Archive for April, 2021

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் 4–அர்த்தபஞ்சக அதிகாரம் —

April 11, 2021

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

———–

அதிகாரம் 4–அர்த்த பஞ்சக அதிகாரம் —-

முமுக்ஷுக்கள் அறிந்து கொள்ள வேண்டிய 5 தத்வங்கள்

1.ஈச்வர ஸ்வரூபம்
2.ஜீவ ஸ்வரூபம்
3.மோக்ஷோபாயம்–மோக்ஷம் என்கிற பலன்
4.ப்ராப்தி விரோதி
5.அதற்கான பரிகாரம்
இவையே அந்த 5 தத்வங்கள்
இவற்றை விவரிக்கிறார், ஸ்வாமி தேசிகன் இந்த அதிகாரத்தில்–

அதிகாரத்திலிருந்து —-

ஆதெள ப்ராப்யம் பரமம் அநதம் ப்ராப்த்ரு ரூபம் ச மாதெள
இஷ்ட உபாயம் து அயனன மஸோரீர்ப்ஸிதார்த்தம் சதுர்த்யாம்
தத் வ்யாதாதம் மமக்ருதிகிரி வ்யஜ்ஜயந்தம் மனும் தம்
தத் ப்ராயம் ச த்வயம் அபி விதந் ஸம்மத :ஸர்வவேதீ

வ்யாக்யானம் —-

1.ப்ரணவத்திலும் ”அ ” உள்ளது; அஷ்டாக்ஷரத்தில் , நாராயண என்பதிலும் ”அ ” உள்ளது. இவற்றின் மூலமாக, குற்றமே இல்லாததும்,
மிக மிக உயர்ந்ததும், அடையப்பட வேண்டிய பொருளாக உள்ளதும் , இருப்பது ”பகவான் ” என்று கூறப்பட்டது.
நாராயணாய என்பதில் உள்ள நான்காம் வேற்றுமை (உ–ம்.விவசாயி மாடுகளுக்குத் தண்ணீர் கொடுக்கிறான் )
அடைய ஆசைப்படும் பகவானைச் சொல்லிற்று.
”அம்பஸ்ய பாரே புவனஸ்ய மத்யே —-” என்று ஆரம்பிக்கிறது ,
மஹா நாராயண உபநிஷத்
2. நம என்கிற பதத்தில் உள்ள ”ம ” என்கிற அக்ஷரத்தின் மூலமாக ,பகவானை அடைய வேண்டிய ஜீவாத்மாவின் ஸ்வரூபம் கூறப்பட்டது.
3.நாராயணாய என்பதில் உள்ள, ”அயநம் ” என்பதன் மூலமாக, பகவானை அடையும், ஸித்தோபாயம் கூறப்பட்டது.
4. நம என்பதன் மூலமாக, இப்படிப்பட்ட உபாயத்துக்கு வேண்டிய முக்கிய அங்கமான சரணாகதி (ஸாத்யோபாயம் ) கூறப்பட்டது.
.5.”நம ” என்பதில் உள்ள ”ம ” என்கிற எழுத்து, பகவானை அடையத் தடையாக உள்ள ”மம காரத்தைச் சொல்லிற்று .
மம காரம் என்றால்,நான், என்னுடையது என்கிற எண்ணம்–சிந்தனை–

இங்ஙனம் 5 உன்னத விஷயங்களை விளக்குகின்ற அஷ்டாக்ஷரத்தையும் இதைப்போல , த்வயம் , சரம ச்லோகம்
இவற்றையும் தெளிவாக அறிபவன் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆகிறான்.

அதிகாரத்திலிருந்து—-

ஐந்து அர்த்தங்களைக் கூறுவதற்கும் , ஆறு அர்த்தங்களைக் கூறுவதற்கும் வேறுபாடு இல்லை. நாராயணாதி சப்தங்களிலே விவக்ஷிதமான
ஸம்பந்த விசேஷத்தை ஸித்தாந்தத்துக்குத் தளமாக்கி இத்தை அநுபந்தித்திருக்கும் அர்த்த பஞ்சகத்தைச் சிலர் விசாரித்தார்கள்
இச் சம்பந்தத்தோடே கூட ஷடர்த்தங்களென்று சிலர் அநுஸந்தித்தார்கள்

வ்யாக்யானம்—-

நாராயணாதி ஸப்தங்களிலே —” நாராயண ” , ”ஓம் ” ஆகிய பதங்களின் மூலமாக பகவானுக்கும், ஜீவாத்மாவுக்கும் இருக்கிற உறவுமுறை ,
ஆத்மாவுக்கும், சரீரத்துக்கும் இருப்பதைப் போன்றது என்பது இங்கு விவரிக்கப்பட்டது.

இந்தத் தத்வம் , நமது விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்திற்கு அடிப்படை என்று பறை சாற்றுபவர்கள் , முமுக்ஷுவால் ( மோக்ஷத்துக்கு ஆசைப்படுபவன் )
தெரிந்து கொள்ள வேண்டியது, அர்த்தபஞ்சகம் எனக் கருதி, அதை ஆராய்ந்தார்கள். இன்னும் சிலர், ஈச்வரன்—ஜீவன் என்கிற உறவு முறையும்
நன்கு அறியப்பட வேண்டும் என்று உணர்ந்து, ஆறு அர்த்தங்களையும் ஆராய்ந்தனர்

அதிகாரத்திலிருந்து——

அர்த்த பஞ்சகத்தின் விவரம்
———————————————-
இச் சம்பந்தம் போலே , முமுக்ஷுவுக்கு விசேஷித்து அறிய வேண்டுவதாகச் சேர்த்த அர்த்த பஞ்சகம் ஏதென்னில்

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச்ச ப்ரத்யகாத்மந :
ப்ராப்த்யுபாய பலம் ச ஏவ ததா ப்ராப்தி விரோதி ச
வதந்தி ஸகலா வேதா : ஸ இதிஹாஸ புராணகா :

வ்யாக்யானம் —-
—————————-

ஸ்வாமி தேசிகன், ஹாரீத ஸம்ஹிதையிலிருந்து மேற்கோள் காட்டுகிறார் —
முமுக்ஷுக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் இதில் சொல்லப் படுகின்றன-
ஜீவாத்மா அறிய வேண்டியவை —
1.ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம்
2.அவனை அடைய விரும்பும் ஜீவனின் ஸ்வரூபம்
3.ப்ரஹ்மத்தை அப்படி அடைவதற்கான உபாயம்
4.ப்ரஹ்மத்தை அடைவதால் பெரும் பயன்
5.ப்ரஹ்மத்தை அப்படி அடைவதற்குத் தடையாக உள்ள விஷயங்கள்

ப்ரஹ்மத்தின்-ஈச்வரனின் ஸ்வரூபம்

அதிகாரத்திலிருந்து—
———————————

இவற்றில் ப்ராப்யமான ப்ரஹ்மத்தினுடைய ஸ்வரூபம் –திருமந்த்ரத்தில் ப்ரதம அக்ஷரத்திலும் நாராயண சப்தத்திலும் ,
த்வயத்தில்
ஸவிசேஷணங்களான நாராயண சப்தங்களிலும் ,சரம ச்லோகத்தில்
மாம் , அஹம் என்கிற பதங்களிலும் அனுஸந்தேயம்

வ்யாக்யானம்
———————-

இவற்றில் –அதாவது–அர்த்த பஞ்சகத்தில்
அடையப்பட வேண்டியதான லக்ஷ்யமான ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் திருமந்த்ரத்தின் முதல் அக்ஷரமான –”அ ” என்பதன் வாயிலாகவும்,
”நாராயண ” என்கிற பதத்தின் வாயிலாகவும் நன்கு தெளிவாகிறது.
”த்வய ” மந்த்ரத்தில் இருக்கிற ”ஸ்ரீமந் ” என்கிற பெருமை சேர்க்கும் சொல்லுடன் கூடிய ”நாராயண –” என்கிற சொல் மூலமாகத் தெளியப்படுகிறது.
சரம ச்லோகத்தில் உள்ள ”நான் ”, ”என் ” என்கிற சொற்கள் மூலமும் அறியப்படுகிறது.

அதிகாரத்திலிருந்து——

ஈச்வரன் , பிராட்டியை விட்டுப் பிரியாதவன் , ஜ்ஞானானந்த ஸ்வரூபன்
———————————————————————————————–

அவ் விடங்களில் அநுஸந்திக்கும் போது

1.ஸ்ரீரியா ஸார்த்தம் ஜகத்பதி :
2.ஏஷ நாராயண: ஸ்ரீமாந்
3.பவாந் நாராயணோ தேவ :ஸ்ரீமாந் சக்ர தரோ விபு :
4.ஸ்ரீவத்ஸ வக்ஷா நித்ய ஸ்ரீ :
5.விஷ்ணோ :ஸ்ரீரநபாயிநீ
6.ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸம் இதம் வசனம ப்ரவீத்
7.ஸீதாமுவாசாதியசா ராகவம் ச மஹா வ்ருதம்
8.அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராக்ஷஸீ கணம்
9.பவேயம் சரணம் ஹி வ :
10.பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா
11.தயா ஸஹாஸீநமனந்த போகினி
12.காந்தஸ்தே புருஷோத்தம :
13.ஸ்வ பரிசரண போகை :ஸ்ரீமதி ப்ரீயமாணே
14.ஸ்ரீமதே நிர்மலானந்தோ தன்வதே விஷ்ணவே நம :
15.ஸ்ரீய :காந்த :அநந்தோ வர குண கணைகாஸ்பத வபு :
16.ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸோ
17.ஸ்ரீய :பதிர் நிகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாநாநந்த ஞானானந்த ஸ்வரூப :
18.நீயும் திருமகளும் நின்றாயால்
19.ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப
20.கோலத் திரு மா மகளோடு உன்னை
21.நின் திரு வருளும் பங்கயத்தாள் திரு வருளும்
22.உன் தாமரை மங்கையும் நீயும்
23.அகலகில்லேன் இறையும்
24.உணர் முழு நலம்
25.நந்தா விளக்கே அளத்தற்கரியாய்

என்றும் ப்ரமாணங்கள் சொல்லுகிறபடியே ,ஸர்வ ப்ரகாரத்தாலும் ஸர்வாவஸ்தையிலும் ஸஹ தர்ம சாரிணியான
பெரிய பிராட்டியாரோடு பிரிவில்லாத முழு நலமான அநந்த ஞானானந்த ஸ்வரூபமாக அநுஸந்திக்க வேணும்

வ்யாக்யானம்
——————————

பகவானின் ஸ்வரூபம் ,எல்லை யில்லா ஞானம் உள்ளதாகவும், எல்லை யில்லா ஆனந்தம் உடையதாகவும் அறிய வேண்டும்.
அவன், எப்போதும், எந்த உருவிலும், எந்தச் சூழலிலும் , தனது நாயகியான பெரிய பிராட்டியாரை விட்டுப் பிரியாமல்
இருக்கிறான் என்பதையும் அறிய வேண்டும் . பெரிய பிராட்டியார், பகவானுடைய எல்லாச் செயல்களிலும் உதவி–பங்கு பெற்று–
இருக்கிறாள் என்பதையும் அறிய வேண்டும். இவற்றைப் பல ப்ரமாணங்கள் மூலமாக அறியலாம்

1. லைங்க புராணம்—-

ஸ்ரீரியா ஸார்த்தம் ஜகத்பதி :—-உலகங்களுக்குப் பதியான நாராயணன்,
ஸ்ரீ மஹா லக்ஷ்மியுடன் வைகுண்டத்தில் இருக்கிறான்

2.ஹரிவம்ஸம் (113–62 )

ஏஷ நாராயண: ஸ்ரீமாந் —இந்த ஸ்ரீமந் நாராயணன் எப்போதும்
ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸஹிதமாகவே இருக்கிறான்

3.ஸ்ரீமத் ராமாயணம் –யுத்த காண்டம் (6– 120–13 )

பவாந் நாராயணோ தேவ :ஸ்ரீமாந் சக்ரதரோ விபு :—–ராமா —
நீயே மஹா லக்ஷ்மியின் நாயகனும் சக்ர தாரியும் எல்லா உலகங்களுக்கும் எஜமானனுமான நாராயணன் ஆவாய்

4. ஸ்ரீமத் ராமாயணம் –யுத்த காண்டம் (6– 114–15 )

ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ ——-ஸ்ரீ வத்ஸம் என்கிற மறுவை தன்னுடைய திருமார்பில் தரித்தவரும், எப்போதும்
பெரிய பிராட்டியாருடன் கூடியிருப்பவரும் —

5. விஷ்ணு புராணம் ( 1–18–17 )

விஷ்ணோ :ஸ்ரீரநபாயிநீ ——மஹா லக்ஷ்மி எம்பெருமானை விட்டு எப்போதும் பிரியாதவள்

6.ஸ்ரீமத் ராமாயணம் ( 3–15–6 )

–ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸம் இதம் வசனமப்ரவீத் —-லக்ஷ்மணன், ஸீதையின் முன்பாக, ராமனிடம் இந்த வார்த்தையைச் சொன்னான்.

7.ஸ்ரீமத் ராமாயணம் ( 2–31–2 )

ஸீதாமுவாசாதியசா ராகவம் ச மஹாவ்ருதம் ——தன்னைச் சரணம் என்று அடைந்தவர்களைக் காப்பேன் என்கிற ஸங்கல்பத்தை
உடைய ராமனிடமும், ஸீதையிடமும் ,லக்ஷ்மணன் சொன்னான்

8.ஸ்ரீமத் ராமாயணம் ( 5–58–87 )

அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராக்ஷஸீ கணம் —-ராக்ஷஸிகளின் கூட்டத்தை, ராமனிடமிருந்து காப்பாற்றும் சக்தி ,ஸீதையிடம் உள்ளது.

9. ஸ்ரீமத் ராமாயணம் ( 5–58–90-)
பவேயம் சரணம் ஹி வ :—–ஹே ராக்ஷஸிகளே — உங்களுக்கு நான் சரணம் புகுகின்றவள் ஆவேன் –( சரணம் என்று
அடைந்த ராக்ஷஸிகளைக் காப்பேன் )

10. ஸ்ரீமத் ராமாயணம் (2–31–27 )

பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா —–ஹே ராமா, இந்த மலை அடி வாரத்தில் ஸீதையுடன் சுகமாக இருப்பீராக —
நீர் விழித்து இருந்தாலும், தூங்கினாலும் உங்களுக்கு எல்லாக் கைங்கர்யங்களையும் ,நான் செய்வேன்

11.ஸ்தோத்ர ரத்னம் (39 )–ஸ்ரீ ஆளவந்தார்

தயா ஸஹாஸீநமநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைகதாமநி |
பணாமணி வ்ராதமயூகமண்டல
ப்ரகாசமாநோதர திவ்ய தாமநி ||

தயாஸஹ –பெரிய பிராட்டியுடன் — வீற்றிருக்கிறான் பகவான் எங்கு வீற்றிருக்கிறான்
சிறந்த ஜ்ஞானம் , பலம் என்பனவற்றுக்கு முக்கிய இடமாய், தன்னுடைய படங்களிலிருக்கும் ரத்னக் கூட்டங்களின்
ஒளி வட்டத்தாலே உள் பிரதேசமெல்லாம், பிரகாசமாக இருப்பதான அப்ராக்ருதமான மணிமண்டபத்தை உடையவனுமான
திருவனந்தாழ்வான் என்கிற நாகணை மேல் வீற்றிருக்கிறான்
பெரிய பிராட்டி ,திவ்ய மஹிஷி என்று ஸேவிப்போர் அறியும் வண்ணம் வீற்றிருக்கிறான்.

12.சதுச்லோகீ –ஸ்ரீ ஆளவந்தார் ( 1 )

காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதி : ஸய்யாஸனம் வாஹனம்
வேதாத்மா விஹகேச்வரோ யவநிகா , மாயா ஜகன்மோஹிநீ |
ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜ :ஸதயித : த்வத்தாஸதாஸீகண :
ச்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம : கதம் த்வாம் வயம் ||

ஹே –பகவதீ —புருஷர்களில் உத்தமனாகிய புருஷோத்தமனாகிய பகவான் , உனக்குக் காந்தன்; ப்ரியன் . கைங்கர்யபதியான
ஆதிசேஷன் சயனமும் ,ஆஸனமும் ஆகிறான். வேத ஸ்வரூபியான கருடனும் , உனக்கு வாஹனம் ;ஆஸனம் .
ஹே –ஜகன்மோஹினீ –உலகில் உள்ள ஜீவாத்மாக்களுக்கு, விபரீத ஜ்ஞானத்தைக் கொடுக்கும் மூல ப்ரக்ருதி என்கிற தத்வம்
உனக்கு சேஷம்—-அதாவது அடிமை. இது திரை போல் இருக்கிறது. ஜீவர்கள் உன்னைத் தரிசிக்க விட்டாமல் தடுக்கிறது. ப்ரஹ்மா,
ருத்ரன் முதலான தேவர்கள் ,அவர்கள் மனைவியரும் உனக்கு ”தாஸத்வம் ” செய்யும் ஸ்த்ரீகளுடன் சேர்ந்து ,
அடிமைக் கூட்டமாக இருக்கிறார்கள். இதில், நீ ”ச்ரீ ” என்று சொல்லப்படுகிறாய்.நாங்கள் யாராக இருந்தாலும்,
உன் பெருமைகளைத் தெளிவாகச் சொல்ல இயலாது.
பெரிய பிராட்டியார், தானே விரும்பி, எம்பெருமானுக்கு சேஷமானதையும்,
நித்ய விபூதி, லீலா விபூதி என்கிற மற்ற எல்லாவற்றிலும் அவள், எம்பெருமானுடன் சேர்ந்து சேஷியாகிறாள்

13.ஆத்ம ஸித்தி ( மங்கள ச்லோகம் ) ஸ்ரீ ஆளவந்தார்

ஸ்வ பரிசரண போகை :ஸ்ரீமதி ப்ரீயமாணே —–எம்பெருமானுடைய
கைங்கர்யங்களைப் போகமாக எண்ணுகிற நித்ய ஸூரிகளால்
சந்தோஷப் படுத்தப்பட்ட பெரிய பிராட்டியுடன் கூடிய
பகவானிடத்தில் பக்தி உண்டாக வேணும்

14.வேதாந்த ஸாரம் –மங்கள ச்லோகம் (ஸ்ரீ உடையவர் )

ஸ்ரீமதே நிர்மலானந்தோ தன்வதே விஷ்ணவே நம —
அசேஷ சிதசித் விஷ்ணு சேஷிநே சேஷஸாயிநே
நிர்மலாநந்த கல்யாண நிதயே விஷ்ணவே நம :
மஹாலக்ஷ்மியுடன் கூடியவனும் கெட்ட குணங்களே இல்லாமல் ஆனந்தக் கடல் போலிருப்பவனும் ஆகிய ஸ்ரீ விஷ்ணுவுக்கு நமஸ்காரம் .
( இது 32 அக்ஷரங்களைக் கொண்டது என்றும் , 32 ப்ருஹ்ம வித்யைகளைக் குறிக்கிறது என்றும்,
எல்ல வேதங்களும் இந்த 32 அக்ஷரங்களில் அடக்கம் என்றும் சொல்வர் )

15. வேதாந்த தீபம் –மங்கள ச்லோகம்–( ஸ்ரீ உடையவர் )

ஸ்ரீய :காந்த :அநந்தோ வர குண கணைகாஸ்பத வபு :—-
மஹா லக்ஷ்மிக்குப் ப்ரியமானவனும் ,எங்கும் நிறைந்தவனும், எல்லை யில்லாக் கல்யாண குணங்களுக்கு ஒரே இடமான
திருமேனியை உடையவனுமான எம்பெருமான்—

16.ஸ்ரீபாஷ்யம் –மங்கள ச்லோகம்—ஸ்ரீ உடையவர்

ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸோ –மஹாலக்ஷ்மிக்கு இருப்பிடமான பரப்ரஹ்மத்தினிடத்தில்

17.ஸ்ரீ கீதா பாஷ்யம் —ஸ்ரீ உடையவர் —

ஸ்ரீய :பதிர் நிகில ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாநாநந்த ஞானானந்த ஸ்வரூப :—-
லக்ஷ்மிபதியான எம்பெருமான், எல்லாக் கெட்ட குணங்களுக்கும் விரோதியாய், எல்ல நற்குணங்களுக்கும் ஒரே இருப்பிடமாய்,
தேசம், காலம், வஸ்து இவைகளால் அளவில்லா ஜ்ஞானமும் ஆனந்தமுமான ஸ்வரூபத்தை உடையவன்.

18. முதல் திருவந்தாதி ( 86 ) பொய்கை ஆழ்வார்

நீயும் திருமகளும் நின்றாயால், குன்றெடுத்து
பாயும் பனி மறைத்த பண்பாளா —வாசல்
கடைகழியா உள்புகாக் காமர்பூங்கோவல்
இடைகழியே பற்றி இனி .

குன்றெடுத்து மழையைத் தடுத்து, ஆயர்களையும் கோக்களையும்
காத்தவனே—நீ திருமகளுடன் இடைகழியில் நின்றாய்– —
——————————————————————–.
என்னிடம் உள்ள அன்பால் அங்கேயே நின்றாய்—இடைகழியை விட்டு வெளியேயும் வரவில்லை; உள்ளேயும்
புகவில்லை.எங்களுடன் கலந்த மகிழ்ச்சியால் இடைகழியிலேயே நின்றாய்.

19. திருவாய்மொழி ( 4–9–10 ) ஸ்ரீ நம்மாழ்வார்

ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப—-

கண்டு கேட்டுற்று மோந்து உண்டுழலு மைங்கருவி
கண்ட வின்பம் தெரிவரிய வளவில்லாச் சிற்றின்பம்
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்
கண்ட சதிர் கண்டொழிந்தேன் அடைந்தே னுன் திருவடியே

அழகிய முன் கை வளைகளை உடைய பெரிய பிராட்டியும் , நாராயணனான நீயும் , நிலாநிற்ப—கைங்கர்யம் பெறுவதற்குச்
சேஷியாய் நிலைத்திருக்க

20. திருவாய்மொழி ( 6–9–3 ) ஸ்ரீ நம்மாழ்வார்

கோலத் திருமாமகளோடு உன்னை

ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப்பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே
கோலத்திருமாமகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ

மஹா லக்ஷ்மியுடன் பொருந்தியுள்ள உன்னை—–

21. திருவாய்மொழி ( 9–2–1 ) ஸ்ரீ நம்மாழ்வார்

நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்

பண்டைநாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு, நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடிகுடி வழிவந்து ஆட்செய்யும்
தொண்டரோர்க்கருளிச் சோதிவாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தென்திரைப் பொருநல் தண்பணை சூழ்ந்த திருப்புளிங்குடிக் கிடந்தானே

தேவரீருடைய கருணையையும் தாமரையில் வஸிக்கும் பிராட்டியின் கருணையையும் கொண்டு,
தேவரீருடைய கோயிலைச் சுத்தப்படுத்தி ( கைங்கர்யங்கள் செய்து )

22.திருவாய்மொழி ( 9–2–3 ) ஸ்ரீ நம்மாழ்வார்

.உன் தாமரை மங்கையும் நீயும்

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி ? உன் திருவுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழிவரும் தொண்டரோர்க்கருளி
தடங்கொள் தாமரை கண்விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடங்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய் திருப்புளிங்குடிக் கிடந்தானே

உனக்குத் தகுந்த திவ்ய மஹிஷியாய் தாமரைப் பூவிலிருக்கும் பிராட்டியும் , நீயும் (மூன்று உலகங்களும் கைங்கர்யம் செய்யுமாறு
இருந்து அருள வேண்டும் )

23. திருவாய்மொழி ( 6–10–10 ) ஸ்ரீ நம்மாழ்வார்

அகலகில்லேன் இறையும்

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பா !
நிகரில் புகழாய் ! உலகம் மூன்றுடையாய் ! என்னை ஆள்வானே !
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே !
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

ஒரு க்ஷண நேரம் கூட உன்னை விட்டுப் பிரியச் சக்தி யில்லை யென்று தாமரையில் இருக்கும் பிராட்டி வஸிக்கின்ற திரு மார்பை உடையவனே

24. திருவாய்மொழி (1–1–2 ) ஸ்ரீ நம்மாழ்வார்

உணர் முழு நலம்

மனனக மலமற மலர்மிசை யெழு தரும்
மனனுணர் வளவிலன் பொறி யுணர்வவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர் நிகழ் கழிவினும்
இனனிலனெனனுயிர் மிகுநரை யிலனே

எம்பெருமான், முழுவதும் ஞான ஸ்வரூபன் மற்றும் ஆனந்த ஸ்வரூபன்

25. பெரிய திருமொழி ( 3–8–1 )

.நந்தாவிளக்கே அளத்தற்கரியாய்

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் !
நரநாரணனே ! கருமாமுகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாயென நின்று
இமையோர் பரவும் இடம் , எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசை பாட மாடே
களிவண்டுமிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர்
மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே

நாசமல்லாததாயும் , ஸ்வயம் ப்ரகாசமாயும் , தேசம்,காலம், வஸ்து இவைகளின் அளவுகளில்
இல்லாததாயும் ஸ்வரூபத்தை உடையவனே

அதிகாரத்திலிருந்து—–

ஈச்வரன், இழி குணங்களே இல்லாதவன்

இப்படி ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண்வாக்யம் பரமம் பதம்
பர :பராணாம் ஸகலா ந யத்ர க்லேசாதயஸ் ஸந்தி பராவரேசே-என்கிறபடியே ஹேய ப்ரத்யநீகமாக அநுஸந்தேயம்

வ்யாக்யானம்
————————–

விஷ்ணு புராணத்திலிருந்து ,ஸ்வாமி தேசிகன் மேற்கோள் காட்டுகிறார்

ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண்வாக்யம் பரமம் பதம் ( 1–22– 53 )——-
விஷ்ணு என்கிற திருநாமம் கொண்ட எம்பெருமானின் ஸ்வரூபம் தோஷங்களே இல்லாதது.

பர :பராணாம் ஸகலா ந யத்ர க்லேசாதயஸ் ஸந்தி பராவரேசே ( 6–5–85 )

பகவான் , உயர்ந்தவைகளை விட மிகவும் உயர்ந்தவன்; அவனிடம்,க்லேசங்கள் முதலான தோஷங்களும் கிடையாது.

அதிகாரத்திலிருந்து
———————————–

ஈச்வரன்,அநந்த கல்யாண குணங்களை உடையவன்

1. தைர்யுக்த : ச்ரூயதாம் நர :
2.தமேவம் குண ஸம்பன்னம்
3.ஜ்யேஷ்டம் ச்ரேஷ்டகுணைர்யுக்தம்
4. ஏவம் ச்ரேஷ்டகுணைர்யுக்த :
5.குணைர்விரருசே ராம :
6.தமேவம் குணஸம்பன்னம் அப்ரதத்ருஷ்யபராக்ரமம்
7. பஹவோ ந்ருப கல்யாணகுணா :புத்ரஸ்ய ஸந்தி தே
8. ஆந்ரு சம்ஸ்யமநுக்ரோச :ச்ருதம் சீலம் தமச்சம :ராகவம்
சோபயந்த்யேதே ஷட்குணா :புருஷோத்தமம்
9. விதித :ஸ ஹி தர்மஞ : சரணாகத வத்ஸல :
10. சரண்யம் சரண்யம் ச த்வாம் ஆஹுர்திவ்யா மஹர்ஷய :
11. நிவாஸவ்ருக்ஷ : ஸாதூநாம் ஆபன்னானாம் பரா கதி :
12.தேஜோ ப்லைச்வர்ய மஹாவபோத ஸ்வீர்ய சக்த்யாதி குணைகராசி :
13. ஸர்வபூதாத்ம பூதஸ்ய விஷ்ணோ: கோ வேதிதம் குணான்
14. யதா ரத்னாநி ஜலதே: அஸங்க்யேயாநி புத்த்ரக ததா குணாச்ச தேவஸ்ய த்வஸங்க்யேயா ஹி சக்ரிணா :
15. வர்ணாயுதைர்யஸ்ய குணா ந சக்யா வக்தும் ஸமேதைரபி ஸர்வதேவை :
16. சதுர்முகயுர்யதி கோடிவக்த்ரோ பவேந்நர : க்வாபி விசுத்தசேதா : ஸ தே குணாநாமயுதைகமம்சம் வதேந்ந வா தேவவர ப்ரஸீத
17. தவானந்த குணஸ்யாபி ஷடேவ ப்ரதமே குணா : யைஸ்த்வயேவ ஜகத்குக்ஷொள அந்யேஅப்யந்தர்நிவேசிதா :
18. இஷுக்ஷயாந்நிவர்த்தந்தே நாந்தரிக்ஷ க்ஷிதி க்ஷயாத் மதி க்ஷயாந்நிவர்த்தந்தே ந கோவிந்த குண க்ஷயாத்
19. வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய்
20. உயர்வற உயர்நலம் உடையவன்-என்கிறபடியே
ப்ராப்யத்வ ப்ராபகத்வோபயுக்தங்களான குணங்களாலே விசிஷ்டமாக அநுஸந்தேயம்

வ்யாக்யானம்
————————–

ஈச்வரன் –ஸ்ரீமந் நாராயணன் , ஜீவன்களால் அடையக் கூடியவனாக இருப்பதற்கு எந்தெந்தக் குணங்கள் தேவையோ , அப்படி அளவற்ற
கல்யாண குணங்களை உடையவன் என்றும், அவ்விதம் ஜீவன்கள் அடைவதற்கு ஏற்ற உபாயமாக இருப்பதற்கும் , கல்யாண
குணங்களைக் கொண்டுள்ளான் என்றும் , அவற்றுக்கான பற்பல எடுத்துக் காட்டுக்களை ,ஸ்வாமி தேசிகன் சொல்கிறார்

1. ஸ்ரீமத் ராமாயணம் ( 1–1–7 )

தைர்யுக்த : ச்ரூயதாம் நர : ——இப்படிப்பட்ட குணங்கள் அனைத்தையும் கொண்டவரைச் சொல்கிறேன்—கேட்பீராக

2.ஸ்ரீமத் ராமாயணம் ( 2–2–48 )
தமேவம் குண ஸம்பன்னம் ——இப்படி குணங்கள் நிறைந்த அந்த ராமனை–

3. ஸ்ரீமத் ராமாயணம் (1–1–20 )
ஜ்யேஷ்டம் ச்ரேஷ்ட குணைர் யுக்தம்—-மூத்தவனும், இப்படி மிக உயர்ந்த குணங்களை உடைய ராமனை

4.ஸ்ரீமத் ராமாயணம்– 2–1–31
ஏவம் ச்ரேஷ்ட குணைர் யுக்த :—-இப்படி , மிகவும் உன்னதமான குணங்கள் கொண்ட ராமனை

5.ஸ்ரீமத் ராமாயணம்–
குணைர் விரருசே ராம :——கல்யாண குணங்கள் மூலமாக ராமன் விளங்கினான்

6.ஸ்ரீமத் ராமாயணம் —
தமேவம் குண ஸம்பன்னம் அப்ரத த்ருஷ்ய பராக்ரமம் —இப்படி, எல்லாக் கல்யாண குணங்களின் இருப்பிடமாகவும், யாராலும்
வெல்லப் படாதவனுமான உள்ள ராமன்
7. ஸ்ரீமத் ராமாயணம் —
பஹவோ ந்ருப கல்யாணகுணா :புத்ரஸ்ய ஸந்தி தே –தசரதா , உன் புத்திரனான ராமனுக்குப் பல உயர்ந்த குணங்கள் உள்ளன.

8. ஸ்ரீமத் ராமாயணம்—
ஆந்ரு சம்ஸ்யமநுக்ரோச :ச்ருதம் சீலம் தமச்சம :ராகவம்
சோபயந்த்யேதே ஷட்குணா :புருஷோத்தமம் —–தன்னைச்
சரணம் என்று அடைந்தவர்களைக் காப்பாற்றும் தன்மை (குணம் ) அளப்பரிய கருணை, வேதங்களின் –சாஸ்த்ரங்களின் பொருளை
உணர்ந்திருக்கும் தன்மை, தாழ்ந்தவர்களிடமும் சமமாகப் பழகும் தன்மை, மனத்தை அடக்கும் திறன், இந்த்ரிய நிக்ரஹம்–
அதாவது,புலனடக்கம் –ஆகிய ஆறு குணங்களும் புருஷ ச்ரேஷ்டனான ராமனை அலங்கரிக்கின்றன
9. ஸ்ரீமத் ராமாயணம்—
விதித :ஸ ஹி தர்மஞ : சரணாகத வத்ஸல :—–எல்லாத் தர்மங்களையும் அறிந்த ராமன், தன்னிடம் சரணம்
அடைந்தவர்களிடம் மிகுந்த அன்பு உடையவன் என்று எல்லோராலும் அறியப்பட்டவன் அல்லவா
10. ஸ்ரீமத் ராமாயணம்—
சரண்யம் சரண்யம் ச த்வாம் ஆஹுர் திவ்யா மஹர்ஷய :—-ராமா —-நீயே சரணாகத ரக்ஷகன் என்றும், சரணம் என்று
அடைபவர்களுக்கு ஏற்றவன் என்றும்,சரணம் என்று அடைந்தவர்களைக் காப்பவன் என்றும், ஸநகாதி மஹரிஷிகள் கூறுகின்றனர்
11.ஸ்ரீமத் ராமாயணம்
நிவாஸவ்ருக்ஷ : ஸாதூநாம் ஆபன்னானாம் பரா கதி :—
ஸாதுக்களுக்கு , நிழல் கொடுக்கும் கற்பக மரம் ; ஆபத்தில் உள்ளவர்கள் அடைய வேண்டிய உயர்ந்த கதி

12.விஷ்ணு புராணம்
தேஜோ ப்லைச்வர்ய மஹாவபோத ஸ்வீர்ய சக்த்யாதி குணைகராசி : —மிக உயர்ந்த தேஜஸ், பலம், ஐச்வர்யம் ,
ஜ்ஞானம், வீர்யம், சக்தி,இவை முதலான குணங்கள் யாவும் ஒன்று சேர்ந்து இருக்கும் இடம்—ஷாட்குண்ய பரிபூர்ணன்

13.ப்ரஹ்ம புராணம்
ஸர்வபூதாத்ம பூதஸ்ய விஷ்ணோ: கோ வேதிதம் குணான்
எல்லாவற்றுக்கும் ஆத்மாவாக இருக்கிற விஷ்ணுவின் குணங்களை( ருத்ரனையும் ,பார்வதியையும் காட்டில் ), எவன் அறிய வல்லவன் !
14. வாமன புராணம்–
யதா ரத்னாநி ஜலதே: அஸங்க்யேயாநி புத்த்ரக ததா
குணாச்ச தேவஸ்ய த்வஸங்க்யேயா ஹி சக்ரிணா : —
ஸமுத்ரத்தில் உள்ள ரத்னக் கற்களைக் கணக்கிட இயலாது; அதைப்போல , சக்ரத்தை ஏந்திய எம்பெருமானின் குணங்களைக் கணக்கிட இயலாது.
15. மஹாபாரதம் —
வர்ணாயுதைர்யஸ்ய குணா ந சக்யா வக்தும் ஸமேதைரபி ஸர்வதேவை : எல்லாத் தேவர்களும் ஒன்றுகூடி,
இருந்து பலப் பதினாயிரம் வருடங்கள் சொன்னாலும்,அவனது குணங்களை முழுமையாகக் கூறி விட முடியாது.
16. வராஹ புராணம் —-
சதுர்முகயுர்யதி கோடிவக்த்ரோ பவேந்நர : க்வாபி விசுத்தசேதா : ஸ தே குணாநாமயுதைகமம்சம்
வதேந்ந வா தேவவர ப்ரஸீத —–ப்ரஹ்மாவின் ஆயுஸ்ஸும் – பல ஆயிரக்கணக்கான வாய்களும், மிகவும் சுத்தமான
மனமும் உள்ள ஒருவன் எங்கேயாவது இருந்து, அவன், உன்னுடைய குணங்களின் பதினாறாயிரத்தின்
ஒரு பாகத்தையாவது கூற முடியுமோ ? முடியாதோ ?( முடியாது என்பது தேற்றம் )

17. தவானந்த குணஸ்யாபி ஷடேவ ப்ரதமே குணா :
யைஸ்த்வயேவ ஜகத்குக்ஷொள அந்யேஅப்யந்தர்நிவேசிதா :

நீ ,கணக்கற்ற குணங்களை உடையவன்;ஆனாலும், ஜ்ஞானம் , பலம், ஐச்வர்யம் ,வீர்யம்,சக்தி,தேஜஸ் என்கிற
ஆறு குணங்கள் முக்யமானவை .இவ்வுலகை , நீ, வயிற்றில் வைத்திருப்பதைப்போல , இந்த ஆறு குணங்களும் மற்ற
குணங்களைத் தங்களுக்குள் அடக்கிக் கொண்டிருக்கின்றன.

18. இஷுக்ஷயாந்நிவர்த்தந்தே நாந்தரிக்ஷ க்ஷிதி க்ஷயாத்
மதி க்ஷயாந்நிவர்த்தந்தே ந கோவிந்த குண க்ஷயாத்

ஆகாசம் முழுவதும் பாணங்களால் நிரப்ப வேண்டும் என்று அம்புகளைப் போடும் சிலர், தங்களிடம் பாணங்கள்
தீர்ந்து விடுவதால், ஓய்ந்து போகிறார்களேயன்றி ஆகாசம் , நிரம்புவதால் அல்ல. இதைப் போல, முழுவதும்
சொல்ல புத்தியின் ஆற்றல் இல்லாதவர்கள் கோவிந்தனுடைய குணங்களை சொல்லி ஓய்ந்து
போகிறார்களே யன்றி , குணங்கள் யாவையும் சொல்லி முடிந்து விட்டதால் அல்ல
19. திருவாய்மொழி
வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய்

மணந்த பேராயா ! மாயத்தால் முழுதும் வல்வினையேனையீர்கின்ற
குணங்களையுடையாய் ! அசுரர் வன்கையர் கூற்றமே 1கொடியபுள்ளுயர்த்தாய் !
பணங்களாயிரமு (மு )டைய பைந்நாகப் பள்ளியாய் !பாற்கடல் சேர்ப்பா
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீதானே

மிகவும் கொடிய பிரபலமான பாவங்களைச் செய்த என் போன்றவனையும் உன் பால் ஈர்க்கின்ற குணங்களை உடையவனே
பாசுரத்துக்கு,சுருக்கமான பொருள்—-
நப்பின்னையைப் போல ,பல கோபிகைகள் , பேர் ஆயா –கோபர்களின் அரசனே –கண்ணனே
மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய்
ஆச்ரிய சேஷ்டிதங்கள் அகடதகடினா சாமர்த்யங்கள் இவற்றால் வல்வினையேனை
——கொடிய பாபியான என்னை , சிறிதும் விடாமல் ,பாபங்களைப் பிளந்து எறிகின்ற , கோபிகைகள் அநுபவித்த கல்யாண குணங்களை
உடையவனே–புஜபல பராக்ரமம் உடைய அசுரர்களுக்கு யமனே —கருடக் கொடி உடையவனே
ஆயிரம் படங்களை உடைய ஆதி சேஷன் மீது, திருப்பாற்கடலில் சயனித்து இருப்பவனே
வணங்கும் ஆறு –வழி –அறியேன் –உன்னைத் துதிக்கும் வழி தெரியாதவன்
மனம் ,வாக்கு,செய்கை இவைகளுக்கு அந்தர்யாமியாய் இருப்பவனே — என்கிறார்

20. திருவாய்மொழி
உயர்வற உயர்நலம் உடையவன்

உயர்வற வுயர்நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே

உயர்வு இவ்வளவுதான் என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாதபடி, உயர்ந்ததான ஆனந்தம் முதலிய குணங்களை உடையவனே

ஹே—மனஸே —வேறு எவரும் தன்னைவிட ஏற்றமில்லாதபடி இருப்பவனும் உயர்ந்த ஆனந்தமான கல்யாண குணங்களை
எப்போதும் உடையவனும் வேதத்தால் புகழப்படுபவனும் அஞ்ஞானத்தை அகற்றி அறிவையும் பக்தியையும் அளிப்பவனும்
மறதி ,தளர்வு இல்லாத நித்யஸூரிகளுக்கு ஸ்வாமியும் — இப்படிப்பட்ட பகவானுடைய, ஆச்ரிதர்களின் துக்கங்களைப்
போக்கும் குணமுடைய ,ஜ்யோதிஸ் ஸ்வரூபமான திருவடிகளை எப்போதும் வணங்கி உஜ்ஜீவிப்பாயாக —-
என்கிறபடியே ப்ராப்யத்வ ப்ராபகத்வோபயுக்தங்களான
குணங்களாலே விசிஷ்டமாக அநுஸந்தேயம் —

தன்னை அடைவதற்கும் அடைவிப்பதற்கும் தேவையான குணங்களுடன் இருக்கிறான்.
இந்தப் பகவத் குணங்கள், உபயோகத்துக்கு ஏற்ப, ப்ராப்யத்வோபயுக்த குணங்கள் என்றும்,
ப்ராபகத்வோபயுக்த குணங்கள் என்றும்உபயோபயயுக்த குணங்கள் என்றும் மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள்.
ப்ராப்யத்வோபயுக்த குணங்கள் —எல்லாவற்றிற்கும் சேஷியாக இருப்பது , எல்லை இல்லாத ஆனந்த ஸ்வரூபனாக இருப்பது
ப்ராபகத்வோபயுக்த குணங்கள்—- தயை, வாத்ஸல்யம் , ஒளதார்யம், –முதலிய குணங்களோடு இருப்பது
உபயோபயயுக்த குணங்கள் —ஷாட்குண்யம் — ஜ்ஞானம் , பலம், ஐச்வர்யம் ,வீர்யம்,சக்தி,தேஜஸ் என்கிற ஆறு குணங்கள்
இப்படியாக, எம்பெருமான் ,அளவில்லாக் கல்யாண குணங்களை உடையவனாக இருக்கிறான்.

அதிகாரத்திலிருந்து ———-

ஈச்வரன் ”திவ்ய மங்கள விக்ரஹமுடையவன்

1.ஸதைக ரூப ரூபாய
2. நித்ய ஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ சந்நிதிம் ப்ரஜேத்
3. ஸமஸ்தாச்சக்த்யச்சைதா ந் ருப யத்ர ப்ரதிஷ்டிதா : தத்விச்வரூப வைரூப்யம் ரூபமன்யத்த ரூபமன்யத்தரேர்மஹத்
4. இச்சா க்ருஹீதாபிமதோருதேஹ :
5. ந பூதஸங்க ஸம்ஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மாந :
6. ந தஸ்ய ப்ரக்ருதா மூர்த்தி : மாம் ஸமேதோ அஸ்திஸம்பவா
7. பூஜைச்சதுர்பி : ஸமுபேதமேதத்ருபம் விசிஷ்டம் திவி ஸம்ஸ்திதம் ச
8. ருக்மாபம்ஸ்வபந் தீ கம்யம்
9.தத்ரைகஸ்தம் ஜகத் க்ருத்ஸ்நம்
10. பச்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே
11. அஸ்த்ர பூஷண ஸம்ஸ்தாந ஸ்வரூபம்
12. பூஷணாஸ்த்ர ஸ்வரூபஸ்தம் யதேதமகிலம் ஜகத்
13. தமஸா : பரமோ தாதா சங்கம் சக்ரம் கதா தர :–என்கிறபடியே
ஸர்வ ஜகதாச்ரயமான அப்ராக்ருத திவ்யமங்கள விக்ரஹ விசிஷ்டமாக அநுஸந்தேயம் .

இவ்விக்ரஹம் பர வ்யூஹ விபவ ஹார்த்தர்சாவதார ரூபேண பஞ்சப்ரகாரமாயிருக்கும்படியும்
இவற்றிலுள்ள விசேஷங்களும் பகவச் சாஸ்த்ர ஸம்ப்ரதாயத்தாலே அறியப்படும்

வ்யாக்யானம்
————————-
1. விஷ்ணு புராணம் —
ஸதைக ரூப ரூபாய—எப்போதும் ஒரேவிதமான மாறுதல் இல்லாத திருமேனியை உடையவன்

2. பௌஷ்கர ஸம்ஹிதை
நித்ய ஸித்தே ததாகாரே தத்பரத்வே ச பௌஷ்கர யஸ்யாஸ்தி ஸத்தா ஹ்ருதயே தஸ்யாஸௌ சந்நிதிம் ப்ரஜேத் ————————
ஹே , பௌஷ்கரனே —எப்போதும் இருப்பதுமான திருமேனியை உடையவன் ;அவன் எல்லோருக்கும் மேம்பட்டவன் என்றும் ,
எவனுடைய மனத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறதோ, அவன் அருகில் எம்பெருமான் எப்போதும் உள்ளான் .
3. விஷ்ணு புராணம்
ஸமஸ்தாச்சக்த்யச்சைதா ந் ருப யத்ர ப்ரதிஷ்டிதா : தத்விச்வரூப வைரூப்யம் ரூபமன்யத்த ரூபமன்யத்தரேர்மஹத்—
எல்லா சரீரங்களைக் காட்டிலும், வேறான திருமேனியை உடையவன்,
எம்பெருமான்.அந்தத் திருமேனியில், எல்லா சக்திகளும் நிலையாக உள்ளன.
4. விஷ்ணு புராணம்—
இச்சா க்ருஹீதாபிமதோருதேஹ : —
பக்தர்களுக்கு இஷ்டமான , அனைவர்க்கும் இன்பம் தருகிற திருமேனியைத் தன் ஸங்கல்பத்தாலே பகவான் எடுத்துக்கொள்கிறான் .
5. மஹா பாரதம்—சாந்தி பர்வம்—-
ந பூதஸங்க ஸம்ஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மாந : —-
இந்தப் பரமாத்மாவின் திருமேனி பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டானதல்ல
6.வராஹ புராணம்—
ந தஸ்ய ப்ரக்ருதா மூர்த்தி : மாம் ஸமேதோ அஸ்திஸம்பவா —–
எம்பெருமானின் திருமேனி, மாம்ஸம், மேதஸ் (மஜ்ஜை ) எலும்பு ஆகியவற்றால் ஆனதல்ல
7.மஹாபாரதம்—
பூஜைச்சதுர்பி : ஸமுபேதமேதத்ருபம் விசிஷ்டம் திவி ஸம்ஸ்திதம் ச —
பகவானது திருமேனி, நான்கு திருக்கரங்களுடன் உள்ளது;சிறப்பானது; பரமபதத்தில் நிலையாக உள்ளது.
8.மநு ஸ்ம்ருதி—
ருக்மாபம்ஸ்வபந் தீ கம்யம் —–தங்கம் போன்று ப்ரகாசிப்பவன்; அவனைக் கனவில் காண்பதைப் போல மனத்தால் மட்டுமே நினைக்க முடியும்.
9.ஸ்ரீமத் பகவத் கீதை—
தத்ரைகஸ்தம் ஜகத் க்ருத்ஸ்நம் ப்ரவிபக்த மநேகதா |
அபஸ்யத் தேவ தேவஸ்ய சரீரே பாண்டவஸ்துதா ||
உலகங்கள் பலவிதமாகப் பிரிந்து இருக்கின்றன.ஆனால், அவையாவும் தேவதேவனான பகவானின்–ஸ்ரீ க்ருஷ்ணனின் திருமேனியில் ,
ஒரு சிறிய பகுதியாக இருப்பதை அர்ஜுனன் பார்த்தான்.
10.ஸ்ரீமத் பகவத் கீதை—
பச்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூத விசேஷ ஸங்காத் |
ப்ரஹ்மாண மீஸம் கமலாசநஸ்தம்ம்ருஷீம்ஸ்ச ஸர்வானுரகாம்ஸ்ச திவ்யாந் ||
ஆச்சர்யப்பட்டு, மெய்சிலிர்க்க அர்ஜுனன் வணங்கிக் கூறுகிறான்.
—–ஹே தேவாதி தேவனே, க்ருஷ்ணா —உன்னுடைய திருமேனியில் அனைத்துத் தேவதைகளையும் நான் காண்கிறேன்.
பிராணிகளின் கூட்டங்களைப் பார்க்கிறேன்.கமலாஸனத்தில் வீற்றிருக்கும் ப்ரஹ்மாவைப் பார்க்கிறேன்.
ஸகல ரிஷிகளையும் பார்க்கிறேன்.தெய்வத் தன்மை உள்ள ஸர்ப்பங்களையும் பார்க்கிறேன்.
11.விஷ்ணு புராணம்—-
அஸ்த்ர பூஷண ஸம்ஸ்தாந ஸ்வரூபம் ——–ஆயுதங்களும் ஆபரணங்களும் உன் திருமேனியை இருப்பிடமாகக் கொண்டிருக்கின்றன.
12. விஷ்ணு புராணம்—-
பூஷணாஸ்த்ர ஸ்வரூபஸ்தம் யதேதமகிலம் ஜகத் —- உலகங்கள் யாவும் அவனது திருமேனியில் ஆயுதங்களாகவும் ஆபரணங்களாகவும் உள்ளன.
13.ஸ்ரீமத் ராமாயணம்—
தமஸா : பரமோ தாதா சங்கம் சக்ரம் கதா தர :——
ப்ரக்ருதிக்கும் மேலிடத்தில் இருப்பவனாய், சங்க,சக்ர ,கதாதாரியாய் போஷகனாக இருக்கிறான், ஸ்ரீ ராமன்.

என்றெல்லாம் சொல்லுமாப்போலே ,இவற்றிலுள்ள விசேஷங்களும் பக்வச் சாஸ்த்ர ஸம்ப்ரதாயத்தாலே அறியப்படும் ——
இந்த விதங்களில் அமைந்திருக்கும் தனித்வ பெருமைகளும் பகவானைப் பற்றிச் சொல்லும் சாஸ்த்ரங்களும் பாஞ்சராத்ர முதலிய
ஸம்ப்ரதாய க்ரந்தங்களாலே தெளிந்து கொள்ளலாம்

அதிகாரத்திலிருந்து–

பகவான் எல்லையற்ற விபூதிகளை உடையவன்
————————————————————————-

1.விஷ்ணோரேதா விபூதய :
2.மஹா விபூதி ஸம்ஸ்தாந
3.நாந்த : அஸ்தி மம திவ்யானாம் விபூதினாம் பரந்தப இத்யாதிகளுடைய ஸங்க்ரஹமான
4. யதண்டமண்டாந்தர கோசரம் ச யத்

என்கிற ச்லோகத்தின்படியே அநந்தவிபூதி விசிஷ்டமாக அநுஸந்தேயம்

வ்யாக்யானம்
————————-

1.விஷ்ணு புராணம்—விஷ்ணோரேதா விபூதய :
இவை எல்லாமும் –அதாவது, மநு முதலானோர்,காலம் , எல்லா ஜந்துக்கள் இவையாவும், உலகின் ஸ்திதிக்குக் காரணமான மஹாவிஷ்ணுவின்
விபூதிகள் –ஐச்வர்யங்கள்

2. விஷ்ணு புராணம்— மஹா விபூதி ஸம்ஸ்தாந–மஹா விபூதி எனப்படுகிற நித்ய விபூதியைத் தன்னுடைய இருப்பிடமாகக் கொண்டவனே

3.ஸ்ரீமத் பகவத் கீதை–
நாந்த : அஸ்தி மமதிவ்யானாம் விபூதினாம் பரந்தப |
ஏஷ தூத்தேஸத : ப்ராக்தோவிபூதேர் விஸ்தரோமயா ||
ஸ்ரீ க்ருஷ்ணன் , அர்ஜுனனிடம் சொல்கிறான்—–
ஹே—அர்ஜுனா—பகைவரை வாட்டுபவனே ! என்னுடைய திவ்ய விபூதிகளுக்கு முடிவே கிடையாது. இதுவரை நான் சொன்னவை
என்னுடைய விபூதியின் ஓரளவுதான்–சிலவற்றையே சொன்னேன்.

4. ஸ்தோத்ர ரத்னம் —
யதண்டம் அண்டாந்தர கோசரஞ்ச யத்
தசோத்தராண்யா வரணாநி யாநி ச |
குணா : ப்ரதானம் புருஷ : பரம்பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூதய : ||

தே –விபூதய :–உனது ஐச்வர்யங்கள் எவை என்றால் யத் அண்டம்—எந்த எந்த அண்டங்களோ , அவற்றின் உட்புறங்கள்
எவையோ, அந்த அண்டங்களுக்கு மேன்மேல் ,பத்து மடங்கு அதிக விஸ்தீரணங்கள் உள்ள ,மேலும் மேலும் சூழ்ந்து இருக்கிற
பஞ்ச பூதங்கள்–நீர், நெருப்பு, இவை எவையோ,
குணா : —- ஸத்வ ,ரஜோ ,தாமஸ குணங்களும்
ப்ரதானம் —-அவற்றுக்கு ஆதாரமான மூல ப்ரக்ருதியும்
புருஷ :=பக்த ஜீவர்களும்
பரம்பதம் = ஸுத்த ஸத்வ த்ரவ்யமான ஸ்ரீ வைகுண்டமும்,
பராத்பரம் =இவற்றில் பரம் ஆனதற்கும் மேலாக பூர்ண சைதன்ய
விகாஸம் உடைய முக்தர்களும், நித்யர்களும், இப்படி எல்லாமும்
தே விபூதய : =உனது ஐச்வர்யங்கள்
என்று , ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னத்தில் ( 17 ) கூறுகிறார்

அதிகாரத்திலிருந்து—

ஈச்வரனின் லீலா ரூப ஜகத் வ்யாபாரம்
—————————————————————

இவ்விபூதிகளில் ,சேதநங்களாயும் அசேதநங்களாயும் உள்ள இரண்டு வகையும் லீலார்த்தங்களையும் போகார்த்தங்களையும் விபக்தங்களாயிருக்கும்
அநுஸந்தேயம் பொதுவாயிருக்க ரஸ வைஷம்யத்தாலே லீலா-போக–விபாகம் யதாலோகம் கண்டு கொள்வது. அப்படியே ,
1.ஜந்மாத்யஸ்ய யத :
2. க்ரீடா ஹரேரிதம் ஸர்வம்
3. க்ரீடதோ பாலகஸ்யேவ
4. பால :க்ரீடநகைரிவ
5. ஹரே விஹரஸி க்ரீடா கந்துகைரிவ ஐந்துபி :
6. லோகவத்து லீலா கைவல்யம்
என்கிறபடியே லீலாரூப ஜகத்வ்யாபார லக்ஷணமாக அநுஸந்தேயம்

வ்யாக்யானம்
————————-
பகவானின் விபூதிகள், சேதனம், அசேதனம் என்று இருவகைப்படும். இவை, பகவானுடைய லீலைக்காகவும், அவன் அநுபவிப்பதற்காகவும்
உள்ளன. இப்படிப்பட்ட இரண்டு பிரிவு ,அவனது ”ரஸத்”துக்காக மட்டுமே.
அனைத்தும் அவனால் ஏற்கப்படுகிறது.பகவான் இவ்வுலகில் ஈடுபடுவது, அவனது லீலைக்காக என்பதை இப்போது அறியலாம்.

1. ப்ரஹ்ம ஸூத்ரம் —ஜந்மாத்யஸ்ய யத : =கண்ணால் பார்க்கப்படும் இவ்வுலகின் பிறப்பு முதலானவைகளை, யாரிடமிருந்து உண்டாகிறதோ , அவனே ”ப்ரஹ்மம் ”

2.மஹாபாரதம்—சாந்தி பர்வம்–க்ரீடா ஹரேரிதம் ஸர்வம் = இவை யாவும் பகவானுக்கு விளையாட்டு

3. விஷ்ணு புராணம்–க்ரீடதோ பாலகஸ்யேவ = விளையாடும் குழந்தையின் சேஷ்டைகள் போலிருக்கிற ,எம்பெருமானின் லீலைகளைப் பார்.

4. மஹா பாரதம்–ஸபா பர்வம்–பால :க்ரீடநகைரிவ = குழந்தை, விளையாட்டுக் கருவிகளான பொம்மைகளை வைத்து விளையாடுவதைப்
போல, பகவான், நம்மை வைத்து விளையாடுகிறான்.

5. விஷ்ணு தர்மம்—ஹரே விஹரஸி க்ரீடா கந்துகைரிவ ஐந்துபி := பந்துகளை வைத்து விளையாடுவதைப் போல,ஸ்ரீ ஹரியே—உனது விளையாட்டு இருக்கிறது.

6. ப்ரஹ்ம ஸூத்ரம் –லோகவத்து லீலா கைவல்யம் =இவை எல்லாமே அவனது விளையாட்டுக்காகவே

இப்படி, எல்லாமே அவனது, உலக வியாபார லீலா விநோதங்களின் லக்ஷணம் என்று அறியப்படுகிறது.

அதிகாரத்திலிருந்து–
——————————–

ஜீவ ஸ்வரூபம்
————————
இப்படி, லக்ஷ்மி ஸஹாயமாய் அபரிமித ஞானானந்தமாய் , ஹேயப்ரத்யநீகமாய் ,ஞான –சக்த்யாத்யனந்த –மங்களகுண –விசிஷ்டமாய்,
திவ்ய மங்கள–விக்ரஹோபேதமாய்,சரீரபூத–விபூதித்வய –யுக்தமாய் , ஜகத்ஸ்ருஷ்ட்யாதி –வ்யாபார –லீலமாய்க் கொண்டு,
ப்ராப்யமான ப்ரஹ்மத்தை ப்ராபிக்கும் , ப்ரத்யகாத்மாவினுடைய ,பத்த–முக்த –நித்ய–ஸாதாரண– ரூபமும்
உபாயாதிகாரியான தனக்கு இப்போது அஸாதாரணமான ரூபமுமறியவேணும் .

வ்யாக்யானம்
————————

இப்படி, எம்பெருமான் ,மஹாலக்ஷ்மியுடன் எப்போதும் இணைந்தவனாக இருக்கிறான்
அவன், எல்லையில்லா ஜ்ஞானம் உள்ளவன். எல்லையில்லா ஆனந்தம் உள்ளவன். எல்லாத் தாழ்வுகளுக்கும் , எதிராக உள்ளவன்.
ஜ்ஞானம், சக்தி போன்ற அளவற்ற மங்கள குணங்களை உடையவன் . திவ்ய மங்கள விக்ரஹ ஸ்வரூபி.
தன்னுடைய சரீரமாக, லீலா விபூதி, நித்ய விபூதியை உடையவன். படைத்தல், காத்து நிர்வஹித்தல் இவனுக்கு பொழுதுபோக்கு –விளையாட்டு.
இங்ஙனம் அடையவேண்டிய ப்ராப்யமாக –பொருளாக –இருக்கிறான் என்பதை உணர்ந்து அவனை அடைய விரும்பும் ஜீவன்கள் —
பத்தர், முக்தர், நித்யர் என்று மூன்று விதமாக இருப்பதையும் அவர்களுக்குள்ள வேறுபாட்டையும் அறிய வேண்டும்.

அதிகாரத்திலிருந்து

மூன்று வகைச் சேதனர்களின் லக்ஷணம்

இவர்களில்,
பத்தரானவர் அநாதி கர்ம ப்ரவாஹத்திலே ,அனுவ்ருத்த ஸம்ஸாரராய் ப்ரஹ்மாதி ,ஸ்தம்ப ,பர்யந்த ,விபாக ,பாகிகளான க்ஷேத்ரஜ்ஞர்.

முக்தராவார் , சாஸ்த்ர சோதிதங்களான ,உபாய விசேஷங்களாலுண்டான பகவத்ப்ரஸாதத்தாலே , அத்யந்த ,நிவ்ருத்த ,ஸம்ஸாரராய் ,ஸங்கோச
ரஹித பகவதனுபவத்தாலே ,நிரதிசயானந்தராய் இருக்குமவர்கள்

நித்யராவார், ஈச்வரனைப் போலே அநாதியாக ஞானசங்கோசமில்லையாமையாலே
ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா : என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸாரராய்க் கொண்டு நித்ய கைங்கர்யம் பண்ணுகிற அநந்த , கருட ,விஷ்வக்ஸேனாதிகள்

இவர்களெல்லார்க்கும் ஸாதாரணமான ரூபம் அணுத்வ ஜ்ஞானானந்த அமலத்வாதிகளும் பகவத் சேஷத்வ பாரதந்த்யாதிகளும் முமுக்ஷுவான
தனக்கு அஸாதாரணமாக அறியவேண்டும் ஆகாரங்கள் உபோதாத்திலே சொன்னோம்.
மேலும் கண்டு கொள்வது

வ்யாக்யானம்
——————–
பத்தர்கள் எனப்படுவோர், கணக்கற்ற முடிவே இல்லாத காலமாகத் தொடர்ந்துகொண்டே வருகிற கர்மாக்கள் காரணமாக, ஸம்ஸாரம்
என்கிற சக்கரத்தில் அகப்பட்டு, அதில் சுழன்று, அதிலேயே உழன்று வருபவர்கள். புல் முதலாக, ப்ரஹ்மா வரையிலும் க்ஷேத்ரஜ்ஞர்.ஆவர்.

முக்தர் என்பவர்கள், சாஸ்த்ரங்களில் சொல்லிய உபாயங்களைச் சரியானபடி பின்பற்றி, எம்பெருமானின் க்ருபையைப் பெற்றவர்கள்.
இவர்கள், ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு, வெளியேறி, பகவத் அனுபவத்தில் எல்லையில்லா ஆனந்தத்தில் எப்போதும் திளைத்திருப்பவர்கள்.

நித்யர்கள் என்பவர்கள் , தங்களுடைய ஜ்ஞானம் எப்போதுமே சுருங்காமல், விகஸித்து பிரகாசிக்க, பகவானையே ஒத்து இருப்பவர்கள்.
இதனை ,
ஸ்ரீ பராசர பட்டர் தனது க்ரந்தமான குணரத்ன கோசத்தில் சொல்கிறார் (27 )

தே ஸாத்யா : ஸந்திதேவா : ஜனனி ! குண–வபுர் –வேஷ–வ்ருத்த –ஸ்வரூபை :
போகைர்வா நிர்விசேஷா : ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா : |
ஹே—ஸ்ரீ : ! ஸ்ரீரங்கபர்த்து : தவச பத பரீசார வ்ருத்த்யை ஸதா பி
ப்ரேம ப்ரத்ராண பாவவில ஹ்ருதய ஹடாத்கார கைங்கர்யபோகா : ||

ஹே–ஜனனீ —தாயே— ஹே–ஸ்ரீ —பெரிய பிராட்டியே–எவர்கள் நல்லகுணங்கள் ,வயசுக்கு ஏற்ற நடத்தைகளுடன் , ஆத்ம ஸ்வரூபத்தாலும்
பகவத் அநுபவங்களாலும் ,வேறுபாடு இல்லாமல், ஒரே வயதுள்ளவர்களாய் எப்போதும் எந்தக் குற்றமும் அற்றவர்களாய்,பகவானிடம் ப்ரீதியுடன்
நல்ல மனஸ்ஸுடன் கைங்கர்யங்களில் ஈடுபடுகிறார்களோ அந்த ஸாத்ய தேவர்கள் எனப்படும் நித்ய ஸூரிகள் ,
உனக்கும், பகவானுக்கும் திருவடிகளில் கைங்கர்யம் செய்துகொண்டு எப்போதும் வைகுண்டத்தில் இருக்கிறார்கள்.இவர்கள், ஆதிசேஷன், கருடன்,
விஷ்வக்ஸேனர் முதலானவர்கள்.

இவர்கள் எல்லோருக்கும் பொதுவான தன்மைகள் என்னவெனில்—
அணு போன்று அளவுள்ள தன்மை , ஞானமயமாக இருத்தல், ஆனந்த மயமாக இருத்தல், எவ்விதக் குற்றமும் இல்லாமல் இருத்தல்,
முதலியவையாகும்.
இப்படி, இவர்கள் யாவரும் பகவானுக்கு அடிமைகள்.அவனது ஸங்கல்பத்தின்படி பணியாற்றுபவர்கள்.

அதிகாரத்திலிருந்து—-
————————————–

ஜீவனின் ஸ்வரூபத்தை ,ரஹஸ்ய த்ரயத்தில் அநுஸந்திப்பது

இப்ராப்தாவினுடைய ஸ்வரூபம், ப்ரணவ நமஸ்ஸுக்களில் மகாரங்களிலும் நார சப்தங்களிலும், ப்ரபத்யே என்கிற உத்தமனிலும் ,வ்ரஜ என்கிற
மத்யமனிலும் , த்வா என்கிற பதத்திலும் , மா சுச : என்கிற வாக்யத்திலும் அநுஸந்தேயம்

மோக்ஷோபாயம் , பற்றி –ரஹஸ்ய த்ரயத்தில்
———————————————————————————————————–

ப்ராப்த்யுபாயமும் , இதில் பரிகரங்களும் , பலஸ்வரூபமிருக்கும்படியும் மேலே ப்ராப்த ஸ்தலங்களிலே பரக்கச் சொல்லக் கடவோம்.
இவற்றில் உபாயம் ,
திருமந்த்ரத்தில் நமஸ்ஸிலும் , அயந சப்தத்திலும் த்வயத்தில் பூர்வ கண்டத்திலும் , சரம ச்லோகத்தில் பூர்வார்த்தத்திலும் அநுஸந்தேயம்.
பல ஸ்வரூபம்,
சதுர்த்யந்த பதங்களிலும் த்வயத்தில் நமஸ்ஸிலும் ,ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிறவிடத்திலும் அநுஸந்தேயம் .

வ்யாக்யானம்
———————

ஜீவனின் ஸ்வரூபம்—அஷ்டாக்ஷரத்தில் ”ஓம் ” என்கிற அக்ஷரத்தின் மூன்றாவது அக்ஷரமான ( எழுத்தான ) , ”ம ” என்பதன் மூலமாகவும், ”
”நம ” என்கிற பதத்தின் மூலமாகவும், ”நாராயணா ” என்பதில் ”நார ” என்பதன் மூலமும், சொல்லப்பட்டது.
த்வயத்தில் , ”ப்ரபத்யே ” என்பதன் மூலம் உணர்த்தப்பட்டது.
சரம ச்லோகத்தில், ”வ்ரஜ ” என்பதன் மூலமும், ”த்வா ” என்பதன் மூலமும் ”மா சுச : ” என்பதன் மூலமும் வெளிப்படுத்தப்பட்டது.

மோக்ஷோபாயம் போன்றவற்றுக்கு, பகவானை அடையும் உபாயம் ஸம்பந்தமாகவும் அவ்விதம் மோக்ஷம் அடைந்த பிறகு, கிடைக்கின்ற
பலன்கள் பற்றியும் , நாம் போகப்போக விவரிப்பதாக, ஸ்வாமி தேசிகன் அருள்கிறார்.
உபாயம் என்பது,
அஷ்டாக்ஷரத்தில் உள்ள –ஓம் நமோ நாராயணாய — என்பதில் உள்ள ”நம ” என்பதன் மூலமும்,
நாராயணாய என்பதில் உள்ள ”அயந ” என்பதன் மூலமும், அறியக் கடவோம் .

த்வய மந்த்ரத்தில் , ஸ்ரீமந் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே — என்கிற முதல் வரியின் மூலம் அறியக்கடவோம் .

சரம ச்லோகத்தில், இரண்டாவது வரியான ”அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: ” என்பதன் மூலமும் அறியக்கடவோம்

அதிகாரத்திலிருந்து—-
—————————————–

மோக்ஷம் பெறுவதைத் தடுக்கும் விரோதிகள் –பகவன் நிக்ரஹமே முக்ய விரோதி
——————————————————————————————————————-

ப்ராப்தி விரோதியாவது
அவித்யா–கர்ம — வாஸனாதி —ரூபமான மோக்ஷ ப்ரதிபந்தக வர்க்கம்.
இதில் ப்ரதானம் , அநாதியாக ஸந்தன்யமானமான ஆஜ்ஞாதி லங்கன மடியாகப் பிறந்த பகவான் நிக்ரஹம் .
இது, க்ஷேத்ரஜ்ஞர்க்கு –ஞானசங்கோசகரமான , த்ரிகுணாத்மக , ப்ரக்ருதி ஸம்ஸர்க்க விசேஷத்தை உண்டாக்கியும் ,
இப் ப்ரக்ருதி பரிணாம விசேஷங்களான சரீரேந்த்ரியாதிகளோடே துவக்கி,
திண்ணமழுந்தக்கட்டி பல செய்வினை வன்கயிற்றால் புண்ணை மறையவரிந்தென்னைப் போரவைத்தாய் புறமே என்றும்
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன் என்றும்–சொல்லுகிறபடியே
தேஹேந்த்ரியாதி பரதந்த்ரனாக்கியும்
அவ்வவஸ்தையிலும் சாஸ்த்ரவச்யதை கூடாத திர்யகாதி தசைகளிலே நிறுத்தியும்
சாஸ்த்ர யோக்யங்களான மனுஷ்யாதி ஜன்மங்களில் பாஹ்யகுத்ருஷ்டி மதங்களாலே கலக்கியும் ,
அவற்றில் இழியாதவர்களையுமுள்பட பகவத் ஸ்வரூப திரோதானகரீம்
விபரீத ஞான ஜனனீம் ஸ்வவிஷயாயாச்ச கோப்யபுத்தேர்ஜனனீம் என்கிறபடியே ,
இம்மூலப்ரக்ருதி முதலான மோஹன பிஞ்சிகை தன்னாலே தத்வஞான விபரீத ஞான விஷய ப்ராவண்யங்களைப் பண்ணியும்
இவையடியாக ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ என்கிறபடியே
ஸுகலவார்த்தமான அக்ருத்ய கரணாதி ரூபமான ஆஜ்ஞாதிலங்கனத்தைப் பண்ணுவித்தும் ,
பாபம் ப்ராஜ்ஞாம் நாசாயதி க்ரியமாணம் புந : புந : நஷ்டப்ரஜ்ஞ : பாபமேவ புநராரபதே நர :என்கிறபடியே
மேலும் அபராத பரம்பரைகளிலே மூட்டி அதன் பலமாக
க்ஷிபாம்யஜஸ்ரம் இத்யாதிகளிற்படியே , கர்ப ,ஜன்ம, ஜரா, மரண , நரகாதி சக்ர பரிவ்ருத்தியிலே பரிப்ரமிப்பித்தும் க்ஷுத்ர ஸுகாதிகளுக்கு
ஸாதனமான ராஜஸ தாமஸ சாஸ்த்ரார்த்தங்களைக்கொண்டு
யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா :ப்ரேதான் பூதகணாம்ச்சாந்யே யஜந்தே தாமஸா ஜனா : என்கிறபடியே
தன்னோடு ஒக்கவொழுகு சங்கிலியிலே கட்டுண்டு உழலுகிற க்ஷேத்ரஜ்ஞர் காலிலே விழப்பண்ணியும் ,
அவர்கள் கொடுத்த ஜூகுப்ஸாவஹ க்ஷுத்ர தேவதா புருஷார்த்தங்களாலே க்ருமிகளைப் போலே க்ருதார்த்தராக மயக்கியும்
யோக ப்ரவ்ருத்தரானவர்களையும் க்ஷுத்ர தேவதா யோகங்களிலேயாதல் நாமாத்ய சேதனோபாஸனங்களிலேயாதல்
மூளப்பண்ணிச் சில்வானங்களான பலங்களாலே யோகத்தைத் தலைசாய்ப்பித்தும்
,ஆத்மப்ரவணரையும் ப்ரக்ருதி ஸம்ஸ்ருஷ்டம் , ப்ரக்ருதி வியுக்தமென்கிற இவ்விரண்டு படியிலும் ப்ரஹ்மாத்யஷ்டையாலேயாதல் ,
ஸ்வரூப மாத்ரத்தாலேயாதல் உபாஸிக்க மூட்டி
அவை நாலுவகைக்கும் பலமாக அல்பாஸ்வாதங்களைக் கொடுத்து புனராவ்ருத்தியைப் பண்ணியும்
ப்ரஹ்மாத்மக ஸ்வாத்மசிந்தன ப்ரவ்ருத்தரானவர்களையும் ஸ்வாத்மசரீரக பரமாத்ம சிந்தனபரரையும் அந்தராயமான
ஆத்மாநுபவத்தாலேயாதல் , அஷ்டௌ ஸ்வர்ய ஸித்திகளாலேயாதல்,வஸ்வாதிபதப்ராப்தி ப்ரஹ்மகாயநிஷேவணாதிகளாலேயாதல்
,அபிஷேகத்துக்கு நாளிட்ட ராஜகுமாரனுக்குச் சிறையிலே எடுத்துக் கை நீட்டின சேடிமார் பக்கலிலே கண்ணோட்டமுண்டாமாப் போலே
ப்ராரப்த கர்மபலமான தேஹேந்த்ரியங்களிலும் ததனுபந்திகளான பரிக்ரஹங்களிலும் தன்மூல போகங்களிலும் கால்தாழப்
பண்ணியாதல் அந்யபரராக்கியும் இப்படிப் பல முகங்களாலே பகவத்ப்ராப்திக்கு விலக்காயிருக்கும் .முப்பத்திரண்டு அடியான
துரவுதத்துவார் முன்னடியிலே விழுந்ததோடு முப்பதாமடியிலே அந்தராயமுண்டானாலும் இவன் ஸம்ஸாரத்தைக் கடந்தானாகான்

கர்மயோகாதிகளில் ப்ரவர்த்தனுக்கு நேஹாபிக்ரம நாசோ அஸ்தி இத்யாதிகளிற்படியே இட்டபடை கற்படையாய் என்றேனுமொருநாள்
பலஸித்தியுண்டாமென்கிறவிதுவும் கல்பாந்தர மன்வந்தர யுகாந்தர ஜன்மாந்தராதிகளில் எதிலே யென்று தெரியாது.
அனுகூல்யம் மிகவுமுண்டாயிருக்க வசிஷ்டாதிகளுக்கு விலம்பங்காணா நின்றோம்..
ப்ரதிகூல்யம் மிகவுண்டாயிருக்க வ்ருத்ர க்ஷத்ரபந்து பரப்ருதிகளுக்குக் கடுக மோக்ஷமுண்டாகக் காணா நின்றோம்.
ஆதலால், விலம்பரஹித மோக்ஷஹேதுக்களான ஸுக்ருதவிசேஷங்கள் ஆர்பக்கலிலே கிடக்குமென்றும் தெரியாது .
விலம்ப ஹேதுவான நிக்ரஹத்துக்குக் காரணங்களான துஷ்கர்மவிசேஷங்களும் ஆர்பக்கலிலே கிடைக்குமென்றுந்தெரியாது.

வ்யாக்யானம்
————————-

மோக்ஷம் பெறுவதற்குத் தடையாக உள்ளவை–
1. அவித்யை—சரீரத்தை ஆத்மாவாக நினைத்தல்மற்றும் ஆத்மாவை ஸ்வதந்த்ரன் என்று நினைத்து இறுமாந்து, அஹங்காரம் ,மமகாரம் கொள்ளுதல்
2.கர்மா அல்லது கர்மம் —ஜீவன் செய்யும் புண்ய ,பாபச் செயல்கள்
3.வாசனை —முன்னாலே சொன்ன அவித்யை,கர்மா இவைகளாலே உண்டாகும் ஸம்ஸ்காரம் அதாவது தன்மை
4. ருசி—மேற்சொன்ன வாசனைக்கு ஏற்ப உண்டாகிற விருப்பம் /ஆசை
5. ப்ரக்ருதி ஸம்பந்தம் —சரீர சம்பந்தத்தாலே ,ஜீவன் மேற்சொன்ன ருசிக்கு ஏற்ப ,உலக விஷயங்களில் ஈடுபடல்

இந்த ஐந்தும் , சேதனனுக்கு ( ஜீவன் )சக்கரச் சூழற்சியைப் போலத் தொடர்ந்து வருகின்றன. இதில் முக்கியமான தடை, பகவானின்
கட்டளைகளை, எல்லையற்ற காலமாகத் தொடர்ந்து மீறியபடி இருப்பது. அதனால், பகவானின் தண்டனைக்கு ஆளாதல்.

ப்ரதிபந்தக வர்க்கம் –அடிக்கடி செய்யப்பட்ட பாபமானது, அறிவை அழிக்கிறது. அறிவை இழந்த ஜீவன், மறுபடியும் பாபத்தையே செய்கிறான்.
இவற்றில் மோக்ஷத்துக்கு முக்யத் தடை யாதெனில்,
காலங்காலமாக பகவானின் கட்டளைகளைத் தொடர்ந்து மீறியபடி இருப்பதால், அவற்றுக்காக அவன் கொடுக்கும் தண்டனைகளே
ஆகும். இதன்காரணமாக, நிகழ்வது பலப்பல—-

1. சேதனனுக்கு,ப்ரக்ருதியுடன் ஏற்படும் தொடர்பு
2. இந்தப் ப்ரக்ருதி ஸத்வம் ,ரஜஸ்,தமஸ் என்கிற மூன்று குணங்களுடன் இருப்பதால், சேதனனின் ஜ்ஞானம் சுருங்குகிறது.
3. ஜ்ஞானம் சுருங்குவதால், சேதனன் ப்ரக்ருதி சம்பந்தமுடைய சரீரத்தோடும் இந்த்ரியங்களோடும் சேர்கிறான்.
4.இதனை ஸ்ரீ நம்மாழ்வார் ,திருவாய்மொழியில் (5–1–5 ) கூறுகிறார்.

கண்ணபிரானை விண்ணோர்கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வல் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே

பரமபதத்தில் இருப்பவர்க்கு ,கரிய மாணிக்கம் போல் மதிப்பும் அமுது =போக்யமாயும் உள்ள கண்ணனே –கண்ணனான பகவானே —
மனஸ்ஸால் நினைத்து, அவ்வப்போது செய்யும் கர்மாவுக்கு இணங்க, ப்ராக்ருத சரீரத்தில் இந்த ஜீவனைப் புகுவித்து,
ஜீவன் செய்த (நான் செய்த ) பல பாபங்கள் என்கிற கயிற்றால் இந்த சரீரத்தில் , திண்ணம் அழுந்தக்கட்டி = அமிழ்ந்து
கிடக்கும்படி இறுக்கமாகக் கட்டி , புண்ணை மறைய = உடம்பிலே இருக்கிற ரணங்கள் வெளியே தெரியாதபடி தோலினால் மூடி,
என்னைப் புறமே போரவைத்தாய் = உனக்கு அடிமையான என்னை இந்தப் ப்ரக்ருதியில் உழன்று நீடித்து இருக்கும்படி செய்துவிட்டாய்

5. திருவாய்மொழி ( 3–2–1 )

முந்நீர் ஞாலம் படைத்த எம்முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேரறப் பாய்ந்து
எந்நாள் நான் உன்னை இனி வந்து கூடுவனே

மூன்று விதமான ஜலத்தை உடைய –அதாவது—மழை நீர், ஆற்று நீர், ஊற்று நீர் —பூமியைக் கடல் சூழ்ந்து இருக்குமாறு
படைத்த முகில் வண்ணனே ! ஜீவன்களாகிய எங்களிடம் கருணை கொண்ட காளமேகம் போன்றவனே !
ச்ருஷ்டியின் தொடக்கத்தில், நீ , என் நன்மைக்காக அருளிய ஆக்கையின் வழி உழல்வேன் =உடல் செல்லும்
வழியிலே நடந்து ஸம்ஸாரத்திலே அலைகிறேன் .
வெந்நாள் நோய் வீய= ப்ரளய அக்னி போல எரிக்கின்ற ச்ருஷ்டியின் பாதைகள் அழியும்படி ,
வினைகள் வேர் அறப் பாய்ந்து=என் , புண்ய பாபக் கர்மாக்களை வேரோடு அறுத்து அழித்து
எந்நாள் நான் உன்னை = என்றுதான் நல்ல வழியை அடைந்து என்றைய நாளில் ,அடியேன், உன் திருவடித்தாமரைகளில்
இனி வந்து கூடுவனே = இனி எப்போது வந்து சேர்வேனோ ?

6. ஜீவனை–சேதனனை—ஸாஸ்த்ரங்களின்படி நடக்க இயலாத விலங்கு போன்ற சரீரங்களை எடுக்கும்படி செய்துவிடுகிறது.

7.ஸாஸ்த்ரங்களின்படி நடக்கக் கூடிய மனிதப் பிறவி அளித்தாலும், வேதங்களுக்குத் தவறான விளக்கங்களைக்
கொடுக்கும் மதங்களில்,ஜீவனின் மனஸ்ஸை ஈடுபடுத்துகிறது

8. ஸ்ரீ உடையவர் ஸரணாகதி கத்யத்தில் கூறுகிறார்(கத்ய த்ரயம் )

மதீயானாதி கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருத்தாம்–பகவத் ஸ்வரூப திரோதானகரீம்–விபரீத ஜ்ஞான ஜனனீம்
ஸ்வவிஷயாயாஸ்ச போக்த புத்தேர் ஜனனீம்–தேஹேந்த்ரியத்வேன–போக்யத்வேன–சூக்ஷ்மரூபேண சாவஸ்திதாம்
தைவீம்–குணமயீம் மாயாம் தாஸபூத சரணாகதோஸ்ம தவாஸ்மி தாஸ : இதி வக்தாரம மாம், தாரய |

இந்தப் ”ப்ரக்ருதி ” இருக்கிறதே , இது ,,அநாதி காலமாக அடியேன் செய்த கர்ம வினை என்கிற ஆற்று வெள்ளத்தில் அடித்துத்
தள்ளப்பட்டு பகவானின் ஸ்வரூபத்தை அறியாதபடி செய்கிறது.
நாராயணன் , பரமன்; அவனுக்கு நாம் நல்லடியோம் என்கிற நல்ல எண்ணங்கள் தோன்றாதபடி தடுத்து, அதற்கு எதிரான
எண்ணங்களை நினைக்கச் செய்கிறது.
ஒரு பொருளை, வேறு ஒரு பொருளாக நினைக்கச் செய்கிறது.
தனக்குத் தானே இன்பமானவன் என்கிற எண்ணத்தைத் தோன்றச் செய்கிறது. மாயாவித்யை செய்பவன்,காண்பவரை
மயக்க , தன் கையில் மயில்தோகை வைத்திருப்பதைப் போன்று ப்ரக்ருதியானது , சரீரத்தையும் , இந்த்ரியங்களையும்
தன்வசம் வைத்து ஜீவனை மயக்கி அவன் உண்மையை அறியாமல் , அவனுக்குத் தவறான அறிவைக் கொடுத்து,
புலன் இன்பங்களில் ஈடுபடச் செய்கிறது.
” நான் உமக்கு அடிமை ; உம்மையே தஞ்சமாகப் பற்றினேன்” என்று சரணாகதி மந்த்ரத்தைச் சொல்லும் அடியேனை ,
இந்தப் ப்ரக்ருதி ஸம்பந்தத்திலிருந்து தாண்டும்படி செய்து அருளவேணும்

9. இந்தப் ப்ரக்ருதி ஸம்பந்தமானது , ஜீவனை, பகவானின் கட்டளைப்படி நடக்கவிடாமல், சாஸ்த்ரங்களால் தடுக்கப்பட்ட செயல்களில் ஈடுபடவைக்கிறது
திருவாய்மொழி ( 6–9–9 ) பாசுரத்தை ஸ்வாமி தேசிகன் இங்கு எடுத்துச் சொல்கிறார்

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ ?
தாவி வையங்கொண்ட தடந்தாமரை கட்கே
கூவிக்கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ ?

என் மனஸ் கலங்கும்படி ஐந்து இந்திரியங்களும் எனக்குத் துக்கத்தை ஏற்படுத்த ,அல்ப ஸுக விஷயங்களை எனக்குத் தோன்றத் செய்து,
உனக்குத் தாஸனான நான் , தாஸத்வம் செய்யாமல், ப்ரக்ருதியில் தங்கும்படி பாபம் செய்த என்னை , உன்னை அநுபவிக்க இயலாமல்,
இந்த உலகத்திலேயே மூழ்கடித்து அழிக்கப் பார்க்கிறாயா ?
உலகங்களை எல்லாம் ,திருவடிகளால் வசப்படுத்திய அந்தத் திருவடிகளுக்குக் கைங்கர்யம் செய்ய ,
நீயே ,என்னைக் கூப்பிட்டு ஆட்கொள்ளும் நாள் நெருங்காதோ ?

10. மஹாபாரதம் –உத்யோக பர்வம் —

பாபம் ப்ராஜ்ஞாம் நாசாயதி க்ரியமாணம் புந : புந : நஷ்டப்ரஜ்ஞ : பாபமேவ புநராரபதே நர :என்கிறபடியே
மறுபடியும் மறுபடியும் தொடர்ந்து செய்கின்ற பாபம் அறிவை அழிக்கிறது;
அறிவை அவன் –ஜீவன்–இழப்பதால், மேலும் மேலும் பாவங்களையே செய்கிறான்.

11. ஸ்ரீமத் பகவத் கீதை –16ம் அத்யாயம்–19 வது ச்லோகம்

தாநஹம் த்விஷத :க்ரூரான் ஸம்ஸாஸேஷு நராதமாந் |
க்ஷிபாம் யஜஸ்ர மஸுபா ராஸுரீஷ்வேவ யோநிஷு ||

என்னை வெறுக்கிற க்ரூரர்களான மனுஷ்யப் பதர்களை , அசுரப் பிறவிகளில் அடிக்கடித் தள்ளுகிறேன்

இப்படி மேலும் மேலும் பாபம் செய்கிறவர்களை, கர்பவாஸம் , பிறப்பு, கிழத்தன்மை, மரணம், நரகம், என்னும் சுழற்சியில் ஆழ்த்தி விடுகிறான்.

12. க்ஷுத்ர ஸுகங்களில் –மிக அல்பமான ஸுகங்களில் இழிவோர், ராஜஸ —தாமஸ ஸாஸ்திரங்களை அப்யஸித்து
தாங்களும் தங்களைப் போன்றவர்களும் ,தங்களுக்குச் சமமான சங்கிலியால் கட்டப்பட்டவர்களும் ,ஆகிய க்ஷுத்ர தேவதைகளின் கால்களில் விழுகின்றனர்.
இதை .ஸ்ரீமத் பகவத் கீதையில், ஸ்ரீ கண்ணன் சொல்கிறார்

யஜந்தே ஸாத்விகா தேவாந் யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா : |
ப்ரேதான் பூதகணாம்ச்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா : ||

ஸாத்விகர்கள் , தேவர்களையும் , ராஜஸ குணம் உள்ளவர்கள் யக்ஷர்களையும் , தாமஸ குணம் உள்ளவர்கள் ப்ரேதங்களையும்
பூதங்களையும் பூஜிப்பார்கள் .
இந்த க்ஷுத்ர தேவதைகள் இவர்களுக்கு அருவருப்பைத் தரும் மிக்க தாழ்ந்த பலன்களைக் கொடுக்கின்றன. சேற்றில் உள்ள
புழுக்கள் , அந்தச் சேற்றில் மகிழ்வதைப்போல, இந்த அல்பப் பலன்களை , தங்களுக்குக் கிடைத்த உயர்ந்த பலன்களாகக் கருதி மகிழ்கின்றனர்

13. யோக ப்ரவருத்தரானவர்களையும் க்ஷுத்ர தேவதா யோகங்களிலேயாதல்
நாமாத்ய சேதனோபாஸனங்களிலேயாதல் மூளப் பண்ணிச்
சில்வானங்களான பலங்களாலே யோகத்தைத் தலை சாய்ப்பித்தும்—-என்று ஸ்வாமி தேசிகன் கூறுகிறார் . அதாவது—–
யோகம், துக்க நிவ்ருத்திக்குச் சாதகமாகச் சொல்லப்பட்டாலும், யோகத்தில் ஈடுபடும் சிலர், இந்த்ரன் முதலிய தேவர்களையே உபாஸிக்கின்றனர் .
இந்த யோகிகளிலும் சிலர், இந்த்ரன் முதலிய தேவர்கள் தாழ்ந்தவர்கள் என்று அறிந்து, ”நாமோபாஸன”த்தில் ஈடுபடுகின்றனர்.இது ,
சாந்தோக்யத்தில் ”பூம வித்யை யில் உள்ளது.
இதில், வேதங்களின் சப்தத்தையோ வாக்கு, மனஸ் , ஆகாசம் ,ஜலம் –இந்த அசேதநங்களை, ”ப்ரஹ்ம”மாக உபாஸிப்பது .
இதனால், தன் விருப்பப்படி எங்கும் சஞ்சரிப்பது, போன்ற பலன்களை அடைந்து, இவற்றையே பெரிய பலனாக நினைத்து,
உயர்நிலையை அடையாது தடைப்பட்டு விடுவர் .

பூம வித்யை–சாந்தோக்ய உபநிஷத்தில் உள்ளது–
நாரதர், ஸநத்குமாரரை அணுகி உபதேசம் செய்யும்படி ப்ரார்த்தித்தார் .
அவரது மனஸ் கலங்கியிருந்தது. நாரத மஹரிஷி யாவும் அறிந்தவர். அவருக்கே கலக்கம் என்றால் !
ஸநத்குமாரர் , நாரதரைப் பார்த்து, ”முதலில் உங்களுக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லுங்கள் ” என்கிறார்.
நாரதர் =நான் எல்லா ஸப்தங்களையும் அறிந்திருக்கிறேன்
ஸநத்குமாரர் ==இதை ப்ரஹ்மமாக உபாஸித்து ஸப்தம் கேட்கும் இடங்களில், எல்லாம் சஞ்சரித்து ஆனந்தம் அடையலாமே
நாரதர் =இதற்கு மேலும் உண்டா
ஸநத்குமாரர் =ஸப்தம் , வாக்கு, மனஸ் , ஸங்கல்பம் , சித்தம் , த்யானம் , விஜ்ஞானம் , பலம்,அன்னம் , தண்ணீர் , தேஜஸ் , ஆஸயம் ,
நினைவு, ஆசை , என்று 14 ஐயும் ப்ரஹ்மமாக உபாஸிக்கலாம்
நாரதர் = இதற்கும் மேலானது, எது
ஸநத்குமாரர் =”ப்ராணனை ” மேலானதாக உபாஸிக்கலாம்.ப்ராணன் — ஜீவாத்மா–இதை உயர்ந்த புருஷார்த்தமாக உபாசிக்கலாம்.
நாரதர் =இதைவிட உயர்ந்தது உள்ளதா
ஸநத்குமாரர் = ப்ரஹ்மத்தை உபாஸிப்பது சிறந்தது.இதற்கு உபாஸனம்மனனம்; இதில் ச்ரத்தை;இதில் அசைக்கமுடியாத பற்றுதல்;அதற்குத்
தகுந்தவாறு செய்யப்படும் செய்கை;ஊக்கம்; இப்படி இருந்து, ப்ரஹ்மத்தை உபாஸிக்கலாம் . இதற்கு ”பூம வித்யை ”என்று பெயர்.
இதற்கு மேம்பட்டது இல்லை.ப்ரஹ்மம் எல்லாவற்றுக்கும் ஆத்மா.பரமாத்மா.இப்படி உபாஸிப்பவன் , கர்மாக்களிலிருந்து விடுபடுகிறான்.
இதற்கு, மனஸ் சுத்தம் வேண்டும். மனஸ் சுத்தமாவதற்கு , சுத்தமான ஆகாரத்தைச் சாப்பிடவேண்டும்.
ஸநத்குமாரரை , ”ஸ்கந்தர் ” என்றும் சொல்வதுண்டு.

ஆத்மாவின் விஷயத்தில் ஈடுபடுவோர்— ஆத்மாவானது ப்ரக்ருதியுடன் தொடர்பு உடையதாகவோ, அல்லது
இல்லாததாகவோ உபாசிப்பர். இப்படி நான்கு த்யானங்கள் — உபாஸனங்கள் சொல்லப்படுகின்றன
1.ப்ரக்ருதியுடன் கூடியதாக, தன்னுடைய ஆத்மாவையே ப்ரஹ்மமாக ஏறிட்டு உபாஸிப்பது
2.ப்ரக்ருதியுடன் கூடிய தன்னுடைய ஆத்மாவை , ப்ரஹ்மம் என்று ஏறிடாமல், ”அஹம் , அஹம் ” ( நான், நான் ) என்று உபாசித்தல்
3.ப்ரக்ருதி ஸம்பந்தம் அற்ற சுத்த ஜீவாத்ம ஸ்வரூபத்தை ப்ரஹ்மமாக ஏறிட்டு உபாஸித்தல்
4.ப்ரக்ருதி ஸம்பந்தம் அற்ற சுத்த ஜீவாத்ம ஸ்வரூபத்தை ”அஹம் ,அஹம் ” ( நான் , நான் , ) என்று உபாஸித்தல் .
சேதநாசேதநங்களைசரீரமாக உடைய ப்ரஹ்மத்தினுடைய அவயவமான ஜீவனை உபாஸிப்பதால் ,
இவை நான்கும் ப்ரதீக ( அவயவ ) உபாஸனங்கள் எனப்படுகிறது. இவை, பகவத் அனுபவத்தைத் தராது.
தாழ்ந்த ஆத்ம அனுபவத்தைக் கொடுத்து, மறுபடியும் ஸம்ஸாரத்தில் சிக்குவர் ஸ்ரீ உடையவரின் ஸ்ரீ பாஷ்யம் ( 4–3–5 )
இதுவும் மோக்ஷத்தைத் தராது.

இவை தவிர, த்ருஷ்டி உபாஸனம் போன்ற பல உபாஸனங்கள் உள்ளன.

இன்னும் சிலர், சேதநர்கள் —ப்ரஹ்மத்தையே உபாஸித்தாலும் ,தங்களது ஆத்மாவைத் தியானித்து,( ஆத்மோபாஸனம் ) அந்த ஆத்மாவில் அந்தர்யாமியாக ப்ரஹ்மம்
இருப்பதாகவும் , ஆத்மாவைச் சரீரமாகக் கொண்டுள்ளதாகவும் உபாஸித்தாலும் மறைமுகமாக,தங்களின் ஆத்ம த்யானத்தில் ஈடுபடுவதால், ”கைவல்ய ”
நிலையை அடைகிறார்கள். இதில் அஷ்டமாஸித்திகள் கிடைக்கும்; ”வசு”க்கள் போன்ற ஜன்மங்கள் கிடைக்கும்.அல்லது ப்ரஹ்மா முதலானவர்களின்
சரீரத்தில் புகுகின்ற ஆற்றல் கிடைக்கும். அரசாள்வதற்காக, ”ராஜ கிரீடத்”தைச் சூட்டிக்கொள்ளும் நிலையில் உள்ள அரசகுமாரன், தான் காராக்ருஹத்தில்
( சிறையில் ) இருந்தபோது, தன்னைக் கவனித்துக் கொண்ட வேலைக்காரப் பெண்கள் பக்கம் சாய்வது போலாகும் என்று இதற்கு உதாரணமிட்டுக் கூறுவர்.

இப்படியாக,தங்களுடைய வினைப்பயன் காரணமாக , சரீரத்தாலும், இந்த்ரியங்களாலும் உழன்று அலைந்து, அவற்றால் கிடைக்கும் போகமே நிலை என்பதாக
எண்ணி,புருஷார்த்தத்தை இழந்து, சேதநர்கள் —ஜீவாத்மாக்கள் உள்ளனர்.
மேற்சொன்னவாறு பகவானை அடையப் பற்பலத் தடைகள் உள்ளன. பகவானை அடையச் சரியான வழியில் செல்வதாகச் சொன்னாலும்,
அந்த வழியில்( கிணறு தாண்டுவார் ) முப்பத்திரண்டு படிகள் இருப்பதாக வைத்துக் கொண்டால்,
முதல் படியில் தடுக்கிக் கீழே விழுந்தாலும், முப்பத்திரெண்டாவது படியில் தடுக்கிக் கீழே விழுந்தாலும், எந்த வித்யாஸமும் இல்லை.
இப்படி, எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும், எந்தக் காலமாக இருந்தாலும், இப்படித் தடைகள் நேரிடில், சேதநன்–ஜீவன் , ஸம்ஸாரத்தில்
உழன்றுகொண்டேதான் இருப்பான்.

கர்மயோகத்தைப் பற்றி.ஸ்ரீ கிருஷ்ணன் , கீதையில் சொல்லும்போது—
நேஹாபி க்ரமநாஸோஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே |
ஸ்வல்ப மப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் ||
அதாவது, கர்மயோகத்தை ஒரு சேதநன்—ஜீவாத்மா– முமுக்ஷு ( மோக்ஷத்தில் ஆசையுள்ளவன் ) ஆரம்பித்தால் , அது வீணாகப்போய்விடும் என்பது இல்லை.
ஜன்மங்களின் முடிவிலோ , யுகத்தின் முடிவிலோ , கல்பத்தின் முடிவிலோ , மன்வந்த்ரத்தின் முடிவிலோ —அதன் பயன்–எப்போது கிடைக்கும் என்று
சொல்லமுடியாது. எதிர் பலனும் வராது. ஆனால், இதன் சிறு பகுதிகூட, ஸம்ஸாரம் என்கிற பெரிய பயத்திலிருந்து காக்கும்.
அதாவது, கர்மயோக பலன் என்பது–கல்லால் கட்டப்பட்ட சுவர் போன்றது; என்றும் நிலையாக இருக்கும். ஆனால், அதன் பலன், எப்போது கிட்டும்
என்று உறுதியாகச் சொல்லமுடியாது.
பகவான் உகக்குமாறு பற்பலச் செயல்களைச் செய்த வசிஷ்டர் முதலானோர்கூட, பலகாலம் காத்திருக்கும்படி ஆயிற்று.
ஆனால், பகவானை விரோதித்த வ்ருத்ராஸுரன் , க்ஷத்ரபந்து முதலானோர் மிகவும் எளிதாக,தாமதமின்றி, மோக்ஷம் அடைந்தனர்.

வ்ருத்ராஸுரன் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம் — ஸ்ரீமத் பாகவதத்தில் இருக்கிறது–
தேவர்களுக்கு, புரோஹிதர் இல்லாத சமயம். த்வஷ்டா என்கிற ரிஷியின் குமாரன் விச்வரூபன் தேவர்களுக்குப் புரோஹிதர் ஆனார்.
சுக்ராச்சார்யரால் ( அசுரர் குரு )அவருடைய வித்யையால் மறைத்துவைக்கப்பட்டிருந்த தேவர்களின் சொத்துக்களை , நாராயண கவசம்
என்கிற வைஷ்ணவ வித்யையை உபாஸித்து , அந்தச் சொத்துக்களை மீட்டு, விச்வரூபன் என்கிற தேவர்களின் புரோஹிதர் ,இந்த்ரனுக்கு
அளித்தார். நாராயண கவசத்தையும் இந்திரனுக்கு உபதேசித்தார் .
இந்த உபாஸனத்தால் , இந்த்ரன் , தன்னுடைய உலகங்களை அசுரர்களிடமிருந்து மீட்டான்.
இந்த விச்வரூபனுக்கு , மூன்று தலைகள். இவர், யாகங்கள் செய்யும்போது, ஹவிர்ப் பாகங்களை ,மறைமுகமாக , அசுரர்களுக்கு
அளித்தார். மேலும், இந்த்ரன் ஆகும் தவ வலிமையும் இவருக்கு இருந்தது.
அதனால்,இந்த்ரன் தன்னுடைய வஜ்ராயுதத்தால் இவர் தலைகளை வெட்டி, இவரைக் கொன்றுவிட்டான்.
விச்வரூபனின் தகப்பனாரான ”த்வஷ்டா ” என்கிற ரிஷி,
இந்த்ரனைக் கொல்லக்கூடிய சத்ரு வேண்டும் என்று ஒரு ஹோமம் வளர்த்து ,அதில், ”இந்த்ர சத்ரோ வர்தஸ்வ ” என்று ஆஜ்யத்தைச் ( நெய் )
சேர்த்தார்.மந்த்ரத்தில் ஸ்வரப்பிழை இருந்ததால்,இந்த்ரனால் கொல்லப்படும் ஒரு புருஷன் கோரமான ரூபத்துடன் தோன்றினான்.
இவன்தான் ”வ்ருத்ராஸுரன் ”.

இவன் செய்த கொடுமைகளைத் தாங்கமுடியாத ரிஷிகளும் தேவர்களும் பகவானிடம் ப்ரார்த்தித்தார்கள் .
பகவான், ரிஷியின் சரீரத்திலிருந்து எலும்பை எடுத்து, விச்வகர்மாவைக் கொண்டு அதை ஆயுதமாகச் செய்து, அந்த ஆயுதத்தைப் ப்ரயோகித்தால்
அவன் மடிவான் என்று அருளினார்.
தேவர்கள், ரிஷியைப் ப்ரார்த்தித்தார்கள் . அவர், பகவானைத் த்யானித்து தன்னுடைய சரீரத்திலிருந்து வெளியே வந்தார்.பகவானின் கட்டளைப்படியே
ரிஷியின் சரீரத்திலிருந்து எலும்பை எடுத்து, விச்வகர்மாவிடம் கொடுத்து , அவர் அதை ஆயுதமாகச் செய்துகொடுக்க அந்த ஆயுதத்தை ஏந்தி,
இந்த்ரன் வ்ருத்ராஸுரனோடு யுத்தம் செய்தான்.
த்ரேதா யுகத்தில், நர்மதா நதி தீரத்தில்,மிகக் கோரமான தேவாஸுர யுத்தம் நடந்தது.சம்பரன் போன்ற அசுரர்கள் பயந்து ஓடினர் .
வ்ருத்ரன் மட்டில், இந்த்ரனை எதிர்த்து சண்டையிட்டான்.அப்போது சொன்னான்—
” இந்த்ரா —-இந்த ஆயுதத்தால் என்னைத் தாக்கு . நான் பாபங்கள் அகன்று மோக்ஷம் அடைவேன். என் மனம் பகவான் நாராயணனின் சரணங்களைப்
பற்றி இருக்கிறது.” என்று சொல்லிக்கொண்டே , பெரிய உருவம் எடுத்து, ஐராவதத்துடன் இந்த்ரனை விழுங்கிவிட்டான்.இந்த்ரன் , அஸுரனின் வயிற்றை
விச்வகர்மா செய்து கொடுத்த ஆயுதத்தால் கிழித்து, வெளியே வந்து வ்ருத்ரனின் தலையை அறுத்து அவனைக் கொன்றான். அஸுரனின்
ஆத்மா, பரமாத்மா ஜ்யோதிஸ்ஸை அடைந்து மோக்ஷம் பெற்றது.

க்ஷத்ர பந்து வ்ருத்தாந்தம் –குருபரம்பரா ஸாரத்தில் முன்னமேயே பார்த்தோம்.
ஆக மோக்ஷத்தை அடையும் விசேஷமான கர்மாக்களை யார் செய்தார்கள் என்றோ, மோக்ஷம் அடையத் தாமதமான கர்மாக்களை
யார் செய்தார்கள் என்றோ, கூற இயலாது.

அதிகாரத்திலிருந்து
———————————-

மோக்ஷத் தடையை விலக்க , சரணாகதியே பரிஹாரம்
—————————————————————————————–

இப்படி அநிஷ்ட பரம்பரைக்கு மூலங்களான அஜ்ஞாதிலங்கனங்களாலே வந்த பகவத் நிக்ரஹ விசேஷமாகிற ப்ரதான விரோதிக்குச் செய்யும்
பரிஹாரத்தை ,தஸ்ய ச வசீகரணம் தச்சரணாகதிரேவ —-என்று கடவல்லியில்வசீகார்த்த பரம்பரையை வகுத்த இடத்திலே ஸ்ரீ பாஷ்யகாரர்
அருளிச் செய்தார்.

மோக்ஷத் தடைகள் பற்றி ரஹஸ்ய த்ரயம் சொல்வது—
——————————————————————————

இவ் விரோதி வர்க்கத்தை யெல்லாம் ரஹஸ்யத்ரயத்தில் விதிக்கிற அர்த்தங்களுடைய வ்யவச்சேத சக்தியாலும், நமஸ்ஸுக்களில்
மகாரங்களில் ஷஷ்டிகளாலும் ஸர்வபாப ஸப்தத்தாலும் அநுஸந்தித்து ஸம்ஸாரத்தில் அடிச்சூட்டாலே பேற்றுக்குறுப்பான
வழிகளிலே த்வரிக்க ப்ராப்தம்

பொருள் ஒன்று என நின்ற பூமகள்நாதன் அவனடி சேர்ந்து
அருள் ஒன்றும் அன்பன் அவன் கொள் உபாயம் அமைந்த பயன்
மருள் ஒன்றிய வினைவல் விலங்கு என்று இவை ஐந்து அறிவார்
இருள் ஒன்று இலாவகை என் மனம் தேற இயம்பினரே

ப்ராப்யம் ப்ரஹ்ம ஸமஸ்த சேஷி பரமம் ப்ராப்தா அஹம் அஸ்ய உசித :
ப்ராப்தி : தாய தன க்ரமாத் இஹ மம ப்ராப்தா ஸ்வத :ஸூரிவத்
ஹந்த ஏனாம் அதிவ்ருத்தவாந் அஹம் அஹமத்யா விபத்யாச்ரய :
ஸேது :ஸம்ப்ரதி சேஷிதம்பதி பரந்யாஸஸ்து மே சிஷ்யதே

வ்யாக்யானம்
—————————-

மோக்ஷம் அடைவதற்குத் தடையாக இருப்பவனவற்றில் முதன்மையானது எதுவெனில், பகவானின் கட்டளைகளை மீறுவதே ( வேதங்களும் சாஸ்த்ரங்களும்
சொல்வது தான் பகவானின் கட்டளை )இப்படி மீறிச் செயல்படுவதே, சங்கிலித் தொடர் போன்ற சொல்லொணாத் துன்பங்களுக்குக் காரணம்.
இவற்றை விலக்குவது எப்படி என்று ஸ்ரீ பாஷ்யகாரர் சொல்வது என்னவெனில்,
எம்பெருமானை வசப்படுத்துக —இது ஒன்றே நமக்கு அநுக்ரஹம் பண்ணும்படி பகவானை வசப்படுத்தும்
ஸாதனம் —-அவனிடம் செய்யும் சரணாகதியே
இதனை, கடோபநிஷத்தில் புலன் மனம் போன்றவற்றை அடக்கும் வரிசை கூறும் இடத்தை விளக்கும்போது விவரிக்கிறார்.
யோகத்தில் இழிபவன் எதை வசப்படுத்த வேண்டும் —வசீகரிக்க வேண்டும், எதை விட வேண்டும், எதை வசீகரிப்பதில் ச்ரமம் அதிகம் என்பதையெல்லாம்
இதில் காணலாம்.
புற இந்த்ரியங்களை , மனஸ்ஸிலும் ,மனஸ்ஸைப் புத்தியிலும் புத்தியை ஜீவாத்மாவிலும் , ஜீவாத்மாவைப் பரமாத்மாவிலும் அடக்க வேணும்.
இதுவே வசீகரிக்கும் முறை என்று கடோபநிஷத் கூறுகிறது.
பக்தி யோகத்தால் ,பகவானை வசீகரிக்கலாம் ; பக்தியோகம் செய்ய இந்த்ரியங்களை வெல்ல வேண்டும் ; இந்திரியங்களை வெல்ல பகவானை
வசீகரிக்க வேண்டும். இப்படி ஒன்றையொன்று பிணைத்திருப்பதால் சக்ரக தோஷம் என்பது ஏற்படுகிறது. இதை போக்க, எம்பெருமானைச்
சரணமடைவதே வழி ( ஸ்ரீபாஷ்யம் –ஆநுமாநிகாதிகரணம் )

இவ்விதம் , மோக்ஷத்தைத் தடை செய்யும் விரோதிகளை ”வ்யவச்சேத சக்தியால் ” அதாவது, மறைமுகமாகக் கூறப்படும் கருத்துக்கள்—
”நம” என்பதில் உள்ள மமகாரம் ( நான், எனது ) சரம ச்லோகத்தில் ”ஸர்வ பாபம் ”
இப்படி மறைமுகமாக அறிவதன்மூலமாக ஒரு சேதநன் ,”நாம் ஸம்ஸாரம் என்கிற சூடான மணலில் நடக்கிறோம்;–அடிச்சூடு —
மிகவும் வேகமாக நடந்து இதைக்கடந்து, மகிழ்ச்சிப் பாதையை அடையவேண்டும் என்பதை உணர்வான்

பொருள் ஒன்று என நின்ற பூமகள்நாதன் அவனடி சேர்ந்து
அருள் ஒன்றும் அன்பன் அவன் கொள் உபாயம் அமைந்த பயன்
மருள் ஒன்றிய வினைவல் விலங்கு என்று இவை ஐந்து அறிவார்
இருள் ஒன்று இலாவகை என் மனம் தேற இயம்பினரே

பரமாத்மா இவன் ஒருவனே, தாமரைச் செல்வியின் நாதன் இவனே-இவனே எம்பெருமான்
எம்பெருமானை மிக விரும்பி, அவனது அருளை யாசித்து, அவனது திருவடிகளை சரணம் என்று பற்றியிருக்கும
ஜீவன் இதற்கு, எம்பெருமானை அடைய ஜீவன் கைக்கொள்ளும் உபாயம் எம்பெருமானை அடைந்த பின்னர் பெரும் பலன்
எம்பெருமானை அடைவதற்குத் தடையாக உள்ள அறியாமை போன்ற வினைப்பயன்கள்
இந்த ஐந்து விஷயங்களையும் எல்லாம் அறிந்த நம் ஆசார்யர்கள் ,ஐயம் அற நமக்கு உபதேசித்தனர்

ப்ராப்யம் ப்ரஹ்ம ஸமஸ்த சேஷி பரமம் ப்ராப்தா அஹம் அஸ்ய உசித :
ப்ராப்தி : தாய தன க்ரமாத் இஹ மம ப்ராப்தா ஸ்வத :ஸூரிவத்
ஹந்த ஏனாம் அதிவ்ருத்தவாந் அஹம் அஹமத்யா விபத்யாச்ரய :
ஸேது :ஸம்ப்ரதி சேஷிதம்பதி பரந்யாஸஸ்து மே சிஷ்யதே

நான் அடையவேண்டிய லக்ஷியம் –மிக உயர்ந்ததான ,எல்லாருக்கும் எஜமானான பரமாத்மா. அவனை அடைவதற்கு ஏற்றவன் நான்.
தகப்பனாரின் சொத்து, பிள்ளைக்கு வருவதைப்போல நித்ய சூரிகளுக்குக் கிடைத்த கைங்கர்யம் எனக்கும் கிடைத்திருக்கவேண்டும்.
ஆனால், நான், அறியாமை, அஹங்காரம் இவற்றால் இதனை இழந்துள்ளேன்.
திவ்யதம்பதியரான –எம்பெருமானையும் பிராட்டியையும் சரணாகதி செய்யும்போது, இவை கிடைத்துவிடும்.
சரணாகதி என்பது, இந்த லக்ஷ்யத்தை அடையும் உபாயம் என்பதைத் தெளிந்தேன் .

——————

அதிகாரம் 4–அர்த்தபஞ்சக அதிகாரம் நிறைவு

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் 1—உபோத்காத அதிகாரம் —

April 11, 2021

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

ஸமாச்ரயணம் ஆன பிறகு, ”க்ரந்த சதுஷ்டயம் ” என்கிற நான்கு க்ரந்தங்களை,
ஆசார்யனிடம் , ”காலக்ஷேப ” மாகக் கேட்கவேண்டும் என்று ஆசார்யர்கள் கட்டளையிட்டு இருக்கிறார்கள்.
1. ஸ்ரீ பாஷ்யம்—ஸ்ரீ வ்யாஸரின் ”ப்ரஹ்ம ஸுத்ர”த்துக்குஸ்ரீ உடையவரின் வ்யாக்யானம் —உரை
2. ஸ்ரீ கீதா பாஷ்யம்—ஸ்ரீமத் பகவத் கீதைக்கு, ஸ்ரீ ராமானுஜர் அருளிய உரை-அதற்கு, ஸ்வாமி தேசிகன் ஸாதித்த ”தாத்பர்ய சந்த்ரிகை ”
3. பகவத் விஷயம் –ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு , ஸ்ரீ ராமானுஜர் கட்டளைப்படி, அவருடைய ஞான புத்ரர்
”திருக்குருகைப் பிரான் பிள்ளான் ” அருளிய வ்யாக்யானம் –ஆறாயிரப்படி –மணிப்ரவாள நடையில்
4. ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் —ஸ்வாமி தேசிகன், நாமெல்லோரும் நல்ல கதியை அடையவேண்டுமென்று விரும்பி ,
தனது அந்திம காலத்தில்,அருளிச் செய்த க்ரந்தம்

இந்த நான்கும், மாறுபட்ட கருத்து ஏதுமில்லாமல், ஒரே குரலில், நமது ஸம்ப்ரதாயக் கொள்கைகளைச் சொல்கின்றன.
இதை ”உபய வேதாந்த ஐக கண்ட்யம் ” என்று சொல்வார்கள்.

——-

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்
இது 4 பாகம்—-32 அதிகாரங்கள்
1. அர்த்தாநு சாஸன பாகம்
2.ஸ்த்திரீகரண பாகம்
3. பத வாக்ய யோஜனா பாகம்
4. ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம்

1-அர்த்தாநு சாஸன பாகத்தில் –22 அதிகாரங்கள்
2-ஸ்த்திரீகரண பாகத்தில் —4 ”
3-பத வாக்ய யோஜனா பாகத்தில் — 3 ”
4. ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகத்தில்–3 ”

——–

அதிகாரம் 1—உபோத்காத அதிகாரம் –

ஆபகவத்த :ப்ரதிதாம் அநத்யாம் ஆசார்ய ஸந்ததிம் |
மனஸி மம யத் ப்ரஸாதாத் வஸதி ரஹஸ்ய த்ரய ஸார : அயம் ||

தோஷங்கள் —அதாவது குற்றங்கள் எதுவுமே இல்லாததும் , மிகவும் ப்ராபல்யமானதும்,
பகவானே முதல் ஆசார்யனாக இருப்பதுமான , இந்தக் குரு பரம்பரையை நமஸ்கரிக்கிறேன் –
அவர்களின் க்ருபையால், அடியேன் மனஸ்ஸில் மூன்று முக்ய ரஹஸ்யங்களின்
( திருவஷ்டாக்ஷரம், த்வயம், சரமஸ்லோகம் ) ஆழ்ந்த உட் கருத்துக்கள் எப்போதுமே நிலைத்து உள்ளன

2. கர்மம் ப்ரஹ்ம ஆத்மகே சாஸ்த்ரே கௌதஸ்குத நிவர்த்தகாந் |
வந்தே ஹஸ்திகிரி ஈசஸ்ய வீதீ சோதக கிங்கராந் ||

கர்மா விசாரம், ப்ரஹ்ம விசாரம் என்று இரண்டு பாகங்களை உடைய வேத சாஸ்த்ரங்களில் , ஹைதுகர்கள் —-
அதாவது, எதற்கும் காரணம் கேட்பவர்கள்–ப்ரமாணங்களை நம்பாதவர்கள்—இவர்களைக் கண்டித்தவர்களும்,
ஸ்ரீ தேவாதிராஜனுடைய திருவீதிக் குப்பைகளைச் சுத்தம் செய்யும் கைங்கர்யங்களைச் செய்பவர்களுமான
ஆசார்யர்களை நமஸ்கரிக்கிறேன்.
இவர் ஸ்ரீ அப்புள்ளார் — ஸ்ரீ தேவப்பெருமாளை அடையும் வழியை–மார்க்கத்தைத் தூய்மை ஆக்கினார்

3. ஆளும் அடைக்கலம் என்று எம்மை அம்புயத்தாள் கணவன்
தாளிணை சேர்ந்து எமக்கும் அவை தந்த தகவுடையார்
மூளும் இருட்கள் விள்ள முயன்று ஓதிய மூன்றின் உள்ளம்
நாளும் உகக்க இங்கே நமக்கு ஓர் விதி வாய்க்கின்றதே

நம்மைக் காப்பாற்ற வேண்டியதாகத் தீர்மானித்து, நம்மைக் காக்கச் சங்கல்பித்து இருக்கிற ,தாமரைப் புஷ்பத்தில்
வசிக்கும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் நாதனான எம்பெருமானின் ஒன்றுக்கொன்று ஒப்பான திருவடிகளை உபாயமாகப் பற்றி,
நமக்கும் அத் திருவடிகளையே உபாயமாகக் காட்டிக் கொடுத்த க்ருபையை உடைய ஆசார்யர்கள் ,
மேலும் மேலும் பெருகுகின்ற அஜ்ஞான இருட்டுக்கள் அழிய வேணுமென்று ஆசைப்பட்டு–முயற்சித்து ,
உபதேசித்த மூன்று ரஹஸ்யங்களின் உள்ளார்ந்த அர்த்தத்தை எந்நாளும் –எப்போதும் நினைத்து
உகக்க இவ்வுலகில் நமக்கு ஒப்புவமை இல்லாத ஒரு விதி–பாக்யம் கிடைக்கிறதே

திருமகள் கேள்வனான எம்பெருமானின் திருவடிகள் மட்டுமே தங்களைக் காக்கும் என்றும் அவன் மட்டுமே தங்களுக்கு
அடைக்கலம் என்றும், அறிந்த நமது ஆசார்யர்கள் அவனது திருவடிகளையே தங்களுக்கு உபாயமாகப் பற்றி,
அந்தத் திருவடிகளே நமக்கும் உபாயம் என்று காட்டிக் கொடுத்தார்கள்.
இப்படிப்பட்ட ஆசார்யர்கள் நமது அறியாமை என்கிற இருளை ஒழிக்க மூன்று ரஹஸ்யங்களின் உட்பொருளை நமக்கு அளித்தார்கள்.
இதைத் தினமும் இடைவிடாது அனுபவித்து சந்தோஷப்படும் பாக்யம் இவ்வுலகில் நாம் எந்தவொரு ப்ரயத்னமும் செய்யாதிருக்க
நமக்கு, ஆசார்ய பரம்பரை மூலமாகக் கிடைத்துள்ளதே !

4. மணிவர இவ சௌரே :நித்ய ஹ்ருத்ய அபி ஜீவ :
கலுஷமதி : அவிந்தந் கிங்கரத்வ ஆதி ராஜ்யம் |
விதி பரிணதி பேதாத் வீக்ஷித :தேந காலே
குருபரிஷத் உபஜ்ஞாம் ப்ராப்ய கோபாயதி ஸ்வம் ||

கௌஸ்துபமணி போன்ற ஜீவாத்மா ,எம்பெருமானுக்குப் பிரியமானவன். எம்பெருமானும் கௌஸ்து பமணிக்குப் பிரியமானவன்.
ஜீவன் , தனது அறியாமையால் புத்தி தடுமாறி எம்பெருமானுக் செய்யும் கைங்கர்யத்தை , ஒரு கால கட்டத்தில் கைவிடும்போது,
எம்பெருமானின் கடாக்ஷத்தால் , ஆசார்யர்களின் உபதேசங்கள் மூலமாக, தனது ஸ்வரூபம் பற்றிய உண்மை அறிவு, –
அதாவது–ஜீவன் எம்பெருமானின் அடிமை, ஜீவன் எம்பெருமானுக்காகவே இருக்கிறான்–என்கிற ஞானம் ஏற்படுகிறது.
இதனால், ஜீவாத்மா தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறான்.

ஜீவாத்மாவின் ”ஸ்வரூப ” யோக்யதை
————————————————————–

ஸ்ரீயப்பதியான ஸர்வேச்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்துப ஸ்தானீயனாய்க் கொண்டு
ஹ்ருதயங்கமனாய் குமாரனென்றும், புத்ரனென்றும், சிஷ்யனென்றும் ,ப்ரேஷ்யனென்றும் ,சேஷபூதனென்றும் , தாஸபூதனென்றும் ,
அவ்வோ ஸாஸ்த்ரங்களிலே ப்ரதிபன்னனாயிருக்கும் ஜீவாத்மா , இவன் தனக்கு வகுத்த சேஷியாய் ,அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் ,
உயர்வற உயர்நலம் உடையவனாய் ,நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனாய்
ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானான ஸர்வேச்வரன்

வ்யாக்யானம் :—
ஸ்ரீ லக்ஷ்மி நாயகனான பகவானுக்கு , ஜீவாத்மா பகவானின் கௌஸ்துபமணி போன்று மிகவும் பிரியமானவன் என்றும் .
இவன் , பகவானுக்கு இளவரசன் எனவும் , புத்ரன் எனவும் சிஷ்யன் எனவும் வேலைக்காரன் எனவும் , அவனுக்காக மட்டுமே உள்ளவன் எனவும்,
அடிமை எனவும் பற்பல சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.
இந்த ஜீவாத்மாவுக்கு , வகுத்த எஜமானனாய் ,அறியாமையே இல்லாத நித்ய ஸூரிகளுக்கு அதிபதியாய், தன்னையொத்தாரும் ,மிக்காரும்
என்று ஏதுமில்லாத கல்யாண குணசாலியாய் , தனது திருமார்பில் தாமரையில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை எந்த அளவுக்கு
விரும்புகிறானோ அந்த அளவுக்கு விரும்புகிறவனாய் இவ்வுலகவாசிகள், அவ்வுலகவாசிகள் அனைவருக்கும் எம்பெருமான் ,ஸர்வேச்வரனாக உள்ளான் .

வைகுண்டேது பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி : ஆஸ்தே என்றும்
ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப என்றும் சொல்லுகிறபடியே
பெரிய பிராட்டியாரோடே கூடத் தெளி விசும்பிலே ,
யா அயோத்யா இதி அபராஜிதா இதி விதிதா நாகம் பரேண ஸ்திதா என்கிறபடியே
அயோத்யாதி சப்த வாச்யமான கலங்காப் பெரு நகரிலே ,ஸஹஸ்ரஸ்தூணாதி வாக்யங்களாலே ஓதப்படுகிற திருமாமணி மண்டபத்திலே ,
கௌஷீதகி ப்ராம்மணதிகளிலே ஓதப்படுகிற பர்யங்க விசேஷத்திலே ,
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் என்றும்
நிவாஸ சய்யாஸந என்றும் சொல்லுகிறபடியே ,
ஸர்வ தேச –ஸர்வ கால –ஸர்வவஸ்தோசித் –ஸர்வ வித கைங்கர்யங்களையும் ,ஸர்வவித சரீரங்களாலே அனுபவித்துச் சேஷத்வமே
தனக்கு நிரூபகமாகையாலே சேஷன் என்றே திருநாமமாகும்படியான திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளி மெத்தையிலே
வானிளவரசாய்க் கொண்டு தான் வாழ்கிற வாழ்வை ஸர்வாத்மாக்களும் அநுபவித்து க்ருதார்த்தராக வேணும் என்று ஸஹ்ருதனாயிருக்கிற
இருப்பு அடியாக நித்யானுபவம் பண்ணுகிற அந்தமில் பேரின்பத்தடியரான நித்யஸூரிகளோடு ஒக்கத் தானும்
ஸ்வாமி கைங்கர்யத்துக்கு ஸ்வரூப யோக்யதையாலே இட்டுப் பிறந்து வைத்து அநாதி மாயையாலே ஸுப்தனாய் —
அநேக ஜன்ம ஸஹஸ்ரீம் ஸம்ஸார பதவீம் வ்ரஜந் மோஹ ச்ரம ப்ரயாதோ அஸௌ வாஸனா ரேணு குண்டித :—- என்கிறபடியே
ப்ரக்ருதியாகிற பாழிலே விழுந்து ஓடியோடிப் பல பிறப்பும் பிறந்து தட்டித்தாவற்று அழுக்கடைந்து, ஒளி அழிந்தபடியாலே
தத்வஹித விஷயமாய் யதாவத் ப்ரகாசா ரஹிதனாய் நிற்க—-

வ்யாக்யானம் :—
வைகுண்டேது பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி : லைங்க புராணம் இப்படிக் கூறுகிறது—-ஸமஸ்த உலகங்களுக்கும்
எஜமானன் ஆக இருக்கிற பகவான் ,வைகுண்டத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன் விளங்குகிறான்.

கண்டு கேட்டுற்று மோந்துண்டுழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் , தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப
—————————————————————————-
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே –————–திருவாய்மொழி (4-9-10)

அழகிய வளையல்களை அணிந்த பிராட்டியும் , நீயும் , உங்களைத் தவிர வேறு ஈச்வரர்களில்லை என்னும்படியாக ஸேவை சாதிக்க
நித்ய ஸூரிகளைப்போல எல்லா ஆத்மாக்களும் உன்னை அநுபவித்துக் கைங்கர்யம் செய்யும்படியான –
இப்படி உன்னால் ஏற்பட்ட புருஷார்த்தத்தை நான் ஸாக்ஷாத்கரித்தேன்
ஸ்ரீ உத்தமூர் ஸ்வாமி, தன்னுடைய பிரபந்த ரக்ஷையில் கூறுகிறார்—
பொருள் அழிவு, ஆயுள் முடிவு, பேராசை பரஹிம்ஸை பலநரக பாதையான ஸம்ஸாரத்திலே , ஐங்கருவி( ரூபம்,சப்தம், ஸ்பர்சம் ,வாஸனை , ரஸம் )
இன்பத்தை அநுபவித்து அதன் வாசனையால் மேன்மேல் திரிகின்ற பஞ்சேந்த்ரியங்களால் மறுபடியும் மறுபடியும் சிற்றின்பத்தை நுகர்ந்து,
அவை அற்பமாய் துயரமாகவே இருப்பதையும் , ஆத்ம அனுபவமென்கிற ”கைவல்யம் ”எம்பெருமானைப் பற்றிய அறிவு சிறிதும்
அப்போது இல்லாததால் மிகக் கேவலமே என்றும், அவற்றில் இழிந்தாரோடு ஸ்நேஹம் அனர்த்தம் விளைவிக்கும் என்றும்
இவைகளை விட்டொழித்து,நேராக உன் திருவடிகளை ஆச்ரயித்தேன்

ஸ்ரீ குணரத்னகோசம் ( 23 ) ( ஸ்ரீ பராசர பட்டர் அருளியது–)
ஆஜ்ஞாநுக்ரஹ பீமகோமலபுரீபாலா பலம் பேஜுஷாம்
யாயோத்யேத்யபராஜிதேதி விதிதா நாகம் பரேண ஸ்த்திதா |
————————————————————————————————–
பாவை ரத்புத போகபூமகஹநை : ஸாந்த்ரா ஸுதாஸ்யந்திபி :
ஸ்ரீ ரங்கேஸ்வர கேஹ லக்ஷ்மி !யுவயோ :தாம் ராஜதாநீம் விது : ||

ச்ருதி–ஸ்ம்ருதி –இதிஹாஸ –புராண–ஸ்ரீ பாஞ்சராத்ராதிகளிலும் , ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலும் விவரிக்கும் பரமபதத்தை
இந்த ச்லோகத்தில் , ஸ்ரீ பட்டர் கூறுகிறார்
ஆணையிடுவதும் , வாழ்த்துவதும் ஆகிய செயல்களைச் செய்யும் த்வாரபாலகர்களை உடைய நகரம்—
எம்பெருமானை, -பக்தி-ப்ரபத்தி வழிகளில் ஆச்ரயித்தவர்களுக்கு, அடைய வேண்டிய பயன் ——–
யுத்தம் செய்து வெல்ல இயலாத நகரம்—— என்றும் எவராலும் தோற்கடிக்கப்பட முடியாத நகரம்——–
வேதங்களால் அறியப்பட்ட நகரம் ——— ஸ்வர்காதிகளுக்கும் மேலே உள்ள நகரம் ——–என்றும் நிலைத்திருக்கும் நகரம் ——–
அத்புதமான பகவதனுபவம் நிறைந்த பொருட்களால் செழிப்பான நகரம்———–
அத்தகைய நகரம்–வைகுண்டம் –பரமபதம் என்பது– திவ்ய தம்பதியரான உங்கள் தலைநகர்
என்று வேத விற்பன்னர்கள் புகழ்கிறார்கள்

தலவகாரோபநிஷத் கூறுகிறது—

அயோத்யாதிசப்தவாச்யமான கலங்காப் பெருநகரிலே ,ஸஹஸ்ரஸ்தூணாதி
வாக்யங்களாலே ஓதப்படுகிற திருமாமணி மண்டபத்திலே
————————————————————————————–
வைகுண்டத்துக்கும் அப்பால், அயோத்யா என்றும், எவராலும் வெல்ல இயலாத அபராஜிதா என்றும் கூறப்படும் நகரத்தில்,
ஆயிரமாயிரம் தூண்களையுடைய திருமாமணி மண்டபத்தில்,

கௌஷீதகி
ப்ராம்மணதிகளிலே ஓதப்படுகிற பர்யங்க விசேஷத்திலே ,
——————————————————————————————–
கௌஷீதகி ப்ராம்மணம் போன்றவைகள் சொல்கின்றன—

பர்யங்கம்–உயர்ந்த ஸிம்ஹாஸனத்திலே அமர்ந்துள்ளான்
முக்தனான ஜீவன், அளவற்ற பிரகாசத்தை உடைய ஸிம்ஹாஸனத்தை நெருங்குகிறான்.
அந்த ஸிம்ஹாஸனத்தில் , பரமாத்வாகிய பகவான் வீற்றிருக்கிறான்.

அந்தஸிம்ஹாஸனம் .

— சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் என்றும்
——————————————————————————————————-
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் —-என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு

ஆதிசேஷன், எம்பெருமான் நடந்தால் குடையாகவும், அமர்ந்தால் ஸிம்ஹாஸனம் ஆகவும், இருக்கிறான் .

நிவாஸஸய்யாஸந என்றும் சொல்லுகிறபடியே
———————————————————————————-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரம் —-ஸ்தோத்ர ரத்னம் ( ச்லோகம் 40 )

நிவாஸசய்யாஸந பாதுகாம்சுக உபதாந வர்ஷாதப வாரணாதிபி : |
———————————
சரீர பேதைஸ்தவ சேஷதாம் கதை :யதோசிதம் சேஷஇதீரிதே ஜநை : ||

ஆளவந்தார் ஸ்தோத்தரிக்கிறார் —
திருக்கோயில், திருப்பள்ளி ,சிங்காசனம் ,திருவடிநிலை, பீதாம்பராதி,தலையணை முதலானவை,
மழையையும் வெய்யிலையும் விலக்கவான குடை,பாதபீடம் முதலாக மாற்றுமான தகுமாறு உனக்கு பணிவிடைக்கான
நிலையைப் பெற்றவனான தனது உருவங்களாலே அந்தந்தக் கார்யங்களுக்குத் தகுந்தாற்போல
எல்லா ஜனங்களாலும் சேஷனென்றே அழைக்கப்படுகிற –ஆதிசேஷன் .
இவ்வாறு, எண்ணற்ற உருவங்களெடுத்து , தனக்கென்று எந்த எண்ணமுமின்றி, பகவானுக்கு மட்டுமே அடிமையாகி,
எல்லாக் கைங்கர்யங்களையும் செய்துவருவதால், சேஷனாயிருப்பவனின் செயல்கள் எல்லாம் இருப்பதாலே,
சேஷன் என்றே பேர் பெற்று, அறிந்தவர், அறியாதார் எல்லோராலும் சேஷன் என்றே பேசப்படுகிறான்

இவ்விதம் , தான் பெறுகின்ற நிலையான கைங்கர்யத்தைப் போன்று, அனைத்து ஆத்மாக்களும் செய்து
தன்னை அனுபவிக்க வேண்டும் என்கிற திருவுள்ளம் கொண்டவனாக எம்பெருமான் உள்ளான்
—இப்படியாக, ஜீவாத்மா , தன்னுடைய ஸ்வரூபத்துக்கு ஏற்றவாறு , எம்பெருமானுக்கு எப்போதும் கைங்கர்யம் செய்வதில்
எல்லையற்ற பரமானந்தம் உள்ள நித்ய ஸூரிகளைப் போலவே ,கைங்கர்யம் செய்யும் தகுதி உள்ளவனே—
ஆனால், இந்த ஜீவாத்மா, அநாதியான ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் எண்ணிலாப் பிறப்புகள் அடைந்து, தட்டித் தடுமாறி, ஸம்ஸார அழுக்கடைந்து,
சுருங்கிய ஞானத்தை உடையவனாய் , ஒன்றும் விளையா நிலம் போலே ,கிடைக்கவேண்டியது கிடைக்காமல்,
இளைப்பாறும் இடமில்லாதவனாகி,விபரீத வாஸனா ருசிகளை அடைந்து, ஸ்வரூபப் பிரகாசத்தையும் இழந்து,உண்மையான ஞானமில்லாமல் இருக்கிறான்
இதை ஸ்ரீ விஷ்ணு புராணம் இவ்வாறு சொல்கிறது—
அநேக ஜன்ம ஸஹஸ்ரீம் ஸம்ஸார பதவீம் வ்ரஜந் மோஹ
ச்ரம ப்ரயாதோ அஸௌ வாஸனா ரேணு குண்டித :

அநேகமாயிரமாயிரம் ஜன்மமெடுத்து, ஸம்ஸார மார்க்கத்தில் சென்று, மோஹத்தில் மூழ்கி, ச்ரமத்தை அடைந்து, தான் யாரென்றே அறியாதபடி,
மயக்கத்தில், கர்மாக்களின் வாஸனையாகிற புழுதியில் அகப்பட்டு, ஞானத்தை இழந்து ஜீவாத்மா உள்ளான் .

இனி, ஸ்வாமி தேசிகன்,” ராஜகுமார த்ருஷ்டாந்தம்” சொல்கிறார்—
வழி தவறிய ராஜகுமாரன் —உதாரணம்

ஒரு ராஜா அந்தப்புரத்துடனே வேட்டைக்குச் சென்று விளையாட்டிலே ஸக்தனான அளவிலே
வார்த்தை அறிவதற்கு முன்பே வழிதப்பின ராஜகுமாரன் எடுத்தார்கையிற் பிள்ளையாய்
ஏதேனும் ஒரு குறிச்சியிலே வளர , அவன் தனக்கில்லாத சபரத்வாதிஜாதிகளை ஏறிட்டுக்கொண்டு ,

மாதா அபி ஏகா பிதா அபி ஏக : மம தஸ்ய ச பக்ஷிண :
அஹம் முநிபி : ஆநீத :கவாசனை :
அஹம் முநீநாம் வசனம் ச்ருணோமி கவாசனானாம் ஸ வச :ச்ருணோதி
ப்ரத்யக்ஷம் ஏதத் பவதா அபி த்ருஷ்டம் ஸம்ஸர்கஜா தோஷ குணா பவந்தி |–என்கிறபடியே
வேடுவச் சேரியிலே கிளிபோலே அவர்கள் பழக்கி வைத்த பாசுரமே தனக்குப் பாசுரமாய் , அவர்களுக்குப் பிறந்தவர்களைப் போலே
அவர்கள் ஊணும் வ்ருத்தியுமே தனக்கு ஊணும் வ்ருத்தியுமாய் ,தன் பிறவிக்கு உரிய போகங்களில் ஆசார ஸம்ஸ்காராதிகளிலும்
புதியது உண்ணாதே ராஜபோக விருத்தங்களான ஜூகுப்ஸித விஷயங்களிலே தனக்குப் பேறுமிழவும் ஹர்ஷ சோகங்களுமாய் ,
ராஜகுமாரனென்று தன்னடி அறிவார் சில ரிஷிப்ராயர் உண்டானாலும் அவர்களுக்குக் கிட்டவொண்ணாத அவஸ்தையையுடையவனாய்
இப்படி ப்ராந்திஸித்த சபரத்வாத்யவஸ்தையோடே யாவஜ்ஜீவனம் நடக்கில் உத்தர ஜன்மங்களிலும் ஒரு யோக்யதை பெற
விரகில்லாதபடியாய்த் தட்டுப்பட்டு நிற்குமாப்போலே , இவனும் தேஹாத்மாபிமானாதிகளாலே தன்னுருக்கொடுத்து
வேற்றுருக்கொண்டு நிற்க —

வ்யாக்யானம் : —

ஒரு அரசன் , தனது அந்தப்புரத்திலுள்ள எல்லோருடனும் வேட்டையாடக் காட்டுக்குச் சென்று, அந்த வேட்டையிலேயே ஆழ்ந்திருக்க ,
அப்போது அந்த அரசனின், சிறுபிள்ளை— அறியாச் சிறுபிள்ளை– பேச்சு வராத சிறுபிள்ளை–
தன்னுடன் ஒருவரும் இல்லாத நிலையில், காட்டில் வழியைத் தவறவிட்டு , அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்க ,
அப்போது அந்தக் காட்டில் இருந்த வேடர்கள் இச் சிறுபிள்ளையைப் பார்த்து, இக்குழந்தையை அழைத்துச் சென்று
தங்கள் இருப்பிடத்தில் வைத்து வளர்த்தார்கள்.
இச் சிறுபிள்ளையும், தான் யார் என்று அறியாத நிலையில், தனக்குப் பொருந்தாத, வேடுவர்கள் வாழ்க்கை வாழலானான் .
விஷ்ணு புராணம் கூறுகிறது—-

மாதா அபி ஏகா பிதா அபி ஏக : மம தஸ்ய ச பக்ஷிண :
அஹம் முநிபி : ஆநீத :கவாசனை :
அஹம் முநீநாம் வசனம் ச்ருணோமி கவாசனானாம் ஸ வச :ச்ருணோதி
ப்ரத்யக்ஷம் ஏதத் பவதா அபி த்ருஷ்டம் ஸம்ஸர்கஜா தோஷ குணா பவந்தி |

விஷ்ணு புராண ச்லோகத்தின் மூலமாக,
தாய் தகப்பனாக கிளிகளின் பெற்றோருக்குப் பிறந்த இரண்டு கிளிகள் பற்றிய சம்பவத்தை ஸ்வாமி தேசிகன் இங்கு எடுத்துரைக்கிறார்—
கிளி, ஒரு முனிபுங்கவரிடம் சொல்கிறது——-
எனக்கும் இன்னொரு கிளிக்கும் தாயும் ஒருத்தி; தகப்பனும் ஒருவனே !
நான், ஆஸ்ரமவாசிகளான ரிஷிகளாலும், இன்னொரு கிளி பசு மாம்ஸம் தின்பவர்களாலும் வளர்க்கப்பட்டோம்.
நான், தினந்தோறும் முனிவர்களின் பேச்சுக்களைக் கேட்கிறேன்; அந்தக் கிளியோ மாட்டிறைச்சி உண்பவர்களின் பேச்சுக்களைக் கேட்கிறது.
நான் பேசும் பேச்சுக்களின் தன்மையையும், அந்தக்கிளி பேசும் பேச்சுக்களின் தன்மையையும் கேட்டு,
இவற்றிலுள்ள வேறுபாட்டை நீ தெரிந்துகொண்டு இருக்கலாம்.
இவற்றிலிருந்து, குணங்களும் குற்றங்களும் —- நல்ல பண்புகளும், தீய பண்புகளும் , சேர்க்கையால் ஏற்படுகின்றன
என்று சொல்லிற்று

வேட்டுவர்களால் வளர்க்கப்பட்ட கிளியைப் போன்றே , இந்த ராஜகுமாரனும் வேடர்கள் மொழியே தன் மொழியாகவும்,
அவர்கள் எப்படிப் பேசுகிறார்களோ அப்படியே பேசியும் , அவர்களுக்குப் பிறந்தவர்களைப்போல
அவர்கள் உண்ணும் உணவையே உண்டும் வாழலானான்
அரசனுக்கு உரிய ஆசாரங்கள், ஸம்ப்ரதாயம், போகங்கள் –இவற்றை அறவே அறியாமல், ஒரு ராஜகுமாரன் எப்படி நடந்துகொள்வானோ
அதற்கு நேர் எதிரிடையாக , வாழ்ந்தான். அந்த வனத்தில் வசித்த சில ரிஷிகளுக்கு, இவன் ஒரு ராஜகுமாரன் என்று தெரிந்து, இவனைத்
திருத்த முயற்சி செய்தபோதும், இவன் அவர்கள் பக்கலிலேகூடப் போகாமலிருந்தான். இன்னொரு ஜன்மம் எடுக்கும்போதாவது,
உன்னதமான பிறவி எடுக்கவேணும் என்கிற எண்ணமோ , முயற்சியோ இல்லாதவனாக இருந்தான்.

தனது நிஜ ஸ்வபாவத்தை இழந்து, வேறு ஸ்வபாவம் எடுத்த ராஜகுமாரனைப் போன்றே —ஜீவாத்மா—தானும் ,தான் உள்ள உடலும்
ஒன்றே என்கிற மயக்கத்தில், தன்னுடைய நிஜ ஸ்வபாவத்தை இழக்கிறான்.

அதிகாரத்திலிருந்து—–

அந்த ராஜகுமாரனுடைய லக்ஷணாதிகளாலே ஜாதி விசேஷத்தை அறிவார் சில தார்மிகர் . ஒரு விரகாலே இவனை மீட்கப் பெற்று
அபிமானிக்க இவனுக்கு வந்தேறியான ஜாத்யந்தராபிமானத்தை வழிவிலக்கி த்ருஷ்டாத்ருஷ்ட ஸம்ஸ்காராதிகளாலே உத்தரோத்தர போக
ததுபாயங்களுக்கு யோக்யநாம்படி விரகு செய்து , இவனுக்கு ஸ்வஜாத்யனுரூபமான குண வ்ருத்தங்களைத் தங்கள் உபதேச
அநுஷ்டானங்களாலே குடிபுகரவிட்டு இவனுக்கு அநேக தோஷ த்ருஷ்டங்களான சபராதி போக்ய க்ஷுத்ர விஷயங்களை
அருவருப்பித்து ராஜாதி போக்யங்களான அதிசயித புருஷார்த்தங்களை ஆய்ந்து எடுக்கவல்ல அளவுடைமையை உண்டாக்கி நிறுத்துமாப்போலே
இவ்வாத்மாவுக்குச் சில தார்மிகர் பித்ராதி முகேந நொடித்து,

புமாந் ந தேவோ ந நரோ ந பகர் ந ச பாதப :
சரீராக்ருதிபேதா : அஸ்து பூயைதே கர்மயோநய :–என்கிறபடியே உரு வியந்த விந்நிலைமையை உணர்த்தி ,
அதுக்கு அநுரூபமான புருஷார்த்த ததுபாயங்களிலே அந்வயிக்கிலாம்படி விரகு செய்து உடம்பு தின்றார்படி யன்றிக்கே
ஒரு வெளிச் சிறப்புடையார்க்கு வரும் குண வ்ருத்தங்களை உண்டாக்கி ஹேயோபாதேய விபாகக்ஷமனுமாக்கி நிறுத்தின வளவிலே ,

இவனுடைய அடியுடமையையும் சில தார்மிகரடியாக வந்த யோக்யதையும் அளவுடைமையையும் நேராகக் கண்டு பரம காருணிகனான பரம
சேஷியாலே ப்ரேரிகராய்த் தாங்களும் காருணிகோத்தமராயிருப்பார் சில தேசிகர் .

ஈச்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸுக்ருதம் ததா
விஷ்ணோ :கடாக்ஷமத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்த்விகை :
ஸம்பாஷணம் ஷடேதாநி ஹி ஆசார்ய ப்ராப்திஹேதவ :–என்கிறபடியே நேர்பட்டு ——

வ்யாக்யானம் :—
இச்சிறுபிள்ளையின் தேஜஸ் போன்ற முக விலக்ஷணங்களாலே இவன் ராஜகுமாரன் என்று உணர்ந்த சில தார்மிகர்—மஹான்கள்—
இவனை ஏதேனும் ஓர் உபாயத்தால், மீட்க எண்ணி முதலில் அவன் ஒரு வேடன் என்கிற மதி மயக்கத்தைப் போக்கடித்தனர் .
த்ருஷ்ட ஸம்ஸ்காரம்—-ஸ்நானம், வஸ்திரம் இவை
அத்ருஷ்ட ஸம்ஸ்காரம் — செளள , உபநயனங்கள் இவை
ஸாஸ்த்ரப்படி ஸ்நானம் செய்தல், வஸ்திரம் உடுத்தல், ,பிற ஆசாரங்களை அறியும்படி செய்தனர்.
இதன்மூலமாக ராஜகுமாரன் ஒருவன் ,அனுபவிக்கத்தக்க விஷயங்களை அனுபவிக்கும் தகுதியை இந்த ராஜகுமாரன் அடைந்தான்.
அரசகுமாரனுக்கு ஏற்றதான குணங்கள், உருவம் முதலியவற்றை உபதேசம் மூலமாகவும், எடுத்துக்காட்டுக்கள் மூலமாகவும் அறியச் செய்தார்கள்.
இதனால், இவன் இதுவரை கொண்டிருந்த தாழ்வான வாழ்க்கையை வெறுக்கும்படி செய்தனர் .
புருஷார்த்தங்களை ஆராய்ந்து தெளியவும் தேவையான அறிவையும் அளித்தனர்

இந்த ஜீவாத்மாவுக்கு , தந்தை முதலான பித்ருக்கள் மூலமாக, சில தார்மிகர்களின்
தொடர்பு ஏற்படுகிறது அந்த நல்லவர்கள்—மஹான்கள், இந்த ஜீவாத்மாவுக்கு
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் உள்ள நல்லதைச் சொல்கிறார்கள்

புமாந் ந தேவோ ந நரோ ந பகர் ந ச பாதப :
சரீராக்ருதிபேதா : அஸ்து பூயைதே கர்மயோநய :

ஜீவாத்மா என்பவன் , தேவன் இல்லை; மனிதன் இல்லை ; மிருகமும் இல்லை; மரமும் இல்லை— ஒவ்வொருவருக்கும் சரீர அமைப்பில்
ஏற்பட்ட வேறுபாடானது, அவரவர் கர்மவினைக்கு ஏற்ப உண்டானவை—
இப்படிப் பலப் ப்ரமாணங்களைச் சொல்லி, ஜீவன் உடலைக்காட்டிலும் வேறுபட்டவன்; ஜீவனின் ஸ்வரூபத்துக்கு ஏற்றதாக உள்ள புருஷார்த்தங்கள் எவை ,
அவற்றை அடையும் உபாயம், இவற்றையெல்லாம் உபதேசிக்கின்றனர்
(ஆத்மா, சரீரத்தைக் காட்டிலும் வேறு என்கிற ஞானம் இல்லாதார் –உடம்பு தின்றார் )
இப்படி உயர்ந்த குணங்களை உண்டாக்கி, எவற்றை ஏற்கவேண்டும் எவற்றை விலக்க வேண்டும் என்கிற விவேகம் வளரும்படி செய்கின்றனர்.

இப்படி இந்த ராஜகுமாரன், அவனுடைய ஸ்வரூபத்துக்கு மாறியிருப்பதையும், சில தார்மிகர்கள் செய்த நல்லுபதேசங்களையும்
அவற்றால் அவனது அறிவு பிரகாசிப்பதையும், பகவானின் கருணையால் சில ஆசார்யர்கள் காண்கிறார்கள்
இப்படிப்பட்ட ஆசார்யர்களின் தொடர்பு எப்படி ஏற்படுமென்றால்

ஈச்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸுக்ருதம் ததா
விஷ்ணோ :கடாக்ஷமத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்த்விகை :
ஸம்பாஷணம் ஷடேதாநி ஹி ஆசார்ய ப்ராப்திஹேதவ :

ஜீவர்கள் நன்றாக இருக்கவேண்டுமென்று ஈச்வரன் எண்ணுவது
ஜீவனுக்குத் தற்செயலாக வரும் புண்ய கர்ம பலன்
ஜீவனுக்கு எம்பெருமானின் கடாக்ஷம்
ஜீவனுக்கு, எம்பெருமானிடத்தில் இருந்த த்வேஷம் போவது
ஜீவனுக்கு, எம்பெருமானின் கல்யாணகுணங்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம்
ஜீவனுக்கு, ஸத்வ குணம் உள்ளவர்களுடன் ஸ்நேஹம் —
இந்த ஆறும், ஒருவனை, மிகவும் நல்ல ஆசார்யனிடம் சேர்த்துவிடும் –என்கிறபடி அணுகி,
ஆசார்ய உபதேசம் மூலமாக, முமுக்ஷு தெரிந்துகொள்ள வேண்டியவன

அதிகாரத்திலிருந்து——
அந்த ராஜகுமாரனுக்குச் சில ராஜாந்தரங்கர் மேற்பட்டு, பிறவியை உணர்த்தி, மேலுள்ள ப்ரிய தமங்களையும் ஹிததமங்களையும் தெளிவித்து
ஒரு விரகாலே அந்த ராஜாவுக்கும் ராஜகுமாரனுக்கும் பரஸ்பர ஸம்ச்லேஷாகாங்க்க்ஷையை உத்தம்பிக்குமாப்போலே ,இவனுக்கும்

நாயம் தேவோ ந மர்த்யா வா ந திர்யக் ஸ்தாவரோ அபி வா
ஞானானந்தமய ஸ்த்வாத்மா சேஷோ ஹி பரமாத்மன :–என்றும்,
தாஸபூதா : ஸ்வதஸ்ஸர்வே ஹி ஆத்மன : பரமாத்மன :-என்றும்,–ப்ரமாணங்கள் சொல்லுகிறபடியே
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகுமங்காதுஞ்சோராமே ஆள்கின்ற செங்கோலுடைய ஸ்ரீய:பதி நாராயணனுடனே
குடல் துவக்கத்தைத் தெளிவித்து இவனுக்கு தத்ப்ராப்த்யுபாயங்களிலே முயன்று இவன் பெறுகிற பேறே
தங்களுக்குப் பொன்னுலகையும் புவனி முழுவதையுமாளுகையாக உகந்து
அதடியாக அன்று ஈன்ற கன்றுக்கு இரங்கிச் சுரக்கும் தேநுவைப் போல
இத்தேசிகர் இவ்வாத்மாவுக்கு அஜ்ஞான ஸம்சய விபர்யயங்கள் தீரவேண்டுமென்று மிகுந்து குறைவரச் சுரக்கும் பாசுரங்களைக் கொண்டு
தத்த்வேந யச்சித சிதீச்வர தத் ஸ்வபாவ–இத்யாதிகளிற்படியே
ஈச்வரனுடையவும் ஈசிதவ்யங்களுடையவும் ஸ்வரூப, ஸ்வபாவ ஸம்பந்தங்களும்
இவற்றின் த்யாஜ்யோபாதேயங்களான இவற்றினுடைய உபாயங்களும்
இவற்றின் கதிப்ரகாரங்களும் உக்தாநுக்தங்களான மோக்ஷ விரோதிகளுமாகிற
இவ்வர்த்தங்கள் முமுக்ஷுவான இவ்வாத்மாவுக்கு ஞாதவ்யங்கள்
இவ்வர்த்தங்கள் எல்லாம் அத்யாத்ம விஷய ஸப்தராசியில் ஸாரதமமான ரஹஸ்யத்திலே ப்ரதிதந்த்ர ஸாரோத்தாரேண ஸங்க்ரஹிக்கப்படுகின்றன

திருவுடன் வந்த செழுமணிபோல் திருமால் இதயம்
மருவு இடம் என்ன மலரடி சூடும் வகை பெறும் நாம்
கருவுடன் வந்த கடுவினையாற்றில் விழுந்தொழுகாது
அருவுடனைந்தறிவார் அருள் செய்ய அமைந்தனரே

கர்மவித்யாதி சக்ரே ப்ரதிபுருஷமிஹாநாதி சித்ரப்ரவாஹே
தத்தத்காலே விபக்திர்பவதி ஹி விவிதா ஸர்வ ஸித்தாந்த ஸித்தா
தல்லப்த ஸ்வாவகாச ப்ரதபகுரு க்ருபா ம்ருஹ்யமாண : கதாசித்
முக்தைச்வர்ய அந்த ஸம்பத் நிதிரபி பவிதா கச்சிதித்தம் விபச்சித்

வ்யாக்யானம் —–
அவர்கள், இந்த ராஜகுமாரனுக்கு அவனுடைய அரச பிறப்பைக் கூறி, அதற்கு ஏற்றதான நன்மைகள் எவை என்றும், அவற்றை அடைவதற்கான
உபாயங்கள்–வழிகள் –எவை என்றும், உணர்த்தி, அவனும் , ராஜாவும் ஒன்றுசேர்வதற்கான எல்லா முயற்சிகளையும் செய்கின்றனர்.
இதைப்போலவே, ஜீவனுக்கும் ஆச்சார்யர்கள் மூலமாக நடைபெறுகிறது–

நாயம் தேவோ ந மர்த்யா வா ந திர்யக் ஸ்தாவரோ அபி வா
ஞானானந்தமய ஸ்த்வாத்மா சேஷோ ஹி பரமாத்மன :–ப்ரமாணங்கள் சொல்லுகிறபடியே

ஜீவாத்மா என்பவன் , தேவன் இல்லை; மனிதன் இல்லை ; மிருகமும் இல்லை; மரமும் இல்லை— அவன் , ஞானம் மற்றும் ஆனந்தத்தையே ஸ்வரூபமாக
உடையவன். அவன் பகவானுக்கு அடிமை.பகவானையே அண்டி இருக்கிறான். அவனது கைங்கர்யத்துக்காகவே இருக்கிறான்.

தாஸபூதா : ஸ்வதஸ்ஸர்வே ஹி ஆத்மன : பரமாத்மன :

மந்த்ரராஜபத ஸ்தோத்ரத்தில் சிவன் சொல்கிறார் —
எல்லா ஆத்மாக்களும், பரமாத்மாவுக்கு இயற்கையாகவே தாஸர்கள்.ஆகையால், நானும் உனக்குத் தாஸன் என்று நினைத்து வணங்குகிறேன்

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையா லிடர் தீர்வ ராகாதே –நாச்சியார் திருமொழியில் ( 11–3 )

”பொங்குகிற ஸமுத்ரத்தால் சூழப்பட்ட பூமியையும், வைகுந்தமென்னும் உலகத்தையும் அவைகளில் ஒன்றும்
விட்டுப்போகாமல் செங்கோல் செலுத்தி ஆளுகின்ற எம்பெருமானான ,லக்ஷ்மிகாந்தனுக்கும், ஜீவனுக்கும் உள்ள—
பிறப்பால் வந்த—-உறவை ஆசார்யர்கள் உபதேசிக்கின்றனர் .
அந்த ஜீவன், பகவானை அடைவதற்கு முயற்சிக்கின்றனர் .இப்படி அந்த ஜீவன் பெறுகின்ற பேறு மூலமாக , தங்களுக்கே
இந்த நித்ய விபூதியும், இவ்வுலகம் முழுவதும் கிடைத்ததாக எண்ணுவர்.
அன்று பிறந்த தன்னுடைய கன்றுக்கு ,பசுவானது , தானே பாலைச் சுரப்பதுபோல, ஜீவனிடம் அன்பு செலுத்துகின்றனர்.
அவனுடைய அஜ்ஞானம், தவறான ஞானம் , சாஸ்த்ர சந்தேகம் இவற்றையெல்லாம்,
தங்களுடைய கச்சிதமான உபதேசங்கள் மூலமாக விலக்குகின்றனர்.

ஸ்வாமி தேசிகன் , ஸ்தோத்ர ரத்னத்திலிருந்து ச்லோகத்தை இங்கு சொல்கிறார் —
தத்த்வேந யச்சித சிதீச்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க தாதுபாயகதீருதார : |
ஸந்தர்சயந் நிரமிமீத புராணரத்னம்
தஸ்மை நமோ முனிவராய பராசராய ||

ஜீவர்கள், அசேதனம் , ஈச்வரன் என்னும் தத்வத்ரயம் , அவற்றின் ஸ்வபாவங்கள் ( குணங்கள் ) , இவ்வுலக போகங்கள், மோக்ஷம் , மோக்ஷ சாதனங்கள்,
ஜீவன் மோக்ஷத்துக்குச் செல்லும் மார்க்கம், இவைகளையெல்லாம் உள்ளபடி விளக்கி ,எந்த உதார புருஷரான ஸ்ரீ பராசரர் , ஸ்ரீ விஷ்ணு புராணத்தை
அருளினாரோ , அந்த ருஷிச்ரேஷ்டருக்கு நமஸ்காரம்
இப்படி ஸ்ரீ பராசரர் கூறுவதை போன்று,
ஆசார்யர்கள் ஜீவனுக்கு, சேதன–அசேதனங்களை நியமிப்பவரான பகவானின் குணங்களை உபதேசிக்கின்றனர்.
சேதன–அசேதனங்களின் தனமைகள், அவற்றின் இடையே உள்ள உறவு இவற்றையும் சொல்கின்றனர்.
இவ்வுலக வாழ்க்கையில் அனுபவிக்கும் சுகம்—துக்கம் இவற்றையும் விளக்கி, இந்தப் பிறவியிலிருந்து விடுபடும் உபாயங்கள், அடையப்படும்
மோக்ஷம், ஜீவன் மோக்ஷத்துக்குச் செல்லும் வழி , அதற்கு ஏற்படும் தடைகள்,
இப்படி ”அர்த்த பஞ்சகத்தை”— விளக்குகின்றனர்.
இவை யாவுமே, மோக்ஷத்தில் ஆசை உடைய ” முமுக்ஷு ”தெரிந்துகொள்ள வேண்டியவை
இவை யாவும் ”ரஹஸ்யத்ரயத்தில் ”சொல்லப்படுகின்றன.

திருவுடன் வந்த செழுமணிபோல் திருமால் இதயம்
மருவு இடம் என்ன மலரடி சூடும் வகை பெறும் நாம்
கருவுடன் வந்த கடுவினையாற்றில் விழுந்தொழுகாது
அருவுடனைந்தறிவார் அருள் செய்ய அமைந்தனரே

ஜீவாத்மாக்களாகிய நாம், பகவானின் திருமார்பில் இருப்பதும், திருப்பாற்கடலைக் கடைந்தபோது, ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன் வெளியே வந்ததுமான
”கௌஸ்துப மணி ”போன்று , பகவானின் திருமார்பில் இருப்பதற்குத் தகுதி உடையவர்களே —
தவிரவும், அவனது தாமரை போன்ற திருவடிகளை , நமது தலையில் கிரீடம் போன்று அணிந்துகொள்ளும் தகுதியும் உள்ளவர்களே
ஆனாலும், தாயின் கர்பத்தில் , நமது கர்மங்கள் என்கிற வெள்ளத்தில் விழுகிறோம். அந்தக் கர்மானுபவ வெள்ளத்தில்
அடித்துச் செல்லாமல் , நம்மைக் காப்பாற்றுவதற்காகவே ”அர்த்த பஞ்சக ” ஞானம் பெற்ற ஆசார்யர்கள் , அவதரித்தனர்

கர்மவித்யாதி சக்ரே ப்ரதிபுருஷமிஹாநாதி சித்ரப்ரவாஹே
தத்தத்காலே விபக்திர்பவதி ஹி விவிதா ஸர்வ ஸித்தாந்த ஸித்தா
தல்லப்த ஸ்வாவகாச ப்ரதபகரு க்ருபா ம்ருஹ்யமாண : கதாசித்
முக்தைச்வர்ய அந்த ஸம்பத் நிதிரபி பவிதா கச்சிதித்தம் விபச்சித்

ஸம்ஸாரத்தில் உழலும் ஒவ்வொரு ஜீவனும் , கர்மாக்கள், அறியாமை போன்ற வினைகளில் சிக்குண்டு ,
எத்தனையோ வருஷங்களாக, அல்லல்படுகிறான். பூர்வ கர்மாக்கள் பலன் கொடுக்கத் தொடங்கும்போது,
பகவானின் கருணை கிடைக்கிறது–இது மிக்க குறைவான ஜீவன்களுக்கே கிடைக்கிறது –
இப்படிப் பெறும் கருணையால், இவன் பெருத்த ஐச்வர்யத்தை அடைகிறான் –
இந்த ஐச்வர்யம் நித்யஸூரிகள் பெரும் ஐச்வர்யத்தைப் போன்றது

———–

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் 2–ஸாரநிஷ்கர்ஷாதிகாரம் —–

April 11, 2021

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

———–

2–ஸாரநிஷ்கர்ஷாதிகாரம் —-
முமுக்ஷு –மோக்ஷத்தில் மிக ஆர்வமுடையவன் —
மிக முக்யமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய மிகவும் ஸாரமான விஷயத்தை , நிர்ணயித்துச் சொல்கிறது ரஹஸ்ய த்ரயம்—
அதன் பிரயோஜனம்–மோக்ஷம்– மோக்ஷ உபாயம்–இவற்றுக்கு சாஸ்த்ரமே ப்ரமாணம்–
அஸாரம் , அல்பஸாரம் , ஸாரதமம் —இவற்றின் விளக்கம்

அதிகாரத்திலிருந்து—–
ஸ்ருதி பத விபரீதம் க்ஷ்வேள கல்பம் ஸ்ருதை ச
ப்ரக்ருதி புருஷ போக ப்ராபக அம்ச : ந பத்ய :
தத் இஹ விபுத குப்தம் ம்ருத்யுபீதா விசன்வந்தி
உபநிஷத் அம்ருத அப்தே :உத்தமம் ஸார மார்யா :

வ்யாக்யானம் —-
வேதங்கள் காட்டும் வழிக்கு, நேர் எதிராக , அர்த்தங்களையும் வழியையும் சொல்லும் எல்லா மதங்களும் விஷத்துக்குச் சமமானவை.
வேதங்களிலும், இவ்வுலக சௌகர்யங்களையும், கைவல்யம் என்று சொல்லப்படும்
தனது ஆத்மாவையே அனுபவிக்கும் பொருட்டுச் சொல்லப்படும் பகுதிகள் , அனுகூலமற்றவையாகும்.
ஆதலால், ஸம்ஸாரத்தைக் கண்டு அச்சப்படுகிற நல்ல விவேகமுள்ளவர்கள் ,இந்த வேதத்தில்,உபநிஷத்தாகிற திருப்பாற்கடலிலிருந்தும் ,
முன்பு ஆசார்யர்களால் காப்பாற்றப்பட்டு வருகிறதுமான ,
மிகவும் ஸாரமானதை ( ரஹஸ்ய த்ரயத்தை )–இந்த அம்ருதத்தை —-மிகவும் விரும்புகிறார்கள்.

அதிகாரத்திலிருந்து—-
ரஹஸ்யத்ரயத்தின் ப்ரயோஜன விசேஷங்கள்
இந்த ரஹஸ்ய த்ரயத்தில் , திருமந்த்ரம் , ஸர்வம் அஷ்டாக்ஷராந்த :ஸ்தம் என்கிறபடியே
தன் அர்த்தத்தை அறிய எல்லா அர்த்தங்களையும் அறிந்து தரும்படியாயிருக்கையாலும்
சரம ச்லோகம் ”ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ ” என்று தான் சொல்லுகிற
உபாயம் ஒன்றையுமே அவலம்பிக்க ஸர்வோபாய பலஸித்தி உண்டாம் என்று ஸ்தாபிக்கையாலும் ,
த்வயமும் கட ஸ்ருத்யாதிகளில் சொல்லுகிறபடியே தன்னை ஒருகால் உச்சரித்தவனை
ஸர்வ ப்ராகாரத்தாலும் க்ருதக்ருத்யனாக்க வல்ல வைபவத்தை உடைத்தாயிருக்கையாலும்
ரஹஸ்ய த்ரயமே முமுக்ஷுக்களுக்கு ஆதரணீயம்

வ்யாக்யானம் —–
ரஹஸ்யத்ரயம் –என்கிற மூன்று மந்த்ரங்களில், திருமந்த்ரம் என்று புகழப்படும், அஷ்டாக்ஷரம்
மற்றவற்றின் அர்த்தங்களையும் , அறியும்படி செய்யக்கூடியதாக இருக்கிறது.
ஸ்ரீமதஷ்டாக்ஷரப்ரஹ்ம வித்யை ( நாரதீய கல்பம்–1–9 ) மற்றும் ஹாரீத ஸ்ம்ருதி சொல்கிறது–
ஸர்வம் அஷ்டாக்ஷராந்த :ஸ்தம் –அனைத்துமே அஷ்டாக்ஷரத்தில் உள்ளது–
சரம ச்லோகம் ”ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ ” என்கிறது—-
அதாவது, மோக்ஷத்துக்கான அனைத்து உபாயங்களையும் கைவிட்டு, என்னை அடைக்கலமாக அடைவாயாக —என்கிறது.
இப்படி ஒரே வழியைக் கடைப்பிடிக்க வேண்டும்;
இதுவே ”சரணாகதி ” –இந்த வழி , மற்ற எல்லா வழிகளின் பலனையும் அளிக்கக்கூடியது.
த்வயம் என்பது, கடோபநிஷத்தில் சொல்வதைப்போல, தன்னை ஒரு தடவை உச்சரித்தவனை, அவன், மோக்ஷம் பெறுவதற்கான
எல்லாக் கர்மாக்களையும் , செவ்வனேவாகவும், மிகச்சிறப்பாகவும் முடிக்க உதவுகிறது—
ஆகவே, முமுக்ஷுக்களுக்கு , ரஹஸ்யத்ரயமே சிறந்தது.

அதிகாரத்திலிருந்து—–
மோக்ஷம், மற்றும் மோக்ஷ உபாயங்களுக்கு , சாஸ்த்ரமே ப்ரதானம்
அஸார மல்பஸாரம் ச ஸாரம் ஸாரதரம் த்யஜேத்
பஜேத் ஸாரதமம் சாஸ்த்ரே (ஸ்த்ரம் ) ரத்நாகர இவாம்ருதம்
பரம புருஷார்த்தமும் ததுபாயமும் ப்ரத்யக்ஷாதி ப்ரமாணங்களால் அறியவொண்ணாத படியாலே இவற்றுக்கு—
சாஸ்த்ராத் வேதிந ஜநார்த்தனம் என்றும்
தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாண்யம் கார்ய அகார்ய வ்யவஸ்திதொள என்றும்
சப்தப்ரஹ்மணி நிஷ்ணாத : பரம் ப்ரஹ்மாதி கச்சதி என்றும்-சொல்லுகிறபடியே சப்தமே ப்ரமாணம்

வ்யாக்யானம்—-
சாஸ்த்ரங்களில் , 1.அஸாரம் — ஸாரமே இல்லாதது (பலனே இல்லாதது)
2. அல்ப ஸாரம்—(-கொஞ்சம் ஸாரமுள்ளது) அற்பமான பலனைக் கொடுப்பது
3. ஸாரம் —-( ஸாரமுள்ளது ) பலனைக் கொடுப்பது
4.ஸார தரம்—(மிகவும் ஸாரமுள்ளது )அதிக பலனைக் கொடுப்பது–இவற்றை விடவேண்டும்.
க்ஷீர சமுத்ரத்தில் அம்ருதம் போல, சாஸ்த்ரங்களில் மிக உயர்ந்த ,உத்தமமான ஸாரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒருவன், அவனுடைய வாழ்க்கையில், மிக உயர்ந்த புருஷார்த்தமாகிய மோக்ஷம் என்பதையும்
அதை அடையும் உபாயத்தையும், ப்ரத்யக்ஷம் –கண்ணால் காண்பது அல்லது, அநுமானம் –ஊகித்து அறிவதாலோ
இவைகளால், புரிந்துகொள்ள முடியாது.
ஆனால், சாஸ்த்ரமே ப்ரமாணம் என்பதன் மூலம் அறியலாம்
சாஸ்த்ராத் வேதிந ஜநார்த்தனம் —–மஹாபாரதம் –உத்யோக பர்வம் கூறுகிறது
சாஸ்த்ரம் மூலமாக ஜநார்த்தனனை அறிகிறேன்
தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாண்யம் கார்ய அகார்ய வ்யவஸ்திதொள — ஸ்ரீமத் பகவத் கீதை ( 16–24 )–ச்லோகம் இதோ—
தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதொள
ஜ்ஞாத்வா சாஸ்த்ர விதாநோக்தம் கர்ம கர்த்து மிஹார்ஹஸி
அர்த்தம்—செய்யத் தக்கது , செய்யத் தகாதது, என்பதை முடிவு செய்வதில்,சாஸ்த்ரம்தான் ப்ரமாணம் –ஆகவே, சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட
முறையை அறிந்து, கர்மாக்களைச் செய்வாயாக ——
சப்தப்ரஹ்மணி நிஷ்ணாத : பரம் ப்ரஹ்மாதி கச்சதி –மஹாபாரதம்–சாந்தி பர்வம் (276–2 )
சப்தமாகிய வேதங்களை அறிந்தவன், ”ப்ரஹ்ம”த்தை—அதாவது–
ஸ்ரீமந் நாராயணனை அறிந்தவன் ஆகிறான்

அதிகாரத்திலிருந்து —-
அஸாரம் , அல்பஸாரம் —-விளக்கம்
———————————————————
அவ்விடத்தில்,
அனந்தபாரம் பஹு வேதிதவ்யம் அல்பச்ச காலோ பகவச்ச விக்நா :
யத்ஸாரபூதம் ததுபாததீத ஹம்ஸோ யதா க்ஷீரம் இவ அம்புமிச்ரம்–என்கிற ச்லோகத்தில்,
ஸார பூதம் என்கிற பதத்தாலே பிரதிபன்னமான நிரூபாதிக ஸாரத்தை விஷயீகரிக்கிற ஸாரதம ஸப்தம் உபாதேயம் .
பாஹ்ய குத்ருஷ்டி சாஸ்த்ரங்கள் அத்யந்தா ஸாரங்களாகையாலே அநூபாதேயங்கள்.
வேதத்தில் பூர்வ பாகத்தில், ஐஹிகபலஸாதன ப்ரதிபாதகமான ப்ரதேசம் அத்யல்ப ஸாரமாகையாலே அனுபாதேயம் .
ஆமுஷ்மிகபல ப்ரதிபாதகாம்சம் ஐஹிக பலத்திற்காட்டில், அதிசயித பலத்தை உடைத்தாகையாலே சிலர்க்கு ஸாரம்
என்னவாயிருந்த போதிலும் துக்க மூலத்வாதி தோஷ த்ருஷ்டமாகையாலே அனுபாதேயம்.
ஆத்ம தத் ப்ராப்தி தத் ஸாதன மாத்ரத்தை ப்ரதிபாதிக்கும்
அம்சமும் ஸாரதரமாய் இருந்ததேயாகிலும் அதிலும் அத்யந்தாதிசயிதமான பரமாத்மாநுபவ ஸாபேக்ஷர்க்கு அனுபாதேயம் .
பரமாத்ம தத்ப்ராப்தி தாதுபாயங்களை வெளியிடும் ப்ரதேசம் ஸாரதமமாகையாலே விவேகிக்கு உபாதேயம்

வ்யாக்யானம்—
ஸ்வாமி தேசிகன் உத்தவ கீதையிலிருந்து ( 3–10 ) உதாரணம் சொல்கிறார்–
நாம் அறியவேண்டிய வேதாந்த பாகங்கள் பற்பல இருக்கின்றன;இவ்வளவுதான் என்று நிச்சயிக்க முடியாத அளவுக்கு இருக்கின்றன.
ஆனால், அறிவதற்கான ,காலமோ ( ஆயுட்காலம் ) மிகக் குறைவு;தவிரவும், தடங்கல்கள் –இடைஞ்சல்கள் பல உள்ளன;
ஆகவே, அன்னபக்ஷி ,எப்படி பாலிலிருந்து ,தண்ணீரைப் பிரிக்கிறதோ அதைப் போன்று,ஸாாரமில்லாதவைகளுடன் கலந்திருக்கும் ,
மிகவும் ஸாரமானதையே ஒருவன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வேதத்தில் சேராத சாஸ்த்ரங்களும் , வேதத்தை மறுத்துச் சொல்லும் ,வேதத்திற்குப் புறம்பான ஸாங்க்ய, சார்வாக, ஜைன , யோக , பாசுபதாதி
மதவாதிகளாலும் ( இவர்கள் பாஹ்யர் எனப்படுவர் ) , அத்வைத ,பூர்வ மீமாம்ஸா மதவாதிகளாலும் ( இவர்கள் குத்ருஷ்டிகள் ),
செய்யப்பட சாஸ்த்ர விதிகள் என்று சொல்லிக்கொள்ளும் நூல்கள் அடியோடு ஸாரமற்றவை ; உயர்ந்தவை அல்ல ; தள்ளப்படவேண்டியவை.
வேதத்தின் பூர்வ பாகமாகிய முதல் பாகம், கர்ம காண்டத்தைச் சொல்கிறது;
உலக விஷயங்களை –இன்பங்களை –இவைகளை எப்படிப் பெறுவது ,என்பதைச் சொல்கிறது. இவையும் உயர்ந்தவை அல்ல.தள்ளப்படவேண்டியவை.
மேலுலகமான –ஸ்வர்க்கம் –இவற்றைப்பற்றிய பகுதி, உலக இன்பங்களைச் சொல்லும் பகுதியைவிட உயர்வாகத் தோன்றினாலும்,
இவையும் முடிவில் துன்பத்தில் முடிகிறது. ஸ்வர்க்க போகமும் நிலையானதல்ல ! மறுபடியும் பிறவியே–ஆகவே, இதுவும் பயனில்லாதது.
இவற்றைவிட , இன்னும் உசத்தியாகப் புலப்படும், ஆத்மாவை அறியும் பகுதியும் ஆத்மானுபவம்—அதற்கான உபாயத்தைச் சொல்லும் பகுதியும்,
உண்மையில் உயர்ந்தவை அல்ல ; இதுவும் தள்ளப்படவேண்டியதே !
பகவானை மட்டுமே அறியவும் அவனடி அடையவும் ஆவல்கொண்டவனுக்கு– விவேகிக்கு— பரப்ரஹ்மம் பற்றிய வேதப் பகுதிகள்
அவனை அடையும் உபாயம் பற்றிக் கூறும் வேதப் பகுதிகள் மிக மிக முக்கியமானதாகும்.
இதுவே ஸார தமம்

ஜீவனுடன் சேர்ந்து, அவன் ஜ்ஞானம், கர்மங்கள் , வாஸனை –மூன்றும் தொடர்ந்து வருகின்றன.
ஜ்ஞானம், கர்மங்கள் –இவை, ஜீவனுக்கு அடுத்த பிறவியில், அநுபவிக்க வேண்டிய விஷயங்களைச் சேர்த்துவைக்கின்றன.
இந்த விஷயங்களைக் கையாள, பூர்வ ஜன்ம வாஸனை உதவுகிறது.
இல்லாவிடில், புது ஜன்மத்தில் ,இந்த்ரியங்களின் பழக்கம் இல்லாமலேயே வேலை செய்ய இயலாது. புது ஜன்மத்தில் ,வேலைகளைச் செய்வது,
பூர்வ ஜன்ம வாஸனை இருப்பதால்தான்.
ஜீவன், செயல்படுவதற்கு, பகவான் 16 கலைகளைத் தருகிறான்
1. ப்ராணன் 2. புத்தி 3.த்ரேகம் ( சரீரம் ) 4.ச்ரத்தை 5. ஐந்து பூதங்கள் 10. இந்த்ரியம் 11. மனஸ் 12. அன்னம்
13.வீர்யம் 14.தபஸ் 15.மந்த்ரம் 16.கர்மம் (ஹோமம்,யாகம் போன்றவை ) இவன் ஷோடச கல புருஷன்

அதிகாரத்திலிருந்து—
ஸாரதமமானதால் , ரஹஸ்ய த்ரயமே மிகவும் உபாதேயம்
——————————————————————————————-
பஹுப்யச்ச மஹத்ப்யச்ச சாஸ்த்ரேப்யோ மதிமாந்நர :
ஸர்வதஸ்ஸாரமாதத்யாத் புஷ்பேப்ய இவ ஷட்பத :–என்கிறபடியே ரஹஸ்ய த்ரயம் முமுக்ஷுவான இவ்வாத்மாவுக்கு மிகவும் உபாதேயமாகக்கடவது

அமையா இவை என்னும் ஆசையினால் அறு மூன்று உலகில்
சுமையான கல்விகள் சூழ வந்தாலும் தொகை இவை என்று
இமையா இமையவர் ஏத்திய எட்டு இரண்டு எண்ணிய —நம்
சமயாசிரியர் சதிர்க்கும் தனி நிலை தந்தனரே

சாகாநாம் உபரி ஸ்திதேந மனுநா மூலேன லப்த ஆத்மக :
ஸத்தாஹேது ஸக்ருத் ஜபேந ஸகலம் காலம் த்வயேந க்ஷிபந்
வேத உத்தாம்ஸ விஹார ஸாரதி தயாகும்பேந விஸ்ரம்பித :
ஸாரஞ்ஓ யதி கச்சத் அஸ்தி புவனே நாத : ஸயூதஸ்ய ந :

வ்யாக்யானம் —-
ஸ்வாமி தேசிகன், மஹாபாரதம்—சாந்தி பர்வத்திலிருந்து ,மேற்கோள் காட்டுகிறார்
பஹுப்யச்ச மஹத்ப்யச்ச சாஸ்த்ரேப்யோ மதிமாந்நர :
ஸர்வதஸ்ஸாரமாதத்யாத் புஷ்பேப்ய இவ ஷட்பத : ( 176–66 )
பற்பல பெரிய சாஸ்த்ரங்கள் இருக்கின்றன—-அவைகளில், வேதாந்தங்கள் ஸாரமானவை . புத்திசாலியானவன், அவைகளிலிருந்தும் ,மிகுந்த
ஸாரமானதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தேனீ எப்படி, மலர்களைத் தேடித் தேடிச் சென்று, தேனை உறிஞ்சி எடுக்கிறதோ,அதைப்போல, முக்கியமானவற்றை–மிகவும் ஸாரமானவற்றை
க்ரஹிக்கவேண்டும்.
அதுவே, உள்ளபடியே அறியப்படவேண்டிய தத்வங்கள்—மோக்ஷத்துக்கு உபாயமாக உள்ளவை. தனித்து விளங்குபவை.
அவையே, மூன்று ரஹஸ்யங்கள்– மோக்ஷத்தை விரும்பும் முமுக்ஷுவுக்கு மிக முக்யமானவை

ஸ்வாமி தேசிகன், இதற்குப் பிறகு ஒரு பாசுரமிடுகிறார் —-
அமையா இவை என்னும் ஆசையினால் அறு மூன்று உலகில்
சுமையான கல்விகள் சூழ வந்தாலும் தொகை இவை என்று
இமையா இமையவர் ஏத்திய எட்டு இரண்டு எண்ணிய —நம்
சமயாசிரியர் சதிர்க்கும் தனி நிலை தந்தனரே
இதுவரை, நாம் கற்றவைகள் போதாதென்று, இன்னும் கற்கவேண்டும் என்கிற ஆசையால், உபயோகமில்லாமல், வெறும் சுமையாக இருக்கிற
பதினெட்டு வித்யைகள்— அதாவது–
நான்கு வேதங்கள், சிக்ஷை , வ்யாகர்ணம் , சந்தஸ் , நிருக்தம், ஜோதிடம், கல்பம், மீமாம்ஸை , ந்யாயம் ,
புராணம் , தர்மம், ஆயுர்வேதம், தனுர் வேதம்,காந்தர்வம், அர்த்தசாஸ்த்ரம்
இவை வெறும் எண்ணிக்கை— இவ்வளவு படித்திருக்கிறான் என்கிற கணக்குக்கு மாத்ரம் உபயோகப்படும் –இந்தக் கல்வி–சுமை என்கிறார்
ஆகவே,கண் இமையா–அதாவது ஞானக் குறைவே இல்லாத — நித்ய ஸூரிகள் பெருமையுடன் புகழ்ந்த–கொண்டாடிய —
எட்டு அக்ஷரமுள்ள மூல மந்த்ரத்தையும், மற்றும் இரண்டு— த்வயம், சரம ச்லோகம் இரண்டையும் எப்போதும் மனதில் தரித்துக்கொண்டிருக்கும்
நமது ஸித்தாந்தத்தை எங்கும் பரப்புகின்ற நமது ஆசார்யர்கள் ,சிறிய முயற்சியால் –ப்ரயத்தனத்தால்– ஸர்வார்த்த ஸித்தியைக்
கொடுக்கும், ஸாரத்தையே கொண்டிருக்கிற ஒப்பற்ற இருப்பைத் தந்தனர்—அதாவது—அஷ்டாக்ஷரத்தையும், த்வயம் , சரமச்லோகம்
இவற்றை , நமது ஆசார்யர்கள் நமக்கு அளித்தனர்.

ஸ்வாமி தேசிகனின் ஸம்ஸ்க்ருத ச்லோகம்—-
சாகாநாம் உபரி ஸ்திதேந மனுநா மூலேன லப்த ஆத்மக :
ஸத்தாஹேது ஸக்ருத் ஜபேந ஸகலம் காலம் த்வயேந க்ஷிபந்
வேத உத்தாம்ஸ விஹார ஸாரதி தயாகும்பேந விஸ்ரம்பித :
ஸாரஞ்ஓ யதி கச்சத் அஸ்தி புவனே நாத : ஸயூதஸ்ய ந :
வேதங்களின் மேல் பாகம் , உபநிஷத் என்பர். இதில்,மூல மந்த்ரமான அஷ்டாக்ஷரம் ப்ரகாசிக்கிறது— விவேகியானவன்,
அஷ்டாக்ஷரம் மூலமாகத் தன்னுடைய உண்மையான நிலையை உணர்கிறான்.
இவன், தனது வாழ்நாள் முழுவதும் மிக உயர்ந்த புருஷார்த்தத்தை அளிக்கும் த்வயத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தாலோ,
ஒரு தடவை மட்டும் சொன்னாலோ, வேதத்தின் சிரத்துக்கு பூஷணம் போன்றவனும், தனது லீலையாக, அர்ஜுனனுக்கு தேர் சாரத்யம்
செய்தவனுமான ஸ்ரீ க்ருஷ்ணன் , கருணை மேலிட்டுச் சொன்ன சரம ச்லோகத்தில் மஹாவிச்வாஸம் உள்ளவனாக இருந்தாலோ,
இப்படிப்பட்டவன், நமது கூட்டம் அனைத்துக்கும் ஸ்வாமி போன்றவன் .

2ம் அதிகாரமான ஸாரநிஷ்கர்ஷ அதிகாரம் நிறைவு

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அர்ச்சாவதாரத்தில்-இருந்தும், கிடந்தும்,நின்றும்—–

April 10, 2021

1-பரமபதத்தில் இருந்தான்—அமர்ந்தான் (அமர்ந்த –உட்கார்ந்த திருக்கோலம் )
2-திருப்பாற்கடலில் கிடந்தான்-கூப்பாடு கேட்கும் இடம்.

3-ஸாளக்ராமத்தில் —–வந்து நின்றான்—–
ஸ்ரீ மூர்த்திப் பெருமானாக -முக்திநாராயணனாக நின்றான்
வடக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் ஸ்ரீ தேவியுடன் நின்றான்.
கண்டகி நதி எனப்படும் ”சக்ர ”தீர்த்தக்கரையில்-கனக விமானத்தின் அடியில் நின்றான்

4-திருவதரியில் வந்து அமர்ந்தான்
திருவஷ்டாக்ஷர அவதார க்ஷேத்ரமாகையால், இங்கு அமர்ந்தான்.
பத்ரிநாராயணனாக இருந்தான்-கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் இருந்தான்.
அரவிந்தவல்லித் தாயாருடன் இருந்தான்-தப்த குண்டத்தில் அருகில் இருந்தான்
தப்தகாஞ்சன விமானத்தின் அடியில் இருந்தான்-”நரனு”க்குப் ப்ரத்யக்ஷமாகி இருந்தான்.

5.திருப்பிரிதியில் ( ஜோஷிமட் –நந்த ப்ரயாக் ) கிடந்தான்.
ஜோஷிமட்டில் கிடந்தான்-புஜங்க ஸயனமாகக் கிடந்தான்
கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் கிடந்தான்.-பரமபுருஷனாகக் கிடந்தான்
பரிமளவல்லி நாச்சியார் அருகே இருக்கக் கிடந்தான்.
இந்த்ர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானஸ ஸரஸ் அருகே கிடந்தான்.
கோவர்த்தன விமானம் அடியில் கிடந்தான்
இங்கு ஸ்ரீ ந்ருஸிம்ஹனும் ,வாஸுதேவரும்தான் எழுந்தருளி இருக்கிறார்கள்;

6.தேவப் பிரயாகையில் வந்து நின்றான்
திருக்கண்டமென்னும் கடிநகரில் வந்து நின்றான்
நீலமேகப் பெருமானாக நின்றான்
கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் நின்றான்
புண்டரீக வல்லித் தாயாருடன் நின்றான்
அளகானந்தா –பாகீரதி சங்கமம் ஆகி கங்கை எனப் போற்றப்படும் நதிக்கரையில் நின்றான்
மங்கள விமானத்தின் அடியில் நின்றான்
ப்ரஹ்மாவுக்கும், பரத்வாஜருக்கும் ப்ரத்யக்ஷமாகி நின்றான்
பெரியாழ்வார் பாட, குதூகலித்து நின்றான்

7.த்வாரகையில் நின்றான்
கல்யாண நாராயணனாக நின்றான்
த்வாரகாதீசனாக நின்றான்
மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நின்றான்
ஸ்ரீ லக்ஷ்மி , ருக்மிணீ ,அஷ்ட மஹிஷிகள் சூழ நின்றான்
கோமதி நதி, சமுத்ரத்தில் சங்கமிக்கும் இடத்தில் நின்றான்
ஹேமகூட விமானத்தின் அடியில் நின்றான்
திரௌபதிக்குப் ப்ரத்யக்ஷமாகி நின்றான்
நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார், ஸ்ரீ ஆண்டாள், திருமங்கை ஆழ்வார்
மங்களாசாஸனம் செய்ய , ராஜாவைப்போல நின்றான்

8.வடமதுரையில் நின்றான்
ப்ருந்தாவனம் கோவர்த்தனம் சேர்ந்த மதுராவில் நின்றான்
பாலக்ருஷ்ணனாக நின்றான்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நின்றான்
ஸத்யபாமாவுடன் நின்றான்
யமுனா நதிக்கரையில் நின்றான்
கோவர்த்தன விமானத்தின் அடியில் நின்றான்
ப்ரஹ்மாவுக்கும் ,இந்த்ராதி தேவர்களுக்கும், தேவகி வஸுதேவருக்கும் ப்ரத்யக்ஷமாகி நின்றான்
நம்மாழ்வாரும், பெரியாழ்வாரும் தொண்டரடிப் போடி ஆழ்வாரும் ஸ்ரீ ஆண்டாளும் திருமங்கை ஆழ்வாரும் பாடப்பட,
தன்னுடைய அவதார பூமி என்கிற பெருமிதத்துடன் நின்றான்

9.திருவாய்ப்படிக்கு வந்து நின்றான்
திருவாய்ப்பாடியாகிய கோகுலத்தில் நின்றான்
நவ மோஹன க்ருஷ்ணனாக நின்றான்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நின்றான்
ருக்மிணி, ஸத்யபாமாவுடன் நின்றான்
யமுனா நதி தீரத்தில் நின்றான்
ஹேமகூட விமானத்தின் அடியில் நின்றான்
நந்தகோபருக்குப் ப்ரத்யக்ஷமாகி நின்றான்
பெரியாழ்வாரும் ஸ்ரீ ஆண்டாளும், திருமங்கை ஆழ்வாரும் பாடல்களால் துதிக்க நின்றான்

10.திருவயோத்திக்கு வந்து இருந்தான் ( அமர்ந்தான் )
ஸ்ரீ ராமனாக இருந்தான்
ஸ்ரீ ரகுநாயகனாக இருந்தான்
ஸீதா தேவியுடன் இருந்தான்
வடக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் இருந்தான்
ஸரயூ நதிக்கரையில் இருந்தான்
புஷ்கல (புஷ்பக) விமானத்தின் அடியில் இருந்தான்
ராமனாக அவதரித்த பூமி இது என்கிற பூரிப்புடன் இருந்தான்
தேவர்களுக்கும் ,முனிவர்களுக்கும் பரதனுக்கும் ப்ரத்யக்ஷமாகி இருந்தான்
நம்மாழ்வாரும் பெரியாழ்வாரும் , குலசேகர ஆழ்வாரும் ,தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும்
மங்களாசாஸனம் செய்ய மந்தஹாஸத்துடன் இருந்தான்

11. நைமிசாரண்யத்தில் நின்றான்
ஸ்ரீ ஹரி என்கிற தேவராஜன் என்கிற திருநாமம் ஏற்று நின்றான்
ஸ்ரீ ஹரிலக்ஷ்மியுடன் நின்றான்
கோமுகி , சக்ர தீர்த்தம், அருகில் நின்றான்
ஆரண்யமாகி நின்றான்
இந்த்ரன் ,சந்த்ரன், வேதவ்யாஸர் ,ஸூத புராணிகர்களுக்கு ப்ரத்யக்ஷமாகி நின்றான்
திருமங்கை ஆழ்வார் பத்துப் பாசுரங்களால் பாட, திருப்தியுடன் நின்றான்

12. அஹோபில ந்ருஸிம்ஹர்களாக வந்து அமர்ந்தான் –வந்து இருந்தான்
சிங்கவேள் குன்றத்தில், சீரிய சிங்கமாக அமர்ந்தான்–இருந்தான்
ஜ்வாலா ஹோபில மாலோல க்ரோடா காரஞ்ச பார்க்கவ : |
யோகானந்த : சத்ரவட : பாவநோ நவமூர்த்தய :-என்பதாக நவ நரசிம்மர்களாக இருந்தான்
ப்ரஹ்லாத வரதனாக இருந்தான்
ஸ்ரீ லக்ஷ்மி , அம்ருதவல்லி ,செஞ்சுலக்ஷ்மி ஸமேதராய் இருந்தான்
பவநாசினி போன்ற தீர்த்தக்கரைகளில் இருந்தான்
ப்ரஹ்லாதனுக்கும் ,கருடனுக்கும் ப்ரத்யக்ஷமாகி இருந்தான்
திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள் பாடிக் கொண்டாட இருந்தான்

13.திருவேங்கட மாமலையில் நின்றான்
மலை குனிய நின்றான்
தேவாதி தேவர்களை—ஸேவிக்க வாருங்கள் என்று கூறி ,மேலேயிருந்து கீழே வரச் செய்து நின்றான்
பூலோகத்து மானிடரை, ஸேவிக்க வாருங்கள் என்று கூறி , கீழேயிருந்து மேலே வரச் செய்து நின்றான்
திருவேங்கடமுடையானாகி நின்றான்
ஸ்ரீநிவாஸனாக நின்றான்
மலையப்ப ஸ்வாமியாக நின்றான்
ஸப்தகிரி வாஸியாக நின்றான்
கிழக்கே திருமுக மண்டலத்துடன் நின்றான்
பத்மாவதி நாயகனாய் நின்றான்
பதினான்கு தீர்த்தப் ப்ரியனாக நின்றான்
நித்ய கல்யாணப் பெருமாளாக நின்றான்
ஆனந்த நிலையத்தின் அடியில் நின்றான்
நித்யோத்ஸவ ,பக்ஷோத்ஸ்த்வ , மாஸோத்ஸவ , ஸம்வரோத்ஸவ ஸ்ரீநிவாஸனாய் நின்றான்
தொண்டைமான் அரசருக்குத் ப்ரத்யக்ஷமாய் நின்றான்
நம்மாழ்வாரும், பொய்கை பூதம் பேயாழ்வாரும் , பெரியாழ்வாரும் ஸ்ரீ ஆண்டாளும்
குலசேகர ஆழ்வாரும், திருமழிசையும் திருப்பாணாழ்வாரும் ,திருமங்கை ஆழ்வாரும்
பலப்பலப் பாசுரங்களால் ,பக்திச் சுவை சொட்டப் பாடியதைக் கேட்டு, பரம ஆனந்தத்துடன் நின்றான்

————–

பகவான் வடநாட்டிலிருந்து, தொண்டை நாடு வந்தான் ;தொண்டை நாடு, சான்றோருடைத்து—
இருந்தும், நின்றும் அலுத்தவன்,

14. திருவள்ளூரில் கிடந்தான்
திருஎவ்வுள் என்கிற வீக்ஷாரண்ய க்ஷேத்ரத்திலே புஜங்க சயனத்தில் கிடந்தான்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் கிடந்தான்
ஸ்ரீ கனகவல்லி ஸமேதனாய்க் கிடந்தான்
ஹ்ருத்தாபநாசினி புஷ்கரணிக் கரையில் கிடந்தான்
விஜயகோடி விமானத்தின் அடியில் கிடந்தான்
ப்ரஹ்மாவுக்கும், ருத்ரனுக்கும், சாலிஹோத்ர ரிஷிக்கும் ப்ரத்யக்ஷமாகிக் கிடந்தான்
திருமழிசை ஆழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாஸனம் செய்யக் கிடந்தான்

15.திருநின்றவூரில் ,பக்தவத்ஸலனாகக் கிழக்கு நோக்கி நின்றும்,
16.திருவல்லிக்கேணியில் ,வேங்கடக்ருஷ்ணனாக —-பார்த்தஸாரதியாக கிழக்கு நோக்கி நின்றும்,
17.திருவிடவெந்தையில் ,லக்ஷ்மி வராஹனாகக் கிழக்கு நோக்கி நின்றும்,
18.திருக்கடல்மல்லையில், ஸ்தலசயனப் பெருமாளாகக் கிழக்கு நோக்கிக் கிடந்தும்,
19.திருக்கடிகையில் யோகந்ருஸிம்ஹனாகக் கிழக்கு நோக்கி அமர்ந்தும் –இருந்தும்
20.திருநீர்மலையில், நீர்வண்ணனாகக் கிழக்கு நோக்கி நின்றும்,
21.திருப்புட்குழியில் விஜயராகவனாகக் கிழக்கு நோக்கி அமர்ந்து இருந்தும்
22.திருப்பரமேச்வர விண்ணகரத்தில் பரமபதநாதனாக, மேற்கு நோக்கி அமர்ந்து இருந்தும்
23.திருப்பவளவண்ணத்தில், பவளவண்ணனாக, மேற்கு நோக்கி நின்றும்,
24.திருக்கள்வனூரில் ஆதிவராஹனாக மேற்கு நோக்கி நின்றும்,
25.திருக்காரகத்தில், கருணாகரனாக, தெற்கு நோக்கி நின்றும்,
26.திருப்பாடகத்தில் ,பாண்டவதூதனாகக் கிழக்கு நோக்கி அமர்ந்து–இருந்தும்
27.திருவேளுக்கையில், அழகிய சிங்கனாகக் கிழக்கு நோக்கி நின்றும்
28.அட்டபுயகரத்தில்ஆதிகேசவனாக, கஜேந்த்ரவரதனாக– எட்டுத் திருக்கரங்களுடன் மேற்கு நோக்கி நின்றும் .
29.திருக்கார்வானத்தில்,நவநீதசோரனாக மேற்கு நோக்கி நின்றும்.
30.திருவெஃகாவில் யதோத்தகாரியாக மேற்கு நோக்கிக் கிடந்தும்,
31. திருநிலாத்திங்கள் துண்டத்தில் சந்த்ரசூடனாக மேற்கு நோக்கி நின்றும்,
32திருஊரகத்தில் த்ரிவிக்ரமனாக மேற்கு நோக்கி நின்றும் .
33. திருநீரகத்தில், ஜெகதீசனாக,கிழக்கு நோக்கி நின்றும்,
34.திருத்தண்காவில் ,தீப ப்ரகாசனாக மேற்கு நோக்கி நின்றும்

இவ்வாறாக, தொண்டை நாட்டுத் திவ்ய தேசங்களில், பல ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்ய,
ப்ரார்த்தித்தவர்களுக்குப் ப்ரத்யக்ஷமாகி , அருளி,
14 திவ்ய தேசங்களில் நின்றும், 2 திவ்ய தேசங்களில் கிடந்தும், 3 திவ்யதேசங்களில் அமர்ந்து இருந்தான்

35. திருக்கச்சியில் வரதனாக நின்றான்
பேரருளாளனாக நின்றான்
தேவாதிராஜனாக நின்றான்
அத்தியூரானாக நின்றான்
புள்ளூர்ந்து நின்றான்
மேற்கே திருமுக மண்டலத்துடன் நின்றான்
பெருந்தேவித் தாயாருடன் நின்றான்
அநந்த ஸரஸ் அருகில் நின்றான்
புண்யகோடி விமானத்தின் அடியில் நின்றான்
சாலைக்கிணறு தீர்த்தத்தை விரும்பி நின்றான்
ப்ருஹ்மா ,ஆதிசேஷன், நாரதர், கஜேந்த்ரன் ,ப்ருகு —இவர்களுக்குப் ப்ரத்யக்ஷமாகி நின்றான்
பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார் மங்களாசாஸனம் செய்ய, அத்திகிரியில் நின்றான்
ஸ்ரீ உடையவருக்கு அருளிப் பேரருளாளனாக நின்றான்
திருக்கச்சி நம்பிகளுக்கு ஆறு வார்த்தைகள் அருளி நின்றான்
ஸ்வாமி தேசிகன் , துதித்துக் கொண்டாடப் , புன்முவலுடன் நின்றான்

————

தொண்டை நாட்டிலிருந்து ,நடுநாடு வந்தான்

36.திருக்கோவிலூரில் உலகளந்து நின்றான்

வலது திருவடி ,வானத்தை அளக்க,நின்றான்
வலது திருக்கரத்தில் சங்கமும், இடது திருக்கரத்தில் ஆழியுமாக நின்றான்
முதல் மூன்று ஆழ்வார்களின் சங்கத்தில் ,இடைகழிக்குச் சென்று நெருக்கி நின்றான்
திருவிக்ரமனாகி நின்றான்
கோபாலனாகி நின்றான்
தேஹளீசனாக நின்றான்
புஷ்பவல்லித் தாயாருடன் நின்றான்
பெண்ணை நதிக்கரையில் நின்றான்
ஸ்ரீகர விமானத்தின் அடியில் நின்றான்
முதல் மூன்று ஆழ்வார்களுக்குப் ப்ரத்யக்ஷ்மாகி நின்றான்
முதல் மூன்று ஆழ்வார்களும், திருமங்கை ஆழ்வாரும் பன்னிப்பன்னிப் பாசுரமிடப் பரசவசத்துடன் நின்றான்
நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை ,இங்கிருந்து பெருகச் செய்யத் திருவுள்ளம் கொண்டு நின்றான்
உடையவர் ஸ்தாபித்த 74 ஸிம்ஹாசனாதிபதிகளில் ,திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் ,வழிவழியாகக் கொண்டாட நின்றான்
ஸ்வாமி தேசிகன் ,சதகமிட்டுத் தோத்தரிக்க, சந்தோஷமாய் நின்றான்

37.திருவயிந்திரபுரத்தில் நின்றான்

மூவராகி நின்றான்
மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்து நின்றான்
வினை தீர்த்த மன்னவனாக நின்றான்
ஏழிசைநாதப் பெருமாளாக நின்றான்
மேவுசோதியாக நின்றான்
தேவநாதனாக நின்றான்
அடியவர்க்கு மெய்யனாக நின்றான்
ஹேமாப்ஜவல்லித் தாயாருடன் நின்றான்
கருடநதிக்கரையில் நின்றான்
ஒளஷதகிரி அருகே நின்றான்
ஸுத்வ ஸத்வ விமானத்தின் அடியில் நின்றான்
இந்திரன், ருத்ரன், ஆதிசேஷன், கருடன்,சந்த்ரன் ,ப்ருகு ,மார்க்கண்டேயருக்குப் ப்ரத்யக்ஷமாகி நின்றான்
திருமங்கை ஆழ்வார் ,பாசுரமிடக் கேட்டுப் பூரித்து நின்றான்
ஸ்வாமி தேசிகனை,ராமானுஜ தயாபாத்ரமாக்கி நின்றான்
ஸ்வாமி தேசிகனை ஞான வைராக்ய பூஷணமாக்கி நின்றான்
ஸ்வாமி தேசிகனை, கிளியைப் பழக்குவிக்குமாப்போலே
பழக்குவித்து நின்றான்
ஸ்வாமி தேசிகனை,சதகம், பஞ்சாசத் , கோவை, மாலை என்று பலபடியாகத் தன்னைப் பாடச் செய்து நின்றான்
ஸ்வாமி தேசிகனை மஹாசார்யனாக உலகுக்குக் கொடுத்து நின்றான்

—————-

சோழநாட்டுக்கு வந்தான்

38. திருச்சித்ரகூடத்தில் , கிடந்தான்; இருந்தான் (சத்யாக்ரஹம் செய்வதைப்போல)
மூலவர், கோவிந்தராஜனாக ,போக சயனத்தில் கிடந்தான்
உத்ஸவர் தேவாதிதேவனாக, பார்த்தசாரதியாக அமர்ந்தான்–இருந்தான்
புண்டரீகவல்லித் தாயாருடன் இருந்தான்
ஸாத்விக விமானத்தின் அடியில் கிடந்தான், இருந்தான்
குலசேகர ஆழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்ய இருந்தான்

39.திருக்காழிச் சீராம விண்ணகரம் சீர்காழியில், இடது திருவடி உலகளக்கும் தாடாளனாக வந்து நின்றும் ,
40.திருத் தலைச் சங்க நாண்மதியமான தலைச் சங்காட்டில் வெண்சுடர்ப் பெருமாளாக நின்றும்,
41.சிறுபுலியூரில் க்ருபாஸமுத்ரனாகப் புஜங்கசயனமாகக் கிடந்தும்
42.திருவாலி, திருநகரியில், வயலாளி மணவாளனாக லட்சுமி ந்ருஸிம்ஹனாக இருந்தும்,
திருநாங்கூர் 11 திருப்பதிகளில்,
முதலில்,
43.திருமணிமாடக்கோயிலில் நந்தாவிளக்கு என்றும், நாராயணன் திருநாமத்துடன் இருந்தும்
44.அரிமேயவிண்ணகரத்தில் குடமாடு கூத்தனாக இருந்தும்,
45.திருவண் புருஷோத்தமத்தில் புருஷோத்தமனாக நின்றும்,
46.திருச் செம்பொன்செய்கோயிலில் பேரருளாளன், செம்பொன்னரங்கர் என்று நின்றும்
47.திருவைகுந்த விண்ணகரத்தில் வைகுந்த நாதனாக இருந்தும்,
48.திருத்தெற்றியம்பலத்தில் ரங்கநாதன், லக்ஷ்மீரங்கர் என்கிற திருநாமங்களுடன் கிடந்தும்
49.திருமணிக்கூடத்தில், வரதராஜனாக நின்றும்
50.திருக்காவளம்பாடியில் கோபாலக்ருஷ்ணனாக நின்றும்,
51.திருத்தேவனார்தொகை என்கிற கீழச்சாலையில் தெய்வநாயகனாக நின்றும்
52.திருவெள்ளக்குளம் என்கிற அண்ணன் கோயிலில் ஸ்ரீநிவாசன் என்கிற அண்ணன் பெருமாளாக நின்றும்
53.திருப்பார்த்தன் பள்ளியில், பார்த்தசாரதியாக நின்றும்

ஒவ்வொரு வருடமும்,தைமாத அமாவாசைக்கு மறுநாள்,
திருநாங்கூர் 11 திவ்யதேசங்களில் முதன்மையான மணிமாடக்கோயிலில்,
இந்தத் திவ்ய தேச எம்பெருமான்கள் , யாவரும் எழுந்தருளி திருமஞ்சனம் ஆகி,
திருமங்கை மன்னனால் மங்களாஸாசனம் செய்யப்பெற்று, அன்று ராத்ரி, இந்த 11 அர்ச்சாமூர்த்தி
எம்பெருமான்களும் தனித் தனி கருட வாகனத்தில் ஆரோகணித்து சேவை சாதிக்க
திருமங்கை மன்னனும், குமுதவல்லி நாச்சியாரும் அன்று ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளி
ஸ்ரீ மணவாள மாமுனிகள் தோளுக்கு இனியானில் எழுந்தருளி சேவை சாதிக்க

54.திருஇந்தளூருக்கு வந்து வீரசயனமாகிப் பரிமள ரங்கநாதனாகக் கிடந்தும் ,
55.திருவழுந்தூர் என்கிற தேரழுந்தூரில் எல்லை இல்லா அழகுடன் பசுங்கன்று அருகிருக்க,ஆமருவியப்பனாக நின்றும்
56.திருநாகையில் (நாகப்பட்டிணம் ),நீலமேகனாகவும் ,ஸௌந்தரராஜனாகவும் நின்றும்
57.திருக்கண்ணபுரத்தில் சௌரிராஜனாக நின்றும்,
58.திருக்கண்ணங்குடியில் தாமோதரநாராயணனாக நின்றும்,
59.திருக்கண்ணமங்கையில் பக்தவத்ஸலனாக நின்றும்,
60.திருச்சேறையில் ஸாரநாதனாக நின்றும் ,
61.திருநறையூர் என்கிற நாச்சியார் கோயிலில் திருநறையூர் நம்பி ஸ்ரீநிவாஸனாக விவாஹ திருக்கோலத்தில் நின்றும்
62.திருவிண்ணகர் என்கிற உப்பிலியப்பன் கோயிலில், ஸ்ரீநிவாஸனாக நின்றும்,

63.திருக்குடந்தை என்கிற கும்பகோணத்தில்,
காவிரியும் அரசலாறும் இருபுறமும் சாமரங்கள் வீசுவதைப் போல் உபசரிக்க, சாரங்கபாணியாக , உத்தான சயனத்தில் கிடந்தான்.
ஆராவமுதனாக ,அழகுத திருமேனியுடன் நின்றான்
கோமளவல்லித் தாயாருடன் நின்றான்
பொற்றாமரைப் புஷ்கரணி அருகே நின்றான்
வேத, வைதீக விமானத்தின் அடியில் கிடந்தான்;நின்றான்
திருமழிசை ஆழ்வாருக்காக , கிடந்தவாறு எழுந்தான்
ஸ்ரீமந் நாதமுனிகள், திவ்ய ப்ரபந்தப் பாசுரங்களைத் தொகுக்கக் காரணமானான் ;
”ஆராவமுதாழ்வான் ” ஆனான்
பூமியில் எங்கும் காண இயலாத ”சித்திரைத்தேரில் ” பவனி வர நின்றான்
நம்மாழ்வாரும், பூதத்தாழ்வாரும், பேயாழ்வாரும் பெரியாழ்வாரும், திருமழிசை ஆழ்வாரும் ஸ்ரீ ஆண்டாளும் திருமங்கை ஆழ்வாரும்
51 பாசுரங்களால் பாட ,திருச் செவி சாத்தினான்
இவ்வளவு அருமையும் பெருமையும் வாய்ந்த ஆராவமுதனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணப்போமோ —

64. பகவான் திருநந்திபுர விண்ணகரம் என்கிற நாதன் கோயிலில்,ஜெகந்நாதனாக இருந்தும் ,
65. திருக்கூடலூரில் ஜகத் ரக்ஷகனாக நின்றும் ,
66. திருக்கவித்தலத்தில் (கபிஸ்தலம்) கஜேந்த்ர வரதனாகக் கிடந்தும் (புஜங்க சயனம் ),
67.திருவெள்ளியங்குடியில் கோலவில்லி ராமனாக புஜங்க சயனமாகக் கிடந்தும்
68.திரு ஆதனூரில் ஆண்டளக்கும் அய்யனாகக் கிடந்தும் ( இங்கும் புஜங்க சயனம் ),
69.திருப் புள்ளம்பூதங்குடியில், வல்வில் ராமனாகக் கிடந்தும் (இங்கும் புஜங்க சயனம் ),
70.திருக்கண்டியூரில் ஹர சாப விமோசனப் பெருமாளாக நின்றும்
71.தஞ்சை மா மணிக் கோயிலில் நீலமேகப் பெருமானாக,மணிக் குன்றப் பெருமாளாக,ந்ருஸிம்ஹனாக இருந்தும்
72.திருப்பேர் நகரில் அப்பக்குடத்தானாக–புஜங்க சயனமாகக் கிடந்தும்,
73.திரு அன்பிலில் , வடிவழகிய நம்பியாகப் புஜங்க சயனமாகக் கிடந்தும் அருள் புரிய

திருமெய்யத்தில் வந்து நின்றான்
74.திருமெய்யம்

குடைவரைக்கோயிலில் கிடந்தான்
ஆதிசேஷன் ,அரக்கர்களை அண்டவிடாது இருக்கக் கிடந்தான்
ஸத்யமூர்த்தியாக நின்றான்
மெய்யப்பனாக நின்றான்
உய்யவந்த நாச்சியாருடன் நின்றான்
சத்ய தீர்த்தம் அருகில் நின்றான்
சத்யகிரி விமானம் அடியில் நின்றான்
திருமங்கை ஆழ்வார் மங்களாசாஸனம் செய்ய நின்றான்
நாம் உய்ய வந்தவன் என்று இந்த மெய்யப்பனை நினைத்தாரில்லை

75.திருமோகூரில் காளமேகப் பெருமாளாக நின்றும்
76.திருமாலிருஞ்சோலையில்,சொக்கத் தங்கமாக, கள்ளழகராக சுந்தர்ராஜப் பெருமானாக நின்றும்
77.திருக்கூடல் என்கிற மதுரையில், கூடலழகராக இருந்தும்,
78.திருத் தண்காலில் நின்ற நாராயணனாக நின்றும்,
79.ஸ்ரீ வில்லிபுத்தூரில் வடபத்ர சாயீயாகக் கிடந்தும் ,
80.திருக்கோட்டியூரில் உரகமெல்லணை கிடந்தும், ஸௌம்ய நாராயணனாக நின்றும்,
81.திருப்புல்லாணியில் தர்ப்ப சயன ராமனாகக் கிடந்தும், ஆதி ஜெகந்நாதனாக நின்றும்,
82.திருப்புளிங்குடியில் காய்சின வேந்தனாகக் கிடந்தும்,
83.திருத்தொலைவில்லி மங்கலம் என்கிற இரட்டைத் திருப்பதியில்,ஸ்ரீநிவாஸனாக நின்றும், அரவிந்தலோசனனாக இருந்தும்
84.திருச்சிரீவரமங்கலம் என்கிற வானமாமலையில் தோதாத்ரிநாதனாக இருந்தும்,
85.திருக்கோளூரில் வைத்தமாநிதியாகக் கிடந்தும்,
86.திருக்குறுங்குடியில் ,திருப்பாற்கடல்நம்பி என்று கிடந்தும் இருந்த நம்பியாகவும் நின்ற நம்பியாகவும், மூன்று நிலையிலும் ஸேவை ஸாதித்தும் ,
87.திருக்குளந்தையில் பெருங்குளம் மாயக்கூத்தன் , ஸ்ரீநிவாசன் என்று நின்றும்,
88.திரு வர குணமங்கையில் விஜயாஸனப் பெருமாளாக இருந்தும்,
89.தென்திருப்பேரையில் மகரநெடுங்குழைக் காதனாக இருந்தும்,
90.திருவைகுண்டத்தில் வைகுண்டநாதனாக கள்ளபிரானாக நின்றும்,

91.திருக்குருகூரில் ஆதிநாதனாக, பொலிந்து நின்ற பிரானாக நின்றும் , ஸ்ரீநம்மாழ்வாரைக்
கோயில்கொள்ளச் செய்தும் , அரையர்களைச் சேவை செய்யச் செய்தும்,
இப்படி ”நவ திருப்பதிகள்” எனப்படும்,
ஸ்ரீவைகுண்டம்,
வரகுணமங்கை
திருப்புளிங்குடி
இரட்டைத் திருப்பதி என்கிற தொலைவில்லி மங்கலம்
திருக்குளந்தை
திருக்கோளூர்
திருப்பேரை
திருக்குருகூர்
என்கிற 9 திவ்ய தேசங்களில்,
கிடந்தும், இருந்தும், நின்றும் சேதனர்களை ஈர்க்க முயற்சித்து,
திருக்குறுங்குடியில் ,கிடந்தும், இருந்தும் நின்றும் கூப்பிட்டு-

உடனே, சேர நாடு என்கிற மலைநாட்டுக்குப் போனாலாவது,நம் குழந்தைகள் நம்மைத் தேடி வரமாட்டார்களா என்று எண்ணி
திருக்கடித்தானம் வந்தான்

92.திருக்கடித் தானத்தில்,அத்புத நாராயணனாக நின்றும்
93.திருக்காட்கரையில் காட்கரை யப்பனாக நின்றும்,
94.திருச்செங்குன்றூரில் ,இமையவரப்பனாக நின்றும்
95.திருநாவாயில், நாவாய் முகுந்தன்–நாராயணனாக நின்றும்,
96.திருப்புலியூரில் ,மாயப்பிரானாக நின்றும்,
97.திருமூழிக்களத்தில் அப்பன் –ஸ்ரீஸூக்திநாதப்பெருமாளாக நின்றும் ,
98.திருவண்பரிசாரத்தில்,திருக்குறளப்பன்–திருவாழ்மார்பனாக இருந்தும் ,
99.திருவண்வண்டூரில் கமலநாதனாக நின்றும்,
100.திருவல்லவாழில் கோலப்பிரான் –ஸ்ரீவல்லபனாக நின்றும்
101.திருவித்துவக்கோட்டில் ,உய்யவந்தப் பெருமாளாக நின்றும்,
102.திருவாறன்விளையில் ,திருக்குறளப்பனாக நின்றும்
103.திருவாட்டாற்றில் ஆதிகேசவப் பெருமானாகக் கிடந்தும்
நின்று, நின்று திருவடிகள் நோக,
ஒரு திவ்ய தேசத்தில் அமர்ந்து இருந்து, திருவாட்டாற்றில் கிடந்து,
ஜீவாத்மாக்களாகிய சேதனர்கள் , தன்னைத் தேடி வரவில்லையே என்கிற ஆதங்கத்தில்.
104.திருவனந்தபுரத்தில் கிடந்தான்
அனந்த பத்மநாபனாகக் கிடந்தான்
ஸ்ரீஹரிலக்ஷ்மியுடன் கிடந்தான்
மிகப் பெரிய திருமேனியுடன்,மூன்று வாசல் வழியே தரிசிக்குமாறு கிடந்தான்
ஹேம கூட விமானத்தின் அடியில் கிடந்தான்.
ஏகாதச ருத்ரர்களுக்கும் இந்த்ரனுக்கும், சந்த்ரனுக்கும் ப்ரத்யக்ஷமாகிக் கிடந்தான்
நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்யக் கிடந்தான்
சேதனர்கள் , மிகப் பெரிய திருமேனியைப் பக்தியுடன் சேவித்தாலும்,
பன்னிரு ஆழ்வார்களில் ,ஒருவர்தான் மங்களாசாசனம் செய்திருக்கிறார் என்று இவரை விடுத்துப் போந்தனர்

காவிரி பாயும் ,கன்னலும், செந்நெல்லும் சூழும் , திவ்ய தேசமே தகும் என்று திருவுள்ளம் பற்றி,
105-திருவெள்ளறை வந்தான்

புண்டரீகாக்ஷனாக நின்றான்.கிழக்கே திருமுக மண்டலத்துடன் நின்றான்
செண்பகவல்லி என்கிற பங்கஜவல்லி ஸமேதனாக நின்றான்
ஏழு தீர்த்தங்கள் அருகிருக்க நின்றான்
விமலாக்ருதி விமானத்தின் அடியில் நின்றான்
உத்தராயண வாசல், தக்ஷிணாயன வாசல் இருக்க ,அவற்றின் மூலம் ஸேவை ஸாதித்து நின்றான்
உய்யக்கொண்டார் , இங்கு அவதரிக்க நின்றான்
எங்களாழ்வான் இங்கு அவதரிக்க, நின்றான்
ஸ்ரீ உடையவர், பலகாலம் இங்கு வசித்துப் போற்ற, நின்றான்
பெரியாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாஸனம் செய்யப் பூரித்து நின்றான்.
திவ்ய பிரபந்தங்களுக்கு , அர்த்த விசேஷங்களைத் தினவடங்கச் சொல்லும் சோழியர்கள் பக்கலில் இருக்க நின்றான்

106. உத்தமர்கோயிலில் கிடந்தான்
திருக்கரம்பனூர் என்கிற திவ்ய தேசத்தில், புஜங்க சயனனாகக் கிடந்தான்
திருவெள்ளறையில் நின்று பார்த்தவன் ,இங்கு வந்து ”படுத்தான்”
புருஷோத்தமனாகக் கிடந்தான்
பூர்ணவல்லித் தாயாருடன் கிடந்தான்
கதம்ப தீர்த்தக் கரையிலே கிடந்தான்
உத்யோக விமானத்தின் அடியிலே கிடந்தான்
ருத்ரனின் ப்ரஹ்மஹத்தி தோஷம் நீங்க, தாயாரை அவருக்குக் கைக் கபாலத்தில்
பிக்ஷை இடச் செய்து , அநுக்ரஹம் செய்து, இங்கே கிடந்தான்
திருமங்கை ஆழ்வார் ,ஒரு பாசுரத்தில் மங்களாசாசனம் செய்யக் கிடந்தான்

காவிரியைத் தாண்டித் தெற்கே போவோம் என்று எண்ணி, திருப்பாணாழ்வாரின் அவதார ஸ்தலமான
107 உறையூர் வந்தான்
சோழமன்னனின் திருமகள்–கமலவல்லி, இங்கு விரதமிருந்து , விவாஹம் செய்து கொள்ள,
அழகிய மணவாளப் பெருமாளாக நின்றான்
இவன்தான் ஸ்ரீ ரங்கநாதன்—ஒவ்வொரு வருடமும் ”பங்குனி உத்ரத்துக்கு” முன்பாக , 6ம் திருநாளில்,
நம்பெருமாளாக இங்கு எழுந்தருளி, கமலவல்லி நாச்சியாரை விவாஹம் செய்து கொண்டான்
குலசேகரரும், திருமங்கைமன்னனும் மொத்தமே இரண்டு பாசுரமிட நின்றான்
இந்த விவாஹ வைபவத்தைத் தரிசிக்க வந்தவர்கள் ஸ்ரீரங்கம் செல்லவே ,அவர்களுடன் கூடவே
8ம் திருநாளில்,

108. ஸ்ரீரங்கம் வந்தான்

9ம் திருநாளில், பெரிய பிராட்டியாரின் ஊடலால் ஏற்பட்ட ”பிரணயக் கலகம்” நம்மாழ்வாரால் ,தீர்க்கப்பட மகிழ்ந்து நின்றான்.
அன்றே பெரிய பிராட்டியாரின் திருஅவதார தினமான பங்குனி உத்ரத்தில், சேர்த்தியில்
எழுந்தருளி இருக்கும்போது, ஸ்ரீ உடையவர் , ”கத்யத்ரயம்” சமர்ப்பித்து, சரணாகதி செய்ய,
சேதனர்கள் , இந்த ”பவிஷ்யதாசார்யரை ” அடியொற்றி, சரணாகதி செய்து , நம்வீடு வருவார் என்று குதூகலித்தான்

*இதுவே பூலோக வைகுண்டம் என்றான்
*வைகுண்டத்தில் இருக்கும் ”வ்ரஜா” நதியே காவேரி நதி.
*வைகுண்டத்தில் இருக்கும் ஸ்ரீ வாஸுதேவனே ,ஸ்ரீரங்கநாதன் .
*விமானமே, ப்ரணவம்
*விமானத்தின் நான்கு கலசங்களே நான்கு வேதங்கள்
*விமானத்தினுள்ளே பள்ளிகொண்ட பெரிய பெருமாளே, ப்ரணவம் விவரிக்கும்”பரமாத்மா”
*காவிரியையும், கொள்ளிடத்தையும் மாலையாக்கிக் கொண்டான்
* தானே ”இக்ஷ்வாகு குலதனம்” என்றான்
”ஸதம்வோ அம்பா தாமானி ஸப்தச்ச —”என்று ப்ரஹ்மாவுக்குச் சொல்லி,
பரமபதத்தையும் சேர்த்து நூற்றெட்டுத் திவ்ய தேசங்களிலும் ”நானே” என்றான் ‘
*சந்த்ர புஷ்கரணி எனதே என்றான்
*படமெடுத்த ஆதிசேஷன் படுக்கையிலே படுத்திருக்கும் ”பெரிய பெருமாள்” நானே என்றான்
*.ப்ரணவாகார விமானத்தின் அடியில் சயனித்திருப்பது ”நானே” என்றான்
*விமானத்தின் மீது ”பரவாஸுதேவனாக ” இருப்பதும், நானே என்றான்
*ரங்க மண்டபத்தை , காயத்ரீ மண்டபம்” என்றும் ,
அங்குள்ள 24 தூண்களையும் காயத்ரீ மந்த்ரத்தின் 24 அக்ஷரங்கள் என்றும் பூர்வாசார்யர்கள் புகழ, ஆமோதித்தான்
*ஏழு உலகங்களையும் , ஏழு ப்ராகாரங்களாக்கினான்
*வேத ஸ்வரூபன் —பெரிய பெருமாள்
*வேதச்ருங்கம்— ப்ரணவாகார விமானத்தின் சிகரமாகியது
*வேதப்ரணவம் –ப்ரணவாகார விமானமாகியது
*வேதாக்ஷரமே –காயத்ரி மண்டபமாகியது

அர்ச்சாவதார ,முதல் அவதாரமாகினான் *அண்டர்கோன் அணியரங்கனானான்
*திருப்பாவை முப்பதும் செப்பினாளை உயர் அரங்கனாகிய தனக்கு,கண்ணி உகந்து அளித்தவளை
பெரியாழ்வார் பெற்றெடுத்தவளைத் , தன்னிடம் பேதைமை கொண்டவளை , மாலையிட
பெரியாழ்வார் கனவில் தோன்றி, கோதையைத் திருவரங்கம் அழைத்து வரச் சொன்னான்
இங்கு பட்டர்,கோவில் பரிசனங்களிடம் ,அப்படியே தோன்றி,
அழகிய பூப்பல்லக்கில் ,கோதையை சந்நிதிக்கு அழைத்துவரச் சொன்னான்.
அவனின் திருவுளப்படி ஆண்டாள் திருமணத்தூண் அருகே வந்து
அரங்கனுக்கு மாலையிட,
அரங்கனும் மாலையிட.
மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனனாகிய ரங்கநாதன் வந்து
ஆண்டாள் கைத்தலம்பற்றி , தீவலம் செய்து,
பொரி முகம் தட்ட , செம்மை உடைய தன்னுடைய திருக்கரத்தால்,
கோதையின் தாள் ( திருவடி )பற்றி , அம்மி மிதித்து,
வாய்நல்லார் நல்ல மறை ஓதும் மந்திரம் முழங்க ,
பெரியாழ்வார், கோதையைக் ”கன்யாதானம்” செய்ய,
நம்பெருமாளாகிய ஸ்ரீரங்கநாதன், கோதா மணாளனாக ஆனான்.

*துலுக்க நாச்சியாரின் , இஷ்ட மணாளனானான்
*சேரகுலவல்லியின் , வீர மணாளனானான்
*குலசேகரன், படியாய்க் கிடக்கப் பவள வாய்க் காட்டிப் பரிவுகொண்டான்
*.பெரிய திருவடி அனவரதமும் அமர்ந்து இருந்து அஞ்சலி செய்ய , அருள் புரிந்தான்
*திருவிண்ணாழித்திருச் சுற்றில், பூமிக்கு அடியில் சாளக்ராம எம்பெருமான்கள்
ஏராளமாக வாசம் செய்ய, அங்கு பக்தர்கள் ,மண்டியிட்டு வலம் வருவதை ,வழக்கமாக்கினான்
*திருமங்கை ஆழ்வார் பிரார்த்தனையை ஏற்று, ”திருவத்யயன உத்ஸவத்தில்” , வேதங்களோடு
திருவாய்மொழியையும் திருச்செவி சாற்றத் திருவுள்ளம் கொண்டான்
*விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தி திருவர்மார்பன் கிடந்த வண்ணனானான்
*நம்மாழ்வாரும், பொய்கை ஆழ்வாரும் பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் பாசுரமிட கிடந்தான்;நின்றான்
*திருமழிசை ஆழ்வாரும், பெரியாழ்வாரும் குலசேகர ஆழ்வாரும் போற்றிப் புகழ நின்றான்.
*தொணடரடிப் பொடி ஆழ்வாரும், திருப்பாணாழ்வாரும், ஆண்டாளும், திருமங்கை ஆழ்வாரும் பாசுரங்கள் ,
பல இசைத்துப் பாட,பரவசப்பட்டான்;
கிடந்தான்;நின்றான்
*மொத்தமாக 247 பாசுரங்களில்,பக்திரஸம் பரிணமிக்க, ரங்கராஜனாக ஆனான்
*நம்மாழ்வாரும், பொய்கை ஆழ்வாரும் பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் பாசுரமிட கிடந்தான்;நின்றான்
*திருமழிசை ஆழ்வாரும், பெரியாழ்வாரும் குலசேகர ஆழ்வாரும் போற்றிப் புகழ நின்றான்.
*தொணடரடிப் பொடி ஆழ்வாரும், திருப்பாணாழ்வாரும், ஆண்டாளும், திருமங்கை ஆழ்வாரும்
பாசுரங்கள் ,பல இசைத்துப் பாட,பரவசப்பட்டான்;
கிடந்தான்;நின்றான்
*மொத்தமாக 247 பாசுரங்களில்,பக்திரஸம் பரிணமிக்க, ரங்கராஜனாக ஆனான்

*இவன் சேர்த்தி ஸேவை தரும் ரங்கன்
*சித்ரா பௌர்ணமி அன்று, காவேரித் தாயாருடன் சேர்த்தி
*சித்திரையில், சேரகுல வல்லியுடன் சேர்த்தி
*பங்குனி ஆயில்யத்தில் , உறையூரில் கமலவல்லியுடன் சேர்த்தி,
*பங்குனி உத்ரத்தில் ,பெரிய பிராட்டியாருடன் சேர்த்தி

*இவனே, காவேரி ரங்கன்
*இவனே கஸ்தூரி ரங்கன்
*இவனே பரிமள ரங்கன்
*இவனே க்ஷீராப்தி ரங்கன்
*இவனே இக்ஷ்வாகு குல ரங்கன்
*இவனே பெரியபெருமாள் ரங்கன்
*இவனே நம்பெருமாள் ரங்கன்
*இவன் கருமணி ரங்கன்
*இவன் கோமள ரங்கன்
*இவனே கோதையின் ரங்கன்
*இவனே வைபோக ரங்கன்
*இவனே முதன்முதலில், அரையர் ஸேவை கொண்டருளிய ரங்கன்
*இவனே தினமும், வெண்ணெய் அமுதுண்ணும் ரங்கன்
*இவனே ”திறம்பா ”வழிகாட்டும் ரங்கன்
*இவனே”கபா”அலங்கார ரங்கன்
*இவனே ”கோண வையாளி ”நடைபோடும் ரங்கன்
*இவனே ஐப்பசியில் ,யாவும் தங்கமான ரங்கன்
*இவனே ,தாயின் பரிவுடன் ”பல்லாண்டு” பாடப்பெற்ற ரங்கன்
*இவனே பங்குனியில் காவிரிக்கரையில்,தயிர்சாதமும், மாவடுவும் விரும்பி ஏற்கும் ரங்கன்
* இவனே , அடியார்களை அரவணைக்கும் ரங்கன்
* இவனே வைணவத்தின் ”ஆணி வேரான ”அரங்கத்தின் அப்பன், ரங்கன்
* இவனே அடியார்க்கு ஆட்படுத்தும் ரங்கன்
* இவனே, தானே முக்தனாக இருந்து, வைகுண்ட ஏகாதசியன்று, பரமபதத்தைக் காட்டும் ரங்கன்
* இவனே பணியைப் பத்துகொத்தாக்கிப் பணிகொள்ளும் ரங்கன்
* இவனே இராமானுசரை,”நெடுநாள் தேசாந்திரம் சென்று ,மிகவும் மெலிந்தீரே” என்று தாயைவிட, அதிகப் பரிவு காட்டிய ரங்கன்
*இவனே ப்ரஹ்மாதி ராஜன்
*இவனே இந்திராதி ராஜன்
*இவனே நித்யஸூரிகளின் ராஜன்
*இவனேமுக்தர்களின் ராஜன்
*இவனே ராஜாதி ராஜன்
*இவனே வைகுண்ட ராஜன்
*இவனே ஸுர ராஜ ராஜன்
*இவனே அகிலலோக ராஜன்
*இவனே ஸ்ரீரங்க பத்ரன்
*இவனே ஆனந்தரூபன்
*இவனே நித்யானந்தரூபன்
*இவனே ரமணீயரூபன்
*இவனே ஸ்ரீரங்கரூபன்
*இவனே லக்ஷ்மிநிவாஸன்
*இவனே ஹ்ருத்பத்ம வாஸன்
*இவனே க்ருபாதி வாஸன்
*இவனே ஸ்ரீரங்க வாஸன்
*இவனே ,எல்லாமும், எல்லா எம்பெருமான்களும்
ஏனெனில்,
எல்லா திவ்யதேச எம்பெருமான்களும் ,இவனிடம் தினமும் சாயரக்ஷையில் க்ஷீரான்ன நைவேத்யத்தின்போது,
, 108 சர மாலைகளைச் சாற்றிக் கொண்டு ”தர்பார் ஸேவை ”நடக்கிறது—

*இவனை ஸ்தோத்தரிக்க , ஆதிசங்கரர் வந்தார்
*இவனை ஸ்தோத்தரிக்க ஸ்ரீ மத்வர் வந்தார்
*இவனுக்கு கைங்கர்யம் செய்த ஆசார்யர்கள்,கணக்கிலடங்காது.

ஸ்ரீரங்க வாஸம் செய்து, பற்பலக் கைங்கர்யங்கள் செய்த சில ஆசார்யர்கள்
*ஸ்ரீமன் நாதமுனிகள்,
*உய்யக்கொண்டார் ,
*மணக்கால் நம்பி,
*ஸ்ரீ ஆளவந்தார்,
*திருவரங்கப் பெருமாள் அரையர்
*பெரிய நம்பிகள்,
*எம்பெருமானார் என்கிற ஸ்ரீ உடையவர்
*முதலியாண்டான்
*கந்தாடையாண்டான்,
*கூரத்தாழ்வான்,
*திருக்குருகைப் பிரான் பிள்ளான்,
*எம்பார்,
*திருவரங்கத்தமுதனார்
*ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன்
*பட்டர்,
*நஞ்சீயர் ,
*நடாதூரம்மாள்
*பராங்குசதாஸர்
*பிள்ளை அமுதனார்,
*பிள்ளை உறங்காவில்லி தாஸர்
*பிள்ளை லோகாசார்யர்
*பெரியவாச்சான் பிள்ளை
*மாறனேரிநம்பி
*வங்கிபுரத்தாச்சி
*வடக்குத் திருவீதிப்பிள்ளை
*வடுக நம்பி
*நம்பிள்ளை,
*அநந்தாழ்வான்
*ஈச்வர முனிகள்
*எங்களாழ்வான்
*கூரநாராயண ஜீயர்
*சொட்டை நம்பிகள்
*திருக்கச்சிநம்பி
*திருக்கண்ணமங்கையாண்டான் ,
*திருக்கோட்டியூர் நம்பி,திருமலை நம்பி,
*திருமாலையாண்டான்,
*திருவாய்மொழிப்பிள்ளை
*பின்பழகிய பெருமாள் ஜீயர்
*பெரிய ஆச்சான் பிள்ளை,
*அழகியமணவாளப் பெருமாள் ஜீயர் ,
*கூர குலோத்துங்க தாசர் ,
*திருவாய்மொழிப்பிள்ளை ,
*பெரிய ஜீயர் என்கிற ஸ்ரீ மணவாள மாமுனிகள்

இப்படி எண்ணிலா ஆசார்யர்கள் , இவனிடம் மோகித்து, பக்தி மேலிட்டு,
வாசிக, காயிக , லிகித கைங்கர்யங்கள் செய்துள்ளனர்
தியாகாஜ ஸ்வாமிகள், பஞ்சரத்னமே பாடி இருக்கிறார்

இவைகளை எல்லாம், கேட்டுப் பரவசமான ஜீவாத்மாக்கள் –சேதனர்கள் ,
”ரங்கா—ரங்கா—” என்று மெய்சிலிர்க்கக் கூவினர்; ஆடினர்;
ரங்கனின் புகழ் பாடினர்
ரங்கனை அடைய ஆவல் கொண்டனர் ; அவன் திருவடி நிழலில் இளைப்பாரத் தாபப்பட்டனர்
பெரிய பெருமாள் , ஆதிசேஷனின் அரவணையில் , இவை அறிந்து ஆனந்தமடைந்தான்
நம்பெருமாளோ,
இருந்தும், கிடந்தும், நின்றும் –இங்கேயே பல்லாண்டாக நின்றும்–அதன் பயனாக,
நம்பிள்ளைகளைத் திரும்பப் பெறுவோம் என்கிற ஆனந்தத்தில் ஸேவை சாதித்தான்

ஸ்ரீரங்கமதுலம் க்ஷேத்ரம் ஸ்ரியா ஜூஷ்டம் சுபாஸ்தம்
யத்கத்வா ந நரோ யாதி நரகம் சாப்யதோகதிம்

செல்வங்களும் மங்களங்களும் நிறைந்த ஒப்பற்ற திவ்யதேசம் ஸ்ரீரங்கம்
அதை அடைந்த மனிதன், நரகத்தை அடைவதில்லை;தாழ்ந்த நிலையையும் அடைவதில்லை.

காவேரி வர்த்ததாம் காலே காலே வர்ஷது வாஸவ : |
ஸ்ரீரங்கநாதோ ஜயது ஸ்ரீரங்க ஸ்ரீஸ்ச வர்த்ததாம் ||

எழுநூறு சந்யாசிகள் ,எழுபத்துநான்கு ஆசார்யர்கள், பன்னீராயிரம் ஏகாங்கிகள் ,
முன்னூறு கொற்றியம்மைமார்கள் , அரசர்கள், சாற்றாத ஸ்ரீவைஷ்ணவர்கள் ,
இவர்களால் நிரம்பப்பெற்று , காவேரி , பயிர்களுக்கு வேண்டிய காலங்களில் பெருகட்டும்.
வேண்டிய சமயங்களில் மழை பொழியட்டும்.
ஸ்ரீரங்கநாதன் வெற்றியுடன் வாழட்டும்; ஸ்ரீரங்க ஸ்ரீ என்கிற திருவரங்கச் செல்வம் எப்போதும் வளரட்டும்

———————————————————————————————————————-

அர்ச்சாவதாரத்தில், இருந்தும் கிடந்தும் நின்றும் பகவான் ஸ்ரீமந் நாராயணன்,
அவன் குழந்தைகளாகிய நம்மைத் திரும்பப் பெறுவதில் வைகுண்டத்தில்
தொடங்கிப் பல திவ்யதேசங்களில்,முயற்சித்தாலும், அவனது திருவுள்ள வேட்கை
பூலோக வைகுண்டத்தில் –திருவரங்கத்தில், வெற்றி அடைந்தது

ஸ்ரீமந் ஸ்ரீரங்கச்ரியமநுபத்ரவாம் அநுதினம் ஸம்வர்தய |
ஸ்ரீமந் ஸ்ரீரங்கச்ரியமநுபத்ரவாம் அநுதினம் ஸம்வர்தய |\

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலினே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம :

———————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ முகுந்தமாலாவில், ஸ்ரீ க்ருஷ்ணானுபவம்–

April 10, 2021

ஸ்ரீ முகுந்தமாலாவில், க்ருஷ்ணானுபவம்

குஷ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரா திநே திநே |
தமஹம் ஸி ரஸா வந்தே ராஜாநம் குலசேகரம். ||

எந்த ராஜாவின் நகரில், “ஸ்ரீ ரங்கத்துக்குப் போவோம், வாருங்கள்” என்று தினம், தினம் பறை என்கிற வாத்தியத்தின்
மூலம் அழைக்கப்படுகிறதோ, அந்த ராஜ்யத்தின் அரசனான ஸ்ரீ குலசேகரரைத் தலையால் வணங்குகிறேன்

————​

​ஸ்ரீ வல்லபேதி வரதேதி தயாபரேதி
பக்த ப்ரியேதி பவலுண்டந கோவிதேதி |
நாதேதி நாகசயநேதி ஜகந் நிவாஸே
த்யாலாபிநம் ப்ரதிபதம் குரு மே முகுந்த ||–1-

மே ….முகுந்த….என்கிறார். என்னுடைய முகுந்தனே என்று அழைக்கிறார். அழைத்து என்ன சொல்கிறார் தெரியுமா !
ஸ்ரீ வல்லபா ( லக்ஷ்மி பதி ), வரதா, தயாபரா , பக்த ப்ரியா , பவலுண்டன கோவிதேதி (பிறவித் துயரை அறுப்பவனே )
நாத இதி–காப்பாற்றுபவனே —நாதா, ( அவன் தான் நாதன், நாமெல்லாம் அல்ல ),
நாகசயனா , ஜகந்நிவாஸா —அடியேன் எப்போதும் உன்னுடைய திருநாமங்களையே———
ஆலாபிநம் ——–பேசுபனாக—பாடுபவனாக —அனுக்ரஹம் செய் என்கிறார்.
உன் திரு நாமங்களை எப்போதும் நாம சங்கீர்த்தனமாகச் செய்ய–அருள் புரிவாயாக—என்கிறார்.

———-

ஜயது ஜயது தேவோ தேவகீ நந்த நோயம்
ஜயது ஜயது க்ருஷ்ணோ வ்ருஷ்ணி வம்ச-ப்ரதீப : |
ஜயது ஜயது மேக ச்யாமள கோமாளாங்கோ
ஜயது ஜயது ப்ருத்வீ –பாரநாஸோ முகுந்த : ||–2-

இவன் தேவகியின் மைந்தன்
இவன் வ்ருஷ்ணி குலத்தின் விளக்கு —ஆயர் குல விளக்கு
இவன் மேக ச்யாமளன்
இவன் கோமாளாங்கன்
இப்படிப்பட்டவன் வெற்றி அடைவானாக என்று , ஜயது ,ஜயது என்று எட்டு தடவை சொல்கிறார்
( இது அஷ்டாக்ஷரத்தை நினைவுபடுத்துகிறதா !)

————

முகுந்த! மூர்த்நா ப்ரணிபத்ய யாசே
பவந்த–மேகாந்த -மியந்த -மர்த்தம் |
அவிஸ்ம்ருதிஸ் -த்வச் -சரணாரவிந்தே
பவே பவே மேஸ்து பவத்-ப்ரஸாதாத் ||–3-

இந்த 3வது ஸ்லோகத்தில் முகுந்தனிடம் ஒன்றே ஒன்று யாசிக்கிறார்.
எவ்வளவு பிறவி எடுத்தாலும், முகுந்தனின் கிருபையாலே அவனுடைய திருவடிகளை மறக்காமல் இருக்க யாசிக்கிறார்.
அவிஸ்ம்ருதி —மறக்காமலிருப்பது—பகவத் ப்ரஸாதாத் –பகவானுடைய கிருபையால்.
பவே பவே—ஒவ்வொரு ஜன்மத்திலும். என்கிறார்.

———–

நாஹம் வந்தே தவ சரணயோர் த்வந்த –மத்வந்த –ஹேதோ :
கும்பீபாகம் குருமபி ஹரே ! நாரகம் நாபநேதும் |
ரம்யா ராமா ம்ருது தநு லதா நந்தநே நாபி ரந்தும்
பாவே பாவே ஹ்ருதய –பவநே பாவயேயம் பவந்தம் ||–4-

அவன், ஹரி—ஹரே என்று அழைக்கிறார். அஹே—அடியேன். தவ த்வந்தம் சரணயோ ——உன்னுடைய இரு திருவடிகளை .
எதற்காக நமஸ்கரிக்கவில்லை ,ஆனால் , எதற்காக நமஸ்கரிக்கிறேன் என்று விண்ணப்பிக்கிறார்.
மோக்ஷத்துக்காக அல்ல;கும்பீபாகம் என்கிற நரகவேதனையை நீக்கு என்பதற்காக அல்ல;
தேவலோக நந்தவனத்தில், கொடிபோன்ற மாதர்களுடன் ரமிக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
பிறகு எதற்காக என்றால்,
ஒவ்வொரு ஜன்மத்திலும் அடியேனின்— ஹ்ருதய பவநே–இதயக் கோயிலில் உன்னை நினைக்க வேண்டும்–
என்பதற்காகவே நமஸ்கரிக்கிறேன் என்கிறார். –

—————-

நாஸ்தே தர்மே ந வஸூ நிசயே நைவ காமோப —போகே
யத்யத் பவ்யம் பவது பகவந் ! பூர்வ கர்மாநுரூபம் |
ஏதத் ப்ரார்த்யம் மம பஹூமதம் ஜந்ம ஜந்மாந்த ரேபி
த்வத் –பாதாம்போருஹ —யுககதா நிஸ் சலா பக்தி ரஸ்து ||–5-

பகவந் ! பகவானே …என்று தாபத்துடன் அழைக்கிறார்.
இந்த ஸ்லோகத்தில் எவற்றில் ஆசை இல்லை ; ஆனால் எதில் ஆசைப்பட்டுப் பிரார்த்திக்கிறேன் என்பதைச் சொல்கிறார்.
தர்மே ஆஸ்தா ந—தர்மத்தில் ஆசை இல்லை;
வஸூ நிசயே ந —-குவியல், குவியலாக இருக்கிற பணத்தின்மீதும் ஆசை இல்லை;
காமோப –போகே நைவ—-காமம் என்கிற போகத்திலும் ஆசை இல்லவே இல்லை;
உடனே கர்மானுபவத்தைச் சொல்கிறார்.
பூர்வ கர்மானுரூபம் யத்யத் பவ்யம் பவது—பூர்வ ஜென்மங்களின் கர்மாக்களுக்கு ஏற்ப, எது எது எப்படி நடக்கவேண்டுமோ ,
அவைகள் அப்படியே நடக்கட்டும் ஆனால்
மம ஜன்ம ஜன்மாந்தரேபி ——அடியேனுக்கு, இந்த ஜன்மத்திலும் அடுத்த ஜன்மங்களிலும்,
பஹூ மதம் ப்ரார்த்யம் —-மிகவும் ஆசையான பிரார்த்தனை எதுவெனில்,
ஏதத் —- இதுவே —-( என்கிறார் )
த்வத் பாதாம் போருஹ –யுககதா——- உன்னுடைய திருவடித் தாமரைப் பற்றியதான
நிஸ்சலா பக்தி : அஸ்து—– அசையாத பக்தி தொடர்ந்து இருக்கவேண்டும். அதுவே அடியேனின் ஆசை.
அதற்கு அருள் புரிக என்கிறார்.

————-

திவி வா புவி வா மமாஸ்து வாஸோ
நரகே வா நரகாந்தக ! ப்ரகாமம் |
அவதீரித —ஸாரதாரவிந்தௌ
சரணௌ தே மரணேபி சிந்தயாமி ||–6-

இச் ச்லோகத்தில் , நரகாசுரனை அழித்தவனே என்கிறார்—-…..
மம -( என்னுடைய) வாஸம்,
திவிவா , புவிவா –தேவ லோகத்தில் இருந்தாலும், இந்தப் பூமியில் இருந்தாலும் —ஏன் நரகே வா—-நரகத்திலே இருந்தாலும் கூட,
அவதீரித –ஸாரதாரவிந்தௌ—- சரத்காலத்தில் பூத்திருக்கும் தாமரைப் புஷ்பத்தையே பழிக்கும்,
தே சரணௌ —உன்னுடைய திருவடிகளை ,
மரணே அபி சிந்தயாமி—–அடியேனின் மரண சமயத்திலும் நினைக்கிறேன் .
( நமக்கும், அப்படியே எப்போதும் நம்முடைய சிந்தனை ஸ்ரீ கிருஷ்ணனின் திருவடித் தாமரைகளிலேயே இருக்கவேண்டும்;
அதற்கு, அந்தக் கிருஷ்ணனே அருளவேண்டும் )

——————

கிருஷ்ண ! த்வதீய –பதபங்கஜ –பஞ்ஜராந்த–
மத்யைவ மே விஸது மாநஸ –ராஜ ஹம்ஸ : |
ப்ராண –ப்ரயாண–ஸமயே கபவாத –பித்தை :
கண்டா –வரோதந –விதௌ ஸ்மரணம் குதஸ் தே ||–7-

க்ருஷ்ணா…..
ப்ராண –ப்ரயாண —ஸமயே
கப–வாத–பித்தை :——–இந்த உயிர் ,ப்ராணன் , ப்ரயாணப்படும் சமயத்தில், உடலை விட்டுப் பிரியும் சமயத்தில்,
கபம் (சளி ) வாதம் ( வாய்வு ), பித்தம் —இவைகள் ,
கண்டாவரோதந விதௌ —-நெஞ்சை அடைக்கும் நேரத்தில், தே – ஸ்மரணம் –குத : —உன்னுடைய நினைவு எப்படி வரும் ( வராது )
அதனால்,
மே மாநஸ —ராஜ ஹம்ஸ :—–அடியேனுடைய மனமாகிய ராஜஹம்ஸம், அத்யைவ —இன்றே, இப்போதே
த்வதீய –பத பங்கஜ –பஞ்ஜராந்தம்–உன்னுடைய திருவடித்தாமரை என்கிற கூண்டுக்குள் ,
விஸது—-புகுந்து கொள்ளட்டும்

முந்தைய ச்லோகத்தில்,
மரணேபி …… மரணம் ஏற்படும் சமயத்திலும் —உன் திருவடிகளையே சிந்தனை செய்கிறேன் என்று சொன்ன ஆழ்வாருக்கு ,
ஒரு சந்தேகம் வந்தது. கபம், வாதம், பித்தம், இவையெல்லாம், நெஞ்சை நெருக்கி, குரலை ஒடுக்கி,
மனசைத் தடுமாறும்படி செய்துவிட்டால், மரணம் ஏற்படும் சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணனை நினைக்காமல் தடுத்துவிட்டால்,
என்ன செய்வது என்று தோன்றி, இந்த ச்லோகத்தை அமைத்துள்ளாரோ !
அப்போதைக்கு, இப்போதே சொல்லி வைத்தாரோ ! ( இந்தச் சமயம் வராஹ சரம ச்லோகம் நினைவுக்கு வருகிறதா )

————–

சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம்
மந்த மந்த –ஹஸிதாநநாம்புஜம் |
நந்தகோப –தநயம் பராத்பரம்
நாரதாதி –முநிப்ருந்த –வந்திதம் ||–8-

மந்தஹாஸம் ததும்பும் ,அன்றலர்ந்த தாமரை திருமுகத்தை உடையவனும்,நந்தகோபரின் செல்வனும்,
பராத்பரம்—எல்லாரையும்விட உயர்ந்தவனும், நாரதர் முதலியமுனிக் கணங்கள் வணங்கும் , ஹரிமேவ—-ஸ்ரீ ஹரியையே
ஸந்ததம் சிந்தயாமி—-எப்போதும் ஸ்மரிக்கிறேன் ( நாமும் இந்த ச்லோகத்தைத் தினமும் சொல்லலாம் )

——–

கரசரண—ஸரோஜே காந்தி மந் —நேத்ரமீநே
ஸ்ரமமுஷி புஜவீசி –வ்யாகுலே காதமார்க்கே |
ஹரிஸரஸி விகாஹ்யா பீய தேஜோஜலௌகம்
பவமரு –பரிகிந்ந : கேதமத்ய த்யஜாமி ||–9-

இந்த ச்லோகத்தில், பகவானது திருமேனி தேஜஸ் என்கிற தீர்த்தத்தைப் பருகி, தாகத்தைப் போக்கிக்கொள்கிறேன் என்கிறார்.
அந்தத் தீர்த்தம் தடாகத்தில் இருக்கிறது; அது ஹரி என்னும் தடாகம்; அந்த ஹரியின் , திருக்கைகளும், திருவடிகளும் தாமரைகள் ;
அவை நிறைந்த தடாகம்; அவரது ஒளி வீசுகிற திருக்கண்கள் ,மீன்கள் அவை நிறைந்த தடாகம்;
அவரது திருப்புஜங்களே ச்ரமங்களை அகற்றிப் புயல் போல இருக்கும் தடாக அலைகள்;இந்தத் தடாகம் மிக ஆழமானது;
சம்சாரமாகிய பாலைவனத்தில் வருந்திய அடியேன் ,
இந்த ஹரி என்கிற தடாகத்தில் மூழ்கி, அவரது தேஜஸ் என்கிற ஜலத்தைப் பானம் செய்து,
அத்ய கேதம் த்யஜாமி—–இப்போது கஷ்டங்களை எல்லாம் விட்டு விடுகிறேன்
( பாலைவனத்தில் நீருக்காக அலைந்த நான், பகவானின் தேஜஸ் என்கிற ஜலத்தைப் பருகினேன் ,தாகம் தீர்ந்தது ,என்கிறார் )

————

ஸரஸிஜ –நயநே ஸசங்க —சக்ரே
முரபிதி மா விரமஸ்வ ! ரந்தும் |
ஸூகதரமபரம் ந ஜாது ஜாநே
ஹரிசரண — ஸ்மரணாம்ருதேந துல்யம் ||–10-

சித்த —என்று மனதைக் கூப்பிடுகிறார். தாமரைக் கண்ணனும், சங்குசக்ரதாரியும், முரன் என்கிற அசுரனை அழித்தவனுமாகிய
ஹரியிடம் பக்தி கொள்வதை விடாதே ; யத :—-ஏன் எனில், ஹரியின் திருவடிகளை ஸ்மரிக்கும்
அமிர்தத்தோடு அதற்குச் சமமான மற்றோர் உயர்ந்த சுகம், ஜாது ந ஜாதே ——எப்போதும் அறிந்திலேன் .

———

மாபீர்–மந்தமநோ விசிந்த்ய பஹூதா யாமீஸ்சிரம் யாதநா :
நாமீ ந : ப்ரபவந்தி பாபரிபவ : ஸ்வாமீ நநு ஸ்ரீதர : |
ஆலஸ்யம் வ்யப நீய பக்தி–ஸுலபம் த்யா யஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸநாபநோத நகரோ தாஸஸ்ய கிம் ந க்ஷம : ||–11

மனதே….பயப்படாதே என்கிறார். இந்த ஸ்லோகத்திலும். மனஸ் …..எதற்காகப் பயப்படவேண்டாம் ?
பதில் சொல்கிறார்…
பாபிகளுக்குப் பகைவன் —யமன் கொடுக்கும் தண்டனைகள். இந்த யம தண்டனைகள் சக்தியை இழந்தவை —-எப்போது தெரியுமா?
ஸ்ரீமன் நாராயணனைத் த்யானம் செய்தால், இவை சக்தியை இழந்தவை ஆலஸ்யம் இல்லாமல் த்யானம் செய்தால்,
பக்தியுடன் த்யாநித்தால், அவை நம்மைத் துன்புறுத்தாது. உலகத்தார் கஷ்டங்களைஎல்லாம் போக்குபவன் இவன்—-
அப்படி இருக்கிற கருணா சாகரன் , தன்னுடைய பக்தனுக்கு ( தாஸஸ்ய), ந க்ஷம : —–துன்பத்தை அழிப்பதில் வல்லமை இல்லாதவனா ! —

—————–

பவஜலதி —கதாநாம் த்வந்த்வ —வாதாஹதாநாம்
ஸுத துஹித்ரு —-களத்ர –த்ராண — – பாரார்திதாநாம் |
விஷம –விஷய –தோயே மஜ்ஜதா –மப்ல வாநாம்
பவது ஸரணமேகோ விஷ்ணு போதோ நராணாம் ||–12

பகவான் ,கரை ஏற்றுகிறான் —விஷ்ணு போத :—என்கிறார்–விஷ்ணு என்கிற ஓடமாகக் கரைஏற்றுகிறான்.
இந்த சம்சாரம் இருக்கிறதே—புனரபி ஜனனம், புனரபி மரணம் –இந்தக்கடலில்,
த்வந்த்வ வாதாஹதனாம்—குளிர்–வெய்யில், சுகம்–துக்கம் என்பன போன்ற இரட்டைகள் ,இவனைத் தாக்குகின்றன;
உறவுகள் —இவர்களைக் காப்பது என்கிற பாரத்தால், கஷ்டப்படுகிறான் ; விஷய சுகம் என்கிற ஜலத்தில் மூழ்குகிறான்;
இவனைக் கரையேற்ற ஓடம் இல்லை; இப்படிப்பட்டவர்களுக்கு, விஷ்ணுவே ஓடம் . அவன்தான் சரணம்

———–

பவஜலதி –மகாதம் துஸ்தரம் நிஸ்தரேயம்
கதமஹமிதி சேதோ மா ஸ்ம கா : காதரத்வம் |
ஸரஸிஜத்ருஸி தேவே தாவகீ பக்திரேகா
நரகபிதி நிஷண்ணா தாரயிஷ்யத்வஸ்யம் ||–13

மறுபடியும் மனஸ்ஸுக்குச் சொல்கிறார்.
ஹே சேத :—–மனசே…ஜனன, மரண சம்சாரக் கடல் –இது மிக ஆழமான கடல்;
இதைத் தாண்டுதல் எப்படி என்று …காதரத்வம் மா ஸ்மா கா :——பயப்படாதே –
தாமரைக் கண்ணன்; நரகாசுரனை அழித்தவன்; அப்படிப்பட்ட பகவானிடம் ,உனக்குப் பக்தி இருந்தால்,
ஏகா அவஸ்யம் தாராயிஷ்யதி– அது ஒன்றே , அவசியம் , தாண்டச் செய்துவிடும்

————–

த்ருஷ்ணா தோயே மதந–பவநோத்தூத–மோஹோர்மி- மாலே
தாராவர்த்தே தநய —சஹஜ –க்ராஹ –ஸங்காகுலே ச |
ஸம்ஸாராக்யே மஹதி ஜலதௌ மஜ்ஜதாம் நஸ்த்ரிதாமந்
பாதாம் போஜே வரத பவதோ பக்திநாவம் ப்ரயச்ச ||–14-

பக்திநாவம் , என்கிறார் ,இந்த ச்லோகத்தில்.
பக்திநாவம் ——பக்தி என்கிற ஓடம் .ப்ரயச்ச—கொடுங்கள் என்கிறார்.
அந்த பக்தி, பவது பாதாம்புஜே—-தேவரீரின் திருவடித் தாமரைகளின்மீது பக்தி என்கிறார்.
வரத —-வரம் அளிப்பவரே என்று பகவானைக் கூப்பிடுகிறார். பக்தியாகிய ஓடத்தை யாருக்காகக் கேட்கிறார் ?
மஹதி ஜலதௌ மஜ்ஜதாம் ந :—-பெரிய சமுத்ரத்தில் மூழ்கியுள்ள எங்களுக்கு,
அது என்ன சமுத்ரம் ? சம்சாரமென்னும் பெரிய சமுத்ரம்;
இந்த சமுத்ரத்தில் பேராசை என்கிற ஜலம்;காமமும், மோஹமும் , காற்றும் அலையும்
(காற்று வீசி சமுத்திர அலைகள் மேலே எழும்புவது போன்று காமம் என்கிற காற்று இந்த சம்சாரக் கடலில் வீசி,
மோஹம் என்கிற அலைகளை, மேலே மேலே எழுப்புகிறது );
தாராவர்த்தே—மனைவி என்கிற சுழல்; மக்கள், கூடப் பிறந்தவர்கள்-இவர்களெல்லாம், முதலைக் கூட்டங்கள்.
ஹே..த்ரிதாமந் —–ஹே,பரந்தாமா, இப்படிப்பட்ட சம்சாரக் கடலைத் தாண்ட, பக்தி என்கிற ஓடத்தை அருளும்படி விண்ணப்பிக்கிறார்.

——–

மாத்ராக்ஷம் க்ஷீண புண்யாந் க்ஷணமபி பவதோ பக்திஹீநாந் பதாப்ஜே
மாஸ்ரௌஷம் ஸ்ராவ்யபந்தம் தவ சரிதம பாஸ்யாந்ய தாக்யா நஜாதம் |
மாஸ்மார்ஷம் மாதவ ! த்வா மபி புவநபதே ! சேதஸா பஹ்நுவாநாந்
மாபூவம் த்வத் ஸபர்யா —வ்யதிகர –ரஹிதோ ஜந்மஜந்மாந்த ரேபி ||–15-

ஸ்ரீ குலசேகரர், இந்த ச்லோகத்தில், பகவத் பக்திக்கான முக்ய விவரங்களைச் சொல்கிறார்.
புவநபதே ! மாதவா! என்கிறார்.
உன் திருவடியில் (பவத: பதாப்ஜே பக்திஹீநாந்) பக்தி இல்லாதவர்களை, பாவிகளை
( க்ஷீண புண்யான் ) ஒரு க்ஷணமும் பார்க்கமாட்டேன்; உன் திவ்ய சரிதங்களைத் தவிர, மற்றக் கதைகளைக் கேட்கமாட்டேன் ;
உன்னை மனத்தால் வெறுப்பவரை நான் மனத்தாலும் நினைக்கமாட்டேன் (மாஸ்மார்ஷம் );
இந்த ஜன்மத்திலும்,மற்ற ஜன்மங்களிலும், உன்னை பூஜை செய்யாதவனாக இருக்கமாட்டேன் (மாபூவம்).
பார்க்கமாட்டேன்; கேட்கமாட்டேன்;நினைக்கமாட்டேன்;
உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றி செய்யப்படும் பூஜையைச் செய்யாமல் இருக்கமாட்டேன்—-என்கிறார்.

—————

ஜிஹ்வே ! கீர்த்தய கேசவம் முரரிபும் சேதோ ! பஜ ஸ்ரீதரம்
பாணித்வந்த்வ ! ஸமர்ச்சயாச்யுதகதா: ஸ்ரோத்ரத்வய ! த்வம் ஸ்ருணு |
க்ருஷ்ணம் லோகய லோசநத்வய ! ஹரேர் –கச்சாங்க்ரியுக்மாலயம்
ஜிக்ர க்ராண முகுந்தபாத –துளஸீம் மூர்த்தந்! நமாதோக்ஷஜம் ||–16-

நாக்கே—கேசவனைத் துதி; மனமே , முராரியைப் பஜனை செய்;கைகளே, ஸ்ரீதரனை அர்ச்சியுங்கள்;
காதுகளே, அச்சுதனின் சரிதங்களைக் கேளுங்கள்;கண்களே, கண்ணனைத் தர்சியுங்கள் ;
கால்களே , —ஹரே ஆலயம் கச்ச—ஹரியின் திருக்கோவிலுக்குச் செல்லுங்கள்;
மூக்கே ,முகுந்தனின் திருவடித் துளசியை நுகர்வாயாக; தலையே,விஷ்ணுவை வணங்குவாயாக .
இந்த ஸ்லோகத்தில்,பகவானின் திருநாமங்களாகிய , கேசவன், முராரி,ஸ்ரீதரன், அச்யுதன், கிருஷ்ணன்,
ஸ்ரீஹரி,முகுந்தன், விஷ்ணு —ஆக , எட்டுத் திருநாமங்களைச் சொல்கிறார்.

—————

ஹே லோகா : ஸ்ருணுத ப்ரஸுதி மரணவ்யாதேஸ் — சிகித்ஸாமிமாம்
யோகஜ்ஞா : ஸமுதா ஹரந்தி முநயோ யாம் யாஜ்ஞவல்க் யாதய : |
அந்தர் ஜ்யோதிரமேயமேக –மம்ருதம் க்ருஷ்ணாக்யமாபீயதாம்
தத்பீதம் பரமௌஷதம் விதுநதே நிர்வாணமாத்யந்திகம் ||–17-

க்ருஷ்ணாக்யம் அம்ருதம் ஆபீயதாம் தத் பரமௌஷதம் —-கிருஷ்ணன் என்கிற அம்ருதம் உயர்ந்த மருந்து என்கிறார்.
ஹே, லோகா :—லோகத்தில் உள்ளவர்களே, ஜனன, மரண வியாதிக்கு,
இமாம் சிகித்ஸாம், ஸ்ருணுத—-இந்த சிகிச்சையைக் கேளுங்கள் என்கிறார்.
யாஜ்ஞவல்க்யர் போன்ற மஹரிஷிகள் சொன்ன மருந்து என்கிறார்.
நமக்குள் அந்தர்யாமியாகவும், ஜோதிஸ்வரூபனாகவும் ,
அமேயம் ஏகம் க்ருஷ்ணாக்யம் —-அளவிட முடியாத , ஒன்றாக உள்ள, கிருஷ்ணன் என்கிற அம்ருதமே மருந்து;
அதைப் பானம் செய்தால்,கடைசியான மோக்ஷ சுகம் கிடைக்கும்
( முக்தி தரும் )இதைப் பானம் செய்யுங்கள்

————

ஹே மர்த்யா : ! பரமம் ஹிதம் ஸ்ருணுத வோ வக்ஷ்யாமி சங்க்ஷேபத :
ஸம்ஸாரார்ணவ —மாபதூர்மி –பஹுளம் ஸம்யக் ப்ரவிஸ்ய ஸ்திதா : |
நாநா –ஜ்ஞான –மபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேத்யமும்
மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாமசஹிதம் ப்ராவர்த்தயத்வம் முஹூ : ||–18-

ஹே மர்த்யா:—-ஒ, மனுஷ்யர்களே , என்கிறார். இவர்கள் யார் ?
ஆபதூர்மி ஸம்ஸாரார்ணவம் ஸம்யக் ப்ரவிஸ்ய ஸ்திதா :—-ஆபத்தான அலைகலுள்ள, சம்சார சமுத்ரத்தில் நன்கு மூழ்கி உள்ளவர்கள் .
உங்களுக்கு, மிக உயர்ந்த ஹிதம் –நன்மையை ,சுருக்கமாக, வக்ஷ்யாமி—சொல்கிறேன். ஸ்ருணுத—-கேளுங்கள்.
பலவிதமான ஞானங்களைத் தள்ளிவிட்டு, ஸப்ரணவம்—–பிரணவத்துடன் கூடி இருக்கிற,
நமோ நாராயணாய இதி —“நமோ நாராயணாய” என்கிற மந்த்ரத்தை, நமஸ்காரத்துடன் , அடிக்கடி (முஹூ : ) ஜெபியுங்கள்

——————–

ப்ருத்வீ ரேணுரணு: பயாம்ஸி கணிகா : பல்கு –ஸ்புலிங்கோநலஸ்
தேஜோ நிஸ்வஸநம் மருத் தநுதரம் ரந்த்ரம் ஸு ஸுக்ஷ்மம் நப : |
க்ஷூத்ரா ருத்ர –பிதாமஹ –ப்ரப்ருதய : கீடா : ஸமஸ்தாஸ் –ஸு ரா :
த்ருஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே பூமாவதூதாவதி : ||–19–

உன்னுடைய மஹிமையைக் காணும்போது, பூமி, சிறிய தூசு; ஜலமெல்லாம் திவலை ( நீர்த் துளி);
தேஜஸ் என்பது சிறிய நெருப்புப் பொறி;காற்று, சிறிய மூச்சு ; ஆகாயம், மிகச் சிறிய த்வாரம்;
சிவன், பிரமன் முதலான சகல தேவர்களும் சிறிய புழுக்கள்; உன்னுடைய அளவில்லாத இந்த மஹிமை வெல்லட்டும்

————-

பத்தேநாஞ்ஜலிநா நதேன ஸிரஸா காத்ரை : ஸரோமோத்கமை :
கண்டேந ஸ்வரகத் கதேந நயநேநோத்கீர்ண –பாஷ்பாம்புநா |
நித்யம் த்வச்சரணாரவிந்த — யுகள –த்யாநாம்ருதாஸ்வாதிநாம்!
அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ! ஸததம் ஸம்பத்யதாம் ஜீவிதம் ||–20–

தாமரைக் கண்ணா ! கூப்பிய கரங்களோடும், வணங்கிய தலையோடும், மயிர்க்கூச்செடுக்கும் உடலோடும்,
தழு தழுத்த குரலோடும், ஆனந்தபாஷ்பம் பெருகும் கண்களோடும், உன் திருவடித் தாமரைகளை த்யானம் செய்கிற
அம்ருத ரஸத்தை, எப்போதும் பானம்செய்கிற , வாழ்க்கை நிறைவடையட்டும்

—————

ஹே கோபாலக ! ஹே க்ருபாஜலநிதே ! ஹே ஸிந்து கந்யாபதே
ஹே கம்ஸாந்தக ! ஹே கஜேந்த்ரகருணாபாரீண ! ஹே மாதவ ! |
ஹே ராமாநுஜ ! ஹே ஜகத்குரோ ! ஹே புண்டரீகாக்ஷ ! மாம்
ஹே கோபி ஜநநாத ! பாலயபரம் ஜாநாமி ந த்வாம் விநா ||-21-

ஹே, கோபாலா, ஹே கருணா சமுத்ரமே, ஹே சமுத்ரராஜனின் புத்ரியான லக்ஷ்மியின் பதியே ,
கம்சனை அழித்தவனே, கஜேந்த்ரனைக் கருணையோடு காப்பாற்றியவனே , மாதவா, பலராமனின் தம்பியே,
மூவுலக்கும் ஆசானே, தாமரைக் கண்ணா, கோபிகைகளின் அன்பனே, உன்னையல்லால் , வேறு யாரையும் அறியேன்,
மாம், பாலய—என்னைக் காப்பாற்று

—————-

பக்தாபாய –புஜங்க –காருடமணிஸ் –த்ரைலோக்ய –ரக்ஷாமணி :
கோபீலோசந –சாதகாம்புதமணி : சௌந்தர்யமுத்ரா மணி : |
ய : காந்தாமணி —ருக்மிணி —கநகுச –த்வந்த்வைக —பூஷாமணி :
ஸ்ரேயோ தேவஸிகாமணிர் திஸது நோ கோபால சூடாமணி : ||–22-

ய :—எவன் , தேவா—அந்தப் பகவான்,
அவன் தேவசிகாமணி—அவன், பக்தர்களுக்கு வரும் ஆபத்துக்களாகிய சர்ப்பத்துக்கு, காருடமணி (கருட ரத்னம்)
அவன், மூவுலகையும் ரக்ஷிக்கும் மணி (ரத்னம் ).
அவன், கோபிகைகளின் கண்களாகிற சாதகபக்ஷிகளுக்கு, மேகமாகிய மணி ( ரத்னம் ).
அவன், சௌந்தர்ய –முத்ரா மணி—அழகிற்கே அழகான மணி (ரத்னம் ).
அவன், பெண்கள் குல ரத்னமான ருக்மிணிக்கு ,அலங்கார மணி (ரத்னம்).
அவன், கோபால சூடாமணி ( யாதவ குலத்துக்கே சூடாமணி ).
அவன், அந்தக் கண்ணன், நமக்கு க்ஷேமத்தை அளிக்கட்டும்.
( அவன் ஏழு மணிகளாக, ஆழ்வாரால் போற்றப்படுகிறான் )

——————–

ஸத்ருச்சேதைக மந்த்ரம் ஸகலமுபநிஷத் —வாக்ய–ஸம்பூஜ்ய –மந்த்ரம்
ஸம்ஸாரோத்தார– மந்த்ரம் ஸமுபசித தமஸ் –ஸங்க –நிர்யாண –மந்த்ரம் |
ஸர்வைஸ்வர்யைக —மந்த்ரம் வ்யஸந –புஜக –ஸந்தஷ்ட–ஸந்த்ராண –மந்த்ரம்
ஜிஹ்வே!ஸ்ரீ-க்ருஷ்ண -மந்த்ரம் –ஜபஜப ஸததம் ஜந்ம –ஸாபல்ய –மந்த்ரம்–23-

வியாதிகள் தீர, மணி, மந்த்ரம், ஔஷதம் என்று மூன்று முறைகள் உள்ளதாக, ஆயுர்வேதம் சொல்கிறது.
ஆழ்வார், சம்சாரிகளின் பிறப்பு, மறுபடியும் இறப்பு, திரும்பவும் பிறப்பு என்பதான பிணி தீர , இந்த மூன்றையும் சொல்கிறார் .
இதற்கு முந்தைய ஸ்லோகத்தில் , மணி என்பதாகச் சொன்னார். இந்த ஸ்லோகத்தில், மந்த்ரம் என்பதைச் சொல்கிறார்.

ஹே…ஜிஹ்வே —ஸததம் ஜபஜப —-என்கிறார். அதாவது, ஏ , நாக்கே—-எப்போதும் ஜபித்துக்கொண்டிரு —என்கிறார்.
எந்த மந்த்ரத்தை—? ஸ்ரீ க்ருஷ்ண மந்த்ரம்—
இந்த மந்த்ர மஹிமையைச் சொல்கிறார்.
விரோதிகளை அழிக்கும் மந்த்ரம்
எல்லா உபநிஷத்துக்களும் போற்றுகிற மந்த்ரம்
சம்சார சமுத்ரத்தைத் தாண்ட வைக்கும் மந்த்ரம்
சேதனர்களிடம் மண்டியுள்ள அஞ்ஜானம் என்கிற இருட்டை அகற்றும் மந்த்ரம்
எல்லா ஐஸ்வர்த்தையும் அளிக்கும் மந்த்ரம்
துன்பமென்கிற சர்ப்பம் தீண்டியவரைக் காக்கும் மந்த்ரம்
ஜன்ம சாபல்ய மந்த்ரம்
இதுவே ஸ்ரீ க்ருஷ்ண மந்த்ரம்.–எப்போதும் ஜபிக்கச் சொல்கிறார்.

———————-

வ்யாமோஹ –ப்ரஸமௌஷதம் முநிமநோவ்ருத்தி–ப்ரவ்ருத்யௌஷதம்
தைத்யேந்த்ரார்த்திகரௌஷதம் த்ரிஜகதாம் ஸஞ்ஜீவநை கௌஷதம் |
பக்தாத்யந்தஹிதௌஷதம் பவபயப்ரத்வம்ஸநை கௌஷதம்
ஸ்ரேய : ப்ராப்திகரௌஷதம் பிப மந :ஸ்ரீ -க்ருஷ்ண –திவ்யௌஷதம் ||–24-

முந்தைய இரண்டு ஸ்லோகங்களில், மணி, மந்த்ரம் என்று இரண்டையும் சாதித்த ஆழ்வார்
இந்த ஸ்லோகத்தில் ,ஔஷthaம் என்பதாகச் சொல்கிறார்
மனஸ்ஸுக்குச் சொல்கிறார் ;—
உலக மயக்கங்களைத் தெளிவிக்கும் ஔஷதம்
ரிஷிகளின் மனஸ் சை பகவானிடம் திருப்பும் ஔஷதம்
அரக்கர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கும் ஔஷதம்
மூவுலக மக்களும் பிழைப்பதற்கான ஔஷதம்
பக்தர்களுக்கு மிக அனுகூலமான ஔஷதம்
சம்சார பயத்தை அழிக்கும் சிறந்த ஔஷதம்
எல்லாவிதமான நன்மைகளையும் கொடுக்கும் ஔஷதம்
இந்த ஔஷதம்— க்ருஷ்ண திவ்ய ஔஷதம்
பிப —பருகுவீர்களாக
க்ருஷ்ணன் என்கிற ஔஷதத்தைப் பருகுங்கள் ,இதுவே திவ்ய ஔஷதம் .என்கிறார்

————-

ஆம்நாயா ப்யஸநாந்யரண்யருதிதம் வேதவ்ரதான் யந்வஹம்
மேதஸ்சேதபலாநி பூர்த்தவிதயா ஸர்வே ஹூதம் பஸ்மநி |
தீர்த்தாநாம வகாஹநாநி ச கஜஸ்நாநம் விநா யத் பத
த்வந்த்வாம்போருஹ –ஸம்ஸ்ம்ருதீர்விஜயதே தேவஸ் ஸ நாராயண : ||–25-

பகவானின் திருவடிப் பெருமையைச் சொல்கிறார்.

பகவானின் திருவடிகளைத் த்யாநிக்காமல்,
வேத அத்யயனம்/ பாராயணம் செய்தல், காட்டில் புலம்புவதற்கு ஒப்பாகும்.
வைதீக விரதங்கள், உடல் கொழுப்பை அகற்றுமே அன்றி,வேறு பலனைக் கொடுக்காது.
குளம்./ கிணறு இவைகளை வெட்டுவது, நெருப்பே இல்லாத சாம்பலில், ஹோமம் செய்யப்பட்டதாகும்.
தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வது, யானைகள் குளிப்பது போலாகும்.
அதனால், ஸ : தேவா விஜயதே—அந்த பகவானுக்கே விஜயம்—வெற்றி

————-

ஸ்ரீமந் நாம ப்ரோச்ய நாராயணாக்யம்
கே ந ப்ராபுர் வாஞ்சிதம் பாபி நோபி |
ஹா ந : பூர்வம் வாக் ப்ரவ்ருத்தா ந தஸ்மின்
தேந ப்ராப்தம் கர்ப்பவாஸாதி துக்கம் ||–26

ஸ்ரீமந்நாராயணா என்கிற பகவன் நாமத்தைச் சொல்லிப் பாவியும்கூட ,அவர் விரும்பிய பலனை அடைந்திருக்கிறார்கள்.
ஹா—-முன் பிறவியிலேயே இதைச் சொல்லவேண்டுமென்றுத் தோன்றவில்லையே ?அதனால், கர்ப்ப வாஸம்
முதலான கஷ்ட துக்கங்கள் எல்லாம், ப்ராப்தம்—அடையப்பட்டது

———

மஜ்ஜந்மந : பலமிதம் மதுகைடபாரே
மத்ப்ரார்த்தநீய –மதநுக்ரஹ ஏஷ ஏவ |
த்வத் ப்ருத்ய –ப்ருத்ய –பரிசாரக–ப்ருத்ய –ப்ருத்ய
ப்ருத்யஸ்ய ப்ருத்ய இதிமாம் ஸ்மர லோகநாத ||-27-

மதுகைடபரை அழித்தவரே ! ஹே லோகநாதா ! அடியேன் உம்மை வேண்டி, தேவரீர் அனுக்ரஹிக்க வேண்டியது இதுவே !
உமது ,அடியார்க்கு, அடியாரின் அடியார்க்கு, அடியாரின் அடியார்க்கு, அடியாரின் அடியேன் என்று ,
மாம்—அடியேனை, ஸ்மர— நினைப்பீராக அதாவது , அடியாரின் வரிசையில், ஏழாவது நிலையில் உள்ள அடியானாக,
பகவானைத் திருவுள்ளம் பற்றச் சொல்கிறார்.

————-

நாதே ந புருஷோத்தமே த்ரிஜகதா மேகாதிபே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பதஸ்ய தாதரி ஸுரே நாராயணே திஷ்டதி |
யம் கஞ்சித் புருஷாதமம் கதிபயக்ராமேஸமல் பார்த்ததம்
ஸேவாயை ம்ருகயாமஹே நரமஹோ மூகா வராகா வயம் ||–28-

மூவுலகங்களுக்கும் ஒரே தலைவன்; மனதால் ஸ்மரித்து அவனுக்கு அடிமையானாலேயே
தன் ஸ்தானத்தையே நமக்கு அளித்து விடுபவன்;
புருஷோத்தமன்; நாராயணன் என்னும் தேவன் நமக்கு நாதனாக இருக்கும்போது,
சில கிராமங்களுக்கு மட்டுமே தலைவன் ; சொற்பப் பணத்தைக் கொடுப்பவன்; தரக் குறைவான மனிதன் —இவனிடம்,
ஸேவாயை ம்ருகயாமஹே —-வேலை கொடுங்கள் என்று கெஞ்சி அலைகிறோமே —நாம், எவ்வளவு மூடர்கள் -அற்பர்கள்

———

மதந பரிஹர ஸ்திதிம் மதீயே
மனஸி முகுந்த–பதாரவிந்த —தாம்நி |
ஹர–நயந –க்ருஸா நுநா க்ருஸோஸி
ஸ்மரஸி ந சக்ர பராக்ரமம் முராரே ||–29-

மன்மதா! முகுந்தனின் திருவடிகள் என் மனத்தில் வசிக்கின்றன —நீ என் மனத்தில் இருங்காது நீங்கி விடு.
நீ, ஏற்கெனவே சிவபிரானின் நெற்றிக் கண்ணால் அழிந்திருக்கிறாய்;
முராரியின், சக்ராயுதத்தின் பராக்ரமத்தை நினைவு படுத்திக் கொள்ளவில்லையா ?

————

தத்த்வம் ப்ருவாணானி பரம் பரஸ்மாத்
மது க்ஷரந்தீவ ஸதாம் பலாநி |
ப்ராவர்த்தய ப்ராஞ்ஜலிரஸ்மி ஜிஹ்வே
நாமாநி நாராயண கோசராணி ||–30-

தன்னுடைய நாக்கைக் கை கூப்பி வணங்குகிறார்.
நாக்கே, உன்னை நமஸ்கரிக்கிறேன் . நாராயணனின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே இரு.
அந்தத் திருநாமங்கள் உயர்ந்தவைகளில் உயர்ந்ததான தத்வங்களைக் கூறுகின்றன.
தேனைப் பொழிகின்றன. நல்லவர்கள் விரும்புகின்ற பலன்களும் அவையே

——————-

இதம் ஸரீரம் பரிணாம பேஸலம்
பதத்ய வஸ்யம் ஸ்லத–ஸந்தி –ஜர்ஜரம் |
கிமௌஷதை: க்லிஸ்யஸி மூட துர்மதே
நிராமயம் க்ருஷ்ண –ரஸாயநம் பிப ||–31-

ஹே—மூடனே….இந்த சரீரம் ,வயதால் முதிர்ச்சி அடைந்து, இளைத்து, பூட்டுகள் தளர்ந்து, நிச்சயம் அழியப்போகிறது.
துர்மதே—-துர்புத்தியே ! இந்த சரீரத்தைக் காப்பாற்ற, பற்பல மருந்துகளை ஏன் சாப்பிடுகிறாய் ?
க்ருஷ்ண ரஸாயனம் பிப—-ஸ்ரீ கிருஷ்ணன் என்கிற திருநாமத்தை உச்சரிக்கின்ற மிக உயர்ந்த மருந்தைப் பானம் செய்

—————–

தாரா வாராகர வரஸுதா தே தநூஜோவிரிஞ்சி :
ஸ்தோதா வேதஸ்தவ ஸுர குணோ ப்ருத்ய வர்க்க : ப்ரஸாத :
முக்திர் மாயா ஜகத விகலம் தாவகீ தேவகீ தே
மாதா மித்ரம் வலரிபுஸுதஸ் –த்வய்யதேந்யந்த ஜாநே ||–32-

க்ருஷ்ணா….உன்னுடைய பத்னி, திருப்பாற்கடலில் உதித்த மஹாலக்ஷ்மி என்பதை அறிவேன்.
உனது தனயன், பிரம்மா என்பதை அறிவேன்
உன்னைத் துதிப்பது, வேதங்கள் என்பதை அறிவேன்
உனது வேலைக்காரர்கள், தேவர்கள் என்பதை அறிவேன்
உனது மாயை உலகம் என்பதை அறிவேன்
உனது தாயார் ,தேவகி என்று அறிவேன்
உனது சிநேகிதன் இந்திரனின் புத்ரனான அர்ஜுனன் என்பதை அறிவேன்
அத: அந்யத் ந ஜாநே —இவற்றைக்காட்டிலும் வேறு ஒன்றும் உன்னைப் பற்றி அறியேன்

—————–

க்ருஷ்ணோ ரக்ஷது நோ ஜகத்ரய குரு : க்ருஷ்ணம் நமஸ்யாம்யஹம்
க்ருஷ்ணேநாம ரஸத்ரவோ விநிஹதா:க்ருஷ்ணாய துப்யம் நம : |
க்ருஷ்ணாதேவ ஸமுத்திதம் ஜகதிதம் க்ருஷ்ணஸ்ய தாஸோஸ்ம்யஹம்
க்ருஷ்ணே திஷ்டதி ஸர்வமேததகிலம் ஹே க்ருஷ்ண ரக்ஷஸ்வ மாம் ||–33-

ஜகத்ரய குரு :க்ருஷ்ண :ந : ரக்ஷது —உலகத்துக்கெல்லாம் ஆசார்யனான ஸ்ரீ கிருஷ்ணன் நம்மை ரக்ஷிப்பானாக
அஹம் க்ருஷ்ணம் நமஸ்யாமி —-அடியேன் ஸ்ரீ கிருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன்
கிருஷ்ணனால் தேவர்களின் விரோதிகள் அழிக்கப்பட்டனர்;
க்ருஷ்ணாய துப்யம் நம:—-க்ருஷ்ணனான உனக்கு நமஸ்காரம்
இந்த உலகமெல்லாம், ஸ்ரீ க்ருஷ்ணனிடமிருந்து தோன்றியது;
அஹம் க்ருஷ்ணஸ்ய தாஸ :—அடியேன் க்ருஷ்ண தாஸன்.
எல்லாமே க்ருஷ்ணனிடத்தில் நிலை பெற்று இருக்கிறது.ஹே, கிருஷ்ண ! மாம் ரக்ஷஸ்வ —ஹே, க்ருஷ்ணா ,
அடியேனைக் காப்பாற்று

————–

தத்த்வம் ப்ரஸீத பகவந் ! குரு மய்ய நாதே
விஷ்ணோ ! க்ருபாம் பரம காருணிக : கில த்வம் |
ஸம்ஸார —ஸாகர –நிமக்ந –மநந்த தீநம்
உத்தர்த்துமர்ஹஸி ஹரே !புருஷோத்தமோஸி ||–34-

ஹே, பகவானான விஷ்ணுவே !அநந்த ஹரே —-முடிவே இல்லாத ஹரியே நீ, புருஷர்களில் சிறந்தவன் புருஷோத்தமன்.
பரம காருணிகன் –கருணைக்கடல் . அடியேன் பிறவிக் கடலில் மூழ்கியவன்; தீனன் ;
அடியேனைக் கரை ஏற்றத் தகுந்தவன்;அப்படிப்பட்ட நீ, அடியேனுக்கு அருள் புரிவாயாக

————–

நமாமி நாராயண பாத பங்கஜம்
கரோமி நாராயண –பூஜநம் ஸதா |
வதாமி நாராயண –நாம நிர்மலம்
ஸ்மராமி நாராயண –தத்வ மவ்யயம் ||–35-

எப்போதும், அடியேன் ஸ்ரீ நாராயணனின் திருவடித்தாமரைகளையே வணங்குகிறேன் .
ஸ்ரீமந்நாராயணனைப் பூஜிக்கிறேன் நாராயண நாமத்தைச் சொல்கிறேன் .
அழிவே இல்லாத, நாராயணன் என்னும் தத்வப் பொருளையே ஸ்மரிக்கிறேன்

———-

ஸ்ரீநாத நாராயண வாஸுதேவ
ஸ்ரீக்ருஷ்ண பக்த ப்ரிய சக்ரபாணே |
ஸ்ரீ பத்மநாபாச்யுத கைடபாரே
ஸ்ரீ ராம பத்மாக்ஷ ஹரே முராரே ||–36-

லக்ஷ்மிபதியே , நாராயணனே , வாஸுதேவனே , க்ருஷ்ணா , பக்தப்ரியா , சக்ரபாணியே , பத்மநாபனே ,
அச்யுதனே ,கைடபனை அழித்தவனே ( ஸ்ரீ ஹயக்ரீவா), ஸ்ரீராமா , தாமரைக் கண்ணனே , ஹரியே ,முராரியே-

————-

அநந்த வைகுண்ட முகுந்த க்ருஷ்ண
கோவிந்த தாமோதர மாதவேதி |
வக்தும் ஸமர்த்தோபி ந வக்தி கஸ்சித்
அஹோ ஜநாநாம் வ்யஸநாபி முக்யம் ||–37-

அநந்தா , வைகுந்தநாதா , முகுந்தா, க்ருஷ்ணா , கோவிந்தா, தாமோதரா , மாதவா,—–
இப்படியெல்லாம், சொல்வதற்கு ஸமர்த்தோபி—சாமர்த்யம் இருந்தும், ஜனங்கள் ,
உலக விஷயங்களில் ஊன்றி இருக்கிறார்களே—-என்ன ஆச்சர்யம் !

————-

த்யாயந்தி யே விஷ்ணுமநந்தமவ்யயம்
ஹ்ருத்பத்ம —மத்யே ஸததம் வ்யவஸ்திதம் |
ஸமாஹிதாநாம் ஸததாபயப்ரதம்
தே யாந்தி ஸித்திம் பரமாஞ்ச வைஷ்ணவீம் ||–38-

பகவான் ஸ்ரீவிஷ்ணு முடிவே இல்லாதவர்; ஹ்ருதயத் தாமரையில் எப்போதும் நிலையாக வீற்றிருப்பவர்;
ஐம்புலன்களையும் அடக்கியவருக்கு, எப்போதும் அபயம் அளிப்பவர்; அப்படிப்பட்ட
ஸ்ரீ மஹாவிஷ்ணுவை, த்யானம் செய்பவர்கள் மிக உயர்ந்ததும் ,சாச்வதமுமான ,
வைஷ்ணவீம் ஸித்திம் —உயர்ந்த லோகமான ஸ்ரீ வைகுந்தத்தை அடைவார்கள்.

———–

க்ஷீரஸாகர —தரங்க –ஸீகரா ஸார
தாரகித —சாரு –மூர்த்யே |
போகீபோக —ஸயநீய –ஸாயிநே
மாதவாய –மதுவித்விஷே நம : ||–39-

திருப்பாற்கடலில் ஆதிசேஷனின் திருமேனியில் பள்ளிகொண்டு பாற்கடலின் அலைத்துளிகள் , நக்ஷத்ரங்கள் போலப்
பட்டுத் திருமேனியை அலங்கரிக்கிற ஸ்ரீமந்நாராயணனும்,
மது என்னும் அரக்கரை அழித்தவரும் , ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் நாதனுமான( மாதவன்) ஸ்ரீமந் நாராயணனுக்கு நமஸ்காரம்

—————

யஸ்ய ப்ரியௌ ஸ்ருதிதரௌ கவிலோக வீரௌ
மித்ரே த்விஜந்மவர -பாராஸவா –வபூதாம் |
தேநாம்புஜாக்ஷ –சரணாம்புஜ —ஷட்பதேந
ராஜ்ஞா க்ருதா க்ருதிரியம் குலஸேகரேன ||–40-

தாமரைக் கண்ணனின் திருவடித் தாமரைகளில் வண்டு போன்ற ஸ்ரீ குலசேகர மன்னருக்கு, ப்ரியமானவர்களும்,
கேள்வி ஞானம் உள்ளவர்களும் கவிகளில் சிறந்தவர்களும் வீரர்களும் –
அந்தண -மிஸ்ர வர்ணத்தில் இரு நண்பர்களாக இருந்தார்களோ ,அந்தக் குலசேகர மன்னரால்,
இயம் க்ருதி : க்ருதா —-இந்த ஸ்தோத்ரம் செய்யப்பட்டது.

———

கும்பே புனர்வஸு பவம் கேரளே கோள பட்டணே
கௌஸ்துபாம்ஸம் ஸம்தராதீசம் குலசேகரமாஸ்ரயே

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ குலசேகராழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வேதங்களும் ஸ்ரீ வேதாந்தங்களும் -ஸ்ரீ உபநிஷத்துக்கள் சுருக்கம் —

April 9, 2021

வேதம் – அநாதியானது
அதாவது ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. இதை ஒருவரும் இயற்றவில்லை. மஹரிஷிகளால் த்யானத்தில்
காணப்பட்டவை வேதம். இந்த மஹரிஷிகள்”மந்த்ர த்ரஷ்டா ”எனப்பட்டனர். வேதம் ”அபௌருஷேயம்” எனப்படும்.
அதாவது
ஒருவராலும் இயற்றப்படாதது. உலகில் வேறு எந்த நூலோடு கூடவும் ஒப்பிட இயலாதது. ஏனெனில் வேதம் ஆரம்பமும்,
முடிவும் இல்லாதது. இது எப்போது தோன்றியது என்பதை வரையறுத்து சொல்லவும் இயலாது. பகவானின் மூச்சுக்காற்று
என்று சொல்லப்படுவதால், பகவானைப் போலவே வேதமும் ஒருவராலும் தோற்றுவிக்கப்படாதது. வேதம் மிக கவனமாக பல
லட்சக்கணக்கான ஆண்டுகளாக முன்னோர்களால் எழுத்துப் பிசகாமல், ஸ்வரம் பிசகாமல் மனனம் பண்ணி, வழிவழியாக,
இப்போதுள்ள தலைமுறை வரை கொண்டு வந்திருப்பது வேறு எங்கும் காணாத, கேட்கப்படாத விந்தை. உலகத்தில் மிகமிகப்
பழமையானவை ‘வேதங்கள்”.
வேதத்தில் தர்மத்தைச் சொல்லும் பாகம் ”ஸம்ஹிதை”.
தத்வத்தைச் சொல்லும் பாகம் ”உபநிஷத்” அல்லது ”வேதாந்தம்”.
வேதத்தை ”ஸ்ருதி” என்றும் சொல்வர்.
ஆசார்யன் உபதேசிக்க சிஷ்யன் கேட்க, பிறகு, அந்த சிஷ்யன் தன் சிஷ்யனுக்கு அல்லது சிஷ்யர்களுக்குச் சொல்ல
இப்படி வேதம், வழி வழியாகச் சொல்லப்பட்டது. தமிழில் இதை ”எழுதாக் கிளவி” என்று சொல்வர்.

க்ருஷ்ண த்வைபாயநர் – அச்வத்தாமா

ஒவ்வொரு த்வாபரயுகத்திலும் விஷ்ணுவின் அம்சமாக ஒரு ரிஷி ”வ்யாஸர்” என்கிற பெயருடன் தோன்றி வேதத்தை
ஒழுங்குபடுத்துகிறார். இது 28வது சதுர்யுகம். இந்த யுகத்தில். ”க்ருஷ்ண த்வைபாயனர்” என்கிற ரிஷி வ்யாஸராக அவதரித்து
வேதங்களை ஒழுங்குபடுத்தினார்.
அடுத்து வரும் த்வாபரயுகத்தில் த்ரோணாரின் புத்ரர் ”அச்வத்தாமா” (இவர் சிரஞ்சீவிகளில் ஒருவர்) வ்யாஸராகத்
தோன்றி, வேதங்களை ஒழுங்குபடுத்துவார் என்று சாஸ்த்ரக்ஞர்கள் கூறியுள்ளனர்.
வேதம் என்பது ஸ்வர்க்கம், பசு, புத்ரன் முதலிய இஷ்டத்தை அடைவதற்கும், நரகம் முதலிய
அநிஷ்டத்தை அடையாமல் இருப்பதற்கும் உபாயத்தை, லோக ரீதியில் இல்லாததான ஒரு விஷயத்தைச் சொல்கிறது;.
யாகம்,ஹோமம், தானம், த்யானம் – இவை தர்மங்கள்.
இவைகளுக்கு ப்ரமாணமாக இருப்பது—_மூலமாக இருப்பது ”வேதம்”. இதை ”வேதோமீ கில தர்ம மூலம்” என்று சொல்வர்.
இப்படி வேதத்தின் அருமை, பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். இது பாரத நாட்டின் பொக்கிஷம்,
கலியுகத்தில், மனிதர்கள் மந்த புத்தி உடையவர்களாக இருப்பர் என்று வ்யாஸர் (க்ருஷ்ணத்வைபாயனர்) வேதத்தை நான்காக
பிரித்தார் என்று பொரியோர்கள் சொல்வார்கள்

வேதங்களை அத்யயனம் செய்ய ”ஸ்வரம்” முக்கியம். இதை ஐந்து விதமாக அத்யயனம்/ பாராயணம் செய்வார்கள்.

பாராயண முறை விவரம்
(1) வேத மந்த்ரங்களை சந்தி சேர்த்து பாராயணம் செய்தல்– இது ”மூலஸம்ஹிதை” எனப்படும்.
(2) வேத மந்த்ரங்களைப் பதம் பதமாக பிரித்து அத்யயனம் செய்தல் – இது ”பதஸம்ஹிதை” எனப்படும்
(3) ஒரு பதத்தை முன்னும், பின்னும் சொல்லுதல் (உ.ம்:அக்னிம் ஈளே, ஈளே ப்ரோஹிதம், ப்ரோஹிதம்
யஜ்ஞஸ்ய, யஜ்ஞஸ்ய தேவம், தேவம் ரித்விஜம் —இப்படி ) இது ”க்ரம ஸம்ஹிதை” எனப்படும்.
(4) பதங்களைச் சேர்த்து சேர்த்து மறுபடியும் பிரித்துச்சொல்லுதல் (உ.ம்: .அக்னிம் ஈளே, ஈளே அக்னிம்,அக்னிம் ஈளே, ஈளே ப்ரோஹிதம்,
ப்ரோஹிதம் ஈளே,ஈளே ப்ரோஹிதம், ப்ரோஹிதம் யஞ்ஞயஸ்ய,யஞ்ஞயஸ்ய ப்ரோஹிதம் இப்படி) – இது”ஜடஸம்ஹிதை” எனப்படும்.
(5) கடினமாக அத்யயனம் செய்தல் (உ.ம்: அக்னிம் ஈளே, ஈளே அக்னிம், அக்னிம் ஈளே ப்ரோஹிதம், ப்ரோஹிதம் அக்னிம் ஈளே,
அக்னிம் ஈளே ப்ரோஹிதம், ஈளே ப்ரோஹிதம், ஈளே, ஈளே ப்ரோஹிதம், யஞ்ஞஸ்ய ப்ரோஹிதம் -இப்படி) இது ”கனம்” எனப்படும்

———

ஸ்ரீ வேதாந்தங்கள்-ஸ்ரீ உபநிஷத்துக்கள்

இவற்றில் முக்கியமானவை
1. ஈசோபநிஷத்
(ஈசாவஸ்ய உபநிஷத்)
2. கேநோபநிஷத்
3. கடோபநிஷத்
4. ப்ரச்னோபநிஷத்
5. முண்டக உபநிஷத்
6. மாண்டூக்ய உபநிஷத்
7. தைத்திரீய உபநிஷத்
8. ஐதரேய உபநிஷத்
9. சாந்தோக்ய உபநிஷத்
10. ப்ருஹதாரண்யக உபநிஷத்
இவற்றின் சுருக்கம் ”ப்ருஹ்ம ஸூத்ரம் ” . வ்யாஸர் இயற்றியது. 545 ஸுத்ரங்கள்

மேற்சொன்ன, பத்து உபநிஷத்துக்களுடன்கூட,
(11)ச்வேதாச்வதர உபநிஷத்
(12) அதர்வசிர உபநிஷத்
(13) அதர்வசிகோ உபநிஷத்
(14) கௌஷீதகி உபநிஷத்
(15) மந்த்ரிகோபநிஷத்
(16) ஸூபாலோபநிஷத்
(17)அக்நி ரஹஸ்யம்
(18) மஹோபநிஷத் –

———-

வேதமும் உபநிஷத்தும் கங்கை.
பாஞ்சராத்ர நூல் -யமுனை.
ஆழ்வார் அருளிச் செயல்கள் – சரஸ்வதி நதியைப் போல.
ஆக விசிஷ்டாத்வைதம் ”த்ரிவேணி வைஷ்ணவம்” எனப்படுகிறது.

————-

வேதாங்கங்கள் – ஆறு
1.சிக்ஷை 2. வியாகரணம் 3. சந்தஸ் 4. நிருக்தம் 5.ஜ்யோதிஷம் 6.கல்பம்

1) சிக்ஷை – பாணினி, நாரதர் முதலியவர்களால் செய்யப்பட்டது என்று சொல்வர். 32 சிக்ஷைகள் கிடைத்துள்ளதாகவும்,
இதில் சப்தங்களின் அக்ஷரங்கள், மூன்று ஸ்வரங்கள், இவற்றைச் சரியாக உச்சரிக்கும் விதம் சொல்லப்பட்டுள்ளது என்றும் சொல்வர்.

2) வ்யாகரணம் – இது இலக்கணம். அனுமானை நவ வ்யாகரண பண்டிதன் என்று புகழ்வார்கள்.
வ்யாகரணம். ஸமஸ்க்ருத மொழிக்கும், வேதத்துக்கும் முக்யமானது

3) சந்தஸ் – வேத மந்திரங்களின் மாத்திரை. ; உச்சரிப்பு,உச்சரிக்கும்போது உள்ள ஏற்ற, இறக்கம் சந்தஸ்எனப்படுகிறது.

4) நிருக்தம் – வேதச் சொற்களைப் பிரிக்கும் விதம் இதில் சொல்லப்படுகிறது. அரிய பதங்களின் அர்த்தங்களும்
நிகண்டுவும் இதில் உள்ளன. பாஸ்கர முனிவரால் செய்யப்பட்டது தற்போது வழக்கத்தில் உள்ளது.

5) ஜ்யோதிஷம் – வானஇயல் என கருதப்படுகிறது. வானசாஸ்த்ரமும் இதில்சொல்லப்படுகிறது. ஜ்யோதிஷத்துக்கு சம்பந்தப்பட்டது
வானவியல். இதில் வைதீக கர்மாக்களை செய்ய வேண்டியகாலம், பலன் விசாரிக்கப்படுகிறது.
ஸுர்யன், மற்றும் க்ரஹங்களைப் பற்றிய கணித சாஸ்த்ரம் உள்ளது.

6) கல்பம் – வேதங்களில் சொல்லும் கர்மாக்களை ”கல்பம்” சொல்கிறது.
காத்யாயனர், ஆச்வலாயனர், போதாயனர் – இவர்கள் அருளிய கல்பஸுத்ரங்கள் புகழ் பெற்றவை

உப அங்கங்கள் (உபாங்கங்கள்)
(வேதத்திற்கு உப அங்கமாக ஆறு ரிஷிகள் அருளியவை
1. சாங்கியம் 2. யோகம் 3.மீமாம்ஸம் 5.ந்யாயம் 6 வைசேஷிகம்

1. சாங்கியம் – ஸ்ரீ கபில முனிவர் அருளியது. 25 தத்வங்கள் இதில் சொல்லப்படுகின்றன. பஞ்ச அங்க யோகத்தால்,
ஞானத்தை அடையலாம் என்றும் சொல்லப்படுகிறது.

2. யோகம் – ஸ்ரீ பதஞ்சலி முனிவர் இயற்றியது.இவர் இருபத்து மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகச் சொல்வர்
யோகஸுத்ரம் என்கிற நுhலை இயற்றியிருக்கிறார்-ஸம்ஸ்க்ருதத்திற்கு மஹா பாஷ்யம் என்கிற இலக்கணமும் இயற்றியிருக்கிறார்
யோகத்தில்194 ஸுத்ரங்கள் உள்ளன.-=மனஸ், உடல், ஆத்மா இவைகளை யோகம் செய்து நெறிப்படுத்தி பகவானுக்கு அர்ப்பணிப்பதைப் பற்றிச்
சொல்கிறது. இது ”யோகஸித்தி” எனப்படுகிறது.
யோகஸுத்ரத்தில் 185 பழமொழிகள் வாக்யங்களாக உள்ளன.
இதில் நான்கு பிரிவுகள் உள்ளன அவை சமாதி, ஸாதனா, விபூதி, கைவல்யம் (மோக்ஷம்) எனப்படும்

3. மீமாம்ஸம் (பூர்வ மீமாம்ஸம்) – ஜைமினி முனிவர் அருளியது.12 காண்டங்கள் 60 அத்யாயங்கள் வேதத்தில் உள்ள தத்வ விசாரணைகள் இதில் உள்ளன.

4. மீமாம்ஸம் (உத்தர மீமாம்ஸம்) – இது வேதாந்தம் எனப்படும்.ஸ்ரீ வியாஸ முனிவர் அருளியது. இது வேதங்களின் ஸாரம்.
இது ”ப்ருஹ்ம ஸுத்ரம் ” என்றும் சொல்லப்படும். 4 அத்யாயங்கள் உள்ளன. ஒவ்வொரு அத்யாயத்துக்கும் 4பாதங்கள்.
ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் இதற்கு பாஷ்யம் (உரை) எழுதியுள்ளார். இது ”சாரீரக மீமாம்ஸை” எனப்படுகிறது.
பகவத்ஸ்ரீ ராமனுஜரின் உரை ”ஸ்ரீ பாஷ்யம்” எனப்படுகிறது.
ஸ்ரீ மத்வாச்சாரியாரும் உரை எழுதியிருக்கிறார்.

5. ந்யாயம் – வேதத்தில் சொல்லப்பட்டவைகளைக் கடைந்து அதிலிருந்து எடுக்கப்பட்டவை ”ந்யாயம்” , 537 ஸுத்ரங்கள் உள்ளன.
”ந்யாயத்தை”அறிய 16 வழிகளைச் சொல்கிறது
(1) ப்ரமாணம் (2) ப்ரமேயம் (3) ஸம்சயம் (4) ப்ரயோஜனம்
(5) உதாரணம் (6) சித்தாந்தம் (7) அவயவம் (8) தர்க்கம்
(9) நிர்ணயம் (10) வாதம் (11) ஜல்பம் (12) விதண்டாவாதம்
(13) ஹேத்வபாஸம் (14) தந்த்ரம் (15) ஜோதி
16) நிக்ரஹஸ்தானம்

6. வைசேஷிகம் – ஸ்ரீ கணாத முனிவர் அருளியது. உலகில் உள்ள எல்லாப் பொருள்களின் குண ஆராய்ச்சி ஸம்பந்தமானது.
இவை ஆறு 1) த்ரவியம் – இது 9 பிரிவு –
அவையாவன – மண், ஜலம், தேஜஸ், வாயு, ஆகாயம், காலம், திசை, ஆத்மா, மனம்
2) குணம் – இது த்ரவியத்துடன்சேர்ந்தது. 24 பிhpவுகள் உள்ளன.
அவை ரூபம் , ரஸம், கந்தம்,பரிசம், சங்க்யை, பரிமாணம், பிரிதல், சம்யோகம், வியோகம்,முன்னிலை, பின்னிலை, புத்தி,ஸுகம், துக்கம்,
த்வேஷம்,முயற்சி குருத்வம், ஸ்நேஹம், சப்தம், வேகம், திரவத்வம், விருப்பு, வெறுப்பு, அடக்கம் – ஆக 24.
3) கர்மம் (வினை)
4)சாமான்யம் (த்ரவ்யம், குணம் கர்மத்திலே சேரும். இது உயர்வு, தாழ்வு என்று இரண்டு வகை)
5) விசேஷம் (கடைசியாக மீதமாகும் இரண்டு அணுக்களின் நிலை)
6) ஸமவாயம்(கர்த்தா, செயல், அணு , அண்டம் – இவற்றின் ஆராய்ச்சி) –

”ருக்” வேதத்திலிருந்து ஆயுர்வேதமும்
”யஜூர்” வேதத்திலிருந்து தனுர்வேதமும்
”ஸாம” வேதத்திலிருந்து கான வேதமும்
”அதர்வண” வேதத்திலிருந்து அர்த்த வேதமும் (அர்த்தசாஸ்த்ரம் – ஆட்சிக்கலை) தோன்றியது என்று சொல்வர்.

இப்படி மிக முக்கியமானதாக உள்ள உபநிஷத்துக்களை, ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீ ப்ரஹ்ம ஸுத்ரம் இவைகளுடன் சேர்த்து
”ப்ரஸ்தான த்ரயம்” என்று சொல்வர்.

———

1 – ஈசாவாஸ்ய உபநிஷத்

இது குரு, சிஷ்யனுக்கு உபதேசம் செய்வதைப் போல அமைந்துள்ளது. 18 மந்த்ரங்கள் இந்த உபநிஷத்தில் இருக்கின்றன.
இதன் சுருக்கம் –
குரு, சிஷ்யனுக்கு உபதேசம்
பகவான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான். வெளிப்புறக் காட்சிகளைக் கண்டு மயங்காமல், உள்ளே இருக்கும் பகவானை
த்யானம் செய்வதில் வைராக்யம் இருக்க வேண்டும். அதே சமயம், கர்மாக்களையும் செய்தல் வேண்டும். எல்லாவற்றிலும்
வ்யாபித்து, எல்லாவற்றையும் நியமித்து, எல்லாவற்றிற்கும் ஆத்மாவாக பகவான் இருக்கிறான். ஆதலால் எல்லாமே
பகவானுக்குச் சரீரம். எல்லாக் கல்யாண குணங்களும் நிறைந்தவன் பகவான். பகவானை அடைய தனியான கர்மமோ,
தனியான ஞானமோ போதாது. ஸத்கர்மாக்களைச் செய்து கொண்டே இருந்து, வினைகளைப் போக்கிக் கொண்டு, நல்ல
ஞானம் வரப்பெற்று மோக்ஷம் அடைய வேண்டும்.
இதற்கு பக்தி அல்லது ப்ரபத்தி வழி.
இதில் 18 மந்த்ரங்கள் உள்ளன. இந்த 18மந்த்ரங்களின் விசேஷத்தை விவரிப்பது தான் ஸ்ரீமத் பகவத்கீதையின்
18 அத்யாயங்கள். ஈசன் வாஸம் பண்ணுகிற விஷயத்தைச் சொல்வதால் ”ஈசாவாஸ்யம்” எனப்பட்டது.

————-

2 – கேநோபநிஷத்து

இது சிஷ்யன் கேள்வி கேட்கும் ரூபமாய் அமைந்துள்ளது.
சிஷ்யன் –
மனது தன் இஷ்டப்படி சஞ்ரிக்கிறது. இப்படியே கண், காது, வாக்கு தம்தம் கார்யங்களைச் செய்கிறது.
இது யாருடைய கட்டளையால்?

ஆசார்யன் –
ப்ராணனுக்கும் ப்ராணனாய், நீ சொன்ன எல்லாவற்றிற்கும் சக்தியை அளித்து, பகவான் இயக்குகிறான்.
அவன் அனுக்ரஹத்தாலே ஒவ்வொரு அவயவமும், வேலை செய்கிறது. எவ்வளவு தெளிவாக பகவானின் செயலை நீ அறிய
முயன்றாலும், ஒரு ”திவலை” அளவுதான் தெரிந்து கொண்டவன் ஆவாய். பகவானை நான் நன்கு அறியேன் என்று
வணக்கத்துடன் சொல்பவனே, பகவானை அறிந்தவன் ஆவான்.-தேவர்களே கூட பகவானை முழுமையாக அறிந்தவரில்லை.
இதற்கு ஒரு உபாக்யானம் (கதை) உள்ளது.

பகவான் தன்னுடைய பக்தர்களான தேவர்கள் மீதுள்ள அன்பினால் அஸுராதிகளை ஜெயிக்கிறான். ஆனால் தேவர்கள்,
தாங்களே அஸுராதிகளை ஜெயிப்பதாக கர்வம் கொண்டனர்.
இந்தக் கர்வத்தை அழிக்க, பகவான் திருவுள்ளம் கொண்டான்.
உடனே பரப்ரம்மம் (பகவான்) யக்ஷரூபமெடுத்து அவர்கள் எதிரில் நின்றது. அவர்களுக்கு இது யாரென்று தெரியவில்லை.

தேவர்கள், அக்னி தேவனைப் பார்த்து இந்த ”யக்ஷன்” யாரென்று தெரிந்து கொண்டு வா என்றார்கள்,
அக்னி தேவன் யக்ஷனிடம் வந்தான். யக்ஷன் நீர் யாரென்று கேட்க
அக்னிதேவன் தன் பெருமை எல்லாவற்றையும் சொன்னான். உன்னுடைய வீர்யம்
எப்படிப்பட்டது என்று யக்ஷன் கேட்க எல்லாவற்றையும் ஒரு நொடியில் எரித்து விடுவேன் என்று அக்னி தேவன் சொன்னான்.
பரப்ரம்மம் ஒரு புல்லை எடுத்து எதிரில் வைத்து அக்னியைப் பார்த்து இதை எரித்து விடு என்றது. அக்னி, வெகு துரிதமாகவும்,
முழு ஆற்றலோடும் முயன்றும் அந்தப் புல்லை எரிக்க முடியவில்லை. இவன் யாரென்று தெரியவில்லை என்று
அக்னிதேவன் திரும்பி விட்டான்.

தேவர்கள் வாயு தேவனை யக்ஷனிடம் அனுப்பினார்கள்.
யக்ஷன், உன் பலம் எப்படிப்பட்டது என்று கேட்க,
வாயுதேவன், நான் எல்லாவற்றையும் என் ஆற்றலால் தூக்கி எறிந்து விடுவேன் என்றான்.
பரப்ரம்மம் இந்தப் புல்லை எடுத்துச் செல் என்றது. வாயுதேவன் தன்னுடைய சக்தியை எல்லாம் ப்ரயோகித்தும் புல்லை அசைக்க
முடியவில்லை. வாயுதேவனும் திரும்பி விட்டான்.
இவர்கள் இருவரும் பூமி, அந்தரிக்ஷம், ஸ்வர்க்கம் என்ற மூன்று உலகங்களுக்கும் ப்ரதான தேவதைகள் இவர்களால் முடியவில்லை.

மூன்றாவது ப்ரதான தேவதையான இந்த்ரனை தேவர்கள் அனுப்பினார்கள். இப்போது பரப்ரம்மம் மறைந்து விட்டது.
இந்திரன் திகைத்து நின்றான். அச் சமயம் ஆகாயத்தில் ஸர்வாபரண பூஷிதையாய் ஒரு ஸ்த்ரி தோன்றினாள்.
அவள் பார்வதி தேவி.
இந்த்ரன் அவளிடம் , ”யார் அந்த யக்ஷன்” என்று கேட்டான்.
”இந்திரனே, அது யக்ஷனல்ல! பரப்ரம்மம்.பரப்ரம்மத்தின் அனுக்ரஹம் இல்லாவிடில் உங்களால் ஒரு அணுவைக் கூட அகற்ற முடியாது.
உங்கள் கர்வத்தை விட்டு பரப்ரம்மத்தின் பெருமையை உணருங்கள்! என்று பார்வதி சொன்னாள்.
இந்திரன், இந்த உண்மையை எல்லாத் தேவர்களுக்கும் எடுத்துச் சொல்லி கர்வத்தை ஒழித்தான்.

பரப்ரம்மம் அனந்த கல்யாண குணங்களை உடையது.
வேத, வேதாங்கங்களை அத்யயனம் செய்து, ஸத்யஸந்தர்களாக இருப்பவர்களுக்கு ப்ரஹ்மஜ்ஞானம் கூடி வரும்.
நல்ல ஒழுக்கம், இந்த்ரியநிக்ரஹம், தபஸ் உள்ளவர்களுக்கு, ப்ரம்மவித்யை நிலையாக நிற்கும்.
இந்த வித்யையைப் பெற்றவர்கள், பகவான் வீற்றிருக்கும் உலகிற்குச்சென்று உயர்ந்த புருஷார்த்தத்தை அடைவர் என்று சொன்னார்.

இதில் நான்கு காண்டம்.
”கேந” என்கிற சொல்லைக் கொண்டு தொடங்குவதால் இது ”கேநோபநிஷத்து” எனப்பட்டது.

————

3 – கடோபநிஷத்து

இது க்ருஷ்ண யஜூர் வேதத்தில் உள்ளது.
”கடசாகை”யைச் சேர்ந்த உபநிஷத். ”கடா” என்பவரைச் சார்ந்த சாகை கடசாகை. இதில் நசிகேதஸ் உபாக்யானம் உள்ளது.
இது தைத்திரீய ப்ராம்மணத்திலும் (3-11-8) உள்ளது. மஹா பாரதத்தில் உள்ளது சிறிது வேறுபடும்.
இந்த உபநிஷத்தில் ”வல்லி” என்கிற பிரிவுகள் ஆறு உள்ளன. மும் மூன்றாக இரண்டுஅத்யாயங்கள் உள்ளன.

வாஜச்ரவஸர் (கௌதமர் என்றும் சொல்வர்) என்கிற மஹரிஷி தன் சொத்துக்களை எல்லாம் தக்ஷிணையாக கொடுத்து ஒரு யாகம் செய்தார்.
மிகவும் வயது முதிர்ந்த பசுக்களைத் தானம் செய்ய முற்பட்டபோது இவர் குமாரரான நசி கேதஸ், தந்தை இப்படித் தானம் செய்வதால்
(ஒன்றும் உபயோகப்படாத பசுக்களை) இருள் சூழ்ந்த உலகில் அல்லவோ வசிக்க நேரிடும் என்கிற தர்ம சாஸ்த்ரத்தை உணர்ந்து அதற்காக வருந்தி
தந்தையிடம் தன்னையே தானம் செய்யும்படி ஒரு தரத்துக்கு மூன்று தரம் வேண்டினான்.
தந்தைக்குக் கோபம் வந்து ”உன்னை யமனுக்குத் தானம் பண்ணுகிறேன்” என்று சொன்னார்.
நசிகேதஸ்,தந்தையின் வாக்கைச் சத்யமாக்க யம லோகம் செல்லப் புறப்பட்டான்.
வாஜச்ரவஸர் வருத்தம் மேலிட்டு, யமன் தன்னுடைய க்ருஹத்தில் இல்லாத சமயமாக பார்த்து நசிகேதஸ் என்கிற குமாரனை
யம லோகத்துக்குச் செல்ல அனுமதித்தார்.

அப்படியே யமனுடைய உலகத்தில் அவனுடைய க்ருஹத்துக்குச் சென்ற நசிகேதஸ், யமன் க்ருஹத்தில் இல்லாததால், அவன்
வீட்டிற்கு திரும்பும் வரை வீட்டு வாசலிலேயே காத்திருந்தான்.-மூன்று நாட்கள் அன்ன, ஆகாரமின்றி பட்டினியுடன் காத்திருந்தான்
யமன் வந்ததும் அதிதியான ப்ராம்மணச் சிறுவன் பட்டினியுடன் இருப்பதை அறிந்து அதற்கு பிராயச்சித்தமாக மூன்று வரங்களை கொடுப்பதாகவும்,
வரங்களை கேட்க வேண்டும் என்றும், நசிகேதஸைக் கேட்டுக் கொண்டான்.

நசி கேதஸ் கேட்ட முதல் வரம் – தன்னுடைய தந்தை துயரம் நீங்கி தன்னை அனுக்ரஹிக்க வேண்டும் என்றும், 2வது வரமாக
வயோதிகம், மரணம் இவை இல்லாத ஸ்வர்க்கமான மோக்ஷத்தை அடைய, அக்னி விஷயமாக ஹோமத்தைச் செய்யும் விதத்தைச்
சொல்ல வேண்டும் என்று கேட்டான்.-இந்த இரண்டு வரங்களும் யமனால் அருளப்பட்டன.
மூன்றாவது வரமாக இறந்தவனுடைய உண்மை நிலையை, ஆத்ம தத்துவத்தைச் சொல்லுமாறு கேட்டான். யமன் இந்த
விவரத்தை உடனே சொல்லாமல் பலவிதங்களில் நசிகேதஸ்ஸை, பரீக்ஷை செய்துவிட்டு பிறகு சொன்னான்.

”ஜீவாத்மா” பிறப்பு, இறப்பு அற்றவன். உடல் அழியுமே தவிர ஜீவாத்மா அழியாது. ஜீவாத்மா, பரமாத்மா இருவரும் ஹ்ருதயத்தில் இருக்கின்றனர்.
ஜீவாத்மாவுக்கு உடம்பு-ஒரு ரதம்.
புத்தி – ஸாரதி. மனது – கடிவாளம்.
புலன்கள் – குதிரைகள்.
விஷயங்கள் – அவற்றின் புலங்கள்.
இவற்றைக் கொண்டு ஜீவன், சுக துக்கங்களை அனுபவிக்கிறான். அறிவுள்ளவன் இவற்றை தக்கவாறு பயன்படுத்தி பகவானை அடைகிறான்.
பரமாத்மாவை அடைவதே ”ஸ்ரேயஸ்”.
ஹ்ருதயத்தில் பகவானை உபாஸிக்க வேண்டும்.

ஹ்ருதயத்தில் பகவானை உபாஸிக்க வேண்டும். வேர் மேலாகவும், கிளைகள் கீழாகவும், உள்ள இந்த ஸம்சாரம் என்கிற மரத்தில்,
எல்லாம் பகவானின் இஷ்டப்படி நடக்கிறது. கண்ணால் காணமுடியாத பகவானை மனத்தினால் காண,யோகத்தில் நிலை பெற வேண்டும்.
பலவகை நாடிகளும் தலையில் உள்ள ”ஸுஷும்நா ” நாடி வழியாகச் செல்ல அப்போது ஜீவனும் சென்று பகவானின் இருப்பிடம் சென்று விளங்குவான்.
பகவானை உபாஸித்து அவனுக்கு அடிமையாக பரமபதத்தில் ஸுகானுபவம் பெற்று வாழ்வான் என்று யமன் சொல்லி முடித்தான்.
கடோபநிமூத்தில் மிக விவரமாக இது சொல்லப்படுகிறது.

—————-

4 – பிரச்னோபநிஷத்து

இதில் 6 ப்ரச்னங்கள். ”ப்ரச்னம்” என்றால் கேள்வி.
ஒவ்வொரு ப்ரச்னமும் ஒரு மஹரிஷியின் கேள்வியாக அமைந்து அதற்கான பதிலை விளக்குகிறது.
ஸுகேசர், சைப்யர்,ஸெளர்யாயணி, கௌஸல்யர், பார்க்கவர், கபந்தி என்று ஆறுரிஷிகளும்,
பிப்பலாத மஹரிஷியை அணுகி, ஒரு வருட காலம் தபஸ், ப்ரம்மச்சர்யம், ச்ரத்தை இவைகளுடன் இருந்து
மஹரிஷியிடம் கேள்விகள் கேட்டுத் தெளிவு பெறுகின்றனர்.

ஒவ்வொரு மஹரிஷியின் கேள்வியும், மஹரிஷியின் பதிலும் சுருக்கமாகத் தரப்படுகிறது.

1-முதலில் கபந்தி – ப்ரஜைகள் எங்கிருந்து பிறக்கின்றன?
பிப்பலாதர் –
ப்ரஜாபதியானவர், ப்ரஜைகளை ச்ருஷ்டிக்க எண்ணி,”ரயி”, ”ப்ராணன்” என்ற இரண்டையும் ச்ருஷ்டித்தார்.
”ப்ராணன்” என்பது ஜீவ சமஷ்டி .”ரயி” என்பது அதற்கு உடலாக இருக்கின்ற ப்ரக்ருதி.
ஸ்ருஷ்டிக்கும் பகவானே, ஸம்வத்ஸரம், மாஸம், நாள் என்று கால ரூபமாக இருக்கிறான்.
தக்ஷிணாயனத்தின் வாயிலாக சில ப்ரஜைகள் சந்திரலோகம் (ஸ்வர்க்கம்) சென்று பலனை அனுபவித்து திரும்புகின்றனர் (மறுபடியும் பிறவி)
இவர்கள் கர்மானுஷ்டானத்திலேயே நோக்கம் உள்ளவர்கள்
வித்யையை அனுஷ்டித்து ஆத்மாவை அறிந்தவர் உத்தராயணம் வாயிலாக ஸுர்ய மண்டலம் சென்று
மறுபடியும் திரும் பமாட்டார்கள்.
த்ரிகரண சுத்தியும், தபஸ்ஸ@ம், ப்ரஹ்மசர்யமும் உள்ளவர்களுக்கு ப்ரக்ருதி மண்டலத்துக்கு மேலேயுள்ளது ப்ரஹ்மலோகம்.

2 – பார்க்கவர் கேட்பது –
ப்ரஜைகளின் உடம்பைத் தாங்குபவர் எவர்?
ப்ரகாசப்படுத்துகிறவர் எவர்?
இவர்களில் யார் சிறந்தவர்?

பிப்பலாதர் பதில் –
பஞ்சபூதங்களும், இந்திரியங்களும் உடம்பைத் தாங்குகின்றன. இதில் ப்ராண வாயு சிறந்தது. இதை நிரூபித்தும்
ப்ராண வாயு மற்ற இந்த்ரியங்களுக்கு உணர்த்தியது.
வாக்கு, கண், மனசு, காது போன்றவை. ப்ராணனைப் பலவாறு புகழ்ந்தன.
இந்த ஸ்தோத்ரம் இங்கு விவரமாகச் சொல்லப்பட்டுள்ளது ).

3 – கௌசல்யரின் கேள்வி –
இந்த ப்ராணவாயு எங்கிருந்து பிறக்கிறது?
எப்படி உடலில் வந்து சேருகிறது?
எவ்வாறு தன்னைப் பிரித்துக் கொள்கிறது?
எந்த வழியாக வெளியே கிளம்புகிறது?
உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் எப்படி இருந்து வருகிறது?

பிப்பலாதர் பதில் –
பரமாத்மாவிடமிருந்து (பகவான்) ப்ராண வாயு பிறக்கிறது. ஒவ்வொருவர் உருவத்திற்கும் நிழல் இருப்பதைப்
போல, ஜீவனின் உடலில் சேர்ந்து( ப்ரவேசித்து) மனசும் மற்ற இந்த்ரியங்களும் பிரியாதபடி இருக்கிறது.
முகபாவத்தில் இருக்கிறது. ஹ்ருதயத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கீழ் இந்த்ரிய ஸ்தானத்தில் ”அபானன்” என்கிற பெயராலும்,
ஹ்ருதய நாடித்துடிப்பில் ”வ்யானன்” என்கிற பெயராலும்,
பாப புண்ய பலன் பெறும் நாடியில் – ”உதானன்” என்கிற பெயராலும்,
வயிற்றில் அக்னியாக ”ஸமானன்” என்கிற பெயராலும்,ப்ராணவாயு வசிக்கிறது.

கீழ் இந்தீரிய ஸ்தானம் – அபானன் – ஸுர்யன்
வயிற்றில் – ஸமானன் – பூமி
ஹ்ருதயத்தில் வ்யானன் – ஆகாயம்
புண்ய, பாப நாடித் துடிப்பில் – உதானன் – வாயு
முக்ய ப்ராணன் – தேஜஸ்
இப்படி பஞ்ச பூதங்களுக்கு சம்பந்தப்படுத்துவர்.

(அதனால்தான் ஆகாரம் உட்கொள்ளும் முன்பாக ப்ராணாஹுதி என்று ப்ராணாயஸ்வாஹா , அபாநாயஸ்வாஹா ,
வ்யாநாயஸ்வாஹா , உதானாயஸ்வாஹா , ஸமாநாயஸ்வாஹா , ப்ரஹ்மணேஸ்வாஹா … என்று துளி சாதம் எடுத்துக் கொண்டு
பல்லில் படாமல் ஒவ்வொரு மந்த்ரத்தையும் சொல்லி சாப்பிடுகிறோம்).

4. ஸெளர்யாயணி முனிவர் கேள்விகள் –
தூங்கும்போது உடலில் எவை வேலை செய்கின்றன?
எவை வேலை செய்யாமல் உள்ளன?
ஸ்வப்னம் காண்பது எப்படி?
எதற்கு சுகம் உண்டாகிறது?
எல்லாம் எங்கே தங்கி நிற்கின்றன?

பிப்பலாதர் பதில் –
உறங்கும்போது எல்லா இந்த்ரியங்களும் மனத்தில் லயிக்கின்றன. அப்போது ப்ராண, அபான, வாயுக்கள் வேலை செய்கின்றன.
அப்போது ப்ராணன் (ஜீவன் என்று பொருள் கொள்க), மனசை உடலிலேயே பரப்ரம்மம் உள்ள இடத்திற்கு கொண்டு செல்கிறது.
அப்போது வழியில் கண்டது, கேட்டது, எப்போதோ அனுபவித்தது, அனுபவிக்காதது, இருப்பது,
இல்லாதது எல்லாம் ஸ்வப்னத்தில் – ஸ்வப்ன அனுபவத்தில் வருகிறது.
தேஜஸ் (பராமாத்மா)ஸினால் தாக்கம் ஏற்பட்டு ஸ்வப்னமும் போய் சுகத்தை ஜீவன் அனுபவிக்கிறது.
எல்லாம் இப்படி தன்னிடத்தில் லயித்து இருக்கும்போது ஜீவன், பரமாத்மாவிடம் தங்கி நிற்கிறான்.
இப்படி உபாசிப்பவன் எல்லாவற்றையும ;அறிந்தவன் ஆவான்.

5 – சைப்யரின் கேள்வி –
ப்ரணவத்தை சாகும் வரை உபாஸிப்பவன் பெறும் உலகம் எது?

பிப்பலாதர் பதில் –
ஒற்றை மாத்ரை உள்ள ப்ரணவத்தை உபாஸிப்பவன் தபஸ், ப்ரஹ்மச்சர்யம், ஆஸ்திக்யம், என்ற
செல்வங்களுடன் உயர்ந்ததை அனுபவிப்பான்.
இரண்டு மாத்திரைஉள்ள ப்ரணவத்தை உபாஸிப்பவன் ஸ்வர்க்க லோகம் வரை(சந்திர லோகம்) சென்று நல்ல
அனுபவங்களை அனுபவித்து திரும்புவான்.
மூன்று மாத்ரை கொண்ட ப்ரணவத்தினாலே, பரமான ப்ரஹ்மத்தை உபாசிப்பவன், எல்லா பாபமும் போய்
பயத்தையும் போக்குகின்ற பரமபுருஷனைக் கண்ணாலே காண்பான்.

6 – ஸுகேசர் கேள்வி –
ஷோட சகல புருஷன் யார்?
எங்கு உள்ளான்?

பிப்பலாதர் பதில் –
பதினாறு கலைகளுக்கு புருஷன். இந்த உடலிலேயே இருக்கிறான். சிந்தனை செய்து ப்ராணன், ச்ரத்தை,
5 பூதங்கள், இந்த்ரியம், மழை, அன்னம், வீர்யம், தபஸ், மந்த்ரம், கர்மம், பலன், பேர் என்கிற பதினாறையும் அமைத்துக்
கொண்டால் இந்த ஜீவனுக்கும் மேலானவன் ப்ரம்மம் – பரமாத்மா என்று அறிவான்.
16 கலைகளும் ஜீவனிடம் அடங்கியுள்ளன.
இப்படி அறிந்தவனுக்கு ம்ருத்யு பயம் இல்லை. பொதுவாக ப்ராண வாயு முக ஸ்தானம் என்றும், இதுவே கீழ் இந்திரிய
ஸ்தானத்தில் அபான வாயு (அபானன்), வயிற்றில் அக்னி இருக்குமிடத்தில் ஸமானன், ஆத்மாவின் இருப்பிடமான
ஹ்ருதயத்தில் ஆயிரக்கணக்கான நாடிகளில் வ்யானன், புண்யத்தினால் பெறப்படும் புண்ய லோகம், பாவத்தின் பலனாக
பெறப்படும் பாப லோகம், இரு வினைகளின் பயனாக மனித உலகத்தையும் பெற வழியாக உள்ள நாடிகளில் உதானன் என்றும்
ப்ராண வாயு தன்னை பிரித்துக் கொண்டு இயங்குவதாக சொல்லப்படுகிறது.

————-

5 – முண்டகோபநிஷத்து

ப்ரஹ்மா, எல்லா வித்யைகளுக்கும் ஆதாரமான ”ப்ரஹ்ம வித்யை”யை, தன் மூத்த குமாரரான அதர்வர் என்பவருக்கு உபதேசித்தார்.
இந்த வித்யை அங்கீர், பாரத்வாஜர், ஸத்யவாஹர் வழியாக ”அங்கிரஸுக்கு” வந்தது.
சௌநகர் என்கிற ரிஷி ,அங்கிரஸை அணுகி
”எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்ததாகும்?” எனக் கேட்டார். அதற்குரிய விளக்கம் தான்—-முண்டகோபநிஷத்து.

”பரை”, ”அபரை” என்கிற இரண்டு வித்யைகளை அறிய வேண்டும்.
அபரை என்பது வேதங்களும் அவற்றின் அங்கங்கள் உபாங்கங்கள். இவற்றை அர்த்தத்துடன் அத்யயனம் செய்து
அடையப்படும் தெளிவான ப்ரஹ்ம ஞானமே அபர வித்யை (உலக வாழ்க்கைக்கு பயன்படும் பலவகையான
கல்விகளைச் சொல்வது என்றும் சொல்லப்படுகிறது).

”பரை” – என்பது அழிவே இல்லாத பர ப்ரஹ்மத்தைப் பெற வழியாக உள்ள ஸாக்ஷாத்காரம். இது ஜ்ஞானிகளுக்கு உரியது.

ப்ரஹ்மத்திற்கு உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால்,
தன் த்ரேகத்திலிருந்து நூல் உண்டாக்கி அதனால் கூடு ஒன்று செய்து அதில் இருக்கும் ”ஊக்ணநாபி” என்கிற சிலந்திப் பூச்சியே.
நித்ய கர்மாக்களை விடாமல் செய்தால் ப்ரஹ்ம லோகம் வரையிலுள்ள பலன்கள் எல்லாம் கர்மம் செய்வதாலேயே வந்து சேரும்.

பரமபுருஷன் – பகவான் என்று அறிந்து அனுஷ்டான பரர்களாக இருப்பவர்கள் ஸுர்ய மண்டலம் வழியாக பகவானின் உலகத்தை அடைவர்.
காம்யங்களை விட்டு, நித்ய கர்மாக்களை விடாமல் செய்து வேத வேதாந்த ஞானமுள்ள குருவை அடைந்து அவர் மூலம் ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்.

ப்ரணவம் என்கிற வில்லில் ஜீவாத்மா என்கிற அம்பை உபாஸனையால் கூர்மை யாக்கி வில்லில் தொடுத்து, ப்ரஹ்மம் என்ற இலக்கில் எய்ய வேண்டும்.
இதுதான் மோக்ஷத்திற்கு உபாயம். இப்படிப்பட்ட மோக்ஷ ராஜ்யத்திற்கு உரியவனான பகவான் ஹ்ருதயத்திலும் இருக்கிறான்.
இதை அறிந்தவன் த்வேஷம், வினைகள் எதுவும் இல்லாதவனாக ஆகிறான்.

உடல் ஒரு வ்ருக்ஷம். இதில் இரண்டு பக்ஷிகள் உள்ளன. ஒன்று வ்ருக்ஷத்தில் உள்ள பழங்களை சாப்பிடுகிறது
இன்னொரு பக்ஷி எதுவும் சாப்பிடாமல் ஒளியுடன் உள்ளது.
கர்மானுஷ்டானன் ப்ரஹ்ம வித்யை செய்யத் தகுந்தவன். ப்ரஹ்ம வித்யையை அனுசரிப்பவனை ஆராதிப்பவனுக்கு ஸர்வ லோகமும் பயன்.

ஸ்ரீ பாஷ்யத்தில் சொல்லப்பட்ட விவேகம், விமோகம், அப்யாஸம், க்ரியை, கல்யாணம், அனவஸாதம், அனுத்தர்ஷம் ஆகிய ஏழும் வேண்டும்.

1) விவேகம் – சாஸ்த்ர சம்பந்தமான சுத்தமான ஆஹாரத்தை எடுத்துக் கொண்டு வாழ்தல்.
2) விமோகம் – பற்றற்று இருப்பது.
3) அப்யாஸம் -பக்திக்கு இலக்கான பகவானையே சிந்தனை செய்வது.
4) க்ரியை – வைதீக கர்மானுஷ்டானம்.
5) கல்யாணம்- சத்யம், முக்கரணங்களுடன் (மனோ, வாக்கு,காயம்) ஒத்திருப்பது. தயை – நன்கொடை, அஹிம்சை – பிறருக்கு துன்பம் நினைக்காமை என்பன.
6) அனவஸாதம் – சோர்வில்லாமல் இருப்பது.
7) அனுத்தர்ஷம் – அதிக மகிழ்ச்சிக்கு ஆளாகாமல் இருத்தல்.

பக்தி யோகம் செய்ய இவை எல்லாமும் வேண்டும். இதனால் பகவானை அடையலாம்.

இந்த உபநிஷத் மூன்று பிரிவாக உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு கண்டங்கள்.

————-

6 – மாண்டூக்யோபநிஷத்து

ஆறு கண்டங்கள். இது ப்ரணவத்தில் உள்ள அக்ஷரங்களைப் பிரித்துச் செய்யப்படும் உபாஸநத்தைப பற்றிச் சொல்கிறது.
இந்த அக்ஷரங்களை வைச்வாநரன், தைஜஸன், ப்ராஜ்ஞன் – என்றிப்படி உபாஸிக்க வேண்டும்.
ஜீவனுக்கு விழிப்பு,ஸ்வப்நம், உறக்கம், மோக்ஷம் என்று நான்கு நிலைகள் உள்ளன.
ஒவ்வொரு நிலைக்கும் ஒரு மூர்த்தி.
இம் மூர்த்தி ஸ்ருஷ்டி, ஸ்திதி,வ்யாபாரங்களுக்குக் காரணன்.
சாந்தமாக இருப்பது நான்காவது மூர்த்தி. அதுவே ஆத்மா.
வைச்வாநரன் – அநிருத்தனையும்,
தைஜஸன் – ப்ரத்யும்நனையும்,
ப்ராஜ்ஞன் – ஸங்கர்ஷணனையும்,
துரீயன் – வாஸுதேவனையும் குறிக்கும்.
(உபநிஷத் பாஷ்யகாரர்–ப்ரஹ்மஸுத்ரத்தில் உபயலிங்க அதிகரணத்தில் விவரம் உள்ளது).

ஜீவனின் மூர்த்தி வ்யூஹம் குணங்கள்–நிலை

விழிப்பு வைச்வாநரன் அநிருத்தன் சக்தி,தேஜஸ் –(ஜாக்ரந் மூர்த்தி) ரக்ஷணம் – அறிவு
ஸ்வப்னம் தைஜஸன் ப்ருத்யும்னன் ஐச்வர்யம்,(ஸ்வப்னமூர்த்தி) வீர்யம்,ஸ்ருஷ்டி, தர்மம்
உறக்கம் ப்ராஜ்ஞன் ஸங்கர்ஷணன் க்ஞானம், பலம்(ஸஷுப்த ஸம்ஹாரம் மூர்த்தி) சாஸ்த்ரப்ரசாரம்
மோக்ஷம் வாசுதேவன் வாஸுதேவன் (மூர்ச்சாமூர்த்தி)

*முதல் வ்யூஹம் – வாஸுதேவன் என்றும், மொத்தம் நான்கு வ்யூஹங்கள் என்றும் சொல்வர். மூலவாஸுதேவனை –
பரவாஸுதேவன் என்றும், இந்த முதல் வ்யூஹ வாஸுதேவனை வ்யூஹ வாஸுதேவன் என்றும் சொல்வர்.
வ்யூஹ வாஸுதேவன் எல்லாவற்றிற்கும் பொது.
விழித்திருப்பவன் – எல்லாவற்றையும் செய்கிறான். ஸ்வப்னத்தில் உடலின் செயல் இல்லை.

ஜீவன் செய்யும் த்யானத்திலும் நான்கு நிலை:
1) வெளிவிஷயங்களிலே ஈடுபட்டுக் கொண்டே பகவானை சிந்தித்தல் – ஜாக்ரத் த்யானம்
2) வெளி விஷயங்கள் இல்லாமல், மனஸ் மட்டும் வெளிவிஷயங்களில் பற்றைவிடாமல்——பகவத்சிந்தனை—–ஸ்வப்ந த்யானம்
3) வெளிவாஸனையோடுமட்டும் கலப்புண்ட சிந்தனை——ஸுஷுப்தி த்யானம்
4) எல்லாமும் விலக பகவத் த்யானம் மட்டுமே இருப்பது—-மூர்ச்சா த்யானம்

பகவானின் லீலா விபூதியில் (உலகங்களையெல்லாம், ஜீவன்களை எல்லாம் படைத்துக் காத்து அழிக்கும் விளையாட்டில்)
ஸ்ருஷ்டி, ஸ்திதி ஸம்ஹாரங்களில் வாஸுதேவ மூர்த்தியிடமிருந்து ஸங்கர்ஷண மூர்த்தி,
அதனின்று ப்ரத்யும்னமூர்த்தி, அதனின்று அநிருத்தமூர்த்தி தோன்றுகிறது.

ஸங்கர்ஷணன் – ஜீவ தத்துவத்திற்கு அபிமானி.
ப்ரத்யும்னன் -மனஸ்ஸுக்கு அபிமானி.
அநிருத்தன் அஹங்காரத்திற்கு அபிமானி.

மோக்ஷ ஆசை யுள்ளவர்கள் முதலில் அநிருத்தன், பிறகு ப்ரத்யும்னன், பிறகு ஸங்கர்ஷணன் அதன் பிறகு வாஸுதேவ உபாஸனம் செய்ய வேண்டும்.

ப்ரணவத்திற்கு வ்யூஹ மூர்த்தி விஷயமாக விவரித்துச் சொல்லப்படுகிறது.
அதர்வ வேதத்தைச் சேர்ந்த பிப்பலாத சாகையில் உள்ள ப்ரச்னோபநிஷத்து, முண்டக சாகையில் உள்ள முண்டகோபநிஷத்து,
மண்டூக சாகையில் உள்ள மாண்டோக்ய உபநிஷத்து இவை பிரஸித்தி பெற்றவை.

ஆத்மாவின் பதங்கள் நான்கு.
வைச்வாநரன், தைஜஸன், ப்ராஜ்ஞன், துரீயன்.
ஜீவனுடைய நான்கு அவஸ்தைகள்
விழிப்பு,ஸ்வப்னம், ஸுஷுப்தி மோக்ஷம்.-இந்த நான்கு அவஸ்தைகளை (நிலைகளை) நிர்வஹிப்பது நான்கு மூர்த்திகள் என்று சொல்லப்படுகிறது.

————-

7. தைத்திரீயோபநிஷத்து

கிருஷ்ண யஜூர்வேதம் – தைத்திரீய சாகை – ஆரண்யகத்தில் ஐந்தாவது, ஆறாவது ப்ரச்னம் என்பதாக தைத்திரீயோபநிஷத்து உள்ளது.

ஐந்தாவது (முதல் ப்ரச்னம்) – சீக்ஷா வல்லி, ஆனந்த வல்லி என்கிற ப்ரஹ்ம வல்லி, ப்ருகு வல்லி என்று மூன்று பிரிவுகள்.

ஐந்தாவது, ஆறாவது ப்ரச்னங்கள், ஸாம்ஹிதி உபநிஷத்,வாருணீ உபநிஷத் , யாஜ்ஞிகீ உபநிஷத் என்றும் மூன்றாகப் பிரிப்பர்.

சீக்ஷாவல்லிக்கு ஸாம்ஹிதீ உபநிஷத் என்றும், ஆனந்த வல்லியும், ப்ருகுவல்லியும் – ஆனந்தமயமான ப்ரஹ்ம வித்தையைச் சொல்வதால் ஸைஷா ,
பார்கவீ, வாருணீ வித்யா என்று சொல்லப்பட்டதற்கு இணங்க
வாருணீ உபநிஷத் என்றும் நாராயண உபநிஷத் – யாஜ்ஞகீ உபநிஷத் என்றும் சொல்லப்படுகிறது .

வேதாங்கங்களில் கூறப்படும் சிக்ஷையைச் சொல்வதால், சீக்ஷாவல்லி என்றும், ஆநந்தமய வித்யையைச் சொல்வதால் ஆனந்த வல்லி என்றும்,
”ப்ரஹ்மவித் ஆப்நோதிபரம்…..” என்ற ப்ரஹ்மசப்தத் தொடக்கத்தாலே ”ப்ரஹ்மவல்லி” என்றும் சொல்வர்.
இது வாருணீ உபநிஷத்தின் முன் பகுதி. பின் பகுதியானது ப்ருகுவுக்கு அவர் பிதாவான வருணன் உபதேசித்தது”ப்ருகுவல்லி.”

யக்ஞன் என்கிற நாராயணன் என்கிற மஹரிஷியால் ஸக்ஷாத்கரிக்கப்பட்டிருப்பதால், ”யாஜ்ஞகீ” என்றும், நாராயண உபநிஷத் என்றும் சொல்வர்.
நாராயணாநுவாகம் நடுநாயகமாக இதில் உள்ளது.
பகவான் நாராயணனையும், அவனை ஆராதிக்கும் முறையையும் சொல்கிறது. இது முக்யமானது.

சீக்ஷாவல்லி

வேதத்திற்கு அங்கமானவை ஆறு. அவற்றில் ஒன்று சிக்ஷை.
இதில் வர்ணம், ஸ்வரம், ஹ்ரஸ்வதீர்க்காதி மாத்ரை. உச்சரிப்புக்கு வேண்டிய ப்ரயத்ன பலம் (வலிமை) ஸாமஸம்ஹி தை எனப்படும்
ஸந்தானம் – இவைகள் இதில் உள்ளன.-ஸம்ஹிதை என்பது இணைப்பு,-இணைப்பதற்கு இரண்டு வேண்டும்.
பூர்வ ரூபம்,உத்தரரூபம், ஸந்தி, ஸந்தானம் என்ற நான்கு வஸ்துக்களில்
லோகம், ஜோதி, வித்யா, ப்ரஜை , சாரீரம் இவை ஸம்பந்தமாகச் சொல்லி இவற்றைச் சொல்பவருக்கு மக்கள், பசுக்கள்,
வேதார்த்தஜ்ஞானம், அன்னம், ஸ்வர்க்கம் போன்ற பலன்கள் சொல்லப்பட்டது.
ப்ரணவத்தைச் சொல்லி, அதனால் அறிவு, ஆரோக்யம், பேசும் ஆற்றல், காதுக்கு வன்மை வேண்டப்பட்டது.
பூ:, புவ:, ஸுவ: என்றமூ_ன்று வ்யாஹ்ருதிகள். அத்துடன் ”மஹ ” சேர்த்து நான்கு உபாஸனங்கள் சொல்லப்பட்டது.
உபாஸன பலனாக, பகவானைத் தியானித்து ஹ்ருதய நாடி மூலம் சிரசில் கபாலத்தை பிளந்து அக்னிலோகம்,
வாயுலோகம், ஸுர்ய லோகம் இவற்றில் தங்கி ப்ரஹ்மத்திடம் சேர்ந்து பேரானந்தத்தை அனுபவிப்பது சொல்லப்பட்டது.
பிறகு பங்க்தி, ஐந்து ஐந்தாக சொல்லப்பட்டது. துர்க்குணங்களை ஒழித்து ஸத்வ குணத்தை வளர்த்து தபஸ் செய்தல் – ”ந்யாஸம்”
என்கிற தபஸ் சொல்லப்பட்டது. முக்யமாக வேதரஹஸ்யம் சொல்லப்பட்டது.

ஆநந்தவல்லி

பகவானிடமிருந்து பஞ்சபூதங்களும் ஓஷதிகளும், அன்னமும், அன்னத்தின் மூலம் உடலும் பிறக்கின்றன.
எல்லாரும் அன்னத்தால் போஷிக்கப்படுகிறார்கள். அன்னம் உயர்ந்தது.
அன்னமய உடலில், ப்ராணமய ஆத்மா. இதற்கு ப்ராணன் தலை; வ்யானன் வலப்பக்கம்; அபானன் இடப்பக்கம்;
வாயு நடுவுடல்; பூமி ஆதாரம்; ப்ராணனே ப்ரஹ்மம்.

இதற்கு மேல் மனோமயம். யஜூர்வேத சிந்தனம் தலை; ருக்வேத சிந்தனம் வலப்பக்கம்; ஸாமவேத சிந்தனம் இடப்பக்கம்;
ஆசார்யர்களின் ஆக்ஞை நடுவுடல்; அதர்வ வேத சிந்தனம் ஆதாரம்.
இப்படி உபாஸிப்பதால் மனதிற்கு எட்டாத பேரானந்தம் கிடைக்கும். இதற்கு மேல் விஞ்ஞானமயம். ஜீவன் இதற்கு
(அறிவுகள் சக்தி – அவயவங்கள். ச்ரத்தை. அநித்ய வஸ்துவின் அநுபவம், நித்ய வஸ்துவின் அநுபவம். யோகம், சக்தி –அவயவங்கள்)
இப்படி உபாஸித்தால் உடலிலிருந்து வெளியே வரும் போது எல்லா பாபங்களையும் போக்கி எல்லாவற்றையும் அடையலாம்.

இதற்கு மேல் ஆனந்த மயம்.
ப்ரியம் – தலை; மோதம் -வலப்பக்கம்; ப்ரமோதம் – இடப்பக்கம் ;
ஆனந்தம் – நடுவுடல் ;ப்ரஹ்மம் – ஆதாரம்.
சிறந்த ஸுகஅனுபவம்.
இதை இப்படி உபாஸிப்பவன் பெறும் ஆனந்தம் அளவிட இயலாதது .

மானுஷ ஆனந்தம் – நல்ல ஆரோக்யத்துடன், யுவாவாய் இருக்கும்போது சிஷ்யர்களுக்கு நன்கு உபதேசித்துச்
செல்வத்துடன் இருக்கும்போது பெறும் ஆனந்தம்.

இதைப் போல் நூறு மடங்கு – மனுஷ்ய கந்தர்வர்களின் ஆனந்தம். தேவகந்தர்வர்கள், பித்ருக்கள், தேவலோக வாசிகள்,
இந்த்ரன், ப்ருஹஸ்பதி, ப்ரஹ்மா வரை ஆனந்தத்தை நூறு நூறாகப் பெருக்கி சதுர்முகாநந்தம் நூறு கொண்டது,
பரப்ரஹ்மத்தின் ஆனந்தம் என்று சொல்கிறது. இவ்வளவாக மோக்ஷம் அடைந்து, பரப்ரஹ்மத்தை அடைவது சொல்லப்படுகிறது.

ப்ருகுவல்லீ

வருணர் – தன் குமாரனான ப்ருகுவுக்கு சொன்னது.

ப்ரஹ்மம் என்பது அன்னம், ப்ராணன், கண், மூக்கு, மனஸ், வாக்கு, பிறகு ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் இப்படி உபாஸிப்பது –
இதுதான் ப்ரஹ்மம் என்றார்.
கடைசியில் பிதாவின் உபதேசப்படி தபஸ் செய்து ஆனந்தமயமே
ப்ரஹ்மம் என்று ப்ருகு தெளிந்தான்.
இதில் ”விசிஷ்டாத்வைத”ப்படி மோக்ஷம் விளக்கப்படுகிறது

இரண்டாம் ப்ரச்னம் – நாராயணோபநிஷத்

திருப்பாற்கடலிலும், ஸுர்ய மண்டலத்திலும், பரமபதத்திலும் உள்ளவன்.
ஸர்வந்தர்யாமி.
எல்லாவற்றையும் படைத்து, காத்து,அழிப்பவன்.
எல்லாவற்றிலும் ஆராதிக்கப்படுபவன் என்று
பலவாறாக துதிக்கிறது நாராயணோபநிஷத்து.

திருப்பாற்கடலிலும், ஸுர்ய மண்டலத்திலும், பரமபதத்திலும் உள்ள ஸர்வந்தர்யாமி
இதில் அக்னி, ருத்ரன், விநாயகர், கருடன், துர்க்கை, நாராயணன் இவர்களைப் பற்றிய மந்த்ரங்கள் உள்ளன.
அகமர்ஷ ண ஸுக்தம் – ஸ்நானம் செய்யும் முறை, அபிகமன காலம் வரை செய்பவை சொல்லப்படுகின்றன.
ப்ரம்மோபாஸனம் சொல்லப்படுகிறது.

மதுஸுக்தம், க்ருதஸுக்தம் உள்ளது. ஸாத்விக த்யாகம் சொல்லப்படுகிறது.
தஹர வித்யை, மோக்ஷ வித்யை, பர வித்யைகளாலே உபாசிக்கப்படுபவன் என்கிறது.
ஸுர்ய மண்டலத்திலே பகவானை உபாசிக்கும் விதம் சொல்லப்படுகிறது.

உபாதான கால விவரம், ஆராதனம் இவைகள் கோடி காட்டுகிறது.
ஹிரண்ய கர்ப்ப ஸுக்தம், மேதா ஸுக்தம், த்ரி ஸுபர்ண ப்ரஹ்ம ஸுக்தம் இதில் உள்ளன.

ஸன்யாஸ,ஹோம மந்த்ரங்கள் சொல்லப்படுகின்றன–ஸத்யம், தபஸ், தமம்,சமம், தானம், தர்மம், பிரஜநனம், அக்னி,
அக்னிஹோத்ரம்,யஜ்ஞம், மாநஸம் இவைகளைச் சொல்லிக் கடைசியாக ”ந்யாஸத்தை”ச் சொல்கிறது.
இதுவே ப்ரபத்தி.

ப்ரபத்தி செய்து கொள்பவன் மீண்டும் பிறப்பதில்லை.
ப்ரணவத்தைக் கொண்டு ஜீவனை , பகவானிடம் சமர்ப்பிக்கும் தேவ ரஹஸ்யம் என்பது சொல்லப்படுகிறது.

தைத்திரியோபநிஷத்தில் உள்ள மஹா நாராயணோபநிஷத்”
பர தத்துவத்தைச் சொல்கிறது.

இதற்கு இரண்டு ப்ரச்னங்கள்.
முதல் ப்ரச்னத்தில் சீக்ஷாவல்லி, ப்ருகுவல்லி, ஆனந்தவல்லி.
இரண்டாவது ப்ரச்னத்தில் ”யாஜ்ஞிகி உபநிஷத்”.

—————————

தைத்திரியோபநிஷத்

இது மூன்றாக உள்ளது.
(1) ஸாம்ஹிதி உபநிஷத் (சீக்ஷாவல்லி),
(2) வாருணி உபநிஷத் (ப்ருஹ்ம வல்லி, ஆனந்த வல்லி)
(3) யாஜ்ஞிகி உபநிஷத் (ப்ருகுவல்லி)

பரவித்யாவின் அங்கம் – பூர், புவஸ், ஸுவ: என்கிற வ்யாஹ்ருதி த்ரயம் (பூர், புவ:, ஸுவ:மூன்று) நாலாவது வ்யாஹ்ருதி – மஹ

இந்த நாலாவது வ்யாஹ்ருதி – முதல் மூன்று வ்யாஹ்ருதிக்கு சரீரம்.
இந்த சரீரத்திற்கு ஆத்மா பரப்ருஹ்மம்.
இதற்கு ”வ்யாஹ்ருத் உபாசனை” என்று பெயர்.
இதைச் செய்பவனுக்கு ”ப்ரஹ்ம வித்யை” ஸித்திக்கிறது.

உபாஸனா | பூ | புவ: | ஸுவ: | மஹ :

1. லோகோபாஸனா | உலகம் | அந்தரிக்ஷம் | ஸ்வர்க்கம் | ஆதித்யன்
2. தேவதோபாஸனா | அக்னி | வாயு | ஆதித்யன் | சந்த்ரன்
3. வேதோபாஸனா | ருக் | ஸாமம் | யஜூர் | ப்ரஹ்ம| (ப்ரணவம்)
4. ப்ராணோபஸனா | ப்ராணன் |அபானன் |வ்யானன் | அன்னம்

இப்படி ப்ரஹ்ம வித்யை ஸித்திக்கும் உபாஸகன் தனது ஹ்ருதயாகாசத்தில் உள்ள அழகிய, அழிவற்ற ஒரு புருஷனை
உபாசித்து வாயினுள், அடி நாக்கின் மேலே” தாலுகை” எனப்படும்.
நடுவில், பசுவின் காம்பு போல் தொங்கும் ஒருவகை மாமிச பிண்டத்தின் உள் வழியாகச் சென்று, தலையின் ரோம வேர்களை
அடைந்து, பின் மண்டையோட்டை விலக்கிக் கொண்டுச் செல்லும்” ஸுஷும்னா” என்கிற நாடியின் வழியாக
அக்னி, வாயு,மற்றும் ஆதித்ய லோகங்களை அடைந்து, ப்ரஹ்மத்தை அடைந்து, கர்ம பந்தஹீனன் ஆகையாலே
அப்ராக்ருத சரீர இந்த்ரியங்களை தன் விருப்பப்படி பெற்று, நித்ய ஸூரிகள் அனுபவிக்கும் எல்லையில்லாப் பேரானந்தத்தை அனுபவிக்கிறான்.

————-

தைத்திரிய நாராயண உபநிஷத்

இப்போது நடப்பது, ஸ்வேதவராஹ கல்பம்.
இது முடிந்ததும் நைமித்திக ப்ரளயம். அப்போது ஸுர்ய மண்டலம் நாசம்.
ஒரு வஸ்துவை அறிய வேண்டிய ஜ்ஞானம் – தர்ம பூத ஜ்ஞானம் எனப்படும். நித்ய முக்தர்களுக்கு இது அளவில்லாதது.
பாபத்தை போக்கக்கூடிய வருணனுக்கு ”அகமர்ஷணன்” என்று பெயர். அகமர்ஷண ஸுக்தம் என்றால் எல்லா பாபங்களையும்
போக்குவதற்காக ஜபிக்கப்படும் மந்த்ரம் என்று அர்த்தம்.

பரமாத்மாவிடமிருந்து உண்டான வஸ்துக்கள்.

(1) ஏழு இந்த்ரியங்கள் (மனஸ், புத்தி, ஐந்து ஜ்ஞானேந்த்ரியங்களான கண், காது, மூக்கு, தோல், நாக்கு)
(2) ஏழு அக்னிகள் – ஆவஹனீயம், கார்ஹ பத்யம், தக்ஷிணாக்னி, ஸப்ய, ஆவஸத்ய, ப்ராஜஹித,அக்னிர்த்ராஹா ::
(3) ஏழு ஸமித்துக்கள் (மரங்கள் – அச்வத்த, உதும்பல, பலாச, ஸமீ, விகங்கத, அசனீ, புஷ்கரபர்ன)
(4) அக்னிக்கு ஏழு நாக்குகள் (காயீ, கராலீ, மனோஜவ, சுநீசுதா, சுதாம்பரவர்ணா, ஸ்ப்ரிலிங்கிணீ, விஸ்வரூபி)
(5) ஏழு லோகங்கள் – பூலோக, புவர், ஸுவர், மஹர், ஜனோ, தபோ, ஸத்ய லோகம்

நாராயண உபநிஷத்தில்
64வது மந்த்ரம் – ஜ்ஞானத்தைப் பெற, ஜபிக்கப்பட வேண்டும்.
65வது மந்த்ரம் – கெட்ட கனவுகள், பயத்தைப் போக்க ஜபிக்கப்படவேண்டும்.
66வது மந்த்ரம் – மதுஸுக்தம் (அமாவாஸ்யை, ச்ராத்த காலங்களில் சொல்லப்படுகிறது)

————–

8. ஐதரேயோபநிஷத்து

இது ”ருக்” வேதத்தைச் சேர்ந்தது. ”ஐதரேயர்” என்கிற மஹரிஷி தவம் புரிந்து கண்ட ப்ராஹ்மணம். ஐதரேய ஆரண்யகமும் உள்ளது.
(ஐந்து ஆரண்யகங்கள் – இரண்டாவதுமற்றும் மூன்றாவது ஆரண்யகத்திற்கு ஐதரேயோபநிஷத்து என்றுபெயர்).

ப்ராணன் சிறந்தது. இது உடலை விட்டு கிளம்பினால் எல்லா அவயவங்களும் செயல்படாது.
ஸத்யம் – இதை ”ஸத்” ,”தி”, ”யம்” என்று மூன்றாகப் பிரித்தால் ”ப்ராணன்”, ”அன்னம்”,”ஆதித்யன்” என்று பொருள்படும்
வாக்கு – இதில் அடங்கிய சந்தஸ்களுக்கு,
ப்ருஹதி சந்தஸ் என்பது ப்ராணன்.

தண்ணீரால் ப்ராணனுக்கு புஷ்டி ஏற்படுகிறது.
விஸ்வாமித்ரர், இந்திரனிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த்ரன் சொன்னதாவது:-
நான் ப்ராணன், எல்லா பூதங்களும் ப்ராணனே, ஆதித்யன் ப்ராணனே.
எனக்கு அன்னம் இதுவே.
இது வைச்வாமித்ரம் ஆகும். (கௌஷீதகி உபநிஷத்தில்” ப்ரதர்தந வித்யை” முதலியவற்றில் உள்ளது).

மரம், செடி இவற்றில் ஆத்மா சிறிது விரிந்திருக்கும்.
பிராணிகளிடத்தில் கொஞ்சம் அதிகம்.
மனித உடலில் இந்த விரிவு அதிகம். (ஜீவாத்மா)

மனித உடலில் வாயு ஐந்து விதமாக இருக்கிறது.
இவைகளுக்கு கட்டுப்பட்டது கண், காது,மூக்கு,மனம், சொல் (வாக்கு).
வாக்கினால் செய்யப்படும் யஜ்ஞம் ஐந்து விதம் (ஸோம யாகமும் சேர்த்து)

உக்தி (அல்லது) உக்த்தம் மிக முக்கியமானது.
நிஷ்கேவல்யம் என்பது உக்த்த சாஸ்த்ரம்.
இது ஒரு விதமான மந்த்ர பாடம்.
பல த்ருஷ்டி விதிகள் இதில் சொல்லப்படுகின்றன (த்ருஷ்டி என்பது, ஒன்றை மற்றொன்றாகப் பாவிப்பது)
ப்ருஹதீயை (ஆயிரமாக) பாவித்து, இந்த்ரனாக பாவித்து, அதனால் இந்த்ர லோகத்தை அடையலாம்.
ஆனால்,மீண்டும் பிறப்பு உண்டு.
ஆதித்ய, அக்னியின் (இரண்டின்) அம்சங்கள் சுக்ல சோணிதங்கள். இவை ஒன்று சேர்வதால் ஆத்மா இவ்வுலகை அடைகிறது.
ஆத்மாவுக்கு ஆண்,பெண் என்கிற வித்யாஸம் இல்லை.
மனுஷ்ய ஆயுள் நூறு வயது.
அதாவது முப்பதாயிரம் நாட்கள்தான். நூறு என்பதை 365ல் பெருக்காதீர்கள். மொத்தத்தில் நூறு வயது;( நூறு வருஷம் அல்ல)
ப்ருஹதிசந்தஸ் ஆயிரம் என்று சொன்னதைப் போல,
இந்த எண்ணிக்கையும் முடிவடையும் போது, தேவ ரதத்தில் (ஐந்து உரு) சென்று பரமாத்மாவை அடையலாம்.
ஐந்து உரு என்பது – 1) வாக்கு – ரதத்தின் ஏர்க்கால்,
2) காதுகள் -சக்கரங்கள்,
3) கண்கள் – குதிரைகள்,
4) மனம் – தேர் பாகன் அல்லது கடிவாளம்,
5) ப்ராணன் – முதலாளி (ஆத்மா)

இதில் (ஐதரேயோபநிஷத்தில்) ஆத்ம ஷட்கம்

உலகெல்லாம் ச்ருஷ்டிப்பதற்கு முன்பு ஆத்மா ஒன்றே. (அதாவது பரமாத்மா ; பரமபுருஷன்)
இது ஸங்கல்பித்துக் கொண்டு ச்ருஷ்டி செய்யத் தொடங்கியது.
அம்பஸ் (ஸ்வர்க்கம்)
,மரீசி (அந்தரிக்ஷ லோகம்),
மரம் (பூலோகம்),
அப்பு (பாதாளம்).
லோக பாலர்கள், இவைகளை முதலில் ச்ருஷ்டித்தது.-பிறகு,ஜலத்தினின்று ஒரு புருஷ வடிவத்தை உண்டாக்கியது.
இதற்கு, அண்டம் போல் வாய் இருந்தது. வாக்கு, மூக்கு, கண், காது இந்த்ரியங்களையும் அவைகளுக்கான தேவதைகளையும்
பிறகு,
ஹ்ருதயம், ப்ராணன், மனஸ், சந்த்ரன், நாபி, அபானம், ம்ருத்யு தேவதை, ஆண் குறி, வீர்யேந்த்ரியம், இப்படி உண்டாக்கப்பட்டது.
இவைகளுக்கு பசி,தாகத்தை பரமாத்மா, உண்டாக்கியது.
அவைகள் ”நாங்கள் வசிப்பது எங்கே?” என்று கேட்க,
பரமாத்மா முதலில் பசுவைக் கொடுத்தது.-பிறகு குதிரையைக் கொடுத்தது.-மனித உடலை உண்டாக்கிக் கொடுத்தது.
பசி, தாகம் இரண்டும் எங்கள் இடம் எது என்று மறுபடியும் கேட்க ”ஹவிஸின்” பாகம் என்று பரமாத்மா சொல்லிற்று.

பிறகு ஜலத்திலிருந்து அன்னத்தை உண்டாக்கியது.
வாய்,அபானம் என்கிற வாயுவினாலே அன்னத்தை உண்ணத் தெரிந்து கொண்டது. ப்ராணன் என்கிற ஜீவாத்மா’ ஸீமா” என்கிற
தலையின் உச்சியைப் பிளந்து கொண்டு உள்ளே புகுந்தது. இது ”வித்ருதி” எனப்படும்.
இந்த ஜீவாத்மாவுக்கு விழிப்பு (ஜாக்ரம்),சொப்பனம் (ஸ்வப்னம்) ஸுஷுப்தி (தூக்கம்) என்கிற மூன்று நிலைகள் உண்டு.
இவை யாவும் அழியக் கூடியது. எங்கும் ப்ரம்மம் (பரமாத்மா) வ்யாபித்துள்ளது.

ஜீவாத்மா, முதலில் புருஷனிடத்தில்” வீர்ய”மாக இருக்கிறது.–புருஷன் வீர்யத்தை ஒன்று சேர்த்து ஸ்திரீயிடத்தில் சேர்த்தவுடன்,
இது ஜீவாத்மாவிற்கு முதல் பிறப்பு.-பிறகு எப்போதும் போலப் பிறப்பது இரண்டாவது பிறப்பு.
ஆயுள் முடிந்து, மரித்து,மறுபடியும் பிறக்கிறான்.-இது மூன்றாவது பிறப்பு.
இப்படி எண்ண இயலாத பிறப்புகள், இறப்புகள், சங்கிலித் தொடர் போல ஜீவாத்மாவுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

வாமதேவர் என்கிற மஹரிஷி , கர்ப்பத்தில் இருக்கும்போதே முன் ஜன்மங்களையெல்லாம் அறிந்து, பிறந்தவுடனேயே கர்ம
பந்தத்திலிருந்து விடுபட்டு பரமபதம் சேர்ந்தார், என்று சொல்வர்.

இது எல்லோராலும், ரிஷிகளால் கூட இயலாத செயல்.

பரமாத்மா சர்வ சேஷி . ப்ரஹ்மா, இந்த்ரன், ப்ரஜாபதி எல்லா தேவதைகள், பஞ்ச பூதங்கள், யோநிஜங்கள், அயோநிஜங்கள்,
முட்டையில் பிறப்பன, கர்ப்பத்தில் பிறப்பன, புழுக்கத்தில் பிறப்பன, பூமியை பிளந்து பிறப்பன, பறக்கும் பிராணிகள், நீர் வாழ்வன என்று
இப்படி ஜீவராசிகள் எல்லாமும், பரமாத்மாவின் ஆக்ஞைக்கு உட்பட்டு, அவனுக்கு சேஷனாக இருப்பவை.

மனித உடலில் எலும்புகள் 360. அவற்றில் கொழுப்பு 360 ஆக 720.
ஒரு வருடத்தில் பகல் 360 இரவு 360 ஆக 720.
உடல் என்கிற குடிசையி;ல் எல்லா மூங்கில்களுக்கும் ஆதாரமான நடுமூங்கில் போல, கண், காது, மூக்கு இவற்றிற்கு ஆதாரமான
ப்ராணனை நாளுக்கு சமமாக பாவித்து பாவனை செய்தால் ஆயுள் முதலிய பலன் கிடைக்கிறது.

அக்ஷரங்களை 360 , 360 என்று இரண்டு பாகமாக ஆக்கி, அவற்றின் சேர்க்கையை 360ஆக ஆக்குங்கள் (எப்படி என்று யோசியுங்கள்).
பகல், இரவு, சந்தி இவை முறையே 360 , 360 360, ஆக மொத்தம் 1080 ஆகும்- இப்படி ப்ருஹதி 1080 ஆகிறபடி,

இதை எலும்பு, கொழுப்பு 540, 540 ஆக பிரித்து மறுபடியும் கூட்டி”1080” என்று சொல்லி, பாவனை செய்யும் விதமும் அதன் பலனும் சொல்லப்படுகிறது.

சரீர புருஷனுக்கு, ரஸம், ப்ரஜ்ஞாத்மா. ஸந்தஸ் புருஷனுக்கு,ரஸம், அகாரம். வேதங்கள் மூன்றுக்கு, ரஸம் பிரமன். மஹா புருஷன் என்பது ஸம்வத்ஸரம்(வருடம்).
இதன் ரஸம் ஆதித்யன்.
ஸரீர ரசமான ப்ரஜ்ஞாத்மாவையும் மஹா புருஷனான ஆதித்யனையும் ஒன்றாக பாவனை செய்வது சொல்லப்படுகிறது.
பரமாத்மா, தன் ஆத்மாவின் அந்தராத்மா என்று தெளிய வேண்டும் என்று ஒரு மந்த்ரம் சொல்கிறது. (அதாவது ஜீவாத்மாவுக்கும் ஆத்மா).
சரீரத்தை வீணைக்கு ஒப்பிட்டு இதை நன்கு தெளிந்தவன், பார் புகழும் வண்ணம் இருப்பான் என்பது சொல்லப்படுகிறது.

ஸம்ஹிதையில் ”ண”காரம் பலம்.
”ஷ ”காரம் ப்ராணன்.
பரமாத்மாவே எல்லாமும் என்று இந்த உபநிஷத் சொல்கிறது.

—————

9 – சாந்த்யோக்யோபநிஷத்

இது ஸாம வேதத்தைச் சேர்ந்தது. இது ”தாண்டி”சாகையின் கடைசி பாகம்.
வேத வ்யாஸர் ப்ரம்மஸுத்ரத்திற் குஎடுத்துக் கொண்ட உபநிஷத்துக்களில் இதுவே அதிகமாக எடுத்தாளப்பட்டுள்ளது.

ஸாம வேதத்தைச் சேர்ந்ததாகையால், உத்கீதத்தைப் பற்றி இது (இந்த உபநிஷத்) சொல்கிறது.
ப்ரணவத்தை முதலில் சொல்லி, பலவாறு உபாஸனங்களைச் சொல்லி,
உத்கீத பதம்,ஸாம பதம், ஸாம பொது, அதன் அம்சங்கள், உட் பிரிவுகள்
இவைகளில் உபாஸனம் செய்வதைச் சொல்லி, ஐஷிகம், ஆமுஷ்மிகம் என்று பல பலன்களுக்கான உபாஸனங்களைச் சொல்லிப்
பிறகு மோக்ஷத்திற்கான பக்தியோகம் இவற்றைச் சொல்கிறது.

எட்டு பிரபாடகங்களாக உள்ளது. பிரபாடகம் என்பது
அத்யாயம். அத்யாயத்தில் அனேக காண்டங்கள் (பிரிவுகள்).
ஸாமம் – வேத கானம்.”ருக்”குகளில் கானம் பண்ணப்படும்.
ஒவ்வொரு” ரிக்”கிலும் கானம் பண்ணும்போது அந்த கானத்தை ஐந்து பாகமாக பிரிப்பார்கள். அவையாவன:-
1) ஹிங்காரம்,
2) ப்ரஸ்தாவம்,
3) உத்கீதம்,
4) ப்ரதிஹாரம்,
5) நிதனம்.
இதை ஏழாகவும் பிரித்துச் சொல்வார்கள்.
1) ஹிங்காரம், 2) ப்ரஸ்தாவம், 3) ஆதி, 4) உத்கீதம், 5) ப்ரதிஹாரம், 6) உபத்ரவம், 7) நிதனம்.

ப்ரபாடகம் -1 –
ப்ரணவத்தை உத்கீதமாக உபாசிக்கச் சொல்கிறது.
உத்கீதம் உலகில் ஸாரமானது. பூமியின் ஸாரம்எதுவென்றால் விளையும் பயிர்களுக்கு ஜலம் மூலமாக இருப்பதால், ஜலம் – ஸாரம்.
அதில் உண்டான ஓஷதிகள் ஸாரம். இவற்றைச் சாப்பிட்ட மனித உடல் ஸாரம். இந்த உடலில் வாக்கு ஸாரம்.
வாக்குகளில் ”ருக்” ஸhரம். இதற்கு மேல் ஸாம கானம். இதில் சிறந்தது உத்கீதம்.

உபாஸனம் இல்லாமல் விதிக்கப்பட்டதைச் செய்தாலும் பலன் உண்டு.
உபாஸனத்தோடு செய்தால், பலன் மிகவும் அதிகம்.
இந்த உத்கீதத்தை -ப்ராணவாயுவாக உபாஸிப்போருக்கு விரோதிகள் அழிவர்.

கச்யப ப்ராஜபதிக்கு திதி, அதிதி என்று இரண்டு மனைவிகள்.-இவரின் புதல்வர்கள் தேவர்களும், அசுரர்களும் ஆவர்.

இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அசுரர்களை ஜெயிக்க தேவர்கள் முடிவெடுத்து தேவர்கள் மூக்கில் உள்ள இந்த்ரியமாக
உத்கீதத்தில் சொல்லப்பட்ட ”ப்ரணவத்தை” உபாஸித்தனர்.

அசுரர்கள் அதைக் கெடுத்தனர். இப்படி வாக்கு, கண், காது, மனஸ் என்பதையெல்லாம் உபாஸித்தனர். அசுரர்கள்
எல்லாவற்றையும் கெடுத்தனர்.
கடைசியில் முகத்தில் உள்ள ப்ராணனான ப்ராண வாயுவை உத்கீதமாக தேவர்கள் உபாஸித்ததும் அசுரர்கள் அதன் மீது
எறிந்த பாவங்கள் வெளியே சிதறி ஓடியது.
(ப்ராணன் பாதிக்கப்படவில்லை). இவ்வாறாக ப்ராணனாக பாவிக்கப்பட்ட உத்கீதத்தின் பெருமை சொல்லப்பட்டது.

உத்கீத ப்ரணவத்தை ”அமிர்தம்” எனப்படும் ப்ரம்மமாக உபாஸிக்கச் சொல்கிறது. தேவதைகள், ம்ருத்யுவுக்குப் பயப்பட்டு
வேத வித்யைக்குள் புகுந்து வேத மந்த்ரங்களால் தங்களை மறைத்துக் கொண்டனர்.
அப்போது ம்ருத்யு, தண்ணீரில் மீனைக்கண்டாற் போல் தேவதையைப் பார்த்து விட்டான்.
பிறகு அவர்கள் அமிர்தமான ப்ரணவத்திலே மறைந்து கொண்டனர்.
இங்ஙனம் தங்களைக் காத்துக் கொண்டனர்.
இப்படி உபாஸிப்பவனுக்கு ” ம்ருத்யு ” இல்லை, பயமுமில்லை.

”கப்யாஸ புண்டரீகாக்ஷ த்ருஷ்டி” என்பது சொல்லப்படுகிறது.
ஆகாசமாக உத்கீதத்தைப் பார்ப்பவனுக்கு உயர்ந்த ஜீவனம் —-, உயர்ந்த உலகங்கள் கிடைக்கும். (சௌனகர் – சாண்டில்யருக்குச் சொன்னது).

உமூஸ்தி என்கிற மஹரிஷி , பஞ்சம் ஏற்பட்ட சமயத்தில் உணவு கிடைக்காமல், ஒரு கிராமத்தில், யானைக்குக்
கொடுக்கப்படும் ”குல்மாஷம்” என்கிற உணவை, உயிர் தரிக்க வேண்டும் என்ற காரணத்தால், யானைப் பாகனிடம் கேட்டு, ஒரு
கவளம் வாங்கிச் சாப்பிட்டார்.
ஆனால் தொடர்ந்து யானைப் பாகன் கொடுத்த தண்ணீரை ”இது எச்சில் வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்
. உயிர் தரிக்க கொஞ்சம் உணவு சாப்பிட்டால் போதும் என்கிற நியதி இந்தத் தத்வத்தில் சொல்லப்படுகிறது.

ஒரு அரசன் யாகம் செய்யப் போகும் சமயத்தில் ”ப்ரஸ்தாபம்”, ”உத்கீதம்”, ”ப்ரதிஹாரம்” என்கிற ஸாமங்களுக்கு தேவதை யார்
யார் என்று ரிக் வித்குகளிடம் கேட்க (யாகத்தை நடத்திவைப்பவர்கள்),
அவர்கள் தெரியாது என்று சொல்ல,
அரசன் இவரையே (உஷஸ்தி) (அச்சமயர் உஷஸ்தி அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்) ரிக்வித்தாக நியமித்து அவரை மேற்கண்ட
ஸாமங்களுக்கு தேவதைகளைப் பற்றிக் கேட்க உஷஸ்தி. ”ப்ரஸ்தாபம்” என்கிற ஸாமகானத்தில்
ஸர்வ பூதங்களுக்கும் பிறவி,அழிவு இவைகளுக்கு காரணமாக உள்ள ”ப்ராண” தேவதையையும் , உத்கீதத்திலே ”ஆதித்யன்” தேவதையையும்,
ப்ரதிஹாரத்தில் ”அன்னத்தையும்” தேவதையாகப் பாவிக்க வேண்டும் என்று சொல்லி யாகத்தை நடத்தி வைத்தார்.

அன்னத்தைப் பெறக் காரணமாக உள்ள ”சௌவோத்கீதம்” என்கிற உத்கீதம் இதில் சொல்லப்படுகிறது. ஸாமகானத்தில்
இசையின் பொருத்தத்திற்காக புதிய அக்ஷரங்கள் இருக்கும். அவை” ஸ்தோபாக்ஷரங்கள்” எனப்படும்.
”ஹா உ”, ”ஹா இ ”’போன்றவை

1) ஸுர்யோதயத்திற்கு முன்பு ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்குபுறப்படும் காலம்;
2) மனிதர்கள் விழித்தெழும் உதய காலம்;
3) பறவைகள் பறக்கும் ஸங்கவ காலம்;
4) தேவதைகளின் உச்சிக் காலம்;
5)அபரான்ன காலம்;
6) அஸ்தமனத்திற்கு முன்பு கால்நடைகள் திரும்பும் காலம்;
7) பித்ருக்களின் அஸ்தமன காலம்.
இப்படி ஏழு பிரிவுகளாக ஸுர்யனைப் பாவித்து ஸாமத்தை உபாஸிப்பது சொல்லப் படுகிறது.

மேலும், ”அதிம்ருத்யூபாஸனம்” விவரிக்கப்படுகிறது.

மாதங்கள் 12,
ருதுக்கள் 5 (ஹேமந்த ருது, சிசிர ருது ஒன்றாக கணக்கிடப்படுகிறது)
உலகங்கள் 3 . ஸுர்யன் 1
ஆக 21. ஸாம பக்திகளில் எழுத்துக்கள் 22.
இப்படி ஸுர்யோபாசனம் செய்தால் ம்ருத்யுவை ஜயித்து மோக்ஷத்திற்கு அருகதையாவது சொல்லப்படுகிறது.
ஸோம யாகத்தில் 3 யவனங்களுக்கு அதிபதியான வஸு , ருத்ர, ஆதித்யர்களைப் பற்றிய ஸாமங்களைச் சொன்னால்
மூவுலகும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

——————

10 ப்ருஹதாரண்யக உபநிஷத்து

இது உருவில் பெரியது. சுக்ல யஜூர் வேதத்தைச் சேர்ந்த சதபத ப்ராம்மணத்தின் கடைசிப் பகுதி.
இது காண்வம்,மாத்யந்தினம் என்று இரண்டு பிரிவுகள். (கிளைகள்).
ப்ராஹ்மணம் – காண்வ சாகையிலும் மாத்யந்தின சாகையிலும் உள்ளது.

எட்டு அத்யாயங்கள் இதில் உள்ளன. முதல் இரண்டு அத்யாயங்கள் ஜ்ஞானத்தைப் பற்றிச் சொல்கிறது. “ப்ரவர்க்யம்”
என்கிற ஸோம யாகத்தைச் சேர்ந்த ஒரு அங்கத்தைச் சொல்வதாகவும் சொல்வர். மீதி ஆறு அத்யாயங்களுக்கும் பாஷ்யம் (விரிவுரை) உண்டு .

ஒன்றை மற்றொன்றாகப் பாவிப்பது “த்ருஷ்டி விதி” எனப்படும். அச்வமேத யாகம் தொடங்கி, ஒரு வருஷ காலம்
கழித்து இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது
(ஒன்றை மற்றொன்றாகப் பாவிப்பது). குதிரையின் தலை, கண், ப்ராணன் முதலிய அங்கங்களை விடியற்காலை வேளை (உஷத் காலம்)
ஸுர்யன், வாயு இவைகளைப் போல பாவிக்க வேண்டும்.
யாகம் செய்பவன் இது போன்ற பாவனைகளைத் தெளிந்து செய்ய வேண்டும். விரைவில் பலன் பெறலாம்.

பரமாத்மா உருவத்தை எடுக்க விருப்பம் கொண்டு ஜலத்தை உற்பத்தி செய்தது. ஜலத்தின் சாரமாக, பூமி உண்டாயிற்று.
அதிலிருந்து, அக்னி உண்டாயிற்று. அக்னியே, ஆகாயத்தில் வாயுவாகவும், மேலுலகில் ஆதித்யனாகவும் உள்ளது.
அக்னி என்கிற உருவத்தை எடுத்த பரமாத்மா, ஸம்வத்ஸரத்தை உண்டாக்கியது. அதாவது பல ஸம்வத்ஸர காலம் (பல வருஷங்கள்)
ப்ராணிகளை படைக்கும் ப்ரஹ்மா என்று கொள்ளலாம்.

ப்ரஹ்மஞானம் உண்டாகத் தடையாக இருக்கும் பாபங்களைப் போக்க ப்ராணனை உபாஸிக்கச் சொல்கிறது.
”மதுப்ராம்மணம்” என்பது இதில் சொல்லப்படுகிறது.
ஓவ்வொரு இந்த்ரியத்திற்கும் ஒரு அதிஷ்டான தேவதை உண்டு. தேவதைகள் இஷ்டப்படி இவை இருக்கின்றன. ஆதலால் மது என்று பெயர்.
இந்த தேவதைகள், ”மற்ற எல்லாருக்கும், அழிவே இல்லாமல் ஒருவன் அந்தர்யாமியாக இருக்கிறான். அவனே
ஆத்மா , அவனே மது” என்று உபாசித்தன (பரமாத்மாவை). இந்த மது ரஹஸ்யத்தை ”தத்தியங்” என்கிற மஹரிஷியிடத்தில்
”அச்வினி தேவர்கள்” வந்து, இந்த வித்யையை உபதேசிக்குமாறு கேட்டார்கள். இந்த ரஹஸ்யத்தை வெளியிட்டால் தலையை
வெட்டி விடுவதாக இந்த்ரன் சொல்லியிருப்பதால் அஞ்சுகிறேன் என்றார் முனிவர்
உங்களுடைய தலையை வெட்டித் , தனியாகப் பாதுகாத்து குதிரையின் தலையைப் பொருத்துகிறோம். நீங்கள் உபதேசியுங்கள்.
இந்த்ரன் வெட்டுவதாயிருந்தால், இந்த குதிரைத் தலையைத் தான் வெட்ட வேண்டும். வெட்டியவுடன் உங்கள் தலையைப் பொருத்தி விடுகிறோம் என்றனர்
அச்வினி தேவர்கள் –வைத்யர்கள் அல்லவா? மஹரிஷி ஒப்புக் கொண்டு ரஹஸ்யத்தை தேவர்களுக்கு குதிரை முகமாக உபதேசித்தார். (ஹயக்ரீவ ஸ்வரூபம்)

”பரமாத்மா எல்லா உயிர்களிலும் இருக்கிறான். உள்ளே, வெளியே எங்கும் இருக்கிறான். அவன் இல்லாத இடமே இல்லை.
உலக வ்யவஹாரங்களை நடத்த பற்பல உருவங்களை எடுத்துக் கொள்கிறான்.
ஹரியானவன் அவன் —-பல ஆயிரக்கணக்கான ஹரியாக ஆகிறான். இந்தப் பரமாத்மா, எல்லாக் காலங்களிலும்
எல்லா இடங்களிலும் இருந்து ஸர்வேச்வரன் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறான்”. இதுதான், உபதேசத்தின் சுருக்கம்.

இந்த்ரன் கோபத்துடன் வந்து, முனிவரின் தலையை (குதிரைத்தலை) வெட்ட, அச்வினீ தேவர்கள், முனிவரின்
சுயமான தலையைப்பொருத்த, ”தத்தியங்” என்கிற அந்த முனிவர் செய்த பேருபகாரம் இவையெல்லாம்—————- தனிக்கதை.

வித்யையை உபதேசிக்கும் ஆசார்யன் முதல் பகவான் வரையிலுள்ள வம்ச ப்ராம்மணம் முக்யம். (வம்ச வித்யை) இதை
ஒவ்வொருவரும் அநுஸந்திக்க வேண்டும்.
அச்வலர் -யாஜ்ஞவல்க்யர் – ஸம்வாதம்
விதேஹ தேச ராஜாவான ஜனகர், விசேஷமாக ஒரு யாகம் நடத்தினார். அதற்கு, ஏராளமான வேத வித்துக்கள் வந்தனர்.
இவர்களில், வேதங்களை வேதாங்கங்களை அத்யயனம் செய்து, ப்ரம்ம வித்யை வரையில் எல்லா வித்யைகளிலும் சிறந்து
விளங்குபவர் யார் என்று அறிய விருப்பம் கொண்டார்.
சிறந்த ஜ்ஞானியாக இருப்பவர், பொன் குப்பிகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த ஆயிரம் பசுக்களை ஸ்வீகரிக்க வேண்டும் என்று
ப்ரார்த்தித்தார். ஒருவரும் முன்வரவில்லை.
அச்சமயத்தில் யாஜ்ஞவல்க்யர் (இவர் ஸுர்யனைத் த்யானம் பண்ணி ஸுர்யன் குதிரை ரூபமாகப் ப்ரஸன்னமாகி உபதேசிக்க அவரிடம் உபதேசம்
பெற்றார். இதற்கு அந்தர்யாமி ப்ராம்மணம் என்று பெயர்).
தன் சிஷ்யனை அழைத்து, ”பசுக்களை நம் க்ருஹத்திற்கு ஓட்டிக் கொண்டு போ” என்றார்.
மற்ற ப்ராம்மணர்கள் ஆக்ஷேபித்தனர்.
ஜனக ராஜனின் யாகத்தை நடத்தி வைக்கும் ருத்விக் அச்வலர், நீர்தான் சிறந்த ப்ரம்ம வித் என்று உங்களைக் கருதுகிறீரா ? என்று கேட்டார்.
யாஜ்ஞ வல்க்யர் ”அத்தகைய ப்ரஹ்ம வித்யைக்கு எனது நமஸ்காரம்,எனக்கு பசுக்கள் தான் தேவை” என்றார்.
அச்வலர், யாஜ்ஞவல்கயரை கேள்வி கேட்கலானார்.
அச்வலர் யாகத்தை நடத்தும் எஜமானர் மோக்ஷம் பெற ஹோதா, அத்வர்யு, உத்காதா, ப்ரம்மா, என்கிற ருத்விக்குகள் பற்றியும்,
ஹோதா சொல்லும் ருத்விக்குகள், உத்காதா செய்யும் சாமகான ருக்குகள், ப்ரஹ்மா யாகத்தைக் காப்பது, பிற தேவதைகள்
பற்றியும் அவ்வப்போது பெறும் பலன்களைப் பற்றியும், யாஜ்ஞ வல்க்யரைக் கேட்டுத் , திருப்தி அடைந்தார்.

ஆர்த்தபாகர் என்கிற மஹரிஷி கேள்வி கேட்க யாஜ்ஞவல்க்யர்,
அவருக்கு க்ரஹங்கள் எட்டு
அவை மூக்கு, வாக்கு, நாக்கு, கண்,காது, மனஸ், கை, த்வக் என்பவை என்றும், அவற்றின் விஷயங்கள் அதிக்ரஹங்கள் என்றும்,
அக்னி ம்ருத்யு என்றும்,ஜலம் அதை அன்னமாக உடையது என்றும்,
ஜீவன் மரணம் அடையும்போது, ப்ராணன்கள் அவற்றை விடுவதில்லை என்றும் சொன்னார்.
ஜீவன் லயமடையப் போகுமிடம் எங்கே?” என்றுஆர்த்தபாஹர் கேட்க,
அவரைத் தனியே அழைத்துப்போய் புண்யம், பாபம் என்கிற கர்மாக்களுக்கு ஏற்பச் செல்கிறான் என்று பதில் சொன்னார்.
(ஸதஸ்ஸில் சொல்லாமல், தனிமையில் ஒருவருக்கு மட்டில் – கேள்வி கேட்டவருக்கு மட்டில்—- சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது)

புஜ்யு என்பவர், மத்ர தேசத்தில் அத்யயனம் செய்து கொண்டிருந்தபோது, ”பதஞ்சலர் என்பவர் வீட்டிற்குச்
சென்றோம். அவருடைய பெண்ணை, ஒரு கந்தர்வன் பிடித்திருந்தான் (ஒருவகைப் பிசாசம்) அதை நீ யார் என்று
கேட்டோம். நான் ஸுதன்வா–”ஆங்கீரஸ கோத்ரம்” என்று பதில் சொல்லிற்று. பிறகு லோகங்கள் விஷயமாகச் சில கேள்விகள்
கேட்டு “பாரிக்ஷிதர்கள்” எங்கே போயிருந்தன என்று அந்தக் கந்தர்வனைக் கேட்டோம். இதற்கு நீர் பதில் சொல்லும்” என்று
யாஜ்ஞவல்க்யரைக் கேட்டாh.

”பாரிக்ஷதர்கள், அச்வமேதயாகம் செய்யும் இடத்திற்குப் போனார்கள்” என்று பதில் சொன்னார்.
புஜ்யு , ”அச்வமேத யாகம் செய்பவர் எங்கே போகிறார்?” என்று கேட்டார்.
ஸுர்யனை, பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது. இதில் பெரும் பகுதி ஸமுத்ரம். இந்த அண்டகடாஹத்தில்— இதில் கத்தி
முனையளவு கொசுவின் இறகளவு கனமுள்ள சந்தில் பாரிக்ஷதர்கள் சென்றனர். இந்த்ரன் அவர்களைக் கருடனாக
இருந்து சுமந்து சென்று வாயுவிடம் சேர்த்தான். வாயு அவர்களை அச்வமேத யாகம் செய்பவர் இடத்தில் சேர்த்தது. இப்படி அந்தக்
கந்தர்வன் உமக்குச்சொல்லி வாயுவே வ்யஷ்டி, சமஷ்டி எல்லாம் எங்கும் சஞ்சரிப்பவன் என்று சொல்லியிருப்பான் என்றார்.

பிறகு உஷஸ்தர் , கஹேளர்-இருவரின் கேள்விகள்.
உஷஸ்தர் – எல்லாவற்றுக்குள்ளும், உள்ளே இருக்கும் ஆத்மா ப்ரத்யக்ஷமாக இருக்கிற ப்ரம்மம் என்கின்றனர். இது என்ன?
யாஜ்ஞ வல்க்யர் – உமக்கும் ஆத்மாவாக இருப்பது அது.
உஷஸ்தர் – இது மாடு, இது குதிரை என்று சொல்வதைப் போல இருக்கிறதே ?
யாஜ்ஞவல்க்யர் – ச்ரவணம், மனனம், த்யானம், தர்சனம் என்பவற்றைச் செய்யும் ஆத்மாவை நான் சொல்லவில்லை.இது
ஜீவாத்மா. நான் சொன்னது எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஆத்மாவாக இருப்பது.
கஹோளர் – அது எந்த ஆத்மா ?
யாஜ்ஞவல்க்யர் – பசி, தாகம், சோகம், மூப்பு, மரணம் இவை எதுவுமே இல்லாத ஆத்மா. இதனை உணர்ந்தவர்கள்
(ப்ராஹ்மணர்கள்) புத்ரன், பணம், உலகம் என்கிற மூன்றிலும் பற்று இல்லாமல், பிக்ஷை எடுத்து வாழ்கின்றனர். ப்ராஹ்மணன்,
உபதேசம் மூலம் பாண்டித்யம் பெற்று, அஹங்காரம் அற்று இருக்க வேண்டும். எப்போதும் அந்த ஆத்மாவையே சிந்திக்க வேண்டும்.

கார்கி என்கிற ஸ்த்ரீ கேள்வி கேட்டாள்
”இந்த பூமிக்கெல்லாம் ஆதாரமானது ஜலம். அதற்கு எது ஆதாரம்” என்று கேட்டு மேன்மேலும் கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தாள்.
யாஜ்ஞயவல்க்யர் மேன்மேலும் பதில்களைச் சொல்லி லோகங்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தார்.

கடைசியாக ”ப்ரம்ம லோகங்களுக்கு எது ஆதாரம்?” எனக் கேட்டாள்.
கேட்கத் தகாததை, உள்ளபடி உணராமல் கேட்டால் தலை விண்டு விழுந்து விடும் என்று யாஜ்ஞவல்க்யர் சொல்ல,
கார்கி அத்துடன் கேள்வி கேட்பதை நிறுத்திக் கொண்டாள்.

உத்தாலகர் சொன்னதாவது:
மத்ர தேசத்தில் பதஞ்சலரின் வீட்டில் அத்யயனம் செய்து கொண்டிருந்த போது அவருடைய மனைவியை ஒரு கந்தர்வன்
பிடித்தான். அவனை யார் என்று கேட்டோம். நான் ஆதர்வணன், கபந்தன் என்றான். அந்த கந்தர்வன் என்கிற பிசாசம் எங்களைக் கேட்டான்.

”எல்லா உலகங்களையும் எல்லா ஜந்துக்களையும் தரித்திருக்கும் ஸுத்ரம், அவற்றின் உள்ளே இருந்து நியமிக்கும்
அந்தர்யாமியை அறிவீர்களா?
இதை அறிந்தவன்தான் லோகம்,வேதம், ப்ரம்மம் இவற்றை அறிந்தவனாவான் என்று சொன்னான்.
அது என்ன?”
யாஷ்ஞவல்க்யர் – நான் அறிவேன். அந்த ஸுத்ரமானது ப்ராணன். எல்லா உலகங்களையும் ஜந்துக்களையும் உள்ளே
இருந்து நியமிக்கும் அந்தர்யாமிதான் ப்ரம்மம். சாதாரணமாக உத்தாலகர் கேள்விகளுக்குத் த்ருப்தியான பதில் வந்தால்,
ஸதஸ்ஸில் கேள்வி கேட்பதை அத்துடன் நிறுத்திக் கொள்வார்கள். (இவரை வெல்ல யாருமில்லை என்று பொருள்)

ஆனால், கார்கி மறுபடியும் கேள்வி கேட்டாள்.
கார்கி – வானுலகுக்கு கீழும், மேலும் (எல்லா இடங்களிலும்) எல்லா காலங்களிலும் எல்லா வஸ்துக்களும் எதை ஆதாரமாக
உடையதோ, எது காரணமோ, அது என்ன?
யாஜ்ஞவல்க்யர் – ஆகாசம் (மூலப்ரக்ருதி)
கார்கி – இதற்கும் (ஆகாசத்திற்கும்) ஆதாரம் எது ?
யாஷ்ஞவல்க்யர் – அக்ஷரம். சிறிதுமல்ல, பெரிதுமல்ல, நீண்டதுமல்ல, குறுகியதுமல்ல எந்த நிறமுமல்ல. எல்லா
இடத்திலுமிருப்பது. இதன் ஸங்கல்பத்தினாலே ஸுர்யன், சந்த்ரன்,ஸ்வர்க்கம், நக்ஷத்ரங்கள், பூமி யாவும் தரிக்கப்பட்டு இருக்கின்றன.
இதற்கு மேம்பட்ட எதுவுமில்லை என்று பலவாறாக எடுத்துரைத்தார்.

கார்கி என்பவள் ”இவரை ஜெயிக்க இயலாது எல்லோரும் இவருக்கு நமஸ்காரம் செய்யுங்கள்” என்றார்.

பிறகும் விதக்தர் என்பவர் கேள்விகள் கேட்டார்.
யாஜ்ஞவல்க்யர் ”இவ்வளவு மஹரிஷிகள் இந்த ஸதஸ்ஸில் கேள்விகள் கேட்டு என்னுடைய பதில்களால் திருப்தி
அடைந்தார்கள். நீர் வீண் ஆடம்பரத்திற்காக கேள்விகள் கேட்கிறீர். நான் கேட்கும் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லும்” என்று பலவாறாகக் கேட்க,
எல்லாவற்றிற்கும் விதக்தர் பதில் சொல்லிக்கொண்டே வந்தார்.
இந்தச் சமயத்தில்,
யாஜ்ஞவல்க்யர் முன்பு எட்டு புருஷர்களைப் பற்றிச் சொன்னேன் -அவர்களுக்கும் அவர்களின் ஆதாரம் முதலியவற்றிற்கும்
மேற்பட்டு அவற்றையெல்லாம் நியமித்து அடக்கும் ஓளபநிஷத புருஷன்–உபநிஷத்துக்களிலே சொல்லப்படும் புருஷன் யார்?
நீர் அது யார் என்று சொல்லவில்லையெனில், உமது தலை துண்டாகிக் கீழே விழும்” என்றார்.
விதக்தர் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தவுடன் தலை துண்டாகிக் கீழே விழுந்தது.

அவருடைய சிஷ்யர்கள், அவருடைய அஸ்திகளை மூட்டையாகக் கட்டி, அவர் வீட்டில் சேர்க்க, எடுத்துச் செல்லும்
போது, வழியில், திருடர்கள், இந்த மூட்டையில் பணம் இருக்கிறது என்று எண்ணி அதைப் பிடுங்கிக் கொண்டு ஓடினர்
(ப்ரம்ம வித்திடம் அபசாரப்பட்டதால் இப்படிநேர்ந்தது என்பதை உணர வேண்டும்).

யாஜ்ஞவல்க்யர், ஸதஸ்ஸில் உள்ளவர்களைப் பார்த்து, இன்னும் யாராவது கேள்விகள் கேட்கலாம் என்றார்.
நடுநடுங்கிய அவர்கள் ஒன்றும் பேசவில்லை. ஸதஸ் கலைந்தது.

10(2) ஜநகர் – யாஜ்ஞவல்க்யர் – ஸம்வாதம்

பிறிதொரு சமயம் யாஜ்ஞவல்க்யர் ஜனக ராஜன் சபைக்கு மறுபடியும் சென்றார். அரசன் வணங்கி, வரவேற்று, பசுக்கள்
வேண்டுமா அல்லது வேத அர்த்தங்களுக்கா என்றார்.
யாஜ்ஞவல்க்யர் இப்போது அரசனுக்கு உபதேசித்தார்.

வலது கண்ணிலே ”இந்த்தன்” என்கிற புருஷன் இருக்கிறான்
(இந்திரன் என்கிறதை மறைமுகமாக இப்படிச் சொல்லும் பழக்கம் உண்டு) இடது கண்ணில் அவனுடைய பத்னி இருக்கிறாள்.
இவ்விருவருக்கும் ஹ்ருதயமே வாசஸ்தலம். அங்குள்ள மாம்ஸமே அன்னம்.
ஹ்ருதயத்தில் பின்னலைப் போல உள்ள நாடிகள் வஸ்த்ரம்.
ஹ்ருதயத்தினுள் பல ஆயிரமாகப் பிரிந்து, கேசத்தைவிட மெல்லிய நாடிகள் உள்ளன. அவற்றிற்கு ”ஹிதை” என்று பெயர்.
அவற்றின் வழியாக, ஜீவன் வெளியே கிளம்புகிறான்.

ஹ்ருதயத்திலிருந்து உச்சந்தலை உள்ளவரை உள்ள மார்க்கமானது (சுஷும்நா நாடி) ப்ராண, இந்த்ரியங்களில்
சிக்குண்ட ஜீவாத்மாவைக் காட்டிலும், பற்றற்றவனாக அழிவற்றவனாக ஹ்ருதயத்திலுள்ள பரமாத்மா வேறுபட்டவன்.

இன்னொரு சமயம், இதே போன்ற ஒரு ஸம்வாதம் நடந்தது.
அரசன் கேட்க யாஜ்ஞவல்க்யர் பதில் சொல்ல மிக உன்னதமான கருத்துக்கள் கிடைத்தன.

அரசன் – புருஷ னுக்கு எது ஜ்யோதிஸ் ?
யாஞவல்க்யர்- ஸுர்யன்தான் ஜ்யோதிஸ்
அரசன் – ஸுர்யன் அஸ்தமித்தால் ?
யாஜ்ஞவல்க்யர் – அப்போது சந்த்ரன்
அரசன் – இருவரும் இல்லாதபோது ?
யாஜ்ஞவல்க்யர் – அப்போது அக்னி (விளக்கு போன்றவை)
அரசன் – அதுவுமில்லாதபோது ?
யாஜ்ஞவல்க்யர் – வாக்கு, மையிருட்டிலும் பேசினால் பேச்சைக் கொண்டு அவனை அறியலாம், அணுகலாம்
அரசன் – வாக்கும் இல்லாத போது ?
யாஜ்ஞவல்க்யர் – ஆத்மாவே ஜ்யோதிஸ்
அரசன் – ஆத்மாவாவது எது ?
யாஜ்ஞவல்க்யர் – ஹ்ருதயத்திலே ப்ராண வாயு முதலியன இருக்க அறிவுக்கு ஆதாரமாக இருப்பது ஆத்மா. ஸ்வப்ன லோகத்தை
ஆத்மா சேரும்போது, துக்க ரூபமான இவ்வுலகைக் கடக்கிறது.
உடலோடு சேர்ந்திருக்கும்வரை பாபம் செய்கிறது.
உடலிலிருந்து விடுபட்டு விட்டால் பாபம் இல்லை. ஸ்வப்ன காலத்தில், அவற்றில் ஏற்பட்டதைக் கொண்டு தானே அவற்றை அறிகிறான்.
திரும்பவும் இவ்வுலகத்திற்கு வருகிறான். ஸ்வப்னத்தில் துக்கம், மகிழ்ச்சி, சோகம், இன்பம் இப்படி அனுபவிக்கிறான். எல்லாம்
ஸ்வப்னம் என்று பிற்பாடுதான் தெரிகிறது. ஸ்வப்ன காலத்திலே ஜீவன் தனக்குத் தானே ஜ்யோதிஸ்ஸாக ஆகிறான்.
உறக்கத்தில்(ஸுஷுப்தி) பரமாத்மாவுடன் ஐக்கியமாகிறான். அப்போது உற்றார், உறவினர், புண்யம், பாபம் , துக்கம் என்று எதனோடும்
இணைப்பு இருப்பதில்லை
தைத்திரியோபநிஷத்தில் சொல்லியபடி,

மனுஷ்ய ஆநந்தம், பித்ருக்களின் ஆநந்தம், தேவர்களின் ஆநந்தம், சதுர்முக (ப்ரம்மா) ஆநந்தம் என்று மேன்மேலும் உள்ள
ஆநந்தத்தை அடைகிறான். இப்போது எந்த இந்த்ரியமும் வேலை செய்வதில்லை. மனஸ் ஓய்வில் இருக்கிறது.

10(3) – விழிப்பு, ஸ்வப்னம், உறக்கம், இறப்பு

விழிப்பு, ஸ்வப்னம், உறக்கம் என்ற நிலைகளுக்கு மேற்பட்ட நிலை இறப்பு. அப்போது பரமாத்மாவினால் வேறு இடம் கொண்டு போகப்படுகிறான்.
புண்ய, பாபங்களுக்கு ஏற்றவாறுவேறு சரீரம் எடுத்து அனுபவிக்கிறான்.
ஜ்ஞானம், கர்மாக்கள்,பூர்வ வாஸனை, இந்த மூன்றும இந்த ஜீவனைத் தொடர்கின்றன.
ஜ்ஞானமும், கருமங்களும் ஜீவனுக்கு அடுத்த பிறவியில் அநுபவிக்க வேண்டிய விஷயங்களைச் சேர்த்து வைக்கின்றன.
இந்த விஷயங்களைக் கையாள பூர்வ வாசனை உதவுகிறது.
ப்ரஹ்மஞானம் உள்ளவன், ப்ரம்மாநுபவம் பெறுகிறான்.
புனர் ஜன்மம் இன்றி, தேவயானம் வழியாக ஸுர்ய மண்டலம் புகுந்து மோக்ஷம் பெறுகிறான்.
பரமாத்மாவே,ப்ராணேந்த்ரியங்களுக்குச் சக்தி அளிப்பவன். அவன் எங்குமிருப்பவன். மனஸ்ஸால் தான் அவனைப் பார்க்க இயலும்.
அந்தர்யாமியாய் ஹ்ருதயத்தில் இருக்கிறான். இவனை அறிய, வேத அத்யயனம், யஜ்ஞம், தானம், தபஸ் முதலியன செய்கின்றனர்.
யோகநிஷ்டையில் இழிந்து, இவனைக் காண முயற்சிக்கின்றனர். இவனை அடைய ஸன்யாஸம் மேற்கொள்கின்றனர். இந்த்ரியங்களை அடக்கி, தீயதைச்
செய்யாமல், காம்ய கர்மங்களைச் செய்யாமல், சீதோஷ்ண சுக துக்கங்களைப் பொறுத்துக்கொண்டு, மனஸ்ஸை நன்கு
நிலைநிறுத்தி தனக்குள்ளே இருக்கும் இந்தப் பரமாத்மாவைப் பார்க்கவேண்டும்.
இதுவே ”பரப்ரம்மம்”. இந்த பரப்ரம்மம் , இக பர சுகங்களையும் எல்லாவற்றையும் அளிக்கும்.

பூர்ணத்தில் இருந்து பூர்ணம் உயர்ந்தது. பூர்ணத்தைச் சார்ந்த பூர்ணத்தை அழித்து , பூர்ணம் தான் முடிவில் இருக்கிறது.
வேதத்தில் சொல்லியபடி, எல்லா உலகமும் உயிர்களும் ப்ரஹ்மாவால் சிருஷ்டிக்கப் படுகின்றன. ஆதலால், வேதம்
எங்கும் நிறைந்திருக்கிறது. இதற்குக் காரணமான வேதம்,
கார்யமான ப்ரபஞ்சத்தைக் காட்டிலும் உயர்ந்தது. கார்யமாய் காரணம் நிறைந்து உள்ளதற்கும், மேலான வ்யாஹ்ருதி ( பூ:, புவ:,ஸு வ:)க்கு, லயஸ்தானமாய் எல்லாவற்றிற்குமே காரணமாக இருப்பது ப்ரணவம். இந்த ப்ரணவத்தை ப்ரம்மமாக உபாஸிக்க வேண்டும்
(பூர்ணம் என்கிற மந்திரத்திற்குப் ப்ரம்மம் என்றும் பொருள் உண்டு).

10(4) ப்ரஜைகள் மூன்று வகை

தேவர்கள் (தேவதைகள்), மனிதர்கள், அசுரர்கள். இவர்கள் தங்களுடைய தகப்பனாரை அண்டி, உபதேசிக்குமாறு வேண்டினர்.
தேவர்கள் வேண்டிய போது “த” என்று உபதேசித்து தெரிந்து கொண்டீர்களா என்று தகப்பனார் கேட்டார்.
”தமம்”அதாவது ”இந்த்ரிய நிக்ரஹம்” வேண்டும் என்று புரிந்து கொண்டோம் என்றனர்.

மனிதர்களிடம் ”த” என்பதைச் சொன்னபோது ”தானம்” செய்யுங்கள் என்பதை உணர்ந்ததாக, அவர்கள் சொன்னார்கள்.

அசுரர்களிடம், அந்த எழுத்தைச் சொன்ன போது, தயை புரியுங்கள் என்று உணர்ந்ததாகச் சொன்னார்கள்.

ப்ரம்மத்திலிருந்து பிறந்த ”ப்ரஜாபதியின்” புதல்வர்களான தேவர்கள் ஸத்யத்தை உபாஸிக்கின்றனர். பரப்ரம்மமே ஸத்யம்.
இது (பரப்ரம்மம்) ஆதித்ய மண்டலத்திலும் உள்ளது.
கண்ணிலும் உள்ளது. இதற்கு பூ: , புவ:, ஸுவ: என்கிற வ்யாஹ்ருதிகள்.

சாந்தோக்ய உபநிஷத்தில் சொல்லப்பட்ட சாண்டில்ய வித்யை, மின்னலை ப்ரம்மமாக உபாஸிப்பது சொல்லப் படுகிறது
வாக்கை, ”பசு”வாக உபாஸிப்பது, மோக்ஷம் செல்பவன் தேவயான மார்க்கத்தில், ஆத்யாத்மிக, ஆதிபௌதிக, ஆதிதைவிக
தாபங்களுக்கு இடமில்லாத ப்ரம்ம லோகம் சென்று சந்தோஷிப்பது சொல்லப்படுகிறது .
அன்னத்தை ”வி” என்றும், ப்ராணனை ”ரம்” என்றும் சேர்த்து ப்ரம்மமாக உபாஸிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
ப்ராணனை, ருக்காகவும், யஜூஸ்ஸாகவும், ஸாமமாகவும் உபாஸிப்பது சொல்லப்படுகிறது. வாக் எனப்படும் வேதத்தை
பசுவாக உபாஸிக்க வேண்டும். பசுவுக்கு நான்கு மடிகள்.
ஸ்வாஹா , வஷட், ஹந்த, ஸ்வதா.
தேவர்களுக்குக்கொடுக்கப்படும் ஹவிர் பாகங்கள் ஸ்வாஹா அல்லது வஷட்.
மனுஷ்ய யஜ்ஞத்தில், ஹந்த என்று சொல்லி ஹவிஸ்ஸும்,
பித்ருக்களை உத்தேசித்துச் செய்யும்போது ஸ்வதா என்றும் சொல்லப்படுகிறது.

பசு – வாக்கு.
காளை – ப்ராணன்.
கன்று – மனஸ்.
பால்-பகவானை துதிக்கும் ஸ்தோத்ரங்கள்.

10(5) – காயத்ரீ உபாஸனம்

காயத்ரீயின் முதல் பாதத்தை மூன்று உலகங்களாக உபாஸிப்பவன் மூன்று உலகங்களில் எதையும் அடைவான்.
இரண்டாம் பாதத்தை மூன்று வேதங்களாக உபாஸிப்பவன்,
வேதத்தில் சொல்லப்பட்ட பலன்களை அடைவான்.
மூன்றாம் பாதத்தை, ப்ராண அபான, வ்யானங்களாக உபாஸித்தால், எல்லாப் ப்ராணிகளையும் வசமாக்கிக் கொள்ளலாம்.
நான்காம் பாதத்திற்கு “தர்சபதம்” என்று பெயர். இதைப் ப்ரம்மமாக உபாஸித்தால், புகழ், பொருள் கிடைக்கும்.
ப்ராணன்களுக்கு,“கயம்” என்று பெயர்.
கயங்களைக் காப்பதாலே காயத்ரீ .
காயத்ரீ உபாஸனம் செய்பவன் இஷ்டப்பட்ட பலனை அடைவான்.

ப்ரம்ம உபாஸனம் செய்பவனுக்கு நான்கு மந்த்ரங்கள் –
ப்ரார்த்தனை செய்வதற்காக இங்கு சொல்லப்படுகிறது.
(இது,ஈசாவாஸ்ய உபநிஷத்திலும் உள்ளது).

10(6) மந்த்த கர்மா

ப்ராண வித்யை, பஞ்சாக்னி வித்யை, மந்த்த கர்ம – –மூன்றும் சொல்லப்படுகின்றன (சாந்தோக்ய உபநிஷத்தைப் பார்க்க) .
மந்த்த கர்மாவில் நெய்யினால் ஹோமங்களைச் செய்த பிறகு, ”மந்த்த”என்கிற வஸ்துவை, ப்ராணனைப் புகழும் மந்த்ரத்தைச் சொல்லிக்
கொண்டே கையில் வைத்துக் கொண்டு, காயத்ரீயினாலும், இன்னும் சில மந்த்ரங்களாலும், விதிப்படி ஆசமனம் செய்து,
அக்னிக்கு மேற்கே கிழக்கில் தலை வைத்து இரவில் படுத்திருந்து,
உதயத்தில் ஸுர்யனுக்கு உபஸ்தான மந்த்ரங்களைச் சொல்ல வேண்டும்.
இப்படியான மந்த்த த்ரவ்யத்தாலே உலர்ந்த கட்டையை நனைத்தால் அது துளிர் விட்டு, கப்பும் களையுமாக வளரும்.
”மந்த்த த்ரவ்யம்” என்பது, நெல், யவம், எள், உளுந்து, கோதுமை, ப்ரயங்கு, மஸுரம் கல்வம், கலகுலம்,இன்னொன்று
பெயர் தெரியவில்லை (பத்து தானியங்கள்)
இவற்றை எல்லாம் அரைத்து தயிர், தேன், நெய் இவற்றில் ஊற வைக்க வேண்டும்.
ஹோமங்கள் நெய்யினாலே செய்யப்பட வேண்டும்.
பிள்ளை பெறுகிறவன், இந்த பிள்ளை ,தனக்குச் சிறந்த பலன்களை மேலுலகில் அடையுமாறு செய்ய,இவன் எப்படி நடந்து கொள்ளவேண்டும்,
என்ன கார்யங்களைச்செய்யவேண்டும் என்று பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன.

தீர்க்கமான ஆயுளைப் பிள்ளை பெறும்படியாகவும்,நன்கு படிக்கவும்,
பிரஸித்தியாக வேண்டுமென்றாலும் செய்ய வேண்டிய முறைகள்,இதில் சொல்லப்படுகின்றன.

”வம்ஸ ப்ராம்மணம்” என்கிற பரம்பரை சொல்லப்படுகிறது.
பரப்ரம்மம், ப்ரஜாபதி என்கிற பரம்பரை ஒன்று.
ஆதித்யனிடமிருந்து வரும் பரம்பரை மற்றொன்று.
இரண்டும் ஒன்று சேர்ந்ததும் சொல்லப்படுகிறது.
யாஜ்ஞ்யவல்க்யர், ஸுர்யனிடம் ஸூக்ல யஜூஸ் வேதத்தைப் பெற்றது சொல்லப்படுகிறது .

இதுவே ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் சாரம்.

————

11 – ச்வேதாச்வதரோபநிஷத்

ஆறு அத்யாயங்கள். சித், அசித், ஈச்வரன் என்று தத்துவங்களை மூன்றாக வகுத்ததற்கு இது ஆதாரம்.
பரமாத்மாவின் ஸ்வரூபம்,சக்ர ரூபமாகச் சொல்லப்படுகிறது.
பிறப்பது, வாழ்வது, இறப்பது முதலிய எல்லாவற்றிற்கும் காரணமானது எது?
காலமா?
இயற்கையா?
முன்வினையா?
பஞ்சபூதங்களா?
மூலப்ரக்ருதியா?
ஜீவனா?—இல்லை,
இவை எல்லாம் சேர்ந்ததா?
சேர்ந்ததாக இருந்தால், சேர்த்தது யார்?
என்று விவாதித்து “பரமாத்மா” என்கிற முடிவுக்கு வந்தது.

ஸம்ஸாரத்திலே உழல்கின்ற ஜீவர்.
எல்லாம் அறிந்த ஈச்வரன்.
போகத்தை அளிக்கும் அசித் (அசேதநம்).
ஈச்வரன், குணங்கள் நிறைந்த குறையில்லாத ஜோதி.
இவன், சேதனன், அசேதனங்களுக்கு அந்தர்யாமியாக இருக்கிறான்.
இதுதான் ப்ரம்மம்.-இதற்கு மேல் ஒன்றுமில்லை.
இது அரணிக்கட்டையில் உள்ள அக்னியைப் போன்றது.-எளிதில் அறிய இயலாது.
ஜீவாத்மா கீழ் அரணிக் கட்டை.
ப்ரணவம் மேல் அரணி.
கடைதல் என்பது த்யானம் செய்தல்.
இப்படி ஜீவாத்மாவுக்குள் பரமாத்மா மறைந்திருப்பதைத் த்யானம் செய்து,அறிந்து உபாஸிக்க வேண்டும்.
த்யானம் செய்பவருக்கு,கர்மானுஷ்டானம் முக்கியம்.
விஷ்வக்ஸேனர், ஆசார்யன் இவர்களின் அநுக்ரஹத்தைப் பெற வேண்டும்
பகவானை ஸ்தோத்தரித்து, அவன் அருளாலே, அவனிடம் மனதைப் பதிய வைக்கவேண்டும்.
தலை, கழுத்து, மார்பு இவற்றை நன்கு நிமிர்த்தி, சுத்தமான இடத்தில் தகுந்த ஆஸனத்தில் அமர்ந்து புலன்களை அடக்கி ,
ப்ராணாயாமங்களைச் செய்து, மனஸ்ஸை பரப்ரம்மத்திடம் நிறுத்த வேண்டும்.

அக்ஷரங்கள் யாவும் அகரத்திலிருந்து உண்டாகின்றன.
அகரத்தின் பொருளான பரமாத்மாவிடமிருந்து எல்லா உலகங்களும் உண்டாகின்றன.
அவன் அனைத்துக்கும் அந்தராத்மா. அவன் மாயன். மாயை ”மூலப்ரக்ருதி”.
அவனுடைய அம்சங்களே ஜீவாத்மாக்கள். இவனைச் சரணம் அடைய வேண்டும்.
ஜ்ஞானம், கர்மம் இரண்டாலும் அவனை ஆராதிக்க வேண்டும்.
இந்த ஜீவாத்மா ஆணல்ல, பெண்ணல்ல,அலியுமல்ல.
எந்த உடலை, கர்ம வினையால் பெறுகிறதோ, அதன் அடிப்படையில் ஜென்மாக்களில் இந்த ஜீவன்
அழைக்கப்படும்.
இவற்றையெல்லாம் தெளிந்து, பரமாத்மாவை ஆராதிப்பவர் அவன் திருவடியை அடைவர்.

பரமாத்மா ஜகத்காரணன்.
பந்த பாசங்களிடமிருந்து விடுபட்டு, அவனையே கதி என்று நினைப்பவருக்கு மோக்ஷம் உண்டு.
பரமாத்மா – ஆறு விதமான – எட்டுகளை உடையவன்.
(1) அஷ்டமாசித்தி
(2) எட்டு திக்குகள்
(3) எட்டு திக்பாலகர்கள்
(4) எட்டு ப்ரக்ருதிகள் (பூமி, ஜலம், ஆகாசம், நெருப்பு, வாயு,மனஸ், புத்தி, அஹங்காரம்)
(5) எட்டு தேவதைகள் (ப்ரஹ்மா, ப்ரஜாபதி போன்றவர்கள்)
(6) எட்டு வஸுக்கள்
(7) எட்டு திருக்கல்யாண குணங்கள்

(இந்த ஏழில் ஏதேனும் ஆறு) மூன்று மார்க்கங்களை உடையவன்.
(1) மோக்ஷத்திற்குச் செல்லும் தேவயாநம்
(2) கர்மலோகத்திற்குச் செல்லும் பித்ருயாநம்
(3) க்ஷூத்ர ஜந்துக்களுக்கான மார்க்கம்

ச்வேதாச்வதரர், தன் தபோபலத்தாலும், தெய்வ அநுக்ரஹத்தாலும், ப்ரம்மத்தை அறிந்து பலருக்கு இப்படி உபதேசித்தார்.

—————-

12 -அதர்வசிர உபநிஷத்து

தேவதைகள், ஸ்வர்க்கத்திற்குச் சென்று, ருத்ரனைப் பார்த்து, ”நீர் யார்?” என்று கேட்க,
அவர், ”நான் ஒருவனே முதலில் இருந்தேன்: இப்போதும் இருக்கிறேன்.
இனிமேலும் இருக்கப் போகிறேன் என்னைத் தவிர வேறொன்றும் இல்லை” என்றார்.
தேவதைகள், பகவான் சொல்ல வேண்டியதை இவர் சொல்கிறாரே என்று நினைத்தனர்.

ருத்ரன், ”தேவதைகளே! நீங்கள் நினைத்த அந்த பகவான் சூக்ஷ்மத்திற்கும் சூக்ஷ்மமானவன். எங்கும் பரந்து உள் புகுந்து
இருப்பவன். எனக்கும் அந்தர்யாமி. இவ்வாறே எனக்குள் புகுந்திருப்பதால், நான் என்றேன்” என்று சொன்னார்.
ருத்ரன், பகவானின் பக்தன். தேவதைகள் இவ்வாறு ருத்ரனைத் துதித்தனர்.
ப்ரணவம், அதற்கு விளக்கம்-இது ஒருஉபாஸனா மார்க்கம் என்று சொல்லப்பட்டது.
இந்த்ரன், நான்முகன், ஆதித்யன், பசுபதி, யாவருக்கும் பகவான் அந்தர்யாமி . இது ஒருவகை உபாஸனம்.

————-

13 – அதர்வ சிகோபநிஷத்து

பைப்பலாதர் மற்றும் பல மஹரிஷிகள், ”அதர்வா” என்பவரிடம் சென்று ”த்யானத்திற்கு மந்த்ரம் எது?
த்யானமானது எது?
த்யானம் செய்பவன் யார்?
த்யானம் செய்யப்படும் தத்துவம் என்ன?” என்று கேட்டனர்.

அதர்வா பதில் சொன்னார்.
”த்யானத்திற்கு மந்த்ரம் ப்ரணவம். அது நான்கு பாதம் உள்ளதாய் ப்ரம்மமாகும். அகார,உகார, மகாரங்கள்
அவற்றின் மேல் அரை மாத்திரை –
இதுவே வேதங்கள். இதுவே லோகங்கள் என்றும் மற்றும் பலவிதமாகவும் , இது புகழப்படுகிறது .
இந்தப் ப்ரணவம் ஹ்ரஸ்வம், தீர்க்கம், ப்லுதம், எனவும் பிரிக்கப்படும்.
இந்த நான்கு மாத்திரைகளை மனிதனுக்கு உள்ள விழிப்பு, ஸ்வப்னம், உறக்கம், மோக்ஷம் என்கிற நான்கு தசைகளாகச் சொல்வர்.
இந்தப் ப்ரணவமே த்யானத்திற்குச் சாதனம்.
த்யானத்தை விஷ்ணுவாகப் பாவிக்க வேண்டும்.
த்யானத்திற்கு அதிஷ்டான தேவதை விஷ்ணு . த்யானம் செய்பவனை ருத்ரனாகப் பாவிக்க வேண்டும்.
ஸர்வ ஐச்வர்யம் உள்ள எல்லாவற்றிற்கும் காரணனான முன்பு அரை மாத்திரையில் தேவதையாகச் சொல்லப்பட்ட
பரம புருஷனே எல்லோருக்கும் சுகம் அளிப்பவன். அவனே உபாஸிக்கப்படவேண்டியவன்.

ஓம்-உபாஸனா மந்த்ரம். இதில் பரமாத்மா என்கிற எண்ணம் வேண்டும்.
ஓம் – இதற்கு நான்கு பாதங்கள்- அகாரம், உகாரம், மகாரம், நாதம்.

அகாரம் – பாஸ்வதீ என்றும் பெயர்.
ப்ருத்வி லோகம்;சிவப்பு, மஞ்சள் நிறம்;
ருக் வேதம்; ப்ரஹ்மா
தேவதை; அஷ்டவஸுக்கள்;
காயத்ரீ சந்தஸ்;
கார்ஹபத் அக்னி; என்று த்யானித்தல்.அவச்யம்

உகாரம் – வித்யுமதீ என்றும் பெயர்.
அந்தரிக்ஷ லோகம்;
யஜூர்வேதம்;
கருப்பு நிறம்;
விஷ்ணு தேவதை;
ஏகாதச ருத்ரர்கள்;
த்ருஷ்டுப்சந்தஸ்;
தக்ஷிணாக்னீ;
என்று த்யானிக்க வேண்டும்.

மகாரம் – ”சுபாசுபா” என்றும் பெயர்.
ஸாம வேதம்;
வெளுப்பு நிறம்;
ருத்ரன் தேவதை;
பன்னிரண்டு ஆதித்யர்கள்;

ஜகதீசந்தஸ்;
ஆஹவநீயாக்னி; என்று த்யானிக்க வேண்டும்.

நாதம் – ”வித்யுமதி” என்றும் பெயர்.
அதர்வ வேதம். அர்த்த மாத்திரை;
ஸோம லோகம்;
எல்லா நிறங்களும்;
மருத்தேவதைகள்;
விராட் சந்தஸ்;
ஏகர்ஷி என்கிற அக்னி; என்று த்யானிக்க வேண்டும்.

————

14 – கௌஷீதகி உபநிஷத்து

இதில் பர்யங்க வித்யை, ப்ரதர்தந வித்யை, பாலகி வித்யை சொல்லப்படுகிறது.
இவை யாவும் வித்யைகளில் சொல்லப்பட்டுள்ளது.

—————

15 – மந்த்ரிகோபநிஷத்து

ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களால் மூல ப்ரக்ருதியானது, பரப்ரம்ம ஸ்வரூபத்தை மறைக்கிறது.
ரஜஸ், தமோ, குணம் ஒழிந்து ஸத்வ குணம் மேலோங்கியவர்களின் ஹ்ருதயத்திலே அந்தர்யாமியாக ப்ரம்மத்தை தர்சிப்பார்கள்.
உலகில் ப்ரம்மத்தைச் சிலர் 26வது தத்துவமாயும், 27வதாகவும், 24-ஆகவும், இன்னும் எவ்வெவ்வாறோ
பார்க்கிறார்கள். எல்லாம் அவனிடமிருந்து பிறந்து அவனிடமே மறைகின்றன. இந்த ப்ரம்மத்தை அறிந்து உபாஸிப்பவர் அவனிடம்
சேர்ந்து விளங்குவர்.

————–

16 – ஸூபாலோபநிஷத்து

16 அத்யாயங்கள் உடையது. நாராயணனே பரதத்துவம் என்பதைச் சொல்கிறது.
”கோராங்கர்” என்பவர் ரைக்வருக்குச் சொன்னது இது.

சேதனங்கள், அசேதனங்கள், சேதனா சேதனங்கள் இவைகளுக்கு கார்யமாக இல்லாத ஒன்றிலிருந்து ”தமஸ்” தோன்றியது.
தமஸ்ஸிலிருந்து பஞ்ச பூதங்களுக்குக் காரணமான தாமஸ அஹங்காரம்,
இதிலிருந்து ஆகாசம்,
இதிலிருந்து வாயு,
வாயுவிலிருந்து அக்னி,
இதிலிருந்து ஜலம்,
ஜலத்திலிருந்து மண்
இப்படியாகத் தோன்றி இதெல்லாம் ப்ரம்மாண்டமாக ஆயிற்று.
கொஞ்சகாலத்திற்குப் பிறகு, இந்த ப்ரம்மாண்டம் பிளக்கப்பட்டு, மேல் பாகம் – ஸ்வர்க்கம், கீழ் பாகம் பூமியாகவும் ஆயிற்று.
நடுவில் ப்ரம்மாவுக்கு அந்தர்யாமியான மஹா புருஷன்.
அவன் ப்ராணிகளுக்கு ம்ருத்யுவைப் படைத்தான். அவன்தான் ருத்ரன். (கண்ட பரசு என்றும்பெயர்).
அந்த ம்ருத்யு ப்ரம்மாவிடத்தில் புகுந்து மறைந்தான்.

ப்ரஹ்மா, மானஸ புத்ரர்களாக ஏழு பேரைப் படைத்தான்.
அவர்கள் புத்ரர்களைப் படைத்தனர் (ப்ரஜாபதி எனப்படுபவர்கள்).
முகத்திலிருந்து ப்ராம்மணனும், கைகளிலிருந்து க்ஷத்திரியர்களும், தொடையிலிருந்து வைச்யர்களும்,
கால்களிலிருந்து ஸுத்ரர்களும் உண்டானார்கள்.
மனஸ்ஸிலிருந்து சந்த்ரனும், கண்ணிலிருந்து
ஸுர்யனும் காதிலிருந்து காற்றும், ப்ராண வாயுவும்,
ஹ்ருதயத்திலிருந்து மற்ற எல்லாமும் உண்டாயிற்று.
நெற்றியிலிருந்து கோபத்தினால் ருத்ரன் உண்டானார்.
எல்லா உலகங்களையும் தனதாக்கிக் கொண்ட ஹிரண்ய கர்ப்பன்,
ஸ்த்ரீ , புருஷன் இரு உருவமாகப்பிரிந்து, தேவ – ரிஷி – யக்ஷ –
ராக்ஷஸ – கந்தர்வ ஜாதிகளையும், மிருகங்களையும் மற்றப் பிராணிகளையும் ச்ருஷ்டித்தான்.

ப்ரளய காலத்தில் அவனே அக்னியாகி எல்லாவற்றையும் எரிக்கிறான். அப்போது பூமி, ஜலத்திலும், ஜலம், நெருப்பிலும்,
நெருப்பு, காற்றிலும், காற்று, ஆகாசத்திலும் லயிக்கின்றன.

ஆகாசம், இந்த்ரியங்களோடும், இந்த்ரியங்கள், தன்- மாத்ரைகளோடும், தன்மாத்ரைகள், அஹங்காரத்திலும்,
அஹங்காரம், மஹத்திலும், மஹத், அவ்யக்தத்திலும், அவ்யக்தம், அக்ஷரத்திலும், அக்ஷரம், தமஸ்ஸிலும் லயிக்கின்றன.
தமஸ் பகவானுடன் ஒன்றி மறைகிறது.

இப்படிப்பட்ட பகவானை அடைய பலனில் பற்றில்லாமல், ஸத்யம், கொடை, தவம், ப்ரம்மச்சர்யம், வைராக்யம், யஜ்ஞம்,
என்கிற ஆறு அங்கங்களைக் கொண்டு உபாஸிக்க வேண்டும்.
ஹ்ருதயத்தின் நடுவே, மாம்ஸ பிண்டம் ஒன்று உள்ளது. (புரிதத்து) . அதில் தாமரைப் பூ போல ஓர் அவயவம் உள்ளது.
அங்கே நாடிகளின் வாயாக பத்து த்வாரங்கள் உள்ளன.அவற்றில் ப்ராண, அபான முதலிய வாயுக்கள் உலவுகின்றன.
யோகி, அந்தந்த வாயுவின் ஸகாயத்தால் எல்லா லோகங்களையும் யக்ஷ , ராக்ஷஸ, கந்தர்வர்களையும் மற்ற எல்லாவற்றையும் பார்க்கிறான்.
முக்யமான இந்த பத்து நாடிகள் ஒவ்வொன்றுக்கும் 72,000 சிறிய நரம்புகள் உள்ளன. ஜீவாத்மா இந்த நாடிகளில் இருக்கிறான்
(விழித்திருக்கும்போது).ஸ்வப்ன தசையில், ஸ்வப்னம் காண்பது,உறக்கத்தில் உடலைக் காப்பது,
ரத்தத்தை எல்லா நாடிகளிலும் பரப்புவது,ஹிதை எனப்படும் நாடிகளோடு சேர்ந்த ”புரிதத்து”என்கிற
ஹ்ருதயாகாசத்தில் போய் உறங்குவது எல்லாமே இதன் செயல்.
கண், காது, மூக்கு, நாக்கு, த்வக் (தோலில் எங்கும் உள்ளது) மனஸ், புத்தி, அஹங்காரம், சித்தம், வாக்கு, கை, கால்,
மலேயந்திரியம், மூத்திரேந்திரியம்-ஆக 14 இந்த்ரியங்கள்.
இவைகளுக்குத் தனித்தனியாக உள்ள விஷயம் – இவற்றுக்கான
தேவதை-இப்படி 14 உபாஸனைகள்.
நாடி, ப்ராணன், அதனால்உண்டாகும் அறிவஅப்போது ஏற்படும் ஆநந்தம், ஹ்ருதயாகாசம்
ஆகிய 8 இடங்களில் பரந்து உள்ளவனாக-பகவானை உபாஸிக்கவேண்டும்.
எல்லாவற்றையும் நிர்வஹிப்பவன். கட்டளையிடுகிறவன்.
எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஆத்மா.
ப்ராணனுக்கும் ஆத்மா.
அறிவுக்கு எட்டாதவன்.
பலபடியாக வருணிக்கப்படும் பரமாத்மா
ஸ்ரீமன்நாராயணன். ஆதித்யர்கள், ருத்ரர்கள் அவனே.
காரணமும் அவனே. அவனுக்கு எல்லாப் பூமிகளும் உடல்.
பரமபதத்தில் எழுந்தருளியிருப்பவன்.
எல்லாம் உடலாய், பகவான்எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாய் –
ஆத்மாவாய் இருக்கும் இந்தவித்யையை உபதேசமாகப் பெற்றார்.
இது வேத ரஹஸ்யம்.

உடம்பில் உள்ள நாடிகளில் நான்கு நாடிகள்
முக்கியமானவை. ரமை, அரமை, இச்சை, அபுநர்பவை –
புண்யலோகம், பாப லோகம், நினைத்த இடம், மோக்ஷ ஸ்தானம், என்கிற இடங்களுக்கு இவை முறையே வாயில்கள்.
நான்காம் நாடி வழியாகப் புறப்பட்டு, ஹ்ருதயகோசம்,
தலைக்கபாலம் இவற்றைப் பிளந்து கொண்டு ப்ருத்வி முதல் எல்லா தத்துவங்களையும் கடந்து ஜீவன் மேலே செல்கிறான்.

இப்படிப்பட்ட வித்யையை புத்ரன், சிஷ்யன் தவிர வேறு யாருக்கும் உபதேசிக்கலாகாது.

————————

17 – அக்னி ரஹஸ்யம்

சுக்ல யஜூர் வேதத்தில், சதபத ப்ராம்மணத்தில் இது ஒரு பாகம். இது உபநிஷத்து அல்ல.
யாகங்கள், ஹோமங்கள் செய்பவர் வைதீகமான அக்னியை ”ஆதானம்” என்பதை அனுஷ்டித்து ஸம்பாதிக்கிறான்.
இவன் ”ஆயிதாக்னி” எனப்படுகிறான்.
ஸோம யாகம் செய்யும்போது கருடன் முதலான உருவில இடம், நிர்மாணிக்கப்பட்டு,ஆஹவநியாக்னி வைக்கப்படுகிறது.
புருஷனுடைய ஆயுட்காலம் 36,000 நாட்கள்.ஒவ்வொரு நாளிலும் செய்யும் கடமைகளை, யாகத்துக்கு வேண்டிய அங்கங்களாக பாவித்து க்ரது (யாகம்)
செய்ய வேண்டும். (ஸ்தோத்ரங்கள், பூஜை உட்பட ஒவ்வொருவரும் செய்யும் கடமைகள்).
இது” வித்யாமயக்ரது” எனப்படும்.(வைச்வாநர வித்யை – சாண்டில்ய வித்யை தனியே சொல்லப்பட்டுள்ளது)

————-

18- மஹோபநிஷத்

நாராயணன் ஒருவன் தான் ச்ருஷ்டிக்கு முன்பு இருந்தான்.
ப்ரம்மன், ருத்ரன், ஜலம், அக்னி, ஸோமன், ஸ்வர்க்கம்,பூமி,நக்ஷத்ரம், ஸுர்யன், சந்த்ரன் முதலிய எதுவும் இல்லை,
தனியாக இருப்பதில் த்ருப்தி இல்லாத நாராயணன்
த்யானம் செய்ய 14 பிள்ளைகள். (10 இந்த்ரியங்கள், மனஸ், அஹங்காரம்,ப்ராணன், ஆத்மா (உடல்).
புத்தி 15வது—— இப்படியாகப் பிறந்தன.
பிறகு 5 பூதங்கள், 5 தன்மாத்ரைகள்,, 25வது தத்துவமாக ஜீவன் பிறந்தன.
பரமாத்மா எல்லாவற்றையும் ஒன்றாக்கி ஜீவனை அதில் புகுத்தி ஸ்ருஷ்டி செய்தான்.
இப்படி எல்லா ஜீவ ஸ்ருஷ்டிக்கும் காரணம் நாராயணன்.
நெற்றியிலிருந்து ருத்ரன், இவனிடம் சத்யம், ப்ரம்மச்சர்யம்,
வேதம் மற்றும் பல செல்வங்கள் சேர்ந்தன.
ஆகவே அவன் ஈசானன், மஹா தேவன் எனப்பட்டான்.
அவன் நாராயணனை தியானம் செய்ய நெற்றியில் வியர்வை உண்டாயிற்று.
அது எங்கும் பரவி நீராக ஆயிற்று.
அதில் ப்ரம்மாண்டம் உண்டாயிற்று. ப்ரம்மன் அங்கு தோன்றினான்.
பிறகு அந்தந்த லோகங்கள், தேவதைகள் பிறந்தன.
இதற்கெல்லாம் காரணம் நாராயணன். அவனை ஆச்ரயித்தே எல்லா உலகமும் உயிர்களும் உள்ளன.
தாமரை மொட்டுபோன்ற ஹ்ருதயத்தில் அக்னி ஜ்வாலை உள்ளது.
அதனிடையில் பரமாத்மா இருக்கிறான். ப்ரம்மன், சிவன், இந்த்ரன் எல்லோருடைய ஹ்ருதயத்திலும் இருக்கிறான்.
இதற்கு மேல் ச்லோக ரூபமாக இந்த உபநிஷத் உள்ளது.

வேதம்- பெரிய பர்வதம்.
வேதாந்தம் என்கிற உபநிஷத் —-மலைக்குள் இருக்கும் குகை.
இந்த குகைக்குள் நம்மை அழைத்துப் போய்
நமக்கு வழிகாட்டுபவர்கள் ஆசார்யர்கள்.
வேதத்தை அத்யயனம் செய்தால் மட்டும் போதாது.
வேதாங்கங்களையும் கற்க வேண்டும் (வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், கல்பம், சிக்ஷா , ஜோதிடம்).

மஹரிஷிகள், ருக் வேதத்தை புத்தியாகிற மத்தினால் கடைந்தார்கள். எட்டு அக்ஷரம் கிடைத்தது.
இப்படியே யஜூர் வேதம் கடையப்பட்டது.
இதிலிருந்து எட்டு அக்ஷரம் கிடைத்தது.
இப்படியே ஸாமவேதம் கடையப்பட்டது.
இதிலிருந்து எட்டு அக்ஷரம் கிடைத்தது.
இந்த 24 அக்ஷரங்கள் தான் காயத்ரீ மந்த்ரம்.

இதையும் சுருக்கினார்கள்.
ருக் வேத 8 அக்ஷரங்களிலிருந்து ” பூ: ”
யஜூர் வேத 8 அக்ஷரங்களிலிருந்து ”புவ:” ,
ஸாமவேத 8 அக்ஷரங்களிலிருந்து ” ஸுவ:”
பூ:, புவ:, ஸுவ: —– வ்யாஹ்ருதி மந்த்ரம் என்று பெயர். இதை மேலும் சுருக்கினார்கள்.

ருக் —–.. பூ:.—— … என்பதிலிருந்து ”அ ”காரம்
யஜூர் ..—- புவ : —–… என்பதிலிருந்து” உ”காரம்
ஸாம —–.. ஸுவ:—- … என்பதிலிருந்து ”ம” காரம்
மூன்றையும் சேர்த்தார்கள்.
”ஓம்காரம்” பிறந்தது. வேதத்திற்கு இதுவே சிரஸ்.

யஜ்ஞ ப்ரகரணத்தில்
உத்கீதத்தாலே (ஸாம வேதம்)தேவதைகளையும், பகவானையும் அழைக்க வேண்டும்.
ருக் வேதத்தாலே அப்படி வந்தவர்களை ஸ்தோத்ரம் பண்ண வேண்டும்.
யஜூர் வேத மந்த்ரங்களால் இப்படி இப்படி அழைக்கப்பட்டு வந்துள்ள தேவதைகளுக்கும் பகவானுக்கும் ஹோமம் பண்ண வேண்டும்.
அதர்வ வேதமானது ப்ரஹ்மாவாக இருந்து இந்த யஜ்ஞத்தை நடத்தி வைக்கிறது.
வேதமும், ஸ்ம்ருதிகளும் என் கட்டளைகள். அவற்றை மீறி நடப்பவன் என் கட்டளையை மீறியவனாவான்.
அவன் என்னிடம் பக்தி கொண்டாலும் ஏற்கப்படாது என்று ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் பகவானே அருளி யிருக்கிறார்.

ஸ்ரீ நாராயண உபநிஷத் மந்த்ரத்தைச் சொல்லி வேதோபாஸனத்தை நிறைவு செய்கிறோம்.

ஓம் அத புருஷோ ஹவை நாராயணோ காமயத ப்ரஜாஸ் ஸ்ருஜேயதி |
ஸ்ரீ நாராயணாத் ப்ராணோ ஜாயதே |
ஸ்ரீமனஸ்ஸர்வேந்த்ரியாணிச |
ஸ்ரீ கம்வாயுர் ஜ்யோதிராப: ப்ருதிவீ விச்வஸ்ய தாரிணீ |
ஸ்ரீ நாராயணாத் ப்ரஹ்மாஜாயதே |
ஸ்ரீ நாராயணாத் ருத்ரோ ஜாயதே |
ஸ்ரீ நாராயணாதிந்த்ரோ ஜாயதே |
ஸ்ரீ நாராயணாத் த்வாதாசா தித்யா ருத்ரா வஸவ: ஸர்வாணிச சந்தாகும்ஸி |
ஸ்ரீ நாராயணாதேவ ஸமுத்பத்யந்தே |
ஸ்ரீ நாராயணாத் ப்ரவர்த்தந்தே |
ஸ்ரீ நாராயணே ப்ரலீயந்தே |
ஸ்ரீ அத நித்யோ நாராயண: |
ஸ்ரீ ப்ரஹ்மாச நாராயண: |
ஸ்ரீ சிவஸ்ச நாராயண: |
ஸ்ரீ சந்ரஸ்ச்ச நாராயண: |
ஸ்ரீ காலஸ்ச்ச நாராயண: |
ஸ்ரீ ஊர்த்வம்ச நாராயண: |
ஸ்ரீ அதஸ்ச்ச நாராயண: |
ஸ்ரீ அந்தர்பஹிஸ்ச நாராயண: |
நாராயண ஏவேதகும் ஸர்வம் |
யத்பூதம் யச்சபவ்யம் |
நிஷ் களங்கோ நிர்விகலபோநிராஞ்ஜநோ நிராக்யாத:

ஸுத்தோதேவ ஏகோ நாராயண: |
நத்விதியோஸ்தி கஸ்சித் |
ய ஏவம் வேத
ஸவிஷ்ணுரேவபவதி ஸவிஷ்ணுரேவ பவதி

ஓமித்யக்ரே வ்யாஹ்ரேத்
நம இதி பஸ்சாத்
நாராயணாயேத்யுபரிஷ்டாத்
ஓமித்யோகாக்ஷரம்
நம இதி த்வே அக்ஷரே
ஸ்ரீ நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி
ஏதத்வை நாராயண-ஸ்யாஷ்டாக்ஷரம் பதம்
யோஹவை நாராயணஸ்யாஷ்டாக்ஷரம் பதமத்யேதி
அனபப்ருவ: ஸர்வமாயுரேதி
விந்ததே ப்ராஜாபத்யம் ராயஸ்போஷம் கௌபத்யம்
ததோம்ருதத்வமச்நுதே ததோம் ருதத்வ மச்னுத இதி
ய ஏவம் வேத
இத்யுபநிஷத்

ப்ரத்யகானந்தம் ப்ரம்ஹ புருஷம் ப்ரணவ ஸ்வரூபம்
அகார உகார மகார இதி
தானேகதா ஸதபவத்ததோமிதி
யமுக்த்வா முச்யதோ யோகீ ஜன்ம ஸம்ஸார பந்தனாத்
ஓம் நமோ நாராயணாயேதி மந்த்ரோபாஸக:
வைகுண்டலோக புவனம் கமிஷ்யதி
ததிதம் பரம் புண்டரீகம் விக்ஞாநகனம்
தஸ்மாத் ததிதாப மாத்ரம்
ப்ரம்ஹ்ண்யோ தேவகீ புத்ரோம் ப்ரம்ஹண்யோ மதுஸுதனோம்
ஸர்வபூதஸ் தமேகம் நாராயணம்
காரண ரூப மகாரம் பரம்ப்ரஹ்மோம்
ஏதத தர்வதிரோயோ தீயதே

ப்ராதரதீயானோ ராத்ரிக்ருதம் பாபம் நாசயதி
ஸாயமதீயானோ சிவஸ்க்ருதம் பாபம்நாசயதி
மாத்யந்தின மாதித்யாபிமுகோதீயான:
பஞ்சபாதக உபபாதகாத் ப்ரமுச்யதே

ஸர்வவேதபராயண புண்யம் லபதே
நாராயண ஸாயுஜ்யமவாப்னோதி
நாராயண ஸாயுஜ்யமவாப்னோதி

ய ஏவம் வேத
இத்யுபநிஷத்

ஹரி : ஓம்

————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேத வியாஸர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள் –32-சுருக்கம் —

April 8, 2021

1. மதுவித்யை

தேனாக ஸுர்யனையை த்யானம் செய்வது.
ஸுர்ய மண்டலத்தை, தேவதைகள் உட்கொள்ளும் தேனாகவும்,
மேலுலகில் அந்தரிக்ஷம் எனப்படும் தேன் அடை இருப்பதாகவும்,
வண்டுகள் மலர்களிலிருந்து தேனை எடுத்து சேர்க்குமாப் போலே”வேத மந்த்ரங்கள்” என்றும்,
வஸு – ருத்ர – ஆதித்ய – மருத் ஸாத்ய கணங்கள் 4 திக்குகளிலும், மேல்புறத்திலும் நிற்பதாகவும்
தேனாக ஸுர்யனைப் பாவித்தும் அவனுக்கு அந்தர்யாமியாக பகவானை உபாஸனம் செய்தல்.

————

2. காயத்ரீ ப்ரஹ்ம வித்யை

காயத்ரீ சந்தஸ்ஸுக்கு மூன்று பாதங்கள், 24 அக்ஷரங்கள்.
ப்ரஹ்மத்திற்கு 4 பாதங்கள் (பூதம், ப்ருத்வி, சரீரம், ஹ்ருதயம்) .
வாக்கானது ஸர்வ பூதங்களையும் குறிக்கிறது – இரு குணங்கள் .
ப்ருத்வியை பாதமாக உடைய இதற்கு ஸர்வ பூதங்களும் ஆதாரம் . அவைகளால் மீள முடியாது.
சரீரமாயும் ஹ்ருதயமாகவும் இப்படி ப்ருஹ்மத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. இப்படி உபாஸிக்கச் சொல்கிறது.
இதற்கு அங்கமாக ஹ்ருதயத்தில் நான்கு பக்கங்களிலும் , மேலுமாக ஐந்து குழிகள் இருப்பதாகவும்,
அங்கு ப்ராணன்கள் சஞ்சரிப்பதாகவும்,
ஐந்து குழிகளிலும் ஐந்து துவாரபாலகர்கள் மற்றும் ஆதித்யன், சந்த்ரன், அக்னி, பர்ஜன்யன், ஆகாசம்
இவைகளின் தேவதைகள் இருப்பதாகவும் உபாஸனம் செய்யுமாறு சொல்கிறது.
இது ”காயத்ரீ ப்ருஹ்ம வித்யை” எனப்படும்.

———-

3. கௌக்ஷய ஜ்யோதிர் வித்யை

ப்ரம்மமே வைச்வாநரன். இவன் அக்னிக்கு அந்தர்யாமி. இங்ஙனம் உபாசிக்கும் முறைதான் இந்த வித்யை.
காதுகளை கைகளால் மூடிய போது காதுக்குள் ஒரு சப்தம் கேட்கிறதல்லவா? அது, இந்த ப்ரஹ்மத்தைக் காட்டுகிறது.

————

4. சாண்டில்ய வித்யை

ப்ரும்மமே எல்லாவற்றிற்கும் காரணம் என்று அறிந்து காம க்ரோதங்கள் இன்றி சாந்தத்துடன் ப்ரும்மத்தை உபாஸிப்பது.

————-

5. கோஸ விஜ்ஞானம் (வித்யை)

தன் புத்ரன் தீர்க்க ஆயுளோடு இருக்க செய்யப்படும் உபாஸனம். வாயுவை திக்குகளின் குமாரனாக நினைத்து
மந்த்ரங்களைச் சொல்லி உபாஸிக்க வேண்டும்.

———-

6. புருஷ வித்யை

தன்னை ஒரு யக்ஞமாக கருதி தன் ஆயுட் காலத்தை (116 வருமூம்) மூன்றாக பிரித்து
வஸு , ருத்ர, ஆதித்யர்களாக நினைத்து,
பசி, தாகங்களைத் தீக்ஷையாகவும், உட்கொள்வதை உபஸத்தாகவும் சிரிப்பு இவைகளை ஸ்தோத்ரங்களாகவும்,
சாஸ்த்ர சம்பந்தமாகச் செய்யப்படுவதை ஸம்பாவனையாகவும், மரணத்தை அவப்ருதமாகவும் பாவித்து, சாஸ்திர விதிப்படி உபாஸித்தால்,
நோயை விலக்கி நீடித்து வாழ்வான் என்கிறது.
”ஐதரேய மஹிதாஸர்” என்பவர் இப்படி வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
இவர், இந்த வித்யையை, ஸ்வேத கேதுவுக்கு உபாசித்ததாகவும் சொல்வர்.
அந்திம காலத்தில் ஜபிக்க வேண்டிய மந்த்ரங்களை ஜபித்தால், மோக்ஷம் அடைவான் என்றும் கூறுகிறது.
(தைத்திரீய முடிவில் சொல்லப்படும் புருஷ வித்யை இதுவல்ல).

————-

7 – ரைக்வ வித்யை

இது ஸம் வர்க்க வித்யை என்றும் சொல்லப்படும்.
”ஜாநச்ருதி” என்பவர் மிகவும் தர்மிஷ்டர். வீடுகள், சத்திரங்கள் கட்டி எல்லா இடங்களிலும் அன்னதானம் முதலிய எல்லா
தானங்களையும் ச்ரத்தையோடு செய்பவர். ஒரு நாள் இரவில்அவர் தன்னுடைய மாளிகையின் மேல் மாடியில்
படுத்திருக்கும்போது, அவருக்கு மேலே ஆகாயத்தில் அன்னங்கள் பறந்தன. அதில் முன்னே போகும் அன்னத்தை,
பின்னே செல்லும் அன்னம், ”உனக்கு கண்ணில்லையா ?
தர்மிஷ்டனான ”ஜாநச்ருதி” படுத்திருக்க, அவன் மேலாகப் பறந்து போகிறாயே?” என்று கேட்டது.
முன்னே செல்லும் அன்னம்,”வண்டியுடன் எப்போதும் வசிக்கும் ரைக்ரவரா இவர்?” என்று கேட்டது.
”அது யார்? வண்டியோடு இருக்கும் ரைக்வர்” என்று, பின்னால் செல்லும் அன்னம் கேட்டது.
சூதாட்டங்களில் ”க்ருதம்” என்கிற ஆட்டம் தெரிந்தவர் எல்லா ஆட்டங்களும் தெரிந்ததற்குச் சமம்.
”ரைக்வர்” எல்லாம் அறிந்தவர். அந்த பெருமை இந்த ஜாநச்ருதிக்கு ஏது?” என்று
முன்னே செல்லும் அன்னம் சொல்லிற்று.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜாநச்ருதி , காலையில் எழுந்து ”ரைக்வர் எங்கிருக்கிறார்?” என்று அறிய எல்லா
பக்கங்களிலும் ஏவலர்களை அனுப்பினார். பல பேர் காணவில்லை என்று திரும்பி வர, ஒருவன் மட்டும் ”ஓரிடத்தில்
வண்டியின் அடியில் சிரங்குகளைச் சொறிந்து கொண்டு அமர்ந்திருக்கிறார்” என்று சொன்னார்.

ஜாநச்ருதி, பசுக்கள், குதிரைகள் இவற்றை ஏராளமாகக் கொண்டுபோய் ரைக்வரிடம் கொடுத்து அடிபணிந்து
தேவதாக்ஞானம் உபதேசிக்க ப்ரார்த்தித்தார். ரைக்வர் மறுத்தார். மறுபடியும் ஏராளமான செல்வங்களையும் மற்றும் தன்
புத்ரியையும் கொடுத்து உபதேசிக்குமாறு ப்ரார்த்தித்தார்.
இப்போது மனம் கனிந்து, ரைக்வர் உபதேசித்ததுதான் ரைக்வவித்யை.

————–

8 – ஸம்வர்க வித்யை

(ஸத்ய காம ஜாபாலர் என்கிற மஹரிஷி ஸ்வேதகேதுவுக்கு உபதேசித்தது)
காபேயன், அபிப்ரதாரி , என்கிற இருவர் சாப்பிட உட்கார்ந்த சமயத்தில் ஒரு ப்ரஹ்மச்சாரி பிக்ஷை கேட்டார். இருவரும் பிக்ஷை
போடவில்லை. ப்ரஹ்மச்சாரி , ”உலகத்தை தாங்குபவன் நான்கு நான்கு மஹாத்மாக்களை விழுங்கியுள்ளான். பற்பல உருவாக
வசிப்பவன் அவன். இவனை மனிதர்கள் தெரிந்து கொள்வதில்லை.
இந்த அன்னம் யாருக்கு உள்ளதோ அவனுக்கு அளிக்கப்படவில்லை” என்றான்.

காபேயன், ”ப்ரஹ்மச்சாரியே ! எல்லாவற்றையும் ச்ருஷ்டிப்பவன் ஸர்வக்ஞன். இவன் ஒருவராலும் சாப்பிடப்படாததைச் சாப்பிடுகிறான்.
இப்படி நாங்கள் உபாஸிக்கிறோம்” என்று சொல்லி, பிக்ஷை அளித்தான்.
அக்னி, ஸ@ர்யன், சந்த்ரன் இவற்றிற்கு லயஸ்தானம் வாயு.
உடம்பில் கண், காது, வாக்கு, மனஸ் இவைகளுக்கு லயஸ்தானம் ப்ராணன். இவற்றைத் தெரிந்து உபாஸிப்பவன் ,
ப்ரஹ்மத்தை அனுபவிப்பான். (இது பலன்) என்று இதில் சொல்லப் படுகிறது.

————–

9 – ஷோடச கல ப்ரஹ்ம வித்யை

ஸத்ய காமன் என்கிற மஹரிஷியின் வரலாறு சொல்லப்படுகிறது.
ஸத்ய காமன் ஆசார்யரை வரிக்கப் போவதற்கு முன்பு தன் தாயாரிடம் கோத்ரத்தின் பெயரைக் கேட்டான்.
”கோத்ரம் எதுவென்று தெரியாது” என்று சொன்ன தாயார், ஆசார்யனிடத்தில் ”என் தாயார் ஜாபாலை. நான் ஸத்ய
காமன் என்று சொல்!” என்றாள்.
ஸத்ய காமன் கௌதம-ஹாரித்ருபாதர் என்கிற ரிஷியிடம் சென்று இதைச் சொல்ல, குருவும் இவனை அங்கீகரித்து
இளைத்த 400 பசுக்களை வளர்த்துவரச் சொன்னார். அவற்றை வெகு சிரமப்பட்டு பல வருஷங்கள் வளர்த்து ஆயிரம்
பசுக்களாக்கினான். அவற்றில் ஒரு காளை ஸத்ய காமனுக்கு ”ப்ரகாசவா” என்கிற பாதத்தை உபதேசித்து, அதற்கு நான்கு
அவயவங்கள் என்று கூறி, ”அக்னி உனக்கு இன்னொரு பாதத்தைச் சொல்லும்” என்று சொல்லிற்று.

மறுநாள் ”ஸமிதாதானம்” செய்யும் சமயத்தில், அக்னி ”அனந்தவான்” என்கிற பாதத்தையும், அதன் நான்கு
பாகங்களையும் உபதேசித்தது.
”ஹம்ஸம் உனக்கு மூன்றாவது பாதத்தைச் சொல்லும்” என்றது.
மறுநாள் மாலை அன்னத்திடம் ஜ்யோதிஷ்மான் என்கிற பாதத்தையும், அதன் நான்கு பாகங்களையும் அறிந்தான்.
அன்னம், ”மற்றொரு பாதத்தை நீர்ப்பறவை சொல்லும்” என்றது.

அதற்கடுத்த மறுநாள் மாலை நீர்ப்பறவையிடம் ”ஆயதனவான்” என்கிற பாதத்தையும், அதன் பாகங்களையும் அறிந்தான்.
இப்படியாகக் கற்று நன்கு அறிந்த ஆசார்யனைப் போன்ற தேஜஸ் முகத்தில் தெரிய ஆயிரம் மாடுகளையும் ஓட்டிக் கொண்டு
ஆசார்யரிடம் சென்றான்.

ஆசார்யர் இவனைப் பார்த்து ”ப்ரஹ்மத்தை அறிந்தவனாக உன் முகம் சொல்கிறது. யார் உனக்கு சொன்னது?” என்று கேட்க,
ஸத்ய காமன் எல்லாவற்றையும் சொல்லி , ”இருந்தாலும் ஆசார்ய முகமாக உபதேசம் செய்யவேண்டும்” என்று ப்ரார்த்திக்க மனம்
சந்தோஷம் அடைந்து ஆசார்யனும் உபதேசம் செய்தார்.(இரண்டு உபதேசமும்-அதாவது எல்லாம் ஒன்றாக இருந்தன).

இந்த ஸத்ய காமனின் சிஷ்யன் உபகோஸலன். பன்னிரண்டு வருடம் ஆசார்யனின் வைதீக அக்னியைப் பாதுகாத்து வந்தான்.
ஆசார்யன் இவனுடன் இருந்த மற்ற சிஷ்யர்களுக்கு உபதேசம் முதலியவற்றை முடித்தவர் , உபகோஸலனுக்கு ஒன்றும்
சொல்லவில்லை. ஆசார்யருடைய மனைவி ப்ரார்த்தித்தும் எதுவும் சொல்லாமல், ஆசார்யன் வெளியூர் சென்று விட்டார்.

பன்னிரண்டு வருஷ காலம் பாதுகாத்து வந்த அக்னி இவனிடம் கருணை கொண்டு ”கம என்பது நமது சுகம், வம்
என்பது இந்த்ரியம் அல்லது வானம் போன்றது என்றும், ப்ராணன் ப்ருஹ்மம், கம்-ப்ருஹ்மம் (வம்) என்று உபதேசித்தான்.

பிறகு ”அக்னி வித்யையை” உபதேசித்து இதற்கு மேல் உனக்கு ஆசார்யன் உபதேசிப்பார் என்று அக்னி சொன்னான்.

வெளியூர் சென்றிருந்த ஆசார்யன் திரும்பி வந்தார்.
சிஷ்யனின் முகத்தைப் பார்த்தார். ”ப்ரஹ்ம தேஜஸ் ப்ரகாசிக்கிறதே? யார் உபதேசித்தது?” என்று கேட்டார்.

உபகோஸலன் நடந்த உண்மையைச் சொன்னான். ஆசார்யன் சந்தோஷமடைந்து மேற்கொண்டு உபதேசம் செய்தார்.
அதாவது
ஆத்மாவானது த்ரேகத்தில் இருப்பது. ஆத்மாவிற்கு அழிவு கிடையாது. இதை நன்கு தெரிந்து கொண்டால் பாபம்
ஆத்மாவில் ஒட்டாது என்று ஆரம்பித்து பலவற்றையும் உபதேசித்தார். இவ்வாறு உபாஸனம் செய்தவன் முமுக்ஷுவாக
இருப்பதால் இவன் மரணமடைந்த பிறகு இவனுக்கு செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்யா விட்டாலும் இவன் ஆத்மா
அர்ச்சிராதி மார்க்கம் என்கிற தேவயான மார்க்கத்தாலே ப்ரஹ்மத்திடம் சேர்க்கப்படுவான்.
இதன் பிறகு துக்கம் என்பதே கிடையாது என்று உபதேசித்தார்.

—————

10 – மேலே சொல்லப்பட்டது உபகோஸல வித்யை, என்றும் சொல்வர்
————–

11 – நடுவில் அக்னி உபதேசித்தது இதைச் சார்ந்த அக்னி வித்யை
(ஆக, ஷோடச கலை ப்ரஹ்மவித்யை, உபகோஸல வித்யை, அக்னி வித்யை மூன்றும் சொல்லப்பட்டது)

—————-

12 – ப்ராண வித்யை

ப்ராணன் மூத்தது. அதாவது கர்ப்ப வாஸத்தில் ப்ராணன் ஏற்பட்ட பிறகுதான் மீதி இந்த்ரியங்கள் உண்டாகின்றன.
ஆதலால் ப்ராணன் ”ஜ்யேஷ்டன்”.

ப்ராணனுக்கும் மீதி இந்த்ரியங்களுக்கும் ஒரு கலகம் ஏற்பட்டது. ”யார் உயர்ந்தவர்?” என்பதே அது.
ஸ்ருஷ்டி செய்த ப்ரஜாபதியிடம் சென்று, இந்த வ்யவஹாரத்தைத் தீர்க்குமாறு கேட்டுக் கொண்டன.
அவர் உங்களுக்குள் யார் சரீரத்திலிருந்து வெளிப்பட்டால் சரீரம் குலைந்து போகுமோ அவரே ச்ரேஷ்டர், உயர்ந்தவர் என்றார்.

வாக்கு ஒரு வருஷ காலம் சரீரத்தை விட்டு வெளிப்பட்டு இருந்தது. ஊமை போல சரீரம் வாழ்ந்தது. இதைப் போலவே
கண்கள், காதுகள் மற்ற இந்த்ரியங்களும் வெளிப்பட்டு சரீரத்தைச் சோதித்தது.
சரீரத்தில் அந்தந்த அங்கத்திற்கு குறைவு ஏற்பட்டதே தவிர, சரீரம் ஜீவித்திருந்தது.
ப்ராணன், சரீரத்தை விட்டு வெளியே கிளம்பின தருணத்தில் எல்லா அவயவங்களும் செயலிழக்கத் தொடங்கின.
அவை ப்ராணனை வெளியே போக வேண்டாம் என்று வேண்டி, ப்ராணனே ச்ரேஷ்டன் அதாவது உயர்ந்தவன் என்றன.
ப்ராணன்,தனக்கு அன்னம், ஆடை எல்லாம் அளிக்க வேண்டும் என்று கேட்டது.
அன்னம் ப்ராணனுக்கு என்றும், முன்னும் பின்னும் அருந்தும் ஆசமன தீர்த்தம் ப்ராணனுக்கு உடை என்றும் சொல்லி
அவையாவும் ப்ராணனை உபாசித்தன.

————–

13. பஞ்சாக்னி வித்யை

அருண மஹரிஷியின் குமாரர் ஆருணீ. அவரின் குமாரர் ச்வேதகேது. அவர் ஒரு சமயம் பாஞ்சால தேசத்தில் நடந்த
ஸதஸ்ஸுக்கு (விவாதங்கள் நடக்கும் சபை) சென்றார்.
ப்ரவாஹணன் என்ற பாஞ்சால தேசத்து அரசன் நடத்திய சபைக்கு அவர் சென்றார். அந்த அரசன் ச்வேதகேதுவை சில கேள்விகள் கேட்டார்.
அரசன்:ரிஷி புத்ரரே! உமக்கு தகப்பனார் உபதேசங்களைச் செய்திருக்கிறாரா ?
ச்வேதகேது: ஆம் அரசன்: ப்ரஜைகள் மரணம் அடைந்த பிறகு போகும் இடம் எது?
(அதாவது யாக தான பூர்த்தாதி புண்ய கர்மாக்களைச் செய்தவர்கள் எந்த லோகத்திற்கு போகிறார்கள்)
ச்வேதகேது: தெரியாது
அரசன்: திரும்பி வரும் வழி எது? (யாகாதிகளை அனுஷ்டித்தவர்திரும்பி வரும் வழி எது ?)
ச்வேதகேது: தெரியாது
அரசன்: தேவயான மார்க்கம், பித்ருயாண மார்க்கம் இவற்றின் வேறுபாடு தெரியுமா? (வேத்தபதோ தேவயானஸ்ய
பித்ருயானஸ்யச வ்யாவர்த்தனா ?)
ச்வேதகேது: தெரியாது
அரசன்: மேலுலகம் சென்றவர்கள் யார் தெரியுமா? (இந்த லோகத்திலிருந்து செல்பவர்களில் ஸ்வர்க்க லோகத்தை
அடையாதவர்கள் யார் ?)
ச்வேதகேது: தெரியாது
அரசன்: ஐந்தாவது ஆஹூதியில் மனிதன் பிறக்கிறான் என்பது தெரியுமா?
(வேத்த யதா பஞ்ம்யாமாஹூ தாவாப புருஷவசஸோ பவந்தீதி ?)
ச்வேதகேது: ஒன்றும் தெரியாது

இங்ஙனம் கேள்விகள் கேட்ட பாஞ்சால தேசத்து அரசன்
”ரிஷிபுத்ரரே, இவை ஒன்றையும் அறியாது, நீர் பெற்றுக் கொண்ட உபதேசம் தான் என்ன ? எப்படி உபதேசம் பெற்றதாகக்
கூறமுடியும் ?” என்று கேட்க,
ச்வேதகேது மான பங்கப்பட்டு தகப்பனாரிடம் ஓடி வந்து (ஆருணி) விஷயத்தைச் சொல்ல, அவர்
தனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று வருத்தப்பட்டு,அரசனிடமே கேட்கலாம் என்று புறப்பட்டார்.
ச்வேத கேதுவையும் அழைத்தார். பிள்ளை வரவில்லை.
தான் மட்டும், ப்ரவாஹணன் என்கிற அந்த பாஞ்சால தேசத்து அரசனிடம் சென்றார்.
தன்னுடைய பிள்ளையிடம் கேட்ட கேள்விகளுக்கு தனக்கு பதில் தெரியாது என்றும்
அதைத் தெரிந்து கொள்ள வந்திருப்பதாகவும் சொன்னார்.

அரசன் ஆருணி என்கிற உத்தாலகருக்கு உபதேசித்ததே ”பஞ்சாக்னி வித்யை”.
ச்ரத்தையோடு புண்ய கர்மாக்களைச் செய்தவன் மரணம் அடைந்ததும், உடலில் இருந்து கிளம்பிய அவனும் (ஜீவாத்மா),
ப்ராணேயந்த்ரியங்களும், பூத ஸூக்ஷ்ம ஸரீரம் எடுத்து, முதல் அக்னியான ”ஸ்வர்க்கத்தில்” ஹோமம் செய்யப்படுகிறது.
வெகு போக்யமான ஸரீரம் எடுத்து (போக ஸரீரம்) போகங்களை அனுபவித்த பிறகு இந்த பூத சுக்ஷ்ம ஸரீரம் ”மேகம்” என்கிற
அக்னியில் சேர்க்கப்படுகிறது. பிறகு மழை மூலமாக, பூமி என்கிற நிலத்தில் விழுந்து,தான்யங்களில் புகுந்து, ஆகாரமாக புருஷனின் (நாலாவது அக்னி)
உடலில் சேர்ந்து, பிறகு ஸ்த்ரி எனப்படும் ஐந்தாவது அக்னியில் சேர்ந்து ஏறக்குறைய பத்து மாதங்கள் இருந்து உலகில் பிறக்கிறது.
இதுவே பஞ்சாக்னி வித்யை.

ஆயுள் பர்யந்தம் வரை இருந்து, மறுபடியும் மரணம் அடைந்து, முன்பு சொன்னதைப் போல ஐந்து அக்னிகளில்
இருந்து மறுபடியும் பிறந்து இப்படி எண்ணற்ற சங்கிலித் தொடராக,ஜீவன் பிறவிகள் எடுக்கிறது. இப்படி இருப்பதை
உணர்ந்து ஆத்மாவை வேறாகப் பாவித்து, உபாஸிப்பவரும் ச்ரத்தையுடன் ப்ரஹ்மத்தையே உபாஸிப்பவரும், மரணம்
அடைந்ததும் ”தேவயான மார்க்கம்” என்று சொல்லப்படும் அர்ச்சிராதி மார்க்கத்தாலே ப்ரஹ்மத்தை அடைகின்றனர்.
(அர்ச்சிராதி மார்க்கம் – இதில் விரிவாகவே சொல்லப்படுகிறது)

யக்ஞம் செய்தவர்கள், குளம் முதலியன வெட்டியவர்கள், ஆலயம் கட்டியவர்கள், தான தர்மம் செய்தவர்கள், பித்ருயான
மார்க்கமான புகை, இரவு, க்ருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயனம், பித்ரு லோகம், ஆகாசம், சந்த்ர லோகம் மூலமாக ஸ்வர்க்கம் சென்று
போகத்தை அனுபவித்து பிறகு ஆகாசம், வாயு, புகை, மேகம், மழை, ஓஷதிகள் என்று திரும்பி வந்து புருஷனிடம் போய்
சேர்வதில் முன் கர்ம வினைகளுக்கு தக்கபடி தாமதம் முதலியன ஏற்பட்டு கர்ப்பம் மூலமாக ஸ்த்ரீயை அடைந்து – மறுபடியும்
ஜனனம், மறுபடியும் மரணம்.
இப்படி பலப்பல ஜன்மங்கள். கொசு, புழு, பூச்சி போன்ற ஜந்துக்கள் பிறப்பதும், மரிப்பதுமாய் இருக்கும்.
இவற்றிற்கு மேலுலகம் என்பது இல்லை.
ஸ்வர்க்க லோகம் தான் அக்னி. ஸுர்யன்-ஸமித். ஸுர்ய கிரணங்கள்-புகை. அஹஸ் – அர்ச்சிஸ். சந்த்ரன்-அங்காரம்
அதாவது தணல். நக்ஷத்திரங்கள் – நெருப்பு பொறிகள்.

———–

14. வைச்வாநர வித்யை

ப்ராசீனசாலர் , சத்யஜ்ஞர், இந்த்ரத்யும்னர், ஜனர், புடிலர் – ஆகிய ஐந்து மஹரிஷிகளும் ஒன்று கூடி ”நம் ஆத்மா யாது ?
ப்ரஹ்மம் யாது ?” என்று விசாரம் செய்து, தெளிவு ஏற்படாமல்,
அருண மஹரிஷியின் புதல்வரான உத்தாலக மஹரிஷியை அணுகினர்.
அவரும் இதை நான் அறியேன் அல்லேன்! இதனை அறிந்தவர் கேகய தேசத்து அரசன் அச்வபதி என்பவர். அவரை
அணுகுவோம் என்று ஆறு மஹரிஷிகளும் அச்வபதியை அடைந்தனர்.
அச்வபதி மன்னர் இந்த மஹரிஷிகளைக் கொண்டு ருத் விக்குகளாக வரித்து யாகம் செய்து தக்ஷிணையைக்
கொடுக்கிறேன் என்றார்.
இவர்கள் வைச்வாநர வித்யையை தானமாக (தக்ஷிணை) வேண்டினர்.(அக்காலத்தில் ஞானத்தைப்
பெறுவதற்கு மிகவும் ஆவலும், அதற்கான வழிகளில் இழிவதும் மஹரிஷிகளிடையே இருந்தது )
அரசன் இவர்களை ஒவ்வொருவராக அழைத்து, வைச்வாநர உபாஸனம் இதுவரை எப்படி செய்கிறார்கள் என்று கேட்டான்.
ப்ராசீனசாலர் த்யுலோகத்தையும், சத்யயஜ்ஞர் ஆதித்யனையும், இந்த்ரத்யும்னர் வாயுவையும் ஜனர் ஆகாசத்தையும், புடிலர்
ஜலத்தையும், உத்தாலகர் ப்ருத்வியையும் உபாசிப்பதாகச் சொன்னார்கள்.
அரசன், இவை யாவும் வைச்வாநர ஆத்மாவின் அவயவங்கள். இவை இம்மை பலனை மட்டுமே அளிக்கும்.
ஆனால் இவற்றையெல்லாம் சேர்த்து ”விச்வரூப வைச்வாநர” உபாஸனம் செய்ய வேண்டும் என்று உபதேசித்தான்.
இதன் பலன் ”பரப்ரம்ம உபாஸனை” என்றும் சொன்னான்.

இவற்றைத் தன் உடலில் அங்கங்களாக வைத்து ப்ராணாக்னியை வைச்வாநர அக்னியாக பாவித்து, அன்னத்தை
ஐந்து ப்ராணாஹூதிகளாக முறைப்படி செய்வது. பஞ்சப்ராணங்களை இப்படி உபாஸித்தால், அவற்றின் வழியே இந்த்ரியங்கள்,
அவற்றை நியமிக்கும் தேவர்கள், அவர்கள் சார்ந்த உலகங்கள், யாவும் திருப்தி அடையும். இப்படி உபாஸிப்பவனின்
பாபம் தீயில் இட்ட பஞ்சு போல எரிந்து போகும் என்று, அரசன் சொன்னான்.

————–

15. ஸத்வித்யை
அருண மஹரிஷியின் பேரன் ச்வேதகேது. உத்தாலகரின் குமாரன். பன்னிரெண்டு வயதான ச்வேதகேது தகப்பனாரின்
கட்டளைப்படி குருகுல வாஸம் செய்து வேதத்தை எல்லாம் அத்யயனம் செய்து 24 வயதில் திரும்பி வந்தான்.
உத்தாலகர் பிள்ளையைக் கேட்டார். ச்வேதகேது எல்லாவற்றையும் குருகுலவாஸத்தில் அறிந்து கொண்டாயா?
எதைக் கேட்டு, சிந்தனை செய்து, த்யானித்தால், உலகத்தில் எல்லாவற்றையும் கேட்டு ,சிந்தித்துத் த்யானிக்கப் பெற்றதாக
ஆகுமோ அப்படி ஸர்வத்தையும் நியமிக்கும்படியானதை ஆசார்யன் உபதேசித்தாரா ? நீ கேட்டு தெரிந்து கொண்டாயா ?

ச்வேதகேதுவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆசார்யன் இதைச் சொல்லவில்லையே, தந்தையிடமே ப்ரார்த்திப்போம்
என்று தந்தையிடம் இதற்கு அவரையே உபதேசமாக சொல்லுமாறு கேட்டுக் கொண்டான்.
உத்தாலகர் சொன்னார்.
ஸத் என்கிற வஸ்து, தான் பலவாறாக ஆகக் கடவேன் என்று ஸங்கல்பம் செய்து கொண்டு ”தேஷஸ்”ஸை ச்ருஷ்டித்தது.
”தேஷஸ்” ஸங்கல்பம் செய்துகொண்டு ஜலத்தை ச்ருஷ்டித்தது. ஜலம் , இவ்வாறு ப்ருத்வியை ச்ருஷ்டித்தது.
இவைகள் பூமியில் பிராணிகள் என்ற பூதங்களாயின.
அந்த பிராணிகள் அண்டஜம், ஜீவஜம், உத்பிஜ்ஞம் என்று மூன்று வகை.
அண்டஜம் – முட்டையிலிருந்து உண்டாவது.
ஜீவஜம் – பிராணிகளிடமிருந்து பிறப்பது (மனிதர்களையும் சேர்த்து)
உத்பிஜ்ஞம் – பூமியைப் பிளந்து வளர்வது (மரம், செடி,கொடிகள்).
(உத்பிஜ்ஞத்தில் வியர்வையிலிருந்து உண்டாவதும் சேரும்).
ஸத் என்பது ஜீவாத்மாவோடு ப்ரவேசித்து, பலவகை நாம ரூபங்களை உண்டாக்க சங்கல்பித்துக் கொண்டு,
அதற்காக தேஜஸ், ஜலம், ப்ருத்வி என்கிற மூன்று மகா பூதங்களையும் த்ருவித்க்கரணம் செய்தது.
அதாவது ஜலத்தில் மற்ற இரண்டும்(தேஜஸ், ப்ருத்வி) கலந்திருக்கும்.
தேஜஸ்ஸில் ஜலம், ப்ருத்வி கலந்திருக்கும். ப்ருத்வியில் தேஜஸ், ஜலம் கலந்திருக்கும்
(இவற்றை பஞ்ச பூதங்கள் என்று சொல்லும்போது பஞ்சீகரணம் என்று பெயர்).
இப்படி கலந்திருப்பதிலிருந்து உடலை ச்ருஷ்டித்து, ஜீவாத்மாவுடன் தானும் அதன் உள்ளே புகுந்து, ஒவ்வொரு வஸ்துவாகவும்,
”ஸத்” என்கிற பரப்ரம்மம் இருக்கிறது .
ஒவ்வொன்றிலும் அசேதனம், சேதனன், ஈச்வரன் சேர்ந்து இருக்கிறது என்பதை அறிவாயாக.
தேஷஸ்ஸுக்கு நிறம் சிவப்பு. ஜலத்திற்கு நிறம் வெண்மை.
ப்ருத்விக்கு நிறம் கருப்பு. நெருப்பு எரியும்போது இந்த மூன்று நிறங்களையும் காணலாம்.
இப்படி மூன்று மஹா பூதங்களிலிருந்து உண்டான
அன்னம், உடலை வளர்த்து, மூன்று பரிணாமங்களைப் பெறுகின்றது.
அஸாரபாகம் – மலமாக ஆகிறது.
ஸாரபாகம் -உடலில் மாம்ஸம்.
மிகவும் ஸாரமானது மனஸைப் போஷிக்கிறது.
அருந்தும் ஜலமும், நீர், இரத்தம், மனஸைப் போஷிக்கும் பாகம் என்று மூன்றாக மாறுகிறது.
தேஜோமயமான ஆகாரமும்,எலும்பு, அதற்கு வேண்டிய ஸ்னேஹம் (பசை), வாக்கை வளர்க்கும் பாகம் என மூன்றாக மாறுகிறது.
ஆக மனஸ்-அன்னமயம்,
ப்ராணன்- ஜலமயம்,
வாக்கு – தேஜோமயம்.
”15 நாட்கள் ஆகாரம் இல்லாமல் வெறும் ஜலத்தைப் பானம் பண்ணி வந்தால்கூட, ப்ராணன் அழியாது. அப்படி இருந்து
மறுபடியும் என்னிடம் வா” என்றார் தகப்பனார்.
ச்வேதகேது, அப்படியே 15 நாட்கள் பட்டினி கிடந்து அப்போது தீர்த்தத்தை மாத்திரம் அருந்தி தகப்பனாரிடம் வந்தான்.
தகப்பனார் வேதங்களைச் சொல்லச் சொன்னார்.
ச்வேதகேதுவால் எதுவும் சொல்ல முடியவில்லை.
அப்போது ”நீ சாப்பிடாத போது16 அம்சங்களில் 15 அம்சங்கள் போய் விட்டன. இப்போது சாப்பிட்டு விட்டு வா” என்றார்.
ச்வேதகேது சாப்பிட்ட பிறகு சொல்வதற்கு பலம் வந்தது. அன்னத்தால் புஷ்டி ஏற்படுகிறது என்று விளக்கினார்.

இதைப்போல எல்லா உலகுக்கும் காரணமான வஸ்து எல்லாவற்றிலும் உட்புகுந்து நியமிக்கும்
சக்தியோடு இருக்கிறது என்று சொன்னார்.
பலவகை புஷ்பங்களிலிருந்து தேனீக்கள் தேனைச் சேகரிக்கின்றன. அந்த தேன் துளிகள், ”நான் இந்த புஷ்பத்தைச்
சேர்ந்தவன்” என்று தனியாகப் பிரித்துச் சொல்ல முடியுமா ?
அப்படியே ”ஸத்” எனப்படும் பராமாத்மாவிடம் ஒன்றின ஜீவாத்மாக்கள், தங்களைத் தாங்களே தெரிந்து கொள்ள இயலாது.
பல நதிகளிலிருந்து தண்ணீர் ஸமுத்திரத்தில் சேர்ந்த பிறகு அவை இன்னின்ன நதியின் ஜலம் என்று பிரித்து சொல்ல முடியுமா ? முடியாது.
ஒருவன் மரணம் அடையும் தருவாயில் அவனைச் சேர்ந்தவர்கள் அருகில் அமர்ந்து சில கேள்விகள் கேட்கும்போது
அவற்றை அவன் உணர்வதில்லை. ஏனெனில் அவனது வாக்கு மனஸ்ஸிலும், மனஸ் ப்ராணனிலும், ப்ராணன் தேஜஸ் எனப்படும்
பூத ஸக்ஷ்ம சரீரத்திலும் அதன் காரண வஸ்துவான பரமாத்மாவிடமும் லயித்து விடுவதால், உணர்வதில்லை.
உலகெங்கும் பரமாத்மா இருக்கிறான் என்றும், அவன் அழிவற்றவன், தோஷமற்றவன், எல்லா உயிர்களுக்கும் அவன்
ஆத்மா, உனக்குள்ளும் அவன் இருக்கிறான் என்று ச்வேதகேதுவுக்கு உத்தாலகர் உபதேசித்தார்.

இந்த ஸத்வித்யையில் 16 கண்டங்கள்
இவற்றில் சொல்லப்பட்டவை.
(1) ”ஸத்” என்பது எல்லா உலகத்துக்கும் காரணம்.
(2) ”ஸத்” முதலில் ”ஸமஷ்டி ச்ருஷ்டி” செய்கிறது.
(3) பூதங்களை ஒன்றோடொன்று சேர்த்து ”வியஷ்டி” ச்ருஷ்டி
செய்கிறது.
(4) த்ருவித்கரணம் என்கிற பூதங்களின் சேர்க்கை
செய்யப்படுகிறது.
(5) தேஜஸ், ஜலம், ப்ருத்வி இவற்றால் உடல் வளர்க்கப்படுகிறது.
(6) அன்னத்தின் நுண்ணிய பாகம் வாக், ப்ராணன், மனஸ்ஸை
வளர்க்கிறது.
(7) இது இல்லையேல் மனஸ் க்ஷீணமாகி விடுகிறது.
(8)”ஸத்” – சேதனங்களில் லயஸ்தானம்.
(9) இப்படி லயிக்கும் ஜீவன்கள் கணக்கில்லாதவை
(10) கடலில் இருந்து ஜலம் ஆவியாகி, மழையாகி, நதியாவது போல சேதனர்கள் (ஜீவன்கள்) ஸத்திலிருந்து புறப்படுவர்.
(11) இந்த சேதனர்களுக்கு அழிவில்லை.
(12) ”ஸத்” என்பது மிக மிக ஸக்ஷ்மமானது
(13) ”ஸத்” – எங்கும் கரந்து ,பரந்து உள்ளது.
(14) ஆசார்யன் மூலமாக இதை அறிய வேண்டும்
(15) இந்த வித்யையை உபாஸிப்பவனுக்கு எல்லா அநிஷ்டமும் போகும்
(16) அதனால் மீண்டும் ஸம்ஸார பந்தம் இல்லை.
உத்தாலகரின் உபதேசம் உலகில் உள்ளோர் மனங்களில் நன்கு பதியும்படி இருப்பதாகச் சொல்வர்.

—————

16. பூம வித்யை
நாரதர், ஸனத்குமாரரை அணுகி உபதேசம் செய்யும்படி ப்ரார்த்தித்தார். அவரது மனம் கலங்கியிருந்தது.
நாரத மஹரிஷி யாவும் அறிந்தவர். அவருக்கே கலக்கம் என்றால்?
ஸனத்குமாரர்,நாரதரைப் பார்த்து
உமக்கு தெரிந்ததையெல்லாம் முதலில் சொல்லுங்கள் என்றார்.
நாரதர் நான் எல்லா ஸப்தங்களையும் அறிந்திருக்கிறேன் என்றார்.
இதை உபாஸித்து (ப்ரம்மமாக)ஸப்தங்கள் கேட்குமிடங்களிலெல்லாம்
ஸஞ்சரித்து ஆனந்தம் அடையலாம் என்று ஸனத்குமாரர் சொல்ல,
நாரதர் இதற்கு மேலும் உண்டா என்று கேட்டார்.
ஸம்பாஷணை தொடர்ந்தது.

ஸப்தம், வாக்கு, மனஸ், ஸங்கல்பம், சித்தம், த்யானம், விஜ்ஞானம், பலம், அன்னம், தண்ணீர், தேஜஸ், ஆகாயம்,
நினைவு, ஆசை என்று பதினான்கையும் ப்ரம்மமாக உபாஸிக்கலாம் என்று ஸம்பாஷணை தொடர்ந்தது.
இதற்கும் மேலானது எது என்கிற கேள்வி வந்தபோது,
”ப்ராணனை” மேலானதாக உபாஸிக்கலாம் என்றும், ப்ராணன் என்பது ஜீவாத்மா என்றும்
இந்தப் ப்ராணனை உயர்ந்த புருஷார்த்தமாக உபாஸிக்கலாம் என்றும் சொன்னார்.

ஸனத்குமாரர் மேலும் சொன்னார்.
இதை விட ”ப்ரம்மத்தை” உபாஸனை செய்வது மேலானதாகும். அதற்கு உபாஸனம், மனனம், இதில் ச்ரத்தை,
இதில் அசைக்க முடியாத பற்றுதல், அதற்கு தகுந்த செய்கைகளில் ஊக்கம், இப்படி இருந்து அந்த ப்ரம்மத்தை
உபாஸிப்பது ”பூமா” எனப்படும்.
இதற்கு மேம்பட்டது இல்லை. இது எல்லாவற்றிற்கும் ஆத்மா-பரமாத்மா.
இப்படி உபாஸனம் செய்பவன், கர்மங்களிலிருந்து விடுபடுகிறான் இதற்கு மனஸ் சுத்தம் வேண்டும்.
மனஸ் சுத்தமாவதற்கு சுத்தமான ஆகாரத்தைச் சாப்பிட வேண்டும். இப்படி ஸனத் குமாரர் பதில் சொன்னார்.
இவரை ”ஸ்கந்தர்” என்றும் சொல்வதுண்டு.

———–

17. தஹர வித்யை

இந்த ஸரீரத்திற்கு ”ப்ரம்மபுரம்” என்று பெயர்.
இதன் உள்ளே இருக்கிற புண்டரீகம் (தாமரைப்பூ) போன்ற சிறிய ஹ்ருதயத்திலே ஆகாசம் இருக்கிறது.
வெளியில் உள்ள ஆகாசத்தைப் போலவே தான், இதுவும். உடல் அழியும்போது, புண்டரீகம் அழியும் போது இவ்வாகாசம் அழிவதில்லை.
இப்படி உள்ள ஆகாசத்தின் உள்ளே கல்யாண குணங்களான எட்டு – இதை உபாஸிக்க வேண்டும்.
இதனால் உபாஸிப்பவன் –
1) அபஹதபாப்மா (வினை இல்லாதவன்)
2) விஜர: (மூப்பில்லாதவன்)
3) விம்ருத்யு (மரணத்திற்கு இடமாகாதவன்)
4) விசோக: (துக்கமற்றவன்)
5) விஜிகத்ஸ: (பசியற்றவன்)
6) அபிபாஸ: (தாகமற்றவன்)
7) ஸத்யகாம: (நிலையான போக்யங்களை உடையவன்)
8) ஸத்யஸங்கல்ப: (தடையில்லாத ஸங்கல்ப சக்தியுள்ளவன்)— ஆக எட்டு குணங்களை அடைகிறான்.
வேதத்தில் சொல்லப்பட்ட சில கர்மாக்களைச் செய்து புண்ணிய பலன்களைப் பெற்றாலும், அதை அனுபவித்ததும்
யாவும் அழிந்து விடும்.ஆனால் ஆத்மாவையும் அதன் குணங்களையும் உபாஸிப்பவனுக்கு எல்லா பலன்களும் உண்டு.
இந்த பரமாத்மாவின் கல்யாண குணங்களை நாம் அறியாமல் இருப்பது நமது பாபத்தாலே. பூமிக்குள்ளே புதையல்
இருந்தும், பூமியின் மேலே நடப்பவனுக்கு அது தெரிவதில்லை.
அதைப் போல பரமாத்மாவை அறியாமல் இருக்கிறோம். இவன் ஹ்ருதயத்திலே இருக்கிறான். உபாஸகனாகிய ஜீவாத்மா
உடலிலிருந்து பிரிந்த பிறகு பரஜ்ஞோதியை அடைகிறான் என்பது இந்த பரமாத்மாதான்.
இவன் —இந்தப் பரமாத்மா—-சேதனம், அசேதனம் எல்லாவற்றையும் ஆள்கிறவன். எல்லா உலகங்களையும் எல்லா
பூதங்களையும், எல்லா வஸ்துக்களையும் ஒன்றோடொன்று கலந்து அழியாதபடி ஆங்காங்கு நிறுத்தி அதன் அதன்
தன்மையோடு காக்கின்றான்.இவனிடத்தில் எந்த தோஷமும் இல்லை.-இவனை அடைவதால் ”தாபத்ரயம்” நீங்கும்.

இவனைப் பெற, ப்ரம்மச்சர்யம் வேண்டும்.
ப்ரம்மச்சர்யத்தாலே ப்ரம்ம லோகத்தில் ”அரம்”என்றும் ”புண்யம்”என்றும் சொல்லப்படும் இரண்டு ஸமுத்திரங்களையும்
”ஐரம்மதீயம்” என்கிற தடாகத்தையும், ”ஸோமஸவனம்” என்னும் அரச மரத்தையும் தாண்டி ”அபராஜிதை” என்கிற ப்ரம்மத்தின்
(பரமாத்மா) ராஜதானிக்குச் சென்று, பரமாத்மா எழுந்தருளியுள்ள அழகிய ஸ்தானத்தை அடைந்து ப்ரும்மானுபவம் பெறுகிறான்.
(பரமபதம் அடைகிறான்).

ஹ்ருதயத்தில் உள்ள எல்லா நாடிகளுக்கும் ஸூர்ய க்ரணங்களுக்கும் சம்பந்தம் உண்டு. ஹ்ருதயத்தில் உள்ள 101
நாடிகளில் ஒரு நாடி தலைப் பக்கம் உள்ள நாடியின் வழியே ஸூர்ய மண்டலம் போய் மனோவேகமாய் பரமபதம்
(வைகுண்டம்) சேர்ந்தால் மேலே சொன்ன பலன்கள் உண்டு. இதுவே ”தஹர வித்யை” எனப்படுகிறது.

———-

18. ப்ரஜாபதி வித்யை

மேலே சொன்ன ”பர” வித்யைக்கு இந்த ப்ரஜாபதி வித்யை அங்கம் (முண்டகோபநிஷத்தைப் பார்க்க).
ப்ரஜாபதி தன் பிள்ளைகளான தேவர்களும், அசுரர்களும் க்ஷேமமாக இருப்பதற்காக ஆத்மாவை எட்டு குணங்களோடு அறிந்தவனுக்கு
ஸர்வ லோகமும், ஸர்வ சுகமும் உண்டு என்பதாக சொன்னதே இந்த வித்யை.

தேவர்களில் ப்ரதானன் இந்திரனும், அசுரர்களில் ப்ரதானன் விரோசனனும், 32 வருஷ காலம் ப்ரம்மச்சர்யம் அனுஷ்டித்து
ப்ரஜாபதியை அணுக அவர், ”ஆத்மா கண்ணில் தெரிகிறதா ?” என்று கேட்டார்.
கண்ணில் இருக்கும் நிழலை-அதன் பிரதிபிம்பம் தான் ஆத்மா என்று நினைத்தனர். விரோசனன் இதனையே
அசுரர்களுக்கு உபதேசித்தான். அதனால் அவர்கள் தேஹாத்மவாதிகள் ஆனார்கள்.

இந்த்ரனுக்கு திருப்தி இல்லை.
அவன் ப்ரஜாபதியை மறுபடியும் கேட்க, அவர் படிப்படியாக ஸ்வப்ன அவஸ்தையில் உள்ள ஆத்ம ஸ்வரூபம், உறக்கத்தில்
உள்ள ஆத்மஸ்வரூபம், இவற்றைச் சொல்ல இப்பொழுதும் இந்த்ரன் திருப்தி அடையவில்லை.

101 வருஷங்கள் ப்ரம்மச்சர்யம் இருந்து ”தஹர வித்யையில்” பகவானுக்கு உள்ள எட்டு குணங்களும் இவனுக்கும் உண்டு.
இவன் ,உடலில் இருந்து புறப்பட்டு பரமாத்மாவை அடைந்து சுகப்படுகிறான் என்று உபதேசித்தார். இந்த்ரனும் திருப்தி அடைந்து
தேவர்களுக்கு இதை உபதேஸித்தான். ஆத்ம ஸ்வரூபத்தை இந்த வித்யையினாலே ஜ்ஞான யோக பலத்தாலே அடைந்து
பக்தி யோகத்தில் இழிந்து மோக்ஷம் அடைவதே பலன்.

”பகவானை கரிய திருமேனி உடையவனாகவும், சேதன அசேதனங்களுக்கு அந்தர்யாமியாகவும் இருவகைகளாக
உபாஸிக்கிறேன். குதிரை, மயிரை சிலிர்த்து உதறுவது போலே பாபங்களை உதறித்தள்ளி ராகுவினின்று விடுபட்ட
சந்த்ரன் போலே சரீரத்திலிருந்து விடுபட்டு பரமபதம் சேருகிறேன்.”
ஸத்வ குணத்தை அழித்து சுக்லதாதுவை உட்கொள்ளும் ஜன்மம் இல்லை.
இந்த ஸாந்தோக்ய உபநிஷத்தில் சொன்ன வித்யை யாவும்
ப்ரஹ்மா ப்ரஜாபதிக்கும், ப்ரஜாபதி மனுவுக்கும், மனு ப்ரஜைகளுக்கும் உபதேசித்தது.
ஆசார்யனை அணுகி உபதேசம் பெற்று இந்த்ரியங்களை ஆத்மாவிடம் செலுத்தி (இந்த்ரியங்களை அடக்கி)
வைதீக கர்மாக்களைச் செய்து, ஜீவஹிம்சை செய்யாமல் மேற்சொன்ன வித்யைகளில் ஒன்றை உபாஸிப்பவர் ஆயுட்காலம்
முடிந்ததும் ப்ரஹ்மத்தை (பரமாத்மா) அடைகிறான்.

ப்ரம்மத்தை அறிவது உபநிஷத்துக்களைக் கொண்டு. அந்த ப்ரம்மத்தை நான் உபாஸிப்பேன். ப்ரம்மம் என்னை ஆதரிக்கட்டும்.
ஆத்ம விஷயங்களில் ஈடுபட்ட எனக்கு உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட தர்மங்கள் எல்லாம் ஸித்திக்க வேண்டும்.
அவை என்னை ரக்ஷிக்க வேண்டும்.

—————

19. புருஷாத்ம வித்யை

(இது ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருகிறது. இருந்தாலும், வித்யைகளை வரிசையாகச் சொல்லிக் கொண்டு
இருப்பதால், இங்கு சேர்க்கப்பட்டு விவரிக்கப்படுகிறது).

முதன் முதலில் ஆத்மா ஒரே புருஷ ரூபமாக இருந்தது. இதற்கு (பரமாத்மா) புருஷன் என்றே பெயர்.
தனிமையில் சுகம் பெறாமல், இரண்டாவதாக ஒன்றை விரும்பி ஸ்த்ரீயும், புருஷனும் சேர்ந்ததோர் உருவமாகி,
பிறகு ஸ்த்ரீ வேறு, புருஷன் வேறு என்று பிரித்துக் கொண்டது.

இருவரும் புணரும் போது, தான் பிறப்பித்த ஸ்த்ரீயோடு தானே புணர்வது சரியல்ல என்று கருதி,பரமாத்மா ஸங்கல்பித்தவுடன் ,
ஸ்த்ரீயானவள் பசுவாக மாறினாள்.
இங்ஙனம், ஒவ்வொன்றிலும்,ஸ்த்ரீ புருஷ பேதம், எல்லா ஜீவராசிகளிலும் ச்ருஷ்டி செய்து,தன் உள்ளங்கையிலிருந்து பரமாத்மா அக்னியைப் படைத்தார் .

தேவர்கள் ச்ருஷ்டி, ஸனக, ஸனந்தாதி முதலியவர்களின் ச்ருஷ்டி செய்யப்பட்டது. அவை ஒவ்வொன்றிலும் பரமாத்மா உட்புகுந்தார் .

அந்த ஆத்மாவை உபாஸிக்க வேண்டும்.அடையப்பட வேண்டியது அதுவே. இதற்கு ”ஆத்மோபாஸனம்” என்று பெயர்.

இவனுக்கு தேவர்களும் இடைஞ்சல் செய்ய மாட்டார்கள்.
ஆனால், தேவர்களையோ மற்ற தேவதைகளையோ உபாஸிப்பவன், அவர்களுக்கு தாஸனாய், மாடு போல் உழைக்க
வேண்டியவனாகிறான். மனிதர்களுக்கு ஆத்மஜ்ஞானம் ஏற்படுவதை தேவர்களும், இதர தேவதைகளும் விரும்புவதில்லை.
தனக்கு உழைக்கும் மாடு தன்னை விட்டு போய் விடுகிறது அல்லவா !
ஒருவன் பூர்ணனாவதற்கு, மனைவி, புதல்வன், பணம், நல்ல செய்கை என்கிற நான்கும் பொருந்தியிருக்க வேண்டும்.

வாக்கு-மனைவி,
ப்ராணன் – புதல்வன்,
கண்ணும், காதும்-பணம்.
உடலே -நல்ல செயல்களைச் செய்ய உதவுகிறது.
இவ்வளவாக ஜீவன் பூரணணாக இருந்து பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும்
அனைவருக்கும் தந்தையான பரமாத்மா ஏழு அன்னங்களை உண்டாக்கினான். அவற்றில் ஒன்றை எல்லாருக்கும் பொதுவாக
ஆக்கினான். (இது நாம் தினந்தோறும் உண்பது. தேவர்கள், விருந்தினர் இவர்களுக்கு அளித்த பிறகே நாம் உண்ண வேண்டும்.
ஏனெனில் இது யாவருக்கும் பொது அல்லவா!)
தேவர்களுக்கு இரண்டை அளித்தான் (வேதங்களிலும், ஸ்ம்ருதிகளிலும் அவர்களுக்காக விதிக்கப்பட்ட தர்ஸபூர்ண மாஸங்கள் என்கிற கர்மாக்கள்)
ஒன்றை பசுவுக்கு அளித்தான். (இது பாலைக் கொடுக்கிறது).
மூன்றை தனக்காக வைத்துக் கொண்டான் (மனம், வாக்கு, ப்ராணன்)

எல்லா இந்த்ரியங்களுக்கும் மனஸே முக்கியம்.
மனஸ் வேறு ஏதாவதில் லயித்திருந்தால் கண்ணில் பட்டது காணப்படாது. காதில் கேட்டது கேட்கப்படாது.
விருப்பம், ஸங்கல்பம், ஐயம்,நம்புதல், அவநம்பிக்கை, தைர்யம், அதைர்யம், வெட்கம், அறிவு, பயம் — இவை எல்லாவற்றுக்கும் காரணம் மனஸே.
இப்படியே வாக்கு என்கிற இந்த்ரியமும் முக்கியமானது.
மூன்றாவது ப்ராணன்.
இது ப்ராண-அபான- வ்யான-உதான-ஸமானங்களாக இருக்கின்றன. மூன்று அன்னங்களாலே ஆத்மா தன்னுடைய நிலையைப் பெறுகிறது.

இவற்றில் ப்ராணனுக்கு தேவதை சந்த்ரன். அவனுக்கு 16 கலைகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலையாக 15 கலைகள் அழியும்.
அவையே மறுபடியும் வளரும். 16வது கலை அழிவற்றது. அமாவாஸ்யை அன்று சந்த்ரன் இந்த கலை (16வது கலை)மூலம்
எல்லா பிராணிகளுக்குள்ளும் புகுந்திருப்பான்
சந்த்ரனைப் போலவே புருஷனுக்கும் 16 கலைகள். தானே ஒரு கலை. அது அழிவற்றது. அழியும் கலைகள் 15.
இது அவருடைய சொத்து. சொத்துகள் அழிவதும், வளர்வதும் நாம் பார்க்கிறோம்.

இப்படிப்பட்ட புருஷன், புத்திரனைப் பெற்று மனுஷ்ய லோகத்தையும், காம்ய கர்மங்களைச் செய்து பித்ரு லோகத்தையும்,
பக்தியோகம் செய்து தேவ லோகத்தையும் (பரமபதம் என்று இங்கு பொருள் கொள்க) பெற வேண்டும்.

வாயு தேவதை எப்போதும் வீசிக் கொண்டே இருக்கிறது. அக்னி எரித்துக் கொண்டே இருக்கிறது. வெயில் காய்ந்து
கொண்டே இருக்கிறது. நிலவும் அப்படியே.
இவைகளுக்கெல்லாம் அஸ்தமனம் என்பது உண்டு
ஸுர்ய,சந்த்ரர்கள் வானத்தில் சஞ்சரிப்பதற்கு வாயுவின் சகாயம் வேண்டும். வாயுவே உயர்ந்தது. ப்ராணனும் ஒரு வாயுவே.

இந்த்ரியங்களில் ப்ராணன் உயர்ந்தது. ப்ராணனுக்கு மேற்பட்ட ஜீவாத்மாவும், பரமாத்மாவும் கூட ப்ராணன் என்றே
அழைக்கப்படுவது உண்டு.
ப்ராணன் அம்ருதம்; ஆத்மா அம்ருதம்.-இப்படி ஜகத்காரணனான பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும்.

————-

20 – பாலாகி வித்யை

(இதுவும் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளதே).
அஜாதசத்ரு என்கிற அரசனிடம், பாலாகி என்பவன் தன்னுடைய ப்ரம்மஜ்ஞான அறிவை வெளிப்படுத்த ஆவல்
கொண்டு அரசனிடம் சென்று தன்னுடைய அறிவாற்றலை வெளிப்படுத்தினான்.
ஸுர்ய மண்டலம், சந்த்ர மண்டலம்,மின்னல், ஆகாயம் இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லி அங்கேயுள்ள ஆத்மாவை (ஜீவாத்மா)
ப்ரம்மமாகச் சொன்னான்.
அஜாதசத்ரு இதை ஒப்புக் கொள்ளாமல், இவற்றை மறுத்து, வாதிட்டான். பாலாகி அஜாதசத்ருவைப் பணிந்து, ப்ரம்மத்தைப்
பற்றி சொல்லுமாறு கேட்டான்.
அஜாதசத்ரு பாலாகியை அழைத்துக் கொண்டு, தூங்குபவன் அருகில் சென்று, அவனை எழுப்பினான்.
அவன் எழுந்திருக்காமல் இருக்கவே, கையால் அசைத்து எழுப்பினான். அவன் எழுந்தவுடன், அரசன்
பாலாகியைப் பார்த்து ”இப்போது விழித்தவன், உறங்கும்போது எங்கு இருந்தான் என்பது உனக்கு தெரியுமா? எங்கேயிருந்து
வந்தான் என்பது தெரியுமா ?” என்று கேட்டான். பாலாகிக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

அரசன், இப்போது, அவனுக்கு உபதேசித்தான்.
தூங்க ஆரம்பிக்கும்போது, இந்த்ரியங்கள் வேலை செய்வதிலிருந்து ஓய்வு பெற ஆரம்பிக்கின்றன. ஜீவன், ஸ்வப்னம்
காண இருக்கும் நாடிகளில் சென்று ஸ்வப்னங்களைக் கண்டு, பிறகு ஹ்ருதயத்திற்குச் சென்று, அங்கிருந்து ஆகாசம் சென்று
பரமாத்மாவிடம் உறங்குகிறது. இப்படி தூங்கிஎழுந்திருக்கும்போது பரமாத்மாவிடமிருந்து வெளிப்படும்போது
இந்த்ரியங்களுடன் சேர்ந்து எல்லா உணர்ச்சிகளையும் திரும்பப் பெறுகிறது. (கௌஷீதகி உபநிஷத்தில் இது விவரமாகச் சொல்லப்பட்டுள்ளது).

ஜீவாத்மா அதாவது ப்ராணன் – பசுங்கன்று. இதற்கு கர்ப்பஸ்தானம் ஹ்ருதயம். இது வெளிப்பட்டு விளங்கும் ஸ்தானம் உடல்.
அன்னம் என்கிற கயிற்றால் கட்டப்பட்டுள்ளது.
இப்படி உணர்ந்தவருக்கு ஏழு சத்ருக்களால் அழிவில்லை.
(இரண்டு கண், இரண்டு காது, இரண்டு நாசித்வாரம், வாய் ஆக ஏழு).
தலையில் நிலைத்துள்ளது ப்ராணன்.
ப்ரம்மத்திற்கு இரண்டு ரூபங்கள்.
மண், நீர், நெருப்பு இதில் தங்கியிருப்பது ஒரு ரூபம்.
இது மூர்த்தரூபம்.
வாயுவும்,ஆகாயமும் மற்றொரு ரூபம் – இது அமூர்த்தரூபம்.
இது சத்யத்திற்கெல்லாம் சத்யம். (சத்யம்-ஜீவாத்மா. அவற்றுக்கெல்லாம் சத்யம் -ப்ரம்மம்-பரமாத்மா).

———–

21. மைத்ரேயி வித்யை

(இதுவும் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளதே)
யாஜ்ஞவல்க்யர் மஹரிஷி . அவருக்கு இரண்டு மனைவிகள்.மூத்த மனைவி மைத்ரேயி. இளைய மனைவி காத்யாயனி.
இது யாஜ்ஞவல்க்யருக்கும் அவரது மனைவி மைத்ரேயிக்கும் நடந்த ஸம்வாதம்.

மைத்ரேயி – பூமி அளவு பணம் கிடைத்தாலும், அதனால் மோக்ஷம் பெற முடியுமா ?

யாஜ்ஞவல்க்யர் – முடியாது. சொத்து இருந்தால் இந்த உலக வாழ்க்கைக்கு உபயோகப்படும். மோக்ஷம் பெற இயலாது.

மைத்ரேயி – சொத்தை பிரித்துக் கொடுப்பதாகச் சொன்னீர்கள்.
மோக்ஷத்திற்கு உபயோகப்படாதது எனக்கு எதற்கு? மோக்ஷ உபாயத்தை உபதேசியுங்கள்.
யாஷ்ஞவல்க்யர் – மிக்க சந்தோஷம்.
நான் சொல்வதை கவனமாகக் கேள்.
ஒருவருக்கொருவர் பிரியமாவது என்பது நாம் நினைப்பதால் அல்ல. பரமாத்மா அப்படி நினைத்தால்தான் அது நடக்கும்.
எப்போதும் ப்ரியமாக இருக்கும் பரமாத்மாவை உபதேசம் மூலமாக கேட்டு, அறிந்து, த்யானித்து ,அனுபவிக்க வேண்டும்.
இதை அடைய இந்த்ரியங்களை அடக்க வேண்டும்.
இந்த பரமாத்மா, விஜ்ஞானாத்ம (ஜீவாத்ம) ஸ்வரூபனாய் பஞ்ச பூதங்களோடு கலந்து வருகிறது.

மைத்ரேயி – இதை விளக்க வேணும்

யாஜ்ஞவல்க்யர் – எல்லாம் ஆத்மாவே என்று அறியாதவன்-
அறிகிறவன், அறியும் கருவி, அறியப்படுபவது இவற்றை வெவ்வேறாக பார்ப்பான். எங்கும் வ்யாபித்துள்ள ஆத்மாவாகவே
எல்லாவற்றையும் காண்பவனுக்கு இப்படி வேறுபாடு தோன்றாது. எதைக் கண்டாலும் ஆத்மாவைக் காண்பதாகவே தோன்றும்.

————-

22 – பர்யங்க வித்யை (இது கௌஷீதகி உபநிஷத்தில் உள்ளது)

சித்ரன் என்கிற அரசன், அருணரின் புதல்வரை யாகம் செய்விக்க வேண்டினான். அவர் தன் புத்ரனான ச்வேதகேதுவை அனுப்பினார்.
அரசன், ச்வேதகேதுவைப் பார்த்து, ”என்னையோமற்றவரையோ (மற்ற அரசர்களையோ) யாகம் செய்வித்து
அதனால் அடையப்படும் லோகத்தைப் பற்றிய ரகஸ்யம் உள்ளதா? அது உங்களுக்கு தெரியுமா? அதன் மார்க்கம் என்ன?” என்று கேட்டார்.
ச்வேத கேதுவுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.
தகப்பனாரிடம் திரும்பி விட்டான். தகப்பனாரிடம் நடந்ததைச் சொன்னான். தகப்பனாருக்கும் தெரியவில்லை. அவர் அரசனிடம்
சென்று இதை தெரிவிக்க வேண்டினார்.

அரசன் சொன்னதாவது – இவ்வுலகில் மரணம் அடைபவர் சந்த்ர லோகம் செல்கின்றனர். சந்த்ரன் மேலுலகத்திற்கு வாசல்
போன்றவன். சந்த்ரன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்பவரை மேலே செல்லுமாறு அனுமதிக்கிறான்.
பதில் தெரியாதவனை மழை மூலமாகத் திருப்பி, உலகத்திற்கே அனுப்புகிறான். அப்படி திரும்பியவன் இவ்வுலகில் மறு பிறவி எடுக்கிறான்.
சந்த்ரன் ”நீ யார்?” என்று கேட்க,
பஞ்சாக்னி வித்யையில் சொல்லியபடி ஐந்து நிலைகளைப் பெற்று, பிறவியை அடைந்தவன். இனி என்னை அவ்வாறு பிறக்குமாறு விடவேண்டாம்,
பகவான் சத்யம் என்று தவத்தாலே உணர்ந்தேன் என்று பதில் சொல்பவனை சந்த்ரன் விட்டு விடுகிறான்.
அப்படிச் சொல்பவனை மேலே (அர்ச்சிராதி மார்க்கத்தில்) போக அனுமதிக்கிறான். அப்படி அனுமதிக்கப்பட்டவன் அக்னி லோகம்,
வாயு லோகம், வருண லோகம், ஆதித்ய லோகம், இந்த்ர லோகம், ப்ரம்ம லோகம் என்று இப்படி அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்கிறான்.
ப்ரம்ம லோகத்தில் அரம் என்கிற மடு உள்ளது. முஹூர்த்தர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், அயலாரை
தடியால் அடித்து விரட்டுவார்கள். இதற்கு மேலே ”விரஜை ” என்கிற ஆறு. திவ்யம் என்கிற வ்ருக்ஷம்.
”ஸாலஜயம்” என்று சொல்லப்படும் ”அபராஜிதம்” என்கிற ராஜதானி.
இதற்கு இந்த்ரன்,ப்ரஜாபதி என்று இரண்டு த்வா ரபாலகர்கள்.
”ப்ரபுவிமிதம்”,”விஷப்ரமிதம்” என்று சொல்லப்படும் விசாலமான மண்டபம். ”விசக்ஷணை” என்கிற பீடம்.
அமிதௌஜஸ் எனப்படும் அளவற்ற ப்ரகாசம் உடைய கட்டில். எல்லாவற்றையும் தங்கள் ஸௌந்தர்யத்தால்
கொள்ளை கொள்ளும் தேவியர்கள். எண்ணற்ற ஸ்த்ரீ ரத்னங்கள்.
இத்தகைய ப்ரம்ம லோகத்திற்கு இவன் வருகிறான்.

பகவான் ”விரஜை ” ஆற்றின் அருகே வந்து கட்டளையிட்டதும், கையில் மாலையுடன் 100 திவ்ய அப்ஸரஸ்கள், மையை வைத்துக்
கொண்டு 100 திவ்ய அப்ஸரஸ்கள், கந்தப் பொடி, பட்டு வஸ்த்ரம், ஆபரணங்கள் இவைகளை ஏந்திக் கொண்டு
நூறு, நூறு அப்ஸரஸ்கள்-ஆக 500 அப்ஸரஸ்கள் இவனுக்கு அலங்காரம் செய்கின்றனர்.
அர்ச்சிராதி மார்க்கத்தில் வந்த ஜீவன் (முக்தன்) ”அரம்” என்கிற மடுவை நினைத்த மாத்திரத்தில் தாண்டி,
முஹுர்த்தர்கள் விலகி வழிவிட ”விரஜை ” ஆற்றையும் நினைத்த மாத்திரத்தில் கடந்து,
”திவ்யம்” என்கிற மரத்தை அணுகி,
ப்ரம்மத்தின் நறுமணம் இவனுடைய சரீரத்திற்கு ஏற்பட
”ஸாலஜ்யம்” என்கிற இடத்திற்கு வந்து
”அபராஜிதம்” என்கிற அரண்மனையில் புகுந்து
”ப்ரம்ம தேஜஸ்” ஜொலிக்க,
இந்த்ரன்,ப்ரஜாபதி என்கிற இரு த்வாரபாலகர்கள் வழிவிட,
”விஷப்ரமிதம்” என்கிற மண்டபத்தை அடைந்து,
”ப்ரம்மயசஸ்” வந்து சேர,விசக்ஷணை என்கிற பீடத்தை நெருங்கி,
”அமிதௌஜஸ்” என்கிறகட்டிலை அடைய,

பகவான் இவனை ”நீ யார் ? ” என்று கேட்க,

முக்தன் ”ஸ்வர்க்கத்திலிருந்து ஆகாசம், வாயு, மேகம் முதலிய வழிகளில் கீழே இறங்கி எண்ணற்ற பிறப்புகள் எடுத்த ஜீவாத்மா.
நீர் எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஆத்மா அதாவது பரமாத்மா.
அடியேனுக்கும் ஆத்மா. நான் மனஸ், வாக்கு, உடல் மற்றும்இந்த்ரியங்களின் உதவியுடன்
ஆண், பெண், அலி என்று பற்பல ஜென்மம்,உருவங்கள் எடுத்தேன்.
உடல், இந்த்ரியம், மனஸ்,ப்ராணன், அறிவு இவற்றையெல்லாம் விட நான் மேலானவன் என்று தெரிந்து கொண்டேன்.
தேவரீரை ஆத்மாவாக உடையவன். தேவரீருக்கே சேஷபூதன்” என்று பதில் சொல்கிறான்.
பர்யங்க வித்யையான இதில் சொல்லப்பட்டபடி பகவானை உபாஸிப்பவர் பகவானின் திருவடிகளை அடைவர்.

————————-

23. ப்ரதர்தந வித்யை
(இதுவும் கௌஷீதகி உபநிஷத்தில் உள்ளது).

திவோதாஸன் என்பவரின் குமாரன் ப்ரதர்தனன். மிகவும் பராக்ரமசாலி. சண்டைகளில் இந்த்ரனுக்கு உதவி செய்தவன். ஒரு
சமயம் இந்த்ரன் இடமான ஸ்வர்க்க லோகம் சென்றான். இந்த்ரன் இவனிடம் ”வரன் அளிக்கிறேன் கேள்” என்றான். ப்ரதர்தனன்
”மனிதனுக்கு எது ஹிதமோ, அதையே வரமாக எனக்கு அளிப்பாயாக” என்றான்.

இந்த்ரன் சொன்னதாவது:
என்னை உபாஸனை செய். என்னை உபாஸித்தால் மாத்ருஹத்தி, பித்ருஹத்தி, களவு, கர்ப்பஹத்தி போன்றவற்றால்
வரும் பாபம் கிடையாது. பாபம் செய்ததற்காக முகம் கருக்காது.
நான் ப்ராணன். என்னை ஆயுள் என்றும், அம்ருதம் என்றும் உபாஸனம் செய். இதனால் முழு ஆயுளைப் பெற்று ஸ்வர்க்க
லோகத்திலும் அழியாமல் இருப்பாய்.

ப்ராண வாயு எல்லா இந்த்ரியங்களிலும் வ்யாபித்து இந்த்ரியங்களை வேலை செய்யச் செய்கிறது. ப்ராணனே
ப்ரஜ்ஞை. ப்ரஜ்ஞையே ப்ராணன். இரண்டும் சேர்ந்தே இருக்கும். சேர்ந்தே உடலிலிருந்து புறப்பட்டு விடும்.
ப்ரஜ்ஞை என்பது ஜீவன். இவற்றுக்கு ஆத்மா பகவான். ஆனந்த ஸ்வரூபன்;
பிறப்பு இறப்பு அற்றவன்; நல்வினை, தீவினைகளுக்கு அப்பாற்பட்டவன் ; உலகங்களைக் காப்பவன் ; நியமிக்கிறவன் ;
இப்படிப்பட்டவனை எனக்கும் ஆத்மாவாக உபாஸனை செய். இதுவே ”ப்ரதர்தன வித்யை” ஆகும்.

————

24. சாண்டில்ய வித்யை
(அக்னி ரஹஸ்யத்தில் இருக்கிறது)

ஸத்யத்தை ப்ரம்மமாக உபாஸிப்பாயாக. ஸத்யம் என்கிற
ப்ரம்மம் எல்லாவற்றுக்கும் ஆத்மா. எங்கும் பரந்தவன்.
அணுவுக்கும் அணுவானவன். எல்லாவற்றிலும் பெரியவன்.
எனக்கும் ஆத்மா என்று உபாஸனை செய்ய வேண்டும் என்று
ச்வேதகேதுவுக்கு சாண்டில்யர் கூறினார்.

———

25. புருஷ வித்யை மற்றும்
26. ந்யாஸ வித்யை
ப்ரஹ்மணேத்வா மஹஸ ஓம் இதி ஆத்மாநம் யுஜ்ஜீத…..என்று ஆரம்பிப்பது
”ந்யாஸ வித்யை”. தஸ்யை – வம் விதுஷ ———என்று ஆரம்பித்துச் சொல்லப்படுவது
”புருஷ வித்யை” (புருஷ வித்யை—தைத்திரீய நாராயண உபநிஷத் )
ஆத்மாவாகிற ஹவிஸ்ஸை பரமாத்மாவிடம் சேர்ப்பித்தலாகிற யாகம் என்று சொல்லலாம் (யஜ்ஞரூபமாகச் செய்யப்படுகிற ந்யாஸ வித்யை)
இதற்கு ஆத்மா – யஜமானன்.
ஸ்ரத்தா – ஆஸ்திக புத்தி.
பத்னீ – தர்மபத்னீ.
ஸரீரம் – ஸமித்து.
மார்பானது, யாகம் பண்ணுமிடம், அதாவது அக்னி குண்டம்.
உடம்பில் உள்ள ரோமங்கள் – பரிஸ்தரணம்.
தலைமயிர் -தர்ப்பக்கட்டு.
ஹ்ருதயம் – யூபஸ்தம்பம்.
ஆசையானது நெய் .
கோபமானது – வெள்ளாடு.
ஆலோசிக்கிற அறிவு – நெருப்பு.
எல்லா வஸ்துக்களுக்கும் அநுகூலமாக இருக்கிற அறிவு –தக்ஷிணை.
வாக்கு – ஹோதா.
ப்ராணன் – ஸாமகானம் பண்ணுகிற ருத்விக்.
கண் – அத்வர்யு என்கிற ருத்விக்.
மனம் – ப்ரஹ்ம என்கிற ருத்விக்.
காது -அக்நீத்ரன் என்கிற ருத்விக்.
எவ்வளவு காலம் உயிருடன் இருக்கிறோமா அது யாக தீக்ஷை .
எதைச் சாப்பிடுகிறானோ, குடிக்கிறானோ – அது ஸோம பானம்.
விளையாடுகிறான் என்று சொல்லப்படுவது ”உபஸத்” என்கிற யாகம்.
நடப்பது, எழுந்திருப்பது, உட்காருவது – அது”ப்ரவர்க்யம்” என்கிற யாகம்.
முகம் – ஆஹவநீயம் என்கிற அக்னி.
இவரது அறிவு – ஹோமப் பொருள். காலையிலும், மாலையிலும் சாப்பிடுவது – அது ஸமித்.
மாலை, காலை, மதியம் என்பவை மூன்று ஸவனங்கள் (தாநி, ஸவநாநி போன்றவை)
பகல் இரவுகள் -தர்ச பூர்ணமாஸ இஷ்டிகள்.
பக்ஷங்கள், மாதங்கள் – சாதுர்மாஸ்ய யாகம்.
ருதுக்கள் -பசு பந்தம்.
வருஷங்கள், அவற்றின்உட்பிரிவுகள் – அஹர்கணம்.
இந்த யாகமானது எல்லாச் சொத்தையும் தக்ஷிணையாகக் கொண்டது.
மரணம் – அவப்ருத ஸ்நானம் (சாந்தோக்யத்தில் 3 -16-1 -சொல்லப்பட்ட புருஷ வித்யை வேறு)
சாந்தோக்யத்தில் சொல்லப்பட்டது, ஆயு ப்ராப்தியை பலமாக உடைய
ஸ்வதந்த்ர வித்யை என்று ஸ்வாமி தேசிகன் அதிகரண ஸhராவளியில் அருளியுள்ளார்.
அர்ச்சிராதி மார்க்கம் — இந்த மார்க்கம்,
உபகோசல வித்யை, பஞ்சாக்னி வித்யை, பர்யங்க வித்யைகளில் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ப்ரஹ்ம உபாஸகர்கள் எல்லோரும் அர்ச்சிராதி கதியைச் சிந்தனை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

உபநிஷத்தில் விவரிக்கப்பட்டுள்ள (பக்தி யோகத்தில் சொல்லப்படும்) மிகக் கடினமான ப்ரஹ்ம வித்யைகள் – 32. இவை
உபாஸனா மார்க்கங்கள். அவையாவன :———–
1. அக்னிவித்யை
2. அக்ஷர வித்யை
3. ஆனந்த வித்யை
4. அதிம்ருத்யுபாஸன வித்யை
5. பாலாகி வித்யை
6. பூம வித்யை
7. ப்ரஹ்ம வித்யை
8. சாண்டில்ய வித்யை
9. தஹர வித்யை
10. ஜ்யோதிர் வித்யை
11. கோச விஜ்ஞான வித்யை
12. மது வித்யை
13. மைத்ரேயி வித்யை
14. கௌரக்ஷ ஜ்யோதிர் வித்யை
15. ந்யாஸ வித்யை
16. பஞ்சாக்னி வித்யை
17. பர வித்யை
18. பர்யங்க வித்யை
19. ப்ரஜாபதி வித்யை
20. ப்ராண வித்யை
21. ப்ரதர்ன வித்யை
22. புருஷ வித்யை
23. புருஷாத்ம வித்யை
24. ரைக்வ வித்யை
25. புருஷோத்தம வித்யை
26. ஸத் வித்யை
27. ஸர்வ பர வித்யை
28. ஷோடஸ கல ப்ரஹ்ம வித்யை
29. உத்கீத வித்யை
30. உபகோஸல வித்யை
31. வைஷ்ணவ வித்யை
32. வைச்வாநர வித்யை

மோக்ஷம் அடைய இரண்டு வழிகள்:
முதல் வழி :
1) பக்தி யோகம் மூலமாக
(2) ப்ரபத்தி மூலமாக-பரமபதத்தை அடையலாம் என்று சொல்லப்படுகிறது.
முதல் வழியில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் , ஸ்ரீமத் பகவத்கீதையில் அருளிய ”கர்ம யோகம்” , ”ஞான யோகம்” இரண்டையும் நன்கு புரிந்து
கொண்டு (கசடறக் கற்று) பிறகு ”பக்தி யோகத்தில்” இழிந்து 32 உபாஸனா மார்க்கங்களில் ஏதாவது ஒன்றில் “தைலதாரை”
போன்று புத்தியைச் செலுத்தி பகவானை அடைதல்.
இப்படிச் செய்து கொண்டே வந்தால், பலப்பல ஜன்மங்கள் எடுத்து, அந்தந்த ஜன்ம வாசனையாலே இந்த புத்தி தொடர்ந்து இருந்து,
ஏதாவது ஒரு ஜன்மத்தில் பகவானின் திருவடியை அடையலாம்.
பெரிய ஞானிகளுக்கும், மஹான்களுக்கும், மஹரிஷிகளுக்கும் இது முடியுமோ, என்னவோ ?

நம்மைப்போன்ற பரம லௌகீகத்தில் உழலும் சம்சாரிகளுக்கு ஏற்றது இரண்டாவது வழியான ப்ரபத்தி தான்.
இராமாயணம் முழுவதும் ப்ரபத்தி தர்மத்தைச் சொல்கிறது.
ப்ரஹ்ம வித்யைகள் எல்லாம் பகவானை அடைவதற்கான சாதன வித்யைகள்.
சத் வித்யா, பூம வித்யா, தஹர வித்யா, உபகோசல வித்யா, சாண்டில்ய வித்யா, வைச்வா நர வித்யா, ஆனந்த மய
வித்யா, அக்ஷர வித்யா முதலிய வித்யைகள் ஒரே சாகையில் இருப்பவைகள் மற்றும் அனேக சாகைகளில் இருப்பவைகளுக்கான உதாரணங்கள்.
இப்படிப்பட்ட ப்ரஹ்ம வித்யையானது மரண கால பர்யந்தம் இடைவிடாமல் தினந்தோறும் அநுஷ்டிக்கப்பட வேண்டி இருக்கிறது.

இந்த 32 வித்யைகளுக்கும் ஆதாரம் ஸ்ரீ ஹயக்ரீவன்.
எல்லா வித்யைகளுக்குமே ஆதாரம் ஸ்ரீ ஹயக்ரீவன்.
பகவான், ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் எடுத்து வேதங்களை, மது, கைடபர்களிடமிருந்து மீட்டுத் திரும்பவும்
ப்ருஹ்மாவுக்கு உபதேசித்ததால் தான், வேதம் எல்லா உலகங்களிலும் பரவி இருக்கிறது.

ஸ்ரீ ந்ருஸிம்ஹ தாபநீய உபநிஷத்தில் ஸ்ரீ ந்ருஸிம்ஹ அநுஷ்டுப் மந்த்ரம் 32 அக்ஷரங்களாக உள்ளது.
ஸ்ரீ ஹயக்ரீவனைப் பற்றிய முக்ய மந்த்ரம் 32அக்ஷரங்களிலுள்ள அநுஷ்டுப் ச்லோகம்.
இவை, 32 ப்ரஹ்ம வித்யைகளைக் குறிப்பதாகப் பெரியோர் சொல்வர்.
ஆக 32 ப்ரஹ்ம வித்யைகளின் பெருமையையும், அருமையையும் சொல்லில் விவரிக்க இயலாது.

————-————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேத வியாஸர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ கோயில் பெரிய திருமொழி -ஸ்ரீ பரகாலன் பனுவல்கள் —

April 8, 2021

ஸ்ரீ கோயில் பெரிய திருமொழி –

1-வாடினேன் வாடி
2-தாயே தந்தை
3-விற் பெரு விழவும்
4-அன்றாயர்
5-திவளும்
6-தூ விரிய
7-நும்மைத் தொழுதோம்
8-ஏழை ஏதலன்
9-பெடை அடர்த்த
10-கண் சோர
11-தெள்ளியீர்
12-மூவரில்
13-காதில் கடிப்பு
14-மாற்றமுள

———–

ஸ்ரீ பரகாலன் பனுவல்கள் —

மஞ்சுலாம் சோலை வண்டறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை யிவை–1-1-10-

மங்கையர் கலியனது ஒலி மாலை அரிய வின்னிசை –1-2-10-

மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை–1-3-10-

கலியன் வாயொலி செய்த பனுவல் வரம் செய்த வைந்தும் ஐந்தும்–1-4-10-

மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை–1-5-10-

காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை–1-6-10-

இரும் தமிழ் நூல் புலவன் மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன் செங்கை யாளன் செஞ்சொல் மாலை-1-7-10-

மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்-1-8-10-

திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன் பண்ணார் பாடல் பத்து-1-9-10-

கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை–1-10-10-

———-

கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம் மன்னு பாடல்-2-1-10-

மங்கையர் கோன் கலியன் கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும்-2-2-10-

கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி சொன்ன சொல் மாலை பத்து-2-3-10-

மங்கையர் கோன் அமரில் கட மா களியானை வல்லான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை-2-4-10-

கடமாரும் கருங்களிறு வல்லான் வெல் போர்க் கலி கன்றி யொலி செய்த வின்பப் பாடல் திடமாக விவை யைந்தும் ஐந்தும் வல்லார்–2-5-10-

வடி கொள் நெடு வேல் வலவன்கலிகன்றி யொலி -2-6-10-

மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் பன்னிய பனுவல்–2-7-10-

கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை–2-8-10-

மங்கையர் தம் தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த சீர் மன்னு செந்தமிழ் மாலை -2-9-10-

மங்கை வேந்தன் வாள் கலியன் ஒலி யைந்தும் யைந்தும்-2-10-10-

————–

வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த பாவு தண் தமிழ் பத்திவை-3-1-10-

உலகுக்கு அருளே புரியும் காரார் புயல் கைக் கலி கன்றி குன்றா வொலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும்-3-2-10-

மங்கையர் கோன் மருவார் ஊனமர் வேல் கலி கன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்-3-3-10-

அங்கமலத் தடம் வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்டமுக்கி யடையார் சீயம் கொங்குமலர் குழலியர் கோன்
மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன சங்க முத்தமிழ் மாலை பத்து–3-4-10-

கல்லின் மன்னு திண தோள் கலியன் ஒலி செய்த நல்ல இன்னிசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும்–3-5-10-

கையிலங்கு வேல் கலியன் கண்டுரைத்த தமிழ் மாலை ஐயிரண்டும் இவை-3-6-10-

காய்சின வேல் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை பத்து-3-7-10-

நெடுமாலுக்கு என்றும் தொண்டாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய் தமிழ் மாலை -3-8-10-

மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்க மலி தமிழ் மாலை பத்து இவை–3-9-10-

————-

கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்து–4-1-10-

ஆலிமன் அருள் மாரி பண்ணுளார் தரப் பாடிய பாடல் இப் பத்து-4-2-10-

மங்கையார் வாள் கலிகன்றி ஊனமில் பாடல் ஒன்பதோடு ஒன்றும்–4-3-10-

கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி
பாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் –4-4-10-

மங்கையர் தலைவன் வண்டார் கலியன் வாயொலிகள்–4-5-10-

கலியன் சொன்ன பாவளம் பத்தும் –4-6-10-

கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை–4-7-10-

வார்கொள் நல்ல முலை மடவாள் பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்து–4-8-10-

காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த சீரார் இன் சொல் மாலை-4-9-10-

வண்டறை சோலை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்-4-10-10-

————

கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலி கன்றி சொல் தான் ஈரைந்து இவை -5-1-10-

கோவைத் தமிழால் கலியன் சொன்ன பா–5-2-10-

நஞ்சுலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐ இரண்டும்–5-3-10-

கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல் நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் –5-4-10-

நீல மலர்க் கண் மடவாள் நிறைவழிவைத் தாய் மொழிந்த வதனை நேரார் கால வேல் பரகாலன் கலி கன்றி ஒலி மாலை–5-5-10-

காமரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர் நாமருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும்–5-6-10-

மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள் பன்னிய பனுவல்–5-7-10-

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும் ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ்
திரு வரங்கத் தம்மானை நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த பாடல் –5-8-10-

மாட மங்கை திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை–5-9-10-

ஒளி சேர் கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும்–5-10-10-

————-

காமரு சீர்க் கலிகன்றி சொன்ன பாமரு தமிழ் இவை–6-1-10-

வானாரும் மதிள் சூழ் வயல் மங்கையர் கோன் மருவார் ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை –6-2-10-

காரார் புயல் தடக்கைக் கலியன் ஒலி மாலை-6-3-10-

கறையார் நெடுவேல் மங்கையர் கோன் கலி கன்றி சொல்–6-4-10-

காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை–6-5-10-

பொய்ம் மொழி யொன்றில்லாத மெய்ம்மையாளன் புலங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த
அம் மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல்–6-6-10-

கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை–6-7-10-

வம்பவிழ் தார்க் கன்னவிலும் தோளான் கலியன் ஒலி–6-8-10-

வண் களக நில வெறிக்கும் வயல் மங்கை நகராளன் பண் களகம் பயின்ற சீர் பாடல் இவை பத்து–6-9-10-

காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை–6-10-10-

————-

நறையூர் நம்பிக்கு என்றும் தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை–7-1-10-

கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன் சொன்னீர் சொல் மாலை –7-2-10-

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி நாடன்
நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச் சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும்
தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை பாடல் பத்திவை–7-3-10-

தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை–7-4-10-

மங்கை வேந்தன் பரகாலன் சொல்லில் பொதிந்த தமிழ் மாலை -7-5-10-

யணி யாலியர் கோன் மருவார் கறை நெடுவேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும்–7-6-10-

கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன்
சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்து–7-7-10-

கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல்
ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும்–7-8-10-

காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை–7-9-10-

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை–7-10-10-

———–

மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று காவளரும் கடி பொழில் சூழ்
கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும்–8-1-10-

கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை பார்மலி மங்கையர் கோன் பரகாலன் சொல்–8-2-10-

கடல் சூழ் வயலாலி வள நாடன் காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை–8-3-10-

வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன் கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை–8-4-10-

வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து ஆர்வத்தால் அவர் புலம்பிய
புலம்பலை யறிந்து முன்னுரை செய்தn கார் கொள் பூம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி–8-5-10-

கருமா முகில் தோய் நெடுமாடக் கண்ண புரத் தெம்மடிகளைத் திரு மா மகளால் அருள் மாரிச் செழு நீராலி வள நாடன்
மருவார் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி –8-6-10-

மலி புகழ் கண புர முடைய வெம்மடிகளை வலி கெழு மதிளயல் வயலணி மங்கையர்
கலியன தமிழிவை விழுமிய விசையினொடு ஒலி –8-7-10-

கண்ண புரத் தடியன் கலியன் ஒலி -8-8-10-

செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன் கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள்–8-9-10-

கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை–8-10-10-

————–

பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக் கற்ற நூல் கலிகன்றி யுரை செய்த சொல் –10-1-10-

அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை யழித்தவன் தன்னைப்
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம்–10-2-10-

வென்ற தொல் சீர் தென்னிலங்கை வெஞ்சமத்து அன்று அரக்கர்
குன்ற மன்னார் ஆடி யுய்ந்த குழ மணி தூரத்தை–10-3-10-

எழில் தோள் கலிகன்றி செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கண் நெடியவன் தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்–10-4-10-

காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10-

அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்
நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை –10-6-10-

கடல் சூழ் கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி
இன்னிசை மாலைகள் ஈரேழும்-10-7-14-

அல்லிக் கமலக் கண்ணனை யங்கோர் ஆய்ச்சி எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை-10-8-10-

வாள் திறல் தானை மங்கையர் தலைவன் மான வேற் கலியன் வாய் ஒலிகள்
தோட்டலர் பைந்தார்ச் சுடர் முடியானைப் பழ மொழியால் பணிந்து உரைத்த பாட்டிவை–10-9-10-

சுரும்பார் பொழில் மங்கையர் கோன் ஒண்டார் வேல் கலியன் ஒலி மாலைகள்–10-10-10-

—————

அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச் சென்ற மாயனைச் செங்கண் மாலினை
மன்றிலார் புகழ் மங்கை வாள் கலி கன்றி சொல்–11-1-10-

வென்று விடை யுடன் ஏழு அடர்த்த வடிகளை மன்றின் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல் ஓன்று நின்ற ஒன்பதும்–10-2-10-

பெற்றார் ஆயிரம் பேரானைப் பேர் பாடப் பெற்றான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை-11-3-10-

வேலை புடை சூழ கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலி கன்றி சொன்ன பனுவல் ஒழி கெழு பாடல்–11-4-10-

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே—11-5-10-

யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
காவளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை–11-6-10-

மெய்நின்ற பாவம் அகலத் திருமாலைக்
கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை
ஐ ஒன்றும் ஐந்தும் இவை பாடி ஆடுமினே –11-7-10-

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே —11-8-10-

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மா முனிகளின் வியாக்கியான சீர்மை -ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் —

April 8, 2021

1-தமிழ்ப்பற்று –
2-ஆழ்ந்த பொருள் விளக்கம் –
3-ஸ்ரீ வைஷ்ணவ அடிப்படை கொள்கைகள்
4-உவமை உருவகம்
5-அணிகள்
6-முரண்பட்டு சமன்வயம்

————

1-தமிழ்ப்பற்று –

தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளரே – 3-8 10-
தூய தமிழ் பத்தும் வல்லார்
சம்ஸ்க்ருதம் சப்தம் போல் அன்றிக்கே -இருண்டு பொருள் தெரியாமை -அன்றிக்கே
பெண்ணுக்கும் பேதைக்கும் அறியலாம்படி ஸ்வார்த்த பிரகசகமாய் தூய்மையை உடைத்தான
திராவிட பாஷையாய் -ஓர் ஒன்றே ஓர் ஆத்மாவுக்கு உஜ்ஜீவனமாய் போரும் என்னும்படி
இருக்கிற பத்துப் பாட்டையும் சாபிப்ராயமாக அனுசந்திக்க வல்லவர்கள்

சீர்மலி செம்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே -2-4 10- –
சீர்மலி செம்தமிழ் வல்லார் -சீர் மலிகையாவது -சப்த லஷணங்களில் குறைவற்று இருக்கையாலே – அழகு மிக்கு இருக்கை
அன்றிக்கே –
பகவத் குணங்களால் நிறைந்து இருக்கிற என்னுதல்
செம் தமிழ் ஆர்ஜவ யுக்தமான தமிழ் -அதாவது -சப்தத்தின் உடைய பிரசன்னதையாலே
உள்ளில் கிடக்கிற அர்த்தம் தானே பிரகாசிக்கும் படியாக இருக்கை –
செந்தமிழ் -வார்த்தைகள் பொருள் தானே விழுங்கும் செம்மை -ஸ்வயம் பிரகாசம்
நடை விளங்கு தமிழ்
செவ்வித் தமிழ்
ஸ்வார்த்த பிரகாசம்

கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு –4-8-4-
ஞாசி தாசி -கூனி பணிப்பெண் -கூன் தொழுத்தை -அடியாட்டி -அடிமைப்பெண் –
சக்களத்தி -மாற்றாட்டி மகன் -தூய தமிழ் வார்த்தை –

கூனியாகிற அடியாட்டி ஆனவள் -திரு அபிஷேக மகோத்சவத்துக்கு அழிவான துருக்திகளை சொல்ல –
அதாவது –
ஜ்ஞாதி தாசீ யதோ ஜாத கைகேயாச்து சஹோஷிதா –
பிரசாதம் சந்த்ர சங்காஸ் மாருரோஹா யதார்ச்சயா -என்கிறபடியே
ஜ்ஞாதி தாசியான இவள் யதார்ச்சிகமாக மாளிகை தளத்தின் மேலே ஏறிப் பார்த்தவாறே –
பெருமாளுடைய திரு அபிஷேகத்துக்கு திருப் படை வீடு எல்லாம் கோடித்து கிடக்கிற படியையும் –
ப்ர்யந்தம் ப்ரந்த மயோத்யாயாம் -என்கிறபடியே
திரள் திரளாக வந்து கிடக்கிற ஜன சம்மர்தத்தையும் -மங்கள வாத்திய கோஷங்களையும்
கண்டு சஹிக்க மாட்டாதே தளத்தின் நின்றும் இறங்கி வந்து
கைகேயியை பர்த்சித்து -உன் மாற்றாட்டி மகன் அபிஷேகம் செய்ய தேடுகிறான்
உன் மகன் அவனுக்கு இனி இழி தொழில் செய்து இருக்கும் அத்தனை இறே
இத்தைப் பார்த்து கொண்டு நீ இருக்கிறது ஏது
அவனுடைய அபிஷேகத்தை குலைத்து உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கும்படி
ராஜாவோடே சொல்லு – அதுக்கு உபாயம் -முன்பே உனக்கு தந்து இருப்பது இரண்டு வரம் உண்டே
அவை இரண்டையும் உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்
ராமனை காடேற போக விடுகையும் -என்று வேண்டிக் கொள்
சத்ய தர்ம பரரான ராஜாவால் செய்யாது ஒழிய போகாது காண் -என்று
திரு அபிஷேகத்துக்கு விக்நமான துருக்திகளை சொன்னாள் இறே

கருளுடைய பொழில் மருதம்–4-9-3-
கருள் -என்று கறுப்பாய்-அத்தாலே சீற்றத்தை சொல்லுகிறது
கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்-என்னக் கடவது இறே–தொல் காப்பியம் மேற்கோள் –

திருக்குறள் -செவிக்கு உணவு இல்லாத போது -மேற்கோள்

—————————————————————–

2-ஆழ்ந்த பொருள் விளக்கம்
கை இளங்குந் நெல்லிக்கனி போல் காட்டி அருளுவார்
சொல்லிலரசிப் படுதி நங்காய் சூழல் உடையன் உன் பிள்ளை தானே
இல்லம் புகுந்து என் மகளைக் கூவி கையில் வளையை கழற்றிக் கொண்டு
கொல்லையினின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிகின்றானே -2 9-10 – –

நான் அல்லன் என்று சிரிக்கின்றானே –
நான் அல்லேன் காண் -என் கையில் வளை கண்டாயோ -நான் உன் இல்லம் புகுகிறது கண்டாயோ –
உன் பெண்ணைப் பேர் சொல்லி அழைக்கிறதைக் கேட்டாயோ -வந்து கையில் வளை கழற்றினது கண்டாயோ
கண்டாயாகில் உன் வளையை அங்கே பறித்து கொள்ளா விட்டது என் -என்றாப் போலே
எனக்கு மறு நாக்கு எடுக்க இடம் இல்லாதபடி சில வார்த்தைகளைச் சொல்லி நின்று சிரியா நின்றான்
இதில் காட்டில் உண்டோ துஸ்ஸகமான தீம்பு -என்கை –

நான் அல்லேன் பல அர்த்தங்கள்
பார்த்தேன் என்றால் அனுமதி பெற்றேன்
பார்க்கவில்லை என்றால் ஆதாரம் இல்லா பழி
கண்ணன் பாவத்தில் இருந்து விளக்கி மா முனிகள்

3-9-4-மாற்றுத்தாய் -இரண்டு விளக்கம்
மாற்றுத்தாய் -மற்ற தாய் சுமத்தரை -நாடே வேண்டாம் -காட்டிலே ஆவது நிம்மதியாக இரு என்று வாழ்த்தி ஆசீர்வாதம்
கூற்று -யமன் போன்ற கைகேயி ஏவ
மாற்றான் தாய் மனப்பான்மை கொண்ட கைகேயி -போக சொல்ல
கூற்றுத்தாய் – -கூறு போட்ட பாயாசம் உண்டவள் -சுமத்தரை -ஆசீர்வாதம் செய்து வழி அனுப்பினாள்

3-10- அடையாளப்பத்து -திருவடி பாவத்தில் பெரியாழ்வார்
3-10-9-முத்ரை கணை ஆழி -உச்சி மேல் வைத்துக் கொண்டு உகந்தாள்
மா முனிகள் சீதா பிராட்டி பாவனையில் மாறி வியாக்யானம்
சிவ தனுஸ் -கை பிடித்து -உள்ளம் உறுத்தி -உகந்தனள் -ஆல்-வியப்பு மகிழ்ச்சி உணர்வை விளக்கி –

————-

3-ஸ்ரீ வைஷ்ணவ அடிப்படை கொள்கைகள்
ராமாநுஜ–94- தவம் தரும் – -தகவும் -அருளும் -ஐந்தும் –
தவம் செல்வம் -வைஷ்ணவ அடிப்படையில்
சத்யம் -தபஸ் -புலன் அடக்கம் -மன அடக்கம் -தானம் -அனுஷ்டானம் -மக்கள் பேறு -அதிகம் பெற்றுக்கொள்ளாமல் –
மூன்று தீ அக்னி ஹோத்ரம் -அதிகமனம் -திரு ஆராதனம் –
மாதவன் தெய்வம் மனசில் நாட்டி -மனக்கோயில் மானஸ ஆதாரணம் -அதுக்கும் மேல் சரணாகதி –
தஸ்மாத் நியாசம் அதிரிக்தம் -ஏஷாம் தபஸாம் –

————-

4-உவமை உருவகம்
கற்பகமாக உருவகம் மேல்
கற்பகம் காட்டிலும் உத்க்ருஷ்டம்
என்னை ஆள வந்த கற்பகம் -ஸ்வாமியாக -தானே தேடி வந்து
இந்த மநோ பாவம் தருவார்
செல்வம் -பக்தி கைங்கர்ய ஸ்ரீ

————–

5-அணிகள்
மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு-1-4-10-

மைத் தடம் கண்ணி யசோதை-கருத்து பெருத்து இருந்துள்ள கண்ணை உடையளான யசோதை –
அஞ்சனத்தாலே அலங்க்ர்தமாய் பரந்துள்ள கண்ணை உடையவள் என்னுதல்-
அஞ்சன வண்ணனான இவனை அநவரதம் பார்த்து கொண்டு இருக்கையாலே

இவனுடைய திருமேனி நிறம் ஊறி -அத்தாலே மைத்து -இவன் பக்கல் ஸ்நேகத்தாலே
விகசிதமான கண்ணை உடையவள் என்னுதல் –
தற் குறிப்பு ஏற்று அணி கொண்டு வியாக்யானம்
அஞ்சன வண்ணனை அநவரதம் பார்த்துக் கொண்டு இருப்பதால் -கண்களில் நிறம்
வியந்து பார்த்து -அகன்று

————

6-முரண்பட்டு சமன்வயம்
தண் புதுவை பட்டன் சொன்ன
குளிர்ந்த ஸ்ரீ வில்லி புத்தூர் -முரண்பாடு போக்க
உடலுக்கு இல்லை இது
பிறவிப்பிணி வெப்பம் போக்கி குளிர்ச்சி உண்டாக்கும்
தாப த்ரயங்களைப் போக்கி அருளும் திவ்ய தேசம்

என் கண்ணா கண்ணா என்ன உதவப் புள்ளூர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த அதகன் -2-1-9-
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய் வாராய் -என்று கூப்பிட்டவனாக அருளிச் செய்தார் திருமங்கை ஆழ்வார் –
இவர் -என் கண்ணா கண்ணா என்று கூப்பிடவனாக அருளிச் செய்தார் –
மூலேதி முக்த பத மாலபதி த்வி எந்தரே-என்று கொண்டு -ஆதி மூலமே -என்று கூப்பிட்டானாக பௌராணிகர் சொன்னார்கள் இறே –
இவை தன்னில் சேரும்படி என் என்னில் -மூலம்-என்கிற இடத்தில்
அசாதாரண விக்ரக விசிஷ்டனான ஆகாரத்தை நினைத்து கூப்பிட்டான் ஆகையாலே
அதுக்கு பர்யாய சப்தங்களை இட்டு ஆழ்வார்கள் அருளி செய்தார்கள் ஆகையால் எல்லாம் சேரக் குறை இல்லை –
ஆதி மூலமே அன்றோ என்னில் -இறைவனை சொல்வதால் முரண்பாடு இல்லையே

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .