Archive for November, 2019

ஸ்ரீ த்வய விவரணம்–ஸ்ரீ திருவாய்மொழி-

November 24, 2019

ஸ்ரீ திருவாய் மொழி -ஈடு மகா பிரவேசம் –இரண்டாவது –ஸ்ரீ யபதி

ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -சமஸ்த கல்யாண குணாத் மகனான சர்வேஸ்வரன்
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -என்கிறபடியே -2-6-8–ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறித் திரிகிற இவரை
இவ்வர்த்த பஞ்சகத்தையும் விசத தமமாக அறிய வல்லராம் படி
முதல் அடியிலே நிர்ஹேதுகமாக விசேஷ கடாஷம் பண்ணி அருளினான் –

ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ திருவாய் மொழி பிரபந்தத்தாலே ஸ்ரீ த்வய விவரணம் பண்ணுகிறார் –
இதில் முதலிட்டு மூன்று பத்தாலே-உத்தரார்த்தத்தை விவரிக்கிறார்
மேலிட்டு மூன்று பத்தாலே பூர்வார்த்தத்தை விவரிக்கிறார் –
மேலிட்டு மூன்று பத்தாலே உபாய உபேய யோகியான குணங்களையும்
ஆத்மாத்மீயங்களில் தமக்கு நசை அற்ற படியையும்
அவனோடு தமக்கு உண்டான நிருபாதிக சம்பந்தத்தையும் அருளிச் செய்தார்
மேலில் பத்தாலே தாம் பிரார்த்தித்த படியே பெற்ற படியைச் சொல்லி தலைக் கட்டுகிறார் –

இதில் முதல் பத்தாலே –
உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயர் அறு சுடரடி தொழுது எழு என் மனனே -1-1-1- என்று
சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-ஸூரி போக்யனானவன் திருவடிகளிலே கைங்கர்யமே புருஷார்த்தம் என்று நிர்ணயித்து
உக்தமான அர்த்தத்துக்கும் -வஹ்யமாணமான அர்த்தத்துக்கு பிரமாணம் -உளன் சுடர் மிகு ஸ்ருதியுள் -1-1-7-என்று
நிர்தோஷமான ஸ்ருதியே பிரமாணம் என்றும்
ஏவம் விதனானவன் யார் என்ன —வண் புகழ் நாரணன் –1-2-10-என்றும் -திருவுடையடிகள் -1-3-8-என்றும் –
செல்வ நாரணன் -1-10-8-என்றும் -விசேஷித்து –
தொழுது எழு என் மனனே -1-1-1–என்று உபக்ரமித்து –
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே -1-3-10-என்று த்ரிவித கரணங்களாலும் அடிமை செய்து
தலைக் கட்டுகையாலே பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்று அறுதியிட்டார் –

இரண்டாம் பத்தால் –
இந்த கைங்கர்யத்துக்கு விரோதியான பிரகிருதி சம்பந்தத்தையும் கழித்து –
ஒளிக் கொண்ட சோதி மயமாய் -2-3-10- இக் கைங்கர்யத்துக்கு தேசிகரான அடியார்கள் குழாங்களை
உடன் கூடுவது என்று கொலோ -என்று தாமும் பிரார்த்தித்து
நலமந்தம் இல்லாதோர் நாடு புகுவீர் -2-8-4- என்று பிறருக்கும் உபதேசிக்கையாலே
இவருக்கு பரமபதத்திலே நோக்காய் இருந்தது என்று ஈஸ்வரன் பரமபதத்தைக் கொடுக்கப் புக –
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் –2-9-1-என்று எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை –
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -2-9-4-என்று உனக்கேயாய் இருக்கும் இருப்பே
எனக்கு வேண்டுவது என்று இப் புருஷார்த்தத்தை ஓட வைத்தார் –

மூன்றாம் பத்தால் –
இவருக்கு கைங்கர்யத்தில் உண்டான ருசியையும் த்வரையும் கண்ட ஈஸ்வரன்
கைங்கர்யத்துக்கு ஏகாந்தமான திருமலையிலே நிலையைக் காட்டிக் கொடுக்கக் கண்டு
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -3-3-1- என்று பாரித்து
பாரித்த படியே பாகவத சேஷத்வ பர்யந்தமாக வாசிக அடிமை செய்து தலைக் கட்டுகிறார்

நான்காம் பத்தால் –
இப் புருஷார்த்தத்துக்கு உபாயம் -திரு நாரணன் தாள் -4-1-1- என்றும் –
குடி மன்னு மின் ஸ்வர்க்கம் -4-1-10-என்றும்
எல்லாம் விட்ட இறுகல் இறப்பு -4-1-10-என்றும்
ஐம்கருவி கண்ட வின்பம் தெரிய அளவில்லா சிற்றின்பம் -4-9-10- என்று தாமும் அனுசந்தித்தார்

ஐஞ்சாம் பத்தால்
இந்த இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் –
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -5-7-10-என்று
தன் திருவடிகளையே உபாயமாகத் தந்தான் என்றார் –

அவன் தந்த உபாயத்தை கடகரை முன்னிட்டு பெரிய பிராட்டியார் புருஷகாரமாக –
அலர்மேல் மங்கை உறை மார்பா –உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று ச்வீகரித்தார் -ஆறாம் பத்தால் –

ஏழாம் பத்தால் -இப்படி சித்த உபாய ச்வீகாரம் பண்ணியிருக்கச் செய்தேயும் சடக்கென பலியாமையாலே
விஷண்ணராய்-கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய் –7-1-2-என்று தொடங்கி-உபாய உபேய யோகியான
குணங்களைச் சொல்லிக் கூப்பிட -கூராழி –வெண் சங்கு ஏந்தி —வாராய் -6-9-1-என்று இவர் ஆசைப் பட்ட படியே
வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தி வந்து -7-3-1–இது மானஸ அனுபவ மாத்ரமாய் -சம்ச்லேஷம் கிடையாமையாலே
விச்லேஷித்த படியை -பாமரு -7-6—ஏழை -7-7–திருவாய்மொழிகளில் -அருளிச் செய்தார்

எட்டாம் பத்தால் -கீழ்ப் பிறந்த சம்ச்லேஷம் பாஹ்ய சம்ச்லேஷ யோக்யம் அல்லாமையாலே –
உமருகந்துகந்த உருவம் நின்றுருவமாகி உந்தனக்கு அன்பரானார் அவருந்தமர்ந்த செய்கை உன் மாயை -8-1-4- என்று
இப்படி ஆஸ்ரித அதீன ஸ்வரூப ஸ்தித்யாதிகளை உடையவன் நமக்கு தன்னைக் காட்டி மறைக்கைக்கு அடி
ஆத்மாத்மீயங்களில் ஏதேனும் நசை யுண்டாக வேணும் -என்று அதிசங்கை பண்ணி
அவற்றில் நசை அற்ற படியை -8-2–அருளிச் செய்தார்

ஒன்பதாம் பத்தில் -நீர் என்றிய அதிசங்கை பண்ணிப் படுகிறீர் -ஓர் ஆயிரமாய் -பாசுரம் -இப்படி -என்று
தன்னுடைய நிருபாதிக பந்தத்தையும் காட்டி –
நான் நாராயணன் -சர்வ சக்தி யுக்தன் -உம்முடைய சர்வ அபேஷிதங்களையும் செய்து தலைக் கட்டுகிறோம் -என்று
அருளிச் செய்ய –சீலம் எல்லையிலான் -9-3-11-என்று அவருடைய சீல குணங்களிலே ஆழம் கால் பட்டார் –

பத்தாம் பத்தில் ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்டு திரு மோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி
இவருக்கு அர்ச்சிராதி கதியையும் காட்டிக் கொடுத்து -10-9-
இவர் பிரார்த்தித்த படியே என் அவா அறச் சூழ்ந்தாய் -10-10-10–என்று
இவர் திருவாயாலே அருளிச் செய்யும்படி பேற்றைப் பண்ணிக் கொடுத்த படியை அருளிச் செய்கிறார்

ஸ்ரீ மன்
ஸ்ரீ யபதித்தவம்
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்–1-3-1-
மாயன் வானோர் தனித் தலைவன் மலராள் மைந்தன் –1-5-9-
திரு மகளார் தனிக் கேள்வன் பெருமை யுடைய பிரானார் இருமை வினை கடிவாரே–1-6-9-
கண்ணபிரான் என் அமுதம் சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழலுளானே–1-9-1-
பொரு சிறைப் புள்ளு வந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-
மைந்தனை மலராள் மணவாளனைத்துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்–1-10-4-

பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினொடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே! —1-3-1-

மாயோம் தீய அல வலைப் பெருமா வஞ்சப் பேய் வீயத்
தூய குழவியாய் விடப்பால் அமுதா அமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித் தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என் அம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே–1-5-9-

தரும அரும் பயனாய திரு மகளார் தனிக் கேள்வன்
பெருமை யுடைய பிரானார் இருமை வினை கடிவாரே–1-6-9-

இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழலுளானே–1-9-1-

அருகிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நல் மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொரு சிறைப் புள்ளு வந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-

நெஞ்சமே! நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்–1-10-4-

———

நாராயண
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையிற் கொடிதாய் எனை ஊழி
மாற்றாண்மை நிற்றியோ? வாழி! கனை இருளே!–2-1-7—

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா!
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாரயணனாலே–2-7-1-

நாரணன், முழு ஏழ் உலகுக்கும் நாதன், வேத மயன்,
காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன், எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே–2-7-2-

சரணவ்
திருவடி –
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள் மலராம் அடித் தாமரை
வாயுள்ளும் மமனத்துள்ளும் வைப்பார்கட்கே–3-3-9-

பங்கயக் கண்ணன் என்கோ! பவளச் செவ்வாயன் என்கோ!
அங்கதிர் அடியன் என்கோ! அஞ்சன வண்ணன் என்கோ!
செங்கதிர் முடியன் என்கோ! திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தன் என்கோ சாதி மாணிக்கத்தையே!–3-4-3-

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர்கரு மாணிக்கம் எனது ஆர் உயிர்
பட அரவின் அணைக் கிடந்த பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அட வரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும் சீர்
அடியானேஎ! ஆழ் கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல் வண்ணா! அண்டத்து உம்பரில்
நெடியானேஎ! என்று கிடக்கும் என் நெஞ்சமே–3-8-1-

சரணம்
பற்றுவது -உபாயம் —

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய் கோலத்து ஆயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே–4-1-11-

கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால் நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்?–4-2-8-

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே–4-3-11-

வல் வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சட கோபன்
சொல் வினையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல் வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே–4-4-11-

மைய கண்ணாள் மலர் மேல் உறை வாள்உறை மார்பினன்
செய்ய கோலத் தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே–4-5-2-

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் றனை
நா வியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே–4-5-4-

அறிந்து அறிந்து, தேறித் தேறி, யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே–4-7-7-

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே–4-9-7–

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
ஆட்டுதிநீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே–4-9-9-

ப்ரபத்யே —
அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே–5-7-2-

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக்கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ்செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந் தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-

எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?–5-8-2-

உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே–5-8-11-

நாமங்க ளாயிரமுடைய நம் பெருமானடி மேல்
சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்க ளாயிரத்துள் இவை பத்தும் திருவல்ல வாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே–5-9-11–

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே–5-10-11-

ஸ்ரீ மதே –
திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வட கரை வண் தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கை தொழுத அந் நாள் தொடங்கி இந் நாள் தொறும்
இருந் திருந்து அரவிந்த லோசந! என் றென்றே நைந் திரங்குமே–6-5-8-

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குருகூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே–6-5-11-

ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக் கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே–6-7-8-

வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர் மேல் அசையும் அன்னங்காள்!
என் திரு மார்வற்கு என்னை இன்னவா றிவள் காண்மின் என்று
மந்திரத் தொன் றுணர்த்தி உரையீர் மறு மாற்றங்களே–6-8-10-

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பல நாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-

நாராயண —
என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப் பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்
கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே! கடல் ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்! வினையேனுடை வேதியனே!–7-1-2-

ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்?
அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர்
குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன் னமுதோ!–7-1-7-

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்‘திரு வரங் கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கணீர் மல்க‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப் போதவுணன் உடலிடந்தானே!அலை கடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே!–7-2-5-

திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப் பல இன் கவி சொன்ன உதவிக்கே?–7-9-9-

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந்துறை கின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கை தொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-

எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-

வேண்டிச் சென்று ஓன்று பெறு கிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும் படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-

அமர்ந்த நாதனை யவர வராகி அவ ரவர் கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரை யானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனி தேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-

புனை யிழைகள் அணிவும் ஆடை யுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மை யதன்று இவட் கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுல காளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா
அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11–

ஆய —
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-

வேண்டிச் சென்று ஓன்று பெறு கிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும் படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-

அமர்ந்த நாதனை யவர வராகி அவ ரவர் கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரை யானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனி தேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-

நேர் பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர் பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர் பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர் பட்டார் அவர் நேர் பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல் படி கால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொரு நாள்
படிக் களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக் கணியாய்
கொடிக் கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல் லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-

கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க் கிடர் கெட வசுரர்கட் கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-

உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4-

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-

நம–
கைங்கர்யத்தில் களை அறுக்கிறது-
மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே–10-1-7-

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே–10-2-1-

இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2-

ஊரும் புள் கொடியும் அக்தே உலகுஎல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே–10-2-3-

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே–10-4-3-

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9-

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே–10-8-7-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11–

——————–

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –

இந்த பாசுரத்தில் -பூமன்னு மாது பொருந்திய மார்பன் -என்பதனால்–அலர்மேல் மங்கை உறை மார்பா -என்பதும் –
புகழ்-என்பதனால்-நிகரில் புகழாய் -என்று தொடக்கி கூறப்படும் குணங்களும் தோற்றுகையாலே –
திருவாய் மொழி திருவேம்கடம் உடையானை பற்றியது என்பது அமுதனார் திரு உள்ளம் என்று தோற்றுகிறது –
த்வய விவரணம் திருவாய் மொழி என்று கூறும் ஆசார்யர்களுக்கும் இதுவே திரு உள்ளமாய் இருக்கலாம்-

முதல் மூன்று பத்துக்கள் த்வய மந்த்ரத்தின் பிற் பகுதியை விவரிகின்றன -என்றும்
அடுத்த மூன்று பத்துக்கள் அம்மந்த்ரத்தின் முற் பகுதியை விவரிக்கின்றன என்றும்
மேல் உள்ள மூன்று பத்துக்கள் முறையே-உபாயத்துக்கு உறுப்பான குணத்தையும் –நசை அற்றமையையும்
எம்பெருமானோடு நமக்கு இயல்பாக உண்டான தொடர்பையும் -சொல்லுகின்றன என்றும்
இறுதிப் பத்து வீடு பெற்றமையைக் கூறுகிறது என்றும் விளக்குகின்றனர் ஆசார்யர்கள் –

மந்த்ரத்தில் பிற் பகுதியில் ஸ்ரீ மானான நாராயணனுக்கு எல்லா அடிமையும் செய்ய வேணும் என்கிறது –
அதனையே திரு வேம்கடத்தில் திரு வேம்கடம் உடையானுக்கு -வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் –என்கிறார் நம் ஆழ்வார்
மந்த்ரத்தின் முற் பகுதி ஸ்ரீ மானான நாராயண னுடைய திருவடிகளை தஞ்சமாக பற்றுகிறேன் -என்கிறது –
அதனையே -அலர்மேல் மங்கை உறை மார்பா உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்கிறார் நம் ஆழ்வார் –
இதனால் மந்த்ரத்தில் ஸ்ரீ மன் நாராயணன் என்பது அர்ச்சாவதார எம்பெருனாகிய திரு வேம்கடம் உடையானையே-என்பது
நம் ஆழ்வார் திரு உள்ளம் என்பது தெளிவு –

பூ மன்னு மாது–என்பதால் ஸ்ரீ சப்தமும்
பொருந்திய -என்பதால் நித்ய யோகத்தையும் -காட்டும் -மதுப் ப்ரத்யயமும்-
புகழ் மலிந்த என்பதால் குணம் உடைமை கூறும் நாராயண சப்தமும் –
மார்பன் -என்பதால் திரு மேனிக்கு உப லஷணமான சரண சப்தமும் –
பணிந்து -என்பதால்-சரணம் பிரபத்யே -என்னும் சப்தங்களும் –
உய்ந்தவன் -என்பதால் பிற் பகுதியில் கூறும் பயனும் தோன்ற அமுதனார் சொற்களை-அமைத்து உள்ளமை காண்க –

சரம பர்வ ப்ரபந்தம் என்பது தோன்ற எம்பெருமானை அடி பணிவதாக கூறாது-
எம்பெருமான் பாவில் மன்னும் மாறன் அடி பணிந்ததாக அமுதனார் அருளிய-நயம் வியந்து இன்புறத் தக்கது
மந்த்ரத்தின் தாத்பர்யம் தோன்ற-மாறன் அடி பணிந்து –என்றார் அமுதனார் -என்க –

இனி திருவாய் மொழியை –
அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -என்ற பட்டர் நிர்வாகத்தின் படி –
அமுதனாரும் கருதுவதாக கொள்ளலுமாம் –
தொடக்கத்தில் பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -என்று பொதுப்பட அருளி செய்ததற்கு ஏற்ப
முடிவில்-தென் அரங்கன் அணியாக மன்னும் பங்கய மா மலர்ப்பாவை -என்று சிறப்பித்து காட்டுதல் காண்க –
என் திருமகள் சேர் மார்பனே என்னும் என்னுடை யாவியே -என்று நம் ஆழ்வாரும்
தென் திருவரங்கம் கோயில் கொண்டானை திருவாய் மலர்ந்து இருப்பது ஈண்டு அறிய தக்கது –
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை யாயிரத்து இப்பத்தும் வல்லார் -என்னும் இடத்து –
பெரிய பெருமாள் திருவடிகளிலே திருவாய் மொழி ஆயிரமும் சொல்லிற்று -திரு மோகூர்க்கு ஈத்த பத்து –
திரு வேம்கடதுக்கு இவை பத்து -என்று பிரித்துக் கொடுத்த இத்தனை —
பெருமாள் திருப் பலகையில்-அமுது படியில் மற்றைத் திருப்பதிகள் நாயன்மார்க்கும் அளந்து கொடுக்குமா போலே
என்று -பிள்ளை-அருளி செய்வர் -என்று ரச கனமாக அமைந்த ஈடு வியாக்கியானம் இங்கு அனுசந்தித்து இன்புறத் தக்கது –

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அருளிச் செயல்களில் –ஸ்ரீ திருவாய் மொழியில் —கண்டேன் -கண்டு கொண்டேன் -போன்ற -பாசுரங்கள் –

November 23, 2019

ஸ்ரீ அருளிச் செயல்களில் –கண்டேன் -கண்டு கொண்டேன் -போன்ற -பாசுரங்கள்
ஞானம் தர்சன பிராப்தி -நடு நிலை -காலஷேபம் -உத்தர க்ருத்யம்
அஹம் அஸ்மி அபராதானாம் ஆலய -அகிஞ்சநோ- அகதி — த்வம் ஏவ உபாய பூத மே பவ –
இதி பிரார்த்தனா மதி சரணாகதி ச தேவப்ஸ்மின் ப்ரயுஜ்யதாம் –ஸ்ரீ பாஞ்ச ராத்ர வசனம்

————

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே!
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங் கொண்டருளாயே–1-4-5-

அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன்
அருள் ஆழிப் புட் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
யருள் ஆழி வரி வண்டே! யாமும் என் பிழைத்தோமே–1-4-6-

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்க்
கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடல் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடல் ஆழி மட நெஞ்சே! வினையோம் ஒன்றாமளவே–1-4-10-

பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு
திரு மா நீள் கழல் ஏழுலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கருமாணிக்கம் என் கண்ணுள தாகுமே–1-10-1-

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே–1-10-2-

கண்டாயே நெஞ்சே! கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே–1-10-5-

சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன், என்று என்று இராப் பகல் வாய்
வெரீஇ, அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ் வுயிர்த்து உயிர்த்து
மரீஇய தீவினை மாள, இன்பம் வளர, வைகல் வைகல்
இரீஇ, உன்னை என்னுள் வைத்தனை; என் இருடீ கேசனே!–2-7-9-

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-

தலைப் பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப் பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம் அகலக்
கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு
நிலைப் பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடு உயிரே–3-2-10-

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர்கரு மாணிக்கம் எனது ஆர் உயிர்
பட அரவின் அணைக் கிடந்த பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அட வரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள் செய்யும் வானவர் ஈசனைப்
பண் கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக் கோன் சடகோபன் சொல்
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே–3-6-11-

நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம்பல் பிறப்பிடை தோறு எம் தொழு குலம் தாங்களே–3-7-8-

கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை
வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
பை கொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை
மெய் கொளக் காண விரும்பும் என் கண்களே–3-8-4-

கண்களாற் காண வருங்கொல் என்று ஆசையால்
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத்
திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே–3-8-5-

பொருந்திய மாமரு தின்னிடை போய எம்
பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே
இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10-

துயரில் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நிற்கவே
துயரில் மலியும் மனுஷர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை யுலகில் புக வுய்க்கும் அம்மான்
துயரமில் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யானோர் துன்பமிலனே –3-10-6-

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில்,‘உலகு அளந்தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே–4-4-8-

விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;
கரும் பெரு மேகங்கள் காணில்,‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;
பெரும்புலம் ஆநிரை காணில்,‘பிரான்உளன்’ என்று பின் செல்லும்;
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக் கின்றானே–4-4-9-

அப்பனே!அடல் ஆழி யானே! ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே!‘உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று
எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு, ஆவி துவர்ந்து துவர்ந்து,
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே–4-7-5-

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவி யுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே–4-7-6-

அறிந்து அறிந்து, தேறித் தேறி, யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே–4-7-7-

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தி யாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே–4-7-10-

காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் பொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8-

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
ஆட்டுதிநீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே–4-9-9-

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே–4-9-10-

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-

புற மறக் கட்டிக் கொண்டு இரு வல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிற முடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அற முயல் ஆழி அங்கைக் கரு மேனி அம்மான் தன்னையே–5-1-6-

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்–5-2-1-

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண் ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரி கின்றனவே–5-2-2-

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ் வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே–5-2-5–

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றி னோடும் செல்கின்றது என் நெஞ்சமே–5-5-1-

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திரு மறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே–5-5-2-

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே–5-5-3-

நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே–5-5-4-

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே–5-5-5-

மேலும் வன் பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே–5-5-6-

நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே–5-5-7-

கையுள் நன்முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
மை கொள் மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே–5-5-8-

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சென்னி நீண் முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் போல் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே–5-5-9-

கழிய மிக்கதொர் காதலள் இவள் என்று அன்னை காணக் கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே–5-5-10-

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ் வதெவ் வத்துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கரு மேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீ வர மங்கல நகர்
கை தொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!–5-7-5-

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின் பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக் குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய்.–5-8-5-

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே–5-8-9-

சூடு மலர்க் குழலீர்! துயராட்டியேனை மெலியப்
பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
மாடு யர்ந்தோமப் புகை கமழும் தண் திரு வல்ல வாழ்
நீடு றைகின்ற பிரான் கழல் காண்டுங்கொல் நிச்சலுமே–5-9-3-

நன்னலத் தோழிமீர்காள்! நல்ல அந்தணர் வேள்விப் புகை
மைந்நலங் கொண்டுயர் விண் மறைக்கும் தண் திருவல்லவாழ்
கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை
என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே–3-9-5-

காண்பதெஞ் ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங் கானல் திரு வல்ல வாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே–5-9-6-

ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மையோ டின்மையாய் வந்து என்
கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே! என் கண் ட்குத்
திண் கொள ஒரு நாள் அருளாய் உன் திரு வுருவே–5-10-7-

வைகல் பூங்கழி வாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந் நெல் உயர் திரு வண் வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே–6-1-1-

கறங்கு சக்கரக் கைக் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே–6-1-3-

கடலின் மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே–6-1-4-

புணர்த்த பூந் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே–6-1-5-

ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண் டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே–6-1-6-

கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே–6-1-7-

திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய!
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண் வண்டூர்
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே–6-1-8-

கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல் வினையேன் திறம் கூறுமின்; வேறு கொண்டே–6-1-9-

விண்ணுளார் பெருமாற் கடிமை செய் வாரையும் செறும் ஐம்பு லனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்! பத்தியினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்! ஒன்று சொல்லாயே–7-1-6-

பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;
ஆரை இனி இங்குடையம் தோழீ! என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது? என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே–7-3-7-

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் கார்க் கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே–7-3-8-

கேட்டு உணர்ந்தவர் கேசவர்க்கு ஆளன்றி ஆவரோ
வட்டமிலா வண் கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டம் கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய
கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துக்கள் கண்டுமே –7-5-6

கண்டும் தெளிந்து கற்றார் கண்ணற்கு ஆளன்று ஆவரோ
வண்டு உண் மலர்த் தொங்கல் மார்கண்டேயனுக்கு வாழு நாள்
இண்டைச் சடைமுடி யீசனுடன் கொண்டு உசாச் செல்ல
கொண்டங்குத் தன்னோடும் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே –7-5-7-

என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!
உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?–7-6-5-

என் திரு மார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நாமகளை அகம்பாற் கொண்ட நான் முகனை
நின்ற சசி பதியை நிலங்கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ?–7-6-7-

ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரி யாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளி யம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங் கொலோ?–7-6-8-

காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டுமவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே?–7-6-9-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவள வாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-

வேண்டிச் சென்று ஓன்று பெறு கிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும் படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-

காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் ! இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான் எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3-

மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்று முருவுஞ் சுவடுங் காட்டான்
ஏல மலர்க் குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்ப தாணை உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்! பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும் அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே–8-2-8-

காண் கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக் கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன் என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–8-2-9-

ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
சாலம் பேர்வதோர் காரிருளூழி யொத்துளதால் உன்
கோலம் காரெழில் காணலுற்றாழும் கொடியேற்கே–8-3-4-

பணியா வமரர் பணிவும் பண்பும் தாமே யாம்
அணியா ராழியும் சங்கமு மேந்துமவர் காண்மின்
தணியா வெந் நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6-

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே—8-5-1-

காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்ட லமந்தால் இரங்கி யொரு நாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயி றுதிக்கும் கரு மா மாணிக்கம்
நாள் நன் மலை போல் சுடர்ச் சோதி முடி சேர் சென்னி யம்மானே–8-5-2-

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீ யின்னே
சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள்
இறந்து நின்ற பெரு மாயா உன்னை எங்கே காண்கேனே–8-5-10-

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11-

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே–8-7-1-

இருந்தான் கண்டு கொண்டே என தேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே—8-7-2-

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம் பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே–8-8-5-

கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-

கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த எம் கார் முகிலை
புணை என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே–9-1-2-

மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுள்ளால் அல்லால் இல்லை கண்டீர் அரணே—9-1-3-

வருணித்து என்னே வட மதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே–9-1-4-

அதிர்காள் செய்கை யசுரர் மங்க வட மதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-

மல்லை மூதூர் வட மதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி யுப்பப் போக வல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே–9-1-6-

குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-

மாதுகிலின் கொடிக் கொள் மாட வட மதுரைப் பிறந்த
தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே–9-1-9-

புளிங்குடிக் கிடந்தது வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாமே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்பா நீ காண வாராயே–9-2-4-

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ்ச் சங்குறை பொருநல் தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
கவள மா களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை யூர்ந்தானே–9-2-5-

எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே இமையவர் தனக்கும் ஆங்கு அனையாய்
செம்மடல் வரும் தாமரைப் பழனத் தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை அடியவர் கவ்வை கண்டு உகந்து நாம் களித்து உள நலங்கூர
இம்மட உலகர் காண நீ ஒரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே –9-2-7-

எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம் இணையடி தொழுது எழ இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைத் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடிக் கிடந்தாய் திரு வைகுந்தத்துள்ளாய் தேவா
இங்கண் மா ஞானத்து இதனுளும் ஒரு நாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே -9-2-8

வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி ஓவாதே கண்ணினை குளிரப் புது மலர் ஆகத்தைப் பருக
சேற்று இள வாழை செந்நெலூடுகளும் செழும் பணைத் திருப் புளிங்குடி யாய்
கூற்று மாய அசுரர் குலம் முதல் அரிந்த கொடு வினை படைகள் வல்லானே -9-2-9-

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4-

மனமே யுன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்
புன மேவிய பூந்தண் துழாய் அலங்கல்
இன மேதும் இலானை அடைவதுமே–9-3-5-

மையார் கருங்கண்ணி கமல மலர் மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-

கண்ணே உன்னைக் காணக் கருதி என் நெஞ்சம்
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே –9-4-2–

அரியாய அம்மானை அமரர் பிரானைப்
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே–9-4-5-

கருத்தே உன்னைக் காண கருதி என் நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்
விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து
ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே –9-4-6-

உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–9-4-8-

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9-

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
வின்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5-

கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–9-8-6-

தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ ––9-8-9-

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-

பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும்
திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–10-4-2-

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே–10-4-3-

ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8-

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-

எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசிம்பு தருவானே–10-8-4-

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6–

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே–10-8-7-

கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே ––10-9-1-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11–

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் -இயற்பா ஆயிரத்தில்—கண்டேன் -கண்டு கொண்டேன் -போன்ற -பாசுரங்கள் –

November 22, 2019

ஸ்ரீ அருளிச் செயல்களில் –கண்டேன் -கண்டு கொண்டேன் -போன்ற -பாசுரங்கள்
ஞானம் தர்சன பிராப்தி -நடு நிலை -காலஷேபம் -உத்தர க்ருத்யம்
அஹம் அஸ்மி அபராதானாம் ஆலய -அகிஞ்சநோ- அகதி — த்வம் ஏவ உபாய பூத மே பவ –
இதி பிரார்த்தனா மதி சரணாகதி ச தேவப்ஸ்மின் ப்ரயுஜ்யதாம் –ஸ்ரீ பாஞ்ச ராத்ர வசனம்

————

ஓன்று மறந்து அறியேன் ஓத நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ ஏழைகாள் அன்று
கருவரங்கத்துள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருவரங்கமே யான் திசை––முதல் திரு வந்தாதி–6-

வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகம்
தாயவனை யல்லது தான் தொழா -பேய்முலை நஞ்சு
ஊணாக வுண்டான் உருவோடு பேரல்லால்
காணா கண் கேளா செவி–11-

வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள்
கைந்நாகம் காத்தான் கழல் –47-

மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை
நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் -முகிழ் விரிந்த
சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்
ஆதி காண்பார்க்கும் அரிது –49-

அரிய புலன் ஐந்து அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் -பெரியனாய்
மாற்றாது வீற்று இருந்த மாவலிபால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது –50-

எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என்னுள்ளம்
தெளியத் தெளிந்து ஒழியும் செவ்வே -களியில்
பொருந்தாதவனைப் பொரலுற்று அரியா
யிருந்தான் திருநாமம் எண் –51—களியில்-அஹங்காரத்தால்

பேரே வரப் பிதற்றல் அல்லால் எம் பெம்மானை
ஆரே அறிவார் அது நிற்க -நேரே
கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன்
அடிக்கமலம் தன்னை அயன்–56-

அன்பாழி யானை யணுகு என்னும் நா வவன் தன்
பண்பாழித் தோள் பரவி யேத்து என்னும் முன்பூழி
காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்
பூணாரம் பூண்டான் புகழ் ——–72-

இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் கனிசாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —87–

எனக்காவார் ஆரோருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம் ——-89-

திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் புறம் தான் இம்
மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே
கண்டாய் கடைக்கட் பிடி ——96–

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் ——99-

ஓரடியும் சாடுதைத்த வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை ———100-

—————–

அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்—இரண்டாம் திருவந்தாதி–6-

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும்கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —24-

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கொண்டு -வராகத்
தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து—31–

காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56-

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் -உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐஞஜூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்-77-

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல் -80-

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82-

நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணிவண்ணனை யான்
எத்த்வத்தால் காண்பன் கொல் இன்று –86-

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

——————-

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ——மூன்றாம் திருவந்தாதி—-1-

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம் —2-

கீழே பஞ்ச வர்ணம் -அதில் பச்சை வர்ணம் சேர்ந்து இங்கு )
பஸ்யதாம் சர்வ தேவா நாம் யயவ் வக்ஷஸ் தலம் ஹரே -என்று
பிராட்டி -தானே ஆசைப்பட்டு வந்து ஏறும்படியான மார்பு படைத்த -ஸ்ரீ யபதி

நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண் ———8–

அறிவென்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில்
செறிவென்னும் திண் கதவம் செம்மி -மறை யென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே நாடோறும்
பைங்கோத வண்ணன் படி ——12-

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று
கிடந்தானைக் கேடில் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண்–34–

காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண்டார கலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான செம்பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை ——35–

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் -அவனே
கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரம் எரித்தான் எய்து ——51-

பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி
மலிந்து திருவிருந்த மார்வன் -பொலிந்த
கருடன் மேல் கண்ட கரியான் கழலே
தெருடன் மேல் கண்டாய் தெளி ——–57-

புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு —–70-

உளனாய நான் மறையினுள் பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண்டாமரை நெடுங்கண் மாயவனை யாவரே
கண்டாருகப்பர் கவி ———–84-

————–

ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி யாம் காண
வல்லமே யல்லமே மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து––நான்முகன் திருவந்தாதி -10-

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் -சூழ்த்த
துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து–11–

மற்றுத் தொழுவார் ஒருவரையும் யானின்மை
கற்றைச் சடையான் கரிக்கண்டாய் -எற்றைக்கும்
கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை
கண்டுகொள் கிற்குமாறு–26-

மாறான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாககே கொள்வேனோ பேதைகாள் -நீறாடி
தான் காண மாட்டாத தாரகல சேவடியை
யான் காண வல்லேற்கு இது-27-

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு –39-

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்-40-

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -41-

ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த
பேராழியான் தன் பெருமையை -கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி–73–

தற்பென்னைத் தான் அறியா னேலும் தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல் வண்ணன் -எற் கொண்ட
வெவ்வினையும் நீங்கா விலங்கா மனம் வைத்தான்
எவ்வினையும் மாய்மால் கண்டு-77-

கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தால் குமை உணர்த்த -வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78–

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து –81-

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை-86-

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

மெய் தெளிந்தார் என் செய்யார் வேறானார் நீறாக
கை தெளிந்து காட்டிக் களப்படுத்து -பை தெளித்த
பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் என்று-94-

—————-

குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—–திரு விருத்தம்-3-

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே—6-

அரியன யாமின்று காண்கின்றன கண்ணன் விண்ணனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்
குரியன வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி ஒரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே —11-

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண்ணேர் அன்ன ஒண்ணுதலே -49 –

திருமாலுரு வொக்கும் மேரு அம்மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச் சக்கர மொக்கும் அன்ன கண்டும்
திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – – -88- –

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
நாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – – 92- –

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் வன்மைப்படியே – – -93 –

எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – – 97- –

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99- –

————-

அருகும் சுவடும் தெரி யுணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர் -பருகலாம்
பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு -பெரிய திருவந்தாதி-–8-

வழக்கொடு மாறுகொள் அன்று அடியார் வேண்ட
இழக்கவும் காண்டு இறைவ -இழப்புண்டே
எம்மாட் கொண்டாகிலும் யான் வேண்ட என் கண்கள்
தம்மாற் காட்டுன் மேனிச்சாய்–13-

சொல்லில் குறையில்லை சூதறியா நெஞ்சமே
எல்லிப் பகல் என்னாது எப்போதும் –தொல்லைக் கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
காத்தானைக் காண்டு நீ காண் –19-

காணப் புகில் அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில் -மாணி
யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
திருவாகம் தீண்டிற்றுச் சென்று–20-

சென்று அங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட -அன்று அங்குப்
பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய
காருருவன் தான் நிமிர்த்த கால்–21-

அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் -என்றேனும்
கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால் காணும் உணர்ந்து –28-

கொண்டல் தான் மால்வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத்தான் -கண்ட நாள்
காருருவம் காண்டோரும் நெஞ்சோடும் கண்ணனார்
பேருரு என்று எம்மைப் பிரிந்து –49-

மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான் நம்
கண்ணவா மற்று ஓன்று காணுறா சீர் பரவாது
உண்ண வாய் தானும் உறுமோ ஓன்று –52–

வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -ஆ ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆ ஆ மருங்கு –54-

மருங்கோத மோதும் மணி நாகணையார்
மருங்கே வர அரியரேலும் ஒருங்கே
எமக்கு அவரைக் காணலாம் எப்பொழுதும் உள்ளால்
மனக்கவலை தீர்ப்பார் வரவு –55-

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காண் தோறும் -பாவியேன்
மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று –73-

————

நீரார் கமலம் போல் செங்கண் மால் -என்று ஒருவன் –
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க –
-சீரார் குடம் இரண்டு -ஏந்தி -செழும் தெருவே –
ஆராரெனச் சொல்லி -ஆடுமது கண்டு
எராரிள முலையார் என்னையரும் எல்லாரும் –
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல் வினையால் –
காரார் மணி நிறமும் கை வளையும் காணேன் நான் –
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் -அறிவழிந்து –
தீரா வுடம்போடுபேதுறுவேன்கண்டிரங்கி–சிறிய திருமடல்–

கூரார் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகேனோ –
ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது காண் –
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –
மற்று ஆராலே கல்மாரி காத்தது தான்
ஆழி நீர் ஆரால் கடைந்திடப் பட்டது -அவன் காண்மின்

தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த
மோரார் குடமுருட்டிமுன் கிடந்த தானத்தே
ஒராதவன் போல் கிடந்தானை கண்டவளும்
வராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து
இங்கு ஆரார் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீராம் இது செய்தீ தென்று ஓர் நெடும் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியாய் சிக்கென ஆர்த்தடிப்ப

காரார் திருமேனி கண்டதுவே காரணமா
பேராபிதற்றா திரி தருவான் பின்னையும்

காரார் திருமேனி காணும் அளவும் போய்
சீரார் திருவேங்கடமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெக்காவே
பேராலி தண் கால் நறையூர் திருப் புலியூர்
ஆராமம் சூழ்ந்த வரங்கம் கண மங்கை
காரார் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர்
காரார் குடந்தை கடிகை கடல் மலை
ஏரார் பொழில் சூழ் இட வெந்தை நீர் மலை
சீராரும் மால் இரும் சோலை திரு மோகூர்
பாரோர் புகழும் வதரி வட மதுரை
ஊராய வெல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓரானை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள் விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண்ணரும் சீர்ப்
பேராயிரமும் பிதற்றி பெரும் தெருவே
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வாரார் பூம் பெண்ணை மடல்-

——————

கன்னவில் தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது
என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான் ——பெரிய திருமடல்–134-

————-

இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமானுசன் புகழோதும் நல்லோர்
மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே –இராமானுஜ நூற்றந்தாதி- 9-

மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திரு உடையார் என்றும் சீரியரே – 10-

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –

மொய்த்த வெம் தீ வினையால் பல்லுடல் தோறும் மூத்து அதனால்
எய்த்து ஒழிந்தேன் முன நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன்
பொய்த்தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து அவிய
கைத்த மெய் ஞானத்து இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –

ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54- –

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமானுசனைத் தொகை யிறந்த
பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே – -55 –

என்னையும் பார்த்து என்னியல்வையும் பார்த்து எண்ணில் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே யுன் பெரும் கருணை
தன்னை என்பார்ப்பர் இராமானுசா வுன்னைச் சார்ந்தவரே – 70 –

செய்த்தலைச் சங்கம் செழு முத்த மீனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி நம் கண் முகப்பே
மெய்த்தலைத் துன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே
மொய்த்தலைக்கும் வந்து இராமானுசா ! வென்னை முற்று நின்றே – – 75-

சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் என்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன் உன் பத யுகமாம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமானுச ! இது கண்டு கொள்ளே – – 83- –

கண்டு கொண்டேன் எம் இராமானுசன் தன்னை காண்டலுமே
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்
றுண்டு கொண்டேன் இன்னுமுற்றனவோ தில் உலப்பில்லையே – -84 –

இவர் நம்மோடு சஜாதீயர் அல்லர் –நம்மை உத்தரிப்பிக்க வந்தவர் என்று
அஸ்மத் ஸ்வாமியான எம்பெருமானாரை உள்ளபடி கண்டு கொண்டேன் .
(ஜென்ம கர்மம் மே திவ்யம் யோ வேத்தி தத்வதக -உண்மையாக )
இப்படி தர்சித்த அளவிலே -அவர் தம் அளவிலே -நின்று விடாதே
அவர்க்கு அநந்யார்ஹர் ஆனவர்களுடைய அழகிய திருவடிகளிலே அடிமைப்பட்டேன் –
என்னுடைய அநாதியாய் -அதிக்ரூரமான கர்மங்களை நீக்கிக் கொண்டேன் –
அவருடைய குண பூரமாகிற சமுத்ரத்தைப் பெரு விடாயர் மடுவிலே வாய் மடுத்து
பருகுமா போலே பெரிய அபிநிவேசத்தொடே இன்று புசித்து கொண்டேன்

பிரார்த்தித்து பெற வேண்டிய வடிவு அழகை ஆகஸ்மிகமாக கண்ணாரக் கண்டு கொண்டேன் –-
கண்டோம் கண்டோம்-கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் –
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும்
கண்டேன் -இத்யாதிப் படியே-மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள்
ததீயரைக் கண்டால் போலே சாஷாத் கரித்தது என்றபடி-
கண்டு கொண்டேன் எம்மிராமானுசன் தன்னை–
இவர் நம்மைப் போன்ற சாதாரண மனிதர் அல்லர் -நம்மை உய்விப்பதற்காக விண்ணின் தலை
பரம பதத்தில் -நின்றும் மண்ணின் தலத்து உதித்தவர் என்று உள்ளபடி கண்டு கொண்டேன் -என்றபடி .
காண்டலுமே –தொண்டர் பொற்றாளில்-
கண்ட மாத்திரத்திலே -அவர் அளவோடு நில்லாது அவர்க்கு ஆட்பட்டாருடைய
அழகிய திருவடிகளில் அடிமைப் பட்டு விட்டேன்

புண்ணிய நோன்பு புரிந்துமிலேன் அடி போற்றி செய்யும்
நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் செம்மை நூற் புலவர்க்
கெண்ணரும் கீர்த்தி இராமானுச ! இன்று நீ புகுந்ததென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே – – 92–

நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102- –

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர் -அவை தன்னொடும் வந்
திருப்பிடம் மாய னிராமானுசன் மனத்தின்றவன் வந்
திருப்பிடம் என் தனி தயத்துள்ளே தனக்கின்புறவே – – 106- –

இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை யாக்கி யங்கு யாட்படுத்தே – – – 107-

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் -இரண்டாம் ஆயிரத்தில்—கண்டேன் -கண்டு கொண்டேன் -போன்ற -பாசுரங்கள் –

November 22, 2019

ஸ்ரீ அருளிச் செயல்களில் –கண்டேன் -கண்டு கொண்டேன் -போன்ற -பாசுரங்கள்
ஞானம் தர்சன பிராப்தி -நடு நிலை -காலஷேபம் -உத்தர க்ருத்யம்
அஹம் அஸ்மி அபராதானாம் ஆலய -அகிஞ்சநோ- அகதி — த்வம் ஏவ உபாய பூத மே பவ –
இதி பிரார்த்தனா மதி சரணாகதி ச தேவப்ஸ்மின் ப்ரயுஜ்யதாம் –ஸ்ரீ பாஞ்ச ராத்ர வசனம்

————

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –ஸ்ரீ பெரிய திருமொழி–1-1-1-

தூவிசேர் அன்னம் துணையொடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்—-1-1-2–

காமனார் தாதை நம்முடை அடிகள் தம்மடைந்தார் மனத்து இருப்பார்
நாமம் நான் உய்யக் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —1-1-3–

பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —1-1–4–

செம்புலாஞ் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —1-1-6–

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —1-1-9-

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன்னின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-1-

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை யமுதை யென்னை யாளுடையப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திரு வல்லிக்கேணிக் கண்டேனே–2-3-2-

வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேயலறி மண் சேர
நஞ்சமர் முலை யூடுயிர் செக வுண்டநாதனைத் தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்யப் பெண்ணுருவாகி
அஞ்சுவை யமுத மன்றளித்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே-2-3-3-

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தமோடின்வானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே –2-3-4-

இன் துணைப் பதுமத் தலர்மகள் தனக்குமின்பன் நற் புவி தனக்கிறைவன்
தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றை யோர்க்கெல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-5-

அந்தகன் சிறுவன் அரசர் தமரசற் கிளையவன் அணி யிழையைச் சென்று
எந்தமக்குரிமை செய்யெனத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமில் குழலாள் அலக் கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே -2-3-6-

பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7–

பள்ளியில் ஓதி வந்த தன சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ்வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—-2-3-8-

மீனமர் பொய்கை நாண மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கராவதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே-2-3-9-

பாராயதுண்டு உமிழ்ந்த பவளத் தூணைப்
படு கடலில் அமுதத்தைப் பரிவாய் கீண்ட
சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள் சிந்தை யுள்ளே
முளைத்து எழுந்த தீங்கரும்பினை
போரானைக் கொம்பொசித்த போர்ஏற்றினை
புணர் மருதம் இற நடந்த பொற் குன்றினை
காரானை யிடர்கடிந்த கற்பகத்தைக்
கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-1-

நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்ற வூர் நித்திலத்தைத் தொத்தார் சோலை
காண்டவத்தைக் கன லெரி வாய்ப் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-2-

தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கோர் பெரு நெறியை வையம் காக்கும்
கடும்பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே —-2-5-3-

கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்
காத்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே—2-5-4-

அப்பொய்யறை வாய்ப்புகப் பெய்த மல்லர் மங்கக்
காய்ந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே—2-5-5-

இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-6-

உள்ளுவார் உள்ளத்தே யுறைகின்றானை
காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே-2-5-7-

இலங்கொளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானை கண்ணாரக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-8-

ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கமாறும்
கண்டானை தொண்டனேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லத்தை தல சயனத்தே-2-5-9-

மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண் வளர்ந்த ஈசன் தன்னை
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூய நான்மறையாளர் சோமுச் செய்ய
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே—2-10-1-

சிந்தனை செய்து இரு பொழுதும் ஒன்றும் செல்வத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10–2-

செழுந்தட நீர்க்கமலம் தீவிகை போல் காட்டும் திருக் கோவலூர் அதனுள் கண்டேனே–2-10-3-

தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-4-

சிறை யணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே-2-10-5-

செறி யார்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-6-

செருந்தி மிக மொட்டலர்த்தும் தேன் கொள் சோலைத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-7-

சீரேறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-8-

தீவடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-9-

வாரணங்கு முலை மடவார் மங்கை வேந்தன் வாள் கலியன் ஒலி யைந்தும் யைந்தும் வல்லார்
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்தக் கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே–2-10-10-

கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தான வேள்விக்
களவின் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு
அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் எல்லாம்
அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழிலயலே
அண்டமுறு முழ ஒலியும் வண்டினங்கள் ஒலியும்
அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும்
அண்டமுறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 3-10-5-

பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை
வாரணிமுலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப
சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
காரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–4-3-1-

சிறப்புடை மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
மறைப் பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே—4-3-2-

திட மொழி மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-3-

திசை முகனனை யோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
உயர் மணி மகுடம் சூடி நின்றானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே—4-3-4-

தேமலர்ப் பொழில் சூழ் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே
காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே —4-3-5–

செல்வ நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
அல்லி மா மலராள் தன்னோடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-6–

செஞ்சொல் நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-7–

தென் திசை திலதம் அனையவர் நாங்கைச் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-8–

தேனமர் சோலை நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே
வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாள் கலிகன்றி
ஊனமில் பாடல் ஒன்பதோடு ஒன்றும் ஒழிவின்றிக் கற்று வல்லார்கள்
மான வெண் குடைக் கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே–4-3-10-

பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கன்னி முடியீர் உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே—-4-9-3-

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காயாய்த்து அடியோர்க்குத்
தேசம் அறிய வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான்
வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே —4-9-4-

தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய்
எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே
எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே —4-9-5-

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள வெம்மைப் பணி யறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே
காட்டீர் ஆனீர் நுந்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே —4-9-7-

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே —-4-9-8–

எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே —4-9-9—

கைம்மானம் மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை
மைம்மான மரகதத்தை மறை யுரைத்த திரு மாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த
வம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-1-

காரார் திண் கடல் ஏழும் மலை யெழ் இவ்வுலகு யெழ் உண்டு
ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே —5-6-2-

தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால்
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே—5-6-3-

பிளந்தவனைப் பெருநிலம் இடை நீட்டிப் பண்டு ஒரு நாள்
யளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-4-

பேர் அழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின் மறையோர் மந்த்ரத்தின்
ஆர் அழலால் உண்டானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-5-

வெஞ்சினத்த கொடும் தொழிலான் விசையுருவை யசைவித்த
அஞ்சிறைப் புட்பாகனை யான் கண்டது தென்னரங்கத்தே–5-6-6-

கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-7-

எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்க்கும் எம்மனைக்கும்
அமரர்க்கும் பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-8-

மை வண்ணம் கரு முகில் போல் திகழ் வண்ண மரகதத்தின்
அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே –5-6-9-

வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே
ஆண்டாய் யுன்னைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே –6-1-1—6-1-9–

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே –6-8-1-

அறுகாத பயணம் போய் பரம பதத்தில் காண்கை அன்றிக்கே விடாய்த்த இடத்தில்
தண்ணீர் குடிக்கப் பெறுவாரைப் போலே திரு நறையூரிலே காணப் பெற்றேன்

தென்னாலி மேய திருமாலை யெம்மானை
நன்னீர் வயல் சூழ் நறையூரில் கண்டேனே—6-8-2-

தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயுளானை நறையூரில் கண்டேனே –6-8-3-

திரு நீர் மலையானை வாடா மலர்த் துழாய் மாலை முடியானை
நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே –6-8-4-

வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறானை
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே –6-8-5-

அம்பன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே –6-8-6-

மெய்யமர்ந்த பெருமானை மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்டு வரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே —6-8-7-

விண்ணின் மீதேற விசயன் தேரூர்ந்தானை
நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே –6-8-8-

கொங்கேறு சோலைக் குடந்தை கிடந்தானை
நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே–6-8-9-

சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே -7-3-1-

பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள்
விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே –7-3-7-

கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-

பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இதுகாணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே –7-4-6-

உண்ணாது வெங்கூற்றம் ஓவாத பாவங்கள் சேரா மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானைப்
பண்ணாரா வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை யம்மான் தன்னைக்
கண்ணாரக் கண்டு உருகி கையார தொழுவாரைக் கருதும் காலே -7-4-8-

கள்ளத்தேன் பொய்யகத்தேன் ஆதலால் போதருகால் கவலை என்னும்
வெள்ளத்தேற்கு என் கொலோ விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால்
தள்ளத்தேன் மண நாறும் தண் சேறை எம்பெருமான் தாளை நாளும்
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாறே –7-4-9-

சிங்கமதாய் அவுணன் திரளாகம் முன் கீண்டுகந்த
சங்கமிடத்தானைத் தழலாழி வலத்தானைச்
செங்கமலத் தயனனை பார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அங்கமலக் கண்ணனை யடியேன் கண்டு கொண்டேனே —7-6-1-

அவ் ஊரில் உள்ளார் உடைய ஜன்மமும் இன்றிக்கே
ஸ்ரீ பிரகலதான் உடைய படியும் இன்றிக்கே-இருக்கிற நான்
கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

தென் அழுந்தையில் மன்னி நின்ற தேவாதி தேவனை யான் கண்டு கொண்டு திளைத்தேனே –7-6-2-

அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ண வணி யழுந்தூர்
நின்றானை யடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே –7-6-4-

செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சனக் குன்றன் தன்னை அடியேன் கண்டு கொண்டேனே –7-6-5-

அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடி பணியும்
கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே –7-6-6-

அருவாய் நின்றவனைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே -7–6-7-

அலையாரும் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கலையார் சொற்பொருளைக் கண்டு கொண்டு களித்தேனே —7-6-8-

ஆராவின்னமுதைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9-

விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து
பண்டானுய்ய வோர் மால்வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மைக் கருமமாவதும் என்தனக்கு அறிந்தேன்
அண்டா நின்னடியன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே-7-7-5-

பெரும் புறக் கடலை யடல் எற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-

மெய்ந்நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யை பொய்யினைக் கையிலோர் சங்குடை
மைந்நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளிகொள் மாயனை
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-2-

எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலி மங்கை தன்னை
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனிமா மதி யந்தவள்
மங்குலைச் சுடரை வடமா மலை யுச்சியைநச்சி நாம் வணங்கப் படும்
கங்குலைப் பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே—7-10-3-

பேய் முலைத்தள நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-4-

ஏற்றினை இமயத்துள் எம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை யண்டத்தப் புறத்து உய்த்திடும் ஐயனைக் கையில் ஆழி ஓன்று ஏந்திய
கூற்றினைக் குரு மா மணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினைக்
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-5-

துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச் சுடர் வான் கலன் பெய்ததோர்
செப்பினைத் திருமங்கை மணாளனைத் தேவனைத் திகழும் பவளத்தொளி
யொப்பனை யுலகேழினை யூழியை ஆழி ஏந்திய கையனை யந்தணர்
கற்பினைக் கழுநீர் மலரும் வயல் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-6-

திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத் தேவதேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்தனை யரியைப் பரி கீறிய அப்பனை யப்பிலார் அழலாய் நின்ற
கருத்தனைக் களிவண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே—7-10-7-

வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சியில் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்சவஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே —7-10-8-

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலைநீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-9-

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-

சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ 8-1-1–

கண்டாள் கொலோ –
ஸ்ரவண ஜ்ஞானம் என்று தோற்றி இருக்கிறது இல்லை
கண்டவர்களுக்கு தெரியுமா போலே தெரியுமோ இவள் வார்த்தையை கேட்டு அறிந்த நமக்கு –
கண்டாள் கொலோ –
நெடுநாள் நோன்பு நோற்று பெற்ற தாயான முன்னே அறிந்த அம்சம் மறைக்கக் கடவதே இருக்க
என் முன்னே இப்படி வெளியிட்டுச் சொல்லும் போது
அவ்விஷயத்தில் இப்படி ஒரு சக்ருத் தர்சனம் உண்டாய் இருக்க வேணுமே –
ஒரு கால் கண்டால் பூர்வ வாசனையும் மறக்கும் படியான
வை லஷண்யம் உள்ளத்து அவ்விஷயத்துக்கே இறே
கலை இலங்கும்படியான பேச்சை உடையராய் இருப்பார் அவ் ஊரில் உள்ளார் –
அப்படியே இவள் பேச்சைக் கொண்டு-இவள் திருக் கண்ண புரத்திலே புக்கு
சௌரிப் பெருமாளை சாஷாத் கரித்தாள் ஆகாதே என்று சொல்லலாய் இரா நின்றது –
அகவாயில் ஓட்டம் எல்லாம் வார்த்தையிலே தெரியும் இறே

ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா வென்னப்பா வென்கின்றாளால்
கருவரை போல் நின்றானைக் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-2-

பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3-

ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ–8-1-4-

வடித் தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின்றாளால்
கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-5-

நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்
காரார் வயல்மருவும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-6-

மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால்
கைவளர்க்கும் அழலாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-7-

பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால்
கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-8-

பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-9-

மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று
காவளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
பூவளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10-

நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க வினி யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-

கண்ண புரம் என்று காட்டினாள்-
பிரான் இருந்தமை காட்டினீர் -என்று அவனைக் காட்டினாள் தாயார் –
அவன் இருந்த ஊரை காட்டுகிறாள் இறே இவள் –
இது போலே காணும் சதாசார்யானில் காட்டில் சத் சிஷ்யனுக்கு உண்டான வாசி –
உனக்கு பிராப்ய பிர்ராபகங்கள் இரண்டும் ஈஸ்வரன் திருவடிகளே -என்று காட்டிக் கொடுக்கும் ஆசார்யன் –
அவ்விரண்டு அர்த்தைத்தையும் என் நெஞ்சில் பிரதிஷ்டிப்பித்த
உன் திருவடிகள் அன்றோ என் புருஷார்த்தம் -என்று இறே சச் சிஷ்யன் இருப்பது –
அதவா –
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்–
திருக் கண்ண புரத்தை காணி கோள்-அஞ்சலியைப் பண்ணி கோள்
என்று சொல்லப் புக்கு-முடியும் சொல்ல மாட்டாதே குறையும் ஹஸ்த முத்ரையாலே காட்டினாள் –
அதவா –
காணுமோ -என்கிறாள் –
இக் கண்ணால் கொள்ளும் பிரயோஜனம் திருக் கண்ண புரத்தை காண்கை அன்றோ –
இத்தை நிஷேதிப்பாரும் சிலர் உண்டாவதே -என்று-விஷண்ணை யாகிறாள் -என்றுமாம் –

விண்ட மலரெல்லாம் ஊதி நீ என் பெறுதி
அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும்
கண்டு வணங்கும் கண்ண புரத் தெம்பெருமான்
வண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோற்றும்பீ –8-4-3-

தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா வரக்கர் துளங்கா முன்
திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திரு மார்பன்
வண்டார் கூந்தல் மலர் மங்கை வடிக்கண் மடந்தை மா நோக்கும்
கண்டான் கண்டுகொண்டுகந்த கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-1-

தொண்டரு மமரரும் முனிவரும் தொழுதெழ
அண்டமொட கலிடமளந்த வரமர் செய்து
விண்டவர் பட மதிள லங்கை முன்னெரி யெழக்
கண்டவர் கண புரமடி கள் தமிடமே —8-7-5-

வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக்கண்ணன்
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —8-8-1-

விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை
கலங்கல் முந்நீர்க் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே–8-8-2-

கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3-

பிளந்து வளைந்த வுகிரானைப் பெரும் தண் செந்நெல் குலை தடிந்து
களம் செய் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-4-

உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு பால் முல்லை முகையோடும்
கழு நீர் மலரும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-5-

குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-6-

செய்த வெம்போர் நம்பரனைச் செழும் தண் கானல் மண நாறும்
கைதை வேலிக் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-7-

செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்ப
கற்ற மறையோர் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-8-

துவரிக் கனிவாய் நிலமங்கை துயர் தீர்ந்து உய்யப் பாரதத்துள்
இவரித் தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த வம்மானை
உவரியோதம் முத்துந்த ஒரு பால் ஒரு பால் ஒண் செந்நெல்
கவரி வீசும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-9-

கண்ணார் கண்ண புரம் கடிகைகடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ —8-9-9-

கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ-
ஒரு தேச விசேஷத்திலே போனால்-சதா தர்சன நத்தாலே -அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்குமத்தை
இங்கே கண்ணாலே கண்டு களிக்கப் பெறுவது என்றோ -என்கிறார் –
இங்கே கண்களாலே காண்கை யாவது என் என்னில்-இவருடைய த்வரை இருக்கிற படி இறே-

நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக
மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையைப்
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே —8-10-9-

பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் –
விரோதி போகப் பெற்ற அளவேயோ – அது போனால் பெறக் கடவ கைங்கரியத்தையும் பெற்றேன் –
வாசிகமான வடிமையும் செய்யப் பெற்றேன் –
நாம் பாடின கவியினுடைய மதிப்பு இருந்த படியாலே இது நம்மால் வந்ததாகக் கூடாது –
உள்ளே இருந்து பாடுவிக்கிறான் ஒருத்தன் உண்டு என்று அறிந்த இது கொண்டே
நீ என் ஹிருதயத்தில் இருக்கிற இருப்பை நிச்சயிக்கலாம் படி பண்ணினாய் –
கண்ண புரத்துறை யம்மானே –
இவரைப் பாடுவித்த முக்கோட்டையாய் இருந்தபடி –

கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை
கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி யவர்க்கு அது அறிந்தோமே —8-10-10-

புனை வளர் பூம் பொழிலார் பொன்னி சூழ் அரங்க நகருள்
முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னைச்
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்றான்
கனை கழல் காணும் கொலோ கயற்கண்ணி எம் காரிகையே –9-9-2-

ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரு நல் தொல் கதியாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர் மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே –10-1-1-

பொன்னை மா மணியை யணி யார்ந்ததோர்
மின்னை வேங்கடத் துச்சியில் கண்டு போய்
என்னை யாளுடை யீசனை யெம்பிரான்
தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே —10-1-2-

துளக்கமில் சுடரை அவுணன் உடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள்
விளக்கினைச் சென்று வெள்ளறை காண்டுமே —10-1-4-

சுடலையில் சுடு நீறன் அமர்ந்ததோர்
நடலை தீர்த்தவனை நறையூர்க் கண்டு என்
உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி யுண்
விடலையைச் சென்று காண்டும் மெய்யத்துள்ளே —10-1-5-

வானையார் அமுதம் தந்த வள்ளலைத்
தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய்
ஆனை வாட்டி யருளும் யமரர் தம்
கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே —10-1-6-

கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய்
மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய
வேந்தனைச் சென்று காண்டும் வெக்கா வுளே —10-1-7-

பத்தராவியைப் பான்மதியை யணித்
தொத்தை மாலிருஞ்சோலை தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினைச் சென்று விண்ணகர் காண்டுமே –10-1-8-

கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க வோர்
கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனைக்
கொம்புலாம் பொழில் கோட்டியூர்க் கண்டு போய்
நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே ———————10-1-9-

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே —-11-5-1-

நமக்கு ஒரு குறை உண்டோ -என்று அனுசந்தித்த இத்தால் பிறந்த ப்ரீதி பிரகர்ஷம்
ஓர் ஆஸ்ரயத்தில் அடங்காது இருக்கையாலே அந்தபுர பரிகரமாய் தங்களில் தோழமையாய் இருப்பார்
ஒருவருக்கு ஒருவர் பரத்வ அவதாரங்களில் இரண்டிலும் தனித் தனியே ஊன்றி அவற்றை அனுசந்தித்து
களித்துப் பேசுகிற இவர்கள் பேச்சாலே தாம் அவற்றையே பேசி அனுபவிக்கிறார் –
இவ்வாத்மாவின் ஸ்வரூபத்தை அனுசந்தித்தால் தனாக்காய் இருக்கை -ஸ்வரூப விரோதியாய் –
அவனதாய் இருக்கும் இருப்பு -ஸ்வரூப அனுரூபமாய் – இருக்குமா போலே
அவன் ஸ்வரூபத்தை அனுசந்திக்கப் புக்காலும் அதடைய ஆஸ்ரித அர்த்தமாக இருக்கும் இருப்பை அனுசந்தித்தால்
ஆனந்த நிர்பரராய் களிக்கும் படியாய் இருக்கும் இறே-
இப்படி பரத்வ சௌலப்யங்கள் இரண்டையும் மாறி மாறி அனுபவிக்கிறார் –

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே —-11-5-1-

தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடீ
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான் முகற்கு
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே —11-5-2-

ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய் ஆய்ப்பாடித்
தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காணேடீ
தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிற்று இவ்
வேழ் உலகும் உண்டு இடமுடைத்தால் சாழலே –11-5-3-

அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தான் காணேடீ
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
ஏறி நீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே —11-5-4-

வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே —11-5-5-

கன்றப் பறை கறங்கக் கண்டவர் தம் கண் களிப்ப
மன்றில் மரக்கால் கூத்தாடினான் காணேடீ
மன்றில் மரக்கால் கூத்தாடினான் ஆகிலும்
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே —11-5-6-

கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் வாகிலும்
ஓத நீர் வையகம் முன் உண்டு உமிந்தான் சாழலே –11-5-7-

பார் மன்னர் மங்கப் படை தொட்டு வெஞ்சமத்துத்
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான்ஆகிலும்
தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே —11-5-8-

கண்டார் இரங்கக் கழியக் குறள் உருவாய்
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் ஆகிலும்
விண்டு ஏழ் உலகுக்கும் மிக்கான் காண் சாழலே —————–11-5-9-

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே—11-5-10-

நீணாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப்
பேணான் கடைந்து அமுதம் கொண்டுகந்த பெம்மானைப்
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன் மலையைக்
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே —11-7-1-

—————–

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே–திருக் குறும் தாண்டகம் –1-

கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே –
சுவடு அறிவிக்கும் தனையும் இறே வருத்தம் உள்ளது – பின்னை அத்தலை -இத்தலையாம் -இத்தனை –
கண்டு கொண்ட –
நான் கண்டு கொண்டேன் -என்று திரு அரசடியிலே காட்டிக் கொடுத்த காட்சி
ஏது செய்தால் மறக்கேன் -என்று மறந்து விட ஒண்ணாதபடி இறே மனசிலே புகுந்து காட்டிக் கொடுத்தது –
கண்டு கொண்ட –
கேட்டது கண்டால் போலே இருக்கிறது காணும்
ஸ்வரூப ஞானம் பிறந்தவர் ஆகையாலே -பண்டே வுண்டாய் – இழந்தது கண்டால் போலே இருக்கிறது –

ஆவியை அரங்கமாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மையில் தொண்டனேன் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்த வாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவி போல் வண்ணர் வந்து என் கண்ணுள்ளே தோற்றினாரே –-12-

இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என்தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–13-

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-

————–

திரு வடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
த்ரேதைக் கண் வளை யுருவேத் திகழ்ந்தான் என்றும்
பெருவடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்
பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை
ஒரு வடிவத் தோர் உருவன் என்று உணரலாகாது
ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கருவடிவில் செங்கண்ண வண்ணன் தன்னைக்
கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே–திரு நெடும் தாண்டகம்–3–

முற்றாரா வன முலையாள் பாவை மாயன்
மொய்யகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறைவு இழந்தாள் ஆவிக்கின்றாள்
அணி யரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன் வாய் சொல் இறையும் பேசக் கேளாள்
பேர்பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்
பொருவற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே –19-

அஃதும் கண்டும் அற்றாள்-
அவள் அவன் பக்கலிலே பித்தேறி – அவன் அவள் பக்கலிலே பித்தேறி –
இருவரும் ஊமத்தங்காய் என்று நான் சொல்ல -அது விபரீத பலமாய்த்து -என்கிறாள் –
அந்யோந்யம் ஒழிய செல்லாதே இருக்கிறபடியைக் கண்டும்
ந கச்சின் ந அபராத்யதி -என்கிறவள் படியையும் –
குன்றனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும் -என்கிறபடியே
குற்றத்தை குணமாகக் கொள்ளும் அவன் படியைப் பார்த்தும் அனன்யார்ஹை -ஆனாள் –
அவன் படியைக் கண்டும் அற்றாள்-அவள் படியைக் கண்டும் அற்றாள் –-சேர்த்தியைக் கண்டும் அற்றாள் –
அற்றாள் -குற்றத்தை குணமாகக் கொண்டாள் –
செய்தாரேல் நன்று செய்தார் -என்னும் படியைப் பார்த்து அங்கே அனன்யார்ஹை ஆனாள் –
ராஜ சம்ஸ்ரய வச்யானாம்-என்கிறபடியே
குற்றத்தை குணமாகக் கொள்ளும் அவன் படியைப் பார்த்து அனன்யார்ஹை ஆனாள் –
சேர்த்தியைப் பார்த்து இருவரும் ஊமத்தங்காய் தின்ற போது தெளிந்து இருப்பார் வேணும் என்று அனன்யார்ஹை ஆனாள்-
அஃதும் கண்டு அற்றாள் –விடுகைக்கு சொன்ன குற்றம் -பற்றுகைக்கு உடலாய்த்து –
மார்வை ஒருத்திக்கு படுக்கை பற்றாக்கினான் என்றவாறே-அதனடியான தன்றோ என்ன –
என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடைய ஆவியே -என்னா நின்றாள் –
போக பூர்த்தி உள்ளது சேர்த்தியிலே இறே –

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை யிருபாடு இலங்கியாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே–21–

கண்டும் -குணம் கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே இருக்கச் செய்தே –கண்டும் –என்கிறபடி -என் என்னில் –
கண் என்று உட் கண்ணாய் -ஜ்ஞான சாஷாத் காரத்தை சொல்கிறது –
அவன் பண்ணின தாழ்ச்சிகளை அனுபவித்து இருக்கச் செய்தேயும் -என்றபடி –
கண்டும்
முன்பு உன் பக்கல் கேட்டுப் போந்தேன் இத்தனை இ றே -கேட்டாப் போலே கண்டு வைத்தும்
கண்டும்
நெடுநாள் சாதனானுஷ்டானம் பண்ணி காண வேண்டிய விஷயம் அனாயாசமாக கண்ணுக்கு விஷயமாக
இருக்கச் செய்தே கிடாய் நழுவ விட்டது –
காணாத போது வெருவ ப்ராப்தமாய் இருக்க கண்டு வைத்து கலங்கினேன் –
கண்டு தெளிய கில்லீர் -என்னக் கடவது இறே –

நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா
நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
செய்வளவில் என் மனமும் கண்ணும் ஓடி
எம்பெருமான் திருவடிக் கீழ் அணையை இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்
கனமகரக் குழை இரண்டும் நான்கு தோளும்
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு
இது வன்றோ எழில் ஆலி என்றார் தாமே–22-

இத்தலையில் உள்ளத்து ஒன்றும் காணாதது போலே அத்தலையில் உள்ளதை நேராகக் கண்டேன் –
விரோதியை நேராக கண்டிலேன் –-போக்யதை குறைவற்று இருக்க கண்டேன் –
அணைத்த போது உறுத்தின திரு மகரக் குழைகளையும் –அணைத்த திருக் கைகளையும் கண்டேன் –

உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து –
என்னொளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
தெள்ளூரும் இளம் தெங்கின் தேறல் மாந்திச்
சேலுகளும் திருவரங்கம் நம்மூர் என்ன
கள்ளூறும் பைம் துழாய் மாலையானைக்
கனவிடத்தில் யான் காண்பது கண்டபோது
புள்ளூரும் கள்வா நீ போகல் என்பன்
என்றாலும் இது நமக்கோர் புலவி தானே–23-

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் -முதல் ஆயிரத்தில்—கண்டேன் -கண்டு கொண்டேன் -போன்ற -பாசுரங்கள் –

November 22, 2019

ஸ்ரீ அருளிச் செயல்களில் –கண்டேன் -கண்டு கொண்டேன் -போன்ற -பாசுரங்கள்
ஞானம் தர்சன பிராப்தி -நடு நிலை -காலஷேபம் -உத்தர க்ருத்யம்
அஹம் அஸ்மி அபராதானாம் ஆலய -அகிஞ்சநோ- அகதி — த்வம் ஏவ உபாய பூத மே பவ –
இதி பிரார்த்தனா மதி சரணாகதி ச தேவப்ஸ்மின் ப்ரயுஜ்யதாம் –ஸ்ரீ பாஞ்ச ராத்ர வசனம்

————

பேணிச் சீருடை பிள்ளை பிறந்தினில் காணத் தாம் புகுவார் புக்கு போதுவார் ஆண் ஒப்பர் இவர் நேரில்லை காண்
திருவோணத்தான் உலகாளும் என்பார்களே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -1 -1 -3-

பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும் பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-
பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள் ஒத்து இட்டு இருந்தவா காணீரே ஒண் நுதலீர் வந்து காணீரே -1-2-2-
கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே –1-2-3-
முழம் தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே- 1-2-4-
இரணியன் மார்வை முன் கீண்டான் குறங்குகளை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-5-
அச்சுதன் முத்தம் இருந்தவா காணீரே முகில் நகையீர் வந்து காணீரே -1-2-6-
நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும் மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்து காணீரே -1-2-7-
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே -1-2-8-
தாம்பால் ஆர்த்த உதரம் இருந்தவா காணீரே ஒளி வளையீர் வந்து காணீரே -1-2-9-
திரு மார்வு இருந்தவா காணீரே சேய் இழையீர் வந்து காணீரே -1-2-10-
தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே –1-2-11-
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12-
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே -1-2-13-
இச்செந்தொண்டை வாய் வந்து காணீரே சேய் இழையீர் வந்து காணீரே -1-2-14-
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவா காணீரே மொய் குழலீர் வந்து காணீரே -1-2-15-
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-
உருவு கரிய ஒளி மணி வண்ணன் புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-
எழில் கொள்மகர குழை இவை திண்ணம் இருந்தவா காணீரே செய் இழையீர் வந்து காணீரே -1-2-18-
பரமன் தன நெற்றி இருந்தவா காணீரே நேர் இழையீர் வந்து காணீரே -1-2-19-
கன்று இனங்கள் மறித்து திரிவான் குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-20-

கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக் கற்றவர் தெற்றி வரப் பெற்ற வெனக்கு அருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள் சூழ் சோலை மலைக்கு அரசே கண்ண புரத்தமுதே–1-5-8-

மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீகேச முலை உணாயே -2 2-6 – –

கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம்
இன்று நீ நீராட வேண்டும் எம்பிரானே ஓடாதே வாராய் -2 4-2 – –

பூணித் தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன் மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் எத்தனையும் இலாதாய் நற்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே மஞ்சனம் ஆட நீ வாராய் -2 4-9 – –

மன்னன் தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த
முன் இவ்வுலகினை முற்றும் அளந்தவன்
பொன்னின் முடியினைப் பூ வணை மேல் வைத்துப்
பின்னே இருந்து குழல் வாராய் அக்காக்காய்
பேர் ஆயிரத்தான் குழல் வாராய் அக்காக்காய் 2-5 9- –

சீலைக் குதம்பை ஒருகாது ஒரு காது செந்நிறம் மேல் தோன்றிப் பூ
கோலப் பனைக் கச்சம் கூறை உடையும் குளிர் முத்தின் கோடாலாமும்
காலிப் பின்னே வருகின்ற கடல் வண்ணன் வேடத்தை காண வாரீர்
ஞாலத்து புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாரும் இல்லை – 3-3 1- –

குன்று எடுத்து ஆ நிரை காத்த பிரான் கோவலனாய் குழலூதி ஊதிக்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்து உடன் வருவானை தெருவில் கண்டு
என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டு அறியேன் யேடி வந்து காணாய்
ஓன்று நில்லா வளை கழன்று துகில் ஏந்து இள மூளையும் என் வசம் அல்லவே -3-4-4 – –

சுற்றி நின்று ஆயர் தழைகள் இட சுருள் பங்கி நேத்ரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆடவும் கண்டேன் அன்றிப்பின்
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசல் ஒட்டேன் மாலிரும் சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக் கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே – 3-4 5-

வலம் காதில் மேல் தோன்றிப் பூ அணிந்து மல்லிகை வனமாலை மௌவல் மாலை
சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டு தீம் குழல்வாய் மடுத்தூதி ஊதி
அலங்காரத்தால் வரும் மாயப்பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப் பட்டு
விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர் வெள்வளை கழன்று மெய் மெலிகின்றதே – 3-4 9-

விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ண வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3 4-10 – –

திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெரும் சவை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல்
வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே–3-10-9-

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –3-10-10-

அவதார விசிஷ்டனாக சர்வேஸ்வரனை கண்ணாலே காண வேண்டும் என்று தேடித் திரிகிறார் சிலரும்
அப்படி தேடி கிறிகோள் ஆகில் அவனை உள்ளபடி கண்டார் உளர் -என்று சொல்லுகிறார் சிலருமாக கொண்டு
தம்மை இரண்டு வகையாக வகுத்து நின்று பேசி இனியர் ஆகிறார் -இத் திரு மொழியில் –

நாடுதிரேல்-என்றும் -கண்டார் உளர் -என்றும் பன்மையாக அருளிச் செய்தது
கட் கண்ணால் காண்கையில் அபேஷா ரூப ஞான வ்யக்திகளும்
உட் கண்ணால் கண்டு அதில் ஊற்றத்தாலே பாஹ்ய அனுபவமும்
சித்தித்தது என்று தோற்றும்படியான ஞான வ்யக்திகளும் பல உண்டு ஆகையாலே

கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள் முடியன்
எதிரில் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளர் தரியாய்
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவாறு கண்டார் உளர் – 4-1 1-

நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலி சார்ங்கம் திருச் சக்கரம்
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் ஜனக ராஜன் தன் வேள்வியில் கண்டார் உளர் -4 1-2 –

கொலை யானை கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருது அழியச்
சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப
அலையார் கடல் கரை வீற்று இருந்தானை அங்குத்தை கண்டார் உளர் -4 1-3 –

தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட
மாயக் குழவி யதனை நாட உறில் வம்மின் சுவடு உரைக்கேன்
ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல் விடை ஏழினையும்
வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்மையே கண்டார் உளர் – 4-1 4-

நீர் ஏறு செஞ்சடை நீல கண்டனும் நான் முகனும் முறையால்
சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற திரு மாலை நாடுதிரேல்
வாரேறு கொங்கை உருப்பிணையை வலியப் பிடித்துக் கொண்டு
தேர் ஏற்றிச் சேனை நடுவே போர் செய்ய சிக்கனக் கண்டார் உளர் – 4-1 5-

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 1-6 –

வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன்
உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன்
வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் – 4-1-7- –

நாழிகை கூறிட்டு காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே
நாழிகை போக படை பொருதவன் தேவகி தன் சிறுவன்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயந்திரன் தலையை
பாழில் உருளப் படை பொருதவன் பக்கமே கண்டார் உளர் – 4-1 8-

மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம்
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை சிக்கென நாடுதிரேல்
எண்ணற்கு அரியதோர் ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் -4 1-9 –

மருதப் பொழில் அணி மால் இரும் சோலை மலை தன்னை
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே – 4-2 11-

கொம்பினார் பொழில் வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4 9-

அன்று வயிற்றில் கிடந்தது இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் திரு சக்கரம் அதனால்
சென்றித் திசை திசை வீழச் செற்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் -5 3-9 –

அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 8-

———–

உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்த நனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என்னழலைத் தீர்வேனே––நாச்சியார் திரு மொழி–13-8-

கண்டீரே -என்று -பரம பக்தி தசையை -கேட்கிறவர்கள் பாசுரத்தாலும்
கண்டோம் -என்று-தான் பெற்ற பேற்றை – சொல்லுகிறவர்கள் பாசுரத்தாலும் –
ஆக தான் பெற்ற பேற்றைச் சொல்லித் தலைக் கட்டுகிறது

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –-14-1-

அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின்மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே–14-2-

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–14-3-

காரத்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-4-

மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல்
ஏதுமொன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரோ
பீதக வாடை யுடை தாழப் பெருங்கார் மேகக் கன்றே போல்
வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே —14-5-

தருமம் அறியா குறும்பனைத் தன் கைச் சார்ங்கமதுவே போல்
புருவம் வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே
வுருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே –14-6-

பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக்கரு மா முகிலைக் கண்டீரே
அருத்தி தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–14-7-

வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதவாடை யுடையானை
அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே
களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே —14-8-

நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே —14-9-

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-

————-

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–பெருமாள் திருமொழி-–1-1-

மதிள் அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
மணி வண்ணன் அம்மானை கண்டு கொண்டு என்
மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே ?—1-5-

கண் வளரும் கடல் வண்ணர் கமல கண்ணும்
ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என்
உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே—1-6-

அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்
நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே ?—-1-7-

திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி
வல் வினையேன் என்று கொலோ வாழும் நாளே ?–1-8-

திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
போராழி அம்மானை கண்டு துள்ளி
பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே?—-1-9-

அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்
இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10-

திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்
கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—1-11-

தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்ட மேவி அலர்ந்து அழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே–2-1-

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான்–2-4-

ஒண் பவள வேலை வுலவு தண் பாற் கடலுள்
கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே –4-4-

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9-

மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே 4-11-

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு
வீங்கு இருள் வாய் என் தன் வீதி யூடே
பொன் ஒத்த வாடைக்குக் கூடல் இட்டு
போகின்ற போது நான் கண்டு நின்றேன்
கண் உற்றவளை நீ கண்ணால் இட்டு
கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் ?
இன்னம் அங்கே நட நம்பி ! நீயே— 6-5-

செய்ய உடையும் திரு முகமும்
செங்கனி வாயும் குழலும் கண்டு
பொய் ஒரு நாள் பட்டதே அமையும்
புள்ளுவம் பேசாதே போகு நம்பி !—- 6-7–

வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி
மேல் இனிது ஒன்றினை நோக்கி
முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள்
பொலியும் நீர் முகில் குழவியே போலே
அடக்கி ஆர செஞ்சிறு விரல் அனைத்தும்
அம் கை யோடு அணைந்து ஆனையில் கிடந்த
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ!
கேசவா ! கெடுவேன் கெடுவேனே– 7-2-

களி நிலா எழில் மதி புரைமுகமும்
கண்ணனே ! திண் கை மார்வும் திண் தோளும்
தளி மலர் கரும் குழல் பிறை யதுவும்
தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த
இளமை இன்பத்தை இன்று என் தன் கண்ணால்
பருவேற்க்கு இவள் தாய் என நினைந்த
அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த
பாவியேன் எனது ஆவி நில்லாதே– 7-4-

மருவு நின் திரு நெற்றியில் சுட்டி அசை தர
மணி வாய் இடை முத்தம்
தருதலும் உன் தன் தாதையை போலும்
வடிவு கண்டு கொண்டு உள்ளம் உள் குளிர
விரலை செஞ்சிறு வாய் இடை சேர்த்து
வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் வுரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம்
தெய்வ நங்கை யசோதை பெற்றாளே –7-5-

முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்
முகிழ் இளம் சிறு தாமரை கையும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு
நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்
அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட வசோதை
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே– 7-8-

குன்றினால் குடை கவித்ததும் கோல
குரவை கோத்ததும் குடமாட்டும்
கன்றினால் விள வெறிந்ததும் காலால்
காளியன் தலை மிதித்ததும் முதலா
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும்
அங்கு என் உள்ளம் குளிர
ஒன்றும் கண்டிட பெற்றிலேன் அடியேன்
காணுமாறு இனி வுண்டேனில் அருளே— 7-9–

எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்–7-11-

புண்டரீக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே!
திண் திற லாள் தாடகை தன் உரம் உருவ சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கண புரத்து என் கருமணியே !
எண் திசையும் ஆள் உடையாய்! ராகவனே! தாலேலோ –8-2–

அம்மா என்று அழைக்கும் ஆர்வ சொல்
கேளாதே அணி சேர் மார்வம்
என் மார்வத் திடை அழுந்த தழுவாதே
முழுசாதே மோவாது உச்சி
கைம்மாவின் நடை அன்ன மென்னடையும்
கமலம் போல் முகமும் காணாது
எம்மானை என் மகனை இழந்திட்ட
இழி தகையேன் இருகின்றேனே– 9-6–

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–

தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எத்தனையும் கண் குளிர காணப் பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே— 10-4–

அம்பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி
அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான்
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே— 10-8–

————-

தலைக்கணத் துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய் –
நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடிரும்
கலைக் கணங்கள் சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின் தன் மாட்சியே —திருச்சந்த விருத்தம்-16-

வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ யிது என்ன பொய் யிரந்த மண் வயிற்றுளே
கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே –25-

மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் மண்ணுளே மயங்கி நின்று
எண்ணும் எண் அகப்படாய் கொல் என்ன மாயை நின்தமர்
கண்ணுளாய் கொல் சேயை கொல் அநந்தன் மேல் கிடந்த வெம்
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே –45-

—————

மொய்த்த வல் வினையுள் நின்று மூன்று எழுத்துடைய பேரால்
கத்திர பந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை அடியரானார்க்கு இரங்கும் நம் அரங்கனாய
பித்தனைப் பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே–திரு மாலை–4-

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி யொன்று இல்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணினை களிக்குமாறே –திரு மாலை–17-

இனித் திரைத் திவலை மோத வெறியும் தண் பரவை மீதே
தனிக்கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்
கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனியரும் புதிருமாலோ வேன்செய்கேன் பாவியேனே–18-

குட திசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி
வட திசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கிக்
கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே–19-

கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டுப்
பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழில் அரங்கம் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தோர் கிடக்கை கண்டும்
எங்கனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே–23-

வெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் தன்னுள்;
கள்வனார் கிடந்தவாறும் கமல நன்முகமும் கண்டும்
உள்ளமே வலியை போலும் ஒருவன் என்று உணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே–24-

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள்
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே–32-

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணுறா வுன்னை என்னோ களை கணாக் கருதுமாறே–44-

————

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே ——அமலனாதி பிரான்——6-

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே ——-10

—————-

திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே -கண்ணி நுண் சிறுத் தாம்பு-3-

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7–

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்–ஸ்லோகம் -6-7-8-9-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகளின் ஸ்ரீ ரத்ன பிரபா வியாக்யானம்

November 21, 2019

யன் மூர்த்நி மே ஸ்ருதி ஸிரஸ்ஸூ ச பாதி
யஸ்மின் அஸ்மன் மநோ ரத பதஸ் சகலஸ் சமேதி
ஸ் தோஷ்யாமி ந குலதனம் குல தைவதம் தத்
பாதார விந்த மரவிந்த விலோச நஸய–6-

 

யன் மூர்த்நி மே -யத் மே மூர்த்நி–யாதொரு எம்பெருமானுடைய திருவடியானது -என் தலையிலும்
அடிச்சியாம் தலை மீசை நி அணியாய் ஆழி யம் கண்ணா நின் கோலப் பாதம் 10-3-6–ஸீரோ பூஷணம் –
நாம் தலை மடுத்து வணங்குவதால் திரு முடியில் விளங்கக் குறையில்லையே
ஸ்ருதி ஸிரஸ்ஸூ ச பாதி–வேதாந்தங்களிலும் விளங்கா நின்றதோ -வேதங்களில் விஸ்தரமாக வருணிக்கப் படுமே
யஸ்மின் –யாதொரு திருவடியில்
அஸ்மன் மநோ ரத பதஸ் சகலஸ் –நமது ஆசைப் பெருக்கம் எல்லாம்
சமேத –போய்ச் சேருகின்றதோ
திருவடிகள் கிடைக்கப் பெற்றாலே சர்வமும் கிடைக்கப் பெற்றதாகும்
தத்-அப்படிப்பட்டவராய்
நம் குலதனம்–வம்ச பரம்பரையாய் நமக்குச் சேர்ந்த செல்வமாய்
நம் குல தைவதம் -நம் குலத்துக்கு எல்லாம் ஆதாரமாய் இருக்கிற
அரவிந்த விலோச நஸ்ய- பாதார விந்த -செங்கண் மாலின் திருவடித் தாமரையை
ஸ்தோஷ்யாமி –ஸ்துதிக்கப் போகிறேன்
இப்படி பிராப்யமுமாய் விலஷணமுமாய் உபகாரகமுமான
திருவடிகளிலே வாசிகமான அடிமை செய்கிறேன் –
நமது குலத்துக்கு அழியாத செல்வமான பகவத் பாராதவிந்தத்தை ஸ்தோத்ரம் பண்ணப் போவதாக ப்ரதிஜ்ஜை செய்கிறார்
குல தனம் –உபாயத்வம்-அயத்ன சித்தமுமாய் ஸ்வத பிராப்தமுமாய் இருக்கை
குல தைவதம் -உபேயத்வம் –
உபாய உபேயங்களை
சங்க்ரஹித்துக் கொண்டு
உபக்ரமித்தபடியே பகவத் ஸ்தோத்ரத்திலே இழிகிறார் –


தத்த்வேன யஸ்ய மஹிம அர்ணவ ஸீகர அணு
சக்யோ ந மாதுமாபி சர்வபிதா மஹாத்யை
கர்த்தும் ததீய மஹிம ஸ்துதிம் உத்யதாய
மஹ்யம் நமோ அஸ்து கவயே நிரபத்ரபாய–7-

யஸ்ய மஹிம–எந்த எம்பெருமானுடைய பெருமையாகிற
அர்ணவ ஸீகர அணு–கடலிலே ஒரு சிறிய திவலை அளவு கூட
சர்வ பிதாமஹ ஆதயை அபி –சிவன் ப்ரஹ்மா முதலானவர்களாலும்
தத்த்வேன –உள்ள படி
சக்யோ ந மாதும் –அளவிட்டு அறிய முடியாததோ
ததீய மஹிம ஸ்துதிம் -அந்த எம்பெருமானுடைய பெருமையைப் பற்றிய ஸ்தோத்ரத்தை
கர்த்தும் உத்யதாய–செய்வதற்கு ஆரம்பம் செய்தவனாயும்
நிரபத்ரபாய–வெட்கம் கெட்டவனாயும்
கவயே-கவி என்று பேர் சுமப்பனாயும் இருக்கிற
மஹ்யம-எனக்கே
நமோ அஸ்து –நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும்
என்னை எல்லாரும் நமஸ்கரிக்கட்டும் என்று தம்மைத் தாமே நிந்தித்துக் கொள்ளுகிற படி
உலகில் ஸாஹஸர்களைக் கைகூப்பி வணங்க வேண்டும் என்று சொல்வது உண்டே


யத்வா ஸ்ரமாவதி யதாமதி வாப்ய அசக்த
ஸ்தௌம் யேவமேவ கலு தேஅபி சதா ஸ்துவந்த
வேதாஸ் சதுர்முகாஸ் ச மஹார்ணவாந்த
கோ மஜ்ஜதோரணுகுலா சலயோர் விசேஷ –8-

யத்வா -அல்லது -ஸ்துதிக்க தொடங்குவதால் யத்வா -என்று உபக்ரமிக்கிறார் இதில்
அசக்த-அஹம் -சக்தியற்ற நான்
ஸ்ரமாவதி –ஸ்ரமம் உண்டாகும் அளவாவது -சக்தி உள்ள அளவாவது என்றபடி
யதாமதி வா–புத்திக்கு எட்டும் அளவாவது
ஸ்தௌமி –ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்
சதா அபி ஸ்துவந்த-எப்பொழுதும் ஸ்தோத்ரம் பண்ணிக்க கொண்டு இருக்கிற
தேஅபி வேதாஸ்-அந்த வேதங்களும்
சதுர்முக முகாச்ச –ப்ரஹ்மாதிகளும்
யேவமேவ கலு -இப்படி அல்லவோ ஸ்துதிப்பது
என்னைவிட அவர்கள் சிறிது அதிகமாக ஸ்துப்பார்கள் ஆகிலும்
மஹார்ணவாந்த-மஜ்ஜதோ–பெரிய கடலினுள்ளே முழுகிப் போகிற
அணு குலா சலயோர் க விசேஷ –சிறியதொரு வஸ்துவுக்கும் பெரிய குலபர்வதத்துக்கும் என்ன வாசி

ஆகவே நம்மால் ஆன அளவு ஸ்துதிப்பது தகுதியே என்று திரு உள்ளத்தை சமாதானம் படுத்திக்க கொள்கிறார்
வேதம் உரைத்து இமையோர் வணங்கும் செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் –பெரிய திருமொழி -2-8-2என்கிறபடியே
தேவர்களும் -வைதிகர்களும் -வேதங்களும் அல்லும் பகலும் ஸ்துதிக்குக் கொண்டே இருந்தாலும் பேசித் தலைக்கட்டி முடியாமல் தங்கள் ஞான சக்திகள் அளவும் ஸ்துக்கிறார்கள்
ஆகவே உள்ளபடி பேச மாட்டாமையில் நானும் அவர்களும் ஒரு வாசி இன்றியே சமமே
அனவதிக அதிசய அஸங்க்யேய பகவத் குண சாகரத்தில் இரண்டுமே முழுகி மறைந்து போகுமே
அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைத் தலைச் சிறந்து பூசிப்ப
மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து -நான் முகன் திருவந்தாதி -10-
பேசுவார் எவ்வளவு பேசுவார் அவ்வளவே -மூன்றாம் திருவந்தாதி -21
வல்லதோர் வண்ணம் -திருவாய் மொழி -7-8-10-


கிஞ்சசைஷ சக்த்யதிச யேன ந தே அனுகம்ப்ய
ஸ்தோதாபி து ஸ்துதி க்ருதேன பரிஸ் ரமேண
தத்ர ஸ்ரமச்து ஸூலபோ மம மந்த புத்தே
இதயத் யமோ அயமுசிதோ மம சாப்ஜ நேத்ர–9-

ஏஷ ஸ்தோதா-இந்த ஸ்துதிப்பவனான அடியேன்
சக்த்யதிச யேன-எனது சக்தியின் மிகுதியினால்
ந தே அனுகம்ப்ய-உனக்கு இரங்கத் தக்கவன் அல்லேன்
அபி து -பின்னை எக்காரணத்தால் இரங்கத் தக்கவன் என்னில்
கிஞ்சசைஷ
ஸ்துதி க்ருதேன பரிஸ் ரமேண–ஸ்துதிப்பதனால் உண்டாகும் பரி ஸ்ரமத்தைப் பார்த்து இரங்கத் தக்கவன்
ஹே அப்ஜ நேத்ர–செங்கண் மாலே
உன் தாமரைக் கண்களால் நோக்காய் –திருவாய் மொழி -9-2-1-
என்னுடைய முயற்சி ஈடேறும் படி உனது தாமரைக் கண்களால் நோக்காய்
ஸ்தோத்ரத்தில் நிலை நின்ற படியைக் கண்டு
செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மன்னினான் –திருவாய் மொழி -1-10-10-என்கிறபடியே
ப்ரீதியாலே திருக் கண்கள் குளிர்ந்த படியைச் சொல்லுதல் -என்றுமாம் –
தத்ர மந்த புத்தே–ஸ்துதிக்கும் விஷயத்தில் மந்த புத்தியை யுடையனான
மம து ஸ்ரமம் -எனக்கோ என்றால் பரி ஸ்ரமம்
ஸூலபோ -எளிதில் உண்டாகக் கூடியது
இதி மம ச –என்கிற காரணத்தினால் எனக்கே
அயம் உத்யமஸ் -இந்த முயற்சி ஏற்று இருக்கிறது
எனவே ப்ரஹ்மாதிகளை விட தனக்கு உண்டான ஏற்றம் -என்னைப் போலே தீனர்கள் அல்லவே –
எனவே சீக்கிரமாக உனது தயை என் மேலே பொழியும் -அவர்கள் ஸ்துதிப்பது வீண் -நான் ஸ்துதிப்பதே தகுதி என்று சகாரப் பிரயோகம்
உசிதோ மம ச –
ச சப்தம் அவதாரணமாய் -எனக்கே உசிதம் என்னுதல்
சமுச்சயமாய் எனக்கும் உசிதம் -என்று கீழ் ஸ்லோகத்தோடு கூட்டுதல் –
இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த நானும் ஏத்தினேன்

—————————-

 

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்–ஸ்லோகம் -1-5-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகளின் ஸ்ரீ ரத்ன பிரபா வியாக்யானம்

November 21, 2019

ஸ்வாத யன்நிஹா சர்வேஷாம்
த்ரய்யந்தார்த்தம் ஸூ துர்க் ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர
தம் வந்தே யாமுநாஹ்வயம்-

 

ய யோகீந்திர—எந்த ஆளவந்தார் என்கிற யோக சிரேஷ்டர்
ஸூ துர் க்ரஹம்–ஒருவராலும் அடியோடு க்ரஹிக்க முடியாத
த்ரய்யந்த அர்த்தம்–வேதாந்தப் பொருளை–
இஹ –இவ்வுலகத்தில்
சர்வேஷாம்-அனைவருக்கும்
ஸ்வாதயன்–எளிதாக அனுபாவ்யம் ஆக்கிக் கொண்டு
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளிட்டாரோ
தம் யாமுந ஆஹ்வயம்-வந்தே -அந்த ஆளவந்தாரை சேவிக்கிறேன்

இந்த ஸ்தோத்ர ரத்னத்தின் ஒவ் ஒரு ஸ்லோகமும் வேதாந்தப் பொருளைகளையே விளக்கி அருளும் –பண்டிதரோடு பாமரர்களோடு வாசியற மதுரமாக -போக்யமாக -உபநிஷத்துக்கள் பொருள்களை அருளிச் செய்த எதிகட்க்கு இறைவன் யமுனைத் துறைவனை வணங்குகிறேன் என்கிறது இந்த தனியன்

————

நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம

ஆதார அதிசயத்தாலே ஸ்ரீ ஆளவந்தாருக்கு நமஸ்காரம் என்று பலகாலும் சொல்லி வணங்குவது

 


அவா அற்று வீடு பெற்ற -என்றும் சொல்லுகிறபடியே
ப்ராப்தி பலமான கைங்கர்யத்தைப் பெற்ற ஸ்ரீ ஆழ்வார் உடைய
திராவிட உபநிஷத் ரஹச்யத்தை ஸ்ரீ பெரிய முதலியார்
ஸ்ரீ ஆழ்வார் உடைய ப்ரசாதத்தாலே லபித்தது
பின்பு ஆச்சார்ய உபதேச க்ரமத்தாலே ஆளவந்தார் அந்த திராவிட உபநிஷத் ரஹச்ய அர்த்தங்களை லபித்தது
அத்தை தாம் அனுபவித்து
அவ் வனுபவத்தால் வந்த ப்ரீதி உள் அடங்காமலே பரீவாஹ அபேஷை பிறக்கையாலும்
சம்சாரிகள் துர்க்கதி கண்டு இவர்கள் இத்தை இழக்க ஒண்ணாது என்னும் கிருபையாலும்
சகல உபநிஷத் ரகஸ்யமாய் -துர்ஜ்ஞேய மான அர்த்தத்தை சர்வரும் அறியும்படியாக இவர் ஸ்தோத்ரமாக வெளி இடுகிறார் –

சுருதி ஸ்ம்ருதி சித்தமாய் ஸூகரமாய்
அத்யவசாயாத்மக ஜ்ஞான விசேஷமான ப்ரபத்தியையே உபாயமாக நிச்சயித்து –
இப்படி ப்ராப்ய ப்ராபகங்களை நிஷ்கர்ஷித்து
இவற்றை ஸ்தோத்ர ரூபத்தாலே
ஸ்ரீ சர்வேஸ்வரனை நோக்கி பிரார்த்திக்றார் –

ஆதி அந்தங்களிலே ஆசார்ய ஸ்துதி யாய்
நடுவிலே பகவத் ஸ்தோத்ரம் ஆக இருக்கிறது –
முதல் மூன்று ஸ்லோகத்தாலே ஸ்ரீ பெரிய முதலியாரை நமஸ்கரிக்கிறார் –

நமோ அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாயா முநயே அகாத பகவத் பக்தி சிந்தவே–1-

அசிந்த்ய –இப்படிப்பட்டது என்று நினைக்க முடியாததும் –
அத்புத –ஆச்சார்யமானதும்
அக்லிஷ்ட -அவனது நிருஹேதுக கிருபையினால் எளிதாகக் கிடைத்ததுமான
ஜ்ஞான வைராக்ய ராசயே-ஞானத்தினுடையவும் வைராக்யத்தினுடையவும் திரட்சி போன்றவராயும்
அகாத பகவத் பக்தி சிந்தவே–ஆழ்ந்த பகவத் பக்திக்குக் கடலையும் இருக்கிற
நாதாயா முநயே நாம -ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு நமஸ்காரம் செய்கிறேன்
இவ்வளவு என்று அறிய ஒண்ணாத ஞானமும் விரக்தியும் இங்கனே வடிவு கொண்டனவோ-என்றும் ஆழ்ந்த பக்திக்கு இருப்பிடம் என்றும் –
அத்புதமாவது –அறிய ஒண்ணாமையாக இருந்தாலும் நம் சற்று அறிவுக்கு எட்டிய அளவு ஆச்சர்யமாக இருக்கின்றவே
இப்படிப்பட்ட எம்பெருமானுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி இவற்றைப் பற்றிய ஞானம் -ஞானமாவது தத்வ த்ரய -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை-அர்த்த பஞ்சக ஞானம் என்றுமாம்
அன்னை அத்தன் புத்ரன் பூமி வாசவார் குழலார் இவர்களைப் பற்றிய வைராக்யங்கள் -இரண்டுமே கும்பலாகக் குவிந்து இவராக ஆயிற்று

அகாத பகவத் பக்தி சிந்தவே-
கீழக்கரை கண்டு பிடிக்க முடியாமல் இருக்குமே
கலக்கவும் முடியாதே
இப்படிப்பட்ட பகவத் பக்திக்கு சமுத்திரம் என்றும் -பகவத் பக்தியாகிற சமுத்திரத்தை தம்மிடத்தில் உடையவர் என்றுமாம்

பக்தியாவது ஜ்ஞான விசேஷமாய் இருக்க -பக்தியைப் பிரித்துச் சொல்லிற்று –
அதினுடைய ப்ராசுர்யம் சொல்லுகைக்காகவும் –
ப்ரதான்யம் சொல்லுகை தோற்றுகைக்காகவும் –
பக்தி யாகிறது -சிநேக பூர்வம் அனுத்யானம் பக்தி

 

ஸ்ரீ ரெங்க நாத முனி பூர்ணமான திரு நாமம் -எப்போதும் எம்பெருமானையே மனனம் செய்பவர் என்பதால் முனி -ஸ்ரீ ஈஸ்வர முனிகள் -ஸ்ரீ ரங்க நாதன் என்று திருநாமம் சாற்றுகையாலே நாதன் என்று திரு நாமம் ஆகிறது

—-

தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜா தத்தவ
ஜ்ஞான அனுராக மஹிமா அதிசய அந்த ஸீம்நே
நாதாயா நாத முநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரனௌ சரணம் மதீயம்-2-

மது ஜிதங்க்ரி ஸரோஜா -எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைப் பற்றின
தத்தவ ஜ்ஞான–உண்மை உணர்ச்சி என்ன
அனுராக –ஆசை என்ன
மஹிமா அதிசய அந்த ஸீம்நே–இவற்றின் பெரு மேன்மைக்கு எல்லை நிலமாயும்
நாதாயா-எனக்கு நாதராயும் இருக்கிற
தஸ்மை நாத முநயே நமோ–அந்த நாத முனிகளுக்கு நமஸ்காரம்
அத்ர பரத்ர சாபி-இவ்வுலகத்திலும் மேல் உலகத்திலும்
நித்யம் யதீய சரனௌ-எப்போதும் -எந்த ஸ்ரீமந் நாதமுனிகளுடைய திருவடிகள்

நித்யம் –
நித்ய அக்னி ஹோத்ரம் போல் அன்றிக்கே
அனவரதம் -என்கை –

சரணம் மதீயம்–என்னுடையதான புகல் இடமோ –அந்த நாதமுனிகளுக்கு நமஸ்காரம்
திருவடித் தாமரைகளைப் பற்றின தத்வ ஞானத்தாலும் பரி பூர்ணர் -அன்பினாலும் பரி பூர்ணர் –
அவதார ரஹஸ்யம் வாத்சல்யாதி குணங்கள் -இவற்றின் உண்மையை உள்ளபடி உணர்ந்து ப்ரேமம் கனத்து இருப்பவர்களில் நிகர் அற்றவர்
மது ஜித் தத்வ ஞானம் -என்னாமல் -அங்கிரி -நடுவில் -பாதாரவிந்தமே தாயாரின் ஸ்தநம் போலே -பரம உத்தேச்யம்

மது ஜித்–அநிருத்தராய்வந்து அவதரித்து
முதல் களையான மதுவை நிரசித்தால் போலே
பகவத் ப்ராப்தி பந்தகங்களைப் போக்குமவன் -என்கை -மது சூதனை யன்றி மற்று இலேன் -திருவாய்மொழி -2-7-6-


பகவத் தத்வ ஞானமும் பகவத் அநு ராகமும் இவர் இடம் சேர்ந்து விசரமித்தன போலும் -ஆகவே இவற்றுக்கு இவரே ஸீமா பூமி –

மனுஷ்ய ஆனந்தமே தொடங்கி-தே யே சதம் – என்கிற க்ரமத்தாலே
ஈஸ்வர ஆனந்தத்திற்கு எல்லையாய் இருக்கும் இருப்பு போலே
இவருக்கும் தத் விஷய ப்ரேமத்துக்கு எல்லையாய் இருக்கும் இருப்பு –


அதர பரத்ர சாபி -அங்கும் அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ என்று அன்றோ பாரிப்பு
அது வானவர் நாடு அன்றோ -பாகவதர்களுக்கே பிரதான்யம்
ஆச்சார்யர் திருவடி சேர்ந்தார் என்று அன்றோ இன்றும் வழக்கம்
சரணம் -உபாயத்துக்கும் உபேயத்துக்கும் வாசகம் இங்கு

முதல் ஸ்லோகத்தாலே பரத்வ விஷயமான ஜ்ஞானாதிகள் உடைய பிரகர்ஷம் சொல்லிற்று
இந்த ஸ்லோகத் தாலே அவதார விஷயமான ஜ்ஞானாதிகள் ஆகையாலே- அதினுடைய ப்ரக்ருஷ்ட தரத்வம் சொல்லுகிறது
அன்றிக்கே
கீழ் சொன்ன ஜ்ஞானாதிகள் தம்மளவில் பர்யவசியாதே
என்னளவும் வர வெள்ளம் கோத்தது – என்னவுமாம் –

பூயோ நமோ அபரிமித அச்யுத பக்தி தத்தவ
ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி
யோகாய நாத முநயே யமிநாம் வராய-3-

அபரிமித அச்யுத பக்தி –அளவில்லாத பகவத் பக்தி என்ன
அபரிமித தத்தவ ஜ்ஞாநம்–அளவில்லாத தத்வ ஞானம் என்ன
அம்ருதாப்தி பரிவாஹ ஸூ பைர்–இவையாகிற அமுதக்கடலின் பரிவாஹம் போன்று பிரசன்ன சீதளங்களான
வசோபி-ஸ்ரீ ஸூக்தி களாலே
லோகே -இவ்வுலகத்தில்
அவதீர்ண பரமார்த்த –அவதாரம் செய்து இருக்கிற பரம புருஷார்த்தமாயும்
சமக்ர பக்தி யோகாய –பரி பூர்ணமாயும் இருக்கிற பக்தி யோகத்தை உடையவராய்
யமிநாம் வராய–யோகிகளின் சிறந்தவரான
நாத முநயே -பூயோ நமோ—நாத முனிகளுக்கு மறுபடியும் நமஸ்காரம்

த்ருஷார்த்தனுக்குத் தண்ணீர் குடிக்கப் பர்யாப்தி பிறவாதாப் போலே
பின்னையும் அவர்க்கு அடியேன் -என்கிறார்
ஆஸ்ரிதரை ஒரு காலும் நழுவ விடாத அச்யுத விஷயத்திலே
ஜ்ஞான பக்த்யாதிகள் ஆகையாலே
தம்மளவில் பர்யவசியாதே
பகவத் விஷயத்துக்கு அபூமியான சம்சாரம் எங்கும்
வெள்ளம் இடும்படியான இவர் உடைய
ஜ்ஞான பக்திகள் உடைய
பிரக்ருஷ்டதையைச் சொல்லுகிறது –
ஸ்ரீ ஸூக்திகளை பக்தி பரிவாஹம் என்றது –சொல்லாவிடில் சரீரம் தரிக்க முடியாது -பக்தி பலாத்காரத்தாலே அவதரித்த சொற்கள்
அம்ருத பரிவாஹம் -பிரசன்னமாயும் மதுரமாயும் சீதளமாயும்
ஸ்ரீ நியாய தத்வம் போன்ற இப்பொழுது லுப்தமான கிரந்தங்களும்-நித்ய காலக்ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் -இவையே பின்பு ஏடு படுத்தப் பட்டு நம்மளவும் வந்தனவே
யோகம் -குருகைக் காவல் அப்பன் அளவு மட்டுமே –
பக்தி -நெஞ்சு கனிந்து ப்ரீதி ரூபமான த்யானம் -பரமார்த்த சமக்ர -இரண்டு விசேஷங்கள் -ஸ்வயம் பிரயோஜனம் -என்றும் அவனை பிராபிக்க பர்யாபதமான உபகரணம் என்றது ஆயிற்று –
அவதீர்ண –
ஈச்வராவதாரம் போலே இறே
ஸ்வயம் பிரயோஜனமான பக்த்யவதாரம் –
பரமார்த்த –
பரம பிரயோஜன ரூபமாய் இருக்கை –
சமக்ர –
அதனில் பெரிய அவா -என்னும்படி குறைவற்று இருக்கை –

——————–

தத்த்வேன யஸ் சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வபாவ
போக அபவர்க்க தத் உபாய கதீ உதார
ஸ்ந்தர்ஸ்யன் நிரமிமீத புராண ரத்னம்
தஸ்மை நமோ முநிவராய பராசராய –4-

உதார-உதார ஸ்வ பாவமுடைய –
சம்சாரிகள் பக்கல் அர்தித்வம் ஆதல் -பிரயோஜனம் ஆதல் -நினையாதே
இவர்கள் அனர்த்த பரிஹாரமே பிரயோஜனமாக உபகரித்து அல்லது நிற்க மாட்டாத மேகம் போலே உபகரித்தவர் –
ய பராசராய –யாவர் ஒரு பராசரர்
சித் அசித் ஈஸ்வர-தத்வ த்ரயம் என்ன
ஸ்வபாவ-அவற்றின் தன்மை என்ன
போக –விஷய அனுபவம் என்ன -நல்ல விஷயங்களின் ஏற்றம் உணர ஹேய விஷயங்களின் கெடுதல்களை அறிய வேண்டுமே -எனவே ஐஸ்வர்யங்களையும் பற்றியும் ஸ்ரீ விஷ்ணுபுராணம் கூறும்
ப்ரஹ்மாதி பிபீலி காந்தமான பத்த சேதன வர்க்கத்துக்குக்
கர்ம அனுகுணமாக தாரதம்யேன அனுபாவ்யமான சப்தாதிகள் –
அபவர்க்க தத் உபாய -மோக்ஷம் என்ன -மோக்ஷ உபாயங்கள் என்ன –
சப்தாதிகள் உடைய அல்ப அஸ்திரத்வாதி தோஷ தர்சனத்தாலே பீதரான சேதனருக்கு
துக்க நிவ்ருத்தி ரூபமானஆத்மபிராப்தியும் -ஸூகைகதமான பகவத் பிராப்தியும்
கதீ -இவ் வாதமா போகக் கூடிய வழிகள் என்ன -இவற்றை
தத்வேண -உள்ளபடியே
ஸ்ந்தர்ஸ்யன் -விளக்கா நின்று கொண்டு
நிரமிமீத புராண ரத்னம்–ஸ்ரீ விஷ்ணு புராணத்தை அருளிச் செய்தாரோ
ரத்னத்ரயம் -மந்த்ர ரத்னம் -த்வயம் -ஸ்தோத்ர ரத்னம் -புராண ரத்னம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ரத்னம் –
அர்த்த பிரகாசகமாய் இருக்கையும் –
சங்க்ரஹமாய் இருக்கையும் –
ஆபத் ரஷகமாய் இருக்கையும் –
இந்தப் புராணாதிகாரிக்கு லோக பரிக்ரஹம் சித்திக்கையும் –
தஸ்மை -அப்படிப்பட்ட
நமோ பராசராய முநிவராய -பராசர மகரிஷிக்கு நமஸ்காரம்
பராசராய —
பரராகிரார் -பாஹ்ய குத்ருஷ்டிகள்
அவரை பிரமாண சரங்களாலே ஹிம்சித்து
வைதிக மரியாதையை ஸ்தாபித்தான் -என்னுதல் –
இந்திரிய ஜயத்தாலே ரஜஸ் தமஸ் ஸூக்களை ஜெயித்தான் -என்னுதல்


மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மத் அநவ்யாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபி ராமம்
ஸ்ரீ மத ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –5-

மத் அநவ்யாநாம்–என்னைச் சேர்ந்தவர்களுக்கு
இத்தால் தமது திரு முடி சம்பந்தத்தால் பூர்வர்களுக்கும் திருவடி சம்பந்தத்தால் அஸ்மதாதிகள் பர்யந்தமாக சொன்னவாறு
நியமேன-எப்பொழுதும்
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி
சர்வம் –தாய் தந்தை மக்கள் செல்வம் மற்றும் உள்ள எல்லாம்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாய்த் தாய் தந்தையும் அவரே இனி யாவரே -5-1-8-என்று ஆழ்வாருக்கு அவன் திருவடிகள் போலே
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆழ்வார் திருவடிகளே சர்வமும் -என்ற திட அத்யவசாயம் அருளிச் செய்கிறார்
விப்ரர்க்கு கோத்ர-சரண -ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசார்ய போதாய நாதிகள்
–பிரபன்ன ஜன கூடஸ்தர் -பராங்குச பரகால யதிவராதிகள்-
யதேவ –யாதோ ஒரு ஆழ்வார் திருவடியேயோ
ந ஆத்யஸ்ய குலபதேர் –நமக்கு குலகூடஸ்தராகிய ஆழ்வாருடைய
நம்முடைய குலத்தலைவர் -என்று திரு நாமம் சாத்தி அருளுகிறார்
வகுளாபி ராமம்–மகிழ மலர்களினால் அழகாயும்-மகிழ் மாலை மார்பினன் -வகுளா பரணர் –
ஸ்ரீ மத -நித்ய உஜ்வலமாயும் இருக்கிற
ததங்க்ரி யுகளம் –அந்தத் திருவடி இணையை
அன்றிக்கே
ந ஆத்யஸ்ய குலபதேர்–லஷ்மீ நாத சமாரம்பாம் –வந்தே குரு பரம்பராம் –என்பதால் பெரிய பெருமாளைச் சொல்லி
ததங்க்ரி யுகளம்-நம்மாழ்வாரைஸ்ரீ சடகோபன் -அன்றோ -சொல்லிற்று என்றுமாம்
முந்திய அர்த்தமே -ந ஆத்யஸ்ய குலபதேர்-நம்மாழ்வாரை சொல்லுகிறது என்பதே பூர்வார்கள் நிர்வாகம் -மிகவும் பொருந்தும் -இதுவே கொள்ளத் தக்கது
ப்ரணமாமி மூர்த்நா –தலையால் வணங்குகிறேன்
பெரிய முதலியாரையும்
ஸ்ரீ பராசர பகவானையும் போலே
ஸ்ரீ கிருஷ்ண குணவித்தராய் இருக்கும் படியையும் நினைத்து
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே சரணம் புகுகிறார் –

 


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

————-

ஸ்ரீ ராம -இடையனின் லீலைகள் –/ ஸ்ரீ பாஞ்ச ஜன்ய மஹிமை-/சங்க தமிழ் நூல்களிலும் திருக்குறளிலும் ஸ்ரீ வைஷ்ணவம்–

November 20, 2019

பிதா மஹஸ்யாபி பிதா மஹாய ப்ராசேத சா தேச பல ப்ரதாய
ஸ்ரீ பாஷ்யகார உத்தம தேசிகாய ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்தே

வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும-தலே ஹைமே மஹா மண்டபே
மத்யே புஷ்பகம் ஆசனே மணி மயே வீர ஆசனே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சஜந ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருத்தம் ராமம் பஜே ஸ்யாமளம்

ஸ்ரீ ராம அவதாரம் இடையன் அவதாரம்

நடையின் நின்று உயர் நாயகன் தோற்றத்தின் இடை நிகழ்ந்த
இராமாவதாரப் பேர்த் தொடை நிகழ்ந்த தோர் அரு மா கதை -கம்பர்
இடை நிகழ்ந்த இராமாவதாரம்–என்றது பலராம பரசுராம அவதாரங்களின் இடையில் என்றவாறு –

கரி வர –கஜேந்திர வரதனே பெருமாள் ராமன் என்று பெயர் இட்டான் வால்மீகி
சாந்தா -தசரதர் பெண் -தத்து கொடுத்தார் ரோஷபாதருக்கு -ரிஷ்ய சிங்கர் மணம்-
இரு கை வேழத்து ராகவன் தன் கதை –குருகை நாதன் -கம்பர்

கரிய செம்மெல் ஒருவனை தந்திடு
அல் ஓக்க நிறத்தினாள்-தாடகை -இவனோ கரிய செம்மல்- -வைரக்குன்று நெஞ்சில் தங்காது –
சொல்லில் ஆரம்பித்து பொருளில் முடிந்த பாடல்

துயர் வண்ணம் -கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன் -அகல்யைக்கு சாப விமோசனம்
அணைக்கும் கையால் தாடகை வதம் -உதைக்கும் காலால் இவளது சாப விமோசனம்

முக்கால் பங்கு காணாமல் விசுவாமித்திரர் புலம்பல் இது
அண்ணலும் நோக்கி அவளும் நோக்கி -கண்ணுங் கண்ணும் பார்த்தால் ஜாதகம் பார்க்க வேண்டாம்
இரண்டு உம்மைத் தொகை -சம்பவம் இல்லை விபத்து
தோள் கண்டார் தோளே கண்டார் –இத்யாதி
எள்ளு போட இடம் இல்லை என்று சொல்லாமல் உளுந்து போட இடம் இல்லை என்பர் கம்பர்
நம்பியை காண ஆயிரம் கண் கொம்பினைக் காணும் தோறும் -க்ஷணம் தோறும் நவ நவ ஆயிரம் கண்கள்

ஆயிரம் ராமர் ஒப்பார் அல்லர்
சுற்றத்தார் தேவரோடும் தொழ நின்ற கௌசல்யை -எண்ணத்தால் உயர்ந்தவர்களை முதலில் சொல்லி
மூ உலகையும் ஈன்றவனை முன் ஈன்றானை பெற்றதால் பெரும் செல்வம் -செல்வம் –
ராமனை பெற்று செல்வம் -பெரும் செல்வம் -பிராட்டி விழுந்து ஸேவிப்பதால்

தர்மம் ஸ்தாபனம் பண்ண ஸ்ரீ ராமர் –ராமம் தர்மம் சனாதனம் -தர்மம் படி நடந்து காட்டி அருளியவர்
தான் செய்தவது எல்லாம் தர்மம் -சர்வ தரமான பரித்யஜ்ய -என்னையே பற்று
தர்மம் சமஸ்தாபனம் பண்ண ஸ்ரீ கிருஷ்ணன்
ராமன் மனுஷ்யனா தெய்வமா -நித்ய சந்தேகமாக பற்றி மந்திரத்தை தலைப்பு உண்டு -கிருஷ்ணனுக்கு அப்படி இல்லையே

அயோத்யா -நைமிசாரண்யம் -யாக சாலை யஜ்ஞ குண்டம் -அஸ்வமேத யாகம் பண்ணிய இடம் –
லவ குசர்கள் -கேள்விச் செல்வம் -நடக்கப்போவதையும் சொல்லி ராமனுக்கு கேட்டு அருளினார்
இங்கு தானே மஹா பாராதம் புராணங்கள் கேட்டு உஜ்ஜீவித்தார்கள்
த்ரேதா யுகத்திலும் பிரசித்தமான திவ்ய தேசம்
ரோமஹர்ஷரின் -வியாசர் சிஷ்யர் -மஹாபாரதம் மானா பத்ரிக்கு மேல் எழுதி இங்கு பிரசாரம்
பலராமன் வர -கண்டு கொள்ளாமல் சொல்லிக் கொண்டே இருக்க -கோபித்து -தர்ப்பத்தால் தலையை
மகன் உக்ர ஸ்ரவஸ்- ஸூதர் புராணம் உபதேசிப்பார் -பாகவத சப்தாகம் ஏழு நாள்களுக்கு எங்கும் நடந்து கொண்டே இருக்கும்
கோமதி நதி -சக்ரதீர்த்தம் -தேவநாதன் சேவை ஹரி லஷ்மீ தாயார் -புண்டரீகவல்லி தாயார் –
கேள்வி சத்சங்கம் பிரசித்தம் இங்கு –
சக்கரத்தாழ்வாரால் ஏற்பட்ட சூர்ய கிரஹணம் குரு ஷேத்ரத்தில் -அன்று தீர்த்தம் ஆட சக்ர தீர்த்தம் –
வியாசர் சந்நிதி -வியாசர் கதி-பீடம் -எல்லா ஓலைச் சுவடிகள் -வேதங்கள் -புராணங்கள் –
சரணா கயா -கயா க்ஷேத்ரம் -திருவடி -கயாசுரன் திருவடி பகுதி
தலை -ஸீரோ கயா பத்ரி –
நாபி நைமிசாரண்யம் நாபி கயா –மூன்றும் உண்டே –
ராம சரித மானச -துளசி
அஹி மஹி ராவணன் -விபீஷணன் போலே வேஷம் போட்டு ராம லஷ்மணர்களை சிறையில் வைக்க -மீட்ட திருவடி சேவை
வேகவதியை தான் ராவணன் சிறையில் என்பார் துளசிதாசர் -ராவணனை வென்று பின்பு சீதாபிராட்டி கூட்டிச் சென்றார் பெருமாள் என்பார்
வ்ருஷ தானம் -நைமிசாரண்யம் பிரசித்தம்
தில தானம் -ராமேஸ்வரம் -திருப்புல்லாணி -பிரசித்தம்
கோ தானம் அயோத்தியை
சன்னிதானம் விளக்கு ஏற்றி வைப்பது புண்ணியம் -லலிதா சரித்திர வ்ருத்தாந்தம் ஸ்ரீ வசன பூஷணத்தில் உண்டே

பரித்ராணாம் -4-8-ஸ்ரீ கீதா ஸ்லோகம் -கம்பர்
அறம் தலை நிறுத்தி வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித்
திறம் தெரிந்து உலகம் பூணச் செந்நெறி செலுத்தித் தீயோர் இறந்துக
நூறித் தக்கோர் இடர் துடைத்து ஏக ஈண்டுப் பிறந்தனன் தன்
பொற்பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் –பிணி வீட்டுப் படலம் -81-

மனிசர்க்காக நாட்டில் பிறந்து படாதன பட்டானே –
விபவ அவதாரத்தில் -14-ஆண்டுகள் காட்டுக்கு போனான்
அர்ச்சா திருமேனி பெரிய பெருமாள் -48-வருஷம் ஸ்ரீ ரெங்கம் விட்டு பல இடங்களுக்கும் போனான்
1323–1371-நம் பெருமாள் ஸ்ரீ ரெங்கம் விட்டு -சூரியோதயம் முன்னால் -அருணோயுதம் போலே –1370-மா முனிகள் அவதாரம்
அர்ச்சா திருமேனியாக பெருமாளும் பல நூறு ஆண்டுகள் போய் இருந்து
மீண்டும் நாம் உஜ்ஜீவிக்க ஸ்ரீ அயோத்யைக்கு எழுந்து அருளப் போகின்றான்

ஸ்ரீ ராமனைப் போலவே ஸ்ரீ ராம பிரியனும் பல இடங்களிலும் -ஸத்ய லோக -ரம்யாதீ ராம பிரியன் –
ஸ்ரீ அயோத்தியை–தசரத ராம பிரியன் -யாதவ ராஜர் -பலராம பிரியன் –
சனத் குமாரன் பிரதிஷ்டை திரு நாராயண பெருமாள் நாராயணாத்ரி — யாதவாத்ரி -யது சைலம் –யதிராஜ சம்பத் குமாரர்

வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும-தலே ஹைமே மஹா மண்டபே
மத்யே புஷ்பகம் ஆசனே மணி மயே வீர ஆசனே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சஜந ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருத்தம் ராமம் பஜே ஸ்யாமளம்

பரதாழ்வாதிகள் இருக்க -அக்ரே -வாச்யதி பிரபஞ்சஜந ஸூதே -வாயு குமாரன் வாசிக்க -தத்வம் வியாக்யானம்
ஸ்ரீ ராமரே பண்ண -முனிப்ய -முனிவர்களுக்கு வழங்கினான் அந்த ஸ்ரீ -ராமம் பஜே ஸ்யாமளம் –
மிதுனத்தில் கேட்டு வியாக்யானம் —
முதலில் கேட்ட போது குசலவர்கள் சொல்ல தனிக் கேள்வி

படி கொண்ட கீர்த்தி பக்தி என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் ராமானுஜன் —
ஸ்ரீ சைல பூர்ணர் இடம் இந்த வியாக்கியானங்கள் ஒரு சம்வத்சரம் கேட்டு அருளி
பிதா மஹஸ்யாபி பிதா மஹாய ப்ராசேத சா தேச பல ப்ரதாய
ஸ்ரீ பாஷ்யகார உத்தம தேசிகாய ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்தே
ப்ராசேத சா தேச பல ப்ரதாய -ஸ்ரீ வால்மீகி ஸ்ரீ இராமாயண தத்வார்த்தங்களை -பல ப்ரதாய வழங்கினார்
இதுவே நமக்கு ஈட்டில் ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்ய ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை ஏடு படுத்தி அருளினார்
ஸ்ரீ எம்பெருமானாருக்கு -63-திரு நக்ஷத்ரம் ஸ்ரீ ராமாயணம் கேட்டு அருளியது –1953-அனந்தாழ்வான் அவதாரம் -20-வயசில் ஆஸ்ரயம்
ஸ்ரீ லஷ்மீ குமார தாதாச்சார்யர் -திருமலை நம்பி வம்சம்
ஸ்ரீ லஷ்மீ தாதாச்சார்யர் -ஸ்ரீ அனந்தாழ்வான் வம்சம்
இருவரும் சம்பந்திகள் –
சம்பிரதாயத்துக்கு இரண்டு அரண்கள் -ஸ்ரீ ராமாயணமும் -ஸ்ரீ திருவாய் மொழியும் —
படி கொண்ட –ஸ்ரீ திருவாய் மொழிக்கு பிரதி தானே ஸ்ரீ ராமாயணத்துக்கு
ஒரு வண்ணம் சென்று புக்கு –நாரையை -திரு வண் வண்டூர் –பொழில் சூழ் -ஏதோ ஒரு வகையாக –
சிந்து தேசம் அதிபதி -ஜயத்ரதன் -சகுனி -காந்தார தேசம் -afkanisthaan-சிசுபாலன் -pakisthaan-
கேகேய தேசம் -அயோத்யையில் இருந்து -7-நாள் பயணம் -kazakisthaan -வழி வர்ணனை நன்றாக ஸ்ரீ வால்மீகி ராமாயணம் –
சோலை வாய்ப்பு -ஈஷமானா-ஸ்லோகம் -பார்த்து போனார்கள் -பாராதே போனார்கள் -நம்பிள்ளை வியாக்யானம் –
சந்நிதியில் சக்கரவர்த்தி திரு மகன் -திருமலையில் -புனர்வசு தோறும் புறப்பாடு
பெரிய ஜீயர் மடத்திலும்-சக்கரவர்த்தி திரு மகன் -திருவடி முத்திரை உண்டே –
தனி ஸ்லோகி வியாக்யானம் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை இந்த தத்வார்த்தங்களையே அருளிச் செய்கிறார் —

விநாசாய துஷ்க்ருதாம் -ராவணஸ்ய வதானாம்- ஒரே நோக்கம் -அவதார தத்வம் –
மூன்றும் ஒன்றுக்கு ஓன்று உள்ளே அடங்கும்
சாது பரித்ராணம் -தர்ம ஸம்ஸ்தாபனம்
அந்தர் அதிகாரணம் -சாதுக்கள் ரக்ஷணமே முக்கியம் -சாதுக்களையும் விவரிக்கிறார் -ஸ்ரீ ராமானுஜர் -மற்றவை ஆனு ஷங்கிகம்
ஆழி விடுத்து அசுரர்கள் கரு அழிக்க வல்லவன் -கருதும் இடம் பொருது-கை சக்கரத்தன் அன்றோ
சங்கல்பத்தாலே அனைத்தும் செய்ய வல்லவன் -தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்ற வேண்டுமே –
வராமல் இருந்தால் – உன் சுடர் ஜோதி மறையாதே -சிற்றாண்டான் வார்த்தை -மறையும் மறையும் -என்றாரே
ஆ காத்த -அவ ரக்ஷணம் -ஆதி முதல்வனே –
முதலை -என்றதே முதல்வனாகக் கொண்டானே
அரை குலைய தலை குலைய -உத்தரீயம் குடுமி குலைய –
க ஜம் என்று குதிக்க -தவரைக்கு நமஸ்காரம்

https://live.staticflickr.com/4251/35324473296_6239978d1f_b.jpg

Notice the difference between the style of architecture.
The original idols have non-dravidian style of carving while the new idols are carved in a typical Dravidian style.

These are the original idols of Shri Rama, Lakshmana and Sita which were removed
sent to a safe place before the Ram Mandir was desecrated byGB bbn Babur.
When Babur marched into Ayodhya, the caretaker of the temple Pandit Shyamanand Maharaj fled Ayodhya
along with the idols handed them over to Swami Eknath Maharaj of Paithan.
Later these idols were handed over to the Guru of Chhatrapati Shivaji Maharaj, Swami Samarth Ramdas.
When Swami Samarth was on a tour of South India, he placed those idols on the banks of the holy sangam of rivers
Tunga & Bhadra forming Tungabhadra in a small town called Harihar, Karnataka.
The idols have been worshipped since then by the Gurus of Narayan Ashram in Harihar.
There was a huge celebration in Harihar after the Ayodhya verdict.
The people of Harihar and the Narayan Ashram are now preparing to return back the idols to Shri Rama’s Birth place, Ayodhya.

As you can see above, the original idols are kept in a secluded room in the temple.
Recently new idols were installed in the open court of the temple for public.

அயோத்யா 7500–ஸ்லோகங்கள் -ஒரு வார நிகழ்வுகள்
பால காண்டம் 2500–ஸ்லோகங்கள் -24-வருஷ நிகழ்வுகள்

1321-முகமது பின் துக்ளக் -1323-கமான் இரா அட சொல்லுவதற்கு பதில்
கொள்ளிடம் சிவப்பானது -10000-ஸ்ரீ வைஷ்ணவர் சிறைச்சேதம்
மதுரை வந்து -மீனாட்சி அம்மான் நாயக்கர் காலம் அப்புறம்
அம்பாலா பூலா குருவாயூர் அப்புறம் —
கோவிந்தபுரம் கோழிக்கோடு அருகில் -ஆழ்வார் -கருடன் சுற்றி -இருக்கும் இடம் காட்டி
பெருமாளே தேடி கோழிக்கோடு வந்தார் -குலசேகர பக்தி தனி
குக்குட நாடு -கோழிக்கோடு -கோழி- உறையூர் என்றுமாம்

———–

ஸ்ரீ பாஞ்ச ஜன்ய மஹிமை-

யுகங்கள் தோறும் பாஞ்ச ஜன்ய மஹிமை க்ருத யுகத்தில் -துருவன்–
த்ரேதா யுகத்தில் பரதன் – -இவனை விட்டு ஸ்நானம் செய்ய மாட்டேன் என்றானே
த்வாபர யுகத்தில் -கீதாச்சார்யர் -ஆழி கொண்டு மறைத்து -லீலைகள்
கலியுகத்தில் பொய்கையாழ்வார் பாஞ்ச ஜன்ய அம்சம் –
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் திருவவதரிக்க பொற்கால் இட்ட படி

வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன்
உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன்
வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் – 4-1-7- –

வெள்ளை விளி சங்கு –
ஸ்யாமளமான திரு மேனிக்கு பரபாகமான வெண்மையை உடைத்தாய்
அனுபவ கைங்கர்யங்களில் ருசி உடையார் வாரும் கோள் என்று தன்  த்வநியாலே அழையா நிற்கும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்

வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதவாடை யுடையானை
அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே
களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே —14-8-

வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதவாடை யுடையானை
கடல் போலே ச்யாமமான திரு மேனிக்கு பரபாகமான வெண்மையை உடையதாய்
ஒப்பு இன்றிக்கே இருக்கிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையனாய் இருக்கிறவன் –

திருச் சங்கு ஏந்தி சேவை சாதிக்கும் ஸ்ரீ பார்த்த சாரதிக்காகவே ஸ்ரீ ஆண்டாள் –
மார்கழி ஆடி மாஸங்கள் இரண்டிலும் சேர்த்தி சேவை உண்டே

ஸ்ரீ ராமன் – ஸ்ரீ கண்ணனை பற்றி இருந்தவை எல்லாம் இழந்தேன் –
தாய் பாலும் கூட கிடைக்காமல் அன்றோ சம்சாரம் தீரும்

——–

சங்க தமிழ் நூல்களில் ஸ்ரீ வைஷ்ணவம்

அந்தணர் என்பர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலால் –திருக்குறள்
அம் தண்மை -மற்றவருக்கும் காருணிகத்தவம்

பார்த்தான் பிறப்பு -வேதம் பார்த்தவன் -ஒழுக்கம் குன்றக் கெடும்

ஆயிரம் விரித்த அணங்குடை –தீ உமிழ் -மா உடை மலர் மார்பின் –சேஷனின் சர்வவித கைங்கர்யம் –பரிபாடல்
வேதார்த்தம் -சங்க பாடல் -5000–ஆழ்வார் பாடல்
எரி மலர் சினவிய கண்ணன் புண்டரீகாக்ஷன் -பூவை –மேனியன் -அமர்ந்த மார்பனை ஸ்ரீயப்பதித்வம் —
நா வல் அந்தணர் அரு மறைப் பொருள்
பூணினை -குறு மா மணி பூ – மால்வரை எதிர் பொன் புனை உடுக்கை -பீதாம்பரம் –
சேவலை கொடியாக உடையவன் -ஆண் கருடனுக்கு சேவல் என்கிறது

தொல் முறை —ஆகாசம் –ஆதி வராஹம் கோலமொடு -ஆழி முதல்வ -காரணத்வம்-வாதாரங்கள் எல்லாம் – சொல்லும் பரிபாடல்
மா அயோயே மூன்று தடவை -மாயோனே என்பதுக்கு பழைய சொல் –
மாயாந்து பிரகிருதி -மறு பிறப்பு அறுத்து மாசில் சேவடி
தீ வளி -திதியின் சிறாரும்–மாசில் –மூ ஏழ் உலகமும்–மாயோய் நின் மூலம் பரந்தது -எல்லாம் புராணம் படி
தீயினுள் திறல் நீ பூவினுள் நாற்றம் நீ -கல்லினுள் மணி நீ -சொல்லினுள் வாய்மை நீ –அறத்தினில் அன்பு நீ –
வேதத்தின் மறை நீ மறைந்து உள்ளும் உட்ப்பொருள் நீ –வெண் சுடர் ஒளியும் நீ அனைத்தும் நீ –
அனைத்து உட்ப்பொருளும் நீ –கீதை வாக்கியம் போலே –நீராய் இத்யாதி ஆழ்வார் –
பிறப்பித்தோர் இல்லையே என்கிறது -இன்னும் ஒரு பாடல்
செங்கட்காரி-சிவந்த கண் -கரும் கண் வெள்ளை -க்ருத யுக நிறம் -சங்கர்ஷணன் -வ்யூஹ -இவற்றையும் சொல்லும்

ப்ரத்யும்னன் -தமிழ் பச்சை –பொன்மயம் சிகப்பு —
இட வல -இட வலவ-இடமும் வலமும் கண்ணன் கோபிக்களுக்கு -ராசா க்ரீடையும் உண்டே
குட வலவ-கோவல -காவல -ஜகத் ரக்ஷகன் -காணா மரபு-யாரும் காண முடியாதே –
மாயா மன்னா -மற்ற அரசர்கள் அநித்தியம் –
தொல் இயல் புலவ வேதங்களால் -மாலை செல்வா -வைஜயந்தி மாலை தரித்து -திருவின் கணவ-

கெடு இல் கேள்வி –கேள்வி ஞானத்தால் வந்த சுருதி -நாம வாய் மொழி –
ஏவில் இல் முது மொழி -வேதம் -அபவ்ருஷேயம்–
நலம் புரி -அம் சீர் -அழகிய சீர் -ஆயிரம் தாயைப் போலே அ ன்பு சங்க பாடலும் சொல்லுமே

விஷ்ணு ஜகத் உதய ரக்ஷய பிரளயதி -பட்டர் –
அலகிலா விளையாட்டுடையவர் -கம்பர்
அந்தமில் ஆதி யம் பகவன் -1-5—
அகர முதல் -எழுத்துக்கு எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு –வள்ளுவர்
ஆன்மா உயிர் எழுத்து -மெய் எழுத்து உடம்பு ஆயுத எழுத்து சேர்த்து –247-
அருள் இல்லாதாருக்கு அவ்வுலகு இல்லை பொருள் இல்லாதாருக்கு இவ்வுலகு இல்லை —-247-பாசுரம்
ஞானம் பலம் -பகாரம் ஐஸ்வர்ய வீர்ய ககாரம் -சக்தி தேஜஸ் -வகாரம்
தனம் உள்ளவன் தனவான்
இவை இருப்பவன் பகவான் –
அடி அளந்தான் தாளில் ஒதுங்கு பாசுரம் –610–உலகு அளந்தான் மாயவனுக்கு
திரு உடை மன்னரைக் கண்டால் திருமாலைக் கண்டேனே என்னும் -ஆழ்வார்

பரி மேல் அழகர் -உலகு அளந்த பெருமாள் கோயில் கைங்கர்யம் -11-13 நூற்றாண்டு –
வேதாந்த தேசிகர் காலம் என்பர்
தாமரைக் கண்ணான் உலகு கூட வேண்டாம் -காமத்துப்பால் —1103 பாசுரம்-
வலைய த்ரயம்-தேசிகன் பெரிய பிராட்டியார் -அன்யோன்யம் –
அறம் பொருள் இன்பம் வீடு -நான்கு புருஷார்த்தங்களையும் சொல்லும் -திருக்குறள் —
சனாதன தர்மம் விடாமல் அருளப்பெற்றது
படைத்தான் படைப்பு -இரண்டும் ஒன்றே போலே மதிக்கிறோம்
இதனாலே தான் நாம் தமிழை -தாய் மொழி -என்கிறோம் –இயற்கையே தெய்வம் –
ப்ரஹ்மாத்மகம் அனைத்தும் –அகர முதல எழுத்து –ஆரம்பம் –
எங்கும் புகுந்து -நியமித்து -பிரவ்ருத்தி நிவ்ருத்தி அனைத்தும் ப்ரஹ்மாதீனம்

திருக்குறளில் இறை உடைமை -அதிகாரம் அரசர்களை பற்றிச் சொல்வதால் – –
திரு உடை மன்னரை காணில் திருமாலைக் கண்டேனே -பாசுரத்தை எடுத்துக் காட்டி
பரிமேல் அழகர் -பெரியவரான நம்மாழ்வார் அருளிச் செய்துள்ளார் என்று காட்டி அருளுகிறார்

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிறவி நீந்தல் அரிது
மலர்மிசை ஏகினான் மாலடி சேர்ந்தர் நிலமிசை நீடுவாழ்வார்
பிறவிப் பெரும் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார் -சரணாகதியையும் இதில் உண்டே-

———–

நீர் -கீழே ஓடும் -இட்ட நிறம் –கொள்ளூம் பாத்திரம் -ஆர்ஜவம் -மந்த்ரம் ஏற்கும் -திவ்ய மங்கள விக்ரஹம் ஆக்கும்
உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உகப்பார்கள் அயோத்யா மக்கள்
தாயைப் போலே பிள்ளை நூலைப் போலே சேலை -கைகேயி அப்பா அம்மா –
எறும்பு பேசு அறிந்தவர் சொன்னால் மரணம் -ஆகிலும் குடிக்க ஆசைப்பட்டு -அவள் குணமே இவளுக்கு

மன்னவன் பணி அன்றாகிலும் நும் பணி மறுப்பனோ
தில்லை வளாகம் -வடுவூர் -புன்னை நல்லூர் ராமர்
வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி ஜோதியில் மறைய
பொய்யோ எனும் இடையாள் இலையால் உடன் போனான்
மையோ மறி கடலோ மரகதமோ மழை முகிலோ ஐயோ –பெருமாள் அழகு
குகன் முதல் நாள் கொடுத்தவற்றை கொள்ளாமல் அடுத்த நாள் ஏற்

காகாவின் ராமாயணம் Indonasiyaavil கம்ப ராமாயணத்துக்கு முன்னே
துளஸீ தாஸ் ராமாயணம் -600-வருஷங்களுக்கு முன்
பாணு பக்தாச்சார்ய ராமாயணம் -300-வருஷங்களுக்கு முன்

ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் -கம்பர் சமகாலம்

——————–

சங்கு சக்கரச் சாமி வந்து சிங்கு சிங்கு என ஆடுமாம் -அது சிங்கு சிங்கு என ஆடுமாம்
உலகம் மூன்றும் அளக்குமாம் -அது ஓங்கி வானம் பிளக்குமாம் –
கல கல எனச் சிரிக்குமாம்-அது காண காண இனிக்குமாம்
கொட்டு கொட்டச் சொல்லுமாம் -அது கூத்தும் ஆடப் பண்ணுமாம்
எட்டு எழுத்துச் சொன்ன பேர்க்கு எந்த வரமும் அளிக்குமாம்
யாரும் காண அரியதாம்-அது யாரும் காண எளியதாம்
பேரும் ஊரும் உள்ளதாம் அது பெரிய பெருமை கொண்டதாம்
ஆதி மூலம் என்று சொன்ன யானை முன்பு வந்ததாம்
ஜோதி ரூபம் ஆனதாம் -அது தூய வீடு தருவதாம்–சங்கு சக்கரச் சாமி வந்து சிங்கு சிங்கு என ஆடுமாம்-

அனைத்தும் அவன் லீலைகளே

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்–8-பகவான் செய்து அருளும் செயல்களின் பிரயோஜனம் சொல்லும் திரு நாமங்கள் -946-982-/ 9-ஸ்ரீ தேவகீ நந்தன் 983-/ 10-திவ்ய ஆயுதமே திவ்ய ஆபரணம் -கண்ணுள் நின்று அகலாத திரு உருவம் –993-1000–பல ஸ்ருதி–

November 20, 2019

அநாதிர் பூர்ப்புவோ லஷ்மீஸ் ஸூவீரோ ருசிராங்கத
ஜநாநோ ஜனஜன்மாதிர் பீமோ பீமபராக்ரம–101-

ஆதார நிலயோ தாதா புஷ்பஹாச ப்ரஜாகர
ஊர்தவகஸ் சத்பதாசார பிராணத பிரணவ பண –102-

பிரமாணம் பிராண நிலய பிராண த்ருத் பிராண ஜீவன
தத்வம் தத்வ விதேகாத்மா ஜன்ம ம்ருத்யுஜ ராதிகா —103-

பூர்ப்புவஸ் ஸ்வஸ் தருஸ் தாரஸ் சவிதா ப்ரபிதாமஹ
யஜ்ஞோ யஜ்ஞபதிர் யஜ்வா யஜ்ஞாங்கோ யஜ்ஞவாஹன–104-

யஜ்ஞப்ருத் யஜ்ஞக்ருத் யஜ்ஞீ யஜ்ஞபுக் யஜ்ஞசாதன
யஜ்ஞாந்தக்ருத் யஜ்ஞகுஹ்யம் அன்ன மன்னாத ஏவ ச –106-

ஆத்மயோ நிஸ் ஸ்வ யஜ்ஞாதோ வைகாநஸ் சாமகாயன
தேவகீ நந்தஸ் ஸ்ரஷ்டா ஷிதீச பாப நாசன –107

சங்கப்ருத் நந்தகீ சக்ரீ சார்ங்க தன்வா கதாதர
ரதாங்கபாணி ரஷோப்யஸ் சர்வ ப்ரஹரணாயுத –108-

ஸ்ரீ சர்வ ப்ரஹரணாயுத ஓம் நம இதி

———————————————————————————

6-முக்தனுக்கு மோஷானந்தம் தரும் ஸ்ரீ வைகுண்ட நாதன் பரமான திரு நாமங்கள் -892-911-
7-கஜேந்திர மோஷ பரமான திவ்ய நாமங்கள் -912-945-
8-ஸ்ரீ பகவான் செய்து அருளும் செயல்களின் பிரயோஜனம் சொல்லும் திரு நாமங்கள் -946-982-
9-ஸ்ரீ தேவகீ நந்தன் –983-992
10-திவ்ய ஆயுதமே திவ்ய ஆபரணம் -கண்ணுள் நின்று அகலாத திரு உருவம் –993-1000

அஷ்ட சித்திகள் -838-870—33 திரு நாமங்கள்
மோஷ ப்ரதத்வம்-871-911—41 திரு நாமங்கள்
ஸ்ரீ கஜேந்திர வரதன் —-912-945—-34 திரு நாமங்கள்
ஜகத் வியாபாரம் ——–946-992—-47 திரு நாமங்கள்
திவ்யாயூத தாரீ —993-1000——-8- திரு நாமங்கள்

—————————————————————————-

8-பகவான் செய்து அருளும் செயல்களின் பிரயோஜனம் சொல்லும் திரு நாமங்கள் -946-982-

9=ஸ்ரீ தேவகீ நந்தன் –983-992

———-

அநாதிர் பூர்ப்புவோ லஷ்மீஸ் ஸூவீரோ ருசிராங்கத
ஜநாநோ ஜனஜன்மாதிர் பீமோ பீமபராக்ரம–101-

———

946-ஜனன-
பிறப்பிப்பவன்-சிருஷ்டி கர்த்தா –

அத₂ ஸர்வ ப₄க₃வத்₃ வ்யாபாராணாம் ப்ரயோஜநம் । தத்  அநுப₄வ க்ஷம கரண யுக்தாந்  அந்யாநபி
ஜநயதீதி
ஜநந꞉ ॥
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே -அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் -3-2-1-

தன்னை வணங்க வைத்த கரணங்கள் இவை உனக்கு அன்று -அமுதனார்

பக்தர் அல்லாதவர்களும் தம்மை அனுபவிப்பதற்கு உரிய உடல் இந்திரியங்கள் முதலியவற்றோடு பிறக்கும் படி செய்பவர் —
பிறகு அவனுடைய எல்லா செயல்களுக்கும் பலன் கூறப்படுகிறது ஸ்ரீ பராசர பட்டர் –

பிராணிகளைப் படைப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஜனங்களைப் பிறக்கச் செய்பவர் -நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

947-ஜன ஜந்மாதி –
பிறவிப் பயனாக இருப்பவன் -ஜனங்களுடைய ஜன்மத்துக்கு பயனாக ஆதியாக -நிமித்தம் -பிரயோஜனம்

தேஷாம் ஜநாநாம் ஜந்மந ஆதி₃ர் நிமித்தம் ப்ரயோஜநமிதி
ஜந ஜந்மாதி₃꞉ । யதா₂

அத்யமே சபலம் ஜென்மம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-3-
இப்போது தான் எனது ஜென்மம் பயன் அடைந்தது -கிருஷ்ணனைக் காணச் சென்ற அக்ரூர் வார்த்தை

ஜன்மன் யவிபலா ச ஏகா ய கோவிந்த ஆஸ்ரய க்ரியா
இந்தப் பிறவியில் பயனற்ற செயல் என்று கூறப்படாமல் உள்ளது எது என்றால்
அது கிருஷ்ணனுக்காகவே செய்யப்படும் செயல்களே ஆகும்

ஸூ ஜென்ம தேகம்  அத்யந்தம் ததேவ அஸேஷ ஜந்துஷு யதேவ புலகோத்பாசி விஷ்ணு நாமாநி கீர்த்திதே
இந்த உலகில் உள்ள அனைவரிலும் யார் ஒருவனுக்கு விஷ்ணுவின் திரு நாமத்தைக் கேட்ட உடனேயே
மயிர்க் கூச்சல் ஏற்படுகிறதோ அவனுடைய பிறவியே சிறந்ததாகும் –

அத்ய ஜன்ம யதார்த்த மே -இன்று எனது ஜென்மம் பயன் கொண்டதானது

அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின் மறந்திலேன் மாதவன் இருப்பதும் என் நெஞ்சுள்ளே -திருச்சந்த 94/95-

அப்படிப்பட்ட ஜனங்களின் பிறப்பிற்குத் தாமே பயனாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

ஜனங்களின் உற்பத்திக்குக் காரணமானவர் -ஸ்ரீ சங்கரர் –

ஜீவர்களின் பிறப்புகளை உண்டாக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

948-பீம –
பயங்கரன் -அசுரர்க்கு வெம் கூற்றம் -6-3-8-
ஷிபாமி -ந ஷமாமி -முன்பே 359 -பீம -பார்த்தோம்–837 பயக்ருத் பார்த்தோம்-

ஏவம் வித₄ மஹ அநுக்₃ரஹ விமுகா₂நாம்
பீ₄ம: –
கர்ப நரகாதி₃ஹேது꞉ । ஸ ஹ் அநாத்மநீநான்
ஹித பு₃த்₃த₄யா ஸத்ருவத்₃ பா₄வ யதே தாந் அஹம் த்விஷத–ஸ்ரீ கீதை -16-19-
என்னை வெறுப்பவர்களையும் த்வேஷிப்பவர்களையும் மீண்டும் ஸம்ஸாரத்தில் தள்ளுகிறேன்

தாநஹம் த்விஷத க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்–
க்ஷிபாம் யஜஸ்ரமஸுபா நாஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷

என்னை த்வேஷிப்பவர்களாய் -கொடியவர்களாய் -மனிதரில் கடையானவர்களாய் –
அமங்களமானவர்களான அவர்களை நான் இடைவிடாமல் பிறப்பு இறப்பு மூப்பு முதலானவை மாறி மாறி வரும்
பிறவிகளில் அதிலும் ஆஸூரப் பிறவிகளிலேயே தள்ளுகிறேன்

வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான்

தம்முடைய இந்த அனுக்ரஹத்தை விரும்பாதவர்களுக்கு கர்ப்ப வாஸம் நரகம் முதலிய துன்பங்களைக் கொடுத்து பயமுறுத்துபவர்
தமக்கு அடிமையாகி உய்யாதவர்களை ஹித புத்தியின் காரணமாக விரோதிகளாக நினைக்கின்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பயத்திற்குக் காரணமானவர் -ஸ்ரீ சங்கரர் –

பயங்கரமானவர் -பிராணனுக்கு ஆதாரமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

949-பீம பராக்கிரம
பயங்கரமான பராக்கிரமம் உடையவன்

அந்யேஷ்வபி ஜக₃த்  அஹித நிரதேஷு ஹிரண்யாதி₃ ஷு
பீ₄ம பராக்ரம꞉ ।
ப₄ மப்யநுக்₃ரஹ ஏவ,யதோத் மாதிநோ
நிகி₃லாதி₃ நிக்₃ரஹஸ் தஸ்ய தத்₃வாத்₄யாநாம் ச  அநுக்₃ரஹ꞉ ॥
காய்ச்சின வேந்தன் -9-2-6-
அசுரர்கட்கு இடர் செய் கடு வினை நஞ்சு -9-2-10-

உலகிற்குத் தீங்கு விளைக்கும் இரணியன் முதலியவர்களுக்கு அச்சத்தைத் தருபவர் -பயப்படுத்துவதும் அனுக்ரஹமே யாகும் –
பித்துப் பிடித்தவனை விலங்கிட்டு வைப்பது அவனுக்கும் அவனால் பாதிக்கப்படும் மற்றவர்களுக்கும்
நன்மையைச் செய்வது அன்றோ -ஸ்ரீ பராசர பட்டர் –

கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே9-2-10-

அசுரர்களை அச்சமுறுத்தும் பராக்ரமத்தை அவதாரங்களில் கொண்டவர் -ஸ்ரீ சங்கரர் –

த்ரௌபதியின் கணவனான பீமன் அல்லது ருத்ரனுடைய பராக்ரமத்திற்குக் காரணம் ஆனவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————-

ஆதார நிலயோ தாதா புஷ்பஹாஸ ப்ரஜாகர
ஊர்தவகஸ் ஸத்பதாசார பிராணத பிரணவ பண –102-

————

950-ஆதார நிலய-
சாதுக்களுக்கு இருப்பிடம்-அனைவருக்கும் இருப்பிட மாய் இருந்தாலும் ஸாதுக்களே தானே ஒத்துக்கொண்டு இருக்கிறார்கள்

ஆதாரம் நிலயம் -பர்யாயம் இருப்பிடம் -ஸாதுக்களே உலகத்துக்கு ஆதாரம் -அவர்களுக்கும் நிலயம் இவன்

இவனை உள்ளத்தில் வைத்து இவனுக்கும் அவர்களே ஆதாரம் -அவர்களையே நிலையமாகக் கொண்டவன் என்றுமாம்

தா₄ர்மிக தயா ஜக₃தா₃தா₄ரா꞉ ப்ரஹ்லாத₃ விபீ₄க்ஷண பாண்ட₃வாத₃ய தேஷாம் நிலய ꞉
ஆதா₄ர நிலய ꞉ ।
தேஹ் யாதா₄ரா꞉, தா

வர்ணாஸ்ரம ஆசார பரா சந்தஸ் ஸாஸ்த்ர ஏக தத் பரா த்வாம் ஹரே தாரயிஷ்யந்தி தேஷு
த்வத் பாராமாஹிதம் –ஸ்ரீ விஷ்ணு ஸ்ம்ருதி
பூமியே வர்ணாஸ்ரமங்கள் எப்போதும் கடைப்பிடித்தபடி ஸாஸ்த்ரங்களை மட்டுமே நம்பியபடி
உள்ள ஸாதுக்கள் மட்டுமே உன்னைத் தாங்குகிறார்கள்
உன்னுடைய பாரம் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது

நிவாஸ வ்ருஷ ஸாதூநாம் ஆபன்னநாம் பராம் கதி  -தாரை வார்த்தை

பூமா தேவி–விஸ்வம் பரா -அத்தைத் தாங்கும் இவன் –விஸ்வம் பர பரர் –ஸ்ரீ பாதுகா தேவிஆழ்வாராதிகள்
என் உணர்விலுள்ளே இருத்தினேன் -ஓடி வந்து என் மனக்கடலில் இருந்தாய் -பட்டினம் காப்பே அவனுக்கு ஸூ ரஷிதம்

உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் -பெரியாழ்வார் -5-4-5-
பேராளன் பேரோதும் பெரியோர் -பெரிய திரு மொழி -7-4-4-
பெரு மக்கள் உள்ளவர் தம் பெருமான் -3-7-5-

தர்மிஷ்டர்கள் ஆதலால் உலகைத் தாங்குகின்ற ப்ரஹ்லாதன் விபீஷணன் பாண்டவர்கள் முதலியோர்க்கு
ஆதாரமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் தாங்கும் பஞ்ச பூதங்களுக்கும் ஆதாரமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களின் கூட்டங்களுக்கு நரகம் போல் உள்ளவர் -இந்த்ரன் பொழிந்த மழையால் வருந்திய கோபாலர்களுக்கு
கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து அடைக்கலம் அளித்தவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

951-தாதா-
தர்மத்தை உபதேசிப்பவன் -உபதேசித்தும் அனுஷ்டித்தும் தாங்குபவன்

ஸ்வயம் ச த₄ர்ம  ஆசார்யகேண
தா₄தா
ந மே பார்த்த அஸ்தி கர்தவ்யம் –ஸ்ரீ கீதை -3-22-
அர்ஜுனா எனக்குச் செய்ய வேண்டிய கர்மங்கள் ஏதும் இல்லை -என்றாலும் நான் செய்கிறேன்

ந மே பார்த்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந—
நாநவாப்த மவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி—৷৷3.22৷৷

பார்த்தனே -மூ வகைப்பட்ட பிறவிகளில் பிறக்கின்ற எனக்குச் செய்யத் தக்க கர்மம் ஏதும் இல்லை – ஏன் என்றால் –
இது வரையில் கிடைக்காது இருப்பதாய் ஒரு கர்மத்தினால் பெறத் தக்கதாய் இருப்பது எதுவும் இல்லை –
அப்படி இருந்த போதிலும் கர்மத்தில் நான் நிலை நிற்கவே செய்கிறேன்

தானே ஆச்சார்ய பதத்தை ஆசைப்பட்டு -தேர் தட்டிலும் -குரு பரம்பரையிலும்- கீதாச்சார்யனாகவும்

உபதேச பலனாக – உலகம் நடத்தவே -அவதார ரஹஸ்ய ஞானம் -பக்தி யுக்தனுக்கு தேஹ அவ்சானே பேறு
28 சதுர்யுகம் முன்பே விவஸ்வானனுக்கு -சூரியனுக்கு -அவர் மனுவுக்கு -அவர் இஷ்வாகுக்குஉபதேசம் -பூவில் நான்முகனைப் படைத்து வேத உபதேசம்

ஆச்சார்ய ப்ரபோ தர்ம தர்மஸ்ய பிரபுர் அச்யுத 

உலகத் தற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் -பெரிய திரு மொழி -10-6-1-

தாமே தர்மத்தை உபதேசித்தும் அனுஷ்டித்தும் உலகைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அதாதா -தம்மைத் தவிர வேறு ஆதாரம் அற்றவர் –தாதா -சம்ஹார காலத்தில் எல்லா
பிராணிகளையும் விழுங்குபவர்-ஸ்ரீ சங்கரர் –

தாங்குவதும் போஷிப்பதும் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

952-புஷ்ப ஹாஸ-
மலரும் புஷ்பம் போலே இனியவன்-மலரடிகள் அன்றோ

ஏவம் நிஷ்பாதி₃த ஸ்வாநுப₄வ ஸக்தீநாம் ஸாயமிவ புஷ்பஸ்ய ஹாஸோ போ₄க்₃ய த  உல்லா
ஸோ (அ)ஸ்யேதி
புஷ்பஹாஸ꞉ ॥
கருவிளை ஒண் மலர்காள் காயா மலர்காள் திருமால் உரு ஒளி காட்டுகின்றீர் -நாச்சியார் -9-3-
தே நீர் கமலக் கண்களும் வந்து என் சிந்தை நிறைந்தவா -8-5-4-

பிராட்டிமார்களும் கூசிப் பிடிக்கும் மெல்லடி –மலர்ந்தும் மலராமல் -நித்ய அனுபவம்

மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்த்வம் வளத்தின் களத்தில் கூடு பூரிக்கும்

வஸுதேவ ஸுதம் கம்ஸ சாணூர மர்த்தனம்
தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் ||

அதஸீ புஷ்ப சங்காசம் ஹாரனூபுர சோபிதம்
ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் ||

தருணவ் ரூப சம்பன்னவ் ஸூகுமாரவ் மஹா பலவ் –சூர்ப்பணகை

தம் ஸ்வரூபத்தை அனுபவிக்கும் சக்தி உடையவர்களுக்கு மாலை வேளையில் பூ மலர்வது போலே
தாமே மலர்ந்து மிகவும் இனியவராக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

புஷ்பம் மலர்வது போல் பிரபஞ்ச ரூபமாக மலர்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மல்லிகை போன்ற புன்முறுவலை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

953-பிரஜாகார –
விழித்து இருப்பவன்

பிரஜாகார பர்வம் -தூக்கம் வராமல் த்ருதாஷ்ட்ரன் முழித்து இருந்து விதுரன் நீதி உபதேசம் -அனுஷ்ட்டிக்க இப்பிறவி இல்லை என்றானே

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -பக்தர்கள் –
இங்கு பக்தி உழவன் பயிர் விளைவிக்க தூங்காமல் க்ருஷி செய்பவன்

ஸஸ் யேஷ் விப₃ க்ருஷீ வலஸ் தேஷு ராத்ரிந்தி₃வம் ப்ரஜாக₃ர்தீதி
ப்ரஜாக₃ர꞉ ।

ச ஏஷு ஸூப்தேஷு ஜாகர்த்தி காமம் காமம் புருஷோ நிர்மிமான –கட-2-1-8–
அனைவரும் உறங்கும் போது ஸர்வேஸ்வரன் விழித்து இருந்து அவர்களுடைய பல விருப்பங்களை
நிறைவேற்றும் பொருட்டு பலவற்றையும் உண்டாக்கிய படியும் உள்ளான்

உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்த செல்வனார் -நாச்சியார் 11-7-

பயிர் இடுபவன் பயிரைக் காப்பது போலே இரவும் பகலும் தூங்காமல் பக்தர்களைக் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எப்போதும் விழித்துக் கொண்டு இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

நன்கு விழித்து இருப்பவர்-படைக்கும் பொழுது பிரஜைகளை வயிற்றில் இருந்து வெளிப்படுத்துபவர்
உலகங்களை உண்டாக்குபவர் -திருவேங்கடம் முதலிய திரு மலைகளில் மகிழ்பவர் -சத்ய சந்தர் –

—————

954-ஊர்த்வக –
மிக உயர்ந்தவன் –

குதஸ் தத₃ர்த₂ம்  அநித்₃ர꞉ ? யத
ஊர்த்₄வக ₃꞉—
ஸ்வபா₄வ துங்க ₃꞉ । யதா₂

மஹாத்மநாம் ஸம்ஸராயம் அப்யுபேதோ-நைவ அவஸீததி அதி துர்க்க 
மஹாத்மாக்களுடைய ஆதரவு பெற்றவன் மிகவும் எளியவன் என்றால் துன்பம் அடைவது இல்லை

கருத்தின் கண் பெரியன் -10-8-8-
தனது பேறாக ரஷித்து அருளுபவன்-

ஏன் தூங்காதவர் எனில் எல்லாவற்றிலும் உயர்ந்த தன்மையை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றிற்கும் மேலே இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மேல் உலகமாகிய ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பவர் -ஸ்ரீ வைகுண்டத்தை அடைவிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

955-ஸத் பதாசார
தாஸ்ய ரசத்தில் தூண்டி நல் வழிப் படுத்துபவன்

தந் மஹத்த்வ ப₂லம் ஸத் பதே ₂-ஸ்வாபா₄விக தா₃ஸ்ய மார்கே ₃ ஆசரணம்-தேஷாம் ப்ரவர்தநம்  அஸ்யேதி
ஸத் பதா₂சார꞉,
அநித்தியம் அ ஸூகம் லோகமிமம் ப்ராப்ய பஜஸ்வ மாம் –ஸ்ரீ கீதை -9-33-
நித்யம் அல்லாததும் ஸூகம் அழிக்காததுமாகிய இந்த உலகை அடைந்த பின்னர் நீ என்னிடம் பக்தி செய்தே யாக வேண்டும்

கிம் புநர் ப்ராஹ்மணா புண்யா பக்தா ராஜர்ஷயஸ் ததா.–
அநித்யமஸுகம் லோகமிமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்—–৷৷9.33৷

குந்தீ புத்திரனே -ஸ்த்ரீகளும் வைஸ்யர்களும் அவ்வண்ணமே சூத்ரர்களுமான பாபத்தினால் தாழ்ந்த பிறப்பை எவர்கள் எடுத்து இருக்கிறார்களோ அவர்களும் என்னை சிறப்பாக ஆஸ்ரயித்து மேலான கதியை அடைகிறார்கள் அன்றோ –
புண்யம் செய்து சிறந்த பிறப்பு எடுத்தவர்களான அந்தணர்களும் ராஜ ரிஷிகளும் என்னிடம் பக்தி செய்தார்கள் ஆகில்
மோக்ஷம் அடைவார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ –
ஆகையால் நிலை இல்லாததாய் -துன்பம் நிறைந்ததான இவ்வுலகை அடைந்து இருப்பவன் ஆகையாலே
என்னிடம் பக்தி செய்வாயாக –

ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் -திருவுள்ள வாழ் கோனாரை அடியேன் அடைந்தேன்

என்னைத் தீ மனம் கெடுத்தாய் -மருவித் தொழும் மனமே தந்தாய்

உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் -10-8-10-

பக்தர்களைத் தமக்கு அடிமை செய்வதாகிய நல் வழியில் செல்லும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சாதுக்களின் வழியாகிய நல்லாசாரங்களைத் தாமும் அனுஷ்டிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

நஷத்ரங்களில் சஞ்சரிப்பவர் -யோக்யர்களை நல் வழியில் செலுத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

956-பிராணத-
உயிர் அளிப்பவன்-ஆத்ம தாஸ்யம் அறியாமல் இருந்தால் பிராணன் இல்லாததனால் போலவே தான்

ஏவம் விக்ஷய விக்ஷ (விஷயாந்தர விஷம் )மூர்ச்சி₂த  நஷ்ட  ஆத்மப்₄ய ஆத்ம உஜ்ஜீவநம் த₃தா₃தீதி
ப்ராணத₃꞉ ॥
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -1-7-5-

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயே-ஆர் மருந்து ஆகுவார்

உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா

கீழே -66–323– 409இதே திரு நாமம் பார்த்தோம்

சப்தாதி விஷயங்களாகிய விஷம் தீண்டி மயங்கித் தம்மை மறந்து ஆத்ம நாசம் அடைந்தவர்களுக்கு
ஆத்மா உய்வதாகிய உயிர் அளிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

இறந்து போன பரீஷித் போன்றவர்களைப் பிழைப்பிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த கதியைக் கொடுப்பவர் -சப்த ரூபமான வேதங்களை நான்முகனுக்கு நன்கு கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

957-பிரணவ –
வணங்கச் செய்பவன் -பிரணவ அர்த்தம் உணர்த்தி -திருவடிகளைத் தொழுது எழச் செய்பவன்

ப்ரணவேந ஈத்₃ருஸ ஸம்ப₃ந்த₄ முத்₃போ₃த்₄ய
* மாம் நமஸ் குரு இதி ஸ்வ சரண அரவிந்த₃யோஸ்தான் ப்ரணமயதீதி
ப்ரணவ꞉

மாம் நமஸ்குரு –ஸ்ரீ கீதை 18-65-என்னை வணங்குவாயாக

பிராணாந் சர்வாந் பரமாத்மனி பிராணாமயதி ஏதஸ்மாத் பிரணவ –அதர்வ சிரஸ்
அனைத்து ஆத்மாக்களையும் பரமாத்மாவை வணங்கும்படி செய்வதால் ப்ரணவம் எனப்படுகிறது –

த்வம் மே அஹம் மே –வேத மூல பிரமாணாத்

மேலைத் தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் -10-8-7-

மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் மூன்று எழுத்தாக்கி மூன்று எழுத்தை
ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்க நன்குடைய வெம் புருடோத்தமன் இருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு ஆனான்
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-10-

தமக்கும் ஜீவன்களுக்கும் உள்ள தொடர்பை பிரணவத்தினால் அறிவித்து அவர்களைத் தமது
திருவடிகளில் வணங்கச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஓங்காரம் ஆகிய பிரணவ ரூபியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரணவம் விஷ்ணுவின் திரு நாமம் -விழித்து இருக்கும் நிலை முதலியவற்றைத் தருபவர் –
முக்தர்களை நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—–

958-பண
வியாபாரம் செய்பவன்

ஏவம் தேஷாம் ஸ்வாம்ய தா₃ஸ்ய வ்யதிஹாரேண வ்யவஹரதீதி
பண ꞉ ।
“பண வ்யவஹாரே ‘
சேஷி சேஷ பாவம் மாறாடி
என் மாய வாக்கை அதனுள் புக்கு என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் -10-7-3-

அனுபவ காலத்தில் போகத்திலே தட்டு மாறும் சீலம் காட் கரையிலே கரை அழிக்கும்

என் தன்னை விற்கவும் பெறுவார்கள்
கமலா க பரமாத்மா ம ஜீவாத்மா இருவருக்கும் கொடுத்து வாங்குபவள் லா தானம் ஆதானம்

தம் அடியவர்களுக்காக தாம் அடிமையாக இருந்து அத் தொடர்பை மாற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

படைத்தவற்றிற்குப் பெயர்களைக் கொடுப்பவர் –
புண்ய கர்மங்களைப் பெற்றுக் கொண்டு அவற்றின் பலன்களைத் தருபவர் -ஸ்ரீ சங்கரர்-

ஜனங்களால் போற்றப் பெறுபவர் -ஜனங்களுடன் பேசுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

————–

பிரமாணம் பிராண நிலய பிராண த்ருத் பிராண ஜீவன
தத்வம் தத்வ விதேகாத்மா ஜன்ம ம்ருத்யு ஜராதிகா —103-

———————-

959-பிரமாணம்
பிரமாணமாய் இருப்பவன்

பிரமா -உண்மை அறிவுக்கு
கரணம் பிரமாணம் உண்மை அறிவுக்கு கருவியாக இருப்பவரே பிரமாணம் –
இவரே ப்ரமேயம் –
இவரைக் காட்டுபவர்கள் ஆழ்வார்கள் பிரமாதாக்கள்

ஏவம் நிஸ் ஸம்ஸய விபர்யய வேத₃ரஹஸ்ய பரமார்த₂ ப்ரத்யாய கத்வாத்
ப்ரமாணம் ॥
அன்று கரு மாணியாய் இரந்த கள்வனே உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு -இரண்டாம் திரு -61
வேதம் வேதத்தின் சுவைப் பயன் –என்னை யாளுடை யப்பன் -பெரிய திரு மொழி -2-3-2-
முன்பே 429 பார்த்தோம்-

மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-1-

வேதங்களின் ரஹஸ்யமாகிய தத்வார்த்தங்களை ஐயம் திரிபின்றி வெளிப்படுத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஞான ரூபியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மேன்மையான அறிவு உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

960-பிராண நிலய
சகல ஆத்மாக்களுக்கும் இருப்பிடம்-பறவைகளுக்குத் தம் கூடு போல் ஆத்மாக்களுக்கு இவன்

ப்ராணந்தீதி ப்ராணா ꞉ அந்யே (அ)பி ஜீவா꞉, தே ஸ்வநீட₃ இவ ஸகுந்தா꞉ அஸ்மின் லீயந்த இதி
ப்ராண நிலய ꞉ । * பும்ஸி ஸஞ்ஜ்ஞாயாம், இத்யாதி₃நா க ₄꞉ ॥

கோலத்திரு மா மகளோடு சாலப் பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பான் -6-9-3-உடன்படாமல் பறந்து போனாலும் மீண்டும் இவன் இடமே வர வேண்டுமே

வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவ கோட்டு அம்மானே !
எங்கு போய் வுய்கேன் ? உன் இணை அடியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே— 5-5-

அடங்கு எழில் சம்பத்து* அடங்கக் கண்டு*  ஈசன்
அடங்கு எழில் அஃது என்று* அடங்குக உள்ளே.

பறைவைகள் கூட்டை அடைவது போலே ஆத்மாக்கள் அடையும் இடமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஜீவர்கள் லயிக்கும் இடமாக அல்லது ஜீவர்களை சம்ஹரிப்பவராக இருப்பவர் -இந்த்ரியங்களுக்கும்
பிராணம் அபானம் முதலான வாயுக்களுக்கும் ஆதாரமான ஜீவாத்மாக்களுக்கும் ஆதாரமானவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயுவிற்கு அடைக்கலமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

961-பிராண த்ருத்
பிராணங்களைத் தரிப்பவன் –

தான் மாத்ருவத்₃ தா₄ரயதி சேதி
ப்ராண த்₄ருத் ॥
தாய் தந்தை உயிராகின்றாய்-2-6-10-

எம்மானும் எம் அம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததன் பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற
நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன்
மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே –7-2-3-

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றான் ஆய் வளர்த்து என் உயிர் ஆகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை எம்மானை-
எத்தால் யான் மறக்கேன்? இது சொல் என் ஏழை நெஞ்சே (9-7)

அவ்வாத்மாக்களைத் தாய் போலே தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உயிர்களை அந்தர்ப்பியாகப் போஷிப்பவர் -ப்ராணப்ருத்-என்ற பாடம் -ஸ்ரீ சங்கரர் –

பிராணன்களை அல்லது இந்த்ரியங்களைத் தாங்குபவர் -பிராண ப்ருத்-எனபது பாடம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

962-பிராண ஜீவன –
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான் -6-7-1-வாஸூ தேவம் ஸர்வம்

தந் அந்ந பாநீயாதி₃வஜ் ஜீவயதீதி
ப்ராண ஜீவந꞉ ॥

அன்னம் ப்ரஹ்ம திவ்ய ஜாநாதி

அவ்வாத்மாக்களை உணவு போலே பிழைப்பிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

பிராண வாயு ரூபியாக பிராணிகளை ஜீவிக்கச் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

முக்ய பிராணனால் ஜீவர்களை வாழ்விப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————–

963-தத்த்வம்
சாரமாய் உள்ளவன் -சத்தா ஹேது

த₃தி₄ து₃க்₃த₄யோரிவ த₃தி₄ஸார ஶ்சித₃ சிதோர் வ்யாப்தி ப்ரயோஜநாப்₄யாம் ஸாராம்ஸ ꞉
தத்த்வம் । யதா

பரமார்த்தம் அசேஷஸ்ய ஜகத் -பிரபாவாப்யயம் சரண்யம் கச்சன் கோவிந்தம் நாவ சீததி
கோவிந்தனே உண்மையான வஸ்து
அவனே இந்த உலகின் ஸ்ருஷ்டிக்கும் அழிவுக்கும் காப்பாற்றுதலுக்கும் காரணமாக உள்ளான்
அவனைச் சரணம் அடையும் ஒருவன் எக் காரணத்தாலும் வருத்தம் அடைய மாட்டான்

ஏகதோ வா ஜகத் க்ருத்ஸ்னம் ஏகதோ வா ஜனார்த்தன சாரதோ ஜகத் க்ருத்ஸ்நாத் அத்திரிக்குதோ ஜனார்த்தன
ஜனார்த்தனனை ஒரு தட்டிலும் இந்தப் பிரபஞ்சத்தை மற்றொரு தட்டிலும் வைத்தால்
தனது மேன்மை காரணமாக ஜனார்த்தனன் உள்ள தட்டே தாழ்ந்து இருக்கும்

கறந்த பால் நெய்யே நெய்யின் சுவையே கடலினுள் அமுதமே அமுதில் பிறந்த இன் சுவையே சுவையது பயனே -8-1-7-
இளம் குயிலே என் தத்துவனை வரக் கூவிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறு இலேனே -நாச்சியார் -5-6-
உலகுக்கு ஓர் உயிர் ஆனாய் -6-9-7-

தயிர் பால்களில் போல் சேதன அசேதனங்கள் ஆகிய பிரபஞ்சத்தில் வியாபித்து இருக்கும்
சாராம்சமானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உண்மையான வஸ்துவாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

குணங்களால் பரவியிருப்பவர் -எல்லோர்க்கும் நன்மை அளிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

964-தத்த்வ வித்
தத்துவத்தை அறிந்தவன்-தன்னையே நன்றாக அறிந்தவர் -நீயே உன்னை உன்னால் அறிந்து கொள்கிறாய்

யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வ வித்

ததா₂ தத்த்வம் ஆத்மநோ வேத்தீதி
தத்த்வ வித் ।
* த்வமேவ த்வாம் வேத்த₂, இதி,
* ஸ்வயமே வாத்மநாத்மாநம் வேத்த₂ த்வம் புருஷோத்தம, இதி ॥

எம்பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசி என் -8-4-9-அவன் ஒருவனே அறிவான்-

தமது இவ் வுண்மையை அறிந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

த்வமேவ த்வம் வேத்த–புருஷோத்தமா நீ உன்னை உன்னுடைய அறிவினால் அறிகிறாய்

தம் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

தம் தன்மையை அறிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

965-ஏகாத்மா
உலகங்கட்கு எல்லாம் ஓர் உயிராய் இருக்கும் தனிப் பெரும் பரமன்

ஸர்வஸ்ய சித₃சித்₃வர்க ₃ஸ் யாயமேக ஏவ சேஷ போ₄க்தா(அ)பி₄மாநீ சேதி
ஏகாத்மா ||

ஆர் உயிரேயோ அகலிடம் முழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பேர் உயிரேயோ
தேவர்க்கும் தேவாவோ ஓர் உயிரேயோ-(ஏகாத்மா-) உலகங்கட்கெல்லாம்-8-1-5-

நாராயணனே நமக்கே பறை தருவான் -ஏக சேஷி -ஸமஸ்த சேஷ பூதர்கள்

நித்யோ நித்யாநாம் சேதநஶ்சேதநாநாமேகோ ப³ஹூநாம் யோ வித³தா⁴தி காமாந் ।
தத்காரணம் ஸாங்க்²யயோகா³தி⁴க³ம்யம் ஜ்ஞாத்வா தே³வம் முச்யதே ஸர்வபாஶை: ॥ -ஸ்வேதாஸ் வர உபநிஷத் -13॥

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I-வேதார்த்த ஸங்க்ரஹ மங்கள ஸ்லோகம்

சேதன அசேதனங்கள் அனைத்திற்கும் ஒரே ஸ்வாமியாகவும்-அனுபவிப்பவராகவும் அபிமானியாகவும் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஒரே ஆத்மாவாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

முக்யமான தலைவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

966-ஜன்ம ம்ருத்யு ஜாரதிக
பிறப்பு இறப்பு மூப்பு கட்கு அப்பால் பட்டவன்

ததா₂பி தது₃ப₄ வித₄ர்மாத்மா
ஜந்ம ம்ருத்யு ஜராதிக ₃꞉ ॥
அமலன் ஆதி பிரான்-

அசேதனம் ஸ்வரூப ஸ்வ பாவ மாறுதல் உண்டே
சேதனம் -ஸ்வ பாவ மாறுதல் உண்டு
இவனுக்கு இவற்றோடு அணுக்கமான தொடர்பு இருந்தாலும் ஸமஸ்த இதர விலக்ஷணன்

மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-1-

சேதன அசேதனங்கள் இரண்டைக் காட்டிலும் வேறு பட்டவராய் பிறப்பு இறப்பு மூப்புக்களைக் கடந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிறப்பு இறப்பு மூப்பு முதலிய ஆறு விகாரங்களைக் கடந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

பிறப்பு இறப்பு மூப்பு முதலிய தோஷங்களுக்கு அப்பாற்பட்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———-

பூர்ப்புவஸ் ஸ்வஸ் தருஸ் தாரஸ் சவிதா ப்ரபிதாமஹ
யஜ்ஞோ யஜ்ஞபதிர் யஜ்வா யஜ்ஞாங்கோ யஜ்ஞவாஹன–104-

————–

967-பூர் புவ ஸ்வஸ் தரு-
மூ வுலகத்திய ஜீவ ராசிகளும் தங்கும் மரமாய் உள்ளவன்
பூ புவ ஸூவ பூமி வானம் சுவர்க்கம் -ஜீவர்களும் தங்கும் மரம்
வாஸூ தேவ தருச்சாயா

பூ₄ர் பு₄வ꞉ஸ்வர் உப லக்ஷிதை ꞉  பக்ஷிபதி₂கைரிவ ப்ராணிபிர் உப ஜீவ்யமாநச் சாய பத்ரல பாரிஜாத꞉
பூ₄ர் பு₄வ꞉ ஸ்வஸ்தரு꞉

ஸமாஸ்ரிதா ப்ரஹ்ம தரோ அனந்தாதி நிஸ் சம்சய பக்குவ பல ப்ரபாத –
ஓங்கி வளர்ந்த பர ப்ரஹ்மம் என்னும் பழுத்த மரத்தை அடைந்தால் அதிலிருந்து பழுத்த பழங்கள் உதிர்வது உறுதி

பாதேயம் வாஸூ தேவ நாம சங்கீர்த்தனம் -பாதே -வழிப்போக்கருக்கு இளைப்பாறும் இடம் -இருப்பிடம் வாஸூ தேவ தருச்சாயா

மூவாத் தனி முதலா மூ வுலகும் காவலோன் -2-8-5-

பூ லோகம் புவர்லோகம் ஸூவர்லோகம் ஆகிய மூ வுலகங்களிலும் உள்ள பிராணிகள் பறவைகள்
பழுத்த மரத்தை அடைவது போல் தம்மை அடைந்து வாழும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பூ புவர் ஸூவர் லோகங்களையும் மரம் போலே வியாபித்து இருப்பவர் -பூ புவ ஸவ என்கிற வேத சாரங்கள் ஆகிய
மூன்று வ்யாஹ்ருதி ரூபங்களால் செய்யப்ப்படும் ஹோமம் முதலியவற்றால் மூ வுலகங்களையும் நடத்துபவர் ஸ்ரீ சங்கரர் –

பூ -நிறைந்தவர் -புவ -செல்வத்தால் சிறந்தவர் -ஸ்வ-அளவற்ற சுகமுடையவர் -தரு -தாண்டுபவர் -அல்லது –
ஸ்வஸ்தரு -கற்பக மரம் போன்றவர் -மூன்று திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

968-தார –
திரு நாவாய் -சம்சாரம் கடலைத் தாண்டுவிக்கும் கப்பல்
விஷ்ணு போதம்
முன்பே 340 பார்த்தோம்
நாரணன் சேர் திரு நாவாய் -9-8-3-

தேஷாம் ஸம்ஸார தாரணாத்
தார꞉ ॥

மாயா மேதம் தரந்திதே–

சம்சார சாகரம் கோரம் –நிஸ் தரந்தி மனுஷ்ய 

அக்கரை என்னும் அநர்த்தக் கடலில் அழுந்திக் கிடந்தேன் -இக்கரை ஏறி -ஆழ்வாருக்கு நித்ய விபூதியை இக்கரை

எவை கொல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-ஆழ்வாருக்கு திரு நாவாய் புகுவதே ஸ்ரீ வைகுண்டம் போவதற்கு சமம்

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன்  பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-

வைகுந்தம் என்னும் தோணி பெறாது உழல்கின்றேன்

அவர்கள் சம்சாரத்தைத் தாண்டும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிறவிக் கடலைத் தாண்டுவிப்பவர் -பிரணவ ரூபி -ஸ்ரீ சங்கரர் –

ஓங்காரமாக இருப்பவர் -அறியப்படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————

969-ஸவிதா –
உண்டாக்குமவன் –ஸவிதா என்று ஸூரியனையும் சொல்லும்

ஸர்வேஷாம் ஸாக்ஷாஜ் ஜந யிதா
ஸவிதா

முன்பே 887 பார்த்தோம்
வள வேழு உலகின் முதலாய வானோர் இறை -1-5-1-

பஹு ஸ்யாம் ப்ரஜாயேய -வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி ஆக்குவதற்காக சமஷடி ஸ்ருஷ்ட்டி பண்ணி நான்முகன் மூலம் செய்து அருளுகிறார்

கடல் ஞாலம் செய் தேனும் நானே என்னும்

வீட்டைப்பண்ணி விளையாடும் விமலன்
ஆகியும் ஆக்கியும் காக்கும்

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-

எல்லாவற்றையும் தாமே உண்டாக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் உண்டாக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

படைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

970-ப்ரபிதா மஹ –
தாத்தாவின் தந்தை -பிதாமஹன் நான்முகன் -பிரஜாபதிகளைப் படைத்து அவர்கள் மூலம் பிரஜைகளைப் படைப்பதால்-
பிதாமஹஸ்யாபி ஜநகத்வாத்
ப்ரபிதா மஹ꞉ ॥

பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேத ஸாதேச பல ப்ரதாய
ஸ்ரீபாஷ்யகாரோத்தம தேசிகாய ஸ்ரீசைல பூர்ணாய நமோ நம: ஸ்தாத்பெரிய திருமலை நம்பியின் தனியன்

ஆதுமில் பாழ் நெடும் காலத்து நன்மைப் புனல் பண்ணி நான் முகனைப் பண்ணி தன்னுள்ளே தோற்றிய இறைவன் -7-5-4-

தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைத்த தேவன்

பிதாமஹரான பிரமனுக்கும் தந்தையானவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

பிதாமஹரான பிரமனுக்கும் தந்தை -ஸ்ரீ சங்கரர் –

நான் முகனுக்குத் தந்தையானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

971-யஞ்ஞ-
தானே யஞ்ஞமாய் உள்ளவன்

ஸ்வ  ஆரத₄ந த₄ர்ம ஸம்ருத்₃தி₄ரிக்தாநாம் (ஆராதனைக்கு சக்தி பிராப்தி இல்லாதவர்க்கு)தத்  அர்தி₂நாம் (ஆர்த்தி உள்ளவர்களுக்கு -ஆசையே தகுதி)ஸ்வயமேவ
யஜ்ஞ꞉
செய்கின்ற கிறி எல்லாம் நானே என்னும் -5-6-4-
ஜப யஞ்ஞ ரூபமாய் இருப்பவன்
முன்பே 446 பார்த்தோம்
அந்தணர் தம் ஓமமாகிய அம்மான் -பெரிய திரு மொழி -8-6-5-
பண்டை நான் மறையும் வேள்வியும் தானாய் நின்ற எம்பெருமான் -பெரிய திருமொழி -5-7-1-
மறையாய் வேள்வியாய் தக்கணையாய் -பெரியாழ்வார் -4-9-5-

குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தண்மை தன்னை
ஒளித்திட்டேன் என் கண் இல்லை நின் கணும் பக்தனும் அல்லேன்
களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் அரங்க மா நகர் உளானே –25-

பற்றிலார் பற்ற நின்றானே

தம்மை ஆராதிப்பதற்கு உரிய புண்யம் இல்லாமல் தம்மை ஆராதிக்க விரும்புவர்களுக்கு
தாமே யஜ்ஞமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஞ ஸ்வரூபி யானவர் -யாகம் செய்பவர்களுக்கு அதன் பலன்களைச் சேர்ப்பிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞங்களை அனுபவிப்பவர் -அல்லது யஜ்ஞங்களுக்குத் தக்கவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

972- யஞ்ஞ பதி-
யஞ்ஞங்களுக்கு ஸ்வாமி -பல ப்ரதன்

ஸ்வ யஜ்ஞ ப₂ல ப்ரத₃꞉
யஜ்ஞ பதி꞉ ॥
அஹம் ஹி சர்வ யஞ்ஞாநாம் போக்தாச ப்ரபுரேவச-ஸ்ரீ கீதை -9-24-
தத்ர தத்ரபல பிரதாதா சாஹமே வேத்யர்த்த-

ஏகைக பல லாபாய ஸர்வ லாபாய கேசவா-சகல பல ப்ரதோ ஹி விஷ்ணு 

தருமவரும் பயனாயா-அவரவர் இறையவர் -விதி வழி நின்றவர் –
கர்ம பக்தி அனைத்துக்கும் இவரே பலன் அளிக்க வேண்டும்

யஞ்ஞதுக்கு -எஜமான் -யஜ்வா -ஆராதன தெய்வம் -த்ரவ்யம் -அங்கம் -வாஹனம்–தாங்குபவன் முதலாளி -ரஹஸ்யம் அனைத்தும் இவனே -என்கிறது மேல்

தம் ஆராதனத்திற்குப் பலனை அளிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஞங்களைக் காப்பவர் -தலைவர் -ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞங்களைக் காப்பவர் அல்லது தலைவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————

973-யஞ்வா-
யாகம் செய்பவன் –

அஸக்தாநாம் ஸ்வயமேவ யஜமாந꞉
யஜ்வா ।
* ஸு யஜோர்ஹ்ருநிப் ।

ஆஶ்வமேதி₄கே –வைஷ்ணவே தர்மே பகவான்

தேஷாம் து பாவநாய அஹம் நித்யமேவ யுதிஷ்ட்ர உபே சந்தயே அநு திஷ்டாமி ஹி
அஸ்கந்தம் தத் விரதம் மம –ஆஸ்வமேதிக பர்வம்
யுதிஷ்ட்ரா சக்தி இல்லாத பக்தர்களைத் தூய்மைப் படுத்துவதற்காக நான் அன்றாடம்
இரண்டு சந்திகளிலும் யாகத்தைத் தவறாமல் செய்கிறேன் -இது எனது விரதமாகும் –

அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரா அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ நீஎதிராஜர் ர் இரங்க வேண்டுவ-ஆர்த்தி பிரபந்தம்
கால த்ரயம் -கரண த்ரய நிர்மிதாத பாபத் த்ரயங்கள் பண்ணிக் கொண்டே இருக்கும் நமக்காக தானே பிரபத்தி செய்து -தாய முறை நமக்கு

கேசவ யாஜி திருக்குமாரர் -தந்தை பூர்வ பாக யாகம் செய்து பெற்ற ராமானுஜர் நமக்காக பிரபத்தி -எஜமானர் உடையவர்

அனுஷ்டிக்க சக்தி இல்லாதார் நித்ய கர்மாக்களையே யாகம் எனபது இதனை தானே அனுஷ்டிப்பவன்

சக்தி அற்றவர்களுக்குத் தாமே யஜமான ரூபியாக யாகம் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யாகம் செய்யும் யஜமானராக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

யாகம் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தரர் –

————-

974-யஞ்ஞாங்க-
பிறர் அனுஷ்டிக்கும் யஞ்ஞங்களை தான் அனுஷ்டிப்பதற்கு அங்கமாய் உள்ளவன்
அங்கம் -துணையாக -அஹ்ய சேஷ பூதம்-

ஸமர்த₂ அநுஷ்டி₂தம்  அபி யஜ்ஞாந்தரம்  அஸ்ய சேஷ பூ₄தமிதி
யஜ்ஞாங்க₃꞉

ஸ்வ தந்த்ர பிரபத்தி -பக்திக்கு அங்கமாக பிரபத்தி -பக்தி ஆரம்ப விரோதி போக்க
பகவானே பிரபத்தி -அவனே அங்கி -மற்றவை எல்லாம் அங்கம் –
பஹுஸ் யாம் ப்ரஜாயேய -இதுவே முக்கிய யஜ்ஜம்-மற்றவை எல்லாம் அங்கங்கள்

வெறிதே அருள் செய்வார் செய்வார்கட்க்கு -இவன் விருப்பப்படி செய்வார்கட்க்கு நிர்ஹேதுகமாக அருள் செய்வார்
இவன் விரும்புவதே உபாயம் –பிரிய தமன் என்று வரிக்கப்பட்டவனுக்கே பேறு
அவன் உகப்பே ஹேது-நிர்ஹேதுக கிருபையே -என் நன்றி செய்தேனோ என் நெஞ்சில் திகழ்வதுவே –
என் உணர்வில் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே

சக்தி யுள்ளவர்கள் செய்த யாகங்கள் மேற்கூறிய தம் யாகத்திற்கு அங்கமாகக் கீழ்ப் பட்டு
இருக்கும் படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யாகங்களே அங்கமாக உடைய வராஹ மூர்த்தியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞத்தால் உத்தேசிக்கப் படுபவர் -பயனாக விரும்பப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

975-யஞ்ஞ வாஹன-
யாகத்தை நடத்தி தருமவன் -சக்தி ஸ்ரத்தை அளித்து

தேஷாம் ஸக்தி ஶ்ரத்₃த₄அதி₄கார தா₃நேந யஜ்ஞம் வாஹயதீதி
யஜ்ஞ வாஹந꞉
செய்வார்களைச் செய்வேனும் யானே -5-6-4-

ஸ்வாமீ ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ பரத்வேந நிர்ப்பரம் ஸ்வ தத்த ஸ்வதியா ஸ்வார்த்தம் ஸ்வ ஸ்மிந்
ந்யஸ்யதி மாம் ஸ்வயம் –ஒன்பதில் கால் ஸ்வ சப்த பிரயோகம் –

ஸ்ருஷ்ட்டி அவதார முகத்தால் பண்ணி அருளும் கிருஷீ பலம்

யஜ்ஞம் செய்பவர்க்கு சக்தியும் ஸ்ரத்தையும் அதிகாரமும் கொடுத்து யாகத்தை நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பலத்தைக் கொடுக்கும் யஜ்ஞங்களை நடத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

செய்பவர்களை வழி நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

யஜ்ஞ ப்ருத் யஜ்ஞ க்ருத் யஜ்ஞீ யஜ்ஞ புக் யஜ்ஞ சாதன
யஜ்ஞாந்த க்ருத் யஜ்ஞ குஹ்யம் அன்ன மன்னாத ஏவ ச –106-

————–

976-யஞ்ஞ ப்ருத் –
யாகத்தை நிறைவுறச் செய்பவன்
பிராயச் சித்தான்ய சேஷாணி ஸ்ரீ கிருஷ்ண  அநு ஸ்மரணம் பரம்-

விகலமபி யஜ்ஞம் ஸ்வ ஸ்மரண பூர்ணா ஹுதிப்₄யாம் புஷ்ணாதீதி
யஜ்ஞ ப்₄ருத் । யதா₂

ப்ரமாதாத் (கவனக் குறைவால் )குர்வதாம் கர்ம பிரஸ்யவத் யத்வரேஷு யத் ஸ்மரணா தேவ தத் விஷ்ணோ சம் பூர்ணம் ஸ்யாதிதி ஸ்ருதி
யஜ்ஞத்தில் எந்தச் செயலைச் செய்யும் போதும் ஏதேனும் ஒரு காரணத்தால் ஏதேனும் ஒரு குறை உண்டானாலும்
மஹா விஷ்ணுவை எண்ணிய யுடனேயே அந்தக் குறை நீங்கி யஜ்ஞம் பூர்ணமாகிறது என்று ஸ்ருதி கூறுகிறது

மாயனைத் தாமோதரனைச் செப்பு -நாம் செய்யும் நோன்பு முடிய உதவுவான்

யஜ்ஞம் குறைவு பட்டாலும் தம்மை தியானிப்பதனாலும் பூர்ணா ஹூதியினாலும்
அதை நிரம்பச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஞங்களைத் தாங்குபவர் -அல்லது காப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞத்தைத் தாங்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

977-யஞ்ஞ க்ருத்-
யாகங்களை உண்டாக்கியவன் -பரஸ்பரம் பாவயந்த -தேவர்கள் மனுஷ்யர்கள்

ஜக ₃த்₃தி₄தா ய யஜ்ஞ மாதௌ₃ ஸ்ருஜதீதி
யஜ்ஞ க்ருத் ॥
பண்டை நான்மறையும் வேள்வியும் தானாய் நின்ற வெம்பெருமான் -பெரிய திரு மொழி -5-7-1-

உலகங்களின் நன்மைக்காக ஆதியில் யஜ்ஞத்தை உண்டாக்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆதி காலத்தில் யஜ்ஞத்தைப் படைத்து பிரளய காலத்தில் யஜ்ஞத்தை அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞத்தைச் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

978-யஞ்ஞீ-
யஞ்ஞங்களால் ஆராதிக்கப் படுபவன் -சர்வ சேஷி

ஸர்வ யஜ்ஞாநாம் சேஷீ
யஜ்ஞீ ॥
செய்கைப் பயன் உண்பேனும் யானே -5-6-4-
அஹம் ஹி சர்வ யஞ்ஞாநாம் போக்தா ச பிரபுரேவச -ஸ்ரீ கீதை -9-24-

யத் கரோஷி யத³ஸ்²நாஸி யஜ் ஜுஹோஷி த³தா³ஸி யத் |
யத் தபஸ்யஸி கௌந்தேய தத் குருஷ்வ மத³ர்பணம் || 9- 27||

எல்லா யஜ்ஞங்களுக்கும் தலைவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஞங்கள் தமக்கு ஆராதனங்கள் ஆகையால் யஜ்ஞங்களுக்குத் தலைவர் -ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞத்தை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

979-யஞ்ஞ புக்
யஞ்ஞங்களை அனுபவிப்பவன் -அந்தராத்மா -தடை இன்றி ரஷிப்பவனும் அவனே-

தான் பு₄ங்க்தே பு₄நக்தி வேதி
யஜ்ஞ பு₄க் ॥

மா முனி வேள்வியை காத்து

செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
ப்ராப்திக்கு உகப்பானும் அவனே

அந்த யஜ்ஞங்களை அனுபவிப்பவர் -அல்லது காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஞங்களை அனுபவிப்பவர் -காப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞத்தை உண்பவர் -தேவர்களை உண்பிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

980-யஞ்ஞ சாதன
யஞ்ஞங்களை சாதனமாக ஆக்குமவன்

தே (அ)ஸ்ய ஜ்ஞாந த்₃வாரா ஸித்₃த்₄யுபாயா இதி
யஜ்ஞ ஸாத₄ந꞉ ॥
தன்னைப் பற்றிய அறிவின் மூலம் தன்னை அடைய யஞ்ஞங்களை உபாயமாக ஆக்குமவன்
முன்பே 981 பார்த்தோம் –

தன்னையே சாதனமாக ஆக்குகிறான் –ஜ்ஞாந த்₃வாரா ஸித்₃த்₄யுபாயா-அவனே எல்லாம் என்ற ஞானம் வந்தால் தானே பூர்த்தி அடையும்-

தமேவம் வித்வான் அம்ருதம் இஹ பவதி

மறந்தேன் முன்னம் முன்னம் -அறிந்தேன் –

யஜ்ஞங்களே ஞானத்தின் வழியாகத் தம்மை அடைவதற்கு உபாயங்களாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம்மை அடைவதற்கு யஜ்ஞங்களை ஞானம் மூலம் சாதனமாக உடையவர் -ஸ்ரீ சங்கரர்-

யஜ்ஞத்தின் ச்ருக் ஸ்ருவம்-கரண்டிகள் -மந்த்ரம் -முதலியவற்றைக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

981-யஞ்ஞாந்த க்ருத்
யாகத்தின் பலனை உண்டாக்குபவன்
ஸ்வ தத்த்வ ஜ்ஞாநம்-கர்ம அனுஷ்டானம் பலன் பரத்வ ஞானம்

ஸர்வ கர்மாகி₂லம் பார்த₂ ஜ்ஞாநே பரி ஸமாப்யதே இதி யஜ்ஞ பர்யவஸாநம் ஸ்வ தத்த்வ ஜ்ஞாநம் கரோதீதி
யஜ்ஞாந்த க்ருத் ॥

ஸர்வம் கர்மம் அகிலம் பார்த்த ஞாநேந பரிஸமாப்யதே–ஸ்ரீ கீதை -4-33-
எந்த எந்த கர்மங்கள் உள்ளனவோ அவை அனைத்தும் ஞானத்தில் சென்று முடிகின்றன

ஸ்ரேயாந் த்ரவ்ய மயாத் யஜ்ஞாத் ஜ்ஞாந யஜ்ஞ பரந்தப.–
ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஜ்ஞாநே பரி ஸமாப்யதே—৷৷4.33৷৷

எதிரிகளை அழிப்பவனே -த்ரவ்ய சாத்தியமான கிரியைகளை முக்கியமாகக் கொண்ட கர்ம யோக
அம்சத்தைக் காட்டிலும் -கர்ம யோகத்தில் உள்ள ஞான அம்சமே சிறந்தது -குந்தீ புத்திரனே –
சர்வம் எல்லா பிரகாரங்களோடு கூடியதாய் -எல்லா அங்கங்களோடும் கூடியதான கர்ம ரூபமான அம்சம்

அமலன் ஆதி பிரான் -தானே ஜகத் காரணன் என்று சொல்லிக்கொடுத்த உபகாரம் போல்
இங்கும் தன்னைப் பற்றிய ஞானத்தைத் தானே அளிப்பவன் என்கிறார் இத்தால்

மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதி இல் மனத்தால்
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பைக் குழியில்
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா
சிறந்தேன் நின் அடிக்கே-திருவிண்ணகர் மேயவனே—பிறந்ததின் பயனை அனுபவிக்காததால் இறந்தேன் என்கிறார் -ஞான ஜென்மம் கிடைக்காமல் உழன்று உள்ளோம்

ஸ்வ ஞானமும் –பர ஞானமும் புருஷார்த்த ஞானமும்-ப்ராப்ய ப்ராபக ஞானம்-முமுஷுவுக்கு ஞான த்ரயமும் உபாதேயம்
ஞானக் கை தா காலக் கழிவு செய்யேல்
அறிவில்லா குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய –நெறி எல்லாம் எடுத்து உரைத்த அகல் ஞால மூர்த்தி

யாகத்தின் பலனாகிய தம்மைப் பற்றிய தத்வ ஞானத்தை உண்டாக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஞத்தின் முடிவாகிய பலத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ வைஷ்ணவீ ருக்கைச் சொல்லுவதாலும்
பூர்ணா ஹூதி செய்வதனாலும் யஜ்ஞத்தை நிறைவேற்றுபவர் – -ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞத்தை நிச்சயிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————

982-யஞ்ஞ குஹ்யம் –
யாகங்களின் அடிப்படை ரகஸ்யமாக உள்ளவன்–மறை பொருள் -வேத ரஹஸ்யம் –

யந் நிரபேஷோ (அ)பி ஸாபேக்ஷவத்₃ யஜ்ஜேஷு புரோடா₃ஸாதி₃கம் பு₄க்த்வா த்ருப்யம்-
ஸ்தர்பயதி, தத்₃ யஜ்ஞ விதி₄க₃தி  ஸாத₄ந வித₃ ஏவ வித₃ந்தி ந ஸ்தூ₂ல த்₃ருஸ இதி
யஜ்ஞ கு₃ஹ்யம் ।

யதா வேத்₃யுதா₃ஹரணே

சர்வே வேதா சர்வ வேத்யா ச சாஸ்த்ரா சர்வே யஜ்ஞா சர்வ இஜ்யஸ்ய கிருஷ்ண
விது கிருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்துவதோ யே தேஷாம் ராஜன் சர்வ யஜ்ஞா ஸமாப்த-
அனைத்து வேதங்களும் அனைத்து வேதப் பொருள்களும் அனைத்து யஜ்ஞங்களும்
அனைத்து யாகங்களால் ஆராதிக்கப்படும் அனைத்து தேவர்களும் கிருஷ்ணனே ஆவான்
அரசனே இவ்விதம் கிருஷ்ணன் உள்ளதை அறிந்தவன் மட்டுமே அனைத்து யஜ்ஞங்களையும் பூர்த்தி செய்தவன் ஆகிறான்

ஜ்யோதீம்ஷி சுக்ராணி ச யானி லோகே த்ரயோ லோகா லோக பாலஸ் த்ரயீ ச த்ரய அக்நயச்ச
அஹுதயச் ச பஞ்சே சர்வே தேவா தேவகீ புத்ர ஏவ
இந்த உலகில் காணப்படும் அனைத்து தேஜஸ்ஸுக்களும் மூன்று லோகங்களும் மூன்று லோகங்களைக் காப்பவர்களும்
மூன்று அக்னிகளும் அந்த அக்னிகளில் அளிக்கப்படும் ஐந்து ஆஹுதிகளும்
அனைத்து தேவர்களும் தேவகியின் புத்திரனான கிருஷ்ணனே ஆவான் –

செய்த வேள்வியர் -5-7-5-இந்த ஞானம் வந்ததும் இனி செய்வது ஒன்றும் இல்லை இங்கும் அங்கும்

கொடுத்துக் கொள்ளாதே கொண்டத்துக்குக் கைக்கூலி கொடுக்க வேண்டுமே -ஓன்று நூறாயிரமாகக் கொடுப்பேன் -இதுவே ரஹஸ்யம்

அனைத்து செயல்களையும் கிருஷ்ண அர்ப்பணம் என்பது மட்டும் அல்ல -அனைத்துமே கிருஷ்ணன் என்று உணர வேண்டும் என்பதே ரஹஸ்யம்

ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத் தெவ்வெவையும்,
சாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை,
போதுவாழ் புனந்துழாய் முடியினாய், பூவின்மேல்
மாதுவாழ் மார்ப்பினாய். என்சொல்லியான் வாழ்த்துவனே?–சர்வே வேதா யத் பதம் ஆமயந்தி –

அனைத்து வேதமும் உபநிஷத்துக்களும் சொல்வது ஒன்றே
ஸர்வ கர்ம ஆராத்யனும் -ஸர்வ வேத அந்தராத்மாவாய் -ஸர்வ காரணமாய் நாராயணன்-என்பதே வேதங்களின் 20 அத்யாய சுருக்கம்

எதையும் எதிர்பாராதவராக இருந்தும் எதிர்பார்ப்பவர் போல் யாகத்தில் அளிக்கும் புரோடாசம் முதலியவற்றை உண்டு
திருப்தி அடைந்து யாகம் செய்தவரைப் பலன்களால் திருப்தி செய்வித்து யாகத்தின் ரஹஸ்யமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஞங்களுள் ரஹஸ்யமாகிய ஞான யஜ்ஞமாக இருப்பவர் -பலனைக் கருதாது செய்யப்படும் யஜ்ஞமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞத்தின் ரஹஸ்யமான விஷ்ணு என்னும் நாமத்தை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

983-அந்நம்
உண்ணும் சுவை யமுதாக உள்ளவன் -யாத்மதா பலதா –

ஏவம் நிஷ்பாதி₃த போ₄க்த்ரு ஸக்தி பி₄ர்பு₄ஜ்யதே இதி
அந்நம்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -6-7-1-
வாசு தேவஸ் சர்வம் -ஸ்ரீ கீதை -7-9
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத
தேனும் பாலும் அமுதுமாகித் தித்தித்து என் ஊனில் உணர்வில் நின்றான் -8-8-4-

போக்தாவாக இருக்க வேண்டுமா போக்த்ருத்வமாக இருக்க வேண்டுமா –
அன்னமாகவா அன்னாதாவாகவா
மா முனிகள் ஆய் ஸ்வாமிகள் சம்வாதம்
சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல் அன்றே பாரதந்திர போக்யதைகள்–ஆச்சார்ய ஹ்ருதயம் சூரணை -21 –
படியாய்க் கிடந்து பவளவாய் காண வேண்டுமே-அமுதம் உண்டு களித்தேனே –அப்பால ரெங்கனை அனுபவித்து

உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -அவன் போக்தா நாம் போக்யம்
இங்கு அவன் அன்னம் -நாம் போக்தா-பகவத் குணஅனுபவத்தால் தானே அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் ஸித்திக்க வேண்டுமே
இருவரும் இரண்டாகவே இருக்க வேண்டும் அன்றோ

இப்படித் தம்மால் அளிக்கப் பட்ட சக்தியைப் பெற்றவர்களால் அனுபவிக்கப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லோராலும் அனுபவிக்கப் படுபவர் -பிராணிகளை சம்ஹரிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லோருக்கும் உய்விடம் -எல்லாவற்றையும் உண்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

984-அந்நாத –
தன்னை அனுபவிப்பவனை தான் இனிதாக அனுபவிப்பவன்
அன்னம் அந்நாத ஏவ ச -ஏவ -அவன் ஒருவனே அத்விதீயம்-ச-சொன்னவை எல்லாம் இவன் ஒருவன் இடம் மட்டுமே பொருந்தும்

தாம்ஶ்ச ததா₂ பு₄ங்க்த இதி
அந்நாத₃꞉ ।
ஷோ(அ)ந்ய ஈத்₃ருஸ இத் யேவகார꞉ ।ச ஸப்₃த₃ ஸ் ஸர்வ முக்தம்  ஏக த்ராஸ்மின் ஸமுச்சிநோதி ॥

வாரிக் கொண்டு உன்னை விழுங்குமவன் என்று ஆர்வுற்ற என்னை –என்னில் முன்னம் பாரித்துத்
தான் என்னை முற்றப் பருகினான் -9-9-10-

உபநிஷத் அஹம் அன்னம் சொல்லி அப்புறம் அந்நாத -இங்கு அவனை-அன்னம் என்று சொல்லி பின்பு சொல்லி அந்நாத என்கிறார்

தம்மை அனுபவிப்பவர்களைத் தாமும் அனுபவிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா உலகங்களையும் சம்ஹார காலத்தில் உண்பவர் -உலகம் அனைத்தும் போக்த்ரு ரூபமாகவும் -உண்பவராகவும் –
போக்ய ரூபமாகவும் உண்ணப் படுபவை யாகவும் -இருத்தலை ஏவ என்ற சொல் காட்டுகிறது -உலகனைத்திலும் உள்ள சொற்கள்
அனைத்தும் சேர்ந்து பரமாத்மாவைக் குறிக்கின்றன என்பதை -சகாரம் காட்டுகிறது -ஸ்ரீ சங்கரர் –

அன்னத்தை உண்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———–

ஆத்ம யோநிஸ் ஸ்வ யஜ்ஞாதோ வைகா நஸ் சாம காயன
தேவகீ நந்தஸ் ஸ்ரஷ்டா ஷிதீச பாப நாசன –107

—————

985-ஆத்ம யோநி –
ஒரு நீராக கலக்கச் செய்பவன் -பாலுடன் சக்கரை சேர்வது போலே

து₃க்₃தே ₄நேவ ஸிதா வலயம் ஆத்மநா போ₄க்தாரம் மிஶ்ரயதீதி
ஆத்ம யோநி꞉ ॥

தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே -2-3-1-

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3-அஹஸ்த்ய பிராதா போல்-ஆத்ம யோநி- என்னுள் கலந்தவன் என்று பெயர் சூட்டுகிறார்

பாலுடன் சக்கரையைச் சேர்ப்பது போல் தம்மை அனுபவிப்பவர்களைத் தம்மிடம் சேர்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தாமே உலகுக்கு எல்லாம் உபாதான காரணமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரமனுக்கு அல்லது ஜீவர்களுக்கு காரணமாக இருப்பவர் -தம்மைத் தாமே அனுபவிப்பதனால் ஆத்ம யோனி -ஸ்ரீ சத்ய சந்தர் –

————

986-ஸ்வயம் ஜாத-
தான் தோன்றி -பிரார்த்திக்காமல் நிர்ஹேதுகமாக அவதாரம் செய்து அருளி

ப்ரார்த₂நா நிர பேஷதயா ஜாத꞉
ஸ்வயஞ் ஜாத꞉ ॥
உயிர் அளிப்பான் என்நின்ற யோநியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா -திருவிருத்தம் -1
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் -9-1-10-

தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக அனைவரையும் தீண்டி கலந்து மகிழவே அவதாரங்கள்-பிறந்த மாயா பாரதம் பொருத மாயா

ஒருவருடைய பிரார்த்தனையையும் எதிர்பாராமல் தாமே திருவவதரிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நிமித்த காரணமும் தாமேயாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

தம்மிடமிருந்து தாமே தோன்றுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

987-வைகாந-
வேரோடு பெயர்ப்பவன்
கந -தோண்டி எடுப்பது

ஜநித்வா ப₄வ து₃꞉க விக ₂நநாத்₃
வைகாந ꞉ ।
விபூர்வாத் கநேத꞉ * கா தோ க ச, இதி க₄ஞ்,
விகா₂ந꞉ ; * தத்ர ஸாது₄꞉ இத் ண் ॥
தான் அவதரித்து பிறவி துக்கங்களை வேரோடு போக்கி அருளி
அடியார் அல்லல் தவிர்த்தான் -8-3-5-
தண்டு ஏந்தி எம் இடர் கடிவான் -9-2-6-

ஆத்ம யோனி -அதுக்காக ஸ்வயம் ஜாத -பாபம் போக்கினால் தானே ஒன்றாக நன்றாகக் கலக்கலாம் -ஸம்ஸார துக்கம் போக்க வேண்டுமே

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானைக்
கடிசேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனைச்
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கோர் அயர்வுண்டே!–1-5-7-

திருவவதரித்த பின் அடியவர்களுக்கு சம்சார துக்கத்தைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஹிரண்யாஷனைக் கொல்வதற்கு பூமியை நன்கு தோண்டியவர் -ஸ்ரீ சங்கரர் –

விசேஷமான இந்த்ரிய பிராணன்களை உடைய -முக்தி அடைந்தவர்களுக்குத் தலைவர் –
ஸ்ரீ வராஹ ரூபத்தில் பூமியை இடந்து எடுத்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

988-ஸாம காயந-
முக்தர்கள் சாம கானம் பண்ணக் கேட்டு இருப்பவன்
பாட்டுக் கேட்கும் இடம் –

ஸ்வ ப்ராப்தி மது₄பாநேந * ஹாவு ஹாவு ஹாவு இதி ஸாமாநி காய ₃ மாநோ முக்தோ
(அ)ஸ்ய அஸ்தீதி
ஸாம கா₃ யந꞉ ।
* ண்யுட் ச இதி ண்யுட் ।
* ஏதத் ஸாம காய₃ ந் நாஸ்தே ,–இத்யாதி₃ ॥

வேதானாம் சாம வேதோஸ்மி தேவானாம் அஸ்மி வசவ இந்திரியம் மனஸ் அஸ்மி பூதானாம் அஸ்மி சேதன –ஸ்ரீ கீதா -10-22-

ஏதத் ஸாம காயன் நாஸ்தே ஹாவு ஹாவு ஹாவு —தைத்ரியம் ப்ருகு வல்லி -10-5-
முக்தி அடைந்தவர்கள் அங்கு ஸாம கானம் பாடியபடி உள்ளார்கள்

எந்தை எம்பெருமான் என்று வானவர் சொல்லும் பெருமான் -1-10-7-

வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு மடக் கிளியை கை கூப்பி வணங்கினாளே

கேட்டு ஆரார் வானவர்கள்  செவிக்கு இனிய செஞ்சொல்லே –
நுடங்கு கேள்வி இசை என்கோ -பாவின் இன்னிசைப் பாடித் திரிவேனே

பிறவி நீங்கி முக்தி அடைந்தவர்கள் தம்மை அடைவதாகிய மது பானத்தினால் மயங்கி
ஹாவு ஹாவு என்று சாம கானம் செய்யும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சாமங்களைப் பாடுபவர் -ஸ்ரீ சங்கரர் –

சாமத்தை கானம் செய்பவர் -சாம கானத்திற்கு தஞ்சமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————–

989-தேவகீ நந்த₃ந –
தேவகிப் பிராட்டியை களிப்பிக்கும் குமாரன்-

திருக்கண் மலர்ந்து தனது பெருமையை பீஷ்மர் சொல்லக் சொல்ல மகிழ்ந்து இருப்பவன்

ஏவம் விதோ ₄ ந பராவஸ்த₂꞉, கிந்து
தேவகீ நந்த₃ந꞉ ।
ச ஏஷ ப்ருது தீர்க்காஷ சம்பந்தீ தே ஜனார்த்தன ஏஷ பூதம் பவிஷ்யச்ச பவச்ச பரதர்ஷப
பரத குலத்தில் உயர்ந்தவரே -அகன்ற நீண்ட திருக் கண்களை யுடைய உனது உறவினனான
இந்த ஜனார்த்தனனே இறந்த காலம் நிகழ் காலம் மற்றும் எதிர்காலமும் ஆவான் –

தேவகி சிங்கமே தாலேலோ -பெரியாழ்வார் -1-3-4-
ஏஷமே சர்வ தர்மாணாம் தர்மோ அதிகதம -பீஷ்மர் அவனைச் சுட்டிக் காட்டி அருளி
யஏஷ ப்ருது தீர்க்காஷா சம்பந்தீதே ஜனார்த்தன
கரியவாகிப் புடை பரந்து நீண்ட வப் பெரிய வாய கண்களை உடைய ஜனார்தனன் கிருஷ்ணன்-

சம்பந்தீ தே ஜனார்த்தன-உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது
பூத பவிஷ்ய பவத் பிரபு உபக்ரமம் இங்கு உப ஸம்ஹாரம்-ஜனார்த்தன ஏஷ பூதம் பவிஷ்யச்ச

ஆயர் புத்ரன் அல்லன் யரும் தெய்வம் -பீஷ்மர் பரத்வம் சொல்லி தேவகி நந்தன்

அனைத்திலும் என் உள்ளம் உள் குளிர நந்த காணுமாறு இனி உண்டு எனில் அருளே -காட்டி -உள்ளம் குளிர வைத்தான் தேவகி நந்தன்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் -முதல் 122-திரு நாமங்கள்
ஷீராப்தி நிகேதனன் -அடுத்த 24-திரு நாமங்கள்
ஆகதோ மதுரா புரீம் -மற்ற திரு நாமங்கள் எல்லாம்

பர ஸ்வரூபத்தில் மட்டும் அன்றி தேவகியின் புத்திரராக திருவவதரித்த ஸ்ரீ கிருஷ்ணாவாதாரத்திலும்
இவ்வளவு பெருமை பொருந்தியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தேவகியின் மைந்தர் -ஸ்ரீ சங்கரர் –

தேவகியை மகிழ்விப்பவர் -ஸ்ரீ லஷ்மி தேவியை கங்கையை மகிவிப்பவர் என்றுமாம் –
பாகரீதியை மகளாகப் பெற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

990-ஸ்ரஷ்டா
படைப்பவன் -பர வாஸூ தேவனும் கிருஷ்ணனே-தானே வேர் முதல் வித்து

பர அவஸ்தோ ₂(அ)பி ஸ ஏவேதி
ஸ்ரஷ்டா ॥
கடல் ஞாலம் செய்வேனும் யானே -5-6-1-
அஹம் க்ருதஸ் நஸ்ய ஜகத பிரபவ -ஸ்ரீ கீதை -7-6-
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணன் -3-2-1-

ஏதத் யோநீநி பூதாநி ஸர்வாணீ த்யுப தாரய.–
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத ப்ரபவ ப்ரலயஸ் ததா৷৷—-7.6৷৷

இந்த சேதன அசேதன சமஷ்ட்டியைக் காரணமாகக் கொண்ட பிரமன் முதலாக புல் ஈறாக உள்ள
எல்லாப் பொருள்களும் என்னுடையவையே என்று அறிவாயாக –
அப்படி இருக்கும் போது நான் இந்த எல்லா உலகிற்கும் உத்பத்தி ஸ்தானமாகவும் லய ஸ்தானமாகவும்
சேஷியாகவும் இருக்கிறேன்

ஸ்ரீ பர வாஸூதேவரும் தாமேயாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா உலகங்களையும் படைப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

படைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————

991-ஷீதீ ஸ
பூமியை ஆள்பவன் -கண்ண பிரான் -பூதேவியின் துயர்களை களைபவன்

ய அநந்த ரூப அகில விஸ்வ ரூபோ கர்ப்பேபி லோகான் வபுஷா பிபர்த்தி, இதி
ஸர்வ ஈஸத்வே (அ)ப் யார்தி பூ₄யிஷ்ட₂த்வாத்₃பூ₄யிஷ்ட₂ம் பூ₄மேரீஸ ꞉
க்ஷிதீ ஸ ꞉ ॥
ய அநந்த ரூப அகில விஸ்வ ரூபோ கர்ப்பேபி லோகான் வபுஷா பிபர்த்தி
அவன் எண்ணற்ற ரூபங்கள் கொண்டவன்
இந்த விஸ்வத்தையும் தனது ரூபமாகக் கொண்டவன்
அனைத்தையும் தனது ரூபத்தில் கொண்டுள்ளான்

ஸர்வ ஈசனாய் இருந்தாலும் தாபத் த்ரயங்களால் வாடி -ஆர்த்தி மிக்கு இருக்கும் பூமியில் உள்ளர்களுக்கு விசேஷ அபிமானம் கொண்டவன்

நாளும் இங்கு ஆள்கின்றானே–10-4-2-
உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே–6-10-10-
ஆள்வான் ஆழி நீர் -10-5-4-

கடல் ஞாலத்து அளி மிக்கான்

எல்லாவற்றிற்கும் ஈஸ்வரர் ஆயினும் பூமியின் துயரத்தை நீக்குவதற்காக திருவவதரித்தால்
பூமிக்கு ஈஸ்வரர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தசரத புத்ரனாய் திருவவதரித்தவர் -ஸ்ரீ சங்கரர் –

பூமிக்கு அரசர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ திருவேங்கடத்தானுக்கு நீசனேன் நிறைவு ஒன்றும் இல்லேன்
என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே 3-3-4–

—————-

992-பாப நாசன
பாபங்களை அழிப்பவன்

அத்ர த₃தி₄நவநீதஸ் தைந்ய ராஸ க்ரீடா₃தி₃கதா₂ம்ருதேந பரேஷாம்
பாப நாஸந꞉;
அவதாரே (அ)பி வைஷ்ணவாநாம் பா₃ஹ்யாப்₄ யந்தர ஸத்ரு நாஸந꞉ ॥
அமுதம் அன்ன செயல்களை பற்றிக் கேட்பதும் ரசிப்பதும் சகல பாபங்களையும் போக்கும்
அவதாரங்கள் மூலம் அடியவர் வெளிப்பகையும் உள்பகையும் போக்குபவன்
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி –
பாப நாசன் கண்ணன் -3-6-2-
நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டில் உள்ள பாவம் எல்லாம் சும்மெனாதே கை விட்டோடித்
தூறுகள் பாய்ந்தனவே -பெரியாழ்வார் திரு மொழி -5-4-3-

தயிர் வெண்ணெய் திருடியது -ராச க்ரீடை செய்தது முதலிய கதை அம்ருதத்தைக் கேட்பவர்களுடைய எல்லா பாபங்களையும் போக்கி –
திரு வவதாரங்களிலும் தம் அடியவர்க்கு உள் வெளி பகைவர்களைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பால லீலைகளை அனுசந்திக்க உள் விரோதிகள் போகுமே –
திவ்ய ஆயுதங்கள் கொண்டு வெளி விரோதிகளைப் போக்கி அருளுவான்
பாபா நாசனை பங்கயம் தடம் கண்ணனை பரவுமினோ -3-6-2-

தம்மைக் கீர்த்தனம் பூஜை தியானம் செய்வதனாலும் நினைப்பதனாலும் பாவங்களைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

பாவங்களைப் போக்குபவர் -பாப காரியங்களைச் செய்யும் அசுரர்களை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் —

————

சங்க ப்ருத் நந்தகீ சக்ரீ சார்ங்க தன்வா கதாதர
ரதாங்க பாணி ரஷோப்யஸ் ஸர்வ ப்ரஹரணாயுத –108-

திவ்ய ஆயுதங்கள் திவ்ய ஆபரணங்களுமாகுமே
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் யார் தம் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் –மற்று இல்லை -8-3-3.
சக்ரம் -மனஸ்த்வம் நின்றவா நில்லா நெஞ்சு -வாயு வேகம் மனோ வேகம் –
சங்கம் தாமச அஹங்காரம் –பஞ்ச பூதமாக மாறும் முன் தன்மாத்ரை -சப்தம் தானே முதலில் –
ஆகாசமாக மாறுவதற்கு முன்பே-சங்க நாதமே பிரணவம் அன்றோ
கதா –புத்தி தத்வம் –மனஸ் போலே சஞ்சரிக்காமல் நிச்சயமாக அன்றோ புத்தி
சார்ங்கம் –சாத்விக அஹங்காரம் –கர்ம ஞான பஞ்ச இந்திரியங்கள் -இவற்றைக் கட்டுப்படுத்தவே சார்ங்கம்
நந்தகி -ப்ரஹ்ம வித்யா ஸ்வரூபம் –அருள் என்னும் ஒள் வாள் கொண்டே பிரதிபந்தகங்களைப் போக்கி அருளுவான்

அழகுக்கும் ஆபரணமாகவும் ரக்ஷணத்துக்காகவும் அடையாளத்துக்காகவும் –
பஞ்சாயுதங்களைச் சொல்லி
சங்கம் முதலில் -சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
கருதும் இடம் பொருதும் இடம் -கொஞ்சம் பிரிய வேண்டுமே
சங்கரய்யா உன் செல்வம் சாலச் சிறந்ததுவே
உண்பது சொல்லில் வாய் அமுதம்

————–

993-சங்க ப்ருத்-
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் -8-9-3-

பரம ஐஶ்வர்ய சிந்ஹ தி₃வ்யாயுத₄த்வாத்
சங்க ₂ப்₄ருத்;
ஸ்வாத₄ர வித்₃ரும ஸுத₄ யா பாஞ்ச ஜந்யம் புஷ்ணா தீதி ॥
பாஞ்ச ஜன்யம் ஹ்ருஷீகேச –சகோஷோதார்த் தராஷ்ட்ரானாம் ஹ்ருதயானி வயாதாரயத்-ஸ்ரீ கீதை
கூராழி வெண் சங்கேந்தி கொடியேன் பால் வாராய் -6-9-1-
தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரம் -பெரியாழ்வார்
உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே -நாச் திரு மொழி -7-8-
சங்கரையா உன் செல்வம் சால அழகியதே -நாச் திரு -7-7-

படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்சஜன்யத்துக்கும் பல்லாண்டு -ரக்ஷணம்
ஏந்தும் -அழகு
திரு வண் வண்டூர் உறையும் பெருமானுக்கு -செரு ஒண் சக்கரம் சங்கு ஏந்தும் தடக்கையன் -அடையாளம்
தமஸ பரமோ தாதா ஸங்க ஸக்ர கதா தர-வியக்தம் -ராமனிடம் சங்கு சக்கரம் காட்டக் கண்டாள் –முதலில் சங்கு 
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் சங்கு சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு-

கையினார் சுரி சங்கு அனல் ஆழியார் இத்யாதி -திருப்பாணாழ்வாரும் காட்டவே கண்டார்-முதலில் சங்கு

தமக்கே சிறந்த அடையாளமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்னும் ஸ்ரீ சக்கரத் தாழ்வானை தம் திருப் பவளத்தின்
அமுதத்தினால் போஷிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அஹங்கார ரூபமாகிய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்னும் ஸ்ரீ சங்கத்தை தரிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்னும் ஸ்ரீ சங்கத்தை அல்லது ஸ்ரீ சங்க நிதி எனப்படும் நிதியை தரிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

994-நந்தகீ –
அறநெறி நந்தக வாளே பெரியாழ்வார் திருமொழி – 5-2-9-
நந்தன -மகிழ்விப்பவன்-

பகவானால் கூட இத்தைப் பார்த்து ஆனந்தம் தர பிரார்த்திக்கும் படி-உடை வாள் ஸர்வேஸ்வர -சிஹ்நம் –விட்டுப் பிரியாதே–சங்கு போல்
கூரத்தாழ்வான் சம்பந்தத்தால் தனக்கும் பேறு –சோயம் ராமானுஜ  -போல் இங்கும்

அபி ப₄க₃வதாபி மாம் அயம் நந்த்₃ யாதி₃தி ப்ரார்த்₂யோ நந்த₃க
* ஆஶிஷி ச, இதி வுன் ।
ஸோ (அ)ஸ்ய நித்ய யோகீ₃தி
நந்த₃கீ ॥

என்னை இது மகிழ்விக்க வேண்டும் என்று தாமும் விரும்பும் ஸ்ரீ நந்தகம் என்னும் திரு வாளுடன்
எப்போதும் சேர்ந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கண் த்ருஷ்டிக்காக -சங்கு -சக்ரீ இடையில் நாந்தகம் என்கிறார் ஸ்ரீ பீஷ்மர்

வித்யா ரூபமாகிய ஸ்ரீ நந்தகம் என்னும் திரு வாளை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ நந்தகம் என்னும் திரு வாளை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

995-சக்ரீ-
கை கழலா நேமியான் -பெரிய திருவந்தாதி-908 கீழ் பார்த்தோம்

நித்ய ஸுத₃ர்ஸந꞉ ஸ்வ ப்₄ருத்ய ஸுர ப்ரதி ப₄ட ரஷோ (அ)ஸுர ஸோணித  கல் மாஷித ஜ்வாலாஶ்சிதம் சக்ரமபி ததை வேதி
சக்ரீ ॥
ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து-தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் -மூன்றையும் ஆண்டாள்
தடவரைத் தோள் சக்கர பாணி -பெரியாழ்வார் -5-4-4-

ஸூதர்சன–அழகிய தர்சனம் -அழகான மார்க்கம் காட்டுபவர்–ஜ்வாலா நேமி அரம் கும்பம் புருஷன்

ஸூதர்சன சதகம் கூர நாராயண ஜீயர் -இன்றும் லோக ஷேம அர்த்தமாக நித்யம் பாராயணம் ஸ்ரீ ரெங்கத்தில் உண்டே

மத்வர் ஐந்து ஆயுத பொறிகள் வருஷம் தோறும் -வைத்துக் கொள்கிறார்கள் -ஹரி தாஸர்கள்

சங்க சக்கர லாஞ்சனம் -முதலில் சங்கு இங்கும்
தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திருச் சக்கரத்தின் கோயில் பொறியாலே -சங்கம் இதில் இல்லையே

அழகு ஆபரணம் அடையாளம் -விரோதி நிரஸனம் ஆச்வாஸ கரம் அனைத்தும்

தம் அடியவர்களான தேவர்களுக்கு விரோதிகளான அசூர ராஷசர்களைக் கொன்று அவர்கள் ரத்தத்தினால் சிவந்த
ஜ்வாலையோடு கூடிய ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வாரை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மனஸ் தத்த்வமாகிய ஸ்ரீ ஸூ தர்சனம் உடையவர் -அல்லது சம்சார சக்கரமானது தம் ஆணையினால் சுழலும்படி செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ ராம -ஸ்ரீ கிருஷ்ண திருவவதாரங்களில் சேனைச் சக்கரத்தை -கூட்டத்தை பெற்று இருந்தவர் -ஸ்ரீ ஸூதர்சனம் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

996-ஸார்ங்க தந்வா –
சர வர்ஷம் வவர்ஷஹா
சார்ங்கம் உதைத்த சர மழை–கோதண்ட மண்டிதரா

ஸார்ங்க₃ம் ச விஷ்பா₂ரித ஜ்யா கோஷ (நாண் ஒலி )ஸர வர்ஷ நாஶித அசேஷ வித்₃வேஷி வார்தம்
ஸ்வ ஸத்₃ருஸம் த₄நுரஸ்யேதி
ஸார்ங்க ₃த₄ந்வா ॥
சார்ங்க வில் சேவகனே–பெரியாழ்வார் -5-4-4-

உறுக்கெட வாளி பொழிந்த
வில்லாண்டான் -போதும் என்று தடுக்கவே ஆள்வது

வஜ்ரம் போல் பெருமாள் அம்பு -கனல் அக்னி போல் தைக்கும்
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்த -சாகரம் சோக்ஷயிஷ்யாமி-பயமுறுத்தவே சமுத்திர ராஜன் பணிந்து வந்தான்
ஸசைல கந்தர்வ மனுஷ்ய -வில்லின் நுனியால் அனைத்தையும் திரும்புவேன் சீதாபிராட்டி இன்று கிடைக்காவிடில்
தனுஷ்கோடி -பெரிய நீர் படைத்து கடைந்து அது அடைத்து உடைத்து
ஜனக்புரி -ஸீதா கல்யாணத்தில் உடைத்த வில்லின் ஒரு கோடி அங்கும் இங்கும் -ஒரு பகுதி இங்கும் அங்கும் நேபாளில் சொல்வார் தொடர்பு விடாமல் இருக்க-

சொல்லினால் சுடுவேன் அது தூய அவன் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்பதால் மாட்டேன்
பிரணவம் தநுர் -ஓங்காரம் வில் ப்ரஹ்மம் லஷ்யம் -ஆத்ம ஸமர்ப்பணம்–ஓம் இத் ஆத்மாநாம் யூஞ்சீத

நாண் ஓசையினாலும் சரமாரி பொழிவதனாலும் பகைவர்கள் என்னும் பெயரையே ஒழிக்கும்-
தமக்கு தகுதியான ஸ்ரீ சார்ங்கம் என்னும் திரு வில்லை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

இந்திரியங்களுக்கு காரணமாகிய சாத்விக அஹங்காரத்தின் வடிவாகிய ஸ்ரீ சார்ங்கம் என்னும் திரு வில்லை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ சார்ங்கம் என்னும் திரு வில்லை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

997-கதாதர
கௌமோதகி-ஆனந்தம் கொடுக்கும் -அடியார் பிரதிபந்தம் போக்குவதால்

இத்துடன் பஞ்சாயுதங்களையும் சொன்னபடி-சிலை இலங்கு –என்கின்றாளால்

க₃தா₃தி₄பத்நீம் ச ஸர்வதஸ் ஸமுத்₃வாந்த கல்பாந்த  அநலஸ் பு₂லிங்கி₃நீம் (பொறிகளைச்)நித்ய ஸம்மோதி₃நீம் கௌமோதகீம் தா₄ரயதீதி
க ₃தா₃த₄ர꞉ ॥
அழகிய சார்ங்கமே தண்டே -பெரியாழ்வார் -5-2-9-
குனி சாரங்கன் ஒண் கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-

பிரளய கால அக்னி போலே நான்கு புறமும் பொறிகளைச் சிதறிப் பகைவர்களை அழித்து உலகை மகிழ்விப்பதனால்
ஸ்ரீ கௌமோதகீ என்ற பெயருடைய திருக் கதையை ய்டையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

புத்தி தத்வ ரூபமாகிய ஸ்ரீ கௌமோதகீ என்னும் திருக் கதையை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ கௌமோதகீ என்னும் திருக் கதையைத் தரித்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————

998-ரதாங்க பாணி –தேர் சக்கரம் கையில் ஏந்தியவர் –உத்யோகம் -பிரயோக சக்கரம் என்பதால் புனர் யுக்தி இல்லை -கீழ் –யநேந ஸ்வ ஸ்வாமி பா₄வ ஸம்ப₃ந்த₄ உக்த

யதோ ₂சிதம் ரதா₂ங்க₃ம் ச பாணா வஸ்யேதி
ரதா₂ங்க ₃பாணி꞉ ।
சக்ரீத் யநேந ஸ்வ ஸ்வாமி பா₄வ ஸம்ப₃ந்த₄ உக்த꞉, அத்₃ய ஸதா உத்₃யதத்வ மித்ய புநருக்தி꞉ ॥
கால சக்கரத்தாய் கடலிடம் கொண்ட கடல் வண்ணனே கண்ணா -7-2-7-
சக்ரீ -ஸ்ரீ சக்கரத் ஆழ்வாரை உடையவன்
இது கை கழலா நேமியான் -பெரிய திருவந்தாதி -87-

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -பூ போல் -எங்கும் சக்ரீ
தொட்ட படை எட்டும் -கீழ் சங்கு சக்ர =இங்கு முதலை துஞ்ச குறித்து எறிந்த சக்கரத்தான் -ரதாங்க பாணி

ஸ்ரீ சக்ராயுதத்தை கையிலே உடையவர் -சக்ரீ என்பதனால் ஸ்வாமி சொத்து சம்பந்தம் சொல்லி -இங்கு எப்போதும்
திருச் சக்கரம் என்று இருப்பை கூறப்படுவதால் புநர் உக்தி தோஷம் இல்லை -ஸ்ரீ பராசர பட்டர் –

தேரோட்டியே — தேர் பாகு -கொண்டே விஜயசாரதி ஆனான் என்றுமாம்

கால சக்கரம் ஜகத் சக்கரம் கர்ம சக்கரம் என்றும் கொள்ளலாம்

கை கழலா நேமியான் -சாது ரக்ஷணம் -பிரபஷ நிரசனம் -கருதும் இடம் பொருதும் என்பதால் மீண்டும் இந்தத் திரு நாமம்

ரதாங்கம் என்னும் திருச் சக்கரத்தைக் கையில் யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

ரதாங்கம் எனப்படும் திருச் சக்ராயுதத்தைக் கையிலே யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

999-அஷோப்ய
அசைக்க முடியாதவன்

ப்ரபந்ந   அப₄ய தா₃ந தா₃ர்ட்₃ யா  த்வஸ் மஹிம்நா(அ)பி
அஷோப்₄ய ꞉ ॥
ப்ரபன்னாயா அபயம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் விரதம் மம-உறுதியான வ்ரதம் கொண்டவன்
தேசுடைய தேவனார் திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே -நாச் திரு -11-5-
முன்பே 807 பார்த்தோம்

சீதையை விட்டாலும் லஷ்மணனை விட்டாலும் உயிரை விட்டாலும் விட ஒண்ணாத விரதம் மம–திட விரதன் -ஊற்றம் உடையாய்–இவர் மஹிமை தோற்றாலும் கொடுத்த வார்த்தையை மீட்ட முடியாதவன் -பெருக்கவும் பேராதே

சரணம் அடைந்தவர்க்கு அபயம் கொடுப்பது என்ற உறுதியான விரதத்தில் இருந்து எப்போதும் அசைக்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

இந்தச் சக்ராயுத உடைமையினால் யாராலும் கலக்க முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –

கலக்க -துன்புறுத்த -முடியாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

1000-சர்வ ப்ரஹரணாத் யுத–சர்வ ப்ரஹரண சர்வ ஆயுத
எண்ணற்ற திவ்ய ஆயுதங்கள்
அங்குல்யக்ரேண தான் ஹன்யாம் இச்சன் ஹரி கணேஸ்வர
காகாசுரனை புல்லாலே
ஆஸ்ரித சம்ரஷணம் தீர்க்க சத்ரம் நீண்ட யாகம்
திவ்ய ஆயுத ஆழ்வார்கள் ரஷண தீஷை கொண்டவர்கள்

அனைத்து தீமைகளையும் அளிக்க வல்ல அனைத்து ஆயுதங்கள் –
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் -தீர்க்க சத்ர யோகம் போல் -எப்பொழுதும் அனைவருக்கும் எல்லா விதத்தாலும்
உகிர் -தர்ப்பை -சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக்கையன்

ஸ்வ நிஷ்டா₂நாம் ஸர்வ  அநிஷ்ட உந்மூலயித்ருண்ய  அஸங்க்₂யேய அந்ய  அமர்யாத₃ ஸாமர்த்₂யாந்-
யாத்ம உசித அந்ய அநந்தாந் யாப₄ரண விகல்ப் யாநி(ஆயுதமா ஆபரணமா விகற்பம் செய்யும் படி )
ஸதா₃ ஸர்வத்ர ஸர்வதா₂ ஸர்வ ப்ரகார(எப்போதும் எங்கும் எல்லாப் படிகளாலும் எல்லா வழிகளாலும் )
ஸமாஶ்ரித ஸம்ரக்ஷா  தீ₃ர்க ₄ஸத்ர தீ₃க்ஷிதாநி ஸர்வ ஐஶ்வர்ய து₄ரந்த₄ராண்ய யந்யாந் யாபி
தி₃வ் யாயுதா₄ந்யஸ்யேதி
ஸர்வ ப்ரஹரணாயுத₄꞉ ।

வடபத்ரசாயி -கர்ப்ப க்ருஹத்துக்கு திருப்பாற் கடல் என்று பெயர் –
அங்கும் பஞ்சாயுத தேவர்கள் துரந்தர்கள் -ரூபத்தில் சேவை உண்டு

ஏவம் அசேஷ தோஷ ₃ ப்ரத்யர் யுபாதி₄ ஸங்க்₂யா  அவதி₄ விரோதி₄   துங்க ₃ மங்க₃ல ஸ்வரூப ரூப
கு₃ண விப₄வ சேஷ்டிதம் அநங்குஸ ஐஶ்வர்ய ஸௌஶீல்யம் ஆபத் ஸக ₂ம் அர்தி₂ கல்பகம்
ப்ரபந்ந ஏக ஜீவாதும் ஶ்ரிய ꞉பதிம் ப₄க₃வந்தம் புருஷோத்தமம் ஆஶ்ரிதாநாம் ஆஶ்சர்ய ꞉
ஸர்வ ஸம்பத் ஸமுதா₃ ꞉ய ॥

தம் அடியவர்களுக்கு எல்லா அநிஷ்டங்களையும் வேரோடு களையத் தக்கனவும் -அளவற்ற சக்தி உள்ளனவும் –
தமக்குத் தக்க திவ்ய ஆபரணம் என்று நினைக்கத் தக்கனவும்-அடியவர்களைக் காப்பதாகிய யாகத்தில் தீஷை பெற்றுக் கொண்ட
தமது பாரத்தை வகிக்கும் எண்ணிறந்த திவ்ய ஆயுதங்களை யுடையவர் –
இந்த தோஷங்களுக்கு எல்லாம் எதிர் தட்டாய் உபாதி எண்ணிக்கை எல்லை இவைகளைக் கடந்தவைகளாய்
மிகவும் உயர்ந்த மங்களமாய் விளங்கும் ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் சேஷ்டிதம் –அநங்குஸ-தடையற்ற செல்வங்கள் சௌசீல்யம் இவற்றை உடையவராய் –
பிரார்த்திப்பவர்களுக்கு கற்பகம் போன்றவராய்-சரணாகதி அடைந்தவர்களுக்கு ஜீவாதுவாய் திருமகள் கேள்வனாய்
பகவானான புருஷோத்தமனை அடைந்தவர்களுக்கு எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்(அவனே மிகப்பெரிய செல்வம் -வைத்த மா நிதி )–ஸ்ரீ பராசர பட்டர் –

அவன் சீர் வல்ல வாரியை வாய் மடுத்து இன்று உண்டு கொண்டேன் -விஸ்வம் தொடங்கி இது வரை -ஆச்சர்யம் என்று சொல்லும்படி அன்றோ உள்ளன

கஞ்சன் வயிற்றில் நெருப்பாய் நின்ற நெடுமால்
காகாசுரனுக்கு தர்ப்பையே ப்ரஹ்மாஸ்திரம் -ஹிரண்யனுக்கு திரு உகிரே திவ்யாயுதம் -நித்ய ஸூரிகளே திவ்யாயுதங்கள்
காக்கும் இயல்பினன் கண்ணபிரான் — செய்து தன் உந்தி உள்ளே வாய்த்த திசைமுகன் இந்திரன்
வானவர் ஆக்கினான் தெய்வ வுலகுகளே -2-2-9-
பரித்ராணாயாய சாதூனாம் -முதலிலே -சேர்க்கை செய்து அடுத்து -ஆக்குவது அடுத்து
அசுரர்களை நீராகும் படியாக நிருமித்து படை தொட்ட -4-8-1-நிருமித்த பின்பு படை தொட்டான் -ஸத்ய ஸங்கல்பன் அன்றோ

இவை மட்டும் இன்றி மற்றும் பலவிதமான திவ்ய ஆயுதங்களை யுடையவர் –
திவ்ய ஆயுதங்களாக நினைக்கப் படாத திரு நகம் முதலியவையும் ஸ்ரீ நரசிம்ஹ திரு வவதாரத்தில் திவ்ய ஆயுதங்கள் ஆயின –
முடிவில் சர்வ ப்ரஹரணா யூதர் ஏற்றது சத்யா சங்கல்பர் ஆதலின் இவர் சர்வேஸ்வரர் என்பதைக் காட்டுகிறது -ஸ்ரீ சங்கரர் –

எல்லா விரோதிகளையும் அழிப்பதற்கு திவ்ய ஆயுதங்களை யுடையவர் -எண்ணிக்கையில் ஆயிரம் என்று கூறப்பட்டாலும்
அதிகமான திரு நாமங்கள் உள்ளன –
அனுஜ்ஞா ஸூத்ரத்தில் சததாஹம் சஹாஸ்ரதாஹம் அதிகமான ருக்குகள் இருப்பது போலே –ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

சர்வ ப்ரஹரணாத் யுத ஓம் நம இதி
தொழுதல் தபஸ் தானம்

அத்யாயம் பூர்த்தி -சாற்று முறை இரண்டு முறை போல் திரும்பவும் சொல்லி பிரபந்தம் பூர்த்தி
ஓம் தத் ஸத் மங்கள கரம்
ஒரு நமஸ்காரம் பத்து அஸ்வமேதங்கள் செய்த பலன் கொடுக்கும்-

———————————————————

இப்படியாக ஹாரீத குலத்துக்குத் திலகம் போன்ற ஸ்ரீ வத்சாங்கர் -என்னும் கூரத்தாழ்வானின் திருக்குமாரரும்
ஸ்ரீ பெரிய பெருமாள் திவ்ய ஆஜ்ஜையாலே ஸ்ரீ பராசர பட்டர் என்ற திரு நாமம் சாற்றப் பெற்றவருமான
ஸ்ரீ ரெங்க நாதன் என்னும் இயல் பெயர் கொண்டவர்
அருளிச் செய்த பகவத் குண தர்ப்பணம் என்னும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யத்தில்
பத்தாம்   நூறு திரு நாமங்கள் வியாக்யானம் ஸம் பூர்ணம்

பத்தாம்   சதகம் முடிந்தது-

——————-

ஸ்ரீ அவதாரத்துக்கும் திரு விளையாடல்களுக்கும் பயன் –

946-ஜனன -அறிவு மழுங்கிய ஜீவர்களுக்கும் தன்னை அடைவதற்கு தகுந்த உடலைக் கொடுத்துப் பிறப்பித்தவர் –
947-ஜன ஜென்மாதி -மக்களின் பிறவிக்கு தானே பயனாக இருப்பவர் -பெருமானை அடைவதே பிறவிப்பயன் –
948-பீம-இப்படிப்பட்ட அருளை விரும்பாதவர்களை நரகம் முதலான துன்பங்களால் பயப்படுத்துபவர் –
949-பீம பராக்கிரம -உலகிற்கு தீங்கு செய்யும் அசூரர்களுக்கு அச்சம் தரும் பேராற்றல் உடையவர் –
950-ஆதார நிலைய -தர்மத்தால் உலகைத் தாங்கும் ப்ரஹ்லாதன் போன்ற சாதுக்களுக்கு ஆதரமானவர் –

951-தாதா-தானே தர்மத்தை உபதேசிக்கும் ஆசார்யனாகவும் அதைக் கடைப்பிடிக்கும் முன்னோடியாகவும் இருப்பவர் –
952-புஷ்ப ஹாச -தன்னை அனுபவிக்கும் திறன் உள்ளவர்களுக்கு மாலைப் பூவைப் போலே மலர்ந்து இருப்பவர்-
953-ப்ரஜாகர -உழவன் பயிரைக் காப்பது போலே உறங்காமல் இரவும் பகலும் அடியார்களைக் காப்பவன் –
954-ஊர்த்வக -தாழ்ந்தோரைக் காக்க இவர் விழித்து இருக்க வேண்டுமோ -இவரே அனைவரையும் விட உயர்ந்தவர் –
ஆகையால் கடமை உணர்வோடு விழித்து இருக்கிறார்
955- சத்பதா சார -தொண்டு புரியும் நல் வழியில் பக்தர்களை ஈடுபடுத்துபவர் -‘
956-பிராணத-உலக இன்பம் எனும் விஷத்தால் தீண்டப் பட்டவர்களுக்கு உயிர் கொடுப்பவர் –
957-பிரணவ -தனக்கும் ஆத்மாக்களுக்கும் உள்ள உறவை பிரணவத்தால் ஓங்காரத்தால் அறிவிப்பவர் –
958-பண -தான் தலைவனாக ஜீவன் தொண்டனாக இருக்கும் நிலையை பேர் அன்பு வயப்பட்டு மாற்றி தானே
பக்தர்களுக்குத் தொண்டனாக இருந்து கொடுக்கல் வாங்கல் செய்பவர் –
959-பிரமாணம் -உண்மையான அறிவைக் கொடுக்கும் கருவியே பிரமாணம் வேத பிரமாணத்தின் மூலம்
ஐயம் இல்லாத அறிவை அளிப்பவர் –
960-பிராண நிலய-பறவைகளுக்கு சரணாலயம் போலே அனைத்து ஆத்மாக்களுக்கும் இருப்பிடம் –

961-பிராண த்ருத்-அந்த ஜீவர்களைத் தாய் போலே தாங்கிப் பேணுபவர்
962-பிராண ஜீவன -ஆத்மாக்களை உணவும் தண்ணீரும் போலே இருந்து வளர்ப்பவர்
963-தத்வம் -தயிரில் வெண்ணெய் போலே சித்துக்கள் அசித்துக்கள் இவற்றின் சாரமாக இருப்பவர்
964-தத்வவித் -தம்மைப் பற்றிய உண்மையை தாமே அறிந்து இருப்பவர் –
965-ஏகாத்மா -உலகில் ஒரே ஆத்மாவே இருப்பவர் -அதாவது இவர் ஒருவரே உலகுக்கு தலைவராயும்
அனுபவிப்பவராகவும் நன்மையே விரும்புபவராகவும் உள்ளார் –
966-ஜன்ம ம்ருத்யு ஜராதிக -ஆயினும் பிறப்பு இறப்பு மூப்புகளின் சூழலைக் கடந்தவர் –
967-பூர்ப்புவஸ்வஸ் தரு -பூ புவ ஸூ வ -ஆகிய மூ உலகங்களில் உள்ளோர் –
968-தார -அவர்களை சம்சாரக் கடலைத் தாண்டுவிப்பவர் -கப்பல் போன்றவர் –
969-சவிதா -அனைவரையும் தந்தையைப் போலே பராமரிப்பவர் –
970-ப்ரபிதாமஹா -அனைவருக்கு பாட்டனராக புகழ் பெற்ற நான்முகனுக்கே தந்தை

———————————————————————–

வேள்வியும் பயனும் –

971-யஜ்ஞ-பொருளைக் கொண்டு யஜ்ஞம் செய்ய ஆற்றல் இல்லாதவர்களுக்கு ஜப யஜ்ஞமாய் இருப்பவர் –
972-யஜ்ஞ பதி -யஜ்ஞத்துக்கு பலனைக் கொடுப்பவர் –
973-யஜ்வா -ஆற்றல் இல்லாதவர்களுக்காக தானே எஜமானனாக இருந்து யாகம் செய்பவர் –
974-யஜ்ஞாங்க -சக்தி உள்ளவர்கள் செய்யும் யாகங்களும் தனக்கு கீழ்ப் பட்டு இருக்கும் படிச் செய்பவர் –
975-யஜ்ஞ வாஹன -யாகம் செய்ய இன்றியமையாதவன திறல் ஈடுபாடு தகுதி யாகியவற்றை கொடுத்து யாகத்தை நடத்துபவர் –
976-யஜ்ஞப்ருத்-யாகத்தில் குறைகள் இருந்தாலும் தம்மை நினைத்துச் செய்யப்படும் பூர்ண ஆஹூதியால் அதை முழுமை அடையச் செய்பவர் –
977-யஜ்ஞக்ருத் -உலக நன்மைக்காக சிருஷ்டி தொடங்கும் போது யாகத்தைப் படைத்தவர் –
978-யஜ்ஞீ -அனைத்து யாகங்களும் இவரைக் குறித்தே செய்யப் படுகிற படியால் யாகங்களுக்கு ஸ்வாமி –
979-யஜ்ஞபுக் -யஜ்ஞத்தில் கொடுக்கப் படும் ஆஹூதியை அனுபவிப்பவர் -அல்லது யஜ்ஞத்தைக் காப்பவர் –
980-யஜ்ஞ சாதன -பெருமானே அடையத் தகுந்தவர் என்னும் அறிவே யஜ்ஞத்தைத் தூண்டும் கோலாக உள்ளவர் –
981-யஜ்ஞாந்தக்ருத் -யாகத்தின் முடிவான பயன் –பெருமானை அடைவதே சிறந்த பயன் -என்றும் அறிவு -இந்த அறிவைப் புகட்டுமவர் –
982-யஜ்ஞகுஹ்யம் -யாகத்தின் ரஹச்யமாகவும் இருப்பவர் -பூரணரான பகவான் யாகத்தில் கொடுக்கப்படும் பொருட்களை
எதிர்பார்த்து ஏற்று திருப்தி அடைவது போல் நடிக்கிறார் என்னும் ரஹச்யத்தை மெய்யன்பர்களே அறிவார்கள் –

————————————————————————————

ஸ்ரீ தேவகீ நந்தன் –

983-அன்னம்-அவன் அருள் பெற்ற மெய்யன்பர்களாலே அன்னத்தைப் போலே -உணவைப் போலே -அனுபவிக்கப் படுபவர் –
984-அந்நாத-தம்மை அனுபவிப்பவர்களை தாம் அனுபவிப்பவர் –
985-ஆத்ம யோநி-சர்க்கரையும் பாலும் கலப்பது போலே தன்னை அனுபவிப்பவர்களை தம்மிடம் சேர்ப்பவர் –
986-ஸ்வயம் ஜாத-யாருடைய வேண்டுதலும் இல்லாமல் தன் இச்சைப்படி பூ உலகில் பிறப்பவர் –
987-வைகான -அவதரித்து தன் அடியார்களின் துன்பத்தை போக்குபவர்
988-சாம காயன-முக்தி அடைந்தவர்களால் வைகுந்தத்தில் சாம வேதம் கொண்டு பாடப்படுபவர் –
989-தேவகீ நந்தன -மேல் சொன்ன பெருமைகள் எல்லாம் வைகுண்ட நாதனுக்கு மட்டும் அல்ல -தேவகியின் மைந்தனதே –
990-ஸ்ரஷ்டா -கண்ணனே பிரபஞ்சத்தைப் படைப்பவர் –
991-ஷிதிச -பூமிக்குத் தலைவர் -இவர் அனைத்துக்கும் தலைவரானாலும் பூமியின் சுமையைக் குறைக்கவே
ஸ்ரீ கண்ணனாகப் பிறந்த படியால் பூமிக்கே தலைவர் –
992-பாப நாசன -தயிர் வெண்ணெய் திருடியது ராசக்ரீடை முதலான கதை யமுதத்தைக் கேட்பர்களின் பாபத்தை ஒழிப்பவர் –

———————————————————-

திவ்ய ஆயுதமே திவ்ய ஆபரணம் -கண்ணுள் நின்று அகலாத திரு உருவம் –

993-சங்கப்ருத்-பர ப்ரஹ்ம லஷணமான சங்கத்தைக் கையிலே ஏந்தியவர் -தன் வாய் அமுதைக் கொடுத்து அத்தை பேணுபவர் –
994-நந்தகீ -தனக்கு மகிழ்ச்சியூட்டும் நந்தகம் என்னும் வாளை ஏந்தியவர் –
995-சக்ரீ -தன் அடியார்களான தேவர்களின் பகைவர்களை அழிக்கும் ஸூ தர்சன சக்கரத்தை தாங்குபவர் –
996-சாரங்க தன்வா -நாண் ஒலியால் உலகை நடுங்கச் செய்யும் சார்ங்கம் என்னும் வில்லைப் பிடித்தவர் –
997-கதா தர -ஊழிக் காலத்தைப் போலே நெருப்பைக் கக்கி பகைவர்களை அழித்து அடியார்களுக்கு
இன்பம் கொடுக்கும் கௌமோதகீ என்னும் கதையை ஏந்துபவர் –
998-ரதாங்க பாணி -தேரின் ஒரு பகுதி போலே இருக்கும் சக்கர ஆயுதத்தை தயார் நிலையில் பிடித்து இருப்பவர் –
999-அஷோப்ய -தன்னிடம் சரணா கதி செய்தவர்களுக்கு அபயம் கொடுப்பதாகிய உறுதியில் இருந்து அசைக்க முடியாதவர் –
1000-சர்வ ப்ரஹரணாயுதி-அடியார்களின் துன்பம் போக்கி இன்பம் கொடுக்கும் எண்ணிறந்த
திவ்ய ஆபரணங்களுக்கு ஒப்பான திவ்ய ஆயுதங்களை தரித்தவர்

————————————

வநமாலீ கதி சார்ங்கி சங்கீ சக்ரீ ச நந்தகீ
ஸ்ரீ மான் நாராயணோ விஷ்ணு வாஸூ தேவோபி ரஷது

“வனமாலீ  கதீ  சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ, ஸ்ரீமான் நாராயணோ  விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது.”என்ற ஆதிசங்கரரின் ஸ்லோகம்
இங்கு ஆதிசங்கரர் விஷ்ணுவின் வியாபக நாமங்களான நாராயண, விஷ்ணு மற்றும்  வாசுதேவ என்ற மூன்றையும் குறிப்பிட்டு உள்ளார்.
‘வனமாலி என்ற மாலையை அணிந்து–வனமாலா விராஜிதனாய் இருந்து அனுபவம் கொடுத்து ரக்ஷிக்கட்டும் –
கௌமோதகி என்னும் கதை,
பாஞ்சசன்னியம் என்னும் சங்கு,
சுதர்சன என்னும் சக்கரம்,
சார்ங்கம் என்னும் வில்,
நந்தகம் என்னும் வாள்
ஆகியவற்றுடன் விளங்கும் நாராயண, விஷ்ணு, வாசுதேவன் என்ற நாமங்களைக் கொண்ட
தேவ -விளையாட்டாகச் செய்து திருமால் –அபி ரஷது-என்னைக் காக்க வேண்டும்’ என்பது இதன் பொருள்.

————–

பல ஸ்ருதி

நான்கு வித அதிகாரிகள்
1-பலம் எதிர்பாராமல் சொல்பவர்கள் ஸ்வயம் பிரயோஜனம் -பக்தியில் முற்றாதவர்
2-குறிப்பிட்ட பலத்துக்காக சொல்பவர்கள்
3-ஜபம் பண்ணுபவர்க்காக
4-பக்தி முற்றி ஸ்வயம் பிரயோஜனமாக ஸ்தோத்ரம் பண்ணுபவர்கள்

யதிதம் கீர்த்த நஸ்ய கேசவஸ்ய மஹாத்மந
நாம் நாம் சஹஸ்ரம் திவ்யானாம் அசேஷண ப்ரகீர்த்திதம்

கீர்த்த நஸ்ய –இன்று முதல் நித்யம் கீர்த்தனம் செய்ய வேண்டும்
கேசவஸ்ய மஹாத்மந –செய்ய வேண்டிய காரணம் சொல்லிற்று
திவ்யானாம் -முக்தர்களாலும் கீர்த்தனம்
அசேஷண -இனி அறிய வேண்டுவது வேறு ஒன்றும் இல்லை

கீர்த்த நஸ்ய –என்பதன் மூலம்
இன்று முதல் நீ பகவானைக் கீர்த்தனம் செய்ய வேண்டும் என்பதும்
கேஸ வஸ்ய மஹாத்மந-என்பதால்
கீர்த்தனம் செய்ய வேண்டியதன் காரணம் என்பதும்
திவ்யா நாம்-என்பதன் மூலம்
முக்தர்களால் பரமபதத்தில் கீர்த்தனம் செய்யப்பட வேண்டும் என்பதையும்
அசேஷேண-என்பதால்
இனி உனக்கு அறிய வேண்டுவது வேறே ஒன்றும் இல்லை என்பதுவும் கூறப்பட்டன

அத₂ அஸ்ய நாம ஸஹஸ்ரஸ்ய கௌரவம் க்₃ராஹயன் ஸாந்தநவ꞉ கௌந்தேய மாஹ
இதீத₃ம்(பேர் ஆயிரத்துக்கு பீடுடைமை சொல்லப்படுகிறது )
இதி । யதே ₃தத் கீர்தநம் ப₄க₃வந் மஹிம்நி, அத்₃ய ப்ரப்₄ருதி ப₄க₃வான் கீர்தநாரம்ப₄ மர்ஹதீத்
யுக்தம்
கீர்தநீயஸ்யேதி ।
அத்ர காரணம்
கேஸவஸ்ய மஹாத்மந இதி ।
நாம்நாம் ப்ராக்ருத பரம பத₃ வ்யவஹார யோக்₃யத்வமாஹ
தி₃வ்யாநாமிதி ।(ஸ்ரீ வைகுண்டத்திலும் கீர்த்தனம் உண்டு)
த்வ கௌரவாத் கிஞ்சித₃பி
ஜ்ஞாதவ்யம் ந ஹாபித மித்யாஹ
அஸேஷேணேதி ॥

—————-

அவதாரிகை
அடுத்து அதிகாரி யார் என்பதும்
பயனும் அங்கமும் கூறப்படுகின்றன

யதிதம் ஶ்ருணுயாந் நித்யம் யச்சாபி பரிகீர்த்தயேத்
ந சுபம் ப்ராப்னுயாத் கிஞ்சித் சோமுத்ரேஹ ச மாநவ –இங்கும் அங்கும் உள்ள அசுபங்கள் நீங்கி விடும்

அத₂  அதி₄காரி   ப₂ல அங்க ₃நிர்ணய ꞉ । ய இத₃ம்
ஶ்ருணு யாதி₃த் யாதி₃ ।
யதா₂அதி₄காரம் ஶ்ரவண மநநயோ ꞉ (கேட்டும் மனனம் பண்ணியும் -)ஸாமாந்யேந  உப₄ய லோக அஸூப விரோதித்வம் தாவத்ப₂ல முக்தம் ॥

காதுகனுக்கும் அம்மே என்று சொல்ல ப்ராப்தி போல் -இதுக்கு யோக்யதை சம்பாதிக்க வேண்டாம் -இது தானே யோக்யதை அருளும்
பலமும் சொல்லி ஆசையை மூட்டுகிறார்

இந்த ஸஹஸ்ர நாமத்தை எப்போதும் கேட்டபடி உள்ளவனும்
கீர்த்தனம் செய்தபடி உள்ளவனும்
பர லோகம் மற்றும் இந்தப் பூமியில் சிறிதும் கெடுதலை அடைய மாட்டான் –மன்னவராய் உலகு ஆண்டு மீண்டும் வானவராய் மகிழ்வு எய்துவர்

இதம் ஸ்ருணு யாத் இத்யாதி –மூலம்
அவரவர் தகுதிக்கு ஏற்றபடி கீர்த்தனம் செய்தால்
இங்கும் அங்கும் உள்ள அஸூ பங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று கருத்து

————-

வேதாந்தகோ ப்ராஹ்மண ஸ்யாத் ஷத்ரியோ விஜயீ பவேத்
வைஸ்யோ தன சம்ருத்தஸ் ஸ்யாச் சூத்ர ஸூகம் அவாப்னுயாத்-3-

அத₂ சதுர்ணாம் வர்ண விஸேஷாணாம்   அநதி₄ரூட₄ப₄க₃வத்₃ப₄க்தீ நாம்(அதி ருடன் ஆரூடன் பக்தி முற்றியவர்கள் போல் இல்லாமல் பக்தியில் பூர்ணம் இல்லாதவனுக்கும்-ஆகையால் மோக்ஷம் பிரார்த்திக்காதவர்களுக்கும் )அநா காங்க்ஷித ப₂ல விஸேஷாணாம் (குறிப்பிட்ட பலன்களை கேட்க்காதவர்களுக்கும் )யதா யோக்யம் ப₂லமாஹ(வர்ணத்துக்குத் தக்க பலம் பெறுவான் )
வேதா₃ந்தக ₃ இதி ॥

இந்த ஸஹஸ்ர நாமத்தை அந்தணன் ஜபித்தால் வேதாந்த ஞானம் கிட்டும்
ஷத்ரியன் ஜபித்தால் வெற்றி கிட்டும்
வைஸ்யன் ஜபித்தால் செல்வம் கிட்டும்
ஸூத்ரன் ஜபித்தால் இன்பம் கிட்டும்

அந்தணர்கள் முதலான நான்கு வர்ணத்தாருக்கும்
பகவத் பக்தி திடமாக உண்டாகாத போது
அவர்கள் எந்தவித பலனையும் எதிர்பாராமல் இந்த ஸஹஸ்ர நாமத்தை ஜபித்தாலும் கேட்டாலும்
அவர்களுக்கு ஏற்படும் பலன்கள் கூறப்படுகின்றன –

——

த₄ர்மார்தீ₂ ப்ராப்நுயாத்₃த₄ர்மம் அர்தா₂ர்தீ₂ சார்த₂மாப்நுயாத் ।
காமாநவாப்நுயாத் காமீ ப்ரஜார்தீ₂ ப்ராப்நுயாத் ப்ரஜா꞉ ॥ 4 ॥

அத₂ வர்ண விஸேஷேண யதா₂காமம் அப்₄யுத₃ ய ப₂லமாஹ
த₄ர்மார்தீ₂தி ॥

தர்மத்தைக் கோரியவன் தர்மத்தையும்
பொருளை விரும்புபவன் பொருளையும்
போகத்தைக் கோரியவன் போகத்தையும்
குழந்தைகளைக் கோரியவன் குழந்தைகளையும் பெறுவான்

நான்கு வர்ணத்தினரும் ஏதேனும் பலனை எண்ணி ஜபித்தால் அவர்கள் விரும்பும் பலனை அடைவார்கள் என்று கூறப்படுகிறது

——————–

அடுத்து சில விதி முறைகளுடன் ஸஹஸ்ர நாமத்தை ஜபித்தல் என்னும் ஸங்கீர்த்தனம் செய்யும் ஒருவனுக்கு
அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் உண்டாகும்
என்பதை அடுத்துள்ள நான்கு ஸ்லோகங்களும் கூறுகின்றன

பக்திமான் யஸ் உத்தாயா சுசி தத் கத மானஸ 
சஹஸ்ரம் வாஸூ தேவஸ்ய நாம் நாம் ஏதத் ப்ரகீர்த்தயேத்–5-

யசஸ் ப்ராப்னோதி விபுலம் ஞாதி ப்ராதான்ய மேவச
அசலாம் ஸ்ரியம் ஆப்நோதி ஸ்ரேயஸ் ப்ராப்நோத் யநுத்தமம்–6-

ந பயம் க்வசித் ஆப்நோதி வீர்யம் தேஜஸ் ச விந்ததி
பவத் யரோகோ த்யுதிமான் பல ரூப குணாந்வித-7-

ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முஸ்யேத பந்தனாத்
பயான் முஸ்யேத பீதஸ்து முஸ்யே தாபந்ந ஆபத–8-

அத₂ நியம விசேஷ வஜ் ஜப ரூப ஸங்கீர்தநே ப₄க்தஸ்ய ஸர்வ ஸம்ருத்₃தி₄மாஹ
ப₄க்திமான்
இத்யாதி₃பி₄ஶ் சதுர்பி₄꞉ । அநுத்தமம் ஶ்ரேயோ முக்தி꞉ । அந்யே (அ)ப்₄யுத₃ யா விசேஷா ꞉ ॥

யார் ஒருவன் அன்றாடம் உறங்கி எழுந்த பின்னர் நீராடுதல் முதலான கர்மங்களைச் செய்து -பரி ஸூத்தனாகி
பக்தியுடன் வாஸூ தேவன் இடம் மனஸை நிலை நிறுத்தி
அவனுடைய இந்த ஆயிரம் திரு நாமங்களையும் நன்றாகக் கீர்த்தனம் செய்வானோ
அவன் மிகுந்த கீர்த்தியையும்
மனிதர்களில் முதன்மையாக உள்ள நிலையையும்
அழியாத செல்வத்தையும்
அனைத்தையும் காட்டிலும் உயர்ந்த மோக்ஷத்தையும் பெறுகிறான்

அவனுக்கு எங்கும் எப்போதும் எதற்கும் பயம் இல்லை
அவன் சக்தி மற்றும் தேஜஸ்ஸை அடைகிறான்

நோய் அற்றவனாகவும் காந்தி உள்ளவனாகவும் பலம் ரூபம் குணம் கொண்டவனாகவும் ஆகிறான்
நோயாளி ஒருவன் அந்த நோய்கள் அனைத்தும் நீங்கப் பெறுகிறான்

பந்தத்தில் அகப்பட்டவன் அந்தப் பந்தத்தில் இருந்து விடுதலை அடைகிறான்
பயத்தில் உள்ளவன் பயம் இல்லாதவன் ஆகிறான்
ஆபத்திலுள்ளவன் ஆபத்தில் இருந்து விடுபெறுகிறான்

குலம் தரும் செல்வம் தந்திடும்*  அடியார் படு துயர் ஆயின எல்லாம்* 
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்*  அருளொடு பெரு நிலம் அளிக்கும்* 
வலம் தரும் மற்றும் தந்திடும்*  பெற்ற தாயினும் ஆயின செய்யும்* 
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். 
ஸர்வ பல பிரத விஷ்ணு ஏகைக பல லாபாயா சர்வ லாபாயா கேசவா
கெடும் இடராயின வெல்லாம் கேசவா என்ன
உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-
ரதிர் மதி ஸரஸ்வதீ த்ருதி ஸம்ருத்தி ஸித்தி ச்ரிய:
ஸுதாஸகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூலதா
ததோ முகம் மதி இந்திரே பஹுமுகீம் அஹம் பூர்விகாம்
விகாஹ்ய ச வசம்வதா: பரிவஹந்தி கூலங்கஷா:–ஸ்ரீ குண ரத்ன கோஸம்–17-
ஸ்ரீரங்கநாதன் என்னும் அமிர்தத்தின் துணையே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
உனது புருவங்கள் கொடி போன்றும், வில் போன்றும் மெலிந்து அழகாக உள்ளது.
அத்தகைய புருவங்கள் யார் ஒருவனை நோக்கி மெதுவாக அசைகின்றதோ, அந்த மனிதனின் நிலை என்ன?
அவனிடம் இன்பம், அறிவு, கல்வி, வலிமை , செல்வச் செழிப்பு, நினைக்கும் செயல்கள் முடியும் தன்மை, செல்வம்
ஆகிய அனைத்தும் தாமாகவே வந்து சேர்கின்றன. அப்படி வரும்போது, அவை சாதாரணமாக வருவதில்லை –
ஒவ்வொன்றும், “நானே அந்த மனிதனிடம் முதலில் செல்வேன், நானே முதலில் செல்வேன்”, என்று
போட்டி போட்டுக்கொண்டு வந்து சேர்கின்றன. இப்படியாக அவை அந்த மனிதனைச் சுற்றி வெள்ளமாக நிற்கின்றன.

—————-

அடுத்து பகவானை மட்டும் விரும்பி நின்று மற்ற எதிலும் சங்கம் இல்லாமல் உள்ளவனுக்கு
அவன் பிரார்த்தனை செய்யாமலேயே தீயவைகளை அவனிடம் இருந்து அகன்று விடுகின்றன என்கிறது

ரத்னம் -செம்படவன் வியாபாரி அரசன் -கை மாற -அரசன் ராணிக்கு போட்டு மகிழ்வது போல் –
அச்சுவை பெறினும் வேண்டேன் என்று இருப்பவர்-

துர்க்காணி அதி தரத் யாசு புருஷஸ் புருஷோத்தமம்
ஸ்துவன் நாம ஸஹஸ்ரேண நித்யம் பக்தி சமன்வித–9-

அத₂ ப₄க₃வத் ஏகார்தி₂நோ (அ)நந்ய ப₄க்தேர அப்ரார்தி₂தாமப் யநர்த₂ நிவ்ருத்திமாஹ
து₃ர்கா₃ணீதி ॥

பக்தியுடன் கூடியவனாக இந்த ஸஹஸ்ர நாமங்களால் புருஷோத்தமனை ஸ்துதிக்கும் ஒருவன்
அனைத்து கஷ்டங்களையும் கடக்கிறான்

தொண்டீர்கள் அவனைத் தொழுதால் -வழி நின்ற வல் வினை மாய்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே

———–

அப்படிப்பட்டவர்களுக்கு உரிய பலன்கள் கூறப்படுகின்றன

வாஸூ தேவ ஆஸ்ரயோ மர்த்யோ வாஸூ தேவோ பராயணா
சர்வ பாப விசுத்தாத்மா யாதி ப்ரஹ்ம சனாதனம்–10-

வாஸூ தேவனையே அண்டியவனாக -வாஸூ தேவனை மட்டுமே பரம கதியாய் நம்பியுள்ளவனாக இருக்கும் ஒருவன்
அனைத்து பாபங்களில் இருந்தும் விடுபட்டவனாக எப்போதும் உள்ள ப்ரஹ்மத்தை அடைகிறான்

சார்ந்த இரு வல் வினைகளையும் சரித்து–அபுநா வ்ருத்தி ரூபா மோக்ஷம் -சாம்யா பத்தி ஸாயுஜ்யம் பெறுகிறான்

————-

ந வாஸூ தேவ பக்தானாம் அசுபம்  வித்யதே க்வசித்
ஜென்ம ம்ருத்யு ஜரா வியாதி பயம் நைவோப ஜாயதே–11-

அத₂ தேஷாம் தத் ப்ராப்திமாஹ வாஸுதே ₃வாஶ்ரய இதி ॥

வாஸூ தேவனிடம் பக்தி கொண்டவர்களுக்கு எப்போதும் தீமை வருவதில்லை
அவர்களுக்கு பிறப்பு இறப்பு மூப்பு பிணிகள் குறித்த பயமும் உண்டாவது இல்லை
மிகுந்த ஸ்ரத்தை பக்தி இவற்றுடன் கூடி இந்த ஸஹஸ்ர நாமத்தை அத்யயனம் செய்யும் ஒருவன்
ஸூகம் பொறுமை செல்வம் தைர்யம் ஞாபகத் திறன் புகழ் ஆகியவற்றை அடைகிறான்

———-

நியமங்களுடன் கூடிய பக்தனுக்கு இடையே வந்து சேரும் பலன்கள் கூறப்படுகின்றன

இதம் ஸ்தவம் அதீ யான ஸ்ரத்தா பக்தி சமன்வித
யுஜ்யேத ஆத்ம ஸூக ஷாந்தி ஸ்ரீ த்ருதி கீர்த்திபி–12-

நியமவதோ ப₄க்தஸ்யாநுஷங்கி₃ணீமப்₄யுத₃ யஸித்₃தி₄மாஹ
இமம் ஸ்தவமிதி ।
ஶ்ரத்₃தா₄ – ஸ கௌரவ த்வரா । ப₄க்திர் வ்யாக்₂ யாதா । ஆத்மா சேதந꞉ । ப₄க₃வதி ப₄க்திர் மஹத꞉
ஸுக்ருதஸ்ய ப₂லம் * கோ₃விந்த₃ப₄க்த் ப்₄ தி₄கம் ஶ்ரேயஶ் சாந்யந்ந வித்₃ யதே , இதி ।

கௌரவத்துடன் உடைய எதிர்பார்ப்பு ஆர்வம் ஸ்ரத்தை -பக்தி ஞான விசேஷம்

ஆனு ஷங்கித பலம் தானே வரும் -ஓங்கி உலகளந்த –உலகோருக்கு பல செல்வங்கள் -நமக்கு கிருஷ்ண காமம் -கைங்கர்ய செல்வம் போல்
மோக்ஷம் போகும் முன் இந்த உலகிலேயே -ஆத்ம ஞானம் பெற்று -சுகம்-பகவத் பக்தி ஸூஹ்ருத பலத்தால்-
கோவிந்த பக்தியே மிகச் சிறந்த புகழ்

பகவத் பக்தியானது மிகுந்த புண்ணியங்களுடைய காரணத்தால் உண்டாலும் பயனாகும்

———-

அது உண்டானால் குரோதம் முதலான தோஷங்கள் தாமாகவே விலகும் என்று கூறப்படுகிறது

ந க்ரோதோ ந ச மாத்சர்யம் ந லோபோ ந அஸுபா மதி
பவந்தி க்ருத புண்யா நாம் பக்தானாம் புருஷோத்தமே–13-

தத்த்வத ஏதே தோஷா ஸ்வபா₄வத ஏவ நிவர்தந்த இத்யாஹ
ந க்ரோத₄ இதி ।

புண்ணியம் செய்வதன் காரணமாக புருஷோத்தமனை அடைந்தவர்களுக்கு கோபம் உண்டாவது இல்லை
ஆசை ஏற்படுவது இல்லை -தீய எண்ணங்கள் ஏற்படுவது இல்லை

ஸம்பாவித -நெல் குத்த தன்னடையே வேர்வை வருமா போல் -சும்மெனாதே ஓடிப் போகும்

——-

மேலே கூறப்பட்ட பலன்கள் அனைத்தும் புனைந்துரை என்னும் அர்த்த வாதமோ என்று பக்தி அற்றவர்கள்
சந்தேகம் அடையக்கூடும் என்று எண்ணி
எம்பெருமானுடைய பெருமை காரணமாக கை கூடாதது எதுவுமே இல்லை
ஆகவே இவை அர்த்த வாதம் என்றோ வேறே விதமாகவோ எண்ணக் கூடாது என்பதற்காக அவனுடைய பெருமையை விவரிக்கிறார்

சரணாகதி செய்பவர்களுக்கும் பப ராசி பாஹுல்யம் -உபாயம் அல்பம் -பேறு பெருத்து இருப்பதால் மஹா விஸ்வாஸம் பெறுவது ஸ்ரமமாகுமா போல் இங்கும்-ஸூத்ரா மணி கணா இவ -கீதை

வியாபித்து தரித்து நியமித்து  புருஷோத்தமன் பற்றி அறியாமல் சங்கை கொள்பவர்களுக்கு மேல் ஸ்லோகங்கள் பதில்

த்யவ் ச சந்த்ர அர்க நக்ஷத்ரா கம் திசோ பூர் மஹோததி
வாஸூ தேவஸ்ய வீர்யேண வித்ருதானி மஹாத்மன–14–

ந அயம் ப₂ல  அர்த₂வாத₃ஶ்ங்கயோ நிர்பா₄க்₃யை ꞉ குதார்கிகை ꞉, ப₄கவத் ப்ரபா₄வஸ்ய
அஸம்பா₄வ்ய அபா₄வேந  அதிவாத₃அபவாத₃ யோர் அஸம்ப₄வா  தி₃த்  யபி₄ப்ரயன் தஸ்ய தம் ப்ரபா₄வமாஹ
த்₃யவ்ஸ் ஸத சந்த்₃ரேதி ।
வித்₄ருதாநீதி நாநாலிங்கா ₃நாம்
* நபும்ஸகம் அநபும்ஸகம் ஏகவஸ்ய அஸ்ய அந்ய தரஸ்யாம் இதி நபும்ஸக லிங்க ₃சேஷதா ॥

சந்திரன் சூர்யன் நக்ஷத்திரங்கள் ஆகியவற்றுடன் கூடிய மேல் லோகமும்
இடைவெளியான ஆகாசமும் திசைகளும் பூமியும் கடலும் மஹாத்மாவான வாஸூ தேவனுடைய சக்தியாலேயே தாங்கப் பட்டுள்ளன

————

அனைத்தும் அவன் சக்தியாலேயே தரிக்கப் பட்டுள்ளன என்று கூறிய பின்னர்
அனைத்துமே அவனுக்கு வசப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது –

கீழ் தாங்குவது
இங்கு நியாந்தா ஆளுகை ,

குண உப ஸம்ஹார பாதம் போல் கீழ் சொன்னவற்றையும் ஆளுபவனும் இங்கு சொல்வதை தாங்குபவனும் அவனே

ச ஸூரா அஸூரா கந்தர்வம் ச யஷோரக ராக்ஷஸம்
ஜகத் வஸே வர்த்ததேதம் க்ருஷ்ணஸ்ய ச சராசரம்–15-

ஸர்வஸ்ய தச் ச₂க்தி வித்₄ரு தத்வ முக்த்வா தத்₃வஸ வர்த்தித்வமாஹ
ஸஸுராஸுரேதி ।
வர்ததே த ₃மித் யார்ஷீ ஸம்ஹிதா । அவர்ததேத₃மிதி வா ॥

தேவர்கள் அஸூரர்கள் கந்தர்வர்கள் யக்ஷர்கள் நாகர்கள் ராக்ஷஸர்கள் சராசரங்கள்-ஸமஸ்த சேதன அசேதனங்களும்
ஆகிய அனைத்தும் கிருஷ்ணனுடைய கட்டுப்பாட்டில் உள்ளன

————-

இவ்விதம் அவை அனைத்தும் வசப்பட்டுள்ளவை என்பது ஆத்மா -சரீரம் என்ற சம்பந்தம் போன்றதாகும் எனப்படுகிறது

இந்திரியாணி மநோ புத்தி சத்வம் தேஜோ பலம் த்ருதி
வாஸூ தேவாத் மகானி ஆஹு க்ஷேத்ரம் ஷேத்ரஞ்ஞ ஏவ ச–16–

இத₃ம் தத்₃வஸ வர்த்தித்வம் ஸாரீராத்ம பா₄வேந விஶிநஷ்டி
இந்த்₃ரி யாணீதி ।
வாஸுதே ₃வாத்மகாநி – தச்ச₂ரீராணீத் யர்த₂꞉ । ஆஹு꞉ ஸாஸ்த்ராணீதி சேஷ ꞉ ।

இந்திரியங்கள் மனம் புத்தி ஸத்வ குணம் தேஜஸ் சக்தி தைர்யம் ஆத்மா ஆகிய அனைத்தும்
வாஸூ தேவனுடைய சரீரங்கள் ஆகும் என்று ஸாஸ்த்ரங்கள் கூறுகின்றன-ஆஹு꞉ ஸாஸ்த்ராணீதி

ஸ்ரீ பகவாநுவாச
இதம் ஸரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித் யபி தீயதே–
ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு க்ஷேத்ரஜ்ஞ இதி தத் வித—-৷৷13.2৷৷

உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்

———-

இவ்விதம் தத்வ ஸாஸ்த்ரங்கள்

அனைத்தும் அவன் வசப்பட்டவை என்று கூறிய பின்னர் மந்தமான புத்தி உள்ளவர்களுடைய
பயத்தை நீக்குவதற்காக அனுஷ்டான ஸாஸ்த்ரங்களும் அவன் வசப்பட்டவை என்கிறது

சர்வ ஆகமானாம் ஆசார ப்ரதமம் பரிகல்பித
ஆசார பிரபவோ தர்மோ தர்மஸ்ய பிரபு அச்யுத–17–

சர்வ ஆகமானாம் –ப்ரமாணமான சாஸ்திரங்கள்
ப்ரதமம் பரிகல்பித -மிகவும் முக்கியமாக உபதேசிக்கும் தர்மம்–

ஆசார -நல் நடத்தை -ஒழுக்கம்
ஆசார பிரபவோ தர்மோ தர்மஸ்ய பிரபு அச்யுத–தர்மத்தால் போற்றப்பட வேண்டியவன்

ஏவம் தத்த்வ ஸாஸ்த்ரார்தா₂நாம் தாத₃தீ₄ந்யம்   அபி₄தா₄யா நுஷ்டா₂நா ஸாஸ்த்ரார்தா₂நாமபி
தாத₃தீ₄ந்யம் மந்தா₃தி₄காரிணாம் ப₄ யமபநேதுமாஹ –
ஸர்வாக ₃மாநாமிதி ।
ஸர்வாக ₃மாநாம்-ஸர்வ த₄ர்ம ப்ரமாணாநாம் ப்ரத₂மம் பரகல்பித꞉ – ப்ரத₂ம ப்ரதிபாத்₃ய த₄ர்ம꞉ ஆசார꞉
சவ்சாதி₃꞉, தத₃ங்க ₃꞉ ஶ்ரௌதோ த₄ர்ம இதி, தஸ் யாராத்₄ ய꞉ ப₂லத₃꞉ ஸஹாயஶ் சாச்யுத இதி ॥

ஸாஸ்த்ரங்கள் அனைத்திற்கும் சிறந்த ஒழுக்கமே முதன்மையாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது
அந்த ஒழுக்கத்தில் இருந்து உண்டாவது தர்மம் ஆகும்
அந்த தர்மத்துக்கு அச் யுதனே ஸ்வாமி யானான்

ஸர்வ ஆகமா நாம் –என்றால் தர்மத்துக்கான பிரமாண ஸாஸ்த்ரங்கள் ஆகும்
ப்ரதமம் பரி கல்பித –என்றால் மிகவும் முக்கியமான உபதேசிக்கப்படும் தர்மம் ஆகும்
ஆசார -என்றால் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை ஆகும்அச் யுதனே யாவான்
யாராத்₄ ய꞉ ப₂லத₃꞉ ஸஹாயஶ் சாச்யுத-அவனே அந்த ஒழுக்கத்தில் நிலை நிற்கவும் அதற்கான பலனை அளிப்பவும் உதவுபவனும் ஆவான்

——-

தர்மத்தைப் பற்றி நிற்பவர்களும் அவனிடம் இருந்தே உண்டானவர்கள் என்கிறது

ரிஷப பிதரோ தேவா மஹா பூதாநி தாதவ
ஜங்கம அ ஜங்கம சேதம் ஜெகன் நாராயண உத்பவம்–18–

ரிஷிகளும் பித்ருக்களும் தேவர்களும் பஞ்ச பூதங்களும் அவற்றின் செயல்களாகிய இன்பங்களும்
ஸ்தாவரங்களுமாகிய அனைத்து உலகங்களும் நாராயணன் இடம் இருந்தே உண்டாயின

ரிஷய –என்றால் ஸ்ம்ருதிகள் போன்றவற்றை யுண்டாக்கின மநு முதலானவர்கள்
மற்றும் அவற்றைத் தியானித்து பின்பற்றுவார்கள் ஆவர்-ஸ்மர்த்தா -ஸ்ம்ருதி எழுதி அனுஷ்டிப்பவர்கள்
பிதரோ தேவ –என்றால் மற்ற தேவதைகள் ஆவர்
மஹா பூதாநி -என்றால் ஆகாசம் மற்றும் உள்ள நான்கு பூதங்களும் ஆகும்
தாதவ –என்றால் தர்மங்களை அனுபவிப்பதற்காக உண்டான தோல் முதலியவை-உபகரணங்கள்
ஜங்கமா ஜங்கம் –என்றால் பலன்களை அனுபவிக்கும் அசையும் மற்றும் அசையாத பொருள்கள் நிறைந்த உலகம் ஆகும்

————–

அடுத்து அனைத்து ஞானத்திற்கும் அவனே காரணம் என்கிறது-ஞான ஹேதுக்களும் அவனே

யோகோ ஞானம் ததா சாங்க்யம் வித்யா சில்பாதி கர்ம ச
வேதா சாஸ்த்ராணி விஞ்ஞான மேதத் சர்வம் ஜனார்த்தநாத்–19–

கர்மயோகம் பக்தி யோகம் ஆகியவற்றின் அறிவும்
சாங்க்யம் எனப்படும் ஞான யோகமும்
தர்க்கம் வியாகரணம் போன்ற வித்யைகளும்
சில்பங்களும்
வர்ணாஸ்ரம தர்மங்களும்
வேதங்களும்
ஸ்ம்ருதிகளும்
இதிஹாஸ புராணங்கள் என்னும் ஸாஸ்த்ரங்களும்
ஆகிய பலவிதமான ஞானமும் ஜனார்த்தனன் இடம் இருந்தே உண்டாயின

ஞானம் என்றால் ஸாஸ்த்ரம்
யோகோ ஞானம் என்றால் ஸாஸ்த்ரங்கள் குறித்த ஞானம்
யோகம் என்பது இரு விதம் -சமாதி யோகம் -கர்ம யோகம்
சாங்க்யம் -என்றால் தத்வங்களைப் பற்றிய அறிவிக்கும் பிரிவு-எண்ணிக்கையால் தத்துவங்களை நிர்ணயிப்பவர் சாங்க்யர்
வித்யா -இலக்கணம் போன்றவை குறித்த அறிவாகும்
மேலும் வில் வித்தை மருத்துவம் இசை ஆடல் போன்றவையும் வித்யையாகும்
சில்பம் -செதுக்குதல் கட்டுமானம் போன்றவை ஆகும்
கர்மம் என்றால் அனைத்து செயல்பாடுகளும் ஆகும்-த்ருஷ்டார்த்தம் இவ்வுலக இன்பங்களுக்கு
வேதங்களே அனைத்திற்கும் முன்னோடி ஆகும்
ஸாஸ்த்ரங்கள் என்றால் ஸ்ம்ருதி இதிஹாஸம் புராணம் ஆகும்
இவை அனைத்தும் ஜனார்த்தனிடம் இருந்தே வருகின்றன

————–

அடுத்து மஹா விஷ்ணுவின் இரண்டு விபூதிகளையும் நிர்வஹிக்கும் தன்மையை அருளிச் செய்கிறார்

ஏகோ விஷ்ணுர் மஹத் பூதம் ப்ருதக் பூதான் யநேகச
த்ரீன் லோகான் வ்யாப்ய பூதாத்மா புங்க்தே விஸ்வ பூ கவ்யய–20–

அவனே ஏகம் -அநேகம் -சேஷீ- நியாமகன்–ஆத்மா -ரக்ஷகன் -வ்யாப்த கத தோஷம் தட்டாதவன் –
புங்க்தே-லீலா ரசமும் போக ரசமும் அனுபவிப்பவன்
வாக்குக்கும் மனசுக்கும் கோசரம் அல்லன்

பெரும் பொருளாகிய மஹா விஷ்ணு பலவாகப் பிரிந்துள்ள பூதங்களையும்
மூன்று உலகங்கள் எனப்படும் பத்தர் முக்தர் நித்யர் என்னும் மூன்று வகை சேதனர்களையும் வியாபித்து
அனைத்து பிராணிகளுக்கும் அந்தர்யாமியாக யுள்ள போதிலும் அவற்றின் தோஷங்கள் ஏதும் அடையாதவனாக
அனைத்தையும் காப்பாற்றி அனுபவிக்கிறான்

ஏக -என்றால் மஹா விஷ்ணு தனித்தன்மை உள்ள ஒருவன்
அநேக என்றால் எண்ணற்ற ரூபம் செயல்பாடுகள் மாறுபாடுகள் ப்ரயோஜனங்கள் கொண்டுள்ள தனித்தனியான வேறுபட்ட பூதங்கள்
இவை அனைத்திலும் மூன்று லோகங்களிலும் -பத்த முக்த நித்ய த்ரிவித ஆத்மாக்களைச் சொன்னவாறு அவன் பரவி நிற்கிறான்
பந்தத்தில் உள்ள ஜீவாத்மா முக்தாத்மா மற்றும் நித்யர் ஆகியவையே மூன்று லோகங்களிலும் உள்ள ஆத்மாக்கள்
அவை அனைத்தையும் கட்டுப்படுத்தி அவற்றின் எஜமானனாக உள்ளதால் அவையுடைய ஆத்மாவாக மஹா விஷ்ணுவே உள்ளான்
அவனே அவற்றைக் காப்பவன் ஆவான்-நித்யோ நித்யாநாம் ஏகோ பஹு நாம்
ஆனால் அவற்றின் தோஷங்களால் தீண்டப்படாதவன் ஆகிறான்
தனது மேன்மை காரணமாக மஹத் பூதம் ஆகிறான்
வாக்கு மற்றும் மனம் ஆகியவற்றுக்கு அப்பால் உள்ளவன்
புங்க்தே என்றால் லீலா ரஸம் மற்றும் போக ரஸம் ஆகியவற்றை அனுபவிக்கிறான் என்றவாறு

ஒருவராக இருந்தே
பல காரணப் பொருள்கள்
பஞ்ச பூதங்கள் ரூபம் பயன் பரிணாமம் ஸ்வரூபம் வேறே வேறே
மூவகை ஆத்மாக்கள் -இவர்களும் வேறே வேறே தானே
அவர்களையும் வியாபித்து
நியம சேஷிதவ -நியமித்து -உள்ளே உறையும் ஆதிமஜாவாக இருந்து
உண்ணுகிறான்
அனைத்தையும் ரக்ஷித்து –
அவ்யய தோஷம் தட்டாமல்

அவாங் கோசார லீலா போகம் இன்புறும் இவ்விலஜியாட்டு உடையவன்

———

அடுத்து அளவற்ற மஹிமை யுள்ள பகவான் இந்த சுலோகத்துக்கு விஷயம் ஆகிறான்
அவனைக் காட்டிலும் உயர்ந்த ஞானம் மற்றும் வாக்கு கொண்டவரான வேத வ்யாஸர் இந்த ஸ்லோகத்தை உரைத்தார்
அவர்கள் இருவர் யுடைய மங்களகரமான மஹிமையை இந்த ஸ்லோகம் கூறுகிறது
இதனைக் கொண்டு தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ள நிற்கும் அனைவருமே இதற்கு அதிகாரிகள் ஆவர்
ஆகவே உயர்ந்தும் தாழ்ந்தும் உள்ளதான அனைத்து விதமான பொருள்களையும் அடைய விரும்பும்
ஒருவன் யாராக இருந்தாலும் இந்த ஸ்லோகத்தை ஐயம் இன்றிக் கூறலாம்

இமம் ஸ்தவம் பகவதோ விஷ்ணோ வ்யாஸேன கீர்த்திதம்
படேத்ய இச்சேத் புருஷஸ் ஸ்ரேயஸ் ப்ராப்தும் ஸூகாநி ச

ஸ்ரேயஸ் எனப்படும் முக்தியையும் மற்ற பல ஸூ கங்களையும் அடைய எண்ணும் ஒருவன்
பகவான் குணக்கடலான வேத வ்யாஸரால் அருளிச் செய்யப்பட்டதும் –நிஸ்ஸீம பூமா பகவானாகிய மஹா விஷ்ணுவைக் குறித்தும்
உள்ளதான இந்த ஸ்தோத்ரத்தைப் படிப்பானாக

அவரை விழுங்கும் படி வாக்குடைய மலக்கு நா வுடைய
ஏற்கும் பெரும் புகழ்வானவர் ஈசன்
ஏற்கும் பெரும் புகழ்க்குருகூர் சடகோபன் போல்

உபய மாங்கல்ய மஹிமை இதுக்கு உண்டே-பராபரன் அடைய -ஸ்ரேயாஸ் பெற சங்கை இல்லாமல் இது அளிக்கும்

ஸ்தோத்ரம் ஸ்ரோதா விஷய மூன்று மகிமையும் வேண்டுமே மஹா தரித்ரமுள்ள ஜகத்தில் உள்ளோர் அதிகாரிகள்

———

ஸ்வ பாவத்தாலேயே ஸூகம் துக்கம் நன்மை தீமை என்பது போன்ற இரட்டைகளாக உள்ள அனைத்து
கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாக உள்ளவனும்
அடியார்களுக்கு கற்பக மரம் போன்றவனும்
தாமரை போன்ற சிவந்த திருக்கண்கள் கொண்டவனும்
மஹா லஷ்மியின் நாயகனுமான ஸர்வேஸ்வரனை வணங்குபவர்களுக்கு அவனே அனைத்துமாக உள்ளான்
ஆகவே அவனை வணங்குபவர்களுக்கு கிட்டக்கூடியவை சொல்வதற்கே எட்டாதபடியே உள்ளன
இப்படி உள்ள போது அவனை வணங்காமல் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் உலாவது ஏனோ என்று நிறைவு செய்கிறார்

விஸ்வேஸ்வரம் அஜம் தேவம் ஜகத ப்ரபும் அவ்யயம்
பஜந்தி யே புஷ்கராக்ஷம் நதே யாந்தி பராபவம்
நதே யாந்தி பராபவம் ஓம் நம இதி

இப்படி ஆயிரம் திரு நாமங்களால் -ஸ்ரீ மன் நாராயணனே புருஷோத்தமன் -ஸ்ரீ யபதி –
சரணா கதர்களுக்கு உயிர் அளிக்கும் மருந்தாயும்-
எல்லையில்லா மங்களமான இயற்க்கை நிலை -ஸ்வரூபம் -வடிவம் -ரூபம் -பண்புகள் திரு விளையாடல்கள் –
பரத்வம் சௌலப்யம் ஆகியவற்றை உடையவன் –
அநிஷ்டங்களை களைந்து இஷ்டங்களை வழங்கும் வள்ளல் -சர்வ ரஷகன் -இவனுடைய சஹஸ்ர நாமங்களைச் சொல்பவர்
செங்கண் திரு முகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் –

அனைத்து உலகங்களுக்கும் ஈஸ்வரனும்
பிறப்பற்றவனும்
அனைத்து ஆனந்தங்களைக் காட்டிலும் ஆனந்தம் உள்ளவனும்
இந்த உலகங்களின் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹாரம் ஆகியவற்றுக்கு காரணமானவனும்
செந்தாமரைக் கண்கள் கொண்ட வானுமாகிய ஸ்ரீ மன் நாராயணனை உபாஸிப்பவன்
யாராக இருந்தாலும் அவன் எதிலும் தோல்வியே அடைய மாட்டான் -அவமானம் அடைய மாட்டான்
இரண்டாவது முறையாக இறுதியாக உள்ள வரியைக் கூறியதால்
தோல்வி அடைய மாட்டான் அவமானம் அடைய மாட்டான் என்று உறுதிபடக் கூறியதாயிற்று

அனைத்து விதமான நன்மைகளை அளிக்க வல்லதும்
ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதியில் உள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டதும்
ஆகிய இந்த ஸஹஸ்ர நாமத்தைக் குறித்த வ்யாக்யானம்
ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளில் ஸமர்ப்பிக்கப் பட்டது

149 அத்தியாயத்தில் இறுதியில் இது உள்ளது
142-144 ஸ்லோகங்கள் இதில் உண்டு

அஸ்மாகம் அத்ர ச பரத்ர ச சர்வ துக்கம்
உன்மூல்ய சம்மதம் அசேஷ விதாம் விதாய
ஸ்ரீ ரெங்கராஜ மஹிஷீ ச ச வைஷ்ணவா நாம்
சங்காத் ஸூகம் ஸஹ ஐயேன சதா க்ரியாஸ்தாம்

ஹாரீத குல திலகம் -ஸ்ரீவத்சாங்கர் -திருக்குமாரர்–ஸ்ரீ பராசர பட்டர் -ஸ்ரீ ரெங்கநாதன் திவ்யாஜ்ஜையால் அருளிச் செய்த
ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம் -ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாஷ்யம் சம்பூர்ணம்
ஒழுக்கத்தில் நிலை நிற்கவும் பலனை அளிக்கவும் காரணம் அச்யுதனே

அஸ்மாக மத்ர ச பரத்ர ச ஸர்வது₃꞉க்க ₂-
முந்மூல்ய ஸம்பத₃ம் அசேஷ விதா₄ம் விதா₄ ய।

ஶ்ரீரங்க ₃ராஜ மஹிஷீ ஸ ச வைஷ்ணவாநாம்
ஸங்கா₃த் ஸுக₂ம் ஸஹ ஜயேந ஸதா₃ க்ரி யாஸ்தாம் ॥

இதி ஶ்ரீஹரித குலதிலக ஶ்ரீவத் ஸாங்க மிஶ்ர ஸூநோ ꞉ ஶ்ரீரங்க ₃ராஜ தி₃வ் யாஜ்ஞா-
லப்₃த₄ ஶ்ரீபராஸர ப₄ட்டாபர நாமதே ₄ யஸ்ய ஶ்ரீரஞ்ஜநாத₂ஸ்ய க்ருதௌ
ஶ்ரீமத்₃விஷ்ணு ஸஹஸ்ர நாம விவரணம் ப₄க₃வத்₃கு₃ண த₃ர்பணாக்₂ யம்
பா₄ஷ்யம் ஸமாப்தம் ।
॥ ஶ்ரீக்ருஷ்ோர்பேமஸ்து ॥

ஸ்ரீ ரெங்கநாதனுடைய பட்ட மஹிஷீ யான ஸ்ரீ ரெங்க நாச்சியாரும்
ஸ்ரீ வைஷ்ணவர் களுடைய சேர்க்கையும்
நமக்கு இம்மையிலும் மறுமையிலும் அனைத்து துன்பங்களையும் நீக்கி
அனாசித்து விதமான ஐஸ்வர்யங்களையும் உண்டாக்கி
எப்போதும் வெற்றியுடன் கூடிய இன்பத்தை அளிப்பதாக

—————

ஸ்ரீபராசர பட்டர் அருளிய பகவத் குண தர்ப்பணம்(விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம்)
அவதாரிகை என்னும் முன்னுரை –
ஸ்வாமி பராசரபட்டர் அனுக்ரஹித்தது பகவத் குண தர்ப்பணம் – ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் .பாரத பஞ்சமோ வேத: மக்கள் உஜ்ஜீவனத்திற்கு பெற்றது மஹாபாரதம். உபநிஷத்து ஆகிற கடலை கடைந்தெடுத்து இந்த மஹாபாரதம் என்ற அமுதத்தை வியாசர் கடைந்து கொடுத்தார்.

முதல் திருநாமம் முதல் – 122 வரை – பரரூபம், பரவாஸுதேவன், வைகுண்டநாதன் ப்ரபாவம்.
அடுத்த 24 திருநாமங்கள் -144 வரை வ்யூக அவதாரங்களான வாள்தேவன், ஸங்கர்ஷணன், அநிருத்தன் ப்ரத்யும்னன். 147 முதல் கடைசி திருநாமம் வரை – விபவ அவதாரத்தை வர்ணிக்கிறார். அந்தர்யாமி பரத்துவத்திலும் அர்ச்சை விபவத்தின் பிரதிநிதியாகவும் திகழ்கிறது. அர்ச்சை விபவ அவதாரத்தையும் சேர்த்து பஞ்ச ப்ரகாரத்தையும் விஷ்ணு ஸஹஸ்ர நாமம் சொல்கிறது.

விளக்கம் (விஷ்ணு ஸஹஸ்ரநாம கூறுவதின் பயன்கள் பலஸ்ருதி த்வாதசராம பஞ ச ரம் ….)107 ஸ்லோகம் முடிக்கப்பட்ட பின் தான் வனமாலி கதிஸார்ங்கி… வாளி தேவோ அபிரக்ஷது. என்ற இந்த ஸ்லோகம் இடையில் சேர்க்கப்பட்டு மற்ற ஸ்லோகங்களான த்வாதசநாம பஞ்சரம் இந்த வரிசையில் தான் ஆச்சர்யர்கள் காலத்திலிருந்து அனுசந்திக்கிறோம்.

பகவான் அந்தந்த வர்ணத்திற்கு விதித்தது கிட்டும். ப்ராஹமணர்கள் என்றால் ஆத்ம பரமாத்மா ஞானம் போன்ற ஒவ்வொரு வர்ணத்தவரும் அவரவருக்கு விதித்ததை பெறுவார்கள் என அருமையாய் வரிசைபடுத்தினார். விருப்பம் வேண்டுபவர்க்கு அந்தந்த விருப்பம் கிட்டும். செல்வம் கிட்டும். ஞானம் கிட்டும். 4, 5, 6, 7, 8 என இதே மந்திரங்களை ஜபம் வடிவில் சொன்னால் அசைக்க மாட்டாத செல்வம் இந்த லோகத்தில் கிட்டும். ஒரு நாளும் அச்சம் என்பதே கிராது. தேஜஸ் ச – ஒளி உற்சாகம் கிட்டும். வியாதி படுத்தாது. புற அழகும் அக அழகும் காரிய சாமர்த்தியமும் கிட்டும். குலம் தரும் செல்வம் தரும் ….நாராயணா என்னும் நாமம் என்ற பாசுரப்படி அனைத்து விதமான செல்வங்களும் கிட்டும். உறுபெரும் செல்வமும்… நம்மாழ்வார் திருவாய்மொழியே எல்லாம் என ராமானுஜர் இருந்தார். ராமானுஜரே ஸர்வம் என நாம் இருக்கிறோம். ரதி. அழகு, மதி-புத்தி, சரஸ்வதி – வித்யா கடாக்ஷம் திருதி – தைரியம், சித்தி – காரிய சித்தி புத்தி – சாதுரியம் ஸ்ரீ: செல்வம் இந்த 7ம் ஒருவன் பின்னே நான் முன்னே நான் முன்னே என்று முந்திக்கொண்டு வரும்  . நாராயண நாமமே – ஸகல பல ப்ரயோகி விஷ்ணு: ஏகைக பல லாபாய ஸர்வ லாபாய கேசவ: கெடும் இரு ராயவெல்லாம் கேசவா …என்ற ஆழ்வார் பாசுரப்படி ஆபத்துகள் விலகி சம்பத்துக்கள் கிட்டும் எல்லா தொல்லை களிலிருந்தும் விடுதலை அடைகிறான். வியாதியால் பீடிக்கபட்டவனுக்கு வியாதி தொலைகிறது.சம்சார பந்தத்தில் கட்டுப்பட்டவன் விடுபடுகிறான்.

முச்யே தா பன்ன ஆபத: ஆப்னோ பலம் என்று இருத்தல். இப்போ எம்பெருமானே பலம் என்று இருந்தால் எல்லாமே கொடுக்கிறார். இதற்கு திருஷ்டாந்தமாய் செம்படவன் கையில் ரத்னம் கிடைத்தால் அதை வியாபாரியிடம் கொடுத்து ஒரு கணிசமான தொகையை பெறுவான். அதே வியாபாரி அதை ராஜாவிடம் கொடுத்தால் அதன் மதிப்பு பன்மடங்கு அதிகரிக்கும். அந்த ராஜா ராணியின் கழுத்தில் போடுவார். இந்த ரத்னத்தை போல் தான் வியாபாரி போல் இருப்போமா. அல்லது ராஜாவை போல் இருப்போமா அல்லது சொல்லும் இன்பத்திற்காக சொல்லுவோமா என்பது அவரவரை பொறுத்தது. பச்சை மாமலை போல் மேனி …. என்று தொண்டரடி பொடி ஆழ்வார் பாசுரத்தில் நாமங்களை சொல்லுவதே பாக்யம் தவிர வேறு பாக்யம் வேண்டாம் -. இந்த புருஷாத்தம நாமம் சொல்பவருக்கு பாப வாசனையே இருக்காது. காமம் குரோதம் முதலியவற்றை தாண்டுகிறான். அநிஷ்டத்தை தொலைப்பது 9 வது ஸ்லோகம். இஷ்ட ப்ராப்தி 10, 11வது ஸ்லோகம். வாஸுதேவனே ப்ராப்யம் என்று இருப்பவர்கள் அவரை அடைகிறார்கள். வாஸீ தேவ பக்தர்களுக்கு அஸூபமே கிடையாது. கல்யாணமாய் சொல்ல ஆரம்பித்தால் ஒரு நாளும் வீணாக போக மாட்டோம். ஜன்ம ம்ருத்யு ஜரா வியாதி எப்போதும் அண்டாது. ஸ்மிர்த்தி கீர்த்தி: … ஆனுஷஸ்ய பலன் கிட்டும். ஒங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி ….. பாசுரம் போல் பால் பசு எல்லா செல்வமும் கிட்டும். நடுவில் கிட்டும் பலன்கள். ஜுவாத்மா பரமாத்மாவிற்கு ப்ரகாரம் என ஸுகப்படுவான். ஸ்மிர்த்தி கீர்த்தி. போன்ற அனைத்தும் கிட்டும். நக்ரோதோ நசமார்ச்சர்யம். …கோபம் இருக்காது. பொறாமை இல்லை. பகவத் நாமத்தை சொன்னால் க்ரோதம் தாபம் முதலியவைகள் ஏற்படாது. இவை நம்பத் தகுந்ததாக இல்லையே என்று ஒருவன் ஆட்சேபித்தால் அவன் பகவானின் பெருமையை அறியவில்லை என அர்த்தம்
சரணாகதி.. உபாயம் உன் திருவடிகளே சரணம் என சொல்வது எங்கனம் நம்புவது கடினமோ ஏனெனில் போகும் இடம் பெரிய இடம் வைகுந்தம் அதை ஒப்பிடும் போது இந்த உபாயம் சிறிது என நினைப்பது போல்.ஈஸ்வரனால் இத்தனையும் பண்ண முடியுமா எனில் அவர் பெருமைக்கு தக்கவாறு பண்ணுவார். இத்தனை பெருமைகளும் நாமங்களை சொல்வதால் கண்டிப்பாக கிட்டும். திட விசும் பெருவெளி … அனைத்து நீராய், நிலமாய் கடலாய், உபநிஷத்து சூரியன் சந்திரன் போன்றவைகள் இவரின் ஸங்கல்பத்தால் தாங்கப்படுகின்றது. ஸித்தே மணிகணா இவ – மணி நூலில் கோத்திருக்கு.அது போல் இப்பரபஞ்சம் ப்ரஹ்மத்தின் இடத்தில் கோர்க்கப்பட்டுள்ளது. ஏகோ விஷ்னு : மஹத்பூதம்.. பஞ்சபூதங்கள் பஞ்ச கர்மேந்திரியங்கள். திரிலோ கான் ப்ராப்ய ….. பக்த முக்த நித்ய-3 வகையினர். உலகத்தையே அவர் சாப்பிடுகிறார். அவர் அன்னதாவாக இருந்து நாம் அன்னமாக நம்மை சாப்பிடுகிறார். அவர் கொடுப்பவர். நாம் அனைவரும் வாங்கிக் கொள்பவர் . ரூபப்ரகார பரிணாம … ப்ரயோக.. தான் ஒருத்தராக இருந்து கொண்டு அஸங்கேய… ஆகாசம் ப்ருத்வி போன்ற பஞ்சபூதங்கள், ஸ்வரூபம் பரிணாமம் அனைத்தும் வேற இவரிடத்தில் தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த சேதனர்கள் அனைவரையும் நியமித்து அவர் சேக்ஷி நாம் சேஷர்கள். அனைத்திற்குள்ளும் நிறைந்திருக்கார். ஆனால் தோஷம் தட்டாதவராக இருக்கார். அந்தந்த வியாபித்த பொருளின் தோஷம் இவரை தீண்டாது. மேல் உலகம் அவர் விபூதி. கீழ் உலகம் அவர் விபூதி. லீலா போகரசம்…பூதாத்மா…. அனைவருக்கும் அந்தராத்மாவாய் இருந்து அவர் ஸ்வாமியாய் நியமிக்கிறார். வ்யாசரால் படைக்கப்பட்ட இந்த சாஸ்திரத்தை படித்தவர்களுக்கு ஸ்ரேயஸ்
சுகம் கிட்டும்.

நிஸ்ஸீம பூமா. அவரையே விழுங்கும் அளவு வாக்கு ஞானம் உடையவர். அந்த பெருமை படைத்தவனையே சாப்பிடும் அளவிற்கு பெருமை படைத்தாள். பாடப்பட்டவர் பெருமையும் பாடியவர் பெருமையும் பெரியவர். இரண்டும் ஸஹஸ்ர நாம பெருமையில் சேரும். இப்பேர்பட்ட ஸஹஸ்ரநாமத்தால் போக்கத்தக்கது. தாரித்ரம், எந்த ஒரு ஜீவாத்மா புத்தியிருப்பவன் பராபர ….. ஸ்ரேயார்த்தி சந்தேகத்திற்கு இடமில்லாமல் அனுபவிக்கட்டும். விஸ்வேஸ்வரம் அஜம் தேவம் – ஜகத்திற்கே விஸ்வமாய் பிறப்பவர்.

இது ஆனுசாசன பர்வத்திலே வ்யாசராமல பாடம் பெற்று தான தர்ம ப்ரகடனத்தில் பீஷ்மரால் கூறியது. 149 அத்தியாயத்துடன் ஸஹஸ்ரநாமம் ஸமாப்தம்.

பகவானே ப்ராப்யம். அதை அறிந்து யார் பற்றுகிறார்களா ஏவம் ஸமத்தர்த்தும் ஜெயம் அபஜெயம் : அனைத்து நன்மைகள் குணங்களுக்கு இருப்பிடமாய் பாரிஜாதம் கொண்டவரும் குணசாகரமான பகவானி பக்தி செய்பவருக்கு அனைத்துமாய் அவர் இருக்கிறார். மொழியை கடக்கும் பெரும் புகழாம் …. வணங்குபவர் இந்த சம்சாரத்தில் இருக்கும் வரை அவமானம் என்ற பேச்சிற்கே இடமில்லை. சத்யம் சத்யம் புனஸ்த்யம். ரங்கராஜனும் ஸ்ரீரங்க மஹிஷியும் சேர்ந்து சம்பத்தை கொடுக்கட்டும். வெற்றியோட கூடிய சுகத்தை அளிக்கட்டும்.
ஸ்லோகங்களின் சாரார்த்ததிலிருந்து சில ஜகத்வஸே வர்த்ததேதம்… ஸசராசரம்..பத்ரம் புஷ்பம் பலம் தோயம் இந்த 4ம் சாப்பிடுகிறேன் இந்த 4 ஸ்லோகத்தால் பகவானின் ஆளுமை சொல்லப்படுகிறது. க்ஷேத்ரம் என்று சொல்லப்படும் சரீரம் எல்லாம் அவன் வசம். பகவானை தியானிக்கும் போது மற்ற கல்யாண குணங்களும் குடிகொண்டிருக்கும். இந்திரியங்கள் புத்தி (ஞானம்) ஸத்வம் தேஜஸ் பெருமானுக்கு வசப்பட்டவை. பெருமான் ஸர்வ நியந்தா ஆகாசம் போன்ற பஞ்சபூதங்கள் அவர் வசம். சேதனம், அசேதனம் அனைத்தும் அவர் ஆணைப்படி நடக்கும். ஐததாத்மயம் – சேதனா அேசதனா ப்ரஹ்மத்தை அந்தராத்மாவாய் கொண்டவை. அனுஷ்டமான சாஸ்திரத்தை பற்றி சொல்ல போகிறது.

எல்லா வேதத்திலும் எது முக்கியம் என்றால் ஆசார, அனுஷ்டானம் அகத்தூய்மை புறத்தூய்மை ஆசாரத்துடன் இருப்பது தான். அனைத்தும் அவருக்கு ஆதீனப் பட்டுத் தான் என தத்வ சாஸ்திரம் கூறுகிறது. எல்லா தர்மங்களாலும் ஆராதிக்கப்படுபவரும் சகாயம் பண்ணுபவரும் அவரே. பலத்தை கொடுப்பதும் அவரே. அதற்கு உதவுவதும் அவர் தான். ஆராதிக்கப்படுபவரும் அவர் தான். தேவர்கள் ஆகாசம் போன்ற பூதங்கள் தாதுக்கள் அசைவன – பூச்சியிலிருந்து மனுஷன் வரைக்கும், அசையாதது – தின்னும் பதார்த்தம். இவை அனைத்தும் நாராயணிடத்தில் தான் உருவாகிறது. ஞானத்திற்கு ஊற்றமாய் இருப்பதும் அனைத்தும் அவரிடத்தில் தான். யோக ஞானம் ததா சாங்க்யம் – ஸர்வம் ஜனார்த்தனத்தில் உற்பத்தியாகிறது

ஞானத்திற்கு ஹேதுவாய் இருப்பதும் அவரிடத்தில் தான். யோகம் கர்மயோகம். அந்த யோகத்தை இரண்டாக சொல்லலாம். சமாதி யோகம் – பக்தி யோகம். எண்ணிக்கையாலே தத்துவங்கள் சொல்வது சாங்கிய மதம். வித்யா. சீக்ஷா ஜோதிடம் முதலியவைகளை நிர்ணயம் பண்ணுவது. தனுர்வேதம், ஆயுர்வேதம் காந்தர்வ வேதம் ப்ரக்ருதி அர்ஜு உைலாச முதல் காமயனவாசா வரை.. அனைத்திற்கும் அத்புதமான பதபதா அர்த்தங்கள் ஸ்ரவணம் செய்யும் பாக்கியம்
ஸ்ரோதாக்கள் பெற்றோம்.ஈஸ்வர உவாச … ஸ்ரீராமராம ராமேதி ….. ஸ்லோ கார்த்தம் விசேஷித்தது பஞ்ச ஆயுதம் ஸ்லோகம். த்வாதச நாமம் சொல்லி திருமண் இட்டுக் கொள்ளும் தாத்பர்யம் என இப்படி அர்த்தங்களின் அணிவரிசையை அடுக்கிக் கொண்டே போகலாம். அனைத்தும் அத்யத்புதம் இந்த வரிசையில் ராமஸ்லோகங்கள்,

ஹரித குலத்தில் பிறந்த கூரத்தாழ்வான் அவர் திருக்குமாரர் பராசர பட்டரால் ஏற்படுத்திய பகவத் குண தர்ப்பணம் முற்றுப் பெற்றது.
வ்யாக்யான சக்ரவர்த்தியாய் ஸ்ரோத்தார்கள் உஜ்ஜீவனம் அடைய ஹேதுவாய் சத்விஷயங்கள் மயமாய் ச்ரோத்தாக்களை ஆச்சர்யத்தில் திளைக்க வைத்து அத்யத்புதமாய் அர்த்தங்களை வர்ஷித்த ஞான குரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என பிரார்த்தித்து அடியேனின் தண்டவ ப்ரணாமங்களை தாழ்மையுடன் தெரிவித்துக கொள்கிறேன். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
யுக உபன்யாஸகர் வாழி வாழியே.
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்–6-முக்தனுக்கு மோஷானந்தம் தரும் ஸ்ரீ வைகுண்ட நாதன் பரமான திரு நாமங்கள் -892-911-/7-கஜேந்திர மோஷ பரமான திவ்ய நாமங்கள் -912-945-/

November 20, 2019

அநந்த ஹூத புக்போக்தா ஸூ கதோ நைகதோ அக்ரஜ
அநிர்விண்ணஸ் சதா மர்ஷீ லோகாதிஷ்டான மத்புத –95

சநாத் சநாத நதம கபில கபிரவ்யயஸ்வஸ்தி தஸ்
ஸ்வ ஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்தி புக் ஸ்வஸ்தி தஷிண –96

அரௌத்ர குண்டலீ சக்ரீ விக்ரம் யூர்ஜித தசாசன
சப்தாதிகஸ் சப்தசஹஸ் சிசிரஸ் சர்வரீகர –97

அக்ரூர பேசலோ தஷோ தஷிண ஷமிணாம் வர
வித்வத்தமோ வீதபய புண்ய ஸ்ரவண கீர்த்தன–98

உத்தாரணோ துஷ்க்ருதஹா புண்யோ புண்யது ஸ்வப்ன நாசன
வீரஹா ரஷணஸ் சந்தோ ஜீவன பர்யவச்தித–99

அநந்த ரூபோ அநந்த ஸ்ரீர் ஜிதமன்யூர் பயபஹ
சதுரஸ்ரோ கபீராத்மா விதிஸோ வ்யாதிசோ திஸ–100-

அநாதிர் பூர்ப்புவோ லஷ்மீஸ் ஸூ வீரோ ருசிராங்கத
ஜநாநோ ஜனஜன்மாதிர் பீமோ பீமபராக்ரம–101-

———————————————————————————

6-முக்தனுக்கு மோஷானந்தம் தரும் ஸ்ரீ வைகுண்ட நாதன் பரமான திரு நாமங்கள் -892-911-
7-கஜேந்திர மோஷ பரமான திவ்ய நாமங்கள் -912-945-

அஷ்ட சித்திகள் -838-870—33 திரு நாமங்கள்
மோஷ ப்ரதத்வம்-871-911—41 திரு நாமங்கள்
ஸ்ரீ கஜேந்திர வரதன் —-912-945—-34 திரு நாமங்கள்
ஜகத் வியாபாரம் ——–946-992—-47 திரு நாமங்கள்

—————–

6-முக்தனுக்கு மோஷானந்தம் தரும் ஸ்ரீ வைகுண்ட நாதன் பரமான திரு நாமங்கள் -892-911-

——–

அநந்த ஹூத புக்போக்தா ஸூ கதோ நைகதோ அக்ரஜ
அநிர்விண்ணஸ் சதா மர்ஷீ லோகாதிஷ்டான மத்புத –95

————–

892-அக்ரஜ
முன்னே விளங்குபவன் -பர்யங்க வித்யை

ஏவம் ப்ராப்த வதாம் முக்தாநாமக்₃ரே ஸஹ ஸர்வேஶ்வர்யா ஶ்ரியா யதா₂பர்யங்க வித்₃யம்
பரம போ₄க்₃யோ ஜாயத இதி
அக்₃ரஜ꞉

ச ஆகச்சதி அபிதவ் ஜசம் பர்யங்கம் -கௌஷீதகீ -1-5-
முக்தன் ஸர்வேஸ்வரனுடைய பர்யங்காசனத்தை அடைகிறான்

உப ஸ்ரீ ரூப ப்ரும்ஹணம் தஸ்மிந் ப்ரஹ்மாஸ்தே தமித்தம்வித் பாதேநைவ அக்ரே ஆரோஹதி
தம் ப்ரஹமாஹ கோ அஸி இதி –கௌஷீதகீ -1-5-
அந்தப் பர்யங்காசனத்தில் ஸர்வேஸ்வரன் தன்னுடைய பத்னியாகிய பெரிய பிராட்டியாருடன்
தன்னுடைய சேவகர்கள் சூழ்ந்தபடியும் வீற்று உள்ளான்
இப்படியாக ஸர்வேஸ்வரன் உள்ளதை இது நாள் வரை உபாஸித்து வந்த முக்தன்
இப்போது அந்த ஸர்வேஸ்வரனைக் கிட்டி அவன் வீற்றுள்ள பயங்காசனத்தின் மீது ஏறுகிறான்
அப்பொழுது சர்வேஸ்வரன் அவனை நீ யார் என்று வினவுகிறான் –

ஸா  யா ப்ரஹ்மணி சிதிர்யா வயஷ்டி தம் சிதிம் ஜயதி தாம் வயஷ்டி வ்யஸ்னுதே இதி இத்யே -வமந்தா ஹி பர்யாங்க வித்₃யா –கௌஷீதகீ -1-6-
அந்தப் ப்ரஹ்மத்தைக் குறித்த ஞானத்தை முக்தாத்மா அடைகிறான்
அந்தப் ப்ரஹ்மத்தின் ஆனந்தத்தை அடைகிறான் –

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

தேவிமாராவார் திரு மகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட்செய்வார் –வான் உயரின்பம் மன்னி வீற்று இருந்தாய்-அக்₃ரஜ -8-1-11-

இப்படி வந்தடைந்த முக்தர்கள் அனுபவித்து மகிழும்படி பர்யங்க வித்தையில் கூறியது போல் எல்லாச் செல்வங்களும் நிரம்பி
மிக ஸூக கரமாகப் பிரகாசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லாவற்றிற்கும் முன்னே இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

படிப்பதற்கு முன்னர் தோன்றுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

893-அநிர் விண்ண-
துயர் அற்றவன் -துயர் அறு சுடர் அடி தொழுது எழு -1-1-1-
சோம்பாது இப் பல்லுலகை எல்லாம் படைவித்த வித்தா -முன்பே 436-பார்த்தோ
சேதனனை துயர் அறச் செய்வதில் சதா முயற்சி யுடையவன்-

ஷேம கிருஷி பலன் கண்டதும் தான் துயர் அற்றவனாக இருக்கிறான் என்கிறது இங்கு

அமலன் தான் குற்றம் அற்றவன் என்று மட்டும் அல்லாமல் நம் குற்றங்களை போக்குமவன் போல்
இங்கும் நமது துயர் அறுத்து தானும் துயர் அற்று இருப்பத்தைச் சொல்கிறது

ஏவம் ஆஶ்ரிதம் மஹதா ப்ரணிதா₄நேந ஸம்ஸார க₃ர்தாத ₃உத்தார்ய ஆத்மாநம் ப்ராபப்ய ச
தம் அஸோஸ்யம் பஶ்யன்
அநிர்விண்ண

க்ருதக்ருத்யஸ் ததா ராமோ விஜ்வர–
தன்னைச் சரணம் புகுந்த விபீஷணனுக்கு இராமன் அப்போதே இலங்கை அரசனாக
பட்டாபிஷேகம் செய்து வைத்து அதன் பின்னர் செய்ய வேண்டியதை செய்து முடித்த மகிழ்ச்சியில் ஆழ்ந்தான் –

இப்படித் தம்மை அடைந்தவனை சம்சாரம் என்னும் படு குழியில் இருந்து கரையேற்றிய பிறகு
அவனைப் பற்றிய கவலை யற்று இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

விரும்பியவை எல்லாம் நிரம்பி இருப்பதாலும் ஒன்றும் கிடைக்காமல் இருக்கக் காரணம் இல்லாமையாலும்
வருத்தம் அற்று இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

துன்பம் அடையாதவர் -உலகப் படைப்பு முதலிய செயல்களில் சலிப்பு அடையாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

894-ஸதா மர்ஷீ
பொறுமை உள்ளவன் -எல்லா கைங்கர்யங்களையும் முக்தன் பாரிப்பு எல்லாம் அடங்க செய்வதை பொறுமை உடன் ஏற்றுக் கொள்பவன்

தத꞉ ப்ரப்₄ருதி ஸர்வே காலம் தேந க்ருத ப்ரதி க்ருதம் மர்ஷிதும் நிர்போ₃டு₄ம் ஶீலமஸ்யேதி
ஸதா₃மர்ஷீ ।
சோஸ்நுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா –தைத்ரியம் 1-2-
அந்த முகுந்தன் ப்ரஹ்மத்தின் அனைத்து விதமான போகங்களையும் அனுபவிக்கிறான்

உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் -10-8-10-

முகப்பே ஏவி பணி கொள்ளாய் -நித்ய யுக்தனாக்கி அருள பிரார்தித்தபடியே –

அது முதல் எல்லாக் காலத்திலும் முக்தன் செய்யும் கைங்கர்யங்களை பொறுத்துக் கொண்டும்
நிறைவேற்றிக் கொண்டும் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நற் காரியங்கள் செய்து அநு கூலமாக இருப்பவர்களின் குற்றங்களைப் பொறுப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களிடம் எப்போதும் கோபம் உள்ளவர் -நல்லோர்கள் விஷயத்தில் மன்னிக்கும் தன்மை உள்ளவர் –
ஸ்ரீ நந்தகோபனைக் காக்க வருணனிடன் சென்றவன் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————

895-லோகாதிஷ்டானம்-
உலகங்களுக்கு ஆஸ்ரயமாய் இருப்பவன் -இவற்றைத் தாங்குபவன் -இங்கு நித்ய விபூதியை குறிப்பிடுகிறது –

அநுத்தமேஷு உத்தமேஷு லோகேஷு , இதி ஶ்ருதாநாம் முக்த போக்₃ யாநாம் நித்ய -ஆஸ்ரயோ
லாேகாதி₄ஷ்டா₂நம் ||
அநுத்தமேஷு உத்தமேஷு லோகேஷு
உத்தமமான லோகங்களில் தனக்கு நிகராக யாரும் இல்லாமல்

வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று வீடு தரும் ஆழிப் பிரான்-3-9-9-

முக்தர்களினால் எப்போதும் பற்றப்படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மூன்று உலகங்களுக்கும் ஆதாரமானவர் -ஸ்ரீ சங்கரர் –

உலகிற்குப் புகலாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

896-அத்புத –
அத்புதமாய் உள்ளவன் –அத்புதம் -என்றும் பாடம்
அப் பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே –

தத்ர ச
அத்₃பு₄த꞉ ।
* அதி₃பு₄வோ டு₃தச் ।
ஸர்வதா₃ ஸர்வை ꞉ ஸர்வதா₂(அ)நுப₄வே (அ)ப்ய பூர்வ வத₃தி
விஸ்மயநீய ꞉ ॥
ஸதா பஸ்யந்தி ஸூரய –
பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில் யாம் -பெரிய திரு மொழி -8-1-9-
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மான்
இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை
இன்னார் என்று அறியேன் -பெரிய திரு மொழி -10-10-9-
அற்புதன் நாராயணன் -8-6-10-

வியப்பாய வியப்புஇல்லா*  மெய்ஞ் ஞான வேதியனைச்,* 
சயப்புகழார் பலர் வாழும்*  தடம் குருகூர்ச் சடகோபன்,*
துயக்கு இன்றித் தொழுது உரைத்த*  ஆயிரத்துள் இப்பத்தும்,*
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும்*  ஒலி முந்நீர் ஞாலத்தே. –3-1-11-

எக்காலமும் எல்லோராலும் எல்லா வகைகளாலும் அனுபவிக்கப் பட்டு இருந்தும் ஆச்சர்யப் படத் தக்கவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் உருவம் சக்தி செய்கை ஆகியவற்றால் அற்புதமானவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆச்ச்சர்யமான உருவம் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

ஸநாத் ஸநாத நதம கபில கபிரவ்யய ஸ்வஸ்தி தஸ்
ஸ்வ ஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்தி புக் ஸ்வஸ்தி தஷிண –96

————-

897-ஸநாத்-
அனுபவிக்கப் படுபவன் –அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத

ஸூர்ய ஒளி எங்கும் பங்கு போட்டுக் கொடுத்தாலும் எங்கும் குறையில்லாமல் இருப்பது போல் ஒவ்வொரு முக்தனுக்கும் பூர்ண அனுபவம் உண்டே

தேஷாம் ஸம் ப₄ஜநாத்
ஸநாத்,
ஸநஸ் ஸநாதி₃தி கணே நிபாதித꞉ ॥
விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனி -2-3-2-
எனக்கு ஆராமுதானாய் -10-10-5-

முக்தர்களால் பங்கு போட்டுக் கொண்டு அனுபவிக்கப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அநாதியான கால ரூபியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

லாபத்தை அடையும்படி செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

898-ஸநாதந தம –
மிகப் பழைமை யானவன்–ஸநா-புராணே தந-ரூபம்-நித்யம் –ஸநாதந தர –ஸநாதந தம

கிருஷ்ணன் தர்மம் ஸநாதநம்

ஏவம்
ஸநாதந தம꞉ ।
ஸநா புராணே தநபி ரூபம், புராணதம꞉ புராபி நவ꞉ புராண ꞉, ஸதா₃-தநத்வே (அ)பி ததா₃தநவந் நித்யம் நூதந போக்ய ॥
ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே-2-5-4-
வைகல் தோறும் என் அமுதாய வானேறே -2-6-1-

மிகத் தொன்மையான வராயினும் அப்போது தான் புதிதாகக் கிடைத்தவர் போல் அனுபவிக்கத் தக்கவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லோருக்கும் காரணம் ஆகையால் பிரமன் முதலியோருக்கும் பழைமையாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகவும் தொன்மையானவர் -லாபத்தைக் கொடுப்பவளான லஷ்மி தேவியைத் தம்மிடம் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

899-கபில –
ஒளி விளக்கமுற்றவன் -காள மேகம் மின்னல் போலே பிராட்டி உடன் -ஒளி மயமான பரம பதத்தில் –

கிம் ரூப꞉ ? மத்₄ யஸ்த₂நீல தோயதே ₃வித்₃ -யல்லே கோ₂ஜ்ஜ்வல வர்ண ꞉
கபில꞉ ॥
கோட்டிய வில்லோடு மின்னு மேகக் குழாம் -9-5-7-

நீல தோயத மத்யஸ்த–வித்யுல்லேக்க பாஸ்வரா -மின்னு மா மழை தவழும் மேக வண்ணா

கரியான் ஒரு காளையான கண்ணனைக் காட்டித் தரும் பிராட்டி

சுற்றிலும் மின்னிக் கொண்டு இருக்கும் மின்னலின் நடுவில் உள்ள மேகம் போல் நிறமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கபில நிறமுள்ள வடவாக்னியாக கடலில் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ அனுமனை ஏற்றுக் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

900-கபிரவ்யய –
அழிவில்லா ஆனந்தம் அனுபவிப்பவன்–முக்தனையும் அனுபவிப்பித்து தானும் அனுபவித்து இவற்றை –பாதி-பாலனமும் பண்ணி அருள்பவர் 

ஸ்வயமபி தத₃நுப₄வ ஸுக ₂நிர்வ்ருதிம் பாதி பிப₃தீதி வா
கபி ரவ்ய ꞉ ।
* இன் ஸர்வதா₄-துப்₄ய ꞉ । ஆதோ லோப꞉ ॥
பெரிய சுடர் ஞான இன்பம் -10-10-10-

மாறுதல் அற்ற நித்ய ஸூகத்தைக் காப்பாற்றி அனுபவிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கபி -சூரியன் வராஹம் அப்யய -பிரளயத்தில் உலகம் அடங்கும் இடமாக இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –

கபி சுகத்தைப் பருகுபவர் -அப்யய -பிரளயத்தில் உலகம் லயிக்கும் இடமாக இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் –
அவ்யய-என்ற பாடத்தில் காக்கப் பட வேண்டியவர்களிடம் செல்பவர் என்றுமாம் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

இப்படியாக ஹாரீத குலத்துக்குத் திலகம் போன்ற ஸ்ரீ வத்சாங்கர் -என்னும் கூரத்தாழ்வானின் திருக்குமாரரும்
ஸ்ரீ பெரிய பெருமாள் திவ்ய ஆஜ்ஜையாலே ஸ்ரீ பராசர பட்டர் என்ற திரு நாமம் சாற்றப் பெற்றவருமான
ஸ்ரீ ரெங்க நாதன் என்னும் இயல் பெயர் கொண்டவர்
அருளிச் செய்த பகவத் குண தர்ப்பணம் என்னும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யத்தில்
ஒன்பதாம்      நூறு திரு நாமங்கள் வியாக்யானம் ஸம் பூர்ணம்

ஒன்பதாம்     சதகம் முடிந்தது-

———–

901-ஸ்வஸ்தித –
மஹா மங்களங்களைக் கொடுப்பவன்

ஏவம் மஹந் மங்க₃லம் த₃தா₃தீதி
ஸ்வஸ்தித₃꞉

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சார அக்நி விதீபன வியபஹத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||ஸ்ரீ பாஷ்யம் -இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

அசந்நேவச பவதி -அசத் ப்ரஹ்மேதி வேத சேத் அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத -சந்த மேநம் ததோ விது-தைத்ரியம்
இந்த மெய் ஞானம் அருளி பரம பதம் பேற்றையும் அளிப்பவன்
உயர் வினையே தரும் ஒண் சுடர்- 1-7-4-
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து போதில் கமல வன்னெஞ்சம் புகுந்தான் -பெரியாழ்வார் -5-2-8-

இப்படி மங்களத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ பரசார பட்டர் –

பக்தர்களுக்கு மங்களத்தை அளிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு மங்களத்தை அருள்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

902-ஸ்வஸ்தி க்ருத் –
மஹா மங்களத்தை செய்பவன் –

ஸ்வ கு₃ணை ꞉ ஸ்வ போக  ஆஶிஷம் கரோதீதி
ஸ்வஸ்தி க்ருத் ॥
ஸோஅஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சித –
முக்தர்களுக்கு போக மகிழ்ச்சி அளிப்பவன்

முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூவுலகுக்கு உரிய
கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்பு தன்னை
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடி யானை வணங்கி அவன் திறத்துப்
பட்டபின்னை இறை யாகிலும் யான் என்மனத்துப் பரிவு இலனே.–3-10-3-

தம்மைக் குணங்களுடன் அனுபவிக்கும் படி முக்தர்களை ஆசீர்வதிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மங்களத்தை செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

நல்லதை உண்டு பண்ணுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————–

903-ஸ்வஸ்தி –
தானே மங்கள ரூபமாக இருப்பவன் –யஸ்ய நாந் யத்ர பஸ்யதி–ஸ்ருணோதி–ச பூமா

ஸ்வய மேவ மஹந் மங்க₃லம்
ஸ்வஸ்தி ।
* ஸ்வஸ்தி ஶிவாஶிஷோ
* ஸாவ ஸேஶ்ஶித் இதி திப்ரத்ய ꞉ । ஶித்வாத்₃ பூ₄பா₄வா பா₄வ꞉
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
செங்கனி வாய் செய்ய தாமரைக் கண்ணன் கொங்கலர் தண் அம் துழாய் முடியன் -6-6-2-
மாண் குறள் கோலப் பிரான் -5-9-6-

தாமே மஹா மங்கள மூர்த்தி -ஸ்ரீ பராசர பட்டர் –

பரமானந்த ரூபமான மங்கள ஸ்வரூபி –ஸ்ரீ சங்கரர் –

எல்லா இடம் காலங்களிலும் சுகமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

904-ஸ்வஸ்தி புக் –
மங்களத்தை பரிபாலிப்பவன் –

ஸர்வ மேதத் ஸ்வஸ்தி பு₄நக்தி – பாலய தீதி
ஸ்வஸ்தி பு₄க்
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே -6-10-7-

எல்லா மங்களங்களையும் அழியாமல் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்கள் மங்களத்தை அனுபவிக்கும்படி செய்பவர் -மங்களத்தை அனுபவிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

சுகத்தை அனுபவிக்கும்படி செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

905 -ஸ்வஸ்தி தஷிண –
மங்களத்தை யாக தஷிணையாக தருபவன் -தீர்க்க சத்திர யாகம் -செய்து தன்னை அளிக்கிறான்

அந்ய த₃பி ஸ்வ பரிசரண அநு கு₃ணம் தி₃வ்ய ஸரீர ஸக்த்யாதி₃ ஸ்வஸ்தி ஸ்வாத்மதா₃ந
தீ₃ர்க ₄ஸத்ரே ருத் விக்ப்₄யோ தேயா த₃க்ஷிணா (அ)ஸ்யேதி
ஸ்வஸ்தி த₃க்ஷிண ꞉ ॥
எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
வானவர் போகம் என்கோ –வானவர் முற்றும் ஒளி வண்ணன் என்கோ -3-4-7-

மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்  தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும்  மருந்தினை, ‘இராமன் ‘என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக்  கண்களின் தெரியக்  கண்டான்.

தம் அடியார்களுக்குத் தமக்குக் கைங்கர்யம் செய்யத் தகுதியாக திவ்ய சரீரம் சக்தி முதலிய பல நன்மைகளை
தஷிணையாக அளிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மங்கள ரூபமாக விருத்தி அடைபவர் -மங்களத்தைக் கொடுக்கும் திறமை உடையவர் –
தஷிண -விரைவு பொருளில் மங்களத்தை மிக விரைவாக அளிப்பதில் வல்லவர் -என்றுமாம் ஸ்ரீ சங்கரர் –

தஷிண -வலது பாகத்தை அலங்கரித்து இருப்பதால் தஷிணா என்று பெயருள்ள ஸ்ரீ லஷ்மியை அடைந்து இருப்பவர் –
மங்களத்தைச் செய்வதில் திறமை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

அரௌத்ர குண்டலீ சக்ரீ விக்ரம் யூர்ஜித தசாசன
ஸப்தாதிகஸ் ஸப்த ஸஹஸ் சிசிரஸ் ஸர்வரீகர –97-

————-

906-அரௌத்ர-
கடுமை இல்லாமல் குளிர்ந்து இருப்பவன்

பரம ஐஶ்வர்யே (அ)பி கு₃ணஶீ லிம்நா
அரௌத்₃ர꞉ ॥
நலம் கடல் அமுதம் –அச்சுவைக் கட்டி -3-4-5-

சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே

சீற்றம் இலாதானைப் அரௌத்₃ரபாடிப்பற சீதை மணாளனைப் பாடிப்பற
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு கோபம் ஆஹாரயதி வரவழைத்துக் கொண்டதை நம்பியே நாம் உள்ளோம்

எல்லாவற்றிற்கும் மேலான செல்வம் இருந்தாலும் திவ்ய கல்யாண குணக் குளிர்ச்சியால் குளிர்ந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாம் அடைந்து இருப்பவர் -ஆதலின் ஆசை வெறுப்பு முதலியவை இல்லாதவர் -கொடிய செய்கை காமம் கோபம் ஆகிய
மூன்று கொடுமைகளும் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

கொடியவர் அல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

907-குண்டலீ-
காதணிகளை அணிந்து இருப்பவன்

யத் உசித நித்ய தி₃வ்ய பூ₄ஷண
குண்ட₃லீ ॥
இலகு விலகு மகர குண்டலத்தன் -8-8-1-
மகர நெடும் குழைக்காதன் மாயன்—நிகரில் முகில் வண்ணன் -7-3-10-
மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட -திரு நெடும் தாண்ட -21-

மின் வீசும் மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்-

தம் திருமேனிக்குத் தகுதியான குண்டலம் முதலிய திவ்ய பூஷணங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆதி சேஷ ரூபி -ஸூர்யன் போலே பிரகாசிக்கும் குண்டலங்கள் உடையவர் –
சாங்க்யம் யோகம் ஆகிய இரண்டு மகர குண்டலங்களை உடையவர் – ஸ்ரீ சங்கரர் –

மகர குண்டலம் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

908-சக்ரீ-
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -பெரிய திருவந்தாதி -87-

மேல் 995 998 வரும்

தாத்₃ருஸ தி₃வ்யாயுத₄꞉
சக்ரீ ॥
திவ்ய ஆபரணமாயும் ரஷையாயும்
ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் -8-3-3-
கூராழி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் –ஒருநாள் காண வாராயே -6-9-1-
குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-

அதே போலே ஸ்ரீ சக்கரத் ஆழ்வான் முதலிய திவ்ய ஆயுதங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகைக் காப்பதற்காக மனஸ் தத்வ ரூபமான ஸ்ரீ ஸூதர்சன சக்ரத்தை தரித்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ சுதர்சனம் என்னும் சக்கரத்தை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

909-விக்ரமீ-
பராக்கிரமம் உள்ளவன் –

கா₃ம்பீ₄ர்ய அநுகூல விலாஸ꞉
விக்ரமீ ॥
உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால்
எழுதிக் கொண்டேன் இராம நம்பீ-பெரியாழ்வார் -5-4-6-
சமுத்திர இவ காம்பீர்ய
முன்பே 76-பார்த்தோம்

தம் பெருமைக்கு உரிய திவ்ய சேஷ்டிதங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிறந்த நடை உள்ளவர் -சிறந்த பராக்கிரமம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

பராக்கிரமம் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

910-ஊர்ஜித சாசன-
பிறர் கடக்க முடியாத உறுதியான கட்டளை பிறப்பிப்பவன்-
திவ்ய ஆஞ்ஞை

விரிஞ்சி புரந்த₃ராத்₃ யலங்க ₄ யாஜ்ஞ꞉
ஊர்ஜித ஸாஸந꞉ ॥
ஆணை மெய் பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வன் -திரு வாசிரியம் -3
சர்வேஸ்வரேஸ்வரன்

ஸ்ருதி ஸ்ம்ருதி மம ஆஜ்ஜை

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சார அக்நி விதீபன வியபஹத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||ஸ்ரீ பாஷ்யம் -இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

அசந்நேவச பவதி -அசத் ப்ரஹ்மேதி வேத சேத் அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத -சந்த மேநம் ததோ விது-தைத்ரியம்

பிரமன் இந்திரன் முதலானவர்களாலும் கடக்க முடியாத உறுதியான கட்டளையை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வேதம் தர்ம சாஸ்திரம் ஆகியவைகள் ஆகிய உறுதியான கட்டளைகளை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

உறுதியான ஆணை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

911-ஸப்₃தா₃திக –
சொல்லுக்கு எட்டாதவன்

அநந்த ஜிஹ்வேந அநந் தேந  அநந்த ஸாகைர் ஆம்நாயைஸ் ஸாக்ஷாத் ஸரஸ்வத்யா ச து₃ருதா₃ஹர
மஹிமா
ஸப்₃தா₃திக ₃꞉ ॥
தன் முடிவு ஓன்று இல்லாத தண் துழாய் மாலையானை –சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே -2-5-8-
யதோ வாசோ நிவர்த்தந்தே

நமோ நமோ வாங்மநஸாதிபூமயே
நமோ நமோ வாங்மநஸைக பூமயே |
நமோ நமோ’நந்த மஹா விபூதயே
நமோ நமோ’நந்த தயைக ஸிந்தவே ||ஶ்லோகம் 21 –

தேநீர் கமலக் கண்களும் வந்து என் சிந்தை நிறைந்தவா
தூ நீர்க்கடலுள் துயில்வானே எந்தாய் சொல்ல மாட்டேனே -8-5-4-

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8-

என் முடிவு காணாதே-எனது தன்மை பார்க்காமல் கண் செம்பளித்து
ஆடி ஆடியில் ஆழ்வார் முடிந்ததே போகும் நிலையைக் காண மாட்டாமல் கலந்தான்
இந்த என்னுள் கலந்த ஒரு குணத்தையே சொல்லப் புகில் ஆனந்த குணம் சொல்லப்புகுந்த வேதம் படும் அத்தனை

பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி
ஏசினர் உய்ந்து போனார் என்பது இவ் உலகின் வண்ணம்
பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தேற்கு
ஆசையோ பெரிது கொள்க அலை கடல் வண்ணர் பாலே–திருக்குறும் தாண்டகம்-17-

ஆதி சேஷனுடைய அநேக நாவாலும் வேதங்களின் அநேக கிளைகளாலும் சரஸ்வதியினாலும் சொல்ல முடியாத
மகிமை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சப்தத்தினால் சொல்வதற்கு உரிய ஜாதி முதலியவை இல்லாதபடியால் சப்தத்தைக் கடந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

சப்தத்தைக் கடந்து இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

7-கஜேந்திர மோஷ பரமான திவ்ய நாமங்கள் -912-945-

912-ஸப்த சஹ –
ஆர்த்த நாத கூப்பீட்டை சுமப்பவன்

அத₂கஜேந்த்₃ர மோக்ஷணம் ।
அஸ்பஷ்ட ஸப்₃தா₃நாம் திரஶ் சமப் யார்த ஸப்₃த₃மதி-
பா₄ரமிவ ஸஹத இதி
ஸப்₃த₃ஸஹ꞉ ।

பக்திம் தஸ்ய அநு சஞ்சிந்த்ய
கஜேந்த்ரனுடைய கூக்குரலை மீண்டும் மீண்டும் சிந்தித்தபடி இருந்தான்

ஹரி -திருநாமத்துடன் கஜேந்திர ரக்ஷணம்
தேவலர் சாபத்தால் -ஹாஹா ஹு ஹு கந்தர்வன் -யானை -முதலை -இருவருக்கும் பேற்றை அளித்தான்

திரிகூட பர்வத்தில் பொற்றாமரைக்குளம் –
பூர்வ ஜென்ம வாசனை -பூவை திருவடியில் சமர்ப்பிக்க இழிய முதலை கவ்வ -தேவமானத்தால் 1000 ஆண்டு போராடி
துதிக்கை மட்டும் மீதி -அகில காராணாய நிஷ் காரணாய அத்புத காராணாய–கதறி கை கூப்பி கண்ணா என்று அழைக்க

ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணன் -திருமாலை -44-
கைம்மா துன்பம் கடிந்த பிரான் -2-9-1-

கஜேந்திர மோஷம் -விலங்குகளின் தெளிவற்ற சப்தத்தையும் பெரிய பாரம் போலே பொறுப்பவர் -ஸ்ரீபராசர பட்டர் –

எல்லா வேதங்களாலும் தாத்பர்யமாகச் சொல்லப் படுவதனால் எல்லா சப்தங்களையும் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்-

பிருகு முனி முதலிய பக்தர்களின் மிரட்டல் ஒலி மற்றும் உதைத்தல் முதலியவற்றைப் பொறுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

913-ஶிஶிர –
வேகமாகச் செல்பவன் –

ஆர்த ஸப்₃த₃ஶ்ரவண அநந்தரம்  அதி த்வர யாக₃த꞉
ஶிஶிர꞉ ।
“ஸ்ஸ ப்லுத கதௌ ”
*அஜிர ஶிஶிர, இத்யாதி₃நா ரக் ப்ரத்யயாந்தோ நிபாதித꞉ ।
* ஶ்ருத்வா சக்ர க₃தா₃த₄ர꞉ ।
ஸாந் நித்₄ யம் கல்ப யாமாஸ தஸ்மின் ஸரஸி இதி ॥

பகவதஸ் த்வராயை நம-

ஸ்ருத்வா சக்ர கதாதர-
கஜேந்த்ரனுடைய கூக்குரலைக் கேட்டவுடன் சக்கரமும் கதையாக வந்து நின்றான்

க ஒலி கேட்டு ஜம் என்று குதித்தான் -வாரணம் காரணம் நாரணம் -சுருக்கமாகவே சொல்லலாம்

கூப்பிட்டதுக்காக வரவில்லை -அது உபாயம் இல்லையே -சம்பந்தத்துக்காக ஆர்த்த நாதம் கேட்டதும் விரைந்து வந்து ரஷிக்கிறான்

ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று ஆழி தொட்டான் -பெரிய திரு மொழி -2-3-9-
போரானை பொய்கை வாய்க் கோட்பாட்டு நின்றவறி–நீரார் மலர்க்கமலம் கொண்டோர் நெடும் கையால்
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய் வாராய் என்னாரிடரை நீக்காய் -என வெகுண்டு தீராத சீற்றத்தால்
சென்றிரண்டு கூறாக ஈராவதனை இடற் கடிந்தான் எம்பெருமான் பேராயிரம் உடையான் -சிறிய திரு மடல்-

துன்பத்தில் இருப்பவரின் கூக்குரல் கேட்டதும் விரைந்து செல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தாப த்ரயங்களால் வருந்துபவர்க்குக் குளிர்ந்த இடமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகவும் சுகத்தை அனுபவிப்பவர் விஷயத்தில் மகிழ்பவர் -பக்தர்கள் தம்மிடம் ஓடிவரும்படி இருப்பவர் –
என்ற பாடமானால் -சந்த்ரனிடம் மகிழ்பவர் என்று பொருள் -அசுரர்களை அழிப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

914-ஸர்வரீ கர –
பிளக்கும் திவ்ய ஆயுதங்களை கையில் ஏந்தியவன் -சென்று இரண்டு கூறாக

ஸர்வரீ கர꞉।
ஶ்ருணாதே ꞉
* க்ருக்₃ ருஶ் ருவ் ருஞ் சதிப்₄யா ꞉ ப்வரச் இதி ஷ்வரா |ஷித்வாத் ஙீஷ் ।
ஸர்வரீ – ஹிம்ஸ்ரா பர விதா₃ரிணீ பஞ்சாயுதீ₄ தா கரே (அ)ஸ்யேதி ॥
பஞ்ச திவ்ய ஆயுதங்களை -குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-
908 சக்ரீ முன்பே பார்த்தோம்

கதா பாணியாய் வந்த விபீஷணன் -ஏஷ ஸர்வாயுதோபேத -கதையைப் பற்றின பாங்கில் -அதே போல் இங்கு சக்கரம் மட்டும் இருந்தாலும் –
அட்ட புயகரத்தான் -தொட்ட படை எட்டும் சொல்லி –குறித்து எறிந்த -சக்கரத்தான் –

அப்போது பகைவரைப் பிளக்கும் பஞ்சாயுதங்களையும் கையில் கொள்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சாரிகளுக்கு இரவாகிய ஆத்ம ஸ்வரூபத்தையும் ஞானிகளுக்கு இரவைப் போலே சம்சாரத்தையும் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

இரவில் சந்த்ரனுக்கு உள்ளிருப்பவராய்க் கிரணங்களைப் பரப்புபவர் -இரவை உண்டாக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———-

அக்ரூர பேசலோ தஷோ தஷிண ஷமிணாம் வர
வித்வத்தமோ வீதபய புண்ய ஸ்ரவண கீர்த்தன–98-

—————

915-அக்ரூர –
க்ரூரம் இல்லாதவன் -முதலையை உடனே கொல்ல மனஸ் இல்லாமல் ஆழி தொட வில்லை

அக்ரூரர் க்ருத ஹ்ருதய -கோபிகள்
இங்கு குரூரமாக கொண்ட சீற்றம் ஓன்று உண்டு என்று இருந்தாலும் அக்ரூரர்

க₃ஜ பரிஜி ஹீர்ஷயா கரஸ்தை ₂ரப் யாயுதை ₄ர்  க்₃ராஹமபி ஜ₂டித் யக்ருத்தவான்
அக்ரூர꞉,
*க்ருதேஶ்ச₂꞉ க்ரூ ச * இதி ரக் க்ரூ – ஆதே ₃ஸஶ்ச । யதா

*க்ரஹக்ரஸ்தம் கஜேந்த்ரம் ச தம் க்ராஹம் ச ஜலாசயாத் உஜ்ஜஹார அப்ரமேயாத்மா தரஸா மது ஸூதந

யாராலும் வெல்ல இயலாத மது ஸூதனன் அந்தக் குளத்தில் இருந்து வேகமாக
கஜேந்த்ரணனையும் முதலையையும் வெளியே எடுத்தான்

கானமர் வேழம் கை எடுத்து அலர கரா அதன் காலினைக் கதுவ ஆனையின் துயரம் தீரப்
புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை-பெரிய திரு மொழி -2-3-9-
ஆயர் கோபிகள் அகரூர் கண்ணனை கூட்டி சென்றதால் க்ரூர ஹ்ருதயர் -எனப்பட்டார்

யானைக்கு ஆச்வாஸம் -முதலைக்கு அவகாஸம் -தானும் க்ருதக்ருத்யனாக ஆனந்தம் -ஸ்வரூப நாஸம்-வேதமும் சத்தை பெற்றது
மழுங்காத –சுடர் சோதி மறையாதே -வந்து நின்று -கஜேந்திர வரதன் இன்றும் நமக்கு சேவை -கருடாரூடனாக –
தொட்டாச்சார்யார் கோபுர வாசல் சேவை -வையம் கண்டு மகிழும் வைகாசி விசாக சேவை
ஆழ்வாராதிகளுக்கு அபிமத லாபம் பெற்றார்கள்
நாமும் இன்று சேவித்து உஜ்ஜீவனம் அடைகிறோம்

யானையைக் காக்கும் பொருட்டு கையில் ஆயுதங்களை எடுத்தும் முதலையையும் கொல்ல மனமில்லாமல்
பொறுத்து இருந்தவர் -ஸ்ரீபராசர பட்டர் –

கோபம் இல்லாதவர்–க்ரௌர்யம்-உள் தாபம் -மநோ தர்மம் -அவாப்த சமஸ்த காமர் என்பதால்
காமம் கோபம் இல்லாதவர் ஸ்ரீ சங்கரர் –

குரூரத் தன்மை இல்லாதவர் -அக்ரூரருக்குப் பிரியமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

916-பேஸல –
அழகன் -அலைய குலைய ஓடி வந்ததால் வஸ்த்ரம் மாலை திரு ஆபரணங்கள் கலைந்து இருந்தும்
அழகில் குறை இல்லாமல்

ஸம் ப்₄ரமாத₃ யதா₂ யத₂ஸ்ரக்₃ பூ₄ஷ  அம் ப₃ர ரமணீய ꞉
பேஸல꞉ ॥
பருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பரமன் -நாச் திரு -14-10-

கஜேந்த்ரனைக் காப்பாற்றுவதில் உள்ள வேகத்தினால் கலைந்த ஆடை ஆபரணங்களினால் அழகாகத் தோன்றியவர் -ஸ்ரீபராசர பட்டர் –

செய்கையிலும் மனத்திலும் வாக்கிலும் வடிவத்திலும் அழகாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மனத்தைக் கவர்பவர்-ருத்ரனை பக்தனாக ஏற்றுக் காப்பாற்றுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

917-தஷ –
வேகம் உள்ளவன் -முன்பே 913 சிசிர பார்த்தோம்-வேகமான செயல் அங்கு இங்கு விரைவாக வந்தமை இந்த பொருளில் –முன்பே 424 பார்த்தோம்

க்ஷிப்ரம் ஆக₃ந்தா
த₃க்ஷ꞉ ॥

களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே -ஜகத் காரணம் -காரணமே கூப்பிட்டதால் புள்ளையும் தூக்கிக் கொண்டு வந்தானே

விரைவாக வந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

முழுமை சக்தி விரைவாக செயல்படுதல் ஆகிய மூன்றும் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

சாமர்த்தியம் உள்ளவர் -விரைவில் சென்று விரோதிகளை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

918-தஷிண –
இனிய இயல்பு உடையவன் -முன்பே வந்து யானைக்கு உதவப் பெற்றிலோமே-
சாந்தவனை கஜேந்த்ரஷ்ய அனுகூல தஷிண -சொல்லி ஆஸ்வாசம் செய்து அருளினான்

ததா₂(ஆ)க₃த்ய தி₄ங்மாம் தூ₃ரக ₃தோ (அ)ஹம் த்வாமிதி ஸாந்த்வநை க ₃ஜேந்த்₃ரஸ்ய அநுகூல꞉
த₃க்ஷிண ꞉ ।
“த₃க்ஷ வ்ருத்₃தௌ₄”
* த்₃ருத₃க்ஷிப்₄ யாம், இதீநன் । யதா
ப்ரீதி மாந் புண்டரீகாக்ஷ சரணாகத வத்சல பஜந்தம் கஜ ராஜாநாம் மதுரம் மது ஸூதந
மது என்னும் அசுரனை அழித்தவனும்
தாமரை போன்ற கண்கள் கொண்டவனும்
தனது அடியார்கள் இடம் கருணை பாசம் கொண்டவனுமாகிய ஸர்வேஸ்வரன்
தன்னை வணங்கி நின்ற கஜேந்த்ரனுடன் மிகவும் ப்ரீதியுடன் விளங்கினான் –

தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினான் -3-1-9-

கனைத்து இளம் கற்று எருமை -யானையை உடனே ரஷிக்காமல் போனதால் குறுமினார் -வியாக்யானம்

அப்படி வேகமாக வந்தும் ஐயோ உனக்கு தூரத்தில் இருந்தேனே -என்று தேற்றி கஜேந்த்ரனிடம்
அன்பு பாராட்டியவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

செல்பவர் அல்லது அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

திறமை உள்ளவர் -உதார குணம் உள்ளவர் மூத்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

919-ஷமிணாம் வர
பொறுமை உள்ளவரில் சிறந்தவன் –

தத்₃த₃ர்ஸநேந த்₄ருதாத்மா
க்ஷமிணாம் வர꞉

அபவத் தத்ர தேவேஸ  –தேவாதி தேவன் தன் ஆற்றாமை தீர நின்றான்

கைம்மா துன்பம் கடிந்த பிரான் -2-9-1-

இருக்கிறவர் இல்லாதது போல் முன்-ஆழ்வார் உடன் கலக்கும் முன்பு -இல்லாதது போல்
கண்கள் சிவந்து –மகர குண்டலத்தன் கொண்டல் வண்ணன்-அந்தாமத்து –உள-க்ருதக்ருத ராம விஜ்வர

ஸ்ரீ கஜேந்த்ரனைக் கண்ட பின்பே தம் இருப்புப் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் பொறுக்கும் யோகிகளையும் பூமி முதலியோரையும் காட்டிலும் மிக உயர்ந்தவர் -உலகம் அனைத்தும் தாங்கியும்
பூமியைப் போலே பாரத்தினால் சிரமம் அடையாமல் மிக உயர்ந்தவர் -சக்தி உள்ளவர்கள் அனைவரிலும் சிறந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

பொறுப்பவர்களில் சிறந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

920-வித்வத் தம –
அறிவில் சிறந்தவன்-வித்வான்களில் மிகச் சிறந்தவர் -யானையின் ரணத்தை ஆறச் செய்த சிறந்த வைத்தியன்

தச் சிகித் ஸாயாம்
வித்₃வத் தம꞉ ।
ஏவமுக்த்வா குரு ஸ்ரேஷ்ட கஜேந்த்ரம் மது ஸூதந ஸ்பர்ச யாமாச ஹஸ்தேந
குரு வம்சத்தில் சிறந்தவனே கேட்ப்பாயாக
கஜேந்த்ரனைக் காப்பாற்றிய யுடன் அவனைத் தன் திருக் கரத்தால் தடவிக் கொடுத்தான் –

உத்தரீயம் வாயில் வைத்து ஊதி உஷ்ணப்படுத்தி -புண்ணில் வைத்து வேது கொண்டவன் –
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் –

வந்து தோன்றாயன்றேல் உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
செந்தண் கமலக் கண் கை கால் சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே–8-5-7-ஸாது பரித்ராணாம் பிரதானம்

ஸ்ரீ கஜேந்த்ரனுக்கு சிகித்ஸை அளிக்கத் தெரிந்தவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

பிறருக்கு இல்லாதன எல்லாவற்றையும் எப்போதும் அறியும் மிக உயர்ந்த ஞானம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிக்க ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

921-வீத பய
யானையின் பயத்தை போக்குபவன் -அவன் வந்த வேகம் கண்டதுமே எல்லா பயங்களும் போந்தன

தத் ஸமாக ₃மது முலோப லம்பா₄த்₃வீதம் ப₄யம் கஜேந்த்₃ரஸ்யேதி
வீத ப₄ ய ॥

தாம் வந்த வேகத்தைக் கண்டதாலேயே ஸ்ரீ கஜேந்த்ரனுக்கு பயத்தை நீக்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சாரம் ஆகிய பயம் அற்றவர் -ஸ்ரீ சங்கரர் –

அச்சம் அற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

922-புண்ய ஸ்ரவண கீர்த்தன –
கஜேந்திர சரிதம் கேட்பதை மிக்க புண்ணியமாம் படி அனுக்ரஹித்தவன் -சொல்பவர் கேட்பவர் -யாவர்க்கும் பாபங்கள் போகும்
ஸ்ருதேந ஹி குரு ஸ்ரேஷ்ட ஸ்ம்ருதேந கதிதேந வா கஜேந்திர மோஷேந நைவ சத்யஸ் பாபாத் ப்ரமுச்யதே
குரு வம்சத்தில் உயர்ந்தவனே –யார் ஒருவன் கஜேந்திர மோக்ஷம் பற்றிக் கேட்க்கிறானோ
நினைக்கிறானோ -பேசுகிறானோ -அவன் அந்த நொடியிலேயே பாபங்கள் அனைத்தையும் விட்டவன் ஆகிறான் –

இதி புண்ய ஶ்ரவண கீர்தந

யானையின் இடர் கடிந்த புணர்ப்பே –முதலாம் -2-8-2–கைக்குமதல் புண்ணியம்

கொண்ட சீற்றம் ஓன்று உண்டு –மற்றது நின் சரண் நினைப்ப –அறிந்து அடியேனும் அடியிணை அடைந்தேன்

ஸ்ரீ கஜேந்திர மோஷத்தைக் கேட்டல் நினைத்தல் உரைத்தலால் எல்லாப் பாவங்களையும் நீக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம்மைப் பற்றிக் கேட்பதும் உரைப்பதும் புண்ணியம் தருவதாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

தம்மைப் பற்றிக் கேட்பதும் பாடுவதும் புண்ணியம் தருவதாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

உத்தாரணோ துஷ்க்ருதஹா புண்யோ புண்ய துஸ்வப்ன நாசன
வீரஹா ரஷணஸ் சந்தோ ஜீவன பர்யவஸ்தித–99

—————-

923-உத்தாரண
கரை ஏற்றுமவன்-யானையையும் முதலையையும் ஒக்க கரை ஏற்று சாபம் விமோசனம் அடையச் செய்து அருளி

தௌ ஸரஸ உத்தாரி தவான்
உத்தாரே꞉
கம்ப மா கரி கோள் விடுத்தான் -பெரியாழ்வார் -5-1-9-

நீந்தும் துயர்ப்பிறவி உட்படமற்று எவ்வெவையும்
நீந்தும்; துயர்இல்லா வீடு முதல்ஆம்;
பூந்தண் புனல் பொய்கை யானை இடர்கடிந்த
பூந்தண் துழாய்என் தனிநா யகன்புணர்ப்பே.

கரை ஏற்றுவனுக்கும் நாலாறும் உபதேசித்த ஆழ்வார்

யானையையும் முதலையையும் குளத்தில் இருந்து கரையேற்றியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலக வாழ்க்கையாகிய கடலில் இருந்து கரையேற்றுபவர் -ஸ்ரீ சங்கரர் –

மேம்படுத்துபவர் -துறவிகளுக்குச் சுகம் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

924-துஷ்க்ருதிஹா –
தீங்கு செய்பவரைத் தொலைப்பவன்
ஸ்தலஸ்தம் தாரயாமாச க்ராஹம் சக்ரேந மாதவ –ஸ்ரீ விஷ்ணு தர்மம்
முதலையானது தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டு தரையில் உள்ள போது மாதவன் தன்னுடைய
சக்கரத்தாலே அதனை அறுத்தான்

இதி துஷ்க்ருதிஹா

பொல்லா அரக்கரைக் கிள்ளிக் களைந்தானை

தூவாய புள்ளூர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானைத்
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயுளானை நறையூரில் கண்டேனே –6-8-3—பரித்ராணாயா ஸாதுநாம் -துஷ்க்ருத்ய வி நாசனம் -தர்மம் ஸம் ஸ்தாபனம் மூன்றும் இதில் உண்டே

துஷ்டமான முதலையைக் கொன்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பாவங்களைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

பாபிகளை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

925-புண்ய
பாபங்களைப் போக்கடிப்பவன்

அநயா கீர்த்யா (அ)ஸ்மதா₃தீ₃நபி புநாதீதி
புண்ய ॥
அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியன் -திருச்சந்த -45-
அடியேன் மனம் புகுந்த புண்ணியனே -பெரிய திருமொழி -3-5-7-
முன்பே 692 பார்த்தோம்

இப் புண்ணிய சரித்திரத்தினால் நம்மைப் போன்றவர்களின் பாவங்களைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம்மை நினைப்பது முதலியன செய்பவர்களுக்குப் புண்ணியத்தைத் தருபவர்–
ஸ்ருதி ஸ்ம்ருதிகளால் எல்லோருக்கும் புண்யத்தையே கூறுபவர் – ஸ்ரீ சங்கரர் –

புண்ணியத்தைத் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————-

926-துஸ் ஸ்வப்ன நாசன
கெட்ட கனவுகளை போக்குபவன்
இந்த சரித்ரம் கெட்ட கனவுகளைப் போக்கும்
எல்லா பகவ திரு நாமங்களுக்கும் இந்த மகிமை உண்டே

க ஏவம் ? து₃ஸ்வப்ந நாஸந꞉ । யதா₂,

யே மாம் த்வாம் ச சரஸ்சைவ
யார் ஒருவன் என்னையும் கஜேந்த்ரனான உன்னையும் குளத்தையும் நினைக்கிறானோ

துஸ் ஸ்வப்நோ நச்யதே தேஷாம்
அவர்களுடைய அனைத்து தீய கனவுகளும் அழிகின்றன

துஸ் ஸ்வப்நோப சாமாயாலம்
இந்த சரித்திரம் அனைத்து தீய கனவுகளையும் நீக்க வல்லது

ஸ்வப்னமும் -கர்ம பலனே -இந்த சரித்திரம் -குளம் யானை ஹரி -நினைக்க துஸ் ஸ்வப்னம் போக்கும் சக்தி படைத்த சரித்திரம்

என்னையும் உன்னையும் இத் தடாகத்தையும் நினைப்பவர்க்குக் கெட்ட கனவு நீங்கும் -என்று கூறி உள்ளதால்
கெட்ட கனவை நீக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் தியாகம் துதி பேர் சொல்லுதல் பூஜித்தல் ஆகிய வற்றால் கெடுதலுக்கு அறிகுறியான கெட்ட கனவுகளைப்
பயன் அற்றதாக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

கெட்ட கனவுகளை அழிப்பவர் –கெட்ட கனவுகளின் தீய பலன்கள் நிகழாமல் தடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————–

927-வீரஹா –
பாசங்களை விடுவிப்பவன் -யானையை முதலை இடம் இருந்தும் -யம பாசத்தின் நின்றும் விடுவிப்பவன்
முன்பே 168/747 பார்த்தோம்

வீரம் தத்₃பா₃த₄கம் ஹதவான்
வீரஹா ।
மோக்ஷ யாமாச நகேந்த்ரம் பாசேப்யஸ் சரணாகதம்
பகவானைச் சரணம் அடைந்த கஜேந்திரனை யமனுடைய பாசக் கயிற்றில் இருந்து விடுவித்தான்

பாதமடைவதன் பாசத்தாலே மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-

எம்பிரான் ஏழையேன் இடரைக் களையாயே-பெரியாழ்வார் -5-1-9-
அண்ணா அடியேன் இடரைக் களையாயே -பெரிய திருமொழி -1-10-1-

யானைக்கு விரோதியைப் போக்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பலவிதமான சம்சார கதிகளைக் கெடுத்து முக்தி அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

லிக மது அருந்துபவரை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

928-ரஷண-
காப்பாற்றுபவன்

தம் ஸ்பர்ஸந பரி ரம்ப₄ண ஸாந்த்வநாதி₃பீ₄ ரக்ஷிதவான்
ரஷண ꞉
ஸ்பர்ஸ யாமாஸ ஹஸ்தேந —
தன்னுடைய திருக்கரத்தால் அந்த யானையைத் தடவிக் கொடுத்தான்

ஸ்பர்சம் -அணைத்தல் – இனிய பேச்சு -மூலம் யானையைக் காப்பாற்றி அருளினவன்
நன்மையே அருள் செய்யும் பிரான் -பெரியாழ்வார் -5-1-8-

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர், தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1-

தொட்டும் தழுவியும் தேற்றியும் கஜேந்த்ரனைக் காத்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்வ குணத்தை மேற்கொண்டு மூவுலகங்களைக் காப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

காப்பவர் –அரஷண-அதிகமான உத்சவங்களை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் —

—————-

929-ஸந்த
வளரச் செய்பவன் -ஆஸ்ரிதர்களுக்காகவே இருப்பவன் –

ஏவமாஶ்ரிதான் ஸந்தநோ தீதி
ஸந்த꞉ ।
* அந் யேஷ்வபி த்₃ருஶ்யதே இதி ட₃꞉ ।
தேஷாம் அஸ்தீதி வா ஸந்த꞉ ।
வசந வ்யத்யய ꞉ ।
தேப்ய இஷ்டம் த₃த்தவாநிதி சா। ஸநோநேர் நிஷ்டா₂ ।
* ஜநஸந, இத்யாதி₃நா(ஆ)த்வவிகல்ப꞉ ॥

பக்தாநாம் -ஜிதந்தே –
சநோதி-வாரிக் கொடுப்பவன் -வள்ளல் மணி வண்ணன்

எம்பார் -பகவானுக்கு மூன்று பரிக்ஷைகள் -கஜேந்திரன் -திரௌபதி -பிரகலாதன் -ரக்ஷணம் செய்து அருளி உள்ளான்

இப்படி அடியவர்களை வளர்ப்பவர் -அவர்களிடம் இருப்பவர் -அவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நல் ஒழுக்கம் உடைய சாதுக்களின் உருவமாக கல்வியையும் பணிவையும் வளர்ப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

நல்லவர் -எங்கும் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–

930-ஜீவந
உயிர் அளிப்பவன் -திரு விருத்தம் 1-

ஸ்வ ஹஸ்தேந ஹநநாத் க்₃ராஹமபி க₃ந்த₄ர்வத்வேந ஜீவயன்
ஜீவந꞉ ।
ச ஹி தேவல சாபேந ஹு ஹு கந்தர்வ சத்தம க்ராஹத்வமகமத் க்ருஷ்ணாத் வதம் ப்ராப்ய விதம் கத –ஸ்ரீ விஷ்ணு தர்மம்
அந்த கஜேந்திரன் தேவலருடைய சாபத்தாலே ஹு ஹு என்ற கந்தர்வனாகையாலே
கிருஷ்ணனுடைய திருக் கரம் பட்டவுடன் சாபம் நீங்கப் பெற்றவன் –

தொழும் காதல் களிறு அளிப்பான் – 3-1-9-
முதலைக்கும் உயிர் அளித்தான்
தேவலர் முனிவர் சாபத்தால் ஹூ ஹூ என்ற கந்தர்வன் முதலை ஆனான் -ஜீவனம் -என்றும் பாடம்

உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா

தம் திருக் கையால் கொல்லப் பட்டதால் முதலையையும் கந்தர்வனாக்கி ஜீவிக்கச் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிராண வாயு வடிவில் அனைவரையும் வாழச் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

வாழ்விப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

931-பர்ய வஸ்தித –
சுற்றும் நின்றவன்
வாத்சல்யம் மிக்கு

வாத்ஸல்யாத் கஜேந்த்₃ரம் பரி — பரிதோ (அ)வஸ்தி₂த இதி
பர்ய வஸ்தி₂த꞉ ;
ப்ரீதிமாந் புண்டரீகாக்ஷ சரணாகத வத்சலா
தாமரை போன்ற கண்கள் யுள்ள ஸர்வேஸ்வரன் தன்னிடம் சரணம் புகுந்தவர்கள் இடம் மிகவும் அன்புடன் உள்ளான்

அவா வறச் சூழ் அரி-10-10-11-
திரு நீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே -8-3-6-

அன்பின் காரணமாக கஜேந்த்ரனைச் சுற்றிச் சுற்றி வந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகம் முதுவதும் வியாபித்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

காப்பதற்காக எல்லாப் பக்கமும் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

அநந்த ரூபோ அநந்த ஸ்ரீர் ஜிதமன்யூர் பயபஹ
சதுரஸ்ரோ கபீராத்மா விதிஸோ வ்யாதிசோ திஸ–100-

சதுர்த² உத்தமப்⁴ராதா மனுர்நாம்னா ச தாமஸ꞉ .
ப்ருʼது²꞉ க்²யாதிர்னர꞉ கேதுரித்யாத்³யா த³ஶ தத்ஸுதா꞉ .. 8-1-27..

ஸ்வாயம்பு –வரோஜித –உத்தம தாமாஸ மன்வந்தரம் -நான்காவது கஜேந்திர ரக்ஷணம் நடந்தது
பாகவதம் -8-1- விவரிக்கும்-இந்த்ரத்யும்னன் அகஸ்தியர் சாபம்

தத்ராபி ஜஜ்ஞே ப⁴க³வான் ஹரிண்யாம்ʼ ஹரிமேத⁴ஸ꞉ .
ஹரிரித்யாஹ்ருʼதோ யேன க³ஜேந்த்³ரோ மோசிதோ க்³ரஹாத் .. 8-1-30..

நமோ நமஸ்தே(அ)கி²லகாரணாய
நிஷ்காரணாயாத்³பு⁴தகாரணாய .
ஸர்வாக³மாம்னாயமஹார்ணவாய
நமோ(அ)பவர்கா³ய பராயணாய ..8- 3-15..ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானின் சரணாகதி ஸ்தோத்ரம்-

ஏதன்மஹாராஜ தவேரிதோ மயா
க்ருʼஷ்ணானுபா⁴வோ க³ஜராஜமோக்ஷணம் .
ஸ்வர்க்³யம்ʼ யஶஸ்யம்ʼ கலிகல்மஷாபஹம்ʼ
து³꞉ஸ்வப்னநாஶம்ʼ குருவர்ய ஶ்ருʼண்வதாம் .. 8-4-14..பல ஸ்ருதி

—-

932-அநந்த ரூப-
எண்ணிறந்த ரூபங்களை உடையவன் -ஆஸ்ரித ரஷண அர்த்தமாக

ஈத்₃ருஶி ஸத்₃ய ꞉ ஸம்பாத்₃ யாந் (சடக்கென உருவெடுத்த)யநந்தாநி ரூபாண் யஸ்யேதி
அநந்த ரூப꞉ ॥
வரம்பில பல பிறப்பாய் ஒளி வரு முழு நலம் -1-3-2-
பல பலவே சோதி வடிவு -2-5-6-

மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-அசுரர்கள் கொள்வார்களே இவன் கொள்ளச் சொல்ல வேணுமோ

இப்படி பக்தர்களைக் காக்க அப்போதைக்கு அப்போது எண்ணிறந்த உருவங்களைக் கொள்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகம் முதலிய எண்ணற்ற உருவங்களாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அளவற்ற அழிவற்ற உருவங்களை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————–——————

933-அநந்த ஸ்ரீ
அளவற்ற செல்வம் உடையவன் -உபய விபூதி நாதன் -எல்லாம் பக்தாநாம்

தேப்யோ தேயா ꞉ (பக்தர்களுக்குக் கொடுப்பதற்காக)ஸ்வ ப்ராப்தி பர்யந்தா அநந்தா꞉ ஶ்ரியோ (அ)ப்யஸ்யேதி
அநந்தஶ்ரீ꞉ ।
ததோ திவ்ய வபுர் பூத்வா ஹஸ்தி ராட் பரமம் பதம் ஜகாம–ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
அதன் பின்னர் திவ்யமான சரீரம் எடுத்த ஸ்ரீ கஜேந்திராழ்வான் பரம பதம் சென்றான்

செல்வர் பெரியர் -நாச்சியார் -10-10-
செல்வத்தினால் வளர் பிள்ளை -பெரியாழ்வார் -2-8-8-

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 –அங்கு பொய்கை-சம்சார சாகரம் இங்கு

பக்தர்களுக்குக் கொடுப்பதற்காக தம்மை அடைவது வரை எண்ணற்ற செல்வங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அளவற்ற சக்திகளை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அழிவில்லாத தன்மை கொண்ட லஷ்மியாகிய ஸ்ரீ யை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

934-ஜித மன்யு –
கோபத்தை வென்றவன் –

ய சரணாகத கஜேந்திர த்வேஷிணே ꞉ஜல கீடாய க்ரோத ஸ இதா₃நீம் ஜித இதி
ஜித மந்யு꞉॥
சரணாகதனான கஜேந்த்ரனுக்கு இன்னல் விளைவித்த நீர் புழுவை கோபியாமல் நல் வாழ்வு அளித்தவன்
குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் -மூன்றாம் திரு -99-

முதலை மேல் சீறி வந்தார் -பக்த ரக்ஷண தவரையில் வந்தாலும் முதலைக்கும் பேறு

கோன் வஸ்மி –ஜித க்ரோத

சரணா கதனான ஸ்ரீ கஜேந்த்ரனுக்கு விரோதியான முதலைக்கும் நற்கதி அளித்து கோபத்தை வென்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கோபத்தை வென்றவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்கள் விஷயத்தில் கோபம் அடைபவர் -யஜ்ஞங்களை உண்டாக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

935-பயாபஹ
ஆஸ்ரிதர் பயத்தை போக்குபவன் –
பய நாசன -838-முன்பே பார்த்தோம்

அஸ்மதா₃தீ₃நாமபி (நம் போல்வாருக்கும் கூட )ஸ்வ வாத்ஸல்யேந தாத்₃ருஸ அநாத₂த்வ ப₄யம் வத்₄யாதி₃த்  யாஸம்ஸநார்ஹ꞉
ப₄யாபஹ꞉ ।
* ஆஶிஷி ஹந꞉ இதி ட꞉ ।
பயே மஹதி மக்நாம்ச் ச த்ராதி நித்யம் ஜனார்த்தன
ஸம்ஸாரம் என்னும் கடலில் சிக்கும் ஸம்ஸாரிகளைப் பயத்தில் இருந்து அன்றாடம் காப்பவன் ஜனார்த்தனன் ஆவான் –

நம்பனை நரசிங்கனை -பெரியாழ்வார் -4-4-8-
நம்பனே ஆழி முன் ஏந்தி கம்ப மா கரி கோள் விடுத்தானே -பெரியாழ்வார் -5-1-9-
ஆர்த்தா விஷண்ணா சிதிலாச் ச பீதா கோரேஷூ ச வ்யாதிஷூ வர்த்தமானா
சந்கீர்த்ய நாராயண சப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் ஸூகி நோ பவந்து-

தம் வாத்சல்யத்தினால் நம் போன்றவர்க்கும் நாதன் இல்லை என்ற பயத்தைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்களுக்கு சம்சார பயத்தை போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

பயங்களைப் போக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

936-சதுரஶ்ர-
ஆஸ்ரிதர் -கார்யம் உடனே செய்து முடிக்கும் -சதுரன் -சமர்த்தன்

யத்₃ யபி ஸ்வ மஹிமோசிதம் க₃ர்ஜதே க₃ஜாய ஶ்லத₂  அம்ப₃ர ஆப₄ரண மாலம் ஜகா₃ம யத்₃ யபி
க்ஷுத்₃ர ஜல கீடாய சு க்ரோத₄, ததா₂பி
சதுரஶ்ர꞉ –
ஸம வேத காரீ, ஆஶ்ரிதார்த₂꞉ ஸம் ப்₄ரமோ ஹி ஸாம் ப்ரதம் ॥
ஆதி மூலமே -தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே-3-1-9-
வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7-

தம் பெருமைக்குத் தக்க கூக்குரல் இட்ட யானைக்காக ஆடை ஆபரணங்களும் பூ மாலைகளும் கலையும்படி சென்றும் –
முதலையின் மேல் கோபம் கொண்டு இருந்தும் அந்தப் பரபரப்பிலும் செய்ய வேண்டிய செயல்களைப்
பழுது இல்லாமல் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அவரவர் வினைகளுக்கு ஏற்ப -தர்ம அர்த்த காம மோஷங்கள் ஆகிய நான்கு வித பலன்களைக்
கொடுக்கின்ற படியால் நியாயத்தோடு கூடியவர் -ஸ்ரீ சங்கரர் –

திறமையுடன் செல்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

937-கபீராத்மா –
ஆழம் கண்டு அறிய முடியாதவன் –சமுத்திர இவ காம்பீர்யே

அந்யேஷாம் சதுர் முக ₂முகா ₂நாம் அப்ரத்₄ருஷ்ய கா₃ம்பீ₄ர்ய
க₃பீ₄ராத்மா ॥
பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும் கட்கரிய கண்ணன் -7-7-11-
நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்பெருமான் தன்மையை யார் அறிகிற்பர்-8-3-9-
பேராழியான் தன் பெருமையை கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் -நான்முகன் திருவந்தாதி -73-

பிரமன் முதலியோர்க்கும் ஆழம் காண முடியாத ஸ்வரூபம் உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அளவிட முடியாத ஆழமான ஸ்வரூபம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆழம் காண முடியாத மனம் உள்ளவர் –அகபீராத்மா -மழையினால் ஏற்பட்ட பயத்தை கோவர்த்தன மலையை எடுத்துப் போக்கியவர் –
யமளார்ஜூன மரங்களுக்கு பயத்தை உண்டாக்கியவர் -ஆத்மா வாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

938-விதி ஸ –
ஸ்வரூபத்தாலும் ரூபத்தாலும் குணத்தாலும் வைபவத்தாலும் எல்லாருக்கும் மேலாய் இருப்பவன் -பிரமன் சிவன் இவர்கள் ஸ்துதிக்கு அப்பால் பட்டவன்

தேஷாம் விநய க₃த்₃க₃த₃ஸ்துதி கி₃ராம்  அஸ்ய தூ₃ரே விவிதா₄ தி₃ஸா : (விவிதம் விசித்திரம் வினோதம் )— தேஸா இதி
விதி₃ ஸ ॥
நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த -பெரிய திருமொழி-1-7-8-
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது அருமா வெய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மான் -10-7-6-
சிவர்க்கும் திசை முகற்கும் ஆமோ தரமறிய எம்மானை -2-7-12-
தானே வந்து யானைக்கு அருள் செய்த கபீராத்மா விதிச-

செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4-

அவர்கள் வணங்கித் தழு தழுத்து மெய்ம் மறந்து செய்யும் துதிகளுக்கும் எட்டாத மகிமை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அந்தந்த அதிகாரிகளுக்குத் தகுந்த விதவிதமான பலன்களைக் கொடுப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஞானிகளுக்கு ஸூகத்தைத் தருபவர் -ஆச்சர்யப் பட வைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

939-வ்யாதிச
பதவிகளைத் தருமவன் –

தேஷாம்  அபி மதம் தத் தத் பத₃ம்  அதிஸ்ருஜதீதி
வ்யாதி₃ஸ ꞉ ।
இகு₃ பத₄த்வாத் க
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே -5-2-8-

அவர்கள் விரும்பும் பலன்களை உண்டாக்கித் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

இந்திரன் முதலியவர்களையும் பலவித அதிகாரங்களில் நியமிப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

கருடன் முதலியவர்களுக்கு ஸூகத்தை தருபவர் -விசேஷமாகக் கட்டளை இடுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————–

940-திச-
நியமிப்பவன்-ஆதேசம் ஆணை

யானையை அந்தரங்கமாகக் கொண்டு -அளியல் நம் பையல் -தேவர்களுக்கு ஆணை
ஈசன் வானவர்க்கு –என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கு

ந தாந் கஜேந்திர வத ₃ந் தரங்கீ₃கரோதி, கிந்த்வாஜ்ஞாபய தீதி
தி₃ஸ ꞉ ।
பூர்வவத்

கஜேந்திர மோக்ஷணம் த்ருஷ்ட்வா ஸர்வேந்த்ர புரோகமா ப்ராஹ்மணம் அக்ரத க்ருத்வா தேவா ப்ராஞ்ஜலயஸ்ததா-ஸ்ரீ விஷ்ணு தர்மம்
கஜேந்த்ரனைக் காப்பாற்றிய போது இந்திரன் தலைமையில் நான்முகன் முன்னிலையில் அனைத்து தேவர்களும் கை கூப்பி
எங்கும் நிறைந்தவனாகிய நாராயணனை வணங்கி நின்றார்கள்

வவந்திரே மஹாத்மானம் ப்ரபும் நாராயணம் ஹரீம் விஸ்மயோத் புல்ல நயநா பிரஜாபதி புரஸ் சரா--பவ்ஷ்கர ஸம்ஹிதை
கஜேந்த்ரனைக் காப்பாற்றிய அந்த நாராயணனே ஸம்ஸாரம் என்னும் விலங்கை அறுக்கும் ஸ்ரீ ஹரி ஆவான்

*கஜேந்திர க்ராஹ மோஷீ ச ஸம்ஸாரோத் ஸார லஷண :, இதி

இருக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்கும் தன் மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக -5-2-8-
ராஜாக்கள் ஊர் தோறும் கூறு செய்வார்களை வைக்குமா போலே

ஸ்ரீ கஜேந்த்ரனைப் போல் அவர்களை அந்தரங்கனாகக் கொள்ளாமல் அவரவர் செயல்களில் ஆணையிடுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வேதங்களில் கூறப்பட்டபடி அனைவர்க்கும் பலன்களைத் தருபவர் -ஸ்ரீ சங்கரர் –

தர்மம் முதலியவற்றில் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

அநாதிர் பூர்ப்புவோ லஷ்மீஸ் ஸூ வீரோ ருசிராங்கத
ஜநாநோ ஜனஜன்மாதிர் பீமோ பீம பராக்ரம–101-

—————-

941-அநாதி
ந ஆதியதே -ஆதியாக – புருஷார்த்தமாக -ஏற்க்கப்படாத -ஈஸ்வரோஹம் என்று இருப்பாரால் அறியப்படாதவன்

இவனையே ப்ராப்யம் ப்ராபகமாய்க் கொள்ளாமல் இருப்பதால் ஸ்வாமி என்று ஏற்றுக் கொள்ளாமல் இருப்பார்களே

ஏவம் திர்யக் யபி பக்தேஷு விவஸ ( கட்டுப்பட்டு -பக்த பராதீனனாக இருந்து )
ப்ரஹ்மாஷு பல்கு பலம் பிரயச்சதி (அல்ப பலன்களைக் கொடுத்து அனுப்புவான் )

யஸ்மாத்
அநாதி₃꞉ ;
தைர் அந்ய பரைர் ந ஸ்வாமித்வேந அதீ₃யத இதி ॥
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும் ஏத்தும் அம்மான் -10-7-7-

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-

இப்படி விலங்கான கஜேந்த்ரனுக்கும் வசப்பட்டு பிரம்மாதிகளுக்கும் அற்ப பலன்களையே கொடுப்பவர்

வேறு பலன்களை விரும்பும் அவர்களால் ஸ்வாமியாக அறியப் படாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றிற்கும் தாம் காரணமாக இருப்பதால் தமக்கொரு காரணம் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

முக்ய பிராணனை உயர்ந்த பக்தனாகக் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

942-பூர்புவ
உண்மையில் வாழ்பவருக்கு இருப்பிடம்

ப₄வதீதி பூ₄꞉ ஸ்வ தா₃ஸ்ய ஜ்ஞாநேந ஆத்ம லாப₄வான், தஸ்ய பு₄வ꞉ ஸ்வயமேவ பூ₄꞉ – பத₃ம் ப₄வதீதி
பூ₄ர்பு₄வ꞉ ।
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்த மேநம்ததோ வித்து

மய்யேவ மந ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேஸய.–
நிவஸிஸ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்ஸ்ய-–৷৷12.8৷৷

இக் காரணத்தாலே என்னிடம் நெஞ்சைச் செலுத்து -என்னிடம் பரம ப்ராப்யம் என்னும் உறுதியைக் கொள்வாய் –
இப்படிக்கு கொண்ட யுடனேயே என்னிடம் வாழ்வாய் இதில் ஐயம் இல்லை

கஜேந்த்ரனிடம் நீ என்னிடம் வஸிப்பாய் என்பதில் ஐயம் இல்லை

நீதி வானவர் –சேஷ பாவம் அறிந்து கைங்கர்யம் -அநீதி மண்ணவர் இங்கு
திருவுள்ள வாழ் கோனாரை அடியேன்
கடல் வண்ணங்கள் பூதங்கள் மண் மேல் -இருக்க வேண்டும் படி இருப்பவர்கள் பூ சத்தாயாம்
யானே நீ என் உடைமையும் நீயே அறிந்தவர்களுக்கு இவனே பூமி வாசல் ஸ்தானம்

அவனை சேஷி ஸ்வாமி அறிந்தவன் பூ -இருப்பவன்
கடல் வண்ணன் பூதங்கள் -5-2-1-
ஸ்வரூப ஞானம் உள்ளவனுக்கு புவ இருப்பிடம்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன் -பெரியாழ்வார் -5-4-5-
முன்பே 430 பார்த்தோம்

பகவானுக்கு அடிமைப் பட்டவன் என்ற ஞானம் உடைய பக்தனுக்குத் தாமே இருப்பிடமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றிற்கும் ஆதாரமான பூமிக்கும் ஆதாரமானவர் -ஸ்ரீ சங்கரர் –

பூ -நிறைவானவர் -புவ -உலகத்திற்குக் காரணம் ஆனவர் -இரண்டு திரு நாமங்கள் –

—————-

943-லஷ்மீ
தானே எல்லா வித செல்வமாய் உள்ளவன்

தேஷாம்
லக்ஷ்மீ꞉,
ஸர்வா ஸம்பச் ச ।

பவத் கதம் மே ராஜ்யம் ச ஜீவிதம் ச ஸூகாநி ச –யுத்த -19-6-
என்னுடைய ராஜ்ஜியம் உயிர் ஸூ கம் போன்றவை உனக்காகவே உள்ளன-விபீஷணன் வார்த்தை

கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ண பலா கிருஷ்ண நாதாச் ச பாண்டவா கிருஷ்ண பாராயணம் தேஷாம்–
ஜ்யோதிஷாம் இவ சந்த்ரமா –துரோணபர்வம் -183-24-
பாண்டவர்கள் தங்கள் ஆஸ்ரயமாகவும் -ஆதாரமாகவும் -சக்தியாகவும் நாதனாகவும் கிருஷ்ணனையே அடைந்துள்ளவர்கள்
நக்ஷத்ரங்களுக்கு சந்திரன் போன்று அவர்களுக்கு கிருஷ்ணன் ரக்ஷகன்

பெரும் செல்வமும் நன் மக்களும் –அவரே இனி யாவரே -5-1-8-

மாதா பிதா -விபூதி சர்வம்
உரு பெரும் செல்வமும்

தம்மைச் சேர்ந்தவர்களுக்கு எல்லாச் செல்வங்களும் தாமேயாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகத்திற்கு ஆதாரமாக மட்டும் அல்லாமல் சோபையாகவும் இருப்பவர் -அல்லது -பூ புவ லஷ்மீ -என்று
பூ லோகம் புவர் லோகம் ஆத்மவித்யை யாகவும் இருப்பவர் –
அல்லது பூர் புவோ லஷ்மீ -என்று பூமிக்கும் ஆகாயத்திற்கும் சோபையாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

புண்யம் செய்தவர்களைப் பார்ப்பவர் -புண்யம் செய்தவர்களால் பார்க்கப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————-

944-ஸூ வீர
சிறந்த வீர்யம் உள்ளவன்

தேஷாம் விநி பாத ப்ரதீகார꞉
ஸுவீர꞉ ||
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய் -3-2-3-

சென்று கொன்று வென்றி கொண்ட வீரன்
ஜய ஜய மஹா வீர

அந்த பக்தர்களுக்கு அபாயத்தை போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பலவகை நல்ல கதிகளைக் கொடுப்பவர் –பலவகையாக செயல் படுபவர் -ஸ்ரீ சங்கரர் –

முக்ய பிராணனைச் சிறந்ததாக ஆக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————-

945-ருசிராங்கத-
அழகான திவ்ய மேனியை அடியார்கள் அனுபவிக்க தருமவன்

தேப்₄ யஸ் ஸ்வம் – ருசிரம் அதி மநோ ஹரம்   அநுப₄வ யோக்₃ ய மங்க₃ம் த₃தா₃தீதி
ருசிராங்க₃த₃꞉ ।யதா

ந தே ரூபம் -பக்தாநாம் பிரகாசயே -ஜிதந்தே–உன்னுடைய ரூபம் உனக்காக அல்ல-அனைத்தும் அடியார்களுக்காகவே

கண்கள் சிவந்து வாயும் சிவந்து கனிந்து –நான்கு தோளன் ஒருவன் அடியேன் உள்ளானே -8-8-1
வெண் பல் சுடர் செவ்வாய் முறுவலோடு என்னுள்ளத்து இருந்தான் -8-7-7-

பாவியேன் என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே –பரித்ராணாம் ஸாது நாம் இதுவே முக்கிய பிரயோஜனம்

அவர்கள் தமது திவ்ய மங்களத் திரு மேனியைக் கண்டு களித்து அனுபவிக்கும் படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

அழகிய தோள் வளைகள் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அழகான தன்மை கொண்ட உடலை அளிப்பவர்-அழகிய தோள்வளைகளை உடையவர் –
அருசிராங்கத-அழகற்ற மனத்தைக் கவராத லிங்க தேகத்தை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

நலம் அந்தமில்லாத நாடு –

892-அக்ரஜ-முக்தி அடைந்தவர் அனுபவிக்கும் படி கம்பீரமாக அவன் முன்னே தோன்றுபவர் –
893-அ நிர் விண்ண -ஜீவனை சம்சாரத்தில் இருந்து அவனைப் பற்றிய கவலை இல்லாதவர் –
894-சதா மர்ஷீ -முக்தன் செய்யும் தொண்டுகளைப் பெருமையோடு ஏற்பவர் –
895-லோகா திஷ்டா நம்-முக்தர்கள் இன்பம் துய்க்கும் உலகத்திற்கு ஆதாரம் ஆனவர் –
896-அத்புத -முக்தர்கள் எக்காலத்திலும் அனுபவித்தாலும் காணாதது கண்டால் போலே வியப்பாக இருப்பவர் –
897-ஸ நாத் -முக்தர்களால் பங்கிட்டு போற்றி அனுபவிக்கப் படுபவர் –
898-ஸநாதநதம -பழையவராயினும் புதியதாகக் கிடைத்தவர் போல் ஈடுபடத் தக்கவர் –
899-கபில -பளிச்சிடும் மின்னலுக்கு இடையே கரு மேகத்தைப் போலே இருப்பவர் –
வைகுந்தம் -மஹா லஷ்மி மின்னல் பகவான் -மேகம்
900-கபிரவ்யய -குறைவற்ற மகிழ்ச்சியை அனுபவிப்பவர்

901-ஸ்வஸ்தித -மங்களங்களைக் கொடுப்பவர் –
902-ஸ்வஸ்திக்ருத் -தன் மங்கள மான குணங்களை அனுபவிக்கக் கொடுப்பவர் –
903-ஸ்வஸ்தி -தானே மங்கள வடிவமாக இருப்பவர் –
904-ஸ்வஸ்தி புக் -மங்களங்களின் ஊற்றுவாயைக் காப்பவர்
905-ஸ்வஸ்தி தஷிண -தமக்குத் தொண்டு புரியும் முக்தர்களுக்கு திவ்யமான திருமேனி சக்தி ஆகியவற்றை தஷிணையாக அளிப்பவர் –
906-அ ரௌத்ர-கல்யாண குணங்களின் குளிர்ச்சியால் கடுமை இல்லாமல் இருப்பவர் –
907-குண்டலீ-தன் திரு மேனி அழகுக்கு ஏற்ற குண்டலங்களை-காதணிகளை -அணிந்தவர்
908-சக்ரீ-சுதர்சன சக்கரத்தை ஆயூததை ஏந்தியவர் –
909-விக்ரமீ-கம்பீரமான இனிய விளையாட்டுக்கள் கொண்டவர் –
910-ஊர்ஜித சாசன -நான்முகன் இந்த்ரன் முதலியோரால் மீற முடியாத கட்டளை படைத்தவர் –
911-சப்தாதிக -ஆயிரம் நாக்கு உடைய ஆதி சேஷன் போன்றவர்களாலும் பேச முடியாத மகிமை உடையவர்

——————————————————————–

ஸ்ரீ கஜேந்திர மோஷம் –

912-சப்த சஹ -தெளிவில்லாத சொற்கள் பேசும் பிராணிகளின் வேண்டுதல் ஒலியையும் ஏற்பவர்
913-சிசிர -கஜேந்த்ரனின் கூக்குரல் கேட்டவுடன் மிக விரைவாகச் சென்றவர்
914-சர்வரீகர -பகைவர்களை அழிக்கும் ஐந்து ஆயுதங்களை ஏந்திக் கொண்டு விரைந்தவர் –
915-அக்ரூர -கையில் ஆயுதங்கள் இருந்தும் உடனே முதலையைக் கொல்லும் கடிமை இல்லாதவர்
916-பேசல -கருடன் மேல் விரைந்த போது ஆடையும் ஆபரணமும் கலைந்ததே பேர் அழகாக விளங்கியவர் –
917-தஷ -ஆனையைக் காக்க மடுக்கரைக்கு விரைந்தவர்
918-தஷிண -விரைந்து வந்து இருந்தும் -நான் தள்ளி இருந்து நேரம் கடத்தி விட்டேனே வெட்கப்படுகிறேன் என்று அன்புடன் மொழிந்தவர்
919-ஷமிணாம் வர -பொறுமை உள்ளவர்களில் சிறந்தவர் -யானையைக் கண்ட பின்பே பதட்டம் நீங்கி பொறுமை அடைந்தவர் –
920-வித்வத்தம -சிறந்த அறிவாளி -யானையின் துன்பத்தை தன் கைகளால் தடவிக் கொடுத்து போக்கத் தெரிந்தவர் –

921-வீதபய -தன் வேகத்தாலேயே கஜேந்த்ரனனின் பயத்தைப் போக்கியவர்
922-புண்ய ஸ்ரவண கீர்த்தன -கஜேந்திர கடாஷத்தைக் கேட்டாலும் சொன்னாலும் பாவங்களை நீக்குபவர் –
923-உத்தாரண -யானையையும் முதலையையும் குளத்தில் இருந்து கரை ஏற்றியவர் –
924-துஷ்க்ருதிஹா -தீயதான முதலை கரை ஏறிய பின்பு அதை அழித்தவர் –
925-புண்ய -இந்த புண்ணிய கதையைப் பாடும் நம்மைத் தூய்மை படுத்தியவர் –
926-துஸ் ஸ்வப்ன நாசன -இதைக் கேட்டவர்களுக்கு கெட்ட கனவைப் போக்குபவர்
927-வீரஹா -கஜேந்த்ரனின் பகைவனை -முதலை ம்ருத்யு -அழித்தவர் –
928-ரஷண-இன் சொற்களாலும் தொட்டும் தழுவியும் கஜேந்த்ரனைக் காத்தவர் –
929-சந்த-இப்படி தன் அடியார்களுக்காக இருப்பவர் -அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றி பக்தியை வளர்ப்பவர் –
930-ஜீவன -ஹூ ஹூ என்னும் கந்தர்வன் -தேவல முனிவர் -சாபத்தால் முதலையாக வர -அத்தை கந்தர்வனாக்கி வாழ்வித்தவர் –

931-பர்ய வச்தித -தன் அன்பினால் ஸ்ரீ கஜேந்த்ரனைச் சூழ்ந்தவர்
932-அநந்த ரூப-பக்தர்களைக் காக்க பல வடிவங்களை எடுப்பவர் –
933-அநந்த ஸ்ரீ -தன் பக்தர்களுக்கு அளிக்க உலக இன்பம் முதல் தன்னை அடைவது வரை அனைத்துச் செல்வங்களும் உடையவர் –
934-ஜித மன்யு -கோபத்தை வென்றவர் -முதலைக்கும் நற்கதி அளிப்பவர் –
935-பயாபஹா -இந்த வரலாற்றைக் கேட்டவர்களுக்கு என்னைக் காக்கத் தலைவன் இல்லையே என்ற பயத்தை போக்குபவர் –
936-சதுரஸ்ர -பக்தர்களுக்காகப் பதறினாலும் அதன் வேண்டுகோளைத் திறமையுடன் முடித்தவர் –
937-கபீராத்மா -தேவர்களும் அறிய ஒண்ணாத -ஆழமான தன்மை கொண்டவர் –
938-விதிச -தேவர் முதலானோரின் தழு தழுத்த ஸ்துதிக்கும் எட்டாத மகிமை உள்ளவர்
939-வ்யாதிச -அந்தந்த தேவர்களுக்கு உரிய பதவியைக் கொடுத்து கடமை யாற்றச் செய்பவர் –
940-திஸ-தேவர்களுக்கு ஈசனானவர் -யானையிடம் பாசம் வைத்தவர் –

941-அநாதி -விலங்கான யானைக்கு தம்மையே தந்தவர் -ஆனால் தேவர்களுக்கு தாழ்ந்த பலனைக் கொடுப்பவர் –
942-பூர்புவ -பகவானுக்கு அடியவன் நான் என்று உணர்ந்த தூயவனுக்கு சிறந்த அடையும் இடம் ஆனவர் –
943-லஷ்மீ -பக்தர்களுக்குச் செல்வமாக இருப்பவர் –
944-ஸூ வீர -பக்தர்களின் ஆபத்தைப் போக்கும் சிறந்த சக்தி உடையவர் –
945-ருசி ராங்கத-அடியார்கள் கண்டு களிக்கத் தன் அழகான திருமேனியைக் கொடுப்பவர் –

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்