Archive for February, 2020

ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-21-40- -ஸ்ரீ உ வே -PBA -ஸ்வாமிகள்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

February 9, 2020

அரங்கனே தரங்க நீர் கலங்க வன்று குன்று சூழ்
மரங்கள் தேய மா நிலம் குலுங்க மா சுணம் சுலாய்
நெருங்க நீ கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார்
குரங்கை யாள் உகந்த வெந்தை கூறு தேற வேறிதே –21-

பதவுரை

குரங்கை

–

வானரப்படைகளை
ஆள் உகந்த எந்தை !

–

உகந்த ஆட்கொண்ட நாயனே!
அரங்கனே

–

ஸ்ரீஅரங்கநாதனே!
அன்று

–

(துர்வாஸ மஹர்ஷியின் சாபத்தினாலே தேவர்கள் செல்வமிழந்து வருந்தி உன்னைச் சரணம் பற்றி நின்ற) அன்று
தரங்கம் நீர் கலங்க

–

அலைகளையுடைய ஸமுத்ரமானது கலங்கவும்
மா நிலம் குலங்க

–

பெரிய பூமியானது குலுங்கவும்
மாகணம் நெருங்க கலாய்

–

வாஸுகி யென்னும் நாகத்தை அழுந்தச் சுற்றி
நீ கடைந்த

–

(கடலை) நீ கடைந்தருளின காலத்திலே
நின்ற

–

அருகே நின்று கொண்டிருந்த
சூரர்

–

மிக்க பராக்ரமசாலிகளென்று பேர்பெற்ற தேவாஸுர ப்ரப்ருதிகள்.
என் செய்தார்

–

என்ன  காரியம் செய்தார்கள்
இது

–

இவ்விஷயத்தை
வேறு

–

விசேஷித்து
தேற

–

நான் தெரிந்து கொள்ளும்படி
கூறு

–

அருளிச் செய்யவேணும்.

 

அரங்கனே தரங்க நீர் கலங்க வன்று –
அரங்கனே அன்று துர்வாச மஹா ரிஷியின் சாபத்தால் தேவர்கள் செல்வம் இழந்து வருந்தி
உன்னை சரணம் அடைந்த போது-
அலைகள் உடைய சமுத்ரம் கலங்கவும்

குன்று சூழ் மரங்கள் தேய –
மந்திர மலை சூழ் மரங்கள் தேயவும்

மா நிலம் குலுங்க
பெரிய பூமியானது குலுங்கவும்

மா சுணம் சுலாய் நெருங்க-
சர்ப்ப ஜாதி -வாசுகி என்னும் -நாகத்தை அழுத்திச் செற்ற

நீ கடைந்த போது நின்ற சூரர்
கடல் நீ கடைந்து நீ அருளின காலத்திலேயே அருகே நின்ற பராக்கிரம சாலிகள் என்ற பேர் பெற்ற தேவ அசுர பிரக்ருதிகள்

என் செய்தார் இது வேறு தேற கூறு
என்ன செய்தார்கள் என்று இவ் விஷயத்திலே நான் தெரிந்து கொள்ளும் படி விசேஷித்து அருளிச் செய்ய வேணும்
தானே அசகாசனாய்க் கடைந்து -தேவர்களும் அசுரர்களும் கடைந்தார்கள் என்று விஜய பெயர் பெறும் படி கொடுத்து அருளினாய்

குரங்கை யாள் உகந்த வெந்தை
வானர படைகளை வகுத்து -அது கொண்டு நாயகனாய் ராவணனைத் தொலைத்தது எல்லாம் தனது சேஷ்டிதங்கள் என்றாலும்
வானரங்கள் இலங்கையை தவிடு பொடி ஆக்கினார்கள் என்ற பெயர் வாங்கிக் கொடுத்து அருளினாய்-
என்ன ஆஸ்ரித பஷ பாதம் என்கிறார்-

இந்திரன் முதலிய தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மந்தர மலையை மத்தாக  நாட்டி-

வாஸுகி நாகத்தைக் கடை கயிறாகச் சுற்றிக் கடல் கடைந்த போது தேவர்கள் அசுரர்கள் முதலியோர்

தாங்கள் கயிற்றை வலித்துக் கடைவதாகக் கைவைத்து க்ஷண காலத்திற்குள் இளைத்துப்போய் கைவாங்கினவாறே ‘

நீங்கள் வெறுமனே இருங்கள்’ என்று அவர்களைச் சுகமாக உட்காரவைத்து விட்டு

எம்பெருமான் தானே அஸஹாயனாய்க் கடைந்து தலைக் கட்டியிருக்கச் செய்தேயும்

“தேவதைகள் கடல்கடைந்தார்கள்” என்று நாட்டார் தேவதைகளுக்கு விஜயப் புகழ் கூறுமாறு அவர்களை அபிமாநித்ததும், –

அதிமாநுஷக்ருத்யங்களைச் செய்து இராவணனைத் தொலைத்ததெல்லாம் தன்னுடைய திவ்ய

சேஷ்டிதமாயிருக்கச் செய்தேயும். ‘வாநர வீரர்கள் இலங்கையைப் பொடிபடுத்தினார்கள்’ என்று உலகத்தார்

அவர்கள் தலையிலே விஜயப்புகழை ஏறிட்டுகூறுமாறு அவர்களை அபிமாநித்ததும்-

என்ன ஆசரித பக்ஷபாதம்! என்று விஸ்மப்படுகிறார்கள்.

கடல் கடைந்தவிதம் மிகவும் பயங்கரமாயிருந்தது என்கைக்காக,

“தரங்க நீர் கலங்க, குன்றுசூழ் மரங்கள் தேய, மாநிலம் குலுங்கக் கடைந்தபோது” என்கிறார்.

ஸர்ப்பஜாதிக்கு வாசகமாகிய மாசுணம் என்றசொல் இங்கு வாஸுகி யென்று சிறப்புப் பொருளைத் தந்தது.

கலாய் = சுலாவி என்றபடி: சுலாவுதல்- சுற்றுதல்.

இப்படி நீ கடைந்த காலத்திலே, “நாங்கள் பராக்ரமசாலிகள்” என்று செருக்கி மார்புதட்டிக் கிடப்பவர்களான தேவர்கள்

“கடலில் நின்றும் அமுதம் கிளர்ந்து வருவது எப்போதோ!” என்று தாங்கள் உணவு பெறுங்காலத்தை எதிர்பார்த்து

அக்கடலையே நோக்கிக் கொண்டிருந்தது தவிர ஸமுத்ரமதந காரியத்துக்கு உறுப்பாக ஒரு காரியமும் செய்யவில்லை;

செய்ததுண்டாகில் பிரானே! நீயே சொல்லிக்காண்; மந்தரமலைக்கு அதிஷ்டநமா யிருந்தார்களா?

வாஸுகிக்கு நல்லசக்தியுண்டாம்படி வரமளித்தார்களா?

அல்லது கடை கயிற்றைத்தான் சற்றுப்பிடித்து வலித்தார்களா? என்னதான் செய்தார்கள்?

அவர்கள் செய்தது ஒன்றுமில்லை.

(அப்படி யிருக்கச்செய்ததேயும் ‘தேவர்கள் கடல் கடைந்தார்கள்’ என்று நாடெங்கும் புகழும்படி

அவர்களை அபிமாநித்தது என்ன ஆச்ரித பக்ஷபாதம்! என்ற வியப்பு உள்ளுறை.)

—————————————————————————

பண்டும் இன்றும் மேலுமாய் பாலனாகி ஞாலம் ஏழும்
உண்டும் மண்டி ஆலிலைத் துயின்ற வாதி தேவனே
வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்ப்
புண்டரீகப் பாவை சேரு மார்ப பூமி நாதனே –22-

பதவுரை

பண்டும் இன்றும் மேலும் ஆய்

–

மூன்று காலங்களிலும் கைவிடாதே நின்று ரக்ஷித்தருளுமவனாகையாலே
ஞானம் எழும்

–

உலகங்களையெல்லாம்
மண்டி உண்டு

–

(ப்ரளய வெள்ளம் கொள்ளாதபடி) விரும்பி அமுது செய்து
ஓய் பாலன் ஆகி

–

ஒப்பற்ற சிறு குழந்தையாய்
ஆலிலை துயின்ற

–

ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளின
ஆதிதேவனே !

–

மூல புருஷனே!
வண்டு

–

வண்டுகளானவை
கிண்டு

–

(மதுவுக்காக வந்து) குடையும்படியான
தண்துழாய் அலங்கலாய்

–

குளிர்ந்ததிருத்துழாய் மாலையை அணிந்தவனே!
சீர் கலந்த புண்டரீக பாவை சேரும்மார்ப!

–

அழகு சேர்ந்த தாமரை மலரிற்பிறந்த பெரிய பிராட்டியார் வந்து புணரும்படியான திருமார்பையுடையவனே!
பூமி நாதனே!

–

பூமிப்பிராட்டிக்கு நாதனே! (என்று ஈடுபடுகிறார்.)

பண்டும் இன்றும் மேலுமாய்-
மூன்று காலத்திலும் -சிருஷ்டி காலத்து முன்பும் -சிருஷ்டி காலத்திலும் -பிரளய காலத்திலும்
கை விடாமல் ரஷித்து அருளி
ரக்ஷகத்வம் முக்காலத்திலும் குறைவற்றது என்பதையே பேண்டும் இன்றும் மேலும் என்கிறார்
ஸ்ருஷ்டிக்கு முன்பும் ஸ்ருஷ்டியின் பொழுதும் பிரளய காலத்திலும் என்றுமாம்

ஓர் பாலனாகி ஞாலம் ஏழும் உண்டும் மண்டி –
அத்விதீயமான சிறு குழந்தையாய் -பிரளய வெள்ளம் கொள்ளாத படி உலகங்களை எல்லாம் விரும்பி அமுது செய்து

ஆலிலைத் துயின்ற வாதி தேவனே-வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்ப்-
புண்டரீகப் பாவை சேரு மார்ப பூமி நாதனே –
ஒருவரையும் விலக்காமல் அனைவரையும் திரு வயிற்றிலே கொண்டவன் ஆஸ்ரிதர் பக்கல் கொள்ளும்
பஷ பாதம் வியப்பு அல்ல –என்கிறார் –

புண்டரீகப் பாவை சேரு மார்ப பூமி நாதனே –-ஸ்ரீ யபதி அன்றோ –
பிறந்த இடமான தாமரையும் கொதிக்கும்படியான திரு மார்பு –
அவளைத் தண்ணீர் தண்ணீர் என்னப் பண்ணும் திரு மார்பு-

எல்லா வுலகங்களையும் கொள்ளை கொள்ளவந்த ப்ரளய காலத்திலே

வஸிஷ்ட சண்டாள விபாகம் பாராமல் எல்லாரையும் திருவயிற்றிலே வைத்து நோக்கின உனக்கு

ஆச்ரியதர்கள் விஷயத்திலே வாத்ஸல்யமுள்ளமை ஒரு வியப்போ? என்கிறார் இப்பாட்டில்.

அநாச்ரிதர்கள் என்று ஒருவரையும் விலக்காமல் ஆச்ரிதர்களோடு மையமாகவே அவர்களையும் வயிற்றிற் கொண்டவன்

ஆச்ரித விஷயத்தில் காட்டும் பக்ஷபாதம் உண்மையில் வியப்பன்றே.

எம்பெருமானுடைய ரக்ஷகத்வம் மூன்று காலங்களிலும் குறையற்ற தென்கிறார்-

பண்டும் இன்றும் மேலும் என்று.

பண்டும் என்றது ஸ்ருஷ்டிக்கு முற்காலத்திலே என்றபடி.

இன்றும் என்றது- ஸ்ருஷ்டிகாலத்தைச் சொன்னபடி.

மேலும் என்றது ப்ரளய காலத்தைச் சொன்னபடி.

ஸ்ருஷ்டிக்கு முற்காலத்தில் எம்பெருமானுடைய ரக்ஷகத்வம் எப்படிப்பட்ட தென்னில்;

ஒன்று ஒன்றிலே  லயிக்கிறதென்று சொல்லிக்கொண்டு வருமிடத்து இறுதியாக

“துக்ஷ†*** என்று சொல்லியிருக்கையாலே தன் பக்கலிலே ஏறிட்டுக்கொண்டு நோக்கும் விதம் அறியத்தக்கது.

ஸ்ருஷ்டி தசையில் எல்லா வுயிர்கட்கும் ஏககாலத்தில் கரண களே பரங்கள் கொடுத்தருளியதும்,

ப்ரளய தசையில் அனைத்தையும் வயிற்றிலே வைத்து நோக்கியதும் ரக்ஷண ப்ரகாரஙக்ள்

—————

வால் நிறத்தோர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன்
ஊனிறத் துகிர்த் தல மழுத்தினாய் உலாய சீர்
நானிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கி
பால் நிறக் கடல் கிடந்த பத்ம நாபன் அல்லையே –23-

பதவுரை

வால் திறந்து

–

வெளுத்த நிறத்தையுடைய
ஓர் சீயம் ஆய்

–

ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாயவதரித்து
வளைந்த வாள் வயிற்றினன்

–

வளைந்தும் ஒளிபெற்றுமிருக்கிற பற்களையுடையனான இரணியனுடைய
ஊன் நிறத்து

–

சரீரத்தில் மர்ம ஸ்தானத்திலே
உதிர் தலம் அழுத்தினாய்

–

கை நகங்களை அழுத்தினவனே!
உலாய சீர்

–

உலகமெங்கும் உலாவுகின்ற சீர்மையையுடைய
கால் நிறத்த வேதம்

–

உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம்,ப்ரசயம் எனகிற நால்வகை ஸ்வரங்களையுடைய வேதங்களை
நாவர்

–

நாவிலே உடையவர்கள் (ச்ரோத்ரியர்கள்)
நல்ல யோதினால்

–

விலக்ஷணமான உபாயத்தினாலே
வணங்கு

–

வணங்குவதற்கு இடமான
பால்நிறக் கடல்

–

திருப்பாற் கடலிலே
கிடந்த

–

பள்ளிகொண்டருளின
பற்பநரபன் அல்லையே

–

பத்மநாபன் நீயேயன்றோ

வால் நிறத்தோர் சீயமாய் –
வெளுத்த நிறத்தை உடைய ஒப்பற்ற நரசிம்ஹ மூர்த்தியாக திருவவதரித்து
ஸ்வரூபம் மட்டும் இன்றி நிறத்தையும் மாற்றிக் கொண்டானே என்கிறார்-

காளமேக ஸ்யாமளானாய் இருந்தும் வெண்ணிறமாக்கிக் கொண்டாயே –

யுக வர்ண கிரமம் ஆஸ்ரிதர் விரும்பும் வர்ணம் கொள்பவனே

வால் நிறத்து -வாண் நிறத்து என்று திவ்யமான தன்மை என்றும் கொள்ளலாம்

வளைந்த வாள் எயிற்றவன்-
வளைந்தும் ஒளி பெற்ற பற்களையும் உடைய ஹிரண்யனை

ஊனிறத் துகிர்த் தல மழுத்தினாய்
மர்ம ஸ்தானத்தில் -ஹிருதயத்தில் திருக் கை நகங்களை அழுத்தினவனே

உலாய சீரநானிறத்த வேத நாவர்
எங்கும் உலாவுகின்ற சீர்மையை உடைய -நான்கு ஸ்வரங்கள் -உதாத்தம் அனுதாதம் ஸ்வரிதம் பிரசயம் -உடைய வேதங்களை –

நாவர் -நாவிலே உடையவர்கள் -ஸ்ரோத்யர்கள்

நல்ல யோகினால் வணங்கி-பால் நிறக் கடல் கிடந்த பத்மநாபன் அல்லையே
மனுஷ்ய திர்யக் ஜாதிகள் இரண்டையும் ஏக விக்ரஹமாக்கி தூணிலே தோன்றிய விந்தையை அருளுகிறார்

ப்ரளயகாலத்து ஆபத்தைப்போக்கி வடதளசாயியாக அமைந்தது மிகவும் அற்புதமான செயல் என்று

அதிலே ஈடுபட்டுப் பேசினார் கீழ்ப்பாட்டில்.

இது அகடிதகட நாஸாமர்த்தியமானது நரசிங்கவுருவங்கொண்ட ஸாமர்த்தியத்தின் முன்னே ஒரு பொருளாக மதிக்கத்தக்கதோ?

******  என்கிறபடியே சரீரத்தில் ஏகதேசத்தை மநுஷ்ய ஸஜாதீயமாக்கியம் ஏகதேசத்தைத் திர்யக் ஸஜுதியமாக்கியும்

இப்படி இரண்டு ஜாதியை ஏகவிக்ரஹமாக்கித் துணிலேவந்து தோன்றிய வித்தகம் ஸாமாந்யமானதோ?

இதனைப் பரிசோதிக்க வல்லார்? என்கிறார் இப்பாட்டில்.

வால் நிறத்தோர் சீயமாய் = புருஷோத்தமன் தன்ஸ்ரூபத்தை அழித்து ஸிம்ஹஸஜா தீயனது போலவே

காளமேகம்போன்ற தன்நிறத்தையும் மாற்ற வெண்ணிறத்தை ஏறிட்டுக்கொள்வதே! என்று ஈடுபடுகிறார்.

வால் வெண்மை.

இனி, வான் நிறம்” எனப் பிரித்து, திவ்யமான தன்மையையுடைய என்று பொருள் கொள்ளுதலும் நன்றே.

சீயம் = சிங்கம்.

“வளைந்தவா ளெயிற்றவன்” என்றதனால் இரணியனுடைய பயங்கரமான வடிவுடைமை தோன்றும்.

ஊன்நிறம்- சரீரத்தின் மர்மஸ்தாநம்- ஹ்ருதயமென்க.

உகிர்த்தலம் என்ற விடத்து, “தலம்” என்றது வார்த்தைப்பாடு. ‘உலாய” என்றது ‘உலாவிய’ என்றபடி.

————–

கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே
அங்கை யாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
சிங்கமாய தேவ தேவ தேனுலாவு மென் மலர்
மங்கை மன்னு வாழு மார்ப வாழி மேனி மாயனே –24-

பதவுரை

கங்கை நீர்

–

கங்கா தீர்த்தத்தை
பயந்த

–

உண்டாக்கின
பாத பங்கயத்து எம் அண்ணலே

–

தீருவடித் தாமரையையுடைய எம்பெருமானே!
அம் கை

–

அழகிய திருக்கையிலே
ஆழி சங்கு தண்டும் வில்லும் வாளும்

–

பஞ்சாயுதாழ்வாரக்ளை
ஏந்தினாய் !

–

ஏந்திக் கொண்டிருப்பவனே!
சிங்கம் ஆய

–

நரஸிம்ம மூர்த்தியாயவதரித்த
தேவ தேவ!

–

தேவாதி தேவனே;
தென் உலாவும் மெல்மலர் மங்கை

–

தேன் பொருந்திய ஸுகுமாரமான தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டி
மன்னிவாழும் மார்ப

–

(அப்பூவை விட்டு வந்து) பொருந்தி வாழும்படியான திருமார்பையுடையவனே!
ஆழி மேனி

–

கடல் போன்ற திருமேனியையுடைய
மாயனே

–

ஆச்சர்ய பூதனே! (என்று ஈடுபடுகிறார்.)

கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே
கங்கை தீர்த்தம் உண்டாக்கிய திருவடித் தாமரையை உடைய எம்பெருமானே

அங்கை யாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்-
அழகிய திருக்கைகளிலே பஞ்சாயுத ஆழ்வார்களையும் ஏந்திக் கொண்டு இருப்பவனே-

சிங்கமாய தேவ தேவ
நரசிம்ஹ மூர்த்தியாய் திருவவதரித்த தேவாதி தேவனே –

தேனுலாவு மென் மலர் மங்கை மன்னு வாழு மார்ப –
தேன் பொருந்திய சுகுமார பூவினில் பிறந்து அத்தை விட்டு வந்து பொருந்தி வாழும் படியான திரு மார்பு உடையவனே

வாழி மேனி மாயனே-
கடல் போன்ற திருமேனி உடைய ஆச்சர்ய பூதனே -என்கிறார்

அஹங்கார்களில் தலைவனான ருத்ரருக்கும் ஸ்ரீ பாத தீர்த்தம் தந்து அருளினாய்
கால தாமதம் இராமல் எப்போதும் திவ்ய ஆயுதம் தரித்துக் கொண்டு இருப்பவனே
இத்தை ஒரு நொடியிலே அங்கே அப்பொழுதே தோன்றி வெளியிட்டாய் நரசிம்ஹ மூர்த்தியாய் –
இப்படிப்பட்ட கல்யாண குணங்களில் தோற்று பெரிய பிராட்டியார் மன்னிக் கிடக்கிறார்

உனது திருமேனியை சேவித்த கண்கள் குளிர்ந்து தாப த்ரயங்கள் அற்றதே-
கரும் கடலைக் கண்டவாறே கண்களும் குளிர்ந்து சகல தானங்களும் ஆறுமே –

அஹங்காரிகளில் தலைவனான ருத்ரனுக்கும் ஸ்ரீபாத தீர்த்தத்தை தந்தருளி

அவனைப் பாவனஞ் செய்தருளினவனன்றோ நீ; ****** என்றபடி-

இடர்ப்பட்டு வரும் அடியார்களைத் துயர்நீக்கி ரக்ஷிப்பதில் காலதாமதம் நேரிடாமைக்காகப்

பஞ்சாயுதாழ்வார்களை எப்போதும் திருக்கையிலே எந்திக் கொண்டிருப்பவனன்றோ நீ:

அந்த ஆச்ரிதரக்ஷண சீக்ஷையை இருஸமய விசேஷத்திலே நரசிங்கமாய்த் தோன்றி வெளியிட்டவனன்றோ நீ;

இப்படிப்பட்ட குணங்களுக்குத் தோற்றுப் பெரிய பிராட்டியார் உன்னை விடமாட்டாதே எப்போதும் மார்பில் மன்னியிருக்கின்றாள் அன்றோ;

கருங்கடலைக் கண்டவாறே கண்களுங் குளிர்ந்து கைல தாபங்களும் ஆறவதுபோல உன் திருமேனியை ஸேவித்தவாறே

என் கண்கள் குளிர்ந்த தாபத்ரயமும் ஆறம்படியா யிரா நின்றதே! என்று ஈடுபடுகிறார்.

————-

வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ யிது என்ன பொய் யிரந்த மண் வயிற்றுளே
கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே –25-

பதவுரை

வரத்தினில்

–

(பிரமன் கொடுத்த) வரத்திலே
சிரத்தை மிக்க

–

அதிகமான நம்பிக்கையுடையவனாய்
வாள் எயிறு

–

வாள் போன்ற (பயங்கராமன) கோரப்பற்களையுடையவனான
மற்றவன்

–

ஆச்ரித சத்ருவான இரணியனுடைய
உரத்தினில்

–

மார்விலே
கரத்தை வைத்து

–

திருக்கைகளை வைத்து
உகிர்த்தலத்தை

–

நகரங்களை
ஊன்றினாய்

–

அழுத்திக் கொன்றாய்;
நீ

–

இப்படிப்பட்ட நீ
இரத்தி

–

(ஒரு ஸயம் மாவலியிடத்தே சென்று) யாசிக்கிறாய்;
இது என்ன பொய்

–

இது என்ன இந்திரஜாலம்!
இரந்த மண்

–

யாசித்துப்பெற்ற உலகத்தை
வயிற்றுளே கரத்தி

–

(ஒரு கால்) திருவயிற்றுக்குள்ளே ஒளித்து வைக்கிறாய்;

கண்ணனே! கண்ணபிரானே!

உன் கருத்தை

–

(இப்படியெல்லாம், செய்கிற) உன்னுடைய கருத்தை
யாவர் காண வல்லர்

–

யார்கண்டறிவல்லார்! (யாருமில்லை.)

வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
பிரமன் கொடுத்த வரத்தில்-அதிகமான நம்பிக்கை உடைய வாள் போன்ற பயங்கரமான கோர பற்களைக் கொண்ட
ஆஸ்ரித சத்ருவான ஹிரண்யன்

உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
மார்பினில் திருக் கரத்தை வைத்து திரு நகங்களால் அழித்துக் கொன்றாய்

இரத்தி நீ யிது என்ன பொய்
இப்படிப்பட்ட நீ ஒரு சமயம் மாவலியிடம் சென்று -யாசிக்கிறாய் -இது என்ற ஜாலம்

யிரந்த மண் வயிற்றுளே கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே
யாசித்துப் பெற்ற உலகத்தை ஒரு கால் திரு வயிற்றிலே ஒழித்து வைக்கிறாய்

அநந்ய பிரயோஜனனான பிரகலாதனுக்கு உதவி அருளினாய்
பிரயோஜனாந்த பரனான இந்த்ரனுக்காக யாசக வேஷம் பூண்டு -இது என்ன மாயம்
அப்படி இந்த்ரன் அளவு ஆபி முக்கியம் இல்லாத சம்சாரிகளையும் திரு வயிற்றிலே வைத்து ரஷித்து அருளினாய் –
இது என்ன இந்த்ரஜாலம் -அபார சக்தி யுக்தன் என்று ஸ்ரீ நரசிம்மனாயும்
அசக்தன் என்று வாமனனாயும்
சர்வஞ்ஞன் சர்வசக்தன் என்று பிரளய ரக்ஷகனாம் மாறி மாறிக் காட்டி அருளும் உள் கருத்தை
நீயே எனக்கு அருள வேணும்

அநந்யப்ரயோஜநனான (உன் அநுக்ரஹந்தவிர வேறொன்றையும் பயனாகக் கருதாதவனான) ப்ரஹ்லாதாழ்வானுடைய

விரோதியைக் கழித்தருளினாய் என்பது ஒருபுறமிருக்கட்டும்;

ப்ரயோஜநாந்தரபரனான இந்திரனுக்காக யாசக வேஷம் பூண்டு வந்தாயே இதென்ன மாயம்?

அவ்வளவேயோ? இந்திரனளவு ஆயிரமுக்யமுமில்லாமல் விமுகரான ஸம்ஸாரிகரீ… ப்ரளயாபத்திலே திருவயிற்றில் வைத்து ரக்ஷித்தாயே,

இதற்குத்தான் என்ன கருத்து?

பாரமார்த்திகனான ஆச்ரிதனையும் க்ருத்ரிமனான ஆச்ரிதநாமத்தாரியையும் ராவண ஹிரண்யாதிகளின் வரிசையிலே கணக்கிடத்தக்க ஸம்ஸாரிகளையும் ஒரு ஸமயமாகக் காத்தருள்கின்ற உன்னுடைய உட்கருத்து என்ன?

நீயே எனக்கருளிச் செய்ய வேணுமென்கிறார்.

நீ நரஸிம்ஹாவதார மெடுத்தவற்றைப் பார்த்தாலோ ‘அபார சக்தியக்தன்’ என்று தோன்றுகிறது;

அடுத்தபடியாக, இந்திரனது வேண்டுகோளுக்கிணங்கி வாமநனாய் வந்து யாசகம் செய்தவாற்றைப் பாரத்தாலோ ‘அசந்தன்’ என்று தோற்றாநின்றது;

ப்ரளயாபத்துக்கு உதவுந்தன்மையைப் பார்த்தாலோ ‘இவனுக்கு மேற்பட்ட ஸர்வஜ்ஞனும் ஸர்வசக்தனும் எவ்வுலகத்திலுமில்லை’ என்று என்னும்படியாயிருக்கிறது.

இப்படி சக்தியையும் அசக்தியையும் மாறி மாறிக் காட்டிக்கொண்டு நீ பலபலமாயச் செயல்கள் செய்வதற்குக் கருத்து எதுவோ?

எனக்குத் தெரிய வருளிச் செய்யவேணுமென்கிறார்- என்றுங் கொள்ளலாம்.

——————

ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு நல்லவாய்
ஊணோடு ஓசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்ப்
பூணு பேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்க்
காணி பேணு மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே –26-

பதவுரை

ஆணினோடு பெண்ணும் ஆகி

–

புருஷஜாதி, ஸ்த்ரீஜாதி என்ற இரண்டு சாதிக்கும் ப்ரவர்த்தகனாய்
அல்லவோடு நல்ல ஆய்

–

மேற்சொன்ன இரண்டு ஜாதியிலும் சேராத நபும்ஸக பதார்த்தங்களென்ன இம்மூன்று வகுபபிலும் சிறந்தவையென்ன இவற்றுக்கெல்லாம் நிர்வாஹகனாய்
ஊணொடு ஓசை கூறும் ஆகி

–

ரஸம், சப்தம், ஸ்பர்சம் முதலிய விஷயங்களுக்கு நியாமகனாய்
என்று அலாத மாயை ஆய்

–

உலகிலுள்ள எல்லாப் பொருளாகவும் பரிணமிக்கின்ற ப்ரக்ருதிக்கு நிர்வாஹகனாய்
பூணி பேணும்

–

பசுக்களை மேய்கிக்கிற
ஆயன் ஆகி

–

இடையனாய்
பொய்யினோடு மெய்யும் ஆய்

–

பொய்யரான துர்யோதநரதிகன் பக்கலிலே பொய்யனாய் மெய்யரான பாண்டவர் பக்கலிலே மெய்யனாய்
காணிப்பேணும் மாணி ஆய்

–

(மூவடி) நிலத்தை ஆசைப்பட்ட பிரமசாரியாகி
கரந்து சென்ற கள்வனே!

–

(மஹாபலியின் யாக பூமியிலே) க்ருத்ரிமமாக எழுந்தருளின் மாயனே!
உன்னை யார் மதிக்கவல்லர்!

–

உன்னை அளவிடக்கூடியவர்கள் யார்?

ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு –புருஷ ஸ்த்ரீ ந பும்சக மூன்று ஜாதிக்கும் பிரவர்த்தனாய்
நல்லவாய் இவற்றில் சிறந்தவைக்கு எல்லாம் நிர்வாஹகானாய்

ஊணோடு ஓசை யூறுமாகி -ரசம் சப்தம் ஸ்பர்சம் முதலிய விஷயங்களுக்கு நிர்வாஹகனாய்
லீலா விபூதியை விஸ்தாரப் படுத்த ஆணினோடு பெண்ணுமாய் அவர்களுக்குள் அந்தர்யாமியாகவுமாகி
சம்பந்தம் ஏற்படுத்தி நிர்வஹிப்பவன்

நல்ல வாய் –
உலகில் சிறப்பு பெற்ற வஸ்துக்கள் அவனது தோற்றம் மிக வீறு பெற்று இருக்கும்

யொன்றலாத மாயையாய்ப்
உலகத்தில் உள்ள எல்லா பொருள்களாகவும் பரிணமிக்க பிரக்ருதிக்கு நிர்வாஹகனாய்

பூணு பேணு மாயனாகிப்
பசுக்களை மேய்க்கும் இடையனாகி

பொய்யினோடு மெய்யுமாய்க்
பொய்யர்களான துரியோதனாதிகளுக்கு பொய்யனாகவும் -மெய்யர்களான பாண்டவர்கள் பக்கம் மெய்யனாகவும்

காணி பேணு மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே
மூவடி நிலம் ஆசைப்பட்டு ப்ரஹ்மசாரியாய் -மகா பலியின் யாக சாலையில் க்ருத்ரிமாக எழுந்து அருளின மாயனே

சங்கல்ப ஏக தேசத்தாலேயே சர்வத்தையும் பண்ணவல்லனாய் இருந்தும் ஆஸ்ரித -சாது -பரித்ராணத்துக்காக
தேவ சஜாதீயமாக்கியும்
கோபால சஜாதீயமாக்கியும்
அவதரித்துப் பண்ணின ஆச்சர்ய சேஷ்டிதங்களை யார் நினைக்க வல்லார்

எல்லாவற்றிற்கும் நிரவாஹகனான நீ நித்யஸூரி போக்யமான உன்வடிவை ஆச்ரிதர்கட்கான தேவஸஜாதீயமாக்கியும்

கோபாலஸஜா தீயமாக்கியும் அவதரித்துப் பண்ணின ஆச்சரியசேஷ்டைகளை யார் அறியவல்லார் என்கிறார்.

வாமநாவதாரும் க்ருஷ்ணாவதாரமும் ஒருபுடை ஒத்திருக்கையாலே அவ்விரண்டவதாரங்களையும் சேர்த்து அநுஸந்திக்கின்றாரென்ப.

ப்ரஜைகளை அதிகப்படுத்தி லீலாவிபூதியை விஸ்தாரமாக்க வேணுமென்ற திருவுள்ளத்தினால்

ஸ்த்ரீஜாதிகளையும் புருஷ ஜாதியையும் ஏராளமாகப் படைத்து அவற்றிலே தான் அந்தராத்மாவாய் நின்று

பரஸ்பர ஸம்பந்தத்தை உண்டு பண்ணி இவ்வகையாலே நிர்வஹிக்கின்றான் என்ற கருத்து ஆணினோடு பெண்ணுமாகி என்பதற்கு,

ஆனால் ஒன்றுக்கு முதவாத … ஸகநுயாதிக்கு எம்பெருமான் நிர்வாஹகனல்லனோவென்ன,

அதற்கும் இவனே நிர்வஹாகனென்கிறது

அல்லவோடு என்று. அல்ல= ஸ்த்ரீஜாதியும் புருஷாஜாதியுமாகாதவை;

அவையாவன- நபும்ஸகவ்யத்திகள்.

நல்லவாய்= நல்ல பார்த்தங்களாகையாவதென்னென்னில்;

பகவத்கீதையில் பத்தாவது அத்யாயத்தில் ****** அதாவது- எந்த எந்த வஸ்துவானது செல்வம் மிக்கதாயும் அழகுமிக்கதாயும் நற்காரியங்களில் முயற்சிமிக்கதாயும் விளங்குகின்றதோ அவ்வப்பொருளெல்லாம் எனது தேஜஸ்ஸின் ஏகதேசத்தினுடைய இயைபுகொண்டதென அர்ஜுனே! நீ தெரிந்துகொள்! என்று அருளிச் செய்தபடி

உலகத்திலுள்ள ஸர்வபதார்தங்களிலும் சிறப்பு பெற்றவஸ்துக்களில் எம்பெருமானுடைய தோற்றம் மிக்க வீறுபெற்றிருக்குமென்கை.

இதனால், ஹேமமானவஸ்துக்களில் எம்பெருமானுடைய தோற்றம் இல்லையென்றபடி யல்ல;

எல்லாவற்றிலும் ஸமாமாந்யமாகத் தோற்றமிருந்தாலும் சிறந்தவஸ்துக்களில் தோற்றம் அதிசயித்திருக்குமென்க.

ஒன்றலாக மாயையாய் = ஒன்றலாத – ஒன்று அல்லாத; பலவாகப் பரிணமிக்கக்கூடிய என்றபடி,

எல்லாப் பொருளுமாய்க்கொண்டு பரிணமிக்கக்கூடியது ப்ரக்ருதிதத்வமேயாகையாலும், ****** என்றபடி

மாயையென்று ப்ரக்ருதிதத்வத்துக்குப் பேராகையாலும், ஸர்வவஸ்துவாயும் பரிணமிக்கவல்ல ப்ரக்ருதி

தத்துவத்துக்கு நியாமகனானவனே! என்று பொருளுரைக்கப்பட்டது.

அன்றியே, மாயை என்று ஆச்சர்யத்தையும், சொல்லுவதுண்டாதலால், ஒன்றிரண்டு வஸ்துக்களுக்கு மாத்திரம் நிர்வாஹகையன்றிக்கே ஸகலப்தார்த்தங்களையும் சேதநனுடைய கர்மாநுகூலமாக நிர்வஹிக்கவல்ல ஆச்சர்யத்தையுடைவனே! என்றதாகவுமாம்.

ஸங்கல்பத்தினாலேயே ஸகலத்தையும் நிர்வஹிக்கவல்லனா யிருக்கச் செய்தேயும் ஸாது பரித்ராணத்துக்காக

அஸாதாரணவிக்ரஹத்தை *** ஸஜாதீயமாக்கிக்கொண்டு அவதரித்து, தன்னைப்பேணாமல்

பசுக்களைப் பேணினானென்கிறது பூணிபேணுமாயனாகி என்றும் அப்படி ஸ்ரீக்ருஷ்ணனாய்த் திருவவதரித்து ரக்ஷித்தருளுங்காலத்துப் பொய்யராயிருந்த துரியோன தநாதிகளுக்குத்தானும் பொய்யனேயாகவும்,

மெய்யராயிருந்த பாண்டவர்கட்குத்தானும் மெய்யனேயாகவு மிருந்தபடியைச் சொல்லுகிறது பொய்யினோடு மெய்யுமாய் என்று.

———–

விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்
பண் கடந்த தேசமேவு பாவ நாச நாதனே
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே –27-

பதவுரை

விண் கடந்த சோதியாய்

–

விபுவான மூலப்ரக்ருதி உனக்குள்ளேயாம்படி அதனை அதிக்ரமித்த ஸ்வாம்ப்ரகாசனே!
விளங்கு

–

ஸ்வயம்ப்ரகாசனான
ஞானம்

–

ஜீவாத்மாவை
மூர்த்தியாய்

–

சரீரமாக வுடையவனே!
பண்கடந்த தேசம் மேவு

–

வேதங்களாலும் அளவிட முடியாத பரமபதத்திலே நித்யவாஸம் பண்ணுமவனாய்
பாவநாச நாதனே!

–

ஹேயப்ரத்யநீகனான ஸர்வேச்வரனே!
எண் கடந்த யோகினோடு

–

எண்ணமுடியாத ஆச்சர்ய சக்தியோடு கூடினவனாய்க் கொண்டு
மாணி ஆய்

–

வாமனாய்
இரந்து சென்று

–

(மூவடிமண் வேணுமென்று) யாசித்துச் சென்று
மண் கடந்த வண்ணம்

–

பூமியை யளந்துகொண்ட விதத்தையும்
நின்னை

–

உன்னையும்
ஆர் மதிக்க வல்லர்

–

அளவிடக்கூடியவர்கள் யார்?

விண் கடந்த சோதியாய்
விபுவான மூல பிரகிருதி உனக்கு உள்ளே ஆகும் படி அத்தனை அதி ரமித ஸ்வயம் பிரகாசம் உடையவனே
சுரர் அறி அரு நிலை விண் -எட்ன்று மூல பிரக்ருதியை விண் சப்தத்தால் போலவே இங்கும்

விளங்கு ஞான மூர்த்தியாய்-
ஸ்வயம் பிரகாசமான ஜீவாத்மாக்களை சரீரமாக கொண்டவனே

பண் கடந்த தேசமேவு –
வேதங்களால் அளவிட முடியாத பரம பதத்தில் நித்யம் வாசம் பண்ணி அருளுபவனே

பாவ நாச நாதனே
ஹேய பிரத்ய நீக சர்வேஸ்வரனே

எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்-
எண்ண முடியாத ஆச்சர்ய சக்தியோடு இருக்கும் வாமனாய்

இரந்து சென்று மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே-
யோகி -யோகம் -உபாயத்துக்கும் கல்யாண குணத்துக்கும் –
நல்ல உபாயம் அறிந்து கொண்ட கோல உருவம் அன்றோ –

“விண்கடந்தசோதியாய்!” என்றது-  விபுவான மூலப்ரக்ருதியானது உனக்குள்ளேயாம்படியான

ஸ்வரூவைபவத்தையுடைய ஸ்வயம்ப்ரகாச வஸ்துவானவனே, என்றபடி.

விண் என்றால் ஆகாசமென்று பொருளாமே யல்லது மூலப்ரக்ருதியென்று பொருளாகக் கூடுமோவென்னில்; ஆம்;

ப்ருஹதாரண்யக உபநிஷத்திலே ஐ(ரூ-அ-எ ***” என்றவிடத்தில் ஆகாச சப்தத்தை மூலப்ரக்ருதிபரமாக வியாக்கியானித்துள்ளார்கள்;

“சுரரறிவருநிலை விண்” என்று திருவாய்மொழியிலும் விண் என்று மூவப்ரக்ருதியை அருளிச்செய்திருக்கிறார்.

“விளங்கு ஞான மூர்த்தியாய்” என்றது – ஸ்யம்ப்ரகாசமாய் ஜ்ஞாநசப்தவாச்யமான ஆத்மஸ்ரூபத்தை சரீரமாகவுடையவனே! என்படி.

ஆக, முதலடியிலுள்ள இரண்டு ஸம்போதநங்களாலும் எம்பெருமானுக்கு ‘துணோ ***” என்று சொல்லப்பட்டுள்ள

விபுத்வ ஹூக்ஷ்மத்வங்கள் சொல்லப்பட்டனவென்க.

“விண்கடந்த சோதியாய்” என்ற முதல் ஸம்போதநத்தில் *** என்னுமிடம் சொல்லுகிறது;

விளங்கு ஞானமூர்த்தியாய்” என்ற இரண்டாவது ஸம்போதநத்தில் *** என்னுமிடம் சொல்லுகிறது.

(பண் கடந்த இத்யாதி.) பண் என்று ஸ்வரத்துக்குப் பேராகிலும் இங்கு ஸ்ரப்ரதமான வேதத்தை லக்ஷணையால் குறிக்கும்.

பண்கடந்த = வேதத்தை அதிக்ரமித்த- வேதத்திற்கு விஷயமாகாத என்கை;

வேதங்களாலே பரிச்சேதிக்க முடியாத அப்ராக்ருத ஸ்தலமான பரமபதத்திலே நித்யவாஸம் செய்தருள்கின்ற பரமபுருஷனே!

பாவநாசநாதன் – வட மொழித்தொடர். ஆக இரண்டு அடிகளம் ஸம்போதநமாய் முடிந்தன;

இனி பின்னடிகளில் உலகளந்த சரிதம் அளவிட முடியாத ஒப்பற்றதொரு சரிதமென்கிறார்.

யோக = யோஹ’ என்ற வடசொல் ‘யோகு’ எனக் குறைந்து கிடக்கிறது.

யோக மென்று கல்யாண குணத்துக்கும் உபாயத்துக்கும் பெயர்.

இங்கு அவ்விரண்டுபொருளும் ஆகலாம். யாசகவேஷத்துக்கும் உபாயத்துக்கும் பெயர்.

இங்கு அவ்விரண்டுபொருளும் ஆகலாம்.

யாசகவேஷத்தோடு எழுந்தருளச் செய்வதேயும் மற்றபடி கல்யாண குணயோகத்தில்  குறையில்லை யென்கை.

மஹாபலியின் செருக்கை யடக்குவதற்கு நல்ல உபாயமறிந்து செய்து செயலாதலால் உபாயப்பொருளும் பொருந்துமென்க

———————–

படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே –28-

பதவுரை

பௌவம் நீர்

–

(அண்டங்களுக்குக் காரணமான) ஏகார்ணவத்தை
படைத்து

–

ஸ்ருஷ்டித்து
படைத்த

–

(பிறகு, அண்டப்ரஹ்மஸ்ருஷ்டி பூர்வமாக) ஸ்ருஷ்டிக்கப்பட்ட
பார்

–

பூமியை
இடந்து

–

(ஸ்ரீவராஹமூர்த்தியாய் அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவித்தெடுத்து
அளந்து

–

(த்ரிவிக்ரமனாய்) அளந்து
உண்டு

–

(ப்ரளயகாலத்தில்) திருவயிற்றில் வைத்து நோக்கி
உமிழ்ந்து

–

(ப்ரளயங்கழிந்த பின்பு) வெளிப்படுத்தியும்.
பௌவம் நீர்

–

(இலங்கைக்கு அழகான) கடலை
அடைத்து

–

ஸேதுகட்டித் தூர்த்து.
முன் அதில் கிடந்து

–

முன்பொருகால் அக்கடலிற் கண்வளர்ந்தருளி
கடைந்த

–

(ஒருகால் அமுதமெடுப்பதற்காக அதனைக்) கடைந்தருளின
பெற்றிபோய்!

–

(இப்படிப்பட்ட அளவற்ற பெருமைகளையுடையவனே!
மிடைத்த

–

செருக்கி வந்த
மாலி

–

மாலி என்றகிற ராக்ஷஸனென்ன
விலங்கு மான் மாலி

–

அதிக்ஷுத்ரனான ஸுமாலியென்னும் ராக்ஷஸனென்ன இவர்கள்
காலன் ஊர் புக

–

யமலோகம் போய்ச் சேரும்படியாக
படைக்கலம் விடுத்த

–

ஆயுதங்களை ப்ரயோகித்தருளின
பல் படை தடகை மாயனே!

–

பலவகைப்பட்ட திவ்யாயுதங்களை விசாலமான திருக்கையிலே  யுடையனான பெருமானே! (உன்னையார் மதிக்கவல்லர்? என்று கீழ்ப்பாட்டின் க்ரியைக் கூட்டிக்கொள்வது)

 

படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர் படைத்து அடைத்து
பௌவ நீர் -அண்டங்களுக்கு காரணமான ஏ காரணவத்தை சிருஷ்டித்து பிறகு அண்ட பிரம்ம சிருஷ்டி பூர்வகமாக
சிருஷ்டிக்கப் பட்ட பூமியை
ஸ்ரீ வராஹ மூர்த்தியாய் அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுத்து எடுத்து
திருவிக்ரமனாய் அளந்து பிரளய காலத்தில் வயிற்றில் வைத்து நோக்கி
பிரளயம் கழிந்த வாறே வெளிப்படுத்தியும் –
அடைத்து -சேது கட்டி தூர்த்து

அதில் கிடந்து முன் –
முன் அதில் கிடந்தது -முன்பு ஒரு கால் அதன் முன்னே கண் வளர்ந்து அருளி

அதில் கடைந்த பெற்றியோய்
ஒரு கால் அமிர்தம் பெறுவதற்காக கடைந்து அருளிய -இப்படிப்பட்ட அளவற்ற பெருமைகளை உடையையாய்

மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப் படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே
செருக்கி வந்த மாலி என்னும் ராஷசனும் அதி சூரனனான ஸூ மாலி என்னும் அரக்கனும் யம லோகம் சேரும் படி
அதி ஷூத்ரர்களான மாலி மாலி மான் விலங்கு என்று மூவரையும் என்னவுமாம் –
ஆயுதங்களைப் பிரயோகித்த பலவகைப் பட்ட திவ்ய ஆயுதங்களை விலாசமான திருக் கரங்களிலே உடைய எம்பெருமானே
உன்னை யார் நினைக்க வல்லார்

“மாலிமான்” என்றதை ‘மான் மாலி’ என்று மாற்றி அந்வயித்து ஸுமாலியென்று பொருள்கொள்ளப்பட்டது.

‘ஸு’ என்பதன் ஸ்தாநத்தில் மான் என்றது மஹாந் என்பதன் விகாரம்.

அன்றி, ‘மாலியவான்’ என்பவனை ‘மாலி மான்’ எனக் கூறிக்கிடப்பதாகவுங் கொள்ளலாம்.

அங்ஙனுமன்றி, மாலி, மாலி, மான் விங்கு- மாலியென்ன, சுமாலியென்ன, மாரீச மாயாமிருகமென்ன

இவர்கள் காலனூர்புக- என்று முரைக்கலாம்.

விலங்க என்றது மாலி சுமாலிகட்கு அடைமொழியானபோது, அதிக்ஷுத்ரர்களான என்று பொருள் கொள்க.

இப்பாட்டில் வினைமுற்று இல்லையாகிலும் கீழ்ப்பாட்டோடேயாவது மேற்பாட்டோடேயாவது கூட்டிக் கொள்ளலாம்.

———————————————————————————-

பரத்திலும் பரத்தையாதி பௌவ நீர் அணைக் கிடந்தது
உரத்திலும் ஒருத்தி தன்னை வைத்து உகந்தது அன்றியும்
நரத்திலும் பிறத்தி நாத ஞான மூர்த்தி யாயினாய்
ஒருத்தரும் நினாது தன்மை இன்னதென்ன வல்லரே –29-

பதவுரை

நாத

–

ஸ்வாமிந்!
ஞானம் மூர்த்தி ஆயினாய்

–

ஜ்ஞாநஸ்வருபியானவனே!
பரத்திலும் பரத்தை ஆகி

–

பராத்பரனாயிராநின்றாய்.
ஒருத்தி தன்னை

–

ஒப்பற்ற பெரிய பிராட்டியாரை
உரத்தில்

–

திருமார்பிலே
வைத்து

–

பிரியாமல் அணையவைத்து
உகந்து

–

மகிழ்ந்து
பௌவம் நீர் அணை கிடந்து

–

திருவாற்கடலாகிய சயநத்திலே கண்வளர்ந்தருளி
அது அன்றியும்

–

இப்படிகளாலே ஆச்ரிரக்ஷணம் செய்வது மல்லாமல்
நரத்திலும்

–

ஹேயமான மானிட சாதியிலும்
பிறத்தி

–

வந்து பிறக்கின்றாய்;
நினாது தன்மை

–

உன்னுடைய அநுக்ரஹ ஸ்வபாவத்தை
ஒருத்தரும்

–

யாராகிலும்
இன்னது என்ன வல்லரே?

–

இப்படிப்பட்டதென்று பரிச்சேததிக்க ஸமர்த்தர்களோ? (யாருமில்லை.)

பரத்திலும் பரத்தையாதி -பரா பரனாய் இருந்தாய்
பௌவ நீர் அணைக் கிடந்தது-திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளி
உரத்திலும் ஒருத்தி தன்னை வைத்து உகந்தது -திரு மார்பிலே ஒப்பற்ற பெரிய பிராட்டியை
பிரியாமல் அணைய வைத்து மகிழ்ந்து

அன்றியும் நரத்திலும் பிறத்தி -அதுவும் அன்றியும் மனுஷ்ய சஜாதீயமாக திருவவதரித்து
நாத ஞான மூர்த்தி யாயினாய் ஒருத்தரும் நினாது தன்மை இன்னதென்ன வல்லரே
மேன்மைக்கும் எளிமைக்கும் எல்லை நிலமாய் இருக்கும் உன் தன்மையை அருளுகிறார்

பராத்பரன் ஷீராப்தி நாதன் ஸ்ரீ யபதித்வம் -பரத்வ பரமாகவும்-எளிமைக்கும்-
ராம கிருஷ்ணாதி அவதாரங்கள் – எளிமைக்கும் எல்லை நிலம்-

மேன்மை எல்லை காண முடியாதாப் போலே நீர்மையும் எல்லைகாண வொண்ணாதபடி யிருக்குமாற்றை அநுபவித்து ஈடுபடுகிறார்.

க்ஷீரஸாகரசாயித்வமும் லக்ஷ்மீபதித்வமும் பராத்பரத்வ ப்ரகாசகமாதலால் “பரத்திலும் பரத்தையாதி” என்றதற்கு உபபாதகமாக அவ்விரண்டையும் அருளிச்செய்தார்.

பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியனத்திற்கு அரும்பதவுரை வரைந்த வொருவர்- “பரத்தையாதி யென்றது- ‘பரத்தையாகி’ என்று பாடமாக வேணுமென்று கண்டு கொள்வது” என்றெழுதிவைத்தது மறுக்கத்தக்கது.

ஆதி என்பது ‘ஆ’ என்னும் வினைப்பகுதியடியாப் பிறந்த நிகழ்கால முன்னிலை யொருமை வினைமுற்று என்பதை அவர் அறிந்திலர்.

ஆதி= ஆகின்றாய் என்றபடி.

பரத்தை = முன்னிலை; படர்க்கையில் பரத்தன் என்றாம். மேற்பட்ட வஸ்துக்களிலும் மேற்பட்ட வஸ்துவாக இராநின்றா யென்கை.

நரத்திலும் பிறத்தி = ராமகிருஷ்ணாதிரூபேண மனுஷ்ய ஜாதியிலும் பிறக்கின்டறா யென்கை.

நினாது = நினது என்றதன் நீட்டல்.

————————————————————————————

வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்
போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே
தேனகம் செய் தண்ணறு மலர்த் துழாய் நன் மாலையாய்
கூனகம் புகத்தெறித்த கொற்ற வில்லி யல்லையே –30-

பதவுரை

வானகமும்

–

வானுலகத்திலுள்ளளாரயும்
மண்ணகமும்

–

மண்ணுலகத்திலுள்ளாரையும்
ஏழ் வெற்பும்

–

ஸப்தகுலபர்வதங்களையும்
ஏழ் கடல்களும்

–

ஸப்தஸாகரங்களையும்
போனகம் செய்து

–

அமுது செய்து
ஆல் இலை துயின்ற

–

ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளின்
புண்டரீகனே!

–

தாமரை போன்ற அவயவங்களையுடைய பெருமானே!
தேன் செய் அகம்

–

தேன் நிறைந்த உட்புறத்தை யுடைத்தாய்
தண்

–

குளிர்ந்ததாய்
நறு

–

பரிமளிதமான
மலர் துழாய்

–

திருத்துழாயை
கல் மாலையாய்!

–

நல்லமாலையாக அணிந்தவனே! (நீ)
கூன்

–

(கூனியினுடைய) கூனானது
அகம் புக

–

உள்ளே யொடுங்கும்படி
தெறித்த

–

விட்டெறிந்த
கொற்றம் வில்லி அல்லையே

–

வெற்றி வில்லை யுடையவனான்றோ

போனகம் செய்து -அமுது செய்து
தேனகம் செய் -தேன் செய் அகம் தேன் நிறைந்த உட் புறத்தை யுடைய-
புண்டரீகனே –தாமரை போன்ற அவயவங்களை உடையவனே

————–

கால நேமி காலனே கணக்கிலாத கீர்த்தியாய்
ஞாலம் ஏழும் உண்டு பண்டோர் பாலனாய பண்பனே
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின்
பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யு மூர்த்தியே –31-

பதவுரை

காலநேமி காலனே!

–

காலநேமியென்னும் அஸுரனதுக்கு யமனானவனே!
கணக்கு இலாத கீர்த்தியாய்

–

எண்ணிறந்த புகழையுடையவனே!
பண்டு

–

முன்பொருகால் (ப்ரளய காலத்திலே)
ஞாலம் எழும் உண்டு

–

ஏழுலகங்களையும் அமுது செய்து
பாட்டு

–

மின்னறதெயிற்றரக்கன் வீழ
ஓர் பாலன் ஆய

–

ஒரு சிறுகுழந்தைவடிவமெடுத்த
பண்பனே!

–

ஆச்சர்யபூதனே
வேலைவேவ

–

கடல்நீர் வெந்து போம்படி
வில்வளைத்த

–

வில்லை வளைத்த.
வெல் சினத்த  வீர!

–

எதிரிகளை வென்றேவிடும்படியான சீற்றத்தையுடைய வீரனே!
நின்பாலர் ஆய பக்தர் சித்தம்

–

உன்பக்கல் அன்பு பூண்டவர்களின் சித்தத்தின்படி
முத்தி செய்யும்

–

(அவர்கட்கு) மோக்ஷம் தந்தருள்கிற
மூர்த்தியே!

–

ஸ்வாமியே!

கால நேமி -ராவணின் மாதுலன் –
வேலை வேவ -கடல் நீர் வெந்து போகும் படி
வில் வளைத்த வெல் சினத்த வீர -சிலர் கோபம் கொஞ்ச நேரம் சென்ற பின்பு தீரும் –
இவனது சினம் ஜயித்ததின் பின்பே தீரும் என்கிறார்

நின்பாலராய -உன்னிடத்து உள்ளவர்கள்
பத்தர் சித்தம் முத்தி செய்யு மூர்த்தியே –
மூர்த்தி -திவ்ய மங்கள விக்ரஹம் -வடிவு அழகைக் காட்டி தன் பக்கலில் ஆழம் கால் படுத்திக் கொள்ளுவான்
அன்பு பூண்டவர்களின் சித்தம் படி அவர்களுக்கு மோஷம் தந்து அருளிய ஸ்வாமியே

காலநேமி என்பவன் இராவணனுடைய மாதுலன்; இவன், தாரகாசுர யுத்தத்தில் எம்பெருமானாற் கொல்லப்பட்டவன்.

வேலை- கடற்கரைக்குப் பெயர்; இலக்கணையால் கடல்நீரைக் குறிக்கும்.

வெல்சினந்தவீர! = சிலருடைய கோபம் காலக்ரமத்தில் தன்னுடையே சாந்தமாவதுண்டு;

அங்ஙனன்றியே ஸமுத்ரராஜன்மீது பெருமாளுக்குண்டான கோபம் வெல்சினமாய்த்து;

வென்றாலன்றித் தீராத பாதச்சாசையிலே ஒதுங்கிவர்த்திக்கிற பக்தர்கள் என்கை.

முத்திசெய்தல்- வேறு விஷயங்களில் ஆசையற்றதாகச் செய்தல்.

மூர்த்தி- ஸ்வாமி; திவ்யமங்கள விக்ரஹமாகவுமாம்;

வடிவழகைக் காட்டித் தன் பக்கல் ஆழங்காற்படுத்திக் கொள்ளுமவனே! என்றவாறு

————-

குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய்
அரக்கர் அரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ
இரக்க மண் கொடுத்து அவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப நாபன் அல்லையே –32-

பதவுரை

குரங்கு இனம் படைகொடு

–

வாநகர்களின் திரளான சேனையைத் துணைகொண்டு
குரை கடலின் மீது போய்

–

கோஷிக்கின்ற கடலில் (அணைகட்டி) எழுந்தருளி
அங்கு

–

அவ்விலங்கையிலுள்ள
அரக்கர்

–

ராவணாதி ராக்ஷஸர்கள்
அரங்க

–

அழியும்படி
வெம் சரம்

–

தீக்ஷ்ணமான அம்புகளை
துரந்த

–

அவர்கள் மேல் பிரயோகித்த
ஆதி

–

வீரர்களில் தலைவன்
நீ

–

(எம்பெருமானே;) நீயே காண்க;
இரக்க

–

நீ வாமநனாய்ச் சென்று யாசிக்க
மண்கொடுத்தவற்கு

–

உனக்கு மூவடி நிலம் தானங் கொடுத்த மஹாபலிக்கு
இருக்க

–

குடியிருப்பதற்கு
ஒன்றும் இன்றியே

–

ஒருசாண்நிலமும் மிகாதபடி
பரக்க வைத்து

–

(திருவடியை) மிகவும் விஸ்தாரமாக வைத்து
அளந்து கொண்ட

–

(மூவுலகங்களையும்) ஸ்வாதீகப்படுத்திக் கொண்ட
பற்பபரதன் அல்லையே

–

தாமரைபோன்ற திருவடிகளையுடைய பெருமானும் நீயே காண்.

குரக்கினப் படை கொடு -வானரங்களில் திரளான சேனை கொண்டு
குரை கடலின் மீது போய்-கோஷிக்கின்ற கடலில் -சேது அணை கட்டி எழுந்து அருளி
அரக்கர் அரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ-இலங்கையிலே ராவணன் போன்றாரை அழிக்கும் படி
பரக்க -விஸ்தீரமாக அளந்து மா வுலகமும் ஸ்வீகாரமாகக் கொண்டார்-
இரக்கம் ஓன்று இன்றியே -என்றும்- இருக்க ஒன்றும் இன்றியே-என்றும் -பாட பேதம்-

யாசகவேஷத்தைப் பூண்டுகொண்டு சென்று யாசிப்பதும், பிறகு யாசகங் கொடுத்தவனுக்குக் குடியிருக்க

ஒரு அடிநிலமும் மிகாதபடி ஸர்வஸ்வாபஹாரம் பண்ணுவதும் உனக்குத்தான் ஏற்றிருக்குமென்கிறார் போலும்.

“இரக்கமொன்று மின்றியே” என்றே பெரும்பாலும் பாடம் வழங்கும்; பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செய்த வியாக்கியானத்தில்

“பூமியில் அவனுக்கு ஒரு பதயாஸமும் சேஷியாதபடி” என்றருளிச் செய்திருந்தலால்

“இருக்க ஒன்றுமின்றியே” என்று பாடமிருந்திருக்க வேணுமென்று பெரியோர் கூறுவர்.

“இரக்கமொன்றுமின்றியே” என்ற பாடத்திலும் வியாக்கியான வாக்கியத்தைப் பொருந்தவிடலாமென்பர்.

இதில் ஆக்ரஹமுடையோமல்லோம்

————–

மின் நிறத்து எயிறு அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து
பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோய்
நன் நிறத்து ஓர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர்ப்
பொன்னிறத்த வண்ணனாய புண்டரீகன் அல்லையே –33-

பதவுரை

மின் நிறத்து எயிறு அரக்கன்

–

மின்னல் நிறத்தையொத்த பற்களையுடையனான இராவணன்
வீழ

–

மாளும்படி
வெம் சரம்

–

கொடிய அம்புகளை
துரந்து

–

அவன் மேல் பிரயோகித்து (அவனை முடித்தருளி)
பின்னவற்கு

–

அவனது தம்பியான விபீடணனுக்கு
அருள் புரிந்து

–

க்ருபை செய்தருளி
அரசு அளித்த

–

பட்டாபிஷேகம் செய்து வைத்த
பெற்றியோய்!

–

பெருமானே!
நல் சிறத்து

–

நல்ல நிறத்தையுடையவளாய்
ஓர் இன் சொல்

–

ஒப்பற்ற மதுரமான வாக்கையுடையவளாய்
ஏழை

–

உன்பக்கல் சாபல்யமுடையவளான
பின்னை

–

நப்பின்னைப் பிராட்டிக்கு
கேள்வி

–

நாயகனானவனே!
மன்னு சீர்

–

நித்யளித்த கல்யாண குணங்களையுடையனாய்
பொன் நிறந்த வண்ணன் ஆய

–

பொன்போன்ற திவ்யமங்கள விக்ரஹத்தையுடையனான
புண்டரீகன் அல்லையே

–

புண்டரீகாக்ஷனென்பவன்  நீயே காண்

மின் நிறத்து எயிறு அரக்கன் -மின்னலை ஒத்த பற்களை உடைய ராவணன்
பின்னை கேள்வ -நப்பின்னை நாயகனாய்

இராவணனைக் கொன்றொழித்து ஸ்ரீவிபீஷணாழ்வானை இலங்கையரசனாக்கி

அருள் புரிந்தவாற்றைச் சொல்லிப் புகழ்கிறார் முன்னடிகளில்.

இராவணன் பார்க்கும் போதே பயங்கரமான வடிவுடையவன் என்பது தோன்ற மின்னிறத்தெயிற்றரக்கன் என்கிறார்.

வீழ – விழ என்பதன்  நீட்டல். பின்னவன் – தம்பி. வெற்றி – பெருமை.

—————-

ஆதி யாதி யாதி நீ ஓர் அண்டம் ஆதி ஆதலால்
சோதியாத சோதி நீ யது உண்மையில் விளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி ஆயனாய மாயம் என்ன மாயமே –34-

பதவுரை

ஆதி ஆதி ஆதி நீ

–

மூன்று விதமான காரணமும் நீயே யாகிறாய்:
ஒரு அண்டம் ஆதி

–

அண்டத்துக்குட்பட்ட  ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனுமாகிறாய்;
ஆதலால்

–

இப்படியிருக்கையாலே
சோதியாத சோதி நீ

–

பரீக்ஷிக்கவேண்டாத பரம்பொருள் நீ நீயேயாகிறாய்;
அது உண்மையில்

–

அந்த சோதியானது ப்ரமாணஸித்தாமகையாலே
விளங்கினாய்

–

(வேறொன்றாலன்றிக்கே) தானாகவே நீ விளங்குகின்றாய்;
வேதம் ஆகி

–

வேதங்கட்கு நிர்வாஹகனாய்
வேள்வி ஆகி

–

யஜ்ஞ்களாலே ஆராத்யனாய்
விண்ணினோடு மண்ணும் ஆய்

–

உபய விபூதிக்கும் நியாமகனாய்
ஆதி ஆகி

–

இப்படி ஸர்வகாரண பூதனாயிருந்து வைத்த
ஆயன் ஆய மாயம்

–

இடையனாய்ப் பிறந்தாமயம்
என்ன மாயம்

–

என்ன ஆச்சரியமோதான்.

ஆதி யாதி யாதி நீ
உபாதான சககாரி நிமித்த முக் காரணங்களும் நீயே

ஓர் அண்டம் ஆதி –
அண்டத்துக்கு உட்பட சகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகன்

ஆதலால்
சோதியாத சோதி நீ –
பரீஷிக்க வேண்டாத பரம் பொருள் நீயே-நாராயணா பரஞ்சோதி அன்றோ-

யது உண்மையில் விளங்கினாய்-
அந்த ஜோதி பிரமாண சித்தம் -வேறு ஒன்றாலும் அன்றிக்கே தானாகவே விளங்கிற்றே

வேதமாகி வேள்வியாகி-
வேதங்களுக்கு நிர்வாஹகனாய் யாகங்களால் ஆராத்யனாய்

விண்ணினோடு மண்ணுமாய்-
உபய விபூதிக்கும் நிர்வாஹகனாய்

ஆதியாகி ஆயனாய மாயம் என்ன மாயமே –
இப்படி சர்வ காரண பூதனாய் இருந்து ஆயனாய மாயம் என்ன மாயமே

உலகத்தில் ஒரு காரியம் பிறக்கவேணுமானால் அதற்கு மூன்று வகையான காரணங்கள் உண்டு:

உபாதாநகாரணம், ஸஹகாரிகாரணம் , நிமித்தகாரணம். குடம் என்கிற

ஒரு காரியம் பிறக்க வேண்டுமிடத்து மணல் உபாதான காரணமென்றும்,

சக்கரம் தடி தண்ணீர் முதலியவை ஸஹகாரிகாரணமென்றும்,

குயவன் காலம் அத்ருஷ்டம் முதலியவை நிமித்த காரணமென்றும் கொள்ளப்படும்;

அப்படியே ஜகத்தாகிற காரியத்துக்கு மூவகைக் காரணங்கள் அமையவேண்டுமே.

அவற்றில் எம்பெருமான் எவ்வகைக் காரணமாகிறானென்றால், மூவகைக் காரணமும் இவனொருவனே யென்கின்றார்

ஆதியாதியாதிநீ என்று. ஆதி என்றது காரணம் என்றபடி.

ஆதிசப்தத்தை மூன்று தடவைப் பிரயோகித்ததனால் மூவகைக் காரணமும் நீயே என்றதாகிறது.

ஓரண்டமாதி = அண்டமென்றது ஜாத்யேக வசநமாகக் கொள்ளத் தக்கது.

அண்டராசிகளை ஸ்ருஷ்டித்து அவற்றுள் பிரமன் முதல் எறும்பளவான ஸகல பதார்த்தங்களையும் ஸ்ருஷ்டித்து

அவற்றுக்கு அந்தர்யாமியாயிருக்கிறாய் என்றபடி.

இவ்விடத்தில் ஆதி என்றது- ஆகின்றாய் என்னும் பொருளையுடையதான நிகழ்கால முன்னிலை யொருமைவினைமுற்று.

ஆ- பகுதி;  தி- விகுதி.

ஆதலால் சோதியாத சோதி நீ = கார்யவர்க்கங்களிலே ஒருவனாயிருந்தால்

நீ பரஞ்சோதியா அன்றா என்று சோதித்துப் பார்க்க வேண்டியதாகும்;

அப்படியன்றியே ஸகல ஜகத் காரண பூதனாக அமைந்தயாகையினால் ஜ்யோதிச் சப்த வாச்யன் நீதான் என்று

எளிதாக நிர்ணயிக்கலாயிராநின்றது என்படி.

ஜகத் காரண பூதமான பொருள் எதுவோ அதுதான் உபாஸிக்கத் தகுந்ததென்றும்

அதுதான் பருங்சோதியென்றும் தோந்தங்களிற் கூறப்பட்டிருத்தலால்

உன்னைப் பற்றி சோதிக்க வேண்டிய வருத்தமில்லையென்கிறார். “***- என்றது காண்க.

————————————————————————–

அம்பு உலாவு மீனுமாகி யாமையாகி யாழியார்
தம்பிரானுமாகி மிக்க தன்பு மிக்க தன்றியும்
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என் கொலோ எம் ஈசனே –35-

பதவுரை

என் இசனே

–

எம்பெருமானே! (தேவரீர்)
ஆழியார் தம் பிரானும் ஆகி

–

திருவாழியாழ்வானையுடைய பரமபுருஷனாயிருந்து வைத்து
அம்பு உலாவும் மீனும் ஆகி

–

ஜலத்தில் உலாவுகின்ற மீனாகியும்
ஆமை ஆகி

–

ஆமையாகியும் (அவதரித்து)
மிக்கது

–

அதிசயத்தை அடைந்தருளிற்று
அன்பு மிக்கது

–

மிகுந்த அன்பையும் காட்டியருளிற்று;
அன்றியும்

–

இதற்கு மேலும்
கொம்பு அராவு நுண்மருங்குல் ஆயர் மாதர் பிள்ளை ஆய்

–

வஞ்சிக்கொம்பு போலும் அரவு போலும் நுட்பமான இடையையுடைய இடைப் பெண்ணுக்குப் பிள்ளையாய்ப் பிறந்து
எம்பிரானும் ஆய வண்ணம் என் கொல்

–

எம்பிரானுமாக நின்ற நிலையும் என்ன அற்புதம்!.

ஆழியான் தம்பிரான் ஆகியும் -சக்கரக்கையனாய் -பராத்பரனாய் இருந்தும்
அம்பு உலாவு மீனுமாகி -ஜலத்தில் உள்ள மீனுமாகியும்
மிக்க தன்பு மிக்க தன்றியும்-மிகுந்த அன்பையும் காட்டியும் அருளி
பல பிறப்பாய் ஓளி வரும் முழு நலம் -எனவே மிக்கதாய் –
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
கொம்பு போலேயும் பாம்பு போலவும் நுட்பமான இடை உடைய இடை பெண்ணின் பிள்ளையாய் பிறந்து

“ஆழியார் தம்பிரானாகியும் அம்புலாவு மீனுமாகி ஆமையாகி” என்று அந்வயித்துக் கொயாள்ள வேணுமென்பர்.

சக்கரத்தாழ்வாரை அடக்கி ஆளுமவன் என்றால் பரத்வத்திற்கு அதனில் மேற்பட்ட லக்ஷணமில்லை;

சக்கரக்கையன் என்பதும் பராத்பரன் என்பதும் பரியாயமாகக் கொள்ளத்தக்கவை;

ஆகவே, “ஆழியார் தம்பிரானாகியும்” என்றது- பாரத்பரனா யிருந்துவைத்தும் என்றபடியாம்-

பரத்வத்தைப் பேணாமல் மீனாவும் ஆமையாயும் பிறந்தவாறு என் கொல்? என்கிறார்.

மிக்கது = இப்படி க்ஷûத்ரயோநிகளிற் பிறந்ததைப் பாவிகள் தாழ்வாக நினைத்தாலும்

ஞானிகள் “பி பிறப்பாயொளிவரு முழுநலம்” என்று- பிறக்கப் பிறக்க ஒளிவளர்வதாக அருளிச் செய்வராகையாலே

அப்படியே இவருமருளிச் செய்கிறார்.

மிக்கது- தாழ்ந்து பிறந்தாலும்  மேன்மையே விளங்க நின்றீர் என்கை.

இது முன்னிலைப் பொருளில் வந்த படர்க்கை; ***- என்று வடநூலார் பிரயோகிப்பதுபோல:

இப்பிரயோகம் கௌரவாதி சயத்தைக் காட்டும். அன்புமிக்கது என்ற விடத்தும்

இங்ஙனமே. தாழ்பிறந்தாகிலும் அடியார்களின் காரியத்தைக் குறையறச் செய்து முடிக்க

வேணுமென்னும் அன்பினால் இப்படி பிறந்தாய் என்று கருத்து.

———————————————————————————

ஆடகத்த பூண் முலை யசோதை யாய்ச்சி பிள்ளையாய்ச்
சாடுதைத்த தோர் புள்ளதாவி கள்ளதாய பேய் மகள்
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பாலமுது செய்
தாடகக் கை மாதர் வாய் அமுதுண்டது என் கொலோ –36-

பதவுரை

ஆடகந்தபூண் முலை

–

ஸ்வர்ணமயமான ஆபரணங்களையணிந்த ஸ்தமங்களையுடையளான
அசோதை ஆய்ச்சி பிள்ளை ஆய்

–

யசோதையென்னும் கோபிகைக்கு புத்திரனாய்ப் பிறந்தருளி
சாடு உதைத்து

–

சகடாசுரனைத் திருவடிகளால் உதைத் தொழித்து
ஓர் புள்ளது அவி கள்ள தாயபேய் மகள்

–

சிறு குழந்தைகளை அனுங்கப் பண்ணுவதொரு பறவையின் வடிவுகொண்டு வந்தருத்ரிம மாதாவாகிய பூதனையானவள்
வீட

–

நீ உயிர்விட்டு மாளும்படி
வைத்த

–

உன் திருப்வளத்திலே வைத்த
வெய்ய  கொங்கை

–

(விஷம் தீற்றின) கொடிய முலையிலுள்ள
ஐய பால்

–

ஸூக்ஷ்மமான பாலை
அமுதுசெய்து

–

உறிஞ்சியுண்டு
ஆடகம் கை மாதர்

–

பொன்வளைகள் அணிந்த கைகளையுடைய ஸ்த்ரீகளினுடைய
வாய் அமுதம் உண்டது

–

அதரத்திலுள் அமுதத்தைப் பருகினது
என்கொல்

–

என்ன வித்தகம்!

ஆடகத்த பூண் முலை –
ஸ்வர்ண மயமான ஆபரணங்களை அணிந்த ஸ்தனங்களை உடையவளான
யசோதை யாய்ச்சி பிள்ளையாய்ச்-சாடுதைத்த தோர் புள்ளதாவி கள்ளதாய பேய் மகள்-
சகடாசுரனை திருவடிகளால் உதைத்து ஒழித்து -சிறு குழந்தைகளை அணுகப் பண்ணும் பறவை வடிவும் கொண்டு
க்ருத்ரிமான தாய் வடிவம் கொண்டு வந்த பூதனை உயிர் விட்டு மாளும் படி
தாடகக் கை மாதர்-பொன் வளைகள் அணிந்த மாதர்கள்
வாய் அமுதுண்டது என் கொலோ -அதரத்தின் அமுதத்தை பருகினது –
உன்னையும் ஓக்கலையில் கொண்டு தமில் மருவி உன்னோடு தங்கள் கருத்தாயின செய்து வரும் கன்னியரும் மகிழ
என்றபடி இவனை இடுப்பில் எடுத்துக் கொண்டு
தங்கள் தங்கள் மனைகளுக்கு கொண்டு போக அவர்களின் வாய் அமுதத்தை உண்பான் –
பூதனை பக்கலில் உண்ட விஷத்துக்கு இந்த அமிர்தம் பரிகாரமோ என்கிறார் –

ஆடக்கை மாதர்வா யமுதமுண்டது என்கொல்?  =

“உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தமில்மருவி உன்னோடுதங்கள் கருத்தாயின செய்துவருங் கன்னியரும் மகிழ” என்றபடி

திருவாய்ப்பாடியிலுள்ள கன்னிகைகள் இவனை யிடுப்பில் எடுத்துக்கொண்டு தங்கள் தங்கள் மனைகளிலே கொண்டுபோக,

யௌவந தசையைப் பரிக்ரஹிந்து வித்தகனாய்க்கலந்து  அவர்களது வாயமுகத்தை உண்பன்; அதனைச் சொல்லுகிறார்.

ஆடகக்கை மாதர் என்றது- பொன்வளைகளாலே அலங்கரிக்கப்பட்ட கையையுடைய பெண்கள் என்றபடி.

(ஆடகம் என்ற காரணச்சொல் காரியத்திற்கு இலக்கணையால் வாசகமாயிற்று.)

கண்ணபிரான் பிடிக்கும் கையென்றும், கண்ணபிரான் அணைக்குங் கையென்றும் அலங்கரிப்பவர்களாம்.

வாயமுதமுண்டது என்கொல்! = பூதபக்கல் உண்ட விஷத்திற்கு இவ்வமுதம் பரிஹாரமோ? என்றவாறு

——————

காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம்
சாய்த்து மா பிளந்த கைத்தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின்
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா –37-

பதவுரை

காய்ந்த

–

காய்கள் நிறைந்ததும்
நீள்

–

உயர்த்தியையுடையதுமான
விளங்கனி

–

(அஸுராவிஷ்டமான) விளாமரத்தின் கனிகளை
உதிர்த்து

–

உதிரச்செய்து (அவ்வசுரனைக் கொன்று)
எதிர்த்த பூ குருந்தம்

–

எதிரிட்ட வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமசுரனை இரு துண்டமாகப் பிளந்து
சாய்த்து

–

முடித்து
மா பிளந்த

–

குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமசுரனை இரு துண்டமாகப் பிளந்த
கைத் தலத்த

–

திருக்கைகளையுடைய
கண்ணன் என்பர்

–

கண்ணன் என்று (உன்னை அறிவுடையார்) சொல்லுவார்கள்.
ஆய்ச்சி பாலை

–

யசோதைப் பிராட்டியினுடைய முலைப்பாலை
உண்டு

–

அமுது செய்து
வெண்ணெய் உண்டு

–

நவநீதத்தை அமுத செய்து
பேய்ச்சிபாலை உண்டு

–

பூசதனையினுடைய முலைப்பாலை உண்டு
பின்

–

கல்ப்பத்தின் முடிவில்
மண்ணை

–

பூமியை
உண்டு

–

திருவயிற்றிலே வைத்து
பண்டு

–

கல்பத்தின் ஆதியிலே
ஓர் ஏனம் ஆய

–

ஒப்பற்ற வராஹருபியாய் அவதரித்த
வாமனா

–

வாமந மூர்த்தியே!

காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து –
காய்கள் நிறைந்தும் உயர்த்தியையும் உடைய -அசூர விசிஷ்டமான விளா மரத்தின்-
கனிகளை உதிரச் செய்து -அவனைக் கொண்டு
எதிர்ந்த பூங்குருந்தம் சாய்த்து-
எதிர்த்த அழகிய குருந்த மரத்தில் உள்ள அசுரனை முடித்து
மா பிளந்த –
குதிரை வடிவு கொண்டு வசந்த கேசி என்னும் அசுரனை இரண்டு துண்டாக பிளந்த
கைத்தலத்த கண்ணன் என்பரால்
திருக் கைகளை உடைய கண்ணன் என்று அறிவுடையார் சொல்லுவார்கள்
ஆய்ச்சி பாலை உண்டு –
யசோதைப் பிராட்டி உடைய முலையில் பால் உண்டு
மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின்-பேய்ச்சி பாலை உண்டு
பாலை உண்டு வெண்ணெய் உண்டு பின் மண்ணை உண்டு -கல்பத்தின் முடிவில் பூமியைத் திரு வயிற்றிலே வைத்து
பண்டு ஓர் ஏனமாய வாமனா –
கல்பத்தின் ஆதியிலே ஒப்பற்ற வராஹ ரூபமாகி -திருவவதரித்த வாமன மூர்த்தியே

—————————————————————–

கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஓர் பொய்கை வாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண தண் துழாய்
வடம் கலந்த மாலை மார்ப காலநேமி காலனே –38-

பதவுரை

கடம் கலந்த

–

மதஜலத்தால் வ்யாப்தமான
வன் கரி

–

வலிய (குவலயாபீடமென்ற) யானையினுடைய
மருப்பு

–

கொம்பை
ஒசித்து

–

முறித்தெறிந்து
ஓர் பொய்கை வாய்

–

ஓர் மடுவின் துறையிலே
விடம் கலந்த பாம்பின் மேல்

–

விஷமனான காளியநாகத்தின் மேல்
நடம் பயின்ற

–

நர்ததனம் செய்தருளின

நாதனே! ஸ்வாமியே!

குடம் கலந்த கூத்தன் ஆய

–

குடக்கூத்தாடின
கொண்டல் வண்ண!

–

காளமேகம் போன்ற கண்ணபிரானே!
தண் துழாய் வடம் கலந்த மாலை மார்ப

–

குளிர்ந்த திருத்துழாய் வடத்தோடு கூடன மாலையை அணிந்த திருமார்பையுடையவனே!
காலநேமி காலனே!

–

காலநேமியென்னும் அசுரனுக்கு ம்ருத்யுவானவனே! (என்று ஈடுபடுகிறார்.)

கடம் கலந்த –
மத ஜலத்தால் வ்யாப்தமான
வன் கரி –
வலிய குவலையா பீடம் என்னும் யானையை
மருப்பு ஒசித்து-
கொம்பை முறித்து எறிந்து
ஓர் பொய்கை வாய்-
ஒரு மடுவின் துறையிலே
விடம் கலந்த பாம்பின் மேல் –
விஷ மயமான காளியன் நாகத்தின் மேலே
நடம் பயின்ற நாதனே-
நடனம் செய்து அருளின ஸ்வாமியே
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண-
குடக் கூத்தாடின கார் மேகம் போன்ற நிறம் உடைய கண்ண பிரானே

——————————————————————

வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் அதன்றியும்
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே –39-

பதவுரை

வெற்பு எடுத்து

–

மந்தர பர்வதத்தைக்கொண்டு
வேலை நீர்

–

கடல் நீரை
கலக்கினாய்

–

கலங்கச் செய்தாய்
அது அன்றியும்

–

அதுவு மல்லாமல்
வெற்பு எடுத்து

–

மலைகளைக்கொண்டு
வேலை நீர்

–

(தெற்குக்) கடலிலே
வரம்பு கட்டி

–

திருவணையைக்கட்டி
வேலைசூழ்

–

கடலாலே (அகழாகச்) சூழப்பட்டதாயும்
வெற்பு எடுத்த இஞ்சி சூழ்

–

மலையான மதினாலே சூழப்பட்டதாயுமுள்ள
இலங்கை

–

லங்கையினுடைய
கட்டு

–

அரணை
அழித்த

–

அழியச் செய்த
நீ

–

தேவரீர்
வெற்பு எடுத்து

–

கோவர்த்தனமலையைக் குடையாக வெடுத்து
மாரி காத்த

–

மழையைத் தடுத்த
மேகம் வண்ணன் அல்லையே

–

காளமேக நிபச்யாமரன்றோ!

வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் –
மந்திர பர்வதத்தைக் கொண்டு கடல் நீரைக் கலங்கச் செய்தாய்
அதன்றியும்
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி –
மலைகளைக் கொண்டு தெற்குக் கடலில் அணை கட்டினாய்
வேலை சூழ் வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ-
கடலாலே அழகாக சூழப் பட்ட -திரிகூட பர்வத மலையாலும் சூழப் பட்ட இலங்கையை -அரணை அழியச் செய்த தேவரீர்
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே-
கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்து மழையைக் காத்த காள மேக சியாமளன் தானே என்கிறார்

————-

ஆனை காத்து ஓர் ஆனை கொன்று அதன்றி ஆயர் பிள்ளையாய்
ஆனை மேய்த்தி ஆ நெய் உண்டியன்று குன்றம் ஒன்றினால்
ஆனை காத்து மை யரிக்கண் மாதரார் திறத்து முன்
ஆனை யன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே –40-

பதவுரை

ஆனை காத்து

–

கஜேந்த்ராழ்வானைக் காத்தருளி
அது அன்றி

–

அவ்வளவேயல்லாமல்
ஆயர்பிள்ளை ஆய்

–

கோபாலகுமாரனாகி
ஓர் ஆனை கொன்று

–

குவலயாபீடமென்ற ஒரு யானையைக் கொன்று
ஆனை

–

பசுக்களை
மேய்த்தி

–

மேய்த்தருளா நின்றாய்;
ஆ நெய்

–

பசுக்களின் நெய்யை.
உண்டி

–

அமுது செய்யா நின்றாய்;
அன்று

–

இந்திரன் விடாமழை பெய்வித்தகாலத்தில்
குன்றம் ஒன்றினால்

–

கோவர்த்தநமென்ற ஒரு மலையைக் கொண்டு
ஆனைக் காட்டு

–

பசுக்களை ரக்ஷித்து
மை அரி கண் மாதரார் திறந்து

–

மையணிந்து செவ்வரி படர்ந்த கண்ணையுடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக
அன்று

–

அக்காலத்திலே
முன்சென்று

–

அவளெதிரே நின்று

ஆனை அடர்ந்த மாயம் எருதுகளேழையுங் கொன்ற ஆச்சரியம்

என்ன மரயம்

–

என்ன ஆச்சரியம்!

 

ஆனை காத்து ஓர் ஆனை கொன்று-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானைக் காத்து -குவலயா பீடம் என்ற யானையைக் கொன்று
அதன்றி ஆயர் பிள்ளையாய்-ஆனை மேய்த்தி –
பசுக்களை மேய்த்து அருளினாய்
ஆ நெய் உண்டியன்று குன்றம் ஒன்றினால் ஆனை காத்து-
பசுக்களின் நெய் அமுதத்தையும் உண்டு அருளினாய் –
இந்த்ரன் மழை பெய்வித்த அந்த காலத்தில் கோவர்த்தன மலை கொண்டு-பசுக்களைக் காத்து அருளினாய்
மை யரிக்கண் மாதரார் திறத்து முன் ஆனை யன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே –
மை அணிந்து செவ்வரி படர்ந்த நப்பின்னை பிராட்டிக்காக –
அக்காலத்திலே அவள் எதிரிலே சென்று ஏழு எருதுகளையும் கொன்றது என்ன ஆச்சர்யம்
ஆ –ஆன் -இரண்டுமே பசுவுக்கு பெயர் –

இரண்டாமடியில், ஆனை= ஆன் ஐ;  ஆன்- பசு ஜாதி; ஐ- இரண்டாம் வேற்றுமையுருபு.

மேய்த்தி. உண்டி = முன்னிலையொருமை வினைமுற்றுக்கள்.

மூன்றாமடியில் “ஆனைக்காத்து” என்று ஸந்தியாகவேண்டுமிடத்து ‘ஆனைகாத்து’ என இயல்பாக நின்றது எதுகை நயம் நோக்கியென்க.

ஆ என்றும் ஆன் என்றும் நோக்களுக்குப் பெயர்.

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-1-20- -ஸ்ரீ உ வே -PBA -ஸ்வாமிகள்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

February 9, 2020

ஸ்ரீ திருக் கச்சி நம்பி அருளிச் செய்த தனியன்

தருச்சந்த பொழில் தழுவு தாரணியின் துயர் தீரத்
திருச்சந்த விருத்தம் செய் திரு மழிசைப் பரன் வருமூர்
கருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கு மண நாறும்
திருச்சந்ததுடன் மருவு திருமழிசை வளம் பதியே –

தருச்சந்த பொழில் தழுவு தாரணியின் -விருக்ஷங்களினுடைய அழகை யுடைய சோலைகளாலே சூழப்பட்ட
பூமியில் உள்ளவர்களுடைய
துயர் தீர–துக்கம் தீரும் படியாக
திருச்சந்த விருத்தம் செய் திரு மழிசைப் பரன் வருமூர்-திருவவதரித்த திவ்ய தேசம் ஏது என்றால்
கருச்சந்தும் -பெருமை பொருந்திய சந்தன மரங்களும்
காரகிலும் -கறுத்த அகில் கட்டைகளும்
கமழ் கோங்கு –மணம் மிக்க கோங்கு மரங்களும்
மண நாறும்-பரிமளம் வீசப் பெற்றதாய்
திருச்சந்ததுடன் மருவு -பெரிய பிராட்டியார் அபி நிவேசத்துடன் பொருந்தி வாழப் பெற்றதான
திருமழிசை வளம் பதியே –செல்வம் மிக்க திவ்ய தேசம்

தாரணியின் துயர் தீர ..திருமழிசை வளம் பதியே
”கண்டியூர் அரங்கம் மெய்யம் கட்சி பேர் மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே போல .
“பதியே பரவி தொழும் தொண்டர் தமக்கு கதியே போல
திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே
விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேங்கடம் –
சமன் கொள் வேங்கடமே -போலே திவ்ய தேசமே பரம ப்ராப்யம்

———-

திரு அவதார ஸ்தலம் பாடுகிறார் –

உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து தம்மில்
புலவர் புகழ்க் கோலால் தூக்க -உலகு தன்னை
வைத்து எடுத்த பக்கத்தும் மா நீர் மழிசையே
வைத்து எடுத்த பக்கம் வலிது

சர்வஞ்ஞராகிய சதுர் முகர் விஸ்வகர்மாவைக் கொண்டு துலாக்கோலால் நாட்டி
வசிஷ்டர் பார்க்கவர் போன்றோருக்கு எடுத்துக் காட்டிய விருத்தாந்தம் -புராண சித்தம் –
புலவர் -பார்க்கவாதி மஹரிஷிகளான மஹா கவிகள் -என்பர் ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்
புகழ்க்கோல்-பெருமையை விளக்கும் துலாக்கோல்
திருமழிசையின் அநந்ய அசாதாரணமான ஏற்றம் சொல்லிற்று ..மஹீஷா சார ஷேத்ரம்
ஜகன் நாதன் இறே அங்கே நித்ய வாஸம் பண்ணுகிறது –
சிந்தயேத் ஸ ஜகந்நாதம் விஷ்ணும் ஜிஷ்ணும் சநாதனம் -என்னக் கடவது இறே
அத்தாலே வைத்தெடுத்த பக்கம் வலிதாய்த்து

————-

எழுத்து அசை சீர் தளை அடி தொடை -இந்த ஆறு உறுப்புக்களையும் கொண்டு
வெண்பா -ஆசிரியப்பா -கலிப்பா -வஞ்சிப்பா -என்ற நான்கு பா இனங்களுக்கும்
துறை தாழிசை விருத்தம் -மூன்று இனங்கள் யாப்பு இலக்கணத்தில் உண்டு
இது எழு சீர்க் கழி நெடில் அடி ஆசிரிய விருத்தத்தில் அமைந்த திவ்ய பிரபந்தம்
ஓன்று முதல் ஆறு சீர்கள் மாச்சீர்கள் ஏழாவது விளாச் சீர்
தான தான தான தான தான தான தானனா –சந்தங்களில் அமைத்தது -சந்த விருத்தம் என்றும்
கவி விருத்தம் என்றும் சொல்வர் –

ஒரு பிறவியில் இரண்டு குலங்கள்-யது குலம் ஆய்க்குலம் கண்ணனைப் போலவே
ரிஷி குலம் பிரம்பு அறுத்த தாழ்ந்த குலம் இவரும்
சர்வேஸ்வரன் மயர்வற மதிநலம் அருளி சர்வத்தையும் காட்டிக் கொடுக்க நெடும் காலம் இவ்விபூதியிலே இருந்து
ஸ்ரீ மன் நாராயணனுடைய பரத்வத்தை பலவாறும் அருளிச் செய்த இடத்தும் சம்சாரிகள் திருந்தக் காணாமையாலே
அவனது பெருமையை வாய் வேறுவப்பெற்ற தமது பாக்யத்தை அவன் திரு அருளால் பெற்றதை பேசி அருளுகிறார் இதில்

————-

பூநிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லீரே –1-

பூநிலாய ஐந்துமாய் -பூமியில் தங்கி இருக்கிற சப்தாதி -சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்கள்-ஐந்து குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
புனல் கண் நின்ற நான்குமாய்-நீரிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள்-நான்கு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
தீநிலாய மூன்றுமாய் -தேஜஸ்ஸிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப-மூன்று குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
சிறந்த கால் இரண்டுமாய்-சர்வ பிராணிகளுக்கும் ஜீவன ஹேது வாகையாலே ஸ்ரேஷ்டமான வாயுவில் உள்ள
சப்த ஸ்பர்சங்கள் இரண்டு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
மீநிலாய தொன்றுமாகி -ஆகாசத்தில் உள்ள சப்த குணம் ஒன்றுக்கும் நிர்வாஹகனாய்
வேறு வேறு தன்மையாய்-பரஸ்பரம் விலக்ஷணமான தேவாதி பதார்த்தங்களும் அந்தராத்மாவாய்
நீநிலாய வண்ண –கார்ய காரண வர்க்கத்தில் நிற்கும் பிரகாரத்தை உடையனாய்-நீ நிற்கிற படியையும்
நின்னை –சித் அசித் விசிஷ்டமாய் கொண்டு ஜகத் உபாதான காரணமாய் நிற்கிற உன்னையும்
யார் நினைக்க வல்லீரே –ஸூவ ப்ராயத்தினால் யார் தான் சிந்தித்து அறியக் கடவர்

பூ நிலாய ஐந்து .”பிராக்ருத சிருஷ்டி அருளுகிறார் ..பூமிக்கு ஐந்து குணங்களும்(மணம் ரசம் , ரூபம் ,ஸ்பர்சம் சப்தம் )
புனல் =நீருக்கு நான்கும் ,தீ -தேஜஸ் மூன்றும் ,வாயு (சிறந்த கால் =சர்வ பிராணிகளுக்கும் ஜீவன ஹேது )இரண்டும்
ஆகாசத்துக்கு மீநிலாயது )ஒன்றும் -சப்தம் மட்டும் ..இப்படி பஞ்ச பூதங்களும் குணங்களும் அவன் இட்ட வழக்காக இருக்கும்
”வேறு வேறு தன்மையாய் நீர் நிலய வண்ணம் நின்னை “என்று விலஷணமாய் இருக்கும் யாவற்றுக்கும் ஆத்மாவாக இருக்கிற படியையும்
உன்னையும் “யார் நினைக்க வல்லார் யாராலே ஸ்வ பிரயத்தனத்தால் நினைக்க முடியும் என்கிறார்-

ஆகாசாத் வாயு -வாயோர் அக்னி -அக்நேர் ஆப -அத்ப்ய ப்ருத்வீ–தைத்ரியம்

ஆகாசத்தில் சப்தம் ஒன்றும்
காற்றில் -சப்தம் ஸ்பர்சம்
தீயில் -சப்தம் ஸ்பர்சம் ரூபம்
புனல் கண் -சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரசம்
பூமியில் -சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரசம் கந்தம்

ஆத்மாக்கள் ஞாத்ருத்வாதிகளால் ஒன்றாக இருந்தாலும் கர்மாதீனமாக தேவாதி உபாதிகள் இருப்பதால்
வேறு வேறு தன்மையாய் உண்டே

இது வேதாந்த பிரமாணம் கைப்படாத குத்ருஷ்டிகளுக்கோ -பேதாபேதிகளுக்கோ –மாயா வாதிகளுக்கோ நினைக்க ஒண்ணாதே
பரமாணுக்களே -உபாதான காரணம் -என்னும் வைசேஷிகர் நினைக்க வல்லர் அல்லர்
பிரதானமே -உபாதான காரணம் -என்னும் -சாங்க்யர் நினைக்க வல்லர் அல்லர்
நிமித்த உபாதனங்களுக்கு பேதம் சொல்லும் சைவர் நினைக்க வல்லர் அல்லர் –
சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயமும் பரஹம பரிணாமம் என்னும் பேத அபேத வாதிகள் நினைக்கவோ –
நிர்விசேஷ சிந் மாத்ரம் ப்ரஹ்மம் தத் வ்யதிகரங்கள் அபரமார்த்தங்கள் என்னும் மாயாவாதிகள் நினைக்கவோ –
வேதாந்த ப்ரேமேயம் கைப்பட்டார் ஒழிய ஆர் நினைக்க வல்லர்
பாஹ்ய குத்ருஷ்டிகளால் நினைக்க ஒண்ணாது -என்கிறார் –

அண்டங்களுக்குக் காரணமாய் குணங்களோடு கூடிய நிலம் நீர் தீ கால் விசும்பெனும் ஐம்பூதங்கட்கு அந்தராத்மாவாய்  நிற்கிற நீயே உபாதாந காரணம்;

இப்பரமார்த்தமானது வேதாந்தப்ரமேயம் கைப்படாத பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு நெஞ்சில்புக வழியில்லையென்கிறது, இப்பாட்டு,

இது எம்பெருமானை முன்னிலையாக்கிச் சொல்லும் பாரசுமாயிருத்தலால் விளி வருவித்துக் கொள்ளப்பட்டது.

இப்பாட்டின் முன் இரண்டரையடிகளால் பிராக்ருத ஸ்ருஷ்டி சொல்லப்படுகிறது,

ஸாதாரனமாய் ப்ருதிவிக்கு மனம் குணமென்றும்,

அப்புக்கு ரஸம்குணமெனறும்,

தேஜஸ்ஸுக்கு ரூபம் குணமென்றும்,

வாயுவுக்கு ஸ்பர்சம் குணமென்றும்,

ஆகாசத்திற்கு  சப்தம் குணமென்றும்

இங்ஙனே ஒவ்வொரு பூதத்திற்கு ஒவ்வொன்று குணமாகச் சொல்லப்பட்டிருந்தாலும், ‘

காரணவஸ்துவிலுள்ள குணங்கள் காரியத்தில் வந்து சேருகின்றன’ என்ற நியாயப்படி

பூமிக்கு ஐந்து குணங்களும்,

ஜலத்திற்கு நான்கு குணங்களும்,

தேஜஸ்ஸுக்கு மூன்று குணங்களும்,

வாயுவுக்கு இரண்டு குணங்களும் உண்டு.

கைத்திரீயோப நிஷத்தில்- “ஆகாசாத்வாயு; வாயோரக்நி; அக்நேராப: அத்ப்ய: ப்ருதீவீ,” என்று

ஆகாசத்தில் நின்றும் வாயுவும்,

வாயுவில் நின்றும், அக்நியும்,

அக்நியில் நின்றும் ஜலமும்,

ஜலத்தில் நின்றும் ப்ருதிவியும் உண்டாவதாக ஓதப்பட்டிருக்கின்றது.

ஆகாசத்தில் நின்றும் பிறக்கிற வாயுவானது தன் குணமாகிய ஸ்பர்சத்தோடு கூட ஸ்வ காரணமான ஆகாசத்தின் குணமாகிய சப்தத்தையும் உடைத்தானதாம்.

வாயுவின் நின்றும் பிறக்கிற அக்நியானது தன்குணமாகிய ரூபத்தோடு கூட ஸ்வகாரணமான வாயு வினிடத்துள்ள சப்தஸ்பர்சங்களையும் உடைத்தானதாம்.

அக்நியில் நின்றும் பிறக்கிற ஜலமானது தன்குணமாகிய ரஸத்தோடுகூட ஸ்வகாரணாமன அக்நியிடத்துள்ள சப்தஸ்பர்சரூபங்களையும் உடைத்தானதாம்.

ஜலத்தில் நின்றும் பிறக்கிறபூமியானது தன் குணமாகிய கந்தத்தோடுகூட ஸ்வகாரணமாக ஜலத்திலுள்ள சப்தஸ்பர்ரூபரஸங்களையும் உடைத்ததானதாம்.

ஆகவே, பூமியானது ஐந்து குணங்களை உடைத்தானதாகவும்,

ஜலமானது நான்கு குணங்களை உடையதாகவும்,

அக்நியானது மூன்று குணங்களையுடையதாகவும்,

வாயுவானது இரண்டு குணங்களையுடையதாகவும்,

ஆகாசமானது ஒரு குணத்தை உடையதாகவும் ஆயிற்று.

இந்த ப்ரக்ரியையைத் திருவுள்ளம் பற்றியே “பூநிலாயவைந்தும்” இத்யாதிகள் அருளிச்செய்யப்பட்டனவென்க.

இப்படி ஒரு பூதத்தில் நின்றும் மற்றொரு பூதமுண்டாவதாகச் சொல்லப்பட்ட ப்ரக்ரியை தவிர,

தந்மாத்ரத்தில் நின்றும் தந்மாத்ரம் பிறக்கை,

பூதத்தில் நின்றும் தந்மாத்ரம் பிறக்கை முதலிய ப்ரகாராந்தரங்களும் உண்டாயினும்,

அதுவுமன்றி, பஞ்சீகரண ப்ரக்ரியையாலே எல்லாப்பூதங்களிலும் எல்லாக் குணங்களுமே ஏற்றத்தாழ்வாக இருக்குமென்கிற கோட்பாடு முண்டாயினும்,

இங்கே *ஆகாசாத் வாயு:* என்று கீழே உதாஹரிக்கப்பட்ட ச்ருதிச் சாயையாலே அருளிச் செய்யப்பட்டிருக்கிறதென்றுணர்க.

இந்தப்ரக்ரியை ஸ்ரீவிஷ்ணு புராணத்திலும் (முதல் அம்சம், இரண்டாமத்தியாயம், ச்லோ 50.) ஸ்பஷ்டம்.

(1). பூமியில்- சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம்

(2) புனற்கண் -சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம்.

(3) தீயில்- சப்தம், ஸ்பர்சம், ரூபம்.

(4) காற்றில் – சப்தம், ஸ்பர்சம்.

(5) ஆகாயத்தில்- சப்த மொன்றே.

ஆக இப்பஞ்சபூதகுணங்கள் எம்பெருமானாயிருக்கையாவதென்? எனில்;

பஞ்சபூதங்கள் எப்படி எம்பெருமானிட்ட வழக்காயிருக்கின்றனவோ,

அப்படியே அவற்றின் குணங்களும் அவ்வெம்பெருமாளிட்ட வழக்காயிருக்கின்றனவென்றவாறு.

“வேறு வேறு தன்மையாய்” என்றது அண்டத்துக்கு உட்பட்டவையாய் ஒன்றுக்கொன்று விலக்ஷணங்களாயுள்ள தேவாதி பதார்த்தங்கட்கெல்லாம் ஆத்மாவாயிருக்கும்படியைச் சொல்லுகிறது.

ஆத்மாக்கள் அனைவரும் ஜ்ஞாத்ருத்வாதிகளாலே வேற்றுமையின்றி ஒரு படிப்பட்டிருந்தாலும் கர்மாதீநமாக வருகிற தேவத்வமநுஷ்யத்வாதிகளாகிற உபாதிகள் வெவ்வேறுபட்டனவாதல்பற்றி “வேறு வேறு தன்மையாய்” எனப்பட்டதென்ப.

ஆர் நினைக்கவல்லர்? என்றது- நினைக்கவல்லார் ஒருவருமில்லை யென்ற குறிப்பு.

பேதாபேதிகள் நினைக்கவோ?

நிர்விசேஷவஸ்துவ்யதிரிக்தங்கள் அபரமார்த்த மென்னும் மாயாவாதிகள் நினைக்கவோ? என்கிறார்.

—————

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞாநமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே –2-

“ஆறும் ஆறும் ஆறு மாய “..
முதல் ஆறு
அந்தணர்கள் ஆறு கர்மாக்களை —அத்யயனம் (தான் ஓதுதல் ),அத்யாபனம் (ஓதுவித்தல் )
யஜனம் தான் வேள்வி செய்தல் ),யஜனம் (பிறரை வேள்வி செய்வித்தல் ),தானம் (தான் கொடுப்பது )
ப்ரதிக்ரஹம் (பிறர் தருவதை வாங்கி கொள்ளுதல் ) இந்த கருமங்களுக்கு அவன் நிர்வாஹகன் .
முதல் ஆறு, வேதமோதல் முதலான தொழில்களைச் சொல்வது. படிப்பது, கற்பது, படிக்க வைப்பது, கற்பிப்பது,
கொடுப்பது, பெறுவது என்று ஆறு செயல்கள் சொல்லப்படுகின்றன

அடுத்து ருது ஆறு —
வசந்தம் ,க்ரீஷ்மம் ,வர்ஷ ,சரத் ,ஹேமந்தம் ,சிசிரம் –இந்த ருதுக்களும் அவன் பிரவர்தகன்.
அவை கார்; கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகியன.

அடுத்த ஆறு
யக்ஜம் –ஆக்ஞேயம் ,அக்நீஷோமீயம் ,வுபாம்சுயாஜம் ,ஐந்தரம் ,இரண்டு ஐந்த்ராஞ்ஞம் —
ஆக்னேயம் முதலிய யாகங்கள். வேதம் ஓதல், வேள்வி வளர்த்தல், திருப்பலி கொடுத்தல்,
தானம் செய்தல் போன்று யாகங்கள் செய்பவர்கள் அனுஷ்டிக்கத் தக்க ஆறு செயல்கள்.
இவற்றில் முதல் மூன்றும் பவுர்ணமியில் செய்யப்படும் யாகங்கள் -பவுர்ணமாஸம் என்றும்
அடுத்த மூன்றும் அமாவாசையில் செய்யப்படும் யாகங்கள் என்பதால் தர்சம் என்றும்
இவை ஆறும் ஸ்வர்க்க பலத்துக்காக செய்யப்படுவதால் தர்ச பவுர்ணமாஸம் என்று ஒரே பெயராகச் சொல்லப்படும்
இவனே சர்வ தேவதைகளுக்கும் சரீரியாய் இருந்து தானே சர்வ யஜ்ஞா போக்தாவாகிறான்

அடுத்து ஐந்து
யஜ்ஞம் தேவ ,பித்ரு ,பூத ,மனுஷ ,ப்ரஹ்ம –பஞ்ச மஹா யக்ஜம் அருளுகிறார்
பஞ்ச யஜ்ஞா போக்தாவும் இவனே

அடுத்த ஐந்து -பிராணன ,அபான ,வ்யான ,வுதான ,சமான .பஞ்ச ஆஹுதிகள் ..
இவை ஐந்தும் அந்தர்யாமியான இவனுக்கு ஆராதனம்
அடுத்த ஐந்து
பஞ்ச அக்னிகள் –கார்ஹா பதியம் ,ஆஹஅவநீயம் ,தஷினாக்னி ,சப்யம் ,ஆவசட்யம் …இவற்றை சரீரமாக கொண்டவன் .

ஏறு சீர் இரண்டுமாய்
மிக்க அதிசயத்தை வுடைய ஞானம் , விரக்தி இரண்டையும் தர வல்லவன் .
அவனை மட்டும் நோக்கும் ஞானமும் , கடை அற பாசங்கள் விடுகை யாகிய வ்ரக்தியும்
மால் பால் மணம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
கடையறப் பாசங்களைக் கை விட்டு
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
இவை இரண்டுமே முக்கியம் என்பதால் ஏறு சீர் -ஆகின்றன –

“மூன்றும் “-
கீழ் சொன்ன ஞான விரக்திகள் பயனாக பெரும்
பரபக்தி பரஞான ,பரம பக்தி –
அல்லது
ஐஸ்வர்ய ,கைவல்ய ,பகவத் ப்ராப்திகளையும் .

அடுத்து “ஏழும் ” என்று
விவேகாதிகள் ஏழையும் ..
விவேகம் (ஜாதி ஆஸ்ரய நிமித்த திஷ்ட தோஷங்கள் இல்லாத அன்ன சுத்தியால் உண்டாகும் காய சுத்தி )
விமோஹம் காமம் ,க்ரோதம் இல்லாமை ),
அப்யாசம்-(ஸூப ஆஸ்ரயமான வஸ்துவில் பலகாலம் பரிசீலனம் பண்ணுகை )
க்ரியை-(பஞ்சம மஹா யஜ்ஜாதிகளை -நித்ய நைமித்திக கர்ம அனுஷ்டானம் )
கல்யாணம் -( சத்யம் ஆர்ஜவம் தயை அஹிம்சை பிறர் அபசாரங்களில் கண் வையாமை போன்றவை )
அனவசடம் (சோக நிமித்தம் ,-மனசை மழுங்காது இருத்தல் )
அனுடர்ஷம் (சந்தோஷத்தால் தலை கால் தெரியாமல் பொங்காது இருக்கை )
எம்பெருமானை சிந்திக்க வேண்டிய மன தெளிவுக்கு இந்த விவேகாதி சப்தம் எல்லாம் தேவை –

அடுத்த ஆறும் –
ஞான பால ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் குணங்கள் இவற்றுக்கும் நிர்வாஹகன் அவன் ”

எட்டும் “ என்று –
அபஹத பாபமா -பாபம் சம்பந்தம் அற்றவன் -விஜரஹ -கிளத் தன்மை அற்று நித்ய யுவாவாய் இருப்பவன்
விமிருத்யு மரணம் அற்றவன் -விசோக-சோகம் அற்றவன் – விஜிகத்சக பசி அற்றவன் -அபி பாஷா தாகம் அற்றவன்
சத்ய காம சத்ய சங்கல்ப ,ஆகிய எட்டு குணங்களும் தம்மைத் தொழும் அடியார்க்குத் தர வல்லவன்
தம்மையே ஓக்க அருள் செய்யுமவன் அன்றோ

வேறு வேறு ஞானமாகி –
வணங்கும் துறைகள் பல பல வாக்கி -கள்ள வேடத்தைக் கொண்டு போய் புறம் புக்க வாறும் என்று
புத்த அவதாரமும் ஆனவனே

மெய்யினோடு பொய்யுமாய் –
மெய்யர்க்கு மெய்யனாகும் விதி இல்லா என்னைப் போலே பொய்யர்க்கே பொய்யனாகும் .
“புள் கொடி உடைய கோமான் போலே ஆஸ்திகர்களுக்கு தனது மெய்யான ரூபம் நாஸ்திகர்களுக்கு காட்டித் தராமலும்
முமுஷுக்களுக்கு அவனையே தந்து -மற்றவர்களுக்கு சூத்திர பலமும் தந்து ,தள்ளி நிற்பவன்

ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே நின்னை யார் நினைக்க வல்லரே –
ஸ்பர்சம் சப்தம் மற்றும் ரூபம் ரசம் கந்தம் ஐந்தையும் அவனாவது
உண்ணும் சோறும் பருகும் நீறும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -போலே ..
“கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐம்கருவி .கண்ட .இன்பம் எம்பெருமான் தானே
மெய்ப்பொருள் கண்டார்க்கு சர்வவித போக்யமும் அவனே
ஆயர் ஏறே மெய் பொருள் கண்டார்க்கு –ஆய- மாய மாயனே -நம்மிடையே வந்து -திவ்ய மங்கள விக்ரஹத்தை
சம்சாரி சஜாதீயமாக்கி வந்து பிறந்து அருளிய ஆச்சர்யம்

————

முன் இரண்டு அடிகளால் லீலா விபூதியையும் -அடுத்து நித்ய விபூதியையும் சொல்லி
தனக்கு நிர்ஹேதுக கிருபையைக் காட்டி அருளியதைச் சொல்கிறார்

ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி அல்லவற்றுள் ஆயமாய்
ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற வாதி தேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி யந்தரத்து யணைந்து நின்று
ஐந்தும் ஐந்துமாய நின்னை யாவர் காண வல்லரே —3-

பதவுரை

ஐந்தும்

–

ஆகாசாதி பூதங்கள் ஐந்தும்
ஐந்தும்

–

ஜ்ஞாநேந்திரியங்கள் ஐந்தும்
ஐந்தும்

–

கருமேந்திரியங்கள் ஐந்தும்
ஐந்தும்

–

தந்மாத்ரைகள் ஐந்தும்
மூன்றும்

–

ப்ரக்ருதி, மஹாந், அஹங்காரம் என்ற மூன்றும்
ஒன்றும்

–

மநஸ்ஸாகிய ஒன்றும்
ஆகி

–

(ஆக இப்படிப்பட்ட இருபத்தினாலு தத்துவங்கட்கு) நிர்வாஹகனாய்
அல்ல வற்றுளாயும் ஆய் நின்ற

–

கீழ்ச்சொல்லப்பட்ட அசித்துப் போலன்றியே சேதநராயுள்ளவர்கட்கும் அந்தர்யாமியாய் எழுந்தருளியிருக்கிற
ஆதிதேவனே!

–

முழு முதற்கடவுளே!
அந்தரத்து அணைந்து! நின்று

–

பரமபதத்திலே பொருந்தி நின்று
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி

–

அப்ராக்ருத பஞ்சசக்திகளுக்கும் ஜ்ஞாநேதிரியங்களைந்துக்கும், கருமேந்திரியங்களைந்துக்கும் நிர்வாஹகனாய்
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை

–

சப்தாதிபோக்யங்களைந்துமாய், போகஸ்தாகம், போகோபகரணம், வைகுந்தத்தமர் முனிவர் முக்தர் என்ற ஐந்து வகுப்புகட்கு நியாமகனுமா யெழுந்தருளியிருக்கிற உன்னை.
யாவர் காண வல்லர்

–

யார் அறியவல்லர்? (யாருமறியகில்லார்.)

ஐந்தும் ஐந்தும் ஐந்தும் –முதல் ஐந்து –பஞ்ச பூதங்கள்–அடுத்த ஐந்து –ஞான இந்திரியங்கள்
அடுத்த ஐந்து கர்ம இந்திரியங்கள் –
அல்ல வற்றுள் நின்று -இப்படிச் சொன்ன அசித் போன்று இல்லாமல் சித் எல்லா வற்றிலும்
அந்தர்யாமியாய் இருந்து நிர்வகிக்கும்
மூன்றும் ஒன்றும் ஆகி -பிரகிருதி -அவிபக்த தமஸ் -அக்ஷரம் போன்ற அவஸ்தைகளைக் கொண்ட பிரகிருதி –
அதில் இருந்து குண வைஷம்யம் அடியாக பிறக்கும் விகாரங்களான மஹானும்
அதில் நின்றும் பிறக்கிற அஹங்காரம் -ஆகிய மூன்றும் – மனசாகிய ஒன்றும்
ஐந்தும் -தன் மாத்ரைகள் ஐந்தும் ஆகி -இப்படி 24 தத்துவங்களுக்கும் நிர்வாஹகனாய் ஆகி
ஆதி தேவனாய் -முழு முதல் கடவுளாய்
அந்தரத்து அணைந்து நின்று -பரமபதத்தில் பொருந்தி இருந்து –
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி -அப்ராக்ருத பஞ்ச சக்திகளுக்கும் ஞான இந்திரியங்களுக்கும்
கர்ம இந்திரியங்களுக்கும் – நிர்வாஹகனாய்
ஐந்தும் -சப்தாதி போக்யங்கள் ஐந்துமாய்
ஐந்துமாய-போக ஸ்தானம் போக உப கரணங்கள் -வைகுந்தத்தது அமரரரும் முனிவரும் முக்தர் என்கிற ஐந்து வகுப்புக்களும் –
நியாமகனாய் எழுந்து அருளி இருக்கிற உன்னை யார் நினைக்க வல்லவர் என்கிறார்
லீலா விபூதி விசிஷ்டானாயும் நித்ய விபூதி விசிஷ்டானாயும் -திவ்ய மங்கள விக்ரஹத்தையும் நீ எழுந்து அருளி இருக்கும் இருப்பை
நிர்ஹேதுக கிருபையால் நீ காட்டி அருள நான் எளிதில் கண்டால் போலே காணக் கூடியவர்கள் யாரும் இல்லையே –

லீலாவிபூதி விசிஷ்டனாயும் நித்யவிபூதி விசிஷ்டனாயும் நீ எழுந்தருளியிருக்குமிருப்பை நிர்ஹேதுக க்ருபையாலே எனக்கு நீ காட்டியருள நான் எளிதிற்கண்டாப்போல் ஸ்வஸரமர்த்தியத்தாற் காணக்கூடியவர்கள் யாருமில்லை யென்கிறார்.

முன்னிரண்டடிகளால் லீலாவிபூதியோகமும், பின்னிரண்டடிகளால் நித்யவிபூதியோகமும் அருளிச்செய்யப்படுகின்றன.

முதலடியில், ஐந்தும்- ப்ருதிவி. அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் (நிலம் நீர் தீ கால்விசும்பு) என்ற பஞ்சபூதங்கள்.

ஐந்தும் = த்வக்கு, சக்ஷûஸ், ச்ரோத்ரம், ஜிஹ்வா, க்ராணம் (செவ் வாய் கண் மூக்கு உடல்) என்ற பஞ்சஜ்ஞாநேந்திரியங்கள்.

ஐந்தும்- வாக்கு’ பாணி, பரதம், பாயு, உபஸ்தம் (வாய்,கை, கால், குதம்,குறி)என்ற பஞ்சகர்மேந்திரியங்கள்.

இரண்டாமடியில், ஐந்தும் = சப்ததந்மாத்ரை, ஸ்பர்சதந்மாத்ரை,ரூபதந்தமாதரை, ரஸதந்மாத்ரை, கந்ததந்மாத்ரை என்னும் பஞ்சதந்மாத்ரைகள்.

மூன்றும் = அலிபக்ததமஸ்ளென்றும் அக்ஷரமென்றும் சில அவஸ்தைகளை யுடைந்தாயிருக்கிற ப்ரக்ருதி (1), அந்தப்ரக்ருதியில் நின்றும் குணவைஷம்யமடியாகப் பிறக்கிற விகாரங்களுள் முதலதான மஹாக் (2), அந்த மஹத்தத்வத்தில் நின்றும் பிறக்கிற அஹங்காரம் (3), ஆக மூன்று,

ஒன்று- மநஸ்ஸு. ஆக இருபத்தினாலு தத்துவங்கள் சொல்லப்பட்டன. (முதலடியில் பதினைந்து; இரண்டாமடியில் ஒன்பது, ஆக-24.)

ஆகிநின்ற என்ற ஸாமாநாதிகரண்யம்- இத் தத்துவங்களுக்கும் எம்பெருமானுக்குமுள்ள ஸம்பந்தங்களெல்லாவற்றையும் உளப்படுத்தியதாம்.

அல்லவற்றுளாயுமாய்- இப்படி இருபத்தினாலாக வகுக்கப்பட்ட ப்ரக்ருதியிலே ஸம்ஸ்ருஷ்டரான ஜீவாத்மாக்களுக்கு அந்தர்யாமியாய் என்றபடி,

அல்லாவை என்றால் ஜீவாத்மாக்களை எங்ஙனே குறிக்கும்படியென்னில்; அல்லவை என்பதற்கு ‘அப்படியாகாதவை’ என்று பொருள்.

ப்ரகரணாநுகுணமாக ‘அசித்தாகாதவை’ என்று பொருளாய் அசேக்நவ்யாவ்ருத்தரான சேதநர்களைக் குறிக்கிறபடி.

இனி பின்னடிகளில், திவ்யமங்களவிக்ரஹத்தையும் நித்யவிபூதியோகத்தையும் தமக்குக் காட்டித்தந்தருளினபடியை அருளிச்செய்கிறா.

(1) ஐந்தும் = *** ***  பஞ்சசக்திகளாவன – “*** ***  என்று சொல்லப்படுகிறவையாய் நித்யவிபூதியிலுள்ளவையான பஞ்சபூதங்கள். வாஸுதேவனுடைய திவ்யமங்களவிக்ரஹம் பஞ்ச சத்திமயமென்று வேதாந்த நூற்கொள்கை.

ஐந்தும், ஐந்தும், ஐந்தும் – அப்ராக்ருதங்களான ஜ்ஞாநேந்திரியங்கனைந்தும், கருமேந்திரியங்களைந்தும், சப்தாதி போக்யங்களைந்தும். ஐந்தும் = ***  நங்களென்ற வகுப்பு (1), ஜொஹொவதுரணங்களென்ற வகுப்பு (2), “வைகுந்தத்தமரரும் முனிவரும்” என்ற இரண்டு வகுப்புகள் (4), முக்தர் என்ற வகுப்பு (50)- ஆ க ஐந்து கோடிகள்.

அந்தரம் = ஆகாசம்; பரமாகாசமெனப்படுகிற பரமபதம்.

————

மூன்று முப்பத்தாறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
மூன்று மூர்த்தியாகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கமில் விளக்கமாய்
என் தன் ஆவியுள் புகுந்தது என் கொலோ வெம் மீசனே –4-

பதவுரை

மூன்று முப்பது

–

முப்பத்து மூன்று ஹல்லெழுத்துகட்கும்
ஆறினொரு ஒரு ஐந்தும் ஐந்தும்

–

பதினாறு அச்செழுத்துகட்கும்
ஐந்து

–

ளகாராதி பஞ்சாக்ஷரங்கட்கும்
ஆய்

–

நிர்வாஹகனாய்
மூன்று மூர்த்தி ஆகி

–

ருக்கு, யஜுஸ், ஸரமம் னஎ“கிற வேதத்ரய ஸ்வரூபியாய்
மூன்று மூன்று மூன்று மூன்றும் ஆய்

–

த்வாதசாக்ஷரீ ப்ரதி பாத்யனாய்
மூன்று தோன்று சோதி ஆய்

–

மூன்று ட்அஷரமாகிய ப்ரணவத்திலே விளங்கும் ஜ்யோதிரிமயனாய்
துளக்கம் இல் விளக்கம் ஆய்

–

என்று மழிவற்ற விளக்காகிய அகாரத்துக்கு வாச்யனாய்
எம் ஈசனே

–

எமக்கு நிருபாதிக சேஷியாயிருப்பவனே!
என்று

–

(என் காரியங்களையெல்லாம் நீயே உன் தலைச்சுமையாக) ஏறிட்டுக்கொண்டு
என் ஆவியுள்

–

என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளே
புகுந்தது

–

புகுந்திருப்பது
என் கொல்?

–

என்ன நீர்மை!

மூன்று முப்பது –33 ஹல் எழ்த்து
ஆறினொடு ஒர் ஐந்தும் ஐந்தும் –16 அச்சு எழுத்துகள்–
ஐந்தும் – ளகராதி பஞ்சாட்ஷரம்
ஆய் –நிர்வாஹகானாய்
மூன்று மூர்த்தி ஆகி நின்று “-ரிக் ,யஜுர் ,சம வேத வேத திரைய ஸ்வரூபியாய்-
ப்ரதிபாத்யன்–ப்ரவர்த்திப்பித்தவன் என்றுமாம்

மூன்று மூன்று மூன்று மூன்றும் ஆய –த்வாதச அஷரீ பரதி பாத்யனாய் ..”ஒம் நமோ வாசுதேவாய “.

தோன்று சோதி மூன்றுமாய் ”-மூன்று தோன்று சோதியாய் என்று மூன்று அஷரம்-பிரணவம் -தோன்றும் ஜோதி ..’

துளக்கம் இல்லா விளக்கம் “-அழிவற்ற விளக்காக –
அ ” காரம் ..ஓம்காரத்தில் திகழ்கின்ற ஜோதி மயன் ஓம்கரோ பகவன் விஷ்ணு போல
சகலத்துக்கும் காரணம் தனக்கு காரணம் அற்றவன் ஆதலால்
துளக்கமில்லா விளக்கு என்றார் .

எம் ஈசனே “-எனக்கு நிருபாதிக சேஷியனவானே
என்று -எனது காரியங்களை நீயே உன் தலைச் சுமையாய் ஏறிட்டு கொண்டு .

என் ஆவியுள் புகுந்தது என் கொல் “.-என்ன நீர்மை வேதங்கள் மந்த்ர ரஹஸ்யங்களை தேவரீர் உண்டாக்கி வைத்தும் –
அவ்வழியாலே உபாசியாமல் இருக்க
தேவரீரே அடியேனுடைய அஞ்ஞான அசக்திகளைக் கண்டு அறிந்து நிர்ஹேதுகமாக ஹ்ருதயத்தில் எழுந்து அருளி
ஸ்வரூபத்தை சாஷாத்கரிப்பித்து என்னை இடைவிடாமல் அடிமையும் கொண்டு அருளி உபகரித்தமை என்ன நீர்மை –

வேதங்களையும் மந்த்ர ரஹஸ்யங்களையும் தேவரீர் உண்டாக்கி வைத்திருக்கச் செய்தேயும் அடியேன் அவ்வழியாலே அறிந்து உபாஸியாதே யிருக்க தேவரீரே அடியேனுயைட ஹ்ருதயத்தினுள்ளே புகுந்தெழுந்தருளியிருக்கிறவிது என்ன நீர்மை! என்று ஈடுபட்டுப் பேசும் பாசுரம், இது.

மூன்று மூர்த்தியாகி = ருக்கு, ஸாமம், யஜுஸ் என்று மூன்று உருக்கொண்ட வேதங்களுக்கு ப்ரதிபாத்யன் (அல்லது) ப்ரவர்த்தகன் என்றபடி,

மூன்று மூன்று மூன்று மூன்றுமாய் = நாலுமூன்றுகள் கூடியப் பன்னிரண்டாய், “ஓம் நமோ பகவதே வாஸுதேவாய’ என்கிற தவ்யாதசாக்ஷரியாலே ப்ரதிபாத்யன் என்றதாகிறது.

தோன்று சோதி மூன்றுமாய் = ‘மூன்று தோன்று சோதியாய்’ என்று மொழிமாற்றி இயைக்கவேணும்.

மூன்றிலே தோன்றுகிற சோதியாய் என்றபடி.

மூன்று என்கிறது- மூன்று திருவக்ஷரமான ப்ரணவத்தை.

இது ஸம்ஹிதாகாரத்தாலே ஏகாக்ஷரமாயிருந்தாலும் உட்பிரிவிலே அ, உ, ம் என மூன்று திருவக்ஷரமாய் மூன்று அர்த்தங்களைப் பிரதிபாதிக்கவற்றாயிருக்குமிறே.

இப்படிப்பட்ட ஓங்காரத்திலே திகழ்கின்ற ஜ்யோதிர்மயன் எம்பெருமானிறே.

“ஓங்காரோ பகவாந் விஷ்ணு.” என்றதும் காண்க.

துளக்கமில் விளக்கமாய் = அந்த ப்ரணவத்திலே ப்ரதமாக்ஷரமான அகாரத்தைத் “துளக்கமில்விளக்” கெள்கிறது.

ஸகல வேதங்கட்குக் காரணமான ப்ரணவத்துக்குங் காரணமாய், தனக்கொரு காரணமற்றிறே அகாரமிருப்பது.

ஆகையாய் துளக்கமற்ற விளக்குப் போன்றதாய்த்து.

ஆக இவ்வழியாலே நான் அறிந்து உபாஸிப்பதற்கு நீ விஷயமாக வேண்டியிருக்க,

அங்ஙனாகாதே நீயே எனது அஜ்ஞாக அசக்திகளைக் கண்டறிந்து இப்படிப்பட்ட உன் ஸ்வரூபத்தை

எனக்கு ஸாக்ஷாத்கரிப்பித்து என்னை இடைவிடாது அடிமைகொண்டனையே! என்கிற உருக்கம் ஈற்றடியில் தோற்றும்.

————

வேதங்களும் மந்திர ரஹஸ்யங்களும் இருக்க -யாவர் காண வல்லரே -என்று எம்பிரான் கேட்க
அந்தராத்மாவாகவும் ஜகத் காரணத்வத்தாலும் -சகல ஆதாரமாய் இருக்கும் ஸ்வ பாவத்தை –
சமுதாய ரூபமாக அறியலாமே தவிர
தேவரீர் எனக்கு காட்ட நான் அலகு அலகாக கண்டால் போலே ஒருவருக்கும் காண முடியாதே என்கிறார்-

நின்று இயங்கும் ஒன்றிலா உருக்கள் தோறும் ஆவியாய்
ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னதென்று
என்றும் யார்க்கும் எண்ணிறந்த வாதியாய் நின்னுந்தி வாய்
அன்று நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே –-5-

பதவுரை

நின்று

–

ஸ்தாவரமாயும்
இயங்கும்

–

ஜங்கமமாயுமிருக்கிற
ஒன்று அலா ருக்கள் தோறும்

–

பலவகையான சரீரங்கள் தோறும்
ஆவி ஆய்

–

ஆத்மாவாய்
ஒன்றி

–

பொருந்தி
உள் கலந்து நின்ற

–

பரிஸமாப்ய வர்த்தியாநின்ற
நின்ன

–

உன்னுடைய
தன்மை

–

ஸ்வபாவம்
இன்னது என்று

–

இத்தகையதென்று
என்றும்

–

எக்காலத்திலும்
யார்க்கும்

–

எப்படிப்பட்ட ஞானிகட்கும்
எண் இறந்த

–

சிந்திக்க முடியாதிருக்கிற
ஆதியாய்

–

ஆதிகாரணபூதனனான எனம்பெருமானே! (நீ)
அன்று

–

முற்காலத்திலே
நின் உந்திவாய்

–

உனது திருநாபியில்
நான் முகன்

–

சதுர்முகப்ரஹ்மாவை
பயந்த

–

படைத்த
ஆதிதேவன் அல்லையே

–

முழு முதற் கடவுளல்லையோர்.

நின்று -ஸ்தாவரமாயும் -நிலை பேராமல் நிற்கும் மலை போன்றவை
இயங்கும் -அசையக் கூடிய பசு பக்ஷி யாதி ஜங்கமமாயும் இருக்கிற
ஒன்றிலா உருக்கள் தோறும் ஆவியாய்-பலவகை சரீரங்கள் தோறும் ஆத்மாவாய்
ஒன்றி -பொருந்தி
உள் கலந்து நின்ற நின்ன தன்மை -பரிசமாப்யா வர்த்தியா நின்ற உன்னுடைய ஸ்வ பாவம்
இன்னதென்று-இத்தகையது என்று
என்றும் -எக்காலத்திலும்
யார்க்கும் -எப்படிப்பட்ட ஞானியர்க்கும்
எண்ணிறந்த -சிந்திக்க முடியாது இருக்கிற
வாதியாய் நின்னுந்தி வாய்-ஆதி காரண பூதனான எம்பெருமானே நீ உனது திரு பாபியிலே
அன்று நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே -முற்காலத்தில் சதுர்முகனைப் படைத்த முழு முதல் கடவுள் அன்றோ

எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி “ஆழ்வீர்! நம்மை உள்ளபடி அறிவிக்கவற்றான வேதங்களும் மந்த்ரஹஸ்யங்களும் பலபல உண்டாயிருக்க ‘யாவர் காணவல்லரே’ என்பானேன்?” என்ன;

அந்தர்யாமித்வத்தாலும் ஜகதேக காரணத்வத்தாலும் ஸகலாதாரனாயிருக்கிற ஸ்வபாவத்தை

ஸ்தூலத்ருஷ்டியாலே ஸமுதாயருபே அறியில் அறியலாமத்தனையொழிய,

தேவரீர் காட்ட நான் அலகலகாகக் கண்டாற்போலே ஒருவர்க்குங் காண முடியாதென்கிறார்-

இதில் நின்று என்னு- நிலைபேராதே நிற்கும் மலை முதலிய ஸ்தாவர பதார்த்தங்களைச் சொல்லுகிறது;

இயங்கும் என்று- அசையக்கூடிய பசுபக்ஷ்யாதி ஜங்கம பதார்த்தங்களைச் சொல்லுகிறது;

இயங்கும் என்று- அசையக்கூடிய பசுபக்ஷ்யாதி ஜங்கம பதார்த்ங்களைச் சொல்லுகிறது.

ஒன்று அலா = ஒன்று அல்லாத என்றாய், பலபலவென்றபடி.

நின் உந்திவாய் இத்யாதி. தேவரதி ஸகலபதார்த்தங்களும் அழிந்து கிடந்த அக்காலத்தில் உன்னுடைய திருநாபிக் கமலத்திலே பிரமனைப் படைத்த ஜகதேக காரணனல்லையோ நீ

உந்திவாய் = வாய்- ஏழனுருபு. நான் முகன் + பயந்த, நான்முகற்பயந்த.

—————-

உலகத்தில் ஒன்றுக்கு ஓன்று தாரகமாய் இருக்கும் பொருள்களுக்கும் இவனே தாரகம் என்கிறார்
இத்தால் அரவணை மேல் பள்ளி கொண்ட பெருமானே என்று விளிக்கிறார் —

நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை
நாகம் ஏந்து மாகம் மாகம் ஏந்து வார் புனல்
மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின் கணேயியன்றதே –6-

நாகம் ஏந்தும் ஆக–திரு அனந்தவாழ்வானாலே தரிக்கப் பட்ட திருமேனியை யுடைய எம்பெருமானே
நாகம் ஏந்து மேரு வெற்பை -ஸ்வர்க்க லோகத்தை தரிக்கிற மேரு பர்வதத்தையும்
தனது தேஜஸ்ஸாலேயே தரிக்கிறது என்பர்
நாகம் ஏந்து மண்ணினை–திருவனந்தாழ்வான்-அல்லது திக்கஜங்களால் தரிக்கப்பட்ட பூமியையும்
நாகம் -சர்ப்பத்துக்கும் யானைக்கும் –
மாகம்–பரம பதத்தையும்
மாகம் ஏந்து வார் புனல்–ஆகாசத்தால் தரிக்கப்பட்ட கங்கையையும்
மாகம் ஏந்து மங்குல் -ஆகாசத்தால் தரிக்கப்பட்ட மேக மண்டலத்தையும்
தீ ஓர் -ஓர் தீ -வைச்வானர அக்னியையும்
வாயு ஐந்து -பஞ்ச வ்ருத்தி பிராணங்களையும்
அமைந்து காத்து-பொருந்தி ரஷித்து அருளி
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை -எல்லாவற்றையும் ஒரு வஸ்துவே தரித்துக் கொண்டு நிற்கிறது என்று
உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டுள்ள ஸ்வ பாவம் –
நின் கணேயியன்றதே-உன்னிடத்தில் தான் இருக்கின்றது –

கைலவஸ்துக்களுக்கும் எம்பெருமான் அந்தர்யாமியாயிருந்து கொண்டு அனைத்துக்கும் ஆதாராமகிறான் என்னுமர்த்தம் கீழ்பாட்டிற் சொல்லப்பட்டது;

உலகத்தில் ஒன்றுக்கொன்று தாரகங்களாகத் தோற்றும் பதார்த்தங்கட்கும் இம்வெம்பெருமானே தாரகன் என்கிறது இப்பாட்டு.

இரண்டாமடியிலுள்ள “நாகமேந்துமாக!” என்பது ஸம்போதகம். அரவணைமேற் பள்ளிகொண்ட பெருமானை! என்று விளித்தபடி.

மேருபர்வதம் ஸ்வர்க்கத்தை எங்ஙனே தரிக்கிறதென்றால், தன் சிகரத்திலுள்ள தேஜ்ஸ்ஸின் வழியாலே என்பர்.

முதலடியின் முதலிலுள்ள நாகம்- நாசா” என்ற வடசொல்லிகாரம். ***- ***-  என்பது ச்ருதி.

அதற்கு மேல் நாகம்- நாஹா என்ற வடசொல் விகாரம். அந்த பதத்திற்கு ஸர்ப்பமென்றும், யானையென்றும் இரண்டு பொருள்களுண்டு . இரண்டு பொருளும் இங்கு ஏற்கும்.

பூமியானது ஆதிசேஷனாலும், திக்கஜங்களாலும் தாங்கப்படுவதால். இரண்டாவடியிலுள்ள நாகமும் – நாஹா என்ற வடசொல் விகரம் (“நாகமேந்துமாகன்” என்பதன் அண்மைவிளி.)

இரண்டாமடியில், மாகம் இரண்டும் ஹோவா என்ற வடசொல் விகாரம்.

முதல் மாகம்- பரமாகாசவாசகம்.

இரண்டாவது மாகம்- ப்ரஸித்தாகாசவாசகம்.

மூன்றாமடியிலுள்ள மாகமும்- ஹோவா. என்ற வடசொல் விகாரமே.

ஏகமேந்தி நின்ற நீர்மை- “***- ***- ” என்றிவை முலான வேதாந்த வாக்கியங்களில் ஓதப்பட்டுள்ள அர்த்தம் உன் பக்கலில்தான் பொருந்தியிரா நின்றதென்றபடி.

ஏகம்- வன்கம்.

நின் கண்= கண்- எழலுருபு.

——————–

ஓன்று இரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய்
ஓன்று இரண்டு காலமாகி வேலை ஞாலமாயினாய்
ஓன்று இரண்டு தீயுமாகி ஆயனாய மாயனே
ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே –7-

பதவுரை

ஒன்று இணர்டு மூர்த்தி ஆய்

–

ப்ரதாநமான ஒரு மூர்த்தியும் அப்ரதாநமான இரண்டு மூர்த்தியுமாய்
உறக்கமோடு உணர்ச்சி ஆய்

–

அஜ்ஞாநத்துக்கும் ஸத்ஜ்ஞானத்துக்கும் நியாமகனாய்
ஒன்று இரண்டு காலம் ஆகி

–

மூன்று காலங்களுக்கும் நிர்வாஹனாய்
வேலை ஞாம் ஆயினாய்

–

கடல்சூழ்ந்த பூமண்டலத்துக்கு ப்ரவத்தகனாய்
ஒன்று இரண்டு தீயும் ஆகி

–

மூன்று அக்நிகளுக்கும் நிர்வாஹனாய்
ஆயன் ஆய

–

கோபாலஸஜாதீயனாய் அவதரித்த
மாயனே!

–

ஆச்சர்யபூதனான எம்பெருமானே!
ஒன்று இரண்டு கண்ணினாலும்

–

முக்கண்ணனான சிவபிரானும்
உன்னை

–

உன்னை
ஏந்த வல்லனே

–

துதிக்க வல்லவனே!

ஓன்று இரண்டு மூர்த்தியாய் –பிரம்மா ருத்ரன் இவர்களை சரீரமாகக் கொண்டு அவர்களுக்கும் நிர்வாஹகன் –
முனியே நான் முகனே முக்கண் அப்பா போலே
ஓன்று பிரதானம் -இரண்டு அப்ரதானம்

உறக்கமோடு உணர்ச்சியாய்-அஞ்ஞானத்துக்கும் ஞானத்துக்கும் நியாமகனாய்
உறக்கம் -என்றது அஜ்ஞ்ஞானத்தை –
அஜ்ஞ்ஞானம் அன்யதா ஜ்ஞானம் விபரீத ஜ்ஞானம் சம்சயம் மறப்பு எல்லாம் -உறக்கம் தானே –
ஸ்வரூப யாதாம்யத்தை சிலருக்கு உள்ளபடி சாஷாத் கரிக்கச் செய்பவனும்
திரிமூர்த்தி சாம்யம் வ்யாமோஹாதிகளாலே சிலரை மயங்கச் செய்பவனும் இவனே

ஓன்று இரண்டு காலமாகி-இறந்த நிகழ் எதிர் காலங்கள் -முக்காலங்களுக்கும் நிர்வாகனாய் -சாதாரண அர்த்தம் –
சாத்விக ரஜஸ் தமஸ் காலங்களுக்கும் கடவன் என்றபடி

வேலை ஞாலமாயினாய் –கடல் சூழ்ந்த பூ மண்டலத்துக்கு ப்ரவர்த்தனாகி

ஓன்று இரண்டு தீயுமாகி –ஆஹவநீயம் -கார்த்தபத்யம் தஷிணாக்னி என்ற மூன்று அக்னிகளுக்கும் நிர்வாஹகன் .

ஆயனாய-கோபால சஜாதீயனாய் திருவவதரித்த

ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே –
ருத்ரனும் துதிக்க வல்லவன் அல்லன் என்கிறார் –

ப்ரஹ்ருத்ராதிகளைச் சரீரமாகக்கொண்டு அவர்களுக்கு நியாமகனாய் என்கிறது முதலடைமொழி.

“முனியே நான்முகனே முக்கண்ணப்பா” இத்யாதிகளிற்போல இங்கும் ஸாமாநாதிகரண்யம் சரீர சரீர பாவத்தைப் பற்றியதாம்.

உறக்கமோடு உணர்ச்சியாய்= இலக்கணையால் அஜ்ஞானத்தை உறக்கமென்கிறது.

ஞானமற்றவனுக்கு உறக்கம் தவிர வேறு தொழிலிலாமை அறியத்தக்கது.

அஜ்ஞாகம், அந்யதாஜ்ஞாநம், விபரீதஜ்ஞாகம், ஸம்சயம், மறப்பு இவையெல்லாம் உறக்கமேயாம்.

உறக்கத்துக்கும் உணர்ச்சிக்கும் எம் பெருமான் நிர்வாஹகனாகையாவ தென்னென்னில்;

தன் ஸ்வரூப யாதாத்மியத்தைச் சிலர்க்கு உள்ளபடி ஸக்ஷாத்கரிக்கச் செய்பவனும் தானே; த்

ரிமூர்த்திஸாம்ய வ்யாமேஹாதிகளாலே சிலரை மயங்குபவனும்தானே என்கை.

ஒன்றிரண்டு காலமாகி = இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்  என்று மூன்று காலங்களுக்கும் நிர்வாஹகன் என்பது ஸாமாந்யமான அர்த்தம்.

ஸத்வகுணம் மிகும்படியான ஸாத்விககாலத்துக்கும்,

ரஜோகுணம் மிகும்படியான ராஜஸ காலத்துக்கும்,

தமோகுணம் மிகும்படியான தாமஸகாலத்துக்கும் கடவன் என்கை விசேஷார்த்தம்.

—————–

ருத்ரனுக்கு மட்டும் இல்லை -உபய விபூதியில் உள்ளார் அனைவருக்கும் முடியாது என்கிறார்

ஆதியான வானவர்க்கும் அண்டமாய வப்புறத்து
ஆதியான வானவர்க்கும் ஆதியான வாதி நீ
ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி
ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே –8-

பதவுரை

ஆதி ஆன கால

–

ஆதிகாலத்துக்கு நிர்வாஹகனானவனே!.
ஆதி ஆன

–

ஜக்த்ஸ்ருஷ்டி முதலினவற்றுக்குக் கர்த்தாக்களான
வானவர்க்கும்

–

(பிரமன் முதலிய) தேவதைகட்கும்.
அண்டம் ஆய அப்புறத்து ஆகி ஆன வானவர்க்கும்

–

அண்டமென்று பெயர் பெற்ற அப்பரமபதத்திலுள்ள ப்ரதாநகர்களான நித்யஸூரிகளுக்கும்
ஆதி ஆன

–

நிர்வாஹகனான
ஆதி

–

அதிபதி
நீ

–

நீயாகிறாய்;
ஆதி ஆன

–

ஜகத்துக்குக் கடவர்களாக ஏற்பட்டிருக்கிற
வானம் வாணர்

–

(பிரமன் முதலிய) மேலுலகத்தவர்களினுடைய
அந்த காலம்

–

முடிவு காலத்தை
நீ உரைத்தி

–

நீ அருளிச்செய்ய நின்றாய்.
ஆதி காலம ஆன நின்னை

–

ஆதிகாலத்துக்கு நிர்வாஹகனான உன்னை.
யாவர் காணவல்லர்

–

பரிச்சேதிக்க வல்லார் யார்?

ஆதியான வானவர்க்கும் –
பிரம்ம -தஷ பிரஜாபதிகள்- சப்த ரிஷிகள்- த்வாசதச ஆதித்யர்கள் -சிருஷ்டி கர்த்தாக்கள் -இந்த்ரன் -சதுர்தச மனுக்கள்-
ஸ்திதி கர்த்தாக்கள் -ருத்ரன் -அக்னி- எமன் இவர்கள் போன்ற சம்ஹார கர்த்தாக்கள் போன்றறோரை இத்தால் சொல்லிற்று .

அண்டமாய வப்புறத்து ஆதியான வானவர்க்கும் –
நித்ய ஸூரிகளுக்கும்

ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி-
ஜகத்துக்கு கடவர்களாக ஏற்படுத்தி இருக்கும் மேல் உலகத்தவரின் முடிவு காலத்தை நீ அருளிச் செய்கிறாய்

ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே
ஆதி காலம் ஆன நின்னை என்று மாற்றி ஆதி காலத்துக்கு நிர்வாஹகனான உன்னை யாவர் காண வல்லரே –என்கிறார்-

உபயவிபூதியிலுமுள்ள ஸகல பதார்த்தங்களினுடையவும் ஸத்தாதிகள் தானிட்ட வழக்காகப்பெற்ற உன்னை ருத்ரன் ஒருவனையோ பரிச்சேதிக்கமாட்டான்? உபயவிபூதியிலும் பரிசேதிக்க வல்லர் இல்லையென்கிறார்.

ப்ரஹ்மா, தக்ஷப்ரஜாபதிகள், ஸப்தரிஷிகள், ஆதித்யர்கள் ஆகிய இவர்கள் ஸ்ருஷ்டி கர்த்தாக்கள்; இந்திரன், சதுர்த்தச மநுக்கள் ஆகிற இவர்கள் ஸ்திதிகர்த்தாக்கள்; ருத்ரன், அக்நி, யமன் முதலானவிவர்கள் ஸம்ஹாரகர்த்தாக்கள், ஆகிய இவர்களைச் சொல்லுகிறது- முதலடியில்

“ஆதியானவானவர்” என்று. ‘அண்டமாயவப்புறத்தாதி யானவானவர்’- நித்யஸூரிகள்.

“அண்டமாள்வதாணை” “அண்டம்போ யாட்சி அவர்க்கதறிந்தோமே” இத்யாதிகளில் அண்ட சப்தம் பரமபதவாசகமாக வருதல் காண்க.

இவ்விடத்துப் பெரியவாச்சர்ன்பிள்ளை வியாக்கியானத்தில் “அண்டசப்தவாச்யமான “லீலாபூதிக்கு அப்புறத்தில் அண்ட சப்தவாச்யமான பரமபதத்தில் வர்த்திக்கிற” என்பது சுத்தபாடம்.

ஜகத்துக்கு நிர்வாஹமான காலதத்துவமும் அவம்பெருமாளிட்ட வழக்கென்கிறது- மூன்றாமடி.

எம்பெருமான் ப்ரவர்த்திப்பித்த சாஸ்த்ரங்களிலே ***-***- இத்யாதிகளாலே ப்ரஹ்மாதி தேவர்களுக்கு அவஸாநகாலம் கூறப்பட்டிருந்தலால் “அந்தகாலம் நீயுரைத்தி” எனப்பட்டது.

அந்த காலம் = *** என்ற வடசொல் விகாரம். ப்ரஹ்மாதிகளுடைய ஆயுஸ்ஸுக்கு ஓர் எல்லை ஏற்பட்டிருப்பதாலும் எம்பெருமானுக்கு அது இல்லாமையாலும் இவனே முழுமுதற் கடவுள் என்பது ஸ்பஷ்டம்.

ஆதி ஆன காலம்நின்னை = ஆதி காலம் ஆன நின்னை என மாற்றியுரைக்கப்பட்டது;-

கார்யரூபமான ஜகத்துக்களெல்லாம் லயமடைந்து போனவளவிலே ***- என்றபடி ஆதிகாலத்துக்கு நிர்வாஹகனாயிருந்த உன்னை என்றவாறு.

————

தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –9-

பதவுரை

தாது உலாவு

–

தாதுகள் உலாவுகின்ற
கொன்றை மாலை

–

கொன்னைப்பூ மாலையையும்
துன்னு செம் சடை

–

நெருங்கிய சிவந்த சடையையுடைய
சிவன்

–

ருத்ரன்
நீதியால்

–

முறைமைப்படி
வணங்கு

–

வணங்கப்பெற்ற
பாத

–

திருவடிகளையுடையவனே!
நின்மலா!

–

நிர்மலஸ்வரூபியே!
நிலாய சீர்வேதம் வாணர்

–

நிரம்பிய குணங்களையுடைய வைதிகர்களென்ன
கீதம்

–

வேள்வியார்

ஸாமகானம் மிகுந்த யஜ்ஞயாகங்களை நடத்துமவர்களென்ன

நீதி ஆன கேள்வி யார்

–

சிரமப்படி ச்ரவண மநநங்களை ச் செய்கிற மஹான்களென்ன (இவர்கள்)
நீதியால்

–

சாஸ்த்ரவிதிப்படி
வணங்கு நின்ற நீர்மை

–

வணங்குகைக்கு உரிய தன்மை.
நின் கண்ணே நின்றது

–

உன் பக்கலில்தான் உள்ளது.

தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
பிரயோஜனாந்தரர்களில் முதல்வரான சிவனும்

நீதியால் வணங்கு பாத நின்மலா–
அநந்ய பிரயோஜனரான வைதிக உம்பர்களும் உன்னையே ஆஸ்ரயிக்கிறார்கள்
நீயே சர்வ சமாஸ்ரயணீயன் என்கிறார்

நிலாய சீர் வேத வாணர்–
நிரம்பிய கல்யாண குணங்கள் உடைய வைதிகர்கள்

கீத வேள்வியார் –
சாம வேத ஞானம் உடையவர் முகுந்த யாக யஜ்ஞங்கள் நடத்துபவர்கள் .

நீதியான கேள்வியார்-
க்ரமப்படி ஸ்ரவண மனனநாதிகளை செய்பவர்கள் –

ப்ரயோஜநாந்தரபார்களில் முதல்வனான சிவனும் அநந்யப்ரயோஜநரான வைதிகோத்தமர்களும் உன்னையே ஆச்ரயிக்கக் காண்கையாலே நீயே ஸர்வ ஸாச்ரயணீயன் என்கிறார்.

—————-

காரணந்து த்யேயா -காரண வஸ்துவே உபாஸ்யம் என்கிறார் இதில்

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –10-

பதவுரை

தன்னுள்ளே திரைத்து

–

தன்னிலே கிளர்ந்து
எழும்

–

பரவுகின்ற
தரங்கம்

–

அலைகளையுடைத்தாய்
வெண்தடம்

–

வெளுத்த ப்ரதேசங்களையுடைத்தான
கடல்

–

கடலானது
தன்னுள்ளே  திரைத்து எழுந்து

–

தனக்குள்ளே கிளர்துலாவி
அடங்குகின்ற தன்மைபோல்

–

(மறுபடியும்) சாந்தமாவதுபோல.
நிற்பவும்

–

ஸ்தாவரஜங்கமரூபமான ப்ரபஞ்சமெல்லாம்
நின்னுள்ளே

–

உன் ஸ்வரூபத்துக்குள்ளே
பிறந்து

–

உத்பந்தமாய்
இறந்து

–

லாபமடைந்து
நின்னுள்ளே அடக்குகின்ற நீர்மை

–

(இப்படி) உன் ஸ்வரூபத்துக்குள்ளேயே ஒடுங்கிப்பொருகைக்கு உரிய தன்மை
நின் கண்ணே நின்றது

–

உன் பக்கலில் தான் உள்ளது.

தன்னுளே திரைத்து எழும்-
பகவத் சங்கல்பத்தால் தோன்றி உள்ளதும் பின்பு அழிவதும் அவனது ஸ்வரூபத்தில் பிறந்து லயிப்பது
கடலில் அலைகள் தோன்றி அழிவது போலேவே
தரங்கம் -அலைகள்-

நிற்பவும் திரியவும்–
நிற்பனவும் திரிவனவும் -ஸ்தாவர ஜங்கம ரூபமான பிரபஞ்சம் எல்லாம்

நின்னுளே பிறந்து இறந்து-உன் ஸ்வரூபத்துக்கு உள்ளே உத்பன்னமாய் லயம் அடைந்து
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே-உன் ஸ்வரூபத்துக்கு உள்ளே
ஒடுங்கிப் போக உரிய தன்மை உன் பக்கத்திலே தான் உள்ளது –

அதர்வசிகையிலே “*** “  – என்று ஓதப்பட்டிருக்கிறது. ‘

ஜகத்துக்கு எது உபாதாநகாரண்மோ அதுதான் உபாஸ்யம்’ என்பது அந்த ச்ருதிவாக்யத்தின் பொருள்.

அப்படி உபாதாக காரணத்வ ப்ரயுக்தமான ஆச்ரயணியத்துவமும் எம்பெருமானிடத்தே யுள்ளது என்கிறது இப்பாட்டு.

அலையெறிவு ஓய்ந்துகிடந்த கடலானது வாயுஸஞ்சாரத்தாலே எங்கும் அலையெறியப்பெற்று,

மீண்டும் காற்று ஓய்ந்தவாறே அவ்வலையெறிவு அடங்கி, கடலானது சாந்தமாவதுபோல- என்பது முன்னடிகளின் கருத்து.

பின்னாடிகளிற் கூறப்படும் அம்சத்திற்கு இது த்ருஷ்டாந்தம்.

தார்ஷ்டாந்திகத்தில் வாயுவின் ஸ்தானத்திலோ பகவத் ஸங்கல்பத்தைக்கொள்க.

ஸங்கல்பமில்லாதபோது பகவத்ஸ்வரூபம் சாந்தமாயிருக்கும்.

***- என்றாற்போன்ற ஸங்கல்பம் உண்டானவாறே ஸ்தாவர ஜங்கமாத்மகமான ப்ரபஞ்சங்கள் தோன்றுதலும்

பின்பு அழிதலுமான அவஸ்தைகளையடைந்து கடைசியாக

***- என்றபடி எம்பெருமானளவிலே உயஸம்ஹ்ருதங்களாய்ப் போகிறபடியை சொல்லுகிறது.

நிற்பவும் திரிபவும்- நிற்பனவும் திரிபனவு மென்றபடி.

—————

பிரஜாபதி பசுபதிகள் இவனுக்கு புத்ரராகவும் பரனாகவும் சுருதி சொல்லுமே –
ஸ்ருஜ்யர்-அஞ்ஞர்-ஆஸ்ரயணீயர் ஆக மாட்டார்களே

சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே –11-

பதவுரை

சொல்லினால்

–

வேதாந்த சாஸ்த்ர முகத்தாலே
தொடர்ச்சி நீ

–

(ஏகாந்திகளுக்கு) உறவை உண்டு பண்ணுமவன் நீ;
சொலப்படும் பொருளும் நீ

–

(சில புராணாதிகளில் ஆச்ரயணீயராகச்) சொல்லப்படுகிற தேவாதி பதார்த்தங்களுக்கு அந்ராத்மா நீ;
சொல்லரினால் சொல்லப்படாது தோன்றுகின்ற சோதி நீ சொல்லினால்

–

நீ காட்டிக்கொடுத்த வேதத்திற் சொல்லியபடி
படைக்க

–

(உலகங்களை) உண்டாக்குவதற்காக
நீ படைக்க வந்து தோன்றினார்

–

உன்னாலே ஸ்ருஷ்டிக்கப்பட்டு வந்து பிறந்தவர்களான ப்ரஹ்மாதிகன்
சொல்லினால்

–

சப்தங்களைக் கொண்டு
சுருங்க

–

சுருக்கமாவாவது
நின் குணங்கள்

–

உனது கல்யாண குணங்களை
சொல்லவல்லரே.

–

வர்ணிக்க சக்தர்களோ? (அல்லர்.)

சொல்லினால் –
வேதாந்த சாஸ்திர முகத்தால்

தொடர்ச்சி நீ-
ஏகாந்திகளுக்கு .உறவை உண்டுபவன் நீ

சொலப்படும் பொருளும் நீ-
சில புராணங்களில் சொல்லப் படும் தேவாதி அனைத்துக்கும் அந்தர்யாமி நீயே .

சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ-
வேதத்தால் சொல்ல முடியாது என்று தோன்றுகின்ற தேஜஸ் சப்த வாக்யனும் நீயே .

சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்-
நீயே காட்டிக் கொடுத்த வேதத்தில் சொல்லிய படியே உலகத்தை உண்டாக்கிய உன்னாலேயே சிருஷ்டிக்கப் பட்டு
வந்து பிறந்த பிரம்மா முதலானோர்

சொல்லினால் –
சப்தங்களைக் கொண்டு

சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே –
சுருக்கமாக வாவது -உனது கல்யாண குணங்களை வர்ணிக்க சக்தர்களோ

***- ப்ரஹ்ருத்ராதிகள் ஆச்ரயணீரல்லர்களென்றும் எம்பெருமானொருவனே ஆச்ரயணீயனென்றும் சொல்லிவிடலாமோ?

வேதங்களில் ***-***- இத்யாதிகளான சில வாக்கியங்கள் சிலபாரம்யத்தையும்

***- இத்யாதிகளான சில வாக்யங்கள் ப்ரஜாபதி பாரம்யத்தையும் சொல்லிக்கிடக்கின்றனவே;

அவர்கள்- ஆச்ரயணீயராகத் தடையென்ன? என்று சிலர்க்கு சங்கையுண்டாக

அந்த ப்ரஜாபதி பசுபதிகள் எம்பெருமானுக்குப் புத்ரபௌத்தர்களான வேதங்கள் முறையிடா நிற்பதுந் தவிர,

அவர்கள் எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை விரிவாகப் பேசமாட்டாமையன்றிக்கே

சுருக்கமாகவும் பேசமுடியாதவர்களென்று ப்ரமாண ப்ரஸித்தமாயிருக்க,

இப்படி ஸ்ருஜ்யர்களாகவும் அஜ்ஞர்களாயுமுள்ள அவர்கள் ஆச்ரயணீயராகைக்கு ப்ரஸக்தியேயில்லை யென்றாயிற்று.

————–

உலகு தன்னை நீ படைத்தி யுள் ஒடுக்கி வைத்தி மீண்டு
உலகு தன்னுளே பிறத்தி ஓர் இடத்தை அல்லை ஆல்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகு நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே –12-

பதவுரை

உலகு தன்னை

–

லோகங்களை
நீ படைத்தி

–

நீ ஸ்ருஷ்டியாகின்றாய்;
உள் ஒடுக்கி வைத்தி

–

(நித்யஸநமித்திகாதி ப்ரளயாபத்துக்களிலே அவ்வுலகங்களைத்) திருவயிற்றினுள்ளே ஒடுங்கவைத்து நீயே நோக்கா நின்றாய்.
மீண்டு

–

அதுமன்றியில்
உலகு தன்னே

–

இவ்வுலகத்தினுள்ளே
பிறத்தி

–

வந்து அவதரியா நின்றாய்;
ஓர் இடத்தை அல்லை

–

ஓரிடத்தை இருப்பிடமாகவுடையை என்று நிர்ணயிக்க முடியாதவனாயிரா நின்றாய்;
உலகு

–

ப்ரபஞ்சம் முழுதும்
நின்னொடு ஒன்றி நிற்க

–

(சரீரியான) உன்னோடு (சரீரமாய்) அணைந்து நிற்க
வேறு நிற்றி

–

அஸாதாரண விக்ரஹகத்தோடு கூடி வ்யாவ்ருத்தனாயிரா நின்றாய்;

ஆதலால்:

உலகில்

–

லோகத்திலே
குழல் உள்ள நின்னை

–

ஆச்சரியமான படிகளையுடைய உன்னை
யாவலர் உள்ள வல்லவர்

–

அறியவல்லாரார்?

 

உலகு தன்னை நீ படைத்தி-
ஜகத் காரண பூதனாய் நின்று நோக்கும் அளவே அன்று
வேறு நிற்றி -அசாதாரண விக்ரஹத்தோடு கூடி வந்து திருவவதரித்து நோக்குகின்ற உன் படிகளை
சூழல் உள்ள நின்னை-ஆச்சர்யமான படிகளை உடைய உன்னை
அறிய வல்லார் யாரும் இல்லை என்கிறார்-

ஜகத்காரணபூதனாய்நின்று நோக்குமளவே யன்றிக்கே அஸாதாரண விக்ரஹத் தோடுங் குடிவந்தவதரித்து நோக்குகின்ற உன்படிகளை அறியவல்லார் ஆருமில்லை யென்கிறார்.

நான்காமடியை, சூழல் உள்ள நின்னை  உலகில் யாவருள்ளவல்லர்” என மாற்றி அந்வயித்துக்கொள்க.

ஆச்சர்யமான படிகளையுடைய உன்னை லௌகிக புருஷர்களில் அறியவல்லார் ஆருமில்லை யென்க.

இனி, நின்னை என்பதற்கு ‘உன்னிடத்திலே’ என்று பொருள்கொண்டு உன்னிடத்திலே உள்ள சூழலை ஆர் அறியவல்லார்? என்னவுமாம்.

படைத்தி-, வைத்தி, பிறத்தி, நிற்றி= இவை முன்னிலை யொருமை வினை முற்றுக்கள்.

—————-

இன்னை என்று சொல்லலாவது இல்லை யாதும் இட்டிடைப்
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்
பின்னையாய கோலமோடு பேருமூரும் ஆதியும்
நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே –13-

பதவுரை

இன்னை என்று

–

‘நீ இப்படிப்பட்டவன்’ என்று
சொல்லலாவது

–

சொல்லக்கூடியது
யாதும் இல்லை

–

ஒரு படியுமில்லை;
உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்

–

உன்னுடைய அவதாராதி விஷயங்களில் ஆச்ரிதர்க்கும் அநாச்சரிதர்க்கு முள்ள விவாதத்தை அறிந்திருக்கும் மஹான்கள் (உன்னை)
ஆதியும்

–

(விக்ரக்ஷபரிக்ரக்ஷம் பண்ணினதற்குக்கு) காரணத்தையும்
நீர்மையால் நினைக்கில் (அல்லது)

–

உன்னுடைய கிருபையினாலே நீ அறிவிக்க இறியுமதெழிய
இட்டிடை பின்னை கேள்வன் என்பர் நின்னை

–

நுண்ணிய இடையை யுடையளான நப்பின்னைப்பிராட்டிக்கு வல்லபனானகக் கூறுவர்கள்; உன்னுடைய
பின்னை ஆய கோல மோடு

–

ஸர்வவிலக்ஷணமான திவ்விய மங்கள விக்ரக்ஷத்தையும்
பேரும் ஊரும்

–

திருநாமங்களையும் திவ்யஸ்தானங்களையும்
ஆர் நினைக்க வல்லர்

–

(மற்றைப்படி) அறிய வல்லாரார்?

 

“இன்னை என்று சொல்லலாவது இல்லை-
நீ இப்படிப் பட்டவன் என்று சொல்லக் கூடியது ஒரு படியும் இல்லையே

உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்-
உன்னுடைய திருவவதாரத்து விசேஷங்களை ஆஸ்ரிதர்களுக்கும் அநாஸ்ரிதர்களுக்கும்
உள்ள விவாதத்தை அறிந்த மகான்கள்

இட்டிடைப் பின்னை கேள்வன் என்பர் –
நுண்ணிய இடையை உடைய நப்பின்னை பிராட்டியாருக்கு வல்லபனாக கூறுவார்கள்

பின்னையாய கோலமோடு-
சர்வ விலஷணமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும்

பின்னையாய கோலம் –
மானிட ஜாதிக்கும் கீழாக திரியும் ஜாதியில் வந்து திருவவதரித்து -என்றும் கொள்ளலாம்

பேருமூரும் ஆதியும்-
திரு நாமங்களையும் -திவ்ய தேசங்களையும் விக்ரஹ பரிக்ரஹம் பண்ணியதற்கு காரணத்தையும்

நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே-
நீர்மையால் நினைக்கில் அல்லது நின்னை யார் நினைக்க வல்லர் -ஒழிய மற்றப்படி யாராலும் அறிய முடியாதே-

ஆதி அம் ஜோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த

பிணக்காவது-ஆஸ்ரியர்கள் பேரும் ஓர் ஆயிரம் பிற பல உடைய எம்பெருமான் -என்றும்
அநாஸ்ரிதர்கள் பேரும் ஓர் உருவமும் உள்ளதில்லை என்பர் –

எம்பெருமானுடைய வைலக்ஷண்யத்தையும் அவதார ரஹஸ்யங்களையும் அவன் தானே காட்டிக் கொடுக்கில் காணுமதொழிய ஸ்வப்ரயத்நத்தாலே ஆர்க்கும் காணமுடியாதென்கிறார்.

“ஆகியஞ்சோதியுருவை அங்கு வைத்திருங்குப்பிறந்த” என்றபடி

தன்படிகளில் ஒன்றும் குறையாமே எல்லாவற்றோடுங் கூடிவந்து திருவவதரித்து நிற்கிற நிலையிலே

உன் படிகளில் ஏதாவதொருபடியையும் பரிச்சேதித்து அறிய முடியாதென்பது முதலடியின் கருத்து.

உன்னாலே *மயர்வர மதிநல மருளப்பெற்ற உன் விஷயங்களை யெல்லாம் நன்கறிந்துள்ள மஹான்கள்

“மிதுநமே ஆச்ரசணீயம்” (அதாவது பெருமாளும் பிராட்டியுமாக இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்கை முறை)

என்று சொல்லுவார்கள்- என்பது இரண்டாமடியின் கருத்து.

பிணக்காவது – “பேருமோருருவமும் உளதில்லை” என்று அநாச்ரிதர்கள் கூறுவதும்,

“பேருமோராயிரம் பிறபலவுடைய வெம்பெருமான்” என்று ஆச்ரிதர் கூறவதுமான இப்படிப்பட்ட விவாதம்:

இதனையறிந்தவர்களென்றால், அநாச்ரிதர்கள் கூறுவது அஸம்பத்தமென்றும் ஆச்ரிதர்கள் கூறுவதே பொருத்தமுடைத்தென்றும் சோதித்தறிந்தவர்களென்கை.

“பிள்ளையாயகோலம்” என்றது- இதர வ்யாவ்ருத்தமான விக்ரஹமென்றபடி.

அன்றி, மானிட சாதிக்கும் ” பிற்பட்டதான் (ஹேயமான) திர்யக்காதி ஜாதியிலேயான திருமேனி யென்னவுமாம்.

“***- என்று கீதையிலே அறிவித்தாப்போலே நீறே அறிவிக்கில் அறியுமத்தனையொழிய மற்றைப்படியாக அறியமுடியாதென்பது ஈற்றடியின்கருத்து.

இப் பாட்டின் முடிவில் நினைக்கிலே என்றவிடத்து அல்லது என்று கூட்டிக் கொள்ளவேணுமென்பர்.

—————

தூய்மை யோகமாயினாய் துழாய் அலங்கல் மலையாய்
ஆமையாகி ஆழ் கடல் துயின்ற வாதிதேவ நின்
நாமதேயமின்ன தென்ன வல்லமல்ல வாகிலும்
சாம வேத கீதனாய சக்ர பாணி அல்லையே –14-

பதவுரை

தூய்மை யோகம் ஆயினாய்

–

ஸம்ஸாரிகள் அழுக்குடம்பு நீங்கிப் பரிசுத்தமான அப்ராக்ருத சரீரம் பெறும்படி அருள் செய்யுமவனே!
துழாய் அலங்கல் மழையாய்

–

திருத்துழாய்மாலை யணிந்துள்ளவனே!
ஆமை! ஆகி! ஆழ்! கடல்! துயின்ற! ஆதிதேவ!

–

கூர்மருபியாய் ஆழ்ந்த கடலிலே திருக்கண் வளர்ந்தருளின ஆதி தேவனே!
நின் நாமதேயம்

–

உனது திருநாமங்களுக்கு வாச்யமான குசேஷ்டிதங்கள்
இன்னது என்ன

–

இன்னின்னவை யென்று சொல்ல
வல்லம் அல்ல ஆகிலும்

–

யாம் ஸமர்த்தர்களல்லோ மாயிலும்
சாம வேத கீதன் ஆய

–

ஸாமவேதத்திலே ப்ரதிபாதிக்கப்பட்டவனான
சக்ர பாணி அல்லையே

–

கையிலே திருவாழி யணிந்த பரமபுருஷன் நீயேயிறே (என்று சொல்லவல்லோம்)

தூய்மை யோகமாயினாய் –
சம்சாரிகள் அழுக்கு உடம்பு நீங்கி அப்ராக்ருத சரீரம் பெறும் படி அருள் செய்பவன்

நின் நாமதேயமின்ன தென்ன வல்ல மல்ல வாகிலும்–
உனது திரு நாமங்களுக்கு வாச்யமான திருக் கல்யாண குண சேஷ்டிதங்கள்
உனது எண்ண முடியாத பல பல திருக் கல்யாண குணங்களையும் இன்புறும் விளையாட்டுக்களையும் இவை இவை என்று
பகுத்து சொல்ல அடியேன் சமர்த்தன் அல்லேன் என்றாலும்
நீ பரிஹரித்து அருளின ஸ்ரீ கூர்ம விக்ரஹம் –திருக்கையில் திருவாழியுமான சேர்த்தியை சாம வேதத்தில் அருளிய
அதி ரமணீய ஹிரண்மய விக்ரஹம் என்று அறிந்தேன் என்கிறார் —

“நம் அவதாரரஹஸ்யத்தை நீர் அறிந்தபடி யென்?” என்று எம்பெருமான் திருவுள்ளமாக,

“ப்ரயோஜநாந்தர பரர்க்காக இதர ஸாஜாதீயராகத் திர்யக் யோநியிலே திருவவதரித்தருளின தேவரீருடைய குண சேஷ்டிதங்களை அடியேன் பரிச்சேதித்து அறியமாட்டேனேலும் அவ்வழக்கு ***- என்றறிந்தேன்” என்கிறார்.

தூய்மை யோகமாயினாய்! = அசித் ஸம்ஸர்க்கத்தாலே அசுத்தனான ஸம்ஸாரிக்கு உன் “க்ருபையாலே அந்த அசித்ஸம்ஸர்வர்க்கத்தை யறுத்து நித்யஸூரிகளோடே சேர்த்து உன்னை அநுபவிப்பிக்கவல்ல சுத்தியோகத்தையுடையவனே! என்ற படி.

(நின்நாமதேயம் இத்யாதி.) நாமதேயமாவது- குணங்களையும், சேஷ்டிகளையும் சொல்லுகிற திருநாமம். ஆயினும் இச்சொல் இங்கு இலக்கணையால் திருநாமவாச்யமான குணசேஷ்டிதஙக்ளையே சொல்லக்கடவ’தாமென்பர்.

“நின்னாமதேயமென்று-வாச்யமான குணசேஷ்டிதங்களை ***-கமான சப்தத்தாலே லக்ஷிக்கிறது” என்ற வியாக்கியான ஸூக்தி காண்க.

உன்னுடைய எண்ணில் பல்குணங்களையும் இன்புறு மிவ் விளையாட்டுகளையும் இவை யிவையென்று பகுத்துச் சொல்ல அடியேன் அமஸமர்த்தனேயாகிலும் என்றவாறு.

சாமவேதநீதனாய சக்ரபானியல்லையே = நீ பரிக்ரஹித்தருளின் கூர்மவிக்ரஹம் ஸாமாக்யமானதல்லவென்றும் ஸாக்ஷாரத் ***- மாய்க் கையுந்திருவாழியுமான அதிரமணீய ஹிரண்மய விக்ரஹம் என்றும் அறிந்தேனென்கை

————-

அங்கமாறு வேத நான்கு மாகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணைத் தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வ மல்கு சீரினாய்
சங்க வண்ண மன்ன மேனி சாரங்க பாணி யல்லையே –15-

பதவுரை

அங்கம் ஆறும்

–

சீக்ஷை முதலிய ஆறு அங்கங்களென்ன
வேதம் நான்கும்

–

(அங்கியான) நான்கு வேதங்களென்ன (இவற்றுக்கு)
ஆகி நின்று

–

ப்ரவர்த்தகனாய் வேதங்களினுள்ளே
தங்குகின்ற தன்மையாய்

–

ஸுப்ரதிஷ்டிதமாயுள்ள ஸ்வரு பஸ்வாபங்களையுடையவனே!
தடம் கடல்

–

மஹா ஸமுத்திரத்திலே
பணம் தலை செம் கண் நாக அணை

–

படங்களின் தலையிலே சிவந்த கண்களை யுடையனான தீருவனந்தாழ்வானாகிற அணையிலே
கிடந்த

–

கண்வளர்ந்தருளுகிற
மல்குசெல்வம் சீரினாய்

–

நிறைந்த செல்வத்தையும் குணங்களையுடையவனே!
சஙக வண்ணம் அன்னமேனி

–

சங்கினுடைய வர்ணம் போன்ற திருமேனியையுடையனாய் (கிருதயுகத்தில் திருவவதரித்து)
சாரங்கபாணி அல்லையே

–

(த்ரேதாயுகத்தில் இக்ஷ்வாகு குலத்திலே) கையும் வில்லுமாய் வந்து பிறந்தவன் நீயேயன்றோ?

 

அங்கமாறு–
சீஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற ஆறு வேத அங்கங்களும்
அஷரங்களை உச்சரிக்க வேண்டியவற்றை சிஷை சொல்லும்
பிரகிருதி பிரத்யங்களின் பாகுபாடு வியாகரணத்தில்
அர்த்த விவேகம் சொல்லும் .நிருக்தம்
காலங்களை ஜ்யோதிஷமும்
வைதிக கர்மங்களை அனுஷ்டிக்க வேண்டிய முறைகளை கல்பமும் சொல்லும் –

இந்த ஆறு அங்கங்களும் நான்கு வேதங்களுக்கும் உண்டு -இவற்றால் அவனுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்கள் சொல்லப்படும் .

அவன் தான் –மா கடல்
திருப் பாற் கடலில்-
பணைத் தலை-செங்கண் நாகணைக் கிடந்த.-
பணங்களின் தலையில் சிவந்த கண்களை உடைய திரு அனந்தாழ்வான் என்னும் அணையில் பள்ளி கொண்டு இருக்கும் .

மல்கு செல்வம் சீரினாய்.”-
நிறைந்த செல்வத்தையும் குணங்களையும் கொண்ட

சங்க வண்ண மன்ன மேனி-
சங்கின் வண்ணம் போன்ற திருமேனியை உடையவன்-கருத யுகத்தில் திருவவதரித்து

சாரங்க பாணி யல்லையே –
த்ரேதா யுகத்தில் இஷ்வாகு குலத்திலே திருக்கையிலே திருச் சார்ங்கம் என்னும் கோதண்டம் கொண்டு
வந்து திரு வவதரித்த நீயே அன்றோ -என்கிறார்-

வேதங்கட்கும் அவற்றின் அங்கங்கட்குமே விஷயமாகவல்ல ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய நீ

ஆச்ரிதர்களை அநுக்ரஹிக்கைக்காகத் திருப்பாற்கடலிலேயே திருக்கண் வளர்ந்தருளி,

அதுதானும் பரதசை யென்னும்படி அங்கு நின்னும் புறப்பட்டு ஆச்ரிதர் உகந்த ரூபத்தையே

உனக்கு ரூபமாகக் கொண்டு வந்தவதரித்தாய் என்கிறார்.

அங்கம் ஆறும் = சீக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என வேதாங்கள் ஆறு.

அச்சுக்கள், ஹல்லுக்கள் என்னும் அக்ஷரங்களை உச்சரிக்க வேண்டிய முறைகளும்,

அவை ஒன்றோடொன்று சேர வேண்டும் முறைகளும் சீக்ஷையில் சொல்லப்படும்;

ப்ரக்ருதி ப்ரத்யயங்களின் பாகுபாடும், அவற்றின் அர்த்தவிவேகமும் வியாகரணத்திலும் நிருக்தியிலும் நிர்ணயிக்கப்படும்;

காயத்ரீ, த்ரிஷ்டுப், ஜகதீ இத்யாதி ***-சந்தங்களில் கூறப்படும்;

வேதோக்கர்மங்களைக் காலமறிந்து அநுஷ்டிக்க வேண்டுகையாலே அக்காலங்களை யறிவிக்கும் ஜ்யோதிஷம்:

ஆச்வலாயநர், ஆபஸ்தம்பர் முதலிய மஹர்ஷிகளால் செய்யப்படட் கல்பங்களில்

வைதிக கருமங்களை அநுஷ்டிக்க வேண்டிய முறைமைகள் விளக்கப்படும்.

இப்படிப்பட்ட ஆறு அங்கங்களோடு கூடிய வேதங்கள் நான்கு. ருக், யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்பன.

ஆக இந்த ஸாங்கவேதங்களாலும் எம்பெருமானுடைய ஸ்வரூபஸ்பாவங்களே ப்ரதிபாதிக்கப்படுகின்றமை

ஒன்றரை யடிகளாற் கூறப்பட்டதாயிற்று.

———–

தலைக் கணத் துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய் –
நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடிரும்
கலைக் கணங்கள் சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின் தன் மாட்சியே —-16 –

பதவுரை

தலைக்கணம்

–

முதன்மைபெற்ற தேவகணமென்ன
துகள்

–

க்ஷுத்ரமான ஸதாவரகணமென்ன
குழம்பு சாதி

–

மிச்ரயோனிகளான மநுஷ்ய திர்யக்ஜாதிகளென்ன இவற்றிலே
சோதி

–

அப்ராக்ருதமான தேஜஸ்ஸோடே கூட
தோற்றம் ஆய்

–

திருவவதரித்து
நிலைக்கணகங்கள் காண

–

(தேவாதிகள் மாத்திரமே யன்றியே) ஸ்தாவரங்களும் (உன்னை) அனுபவிக்கும்படி
வந்து நிற்றி

–

வந்து நிற்கிறாயாகிலும்
ஏலும் நீடு  இரும் கலை கணங்கள்

–

நித்தியமாய் விரிந்தவையான வேதசாஸ்திர ஸமூஹங்கள்
சொல் பொருளினால்

–

அபிதாநவ்ருத்தியாலும்
கருத்தினால்

–

தாம்பர்ய வ்ருத்தியாலும்
நினைக்க ஒணா

–

(உன் பெருமைகளை) நினைக்கவும் மாட்டாமல்
மலை கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி

–

பர்வத ஸமூஹஙக்ள்போல் அபரிச்சேத்யமாக அறிவிக்கும் வைலக்ஷண்யமானது
நின் தன் மாட்சியே

–

உன்னுடைய வைலக்ஷண்ய மென்னுமித்தனை

தலைக்கணம் –
முதன்மை பெற்ற தேவ கணங்கள்

துகள் –
ஷூத்ரமான ஸ்தாவர கணங்கள்-
குப்ஜ மரமாய் -சிறிய மரமாயும் திருவவதாரம் செய்ததை புராணம் கூறும் –

குழம்பு சாதி –
மிஸ்ர யோநிகளான மனுஷ்ய ஜங்கம ஜாதிகள் இவற்றிலே ”

சோதி தோற்றமாய் –
அப்ராக்ருத தேஜஸ் உடன் திரு வவதரித்து

நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும்-
தேவர்கள் மட்டும் இல்லாது அனைவரும் அனுபவிக்கும் படியாக வந்து நிற்பாயாகிலும்
நிலைக் கணங்கள்-அசையாமல் நிலை நிற்கும் ராசிகள் -ஸ்தாவர சமூகங்கள்

நீடிரும் கலைக் கணங்கள் –
நித்தியமாயும் விரிந்தும் உள்ள வேத சாஸ்திர சமூகங்கள்

சொல் பொருள் கருத்தினால் –
அபிதான வ்ருத்தியாலும் தாத்பர்ய வ்ருத்தியாலும்

நினைக்கொணா-
உனது பெருமைகளை நினைக்கவும் மாட்டாமல் .
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி-
பர்வத சமூகங்கள் போலே அபரிச்சேத்யமாக அறிவிக்கும் வைலஷண்யம்

நின் தன் மாட்சியே –
உன்னுடைய வைவைலஷண்யம் எத்தனை

திருப்பாற்கடலில் நின்றும் தேவ மதுஷ்பாதி யோநிகளிலே அவதரித்து ரக்ஷிப்பது மாத்திரமே யன்றி

ஸ்தாவர பர்யந்தமான நால்வகை ஸ்ருஷ்டிகளிலும் அவதரித்து நீ உன்னை ஸர்வாநுபயோக்யனாக, ஆக்கினாலும்

சாஸ்த்திரங்களானவை பரிச்சேதித்து அறியமாட்டாதபடியன்றே உன்னுடைய அவதார வைக்ஷைண்ய மிருப்பது என்கிறார்.

மநுஷ்யாதிகளுக்கு மேற்பட்ட தேவகணத்தைத் தலைக் கணமென்கிறது

க்ஷுத்ரகணங்களாகிய ஸ்தாவராதிகளைத் துகள்கண மென்கிறது. மநுஷ்ய கணங்களும் திர்யக்கணங்களும் குழம்பு சாதி யெனப்படும்.

தேவகணங்கள் புண்யயோநியாய், ஸ்தாவரங்கள் பரபயோநியாய் இருப்பது போன்றியே மநுஷ்ய திர்யக்ஜாதிகளிரண்டும் புண்யபாப மிச்ரயோநிகளாகையாலே குழம்புசாதி என்கை உசிதம்;

ஆக இந்நான்கு யோநிகளிலும் *** என்றபடி அப்ராக்ருத திவ்யளம்ஸ்தாகத்தோதே பிறந்தருளின படியைக் கூறுவது முதலடி.

ஸ்தாவரஜாதியில் எம்பெருமான் பிறந்தனை யுண்டோவென்னில் உண்டு;

கும்ஜாம்ரமாய் (-அதாவது சிறியதொரு மாமராய்)த் திருவவதரித்த வரலாறு புராண ப்ரஸித்தம்.

இப்படி திருவதரித்து, நிலைக்கண்கள் காணவந்து நிற்றியேலும் = தேவாதிகள் மாத்ரமில்லாமல் ஸ்தாவரங்களும்கூட உன்னை அநுபவிக்கும்படி நீ வந்து நின்றாயாகிலும்,

நிலைக் கணகங்கள் – அசையாமல் நிலைநிற்கும் ராசிகள், ஸ்தாவர ஸமூஹங்கள்.

நீ இப்படி தாழநின்றாலும் வேதம் முதலிய சாஸ்த்ரங்களானவை உன் வைபவத்தை ஒருபடியாலும் பரிச்சேதிக்கமாட்டாமல்,

பர்வத ஸமூகங்களை வர்ணிக்கப்புகுந்த வொருவன் அவற்றைப் பரிசேசதித்து வர்ணிக்கமாட்டாதே

ஒரு ஸமுதாய ரூபேண வர்ணிக்குமாபோலே வர்ணிக்குமித்தனை யல்லது வேறில்லை யென்கிறார்

நீடிருங் கலைக்கணகங்கள் இத்யாதியால்

——————-

ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது மேல்
ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் ஆதி தேவனே –17-

பதவுரை

ஆதி தேவனே

–

ஸர்வகாரண பூதனான பெருமாளே!
ஏகமூர்த்தி ஆய்

–

(பரமபதநிலயனான) பரவாஸு தேவமூர்த்தியாய்
மூன்று மூர்த்தி ஆய்

–

ஸங்கர்ஷண, ப்ரத்யம்ந, அநிருத்தர்களாகிற மூன்று மூர்த்தியாய்
முதலாயிரம்

–

திருச்சந்த விருத்தம்
நாலு மூர்த்தி ஆய்

–

ப்ரதாநம், புருஷன், அவ்யக்தம், காலம் என்னுமிவற்றை சரீரமாகக்கொண்ட நாலு மூர்த்தியாய்
நன்மை சேர் போகம் மூர்த்தி ஆய்

–

விலக்ஷணமாய்ப் போகத்தக்கு அர்ஹமான மூர்த்தியாய்
புண்ணியத்தின் மூர்த்தி ஆய்

–

புண்யமே வடிவுகொண்டதொரு மூர்த்தியாய்
எண் இல் மூர்த்தி ஆய்

–

(இப்படி) எண்ணிறந்த (பல பல) மூர்த்தியாய்
நலம் கடல்

–

நல்ல திருப்பாற்கடலில்
நாகம் மூர்த்தி சயனம் ஆய் கிடந்து

–

திருவனந்தாழ்வானுடைய திருமேனியைப் படுக்கையாக வுடையவனாய்க் கண் வளர்ந்தருளி
மேல்

–

அதுக்குமேலே
ஆக மூர்த்தி ஆய வண்ணம்

–

அடியார்கள் உகந்த உருவமாகிய அர்ச்சரவதாரமாய் அவதரித்த தன்மை
என் கொல்

–

என்னாயிருந்தது.

ஏக மூர்த்தி
பரமபத நிலையனான பர வாஸூ தேவ மூர்த்தியாய்

மூன்று மூர்த்தி யாய் –
சங்கர்ஷன பிரத்யுமான அநிருத்தன் ஆகிய மூன்று மூர்த்திக்களுமாய்

நாலு மூர்த்தி யாய்
பிரதானம் புருஷன் அவ்யக்தம் காலம் என்னும் இவற்றை சரீரமாகக் கொண்ட

நன்மை சேர் போக மூர்த்தி யாய் –
விலஷணமாய் போகத்துக்கு அர்ஹ்யமான மூர்த்தியாய்

புண்ணியத்தின் மூர்த்தி யாய்
புண்யமே வடிவு கொண்ட தொரு மூர்த்தியாய்

எண்ணில் மூர்த்தியாய்-
இப்படி எண்ணிறந்த பல பல மூர்த்தியாய்

நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது –
நல்ல தொரு பாற் கடலிலே திரு வநந்த ஆழ்வான் திரு மேனியைப் படுக்கையாகக் கொண்டு கண் வளரும்

மேல்
அதற்கும் மேலே

ஆக மூர்த்தி யாய வண்ணம் –
அடியார்கள் உகந்த உருவமாகிய அர்ச்சாவதாரமும் எடுத்த தன்மையை

என் கொல் ஆதி தேவனே ––
தமர் உகந்த உருவம் அவ்வ்ருவம் தானே போலே ஆதி தேவனே இது என்ன விந்தை என்கிறார் –

ஆதி காரணமாய் இருக்கும் நீ கார்ய வர்க்கத்துக்கு உள்ளே அதி ஸூத்ரனாய் இருப்பான் ஒரு சேதனனுடைய
அதீனமாய் இருப்பது என்ன வித்தகம் –

பரவாஸுதேவ மூர்த்தியா யிருந்துகொண்டு நித்யவிபூதியை நிர்வஹித்தும்,

வ்யூஹம் முதலாக ஸ்தாவரஜந்மபர்யந்தமாகத் திருவவதரித்து லீலாவிபூதியை நிர்வஹித்தும் போருகிற இவை

ஓரொன்றே சாஸ்த்ரங்களுக்கு அவிஷமாயிருக்க,

அதுக்குமேலே* தமருகந்த தெவ்வுரு மவ்வுருவந்தானாய் ஸர்வஸுலபனாய் ஸர்வ ஸஹிஸ்ணுவாய்

ஸர்வஜுஸமாராத்யனாய் அர்ச்சாவதார ரூபியாய்த் தன்னை அமைத்துநின்ற தன்மை என்னே! என்று

அது தன்னிலே உள் குழைகின்றார்.

“மேல் ஆகமூர்த்தியாய வண்ணம் என்கொல்!”- கீழ்க்கூறிய பற்பல திருவுருவங்களை ஏற்றுக் கொண்டதுமல்லாமல்

இப்படிப்பட்ட ஊர்வாத்மா பரதந்த்ரமான தொரு நிலைமையை ஏற்றுக்கொண்டவிது என்ன

ஸௌலப்ப பரமகாஷ்டை! என உள்குழைகிறபடி

ஆதிதேவனே! = ஜகத்துக்கெல்லாம் ஆதிகாரணமாயிருக்கிற நீ கார்யவர்க்கத்துக்குள்ளே

அதிக்ஷûத்ரனாயிருப்பானொரு சேதானுடைய விருப்பத்துக்கிணங்கி நடப்பது என்ன வித்தகம்! என்று கேட்கிறபடி-

——————————-

நாக மூர்த்தி சயனமாய் -என்றும் –
தடம் கடல் பணை தலை செங்கன் நாகனைக் கிடந்த -என்றும்- அருளிச் செய்த அநந்தரம்
அதிலே ஆழம் கால் பாட்டு அடுத்த பாசுரம் அருளுகிறார்

விடத்த வயோராயிரம் ஈராயிரம் கண் வெந் தழல்
விடுத்து விள்விலாத போக மிக்க சோதி தொக்க சீர்
தொடுத்து மேல் விதாநமாய பௌவ நீர் அராவணைப்
படுத்த பாயில் பள்ளி கொள்வது என் கொல் வேலை வண்ணனே –18-

பதவுரை

வேலை வண்ணனே

–

கருங்கடல் வண்ணனான எம்பெருமானே!
விடத்த

–

விஷத்தையுடைத்தான
ஒரு ஆயிரம் வாய்

–

ஓராயிரம் வாய்களினின்றும்
இரு ஆயிரம் கண்

–

ஈராயிரம் கண்களினின்றும்
வெம் தழல்

–

வெவ்விய தழலை
விடுத்து

–

புறப்படவிட்டுக்கொண்டு,
வீழ்வு இலாத போகம்

–

ஒரு காலும் விச்சேதமில்லாத பகவநறுபவத்தையுடையனாய்
மிக்க சோதி

–

மிகுந்த ஜ்யோதிஸ்ஸையுடையனாய்
விதானம் ஆய்

–

மேற்கட்டிபோன்ற படங்களினுடைய
மேல்

–

மேற்புறத்திலே
தொக்க

–

திரள்திரளாயிருக்கிற
சீர்

–

அழகை
தொடுத்து

–

தொடுத்து
பௌவம் நீர்

–

ஸமுத்ரஜலத்திலே
படுத்த

–

படுக்கையாக அமைந்த
அரா அணை பாயல் பள்ளி கொள்ளது

–

திருவனந்தாழ்வானாகிய சயகத்திலே பள்ளிகொண்டருளும் தன்னை
என் சொல்

–

எத்திறம்!

விடத்த வயோராயிரம்-
விடாத்தை உடைய ஆயிரம் வாயில் என்றும்

ஈராயிரம் கண் வெந்தழல்-விடுத்து-
ஈராயிரம் கண்கள் என்றும் வெவ்விய தழலை புறப்பட விட்டுக் கொண்டு

விள்விலாத போக
ஒரு காலும் விச்சேதம் இல்லாத பகவத் அனுபவத்தை உடையானாய்

மிக்க சோதி
மிகுந்த ஜ்யோதிசை உடையனாய்

தொக்க சீர்
திரள் திரளாக இருக்கும் அழகை

தொடுத்து மேல் விதாநமாய
தொடுத்து மேல் புறத்திலே மேல் கட்டி போன்ற படங்கள் உடைய

பௌவ நீர் அராவணைப் படுத்த பாயில் பள்ளி கொள்வது என் கொல் வேலை வண்ணனே –
சமுத்திர ஜலத்தில் படுக்கையை அமைத்த திரு வநந்த ஆழ்வான் சயனத்திலே பள்ளி கொண்டு அருளும் தன்மை எத்திறம் –

ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும் பூங்கார அரவு -போலே

விள்விலாத போகம் –
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமும் நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும் புணையாம்
அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும் அரவாம் திருமாற்கு அரவு –

பகவத் அனுபவம் மாறாமல் இருப்பதால் மிக்க சோதி -என்கிறார்-

கீழ் “நாக மூர்த்தி சயனமாய்” என்றும்

“தடங்கல்பணத்தலைச் செங்கணாகணைக் கிடந்த” என்றும்

க்ஷீரஸநகரசயநம் ப்ரஸ்துதமானவாறே திருவுள்ளம் அங்கே ஆழங்காற்பட்டு

அந்நிலையிலே அபிநிவேசாதிசயம் தோற்ற அருளிச் செய்கிறார்.

“விடத்தவாயொராயிர மிராயிரங்கண் வெந்தழல் விடுத்து” என்னுமளவால்

“ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு” (என்முகன் திருவந்தாதி.) என்ற அர்த்தத்தை அருளிச்செய்தபடி.

ஆபத்து நேருவதற்கு ப்ரஸந்தியற்ற இடத்திலுங்கூட ஆதராதி சயத்தினால் ஆபத்தை அதிசங்கித்துக் காப்பிடுந்தன்மை

நித்யஸுரிகளுக்கெல்லாம் உண்டாயிருக்கச் செய்தேயும் திருவனந்தாழ்வானுக்கு அது விசேஷித்திருக்குமாய்த்து.

வீழ்வு இலாத போகம் = “சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாய் நின்றால் மாவடியாம். நீள்கடலுள்-

என்றும், புணையாமணிவிளக்காம் பூம்பட்டாம் புக்கு மணையாந் திருமாற்கரவு.” என்றபடி

பஹுமுகாமகத்திருமால் திறத்தில் கிஞ்சித்கரிக்கும் தன்மையினால் பகவதநுபவமாகிற போகததிற்கு எப்போதும் விச்சேதமில்லாதவன் என்கை.

மிக்க சோதி = பகவதநுபவம் மாறாதே செல்லுமவர்கட்கு விலக்ஷணமானதொரு ஜேஸ்ஸு உண்டாகக் கடவதிறே;

அதனைச் சொல்லுகிறது.

கீழ்ப் பாட்டில் “பௌவநீரராவணைப் படுத்தபாயல் பள்ளிகொள்வதென்கொல்?” என்று-

ஏதுக்காகத் திருப்பாற்கடலில் கண்வர்ளந் தருளாநின்றாய்? என்று எம்பெருமானை நோக்கி வினவிய ஆழ்வாரைக்குறித்து

அப்பெருமான் “ஆழ்வீர்! ஸம்ஸாரிகளை ரக்ஷிப்பதற்காகத்தான் நாம் இக்கிடை கிடைக்கிறோம்” என்றருளிச்செய்ய;

அதுகேட்ட ஆழ்வார், ‘பஹுமுகமாக ஸம்ஸாரிசேதநர்களை ரக்ஷித்தருளின நீ ரக்ஷணக்ருத்யத்திலே இன்னும் சேஷம் வைத்திருக்கிறாயோ?

பண்டை எல்லாம் செய்தருளிற்றே! ஆயிருக்க, ஒன்றும் செய்யாதவன் போலவும்

இன்னும் பல செய்யக் கூடியவன் போலவும் திருப்பாற் கடலிலே வந்து கண்வளர்ந்தருள்வது என்னோ? என்கிறார்.

“புள்ளதாகி வேதான்கு மோதினாய்” என்று- ப்ரமாணத்தைக் கொடுத்தபடியையும்,

“புள்ளின்வாய் பிளந்து” என்று – ப்ரமேயபூதனான தன்னைக் கொடுத்தபடியையும் சொல்லிற்றாயிற்று.

இப்படிப்படட் ரக்ஷணம் என்றைக்கோ செய்யப்பட்டதாகில் இன்றைக்கும் மேலுள்ள காலத்துக்கும் என்னாயிற்று? என்று

சங்கிப்பார்க்கு இடமறும்படியருளிச் செய்கிறார்

புட்கொடியித்யாதி, தான் ரக்ஷணத்தொழிலொன்றிலேயே தீக்ஷிதன் என்பது தோன்றக் கொடிகட்டிக் கிடக்கிறபடி

ஆபத்து அடைந்தவர்கள் அனைவரும் தன்பக்கலிலே வந்து காரியங் கொள்ளும்படி ரக்ஷண தர்மத்தைத்

தெரிவிக்கைக்காகவிறே பெரிய திருவடியை தவ்ஜமாகக் கொண்டிருக்கிறது.

கருடனை த்வஜமாகக் கொண்ட மாத்திரத்தால் என்னாகும்? என்று சங்கிப்பார் தெளியுமாறு அருளிச் செய்கிறார். புள்ளையூர்தி என்று.

ஆச்ரிதர்கட்கு ஆபத்து நேர்ந்தால் பறவையேறிக் கடிதோடிக் காப்பிடுமவன் யல்லாமல்;

புன்னை ஊர்தி- ஆச்ரிதர் ஆபந்நராய் இருந்தவிடங்களிலே வந்து உதவுகைக்கு அவனை வாஹநமாகக்

கொண்டு நடந்தா நின்றாய்,  என்கை. ஊர்தி- ஊர்கின்றாய் என்றபடி.

“புட்கொடிப் பிடித்த பின்னரும்” என்று இப்போதைய பாடமிருந்தாலும்

“புட்கோடிப் பிடித்தி பின்னரும்” என்றே ப்ராசீகமும் சுத்தமுமான பாடமென்று அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்யக் கேட்டிருக்கை.

ஊர்தி என்றது போலவே பிடித்தி என்றதும் ‘பிடிக்கின்றாய்’ என்ற பொருளுடைய முன்னிலை யொருமை நிகழ்கால வினைமுற்று.

ஆகவே, “புள்ளதாகி வேத நான்குமோதினாய்,அதன்றியும் புள்ளின்வாய் பிளந்து புட்கொடிபிடித்தி, பின்னரும் புள்ளையூர்தி” என்றிங்ஙனே மூன்று வாந்யார்த்தமாகக் கொள்ளுதல் சிறக்குமென்க.

பின்னரும் என்னது- அன்றியும் (***) என்றபடி

ஆதலால் என்றது- இப்படியெல்லாம் செய்திருக்கச் செய்தேயும் என்றபடி-

அர்த்த ஸ்வாரஸ்யத்துக்கான சப்தத்தை செருக்குவது உசிதமேயாமென்க.

இப்படி பஹுமுகமாக ரக்ஷகத்வத்தை வெளிப்படுத்திக்கொண்டு ரக்ஷணைக தீக்ஷிதனாய் எழுந்தருளியிருக்கச் செய்தேயும்

திருப்பாற்கடலிலேவந்து குளிரிலே கிடப்பதேன்? என்று *** பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில்

இப்பாட்டின் அந்வயக்ரமம் சிறிது மாறுபட்டிருப்பினும் ஸுகு மாரமதிகளின் ஸௌகரியத்துக்காக இங்ஙனே யாம் உரைத்தோமென்றுணர்க.

கீழும் மேலும் இங்ஙனே யாமெழுது மிடங்களில் இதுவே ஸமாதாகமென்று கொள்க.

கடல் புள்ளிள் பகை மெய் கிடத்தல் காதலித்தது என்கொல்?- என்று மாற்றி அந்வயித்துக்கொள்க.

நித்யஸுரிகளில் தலைவராயும் எம்பெருமானுக்கு அந்தரங்க கிங்கரர்களாயுமுள்ள

பெரிய திருவடி திருவநந்தாழ்வான்களுக்கு உண்மையில் பகைமையென்ன ப்ரஸக்திதானுமில்லையேயாகிலும்

கருடஜாதிக்கும் ஸர்ப்பஜாதிக்கும் உலகவியற்கையிலே பகைமை காணப்படுவதுபற்றி “புள்ளின்பகை” என்று அருளிச் செய்தார்.

வியாக்கியானத்திலும்- “ஸாயாமர்ய த்ருஷ்டியால் பார்த்தால் திருவடிக்கு ஸஹஜத்ருவென்னலாயிருக்கிற

திருவனந்தாழ்வான்மேலே” என்று அருளிச்செய்துள்ளமை காண்க.

————————————————-

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின் வாய் பிளந்து புட் கொடி பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி யாதலால் என் கொல் மின் கொள் நேமியாய்
புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தாழ் காதலித்ததே –19-

பதவுரை

மின்கொள்  நேதமியாய்

–

தேஜஸ்வியாய் விளங்காநின்றுள்ள திருவாழியையுடைய பெருமானே!
புள் அது ஆகி

–

ஹம்ஸரூபியாய் அவதரித்து
வேதம் நான்கும்

–

நான்கு வேதங்களையும்
ஓதினாய்

–

உபதேசித்தருளினாய்,
அது அன்றியும்

–

அதுவுமல்லாமல்,
புள்ளின் வாய் பிளந்து

–

(உன்னை விழுங்குவதாக வாயைத் திறந்துகொண்டு வந்த) பகாஸுரனுடைய வாயைக் கிழித்து (அவனை முடித்து விட்டு)
புள்கொடி பிடித்த பின்னரும்

–

பெரிய திருவடியை த்வஜமாகப் பிடித்ததுமல்லாமல்
புள்ளை

–

அப்பெரிய திருவடியை
ஊர்தி

–

வரஹநமாகக்கொண்டு செல்லா நின்றாய்
ஆதலால்

–

இப்படி பலவகையான ரக்ஷணோபாயங்களைச் செய்தருளா நிற்கச் செய்தேயும்
கடல்

–

திருப்பாற்கடலிலே
புள்ளின் பகை மெய்

–

கருடஜாதிக்குப் பகையென்று தோற்றும்படியான திருவளர் தாழ்வானுடைய திருமேனியிலே
கிடத்தல்

–

பள்ளிகொள்வதை
காதலித்தது

–

விரும்பிப்போவதாகிய
என்கொல்

–

என்ன திருவுள்ளத்தாலே?

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் –
ஹம்ச ரூபனாய் திருவவதரித்து நான்கு வேதங்களையும் உபதேசித்து அருளினாய்

அதன்றியும் புள்ளின் வாய் பிளந்து –
அதுவும் அல்லாமல் பகாசுரனாய் -உன்னைக் கொல்ல வந்த பஷியின் வாயைப் கிழித்துக் கொன்று

புட் கொடி பிடித்த பின்னரும
பெரிய திருவடியை த்வஜமாக பிடித்ததும் அல்லாமல்

புள்ளை ஊர்தி யாதலால்
அந்த பெரிய திருவடியை வாகனமாயும் கொண்டு இப்படி பல பல ரஷண உபாயங்களைச் செய்து அருளி

என் கொல் மின் கொள் நேமியாய் புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தாழ் காதலித்ததே –
திருப்பாற் கடலிலே கருட ஜாதிக்கு பகை என்றும் தோற்றும்படியான திரு வநந்த ஆழ்வான் உடைய திரு மேனியிலே
பள்ளி கொள்வதை விரும்பிப் போர்வதான இக்கார்யம் என்ன திரு உள்ளம்
திருப் பாற் கடலிலே சயனித்து இருப்பது எதற்கு என்று வினவ
சம்சாரிகளை ரஷிக்க என்ன
முன்பே ஹம்சமாக வேதம் அனைத்தும் உபதேசித்து அருளினாய் என்ன –

இத்தால் பிரமாணம் கொடுத்து அருளி –
புள்ளின் வாய் கீண்டு –பிரமேய பூதமான தன்னை ரஷித்து அருளியும் சர்வ ரஷகன் என்று கொடி கட்டி பறை சாற்றிக் கொண்டு
ஆஸ்ரிதற்கு ஆபத்து வந்தால் பெரிய திருவடியை வாகனாமக் கொண்டு வந்தும் ரஷித்து அருளுகிறான் என்றவாறு-

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் -பிரமாணத்தைக் கொடுத்தபடி
புள்ளின் வாய் பிளந்து-ப்ரமேயபூதனான தன்னைக் கொடுத்தபடி
புட் கொடி பிடித்த–ரக்ஷணத்தில் தீஷிதனான படி
புள்ளை ஊர்தி–ரக்ஷணத்துக்கு கடிது ஓடி வரும் படி

கீழ்ப் பாட்டில் “பௌவநீரராவணைப் படுத்தபாயல் பள்ளிகொள்வதென்கொல்?” என்று- ஏதுக்காகத்

திருப்பாற்கடலில் கண்வர்ளந் தருளாநின்றாய்? என்று எம்பெருமானை நோக்கி வினவிய ஆழ்வாரைக்குறித்து

அப்பெருமான் “ஆழ்வீர்! ஸம்ஸாரிகளை ரக்ஷிப்பதற்காகத்தான் நாம் இக்கிடை கிடைக்கிறோம்” என்றருளிச்செய்ய;

அதுகேட்ட ஆழ்வார், ‘பஹுமுகமாக ஸம்ஸாரிசேதநர்களை ரக்ஷித்தருளின நீ ரக்ஷணக்ருத்யத்திலே இன்னும் சேஷம் வைத்திருக்கிறாயோ?

பண்டை எல்லாம் செய்தருளிற்றே! ஆயிருக்க, ஒன்றும் செய்யாதவன் போலவும்

இன்னும் பல செய்யக் கூடியவன்போலவும் திருப்பாற் கடலிலே வந்து கண்வளர்ந்தருள்வது என்னோ? என்கிறார்.

“புள்ளதாகி வேதான்கு மோதினாய்” என்று- ப்ரமாணத்தைக் கொடுத்தபடியையும்,

“புள்ளின்வாய் பிளந்து” என்று – ப்ரமேயபூதனான தன்னைக் கொடுத்தபடியையும் சொல்லிற்றாயிற்று.

இப்படிப்படட் ரக்ஷணம் என்றைக்கோ செய்யப்பட்டதாகில் இன்றைக்கும் மேலுள்ள காலத்துக்கும் என்னாயிற்று?

என்று சங்கிப்பார்க்கு இடமறும்படியருளிச் செய்கிறார் புட்கொடியித்யாதி,

தான் ரக்ஷணத்தொழிலொன்றிலேயே தீக்ஷிதன் என்பது தோன்றக் கொடிகட்டிக் கிடக்கிறபடி

ஆபத்து அடைந்தவர்கள் அனைவரும் தன்பக்கலிலே வந்து காரியங் கொள்ளும்படி ரக்ஷண தர்மத்தைத் தெரிவிக்கைக்காகவிறே

பெரிய திருவடியை தவ்ஜமாகக் கொண்டிருக்கிறது.

கருடனை த்வஜமாகக் கொண்ட மாத்திரத்தால் என்னாகும்? என்று சங்கிப்பார் தெளியுமாறு அருளிச் செய்கிறார். புள்ளையூர்தி என்று.

ஆச்ரிதர்கட்கு ஆபத்து நேர்ந்தால் பறவையேறிக் கடிதோடிக் காப்பிடுமவன் யல்லாமல்;

புன்னை ஊர்தி- ஆச்ரிதர் ஆபந்நராய் இருந்தவிடங்களிலே வந்து உதவுகைக்கு அவனை

வாஹநமாகக்கொண்டு நடந்தா நின்றாய்,  என்கை. ஊர்தி- ஊர்கின்றாய் என்றபடி.

“புட்கொடிப் பிடித்த பின்னரும்” என்று இப்போதைய பாடமிருந்தாலும் “புட்கோடிப் பிடித்தி பின்னரும்” என்றே ப்ராசீகமும் சுத்தமுமான பாடமென்று அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்யக்கேட்டிருக்கை.

ஊர்தி என்றது போலவே பிடித்தி என்றதும் ‘பிடிக்கின்றாய்’ என்ற பொருளுடைய முன்னிலையொருமை நிகழ்கால வினைமுற்று.

ஆகவே, “புள்ளதாகி வேத நான்குமோதினாய்,அதன்றியும் புள்ளின்வாய் பிளந்து புட்கொடிபிடித்தி, பின்னரும் புள்ளையூர்தி” என்றிங்ஙனே மூன்று வாந்யார்த்தமாகக் கொள்ளுதல் சிறக்குமென்க.

பின்னரும் என்னது- அன்றியும் (***) என்றபடி

ஆதலால் என்றது- இப்படியெல்லாம் செய்திருக்கச் செய்தேயும் என்றபடி- அர்த்த ஸ்வாரஸ்யத்துக்கான சப்தத்தை செருக்குவது உசிதமேயாமென்க.

இப்படி பஹுமுகமாக ரக்ஷகத்வத்தை வெளிப்படுத்திக்கொண்டு ரக்ஷணைக தீக்ஷிதனாய் எழுந்தருளியிருக்கச் செய்தேயும்

திருப்பாற்கடலிலேவந்து குளிரிலே கிடப்பதேன்? என்று *** பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில்

இப்பாட்டின் அந்வயக்ரமம் சிறிது மாறுபட்டிருப்பினும் ஸுகு மாரமதிகளின் ஸௌகரியத்துக்காக இங்ஙனே யாம் உரைத்தோமென்றுணர்க.

கீழும் மேலும் இங்ஙனே யாமெழுது மிடங்களில் இதுவே ஸமாதாகமென்று கொள்க.

கடல் புள்ளிள் பகை மெய் கிடத்தல் காதலித்தது என்கொல்?- என்று மாற்றி அந்வயித்துக்கொள்க.

நித்யஸுரிகளில் தலைவராயும் எம்பெருமானுக்கு அந்தரங்க கிங்கரர்களாயுமுள்ள

பெரிய திருவடி திருவநந்தாழ்வான்களுக்கு உண்மையில் பகைமையென்ன ப்ரஸக்திதானுமில்லையேயாகிலும்

கருடஜாதிக்கும் ஸர்ப்பஜாதிக்கும் உலகவியற்கையிலே பகைமை காணப்படுவதுபற்றி “புள்ளின்பகை” என்று அருளிச் செய்தார்.

வியாக்கியானத்திலும்- “ஸாயாமர்ய த்ருஷ்டியால் பார்த்தால் திருவடிக்கு ஸஹஜத்ருவென்னலாயிருக்கிற திருவனந்தாழ்வான்மேலே” என்று அருளிச்செய்துள்ளமை காண்க.

————————————————-

கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏசவன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே –-20-

பதவுரை

முன்

–

அநாதிகாலமாக.
வேலைநீர்

–

ஸமுத்ரஜலத்திலே
கூசம் ஒன்றும் இன்றி

–

சிறிதும் கூசாதே
மாசுணம்

–

திருவனந்தாழ்வானை
படுத்து

–

படுக்கையாக விரித்து
பேச நின்று தேவர் வந்து பாடக் கிடந்ததும்

–

ஸ்தோத்தரம் பண்ணுவதற்கென்று அமைந்த ப்ரஹ்மாதி தேவர்கள் வந்து பாடும்படி சமநித்தருளினபடியையும்
அன்று

–

தேவர்களுக்காகக் கடல் கடைந்த அக்காலத்தில்
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா (என்று) ஏச நீ கிடந்த ஆறும்

–

“வருண பாசங்கள் கிடக்கிற கடலிலேவாழ்கின்ற ஆமையென்னும் க்ஷுத்ர ஜந்துவாகப் பிறந்த கேசவனே!” என்று (அவிவேகிகள்) ஏசும்படி கிடந்தபடியையும்
தேற

–

அடியேன் நன்குதெரிந்து கொள்ளும்படி
கூறு

–

(எனக்கு) அருளிச் செய்யவேணும்.

 

கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
சிறிதும் கூசாதே -திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக விரித்து -சமுத்திர ஜலத்தில்

பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
ஸ்தோத்ரம் பண்ணுவதற்கு என்று -அமைந்த -ப்ரஹ்மாதிகளும் வந்து பாடும் படி அநாதி காலமாக
சயனித்து இருந்து அருளியதையும்

அன்று –
தேவர்களுக்கு கடல் கடைந்த அன்று

பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
வருண பாசங்கள் கிடக்கிற கடலிலே வாழுகின்ற ஆமை என்னும் ஷூத்ர சஜாதீயனாக திருவவதரித்த கேசவனே

ஏசவன்று நீ கிடந்தவாறு
அறிவிலிகள் ஏசும்படி கிடந்த படியும்

தேற கூறு –
அடியேன் நன்கு தெரிந்து கூறும்படி எனக்கு அருளிச் செய்ய வேணும்

நீர்மைக்கு எல்லை பாற் கடல் சயனம்
மேன்மைக்கு எல்லை கடல் கடைந்தது
இவற்றைப் பிரித்து எனக்கு அருளிச் செய்ய வேணும் என்கிறார்
எல்லா அவதாரங்களிலும் பரத்வ சௌலப்யங்கள் இரண்டுமே கலந்தே இருக்குமே –

பாசம் நின்ற நீர் –
பரம பதத்தை விட இந்த பாற் கடலிலே சயனம் போக்யமாய் இருக்கை –
ஆஸ்ரித ரஷணத்துக்காக வென்றே –கூப்பாடு கேட்கும் இடம் அன்றோ-
எல்லா அவதாரங்களில் பரத்வ ஸுவ்லப்யங்கள் ஒன்றுக்கு ஓன்று தொழாதே வீறு பெற்று இருக்குமே

ஆனி மாத சுக்ல பக்ஷ துவாதசி ஸ்ரீ கூர்ம ஜெயந்தி

ஜலாராசிக்ம்க்கு அதிஷ்டான தேவதை வருணனுக்கு ஆயுதம் பாசம் -பாசன் என்று வருணனைச் சொல்வர்

பரமபதத்தில் காட்டில் பாசம் மிக்கு உறங்குவான் போலே யோகு செய்கிறானே திருப் பாற் கடலிலே

ப்ரயோஜநரந்தபரரான நான்முகன் முதலானோர் எந்தத் திருப்பாற்கடலிலே

திருக்கண்வளர்ந்தருளுகிற மேன்மைதானே நீர்மைக்கு எல்லை நிலமாயிராநின்றது;

அமரர்க்கு அமுதமளிக்கக் கடல் கடைந்தபோது மந்தரமலையைத் தாங்குவதற்காக ஆமையாக உருவெடுத்த

நீர்மைதானே மேன்மைக்கு எல்லை நிலமாயிராகின்றது;

இவற்றைப் பிரித்து என்நெஞ்சிலே நன்குபடும்படி அருளிச்செய்யவே அருளிச்செய்யவேணுமென்கிறார்.

க்ஷீரஸாகரசயநவ்ருத்தாந்தம் முன்னடிகளில் கூறப்படுகிறது;

கூர்மாவதாக வ்ருத்தாந்தம் பின்னடிகளில் கூறப்படுகிறது.

க்ஷீரஸாகரசயநம் பரத்வப்காசகமாயினும் ப்ரயோஜநாந்தாபர்களும் வந்து கிட்டித் துதிக்கலாம்படி

எம்பெருமான் தன்னை அமைத்துக்கொண்டு கிடக்கிறபடியை நோக்கினவாறே

“இப்படியும் ஒரு எளிமை உண்டோ?” என்று உள்குழையும்படி யிருந்தலாலும்,

ஆமையாய்ப்பிறந்த பிறவி எல்லார்க்கும் ஏசுகைக்கிடமாயிருந்தாலும்

தேவதே வாதி தேவனான பரமபுருஷன் *** “பின் பிறப்பாய் ஒளிவரு முழுநலம்” இத்யாதிப்படியே

தண்ணிய பிறவியிற் பிறந்த விடத்தும் பரத்வம் குன்றாமற் பொலியநிற்பதே! என்று ஈடுபடும்படியாயிருத்தலாலும்,

மற்றுள்ளார்க்குப் பரத்வம் தோன்றுமிடத்தில் எளிமையும்,

எளிமை தோன்றுமிடத்தில் பரத்வமும் இவ்வாழ்வார்க்குத் தோன்றாநின்ற தாய்த்து.

எல்லா அவதாரங்களிலும் பரத்வஸௌலப்யங்கள் ஒன்றுக்கொன்று தோலாதே வீறு பெற்றிருக்குமென்பதுவே இப்பாட்டின் உள்ளுறை.

ஸௌலப்யத்தோடு இணங்காத பரத்வமும், பரத்வத்தோடு இணங்காக ஸௌலப்யமும்

ஒருபொருளாக மதிக்கத்தக்கவையல்ல வாகையால் இரண்டொடுங் கூடி நிற்கும் நிலையே மெச்சத்தக்காதென்க.

பாசம் நின்ற  நீரில்- ஜலராசிக்கு அதிஷ்டாக தேவதை வருணனாகையாலும்,

அவ்வருணனுக்குப் பாசம் ஆயுதமாகையாலும் “பாசம் நின்ற நீர்” எனப்பட்டது.

“பாசன் நின்ற” என்றும் பாடமுண்டாம்; பாசன் =வருணன்.

இனி, “பாசம் நின்ற நீரில்” என்பதற்கு, “பரமபதத்திற்காட்டில் ப்ரேமஸ்தலாமன கடலிலே” என்றும் பொருள் அருளிச்செய்வர்.

பாசம் என்றது ஆசை;

‘பரமபத்திற்காட்டிலும் இந்த நீர்நிலமே நமக்கு போக்யமான இடம்’ என்று எம்பெருமான் ஆசைப்படத்தக்க நீர் என்றபடி.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களில் -அப் பாஞ்ச ஜன்யம் -அது-இவள் -போன்ற சுட்டுப் பத பிரயோகங்கள் –

February 9, 2020

படை போர் புக்குமுழங்கும் அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு–
முன்னிலையாய் இருக்க பரோஷ நிர்த்தேசம் பண்ணுவான் என் என்னில் –
புத்ரனை அலங்கரித்த தாய் -தன் கண் படிலும் கண் எச்சிலாம் -என்று பார்க்கக் கூசுமா போலே-
மங்களா சாசனம் பண்ணுகிற தம்முடைய கண்ணையும் செறித்து முகத்தை மாற வைத்து-சொல்கிறார் –
அன்று யுத்தத்தில் பிறந்த ப்ரமாததுக்கு இன்று மங்களா சாசனம் பண்ணுகிறார் -என்றுமாம்-

ஆண் ஒப்பர் இவன் நேரில்லை காண் திருவோணத்தான் உலகாளும் என்பார்களே -1 -1 -3-

ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே 1-1-6-

இப்பிள்ளை இணைக்காலில் வெள்ளித்தளை நின்றிலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே–1-2-3-

உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான்
குறங்கு களை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-5-

அங்கு இரு மா மருதம் இறுத்த இப்பிள்ளை குரு மா மணிப் பூண் குலாவித் திகழும்
திரு மார்வு இருந்தவா காணீரே சேய் இழையீர் வந்து காணீரே -1-2-10-

அந் தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர் தம் தொண்டை வாயால் தருக்கி பருகும்
இச் செந்தொண்டை வாய் வந்து காணீரே சேய் இழையீர் வந்து காணீரே -1-2-14-

என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதி நின் முகம் கண் உளவாகில் இனி இங்கே நோக்கிப் போ -1-4-1-

பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள்- ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன்–1-4-7-

அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர் சிங்க உருவாய்–1-6-9-

வன் கஞ்சன் மாளப் புரட்டி அந்நாள் எங்கள் பூம் படு கொண்ட அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-2-1-4-

கடிப்பொன்று நோவாமே காதுக்கு இடுவன்
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பத்ம நாபா இங்கே வாராய் -2 3-11 – –

நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளை
சாவப் பாலுண்டு சகடு இறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் -2 3-12 –

எண்ணெய்ப் புளி பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன்
நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2 4-1 –

போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய்-2-9-6-

கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே–2-9-8-

அங்கு அவர் சொல்லை புதுவைக் கோன் பட்டன் சொல்
இங்கு இவை வல்லார்க்கு ஏதம் ஓன்று இல்லையே -2 10- 10- –

இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார்–3-1-3-

தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் நம் பரமன் இந்நாள் குழலூத கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர் –3-6-6-

வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடி கூடிற்றில
சாய்விலாத குறுந்தலை சில பிள்ளைகளோடு இணங்கித்
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள் தன் அன்ன செம்மை சொல்லி
மாயன் மா மணி வண்ணன் மேல் இவள் மால் உருகின்றாளே – 3-7 2- –

திரு கோட்டியூர் நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4 9-

குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வந்து என்னைப் பற்றும் போது
அன்று அங்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவிணைப் பள்ளியானே -4 10-9 –

————-

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்–24-

இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்-3-2-

சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருத்தில் இரண்டைத் தொன்றேல் திண்ணம் வேண்டும்–5-9-

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்றும் இக்காவில் இருந்து இருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்–—-5-10-

கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே –8-1-

காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடைக் கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே—8-2-

நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும் கொலோ–9-6-

பண மாடரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள்
மண வாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே–10-6-

வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-
அது காண்டுமே
அவ வழியாலே பெறக் கடவோம்
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரசீத -ஸ்தோத்ர ரத்னம் -65-என்னுமா போலே
த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்று சரணம் புக்குவைத்து பிரபத்தி பண்ணினோம் நாம் ஆகையாலே
அதுவும் போட்கனாகக் கூடும் என்று அக்குறை தீர நாத முனிகளை முன்னிட்டால் போலே பெரியாழ்வாரை முன்னிடுகிறாள் –

பிச்சைக் குறையாகி என்னுடைய பெய் வளை மேல்
இச்சை யுடையரேல் இத்தெருவே போதாரே—11-4-
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு-4-5- -என்கிறபடியே எங்கள் தெருவில் எழுந்து அருளாதோ பின்னை –
அசுரனுடைய யஜ்ஞ வாடத்தில் நடந்த நடையை இத்தெருவில் நடந்தால் ஆகாதோ –
என் கண் வட்டத்தில் நடந்தால் ஆகாதோ
தன உடைமை அல்லாததைக் கொடுத்து ஔதார்யம் கொண்டு இருக்கிறவனைப் போலே இருப்பேனோ நான்
ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன் -என்று இருக்குமவள் அன்றோ நான்-

வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –12-6-

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே–14-1-

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே–14-3-

பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக்கரு மா முகிலைக் கண்டீரே-14-7-

———

ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை
அம் தமிழ் இன்ப பாவினை அவ் வடமொழியை –1-4-

மெய் அடியார்கள் தம் ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே–2-1-

மெய்யில் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இவ் வையம் தன்னோடும் கூடுவது இல்லை யான்–3-1-

பேயரே எனக்கு யாவரும் யானுமோர் பேயனே எவர்க்கும் இது பேசி என்?-3-8-

கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல் இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே–3-9-

என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் ? இன்னம் அங்கே நட நம்பி ! நீயே— 6-5-

இற்றை இரவிடை ஏமத்து என்னை இன் அணை மேல் இட்டு அகன்று நீ போய்
அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும் அரிவையரோடும் அணைந்து வந்தாய்-6-6-

விரலை செஞ்சிறு வாய் இடை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் வுரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே –7-5-

அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும் அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட வசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே– 7-8-

இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?
காகுத்தா! கரிய கோவே! —–9-3–

மனம் உருக்கும் மகனே! இன்று நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப் போகாதே நிற்க்குமாறே! —9-4–

இன்று செல தக்க வனம் தான் சேர்த்தல் தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே! வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-

இன்று கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–

சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே— 10-4–

அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவ பகை ஏறி அசுரர் தம்மை
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர் வர தான் தாமமேவி
சென்று இனிது வீற்று இருந்த அம்மான் தன்னை
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும்
இறைஞ்சுமினோ எப் பொழுதும் தொண்டீர்! நீரே —10-10–

———-

படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்–28-

ஆதி யாதி யாதி நீ ஓர் அண்டம் ஆதி ஆதலால்
சோதியாத சோதி நீ யது உண்மையில் விளங்கினாய்–34-

வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் அதன்றியும்
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி–39-

மாய மாய மாயை கொல் அதன்றி நீ வகுத்தலும்
மாய மாய மாக்கினாய் யுன் மாயம் முற்றும் மாயமே –41-

குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே –48-

சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்க மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த வாழியான்–57-

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே –64-

இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என் கொலோ
அன்று பாரளந்த பாத போதை யொன்றி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே –66–

எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்றவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –77-

ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும்
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –78-

பத்து உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு
எத்திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே –82–

கறுத்து எதிர்ந்த கால நேமி காலனோடு கூடவன்று
அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
தொறுக்கலந்த ஊனம் அஃது ஒழிக்க வன்று குன்றம் முன்
பொறுத்த நின் புகழ்கு அலாலோர் நேசம் இல்லை நெஞ்சமே -106-

மாறு செய்த வாளரக்கர் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்–116-

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே -120-

——————-

இச்சுவை தவிர நான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே -2-
அச்சுவை –இச்சுவை
அது ஸ்ருதி பிரசித்தம் –இது பிரத்யஷ சித்தம் –
அது கேட்டார் வாய் கேட்டுப் போமது –இது கைப்பட்டது –
கைப்பட்டதை விட்டு இவ் அறு சுவைக்கு வேறு ஒரு சுவை இருந்த இடம் தேடித் போகச் சொல்லுகிறாயோ –
இவருடைய அறு சுவை இருக்கிறபடி –
பரம பதத்தில் அனுபவத்தை விட்டு இவ் வழகையும் சீலத்தையும் இங்கு உள்ளாரை அனுபவிக்கைக்கு
அங்கு உள்ளாறும் இங்கே வாரா நிற்க என்னை அங்கே போகத் தேடுகிறது என் –

வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்ற விப்பதினை யாண்டு (நின்றதில் பதினை யாண்டு -என்றும் பாடம் )
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகர் உளானே–3-
இவன் போரப் பொலியப் பாரிக்கிற காலம் எல்லாம் தமக்கு ஓன்று இராமையாலே -இது -என்று
ஸூ த்தரமாகப் பேசுகிறார் –
அதாகும்
ததநந்தரமான அந்த அவஸ்தையாம் -என்றபடி –ததநந்தரம் யௌவனம் வந்து பிரவேசித்து விஷய பிரவணனாய் திரியும் –
ஜனனி உடைய புத்தி அதீனமான பேதைத் தனமே நன்று எனும்படி யாய்த்து இதின் அறிவு கேடு இருப்பது –

அற்றமேல் ஓன்று அறியீர் அவனை அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே-9-

அவனதுஊர் அரங்கம் என்னா அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவர்கின்றேனே–12–

நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே –43–

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணுறா வுன்னை என்னோ களை கணாக் கருதுமாறே–44-
ஸ்வ பலம் அற்ற அன்று – கஜ ஆகர்ஷே தே தீரே -என்று
சென்ற காலத்தில் இவனோடு ப்ரஹ்மாதிகளோடு வாசி இல்லை –
அன்று ஒரு முதலையின் கையில் அகப்பட்ட ஆனைக்கு அருளை ஈந்தாய் –
இன்று அஞ்சு முதலையில் கையில் அகப்பட்ட எனக்கு அருளாய் –
ஆனை ஆயிரம் சம்வத்சரம் நோவு பட்டது – நான் அநாதி காலம் நோவு பட்டேன் –
அவன் அகப்பட்டது மடுவிலே-நான் அகப்பட்டது சம்சார சாகரத்திலே இறே –

—————

கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ–10-

————–

உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்–2-
அன்று –ரஷகனானவன் ரஷ்யதை நோக்கக் கடவராக வந்து நின்ற அன்று –

கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8–
பின்னையும் போக்தாவின் அளவன்றிக்கே இருக்கையாலே
அப் பெரிய வாய கண்கள் -என்கிறார் -இது என்ன ஒண்ணாதே பரோஷ நிர்த்தேசம் பண்ண வேண்டும்படி இருக்கை –
போக்யதா அதிசயத்தாலே -அப் பாஞ்ச சன்னியம் -என்னுமா போலே முகத்தை திரிய வைத்து சொல்லுகிறார் –

————-

செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று –5-
இன்றே –
ஈஸ்வரனை அண்டை கொண்டு ஆரப்த சரீரபாத சமயம் பார்த்து இருந்து பின்னையும் வாஸனா ருசிகள் ஆகிற
மண் பற்று விடாமல் விரஜை அளவும் போக வேண்டும்படி இருக்கை யன்றிக்கே இன்றே சவாசனமாக விட்டேன்
இன்றே
அன்று அப்படி யானேன்-இன்று இப்படி யானேன்
நடுவில் இதுக்கு என் கையில் கிடப்பதொரு ஹேதுவைக் கண்டிலேன்
இதுக்கு வரவாறு ஓன்று இன்றிக்கே இருக்க வாழ்வு இனிதாம் படி விழுந்தது என்று விஸ்மிதர் ஆகிறார்
இன்றே
அன்று ஈஸ்வரனும் கூட நிற்கச் செய்தே சம்சரித்துப் போந்தேன்-
இன்று ஆழ்வார் சந்நிதி மகாம்யத்தாலே இவ்வளவும் பிறந்தது என்று ப்ரீதர் ஆகிறார் –

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான்–6–
பகவத் விஷயத்தில் காட்டில் தத் சம்பந்தியான ஆழ்வார் உத்தேச்யர் என்று ருசி பிறந்த இன்று தொடங்கி –
மேல் ஒரு நாளிலே பலிப்பதாக விட்டு வைக்கிறாரோ விஷயீ கரித்த இன்று தொடங்கி

———-

ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன கழிந்த வந்நாள்கள்–1-1-3-

இற்பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னதோர் தன்மை என்று உணரீர்-1-1-7-

வாலி மா வலத்தொருவன துடல் கெட வரிசிலை விளைவித்து அன்று
ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்தநல்லிமயத்துள்–1-2-1-

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்காவாகம் வள்ளு கிரால் போழ்ந்த புனிதன் இடம்–1-7-1-

நாத் தழும்ப நான் முகனும் ஈசனுமாய் முறையால்
ஏத்த அங்கு ஓர் ஆளரியாய் இருந்த வம்மானதிடம்-1-7-8-

பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர்-1-8-4-

மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி தன்னாக்கித் தன்னினருள் செய்யும் தன்னை-1-10-6-

உறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை
மண் மிசைப் பிறவியே கெடுப்பான் அது கண்டு என்நெஞ்சம் என்பாய்-2-1-2-

இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடைக்
கொண்டு போயிடவும் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்-2-1-3-

பெண்ணுருவாகி அஞ்சுவை யமுத மன்றளித்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே–2-3-3-

பேசுமளவன்றிது வம்மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்
நாசமது செய்திடுமா தன்மையால் அதுவே நமதுய்விடம்–2-4-9-

பேணாத வலி யரக்கர் மெலியவன்று பெரு வரைத் தோளிற நெரித்தன்ற வுணர்கோனை
பூணாகம் பிளவெடுத்த போர் வல்லோனை-2-5-7-

பட நாகத்தணைக் கிடந்து அன்று அவுணர் கோவை பட வெகுண்டு மருதிடை போய்-2-5-10-

பிச்சச் சிறு பீலி சமண் குண்டர் முதலாயோர் விச்சைக் கிறை யென்னும் அவ் விறையைப் பணியாதே-2-6-5-

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-1-
அவளும் –வடிவு அழகாலும் பருவத்தாலும் பிறப்பாலும் வந்த ஏற்றத்தை உடையாள் ஆனவளும் –
இவளை –சொன்ன ஏற்றம் எல்லாம் போராத படி இருக்கையாலே கையாலே காட்டி இவளை என்கிறார் –
இளம்படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-2-
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே -2-7-3-
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-6-
இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-7-

அரி உருவாம் இவர் யார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே -2-8-1-
அந்தணர் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-2-
அம்புதம் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே—2-8-3-
அஞ்சுடர் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-4-
அலைகடல் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-5-
அங்கனம் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே-2-8-6-
அழகியதாம் இவரார் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே–2-8-7-
என் ஆவி யொப்பார் இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-8-
அஞ்சுவன் மற்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-9-

ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை–2-10-4-

வாட மருதிடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு
ஆடல் நன் மா வுடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்-3-3-1-

தாய் எனை என்று இரங்காள் தடந்தோளி தனக்கமைந்த
மாயனை மாதவனை மதித்து என்னை யகன்ற இவள்-3-7-5-

அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி வாடாத வள்ளுகிரால் பிளந்து
அவன் தன் மகனுக்கு அருள் செய்தான் வாழும் இடம் -3-10-4-

வராக மதாகி யிம்மண்ணை யிடந்தாய் நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்–4-7-8-

நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி யாவா வென்று இரங்கி
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே —-4-9-1-

முடியுடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர் தம் பெருமானை அன்று அரியாய்
மடியிடை வைத்து மார்வை முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்–4-10-8-

மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்காய்
மன்னு சினத்த மழம் விடைகள் ஏழு அன்று அடர்த்த மாலதிடம்-5-1-6-

பண்டு இவ்வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர்
கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்-5-4-3-

பேராளன் பேரல்லால் பேசாளிப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்-5-5-7-

மண்ணிலிது போலு நகரில்லைஎன வானவர்கள் தாம் மலர்கள் தூய
நண்ணி யுறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —-5-10-8-

ஆண்டாய் யுன்னைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே –6-1-/9-

அங்கை வாள் உகிர் நுதியால் அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர்-6-6-4-

நந்தன் மதலை நிலமங்கை நற்துணைவன் அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான்–8-4-9-

ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —8-8-1-

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே —8-10-3-

செங்கண் நெடிய கரிய மேனித் தேவர் ஒருவர் இங்கே புகுந்து என
அங்கம் மெலிய வளை கழல ஆது கொலோ வென்று சொன்ன பின்னை–9-5-7-

அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர் பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்–9-6-1-

கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை
அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்களத்து-10-3-6-

உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால்
நொந்திட மோதவும் கில்லேன் உங்கள் தம் ஆநிரை எல்லாம்–10-4-8-

பேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி —10-5-8-

அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே –10-6–

பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை போகின்றவா தவழ்ந்திட்டு
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை என் செய்கேன் என் செய்கேனோ –10-7-4-

துவராடையுடுத்து ஒரு செண்டு சிலுப்பி கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி
சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர் இவராரிது வென் யிதுவென் யிதுவென்னொ —10-8-2-
மருளைக் கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர் இருளத்து இது என் இது என் இது வென்னோ—10-8-3-
காமன் எனப்பாடி வந்து இல்லம் புகுந்தீர் ஏமத்து இது என் இது என் இது என்னோ –10-8-4-
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர் எற்றுக்கு இது என் இது என் இது என்னோ —10-8-5-
போனார் இருந்தாரையும் பார்த்துப் புகுதீர்ஏனோர்கள் முன் இது என் இது என் இது என்னோ –10-8-6-
சொல்லாது ஒழியீர் சொன்ன போதினால் வாரீர் எல்லே இது என் இது என் இது என்னோ–10-8-7-
தக்கார் பலர் தேவிமார் சால யுடையீர் எல்லே இது என் இது என் இது என்னோ –10-8-8-
தேடித் திரு மா மகள் மண் மகள் நிற்ப ஏடி இது என் இது என் இது என்னோ —10-8-9-

ஆரெழில் வண்ணா அங்கையில் வட்டாம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-3-
சொல்லியென் நம்பி இவளை நீ யுங்கள் தொண்டர் கைத் தண்டு என்றவாறே –10-9-4-
பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் எனப் பேசுகின்றாயே –10-9-5-
கருங்கடல் வண்ணா கவுள் கொண்ட நீராம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-8-

வாங்கி யுண்ட வவ்வாயன் நிற்க விவ்வாயன் வாய் ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளைமையே -11-2-2-

அந்தரம் ஏழினூடு செல வுய்த்த பாதமது நம்மை யாளும் அரசே —11-4-5-
பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்த்து இவ் வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவது நம்மை யாளும் அரசே –11-4-8-

எல்லாரும் அறியாரோ வெம்பெருமான் உண்டு உமிழ்ந்த வெச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே யவன் அருளே யுலகாவது அறியீர்களே —11-6-2-

————

பனி வரையின் உச்சியாய் பவளவண்ணா எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி
ஏழையேன் இனி இங்கனே உழி தருகிறேனே–9

மடமானை இது செய்தார் தம்மை மெய்யே கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்
கடல் வண்ணர் இது செய்தார் காப்பாராரே ––11-

எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும்
இது வன்றோ நிறை வழிந்தார் நிற்குமாறே–18-

அடியும் அக்தே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே–21-

எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு இது வன்றோ எழில் ஆலி என்றார் தாமே–22-
திரு மணம் கொல்லைக்கும் திருவாலிக்கும் உண்டான பிரத்யாசத்தி
அங்குலி நிர்த்தேசம் பண்ணலாய் இருக்கையாலே இது வன்றோ -என்று கையைக் காட்டினார் -என்கிறாள் –
அங்கன் அன்றியே –நீ இருந்த இடம் அன்றோ -நமக்கு உத்தேச்யம் என்றார் -என்னவுமாம் –
சேஷி இருந்த இடமே சேஷ பூதனனுக்கு உத்தேச்யமாம் போலே
பிள்ளை வேட்டகத்தை ஆசைப்படும் பெண் பிள்ளை புக்ககத்தை ஆசைப்படும் இறே –
உன் காலே அன்றோ நமக்கு உத்தேச்யம் -என்று என் காலைக் காட்டிப் போந்தார் –என்கிறாள் –

———————-

தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் -தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்–-முதல் திரு வந்தாதி-44-

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் -அவனே
கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரம் எரித்தான் எய்து ——மூன்றாம் திருவந்தாதி–51-

மாறான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாககே கொள்வேனோ பேதைகாள் -நீறாடி
தான் காண மாட்டாத தாரகல சேவடியை
யான் காண வல்லேற்கு இது—நான்முகன் திருவந்தாதி -27-

இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28-

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

————————

அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—-திரு விருத்தம்-3-

அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –27-

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60- –

நலம்பாடுமிது குற்றமாக வையம் சிலம்பும்படி செய்வதே திருமால் இத்திருவினையே – — 87- –

எமக்கினி யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே யாதானும் சிந்தித்து இரு -பெரிய திருவந்தாதி-–9-

உணரத் தனக்கு எளியர் எவ்வளவர் அவ்வளவர் ஆனால் எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு –29-

அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
அவனாம் அவன் என்று இராதே -அவனாம்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலுமாம் —36-
அவனாம்-தூரச்தனாய் இருப்பானோ /இவனாம்-சுலபனாய் இருப்பானோ /உவனாம் – மத்யச்தனாய் இருப்பானோ
மற்று உம்பர் அவனாம்-அல்லது மிகவும் உயர்ந்தவனாய்-எட்டாதவனாய் இருப்பானோ
அவன் என்று இராதே –சர்வேஸ்வரன்-இப்படி என்று என்று எல்லாம் நினைத்து இராதே
அவனாம் அவனே எனத் தெளிந்து-எம்பெருமான் உடைய ஸ்வரூபமே-சௌலப்யம் என்று தெளிந்து கொண்டு
அவன் என்ற சொல்லே சௌலப்யம் ஆழ்வார்கள் படி இதுதானே
ஆம் அவன் நமக்கு கையாளாக இருப்பவன்-பரதந்த்ர்யமே வடிவு என்றபடி
கண்ணனுக்கே தீர்ந்தால் –அந்த சௌலப்யத்தை-கிருஷ்ணாவதார முகத்தாலே-விளங்கக் காட்டி அருளிய அவனுக்கே ஆட்பட்டால் –
அவனே எவனேலுமாம் –அப்பெருமானே எல்லா உறவு முறையும் ஆவான்-
யஸ்ய மந்த்ரீச கோப்தாச சூஹ்ருத்சைவ ஜனார்த்தன -அர்ஜுனனுக்கு ஆனால் போலே -ஆஸ்ரயணீயன் சிவனோ ப்ரஹ்மணோ விஷ்ணுவோ
இவர்களிலும் மேம்பட்ட தெய்வமோ-என்கிற சங்கை தெளிந்து-வேதாந்தங்களில் -சொல்லப் பட்ட தெய்வம் கண்ணபிரான் ஒருவனே
என்று தெளிந்து பற்றினால்-அந்த அந்த தேவதாந்த்ரங்கள் அளிக்கும் பலன்களையும்-
மேலாக கைங்கர்ய சாம்ராஜ்ய பலனையும்-அவனே அளித்து அருளுவான் என்றதாயிற்று-

எவ்வளவர் எவ்விடத்தோர் மாலே அது தானும் எவ்வளவும் உண்டோ எமக்கு –47-

வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே அறி கண்டாய் சொன்னேன் அது–66-
சொன்னேன் இது என்னாமல் அது -என்றது அர்த்த கௌரவம் தோற்ற அருளிச் செய்கிறார்-

அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில்
அதுவோர் பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-

கரந்த உருவின் அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழியங்கை அம்மானை ஏத்தாது அயர்த்து–82-

———-

உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே.-1-1-1-

இலன்அது உடையன்இது எனநினைவு அரியவன்-1-1-3-

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கவை
ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே–1-1-4-

அவரவர் தமதமது அறிவறி வகை வகை
அவரவர் இறையவர் என யடி யடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே—1-1-5-

படர் பொருள் முழுவதும் ஆய் அவை அவை தொறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்-1-1-7-

உளன் எனில் அவனுருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என விலன் என இரு குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே–1-1-9-

மதுவார் தண் அம் துழாயான் முது வேத முதல்வனுக்கு
எது ஏது என் பணி என்னாததுவே ஆட் செய்யும் ஈடே–1-6-2-

ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக் கருமாணிக்கம் என் கண்ணுள தாகுமே–1-10-1-

அம்மான் பின் நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே–2-3-8-

உள்ளம் மலங்க வெவ் வுயிர்க்கும்; கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்று இவளே–2-4-4-

கஞ்சனை வஞ்சனை செய்தீர்! உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே!–2-4-8-

இலங்கை செற்றீர்! இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே–2-4-10-

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-

வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந்தார்கட்கே–3-3-6-

ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆது ம்ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில், அவனையும் கூடலாமே–3-4-10-

வடங்கொள் பூந் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால் வாணுதலீர்!என் மடக் கொம்பே–4-2-7-

வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால் நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்?–4-2-8-

எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே–5-1-2-

சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே–5-1-8-

நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்-5-5-7-

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்தும்
மதுவை வார்குழலார் குரவை பிணைந்த குழகும்
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும்
முதுவைய முதல்வா! உனை என்று தலைப் பெய்வனே?–5-10-2-

திமிர் கொடா லொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக் கொசிந்து கரையுமே–6-5-2-

மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர் தொழும் அத் திசை உற்று நோக்கியே–6-5-5-

முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே–6-5-7-

இரங்கி நாள்தொறும் வாய் வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தா னுறை தொலை வில்லு மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித் தொழும் அவ் வூர்த் திரு நாமம் கற்றதற் பின்னையே–6-5-9-

பின்னை கொல்?நில மா மகள் கொல்? திரு மகள் கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள் நெடு மால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந்துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் வூர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே–6-5-10-

செங்கயல் பாய் நீர்த் திருவரங் கத்தாய்! இவள் திறந்து என் செய்கின் றாயே?–7-2-1-
முன் செய் திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-
திட் கொடி மதிள் சூழ் திருவரங் கத்தாய்’ இவள் திறத்தென் செய்திட்டாயே?–7-2-3-
சிட்டனே! செழு நீர்த் திருவரங் கத்தாய்! இவள் திறத் தென் சிந்தத் தாயே?–7-2-4-
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே!–7-2-5-
பை கொள் பாம்பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே–7-2-6-
தென் திரு அரங்கம் கோயில் கொண்டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-
அடி யடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே–7-2-10-

தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-
பொங்கு பொழி மழையாய்ப் புகழாய்ப் பழியாய்ப் பின்னும் நீ வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!–7-8-2-
ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில் லனவாய் வியவாய் வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே!–7-8-3-
வெள்ளத் தடங் கடலுள் விட நாகணை மேன் மருவி உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!-7-8-4-
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே–7-8-5-
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னு நீ துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே–7-8-6-
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த் துயரங்கள் செய்து வைத்தி;இவை என்ன சுண்டாயங்களே–7-8-7-
முன்னிய மூவுலகும் மவையாய் அவற்றைப் படைத்தும் பின்னும் உள்ளாய்!புறத் தாய்!இவை என்ன இயற்கைகளே–7-8-8-

பதவிய இன் கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே–7-9-10-

பேர் வளம் கிளர்ந்த தன்றிப் பேச்சு இலள் இன்று இப் புனை இழையே–8-9-4-
பட வர வணையான் தன் நாமம் அல்லால் பரவாள் இவளே–8-9-8-
அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10-

திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10—

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7–

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11–

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

சங்க கால இலக்கியங்களில் ஸ்ரீ வைஷ்ணவம் / ஆய கலைகள் 64–

February 8, 2020

மாயோன் புகழ் பாடும் தொல்காப்பியம்

தொல்காப்பியம் எனும் இலக்கண நூலில் எல்லா இலக்கண விதிகளும் சூத்திர முறையில் கூறப்பட்டிருக்கின்றன.
அகத்திணையியலில் ஐந்தாம் சூத்திரம் ஐவகை நிலங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற
நானிலங்களைப் பற்றிக் கூறும் போது அவற்றின் தெய்வங்களையும் குறிக்கிறது.

மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே

முல்லை என்பது காடுகள் நிறைந்த நிலம். அதில் மாயோன் உறைகிறான்.
குறிஞ்சி என்பது மலைகள் நிறைந்த நிலம். அதில் சேயோன் உறைகிறான்.
மருதம் என்பது நன்னீர் நிறைந்த நிலம். அதில் வேந்தன் உறைகிறான்.
நெய்தல் என்பது எங்கு நோக்கினும் மணல் நிறைந்து காணப்படும் நிலம். அதில் வருணன் உறைகிறான்.

இங்கே மாயோன் என்பவன் கண்ணன் என்றும், சேயோன் என்பவன் முருகன் என்றும்,
வேந்தன் என்பவன் இந்திரன் என்றும் பொருள் கூறுவார்கள்.
பிற்கால இலக்கியங்களில் எல்லாம் மாயவன் என்று கண்ணனே அறியப்படுவதால் கண்ணன் தான்
இங்கே மாயோன் என்று சொல்லப்படுகிறான் என்ற பொருள் பொருந்தும்.
அப்படியே பிற்கால இலக்கியங்களில் குறிஞ்சித் தலைவனாக முருகனே அறியப்படுவதாலும்
அவன் சிவனின் மகன் என்றும் கொற்றவை சிறுவன் என்றும் அறியப்படுவதாலும்
சேயோன் என்பது முருகனே என்ற பொருளும் பொருந்தும்.
வேந்தன் என்றால் இந்திரன் தானா? இந்திரன் என்ற சொல்லும் வேந்தன் என்ற சொல்லும் அரசன் என்ற
பொதுப் பொருளைக் கொண்டிருப்பதாலும் இந்திரன் மழைக்கு தலைவன் என்று வடமொழி இலக்கியங்களும்
பிற்கால தமிழ் இலக்கியங்களும் கூறுவதாலும் நீர் நிறைந்த நிலத்திற்கு இந்திரன் தலைவன் என்பதும் பொருந்தும்.
வருணன் என்பவன் வடமொழி வேதம் சொல்லும் வருணன் தானா? இல்லை வேறு தெய்வமா? இந்த கேள்வியும் உண்டு.
வடமொழி வேதம் சொல்லும் தேவனாம் வருணனும் கடலுக்கு அரசனாகத் தான் அறியப்படுகிறான்.
இங்கும் கடலும் கடல் சார்ந்த இடமும் என்று வகுக்கப்படும் நிலமாம் நெய்தலுக்கு உரியவனாக வருணன் அறியப்படுகிறான். . .

புறத்திணையியலில் ஐந்தாம் சூத்திரத்தின் ஒரு பகுதியில் பூவை நிலை என்னும் துறையைப் பற்றி
விளக்கும் போது மாயோன் மீண்டும் சொல்லப்படுகிறான்.

மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ் பூவை நிலையும்

மாயோனின் நிலைத்த பெருஞ்சிறப்பின் எல்லாவற்றையும் மிஞ்சும் பெரும் புகழைப் பாடுவதைப் போல்
தலைவனின் புகழைப் பாடுவது பூவை நிலை.
மாயோனின் சிறப்பையும் பெருமையையும் பாட்டுடைத் தலைவனுக்கு உவமையாகச் சொல்வதும் பூவை நிலை.
சிறப்பான் ஒன்றையே உவமையாகக் கூறுவார்கள். இங்கே மாயோனின் சிறப்பையும் புகழையும்
மிகச் சாதாரணமாகச் சொல்லி விட்டு விடாமல் மன்பெருஞ்சிறப்பு என்றும் தாவா விழுப்புகழ் என்றும்
மிக மிக உயர்வாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து மாயோன் என்னும் தெய்வம் தமிழர்களின் மிகப் பெரும் தெய்வமாக இருந்திருக்கிறது என்பது விளங்கும்.

—–

இப்போது கலித்தொகை கூறும் ராமாயண கதை காண்போம்.

இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல்செல்லாது உழப்பவன் போல
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்: —-கலித்தொகை 38:1-8

புலவர் கபிலர் யானை தன் கொம்புகள் வேன்கை மரத்தில் குத்தியதை பின் எடுக்க முடியாமல் தவித்ததை –
இமயமலையை வில்லாக வளைத்து (முப்புரம் எரித்த) சடையுடைய சிவபெருமான் தன் மனைவி உமையோடு அமர்ந்து
இருந்தபோது 10 தலை கொண்ட இராவணன் இமயமலை கீழ் கையிட்டு தூக்கிட முயல
சிவன் அழுத்த அல்லல் உற்றாதற்கு உவமையாக தந்துள்ளார்.

தமிழ் மக்களிடம் இராமாயணம் மிகுதியாக பரவி உள்ளதைக் காட்டும்.

———–

மணிமேகலையில் இராமாயணம்:

கம்பராமாயணத்திற்கு 6-7 நூற்றாண்டுகள் முற்பட்ட பௌத்த காவியமான மணிமேகலையில்
ஸ்ரீ ராமாயணச் செய்திகள் சான்றுகளாகவே அளிக்கப் பட்டிருக்கின்றன.

‘நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால் –(உலக அறவி புக்க காதை, 10-20)

காயசண்டிகை கூறினாள் – “நெடியோனாகிய திருமால் இராமனாக மண்ணில் அவதாரம் புரிந்து,
அவன் அடங்காத பெரிய கடலை அடைத்த போது, குரங்குகள் பெயர்த்துக் கொண்டு வந்து எறிந்த பெரிய பெரிய மலைகள்
எல்லாம் கடலின் வயிற்றில் சென்று மறைந்தது போல, இந்த அடங்காப் பசியை நிரப்ப இடும் மலை மலையான உணவு எல்லாம்
என் வயிற்றின் ஆழத்தில் சென்று மறைந்து விடுகிறது”.
இந்த வரிகளில் பல செய்திகள் அடங்கியுள்ளன – ராமன் திருமாலின் அவதாரம். அவனது ஆணையில் வானரர்கள் கடலை அடைத்து
அணை கட்டியது. மேலும், இந்த வரலாறு உவமையாகக் கூறப் படும் அளவுக்கு பிரசித்தி பெற்றிருந்தது.

இதே காப்பியத்தில் பிறிதோரிடத்தில், வாத விவாதத்தில்,
“ராமன் வென்றால் என்றால் மாண்பில்லாத ராவணன் தோற்றான் என்று தானே அர்த்தம்?” என்று அடிப்படையான
தர்க்கமாகவே இராம காதைச் சான்று வைக்கப்படுகிறது, அதுவும் ஒரு புத்த மதம் சார்ந்த புலவரால் என்றால்
அது பண்டைத் தமிழகத்தில் எவ்வளவு அறியப் பட்ட விஷயமாக இருக்க வேண்டும்!

“மீட்சி என்பது “இராமன் வென்றான்” என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
உள்ள நெறி என்பது “நாராசத் திரிவில்
கொள்ளத் தகுவது காந்தம்” எனக் கூறல்”–(சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, 50-60)

இந்த வரிகளில் “மாட்சி இல் இராவணன்” என்று இராவணன் உரைக்கப் படுவதையும் காண்க.

——–

திருமாலை
பெரியவனை மாயவனை பேருலகம் எல்லாம் விரிகமல உந்தியிடை விண்ணவனை என்று
இளங்கோவடிகள் குறிப்பிட்டிருப்பது ஆழ்வார்கள் திருமாலைப் பெருமையுடன் குறிப்பிடுவதற்கு ஒப்பாக விளங்குவதைக் காணலாம்.
திருமாலை இப்பேருலகின் வடிவமாகக் காணும் ஆழ்வார்களின் தத்துவநிலைக்கு ஒப்பாகவும்
அடிகளாரின் காப்பிய அடிகள் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

முற்ற உலகெலாம் நீயே யாகி
மூன்றெழுத் தாய முதல்வ னேயோ

—————-

ஐந்து மூர்த்தங்களை திருமால் தன்னுடன் உள்ளடக்கியவர்.
சங்கருஷணன், பிரத்யும்நன், அநிருத்தன் மற்றும் வாசுதேவன் என்பவை அவை.
பரிபாடல் அழகு தமிழில் இதனை நமக்கு தருகின்றது:
செங்கட்காரி! கருங்கண் வெள்ளை!
பொன்கட் பச்சை! பைங்கண் மாஅல்! – (பரி.3:81-82)
சிவந்த கண்களுடைய வாசுதேவனே! கரிய கண்களையுடைய சங்கருஷணனே! சிவந்த உடம்பினை உடைய பிரத்யும்நனே!
பசிய உடம்பினையுடைய அநிருத்தனே! என்பது இதன் பொருளாகும்.

காவிரிப்பூம்பட்டினத்து காரிக் கண்ணனார் கண்ணனையும் பலதேவனையும் இரு பெருந் தெய்வம் என பாடுகின்றார்:

பால்நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல உருவின் நேமியோனும் என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு -புறம்:58:14-16

—

பிறப்பித்தோர் இல்லாத கண்ணன் இந்த உலகின் துன்பத்தை போக்க இந்த பூமியில் அவதாரமாக
வந்தருளும் தயாபரனாவான். இதனை பரிபாடல் விளக்குகிறது:

புவ்வத் தாமரை புரையும் கண்ணன்
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன்
எவ்வயின் உலகத்தும் தோன்றி அவ்வயின்
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்-பரி.15:49-52-

ஆக ரொம்ப ரொம்ப காலத்தை குறைவாக மதிப்பிட்டாலும் கூட கிமு 500 க்கு சற்றும் குறையாத காலம் முதல்
பரிபாடலின் ஏழாம் நூற்றாண்டு ஊடாக இன்று வரையிலுமாக கிருஷ்ணனை முழுமுதல் கடவுளாக வணங்கும்
பாரம்பரிய தொடர்ச்சியினைக் காணமுடியும்.

————

கம்பராமாயணம் பாயிரப் பாடல் இன்னும் ஒருபடி மேலே சென்று உலகில் எந்த இடத்தின் மொழியானாலும்
அதில் ஸ்ரீ ராமகாதையைக் கேட்பவர்கள் அமரர் ஆவார்கள் என்று கூறுகிறது –

வட கலை, தென் கலை, வடுகு, கன்னடம்,
இடம் உள பாடை யாதுஒன்றின் ஆயினும்,
திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே

(வடகலை – சம்ஸ்கிருதம், தென்கலை – தமிழ், வடுகு – தெலுங்கு, பாடை – பாஷை, அடைவுடன் – பக்தியுடன்)

——————–

ஆ முக்த்யா மால்யதா -தெலுங்கு பிரபந்தம் -ஆண்டாளைப் பற்றி
ஸ்ரீ கிருஷ்ண தேவ ராயர்

—————

ஸோம: ப்ரதம: விவிதே கந்தர்வோ விவித உத்தர:
த்ருதீயோ அக்னிஸ்தே பதி: துரீயாஸ்தே மனுஷ்யஜ:—(ரிக்வேதம் 10.85.40)

“முதலில் சோமனும், இரண்டாவதாகக் கந்தர்வனும், மூன்றாவதாக அக்னியும் உன்னை சுவீகரித்தனர்.
பெருமைக்குரிய தேவர்களால் சுவீகரிக்கப் பட்ட உன்னை, இறுதியாக மனிதனாகிய நான் வரிக்கிறேன்”

பார்ப்பனர்களின் இந்த மந்திரம் பெண்மையை இழிவு செய்கிறது, இழிவான பெண்ணை தூய்மைப் படுத்துவது
என்பது தான் இதன் பொருள் என்று ஒரு அவதூறு.
“மூன்று பேர் மணந்த பென்ணை நாலாவதாக மணக்கிறேன் என்று சொல்கிறான், எந்த மானமுள்ள ஆண்மகனாவது
இப்படிச் செய்வானா?” என்பது “கற்பு என்பதே ஒரு பொய்க் கற்பிதம்” என்று பேசுவதாகச் சொல்லிக் கொண்ட
இந்த இயக்கத்தின் இன்னொரு அவதூறு.
முதலில் இந்த மந்திரத்தின் தாத்பர்யம் என்ன? பிறந்தது முதல் தேவர்களின் ஆசிர்வாதத்தாலும், அனுக்ரஹத்தாலும்
வளர்ந்த பெண்ணை, அவர்கள் ஆசியுடன் மனிதன், அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஏற்றுக் கொள்வது என்பது.

எல்லா வேதமந்திரங்களையும் போல, இதிலும் “தேவர்கள்” என்பவர்கள் ஆசாமிகள் அல்லர்.
அகமும், புறமும் உள்ள தெய்வ சக்தியின் குறியீடுகள்.
“சோமன்” என்பது எல்லா உயிர்களிலும் அடங்கியிருக்கும் பரம்பொருளின் ஸ்வரூபமான ஆனந்தம் என்ற தத்துவத்தைக் குறிப்பது,
கந்தர்வன் என்பது மனத்தில் காமம் என்ற விதையை ஊன்றும் இச்சா தத்துவம்.
அக்னி என்பது தெய்வீக சக்தி ஓங்கி வளர்ந்து தன் உன்னத நிலையை எய்துவதன் குறியீடு.
இந்த தெய்வ சக்தியே இகம்,பரம் என்ற இரண்டு விதமான சுகங்களையும் நோக்கி மனிதனை இட்டுச் செல்கிறது.

இதை ஒரு அழகிய கவிதையாகக் கண்டு அனுபவிக்கவும் இடமிருக்கிறது,

“சிறுமியாக இருக்கையில் முதலில் நீ நிலவைக் கண்டு மையல் கொண்டாய்
பின்னர் மேகங்களில் வழிந்தோடும் இசையில் மனம் பறிகொடுத்தாய்
பின்னர் ஆசைத் தீ உன்னைப் பற்றியது.
ஓ பெண்ணே
நான்காவதாக மனிதனாகிய நான் உன்னை வரிக்கிறேன். ஏற்றுக் கொள்.”

சோமன், நிலவு, மனம், ஆனந்தம் இவை அனைத்தும் வேதப் படிமத்தில் தொடர்புடையவை.
கந்தர்வர்கள், இசை, கலைகள், மேகங்கள் இவையும்.
தத்துவமும், கவித்துவமும் ததும்பும் அழகிய மொழியில் சொல்லப் பட்ட இந்த மந்திரத்தில் அருவருப்பைக் காணும்
திராவிட பகுத்தறிவு ஒருவிதமான மனப்பிறழ்வு நிலை என்று தான் கூற வேண்டும்.

பெண் இழிவானவள் என்று கூறவந்தால் தேவர்கள் அவளைத் தள்ளினார்கள் என்றல்லவா இருக்க வேண்டும்?
ஆனால் இங்கே ஸ்வீகரித்தார்கள் என்று வருகிறது. மேலும் இந்த ஒற்றை மந்திரத்தை வைத்து ஒன்றும் சொல்ல முடியாது.
திருமணச் சடங்கில் உள்ள எல்லா மந்திரங்களும் பெண்ணை மிக உயர்வாகக் கூறுகின்றன

………………

ஆய கலைகள் அறுபத்து நான்கின் பட்டியல் விளக்கம் …..

1. அக்ஷரா விலக்கணம் எழுத்திலக்கணம்
2. இலிகிதம் எழுத்தாற்றல்
3. கணிதம் கணிதவியல்
4. வேதம் மறை நூல்
5. புராணம் தொன்மம்
6. வியாகரணம் இலக்கணவியல்
7. நீதி சாஸ்திரம் நய நூல்
8. ஜோதிடம் கணியக் கலை
9. தர்ம சாஸ்திரம் அறத்துப் பால்
10. யோக சாஸ்திரம் ஓகக் கலை
11. மந்திர சாஸ்திரம் மந்திரக் கலை
12. சகுன சாஸ்திரம் நிமித்தகக் கலை
13. சிற்ப சாஸ்திரம் கம்மியக் கலை
14.வைத்தியசாஸ்திரம் மருத்துவக் கலை
15. உருவ சாஸ்திரம் உறுப்பமைவு
16. இதிகாசம் மறவனப்பு
17. காவியம் வனப்பு
18. அலங்காரம் அணி இயல்
19. மதுர பாடனம் இனிதுமொழிதல்
20. நாடகம் நாடகக் கலை
21. நிருத்தம் ஆடற் கலை
22. சத்தப்பிரும்மம் ஒலிநுட்ப அறிவு
23. வீணை யாழ் இயல்
24. வேணு (புல்லாங்குழல்)குழலிசை
25. மிருதங்கம் (மத்தளம்)
26. தாளம் தாள இயல்
27. அத்திரப் பரிட்சை வில்லாற்றல்
28. கனகப் பரிட்சை (பொன் நோட்டம்)
29. இரதப் பரிட்சை (தேர் ஏற்றம் )
30. கஜப் பரிட்சை (யானை எற்றம்)
31. அசுவப் பரிட்சை (குதிரை ஏற்றம்)
32. இரத்தினப் பரிட்சை மணி நோட்டம்
33. பூமிப் பரிட்சை மண்ணியல்
34. சங்கிராம விலக்கணம் போர்ப் பயிற்சி
35. மல்யுத்தம் கைகலப்பு
36. ஆகருடனம் (ஆகர்ஷணம்)கவர்ச்சியியல்
37. உச்சாடனம் ஓட்டுகை
38. வித்து வேடனம் (நட்பு பிரிக்கை)
39. மதன சாஸ்திரம் மதன கலை
40. மோகனம் மயக்குக் கலை
41. வசீகரணம் வசியக் கலை
42. இரசவாதம் இதளியக் கலை
43. காந்தருவ வாதம் (இன்னிசைப் பயிற்சி)
44. பைபீலவாதம் (பிறவுயிர்மொழி)
45. கவுத்துவ வாதம் மகிழுறுத்தம்
46. தாதுவாதம் ( நாடி சாஸ்திரம்)
47. காருடம் கலுழம்
48. நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது இழப்பறிகை)
49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்;மறைத்ததையறிதல்)
50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்–வான் செல்கை)
51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது–வான்புகுதல்)
53. அதிரிசியம் தன்னுறு கரத்தல்
54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55. மகேந்திர ஜாலம் பெருமாயம்
56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்–அழற் கட்டு)
57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்)
58. வாயுஸ்தம்பம் வளிக் கட்டு
59. திட்டி ஸ்தம்பம் கண் கட்டு
60. வாக்கு ஸ்தம்பம் நாவுக் கட்டு
61. சுக்கில ஸ்தம்பம் (விந்தையடக்கல்)
62. கன்னத்தம்பம் புதையற் கட்டு
63. கட்கத்தம்பம் வாட் கட்டு
64. அவத்தைப் பிரயோகம் சூனியம்

————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சாரதா பீடம்-அற்புதம் வாய்ந்த இந்துக்களின் ஆன்மிக பூமியான ஜம்மு காஷ்மீர்-

February 7, 2020

ஸ்ரீ சாரதா பீடம் (Sharada Peeth), இந்திய – பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில்,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், நீலம் ஆற்றின் கரையில், இந்து சமயக் கடவுளான சாரதாவிற்கு அர்பணிக்கப்பட்ட கோயில் ஆகும்.
சாரதா பீடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
காஷ்மீர பண்டிதர்கள் அதிகம் வாழ்ந்த இப்பகுதியில் இந்து சமய வேதங்கள் பயிற்றுவிக்கப்படும் மையமாக விளங்கியது.

14ஆம் நூற்றாண்டில் சிதிலமடைந்த சாரதா பீடத்தை காஷ்மீர் மன்னர் குலாப் சிங் 19ஆம் நூற்றாண்டில் திருப்பணி செய்தார்
இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் சாராதா பீடம் அமைந்த பகுதியை பாகிஸ்தான் நாட்டு பஷ்தூன் பழங்குடி மக்கள் கைப்பற்றி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இணைத்தனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கில், பாரமுல்லாவிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும்,
முசாபராபாத் நகரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும்,
எல்லைக் எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இந்தியத் துணைக் கண்டத்தில் சாரதா பீடம், புகழ் பெற்ற வேத கல்வி மையமாக விளங்கியது.
அத்வைத தத்துவ நிறுவனர் ஆதிசங்கரர் மற்றும் விசிட்டாத்துவைத நிறுவனரும் வைணவ குருவுமான இராமானுசர்,
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்திரத்திற்கு விளக்க உரை எழுதுவதற்காக காஷ்மீரின் சாரதா பீடத்திற்கு வருகை புரிந்தனர்.

யுவான் சுவாங்
கி பி 632 இல் சீன பௌத்தப் பயணி யுவான் சுவாங் சாரதா பீடத்திற்கு வருகை புரிந்து,
இரண்டு ஆண்டுகள் தங்கி, பௌத்தம் தொடர்பான கல்வியைப் பயின்றார்.[6]

சாரதா கோயில் அமைப்பு
சாரதா பீடத்தின் சரசுவதி கோயிலின் நீளம் 142 அடியாகவும், அகலம் 94.6 அடியாகவுவும் இருந்தது.
மேலும் 88 அடி உயர தோரண வாயிலும் அமைந்திருந்தது.
கோயில் மூலவரான சாரதா தேவியின் உருவம் சந்தன மரத்தினால் செய்யப்பட்டது.

வரலாற்று குறிப்புகள்
காஷ்மீரப் பண்டிதரான மகாகவி கல்ஹானர், தான் எழுதிய இராஜதரங்கிணி எனும் சமஸ்கிருத நூலில்
சாரதா பீடத்தையும், அதன் நிலவியலையும் குறித்துள்ளார்.

இசுலாமிய வரலாற்று அறிஞரும், புவியியலாளருமான அல்-பிருனி (973 – 1048), சாரதா பீடத்தின் கருவறையில்
மரத்திலான சரசுவதியின் சிற்பம் காணப்பட்டதாக தமது குறிப்பில் குறித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரத்தின் மூல ஸ்தானம் -மருவி இந்தப்பெயர் – சூரியன் கோயில் போன்று,
சாரதா பீடத்தின் கோயில் அமைப்பு இருந்ததாக குறிப்பிடுகிறார்.

பதினான்காம் நூற்றாண்டில் சாரதா பீடத்தின் கோயிலை இசுலாமியர்கள் சிதைத்ததாக கருதப்படுகிறது.

காஷ்மீரம் – ஒரு ஹிந்து பூமி! ஹிந்து மதத்தின் அடித்தளம்!காஷ்யபபுரி எனும் காஷ்மீர்! வேதம் விளைந்த பூமி!
தெய்வங்கள் தேடி வந்த பூமி! ரிஷிகள், முனிவர்களின் அருந்தவ பூமி! ஆசார்யர்களின் ஆன்மீக பூமி!

காஷ்மீர்=காஷ்யபர்+ மீரா. காஷ்யப ரிஷியின் பெரிய ஏரி. பெரிய ஏரிக்கு சம்ஸ்க்ருதத்தில் ‘மீரா’என்பர்.
காஷ்யப ரிஷி இப்போதைய வைவஷ்வத மந்வந்ரத்தின் சப்த ரிஷிகளில் ஒருவர். அதாவது ஏழு ரிஷிகளில் ஒருவர் காஷ்யபர்.
காஷ்யப கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ரிஷியின் மரபினர்.
ப்ரஜாபதி தக்ஷர் தம் 13 குமாரத்திகளை காஷ்யபருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
தேவர்கள், கன்வர்கள், யக்ஷர்கள், நாகர்கள் எல்லாம் காஷ்யபரின் பிள்ளைகள்.

ஸ்ரீநகர்–குல்மார்க் பெரிதும் வற்றிப் போன ஏரியின் பெரும்பகுதியைச் சமப்படுத்தி ஊராக்கினார் அனந்த்நாக்.
அங்கு பல குருகுலங்கள், சர்வகலா சாலைகள் நிறுவி மிகப் பெரிய ஞான நகரம் ஆக்கினார்.
உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் பல சமயங்களைச் சார்ந்த அறிஞர்களும் ஞானிகளும் வந்து கூடி சத் சங்கம் செய்யும் இடமாகத் திகழ்ந்தது.
ஞானம் என்னும் செல்வத்தை (ஸ்ரீ) உடைய நகர் என்பதால் ‘ஸ்ரீநகர்’ ஆயிற்று.
இவற்றை எல்லாம் நிர்வாகம் செய்ய நிர்மாணித்த இடமே இன்றைய ‘அனந்த்நாக்’.
ஸ்ரீநகரின் ஞானச் செல்வத்தை அனுபவிக்க கெளிரி தேவியும், விநாயகரும் கைலாயத்தி லிருந்து அங்கு வருவார்களாம்!
அவர்கள் வரும் வழிக்கு ‘கெளரிமார்க்’ என்று பெயர். அதுவே மருவி இன்றைய ‘குல்மார்க்’ ஆயிற்று.

ஞான பூமியை ஆளும் ஞான தேவி ஸ்ரீ சரஸ்வதி:
காஷ்மீரை ஆளும் காவல் தெய்வம் சரஸ்வதி தேவி. சரஸ்வதிக்குரிய ஸ்லோகத்தில் ‘காஷ்மீர பூர வாசினி’ என்று போற்றப்படுகிறார்.
‘நமஸ்தே சாரதா தேவி!
காஷ்மீர் பூர வாசினி!
த்வமஹே ப்ரார்த்யே நித்யம்,
வித்யா தான் இஞ்சா தேஹிமே!’

காஷ்மீர மொழியின் எழுத்து வடிவங்கள் ‘சாரதா’ என்று அழைக்கப்பட்டது. கலாசாலைகள் ‘சாரதாபீடங்கள்’ஆயின.
அந்த நாடே ‘சாரதா தேசம்’ என்றும் அழைக்கப்பட்டது.
(சரஸ்வதி கோவில், சாரதா பீடம் எல்லாம் இன்றைய பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் – POK – இடிந்த நிலையில் உள்ளன!
வழிபாடு இல்லாமல் பாழடைந்து கிடக்கின்றன!)

ஆதிசங்கரரின் ‘செளந்தர்ய லஹரி’
ஆதிசங்கராசார்யர் எட்டாம் நூற்றாண்டில் காஷ்மீர் வந்து, பல ஆண்டுகள் தங்கியிருந்தார்.
கோபாலாத்ரி மலைமேல் அமர்ந்து தான் சிறந்த ‘செளந்தர்ய லஹரி’பாடினார். இந்த மலை சங்கராசார்ய மலை என்றும் அழைக்கப்படுகிறது.
நீலம் நதி (கிருஷ்ண கங்கா)க் கரையில் இருந்த சாரதா கோவிலுக்குச் சென்ற ஆதிசங்கரர், அந்தக் கோவிலின் அமைப்பு,
சாந்நித்யம் ஆகியவற்றைக் கண்டு மிக உகந்து அதே போல சிருங்கேரியில் துங்கபத்ரா நதி தீரத்தில் கோவில் கட்டினாராம்.
சிருங்கேரியில் உள்ள சாரதாம்பாளின் சந்தன மரத்தாலான மூல விக்ரகம் காஷ்மீரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.

ஸ்ரீ ராமானுஜரின் ‘ஸ்ரீபாஷ்யம்’
ஸ்வாமி ராமாநுஜர் 11 ஆம் நூற்றாண்டில் காஷ்மீர் வந்தார். வேத வியாசரின் பிரம்ம சூத்திரங்களுக்கு உரை எழுதுவதற்காக,
சாரதா பீடத்தில் இருந்த, வேத வியாசரின் சீடர் போதாயன மகரிஷி இயற்றிய ‘போதாயன விருத்தி கிரந்தம்’ என்னும் நூலைப் பார்க்க வந்தார்.
ஸ்ரீ ராமாநுஜர் இயற்றிய ஸ்ரீபாஷ்யத்தை ஸ்ரீ சரஸ்வதி தேவி தம் சிரசில் சூடிப் பெருமைப் படுத்தினார்.
சில சூத்திரங்களுக்கு ஸ்ரீ ராமானுஜரின் வ்யாக்யானங்களைக் கேட்டு, அவரை உச்சி முகர்ந்தார்.
ஸ்ரீ ராமாநுஜரை ‘ஸ்ரீபாஷ்யகாரர்’ என்று போற்றினார்.
ஸ்ரீ சரஸ்வதி தேவி தாம் வணங்கி வந்த ‘ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர்’ விக்ரகத்தை ஸ்ரீ ராமாநுஜருக்குத் தந்தருளினார்.

பிற மத அறிஞர்கள்:
பெளத்த, சமண மத அறிஞர்களும் இங்கு வந்து தத்துவ விசாரம் செய்தனர்.
பல பெளத்தத் துறவிகள் இங்கு பல ஆண்டு காலம் தங்கி இருந்து கற்றனர்.
யுவான் சுவாங்(சீனா) ஹேமசந்திரர்(சமண) ஆகியோர் இங்கிருந்தனர்.
இஸ்லாமிய மத அறிஞர்களும்- அல்பரூனி- இங்கு வந்து படித்துச் சென்றதாகக் குறிப்புகள் உள்ளன.
பெளத்தம் இங்கு வளர்ந்ததற்கு அடையாளமாக இன்றைய லடாக் பிரதேசம் விளங்குகிறது.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பைத் எதிர்த்து வென்ற இந்து மன்னர்கள்:
இஸ்லாமியர்கள் உலகின் பல நாடுகளிலும் தங்கள் ஆதிக்கத்தைக் காட்டிய போதும்,
பரத கண்டத்துக்குள் அவ்வளவு சுலபமாக நுழைய முடியவில்லை.
‘லோஹனா’ வம்சத்து மன்னர்கள் அவர்களை உள்ளே நுழைய விடாமல் நம் வட மேற்கு எல்லையைப் பாதுகாத்தனர்.
லோஹனா வம்சத்தின் முன்னோர் ‘லவ’ பேரரசரின் (ஆம்… ஸ்ரீராமரின் திருக்குமாரர் தான்) படையில் வாள் படைத் தளபதிகளாக இருந்தார்கள்!
ஸ்ரீராமாயண காலத்து லவ புரி தான் இன்றைய லாகூர் (பாகிஸ்தான்).

காஷ்மீரின் வரலாறு:
மகாகவி கல்ஹணர் காஷ்மீரின் வரலாற்றை ‘ராஜ தரங்கிணி’ என்னும் நூலாக எழுதியுள்ளார்.
எட்டு பகுதிகள்- தரங்கங்கள்-கொண்ட இந்நூலில் 7826 ஸ்லோகங்கள் உள்ளன.
இதையே காஷ்மீர் பற்றிய அடிப்படை ஆதார நூலாக மற்ற ஆராய்ச்சி யாளர்கள் / எழுத்தாளர்கள் கொண்டுள்ளனர்.
கல்ஹணர் காஷ்மீரை ஆண்ட பல மன்னர்களின் பெயரைப் பட்டியல் இட்டுள்ளார்.

அவர்களுள் சில பெயர்கள்:
கோநந்தா, தாமோதரா யஷோவதி, லவ, குசேஷயா, சுரேந்திரா, ஜனகா, அசோகா, ஜலோகா, அபிமன்யு… மற்றும் பலர்.
இந்த நூல் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சுருக்கமாக M.A.Stein என்பவர் ஆங்கிலத்தில் Kalhana’s Rajatarangini-A Chronicle of the Kings of Kashmir என்று
மூன்று புத்தகங்களாக எழுதியுள்ளார்.

காஷ்மீரத்தில் (பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு -காஷ்மீரில்) முஸாபராபாத் நகரிலிருந்து சுமார் 207 கி.மீ தூரத்திலும்,
பாரத -பாக் எல்லைக் கோட்டில் உள்ள குப்வாராவில் இருந்து 30 கி.மீ தூரத்திலும் சாரதா கிராமம் அமைந்துள்ளது.
மேலும் ஒரு சிறப்பு என்ன வென்றால், இந்த கிராமம் கிஷன்கங்கா (இன்னொரு பெயர் நீலம்) மதுமதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில்
நீலம் பள்ளத்தாக்கில், அழகு கொஞ்சும் பிரதேசத்தில் உள்ளது.
இந்த பகுதி பனிபடர்ந்த நங்கபர்பத் மலைத் தொடரின் சாரதா – நாரத சிகரங்களுக்கு இடையில் உள்ளது.

வரலாறு – புராதனம்

சாம்ராட் அசோகரால் பொது ஆண்டு முன் 273ல் புத்தமத கலாசாலை நிறுவப்பட்டது.
மஹாராஜா கனிஷ்கரால் பொது ஆண்டு பின் 141ல் சாரதா பீடத்தில் 4வது புத்த அறிஞர்களின் அவை சந்திப்பு நடத்தப்பட்டது.
கவி கல்ஹணர் தன்னுடைய ராஜ தரங்கிணி என்ற 11வது நூற்றாண்டில் இயற்றப்பட்ட காவியத்தில் சாரதா ஆலயத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
அல் பெரூனி என்பவர் இன்றைய தஜிகிஸ்தான் – உஸ்பெஸ்கிஸ்தான் என்றறியப்படும் பகுதிகளைச் சேர்ந்தவர்.
அல் பெரூனி வெளிநாட்டிலிருந்து (மத்திய ஆசிய) வந்த சரித்திர ஆராய்ச்சியாளர்.
இவர் சமஸ்கிருதம், பாரசீகம் என்று எழெட்டு மொழிகள் அறிந்தவர்.
அவர் பாரதத்திற்கு பொது ஆண்டு முன் 1036ல் வந்த போது காஷ்மீரத்திற்கு பயணம் செய்திருக்கிறார்.
அங்கு சாரதையின் பெரிய விக்கிரகம் இருந்ததாகவும் பெரும் எண்ணிக்கையில் யாத்ரிகர் திரண்டிருந்திருந்ததாகவும்
தன்னுடைய பயணநூலில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் 500 வருடங் களுக்குப் பின்னர் அக்பர் காலத்தில் வாழ்ந்து அய்னி அக்பரி எழுதிய
அபுல் பஸலும் சாரதையின் கோயிலைப் பற்றி விவரித்துள்ளார்.

டோக்ரா என்ற ஜாம்வால் வம்சாவளி முதல் அரசர் மஹாராஜா குலாப்சிங். அவர் ஆட்சி புரியத் துவங்கிய ஆண்டு 1846.
அதுவரை முஸ்லிம் படையெடுப்புகளின் போது சிதைக்கப்பட்ட பல கோயில்களை புதுப்பித்துச் செப்பனிட்டார்.
அவற்றுள் முதன்மையானது சாரதா பீடம். இந்த வம்சத்தின் கடைசி அரசர் ஹரிசிங்.

ஊடாடும் ஆன்மீக இழை

ஆதிசங்கரர் பாரத நாடெங்கும் தன் சீடர்களுடன் திக்விஜயம் செய்த போது காஷ்மீரத்தில்
சைவமும் (சிவ வழிபாடு) சாக்தமும் (சக்தி வழிபாடு) புத்துயிர் பெற பெரும் முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற்றார்.
இடைப்பட்ட காலத்தில் காஷ்மீரத்தில் புத்த மதம் ஓங்கி இருந்திருக்கிறது. அவர்களை, ஆதிசங்கரர் சமய உரையாடல்கள்
வாத பிரதிவாதம் நிகழ்த்தி சனாதன தர்மத்தின் மேன்மையை அவர்களுக்கு உணர்த்தி,
அவர் தம் மனங்களை வென்று ஹிந்துமதத்தை ஏற்கச் செய்துள்னார்.
அவருடைய இலக்கிய நயம் மிக்க இறைவனின் தெய்வீக அழகைப் பாடும் செனந்தரிய லஹரி என்ற நூலை
காஷ்மீரில் எழுதியதாகத் தெரிகிறது. இயற்கையின் அழகு மிளிரும் காஷ்மீரையே சங்கரர் அன்னையின் வடிவமாய் கண்டிருப்பாரோ?

காஸ்யப ரிஷி ஏழு ரிஷிகளுள் ஒருவர். காஷ்மீரம் என்ற பெயர் கச்யயமிர் அதாவது,
காச்யப முனிவர் ஏற்படுத்திய ஏரி அல்லது காச்யப மேரு காச்யபமலை என்பதன் மருவிய வடிவமாக இருக்க வேண்டும்.
வரலாற்று அறிஞர்களின், புராணங்களை படித்தவர்களின் கருத்து அலெக்சாண்டரின் படைகளின் பயண வரலாற்றைக் குறிப்பிடும்
கிரேக்க புத்தகம் பண்டைய காஷ்மீரை காஸ்பேரியா என்று பதிவு செய்திருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த ராமானுஜரும் சீடர்கள் உடன் வர யாத்திரை, மேற்கொண்டு அன்னை சாரதையைத் தரிசனம் செய்தார்.
வேதாந்தத்திற்கு அவர் எழுதிய விளக்கவுரை (பாஷ்யம்) அன்னையின் சன்னதியில் சமர்ப்பித்து, அதன் ஏற்று அங்கீகரிக்குமாறு வேண்டினார்.
அன்னை மிகவும் மகிழ்ந்து இது சாதாரண விளக்கவுரை அல்ல, பாஷ்யங்களுள் உயர்வானது என்று பொருள்பட, ராமானுஜரின் படைப்பு
ஸ்ரீபாஷ்யம் என்று அழைக்கப்படும் என்று அசரீரியாக ஒலித்து ஆசீர்வாதம் அளித்தாள்.

கர்நாடக சங்கீதத்தின் மூம்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் சரஸ்வதியைப் போற்றி எழுதிய பாடலில்
அன்னையை காஷ்மீரபுர வாஸினி (காஷ்மீரத்தில் வசிப்பவளே) என்று அழைக்கிறார்.

இன்றளவிலும், காஷ்மீரத்து மக்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும், தங்கள் காலை பிரார்த்தனையில்
“நமஸ்தே சாரதா தேவி காஷ்மீர புரவாஸினி த்வாம் வரம் பிரார்த்தயே நித்யம் வித்யாதனம் ச தேஹிமே” என்று வேண்டுகிறார்கள்.
(பொருள் : சாரதே, தேவியே, காஷ்மீரத்தில் வாசம் செய்பவளே, யான் உன்னை தினமும் துதிக்கிறேன்,
அடியேனுக்கு ஞானச் செல்வத்தினை அளிப்பாய்)

புனித யாத்திரை

சாரதாபீடம் என்னும் இந்த சரஸ்வதி கோயிலுக்கு பாரத நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பாமரர்கள் முதல் துறவிகள் வரை
பன்னெடுங்காலமாய் புனித யாத்திரை மேற்கொண்டு புண்ணியம் அடைந்துள்ளனர் என்று தெரிகிறது.
1947ல் ஆண்டு நாம் சுதந்திரம் அடைந்து 100 நாட்களுக்குள் பாகிஸ்தான் நயவஞ்சமாக போர்தொடுத்து
நம் ஜம்மு- காஷ்மீரின் பெரும் பகுதியை ஆக்ரமித்துக் கொண்டதால் சாரதா பீட யாத்திரை நின்று போயுள்ளது.
கோயிலும் பராமரிப்பின்றி பொலிவிழந்து உள்ளது. குறிப்பாக அக்டோபர் 2005ல் நிலநடுக்கத்தாலும் இந்த கோயில் சிதிலமடைந்தது.

சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக் பிறந்த தால் வாண்டிக்கு வருடம்தோறும் புனித யாத்திரை மேற்கொள்ள பாக் அரசும்நம் அரசும்
ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.அதைப்போல சாரதா பீடத்திற்கும் யாத்ரிகர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கடந்த
சில ஆண்டுகளாகவே பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.
அவர்களுள் ரவீந்திர பண்டிதர் என்பவரும் முக்கியமானவர் – அதுவும் சமீபத்தில் கர்தார்பூர் தடம் திறக்கப்பட்டு
சீக்கியர்கள் தால் வாண்டிக்கு சுலபமாக சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டவுடன் சாரதா யாத்திரை கோரிக்கை இன்னும் வலுவடைந்துள்ளது.

ராணுவ ரீதியிலும் நன்மை

சாரதா பீடம் அமைந்துள்ள பகுதி பாகிஸ்தானின் ஆக்ரமிப்பில் இருந்தாலும், ஏற்கனவே நம்முடைய பாரத நாட்டின்
ராணுவம் இந்த பகுதியில் கவனம் செலுத்தி எப்பொழுது தேவையென்றாலும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கத் தயார் நிலையில் உள்ளது.
நாம் மலையின் மேல் பகுதியில் கண்காணிப்பைப் பலப்படுத்தி உள்ளதால் எளிதில் எதிரியை சமாளிப்பது மட்டுமல்ல
வலு விழக்கச் செய்யக் கூடிய வசதியான நிலையில் இருப்பதாகவும் அந்த பகுதியில் பணிபுரிந்த அனுபவமுள்ள
லெட் ஜெனரல் சய்யத் அல்ஹஸ்னின் கூறுகிறார். பாக். ராணுவம் அவ்வளவு எளிதில் ஒப்புக் கொள்ளாது என்றாலும்
நாம் தொடர்ந்து யாத்திரைக்கு முயல வேண்டும் – பாக் அரசு மீது நிர்ப்பந்தங்கள் கொண்டு வர வேண்டும் என்கிறார் இவர்.

சாரதா என்றால் சரஸ்வதி என்ற பொருள் உண்டு. சரஸ்வதியின் சிலை இருந்ததால் மட்டுமே அது சிறப்பு பெற்றுவிடவில்லை.
அந்த இடமே வேத பல்கலைக் கழகம் போன்று செயல்பட்டிருக்கிறது. எண்ணற்ற அறிவாளிகள் அங்கே இருந்திருக்கிறார்கள்.
அரிய பல நூல்களை இயற்றியிருக்கிறார்கள் அதுகுறித்து விவாதம் செய்திருக்கிறார்கள்.
அதனால்தான் அது அறிவின் தலைநகரம் என்று போற்றப்படுகிறது.
முதலில் சிறிய வழிபாட்டுத் தலமாகவும் இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் பெரிய கோயிலாகவும் எழும்பியதாகச் சொல்லப்படும்
சாரதா பீடத்தில் வேதங்களும் 64 கலைகளும் குடிகொண்டு இருந்திருக்கிறது.

வேதமும் சங்கீதமும் கல்வியும் கற்றுத் தரப்பட்ட இந்த மையத்தில் சமஸ்கிருத மற்றும் காஷ்மீர சரஸ்வத் பண்டிதர்கள் தங்கியிருந்திருக்கிறார்கள்.
ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இந்தப் பகுதிக்கு வருகை தந்த சீன பௌத்த துறவியான யுவாங் சுவாங் இந்த வேத பாடசாலை பற்றி சிலாகித்து எழுதியுள்ளார்.

இந்த கோயிலுக்கு நான்கு திசைகளிலும் வாசல்கள் இருந்ததாகவும் வேதங்களை கற்று உணர்ந்தவர்கள் வந்தால் மட்டுமே
தெற்கு வாயிற் கதவுகள் திறக்கும் என்றும், ஜகத்குரு ஆதிசங்கரர் வருகை புரிந்த போது தானாக தெற்கு பக்கக் கதவு திறந்து
அவரை வரவேற்றது என்றும் சொல்லப்படுகிறது.

நமது எல்லைப் பகுதியில் இருந்ததாலோ என்னவோ ஒவ்வொரு முறையும் அன்னியர் படையெடுப்பின் போது இந்த ஸ்தலம் பாதிக்கப்பட்டது.
முதலில் 14ஆம் நூற்றாண்டில் அந்நிய அரசர்களால் இந்த கோயில் சிதைக்கப்பட்டது.

சுமார் 450 வருடங்களுக்கு பின் இந்த பகுதியின் முதல் இந்து மன்னரான டோக்ரா வம்சத்து குலாப் சிங் இந்தக் கோயிலின் பல பகுதிகளை சீர் செய்தார்.
ஷ்ரதா தேவியை முதன்மை தெய்வமாக வழிபடும் சரஸ்வத் பண்டிதர்களைக் கொண்டு வழிபாடுகள் நடந்தன.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்பட்டபோது போரில் மீண்டும் இந்த கோயில் சிதைக்கப்பட்டது.
பின்னர் 1948இல் போர் முடிவுக்கு வந்த பின் ஸ்தலம் இருந்தப் பகுதியானது ஆப்கன் பழங்குடியினரான பாஷ்யன்களிடம் சென்றது.
அதன்பின் ஆசாத் காஷ்மீர் பகுதிக்கு போய்விட்டது. 2005 ல் ஏற்பட்ட பூகம்பத்தில் மிச்சமிருந்த இந்த கோயிலின் பெரும்பகுதியும் சேதமடைந்து விட்டது

சாரதா எழுத்து வரி வடிவம் – கலாச்சாரம்

தேவநாகரி எழுத்து வடிவம் போல சாரதா எழுத்து வடிவம் பொது ஆண்டு முன் 8ல் இருந்து 12 நூற்றாண்டு வரை பிரபலமாக இருந்ததாய் தெரிகிறது.
பிராம்மி மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. அன்றைய பாரதத்தின் வடமேற்கு பகுதிகளில்
காஷ்மீர், பஞ்சாப், சிந்து, இன்றைய ஆப்கானிஸ்தான் வரை பரவியிருந்தாகத் தெரிகிறது.
சீக்கியர்கள் அதிகம் பயன்படுத்தும் குருமுகி சாரதா எழுத்திலிருந்ததாகத் தெரிகிறது.
சாரதா எழுத்து வடிவத்தை மீண்டும் உயிர்ப்பித்து பழைய நூல்கள் மொழி பெயர்த்து வெளி உலகிற்கு கொண்டு வந்தால்
புராதனமான சாரதா – காஷ்மீர் கலாச்சாரத்தை அதன் மாண்பை அனைவரும் போற்றுவர்.
சாரதா பீடத்தைக் காப்போம் (Save Saradha Committee) என்ற கோஷத்துடன் கர்நாடகாவில் ஒரு குழுவினர் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்கள் 2018 செப்டம்பர் மாதம் இந்த கருத்தை வலியுறுத்தி இரண்டு நாட்கள் பெங்களூரில் மாநாடு நடத்தியுள்ளனர்.
அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் செல்ல காஷ்மீர் ஹிந்துவிற்கு விசா தேவையின்றி சுதந்திரமாக சென்று வர
பாக்.அரசை பாரத அரசு ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.
சாரதா பீட யாத்திரை ஆண்டிற்கு ஒரு முறையாவது நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாரதா பல்கலைக்கழகத்தை ஜம்மு-காஷ்மீரில் நிறுவுவோம்.
அன்னை சாரதையின் கலாச்சாரம் புத்துயிர் பெற்றுப் ஞானத்தின் ஒளி எங்கணும் பரவ வேண்டும் என்று நாமும் பிராத்திப்போம்.

——————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ—ஸ்லோகம் -2–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த வியாக்யானம் –

February 7, 2020

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் சதா –

—————-

ஸ்வ சேஷ சேஷார்த்தோ நிரவதிக நிரப்பாத மஹிமா
பலாநாம் ததா ய பலம் அபி ச சரீரகமித
ஸ்ரியம் தத் சத்நிஸீம் தத் உபசதந த்ராச சமநீம்
அபிஷ்டவ்தி ஸ்துத்யாம் அவிதத மதிர் யாமுந முனி –

ஸ்ரீ யபதி -சர்வேஸ்வரன் -ஓத்தார் மிக்கார் இலாய மா மாயன் -சர்வபல ப்ரதன்-தானே பலத்தை அனுபவிப்பவன் –
சரீர சாஸ்த்ரத்தால் பிரதி பாதிக்கப்படுபவன் -அவனை உபாசிப்பதில் அச்சத்தைப் போக்கி
அருளுபவளான ஸ்ரீ பெரிய பிராட்டியாரை -க ஸ்ரீ ஸ்ரீய -என்றபடி திருவுக்கும் திருவாகிய செல்வன் அன்றோ-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரம் பண்ணி அருளுகிறார்

———————————————

யஸ் யாஸ்தே மஹிமாந மாதமந
இவ த்வத் வல்லபோ அபி பிரபு
நாலம் மாதுமியத்தயா
நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத
தாம் த்வாம் தாஸ இதி ப்ரபன்ன
இதி ச ஸ்தோஷ்யாம் யஹம் நிர்ப்பயொ
லோகைகேஸ்வரி லோக நாத தயிதே
தாந்தே தயாந்தே விதன்–2-

அனைத்து லோகங்களுக்கும் ஒரே ஈஸ்வரியாக உள்ளவள் -கருணைக் கடலே –
உன்னுடைய அளவற்றதும் இயல்பாகவே உள்ள உனது பெருமையை -சர்வேஸ்வரனாகிய உனது நாயகன் –
தனது பெருமையைப் போன்றே -இது இந்த அளவு -என்று அறிய மாட்டான் –
அப்படிப்பட்ட உன்னை உனக்கு நான் தாசன் -உன்னை நான் சரணம் அடைந்தவன் -என்று உள்ள நான்
சிறிதும் பயம் இல்லாதவனாக ஸ்துதிக்கிறேன்

யஸ்ய —
யஸ்ய ஆயுதா யு தாம் ச அம்சே விஸ்வ சக்தி ஐயம் ஸ்திதா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-53–
யார் ஒருவனுடைய பல ஆயிரத்தில் ஒரு பாகமாக உள்ள ஒரு பகுதியில் உலகம் என்ற சக்தி நிலைக்கிறது -என்றும்

ஸ்வ சக்தி லேஸாத் த்ருத பூத சர்க்க –ஸ்ரீ விஷ்ணு புராணம்- 6-5-84–
தனது சக்தியின் ஒரு சிறிய பகுதி மூலம் மட்டுமே தாங்கப்பட்ட உயிர்களைக் கொண்டவன் -என்றும்

மநஸைவ ஜகாத் ஸ்ருஷ்டிம் சம்ஹாரம் ச கரோதி யஸ் –ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-22-15-
யார் ஒருவன் தன் மனம் மூலம் மட்டுமே இந்த ஜகத்தின் ஸ்ருஷ்ட்டி மற்றும் சம்ஹாரத்தைச் செய்கிறானோ -என்றும்

பராஸ்ய சக்தி விவிதை ஸ்ரூயதே ஸ்வபாவிகீ ஞான பலா கிரியா ச –ஸ்வேதரஸ் -6–8-
அவனுடைய சக்தியானது பலவிதமாகவும் ஞானம் பலம் மற்றும் செய்கைகளை இயல்பாகவே கொண்டதாகவும் உள்ளதே -என்றும்

ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் –மஹா நாராயண உபநிஷத் -என்றும்

திவ்யோ தேவ ஏகோ நாராயண –ஸூபால உபநிஷத் -7-இத்யாதி பிரமாணங்களால் வெளியிடப்பட்ட
பரத்வத்தை உடையவன் உனக்குக் கணவனாக உள்ளான் –

இப்படிப்பட்ட சர்வேஸ்வரனுக்கும் கூட எட்டாத விதமாக -இத்தகையது -என்று வாக்காலும் மனதாலும் கூற இயலாதபடி
உனது அளவற்ற பெருமையானது உள்ளது -இவ்வளவு என்று நிரூபிக்க இயலாதபடி உள்ளது –

ஆனால் அவன் உனது பெருமையை இவ்வளவு என்று நிரூபிக்க முயன்றால் –
தனக்கும் தன் தன்மை அறிய அரியான் –திருவாய் -8-4-6-என்பதற்கு ஏற்ப
தனது வைபவத்தைக் கூட உணர இயலாமல்
உள்ளது போன்று உனது பெருமையை உணர்வதில் சக்தி அற்றவனாகவே உள்ளான் –

ஆனால் ஜகத்துக்கு இரண்டு சேஷிகளா என்ற சங்கை எழலாம் -இதுக்கு விடை அளிக்கிறார்
நித்ய அநு கூலம் ஸ்வத–
ஸ்ரீ நீளா ஸூக்தம் அஸ்ய சாநா ஜகதஸ் விஷ்ணு பத்னீ -என்பதுக்கு ஏற்ப ஜகத்துக்கு
இவள் எஜமானி என்ற போதிலும்
அவனைப் பற்றி நிற்பதால் அவனுக்கு உட்பட்டவள் என்பதால் இரண்டு சேஷிகள் இல்லை

அவனுக்கு உட்பட்டவள் என்றால் இவளது பெருமைக்கு கொத்தையோ என்னில் -ஆகாது

அபூர்வ நாநா ரஸ பாவ நிர்ப்பர பிரபத்தயா முக்த விதக்த லீலயா –ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -44-என்றும்

பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு –ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் -18-என்றும்

சர்வஞ்ஞனாலும் அவள் மேன்மையைக் கூறி முடிக்க முடியாதே

தாம் த்வாம்
கீழே கூறப்பட்ட பரத்வத்தையே கொண்டு நிரூபிக்க வல்ல தன்மையை உடைய உன்னை

தாச இதி
உன்னுடைய அடிமை என்று பற்றுவதாக உரைக்கிறார்

ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் –ஸ்ரீ ஸூக்தம்
அஸ்ய சாநா ஜகத–ஸ்ரீ நீளா ஸூக்தம்
பொதுவான சேஷியானால் உமக்கு என்ன சிறப்பு என்னில்

ஆத்ம ஸ்வரூபத்துக்கு ஏற்ப சேஷபூதனாக கைங்கர்யத்தை முன்னிட்டு சரணம் புகுந்தவன் என்று
ப்ரபந்ந இதி ச -என்கிறார்

இந்தக் காரணத்தால்
தோஷ்யாம் அஹம் நிர்ப்பர
எந்தவித பயமும் அற்று உன்னை ஸ்துதிக்கிறேன்

உலக வழக்கில் தான் ஸ்தோத்ரம் என்பது இல்லாத ஒன்றையே உரைப்பதாக இருக்கும்
பூதார்த்த வ்யாஹ்ருதிஸ் சா ஹி ந ஸ்துதி பரமேஷ்டிநி –ரகுவம்சம் -10–33-என்கிறபடி
உண்மையே ஆகும் பொதுவான இலக்கணத்தின் படி அல்ல –

அதே போன்றே இவள் விஷயத்திலும் உள்ளது உள்ளபடி வெளிப்படுத்த இயலாதபடி யாகவே உள்ளது –
இந்த நிலை ஏன் என்றால்
லோக ஏக ஈஸ்வரி
இந்த அணைத்து லோகங்களுக்கும் ஒரே ஈஸ்வரியாக உள்ளதால் ஆகும்
லோக நாத தயிதே
இந்த அணைத்து லோகங்களுக்கும் நாயகனாக உள்ள நாராயணன் பட்ட திவ்ய மஹிஷியாக உவ்ள்ளதால் ஆகும் –

இத்தகைய மேன்மை கொண்ட நம்மை உம்மால் அளவுபடுத்திக் கூற முடியுமோ என்ன –
நீ கூறுவது உண்மையே ஆகும் –
உன்னுடைய மேன்மையை நாங்கள் உணர்ந்ததால் அல்லவோ உன்னை ஸ்துதிக்க இயலாமல் நிற்கிறோம் –
ஆனால் உன்னுடைய எளிமையை நோக்கும் போது
குறைந்த அறிவு கொண்ட எங்களாலும் ஸ்துதிப்பதற்கு ஏற்றபடி நிலை உள்ளதே

தாந்தே –
கருணை காரணமாகத் தழைத்து வளர்ந்துள்ள கற்பகக் கொடியே

தயாம் தே விதந் –
தயை என்றால் ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க அஸஹிஷ்ணுதா -என்றபடி தனது நிலையை ஆராயாமல்
மற்றவர்கள் துன்பம் கண்டு பொறுக்க இயலாமை -என்பது அன்றோ லக்ஷணம்
அவ்விதம் உள்ள உன்னுடைய தயை குணத்தை நான் அறிந்து கொண்டேன் –

அப்படிப்பட்ட தயை நம்மிடம் உள்ளதோ என்ன —
பாபாநாம் வா —-ந அபராத்யதி –பாபம் செய்தவன் இடத்திலும்
கருணை காட்ட வேண்டும் -அபராதம் செய்யாதவன் யாருமே இல்லையே -என்பதால் இத்தன்மை விளங்குகிறதே –

சர்வேஸ்வரன் தேவர்கள் செயலை நிறைவேற்ற திவ்ய மங்கள விக்ரஹம் எடுத்துக் கொள்ளும் போதும்
நீயும் அதற்கு ஏற்ப ஒரு திரு மேனியை எடுக்கிறாய் -சக்கரவர்த்தி திருமகனாய் அவதரிக்கும் போது
ஜனகராஜன் திரு மகளாய் அவதரிக்கிறாய் –

ஸ்ரீ விபீஷணனை நிலை பெறச் செய்யவும்
ராவணாதிகளை நிரசிக்கவும்
அசோகவனத்தில் இருந்து காட்டை அழித்து நாடாக்கவும்
ராவண வத அனந்தரம் திருவடிக்கு நல் சொற்களை அருளிச் செய்து
சரணம் அடையாத ராக்ஷஸிகளையும் ரஷித்து அருளி
உனது உயர்ந்த கிருபாகுணத்தை வெளியிட்டு அருளினாய் –

அத்தை எண்ணியே அடியேன் அச்சம் இன்றி ஸ்துதிக்கிறேன் –

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நிகமாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–

February 5, 2020

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம்

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ்யாஸ் பதமிதி I
ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II –ஆச்சார்ய நமஸ்கார ரூபம்-

—————–

72–கீழே பரம் ப்ரஹ்மைவ -மங்கள ஸ்லோகார்த்தம் -பிறமத நிரசனம்-
இனி அசேஷ சித் அசித் -மங்கள ஸ்லோகார்த்தம் -ஸூய சித்தாந்த விவரணம் –

கடக சுருதிகள் கொண்டு சரீராத்மா பாவம் பிரதானம்
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் –ய ஆத்மநி திஷ்டன் -ப்ருஹதாரண்யம் -என்று
அசேதனங்களுக்கும் சேதனங்களுக்கும் அந்தர்யாமி
ய ப்ருத்வீம் ய அக்ஷரம் ய ம்ருத்யும் –ஸூபால உபநிஷத்
த்வா ஸூ பர்ணா–முண்டகம்
அந்தப்பரவிஷ்ட
தத் ஸ்ருஷ்ட்வா –அநு பிரவேசத்–தைத்ரியம்
அநே ந ஜீவேந –சாந்தோக்யம்

90–பகவானின் விசித்திர ஐஸ்வர்யங்களைக் காட்டும் பிரமாணங்கள்
ஸ்ரீ கீதையில் -சர்வ சக்தன் -நியமன சாமர்த்தியம் -சர்வ வ்யாபி -சர்வ அந்தர்யாமி –
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -சங்கல்ப ஏக தேசத்தாலே அனைத்தையும் தாங்குகிறான் –
ந ச மத்ஸ்தாதி பூதாநி
விஷ்டாப்யாஹமிதம் க்ருத்ஸ்நம் ஏகாம்சேந ஸ்திதொ ஜகத்

91–ஏகத்வே சதி நாநாத்வம் -விவரணம்
ப்ரஸாசித் ருத்வேந ஏக தேவ ஸந் =ஏகத்வே சதி
விசித்திர பஜதே = நாநாத்வம்
ஏவம் ஸ்வல்ப அவஸ்தி தோபிஸந் = நாநாத்வே சதி
அநவதிக அவதிஷ்டதே = ஏகதா
ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்ய–இத்யர்த்த -அசிந்த்யம் அர்ஹதி
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயனான ஒருவனாக இருந்து
பலவாக -சர்வ ஆத்மாவாக உள்ளான் -நாநாத் வே சதி ச ஏகதா
யோ வேத வ்யோமந் –தத் அக்ஷரே பரமே வ்யோமந் –விசஜாதீயன்
சக்தயஸ் சர்வ பூதாநாம் –பவந்தி தபதாம் ஸ்ரேஷ்ட -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஜகத் ஏதத் மஹாச்சர்யம் -அக்ரூரர் வார்த்தை

92–நம் சித்தாந்தமே எல்லா சுருதிகள் சித்தம்
நேஹ நாநாஸ்தி
ம்ருத்யோ
ய ஸர்வஞ்ஞா
யஸ்ய ஞானமயம் தபஸ்
ஸர்வாணி ரூபாணி
சர்வே நிமேஷா
அபஹத பாப்மா
சர்வம் கலு இதம் ப்ரஹ்மம்
ஜெகதாத்ம்யம் இதம் சர்வம்
போக்தா போக்யம் ப்ரேரிதா
பதிம் விஸ்வஸ்ய
தமீஸ்வரனாம்
ஸர்வஸ்ய வஸீ
அந்தப்ரவிஷ்ட
யஸ்ய ஆத்மா சரீரம்
தத்த்வமஸி

93–பேத அபேத கடக சுருதிகள்
ஸர்வஸ்ய –சர்வம் சமஞ்சதி-சர்வ சரீர தயா -இத்தால் அத்வைதம் சமர்ப்பிக்கப்பட்டதாயிற்று
அபேதம் சாஸ்வதம் -ஸ்வரூப ஸ்வ பாவங்களின் பேதங்கள் உள்ளன -பேதம் சமர்த்திக்கப்பட்டதாயிற்றே

94–ஐக்கிய ஞானத்துக்கும் பேத ஞானத்துக்கும் மோக்ஷ உபாய பரமான ஸ்ருதிகளுக்குள் விரோதம் இன்மை
தத்வமஸி ஸ்வேதகேது
தஸ்ய தாவதேவ சிரம் யாவத் ந விமோஷ்யே அத சம்பத்ஸ்யே–
ப்ருதக் ஆத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வா ஜுஷ்ட தேந அம்ருதத்வமேதி–
ப்ருதக் ஆத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வா – ஜீவாத்மாவையும் நியமிக்கும் பரமாத்மாவையும் வெவ்வேறாக எண்ணியதால்
ஜுஷ்ட தேந-அவன் அனுக்ரஹத்துக்கு இலக்கானவனாய்
அம்ருதத்வமேதி– -மோக்ஷம் அடைகிறான்
பெத்த ஞானமே மோக்ஷ சாதனம் என்றதாயிற்றே
அந்தராத்மா -அத்யந்த விலக்ஷணன்

95–ப்ரஹ்மம் மூன்று நிலைகள்
தானான ஸ்வரூபம் –அத்வாரக அவஸ்தானம் –
சேதன அந்தர்யாமி –சத்வாரக அவஸ்தானம்
அசேதன அந்தர்யாமி -சத்வாரக அவஸ்தானம்
அசேதனம் -பரார்த்தமாகவே -விகாராஸ்பதமாகவே இருக்கும் ஸ்வ பாவம் –போக்யம்
சேதனம் -போக்தா -இயல்பாக நிர்மலன் -அபரிச்சின்ன ஆனந்த ஞான மய ஸ்வரூபம்
ஸ்வ பாவங்களில் கர்மங்களால் -சங்கோச விகாசங்கள் உண்டே
போக்தா போக்யம் ப்ரேரிதா -இவற்றின் பேத அபேதங்களை போதிக்கும்
சுருதி பேத அபேதங்களை போத்திக்க வில்லை
ஆகவே பேத அபேத ஞானம் மோக்ஷ உபாயம் என்று சொல்ல இயலாது –

96–சத் வித்யைக்கு ச குண வித்யாத்வத்தையும்-ஏனைய ப்ரஹ்ம வித்யைகளுக்கு விகல்பத்வத்தையும் வர்ணித்தல்
வாக்யகாரர் -யுக்தம் தத் குணக உபாஸனாத் -என்று கல்யாண குணங்களுடன் கூடிய ப்ரஹ்மமே உபாசிக்கப்பட வேண்டியவன்
எந்த ப்ரஹ்ம வித்யையை மேற்கொண்டாலும் பலம் ஒன்றே -இதையே விகல்பம்-என்கிறார்
சதவித்யையில் ஜகத்காரணத்வ குணம்
சத்யத்வம் ஞானத்தவம் அனந்தத்வம் அமலத்வம் ப்ரஹ்ம ஸ்வரூப நிரூபக தர்மங்கள்
சத் வித்யையில் காரணத்வத்துடன் கூடிய ப்ரஹ்மம் அனுசந்திக்கப்படுகிறது
தஹர வித்யையில் அபஹத பாப்மத்வம் போன்ற குணங்களுக்கு தனித்து அனுசந்தானம் உண்டு
இவ்வாறு உபாசனத்தில் வாசி இருந்தாலும் ச குண ப்ரஹ்ம ப்ராப்தியில் வாசி இல்லை

97–சர்வேஸ்வரன் -சர்வ நியாந்தா –
சேஷபூதராகவே இருந்து ஸாஸ்த்ர ஆஞ்ஜைகளுக்கு உட்பட்டே -அவனாலே தூண்டப்பட்ட பிரவ்ருத்தி நிவ்ருத்திகள்
பிரதமத்தில் உதாசீனனாக இருந்து ஜீவ ஸ்வாதந்த்ரம் படி செயல்கள் -அவசியம் ஏற்பட்டால் துணை புரிவோம் என்று இருக்கிறான் –
முதல் செயலுக்கு ஏற்ற பலத்தை உடையதாக இரண்டாம் செயல்கள் முதலியவற்றில் அனுமதி அளித்து பலனை அளிக்கிறான் —
அசத் கர்மாக்களால் அப்ரசன்னனாகிறான் -ததாமி புத்தி யோகம் -ஷிபாமி ந ஷமாமி -என்று உண்டே

98–சத் கர்மாக்களைச் செய்வதால் பிரசன்னனாகி-மாம் ஏவ யே பிரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்திதே –
சதாச்சார்ய சம்பந்தம் உண்டாக்கி அருளி
சம தமதாதிகளான ஆத்மகுணங்களை வளரச் செய்து -திவ்ய மங்கள ஆத்ம ஸ்வரூப அனுசந்தானம் –
பக்திரூபாபன்ன-ஞானம் -ப்ரத்யக்ஷ சாமானாகாரம்

99–உபாய -பரமான பிராமண வாக்கியங்கள்
ஸ்ரீ ஆளவந்தார் -உபய பரிகர்மித–கர்ம ஞான யோகங்களால் -பரிசுத்த மனசைப் பெற்று –
ஐகாந்திக ஆத்யந்திகமுமான பக்தியோகத்தில் இழிந்து பிராப்தி –
வித்யாம் ச அவித்யாம் ச
அவித்யயா ம்ருத்யும் தர்த்தும்
வேதந சப்தத்தால் தியானமே சொல்லிற்று -த்யானம் ஞான விசேஷமே
நாயமாத்மா லப்ய
ப்ரேம புரஸ்கர த்யானம்

100–ப்ரஹ்ம ஸ்வரூபம் விளக்கம் -கேவல தர்க்கம் யுக்திகளை மட்டும் கொள்ளாமல்
வேதாந்தம் வாக்கியங்களையும் அவற்றின் வியாக்கியானங்களை கொண்டே செய்யப்பட்டுள்ளன என்கிறார்
போதாயனர் வ்யாஸருடைய சிஷ்யர் -ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு வ்ருத்தி கிரந்தம் அருளி உள்ளார்
டங்கர் என்கிற ப்ரஹ்ம நந்தி -த்ரமிடச்சார்யர் குஹதேவர் -கபர்தி -பாருசி போன்றோர் உரைநூல்கள் அருளி உள்ளார்கள்
ததேதத் நாநாவித அனந்த சுருதி நிகர சிஷ்ட பரிக்ரஹீத தத் தத் வியாக்யான பரிச்ரமா தவதாரிதம் –என்று
இவற்றை அடிப்படையாகக் கொண்டே ப்ரஹ்ம உபாய உபேய உபய ஸ்வரூபங்களை விளக்கி உள்ளேன் என்கிறார்

சார்வாக -பவ்த்த-காணாத ஆஷபாத -ஜைன -கபில -பதஞ்சலி -வேத பாஹ்யர்
சங்கர பாஸ்கர யாதவ பிரகாசர் குத்ருஷ்டிகள்
யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய யாஸ்ச காஸ்ச குத்ருஷ்டய
சர்வா தா நிஷ்பலா ப்ரேத்ய தமோ நிஷ்டாஹி தா ஸ்ம்ருதா –மனு ஸ்ம்ருதி
மாத்ஸ்ய புராணமும் -ஸங்கீர்ணா சாத்விகாஸ் சைவ ராஜசா தாமஸா ததா—பித்ரூணாம்ச நிகத்யதே-என்று
கல்பங்களை நான்கு வகைகள் -ஸங்கீர்ணா மூன்றும் கலந்து -இவ்வாறு -18-புராணங்கள் –
சாத்விக புராணங்களே ஏற்கத் தக்கன –
நத தஸ்தி ப்ருதிவ்யாம்வா தீவி தேவேஷு வா புந சத்வம் ப்ரக்ருதிஜை முக்தம் யதேபி ஸ்யாத் த்ரிபி குணை–ஸ்ரீ கீதை –
ப்ரஹ்மாதிகளும் முக்குண வஸ்யர்களே

101–சத்வாதி குணங்களின் செயல்கள்
சத்வாத் சஞ்சாயதே–இத்யாதிகளால் குணங்களின் செயல்பாடுகள் ஸ்ரீ கீதையில் விளக்கி உள்ளான்
வேதங்கள் அபவ்ரு ஷேயம்– ஸ்ருதிகளில் விரோதங்கள் இருப்பது போன்று தோன்றினாலும்
முன் பின் வாக்கியங்களை ஆராய்ந்தால் விரோதிகள் மறையும்

102–அதர்வசிகை ஸ்வேதாஸ்வதர உபநிஷத்துக்களைக் கொண்டு சிவனே பரத்வம் என்னும் சங்கை
பிராணம் மனசி–அதர்வசிகை வாக்கியம் ஈஸ்வரனை த்யானம் பண்ண சொல்லும்
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரன் சிவன் இவர்கள் ஸ்ருஷ்டிக்கப்பட்டவர்கள்–சர்வேஸ்வரனான சம்புவையே –
ஆகாசத்தில் நடுவில் த்யானம் செய்ய வேண்டும்
முண்டக உபநிஷத் -வ்ருஷம் போ-பிராணிகள் ஹ்ருதய குகைக்குள் உள்ளான் –
அனைத்திலும் வியாபித்து உள்ளான் -அவன் சிவன்
ஸ்வேதாஸ்வதர உபநிஷத் -சத் அசத் ஒன்றும் இல்லாமல் சிவன் ஒருவனே இருந்தான் –
ஹிரண்ய கர்ப்ப சமர்த்த அக்ரே
இவ்வாறு நான்முகனையும் சிவனையும் ஜகத் காரணமாக சொல்லும் சுருதிகள் உண்டே

103–ஜகத் காரண வாக்கியங்கள் எல்லாம் நாராயணனையே சொல்லும் என்று நிரூபணம்
ஜந்மாத் யத்ய யத -ப்ரஹ்ம ஸூத்ரம்
யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே -யேந ஜாதாநி ஜீவந்தி-யத் பிரயந்தி அபி தத் ப்ரஹ்மேதி –தைத்ரியம்
இவை ப்ரஹ்ம லக்ஷணம் சொல்லும் -இந்த ப்ரஹ்மம் யார் என்பது ஸ்ருஷ்ட்டி விளக்கப் பட்ட இடங்களிலே தானே இருக்கும் –
சம்பு ஆகாச மத்யே த்யேய-போன்ற வாக்கியங்களில் இருந்து கிடைக்காதே –

சதேவ சோம்ய இதம் அக்ரே ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம்
ப்ரஹ்ம வா இதம் ஏகமேவ அக்ரே ஆஸீத்
ஆத்மாவா இதம் ஏக ஏவ அக்ர ஆஸீத் நான்யத் கிஞ்சன மிஷத்
ஏகோஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்ம ந ஈஸாநா நேமேத்யா வா ப்ருத்வீ –மஹா உபநிஷத்
ஆக நாராயணனே -சத் -ப்ரஹ்ம -ஆத்ம சப்தங்களால் சொல்லப்பட்டவன் -சாக பசு நியாயம்
சாமான்ய சப்தங்களை விசேஷ சப்தத்தில் பர்யவசானம் செய்து நிர்ணயிக்க வேண்டும் –

104–தைத்ரியமும் நாராயண உபநிஷத்துக்களும் நாராயணனே பரம் பொருள் என்று சொல்லும்
யம் அந்த சமுத்ரே –சமுத்திர சாயியான நாராயணனே -சர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத புருஷாததி
ஆதித்ய வர்ணம் தமஸஸ்து பாரே
அத்ப்ய ஸம்பூத–என்று தொடங்கும் எட்டு ருக்குகளும் விளக்கும் அவனே நைந மூர்த்வம் -என்பதால் விளக்கப்படுபவன்
சர்வ வ்யாபி -ஸ்தாவரம் ஜங்கமம் அனைத்து வடிவாயும் உள்ளவன் -அதீந்த்ரியன் -பரிசுத்த மனசாலே காண முடியும் –
இவனை ஆளுபவர் யாரும் இல்லை -நதஸ்யேச -நாராயணனே பரமபுருஷன்
இதில் ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ந்யவ் –ஸ்ரீ யபதியே பரதத்வம் -ஜகத் காரணன் -பர ப்ரஹ்மம் என்று தைத்ரியம் விளக்கும் –
ஹிரண்ய கர்ப்ப -இதுவும் நாராயணனையே சொல்லும் -ஹிரண்ய கர்போ பூ கர்ப–ஸ்ரீ சஹஸ்ர நாமம் –

105–நாராயண அநுவாகமும்-நாராயணனே பரதெய்வம் -ப்ரஹ்மாதிகள் இவன் விபூதி என்று சொல்லும்
சஹஸ்ர சீர்ஷம் தேவம் இத்யாதி
வேத சாகைகளில் -அக்ஷர -சிவ -சம்பு -பர ப்ரஹ்ம -பரஞ்சோதி -பரதத்வ -பராயண -பரமாத்மா -சப்தங்கள்
நாராயணனையே சொல்லும் என்று நாராயண அனுவாகம் சொல்லும் –
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்ய தேவ நாராயண -ஸூபால உபநிஷத்
ப்ரஹ்மவித் ஆப் நோதி பரம் -இவனையே உபாசனம் செய்ய விதிக்கின்றது

106-அதர்வசிகை உபநிஷத்துக்கும் நாராயணனையே போற்றுகிறது
பிராணம் மனசி சஹ கரணை நாதாந்தே பரமாத்மநி சம் ப்ரதிஷ்டாப்ய த்யாயீதா ஈஸாநாம் ப்ரத்யாயிதவ்யம்-என்று
இந்திரியங்கள் பிராணன் போன்ற விகார வஸ்துக்கள் பரமாத்மாவிடம் லயிக்கின்றன -என்ற அனுசந்தானத்துடன்
அனைத்தும் அவனுக்கு சேஷ பூதங்கள் என்ற அனுசந்தானத்துடன் தியானிக்க வேண்டும் –
இதில் ஈஸாநாம் என்பதால் சிவனை த்யானம் செய்ய விதிக்கிறது என்பர் பூர்வ பக்ஷி
இது பொருந்தாது
சர்வஸ்வ வஸீ
ஸர்வஸ்ய ஈஸாநா
பதிம் விஸ்வஸ்ய
ந தஸ்யே சே கச்சந –இத்யாதிகளால் நாராயணனே சர்வேஸ்வரன் -கட்டளை இடுபவன்-இவனே தியானிக்க வேண்டியவன் –
காரணம் து த்யேய சர்வ ஐஸ்வர்ய சம்பந்த சர்வேஸ்வர சம்பு ஆகாச மத்யே
சம்பு சிவனைச் சொல்லவில்லை
சம் -சுகம் -மோக்ஷமாகிய சுகம் -பவதி -உண்டாகிறது -அஸ்மாத் -இவன் இடத்தில் என்ற வ்யுத்பத்தி –
விச்வாஷம்
விஸ்வ சம்புவம் –இத்யாதி நாராயண அநுவாக சுருதிகள் சம்பு சப்தத்தால் நாராயணனையே சொல்லும்
சம்பு ஸ்வயம்பூ த்ருஹிண–நிகண்டு -பொதுச்சொல் சம்பு -இந்த சாமான்ய சப்தத்தை சிறப்பான வஸ்து விசேஷத்தில்
முடிப்பதே பர்யவசானம் -ஆகவே சம்பு சப்தம் நாராயணனையே குறிக்கும் –

107-ஸ்வேதாஸ்வதரமும் நாராயணனே பரம் பொருள் என்று சொல்லும்
யஸ்மாத் பரம் நா பரமஸ்தி கிஞ்சித் —யஸ்மாத் நாணீயோ ந ஜ்யாயோஸ்தி கச்சித்–
ததோ யத் உத்தரதரம் –
அணீய-ஸூஷ்மம் /ஜ்யாய-உயர்ந்தது -இவனே பராத்பரன் -சர்வ வ்யாபி
இங்கு மந்த்ரங்கள் வரிசை
1-வேதஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் -தமேவ விதித்வா அதி ம்ருத்யு மேதி
நாந்ய பந்தா வித்யதேயநாய
2-யஸ்மாத் பரம் நா பரமஸ்தி கிஞ்சித் —யஸ்மாத் நாணீயோ ந ஜ்யாயோஸ்தி கச்சித்–
வ்ருஷ இவ ஸ்தப்தோ திவி திஷ்டதி ஏக தேநேதம் பூர்ணம் புருஷேண சர்வம் —
3–ததோ யத் உத்தரதரம் ததரூபமநா மயம் ய ஏதத் விது அம்ருதா தே பவந்தி -அதேதரே துக்கமேவாபி யந்தி
4–சர்வாநந சிரோக்ரீவ -சர்வ பூத குஹாசய சர்வ வ்யாபீ ச பகவான் தஸ்மாத் சர்வகத சிவ

பிரகிருதி மண்டலத்துக்கு மேல் -சூர்ய தேஜஸ் போல் -மஹா புருஷனான நாராயணனை அறிந்த உபாசகன்
சம்சாரம் கடக்கிறான்-அவனை அடைய வேறே வழி இல்லை -இதை நான் அறிவேன் என்று முதல் மந்திரத்தால் சொல்லி
இந்த இரண்டு ப்ரதிஜ்ஜைகளையும் சமர்ப்பிக்க வந்த மந்த்ரம் யஸ்மாத் –
சமர்த்தனம் செய்த பின் முடிவுரை -ததோ யத் உத்தரதரம் -முன் சொன்ன காரணத்தால் அனைத்திலும் உயர்ந்த புருஷ தத்வம்
அரூபம் –கர்மத்தால் வந்த உருவம் அற்றது –
அநாமயம்-கர்மத்தால் வந்த சுக துக்கங்கள் அற்றது –
ய ஏதத் விது -எவர் இந்த புருஷ தத்துவத்தை அனைத்திலும் உயர்ந்தது என்று அறிகின்றார்களோ
அம்ருதா தே பவந்தி -அவர்கள் அம்ருதத்வத்தை அடைகின்றார்கள்
அதேதரே துக்கமேவாபி யந்தி -அப்படி அறியாதவர்கள் சம்சாரத்தையே அடைகிறார்கள்
பூர்வ பக்ஷி -தத-என்றதுக்கு-நம்மைப் போலே இல்லாமல் முன் மந்திரத்தில் சொன்ன புருஷ தத்துவத்திலும் என்று
பொருள் கொண்டு முன்னுக்கு பின் விரோதமாக சொல்கிறார்கள் –
அம்ருதத்துக்கு காரணமாக முதலில் சொல்லப்பட்ட புருஷ தத்வ வேதனம் -ஆகவே முடிவில் சொல்லப்படும்
அம்ருதத்வ ஹேதுவும் அந்த புருஷத்வ வேதனமாகவே இருக்க வேண்டும் அன்றோ –
யஸ்மாத் பரம் நா பரமஸ்தி கிஞ்சித்-என்கிற சுருதிக்கு
யஸ்மாத் அபரம் கிஞ்சித் அபி பரம் நாஸ்தி -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் அன்வயம் -அவனிலும் உயர்ந்த வஸ்துவும் இல்லை –
அவனுக்கு சமமும் இல்லை என்று சம அப்யதிக உபய நிஷேதம் வரும்
உள்ளபடியே அன்வயம் கொண்டால் யஸ்மாத் பரம் கிஞ்சித் அபி அபரம் நாஸ்தி-என்று கொண்டால்
உத்க்ருஷ்டதரமாக வேறு ஒன்றும் இல்லை என்று மட்டுமே சித்திக்கும்

அடுத்துள்ள –சர்வாநந சிரோக்ரீவ-சிவ சப்தம் நாராயணனையே காட்டும் -மங்களத்தை செய்பவன் -பரம சுத்தன் என்றவாறு –
சர்வ சர்வ ஸ்தாணு சிவ -சஹஸ்ர நாமம்
சாஸ்வதம் சிவம் அச்யுதம் –நாராயண அனுவாகம் –
சர்வாநந சிரோக்ரீவ-என்று சஹஸ்ர சீர்ஷா புருஷா என்கிறது
பகவான் -சப்தமும் குணநிதியான நாராயணனையே சொல்லும்
மேலும் இந்த மந்திரத்துக்கு பிறகு -மஹாந் ப்ரபுர்வை புருஷ ஸத்வஸ்ய ஏஷ ப்ரவர்த்தக -என்றும் உள்ளதே
நாராயணனே சாத்விக தேவதை -சிவன் தாமச தேவதை –
இப்படி முதலிலும் கடைசியிலும் புருஷனான நாராயணனை வர்ணித்த பின்பு
சர்வ வ்யாபீ
சர்வ பூத குஹா சய
சர்வாநந சிரோக்ரீவ-என்று புருஷ ஸூக்தத்தின் அர்த்தத்தையே சுருக்கிக் கூறும் இடையில் உள்ள மந்திரத்தில்
சிவ சப்தத்தை அமைந்துள்ளதால் சிவ சப்தம் நாராயணனையே குறிக்கும்

108–சைவர்கள் வாத கண்டனம் –
சைவர்கள் வாதம் -ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -என்ற காரண வாக்கியம் நாராயணனை
ஜகத் காரணனாகச் சொல்வது போலே
யதா தமஸ் தத் ந திவா ந ராத்ரி ந சத் ந சாசத் சிவ ஏவ கேவல –என்று மூல பிரகிருதி மட்டும் இருந்ததோ –
பகலும் இரவும் இல்லையோ உருவமுடைய வஸ்துக்களும் உருவம் இல்லாத வஸ்துக்களும் இல்லையோ
அப்போது சிவன் ஒருவரே இருந்தார் -என்பதும் சிவனுக்கு காரண வாக்யமே என்பர்
யா பர ச மஹேஸ்வர -நாராயண உபநிஷத்தும் மஹேஸ்வர சப்தத்தால் சிவனையே சொல்லிற்று
அவனே உபாஸிக்கத் தக்கவன் என்பர்

இதுக்கு ஸ்ரீ பாஷ்யகாரர் பதில்
ந சத் ந அசத் -வாக்கியத்தில் சிவ சப்தத்தால்-பொதுச் சொல்லால் -சிறப்பித்து –
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்-என்று நாராயணனே சொல்லப்படுகிறான்
சிவ மஹேஸ்வர போன்ற பொதுச் சொற்கள் நாராயண -விசேஷ சொல்லுடன் சேர்த்தே பொருள் கொள்ள வேண்டும் –
யத் வேதாதவ் ஸ்வர ப்ரோக்த வேதாந்தே ச பிரதிஷ்டித–தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய ய பர ச மஹேஸ்வர –பூரணமான மந்த்ரம்
பிரணவம் வேதங்களுக்கு பீஜம் -அகாரம் இந்த பிரணவத்துக்கு காரணம் –

அகாரோ விஷ்ணு வாசக
அஹம் க்ருத்ஸ் நஸ்ய ஜகத பிரபவ ப்ரலய ததா மத்த பரதரம் நாத்யத் கிஞ்சிதஸ்ய தனஞ்சய
அக்ஷரானாம் அகாரோஸ்மி
அ இதி ப்ரஹ்ம
அகாரோ வை சர்வா வாக்
நாராயணனே சர்வ ஸ்ரேஷ்டமாக சொன்னவாறு
ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா து உபதேச வாமதேவ வத் -ஸூத்ரத்தின் படியே தேவதாந்த்ர சப்தத்தால் நாராயணனையே குறிக்கும் –
ப்ரதர்தனன் -இந்திரன் -மாம் ஏவ உபாஸ்வ -வாமதேவர் உபதேசம் போலே –

109-வ்யோமாதீத-சிவ -தத்வ வாத கண்டனம்
அதயதிதம்-என்று தொடங்கும் -சாந்தோக்ய உபநிஷத் வாக்யத்துக்கு நாராயணனிலும் உயர்ந்த வஸ்து உள்ளது
வ்யோம -ஆகாசம் -அதீத -கடந்த -ஆகவே வ்யோம அதீத வாதிகள் இவர்கள் –

அதயதிதம் அஸ்மிந் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேச்ம தஹரோஸ்மிந் அந்தர ஆகாச தஸ்மிந்
யதந்த ததந்வேஷ்டவயம் தத்வாவ விஜிஜ்ஞாசி தவ்யம்–என்பது சாந்தோக்யம்

அஸ்மிந் ப்ரஹ்ம புரே-பர ப்ரஹ்மத்துக்கு இருப்பிடமாயுள்ள இந்த உபாசகன் உடம்பில் -ஒன்பது த்வார பட்டணம்
யதிதம் தஹரம் புண்டரீகம் வேச்ம-மிகச் சிறிதாயும் தாமரைப் பூ போன்றதுமான ஹ்ருதயமாகிற ஸ்தானம்
அஸ்மிந் அந்தர ஆகாச -அந்த ஹ்ருதயத்தில் அல்ப ஆகாசத்தில்
தஸ்மிந் தந்த யத் -அந்த ஆகாசத்தினுள் யாது ஓன்று உள்ளதோ
ததந்வேஷ்டவயம் -அதுவே தேடத்தகுந்தது
தத் விஜிஜ்ஞாசி தவ்யம் –அது உபாசிக்கத் தக்கது
இங்கு ஆகாச சப்தத்தால் பரம புருஷனான நாராயணன்
சொல்லப்படுகிறான்
ஆ சமந்தாத் காசதே இதி ஆகாச -வ்யுத்பத்தி -எங்கும் வியாபித்து பிரகாசிப்பதால் ஆகாசம் எனப்படுகிறான்

இந்த ஆகாசத்தில் விவரணமாக இங்கு -ஆகாசோ ஹ வை நாம ரூபயோ நிர்வஹிதா —
நாம ரூபங்களுக்கு நிர்வாஹகன் -என்கிறது
ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமானி க்ருத்வா அபிவதன் யதாஸ்தெ -புருஷ ஸூக்தம்
பரமபுருஷனான நாராயணனே நாம ரூபங்களைச் செய்விப்பவன் –
இந்த ஆகாச சப்த வாச்யனான நாராயணனுக்கு உள்ளே சிவ தத்வம் உயர்ந்ததாக உள்ளது –
அதுவே த்யானிக்கத்தக்கது என்பர் சைவர்

இதுக்கு ஸ்வாமி சமாதானம்
இந்த சந்தேகம் உபநிஷத்தே எழுப்பி விடையும் தருகிறது
தஹரோஸ்மிந் அந்தர ஆகாச–கிம் தத்ர -வித்யதே – யத் அந்வேஷ்டவயம் யத்வாவ விஜிஜ்ஞாசி தவ்யம்-என்று
ஹ்ருதயக்கமலத்துள் இருக்கும் ஆகாசமோ மிகச் சிறியது -அதனுள் என்ன இருக்க முடியும் –
எதன் ஸ்ரவண மனன நிதித்யாசி சனங்கள் விதிக்கப்படுகின்றன -என்று கேட்டுக் கொண்டு மேலே
யாவாந் வா அயமாகாச தாவா நேஷ அந்தர் ஹ்ருதயே ஆகாச –என்று ஆகாசம் சிறியது என்று நினைக்க வேண்டாம்
அயமாகாச-நம் கண்களுக்கு வெளியில் புலப்படும் ஆகாசம்
யாவாந்-எத்துணை பெரியதோ
தாவாந் அந்தர் ஹ்ருதயே ஆகாச-அத்துணை பெரியது ஹ்ருதய கமலத்தில் இருக்கும் ஆகாசமும்
ஏன் எனில் அவன் ஸ்ரீ மந் நாராயணன் ஆகையாலும் விபு ஆகையாலும் மிகபி பெரியவன் என்று
அவனது மஹிமையை வர்ணிக்கிறது
மேலும் -உபே அஸ்மின் த்யாவா ப்ருத்வீ –இத்யாதிகளால் உபய விபூதி களுக்கும் ஆதாரம் –
அனைத்தும் அவனுக்குள் வைக்கப்பட்டுள்ளன -என்று எல்லாம் வர்ணித்து ஆகாசத்தினுள் இருப்பது யாது என்பதற்கு
சமாதானமாக அஸ்மின் காமா ஸமாஹிதா -கல்யாண குணங்கள் உள்ளன -என்றும்
அவை எவை என்பதையும் சுருதியே –
அபஹத பாப்மா விஜர விம்ருத்யு விசோக அவிஜிகத்ச அபிபாச சத்ய காம ஸத்ய ஸங்கல்ப –என்று
அவனை தியானிப்பது போலெ இந்த அஷ்ட குணங்களையும் தனித்தனியாக தியானிக்க வேண்டும்
ஆக அந்த பரமாத்மாவினுள் -ஜகாத் ஸ்ருஷ்டத்வம் -ஜகத் ஆதாரத்வம் -ஜகத் நியந்த்ருத்வம் -ஜகத் ஸ்வாமித்வம் –
இவ்வளவும் செய்தும் பாபம் அற்று இருக்கை-வ்யாப்த கத தோஷம் தட்டாமல் இருக்கை
இந்த கருத்தையே தஸ்மிந் யத் அந்தரிதி காம வ்யபதேச -என்று காம சப்தத்தால்
குணங்களைக் குறித்து அருளிச் செய்கிறார் –

இங்கு சிவனைப் பற்றிய பேச்சுக்கு சிறிதும் இடம் இல்லை –
அதயே இஹ ஆத்மாநம் அநு வித்ய வ்ரஜந்தி ஏதாந் சத்யாந் காமாந் தேஷாம் சர்வேஷு லோகேஷு
காம சாரோ பவதி -என்று இங்கேயே சொல்கிறது –
இங்கு ஆத்மாநம்-என்று பரமாத்மாவையும்-சத்யாந் காமாந்-என்று அவனது கல்யாண குணங்களையும்
தனித்தனியாக வெளிப்படையாக உள்ளதே
காமா -காம் யந்தே இதி காமா -வ்யுத்பத்தி -அனைவராலும் விரும்பப்படுவதால் காம சப்தம் குணங்களைக் காட்டும்
ஸோஸ்நுதே சர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதா –தைத்ரியமும் காம சப்தத்தால் குணங்களைச் சொல்லிற்றே

110–விஷ்ணு அவதாரம் சொல்லும் சுருதிகள் கருத்து விளக்கம்
பிரம்ம விஷ்ணு ருத்ர இந்திரா தே சர்வே சம்ப்ரஸூயந்தே–அதர்வசிகம் –
கஸ்ய த்யேயா –காரணம் து த்யேயா
சைவர்கள் பூர்வ பக்ஷம் -விஷ்ணுவும் இவர்கள் உடன் ஸ்ருஷ்டிக்கப்பட்டவன் -ஆகவே தியானிக்க தக்கவன் அல்ல –
காரண வஸ்து தானே த்யானிக்கப்பட வேண்டும்
ஜகத் காரண வஸ்து நாராயணனே என்று பல சுருதிகள் கூறும் -இஷ்ட பரிஹிருத அவதாரம் –
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தவன்
ஜெகதாம் உபகாராய ந சா கர்ம நிமித்த ஜா
அவர்கள் இடையிலும் தோன்றி சமமாகச் சேர்த்து படிக்கும் படி ஸுலப்யம் தோன்ற லோக ஷேமத்துக்காகவே அவதாரம் –
காரணத்வம் பரத்வம் இவற்றுக்கு குறை இல்லாமல் முதல் அவதாரமாக பிரதமஜா விஷ்ணு அவதாரம்

111–அதர்வசிரமும் நாராயண பரத்வத்தையே செப்புகிறது
தேவா ஹா வை ஸ்வர்க்கம் லோகம் அகமந் தம் தேவா ருத்ரம் அப்ருச்சன் கோ பவாநிதி சோ ப்ரவீத் -அஹமேவ ப்ரதமம்
ஆஸம் வர்தாமி ச நான்ய கஸ்சித் மத்த வ்யதிரிக்த இதி ச அந்தராதந்தரம் ப்ராவிசத் திஸஸ் ச அந்தரம் ப்ராவிசத்
ஸோஹம் ப்ரஹ்ம இதி -என்று
சிவன் தானே பராத்பரன் என்றது அந்தர்யாமியாக உள்ள பரமாத்மாவின் ஐஸ்வர்யத்தையே சொன்னவாறு
ச அந்தராதந்தரம் ப்ராவிசத் திஸஸ் ச அந்தரம் ப்ராவிசத் -என்பதால் தெளிவாகும்
ச -என்னுள் அந்தர்யாமியாய் உள்ள அந்த பரமாத்மா
அந்தராதந்தரம் -சரீரத்தில் உள்ள பிராணன் முதலியவற்றுக்குள் இருக்கும் ஜீவாத்மாவினுள்
ப்ராவிசத் -புகுந்துள்ளான் -அப்படியே
திஸஸ் ச அந்தரம் ப்ராவிசத் –திசைகள் போன்ற அனைத்து ஜட பதார்த்தங்களினுள்ளும் உள்ள
ஜீவாத்மாக்களுக்குள்ளும் புகுந்துள்ளான்
ஸூத்ரகாரரும் -ஸாஸ்த்ர திருஷ்ட்யா து உபதேச வாமதேவ வத்-என்று இக்கருத்தையே அருளிச் செய்கிறார்
இந்திரன் பிரதர்தனனை பார்த்து பிரதர்தன வித்யையில் எனக்கு அந்தர்யாமியான அவனையே உபாசனம் செய் -என்கிறான்
சர்வ கதத்வாத் அனந்தஸ்ய ச ஏவாஹ மவஸ்தித மத்தஸ் சர்வம் காம் சர்வம் மயி சர்வம் சனாதன -ப்ரஹ்லாதன்
சர்வ வியாபி -சர்வ சப்த வாச்யன் -சர்வ ஆத்மா –
வாக்யகாரரும் -ஆத்மேத்யேவ து க்ருஹீண்யாத் ஸர்வஸ்ய தந் நிஷ் பத்தே-என்று சர்வ காரணம் அவனே
ஆதமேதி து உப கச்சந்தி க்ராஹ்யந்தி ச –சர்வாத்மா என்ற நினைவுடன் உபாஸிக்க வேண்டும் என்றவாறு –

112–ப்ரஹ்மாதிகளுக்கும் அந்தர்யாமி அவனே –
ஸ்ரீ மஹாபாரத ஸ்லோகம் -தவாந் அந்தராத்மா என்று நான்முகன் ருத்ரனுக்கு உபதேசம்
திரிபுர தகனத்தில் சிவனுக்கும் தனுஸ்சுக்கும் அந்தர்யாமி
ஏதவ் த்வவ் -இத்யாதி ஸ்லோகத்தால் அவன் அனுக்ரஹத்தால் பிரம்மாவும் கோபத்தால் சிவனும்
ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டதை சொல்லும் -இவர்களும் பர ப்ரஹ்மதுக்கு சரீரமே

ஸ்ரீ மந் நாராயணனே ஜகத் காரணம் என்ற விளக்கம் சம்பூர்ணம்

———–

113–சைவ மத கண்டனம்
உபாதாம் து பகவான் நிமித்தம் து மஹேஸ்வர -உபாதான காரணம் அவன்- நிமித்த காரணம் ருத்ரன்
ஸூத்ராகாரர் -ஜந்மாத் யஸ்ய யாத -அபின்ன நிமித்த உபாதானம் இவனே -சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மமே நிமித்த காரணம் –
மேலும் -பிரகிருதிஸ் ச ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் –என்று பிரதிஜ்ஜையும் த்ருஷ்டாந்தமும்
அதாவது எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்தது ஆகுமோ என்கிற பிரதிஜ்ஜையும்
மண் ஸ்வர்ணம் இத்யாதி த்ருஷ்டாந்தங்களும் பொருந்த வேண்டுமே
சதேவ சோம்ய இதம் அக்ரே ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வ்ருஷ ஆஸீத் யாதோ த்யாவா ப்ருத்வீ நிஷ்டதஷூ ப்ரஹ்மாத்யதிஷ்டத் புவநாநி தாரயந்
சர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத புருஷாததி ந தஸ்யேசே கஸ்ஸனே தஸ்ய நாம மஹத் யஸஸ் -என்று
கால விசிஷ்ட ப்ரஹ்மம் நிமித்த காரணம்
நேஹ நாநாஸ்தி கிஞ்சன
ஸர்வஸ்ய வசீ
ஸர்வஸ்ய ஈஸாந
புருஷ ஏவ இதம் சர்வம் யத் பூதம் யச்ச பவ்யம் உதாம்ருதத் வஸ்ய ஈஸாந நான்ய பந்தா அயனாய வித்யதே
போன்றவை இத்தை பறை சாற்றும்

114—ஸ்ரீ மந் நாராயணனே பர ப்ரஹ்மம் -இதிஹாச புராண சித்தம் –
கேந ஸ்ருஷ்டம் இதம் சர்வம் ஜகத் ஸ்தாவர ஜங்கமம்-ப்ரலயேச கமப்யேதி தந்மே ப்ரூஹி
பிதாமஹ -யுதிஷ்டர் பீஷ்மர் இடம் கேள்வி
நாராயணோ ஜகந் மூர்த்தி அநந்தாத்ம சதாதன ருஷய பிதரோ தேவ மஹா பூதாநி தாதவ ஜங்கமா ஜங்கமம்
சேதம் ஜகந் நாராயண உத்பவம் –
ஸ்ரீ விஷ்ணு புராணம் -மைத்ரேயர் பராசரர் சம்வாதம் -பொதுவான கேள்வியில் ஆரம்பம் –
ச அஹம் இச்சாமி தர்மஞ்ஞ ஸ்ரோதும் த்வத்தோ யதா ஜகத் பபூவ பூயஸ் ச யதா மஹாபாக பவிஷ்யதி
யன்மயம் ச ஜகத் ப்ரஹ்மந் யதஸ்ச ஏதத் சராசரம் லீநம் ஆஸீத் யதா யத்ர லய மேஷ்யதி யத்ர ச –
இந்த கேள்விகளை அடிப்படையாகக் கொண்டே இந்த புராணம்
விஷ்ணோ சாகாசாத் உத்பூதம் ஜகத் தத்ரைவ ச ஸ்திதம் -ஸ்திதி சம்யம கர்த்தாசவ் ஜகதோஸ்ய ஜகச்ச ச -என்று பதில்
இதில் முடிவில்
ப்ரக்ருதி யா மயாக்யாதா வ்யக்த அவ்யக்த ஸ்வரூபிணீ புருஷஸ் சா அபி உபாவேதவ் லீயதே பரமாத்மநி-
பரமாத்மா ச ஸர்வேஷாம் ஆதார பரமேஸ்வர -விஷ்ணு நாம ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே –
ஸ்ரீ விஷ்ணுவின் பரத்வத்தை ப்ரதிபாதனம் செய்யவே வந்த புராணம் –
விஷ்ணு எங்கும் பரந்து இருப்பவன் -ரூடியால் நாராயணன்
பர பரானாம் பரம -அபரிச்சன்ன -ப்ரஹ்மாதிகளிலும் பராத்பரன்
ஆத்ம சம்ஞ்ஜித -தான் ஸ்வ நிஷ்டன்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம
ரூப வர்ணாதி நிர்தேச விசேஷண விவர்ஜித
அபஷய விநாசாப்யாம் பரிணாமர்தி ஜன்மபி வர்ஜித
சக்யதே வக்தும் யா சதாஸ்திதீ கேவலம்
ஸர்வத்ர அசவ் –தத் ப்ரஹ்ம
அஜம் -அஷயம்-அவ்யயம் -நிர்மலம்
சர்வ பூத ப்ரக்ருதி -பிரதானம் -விகாரான் -குணான்-வ்யதீத -அதீத சர்வாவரணன்–அகிலாத்மா
தேஜோ பல ஐஸ்வர்ய ஞானம் வீர்யம் சக்தி -ஏக ரூபன் – சம அப்யதிக தரித்ரன் -ஸமஸ்த சகல இதர விலக்ஷணன்

115–மும்மூர்த்தி ஸாம்ய பக்ஷ நிரசனம்
ப்ரஹ்ம விஷ்ணு சிவாத் மிகாம்–ஏக ஏவ ஜனார்த்தன -ஜகத்துக்கும் இவர்களுக்கும் அபேதம் சொல்லும்
விஷ்ணுவின் விபூதியை சொல்லும் விதத்தில் பேதம் இல்லையே
சங்கல்பத்தாலே லீலா விபூதியில் இவர்கள் அந்தர்கதம்
ப்ரஹ்மாதிகளை உள் அடக்கிய பிரபஞ்சம் இவனுக்கு சரீரம் என்பதை
ப்ருதிவ்யாப
ச ஏவ சர்வ பூதாத்மா
ச யேன ஸ்ருஜ்ய –மூன்று ஸ்லோகங்களும் சொல்லும்
தத் சர்வம் வை ஹரே தநு
மஹா பாரத ஸ்லோகம் -ந பூத சங்க சமஸ்தான தேஹோஸ்ய பரமாத்மந —
அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன் என்றவாறு
அஜாயமாநோ பஹு தா விஜாயதே தஸ்ய தீரா பரிஜாநந்தி யோனிம்–ஸ்ருதியும் சொல்லுமே –

116–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர சித்தம்
சைவர்கள் -த்ரிவிதம் –
பிரகிருதி உபாதான காரணம் -சிவன் நிமித்த காரணம் -முதல் வகை
நாராயணன் உபாதான காரணம் -சிவன் நிமித்த காரணம் -இரண்டாவது வகை –
உபாதானம் நிமித்தம் இரண்டு காரணமும் நாராயணனே -மோக்ஷம் அளிப்பவனும் இவனே –
ஆனால் முமுஷுக்களால் அடையத் தக்கவன் சிவனே -மூன்றாவது வகை

ஜந்மாத் யஸ்ய யத ப்ரக்ருதிஸ் ச ப்ரதிஜ்ஜா த்ருஷ்டாந்த அநுப ரோதாத்–இத்யாதி ஸூத்ரங்களாலும்
விஷய வாக்யங்களாலும் நாராயணனே உபாதான நிமித்த காரணம் என்று சாதித்த பின்பு
பரமத சேதூன்மாந சம்பந்த பேத வ்யபதேசேப்ய-என்று அடையத் தக்க வேறு தத்வம் உண்டு என்று ஆ சங்கித்து
சாமான் யாத்து புத்யர்த்த பாதவத் ஸ்தான விசேஷான் ப்ரகாசாதிவத் –உபபத்தேச்ச ததாந்ய ப்ரதிஷேதாத்
அநேந சர்வ கதத்வம் ஆயாம சப்தா திப்ய –இத்யாதி ஸூத்ரங்களால் சமாதானம்

அத ய ஆத்மா ச சேது -என்று சேதுவாக சொல்லிய பின்பு அடையத் தக்க வாஸ்து வேறாகத் தானே இருக்க வேண்டும் –
ஏதம் சேதும் தீர்த்வா–சுருதி சேதுவான ப்ரஹ்மத்தைக் கடக்க வேணும் என்கிறது
சதுஷ்பாத் ப்ரஹ்ம ஷோடசகலம்–சுருதி ப்ரஹ்மத்தை நான்கு கால்களும் பதினாறு கலைகளும் கொண்டதாக சொல்வதால்
அபரிதமான தத்வம் வேறே என்றதாகிறது
அம்ருதஸ்ய ஏஷ சேது -உபநிஷத் உபாசகனை அம்ருதமான தத்வத்திடம் அடைவிப்பதாக பர ப்ரஹ்மத்தை சொல்கிறது
மேலும் ததோ யத் உத்தரதரம்-என்று உயர்ந்ததாக அந்த தத்வம் என்கிறது

பரம் அத சேது உந்மாந சம்பந்த பேத வ்யபதேசேப்ய-இது பூர்வ பக்ஷ ஸூத்ரம்
இதை நிராகரிக்க -சாமான்யத்து முதலான சித்தாந்த ஸூத்ரங்கள் –
ப்ரஹ்மத்தை சேதுவாகச் சொன்னது அது பிறர் இடம் சேர்ப்பிக்கச் சொன்னது அன்று
ஒவ் ஒரு வஸ்துவும் வேறு ஒன்றுடன் கலக்காமல் பாதுகாக்கும் அணை சேது -என்பதற்காகவே
இத்தையே பின்பகுதி -அத ய ஆத்மா ச சேது வித்ருதி ஏஷாம் லோகா நாம் அசம்பேதாய–என்பதால் விளக்கப்பட்டது –
சதுஷ் பாத் ப்ரஹ்ம –அளவுபட்டதாகச் சொன்னது உபாசனத்துக்காகவே –
காரணபூதமான ப்ரஹ்மம் சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் என்றதே
வாக் பாத பிராண பாத சஷூஸ் பாத ஸ்ரோத்ரம் பாத -என்று ப்ரஹ்மத்தை வாக்கு முதலிய
பாதமாகச் சொன்னதும் உபாசனத்துக்காகவே -அப்படியே இங்கும் –

ஸ்நாந விசேஷாத் ப்ரகாசாதி வத் –உபாசனத்துக்கு எப்படி பரிச்சின்னமாகும் என்ற சங்கை தீர்க்க இந்த ஸூத்ரம்
பிரகாசமும் ஆகாசமும் எங்கும் பரவி இருந்தாலும் -ஜன்னல் கடம் ஸ்தான சம்பந்தத்தால்
அளவுபட தோன்றுவது போலே என்றபடி
சம்பந்த வியபதேச என்ற ஹேதுவுக்கு உபபத்தேஸ் ச –ஸூத்ரம் சமாதானம் –

ப்ராப்யமும் பிராபகமும் வெவ்வேறாக இருக்க வேண்டும் என்கிற நிர்பந்தம் இல்லையே
நாயமாத்மா சுருதிகள் இத்தையே காட்டும்
யமேவ ஏஷ விவ்ருணுதே தேந லப்ய–ப்ரஹ்மமே அதை அடைய சாதனம் என்றவாறு –

தத் அந்ய உபதேசாத்–ஸூத்ரம் பேத வ்யபதேசம் என்ற ஹேதுவுக்கு சமாதானம் –
ததோ யத் உத்தர தரம் அஷராத் பரத பர –பூர்வ பக்ஷம்
யஸ்மாத் பரம் நாபரம் அஸ்தி -போன்றவற்றால் வேறே ஓன்று இல்லை என்றும்
அநேந சர்வ கதத்வம் ஆயாம சப்தாதிப்ய
தேநேதம் பூர்ணம் புருஷேண சர்வம் போன்ற ஆயாமத்தை -வியாப்தியை சொல்லும் வாக்யங்களால்
ப்ரஹ்மம் சர்வத்தையும் வியாபித்து உள்ளது என்பதால் வேறே உயர்ந்த வஸ்து இல்லை என்றதாயிற்றே

இப்படி பராதிகரணத்தில் முதல் பூர்வ பக்ஷ ஸூத்ரத்தாலும் பின்புள்ள சித்தாந்த ஸூத்ரத்தாலும்
ஸ்ரீ மந் நாராயணனே சர்வ ஸ்ரேஷ்டராக சித்தாந்தித்து அருளுகிறார் ஸ்ரீ பாஷ்யகாரர்

117–ஸ்ரீ மனு ஸ்ம்ருதியும் ஸ்ரீ விஷ்ணு புராணமும் ஸ்ரீ மந் நாராயணனே பரதத்வம் என்று காட்டும்
சத்வாதிகள் சமமாக இருக்கும் காலத்தில் பிரதானம் -தமஸ்-அநிருத்தனால் அதிஷ்டிக்கப்பட்டுள்ளது –
ப்ராதுர் ஆஸீத் தமோநுத–தமஸ் எனப்படும் பிரதானம் தத்துவத்தை நியமிப்பவன் –
இந்த அநிருத்த பகவானே ஜலாதி தத்வங்கள் -ப்ரஹ்மாண்டம் -ப்ரம்மா இவற்றைப் படைத்தான் என்று
சிசிர்ஷூ விவிதா பிரஜா அப ஏவ ச சர்ஜாதவ் தாஸூ வீர்ய மாபாஸ்ருஜத்–தஸ்மிந் ஜஜ்ஜே ஸ்வயம் ப்ரஹ்மா -என்று
பிரம்மா ஜீவ வர்க்கமே கர்ம வஸ்யன் ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டவன் என்கிறதே
அதே மனு ஸ்ம்ருதி மேலும்
அயனம் தஸ்ய தா பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத-தத் விஸ்ருஷ்ட ச புருஷ லோகே ப்ரஹமேதி கீர்த்யதே-என்று
நாராயணனே முதல் காரணம் என்கிறதே
ஸ்ரீ விஷ்ணு புராணமும் ப்ரஹ்மாதிகள் பாவனா த்ரயத்தில்-கர்மா பாவனா -ப்ரஹ்ம பாவனா -உபய பாவனா – –
ஏதேனும் ஒன்றில் சம்பந்தம் உடைய அசுத்தர்கள் என்கிறது

இத்தால் மங்கள ஸ்லோக விஷ்ணுவே பராத்பரன் பர தத்வம் சர்வ ஸ்ரேஷ்டன் என்று நிரூபணம்

118–சொற்கள் செயல் மூலமே பொருளை போதிக்கும் -மீமாம்சகர் பூர்வ பக்ஷம்
மீமாம்சகர் -பாட்டர் -பிரபாகரர்-த்வி விதம் -குமாரில பட்டர் கொள்கை பின்பற்றுபவர் பாட்டர் –
பிராபாகரர் கொள்கையை பின்பற்றுபவர் பிரபாகரர் –
வ்யுத்பத்தி -இந்த சொல்லுக்கு இந்த பொருள் என்று அறிந்த ஞானம்
வஸ்துக்கள் -கடம் படம் போல்வன சித்த வஸ்துக்கள் -பிரயத்தனம் மூலம் வருபவை கார்யம்
விதி அர்த்தவாதம் மந்த்ரம் மூன்றுமே வேதத்தில் உண்டு -வேதம் முழுவதுமே காரியத்தையே விளக்கும்
ப்ரஹ்மம் சித்த வஸ்து-வேதாந்தங்கள் ப்ரதிபாதிப்பதாக செய்யும் விசாரங்கள் பயன் அற்றவை என்பர் மீமாம்சகர்
மனுஷ்ய பசு -இவை சப்த சக்தியால் பொருளை வெளியிடுகின்றன
பசுவை அறியாதவன் பசுவைக் கொண்டு வா என்று ஒருவன் சொல்ல ஒருவன் கொண்டு வர அதை பார்த்து அறிகிறான்
நிகழ்வுகள் மூலம் அறிகிறான் -இது தான் வ்யுத்பத்தியைப் பெரும் வழி
இதை அனைத்து வேதாந்திகளும் கண்டித்து ப்ரஹ்ம விசாரம் செய்ய வேண்டும் என்று சாதிப்பது இன்றியமையாது என்பர்

119–சித்த வஸ்துவிலும் வ்யுத்பத்தி உண்டாகலாம் -என்ற விளக்கம்
அத்ரோச்யதே-என்று சமாதானம்
சித்த வஸ்து விஷயத்திலும் சப்தங்களுக்கு போதிப்பிக்கும் சக்தி எளிதில் உண்டாகலாம் –
இதுக்கு உதாரணம் -மௌனி ஒருவன் இடம் தடி எங்கே கேட்க அவன் சைகையால் மூலையைக் காட்ட –
கை அசைவைப் பார்த்து அறிவது போலே
ஆகவே சித்த வஸ்து விஷயத்திலும் முதலில் சப்த சக்தி அறிய முடியுமே

120—சித்த வஸ்துவில் வ்யுத்பத்திக்கு மற்றுமோர் த்ருஷ்டாந்தம்
குழந்தைக்கு மிருகம் தாவரம் சந்திரன் பாம்பு -என்று சுட்டிக் காட்டி அதன் அதன் பெயர்களைச் சொல்லிச் சொல்லி
பலமுறை போதிக்க
பின்பு பிற்காலத்தில் சப்தம் சொன்னதுமே அர்த்தம் அறிந்து கொள்வது சப்தத்துக்கே போத்ய போதக பாவ சம்பந்தம்
இயல்வாய் அமைந்து இருப்பதாலேயே
குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது இது பெயராம் என்று ஸங்கேதம் செய்பவர் உண்டு
இந்த இந்த சப்தங்களுக்கு இந்த இந்த அர்த்தம் என்று -இப்படி ஸங்கேதம் செய்யாமலேயே இருப்பதால் இது இயற்கையே –
சித்த வஸ்துவைப் போதிக்கும் சக்தி சப்தங்களுக்கு உண்டு என்று தேரினமையால் வேதாந்த வாக்கியங்களைக் கொண்டு
ப்ரஹ்ம விசாரம் செய்வது நியாயமானதே என்பதை விளக்கியதாயிற்று-

121–மீமாம்சகர் படியேயும் ப்ரஹ்ம விசாரம் செய்வது நியாமமே -என்று நிரூபணம் –
உபாசனம் -தைல தாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்ததி –
அடைய வேண்டும் என்னும் விருப்பம் -அடைதல் -இரண்டிலும் விசேஷணம் பர ப்ரஹ்மமே
இப்படி உபாசனை யாகிற செயலின் பலனாய் அமைந்துள்ள பர ப்ரஹ்மம் இடத்தில்
வேதாந்த வாக்ய தாத்பர்யங்கள் உண்டாகலாம் என்று கூறினார் ஆயிற்று
இதை விளக்க மூன்று த்ருஷ்டாந்தங்கள் –

ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்க காமோ யஜேத -என்று சொல்லி சுவர்க்கத்தை விளக்க –
யஸ்மின் ந உஷ்ணம் ந சீதம் ந ஆர்த்தி -என்று விதி அல்லாத அர்த்தவாத வாக்கியம் –
இதுவும் பிரமாணம் என்று கொள்ளுவது போலே ப்ரஹ்மத்தின் குண விபூதி வாக்கியங்களும் பிரமாணம் ஆகுமே
ராத்ரீ ருபேயாத் -என்று இரவில் சத்ரங்களைச் செய்யச் சொல்லி -அதற்குப் பயனாக
பிரதிஷ்டந்திஹவா ஏத யே ஏதா ராத்ரீ உபயந்தி -என்கிற அர்த்தவாத வாக்கியம் இந்த ராத்திரி ஸத்ரங்களைச்
செய்பவர்களுக்கு ப்ரதிஷ்டை உண்டாகிறது என்கிற இதுவும் பிரமாணமாக கொள்கிறார்கள்
இப்படி விதி வாக்கியங்கள் மாத்திரம் இன்றி நிஷேத வாக்யங்களுக்கும் இதே போலே என்று அடுத்த உதாரணம்
தஸ்மாத் ப்ராஹ்மணாய நாபகுரேத–என்று ப்ராஹ்மணனைக் கொல்ல முயலாதே -என்று சொல்லி -அதன் விளைவை
ய அப குருதே தம் சதேந யாதயேத் -என்று அப்படிச் செய்பவனுக்கு சத யாதநா நரக அனுபவம் -என்று
சொல்வதுக்கும் பிரமாணம் உண்டே
இதே போலவே ப்ரஹ்மம் -உபாசனமும் பலன்களை சொல்லும் -ஸ்வரூப குண விசேஷ வாக்கியங்களும்
பிரமாணம் ஆகுமே என்றதாயிற்று –

122–மந்த்ர அர்த்த வாதங்களால் விளக்கப்பட்டவைகளும் காரியத்தில் உபயோகம் உள்ளதால் தான் பிரமாணங்கள் ஆகின்றன –
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -போன்ற உபநிஷத் வாக்கியங்கள் உபாசனையையும் பலத்தையும் சொல்லும் வாக்கியங்கள்
பிரமாணமாம் போலவே மந்த்ர அர்த்தவாத வாக்கியங்களும் பிரமாணம் ஆகுமே -என்கிறது –
ருணம் ஹி வை ஜாயதே இதி ஸ்ருதே –என்று ஆரம்பிக்கும் வாக்யத்தால் த்ரமிட பாஷ்யகாரர்
கர்மம் செய்யத் தூண்டவே குணங்கள் -பலன்கள் -பற்றிய வர்ணனைகள்
ஆகவே அடைய விரும்பிய முக்கிய பலமான ப்ரஹ்ம விசாரம் செய்வது உக்தமே -என்றதாயிற்று –

123–மீமாம்சகர்களால் சொல்லப்பட்ட கார்ய லக்ஷண கண்டனம்
ப்ரபாகாரர்கள் -யகாதி கிரியைகள் அழியக் கூடியவை -ஸ்வர்க்காதி பலன்கள் சரீரம் அழிந்த பின்பே கிடைக்கைக் கூடியவை -என்று
அபூர்வம் ஒன்றைக் கல்பித்து -அபூர்வம் கார்யம் நியோகம் -என்பவை பர்யாய சப்தங்கள் –
இக்காரியம் ப்ரயத்னத்தால் உண்டாகிறது -ப்ரயத்னமே க்ருதி ஆகும் -இக்காரியம் -அபூர்வம் -ப்ரயத்னத்தால் சாதிக்கப்படுவதால்
க்ருதி சாத்தியம் -எனவே க்ருதி சாத்யத்வம் ஒரு தர்மம் -இது தான் க்ருதி பாவ பாவிதா-பிரயத்தனம் இருப்பதால் உண்டாக்கப்படுகை –
இதுவே க்ருதி சாத்தியம் எனப்படுகிறது –
கார்யம் இஷ்டமானதாக இருப்பதால் இஷ்டத்வம்-என்பது இரண்டாவது தர்மம் ஆகும் இந்த இரண்டு தர்மங்களும்
காரியத்தில் மட்டும் இல்லாமல் பல்வேறு பதார்த்தங்களில் இருப்பதால் இது காரியத்தின் அசாதாரண தர்மம் இல்லை என்பதால்
மூன்றாவதாக க்ருதி உத்தேச்யத்வ தர்மம் -அதாவது கார்யம் அபூர்வம் -க்ருதிக்கு பிரயத்னத்துக்கு உத்தேச்யம்
ஆகவே ப்ரயத்னத்தால் சாதிக்கத் தக்கதாயும் -ப்ரயத்னத்துக்கு உத்தேச்யமாயும் எது ஆகி உள்ளதோ அது கார்யம் என்று
காரியத்தின் லக்ஷணம் என்று தேறிற்று என்று பிரபாகர மீமாம்சகரர்கள் காரியத்தின் லக்ஷணம் சொல்லுவார்கள்
இது என்னுடையது என்ற உரிமையே உத்தேச்யம் -பிரயத்தன உத்தேச்யம் என்றால் -பிரயத்தனம் அசேதனம் ஆகுமே –
இது பிரயோஜனத்துக்கு சாதனம் என்று என்ன முடியாதே -அபூர்வத்தை அடைய வேண்டும் என்ற விருப்பத்துடன்
சேதனன் பிரயத்தனம் செய்கிறான் -அபூர்வம் ப்ரயத்னத்துக்கு உத்தேச்யம் என்றது –
ஆகவே இம்முறையில் க்ருதி உத்தேச்யம் காரியத்தில் பொருந்துகிறது என்பர் –
இதற்கு ஸ்ரீ பாஷ்யகாரர்
இஷ்ட வஸ்து தானே ப்ரயத்னத்தின் உத்தேச்யம் –
ஆகவே இஷ்டத்வமும்-க்ருத உத்தேச்யத்வம் இரண்டு தர்மங்களும் ஒன்றாகும் –
காரியத்தில் இஷ்டத்வத்தை விட வேறான க்ருத உத்தேச்யத்வம் ஆகாதே -என்று அருளிச் செய்வார்
இதற்கு மீமாம்சகர்கள் சொல்லும் பதில் அடுத்து –

124–இஷ்டம் என்பதற்கு இரண்டு ரூபங்கள் -ஓன்று விரும்பப் படுவது -அடுத்தது ப்ரயத்னத்துக்காக தூண்டப்படுவது –
அதாவது உத்தேச்யமும் தூண்டப்படுவதும் -ப்ரேகத்வ ஆகாரம் தான் க்ருதி உத்தேச்யத்வம் -இது இஷ்டத்துவத்திலும் வேறானதே –
இதற்குள் அடங்கும் என்று சொல்வது பொருந்தாது -என்பர் –
இது பொருந்தாதே -க்ருதி உத்தேச்யத்வம் க்ருதி சாத்யத்வமே அன்று அதனிலும் வேறானது அன்று –
இஷ்டப்பட்ட பொருள் பிரயத்தனம் செய்யாமலே கிட்டும் என்றால் அதற்கு பிரயத்தனம் யாருமே செய்யார் –
அதே போலே பிரயத்தனம் செய்து இஷ்டமான பொருள் ஸித்திக்காமல் இருந்தால் யாரும் பிரயத்தனம் செய்யார் –
எனவே பிரேரகத்வமும் தூண்டுதலும் இஷ்டத்வம் க்ருதி சாத்யத்வமும் வேறானது என்பது பொருந்தாதே –

125–புருஷ அநு கூலத்வம் க்ருதி உத்தேச்யத்வம் என்பதன் கண்டனம் –
இஷ்டமாக இருப்பது அநு கூல வஸ்து வானபடியாலே -அனுகூலத்தைத் தானே க்ருதி உத்தேச்யம் என்கிறோம் –
ஆகவே க்ருதி உத்தேச்யத்வத்தை இஷ்டத்வ க்ருத சாத்யத்வங்களில் இருந்து வேறுபட்டதாகக் கருத வேண்டும் –
அபூர்வம் என்னும் கார்யம் சேதனர்களுக்கு அநு கூலமாக உள்ளது -ஆகவே க்ருதி உத்தேச்யம் என்று எண்ணப் படுகிறது -என்பர்
இதுக்கு பதில்
அபூர்வமாகிய கார்யம் சேதனர்களால் அநு கூலமாக எண்ணப் பட முடியாதது
அநு கூலமாக தோன்றுவது ஸூகம்
ஆகவே அபூர்வ காரியத்தில் எவ்வித சுகமும் இல்லையே -சுகத்தில் நின்றும் வேறானதே -அநு கூலம் ஆக மாட்டாதே –
ஆகவே பொருந்தாதே
இதுக்கு அவர்கள் பதில்
துக்க நிவ்ருத்தியும் அநு கூலமாகுமே -ஆகவே சுகத்திலும் வேறான அபூர்வ காரியமும் சேதனர்களுக்கு
அநு கூலமாக எண்ண முடியும் -என்பர் –
இதுக்கு பதில்
எது தாமாகவே இஷ்டமாகத் தோன்றுகிறதோ அதுவே அநு கூலம் -சுகம் -பிரதி கூலமாக உள்ளது துக்கம்
துக்க நிவ்ருத்தி இஷ்டமாகிறது அன்றி அது தானாகவே இஷ்டம் ஆகாதே -ஆகவே அநு கூலமாக எண்ணத் தக்கது அன்றே

பத்த ஜீவர்களின் மூன்று நிலைகள் -அநு கூல சம்பந்தம் -பிரதி கூல சம்பந்தம் -ஸ்வரூபத்துடன் இருக்கை-ஆகிய மூன்றும் உண்டே
சுகத்தை அனுபவிக்கும் பொழுது அநு கூல சம்பந்தம் -துக்கம் அனுபவிக்கும் பொழுது பிரதி கூல சம்பந்தம் –
இரண்டும் இன்றி தூங்கும் பொழுது போல ஸ்வரூபம்
சுக நிவ்ருத்தியையும் துக்கத்தையும் ஒன்றாகவும் துக்க நிவ்ருத்தியையும் சுகத்தையும் ஒன்றாகவும் எண்ணினால் தூக்கம் போன்ற
நிலைகளிலும் சுகத்தையும் துக்கத்தையும் ஒத்துக் கொள்ள வேண்டி வரும் –
எனவே அவை வெவ்வேறே –
ஸ்வரூப நிலையில் இருப்பது தூங்குவது போல்வன இவனுக்கு விருப்பம் அன்று
அதே போலே துக்க நிவ்ருத்தியும் அநு கூலம் ஆகாதே -சுகத்துடன் இருப்பது ஒன்றே அநு கூலமாகும்
சுகத்திலும் வேறான -நியோகம் -கார்யம் -அபூர்வம் -என்று எல்லாம் சொல்லப்படுவதை அநு கூலம் என்று சொல்லும்
மீமாம்சகர்கள் வாதம் பிரமாணிகர்களுக்கு ஏளனமே ஆகும் –

126—அபூர்வ கார்யம் இஷ்ட சாதனமே அன்றி சுக ரூபம் அன்று
நியோகம் ஒரு சுக விசேஷமே-ஸ்வயம் பிரயோஜனமாக உள்ளது ஒன்றே இஷ்டமாகும் -ஸ்வர்க்காதிகள் ஸ்வயம் பிரயோஜனம் இஷ்டம்
இஷ்டத்தை சாதித்துக் கொடுக்கிற ஓன்று -நியோகம் -தூண்டுதல் -பிரேரகம் – அபூர்வம் –
காலாந்தரத்தில் ஸ்வர்க்காதிகளை சாதித்துக் கொடுப்பதால் நித்யம் என்கிறார்கள்
ப்ரத்யக்ஷத்தால் அறிய முடியாதது இது
யாக கிரியை தானே சுவர்க்கத்தை சாதித்து தரும்
யாகத்தில் இருந்து உண்டாகும் அபூர்வம் -ஸ்வயம் பிரயோஜனம் ஆகாது -சுக விசேஷமாக நினைப்பது தவறு

127–இதற்கு மீமாம்சகர்கள் பதில்
சேவகர்களை செல்வம் வழங்கும் ராஜாவை பிரதானமாக எண்ணுவது போலே இங்கும் நியோகத்தையும் கொள்ளலாமே
எனவே நியோகமும் ஸ்வயமாகவே இஷ்டமாகலாம் சுக ரூபமாகலாம்
யஜேத பதத்தில் லிங் என்னும் லகாரம் ஸ்வயம் பிரயோஜனமாகச் சொல்கிறது என்பர் –
இது ஏற்கத் தக்கது அன்று -யஜேத பதம் ஸ்வர்க்க காம பத்துடன் சேர்த்து படிப்படுவதால் ஸ்வர்க்கத்துக்கு சாதனம் ஆகும்
அபூர்வம் யாகத்தில் இருந்து வேறுபட்டு அதற்கு தூண்டுவதாக இருப்பது -வாக்கியம் பாதங்களின் கூட்டமே –
யஜேத பதம் ஸ்வர்க்க காம பதத்தோடே அந்வயிப்பதால் ஷ்வார்ப்பதை சாதிக்கும் கார்யம் யாகம் என்றதாயிற்று
எனவே அபூர்வ காரியத்துக்கு அநந்யார்ஹத்வமும் பிரதானமும் தோன்றாது –
கங்காயாம் கோஷ-லக்ஷனையால் கங்கையின் கரை -கங்காயாம் கங்கையின் நீர் பெருக்கு கோஷ சப்தத்துடன் சேராதே
யஜேத-யாகத்தை செய்யக் கடவன் -கார்யம் தான் போதிக்கப்படும் –
ஸ்வர்க்க சாதனம் என்ற கருத்து வந்ததும் பிரதானதா தன்மை இருக்காதே –
அபூர்வ கார்யம் இஷ்ட சாதனம் என்ற வடிவிலே தான் தோன்றும் -பிரதானமாக தோன்றாது

128–அபூர்வ காரியத்தில் அநு கூலதை உள்ளது என்பதின் கண்டனம் –
நியோகம் சுகரூபம் என்று சொல்லும் மீமாம்சகனும் நியோக சுகத்தை அனுபவிப்பது இல்லை
காரீர்யா வருஷடி காம யஜேத –என்று மழை வண்டி காரீரி யாகம் செய்யக்கடவன் –
காரீரம்-என்பது ஒரு வகை முள் செடி -மூங்கில் தளிரையும் குறிக்கும் –
பயிர்கள் வாடி வதங்கும் காலத்தில் இந்த யாகம் செய்யக்கடவன் -யாகம் செய்த உடன் மழை பெய்தாலும் பெய்யலாம் –
குறை நேர்ந்தால் பெய்யாமலும் போகலாம் –
இந்த யாகம் செய்த உடன் அபூர்வம் உண்டாகிறது -மழை பெய்யும் வரை நிலைத்து இருந்து உண்டாக்குகிறது –
இது சுக ரூபமாக இருக்குமானால் யாகம் செய்தவனுக்கு சுக அனுபவம் தோன்றி இருக்க வேண்டும் –
அப்படி அனுபவம் உண்டாவது இல்லை -ஆகவே சுகரூபமோ அநு கூலமாகவோ இல்லை
க்ருதி உத்தேசியத்தை சாதிக்க முயலும் அவர்கள் பக்ஷம் சித்திக்காது
க்ருதி சாத்யத்வமும் இஷ்டத்துவமுமே சித்திக்கும் வேறு ஒன்றும் சித்திக்காது –

129–க்ருதிம் பிரதி சேஷித்வம் க்ருதி உத்தேச்யத்வம் என்னும் லக்ஷணம் கண்டனம் –
ப்ரயத்னத்தைக் குறித்து சேஷியாக இருக்கும் தன்மை க்ருதி உத்தேச்யத்வம் -என்றால் சேஷி யார் சேஷன் யார்
காரியத்துக்கு எது பிரதிசம்பந்தியோ அது அந்த சேஷ வஸ்துவுக்கு சேஷீ என்பர்
க்ருதி முயற்சி கார்யம் அதனால் சாதிக்கத்தக்கது இரண்டும் பிரதி சம்பந்திகள்
பரோத்தேசேந ப்ரவ்ருத்த க்ருதி வியாப்தி அர்ஹத்வம் ஏவ சேஷத்வம் -என்று நமது முயற்சிகள் எல்லாம்
காரியத்தை உத்தேசித்தே என்று அபூர்வ காரியத்தை உத்தேசித்து யாகம் செய்வதால் யாகம் சேஷம் அபூர்வம் சேஷீ என்பர்
இது பொருந்தாது –
க்ருதி உத்தேச்யத்வம் என்பதுக்கு மற்று ஒன்றை உத்தேசித்து என்று அந்த உத்தேச்யத்வத்துக்கு லக்ஷணம்
ஆத்ம ஆஸ்ரயம் தோஷம் வருமே
உத்தேச்யத்வம் என்றால் -ஈப்சித சாத்யத்வம் -நாம் அடைய விரும்பும் வஸ்துவை சாதித்துக் கொள்வதை குறிக்கும்
குருதியின் பிரயோஜனம் அடைய விரும்பும் வஸ்து -கிருதியின் செயலின் பிரயோஜனம் அதை செய்யும்படி எது தூண்டுகிறதோ
அது தான் என்றும் நம்மால் விரும்பப்பட்டதாயும் நமது செயலால் சாதிக்காத தக்கதாயும் இருக்கும்
வஸ்துவில் நின்றும் வேறு அன்று அன்றோ

130–சித்தாந்தத்தில் சேஷி அர்த்தம் -ஜிஞ்ஞாஸையை சாந்தம் ஆக்கி அருளுகிறார் ஸ்ரீ பாஷ்யகாரர் –
எந்த வஸ்துவின் ஸ்வரூபம் உள்ள காலம் எல்லாம் மற்ற ஒரு வஸ்துவுக்கு -அதிசயத்தை -விசேஷத்தை –
உண்டாக்க வேண்டும் என்னும் இச்சையால் ஏற்கத் தகுந்தது ஆகிறதோ அது சேஷம் –
அதாவது மற்று ஒன்றின் ப்ரயோஜனமோ எதன் பரம ப்ரயோஜனமோ அது சேஷன் மற்று ஓன்று சேஷி
யாகத்தை பலத்துக்கு சேஷம் என்றும் பலம் சேஷி என்றும் சொல்கிறோம்
கர்ப தாசர்கள் விஷயத்திலும் இப்படியே
அனைத்துக்கும் இவனே ஸ்வாமி சேஷீ
ஸர்வஸ்ய வஸீ
ஸர்வஸ்ய ஈஸாந
பதிம் விஸ்வஸ்ய
அபூர்வம் என்று அவர்கள் கல்பித்து சொல்வதும் சேஷமே அன்றோ சேஷீ ஆகாதே
எது ப்ரயத்னத்தால் சாதிக்கத் தக்கதாய் பிரதானமாகவும் ஆகின்றதோ அது கார்யம் என அபூர்வ காரியத்தை சேஷியாக எண்ணி
க்ருதி சாத்தியம் பிரதானம் யத்தத் கார்யம் இதயபீதியதே -என்ற மீமாம்சகரின் பேச்சு விவேகத்துடன்
விசாரம் செய்பவர் கோஷ்ட்டியில் எடுபடாதே
அபூர்வ கார்யம் பிரதானம் ஆகவே ஆகாதே -ஸ்வர்க்கத்துக்கு சேஷமாகத் தான் ஆகும் –

131–ஸ்வர்க்க காம போன்ற பதங்கள் நியோஜ்ய விசேஷ சமர்ப்பண பரங்கள் என்பதன் கண்டனம்
யாகம் செய்யும் எஜமான் இடம் மூன்று அவஸ்தைகள் -அவை
நியோஜ்யத்வ அவஸ்தை -அதிகாரத்வ அவஸ்தை -கர்த்ருத்வ அவஸ்தை
யஜேத-விதி வாக்யங்களைக் கேட்டு இது செய்யக்கடவது என்ற எண்ணம் -நியோஜ்யத்வ அவஸ்தை
அதை செய்வதற்கு வேண்டியவற்றை செய்ய வேண்டியவனாக எண்ணுவது -அதிகாரத்வ அவஸ்தை
பின்பு யாகம் செய்யத் தொடங்குகிறான் –கர்த்ருத்வ அவஸ்தை
ஸ்வர்க்க காம யஜேத
இதில் ஸ்வர்க்க காம பதம் நியோஜ்ய விசேஷம் என்று மீமாம்சகர் சொல்வது பொருந்தாதே
ஸ்வர்கம் விரும்பும் புருஷன் யாக கர்த்தா -யாகம் ஸ்வர்க்க சாதனம் –
யஜேத சப்தம் யாக கிரியையின் கர்த்தாவைச் சொல்கிறது –
ஆனால் மீமாம்சகர் புத்தி விசேஷத்தின் கர்த்தாவை சொல்கிறது என்பர் –
யாக கிரியையில் கர்த்தாவாகச் சொல்லப்பட்டவனை புத்தி விசேஷத்தில் கர்த்தாவாகச் சொல்வது உசிதம் அன்று

132–அபூர்வ கண்டனமும் -பகவானுக்கே பல பிரதத்வமும்
ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்க காம யஜேத
த்ரமிடாச்சார்யார் த்ரமிட பாஷ்யத்தில் -பல சம்பிந்த் சயாஹி கர்மபி ஆத்மாநம் பிப்ரீ ஷயந்தீ ச ப்ரீதி
அலம்கலாயேதி ஸாஸ்த்ர மர்யாதா-என்று
பகவானே அந்தர்யாமியாய் இருந்து இந்திராதி தேவதைகள் மூலம் இஷ்ட பலன்களை அளிக்கிறான்
இஷ்டா பூர்தம் பஹுதா ஜாதம் ஜாயமாநம் விஸ்வம் பிபர்தி புவநஸ்ய நாபி -சுருதி
சுருதிகளால் விளக்கப்பட்ட கர்மாக்கள் இஷ்டம்
ஸ்ம்ருதிகளால் விளக்கப்பட்ட கர்மாக்கள் -பூர்த்தம்
வண்டி சக்கரத்துக்கு நாபி போலே பிரபஞ்சத்தை தாங்கி நியமிக்கிறான்
ததேவ அக்னி தத் ஸூர்ய தது சந்த்ர –
யோ யோ யாம் யாம் –ச தயா ச்ரத்தயா
யுக்த -ஸ்ரீ கீதா ஸ்லோகங்களிலும் அஹம் ஹி சர்வ யஞ்ஞாநாம் போக்தா ச பிரபுரேவ ச
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் -யஜ்ஜை த்வம் இஜ்ய சே யை ஸ்வ தர்ம பரை தே தரந்தி-என்று இந்தக் கருத்தைச் சொல்லும்
சதுர் ஹோதாரோ யத்ர சம்பந்தம் கச்சந்தி தேவை -என்றும் உண்டே
பரமாத்மாவே தானே வேண்டிய பலன்களை அளிப்பவன் என்று தெளிந்த பின்பு –
இந்நிலையில் அபூர்வத்தை எதற்கு ஏற்க வேண்டும்

133–யஜேத –யஜ் தாது பூஜிப்பது -ஆராதனை ரூபமான கர்மா -பகுதியும் விகுதியும் சேர்ந்து பதம் ஆகும் –
பிரத்யயம் இந்த செயலைச் செய்பவன் ஆணா பெண்ணா நிகழ் காலமா இறந்தகாலமா இவற்றையே தான்
குறிக்குமது ஒழிய அபூர்வ கால்பணம் செய்வதற்கு அவசியம் இல்லையே

134–அனைத்து சுருதி ஸ்ம்ருதிகளும் பகவானையே பலப்ரதானனாகச் சொல்லுகின்றன –
அபூர்வம் கல்பிக்க வேண்டாம் என்று நிரூபணம் ஆயிற்று
கர்மாக்களை விதிக்கும் வாக்கியங்களும் தேவதைகளே பகவானை அந்தர்யாமியாகக் கொண்டு
பலத்தை தருவதை சொல்லுகின்றன
வாயவ்யம் ஸ்வேதமால பேத பூதி காம -செல்வம் விரும்புபவன் வெள்ளாட்டைக் கொண்டு வாயுவை தேவதையாக உடைய
யாகம் செய்பவனை உத்ஸாகப்படுத்த அர்த்த வாதமாக –
வாயுர்வை ஜேபிஷ்டா தேவதா வாயு மேவ ஸ்வேந பாகே தேயேந உபதாவதி ச ஏவைநம் பூதிம் கமயதி-என்று
வாயு தேவதை வேகமாக செல்வதால் தேவதை பிரசன்னமாகி பலன்களை சீக்கிரம் அளிக்கும் என்கிறது –
யேஷஹ்யேவ ஆனந்தயாதி –ஆனந்தமயமான பரமாத்மாவே ஆனந்தம் அளிக்கிறான்
அதசோ பயங்கதோ பவதி -உபாசகன் அபயத்தை அடைகிறான்
அத தஸ்ய பயம் பவதி -இவனுக்கு பயந்தே காற்று வீசுகிறது –
பீஷாஸ்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூர்ய பீஷாஸ்மாத் அக்னிஸ் ச இந்த்ரச்ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம இதி –
நியதம் குரு -என்றும் மயி ஸர்வாணி கர்மாணி –ஷிபாமி –தாதாமி புத்தி யோகம் இத்யாதிகளால்
ஸ்ரீ கீதாச்சார்யனும் அருளிச் செய்கிறான்
இதனால் அபூர்வம் கல்பிக்க அவசியம் இல்லையே –
பூர்வ மீமாம்சையில் தேவதா அதிகரணத்தில் கர்மமே பலத்தைக் கொடுக்கிறது என்பது புகழ்ச்சியே
வேதாந்தம் அறியாதோர் கர்மாக்களில் பற்றை விடக் கூடாது –கர்மாக்களில் பற்று கட்டாயம் வேண்டும் என்பதற்காகவே
அவ்வாறு புகழ்ச்சி -பூர்வ உத்தர மீமாம்சை ஒரே சாஸ்திரம் -இரண்டும் ஒரே கருத்தையே தான் சொல்லும் –

135-இனி விசிஷ்டாத்வைத சித்தாந்தம் ஒன்றாலேயே ஏற்கப்படும் நித்ய விபூதி ஸ்தாபனம்

நீல தோயதா –தஸ்ய மத்யே வஹ்நி சிகா –மின்னலுள் மேகம் என்று அபூத உவமை
மேகத்தில் மின்னல் மின்னுவது பிரத்யக்ஷம் –
நீலதோயத சப்தம் நீல மேக ஸ்யாமளமான திருமேனியைச் சொன்னவாறு –
மநோ மய பிராண சரீர –சர்வ ப்ராணன்களையும் சரீரமாகக் கொண்டவனை தூய மனசாலே மட்டுமே கிரஹிக்க முடியும் என்கிறது –

136-தஸ்ய ஹைதஸ்ய புருஷஸ்ய ரூபம் யதா மஹா ரஜநம் வாச யதா பாண்டு ஆவிகம் யதா இந்த்ர கோப
யதா அக்னி அர்ச்சிஸ் யதா புண்டரீகம் யதா ஸக்ருத் வித்யுதம் -என்று திவ்ய மங்கள விக்ரஹம் –
மஞ்சளில் நனைத்த வஸ்திரம் — -வெண்மையான கம்பளம் -இந்த்ர கோப பூச்சி–அக்னி ஜ்வாலை -தாமரை –
பிரகாசமான மின்னல் -இவற்றுக்கு எல்லாம் ஒப்பாக இருக்கும் -என்கிறது –

137-ஹரீஸ் சதே-அஸ்யேசாநா -தத் விஷ்ணோ பரமம் பதம் -ஷயந்தம் அஸ்ய ரஜஸ பராகே-இத்யாதி சுருதிகள்-
திவ்ய ரூப திவ்ய மஹிஷீ திவ்ய ஸ்தானம் போன்றவற்றுடைய உண்மையான நிலைகளை சொல்லும் பல சுருதிகள் உண்டே –
சதா பஸ்யந்தி ஸூரய–பரம ஸ்தானம் -ஸூரிகளின் கணம் -அவர்களின் இப்போதையப் பார்வை -மூன்றுமே இத்தால் விளக்கப்படுகின்றன –
ஸூ ரிகளால் எப்போதும் காணத்தக்க பரமபதம் -என்று பல விசேஷங்களுடன் விளக்கும் வாக்கியம் -அநேக விதான தோஷம் வராதே —
அங்கத்தையும் கர்மாவையும் -விசேஷண விசேஷ்ய பாவ சம்பந்தத்தால் ஒரே வஸ்துவாக பூர்வ மீமாம்சையில் ஜைமினி மகரிஷியும்
தத் குணாஸ்து வீதீயேரந் அவிபாகாத் விதாநார்த்தே ந சேத் அந்யேந சிஷ்டா –என்கிற ஸூத்திரத்தாலே சொல்லியுள்ளார் –
இதுக்கு ஒரு த்ருஷ்டாந்தம்
யத் அக்நேய அஷ்டா கபால அமாவாஸ்யாயாம் பவுர்ணமாஸ்யாயாம் ச அச்யுதோ பவதி –
இதே போலே சர்வ விசேஷண விஸிஷ்ட பரமபதம் என்றதாயிற்று

138-தத் விஷ்ணோ பரமம் பதம் -சதா பஸ்யந்தி -என்பதால் நித்யர்களைச் சொன்னவாறு -முக்தர்கள் சதா பஸ்யந்தி அல்லரே

139–தத் விஷ்ணோ பரமம் பதம் -இதுக்கு பூர்வ பக்ஷம் -ஸ்தான விசேஷம் சொல்ல வில்லை –
அவனது திருமேனியைச் சொல்கிறது என்பர்
ஸ்ரீ விஷ்ணு புராணம் -ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ணு வாக்கியம் பரமம் பதம் –என்று இருப்பதால்
பகவத் ஸ்வரூபமே பரமபதம் என்னும் திவ்ய ஸ்தானம் அன்று என்பதாம் –

இதுக்கு சமாதானம்
பல பிரமாணங்கள் திவ்ய ஸ்தானத்தைச் சொல்லும்
ஷயந்தமஸ்ய தத் அக்ஷரே பரமே யோஸ்ய அத்யக்ஷ யோ வேத நிஹிதம் -போன்றவை பலவும் உண்டே
தத் விஷ்ணோ பரமம் பதம் –விஷ்ணுவுக்கும் பரமபதத்துக்கும் பேதம் சொல்லுமே
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் விஷ்ணு என்ற பெயரை உடைய பரமபதம் -என்று இரண்டுக்கும் வாசியே சொல்லிற்றே
ஏகாந்திந–சதா ப்ரஹ்ம த்யாயிந- ஸ்லோகத்தில் -யத்வை பஸ்யந்தி ஸூரய-என்ற பகுதியில் விளக்கும்
ஆக மூன்று பரமபதங்கள் -கீழே ஸ்தான விசேஷம் -இனி பரிசுத்த ஆத்ம ஸ்வரூபமும் சர்கஸ் திதி அந்த காலேஷு –
மூன்றாவது விஷ்ணு ஸ்வரூபமே –
இதையே ஸமஸ்த ஹேய ரஹிதம் என்கிறது –
இம்மூன்றுமே பிராப்தம் அன்றோ நமக்கு –
த இமே சத்யா காமா அந்ருத அபிதாநா -என்று அவனது கல்யாண குணங்கள் கர்மத்தால் திரோதானம் –
அந்ருத-சப்தம் கர்மாவைச் சொல்லும்
அவித்யா கர்ம சம்ஞ்ஞாந்யா –ஸ்ரீ விஷ்ணு புராணம் –
ஆகவே தான் பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபம் -பகவத் ஸ்வரூபம் -திவ்ய ஸ்தானம் -மூன்றுமே பரமபதம் எனப்படுகின்றன –

ஷயந்தமஸ்ய ரஜஸ பராகே –ஆதித்ய வர்ணம் தாமச பரஸ்தாத் –ரஜஸ் தமஸ்- -ப்ரக்ருதி தாண்டி –
முக்குண மய பிரகிருதி ஜீவாத்மாவுக்கு போக்யம்-இத்தை தாண்டியே பரமபத ஸ்தானம்
வேதாஹமேதம் -மந்த்ரமும் இத்தையே தெரிவிக்கும் –
பரமபதம் -பர வ்யோம சப்தத்தாலும் சொல்லும் –
யோ வேத நிஹிதம் குஹாயம் பரமே வ்யோமந் –
அக்ஷரே பரமே வ்யோமந் -என்பவை இது ஒன்றே நித்யம் என்றதாயிற்று
யத்ர அர்ஷய பிரதமஜா தத் விப்ராஸ -நித்ய ஸூ ரிகள் நித்ய வாசஸ்தானம் செய்யும் ஸ்தானம் என்றும்
அவர்கள் ஸ்தோத்ரம் செய்து பிரகாசமாக விளங்குகின்றார் என்கிறது
விப்ராஸ மேதாவிகள் -விபந்யவ-ஸ்தோத்ரம் செய்பவர்கள் -ஜாக்ருவாம்ச -மயர்வற மதி நலம் உடையவர்
இவ்வாறு திவ்ய ஸ்தானமும் -நித்ய ஸூரிகள் கூட்டமும் – இவற்றின் அழிவின்மையும் சித்திக்கும்

140–சதேவ சோம்ய இதம் அக்ரே ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் – -ஸ்ருதிகளால்
திவ்ய ஸ்தான நித்ய ஸூரிகளின் இன்மை சித்திக்காது
சத் என்று ஒன்றே தானே இருப்பதாகச் சொல்கிறது -சத்தான ப்ரஹ்மமும் நித்ய விபூதியும் என்று இருக்க வேண்டாவோ –
ஏவகாரத்தால் வேறு ஒன்றுமே இல்லை என்கிறதே –
ப்ரஹ்மம் ஒன்றே இருந்தது என்றால் ஞான பல ஐஸ்வர்யாதிகளும் இல்லை என்றது ஆகுமோ
ஏதேஷாம்-என்று இவை எல்லாம் ப்ரஹ்ம ஸ்வரூபத்துக்குள் அடங்கும்
ஆயின் ஞானாதிகள் குணங்கள் -நித்ய விபூதி த்ரவ்யம் அன்றோ என்னில்
விசேஷணங்கள் குணங்களாயும் த்ரவ்யங்களாயும் இருக்கலாமே
ஆகவே கல்யாண குணம் -என்று விசேஷணங்களை சொன்னவாறு –
அப்படியானால் லீலா விபூதியும் விசேஷணமாகக் கொண்டு அதுவும் நித்தியமாக வேண்டாவோ என்னில்
அத்தை விலக்கவே கல்யாண குணம் -கல்யாணம் -அப்ராக்ருதம் -என்றவாறு

சதேவ -ஏகமேவ அத்விதீயம் இவற்றால் விலக்கப் படுபவை -பத்த ஜீவர்களும் -அவர்களால் அனுபவிக்கப்படும்
ப்ராக்ருதமான பிரபஞ்சம் பிரக்ருதியுமே –
நித்ய ஸூரிகள் சதா பஸ்யந்தி ஸூரயா–ஸ்ருதியை அனுசரித்து சர்வஞ்ஞராய் இருப்பார்களே
அபஹத பாப்மா -விஜர -விம்ருத்யு -விசோக -விஜிகத்ச-அபிபாச -சத்யகாம -ஸத்யஸங்கல்ப –என்று
நித்ய போக்ய போக உபகரணங்கள் சித்திக்கும்
இங்குள்ள ப்ராக்ருதமான போக்ய போக உபகரணங்களும் ஸத்யமாக இருந்தாலும் நித்தியமாக இருக்காதே –
சத்யகாம -என்று ப்ரஹ்மத்தையே சொன்னபடி -சத்ய காமா யஸ்ய -எவனுடைய விரும்பப்படும் பொருள்கள் எல்லாம்
சத்யங்களாக அழிவில்லாததாக இருக்கின்றனவோ அவன் சத்யகாமா எனப்படுகிறான் –
பரமாத்மா ஸத்யஸங்கல்பனாக -சங்கல்ப மாத்திரத்தாலே அனைத்தையும் பெற சக்தன் -அவன் சங்கல்பம் அடியாகவே
நித்ய விபூதியும் நித்ய ஸூரிகளும் ஸ்திரமானவர்கள் ஆகிறார்கள்
அனைத்தின் ஸ்திதிகளும் பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவனது அதீனத்துக்கு உட்பட்டவையே
ஆக திவ்ய ஸ்தானமும் நித்ய ஸூரிகளும் சுருதி பிரமாண சித்தமே –

141–இதிஹாச புராண சித்தமும் இவை
தவ் து மேதாவிநவ் –லவ குசர்கள் -வேதாந்தம் அறிந்தவர்கள் -வேதார்த்தங்களை வெளியிட்டு அருளவே
ஸ்ரீ ராமாயணமும் அவதாரம் –
வ்யக்தமேஷ மஹா யோகீ தாஸ பரம -மண்டோதரி வார்த்தை –
அநாதி மத்ய நிதந –சாஸ்வத -த்ருவ–மூன்று சப்தங்களும் நித்யம் என்பதைக் குறிக்கும் –
முதல் பதம் ப்ரஹ்ம ஸ்வரூபம் நித்யம் என்றும் –
இரண்டாவது பதம் -கல்யாண குணங்களுடன் சேர்ந்த ப்ரஹ்மம் நித்யம் என்றும்
மூன்றாவது பதம் திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்ட ப்ரஹ்மம் நித்யம் என்றும்
ப்ரஹ்ம ஸ்வரூப குண விக்ரஹங்கள் நித்யம் என்று சொல்லும்
தமஸ பரம -பிரக்ருதிக்கு அப்பால் உள்ள ஸ்தானம்
நித்ய ஸ்ரீ -பிராட்டி ஸஹிதன்
சங்க சக்ர கதாதர -திவ்ய ஆயுதங்கள் ஸஹிதன் –

பெருமாள் தன்னுடைச் சோதி எழுந்து அருளும் போதும் –சராநாநாவித –சஹாநுக -என்று
பாணங்களும் கோதண்டமும் மனித உருவில் பின் தொடர்ந்தன -என்று திவ்ய ஆயுதங்களும் திவ்ய ஸ்தானமும் சித்திக்கும்
ஸ்ரீ விஷ்ணு புராணமும் -சமஸ்தா –சக்த்ய ஹரி -என்று சேதன சக்தி அசேதன சக்தி கர்மசக்தி முதலான சக்திகளே
திவ்ய ஆயுதங்கள் திவ்ய பூஷணங்கள்-அவனது திவ்ய மங்கள விக்ரஹம் அப்ராக்ருதம் –
ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் என்கிறது
நித்யைவேஷா -இத்யாதி பிராட்டியுடைய நித்யத்வமும்
ஏகாந்திந –இத்யாதியால் -திவ்ய ஸ்தானமும் -நித்ய ஸூரிகளும் நித்யம் என்றும்
திவ்யம் ஸ்தானம் -மஹாபாராத ஸ்லோகமும் உண்டே

142–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்திரமும் –அந்தஸ் தத் தர்ம உபதேசாத்-அந்தர் அதிகரணத்தில்
ய ஏஷா அந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷஸ் த்ருச்யதே -விஷய வாக்கியம்
கப்யாசம் -கே ஜலத்தில் -அப்யாஸ்தே -இருப்பது
கம் பிபதி -ஜலத்தை குடிக்கிறது -காபி தாமரைத்தண்டு -கபவ் -அத்தாமரைத் தண்டில்
ஆஸ்தே இதி -தண்டுடன் கூடிய தாமரை
கம் பிபதி -ஜலத்தை இழுக்கிறான் -காபிநா –ஸூரியனால்–ஆஸ்யதே இதி-மலர செய்யப்படுவதால்
கப்யாசம் புண்டரீகத்துக்கு அடைமொழி
இப்படி மூன்று அர்த்தங்கள் –
கம்பீராம்பஸ் ஸம்பூத-ஆழ்ந்த ஜலத்தில் தோன்றிய –
ஸூம்ருஷ்ட நாள -பருத்த தண்டுடன் கூடிய
ரவிகர விகசித–ஸூர்ய கிரணங்களால் மலர்விக்கப்பட்ட புண்டரீகம்
ச ஏஷ சர்வேப்ய–உலக சேஷி -கர்ம வசியன் இல்லாதவன் -ஸர்வஸ்ய வசீ -பதிம் விஸ்வஸ்ய–

143–வாக்யகாரர் -த்ரமிட பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூக்திகள் -திவ்ய ரூப விஷயங்களில் பிரமாணம்
வாக்ய காரர் -ஹிரண்மய புருஷ த்ருச்யதே இதி ப்ராஞ்ஞ சர்வ அந்தர ஸ்யாத் லோக காம உபதேசாத் ததோதயாத் பாப்மநாம்
ஸ்யாத் ரூபம் -உபாசகர்களை அனுக்ரஹிக்க அநித்ய ரூபம் மேற்கொண்டுள்ளார் பூர்வபக்ஷம்
ரூபம் வா -அப்ராக்ருதம் -திவ்யம் -நித்யம் -ஸ்வாபாவிகம் –
த்ரமிட பாஷ்யகாரரும் -ந சஷூஷா மனசா து -மஹா ரஜநம் வாச வேதாஹ மேதம்–ஆதித்ய வர்ணம் –
ஹிரண்மயன் -ஸ்வர்ணம் போன்ற தேஜஸ்ஸுடன் கூடிய திருமேனி –
ஆதித்ய வர்ணம் புருஷன்-இச்சாக்ருஹீத திவ்ய மங்கள விக்ரஹம் கொண்டவன் என்கிறார்
அஸ்யே சா நா ஹ்ரீஸ் சதே -என்று நித்ய பத்னீ ஸஹிதன்
சதா பஸ்யந்தி -நித்ய ஸூரிகள் ஸஹிதன்
தமஸ பரஸ்தாத் ஷயாந்தமஸ்ய –திவ்ய ஸ்தான ஸஹிதன்

144–சப்தத்தில் உள்ள போதக சக்தி இயற்கையானது
வேதம் சாத்தியமான அர்த்தங்களையே விளக்கும் -பிரத்யக்ஷ சித்தமானவற்றை சொல்லாதே –
ஒத்பத்தி கஸ்து சப்தஸ்ய அர்த்தேந சம்பந்த -பூர்வ மீமாம்ச ஸூத்ரம்
அக்னி உஷ்ணம் ஜாலம் குளிர்ச்சி போலே சப்தம் அர்த்தம் சம்பந்தம் இயற்க்கை
ஆனால் நமக்கு தெரியா பொருளை பற்றிய சப்தம் கேட்டதும் அர்த்தத்தை நாம் அறிகிலோமே –
போத்ய போதக பாவ சம்பந்தம் -வாஸ்ய வாசக பாவ சம்பந்தம் அறிந்தவனுக்குத் தானே அறிய முடியும்
சம்பந்த ஞானம் அவஸ்யகம் அன்றோ –
கண்ணால் பார்க்கும் சக்தி இயற்கை என்றாலும் வெளிச்சம் அவசியம் அன்றோ -அதே போலவே இங்கும் –
ஹேது -ஸாத்ய சம்பந்தம் -வ்யாப்ய வியாபக சம்பந்தம்
ஹேது உள்ள இடங்கள் எல்லாம் சாத்தியம் இருக்கும் -புகை பார்த்து நெருப்பு சாதிப்பது போலே
ஆனால் நெருப்பு உள்ள இடங்கள் எல்லாம் புகை அவசியம் இல்லையே -பழுக்கக் காய்ச்சிய இரும்பு -போலே

சம்பந்த ஞானம் துணை கொண்டே பொருளைப் போதிக்குமேல் சப்த பிரமாணத்தை அனுமானத்திலே சேர்க்கலாகாதோ -என்னில்
அனுமானத்தில்-சாத்யத்துக்கும் ஹேதுவுக்கும் இடையே -ஞாப்ய-ஞாபக சம்பந்தம் -அதாவது
ஞாபகப் படுத்துவது -ஞாபகப் படுத்தப்படுவது -சம்பந்தமும் வேண்டுமே
இதையே போதக போதக பாவம் என்னலாம்
ஆகையால் வ்யாப்ய வியாபக பாவ சம்பந்தத்தையும் அதற்கு மூலமான காரண கார்ய பாவ சம்பந்தத்தையும்
அறிந்த பின்பு தான் ஹேது ஸாத்யத்தின் ஞானத்தை உண்டு பண்ணும் –
இல்லையேல் உண்டு பண்ணாது என்று அனுமானத்தால் எண்ணப்படும் –
ஆனால் சப்த பிரமாணத்தில் பிற சம்பந்தங்களின் ஞானம் தேவைப் படுவது இல்லை –
போத்ய போதக பாவ சம்பந்தத்தின் ஞானத்தின் தேவை மட்டுமே உள்ளது இங்கு
தொன்று தொட்டு வழங்கி வந்த போதும் எவர் ஸங்கேதம் செய்தார் என்பது தெரியாதலால் எவரும் அப்படி
ஒரு ஸங்கேதத்தைச் செய்யவில்லை என்பது புலப்படுகிறது –
ஆகவே சப்தத்தின் போதகத்வ சக்தி இயற்கையானது எனத் தேறிற்று

145–வேதங்களின் அபவ்ருஷேயத்வமும்–நித்யத்வமும் -ப்ராமாண்யமும்
அர்த்தங்கள் உள்ள சப்த கூட்டமே வாக்யமாகும் -வாக்யார்த்தம் -பத ஸமூஹம்–
முன் கல்பத்தில் உள்ள சப்த சமூகத்தையே நான்முகனுக்கு உபதேசிக்கிறார் -ஆகவே வேதம் அபவ்ருஷேயம் –
முறை மாறாமல் நித்தியமாய் இருக்கும் -சுடர் மிகு சுருதி உயர்ந்த பிரமாணம் ஆகும்
அந்த ப்ரஹ்மம் ஸ்வரூபாதிகள் போலவே ஆராதிக்கும் உரை பலன்கள் இவற்றை விளக்கும் சப்த சமூகமான வேதமும் நித்யம்
வேதார்த்தங்களை நினைவில் கொண்டே உப ப்ரஹ்மணங்கள் -விதி அர்த்தங்களை விளக்கும் தர்ம சாஸ்திரங்கள்
அர்த்தவாதம் மந்த்ரம் பாக்க அர்த்தங்களைக் கொண்டு இதிஹாச புராணங்கள்
சப்தங்கள் அமைப்பை விளக்க வியாகரணம் ஆகும்

146-சித்த வஸ்து விவரண நிகமனம்
ஸ்ரீ மன் நாராயணனே -அகில ஹேயபிரத்ய நீக கல்யாண குணக்கடல் -ஸ்வ வியதிரிக்த ஸமஸ்த வஸ்து விலக்ஷணன்-
நிரவதிக ஞான ஆனந்த மயன் -த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப
ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் இவன் அதீனமே

சர்வம் கலு இதம் ப்ரஹ்மம் –சரீரம் அனைத்து சேதன அசேதனங்களும் ப்ரஹ்மதுக்கு –
ஐததாத்ம்யம்-என்றது ப்ரஹ்மமே அனைத்துக்கும் ஆத்மா
தத் தவம் அஸி
நீராய் நிலனாய் –சிவனாய் இத்யாதி
த்வம் யஜ்ஞ
ஜகத் சர்வம்
யாகம் வஷட்காரம் ஓங்காரம் ப்ரஹ்மமே-
ஜ்யோதீம்ஷி விஷ்ணு -ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் –
போக்தா போக்யம் ப்ரேரிதா –

சோகாமயாத–என்று தொடங்கி–அபவத் வரை உள்ள உபநிஷத் வாக்கியம்
ஆனந்தமயமான அப்பரமாத்மா -தேவாதி -பலவாக கடவேன்-என்று சங்கல்பித்து -ஸ்ருஷ்டித்து புகுந்து
சத்தாகவும் த்யத்தாகவும் -சேதன அசேதனங்களாக மாறிற்று
அசேதன பதார்த்தம் ஜாதி குண கிரியைகளுக்கு இருப்பிடமாகையாலே நிருக்தம் -என்றும் சொல்லப்படும்
சேதன பதார்த்தம் இயல்பாகவே ஜாதி குண கிரியைகளுக்கு இருப்பிடம் இல்லாததால் அநிருக்தன் -எனப்படுகிறான்
சேதனன் அசேதன பதார்த்தங்களை ஆதாரமாக தாங்குவதால்-நிலையநம் -என்றும்
தாங்கப் படுவதால் அசேதனம் -அநிலையநம் -எனப்படும்
விகாரம் அற்று இருப்பதால் சேதனம் சத்யம் எனப்படுகிறான் –
மாற்றம் அடைவதால் அசேதனம் -அந்ருதம் – எனப்படும்
அந்தர்யாமியாக புகுந்த பர ப்ரஹ்மம் சேதன அசேதன சொற்களால் சொல்லப்படுவான்
இப்படி சேதன அசேதன வடிவுகளை ஏற்ற போதும் அவற்றுடன் இரண்டற ஒன்றாகக் கலக்காததால்
பர ப்ரஹ்மம் சத்தியமாக விகாரம் அற்று இருக்கும் என்கிறது சுருதிகள்

147-ப்ரஹ்ம ப்ராப்திக்கு உபாயங்களின் சுருக்க விளக்கம் –
பக்தி ஒன்றே பகவத் பிராப்திக்கு உபாயம் -அந்த பக்தியை பர ப்ரஹ்ம யாதாம்ய ஞானம் பெற வேண்டுமே –
அந்த ஞானத்துடன் வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானங்களும் வேணும் –
மன சுத்தி அடைந்து -பக்தி ஆரம்ப விரோதிகள் கழிந்து -ப்ரீதி பிறந்து வளர்ந்து -ப்ரத்யக்ஷ சாமான காரம் அடைகிறோம்
ப்ரீதி உடன் கூடிய பக்தி தானே பிரபத்தி -ப்ரீதியும் ஞான விசேஷமே-
ஸூகமும் ப்ரீதியும் -உலகில் ஒரே பதார்த்தம் -அநு கூல ஞானமே ஸூகம் –
வைசேஷிகர் ஞானம் வேறே ஸூகம் வேறே என்பர் –
விஷயங்களை கிரஹிக்கும் ஞானம் மூன்று வகை -அநு கூல ஞானம் – இதன் காரணம் ஸூகம் –
பிரதி கூல ஞானம் -இதன் காரணம் துக்கம் -சில மத்யஸ்தமாயும் இருக்குமே –
புஷ்பம் சந்தனம் போன்ற ஞானத்தால் ஸூகமும் பாம்பு போன்றவற்றை ஞானத்தால் துக்கமும் –
மரத்துண்டு கல்துண்டு போன்றவற்றால் ஸூகம் துக்கம் இல்லாமல் மத்யஸ்தமாயும் இருக்குமே
இந்த ஞானம் இருப்பதால் ஸூகி துக்கி என்கிறோம் -ப்ரஹ்ம இதர விஷயங்கள் அல்ப அஸ்திர ஸூகம் தருபவை
ப்ரஹ்மமே ஆனந்தோ ப்ரஹ்மம் -என்றபடி ஸ்திரமாயும் அனந்தமாயும் இருக்கும்

ரஸோ வை ச ரசம் ஹி ஏவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி –என்று ப்ரஹ்மமே ரசவடிவம் -ஆனந்த வடிவம் –
ப்ரஹ்மத்தை அடைந்த உபாசகன் ஸூகி ஆகிறான் –
பிராகிருத பதார்த்தங்கள் ஜடம் -தாம் அநு கூலமாய் இருப்பதை அவை புலப்படுத்திக் கொள்ள முடியாதே –
ப்ரஹ்மம் அநு கூலமாய் தொற்றுவதும் செய்து தானும் அனுகூலமாய் இருப்பதை சாஷாத்காரிக்க முடியுமே
எல்லையில்லா உயர்வு -அகில ஹேய பிரத்ய நீகம் -ஸமஸ்த கல்யாண குணாத்மகம் -உபய விபூதி நாதத்வம் -அறிந்து
நமது சேஷத்வமும் அறிந்து -அனுபவ ஜெனித அளவற்ற ப்ரீதி உண்டாகும் -ப்ரீதி காரித கைங்கர்யம் பன்ன மேலும் தூண்டுவிக்கும்
பரதந்த்ர தாசனாக அவனது முக உல்லாசத்துக்காகவே சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தித கைங்கர்யங்களை
செய்து கொண்டே பிரசன்னனாக வாழ்வோம் –

148–தாஸத்வம் -சேஷத்வம் -பகவத் வசப்பட்டு இருந்து – சேஷத்வமே ஸூகம்-
சர்வம் பரவசம் துக்கம் சர்வம் ஆத்மவசம் ஸூகம் ஏதத் வித்யாத் சமாஸேந லக்ஷணம் ஸூக துக்கயோ -மனு ஸ்ம்ருதி –
சேவா ஸ்வ வ்ருத்தி ஆகியாதா -நாய் தொழில் என்றும் -தேஹாத்ம அபிமானம் உள்ளவர்களே சொல்லுவது –
ஸ்வாமி பிரத்யக்ஷம் இல்லாததால் சரீரமே ஆத்மா என்றும் ஸ்வ தந்திரம் என்றும் நினைப்பார்கள்
ஆத்ம அபிமானத்துக்கு ஏற்ப ஸூக துக்கங்கள் சரீரத்துக்கு ஏற்ப மனுஷ்ய தேவ ஜங்கமங்களுக்கு மாறுமே
ஒரே விஷயம் ஒருவனுக்கு ஸூகமாகவும் வேறே ஒருவனுக்கு துக்கமாகவும் இருப்பதைக் காணலாமே
ஸ்வ தந்த்ர எண்ணமோ பர தந்த்ர எண்ணமோ ஸூக துக்க காரணம் இல்லை -அபிமானம் இதற்குக் காரணம்
ஜீவ ஸ்வரூபம் சாஸ்திரங்கள் மூலம் அறிந்து விலக்ஷணம் -சரீரத்தில் நின்றும் வேறுபட்டது
ஞானமயன் ஆனந்தமயன் அமலன் -ஆத்மஸ்வரூபம் அறிந்து -பதிம் விஸ்வஸ்ய-ஸ்வாமி -சேஷி சேஷத்வம் அறிய வேண்டும்
விபரீத ஞானம் -ஸ்வ தந்த்ர எண்ணம் கர்மத்தால் தோன்றும்

பதார்த்தங்கள் அனுகூலமாகவும் பிரதிகூலமாகவும் சுக துக்க ரூபமாகவும் தோன்றுவதும் கர்மம் அடியாகவே –
ஆகவே அல்பம் அஸ்திரம் இவையே –
கர்மம் அழிந்த பின்பே இவற்றின் ஸூயா ஸ்வரூபம் அறிந்து ஸ்திர நிரதிசய ஸூக ரூபமான பகவத் ஸ்வரூபம் அறிகிறோம்
கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம ஆனந்தோ ப்ரஹ்ம சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -சுருதி
நரக ஸ்வர்க்க சம்ஜ்ஜேவை புண்ய பாபே த்விஜோத்தம -வஸ்து ஏகமேவ துக்காய ஸுகாய ஈர்ஷ்யாகமாயச கோபாயச யாத
தஸ்மாத் வஸ்து வஸ்த்வாத்ம கம்யத–ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம்
ஒருவருக்கு ஒரு வஸ்து சுகம் -வேறே ஒருவருக்கு துக்கம் -மூன்றாமவருக்கு பொறாமை நாலாமவர்க்கு கோபம் –
இவ்வாறு வியவஸ்தை இல்லாமல்
ததேவ ப்ரீதயே பூத்வா புநஸ் துக்காய ஜாயதே -தஸ்மாத் துக்காத்மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் சுகாத்மகம் –
சஹி ஆஸ்ரமை சதா உபாஸ்ய சமஸ்தை ஏக ஏவச-என்று சர்வராலும் சேவிக்கத்தக்கவன் அவனே என்றும்

ஸ்ரீ கீதையிலும் -மாம்சய அவ்யபிசாரேண பக்தி யோகேந சேவதே -என்றும்
ச குணான் சம தீத்ய ஏதான் ப்ரஹ்ம பூயாய கல்பதே-என்றும் சொல்லப்பட்ட
பக்தி ரூபையான சேவை தானே -வேதன சப்த ஞான சப்தங்களாலே
ப்ரஹ்ம வித் ஆப்நோதி பரம் தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்று
ஞான சப்தத்தாலும் பக்தியே சொல்லப்பட்டது
ய மேவைஷ வ்ருணுதே -என்று அவன் வரிப்பதும் பக்தனையே –
ப்ரியோஹி ஞானிந அத்யர்த்தம் அஹம் ச ச மம ப்ரிய–
ப்ரஹ்ம ஞானமே அவனை அடைய சாதனமாகும்
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயனரும் மோக்ஷ தர்மத்தில் –
ந சந்த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷுஷா பஸ்யதி கச்ச ந ஏநம் -பக்த்யா த்ருத்யா ச ஸமாஹிதாத்மா
ஞான ஸ்வரூபம் பரிபஸ்ய தீஹ–என்று
சாந்தி நிலை அடைந்த பக்தனே பகவத் சாஷாத்காரம் அடைகிறான் –
பக்த்யா ச த்ருத்யா ச ஸமாஹிதாத்மா -ஸ்லோகத்திலும்
த்ருத்யா ஸமாஹிதாத்மா பக்த்யா பஸ்யதி -என்று அன்வயித்து
பக்த்யா து அனன்யயா சக்ய -என்று பக்தி ஒன்றாலேயே சாஷாத்காரம் –

ந சந்த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷுஷா பஸ்யதி கச்ச நைநம் ஹ்ருதா மநீஷா மனசா அபிக் லுப்த
ய ஏதத் விது அம்ருதா தே பவந்தி -உபநிஷத்
இதற்கு வியாக்யானமே வியாசர் – ஹ்ருதா பதத்துக்கு பக்த்யா பதம் அங்கு
மநீஷா மனசா-சாந்தி தாந்திகளுடன் கூடிய மனம் என்றவாறு
பக்தி ஞான விசேஷம் – என்றவாறு —

———–

சார அசார விவேகஞ்ஞா கரியாம்சஸ் விமத்சரா
பிராமண தந்த்ரா சந்தீதி க்ருதஸ் வேதார்த்த ஸங்க்ரஹ

நான்கு காரணங்கள் -இந்த கிரந்தம் இயற்றக் காரணம் –
1-சார அசார விவேகஞ்ஞா
எது சாரம் -பிரமாணங்களுக்கு பொருந்துவது -தர்க்கத்துக்கு உதவுவது -இவ்வாராய்ச்சியே விவேக ஞானம் –
இந்த விவேக ஞானம் உள்ளவர் பலர் உண்டே -இது முதல் காரணம்
2-கரியாம்சஸ்
இது பல வழிகளில் -பலரிடம் -பலகால் -பல ஸாஸ்த்ர கருத்துக்களை கேட்டுத் தெரிந்தவரைச் சொல்லும்
முரண்பட்ட ஸாஸ்த்ர அர்த்த ப்ராபல்ய துர்பல்யங்களை அறிய வேண்டுமே –
முதலாவதான சார அசார விவேகத்துக்கு சஹகாரி இது
3-விமத்சரா
இத்தை சொன்னவர் உறவுக் காரரா ஊர் காரரா நண்பரா முன்னாள் உதவினவரா என்று எல்லாம் பாராமல் –
பொறாமை அற்றவர் உளர் -நம் கருத்தை ஏற்பர் என்று காட்டி அருளுகிறார்
4-பிராமண தந்த்ரா சந்தீதி க்ருதஸ்
எவர் எல்லா சமயங்களிலும் பிரமாணங்களை அடிப்படையாகவே கொண்டு நிர்ணயம் செய்கிறார்களோ அப்படி
தமக்கு விரோதமாக இருந்தாலும் அதற்காக கலங்குவது இல்லையோ அவரே பிராமண பரதந்த்ரர் ஆவார் –
இப்படிப்பட்டவர் இந்த கிரந்தத்தை ஏற்றுக் கொள்வார்கள் –
இப்படி இல்லாதவர் ஏற்கா விட்டாலும் அது குறை இல்லை என்று அருளிச் செய்து நிகமிக்கிறார்

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சுருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–/வேதங்களின் தாத்பர்யம்-/ஆத்மா- பரமாத்மா – யாதாத்ம்ய ஞானங்கள் / சங்கர பாஸ்கர யாதவ மத நிரசனங்கள்–

February 5, 2020

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

ஸ்வாமி இந்த முதல் ஸ்துதியில் வேதங்களின் உள்ளுறைப் பொருளான விஷ்ணுவுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.
கண்ணன் எம்பெருமானும் கீதையில் இதை, “ஸர்வை: வேதை: அஹமேவ வேத்ய:”
(எல்லா வேதங்களினாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன்) என்று தெரியப்படுத்தினான்.
வேதங்கள் அனைத்தின் உள்ளுறைப் பொருளாக விஷ்ணு விளங்குவதால் ஸ்வாமி தொடங்கும் போதே
அவனுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.
இதன் மூலமாகத் தம் சிஷ்யர்களையும் இதை ஸேவிப்பவர்களையும் விஷ்ணு பகவானுக்குத் தங்களை
ஸமர்ப்பித்துக்கொள்ள வழி வகுக்கிறார்.
சிஷ்யர்களை வழிப்படுத்தும்போதே வேத ஸாரத்தையும் அறிவுறுத்தினாராகிறார்.

விஷ்ணு பகவான் மூன்று வகைகளில் உருவகப் படுத்தப் பட்டிருக்கிறார்:

(i)அசேஷ சித்-அசித்-வஸ்து-சேஷிணே

அவனே ஒன்று விடாது எல்லாப் பொருள்களுக்கும் அதிபதி.
அவன் ஆதிபத்யத்தில் உணர்வுள்ளன உணர்வற்றன யாவும் அடங்குவன.
சித் அசித்-அறிவுள்ளன அறிவற்றன யாவும் அடங்குவன.
அசேஷ பதம் சித்திலும் அசித்திலும் அந்வயிக்கும் –
நம் அனுபவத்தில் நாம் உணர்வுள்ளன/உணர்வற்றன யாவும் சில தொடர்புகளாலும் நெறிமுறைகளாலும்
கட்டுப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம்.
அவை ஒன்றுக்கொன்று ஸ்வதந்த்ரமாயும் இல்லை. அவற்றின் அவ்வப்போதைய நிலை சில நெறிகளுக்குட்பட்டே அமைகின்றன.
அவை யாவுமே ஓர் உயர் கோட்பாட்டுக்குட்பட்டே இயங்குகின்றன.
அவை “சேஷ பூதர்”, அதாவது கட்டுப்பட்டவர்கள் என அறியப்படுகின்றன.
இவ்வாறின்றி, தன்னிச்சையாய் ஸ்வதந்த்ரனாய் இருப்பவன் சேஷி எனப்படுகிறான்.

இப் பதம் லீலா விபூதி நாயகத்வத்தைக் காட்டும்-
விசிஷ்டாத்வைத சித்தாந்தம் சுருக்கமாக இங்கே அருளிச் செய்கிறார் —
அசேஷ சித் -ஜீவன் ஒருவன் அல்ல பலர் என்றதாயிற்று
வஸ்து-ஜகத் மித்யை பொய்யானது இல்லை மெய் என்றதாயிற்று
ஜீவாத்மா தன் சரீரசத்தை தனது வசமாக்கிக் கொள்வது போலே அனைத்துக்கும் ஜீவனாகிய ப்ரஹ்மம்
அசேஷ சித்துக்களை அசித்துக்களையும் தனது வசமாக்கிக் கொள்கிறான்
ஜகத் ப்ரஹ்மமே என்றதும் சரீராத்மா சம்பந்தம் அடியாகவே ஒழிய ஐக்கியம் சொல்வது அல்ல என்றதும் ஆயிற்று
இத்தால் ப்ரஹ்மம் வேறு சேதன அசேதனங்கள் அடங்கிய ஜகத் வேறு என்றதாயிற்று –

ii) சேஷ சாயினே

அவன் ஆதிசேஷனாகிற திவ்ய நாகத்தின் மீது சாய்ந்துள்ளான்.
ஸம்ஸார பந்தங்களிலிருந்து நித்யமாக விடுவிக்கப் பட்டிருப்பதால் நித்யஸூரி அல்லது ஸர்வகால முநி எனப்படுகிறான்.
இதனால் எம்பெருமானின் ஆதிபத்யம் என்பது ஒரு உண்மையான உறவு என்பது ஆதிசேஷன் போன்ற
நித்யஸூரிகளால் நமக்குத் தெரிகிறது.
ஞானம் பிறந்த தசையில் எம்பெருமானுக்கு நாம் சேஷ பூதர்கள் எனும் உணர்வுண்டு என்பதும் தெரிகிறது.
இதுவே சேஷ / சேஷி ஸம்பந்தம்.

இது நித்ய விபூதி யோகத்வத்தை சொல்லும்-
நித்ய முக்த பத்னி பரிஜனாதிகளுக்கும் இது உப லக்ஷணம்

முதல் குறிப்பால் ஸ்வாமி எல்லாவற்றுக்கும் விஷ்ணுவுக்கும் உடையவன்/அடிமை என்றார்.
இரண்டாவது குறிப்பால் ஸம்பந்த ஞானம் பெற்றவனே முக்தனாகக் கடவன் என்கிறார்.

ஆனால் ஒருவனுக்கு அடிமைப் பட்டிருப்பது துக்கமான விஷயமன்றோ?
ஆகில், இந்தத் துக்கத்தைத் தவிர்க்க ஒவ்வொருவனும் இந்த ஞானப் ப்ராப்தியைத் தள்ளிப் போட விரும்புவானன்றோ?

இதற்கு விடையாவது, இவ்வுறவு உண்மையானது என்பதால் ஒவ்வொருவரும் உணராமல் போனாலும் இவ்வுறவிலிருந்து தப்ப முடியாது.
மேலும் எம்பெருமானின் ஆளுகைக்குட்பட்டிருப்பது அளவற்ற இன்பமே ஆதலால் துன்பம் இல்லை என்பதே.
இதையே ஸ்வாமி மூன்றாவது குறிப்பில் விளக்குகிறார்.

[iii] நிர்மலானந்த-கல்யாண-நிதி:-நிர்மலன் -அனந்தன் -கல்யாண நிதி

விஷ்ணு பகவான் தூய முடிவற்ற மங்கள ஸ்வரூபி. அவன் தன்னிகரற்றவன்.
நித்ய ஸூரிகளும் அவனாலேயே ஆனந்தம் அனுபவிக்கின்றனர்.
உணர்வுள்ளவை யாவும் சம்சார சம்பந்தத்தினால் தூய்மை இழக்கின்றன. ஆனால் அவன் எப்போதும் தூயோனாயுள்ளான்.
அவனவதாரங்கள் தூயன, தெய்வீகமானவை. அவன் விடுபட்டவன், மற்றவர்களை விடுவிக்கவும் வல்லவன்.
ஆகவே நாம் அவனைச் சரண் புகுதலும், மோக்ஷம் பெறுதலும் நியாயமே .

நிர்மலன் அவன் குற்றமற்றவன்,
அனந்தன் -அபரிச்சேத்யன் -தேச கால வஸ்து த்ரிவித பரிச்சேத ரஹிதன் –
கல்யாண நிதி -நற்குண ஸமுத்ரம், அழகின் முழு உரு,
ஆகவே விஷ்ணு அநுபவம் ஆனந்தம் தருவது.
அவன் ஸ்வாமித்வம் நமக்கு ஸுக ரூபமானது. ஞானிகளும் முக்தரும் நித்தியரும் இந்த ஆனந்தத்தை அனுபவிதத்திருப்பவர்கள்.
ஸம்சார ஸம்பந்தம் தாற்காலிகம், துன்பம் நிறைந்தது. விஷ்ணு ஸம்பந்தம் நித்யமானது, இன்பமயமானது.
அகிலஹேய ப்ரத்ய நீகத்வமும் கல்யாண குணாத்மகாத்வமுமே ப்ரஹ்மத்துக்கு உபய லிங்கங்கள் –

அவனது எல்லையற்ற மங்கலத்தன்மை அவனது பூர்ணத்வத்தைக் காட்டுகிறது.
அவன் ஸ்வாமித்வத்திலும் கூட அபூர்ணனல்லன்.
அவனது இந்த பூர்ணத்வமே நமக்கு நம் விடுதலையை, மோக்ஷத்தை உறுதி செய்கிறது.

அவனே விஷ்ணு பகவான். அவன் தூரஸ்தனல்லன்.
அவன் எல்லாவற்றிலும் நிறைந்துள்ளான் என்பதே அச் சொல்லின் பொருளுமாகும்.
எல்லாவற்றிலும் நிறைந்திருந்தும் அவன் அவற்றால் மாசடைவதில்லை.
சூர்யனின் கதிர்கள் போல் அவன் அப்பழுக்கின்றித் திகழ்கின்றான்.
சூர்யனின் கதிர்கள் சேற்றின் மேல் படிந்தாலும் அவை அழுக்கடைவதில்லை அன்றோ!

நாம் விஷ்ணுவைச் சரண் அடைகின்றோம்.
நம
கீழே ப்ராப்யமான ப்ரஹ்மத்தை விவரித்து அருளி இனி பிராபகம்- இதுவே ப்ரஹ்மத்தை அடையும் உபாயம் -என்கிறார்
கேவலம் நமஸ்காரத்தை சொன்னது அன்று இது -பக்தி பிரபத்தி பர்யந்தம் நமஸ் அர்த்தம் கொள்ள வேண்டும்

ஆக இத்தால் ஸ்வ சித்தாந்த சுறுக்கங்களை அருளிச் செய்தார் ஆயிற்று

—————–

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ்யாஸ் பதமிதி I
ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய நமஸ்கார ரூபம்-

இந்த ச்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.
அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் பொருளைப் புரிந்து கொள்வதில் இருந்த குழப்பங்களை நீக்குவதில்
அவரது பெரும்பங்கு இதில் வற்புறுத்தப் படுகிறது. வேதங்களின் நிலைப்பாட்டை விளக்க
ஸ்ரீ யாமுநாசார்யர் ஸித்தித்ரயம் மற்றும் ஆகமப் ப்ராமாண்யம் போன்ற க்ரந்தங்களை சாதித்தருளினார்.

இந்த ச்லோகத்தில் எம்பெருமானார் தம் காலத்தில் இருந்த மூன்று ப்ரதான வேதாந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.
இம்மூன்று கோட்பாடுகளையும் ஏற்பதில் உள்ள பெரும் ப்ரச்சினைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக, மாற்றுக் கோட்பாடுகளைப் பற்றிய ஒரு சிறு விமர்சத்தை நமக்கு வைக்கிறார்.
சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மதங்களை நிரசித்தும் தம்மை ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அருளிய
ஸ்ரீ ஆளவந்தாரை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் இதில்

(i) பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி

ப்ரஹ்மம் நிர்விசேஷ சின் மாத்திரம் -ஞான மயம் -ஸ்வயம் பிரகாசம் -மற்றவை அனைத்தும் மித்யா –
அந்த ப்ரஹ்மமே மாயையால் அஞ்ஞானத்தால் ஜகத்தாகத் தோற்றம் அளித்து
ஜென்ம ஜரா மரணாதி துக்கங்களை அடைகிறது என்பர் அத்வைதிகள்
அத்வைதத்தில் பர ப்ரஹ்மமே குழம்பியுள்ளது, ஸம்ஸாரத்தில் அந்வயிக்கிறது.
“பரம்” எனும் சொல் எல்லா வகையிலும் மேன்மையைக் குறிக்கும். வேதங்களில் ப்ரஹ்மத்தின் மேன்மை விளக்கப் படுகிறது.
ப்ரஹ்மம் எல்லா மங்களங்களாலும் நிறைந்தது, ஒரு குறையுமற்றது. ஆகவே தான் அது ப்ரஹ்மம் எனப்படுகிறது,
அறியப்பட வேண்டியது என ஓதப்படுகிறது. தன்னை உபாசிப்போர் குறைகளைப் போக்கி,
அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறது.

அத்வைதத்தில் இரு முரண்பாடுகள் உள்ளன –
(i) எல்லா வகையிலும் மேன்மையுற்ற ப்ரஹ்மமே அஞ்ஞானத்தில் மூழ்குமாயின் அதை
ப்ரஹ்மம் என்றழைக்க அதன் மேன்மைதான் யாது?
(ii) எல்லாரையும் உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய ப்ரஹ்மம் சோகிக்குமாயின் அதை உய்விப்பார் யார்?

”ஏவ” எனும் சொல் இந்த முரண்பாடுகளை வலியுறுத்துகிறது.
எப்பொழுதும் தனக்குத் தானே பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ப்ரஹ்மத்துக்கு தன்னை அறியாமையாகிய
அவித்யை எப்படி சம்பவிக்கும் -என்கிற விரோதமும்
ப்ரஹ்மமே சம்சாரம் அடைந்தால் மோக்ஷம் பெற வேதாந்த ஸ்ரவணாதிகள் செய்ய வேண்டி இருக்கும் விரோதமும் உண்டாகுமே

தனக்கு ஏற்படும் அஞ்ஞானத்தினால் ப்ரஹ்மம் மாயையில் சிக்குண்கிறது
(ப்ரம பரிகதம்) இம்மாயையே பார்வையில் வேறுபாட்டை விளைக்கிறது.

அத்வைதத்தில் ப்ரஹ்மம் ஒன்றே உணர்வுள்ளதாக ஒப்புக் கொள்ளப் படுவதால் வேறுபாடு பற்றிய
உணர்வு பூர்வமான அநுபவம் மட்டுமே இருக்க முடியும்.
ப்ரஹ்மம் மாயையை அனுபவிப்பதில்லை, பிற யாவும் அனுபவிக்கின்றன என அத்வைதியால் வாதாட இயலாது.
ப்ரஹ்மம் தவிர்த்த ஏனைய யாவும் மாயையின் பாற்பட்டனவே.
மாயையினால் உண்டான ஒன்று மாயையை அனுபவிப்பது என்பது முரண்பாடாகும்.
முதலில் தான் ச்ருஷ்டித்த மாயையின் விளைவு தன் மாயையைத் தானே உருவாக்க முடியாது.
மாயையின் பொருள்களை அநுபவிக்க வேண்டுமாயின் அம்மாயை முன்பே இருக்க வேண்டும்.
ஆகவே, ப்ரஹ்மம் தானே அதை முதலில் அநுபவித்தாக வேண்டும்.

(ii) தத் பரோபாத்யாலீடம் விவசம்

ப்ரஹ்மன் மாற்றம் விளைப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது.

இது பாஸ்கராசார்யரின் கொள்கையை விளக்குகிறது.
தான் மட்டுமே ஸத்யமாயுள்ள ப்ரஹ்மத்தை மாயை/அவித்யை எவ்வாறோ குழப்புகிறது
என்பதை நிலைநிறுத்துவதில் உள்ள ச்ரமங்களை பாஸ்கரர் உணர்ந்திருந்தார்.
“பர” என்றதால் இயல்வுகள் யாவும் தனிப்பட்டவை, உண்மையானவை என்பதும் பெறப்படுகிறது.
இவ் வியல்புகள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை. இவற்றால் தளை யுண்டு ப்ரஹ்மம் கர்ம சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது.

மேலும் இவ் விளக்கத்தில், மேம்பட்ட ஒரு ப்ரஹ்மம் தானே கட்டுண்பதும் துக்கத்தில் உழல்வதுமான முரண்பாடும் உள்ளது.

(iii) அசுபஸ் யாஸ் பதம் = ப்ரஹ்மம் அசுபங்களின் இருப்பிடமாகிறது

இது யாதவ ப்ரகாசரின் கொள்கையை விளக்குகிறது.

யாதவப்ரகாசர் ப்ரஹ்மமே அறிவுள்ளன/அறிவற்றன இரண்டுமாகவும் பிரிந்திருப்பதாகவும்,
ஆகவே அசுபங்களின் இடமாய் இருப்பதாகவும் கருதினார்.
அறிவற்றனவின் அசுபத்தன்மை அவை எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதாலும், நிலை நில்லாமையாலும் ஏற்படுகிறது.
அறிவுள்ளனவற்றின் அசுபத் தன்மை அவை கர்ம ஸாகரத்தில் மாட்டிகொள்வதாலும் அவ்வினைகளால் துன்புறுவதாலும் ஏற்படுகிறது.
வேதங்களில் சொல்லப்படும் ப்ரஹ்மம்
“ஸ்வேதர-ஸமஸ்த-வஸ்து-விலக்ஷண”மாய் , அதாவது மற்றெல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டும்,
அவற்றின் அசுபங்கள்/அமங்கலங்கள் யாதொன்றும் இல்லாமலும் இருக்கிறது.
ஆனால், யாதவப்ரகாசரின் யோஜனையில், வேதக் கோட்பாட்டுக்கு விருத்தமாக,
ப்ரஹ்மமே அமங்கலங்களின் இருப்பிடமாய் உள்ளது.

”பரம் ப்ரஹ்மைவ” எனும் சொற்கள் இம்மூன்று கோட்பாடுகளுக்குமே பொருந்தும்.
அதாவது எல்லாப் பொருள்களுக்கும் மேலானதும் எல்லா வகைகளிலும் மேம்பட்டதும் ஆனந்த ஸ்வரூபமானதும் குறைகளே அற்றதும்
எல்லாவகைகளிலும் மங்கலமானதும் பரிசுத்தமானதும் ஆன ஒன்றை சங்கரர், பாஸ்கரர், யாதவப்ரகாசர் மூவருமே
அஞ்ஞானம், அமங்கலங்கள், துக்கம் இவற்றால் உழல்வதாகக் கருதுகிறார்கள்.

(iv) ச்ருதி ந்யாயா பேதம் ஜகதி விததம் மோஹநம் இதம் தம:

ப்ரஹ்மத்தை பூர்ணம் என்றும், பூர்ணமன்று என்றும் இவ் விளக்கங்களால் அறிந்து கொள்வது
தவறான அறிவும், அறியாமையும் ஆகும்.
“இதம் தம:” என்றது இதையே.
இத்தகைய புரிந்து கொள்ளல் தர்க்க நெறிகளுக்கு முரணானது. வேதங்களைப் புரிந்து கொள்ள உதவும் நியாய சாஸ்த்ரத்துக்கு முரணானது ஆகும்.

கேள்வி: இவை யாவும் தவறான புரிந்து கொள்ளல், வேதங்களுக்கு விரோதமானவை,
வேதங்களின் அங்கங்களான நெறிகளுக்கு முரணானவை….எனில், இவற்றை விமர்சிப்பான் என்?
விடை: ஏனென்றால், அவைகளும், “ஜகதி விததம்” உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன,
பலரும் இக் கொள்கைகளால் மயங்கியும் கிளர்ச்சியுற்றும் உள்ளனர்.

அவ்வாறே இருக்கட்டுமே. இக்கருத்துகள் தவறானவை, மறைகளின் கருத்துக்கு முரணானவை, தமக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவை
பலராலும் பின்பற்றப் படுபவை…..இருக்கட்டுமே! நாம் ஏன் அவற்றை விமர்சிக்க வேண்டும்?
விடை: ஏனெனில் இப்பாதைகளைப் பின்பற்றினால் பற்றுவோர் வழிதவறிப் போவர்.
இக் கருத்துகள் “மோஹநம்” = மதி மயக்குபவை. ஆகவே, அறியாமை இருள் விமர்சிக்கத் தக்கதே.

இப்படிச் சொல்லி, ஆசிரியர் இவ் விமர்சத்தைத் தாம் செய்ய மேற்கொண்ட பின்னணியை விளக்கி யருளுகிறார்.
வேதங்களுக்குத் தவறான விளக்கங்களை ஸ்வாமி தம் கருணையினால் மறுத்துரைக்கிறார்.
ஞானம் பெற்றவர் பெறாதோருக்கு அறிவுறுத்தி நெறிப் படுத்துவது கடமையாகும்.
ஆகிலும் ஸ்வாமி இதைத் தம் ஆசார்யரான ஆளவந்தார் மேல் ஏறிட்டு ஸாதிக்கிறார்:

(v) யே நா பாஸ்தம் ஸ ஹி விஜயதே யாமுன முநி:
இச் சொன்ன அறியாமை இருளை நீக்கும் யாமுன முநி வென்று நிற்பாராக!
தர்க்க விரோதமானதும் சாஸ்த்ர விரோதமானதுமான கோட்பாடுகளை மறுத்து ஒழிப்பதில் தம்
ஆசார்ய அருள் பெரும் பணியினை நினைவு கூறுகிறார்.
தம் ஆசார்யருக்கு இவ்விஷயத்தில் ஜயகோஷம் இடுகிறார்.

வேதார்த்த ஸங்க்ரஹத்தின் மூலம் யாமுநாசார்யரின் வெற்றியை ஸ்வாமி நிரந்தரமாக்கியுள்ளார் என்ன வேண்டும்.
தம் குருவின் திருவுள்ளத்தை சீடர் இக் ரந்தம் முழுக்கத் தெளிவாக அர்த்த புஷ்டி யுள்ளதாக்கி யுள்ளார்.

————————

3-வேதங்களும் அவற்றின் இறுதியான வேதாந்தமும் உலகம் யாவும் நன்றாய் இருக்க அவச்யமான ஒழுக்க நெறியைப் போதிக்கின்றன.
இதன் மூலம், ஸ்வாமி அனைத்து வேதங்களின் நோக்கமே முழு சமுதாயத்தின் மங்களமே என அறுதியிடுகிறார்.
வேதாந்தத்தைக் கற்பதன் மூலம் ஒரு சரியான பொருளைப புரிந்து கொள்ள முடியும்.
வேதாந்தத்தைப் பல்வேறு வழிகளில் புரிந்து கொள்ள முடியும் என்பதை ஸ்வாமி மறுக்கிறார்.
ஒரு தனிப்பட்ட ஆத்மா, பரமாத்மா இரண்டுமே துல்யமாகப் புரிந்து கொள்ளப் படவேண்டும்.
அதன்பின், ஆத்மா, பரமாத்மா இரண்டைப் பற்றிய அறிவோடு ஒவ்வொருவரும் தந்தமக்குள்ள ஸமூஹ நிலை,
வகுப்புக்கேற்ப மனோபாவத்தோடு செயல் முறையில் ஈடுபட வேண்டும். இந்தச் செயல்பாடே பக்திக்கு வழி வகுக்கும்.

உலகம் முழுதுக்கும் மங்கள ஹேதுவானதால் வேதாந்தம் மக்களை முற்றும் துறத்தல் போன்ற தீவிர துறவு நிலைகளை
ஏற்கச் சொல்வதாக நினைக்கவில்லை. ப்ரத்யக்ஷ வாழ்வுக்கு ஒரு அர்த்தமும் இலக்குமுண்டு என்பதை மறக்கலாகாது.
ஒரு துறவிகூட, உலகியலில் உள்ள பிறர் வாழ்வோடு இயையாமல் இருக்க முடியாது.
சங்கரர் போன்றோர் உலகியல் ஜீவனத்துக்கு ஒரு ப்ரத்யக்ஷ வாழ்முறையும், ஆத்மோஜ்ஜீவனத்துக்கு பந்தங்கள் அறுபட்ட
இன்னொரு முறையையும் இருவேறு வாழ்வுகளாகக் கண்டனர்.
இதில் முன்னது தாழ்ந்த நிலை, பின்னது உயரிய நிலை என்று அபிப்ராயம்.

அசேஷ ஜகத் –நான்கு வித புருஷார்த்தங்களையும் -ஒன்றில் பற்று கொண்ட பலவகைப்பட்ட அதிகாரிகளும் –
ஹித அநு சாசன -ஹிதத்தை தெளிவாகவும் விவரமாகவும் சொல்லும் வேதங்கள்
முக் குணத்தவர்களுக்கும் வேதம் உபதேசிக்கும் –

ஸ்வாமி வாழ்க்கையை இப்படி இரு கோடுகள் போட்டுப் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை.
மாறாக, ப்ரத்யக்ஷ உலகியல் வாழ்வும், உஜ்ஜீவனம் தேடும் ஆன்மீக வாழ்வும் ஒன்றெனக் கருதினார்
பந்தங்களினின்று விடுபட ப்ரத்யக்ஷ வாழ்வை அவச்யம் விடவேண்டும் என்று அவர் கருதவில்லை.
மாறாக, இவ்வாழ்க்கையை வாழ்ந்தபடியே நம் லக்ஷ்யத்துக்குச் செயல்பட வேண்டும்.
ஒரு வேதாந்திக்கும் ஒரு ஞானமற்றவனுக்கும் உள்ள வேறுபாடு, மனத்தளவில் ஆனதே.
ஒரு வேதாந்தி ஆத்மா பரமாத்மா இரண்டையும் புரிந்து கொண்டு செயல்படுகிறார்,
ஒரு ஸாமான்யர் வெறும் உணர்ச்சிகள், ஆசைகள், குழப்பத்தோடு செயல்படுகிறார்.
ஆத்மா பரமாத்மாவைப் பற்றிய தெளிந்த சிந்தையோடு தார்மீகமாக இலக்கில் வாழ்க்கையை நடத்துபவர்க்கு தெய்வீகக் காதல்,
பக்தி தானே ஏற்பட்டு அவரை எம்பெருமானிடம் அழைத்துச் செல்கிறது. பக்தியே வேதாந்தத்தின் இறுதிச் செய்தி.

அபிசாராதி யாகங்களைச் செய்து நாளடைவில் புத்தி மாறி சாத்விகர்கள் ஆவரே
இவ்வாறு சகல ஜனங்களுக்கும் வேதம் வாத்சல்யம் காட்டி சுருதி –அழிவற்ற நித்ய அபவ்ருஷேயத்வத்தால் -சுடர் மிகு சுருதி –
சுருதி நிகரம் -வேத சமூகம் -சிரஸீ – வேதாந்தம் –
அயமர்த்த சமதி கத –சொல்ல இருக்கும் பொருள் நன்கு அறியப் படுகிறது –
இவை ஜீவ பரமாத்ம யாதாம்ய ஞான பூர்வக –சேஷி சேஷ சம்பந்த ஞானமும் சகலமும் ப்ரஹ்ம சரீரம் –
அவன் உள்ளே புகுந்து நியமிக்கிறார் என்ற ஞானமும் வருமே –
வர்ணாஸ்ரம தர்ம இதி கர்தவ்யதாக –யாதாம்யா ஞானத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும்
வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் கொண்டு -உபாசனம் –
த்யான அர்ச்சன ப்ரணாமங்கள் -செய்து ப்ரஹ்ம பிராப்தி அடைய உபதேசிக்கும் –
கர்ம அனுஷ்டானம் ப்ரஹ்ம உபாசன இச்சையைப் பிறப்பிக்கும் –
கர்ம யோகம் ஒன்றாலேயே – ஞான யோகம் ஒன்றாலேயே – ப்ரஹ்ம பிராப்தி என்பது ஸ்ரீ பாஷ்யகாரர் பக்ஷம் இல்லையே
நாம் செய்யும் கர்மயோகம் பகவத் ஆராதனம் ஆகும் -அதனால் ரஜஸ் தமஸ் அழிந்து சத்வம் வளர்ந்து பக்தி பிறந்து
பக்தி யோகமாக வளர்ந்து மோக்ஷ சாதனம் ஆகுமே –

எம்பெருமானின் திருவடித் தாமரைகளில் வைக்கும் ஈவிர உறுதியான அன்பே பக்தி.
இதுவே த்யானம், தொழுகை, ஸ்மரணம், கீர்த்தனம் என வெவ்வேறு நிலை அடைகிறது.
ஸ்வாமியின் திருவுளத்தில் அறியப்படாத் ஒன்றின்மேல் அறிவுணர்வின்றிச் செய்வது பக்தி அன்று.
ஞானியர் சிலர் பக்தி ஞானம் இரண்டும் வெவ்வேறு பாதைகள் போலக் காட்டினர். சிலர் தம் ப்ரத்யக்ஷ அநுபவத்திலிருந்து
பக்தியைவிட ஞாநமே உயர்ந்தது என்றும் கருதுவர். ஆனால் ஸ்வாமிக்கு பக்தி ஞானம் இரண்டும் ஒன்றே.
ஞானமே பக்தியாக முதிர்கிறது, அன்பே மேலும் அறிந்துகொள்ள உதவுகிறது.
ஆழ்ந்த அன்பு முதிர்ந்து தளைகளிலிருந்து விடுவித்து எம்பெருமானுடன் பிணைக்கிறது.

எம்பெருமானின் இணையடித் தாமரைகளை அடைவிக்கும் மங்களமே வேதாந்தம் சொல்லித்தரும் பாடம்.

பரம புருஷ சரண யுகள -“இணை யடித் தாமரைகள்” என்பதால் ஸ்வாமி ஆத்மா எம்பெருமானுக்கு சேஷப்பட்டவன் என உணர்த்துகிறார்.
எத்தடையுமின்றி எல்லா வகையிலும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வதே பந்தத்திலிருந்து விடுதலை.
அன்பின் மகிழ்ச்சி கைங்கர்யத்தில் உள்ளது. உகப்பைத் தருவது ஒன்றே நோக்காய்,
பிரதிபலன் எதிர்பாராமல் பிறர் மகிழ்ச்சிக்காகவே செய்யப்படும் பணியே கைங்கர்யம்.

ஈச்வரானுபவமானது அவனுக்கு அவன் உகக்கக் கைங்கர்யம் செய்யும் அவா மிகுதலே. கைங்கர்யம் என்பது கட்டாயத்தின் பேரிலன்று,
ஈச்வரானுபவத்தினாலே தானே கிளர்ந்தெழும் அவா. இக்கருத்துகளின் மூலம் ஸ்வாமி செயல்பாடு ஆன்மிகம் இரண்டையும் வெகு எளிதாகப் பிணைக்கிறார்.
ஒருவரின் செயல்பாடு அவரது ஞானம், அநுபவம் இரண்டினாலேயே அமைகிறது ஒருவரின் ஞானம் பிழையற வளர்க்கப்பட்டால்,
அவரது அநுபவமும் முழுக்க ஈச்வராநுபவமாயின் செயல்பாட்டுக்கு அஞ்சவோ அதைத் தள்ளவோ வேண்டா.
ஆகவே ஸ்வாமியின் திருவுள்ளப்படி பந்த ஜீவனத்தில் செயல்பாடோ அல்லது மோக்ஷமோ இரண்டிலுமே (கைங்கர்யமாகிற) செயல்பாடு
இருக்கவே செய்கிறது. கர்மம் இல்லாமல் இல்லை, செயல் இன்றி இருப்பதுமில்லை.

அத்யர்த்த ப்ரிய-பூர்வக த்யான அர்ச்சன பிரணாமாதிகள் -ஆதி சப்தம் -திரு நாம சங்கீர்த்தனம் -யஜனம் –
இவை அனைத்தும் பிரதிபந்தகங்களையும் போக்க வல்லவை –
தத் பிராப்தி பலம் -இவற்றுக்கு உண்டே

இந்த ஆரம்ப வாக்யங்களால் ஸ்வாமி ஆத்மா, இறைவன், பந்தம், மோக்ஷம், அன்பு, ஞானம், கர்மம் (செயல்பாடு), கைங்கர்யம்
ஆகிய யாவற்றையும் ஒரு கோப்புக்குள் கொணர்ந்து அவை ஒன்றுக்கொன்று
இயல்பாகத் தொடர்புடையவை என்பதை அழகாகக் காட்டுகிறார்.
ஆத்மாக்கள் சரீர பயத்தில் உள்ளன. தேவர், மனிதர், என்பன போன்ற உயிர் வாழிகளாய் சரீரத்தில் அவை படும் துயர்களால்
சரீரத்தை ஆத்மா என்று மயங்கியுள்ளன. இம்மயக்கமே எல்லாத் துன்பத்துக்கும் காரணம்.
சரீரத்தை ஆத்மா என்று மயங்குவதே சரீரம் எடுக்கவும் துயரப்படவும் ஹேது. துயரத்தால் பயம்.
வேதாந்த வாக்யங்கள் இவ் வச்சத்தைப் போக்குவதிலேயே உத்பத்தி ஆகின்றன.
அவை ஆத்மாவின் உண்மை சாரம்,
இறைவனின் உண்மை நிலை,
ஈச்வரனை வணங்கும் வகை,
ப்ரஹ்மத்தை உணர்வதின் பேரின்பம் இவற்றை அறிவுறுத்தி இவ்வச்சத்தைப் போக்குகின்றன.

அஸ்ய ஜீவாத்மா –பரமாத்மாவுக்கு சரீர பூதன் -சேஷ பூதன் -அவனில் வேறு பட்டவன் –
இத்தால் ஐக்கியம் மறுக்கப் படுகிறது

அநாதி அவித்யா சஞ்சித -என்று அவித்யை அடியாகவே சரீரம் -கர்ம ப்ரவாஹ ஹேதுக-ப்ரஹ்மாதி ஸூர நர ஸ்தாவராத்மக
சதுர்வித தேக பிரவேச க்ருத –தத் தத் ஆத்ம அபிமான ஜெனித அவர்ஜனீய பவ பய வித்வம்ஸனாய –
விலக்க முடியாத சம்சார பயத்தைப் போக்க
தேக வ்யதிரிக்த ஆத்ம ஸ்வரூப -ஞான ஆனந்த லக்ஷணம் -ஸ்வ பாவம் -அநந்யார்ஹ சேஷ பூதன்-என்பதை அறிந்து
தத் அந்தர்யாமி பரமாத்ம ஸ்வரூப -சர்வ சேஷி -ஸ்வ பாவம் -ஆஸ்ரித ஸூலபன் -சரணாகத வத்சலன் -என்பதையும் அறிந்து
தத் உபாசன -தத் பல பூத -ஆத்ம ஸ்வரூப ஆவிர்பாக பூர்வக
அனவதிக அதிசய ஆனந்த ப்ரஹ்ம அனுபவ ஞாபநே–அநு சாஸந -சப்தமும் ஞாபநே-சப்தமும் ஒன்றே –

ஸ்வாமி தொடங்கும் போதே வேதாந்தத்தின் நோக்கம் ஸர்வ ஜன சுகம் என்பதை விளக்கினார்.
வேதாந்தம் ஆத்ம ஞானத்தைப் போதித்து சரீர பயத்தையும் துயரத்தையும் நீக்குகிறது.
துயரத்தை மறுப்பதுமட்டுமன்று, பேரின்பத்தை அநுபவிப்பதும் வேதாந்தத்தின் பயனாகும்.

வேதாந்த வாக்யங்கள் யாவைக்கும் இதே நோக்கம் தான்.
1-“தத்வமஸி”,
2-“அயமாத்மா ப்ரஹ்ம”,
3-“ய ஆத்மனி திஷ்டன் நாத்மனோந்தரோ யமாத்மா ந வேத, யஸ்ய ஆத்மா சரீரம் ய ஆத்மாநமந்தரோ யமயதி ஸ த ஆத்மா அந்தர்யாம்யம்ருத:”,
4-“ஏஷ ஸர்வ பூதாந்தராத்மா அபஹதப் பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண:”,
5-“தமேதம் வேதா நு வசநேன ப்ராஹ்மணா விவிதிச்யந்தி யஞ்ஞேன தானேன தபஸா நாசகேன”,
6-“ப்ரஹ்ம விதாப்நோதி பரம்”,
7-“தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்யப் பந்தா அயநாய வித்யதே” என்பன சில இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.

இம்மேற்கோள்கள் வேதாந்தத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டு,
எந்த இடம் தொட்டாலும் இந்த தொனி வருமாறு அமைத்துள்ளார்.
சில பகுதிகள் எம்பெருமானும் ஆத்மாவும் ஒன்றென்னும், சில வேற்றுமையைப் பேசும்,
ஆனால் எம்பெருமானும் ஆத்மாவும் பரஸ்பரம் உறவுபட்டுள்ளதையே யாவும் காட்டும்.
யாவுமே இவ்வுலகியலில் மாறுவது போலத் தோன்றினும், ப்ரஹ்மத்தை உபாஸித்து வழிபட்டவனுக்கு
முடிவிலாப் பேரின்பம் என்றே காட்டும்.

வேதாந்த வாக்ய ஞானம் ப்ரவ்ருத்தம் ஹி
1-தத் த்வம் அஸி–நீயும் பர ப்ரஹ்மத்தையே ஆத்மாவாக உடையவன் ஆகிறாய்
இத்தால் ஜீவாத்மா பரமாத்மா பேதம் சித்திக்கும் -இத்தையே
2-அயமாத்மா ப்ரஹ்மம் –

3-யா ஆத்ம நி –அம்ருத –எந்த பர ப்ரஹ்மம் ஜீவாத்மாவுக்குள் இருப்பவன் ஆகிறானோ
யம் ஆத்மா ந வேத -எந்த பரமாத்மாவை ஜீவாத்மா அறிவது இல்லையோ
யஸ்ய ஆத்மா சரீரம் -எந்த பரமாத்மாவுக்கு ஜீவாத்மா உடல் ஆகிறதோ
ய ஆத்மாநம் அந்தர யமயதி–எந்த பரமாத்மா ஜீவாத்மாவை நியமிக்கிறானோ
ச அம்ருத -அந்த விகாரம் என்ற அந்தர்யாமி
தே ஆத்மா -உனக்கு ஆத்மா —இது கடக சுருதி

4-“ஏஷ ஸர்வ பூதாந்தராத்மா அபஹதப் பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண:”,–எல்லா பூதங்களுக்கும் அந்தராத்மாவாக
இருக்கும் இவன் கர்ம சம்பந்தம் அற்று திவ்யனாக பிரகாசிக்கும் ஸ்ரீ மன் நாராயணனே

5-“தமேதம் வேதா நு வசநேன –அத்தகைய இந்தப் பரமாத்மாவை ப்ராஹ்மணா -ப்ரஹ்ம வித்துக்கள்
விவிதிச்யந்தி -அறிய விரும்புகின்றனர் -எதனால் என்னில்
யஞ்ஞேன -பலனை எதிர்பார்க்காமல் செய்யும் வர்ணாஸ்ரம தர்ம யாகங்களாலும்
தானேன தபஸா நாசகேன”, -தானங்களாலும் அழியாத தபஸாலும்
இத்தால் வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானங்கள் உபாசன அங்கங்கள் என்றதாயிற்று

6-“ப்ரஹ்ம விதாப்நோதி பரம்”, –பரமபுருஷனை உபாசிப்பவன் அவனையே அடைகிறான் -உபாசனமே அவனை அடையும் சாதனம்
7-“தமேவம் வித்வான் -அவனை இவ்விதம் உபாசிப்பவனே
அம்ருத இஹ பவதி -முக்தனாகிறான்
நான்யப் பந்தா அயநாய வித்யதே” -பரமாத்மாவை அடைய வேறே வழி இல்லை

இத்யாதிகம் -இவை முதலானவற்றை உதாரணமாக காட்டி அருளுகிறார்
பேதம் உபாசிக்கும் சுருதிகள்-உபாசனமே உபாயம் போன்ற சுருதிகள் பலவும் உண்டே

——-

வேதங்களின் தாத்பர்யம் கூறிய பின், பகவத் ராமாநுஜர் அடுத்த இரு பத்திகளில்
ஆத்மா, பரமாத்மாக்களின் உண்மை இயல்பைக் கூறுகிறார்,

ஒரு தனி ஆத்மா, தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவரங்கள் என்னும் பிரகிருதியின் வெவ்வேறு பரிணாமங்களின்
வெவ்வேறு மாறுபாடுகளைப் பெற்றிருப்பதில்லை,
தனி ஆத்மாவானது ஞானம், ஆநந்தம் எனும் இரு குணங்களை மட்டுமே பெற்றுத் திகழ்கிறது.
சரீரத்தாலாகும் பேதங்கள் அழிந்த பின், ஓர் ஆத்மாவுக்கும் மற்றொரு ஆத்மாவுக்கும் உள்ள வேறுபாடு சொல்லால் விளக்க முடியாது,
அந்தந்த ஆத்மாவின் ஸ்வாநுபவத்தாலேயே வேறுபாடு அறிய முடியும்.
ஞானம் அல்லது உணர்வு என்பதே எல்லா ஆத்மாக்களுக்கும் அடிப்படை. இது எல்லா ஆத்மாக்களுக்கும் ஸமமானதே,
ஆசார்யர், ஆத்மா உடலினின்றும் வேறுபட்டது அதைவிட மேலானது என்கிறார்.
உடலையும் மற்றப் பொருள்களையும் செய்யும் பொருளால் ஆனதன்று ஆத்மா என்பதால் அதைப் போல்
எப்போதும் மாற்றமும் சிதைவும் அடையாதது. உணர்வே ஆத்மாவின் அடிப்படை, உணர்வும் ஆனந்தமுமே அதன் இயல்புகள்.
இந்த அடிப்படை ஞானம்/உணர்வு எல்லா ஆத்மாக்களுக்கும் ஸமமானது.
பந்தம் இந்த ஞான உணர்வை சுருக்கம் அல்லது விரிவு அடையச் செய்கிறது.
இதனால் ஒரு தாற்காலிக மாறுபாடு எழுகிறது. சரீரத்தாலுண்டான வேறுபாடுகள் அழிந்த பின் ஒன்றனுக்கும் மற்றதனுக்கும்
ஒரு வேறுபாடும் சொல்ல முடியாது. அவை யாவும் ஒரே மாதிரியான ஆத்மாக்களே,
அவரவர் தத்தம் அனுபவத்தாலேயே தம்மை உணரமுடியும்.

இந்த விவரணத்தால் சரீரமே நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆத்மா எனும் நாஸ்திக வாதம் மறுக்கப்பட்டது.
அடிப்படை ஞானம்/உணர்வு (ஸ்வருப/தர்மி ஞானம்), குணம் சார்ந்த உணர்வு/ஞானம் (தர்மபூத ஞானம்)
இவற்றின் வேறுபாடு விளக்கப்படுவதால்
ஆத்மா குணங்களற்ற ஞானம் மட்டுமே எனும் அத்வைதக் கோட்பாடு மறுக்கப்பட்டது,
ஆத்மாக்களில் அவற்றை வேறுபடுத்தும் அடிப்படை குணங்களுண்டென்பதும் மறுக்கப்பட்டது.

ஜீவாத்ம ஸ்வரூபம் –தேவாதி –பேத ரஹிதம்
ததாத்மா ப்ரக்ருதே சங்காத் அஹம் மாநாதி தூஷித
பஜதே பிராக்ருதான் தர்மான் அந்யஸ் தேப்யா அபிசோ அவ்யய –என்று
தேஹ சம்பந்தத்தால் தேஹாத்ம பிரமமும்-ஸ்வ தந்த்ர ஆத்ம பிரமமும் -போன்ற பிராகிருத தர்மங்கள் உண்டாகின்றன –
இவற்றை விட வேறுபட்டதே ஆத்மஸ்வரூபம்
புமாந் ந தேவோ ந நரோ ந பசு ந ச பாதப
சரீராக்ருதி பேதாஸ்து பூபைதே கர்ம யோநய–என்றும்
ஞான ஆனந்த மயஸ்த்வாத்மா சேஷோ ஹி பரமாத்மந –என்றும் உப ப்ரும்ஹணங்கள்
சேஷத்வத்தையும் -ஞான ஆனந்த மயத்தையும் சொல்லுமே
சரீரம் கழிந்த பின் -ஞான ஸ்வரூபம் இத்யே தாவதேவ நிர்த்தேசம்–தச்ச –சமானம் –ஞான ஸ்வரூபம் ஆத்மாக்களுக்கு எல்லாம் சமம்
ஸ்வரூபம் ஆவிர்பாவம் அடைந்ததும் -நாநா வித பேதங்களும் பாஹ்ய ஆந்திர பேதங்கள் போகுமே –

இவ்வண்டம் உணர்வுள்ள ஆத்மாக்கள், உணர்வற்ற பிரகிருதி இரண்டாலும் உருவாகியுள்ளது.
பகவான் அந்தர்யாமியாய் ஒவ்வொன்றினுள்ளும் உறைந்து நியமித்து நடத்துகிறான்.
பகவான் ஒருவனே அனைத்தையும் ஸ்ருஷ்டித்து, ரக்ஷித்து, லயம் அடைவித்து பந்தங்களிலிருந்து மோக்ஷம் தருகிறான்.
இறைவன் அளப்பரிய மங்கள குணங்களுடையவன், குறைகளுக்கு எதிர்த் தட்டானவன்,
இறைவனின் உண்மை இயல்பு தனித்வம் வாய்ந்தது, எத்தொடும் ஒப்பிட முடியாதது.
அவன் எண்ணற்ற மிக உயர்ந்த மங்கள குணங்களை உடையவன்.
வேதாந்தத்தில் அவன் ஸர்வாத்மா, பரம்ப்ரஹ்ம, பரம் ஜ்யோதி, பர தத்வம், பரமாத்மா, ஸத் எனப்படுகிறான்.
அவனே எல்லார்க்கும் மேலான பரமாத்மா நாராயணன்,
வேதங்களின் லக்ஷ்யம் அவன் புகழ் பாடுவதே,
பேத ச்ருதி அவன் தனி தனி ஆத்மாக்களில் உள்ளுறை நியந்தாவாக எல்லா அறிவுள்ள அறிவற்ற பொருள்களில் இருப்பதைப் பாடுகிறது,
அபேத ச்ருதியும் அவன் புகழைப் பாடுகிறது, ஸாமானாதிகரண்ய நியாயத்தால் அறிவுள்ளன, அறிவற்றன என்று வேறுபடுத்திப் பாடுகிறது,

பகவத் ராமாநுஜர் வேதாந்தத்தின் நோக்கம் எல்லார்க்கும் மிகப் பெரியனான எம்பெருமான் நாராயணனின்
பெருமையைப் பேசுதலே என்று வலியுறுத்துகிறார், “ப்ரஹ்மம்” என்ற சொல் தான் மிக உயர்ந்ததாய் இருந்துகொண்டு,
மிக்க உயர்வினை மற்றோர்க்கும் தர வல்லது எனும் பொருளை உடையது,

ஏவம் வித சித் அசித் ஆத்மக பிரபஞ்சஸ்ய-உத்பவ ஸ்திதி பிரளய சம்சார நிவர்த்தன ஏக ஹேது பூத
ஸமஸ்த ஹேய பிரத்யநீக
அனந்த கல்யாண குணாத்மக
சர்வாத்ம வேத்ய–சர்வாத்மா –பர ப்ரஹ்மம் -பரஞ்ஜோதிஸ்-பரமாத்மா –சத்
பகவன்–ஷட்வித குணாத்மகன்
உபாயவிபூதி நாதன்
நாராயணன்
புருஷோத்தமன்

பகவான் எல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டுத் திகழ்கிறான்.
மாயாவாதிகள் ப்ரஹ்மம் அடிப்படையில் ஆத்மா போன்றோனே என்கின்றனர், இக்கருத்து இங்கு மறுக்கப்படுகிறது.
பகவானின் உண்மை இயல்பு ஜீவாத்மா உட்பட எல்லாவற்றையும் கடந்தே நிற்கிறது.
கர்மத்தால் பிறப்பு இறப்பில் சிக்கியுள்ள ஆத்மா போலன்றி பகவானின் இயல்பு முற்றிலும் இக்குறைகள் ஒன்றுமின்றி உயர்ந்துள்ளது,
பகவான் கருணை, அழகு, பலம், முதலியவற்றால் எல்லை இல்லாதவனாக உள்ளான்.
வேதாந்தம் அவனை எல்லாரினும் மேம்பட்ட “பரம் ப்ரஹ்மம்” என்றும், எல்லா ஆத்மாக்களுக்கும் ஆத்மா என்பதால் “ஸர்வாத்மன்” என்றும்,
மிக மேலான ஒளி என்பதால் “பரம் ஜ்யோதி” என்றும், மேம்பட்ட உண்மை என்பதால் “பரம் தத்வம்” என்றும், “ஸத்” என்றும் பேசுகிறது.

வேதாந்தத்தில் உள்ள பாடல்கள் பேதம் அபேதம் என இருவகை ஆகும்.
பேத வாக்யங்கள் பகவானுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவாகக் கூறும்.
அவை அவனே உள்ளே எல்லார்க்கும் நியந்தா என்னும். மற்றவற்றை அவனது சக்திகள், வடிவங்கள், இயல்புகள்,
மனோ நிலைகள் ஐச்வர்யங்கள், உடல் என்னும். இவ்வாறாக, அவை அவன் எல்லாவற்றையும் நடத்தும்,
ஆளும் பெருமையைப் பேசுகின்றன. மற்றவை யாவும் அவனுக்குப் பரதந்த்ரமானவை அடங்கியவை, ஆளுகைக்குட்பட்டவை.
அவனே ஸ்ருஷ்டிக்கிறான், ரக்ஷிக்கிறான், சித் அசித் உருவான ப்ரபஞ்சம் முழுதும் தன் விருப்பப்படியே நடத்தி
ஆத்மாக்களைத் தளைகளிலிருந்து விடுவிப்பதும் செய்கிறான். வேதாந்திகளுக்கு இந்த மோக்ஷ ப்ரதத்வம் ஒரு முக்யமான விஷயம்,
இதுவும் அவன் கல்யாண குணம் ஆதலால்.

அபேத ச்ருதி வாக்யங்கள் ஆத்மாவை இறைவனிடமிருந்து பிரிக்க முடியாதவைகளாகக் காட்டும்.
இறைவனைப் பற்றிப் பேசும்போது அவை மற்றப் பொருள்களைக் குறிப்பிடும்போது ஸாமாநாதிகரண்யத்தைப் பயன்படுத்துகின்றன.
ஸாமாநாதிகரண்யமாவது சொற்களைப் பயன்படுத்தும் ஒரு விதம். எடுத்துக்காட்டாக,
“இந்தப் பறவை நீலமாக இருக்கிறது” என்பதில் நீலம் என்பது நிறத்தை மட்டுமே குறிக்கிறது
ஆனால், நீலப் பறவை என்பதில் நீலம் என்பது பறவையைக் குறிப்பதாகாது. அச்சொல், நீலமாய் உள்ள ஒரு பறவையைக் குறிக்கிறது.
நீலம் என்பது ஒரு இயல்பு, அதைக் குறிக்கிறது, இதே போலத் தான் வேதாந்தமும், இந்த உலகமே இறைவன்,
இறைவனே ஒவ்வோர் ஆத்மாவும் என்கிறது, அப்படிச் சொல்கையில்,
இவ்வுலகம் தானே இறைவன் என்றோ ஒவ்வோர் ஆத்மாவும் தானே இறைவன் என்றோ சொல்லாமல்,
அவற்றைத் தன் சரீரமாக இறைவன் கொண்டுள்ளான் என்றே உணர்த்துகிறது. பறவையும் நீலமும் பிரிக்க முடியாதாப் போலே
இவையும் இறைவனோடு உள்ளன. ஒன்றைச் சொல்லப் பயன்படும் சொல் மற்றதையும் குறிக்கும்.

தச் சக்தி –பரஸ்ய ப்ரஹ்மண சக்தி ததேததகிலம் ஜகத் -இந்த பிரபஞ்சம் எல்லாம் அவன் சக்தியே –
அவனுக்கு சரீரம் -உள்ளும் புறமும் வியாபித்துள்ளான்
தத் அம்ச –விஷ்ணோர் அம்ச த்விஜோத்தம –அவன் விசேஷ்யம் -பிரபஞ்சம் விசிஷ்டத்தின் அம்சம்
தத் விபூதி -விஷ்ணோ ரேதா விபூதய -அவனே நியமிப்பவன் -பிரபஞ்சம் நியாம்யம்
தத் ரூப -பரஸ்ய ப்ரஹ்மணோ ரூபம்
தத் சரீர -ஜகத் சர்வம் சரீரம் தே
தத் தநு –தாநி ஸர்வாணி தத் வபு -அனைத்தும் அவனது உடல்

இவ்வாறு பேத சுருதிகள்
சக்தி -அம்ச -விபூதி -ரூப – சரீர – தநு போன்றவற்றால் அந்தர்யாமி -நியமிப்பவன் சொல்வது போலே
அபேத சுருதிகள் நியமனத்தை சாமாநாதி கரண்யத்தால் காட்டும்

இறைவன் எல்லாங்கடந்து நிற்கும் ப்ரபாவத்தைச் சொல்வதே பேத ச்ருதியின் நோக்கமாகும்.
ஒவ்வொரு விஷயமும் இந்த மஹா தத்வத்தையே உள்ளடக்கியுள்ளது என்று விளக்குவதே அபேத ச்ருதியின் நோக்கமாகும்.

இவ்வாறாக இவ்விரண்டு வகைப்பட்ட வாக்யங்களும் ப்ரபஞ்சத்தை விளக்குவதில் ஒன்றுக்கொன்று சார்புள்ளனவாய் இருக்கின்றன.

ஒரு வகை வாக்யங்களை மட்டுமே கைக்கொண்டு அவையே முக்கியம் எனும் சிந்தனைப் போக்கு இவ்விஷயத்தை முற்றிலும் மறந்துவிட்டது,
வேதாந்தத்திலேயே ஒரு வகை வாக்யங்களை மட்டும் ஏற்று மற்றதைக் கைவிடும் போக்கே இல்லை.
அறிஞர்கள் சிலர் தமக்கு விருப்பமான சில வாக்யங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு,
மிக அல்ப அறிவு தருவன எனப் பிறவற்றைத் தள்ளி விட்டார்கள்.
பகவத் ராமாநுஜரோ வேதாந்தக் கோட்பாடுகளை முற்றிலும் உணர்ந்து அநுபவிக்க இருவகை வாக்யங்களும் தேவையே,
அவை முரண்பட்டவை அன்று. மாறாகத் தொடர்ச்சியான எல்லா வாக்யங்களையும் கோட்பாடுகளையும்
முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுவன என்று நிறுவி யருளினார்,

—————

மாறுபட்ட விளக்கங்கள்

வேதாந்தத்தின் உட்பொருளைச் சுருக்கமாக விளக்கியபின், ஸ்வாமி க்ரந்தத்தின் மீதியை இரு பகுதிகளாகப் பிரிக்கிறார்:
(1) பிற விளக்கங்களை ஆய்வது
(2) தம் கருத்தை எடுத்துரைப்பது.

1.முதலில் ஸ்ரீ சங்கரர் உள்பட வேறுபல அத்வைதிகளின் ஸித்தாந்தங்கள் கூறப்படுகின்றன,
2.இக் கோட்பாடுடையவர்கள், மேலுக்கு சப்பைக் கட்டாகச் சில கூறி ப்ரஹ்மத்துக்கும் ஜீவனுக்கும் வேறுபாடுகள்
பேசும் வாக்யங்களை முற்றாக விட்டு, ஒற்றுமை கூறும் ஸாமாநாதிகரண்ய ச்ருதிகளை மட்டும்
தங்களுக்கு ஆதரவாக காட்டுகிறார்கள்.
3.அவர்களுடைய முடிவுகள் இவ்வாறுள்ளன:

ப்ரஹ்மம் வெறும் ஞானமே. ப்ரஹ்மத்துக்கு குணங்கள் கிடையாது.
ப்ரஹ்மம் எக்காலத்தும் விடுதலை பெற்றிருக்கும், பிறிதொன்றைச் சாராமல் தானே தோன்றக்கூடியது (ஸ்வயம் ப்ரகாசம்).
ஆகிலும், தத்த்வமஸி போன்ற வாக்யங்களால் ப்ரஹ்மம் என்பது ஆத்மாவே (ஜீவாத்மா) என உணர வேண்டும்.
வேறு ஒரு வஸ்து இல்லாததால், அஞ்ஞானம், பந்தம், மோக்ஷம் யாவுமே இந்த ப்ரஹ்மத்தையே சாரும்.
சுத்த ஞான ஸ்வரூபமான ப்ரஹ்மம் மட்டுமே ஸத்யம். பிற யாவும் – ஆள்பவன் ஆளப்படுபவன் என உள்ள வேறுபாடுகள் – பொய்.
சில ஆத்மாக்கள் மோக்ஷமடைகின்றன, சில பந்தப்பட்டுள்ளன என்கிற அமைப்பு ஏற்கத்தக்கதன்று.
சில ஆத்மாக்கள் ஏற்கெனவே மோக்ஷமடைந்து விட்டன என்பது தவறு.
ஒரே ஒரு சரீரத்துக்கு மட்டுமே ஆத்மா உண்டு ஆனால் அது எந்த சரீரத்தில் உள்ளது என்பது எவருக்கும் தெரியாது.
வேத தாத்பர்யம் போதிக்கும் ஆசார்யர் மாயை, வேத அதிகாரி மாயை, வேதம் மாயை. வேதத்தால் அறியப்படும் வஸ்து மாயை.
மாயையாகிய வேதத்தை அறிந்தால் இவ்விஷயம் புலப்படும்.

அத்வைதிகள் ப்ரஹ்மத்துக்கும் ஆத்மாவுக்கும் ஐக்கியம் பேசும் வாக்யங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள்.
வேதாந்தம் முதலில் வேற்றுமையை உபதேசித்து விட்டு மறுப்பதாக கொள்கிறார்கள்.
ஆனால் ஏற்கெனவே அனுபவத்தால் நமக்குத் தெரிந்துள்ள வேறுபாட்டை மறுபடியும் கூறி
மறுக்க வேண்டிய நிர்பந்தம் வேதாந்தத்துக்கில்லை. நேர்பட மறுத்திருக்கலாம், அவ்வாறு மறுக்கவில்லை.
ப்ரஹ்மத்துக்கு குணங்கள், இயல்புகள் இல்லை, அது வெறும் உணர்வு மட்டுமே என அத்வைதிகள் நினைக்கிறார்கள்.
வேதாந்தம் ப்ரஹ்மத்தை ஸகுணமாகவும் நிர்குணமாகவும் பிரித்து அறிந்து கொள்ளக் கற்பிக்கவில்லை.
மேலும் இவர்கள் சொல்லும் வெறும் உணர்வு ரூபமாக அது ப்ரஹ்மத்தை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

குணமற்ற ப்ரஹ்மத்தை எல்லா உறவுகளுக்கும் வெளியில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
அது எப்போதும் ஸ்வதந்த்ரமாகவும், ஸ்வயம் ப்ரகாசமாயும் உள்ளது.
ஒரு ஆத்மாவின் முற்றிலும் அப்பழுக்கற்ற நிலையே ப்ரஹ்மம். ப்ரஹ்மம் தவிர வேறில்லாததால்,
பந்தம் மோக்ஷம் என்பன எல்லாவற்றையுமே அந்த ப்ரஹ்மம் ஒன்றே அநுபவிக்கிறது.
ப்ரஹ்மம் தவிர வேறொன்றில்லாததால் ஒரு ஆத்மா கட்டுண்டுள்ளது, மற்றொன்று மோக்ஷம் அடைந்துள்ளது,
அல்லது சில பெருமுனிவர்கள் மோக்ஷம் பெற்றனர் என்றெல்லாம் சொல்ல முடியாது.
அத்வைத ப்ரஹ்மத்துக்கு குணங்கள் இல்லை, மோக்ஷ தசையில் அது ஒன்றைத் தவிர வேறில்லை என்பதால்
எவருக்கும் மோக்ஷம் இல்லை. அல்லது ப்ரஹ்மமே ஏதோ ஒரு வடிவில் கட்டுண்டிருந்தது,
பிறகு மோக்ஷமடைந்தது எனல் ஆகும். ப்ரஹ்மத்தை நாம் நோக்கும் கோணத்தைப் பொறுத்தது இது.

மோக்ஷத்துக்கு வழியும் மாயையே
ப்ரபஞ்சம் முழுதும் மாயை. எனவே உண்மையில் வேறுபாடுகளில்லை, கற்கும் மாணவன் மாயை,
வேதமும் அதன் பொருளும் மாயை, கேட்பவன் கேள்வி ஞானம் மாயை, கற்பிப்பது கேட்பது கல்வியின் கருத்து யாவும் மாயை,
அத்வைதம் உணர்ந்த ஆசார்யருக்குக் கற்பிக்க ஏதுமில்லை ஏனெனில் அவருடைய ஆத்மாவைத் தவிர வேறில்லையே!
வேறுபாட்டைத் தவிர்க்க எல்லாக் கர்மங்களிலிருந்தும் ஸந்யஸித்தவர்,
இனி வாழ்நாள் முழுதும் குரு சிஷ்யன் எனும் த்வைதத்தையே (வேறுபாட்டையே) நினைத்து இருக்கவேண்டும்!

அத்வைதத்தை முறையாகக் கற்றபின், தனது அனுபவத்துக்கு வெளிப்படும் எல்லா சேதன அசேதன பொருட்களும்
மாயை எனும் நிலையில் வாழ வேண்டும். அப்போது தன்னுடைய சரீரம் மட்டுமே உணர்வோடுள்ளதாயும்
பிற யாவும் உணர்வற்றன என்றும் தோன்றும். ஒவ்வொரு அத்வைத சீடர்க்கும் இதே நிலை என்பதால்
ஒருவருக்கும் தம்மைத் தவிர பிறர்க்கு உணர்வுண்டு எனத்தோன்றாது.
எனக்கு நீ மாயை, உனக்கு நான் மாயை என்கிற வேடிக்கையான நிலைதான்.

இக்கால அத்வைதிகள் இம் முரண்பாட்டை ஒருவாறாக நிர்வஹிக்க எண்ணி, ஸத்யத்தை
‘வ்யாவஹாரிகம்’, ‘பாரமார்த்திகம்’ என்று இரு நிலைகளில் எப்போதும் வழங்குகிறார்கள்.
இது வெறும் சொல் விளையாட்டே. குணங்கள் ஏதும் இல்லாத வஸ்து ஸத்யமாகக் கூட இருக்க முடியாது.
ஸத்யம் என்பதே அனுபவத்தால் உணரப்படும் ஒரு பண்பு தான். அது ஸத்யம்-பொய் என்கிற இரட்டையைச் சேர்ந்தது தானே!
குணங்கள், வேறுபாடுகள், இரட்டைகள் – இவற்றைக் கடந்த தத்துவம் ஸத்யத்தையும் கடந்து ஸத்யமாகக் கூட விளங்க முடியாது.

ஸத்யத்தின் நிலைகள் எவ்வாறு தாங்கப்படுகின்றன? வ்யாவஹாரிக நிலையில் தான் தாங்கப்படுகின்றனவாயின்,
அந்த நிலையைப் பொய்யென்னும் போது ப்ரஹ்மமும் பொய் என்று வழங்க வேண்டி வரும்.
பாரமார்த்திக நிலையிலும் பொருந்தாது; அங்கு தான் வேறுபாடுகளே இல்லையே!
அப்போது, இவ்விரு சாத்தியங்களைத் தாங்க வேறொரு ஸத்யம் தேவைப்படுகிறது. இது முரண்.

இதே போல், அறிவு என்பதும் அறிவு-அறியாமை என்னும் இரட்டையைச் சார்ந்ததே.
எல்லையின்மையும் எல்லையுடைமை-எல்லையின்மை என்னும் இரட்டையைச் சார்ந்தது.
எல்லா வேறுபாடுகளையும் கடந்த தத்துவம் அறிவாகவும் எல்லையற்றதாகவும் இருக்க முடியாது.
அத்வைதிகள் குணங்களை மறுத்து விட்டு, ஒரு சில வேறுபாடுகளை மட்டும் இசைகிறார்கள். இதுவும் முரண்.
அறிவில்லாத பொருளல்லாதது அறிவுள்ள பொருள் தான். எல்லைப்படும் பொருளல்லாதது, எல்லையில்லாதது தான்.
ஒன்றை இல்லை செய்வதால், இரட்டையின் மற்றொன்றே நிலை நிறுத்தப் படுகிறது.
குணமில்லாத ப்ரஹ்மம் யார் அறிவுக்கும் எட்டாத ஒரு கற்பனைப் பொருள் ஆகிறது.
அத்வைத ப்ரஹ்மமே மிகப் பெரிய மாயை.

உப்பு எப்படி உள்ளும் புறமும் உப்பாகவே இருக்குமே அப்படியே ஜகத்தும் ப்ரஹ்மமும்
விஜாதீயம் -சஜாதீயம் -ஸூவகதம் -மூன்று வித பேதங்களும் இல்லை
ப்ரஹ்மம் -பந்தம் அற்று ஸ்வயம் பிரகாசமாய் இருந்தாலும் -அவித்யையால் -அஞ்ஞானத்தால் -மறைக்கப்பட்டுள்ளது
தத்வமஸி -வாக்கியம் ஐக்யத்தையே சொல்லும்
பத்தன் முக்தன் என்ற பேதமும் இல்லை -அது போன்ற வ்யவஸ்தையே கிடையாது -ஜீவ பேதம் ஒத்துக் கொள்ளாதவர்கள் அன்றோ
ஒரே ஒரு சரீரமே ஜீவனைக் கொண்டது -மற்றவை எல்லாம் மாயை –
ஞான உபதேசம் செய்யும் ஆச்சார்யனும் பொய்-சாஸ்திரமும் பொய் -அதைக் கேட்க்கும் சிஷ்யனும் பொய் –
சாஸ்த்ரத்தால் உண்டாகும் ஞானமும் பொய் –
இத்துணை பொய்க் கற்பனைகள்

———————

பாஸ்கரரின் பேதாபேதம் சுருக்கமாகச் சொல்லப் படுகிறது.
ப்ரஹ்மம் குறைகளற்றதாய்ச் சொல்லபட்டாலும், ஆத்மாவோடு ஒற்றுமை ‘தத்வமஸி’ போன்ற வாக்கியங்கள் சொல்வதால்,
ப்ரஹ்மமே சில காரணங்களால் ஆத்மாவாக மாறி மாற்றமும் துன்பமும் அடைகிறது. அதனால் பந்த மோக்ஷங்களுக்கு ஆளாகிறது.
அத்வைத மாயை ஸித்தாந்தத்தில் உள்ள முரண்களை பாஸ்கரர் நன்குணர்ந்திருந்தார்.
ஆகையால் உண்மையான காரணங்களால் ப்ரஹ்மத்தின் மாறுதலை விளக்கினார்.
இவர் கொள்கையில் மாயையால் வரும் குறைகள் இல்லையே ஆகிலும்,
ப்ரஹ்மத்துக்கு தோஷங்களை நிரூபிக்கும் குறை உண்டு.

ப்ரஹ்மம் நிர்விசேஷம் இல்லை
ப்ரஹ்மத்தைக் காட்டிலும் விஜாதீய சஜாதீய ஸூவகத பேதங்கள் உண்டு
ப்ரஹ்மம் கர்ம பந்தம் அற்றது
ஸமஸ்த கல்யாண குணாத்மகன் –
ஆனால் தத்வமஸி போன்ற சுருதி வாக்யங்களுக்கு நிர்வாகம் செய்ய முடியாமல் உபாதி-என்ற ஒன்றைக் கற்பித்து
இந்த உபாதி சம்பந்தத்தால் ப்ரஹ்மம் சம்சார பந்த மோக்ஷங்களுக்கும் தோஷ ரூபமான விகாரங்களுக்கும்
ஆஸ்பதம் ஆகின்றது என்பர்

————

யாதவப்ரகாசர் மதம் விவரிக்கப்படுகிறது,
இவரும் மேற்சொன்ன பிறரைப் போல் ஐக்கியம் பேசும் சொற்களால் மயங்குகிறார்.
இவர் கொள்கையில், ப்ரஹ்மம் உயர் பண்புகளுடையது ஆகிலும், ஆத்மாவாகி தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவரமாகி
ஸ்வர்க்க நரகாதிகளை அநுபவித்து பின் மோக்ஷமடைவதாகச் சொல்லப் படுகிறது.
ப்ரஹ்மத்தின் ஸ்வபாவமே மற்றத்தினின்றும் வேறுபட்டும், ஒருபடிப்பட்டும் இருப்பதாகும்.
ப்ரஹ்மம் ஆகாசம் போன்றவற்றுக்குத் தக்க விகாரம் அடையும்.

பாஸ்கரரின் மதத்தில் ப்ரஹ்மம் சில காரணிகளால் பாதிக்கப் படுகிறது.
இவை ப்ரஹ்மத்துக்குப் புறம்பானவையா? அல்லது உட்பட்டவையா? என்னும் கேள்வி பிறக்கிறது.
புறம்பானவை என்றே கொள்ள வேண்டும். ஆயின், ப்ரஹ்மத்தைக்காட்டிலும் வேறுபட்ட, அதைவிட உயர்வான
தத்துவம் உண்டு என்றாகி விடுகிறது. இக்குறையைக் களைய
யாதவப்பிரகாசர், ப்ரஹ்மம் தன் ஸ்வபாவத்தாலேயே மாறுதலுறுகிறது,
வெளிக் காரணிகளால் அல்ல என்று கூறுகிறார்.

சேதன அசேதன வஸ்துக்களில் அபேதம் ஸ்வாபாவிகமாக இருப்பது போல் பேதமும் ஸ்வாபாவிகமே-என்பர்
ப்ரஹ்மம் எவ்வித உபாதி இல்லாமல் சித் அசித் ஈஸ்வரன் -என்று மூன்றாகப் பரிணமிக்கிறது –
ஆகவே இம் மூன்று தத்துவங்களும் ஸத்யமே
இவர்களும் ஐக்கிய வாதிகளே –
ப்ரஹ்மம் ஸ்வாபாவிக கல்யாண குணாத்மகனே -முக்குணங்கள் அளவற்ற மேன்மையுடையவையே –
எண்ணிக்கை அற்றவை -மிக உயர்ந்தவையே –
அந்த ப்ரஹ்மமே தேவாதி ரூபமாயும் சுவர்க்கம் நரகம் மோக்ஷம் இவற்றில் இருக்கும் ஆத்மாக்களாயும்
இருக்கும் ஸ்வ பாவத்தை உடையது
ஸ்வ பாவத்தால் இவற்றை விட வேறு பட்டு உள்ளதாகிலும் ஆகாசாதி தோஷ ரூபங்களான விகாரங்களுக்கும்
ஆஸ்பதம் ஆகிறது -என்பர்

——————

அத்வைதக் கொள்கை முதல் யாதவப் பிரகாசர் கொள்கை வரை சிந்தனையின் ஒரு விதமான போக்கு உணர முடிகிறது.
ப்ரஹ்மத்தைக் குறைகளினின்றும் காப்பாற்ற அத்வைதிகள் மாயையைப் பயன் படுத்துகிறார்கள்.
ஆனால் இது பல முரண்பாடுகளுக்கு இடமளிக்கிறது.
பாஸ்கரர் முரணில்லாத கொள்கை வகுக்க, ப்ரஹ்மத்துக்கு வெளியில் சில காரணங்களைக் கொள்கிறார்.
இதனால், உண்மையில் ப்ரஹ்மம் சிறிது மாசுபடுகிறது.
யாதவ பிரகாசர் பாஸ்கரரின் கொள்கையில் உள்ள சில முரண்பாடுகளைக் களைய
அக் காரணங்களும் ப்ரஹ்மத்தின் ஸ்வபாவத்திலேயே இருப்பதாகக் கல்பித்து,
ப்ரஹ்மத்தைக் குறைகளுக்கு இருப்பிடமாகவே மாற்றி விடுகிறார்!
முரண் பிறவாமல் கொள்கை வகுத்தலும்,
வேதாந்தங்களுக்கு இசைந்த ப்ரஹ்மத்தின் பெருமை உரைத்தலும்
மிகக் கடினமான காரியங்களாக தோன்றுகின்றன.

————-

வேதங்களின் உட்பொருள் உணர்தல்
அத்வைத விமர்சம்
இனி அத்வைத விமர்சமும், அதன் பின் பேதாபேத தத்வத்தின் இரு வகுப்பார் பற்றிய விமர்சங்களும் தொடரும்.
முதலில் அத்வைதம் பற்றித் தரப்படும் விளக்கங்களுக்கு மிக்க எச்சரிக்கையோடு
அறிஞர்கள் அதிலுள்ள கஷ்டங்களைத் தெரிவிக்கிறார்கள்.

சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -என்று அருணர் ஸ்வதேகேதுவுக்கு உபதேசம் தொடக்கம்
தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இதி–இது முதல் சங்கல்பம் – சமஷ்டி ஸ்ருஷ்ட்டி இது –
சேயம் தேவத ஐஷத ஹந்தாஹம் இமா திஸ்ர தேவதா -அநேந ஜீவேந ஆத்மநா அநு ப்ரவிஸ்ய
நாம ரூபே வ்யாவகராணி–இது அடுத்த சங்கல்பம்
தேஜஸ் அப்பு அன்னம் -மூன்றின் அபிமான தேவதைகளை சரீரங்களாகக் கொண்டு அவற்றுள் புகுந்து
நாம ரூபங்கள் கொடுத்து -இது வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி –
அடுத்து சத் மூலா சோம்ய இமா பிரஜா –என்று அவனே ஸமஸ்த ஜகத்துக்கும் ஸர்வவித காரணம் –
ஆத்மாவாக உடையவை -லயத்தையும் உடையவை என்றும் உபதேசித்து
கடைசியில் -ஐததாத்ம்யம் இதம் சர்வம் -தத் சத்யம் ச ஆத்மா தத்வமஸி ஸ்வேதகேதோ -என்று
சத்தான ப்ரஹ்மமே சேதன அசேதனங்களை வியாபித்து ஆத்மாவாக உடைத்து –
அதே ப்ரஹ்மம் தான் நீயும் என்று தானே உபதேசம் –

“தத்த்வமஸி”யில் உள்ள “தத்” எனும் சொல் ப்ரஹ்மனைக் குறிக்கும்.
இந்த வாக்கியம் ப்ரஹ்மமே ஜகத் ஸ்ருஷ்டி, ரக்ஷணம், ஸம்ஹாரம் மூன்றையும் ஸங்கல்ப மாத்ரத்தால்
செய்ய வல்லது என்று கூறும் கட்டத்தில் வருகிறது.
“ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய” (அந்த ப்ரஹ்மம் தான் பலவாக ஸங்கல்பித்தது, என்று தொடங்கி)
முதல் “ஸந் மூல: ஸோம் யே மா ஸர்வா: ப்ரஜா: ஸதாயதனா: ஸத் ப்ரதிஷ்டா:” என்று முடிகிறது.
இந்த உலகம் முழுதும் ப்ரஹ்மத்தை மூலமாகவும், இருப்பிடமாகவும், அடிப்படையாகவும் கொண்டுள்ளது என்று பொருள்.

அத்வைதிகள் ப்ரஹ்மம் நிர்விசேஷம் என்பது பொருந்தாதே
ஜகத் காரண சுருதிகள் பலவற்றிலும் -அகில ஹேய பிரத்ய நீக ஸமஸ்த கல்யாண குணாத்மகன் -சர்வஞ்ஞன் –
சர்வசக்தன் -ஸமஸ்த இதர வஸ்து விலக்ஷணன் -ஓத்தார் மிக்கார் இலையாயவன் -ஸத்ய ஸங்கல்பன் –
போன்றவற்றைச் சொல்லுமே –
ப்ரஹ்மன் ஸர்வ வ்யாபி, ஸர்வ சக்தன், ஸர்வஜ்ஞன், எல்லாவற்றையும் தன் இயல்வாக உடையவன்,
தனக்கு நிகரோ தன்னை விஞ்சியவனோ அற்றவன், ஸ்வயம் பரிபூர்ணன், ஸத்ய ஸங்கல்பன் என்கின்றன,
இவ்வாக்கியங்கள் கூறும் ப்ரஹ்மன் அனந்த கல்யாண குணங்கள் நிரம்பியவர்.
“அபஹதபாப்மா” போன்ற சொற்கள் இவர் அப்பழுக்கற்றவர் என நமக்கு அறிவுறுத்துகின்றன,
இவை அத்வைத நிலைப்பாட்டுக்கு ஒவ்வா

அத்வைதத்தின் நிலைப்பாடு வேத அபிப்ராயங்களோடு முரண்படுகின்றது மூன்று வழிகளில்:
1. தத்த்வமஸி என்பது ப்ரஹ்மத்துக்கும் உலகுக்கும் உள்ள காரண கார்ய உறவைக் குறிப்பதே தவிர,
தனி ஆத்மா பரமாத்மாவின் ஐக்யத்தைக் குறிப்பதன்று.
2. ப்ரஹ்மன் நிர்குணன் எனும் கருத்து வேதங்களில் உள்ள ப்ரஹ்மத்தின் எண்ணற்ற கல்யாண குணங்களைப் பற்றிய
வாக்கியங்களைப் பொருளற்றதாக்கி விடும்.
3. ப்ரஹ்மன் குறைகளற்றவன் எனும் வேதத்தின் கருத்தை, ப்ரஹ்மனும் ஆத்மாவும் ஒன்றெனும் வாதம் பொருளற்றதாக்கி விடும்,
ஏனெனில் ஆத்மாவுக்குள்ள அளவற்ற குறைகளை ப்ரஹ்மன் மீது ஏற்றிவிடும்.

இந்த ஸ்ருதிகளுக்கு -அத்வைத வாதம்
ஒன்றை அறிவதன் மூலம் யாவற்றையும் அறிய முடியும் என இவ்விஷயம் தொடங்கிற்று.
மண், குடம் எனும் எடுத்துக்காட்டுகளால் காரணமே மெய், பிற விளைவுகள், மாறுதல்கள் உண்மையல்ல.
காரண ப்ரஹ்மம் உள்ளும் புறமும் எல்லா வேறுபாடுகளும் அற்றதாக,
“ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம்” எனும்
வாக்யத்தால் சொல்லப்பட்டது.
அதாவது, முதலில் ஸத் மட்டுமே இருந்தது, அதற்கு இரண்டாவதாக ஒன்றில்லை என்பது இதன் பொருள்.
“ஸத்யம் ஞாநம் அநந்தம் ப்ரஹ்ம”, “நிஷ்கலம்”,”நிஷ்க்ரியம்”, “நிர்குணம்”, “நிரஞ்சனம்”, “விஞ்ஞானம்”, “ஆனந்தம்”
ஆகிய யாவும் ப்ரஹ்மம் ஒரு குணமுமற்றது என்பதையே வலியுறுத்துகின்றன,

ஸத்யம் ஆனந்தம், எல்லையற்றது என்பன குணங்களற்ற ப்ரஹ்மத்தைக் குறிக்குமாயின் இவை யாவும்
ஒரே பொருள் கொண்ட பல சொற்கள் எனும் அபத்தம் உண்டாகும்.
இச்சொற்கள் யாவும் உடன்பாடாக வன்று, எதிர்மறையாக,
மாறுபாட்டை மறுப்பனவாக அர்த்தம் கொள்ளப்பட வேண்டும்.
ஸத்யம் என்பது ப்ரஹ்மம் பொய் அன்று என உணர்த்துகிறது.
எல்லையற்றது என்பது ப்ரஹ்மம் எல்லைகளுக்குட்பட்டது அன்று என உணர்த்தும்.
இவை யாவும் ஒரோ குணத்தை மறுப்பதற்காகவே கொள்ளப் பட வேண்டும்.

அத்வைதி இவ்விஷயத்தில் காரண தத்துவத்தை ஒப்புக்கொண்டு விளக்க முயற்சி செய்கிறார்.
ஆனால் இம்முயற்சியில் அவர் காரணம் மட்டுமே உண்மை
காரியம் உண்மையன்று என்றொரு கருத்தை முன் வைக்கிறார்.
இவ் விளக்கத்தின் படி அவர் இவ்வுலகம் முழுதும் உண்மையன்று, வேறுபாடுகள், குணங்கள் உண்மையல்ல என்கிறார்.
ப்ரஹ்மம் பற்றி உடன்பாடாக ஏதும் சொல்ல முடியாது, வேதத்தில் வரும் உடன்பாட்டு வாக்கியங்கள்
அவை சொல்லும் குணங்களுக்கு மாறுபாடான பொருள் உணர்த்துவதாகக் கொள்ள வேண்டும் என்கிறார்.
அதாவது -ப்ரஹ்மம் அஸத்யம் அன்று அஞ்ஞானம் அன்று என்பதைச் சொல்ல வந்ததே என்பர்

இதற்கு இராமானுசரின் விடை-

சதேவ சோம்ய- இத்யாதி -காரண வாக்கியங்கள் -ஜகத் காரணத்வத்தை சொல்லும்
அவி விபக்த நாம ரூபம் -ஆகவே சத்தாகவே ப்ரஹ்மம் இருந்தது என்கிறது-
சத்யம் ஞானம் அநந்தம் போன்ற -சோதக வாக்கியங்கள் ப்ரஹ்மத்தின் இதர ஸ்வபாவ விசேஷங்களைச் சொல்லும் –
அத்வைதியின் காரணமே உண்மை, விளைவு/கார்யம் உண்மையன்று என்பது ஆதாரமற்றது,
ப்ரஹ்மத்தை (காரணம்) அறிவதன் மூலம் எதையும் (கார்யம்/விளைவு) அறியலாம் எனும் கூற்றுக்கு முரணானது.

(1) விளைவுகள் உண்மை அல்லனவாகில் அவற்றை அறிந்து பயனில்லை,
(2) உண்மையை அறிந்து கொள்வதன் மூலம் உண்மை அல்லாதவற்றை அறிய முடியும் என்பது தர்க்க பூர்வமானதன்று,
உண்மை, உண்மை-அற்றது இவ்விரண்டுக்கும் ஸாம்யமில்லை.

இந்த வேத வாக்கியத்தை சரியான முறையில் புரிந்து கொள்ள ப்ரஹ்மமே
எல்லாவற்றுக்கும் ஆத்மா என்பதை ஏற்க வேண்டும்.

விளைவுகள் உண்மையல்ல எனும் அத்வைத வாதத்தை ஆசிரியர் மறுக்கிறார்.
“ப்ரஹ்மம் ஒன்றை அறிவதன் மூலம் எல்லாம் அறியப்படுகின்றன என்பது காரணத்தை அறிவதன் மூலம்
விளைவை அறியலாம் “ என்பதை மறுப்பதாய் உள்ளது என்கிறார்.

விளைவுகள் உண்மை அல்ல எனில், அவற்றை அறியத் தேவையே இல்லை, ஏனெனில் அவை இல்லை!
உண்மையில் இல்லாத ஒன்றை ஒருவர் எப்படி அறிய முடியும்? உள்ளதும் இல்லாததும் ஒன்றோடொன்று
ஏதோ ஒருவகையில் தொடர்பு படாவிடில் அவை பற்றிய உண்மை அறிவு எப்படி ஏற்பட முடியும்?
உண்மை, பொய் இரண்டுக்கும் ஓர் உடன்மறையான தொடர்புண்டு என்பது தர்க்கத்துக்கு மாறானது.

இவ்வாக்கியத்துக்குச் சரியான விளக்கம், குடம் போன்றவற்றுக்கு மண் போல ப்ரஹ்மம் யாவற்றுக்கும்
அந்தராத்மாவும் உட்பொருளுமாகும் என்பதே. காரணம், விளைவு இரண்டும் உண்மைகளே.
இதை ஏற்றுக்கொண்டால், ப்ரஹ்மம் உலகுக்கு அந்தராத்மா என்பது பொருந்தும்.

ஏக விஞ்ஞாநேந சர்வ அபாவ ஞானம் இல்லையே -ஒன்றை அறிந்து மற்ற சகலமும் இல்லை என்றா அறிகிறோம் என்பது இல்லையே
ஏக விஞ்ஞானம் சர்வ ஞானம் என்று அன்றோ உள்ளது
அபி து ஏக விஞ்ஞாநேந -ப்ரஹ்மம் ஒன்றே -அதை ஆத்மாவாகக் கொண்டது பிரபஞ்சம் -என்பதை ஒத்துக் கொண்டு
ஒன்றான ப்ரஹ்மத்தை அறிந்ததாலேயே அத்தை ஆத்மாவாகக் கொண்ட மற்றத்தை எல்லாம் அறிந்ததாகுமே -என்று
அனைத்து ஞானங்களுக்கும் ஒப்புமை விளக்கப்பட்டதாகுமே

ச்வேதகேதுவின் தந்தை தம் மகனைக் கேட்டார் ”நீ த்ருப்தனாயும் கர்வத்தோடும் காணப் படுகிறாய்.
நீ அந்தக் கட்டளை(ஆதேசம்)யையும் அறிந்துகொண்டாயா? ஆதேசம் பற்றி ஆசார்யர்களைக் கேட்டாயா?”.
ஆதேசம் என்பது எல்லாவற்றையும் கட்டுப் படுத்துவது. கட்டளை எனலாம். ப்ரஹ்மமே ஆதேசம்.
ஏனெனில் அதுவே உலகைக் கட்டுப்படுத்துகிறது. அவனே, “ப்ரசாஸிதாரம் ஸர்வேஷாம்” எல்லாவற்றுக்கும் தலைவன்.
“ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸானே கார்கி சூர்யா சந்த்ர மாஸௌ வித்ருதௌ திஷ்டத:”.
கார்கி! இந்த அழிக்கமுடியாத தலைவனின் ஆதரவில் ஸூர்யனும் சந்த்ரனும் நிற்கின்றனர்.
“ஏகமேவ அத்விதீயம்” என்பதில் ஏகம் என்பது உலகுக்கு அது ஒன்றே காரணம் என்பது,
அத்விதீயம் என்பதில் உலகுக்கு ப்ரஹ்மம் தவிர மற்றொரு காரணம் இல்லை என்பதும் தெளிவு,

மேலும் தந்தை உத்தாலகர் ச்வேதகேதுவைக் கேட்கிறார் ”இவ்வுலகுக்கு மூலப் பொருளான தலைவனைப் பற்றி அறிந்தாயா?
அந்த ப்ரஹ்மனைப் பற்றிக் கேட்டால், கேளாதன எல்லாம் கேட்டதாகும். அவனை நினைத்தால் நினையாதன எல்லாம் நினைத்ததாகும்.
அவனை அறிந்துகொண்டால் அறியாதன எல்லாம் அறிந்தன ஆகும்.

உலகுக்கு மூலமும், உட்பொருளும், உலகின் அழிவுக்குக் காரணமும். எங்கும் நிறைந்ததும் பரிபூர்ணமானதும்
எல்லைகளற்றதும் ஸத்ய ஸங்கல்பனும் அளவற்ற கல்யாண குணங்களுள்ளவனும் ஆன ப்ரஹ்மனை
ச்வேதகேது அறிந்துகொண்டானா என அறிவதே தந்தையின் நோக்கம்.

ஆதேச –ஆ உபசர்க்கம் -திச்–வினைச்சொல் -நியமனம் பொருள் –
ஆதிச்யதே அநேந இத் யாதசே-உலகம் முழுவதும் ப்ரஹ்மத்தால் நியமிக்கப் படுவதால் ஆதேச -என்று ப்ரஹ்மத்தையே சொல்லும்
இதுவே -ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய -ப்ருஹதாரண்யம் -என்றும்
பிரசாசிதாரம் ஸர்வேஷாம் -மனு ஸ்ம்ருதி
மேலும் ஏகமேவ -ப்ரஹ்மம் ஒன்றே ஜகத் காரணம் என்றும்
அத்விதீயம் -என்று ப்ரஹ்மமே நியமிப்பவன் என்றும் சொல்வதையே ஆதேச என்கிறது
மேலும் -யேந அச்ருதம் ச்ருதம் பவதி –என்று எதனுடைய இருப்பால்-என்று கொள்ளாமல்
எதனை அறிந்தால் -என்று கொண்டு – கேட்கப்படாததவை கேட்க்கப்படுமோ
இதுவே ப்ரஹ்மத்தை அறிந்தால் அதன் தோற்றங்கள் விகாரங்கள் எல்லாம் அறியப் படும் என்றதாயிற்று
இந்த கருத்தையே -கஸ்மின் நு கலு விஞ்ஞாதே ஸர்வமிதம் விஞ்ஞாதம் பவதி -என்று சொல்லும்
ஆகவே உததம் ஆதேச அப்ராஷ்ய–என்ற வாக்யத்துக்கு
ஸமஸ்தத்துக்கும் சகல காரணமாய் -அதற்கு இன்றியமையாத சர்வஞ்ஞத்வம் சர்வசக்தித்வம் போன்ற
ஸமஸ்த கல்யாண குணாத்மகனான ப்ரஹ்மத்தைப் பற்றிக் கேட்டாயா -என்பதே கேள்வி -என்றதாயிற்று –

ப்ரஹ்மனே வெவ்வேறு வடிவங்களில் மாறுபாடுகளில் விளைவுகளாய்க் காணப்படும் எல்லாவற்றுக்கும் காரணம்,
அறிவுள்ள அறிவற்றன யாவற்றையும் தன் உடலாயும் ஸூக்ஷ்ம நிலையில் யாவற்றிலும் தானேயுள்ள ப்ரஹ்மனே அனைத்தையும்
ஸ்தூல வடிவாகக் கொண்டுள்ளான் என்பதால் ப்ரஹ்மனை அறிவதால் அனைத்தையும் அறிந்ததாகும்,
அவனைப் பற்றிக் கேட்டால் அனைத்தையும் கேட்டதாகும் என உத்தாலகர் கூறுகிறார்.

ஆனால் விவரமறியாத பிள்ளை ச்வேதகேது, தந்தையின் உட்கருத்தை அறிந்திலன், ப்ரஹ்மனிலிருந்து வேறான உலகத்தை
ப்ரஹ்மனை அறிவதின் மூலம் எவ்வாறு அறிய முடியும் என அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
எனவே, “மரியாதைக்குரிய தந்தையே! ஆதேசம் என்பது என்ன” என்று கேட்கிறான்.

தந்தைக்குக் காரணம் விளைவு (கார்யம்) இரண்டில் வேறுபாடில்லை என்பது தெரியும்.
ப்ரஹ்மனில் ஸூக்ஷ்ம வடிவிலுள்ளவ சேதன அசேதனங்களே ஸ்தூல வடிவெடுக்கின்றன.
எல்லா அறிவுள்ள அறிவற்ற பொருள்களும் ப்ரஹ்மத்தின் உடலே. சரீரமே.
இவ்வுலகின் உயிராய் ஆத்மாவாய் இருப்பவன் நியாமகன் ஆதேசம் ஆக்குபவன் ப்ரஹ்மனே.
அவனே அனைத்துக்கும் நியந்தா.

தந்தை தம் மனத்தில் உள்ளதைத் தம் மகனுக்குத் தெளிவுபடுத்த முற்படுகிறார்.
ப்ரஹ்மத்தின் உண்மை இயல்வானது உணர்வு மயமாயிருப்பது, அளவற்ற பெருமையுடனிருப்பது.
அது உண்மை போன்ற அளவிறந்த மங்கள குணங்களுக்கு இருப்பிடம், அது எவ்வித மாறுதல்களுக்கும் உட்படாதது.
பெயர்கள் வடிவங்களற்ற அறிவுள்ள, அறிவற்ற சேதன அசேதனங்களை அவற்றின் ஸூக்ஷ்ம நிலையில் அது தன் சரீரமாகக் கொண்டுள்ளது,
தனது லீலையில் ஆசையினால் அது தன் சரீரத்தையே நிற்பனவும் அசைவனவுமான பலவாக்கிக் கொள்கிறது.
ப்ரஹ்மத்தை அறிந்தால் யாவற்றையும் அறியலாம்.
இவ்விஷயத்தைத் தெளிவுறுத்தத் தந்தை உலகியலில் காணும் காரண கார்ய சம்பந்தத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.

இவ் வுலகில் நாம் காரணம் கார்யத்திலிருந்து வேறுபட்டதில்லை எனக் காண்கிறோம். காரணமே ஒரு மாறுதல் அடைந்து கார்யமாகிறது.
இந்தக் காரியமே ஒரு மாறுதலடைந்து காரணமாகிறது, முன் மாறுதலை ஸ்ருஷ்டி, படைப்பு என்கிறோம்;
பின்னதை அழிவு, நாசம் என்கிறோம். ப்ரஹ்மம் தன்னில் நிறைவுடையது, அதற்குத் தன சரீரத்தை மாற்றிக் கொண்டு
அடைய வேண்டிய பயன் ஏதுமில்லை. ஆகவே இந்த நடவடிக்கை, லீலை அல்லது விளையாட்டு எனப்படுகிறது.
ஒரே களி மண்ணிலிருந்து குடம், ஜாடி என வேறு பல வடிவுகளைச் சமைக்கலாம். ஆனால் அந்தக் களிமண் மட்டுமே உண்மை.
மற்றவையெல்லாம் அந்தக் களிமண்ணுக்குத் தரப்படும் பானை, குடம், ஜாடி எனும் வேறு வேறு பெயர்களே அன்றி வேறல்ல.

ஆயினும், மகனுக்கு உலகில் காணில் வெவ்வேறு பொருள்களுக்கு ப்ரஹ்மமே காரணம் என்பது விளங்கவில்லை.
ஆகவே, “தந்தையே! எனக்கு இதை நீரே விளக்க வேணும்” என்றான். எல்லாவற்றிலும் இருப்பதும், எல்லா ஆற்றலும் உள்ளதுமான
ப்ரஹ்மமே காரணம் என விளக்க, தந்தை, “இது ஒன்றே முதலில் ஸத் என்று உள்ளதாக இருந்தது,
இதை விட்டால் வேறொன்றுமே இரண்டாவதாக இல்லை” என்றார்.

”இது” ப்ரபஞ்சத்தையும், “முதலில்” என்பது ஸ்ருஷ்டிக்கு படைப்புக்கு முன்பான காலத்தையும் குறிக்கிறது.
அப்போது ப்ரபஞ்சம் வடிவங்களாலும் பெயர்களாலும் அறியப்பட முடியாதிருந்தது.
அதாவது, அது, “இருத்தல்” (ப்ரஹ்மம்) என்பதைத் தன் உயிராகக் கொண்டிருந்தது.
“ஒன்றே ஒன்று” என்பதால் அதைத் தவிர வேறு காரணப் பொருளும் (உபாதானம்) இப்ரபஞ்சத்துக்கு இல்லை என்றாயிற்று.
“வேறு இரண்டாவதாக ஒன்று இல்லை” என்றதால் ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிக்கு வேறு ஒரு ஸ்ருஷ்டி காரணமும் (நிமித்தம்) இல்லை என்றாயிற்று.

“எதைக் கேட்டால் எல்லாவற்றையும் கேட்டதாகுமோ அந்த ஆதேசத்தை நீ கேட்டாயா?” என்று தந்தை கேட்பதிலிருந்து
அவர் உள்ளத்தில் உள்ளது தெளிவாகிறது. “அது, நான் பல ஆகுவேனாக, நான் பல்கிப் பெருகுவேனாக என ஸங்கல்பம் செய்தது” என
அவர் சொல்வது இவ்விஷயத்தை மேலும் வலியுறுத்துகிறது.
இங்கு குறிக்கப்படும் வ்யக்தி எங்குமுள்ள, எல்லா ஆற்றலும் மிக்க ஸத்ய ஸங்கல்ப சக்தியுள்ள பரப்ரஹ்மம்.
ப்ரஹ்மம் எப்போதுமே தன்னிறைவுள்ளவனாதலால் ஒரு நோக்கமோ லாபமோ இல்லாத லீலையே ஸ்ருஷ்டி.
ப்ரஹ்மம் தான் பல ஆவதாக ஸங்கல்பம் செய்தது, இந்த ஸங்கல்பம் இப்ரபஞ்சம் முழுதும் பல்வேறு சேதன அசேதனங்களால்
நிறைக்கப் படவேணும் என்று. இதற்கே அதன் ஸங்கல்பம். ஆகவே அது பல்கிப் பெறுக முடிவெடுத்தது.
அது தன்னில் ஒரு பகுதியிலிருந்து ஆகாசம் முதலிய அடிப்படை பூதங்களை உருவாக்கியது.
பின் ப்ரஹ்மம் “நான் இவ்வடிப்படை பூதங்களினுள் ஜீவாத்மாக்களின் மூலம் புகுந்து பல தனி வடிவுகளும் பெயர்களும் உடைய
பொருள்களும் ஆவேன்” என முடிவெடுத்தது. இதனால் தனி ஓர் உயிர் அல்லது பொருளின் உட்பொருளாக ப்ரஹ்மமே இருப்பது தெரிகிறது.
மேலும், ப்ரஹ்மத்தின் சரீரமான இந்தத் தனி ஆத்மா ப்ரவேசிப்பதாலேயே ப்ரபஞ்சத்திலுள்ளன யாவும்
பெயர்களும் வடிவங்களும் பெறுகின்றன என்றும் தெரிகிறது.

கதந் நு பகவ ச ஆதேச –அந்த ஆதேசம் எப்படிப்பட்டது -என்று வினவினான்
அபின்ன நிமித்த உபாதானம் -என்பதை விளக்குகிறார்
அவிகாரி ஸ்வரூபம் ஸ்வாம்சேந அவஸ்திதம் -என்று இரண்டு பதங்களை இட்டு சமாதானம்
அம்சம் -அம்சி -தர்மம் -தர்மி -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –
இதில் சத்யம் ஞானம் அநந்தம் மூன்றும் விசேஷணங்கள் -ப்ரஹ்மம் -விசேஷ்யம்
இதே போலவே சேதன அசேதனங்களும் ப்ரஹ்மத்துக்கு அப்ருதக் சித்த விசேஷணங்கள் –
அவிகாரம்-தர்மியின் அம்சம் – விசேஷணம் தனது சங்கல்பத்தால் மாறுதல் –
இத்தையே -அவிகாரி ஸ்வரூபம் ஸ்வாம்சேந அவஸ்திதம் –என்னும் இரண்டு பதங்களால் வெளியிட்டு அருளுகிறார் –

இவ்வாறு ப்ரஹ்மம் “நான் பல ஆவேன்” என்று முடிவெடுத்ததாலும், ப்ரஹ்மம் தானே பல ஆயிற்று என்றதாலும்
தந்தை தம் மனத்தில் ப்ரஹ்மமே ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி காரணமும் (நிமித்தம்) , பொருள் காரணமும் (உபாதானம்) என்று
உணர்கிறார் எனத் தெரிகிறது. சாந்தோக்யத்தின் அடுத்த மேற்கோள்கள் ஸ்ருஷ்டி எவ்வாறு நடந்தது எனக் காட்டும்.

தனி ஆத்மா ப்ரஹ்மத்தின் சரீரமாகச் செயல்படுவதால் அது ப்ரஹ்மத்தைத் தன் ஆத்மாவாக உடையது எனலாம்.
தேவர், மனிதர், விலங்கு, தாவரம் என வெவ்வேறு நிலையில் இருப்பதால் இவை யாவும் ப்ரஹ்மத்தின் ப்ரகாரங்களே.
ஆகவே மரம், செடி, கொடி, கல், மலர், பானை, என யாவும் அந்தந்த வடிவுகளை மட்டுமன்றி அவற்றுள் உள்ள
ப்ரஹ்மத்தின் தன்மையையும் காட்டுவன. ஆகவே அவை யாவற்றையும் ப்ரஹ்மமே தலைவனாகி உளவாக்குகிறான்,
ஆக எல்லாப் பெயர்களும் ப்ரஹ்மத்தையே சுட்டும்.
இவ்வாறாக, ப்ரபஞ்சம் முழுமைக்கும் ப்ரஹ்மமே காரணமாகவும், வஸ்துவாகவும் உள்ளது.
ப்ரபஞ்சம் ப்ரஹ்மத்தால் ஆகி, அவனால் தாங்கப் பட்டு, அவனால் கட்டுப் படுத்தப் படுகிறது.
“மகனே! எல்லாவற்றிற்கும் மூலம், இருப்பிடம், ஆதாரம் ப்ரஹ்மமே“ என்றதன் பொருள் இதுவே.
காரண கார்ய சம்பந்தத்தைக் காட்டி, தந்தை, “இந்த ஆத்மாக்கள் யாவும் ப்ரஹ்மத்தைத் தம் ஆத்மாவாக உடையவை,
ப்ரபஞ்சம் ப்ரஹ்மத்தைத் தன் ஆத்மாவாக உடையது, ப்ரஹ்மமே யாவற்றுக்கும் ஆத்மா, எல்லா ஆத்மாக்களுமே அதன் சரீரங்கள்” என்கிறார்.
“நீ அது ஆகிறாய்” என்பதில் நீ என்பது தனி உயிராகிய மகனைக் காட்டும்.
பிரபஞ்சம் முழுதும் ப்ரஹ்மம் என்பதால் தனி ஆத்மாவும் “ப்ரஹ்மாத்மகம்” என்றதாயிற்று. ஆகவே அதுவும் பிரஹ்மம் ஆகிறது.

எல்லார்க்கும் தான் ஆத்மாவாய் ப்ரஹ்மம் இருப்பதன் பொருள் என்ன?
ப்ரஹ்மம் மற்றெல்லாவற்றோடும் சேர்த்துப் பார்க்கப் படுகிறதா (ஐக்யம்) அல்லது உயிருக்கும் உடலுக்கும் போல் தொடர்புடையதா?
அது ஐக்யம் எனில், “ ‘நான் பல ஆவேன்’ என அது முடிவெடுத்தது” என்பன போன்ற பல வாக்கியங்கள் பொருளற்றது ஆகிப் போகும்,
ஏனெனில் ஸத்ய ஸங்கல்பத்தைச் சொல்லும் இவ்வாக்கியங்கள் ப்ரஹ்மத்தைத் தவிர வேறெதற்கும் ஒட்டா.
ஆகவே, இத்தொடர்பு உடலுக்கும் ஆத்மாவுக்கும் உள்ளது போன்றதே, எல்லா ஆத்மாவுக்கும் அது ஆத்மாவாய் உள்ளது.
“எல்லா ஆத்மாவுக்கும் ஆத்மாவானது ப்ரஜைகளின் ஆள்வோனாய் நுழைந்தது” என்பதால் இது உறுதி ஆகிறது,
இப்பொருளிலேயே, ப்ரஹ்மம் எல்லாவற்றிலும் ஆத்மாவாய் நுழைகிறது, அவற்றினுள் இருந்து ஆட்சி செய்கிறது.
அவற்றினுள் நுழைவதால், அவற்றின் செயல்பாடுகள் யாவற்றுக்கும் அவற்றின் ஆத்மா போல் ஆகிறது.
அதுவே எல்லார்க்கும் ஆத்மா, அவற்றின் ஆத்மாவாய் இருத்தலால் அதுவே அவற்றின் எல்லா இருப்பும் தன் உடலாய் உடையதாகிறது.

தத் ஐஷைத பஹுஸ்யாம் ப்ரஜாயேய -சத் என்னும் ப்ரஹ்மமே இங்கே தத் என்கிறது-
ஐஷைத–நிமித்த காரணம் -சங்கல்பம் பஹுஸ்யாம் ப்ரஜாயேய-உபாதான காரணம் –
இதில் பிரக்ருதியைக் கொண்டு -தேஜஸ் -அப் -அன்னம் -சமஷ்டி ஸ்ருஷ்ட்டி –
ஹந்தாஹம் இமா திஸ்ரோ தேவதா அநேந ஜீவேந ஆத்மன அநு ப்ரவிஷ்ய நாம ரூபே வ்யாகரவாணி –வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி
அநேந ஜீவேந ஆத்மன–என்பதால் ஜீவன் ப்ரஹ்மத்தை ஆத்மாவாக உடையவன் என்றும்
நாம ரூபே வ்யாகரவாணி-என்பதால் ஜீவனை உடலாகக் கொண்டு அசேதனங்களுக்குள் புகுந்து -அவற்றுக்கு
பொருளாம் தன்மை -பெயரையும் உருவத்தையும் உண்டு பண்ணுகிறேன் என்கிறது

முதல் படைப்பில் தேஜஸ் அவ் அன்னங்களுக்கு-ப்ரஹ்ம அநு பிரவேசம் மட்டுமே உண்டு –
ஆகவே அத்வாரகம் -ஜீவனின் துணை அற்று என்றும் –
பின்பு சகல சேதன அசேதனங்களுக்கு அவை உண்டாவதை -சத்வாரகம் -ஜீவனின் துணை கொண்டு -என்கிறது –

“அவனே ஒவ்வோர் ஆத்மாவினுள்ளும் உறைகிறான், அவனே அவற்றை இயக்குகிறான், அவனே உன் ஆத்மா,
அவனே அந்தர்யாமி = உள் உறைந்து இயக்குமவன், அவன் மரணத்துக்கு அப்பாற்பட்டவன்” என்பதால் இது தெரிகிறது.
எல்லாச் சேதன அசேதனர்களையும் ப்ரஹ்மம் தன உடலாக உடையது ஆதலால், அதுவே எல்லாச் சொற்களாலும் குறிக்கப் படுகிறது,
இதுவே “தத் த்வமஸி” என்பதைப் புரிந்து கொள்ளும் வழி ஆகும்.
ஜீவாத்மா, “த்வம்” என்று குறிக்கப் படுவது ஏற்கெனவே ஓர் உடலில் உள்ளது, அதை ப்ரஹ்மத்தின் ஓர் ப்ரகாரமாக இயக்குகிறது.
ஏனெனில் அதுவே ப்ரஹ்மத்தின் சரீரம். ஜீவாத்மாவால் தனித்து இருக்கவோ செயல் படவோ இயலாது என்பதால்,
“த்வம் “ என்பது ப்ரஹ்மம் வரை சென்று சுட்டிக் காட்டுகிறது. ச்ருதி இவ்விஷயத்தை,
“ஓர் ஆத்மாவில் நுழைந்து ப்ரஹ்மம் அதற்கு நாமங்கள் ரூபங்களைத் தருகிறது” என்று குறிப்பிடுகிறது.

”தத்”, “த்வம்“ இரு சொற்களும் ப்ரஹ்மத்தையே குறிக்கின்றன.
“தத்” என்பது ஜகத் காரணமான , எல்லா மங்களங்களும் நிறைந்த எக்குறைகளுமற்ற மாறுபாடுகளற்ற ப்ரஹ்மத்தைக் குறிக்கிறது.
“த்வம் “ என்பது அந்த ப்ரஹ்மம் ஒரு தனி ஆத்மாவின் உள்ளுறைந்து இயக்கும் நிலையைக் குறிக்கிறது.
“தத்” ப்ரஹ்மம் காரணமாய் இருப்பதையும், “த்வம்” ப்ரஹ்மம் கார்யமாய் இருப்பதையும் ஆக இரு வேறு நிலைகளில்
இரு வேறு தொழில்களைக் காட்டுகிறது. ப்ரஹ்மம் தனி ஆத்மாவில் இருப்பதால்
அதன் காரணத்வம், மங்கள குணங்கள், குற்றங்களற்ற தன்மை, மாறுபாடுகளின்மை ஆகியன பாதிக்கப் படுவது இல்லை
எனும் கருத்தைத் தெரிவிக்கிறது. இவ்விளக்கம், தனி ஆத்மா ஓர் உடலில் இருந்து நியமிக்கும் நிலையிலும்
ப்ரஹ்மத்தின் நிலை வேறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

ச்ருதிகளைப் பயிலாதவர்களுக்கு ப்ரஹ்மமே எல்லா ஆத்மாக்கள், பொருள்களுக்கும் உள்ளுறைவது என்பது புரிந்து கொள்ள இயலாது,
அவர்கள் சொற்கள் சொல்லும் குறுகிய எல்லைக்குட்பட்ட விஷயங்களை புரிந்து கொள்கிறார்கள்,
ச்ருதியை அறிந்தோர் ப்ரஹ்மமே எல்லார்க்கும் உள்ளுறை ஆத்மா, ஜகத் காரணம், ஸர்வ நியாமகன் என அறிகிறார்கள்.
எல்லாப் பொருள்களும் ப்ரஹ்மத்தையே சரீரமாக உடையனவாதலால் எல்லாச் சொற்களாலும் குறிக்கப்படும் பொருள்கள் யாவும்
ப்ரஹ்மத்தின் வெவ்வேறு நிலைகளே என உணர்கிறார்கள்.
ஆனால் இது எல்லாச் சொற்களுக்குமுள்ள அர்த்தத்தைக் குலைத்து விடாதோ? “பசு” என்பதும் “மான்” என்பதும்
ப்ரஹ்மத்தையே குறிக்கும் ஆயின் அச் சொற்களின் சிறப்பு என்ன?
இல்லை, அங்ஙனமன்று. எல்லாச் சொற்களின் பொருளும் அவ்வவற்றில் உள்ள ப்ரஹ்மத்தைக் குறித்தே பொருள் நிறைவை
அடைகின்றன என்பதே காட்டப்படுகிறது. “நான் அவற்றைப் பெயர்களாலும் வடிவங்களாலும் பகுப்பேன்” என்றதன் தாத்பர்யம் இதுவே.

எளிய காட்சிகள், அளவைகளால் உயர்ந்த பரமாத்மா அறியப்படுவதில்லை ஆதலால் இச்சொற்கள் வெவ்வேறு பொருள்களைக் குறிக்கும் போது
ப்ரஹ்மத்தின் இருப்பினாலேயே நிறைவுறுகின்றன என்று உணராது அவ் வச்சொற்களின் மேலோட்டமான பொருள்களால்
குறிக்கப் படுவதை உணர்ந்தே திருப்தி அடைந்துவிடுகிறார்கள். வேதத்தின் அறிவு எப்பொருளும் தனிப் பொருள் அல்ல,
அனைத்தும் ப்ரஹ்மத்தால் விளங்குகின்றன என்றும், அவற்றைக் குறிக்கும் சொற்கள் ப்ரஹ்மத்தில் நிறைவு பெறுகின்றன என்றும் உணர்த்துகின்றன.
இவ்வாறாக எல்லாச் சொற்களும் இறுதியில் ப்ரஹ்மத்தையே குறிக்கின்றன.
ப்ரஹ்மமே ஜகத்தையும் பொருள்களையும் (முந்தைய ச்ருஷ்டியில் போன்றே) படைக்கிறது,
இச்சொற்கள் யாவும் வேதத்தினின்றே வருகின்றன. இவை ப்ரஹ்மத்தையே குறிக்கின்றன.

மநு, “வேதங்களிலிருந்து ப்ரஹ்மம் சொற்கள்,வெவ்வேறு செயல்பாடுகள், வடிவங்களைப் படைத்தார்” என்கிறார்.
பராசரர், “ப்ரஹ்மம் பெயர்கள், எல்லாவற்றினுடைய வடிவங்கள், தேவ திர்யக் ஆதி யாவற்றையும் வேத சொற்களிலிருந்தே படைத்தது” என்கிறார்,
வேதமே, “அவனே ஸூர்யனையும் சந்த்ரனையும் முன்போன்றே படைத்து அவற்றுக்குப் பெயர்களும் தந்தான்” என்கிறது.

சந் மூலா–இமா பிரஜா –சத் என்னும் ப்ரஹ்மத்தையே மூலமாக கொண்ட சேதன அசேதனங்கள்
சத் பிரதிஷ்டா -ப்ரஹ்மத்தின் இடமே லயம் அடைகின்றன
சந் நியாம்யதா–தாரகமாயும் நியாமகவாயும்
சத் சேஷதா–ஸ்வாமியாயும்
ஐததாத்ம்யம் இதம் சர்வம் -என்று அச்சிதவஸ்துக்களுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஸ்வரூப ஐக்யதையையே என்றும்
தத்வமஸி என்று ஜீவ ப்ரஹ்ம ஸ்வரூப ஐக்கியம் -என்று சொல்வது பொருந்தாது என்பதை ஏவம் யுக்தம் பவதி இத்யாதியால் விளக்குகிறார்
இதம் சர்வம் என்று அங்கேயே சேதனங்களையும் சொல்லிற்றே
இதம் சர்வம் அஸ்ருஜத –அனைத்தையும் படைத்து –சச்ச த்யச்ச அபவத் -சேதன அசேதன என்று பிரித்தது –

அசேதன ஸ்வரூப ஐக்யம் என்றால் கீழே ஐஷத-சங்கல்பித்தது ஒவ்வாதே -ஸத்யஸங்கல்பத்துவத்துக்கு கொத்தை வரும்
அதே போலே சேதன ஸ்வரூப ஐக்யம்என்றால் கர்ம வஸ்யம் வந்தேறும் –
இவை மட்டும் அல்ல
அந்த ப்ரவிஷ்டா சாஸ்தா ஜனானாம் சர்வாத்மா -என்கிற ஸ்ருதிக்கும்
ய ஆத்மநி திஷ்டன் ஆத்மந அந்தர -என்கிற ஸ்ருதிக்கும் விரோதிக்கும்
நியமன சாமர்த்யத்துக்கு கொத்தை வரும்
ஆகவே சரீராத்ம பாவத்தையே சொன்னதாகக் கொள்ள வேண்டும் –

இவ்வாறு ஜகத், ப்ரஹ்மம் இரண்டின் பிரிக்க முடியாத தன்மை விளக்கப் படுகிறது.
ஆகவே ஒரு ப்ரஹ்மத்தைப் பற்றிய ஞானம் ஏன் மற்றெல்லாப் பொருள்களைப் பற்றிய ஞானத்தையும் தருகிறது என்பதும் தெளிவாகிறது.
“தத் ஸத்யம்” என்பது யாவும் உண்மையே ஏனெனில் யாவற்றிலும் ப்ரஹ்மமே உள்ளது, அவை அதன் கார்யமே,
ப்ரஹ்மமே அவற்றின் ஆத்மா என்பது தெரிகிறது. மண்ணால் ஆன எல்லாப் பொருள்களும் அவற்றில் மண் இருப்பதாலேயே
தம் இருப்பைப் பெற்று உள ஆகின்றன அன்றோ!
ப்ரஹ்மத்தைப் பற்றிய சோதக வாக்கியங்கள் ப்ரஹ்மம் மங்கள குணங்களின் இருப்பிடம், எனவும் அது குறைகளற்றது எனவும் காட்டும்.
ச்ருதி வாக்யங்கள் எதெது ப்ரஹ்மம் இல்லை என்று விவரித்து ப்ரஹ்மத்தைச் சொல்வன என்றாலும்,
ப்ரஹ்மம் உயர்ந்த விஷயம் என்றே ஒப்புக் கொள்ள வேண்டும். ஒரு உயர்ந்த விஷயத்தை மற்றவையினின்ரும் வேறுபடுத்தி
வேதம் உணர்த்துகிறது என்றே அறிய வேண்டும். “இது இல்லை” என்று சொல்ல வேண்டிய கட்டாயம் பிரமத்தின் விஷயத்தில் உள்ளது,
ஏனெனில் அது தனிச் சிறப்புடையது, மற்றெதுவும் போல் அல்லாதது.
வேதம் மிக உயர்ந்த விஷயத்தைப் பற்றி பேசுகின்றன. ஒருகுணமும் இல்லாத நிர்குண வஸ்துவை அல்ல.

அத்வைதி வேதம் எல்லாவற்றையும் எதிர்மறையாகவே விளக்கி, ப்ரஹ்மம் பண்புகளற்றது என்கிறார். இது விமர்சிக்கப்படுகிறது.
முதலில், ‘ஞானம்’ என்பதை ‘அறிவற்றது அன்று’ என்றோ, ‘உண்மை’ என்பதை பொய் அல்லாதது என்றோ சொல்ல வேண்டிய தேவை இல்லையே.
இவை நேர்பட விளக்கப் படக் கூடிய சொற்கள். எதிர்மறை விளக்கம் தேவை இல்லை, இது குழந்தைத் தனமான வெறும் சொல் விளையாட்டு.
இதன்படி, அறிவற்றது என்பதையும் அறிவு இல்லாதது எனலாமா அல்லது ‘அறிவுள்ளது என்று சொல்ல முடியாதது’ எனலாமா?
அஸத்யம் என்பதைப் பொய் என்பதா, சத்யம் ஸல்லாதது என்பதா? இச்சொற் சிக்கலில் நாம் மாட்டிக் கொண்டால்
வேத வாக்கியங்களின் மெய்ப் பொருள் விட்டு விலகிப் போவோம்.
சொற்களின் எதிர்மறைப் பொருள்களை விடலாகாது என்றே சாதித்தாலும், நாம் உடன்பாடான பொருளுள்ள விஷயத்தை விட்டிடுவோம்.
ப்ரஹ்மம் எல்லா நல் இயல்புகளும் நிறைந்தது என்றே சித்திக்குமே ஒழிய அத்வைதி அவசரமாக முடிவெடுப்பது போல
இயல்புகள் அற்றதாகாது. ப்ரஹ்மத்தின் உயர்ந்த குணங்களைச் சொல்ல சொற்கள் இல்லாமல் வேதம் தடுமாறுகிறது – அவ்வளவே !

ஓர் உலகியல் உதாஹரணம் காண்போம். அளவையியல் பௌதிக சாஸ்த்ரத்தில் ஓர் துகளின் பண்பை
அதன் துளி இயல்பிலோ அல்லது அலை இயல்பிலோ காணலாம். துளி இயல்பில் மட்டும் அல்லது
அலை இயல்பில் மட்டும் காணலாகாது என்று அறிந்தே இவ்வாறு பேசுகிறோம்.
நமக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு நம் நேர் புலன்களுக்கு அப்பாற்பட்ட இவற்றை விவரிக்கிறோம்.
இவை பண்புகள் அற்றவை – துளியும் இல்லை, அலையும் இல்லை – என்று சொல்லி புத்தகத்தை மூடி விடுவது இல்லையே!
ஆனால், ப்ரஹ்மம் என்பது வெறும் சுத்த ஞானமே என்று படிப்பிக்கப்பட்டால் எல்லா குணங்களும் அற்றது என்று பொருள்பட்டு விடாதா?
அன்று அது அவ்வாறன்று. குணங்களைக் குறிக்கும் சொற்கள் அவ்வவப் பொருள்களின் அடிப்படை இயல்புகளைக் குறிக்கின்றன,
அதன்வழி அவ்வவப் பொருள்களின் இருப்பை உணர்த்துகின்றன. இது ஸ்வரூப நிரூபக தர்மம் எனப்படுகிறது.

உலகில் குடம் இத்யாதி சப்தங்கள் ஆகாரங்களையே சொல்லுமது ஒழிய ப்ரஹ்ம பர்யந்தம் என்று அறிகிறோம் இல்லோமே என்ன
அதுக்கு சமாதானம் -அஸ்ருத வேதாந்த -இத்யாதி
கண்ணால் சந்தனக் கட்டையைப் பார்ப்பவன் அதன் வாசனையை அறிய முடிய வில்லை என்றால்
அதுக்கு இல்லை என்று ஆகி விடுமோ -அதை அறியவல்ல இந்திரிய பொறி இல்லை என்று தானே –
அதே போலே வேதார்த்தம் அறிந்தவர்களே ப்ரஹ்மாத்மகம் அறிவார்கள் –
எல்லா சொற்களையும் விசிஷ்ட ப்ரஹ்மத்தையே குறிக்கும் -என்றதாயிற்று
ப்ரத்யக்ஷ ப்ரமாணத்தால் ப்ரஹ்மத்தை அறிய முடியாதலால் லௌகிகர் ப்ரஹ்மம் பர்யந்தம் சப்தம் போவதை அறியாமல் இருக்கிறார்கள்

வைதிகா ஏவ சர்வே சப்தா–
ஸர்வேஷாம் து ச நாமாநி கர்மாணி விவிதாநி ச
வேத சப்தேப்ய ஏவாதவ் ப்ருதக் ஸம்ஸ்தாஸ் ச நிர்மமோ –மனு ஸ்ம்ருதி
ஆதவ்-படைப்புக் காலத்தில்
வேத சப்தேப்ய ஏவ –வேதத்தில் உள்ள சப்தங்களில் இருந்தே
நாமாநி-பெயர்களையும்
விவிதாநி கர்மாணி ச -பல செயல்களையும்
நிர்மமே -அமைத்தார்
ப்ருதக்-தனித்தனியாக
ஸம்ஸ்தாஸ் ச-உருவங்களையும்
நிர்மமே -அமைத்தார்

ஸ்ரீ பராசரரும்
நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருத்யாநாம் ச பிரபஞ்சிதம்
வேத சப்தேப்ய ஏவாதவ் தேவாதீநாம் சகார ச-என்கிறார்
வேதமும் -சூர்யா சந்த்ரமசவ் தாதா யதா பூர்வம கல்பயத் -என்கிறது
இத்தால் ஜகத் ப்ரஹ்மம் அபேதம் விளக்கப்பட்டது
இதனால் ஒன்றை அறிந்தால் மற்றவை எல்லாம் அறியப் பட்டனவாகும் என்பதையும் விளக்கப்பட்டதாயிற்றே –

காரண வாக்கியங்களைக் கொண்டு ப்ரஹ்மம் ச விசேஷம் என்றதாயிற்று இது வரை –
இனி சோதக வாக்கியங்களும் ப்ரஹ்மம் ச விசேஷம் என்றே காட்டும் என்று விளக்குகிறார்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -நல்ல குணங்கள் உள்ளவன்
நிர் குணம் நிஷ்க்ரியம் சாந்தம் நிரவத்யம்-ஹேய குணங்கள் இல்லாதவன்
சத்ய காமா ஸத்ய ஸங்கல்பம் –நற்குணங்கள் உண்டு என்றும்
அபஹத பாப்மா விஜர வி ம்ருத்யு விசோகா அவிஜிகத்ச அபிபாச—ஹேய குணங்கள் இல்லை என்றும்
இதுவே கடக சுருதி

வேதாந்த ஸூத்ரகாரர்,
“அடிப்படை இயல்பாய் இருத்தலால் அக் குணம் அவ் வஸ்துவின்/பொருளின் ஸ்வரூபத்தை உணர்த்துகிறது,
அதை அறிபவரின் இயல்பை உணர்த்துவதே போல” (2-3-29) என்றும்
“அவ்வாறு உயர்த்துவதில் குறை இல்லை, குணங்கள் அவ்வவ வஸ்துவோடு எப்போதும் இருப்பதால்” (2-3-30) என்றும் கூறுகிறார்.

இங்கேயும் ஞானம் என்பது ப்ரஹ்மத்தின் ஓர் அடிப்படைக் குணம் ஆதலால் அதை அவ்வாறே உணர்த்துகிறது.
அது நமக்கு, “ப்ரஹ்மம் இயல்புகளற்ற வெறும் ஞானமே” என்று உணர்த்தவில்லை.
நாம் இதை எவ்வாறு அறிகிறோம்?–வேதம் தெளிவாகச் சொல்கிறது,
”யாவற்றையும் அறிந்தவன், புரிந்துகொள்கிறவன் எவனோ” என்கிறது (முண்டக 2-2-7);
“அவனது ஆற்றல்கள் மிகப் பெரியன, பல்வகைப் பட்டன” ச்வேதாச்வதார (6-6-17).
“அறிபவன் அறிந்துகொள்ளப் படுவது எங்கனம்?” ப்ருஹதாரண்யகம் (4-4-14).
ப்ரஹ்மம் வெறும் அறிவு, ஞானம் மட்டுமல்லன், அறிபவனும் கூட! ஆகவே அறிவு அவனது அடிப்படை இயல்பு, குணம்.
ப்ரஹ்மத்தின் வஸ்து ஸ்திதிக்கு ஞானம் அடிப்படை இயல்பாதலால் வேதம் ப்ரஹ்மத்தைக் குறிக்க ஞானத்தைச் சொல்கிறது.

யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத் பிரயந்தி அபி சம்விசந்தி தத் விஜிஞ்ஞாஸஸ்வ
தத் ப்ரஹ்மேதி –என்ற காரண வாக்கியத்தை
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –சோதக வாக்கியம்
ஸத்யமாக-ஞானமாக -அநந்தமாக–மூன்று விசேஷணங்கள் -ப்ரஹ்மத்துக்கு –
சத்யம் -சத்தை நிருபாதிகம் ப்ரஹ்மத்துக்கு மட்டுமே
ஞானம் -நித்ய -அசங்குசித ஞானமயன் ஞான குணகன் –
அநந்தம் -தேச கால வஸ்து பரிச்சேத ரஹிதன்

தத்வமஸியில் இச்சொற்கள் குணங்களற்ற ஒரே ப்ரஹ்மத்தைக் குறிப்பதாகக் கொண்டால்
இச் சொற்கள் தரும் பொருளை முற்றிலும் தவிர்ப்பதாகவே ஆகும்.
அத்வைதி இவ்வாதத்தை மறுக்கிறார். சொற்களின் அடிப்படைப் போக்குளை ஏற்க வேண்டும் என அவர் இசைகிறார்.
ஆனால் சொற்களின் அடிப்படைப் பொருள் எதிர்மறையான இருப்பின் மாற்றுப் பொருளைக் கருத வேண்டும்.
தத் என்பதால் சுட்டப்படும் ப்ரஹ்மம் காரணத்வத்தை அடிப்படையாய்க் கொண்டது.
த்வம் என்பதால் சுட்டப்படும் ப்ரஹ்மம் அந்தர்யாமித்வத்தை அடிப்படையாய்க் கொண்டது.(உள்ளுறையும் நியந்தா)
உண்மையில் காரணத்வம் அந்தர்யாமித்வம் என்பன இரு வேறு இயல்புகள்,
ஆகவே இரு வேறு இயல்புடைய தர்மத்தையுடைய தர்மியைக் குறிப்பன.
ஒரு தர்மம் அல்லது இயல்புடைய தர்மி அல்லது பொருள் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மற்றொரு இயல்போடு எவ்வாறு பொருந்த முடியும்?
அவர்கள் சொல்லும் ஐக்யத்தை எவ்வாறு அடைய முடியும்?
இயல்புகள் யாவும் மறுக்கப்பட்ட இயல்புகள் இல்லாத வஸ்துவே அத்வைதிகள் காட்டும் வஸ்து.

அத்வைதிகள் -சத்யம்-என்று அசத்ய அபாவம் என்றும் -ஞானம் அஞ்ஞான அபாவம் என்றும் –
அநந்தம் என்று அ அநந்த அபாவம் என்றும் -அத்வைதிகள் சொல்லுவார்
சர்வ பிரத்யநீக ஆகாரதா போதநேபி –என்று
வெளுப்பு என்று கறுப்பு இல்லாததை சொல்வது போலே -என்று உபமானம் சொன்னால் -பொருந்தாது
உபமானத்துக்கும் உபமேயத்துக்கும் -தர்ம ஐக்யம் த்ருஷ்டாந்ததில் ப்ரஹ்மம் வெண்மை போலே தர்மம் அல்லவே
இதற்கு மூன்று விசேஷணங்கள் -கண்ட முண்ட பூர்ண ச்ருங்க கவ் -போலே மூன்று ப்ரஹ்மங்களைச் சொல்லுமே என்னில்
விசேஷண பேதத்தால் விசேஷய பேதம் சித்திக்காதே
தேவதத்த ஸ்யாம யுவா லோஹிதாஷ-என்று கறுப்பாயும் காளைப் பருவமாயும் சிவந்த கண்களைக் கொண்டவனும் போலே

“இவன் அந்த தேவதத்தன்” எனும்போது ஒரு குறிப்பிட்ட மனிதனின் அடையாளம் குறிக்கப் படும்.
இதில் இவன் என்பது இப்போதைய நேரத்தையும் இடத்தையும், அந்த என்பது கடந்த காலத்தையும் வேறு இடத்தையும் குறிக்கும்.
நிகழ் காலத்து மனிதனையே கடந்த காலத்துக்கு குறிப்பும் உணர்த்தும் எனில் இயலாது.
ஏனெனில் நிகழ் காலம், கடந்த காலம் என்பன இரு வேறு தர்மங்கள். அதே போல் ஒரே மனிதன் ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களோடு
தொடர்புபடுத்தப்பட முடியாது. இதைப் புரிந்துகொள்ள ஒரே வழி அடிப்படைப் பொருள்களைக் கொடுக்கும்
இயல்புகள், ஆகிய இடம், காலம் இரண்டையும் தள்ளிவிடுவதேயாம்.

அத்வைதியின் இவ்வாதம் சரியன்று. இவனே அந்த தேவதத்தன் என்பதன் அடிப்படைப் பொருள்
இரண்டாம் நிலைப் பொருள்களை வைத்து எண்ணாமலே செல்லுபடி ஆகும்.
ஒரு மனிதன் இரு வேறு காலங்களில் இரு வேறு இடங்களில் இருப்பதாக நினைப்பது தவறு எனும் அத்வைதக் கோட்பாடு சரியன்று.
ஒரே மனிதன் ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களில் இருப்பதாகக் கூறுவது பிழைபட்டது,
ஆனால் அவனே வேறு காலங்களில் இரு வேறு இடங்களில் இருக்கக் கூடும். இருக்க முடியாது என்பது பிழை.
முன்பு பிறந்திராத ஒரு குழந்தை இப்போது பிறந்திருக்கலாம். அப்பொழுதே “அக்குழந்தை முன்பு இருந்தது” என்பது பொருந்தாது.
ஒரே மனிதன் ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களில் இருப்பதாகச் சொல்வது முரண்பாடானது.
ஆனால் இரு வேறு காலங்களில் இரு வேறு ஓடங்களில் இருப்பதாகச் சொல்வது சாத்தியமே.

அத்வைதி இதை மறுத்தாலும், இந்த அந்த இரண்டனுள் ஒன்றையே அவர் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இரண்டையுமன்று. இரண்டாம் பொருளை ஊகிக்க வேண்டிய தேவை இல்லை. அடிப்படை அர்த்தம் தானே நிலை நிற்க இயலும்.
“தத் தவம் அஸி”யில் இக்கஷ்டமும் இல்லை. ப்ரஹ்மம் புற அண்டமாகவும், உள்ளுறையும் நியந்தாவாகவும் இருக்கக் குறை இல்லை.
இதில் முரண்பாடுமில்லை, ப்ரஹ்மத்துக்கு ஒன்றனுக்கு மேற்பட்ட இயல்புகள், உண்மையில் கணக்கற்ற இயல்வுகள் உண்டு.
இதுவே ஸாமானாதிகரணத்தின் ஆழ்பொருளாகும். ஆகவே தான் அறிஞர்கள் ஒரே வஸ்துவின் பல இயல்புகளைக் குறிக்க
வெவ்வேறு சொற்கள் பயன்படுவதாகக் கூறுகிறார்கள்.

மேலும், ஒரு விஷயத்தின் விவரங்களை உப ஸம்ஹரிக்கும்போது முடிவுகளை எடுக்கையில் அவ்விவரணங்களின் தொடக்கத்தோடு முரண்படலாகாது.
ப்ரஹ்மம் பலவாக ஸங்கல்பித்தது என்பதே முதல் விஷயமாகும்.
ப்ரஹ்மம் தன் ஸத்ய ஸங்கல்பத்தால் பலவாக ஸங்கல்பித்தது, அதனால் தானே ஜகத் காரணம் என்று ஸ்தாபித்தது.
ப்ரஹ்மத்துக்கு அவித்யா எனும் தோஷம் உண்டு என்பது, ப்ரஹ்மம் குறைகள் அற்றது என்பதோடு முரண்படுகிறது.
ப்ரஹ்மம் எல்லா நிறைவுகளும் கொண்டது எனத் தொடக்கத்திலேயே சொல்லப்படுவதால், தன் ஸங்கல்ப மாத்ரத்தாலேயே
அது ஜகத் ஸ்ருஷ்டி செய்கிறது என்பதோடு அதற்கு அவித்யை/அஞ்ஞானம் உண்டு என்பது சேராது.
அடுத்த பத்தியில் வேதம் ப்ரஹ்மத்துக்கு குணங்கள் இல்லை என்னுமாகில் அத்தால் ப்ரஹ்மத்தை விவரிக்க முடியாது என்பது கூறப்படுகிறது.

ஞான வடிவம் என்பதைக் கொண்டு இதுவே ஞானத்துக்கு ஆஸ்ரயமாக இருக்க முடியாது என்பர் அத்வைதிகள்
ஆர்த்த குண நிஷேதம் இது –
இது சுருதிகள் பலவற்றுக்கும் விரோதம் ஆகும் -ஞான மயம் ஞான குணம் உடையவை என்று பலவும் உண்டே
ஸ்வரூப நிரூபக தர்மம் -ஞான மயம் என்றது -கோத்வம் போலே
தத் குண சாரத்வாத் தத் வியபதேச ப்ராஞ்ஞா வத்–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்
ஜீவனிடம் விஞ்ஞானம் என்னும் குணமே சாரம் -என்பதால் ஜீவன் விஞ்ஞானம் என்றே சொல்லப்படுகிறான்–
ப்ராஞ்ஞனான ப்ரஹ்மம் ஆனந்த குணத்தை சாரமாக கொண்டு இருப்பதால் ஆனந்தமாகவே பேசப்படுகிறது அதே போலே – -என்றவாறு
பிராஜ்ஜே நாத்மநா –
ப்ரஹ்மணா விபச்சிதா –
ய சர்வஞ்ஞ சர்வவித் –
யாவதாத்ம பாவித்வாச்ச ந தோஷ
பராஸ்ய சக்தி விவிதை ஸ்ருயதே ஸ்வபாவகீ ஞான பல கிரியா ச –
விஞ்ஞாதாரம் அரே கேந விஜாநீ யாத்-போன்ற பல சுருதிகள் ஞானமயம் ஞானகுணகம் என்றதைச் சொல்லும்

வேதம் சொற்களாலும் வாக்யங்களாலும் ஆனது. சொற்கள் வெவ்வேறு வடிவில் வெவ்வேறு பொருள்களை உணர்த்துவதால்
அர்த்தமுள்ளவை ஆகின்றன, வெவ்வேறு பொருள்களை, வஸ்துக்களைக் குறிப்பதால் சொற்களும், அவற்றால் வாக்கியங்களும்
விபின்ன விஷயங்களை உணர்த்தும். ஆகவே குணங்களில்லாமல் ஒரு வஸ்துவை வேதம் உணர்த்த முடியாது.
“குணங்களற்றது” என வேதம் சொல்வது மற்ற வஸ்துக்களில் காணப்படும் குணங்கள் இல்லாமை பற்றி.
ஆகவே ப்ரஹ்மம் குணமற்றது என்னவியலாது. அவ்வாறாயின், வேதம் ப்ரஹ்மம் பற்றி ஏதுமே சொல்லியிராது,
அவ்வாறாயின் வேதம் ப்ரஹ்மம் பற்றிய ஞானத்துக்கு ஊற்றாயிராது.
ஒவ்வொரு சொல்லும் வேர், உரி இரண்டாலும் ஆனது. பொருள்களை வேறுபடுத்தி உணர்த்த வெவ்வேறு வேர், உரிகள் பயன்படுகின்றன.
ஒவ்வொரு வாக்கியமும் இத்தகு சொற்களால் ஆனவை.

ஒவ்வொரு வைதிக ஸம்ப்ரதாயமும் வேதமே ப்ரஹ்ம ஞானத்துக்கு அடி என ஒப்புகிறது.
வேதம் உபயோகப்படுத்தும் சொற்கள், வாக்யங்களைப் பொறுத்தே வெவ்வேறு வஸ்துகள், அர்த்தங்களைக் குறிக்கும்.
வேதம் தானே ஒரு பண்பும் அற்ற ஒரு வஸ்துவைக் காட்டாது. அது அதன் ஸ்வபாவத்துக்கு மாறானது.
ஒரு வஸ்துவை இயல்புகள் அற்றது என வேதம் பகரும் என வலியுறுத்தப்படுமேயானால், அவ்வஸ்துவைப் பற்றி அது ஒன்றுமே சொல்லாது!
ஏனெனில் அவ்வஸ்துவின் இயல்புகள் பற்றிச் சொல்லாமல் அதனால் அவ்வஸ்துவைப்பற்றிச் சொல்லமுடியாது.
வேதம் உண்மையில் ப்ரஹ்மத்திடம் உள்ள சில இயல்புகள் பிற வஸ்துக்களில் இல்லை என்றே சொல்கிறது.
உதாஹரணமாக, ப்ரஹ்மம் ஜகத் காரணம், ஸத்ய ஸங்கல்பம் உள்ளது, ஸர்வ வ்யாபி என்கிறது.
இவ்வாறு அதுவே ப்ரஹ்மம் பற்றிய தகவல்களைத் தருகிறது.

அத்வைதி இவ்விஷயத்தை இவ்வாறு மறுக்கலாம்:
””நாங்கள் குணங்களற்றதைப் பற்றிய தகவல் களஞ்சியம் வேதம் என்ன மாட்டோம்.
தன்னால் ஒளிரும் வஸ்துவை வேதம் காட்ட வேண்டியதில்லை. அனைத்து வேற்றுமைகளையும் வேதம் மறுத்து விட்டால்,
மிச்சம் இருப்பது ப்ரஹ்மம் தானே! இவ்வாறு தான் வேதம் ப்ரஹ்மத்தை உணர்த்திகிறது.” என்னலாம்.

இந்த வாதம் சரியன்று. எல்லா வேறுபாடுகளும் நீக்கப் பட்டுவிட்ட வஸ்து எப்படி விவரிக்கப்படும்?
அந்த வஸ்து அறிவு மட்டுமே (ஞப்தி மாத்திரம்) என்பது சரியன்று.
அப்படிப்பட்ட ஞானமும் இயல்பு கொண்ட வஸ்துவை மட்டுமே குறிக்கப் பயன் படும்.
“ஞா அவபோதனே” என்றுள்ளதால் மற்றப் பொருள்களைக் குறிக்கவும் ஞானம் தேவை,
வஸ்துவை ஒருவருக்கு உணர்த்துகிறது. அறியும் போது அறிவு தன்னால் வெளிப்படுகிறது. பிற வஸ்துக்களையும் உணர்த்துகிறது.

அத்வைதி விசேஷங்களற்ற வஸ்து பற்றிப் பேச தயங்குவதே இல்லை. அதை ஞானம் என்று உறுதியாக கூறுகிறார்.
பிற வஸ்துக்களை அறியும் பொது அறிவு தன்னால் விளங்குகிறது. நவீன குருக்கள் சிலர் ச்வாஸத்திலோ, ஆனந்தத்திலோ
நிலை நிற்கும் அறிவை தூய்மையான அறிவாக தவறாக கருதுகிறார்கள்.
ஆனால் அந்த அறிவு ஒரு வித விசேஷத்தை ஆதாரமாகக் கொண்ட அறிவு தான்.
சில போதகர்கள் மனம் எதைப்பற்றியும் எடைபோடாத நிலை தூய்மையான அறிவின் நிலை என்கிறார்கள்.
அதுவும் ஒரு வகை பண்பு சார்ந்த அறிவு தான், பண்புகளற்ற அறிவல்ல. நமது போதகரே அதின் பண்புகளை
அழகாகச் சொற்களைக் கொண்டு விவரித்து விட்டார்! எந்த பொருளையோ பண்பையோ சாராத அறிவு அறிவே அல்ல.
அறிவின்மை அல்லது மயக்க நிலை ஆகும். ஞானம் எப்போதும் பண்புகளை உடையதே.
அப்பண்புகளைப் பற்றி அத்வைதி பேச நிறுத்திவிடுவதால் அது பண்புகளற்றது ஆகிவிடாது.

ப்ரஹ்மத்தின் உண்மை இயல்பு தானே தெரிவதற்கு இருப்பின் (ஸ்வயம் ப்ரகாசம்), அதில் வேறொரு இயல்பு ஏறிட முடியாது.
உதாஹரணமாக, ஒரு கயிறு தெளிவாகப் பார்க்கப் படும்போது, அதைப் பாம்பு என்று யாரும் எண்ண மாட்டார்கள் அன்றோ.
அத்வைதியான நீங்களும் இதற்கு இசைகிறீர்கள். ஆகையால், அவித்யை என்று ஒன்றைக் கொண்டு,
இதனால் ப்ரஹ்மம் மறைக்கப் படுகிறது என்கிறீர்கள்.
அவித்யையால் மறைக்கப்பட்ட ப்ரஹ்மத்தின் அம்சத்தையே சாஸ்திரம் வெளியிடவேண்டும்.
இல்லாவிடில், சாஸ்திரத்தால் அஞ்ஞானத்தைப் போக்கவே முடியாது.

கயிறு – பாம்பு உதாரணத்தில் கயிற்றின் சில பண்புகள் “பாம்பு” என்கிற ப்ரமத்தைக் கடந்து தோற்றுவதாலேயே
”இது பாம்பு” என்கிற எண்ணம் நீங்குகிறது. ப்ரம்ஹத்தின் ஏதோ ஒரு இயல்பு சாஸ்திரத்தால் உணர்த்தப்பட்டு
அதனால் ப்ரமம் விலகுகிறது என்று கொண்டால், ப்ரஹ்மம் ஸவிசேஷம் (குணங்கள் உடையது) என்று தேறிவிடும்.
ப்ரமாணத்தில் உறுதி உடையாருக்கு குணங்களற்ற பொருளை நிரூபிக்க எந்தப் பிரமாணமும் கிடைக்காது.
உலகின் அனுபவத்தை விளக்க அத்வைதி அத்யாஸம் அதாவது ஏறிடுதல் எனும் உத்தியைக் கைக் கொள்கிறார்.
இவ்வுலகம் ப்ரஹ்மத்தின் மீது ஏறிடப்பட்டுள்ள ஒரு மாயை. தானே ஸ்வயம் ப்ரகாசமாய் உள்ள ப்ரஹ்மத்தை மறைக்க
வேறொரு தத்துவம் தேவைப்படுகிறது. இதற்கே அத்வைதி அவித்யை அல்லது அறியாமையை உபயோகிக்கிறார்.

வேத ஞானம் இந்த அறியாமை/மாயையை நீக்குவதால் வேதம் ப்ரஹ்மத்தின் ஏதோ சில இயல்புகளையாவது உணர்த்தவேண்டும்.
அவ்வாறு உணர்த்தியே அது அறியாமையை விலக்க வேண்டும்.
அத்வைதி அடிக்கடி கயிறு – பாம்பு உதாரணத்தை எடுக்கிறார். கயிறு பற்றிய மாயை அதன் இயல்பை அறிவதால் ஒழிக்கப் படமுடியும்.
அதேபோல் அஞ்ஞானத்தால் வரும் அறியாமையை வேதம் விலக்கி ப்ரஹ்மத்தை உணர வைக்கமுடியும்.
வேதம் ஒரே ஓர் இயல்பை வெளியிடுமாயினும் ப்ரஹ்மம் ஸவிசேஷம் என்றே தேறும். அதன் சில அல்லது எல்லா இயல்புகளும்
ஆத்மாக்களுக்குப் புலப்படுவதில்லை. வேத ஞானமே இந்த அறியாமைத் திரையைக் கிழிக்கிறது..

நிர்ணயிக்க முடியாத நோக்கில் கூட (நிர்விகல்ப ப்ரத்யக்ஷம்) இயல்புகள் உள்ள பொருளே உணரப்படும்.
இல்லாவிடில், ஸவிகல்ப ப்ரத்யக்ஷம் – நிர்ணயமுள்ள நோக்கு – என்று ஒன்று இருக்கவே முடியாது.
இயல்புகளின் ஒற்றுமையை உணர்வதே நிர்ணயமுள்ள நோக்கு/பார்வை ஆகும்.
பசுத்தன்மை என்பது பல பசுக்களில் உள்ள ஒரே மாதிரியான இயல்புகளின் கூட்டறிவே ஆகும்.
இந்த ஒற்றுமையே பசுக்கள் பற்றிய நம் பார்வையை நிர்ணயிக்கிறது. இதை முதலில் உணர முடியாவிடில்,
பிறகு நமக்கு ஏற்படும் பார்வை/ஞானத்தை முதலில் வந்ததோடு ஒப்பிட முடியாது.

ஒரு பொருளின் இயல்பை நிர்ணயிக்க முடியாத பார்வையே முதல் பார்வை ஆகும். பிறகு, பார்க்கப் பார்க்க நமக்கு
அதன் இயல்புகள் புலப்படுகின்றன. எந்த இயல்பும், குணமும் முதலில் புலப்படாவிடில் நமக்கு அந்தப் பொருளின் இயல்பு
எப்போதும் தெரியாமல் இருந்துவிடும். முதலில் அவை உணரப்படுவதாலேயே பின்னர் இவ்வியல்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
இதில், ஒரே பொருளில் வேற்றுமை, ஒற்றுமை இரண்டும் பொருத்தப் படுவது மறுதலிக்கப் படுகிறது.
இயல்பு/பண்பு என்பது ஒரு பொருளின் ஒரு நிலை/பிரகாரம் என்பதால் அது பொருளிலிருந்து வேறுபட்டது.
ஆயினும், அதே காரணத்தால் அது தனியாய் இருக்கவும் முடியாது, அறியவும் முடியாது.

இதே வாதங்களால் நம்மால் பேதாபேத வாதிகளையும் மறுதலிக்க முடியும். ப்ரஹ்மத்தில் வித்யாசம், ஒற்றுமை இரண்டையும்
ஸமன்வயப்படுத்த முயற்சி செய்கிறார்கள், ஆனால் முற்றிலும் மாறுபட்ட இரு இயல்புகளை ப்ரஹ்மத்தின்மீது சுமத்துகிறார்கள்.
உலகமும் ஜீவர்களும் ப்ரஹ்மத்தின் இயல்புகள் (ப்ரகாரம்). இயல்பு என்பது வஸ்துவிலிருந்து கண்டிப்பாக வேறுபட்டது.
உதாரணமாக, சிவப்பு நிறம் என்பது ரோசாப்பூ ஆகாது. ஆனால், இந்த நிறத்தைத் தனியாகப் பார்க்க முடியாது.
அது தனியாய் இருக்க முடியாது. ரோசா போன்ற ஒன்றோடு அல்லாமல் சிவப்பைத் தனியே பார்க்க முடியாது.
ஆகவே பண்பு, வஸ்து இரண்டும் தனியானவை. பண்பு/இயல்பு, வஸ்து இரண்டும் பிரிக்க முடியாதவை (அப்ருதக் ஸித்தி).
ஆகவே பொருள்கள் ப்ரஹ்மத்தினின்று வேறுபட்டவை. இது புரிந்தாலே நம்மால் ப்ரஹ்மத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

ப்ரஹ்மத்தை மறைக்கும் குணங்களை வேதம் மறுக்கிறது, ப்ரஹ்மத்தை குணமற்றதாகக் காட்டுகிறது என்பாரேல்,
“அந்த வேத வாக்கியங்கள் எவை?” என்றே கேட்க வேண்டும்.
அத்வைதி சொல்வார்: “வாசாரம்பணம் விகாரோ நாமதேயம் ம்ருத்திகேத்யேவ ஸத்யம்” என்று வேதம் சொல்கிறது.
களி மண்ணே உண்மை. பெயர், உருவம், எல்லாம் உண்மை அல்ல. இவை மொழியால் வருபவை.
இந்த உதாரணத்தால் ப்ரஹ்மம் மட்டுமே உண்மை, குணங்கள் யாவும் மறுக்கப் படுகின்றன,

இதற்கு விடை – இது அப்படின்று. வேதம் ஒன்றை அறிவதால் எல்லாம் அறியப் பட்டதாகும் என்று உறுதி தந்தது.
இதிலிருந்து, “ஒன்றை அறிவதால் பிறவற்றைப் பற்றிய அறிவு எப்படி ஏற்படும்?” எனும் கேள்வி எழுகிறது.
இந்த விஷயமே வேதத்தால் விளக்கப் படுகிறது. அது எந்த குணத்தையும் மறுக்கவில்லை,
அதே களிமண் தன் நிலை, உபயோகம் இவற்றைப் பொறுத்து வெவ்வேறு பெயர்களைப் பெறுகிறது.
எல்லாவற்றிலும் பொருள் ஒன்றே. ஆகவேதான், பொருளின் நிலை, இயல்பு பற்றி அறிவது அதன் முழு அறிவைத் தரும்.
நாம் சொன்னதற்கு வேதத்தில் எவ்வித மறுப்பும் இல்லை.

“ஒன்றை அறிவதால் எல்லாவற்றையும் அறிய முடியும்” எனும் வேத லக்ஷ்யம் ப்ரஹ்மம் தவிர எல்லாமே மாயை/பொய் என்றால்,
களிமண் பற்றிய உதாரணமே தவறாகும்.
ச்வேதகேது கயிறு – பாம்பு மாயையை முன்பே அறிந்து, அவன் பானை, பாத்திரம் ஆகியவற்றைக் களிமண்ணின் மாயை என அறிவான்
என நாம் ஊகிக்க முடியாது. இது மிகவும் இயல்பற்ற அறிதல் ஆகும். அவ்வாறு அறிந்திருந்தாலும் எதைக்கொண்டு
இங்கு பானை முதலாவை மாயை என்று அவன் உணர்ந்தான்? கயிறு – பாம்பு உதாஹரணதுக்கும்,
களிமண் – பானை உதாஹரணதுக்கும் என்ன ஸம்பந்தம், அது எங்கு நிரூபிக்கப் படுகிறது?
உதாஹரணத்தில் ஏதோ ஒரு பண்பு அறியப்பட்டாலேயே, அதைக்கொண்டு தெரியாத பொருளை விளக்க முடியும்.
உதாஹரணத்திலும் புதிதாக ஒன்றை விளக்கி, பிறகு அவன் அறியாத விஷயத்திலும் புதிதாக ஒன்றை
ஒரே வாக்கியத்தால் உணர்த்த முடியாது. இது உதாரணத்தின் பயனுமல்ல.

உதாரணங்கள் எப்படிச் செயல்படும் என்பது அத்வைதிக்கு விளங்கவில்லை. உதாரணம் காட்டும் போது,
காட்டப்படும் விஷயம் கேட்பவருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்றும், அதைக்கொண்டு அறியாதது உணர்த்தப்படும் என்பதே சரி ஆகும்.
உதாரணத்திலும் அறியாத விஷயம் இருக்குமாயின் எந்த அறிவையும் உணர்த்த முடியாது.
அத்வைதி தனக்கு சாதகமானதெல்லாம் ச்வேதகேது முன்பே அறிந்ததாகக் கொள்வது பொருந்தாது.
தந்தையின் வாக்காலேயே அவன் இரண்டையும் (உதாரணத்தின் நோக்கு + புதிய அறியாத விஷயம்) அறிந்தான் என்று கொள்ள முடியாது.
உதாரணம் காட்டும் போது, ஒன்று அறிந்தும், மற்றொன்று அறியாமலும் இருக்க வேண்டும்.
இரண்டும் அறியப்படாமல் இருக்குமாயின் கேட்பவருக்கு ஒன்றும் விளங்காது.

ஆக, மண்ணின் மாற்றங்களே பானை முதலானவை என்று ச்வேதகேது அறிந்தான் என்று கொள்வதே இயல்வானதும் பொருத்தமானதும் ஆகும்.
பானை முதலானவை கயிறில் பாம்பு போல் பொய்யானவை என்று அவன் அறிந்தான் என்று கொள்வது அனாவசியம் ஆகும்.

ஓர் ஆக்ஷேபம் எழுப்பப்படலாம். “ஸதேவ ஸோம்ய! இதமாக்ர ஆஸீத், ஏகமேவ அத்விதீயம்” எனும் ச்ருதி வாக்யத்தில்
ஏகமேவ (ஒன்றே ஒன்று) ஸதேவ (ஸத் மட்டுமே) என்பதில் ஒன்றே மட்டும் என வலியுறுத்தல் இருமுறை வருகிறது.
ஆகவே, இவ்வாக்கியத்தின் நோக்கம் ஸஜாதீய (தன் வர்க்கத்தில் வேறு ஒன்று) பேதமும்
விஜாதீய (பிற வர்க்கத்தில் வேறு ஒன்று) பேதமும் இல்லை என்பதே அது.

இந்த ஆக்ஷேபத்தில் உள்ள நிலை உறுதியானதன்று. மண், குடம் என முன்பு சொல்லப்பட்ட உதாரணத்தில் தெளிவாயுள்ளது:
காரணம், கார்யம் என இருவகையில் நமக்கு ஞானம் உண்டாகிறது. ஆகவே பொருள் ஒன்றே, அதன் நிலைகள் வேறு என.
ச்வேதகேது ப்ரஹமமே எல்லாவற்றின் மூல காரணம் என்பதை அறிந்திலன்
ஆதலால் அவனுக்கு உபதேசம், “ஸதேவ ஸோம்ய!” என்று தொடங்குகிறது.

“ஸதேவ இதமக்ர ஆஸீத்” என்பதில் உள்ள “அக்ரே” சப்தம் கால ப்ரமாணம் குறிக்கிறது.
இதில் இப்போது தெரிகிற இந்த ப்ரபஞ்சம் முன்பு ”இதம்” என்று இருப்பாகிற ஸ்திதியை அடைந்தது என்று காட்டுகிறது.
“ஏகமேவ” என்பதால் பல எனும் நிலைக்கான நாமங்கள் வடிவங்கள் வேறுபாடு புலப்படவில்லை.
ஆகவே இவ்வளவால் ஸத் என்பதே ப்ரபஞ்சத்தின் மூல காரணம் என்றாகிறது.

நாம் பொதுவாக உபாதான காரணம் ஓர் நிமித்த காரணத்தை எதிர்பார்த்தே அமையக் காண்கிறோம்.
(பானை உதாரணத்தில் மண், பானை ஆக ஒரு குயவன் தேவை) இது நடக்க ஒரு சூழலும் தேவை.
இவ்விஷயத்தில் ப்ரஹ்மம் ஓர் வேறுபட்ட நிமித்த காரணத்தை எதிர்பார்க்காது.
ப்ரஹ்மம் எல்லா வகையிலும் ஒப்பற்றதும், ஸர்வவ்யாப்தனாயும் உள்ளதால் அது ஸர்வசக்தனாயும் இருப்பதை அறியத் தடையில்லை.
”அத்விதீயம்” சப்தம் ப்ரஹ்மம் மற்றொரு நிமித்த காரணம் அல்லது உதவியை எதிர்பார்க்கிறது என்பதை மறுக்கிறது.
ப்ரஹ்மத்துக்கு எல்லா சக்திகளும் உண்டு என்பதால் பல ச்ருதி வாக்யங்கள் ப்ரஹ்மம் முதலில் உபாதான காரணம்,
பிறகு அதுவே நிமித்த காரணமும் என நமக்குக் காட்டுகின்றன,

இப்போது விவாதாஸ்பதமான ச்ருதி வாக்யத்தை ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார்.
அவர் எழுப்பும் ஆக்ஷேபம் ச்ருதி வாக்கியத்தின் பொருள் செழுமையையும் உபதேச அர்த்தத்தையும் மிகக் குறைத்துவிடுகிறது.
ப்ரஹ்மத்தைத் தவிர இன்னொன்றை மறுதலிக்கவே “ஏவ” எனும் சொல்.
ஆசிரியர் இதைவிட இன்னும் இது விரிவானது என்கிறார். இதிலுள்ள பானை உதாரணத்தால் இதை விளக்குகிறார்.
இதிலுள்ள ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்த பொருள் கொண்டது. நாம ரூபங்களில்லாத ப்ரபஞ்சத்துக்குக் காரணம் ப்ரஹ்மம்,
நாம ரூபங்கள் கொண்ட ப்ரபஞ்சம் ப்ரஹ்மத்தின் கார்யம். ”இதம்” எனும் இப்போதுள்ள நிலை ப்ரஹ்மத்தின் சரீரம்/வடிவம்.
ப்ரஹ்மம் தன ஆற்றலால் ஒரு நிலையிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றுகிறது.
இவ்வாறு ப்ரஹ்மம் உபாதான காரணமாயும், நிமித்த காரணமாயும் உள்ளது.

மற்ற ச்ருதி வாக்யங்களில் முதலில் ப்ரஹ்மம் நிமித்த காரணம் என்றும் பிறகு எது உபாதான காரணம் என்றும் விசாரிக்கப் படுகிறது.
முடிவாக, ப்ரஹ்மமே உபாதான காரணம் உள்பட எல்லாக் காரணமும் என்று சொல்லப்படுகிறது.

ரிக் வேதத்தில் சொல்லப்படுவதைப் பாருங்கள்:

கிம்ஸ்வித் வனம்? க உ ஸ வ்ருக்ஷ ஆஸீத்? யதோ த்யாவாப்ருத்வீ நிஸ்ததுக்ஷு,
மனீஷினோ மனஸா ப்ருச்சதே து தத், யத் அத்யாதிஷ்டத்-புவனாநி தாரயன் I

ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ஸ வ்ருக்ஷ ஆஸீத் யதோ த்யாவா ப்ருத்வீ நிஸ்ததக்ஷு
மனீஷினோ மனஸா விப்ரவீமி வஹ ப்ரஹ்மாத் யதிஷ்டத் புவனானி தாரயன்I

[காடு எது? ஆகாசமும் பூமியும் உருவான மரங்கள் எவை? ஞானிகள் தங்கள் மனதில் தேடுகிறார்கள்.
எந்த ஆதாரத்தால் ப்ரபஞ்சங்கள் தாங்கப்படுகின்றன?
ஞானவான்களே! நான் இதை என் மனதில் நன்கு ஆராய்ந்து சொல்கிறேன்; ப்ரஹ்மமே காடு; ப்ரஹ்மமே மரம்;
ப்ரஹ்மம் ஆகாசத்தையும் பூமியையும் உருவாக்கித் தானே தாங்குகிறது.]

பொதுவாக, ஒரே வஸ்துவே உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருப்பதில்லை.
இந்த ஸந்தேஹம் ப்ரஹ்மம் விசேஷமானது மிக வேறுபட்டது என தெளிவிக்கப்படுகிறது.

வீடு கட்ட மரம் தேவையான மரப் பொருள் தருகிறது. இது உபாதான காரணம். தச்சன் மரத்தைக் காட்டிலிருந்து தேடிக் கொண்டு
வந்து தக்க கருவிகளையும் கொண்டு மரத்தைப் பொருள் ஆக்குகிறான்.
ப்ரஹ்மம் தான் மரம். அதுவே மரம் உள்ள வனம், ப்ரஹ்மமே உருவாக்கும் தச்சன், ப்ரஹ்மமே இவ்வெல்லாவற்றுக்கும் ஆதாரம்.
“ஸதேவ” ச்ருதியும் இதுவும் ஒரே கருத்தை வெளியிடுகின்றன.

ப்ரஹ்மத்தை வேறு ஒரு தொடர்புகளும் இயல்வுகளும் அற்றதாகக் காட்ட விழையும் அத்வைதிக்கு இந்த வேத வாக்கியம் துளியும் பயன்படாது.
‘அக்ரே’ எனும் சொல் கால ப்ரமாணம் காட்டுவது, ‘ஆஸீத்’ என்பது கார்ய பாவம் (மாறும் நிலை) காட்டுவது.
இவ்வாறாக, காரண-கார்ய ரூபத்தில் ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிக்கான உபாதான மற்றும் நிமித்த காரணத் தொடர்பு விளக்கப் படுகிறது.
இப்படி ப்ரஹ்மம் விசேஷமானது, எல்லா சக்திகளும் நிரம்பியது எனத் தெரிகிறது.
மற்றபடி தெரியாத வேறு ஸம்பந்தங்களும் இயல்புகளும் கூட ச்ருதி வாக்யங்களால் தெரிகின்றன.
இந்த ச்ருதி வாக்யம் காரண கார்யங்களின் உண்மைத் தொடர்பை விளக்க வந்தது.
ஆகவேதான் இது, ‘அஸத் ஏவ இதமக்ர ஆஸீத்’ (உயிரற்றதே முதலில் இருந்தது) என்று சொல்லி,
பின் இல்லாததிலிருந்து உள்ளது வரக்கூடும் என்பதை மறுக்கிறது. இவ்வாக்யம்,
‘குதஸ்து கலு ஸோம்ய ஏவம் ஸ்யாத்’ (அன்பனே! இது எப்படி இவ்வாறு இருக்கக் கூடும்?’) என்று கேட்கிறது.

இவ்வினாவின் உட்கிடையாவது – முதலில் இல்லாதது மட்டுமே இருந்திருந்தால், காரணமற்ற ஸ்ருஷ்டி எனும் முரண் ஏற்படும்.
இது மேலும் ‘கதமஸதஸ் ஸஜ்ஜயேத’ (இருப்பது இல்லாததிலிருந்து எங்ஙனம் உருவாகும்?) எனும் கேள்வியால் வலியுறுத்தப் படுகிறது.
பானைக்கு மண்ணின் இயல்பு இருப்பது போன்றே இதுவும்.

ஒன்றை அறிந்துகொள்வதன் மூலம் எல்லாம் அறியப்பட்டதாகிறது என்பது இவ்வுபதேசம்.
இப்படிச் சொல்வதன் காரணம், ஒரே வஸ்துவே காரணமாயும், தன் நிலையில் மாற்றம் ஏற்பட்டபின் கார்யமாயும் உள்ளதே.
இல்லாததிலிருந்து உள்ளது எழும் என்றால் ஒன்றை அறிவதன் மூலம் எல்லாம் அறியப்படும் என்பது நிற்காது.
ஏன் எனில் முரண்பட்ட பொருள்களை ஒன்றன் வழி இன்னொன்றை க்ரஹிக்க முடியாது.
இக்கொள்கைப்படி உபாதான நிமித்த மற்றும் ஸஹகாரி காரணங்கள் தம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்ட விளைவைத் தருகின்றன.
ஆகில், ஒரு காரணத்தை அறிந்தால் அதன் விளைவை அறிய முடியாது!

இந்த (ஸாங்க்ய) தத்வம் சொல்பவர் பழைய வஸ்துவிலிருந்து புது வஸ்துக்கள் வரலாம் என்பதை மறுக்க முடியாது.
ஆனால் அது அப்படி அன்று. புது வஸ்துக்கள் பழையனவற்றின் வேறுபட்ட, மாறுபட்ட புது வடிவங்களே.
காரணத்திலிருந்து முற்றிலும் முரண்பட்ட கார்யம் என்பதை நாம் மறுப்பதே ஒரு வேறுபாடு.
கார்யம் என்பது காரணத்தின் வேறுபட்ட படிவ மாற்றம் என்பது இல்லாவிடில் காரணங்களிலிருந்து கார்யங்கள் விளைவதென்பதே இராது.
ஆகவே, கார்யம் என்பது காரணத்தின் மாறுபாடான தோற்றங்கள் என்பது பொருந்தும்.

இந்த உபதேசத்தின் உண்மைக் காரணம் ஆசிரியரால் சொல்லப் படுகிறது. இது, அஸத் கார்யவாதத்தை மறுதலித்து,
ஸத் கார்ய வாதத்தை நிலை நாட்ட இந்த உதாரணம் பயன்படுகிறது. வேத உபதேசத்தின் லக்ஷ்யம் ஸத் காரணம் என்பதே.
காரண கார்ய பாவத்தில் ஒன்றை அறிந்துகொள்வதால் எல்லாம் அறியப்படுவது என்ற பொருள் உள்ளதாகிறது.

தத் த்வம் அஸி -என்ற இடத்துக்கு லக்ஷணைக்கு இடமே இல்லையே –
தத் -ஜகத் காரணபூதமான ப்ரஹ்மமும் –த்வம் – ஜீவனுக்கு அந்தர்யாமியான ப்ரஹ்மமும் சொல்லுகிறது என்பதில்
விரோதத்துக்கு இடமே இல்லையே -ஆகையால் லக்ஷணைக்கு இடமே இல்லை
விசேஷணம் இல்லாமல் ப்ரஹ்ம ஸ்வரூபத்தை மட்டும் குறிக்கும் பர்யாய சொற்கள் என்றால் ஒரே வஸ்துவுக்கு
எதற்க்காக ஐக்யம் சொல்ல வேண்டும் –
வேறுபட்ட ப்ரவ்ருத்தி நிமித்தங்களை விட்டு ஐக்யம் சொல்லுவது பயன் அற்றது அன்றோ –
பின்ன ப்ரவ்ருத்தி நிமித்தானாம் சப்தானாம் ஏகஸ்மின் அர்த்தே வ்ருத்தி சாமாநாதி கரணயம்
தத் -ஜகத்காரண பூதமான ப்ரஹ்மம்
த்வம் ஜீவ அந்தர்யாமியான ப்ரஹ்மம்
இப்படி பின்னமான ப்ரவ்ருத்தி நிமித்தங்களை உடைய இரண்டு பதங்களும் ப்ரஹ்மம் ஒன்றையே அவகாஹித்து -பற்றி நிற்கிறது
என்று விஷ்டாத்வைத பக்ஷத்தில் சாமாநாதி கரண்யம் பொருந்தும் -அத்வைதி மதத்திலே பொருந்தாதே –

ஆக தத்வமஸி வாக்யத்துக்கு அத்வைதி பக்ஷத்தில் நான்கு முக்கியமான தோஷங்கள் உண்டாகுமே
1-தத் -என்ற சொல்லால் அறியப் படும் குணங்கள் பாதிக்கப் படுகின்றன
2-இரண்டு பதங்களுக்கு லக்ஷணை சொல்ல வேண்டி உள்ளது
3-சாமாநாதி கரண்ய லக்ஷணம் பொருந்தாமை
4-உபக்ரம விஷய விரோதம் -தத் ஐஷத-வாக்ய விரோதம்

நிர்விசேஷமாக ஒரு வஸ்து உண்டு என்பதற்கு சப்த பிரமாணம் இல்லையே
சப்த பிரமாணம் பதம் என்றும் வாக்கியம் என்றும் இரண்டு விதம்
பதம் -பகுதி விகுதி-அதாவது ப்ரக்ருதி ப்ரத்யயம் – இரண்டும் உள்ளதால் பதம் விசேஷணங்கள் உடன் கூடியே சேர்ந்த
அர்த்தத்தை தெரிவிக்கும் அன்றி நிர்விசேஷமாக அர்த்தம் தெரிவிக்காதே
வாக்கியம் பாத சேர்க்கையால் -ஆகவே பதம் வாக்கியம் இரண்டுக்குமே நிர்விசேஷ பொருளைத் தெரிவிக்கும் சக்தி இல்லை என்றதாயிற்று

அர்த்த பேத போதந க்ருத பத ஸ்வரூபதா லப்த பிராமண பாவஸ்ய –
அர்த்த சம்சர்க விசேஷ போதந க்ருத வாக்ய ஸ்வரூபதா லப்த பிராமண பாவஸ்ய-என்று பிரித்து பொருள் கொள்ள வேணும்
வெண்மையான வஸ்திரம் -வெண்மை கறுப்பு வஸ்த்ரத்தில் இருந்து இந்த வஸ்திரத்தை வேறுபடுத்திக் காட்டும் –
வஸ்திரம் வெண்மை தர்மம் கொண்ட சங்கு இவற்றில் இருந்து வேறுபடுத்திக் காட்டும்
ஆகவே ச விசேஷமாகவே அல்லது நிர்விசேஷ வஸ்து பிரமாணம் அற்றதே யாகும் –

ப்ரஹ்மம் ஸ்வயம் பிரகாசம் -வேதாந்தம் ப்ரஹ்ம சித்திக்காக வந்தது அன்று -அதில் ஆரோபிக்கப்படும்
ஞாத்ருத்வாதிகளை நிக்ஷேபிக்கவே என்பர் அத்வைதிகள்
இதுக்கு சமாதானம்
இதை விலக்க சப்தத்தால் குறித்து தானே -ஞப்தி சப்தம் -விசேக்ஷணத்துடன் கூடிய வஸ்துவைத் தானே சொல்லும்
ஸ்வயம் பிரகாசத்தன்மையும் அது விசேஷத்துடன் சேர்ந்து இருப்பதாலே தான் ஏற்படும் –
எந்த வஸ்து தன்னைத்தவிர பிற வஸ்துக்களும் பேச்சுக்கு உரியதாம் தன்மையைத் தருகிறதோ அதுவே ஸ்வயம் பிரகாசம்
எனவே ச விசேஷத் தன்மைக்கே பொருந்தும்
அவித்யையால் ப்ரஹ்மம் மறைக்கப்படும் பொழுது முழுதும் மறைக்கப்படுகிறதா -ஒரு பகுதி அம்சம் மட்டும் மறைக்கப்படுகிறதா
முழுதும் என்றால் ஸ்வயம் பிரகாசம் இழந்து ப்ரஹ்மம் இல்லை என்றதாகும்
ஒரு அம்சம் என்றால் -ப்ரஹ்மம் மறைப்பைப் பெற்றதால் ச விசேஷமாகும்
எனவே நிர்விசேஷ வஸ்து சித்திக்காதே

——————-

ப்ரதிவாதி பேசுகிறார்
அஸத்கார்யவாத மறுப்பு மாயை ஓர் அடித்தளமின்றி இராது எனக் காட்ட மட்டுமே அமைகிறது. ஒரே ஓர் உண்மை மட்டுமே உள்ளது:
சுத்த ப்ரஞ்ஞை. அதில் அவித்யையால் பிறழ்வு ஏற்பட்டு ப்ரபஞ்சமாகக் காட்சி அளிக்கிறது.
அஸத்கார்ய வாத மறுப்பு அடிப்படையாய் இயங்கும் அஞ்ஞானமே காரணம் என அறிவதே.

இதற்கு நம் பதில்:
இது அவ்வாறன்று. ஒன்றை அறிவது அனைத்தையும் அறிய வழி என்பது அஸத்கார்யவாதத்தை மறுத்து
ஸத்கார்ய வாதத்தை நிலைநிறுத்தவேயாம்!
மேலும் உங்கள் கோட்பாட்டில் மாயை என்பது ஓர் அடித்தளம் இன்றி அமையாது என்பதை நிலைநாட்டுவதே வீண்.
நீங்கள் மாயையை உருவாக்கும் குறை (உபாதி) உண்மை என்பதை ஒப்புக்கொண்டாலே அந்தக் குறையின்
அடித்தளம் உண்மை என்பது ஒப்புக்கொண்டதாகிவிடும்.
அப்போது தான் உண்மையற்ற பொய்மை உருவாகிறது என்பதை ஸ்தாபித்தவராவீர்கள்.
ஆனால் உங்களுக்கோ குறைகள் பொய்யானவை, அக்குறைகளின் அடித்தளங்களே பொய்யானவை ஆகவே
பொய்யான அடிப்படையில் பொய்யான ப்ரஞ்ஞையை நிரூபிக்கிறீர்கள்.
ஆகில், அடித்தளமற்ற பொய்மையை நீங்கள் மறுதலிக்க வேண்டுமே!

இருதரப்பினரும் அஸத்கார்யவாதம் மறுக்கப்படுவதை ஒப்புக்கொள்கிறார்கள்;
ஆனால் அதை மறுப்பதன் மூலம் ஸ்தாபிக்கப் படுவதை ஏற்பதில் முரண்படுகிறார்கள்.
அத்வைதி விவர்த்த வாதம் செய்கிறார், விசிஷ்டாத்வைதி ஸத்கார்ய வாதத்தை ஸ்தாபிப்பதே இப்பத்தியின் நோக்கம் என்கிறார்.
அத்வைதி மாயையாகிய இப்ரபஞ்சத்தை சுத்த ப்ரஞ்ஞையில் வந்த ஒரு பொய்மை என்கிறார்.
அவர், அடித்தளமில்லாமல் ஒரு மாயை நிற்காது என ஸ்தாபிப்பதற்காக அஸத்கார்ய வாதத்தை எடுத்தாள்கிறார்.

விசிஷ்டாத்வைதி இதை இரு படிகளால் மறுத்துரைக்கிறார்:
இந்த வேத வாக்கியம் ஒன்றை அறிவதால் அனைத்தும் அறியப்பட்டதாகிறது என்று தொடங்கியது.
பொய், உண்மையற்றது என்பன இந்தப்பிரகரணத்துக்குச் சேராது. பிறகு உதாஹரிக்கப்படும் களி மண், பானை உதாஹரணமும் சேராது
ஏனெனில் அடித்தளம் பொய் என இது காட்டவில்லை.
ஒரு பொய்க்கு அடித்தளம் வேணும் என நிரூபிப்பது அத்வைதிக்குத் தேவையற்றது. அவர் கோட்பாட்டில் ப்ரஞ்ஞை என்பது மாயையின் அடித்தளமன்று.
அத்வைதி இதைத்தான் நிரூபிக்க வேண்டும். இதன் எதிர்மறையை அவர் ஸ்தாபித்தால், சுத்த ப்ரஞ்ஞை அல்லது ப்ரஹ்மம்
குறைகளுக்குட்பட்டது என்றாகிவிடும்! ஆகவேதான் ஆசிரியர் தொடக்கத்திலேயே ப்ரஹ்மத்துக்கே அஞ்ஞானம் ஏற்படுகிறது என்கிறார்.
உரிச்சொற்கள் போன்றவற்றால் “ப்ரஹ்மம் என்பது ஸத்யம், ஞானம், ஆனந்தம்” என்பனவற்றால்
ப்ரஹ்மத்துக்குப் பல இயல்புகள் காட்டப்படுகின்றன. இவற்றைப் புரிந்துகொள்ளும் விதம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இதில் மாறாட்டமில்லை.

வேத வாக்யங்கள் “நேதி நேதி” என்பன போன்றவற்றால் “இப்படி இல்லை, இப்படி இல்லை” என்பதனால்
எதை மறுக்கின்றன என்பது தெளிய வேண்டும். “ஒன்று வடிவுள்ளது, மற்றொன்று வடிவமில்லாதது” என்பன போலும் வாக்யங்களைக் கூறக்கூடும்.
வேதங்கள் முதலில் ப்ரபஞ்சம் முழுதும் ப்ரஹ்மத்தின் வடிவம் என்று சொல்லி, பின்னர் அது வடிவமற்றது
எனச் சொல்லும் என்பது அஸம்பாவிதம், முறையற்றது. முன்னால் தெரியாததை அது சொல்லாது. அல்லது சொல்லி,
முற்றாக மறுக்காது. அழுக்குப் போகத் துவைப்பதைவிடக் கறை படியாமல் இருப்பது நன்றன்றோ!
ஆசிரியர் வேதம் ஒன்றை உபதேசித்துவிட்டு அதன்பின் ஒவ்வொன்றையும் மறுக்கிறது என்பது பகுத்தறிவுக்கு முரணானது என்கிறார்.
இவ்வாறு அவர் அத்வைதியின் “நேதி நேதி”க்கான விளக்கத்தை மறுக்கிறார்.

ஆகில், “நேதி நேதி”யின் பொருள்தான் என்ன?
வேதாந்த ஸூத்ரகாரர் 3.2.22ல் “நேதி நேதி” என்பது முந்தைய ஸூத்ரங்களில் சொன்னவற்றோடு ப்ரஹ்மம் அடங்கிவிட்டது
என்பதில்லை என வலியுறுத்துவதே என்கிறார். இதுவே சரியான பொருள் ஏனெனில்
மேலே ஸூத்ரங்களே ‘ப்ரஹ்மனே உண்மைகளில் எல்லாம் உண்மை, அதிலிருந்தே ஸத்யமான வாழ்வாதாரங்கள் வருகின்றன
அவை யாவுமே ஸத்யம்’ எனது தொடர்ந்து ஓதுகின்றன.

ப்ரதிவாதி, ‘இதோ இங்கே பல என்பதில்லை’ என்பது பன்மையை மறுப்பதன்றோ என்பாராகில் நாம் சொல்வோம்:
இப்படி இவ்வாக்கியம் அமைந்திருப்பினும், அதே வேதப்பகுதி ‘அவனே யாவற்றுக்கும் அரசன், அவனே யாவற்றுக்கும் நியந்தா’ என
ப்ரஹ்மமே யாவற்றுக்கும் ஸ்வாமி, யாவும் அவன் சரீரமே, அவன் யாவற்றிலும் எல்லா நிலைகளிலும் உளன் என்கிறது.
இந்த யாவர்க்கும் ப்ரபுவானவன் ஒருவனே. வேதங்கள் ப்ரஹ்மத்தைத் தம் ஆத்மாவாக அடையாத எந்த ஒரு வஸ்துவும் உண்டு
என ஏற்கவில்லை. இந்த மறுப்பு உங்களுக்கு ஸாதகமன்றே! ப்ரஹ்மத்துக்குத் தனித்தனி வெவ்வேறு இயல்புகள்
உண்டென்பதை மறுக்கும் ஒரு வேத வாக்யமும் இல்லையே.

ஓரியல்பும் அற்றதாய், வெறும் ப்ரஞ்ஞா ரூபமாய் அஞ்ஞானத்தால் தன்னைத் தானே வேறாகப் பார்க்கும் ப்ரஹ்மத்தை எங்கும் ஓதவில்லை.
ப்ரஹ்மத்துக்கு ஞானம் ஓர் இயல்பு என்று இல்லாமல், அதுவே ஞானம் எனில் அது தன்னை எவ்வாறு இயல்பின் வேறாய்க் காட்டும்?
இதன் தனித்த தன்மையை மறுப்பது இதை அழிப்பதே யாகும்.
ப்ரஞ்ஞை என்பது ஒளி ஆகில், உண்மை ஆகில், அது அஞ்ஞானத்தால் மறைக்கப் படுகிறது என்பது குழந்தைத்தனமானது.
அஞ்ஞானம் எப்படி அதனை இருட்டடித்து அல்லது அணைக்க முடியும்?
ஒளி நித்யமானது என்று அறுதியிடப்படுகிறது என்பதால் அஞ்ஞானம் ப்ரஹ்மத்தை மறைக்க முடியாது.
ப்ரஹ்மம் பன்மையைப் பார்க்கிறது. இந்த விசித்திரக் கோட்பாடு அறிவாளிகளின் அகராதியைத் தாண்டுகிறது!

ஆசிரியர் பன்மையின் அடிப்படையை ஆய்கிறார். அத்வைதி சுத்த ப்ரஞ்ஞை அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டு
மாயையான பன்மையைக் காண்கிறது என்கிறார்.
ஆனால் முன் பகுதிகளில் விளக்கியதுபோல் மறைக்கப்படும்போது மாயை ஆகும் இயல்பு ப்ரஹ்மத்துக்கு இருந்தால் மட்டுமே
இக்கோட்பாடு நிற்கும். ஆனால் அத்வைதியின் ப்ரஹ்மம் இயல்பு அற்றவன் என்பதால் இப்படிப் பட்ட மறைப்பு ப்ரஹ்மத்துக்கே அழிவாகும்.
ப்ரஹ்மத்துக்கு வெளியே அவனை அழிக்க எதுவுமில்லை அவன் நித்யன் என்பதால் அழிவும் இல்லை.
ப்ரஹ்மம் நித்யன், சுத்த ப்ரஞ்ஞன் ஆகவே ஒளிர்பவன். இவனை மறைக்க முடியாது.
ஆனால் அத்வைதி இவனை அஞ்ஞானம் மறைக்கிறது என்கிறார். ஒன்று ப்ரஹ்மம் அழிக்கப் படக் கூடியவன்,
பன்மை இயல்வினன் அல்லது அஞ்ஞானம் முக்கியம் பெறுகிறது. இதனால் பன்மை நிகழ்கிறது.
இது மேலும் முரண்பாடுகளையே விளைக்கும்.

நீரும் பிரஞ்ஞை உள்ளதும் ஸ்வயம் ப்ரகாசமுமான ஓர் ஆத்மாவை ஏற்றுக்கொண்டாக வேண்டுமே.
இந்த ஒளி ஆத்மா தன்னைத் தன் சரீரங்களோடும் தெய்வங்கள் போன்ற பிறவற்றோடும் இணைத்துக்கொள்ளத் தேவை.
இவ்வொளி ப்ரகாசித்தால் தோற்றங்களைப் புரிந்து கொள்வதில் பிழை ஏற்படாது. ஆகவே எடுத்துக்காட்டப்பட்ட குறை உமக்கும் ஏற்கும்.
எங்களைப் பொறுத்தவரை ஒரே ஆத்மா, பரமாத்மா ஒருவனே உளன் அவன் விஷயத்தில் இக்குறை விளக்கப் பட வேண்டும்.
ஆனால் உமக்கோ எனில் நீர் ஒப்புக் கொண்டுள்ள கணக்கற்ற ஆத்மாக்கள் விஷயத்தில் இக்குறை விளக்கப்பட வேண்டும்!

பரப்ரஹ்மன், ஸ்வாபாவிகமாகவே எல்லா அப்பழுக்குகளுக்கும் அப்பாற்பட்டவர், எல்லையில் ஞானமும் இன்பமும் உடையவர்.
கல்யாண குணங்களும் சக்திகளும் நிரம்பிய அளப்பரிய கடல். வினாடி, நிமிஷம், மணி, நாழிகை போன்ற கணக்குகளால்
பகுக்கப்பட்டுள்ள எல்லையிலாக் காலங்களாக ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளயங்களை, தான் அக்காலத்தால் பாதிக்கப்படாமல் செய்து வருபவர்.
இதுவே இவரது தனிச் சிறப்பாகும். எண்ணற்ற தனி உயிர்வாழிகள் அவர் சரீரமாய் உபகாரணங்களாய் உள்ளன.
அவரது லீலையில் பாங்காய் உள்ளன. இவை மூவகைப்படும்: (நித்யர்) எப்போதுமே ஸம்ஸார ஸம்பந்தமற்று இருப்போர்,
(முக்தர்) ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டோர், மற்றும் (பத்தர்) ஸம்ஸாரத்தில் கட்டுப்பட்டுள்ளவர்கள்.
இவர்கள் தவிர இந்த உயிர்வாழிகளால் அநுபவிக்கப்படுகிற எண்ணற்ற வியத்தகு பொருள்கள் ஆற்றல்களும் அவரின் உபகரண அம்சங்களே.
உள்ளிருந்து நியமிக்கும் அந்தர்யாமியாய் ப்ரஹ்மன் ஆத்மாக்களையும் பொருள்களையும் தம் சரீரமாகவும் ப்ரகாரமாகவும்
தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இந்த ப்ரஹ்மனே அறிந்துகொள்ளப் பட வேண்டியவர்.

ருக், யஜுஸ், ஸாம, அதர்வ வேதங்கள் அநாதி காலமானவை, ஆயிரக்கணக்கான கிளைகள் உள்ளவை.
மேம்பொருளை உரைக்க அவை அவிச்சின்னமான இடையறாத ஆற்றொழுக்காக ஞான பரம்பரை மூலம் வருகின்றன.
வேதங்களின் விதி, ஸ்துதி, ப்ரார்த்தனை பாகங்கள் பகவத் த்வைபாயனர், பராசரர், வால்மீகி, மநு, யாஜ்யவல்க்யர், கவுதமர்,
ஆபஸ்தம்பர் போன்றோரின் இதிஹாசங்கள், புராணங்கள், தர்ம சாஸ்த்ரங்களில் விளக்கப் படுகின்றன.
இது நம் நிலை ஆகும்போது நமக்கு என்ன கஷ்டம்?

மஹா பாரதத்தில் பகவான் த்வைபாயனர்
எவன் என்னைப் பிறப்பிலி என்றும் ஒரு காரணம் அற்றவன் என்றும் உலகங்கள் எல்லாவற்றுக்கும் நாயகன் என்றும் அறிகிறானோ…..கீதை
இவ்வுலகில் அழிவது அழிவில்லாதன என இரண்டுள, எல்லா உயிர்வாழிகளும் அழியும் உடல் அழியா ஆத்மா இரண்டும் பெற்றுள்ள,
அழியும் அழியா இவ்விரண்டினும் மேம்பட்டவன் பரமாத்மா, இந்த அழிவற்ற பரமாத்மா மூவுலகுகளையும் நிறைத்து, தாங்குகிறார்…..கீதை .
பரமாத்மாவின் லோகத்தில் காலமும் யஜமானன்று, கட்டுப்பட்டது. ஆனால் இவ்வுலகிலோ யாவுமே நரகம்தான்…மோக்ஷ பர்வம், மஹாபாரதம்
உருவிலா இயற்பியல் பொருள்கள் முதல் யாவுமே மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் உட்பட்டவை,
இவை யாவும் ஹரியின் லீலையில் அடங்குவன….மோக்ஷ பர்வம், மஹாபாரதம்
க்ருஷ்ணன் ஒருவரே இவ்வுலகின் ஆதியும் அந்தமும். அசையும், அசையாப் பொருள்கள் யாவும் இருப்பது க்ருஷ்ணன் பொருட்டே…….ஸபா பர்வம்
க்ருஷ்ணனுக்காகவே இருப்பதாவது கிருஷ்ணனின் உபகரணமாய் இருப்பதே.

பகவான் பராசரரும் இதே போல் பேசியுள்ளார்:
மைத்ரேய! ‘பகவத்’ எனும் சொல் எல்லா வகையிலும் சுத்தமான பெரிய எல்லாக் காரணங்களுக்கும் மூல காரணமான
பரப்ரஹ்மத்துக்கு மட்டுமே உரித்தாகும்.
ஞானம், பலம், ஐச்வர்ய. வீர்யம், சக்தி, தேஜஸ் , குறைகளின்மை ஆகியவற்றின் பரிபூர்ணத்வம் இந்த பகவான்
என்ற சொல்லால் பெறப்படும். மைத்ரேய! இச்சொல் எல்லாப் பூர்த்தியும் நிறைந்த பரப்ரஹ்மன் ஒருவனுக்கே உரித்தாகும்.
மைத்ரேய! இச்சொல் இப்பூர்த்திகள் அனைத்தும் உடைய வாஸுதேவன் ஒருவனையே சாரும்.
நம் மரபில் இச்சொல் மரியாதைக்குரிய ஒருவனுக்கு உபசாரமாகவே பயன்படுத்தப் பெறுகிறது.
வாஸுதேவனுக்கு இது ஆதாரமான சொலும், மரியாதையால் பயன்படுத்தப்படுகிறது.
இதுவே ஒரு குறையுமற்ற, அப்பழுக்கற்ற, நித்யமான அழிவற்ற எங்கும் நிறைந்த மேம்பொருளான விஷ்ணுவின் நிலை.
பலவாகப் பகுப்புண்டுள்ள காலத்தால் அவர் மேன்மைக்கு ஒரு மாற்றமும் வாராது. ஒரு குழந்தைபோல் விளையாடும் அவர் லீலைகளை பார்!
………இவை யாவும் ஸ்ரீ விஷ்ணு புராண ச்லோகங்கள்.

இவ்வாறே மநுவும் சொல்கிறார் : அனைத்தையும் நடத்துபவர் அணுவிலும் சிறியதாய் உள்ளார்.
யாஜ்யவல்க்யர், எம்பெருமானைப் பற்றி அறிந்தே ஆத்மா மேலான தூய்மை அடைகிறது என்கிறார்.
ஆபஸ்தம்பர், எல்லா ஆத்மாக்களும் ஈச்வரன் உறையும் குஹை என்கிறார்.
குஹை = இடம், சரீரம். ஆத்மாக்களுக்கு உறைவிடமாயுள்ள சரீரங்கள் யாவும் இறைவனின் வசிக்குமிடம்.

ப்ரதிபக்ஷி வினவுகிறார்: இந்தச் சொல் ஆரவாரங்களின் நோக்கம் என்ன?

பதில்: நாம் கீழ்ச் சொன்னபடி புரிந்து கொள்கிறோம். ஆகவே ஆத்மாவின் தர்ம பூத ஞானமே கர்மத்தின் அடிப்படையில்
விகாசமோ ஸங்கோசமோ அடைகிறது. ஆகவே உங்கள் எதிர்ப்புக்குப் பொருள் இல்லை.
உங்களுக்கோ எனில் அடிப்படை ஞானம்/பிரஞ்ஞையே பாதிக்கப்படுகிறது, ஏனெனில் நீங்கள் அதற்குள்ள இயல்புகள்/பண்புகளை ஏற்பதில்லை.
ஆகவே அதற்கான விரிவோ சுருக்கமோ உங்களுக்கு இசைவில்லை.
எங்களுக்கோ கர்மம் குண இயல்புகளை ஞான ஒளியிலிருந்து தடுப்பதில் ஏற்புண்டு.
நீங்களோ அவித்யா/அஞ்ஞானம் மறைக்கும் கருவி என்பதால் அது இயல்புகளை மறைக்காமல் ஞான ஒளியையே மறைந்துவிடுகிறது என்கிறீர்கள்.
ஆகவே, எங்கள் நோக்கில் நித்ய ஞானத்தின் குண இயல்புகளே கர்ம வசத்தினால் அஞ்ஞானம் விளைப்பதால்
தேவன், மனிதன், விலங்கு, முதலியவற்றை பேதமாய் உணர்கிறது. இதுவே வேறுபாடு.
“இன்னொரு மூன்றாவது சக்தி உள்ளது, அது அஞ்ஞானம், கர்மம். அதுவே ஆத்மாவின் ஞானத்தை மறைக்கிறது .
ஆகவே ஆத்மாக்கள் ஸம்சார துக்கங்களில் உழல்கிறது “ என்று சொல்லப்படுகிறது.
கர்ம வடிவெடுக்கும் அஞ்ஞானம் ஆத்மாவின் குணம் சார்ந்த ஸங்கோச விகாசங்களுக்குக் காரணம் என்பது
இதனால் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

ஆக்ஷேபம் செய்பவர் சொல்கிறார்: நாங்கள் அவித்யாவைப் பிரஸ்தாவிப்பதற்கு இரு காரணங்கள் உள்ளன….
1. வேதங்கள் அவித்யாவைப் பற்றி பேசுகின்றன.
2. தனி ஓர் ஆத்மா ப்ரஹ்மம் போன்றது என்று சொல்ல அது தேவைப் படுகிறது.
ஆகவே அவித்யா ப்ரஹ்மத்தை மூடியுள்ள குறை என்று சொல்கிறோம்.

பதில்: உலகமே பொய்; அது அவித்யையைச் சார்ந்துள்ளது. அவித்யை இவ்வளவு பொய்யானால்,
அது இன்னொரு மாயையைச் சார்ந்திருக்க வேண்டும். அப்போது, ப்ரஹ்மமே மாயைக்குக் காரணமும் விளக்கமும் ஆகிவிடும்.
அவித்யா அநாதி (ஆரம்பமற்றது) என்பது இப்பிரச்னையைத் தீர்க்க உதவாது.
அவித்யா ஆரம்பமற்றது என்கிற சிந்தனையும் ப்ரஹ்மத்தின் அவித்யையோடு இயைந்ததே.
அவித்யையை விளக்க உங்கள் தத்வத்தில் வேறு எந்த உண்மைக் காரணமும் ஒப்புக்கொள்ளப்படாததால்
மாயைக்கு ப்ரஹ்மமே காரணம் என்று ஏற்றுக்கொள்ளப் வேண்டும். அப்படி என்றால் ப்ரஹ்மம் சாஸ்வதம் ஆனபடியால்
மாயை சாஸ்வதம் என்றாகி ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரமே முடியாது என்றாகிவிடும்.
கீழே கண்ட விவரணங்களினால் ஒரே ஒரு ஜீவன் {ஆத்மா} தான் உள்ளது என்பது மறுதலிக்கப் பட்டதாகிறது.
இந்தத் தவறான கொள்கை ஒரே ஒரு சரீரம் ஓர் ஆத்மாவை உடையதாயுள்ளது,
பிற சரீரங்களுக்கு ஆத்மா இல்லை எனும் தவறான கோட்பாடுள்ளதாகிறது. இந்நிலைப்பாடு கனவு காண்பவர்க்கு மட்டும் ஆத்மா உண்டு,
கனவில் அவர் காணும் மக்களுக்கு ஆத்மா கிடையாது என்பதுபோல் உள்ளது.
ஆகவே ஒரே ஓர் ஆத்மாவைத் தவிரப் பிற யாவும் உண்மையன்று.

மேலும் உங்கள் கோட்பாட்டில் நீங்கள் ப்ரஹ்மம் தன் உண்மை ஸ்வரூபத்துக்கு மாறாக தனிப்பட்ட ஜீவர்கள்
சரீர பாவனையை உருவாக்குவதாகக் கூறுகிறீர்கள். ஒரே ஒரு சரீரம் மட்டுமே ஆத்மாவை உடைத்தாயினும்,
அந்த சரீரம் உண்மை அன்று ஏனெனில் அந்த ஆத்மாக்கள் உண்மை அல்ல.
ஆகவே ஒரே ஒரு சரீரம் மட்டுமே ஆத்மா உடையது என்பது பொருத்தமற்றது.
ஆயினும், நாங்கள் கனவு காண்பவரின் கனவில் வரும் நபர்களின் சரீரங்கள் ஆத்மாக்களை மறுப்பதில்லை.
விழித்திருக்கும்போது கனவில் வந்தவர்களின் சரீர ஆத்மாக்களின் உண்மையையே மறுக்கிறோம்.

அவித்யையை ஒழிப்பது எப்படி சாத்தியமாகிறது? அந்த முடிவின் இயல்பு என்ன?

(ப்ரதிவாதியின் விடை} வஸ்துவை உள்ளபடி அறிந்து கொள்ளுதல் அவித்யையை அழிக்கிறது.
அதன் முடிவு அவித்யையின் நேர் மாறுபாடான விவரணங்களுக்கு அப்பாற்பட்ட அநிர்வசனீயமான ஒரு விஷயம்.

{பதில்} அவித்யை நிர்ணயிக்க முடியாததாயின், அதற்கு நேர் மாறான ஒன்று நன்கு நிர்ணயிக்கப் பட்டதாகிறது.
இது உண்மை, அல்லது பொய், அல்லது இரண்டுமாய் இருக்கவேண்டும். வேறு ஒரு ப்ரசக்தியும் இல்லை.
அவித்யையின் முடிவு ப்ரஹ்மத்தைத்தவிர வேறாய் இருக்க வழியில்லை, ப்ரஹ்மத்தைத் தவிர வேறொன்றை அறிவதே அவித்யையின் விளைவு.
ஆனால் அது ப்ரஹ்மமே ஆயின், ப்ரஹ்மம் எப்போதும் உள்ளதாகையால் அதுவும் எப்போதும் உளதாகிறது.
ஆகில் அவித்யை அழிக்கப்பட்டதாகிறது, வேதாந்த ஞாநம் இல்லாமலே.
இவ்வாறாக ஒன்றாய் இருப்பதான (அத்வைத) ஞாநம் அவித்யையை அழிக்கிறது.
இந்த ஞாநம் இன்மை பந்தத்தை விளைகிறது எனும் வாதம் அடிபட்டுப் போகிறது.

இன்னொரு ப்ரச்சினையும் உண்டு. ப்ரஹ்மமும் ஆத்மாவும் ஒன்று எனும் ஞாநம் அவித்யையை அழிக்கிறது எனில்
இந்த ஞானமே அவித்யையின் விளைவு/வடிவம் ஆகும். அவித்யையின் ஒரு வடிவம் எவ்வாறு அவித்யையை அழிக்கும் என
நீவிர் விளக்க வேண்டும். ஒரு வேளை, நெருப்பு விறகை எரித்து இறுதியில் தானும் முடிவதுபோல் அத்வைத ஞானம்
எல்லாத் தாற்காலிக வித்தியாசங்களையும் அழித்துத் தானும் மாண்டுபோம் என நீவிர் கூறலாம்.
அல்லது ஒரு நஞ்சு பிறிதொரு நஞ்சை முறித்து அழிக்கும் என்னலாம். இது சரியன்று.
அவித்யையை அழிக்கும் அறிவு ப்ரஹ்மத்தினின்றும் வேறென்பதால் அது தன் ஸ்வரூபம் முடிவில் பொய்யாய் இருக்க வேண்டும்!
ஆகில் இவ்வறிவின் முடிவை நிலைநாட்ட அவித்யை ஏதோ ஒரு வடிவில் இருந்தாக வேண்டும்.
அறிவின் அஸ்தமனத்தை நிறுத்தும் அவித்யை எப்படி மறைகிறது?
நீர் சொன்ன நெருப்பு, நஞ்சு போன்றே யாவும் முன்பு ஒரு வடிவிலும் பின் மாறுபட்ட வடிவிலும் இருக்கவே செய்யும், முற்றிலும் மறையாது.

ப்ரஹ்மத்தைத் தவிர பிறவற்றை அழிக்கும் ஞானத்தை அறியும் ஞாதா (அறிபவன்) யார்?
இது ப்ரஹ்மத்தின் மேலேற்றப்படும் அஹங்காரம் ஆக முடியாது. அஹம்காரம் தான் அவித்யையைப் போக்கும் அறிவால் அழிக்கப்படுமன்றோ!
ப்ரஹ்மமே அறிபவன் என்றால், ‘அறிபவனாயிருக்கும் பண்பு’ ப்ரஹ்மத்தின் இயல்வைச் சார்ந்ததா அல்லது மேலேற்றப்பட்டதா
என்னும் கேள்வி பிறக்கிறது. இது மேலேற்றப்பட்டதானால், அவித்யையைப் போக்கும் அறிவால் அழிக்கப்படும் என்னும் காரணத்தால்
அறிதலை ஏற்படுத்த முடியாது. இதை அழிக்க வேறொரு அறிவு உண்டு என்றாலும், அந்த அறிவை அறிவதற்கும்
(1) அறிபவன், (2) அறிவு, (3) அறியப்படும் பொருள் என்னும் மூன்று அம்சங்கள் நிச்சயமாக அமைந்திருக்கவேண்டும்.
ஆக, வேறொரு அறிவையும் அறிய ஒரு அறிபவன் வேண்டும். அந்த அறிபவனும் பிரஹ்மத்தின் மீது மேலேற்றப்பட்ட
அவித்யையின் வடிவமானால், மீண்டும் அதை அழிக்க வேறொரு அறிவு, அதற்கு வேறொரு அறிபவன், என்று
இவ்வாறு முடிவில்லாமல் குழப்பமே மிஞ்சும். “வெறும் அறிவு” என்றொன்று இருக்கவே முடியாது.
எல்லா அறிதலிலும் (1) அறிபவன், (2) அறிவு, (3) அறியப்படும் பொருள் இன்றியமையாதவை.
இந்த மூன்று அம்சங்களோடு கூடாத அறிவால் அவித்யையைப் போக்க முடியாது,
வெறும் அறிவான ப்ரஹ்மத்தால் அவித்யையைப் போக்க முடியாதது போல்.
இந்த முரண்பாடுகளைத் தவிர்க்க ப்ரஹ்மமே உண்மையில் அறிவோன், மாயையால் மூடப்பட்டல்ல, என்பீராகில்
எங்கள் கருத்தை ஏற்றவராவீர்.

அவித்யை நீக்குவது, அறிவை அறிவது என்பனவும் இதன் பகுதியே என்பது நகைப்புக்குரியது.
”தேவதத்தன் தரையைத் தவிர பிறவற்றை அழித்தான்” என்பதில் எல்லாவற்றையும் என்பது
அழிக்கும் செயலையும் குறிக்கும் என்பதுபோல் ஆகிவிடும்.

இந்த வாதங்களைப் புரிந்துகொள்ள சில விளக்கங்கள் தேவை.
அவித்யையை ஆதரிப்பதில்லை அத்வைதத்தின் அடிப்படை. இந்த அவித்யை வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது,
அதுவே அறிவுப் பிறழ்ச்சிக்குக் காரணமான மாயையை விளக்கவல்லது என்பதாம்.
இந்த மாயை ஆத்மாவும் ப்ரஹ்மமும் ஒன்று எனும் அறிவால் நீங்கிப் போகும் (என்பது அவர்கள் வாதம்.}

ஆசிரியர் அத்வைதத்தில் அவித்யைக் கோட்பாடு குறைபட்ட வகையில் நிறுவப்பட்டுள்ளது எனக் காட்டுகிறார்.
ப்ரஹ்மம் அவித்யையின் அடிவேர், மோக்ஷம் என்பது நடவாது.
மாயை முழுவதும் அவித்யை சார்ந்தது. அவித்யை எதைச் சார்ந்தது?
அது பொய் ஆதலால் அது எதையாவது சார்ந்தே இருக்க வேண்டும். அது தானே நிலை நிற்குமாகில்,
அதை அழிக்கவே முடியாது எப்போதும் தழைத்தே நிற்கும். இறுதியில் அது ஸத்யம் ஆகிவிடும்.
அது வேறொன்றால் தாங்கப்படுமாகில், அதைத் தாங்க ப்ரஹ்மத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
ஏனெனில் ப்ரஹ்மமே நித்யம் அதைத் தாங்கி நிற்கும். அதனால் அவித்யையும் நித்யம் என்றாகிவிடும்.

அவித்யை ஆரம்பமற்றது என்று சொல்வது இக்கேள்விக்கு விடை ஆகாது.
அது ஒரு மாயை என்ற அளவிலேயே தொடக்கமற்றது, மெய்ப்பொருள் என்று அன்று.
அதை விலக்கவல்ல மெய்ப்பொருள் ப்ரஹ்மமே.

விசிஷ்டாத்வைதத்தில் ப்ரஹ்மம் ப்ரபஞ்சம், ஜீவர்கள் இரண்டையும் தாங்குபவன்.
அவனைத் தவிர மற்ற யாவும் அவனால் நியமிக்கப் பட்டு, இயக்கப் படுபவை.
“பதிம் விச்வஸ்ய ஆத்மேச்வரம்”. ப்ரபஞ்சம் பொய் அன்று. அது ப்ரஹ்மனைச் சார்ந்துள்ளது.
ஆத்மாக்கள் யாவும் ஸத்யம், ப்ரஹ்மனோடு இயைந்துள்ளபோது அவற்றின் மோக்ஷம் ப்ராப்தமாகிறது.
ப்ரஹ்மனோடு இயைந்து (அனுகூலமாக) அல்லது இயையாது இருப்பது மோக்ஷம் அல்லது தளை (பந்தம்) நிலையைக் காட்டுகிறது.
புத்த தத்வத்தின் வெளிப்படையான தோல்வியை நிறுத்த முற்பட்ட அத்வைதம் அதே குழியில் வீழ்ந்துபட்டது.
அவரால் அவித்யையை விளக்க முடியாமல் அது தொங்குகிறது. அது பொய் ஆதலால் அதை ஏதாவதோர் உண்மையோடு பிணைக்க வேண்டும்.
பாம்பு பற்றிய மாயை கயிறாகிய நிஜத்தோடு பிணைக்கப் பட்டுள்ளது. கானல் நீராகிய மாயை நிலத்தோடு பிணைந்துள்ளது.
ஆதலால் ப்ரஹ்மமே அவித்யையைத் தாங்குகிறது என்பதாகிறது.

அத்வைத ப்ரஹ்மன் ஓர் இயல்வும் அற்றவன், ஞானம் தவிர வேறற்றவன். ஆதலால் அவனால் இம்மாயையை விளக்க முடியவில்லை,
பிரம்ஹன் செயலற்றுள்ளான்!! ப்ரஹ்மன் நித்யன், ஆகவே செயலற்றுள்ள ப்ரஹ்மன் தாங்கும் மாயையும் நித்யமே.
ஆகவே அவித்யையிலிருந்து விடுபடுவது என்பது இயலாது.
ஐக்யம் (அபேதம்) பற்றிய ஞானமும் விளக்கப்படாமல் விடப்பட்டது.
அத்வைதம் அவித்யையை மட்டுமின்றி அதை விலக்கும் ஞானத்தையும் விளக்காமல் விட்டது.
அவித்யையை விலக்கும் ஞாநம் ஒரு தெளிவான வடிவுள்ளது, ஆசார்யனால் சிஷ்யனுக்கு உபதேசிக்கப் படுவது ஆகவே
அந்த ப்ரஹ்மன் உள்பொருளற்ற வெற்றிடமாக முடியாது, இயல்புகளற்ற ஞானமாக முடியாது.
அவித்யை நீக்கும் ஞாநம் ப்ரஹ்மத்திலிருந்து வேறாகில், அது அழிக்கப் படவேண்டிய அவித்யையின் பகுதியாகிவிடும்!
ஏனெனில் அத்வைதத்தில் ப்ரஹ்மன் தவிர வேறெதுவும் அவித்யையே. அது ப்ரஹ்மனோடு ஓப்பாகில், பிரம்மன் நித்யமாதலால்,
இந்த அவித்யை நீக்கும் ஞானமும் நித்யம். அதனால் அவித்யை மறுபடி எழவே எழாது.

அத்வைதியால் இந்த ஞாநத்தை ப்ரஹ்மத்தோடு இணைத்துக் காண முடியாது, அதை அவித்யையின் பாகமாகவே கருத முடியும்.
அப்படியாகில், அவித்யையை அழிக்கும் அறிவை எது அழிக்கிறது?
முன்பும் இப்போதும் அத்வைதிகள் இதற்குத்தரும் ஒரு சாமான்ய விளக்கம் மரத்தை நெருப்பு எரிப்பதுபோல்
அவித்யையும் தானே கருகி விடுகிறது, நஞ்சை நஞ்சு முறிப்பதுபோல் என்று.

நன்கு ஆராய்ந்தால், நெருப்பு எரித்தாலும் வேறு வடிவத்தில் மரம் இருக்கும், முற்றிலும் அழிவில்லை எனப் புலப்படும்.
மரத்தை எரிக்கும் நெருப்பு மரத்தைக் காட்டிலும் வேறுபட்டதாக இருக்கிறது. ஆகவே அத்வைதிகள் கோட்பாட்டுக்குத் தார்க்கிக அடிப்படை இல்லை.
ஒரு நஞ்சை இன்னொரு நஞ்சு ஸமானப் படுத்தலாம். ஆனால் இங்கு உண்ட நஞ்சும் ஸமானமான மருந்து நஞ்சும் வெவ்வேறு!!
வெவ்வேறாக இல்லாத போது நஞ்சை இரட்டிப்பாக உண்டால் கேடில்லை என்றாகிவிடும்.
முதலில் அருந்தப்படும் நஞ்சால் உடலுக்கு ஒரு நிலை பிறந்து, அந்த நிலையை இரண்டாவதாகக் கொள்ளப்படும்
வேறு நஞ்சு குறிக்கிறது என்பது தானே பொருத்தமாகும்.
முறிக்கப்படுவதும் முறிப்பதும் வெவ்வேறான இயல்புகளை உடையவை என்பதே ஆராய்ந்தால் தேறும் உண்மை.

அவித்யை நீக்கும் ஞானம் உண்மையில் அவ்வாறன்று. இந்த ஞானம் பொய்யானதால் அதை அழிக்க எதிர்பார்க்கும் அவித்யையும் அப்படியே.
இந்த ஞானம் ப்ரஹ்மன் இல்லாததால், ஞாநம், ஜ்ஞேயம், ஞாதா எனும் மூவகை ஞான குணகங்களே உண்மை.
இந்த ஞாதா என்னும் அறிவோன் யார்? மாயையால் மூடப்பட்ட ப்ரஹ்மன் இல்லவே இல்லை, ஏனெனில்
அறிவோன் தானே அறியும் அறிவாக முடியுமா? ப்ரஹ்மனும் இல்லை ஏனெனில் அத்வைத ப்ரஹ்மன் அறிவோன் அல்லன்.
அறிவோன் அறிவை அறிந்துளான் என்பது சரியன்று. ஊன்றிப் பார்க்கில், முதல் அறிவே கனிந்து காலத்தில் ஞானமாகிறது.
ஞானம் அவித்யையின் கார்யமாகில் அது அவித்யையை அழிக்காது. நெருப்பே நெருப்பை அணைக்காது.
அது வேறு ஒன்றை எரிக்கும் அவ்வளவே.

தேவதத்தன் தரை தவிர எல்ல்லாவற்றையும் அழித்தான் எனில் அவன் தான் நின்ற தரை தவிர மீதி அனைத்தையும் அழித்தான் என்றே பொருள்.
ஆனால், அழிப்பது எனும் காரியத்தை அவன் அழித்தான் என்றாகாது. அப்படிச் சொன்னால் அது கேலிக்குரியது.
ஆகவே, கவர்ச்சிகரமாக எடுத்துரைக்கப்பட்ட அத்வைத சித்தாந்தம் தார்க்கிகமாக நில்லாது என்பதோடு
அத்யாத்மீகத் தேடலில் தவறான வழியும் காட்டிவிடும் என்பது தெளிவு.
எல்லா பேத ஞானத்தையும் நீக்கும் ஞானம் எங்கிருந்து பிறக்கிறது? வேதங்களிலிருந்து என்றால் அது ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது.
ப்ரபஞ்சம் மாயம் என்கிற ஞானத்தை நீக்கும் ஆற்றல் வேதங்களுக்கு இல்லை.
ஏனெனில் அவை (1) ப்ரஹ்மத்தினின்று வேறுபட்டவை, (2) அவையே அவித்யையின் விளைபொருள்கள்.

இது இப்படி இருக்கிறது:
ஒருவர் பார்வைக் கோளாறால் ஒரு துண்டுக் கயிற்றைப் பாம்பு என்று எண்ணிவிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த மாயையை ‘இது பாம்பன்று’ எனும் இன்னொரு ஞானத்தால் நீக்க முடியாது, அந்த ஞானமும்
அதே தவறான பார்வையால் விளைந்தால். குழப்பதினால் அது பாம்பு என்று அஞ்சுகிற ஒருவரின் அச்சத்தை
அதே குழப்பமுள்ள வேறொருவரால் நீக்க முடியாது. அல்லது குழம்பியுள்ள ஒருவரின் உறுதி மொழியாலும் அது பாம்பன்று என்று தேறாது.
வேதங்களைப் பயிலும் ஒரு வித்யார்த்தி அவை ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை என்று அறிவதால்,
வேறு பிறவற்றைப் போன்றே வேதங்களும் இந்த மாயை பற்றிய குழப்பத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளன என்று தெரியும்.

உண்மைப் ப்ரமாணத்திலிருந்தே உண்மை ஞானம் உண்டாக முடியும். அத்வைதக் கோட்பாட்டில் வேதங்கள்
வித்யாசத்தைச் சொல்வதால் அவையும் அஞ்ஞானத்தின் விளைபொருள்களே. எதை நீக்க முயற்சிக்கின்றனவோ
அதன் பொருள்களாய் இருப்பதால் வேதங்கள் மாயையை விலக்க நம்பத்தக்க ப்ரமாணங்கள் அல்ல.
பேதம் நீக்கும் ஞானம், அறிவோன், இந்த அறிவுக்கு மூலமான வேதங்கள் யாவும் ப்ரஹ்மத்தினின்றும் வேறானதால்
இந்த ஞானத்துக்குட்பட்டவை என ஒருவர் நினைப்பாரேல் மேலும் குழப்பங்கள் விளையும்.
ப்ரபஞ்சம் ப்ரஹ்மத்தினின்றும் வேறானதால் இது அதற்குட்பட்டது என்பது பொய்யாகி, ப்ரபஞ்சம் மெய் என்றாகிவிடும்.
ஒருவன் தன மகன் இறப்பதை ஸ்வப்னத்தில் கண்டு, விழித்து எழும்போது மகனை உயிரோடு உள்ளபடி காண்பதுபோலாகும் இது.
தத்வமஸி போன்ற வாக்யங்கள் ப்ரபஞ்சத்தை விளக்கப் போதுமானவையல்ல ஏனெனில்
கயிறா பாம்பா எனத் தானே குழம்பியுள்ளவர் சொற்கள் போன்றவையே இவை.

அத்வைதி ப்ரஹ்மன் தவிர்த்த யாவும், அது பற்றிய மாயையை அகற்றுவது உள்பட அது நீங்கியவன் உள்பட, மாயையே என்கிறார்.
உலகம் என்பது அநுபவம் மூலம் உணரப்படுவதால் அதன நீக்கம் பற்றிய மாயத் தோற்றமே அது உண்மை என மெய்ப்பிக்கிறது.
இக்கருத்துக்கு ஒரு பதில் சொல்லலாம்: கனவில் ஒன்றுக்கு அஞ்சினவர் ஏதோ ஒரு நிலையில் இது கனவு என
உணர்வாரேல் பயம் நீங்கும் யாவும் கனவு என்ற அறிவால். இதுவும் அதுபோல்தான்.
இவ்விளக்கம் எப்பிரச்னையையும் தீர்க்காது. கனவு என்பதால் பயம் நீங்கிற்று எனும் அறிவு மீண்டும் பயம் வர ஹேதுவாகும்.
வேத வித்யார்த்திக்கே (அத்வைதத்தில்) வேதங்களும் கனவின் பகுதியே என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

கனவில் அனுபவிக்கும் பயம் விழித்தெழுந்து உணர்வுறுவதால் நீங்குகிறது. அது கனவு என்கிற கனவுணர்வால் அன்று.
சில மனச்சிக்கல்கள் இருக்கும்போது விழித்திருக்கும்போதே உண்மையன்று
உலகே கனவு என்றிருப்போரையும் காண்கிறோம். இதனால் மன உளைச்சலும் தொடர்ந்த பயமும் இவர்களுக்குள்ளதும் காண்கிறோம்.

நவீன அத்வைதிகள், கைகாட்டிமரம் சென்று சேரிடம் ஆகாது என இதைச் சமாளிக்க முயற்சி செய்கின்றனர்.
ஆனால் சேரிடத்தைக் காட்டும் கைகாட்டி மரம் நிஜம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஆகவே இந்த நவீன அத்வைத விளக்கமும் எடுபடவில்லை,

அத்வைதத்தின் மற்றொரு விளக்கம் இப்படியும் அமையலாம்: வேதங்கள் மாயையின் விளைவு,
இறுதியில் வெறும் பொய் என்றாலும் ப்ரஹ்மன் தூயது, அபேதமானது எனும் வேதக் கூற்று மெய்தான்.
எல்லாம் அடக்கமாகும்போது, ப்ரஹ்மன் மட்டுமே நிற்கிறது.

இந்த வாதமும் சரியன்று. சூன்ய வாதிகள் (பௌத்தர்) நோக்கில் ப்ரஹ்மனும் இல்லை, “சூன்யமே உள்ளது” என்பர்.
பௌத்தர் கூற்று அறியாமையின் விளைவு என அத்வைதி தள்ள முடியாது.
ஏனெனில், அத்வைதியின் நோக்கிலேயே வேதங்கள் ப்ரஹ்மனைச் சொல்வனவும் அறியாமையின் வெளிப்பாடே.
ப்ரஹ்மன் மட்டுமே மெய் என்பதால் ப்ரபஞ்சம் அடங்கிப்போகும் எனில்,
ப்ரஹ்மனும் சூன்யம் மட்டுமே என்பதில் அடங்கிப்போகும் என்பதே சரி ஆகும்.

உண்மையில் (சூன்ய வாதம் செய்யும்) பௌத்தர், (ப்ரஹ்மன் ஒன்றே உண்மை மீதி யாவும் பொய் எனும்) அத்வைதி
இருவருமே தத்வ விசாரத்தில் இறங்க உரிமை அற்றவர்கள்.
ஏனெனில் அவர்கள் தத்வத்தில் ஒன்றைவிட மற்றொன்று மேலும் அறிவு பூர்வமானதா என அறிந்து கொள்ளும்
ஞானமுண்டு என்பதை ஏற்கும் இடமுண்டு. இருவருக்குமே அறிவை அடையும் வழிகள் யாவும் மாயை,
அந்த நிலையிலேயே அவர்கள் தத்வ விசாரம் அடங்கிவிடுகிறது! இது ஆசார்யர்கள் பிறராலும் காட்டப் பட்டுள்ளது.

தத்வ ஞானத்தில் அடிப்படையாவது , ஞானத்தின் மூலம் (ப்ரமாணம்) தத்வத்தின் முடிவு (ஸித்தாந்தம்) போன்றே
உண்மையாய் இருத்தல் வேண்டும். முடிபு, சித்தாந்தம் எவ்வளவு முக்யமோ அவ்வளவு முக்கியமானது ப்ரமாணமும்.
நம் நோக்கு, ஞானம், எல்லாவற்றிற்கும் அடிப்படையான ப்ரமாணத்தையே மறுப்பது/வினவுவது,
உட்கார்ந்துள்ள மரத்தையே வெட்டுவது போலாகும். அப்படிச் செய்பவர்கள் தத்வ விசாரத்துக்குத் தகுதியற்றவர்கள்.

நாம் காணும் ப்ரபஞ்சம் இறுதியில் பொய்யானது என்பதற்கு என்ன ஆதாரம்?
ஒரு வேளை இப்படிச் சொல்லலாம்: த்ருஷ்டி என்பது அறியாமையின் விளைவு எனவே உண்மையை அறிவதில் பிழைபட்டது.
குறையற்ற முறைகளால் நமக்கு ப்ரபஞ்சம் பற்றிய ஞானம் கிடைக்கிறது.
இவ் விடையும் பிழையானது. பேதானுபவம் தரும் ப்ரத்யக்ஷத்தால் என்ன குறை உண்டு?
அது காலம் காலமாக நமக்கு வரும் பழக்கமல்லவா? ! ப்ரத்யக்ஷம் மட்டும் அன்று,
வேதமும் அந்த அஞ்ஞானத்தின் வெளிப்பாடே!
இரண்டும் அஞ்ஞானத்தின் வெளிப்பாடுகும்போது ஒன்றை மற்றொன்று விலக்க முடியாதே.

மாறாக, நம் ஸம்ப்ரதாயம் மரபு வெவ்வேறு ஞானக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து வருகிறது.
ப்ரத்யக்ஷம் என்பது நிலம் நீர் ஆகாசம் எனும் பூதங்களையும் அவற்றின் குணங்களான ஒளி ஒலி சுவை ஸ்பர்சம்
முதலானதுகளையும் அவற்றின் வழி மனிதர் முதலான உயிர் இனங்களையும் தழுவியது.
வேதங்கள் இவ்வெல்லாவற்றையும் தன் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தை அறிவதும், வழிபட்டு த்யானிப்பதும்
அவரை அடைவதுமான வழிகளைக் காட்டுகிறது இந்த ப்ரத்யக்ஷத்துக்கும் வேதங்களுக்கும் முரண்பாடு இல்லை.

ப்ரத்யக்ஷமும் வேதங்களும் பரஸ்பரம் சார்புள்ளவை.
வேதங்களை அநாதியானவை, தொடக்கம் முடிவு அற்றவை இடையறாத ஆன்மீக மரபுள்ளவை என்று மதிப்போர்
அவ்வேதத்தை அநுஸரித்த ப்ரத்யக்ஷத்தையும் ஏற்க வேண்டும்.
ஆகவே தவறான அடிப்படையில் எழுந்துள்ள இவ்வாதங்களை மறுக்க இவ்வளவே போதும்.
இவை வேதங்களின் உண்மையை, உயர்வை நூற்றுக்கணக்கான சான்றோர் நிலை நாட்டியபடி நின்று நிலவும்.

“அத்வைத விமர்சம்” பகுதி முற்றியது.

—————

பாஸ்கரரின் பேதாபேத விமர்சம்

இரண்டாவது பக்ஷத்தில் (பாஸ்கரரின்) ப்ரஹ்மனையும் உபாதி(லக்ஷணங்கள்)யையும் தவிர வேறெதுவும் ஏற்கப்படவில்லை.
ஆகவே உபாதி ப்ரஹ்மனை மட்டுமே பாதிக்கும். இந்தப் ப்ரகரணத்தில்,
“குற்றங்குறைகள் அற்றிருத்தல்” என்பனபோல் வேதங்களில் சொல்லப்படுவன மறுக்கப்பட்டதாகும்.

இதற்கு பேதாபேத வாதியின் பதில்:
ஒரு ஜாடியில் உள்ள ஆகாசத்தினின்றும் ப்ரபஞ்ச ஆகாசம் வேறுபட்டது; ஜாடியில் உள்ள ஆகாசம் கட்டுக்குள்ளடங்கியது.
எல்லையற்று விரிந்து கிடைக்கும் ஆகாசத்தை ஜாடியில் உள்ள ஆகாசத்தின் குறைகள் தீண்டா.
அதேபோல உபாதிகளால் தனிப்பட்ட ஆத்மாக்களில் தோன்றும் குறைகள் ப்ரஹ்மத்தை பாதியாது.

நம் விடை:
இது சரியன்று. கூறுகள் இல்லாததால் ஆகாசம் என்பது பகுக்கப் படமுடியாதது.
ஜாடி போன்ற பொருள்கள் ஆகாசத்தைப் பகுக்க முடியாது. பகுக்கப்பட முடியாத ஆகாசமே வருகிறது.
அதேபோல ப்ரஹ்மனும் பகுக்கப்பட முடியாதது. ஆகவே அது தானே குணங்களைத் தருமவற்றோடு தொடர்பில் வருகிறது.

வேறொரு காரணத்திற்காக தொடர்புபட்ட ஆகாசம் ப்ரபஞ்ச ஆகாசத்தினின்றும் வேறுபட்டது என்று கூற முடியாது.
ஜாடி ஒரே இடத்தில் ஸ்திரமாக இராது அகண்ட ஆகாசத்தில் எங்கு வேண்டுமானாலும் அசைக்கப் படக்கூடியது.
அது நகரும் இடம் தோறும் அளவுபட்ட ஆகாசத்தையே காட்டுகிறது. தொடர்பிலும் நிரந்தரமில்லை.
இதே தான் ப்ரஹ்மனுக்கும் பொருந்த வேண்டும். “குணங்கள்” என்று. ப்ரஹ்மனின் வெவ்வேறு பகுதிகளாக.
ஒவ்வொரு க்ஷணமும் பகுதிகளின் பந்தமாகவும் விடுதலையாகவும் இவை உள்ளன. அறிவாளிகள் இதைக் கண்டு சிரிப்பார்கள்.

பேதாபேத வாதி கூறுகிறார்:
செவிப் புலனைப் போன்றதே ஆகாசமும். ஆனாலும் கேட்பது என்பது தனிப் புலனாய் உள்ளது.
அதேபோல ப்ரஹ்மனில் தனி ஜீவனும் ஆகும்.

நம் பதில்:
ஆகாசம் (இடம்) என்பது செவிப்புலன் அன்று. செவியினுள் காற்றினால் அமைக்கப்பட்டுள்ள அந்த ஒரு ஆகாசப் பகுதி
மட்டுமே கேட்பது எனும் செவிப்புலன் ஆகும். கேட்பிக்கும் இந்த ஆகாசப் பகுதிக்கும் செவிக்கும் தொடர்பு இல்லை எனினும்
கேட்கும் புலன் இருக்கிறது. ஒரே ஆகாசமே வெவ்வேறு இடங்களிலும் வஸ்துக்களை நகர்த்தியும் அசைத்தும்
வினை ஆற்றினாலும் பொருள்களுக்கும் அதற்கும் இடையே நிரந்தர அல்லது தொடர்ந்த சம்பந்தம் என்பதில்லை.
அதே போலத் தான் ப்ரஹ்மமும் பல குணங்களோடு, தொடர்ச்சி இல்லாமல் ஸம்பந்தப் படுகிறது என நம் புரிந்துகொள்ள வேண்டும்.

செவிப்புலன் தொடர்பான ஆகாசம் பற்றிய இக்கூற்றும் ஒரு விவாதத்துக்காக மட்டுமே யோஜிக்கப் பட்டது.
உண்மையில் கேட்பது எனும் புலன் அறிவு ஆகாசத்தோடு தொடர்புடைத்தன்று.
வேதம் வல்லார்கள் வைகாரிகம் எனப்படும் ஸாத்விக அஹங்காரத்திலிருந்து பதினொரு புலன்கள் உருவாவதாகக் கூறுகிறார்கள்.
பகவான் பராசரர், சிலர் இவை தைஜஸத்திலிருந்து வருவதாகக் கூறுகிறார்கள் என்கிறார்.
ஆனால் உண்மையில் பத்துப் புலன்களும் மனஸ்ஸும் வைகாரிகத்திலிருந்து தோன்றுகின்றன.
வைகாரிகம், தைஜஸம், பூதாதி என அஹங்காரம் மூவகைப்படும்: இவை முறையே ஸாத்விக, ராஜஸ, தாமஸிகங்களோடு ஒக்கும்.
ஆகாசம் முதலியன பூதாதியிலிருந்து தோன்றும். ஆனால் இங்கு ‘தேவ’ எனப்படும் புலன்கள் வைகாரிகத்திலிருந்து தோன்றும்.
வைகாரிகத்திலிருந்து தோன்றும் புலன்களுக்கு அனுபவம் பூதாதியிலிருந்து வரும் பொருள்களால் அமையும்.
இவ்வாறு மஹாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அவ்வாறே புலன்கள் ஆகாசம் போன்ற பூதங்களின் விளைவே எனினும் தவறில்லை ஏனெனில்
ஆத்மாக்களின் சரீரங்களும் பூதங்களின் மாறுபாடே என்றாலும் இதை ஏற்பதில் உங்கள் ப்ரஹ்ம தத்வம் சில ப்ரச்சினைகளுக்கு ஆளாகிறது.
எனினும், அது விதி முறைகளின்றிக் கணக்கற்ற குறைபாடுகளோடு வருகிறது. இதிலிருந்து தப்ப முடியாது.
வேதம் வல்லார்கள் இது குருட்டு நம்பிக்கை உள்ளவர்களுக்குப் பொருந்தும், என்று மிக மதிப்பதில்லை.
ப்ரஹ்மனின் இயல்வை மாற்றி அமைப்பதன் மூலம் மாற்றமற்றது (அவிகாரம்) ப்ரஹ்மன் எனும் ச்ருதி அடிப்படையையே
இது கேள்விக்குரியதாக்குகிறது. ப்ரஹ்மனுக்கு இயல்புகள் கற்பித்து
ப்ரஹ்மன் இயல்பு(குறை)கள் அற்றதெனும் ச்ருதி வாக்யத்தோடு முரண்பாடும் ஏற்படுத்துகிறது.
ப்ரஹ்மனின் சக்தி மட்டுமே மாற்றத்துக்குட்படுகிறது என்றால், இந்த சக்தி என்பது என்ன?
இது ப்ரஹ்மனின் மாறுபட்ட வடிவா அல்லது வேறு ப்ரஹ்மனேவா?
எவ்விதத்திலும் ப்ரஹ்மனில் மாற்றம் என்பது இதில் தவிர்க்க முடியாதது.

“பாஸ்கரரின் பேதாபேத விமர்சம்“ முற்றியது.

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சுருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேத ஸம்ஹிதைகள்- / ஸ்ரீ ப்ரவரம், கோத்ரம், ஸூத்ரம் கோத்ரம் -விவரணங்கள் —

February 2, 2020

ஸ்ரீ ரிக் வேத ஸம்ஹிதைகள்.
ஐத்ரேய ப்ராஹ்மணா.
ஐத்ரேய அரண்யகை.
ஐத்ரேய உபநிஷத்.
கௌஷிடகி ப்ராஹ்மணா.
கௌஷிடகி அரண்யகை.
கௌஷிடகி உபநிஷத்.
ஆஸ்வலாயன ஸ்ரௌத சூத்திரம்.
ஆஸ்வலாயன க்ரஹ்ய சூத்திரம்.
சாங்காயன ஸ்ரௌத சூத்திரம்.
கௌஷிடகி க்ரஹ்ய சூத்திரம்.
வசிஷ்ட தர்ம சூத்திரம்.

ஸ்ரீ சாமவேத ஸம்ஹிதைகள்.கௌத்தும சாகா.
பஞ்சவிம்ச ப்ராஹ்மணா.
சத்விம்ச ப்ராஹ்மணா.
மந்த்ர ப்ராஹ்மணா.
சாந்தோக்ய உபநிஷத்.
மசாக கல்ப சூத்திரங்கள்.
லாத்யாயன ஸ்ரௌத சூத்திரம்.
கோபில/கௌத்தும க்ரஹ்ய சூத்திரம்.
கௌதம தர்ம ஸாஸ்த்ரம்.
ராணானனீய சாகா.
த்ராஹ்யாயன ஸ்ரௌத சூத்திரம்.
த்ராஹ்யாயன/ காதீர க்ரஹ்ய சூத்திரம்.
ஜைமிநீய சாகா.
ஜைமிநீய ப்ராஹ்மணை.
ஜைமிநீய உபநிஷத்.
கேன உபநிஷத்.
ஜைமிநீய ஸ்ரௌத சூத்திரம்.
ஜைமிநீய க்ரஹ்ய சூத்திரம்.

ஸ்ரீ யஜுர்.மைத்ராயனி ஸம்ஹிதை.
மானவ ஸ்ரௌத சூத்திரம்.
மானவ க்ரஹ்ய சூத்திரம்.
வராஹ ஸ்ரௌத சூத்திரம்.
வராஹ க்ரஹ்ய சூத்திரம்.
மானவ தர்ம சூத்திரம்.
மனு ஸ்ம்ரிதி.
கதா ஸம்ஹிதை.
கதா ப்ராஹ்மணை.
கதா ஆரண்யகை.
கதா ஸ்ரௌத சூத்திரம்.
கதா க்ரஹ்ய சூத்திரம்.
கதா தர்ம சூத்திரம்.
விஷ்ணு ஸ்ம்ரிதி.
கதா கபிஸ்தல ஸம்ஹிதை.
கதா கபிஸ்தல ப்ராஹ்மணை.
தைத்ரீய ஸம்ஹிதை.
தைத்ரீய ப்ராஹ்மணை.
வாதுல ப்ராஹ்மணை.
தைத்ரீய அரண்யகை.
தைத்ரீய உபநிஷத்.
மஹாநாராயண உபநிஷத்.
பௌதாயன ஸ்ரௌத சூத்திரம்.
வாதூல ஸ்ரௌத சூத்திரம்.
பரத்வாஜ ஸ்ரௌத சூத்திரம்.
ஆபஸ்தம்ப ஸ்ரௌத சூத்திரம்.
ஹிரண்யகேசி ஸ்ரௌத சூத்திரம்.
வைகநாச ஸ்ரௌத சூத்திரம்.
பௌதாயன க்ரஹ்ய சூத்திரம்.
வாதூல க்ரஹ்ய சூத்திரம்.
பரத்வாஜ க்ரஹ்ய சூத்திரம்.
ஆபஸ்தம்ப க்ரஹ்ய சூத்திரம்.
ஹிரண்யகேசி க்ரஹ்ய சூத்திரம்.
வைகநாச ஸ்ரௌத சூத்திரம்.
பௌதாயன தர்ம சூத்திரம்.
வாதூல ஸ்ம்ரிதி.
ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம்.
வைகநாச தர்ம சூத்திரம்.
வாஜஸனேயி ஸம்ஹிதை.
ஸதபத ப்ராஹ்மணா.
ஸதபத ஆரண்யகை.
ப்ரஹதாரண்யக உபநிஷத்.
ஈச உபநிஷத்.
காத்யாயன ஸ்ரௌத சூத்திரம்.
பாரஸ்கர க்ரஹ்ய சூத்திரம்.
யாஞவல்கிய ஸ்ம்ரிதி.

ஸ்ரீ அதர்வ வேதம்.பைப்பாலட சம்ஹிதை.
அகஸ்த்ய ஸ்ரௌத சூத்திரம்.
சுமந்து தர்ம சூத்திரம்.

—————–

‘அபிவாதயே’ என்று ஆரம்பித்தவுடன் அவரவர் கோத்ரத்திற்கான மூல ரிஷிகளின் பெயரைச் சொல்லுகிறோம்,
அவர்கள் அந்த கோத்ரத்தின் ரிஷிகள். யாரெல்லாம் கோத்ர ரிஷிகள் என்றால், மொத்தம் பத்து பெயர்களை
கோத்ர ரிஷிகளாக ஸ்மிருதியில் சொல்லியிருக்கிறார்கள். சில ஸ்மிருதிகளில் எட்டு (8) என்றும்,
சிலவற்றில் பத்து (10) என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாக தெரிகிறது.

ப்ரும்மாவின் புத்ரகளான,ப்ருகு, அங்கிரஸ், மரீசி, அத்ரி ஆகிய நால்வர் மற்றும் இவர்களில்,
ப்ருகுவின் புத்ரரான ஜமதக்னி,
அங்கிரஸரின் புத்ரகளான கெளதமர், பரத்வாஜர்,
மரீசியின் புத்ரரான கஸ்யபர், வஸிஷ்டர், அகஸ்தியர் மற்றும்
அத்ரியின் புத்ரரான விஸ்வாமித்ரரும் கோத்ர ரிஷிகளில் வரும் மூலவர்கள்.

கோத்ர ரிஷிகள் 8 என்று சொல்லும் ஸ்மிருதிகள், மேற்சொன்ன புத்ரர்களான 7 நபர்களையும், அத்ரியையும் சேர்த்து 8 ரிஷிகளாக
குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லுகிறார்கள்.
ப்ருகு மற்றும் அங்கிரஸ் ஆகிய இருவர்கள் பற்றி ஸ்மிருதிகளில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறதால் அவர்களையும் சேர்த்து 10 ரிஷிகள்
என்பதாக சில ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆக யார் எந்த கோத்ரத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்த 10 ரிஷிகளில் ஒருவராவது வைதீக செய்கையில் வரும் ரிஷிகளாக இருப்பார்கள்.
இவ்வாறு இருப்பதால் இவர்கள் கோத்ர ரிஷிகள் என்றும் பெயர் வந்தது.

நமது கோத்ர ரிஷியினிடமிருந்து உண்டான, ப்ரபலமான, யோக்யதையுள்ள ரிஷிகளே, ப்ரவர ரிஷிகள் எனப்படுகிறார்கள்.
சில கோத்ரத்தில் 7 ப்ரவர ரிஷிகள், சிலதில் 5, சிலதில் 3, சிலதில் 1 – இருக்கலாம்.
ஆதலால் ஸப்தார்ஷேய, பஞ்சார்ஷேய, த்ரயார்ஷேய, ஏகார்ஷேய எனக் கூறுகிறோம்.
‘அபிவாதயே’ எனில் இவைகளைச் சொல்லி நான் யாரெனத் தெரிவிக்கிறேன் என்று பொருள்.

ஆதியில் 9 ரிஷிகளிடமிருந்தே கோத்ரங்கள் உண்டாயின. அவை பின்னர் நூற்றுக்கணக்காக வளர்ந்தன.
நாம் எந்த ரிஷியின் பரம்பரையிலிருந்து நேராக உண்டானோமோ, அவர்களையே கோத்ர ரிஷி என்கிறோம்.

முதலில் ப்ரவரம், பிறகு கோத்ரம், பிறகு ஸூத்ரம் என்பதைக் கூறுகிறோம்.
அதன் பிறகு நமது வேதம் எது என்றும், பிறகு சாகை என்னவென்றும், அதன் பின் கோத்திரம் என்ன என்றும் கூறுகிறோம்.
அதன்பின் அஸ்மிபோ என்கிறோம். ‘அஸ்மி’ என்றால் (மேலே சொன்னவைகளுடன் கூடியவனாக) இருக்கிறேன் என்று பொருள்.
“போ” எனில் பெரியோர்களை மரியாதையாக அழைப்பதாம்.

ஆஸ்வலாயநம், கௌஷீதகம், போதாயனம், ஆபஸ்தம்பம், பாரத்வாஜம், ஸத்யாஷாடம், வைகாநஸம், காத்யாயனம்,
த்ராக்யாயனம், ஜைமினீயம் என ஸூத்ரங்கள் பல உள்ளன.
அந்தந்த ரிஷிகள் ‘கர்ப்பாதானம்’ முதல் என்ன என்ன ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும் என விதித்திருக்கிறார்கள்.
மங்களமானவற்றை பூர்வ ப்ரயோகம் என்றும், மரண விஷயமானதை அபரம் என்றும் கூறுவர்.

ரிக் வேதத்திற்கு ஆஸ்வலாயனம்,
கிருஷ்ண யஜுர் வேதத்திற்கு போதாயனம், ஆபஸ்தம்பம், பாரத்வாஜம், ஸத்யாஷாடம், வைகானஸம் என்ற ஸூத்ரங்கள் ப்ரசித்தமானவை.
சுக்ல யஜுர்வேதத்திற்கு காத்யாயனம்,
ஸாம வேதத்திற்கு த்ராஹ்யாயனம் என்ற ஸூத்ரங்களாம்.

ஒரு வேதத்திற்குப் பல ரிஷிகள் ஸூத்ரம் இயற்றினாலும், நமது தேவாங்க குலப் பெரியோர் கைக்கொண்ட ஸூத்ரத்தையே
நாம் கொள்ள வேண்டும். சிகை, புண்ட்ரம், ஸூத்ரம், ஆசாரம் இவைகளை நம் குல பெரியோர்கள் ஆசாரித்தபடி நாம் செய்ய வேண்டும்.

ஆதியில் 9 ரிஷிகளிடமிருந்தே கோத்ரங்கள் உண்டாயின. அவை பின்னர் நூற்றுக்கணக்காக வளர்ந்தன.
நாம் எந்த ரிஷியின் பரம்பரையிலிருந்து நேராக உண்டானோமோ, அவர்களையே கோத்ர ரிஷி என்கிறோம்.
சமானமான கோத்ரம் உள்ளவர் சகோதரர். சமமான ப்ரவரமுள்ளவர் சப்ரவர்.
ச கோதரர்களையும், சமான ப்ரவர்களையும் மணந்து கொள்ளக் கூடாது.

ஒவ்வொரு கோத்ரத்திற்கும் (தந்தை வழி) மூலாதாரர்களாகிய ரிஷிகளின் பெய்ர்களைக் கூறி தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு,
“அவர்களின் வழியாக வந்த ….. என்ற பெயரைக் கொண்ட நான் தங்களை நமஸ்கரிக்கிறேன்” என்று கூறி விட்டு
பிரம்மசாரி பெரியவர்களுச் செய்யும் வணக்கத்திற்கு (நம்ஸ்காரம்) முன்பு சம்ஸ்க்ருதத்தில் சொல்லும் வார்த்தை தான்
‘அபிவாதயே’. “அபிவாதயே” மந்த்ரம் கோத்ரத்திற்கு கோத்ரம் மாறுபடும்.
உதாரணத்திற்கு ஸ்ரீவத்ச கோத்ரத்தில் பிறந்த நான் என்னை விடப் பெரிய்வர்க்ளுக்கு,
“அபிவாதயே, பார்கவ, ஸ்யவன், ஔர்வ, ஆப்னவான, ஜாமதக்னேதி பஞ்சாரிஷேருபரான்விதம் ஸ்ரீவத்ச கோத்ரே,
ஸ்ரீனிவாச நாமதேயம் அஸ்மின் பூஹு” என்று கூறி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

பெரியவர்களையும் மஹான்களையும் நமஸ்கரிப்பதால், ஆயுள், பலம், கீர்த்தி, செல்வம், சந்ததி முதலியன
மென்மேலும் அபிவிருத்தியடைகின்றன என சாத்திரங்கள் கூறுகின்றன.
ஆகவே மரியாதைக்குரிய பெரியவர்களைக் கண்டால் சாஷ்ட்டாங்கமாக (அதாவது அட்டாங்க வணக்கம் எனப்படுவது –
தலை, கையிரண்டு, செவியிரண்டு, மேவாய், புயங்களிரண்டு என்னும் எட்டு அங்கங்களும் நிலத்தில் தோயும்படி வணங்குதல் வேண்டும்.)
விழுந்து அவரவர் சம்பிரதாயப்படி ஒரு முறையோ பல முறைகளோ நமஸ்கரிக்க வேண்டும்.
பெரியவர்களை முதலில், நமஸ்கரித்த பிறகு தம்முடைய ப்ரவரம் கோத்ரம், சூத்ரம் வேதசாகை, பெயர் என்று இவைகளை வரிசைப்படி
தாம் நமஸ்கரிக்கும் பெரியவரின் காதில் விழும்படி சொல்லி முறையாக அவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவதற்கு, “அபிவாதனம்” என்று பெயர்.
முதலில் நமஸ்காரம் செய்த பின், இரு உள்ளங்கைகளாலும் காதை மூடிக்கொண்டு மேற்கண்ட ப்ரவரம் கோத்ரம், சூத்ரம் வேதசாகை, பெயர்
இவைகளை வரிசைப்படி சொல்லி முடித்தவுடன் இரு உள்ளங்கைகளையும் மல்லாத்தி,
வலது மணிக்கட்டின் மேல் இடது கை மணிக்கட்டைக் குறுக்காக வைத்து தாம் நமஸ்கரித்த பெரியவரின் பாதங்களில் குனிந்து சமர்ப்பிக்க வேண்டும்.

நாம் நமஸ்காரம் செய்யும் அப்பெரியவர் நம்மை, “ஆயுஷ்மாநேதி” அல்லது, “தீர்க்காயுஷ்மாந் பவ.” என்று சொல்லுவதோடு
நம் பெயரையும் சேர்த்துச் சொல்ல வேண்டும்.
சனாதன தர்மத்தில், இப்பேர்ப்பட்ட குடியின் வழித்தோன்றலாக, இன்ன பெயர் கொண்ட நான் இருக்கிறேன், என்பதாகக்
குடியைச் சொன்ன பிறகு, தன்னுடைய பெயரை ஒருத்தன் சொல்லுவதாக அபிவாதனத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் –
தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொள்ளும் முறையே “அபிவாதனம்”.

யஜுர் வேத ஸூத்திரங்கள்- ஆபஸ்தம்ப, போதாயனம்
ரிக்வேத ஸூத்திரங்கள் – ஆஸ்வலாயநம், காத்யாயனம்
ஸாமவேத ஸூத்திரங்கள் – த்ராஹ்யாயணி, ரணாயநி

————-

1-கபிச-அங்கீரஸ-பரத்வாஜ -மாதவாச்ச-ப்ரஹஸ்பத்ய-வாந்தன-பஞ்ச ப்ரவர்
2-பவ்தமர்ஷி -அங்கீரஸ -ப்ரஹஸ்பத்ய-ஜமதக்னி -அப்நுவத் -இங்கும் பஞ்ச ப்ரவர்
3-குண்டின கௌதம -அங்கீரஸ -ஆயஸ்ய-குண்டின கௌதம
4-பரத்வாஜ -அங்கீரஸ -ப்ரஹஸ்பத்ய -பரத்வாஜ
5-வாதுல-சவானி-யஸ்க–பார்கவ -வைதஹவ்ய -சாவேதச

6-மைத்ரேய -பார்கவ -தைவதச-வத்ர்யஸ்வ -ஷவ்னக -ஏகர்ஷேய
7-கர்த்சமத-பார்க்கவ -சுநஹோத்ர -கர்த்சமத
8-வத்ஸ -ஸ்ரீ வத்ஸ-பார்க்கவ -ஸ்யவன -அப்நவந/ அப்நுவத் -ஒளரவ-ஜமதக்ஞ்ய
9-ஆர்ஷிதிசேன-பார்க்கவ – ஸ்யவன -அப்நவந -ஆர்ஷிதிசேன -அநுப
10-பிதாச -பார்கவ – ஸ்யவன அப்நவந / அப்நுவத் -ஒளரவ -பைத

11-சாவர்ணி -பார்க்கவ -வைதஹவ்ய -சாவேதாச-
12-ஷதமர்ஷண-அங்கீரஸ – பவ்ருகுத்ச- த்ராசதஸ்ய ,
13-ஆத்ரேய /கிருஷ்ணா – ஆத்ரேய -ஆத்ரேய -ஆர்ச்சனாச -ஸ்யாவாச்வ
14-ஆர்ஷிதிசேன-பார்க்கவ -ஸ்யவன -ஆப்நவந ஆர்ஷிதிசேன -அநுப
15-பிதச-பார்க்கவ ஸ்யவன-ஆப்நவந/ஆப்நுவத் ஒளரவ -பைத

16-சாவர்ணி -பார்க்கவ -வைதஹவ்ய -சவேதச-
17-ஷதமர்ஷண -அங்கீரஸ – பவ்ருகுத்ச-த்ராசதஸ்ய –
18-ஆத்ரேய /க்ருஷ்ண -ஆத்ரேய- ஆத்ரேய –ஆர்ச்சனாச ஸ்யாவாஸ்ய –
19-வத்புதக-ஆத்ரேய -ஆர்ச்சனாச -வத்புதக
20-கவிஸ்திரஸ் -ஆத்ரேய -கவிஸ்திர -பூர்வதித

21- கௌசிக -விச்வாமித்ர அகமர்ஷண கௌசிக
22-காலபோதன/ கால பவ்த–விச்வாமித்ர -ஆகமர்ஷண -காலபோதன/ கால பவ்த-
23-பார்கவ –பார்கவ -த்வஷ்டா -விஸ்வரூப விச்வாமித்ர -வைச்வாமித்ர -தேவராத–ஒவ்தல-
24-கௌண்டின -வசிஷ்ட -மைத்ராவருண -பயன் -கௌண்டின்ய
25-கபிஞ்ஜலா -வசிஷ்ட -ஐந்த்ர ப்ரமத-அபரத்வஸ்ய

26-வசிஷ்ட -வசிஷ்ட –ஏகார்ஷேய
27-ஹரித/ ஹரிதஸ –ஹரித -அம்பரிஷ-யுவனஸ்வ
28-அங்கிரஸ -அம்பரிஷ -யுவனஸ்வ
29-கௌதமச –அங்கீரஸ – கௌதம – தன்வந்திரி
30-அங்கீரஸ -ப்ரஹஸ்பத்ய -அவத்சர -நைத்ரூப -மௌத்கல்ய

இதில் மூன்று வகைகள்
31-அங்கீரஸ -பர்ம்யஸ்வ -மௌத்கல்ய -தர்க்ஷ்ய –
32-அங்கீரஸ -தவ்ய-மௌத்கல்ய சண்டில்ய
33-கஸ்யப -அவத்சார-தைவல
34-கஸ்யப -அவத்சார -சண்டில்ய
35-கஸ்யப -தைவல -ஆஸித

36-நைத்ரு வகாஸ்யப –கஸ்யப-ஆவத்சர -நைத்ருவ குத்ச /கௌஷ்ஹச
37-அங்கீரஸ -மாந்தத்ர–கௌத்ச -கபி
38-அங்கீரஸ -ஆமஹைய-ஒருக்க்ஷய -கபில
39-அங்கீரஸ -ஆமஹைய-ஒருக்க்ஷய-கன்வ
40-அங்கீரஸ -அஜமீத-கான்வ

41-அங்கீரஸ -கௌர-கான்வ
42-பராசர -வசிஷ்ட -ஷக்த்ரீ-பாராசர்ய- பைங் உபமன்யு –
43-வசிஷ்ட -ஐந்த்ர ப்ரமத – பத்ரவஸ்ய -அகஸ்திய
44-அகஸ்திய -தர்த்தச்யுத -ஸுமவஹ- கர்க்யச –
45-அங்கீரஸ -பர்ஹஸ்பத்ய –பரத்வாஜ -ஸைன்ய –

46-கார்க்ய -அங்கீரஸ -பார்ஷதஸ்வ – ராதிதர
47-கஸ்யப -கஸ்யப -அவத்சார -தைவல–
48-சங்க்ரிதி-சங்க்ரிதி-இரண்டு வகை
49-அங்கிரஸ -கௌரவித -சாங்கரித்ய-சத்ய – கௌரவித -சாங்கரித்ய
50-ஸுர்யத்வஜ-லஹி /மேஹ்ரிஷி-சோரல்-பிஞ்சு

51-தைவரதசவ -விச்வாமித்ர -தைவரதச ஒவ்தலை சிகிதச /விச்வாமித்ர -தேவரத-அகமர்ஷண
52-ஷக்த்ரி –வசிஷ்ட -ஷக்த்ரி-பரஷர்
53-ஜாபாலி /ஜபாலி –பார்கவ -வைதஹவ்ய -ரைவச-த்ரையாரிஷேய-
54-விஷ்ணு வ்ரிதே /விஷ்ணு வர்தனு –அங்கீரஸ -பவ்ருகுத்ச -த்ராசதஸ்ய

—————————————————————————————

அஷ்ட கோத்ர நிபந்தனை–

ஸ்ரீ வஸ்த ஆர்த்ரேய கௌண்டின்யம் பாரத்வாஜஸ் ச கௌசிக
ஷடமர்ஷணஸ் ச வாதூல காஸ்யபஸ் ச அஷ்ட கோத்ர ஜா

அஷ்ட கோத்ர நிபந்தனை மா முனிகளால் கலி 4544-ருதிரோக்காரி வருஷம் –

வைகாசி சுக்ல பக்ஷம் நவமி புதன் கிழமை விடியற் காலையில் ஏற்பட்டது

அஷ்ட கோத்திரங்கள்
ஸ்ரீ வத்ஸம் -நல்லான்-ஏட்டூர் சிங்க ராச்சார்யர்
ஆத்ரேயம் -கிடாம்பி ஆச்சான் வம்சம்
வாதூலம் -போர் ஏற்று நாயனார் சமர புங்கவர்
கௌண்டின்யம்
பாரத்வாஜம்
நைத்ருவ காஸ்யபம்
ஷட மர்ஷணம்
கௌசிகம்

இந்த வம்சத்தவர்களுக்கு
உறையூர் ஸந்நிதி
தொட்டியம் திரு நாராயண புரம் ஸந்நிதி
காஞ்சிபுரம் தேவப்பெருமாள் ஸந்நிதி
அஷ்ட புஜம் ஸந்நிதி
காட்டு மன்னார் கோயில் ஸந்நிதி
ஸ்ரீ பெரும்பூதூர் ஸ்வாமி ஸந்நிதி
சித்ரகூடம் கோவிந்தராஜன் ஸந்நிதி
இவற்றில் முதல் இரண்டாவது தீர்த்தகாரர்கள் ஆக்கி அருளினாராம்

————————————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேத வியாசர் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-