Archive for June, 2022

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் மாத திருநக்ஷத்ரம் –ஸ்ரீ ஸ்வாமி எம்பெருமானார் மாத திரு நக்ஷத்ரம்–ஸ்ரீ நல்லான் வைபவம் 🙏

June 2, 2022

இன்று மிருகசீரிஷம்…..

ஸ்வாமி திருக்கச்சி நம்பிகள் 🙏

மாத திருநக்ஷத்ரம்

இவர் பூவிருந்தவல்லியில் அவதரித்தவர்.
காஞ்சி பூர்ணர் மற்றும் கஜேந்திரதாசர் என்றும் அழைக்கப்பட்டார்.

இவர் தினமும் காஞ்சி தேவப்பெருமாளுக்கு திருவாலவட்டம் வீசும் கைங்கர்யம் செய்து வந்தார்.

அந்தக் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருக்கும் அதே சமயம் நேரடியாக தேவப்பெருமாள் மற்றும் பெருந்தேவித் தாயாருடன் உரையாடவும் வல்லவர்.

வாரணாசி யாத்திரையின் போது தன்னைக் கொல்ல நடந்த சதியிலிருந்து தப்பித்தபின் காஞ்சி திரும்பிய இளையாழ்வார் (ஸ்ரீராமானுஜர்),

தன் தாயாரின் அறிவுரையின்படி ஆளவந்தாரின் சீடரும் காஞ்சி தேவப்பெருமாளின் அந்தரங்க கைங்கர்யபரரான

திருக்கச்சி நம்பிகளைத் தன்னுடைய வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டார்.

நம்பிகள், இளையாழ்வாரைக் காஞ்சி தேவப்பெருமாள் கோயிலிலிருந்து சிறிது தூரத்திலுள்ள சாலைக்கிணற்றிலிருந்து

தினமும் தீர்த்தம் கொண்டு வந்து காஞ்சி தேவப்பெருமாளுக்கு திருமஞ்சன தீர்த்த கைங்கர்யம் செய்யும்படி கூறினார்.

இளையாழ்வாரும் அந்த ஆணையை மகிழ்வுடன் ஏற்று தினமும் தீர்த்த கைங்கர்யத்தைச் செய்து வந்தார்.

பெரிய நம்பிகள் ஆளவந்தாரின் விருப்பத்தின் பேரில், ஆளவந்தாருக்கு அடுத்தபடியாக இளையாழ்வாரை ஆசாரியராக  நியமிக்கவும்,

அதன் பொருட்டு இளையாழ்வாரை சம்பிரதாயத்தில் ஈடுபடுத்தவும் எண்ணம் கொண்டு காஞ்சிபுரம் விஜயம் செய்தார்.

பெரிய நம்பிகள், திருக்கச்சி நம்பிகளை அணுகித் தான் வந்த காரியத்தை எடுத்துரைத்தார்.

திருக்கச்சி நம்பிகளும் அதற்கு மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு பெரிய நம்பிகள் ஆளவந்தாரின்  பெருமைகளை இளையாழ்வாருக்கு  எடுத்துரைத்தார்.

பெரிதும் ஈர்க்கப்பட்ட இளையாழ்வார் ஆளவந்தாரை சரணடையும் பொருட்டு பெரிய நம்பிகளுடன் ஸ்ரீரங்கம் புறப்பட்டார்.

ஆனால் ஆளவந்தாரை இளையாழ்வார் சந்திப்பதற்குள் ஆளவந்தார் திருநாட்டுக்கு எழுந்தருளிவிட்டார்.

இதனால் மனமுடைந்த இளையாழ்வார் காஞ்சிபுரம் திரும்பி, தீர்த்த கைங்கர்யத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்..

நாளடைவில் இளையாழ்வாருக்கு திருக்கச்சி நம்பிகளிடம் மிகுந்த ஈடுபாடு ஏற்பட அவரையே சரணடைந்து தனக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்துவித்துத் தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.

திருக்கச்சி நம்பிகள் தான் பிராமணன் அல்லாததால் தனக்கு ஆசார்யனாகும் தகுதி இல்லை என்றும் அதனால் பஞ்ச சம்ஸ்காரம் செய்துவைக்க இயலாது என்றும் தன்னுடைய இயலாமையை எடுத்துக் கூறினார்.

சாஸ்திரங்களில் தனக்கு இருந்த அதீத நம்பிக்கையினால் திருக்கச்சி நம்பிகளின் கூற்றை இளையாழ்வார் வருத்தத்துடன் ஏற்றுக்கொண்டார்.

ஒரு முறை திருக்கச்சி நம்பிகளின் உச்சிஷ்டத்தை (அவர் உண்ட பிரசாதத்தின் மிகுதியை) ஸ்வீகரிக்க விரும்பிய இளையாழ்வார், திருக்கச்சி நம்பிகளைத் தன் இல்லத்திற்கு விருந்திற்கு வருமாறு அழைத்தார்.

திருக்கச்சி நம்பிகளும் இளையாழ்வாரின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

மிகுந்த மகிழ்ச்சியடைந்த இளையாழ்வாரும் தன் மனைவியிடம் விருந்துக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு தன்னுடைய தீர்த்த கைங்கர்யத்துக்காகச் சென்றிருந்தார்.

அவர் வீடு திரும்புவதற்குள் திருக்கச்சி நம்பிகள் இளையாழ்வார் வீட்டிற்கு வந்து உணவருந்திவிட்டு சென்று விட்டார்.

இளையாழ்வாரின் மனைவி இளையாழ்வார் வீடு திரும்புவதற்குள், திருக்கச்சி நம்பிகள் (அவர் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்பதால்) சாப்பிட்ட இலையை அப்புறப்படுத்தி விட்டு, அவர் சாப்பிட்டு முடித்த இடத்தையும் சாணமிட்டு மெழுகி சுத்தம் செய்தபின் தானும் குளித்து விட்டார்.

தன் கைங்கர்யத்தை முடித்து விட்டு வீடு திரும்பியதும் திருக்கச்சி நம்பிகளின் உச்சிஷ்டத்தை உண்ண எண்ணியிருந்த இளையாழ்வாருக்கு திருக்கச்சி நம்பிகளின் மகிமையை அறியாமல் அவரது குலத்தின் தாழ்ச்சியை மட்டும் நினைத்து தன் மனைவி தஞ்சம்மாள் செய்த செயல்கள் மிகுந்த ஏமாற்றத்தையும் மன வருத்தத்தையும் அளித்தன.

நம்பிகள் தேவப்பெருமாளுடன் நேரிடையாக உரையாட வல்லவர் என்பது அனைவரும் நன்கு அறிந்திருந்த உண்மை. இளையாழ்வாரின் மனதில் நெடுநாட்களாக சில சந்தேகங்கள் இருந்துவந்தன.

அவர் திருக்கச்சிநம்பிகளை அணுகி தன்னுடைய சந்தேகங்களுக்கான விடைகளை (குறிப்பு: ஸ்ரீராமானுஜர் ஆதிசேஷனுடைய மறு அவதாரம் ஆகியபடியால் அனைத்தும் அறிந்தவர். என்றாலும் பூர்வாசார்யர்களின் ஸ்ரீஸூக்திகளை ஸ்தாபிக்கும் முகமாக)   தேவப்பெருமாளிடமிருந்து பெற்றுத்தருமாறு வேண்டினார்.

அன்றைய தினம் இரவு தன்னுடைய கைங்கர்யங்களை முடித்திருந்த நம்பிகளை தேவப்பெருமாள் வழக்கமான மிகுந்த கருணையுடன் நோக்கினார்.

தேவப்பெருமாள் அனைத்தும் அறிந்தவர் ஆகையால் நம்பிகளை நோக்கி “நீர் ஏதாவது கூற விரும்புகிறீரா?” என்று வினவினார்.

நம்பிகளும் பெருமாளிடம் இளையாழ்வாரின் மனதில் சில சந்தேகங்கள் இருப்பதாகவும் அதற்கான விளக்கங்களைத் தந்தருளுமாறு வேண்டினார்.

உடனே தேவப்பெருமாளும் “நான் கலைகளைக் கற்பதற்காக ஸாந்திபினி ஆஸ்ரமத்திற்கு சென்றதைப் போல (ஆதிசேஷ அவதாரமான) அனைத்து சாத்திரங்களிலும் வல்லவரான  இளையாழ்வாரும் தன்னுடைய சந்தேகங்களுக்கான விடைகளை என்னிடம் கேட்கிறார்” என்று கூறினார்.

பிறகு தேவப்பெருமாளும் அனைவராலும் “
ஆறு வார்த்தைகள்” என்று பிரபலமாக அழைக்கப்படும் (ஆறு கட்டளைகளை) நம்பிகள் வாயிலாக இளையாழ்வாருக்கு அனுக்கிரஹித்தருளினார். அவைகள்:

அஹமேவ பரம் தத்வம் – நானே எல்லாவற்றுக்கும் மேலான மெய்ப்பொருள்

தர்சனம் பேத ஏவ – ஜீவாத்மாக்களும்/அசேதனங்களும் என்னிலிருந்து வேறுபட்டவை (அவை என்னுடைய சரீரமாக விளங்குபவை)

உபாயம் ப்ரபத்தி –
“என் ஒருவனையே தஞ்சமாகப் பற்றுவாய்” என்னிடத்தில் சரணம் அடைவது ஒன்றே என்னை அடைவிக்கும் வழி.

அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம் – தங்களின் மரணத்தருவாயில் இருக்கும் சரணாகதர்களுக்கு, என்னைப்பற்றிய சிந்தனை கட்டாயமில்லை. வராஹ சரம ஸ்லோகத்தில் நானே அறிவித்தது போல, உன்னுடைய அந்திம காலத்தில் நானே உன்னைப்பற்றிய சிந்தனையை ஏற்கிறேன். (நம் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யர்கள் நமக்கு காட்டிச்சென்ற இனிமையான பாதை – நாம் எல்லா நேரத்திலும் நம்முடைய ஆசார்யரைப் பற்றியே சிந்தித்தபடி இருக்கவேண்டும்)

தேஹாவஸானே முக்தி –சரணாகதர்கள் தற்போதுள்ள தங்களுடைய இந்த சரீரத்தின் முடிவிலேயே முடிவில்லாத பரமாத்மாவிற்கு கைங்கர்யம் செய்வதற்கான பரமபதத்தை அடைவர்

பூர்ணாசார்ய பதாச்ரிதா – மஹாபூர்ணரை (பெரிய நம்பிகளை) ஆசார்யனாக ஏற்றுக்கொள்வாயாக

திருக்கச்சி நம்பிகள் இளையாழ்வாரிடம் சென்று பகவானின் இந்த ஆறு கட்டளைகளையும் தெரிவித்தார்.

இளையாழ்வாரும் திருக்கச்சி நம்பிகளின் பேருதவிக்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்.

அதே சமயம் இளையாழ்வாரும் தன்னுடைய விருப்பமும் அதுவே என்று கூற, திருக்கச்சி நம்பிகள் பகவானின் திருவுள்ளமும் இளையாழ்வாரின் திருவுள்ளமும் ஒரே விதமாக இருப்பது கண்டு பேர் உவகை எய்தினார்

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இளையாழ்வாரும் பெரிய நம்பிகளை ஆசார்யனாக ஏற்று மதுராந்தகத்தில் பஞ்சஸம்ஸ்காரம் செய்துகொண்டு ஸ்ரீராமானுஜர் என்ற திருநாமத்தை ஏற்றார்.

இவற்றைத்தவிர, திருக்கச்சி நம்பிகளைப் பற்றிய விவரங்கள் பூர்வாசார்யர்களின் க்ரந்தங்களில் காணப்படவில்லை.

வியாக்யானங்களில் அவரைப்  பற்றிய சில குறிப்புகள் காணப்படுகின்றன. அவை:

பெரியாழ்வார் திருமொழி – 3.7.8 – திருவாய்மொழிப் பிள்ளை ஸ்வாபதேச வியாக்யானம் – திருக்கச்சி நம்பிகள் தேவப்பெருமாளிடம் எம்பெருமானுக்கு உகந்த திருநாமம் ஒன்றை தனக்கு சூட்டுமாறு வேண்டி நிற்க, (கஜேந்திராழ்வான் காஞ்சியில் தேவபெருமாளை வழிபட்டதால், கஜேந்திராழ்வான் தேவப்பெருமாளுக்கு மிகவும் பிடித்தமானவர் என்பதால்) எம்பெருமானும் கஜேந்திரதாஸர் என்ற திருநாமத்தை திருக்கச்சி நம்பிகளுக்கு சூட்டி மகிழ்ந்தார்.

திருவிருத்தம் – 8 – நம்பிள்ளை ஈடு – ஒரு முறை எம்பெருமானார் சில ஸ்ரீவைஷ்ணவர்களுடன் கோஷ்டியாக அமர்ந்திருந்தார். திடீரென திருக்கச்சி நம்பிகளைப் பற்றிய நினைவு வந்தவராக

கோஷ்டியை நோக்கி யாராவது ஒருவர் காஞ்சி சென்று திருக்கச்சி நம்பிகளின் நலம் விசாரித்து வர இயலுமா என்று வினவினார்.

அப்போது கோஷ்டியில் ஒருவரும் முன்வரவில்லை. மறுநாள் காலை
பெரிய நம்பிகள் (மஹாபூர்ணர்) எம்பெருமானாரை அணுகி எம்பெருமானாருக்குத் திருவுள்ளாமானால் தான் காஞ்சிபுரம் சென்று வருவதாகக் கூறினார்.

எம்பெருமானாரும் மிக்க மகிழ்ச்சியடைந்தவராக பெரிய நம்பிகள் தன் மீது பூரண அதிகாரம் உள்ளவர் ஆகையால் தன் விருப்பத்தை நிறைவேற்றும் தகுதியும் அவருக்கே உள்ளது என்று கூறி அதற்கு சம்மதித்தார்.

பெரிய நம்பிகளும் காஞ்சிபுரம் சென்று திருக்கச்சி நம்பிகளைச் சந்ததித்து அவர் நலம் பற்றி விசாரித்துவிட்டு உடனடியாக ஸ்ரீரஙத்திற்குத் திரும்பத் தயாரானார். திருக்கச்சி நம்பிகள் எதிர் வரும் உத்ஸவத்தைக் காரணம் காட்டி பெரிய நம்பிகளை சில நாட்கள் கழித்து செல்லலாமே என்று கூறினார்.

பெரிய நம்பிகளோ, காஞ்சிபுரத்திற்கு வர ஒருவரும் முன்வராததாலேயே தான் வர நேர்ந்ததையும், மேலும் தான் வந்த காரியத்தின் நோக்கம் திருக்கச்சி நம்பிகளின் நலம் பற்றி விசாரித்தல் மட்டுமே அது நிறைவேறிவிட்டபடியால் உடனே கிளம்ப வேண்டும் என்று கூறினார்.

எம்பெருமானாரின் ஆசார்யரான பெரிய நம்பிகளே திருக்கச்சி நம்பிகளை சந்திப்பதற்காக காஞ்சிபுரம் சென்ற வந்ததிலிருந்து திருக்கச்சி நம்பிகளின் பெறுமையை நாம் நன்கு அறியலாம்.

ஆசார்ய ஹ்ருதயம் – 85ம் சூர்னிகை –

த்யாக மண்டபத்தில் ஆலவட்டமும் கையுமான அந்தரங்கரை வைதிகோத்தமர் அனுவர்த்தித்த க்ரமம் –

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ப்ராமண குலத்தில் பிறக்காத பாகவதர்களின் பெருமைகளைப்பற்றிக் குறிப்பிடும்போது, தியாக மண்டபம் என வழங்கப்படும் காஞ்சிபுரத்தில் தேவப்பெருமாளுக்கு ஆலவட்டம் வீசிக் கைங்கர்யம் செய்து வந்தவருக்கு (திருக்கச்சி நம்பிகளுக்கு) மிக உயர்ந்த வைதிகோத்தமரான (எம்பெருமானாரே) சேவை செய்ததை இவ்வாறாக குறிப்பிடுகிறார்.

மாமுனிகள் தன்னுடைய தேவராஜ மங்களம் 11வது ஸ்லோகத்தில் திருக்கச்சி நம்பிகளின் மேன்மையையும், தேவப்பெருமாளுக்கு அவர் மீதுள்ள பரிவையும் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ காஞ்சிபூர்ணமிச்ரேண ப்ரீத்யா ஸர்வாபிபாஷனே
அதிதார்ச்சாவ்யவஸ்தாய ஹஸ்தத்ரீஸாய  மங்களம்

திருக்கச்சி நம்பிகளிடம் உள்ள பேரன்பினால் தன்னுடைய அர்ச்சாவதாரப் பெருமைகளை குலைத்துக்கொண்டு உரையாடிய ஹஸ்திகிரீசனுக்கு ஸர்வ மங்களங்களும் உண்டாகட்டும்.

மாமுனிகள், இந்த ச்லோகத்தின் மூலம் தேவப்பெருமாளுக்கும் திருக்கச்சி நம்பிகளுக்கும் இடையே உள்ள உறவை தெளிவுபடுத்துவதுடன், நாமும் பக்தர்களை முன்னிட்டுக்கொண்டே பகவானை வழிபடவேண்டும் எனத் தெளிவுபடுத்துகிறார்.

திருக்கசி நம்பி தனியன்

தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சி பூர்ணம் உத்தமம்
ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம்
🙏🙏🙏🙏

இவர் அருளிச் செய்த
தேவராஜஅஷ்டகம்
என்னும் அற்புத ப்ரபந்தத்தின் மூலம் இவரின் அர்ச்சாவதார அனுபவத்தை அனுபவிக்கலாம் .. 🙏


இன்று திருவாதிரை..

ஸ்வாமி எம்பெருமானார் மாத திரு நக்ஷத்ரம்🙏

ஸகல சாஸ்த்ரங்களுக்கும் ஸங்க்ரஹம் திருவஷ்டாக்ஷரம்.. அதனுடைய பரம தாத்பர்யமாயும்,

ஆழ்வார்களுடைய திவ்ய ப்ரபந்தங்களின் ஸாரார்த்தமாயும்,
ஸ்ரீ மதுரகவிகளுடைய உக்தியாலும்
அநுஷ்டாநத்தாலும்
ப்ரகாசிதமாயும், நம் பூர்வாசார்யார்களின் உபேதச பரம்பரையாலே ப்ராப்தமாயும் சேதநர்களனைவர்க்கும் இன்றியமையாத ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களின் நிஷ்க்ருஷ்ட வேஷமாயும், பரம ரஹஸ்யார்த்தமாயு மிருப்பது சரம பர்வ நிஷ்டை. அஃதிருக்கும்படியை த் திருவரங்கத்தமுதனார்க்கு எம்பெருமானார் தமது நிர்ஹேதுக க்ருபையினாலே கூரத்தாழ்வான்
திருவடிகளிேல இவரை ஆச்ரயிப்பித்தருளி இவர் முகமாக உபேதசித்தருளினார். அங்கனம் உபேதச ப்ராப்தமான அந்தச் சீாிய பொருளை இவ்வமுதனார் தாம் அநவரத பாவநை பண்ணி எம்பெருமானார் திருவடிகைளை இடைவிடாது ஸேவித்துக்கொண்டு போந்தராய் அவருடைய திருக்கல்யாண
குணங்கைளத் தமது பத்திப் பெருங்காதலுக்குப் போக்குவீடாகப் பேசி அநுபவித்தே தீரவேண்டும்படியான நிலைமை தமக்கு உண்டானமையாலும் சரமபர்வநிஷ்டையே சீாியதென்கிற பரமார்த்தத்தைச் சேதநர்கட்கு எளிதில் உணர்த்த வேணுமென்கிற க்ருபாமூலகமான கருத்தினாலும் தாம் எம்பெருமானாருடைய திவ்யகுண சேஷ்டிதாதிகளை ப்ரேமத்துக்குத் தகுதியாகப் பேசுகிற பாசுரங்களாேலே அவருடைய வைபவங்களை அனைவர்க்கும் வெளியிடா நின்றுகொண்டு முன்பு ஆழ்வார் திருவடிகளுக்கே
அற்றுத்தீர்ந்த மதுரகவிகள் தமது நிஷ்டையைக்கூறும் முகத்தாலும் பிறர்க்கு உபேதசிக்கும் முகத்தாலும் உஜ்ஜீவநத்துக்கு உபயுக்தமான அர்த்தத்தை லோகத்தில் வெளியிட்டருளினதுபோல, இவர் தாமும் அவ்வகைகளாேலே ஆசார்யாபிமாந
நிஷ்டர்க்கு அறிந்து கொள்ளத்தக்க அர்த்தங்களையெல்லாம் மிக்க சுருக்கமும் மிக்க விாிவுமின்றி நூற்றெட்டுப் பாசுரங்கள் கொண்ட இத்திவ்ய ப்ரபந்த முகத்தால் அருளிச்செய்கிறார்.. . 🙏

நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,* நிறை வேங்கடப்பொற்
குன்றமும்* வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்*
உன்தனக்கு எத்தனை இன்பந் தரும் உன் இணைமலர்த்தாள்*
என்தனக்கும் அது,* இராமாநுச! இவை ஈந்தருளே……

எம்பெருமானாரே!
நிலை நின்ற பெரும்புகழும் அதிகமான நீர்ப்பெருக்கும் நிறைந்துள்ள திருவேங்கடமென்னும் அழகிய திருமலையும்
ஸ்ரீவைகுந்தமாகிய திருநாடும்
கொண்டாடத்தக்க திருப்பாற்கடலும்
தேவரீருக்கு
எவ்வளவு ஆநந்தத்தை விளைக்குமோ,
தேவரீருடைய உபய பாதாரவிந்தங்கள்
எனக்கும் அவ்வளவு ஆநந்தத்தை உண்டாக்கும்..
இப்படிப்பட்ட திருவடிகளை
அடியேனுக்குத் தந்தருள வேணும் ..

கீழ்ப்பாட்டில்…

அமுதனார் விளக்கிய பரமபக்தியை அறிந்த எம்பெருமானார் மிகவும் உகந்தருளி *இவர்க்கு
நாம் எதைச் செய்வோம்* என்றிருப்பதாகக் கண்ட அமுதனார், “ஸ்வாமிந்! அடிேயேனுக்குத் தேவரீர் வேறொன்றும்
செய்தருள வேண்டா; அடிேயனுக்கு ஸர்வஸ்வமாகிய இந்தத் திருவடித் தாமைரகைளத் தந்தருள வேண்டுமத்தனை
என்கிறார். … 🙏

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

—————

நல்லான்  வாழ்ந்தது கர்நாடக ராஜ்யத்தில். அப்புறம் காஞ்சிபுரம், திருமலை என்று பல இடங்களில் வம்சம் பரவியது.  

மஹான் நாதமுனிகளுக்கு ஒரு  வைஷ்ணவ  சிஷ்யன். உருப்பத்தூர்  ஆச்சான் பிள்ளை என்று பெயர்  (823–924) இன்னொரு பெயர்  வரதாச்சாரி.  

ஸ்ரீவத்ஸ  கோத்ரம்.   நான் சொல்வது காஞ்சிபுரத்தில் நடந்த ஒரு சம்பவம்.

ஒருநாள் வரதாச்சாரி  ஆற்றில் ஸ்னானம் செய்யப் போகும்போது  ஒரு பிணம் நீரில் மிதந்து வருகிறது. யார் இது என்று பார்க்கிறார்.

அதன் உடலில்  ஸ்ரீவைஷ்ணவ  நாமங்கள்  உடலில் பொறித்த சங்க சக்ரம்  இன்னும்   மறைய வில்லை.

அடாடா, யாரோ ஒரு  வைஷ்ணவர் உடலாக இருக்கி றதே.  அனாதையாக இப்படி நீரில் அடித்துச் செல்ல விடலாமா?

அதற்கு செய்யவேண்டிய இறுதி கார்யங்களைச்  செய்ய யாரும் இல்லாத போது  நாம் செய்யவேண்டியது கடமை அல்லவா?  என்று மனம் உரக்க சொல்லியது.  அந்த உடலை சிரமப்பட்டு கரையேற்றி,  வைஷ்ணவ சம்பிரதாய  வேத மந்த்ர  பிரேத ஸம்ஸ்காரங்கள் செய்து அக்னியில் அந்த உடலை சேர்த்து கடனை முடித்தார்.  தீ அந்த உடலை மட்டும் விழுங்கவில்லை,   காட்டுத்தீயாகப் பரவி  ஊரிலுள்ள பிராமணர்கள்  பண்டிதர்கள் எல்லோரும் சண்டைக்கு வந்துவிட்டார்கள்.
அப்போதெல்லாம் ஜாதி வித்யாசம் பார்த்த காலம் அல்லவா. எப்படி ஒரு வேறு வகுப்பு மனிதனின் உடலைத் தொட்டு வைஷ்ணவ அந்திம சடங்குகளை நீ செய்யலாம்? வரதாச்சாரியை ப்ரஷ்டம் செய்து ஒதுக்கி வைத்தார்கள்.
வரதாச்சாரி வீட்டில் ஸ்ரார்த்தம். ஒரு பிராமணனும் நடத்தி வைக்க  எந்த பிராமண வைதிகரும் தயாரில்லை. மறுத்துவிட்டார்கள்.

”காஞ்சி வரதராஜா,  ஸ்ரீரங்க ரங்கநாதா,  திருப்பதி வெங்கடேசா எல்லாம் உன் செயல்,  என் நிலையைப் பார்த்தாயா?’ ஒரு வைஷ்ணவனுக்கு  அந்திம சம்ஸ்காரம் செய்வித்ததற்கு இந்த தண்டனையா?.
நேரம்  ஓடுகிறது ஊருக்கு வெளியே  ரெண்டு பிராமணர்களைக் கண்டு அந்த வெளியூர்க் காரர்களை  ஸ்ரார்த்தம்  நடத்தி வைக்க கெஞ்சுகிறார். ஒப்புக்கொண்டு வருகிறார்கள்.   சாஸ்த்ரோக்தமாக நடத்தி கொடுத்து வைத்த அவர்களுக்கு நன்றியோடு நமஸ்காரம் செய்த  வரதாச்சாரி கண்ணீர் விட்டு வணங்குகிறார்.  நீங்கள்  யார் என்று அடியேன் அறியலாமா?

‘’நான் வரதராஜன், காஞ்சிபுரம், என்று ஒருவர் சொல்லி மற்றவரை பார்க்க அவர் ” நான் வெங்கடேசன் திருமலை’’  என்று சொல்லி புன்னகைத்து மறைகிறார்கள்.

அன்று காலை  காஞ்சி புறம் வரதராஜன் சந்நிதியில்  பட்டாச்சார்யார் கள் (வரதாச்சாரியை  ப்ரஷ்டம் செயது வைத்தவர்களில் சிலர்) பூஜை  செய்து காஞ்சி வரதனை அலங் கரித்து  ஹாரத்தி காட்டும்போது  கணீரென்று பெருமாள் குரல் ஒலிக்கிறது.

”ஊருக்கெல்லாம் பொல்லான், எமக்கு நல்ல ஆச்சான் சக்கரவர்த்தி’’

ஆஹா  இன்று  ஆச்சான் வரதாச்சாரி வீட்டில்  ஸ்ரார்த்தம்.  நாம்  ஒருவரும் உதவவில்லையே. பெருமாள் இப்படி சொல்கிறாரே என்று ஓடுகிறார்கள்.  விஷயம் கசிகிறது.   மின்னல் போல் எங்கும் சேதி பரவுகிறது
பெருமாளே வந்து நடத்திக் கொடுத்தது தெரிந்து வரதாச்சாரியை எல்லோரும்  வணங்கிக் கொண்டாடுகிறார்கள் .பெருமைப் படுத்துகிறார்கள்.  நல்லான்  சக்ரவர்த்தி என்று அழைக்கிறார்கள்
அவர் வம்சம் தான் நல்லான் சக்கரவர்த்தி என்ற பெருமை வாய்ந்த  காஞ்சி வரதராஜ பெருமாள் கொடுத்த  பட்டத்தை இன்னும்  விடாமல்  சூட்டிக்கொண்ட எத்தனையோ வைஷ்ணவர்கள்.  இந்த பட்டத்தை விடலாமா??  எத்தனை   பேருக்கு கிடைக்கும்

வந்தே வரத ராஜேந மம நல்லான் இதி ஸம்ருதம்
பரம ஏகாந்தி ஸம்ஸ்காராத் ப்ரக்யாதம் லோக தேசிகன் -இவர் தனியன்

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ கிருஷ்ண த்ரயம் -பிரியம் -ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

June 2, 2022

ஸ்ரீ ப்ருந்தாரண்ய நிவாஸாய பல ராமானுஜாய ச
ருக்மிணீ ப்ராண நாதாய பார்த்த ஸூதாய மங்களம்

ஸம்யக் நியாய கலா பேந மஹதா பாரதே ந ச உப ப்ரும்ஹித வேதாய நமோ வ்யாஸாய விஷ்ணவே

ருஷிம் ஜூஸா மஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவோதிதம்
ஸஹஸ்ர சாகாம் யோ அத்ராஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம்

ஸ்ரீ வாஸூ தேவனான கிருஷ்ணனும் -ஸ்ரீ கீதையும்
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயநரான ஸ்ரீ வேத வியாஸரும் -ஸ்ரீ சாரீரகமும்
ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமான ஸ்ரீ நம்மாழ்வாரும் -ஸ்ரீ திருவாய் மொழியும்
காட்டி அருளும் வேதாந்த அர்த்தம் ஒன்றே ஆகும்

பக்த்யா பரமயா வா அபி ப்ரபத்யா வா
ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய –நிதித்யாஸி தவ்ய
முமுஷுர்வை சரணம் அஹம் ப்ரபத்யே

ஆத்யே பஸ்யன் உபாயம் பிரபுமிஹ பரம ப்ராப்ய பூதம் த்விதீயே கல்யாண உதார மூர்த்தே
த்விதயமிதமிதி ப்ரேஷாமாணஸ் த்ருதீயே -அதிகரண சாராவளி
முதல் பத்தால் உபாயத்வமும் -இரண்டாம் பத்தால் உபேயத்வமும் -மூன்றாம் பத்தால் திவ்ய விக்ரஹ யோகமும் அருளிச் செய்கிறார் என்றவாறு

அன்ன மய பிராண மய மநோ மயங்கள் -மூன்றும் அசித் -முதற்கண் அசித் விலக்ஷணன் என்றும்
விஞ்ஞான மயன் ஜீவன் -பின்பு சித்த வைலக்ஷண்யம் என்றும்
ஆனந்தமயன் ஏதத் உபய விலக்ஷணன் என்றும்
சாரீரக ஆரம்பத்தில் முதல் மூன்று அதிகரணத்தால் புத்தி ஆரோஹ க்ரமத்துக்குச் சேர – ஸ்தூல அருந்ததி நியாயத்தகுக்கும் சேர -வேத வியாசர்

ஆழ்வார் பர ஸ்வரூபத்தை முதற்கண் அருளிச் செய்து
மனனகம் மலமற மலர்மிசை எழு தரும் மனன் உணர்வு அளவிலன் -என்று ஜீவ விலக்ஷணன் என்றும்
பின்பு பொறி யுணர்வு அவை இலன் -என்று அசித் விலக்ஷணன் என்றும் அருளிச் செய்கிறார் –

ஆக சேதன அசேதன விலக்ஷண தத்வமே ஜகாத் காரணம் என்பது கிருஷ்ண த்ரய ஸித்தாந்தம் -இதுவே வைதிக மதம் –
அபின்ன நிமித்த உபாதன காரண பூதன்
வேர் முதல் வித்தாய் -2-8-10-

ஏதம் விபூதிம் யோகஞ்ச -பத்தாம் அத்தியாயத்தில் குண யோகத்தையும் விபூதி யோகத்தையும் விளக்கினான்

வேத வியாசர்
ஆதராதலோப -3-3-39-என்றும்
பிரக்ருதை தாவத்வம் ஹி ப்ரதி ஷேததி ததோ ப்ரவீதி ச பூய -3-2-21- என்றும்
ந ஸ்தானதோ அபி பரஸ்ய உபய லிங்கம் ஸர்வத்ர ஹி -3-2-11 -என்றும்
குண யோகத்தையும் விபூதி யோகத்தையும் கூறினார்

தஸ்மாத் ப்ரஹ்ம த்வி லிங்கம் த்வித விபவம் இத்யேவ பெத்தாந்த பக்ஷ -என்றும்
கல்யாணை அஸ்ய யோக தத் இதர விரஹோ அபி ஏக வாக்ய ஸ்ருதவ் ச என்றும் தேசிகன்

பரமாத்மா கல்யாண குண விஸிஷ்டன் -குண உப சம்ஹார பாதம்

புகழு நல் ஒருவன் என்கோ -என்று குண யோகத்தையும்
பொருவில் சீரப் பூமி என்கோ -என்று விபூதி யோகத்தையும் ஆழ்வார்

ஆக
கல்யாண குண விசிஷ்டமாயும்
அப குண ரஹிதமாயும்
உபய விபூதி விசிஷ்டமாயும்
சேதன அசேதன விலக்ஷண ஜகத் காரண பூதமாயும்
திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனாடும்
ஸ்ரீ விசிஷ்டமாயும்
உள்ளது பரமாத்ம தத்வம் என்பதே கிருஷ்ண த்ரய ஸித்தாந்தம் –

ஏஷ நாராயண ஸ்ரீ மான் –ஆகதோ மதுராம் புரீம்

புரா ஸூத்ரை வ்யாஸ ஸ்ருதி சத சிரோ அர்த்தம் க்ரதிதவான்
விவவ்ரே தம் ஸ்ராவ்யம் வகுள தரதாம் ஏத்ய யா புனஸ்
உபா வேதவ் க்ரந்தவ் கடயிதும் அலம் யுக்தி ப்ரஸவ்
புனர் ஐஜ்ஜே ராமா வரஜ இதி ஸ ப்ரஹ்ம முகுர –

——————————————

பிரியம்

எது பிரியம் -யாருக்கு பிரியம் -எப்படி பிரியம்

வர்ணாஸ்ரம ஆசார வதா புருஷேண பர புமான்
விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நான்ய தத் தோஷ காரக -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-8-9-ஒவ்ர்ய -சகர ஸம்வாதம் -ஒவ்ரய வசனம்

இந்தப் பிரமாணத்தை வேதாந்த ஸங்க்ரஹத்தில் உதாஹரித்து அருளுகிறார் –
தத் தோஷ காரக -இத்யேநேந பகவத் தோஷ ஹேது பூத ஞான அங்கத்வம் ஸித்தம் -என்று
எது பிரியம் என்பதுக்கு விடை வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் –

யாருக்கு பிரியம்
ஸர்வ நியந்தா -ஸர்வ ப்ரஸாஸ்தா –ஸர்வேஸ்வரன் ஆனவனுக்கு –

எப்படி பிரியம்
ஸ்வாமி நியமனப்படி தாசன் நடப்பதே ஸ்வாமிக்குப் பிரியம் –
பகவத் நியமன அனுகுணம் நடப்பவன் -ஸாஸன அனுவ்ருத்தியே -இப்படி நடப்பவன் தேவன்
மீதூர்ந்து நடப்பவன் அசூரன் –

 

த்வௌ பூதஸர்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸுர ஏவ ச–
தைவோ விஸ்தரஸ ப்ரோக்த ஆஸுரம் பார்த்த மே ஸ்ருணு–৷৷16.6৷৷

த்வௌ = இரண்டு
பூத ஸர்கௌ = உயிர் கூட்டங்களில்
லோகே =இந்த உலகில்
அஸ்மிந் = இந்த
தைவ = தெய்வீக
ஆஸுர = அசுர
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
தைவோ = தெய்வீக
விஸ்தரஸ: = விரிவாக
ப்ரோக்த = சொன்னேன்
ஆஸுரம் = அசுரர்களை
பார்த = பார்த்தனே
மே = என்னிடம் இருந்து
ஸ்ருணு = கேட்பாயாக
ஆஸுரம் மே ஸ்²ருணு = அசுர இயல் பற்றி என்னிடம் கேள்

குந்தீ புத்திரனே இந்த கர்மா யோகத்தில் ஜீவ ராசிகளின் உத்பத்தி தேவர்க்கு உரியது -அஸூரர்க்கு உரியது
என்று இருவகைப்பட்டது -தேவர்க்கு உரிய ஆசாரம் விரிவாகச் சொல்லப்பட்டது –
அஸூ ரர்க்கு உரிய ஆசாரத்தை என்னிடம் இருந்து கேட்பாயாக
பகவத் ஆணை படி நடப்பவர் தேவர்கள் -மீறுபவர்கள் அசுரர்கள் -தன்மை பற்றி சொல்கிறேன் –

ய ஸாஸ்த்ர விதி முத்ஸ்ருஜ்ய வர்ததே காம காரத–
ந ஸ ஸித்தி மவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம்–৷৷16.23৷৷

எவன் ஒருவன் வேதமாகிற எனது ஆணையைக் கை விட்டு தன் விருப்பப்படி செயல் புரிகிறானோ –
அவன் மறுமையில் ஸ்வர்க்கம் முதலான பயனையும் இம்மையில் இன்பத்தையும் மேலான கதியையும் அடைவது இல்லை –
அத்யாயம் சுருக்கம் -சாஸ்த்ர விதியை தாண்டி தம் மனம் போன படி ஆசைப் பட்டு அனைத்தையும் இழக்கிறார்கள்
ஸ்வர்க்கம் அடைவதும் மாட்டான் -இவ்வுலக இன்பமும் இல்லை -ஸ்ரீ வைகுண்டமும் கிட்டான்

பகவான் ஸாஸ்தா -அவன் சாஸனமே சாஸ்த்ரம்
அவன் ஸ்வாமி சேஷி
பதிம் விஸ் வஸ்ய
ஆத்மேஸ்வரம்
யஸ்யாஸ்மி ந தன அந்தரேமி

சரம ஷட்கம் -தத்வ ஞானம் விளைய உபதேசம் பூர்வ த்ரிகம் -தத்வ ஞான அனுகுண அனுஷ்டான உபதேசம் உத்தர த்ரிகம்
ஸாஸ்த்ர முறைப்படி அனுஷ்ட்டிக்க வேணும் -16 அத்யாயம்
ஸாத்விக ஸ்ரத்தையுடன் அனுஷ்ட்டிக்க வேணும் -17 அத்யாயம்
வர்ணாஸ்ரமங்களை கணிசித்து அனுஷ்ட்டிக்க வேணும் -18 அத்யாயம்

பகவத் அபசாரமாவது -வர்ணாஸ்ரம விபரீதமான உபசாரம் -ஸ்ரீ வசன பூஷணம்

ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவ ஆஜ்ஞா யஸ்தாம் உல்லங்க்ய வர்த்ததே
ஆஜ்ஞாச் சேதீ மம த்ரோஹீ மத் பக்தோ அபி ந வைஷ்ணவ –

வர்ணாஸ்ரமங்கள் கர்மம் என்றும் கைங்கர்யம் என்றும் பேதம் -அதிகாரிகளைப் பொறுத்து –

ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -26 –

இந்த க்ரியா வ்ருத்தி சப்தங்களால் சொன்ன கர்ம கைங்கர்யங்கள்
இவர்களுக்கு எதுக்கு அநுகுணமாய் இருக்கும் என்ன சொல்லுகிறது-

கர்ம கைங்கர்யங்கள்
சத்ய அசத்ய
நித்ய அநித்திய
வர்ண தாஸ்ய
அனுகுணங்கள்-

அதாவது கர்மம்-(ஸாஸ்த்ர ஆஞ்ஞா ரூப கர்மங்கள்) அசத்யமாய்–அநித்யுமுமான வர்ணத்துக்கு அநுகுணமாய் இருக்கும்
கைங்கர்யம் சத்தியமாய் நித்யமுமான தாஸ்யத்துக்கு அநுகுணமாய் இருக்கும் என்கை-

வர்ணத்தை அசத்தியம் அநித்தியம் என்கிறது ஆத்மாவுக்கு உள்ள வேஷம் அல்லாமையாலே
சததைக ரூபம் அன்றிக்கே -ஔ பாதிகமுமாய் அநித்யமுமாய் நச்வரமான
தேக அவதியாய் போருகையாலே

தாஸ்யத்தை சத்யம் நித்யம் என்கிறது-திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் திருப்பல்லாண்டு -11- என்கிறபடியே
ஆத்மாக்கு உள்ள வேஷம் ஆகையாலே
சததைக ரூபமாய் யாவதாத்மா அனுவர்த்தி யாகையலே-

வர்ண அனுகுணம் என்றது -வர்ணத்துக்கு சேர்ந்தது என்ற படி
தாஸ்ய அனுகுணம் என்றதும் அப்படியே–தாஸ்யத்துக்கு சேர்ந்தது என்ற படி-

(விசிஷ்ட வேஷத்தை பொறுத்தே இருக்கும் கர்மம் -அசத்திய அநித்ய வர்ணம்
கைங்கர்யம் நிஷ்க்ருஷ்ட வேஷம் பொறுத்தே இருக்கும் -சத்யமாயும் -நித்யமாயும் தாஸ்யம்
திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -தாஸ்யம் பழைமை நித்யம் -அங்கும் உண்டே நிருபாதிகம் -சத்யம் )

————————————————————

மனீஷீ வைதிக ஆசாரம் மனஸா அபி ந லங்கயேத்
பகவத் நியமத்தைப் பரிபாலனம் செய்வது ஒவ்வொரு ஸ்ரீ வைஷ்ணவனுக்கும் அவஸ்ய கர்தவ்யமாகும்

ஆகையால்
பிரியம் பகவத் பிரியம்
அவ்வழியாலே பாகவத பிரியம்
அவ்வழியாலே ஆச்சார்ய பிரியம்
ஸ்வ ஸ்வ வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் என்று தேறியது

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ மத் பகவத் கீதை -ஸ்ரீ கீதா சாரம் -ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

June 2, 2022

அஜாயமாந பஹுதா விஜாயதே
ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் பரம பிரதானம்
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து மாதவன் கண்ணுற நிற்கிலும் கணக்கில்லா உலகோர்க்கு சேமவைப்பாக
ஸ்ரீ கீதா ஸாஸ்த்ரம் -பரம வேதாந்த சாரார்த்த கர்ப்பித திவ்ய ஸாஸ்த்ரம்
அர்ஜுனனை வியாஜ்யமாகக் கொண்டு -ஆத்ம ஷேமங்கர சாஸ்திரம் வெளியிட்டு அருளுகிறார் –
ஸர்வஸ்ய வஸீ
ஸர்வஸ்ய ஈஸாந
வஷட்கார
ஹ்ருஷீ கேஸ –
ஏழு உலகும் தனிக் கோல் செலுத்தும் சர்வ நியாந்தா –
அர்ஜுனனை ந யோத்ஸ்யே -என்ற ஸங்கல்பம் மாறாதவனாக ஸங்கல்பித்து
கீதை கேட்ட பிறகே ஸ்திதோஸ்மி -கரிஷ்யே வசனம் தவ -என்றான்
ராமாவதாரத்தில் கைகேயி உள்ளத்தைக் கலக்கியது ஸ்வ கல்யாண குண ப்ரகாசனத்துக்காகவே –
ராமே வா பரதே வாஹம் விசேஷம் நோப லக்ஷயே -என்று உள்ளத்தில் வேற்றுமை இல்லாத நான்கையும் கைகேயி கலக்கிய மனத்தனள் ஆனது மந்த்ரா வாக்யத்தால் அன்று
தன்னுடைய பரக்கும் தொல் புகழ் பரவச செய்யத் திரு உள்ளம் பற்றிய பகவானாலே இறே
ப்ரஸாதம் சந்த்ர ஸங்காஸம் ஆரு ரோஹா யத்ருச்சயா -என்று யாத்ருச்சயா-சப்தத்தால் வால்மீகி பகவான் ஸூசநம் செய்தார்
கம்பரும்
அரக்கர் பாவமும் அல்ல வரியற்றிய அறமும்
துரக்க நல்லருள் துரந்தனள் தூ மொழி மடமான்
இரக்க மின்மை யன்றோ இவ்வுலகங்கள் இராமன்
பரக்கும் தொல் புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே –
கைகேயி கலக்கத்தால் நமக்கு ஸ்ரீ இராமாயண அம்ருதம் கிடைத்தது –
அதே போல் அர்ஜுனன் உள்ளம் மாறாத படியால் அன்றோ ஸ்ரீ கீதாம்ருதம் கிடைத்தது

ஸர்வ உபநிஷதோ காவ தோக்தா கோபால நந்தன
பார்த்தோ வத்ஸ ஸூதீ போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் -அன்றோ –

பாரத பஞ்சம வேதா
மஹத்வாத் பாரவத்வாச்ச மஹா பாரதம் உச்யதே
கோ ஹ்யந்தோ புவி மைத்ரேய

மஹா பாரத க்ருத் பவேத் என்றும்
விஷய கௌரவத்தாலும் பிரபந்த கௌரவத்தாலும் வக்த்ரு கௌரவத்தாலும் பரம பிரமாணம் இறே மஹா பாரதம்
தேவர்களுக்கு ஈஸ்வரன் கொடுத்த அம்ருதம் பந்தகம்
வேத வியாசர் கொடுத்த இதுவோ சம்சார விமோசகம் அன்றோ
அது கோது என்னும்படி ஸ்ரீ கீதை
வேதேஷு பவ்ருஷம் ஸூக்தம் தர்ம ஸாஸ்த்ரேஷு மாநவம் பாரதே பகவத் கீதா புராணேஷு ச வைஷ்ணவம் –

கீதா ஸூ கீதா கர்தவ்யா கிமன்யை ஸாஸ்த்ர ஸங்க்ரஹை
யா ஸ்வயம் பத்ம நாபஸ்ய முகபத்மாத் விநிஸ் ஸ்ருதா

யஸ்மின் ப்ரஸாத ஸூ முகே கவயோ அபியே தே ஸாஸ்த் ராண்ய ஸாஸூ இஹ தன் மஹிமாஸ்ரயாணி
கிருஷ்ணேந தேன ததிஹ ஸ்வயமேவ கீதம் ஸாஸ்த்ரஸ்ய தஸ்ய ஸத்ருசம் கிமி ஹாஸ்தி ஸாஸ்த்ரம் -இத்யாதிகளாலே கீதா வைபவம் ஸூ ப்ரஸித்தம்

ப்ரஹ்ம ஸூத்ரத்திலும்
ஸ்ம்ருதேஸ் ச -1-2-6-
ஸ்மரந்தி ச -4-1-10-என்றும்
கீதையயை ஸம்வாதி ப்ரமாணமாகக் காட்டி அருளுகிறார் –

பார்த்தம் ப்ரபன்னம் உத்திஸ்ய ஸாஸ்த்ர அவதாரணம் க்ருதம் -ஸ்ரீ ஆளவந்தார்
உத்திஸ்ய என்றது வ்யாஜிக்ருத என்றபடி

அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறியெல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி-திருவாய் -4-8-6-
ஆஸ்ரித வ்யாமோஹமே உபதேசத்துக்கு ஹேது
அர்ஜுனனுக்கு தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும் இவளுக்காகவேவ்
மால் என்கோ
திரௌபதி குழலை விரித்துக் கிடக்கையாலே அது முடிக்கைக்காக செய்வது அறியாமையாலே மூலையிலே கிடந்தாரை முற்றத்தே இட்டான்
பின்னை அர்த்தத்தை சீர்மையை அநுஸந்தியா ஆறி அதிகாரிகளாகச் சொன்னோம்
கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலே இட்டோம் என்று பதண் பதண் என்றான் காணும்
இதம் தே நாத பஸ்காய -என்னும் வியாமுக்தன் பின்பே இதம் து தே குஹ்ய தமம் ப்ரவஷ்யாமி
உபநிஷத் உதாராம் உத்வமன் க்வாபி லஷ்யே சரணம் உப கதான் நஸ் த்ராயதே சார்ங்க தன்வா -என்ன நின்றது இறே

———

ஸ்ரீ கீதா ப்ரமேய அனுபவம்
தத்வ ஞானான் மோக்ஷ லாப -அஞ்ஞானாத் ஸம்ஸார –
மோக்ஷ ப்ரயோஜகத்வ ஞான ஜனக ஸாஸ்த்ரம் உபநிஷத் கீதா ப்ரஹ்ம ஸூ த்ரம் போல்வன –
உபநிஷத் வேத வாக்கியம்
கீதா -வேத்ய வாக்கியம்
ப்ரஹ்ம ஸூ த்ரம் வைதிக வாக்கியம்

நதோ பஞ்ஞம் ப்ரவ்ருத்தம் பஹுபி ருபசிதம் யாமுனேய ப்ரபந்தை
த்ராதம் ஸம்யக் யதீந்த்ரை இதம் அகில தம கர்சனம் தர்சனம் ந -என்றும்

எம்பெருமானார் தர்சனம் என்றே இதற்கு நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார்
அம்புவியோர் இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த அந்தச் செயல் அறிகைக்காக -என்றும்
எம்பெருமானார் தர்சனத்தில்
தத்வாதி நிஷ்கர்ஷம் இருக்கும் படி என் என்னில் –

தத்வம் ஜிஜ்ஞாஸ ஸமாநாநாம் ஹேதுபி ஸர்வதோமுகை
தத்வமேகோ மஹா யோகீ ஹரிர் நாராயண ஸ்ம்ருத என்றும்
ஆலோட்ய ஸர்வ சாஸ்த்ராணி விசார்ய ச புந புந
இதமேகம் ஸூ நிஷ் பன்னம் த்யேயா நாராயணஸ் ததா -என்றும்
தத்வ பரமாயும் உபாஸன பரமாயும் அன்றோ மோக்ஷ ஸாஸ்த்ரம் தான் இருப்பது –
பர ப்ரஹ்ம ஸப்த வாஸ்யனான ந்நாராயணனே பரதத்வம் என்றும்
ப்ரஸாத விஸிஷ்ட னான அவனே பரம ஹிதம் என்றும்
போக்யதா விஸிஷ்ட னான அவனே பரம ப்ராப்யம் என்றே வேதாந்த சாரார்த்தமும் ஸ்ரீ கீதா சாரார்த்தமும் –
நாராயணனே கீதா ப்ரதிபாத்ய பரதத்வம்

நத்வே வாஹம் -2-12-ஸாஸ்த்ர ஆரம்பம் –
குண விஸிஷ்ட தஹர உபாஸனத்தாலே பரஞ்சோதி பிராப்தி யாகிற மோக்ஷம் -ஸ்ருதி
ஸ்வா பாவிக அனவதிக அதிசய ஈஸீத்ருத்வம் நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக க -ஆளவந்தார்

ஸம்சய விபர்யங்களுக்கு இடம் இன்றிக்கே
பரம ப்ராப்யத்வ
ப்ராபகத்வ
ஸர்வ காரணத்வ
ஸர்வ ரக்ஷகத்வ
ஸர்வ ஸம்ஹ்ர்த்ருத்வ
சர்வாதிகத்வ
ஸர்வ ஆதாரத்வ
ஸர்வ நியந்த்ருத்வ
சர்வ சேஷித்வ
ஸர்வ வேத வேத்யத்வ
ஸர்வ ஹேய ரஹித்வ
ஸர்வ பாப விமோசகத்வ
ஸர்வ ஸமாஸ்ரயணீத் வாதி விசிஷ்டனாகவே கூறப்படுகிறான் என்று ஆளவந்தார்
ஸமீரித -பதத்தால் பிரகாசிப்பித்து அருளுகிறார் –

ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் -பேதம் அபேதம் பேதாபேதம் -மூன்றும் சமர்த்திக்கப்படுகிறது

சகலத்தையும்-பலவகைப்பட்ட சேதன அசேதனங்களையும் – சரீரமாக-பிரகாரமாக – யுடைய ப்ரஹ்மம் ஒன்றே -சர்வம் ஸமஞ்சஸம்
தர்சனம் பேத ஏவ ச -தேவப்பெருமாள் ஸ்ரீ ஸூக்தி
ப்ருகாத்மானம் பிரேரிதாரம் ச மத்வா -வேதாந்த கோஷம்
மிதோ பேதம் தத்வேஷு அபலபதி பேத ஸ்ருதி அதோ விஸிஷ்ட ஐக்யாத் ஐக்ய ஸ்ருதிரபி ச சார்த்தா பகவதீ -வேதாந்த தேசிக கோஷம்

ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா—
ந சைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத பரம்—৷৷2.12৷৷

சர்வேஸ்வரனான நான் முக்காலத்தில் எப்போதும் இல்லாமல் இருந்தேன் என்பது இல்லை –
எப்போதும் நான் உள்ளவனே யாவேன்
நீயும் எப்போதும் இல்லாமல் இருந்தாய் என்பதும் இல்லை -நீயும் எப்போதும் உள்ளவனே யாவாய்
இவ்வரசர்களும் எப்போதும் இல்லாமல் இருந்தார்கள் என்பதும் இல்லை -இவ்வரசர்களும் எப்போதும் உள்ளவர்களே
நாம் அனைவரும் இதற்கு மேல் உள்ள காலத்திலும் இருக்க மாட்டோம் என்பது இல்லவே இல்லை –
நான் அனைவரும் எப்போதும் இருக்கவே போகிறோம் –

ஜ்ஞாநேந து ததஜ்ஞாநம் யேஷாம் நாஸிதமாத்மந–
தேஷாமாதித்யவத் ஜ்ஜ்ஞாநம் ப்ரகாஸயதி தத்பரம்—৷৷5.16৷৷

எந்த ஜீவர்களுக்கு ஆத்ம விஷயமான ஞானத்தால் அந்த கர்மம் அழிக்கப் பட்டதோ அவர்களுக்கு
மேலான அவ்வாத்மா ஞானம் ஸூர்யனைப் போலே எல்லாவற்றையும் பிரகாசப் படுத்துகிறது
விலக்க உபாயம் -அநாதி பாப கர்ம வாசனை -ஆத்ம யாதாம்யா ஞானம் கொண்டே -வளர்த்து -அப்பியாசம் முக்கியம் –
ஆதித்யன் ஒளியால் பொருள்கள் விளங்குவது போலே ஞானம்-மேகம் மூட்டம் போலே அஞ்ஞானம் –

இஹைவ தைர்ஜித ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந–
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா—৷৷5.19৷৷

எவர்களுடைய மனம் முன் ஸ்லோகத்தில் சொன்ன ஆத்ம சாம்யத்திலே நிலை நிற்கிறதோ –
அவர்களால் சாதனா அனுஷ்டான நிலையிலேயே சம்சாரம் ஜெயிக்கப் பட்டது –
ப்ரக்ருதி சம்பந்த ரூப தோஷம் அற்றதாய் அதனாலேயே சமமாய் இருப்பதான ஆத்ம வஸ்துவே அன்றோ
ப்ரஹ்மம் எனப்படுகிறது -ஆகையால் அவர்கள் ப்ரஹ்மத்தில் நிலை நிற்பவர்கள் ஆவார்
தோஷம் விலக்கப்பட்ட ஆத்ம -பிரகிருதி சம்பந்தம் இல்லாமல் -கர்ம யோகி -இங்கேயே
சாதன தசையில் சம்சாரம் கழிக்கப் பெற்ற பெருமை அடைகிறான் –
ப்ரஹ்மம் சாம்யம் பெறுகிறான் -பாப புண்ய ரூப கர்மங்கள் வில்லை -சமமாக அனைத்தையும் பார்க்கிறான்
மேலே ஆறு நிலைகள் சம தரிசனத்துக்கு -படிப் படியாக உயர்த்திக் கொண்டு அருளிச் செய்கிறான்

யோ மாமஜமாநாதிம் ச வேத்தி லோக மஹேஸ்வரம்—
அஸம்மூட ஸ மர்த்யேஷு ஸர்வ பாபை ப்ரமுச்யதே–৷৷10.3৷৷

யோ = யாரேனும்
மாம் = என்னை
அஜம் = பிறப்பு இல்லாதவன்
அனாதிம் = தொடக்கம் இல்லாதவன்
ச = மேலும்
வேத்தி = அறிதல்
லோக = உலகில்
மஹேஸ்²வரம் = பெருந்தலைவன்
அஸம்மூட = மயக்கம் அற்ற
ஸ = அவன்
மர்த்யேஷு = இறக்கும் மனிதற்குள்ளே
ஸர்வபாபை: = பாவங்களில் இருந்து
ப்ரமுச்யதே = விடுபடுகிறான்

மனிதர்களுக்குள் மற்றவர்களோடு ஒத்தவனாக எண்ணும் மயக்கம் அற்றவனான எவன் ஒருவன் என்னைப்
பிறப்பு அற்றவனாகவும் -அதிலும் -அநாதி காலமாகப் பிறப்பு அற்றவனாகவும்
லோகேஸ்வரர்களுக்கும் ஈஸ்வரனாகவும் அறிகிறானோ அவன் பக்தி உண்டாவதற்குத் தடையான
எல்லாப் பாபங்களில் இருந்தும் விடுபடுகிறான்
பக்தி பிறக்க பாபங்கள் போக வேண்டுமே –

பேத ஞானம் உடையவனை இறே அஸம்மூடன் என்று கொண்டாடி உள்ளான்
பேத ஞானம் ஸம்மோஹம் ம்ருஷாவாதி மதத்தில்-அதனை அடி அறுக்கும் வாக்யமே மாயன் அன்று ஓதிய வாக்கு –

வேதாந்த ஸித்தமான அத்வைதம் இருவகை -ஜீவாத்வைதம் -ப்ரஹ்மாத்வைதம் –
இவையே பிரகார அத்வைதம் பிரகார்ய அத்வைதம்
வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி—
ஷுநி சைவ ஸ்வபாகே ச பண்டிதா ஸமதர்ஸிந—-৷৷5.18৷৷-ஜீவாத்ம அத்வைதம்

அறிவாளிகள் கல்வியும் அடக்கமும் உடைய அந்தணர் இடமும் அவை அற்ற அந்தணர் இடமும்
உருவத்தால் சிறிய பசுவின் இடமும் உருவத்தால் பெரிய யானையின் இடமும் –
கொன்று தின்னப்படும் நாயிடமும் அதைக் கொண்டு தின்னும் சண்டாளனிடமும் கூட
ஆத்மா ஒரு படிப் பட்டு இருக்கையாலே சமமாகப் பார்ப்பவர்களாய் இருக்கின்றனர்
சம தர்சனம் முக்கியம் -ப்ரஹ்ம ஞானம் -சேஷ பூதர்-அனைவரும் —
வித்யையும் விநயமும் உள்ள -இல்லாத ப்ராஹ்மணர்களுக்குள் வாசி
கோ ஹஸ்தி பசுவோ யானையோ -நாயை அடித்து உண்ணும் வேடனுக்கு நாயுக்கும் வாசி பார்க்காமல்
சம தரிசனமே ஆத்ம சாஷாத்காரம் –
இவை எல்லாம் சரீரத்தால் தானே -ஆத்மா இயற்கையாகவே ஞானி -ஏக ஆகாரம் தானே
புல்லாங்குகள் ஒரே காத்து -சப்த ஸ்வரம் – பசுமாடு பல வர்ணங்கள் பால் வெண்மை தானே –

மத்த பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய.–
மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணி கணா இவ৷৷—-7.7৷৷பரமாத்ம அத்வைதம்

அர்ஜுனா என்னைக் காட்டிலும் வேறு பட்டு இருப்பவற்றில் ஓன்று கூட மிகவும் மேலானதாக இல்லை –
இந்த எல்லாப் பொருள்களும் நூலில் மணிகள் கோர்க்கப்பட்டு இருப்பது போலே
என் இடத்திலேயே கோர்க்கப்பட்டு இருக்கின்றன
நியாமகன் –சமஸ்தத்துக்கும் -சர்வஞ்ஞன் -சர்வசக்தன் -ஓத்தார் மிக்கார் இலாய மா மாயன்–
குணங்களில் -பரத்வம் ஸுலப்யம் -சக்தாதிகளில் – உடையவனும் குணசாலியும் –
என் சொல்லி மறப்பேனோ நம்பியை -தென் குறுங்குடி நின்ற –செம் பொன்னே திகழும் திரு மூர்த்தி
உம்பர் வானவர் ஆதி அம் சோதி -எம்பிரான் -காட்டி அருளிய உபகாரகன் –
சரீராத்மா பாவம் -சர்வ சப்தமும் இவனையே சொல்லுமே –
நீ தனஞ்சயன் -நான் குணஜயன் -அந்தர் பஹிஸ்ஸ சர்வ வியாப்தன் -வியாப்த கத தோஷம் தட்டாமல் –
அதற்கு த்ருஷ்டாந்தம் –மணி கோத்து நூல் த்ருஷ்டாந்தம் –என்னை விட்டு இருக்க முடியாதே –
நூல் ஒன்றே -மணிகள் பல -கண்ணுக்கு தெரியாதே -நூல் தாங்கும் –
யஸ்ய ஆத்மா சரீரம் –யஸ்ய பிருத்வி சரீரம் -இத்யாதி -மணி த்ருஷ்டாந்தம் கடக ஸ்ருதியை திரு உள்ளம் பற்றியே –

அப்ருதக் சித்த விசேஷணம்
விசேஷ்யமான ப்ரஹ்மம் ஒன்றே
தன்னை ஒழிந்த சர்வத்தையும் பிரகாரமாகக் கொண்டது
சேதன அசேதன விசிஷ்டஸ்ய அத்வைதம் -அசேஷ சித்த அசித் ப்ரகாரஸ்ய ப்ரஹ்மண ஏக தத்வம் –
ப்ரஹ்மம் ஸமாப்யதிக தரித்ரம்

பிரதம ஷட்கம் -த்வம்- பதார்த்தம்
மத்யம ஷட்கம் -தத் -பதார்த்தம்
சரம ஷட்கம் -அஸி-பதார்த்தம் –

வாஸூ தேவ சர்வம் – அடியார்களுக்கு இவன் தாரக போஷக போக்ய பூதன்-ப்ராப்ய ப்ராபக பூதன் –
ஞானீ து ஆத்மைவ -ஞானி பரமாத்வாவுக்குத் தாரகன்
ஞானி விரஹம் பரமாத்மாவுக்கு துஸ்ஸஹம்

மயி ஸர்வாணி கர்மாணி ஸந்ந்யஸ் யாத்யாத் மசேதஸா.–
நிராஸீர் நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர—৷৷3.30৷৷

ஆத்மாவைப் பற்றிய அறிவோடு -அனுசந்தானத்தோடு -எல்லாக் கர்மங்களையும் சர்வ அந்தர்யாமியான
என்னிடத்தில் நன்கு வைத்து -கர்ம பலத்தில் விருப்பம் அற்றவனாயும் –
என்னுடைய கர்மம் என்ற எண்ணம் அற்றவனாயும் ஆகி
அநாதி பாவத்தைப் பற்றிக் கவலைப் படாதவனாய்ப் போர் புரிவாயாக –
தூண்ட ஞானம் வேன்டும் -முக்குணம் தூண்டுமோ -சர்வேஸ்வரன் -நியமித்தால் தூண்டப படுகின்றன –
என்னிடம் அனைத்தையும் சமர்ப்பித்து -சர்வ அந்தர்யாமி வியாபகம் -மயி -ஹ்ருதய குஹைக்குள்
சர்வ நியாந்தா தானே -என்ற எண்ணம் வேண்டுமே –

உயிரான ஸ்லோகம் –மூன்று வித தியாகமும் இதில் உண்டு –சந்யாசியா நான் கர்த்தா இல்லை –
நிராஸீ -ஆசைப்படாதே -பலமும் நமக்கு இல்லை -யாக எஜமான் போலே இல்லை –
சொத்து அடைந்து ஸ்வாமி ஆனந்தம் படுவது போலே –
நிர்மமோ– மமதா தியாகம் -அடுத்து -ஜுரம் நீங்கி சண்டை போடு -மூன்று ஜுரங்களும்- இல்லாமல் –
சம்சார தோஷங்களையும் அறிந்து ஆத்ம சாஷாத்கார இன்பமும் அறிந்து -விடாமல் கேட்டு -மனம் பழக்கி –
ஸ்வதந்த்ர கர்த்தா அவன் பரதந்த்ர கர்த்ருத்வம் நமக்கு –
மா மரம் தென்னை மரம் -ஒரே நீர் -ஒரே உரம் -விதை வேறே -போலே நம் கர்மா
சேர்த்தே அறிந்து கொள்ள வேன்டும் -பரதந்த்ர கர்த்ருத்வம் நமக்கு உண்டு –
பலன் -கூடாது என்றது -ஆத்ம சாஷாத்காரம் உயர்ந்த பலனில் மட்டும் நோக்கு –
தியாகம் பண்ணும் கர்த்ருத்வம் உண்டோ என்றால் -நான் சாஸ்திரத்தில் சொன்னதால் செய் –

இத்தையே 18 அத்தியாயத்திலும்
த்யாகோ ஹி புருஷ வ்யாக்ர த்ரிவித ஸம் ப்ரகீர்த்தித என்று
ஸந்யாஸமான தியாகமாவது கர்மங்களை பகவத் ஆராதனமாகச் செய்து கொண்டே கர்த்ருத்வ புத்தி -மமதா -பல -சங்கங்களை விடுவதே –

நான்காம் அத்தியாயத்தில் அவதார ரஹஸ்யம் –
பதினைந்தாம் அத்யாயத்திலும் புருஷோத்தம வித்யா வெளியிட்டு தன்னுடைய சரண்யத்வத்தை உபதேசித்து
தஸ்மிந் த்ருஷ்டே பராவரே –
பரத்வ ஸுலப்ய பரிபூர்ணன்

தேஹாத்மாக்களின் நித்ய அநித்யத்வங்களை நன்கு உபதேசித்து அர்ஜுனன் சோகம் போக்கி அருளினான் இரண்டாம் அத்தியாயத்தில் –

16 அத்தியாயத்தில் -மாஸூச சம்பதம் தைவீம் அபி ஜாதோ அஸி -பாண்டவ என்று
தைவீ சம்பத் விசிஷ்டனாகக் கொண்டாடி சோகத்தைப் போக்கினான்

சரம ஸ்லோகம் அருளிச் செய்து துஷ் கரமாயும் விருத்தமாயும் உள்ள உபாயாந்தரங்களைப் பற்றிய சோகம் நிவ்ருத்தி

ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு உட் க்கிடந்த சோகமே ஸ்லோகமாக வழிந்தன -சோக ஸ்லோஹத்வம் ஆகத
இங்கு ஆச்ரித சோக நிவ்ருத்தங்களுக்காக கீதா ஸ்லோகங்கள்

ஜீவ பர பேதத்தில் தொடங்கி
சரண்ய சரணாகத ரஷ்ய ரக்ஷக பேதத்தில் நிகமனம்
பேத தர்சன ப்ரதிபாதிகமான கீதா சாஸ்திரம்

ஜீவ பர யாதாத்ம்ய ஞானபூர்வக வர்ணாஸ்ரம தர்ம அங்க ஏக பரமபுருஷ சரண யுகள பக்தி -பகவத் பிராப்தி ஹேதுவாகும்-என்று ஒருபடி கீதா நிர்வாஹம்

அவனே சர்வாத்மாக்களுக்கும் ஸர்வ புருஷார்த்த பிராப்திக்கும் ஸித்த உபாய பூதன் -ஸாஷாத் தர்ம பூதன் என்றும் நிர்வாகம்

முந்தையது அங்க பிரபத்தி பரம் -இது ஸ்வ தந்த்ர பிரபத்தி பரம்
ஸாஷாத் தர்மமே அவனே

யே ச வேத விதோ விப்ரா யே ச அத்யாத்ம விதோ ஐநா
தே வதந்தி மஹாத்மாநம் கிருஷ்ணம் தர்மம், ஸனாதனம் -அவனே உபாய பூதன்

மத் பக்தா யாந்தி மாம் அபி
மம சாதரம்யம் ஆகதா
மாமேதி ஸ அர்ஜுனா
மாமேவ ஏஷ்யஸி -அவனே ப்ராப்யன்

தர்ம ஷேத்ரே -த்டுஷ்டாந்த வாக்கியத்தில் தொடங்கி
யத்ர யோகேஸ்வர -ஸஞ்ஜயன் வாக்கியத்தில் ஸமாப்தம்
கேசவ அர்ஜுனன் சம்வாதத்தை அடக்கிக் கொண்டு இருக்கும் சஞ்சய் த்ருதராஷ்ட்ர சம்வாதமே கீதை

சூரணை -189-

இனி மேல் இப் பிரபந்த பிரதிபாத்ய அர்த்தங்களை விஸ்த்ரேண பிரதி பாதிப்பதாக திரு உள்ளம் பற்றி ,
அதில் பிரதமத்திலே சாஷாத்க்ருத பகவத் தத்வரான இவர் -சம்சாரிகளுக்கு உஜ்ஜீவன அர்த்தம்
உபதேசம் பண்ணின இப் பிரபந்தம் –பிரதி பாத்ய அர்த்த சாம்யத்தாலே -பகவத் ப்ரணீத –
கீதோ உபநிஷத் -சமமாகச் சொல்லப் படும் என்கிறார் -மேல் –
(மேலே ஸ்ரீ கீதா சாம்யமும் இதன் ஏற்றமும் அருளிச் செய்கிறார் -மேல் ஐந்து ஸூத்ரங்களால்
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ்வருமறையின் பொருள் அருளினான் ஸ்ரீ கீதாச்சார்யர்
அவர் அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
திருக்குருகூர் ஞானப்பிரான் சந்நிதியும் பிரதானம் -)

மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை
நின்மலமாக வைத்தவர்
ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது
தத்வ விவேக
நித்யத்வாநித்யத்வ
நியந்த்ருத்வ
சௌலப்ய
சாம்ய
அஹங்கார இந்திரிய தோஷ பல
மன பிராதான்ய
கரண நியமன
ஸூஹ்ருதி பேத
தேவாஸூர விபாக
விபூதி யோக
விஸ்வரூப தர்சன
சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே
அன்றோதிய கீதா சமம் என்னும் ..

அதாவது
மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை —
எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் –முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை–திருவாய் -1-5-2-என்றும் –
எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கர்மங்களும் செய் –திருவாய் -3-10-8- -என்றும் சொல்லுகிறபடி
சர்வ காரணமாய் –அபரிசேத்யமான சங்கல்ப ரூப ஞானத்தை உடையவனாய் –
சூழ்ந்த அதனில் பெரிய சுடர் ஞான இன்பம் –திருவாய் -10-10-10-–என்கிறபடியே
பிரகிருதி புருஷ தத்வங்கள் இரண்டும் தன்னுள்ளே ஆகும் படி வியாபித்து –
தான் அபரிசேத்யமாய் – உஜ்ஜ்வலமாய் -ஞான ஆனந்த லஷணமாய் இருக்கிற –
ஸ்வரூபத்தை உடைய சர்வேஸ்வரனை –

நின்மலமாக வைத்தவர் –
எனது ஆவி உள்ளே நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து -திருவாய் -4-7-7-என்று
பரிபூர்ண ஞான ஸ்வரூபனான உன்னை என் நெஞ்சுக்குள்ளே விசத தமாக அனுபவித்து –
என்னும் படி சாஷாத் கரித்த இவ் ஆழ்வார் –.

ஞானப் பிரானை ஞானத்து வைம்மின் என்ற இது —
இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா வர்க்கும்
எரி திரை வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த –ஞானப் பிரானை
அல்லால் இல்லை நான் கண்ட நல்லது -திருவிருத்தம் -99-என்று
பிரளய ஆர்ணவ மக்னையான பூமியை -மகா வராஹமாக -உத்தரித்த -ஞான சக்திகளையும் –
ஸ்வாமித்வ பிராப்தியும் உடையவனாய் -ஸ்லோக த்வய முகத்தாலே சரமோ உபாயத்தை
வெளியிடுகையாலே -ஞான உபகாரனுமாய் இருப்பவனை – ஒழிய -சர்வருக்கும்
உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பது ஒன்றும் இல்லை –இது நான் அறுதி இட்ட விலஷணமான அர்த்தம் –
என்று பிரதம பிரபந்தத்தில் அருளிச் செய்த விஷயத்தை உபாயகமாகப் பற்றச் சொல்லுகிற அளவில் –

திரு குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைமின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே–திருவாய் -4-10-9-என்று
உஜ்ஜீவிக்க வேண்டி இருந்தீர்களாகில் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசத்தை
உங்கள் மானஸ ஜ்ஞானத்துக்கு விஷயம் ஆக்குங்கோள் என்று சம்சாரிகளை
குறித்து உபதேசித்த இப் பிரபந்தம் –

தர்ம சம்ஸ்தாபன அர்த்தமாக அவதரித்து அருளின ஸ்ரீ கிருஷ்ணன் –
அஸ்தான ஸ்நேஹ காருண்யா தர்ம அதர்ம தியா குலம்
பார்த்தம் பிரபன்ன முத்திஸ்ய சாஸ்திர அவதரணம் க்ருதம்–ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –5–என்கிறபடியே –
அஸ்தானத்தே உண்டான – பந்து ஸ்நேஹ காருண்யங்களாலும் – ஸ்வ தர்மத்தில் அதர்ம புத்தியாலும் கலங்கி –
நயோத்ஸ்யாமி–ஸ்ரீ கீதை -2-6- -என்று யுத்த அநிவ்ருத்தனாய் –
யச்ஸ்ரேயஸ் ஸ்யான் நிச்சிதம ப்ரூஹி தன்மே சிஷ்யத் தேஹம்
சாதிமாம் த்வம் பிரபன்னம்–ஸ்ரீ கீதை –2 7-என்ற அர்ஜுனனைத் தெளிவித்து
யுத்தே பிரவர்த்தன் ஆக்குகைக்கு வியாஜமாக –
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய–திருவாய் -4-8-6- -என்கிறபடியே
லோகத்துக்கு உஜ்ஜீவன சாஸ்த்ரமாம் படி எல்லாப் பொருளும் விரித்த ஸ்ரீ கீதையில் –

1 ,2 ,3 தத்வ விவேக –
பிரதமத்தில் –தேக ஆத்மா அபிமான கார்யமான பந்து சிநேகத்தையும் –
வத பீதியையும் மாற்றுகைக்காக தத்வ ஞானத்தை உபதேசிக்கத் தொடங்கின அளவிலே –
நத்வே வாஹம் ஜாது நாசம் நத்வம் நேமே ஜநாதிபா –
நசைவ நபவிஷ்யாம சர்வே வயமத பரம் –ஸ்ரீ கீதை -2-12–என்று
சர்வேஸ்வரனான தன்னோபாதி சகல ஆத்மாக்களும் நித்யர் என்று அருளிச் செய்கிற வழியிலே –
ஜீவ பர பேதம்–ஜீவர்களுக்கு பரஸ்பர பேதம் -ஆகிய இவற்றை தர்சிப்பித்து –
தேஹி நோஸ்மின் யதா தேக கௌமாரம் யௌவனம் ஜரா
ததா தேஹாந்தர ப்ராப்தி தீரஸ் தத்ர நமுஹ்யதி -2-13-– இத்யாதியாலே –
பிரகிருதி ஆத்மா விவேகத்தையும் சொல்லுகையாலே தத்வங்களினுடைய விவேகத்தையும் —

4 -நித்யத்வ அநித்யத்வ —
அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாஸ் சரீரிண
அநாசின அப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத -2-18-என்றும்
நஜாயதே ம்ரியதேவா கதாசித் நாயம் பூத்வா பவிதா வாநபூயஸ்
அஜோ நித்யஸ் சாஸ்வதோயம் புராணோ நஹன்யதே ஹன்யமானே சரீரே –2-20 -என்றும் ,
வாசாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாயா நவாணி க்ருஹணாதி நரோபராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணான் யன்யாமி சம்யாதி நவாணி தேஹி –2-22-இத்யாதிகளாலே
ஆத்ம நித்யத்வ தேக அநித்யங்களையும்-

5 -நியந்த்ருத்வ –
பூமிராபோ நலோ வாயு கம்மனோ புத்தி ரேவச –
அஹங்கார இதீயம் மே பின்னா பிரகிருதி ரஷ்டதா–7-4-
அபரே யமித ஸ்த்வன்யாம் பிரகிருதி வித்தி மே பராம் –
ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் -7-5-என்கிற படியே
சேதன அசேதன சரீரியாய் –
சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதி ஜ்ஞாந மபோஹநஞ்ச -15-15-என்றும் –
ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹ்ருத்தேசே ர்ஜூன திஷ்டதி
ப்ராமயன் சர்வ பூதானி யந்த்ராரூடானி மாயயா-18-61- -என்றும்
சொல்லுகிறபடி சர்வ ஜன ஹ்ருதிஸ்த்தனாய் -நின்று -சர்வ பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும்
பண்ணுவிக்கை யாகிற ஈஸ்வரனுடைய நியந்தருத்வத்தையும் —

6 -சௌலப்ய –
தஸ்யாஹம் ஸூலப பார்த்த நித்ய யுக்தஸ்ய யோகின-8-11- –என்றும்
பரித்ராணாய சாதூனாம் ,விநாசாய துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே-4-8- -என்றும்
பக்திமான்கள் நிமித்தவாகவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான அவன் சௌலப்யத்வத்தையும் ..

7 -சாம்ய –
சமோஹம் சர்வ பூதேஷு நமே த்வேஷ் யோஸ்தி நப்ரிய–9 -29-என்று
அவனுடைய ஆஸ்ரத்யநீயத்வே சர்வ சாம்யத்தையும்

8 -அஹங்கார தோஷ –
அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே-3-27 -என்று அஹங்கார தோஷத்தையும் –

9 -இந்திரிய பல–
யததோஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித
இந்திரியாணி ப்ரமாதீனி ஹரந்தி பிரசபம் மன -2-60-என்று
இந்திரிய பிராபல்யத்தையும்-

10 -மன ப்ராதன்ய –
சஞ்சலம் ஹி மன க்ருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோ ரிவ ஸூ துஷ்கரம்-6-34-என்றும் –
அசம்சயம் மஹாபாஹோ மனோ துர் நிக்ரஹம் சலம்
அப்யாசேனது கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே-6-35- -என்றும்
மற்ற இந்திரியங்களில் வைத்துக் கொண்டு மனசின் உடைய பிரதான்யத்தையும் –

11 -கரண நியமன –
தானி சர்வாணி சம்யம்ய யுக்த ஆசீத மத்பர
வசே ஹி யச்யேந்த்ரியாணி தஸ்ய பிரஜ்ஞா ப்ரதிஷ்டிதா -2-61- -என்றும் –
சர்வத்வாராணி சம்யம்ய மனோ ஹ்ருதி நிருத்த்யச – 8-12- என்றும்
கரண நியமனத்தையும் —

12 -ஸூஹ்ருதி பேத –
சதுர்விதா பஜந்தே மாம் ஜனாஸ் ஸூக்ருதி நோர்ஜுன
ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூராரர்தாத்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப-7-16- -என்று
ஸூஹ்ருதிகளுடைய பேதத்தையும் –

13 -தேவாசுர விபாக –
த்வௌ பூத சர்கவ் லோகேஸ்மின் தைவ ஆஸூர ஏவச-16-6-என்றும்
தைவீ சம்பத் விமோஷாய நிபாந்தயா ஸூரி மதா 16-4–என்று
தேவாசுர விபாகத்தையும்

14 -விபூதி யோக –
ஹந்ததே கத யிஷ்யாமி விபூதி ராத மநஸ் ஸூப பிராதான்யதஸ் குரு ஸ்ரேஷ்ட
நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே –10-9-என்றும்
ஆதித்யா நாமஹம் விஷ்ணு ஜ்யோதிஷாம்
ரவிரம்சுமான்-10-21- -இத்யாதியால் விபூதி யோகத்தையும் –

15 -விஸ்வரூப தர்சன –
பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹ சர்வாம் ஸ்ததா பூத விசேஷ சங்கான்
ப்ரஹ்மாணம் ஈசம் கமலா சனஸ்தம் ருஷீம்ஸ் ச சர்வான் உரகாம்ச தீப்தான் 11-15-இத்யாதியாலே
விஸ்வரூப தர்சனத்தையும் –

16 -சாங்க பக்தி –
மன்மனா பவ மத் பக்தோ மத் யாஜி மாம் நமஸ்குரு
மாமே வைஷ்யசி யுக்த்வைவ மாத்மானம் மத்பராயணா -9-24–என்று
அங்க சஹிதையான பக்தியையும்-
(உபாய – சாதன -உபாசனை -பக்தி இது–என் விஷயமாக ஆறு தடவை சொல்கிறான் -)

17 -18 -பிரபத்தி த்வை இத்யாதி –
தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்தயா
மாமே வயே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -7-14-என்றும்
தமேவ சரணம் கச்ச சர்வ பாவேன பாரத–18-62- -என்று
அங்கத்வேனவும்
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூ ச -18-66- –
ஸ்வதந்த்ரவேனும் –
இரண்டு படியாகவும் பிரபத்து உபதேசம் பண்ணினால் போலேயும்-

(ரஹஸ்ய த்ரயத்தில் தான் ஸ்வ தந்த்ர பிரபத்தி -கீதா பாஷ்யம் வேதாந்த அர்த்தம் சொல்ல வந்ததால் –
அங்க பிரபத்தி தான் இரண்டுமே )

இவரும்
1-2 -3–ஜீவ பர பேதமும்/ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் –
பிரகிருதி -ஆத்மா விவேகம்-ஆகிற தத்வ விவேகத்தையும் —
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -8-8-2-என்கிற இடத்தில் சப்தமாகவும் -ஆர்த்தமாகவும்
ஜீவ பர பேதமும்,ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் ,
( அடியேன் உத்தம புருஷன் இதனால் ஜீவ பரஸ்பர பேதம் -அடிமைத்தனம் அறிந்த அறியாத என்றும் பேதமும் உண்டே )
சென்று சென்று பரம் பரமாய்-8-8-5- -என்று
ஆத்மாவுக்கு தேக விலஷணத்தைச் சொல்லுகையாலே பிரகிருதி -ஆத்மா விவேகம்
ஆகிற தத்வ விவேகத்தையும் —

4 — நித்யத்வ -அநித்யத்வங்களையும்
மின்னின் நிலையிலே மன் உயிர் ஆக்கைகள்-1-2-2- -என்றும் –
உள்ளதும் இல்லதும் -1-2-8–என்றும்
சித் அசித் தத்வங்களின் நித்யத்வ -அநித்யத்வங்களையும்-

5–நியந்தருத்வத்தையும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து-1-1-7- -என்றும் –
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்து -1-1-19–என்றும்
சேதன அசேதன சரீரியாய்
நின்றனர்-1-1-6- -இத்யாதிப் படியே
அவற்றின் சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஸ்வ ஆதீனம் ஆகும் படி இருக்கிறவனுடைய
நியந்தருத்வத்தையும்-

6 -அவனுடைய சௌலப்யத்தையும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–என்றும் –
பல பிறப்பாய் எளிவரும் இயல்வினன் -1-3-2- -என்றும்
ஆசா லேசம் உடையாரை பற்றவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான
அவனுடைய சௌலப்யத்தையும்-

7 -சாம்யத்தையும்
பற்றிலன் ஈசன் முற்றவும் நின்றனன் –1-2-6–என்று
அவனுடைய ஆஸ்ரணியத்வே சாம்யத்தையும்-
(போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும் மாற்றே மாற்றல் இலையே நினக்கு
மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும் வேற்றுமை இன்றது போற்றுநர்ப் பெறினே–பரிபாடல் -4-51/54-)

8 -அஹங்கார தோஷத்தையும்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -1-2-3–என்று
சம்சார ஹேது அதுவேயாக சொல்லுகையாலே -அஹங்கார தோஷத்தையும்-

9 -இந்திரிய பலத்தையும்
விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம் புலன்-7-1-6- -என்று
இந்திரிய பலத்தையும்-

10 -மனோ பிரதான்யத்தையும்
மனத்தை வலித்து -5-1-4-என்று
மனோ நியமத்தின் சொல்லுகையாலே மனோ பிரதான்யத்தையும்-

11 -கரண நியமனத்தையும்
உள்ளம் உரை செயல் உள்ள விம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து -1-2-8–என்று
கரண நியமனத்தையும்-( மத் பர அவன் இறை உள்ளில் ஒடுங்கு இவர் )

12 -ஸூஹ்ருதி பேதத்தையும் –
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்-4-1-1– -என்கையாலே
ஆர்த்தனான பிரஷ்டை ஐஸ்வர்ய காமன்
இறுகல் இறப்பு-4-1-10– என்னும் -என்கையாலே
ஜிஜ்ஞாசுவான கேவலன் –
குணம் கொள் நிறை புகழ் மன்னர் -4-1-8–இத்யாதியாலே
அர்த்தார்த்தியான அபூர்வ ஐஸ்வர்ய காமன்
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மின்-4-1-1- -என்கையாலே
ஜ்ஞாநியாகிற பகவத் சரணார்த்தி -என்கிற ஸூஹ்ருதி பேதத்தையும் –

13 -தேவ அசுர விபாகத்தையும்
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் –5-2-5–என்றும் ,
நண்ணா அசுரர் –நல்ல அமரர் -10-7-5–என்று
தேவ அசுர விபாகத்தையும்-

14 -விபூதி யோகத்தையும்
புகழு நல் ஒருவன் -3-4-1–என்றும் –
நல் குரவும்-6-3-1- -என்றும் –
மாயா வாமனன்-7-8-1- -என்றும் –
இவைகளில் விபூதி யோகத்தையும் –

15 -விஸ்வரூப தர்சனத்தையும் –
நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் -6-9-1–என்று
விஸ்வரூப தர்சனத்தையும் –

16 -சாங்க பக்தியையும்
வணக்குடை தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு உணக்குமின் பசையற-1-3-5-என்றும் –
மேவித் தொழுது உய்மினீர்கள் வேதப் புனித விருக்கை நாவில் கொண்டு அச்சுதன்
தன்னை ஞான விதி பிழையாமை-5-2-9-என்றும் –
மாலை நண்ணி –காலை மாலை –கமல மலர் இட்டு-தொழுது எழுமினோ -9-10-1–என்றும் -சாங்க பக்தியையும் –

17 –18 –இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே
அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து -1-3-5–என்று
அவன் அருளி செய்த பிரபத்தி ரூப ஞானத்தை சகாயமாக கொண்டு அத்தை அறிந்து என்கையாலே –
பக்தி அங்கத் வேனவும் –
மற்று ஓன்று இல்லை-9-1-7–என்றும் –
சரணமாகும் -9-10-5-என்கிற வற்றால்
ஸ்வதந்திர வேனேவும் –
இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே-

ஏதத் பிரதி பாத்யர்த்த சாம்யத்தைக் கொண்டு
மாயோன் அன்று ஓதிய வாக்கு–நான்முகன் –71 -என்கிற
ஸ்ரீ கீதை உடன் ஒக்க சொல்லப் படும் என்கை ..

பிரபத்தி த்வை இத்யாதிகளாலே -என்கிற இடத்தில்-ஆதி -சப்தத்தாலே –
19-அவதார ரஹச்ய வைபவம்
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாமேதி சோர்ஜுனா–4-9-என்றார் போலே
இவை பத்தும் வல்லார் அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறை-1-3-11- -என்று
சொன்ன அவதார ரஹச்ய வைபவம் –

20-ஸ்வ ஆராதன்-
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி –
ததஹம் பக்த்வுபஹ்ருத மஸ்நாமி பிரயதாத்மன -9-26– என்றார் போலே –
பிரிவகை இன்றி நன்னீர் தூயப் புரிவதுவும் புகை பூ-1-6-1–என்று சொன்ன
அவன் ஸ்வ ஆராதத்தை முதலாக கீழ் அனுக்தங்களையும் –

21-கர்ம யோகம் தொடங்கி ஆச்சார்ய அபிமானம் பர்யந்தம் உபதேசம்
தேக ஆத்மா அபிமானிகளை க்ரமத்திலே பிராப்ய சாதனங்களின் எல்லையில் மூட்டுகையும் –
சாத்யோ உபாயங்களில் பரந்து சித்தோ உபாயத்தை மறைத்து உபதேசிக்கும் இடத்தில்
வைபவம் தோற்ற வெளி இடுகையுமான வற்றையும் நினைக்கிறது –

சரம ஷட்கம் -தத்வ ஞானம் விளைய உபதேசம் பூர்வ த்ரிகம் -தத்வ ஞான அனுகுண அனுஷ்டான உபதேசம் உத்தர த்ரிகம்
ஸாஸ்த்ர முறைப்படி அனுஷ்ட்டிக்க வேணும் -16 அத்யாயம்
ஸாத்விக ஸ்ரத்தையுடன் அனுஷ்ட்டிக்க வேணும் -17 அத்யாயம்
வர்ணாஸ்ரமங்களை கணிசித்து அனுஷ்ட்டிக்க வேணும் -18 அத்யாயம்

பகவத் அபசாரமாவது -வர்ணாஸ்ரம விபரீதமான உபசாரம் -ஸ்ரீ வசன பூஷணம்

ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவ ஆஜ்ஞா யஸ்தாம் உல்லங்க்ய வர்த்ததே
ஆஜ்ஞாச் சேதீ மம த்ரோஹீ மத் பக்தோ அபி ந வைஷ்ணவ –

வர்ணாஸ்ரமங்கள் கர்மம் என்றும் கைங்கர்யம் என்றும் பேதம் -அதிகாரிகளைப் பொறுத்து –

இது அன்றோ ஆயன் துவரைக்கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கின் சாரம்-

ஸூ கீதா கர்தவ்யா கிமன்யை ஸாஸ்த்ர ஸங்க்ரஹ
யா ஸ்வயம் பத்ம நாபஸ்ய முகபத்மாத் வி நிஸ்ருதா —

தத்வ த்ரய பேதம் பாரமார்த்திகம்
தத்வத்ரய பேத தர்சனம் ஞான கார்யம்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே -தத்வ ஞானம் ஒன்றே மோக்ஷ சாதனம் என்று வேதாந்தங்கள் சொல்ல
தத்வாந்தர பரி ஞானத்தையும் சொல்வான் என் என்னில்
பகவத் தத்துவத்தை அறியும் போது
இதர ஸமஸ்த விலக்ஷணமாயும்
ஸமஸ்த காரணமாயும்
வியாபகமனாகவும்
தாரகமாகவும்
நியாமாகவாகவும்
சேஷியாகவும் அறிய வேண்டுகையால்
தத்வாந்தர ஞானம் இல்லாத போது இப்படி அறிய விரகு இல்லையே

ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||–ஸ்தோத்ர ரத்னம் ஶ்லோகம் 4 –

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

கீதாச்சார்யன் அருளால் தத்வ விவேகம் வரும்
அசித் விலக்ஷணன் ப்ரஹ்மம் -அறிந்து தேஹாத்ம பிராந்தி விலகும்
ஜீவ பர விவேகத்தால் ஜீவ ஈஸ ஐக்ய கலஹம் நிவ்ருத்தமாம்
அடியேன் உள்ளான் –8-8-2-
சென்று சென்று பரம் பரமாய் -8-8-5-

அஹம் -த்வா -ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி –
பக்தனாய் அஞ்ஞனாய் அசக்தனாய் அபூர்ணனாய் அப்ராப்தனாய் -உள்ள
அபிமுக சேதனனை த்வா சப்தத்தாலும்
முகுந்தனாய் ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தனாய் பூர்ணனாய் ப்ராப்தனாய் உள்ள
ஸர்வேஸ்வரனை அஹம் சப்தத்தாலும்
பந்தகமான விரோதியையும் தந் நிவ்ருத்தியையும் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்றும் விளக்கி அருளுகிறார்

ஆக சேதன அசேதனங்கள்
சேஷமாய் -வியாப்யமாய் -தார்யமாய் -நியாம்யமாய் -இருக்கும்
ஈஸ்வரன்
சேஷியாய் -வ்யாபகனாய் -தாரகனாய் -நியாந்தாவாய் இருக்கும்
என்ற ஞானமே யதார்த்த ஞானம்
இதுவே ஸ்ரீ கீதா சாரம்

பிரதானமான ஸ்ரீ கீதையும்
ப்ரமேயமான ஸ்ரீ பார்த்த சாரதியும்
பிரமாதாக்களான ஆழ்வார்களும் வாழி வாழி வாழியே –

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–