Archive for February, 2021

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -5–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

கீழ்ப்பாட்டிலுள்ள ”கேட்கயானுற்றதுண்டு” என்ற வாக்கியத்தை இப் பாட்டிலும் இயைத்துக் கொள்ளலாம்.
”தீர இரும்புண்ட நீரது போல என்னாருயிரை யாரப் பருக, எனக்காராவமுதானாயே” என்ற
திருவாய்மொழிப் பாசுரத்தையே பெரும்பாலும் அடியொற்றி அருளிச் செய்வது இப்பாசுரம் என்க.

இரும்பனன் றுண்ட நீர்போல் எம்பெரு மானுக்கு, என்றன்
அரும்பெற லன்பு புக்கிட் டடிமைபூண் டுய்ந்து போனேன்,
வரும்புயல் வண்ண னாரை மருவியென் மனத்து வைத்து,
கரும்பினின் சாறு போலப் பருகினேற் கினிய லாறே.–5-

பதவுரை

இரும்பு–இரும்பானது
அனன்று–பழுக்கக் காய்ந்து
உண்ட நீர் போல்–(அக்காய்ச்சலடங்கும்படி) உட் கொண்ட ஜலம் போலே
எம்பெருமானுக்கு–எம்பெருமான் திறத்திலே
என் தன்–என்னுடைய
அரு பெறல் அரு பெறல் அன்பு புக்கேட்டு–பெறுதற்கரிதான அன்பைச் செலுத்தி
அடிமை பூண்டு–கைங்கரியம் பண்ணி
உய்ந்து போனேன்–உஜ்ஜீவிக்கப் பெற்றேன்;
(அன்றியும்)
வரும்-(அடியார் இருக்குமி்டந்தேடி) வருகி்ன்ற
புயல் வண்ணனாரை–மேக வண்ணனான அப்பெருமானை
மருவி–கி்ட்டி
என் மனத்து வைத்து–என்னெஞ்சிலே பொருந்த வைத்து
கரும்பின் இன் சாறு போல–கரும்பினுடைய இனிய ரஸம் போலே
பருகினேற்கு–அநுபவிக்கப் பெற்ற எனக்கு
இனிய ஆறே–போக்யமாயிருக்கிறபடி என்னே!.

இரும்பானது அக்நியாலே மிகவும் காய்ச்சப்பட்டு அக்காய்ச்சலடங்க நீரைப் பருகுமா போலே
நானும் என்னுடைய தாபமடங்க பகவத் விஷயத்தில் அன்பாகிற தண்ணீரைப் பருகி,
ப்ராப்தமான அவ் விஷயத்திலே அடிமை செய்யப் பெற்று
உஜ்ஜீவித்தேனென்பன முன்னடிகள்.

தகாத விஷயங்களில் அன்பு உண்டாவதே சஹஜமாய்,
பகவத் விஷயத்தில் அன்பு உண்டாவது மேட்டுமடையா யிருத்தல் பற்றி அரும்பெறலன்பு எனப்பட்டது.
நெருப்பிலே தாமரை பூத்தாலும் பூக்கும்;
அஹங்காரப் பெரு நெருப்பிலே எம்பெருமான் விஷயமான அன்பு விளைவது மிகவுமரிது.

‘அடிமைப்பூண்டு‘ என்றதனால் ஆத்மாவுக்கு அடிமையே ஆபரணமென்பது பெறப்படும்.

(வரும்புயல் வண்ணனாரை இத்யாதி.)
இருந்தவிடத்தே யிருந்து வர்ஷித்து இன்பம் பயக்கும் மேகம் போலே அடியாருள்ள விடங்களிலே சென்று வர்ஷித்து
இன்பம் பயக்கும் மேகம்போலே அடியாருள்ள விடங்களிலே சென்று ஈரக்கையாலே தடவி
விடாய் தீர்க்குமவன் எம்பெருமான்.

அன்னவனை என் மனத்திலே பொருந்த வைத்துக் கருப்பஞ்சாறு போலே பருகினேன்;
பருகின மாத்திரத்திலே வாயாற்சொல் வொண்ணாத இனிமையாயிருக்கின்றதே! ;
இதற்கென்ன காரணம்! தெரியவேணுமென்றாராயிற்று.

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆஞ்சநேய மூல மந்த்ரம் /ஸ்ரீ ஹனுமத் கவசம் /ஸ்ரீஹநுமான் சாலீஸா —

February 22, 2021

ஸ்ரீ ஆஞ்சநேய மூல மந்த்ரம் …

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹனுமதே ராம தூதாய
லங்கா வித்வம்ஸனாய
அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய
சாஹினி டாஹினி வித்வம்ஸனாய
கில கில பூ காரினே விபீஷணாய
ஹனுமத் தேவாய
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹூம் பட் ஸ்வாஹா!

ப்ரார்த்தனா மந்த்ரம் …

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||

கார்ய சித்தி மந்த்ரம் …

அஸாத்ய ஸாதக ஸ்வாமிந் அஸாத்யம் தவ கிம்தவ
ராம தூத க்ருபாஷிந்தோ மத்கார்யம் ஸாதய ப்ரபோ.

நமஸ்கார மந்த்ரம் …

ஸ்ரீ ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய சமுத்பவ
அஞ்சனா கர்ப்ப ஸம்பூத வாயு புத்திர நமோஸ்துதே.

ஆஞ்சநேய பல ச்ருதி மந்த்ரம் …

ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாய மஹா பலாய ஸ்ரீ ஹனுமதே ஸ்வாஹா.

ஆஞ்சநேயர் காயத்ரி …

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ : ஹநுமத் ப்ரசோதயாத்!

ஓம் தத் புருஷாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்!

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்!

ஓம் ராமதூதாய வித்மஹே
அஞ்ஜனீ புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்!

ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வா பத்கந வாரகம்
அபார கருணா மூர்த்திம் ஆஞ்சநேய நமாம்யஹம்

அஞ்சனா கர்ப்ப ஸம்பூதம் குமாரம் ப்ருஹ்மசாரிணம்
துஷ்டக்ருஹ வினாஸாய ஹனுமந்த முபாஸ்மஹே

நாமாம்யஹம் மாருதஸுநு மாநிலம் ஸ்ரீஜானகி ஜீவத ஜீவத ப்ரியம் |
ஸௌமித்ரி மித்ரம் கபிராஜ வல்லபம் ஸ்ரீராமதூதம் ஸிரஸா நமாமி ||

உத்ய தாதித்ய ஸங்காஸம் உதார புஜ விக்ரமம் |
கந்தர்ப்ப கோடிலாவண்யம் ஸர்வவித்யா விஸாரதம் ||

ஸ்ரீராம ஹ்ருதயா நந்தம் பக்தகல்ப மஹீருஹம் |
அபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மாருதாத்மஜம் ||

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி ||

யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||

ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் |
பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம் ||

அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ’கநாசனம் |
கபீச’மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம் ||

————–

ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.

—————

அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !
அஞ்சினைக் கதிர் பின் சென்று அரு மறை யுணர்ந்தாய் போற்றி !
அல்லலைப் போக்கிக் காக்கும் அனுமனை பாடியே போற்றி !
அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே.

———-

ஸ்ரீ ஹனுமத் கவசம் —

அஸ்ய ஸ்ரீ ஹனுமத்கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய |
ஸ்ரீராமசந்த்ரருஷி: |
காயத்ரீச்சந்த: |
ஸ்ரீ ஹனுமான் பரமாத்மா தேவதா |
மாருதாத்மஜ இதி பீஜம் |
அஞ்ஜனாஸூனுரிதி ச’க்தி: |
ஸ்ரீராமதூத இதி கீலகம் |
மம மானஸாபீஷ்ட ஸித்யர்த்தே ஜபே வினியோக: ||

ஸ்ரீ ராமசந்த்ர உவாச :-

ஹனுமான் பூர்வத: பாது தக்ஷிணே பவனாத்மஜ: |
ப்ரதீச்யாம் பாது ரக்ஷோக்ன: ஸௌம்யாம் ஸாகரதாரண: ||–1-

ஊர்த்வம் மே கேஸரீ பாது விஷ்ணு பக்தஸ்துமேஹ்யத: |
லங்காவிதாஹக: பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம் ||–2-

ஸுக்ரீவ ஸ சிவ: பாது மஸ்தகே வாயுநந்தன: |
பாலம் பாது மஹாவீர: ப்ருவோர்மத்யே நிரந்தரம் ||–3-

நேத்ரே சாயாபஹாரீ ச பாது மாம் ப்லவகேச்’வர: |
கபோலௌ கர்ணமூலே து பாது மே ராமகிங்கர: ||–4-

நாஸாயாமஞ்ஜனாஸூனு: பாது வக்த்ரம் ஹரீச்’வர: |
பாது கண்டம் ச தைத்யாரி: ஸ்கந்தௌ பாது ஸுரார்சித: ||–5-

புஜௌ பாது மஹா தேஜா: கரௌ து சரணாயுத: |
நகான் நகாயுத: பாது குக்ஷௌ பாது கபீச்’வர: || –6-

வக்ஷௌ முத்ராபஹாரீச பாது பார்ச்’வே மஹாபுஜ: |
ஸீதா சோ’கப்ரஹர்தாச ஸ்தனௌ பாது நிரந்தரம் ||—-7-

லங்காபயங்கர: பாது ப்ருஷ்டதேசே’ நிரந்தரம் |
நாபிம் ஸ்ரீராமசந்தரோ மே கடிம் பாது ஸமீரஜ: ||–8-

குஹ்யம் பாது மஹாப்ராக்ஞ: ஸக்தினீ ச சி’வப்ரிய: |
ஊரூ ச ஜானுனீ பாது லங்கா ப்ராஸாத பஞ்சன: ||–9-

ஜங்கே பாது கபிச்’ரேஷ்ட: குல்பம் பாது மஹாபல: |
அசலோத்தாரக: பாது பாதௌ பாஸ்கர ஸன்னிப: ||–10-

அங்கான்யமிதஸத்வாட்ய: பாது பாதாங்குளீஸ்ஸதா |
ஸர்வாங்காநி மஹா சூ’ர: பாது ரோமாணி சாத்மவான் ||–11-

ஹனுமத் கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷண: |
ஸ ஏவ புருஷச்’ரேஷ்ட: புக்திம் முக்திஞ்ச விந்ததி ||–12-

த்ரிகாலம் ஏககாலம் வா படேன் மாஸத்ரயம் நர: |
ஸர்வான் ரிபூன் க்ஷணாஜ்ஜித்வா ஸ புமான் ச்’ரியம் ஆப்னுயாத் ||–13-

அர்தராத்ரௌ ஜலேஸ்தித்வா ஸப்த வாரம் படேத்யதி |
க்ஷயாபஸ்மார குஷ்டாதி தாபத்ரய நிவாரணம் ||–14-

அச்’வத்தமூலே அர்கவாரே ஸ்தித்வா படதி ய:புமான் |
அசலாம் ச்’ரியமாப்னோதி ஸங்க்ராமே விஜயீபவேத் ||–15-

ஸர்வரோகா: க்ஷயம் யாந்தி ஸர்வஸித்திப்ரதாயகம் |
ய: கரே தாரயேந்நித்யம் ராமரக்ஷா ஸமன்விதம் ||–16-

ராமரக்ஷம் படேத்யஸ்து ஹனூமத் கவசம் வினா |
அரண்யே ருதிதம் தேன ஸ்தோத்ரபாடஞ்ச நிஷ்பலம் ||–17-

ஸர்வ து:க பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத் |
அஹோராத்ரம் படேத்யஸ்து சு’சி: ப்ரயதமானஸ: ||–18-

முச்யதே நாத்ரஸந்தேஹ: காராக்ருஹகதோ நர: |
பாபோபபாதகான் மர்த்ய: முச்யதே நாத்ரஸம்ச’ய: ||–19-

அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||–20-

வைதேஹீ கன சோ’க தாபஹரணோ வைகுண்டபக்திப்ரிய: |
அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||–21-

ஸ்ரீ ராம விரசித ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் ஸம்பூர்ணம்.

