Archive for March, 2023

ஸ்ரீ திருவடி மாலை -ஸ்ரீ கழல் கோவை -ஸ்ரீ தேசிகர் மஹாத்ம்யம் –ஸ்ரீ துரை ஸ்வாமி ஐயங்கார் —

March 10, 2023

நிரபாய தேசிகாய நிதர்சிதா மிமாம் கமலா ஸஹாய கருணாதி ரோஹணீம்
க்ரம சோதி ருஹ்ய க்ருதி நஸ்ஸ மிந்ததே பரிசுத்த ஸத்வ பரிகர்மிதே பதே

நித்யமான ஆச்சார்யரால் காட்டப் பெற்ற ஸ்ரீ யபதியின் தயையாகிற படியை முறைப்படி ஏறி
க்ருதார்த்தரானவர்கள் ஸுத்த ஸத்வத்தினால் அலங்கரிக்கப்பெற்ற பரம பதத்தில் பிரகாசிக்கிறார்கள்

இப்பிரபந்தம் இரட்டைக் கழல் ஒலியாய் நவ ரீதியில் அமைக்கப்பட்டுள்ளது

அந்தமிலா மறை அன்பர் அடியார்க்கும் அடியேன்
அதின் கருத்தை ஆய்ந்து அளித்த ஆழ்வாருக்கும் அடியேன்
செந்தமிழால் அருள் செயலின் அடியார்க்கும் அடியேன்
சிந்தனை செய் தொண்டர்களின் அடியார்க்கும் அடியேன்
எந்தையிடம் சரண நெறி புகுந்தார்க்கும் அடியேன்
சந்தமிகு தமிழ் மறையோன் தேசிகனார்க்கு அடியேன்

ப்ரஸித்த நெடியோன் ஸ்ரீ நிவாஸன்
அருள் நெடுமையே ஸ்ரீ நிவாஸனின் நெடுமை
வேங்கட வெற்பு என விளங்கும் வேத வெற்பு
கோமின் துழாய் முடி ஆதி யஞ்சோதி குணங்களே
தல்பம் கல்பாந்த யூன சடஜித் உப நிஷத் துக்த ஸிந்தும் விமத்னன் க்ரத் நாதி ஸ்வாது காதா லஹநி தசசதீ நிர்கதம் ரத்ன ஜாதம் என்று
எழில் குருகை வரு மாறன் திருவாய் மொழி ஆயிரம் குணம் கொண்டு
தாத்பர்ய ரத்னாவளிக் கோவையை அரங்க நகர் அப்பனுக்கு ரஞ்ச நிதியாக சாத்தி மகிழ்ந்தார்
பேசு உபய வேதாந்த வள்ளலாருக்கு இக்குணக் கழல் கோவையை இட்டு மகிழ்கிறார் இவர்

அந்தணர் அந்தியூர் எல்லையில் நின்ற அனைத்துலகும் –வந்தடையும் வகை அன்பர் அறிந்து அறிவித்தனரே என்று
மெய்யுணர்வு வூட்டி -ஸரணாகதியில் மூட்டி -ஸ்ரீ நிவாஸன் பொன்னடியைப் பூட்டி –
அன்னவன் பொன்னடி யாயிரம் -பாதுகா ஸஹஸ்ரம் -பாடி அருளிய வள்ளல் பெரும் கடலின் திருக் குணக் கோவை 25 பாக்களாகக் கோக்கப்பட்டது

————————

உயர்வற உயர் நலம் யுடையோன் அன்பே
மயர்வற மதி நலம் பெற்ற பிரானே
அகணித குண வித்யா விபூஷணா
இக பர பல ஸாதன தாரகனே –1-

தாதை குசிக குல வாரிய ஸூரியின்
தோதை மணி வயிறு வாய்த்தவனே
தந்திரனே ஸர்வ ஸூதந்தரினே
மந்திர மணம் கமழ் மாலையனே –2-

புத்தகம் ஒரு கை முத்திரை ஒரு கை
வித்தகனே அருள் புரியும் வதனா
சத்துவ மேனிய உத்த மநேயா
பத்தர் வினை தவிர் பதுமக் கழலோய்–3-

யதிராஜன அருட் கலமே நலமே
கதியே கவி தார்க்கிக கேஸரியே
வானவர் வாழ்ச்சி தரும் காவலனே
ஞான வைராக்ய செழு மணியானே–4-

தத்வம் அளித்த காரி மாறனோ
புத்துயிர் அளித்த நாத நாதனோ
புருடனைப் போற்றிய யாமுன முனியோ
ஸ்ருதி புகட்டிய யதி வாரிதியோ –5-

காரணமாகிய திரு நாரணனோ
வாரண மலை யுறை பேர் அருளாளனோ
மாலிருஞ்சோலை சுந்தர வடிவோ
ஆலினிலை யுறை யமுதச் செல்வனோ –6-

செந்தமிழ் வடமொழி செழு மறை யாவும்
உன் திறத்தால் நிறம் பெற்றது மிகையோ
விதவித மாயவை மெய்யொலி பரப்பி
உதவிய தூப்புல் குரு மா மணியே –7-

சார ஸந்தேஸ மடலுரைகளும்
சார தமமான கட்டுரைகளும்
ஆரமுதமான தொகை மாலைகளும்
இரங்கிய பல கலைப் பாவலனே-8-

உலகு அளந்த குறளான மாயனின்
அலங்கலான நாலாயிர மறையை
மன்னிய நானூற்று ஐந்தாய் நல்கிய
கன்னிச் சிரவண தூப்பூல் ஐயனே –9-

யதிவரனின் தர்சனமே ஓங்கிட
வாதிகளை வென்ற நீதி மொழிகளின்
வண்மை திண்மை வருணிக்க லாகுமோ
அண்ணலே மெய்ய நின் வியப்பே –10-

பனிக்கடலிலே துயிலும் நாதன்
தனிக்கடல் எனத் தாங்கும் உலகம்
பவக்கடலிலே தவியா வண்ணம்
தவ நெறி காட்டிய தகைமையோனே –11-

கடலிப்பியலே யொளி நித்திலம் என
உடலின் உயிர்க்கு உயிராம் இறையைத்
திருமகள் யுறையும் திருமால் என்று
அருவுடன் அறிந்து அருள் வாமனனே –12-

வெள்ளைப் பரி முக தேசிகருனது
உள்ளத்து எழுதிய சிறு வேதத்தை
ஓலையில் இட்டேன் என்றே யுரைத்த
தலைவனே மறை முடித் தேசிகனே –13–

தாரக போஷக போக்யமான
விரகு என்று அருளிய பழ மொழிகளில்
ஒன்றே யமையும் வீடு பெற்று உய்ய
பொன் கழல் அடி யாயிரம் பாடியவா –14-

உனையே யலதோர் பரம் உண்டு எனவே
நினையார் கதியே நிகரில் புகழாய்
பணமும் புகழும் மதியா மதியே
குணமே வடிவாய் வந்தாய் சரணம் –15-

எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
நந்தா விளக்கே மறை நாயகனே
திருமால் தகவே யவனீ யலையோ
திருவின் பொருளின் மணியே சரணம் –16-

ஆரா வமுதே யறிவார் யறிவே
தீரா வினை தீர் திருவேங்கடவா
கண்ணே மணியே கருணைக் கடலே
தொண்டர் துணையே முகிலே சரணம் –17-

விண்ணோர் பதமும் வேண்டிற்று இலை யான்
மண்ணோர் புகழும் நாடுவது இலையே
என்நேரமு நின்னிரு தாள் மலரை
பொன்னே என யான் புனையைப் பெறுமோ –18-

வருமோ ருறவே வளரிள வரசே
அருவிலை மணியே வன மத கரியே
அரு கணை இறையே யறவுரு நிலையே
அருமறை குருவே யடியார் உயிரே –19–

உடையவனே நீ கவரா யுடைமை
அடைவது இலாமையால் குறையிலையே
புத்தியில் யுறைபவநீக வரதா
புத்தி யிலாமையால் குறைவிலமே –20-

எட்டும் இரண்டும் அறியா என் தன்
முட்ட இருவினை யறவே யிதமொடு
மன்னிய நல் திரு மந்த்ரப் பொருளை
பொன் அருளால் அருளாய் கற்பகமே –21-

நின் பேர் யறியார் மேயவர் யாவரோ
யுன்னை அறிந்து மறந்திடுவாரோ
நின் தொண்டர்க்கே அன்பு செய்திட
என்னை யாக்கியே யருள் புரிவாயே –22-

குரு புங்கவனே கருணா நிதி நின்
அருளால் அநு பூதி பிறந்ததுவே
திரிகின்ற மனம் திரியாது யுனையே
அறிவால் யடியார் தொழு தேசிகனே –23-

அமலனுக்கு மக்கள் அளித்த பெயரொடும்
கமலை யுகந்த ளித்தவி ருதொடும்
நல்லாருலகம் நல் பதம் எய்திட
பல்லாண்டு இரும் என இசை பாடுவனே –24–

வேங்கட நாதன் அடியார் அடிகளில்
வேங்கடேசன் மயலால் இறைஞ்சிய
சேதுவான கழல் காதல் மாலையை
ஓதும் அன்பர் எழில் பதம் ஏறுவரே –25-

————–

உயர்வற உயர் நலம் யுடையோன் அன்பே
மயர்வற மதி நலம் பெற்ற பிரானே
அகணித குண வித்யா வி பூஷணா
இக பர பல ஸாதன தாரகனே –1-

உயர்வற உயர் நலம் யுடையோன் -திருவாய் மொழிக்கு எல்லாம் ஸங்க்ரஹம்
மங்கள உபக்ரமம்
உயர்வற உயர் நலம் யுடையோன் அன்பே –கோல மலர்ப்பாவையின் அன்பின் அன்பு
அன்பன் தன்னை அடைந்தவர்கட்க்கு எல்லாம் அன்பன்
மயர்வற மதி நலம் பெற்ற -அஞ்ஞானம் அந்யதா ஞானம் விபரீத ஞானம் இவை அனைத்தும் வாஸனையோடே போம்படி
மதி -பகவத் விஷய ஞானமாகிய மதியையும்
நலம் -பக்தி-தலைவன் -ஸமஸ்த இறைவன் -ஸர்வ உபகாரகன்
அகணித குண வித்யா விபூஷணா-அநந்த கல்யாண குண கண மஹோ ததி
அகணித-எண்ணிக்கை இன்மை
வித்யா-வித்யை கல்வி ஞானம் தந்த்ரத் தொழில்
விபூஷணம் -ஆபரணம்
இக பர பலஸா தன தாரகனே –
இகம் -இப் பிறப்பு
பர -உயர்வு பர ப்ரஹ்ம அனுபவம்
பல -பயன்
ஸாதன -உபாயம்
தாரகனே -நடத்துவோன் -தரிப்பவன் -கொடுப்பவன்

உயர்வற உயர் நலம் யுடையோன் அன்பே
ஸம்ஸார சேதனர்களை உஜ்ஜீவிக்கவே பகவத் அனுக்ரஹமே வடிவாக வந்தவர்
ஸ்ரீ ராமானுஜர் பகவத் விஷயத்தில் வைத்த ப்ராவண்யமே உருவாக்க ஸ்வாமியாய் திருஅவதாரம்

மயர்வற மதி நலம் பெற்ற பிரானே
தெருள் தர நின்ற தெய்வ நாயக -என்று இவரே அருளிச் செய்தபடி அடியவருக்கு மெய்யனால்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்
பூதத்தாழ்வாரைப் போல் ஞானத்தமிழ் புரிந்து ஞானச் சுடர் விளக்கு ஏற்றிய பிரான்
ஆச்சார்ய கிருபா மூலமான பகவத் கிருபையால் அருளப் பெற்றவர்
ஸ்ரீ ஹயக்ரீவரின் லாலா ஸூ தாபான லப்த ஸர்வஞ்ஞன்

வித்யா வி பூஷணா
யதிராஜரைப் போல் ஐவரும் வித்யா வாஹினி -உத்பத்தி ஸ்தானம்
யதிராஜரின் பரிபூர்ண கிருபா விசேஷத்துக்குப் பாத்திரமானவர்
அடியார்களுக்கு பரம பாக்யத்தைக் கொடுக்கும் விசுத்த வித்யா விபூஷணம்

அகணித குண
கல்யாண குணங்களே வடிவானவர் -ஸர்வ குண நிதி –

இக பர பல ஸாதன தாரகனே
பக்தர்களே தனக்குத் தாரகமாக யுடையவர்
குருவாய் நின்று திகழ்ந்து மண் மேல் நின்ற நோய்கள் தவிர்ந்தனனே –

அகில புவன ரஷா சாதநாய அவதீர்ணே
குமதி கலி விலாஸ த்வாந்த திக் மாம்ஸூ ஜாலே
நிரவதி கருணாப்தவ் வேத ஸூடா குரவ்மே
பவது பரம பக்தி ஸ்ரீ நிதவ் வேங்கடேச

———————————-

தாதை குசிக குல வாரிய ஸூரியின்
தோதை மணி வயிறு வாய்த்தவனே
தந்திரனே ஸர்வ ஸூதந்தரினே
மந்திர மணம் கமழ் மாலையனே–2-

தாதை -தகப்பன்
குசிக குல -கௌசிக குலம் -விச்வாமித்ர குலம்
வாரிய ஸூரியின்-அநந்த ஸூரி –
மாதவர் புகழும் வேத மா மூர்த்தி என்ன விளங்கும் அவ் வனந்த ஸூரி ஓதிடாது ஒழிந்த நூல் இங்கு ஒன்றும் இல்லை என்பராம்
தோதை -தோதாரம்மையார்
மணி வயிறு வாய்த்தவனே-தாயைக்குடல் விளக்கம் செய்த தாமோதரனைப் போலவும்
மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனைப் போலவும்
தந்திரனே ஸர்வ ஸூதந்தரினே-ஸர்வ தந்த்ர ஸ்வ தந்த்ரர் -விருது பெற்றவர்
அகடி கடநா சாமர்த்தியம் பெற்றவர்
மந்திர -மறை மொழி தானே மந்த்ரம் என்ப
எம்பார் த்வய அனுசந்தானம் செய்ய பட்டர் குழந்தை மனம் வீசப் பெற்றது கண்டு மகிழிந்தாரே உடையவர்
மணம் கமழ் மாலையனே-நாட் கமழ் மகிழ் மாலை மார்பினன் –
த்ரி ஜகத்தும் உஜ்ஜீவிக்க பகவான் பிரத்யேகமாக அளித்த பேறே இவர் அவதாரம்

தீப ப்ரதீபமாய் வந்த தேஜஸ் அன்றோ
கண்டா கரேஸ் ஸமஜ நிஷ்டய தாத்ம நேதி -என்று இவரே ஸங்கல்பஸூர்யோதயத்தில் அருளிச் செய்தபடி
மநோ கதம் பஸ்யதி யஸ்ஸ தாத்வம்
மநீஷிணாம் மாநஸ ராஜ ஹம்ஸம்
ஸ்வயம் புரோபாவ விவாத பாஜ
கிம் குர்வதே தஸ்ய கிரோய தார்ஹம்–ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் –

எவன் ஒருவன் ஞானி கள் மனத்தினில் ஹம்ஸம் போல் விளங்கும் தேவரீரை தன் மனத்தில் இருப்பவனாகக்
காண்கின்றானோ அவனுக்கு வாக்குகள் நான் முன்னே நான் முன்னே என்று வந்து ஏவல் புரியுமே –
ஸர்வ வித்யைகளும் இவர் இட்ட வழக்கு ஆகுமே
மந்த்ர உபதேஷ்டாவான பெரிய திருவடி நாயனார் ப்ரஸாதம் அருளப் பெற்றவர்

———————————–

புத்தகம் ஒரு கை முத்திரை ஒரு கை
வித்தகனே அருள் புரியும் வதனா
சத்துவ மேனிய உத்த மநேயா
பத்தர் வினை தவிர் பதுமக் கழலோய்-3-

வாழி வியாக்யான முத்திரைக்கை -பிள்ளை யந்தாதி
உன்னித்ர பத்ம ஸூபகாம் உபதேஸ முத்ராம் -யதிராஜ சப்தாதி
வித்தகன் வேதியன் வேதாந்த தேசிகன் -பிள்ளை யந்தாதி
வாதியார் மூலம் அற நாவின் முழக்கொடு விளங்கிய வித்தகன்
செம்பொன் மேனி மாறாத தூப்புல் மாலே
உத்தமநேயா -கண்ணன் கழல் தொழும் உற்றவரையே தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன்
மற்ற ஒரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்கு ஆள் உற்றவரே தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன் –

—————-

யதிராஜன அருட் கலமே நலமே
கதியே கவி தார்க்கிக கேஸரியே
வானவர் வாழ்ச்சி தரும் காவலனே
ஞான வைராக்ய செழு மணியானே–4-

ஸ்ரீ செல்லப்பிள்ளை -யதிராஜ வீஷா பாத்ரம் -திருநாமம் சூட்டியுகந்தார் -இதுவே யதிராஜ அருட்கலம் -என்கிறார் இங்கு
ஸ்ரீ தெய்வ நாயகன் -கவி தார்க்கிக ஸிம்ஹம் விருத்தி சாற்றி அருளினார்
திருவுடன் வந்த செழு மணி போல்-பகவத் ப்ரீதிக்கு விஷயமானவர்
விச்வாமித்ர பவித்ர குல சோததி கௌஸ்துபன் -என்று அழைக்கப் பெறுபவர்

———————-

தத்வம் அளித்த காரி மாறனோ
புத்துயிர் அளித்த நாத நாதனோ
புருடனைப் போற்றிய யாமுன முனியோ
ஸ்ருதி புகட்டிய யதி வாரிதியோ –5-

புத்துயிர் அளித்த நாதன் -நாதமுனிகள்
நாதேந முனி நாதேந பவேயம் நாத வாநஹம்
யஸ்ய நைக மிகம் தத்வம் ஹஸ்தா மலகதாம் கதம் –யதிராஜ சப்ததி
ஆரப்பொழில் தென் குருகைப்பிரான் அமுதத் திருவாய் இசை உணர்ந்தோர்கட்க்கு இனியவர் தம் சீரைப்பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனி
காளம் வலம்புரி யன்ன நற் காதல் அடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல்
மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி -அதிகார ஸங்க்ரஹம்
நாத உபஞ்ஞம ப்ரவ்ருத்தம் பஹுபி ருபசிதம்
யாமுநேய பிரபந்தை ஸ்த்ராதும் ஸம்யக்
யதீந்த்ரை ரிதமகிலதம கர்சனம் தர்சனம் ந -ஸ்ரீ தத்வ முக்தா கலாபம்

——————-

காரணமாகிய திரு நாரணனோ
வாரண மலை யுறை பேர் அருளாளனோ
மாலிருஞ்சோலை சுந்தர வடிவோ
ஆலினிலை யுறை யமுதச் செல்வனோ –6-

மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்
காரணந்து த்யேய
வாரண மலை யுறை பேர் அருளாளன் -கரிகிரி யம்மான் –பேராத அருள் பொழியும் பெருமாள் –
வாரண வெற்பின் மழை முகில் போல் நின்ற மாயவனே
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம்பிரான் -பெரிய திருமொழி -4-3-1-
ஹஸ்தீஸ ஸர்வ வஸசாமவஸான ஸீமாம்
த்வாம் ஸர்வ காரண மு சந்தி அநபாய வாஸ -ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்
வம்மின் புலவீர் அருளாளப் பெருமாள் என்றும் அருளாழி
யம்மான் என்றும் திரு மகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட
பேர் அருளாளர் என்றும் வியப்பா விருதூதும் படி கரை புரண்ட
கருணைக் கடலை இவ்வண்ணம் பேசுவீர் தென்ன பாங்கே –மெய் விரத மான்யம்
நித்யா வாஸம் வ்ருஷபமசலம் ஸூந்தராக் யஸ்ய விஷ்ணோ
ப்ரத்யா ஸீதந் ஸபதிவிநமத் பாக தேயம் நதஸ்யா -ஸ்ரீ ஹம்ஸ சந்தேசம்
ஸூத்த ஸத்வ குண மயமானதும் ப்ரணவ ஸ்வரூபமானதுமான ஸ்ரீ ரெங்க திவ்ய விமானத்தில்
சுயமாய் உதித்து விளங்கும் ஜோதியைப் பற்றி மொழியுங்கால்
பெட்டியுள் வைத்த மரகத மணி போல் அவ்விமானத்துள் ஓங்கி பிரகாசிப்பவனும்
சேஷ சயனத்தில் பள்ளி கொண்டு அருளுபவனும்
பாற்கடல் புதல்வியின் ஆருயிர் காதலனுமான
அவ்வாஸூ தேவன் இடமே என் மனம் தாவி ஓடுகிறது -ஸ்ரீ ஹம்ஸ சந்தேசம்

——————-

செந்தமிழ் வடமொழி செழு மறை யாவும்
உன் திறத்தால் நிறம் பெற்றது மிகையோ
விதவித மாயவை மெய்யொலி பரப்பி
உதவிய தூப்புல் குரு மா மணியே –7-

தமிழ் வேதத்தை முன்னே சொன்னது
மங்கையர் கோன் என்ற இவர்கள் மகிழ்ந்து பாடும் செய்ய தமிழ் மாலை கணாம் தெளிய ஓதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிக்கின்றோமே –அதிகார ஸங்க்ரஹம்
குரு மா மணியே –ஆச்சார்ய குண பூர்த்தி யுடையவர்
நம்மாழ்வார் ஆச்சார்ய தத்வம்
யதிராஜர் -ஆச்சார்ய ரஹஸ்யம்
தேசிகன் -ஆச்சார்ய ரத்னம்
மறை விளக்கி மறை புகட்டி மறையின் நீதி ஓதினாய்
மறை விளக்கும் மெய்ப்பொருளை வாரமாக நல்கினாய்
மறை கடைந்து எழில் மணம் மிசைத் தமிழ் இயற்றினாய்
மறை முடிப்பெயர் புனைந்து உதவ நெறி யுணர்த்தினாய்
சிட்டரான தேசு உயர்ந்த தேசிகர்க்கு உயர்ந்து மேல் எட்டு மூன்று மூடறுத்த எந்தை மால் இரக்கமே
என் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
நந்தா விளக்கே மறை நாயகனே
திருமால் தகவே யவனீ யலையோ
திருவின் பொருளே மணியே சரணம்

—————

சார ஸந்தேஸ மடலுரைகளும்
சார தமமான கட்டுரைகளும்
ஆரமுதமான தொகை மாலைகளும்
இரங்கிய பல கலைப் பாவலனே-8-

பற் பல் கலை வல்ல பாவலனே
வியாஸர் வால்மீகி போல் இவரும் கவிச் சக்கரவர்த்தி

—————

உலகு அளந்த குறளான மாயனின்
அலங்கலான நாலாயிர மறையை
மன்னிய நானூற்று ஐந்தாய் நல்கிய
கன்னிச் சிரவண தூப்பூல் ஐயனே–9–

மறையின் குருத்தின் பொருளையும் -செந்தமிழையும் கூட்டி ஒன்றத் திரித்ததே தேசிக பிரபந்தங்கள்
திருவாய் மொழியின் பத்துப்பத்தின் அர்த்தங்களும் மும்மணிக்கோவையில்
பயின் மதி நீயே வெளியும் நீயே
தாயும் தந்தையும் நீயே
உறவு உற்றதும் நீயே
ஆறு அறமும் நீயே
துணைவன் துய்யனும் நீயே
காரண கற்பகம் நீயே
இறைவன் இன்பனும் நீயே
யானும் எனதும் நீயே
நல்லதாய் வல்லாய் நீயே –என்று குண தசாக வடிவு அடைவு காணலாம்
அடைபவர் தீ வினை மாற்றி அருள் தரும் தூப்பூல் ஐயா-

—————-

யதிவரனின் தர்சனமே ஓங்கிட
வாதிகளை வென்ற நீதி மொழிகளின்
வண்மை திண்மை வருணிக்க லாகுமோ
அண்ணலே மெய்ய நின் வியப்பே –10-

ராமாநுஜப்பிள்ளான் மா தகவால் உண்டான வண்மை
இவருடைய உண்மை ஞானத்தின் திண்மை
மெய்யனைப் போற்றிய மெய்யன்
உண்மைப் பொருளை யுண்மையாகவே காட்டிக் ஸத்ய வாதி
பகவத் ஆச்சார்யர் திருவடிகளிலே மெய்யன்பு கொண்ட மெய்யன்
மெய்யானான தேவ நாதப் பெருமாளின் செல்லப்பிள்ளை
கொடுத்த
மெய்ய நின் வியப்பே -வாதிகளை வென்ற விதத்தின் வியப்பின் ஆழ்மையை அனுபவிக்க வல்லார் யார் –

————————

பனிக்கடலிலே துயிலும் நாதன்
தனிக்கடல் எனத் தாங்கும் உலகம்
பவக்கடலிலே தவியா வண்ணம்
தவ நெறி காட்டிய தகைமையோனே –11-

ஸ்ரீ வராஹ நாயனார் திருவாயால் குரு குரு சப்தித்து குருவானவர் -குருபிஸ் கோணார வைர்க் குர் குரை -தசாவதார ஸ்தோத்ரம்
இரண்டு உறையாத நம் ஏனத்தின் இரண்டு உரையான சரம ஸ்லோக பலத்தை நம் ஸ்வாமி காட்டி அருளுகிறார் ரஹஸ்ய சிகாமணியில்
காருண்யாஸ் ஸாஸ்த்ர பாணிநா
ஸ்ரீ யபதிக்கும் யதிபதிக்கும் நடந்த ஸம்வாத மகிமையையும் சாற்றி அருளி உள்ளார்
தஞ்சப் பர கதியைத் தந்து அருளிய தயா நிதி

எல்லாருக்கும் எளிதான ஏற்றத்தாலும்
இனி உரைக்கை மிகையான இரக்கத்தாலும்
சொல்லார்க்கும் அளவாலும் அமைதலாலும்
துணி வரிதாய்த் துணை துறக்கும் சுகரத்தாலும்
கல்லார்க்கும் கற்றார் சொல் கவர்தலாலும்
கண்ணன் உரை முடி சூடி உரைத்தலாலும்
நல்லாருக்கும் தீயாருக்கும் இதுவே நன்றா
நாரணற்கே அடைக்கலமாய் நணுகுவீரே

ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்
உனக்கு அடிமை ஆகிறேன் என்கின்றார்க்கும்
அருக்காதே அனைவருக்கும் அனைவராலும்
அஞ்சேல் என்று அருள் கொடுப்பன் இது தான் ஓதும்
இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும்
இவை யறிவார் செயலுடன் என்னிசைவினாலும்
நெருக்காத நீள் விரதம் எனக்கு ஓன்று என்று
நெறி யுரைத்தார் நிலை உணர்ந்து நிலை பெற்றோமே —அபய பிரதான சாரம்

இப் பாசுரத்தில் தேசிகன் ஸித்த ஸாத்ய உபாயமாக அமைந்து இருப்பது காண்க –

——————-

கடலிப்பியலே யொளி நித்திலம் என
உடலின் உயிர்க்கு உயிராம் இறையைத்
திருமகள் யுறையும் திருமால் என்று
அருவுடன் அறிந்து அருள் வாமனனே –12-

கடலிப்பியலே-கடலில் இருக்கும் முத்துச் சிப்பியிலே
யொளி நித்திலம் என -ஒளி வீசும் நல் முத்துப் போலே
சிப்பியைப் போல் உள்ள ஜீவாத்மாக்கள் அந்தராத்மா
இருந்தாலும் வியாப்த கத தோஷம் தட்டாத அமலன் -குண மாயா ஸமாவ்ருதா

குடன் மிசை ஒன்றியும் கூடியும் நின்று கொடும் துயரு
முடன் மிசை தோன்றும் உயிரும் உயிர்க்கு இரா இறையும்
கடன் மிசை கண்டவை தானது திரளவை போர்த்த பொன்னூல்
மடன் மிசை வார்த்தை யதன் பொருள் யன்ன வகுத்தனமே -ஸ்ரீ தத்வ த்ரய சுலளகம்

நிலை தந்த தாரகனாய் நியமிக்கும் இறைவனுமாய்
இலது ஓன்று எனா வகை எல்லாம் தனது எனும் எந்தையுமாய்த்
துலை ஓன்று இலை என நின்ற துழாய் முடியான் உடம்பாய்
விலை இன்றி நாம் அடியோம் எனும் வேதியர் மெய்ப்பொருளே -அதிகார ஸங்க்ரஹம்

தாரகன் -நியந்தா -சேஷி -சரீராத்மா பாவம் -பிரதான பிரதிதந்தரம்
ஜகத் ஸர்வம் சரீரம் தே

நின் திரு தனக்கு நீ திருவாகி
துய்யனும் நீயே செய்யாள் யுறைதலின்

வஜ்ராயுதம் போல் நா வீறு படைத்த ஸிம்ஹம் –

————————

வெள்ளைப் பரி முக தேசிகருனது
உள்ளத்து எழுதிய சிறு வேதத்தை
ஓலையில் இட்டேன் என்றே யுரைத்த
தலைவனே மறை முடித் தேசிகனே –13–

சிறு வேதத்தை-ப்ரணவம் -வேதக்குறள் -ப்ராஹ்மண கோசோஸீ

நின்னால் அன்றி மன்னார் இன்பம்
பெறுவது நின்னை யுறுவது கொள்வார்
நின் பால் அன்றி யன்பால் உய்யார்
நின் தனக்கு நிகர் நின்னடி யடைவார் -மும்மணிக்கோவை –

———————-

தாரக போஷக போக்யமான
விரகு என்று அருளிய பழ மொழிகளில்
ஒன்றே யமையும் வீடு பெற்று உய்ய
பொன் கழல் அடி யாயிரம் பாடியவா –14-

முதல் ஆறு பாக்கள் -ஸ்ரீ மான் தனியனுக்கு வியாக்யானம் -இதுவே திருமந்திரம் போல் -தாரகம் -அவதார வைலக்ஷண்ய பெருமையைக் காட்டும்
7-13-பாக்கள் ராமானுஜ தனியனுக்கு வியாக்யானம் -இதுவே த்வயம் போல் -போக்யம் -ஆச்சார்ய அனுக்ரஹ விஷய மஹிமையைக் காட்டும் –
14-21-சீர் ஓன்று தனியனுக்கு வியாக்யானம் -சரம ஸ்லோகம் போல் போஷகம் -ஸ்ரீ ஸூ க்திகளின் மஹிமையைக் காட்டும் –

இவை தத்வ ஹித புருஷார்த்தங்களை நிரூபிப்பத்தில் பிரதான நோக்கு கொண்டவை

பகவான் தாரகத்தில் மேம்பட்டவர்
ஆழ்வார் போஷகத்தில் மேம்பட்டவர்
ஆச்சார்யர்கள் போக்யத்தில் மேம்பட்டவர்

——————–

உனையே யலதோர் பரம் உண்டு எனவே
நினையார் கதியே நிகரில் புகழாய்
பணமும் புகழும் மதியா மதியே
குணமே வடிவாய் வந்தாய் சரணம் –15-

நாதன்-குலதெய்வம் -குல தனம் -அனைத்துமே நீரே
த்வயி ரக்ஷதி ரஷகை கிம் அந் யை
த்வயி ச அரஷதி ரஷகை கிம் அந் யை–காமாஸிகாஷ்டகம்
க்யாதி லாப பூஜா ஸூ விமுகோ வைஷ்ணவே ஜனே
வியன் கலைகள் மொய்த்திடும் நா வீறு படைத்தவர்

——————–

எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
நந்தா விளக்கே மறை நாயகனே
திருமால் தகவே யவனீ யலையோ
திருவின் பொருளின் மணியே சரணம் –16-

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ–கீதை
பிதா த்வம் மாதா தவம் –ஸ்தோத்ர ரத்னம்
தந்தை என நின்ற தனித்திருமாள் -அம்ருதாஸ்வாதினி
தாயும் நீயே சாயை தந்து உகத்தலின் தந்தையும் நீயே முந்தி நின்று அளித்தலின் -மும்மணிக்கோவை
ஹயக்ரீவன் ஞானப்பாலூட்ட தெய்வ நாயகன் ப்ரேமையுடன் வளர்த்து அருளிய ஸ்வாமி –
திருமலை மால் திருமணியாய்ச் சிறக்க வந்தோம் வாழியே

—————

ஆரா வமுதே யறிவார் யறிவே
தீரா வினை தீர் திருவேங்கடவா
கண்ணே மணியே கருணைக் கடலே
தொண்டர் துணையே முகிலே சரணம் –17-

ஏத்தி மனத்து எழில் ஞான விளக்கை இருள் அனைத்தையும் மாற்றினவர்
உணர்ந்தார் தங்கள் கற்பகம்
ஸ்ரீ ரெங்கேச பக்த ஜன மானஸ ராஜ ஹம்ஸம்
தமிழ் வேதத்தை இந்த வள்ளலான ஆராவமுதத்தையும்
நாள் வேதப் பண்ணகத்தான -அளவரிய வேதத்தான் வேங்கட வேதியன் -சேர்ந்து அனுபவம்
ஆராவமுதக்கடலையே உண்ட முகில் அன்றோ
கண்ணே மணியே -கண்ணினுள் மணியே -உபாய உபேயம் –
தொண்டர் உகக்கும் துணை அடி வாழியே

பிரபதன ஸூ லபனான் திருவேங்கடமுடையானின்
பத்து திருக்குணங்களையும்
1-ஆச்சார்யர்கள் மூலமாக எளிதில் அடையப்படுபவன்
2-தானாகவே ஆச்சார்யர்கள் இடம் வரும் ஸூலபன்
3-அகடி கடநா ஸமர்த்தன்
4-ஆஸ்ரிதர்களை மகிழ வைப்பதே குறிக்கோலாகக் கார்யங்கள் செய்பவன்
5-ஆபாஸ பந்துக்களை வடஜனம் பண்ணும்படி செய்து அருளுவான்
6-ஆஸ்ரிதர்களுடைய அஹங்கார மமகாரங்களை அபஹரித்து அருளுபவன்
7-தார்யாதி குணங்களை அளிப்பவன்
8-உபய விபூதிகளையும் ஆஸ்ரிதர் இட்ட வழக்காகக் கொண்டு அருளுபவன்
9-ஆஸ்ரிதர் பிரிவை க்ஷண காலமும் ஸஹியாதவன்
10-உபாயமாக இருக்கும் ஸமஸ்த கல்யாண குண பூர்ணன்

முதல் இரண்டு அடிகள் பகவானையும் அடுத்த இரண்டும் ஆச்சார்யரையும் காட்டும் பாசுரங்கள்

இந்த பத்து குணங்களையும் 15-16-17 பாசுரங்கள் காட்டும்
நந்தா விளக்காக திருவவதரித்து
நிகரில் புகழாய் வைபவத்துடன் வாழ்ந்து
தீரா வினை தீர்க்கும் ஸ்வாமியாக திகழ்ந்தவர் அன்றோ

—————

விண்ணோர் பதமும் வேண்டிற்று இலை யான்
மண்ணோர் புகழும் நாடுவது இலையே
என்நேரமு நின்னிரு தாள் மலரை
பொன்னே என யான் புனையைப் பெறுமோ –18-

மதீய சிரஸி த்வத் பாத பத்ம நிவேசமே
அத்ர பரத்ர ஸாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம்
யதி சக்ரவர்த்தி பத பத்ம பந்தனம்

நியத புளகி தாங்கீ நிர்ப்பர ஆனந்த பாஷ்பா
கலித நிகில சங்கா கத்கத ஸ்தோத்ர கீதி
அம்ருத லஹரி வர்ணா ஹர்ஷந்தோப பன்னா
விகித நரக பீதி விஷ்ணு பக்திர் விபாதி -ஸ்ரீ ஸங்கல்ப ஸூர்யோதயம்

இந்த விஷ்ணு பக்தி என்பவள்
எப்பொழுதும் மயிர்க்கூச்சோடு கூடிய சரீரத்தை யுடையவளாயும்
பரிபூர்ண ஆனந்தக் கண்ணீரைப் பெருக்கிக் கொண்டும்
விஷயாந்தர பற்றுக்களை சவாசனமாக அற்றுத் தீர்ந்தவளாயும்
தழு தழுத்த குரலோடு ஸ்தோத்ர ரூபமான நாதத்தை யுடையவளாயும்
அம்ருதப்பெருக்கான வாக்கு சாதுர்யம் யுடையவளாயும்
ஸந்தோஷ பரிவாஹ நர்த்தனம் யுடையவளாயும்
நரக பயம் இல்லாதவளாயும்——–பிரகாசிக்கிறாள் என்றபடி

பெருகிய நலநிலை பெருமையின் மிகுமயல்
உருகிய நிலை மணமுயர் முகிழ் எழும் உடல்
சொருகிய விழி திகழ் சுடர் மதி புகுமிறை
கருகிய வுரு திகழ் கரி கிரி யரியே -ஸ்ரீ வைஷ்ணவ தினசரி

—————————–

வருமோ ருறவே வளரிள வரசே
அருவிலை மணியே வன மத கரியே
அரு கணை இறையே யறவுரு நிலையே
அருமறை குருவே யடியார் உயிரே –19–

வன மத கரி -வனத்தில் எத்தேச்சையாக மதம் கொண்டு திரியும் யானை
மாய வாதக்கவிகளை மாய்த்த வேழம்
இவருக்கு மாதங்கள் ஞான பக்தி வைராக்யங்களே
ஆரணங்களிலே சஞ்சாரம் செய்து விசிஷ்டாத்வைத ப்ரவர்த்தகரானவர்
ஸ்ருதிகள் இவர் இடம் இளைப்பாறலாமே

அரு கணை இறை–அடியார்கள் பக்கல் ஸூ லபனாய் எழுந்து அருளி இருக்கும் பகவானைப் போலே

வருவதோர் உறவு என வளர் இளவரசு என
மருவு நன் மகன் என வன மத கரி என
வரு விலை மணி என வடிவவர் யடைபவர்
அருகு அணை இறைவனை அருகு அணை யுடன் -ஸ்ரீ வைஷ்ணவ தினசரி-

மாசின் மனம் தெளி முனிவர் வகுத்தது எல்லாம் மால் உகந்த ஆசிரியர் வார்த்தைக்கு ஒவ்வாதே
தமிழ் மறை ஈன்ற தாய் ஆழ்வார்
வளர்த்த இதத்தாய் ராமானுஜர்
காதலோடு போற்றிப் பெருமை வளர்க்கச் செய்த தாய் ஸ்வாமி

கிம் விஞ்ஞானை கிம் தபோ தான யஜ்ஜை கிம் வா அந்யை த்வத் பக்தி பரித்யாக தீநை-ஸ்ரீ ஸங்கல்ப ஸூர்யோதயம்

ஞானம் தபஸ்ஸுக்கள் போன்ற பல இருந்தாலும் பக்தி -ப்ரீதி -ஹீனமாய் இருந்தால் பயன் இல்லையே

பகவத் வந்தனம் ஸ்வாத்யம் குரு வந்தன பூர்வகம்
ஆச்சார்ய தேவோ பவ
தேவம் இவ ஆச்சார்யம் உபா ஸீத
குரு பரம்பரா த்யானம் பூர்வகமாகவே அனைத்தும் செய்தால் தானே பலன் பெறுவோம் –

——————

உடையவனே நீ கவரா யுடைமை
அடைவது இலாமையால் குறையிலையே
புத்தியில் யுறைபவநீக வரதா
புத்தி யிலாமையால் குறைவிலமே –20-

ந தேஹம் ந பிராணன் ந ச ஸூகம் –ஸ்தோத்ர ரத்னம்

—————–

எட்டும் இரண்டும் அறியா என் தன்
முட்ட இருவினை யறவே யிதமொடு
மன்னிய நல் திரு மந்த்ரப் பொருளை
பொன் அருளால் அருளாய் கற்பகமே –21-

இமையா இமையவர் ஏத்திய எட்டு இரண்டு எண்ணிய நம் ஸமயாசிரியர் சத்திற்கும் தனி நிலை தந்தனரே

எட்டில் ஆறு இரண்டில் ஒன்றில் எங்கும் ஆறு இயம்புவார்

மூன்றில் ஒரு மூன்று மூ விரண்டும் முன் நான்கும் தோன்றத் தோலையும் துயர்

எட்டும் இரண்டும் அறியாத எம்மை இவை அறிவித்து

நீ நற் பதம் தருதலால் கற்பகம் ஆகிறாய் -தம்மையே ஓக்க அருள் செய்யும் கற்பகம் –

——–

நின் பேர் யறியார் மேயவர் யாவரோ
யுன்னை அறிந்து மறந்திடுவாரோ
நின் தொண்டர்க்கே அன்பு செய்திட
என்னை யாக்கியே யருள் புரிவாயே –22-

செம் போன் மேனி மாறாத தூப்புல் மாலே மறவேன் இனி
நின் பதம் ஒன்றிய அன்பரிலும் நேசம் இல்லை

————

குரு புங்கவனே கருணா நிதி நின்
அருளால் அநு பூதி பிறந்ததுவே
திரிகின்ற மனம் திரியாது யுனையே
அறிவால் யடியார் தொழு தேசிகனே–23-

————

அமலனுக்கு மக்கள் அளித்த பெயரொடும்
கமலை யுகந்த ளித்தவி ருதொடும்
நல்லாருலகம் நல் பதம் எய்திட
பல்லாண்டு இரும் என இசை பாடுவனே –24–

ஸ்ரீ ரெங்கநாதன் வேதாந்தாச்சார்யார் என்ற விருதும்
ஸ்ரீ பெரிய பிராட்டியார் -ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் என்ற விருதும்
ஸ்ரீ தெய்வ நாயகன் கவி தார்க்கிக ஸிம்ஹம் என்ற விருதும்

நானிலமும் தான் வாழ நான்மறைகள் தாம் வாழ
மா நகரின் மாறன் மறை வாழ -ஞானியர்கள்
சென்னி அணி சேர் தூப்பூல் வேதாந்த தேசிகனே
இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்

————-

வேங்கட நாதன் அடியார் அடிகளில்
வேங்கடேசன் மயலால் இறைஞ்சிய
சேதுவான கழல் காதல் மாலையை
ஓதும் அன்பர் எழில் பதம் ஏறுவரே –25-

சேதுவான கழல் -அக்கரை சேர்த்து அருளும் திருவடி
திருமகளோடும் ஒரு காலும் பிரியா நாதன்
திண் கழலே சேது வெனச் சேர்கின்றேனே
பக்தி நயநா -பகவானைக் காட்டும் மாலை

அன்பே என்று உபக்ரமித்து
அன்பர் என்று உப ஸம்ஹாரம்
சாந்தி ரஸமுள்ள இவற்றைப் படிப்பவர்
அன்பையே அணிகலமாகக் கொண்ட தேசிகர் கிருபையால் ஸதாசார்ய அனுக்ரஹமும்
ஸத் ஸம்ப்ரதாய ஸித்தியும் பெற்று
ஸ்ரீ யபதியின் அன்புக்குப் பாத்ரமாவார் என்பது திண்ணம் –

————————————–

செல்ல வேண்டிய திசையை சரியாக காட்டுபவனே தேசிகன்.

ஆசார்யன் என்பதும் இதைப் போலவே.
சாரி என்றால் சஞ்சரிப்பவன்.
பாத சாரி காலால் நடந்து செல்பவன்.
கஜாச்சாரி யானை மேல் செல்பவன்.
எனவே சரியான பாதையில் நடந்து சென்று மற்றவர்க்கு வழி காட்டுபவன் ஆசார்யன்.

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஒரு தேசிகன் பெயருக்காக உயர்ந்தவர் என்றால்
அவரே
நிகமாந்த தேசிகன் என்றும்
சுவாமி தேசிகன் என்றும் பெயர் கொண்ட தூப்புல் வேதாந்த மஹா தேசிகன்.

இவர் ஒரு மஹா ஆசார்யனாய் இருந்து வைணவ சமயம் காத்த உத்தமர்.

ஶ்ரீ தூப்புல் வேதாந்த தேசிகனாகப்பட்டவர்
அனந்தசூரியார் – தோத்தாத்ரி அம்மை தம்பதிக்கு திவ்ய குமாரனாய்
தொண்டைமண்டல
காஞ்சி மாநகரில்
பொய்கை யாழ்வார் அவதரித்த விளக்கொளி எம்பெருமான் ஆலய பகுதியான
தூப்புல் எனும்
திருவிடத்தே திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாக
கி.பி. 1268ஆம் ஆண்டு,
விபவ வருஷம்,
புரட்டாசி மாஸம்,
சிரவணம் நட்சத்திரத்ரம கூடிய
புதன் கிழமையில்
அவதரித்தார்.

ஒரு வெண்கல மணியை பெருமாள் தனக்கு கொடுத்து அதை தான் விழுங்கியதாக கனவு கண்டாள் அவர் தாய்.

ராமானுஜரைப் போன்று இவரால் கணீரென்று வேத நாதம் எங்கும் ஒலிக்க பிரகாசிப்பார் என்று பெருமாளே அருளினார். அதனால் தான் பெருமாள் சந்நிதியில் மணி கிடையாது. திருவாராதனம் போது வெளியே உள்ள மணி மட்டும்
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன் என்பதாம்.

பின்னாளில் இவர் ‘சுவாமி தேசிகன்’,
‘தூப்புல் நிகமாந்த தேசிகன்’,
‘தூப்புல் பிள்ளை’,
‘உபய வேதாந்தாசாரியர்’
‘சர்வ தந்திர சுதந்திரர்’
மற்றும்
‘தூப்புல் வேதாந்த மஹா தேசிகன்’
என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்றார்.

இராமனுசரின் உறவினரான நடாதூர் அம்மாளின் நேரடிச் சீடரும் இவரது தாய் மாமனுமான கிடாம்பி அப்புள்ளாரிடம் வட மறையான வேதங்களும்,
தென் மறையான
திவ்ய பிரபந்தமும்,
புராணங்களும் மற்றும்
சாத்திரங்களையும் குறைவறக் கற்றார்.

ஏழாம் வயதில் கிடாம்பி அப்புள்ளாரினால் உபநயனம் செய்விக்கப் பட்டதோடு,
கல்வியும் கற்றவர், தன் இருபத்தோராம் வயதில் திருமங்கை என்றழைக்கப்பட்ட கனகவள்ளி எனும் மங்கையை மணம் புரிந்தார்.
தன்னுடைய இருப்பத்தேழாம் வயதில் வைணவ குரு எனும் நிலையை அடைந்த இவர் தன்னுடைய குருவான கிடாம்பி அப்புள்ளாரின் ஆணைப்படி
கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்தரபுரம் சென்று சில காலம் வாழ்ந்தார்.
திருப்பதி,
மேல்கோட்டை,
காஞ்சிபுரம்,
அயோத்தியா,
பிருந்தாவனம்,
பத்ரிநாத்,
திருவரங்கம்
உள்ளிட்ட எண்ணற்ற தலங்களுக்கு சென்று ஜெகத்குரு இராமனுசரின் தத்துவங்களை பரப்பினார்.
இறுதியில் தன் மகனான குமார வரத தேசிகனோடு திருவரங்கம் வந்தவர் இப்புவியில் 101 வருஷங்கள் வாழ்ந்தார்.

இராமனுசரின் தத்துவங்களை பரப்புவதையே முழுப்பணியாக கருதியவர் சுமார் நூற்றிருப்பத்து நான்கு நூல்களை தமிழ், வடமொழி, பிராகிருதம், மணிப்பிரவாள நடையில் அருளியுள்ளார்.

அவர் தமிழில் :
அடைக்கலப்பத்து,
மும்மணிக்கோவை,
நவமணிமாலை,
அதிகார சங்கிரகம்,
ஆகார நியமம்,
அம்ருதரஞ்சனி,
அம்ருதஸ்வாதினி,
அர்த்த பஞ்சகம்,
சரமஸ்லோக சுருக்கு,
த்வய சுருக்கு,
கீதார்த்த சங்கிரகம்,
பரமபத சோபனம்,
பிரபந்த சாரம்,
ஸ்ரீவைஷ்ணவ தினசரி,
திருச்சின்னமாலை,
திருமந்திர சுருக்கு,
உபகார் சங்கிரகம்,
விரோத பரிகாரம்,
பன்னிருநாமம்

வடமொழியில் :
பாதுகா சஹஸ்ரம்,
கோதாஸ்துதி,
யதிராஜ சப்ததி,
வைராக்ய பஞ்சகம்,
அபீதிஸ்தவம்,
ஆதிகாரண சாராவளி,
அஷ்டபுஜ அஷ்டகம்,
பகவத் தியான சோபனம்,
பூஸ்துதி,
சதுஸ்லோகி
பாஷ்யம்,
தசாவதார ஸ்தோத்திரம்,
தயாசதகம்,
வரதராஜ
பஞ்சாசத்,
தெய்வநாயக பஞ்சாசத்,
திவயதேச மங்களாசனம்,
கருட பஞ்சாசத்,
ஹயக்ரீவ ஸ்தோத்திரம்,
தேசிக மங்களம்,

மணி ப்ரவாளத்தில் :
அம்ருத ரஞ்சனி ரஹஸ்யம்,
அஞ்சலி பிரபாவம்,
ஹஸ்திகிரி மஹாத்ம்யம்,
குரு பரம்பரா சாரம்,
முனி வாகன போகம்,
ஆராதன காரிகா,
ஊசல்பா

ப்ராக்ருதத்தில் :
அச்யுத சதகம்
என பல நூல்களை எழுதியுள்ளார்.

மாமன் அப்புள்ளார் ஐந்து வயதில் அவரை நடாதூர் அம்மாள் பிரசங்கத்திற்கு அழைத்து சென்ற போது அவர் ஒரு கணம் சிறுவனைப் பார்த்து பிரமித்து
”எங்கே பிரசங்கத்தை நிறுத்தினோம்” என்பதை மறந்து போனார்.
மீண்டு யோசிக்கையில், சரியாக அந்த ஸ்லோகத்தை எடுத்து சொன்னார் தேசிகர்.

20 வயதில் சகல சாஸ்திரங்களும் அறிந்தார். அப்புள்ளாரிடம் கருட மந்திர உபதேசம் பெற்றார்.

திருவஹீந்த்ரபுரம் என்ற பெயர் இப்போது சுருங்கி திருவந்திபுரம் ஆகிவிட்டாலும் தேசிகரின் சரித்திரம் கொஞ்சமும் சுருங்க வில்லை.
இங்கு தான் ஒரு சிறு குன்றில் பலநாள் அன்ன ஆகாரமின்றி
கருட மந்த்ரம் ஜபித்தார்.
ஶ்ரீ ஹயக்ரீவ மந்திரம் ஜபிக்வே எம்பெருமானும்
திவ்ய தரிசனம் தந்துஅவருக்கு ஹயக்ரீவ மந்திராபதேசம் செய்து
ஶ்ரீ தேசிகன் விருப்பப்படி அவரது நாவில் குடிகொண்டார்.
தனது சிலா ரூபத்தையும் கொடுத்தார்.
அந்த ஹயக்ரீவ விக்ரஹத்தை இன்றும் தேவநாத பெருமாள் சந்நிதியில் காணலாம்.

காஞ்சி விஜயம் செய்து பிறகு பல திவ்ய தேச யாத்ரை சென்ற தேசிகன் ”பிரபத்தி’ எனும் சரணாகதி தத்தவத்தை விளக்கி வைஷ்ணவ சமூகம் பயன்பெற செய்தவர்.
நியாச விம்சதி,
நியாச தசகம்,
நியாச திலகம் என்று வடமொழியிலும்,
அடைக்கலப் பத்து,
அர்த்த பஞ்சகம் என்று தமிழிலும் அளித்த பெரிய ஞானி.
சகல கலைகளும் கைதேர்ந்து சர்வ தந்திர ஸ்வதந்திரர் என்று அழைக்கப் பட்டார்..

திருப்பதி சென்று தயா சதகம் இயற்றினார். பெருமாளால் வேதாந்தாச்சார்யா என்று கௌரவிக்கப் பட்டவர்.

ஸ்ரீ ரங்கம் போகும் வழியில் ஸ்ரீ பெரும்புதூர் சென்று ஸ்ரீ ராமானுஜரை வழிபட அங்கே யதிராஜ சப்ததி என்ற ஸ்லோகம் உருவானது.

ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதர் மகிழ்ந்து அளித்த பெயர் தான் வேதாந்த தேசிகர் என்று நாம் இன்றும் அவரை அறிவது..
ரங்கநாயகி தாயார் அளித்த பெருமை தான் சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்.

1327ல் அலாவுதினின் தளபதி மாலிக் காப்பூர் தெற்கே பல ஆலயங்களை அழித்தபோது ஸ்ரீரங்க பெருமாள் திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டும் ஸ்ரீ பாஷ்ய க்ரந்தங்கள் கர்நாடகத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த பொறுப்பை தேசிகன் ஏற்றார். ஒரு இரவு செத்த பிணங்களோடு பிணமாக கிடந்து மிலேச்சர்களிடம் இருந்து அரிய வைஷ்ணவ செல்வங்களை காப்பாற்றியவர் ஶ்ரீ மஹா தேசிகன்

”ஸ்ரீ ரங்கம் மீண்டும் பழம் பொலிவை பெற நீ அருள்வாய்” என்று பெருமாளை அவர் பாடியதே அபிதி ஸ்தவம் என்ற ஸ்லோகம்.

ஸ்ரீ ரங்கத்தில் ஆழ்வார்களின் விக்ரஹ பூஜை கூடாது அவர்களில் பலர் பிராமணர்களே அல்ல, என்றும் திவ்ய பிரபந்தம் சமஸ்க்ருதம் அல்ல அதை ஓதக்கூடாது”
என்றும் பத்தாம் பசலிகள் சிலர் தடுக்க அனைவருக்கும் ஆழ்வார்கள் பெருமையை எடுத்துரைத்து, திவ்யப்ரபந்தம் வேத சாரம் என்று நிருபித்து இனியும் இம்மாதிரி எதிர்ப்புகள் வரக்கூடாதே என்று முன் யோசனையாக கல்வெட்டுகளில் பதித்து
ராப்பத்து
பகல் பத்து உத்சவ மகிமையை இன்றும் நமக்கு விளங்கச் செய்தவர் நம் தேசிகர்.
ஸ்ரீ ரங்கநாதன் இதனால் மனமுவந்து
‘இனி ஒவ்வொரு நாளும்
இந்த ஆலயத்தில் சுவாமி தேசிகனை நினைவு கூர்ந்து ” ராமானுஜ தயா பாத்ரம்” எனும் தனியனை சொல்லி விட்டு பிறகு திவ்ய ப்ரபந்தம் ஓத வேண்டும்” என்று வழக்கப் படுத்தினார்.

தேசிகர்
ஸ்ரீ ரங்கத்தில் தான் பெருமாள் திருவரங்கனை பாதாதி கேசம் வரை வர்ணித்த பகவத் த்யான சோபனம் ஸ்தோத்ரம் இயற்றினார்.
இதை படிக்கும் போது திருப்பாணாழ்வாரின் அமலனாதி பிரான் பாசுரங்கள் படிப்பதுபோல் எண்ணம் தோன்றுகிறது.

”நீரென்ன பெரிய ஞானஸ்தர், பண்டிதர் என்ற நினைப்போ?
ஒரே நாளில் 1000 பாக்களை ரங்கநாதர் மேல் இயற்ற முடியுமா உம்மால்?” என்று சில பெரிய கனத்த தலைக்காரர்கள் சவால் விட ”ரங்கநாதனைப் பாட முடியாமலா போகும் என்று தேசிகர் சவாலை ஏற்றாரே தவிர, அன்று முழுதும் சிஷ்யர்களுக்கு பாடம் கற்பித்ததில் போய்விட்டது.
அடடா நாளை காலையில் 1000 பாக்களை இயற்றியதை காட்ட வேண்டுமே, என்று இரவு யோசித்தார். ”தேசிகா, என் பாதுகையிலிருந்து ஆரம்பியேன் ” என்று ஸ்ரீ ரங்கநாதனே எடுத்துக் கொடுக்க, விடிகாலை 4 மணிக்கு எழுத்தாணியை பிடித்தார்.
மூன்றே மணி நேரத்தில் 1008 பாதுகா ஸ்துதி ஸ்லோகம் உருவானது. அதை உச்சரிக்கவே குறைந்தது 7 மணி நேரம் ஆகும் நமக்கு.
மறுநாள் காலை பண்டிதர்கள் அனைவரும் மூக்கில் மேல் விரலை வைக்க மறந்தாலும் தேசிகரை ”கவிதார்க்கிக சிம்ஹம்” என்ற பட்டத்தை அவருக்கு அளித்து கௌரவிக்க மறக்கவில்லை.

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆண்டாளை வழிபாட்டு கோதா ஸ்துதி உருவானது. ஆண்டாள் உத்சவத்தின் போது திவ்ய பிரபந்தத்துடன் ஆண்டாளின் விருப்பப் படியே,
கோதாஸ்துதி ஸ்லோகங்கள் சொல்லப்பட்டு வருகிறதே.

காசு, தங்கம், நாணயம் இதெல்லாம் தேசிகர் பார்த்ததில்லை, வாங்கிக்கொள்ள மாட்டார். எனவே உஞ்சவ்ரித்தியில் வாழ்ந்த அவருக்கு அரிசியோடு தங்கமணிகளை கலந்து கொடுத்து, அதை அவர் மனைவியிடம் கொடுத்து சமைக்க சொல்ல, அவளோ இதெல்லாம் என்ன அரிசியோடு என்று கேட்க, ஏதாவது பூச்சி முட்டையாக இருக்கும் என்று கையால் கூட தங்கத்தை தொடாமல் தர்ப்பையால் அவற்றை ஓதுக்கி வெளியே எறிந்து விட்டார்.

தேசிகரின் பால்ய நண்பன் வித்யாரண்யன்
விஜயநகர சாம்ராஜ்யத்தில் பெரிய பதவியில் இருந்ததால்,

”தேசிகா, நீ எதற்காக ஏழ்மையில் வாடுகிறாய்,
வா என்னிடம், இங்கு உனக்கு நிறைய பரிசு வழங்க ஏற்பாடு செய்கிறேன் என்றான் ” வித்யாரண்யனுக்கு அவர் பதிலாக எழுதியதே நமக்கு பொக்கிஷமாக கிடைத்த
”வைராக்ய பஞ்சகம்”.

”வித்யாரண்யர்
நமக்கல்லவோ மிகப்பெரிய பரிசை அளித்துவிட்டார்.”.

ஆதி சங்கரர் ஒரு ஏழைப் பெண்ணுக்கு பொன் மழை பெய்ய வைத்த கனக தாரா ஸ்தோத்ரம் தெரியுமல்லவா. அதே போல் இன்னொன்றும் காஞ்சியில் நடந்திருக்கிறதே.

காஞ்சிபுரத்தில் தேசிகர் வாழ்ந்தபோது, அவரை அவமானப் படுத்த சில விஷமிகள்,

ஒரு ஏழைப் பையன் தனது திருமணத்துக்கு உதவி கேட்ட போது ”தம்பி நீ தேசிகர் என்று ஒருவர் ரெண்டு தெரு தள்ளி வசிக்கிறார். பணக்காரர்.
யார் கேட்டாலும் பணம் தருவாரே, அவரைப் போய் கேள்” என்று அனுப்ப,
அந்த அப்பாவி அவரது எளிய வாழ்க்கை நெறி தெரியாமல் அவரை நிதி உதவி கேட்க, அவனை அழைத்துக்கொண்டு நேராக வரதராஜ பெருமாள் கோவில் சென்று தாயாரின் சந்நிதியில் அவளை உதவி செய் என வேண்டினார் தேசிகர்.

”அவரது மனதைத் தொடும்

”ஸ்ரீ ஸ்துதி” தாயாரை உடனே அங்கே ஒரு பொன்மழை பெய்ய வைக்க காரணமானது..

ஒரு பாம்பாட்டி தேசிகரிடம் ”என்னுடைய விஷ பாம்புகளை உங்களால் சமாளிக்க முடியுமா?” என்று சவால் விட,
அவர் தரையில் ஒரு கோடு போட்டு
” உன் பாம்புகள் இந்த கோட்டைத் தாண்டட்டும்” என்றார்.
சில விஷ பாம்புகள் கோட்டைத் தாண்ட முயன்றபோது தேசிகர் உச்சரித்த கருட மந்திர ஸ்லோகம் கேட்ட கருடன் வந்து அத்தனை பாம்புகளையும் அன்றைய காலை உணவாகத் தூக்கிக் கொண்டு போய் விட்டான்.

பாம்பாட்டி அவர் காலில் விழுந்து ”என் பிழைப்பே இந்த பாம்புகள் தான் ” தயவு செய்து அவற்றை திரும்ப தரவேண்டும் என்று கெஞ்சினதால், மீண்டும் கருட மந்த்ரம் சொல்லி கருடனை அந்த பாம்புகளை திரும்ப தர வைத்தார் .

”உங்களால் எல்லாமே செய்ய முடியும் என்கிறார்களே, என்னைப்போல் கட்ட முடியாவிட்டாலும் ஒரு சாதாரண கிணறு கட்ட முடியுமா உங்களால்?” என்று ஏளனமாக கேட்டானாம் ஒரு மேஸ்திரி.

”சரியப்பா கட்டுகிறேன்”

‘ நான் கொடுக்கும் கற்களை மட்டுமே கொண்டு அதைக் கட்டவேண்டும்”

”ஆஹா அப்படியே.’ என்ற தேசிகர் அவன் கொடுத்த அளவு சரியில்லாத கோணா மாணா கற்களைக் கொண்டே கட்டிய அந்த வினோத கிணறு இன்றும் திருவஹிந்திர புரத்தில் இருக்கிறது.
எங்கே நீர் வற்றினாலும் அந்த கிணற்றில் நீர் வற்றுவதில்லை. சுவையிலும் குன்றவில்லை.

மற்றொரு சிற்பி தனது பங்குக்கு அவரை சவாலுக்கு இழுக்க, அவன் விரும்பியவாறே, அவன் அமைத்த பீடத்தில் தனது உருவத்தையே தத் ரூபமாக சிலையாக வடித்துக் காட்டியபோது அசந்து போனான். அவனமைத்த பீடம் போதாததால் அங்கங்கே அவர் உருவச்சிலையை உளியால் வெட்டும்போது அவன் வெட்டிய பாகங்கள் அவருடைய உடலிலிருந்து ரத்தத்தை சிந்த வைக்க, பயந்தே போய் அவர் காலடியில் விழுந்து மன்னிக்க வேண்டினான் அந்த சிற்பி.

தனது உருவத்தை தானே தேசிகர் வடித்த சிலாரூபம் இன்றும் தேவநாதர் ஆலயத்தில் இருக்கிறதே.
மேலே சொன்ன அவர்
கட்டிய கிணறையும் பார்க்க தவறவேண்டாம். கோவிலுக்கு அருகாமையில் சற்று தள்ளி
ஒரு மண்டபத்தில் உள்ளது.

நமது தூப்புல் குலமணியும் ஸாக்ஷாத் திருமலைமால் கண்டாவதாரமும் ராமானுஜ முனி அபராவதாரமாவார்.
அவர் ஆழ்வார் மீது வைத்திருக்கும் பற்றை அளவிடமுடியாது, வேறு எந்த ஆசார்யனும் தன்னை “சந்தமிகு தமிழ் மறையோன்” என்று பறைசாற்றி கொண்டதில்லை. அவர்காலத்தில் அத்வைத சித்தாந்தம் தலை ஓங்கி நிற்க அதை நிஷ்கர்ஷித்து உண்மைபொருளை நிலை நாட்ட இவர்களுக்கு ஆழ்வார் ஸ்ரீஸூத்திகள் துணை புரிந்தன. அதையும் நம் ஸ்வாமி “தெரியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே” என்றுசாதித்தார். ஆளவந்தார் இராமானுஜ முனிகாலம் தொடங்கி தேசிகறது காலம் ஏன் இன்றைய அளவிலும் ஆங்காங்கே பூர்வ பக்ஷம் தலை ஓங்குகிறது அப்பொழுது அவர்கள் வேத வேதாந்தத்தை கொண்டே வாதம் செய்கிறார்கள்.
நமது ஆசார்யர்களோ ஆழ்வார்களோ திவ்ய பிரபந்தங்களைக்கொண்டு உண்மை பொருளை உணர்த்துகின்றனர். இது நமது சித்தாந்துக்கே உரிய சிறப்பு.

தேசிகர் 101 வருஷம் வாழ்ந்தார். தனது அந்திம நேரம் நெருங்கியதை உணர்ந்த தேசிகர் தனது குமாரர் குமார வரதாசாரியாரை அழைத்து அவர் மடியில் தலை வைத்து, அவரை ”திருவாய் மொழி, உபநிஷத் எல்லாம் சொல்லப்பா. கேட்டுக்கொண்டே செல்கிறேன்” என்றார். பரமபதம் அடைந்தார். தாயார் ரங்கநாயகி தன்னருகே ஒரு சந்நிதியில் தேசிகரை இருத்திக் கொண்டாள்.
வேறு யாருக்கும் இங்கு இடமில்லை என்ற அவள் ஆணை இன்றும் நிலுவையில் இருக்கிறது.

”ராமானுஜ தயா பாத்ரம், ஞான வைராக்ய பூஷணம்,

ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ”
……………………………………

நராயண பலத்தை
பாமரனுக்கும் தெளியவைத்த
13வது ஆழ்வாரே

நிகமாந்த மஹா தேசிகரே !

வேதாந்த தேசிகரே !

வேதாந்தாசார்யரே !

சீரார் தூப்புல் பிள்ளையே !

இன்னும் ஒரு நூறாண்டிரும் !

இல்லை இல்லை . . .

அது போதாது !

இன்னும் பல ஆயிரமாண்டிரும் .

————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவடி மாலை–ஸ்ரீ ரா. இராகவையங்கார்‌ ஸ்வாமிகள்–

March 6, 2023

ஸ்ரீ திருவடி மாலை அண்ணாமலைப்‌ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்‌ சேது சமத்தான மகாவித்துவான்‌ பாஷா கவிசேகரர்‌ ஸ்ரீ  ரா. இராகவையங்கார்‌

மகாவித்துவான்‌ ரா. இராகவையங்கார்‌ மாலையின்‌ தொடக்கத்தில்‌ உள்ள வாழ்த்தில்‌,
‘திருவினிய பொய்கை’ . என்று பொய்கையாழ்வார்‌
முதலாக குருகைமகிழ்‌ மாறன்‌ பெரிய சடகோபன்‌” ஆகிய குரவர் தாள்‌ சேர்குவர்‌ அடிமையானே’ என்று
குறித்தல்‌ அவர்‌ தம்‌ அடியார்க்கு அடியனாகும்‌ பத்தி நிலையைக்‌ காட்டும்‌.

திருவடிமாலையில்‌ சிலபாடல்கள்‌ திருமால்‌ திருவடி களைப்‌ போற்றுகின்றன. ௪ட கோபரைச்‌ சில பாடல்கள்‌ து.திக்கின்‌றன. பலபா டல்கள்‌ கிருஷ்ணாவதாரம்‌, இராமாவதாரம்‌, நரசிங்காவ வதாரம்‌ முதலிய அவதாரங்கள்‌ பற்றியவையே= திருவேங்கடம்‌, திருவரங்கம்‌, திருமாவிருஞ
சோலை, – திருப்புல்லாணி: முதலிய திருப்பதிகளில்‌ எழுந்தருளிருள்ள எம்‌ பெருமான்‌ களைப்‌ பற்றியவை பல.
திருமால்‌ அருள்‌ வேண்டும்‌ பாடல்கள்‌, மாயோனிடம்‌ முறையிடும்‌ பாடல்கள்‌ சிற்சில, இவ்வாறு திருவடி மாலை பத்தி ரசம்‌ கனிய அமைந்த இன்னிசைப்‌ பாடல்களாகும்‌.

திருவடிமாலையின்‌ இறுதியில்‌ இராமநாம மகமை உரைக்கும்‌ *சீராமநாமப்‌ பாட்டு என்னும்‌ பகுதி உள்ளது.
கல்லாரும்‌ கற்றாரும்‌ கற்கும்‌ நாமம்‌ கங்‌.கை முதல்‌ தீர்த்த பயன்‌ காட்டு நாமம்‌ வில்லாரும்‌ வீரர்‌ செயம்‌ வேண்டும்‌ நாமம்‌ மெய்ம்மைக்கே பரியாயம்‌ வேண்டும் நாமம்‌ என்று இவ்வாறு இராம நாம மகிமை பேசுதலை இப் பகுதியில்‌ காணலாகும்‌.
இந்தப்‌ பக்திப்‌ பனுவல்‌ மகாவித்துவான்‌ வாழ்  நாளி லேயே 1983ஆம்‌ ஆண்டு முதன்‌ முறையாக வெளிடப்‌ பெற்றது. 66 ஆண்டுகளுக்குப்‌ பின்‌ வெளியாகும்‌ இப்‌ பதிப்பினைத்‌ தமிழார்வலர்கள்‌ பெற்றுப்‌ பயன் பெறுவாார்களாக.

————–

வாழ்த்து
‘திருவினிய பொய்கை கருவினொளிர்‌ பூதன்‌
செகமுழுவ தும்பே யெனவகலு நன் பேய்‌
மருவினிய பாணன்‌ வளர்மழிசை பூரன்‌
மசிழ்புதுவை நாதன்‌ மதுரகவி கோதை
அரசினுயர்‌ கொங்கர்‌ மகிபகுல துங்கள்‌
அடியர் பத தூளி யணி குறைய லாளி
குருகைமகழ்‌ மாறன்‌ பெரியசட கோபன்‌.
குரவரிவர்‌ தாள்சேர்‌ குவரடிமை யானே,

விதியோர்தர வியலாத மு குந்தன் மிசை யன்பின்‌
விதுரற்கொரு சபரிக்கெழு பதினாயிர மதிகன்‌
மதியோர் புகழ்‌ குருகூர் மகிழ்‌ மாறன் சட கோபன்‌
மதுரத் தமி ழமிழ்தைப் பொரு மறையைப் பொழி முகிறாள்‌
துதியோர் குரு வழிபாடு செய்‌ கோளூர் மறை வாணன்‌
றுகடீர் மது ரகவீச னிணைச் செம்பத பதுமங்‌
கதியோர் தரு பூதூரெதி ராசன் பத கஞ்சங்‌
கலை தேர் வர வர யோகிகள்‌ கழலே தொழுவோமே.

நூல்

பொருள் கொடுத்து வசை கேட்கும்‌ புல்லர்க்‌ கேயும்‌
பொறுக்கரிதாய்ச்‌ செலிசுடும்வெம்‌ புன்சொல்‌ பெய்தாற்‌
கருள்கொடுத்து மீளாவீ டாங்கே நல்கு
மம்மானின்‌ திருவுளத்துக்‌ காகு மென்றே
தெருள்கொடுத்த பெரியவர்க்குந்‌ தெளிய லாகாத்‌
தெய்வங்கள்‌ தெய்வதமாஞ்‌ செம்மா லுன்னை
யிருள்கொடுத்த நெஞ்சினொடு மேத்து வேன்போ
லிழித்துரையிற்‌ பழித்துரைப்பா னெண்ணினேனே..–1–

மறை யெடுத்துன்‌ குணத்தொன்று வழுத்தப்‌ புக்கு
மனம் வாக்குக்‌ கெட்டாத மகிமைத்‌ தென்றே
யிறையெடுத்துச்‌ சொல மாட்டா தீண்டு மீண்ட
வேற்றமுள போற்றுமுளச்‌ சோதீ யுன்னைத்‌
துறையெடுத்த நெறி தோன்றா நாயேனெய்தச்‌
சொல்லாலே கூவுகின்ற தெல்லாம்‌ பாலர்‌
பிறையெடுத்து விளையாட வாவா வென்று
பிதற்றுகின்‌ற தன்மையினும்‌ புன்மைத்‌ தம்மா.–2-

ஏரி தான்‌ மாரியினுக்‌ கேது வாயி
னிருவிழிநோக்‌ கிரவிவரற்‌ கேது வாயிற்‌
சீரிதா நின்னருட்கு நாயேன்‌ செப்புஞ்‌
சிறுசொல்லு மேதுவெனச்‌ சிறக்கு மம்மா
பாரினீ யருள் செய்வாய்‌ செய்யா யானோ
பயன்கருதேன்‌ பருகுபவன்‌ பருகா துய்யா
னோரில்யா னவனாக வுன்னை யேத்தா
துய்யாமை யேத்தினே னுடைய கோவே.–3-

சொல்லாலே மேலாப்புச்‌ செய்து வானிற்‌
.றிகழ்சோலை மலை மேய தேவ தேவே
சொல்லாலே யுனை வழுத்தத்‌ துணிவ தெல்லாந்‌
துகிலாலே யெரிய விக்கத்‌ துணிவ தாகும்‌
வில்லாலே யாகாய மெய்வ தாகும்‌
விரலாலே வளி யளக்க. மேவ லாகுங்‌
கல்லாலே பெருங்கடனீர்‌ கடத்த லாகுங்‌
காலாலே வானேறக்‌ கற்ப தாமே.–4-

5. அவியாத்‌ தருப்பைவெஞ்‌ சாயக
மாஞ்சிலை யாரணங்காந்‌
தவியாக்‌ கரியர சாகுந்‌
தயிர்க்குடத்‌ தங்குமுத்தி செவியாற்‌ கனவினுந்‌ தெய்வக்‌
கவிகை தெரிந்திலெனைக்‌
கவியாக்கி யாண்ட முழுமுதற்‌று ஓன்மைக்‌ கடவுளுக்கே.

6. ஏழு லோகமும்‌ வாழ வென்று ஓரு
சோழ  மண்டல மீதுதன்‌
னிணையில் காவிரி நடுவி லேயர
வணையிலே வளர்‌ தெய்வதம்‌
மாழை மாதகலாது மின்னென
மார்பிலே யொளி ரருண் முகில்‌
வள மிகுந்தமிழ்‌ மறை மொழிந்துயர்‌
பதின்ம ராடு குணக் கடல்‌
வேழ மென்பதன் வாயினால் வெளி
யாகி வந்த விழுப்பரம்‌
வேத முள்ளன யாவையும் முத
லீறு மோதும்‌ வியன் சுடர்‌
ஊழி யின்னுயிர்‌ முழுதை யுந்தன துதரம்‌ வைத்த தனிப் பொருள்‌
உம்ப ரிம்பரெ லாமு நாபியி
தய மாமுழு முதலரோ.

7. கடன்மிசைக்‌ கிடந்த கருணை வா ரிதியைக்‌
கன் மழை தடுத்த கார்‌ முகிலை
யடன் மிசைத்‌ தேவர்க்‌ கமுது பெய்‌ யாரா
வமுதினை யலர் மகட்‌ கணியை
மடன் மிசைத்‌ தேன் பாய்‌ மாலிருஞ்‌ சோலை
மலை மிசை மரகத மலையை
யுடன் மிசைச்‌ சுழலும்‌ புன் பிறப்‌ பொழிவா
னுள்ளினே னெள்ளினே னுலகே.

8. பல்லா யிரம் பழி சூழ்கின்ற யானுன்‌ பதுமபத
மல்லாற்‌ றொழுது துதித்தறி யேனகி லாண்டமுத
லெல்லாம்‌ வயிற்றி னடக்கி யளிக்கின்ற வின்னருட்கு
நல்லார்‌ பொல்லாரென்‌ றிருகூறு செய்யு நவையுமுண்டே..

9. பிள்ளைப்‌ பருவத்‌ ‘தொரு குழவி
பெரியோர்‌ கையாற்‌ றொழது தொழுது பேணி யவர் தாமுரைத்த மொழி
பிதற்றி யிருக்கும்‌ பெற்றியைப்போ
லுள்ளத்‌ துருகு மன்பர் தொழி
லுதனை நடிக்க“வுவந்துன சீர்‌
உள்ள படி யொன்‌ றுணரும்வலி
யொழிந்த விழிந்த நாயடியேன்‌
எள்ளத்‌ தனையு மிளகாத
விருப்பு மனத்தாற்‌ பொய்ந் நாவா
லீயா திவறுங்‌ கொடுங்கையா
லெண்ணி யியம்பித்‌ தொழலெல்லாங்‌
கொள்ளத்‌ தினையுந்‌ திருவுளத்துக்‌ குறித்த லுளதோ கோகனகக்‌
கோயில்‌ வளர்ந்த கொடி படர்ந்த
கொடைக் கற்‌ பகமே குணக் கடலே.

10. வெருவித்‌ துயர் படு கடலைப்‌ பொரு பிற
வியினிற்‌ சுழல் வரும்‌ வினை தீர
மருவித்‌ தொழு மன மதனைத்‌ தருவதுன்‌
மகிமைத்‌ திருவரு ணெறியாமே
குருவிற்‌ பொலி குல முழுதுக்‌ கொருபதி
குருகைப்‌ பதி வளர்‌ தமிழ் மாறர்‌
பெருவிற்‌ பன மறை யமிழ்தைப்‌ பருகிய
பெருமைப்‌ புயலெனு நெடுமாலே.

17. கத்து கடல் சூழ்‌ புலி
கண்டா கருணன்‌ முனமெதிர்ந்து
செத்த வுடலை நிவேதனஞ்செய்‌
திறத்துக்‌ குகந்தே யவற்குமவன்‌
சித்த முவத்தல்‌ காரணமாத்‌
தீய தம்பி தனக்குமுயர்‌
முத்தி கொடுத்த திருவருளே
மூட னேனை யாண்டதுவே.

12. பத்தி செய்து பகைத்த கண்‌டா கர்‌ணன்‌
பாழி வெள்ளிப்‌ பருப்பத வாணனை
முத்தி யெய்த விழைந்து வணங்கவு
முகுந்த னன்றி யுகந்தது வல்லமோ
புத்தி செய்தரி பொங்கரு டங்குமா
புரிக வென்ற புராரி யிடத்துநீ
நத்தி யெய்தி மகப் பெறு மாயமென்‌
நான்முகப் பிர மற்கொரு தந்தையே.

13-. கூவத்தே வீழ்ந்த சிறு குழவியை நம்‌.
றாயெடுக்கக்‌ குதித்தாற்‌ போலப்‌
பாவத்தே மனக் கலம்போய்ப்‌ பவக் கடல் வாய்ப்‌
பட்டாரைப்‌ பரமன்‌ றானே
யாவத்தே யில்லாத பெருவீட்‌.டை.
யடைவிப்பா னருளா லிச்சை
மேவத்தே கம்படைத்துத்‌ தோன்‌ றுவனிம்‌
மெய்யுணர்ந்தோர்‌ வினைதீர்ந்‌ தோரே.

14, காயா மலருங்‌ கருவிளையுங்‌
காருங்‌ கடலுங்‌ கமழுமெழின்‌
மாயா மதுசூ தன முகுந்த
வர மாதவ வாமன வெனவா
யோயா தலற்றி யகங்கரைய
யுள்ளே ததும்பி யின்பவெள்ளம்‌
பாயா வழிந்து வினைக் கோடை.
பாற்று நாளு முளதேயோ.

15. மனைவிட்டிலன்‌ மகவிட்டிலன்‌
வலிவிட்டிலன்‌ மாலே
‘தனைவிட்டில னிலம்விட்டிலன்‌
றனம்விட்டில னாசை
‘தினைவிட்டிலன்‌ வினைவிட்டிலன்‌
திருவற்றவ னேனும்‌
உனைவிட்டில னெனின்‌ மற்றவ
னொளி பெற்றவ னாமே.

16. நின்ன தாகுமால்‌ விண்ணு மண்ணொடும்‌
நிலைய தாகிய வீடு மேயெனின்‌
என்ன தாக யாதுள்ளதோ தெரி
கிற்கிலே னுடற்‌ செனன மோடுயிர்‌
உன்ன தாகலானிற்கு நல்குதற்‌
கொன்று மில்லையா னேழை யேனுமென்‌
தன்ன தாக வென்‌ கையி லுள்ளதஞ்‌
சலி நினாதுகை தனிலி லாததே.

17. நெய்யிற்‌ றனியே யெரியாத
நெருப்புத்‌ திரியின்‌ மிசை யதையே
பெய்யிற்‌ சுடர் விட்‌ டொளி கிளரும்‌
பெற்றி யேய்ப்ப மலவுயிரை
மெய்யிற்‌ புகுவித்‌ திரண்டனையு.
மேவிப்‌ பொலியும்‌ விழுச்சுடர்‌ நீ
கையிற்‌ கனி போற்‌ காட்டினல்லாற்‌
காணா தெவர்க்கு மகக் கண்ணே.

18. காமாந்த காரமடுக்‌ காரிகையார்‌ வேட்கைக்‌
கராவாயிற்‌ கண்ணிழந்து கன்‌மனவெங்‌
றேமாந்து வீழ்ந்துகரை யேறவலி யில்லா களிறு ஓன்‌
தெந்தையுனை யுன்னாது நொந்தழிவ தருள்வாய்‌
பூமாந்து வண்டுலவு பொய்கையிடைப்‌ புக்குப்‌
போற்று கரி காத்ததினு மேற்றமிதற்‌ குண்டால்‌
தீமாந்து மெழுகு பொரத்‌ தினமுருகு மன் பர்‌
சிந்தை குடி கொண்டிருலகு முந்தை முழு முதலே.

19. பாபத்தாற்‌ காழ்த்தறிவு
பாழ்த்ததனான்‌ வெளிறியடுங்‌
கோபத்ததாற்‌ சிவப்புற்றுக்‌
கொடுஞ்செருக்கா னனியிருண்டே
யாபத்தா னிளைப் பெய்தி
யழுக்காற்றாற்‌ றடிக்கு மனம்‌
சாபத்தேற்‌ குயிர்ப் பிணியாய்த்‌
தழைப்பது காண்‌ டனி முதலே.

20. பழுவிருக்கத்‌ தோல் வேய்ந்த பாவை நெஞ்சப்‌
பாம்பிருக்கும்‌ பாழ்ங்குடங்கர்‌ பற்பல்‌ கோடிப்‌
புழுவிருக்கப்‌ போர்த்தமலப்‌ பொதியே யைந்து
புலப் பேய்கள்‌ குடியிருக்கும்‌ புக்கில்‌ புண்ணாய்‌
குழுவிருக்கத் தொக்கமுடை யிரைமெய்‌ யென்று
குறித்திருக்கப்‌ பெற்றபெருங்‌ குணத்தோர்க்‌ கல்லா
லெழுவிருக்க மொருகணையா ஸனெய்து பத்த
ரெழுபிறப்பு மறுப்பவனை யேத்த லாமே.

21. பணவாசைப்‌ பேய் கண்‌ டுயில விடா
தெனைப்‌ பாவையராம்‌
பிணவாசைப்‌ பூதங்‌ கனவும்‌
புகுந்து பிடித்துடற்று
முணவாசைக்‌ கூளி யெஞ்‌ ஞான்றுந்‌
தெறுமிவைக்‌ கோய்வுமுண்‌டோ
குணவாசைப்‌ பாநுவைப்‌ போன்றுள
னோங்மென்‌ குலதெய்வமே.

22. பொன்னினைக்கும்‌ புகழ் நினைக்கும்‌
பூமியெலா நினைக்கும்‌
பூணினைக்கு மூணினைச்கும்‌
பூவை மொழி யாரை
மன்னினைக்குந்‌ தன்னினைக்கும்‌ மற்றையர்க்குத்‌ தீது
வர நினைக்கும்‌ பழி மறைக்கும்‌
வழி நினைக்குந்‌ தன்ன
தின்னினைக்கு நென்னினைக்கு
மிருள் புகுத்த வல்ல தெது நினைக்க வென்றாலு
மதுநினைக்கு நெஞ்ச
நின்னினைக்க லாகாது
நீநினைத்தல்‌ வேண்டு
நீடொளிய சேடகிரி
நின்ற பெருமாளே.

23-மாட்டாலும்‌ மயக்காலும்‌ மகிழாலும்‌
புகழாலும்‌ வாட் கண்‌ மாதர்‌
கூட்டாலு முணைவாலுங்‌ குடியாக் கொண்
மடியாலுங்‌ கோபத்‌ தாலும்‌
பீட்டாலு மழுக்காற்றுப்‌ பேயாலு
நாயேன் செய்‌ பிழைக ளெல்லாம்‌
பாட்டாலு நிரம்பாது கேட்டாலும்‌
பாவபெனப்‌ பகர்வ ரெந்தாய்‌.

24-ஏழாலே அளந்திட்ட புன் பிறப்பின் எத் துணைக்கோ வினைவேன் எந்தாய் ே
ஊழாலே ஒரு கோடி உடலாலே யுரையாலே யுடறுங்‌ காமப்‌
பாழாலே கூழாலே பகையாலே பசியாலே பயத்தாற்‌ பாவச்‌
சாழாலே திணிந்த மனக்‌ கல்லாலே படுவல் எலாங்‌ கணிக்கலாமே.

25. சற்றேனு மிரங்கீரோ வெனப் பசித்தார்‌
தழங்குரைமுன்‌ றலைக் கேட்‌ டோர்கைத்‌
துற்றேனு மீவறியாச்‌ சுமடனேன்‌
சுடும்வறுமை தொலையத்‌ தம்மை
விற்றேனு முதவுகொடை வீரர்முன
மென்னாவேன்‌ வியாள மேய
புற்றேனு மொவ்வாவென்‌ புல்லுடலே
புவியினெடும்‌ பொறையா மெத்தாய்‌.

26. அருகிருக்கும்‌ புல்லாணி யமர்ந்திருக்கும்‌
வில்லாளிக்‌ கன்பு பூண்டு
பெருகிருக்கு முறையானே பேசறியே
னந்தணரிற்‌ பிறந்தேன்‌ வாளா
முருகிருக்குங்‌ குழலார்க்கு முனைந்திருக்குங்‌ காமத்தீ மூள நாளும்‌
வெருகிருக்கு மாறிருளை விழைந்திருக்கும்‌
வெய்யனருண்‌ மேவ லுண்டே.

27. அனைபடைத்த வுயிர்க்கெல்லா மயன் படைத்த
‘தில்லை யுட லடியார்க்‌ காக்க
முனை படைத்த வறவாழி முதல்வனடி.
முளரியினை முன்னு மெண்ணந் தினை படைக்க மாட்டாது தீ நரகு
படைப்பார்தாஞ்‌ செய்த முன்னை
வினை படைத்த தல்லாது வேறுண்டோ
மெய்யுணர்ந்து விள்ளுங்‌ காலே.

28-குழலோம்பு மினியவிசைக்‌ குயிலோம்பு
குரன் மடவார்‌ கொடிய காமத்‌
தழலோம்பி யேயபணி தலையோம்பிப்‌
பெற்றவற்ப சார மென்னும்‌
விழலோம்பி யதனானோய்‌ மிக வோம்பி
மெலிவெல்லாம்‌ வீடாண்‌ மாயன்‌
கழலோம்பு மாறறியாக்‌ கசடோம்பி
நின்ற வெய்ய காட்சி யாமே.

29-பாடு பட்டுத்‌ தேறி நிதிப்‌ பரப்பு நாளும்‌
பகை விளைக்கு நிலனும் பெண்‌ பாலார்‌ கொங்கைக்‌
கோடு பட்டுச்‌ சிதைந்த புல வுடம்பும்‌ வாழ் நாள்‌
குறை பட்டுப்‌ போம் வழிக்குத்‌ துணையோ சொல்லாய்‌
காடு பட்டுப்‌ போகாமே காக்குங்‌ கார் போற்‌
கருணை மழை பொழிகின்ற கமலக்‌ கண்ணந்‌
கீடுபட்டு வீடுபெற்று வாழ வெண்ணா
திரும்பிறவிக்‌ கடற்பட்ட வேமை நெஞ்சே.

30-எல்லணைத்த பிறைபோலு மெழிலணைத்த
இரு நுதலா ரிரண்டு கொங்கைக்‌
கல்லணைத்துக்‌ கண்ட சுகங்‌ கனவலைத்த
கனி சுவைத்த காட்சித்‌ தென்று
வில்லணைத்து நீல முகின்‌ மிளிர் பச்சைப்‌
பாயன் மிசை மேயினாற் போற்‌
புல்லணைக்கட்‌ சாய்ந்தவன் பேர்‌ புகன்‌ மிருப்பார்‌
பேர் புகன்று புகுவர்‌ வீடே

31-மலைபோ னிதியு மணுவா மதித்து வறுமை கொளுங்‌
கலையோ துளியுங்‌ கடலா நினைத்துக்‌ கருவமுறு
நிலையோ பெறாது நரகு படைக்கின்‌ற நெஞ்சிற்கியான்‌
விலையோ வருளு மிலையோ வடமலை மேலவனே.

32-குடி பிடிக்கு மானப் பேய்‌ குலம் பிடிக்கு
மகங்காரக்‌ கூளி யோடு
செடி.பிடி.க்கும்‌ பேராசைச்‌ செந்நாயு
மனக் குரங்குத்‌ தினமு மென்னை
மடிபிடிக்கும்‌ விடியலும்‌ வழி மறிக்கு
நரக நெறி வகுக்கு மூன்னை
யடி பிடிக்க வொட்டா விவ்‌ வல்லலெலாம்‌
வெல்ல வரு ளரங்கத்‌ தெந்தாய்‌.

33-பாட்டா னளி கண்‌ முரலுமெழிற்‌
பங்கே ருகத்தின்‌ மிசை யமர்ந்து
சூட்டா ரேகினம்‌ பெடைதிளைக்குந்‌
துறை சேர் மல்லி வளதாடி
தாட்டா மரைப்  போதுளப்போதிற்‌
றணவார்‌ பிறவச்‌ சலதி பட
மாட்டார்‌ முடிப்போ தவாவுமுதல்‌
வன்றாட்‌ பிணைந்‌ தெடுத்தலினே.

34-குலை யெடுத்த மரக் கொம்பிற்‌ குதித்துத்‌ தாவும்‌
குரங்கனைத்து நீ முன்னர்க்‌ குறித்த வாறே
மலை யெடுத்து மலை கடந்தும்‌ வாழ்ந்த வென்றன்‌
மனக்குரங்கு மட்டுமுனை வணங்க லில்லாத்
தலையெடுத்து நிமிர்‌ ந்திருளின்‌ வீழ்த லெல்லாத்‌
தயா வுளத்திழற் குறியாத தன்மை யென்னோ
சி லை யெடுத்த நீல முகில்‌ போற் புல்‌லாணித்‌
திருப்பதியின்‌ மேவி வளர்‌ தேவ தேவே,

35. செகத்துக்க ணவதரிக்குத்‌ தெய்வதச் சீர்‌
கேட்டுரையாச்‌ செவிட்டு மூங்கை
முகத்துக்கண்‌ விழித்திருக்க வகத்துக் கண்‌
குருடுபட்ட மூட னல்லா
லிகத்துக் கண்‌ வாழ் வனைத்து மிருங்கான
னீரனைத்தென்‌ றெண்ணா தேபெண்‌
அகத்துக் கண்‌ வந்துழல வாழ் நரக
மமிழப்போ மாதன்‌ யானே.

36. மருவேட்ட குழலார்க்கு மனம் வேட்ட
மயலானே வையத்‌ தென்றுங்‌
கருவேட்ட விடர்க்கடலிற்‌ சரைவே.ட்ட
வுடை கலம்போற்‌ கவிழ்கின்‌ றேற்குச்‌
செரு வேட்ட. தென்னிலங்கை தீ வேட்டஞ்‌
செயம் பொருத செல்வன்‌ கஞ்சத்‌
திருவேட்ட முழு முதல்வன்‌ சீர் வேட்ட
சேவடியே சேம மாமே.

37-ஆற்றைக் கடவா திருஞ்சழிவா
வாழ்த்த விரைவு மடு மரம் போன்
வாற்றைக் கடவா தீ குண முகில்
மாட்‌ட . விரையு மா மிவிடநீ .
றூற்றைக்‌ களைந்து வேர றுக்குத்‌
துகடீ ரருள்வா டருவை கொலோ
சேற்றைக்‌ கழுவ முடையளறு
திளைப்பேற்‌ கொருநாட்‌ டிருமாலே.

38. தெருளாசைப்‌ பட்டறிந்து செங்கண்மால்‌
சேவடிக்கே சேர்ந்த நெஞ்சா
லருளாசைப்‌ பட்டிருக்கு மடியார்முன்‌
செடிநாயேனவனிமீது பொருளாசைப்‌ பட்டிவறிப்‌ புன்பழியே
நனி யிட்டிப்‌ பொரு கண்‌ மானார்‌ மருளாசைப்‌ பட்டதனா னிருளாசைப்‌
பட்டெய்த வதிகின்‌ றேனே.

39-கறையடிக்குள்‌ வெதுப்பொழியக்‌ கலுழன்‌ மிசைக்‌
கார் மழைபோற் கடிது போந்த
விறை யடிக்குத்‌ தினை யுருகா விரும்புமன
மெமனெனும்பேர்‌ யார் சொற்‌ றாலும்‌
மறை படிக்கும்‌ பதைபததைக்கும்‌ பல்கோடி
நினை நினைந்து பரிவு கூரு
மறையடிக்கு முடிக்குமிக வழுத்து மரி
யெழுத்துமெண்ண மாட்டா தந்தோ.

40-தேக நிலை யாத நிலை செத்தபிண மோதுஞ்‌
செல்வ நிலை யாதபடி சொல்வரிர வாளர்‌
போக நிலை யாமை வலி போமுதுமை கூறும்‌
புத்திநிலை யாதமுறை பித்தர்மொழி வாரான்‌
மோக நிலை யாமைசொல மூடமன முண்டு
முற்று நிலை யாமை மறை கற்றவர்கள்‌ சொல்வார்‌
சோக நிலை யாத நிலை சொல்லி யருள்‌ வாரார்‌
சோலை மலை மேவி வளர்‌ நீல நெடு மாலே.

41-முடியிருக்கு நெடுமாலுக்‌ கடிமைசெய
முயலாத மூடமூர்க்கச்‌
செடியிருக்கு மனக்குரங்கு குடி.யிருக்கு முடையாக்கை சிதையா தேயிப்‌
படியிருக்கு மெனநினைக்கும்‌ பாமரர்க்குச்‌
செத்த பிணம்‌ பறை யாற்‌ சாற்றி
நொடியிருக்கு மெனக் கருதீர்‌ நுமக்குமிது
வழியென்று நுவலு மாலோ.

42. ‘குகை கண்டு தனி யிருந்து குல தெய்வம்‌
வரானாக்காக்‌ குருட்டு நெஞ்சாற்‌
பகைசண்டு சினந்துமுறு பணங்கண்டு
விழைந்தும் விழிப்‌ பான லார்புன்‌
னகை கண்டு மருண்டுமவர்‌ நடங்கண்டு
வியந்‌து மொழி நாள்க ளெல்லாந்‌
தொகை கண்டு துறவார்க்குச்‌ சுடுகாட்டிற்‌
புகை கண்டு சொல்லு மெய்யே.

43. மறி கேட்டு வாங்கியதை மலைக் கடவுட்‌ கென்று
வதைத்திட்டுக்‌ கொலை படை.த்து வருள் படைத்த வேலன்‌
குறி கேட்டுக்‌ களியாட்டுக்‌ குணக் கூத்து மாடிக்‌
கும்பிட்டுப்‌ பெற்ற பயன்‌ றுன்பத்தின்‌ வேறோ
செறி கேட்டுப்‌ பவக் கடலிற்‌ றிரையிடர்க்கு நொந்து
தீ வினைக்‌ கரா வாயிற்‌ சிக்குவது தீர்ந்து
நெறி கேட்டுப்‌ பெரு வீட்டி னிலைத்தினிது வாழ
நீர் நினைதி ராயினரி பேர் நினைதிர்‌ மாதோ.

44. தீவினைப்‌ பெருக்காற்‌ பொருடனைப்‌ பெருக்கிச்‌
சிறு புகழ்க்‌ கொரு சில விடுவீர்‌
கோவினைத்‌ தொலைத்துச்‌ செருப்பினைக்‌ கொடுக்குங்‌
கொள்கைநுங்‌ கொள்கையே யம்மா
காவினைச்‌ சயித்த கொடையினா லடியர்‌
கருதிய தன்னையு மளிக்குத்‌
தேவினைப்‌ பழிச்சி யாவையுங்‌ கழித்துச்‌
சிறப்பினை யுறப் பெறா தீரே.

45. மா கனக மேருவென நிதியி ௫ந்தென்
மகிழ் பெண்டிர்‌ மக்களொடு வாழ்விருந்தென்‌
றேக நக மெனவிருந்தென்‌ றெளித்த தாலென்‌
செக முழுது மடிமை புகுஞ்‌ செயத்தி னாலென்‌
போக நகராதிபதி யாயி னாலென்‌
பொல்லாத விரணியரா வணர் போன்‌ மாள்வர்‌
கோகனக மலர்ந்தருணீர்‌ கோத்த கொண்டல்‌
கோதண்ட கோளரியைக்‌ கூறா தோரே.

46-திரவியமொன்‌ றுறுமாயிற்‌ றிரைமேற்‌ செல்வர்‌
தீ மலையின்‌ மிசைச் சேர்வர்‌ சீயத்‌ துஞ்சா
‘திரவியல்வெங்‌ கான்சுரம்போ யிளைப்பர்‌ வையத்‌
தினைப்பிளந்து பாதாளத்‌ திடையும்‌ பார்ப்பர்‌
உரவிய கார்‌ வானத்தும்‌ பறப்பர்‌ பூத
மொன்றுக்கு மஞ்சார்த முயிரு மாய்ப்பர்‌
விரவிய விவ்‌ வினையினொரு தினையும்‌ தெய்வ
விழுப் பொருளைப்‌ பெறப்புரிய விழைவோர்‌ யாரே.

47-அன்புருக்கொ ளசோதைத்தாய்க்‌ கெளிய னாகி
யழனுருக்கொள் வஞ்சத்தாய்க்‌ கெமனே யாகித்‌
துன்புருக்கொள் பொரு களிற்றை மாய்த்துத்‌ தாய
தொழு களிற்றைத்‌ துயர்‌.தீர்த்துத்‌ துகடீ ருள்ளத்‌
தின்புருக்கொள்‌ சேடன் மிசை யினிது சாய்தந்தன்‌
றிடருருக்கொள்‌ காளியனை யடர்த்த லானே
வன் புருக்கொள்‌ கொடியார்க்கு மடியா ருக்கு
மன்னிறைவ னருண் முறைமை மதிக்க லாமே.

48-கங்கைக்‌ கரைக்குக்‌ குகப் பெருமான்‌
கருதும்‌ பம்பைக்‌ கரைக்கநுமான்‌
சங்கம்‌ கடலின்‌ பெருங்கரைக்குச்‌
சார்ந்த வொருவீ டணனிவரைப்‌
பங்கத்‌ துறையும்‌ பள்ள நிலம்‌
பாயும்‌ புனல் போற்‌ கலந்த விறை
துங்கத்‌ தினிய திருவருளே
தொலையாப்‌ புணையாந்‌ துயர்க் கடற்கே.

49-ஓலை கட்டித்‌ தூதேகிப்‌ பாண்டவர்க்கா
வூரிரந்தா னுவந்து சாத்த மாலை கட்டிக்‌ கருள் புரிந்‌தான்‌ மண்ணினுற்றார்‌
புண்ணியத்தின்‌ வாழச்‌ சேது
வேலைகட்டி வைத்த பிரான்‌ யருள் கடலிற்‌
குளித்தற்கு விரகி லாமே
சேலை கட்டி விழி வலைக்கொள்்‌ தெரிவையர்கா
தலின்மூழ்குஞ்‌ சிதடன்‌ யானே.

50-பிரமனை முன்‌ படைத்தவற்குப்‌ பெரு மறையைப்‌
பிறக்குவித்த பிரம மென்றே
பரமனை முன்‌ றுதிக்கறியாப்‌ பாழ்ம் பிறப்பு
மானிடமாய்ப்‌ பார்க்கப்‌ பட்ட
கரமனைத்துக்‌ கழுகனைத்துக்‌ கழுதனைத்துக்‌
கல்லனைத்துக்‌ கனியு நஞ்சா
மரமனைத்தென்‌ றெண்ணி விடா மதியுடையேற்‌
குவமையிந்த வையத்‌ துண்டே.

51-தனக்கு மே லொருவருள ரென வெறுக்குஞ்‌ _
சழக்குயிரின்‌ மமதையினைச்‌ சாற்றி னுற்றா
ருனக்குமேற்‌ கடவளுள னென்ற போதும்‌
உருத்தவரைக்‌ கொலை சூழு முதற்குச்‌ சான்று
சினக்குமே லுலகமெலா நடுங்கா நிற்குந்‌
,தீயவிர ணியனென்று தெளிவா ரன்னா
னெனக்குமே லில்லை யென வகங்கரிப்பி
னெல்லையினின்‌ றேற்கிறைவ வென்செய்‌ வாயே.

52-முற்றத்‌ துறந்த முனிவரரு முதல்வா நின்பான்‌ முறையிட்டுச்‌
செற்றக்‌ காம மயக்கமெலாந்‌
தீரு மாறு வரங்கிடப்பக்‌ குற்றக்‌ கலமா யுளவடியேன்‌
குறைவேண்‌ டுவது முறையோதான்‌
தெற்றத்‌ தெளிந்த சடகோபர்‌
தெவிட்டா தருந்துந்‌ தெள்ளமுதே.

53-அரனைப்‌ படைக்குந்‌ திசைமுகனை
யலரிற்‌ படைக்குந்‌ திரு நாபி
வரனைப்‌ படைக்கு மனப் பெரியார்‌
மலர்ந்த செழுந் தாமரைப் பதத்துச்‌
சிரனைப்‌ படைக்க மாட்டாத
தேகம்‌ படைக்குந்‌ தீய வினை
மரனைப்‌ படைத்து வளர்க்கின்‌ ற
மதியைப்‌ படை.த்தேற்‌ கருளுளதோ.

54-காலமெலாங்‌ கணிகையரிற்‌ கழித்து மூத்த
காரிகையாள்‌ காந்தனைப்பின காண லுற்றுச்
சீலமெலாஞ்‌ திறந்த குணத்‌ தெரிவை யொப்பச்‌
செய்த பிழை பொறுக்குவென்று செப்பல்‌ போல
வாலமெலாந்‌ திரண்டனையே னந்தோ வாசைக்‌
காளாகி நாடொலைத்தே னன்ப ரேய்ப்ப
வோலமெலா மிடுகின்றே னிதற்கு நீயு
முற்றருள்வையோ வறியேன்‌ பெற்ற தேவே.

55-கிளை யெலா நச்சுக்‌ கனி பழுத்‌ திருக்குங்‌
கெட்ட தீ மரத்தையும்‌ வித்து
முளையெலாங்‌ கெடுத்துப்‌ புனலெலாம்‌ வீணாய்‌
முடித்து நல்‌ லெருவெலாந்‌ தீத்துக்‌
களையெலாம்‌ விளைக்‌ குங்‌ களரையு மனையேன்‌
காண்பனோ நின்னையு மாயர்‌
அளையெலா மடிய ரன்புபோ லருந்து
மய்யனே தெய்வ நா யகனே.

56.மறப்பினுக்கோ ரறையா குமை யிருட்டுச்‌
சிறையாகு மயற்கூ டாகும்‌
இறப்பினுக்கும்‌ பிறப்பினுக்கும்‌ படியாகும்‌
நரகினுக்கோ ரேணி யாகுந்‌
துறப்பினுக்குப்‌ பகையாகுந்‌ துர்க் குணத்துக்‌
குறவாகுந்‌ துகடீ ரெந்தாய்‌ சிறப்பினுக்குச்‌ செல்லாது செய் சுவராந்‌
தீமனமென்‌ செயத்தத்‌ தாயே.

57-ஓழுக்கினா னீத்த வுயர் முனி வரரு
முள்ளமுக்‌ கறவுனை யுள்வா
ரிமுக்கினா னளறே யெனுங்குடும்‌ பத்தோ
டிரண்டறப்‌ பொருந்தழுக கிருநீர்‌ முழுக்கினாற்‌ போமோ வுன்‌ றிரு வருளின்‌
மூழ்கினா னல்லது வினையைப்‌
புழுக்கினான்‌ முளைக்கா வித்தெனப்‌ புரிந்து
போற்றினார்க்‌ காற்றுமா தவனே.

58-உடலிந்தே யிடரினுக்கொன்‌ றுன்ன லெல்லா
முரலிருந்தே யுலக்கையினுக்‌ கஞ்சல்‌ போலாங்‌
குடலிருந்த தொடக்கறுத்துக்‌ கோத்த சுற்றக்‌
கொடும்பாசப்‌ பிணிப்பவிழ்த்துக்‌ கொண்ட பெண்ட
மடலிருந்த பெரும்பேயி னாசை யோட்டி
யகப்பற்றும்‌ புறப்பற்று மனைத்தும்‌ வீட்டி
மடலிருந்த துளவலங்கன்‌ மாயன்‌ நூய
மலரடிக்கீ ழ்ப்‌ புக்கொடுங்கா மடமை நெஞ்சே.

59-சரிந்த குழ றாங்கிய கண்‌ கரமும்‌ பற்றத்‌
தளர்ந்த வுடை பிடித்த மலர்க்‌ கரமும்‌ விட்டுத்‌
தெரிந்த வுளத்‌ தொளிர்கின்ற தேவே யுன்னைத்‌
தேர்ந்தொருகாற்‌ கூப்புதலைச்‌ செய்யும்‌ போழ்‌தே விரிந்த குணப்‌ பாண்டவர்தம்‌ வென்றி போல
விளங்குதவக்‌ கொடிமான மெய்யே காத்துப்‌
புரித்தபெரும்‌ பாரதமும்‌ போதா தென்று
புலம்பியதுன்‌ றிருவருளின்‌ பொலிவே யம்மா.

60-துட்டவிரா வணனாவாற்‌ சுடுகென்‌ றோதத்‌
துனைந்தெழுந்து புகுந்தன்பாற்‌ றொழுது தீயர்‌ கிட்டவிரா முழு முதலே சரண மென்று
கிளத்திரங்கும்‌ வீடணனைத்‌ கய னென்னப்‌
பட்டவிராக்‌ கதன்றம்பி நம்பாற்‌ கொள்ளப்‌
படாதென்ற கவி வேந்தை மறுத்து நல்கி
யுட்டவிரா வன்பின்வரி விராவ ணற்கு
முற்ற பய மளிப்பலென்ற வுரையே தஞ்சம்‌.

61-பிரமாண்ட கோடியெலாம்‌ பெற்றுக்‌ காக்கும்‌ பிரமநீ யவரித்த பெற்றி தேறா
துரமாண்ட கவியளனத்து முவரிக்‌ கூலத்‌
துறுகணுனக்‌ கெய்தாமை யளிக்க வோர்ந்து
கரமாண்ட வால்பிணைத்துக்‌ கவிந்து கொண்டு
கடி மதில்போ னின்றிளைப்பாற்‌ கண்க டுஞ்சச்‌
சரமாண்ட வில்லினொடுத்‌ தம்பி யோடுத்‌
தாண்டியவை காத்தவரு டமியேன்‌ றஞ்சம்‌.

62-திசைக்கும்‌ வெப்ப வினைத் துயரைத்தெறு இடத்த வச்ச வரிப் பெ ணருத்திய
திருக்க னிக்கு மணித் துணை கட்டிய
செவிக்க சட்ட னளித்த மூடைச்சவக்‌
தசைக்கு மற்பி னுருக் கொளுத்தருள்‌
தழைத்த பத்த ருடற் புள கத்தொடு
தழற்கணுற்ற வரக்கை நிகர்த்துளன்‌
தனித்து ருக்க முறத்தமி மிற்பொழி
றிசைக்கும்‌ வெற்றி யுருக்கு மிணிக்குயி லெழிற் கை பற்றி யதற்கு வெறுத்தர வெனக் கொ தித்த செருக்க னிடைக் குலத்‌
‘திலச்சை யற்ற சழக்க னெனச்சொலும்‌
வசைக்கு முத்தி கொடுத்து மறைச்சிரம்‌
வழுத்த நிற்கு மடிப்பது மத்தலான்‌ மனத்தை வைக்க நினைப்ப கொல்‌ கற்றவர்‌
மயக்க மிக்க பவக்கடல்‌ வற்றவே.

63. விது வைத்த தலைச் சிவ னுக்குமலர்‌
மிசைவைத்த மறைந்பிர மற்குமிறை
புதுவைத்தல முற்ற முதுக் குறைவி புனை புத்தமிழ்‌ தத்தமி மிற்குமுடி மது வைத்த விதழ்த் தொடை யற்கு மகிழ்‌
மனம் வைத்து மணத்தைய ஸித்தபுயல்‌
பொது வைத்த நிதிக்கு நிகர்த்தவருள்‌
டொழியத்‌ தழைகிற்பது முற்றுமரோ.

64. சேப்படைத்த சவனயனே யெனலான
தெய்வதங்கள்‌ திகழ் மந்‌ தாரக்‌
காப்படைத்த விந்தரனே தலையாய
தேவர்நரர்‌ கனக மேரு
தேப்படைத்த பலகாடி யண்டமுதற்‌
பூதமெலாந்‌ திருமால்‌ நாபிப்‌
பூப்படைத்த தென்‌ றவன்பேர்‌ நாப்படைத்த
பயன்கொள்ளப்‌ புகல்வர்‌ மேலோர்‌ .

65. பரகாலனை முதலாகிய பழையோ ரருளானே
கரவாதுள மறவாதுன கழலே தொழு வேனே
நரநாரண வரிவாமன நளினாசனி நாதா
வரகாரண சகன்மோகன மதுசூதன மாலே.

66-துருவனுக்குயர்‌ நிலைகொடுத்தன
துருபதைக் கவிழ்‌ துகில் வளர்த்தன
சுமுக னுக்குள பயமொ ழித்தன வுலகாளும்‌
ஒருவ னுக்கெழில்‌ வளை தரித்தன
வுரைக ரிக்குயர்‌ கதி படைத்தன
வுலம ழைக்கொரும லையெ டுத்தன வுமை கேளவன்‌
சருவனுக்கிர வொழிய விட்டன
தசமுகற்கடு கணை தொ டுத்தன
சகல ருக்குநல்‌ வரம்விளைப்பன வடி நீழன்‌
மருவெனக்கிக பரம ளிப்பன
வடம லைக்குறு கடவு ணற்பொல
வரை யெனத் தரு தரு வெனப்படு புயமாதோ.

67-முறை க டந்து பிறர் ம டந்தை
முலை புணர்ந்த பழுதெலாந்‌
தறை கி டந்து புனல் படிந்து
தழலி னின்று மொழியுமோ
சிறை கி டந்த செனனம்‌ விஞ்சி
நரகு ழந்து தவிருமோ
மறை க டந்த வரமு குந்த மனமி ரங்கி யருள்வையே.

68-தானே வழங்க வறியாத
சலவா ரியையுன்‌ றயையினுக்கு
நானே யுவமை நவில்வதையு
நயந்துந்‌ தன்னை நல்கலிலா
வானே வளருங்‌ கற்பக மா
மரத்தை நினக்கொப்‌ புரைப்பதையுங்‌
கோனே நிளையுந்‌ தொறுமெனது
கொடிய மனமுங்‌ குலைவுறுமே.

69.மாறு பட்டுரிய கொழுந னுக்கியைய
வாழ்த லற்று மயல்‌ மனைகளில்‌
வயிறு பட்ட பசி தணிய லுற்றுவினை
வழியி யற்றிவரு கூலி கொண்‌
டூறு பட்டசிறு நிலையி னிற்குமவ
ளொருவ னுக்கென முன்‌ னாளினி
லுடைமை பட்டு மண முடிய லுற்றதனை
யுணர்வின்‌ வைத்து நிறை தன் மனம்‌
வேறு ட்டிலளு பட்‌ மாகி மற்ழெதையும்‌
விழைத லற்ற வளு மாயினால்‌
மெலியு மத் தெரிவை குணனை மெச்சிவரன்‌
மேவு காலமுள தாகுமால்‌
தூறு பட்டவினை யேனு னக்கடிமை
தொடர் விலிட்டுமுனை யல்லது
தொழ நி னைத்தவனு மிலையெ னத்தெரிவை
துளவு தொட்ட .முடி மாயனே.

70-தாயிருந்தும்‌ முலையினிற்பால்‌ தழைத்திருந்துந்‌ தரைக் கிடக்குந்‌ தருணந்‌ தானே
வாயருந்த மாட்டாத மகவினுக்கு
வாயின் முலை மடுக்குந்‌ தாய் போல்‌
நீயிருந்து நின் கணருள்‌ நிறைந்திருந்தும்‌
யானருந்தா நிலை கண்‌ டென்கண்‌.
மேயிருந்து நீயூட்டா வெளின்‌ மெலிவேன்‌
வசையுநினை மேவு மெந்தாய்‌.

71-அனும னுக்கு நளிர்க வென ச்சொலி
யழலின்‌ வெப்ப மகற்றி யளித்தவள்‌
அடல ரக்கர்‌ சிறையை யறுப்பதற்‌
கணுமு யற்சியு முற்றில எற்றென முனும யற்கு முதுமறை சொற்றவன்‌ முழுது யிர்க்கு முலகு படைத்தவன்‌
முதிரி ருட்கொர்‌ பரிதி யளித்தவன்‌
முகிலி டர்க்கு மலைமயை யெடுத்தவன்‌
தனுவெ வைக்கும்‌ நிறுவி வளர்ப்பவன்‌
தனய ருக்குண்‌ முலையை யமைப்பவன்‌
தழை. பயிர்க்கு மழையை விடுப்பவன்‌
தரணி துக்க மொழிய வுதிப்பவன்‌
இனும னுக்கு கொடிய பவக் கடல்‌
இழிய வைப்ப னெடுப்ப னெனக்கவன்‌
எழின்மி குத்த வருளின்‌ முறைப்படி .
இனிதி ருப்பதை யல்லது மொல்லுமே.

72. பொற்றை யுடலைப்‌ புறங்கழுவிப்‌
பொழுதே புசித்துப்‌ புனையர வப்‌
புற்றை விழைந்து புணர்ந்துறங்கும்‌ புன்மை யலது புவியினிடை
மற்றை யெதுவு மின்பமென
மதியேன்‌ பரமா வுனைத் துதியேன்‌
இற்றை நாளுன்‌ னடி யெண்ணி
யிருப்பேற்‌ கென்னீ யெண்ணுவதே.

73. கரியுந்‌ திருவீ டணனுமடத்‌
காகா சுரனுந்‌ துருபதையும்‌
பரியு மிடரா னு ளதநடுங்கிப்‌
பகவ னுனையே பற்றியபோ
துரிய தூய்மை முறை புரிய
வுணர்ந்து .மிலரா லன்னவர்க்கு
விரியு மரிய பெருங்கருணை
வினையேன்‌ தனக்கு முளதாமே.

74. பாந்தண்‌ மணிவாய்‌ விடமருத்திப்‌
படரு மழலி னிடைவீழ்த்திப்‌
படையி னறுத்து மலையுருட்டிப்‌
பதைக்க வதைக்கும்‌ படி.புரிந்துந்‌
தேந் தண்‌ டுளவத்‌ தொடைகமழுஞ்‌
செழுந்தாண்‌ மலரி னழுந்துமனந்‌
திறம்பாச்‌ சிறுவன்‌ மொழி காக்கத்‌
திருத் தூ ணுதித்துத்‌ தனைக்குவிக்குங்‌ காந்தண்‌ மெலியும்‌ விரற்கரத்தான்‌
கருத்தோன்‌ றிடங்காண்‌ டலைவேட்டுக்‌
கனக னுரங்கீண்‌ டுடற்றொடக்காற்‌
கரிய குடரு மெடுத்தணிந்து பூந்தண்‌ மாரி சுரருவந்து பொழிய வெல்லா வுயிர்க்குமளி
பொங்கி வழியுஞ்‌ சிங்கப்பிரான்‌
புகழே நினைவேற்‌ கிகழ்வுளதோ

75. எல்லா வுயிரு மெம்பெருமாற்‌
கினிய வுடலா யிருக்குமுடல்‌
பொல்லா தொருநோ யுறினதனைப்‌
போக்க முயற லுயிர்க்கன்‌ றித்‌
கல்லா வுடற்கு முளதாமோ
கடவுள்‌ கழற்கே யறத் தீர்ந்த
நல்லார்‌ தமக்குத்‌ தாமுயலார்‌
நங்கோ னருளி னடப்பாரே.

76. நம்பிரான்‌ காளிங்க நடன மாடி
நயந்ததனை யநுகரிக்க நயந்தார்‌ தம்மு
ளெம்பிரான்‌ றிருவேட மியைந்தா டன்னி
னிருங்காளி யன்வடிவ மெய்தி னாளே
அம்பிரா னடிக்கமலஞ்‌ சிரமேற்‌ றாங்கு
மருமையினாற்‌ பெருமை மிகப்‌ படைத்தாளன்னாள்‌
வெம்பிரா மனம் பழுத்த விழுத்த பத்தி வினையேற்குத்‌ இனையேனு மேவு மேயோ.

77–வாள் பிடித்த கண்ணியர் தம்‌ மயற்பேயின்‌
பேழ்வாயின்‌ மயங்கி வீழ்ந்து
தேள்பிடித்த கரப்பினுருச்‌ சிதைவேற்குச்‌
சேண்முழுதுஞ்‌ சென்று தாஅய
தாள்பிடித்து வழுத்தவிடாக்‌ கோள்பிடித்‌
சழக்குவிதி தணப்ப தெந்த நாள்பிடித்து நண்ணுறுமோ நண்ணாது
நரகிலெனை நாட்டு மேயோ.

78-ஆசையெலாம்‌ புகவல்ல மனமீ காம
னல்வழியிற்‌ செலவுய்க்கு மாக்கை நாவாய்‌
மாசையெலாம்‌ பண்டமெனச்‌ சுமந்தவாவாம்‌
வன்காற்றான்‌ மறுகுபவ வாரி யோடத்‌
தேசையெலா மிழந்ததன்கண்‌ வினையை யீட்டச்‌
சிறுநாய்க னெனநாயேன்‌ செறிந்தேன்‌ கண்டா
ரோசையெலா மிடவெமனாம்‌.பாறை தாக்கி
யுடையும்போ தென்னாவே னுடைய தேவே.

79-தாழியினுக்குமூயர்‌ வீடு கொ டுத்த முதல்‌ தாமரை யுற்ற திரு மா மகளுக் கழகன்‌
வேழ ம ழைக்குமுன மேவிய ளித்தவரன்‌
வேதமு தற்கலைகள்‌ யாவுமு யிர்த்தபரன்‌
ஏழும ரத்தினையு மூடுரு வச்சிலையின்‌
ஏவை விடுத்தபுய லீரடி யைப்பிடியார்‌
ஆழும்‌ வினைப்பிறவி யாகு மிடர்க்கடலில்‌
ஆவி திகைக்கவுழல்‌ வாரிது சத்தியமே,

80-ஒருகூற னுமை கேள்வ னொளிர்நாபி
யுறையாதி மறை வாண னொடு மாதவர்‌
புருகூதன்‌ முதலாய சுரர்யாரு
மறியாத பொருளாய தனிமாமுதல்‌
குருகூரர்‌ பரகாலர்‌ குளிர்கோதை
யதிராசர்‌ வரயோகி குருதாள்களின்‌
முருகூரு நறைவீசு தமிழோத ,
வெனையாள முனமே செய்‌ தவமேதரோ.

81-எய்தாலும்‌ வால்குழைக்கு மிருஞ்சுணங்கன்‌
பெருங்குணனு மில்லே னின்றேன்‌
பெய்தாலுங்‌ கைப்பறாப்‌ பேய்ச்சுரைக்காய்‌
போல்கின்றேன்‌ பெரு நூறம்மேற்‌
செய்தாலு மீவறியாச்‌ செல்வர்கடைக்‌
குழன்றிடர்கொ டீய னேற்கு
வைதாலும்‌ வீடளிக்கு மால் பதத்தை
முடிசூடி வழுத்த லாமே.

82-தூய நீயுயிர்‌, யாவும்‌ வீடு
துலங்கு மாறருள்‌. செய்யினுஞ்‌
சுத்த சத்துவ ருக்க.லாதொரு
துட்ட னேற்கது கிட்டுமோ
தீய ராவண னேனு நம்மொடு
சேர்க வென்ற தினத்திலே
சீல வீடண னன்றி மற்றெவர்‌
தேவ நின்னடி. சூடினார்‌
பாய மாமுகி லேழும்‌ வாழிய
பாரி லேமழை பெய்யினும்‌
பைந்த ருக்குல மல்ல தங்குள
பட்ட தாருத ழைக்குமே
ஆய யாவ முண்ண நல்குறு
மன்ன சாலையு ளாயினும்‌
அறப்ப சித்தவ ரன்றியேவ
ரருந்தி யின்புறு வாரரோ..

83–நீழலொன்று மிலாத பாலை
நெஞ்சு ரத்தி னிருந்ததோர்‌ நிறை குழைத்தரு வடிய டுத்தவர்‌ நெடு வெ யிற்றுயர்‌ தீர்பபோற்‌:
கேழ லென்றொரு ஞான மேனி
கிளர்ந்து கொண்டுல கங்களைக்‌
கீறு வெண்பிறை மாற மைந்தொளிர்‌
கேடில்‌ கொம்பிடை யேந்தினார்‌
வீழ லென்றும்‌ விழாமை யென்றுமிம்‌
மேதி னிக்கண்‌ மிடைந்த
தீ வினை ந ருங்கெடு குணமெ னுங்கறை
விரவு றாம லிருப்பரால்‌ –
தாழ லொன்றுமி லாது போயவர்‌
தாள்‌ டைந்தவர்‌ யாவருஞ்‌
சார்கொ டும்பவ நோயொ. ழித்துயர்‌
தணவி லின்படை வாரரோ.

84-‘திலத்தளவும்‌ பிறர்க்குதவாத்‌ தீயமன னாலே
சிதலைதின்‌ ற மதலையெனத்‌ இனமெலிந்து சாய்வேன்‌
சலத்தையடை தொறும்வேதத்‌ தனிக்கடவுள் யுன்னைத்‌
தயாவிலியென்‌ பேனென்றன்‌ சழக்குவினை யென்னேன்‌
நலத்த நெறி நடக்கறியா தடி யிழுக்கி வீழ்ந்து நனி துயரான்‌ முனி வெய்தி நடுங்குகர மோச்‌சத்‌
தலத்தை யறை குற்ற தளர்‌ நடைப் பருவக்‌ குழவி
தன்மதியென்‌ றுன்மதியிற்‌ சாலவழ கிற்றே.

85-தேனும்‌ பாலுங்‌ கன்னலும்போற்‌
றெவிட்டாச்‌ சுவைய தீந்தமிழின்‌
யானும்‌ பாட வல்லனென
ஞாலம்‌ புகழ்த னனிவிருப்போ
வானும்‌ பாரு மளந்தசெந்தா
மரைத்தாள்‌ விருப்போ நீயறிவை
மீனும்‌ பாழி யாமையுமாம்‌
விமலா நின்சீர்‌ விளம்புதற்கே.

86. தழலை நிகர்த்த துயர்ப் பிறவி
தழைக்கு நிலனா யயன்‌ றிருத்து
மழலை மொழிப்பெண்‌ மயிலனையார்‌
மயற்பேய்‌ பிடித்த மனக்குரங்குன்‌
கழலை வழுத்தி யமுது சுவை
காணா தினிய கரும்பிருக்க
விழலை வளர்க்கு மாத ரைப் போன்‌
மெலிதல்‌ விதியோ விழுப் பொருளே.

87. விள்ளற்‌ கரிய தொரு வீடும்‌
வேண்டா விறலின்‌ விழுப் பெரியார்‌
கொள்ளக்‌ குறையாப்‌ பெருங்கருணைக்‌
குவாலை முகந்து கொளவளிக்கும்‌
வள்ளல் கடவுள் திருவடிப்பூ மணக்காப் பனுவல் மாலை எலாம்
தள்ளப்‌ படுமா லீமம்சைத்‌
தயங்கு மாலை தனை நிகர்த்த

88-பவத்தைப்‌ புகுவேன்‌ பர மாயான்‌
பாவிற்‌ குழல் போ லுழல்‌வேனோ
தவத்தைப்‌ புகுவார்க்‌ குளதாமுன்‌
றயைதான்‌ றமியேற்‌ கிலதாமே.

89. நீயிருக்குங்‌ கோயிலென.நினையாம
லுடம்பிதனை நெடிய காலம்‌
பேயிருக்கும்‌ பாழ் மனையிற்‌ பெருங்கேடு
பெறவிகழ்ந்து பிறருக்‌ கச்ச
மாயிருக்குந்‌ இீயவினைத்‌ தூறுமண்டி
யழியவிட்டே னந்தோ சேய்க்குத்‌
தாயிருக்கு மாறிருக்குந்‌ தடங்கருணைப்‌
பெருங்கடலே தம்பி ரானே.

90. முத்த மிரங்கு முறுவனல்லார்‌
முலைக்கண்‌ மோத முரணழிந்து
நித்த மிரங்கும்‌ வகையுடைந்த
நெஞ்சப்‌ புணையே துணையாய்ப் போய்‌
நத்த மிரங்கும்‌ பவக்கடலி. னனிமூழம்‌ குவதொன்‌ றல்லாதுன்‌
சித்த மிரங்கும்‌ படிவேறென்‌
செயவ லேன் யான்‌.தெய்வதமே.

91. தேறா வொருவன்‌ றெங்கிளநீர்‌
செவ்வே நிறைந்த தீங்காயைச்‌
செங்கை வருந்த வசைத்த சைத்துச்‌
சிறிதுந்‌ தளும்பா வகையோர்ந்து
மாறா மிதுநீ ரிலதென்று
மருண்டு மாந்த முயலாது வறிதே யிகழ்ந்து விட்டாங்கு
வைய முழுது நிறைந்தெவர்க்கும்‌
பேறா யருளுக்‌ குருவான
பெருந்தே வூனப்‌ பேய்விழிக்குப்‌
பிறங்கா வியல்பா னிலையென்‌ று
பேணா திகழ்ந்து பெரும்பிறிதாய்‌
நீறாய்‌ நிலத்து விளிவேனை
நெடுமாற்‌ கேநீ யடிமையென
நினைவித்‌ தெடுத்தாண்‌ டதுஞான
நிதி போன்‌ மாற னெறித்தமிழே.

92. நெஞ்ச மென்ற கருங்கல்‌ கொண்டிடர்‌
நீர வெம்பவ வாரியி
னீடு செல்ல நினைந்து மூழ்குறு
நீச னேனகி லேசனே
தஞ்ச மென்றன னஞ்ச லென்‌ றரு
டந்தி டாயெனி னின்னையே
தந்தை தாய்கதி யென்று வேதம்‌
விதந்த துந்தவ றாகுமே கஞ்ச நாண்மல ரந்த ணன்றரு
கங்கை மோலிய ஸிந்திரர்‌
காசி லாதப ராச ராதியர்‌
காண வாசைகொள்‌ சேவடி
வஞ்ச னேனும வாவி னாலது
மாறெ னாநினை வாயெனின்‌
மாசு ளேற்கென வேறு பாதம்‌
வகுத்தி லாதென்‌ மாயனே.

93. முழுதுந்‌ தெளிந்து சலனங்கொ ளாது
முதுகுன்‌ றிருந்த சுனையிற்‌ பழுதின்‌ றிருந்த புனலின் கண்‌ வந்து படர்திங்க ணீழல்‌ படல்போற்‌று
ஓழுதொன்று தூய ருளமீது வந்து
சுடர்கின்ற சோதி யெனையே
கழுதென்று நின்ற கடையே னெனாது
கழறந்து வீடு தருமே.

94. வெருடருங்‌ கூற்ற மேற்றவெத்‌ நரகின்‌
விமுமமே கெழுமியும்‌ பல்கா
லுருட.ரும்‌ பிறவி யெனைப்பல கோடி
யுறுவதே பெறுவதாய்ப்‌ பொல்லா
இருடரு ஞாலத்‌ திடராலா முழந்து மிம்மியுங்‌ கழிந்திலா தந்தோ.
தெருடருந்‌ தேவுன்‌ னருளையு மறிக்குந்‌
திறத்‌த்‌ தென்‌ தீவினைத்‌ திரளே.

95. வான் மறந்த காலத்தும்‌ வழங்கு புனற்‌
பேராறு மான நின்னின்‌
றூன்மறந்த யோகியர் தமுளமறந்து
பருகவரு ளொழுகஈ நிற்ப: ,
தான்மறந்து நாவற்று நலிவெல்லா
முணர்ந்திலையே நற்றாய்‌ பி
‘தான்மறந்துந்‌ தான் மறவாள் எனல் பொய்யோ
தரைகடந்த சரணத்‌ தாயே.

96. உனக்குரிய வருட்கடலிற்‌ றிளைக்கும்‌ போதா
வொருதுளியிற்‌ றுளியெடுத்திங்‌ குரைக்கப்‌ புக்க
தெனக்கினிப்ப தென்னுமந்த வேது வன்றி
யாதுமோர்‌ பயன்கருஇ யில்லை கண்டாய்‌
‘தனக்கினிக்கு மெனத்தாய்ப்பா லுண்ப தல்லாற்‌
றன்னுடலம்‌ வளர்ப்பதெனச்‌ சற்றுப்‌ பிள்ளை ‘
மனக்கணினைப்‌ பில்லாத வாறு போல்வேன்‌
வரத்தவத்த ரமுதமென மடுக்குந்‌ தேவே.

97. மத்தேறு முதலாகப்‌ படாதனபட்‌
டுயிர்க்கருள வருமாத்‌ தெய்வம்‌
பித்தேறு மகவுக்கும்‌ பெரிதிடருற்‌
றுணவருத்தும்‌ பெற்றாண்‌ மான
தத்தேறு திருக்கரத்தான்‌ ஞாலமெலா நனியூட்டு நன்றி தேறார்‌ செத்தேறு பாடைமரஞ்‌ செய்பாவ
மென்னென்று செப்பு மாறே.

98-நலத்து மருந்தீங்கே நயக்கும் வெந்தீயேனாக
நாட்டமுதமே பெய்த கலத்துளும் கயப்பே சுவைக்குறும் இயல்பேன்
கண்ணநின்‌ கோயிலைச்‌ சூழும்‌
வலத்துளு நின்னை மதித்திடா துலக
வாழ்க்கையே மனக்கொள்வேன்‌ வைகு
நிலத்துளு மினிப்போ நீணர குளும்யா
னெடும்பொறை யாகுவே னம்மா.

99. மையோ மணியோ வெனுமேனி
மாயோனடித் தா மரை வாழ்த்தி
மெய்யோ புளக மரும்பவுளம்‌
வெந்தீ மெழுகின்‌ விரைந்துருகக்‌
கையோ தலைமேற்‌ குவித்தொருகாற்‌
கண்ணீர்‌ கலுழக்‌ கண்டறியேன்‌
ஐயோ வவன்ற னருட்பேரா
ற்ருந்த விழைந்தே னழகிதன்றே.

100. எள்ளற்‌ குரிய மனப்பேயார்க்‌
கேவற்‌ றொழில் செய்‌ திளைப்பேனைக்‌
கொள்ளக்‌ கருதிற்‌ -கொடும்பாவக்‌
கோட்டை யகத்தேன்‌ குணமிலென் று
தள்ளக்‌ கருதி னவன்றாளே
சரணம்‌ புகுந்தே னிவையிரண்டால்‌
விள்ளற்‌ கரிய விழுக்கடவுட்‌
கடியே னிடரே விளைத்தேனே.

101. தாய்வ யிற்றிடை வைத்த தார்கரு
தான ருத்தி வளர்த்ததார்‌ தலையி னிற்பொறி யிட்ட தார்நல
தரையி னிற்பெற விட்டதார்‌
பாய்வ யிற்றுயர்‌ போது தாய்முலை
பால்பி லிற்ற விழைத்ததார்‌
பளக றப்பயி றற்கெ னப்பல
பாடை மைப்புவி நட்டதார்‌
நோய்வ யிற்புக லுற்ற காலையி
னொய்தெ டுத்து நிறுத்ததார்‌  நுவலுக்கடை யுதரம்‌ வைத்துயிர்‌
நுதலி யற்பொ டணைத்ததார்‌
நாய்வ யிற்றிகழ்‌ குணமி லேனையும்‌
நன்னெறிச் செல  வுய்த்ததார்‌
நான்மு. கத்தொரு சேய்படைத்தொளிர்‌
நாபி மெய்ப்பொரு ளன்‌ றியே.

102. விழிவழியே தெரிகின்ற பேய்த்தேரை
நீரென்று விழைவுற்‌ நாரும்‌ குழிவழியாய்‌. வழிகுழியாங்‌ குருட்ருநல்‌ லொளியரெனக்‌ குறித்துக்‌ கூறப்‌
பழிவழியே யொழுகியிருட்‌ பாழ்ங்குழியில்‌
வீழ்கிற்பேன்‌ பரமா நிற்கே
வழிவழியா யுளவடியார்‌ மாந்துதிரு
வருட்காசை வைக்க லாமே.

103. பத்திச்‌ சுவையே பழுத்தமனப்‌
பகவ ரமுதப்‌ பழம்பாடல்‌
நத்திச்‌ சுவைதேர்‌. திருச்செவிக்கு
‘நவில்வார்‌ நாவுங்‌ கயக்கும்வெஞ்சொல்‌
வித்திச்‌ சுவையே நவையாக
விளைத்த வருத்த மித்தனைக்கு
முத்துச்‌ சுவைநல்‌ கருட்கடவுண்‌
முனியா யிதுவ முன்னருளே.

104. பீட்டைப்‌ புரிந்த பெருந்தமிழிற்‌
பிறவா நெறியே நனிகாட்டி
நாட்டைப்‌ புரிந்த தெருட்பெரியார்‌
நயந்த கடவுட்‌ பத்திமைதான்‌
கேட்டைப்‌ புரிந்தேற்‌ கணுவேனுங்
இடையா திவைகொண்‌் டுளதெனின்யான்‌
பாட்டைப்‌ புரிந்து படி.றியற்றிப்‌
பாரை மயக்கும்‌ பாதகனே.

105.– செகத்தைப்‌ புரக்கக்‌ கவித்த முடி
இருந்த வெழுதித்‌ தேசெழுதேன்‌
செந்தா மரைக்க ணெழுதியருட்‌
டேனார்‌ வெள்ளந்‌ தெரித்தெழுதேன்‌
முகத்தைப்‌ புதுக்கி யெழுதிமணி
மூறுவ னிலவை முகிழ்த்தெழுதேன்‌
மொய்யா ரகல மெழுதிமலர்‌
முதல்வி கோயின்‌ முடித்தெழுதேன்‌.

106. அகட்டைப்‌ புனைய வெழுதியூல
கனைத்து மடங்கு மாறெழுதேன்‌
அணியார்‌ நாபி யெழுதிமறை
வவனார்‌ வரவை யமைத்தெழுதேன்‌
இகத்தைப்‌ பரத்தை யளிககுமடி வயெழுதி யெமைக்காப்‌ பதையெழுதேன்‌
எழுதா மறைக்கு மரியவனை
யெழுதி யேமாந்‌ திருந்தேனே

707. தன்னையே தந்தையெனச்‌ சார்ந்தார்க்கோர்‌ தந்‌ தையையும்‌
பின்னையே நல்காப்‌ பெருங்கடவுள்‌–முன்னையே
தன்னையே தந்தையெனச்‌ சாரார்க்‌ கநந்தபிதா
என்னையோ நல்கு மியல்பு.

108, கொலைக்களிற்றிற்‌ கொண்ட குளிர்முத்தை யுப்பு
விலைக்குக்‌ கொடுத்த. விதமே–நிலைத்ததமிழ்ப்‌
பாவைப்‌ பிறர்க்குப்‌ பகர்ந்த பிழை, தீர
நாவைக்‌ கழுவினே னான்‌.

109. கற்ற நயித்துருவ காகுபனி. ராகவன்யான்‌.
சொற்ற தமிழ்க்குச்‌ *சுவைதேறார்‌–உற்ற
ஒருங்குலக மெல்லா மொருவாயி னுண்ட
பெருங்கடவுள் அல்லாற்‌*பிற்‌:

*கேள்வியாற்‌. செவிகண்முற்றுந்‌’ தோட்டவருணர்‌
வினுண்ணு மமுதத்தின்‌… சுவையாய்‌ நின்றான்‌” என்பது
கம்பநாடர்‌. . திருவாக்கு… (இராமாவதாரம்‌. ஆரணிய.சவரி பிறப்‌. 7)

——————-

ஸ்ரீ ராமப்பாட்டு

மதியிருக்குஞ்‌ சடைச்சிவனார்‌ மனைவியினுக்‌
குபதேசம்‌ வகுத்துக்‌ கங்கை
நதியிருக்குந்‌ தண்காசி நகர்மரிக்கு
மூயிர்க்கெல்லா நல்கக்‌ கஞ்சப்‌
பொதியிருக்கு மறைமுதல்வன்‌ பொறியழித்து
வீடளிக்கும்‌ பொற்பிற்‌ றென்று
விதியிருக்கு முடிவழுத்து மெய்ந்நாமம்‌
ராமவென விளம்பு வாயே.

2-தாதையார்‌ நாரதற்குத்‌ தந்த நாமம்‌
தவமுனிவன்‌ வான்மீகி சாற்று நாமம்‌
மேதையார்‌ ஞானியார் தாம்‌ விள்ளு நாமம்‌
விபீடணற்குப்‌ பேறருள மிக்க நாமம்‌
தீதையா ருற்றாலுந்‌ தீர்க்கு நாமம்‌
தேவரெலாஞ்‌ செபிக்கின்ற தெய்வ நாமம்‌
சதையா ருயிர் தளிர்க்கச்‌ செய்க நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

3. குரு வடிவ வசிட்டன் மகிழ்‌ கூர்ந்த நாமம்‌
கோசிகனார்‌ வழிபட்டுக்‌ கொண்ட நாமம்‌
கருவடியிற்‌ புகாநெறியே காட்டு நாமம்‌
கவந்தனொடு விராதனுயிர்‌ களிக்கு நாமம்‌
மருவடிய ரெல்லாரும்‌ வாழ்த்து நாமம்‌
மந்திரங்கட்‌ கரசெனவே வகுத்த நாமம்‌
திருவடிக்கின்‌ னமுதாத்தித்‌ திக்கு நாமம்‌
சீராம நாமமெனச்‌.செப்பு வாயே.

4. இகத்துக்கும்‌ பரத்துக்கு மேற்ற நாமம்‌
* இருக்கனைத்து நாந்தியினி னியம்பு நாமம்‌
மகத்துக்குப்‌ புகல்கின்‌ற மகிமை நாமம்‌
மாதவயோ கியருளத்தே வரைந்த நாமம்‌
முகத்துக்கின்‌ சுவைத்தாக முளைத்த நாமம்‌
மூன்னொரு புள்‌ சிறை முளைக்க மொழிந்த நாமம்‌
செகத்துக்குந்‌ திவியினுக்குஞ்‌ சிறந்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

* – ராமபத்ரன்‌ விஷயமான “பத்ரங்கர்ணேபி’ என்னுஞ்‌
சுருதியே நாந்தியாதலால்‌ இங்ஙனங்‌ கூறியது.

5. உலகினிலெட்‌. டைந்தினுக்கு ளூயிரா நாமம்‌
உறங்காத வில்வியுளத்‌ துறைந்த நாமம்‌
பலகலைதேர்‌. சரபங்கர்‌ பன்னு நாமம்‌ பாய புகழ்க்‌ கவியரசர்‌ பாடு நாமம்‌
இலகலைவாமழ்‌ வருணன்மகிழ்ந்‌ தேத்து நாமம்‌
இத்திரசித்‌ தனை வதைக்க வெண்ணு நாமம்‌
சிலவிலங்குஞ்‌ செப்பவருள்‌ செய்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.–எட்டு -திருமந்திரம்-அஷ்டாக்ஷரம் ஐந்து சிவ பஞ்சாக்ஷரம்

6. கல்லாருங்‌ கற்றாருங்‌ கற்கு நாமம்‌
* கங்கை முதற்‌ நீர்த்தபலன்‌ காட்டு நாம
வில்லாரும்‌ வீரர் செயம்‌ வேண்டு நாமம்‌
மெய்ம்மைக்கே பரியாய மேய நாமம்‌
சொல்லாருஞ்‌ சொலவேட்குந்‌ தூய நாமம்‌
தோமரக்க ரளத்தச்சந்‌ தோற்று நாமம்‌
செல்லாரு மழையினருள்‌ சிறக்கு நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.—*-தீர்த்த ஸ்நாநம் அநந்த கோடி பலதம் ஸ்ரீ ராம நாம அம்ருதம்

7-அரிய குகப்‌ பெருமாளா தரித்த நாமம்‌
ஆயிர நா மப்பயனு மளிக்கு நாமம்‌
பெரியதிரு வடி.பரவும்‌ பெரிய நாமம்‌
பெரும் புண்ணி யப் பயனாப்‌ பிறங்கு நாமம்‌
உரியதந்தை யங்கதனுக்‌ கோது நாமம்‌
ஓன்னாரும்‌ வழுத்துபுக முற்ற நாமம்‌
தெரியவழற்‌ தடவுள் முனந்‌ தெளித்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

* “நிற்கின்ற செல்வம்‌ வேண்டி நெறி நின்ற வுயிர்க ளெல்லாங்‌ கற்கின்ற திவன்ற னாமங்‌ கருதுவ திவனைக்‌
சுண்டாய்‌’” என்று அங்கதனுக்‌ குரைப்பது காண்க.

8.–இசையியற்கண்‌ வாயார-வேத்து நாமம்‌
இம்மையே நன்மை தரு மினிய நாமம்‌
தசையறச் சு தீக்கணற்கு நயக்கு நாமம்‌
நமபட.ரு மிறைஞ்சி யகல்‌ நல்ல நாமம்‌
பசையறுத்த பரதனுளம்‌ பதித்த நாமம்‌
பனிமொழியா ளகலிகைநற்‌ பயன்கொ ணாமம்‌
திசையனைத்துந்‌ தொழவுரைத்துத்‌ திருந்து நாமம்‌
ராம நாமமெனச்‌ செப்பு வாயே.–இசைக்கண்ணும்‌ இயற்கண்ணும்‌ என்க.

9. மலய முனி யுலகறிய வழுத்து நாமம்‌
மலரயனே முதற்றேவர்‌ வாழ்த்து நாமம்‌
அலையுமுயிர்க்‌ கெலாமபய மளிக்கு, நாமம்‌
அத்திரி மா முனியறித்த வமுத நாமம்‌
நிலையில் பிறுப்‌ யற வெருவை நினைந்த நாமம்‌
நீண் நகரம் புகுவார் தாம் நினையா நாமம்
சிலைவலவன்‌ சத்துகுக்கன்‌ தேறு தாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

10. எத்திக்கு மெழுமுனிவ ரேத்து நாமம்‌
எவ்வுயிர்க்குஞ்‌ சீவனமா வெண்ணு நாமம்‌
பத்திக்கு மூலமெனப்‌ பன்னு நாமம்‌
பரமசிவ னுமையவட்குப்‌ பகர்ந்த நாமம்‌ முத்திக்கு வித்தாக முன்னு நாமம்‌
முதியவரு மிளையவரு மொழியு நாமம்‌
சித்திக்கு மந்திரமாத்‌ தேர்ந்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

17, * தாரணியிற்‌ கலிதெறுவே தாந்த நாமம்‌
சபரிநெடுங்‌ காலமுளஞ்‌ சமைத்த நாமம்‌
பேரணியி னவர்க்குநலம்‌ பேணு நாமம்‌
பிரிய வந சூயை புகழ்‌ பேசு நாமம்‌
ஏரணியுந்‌ திரிசடைக்கு மினிய நாமம்‌
யான்சொலவு மெளிவந்த வின்ப நாமம்‌
சீரணியு முமையவள்முன்‌ றெளிந்த நாமம்‌
சீராம நாமமென்று சேர்க வீடே.

காராரு மேனிக்‌ கருணாகர மூர்த்திசக்
காரா தனையிதுவா வாதரித்து–நாரானே
சீராம நாமத்‌ திருப்பாட்‌ டிவணுரைத்தான்‌-மாரா கவன் கவிஞர் மன்

வரி சிலை நெடியேபன் பேர் படைத்தவர்க்கு
அடியவர்க்கு அடியரும் பெறுவார்
வேர் படைத்த எம் பிறவி யாற்றுவக் குணா வீடு -கம்பர்

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ரா. இராகவையங்கார்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –