கு -சமாராதானம் -நீராடி -சத்ருக்கள் மண் உண்ணும் படி – திரு அயோத்தியை நிர்வகிப்பர் –
அவதாரத்துக்கு பிற்பட்டாருக்காக இங்கே வந்து திருக் கண் வளர்ந்து – பெரிய பெருமாள் ஸ்ரீ ராமராக அவதரித்து
இவற்றை செய்து முடித்து மீண்டும் சயனம் – தீபாத் உத்பன்ன பிரதி தீபம் -சர்வம் பூர்ணம் -அர்ச்சையே -அயோத்தியைக்
காட்டில் திருவரங்கம் உகந்து அருளி – அனைவருக்கும் என்றும் இங்கு தானே –
சர்வாதிகரான தேவரீர் உணர்ந்து அருளி அடிமை கொண்டு அருள வேணும் என்கிறார் –
பொல்லா அரக்கனைக் அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -திருப்பாவை -13
தாயையும் தமப்பனையும்-உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே பிரித்த நிர்க்குணன் –
சுரிகுழல் கனிவாய் -இத்யாதி
முன்பொலா இராவணன் -என்னும் இத்தனை போக்கி
அவன் தண்ணிமைக்கு ஒரு பாசுரம் இல்லை இறே
அத்தாலே இறே பிராட்டியும் -நல்ல அரக்கனும் -உண்டு என்றாள் இறே –
பொல்லா அரக்கனைக்-உயிரையும் உடலையும் பிரித்தால் போலே
தாயையும் தமப்பனையும் ஓர் இடத்திலே சேர இருக்க ஒட்டாதே பிரித்த
நைர்க்ருண்யத்தாலே வந்த தண்மையை நினைத்து பொல்லா என்கிறது –
முன் பொலா இராவணன் (திருக்குறும் தாண்டகம் )-என்னும் அத்தனை போக்கி அவன் தண்மைக்கு பாசுரம் இல்லை இறே –
திருவினைப் பிரித்த கொடுமை (பெரிய திருமொழி 5-7) இறே – துர்வ்ருத்தம் -என்னும் அத்தனை இறே
இத் தண்மையை பிராட்டியும் –த்வன் நீச -என்றாள் இறே(தாழ்ந்த முயல் போல் நீ எனது பெருமாள் யானை போல் என்றாள் பிராட்டி கூட )
பொல்லா அரக்கனை-விபீஷணஸ் து தர்மாத்மா -என்று-நல்ல அரக்கனும் ஒருத்தன் உண்டு இறே
பொல்லா அரக்கனை-ஜகத் ச சைலம் பரிவர்த்தயாம் யஹம் -என்ற நிலை மாறி தண்ணிய பையல்கள் அளவிலே பர்யவசித்த படி
(கோபத்தால் ஜகத்தையும் மலைகளையும் இல்லையாம் படி அம்பின் நுனியால் முடிப்பேன் என்று தண்டகாரண்யத்தில் சொன்ன நிலை
மாறி பொல்லா அரக்கனை -என்ற இடத்தில் பர்யவசிக்கிறது )
அரக்கனை-மாயா மிருகத்தைக் காட்டுவார் –மாயா சிரஸைக் காட்டுகைக்கு சஹகரிப்பார் –
க்ருத்ரிமத்தாலே பிரித்த இடம் அழகியதாய் செய்தது என்பாராய் -ராவணனின் தண்ணியர் இல்லை இறே இஜ் ஜாதிக்குள்
பொல்லா அரக்கனைக்-தாயையும் தமப்பனையும் பிரித்த நிர்க்ருணனை
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன்
(சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறிகடல் நெறிபட மலையால்
அரி குலம் பணி கொண்டு அலைகடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே-5-7-7-)
பொல்லா
முன்பொலா இராவணன் தன் முது மதிள் இலங்கை வேவித்து -இறே –
(முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே –திருக் குறும் தாண்டகம்-15-)
பிராட்டி –த்வம் நீச சசவத் ஸ்ம்ருத-என்றாள் (குள்ள நரி-முயல் குட்டி போல் நீ யானை போல் ராமன் -ஸூந்தர -21-16)
இவள் தானும் –அன்று இன்னாதான செய் சிசுபாலன் (நாச்சியார் 4-7-)-என்றாள் –
விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித – என்று நல்ல அரக்கனும் உண்டு என்கை
சீதாயாஸ் சரிதம் மஹத் -என்கிற பிராட்டி வ்ருத்தாந்தம் ஸ்ரீ ராமாயணம் ஆனபடி என் என்னில் -(பவ்லஸ்ய வதம் என்னும் பெயரும் வால்மீகி சூட்டுகிறார் )
குணவான் -என்றது அவனையும் அவளையும் கூட்டி வாழ நினைக்குமவர்களோடு பரிமாறின படி-(ஸுசீல்யன் என்றபடி )
வீர்ய வான் -என்றது பிரிக்க நினைத்தார் முடியும்படி
தர்மஞ்ஞ – என்றது அவர்கள் ஸ்வரூபம் உணர்ந்து இருக்கும் படி –
கிள்ளிக் களைந்தானைக் –திருவிளையாடு சூழலிலே நோய் புக்க இடங்களைக் கிள்ளிக் பொகடுமா போலே தோஷாம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –
கிள்ளிக் களைந்தானைக்-வீர பத்னி யாகையாலே-கல் எடுத்து (கலியன் )-என்னுமா போலே –கிள்ளி –என்கிறார்கள் –
கிள்ளிக் களைந்தானைக்-மறுவலிடாத படிந் கிழங்கோடு வாங்கின படி–
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் -பொல்லாத அப்ராப்த விஷய ஸூசகமான-அஹங்காரத்தை
அஹங்காரத்துக்கு நன்மை தீமைகள் ஆவன –
அஹம் மம -என்றால்-ஈஸ்வரனும் ஈஸ்வர விபூதியும் ஸ்வ அபிமான விஷயமாக தோன்றுகை–
அஹந்காரத்துக்கு நன்மை யாவது – தேகமும் ஆத்மாவும் ஸ்வ தந்தரமாக தோன்றுகை —தீமையாவது –
அனுகூலமான அஹங்காரத்துக்கு அழல் தட்டாதபடி நிரசித்தவனுடைய
“கிள்ளிக் களைந்தானை”-என்ற சொற்போக்கால் இறையும் வருத்தமின்றிக் களைந்தமை தோற்றும்.
ஆராமங்களில் பூச்சி பட்ட இலைகளைக் கிள்ளிப் போகடுமாபோலே களைந்தானென்க.
ஒரே வரியில் சொல்லும் படி ராமனும் கண்ணனும் ஒரே தத்வம் -நாராயணன் -தமிழை ஆண்டாள் -பகாசுரனையும் ராவணனையும் ஒரே வரியில்
புள்ளின் வாய் கீண்டானை -இனிய வாய ஜடாயுவைக் கொன்றவன் -மந்த்ரம் சொன்னதும் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்
————————————————————————————
208
அந்தரத்து அமரர் -திருப் பள்ளி எழுச்சி-7-
கேசவன் தமர் -திருவாய் மொழி -2-7-1-
அந்தரம் -ஆகாசம் -தேவ லோகம் -அவர்கள் வர்த்திக்கும்தேசத்தை இட்டு அந்தரத்து அமரர்
ஸ்ரீ வைஷ்ணவர்களை விஷ்ணு இட்டே சொல்வது கேசவன் தமர்
ஏகாந்தீ வ்யாபதேஷ்டவ்ய நைவ க்ராம குலாதிபி -விஷ்ணு நா வ்யபதேஷ்டவ்ய -இறே
இப் பாட்டுக்கு தாத்பர்யம் இந்த்ரன் வந்தமை முதலில் – சொல்வது தான் –
த்ரஷ்டவ்ய முதலில் சொல்லி கேட்டு மனனம் தியானம் வேதம் சொன்னாலும் அர்த்த க்ரமத்தால் -இப்படி ஆமோ என்னில்
ஸ்ரோதவ்ய முதலில் சொல்லி த்ரஷ்டவ்யம் கடைசில் கொள்வது போலே –
தேவர்கள் மருத்துக்கள் முன்னமே சொன்னதால் இந்திரனை சொல்லி சொல்லாத அனைத்து தேவர்களும் வந்தார்கள் —
அர்த்த க்ரமத்தால் -கொள்வதற்கு உதாஹரணம் –
அக்னி ஆகிதார் ஆகிதாக்னி -ஆகித ஆக்னி-எப் பொழுதும் ஹோமம் பண்ணி கொண்டு இருப்பவர் போல-
பிரணவம் சப்தத்தால் இருந்தாலும் ஆத்மா ஸ்வரூபம் சொன்னாலும் –அ காரம் முதலில்–தாத் பர்த்யம் ம காரத்துக்கு தான் —
அவனுக்கு சொல்ல வேண்டியது இல்லை –அசித்துக்கும் சொல்லி பயன் இல்லை-
உபதேசமே ஜீவாத்மாவுக்கு தான் தேர் தட்டிலும் முன் அமர்ந்தான் –அர்த்தத்தால் –
பரமாத்மா முக்யம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்-ராஜ புருஷன்-ராஜா சேவகன்-பிரதான்யம் -போல
அண்டம் ஆகாசம் -அந்தரத்து அமரர் இவர்கள்- -அந்தரம் அண்டம் ஆகாசம் பர்யாயம் –
கேசவன் தமர் அல்லர் இவர்கள் -இவர் உள்ள இடம் வைத்தே இவர்களை –
பகவத் பக்தர்களை -கைங்கர்யம் இட்டும் அவனை இட்டும் -நிரூபகம் –
பக்ன அபிமானங்களால் வந்ததை சொல்கிறார்-
மேலே அடுத்த பாசுரத்தில் உபகரணங்கள் கொண்டு வந்தமை அருளிச் செய்வார்-
தேவர் ஞானம் பெற்று -புண்யம் செய்து சொர்க்கம் போனவர்கள்–கர்ம பலன் அனுபவிக்க-
ஐஸ் வர்யார்திகள் தான் இவர்கள் அசித் அனுபவம் ஆசை பட்டு- தத்வம் மூன்று தானே
சித் ஆசை கொண்டு கைவல்யம்- பரமாத்மா தான் உயர்ந்தது என்று உணர்ந்து ஆசை கொண்டால்-பகவத் லாபார்திகள்
சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தம் அனுபவம் -ஐச்வர்யார்திகள்-அனுபவத்தில் உயர்வு தாழ்வு இருக்கலாம் –
நிலை உயர்ந்து இந்த்ரன் பட்டம்-இதனால் தான் ஆழ்வார்கள் இவர்களை உயர்த்தி பேசாமல் -பகவத் அனுபவம் இழந்து —
அகங்காரம் மிக்கு-வேதம் வேற சொர்க்கம் போக தூண்டும் வேத சாஸ்திரம் நம்பிக்கை வர அனுபவம் பெற்று திரும்பி வர –
திரும்ப இங்கு தான் வரணும் கர்ம பூமி இது தான்-
சாதனம் பண்ண முடியாத இடம் சொர்க்கம்-அப்படி அகங்கரிப்பவர்களே
பெரிய பெருமாளை சேவிக்க வந்த பின் நாம் வர வேண்டாமா-
எல்லோரும் ஈஸ்வர ஆதீனம் தான் என்று காட்ட-
பிரம்மா முதல் பிபீலிகா எறும்பு வரை-பிள்ளை பெருமாள் ஐயங்கார் –
நான் முன்னே நன் முன்னே என்று வாயில் நுழைந்தார்கள் பிரி கதிர் படாமல்-
ஷேம கிருஷி பலன் -அதனால் வர்க்கம் எல்லாம் எடுத்து சொல்கிறார்-
அகங்காரம் தொலைந்து வந்தார்களா-புண்யம்-அனுபவத்தில் ஈடு பட வைக்கும்-
நான் பிரதானம்-புண்ய பலன் திரும்ப வைக்காது பதவி தக்க வைக்க வந்தார்கள்
திருந்தி வந்தார்களா -இங்கேயே இருப்பார்களா
தேஷாம் சதத யுக்தாநாம்-எப் பொழுதும் சேர்ந்து இருக்க ஆசை கொண்டு இருப்பார்கள் பக்தர்கள்
சேஷத்வம் பார தந்த்ர்யம் மிகுந்து -நம்மை ரஷிக்க -அவன் இருக்கிறான் என்ற மகா விசுவாசம்
காலையில் மட்டும் சத்வ குணம் வந்து அபிமானம் குறைந்து
வைராக்கியம் கொஞ்சம் வந்து அவனை பற்றி-புல்கு பற்று அற்றே-
ஆழ்வான் ஆண்டான் வார்த்தை -நீர் ஒருவரே அதிகாரி அனைத்தையும் விட்டு விட்டே பற்ற வேண்டும் என்றால்
கொஞ்சம் கைங்கர்யம் பண்ண சத்வ குணம் வளர-அபிமானம் பங்க -குறைந்து வந்தார்கள்
மனமே தான் பந்தத்துக்கும் மோட்ஷத்துக்கும் கரணம் –
இருக்கிறார் உள்ளே என்று நம்பி அவனை கேட்டு-காரியம் பண்ண -நெருங்கிய தொடர்பு கிட்டும்
அவன் நினைவு சாஸ்த்ரங்களில் பதித்து வைத்து இருக்கிறார்
பெருமாளை நேராக சேவிப்பது மங்களா சாசனம் பண்ண தான்
நம்பி செய்தால் நம்மை சரி படுத்தும் பொறுப்பை அவனே எடுத்து கொள்கிறான்
ஜீவாத்மாவுக்கு எது நல்லதோ அதுவே தீமை-ஞாதுருத்வம் கொண்டு-சாஸ்திரம் படித்து நடந்து மோட்ஷம் போகலாம்
நான் உசந்தவன் என்று நினைந்து அகங்காரம் கொண்டு ஐஸ்வர்யம் கைவல்யம்-
அணு சக்தி அழிவுக்கும் உயர்வுக்கும் போல-ஞானத்தாலே சேஷத்வ பார தந்த்ர்யம் புரிந்து கொண்டு இருந்தால்-
அம் கண் ஞால அரசர்கள் பங்கமாய் வந்தது போல –
ஸ்த்ரீத்வம் என்கிற அபிமானம் தொலைந்து வந்தோம்-என்கிறாள் —
இரும்பு போல் வலிய நெஞ்சம்–
காந்தஸ்தே புருஷோத்தமன் -கிட்டே போனதும் இழுத்து கொள்கிறான் அவன் இடம்-
ஆந்த்ரமான சேஷத்வம் பார தந்த்ர்யம் புரிய தான் இப்படி அருளுகிறார்-
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்–2-7-1-
கேசவன் தமர் –
பிரசஸ்த கேசனான நிலையிலே தோற்று இருக்குமவர்கள். என்றது,
அவனுடைய அவயவங்களின்-ஸுந்தர்யத்திலே அழகிலே தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றபடி.
அன்றிக்கே,விரோதி நிரசன சீலதையிலே – பகைவர்களை அழிக்கும் பண்பிலே தோற்றிருக்குமவர்கள் என்னுதல்;
அன்றிக்கே, தஸ்மாத் கேசவ நாமாவான் -‘க என்பது பிரமனுடைய பெயர்; நான் எல்லாப் பொருளையும் நியமிக்கிற
சிவன் ஆகின்றேன்; நாங்கள் இருவரும் தேவரீர் திருமேனியில் உண்டானோம். ஆதலால், ‘கேசவன்’
என்னும் திருப்பெயரை உடையவர் ஆனீர்’ என்கிறபடியே, சர்வ நிர்வாஹகனான நிலையிலே தோற்றிருக்குமவர்கள் என்னுதல்.
சர்வேஸ்வரன் உடையார்’ என்றாயிற்று ஆழ்வார் இவர்களை விரும்புகிறது;
‘எமர்’ என்கிற ஆழ்வாருடைய சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புகிறது.
இத்தால் அவன் விஷயீ கரிக்கைக்கு – அங்கீகரிப்பதற்கு ஒரு வைஷ்ணவ அபிமானமே வேண்டுவது என்றபடி.
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்-
எமர் கீழ் மேல் ஏழ் எழு பிறப்பும்- கேசவன் தமர் -ஆனார்கள் என்க.
ஏகாஹம் அபி கௌந்தேய பூமிஸ்த்தம் உதகம் குரு குலம் தாரயதே தாத சப்த சப்த ச சப்த ச
‘குழந்தாய்! தருமபுத்திரா! வாராய்; ஒரு நாளாகிலும் பூமியில் தண்ணீரை விடு; அவ்வாறு விடும் தண்ணீர் வமிசத்தை
மூ ஏழ் தலைமுறை கரை ஏற்றுகிறது’ என்றும்,
தச பூர்வான் தச அபரான் ஆத்மா நஞ்ச –‘கழிந்து போன பத்துப் பிறவிகளையும், இனி வருகின்ற பத்துப் பிறவிகளையும், தன்னையும் பரிசுத்தப்படுத்துகிறது’ என்றும் வரும் பிரமாணங்களைக் காண்க.
————————————————————————————-
209-
துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் -திருப் பள்ளி எழுச்சி -10-
ஆழியும் சங்குமுடைய நங்கள் அடிகள் -பெரிய திருமொழி -11-2-6-
அவனுக்கு சேஷித்வ ஸூசகம் ஆழியும் இத்யாதி
சேஷ சேஷிகளின் அடையாளம் இத்தால் கூறப்பட்டன –
தொடை ஒத்த -ஒழுங்காக தொடுத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்
அடையாளம்–சேஷருக்கு சூசுகம் சங்கு சக்கரம் பொலிந்து தோன்றிய தோள் சேஷிக்கு ஸூசுகம்
அடியேனை-தாஸ்ய ரசம் கொண்டவன்-அளியல்- நம் பையல்-
அனைவரும் படு காடு கிடக்கிறார்கள் என்று சொல்லி-இதில் தனக்கு வேண்டியதை கேட்டார்
கீழே -மக்களுக்கு பரத்வம் காட்டி அருள தேவதைகள் கூட்டம் சொல்லி –
இதில் தனக்கு வேண்டிய புருஷார்த்தம் நிஷ்கர்ஷித்து அருளுகிறார்
பிரயோஜன பரர் போல அன்றிக்கே-தேவர்கள் ரிஷிகள் போல் அன்றியே
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயனை வழுவா-அமிர்தம் வாங்கி போவார் அவர்கள்-தேஷாம் சதத யுக்தாம் –
நித்ய உக்தன் –வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்று இருக்கும் –
முக மலர்ச்சியே பிரயோஜனம்-ஈஸ்வர முகோலாசம்- ப்ரீதி அர்த்தம்-ஒன்றே குறிக்கோள்
அடியேனுக்கு பள்ளி எழுந்து அருளாய் என்கிறார் -பிரார்த்தித்து நிகமிக்கிறார் –
மண் வெட்டி கூடை லஷ்மணனுக்கு போல -இவருக்கும் இதே செல்வம்-ததீய சேஷத்வம் –
ஞானம் ஆனந்த மயன் அல்ல இவரது ஸ்வரூப நிரூபகம் ததீய சேஷ பர்யந்தமாக இருக்கை–
தொண்டர்களுக்கு அடிப் பொடி என்ற ஞானமும்-தொடை ஒத்த துளவமும் கூடையும் இவருக்கு நிரூபக தர்மம்-
இதுவே போக்யம் என்று ததீய பர்யந்தம் -என்றவாறு –
ஸ்நிக்தன் என்று கிருபை பண்ணி அருளி சேஷத்வ எல்லையில் நிறுத்தின தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அருள வேண்டும்
அளியன் என்று அருளி-கிருபை பண்ணி-சிநேகமும் தயையும் இந்த ஜந்துவை கிருபை பண்ண அடுக்கும்-
எல்லாம் அற்றான் என்று திரு உள்ளம் கொண்டு-என்று தயை காட்டி அருளி –
உனக்கு ஆட் படுத்தாய் பிரதம நிலை- அடியார்க்கு ஆட் படுத்தாய்-சரம நிலை
இவருடைய அடியார் அடியார் இருக்கும் படி -எல்லாம் அற்றான் -கர்மாதிகள் இல்லாமல் -என்று திரு உள்ளம் பற்றி –
ஆத்மாவின் ஆர்ப்பை துடைத்தால் நிலை நிற்பது இதுவே –
அளியன் -ஸ்நேகம்– தயாபாத்ரம் –
மத பக்த பக்தேஷு பிரியம் அதிகம் -எல்லை நிலத்தினில் நிறுத்தினாய் -ரத்னம் பட்டது முத்து பட்டது என்னுமா போல
ஆட் படுத்தாய்-கிடைப்பது துர் லபம் -ஆட் படுத்தி விட்டாய்-
முதல் நிலையும் அன்றியே இவ்வருகே சம்சாரி நிலையும் அன்றி சேஷத்வ எல்லை நிலத்தில் நிறுத்தினாய் –
ரத்னம் முத்து பட்டது -கிடைத்தது போலே -ஆட்படுத்தாய் –பிரார்த்தனை மட்டும் இல்லை -கிடைத்த தனம்
வேண்டியது கிட்டியதே இன்னும் ஏன் தபஸ்-பாம்பின் மேல் நீர் நடுவில்
அபிமத சித்தி உண்டானாலும் -உறங்குவார் உண்டோ-கையில் அமுதம் இருக்கே-அஹம் அன்னம் –
புசிக்க எழுந்து அருளாய் –உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
உமக்கு என்று கொண்டு அருள வேண்டும் யோக நித்தரை பலம் பெற்றதன் பின் பண்ண வேண்டுமா –
கோர மா தவம் செய்தனன் கொல்–சேஷித்வ சித்தி பெறவேண்டும்-
யோக நித்திரை பல பர்யந்தமான பின்பும் உறங்குவார் உண்டோ-
திருப்பள்ளி உணர்த்தி கைங்கர்யம் செய்து சேஷத்வ சித்தி நாம் பெற்று உஜ்ஜீவிக்க அருளிச் செய்தார் ஆயிற்று –
ஆழியும் சங்குமுடைய நங்கள் அடிகள் தாம் – -பெரிய திருமொழி -11-2-6-
சர்வேஸ்வர லஷணம் ஆயிற்று
திருவாழி ஆழ்வானும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் –
————————————————————————————
210
தொண்டர் அடிப் பொடி -திருப் பள்ளி எழுச்சி -10
அடியார் அடியார் –அடியோங்களே -திரு வாய் மொழி -3-7-10
பகவான் சேஷித்வத்தின் எல்லை யிலே உளன்
ஆழ்வார் சேஷத்வத்தின் எல்லை யிலே உளர் –
தொண்டர் அடிப் பொடி -திருப் பள்ளி எழுச்சி -10–கங்கையில் புனிதமான காவேரி -சூழ் புனல் -அரங்கா -வேறே திரு நாமம் வேண்டாமே
அழகிய மணவாளன்-அரங்கா சொந்த பேர் இருவருக்கும் இல்லை -ஆழ்வாருக்கும் பெருமாளுக்கும் –
விப்ர நாராயணன் விட்டு தொண்டர் அடிப் பொடி ஆனது போலே-நிரூபக தர்மம் -சூழ் புனல் அரங்கன்
அங்குத்தைக்கு ஸ்பர்சம் ஆகும் படி ஒத்து -கோவில் அரங்கனுக்கு நிரூபகம் போல கணித்திர-
மண் வெட்டி கூடை லஷ்மணனுக்கு போல -இவருக்கும் இதே செல்வம்-ததீய சேஷத்வம் –
ஞானம் ஆனந்த மயன் அல்ல இவரது ஸ்வரூப நிரூபகம் ததீய சேஷ பர்யந்தமாக இருக்கை–
தொண்டர்களுக்கு அடிப் பொடி என்ற ஞானமும் தொடை ஒத்த துளவமும் கூடையும் இவருக்கு நிரூபக தர்மம்-
இதுவே போக்யம் என்று ததீய பர்யந்தம் -என்றவாறு –
ஸ்நிக்தன் என்று கிருபை பண்ணி அருளி சேஷத்வ எல்லையில் நிறுத்தின தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அருள வேண்டும்
உனக்கு ஆட் படுத்தாய் பிரதம நிலை- அடியார்க்கு ஆட் படுத்தாய்-சரம நிலை
இவருடைய அடியார் அடியார் இருக்கும் படி -எல்லாம் அற்றான் -கர்மாதிகள் இல்லாமல் -என்று திரு உள்ளம் பற்றி –
ஆத்மாவின் ஆர்ப்பை துடைத்தால் நிலை நிற்பது இதுவே – அளியன் -ஸ் நேகம்– தயாபாத்ரம் –
அடியார் அடியார்தம் அடியார் அடியார்தமக்கு அடியார் அடியார்தம் அடியார் அடியோங்களே -திரு வாய் மொழி -3-7-10 –
தம் ஈஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம் ‘அந்தப் பரம்பொருள் ஈசுவரர்களான சிவன் முதலியோர்களுக்கும் மேலான
ஈசுவரன்’ என்கிறபடியே, சேஷித்வத்துக்கு -இறைமைத்தன்மைக்கு அவனுக்கு அவ்வருகு இல்லாதது போன்று,
சேஷத்வத்துக்கு -அடிமையாம் தன்மைக்குத் தமக்கு அவ்வருகு இல்லாதபடி அதன் எல்லையிலே நிற்கிறார்.
ஐஸ்வரியத்தை ஆசைப்பட்டவர்கள் தம்மோடு ஒத்த-சஜாதீயரில் – இனத்தாரில் ஏற்றத்தை ஆசைப்பட்டு,
க்ஷத்திரியர்க்கு மேலே ஆசைப்பட்டு,
இந்திர பதத்தை ஆசைப்பட்டு,
பிரஹ்மாவின் அளவில் ஆசைப்படுமாறு போன்று,
இவரும் இவ்வருகில் எல்லையை ஆசைப்படுகிறார்.
இப்போதும் தம்முடைய ருசிக்கு அவதி உண்டாய் இவ்வளவிலே நின்றார் அல்லர்;
சந்தஸில் பாசுரத்தில் இதற்கு அவ்வருகு போக ஒண்ணாமையாலே நின்றார் இத்தனையேயாம்.
‘இவ்வாறு ‘சண்டாள சண்டாளர்களாகிலும் – எம் அடிகளே’ என்று கூறுதல் உலக நடைக்கு மாறுகோடல் அன்றோ?’ எனின்,
‘இப்படி வைஷ்ணவர்களை விரும்பினால் இது உலக மரியாதைக்குச் சேராதிருந்ததாகில்,
ஆழ்வார் விரும்பியதை நம்பினவர்களாகிறோம்,’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.
தாமக் கடையுகத் துள்ளே விழுங்கித் தரித்த பழஞ்
சேமப் புவனம் செரிக்கு மென்றே,சிவன் மா முடிக்கு
நாமப் புனல் தந்த பொற்றாளரங்கர், நலஞ்சிறந்த
வாமத் திருக் கர மேலாகவே கண் வளர்வதுவே.’– திவ்வியகவி
302-
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் -7
காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யானிலேன் -நான்முகன் திருவந்தாதி -53
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்-வரம் கொடுத்த தேவதைகள் தாம் குலையாமே
சக்கரவர்த்தி திரு மகனாய் வந்து அவதரித்து
கையிலிலே வில்லாலே இலங்கையை அழிக்கச் செய்தவனே -ஆஸ்ரயணீயன்-என்கிறார்
தேவதைகள் தங்கள் அளவு அறியாதே ராவணனுக்கு வரம் கொடுத்து
பின்னை தங்கள் குடி இருப்பு இழக்கும் படி -அவனாலே நெருக்குண்டு
போக்கற்ற அளவிலே திருவடிகளிலே வந்து விழுவார்கள் –அதுக்குப் போக்கடி செய்கை ஈஸ்வரனுக்கே பரம் இறே
ப்ரஹ்மாதிகள் வர பலத்தாலே பூண் கட்டின இலங்கையை சங்கல்ப்பத்தால் அன்றியே
கையில் வில்லாலே அழியச் செய்தவனே-உங்கள் விரோதியையும் போக்கி ரஷிக்கும் -என்கை –
தேவனே – ராவண வத சமனந்தரத்திலே கையும் வில்லுமாய் நின்ற போதை
வீர ஸ்ரீ யால் வந்த புகரை உடையவனே ஆஸ்ரயணீயன்-ஆவான் —
கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்த னல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –
கற்றான் ஒருத்தன் உளனாக-அவனைப் புறப்பட விட்ட ஜ்ஞான ஹீநருடையதான இலங்கையை
அரண் அழித்த சக்கரவர்த்தி திருமகனை ஒழிய
வேறு ஓன்று-சமாஸ்ரயணீயமாக நினைத்து இரேன் –
பாவோ நான்யத்ர கச்சதி -என்கிற திருவடியைப் போலே இவரும்
அஞ்ஞானிகளான ராக்ஷஸர் களுடைய இலங்கையை வரம்பு அழித்த சக்ரவர்த்தி திருமகனை ஒழிய
நான் வேறே ஒரு தேவதையை யுடையேன் அல்லேன்
க்ரூரர்களாய்த் தபஸ்ஸினால் தேவதைகளாயினும் ஸ்வதஸ் ஸித்தமான தேவத்வம் இல்லாதவர்களாய்
ஸ்ரீ லஷ்மீ சம்பந்தம் இல்லாதவர்களான ருத்ராதிகளைப் ப்ராப்யராக நினைக்க வேண்டாம் –
—————
303-
மற்றுமோர் தெய்வம் உண்டே -9
தெய்வம் மற்று இல்லை பேசுமினே -திருவாய்மொழி -4-10-3
மற்றுமோர் தெய்வம் உண்டே – நான் சொல்லுகிற இவனை ஒழிய வேறு ஒரு ஆஸ்ரயணீய தத்வம் உண்டே –
ஈஸ்வரோஹம் -என்று இருப்பார் உண்டானாலும்
ஆஸ்ரயணீயனுமாய்
பிராப்தனமுமாய் இருப்பன்-வேறு ஒருவன் இல்லை –
யேப்யன்ய தேவதா பக்தா -என்று அந்யராக விறே இவன் சொல்லும் போதும் சொல்லுவது –
ஓர் தெய்வம் – கட்டைக் குடியனாய் சிறிது போதைக்கு போலியாய் நின்று
பின்னை விவேகித்தால் கழிக்கலாவது ஓன்று இல்லை –
உண்டே –
இவனோடு சமானமாய் இருப்பார் உண்டோ என்று கேட்கிறார் அல்லர் –
கிம் –ஷேபார்த்தம் ஆதல்
ஏழு உலகு மீ பாவம் செய்து அருளால் அளிப்பார் யார் -என்றால்
அவன் -என்று எதிரிகளுக்கு உத்தரமாம் படி ஸூபிரசித்தமான அர்த்தம் என்கிறார் ஆதல்
சம்ப்ரதிபன்னமான அர்த்தத்தை ஒருவராலும் இசையாது ஒழிய ஒண்ணாது இறே –
தெய்வம் மற்று இல்லை பேசுமினே -திருவாய்மொழி -4-10-3–திறம் அன்றி – அவனுக்குச் சரீரமாய் -பிரகாரம் -அல்லாது. திறம் –பிரகாரம் – சரீரம்.
தெய்வம் மற்று இல்லை – ஸூ வதந்தரமாய்த் தனக்கு உரித்தாய் இருப்பது ஒரு தெய்வம் இல்லை.
தேவர்களுடைய சொரூபத்தை விலக்குகிறார் அன்று-
அவனுக்கு விபூதி வேண்டும்’ என்று இருக்கிறவர் ஆகையாலே; அவர்களுடைய ஸ்வாதந்தரியத்தை விலக்குகிறார்.
மற்றைத் தேவர்களை அவனுக்குச் சரீரமாகப் புத்தி பண்ணி அடைந்தீர்கோளாகில்,
அவனுடைய ஆஸ்ரயணத்திலே புகும்;
அவர்கள் ஸ்வதந்தரர்கள் என்று புத்தி பண்ணிப் பற்றினீர் கோளாகில்,
ஸ்வதந்தரமாய் இருப்பதொரு வேறு தெய்வம் இல்லை;
நே ஹா நா நா அஸ்தி -‘ஸ்வதந்தரப் பொருள் இங்குப் பல இல்லை’ என்றும்,
யே யஜந்தி -எவர்கள் பித்ருக்களையும் தேவர்களையும் அக்னியோடு கூடிய பிராமணர்களையும் பூஜிக்கிறார்களோ,
அவர்கள் எல்லா ஆத்மாக்களுக்கும் அந்தரியாமியாயிருக்கிற விஷ்ணுவையே பூஜிக்கிறார்கள்,’ என்றும் வருவன காண்க.
பேசுமின் –நான் ‘அவனுக்குச் சரீரமாய் அல்லது ஸ்வதந்தரமாயிருப்பது ஒரு தேவதை இல்லை,’ என்றேன்;
இப்படி அநந்யதீனமாய் – வேறு ஒருவருக்கும் வசப்பட்டிராத நியமிக்குந் தன்மையையுடைய இவனைத்
தனக்குச் சரீரமாகவுடையது ஒரு தெய்வம் உண்டு,’ என்று சொல்ல வல்லார் உண்டாகில்,
வாய் படைத்தார் என் முன்னே நின்று சொல்லிக் காணுங்கோள்,’ என்கிறார்.
————
304
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கம் -17
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கம் –திருக் குறும் தாண்டகம் -13-
சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்க மா கோயில் கொண்ட உருக்கின விஷயம் தான் இருக்கிறபடி –
வண்டுகள் பொருந்தி விட மாட்டாத சோலை – பரிமளம் படித்தாப் போலே தன்னிலே பிறந்தது என்னும்படி யாய்த்து
வண்டுகள் படிந்து கிடக்கும்படி –-மாறி மாறி விறே அது கால் வாங்குவது – மது மாறுவது செவ்வி மாரில் இறே
ஆக நித்ய வசந்தமான சோலை -என்கை –
சோலையின் போக்யதை புரளி என்னும் படி யாய்த்து ஊரில் போக்யதை இருப்பது –
பரமபத்தோபாதி ஸ்லாக்கியமான கோயிலாக கொண்டான்-
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட-
வண்டுகள் பொருந்தி இருந்து உள்ள சோலையாலே சூழப் பட்ட அரங்கமாகிற -பெரிய கோயிலை
தனக்கு கோயிலாகக் கொண்ட –
சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணினை களிக்குமாறே –17-
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–திருக் குறும் தாண்டகம் —13-
சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்க மா கோயில் கொண்டஉருக்கின விஷயம் தான் இருக்கிறபடி –
வண்டுகள் பொருந்தி விட மாட்டாத சோலை –
பரிமளம் படித்தாப் போலே தன்னிலே பிறந்தது என்னும்படி யாய்த்து வண்டுகள் படிந்து கிடக்கும்படி –
மாறி மாறி விறே அது கால் வாங்குவது – மது மாறுவது செவ்வி மாரில் இறே-ஆக நித்ய வசந்தமான சோலை -என்கை –
சோலையின் போக்யதை புரளி என்னும் படி யாய்த்து ஊரில் போக்யதை இருப்பது –
பரமபத்தோபாதி ஸ்லாக்கியமான கோயிலாக கொண்டான்-
கரும்பினைக் –கரும்பு -என்றது கை தொட்டால் பிசகு நாறாதே இருக்கும் போக்யமான வஸ்துவை –
பிரப்தமுமாய்
சுலபமுமாய்
இருக்கச் செய்தேயும்
போக்யதை யாய்த்து மிக்கு இருப்பது –
கன்னல் -என்னாது ஒழிந்தது – பாக விசேஷத்தால் ஆக்கனாய் வந்த சாரஸ்யம் அல்ல –
சத்தா பிரயுக்தமான சாரஸ்யம் என்கைக்காக – ரசோவைச-என்னக் கடவது இறே –
கண்டு கொண்டு-நிதி எடுத்துக் கொண்டு -என்னுமா போலே கண்ணாலே பருகும் கரும்பாய்த்து இது –
லோச நாப்யாம் பிபந்நிவ-
என் கண்ணினை களிக்குமாறே –நரஹாவகமான விஷயங்களைக் கண்டு களித்துப் போந்த
என் கண்கள் கிடீர்-இவ் விஷயத்தைக் கண்டு களிக்கின்றன
இணை – களிப்புக்கு ஒன்றுக்கு ஓன்று ஒப்பாம் இத்தனை போக்கி வேறு உபமானம் இல்லை-
முக்தர் சதா தர்சனம் பண்ணிக் களிக்கும் களிப்பும்இக் கண்ணாலே இப்படி களிக்கிற இதுக்கு சத்ர்சம் அன்று –
கரணாதிபனான என்னை ஒழிய -தானே களியா நின்றன –
இந்த்ரியங்கள் ஞான பிரசரத்வாரம் என்கிற அந்நிலை குலைந்து சேதன சமாதியாலே தானே களியா நின்றன –
ராமம் மே அநுகதா த்ருஷ்டி –
கர்த்தாவை ஒழியவே கரணங்களுக்கே அந்வய வ்யதிரேகங்களிலே சோக ஹர்ஷங்கள் உண்டாம்படி இறே
விஷய ஸ்வபாவம் இருப்பது –
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட-
வண்டுகள் பொருந்தி இருந்து உள்ள சோலையாலே சூழப் பட்ட அரங்கமாகிற -பெரிய கோயிலை
தனக்கு கோயிலாகக் கொண்ட –
கரும்பினைக் கண்டு கொண்டு –
இது கண்ணாலே தின்னும் கரும்பு –
என் கண்ணினை களிக்குமாறே –
எவ் விஷயங்களைக் கண்டு களித்த கண்கள் எவ் விஷயங்களைக் கண்டு களிக்கிறது –
ப்ரீதி தத்வம் கனாக் கண்டு அறியாத கண்கள் கிடீர் இன்று களிக்கிறது –
(போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-)
(‘வரும் புண்டரம்! வாளி உன் மார்பு உருவிப்
பெரும் புண் திறவா வகை பேருதி நீ;
இரும்பு உண்ட நீர் மீளினும், என்னுழையின்
கரும்பு உண்ட சொல் மீள்கிலள்; காணுதியால்,’–கம்பர் -ஆரண்ய காண்டம்
வரும் புண்டரம் – (என்னை எதிர்த்து) வருகின்ற கழுகே;
உன் மார்பு வாளி உருவி – உனது மார்பினை (எனது அம்பு ஊடுருவி;
பெரும் புண் திறவா வகை – பெரிய புண்ணாகத் திறப்பதற்கு முன்பே;
நீ பேருதி – நீ (இவ்விடம் விட்டு) அப்பால் செல்க;
இரும்பு உண்ட நீர் மீளினும் – (காய்ச்சப்பட்ட) இரும்பில் பட்ட நீர் மறுபடியும் வெளிப்படும் என்றாலும் கூட;
என்னுழையின் -என்னிடத்தில் இருக்கின்ற;
கரும்பு உண்ட சொல் மீள்கிலள் -கரும்புச் சாற்றினும் இனிய சொற்களைப் பேசுகிற (சீதை) மீண்டு செல்ல மாட்டாள்;
காணுதி – (அதனைக்) காண்பாயாக; ஆல் -ஈற்றசை.)
————–
305
குளித்து என் கண் இல்லை -25
நோற்ற நோன்பு இலேன் -திருவாய்மொழி -5-7-1
குளித்து என் கண் இல்லை -25–ஜன்ம மாத்ரையே கொண்டு -நீ அவற்றை அனுஷ்டித்து வா என்னில் என்னும் இத்தனை போக்கி
ஜன்ம பிரப்ருதி ப்ராஹ்மண்யத்துக்கு அனுரூபமாய் இருப்பதொரு அனுஷ்டானமும் இல்லை -என்கிறார் –
குளித்து –நித்ய ஸ்நானம்-நைமித்திக ஸ்நானம்-பிராயச்சித்த ஸ்நானம்-என்று ஸ்நானம் பஹூ முகமாய் இருக்கும் –
நித்ய ஸ்நானம் நைமித்திக ஸ்நானத்து உடல் அன்று –
அந்த நைமித்திக ஸ்நானம் பிராயச்சித்த ஸ்நானத்துக்கு உடல் அன்று –
இவை தனித் தனியே ஸ்வ தந்த்ரங்களாக இறே இருப்பது –
கர்ம அனுஷ்டானம் தான் ஒழிய யோக்யாபாதகங்கள் பண்ணிப் போரத்தான் அரிதாய் இறே இருப்பது-
மூன்று அனலை –அக்நி -என்னா –அனல் -என்கிறது –
ஆராதியா நின்றால் அப்ராப்தியாய்-ஸ்வ பாவமாய் இருக்கும் விஷயம் என்று தோற்றுகைக்காக –
மூன்று அனல்-ஒன்றே துராராதமாய் இருக்க மூன்றை இறே விதித்தது –
ஓம்பும் –சவலைப் பிரஜைகளுக்கு சோறும் நீரும் முடித்துக் கொண்டு திரியும் மாதாவைப் போலே
உமியும் இந்தனமும் கொண்டு திரிய வேண்டிய விஷயம் -என்கை –
குறிகொள் –
மந்திர லோபம்
க்ரியா லோபம்
த்ரவ்ய லோபம்
கால பேதம்
தேவதா த்யாகம்
என்கிற இவற்றில் ஓன்று உண்டாமாகில் நிஷ்பலமாய் இருக்கையாலே கரணம் தப்பில் மரணமாய் இருக்கும் என்கை –
பண்ணின அக்ருத்யங்களை ஷாந்திக்கு விஷயமாக்கி ஓர் அஞ்சலியாலே ஸூபிரசன்னமாம் விஷயம் அன்றே –
அந்தண்மை தன்னை –
இப்படி இருக்கிறது எது என்னில் ப்ராஹ்மண்யம் –அது தன்னை ஒளித்திட்டேன் –
ப்ராஹ்மண்யம் இல்லாமை என் அளவாய் போக்கை அன்றிக்கே இவ் வர்ணம் தான் தண்ணிது -என்னும்படி பண்ணினேன் –
விசிஷ்டராய் இருப்பாரைக் கண்டால் இன்னான் அதிகரித்த வர்ணத்திலே சிலர் அன்றோ
என்று கொண்டு அவர்களுக்கும் அவத்யமாம் படி திரிந்தேன் – இது இறே நான் கர்ம யோகத்தில் நின்ற நிலை-
ஆனால் ஞான யோகம் இருந்தபடி எங்கனே என்னில் –என் கண் இல்லை–என் விஷயமாக எனக்கு ஒன்றும் இல்லை –
ஆத்ம விஷய ஞானம் எனக்கு இல்லை -என்கை
கர்ம யோகம் இல்லை என்ற போதே தத் சாத்யமான ஜ்ஞான யோகம் இல்லை என்னும் இடம் அர்த்த சித்தம் அன்றோ -என்னில் –
இஜ் ஜன்மத்தில் அனுஷ்டித்த தொரு கர்மம் இல்லை யாகிலும்
பூர்வ ஜன்மத்தில் கர்ம யோகம் பக்வமாய் அவ் வளவிலே தேக விஸ்லேஷம் பிறந்து
அனந்தர ஜன்மத்திலே ஜ்ஞானம் நைசர்க்கிகமாய் இருக்கும் இறே –அதுவும் இல்லை என்கை –
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் –
ந தர்மநிஷ்டோஸ்மி நச ஆத்மவேதீ ந பக்திமான் த்வத் சரணாரவிந்தே
அகிஞ்சந : அநந்யகதி : ஸரண்ய த்வத் பாதமூலம் ஸரணம் ப்ரபத்யே”– ஸ்தோத்திர ரத்நம்
ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்மவேதீ ந பக்திமான் த்வம்ச சரணாரவிந்த -கர்ம யோகத்தில் நிஷ்டை யுடையேன் அல்லேன்,
ஞான யோகத்தை யுடையேன் அல்லேன், உன்னுடைய திருவடிகளில் பக்தி யுடையேன் அல்லேன்” என்கிறார்.
ந தர்ம நிஷ்டோஸ்மி – கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேனல்லேன்” என்றது,
நாட்டார் ‘இவன் சில செய்யா நின்றான்’ என்றிருக்கைக்கும், அது கண்டு நான் ‘நமக்குச் சில உண்டு ஆகாதே’
என்று மயங்குவதற்கும், நீ கை விடுகைக்கும் வேண்டுவது உண்டு;
ஆனால் பலத்தோடே கூடியிருப்பது ஒன்று இல்லை என்றபடி.
“ந ச ஆத்மவேதீ-ஞான யோகமுடையேனல்லேன்” என்றது, தாச்சீல்யம் தோன்ற இருப்பன், எனக்கு அது தானும் இல்லை.
தத் ஞானம்; அஜ்ஞானம் அத: அந்யத்உக்தம்”-ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 5 : 57.-இறே –
அந்தப் பரமனைப் பற்றிய ஞானம் தான் ஞானம் என்ற சொல்லால் சொல்லக்கூடியது;
ஆகையால், மேல் சொல்லிய ஞானத்திற்கு வேறானது அஜ்ஞானமாகச் சொல்லப்பட்டது” என்கிறபடியே,
ஆத்மாவைப் பற்றிய உண்மையான-யாதாத்ம்ய – ஞானத்தை முன்னாகக் கொண்ட ஈஸ்வர ஞானம் எனக்கு இல்லை என்றபடி.
ந பக்திமான்-பக்தி யுடையேனல்லேன்”பக்தி இல்லை என்று சொல்ல வேண்டாவே அன்றோ,
மேல் சொல்லிய அவை இரண்டும் உண்டானால் வருமதுவே அன்றோ அது.
அவை இரண்டும் இல்லாமையாலே, பக்தியும் இல்லை என்கிறார் என்றபடி.
நோற்ற நோன்பிலேன்-நோன்பிலேன்’ என்ன அமையாதோ? ‘நோற்ற நோன்பிலேன்’ என்ன வேண்டுமோ? என்ன,
சாதனங்களைச் சமைய அநுஷ்டித்து, பலத்தோடே -வியாப்தமாக -கூடி யிருப்பதாகப் பார்த்திருக்கலாவது ஒன்று இல்லை
என்கைக்காகச் சொல்லுகிறார். என்றது,
சக்கர்வர்த்தி, ஸ்ரீ வசுதேவரைப் போலே பேற்றுக்கு அடியாக நினைத்திருக்கலாவது ஒன்றில்லை என்றபடி.
நுண்ணறிவிலேன்-
ந தர்மநிஷ்டோஸ்மி – கர்மயோகத்தில் நிஷ்டையுடையேனல்லேன்” என்கிற இடத்தில்,
தர்மம் இல்லை’ என்னாமல், தர்ம நிஷ்டனாகப் பெறுகின்றிலேன் என்றால் போலே,
அறிவிலேன்’ என்னாமல், ‘நுண்ணறிவிலேன்’ என்கிறார். என்றது,
ஸ்வ ஸ்வரூப – ஆத்ம ஞானம் பூர்வகமாக -முன்னாகப் பரம் பொருளின் சொரூபத்தைக் காணும் அளவாக
அறியும் அறிவை யுடையேனல்லேன் என்றபடி.
“ந பக்திமான்” என்றும்,
“நின்கணும் பக்தன் அல்லேன்” என்றும் எடுத்துக் கழித்த அளவு இங்கும் எடுத்துக் கழியாது ஒழிவான் என்? என்னில்,
“உபய பரிகர்மித ஸ்வஅந்தஸ்ய ஏகாந்தி காத்யந்திக பக்தியோகைகலப்ய:”-என்பது, ஆத்மசித்தி
உபய பரிகர்மிதஸ் வாந்தஸ்ய- கரும ஞானங்களால் அலங்காரம் பண்ணப்பட்ட மனத்தை யுடையவனுக்கு” என்கிறபடியே,
அவை இரண்டும் உண்டானால் வருமதுவே யன்றோ பக்தி;-அவை இல்லாமையாலே எடுத்துக் கழிக்கவும் வேண்டாவே அன்றோ.
ஆனால், இதைப் போன்று, ‘கர்மம் இல்லை’ என்ற போதே, ‘ஞானம் இல்லை’ என்பது போதருமே அன்றோ,
அதனை எடுத்துக் கழிக்க வேண்டுவது என்? என்னில், பூர்வ ஜென்மத்தில் -முற்பிறவியில் கர்மங்கள் தலைக் கட்டின அளவிலே –
முடிந்த அளவிலே மரணம் உண்டானால் அடுத்த பிறவியிலே ஞானம் உண்டாகக் கடவது.
ஆயின், பக்தியும் அப்படி ஆனாலோ? என்னில், ஞான கர்மங்கள் இரண்டும் உண்டானால் பக்தி கூடி அல்லது நில்லாது,
ஆன பின்பு, இங்கு அப்படி ஆக ஒண்ணாது.
உன்னைவிட்டு ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்’ என்று இவர் சொல்லுகிற இது, பக்தி அன்றோ,
ஸ்நேஹபூர்வம் அநுத்யானம் பக்தி: இதி அபிதீயதே
பஜஇதிஏஷதாது: வை ஸேவாயாம் பரிகீர்தித:
தஸ்மாத் ஸேவாபுதை: ப்ரோக்தா பக்தி ஸப்தேந பூயஸீ”
ஸ்நேஹம் பூர்வம் அநு த்யானம் பக்தி – சிநேகத்தை முன்னிட்ட தியானமானது பக்தி” அன்றோ;
ஆன பின்பு, இது உபாயம் ஆனாலோ? என்ன, அங்ஙனம் ஒண்ணாது அன்றோ,
கரும ஞானங்களோடு கூடியுள்ள மனத்தை யுடையவனுக்கு உண்டாகும் பர பக்தி அன்றோ
சாஸ்திரங்களில் சாதனமாகச் சொல்லிப் போருகிறது;
இது, அங்ஙன் அன்றிக்கே, அவனுடைய அனுக்ரஹம் திரு வருள் காரணமாக வந்தது ஆகையாலே இது ஸ்வரூபமாம் அத்தனை.
அங்ஙன் அன்றிக்கே, புராணங்களிலே தனித்தனியே கர்ம ஞானங்களைச் சாதனமாகச் சொல்லுகையாலே சொல்லிற்றாகவுமாம்.
ஜ்ஞான பக்தி அந்விதம் கர்ம ஜனகாதிஷு த்ருஸ்யதே
கர்ம பக்தி அந்விதம் ஜ்ஞானம் ப்ராயேண பரதாதிஷு
கர்ம ஜ்ஞாநாந் விதா பக்தி: ப்ரஹ்லாத ப்ரமுகாஸ்ரயா”
அவை இல்லையாகில், முதல் இல்லாதார் பலிசை இழக்குமத்தனை அன்றோ? என்ன,
————
306
குரங்குகள் மலையை நூக்க -27
தலையால் குரக்கினம் தாங்கி -பெரியாழ்வார் திருமொழி -4-1-3-
குரங்குகள் மலையை நூக்கக்- மலைகளாலே கடலைத் தூர்க்கிற விடத்தில் மலைகளுக்கு தொகை உண்டாய் –
ஸ்ரீ வானர வீரர்களுக்கு தொகை இல்லாமையாலே ஒரு மலையை அநேகர் கூடித் தொட்டுக் கொண்டு வருவார்கள் ஆய்த்து –
ஒரு மலை ஒருவற்கு பாத்தம் போராதபடி பெரு மிடுக்கராய் இருக்கச் செய்தேயும்
உபாத்யாயர் ஊசி போலே -மரத்தில் ஊசி குத்தி கொண்டு வந்த சிஷ்யர் கூட்டம் போலே –
எல்லோரும் கிஞ்சித் கரித்து ஸ்வரூபம் நிலை பெற வேணும் என்று இருக்கிறவர்கள் ஆகையால் இப்படி செய்கிறார்கள் ஆய்த்து –
ஸ்வரூப ஜ்ஞானம் உடையாதரோடு இல்லாதாரோடு வாசி அற துரும்பு எழுந்து ஆடும் படி இறே
அடிமை கொள்ளுகிறவர் கையும் வில்லுமாய் நின்ற நிலை தான் –
மலையை நூக்க – கடலிலே பொகட -என்னாதே –நூக்க -என்றது –ஒரு திரளுக்கு ஒரு மலை விஷயமாகவும் போராமையாலே
வேறு ஒரு திரளும் வந்து பற்ற அவர்கள் பக்கலிலே -நூக்க -இப்படி கை மேலே போலே யாய்த்து மலை கடலிலே புகுவது –
அவகாஹ் யார்ணவம் ஸ்வப்சயே-என்று கொண்டு பெருமாளுக்கு ஆற்றாமை கரை புரண்டு செல்லா நிற்க
அக் கார்யத்துக்கு வேண்டுவார் ப்ரவர்தியா நின்றார்கள் ஆறி இருக்க ஒண்ணாது இறே –
கடல் தூர்ப்புண்டு அக்கரைப் பட்டதாய் விடவற்று என்னும் த்வரையாலே எல்லாரும் ஒக்க ப்ரவர்த்திதார் ஆய்த்து
தலையால் குரக்கினம் தாங்கி -பெரியாழ்வார் திருமொழி -4-1-3—
ஸ்ரீ வானர வீரர்கள் உடைய திரள்கள் ஆனவை – ஸ்ரீ பெருமாள் திருவடிகள் படப் புகுகிறது அன்றோ -என்னும் கௌரவ புத்தியாலே
சிரசா வஹித்துக் கொண்டு சென்று –
பெரிய மலைகளைக் கொண்டு கடலை ஊடருத்து (இடைவெளி இல்லாமல் )அணியாக அடைக்க
(அணில்கள் நுண் மணலைக் கொண்டு வந்து -சிற்றாள் வேலை வானர வீரர்கள் )
————-
307-
தாவி யன்று-35
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -திரு வாய் மொழி -1-5-3-
தாவி யன்று-35–தாவி –உங்கள் தலையில் நான் கால் வைக்க புகா நின்றோம் என்னில் –
வாசனையாலே சம்வதியாதே ஆணை இடுவர்கள் இறே –
திரு வாணை-நின் ஆணை -என்று சாத்விகர் திருவடிகளை லபிக்கைக்கு மறுக்க ஒண்ணாத படி இடும் ஆணையை –
திருவடிகளைக் கிட்டாமைக்கு இடுவர்கள் ஆய்த்து –
இவர்கள் அறியாதபடி அநாயாசேன திருவடிகள் எல்லார் தலையிலும் படும்படி நடந்தான் –
தாவுதல்—கடத்தல்
அன்று –மகாபலியால் அபஹ்ருத்யமாய் தம்முடைய சேஷித்வமும்- சம்சாரிகள் உடைய சேஷத்வமும் அழிந்து கிடந்த அன்று –
————-
308-
சிக்கெனச் செம்கண் மாலே -35
சிக்கெனப் பிடித்தேன் -திருவாய்மொழி -2-6-1-
சிக்கென –
இது எல்லா குளிக்கும் நிற்கும்
யாவதாத்மாபவி
சர்வேஸ்வரனைக் குறித்து -மாஸூச -என்கிறார் இவர்
செங்கண்மாலே
இது ஸ்வ பாவ கதனம் அன்று-தாத் காலின விசேஷணம்-
இவர் சிக்கென -என்றவாறே-திரு உள்ளம் இவர் பக்கலிலே பிரசன்னமாய்
இவர் பக்கல் வ்யாமோஹம் உள் அடங்காமையாலே-கண் வழியே புறப்பட்டு பிரகாசிக்கிறபடி –
செங்கண் மாலே –
வ்யாமோஹத்தாலே குதறிச் சிவந்த கண்களை உடையவனே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானைக் குறித்து மகா ராஜர் –
வத்யதாம் -என்ற போது-பெருமாள் திரு உள்ளம் அழிந்தால் போலே ஆய்த்து-
பின்பு திருவடி –அத ராம பிரசன்னாத்மா -என்று பெருமாள் உளரானால் போலே ஆய்த்து –
திருவடி –அவதாரத்தில் -மாஸூச -என்றான்
இவர் –அர்ச்சாவதாரத்தில் -மாஸூச -என்கிறார் –
செங்கண் மாலே –
என் ஸ்வரூப லாபத்துக்கு முகம் வரும்படி வ்யாமுக்தரான தேவரீரை ஒழிய புறம்பு எங்கே போவேன் –
உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே–2-6-1-உன்னை –ஆஸ்ரித – அடியார்களிடத்தில் பக்ஷபாதத்தையுடைய உன்னை.
நான் –‘ஆடியாடி’ என்னும் திருவாய்மொழியில் விடாய்த்த நான்.
இனி, ‘நீ உய்விக்க, உன்னாலே உளேனான நான்’ என்றுமாம்.
பிடித்தேன் கொள் –
பிடித்தேனாகவே திருவுள்ளம் பற்று. ‘முன்னும் சொல்லிப்போரும் வார்த்தை அன்றோ இது?’எனின், அங்ஙனமன்று;
சிக்கெனப் பிடித்தேன் கொள் –
என்னைப் பெறுகைக்கு முற்பட்ட நீ விடிலும் விடாதபடி நான் பிடித்தேனாகவே திருவுள்ளம் பற்று.
அவனைப் பார்த்து, மா ஸூ ச -‘துக்கப்பட வேண்டா’ என்கிறார்.
————
309-
வள வெழும் தவள மாட -45
மாட மாளிகை சூழ் மதுரை -நாச்சியார் திருமொழி -4-5-
வள வெழும் தவள மாட –
அழகு மிக்கு இருப்பதாய்
வெள்ளியாலே செய்தது போலே அதி தவளமான மாடங்களை உடைத்ததாய் -இருக்கை –
திரு அவதரித்ததன்று போகப் பெறாத இழவு தீருகிறார் –
வில் விழவுக்காக கம்சன் கோடித்த படியைச் சொல்லிற்றாகவுமாம்
வளம் -அழகு
எழுச்சி -மிகுதி
மதுரை மா நகரம் தன்னுள் –
பிரதமத்தில் வாமன ஆஸ்ரயமாய்
பின்பு ஸ்ரீ சத்ருன ஆழ்வான் படை வீடு செய்து
பின்பு கிருஷ்ணன் திரு அவதாரம் பண்ணுகையால் உண்டான பெருமையைச் சொல்கிறது –
இப்படி பகவத் சம்பந்தம் மாறாத தேசம் ஆகையாலே வைகுந்த மா நகரில் காட்டிலும் இது வ்யாவ்ர்த்தம் –
மாட மாளிகை சூழ் மதுரைப் பதி-நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
அவன் விழ விழவுக்கு என்று கோடித்தான்-
இவள் இவன் வரவுக்கு என்று இருந்தாள் –மாட மாளிகைகள் சமைத்து அலங்கரித்தது –
—————–
310
கவள மால் யானை -45
கவளக் கடா களிறு -திருவாய்மொழி -4-6-5-
கவளமால் யானை கொன்ற கண்ணனை –
கவளம் கொண்டு இருப்பதாய்-பெருத்து இருந்துள்ள-ஆனையைக் கொன்ற கிருஷ்ணனை –
களபமால் -என்று எதுகைக்கு சேர பாடம் ஆனபோது – களபம் என்று உருவத்தில் பெருத்த யானை -என்றபடி –
கீழே ஆனைக்கு அன்று அருளை ஈந்த -என்றார்
இங்கே ஆனை கொன்ற என்கிறார்
இத்தால்-தேவாநாம் தானவாநாஞ்ச -என்றது அழிந்தது-
அங்கு உள்ளார் விரோதிகளைப் போக்கி தன்னை அனுபவிப்பித்தாப் போலே
இவர் தம் உடைய பிரதிபந்தங்களைப் போக்கி தம்மை அனுபவிப்பித்த படி –
திரு அவதரித்த அன்று ஒளிந்து போன ஊரிலே கண் காண வந்து விரோதியை அழியச் செய்த ஏற்றத்தை அனுபவிக்கிறார்-
கவளம் கடாம் களிறு அட்டவன் திரு நாமத்தால் தவளம் பொடி கொண்டு நீர் இட்டிடுமின் –
மதஜலம் ஒழுகா நின்றுள்ள குவலயாபீடத்தை முடித்த உபகாரகனது திரு நாமத்தாலே போக்குவதற்குப் பாருங்கோள்.
இதனால், பிரதிபந்தகங்களை -பிரபலமான தடைகளையும்-அநாயாசேந -வருத்தம் இன்றிப் போக்க வல்லவன்’ என்பதனைக் குறிப்பித்தவாறு.
‘கவளத்தை உண்பித்துப் போதையைத் தரும் பொருள்களைக் குடிப்பித்துப் பிச்சு ஏற்றுவித்த களிறு’ என்பாள்,
‘கவளக் கடாக் களிறு’ என்கிறாள்.
‘தூய்மையான பொடி’ என்பாள், ‘தவளம் பொடி’ என்கிறாள்.
‘பாபம் செய்வதற்குத் துணை புரிந்தவர்கள், கழுவாய்க்கும் கூட்டுப்பட வேண்டாவோ?’ என்பாள், ‘நீர்’ என்கிறாள்.
‘இட்டிடுமின்’ என்றது, ‘இவள் மேலே இடுங்கோள்’ என்றவாறு
————————————————————————————————————————————
மேட்டிள மேதிகள் தளை விடும் ஆயர்கள் -திருப் பள்ளி எழுச்சி -4
எறுமை சிறு வீடு மேய்வான் பரந்தன -திருப்பாவை -8
மேட்டு இள மேதிகள் -வளர்ந்த கிருஷ்ண கர ஸ்பர்சம் மூலம் வளர்ந்து -இளமை உடன் உள்ள எருமைகள்
மேடு -கொம்புகள் வளர்ந்து -இளமை பிராயம்–
மேடு -கொம்பு வளர ஆரம்பம் -நஞ்சீயர் -மேடாக வளர்ந்தன என்றுமாம்
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்–எருமை சிறு வீடு அன்றி பெரு வீடு–
பனி புல் மேய்தல் சிறு வீடு மேய்தல்-பால போகம்-
மேட்டு இள -பெரு வீடு-ஒளி திக்கு எட்டும் பரவிய பின் -பெரு வீடாக கொள்ள வேண்டும்
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண்
கீழ்வானம் வெள்ளென்று –கிழக்கு வெளுத்தாலும் கிடந்தது உறங்கும் இத்தனையோ -எழுந்திராய் என்கிறார்கள் —
உம் -சகாரத்தாலே -கிழக்கு வெளுத்தது அன்று –
உங்களில் யாரேனும் அத் திக்கைப் பார்க்கையாலே-உங்கள் முகத்தில்
ஒளி பிரதிபலிக்கையாலே கிழக்கு வெளுத்ததாய் இருக்கிறது-
இவர்கள் தான் திங்கள் திரு முகத்து சேயிழையார் இறே-
அது அந்யதா ஜ்ஞானம்-மற்று அடையாளம் உண்டோ என்ன –
சம்சாரிகளில் ராத்திரியில்
பர ஹிம்சாதி சிந்தனமும்-
நரக அவஹமான விஷய அனுபவமும்
தமோ குண அபிபவத்தால் வந்த நித்ரையுமாய்ச் செல்லுகையாலே
ராத்திரி தண்ணியது என்று புருஷார்த்த உபயோகியான பகல் விருப்பத்துக்கு உடலாய் இருக்கும்
இவர்கள் கிருஷ்ண அனுபவம் பண்ணப் பெறுகையாலே-ராத்திரி அடிக் கழஞ்சு-பெற்று விடியில் கோப வ்ருத்தர்கள் விரோதிப்பார்கள் என்று-விடியப் புகா நின்றது என்று பயப்பட்டு-கிருஷ்ணனையும் நம்மையும் சேர ஒட்டாதவர்கள் உணரும் காலம் வந்து தோற்றச் செய்தே-நீ கிடந்து உறங்குகையாவது என் என்ன
அவள் உள்ளே கிடந்து அக்காலம் வருகை யாவது என் என்ன –
கீழ்வானம் வெள்ளென்று–
இதுக்கு முன்பு விடிவுக்கு உடலாகச் சொன்னது போல் அன்று – கிழக்கு வெளுத்தது காண் -என்கிறார்கள் –
அஞ்சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால் (திருவாய் -5-4-9) -என்று
போது புக்க போதே பிடித்து கீழைத் திக்கை பார்த்துக் கொண்டு இருப்புதிகோள் –
(வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண்துளியாய்,
அஞ்சுடர வெய் யோன் அணிநெடுந்தேர் தோன்றாதால்,
செஞ்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்,
நெஞ்சிடர்தீர்ப் பாரினியார்? நின்றுருகு கின்றேனே.
இங்கு கோதுகலம் -கிருஷ்ண அனுபவம் இருக்கும் பொழுது இரவு
அந்த பாசுரத்தில் -இரவு வந்ததே கண்ணனும் வாரானால் காகுத்தனும் வாரானால் துன்புற்று இருக்க
அந்த துன்பம் பார்க்க சகியாமல் ஆதித்யனும் வரவில்லை )
திங்கள் திரு முகத்து சேயிழையாரான உங்களுடைய முகத்து தேஜஸ்
கீழைத் திக்கில் சென்று தட்டி உங்கள் முகத்திலே வந்து
ப்ரதி பிம்பிக்கையாலே கிழக்கு வெளுத்தது போல் தோற்றுகிறது அத்தனை –
கிழக்கு வெளுத்தது அன்று –
இது உங்களுடைய அந்யதா ஞானம்-
இத்தை ஒழிய விடிவுக்கு வேறு அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள் என்ன
வெள்ளென்று -என்றது வெள் என்றது -என்றபடி-
அசேதனத்துக்கும் சைதன்யம் உண்டாம் படி-சத்வோத்தரமான காலம் ஆயிற்று –
எழுந்திராய் -என்ன –
அசேதனத்துக்கும் சைதன்யம் உண்டாய்த்து-சத்வோத்தரமான கால க்ருதமல்ல –
மரங்களும் இரங்கும் வகை -என்று
உங்களுக்கு ஸ்வ அநுமான க்ருதம் –
வேறு அடையாளம் உண்டோ -என்ன –
கீழ்வானம் வெள்ளென்று –
கிழக்கு வெளுத்தது எழுந்திராய் -என்கிறார்கள் –
ஆண்களும் வ்ருத்தர்களும் உணர்த்துவதற்கு முன்னே எழுந்திராய் என்கிறார்கள்
அநன்யா ராகவேண பாஸ்கரேண ப்ரபாயதா-திங்கள் திருமுகத்து சேயிழையார் -என்கிறபடியே
(ஸூர்ய ஒளி சீதாப்பிராட்டிக்கு -சந்த்ர ஒளி இவர்களது -சந்த்ர வம்சம் அன்றோ )
வெண்ணிறத்தோய் தயிர் -என்று தயிர் வெளுக்கத் தோய்ந்தவாறே விடிந்தது என்று
அறிகையாலே உறங்காதே பல கால் தயிரைப் பாரா நிற்பர்கள் –
(இடக்கை வலக்கை அறியாமல் பாலையையும் தயிரையும் பார்த்தே காலத்தை உணருமவர்கள் )அத்தாலே கிழக்கு வெளுத்தது -என்ன
நீங்கள் எல்லாம் கிழக்கு நோக்கி -விடிந்தது இல்லையோ -என்று பார்க்க –
உங்கள் முகத்தின் ஒளி கீழ் திக்கில் சென்று தாக்கி உங்கள் முகத்திலே வந்து பிரதிபலிக்கையாலே
கிழக்கு வெளுத்ததாய் இருக்கிறது அத்தனை –
இது அந்யதா ஞானம் -மற்ற அடையாளம் உண்டாகில் சொல்லுங்கோள்-என்ன
(முத்து சிப்பி வெள்ளி -கயிறு பாம்பு -சங்க பீத போல் -பண்பை மாற்றி -அந்யதா ஞானம்
விபரீத ஞானம் பொருள் மாறாட்டம்
தேஹாத்ம அபிமானம் -விபரீத ஞானம்
ஆத்மாவின் பண்பை மாறாடி -சேஷத்வ பாரதந்தர்யம் மாற்றி ஸ்வதந்த்ரன் -நினைவு அந்யதா ஞானம் )
எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் –
பனிப்புல் மேய-அகாலத்திலே விட்டு -வயல்கள் எல்லாம் பரந்தன-
ஸ்ரீ நந்த கோபர்க்கு முத் திறமும் உண்டே -ஆட்டுத் திறம்-மாட்டுத் திறம்- எருமைத் திறம்-
அவற்றின் பின்னே கிருஷ்ணன் போம்-பின்னை ஆரைக் காண்பது -எழுந்திராய் -என்ன –
உங்கள் முகத்தில் ஒளியைக் கண்டு இருள் திரிந்து போகிறது இத்தனை-
அது உங்களுடைய விபரீத ஜ்ஞானம் இருக்கிற படி-
சத்வ நிஷ்டர் சந்நிதியில் அந்தகாரம் நில்லாது இறே-
பெரியாழ்வார் பெண் பிள்ளை அக்நி ஹூத்ர அனுஷ்டானம் அறிகை ஒழிய-
சிறுவீடு வாசி அறிகையான மெய்ப்பாடு
அருணோதயத்துக்கு அஞ்சி இருள் சிதறி சிதறிப் போகிறது என்னவுமாம்
மேட்டிளமேதிகள் தளைவிடும் ஆயர்கள் -என்று-இவள் தகப்பனார் எம்பெருமானை எழுப்பினார்-
இவள் இவர்களை எழுப்புகிறாள்–
நாங்கள் பிரமித்தோமாய் ஆயிடுக -நீ விடிந்தது இல்லை என்று அறிந்தபடி எங்கனே -என்ன-
பஞ்ச லஷம் குடியில் பெண்களில் உங்களை ஒழிய அல்லாதார்-உணராமையால் -என்ன
எருமை சிறுவீடு-எருமைகள் பனிப் புல் மேய்க்கைக்காக வயல் எங்கும் பரந்தன-இது விடிவுக்கு அடையாளம் அன்றோ என்கிறார்கள் –
மேட்டிள மேதிகள் தளை விடுமாயர் (திருப்பள்ளி எழுச்சி -4)-என்று
(விஷ்ணு சித்தர் போல் – துளஸீ ப்ருத்தர் -இவரும் புஷ்ப கைங்கர்யம் )
பெரிய பெருமாளை இவள் தமப்பன்மாரில் ஒருவர் எழுப்பினார் –
இவர்கள் இவளை எழுப்புகிறார்கள் –
இதில் ஆழ்வார்களும் இவளுக்கும் வாசி –
(விஸ்வாமித்திரர்- விஷ்ணு சித்ரர் துளஸீ ப்ருத்யர்கள் திருப்பள்ளி எழுச்சி கைங்கர்ய ஸாம்யம்
புஷ்ப கைங்கர்யத்தாலும் ஸாம்யம் உண்டே)
சிறு வீடு -மேய்வான்-
பெரியாழ்வார் மகளாய் அக்னி ஹோத்ர ஹோமங்களுக்கு உள் மானம் புற மானம் ஆராய்க்கை தவிர்ந்து
இடைச்சியாய் எருமையினுடைய சிறு வீடு பெரு வீடு என்னும் இவற்றில் வாசி அறிகை யாத்ரையான படி
பரந்தன காண்-
பட அடிப் பட்டாலும் உறங்கும் அத்தனையோ –
நம்முடைய உத்தேச்ய வஸ்து அவற்றின் பின் கை கழியப் போனால் என் படக் கடவோம்
ஸ்ரீ நந்த கோபருக்கு முத்திறமும் -ஆடு பசு எருமை -கிருஷ்ணன் அவற்றின் பின்னே போம் –
(வாரணம் ஆயிரம் யானையும் உண்டு வஸூ தேவர் சொத்தும் கண்ணனுக்கு உண்டே )
பின்னை நாம் ஆரைக் காணப் போகிறது –
கெடுவாய் எழுந்திராய் –
எருமை பனிப்புல் மேய்க்கைக்கு வயல் எங்கும் பரந்தன வென்று சொன்ன இது
விடிவுக்கு அடையாளம் அன்றோ என்ன
உங்களுடைய முக ஜ்யோதிஸ் யோஜனையாலே சிதறிப் போகிற இருள் அத்தனை இவை –
அல்லது எருமைகள் அன்று –
இது உங்களுடைய விபரீத ஞானம் இருக்கிற படி -விடிவுக்கு உடல் அல்ல என்ன –
கீழ்ச் சொன்னவை எங்களுடைய அந்யதா ஞானமும் விபரீத ஞானமும் ஆகிறது –
விடிந்தது இல்லை என்கைக்கு அடையாளம் நீ சொல்லாய் என்ன
அஞ்சு லக்ஷம் குடியில் உள்ள பெண்களுக்கு எல்லாம் அவதி இல்லை –
இங்கு எல்லாமாக ஆயிரம் பேர் போராது காண் வந்தது –
அல்லாதாரும் உணர்ந்து வர வேண்டாவோ –
அவர்கள் உணர்ந்து வாராது ஒழிந்தது விடியாததுக்கு அடையாளம் என்ன
————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்