ஆஞ்சநேய கவசத்தின் அர்த்தம் :

ஹனுமான் பூர்வத: பாது தக்ஷிணே பவனாத்மஜ: |
ப்ரதீச்யாம் பாது ரக்ஷோக்ன: ஸௌம்யாம் ஸாகரதாரண: ||–1-

கிழக்கு திக்கில் என்னை ஸ்ரீ ஹனுமான் ரக்ஷிக்கட்டும். தெற்குத்திக்கில் வாயுபுத்திரன் என்னை ரக்ஷிக்கட்டும்.
மேற்கு திக்கில் ராக்ஷசர்களை நாசம் செய்யும் ஸ்ரீ ஹனுமான் என்னை ரக்ஷிக்கட்டும்.
வடக்கு திக்கில் சமுத்திரத்தைத் தாண்டிய ஹனுமார் என்னை ரக்ஷிக்கட்டும். (1)

ஊர்த்வம் மே கேஸரீ பாது விஷ்ணு பக்தஸ்துமேஹ்யத: |
லங்காவிதாஹக: பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம் ||–2-

ஸ்ரீ கேஸரியானவர் என்னை ஆகாயத்தில் ரக்ஷிக்கட்டும்.
ஸ்ரீ விஷ்ணு பக்தியுள்ள ஹனுமார் என்னைக் கீழ்பாகத்தில் ரக்ஷிக்கட்டும்.
லங்கையை எரித்தவர் ஸர்வ ஆபத்துக்களிலிருந்தும் என்னை எப்பொழுதும் காக்க வேண்டும். (2)

ஸுக்ரீவ ஸ சிவ: பாது மஸ்தகே வாயுநந்தன: |
பாலம் பாது மஹாவீர: ப்ருவோர்மத்யே நிரந்தரம் ||–3-

சுக்ரீவ மந்திரியானவர் என்னைத் தலையில் ரக்ஷிக்கட்டும். வாயுபுத்ரர் எனது நெற்றியில் ரக்ஷிக்கட்டும்.
மகாவீரன் எனது புருவங்களின் நடுவில் ரக்ஷிக்கட்டும். (3)

நேத்ரே சாயாபஹாரீ ச பாது மாம் ப்லவகேச்’வர: |
கபோலௌ கர்ணமூலே து பாது மே ராமகிங்கர: ||–4-

எனது கண்களை சாயாக்ராஹீ என்னும் பூதத்தைக் கொன்றவர் ரக்ஷிக்கட்டும்.
வானரங்களுக்குத் தலைவர் எனது கன்னங்களை ரக்ஷிக்கவேண்டும்.
ஸ்ரீ ராம தூதன் எனது காதுகளின் கீழ்பாகங்களை ரக்ஷிக்கட்டும். (4)

நாஸாயாமஞ்ஜனாஸூனு: பாது வக்த்ரம் ஹரீச்’வர: |
பாது கண்டம் ச தைத்யாரி: ஸ்கந்தௌ பாது ஸுரார்சித: ||–5-

ஸ்ரீ அஞ்சனா புத்ரர் எனது மூக்கில் ரக்ஷிக்கட்டும். வானரர்களுக்கு அதிபர் எனது முகத்தைக் காக்கட்டும்.
அஸுரசத்ரு எனது கழுத்தை ரக்ஷிக்கட்டும். தேவர்களால் பூஜிக்கப்பட்டவர் எனது தோள்களை ரக்ஷிக்க வேண்டும். (5)

புஜௌ பாது மஹா தேஜா: கரௌ து சரணாயுத: |
நகான் நகாயுத: பாது குக்ஷௌ பாது கபீச்’வர: || –6-

மஹா தேஜஸ்வி எனது புஜங்களை ரக்ஷிக்கட்டும். கால்களை ஆயுதமாகக்கொண்டவர் எனது கால்களை ரக்ஷிக்கட்டும்.
நகங்களை ஆயுதமாகக்கொண்டவர் எனது நகங்களை ரக்ஷிக்கட்டும்.
வானரங்களுக்குத் தலைவர் எனது வயிற்றை ரக்ஷிக்க வேண்டும். (6)

வக்ஷௌ முத்ராபஹாரீச பாது பார்ச்’வே மஹாபுஜ: |
ஸீதா சோ’கப்ரஹர்தாச ஸ்தனௌ பாது நிரந்தரம் ||—-7-

ஸ்ரீ ராமாங்குளீயத்தை எடுத்துச் சென்றவர் எனது மார்பைக் காக்க வேண்டும்.
பெரும் கைகளை உடையவர் எனது இரு பக்கங்களையும் ரக்ஷிக்கட்டும்.
ஸீதையின் துயரத்தை அடியோடு போக்கியவர் எனது ஸ்தனங்களை எப்பொழுதும் ரக்ஷிக்கட்டும். (7)

லங்காபயங்கர: பாது ப்ருஷ்டதேசே’ நிரந்தரம் |
நாபிம் ஸ்ரீராமசந்தரோ மே கடிம் பாது ஸமீரஜ: ||–8-

லங்கைக்கு பயத்தை அளித்தவர் எனது பின்பாகத்தை ரக்ஷிக்கட்டும்.
ஸ்ரீ ராமச்சந்திரன் எனது தொப்புளைக் காக்க வேண்டும். வாயுபுத்ரன் எனது இடுப்பை ரக்ஷிக்கட்டும். (8)

குஹ்யம் பாது மஹாப்ராக்ஞ: ஸக்தினீ ச சி’வப்ரிய: |
ஊரூ ச ஜானுனீ பாது லங்கா ப்ராஸாத பஞ்சன: ||–9-

சிறந்த புத்திமான் எனது குஹ்யதேசத்தை ரக்ஷிக்கட்டும்.
சிவபக்தரான ஹனுமார் எனது துடையின் சந்திகளை ரக்ஷிக்கட்டும்.
எனது துடைகளையும் முழங்கால்களையும் லங்கையின் உப்பரிகைகளை உடைத்தவர் காக்க வேண்டும். (9)

ஜங்கே பாது கபிச்’ரேஷ்ட: குல்பம் பாது மஹாபல: |
அசலோத்தாரக: பாது பாதௌ பாஸ்கர ஸன்னிப: ||–10-

வானரர்களுள் சிறந்தவர் எனது ஆடு சதைகளைக் காக்க வேண்டும்.
மிகுந்த பலம் வாய்ந்தவர் எனது கணைக்கால்களைக் காக்க வேண்டும்.
சூரியனுக்கு ஒப்பானவரும், ஔஷத பர்வதத்தைத் தூக்கி வந்தவருமான ஹனுமார் எனதுகால்களை ரக்ஷிக்கட்டும். (10)

அங்கான்யமிதஸத்வாட்ய: பாது பாதாங்குளீஸ்ஸதா |
ஸர்வாங்காநி மஹா சூ’ர: பாது ரோமாணி சாத்மவான் ||–11-

அளவு கடந்த பலம் நிரம்பியவர் எனது அங்கங்களையும், கால் விரல்களையும் எப்பொழுதும் காக்க வேண்டும்.
மஹாசூரன் என்னுடைய எல்லா அங்கங்களையும், மனதை அடக்கியவர் எனது ரோமங்களையும் காக்க வேண்டும். (11)

ஹனுமத் கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷண: |
ஸ ஏவ புருஷச்’ரேஷ்ட: புக்திம் முக்திஞ்ச விந்ததி ||–12-

படித்த எந்த அறிவாளி ஹனுமானின் கவசத்தைத் தரிப்பனோ அவனே மனிதர்களுக்குள் சிறந்தவன்.
போகங்களையும் மோக்ஷத்தையும் அடைவான்.(12)

த்ரிகாலம் ஏககாலம் வா படேன் மாஸத்ரயம் நர: |
ஸர்வான் ரிபூன் க்ஷணாஜ்ஜித்வா ஸ புமான் ச்’ரியம் ஆப்னுயாத் ||–13-

மூன்று மாத காலம் நித்தியம் மூன்று முறையோ அல்லது ஒரு முறையோ ஒரு மனிதன் படிப்பானேயாகில்,
அவன் எல்லா சத்துருக்களையும் ஒரு கணத்தில் ஜெயித்து ஐஸ்வர்யத்தை அடைவான். (13)

அர்தராத்ரௌ ஜலேஸ்தித்வா ஸப்த வாரம் படேத்யதி |
க்ஷயாபஸ்மார குஷ்டாதி தாபத்ரய நிவாரணம் ||–14-

நடுநிசியில் இந்த ஹனுமத் கவசத்தை ஏழு தடவை படித்தால் க்ஷயம்,அபஸ்மாரம்(வலிப்பு),
குஷ்டம் முதலிய ரோகங்கள், தாபத்ரயங்கள் யாவும் நீங்கும். (14)

அச்’வத்தமூலே அர்கவாரே ஸ்தித்வா படதி ய:புமான் |
அசலாம் ச்’ரியமாப்னோதி ஸங்க்ராமே விஜயீபவேத் ||–15-

ஞாயிற்றுக்கிழமையன்று அரசமரத்தினடியில் இருந்துகொண்டு இதை எவன் ஒருவன் படிப்பானோ
அவன் அழிவற்ற ஐஸ்வர்யத்தை அடைவான். யுத்தத்தில் ஜெயத்தையும் அடைவான். (15)

ஸர்வரோகா: க்ஷயம் யாந்தி ஸர்வஸித்திப்ரதாயகம் |
ய: கரே தாரயேந்நித்யம் ராமரக்ஷா ஸமன்விதம் ||–16-

ஸ்ரீ ராம ரக்ஷையுடன் கூடிய ஹனுமத் கவசத்தை எவனொருவன் கையில் தரித்துக் கொள்வானோ
அவனுக்கு வியாதிகள் யாவும் நீங்கும். எல்லா காரிய சித்தியும் ஏற்படும். (16)

ராமரக்ஷம் படேத்யஸ்து ஹனூமத் கவசம் வினா |
அரண்யே ருதிதம் தேன ஸ்தோத்ரபாடஞ்ச நிஷ்பலம் ||–17-

ஹனுமத் கவசத்தைப் படிக்காமல் ராம ரக்ஷையைப் படிப்பது வீணாகும். (17)

ஸர்வ து:க பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத் |
அஹோராத்ரம் படேத்யஸ்து சு’சி: ப்ரயதமானஸ: ||–18-

முச்யதே நாத்ரஸந்தேஹ: காராக்ருஹகதோ நர: |
பாபோபபாதகான் மர்த்ய: முச்யதே நாத்ரஸம்ச’ய: ||–19-

எல்லா துக்கங்களும் நீங்கும். எங்கும் விஜயத்தை அடைவான். ஆசாரமாய்ப் பரிசுத்தமான மனதுடன்
ஒரு தினம் இரவு பகல் முழுவதும் திரும்பத் திரும்ப இந்த கவசத்தைப் படித்தானேயாகில் ஜெயில் வாசம் நிச்சயம் நீங்கும்.
இதில் சந்தேகமேயில்லை. மஹா பாபங்கள், உபபாதகங்கள், யாவும் நீங்கும். இதில் சந்தேகமேயில்லை. (18-19)

அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||–20-

வைதேஹீ கன சோ’க தாபஹரணோ வைகுண்டபக்திப்ரிய: |
அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||–21-

மிகுந்த பிரதாபம் வாய்ந்த எந்த ஹனுமார் சமுத்திரத்தை சின்ன குட்டையைப் போல் தாண்டி ஸ்ரீ ஸீதாதேவியின்
மிகுந்த சோகத்தால் ஏற்பட்ட தாபத்தைப் போக்கினாரோ, ஸ்ரீ வைகுண்டநாதரான ஸ்ரீ ராமனிடத்தில் பக்தி கொண்டாரோ,
அக்ஷய குமாரனை வதம் செய்தாரோ, யுத்தத்தில் ஜெயிக்கப்பட்ட ராக்ஷஸனான ராவணனுடைய
மிகுந்த கர்வத்தைப் போக்கினாரோ,அப்படிப்பட்ட வாயுகுமாரனும், வானர ஸ்ரேஷ்டருமான
ஸ்ரீ ஹனுமான் எப்பொழுதும் நம்மை ரக்ஷிக்கட்டும். (20-21)

ஸ்ரீ ராமரால் செய்யப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் முற்றிற்று.

———-

ஸ்ரீஹநுமான் சாலீஸா —

புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரெள பவன குமார்|L
பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்||

ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர|
ஜய கபீஸ திஹுலோக உஜாகர||

ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார்
பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்||

ராமதூத அதுலித பலதாமா|
அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா||

மஹாவீர் விக்ரம பஜரங்கீ|
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ||

கஞ்சன பரண விராஜ ஸுவேசா|
கானன குண்டல குஞ்சித கேசா||

ஹாத் வஜ்ர ஒள த்வாஜ விராஜை|
காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை||

சீதைக்காக மட்டுமா ராமன் ராவணனை கொன்றார்?… உண்மையான காரணம் இதுதான்…

சங்கர ஸுவன கேசரி நந்தன|
தேஜ ப்ராதப மஹா ஜகவந்தன||

வித்யாவான் குணீ அதி சாதுர|
ராம காஜ கரிபே கோ ஆதுர||

ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா|
ராம லஷண ஸீதா மன பஸியா||

ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா|
விகட ரூப தரி லங்க ஜராவா||

பீம ரூப தரி அஸுர ஸங்ஹாரே |
ராமசந்த்ர கே காஜ ஸ(ம்)வாரே ||

லாய ஸஜீவந லகந ஜியாயே |
ஸ்ரீ ரகுபீர ஹரஷி உர லாயே ||

பக்தனிடம் தோற்ற ராமன் மற்றும் ஆஞ்சநேயர்… எப்படி சாத்தியமானது தெரியுமா?

ரகுபதி கீந்ஹீ பஹுத படாஈ |
தும மம ப்ரிய பரதஹீ ஸம பாஈ ||

ஸஹஸ பதந தும்ஹரோ ஜஸ காவை(ம்) |
அஸ கஹி ஸ்ரீபதி கந்ட லகாவை(ம்) ||

ஸநகாதிக ப்ரஹ்மாதி முநீஸா |
நாரத ஸாரத ஸஹித அஹீஸா ||

ஜம குபேர திக்பால ஜஹா(ம்) தே |
கபி கோபித கஹி ஸகே கஹா(ம்) தே ||

தும உபகார ஸுக்ரீவஹி(ம்) கீந்ஹா |
ராம மிலாய ராஜ பத தீந்ஹா ||

தும்ஹரோ மந்தர பிபீஷந மாநா |
லங்கேஸ்’வர ப ஏ ஸப ஜக ஜாநா ||

ஜுக ஸஹஸ்ர ஜோஜந பர பாநூ |
லீல்யோ தாஹி மதுர பல ஜாநூ ||

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ(ம்) |
ஜலதி லாங்கி கயே அசரஜ நாஹீ(ம்) ||

துர்கம காஜ ஜகத கே ஜேதே |
ஸுகம அநுக்ரஹ தும்ஹரே தேதே ||

அனுமனுக்கு வெண்ணெய் சாற்றுவதற்கான காரணம்!

ராம துஆரே தும ரகவாரே |
ஹோத ந ஆஜ்ஞாயா பிநு பைஸாரே ||

ஸப ஸுக லஹை தும்ஹாரீஸரநா |
தும ரச்சக காஹூ கோ டர நா ||

ஆபந தேஜ ஸம்ஹாரோ ஆபை |
தீநோ(ம்) லோக ஹா(ந்)க தே கா(ம்)பை ||

பூத பிஸாச நிகட நஹி(ம்) ஆவை |
மஹாபீர ஜப நாம ஸுநாவை ||

நாஸை ரோக ஹரை ஸப பீரா |
ஜபத நிரந்தர ஹநுமத பீரா ||

ஸங்கட தே ஹநுமாந சுடாவை |
மந க்ரம பசந த்யாந ஜோ லாவை ||

ஸப பர ராம் தபஸ்வீ ராஜா |
திந கே காஜ ஸகல தும ஸாஜா ||

ஔர மநோரத ஜோ கோஇ லாவை |
ஸோஇ அமித ஜீவந பல பாவை ||

சாரோ(ம்) ஜுக பரதாப தும்ஹாரா |
ஹை பரஸித்த ஜகத உஜியாரா ||

ஸாது ஸந்த கே தும ரகவாரே |
அஸுர நிகந்தந ராம துலாரே ||

அஷ்ட ஸித்தி நௌ நிதி கே தாதா |
அஸ் பர தீந ஜாநகீ மாதா ||

தசரதன் தெய்வ பிரவியான ராமன் உள்பட 4 பிள்ளைகளை ஏன் பெற்றார் தெரியுமா?

ஒன்பது விதச் செல்வங்களைக் குறிக்கும் ஒன்பது வகை பக்தி

ராம ரஸாயந தும்ஹரே பாஸா |
ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா ||

தும்ஹரே பஜந ராம கோ பாவை |
ஜநம ஜநம கே துக பிஸராவை ||

அந்த கால ரகுபர புர ஜாஈ |
ஜஹா(ம்) ஜந்ம ஹரி-பக்த கஹாஈ ||

ஔர தேவதா சித்த ந தர ஈ |
ஹனுமத ஸேஇ ஸர்ப ஸுக கர ஈ ||

ஸங்கட கடை மிடை ஸப பீரா |
ஜோ ஸுமிரை ஹநுமத பல பீரா ||

ஜை ஜை ஜை ஹநுமாந கோஸா ஈ(ம்) |
க்ருபா கரஹு குரு தேவ கீ நாஈ(ம்) ||

ஜோ ஸத பார பாட கர கோஈ |
சூடஹி பந்தி மஹா ஸுக ஹோஈ ||

ஜோ யஹ படை ஹநுமாந சாலீஸா |
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா ||

துளஸீதாஸ ஸதா ஹரி சேரா |
கீஜை நாத ஹ்ருதய மஹ(ம்) டேரா ||

பவந தநய ஸங்கட ஹரந , மங்கல மூரதி ரூப |
ராம லஷந ஸீதா ஸஹித, ஹ்ருதய பஸஹு ஸுர பூப ||

———–

அசேஷ லங்காபதி ஸைத்யஹந்தா
ஸ்ரீராமஸேவா சரணைகக்ர்த்தா
அசேஷ து:காஹத லோக கோப்தா
த்வஸௌ ஹநுமாம்ஸ்த்வ ஸௌக்யகர்த்த

மந்த்ராத்மகம் ஸ்ரீ மாருதி ஸ்தோத்ரம் ….

ஓம் நமோ வாயுபுத்ராய பீமரூபாய தீமதே |
நமஸ்தே ராமதூதாய காமரூபாய தீமதே ||
மோஹசோ’க விநாசா’ய ஸீதாசோ’கவிநாஸிநே |
பக்நாசோ’கவநாயாஸ்து தக்தலங்காய வாக்மிநே ||
கதிநிர்ஜிதவாதாய லக்ஷ்மணப்ராணதாய ச |
வநௌகஸாம் வரிஷ்டாய வஷிநே வநவாஸிநே ||
தத்வஞானஸுதாஸிந்துநிமக்னாய மஹீயஸே |
ஆஞ்ஜநேயாய ஸூராய ஸுக்ரீவ ஸசிவாய தே||
ஜன்மம்ருத்யுபயக்நாய ஸர்வக்லேச’ஹராய ச |
நேதிஷ்டாய ப்ரேதபூதபிசா’ச பய ஹாரிணே ||
யாதநாநாஷநாயஸ்து நமோ மர்கடரூபிணே |
யக்ஷரக்ஷஸசா’ர்தூல ஸர்வ்விர்சி’சக பீஹிர்தே ||
மஹாவலாய வீராய சிரஞ்ஜீவிந உத்ததே |
ஹாரிணே வஜ்ரதேஹாய சோல்லங்கித மஹாவ்த||

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மண பரத சத்ருக்ந ஆழ்வார்கள் சமேத ஸீதா பத்தி சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில், திருவள்ளுர்–

February 22, 2021

ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில், திருவள்ளுர்

இந்தியா முழுவதும், ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி ஆஞ்சநேயர், ஹனுமான்ஜி, மாருதி, பஜ்ரங் பாலி, மஹாவீர், பவன் குமார்
என பல பெயர்களால் வழிபடப்படுகிறார்.
அவர் வாயு தேவனுக்கும், அஞ்ஞனா தேவிக்கும் மகனாக அவதரித்தார்.
இவர் ஏழு சிரஞ்ஞீவி (இறவா நிலை) களில் ஒருவர். சூரியத் தேவனே இவரது ஆசான் ஆவார்.
வால்மீகி இராமாயணத்தில் சுந்தர காண்டம் என்ற தனி அத்தியாயத்தில்,
ஆஞ்சநேயர் அன்னை சீதாபிராட்டியை கடல் கடந்து தேடும் போது நிகழ்த்திய லீலைகளைப் பற்றி
மிக விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஸூந்தரனையும் ஸூந்தரியையும் ஸூந்தரனான திருவடி சேர்த்து வைத்த விவரணமான
ஸூந்தர காண்டத்தில் எது தான் ஸூந்தரமாக இல்லாமல் உள்ளது
சுந்தர காண்டம் 2885 ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது.
சமஸ்கிருத வார்த்தையான சுந்தர என்பதற்கு தமிழில் அழகான என்று பொருள்.
இராமாயணத்தில், சுந்தர காண்டத்தின் மகிமை மிகவும் முக்கியமானதாகும்.
கடலானது சம்சார சாகரத்தைக் பிரதிபலிக்கிறது.
மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமர், பரமாத்மாவையும்,
பூமா தேவியின் அம்சமான சீதாபிராட்டியையும், ஜீவாத்மாவுடன் ஒப்பிட்டு கூறுகிறார்.
ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமியை குரு அல்லது தெய்வீக ஆசிரியராக குறிப்பிடுகிறார்.

தேவ பாஷை சமஸ்க்ருதத்தில் பேசாமல் மானுஷ மதுர பாஷையில் திருவடி ஸ்ரீ சீதாபிராட்டி இடம் பேசினார் -வால்மீகி
இவர் நவ வியாகரண பண்டிதர்
அகஸ்தியர் இடம் கற்றாள் பிராட்டி
பிராட்டி விக்ரமத்தில் திருவடி போலவும் சாமர்த்யத்தில் நரசிம்மர் போலவும் ஞானத்தில் ஹயக்ரீவர் போலவும்
பலத்தில் வராஹர் போலவும் ராம பக்தியில் தானாகவும் -இருக்கிறாய் -ஸூந்தர காண்ட ஸ்லோகம் உண்டே
பஞ்ச முக ஆஞ்சநேயாராகவே பிராட்டி கண்டாள்

த்ருஷ்டா ஸீதா -கண்டனன் கற்பினுக்கு அணியை கண்களால் –
களி நடம் புரியக் கண்டேன்
கற்பு -நல் பிறப்பு -பாரதந்தர்யம் –
சீதா கண்களால் பார்த்தேன் -காட்டவே கண்டார்
ராம தூதனாக வாலில் நெருப்பு பெற்றார்
சீதா தூதனாக ராம ஆலிங்கனம் பெற்றாரே –

ஆச்சார்ய பரம் -முக்குணங்கள் ராவணன் கும்பகர்ணன் விபீஷணன் -மனஸ் தச ஞான கர்ம இந்திரியங்கள் –
சீதா ஜீவ -ராமர் பரமாத்மா -கடகர் -திருவடி –
சம்சாரம் -இலங்கை -அசோகவனம் சரீரம் ஒன்பது வாசல் –
கணையாழி -பஞ்ச சம்ஸ்காரம்
உப நயனம் – ஆச்சார்யர் அருகில் அழைத்து செய்வது
உப ந்யாஸம் -அருகில் நல்ல கருத்துக்களை சமர்ப்பித்தல்

அஞ்சிலே ஓன்று பெற்று அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஓன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி -(ஆர் உயிருக்காக ஏகி -ஆர் உயிர் காக்க ஏகி )
அஞ்சிலே ஓன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்
பஞ்ச பூதங்கள் பரமாக சாதாரணமான அர்த்தம்
தாப -தீயில்
திருமண -ஆகாசம்
மந்த்ர உபதேசம் -காற்று
தாஸ்ய நாமம் சேவிக்க பூமி
திருவாராதனம் -நீர்
ஸம்ப்ரதாய அர்த்தமாக -அர்த்த பஞ்சகம் -சரணாகதி மார்க்கம் –

பஞ்சமுக ஆஞ்சநேயரின் தோற்றம்
பஞ்சமுக ஆஞ்சநேயரின் தோற்றத்தைப் பற்றி இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு கிளைக் கதையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இராம – இராவண யுத்தத்தின் போது, பாதாளலோக அரசனான மஹிராவணாவின் உதவியை இராவணன் நாடினான்.
ஹனுமார், இராம இலட்சுமணர்களைப் பாதுகாக்க, தனது வாலையே ஒரு கோட்டையாக மாற்றி, அதில் பத்திரமாக அவர்களைப் பாதுகாத்தார்.
ஆனாலும், மஹிராவணாவோ, விபீஷணன் உருவம் எடுத்து வந்து, அவர்களை சிறைப் பிடித்து, பாதாள லோகம் கூட்டிச் சென்றான்.

அதை அறிந்த ஹனுமார், அவர்களை பத்திரமாக மீட்க, பாதாள லோகம் சென்றார்.
அங்கு சென்ற பிறகு தான், அவ்விடத்தில் எரிந்து கொண்டிருந்த ஐந்து விளக்குகளையும் ஒரு சேர அணைத்தால் தான்,
மஹிராவணாவின் உயிர் பிரியும் என்பதை அறிந்தார்.
உடனே, தன் முகத்துடன்,
ஸ்ரீநரசிம்ம சுவாமி, ஸ்ரீஹயக்ரீவ சுவாமி, ஸ்ரீலஷ்மி வராக சுவாமி மற்றும் ஸ்ரீமஹாவீர கருட சுவாமி ஆகியோர் முகங்களையும்
கொண்ட பஞ்ச முக வடிவம் எடுத்து, அந்த ஐந்து விளக்குகளையும் ஒரு சேர அணைத்தார்.
இதனால், கொடியவன் மஹிராவணான் மாண்டான். பிறகு ஹனுமாரும், இராம இலட்சுமணர்களை பத்திரமாக மீட்டு வந்தார்.

மேலும், பஞ்சமுக ஆஞ்சநேயர், மந்த்ராலய மகானான ஸ்ரீராகவேந்த்ர தீர்த்தரின் உபாசனை தெய்வமாகத் திகழ்கிறார்.
அவர், பஞ்சமுக ஆஞ்சநேயரை நினைத்து தியானம் செய்த இடம் பஞ்சமுகி என்றழைக்கப்படுகிறது.
அங்கு, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.

கும்பகோணத்திலும், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையே, மாதிரி வடிவமாக எடுத்து கொள்ளப்பட்டு, இந்த தலத்தில், மிகப் பிரம்மாண்டமாக 32 அடி உயரத்தில்
வடிவமைக்கப்பட்ட ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை மகாபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் (சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவு) அருகிலுள்ள பெரியகுப்பம் கிராமத்தில்
மிகப் பிரம்மாண்டமான 32 அடி உயரமுள்ள, ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி சிலையானது,
பதிவு செய்யப்பட்ட ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி அறக்கட்டளையின் நிறுவனர்,
குருதேவ் பூஜ்யஸ்ரீ மந்த்ரமூர்த்தி தாசன் S. வெங்கடேச பட்டாச்சாரியார் சுவாமிகளால்,
2004 –ம் வருடம் ஜூலைத் திங்கள் 6 –ம் நாள் மகாபிரதிஷ்டை, செய்யப்பட்டது.

இந்த நிகழ்வானது, ஒட்டு மொத்த மனித குலத்தின் நன்மையை கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளதால்,
மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
உலகத்திலேயே, இங்கு மட்டும் தான் மந்த்ர சாஸ்த்ரப்படி மகாபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால்,
இத்தலம் தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்கிறது.

குருதேவ் தனது குருவின் மூலம், தனக்கு கிடைத்த, சக்தி வாய்ந்த பஞ்ச முகங்களான,
ஸ்ரீஆஞ்சநேய சுவாமி, ஸ்ரீநரசிம்ம சுவாமி, ஸ்ரீமஹாவீர கருட சுவாமி, ஸ்ரீலஷ்மி வராக சுவாமி மற்றும் ஸ்ரீஹயக்ரீவ சுவாமி
ஆகியோரின் மூல மந்த்ரங்களின் பலனானது, ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் சென்றடைய வேண்டும் என்ற
அர்ப்பணிப்பு உணர்வு காரணமாகவே, இங்கு ஸ்ரீ விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமியை பிரதிஷ்டை செய்துள்ளார்.

மந்த்ர சாஸ்த்ரத்தில் வல்லவரான குருதேவ், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அடைந்த துயர்களை,
சிறப்பு பரிகாரங்களைச் செய்து களைந்துள்ளார்.
அவர், காஞ்சி மகாபெரியவாளிடமிருந்து, மந்த்ரமூர்த்தி பட்டம் பெற்ற ஸ்ரீ ரெங்கசுவாமி பட்டாச்சாரியாரை
தனது குருவாக அடைந்ததற்கு மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

மண்டபம் கட்டி முடித்த பிறகு, மூல மந்த்ரங்களை, பஞ்ச முகங்களுக்கு எதிரே, சுவற்றில் செதுக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், பக்தர்கள் எவரும், இந்த மூல மந்த்ரங்களை உரிய முறையில் ஜெபித்து, அதற்கான பலனை எளிதில் அடையலாம்.
இது சாத்தியமாவதற்கு, குரு பரம்பரை மகா சக்தியானது அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

பஞ்சமுகங்களின் முக்கியத்துவம்
கிழக்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி முகமானது,
நமது பாவத்தின் கறைகளைப் போக்குவதுடன், மனதையும் தூய்மைப் படுத்துகிறது.

தெற்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீநரசிம்மர் சுவாமி முகமானது,
நமக்குள் இருக்கும் எதிரிகள் பற்றிய பயத்தைப் போக்குவதுடன், நம்மை வெற்றி பெறவும் வைக்கிறது.

மேற்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீமஹாவீர கருட சுவாமி முகமானது,
தீய சக்திகள் மற்றும் காத்து கருப்பினால் ஏற்படும் தீய விளைவுகளைப் உடனடியாகப் போக்குவதுடன்,
கொடிய விஷக்கடியினால் நமது உடலில் சேரும் விஷத்தையும் முறிக்கிறது.

வடக்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீலஷ்மி வராக சுவாமி முகமானது,
நமக்கு கிரகங்களின் பெயர்ச்சியால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதுடன்,
அனைத்து விதமான அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளிக்கிறது.

மேல் நோக்கியுள்ள ஸ்ரீஹயக்ரீவ சுவாமி முகமானது, நமக்கு ஞானத்தினையும், நாம் ஈடுபடும் அனைத்து
காரியங்களிலும் வெற்றியினையும், புத்ர பாக்கியம் அளிக்கிறது

மகா பிரதிஷ்டையின் சிறப்பம்சங்கள்
மிகப் பிரம்மாண்டமாக 32 அடி உயர விஸ்வரூப வடிவிலுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி சிலையானது,
ஒரே கல்லில் (பச்சை நிற கிரானைட் நிறம் மற்றும் 36’ X 20’ X 10’ அளவு) கர்நாடக மாநிலத்திலுள்ள
ஹசன் என்ற இடத்தில் செதுக்கப்பட்டு அங்கிருந்து சாலை வழியாக திருவள்ளூருக்கு கொண்டு வரப்பட்டது.
ஒட்டு மொத்த உலகத்திலேயே மந்த்ர சாஸ்த்ரப்படி மகாபிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரே தலம்
மகாபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இடமானது புராண காலங்களில் ருத்ர வனம் என அழைக்கப்பட்டு வந்துள்ளது.
மேலும், அகத்தியர் முதலான மாமுனிவர்கள் தவம் செய்த இடமாகவும் அறியப்படுகிறது.

அறக்கட்டளையின் முக்கிய பணிகள்
அன்னதானம்
வேத பாடசாலை அமைத்தல்/ பராமரித்தல்
மந்த்ர, யந்த்ர மற்றும் தந்த்ர சாஸ்த்ரங்களை பரவலாக்கல்
தேவைப் படும் ஏழை எளியோர்க்கு கல்வி பயில உதவி செய்தல் மற்றும் உரிய மருத்துவ வசதி செய்து கொடுத்தல்
கோசாலை அமைத்தல்/ பராமரித்தல்
முதியோர் மற்றும் அனாதை இல்லங்கள் அமைத்தல்/ பராமரித்தல்

ஆலய அமைவிடம்
திருவள்ளூர் நகரமானது சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மிகவும் புகழ் பெற்ற வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் இங்கு அமைந்துள்ளது.
சென்னை சென்ட்ரல் இரயில் நிறுத்தத்திலிருந்து திருவள்ளூர் நகரை அடைவதற்கு புறநகர் மின்சார ரயில் சேவை உள்ளது.
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை பன்னாட்டு விமான நிலையமாகும்.
ஆயில் மில் நிறுத்தத்திலிருந்து பக்தர்கள் ஆசிரமத்தை எளிதாக அடைவதற்கு ஆங்காங்கு அடையாள பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆலய முகவரி
10, தேவி மீனாட்சி நகர், இராஜாஜிபுரம் பகுதி – III, பெரிய குப்பம், திருவள்ளூர் – 602 001. தமிழ் நாடு
தொலைபேசி : +9144-27600641.

—————-

பஞ்சமுக ஹனுமான் மந்திரம்:

ஓம் இராம தூதாய ஆஞ்சனேயாய
வாயு புத்ராய மகா பலாய
சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய
மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய
கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய
சப்த சமுத்ர நிராலங்கிதாய,
பிங்கள நயனாய அமித விக்ரமாய
சூர்யபிம்ப பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய
சஞ்சீவினி சமாநயன
சமார்த்தாய அங்கதலட்சுமண
கபி சைன்ய ப்ராண நிர்வாககாய
தசகண்ட வித்வம்ஸனாய
இராமேஷ்டாய பல்குணசகாய
சீதா சகித இராமச்சந்திர
ப்ராசதகாயட் ப்ரயோகாங்க
பஞ்சமுக ஹனுமதே நம!

————-

பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம்!
1.கிழக்கு முகம்-ஹனுமார்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே
ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.

2.தெற்கு முகம்-நரஸிம்மர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷ?ண முகே
கரால வதனாய நிருஸிம்ஹாய
ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.

3.மேற்கு முகம்-கருடர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம
முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா

4.வடக்கு முகம்- வராஹர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே
ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.

5.மேல்முகம்-ஹயக்ரீவர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே
ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.

———-

ஸர்வ கல்யாண தாதாரம்
ஸர்வ வாபத்கந வாரகம்
அபார கருணா மூர்த்திம்
ஆஞ்ச நேயம் நமாம் யஹம்

ஸ்ரீராம தூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமத் பவ
ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத
வாயு புத்திர நமோஸ்துதே

புத்திர் பலம் யசோதை ரியம்
நிர்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம்ச
ஹனுமத் ஸ்மரணாத்பவேத்

ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்
‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்’

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லக்ஷ்மண பரத சத்ருக்ந ஆழ்வார்கள் ஸமேத சீதாப்பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -4–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

எம்பெருமானை ஒரு கேள்வி கேட்கிறே னென்கிறார் சமத்காரமாக.
மஹா வாரஹ மூர்த்தியாகத் திருவவதரித்துப்
பூமியை எயிற்றிற் கொணர்ந்த எம்பெருமான் கனவிலெழுந்தருளிக் காட்சி தந்தவாறே
அப்பெருமானை மன மொழி மெய்களால் அன்போடு பிடித்து விழுங்கி விட்டேன்;
விஷயாந்தரங்களை யநுபவித்து ரஸித்துப் போந்த எனக்கு இவ் விஷயம் பரமரஸ்யமாயிருந்தது;
இப்படி இருந்ததற்குக் காரணமருளிச் செய்ய வேணுமென்று கேட்கிறேனென்கிறார்.

கேட்க யானுற்ற துண்டு கேழலா யுலகங்க் கொண்ட,
பூக்கெழு வண்ண நாரைப் போதரக் கனவில் கண்டு,
வாக்கினால் கருமந் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால்,
வேட்கைமீ தூர வாங்கி விழுங்கினேற் கினிய லாறே!-4-

பதவுரை

யான் கேட்க உற்றது உண்டு–அடியேன் (ஒரு விஷயம்) கேட்க வேண்டியதுண்டு; (மறு மாற்ற மருளிச் செய்ய வேணும்)
கேழல் ஆய்–வராஹரூபியாகி
உலகம் கொண்ட–பூமியைக் கோட்டில் எடுத்துக் கொண்டேறின
பூ கெழு வண்ணனாரை–பூப் போன்ற மெல்லி வடிவுடையரான பெருமாளை
கனவில் போதர கண்டு –கனவில் எழுந்தருளக் கண்டு
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால்–மன மொழி மெய்களாகிற மூன்று கரணங்களாலும்
சிரத்தை தன்னால்–ச்ரத்தையோடு
வேட்கை மீதுர–ஆசை மிக
வாங்கி விழுங்கினேற்கு–பிடித்து அநுபவித்த வெனக்கு
இனிய ஆறே–போக்யமாயிருக்கிறவிதம் என்னே!

கேட்க யானுற்றதுண்டு= நம்மாழ்வார் தம்முடைய திவ்ய ப்ரபந்தங்களிலே எம்பெருமானை நோக்கிச் சில கேள்விகள் கேட்டிருக்கிறார்;

பெரிய திருவந்தாதியில் ”அருகுஞ்சுவடுந் தெரிவுணரோம், அன்பே பெருகும் மிக இதுவென் பேசீர்” என்றும்,

”புவியுமிருவிசும்பும் நின்ன கத்த, நீயென் செவியின்வழி புகுந்தென்னுள்ளாய்,
அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை யென்பதை யாரறிவார், ஊன்பருகுநேமியா யுள்ளு“ என்றும்,

திருவாய்மொழியில். ”இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென்னுள் வைத்தாய்,
அன்றென்னைப் புரம்போகப் புணர்த்ததென் செய்வான், குன்றென்னத் திகழ்மாடங்கள் சூழ் திருப்பேரான்,
ஒன்றெனக்கருள் செய்ய உணர்த்தலுற்றேனே” என்றும்
இங்ஙனே சில கேள்விகள் கேட்டார்;

அவற்றுக்கு எம்பெருமான் ஒரு மறுமாற்றமும் அருளிச்செய்திலன்; அப்படிப்பட்டவன்
இவ்வாழ்வாருடைய கேள்விக்கு மாத்திரம் மறுமொழி கூறப்புகுகிறானோ?
மாட்டானென்றோ இவர் அறிந்து வைத்தும், நசையாலே கேட்கிறாராயிற்று.

‘உன்னையநுபவித்த எனக்கு நீ பரம போக்யனாயிருக்கின்றாயே, இதற்கு என்ன காரணம் சொல்லு என்று கேட்கிற
இவரது கேள்விக்கு ஸர்வஜ்ஞனான எம்பெருமான்றானும் என்ன மறுமாற்றம் அருளிச் செய்யக் கூடும்?
இவர் கேட்கிற இவரது கேள்விக்குத் தான் அர்த்தமுண்டோ?

”அண்ணிக்கு மமுதூறு மென்னாவுக்கே” என்று மதுரகவியாழ்வார் தம்முடைய ஆனந்தத்தை வெளியிடடுக் கொண்டது போல
இவர் தாமும் கேள்வியென்னும் வியாஜத்தினால் தமது பரமாநந்தத்தையே பிரகாசிப்பித்துக் கொள்ளுகிறாரத்தனை என்று உணரக் கடவது.

‘சர்க்கரையை நாக்கில் போட்டவுடனே தித்திக்கின்றதே, அதற்கு என்ன காரணம்? என்று
ஒருவர் கேட்டால் அக் கேள்விக்குக் கருத்து யாது?

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -3–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

தன்னை விரும்பாமால் பிரயோஜநாந்தரத்தையே விரும்பி அகன்று போக நினைப்பார்க்கும்
திருமேனி நோவக் காரியஞ் செய்தருள்பவனாயிரா நி்ன்றான் எம்பெருமான்;
விபவாவதாரங்களிலே இழந்தார்க்கும் உதவுவதற்காகத் திருமாலிருஞ்சோலை மலை முதலிய
திருப்பதிகளிலே கோயில் கொண்டிரா நின்றான்;
அன்னவனை வணங்கி யுய்ந்தேனென்கிறார்.

பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து, வானோர்க்
காயிருந் தமுதங்க் கொண்ட அப்பனை எம்பி ரானை,
வேயிருஞ்சோலை சூழ்ந்து விரிகதி ரிரிய நின்ற,
மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கி னேனே.–3-

பதவுரை

பாய் இரு பரவை தன்னுள்–பரந்து ஆழ்ந்த திருப்பாற்கடலிலே
பரு வரை–பெரியதான (மந்தர) மலையை
திரித்து–சுழலச்செய்து (கடல் கடைந்த)
வானோர்க்கு ஆய் இருந்து–தேவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து
அமுதம் கொண்ட–அமுதமெடுத்துக் கொடுத்தருளின
அப்பனை–உபகாரகனும்
எம் பிரானை-எமக்கு ஸ்வாமியானவனும்
இரு–மிகப்பெரிய
வேய் சோலை சூழ்ந்து–மூங்கிற் சோலைகளாலே சூழப்பட்டு (அதனால்)
விரி கதிர் இரிய நின்ற–ஸூர்யன் கண்ணுக்குத் தெரியாதபடி யிருக்கப்பெற்ற
மாயிருஞ் சோலை–திருமாலிருஞ்சோலை மலையிலே
மேய–நித்ய வாஸம் செய்தருள்கிற
மைந்தனை–மிடுக்கனுமான ஸர்வேச்ரனை
வணங்கினேன்-வணங்கப்பெற்றேன்.

கடல் கடையும் போது மந்தரமலையை மத்தாக நாட்டிக் கடைந்தனனாதலால் ‘பருவரைதிரித்து‘ எனப்பட்டது.
எம்பெருமான் அவாப்த ஸமஸ்த காமனாகையாலே அவன் செய்தருளுங் காரியமெல்லாம் பிறர்க்காகவே யிருக்கும்;
நிலா தென்றல் சந்தனம் முதலிய பொருள்கள் பிறர்க்கு உபயோகப்படுவதற்கென்றே யிருப்பது போலவே
எம்பிரானுமிருப்பனென்பது விளங்க வானோர்க்காயிருந்து என்றது.

”அமுதம் தந்த” என்ன வேண்டியிருக்க கொண்டே என்றது – எம்பெருமானது நினைவாலென்க.
கடல் கடைந்து அமுதமெடுத்தது அவர்களுக்காக வல்லாமல் தன் பேறாக நினைத்திருந்ததனால்.

விரிகதிர் இரியநின்ற = ஸூர்ய கிரணங்கள் உள்ளே புக வொண்ணாமல் நிழல் செய்திருக்கையைச் சொன்னபடி.

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -2–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 22, 2021

தம்முடைய திருவுள்ளத்தை நோக்கிக் கூறுகின்றார்;
நெஞ்சே!
எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை அநுஸந்திக்கப் பார் என்றார்;
அப்படியே அது அநுஸந்திக்கக் கண்டு ஆச்சரியப்பட்டு
‘நெஞ்சே! நீ அநுஸந்திக்கும் விதம் என்னே!‘ என்று ஈடுபடுகிறார்.

காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதி ளிலங்கை செற்ற
ஏற்றினை, இமயம் மேய எழில்மணித் திரளை, இன்ப
ஆற்றினை அமுதந் தன்னை அவுணனா ருயிரை யுண்ட
கூற்றினை, குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே.–2-

பதவுரை

காற்றினை புனலை தீயை–காற்று நீர் தீ முதலான பஞ்ச பூதமயமான ஜகத்தை சரீரமாக வுடையவனும்
கடி மதிள் இலங்கை செற்ற ஏற்றினை–அரணாகப் போரும்படியான மதிளை யுடைத்தான இலங்காபுரியை முடித்த காளை போன்றவனும்
இமயம் மேய–இமயமலையில் (திருப்பிரிதியிலே) பொருந்தி வாழ்கிறவனும்
எழில் மணி திரளை–அழகிய மணித்திரள் போன்றவனும்
இன்பம் ஆற்றினை–(வடிவெடுத்த) ஆனந்த வெள்ளமாயிருப்பவனும்
அமுதம் தன்னை–போனவுயிரை மீட்கவல்ல அமுதம் போன்றவனும்
அவுணன்–(இரணியனென்னும்) அசுரனுடைய
ஆர் உயிரை–அருமையான உயிரை
உண்ட–கவர்ந்த
கூற்றினை–ம்ருத்யுவமான எம்பெருமானை
உள்ளம்-நெஞ்சமே!
குணம் கொண்டு–திருக்குணங்களை முன்னிட்டு
கூறு–அநுஸந்திக்கப்பார்;
(என்று தாம் சொன்னதும் அப்படியே அநுஸந்தித்த நெஞ்சை நோக்கி)
நீ கூறும் ஆறே–நீ அநுஸந்தித்த விதம் என்னே! (என்று ஈடுபடுகிறடி.)

காற்றினைப் புனலைத் தீயை=
பஞ்ச பூதங்களில் மூன்று பூதங்களைச் சொன்னது மற்ற பூமியும் ஆகாசமுமாகிற இரண்டு பூதங்களுக்கும் உபலக்ஷணமென்க.
பஞ்ச பூதங்களின் காரியமாகிய உலகங்களைச் சொல்லிற்றாய், உலகங்களைச் சரீரமாகக் கொண்டுள்ளவ னென்ற தாகிறது.
சரீரத்தைச் சொல்லும்படியான சொற்கள் சரீரி பர்யந்தமாகச் சொல்லி நிற்குமென்பது வேதாந்திகளின் கொள்கை யென்றுணர்க.

கடிமதிளிலங்கை செற்ற ஏற்றினை=
பல மதிள்களை அரணாகக் கொண்டிருந்த இலங்கா புரியைச் சுடுகாடாக்கின. மஹாவீரன் என்றவாறு.-
இந்த ப்ராக்ருதமான சரீரம் இலங்காபுரியாகக் கொள்ளத் தக்கது.
அது கடலால் சூழப் பட்டிருக்கும்; இது ஸம்ஸாரமாகிற பெருங்கடலினால் சூழப் பட்டிருக்கும்.
அது பத்துத் தலைகளை யுடையனான ஒரு பிரபுவினால் ஆக்ரமிக்கப் பட்டிருந்தது;
இது பத்து இந்திரியங்களாகிற தலைகளைக் கொண்ட மநஸ்ஸென்கிற ஒரு பிரபுவினால் ஆக்ரமிக்கப் பட்டிருக்கிறது;
அதில் சீதா பிராட்டி தீன தசையை யடைந்திருந்தாள், இதில் ஜீவாத்மா சிறை வைக்கப்பட்டு வருந்திக் கிடக்கிறான்.
அங்குச் சிறிய திருவடி வந்து ஸ்ரீ ராம குணகீர்த்தநம் பண்ணி க்ரமேண சிறை விடுத்தது போல,
இங்கும் அத் திருவடியைப் போல் மஹா பண்டிதர்களும் விரக்தர்களுமான ஆசாரியர்கள் பகவத் குணங்களை உபதேசித்துச் சிறை விடுவிக்க முயல்வார்கள்.
முடிவில் எம்பெருமானால் அவ்விலங்கை அழிந்தது போல இந்த ப்ராக்ருத சரீரமும் எம்பெருமானருளால் தொலையும் என்றுணர்க.

இமயமேய எழில்மணித் திரளை=
இமயம் என்று பொன்னுக்கப் பெயருண்டாதலால் அப்பொருளும் இங்குக் கொள்ளக்கூடியதே;
அப்போது மேற்பதத்தை ‘ஏயு‘ என்று பிரித்து பொன் போலப் புகர் கொண்டவனென்று உரைத்துக் கொள்க.
அன்றியே,
“எண் கையான் இமயத்துள்ளான்“ என்ற விடத்துப் போல,
இமயமலையின் கணுள்ள திருப் பிரிதியில் நித்ய வாஸம் பண்ணுமவனென்னவுமாம்.
அழகிய நீல ரத்னங்களைக் குவித்து வைத்தாற்போல் இனியனாயிருப்பவனென்கிறது எழில் மணித்திரளை யென்றதனால்.

இன்பவாற்றினை =
ஆனந்த வெள்ளமே வடிவெடுத்திருப்பவன். விடாய்த்தவர்களின் விடாயை யெல்லாம் தீர்க்கும் ஆறு;
எம்பெருமான் தாப த்ரயத்தையும் தணிப்பன். குளம் முதலானவை இருந்தவிடத்தே யிருந்து உதவும்;
ஆறு அங்ஙனல்லாமல் வேண்டினவிடத்தே திறந்து பாய்ச்சி விளைவித்துக் கொள்ளலாம் படியிருக்கும்;
எம்பெருமானும் அப்படியே. வேண்டுவோர் வேண்டுமிடங்களிலே யெழுந்தருளிக் காதல் கடல்புரைய விளைவிப்பன்.

அமுதந்தன்னை = அன்பர்கட்கு ஆராவமுதமாயிருப்பவன்.
கடலில் தோன்றிய உப்புச் சாறாகிற அமுதம் வாய் கொண்டு பருகலாயிருக்கும்;
இவ் வாராவமுதம் கண்கொண்டு பருகத்தக்கது.
ஏததேவாம்ருதம் த்ருஷ்டவாத்ருப்பந்தி“ என்றது காண்க.

அவுணானாயிரையுண்ட கூற்றினை = கீழ்ச் சொன்னபடியே அமுதமாயிருக்குந் தன்மை அன்பர்களின் திறத்தேயத்தனை;
பிரதிகூலர் திறத்திலோ வென்னில் ம்ருத்யுவாயிருப்பன்;
ப்ரஹலாதாழ்வானுக்குப் பரம போக்யமான அமுதமாயிருந்தவன் தானே இரணியனுக்குக் கூற்றமாயிருந்தானிறே.
அவுணனார் என்று அசுரவர்க்கத்தை யெல்லாம் சொல்லிற்றாகக்கொண்டு உரைத்தலுமாம்.
கூற்று-உடலையும் வேறு கூறார்க்கு யவன் என்று யமனுக்குக் காரணப் பெயர்.

உள்ளம் – அண்மைவிளி; உள்ளமே! என்றபடி.
“உள்ளம்! குணங்கொண்டு நீ கூறு“ என்று அருளிச் செய்தவுடனே
“நீ கூறுமாறு!“ என்று ஈடுபட்டு அருளிச் செய்திருத்தலால், இடையில் திருவுள்ளத்தில் ஒரு விலக்ஷணமான
அநுஸந்தானம் சென்றமை தோன்றும்.

“உள்ளம்! குணங்கொண்டு நீ கூறுமாறே கூறு“ என்று ஒரு வாக்கியமாகவே அந்வயித்து,
‘நெஞ்சமே! எம்பெருமானுடைய திருக்குணங்களை உனக்கு அநுஸந்திக்கத் தெரிந்த வகையிலே அநுஸந்தானம் செய்‘
என்று உரைக்கலாமாயினும் அது அத்துணைச் சிறவாது.

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

விரதங்கள் மூன்று-ஸ்ரீ மதுரகவி தாசன்–ஸ்ரீ வெங்கடேச ஸ்வாமிகள்

February 21, 2021

விரதங்கள் மூன்று
விரதம் என்பது ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு ஒழுக்கத்தைத் தவறாமல் கடைப்பிடிக்கும் மார்க்கமாகும்.

உலகில் எத்தனையோ விரதங்கள் உள்ளன. சிறுவர் முதல் பெரியவருக்கும், ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும்,
பல பருவங்களுக்குத் தகுந்தவையாகவும், இப்படிப் பல வகைகளான விரதங்கள் இருக்கின்றன.
சில சமயங்களில் விலங்குகள் கூட விரதங்கள் அநுஷ்டிக்கக் காண்கிறோம்.

ஆழ்வார்களும் ஆசார்யர்களும் தாங்களாகவும் அநுகாரத்திலேயும் விரதங்களை மேற்கொண்டிருக்கிறார்கள்.
ஆண்டாள் பாவை நோன்பு மேற்கொண்டது அனைவரும் அறிந்ததே.
நாச்சியாரும் விபவத்தில் நோன்பு மேற்கொண்டாள் என்பதைப் புராண இதிஹாஸங்கள் மூலமாக அறிகிறோம்.

இப்படி எத்தனையோ விரதங்கள் இருக்க, இதென்ன மூன்று விரதங்கள்?

இவை மூன்றும், அநுஷ்டிப்பவர்களைக் கொண்டு காணும் விஷயமாகும்.

1-எம்பெருமானுடைய விரதம்
அவாப்த ஸமஸ்தகாமனான எம்பெருமானும் ஒரு விரதம் வைத்துக் கொண்டிருக்கிறான்.

அதாவது தன்னடியார்களை எப்பாடுபட்டேனும் ரக்ஷித்தே தீருவேன் என்பதாம்.

“விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றார் ஸ்ரீ பாஷ்யகாரரும்.
வணக்குடைத் தவ நெறி பூண்ட எல்லாவிதமான கடல் வண்ணன் பூதங்களையும் ரக்ஷிப்பதான
ஸர்வ ரகஷகத்வத்தை ஒரு வ்ரதமாக தீக்ஷை எடுத்துக் கொண்டிருக்கிறான் எம்பெருமான்.

சக்ரவர்த்தித் திருமகனும்
“ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம” என்றானிறே.
தன்னிடம் ஒரு முறை சரண் புகுந்த ஒருவனை எல்லாவித பயத்திலிருந்தும் காப்பதே
தன்னுடைய விரதம் என்றுரைத்தான். இது ஸ்ரீராமாவதாரத்தில் அவனிட்ட சரம ஶ்லோகமாகும்.

ஸம்ஸாரக் கிழங்கெடுத்தல்லது பேரேன் என்றே கிடக்கிறார் பெரிய பெருமாளும்.

அதற்காகவிறே அவன் செய்யும் க்ருஷி அனைத்தும். தன் லாபத்திற்காக சேதனனை அடைய
அவன் செய்யும் முயற்சியினால் அவனை பத்தி உழவன் என்றே அழைக்கிறார் திருமழிசையாழ்வார்.
நம்மாழ்வாரும் அவனை ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செயுள் பேரமர் காதல் கடல் புரைய விளைவித்தவன் என்றார்.

அந்த விரதத்தை அவன் நினைவாக்கி, பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு என்றார் பிள்ளை லோகாசார்யர்.

என் ஊரைச் சொன்னாய், என் பேரைச் சொன்னாய், என்று ஏதேனும் ஒரு காரணத்தைப் பற்றி,
ஒன்று பத்தாக்கி, சேதனனுக்கு நல்வீடு அளிக்கவே அவன் முயற்சிப்பது.

உறங்குவான் போல் யோகு செய்து, பக்தாநாம் என்று சேதனனை எப்படி ரக்ஷிப்போம் என்ற
ஜகத் ரக்ஷண சிந்தனையே அவன் விரதமாம்.

———-

2-சேதனன் விரதம்
இதற்கு எதிர்தட்டாக ஒரு விரதம் கொண்டுள்ளான் சேதனனானவன்.

இவன் விரதமாவது இழந்தோம் என்ற இழவுமின்றி அவனிடம் இருந்து பிரிந்தே கிடப்பேன் என்பதாம்.

அதற்காக அவன் எதையும் பற்றுவான் என்பதை ஆழ்வாரும்
யாதானும் பற்றி நீங்கும் என்றும் அதுவே இவனுக்கு விரதம் என்றும் தம்முடைய திருவிருத்தத்தில் காட்டுகிறார்.

இப்படி எம்பெருமானுக்கும் சேதனனுக்கும் நடக்கும் நித்ய விரத போராட்டத்தை,
பராசர பட்டர் நம்பெருமாளின் திருமஞ்சன கோலத்தில் கண்டு அதை ஒரு கட்டியத்தில் வர்ணிக்கிறார்.

த்வம் மே அஹம் மே குதஸ்தத் ததபி குத இதம் வேதமூல ப்ரமாணாத்
யேதச்ச அநாதிஸித்தாத் அநுபவ விபவாத் தர்ஹி ஸாக்ரோஸ யேவ |
க்வாக்ரோஸ: கஸ்ய கீதாதீஷு மம விதித: கோ-அத்ர ஸாக்ஷீ ஸுதீ ஸ்யாத்
ஹந்த த்வத் பக்ஷபாதீ ஸ இதி ந்ருகலஹே ம்ருக்யமத்யஸ்தவத் த்வம் ||

சேதனனைத் தன்னுடையவன் என்று எம்பெருமான் சொல்ல, அதை மறுத்து இவன் தனக்கே தான் உரியவன் என்கிறான்.
தான் ஸ்வாமி என்பதற்குப் ப்ரமாணம் வேதம் என்று அவன் சொல்ல,
தன் ஸ்வதந்த்ரத்துக்குத் தன் அநாதியான அநுபவம் ப்ரமாணம் என்கிறான் இவன்.
தான் இவ்வாறு கீதையில் சொன்னதை பெரியோர் ஆதரிப்பர் என்று அவன் சொல்ல,
அவர்கள் அவனிடம் பக்ஷபாதம் கொண்டவர் என மறுக்கிறான் இவன்.
முடிவில் நம்பெருமாள் ஈரவாடையுடனும் துளஸீ மாலையுடனும் தனக்கும் இவனுக்கும் உள்ள நவவித ஸம்பந்ததை
ஸத்ய ப்ரமாணம் செய்கிறான் என்று ஒரு சுவையான நாடகத்தை அரங்கேற்றுகிறார் பட்டர்.

அப்படி அவன் செய்தாலும், எல்லாவற்றையும் விட்டு தன்னைப் பற்ற வேணும் என்று
அவன் சரம ஶ்லோகத்தில் சொன்னாலும், அவனை மட்டும் விட்டு விட்டு, வேறேதேனும் ஒன்று என்றில்லாமல்,
அவனைத் தவிர்ந்த எல்லாவற்றையும் பற்றுவேன் என்பதே இவன் கொண்டிருக்கும் விரதமாம்.

————

3-பிராட்டி விரதம்
அதையும் மீறி ஒரு வேளை சேதனன் அவனை அணுகினாலும், அவனுக்குச் நிரங்குஶ ஸ்வாதந்த்ர்யம்
என்றொரு குணம் இருப்பதால், எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்று இவன் செய்த
அபராத கோடியைக் கணிசித்து இவனை அங்கீகரியாது,
க்ஷிபாமி என்றும் நக்ஷமாமி என்றும், பத்தும் பத்துமாகக் கணக்கிட்டு ஒழிக்கக் கூடும்.

இப்படி எதிரம்பு கோர்த்து நிற்கிற இவ்விருவரையும் ஒன்று சேர இணைத்து வைப்பேன் என்பதே பிராட்டியின் விரதமாகும்.

ஶ்ராவயதி என்று,
மணல் சோற்றில் கல்லாராய்வார் உண்டோ என்று அவனுக்கும்,
அவன் தண்டிப்பானோ என்று அஞ்ச வேண்டா என்று இவனுக்கும் உபதேசிப்பள்.
மீளாத போது, சேதனனை அருளாலேயும், ஈஶ்வரனை அழகாலேயும் திருத்துவாள் என்கிறார் உலகாரியன்.

அகலகில்லேன் இறையும் என்றிருப்பதே அவள் விரதம்.
எம்பெருமானை விட்டு ஒருகாலும் பிரிய மாட்டேன், அப்படிப் பிரிந்தால் அந்த சமயத்தில் ஏதோவொரு சேதனனை
அவன் அங்கீகரியாமல் போய் விடக் கூடும், அதனால் தன் புருஷகாரத் தன்மைக்கு பங்கம் ஏற்பட்டு விடும் என்று
அவனுடன் நித்யவாசம் செய்வேன் என்று கொண்டு அவன் திருமார்பை விட்டுப் பிரியாமல் இருக்கும்
விரதம் அநுஷ்டிக்கிறாள் பெரிய பிராட்டியார்.

அதனால் ப்ரஹ்ம வாசகமான அகாரத்தையும் விட்டு அவள் பிரிவதில்லை என்கிறார் சேநாபதி ஜீயர்.

சேதனனுக்கு உபதேசித்தும் அருளாலே திருத்தியும், எம்பெருமானுக்கு உபதேசித்தும் அழகாலே திருத்தியும்
தன் விரதத்தைத் தலைக்கட்டுகிறாள் பிராட்டி.
இதனாலேயே இவளை முன்னிட்டே எம்பெருமானைப் பற்றுகின்றனர் ஆழ்வார்களும் ஆசார்யர்களும்.

இப்படி சேதனன் சொல்வதை மாதாவாகக் கேட்டும், எம்பெருமானுக்கு இனியளான மஹிஷியாய் எடுத்துச் சொல்லியும்,
எதிர்தலையிட்டிருக்கும் இருவரையும் இணைப்பதே இவள் கொண்டிருக்கும் விரதமாம்.

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -1–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 21, 2021

எம்பெருமானுடைய பெருமைகளைப் பன்னி யுரைத்து,
என்னெஞ்சிலே வந்து புகுந்த இப்பெருமானை
இனி நான் ஒருநாளும் விடமாட்டுகின்றிலே னென்கிறார்–

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்,
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் ஆண்ட மாளும்,
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி யென் மனத்து வந்த,
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே!–1-

பதவுரை

நிதியினை-(அன்பர்கட்கு) நிதிபோன்றவனும்
பவளம் துணை–பவளம்போல் இனியேனும் தூண் போல் தாரகனும்
நெறிமையால்–ஒரு நெறிப்பட்டுச் சிந்திக்க வல்ல வர்களுக்குப் பரம கதியாயிருப்பவனும்
முன்–முன்பு
கஞ்சன் மாளகண்டு–கம்ஸன் முடிந்து போம்படி செய்து
அண்டம்–உலகங்களை
ஆளும்–ரக்ஷித்தருளினவனும்
மதியினை–(அடியவர்களை எப்போதும்) நினைத்துக் கொண்டே யிருப்பவனும்
மாலை–அடியார் திறத்தில் வியாமோஹமே வடிவெடுத்தவனும்
வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினை–நான் வாழ்த்தி வணங்கும் படியாக என்னெஞ்சிலே வந்து நின்ற பாக்ய ஸ்வரூபியுமான எம்பெருமானை
கண்டு கொண்ட–ஸேவிக்கப் பெற்ற
தொண்டனேன்–அடியேன்
விடுகிலேன்–(இனி ஒருநாளும்) விடமாட்டேன்.

நிதியினை =
புதைந்து வைக்கப்படும் பொருள் நிதியெனப்படும்.-
யோ வேத நிஹிதம் குஹாயாம்–தைத்திரீய உபநிஷத்தினால் எம்பெருமான நிதியாக அறியப்படுவன்;
“வைத்த மா நிதியாம் மதுசூதன்“ என்பர் நம்மாழ்வாரும்.
நிலத்தினுள் புதைந்து வைத்து ஆள வேண்டியதாயிருக்கும் நாட்டிலுள்ள நிதி;
எம்பெருமானுகிற நிதி அங்ஙனல்லாமல் நெஞ்சிலே புதைந்து ஆளத்தக்கதென வாசி காண்க.

நிதியானது தன்னையுடையவர்களை இரவும் பகலுங் கண்ணுறங்கவொட்டாது;
எந்த வேளையில் யார் கொள்ளை கொள்வாரோவென்று துஞ்சாதிருப்பர் நிதியுடையார்;
எம்பெருமானை யுடையவர்களும்படியே,
“கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்குமுண்டோ கண்கள் துஞ்சுதலே” என்கிறபடியே
காண்பதற்கு முன்பும், உறக்கமில்லை; கண்டாலும் கையாலே உறக்கமில்லை.

நிதியானது ஸித்தாஞ்ஜனமணிந்த சில பாக்யசாலிகளுக்கே கிடைக்கும்;
எம்பெருமானும் பக்தி ஸித்தாஞ்ஜனம் பெற்ற ஆழ்வார்கள் போன்ற சில பாக்யவான்களுக்கே-
இங்ஙனே மற்றும் பல உவமைப் பொருத்தங்கள் கண்டுகொள்க.

பவளத் தூணை=
தூணானது பலவற்றையும் தரித்துக் கொண்டிருந்து தன் கீழே ஒதுங்குவார்க்கு நிழல் கொடுக்குமா போலே
எம்பெருமானும் ஸகல லோக யோக ஷேம துரந்தரனாய்த் தன்னடிச் சார்ந்தாரெல்லார்க்கும் தரபுங்களைத்
தணிக்குமவனா யிருத்தலால் தூண் என்றது.
கல்தூண் தூண் என்பதற்காகப் பவளத் தூண் என்றது.

நெறிமையால் நினைய வல்லார் கதியினை =
மற்ற பொருள்களை நினைப்பதற்கும் எம்பெருமானை நினைப்பதற்கும் நெடு வாசி யுண்டு;
“நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு இடிந்துகும்“ என்கிறபடியே எம்பெருமானைச் சிந்தித்த மாத்திரத்திலே
* உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்து உடம்பெலாங் கண்ண நீர் சோர நிற்கை ப்ராப்தமாகையாலே
இவ் வண்ணமாக நினைத்தலே நெறிமையால் நினைத்தலாம்; அப்படி நினைப்பார்க்கு உபாயமாயிருப்பவன் எம்பெருமான் என்க.

கஞ்சன்மாளக் கண்டு முன் அண்டமாளும் =
சாதுசனத்தை நலியுங் கஞ்சன் உயிரோடிருக்குமளவும் எம்பெருமானுடைய ஆட்சி குன்றி நின்றமையால்
அவனை உயிர் மாய்த்துத் தன்னுடைய ஜகத் ரக்ஷகவத்தை நிலை நிறுத்திக் கொண்டானென்கிறது.
“நாட்டை ஈரக் கையாலே தடவிக் கம்ஸனால் பட்ட நோவு தீர ரக்ஷித்து“ என்ற வியாக்கியான வாக்கியம் நோக்கத் தக்கது.

மதியினை=
மதி யென்பது வடசொல்; புத்தியென்று பெயர்.
“எய்ப்பென்னை வந்து நலியும் போது அங்கேதும் நானுன்னை நினைக்க மாட்டேன்,
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தே னரங்கத் தரவணைப் பள்ளியானே!“ என்றும்
“ஆமிடத்தே யுன்னைச் சொல்லி வைத்தேன்“ என்றும் சொல்லுகிறபடியே
நாம் பாங்காயிருக்கும் போது எம்பெருமானைச் சிந்தித்து வைத்தால் பிறகு நாம் சிந்திக்கப் பெறாத குறை தீர
அவன் தானே நம்மைச் சிந்தித்துக் கொண்டிருப்பவன் என்றவாறு.
வராஹ சரம ச்லோகம் இங்கு அநுஸந்திக்கத்தக்கது.
புத்திக்கு வாசகமான மதி யென்னுஞ் சொல் இவ்வளவு அர்த்தத்தைத் தருவது லக்ஷணையால்.
புத்தியின் காரியமாகிய நினைத்தலைத் தானே செய்பவனென்றபடி.

மாலை=
மால் என்னுஞ்சொல்-பெருமையுள்ளவன் கருநிறம் உள்ளவன்,
(அடியாரிடத்தில்) வியாமோஹமுள்ளவன் என்ற பல பொருள்களைக் கொண்டது.
”ஆசா லேஸமுடையார் பக்கல் வ்யாமுக்தனாயிருக்குமவனை” என்பது வியாக்கியான வாக்கியம்.
அடியார்க்கு எத்தனை உபகரணங்கள் செய்திருந்தாலும் ஒன்றும் செய்திலனாகவே தன்னை நினைத்துக் கொண்டு
‘என் செய்வோம், என் செய்வோம்‘ என்றே பாரிப்புக் கொண்டிருக்கை யாய்த்து எம்பெருமானுடைய வியாமோஹத்தின் பரிசு.

வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினை=
‘வணங்கி‘ என்றதை எச்சத் திரிபாகக் கொள்க:
வணங்க என்றபடி; நான் வாழ்த்தி வணங்கும்படியாக என் மனத்தே வந்து சேர்ந்தவிதியை என்றவாறு.
அன்றியே,
“என் மனத்து வந்த விதியினை வாழ்த்தி வணங்கி விடுகிலேன்“ என்று அந்வயிக்கவுமாம்.
விதி யென்னும் வட சொல் பாக்கியத்தைச் சொல்லும்.
தம்முடைய பாக்கியமே எம்பெருமானாக வடிவெடுத்ததென்கிறார்.
ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை இன்று காணப்பெற்ற அடியேன் இனி விடமாட்டேன் என்றார் ஆயிற்று .

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீமத் பகவத் கீதை –ஸ்ரீ பாரதியார் – பதினெட்டாம் அத்தியாயம் மோக்ஷ சந்யாச யோகம்–

February 21, 2021

“சந்நியாச மென்றாலும், தியாக மென்றாலும் ஒன்றே.
ஆனால், காம்ய கர்மத்தை அடியோடு விட்டுவிடுவது நந்நியாசமென்றும்,
நித்திய நைமித்திக கர்மங்களில் பற்றுதலையும் பலனையும் துறப்பது தியாகமென்றும் அறியவேண்டும்.
எல்லாக் கர்மங்களையும் விட்டுவிட வேண்டுமென்று சிலர் கூறுவார்கள். அது கீதையின் கருத்தன்று.
நித்திய நைமித்திக கர்மங்களைச் செய்தே தீரவேண்டும். செய்யாவிடில் பாபம் நேரிடும்.
மனிதன் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் ஈசுவரன் முக்கிய காரணமாவான்.
அப்படியிருக்கத் தானே அவற்றைச் செய்துவிடுவதாக நினைப்பவன் மூடன். ஞானம், கர்மம், உறுதி, இன்பம்
என்றிவை ஒவ்வொன்றும் சாத்விகம், ராஜசம், தாமசம் என்று மூவகைப் பட்டிருக்கும்.
கடவுளைத் தமக்குரிய கர்மங்களால் ஆராதித்தால் சித்தி பெறலாம்.”
இவ்விதம் கண்ணனுடைய உபதேசத்தைக் கேட்டு அர்ஜுனன் மயக்கமற்று நல்லறிவு பெற்றுப்
போர் புரியத் தொடங்கினான் என்று சஞ்ஜயன் திருதராஷ்டிரனுக்குக் கூறினான்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:
1. உயர் புயத்தோய்! கண்ணா! கேசியைக் கொன்றாய், *சந்நியாசத்தின் இயல்பையும்,
தியாகத்தின் இயல்பையும் பிரித்துக் கேட்க விரும்புகிறேன். (சந்நியாசம் = துறவு. தியாகம் = விடுதல்) ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

2. விருப்பத்தால் செய்யப்படும் செய்கைகளைத் துறப்பது சந்நியாசமென்று புலவர் தெரிந்துளர்.
எல்லாவிதச் செயல்களின் பலன்களையுந் துறந்து விடுதல் தியாகமென்று ஞானிகள் கூறுவர்.

3. சில அறிஞர் செய்கையைக் குற்றம் போல கருதி விட்டுவிட வேண்டும் என்கிறார்கள்,
வேறு சிலர் ‘வேள்வி’ தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது, என்கிறார்கள்.

4. பாரதரில் சிறந்தவனே, புருஷப் புலியே! தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன்; கேள்.
தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டுள்ளது.

5. வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது. அவற்றைச் செய்யவே வேண்டும்.
வேள்வியும், தானமும், தவமும் அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.

6. ஆனால், பார்த்தா! இச்செயல்களைக்கூட ஒட்டின்றியும், பயன்களை வேண்டாமலும் செய்ய வேண்டும்
என்பது என் உத்தமமான நிச்சயக் கொள்கை.

7. *நியமத்தின்படியுள்ள செய்கையைத் துறத்தல் தகாது; மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல்
தமோ குணத்தால் நேர்வதென்பர். (*நியமம் = ஒழுங்கு, சட்டம், சாஸ்திர விதி.)

8. உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால் ஒரு செய்கையைத் துன்பமாகக் கருதி, அதனை விட்டுவிடுவோன்
புரியும் தியாகம் ரஜோ குணத்தின்பாற் பட்டது. அதனால் அவன் தியாகப் பயனை அடையமாட்டான்.

9. நியமத்துக் கிணங்கிய செய்கையை, ‘இது செய்தற்குரியது’ என்னு மெண்ணத்தால் செய்து,
அதில் *ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் ஒருவன் விட்டுவிடுவானாயின் அவனுடைய தியாகமே சாத்விகம் எனப்படும். (*ஒட்டுதல் = விருப்பம்)

10. சத்வ குணத்திலிசைந்து, மேதாவியாய் ஐயங்களையறுத்த தியாகி இன்பமுற்ற செய்கையைப் பகைப்பதில்லை;
இன்பமுடைய செய்கையில் *நசையுறுவதில்லை. (*நசை = பற்றுதல்.)

11. (மேலும்) உடம்பெடுத்தவனால் செய்கைகளை முழுதுமே விட்டுவிட முடியாது.
எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ, அவனே தியாகி யெனப்படுவான்.

12. வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என மூன்று வகைப்பட்ட
கர்மப் பயன்களைத் தியாகிகளல்லாதோர் இறந்த பின்னர் எய்துகின்றனர். சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.

13. எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்குரிய காரணங்கள் சாங்கிய சாஸ்திரத்தில் ஐந்தாகக் கூறப்பட்டன.
அவற்றை என்னிடம் கேட்டுணர், பெருந்தோளாய்!

14. அவை* இடம், கர்த்தா, பலவிதக் கரணங்கள், வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள், இயற்கை என ஐந்து.
(*கர்த்தா = தொழில் செய்வோன்; கரணம் = கருவி. உட்கரணங்களாவன: மனம், புத்தி, சித்தம், அகங்காரம்;
புறக்கரணங்கள் புலன்களும் பூதக் கருவிகளுமாம், “தைவம்” இயற்கை.)

15. மனிதன் உடம்பாலும், வாக்காலும், மனத்தாலும் எந்தச் செயலைத் தொடங்கினாலும், அது நியாயமாயினும்,
விபரீதமாயினும், இவ்வைந்துமே அச்செயலின் ஏதுக்களாம்.

16. இங்ஙனமிருக்கையில் தனிப் பொருளாகிய ஆத்மாவைத் தொழில் செய்வோனாக எவன் புத்திக் குறைவால் காணுகிறானோ,
அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.

17. ‘நான்’ எனுங் கொள்கை தீர்ந்தான், பற்றுதல்கள் அற்ற மதியுடையான்.
அவன் இவ்வுலகத்தாரை யெல்லாங் கொன்ற போதிலும் கொலையாளியாகான், கட்டுப்பட மாட்டான்.

18. அறிவு, அறியப்படு பொருள், அறிவோன் — என இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன.
கருவி, செய்கை, கர்த்தா எனக் கர்மத்தின் சமைப்பு மூன்று பகுதிப் பட்டது.

19. குணங்களை யெண்ணுமிடத்தே, ஞானம், கர்மம், கர்த்தா, இவை குணபேதங்களால் இம்மூன்று வகைப்படும்.
அவற்றை உள்ளபடி கேள்.

20. பிரிவுபட்டு நிற்கும் எல்லா உயிர்களிலும் பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பைக் காணும் ஞானம் சாத்வீகமென்றறி.

21. உயிர்களனைத்திலும் வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள் இருப்பதாகப் பிரித்துக் காணும் ஞானம் ராஜச மென்றுணர்.

22. காரணங் கருதாமல், யாதேனும் ஒன்ற்றைக் காரியத்தை அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும்,
உண்மையிலறியாததும், அற்பத் தன்மையுடையது ஆகிய ஞானம் தாமசமென்று கூறப்படும்.

23. பயன்களை வேண்டாதா நொருவன் பற்றுதலின்றி, விருப்பு வெறுப்பின்றிச் செய்யும் விதி தழுவிய செய்கை சாத்விக மெனப்படும்.

24. விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் செய்யப்படும் மிகுந்த ஆயாசத்துக் கிடமான செய்கை ராஜச மெனப்படும்.

25. செய்கையின் பின் விளைவையும், அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும் துன்பத்தையும் செய்வானது
திறமையையும் கருதாமல், அறிவின்மையால் தொடங்கப்படும் கர்மம் தாமசமெனப்படும்.

26. நசைகளற்றான், நானென்ப தற்றான் உறுதியுங் களிதரும் ஊக்கமு முடையான், வெற்றி தோல்வியில் வேறுபாடற்றான் –
இங்ஙன மாகித் தொழில்க ளியற்றுவோன் ஒளியியல் யுடையானென்ப.

27. வேட்கையுடையோன், செய்கைப் பயன்களை விரும்புவோன், லோபி, இடர் செய்வோன், தூமையற்றோன்,
களிக்குந் துயிலுக்கும் வசபட்டோன் இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்.

28. யோக நிலை பெறாதோன், அநாகரிகன், முரடன், வ்ஞ்சகன், பொறாமை யுடையோன், சோம்பேறி, ஏக்கம் பிடித்தவன்,
காலத்தை நீடித்துக் கொண்டே போவோன் — இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையர் எனப்படுவான்.

29. குண வகையால் மூன்று விதமாகிய புத்தியின் வேற்றுமைகளையும், மிச்சமின்றிப் பகுத்துரைக்கிறேன் தனஞ்ஜயா! கேள்.

30. தொழிலெது, ஒழிவு யாது, செய்யத் தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது, பந்தமெது, விடுதலையெது —
என்பவற்றைப் பகுத்தறியும் புத்தியே, பார்த்தா! சாதிவிக புத்தியாம்.

31. தர்மத்தையும் அதர்மத்தையும் காரியத்தையும் அகாரியத்தையும் உள்ளபடி அறியாத புத்தி ராஜச மெனப்படும், பார்த்தா!

32. பார்த்தா! இருளால் கவரப்பட்டதாய், அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும் எல்லாப் பொருள்களையும்
நேருக்கு மாறாகக் காண்பதும் ஆகிய புத்தி தாமச புத்தியாம்.

33. மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களைப் பிறழ்ச்சியில்லாத யோகத்துடன் தரிக்க வல்லதாகிய மன உறுதியே சாத்விகமாவது, பார்த்தா!

34. பார்த்தா! பற்றுத லுடையோனாய்ப் பயன்களை விரும்புவோன் அறம் பொருளின்பங் களைப் பேணுவதில் செலுத்தும் உறுதி ராஜச உறுதியாம்.

35. பார்த்தா, உறக்கத்தையும், அச்சத்தையும், துயரத்தையும், ஏக்கத்தையும், மதத்தையும் மாற்றத் திறமையில்லாத மூட உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.

36. பாரதக் காளையே! இப்போது மூன்று விதமாகிய இன்பங்களைச் சொல்லுகிறேன், கேள். எதனிலே ஒருவன்
பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ, எதனில் துக்க நாச மெய்துவானோ,

37. எது தொடக்கத்தில் விஷத்தை யொத்ததாய் விளைவில் அமிர்த மொப்ப மாறுவதோ, அந்த இன்பமே சாத்விகமாகும்;
அஃது தன் மதியின் விளக்கத்திலே பிறப்பது.

38. விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து விளைவில்
நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜச மெனப்படும்.

39. தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைப்பதாய், உறக்கத்தினின்றும் சோம்பரினின்றும்
தவறுதலினின்றும் பிறக்கும் இன்பம் தாமசமென்று கருதப்படும்.

40. இயற்கையில் தோன்றும் இம் மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலுமில்லை; வானுலத்தில் தேவருள்ளேயுமில்லை.

41. பரந்தபா! பிராம்மணர் க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவரின் இயல்பில்
விளையும் குணங்களின்படி வகுப்புற்றனவாம்;

42. அகக் கரணத்தை யடக்குதல், புறக் கரணத்தை யடக்குதல், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம், கல்வி, ஆத்திகம் —
இவை இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.

43. சூரத் தன்மை, ஒளி, உறுதி, திறமை, போரில் புறங்காட்டாமை, ஈகை; இறைமை —
இவை இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாம்.

44. உழவு, பசுக் காத்தல், வாணிகம் இவை இயற்கையிலே பிறக்கும் வைசிய கர்மங்களாம்.
தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.

45. தனக்கு, தனக்குரிய கர்மத்தில் மகிழ்ச்சியுறும் மனிதன் ஈடேற்றம் பெறுகிறான்.
தனக்குரிய தொழிலில் இன்புறுவோன் எங்ஙனம் சித்தி யடைகிறானென்பதை சொல்லுகிறேன், கேள்.

46. உயிர்களுக்கெல்லாம் பிறப்பிடமாய், இவ்வையகமனைத்திலும் நிறைந்திருக்கும் கடவுளைத் தனக்குரிய
கர்மத்தால் பூஜை செய்யும் மனிதன் ஈடேறுகிறான்.

47. பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தை குணமின்றி செய்தலும் நன்று.
இயற்கையிலேற்பட்ட தொழிலைச் செய்வதனால் ஒருவன் பாவ மடைய மாட்டான்.

48. குந்தி மகனே! இயல்பான தொழில் குறையுடையதாயினும் அதைக் கைவிடலாகாது.
தீயைப் புகை சூழ்ந்திருப்பது போல் எல்லாத் தொழில்களையும் குறைகள் சூழ்ந்தே நிற்கின்றன.

49. யாங்கணும் வீழ்விலா மதியுடையோனாய், தன்னை வென்று விருப்பந் தவிர்த்து பின்னர்ச்
செயலிலாப் பெரிதுயர்ந்த வெற்றியைத் துறவினால் எய்துவான்.

50. சித்தி யடைந்தவன் எங்ஙனம் பிரம்மத்தில் கலப்பதாகிய மிகச் சிறந்த ஞான நிலை யெய்துவானென்பதைக் கூறுகிறேன், கேள்.

51. தூய்மை பெற்ற புத்தியுடையவனாய், உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஒலி முதலிய விஷயங்களைத் துறந்து,
விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு,

52. தனி இடங்களை நாடுவோனாய், ஆசைகள் குன்றி வாக்கையும் உடம்பையும் மனத்தையும் வென்று
தியான யோகத்தில் ஈடுபட்டு, எப்போதும் பற்றின்மையை நன்கு பற்றியவனாய்,

53. அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல் — இவற்றைவிட்டு,
*மமகாரம் நீங்கி, சாந்த நிலை கொண்டவன் பிரம்மமாகத் தகுவான். (*மமகாரம் = உடைமையுணர்ச்சி)

54. பிரம்மநிலை பெற்றோன், ஆனந்த முடையோன், துயரற்றோன், விருப்பற்றோன்,
எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன், உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.

55. யான் எவ்வளவுடையோன், யாவன் என என்னையொருவன் உள்ளபடி பக்தியாலே அறிகிறான்.
என்னை உள்ளபடி அறிந்துகொண்ட பின்னர் ‘தத்’ (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.

56. எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன்
எனதருளால் அழிவற்ற நித்திய பதவியை எய்துகிறான்.

57. அறிவினால் செயல்களையெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று,
எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.

58. என்னை சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய்,
அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயெனில் பெரிய நாசத்தை அடைவாய்.

59. நீ அகங்காரதிலகப்பட்டு, “இனிப் போர் புரியேன்” என்ற துணிவு பொய்மைப்பட்டுப் போம். இயற்கை உன்னைப் போரிற் பிணிக்கும்.

60. இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் நீ மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும்,
தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.

61. அர்ஜுனா! எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான்; மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.

62. பாரதா! எல்லா வடிவங்களும் அவனையே சரணெய்து. அவனருளால் பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை எய்துவாய்.

63. இங்ஙனம் ரகசியத்தாலும் ரகசியமாகிய ஞானத்தை உனக்குரைத்தேன்.
இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து எப்படி இஷ்டமோ அப்படிச் செய்.

64. மீண்டுமொருமுறை எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய எனது பரம வசனத்தைக் கேள்.
நீ திடமான நண்பன் ஆதலால் உனக்கு ஹிதத்தைச் சொல்லுகிறேன்.

65. உன் மனத்தை எனக்காக்குக. என் தொண்டனாகுக. என்னை யெய்துவாய். உண்மை இஃதே.
உனக்கிது சபதமுரைக்கிறேன். நீ எனக்கினியை.

66. எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னயே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன், துயரப்படாதே.

67. இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும்,
என்பால் பொறாமை யுடையோனுகும் சொல்லாதே.

68. இந்தப் பரம இரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்வேன். என்னிடத்தே பரம பக்தி செலுத்தி என்னையே எய்துவான்;
ஐயமில்லை.

69. மானுடருக்குள்ளே, அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன் வேறில்லை. உலகத்தில் அவனைக் காட்டிலும்
எனக்கு உகந்தவன் வேறெவனுமாகான்.

70. நம்முடைய இந்தத் தர்மமயமான சம்பாஷணையை எவன் படிப்பானோ, அவன் செய்யும் அந்த ஞான யக்ஞத்தால்
நான் திருப்தி பெறுவேன்; இஃதென் கொள்கை.

71. நம்புதல் கொண்டு, பொறாமை போக்கி, இதனைக் கேட்பது மட்டுமே செய்வானெனினும், அவனும் விடுதலையடைவான்.
அப்பால் புண்ணியச் செயலினர் நண்ணும் நல்லுலகங்க ளெய்துவான்.

72. பார்த்தா! சித்தத்தை ஏகாந்தமாக்கி இதை நீ கேட்டு வந்தனையா? தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம் அழிந்ததா?

அர்ஜுனன் சொல்லுகிறான்:
73. மயக்க மழிந்தது நின்னருளாலே அச்சுதா! நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்;
நீ செய்யச் சொல்வது செய்வேன்.

சஞ்ஜயன் சொல்லுகிறான்:
74. இப்படி நான் வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும் நிகழ்ந்த அற்புதமான — புளகந் தரக்கூடிய —
அந்த சம்பாஷணையைக் கேட்டேன்.

75. யோகக் கடவுளாகிய கண்ணன் இந்தப் பரம ரகசியமான யோகத்தைத் தான் நேராகவே சொல்லும்போது நான் அதை வியாசனருளால் கேட்டேன்.

76. அரசனே! கேசவார்ஜுனரின் வியப்புக்குரிய புண்ய சம்பாஷணையை நினைத்து நினைத்து, நான் மீண்டும் மீண்டும் களிப்பெய்துகிறேன்.

77. அரசனே! ஹரியின் மிகவும் அற்புதமான அந்த ரூபத்தை நினைத்து நினைத்து எனக்குப் பெரிய ஆச்சரிய முண்டாகிறது!
மீண்டும் மீண்டும் களிப்படைகிறேன்.

78. கண்ணன் யோகக் கடவுள், எங்குமுளன், வில்லினையேந்திய விஜயன் தன்னோடும்,
அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் நிலை தவறாத நீதியும் நிற்கும்,
இஃதென் மதம்.

ஸ்ரீமத் பகவத் கீதை நிறைவு பெற்றது.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீமத் பகவத் கீதை –ஸ்ரீ பாரதியார் – பதினேழாம் அத்தியாயம் சிரத்தாத்ர விபாக யோகம்–

February 21, 2021

அவரவர் குணங்களுக் கேற்ப சிரத்தையும் சாத்விகம், ராஜசம், தாமசம் என மூவகைப்படும்.
சாத்விக சிரத்தையுடையோர், சாஸ்திரத்தைத் தழுவித் தேவர்களை வணங்குவர்.
ராஜசச் சிரத்தை யுடையோர் யக்ஷர்களையும் ராக்ஷதர்களையும் வணங்குவர்.
தாமச சிரத்தையுடையோர் பூத பிரேத பிசாசங்களை வணங்குவர்.

அவர்களுக்குக் கிட்டும் பலன்களும் குணங்களுக்குத் தக்கபடியே வேறுபட்டிருக்கும்.
அப்படியிருக்க சாஸ்திரத்தை மீறுவோரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
அவர்கள் நினைத்த பலன் கிட்டாதென்பது மாத்திரமன்று; அவர்களுக்குக் கேடுமுண்டாகும்.
அவரவர் குணங்களுக்கேற்ப உண்ணும் உணவும், செய்யும் தவமும், கொடுக்கும் தானமும் மூவகைப் பட்டிருக்கும்.

ஸ்ரீஅர்ஜுனன் சொல்லுகிறான்:
1. கண்ணா! சாஸ்திர விதியை மீறி, ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்வோருக்கு என்ன நிலை கிடைக்கிறது?
ஒளி நிலையா? கிளர்ச்சி நிலையா? அல்லது இருள் நிலையா? (சத்துவமா, ரஜசா, தமசா?) ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

2. ஜீவர்களிடம் இயற்கையால் நம்பிக்கை மூன்று வகையாகத் தோன்றுகிறது. சாத்வீகம், ராஜசம், தாமசம் என; அதைக் கேள்.

3. பாரத! யாவருக்கும் தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே நம்பிக்கை அமைகிறது.
மனிதன் *சிரத்தை மயமானவன். எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ, அந்தப் பொருளே தான் ஆகிறான். (*நம்பிக்கை)

4. ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர். ரஜோ குணமுடையோர், யக்ஷர்களுக்கும், ராக்ஷதருக்கும்
வேள்வி செய்கிறார்கள். மற்றத் தமோ குணமுடையோர் பிரேத பூத கணங்களுக்கு வேள்வி செய்கிறார்கள்.

5. (சிலர்) சாஸ்திர நியமத்தை மீறி, டம்பமும் அகங்காரமு முடையோராய், விருப்பத்திலும், விழைவிலும்
சார்புற்றவர்களாய் கோரமான தவஞ் செய்கிறார்கள்.

6. இங்ஙனம் அறிவு கெட்டோராய்த் தம் உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும் அகத்திலுள்ள என்னையும் வருத்துகிறார்கள்.
இவர்கள் அசுர நிச்சய முடையோரென்றுணர்.

7. ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும் மூன்றுவகைப் படுகிறது. வேள்வியும், தவமும், தானமும்,
அங்ஙனமே மும்மூன்று வகைப்படுகின்றன. அவற்றின் வேற்றுமையைக் கேள்.

8. உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி இவற்றை மிகுதிப் படுத்துவன, சுவையுடையன, குழம்பாயின,
உறுதியுடையன, உளமுகந்தன — இவ்வுணவு சத்துவ குணமுடையோருக்குப் பிரியமானவை.

9. கசப்பும், புளிப்பும், உப்பும், உறைப்பும் மிகுந்தன, அதிகச் சூடு கொண்டன, உலர்ந்தன, எரிச்சலுடையன —
இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர். இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைப்பன.

10. பழையது, சுவையற்றது, அருகியது, கெட்டுப் போனது, எச்சில், அசுத்தம் —
இத்தகைய உணவு தமோ குணமுடையோருக்குப் பிரியமானது.

11. பயனை விரும்பாதவர்களாய், வேள்வி புரிதல் கடமையென்று மனந்தேறி, விதிகள் சொல்லியபடி
இயற்றுவாரின் வேள்வி சத்துவ குணமுடைத்து.

12. பயனைக் குறித்தெனினும், ஆடம்பரத்துக் கெனினும் செய்யப்படும் வேள்வி ராஜசமென்றுணர், பாரதரிற் சிறந்தாய்!

13. விதி தவறியது, பிறர்க்குணவு தராதது, மந்திரமற்றது, தக்ஷிணையற்றது, நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது —
இத்தகைய வேள்வியைத் தாமசமென்பர்.

14. தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் இவர்களுக்குப் பூஜை செய்தல், தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை —
இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்.

15. சினத்தை விளைக்காததும், உண்மையுடையதும், இனியதும், நலங்கருதியதுமாகிய சொல்லல், கல்விப் பயிற்சி
இவை வாக்குத் தவமெனப்படும்.

16. மன அமைதி, மகிழ்ச்சி, மெளனம், தன்னைக் கட்டுதல், எண்ணத் தூய்மை — இவை மனத் தவமெனப்படும்.

17. பயனை விரும்பாத யோகிகளால் மேற்கூறிய மூன்று வகைகளிலும் உயர்ந்த நம்பிக்கையுடன் செய்யப்படும் தவம் சாத்விக மெனப்படும்.

18. மதிப்பையும், பெருமையையும், பூஜையையும் நாடிச் செய்வதும், ஆடம்பரத்துக்காகச் செய்வதுமாகிய தவம் ரஜோ வெனப்படும்;
அஃது நிலையற்றது; உறுதியற்றது.

19. மூடக் கொள்கையுடன் தன்னைத்தான் துன்பப்படுத்திக் கொண்டு செய்வதும், பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய தவம் தாமச மெனப்படும்.

20. கொடுத்தல் கடமையென்று கருதிக் கைம்மாறு வேண்டாமல், தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும் நோக்கிச்
செய்யப்படும் தானத்தையே சாத்விக மென்பர்.

21. கைம்மாறு வேண்டியும், பயனைக் கருதியும், கிலேசத்துடன் கொடுக்கப்படும் தானத்தை ராஜச மென்பர்.

22. தகாத இடத்தில், தகாத காலத்தில், தகாதார்க்குச் செய்யப்படுவதும், மதிப்பின்றி இகழ்ச்சியுடன் செய்யப்படுவதுமாகிய தானம் தாமச மெனப்படும்.

23. ‘ஓம் தத் ஸத்’ என்ற மும்மைப் பெயர் பிரம்மத்தைக் குறிப்பதென்பர். அதனால், முன்பு பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும் வகுக்கப்பட்டன.

24. ஆதலால், பிரம்மவாதிகள் விதிப்படி புரியும் வேள்வி, தவம், தானம் என்ற கிரியைகள் எப்போதும் ‘ஓம்’ என்று தொடங்கி செய்யப்படுகின்றன.

25. ‘தத்’ என்ற சொல்லை உச்சரித்துப் பயனைக் கருதாமல், பல வகைப்பட்ட வேள்வியும் தவமும் தானமுமாகிய கிரியைகள்
மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன.

26. ‘ஸத்’ என்ற சொல் உண்மையென்ற பொருளிலும், நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது.
பார்த்தா! புகழ்வதற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும் ‘ஸத்’ என்ற சொல் வழங்குகிறது.

27. வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும் ‘ஸத்’ எனப்படுகிறது. பிரம்மத்தின் பொருட்டாக செய்யும் கர்மமும் ‘ஸத்’ என்றே சொல்லப்படும்.

28. அசிரத்தையுடன் செய்யும் வேள்வியும், தானமும், தவமும், கர்மமும் ‘அஸத்’ எனப்படும். பார்த்தா! அவை மறுமையிலும் பயன்படா; இம்மையிலும் பயன்படா.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –