Archive for October, 2016

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –9-9–

October 25, 2016

அறுக்கும் வினையில் -எம்பெருமானைக் காண வேணும் என்று மநோ ராத்தித்து மிகவும் பதறி அப்போதே காணப் பெறாதே
வியசனத்தாலே மிகவும் நோவு பட்ட ஆழ்வார் -தம்முடைய தசையை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –
திருவாய்ப்பாடியிலே பெண் பிள்ளைகள் கிருஷ்ணனோடு கலந்து -அவன் பசு மேய்க்கப் போகையாலே
பகல் எல்லாம் அவன் வரவு பார்த்து இருக்க -விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி இன்றிக்கே
எல்லாரையும் போக பிராவண்யத்தாலே சபலராக்கா நின்றுள்ள ஸந்த்யை வர கிருஷ்ணனும் வாரா நின்றான் என்று நிச்சிதமாய் இருக்க –
முற் கொழுந்தில் காணப் பெறாமையாலே
-ஒரு க்ஷணம் காணப் பெறாமையாலே அநேக காலம் விஸ்லேஷத்தால் படும் வியசனத்தைப் படா நிற்க –
அதுக்கு மேலே மல்லிகையின் பரிமளத்தை யுடைய தென்றல் தொடக்கமான ஸந்த்யா காலத்தில் பதார்த்தங்களும்
-அக்காலத்தில் யுண்டான குழல் ஓசைகளும் -அவற்றால் சம்ருத்தமான கிருஷ்ணனுடைய குண சேஷ்டிதாதிகளும்
-துஸ் ஸஹமான நிலாவும் சமுத்திர கோஷம் தொடக்கமான பதார்த்தங்கள் எல்லாம் தனித் தனியாகவும் திரளாவும் நலிய
மிகவும் நோவு பட்டு -கேட்டார்க்கு தரிப்பு அரிதாம் படி ஆர்த்தி மிகுதியாலே கூப்பிட்ட பாசுரத்தை ஒருத்தி சொல்கிறாள் –
திருவாய்ப்பாடியிலே பெண்கள் எல்லாம் ஒரு ராத்திரியில் கிருஷ்ண விரஹத்தால் பட்ட நோவை
இவர் ஒருவருமே படுகிறார் -என்று ஆளவந்தார் அருளிச் செய்வார்
முன்பே ஆற்றாமையாலே தற்பு அற்று இருக்கிறவர் ஆகையால் அத்தனை ஆடல் கொடுக்கைக்கு ஆஸ்ரயம் இல்லை
-ஒரு ஸந்த்யையில் அவர்கள் பட்ட நோவை படுகிறார் என்று அருளிச் செய்வர் எம்பெருமானார் –
ஸந்த்யையாவது எம்பெருமான் தம்மை விஷயீ கரிப்பதற்கு முன்பு உண்டான அல்ப காலம் –
தஸ்ய தாவ தேவ சிரம் யாவத் நவி மோக்ஷயே -என்ன கடவது இ றே –
அக்காலத்தில் பாதக பதார்த்தங்கள் ஆகின்றன -பகவான் லாப ஸூ சகங்களான பதார்த்தங்கள் –மல்லிகை கமழ் தென்றல் –
-இவை பாதம் ஆகைக்கு காரணம் பகவல் லாப ஸூ சகமாய் இருக்கச் செய்தே அப்போதே லபிக்கப் பெறாமை -மாலைப் பூசல்அன்றோ  இது —

——————————————————————–

ஸந்த்யா காலத்தில் தென்றல் தொடக்கமான பதார்த்தங்கள் தனித் தனியே தனக்கு பாதகம் ஆகிற படியை அருளிச் செய்கிறார் –

மல்லிகை  கமழ் தென்றல் ஈருமாலோ
வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ
செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ-இவள் ஆர் கேட்க கூப்பிடுகின்றாள் -வெறும் புறத்தில் நலிய வற்றான தென்றல் மல்லிகையினுடைய பரிமளத்தை ஏறட்டுக் கொண்டு வாரா நின்றது –வத பரிகரமான பத்ரத்திலே நஞ்சு ஊட்டினால் போலே யாய்த்து தென்றல் பரிமளத்தைக் கொண்டு வருகிறபடி -க்ராண இந்திரிய முகத்தாலும் நலியா நின்றது -கண்ணுக்கு விஷயமாய் இறாய்க்க ஒண்ணாத படி இராப்படை ஏறுவாரைப் போலே உடம்பிலே படக் காண்கிற இத்தனை -இத் தென்றலுக்கு கண்ட இடம் எங்கும் வாயாய் இரா நின்றது –
ஈருமாலோ-பண்டே பிரிவால் செற்று அற்று இருக்கிற உடம்பை பலகை பலகையாய் ஈரா நின்றது -பத்ம ஸுகந்திகம் வஹம் சிவம் சோக விநாசனம் தான்யா லஷ்மண சேவந்தே பாம்போ பவன மாருதம் –இருவராய் இருப்பார் காற்றைத் தேடி படுக்கை படா நிற்க இவள் ஒருத்திக்கும் யாய்த்து பாதகமாய் இருக்கிறது -யாநிஸ் மரமணீ யாநி ஜீவ தோமே தயாவி நா –
வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ-அழகிய குறிஞ்சி இசையானது-துளையா  நின்றது –காற்று ஈர்ந்து பொகட்ட புண்ணின் மேலே துளைத்து பொகடா நின்றது -தென்றல் புறம்பே நலிகிறது அத்தனை –இசை செவி வழியே உள்ளே புக்கு நலியா நின்றது -இசைக்கு எவ்வளவு செவிப்பாடு உண்டு -அவ்வளவு பாதகமாம் இத்தனை இ றே -அவன் கூட இருந்த போது எவ்வளவு போக்யமாய் இருக்கும் -வ்யதிரேகத்தில் அவ்வளவும் நலியும் இ றே -குறிஞ்சியும் தென்றலும் க்ருத சங்கேதிகளாய் வந்து ஓன்று அதிகரித்த காரியத்தின் சேஷத்தை ஓன்று செய்யா நின்றது –நற்கொலையாக ஒண்ணாது -உயிர்க் கொலையாக வேணும் -நீ இவ்வளவு செய் நான் அவ்வளவு செய்கிறேன் -என்பாரைப் போலே
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ-செல்லப்பட்டு இருந்துள்ள கதிரை  யுடைத்தான மலையானது மயங்கப் பண்ணா நின்றது -அஸ்தமியா நின்றுள்ள ஆதித்யனை யுடைய ஸந்த்யையானது மோஹிப்பியா நின்றது -புடைவையை வாயிலே கொடுத்து நலிவாரைப் போலே ஓடுகிற வியசனத்துக்கு போக்கு விட்டு கூப்பிட ஒண்ணாத படி உணர்த்தி அழியும் படி மோஹிப்பியா நின்றது
செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ-சிவந்து அழகிதான மேகங்கள் சோதித்த பொகடா நின்றது -அவனுடைய ஸந்த்யா ராகத்தையும்-ஸ்யாமமான நிறத்தையும் யுடைய மேகங்கள் அவயவ சோபைக்கும் நிறத்துக்கும் போலியாய் நலியா நின்றன –கீழ்ச் சொன்ன பாதகார்த்தங்கள் ஆஸ்ரயம் கிடக்கவோ நலிவது என்று சரீரத்தை செற்று பொகடா நின்றன
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்-இவற்றை இன்னாது ஆகிறது என் -அவன் தான் முன்னே நாம் மூடிகைக்கு அன்றோ கலந்து போகின்றது சர்வமும் பாதகமாம் படி முன்னே புகல் அறுத்தான் அவன் அன்றோ –அல்லி யம் தாமரைக் கண்ணன் -அல்லியை யுடைத்தான அழகிதான தாமரை போலே இருந்த திருக் கண்களை யுடையவன் -முதல் உறவு பண்ணுவது கண்ணாலே இ றே -த்ருஷ்ட்டி பந்தம் பிறந்தால் இ றே சம்ச்லேஷம் யுண்டாவது -எம்மான் -அவ் வழகாலே என்னை அநன்யார்ஹை யாக்கினவன்
ஆயர்கள் ஏறு -அவ் வழ காலே இடையரைத் தோற்பித்தால் போலே -தன்னோடு ஒத்த ஆண்களை தோற்பிக்குமவன் -பெண் பிறந்தாரை நோவு படுத்தச் சொல்ல வேண்டாம் இ றே -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணம்-என்கிறபடியே
அரி ஏறு எம் மாயோன்-என்னை அநன்யார்ஹை யாக்கி -என்னோடே கலந்து அத்தாலே பெறாப் பேறு பெற்றானாய் மேநாணிப்பு தோற்ற இருக்கிற படி -ஸிம்ஹ ஸ்ரேஷ்டம்
எம் மாயோன் -சம்ச்லேஷ தசையில் காலைக் கையைப் பிடித்து தாழ நின்று பரிமாறினவன் -பேர நின்ற அநந்தரம் தரிப்பு அரிதாம் படி யாயிற்று பரிமாறிற்று –
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு-அவன் வந்து சம்ச்லேஷிக்கிற போது சர்வாங்க சம்ச்லேஷத்துக்கு ஷமன் இன்றிக்கே ஒழிந்தான் யாய்த்து – அனுபவிக்க இழிந்த துறையும் -இளைப்பாறின இடமும் இருக்கிற படி –புல்லிய வென்று கலக்கிற போது அவனுக்கு முலைகளிலும் தோள்களிலும் யுண்டான அலமாப்பைச் சொல்லுகிறது
புகலிடம் அறிகிலம் -வ்யதிரேகத்தில் தென்றல் முதலான பதார்த்தங்களைத் தப்பிச் சென்று புகுகைக்கு இடம் காண்கிறி லோம் -ஷாம காலத்தில் பஹு பிரஜராய் இருப்பார் தங்கள் பசி கிடக்க பிரஜைகள் அலைப்புக்கு அலைந்து புகலிடம் அறியாதா போலே -நான் ஜீவித்த படி ஜீவிக்கின்றேன் -இவற்றைக் கொண்டு புகுமிடம் காண்கிறிலேன் -என்கிறார் –
தமியம் ஆலோ –இத்தசையில் ரக்ஷகனானவனும் வாராமையாலே தனிமைப் படா நின்றோம் -ஆச்வாஸ காரமான தென்றல் முதலான பதார்த்தங்களும் பாதகமாகா நின்றால் -அர்ஜுனனை நோக்கி பகதத்தன் விட்ட சக்தியை மார்விலே ஏற்றால் போலே இத்தசைக்கு உதவ வேண்டாவோ -ராமஸ் ஸுமித்ரி சஹிதோ விலலாப -என்று தம் தனிமையில் தம்பியாராகிலும் உண்டாய்த்து-அதுவும் இல்லையே இங்கு –

———————————————————————

பாதக பதார்த்தங்கள் தனித் தனியே நலிந்து -அவை பல ஹானி மிக மிக பல கூடி வந்து  நலியா நின்றன -என்கிறாள் –

புகலிடம்  அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-

புகலிடம் அறிகிலம் –மேல் வர புகு கிற பாதக வர்க்கத்தை நினைத்து சொல்லுகிற வார்த்தை யாதல் -கீழ் நலிந்த வற்றுக்கு அஞ்சி அவ்வச்சம் பின்னாட்டுகிற அனு பாஷாணம் ஆதல் -/ தமியம் ஆலோ-புகல் அற்றார்க்கு துணையாமவன் இவ்வளவில் உதவாமையாலே தனிமைப் படா நின்றோம் –
புலம்புறு மணி -நாகுகளைத் தொடருகிற சேக்களின் கழுத்தின் மணி -அந்நாகுகள் கிட்டாமையாலே கூப்பிடுகிறால் போலே யாய்த்து த்வநிக்கிற படி -அது தமக்கு ஸ்மாரகமாய் நலியா நின்றது –
தென்ற லாம்ப லாலோ-மல்லிகை கமழ் தென்றல் -என்று துணை கொண்டு வருகை அன்றிக்கே வெறும் புறத்தில் வந்து நலியா நின்றது –ஆரை மதித்து உடம்புக்கு ஈடிட்டு வருவது -என்று வெறும் புறத்தில் வந்து நலியா நின்றது –ஆம்பல் -இலைக் குழல் ஆதல் -/ ஆய்க் குழல் ஆதல் -/ ஆலோ -ஈருமாலோ-தவருமாலோ-என்று நலிகிற படியை சொல்ல ஒண்ணாத படி -புலி என்பாரைப் போலே -இவற்றின் பேர் சொல்ல அஞ்ச வேண்டும்படியைச் சொல்லுதல் -இவற்றால் படுகிற நலிவு பேச்சுக்கு நிலம் இல்லாத படியால் சொல்லாது ஒழிதல்
பகலடு மாலை-பதார்த்த தர்சனம் பண்ணி தரிக்கலாம் பகலையும் முடித்துக் கொண்டு மலையானது தோற்றா நின்றது –பிராட்டி தனிமையில் ஐயோ என்னும் பெரிய யுடையாரை முடித்துக் கொண்டு ராவணன் நலிந்தால் போலே / வண் சாந்தம் – அழகிய சாந்தம் / பஞ்சமம் -பஞ்சமம் ஆகிற பண் / முல்லை -முல்லை யாழ் என்கிற பண் ஆதல் -இடையாருக்கு தார் முல்லை யாகையாலே அத்தைச் சொல்லுதல்
தண் வாடை யாலோ-தென்றல் காலமும் வாடைக் காலமும் தன்னிலே தூரமாய் இருக்க இப்படிச் சொல்லுகிறது பிரிவொடு காலம் நெடுகிச் சென்ற படி என்னுதல் -தென்றலுக்கு அஞ்சி வாடையின் கீழ் ஒதுங்க வந்து நிற்கிற இடத்திலே வாடை நலிகிற படியைச் சொல்லுதல் -அநர்த்த ஸூ சகமாக எல்லாக் காற்றும் ஒருகாலே அடித்தது என்னுதல் –
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து–எங்கும் அளிக்கின்ற –பரப்பை யுடைத்தான பூமி உரு மாய்ந்து போக -அத்தை யுண்டாக்கி பிரளய ஆபத்தில் அகப்படாதே வயிற்றிலே வைத்து நோக்கி -வெளிநாடு காண உமிழ்ந்து -பிரபலர் அபகரித்த அளவிலே எல்லை நடந்து மீட்டுக் கொண்டு இப்படி வரையாதே ரஷிக்கையே ஸ்வ பாவமாக இருக்குமவன் –இருந்ததே குடியாக ரக்ஷிக்குமவன் கிடீர் மஹிஷி நோவு பட உதவாது இருக்கிறவன் –
வாயன்--கிருஷ்ண ஏவஹி லோகா நாம் -என்கிறபடியே -ஜகத் காரண பூதன் -/ மாயோன்–ரக்ஷண அர்த்தமான ஆச்சர்ய சக்தி உக்தன் –
இகலிடத் தசுரர்கள் கூற்றம் – யுத்த பூமியிலே எதிரிட்ட அஸூரர்க்கு மிருத்யு வானவன் –எதிர் அம்பு கோத்த அ ஸூ ரர்க்கு யாய்த்து மிருத்யு யாவது –சரணம் என்ற அஸூரர்க்கு ரக்ஷகனாம் அத்தனை -ப்ரஹலாதி விபீஷணாதி களை ரஷித்தான் இ றே
வாரான்-என்னை நலிகிற பதார்த்தங்களை சிஷித்துக் கொண்டு வருகிறிலன்
இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்––வரையாதே ரக்ஷிக்குமவனாய் -ப்ராப்தனுமாய் -விரோதி நிரசன ஸ்வபாவனுமானவன் -வாராது இருக்க -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத எனக்கு ஆறி இருக்கப் போமோ —இனி இருந்து –நமாம்சம் ராகவோ புங்க்தே நசாபி மது சேவதே வன்யம் ஸூ விஹிதம் நித்யம் பக்தமச் நாதி பஞ்சமம் -என்கிறபடியே அத்தலையிலே ஆற்றாமையும் –வாலி மாட்டான் படை கூடிற்று -என்றால் போலே ரக்ஷணத்தில் உத்யோகத்தையும் -சிலர் வந்து சொல்லக் கெட்டு தான் ஆறி இருக்கிறேனோ -/ இனி இருந்து-அவனுடைய சரக்கு என்று ஆந்தனையும் கை நோக்கிக் கொண்டு இருந்தேன் -இவற்றின் சந்நிதியில் -அவன் வாராது ஒழிந்த பின்பு முடியும் அத்தனை போக்கி இருக்க க்ஷமை அல்லேன்
என்னுயிர் காக்குமாறு என்–பிறர் உயிராகில் காக்கலாம் இ றே -சம்ச்லேஷ அர்த்தமாக பாரித்து கொண்டு இருக்குமது ஒழிய பிராணனை நோக்கிக் கொண்டு இருக்கப் போமோ –

————————————————————————–

கண்ணால் கண்டவை பாதகமாய் புக்கவாறே அவற்றுக்கு அஞ்சி கண்ணை செம்பளித்தாள்-அகவாயிலே அவன் அழகுகள் ஸ்மாரகமாய் நின்று  நலியா நின்றன என்கிறாள் –

இனி  இருந்து என் உயிர் காக்குமாறு என்
இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து
துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான்
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பணி இரும் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3-

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என்-எனக்கு தாரகமான அழகு பாதகமானால் எனக்கு பிராணனை நோக்க விரகு உண்டோ
இணை முலை -அவன் சேர்த்தி அழகு கொண்டாடும் முலை –
நமுக -குழைய-கடின ஸ்தலம் வர்ஷித்தால் நெகிழுமா போலே சம்ச்லேஷ தசையில் ஸ்பர்சத்தாலே குழைந்த படி
நுண்ணிடை நுடங்க-வெறும் புறத்தில் அருங்குலைக் கீழ் விலை நிலம் போல் நோக்க வரிதான இடை நுடங்கும் படியாகவும் –கலக்கும் போது எதிர்தலையைப் பேண அறிந்திலன் -தன் அபி நிவேசம் தீர்ந்தான் அத்தனை –
துனியிரும் கலவி செய்து -துக்க பலமான கலவி செய்து -இரும் கலவி -கலக்கிற போது பரிமாறின வகைகள் -ஆஸ்ரயித்து அளவு இன்றிக்கே இருக்கை -சம்ச்லேஷம் விஸ்லேஷ யந்தமாய் அல்லது இராமையாலே துக்கத்தை விளைக்கும் என்னுதல் -அத்தசையில் பொறுக்க போகாத படி இருக்கையாலே துக்க ரூபம் என்னுதல் —
ஆகம் தோய்ந்து-என்னை நீராக்கி என்னுடம்பிலே தோய்ந்து -க்ரீஷ்மே சீதமிவ ஹ்ரதம்-என்னுமா போலே -தன் விடாய் கெட்டானாய் இருந்தான் -என் உடம்போடு அணைந்தது தனக்கு பெறாப் பேறாக நினைத்து இரா நின்றான் –
துறந்து எம்மை விட்டு -இப்படி விருப்பத்துக்கு விஷய பூதையான என்னைக்  கை விட்டு அசேதனத்தை பொகட்டால் போலே -பொகட்டோம் என்னும் நினைவும் இல்லாத படி பொகட்டு -இப்படி அவகாஹித்தது எல்லாம் கை விடுகைக்கு உடலாய்த்து என்கை –
அகல் கண்ணன் -அகலுகையே ஸ்வபாவமான கிருஷ்ணன் -அவனுக்கு கலவி காதாசித்கம் -அகலுகையே நிரூபகம் -கலவியால் அல்லது பிரிவு யுண்டாகாமையாலே கலந்தான் அத்தனை –
கள்வன்-தனி இளம் சிங்கம் -கலக்கிற போது நோக்கும் -பேச்சும் பண்ணின வியாபாரங்களும் சர்வ ஸ்வ அபஹாரிகளாய் இருக்கை –அப்போது தன் ஆற்றாமையால் கழிக்கிறான் என்று தோற்றும் படி -யாய் -பலத்தில் பிரிந்து நோவு படுத்தச் செய்தானாய் இருக்கை என்றுமாம் –தனி -தன்னோட்டை கலவியாலே அத்விதீயன் என்று தோற்றும்படி இருக்கிறவன் –இளஞ்சிங்கம் -என்னோட்டை கலவியாலே இளகிப் பதித்து மேனாணித்து இருக்கிறவன் –
எம்மாயன் வாரான்-பிரிவை நினைத்து கலங்கிப் போக மாட்டாதே என் பக்கல் அதி சாபலத்தாலே அத்தசையில் தடுமாறினவன் இப்போது வருகிறிலன் -அத்தசையில் சாபலத்தோபாதி போரும் இப்போதை விரக்தியும்
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்-பணி இரும் குழல்களும் நான்கு தோளும்--அவன் கண்ணுக்கு விஷயம் ஆகாது ஒழிந்தால் -இவை நெஞ்சுக்கு விஷயம் ஆகாது ஒழிந்தால் ஆகாதோ -தான் போகா நின்றால் -இவற்றை வைத்து போக வேணுமோ -கலந்த போது தன் பேறு என்று தோற்றும் படியான ஹர்ஷம் அடங்க கண்ணிலே தோற்றும் படியான திருக் கண்களை யுடையவன் என்னுதல் –பிரிவை நினைத்து வாய் விட மாட்டாதே ஆற்றாமை அடங்கலும் நோக்கிலே நின்ற நிலை என்னுதல் -/ செவ்வாயும் -பிரிவை பிரசங்கித்து முடியச் சொல்ல மாட்டாதே போதைச் சிவந்த அதரமும் -/ நீலப்-பணி இரும் குழல்களும்–கலவியாலே குலைந்து பிரிவை நினைத்து பேண மாட்டாதே போதை -கறுத்துக் குளிர்ந்த பெரிய திருக் குழல்களும் –
நான்கு தோளும்–இவள் தடுமாற்றத்தைக் கண்டு குழலைப் பேணி வரும் தனையும் தரிப்பு அரிதாக நான் எதிரே அணைத்த நாலு தோளும்–உசபம் ஹர -என்றது கம்சாதிகளுக்கு இ றே -பெண்களுக்கு நாலாய் தோற்றும் இ றே
பாவியேன் -இவ் வழகுகளை யநுபவிக்க இழிந்தால் -அறிவு அழிந்து இருக்கப் பெறாதே நினைக்கைக்கு அடியான பாபத்தை பண்ணின என்னுடைய –
மனத்தே நின்று ஈருமாலோ–மனசிலே நிரந்தரமாக நின்று -நலியா நின்றது -அணைக்க எட்டுதல் -நெஞ்சுக்கு எட்டாது ஒழி தல் செய்யப் பெற்றிலேன் -அறிவு அழிந்து மறந்து பிழைக்கவும் பெற்றிலேன் –

———————————————————————

அகவாயிலே நின்று நலிகிறவை ஒழிய ஸ்வரூபேண வந்து ஸ்பர்சாதிகளாலே ஸ்மாரகமாய் நின்று நலிகிற பதார்த்தங்களை சொல்லுகிறாள் –

பாவியேன்  மனத்தே நின்று ஈருமாலோ
வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ
மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த
எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ
யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–நாட்டார் இவ் வழகை வலிய நெஞ்சிலே வைத்து பாபத்தைப் போக்கிக் கொள்ளா நிற்பர்கள் கிடீர் -இவ்வடிவை இ றே சுபாஸ்ரயமாகப் பாவித்து அபிமதங்களைப் பெறுவது –
வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ-உட்பகையேயாய் -புறப் பகை அற்று இருக்கப் பெற்றேனோ -குளிர்த்தியே ஸ்வபாவமாக யுடைத்தான வாடையும் அக்னி கல்பமாய் நலியா நின்றது -தண் வாடை என்று தாய்மார் வார்த்தை சொல்லக் கேட்டுச் சொல்கிறாள் -அனுபவம் விபரீதமாய்த்து இருக்கிறது –
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ–நாட்டார் தாபத்துக்கு அஞ்சி நிலாவில் ஒதுங்கக் காண்கையாலே தானும் அதிலே ஒதுங்கப் பார்த்தாள்-அவனும் அக்னிமய சந்திரன் ஆகா நின்றான் –
மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ–புறம்புள்ளவை பாதகமாய் புக்கவாறே அவற்றுக்கு அஞ்சி படுக்கையிலே சென்று விழுந்தாள்—மிருதுவான மலரால் செய்த படுக்கை தாப ஹேதுவாய் நலியா நின்றது -பழைய நிலாவும் வாடையும் நன்றாம்படி யாய்த்து –இருவருக்குப் படுத்த படுக்கை ஒருவருக்கு பாதகமாம் இ றே –
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த–எம் பெண்மை யம் பூவி தாலோ–பெரிய திருவடியை யுடைய-தெய்வ மாகிற வண்டாலே ஆத்தசாரமான என்னுடைய பெண்மையாகிற பூ -ஏவம் விதமாய் ஏவம்விதமாய் நலிவு படா நின்றது –படுக்கை பாதகம் ஆனவாறே புறம்பே புறப்பட்டாள் -ஸ்வரூப அனுபந்தியான ஸ்த்ரீத்வம் சிதிலமாகத் தொடங்கிற்று / தூவி -சிறகு /அழகிய சிறகை யுடையனாய் தர்ச நீய வேஷமான பெரிய திருவடியுடைய முதுகிலே வந்தாயத்து ஸ்த்ரீத்வத்தை அழித்தது -கருட வாஹனன் இ றே பரதேவதை யாவான் –இது என்கிறது -ஸ்த்ரீத்வம் அழிந்த படி பேச்சுக்கு நிலம் அல்ல என்கிறது
ஆவியின் பரமல்ல வகைகளாலோ–கலக்கிற போது அவன் பரிமாறின வகைகள் ஆஸ்ரயத்தின் அளவன்று என்னுதல் -பாதக பதார்த்தங்களினுடைய பாதிப்பு ஆத்ம வஸ்துவின் அளவன்று என்னுதல்
யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–புறம்புண்டானவை பாதகம் ஆகில் நெஞ்சு உண்டாகில் உசாவித் தரிக்கலாம் இ றே -அதுவும் துணை யாகிறது இல்லை –

——————————————————————–

சகல பதார்த்தங்களும் ஸ்வ ஸ்வபாவங்களை விட்டு அந்யதாவாய் -அவ்வளவிலும் அவனுடைய பிரசாதம் அரிதானால் தரிக்க விரகுண்டோ என்கிறாள் –

யாமுடை  நெஞ்சமும் துணையன்றாலோ
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ
அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும்
எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ
யாமுடை யார் உயிர் காக்குமாறு என்
அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5-

யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ-என்னது என்ன அமையும் ஆகாதே துணை யாகாது ஒழிய –என்னுடையவன் என்னும் படி கை புகுந்தவன் துணை யாகா விட்டால் -நெஞ்சமும் துணை யாகாது ஒழிய வேணுமோ –
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ-ஒரு துணை யற்று இருக்கிற அளவிலே பசுக்கள் புகுரும் ஸந்த்யையும் ஆகா நின்றது –எனக்குத் துணை இல்லை என்று அறிந்தால் மாலைக்கு பிற்காலிக்க வேண்டாவோ -ஆச்வாஸ கரமான பகல் போய்-பிரிந்தார் வெருவும் ஸந்தயையும் ஆகா நின்றது
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ–பதார்த்தங்கள் எல்லா வற்றுக்கும் ஸ்வபாவ பேதம் பிறந்து இருக்கிறாப் போலே -ம்ருது ஸ்வ பாவனானவன் நெஞ்சம் கல்லாய்த்து -நெஞ்சும் துணை யன்று மாலையும் வந்தது -என்னும் இடம் அவன் நெஞ்சில் படுகிறது இல்லை -கல்லை பெண்ணாக்கும் நெஞ்சு யுடையவன் -நெஞ்சு கல்லானால் நெகிழ்க்க வல்லார் யுண்டோ –என் நெஞ்சு வலித்தல் அவன் நெஞ்சு நீராலாகப் பெற்றிலோம் –
அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ-அவனுடைய அழகிய குழல் ஓசை ஸ்ம்ருதமாய் ஈரா நின்றது -அவன் நெஞ்சு கல் என்று கை வாங்க ஓட்டுகிறது இல்லை -குழல் ஓசை -பரதந்த்ரனாகையாலே பசு மேய்க்க வேண்டிற்று என்றும் ஆற்றாமை தன்னது என்றும் -தாழ்ந்த சொற்களை வைத்தூதுகிற குழல் ஓசை –அவன் நெஞ்சு நீர் கிடாய் -என்னா நின்றது –
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும்-நெஞ்சு துணை யாகாத அளவிலும் உதவக் கடவ தோழிமாரும்
எம்மின் முன்னவனுக்குமாய்வராலோ-என் வியசனத்தைக் கண்டு எனக்கு முன்னே -இவளுக்கு அவன் வல்லபனாக வேண்டும் -என்று நோவு படா நின்றார்கள் -துணை என்னும்-மாம்பழ யுண்ணி போலே இ றே நீங்கள் தோழிமார் ஆனபடி -ஏகம் துக்கம் ஸூகஞ்ச நவ் -என்று இருக்குமவர்கள் ஆகையால் இவள் ஆற்றாமை பொறுக்க மாட்டாமை நோவு படுகிறாள் இ றே -இச்சேர்த்தியை இ றே தங்களுக்கு உத்தேச்யமாக நினைத்து இருப்பர் -இவர்களுக்கு அவனோடு சம்பந்தம் இவள் வழியாக இ றே
யாமுடை யார் உயிர் காக்குமாறு என்-இத்தனிமையில் ஆத்ம தாரணம் பண்ணும் விரகு என் -பிறர் உயிர் ஆகில் நோக்கவுமாம் இ றே
அவனுடை யருள் பெறும் போதரிதே–அவனுடைய பிரசாதம் பெறுகை அரிதாய்த்து -அது பெறில் நம் உயிர் தன்னையும் நோக்கவுமாம் இ றே-

———————————————————————

அநந்ய பரையான பெரிய பிராட்டியாரோடு அந்நிய பரரான ருத்ராதிகளோடே வாசி இன்றிக்கே எல்லார்க்கும் உடன் கொடுக்கும் ஸூ லபன் ஆனவனுடைய ஸுசீல்யம் என்னாத்மாவை ஈரா நின்றது என்கிறாள் –

அவனுடை  யருள் பெறும் போதரிதால்
அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெருமள வாவி நில்லாது
அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை
சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-

அவனுடை யருள் பெறும் போதரிதால்-அவனுடைய பிரசாதம் பெறுகை அரிதாகா நின்றது –கொள்வார் தேட்டமான அருள் நமக்குத் தேட்டமாவதே -சர்வ சாதாரணமான ஜலம் அது ஒழியச் செல்லாத தத்துவங்களுக்கு அரிதாப் போலே அவன் அருள் கிடைக்கும் அளவும் பந்துக்களுடைய இன் சொல்லாலே தரித்தாலோ என்ன –
அவ்வருள் அல்லன வருளும் அல்ல–தாபார்த்தர் அக்னியைக் கொண்டு விடாய் தீருமா போலே தாயமாருடைய ஹித வசனத்தாலே தரிக்கவோ –விடாய் தீராத அளவல்ல –விடாயை விளைப்பதும் செய்யும் -அவன் அருள் தப்பாத பின்பு கிட்டும் தனையும் ஆறி இருந்தாலோ என்னில் –
அவன் அருள் பெருமள வாவி நில்லாது-அவன் பிரசாதம் கிட்டும் அளவும் பிராணன் தரிக்கிறது-இல்லை – க்ரம ப்ராப்தியை சஹிப்பதொரு பிராணனை பெற்றோம் ஆகில் ஆறி இருக்கலாம் இ றே
அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்-ஆச்வாஸ ஹேதுவான பகலையும் முடித்துக் கொண்டு -மாலையும் ஆகா நின்றது –சர்வ காலத்துக்கும் துணையான நெஞ்சையும் காண்கிறிலேன் என்னுதல் /மாலையையும் காண்கிறிலேன் -என்னுதல் / மேல் வருகிற வியசன பரம்பரைகளைப் பற்ற மாழை தான் ஸூ க கரம் -என்னலாம் படி இருந்தது என்கை –
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை-சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்--பிராட்டியோடு -அந்நிய பரரான ருத்ராதிகளோடு வாசி அற உடம்பு கொடுக்கும் சீலம் ஸ்மாரகமாய் நித்தியமான ஆத்மாவை முடியா நின்றது -அந்நிய பரர்க்கு எளிதான உடம்பு கிடீர் எனக்கு அரிதாய்த்து –
எவன் இனிப் புகுமிடம் -சர்வ சாதாரணமான உடம்பை இழந்தால் இனி எங்கே போய் தரிப்பது –அவன் உடம்பு கிட்டிற்று இல்லை என்னா ஹிதம் சொல்லுகிற உங்கள் உடம்பைப் பற்றித் தரிக்கவோ -ஆனாள் லோக யாத்ரையைப் பற்றி தரித்தாலோ என்ன
எவன் செய்கேனோ-அவ் அளவில் தரிக்கலாம் விஷயம் அன்றே -தோழிமார் உடன் வ்ருத்த கீர்த்தனம் பண்ணி தரித்தாலோ என்ன –
ஆருக்கு-வடுகருக்கு தமிழர் வார்த்தை போலே சொல்லும் வார்த்தைக்கு அதிகாரிகள் யார் -வ்ருத்த கீர்த்தனம் பண்ணும் தோழிமார் எனக்கு முன்னே அழிந்தார்கள்
என் சொல்லுகேன் -கேட்ப்பாரைப் பெற்றால் சொல்லுகைக்கு பாசுரம் தான் உண்டோ
அன்னைமீர்காள்–தோழிமார் அழிந்தார்கள் –நாட்டார் அந்நிய பரர் — சேஷித்து கோள் நீங்களாய் இருத்தி கோள் -உங்களுக்குச் சொல்லவோ –

————————————————————————–

கீழ்ச் சொன்ன பதார்த்தங்கள் எல்லாம் திரள வந்து கண் பாராதே நலிகிற படியைச் சொல்லுகிறாள் –

ஆருக்கு  என் சொல்லுகேன் அன்னைமீர்காள்
ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்
கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு
பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப்
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7-

ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–நெஞ்சும் உங்களதாய்-பாதக பதார்த்தங்களை போக்ய வஸ்துக்கள் என்று அவற்றைத் தேடித் திரிகிற உங்களுக்குச் சொல்லவோ -நெஞ்சு தம் தாமதன்றோ -அனுகூல பதார்த்தங்கள் தேட்டம் அன்றோ -என்ன உங்களுக்குச் சொல்லுவோம் –
ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை–மிக்கு இருந்துள்ள குளிர்ந்த வாடை இவ்வாத்மாவோடு போம் அளவன்று –பாதக வர்க்கம் மிகைத்தாலும் நெஞ்சு உண்டாகில் தரிக்கலாம் இ றே -அது மீளாத இடத்தே புக்கது –
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்-கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே–மேகம் போலே ஸ்ரமஹரமான நிறத்தாலே அந்நிய பரமாக்கி நமக்கு பவ்யனான கிருஷ்ணனுடைய கள்வம் உண்டு -சம்ச்லேஷ தசையில் சொன்ன தாழ்வுகளும் செயல்களும் -அவற்றால் அபஹ்ருதமாய் -அத்விதீயமான என் நெஞ்சானது அவன் பக்கலது
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு-பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து -பிரதானமான வாடையை ஒழியவே பாதக பதார்த்தங்கள் அஹம் அஹமிகயா மேல் விழுந்து நலிகிற படியைச் சொல்கிறது –சீர் உறுகையாவது-அழகு மிக்கு இருக்கை –அதாகிறது பரிமளிதமாய் க்ராண இந்திரியத்தை நலியும் அளவன்றிக்கே -கண்ணையும் நலியும் படியான -தர்ச நீயமான அகில் புகை –யாழ் நரம்பு -பண் பட்டு இருந்துள்ள யாழ் -பஞ்சமம் ஆகிற பண் –தண் பசுஞ்சாந்து –ஆறிக் குளிர்ந்து செவ்வி அழியாத சாந்து –அணைந்து-இவற்றைக் கூட்டிக் கொண்டு –
போருற்ற வாடை -கூடின பரிகரங்கள் பங்களம் என்னும் படி தனி வீரம் செய்கிற வாடை –பொருகையிலே சமைந்த வாடையானது –
தண் மல்லிகைப் பூப்-புது மணம் முகந்து கொண்டு– ஸ்ரமஹரமான மல்லிகைப் பூவின் செவ்விதான பரிமளத்தை முகந்து கொண்டு –முகப்பார் தாழ்வாம் படி -குறைவற்று இருக்கிறபடி –
எறியுமாலோ–இவளுடைய விரஹ அக்னி தன் மேல் தட்டாத படி கடக்க நின்று வீசா நின்றது —ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை-என்று அந்வயம் –

——————————————————————

கீழே தனித் தனியும் திரளவும் பாதகமானவை ஒன்றுக்கு ஓன்று முற்கோலி வந்து மேல் விழுந்து நலியா நின்றன -என்கிறாள் –

புது  மணம் முகந்து கொண்டு எறியுமாலோ
பொங்கிள வாடை புன் செக்கராலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம்
கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை
வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்-9-9-8-

புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ-பொங்கிள வாடை –என்னை நலியக் கிளர்ந்து இளகிப் பதிக்கிற வாடையானது மல்லிகையின் செவ்விப் பரிமளத்தை முகந்து கொண்டு எறியா நின்றது -இவ்வாடைக்கு ஸ்த்ரீ வதம் பண்ணப் பண்ண நூறே பிராயமாகச் சொல்லுகிறபடி –
புன் செக்கராலோ-செவ்வானமும் மறையா நிற்கிற தசையாய்த்து -ஸந்த்யை தானும் பகல் என்னும் படி இ றே மேல் வருகிற மலை–
அது மணந்து அகன்ற-அப்படி சம்ச்லேஷித்து பிரிந்த வாக்குக்கு அவிஷயமாம் படியாய்த்து யாய்த்து கலந்து பிரிந்த படி -இப்படி அவகாஹித்த இவர் பாசுரம் இன்றிக்கே பாடா நிற்க தூரஸ்தரான நாம் இதுக்கு என்ன பாசுரம் இட்டுச் சொல்வது -மோரு உள்ளதனையும் சோறேயோ என்று எம்பெருமானார் அருளிச் செய்வர் –
நம் கண்ணன் கள்வம்-கண்ணனில் கொடியது -கலக்கிற போது நமக்கு ஸ்வம் என்னும் படி இருந்த கிருஷ்ணனுடைய தற்காலத்து பரிமாற்றம் -அவன் தன்னில் காட்டிலும் பாதகமாகா நின்றது -கலக்கிற போது தாழ்வுகள் தோற்ற பரிமாறின பரிமாற்றத்தில் காட்டிலும் அவன் தானே நல்லன் என்கை –
இனியதனிலும்பர்-பின்னையும் அதுக்கு மேலே
மது மண மல்லிகை மந்தக் கோவை-மதுவையும் மணத்தையும் யுடைத்தான மல்லிகையாலே செறியத் தொடுத்த மலை -/-வண் பசும் சாந்தினில்–அழகிய பசுஞ்சாந்து இவை நலியா நின்றன -/ சாந்தினில்–பஞ்சமம் வைத்து–அதுக்கு மேலே பஞ்சமம் ஆகிற பண்ணையும் கூட்டிக் கொண்டு இக் குழல் ஓசை பாதகமாகா நின்றது என்னுதல் –இவற்றிலே பஞ்சமம் ஆகிற பண்ணையும் கூட்டிக் கொண்டு குழல் ஓசை பாதகமாகா நின்றது என்னுதல்
அது மணந்து -அப்படியே கலந்து -பரிமாறுகைக்காக ஊதுகிற குழல் ஓசைக்கே தரிக்க மாட்டுகிறிலேன்
– இன்ன அருள் ஆய்ச்சியர்க்கே–அப்படிக் கலந்த இன்னருள் ஆய்ச்சியர்க்கே -என்னவுமாம் –தன் பிரசாத்துக்கு விஷய பூதைகளான இடைப் பெண்களுக்கே
ஊதும் அத் தீம் குழற்கே —தீம் குழல் -இனிய குழல் /ஆகள் போக விட்டு குழல் ஊதுமவன் இ றே –
உய்யேன் நான்–கீழில் அவற்றுக்குப் பிழைத்தாலும் குழல் ஓசைக்கு பிழைக்க மாட்டேன் -குழல் ஓசை தான் காத்துக் கிடக்கிறாரை தொடை குத்தி உறக்கி -உறங்குகிற பெண்களை யாய்த்து எழுப்புவது —

————————————————————————–

இடைப்பெண்கள் நடுவு இவன் திருக் குழல் ஊதி அருளுகிற போது நடுவே நடுவே தன் ஆற்றாமையாலே சிலஉக்தி சேஷ்டிதங்களைப் பண்ணா நின்று கொண்டு -பாடுகிற பாட்டை நினைத்து ஒன்றும் தரிக்க மாட்டுகிறிலேன் -என்கிறாள் –

ஊதும்  அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்-அது மொழிந்து–கீழில் அவை மிகை என்னும் படி குழல் ஓசை பாதகம் ஆகிற படி –
இடை இடை -அது மொழிந்து -குழலூதும் போது பிரிந்தேன் -ஆற்றேன் -என்னுமா போலே நீச பாஷணங்களை வைத்தாய்த்து குழலூதுவது -அவற்றைத் தன் வாயால் சொல்ல ஒண்ணாமை யாலே –அது -என்கிறாள் -/ அது ஒழிந்து -பாட பேதம் -அத்தை தவிர்ந்து என்றுமாம் –
தன் செய் கோலம்-தூது செய் கண்கள் கொண்டு–தனக்குத் தானே ஆபரணமாய் தன் கருத்தை அவளுக்கு அறிவிக்க வல்ல திருக் கண்கள் -நெஞ்சில் மறத்தாலே-கிட்டக் கடவோம் அல்லோம் என்று இருக்கிற பெண்களுடைய காளை சென்று பிடியா நிற்கும் கண்கள் என்கை –சந்தே சைஸ் சாம மதுரை ப்ரேம கர்ப்பை ரகர் விதை -ராமே ணாச்வா சிதா கோப்யோ ஹரிணா ஹ்ருத சேதச –நம்பி மூத்தபிரான் செய்யுமத்தை செய்யா நிற்கும் –
ஓன்று பேசித்-கண்ணானது வாக் விருத்தியை அதிகரித்தது -பேச்சால் பிறக்கும் ஸ்பஷ்டத்தை நோக்காலே பிறக்கை-
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்–அழகிய பேச்சோடு கூடின இசைகளாலே கண்ணாலே நோக்கி ஈடுபடுத்துமா போலே ஈடுபடுத்தி -இசையோடு கூடச் செய்தேயும் இயலும் தெரிந்து இருக்கை -வாக்யவஹாரமும் நேத்ர விருத்தியும் மாறாடின படி
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து-கேட்க்கிறவர்களிலும் தன் செவி அணித்து ஆகையால் -நாம் ஈடுபடுகிற படி கண்டால் அபலைகள் ஆனவர்கள் என் படுவார்கள் -என்று மிகவும் நொந்து -வன் நெஞ்சரான நம்மை வருந்தின படி கண்டால் அபலைகள் என் படுகிறார்களோ -என்று மிகவும் நோவு பட்டான் –
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை-பெண்களுடைய நெஞ்சும் ஊடலை அற மறந்து பொருந்தும்படி படுகிற பாட்டை -ஒரு மிடற்று ஓசையிலே அழிகிற நெஞ்சு கொண்டு இ றே மறம் கொண்டாடுவது
யாதும் ஒன்றும் அறிகிலம் -அது பாதகம் ஆகிறபடி எனக்கு ஒன்றும் தெரிகிறதில்லை
அம்ம அம்ம-மாலையும் வந்தது -மிகவும் பயாவஹமாம் படி ராத்திரியும் வந்தது -இனி இருந்து கிலே ஸிக்க வேண்டாத படி இது முடித்தே விடும் போலே இருந்தது –
மாயன் வாரான்–தன்னைப் பிரிந்தார் லஜ்ஜிக்கும் படி தானே இழவாளனாய் வந்து கால் பிடிக்கும் ஆச்சர்ய பூதன் வருகிறிலன் –

——————————————————————-

வருவதாக  சொன்ன காலமான  ராத்திரியும் வந்து மஹா அவசாதம் வர்த்தியா நிற்க அவனைக் காண்கிறிலோம் -இனி பாதகங்களினுடைய சந்நிதியில்  அவனை ஒழியத் தரிப்பது அரிது என்கிறாள்-

மாலையும்  வந்தது மாயன் வாரான்
மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன் நாகுகள் உகளுமாலோ
கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர் முல்லை கரு முகைகள்
மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ
என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–9-9-10-

மாலையும் வந்தது மாயன் வாரான்–மாலையையும் அவனையும் கூடப் பிணைத்து விட்டாள் போலே காணும் -அவன் வருவதாக குறித்துப் போன காலமும் வந்தது -தான் வருகிறிலன் – மாயன் –தன்னைக் காணவே பிரதி கூலங்கள் எல்லாம் அனுகூலமாம் படி தோற்றும் ஆச்சர்ய பூதன் வரக் காண்கிறிலன்
மா மணி புலம்ப வல்லேறு அணைந்த கோல நன் நாகுகள் உகளுமாலோ–பெரிய மணி த்வனிக்கும் படி வலிய ஏறு அணைகையாலே தர்ச நீயமான வடிவை யுடைத்தாய் -துல்ய சீல வயோவிருத்தாம்-என்கிறபடியே ருஷபத்துக்கு சத்ருசமான பருவத்தையும் யுடைய நாகுகள் களியா நின்றன -வல்லேறு-நாகு பிடி கொடுத்தது இல்லை என்று மீளாதே தொடங்கினது முடிய நடத்த வல்ல ருஷபம் –
உகளுகை -கலவிக்கு போக்குவிட்டு சாசம்ப்ரம வ்ருத்திகளை பண்ணுகை –
கொடியன குழல்களும் குழறுமாலோ-கேட்பவருக்கு தரிப்பு அரிதாமவை –தூரப் போன பசுக்களை மீடகைக்காக அங்கும் இங்கும் சிதறின இடையர் எல்லாம் திரண்டு ஊரை வந்து கிட்டி ஊதுகிற குழல்களும் —குழலும் -எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி விரவிக் கொண்டு எழா நின்றது -நாகுகளால் வந்த நலிவுக்கு மேலே குழல்களும் நலியா நின்றன –
வாலொளி வளர் முல்லை கரு முகைகள்-மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ-மிக்க ஒளியை யுடைத்தாய் கொள் கொம்பு மூட வளருகிற முல்லை -அப்படி இருந்துள்ளன கருமுகை -அது போலே இருந்துள்ள மல்லிகை -இவற்றினுள்ளே முழுகி வண்டுகள் ஆலியா நின்றன –
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ-கடலும் ஆகாசத்தில் கிளர்ந்து கூப்பிடா நின்றது -சம்யோக மத்யத்திலே தைர்ய பங்கம் பிறந்து கூப்பிடும்படிக்கு ஸ்மாரகமாய் நலியா நின்றது –
என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–பாதக பதார்த்தங்கள் நடுவு அவனை ஒழிய எத்தை சொல்லி உஜ்ஜீவிப்பது -இவை மேல் விழுந்து நலியா நின்றன -அவனோ வந்திலன் -நான் உஜ்ஜீவிக்க என்பது ஓன்று உண்டோ -முடிந்தேன் -என்றபடி –

——————————————————————-

நிகமத்தில் அவன் பக்கல் சாபலமுடையார் இத்திருவாய் மொழியைச் சொல்லி அவனைப் பெறுங்கோள் என்கிறாள் –

அவனை  விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா
அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11-

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா--அவனை விஸ்லேஷித்து பிராண தாரண ஷமைகள் இன்றிக்கே இருக்குமவர்கள் –
அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்-ஒப்பிக்கப் பட்ட ஆபரணங்களை யுடைய இடைப் பெண்கள் -கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழிய புகுந்து -என்கிறபடியே அவன் வரவுக்கு உடலாக தங்களை அலங்கரித்து வரும் காலத்திலே வரக் காணாமையாலே கூப்பிட்ட கூப்பீட்டை –
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி--அணி குருகூர்ச் சடகோபன் மாறன்-அவனுடைய பிரிவால் நோவு பட்டு அருளிச் செய்த ஆழ்வார் -அவர்கள் எல்லாரும் பட்ட கிலேசத்தை இவர் ஒருவருமே பட்டார் என்கை –
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த–ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு--சர்வரையும் பிரளய ஆபத்தில் ரக்ஷித்து -அழிந்தவற்றை அடங்க உண்டாக்கின சர்வேஸ்வரன் திருவடிகளிலே யாய்த்து சொல்லிற்று -விரஹ பிரளயத்தில் நின்றும் தம்மை எடுக்க வேணும் என்று சொன்ன வார்த்தை யாய்த்து
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்–அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–அப்படி வியாமோஹத்தை யுடையவனைக் கிட்டி தொழுது சாபலமுடையார் பூமியிலே நின்று அடைவு கெடக் கூப்பிட்டு உஜ்ஜீவியுங்கோள் -இத்திருவாய்மொழியை அப்யசித்தார்க்கு என்னைப் போல் என் சொல்லி உய்வன்-என்று கூப்பிட வேண்டா -பேற்றிலே அந்வயம் என்கை –

—————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –9-9–

October 25, 2016

அறுக்கும் வினையில் -எம்பெருமானைக் காண வேணும் என்று மநோ ராத்தித்து மிகவும் பதறி அப்போதே காணப் பெறாதே
வியசனத்தாலே மிகவும் நோவு பட்ட ஆழ்வார் -தம்முடைய தசையை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –
திருவாய்ப்பாடியிலே பெண் பிள்ளைகள் கிருஷ்ணனோடு கலந்து -அவன் பசு மேய்க்கப் போகையாலே
பகல் எல்லாம் அவன் வரவு பார்த்து இருக்க -விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி இன்றிக்கே
எல்லாரையும் போக பிராவண்யத்தாலே சபலராக்கா நின்றுள்ள ஸந்த்யை வர கிருஷ்ணனும் வாரா நின்றான் என்று நிச்சிதமாய் இருக்க
-ஒரு க்ஷணம் காணப் பெறாமையாலே அநேக காலம் விஸ்லேஷத்தால் படும் வியசனத்தைப் படா நிற்க –
அதுக்கு மேலே மல்லிகையின் பரிமளத்தை யுடைய தென்றல் தொடக்கமான ஸந்த்யா காலத்தில் பதார்த்தங்களும்
-அக்காலத்தில் யுண்டான குழல் ஓசைகளும் -அவற்றால் சம்ருத்தமான கிருஷ்ணனுடைய குண சேஷ்டிதாதிகளும்-
துஸ் ஸஹமான நிலாவும் சமுத்திர கோஷம் தொடக்கமான பதார்த்தங்கள் எல்லாம் தனித் தனியாகவும் திரளாவும் நலிய
மிகவும் நோவு பட்டு -கேட்டார்க்கு தரிப்பு அரிதாம் படி ஆர்த்தி மிகுதியாலே கூப்பிட்ட பாசுரத்தை ஒருத்தி சொல்கிறாள் –
ஸந்த்யையாவது எம்பெருமான் தம்மை விஷயீ கரிப்பதற்கு முன்பு உண்டான அல்ப காலம் –
அக்காலத்தில் பாதக பதார்த்தங்கள் ஆகிறன-தம்மை விஷயீ கரிக்கைக்கு உத்யோகிக்கிற எம்பெருமானுடைய
சங்க ஸார்ங்காதி கோஷங்களும் -பெரிய திருவடியுடைய திருச் சிறகு ஒலியும்-அவன் வரவுக்கு ஸூ சகமான –
மன ப்ரசாதிகளான நிமித்தங்களும் –
இவை பாதகமாகைக்கு காரணம் -இவை அவன் வரவுக்கு ஸூ சகமாய் இருக்கச் செய்தே அப்போதே அவனைக் காணாமை -மாலைப் பூசல்அன்றோ  இது –

———————————————————————–

ஸந்த்யா காலத்தில் தென்றல் தொடக்கமான பதார்த்தங்கள் தனித் தனியே தனக்கு பாதகம் ஆகிற படியை அருளிச் செய்கிறார் –

மல்லிகை  கமழ் தென்றல் ஈருமாலோ
வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ
செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-

வெறும் புறத்தில் பொறுக்க ஒண்ணாதே தென்றலானது நஞ்சு ஊட்டினால் போலே மல்லிகையின் பரிமளத்தோடே கூட வந்து ஈரா நின்றது -அழகிய குறிஞ்சியோடே கூடின இசையானது துளையா நின்றது -அஸ்தமியா நின்றுள்ள ஆதித்யனை யுடைய ஸந்த்யையும் வந்து மோஹிப்பியா நின்றது -சிவந்து அழகிய மேகங்கள் சேதித்து பொகடா நின்றன –ஆல்-என்றும் ஓ என்றும் -மிகவும் நோவு பட்டமைக்கு தனித் தனியே ஸூ சகங்கள் -இடைப்பிள்ளைகளை தன்னுடைய ஸுந்தரியாதிகளாலே தோற்பித்தால் போலே தன் திருக் கண்களில் அழகைக் காட்டி என்னை அடிமை கொண்டு என்னோடே அத்யாச்சர்யமாம் படி பரிமாறி அத்தாலே மேனாணித்து இருந்தவனாலே புல்கப் பட்ட முலைகளையும் தோள்களையும் கொண்டு தென்றல் முதலான பதார்த்தங்கள் நலியாதபடி புகுகைக்கு இடம் காண்கிறிலோம் -இத்தசையில் இதுக்கு ரக்ஷகன் ஆணவனும் வாராதே தனிப்பட நின்றோம் –

————————————————————–

பாதக பதார்த்தங்கள் தனித் தனியே நலிந்து -அவை பல ஹானி மிக மிக பல கூடி வந்து  நலியா நின்றன -என்கிறாள் –

புகலிடம்  அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-

சேக்கள் கழுத்தில் சப்திக்கிற -மணி தென்றல் குழல் இவை எல்லாம் அவற்றுக்கு ஸ்மாரகமாய்க் கொண்டு நலியா நின்றன -ஆச்வாஸ கரமான பகலைப் போக்கின ஸந்த்யை -அழகிய சந்தனம் -பஞ்சமம் -முல்லை என்கிற யாழ்-குளிர்ந்த வாடை -இவை எல்லாம் நலியா நின்றன -இப்பதார்த்தங்கள் அடைய தரிசனத்தால் பிறந்த பீதியாலே அவற்றால் வந்த நலிவு சொல்ல மாட்டாதே பதார்த்தத்தை சொன்னாள்–ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணி இருந்ததே குடியாக ரக்ஷித்து அவ்வளவு அன்றிக்கே அவற்றின் பக்கலிலே  மிகவும் வியாமுக்தனாய்  ஆஸ்ரித விரோதிகளைக்  கொண்டு யுத்த பூமியிலே எதிர் இட்ட அ ஸூ ரர்க்கும் மிருத்யுவானவன்  -அப்படியே இக்காலத்தில் நலிகிறவற்றை நீக்கிக் கொண்டு வந்து தோற்று கிறிலன்-இப்படி ஆபத்சகனானவன் வாராது இருக்க இவற்றின் சந்நிதியில் இருந்து  என் பிராணனை நோக்குகை என்று ஒரு பொருள் உண்டோ –

——————————————————————-

அவனுடைய திவ்ய அவயவங்கள் ஹ்ருதயத்திலே ஸ்ம்ருதமாய் நின்று நலியா நின்றன -என்கிறாள் –

இனி  இருந்து என் உயிர் காக்குமாறு என்
இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து
துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான்
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பனி இரும் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3-

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என்-அவனுடைய ஸுந்தர்யமே உள்ளே நின்று நலியா நின்றால் இனி பிராணனைக் காக்க விரகு உண்டோ -என்கிறாள் –
இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க-–துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து–சம்ச்லேஷ ஸூக அதிசயத்தாலே முலைகள் இரண்டும் குழையவும் -நுண்ணிய இடை நுடங்கும் படியாகவும் -துக்க பலகமான சம்ச்லேஷத்தை பண்ணி -என்னை நீராக்கி என்னுடம்பிலே தோய்ந்து -பொறுக்க ஒண்ணாத படி நிரதிசய ஸூகமாம்படி -கலந்து என்றுமாம் –
-அசேதனங்களைப் பொகடுமா போலே எங்களை பொகட்டு அகலுகையே ஸ்வ பாவனான கிருஷ்ணன் –
கள்வன்-தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான்-சம்ச்லேஷ தசையில் சர்வ ஸ் வ அபஹாரிகளான ஆலோக அவலோக நாதிகளை யுடையனாய் -என்னோட்டை கலவியாலே இளகிப் பதித்து மேனாணிப்பதும் செய்து -விஸ்லேஷ தசையில் என் பக்கலிலே அதி சாபலத்தை யுடையவன் வருகிறிலன்
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்-பணி இரும் குழல்களும் நான்கு தோளும்-பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–தாமரைப் பூ போலே இருக்கிற கண்ணும் சிவந்த திருப் பவளமும் -கறுத்து குளிர்ந்து இருந்துள்ள பெரிய திருக் குழல்களும் நாலு திருத் தோள்களும் இவ் வழ குகளை அனுபவித்து இழந்தால் மதி கெடாதே நினைத்து நோவு படுகைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின என்னுடைய மனசிலே நிரந்தரமாக நின்று நலியா நின்றன –

———————————————————————

அவனுக்கு ஸ்மாரகமாய் அவ் வழியாலே நலிகை யன்றிக்கே தானே தனித்தனியே அக்னிமயமாய்  தஹியா நின்றன -என்கிறாள் –

பாவியேன்  மனத்தே நின்று ஈருமாலோ
வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ
மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த
எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ
யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-

தண் வாடையான வாடையும் வெவ்வாடை யாகா நின்றது –எல்லாராலும் ஸ்ப்ருஹை  பண்ணப் படும்  குளிர்ந்த சந்திரன் -அக்னிமய சந்திரன் ஆகா நின்றான் -மிருதுவான மலரால் செய்த படுக்கை வெவ்விய பள்ளியாய் நலியா நின்றது -பெரிய திருவடியை யுடைய தெய்வமாகிய வண்டாலே ஆத்தசாரமான என்னுடைய  பெண்மை யாகிற பூ ஏவம் விதமாய் நலிவு படா நின்றது -/ ஆவியின் பரமல்ல வகைகளாலோ--பாதகங்களினுடைய படி இவ்வாத்மாவின் அளவல்ல / பண்டு இவன் புஜித்த படிகளை நினைக்க -அவை பாதிக்கிற படி என்றுமாம் –

——————————————————————

நெஞ்சு துணையாகாத போதும் துணையாகக் கடவ தோழிமாரும் அவனோட்டை சம்ச்லேஷத்தால் எனக்கு வந்த வியஸனத்தை கண்டு எனக்கு முன்னே நோவு படா நின்றார்கள் -அவனுடைய பிரசாதம் பெறுகை அரிதாய்த்து-எனக்கு தரிக்கைக்கு ஒரு விரகு காண்கிறி லேன் -என்கிறாள் –

யாமுடை  நெஞ்சமும் துணையன்றாலோ
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ
அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும்
எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ
யாமுடை யார் உயிர் காக்குமாறு என்
அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5-

என்னோட்டை சம்பந்தத்தாலே எம்பெருமான் துணை யன்றிக்கே ஒழிந்தால் போலே என் நெஞ்சும் துணை யாகிறது இல்லை -பசுக்கள்  வந்து புகுரும் மாலையும் ஆகா நின்றது -சகல பதார்த்தங்களும் ஸ்வ ஸ்வபாவத்தை தவிர்ந்து வேறு ஒரு படி யானால் போலே ம்ருது ஸ் வ பாவனானவனுடைய  நெஞ்சு கல்லாய்த்து -அவனுடைய அழகிய குழல் ஓசையும் ஸ்ம்ருதமாய் ஈரா நின்றது –

அநந்ய பரையான பெரிய பிராட்டியாரோடு அந்நிய பரரான ருத்ராதிகளோடே வாசி இன்றிக்கே எல்லார்க்கும் உடன் கொடுக்கும் ஸூ லபன் ஆனவனுடைய ஸுசீல்யம் என்னாத்மாவை ஈரா நின்றது என்கிறாள் –

அவனுடை  யருள் பெறும் போதரிதால்
அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெறுமள வாவி நில்லாது
அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை
சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-

அவனுடைய பிரசாதம் பெறுகைக்கு அரிதாய் இரா நின்றது -அவனுடைய பிரசாதம் போக்கி பந்துக்களுடைய சாந்த்வ நாதிகள் தாரகம் ஆகமாட்டா-அவனுடைய பிரசாதம்  பெறும் தனையும் செல்ல பிராணன் தரிக்கிறது இல்லை / அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்-மேல் வருகிற வியசந பரம்பரைகளைப் ஸூ க கரம் -என்னலாவதும் செய்து  பகலுக்கு  நாசகமான ஸந்த்யையும் -எல்லாக் காலத்திலும் தரிக்கைக்கு  துணையான நெஞ்சையும் காண்கிறிலேன் -பகலை அடுகிற ஸந்த்யையும் வந்தது -நெஞ்சு காண்கின்றிலேன்-என்றுமாம் -அன்னைமீர் காள்-புகும் இடம் எது -எத்தைச் செய்வேன் -ஆருக்கு எத்தைச் சொல்லுகேன் –

———————————————————————

கீழ்ச் சொன்ன பதார்த்தங்கள் எல்லாம் திரள வந்து கண் பாராதே நலிகிற படியைச் சொல்லுகிறாள் –

ஆருக்கு  என் சொல்லுகேன் அன்னைமீர்காள்
ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்
கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு
பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப்
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7-

மிக்கு இருந்துள்ள குளிர்ந்த வாடை -இவ்வாத்மாவோடு போம் அளவல்ல -மேகம் போலே இருக்கிற திரு நிறத்தை யுடையனாய் -நமக்கு பவ்யனான கிருஷ்ணனுடைய -அனுசந்தித்தாரை சர்வ ஸ்வாபஹாரம் பண்ண வல்ல சேஷ்டிதங்களாதியாலே அபஹ்ருதமான ஒப்பில்லாத என்னுடைய நெஞ்சானது அவன் பக்கலதே -அற நல்ல அகில் புகை -யாழோசை –பஞ்சமாகிற பண் -பசுஞ்சாந்து -இவற்றை துணையாகக் கொண்டு பொருகையிலே சமைந்த வாடை ஸ்ரமஹரமான மல்லிகைப் பூவினுடைய புதிய நாற்றத்தை முகந்து கொண்டு எறியா நின்றது –

———————————————————————–

கீழே தனித் தனியும் திரளவும் பாதகமானவை ஒன்றுக்கு ஓன்று முற்கோலி வந்து மேல் விழுந்து நலியா நின்றன -என்கிறாள் –

புது மணம்  முகந்து கொண்டு எறியுமாலோ
பொங்கிள வாடை புன் செக்கராலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம்
கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை
வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்-9-9-8-

என்னை நலியக் கிளர்ந்து இளகிப் பதிக்கிற வாடையானது புது மணத்தை முகந்து கொண்டு எறியா நின்றது -செவ்வானம் மறைகிற தசையுமாய்த்து -அப்படி சம்ச்லேஷித்து விஸ்லேஷித்த கிருஷ்ணனுடைய சேஷ்டிதம் அவன் தன்னிலும் காட்டிலும் பாதகமாகா நின்றது -பின்னை அதுக்கும் மேலே -மதுவையும் மணத்தையும் யுடைய மல்லிகையினுடைய செறிந்த கோவை -அழகிய பசுஞ்சாந்து இவையும் நலியா நின்றன –அதுக்கு மேலே அப்படியே கலந்து பரிமாறுகைக்காக பஞ்சமம் ஆகிற பண்ணிலே வைத்து ஊதுகிற குழலுக்கே தரிக்க மாட்டுக்கிறிலேன் –

——————————————————————–

இடைப்பெண்கள் நடுவு இவன் திருக் குழல் ஊதி அருளுகிற போது நடுவே நடுவே தன் ஆற்றாமையாலே சிலஉக்தி சேஷ்டிதங்களைப் பண்ணா நின்று கொண்டு -பாடுகிற பாட்டை நினைத்து ஒன்றும் தரிக்க மாட்டுகிறிலேன் -என்கிறாள் –

ஊதும்  அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-

திருக் குழல் ஊதா நிற்க -நடு நடுவே இடைப் பெண்களுடைய நோக்குகளுக்கும் வடிவு அழகுக்கும் தோற்று பேச நிலம் அல்லாத படியான வார்த்தைகளை சொல்லியும் குழலூதுகையிலே மிகவும் மூண்டு -வாயாலே வார்த்தை சொல்ல அவசரம் அல்லாத போது தன் கருத்தை அவர்களுக்கு அறிவிக்க வல்ல திருக் கண்களாலே வார்த்தை சொல்லியும் -தன் திரு மிடற்றிலே அழகிய பேச்சோடும் கூடின இசைகளாலே அழகிய கண்ணாலே நோக்கி ஈடுபடுத்துமா போலே ஈடுபடுத்தியும் -தன் மிடற்றில் ஓசை தன் செவிக்கு அணித்து ஆகையால் தான் முந்துற மிகவும் ஈடுபட்டு பின்னை பெண்களுடைய நெஞ்சிலே ஊடலை அற மறக்கும் படி படுகிற பாட்டை —/அது ஒழிந்து –என்ற பாட பேதம் -அது தவிர -என்னவுமாம் /
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம–மாலையும் வந்தது மாயன் வாரான்–ஒன்றும் தெரிகிறது இல்லை -அதுக்கு மேலே பயாவஹமாம் படி ராத்திரியும் வந்தது -ஆச்சர்ய பூதனானவனும் வருகிறிலன் / மாயன் -தன்னைப் பிரிந்தார் லஜ்ஜிக்கும் படி தானே இழவாளனாய் வந்து தோற்றுமவன்-

———————————————————-

வருவதாக  சொன்ன காலமான  ராத்திரியும் வந்து மஹா அவசாதம் வர்த்தியா நிற்க அவனைக் காண்கிறிலோம் -இனி பாதகங்களினுடைய சந்நிதியில்  அவனை ஒழியத் தரிப்பது அரிது என்கிறாள்-

மாலையும்  வந்தது மாயன் வாரான்
மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன் நாகுகள் உகளுமாலோ
கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர் முல்லை கரு முகைகள்
மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ
என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–9-9-10-

மாயன் வாரான்-தன்னைக் காணவே  பிரதிகூலங்கள் எல்லாம் அனுகூலமாம் படி தோற்றும் ஆச்சர்ய பூதனானவனும் வருகிறிலன் –கழுத்தில் பூண்ட பெரிய மணிகள் ஓசைப்படும்படி  வலிய ஏறு  அணைகையாலே புதுக் கணித்த நாகுகள் களியா நின்றன –ஊரை அணித்தாக வந்து இடைப்பிள்ளைகள் எல்லாரும் கூட  கேட்ப்பாருக்கு தரிப்பு அரிதாக ஊதுகிற குழல்களும் கூடி த்வனியா நின்றன -மிக்க ஒளியை யுடைத்தாய் கொண்டு  வளர்கிற முல்லை கருமுகைகள் மல்லிகை இவற்றினுள்ளே புக்கு முழுசி வண்டுகள் ஆலியா நின்றன -கடலும் ஆகாசத்தில் கிட்டி கூப்பிடா நின்றது -இவற்றின் நடுவே அவனை ஒழியப் பிழைக்கும் படி எங்கனே –

————————————————————————-

நிகமத்தில் அவன் பக்கல் சாபலமுடையார் இத்திருவாய் மொழியைச் சொல்லி அவனைப் பெறுங்கோள் என்கிறாள் –

அவனை  விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா
அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11-

எம்பெருமானை விஸ்லேஷித்து ஆத்ம தாரண ஷாமைகள் இன்றிக்கே இருக்கிற -விலக்ஷணை களான இடைப் பெண்கள் அவன் வரவு தாழ்த்த ஸந்த்யா காலத்திலே கூப்பிட்ட பாசுரத்தை ஆழ்வார் அவனுடைய பிரிவால் நோவு பட்டு எல்லார்க்கும் எல்லாப் படிகளாலும் ரக்ஷகனான அவன் விஷயமாகச் சொன்ன ஆயிரம் திருவாயமொழியிலும் இத்திருவாய் மொழியைக் கொண்டு -அப்படி ரக்ஷகனாகச் சொன்ன எம்பெருமானை அவன் பக்கல் சாபலமுடையார் பூமியிலே நிரந்தரமாக ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறாள் –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –9–8–

October 24, 2016

இப்படி தம்முடைய ஆர்த்தியை அறிவிக்கச் செய்தேயும் எம்பெருமான் அப்போதே வரக் காணாமையாலே மிகவும் அவசன்னரான ஆழ்வார்
தூத ப்ரேஷணத்தாலும் அவனுடைய குண அனுசந்தானத்தால் வந்த மன ப்ரசாதங்களாலும் -அவன் நம்மை விஷயீ கரித்து
திரு நாவாயிலே கொண்டு போகை நிச்சிதம் என்று அத்யவசித்து –
க்ரமத்திலே கொண்டு போகப் பற்றாமையாலே பதறி -திரு நாவாயிலே புக வேணும் என்று பதறி
-அங்கே புக வல்லேனே என்றும் -புகும் நாள் என்றோ என்றும்
அங்கே புக்கு என் கண்ணாரக் கண்டு அடிமை செய்ய வல்லேனே என்றும் தொடங்கி அநேக மநோ ரதங்களைப் பண்ணுகிறார் –
இலங்கையில் வந்து திருவடி தன்னை திருவடி தொழுது போன பின்பு பிராட்டி
பெருமாளைக் காண்பது எப்போதோ -என்று மநோ ரதித்தது போலே இவருக்கு செல்லுகிறது
-உபாய உபேயங்கள் ஈஸ்வரனே என்று அத்யவசித்தார்க்கு ப்ராப்ய ருசியில் கண் அழிவு அற்றால் விளம்ப ஹேது இல்லாமையால்
ப்ராப்ய சித்தி அளவும் மநோ ரதம் செல்லா நிற்கும் இ றே-அதவா
போக விட்ட தூதர் வர பற்றாமை -நான் அவன் இருந்த இடத்தே போவோம் -என்று மநோ ரதிக்கிறார் -என்றுமாம்
-ப்ராப்ய சித்தியால் யுண்டான த்வரையாலே பெரிய முதலியார் எப்போதும் இந்த திருவாய் மொழியை அனுசந்தித்து அருளுவார் என்று
-பெரிய முதலியார் திருவாய் மொழி -என்றாய்த்து இத்தைச் சொல்லுவது –

———————————————————————-

எனக்கு திரு நாவாய் குறுகைக்கு யுபாயம் யுண்டோ -என்கிறார் –

அறுக்கும்  வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

அறுக்கும் வினையாயின-வினை என்று பேர் பெற்றவற்றை யடங்கலும் போக்கும் -ருசி விரோதி –உபாய – விரோதி -பிராப்தி விரோதி -சரீரத்தளவில் பர்யவசிக்க ஒட்டாதே ப்ராரப்தமாய் வருமவை -அவற்றை அடைய ஒருகால் போக்கும் -க்ரமத்தால் போக்க வேண்டுவது தானே போக்கிக் கொள்ளும் அன்று இ றே -அவன் போக்கும் அன்று -சர்வ பாப்மான ப்ரதூயந்தே –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்கிற படியாகக் கடவது இ றே -இப்படிச் செய்வது ஆர்க்கு என்னில் –
ஆகத்து அவனை-நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு-அவனை ஹிருதயத்திலே நிறுத்த வேணும் என்னும் அத்யாவசாயத்திலே ஒருமைப் பட்ட மநோ ரதத்தை யுடையவர்க்கு –
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்-வினையை வர்த்திப்பிக்கிலும் புக்கு கொடு நிற்க வேண்டும் படி யாய்த்து தேசம் இருப்பது -பரிமளத்தை யுடைத்தாய் -ஸ்ரமஹரமாய -நித்ய வசந்தமான சோலைகளாலே சூழப் பட்ட திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ-குறுகப் பண்ணும் விரகு ஏதோ என்னுதல் / குறுகும் விரகு ஏதோ என்னுதல் / குறுக்கும் -என்று அத்தேச பாஷை -அந்த பாஷையாலே அருளிச் செய்வதே என்று வித்தராய் அருளினார் எம்பெருமானார் –
கொடியேற்கே –-ஆஸாலேசம் யுடையார்க்கு புகலாம் தேசமாய் இருக்க -புகப் பேறாதே நோவு படுகைக்கு அடியான பாபத்தைப் பண்ணின எனக்கு –
கொடியேற்க்கு – ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு–வினையாயின -அறுக்கும் -திரு நாவாய்-குறுக்கும் வகை உண்டு கொலோ—-என்று அந்வயம் —

———————————————————————-

திரு நாவாயிலே புகும் நாள் என்றோ -என்கிறார் –

கொடி  ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–9-8-2–

கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்–கொடி போலே அழகிய இடையை யுடையளாய் -புஷ்ப்பத்தில் பரிமளம் உபாதானமாகப் பிறந்த பிராட்டிக்கு வல்லபன் ஆனவன் -ந கச்சின் நா பராத்யதி -என்பாரும் அருகே இருக்க -இழக்கவோ என்கிறார் –
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்–கூரிய வேல் போலே ஓராளும் ஓர் நோக்கும் நேராய் -போக்தாவின் அளவில்லாத போக்யதையை யுடைத்தான திருக் கண்களை யுடையளாய் -ஆத்ம குணோபேதையான நப்பின்னை பிராட்டி செவ்வி கொள்ள இட்டுப் பிறந்தவன் –தன் கண்ணாலே அவனை யொடியெறிந்து நமக்கு அங்கித் தருமவள் இ றே நப்பின்னை பிராட்டி
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்-இவ்வளவு இன்றிக்கே மஹிஷீ பரிஜநங்களுக்கு எல்லை இன்றிக்கே இருக்குமவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –அவனுக்கும் அவன் பரிகரத்துக்கும் குறைவற வர்த்திக்கலாம் சோலை பரப்பை யுடைத்தான தேசம் –
அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–அடிமை செய்கைக்கு இட்டுப் பிறந்த நான் வந்து கிட்டப் பெரும் நாள் என்றோ –

—————————————————————–

திரு நாவாயில் திரு ஓலக்கத்தில் புகும் நாள் என்று என்று அறிகிறிலேன் என்று அவசன்னராகிறார் –

எவைகோல்  அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-

எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று -நான் வந்து கிட்டப் பெறும் நாள் எவை என்று
எப்போதும்-ஒரு கால் இத்தைச் சொல்லி அல்லாத போது அந்நிய பரதை பண்ணுகிறேனோ –
கவை யில் மனம் இன்றி -அது தன்னிலும் இதுவும் முகாந்தரமுமாய்ச் செல்லுகிறதோ -இரு தலைத்த நெஞ்சு இன்றியே –
கண்ணீர்கள் கலுழ்வன்-கண்ணீர்கள் வெள்ளமிட விருப்பன்
நவை இல் திரு நாரணன் சேர் -துர்லபத்வாதி தோஷம் இன்றிக்கே இருக்கிற ஸ்ரீ மானான நாராயணன் -ஸுலப்யத்துக்கு ஊற்றான பிராட்டியோடே கூட த் திருநாவாயிலே வந்து ஸூலபனானவன்
திருநாவாய்-அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–திரு நாவாயிலே பேரோலக்கமாய் இருக்க அத்திரளிலே சென்று கூடப் பெறும் நாள் என்று என்று அறிகிறிலேன் –அவை -சபை / நவை -குற்றம் / அடியார்கள்  குழாங்களை–உடன் கூடுவது என்று கொலோ–என்று இருக்குமவராகையாலே அந்நாளை யாசைப்படுகிறார் –

—————————————————————

ஆத்மாந்த தாஸ்யம் பண்ணும் படி விஷயீ க்ருதனான நான் நப்பின்னை பிராட்டியோடே கூட இருக்கிற இருப்பில் அடிமை செய்யப் பெறும் நாள் என்று என்று அறிகிறிலேன் -என்கிறார் –

நாளேல்  அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன -பெறக் கடவ நாள் என்று என்று அறிகிறிலேன் -என்னுதல் / பிரிந்து இருக்கக் கடவ நாள் எத்தனை என்று அறிகிறிலேன் என்னுதல் / -பேறு சித்தமான பின்பு பதறுகிறது என் என்னில் –
நானும்-மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்–நித்ய ஸூ ரிகள் பண்ணும் ஆத்மாந்த தாஸ்யத்தில் அன்றோ நானும் அதிகரித்தது -ஒரு பிரயோஜனத்தை கொள்ளக் கிட்டினவனாய் ஆறி இருக்கிறேனோ -தாஸ்ய பரிமளத்தில் சுவடு அறியாதவனாய் ஆறி இருக்கிறேனோ
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்--ஓங்கிப் பரப்பு மாறப் பூத்த சோலைகளை யுடைத்தான தேசம் -அடிமை செய்கைக்கு புஷ்பாத் யுபகரணங்களால் குறைவற்ற தேசம் என்னுதல் -/ நப்பின்னைப் பிராட்டியும் தானுமாக புஷ்பாபசயம் பண்ணலாம் தேசம் என்னுதல் /
வாளேய் தடம் கண்–ஒளியை யுடைத்தான பரந்த கண் -என்னுதல் /வாள் போலே கண்டாரை அழிக்க வல்ல பரந்த கண் என்னுதல் / அவனை அநந்யார்ஹன் ஆக்கும் படி வல்ல கண் அழகை யுடையவள் என்கை –
மடப்பின்னை மணாளா –அழகே அன்றிக்கே ஆத்ம குணங்களாலும் துவக்க வல்லவளுக்கு வல்லபன் ஆனவனே -தேசாந்தரம் போன பிரஜை ஊர் அணித்த வாறே தாய்மாரை பலகாலும் நினைக்குமா போலே -ப்ராப்ய தேசம் அணித்த வாறே திரளாவும் தனித் தனியாகவும் பிராட்டிமாரை அனுசந்திக்கிறார் –

————————————————————————–

திரு நாவாயை என் கண்ணின் விடாய் தீரக் கண்டு உகந்து -க்ருதார்த்தன் ஆவது என்றோ என்கிறார் –

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5-

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்--பிராட்டிக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கும் வல்லபன் -புருஷகாரமாவாரும்-பொறைக்கு உவாத்தாவாரும் யுண்டாய் இருக்க இழக்கக் கடவேனோ –
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்-லோகத்தில் மநுஷ்யர்கள் என்ன -தேவர்கள் என்ன எல்லார்க்கும் நிர்வாஹகன் ஆனவனே -அவர்கள் படுக்கைப் பற்று நோக்குகிற படி
விண்ணாளன் -பிராட்டிமாரும் தானும் தனக்குத் தகுதியான பரம பதத்தில் திவ்ய பர்யங்கத்திலே இருந்து நித்ய ஸூ ரிகளை நிர்வஹிக்கிறவன்
விரும்பி உறையும் திருநாவாய்-உபய விபூதி நாதன் பெறாப் பேறாக ஆதரித்து வர்த்திக்கிற தேசம் –அவன் விரும்புகிற தேசம் அல்லது ப்ராப்யம் இல்லை இ றே
கண்ணாரக் -காண்கையிலே விடாய்ப் பட்ட கண்கள் வயிறு நிறைய
களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–அஹம் அன்னம் என்று ஒரு தேச விசேஷத்திலே களிக்கை ஒழிய இங்கே களிக்கப் பெறுவது என்றோ
கண்டே -காண்கை நிச்சிதம் -என்னும் விஸ்வாசத்தால் களிக்கை அன்றிக்கே கண்டே களிப்பது என்றோ –

—————————————————————

ஊரை அன்றிக்கே அங்கே நிற்கிற உன்னைக் கண்டு கண் களிப்பது என்றோ என்கிறார்

கண்டே  களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–9-8-6-

கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்-நான் செய்த படி செய்ய -கண்களின் விடாய் தீருவது என்றோ -ஒரு நாளிலே காண்கை நிச்சிதம் ஆனபின்பு இந்நிர்பந்தத்துக்கு பலம் என் என்ன –
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி-அந்நிய பரதை இன்றிக்கே உன் திருவடிகளிலே அதி சபலன் ஆனேன் -அரை க்ஷணம் இழக்க மாட்டாத படியாய் யன்றோ என் சாபலம் இருக்கிறது –துரிசாகிறது -மனசுக்கு ஹேயவிஷய ஸ்பர்சம்
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்-பரிமளத்தோ பாதி வண்டுகளும் படிந்தது கிடக்கும் படி புஷ்பிதமான சோலைகளை உடைத்தான தேசம் -நச புனராவர்த்ததே -என்கிறபடியே புக்காரை மீள ஒட்டாத நிரதிசய போக்யமான தேசம்
கொண்டே உறைகின்ற –ஆஸ்ரிதரோடே அனுபவிக்கலாம் -தேசம் என்று திரு உள்ளத்திலே கொண்டு நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –
எம் கோவலர் கோவே–-கிருஷ்ணனாய் வந்து அவதரித்து இடையாருக்கு ஸூ லபன் ஆனால் போலே திரு நாவாயிலே வந்து எனக்கு ஸூ லபன் ஆனவனே-

————————————————————-

திரு நாவாயிலே ஆஸ்ரித அர்த்தமாக  நித்ய வாஸம் பண்ணுகிற நாரண நம்பீ -ஐயோ -இவன் அநந்ய கதி என்று என் பக்கலிலே கிருபையை பண்ணி யருள வேணும் என்கிறார் –

கோவாகிய  மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்-ஈஸ்வரன் இந்திரனை த்ரைலோக்யாதிபதியாக வைத்தான் -மஹா பலி அவனைத் தள்ளி அபத்தத்தை தான் ஏறட்டுக் கொண்டான் -பாதகனானவன் ஸ்வ பலத்தால் ஏறட்டுக் கொண்ட படியால் -நாடு நோவு படும் என்று -ரக்ஷகனான இந்திரனுக்கு கொடுக்கைக்காக -அவன் பக்கலில் நின்றும் விபூதியை வாங்கினான் யாய்த்து -ஆஸ்ரிதருடைய அபேக்ஷித சித்திக்கு தன்னை அழிய மாறும் ஸ்வபாவன் என்கை
தேவா சுரம் செற்றவனே-தேவா ஸூர சங்க்ராமத்திலே பரஸ்பர வதமேயாய்ச் சென்ற வாறே -அனுகூலரான தேவர்களுக்காக அஸூரர்களை அழியச் செய்தவனே -மஹா பலி பக்கல் குண லேசத்தாலே தன்னை அழிய மாறினான் –அங்கு அங்கனம் ஓன்று இல்லாமையால் அவர்களை அழியச் செய்த படி
திருமாலே-ஆஸ்ரிதரை ரஷிக்கைக்கும் -தத் பிரதிகூலரை நிரசிக்கைக்கும் அடி ஸ்ரீ யபதி யாகையாலே
நாவாய் உறைகின்ற -ரக்ஷகனானவன் தூரஸ்தனாகை யன்றிக்கே ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக திரு நாவாயிலே நித்ய வாஸம் பண்ணுகிறவனே –
என் நாரண நம்பீ-அதுக்கு உறுப்பாக -ஆஸ்ரித வத்சலனாய் -அவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோமே -என்று அத்தாலே பூர்ணனானவனே -ஆஸ்ரித ரக்ஷணத்தை நினைத்து சர்வ அந்தர்யாமி யானவன் என்றுமாம் –
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–-அநந்ய கதியான இவன் ஐயோ நோவு படுவதே -என்று கிருபை பண்ணி யருள வேணும் -ஸோ அஹம் தே தேவ தேவேச நார்ச்ச நாதவ் ஸ்துதவ்நச சாமர்த்த்யவான் க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ப்ரஸீத மே -இவன் நமக்கு அசாதாரணன் என்று சம்பந்தத்தைப் பார்த்து கிருபை பண்ணி அருள வேணும் -என்றுமாம் –

—————————————————————–

அபிலஷித்த படி அப்போதே பெறாமையாலே திரு உள்ளம் கலங்கின ஆழ்வார் -அருளிலும் அருள் -தவிரிலும் தவிர் – அஞ்ஞான கந்தம் இல்லாத படி உன்னை என்ப நெஞ்சிலே இருத்தும்ண்ணி தெளிவை தந்து அருள வேணும் –என்று அர்த்திக்கிறார்

அருளாது  ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8-

அருளாது  ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்-பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்-இவன் செய்த படி செய்கிறான் என்று கிருபை பண்ணாதே இருக்கிலும் இரு -என் துர்க்கதியைக் கண்டு கிருபை பண்ணி நிரதிசய போக்யமான உன் திருவடிகளின் கீழே அநந்ய கதியான என்னை வைத்துக் கொள்ளிலும் கொள்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்-தெருளே தரு -மயர்வற மதி நலம் அருளின படியே அஞ்ஞான கந்தம் இல்லாத படியே உன்னை எப்போதும் என் மனசிலே வைத்துக் கொள்ளும் படி -தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்கிற தெளிவைத் தர வேணும் –
தென் திரு நாவாய் என் தேவே –திரு நாவாயிலே நின்று அருளின நீயே ஆஸ்ரயணீயன் -என்னும் இடத்தை எனக்கு அறிவித்தவனே –

————————————————————

தான் இப்படிச் சொன்ன அநந்தரம் அவன் பக்கல் ஒரு வாசி காணாமையாலே -நதே மனுஷ்யா தேவா ஸ் தே -என்று சக்கரவர்த்தி சொன்னால் போலே -திரு நாவாய் காணப் பெறாதே நான் முடியா நின்றேன் -இனி வேறு -திரு நாவாய் அனுபவிக்கும் பாக்கியவான்கள் யாரோ -என்கிறார் –

தேவர்  முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ –9-8-9-

தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்-ஸ்வ யத்னத்தாலே காண்போம் -என்னும் ப்ரஹ்மாதிகளுக்கும் சனகாதிகளுக்கும் காண அரியனாய் இருக்கும் –
மூவர் முதல்வன் –ப்ரஹ்ம ருத்ராதிகள் நடுவே வந்து அவதரித்து அவர்களுக்கு நிர்வாஹகன் என்னுதல் -/ ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நிர்வாஹகன் என்னுதல் /
ஒரு மூ உலகு ஆளி-– மேலும் கீழும் நடுவில் உள்ள சர்வ லோகத்துக்கும் அத்விதீயனான நிர்வாஹகன் –
தேவன்-சர்வ விஸஜாதீயன்
விரும்பி உறையும் திரு நாவாய்-இப்படி சர்வேஸ்வரனாய் இருக்க -ஒரு குடி இருப்பு இல்லாதாரைப் போலே -ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு பாங்கான இடம் -என்று அத்யாதரம் பண்ணி வர்த்திக்கும் தேசத்தை
யாவர் அணுகப் பெறுவார் இனி -நான் முடியா நின்றேன் -இனி இப் பேறு பெற இருக்கிறார் யாரோ -நதே மனுஷ்யா -என்கிறபடியே மனுஷ்யர்க்கு கூட்டு அல்லர்
அந்தோ –உடைமையான எனக்கு உள்ளது உடையவனுக்கு இன்றிக்கே ஒழி வதே –

——————————————————————

உன்னை ஆசைப் பட்டு பெறாது ஒழிந்தாலும் -விட மாட்டாதே சிந்தை கலங்கி -திருமாலே -என்று அழைப்பன் -என்கிறார் –

அந்தோ  அணுகப் பெரு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10-

அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும்–சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்–சொல்லத் தொடங்கினது தலைக் கட்ட மாட்டாத பல ஹானியாலே அந்தோ -என்கிறார் -அணுகப் பெறு நாள் யாவை என்ன வேண்டி இருக்க -அது மாட்டாது ஒழி கிறார் இ றே -ஒரு கால் சொல்லி பல ஹானியாலே விடுகை அன்றிக்கே -சர்வ காலமும் ஹிருதயம் கலங்கி -மாதா பிதாக்களைக் கூப்பிடுமா போலே திருமால் என்று அழையா நிற்பன் -பிதா மாதா ச மாதவ –
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்-கொத்து மிக்க மலரை யுடைத்தான சோலைகளாலே சூழப் பட்டு இருந்துள்ள திரு நாவாயிலே -நித்ய வசந்தமான சோலைகளை யுடைத்தாகையாலே -நிரதிசய போக்யமான தேசம் என்கை –
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–ஒரு தேசத்திலே சென்றே காணக் கடவதான வடிவைக் கொண்டு -ஆஸ்ரித அர்த்தமாக வந்து -நித்ய வாஸம் பண்ணுகிறவனே -அவ்வடிவை எனக்கு கட்டாத வன்று உன் வரவு அஸத் சமம் அன்றோ -என்கை –

——————————————————————

நிகமத்தில் இத்திருவாய் மொழி கற்றார் ஐஹிக ஆமுஷ்மிக போகங்களையும் புஜிக்கப் பெறுவார் என்கிறார் –

வண்ணம்  மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11-

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்–நாநா வர்ணங்களான ரத்னங்களாலே செய்யப்பட மாடங்களை யுடைத்தாய் -நிரதிசய போக்யமான திரு நாவாயிலே நின்று அருளினவனை
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்-பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்-திண்ணிதான மதிலை யுடைத்தான திருநகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த–திரு நாவாய்க்கு ரக்ஷை திரு நகரியிலே போலே –ஆழ்வார் பரியவே அவ்வூருக்கு ரக்ஷை என்னுதல் / ஈஸ்வரனுக்கு தனம் ஆழ்வார் ஆகையால் தனம் கிடந்த இடத்திலே இ றே மதில் இடுவது என்னுதல் / பண்ணார் தமிழ்-பண் மிகுந்த தமிழ் /
மண் ஆண்டு –இஹ லோகத்தில் வைஷ்ணவ ஸ்ரீ யால்-சம்பன்னராய் / மணம் கமழ்வர் மல்லிகையே--மல்லிகை மணம் கமழ்வர் -சர்வ கந்தணம் என்ற விஷயத்தோடு சாம்யாபன்னர் ஆவார் / மல்லிகை மணம் என்று சர்வ கந்தத்துக்கும் உப லக்ஷணம் –

——————————————————————

கந்தாடை  அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –9-8–

October 24, 2016

இப்படி தம்முடைய ஆர்த்தியை அறிவிக்கச் செய்தேயும் எம்பெருமான் அப்போதே வரக் காணாமையாலே மிகவும் அவசன்னரான ஆழ்வார்
தூத ப்ரேஷணத்தாலும் மன ப்ரசாதங்களாலும் அவனுடைய குண அனுசந்தானத்தாலும் -அவன் நம்மை விஷயீ கரித்து
திரு நாவாயிலே கொண்டு போகை நிச்சிதம் என்று அத்யவசித்து -இலங்கையில் வந்து திருவடி தன்னை திருவடி தொழுது போன பின்பு பிராட்டி
பெருமாளைக் காண்பது எப்போதோ -என்று பதறினால் போலே திரு நாவாயிலே புக வேணும் என்று பதறி
-அங்கே புக வல்லேனே என்றும் -புகும் நாள் என்றோ என்றும்
அங்கே புக்கு என் கண்ணாரக் கண்டு அடிமை செய்ய வல்லேனே என்றும் தொடங்கி அநேக மநோ ரதங்களைப் பண்ணுகிறார்
போக விட்ட தூதர் வர பற்றாமை -நான் அவன் இருந்த இடத்தே போவோம் -என்று மநோ ரதிக்கிறார் -என்றுமாம் –

—————————————————————–

எனக்கு திரு நாவாய் குறுகைக்கு யுபாயம் யுண்டோ -என்கிறார் –

அறுக்கும்  வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

அவனை ஹிருதயத்திலே நிறுத்த வேணும் என்னும் அத்யாவசாயத்திலே ஒருப்பட்ட மநோ ரதத்தை யுடையார்க்கு சகல துக்கங்களையும் போக்கும் – / வெறி-பரிமளம் / கொடியேற்கே– அங்கே புகப்    பெறாதே நோவு படுகைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின எனக்கு –

——————————————————————–

திரு நாவாயிலே புகும் நாள் என்றோ -என்கிறார் –

கொடி  ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–9-8-2–

கொடி போலே அழகிய இடையை யுடைய பெரிய பிராட்டியாருக்கு வல்லபனாய் -கூரிய வேல் போலேயாய் பெருத்து இருக்கிற திருக் கண்களை யுடைய நப்பின்னைப் பிராட்டிக்கு போக்தாவாய் –அவ்வளவு அன்றிக்கே மஹிஷீ பரிஜா நாதிகளுக்கு ஒரு முடிவின்றிக்கே இருக்கிறவன் -நித்ய வாஸம் பண்ணுவதும் செய்து -இவன் பரிகரம் எல்லாம் கொண்டு ஒரு மூலையிலே அடங்கும் படி சோலைப் பரப்பை யுடைய திரு நாவாயை –

—————————————————————

திரு நாவாயில் திரு ஓலக்கத்தில் புகும் நாள் என்று என்று அறிகிறிலேன் என்று அவசன்னராகிறார் –

எவைகோல்  அணுகப் பெறும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-

அணுகப் பெருநாள் எவையோ என்று சர்வ காலமும் மற்று ஓன்று அறியாதே ஒருமைப் பட்டு கண்ணீர் பாயா நிற்பன் / நவை இல் திரு நாரணன்- துர்லபத்வாதி தோஷம் தட்டாத படி பிராட்டியோடே கூடி ஆஸ்ரித ஸூலபனானவன் –

———————————————————————–

நாளேல்  அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-

எல்லா அடிமையும் கொள்ளுகைக்கு ஈடான திருச் சோலையை யுடைய திரு நாவாயிலே நப்பின்னை பிராட்டியோடே கூட எழுந்து அருளி இருக்கிற உனக்கு ஆத்மாந்த தாஸ்யம் பண்ணும் படி விஷயீ க்ருதனான நான் திருவடிகளிலே அடிமை யிலே அதிகரிக்கும் நாள் என்று என்று அறிகிறிலேன் என்று பதறுகிறார் –
வாளேய் தடம் கண்–வாள் போலேயாய் பெருத்து இருந்துள்ள கண் –

——————————————————————-

திரு நாவாயை என் கண்ணின் விடாய் தீரக் கண்டு உகந்து -க்ருதார்த்தன் ஆவது என்றோ என்கிறார் –

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5-

லோகத்தில் யுண்டான தேவ மனுஷ்யாதிகளுக்கு நிர்வாஹகனாய் -ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருந்தவன் -அத்யாதரம் பண்ணிக் கொண்டு வர்த்தித்து அருளுகிற திரு நாவாயை –-இங்கு –-பிரக்ருதியோடே –

———————————————————————

திரு நாவாயில் எம்பெருமானைக் குறித்து கண்கள் உன்னைக் கண்டு களிப்பது என்றோ என்கிறார் –

கண்டே  களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–9-8-6-

தொண்டே  உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி— அந்நிய பரதை கெட்டு உனக்கே அடிமை ஆனேன் -/ புக்காரை மற்று ஓன்று அறியாத படி பண்ண வல்ல நிரதிசய போக்யமான திருச் சோலைகள் சூழப் பட்ட திரு நாவாயை ஆதரித்து அங்கே நிரந்தர வாஸம் பண்ணுகிற ஆஸ்ரித ஸூ லபனானவனே-

————————————————————————

திரு நாவாயிலே ஆஸ்ரித அர்த்தமாக  நித்ய வாஸம் பண்ணுகிற நாரண நம்பீ -ஐயோ -இவன் அநந்ய கதி என்று என் பக்கலிலே கிருபையை பண்ணி யருள வேணும் என்கிறார் –

கோவாகிய  மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-

ஆஸ்ரிதருடைய அபேக்ஷிதங்களை முடித்துக் கொடுக்கும் ஸ்வபாவனாய் -ஆஸ்ரித பிரதிகூல நிரசன ஸ்வபாவனுமாய் வைத்து -அதுக்கடியான ஸ்ரீ யபதியுமாய் ஆஸ்ரிதர்க்கு அணித்தாகைக்காக திரு நாவாயிலே எழுந்து அருளி இருப்பதும் செய்து -ஆஸ்ரித வத்சலனுமாய் இப்படி ஆஸ்ரிதர்க்கு உறுப்பாகப் பெற்றோம் -என்றதால் பூர்ணன் ஆனவனே –

————————————————————–

அபிலஷித்த படி பெறாமையாலே திரு உள்ளம் கலங்கின ஆழ்வார் -அருளிலும் அருள் -தவிரிலும் தவிர் -இப்போது கலங்காதே உன்னை அனுசந்திக்க வல்லேனாம்   படி பண்ணி அருள வேணும் –என்று அர்த்திக்கிறார்-

அருளாது  ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8-

கிருபை பண்ணாது ஒழி யிலும் ஒழி -கிருபை பண்ணி நிரதிசய போக்யமான திருவடிக் கீழே என்னை வைத்துக் கொள்ளிலும் கொள்-/ தென் திரு நாவாய் என் தேவே-அஞ்ஞான கந்தம் இல்லாத படி உன்னை என் நெஞ்சிலே இருத்தும் தெளிவைத் தந்து அருள வேணும் –

——————————————————————

நதே மனுஷ்யா தேவா ஸ் தே -என்று சக்கரவர்த்தி சொன்னால் போலே -திரு நாவாய் காணப் பெறாதே நான் முடியா நின்றேன் -இனி வேறு -திரு நாவாய் அனுபவிக்கும் பாக்கியவான்கள் யாரோ -என்கிறார் –

தேவர்  முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ –9-8-9-

ப்ரஹ்மாதிகளுக்கும்  சனகாதிகளுக்கும் துர் ஜ்ஜே யனாய் -ப்ரஹ்மாதிகளுக்கும் காரண பூதனான  சர்வேஸ்வரனாய் அத்யந்த  விஸஜாதீயனானவன்-அத்யாதரத்தைப் பண்ணிக் கொண்டு நிரந்தரமாக வர்த்தித்து அருளுகிற திரு நாவாயை –

——————————————————————–

உன்னை ஆசைப் பட்டு பெறாது ஒழிந்தாலும் -விட மாட்டாதே சிந்தை கலங்கி -திருமாலே -என்று அழைப்பன் -என்கிறார் –

அந்தோ  அணுகப் பெறு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10-

ஐயோ அணுகப் பெறும் நாள் என்றோ -என்று சர்வ காலமும் ஹிருதயம் கலங்கி ஸ்ரீ யபதியே என்று கூப்பிடா நிற்பன் -நிரதிசய போக்யமான திருச் சோலைகளாலே சூழப் பட்ட திரு நாவாயிலே ஆஸ்ரிதர்க்கு ஸூ லபனாய் வந்து -வர்த்தித்து அருளுவதும் செய்து -அதி சிலாக்யமான அழகை யுடையவனே –

———————————————————————

நிகமத்தில் இத்திருவாய் மொழி கற்றார் பெறும் பேற்றை அருளிச் செய்கிறார் –

வண்ணம்  மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11-

நாநா வர்ணங்களான ரத்னங்களாலே செய்யப்பட மாடங்களை யுடைத்தாய் -நிரதிசய போக்யமான திரு நாவாயிலே நின்று அருளினவனை -திண்ணிதான மதிலை யுடைத்தான திருநகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த பண் ஆர்ந்த தமிழான ஆயிரம் திருவாய் மொழியிலும் இத்திருவாய் மொழி வல்லார்கள் ஐஹிக ஆமுஷ்மிக போகங்களையும் புஜிக்கப் பெறுவர் –

————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –9–7–

October 23, 2016

அப்ரீதி கர்ப்ப குண ஸ்மரணத்தாலே மிகவும் ப்ரீதர் ஆனவர் -பாக்ய ஹானியாலே அப்ரீதி வம்சமே தலையெடுத்து அவனைப் பெறில்
ஜீவித்தல் -பெறா விடில் முடிதலாம் படியான தம்முடைய தசையை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –
இயற்கையிலே புணர்ந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி அவன் அழகிலே ஈடுபட்டு அவசன்னையாய் தன் ஆற்றாமை கை கொடுக்க
உத்யானத்திலே சென்று அங்கு இருக்கிற பக்ஷிகளைக் குறித்து -பின்னானார் வணங்கும் சோதி -திரு மூழிக் களம்-என்கிறபடியே தூது போவார்க்கு
அருமைப் பட்டு அறிவிக்க வேண்டாத படி திரு மூழிக் களத்திலே வந்து நின்று அருளினான் -தனக்கு நல்லாரை விட மாட்டாதவன் ஆகையால்
நம் தசையை அறியாது இருந்தான் அத்தனை -க்ருபாம்புதி யாகையாலே நம் தசையை அறிவிக்க வரும்
-தன் அழகைக் கண்டு பிரிந்தார் தரிப்பாரோ என்று அறிவிக்க வேணும் என்று
அவற்றை சவிநயமாக இரக்கிறாள் ஒரு பிராட்டி பேச்சாலே தம் தசையை அருளிச் செய்கிறார் –
அஞ்சிறைய மட நாரையில்-இத்தலையில் அபராதத்தாலே வாராது ஒழிந்தான் அத்தனை -என்று அவனுடைய அபராத சஹத்வம் பற்றாசாக தூது விட்டார் –
வைகல் பூங்கழி வாயில்-நல்லது கண்டால் கால் தாழுமவன் ஆகையால் மறந்து இருந்தான் அத்தனை
-நம் ஆர்த்தியை அறிவித்தால் தன்னிமையிலே நெஞ்சு வைப்பான் ஒருவன் அல்லன் என்று அது பற்றாசாகத் தூது விட்டார்
பொன்னுலகாளியில்-ஐஸ்வர்ய பரப்பாலே மறந்து இருந்தான் அத்தனை -ஆஸ்ரிதரோடு ஏகரசன் என்று அறிவிக்கவே வரும்
-என்று ஐக ரஸ்யம் பற்றாசாக தூது விட்டார்
இதில் தனக்கு நல்லாரை விட மாட்டாமையாலே வாராது இருந்தானாம் அத்தனை –
தன் வடிவு அழகு அது -குணங்கள் அவை -ஆனபின்பு பிரிந்தார்க்கு ஜீவித்து இருக்கப் போமோ என்று
அவ் வடிவு அழகும் குணங்களும் பற்றாசாகத் தூது விடுகிறது –

—————————————————————–

சில நாரைகளைக் குறித்து எம்பெருமான் தன்னுடைய அழகாலும் குணங்களாலும் தன்னைத் தோற்பித்த படியைச் சொல்லி -அவனுக்கு என் தசையை அறிவித்து வந்து உங்களுடைய திருவடிகளை என் தலை மேலே வைக்க வேணும் என்கிறாள் –

எம் கானல்  அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-

எம் கானல் -பகவத் விஷயத்தில் உபகாரகரோடு ஐக ரஸ்யம் ப்ராப்தமாய் இருக்க –எம் -என்கிறது -உபகார ஸ்ம்ருதியில் ஒன்றைத் தன்னதாக்கி கொடுத்து அல்லது தரிக்க மாட்டாத படியால் சொல்லுகிறது -பிறருக்கு உபகரிக்கைக்கு உறுப்பாக வரும் மமகாரம் உத்தேச்யமாய் இருக்கும் இ றே -பகவத் விஷயத்துக்கு ஆக்கின வன்றே தன்னது அடங்க கடகர்க்கு சேஷமாய் இருக்க உபகார ஸ்ம்ருதி ஆறி இருக்க ஒட்டாமையாலே வருமது இ றே -ஆத்ம சமர்ப்பணத்திற்கும் அடி இது வி றே –கானல் என்று கடற்கரை சோலை யாதல் -நெய்தல் நிலமாதல் –
அகம் கழிவாய் -உள்ளான கழி இடத்திலே -அந்தர் க்ருஹ ப்ரவேசத்துக்கு அனுமதி வேண்டாத படி இ றே இவை அந்தரங்கமாய் இருக்கிற படி -கதிதா நி ரஹஸ்யா நி -என்கிறபடியே வர்த்தியா நின்றன –
இரை தேர்ந்து -இரை தேடி –க்ருஹே புக்தம சங்கிதம்-என்கிறபடியே -பண்டு தனக்கு உபகரித்த படியைச் சொல்லுகிறாள் —இப்போது உபகரிக்கைக்காக
இங்கு -இத்தலையை அழித்து தூது விட வேண்டும் படி அகல இருந்தவனைப் போல் அன்றியே ஸந்நிஹிதராகப் பெற்றேன் என்கிறாள் –
இனிது அமரும்-இனிதாக நம்மோடே ஸஹவாசம் பண்ணப் பெறுகை -விலக்ஷண போகங்களை புஜித்து வர்த்திக்கும் என்றுமாம் –
செங்கால மட நாராய் –சிவந்த காலை யுடைய -என் மடியிலே இருக்கும் கால் போலே இருந்ததீ -நான் தலையிலே வைத்துக் கொள்ளப் புகுகிற காலும் –மட நாராய் -பவ்யமான நாராய் –
திரு மூழிக் களத்து உறையும்-தூது போவார்க்கு அடுத்து அணித்தாக நிற்கையாலே பரம பதத்தில் காட்டில் ஏற்றம் இருக்கிற படி –
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு –ஒப்பனையையும் மநோ ஹாரி சேஷ்டிதங்களையும் எனக்காக்கி வைத்தவர் —எம் என்கிறது ஒப்பனையிலும் சேஷ்டிதத்திலும் இரண்டிலும் ஆகிறது –எம் என்று ஆத்ம நி பஹு வசனம் –
என் தூதாய்-ஒப்பனையிலும் செயலிலும் தோற்று வெறும் தாரையாய் இருக்கிற என்னுடைய தூத க்ருத்யத்திலே அதிகரித்து
நும் கால்கள் என் தலை மேல் -உபகாரகரான உங்களுடைய காலை உபக்ருதையாய் உஜ்ஜீவிக்க இருக்கிற என் தலையிலே -இவளுடைய தலையிலே வைக்க கண்டதாய்த்து இவற்றின் கால் -இவற்றினுடைய காலை வைக்க கண்டதாய்த்து இவள் தலை -இரண்டும் பரார்த்தமாகக் கண்டதாய்த்து
கெழுமீரோ -அவனுக்கு சேஷமாக்கின போதே கடகர்க்கு சேஷமாகையாலே என் விதி கொண்டு வைக்க வேண்டா வி றே -என் தலை மேலே சேரி கோளே
நுமரோடே—ச புத்ரஸ் பவ்த்ரஸ் ச கண-என்கிறபடியே சபரிகரமாக –ஆச்சார்ய வாதாச்சார்ய புத்தரே வ்ருத்தி -என்னக் கடவது இ றே –

——————————————————————–

சில குருகுகளைக் குறித்து திரு மூழிக் களத்து எம்பெருமானுக்கு தாமும் தமக்கு நல்லாருமாய் இருந்த இருப்பை நான் இழந்தே போம் அத்தனையோ -என்று அறிவியுங்கோள் -என்கிறாள் –

நுமரோடும்  பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-

நுமரோடும் பிரியாதே--தமரோடு அங்கு உறைவார்-என்றாய்த்து ப்ராப்ய வஸ்துவைச் சொல்ல நினைக்கிறது -அதுக்கு ஈடாக இவையும் குறை யற்று இருக்கிறபடி -குறைவாளர் கார்யம் குறைவற்றார்க்கு தீர்க்க வேண்டாவோ –
நீரும் நும் சேவலுமாய்-சேவலின் நினைவு அறிந்து பரிமாறும் நீரும் உம்முடைய கருத்து அறிந்து பரிமாறும் சேவலுமாய் -சம்ச்லேஷ ரசம் அறியும் நீங்கள் பிரிந்தாருடைய செல்லாமையும் அறிய வேண்டாவோ -உண்டார்க்கு உண்ணாதார் பசி தீர்க்க வேண்டாவோ –
அமர் காதல் குருகினங்காள் -பரஸ்பரம் பொருந்தின காதல் -ஆசையில் விஸ்லேஷத்தை பலிப்பியாத ஆசை யுண்டாகாதே-ஆசையிலும் குறைவற்று -விஸ்லேஷமும் இன்றியிலே கருத்து அறிந்து பரிமாறவும் கடவதாய் இருக்கப் பெறுவதே நீங்கள் -குருகினங்காள்-என்று தொடங்கின சம்போதித்து வைத்து தொடங்கின வார்த்தை முடியச் சொல்ல மாட்டாத பல ஹானியாலே அர்த்த உக்தியாலே அத்தை முடித்து தான் இருக்கிற இருப்பில் விஷணை யாகிறாள் –
அணி மூழிக் களத்து உறையும்–எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு–காதாசித்க சம்ச்லேஷமே ஹேதுவாக பந்துக்கள் கை விட்டார்கள் –காதாசித்கமாக சம்ச்லேஷித்த அளவிலே தாமும் உபேக்ஷித்தார் –பந்துக்கள் கை விட்டதே ஹேதுவாக கைக்கொள்ள வேணும் -பிற்பட்டார்க்கும் காட்டிக் கொடுக்க வந்து நிற்கிற நிலையாகையாலும் கைக் கொள்ள வேணும் -இரண்டும் என்னளவில் உபேஷா ஹேது வாவதே –இங்கு என்-இவ்விருப்புக்கு என்ன பிரயோஜனம் உண்டு -சரீர சமனந்தரத்திலே ஒரு தேச விசேஷத்தில் பெற வேண்டித்தான் ஆறி இருக்கிறேனோ -என்று தன்னில் விஷணை யாய் -பின்னையும் தன் செல்லாமையாலே அவற்றைக் குறித்து வார்த்தை சொல்லுகிறாள்
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –தம் பரிஜனங்களோடே அங்கே நித்ய வாஸம் பண்ணுகிற தமக்கு நாங்கள் ஆகோமோ என்று கேளுங்கோள்–தாமும் தமக்கு நல்லாருமாய் இருக்கிற இருப்புக்கு -அடியார்கள் –குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ-என்று இருப்பார் ஆகாரோ -என்று கேளுங்கோள் —

——————————————————————

சில கொக்கினங்களையும் குருகினங்களையும் நோக்கி தன் அழகைக் காண் கைக்கு நாங்கள் யோக்யதை யுடையோம் அல்லோமோ -என்று கேளீர் -என்கிறாள் –

தக்கிலமே  கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-

தக்கிலமே கேளீர்கள்-என்கிறாள் -தக்கிலமே கேளீர்கள்-ஓர் அறுதி பெறக் கேட்டுப் போருங்கோள் -அவர் வேணும் என்னில் -நாமும் நம் பிராணனை நோக்கவும் -அவர் வேண்டா -என்றாகில் -நாமும் ஒன்றிலே துணியும்படியும் நிச்சிதமாகக் கேட்டுப் போருங்கோள்
தடம் புனல் வாய் இரை தேரும்-பொய்கையின் நீரிலே இரை தேருகிற–உபவாச க்ருசையான என்னைப் போல் அன்றியே இரை மிடற்றுக்கு கீழே இழியும் படி இ றே உங்கள் புஷ்கல்யம்
கொக்கினங்காள் குருகினங்காள்--யாம் கபீ நாம் சஹஸ்ராணி -என்கிறபடியே கண்ணால் கண்ட வற்றை அடைய ஏவுகிறாள் -சிலவற்றைப் போக விட்டோம் -அத்தாலே நம் கார்யம் தலை க் கட்டும் -என்று ஆறி இருக்கும் விஷயம் அன்றே –
குளிர் மூழிக் களத்து உறையும்–விரஹ தாப தப்த்தையாய் இருக்கிற எனக்கு அந்த ஸ்ரமஹரமான தேசத்தில் பிராப்தி அரிதாவதே –
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்-–இக் குளிர்த்திக்கு அடியான அகவாயில் வாசத்தடம் இருக்கிற படி -சிவந்து அலர்ந்த தாமரை போலே இருக்கிற கண் முதலான திவ்ய அவயவங்களை யுடையவன் –முதல் உறவு பண்ணும் கண் -அந்நோக்குக்குத் தோற்றாரை அணைக்கும் கை -ஸ்பர்சத்துக்கு தோற்றார் விழும் திருவடிகள் -திருவடிகளில் விழுந்தாரை சாந்த்வனம் பண்ணி தரிப்பிக்கும் முறுவல் –
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே––அவர்களுக்கு உஜ்ஜீவனமான வடிவு -அவயவங்களை பரபாகமான செந்தாமரை இலைபோலே யாய்த்து திரு மேனி -வெண்டாமரை என்னில் விஜாதீயம் என்று –அக்கமலம் -என்கிறது —அடிகளுக்கு –வடிவு அழகையும் அவயவ சோபையையும் காட்டி எழுதிக் கொண்டவர்க்கு இவ் வடிவுக்குத் தோற்று வைவர்ணயத்தை தரித்து இருப்பார் யோக்யர் அல்லரோ என்று கேட்ட ப் பாருங்கோள் –

——————————————————————

சில மேகங்களை நோக்கி -என் வார்த்தையை அவனுக்குச் சொன்னால் -உங்களைத் தண்டிக்குமோ -என்கிறாள் –

திருமேனி  அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-

திருமேனி அடிகளுக்குத் -ஸ்வரூப குண விபூதிகளை ஒழிய -வடிவு அழகாலே -சர்வ ஸ்வாமி என்று தோற்றும் படி இருக்கிறவர்க்கு –வடிவு அழகாலே ஜகத்தை அடைய தோற்பித்து அடிமை கொண்டு இருக்கிறவர்க்கு என்றுமாம் -அவசர பிரதிபேதிரே –என்கிறபடியே ப்ரதி கூலர்க்கும் ஆகர்ஷகமாய் இ றே வடிவு இருப்பது –
தீ வினையேன் விடு தூதாய்-சர்வ சாதாரணமான வடிவை இழந்து உங்கள் காலிலே விழ வேண்டும்படியான என்னுடைய தூத க்ருத்யத்திலே அதிகரித்து –
திரு மூழிக் களம் என்னும்-ஆர்த்த ரக்ஷணத்துக்கு வந்து நிற்கிற இடம் என்று பிரசித்தமான தேசம் –
செழு நகர் வாய் அணி முகில்காள்-பரம பதத்தில் காட்டில் உண்டான ஏற்றம் -செழு நகர் வாய் வர்த்திக்கிற அழகிய முகில்காள் -என்னுதல் -செழு நீர் வாய் யடிகளுக்கு செப்புங்கோள் என்னுதல் -செழு நீர் வாய்ச் சென்று செப்புங்கோள் என்னுதல்
திரு மேனி அவட்கு அருளீர் -பரார்த்தமான திரு உடம்பை ஆசைப்பட்டவர்களுக்கு கொடுத்தால் ஆகாதோ -இவ் உடம்பு உமக்கு கண்டது என்று இருக்கிறாரோ -என்று சொல்லுங்கோள் -பக்தாநாம் என்கிற படியே இவ்விடம்பு ஆசைப்பட்டாரதன்றோ என்று சொல்லுங்கோள் –காமினிக்கு ஸ்வரூபாதிகளில் காட்டில் வடிவிலே இ றே அபேக்ஷை –அருளீர் -பிரணயித்தவம் குடி போனால் கிருபையும் மறுத்தது –
என்றக்கால் -வாசா தர்ம நவாப்நுஹி -என்று உங்களுக்கு ஒரு வார்த்தை யன்றோ நேரே வேண்டுவது –
உம்மை-இப்படி உபகாரராய் இருக்கிற உங்களை –
தன்-திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–-உங்கள் வடிவில் யுண்டான புகரையும் போக்கி நிர்மலமான ஆகாசத்தில் நின்றும் உங்களையும் ஒட்டுமோ -உங்களுக்கு இல்லாதவற்றை உண்டாக்குமது ஒழிய பண்டு உள்ளவற்றையும் தவிர்த்து உங்களைத் தண்டிக்குமோ -அல்ப சாத்ருஸ்யத்தை தவிர்த்து -பரமம் சாம்யம் உபைதி -என்கிறபடியே ஸர்வதா சாத்ருஸ்யத்தையும் தந்து ஆகாச மாத்ர ஸ்திதி அளவன்றிக்கே -பரம ஆகாசத்தையும் தாரானோ–உங்களுடைய யுக்தி மாத்திரத்திலே எனக்கும் உங்களுக்கும் பிரயோஜனம் கனத்து இருக்க ஆறி இருக்கக் கடவி கோளோ-

நீயே பய சங்கையை பிறப்பித்தாய் -திரு மேனி ஒளி அகற்றி -என்று -ஆன பின்பு –
நாங்கள் உன் வார்த்தையை விண்ணப்பம் செய்தால் -அவன் அங்கீ கரிக்குமோ என்று கேட்பி கோள் ஆகில் -பரமபதத்தில் பண்ணும் அபி நிவேசத்தை என் பக்கலிலே பண்ணினவன் அங்கீ கரிக்கும் –ஆனபின்பு அவனுக்கு எனக்காக ஒரு வார்த்தை விண்ணப்பம் செய்ய வேணும் -என்கிறாள்-

தெளி  விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-

தெளி விசும்பு கடித்து ஓடித் –நிர்மலமாய் -நிராலம்பமான ஆகாசத்தில் பூமியிலே சஞ்சரிப்பாரைப் போலே கடு நடையிலே சஞ்சரித்து -இவற்றின் த்வரை எல்லாம் தன் காரியத்துக்கு உடல் என்று இருக்கிறாள் –
தீ வளைத்து மின் இலகும்-கொள்ளி வட்டம் போலே மின் விளங்கா நிற்கிற -தன் வடிவில் இருட்சிக்கு கை விளக்குக் கொண்டு திரிவாரைப் போலே யாய்த்து மின்னிக் கொண்டு சஞ்சரிக்கிற படி –
ஒளி முகில்காள்-பர பாகத்தால் அழகிதான வடிவை யுடைய முகில் காள்
திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்—திரு மூழிக் களத்திலே நித்ய வாஸம் பண்ணுகையாலே புகர் மிக்கு இருந்தவர்க்கு-அவன் வடிவுக்கு போலியாய் இ றே உங்கள் வடிவு இருப்பது –
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும் -பரமபதம் தேசமாய் இருக்க அத்தை காற்கடைக் கொண்டு என் நெஞ்சிலே நித்ய வாஸம் பண்ணுகிறவன் -என்று சிற்றாட் கொண்டான் பணிக்கும் –பரம பதத்தில் பண்ணும் வ்யாமோஹத்தை என் நெஞ்சிலே பண்ணி வர்த்தியா நின்றான் -என்று எம்பெருமானார் / தீ வினையேன் -நெஞ்சிலே பிரகாசியா நிற்க காண ஒண்ணாத படி பாபத்தைப் பண்ணினேன்
துளிவார்கள் குழலார்க்கு–துளி ஒழுகும் மதுவை யுடைத்தான திருக் குழலை யுடையவர்க்கு -வல்லார் பூ முடித்தால் பூ தோற்றக் கடவது அன்றிக்கே மது ஒழுகக் காணும் அத்தனை இ றே
என் தூதுரைத்தல் செப்புமினே–-தலையில் பூ சருகா இருக்கிற என்னுடைய தூத வாக்கியத்தை அவர்க்குச் சொல்லுங்கோள் -அபி நிவிஷ்டராய் தாமே வரக் கடவராகச் சொல்லி வைத்து -தூது விட இருக்கிற படியை அறிவியுங்கோள் –

சில வண்டுகளைக் குறித்து உங்கள் வார்த்தை விலை செல்லும் படி பிராட்டி சந்நிதியில் வைத்துச் சொல்லுங்கோள் -என்று சொல்கிறாள் –

தூதுரைத்தல்  செப்புமின்கள்-தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும்-பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல்-சுடர் வளையும் கலையுமே–9-7-6-

தூதுரைத்தல் செப்புமின்கள்-என்னுடைய தூத வாக்கியத்தை அறிவிக்க அமையும் -நீங்கள் கொண்டு வர வேண்டா –
தூ மொழி வாய் வண்டினங்காள்-இனிய பேச்சை யுடைய வண்டு காள் -அவன் அநாதரிக்கிலும் உங்கள் பேச்சின் இனிமையாலே வர வேண்டும் படி இ றே உங்கள் பேச்சு இருப்பது –மஹா ராஜர்க்கும் பெருமாளுக்கும் ஏகம் துக்கம் ஸூ கஞ்ச நவ் -என்று விஜாதீயமான இரண்டு தலையும் பொருந்தும் படி திருவடி வார்த்தை சொன்னால் போலே -அத ஸம்ஸ்கார சம்பன்ன —
போதிரைத்து மது நுகரும்-பொழில்-பூக்களில் இரைத்துக் கொண்டு மதுபானம் பண்ணும் பொழில் என்னுதல் -போதிலே -காலத்திலே என்னுதல் -எதிரிகளோடு அம்பு ஏற்கவும் வேண்டா -மீட்சியிலே ஆகவும் வேண்டா -ததிமுகாதிகள் காத்து இருப்பாரும் இல்லை -மதுபானம் பண்ணுவார்கள் உடன் கூட மது பானம் பண்ண அமையும் –
மூழிக் களத்து உறையும்-மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு-நீங்கள் சொல்லும் அத்தனையே வேண்டுவது -உங்கள் வார்த்தை கொண்டாடி க் கேட்ப்பிக்கும் புருஷகாரமும் உண்டு என்கை –
என் வாய் மாற்றம்-தூதுரைத்தல் செப்புதிரேல்-சுடர் வளையும் கலையுமே–என் பாசுரமான தூத வாக்யத்தைச் சொல்லப் பார்த்தி கோளாகில் -என்னுடைய அழகிய வளையும் கலையும் சிதிலமான படியைச் சொல்லுங்கோள் -செப்புவுதி கோளாகில் அது தானே எனக்குச் சுடர் வளையும் களையுமே -அறிவிக்குமதுவே குறை -வரவு தப்பாது -என்கை –

———————————————————-

பின்னையும் சில குருகினங்களைக் குறித்து -சிலரோடு கலந்து -அவர்களைத் துறந்து-அதுவே புகழாக இருக்கும் இருப்புப்  போருமோ -என்று அவர்க்கு அறிவியுங்கோள்  -என்கிறாள் –

சுடர்  வளையும் கலையும் கொண்டு-அரு வினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக்-களத்து உறையும் பங்கயக் கண்
சுடர் பவள வாயனைக் கண்டு-ஒரு நாள் ஒரு தூய் மாற்றம்
படர் பொழில் வாய்க்  குருகினங்காள்-எனக்கு ஓன்று பணியீரே–9-7-7-

சுடர் வளையும் கலையும் கொண்டு-இத்தலையில் தனக்கு பிரயோஜனமாக அம்சத்தைக் கொண்டு என்னைப் பொகட்டுப் போனான்
அரு வினையேன்-அநாதரித்து பொகட்டுப் போக -அவனை இழந்து உங்கள் காலிலே விழும்படியான பாபத்தைப் பண்ணினேன் –
தோள் துறந்த-கலந்த போதை தன் வ்யாமோஹம் எல்லாம் கொண்டு தோளுக்கு அவ்வருகு போக மாட்டாதானாய் இருந்த படி
படர் புகழான்-தன்னை அல்லது அறியாதாரை பொகட வல்லவன் என்று அதுவே புகழாக புகழ்வித்துக் கொண்டு இருக்கிறவன்
திரு மூழிக்-களத்து உறையும்-தூரஸ்தன் என்று ஆறி இருக்க ஒண்ணாத படி திரு மூழிக் களத்திலே நித்ய வாஸம் பண்ணுகிறவனை
பங்கயக் கண்-சுடர் பவள வாயனைக் கண்டு-பொகட்டுப் போனாலும் விட ஒண்ணாத படியான அவயவ சோபையை யுடையவனை –என்னோட்டை விஸ்லேஷத்தால் புதுக் கணித்த அவயவ சோபையை யுடையவனை என்றுமாம் –
கண்டு -அந்நோக்கையும் முறுவலையும் காண் கையாலே உங்களுக்கு என்னில் காட்டில் பேறு முற்பட இருக்கிறது இ றே -அவ் வடிவு அழகைக் காட்டி உங்களையும் போன காரியத்தையும் விஸ் மரிப்பிக்க வல்லவன்
-ஒரு நாள் -ஒரு நாளே அமையும் பிற்றை நாள் சொல்ல வேண்டியது இல்லை –
ஒரு தூய் மாற்றம்-அத்விதீயமான நல்ல வார்த்தை –முடிகிறாள் ஒரு அபலை உஜ்ஜீவிக்க சொல்லுகிற வார்த்தை இ றே
படர் பொழில் வாய்க் குருகினங்காள்-பரந்த பொழில் இடத்திலே வர்த்திக்கிற குருகினங்காள்-நான் உபவாச க்ருசையாய் இருக்க நீங்கள் ஜீவித்து களித்து இருக்கப் போமோ -நான் முடிந்தால் உங்களுக்கு இந்த சோலை பரப்பு எல்லாம் நோக்குவார் யார்
எனக்கு -என் வடிவு இருக்கிற படி கண்டி கோள் இ றே
ஓன்று பணியீரே–எனக்கு உஜ்ஜீவனமாய் இருபத்தொரு வார்த்தை சொல்லுங்கோள்– இரண்டாம் வார்த்தை வேண்டா –
பணியீரே-தான் ஜனக குலத்தில் பிறக்கவுமாம் -எதிர்த்தலை திர்யக்குகள் ஆகவுமாம் -பகவத் விஷயத்தில் உபகாரகரை சொல்லக் கடவது இங்கனமே இ றே –

—————————————————————

சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து அங்குத்தை அழகுக்கு என் புகுருகிறதோஎன்று பயப்பட வேண்டாத படி ஸூ ரஷிதமாய் இருபத்தொரு தேசத்திலே எழுந்து அருளி இருந்தான் -இனி நம்முடைய ஆர்த்தி தீர்க்கும் இத்தனையே அபேக்ஷிதம் -ஆனபின்பு என்னுடைய ஆர்த்தியை அறிவியுங்கோள் என்கிறாள் –

எனக்கு  ஓன்று பணியீர்காள்-இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும்-வண்டினங்காள் தும்பிகாள்
கனக்கொள் திண் மதிள் புடை சூழ்-திரு மூழிக் களத்து உறையும்
புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே-9-7-8-

எனக்கு ஓன்று பணியீர்காள்-நீங்கள் ஒரு வார்த்தை சொல்லா விடில் முடியும் அளவாய் அன்றோ என் தசை இருக்கிறது –
இரும் பொழில் வாய் இரை தேர்ந்து-பரப்பான சோலை எங்கும் புக்கு இரை தேடி
மனக்கு இன்பம் பட மேவும்-மனசிலே இனிமை பிறக்கும் படி அன்றோ நீங்கள் கலக்கிற படி -பிரிவால் வந்த கிலேசம் இ றே எனக்குப் பலித்தது
கனக்கொள் திண் மதிள் புடை சூழ்-திரு மூழிக் களத்து உறையும்-கனத்து திண்ணியதான மதிள் சுற்றும் சூழ்ந்து இருந்துள்ள திரு மூழிக் களத்திலே நித்ய வாஸம் பண்ணுகிறவர்க்கு –அத்தலையில் அழகை அநுஸந்தித்தால் ரக்ஷை தேட்டமாய் இ றே இருப்பது –
புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே—தன்னிலத்திலே நிற்கும் காயாவின் நிறம் போலே யாய்த்து நிறம் இருப்பது -அவ் வடிவு அழகுக்கு மேலே ஒப்பனை அழகு யுடையவர்க்கு -போக்யமான திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு முடியை யுடையவர்க்கு -அவ்வடிவையும் ஒப்பனையையும் அனுபவித்துப் பிரிந்த எனக்கு  -வண்டினங்காள் தும்பிகாள்-ஓன்று பணியீர்கள்-

————————————————————————

நினைத்தது செய்து முடிக்க நல்லதொரு குருகைக் குறித்து நிரதிசய போக்யரான தாம் போகும் போது தம்மை வைத்து போக வேண்டாவோ என்று விண்ணப்பம் செய்யுங்கோள் என்கிறாள் –

பூந்துழாய்  முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக்  தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-

பூந்துழாய் முடியார்க்கு –திருமுடிக்கு ஒப்பனையான வளையம் இருக்கிற படி
பொன் ஆழிக் கையார்க்கு-திரு முடிக்கு வளையம் போலே யாய்த்து திருக்கைக்கு திரு வாழி –
ஏந்து நீர் இளங்குருகே-தறையிலே நடப்பாரைப் போலே -நீரிலே நடக்க வல்ல இளம் குருகே -உன் கமன சாமர்த்த்யத்தால் யுண்டான பலம் நான் பெற வேண்டாவோ – நடுவே நீர் இடைச் சுவரானாலும் தென்க வேண்டா வி றே உனக்கு –திரு மூழிக் களத்தார்க்கு–வளையம் போலேயும் ஆபரணம் போலேயும் அவ் வூரில் நிலையும் அழகுக்கு உடல் என்று இருக்கிறாள் -அவை விக்ரஹத்துக்கு ஆபரணம் ஆனால் போலே -சீலம் ஸ்வரூபத்துக்கு ஆபரணம் இ றே -அழகும் குணமும் ஒரு தலைத்த விஷயம் இ றே
ஏந்து பூண் முலை பயந்து -ஆபரணங்களைத் தரிக்கக் கடவ முலை வை வர்ணயத்தைத் தரித்து -ஆபரணங்கள் சம்ச்லேஷ அர்த்தமாக கழற்றுமவை -இது சம்ச்லேஷத்தால் அல்லது கழலாது இ றே -வ்யதிரேகத்தில் இப்படி இராத போது பிம்ஸ்த்வ வ்யாவ்ருத்தி கிடையாது இ றே -ஆசையும் ஸ்த்ரீத்வத்வமே இதுக்கு அடி -ஆபரணம் அழகுக்கு நிறம் கொடுக்குமா போலே இ றே ஸ்த்ரீத்வத்துக்கும் ஆசைக்கும் வை வர்ணயம்
என் இணை மலர்க் கண் -இணை மலர் போலே இருக்கிற என் கண் –தம் அழகையே இலக்காக யுடைத்தான கண் -அவன் சொல்லும் படி அறிந்து இருக்கிறார்கள் ஆகையால் சொல்லுகிறாள் இத்தனை போக்கி -அல்லாத போது தன் கண்ணில் அழகை தான் சொல்லுகிறாள் அல்லள் இ றே
நீர் ததும்ப-ஆனந்தாஸ்ருவுக்கு இட்டுப் பிறந்த கண் சோகா ஸ் ருவுக்கு இலக்காம் படி
தாம்-கீழ் சொன்ன அழகையும் சீலத்தையும் யுடைய தாம் –
தம்மைக் கொன்டு அகல்தல்-தமக்கு அகல வேண்டினால் -இவ்வடிவைப் பிரிந்தார் பிழையார்-என்று தம்மை வைத்து அன்றோ போவது -தம்மைக் கண்ணாடி புறத்திலே கண்டு அறிவரே-தம்மைப் பிரிந்த தசைக்கு உதவுகைக்கு அன்றோ தம்மைக் கண்டது -இமாம் அவஸ்தாம் ஆபன்னோ நேஹ பச்யாமி ராகவும் –
தகவன்று என்று உரையீரே–மென்மையும் பிரணயித்தவமும் போனால் தாயையும் குடி போக வேணுமோ –நிர்த்தயர் செய்யுமத்தை செய்தார் என்று சொல்லுங்கோள் -ஸ்த்ரீவதம் என்றால் அஞ்சாதார் செய்யுமத்தை செய்தார் என்று சொல்லுங்கோள்–என்கிறாள் –

——————————————————————

சில அன்னங்களைக் குறித்து எம்பெருமானுக்கு என் தசையை நான் முடிவதற்கு முன்பே அறிவியுங்கோள் -என்கிறாள் –

தகவன்று  என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10-

தகவன்று என்று உரையீர்கள் -அவனை அழிக்கை யாவது -நிர்த்தயன் என்கை -அவனுக்கு நிரூபகம் தயை யாகையாலே அவனுடைய மர்மயம் அறியுமவள் ஆகையால் அத்தலை இல்லை -என்கிறாள் –
தடம் புனல் வாய் இரை தேர்ந்து-மிக்க நீர் வெள்ளத்தை யுடைத்தான பொய்கை களிலே இரை தேடி -கலவிக்கு உறுப்பான வியாபாரமேயாய் இருந்த படி –
மிக வின்பம் பட மேவும் -இன்பம் கரை புரளும் படி அன்றோ நீங்கள் சம்ச்லேஷிக்கிறது-பிரிவு தேட்டமாம் படி உன்மஸ்தக ரசமாய் சொல்லுகிறபடி -விஸ்லேஷியா விடில் இரண்டு ஆஸ்ரயமும் அலியும் படி யாய்த்து இவை பரிமாறுகிற படி –
மெல் நடைய அன்னங்காள்-கலவியின் மிகுதி நடையிலே தொடை கொள்ளலாம் படி சர சஞ்சாரம் இருக்கிற படி –
மிக மேனி மெலிவு எய்தி -நான் இவ்விருப்பு இருக்க -உங்களுடைய கலவியும் சர சஞ்சாரமும் ப்ரீதி ஹேதுவாக பிராப்தி யுண்டோ –உங்கள் கலவியின் மிகுதியோபாதி போரும் -என் வடிவில் மெலிவின் மிகுதியும்
மேகலையும் ஈடு அழிந்து-பரியட்டமும் கட்டு அழிந்து -மேகலை தொங்கும் போது ஆஸ்ரயம் வேணுமே –
என்-அகமேனி ஒழியாமே–புறம்பு கழலுமவை கழன்றது -அகவாயில் ஸ்வரூபம் கழலுவதற்கு முன்பே -நான் முடிவதற்கு முன்னே -என்கை –
திரு மூழிக் களத்தார்க்கே–தம்மை ஒழியச் செல்லாதார் சத்தையை நோக்குகைக்கு எடுத்து வந்து இருக்கிறவர்க்கு / திரு மூழிக் களத்தார்க்கே-தகவு அன்று என்று உரையீரே -பொரி புறம் தடவி அத்தலையைப் பேணிப் போந்தது அமையும் -இனி அவர் படியைச் சொல்லிப் போருங்கோள் –

———————————————————————

நிகமத்தில் இத்திருவாய் மொழி தன்னை அப்யசித்தார்க்கு எம்பெருமானை பிரிகைக்கு ஈடான சம்சார துரிதத்தை அறுக்கும் என்கிறார் –

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11-

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் -ஒரு நாளும் விட நினையாதே அவ்வூரிலே நித்ய வாஸம் பண்ணுகிறவர்க்கு
ஒண் சுடரை-பின்னானார் வணங்கும் சோதி என்கிற படியே அவ்வூரில் நிலையால் வந்த புகர் இருக்கும் படி -அவ்வூரில் போக்யதையால் வந்த புகர் -பிற்பாடார்க்கு முகம் கொடுக்கும் நீர்மையால் வந்த புகர் –
ஒழிவில்லா -அவன் அவ்வூரில் ஒழியில் தரிக்க மாட்டாதாப் போலே -அவனை ஒழிய தரிக்க மாட்டாதவள் -என்கை –
அணி மழலைக் கிளி மொழியாள் -அழகியதாய் முக்தமான கிளியின் பேச்சுப் போலே இருக்கிற பேச்சை யுடையவள் –
அலற்றிய சொல்-தன் ஆற்றாமையால் அக்ரமமாகச் சொன்ன பாசுரத்தை
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன்-அப்பிராட்டி படியில் ஒன்றும் குறைவின்றிக்கே இருக்கிற ஆழ்வார்
வாய்ந்து உரைத்த-கிட்டி யுரைத்த -பாவ பந்தத்தாலே நோவு பட்டு யுரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் -கேட்டார்கள் நெஞ்சை ஒரு நாளும் விடாதே வர்த்திக்கிற இப்பத்து –இப்பாசுரத்தை கேட்டார்க்கு சம காலத்தில் போலே சர்வ காலமும் ரசம் பிறக்கும் படி யாய்த்து இருப்பது
நோய் அறுக்குமே–பகவத் விஸ்லேஷம் ஆகிற நோய் அறுக்கும் -கலந்து பிரிந்து திர்யக்குகளின் காலிலே விழுந்து க்லேஸிக்க வேண்டா -விஸ்லேஷ கந்தம் இல்லாத தேசத்திலே புகப் பெறுவார் –

——————————————————————–

கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –9-7–

October 23, 2016

இப்படி அப்ராப்தி கர்ப்ப ஸ்மரணத்தாலே மிகவும் ப்ரீதரான வர்க்கு இப்போது பகவத் சாஷாத்காரம் இல்லாமையால்
ஸ்மரணத்தால் வந்த ப்ரீதியும் மாறி அப்ராப்தியே தலை எடுத்து அத்யந்தம் அவசன்னரான ஆழ்வார் தம்முடைய தசையை
ஒரு பிராட்டியுடைய தூத வாக்யத்தாலே எம்பெருமானுக்கு அறிவிக்கிறார் -எம்பெருமானுடைய அழகிலே ஈடுபட்டு அவனோடே
சம்ச்லேஷித்தாள் ஒரு பிராட்டி அவன் வரவு காணாதே அவனால் அல்லது செல்லாதே ப்ரக்ருதி யாகையாலே தன் ஆற்றாமையாலே
க்ருஹத்தில் நின்றும் உத்யான பிரதேசத்தில் சென்று -அங்கே இருந்தன சில பக்ஷிகளைக் குறித்து நிரதிசய போக்யமான
வடிவை யுடையனாய் க்ருபாம்புதியானவன் தான் தனக்கு ஸ்நேஹிகளானாரோட்டை பரிமாற்றத்தாலே என் தசையை யுணராதே மறந்து இருந்தான் அத்தனை –
ஆதலால் தன் அழகைக் கண்டு பிரிந்தார் தரிப்பாரோ என்று அவனுக்கு அறிவிக்க வேணும் என்று அவற்றை சவிநயமாக இரக்கிறாள் –

—————————————————————–

சில நாரைகளைக் குறித்து எம்பெருமான் தன்னுடைய அழகாலும் குணங்களாலும் தன்னைத் தோற்பித்த படியைச் சொல்லி -அவனுக்கு என் தசையை அறிவித்து வந்து உங்களுடைய திருவடிகளை என் தலை மேலே வைக்க வேணும் என்கிறாள் –

எம் கானல்  அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-

எம் கானல்  அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய்-எங்கள் உத்யானத்தில் உள்ளிற்கழியிலே இரை தேடி இங்கே இனிதாக வர்த்திக்கிற சிவந்த காலையுடைய பவ்யமான நாராய் -/ எம் குடக் கூத்தர்க்கு-ஆத்மநி பஹு வசனம் –குடகு கூத்தாடின அழகைக் காட்டி என்னை அகப்படுத்திக் கொண்டவனுக்கு / நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே–சபரிகரமாக உங்கள் திருவடிகளை என் தலை மேலே வைக்க வேணும் –

—————————————————————–

சில குருகுகளைக் குறித்து திரு மூழிக் களத்து எம்பெருமானுக்கு தாமும் தமக்கு நல்லாருமாய் இருந்த இருப்பை நான் இழந்தே போம் அத்தனையோ -என்று அறிவியுங்கோள் -என்கிறாள் –

நுமரோடும்  பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-

உங்களுடைய பந்துக்களோடும் பிரியாதே நீங்களும் உங்களுடைய சேவல்களும் சம்ஸ்லேஷியா நிற்பதும் செய்து பரஸ்பரம் காதலை யுடைய குருகினங்காள் -குருகினங்களைக் குறித்து வார்த்தை சொல்லுகிறவள்-அர்த்த உக்தியிலே அத்தைத் தவிர்ந்து -பந்துக்களாலும் இகழப் பட்டு திரு மூழிக் களத்திலே உறைகிற தம்மாலும் உபேக்ஷிக்கப் பட்டு இருக்கும் இவ்விருப்பில் முடிகையே நன்று என்று தன்னிலே விஷணையாய் மீளவும் அவற்றைக் குறித்து -தாம் தம் பரிஜனங்களோடே அங்கே நித்ய ஸம்ஸ்லிஷ்டர் ஆனவர்க்கு நாங்கள் ஆகோமோ என்று கேளுங்கோள் என்று தொடங்கின வார்த்தையை முடியச் சொல்லுகிறாள் –

——————————————————————-

சில கொக்கினங்களையும் குருகினங்களையும் நோக்கி தன் அழகைக் காண் கைக்கு நாங்கள் யோக்யதை யுடையோம் அல்லோமோ -என்று கேளீர் -என்கிறாள் –

தக்கிலமே  கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-

 தடம் புனல் வாய் இரை தேரும்–பொய்கை களுடைய நீரிலே இரை தேடுகிற  / செக்கமலம் -செந்தாமரை / அடிகள் -ஸ்வாமி –

—————————————————————–

சில மேகங்களை நோக்கி -என் வார்த்தையை அவனுக்குச் சொன்னால் -உங்களைத் தண்டிக்குமோ -என்கிறாள் –

திருமேனி  அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-

தன் வடிவு அழகாலே ஜகத்தை அடைய அடிமை கொண்டு இருக்கிறவர்க்கு -அவ் வழகை   இழந்து நோவு படுகைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின என்னுடைய தூதாய் -திரு மூழிக் களம் என்று பிரசித்தமாய் இருக்கிற திரு நகரியிலே -அழகிய முகில்காள்–அவளுக்கு உம்முடைய  திருமேனியை அருளீர் என்று சொன்னக்கால் -உங்களைத் தன் திருமேனியில் ஒளியை மாற்றி -உங்கள் அழகு எல்லாம்  தெரியும் படி நீங்கள் நிற்கும் -நிர்மலமான ஆகாசத்தில் நின்றும் உங்களை போக்குமோ–திரு மூழிக் களம் என்னும் செழு நகரில் -திருமேனி யடிகளுக்கு -என்றுமாம் –

————————————————————————

நாங்கள் உன் வார்த்தையை விண்ணப்பம் செய்தால் -அவன் அங்கீ கரிக்குமோ என்று கேட்பி  கோள் ஆகில் -பரமபதத்தில் பண்ணும் அபி நிவேசத்தை என் பக்கலிலே பண்ணினவன் அங்கீ கரிக்கும் –ஆனபின்பு அவனுக்கு எனக்காக ஒரு வார்த்தை விண்ணப்பம் செய்ய வேணும் -என்கிறாள்-

தெளி  விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-

நிர்மலமான ஆகாசத்தில் கடிதாக ஓடிக் கொள்ளி வட்டம் போலே மின் விளங்குகிற அழகிய முகில்காள் –கண்ணால் காண ஒண்ணாத படி பாபத்தைப் பண்ணின என்னுடைய ஹிருதயத்திலே பரம பதத்தில் பண்ணும் வியாமோஹத்தை பண்ணி வர்த்திப்பதும் செய்து -துளி ஒழுகும் மதுவை யுடைத்தான திருக் குழலையும்  விலக்ஷணமான ஒளியையும் யுடையனாய்க் கொண்டு திரு மூழிக் களத்திலே வர்த்தித்து அருளினவனுக்கு என்னுடைய தூத வாக்கியத்தை சொல்லுங்கோள்–

எம்பெருமானுக்கு என் இடையாட்டம் விண்ணப்பம் செய்யுமிடத்து உங்கள் வார்த்தை விலை செல்லும் படி பிராட்டி சந்நிதியில் வைத்துச் சொல்லுங்கோள் -என்று சில வண்டுகளைக் குறித்துச் சொல்லுகிறாள் –

தூதுரைத்தல்  செப்புமின்கள்-தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும்-பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல்-சுடர் வளையும் கலையுமே–9-7-6-

தூ மொழி வாய் வண்டினங்காள்-வருவோம் அல்லோம் என்று இருக்கிலும் உங்கள் பேச்சாலே அவனுக்கும் வர வேண்டும்படியான இனிய பேச்சையுடைய வண்டினங்காள் / போதிரைத்து மது நுகரும்-பொழில்–பூக்களில் இரைத்துக் கொண்டு மது பானம் பண்ணும் பொழில் / என் வாய் மாற்றம்-தூதுரைத்தல் செப்புதிரேல்-சுடர் வளையும் கலையுமே–என் பாசுரமான தூத வாக்கியத்தை சொல்லுவுதி கோளாகில்-என்னுடைய அழகிய வளையும் கலையும் சிதிலமான படியைச் சொல்லுங்கோள் –

———————————————————

பின்னையும் சில குருகினங்களைக் குறித்து -சிலரோடு கலந்து -அவர்களைத் துறந்து-அதுவே புகழாக இருக்கும் இருப்புப்  போருமோ -என்று எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்யுங்கோள் -என்கிறாள் –

சுடர்  வளையும் கலையும் கொண்டு-அரு வினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக்-களத்து உறையும் பங்கயக் கண்
சுடர் பவள வாயனைக் கண்டு-ஒரு நாள் ஒரு தூய் மாற்றம்
படர் பொழில் வாய்க்  குருகினங்காள்-எனக்கு ஓன்று பணியீரே–9-7-7-

என்னுடைய வளையை யும்  கலையையும் -அபஹரித்து தான் இழக்கைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின என்னை விஸ்லே ஷித்து-அதுவே பெரும் புகழாக யுடையானாகக் கொண்டு -திரு மூழிக் களத்திலே நிறைந்த வாஸம் நிறப்பதுவும் செய்து -என்னோட்டை விஸ்லேஷத்தால் புதுக் கணித்த திருக் கண்களையும் திருப் பவளத்தையும் உடையவனாய் இருக்கிறவனைக் கண்டு -பெருத்து இருந்துள்ள பொழிலிலே இருக்கிற குருகினங்காள்எனக்காக ஒரு நாள் ஒரு வார்த்தை அவனுக்கு  பணிக்க வேணும் –

————————————————————-

சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து அங்குத்தை அழகுக்கு என் புகுருகிறதோஎன்று பயப்பட வேண்டாத படி ஸூ ரஷிதமாய் இருபத்தொரு தேசத்திலே எழுந்து அருளி இருந்தான் -இனி நம்முடைய ஆர்த்தி தீர்க்கும் இத்தனையே அபேக்ஷிதம் -ஆனபின்பு என்னுடைய ஆர்த்தியை அறிவியுங்கோள் என்கிறாள் –

எனக்கு  ஓன்று பணியீர்காள்-இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும்-வண்டினங்காள் தும்பிகாள்
கனக்கொள் திண் மதிள் புடை சூழ்-திரு மூழிக் களத்து உறையும்
புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே-9-7-8-

பெரிய பொழிலிலே இரை தேடி மனசிலே இனிமை பிறக்கும் படி சம்ச்லேஷிக்கிற வண்டினங்காள் தும்பிகாள் -கனத்தை யுடைத்தாய் திண்ணிதான மதிள் சுற்றும் சூழ்ந்து இருந்துள்ள  திரு மூழிக் களத்த்திலே வர்த்தியா நிற்பதும் செய்து தன்னிலத்திலே நின்ற காயம் பூ போலே இருக்கிற திரு மேனியையும் போக்யமான திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு முடியையும் யுடையவனானவனுக்கு –

—————————————————————-

நினைத்தது செய்து முடிக்க நல்லதொரு குருகைக் குறித்து நிரதிசய போக்யரான தாம் போகும் போது தம்மை வைத்து போக வேண்டாவோ என்று விண்ணப்பம் செய்யுங்கோள் என்கிறாள் –

பூந்துழாய்  முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக்  தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-

தறையிலே நடக்குமா போலே நீரிலே நடக்க இளம் குருகே –தரிக்கப் பட்டு இருந்துள்ள ஆபரணங்களை யுடைய முலை விவர்ணமாய் -இணை மலர் போலே இருக்கிற கண் நீர் மல்கும் படி நிரதிசய போக்யரான தாம் போம் போது தம்மைக் கொண்டு போகை -தம்முடைய கிருபைக்கு போராது என்று ப்ரணயகதையை விட்டு தம்முடைய ஆர்த்தியாலே சொல்லுகிறாள் –

————————————————————————-

சில அன்னங்களைக் குறித்து எம்பெருமானுக்கு என் தசையை நான் முடிவதற்கு முன்பே அறிவியுங்கோள் -என்கிறாள் –

தகவன்று  என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10-

பெரிய நீர் வெள்ளங்களிலே இரையைத் தேடி   மிகவும் இனிமை பிறக்கும் படி சம்ஸலேஷியா நிற்பதும் செய்து அத்தாலே சரசமான சஞ்சாரத்தை யுடைய அன்னங்காள் –உடம்பு மிக மெலிந்து -மேகலையும் கட்டு அழிந்து நான் முடிவத்துக்கு முன்பே –

——————————————————————–

நிகமத்தில் இத்திருவாய் மொழி தன்னை அப்யசித்தார்க்கு எம்பெருமானை பிரிகைக்கு ஈடான சம்சார துரிதத்தை அறுக்கும் என்கிறார் –

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11-

திரு மூழிக் களத்தில் போக்யதையால் நிரந்தர வாஸம் பண்ணி அங்கே நிரதிசய தீப்தி உக்தனானவனை -எம்பெருமானுக்கு திரு மூழிக் களத்தை பிரிந்து தரிக்க சம்பாவனை யுண்டே யாகிலும் -அவனைப் பிரிவில் தரியாத தன்மையை யுடையளாய் -அழகிதாய் -முக்தமான -கிளியின் பேச்சுப் போலே இருக்கிற பேச்சை யுடையளான பிராட்டி தன் ஆற்றாமையாலே பிரலாபித்த பாசுரத்தில் ஒன்றும் குறையாத படி இருக்கிற ஆழ்வார் நோவு பட்டு உரைத்த –

————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –9–6–

October 22, 2016

கீழில் திருவாய் மொழியிலே –நாமும் நம் வான நாடனொடு ஒன்றினோம் -என்று விரஹம் ஆற்ற மாட்டாமையாலே
முடிகையிலே வியவசிதராய் நின்றாராய் இருந்தது -இத்திரு வாய்மொழியிலே-அவன் குணங்களை அனுபவித்து
அத்தால் வந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே சிதிலர் ஆகிறாராய் இரா நின்றது –
குண அனுபவம் பண்ணுகைக்கு அவன் முகம் காட்ட வேணும் -இப்போது இங்கு ஒரு சம்ச்லேஷம் இல்லை
-சம்ச்லேஷம் இல்லாமையே யன்றிக்கே துக்க அனுபவம் பண்ணுகைக்கும் ஆஸ்ரயம் இல்லாத படியான வியஸனம் செல்லுகிறது
-ஆனபின்பு இது சங்கதம் ஆனபடி என் என்னில் -பெறில் தரித்தல் அல்லாத போது முடிதல் செய்யுமளவான இவர் தசையைப் பார்த்து
-இவர் ஜீவானத்ருஷ்டத்தால்-இருந்தும் வியந்தில் -தம்மோடு தலை தடுமாறாக பரிமாறின பரிமாற்றத்தை அவன் ஸ்மரிப்பிக்க –
அத்தாலே உணர்ந்து பிராட்டி -சமா த்வாதச தத்ராஹம் -ராக வஸ்ய நிவேசனே புஜ்ஞ்ஞா நாமா நுஷான் போகான் சர்வகாம ஸம்ருத்தி நீ -என்று
ராம குணத்தை ஸ்மரிப்பித்து அதி ப்ரீதை யானால் போலே சம்ச்லேஷ தசையில் தாழ நின்று பரிமாறின அவனுடைய
வியாமோஹ அதிசயத்தை தத் காலத்தில் போலே விசதமாக ஸ்மரித்து அத்தால் வந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே
அத்யந்த சிதிலராகிறார் -ஆளவந்தார் அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானம் என்று அருளிச் செய்கிறார் –

——————————————————————–

திருக் காட்கரையிலே  எம்பெருமானுடைய ஆச்சர்யமான பரிமாற்றங்களை நினைத்த தோறும் என் நெஞ்சு மிகவும் சிதிலம் ஆகா நின்றது -என்கிறார் –

உருகுமால்  நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-

உருகுமால் நெஞ்சம் -அனுபவத்துக்கு பிரதம உபகரணமான மனஸ் தத்வம் சிதிலமாகா நின்றது -அனுபவிக்கைக்கும் அனுபவத்தி நிர் வ்ருத்தராகைக்கும் நெஞ்சு வேணுமே -தொழுது எழு என்கைக்கும் -நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார் கொடான் என்கைக்கும் நெஞ்சு வேணும் இ றே -நீஞ்சப் புக்கவனுக்கு வாய் கரையிலே தெப்பம் ஒழுகுமா போலே பரிகரமாக நெஞ்சு சிதிலமாகா நின்றது -எதிர்தலையும் யுண்டாம் படி பரிமாற அறியான் -அனுபவத்துக்கு இருவர் வேண்டும் என்று இரான் –
உயிரின் பரம் அன்றி-பெருகுமால் வேட்கையும் –ஆத்மாவுக்கு பொறுக்க ஒண்ணாத படி அபி நிவேசம் பெருகா நின்றது -அணு பரிமாணமாக இவ்வஸ்துவின் அளவன்றிக்கே ஆறு பெருகுமா போலே மேன்மேல் என பெருகா நின்றது –ஆலும் ஓவும் விஷாத அதிசய ஸூ சகம் —நெஞ்சம் உருகுமால் –வேட்க்கையும் பெருகுமால்-என்று தம்மால் நியமிக்க ஒண்ணாத விஷாதம் தோற்றச் சொல்லுகிறார்
என் செய்கேன் -நெஞ்சு உருகாத படி தரிப்பேனோ -பெருகுகிற அபி நிவேசத்தை அமைப்பேனோ -இதுக்கு அடியான அவன் குணங்களை தவிர்ப்பேனோ
தொண்டனேன்-அதுக்கு அடியான என் சாபல்யத்தை தவிர்ப்பேனோ -சாபலம் அபூமி என்று கை வாங்க ஓட்டுகிறது இல்லை -மறந்து தரிக்க வொட்டுகிறது இல்லை –
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை-
வேட்க்கைக்கு ஹேது சொல்கிறது மேல் முடிய -குறும் தெருவோடு பெரும் தெருவோடு வாசி அற செங்கழு நீரின் பரிமளம் பரக்கிற படி -ஊரோடே சேர்ந்த பொய்கைகள் ஆகையால் உள்ளொடு புறம்போடு வாசி அற பரிமளம் அலைகிற படி –தெருவெல்லாம் ஒரு பரிமளம் -உள்ளு சர்வ கந்த –
திருக் காட்கரை- மருவிய--பரத்வத்தில் காட்டிலும் அவதாரத்தில் காட்டிலும் ஏற்றம் சொல்லுகிறது –பரத்வம் நெடும் கை நீட்டு -அவதாரம் காலாவதியை யுடைத்தது
மாயன் -ஆச்சர்யமான ஸுந்தரியாதிகளை யுடையவன் –
தன் மாயம் -கிட்டின போது தாழ நின்று பரிமாறின படி
நினைதொறே–ஊரை நினை தோறும் / ஸுந்தர்யத்தை நினைதொறும் / ஒரு ஊரும் ஒரு வடிவும் இல்லாதாரைப் போலே தாழ நின்ற சீலத்தை நினைத்த தோறும் /
பஹு பிரகாரத்தாலே அனுபவிப்பிக்க வல்லவன் அவன் -ஒன்றிலே கால தத்வம் உள்ளதனையும் கால் தாழ்ந்து புதியராய் அனுபவிக்க வல்லார் இவர் -அப்பொழுதைக்கு அப் பொழுது என்னாரா வமுதம் -என்றவர் இ றே –

—————————————————————

திருக் காட்கரையில் எம்பெருமானைக் குறித்து உன்னோடு நான் பரிமாறின பரிமாற்றத்தை நினைக்க ஷமன் ஆகிறிலேன் என்கிறார் –

நினைதொறும்  சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2-

நினைதொறும்-நினைக்க உபக்ரமிப்பர் -அந்நினைவேயாய்ச் செல்ல ஒண்ணாத படி பலஹானி மிகும் -மறக்க மாட்டார் -திரியட்டும் நினைக்க என்று இழிவார் -இப்படி பல காலும் நினைக்க உபக்ரமித்து தலைக் கட்ட மாட்டாதே செல்லுகிற படி –
சொல்லும் தொறும் -நினைக்க அரிய விஷயம் சொல்ல ஒண்ணாது என்னும் இடம் சொல்ல வேண்டாது இருக்க சொல்லும் தொறும் -என்கிறது -என்னும் எப்போதும் என் வாசகம் -என்கிற படியே மனஸ் சஹகாரம் ஒழிய வாசனையால் வாக்கு பேசாத தொடங்கும் -செவி வன்மையாக புக்கு நெஞ்சை அழிக்கும்
நெஞ்சு இடிந்து உகும்-நெஞ்சு கட்டு அழிந்து நீராகா நின்றது -பெருக்காற்றில் கறை இடிந்து விழுந்து பின்பு நீராய் கரைந்து போமா போலே சிதிலம் ஆகா நின்றது
வினை கொள் சீர் -பாப ஹரமான கல்யாண குணம் –சர்வருக்கும் துக்க நிவர்த்தகமான குணங்கள் -என்னை ஒருவனையும் அழியா நின்றது –
அன்றியே –சீர் -என்று சீலமாய் –வினையாவது சேஷ்டிதம் -அதாவது சீல கார்யமான தாழ நின்று பரிமாறும் பரிமாற்றம் -ஸூ க்ரீவம் நாதம் இச்சதி -என்ன கடவது இ றே -என்றுமாம் –
பாடிலும் -அடைவு கெடப் பேசுமது ஒழிய ப்ரேமத்தால் பாடுவது ஓன்று உண்டு -அத்தைச் செய்யிலும்
வேம் எனது ஆர் உயிர்-மனஸை அன்றியே அதாஹ்யமான ஆத்மவஸ்துவும் தஹியா நின்றது -வயிரத்தைப் பற்ற வேவா நின்றது -அதாஹ்யம் என்கிறது அக்னிக்கு -பகவத் குணம் அழிக்க மாட்டாதது இல்லை -புறம்புள்ளார்க்கு ஆச்வாஸ ஹேதுவான குணங்கள் என்னை ஒருவனையும் முடியா நின்றது -எல்லாருக்கும் குளிர்த்தியைப் பண்ணும் பனி தாமரையை அழிக்குமா போலே
சுனை கொள் பூஞ்சோலைத் -சுனைகளோடு கூடின தர்ச நீயமான சோலை –
தென் காட்கரை என் அப்பா-நிருபாதிக பாந்தவம் தோற்ற சந்நிஹிதனாய் நின்றவனே -இவை யாயத்து இவரை அழித்தது–சுனைகள் சீலத்துக்கு ஸ்மாரகம் /சோலை-வடிவுக்கு ஸ்மாரகம் / சன்னதி -பந்தத்துக்கு ஸ்மாரகம்
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –நான் உனக்கு அடிமை செய்யும் பிரகாரம் நினைக்க மாட்டு கிறி லேன் -வழு விலா வடிமை செய்ய வேண்டும் என்று பாரித்த நான் –
உனக்கு -வகுத்த சேஷியான உனக்கு -/ ஆள் செய்யும் நீர்மையே-அவன் தாழ நின்று பரிமாறின படியை -விநயத்தாலே -ஆள் செய்யும் நீர்மையே-என்கிறார் /நினைகிலேன்–நினைப்பனாகில் நெஞ்சு அழியா நின்றது –

——————————————————————

அடிமை கொள்ளுகிறோம் என்று க்ருத்ரிமத்தாலே என்னை விஸ்வசிப்பித்து என்னுள்ளே புகுந்து தன் குணங்களாலும் அக்ரம ப்ரவ்ருத்திகளாலும் அவன் என்னை சர்வ ஸ்வாபஹரம் பண்ணின படிகள் அனுசந்திக்க ஷமன் ஆகிறிலேன் என்கிறார் –

நீர்மையால்  நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3-

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை-ஈர்மை செய்து –நெஞ்சம் வஞ்சித்து புகுந்து -என்னை நீர்மையால் ஈர்மை செய்து -தான் சேஷியாய் நான் சேஷமாய் முறையிலே -பரிமாற வாரும் -என்று நெஞ்சை இசையப் பண்ணி க்ரித்ரிமித்து புகுந்தான் -முறை கெடப் புகுர வென்னில் இசையார் இ றே -க்ருத்ரிமிக்கை யாகிறது -ஒன்றைச் சொல்லி மற்று ஒன்றைச் செய்கை இ றே -அது எது என்னில் –
நீர்மையால் என்னை – ஈர்மை செய்து–நீர்மை யாகிறது தாழ நின்று பரிமாறுகையும் -அதுக்கு அடியான சீலமும் -என்னை -முறையிலே பரிமாற வாரும் -என்றதை மெய் என்று இருந்த என்னை –ஈர்மை செய்து -ஈரும் தன்மைகளை செய்து -தான் தாழ்ந்த செயலில் ஈடுபடுத்தி -என்னுதல் -ஈரப்பாட்டை விளைத்து என்னுதல் -என்னை நீராம்படி பண்ணி -என்கை –
என் உயிராய் என் உயிர் உண்டான்-எனக்கு தாரகராவாரை போலே புகுந்து என்னை அழித்தான் –பாதகனாய் புகுரில் இவர் இசையார் இ றே -இருவரும் கூட புஜிக்க இழிந்து -போக்தா தானே யானான் –
அன்றியே –என் உயிராய் என் உயிர் உண்டான்–எனக்கு தன்னால் அல்லது செல்லாத படி பண்ணி -என்னை புஜிப்பதும் செய்தான் என்றுமாம் –
சீர் மல்கு சோலைத்-அழகு மிக்க சோலை –என்னோடு கலந்த இத்தால் தனக்குப் பிறந்த புஷ்கல்யம் அவ்வூர் சோலையே கோள் சொல்லித் தரா நின்றது
தென் காட் கரை என் அப்பன்–ஸூ லபனுமாய் நிருபாதிக பந்துவுமானவன் -என் காரியத்துக்கு தானே கடவனாய் இருக்கிற பந்தம் தோற்ற சந்நிஹிதன் ஆனவன்
கார் முகில் வண்ணன் -என்னோட்டை கலவியாலே கடலை முழுகப் பருகின காள மேகம் போலே யாயத்து அவன் வடிவில் செவ்வி இருப்பது -தூ நீர் முகில் போல் தோன்றாயே -என்று இவர் ஆசைப் பட்ட படியே தோற்றி -அனுபவிப்பித்து பேர நின்ற பின்பு அத்தலையில் செவ்வி இருந்த படி –
தன் கள்வம் அறிகிலன்–முகப்பிலே ஒன்றாய் -முடிவிலே ஒன்றான செயல்கள் தெரிகிறதில்லை -அடிமை கொள்ள வென்று புகுந்து அச் செயலை தானே செய்கிற நிலை எனக்கு ஒன்றும் தெரிகிறதில்லை
அறிகிறிலேன் -சர்வாதிகன் இப்படித் தாழ பரிமாறுகை கூடாது -நான் பிரமித்தேனோ –சம்ச்லேஷத்திலும் மருள் தானீதோ-என்றவர் இ றே –

———————————————————————–

தான் சேஷியாகவும் -ஜகத் எல்லாம் சேஷமாயும் முறையே தப்பாமே எல்லோரோடும் கலக்கிறவன் -அவ்வளவு அன்றிக்கே அதி ஷூத்ரனான என் பக்கலில்  பண்ணின வ்யாமோஹம் எனக்கு அறிய நிலம் அன்று என்கிறார்-

அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே–9-6-4-

அறிகிலேன்-உகப்பாலே செய்தானோ -இவ்வஸ்துவை அழிக்கச் செய்தானோ -அறிகிறி லேன் –
தன்னுள் அனைத்து உலகும் நிற்க-தன் சங்கல்பத்தைப் பற்றி -சகல லோகங்களும் நிற்க -சகல அபாஸ்ரயவன் கிடீர் என்னைத் தனக்கு அபாஸ்ரயமாக நினைத்தான் –
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் -சேஷியான முறை -தப்பாமே அவற்றின் நடுவே நிற்கும் தானும் -என் ஒருவன் பக்கலிலும் கிடீர் முறை கெடப் பரிமாறுகிறது –
பிரான்-என்னை ஒழிந்தார் விஷயத்தில் உபகாரகன் கிடீர் என்னை அளிக்கிறான் -எதிரிகளை அம்பால் அழிக்கும் -என்னை குணத்தால் அழித்தான் -மத்தியஸ்தராக வேணுமாகாதே ரக்ஷிக்கும் போதைக்கு -அம்பு பட்ட புண்ணுக்கு மருந்து இட்டு ஆற்றலாம் -குணத்தால் வந்த புண்ணுக்கு பரிஹாரம் இல்லை –
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை -அவ்வூரை யுடையவனுக்கு ஒரு வஸ்து உத்தேச்யமாவதே -பரிமளம் அலை எறியா நின்றுள்ள சோலை –
என் அப்பன்-உத்பாதகன் கிடீர் என்னை அழித்தான் –
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே--அதி ஷூத்ரனான என் ஆத்மாவை அழித்த வ்யாமோஹம் அறிகிறிலேன் -பெருமைக்கு அவனுக்கு அவ்வருகு இல்லாதாப் போலே சிறுமைக்கும் தமக்கு அவ்வருகு இல்லை என்று இருக்கிறார் -நித்ய சம்சாரிகள் நித்ய ஸூ ரிகள் கோடியிலே என்னும் படி யாயத்து -இவர் தம்மை நினைத்து இருப்பது -நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகாவேயாயத்து அவன் இவரை விரும்புவது -ஸ்வரூப ஞானத்தால் விரும்பில் இ றே ஸ்வரூபத்து அளவில் நிற்பது -வியாமோஹம் முறையை அழிக்கும் இ றே -மூ உலகும் தன்னெறியா வயிற்றிலே கொண்டு சிறியேனுடைச் சிந்தையுள் –நின்று ஒழிந்தார் -என்கிறத்தை இ றே இவர் சொல்லுகிறது –

——————————————————————

என்னை அடிமை கொள்வாரைப் போலே புகுந்து என்னுடைய சரீரத்தையும் ஆத்மாவையும் ஓக்க புஜித்தான் ஒருவன் படியே -என்று விஸ்மிதர் ஆகிறார் –

திருவருள்  செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–9-6-5-

திருவருள் செய்பவன் போல -என்னை அடிமை கொள்வாரைப் போலே -துயரறு சுடரடி தொழுது எழுகைக்கு மயர்வற மதிநலம் அருளினாப் போலே புகுந்தான் -போலே என்கிறது -செய்தது அங்கன் அன்று -தான் திருவருள் பெற்றானாய் இரா நின்றான் –சேஷ பூதனாய் புகுரில் இவர் இசையாரே –
என் உள் புகுந்து-வழு விலா அடிமை செய்யப் பாரித்த என் பக்கலிலே புகுந்து
உருவமும் -இவர் முதலிலேயே அழுக்கு உடம்பு என்றத்தை விரும்பா நின்றான் –இவர் த்யாஜ்யம் என்று இருக்கிறத்தை உத்தேச்யம் என்று இரா நின்றான் -இவர் தாம் அன்றி இவர் அபிமானித்தது அமையாதோ -என்று இரா நின்றான்
ஓர் ஆர் உயிரும் -அபர்யவஸான வ்ருத்தியாலே தாத்பர்யந்தமாய் இல்லாதாது இராமையாலே ஆத்மவஸ்துவையும் விரும்புகிறான் அத்தனை –
உடனே உண்டான்-புஜிக்கும் இடத்தில் வாசி வைத்து புஜித்தால் ஆகாதோ -உண்டான் -போக்தா தானே யானான் -எனக்கு அவகாசம் வைத்திலன்-
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்–தான் போக்தாவாய் புஜித்தமை அவ்வூர் சோலையும் வடிவும் கோள் சொல்லித் தரும் –அழகு வளரா நின்றுள்ள சோலை -கருவளர் மேனி -கறுப்பு வளரா நின்றுள்ள வடிவு -சதைகரூபம் என்று சொல்லுமது கண்டிலோமீ
நம் கண்ணன் –ஆஸ்ரித பவ்யனான கிருஷ்ணன் –
கள்வங்களே–முகப்பில் ஒன்றாய் -முடிவில் ஒன்றாய் இருக்கும் ப்ரவ்ருத்திகள் –அடிமை கொள்வாரைப் போலே புகுந்து -தான் நியாம்யனாய் தாழ நிற்கையும் -விரோதியான சரீரத்தை கழித்து தர வேணும் என்று புகுந்து தேஹாத்ம விபாகம் பண்ண மாட்டாது ஒழிகையும் -போக்யமாய்ப் புகுந்து தான் போக்தாவாகையும் -எனக்கு உபகரிப்பானாய் புகுந்து தன் பேறாகத் தலைக் கட்டுகையும் -இது அடங்க வடிவிலே வேறுபாடடாலே தோற்றி இருக்கையும் -இத்தலையில் ஆத்மபஹாரத்தை தவிர்த்தது தன்னாத்ம அபஹாரத்தாலே யாயத்து –

——————————————————————–

அவன் க்ரித்ரிமன் என்று அறிந்தால் அதிலே இருந்து நெஞ்சாறால் படாதே நீர் அகன்றாலோ என்ன  அவனைக் கண்டவாறே அந்த வஞ்சகங்களை  மெய்யென்று இருப்பன் -என்கிறார் –

எம்  கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-9-6-6-

எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்-எனக்கு பவ்யரைப் போலே இருக்கிற கிருஷ்ணனுடைய வஞ்சனங்கள் எனக்கு செவ்வையாய்த் தோற்றும் -அவன் களவிலே அகப்பட்டாலும் மீள மாட்டாதே -அவன் முகத்தே விழித்த வாறே அது எல்லாம் எனக்கு மெய்யாய் இருக்கும்
அவன் நமக்கு பவ்யன் அன்றோ -என் பக்கல் களவு பரிமாறுமோ -அவன் செய்தது எல்லாம் எனக்கு மெய் -என்றுமாம் –சேமம் போலே இருக்கும் என்றுமாம் –
நம் கண்ணன் கள்வங்கள் -என்று கீழ் முடிய –எம் கண்ணன் -என்று தொடங்குவான் என் -நாம் என்றும் யாம் என்றும் பர்யாயம் ஆகையால் பொருளிசை அந்தாதியாகக் கிடக்கிறது –எம் கண்ணன் கள்வங்கள்-என்ற பாடமாகில் நேரே கிடக்கும் –
அம் கண்ணன் உண்ட -அதி சபலனானவன் அனுபவித்த -அதி பிரவணனானவனை -அம் கண்ணன்-என்ன கடவது இ றே –
என் ஆர் உயிர்க்கோது இது–கோதான என் ஆத்மாவான இது -ஆத்மாவை கோதாம் படியாய்த்து பரிமாறிற்று –
புன் கண்மை எய்தி-பேகணிப்பு -பொல்லா நோக்கை யுடைத்தாய் -என்கை –மீளவும் உயிர்ப்பு பெய்து -என்றும் சொல்லிப் போரும் -ஸ்ருதமும் சப்தார்த்தமும் சேரும் படி என் என்று விசாரித்து -கோதான வாருயிர் பேகணிக்கும் போது மீளவும் உயிர்ப் பெய்ய வேணும் இ றே -என்று பிள்ளை அவிவிரோதேன அன்வயித்து அருளிச் செய்வர்
புலம்பி இராப்பகல்-என் கண்ணன் -என்று அவன் காட் கரை ஏத்துமே-முன்பு எனக்கு பவ்யனான கிருஷ்ணன் என்று அஹோராத்ர விபாகம் இன்றியே கூப்பிட்டு -அவன் வர்த்திக்கிற திருக் காட்கரையையே ஏத்தா நின்றது -ராகவஸ்ய நிவேசனே -என்னுமா போலே –

எம்பெருமான் என்னை அடிமை கொள்வாரைப் போலே வந்து புகுந்து என்னுயிரை மாள நேரே  புஜித்து பின்னையும் புஜியாதானாய் இருக்கும் –

காட்கரை  ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-

காட்கரை ஏத்தும் –அவனிலும் அவன் இருந்த வூரை ஏத்தும் –அதனுள் கண்ணா என்னும்-பரத்வத்தில் காட்டில் அவ்வூரில் புகுந்த பின்பு யுண்டான ஏற்றம் -என் கண்ணன் -என்னா காட்கரை ஏத்தும் -அவ்வூரை ஏத்தா அவன் தன்னை ஏத்தும் -இரண்டுக்கும் புறம்பு போகிறதில்லை –
வேட்கை நோய் கூர நினைந்து–அபி நிவேசம் மிகும் படி அனுசந்தித்து
கரைந்து உகும்--சிதிலமாய் -ஓர் அவயவி பிரதிபத்தி பண்ண ஒண்ணாத படி உகும் –
ஆட் கொள்வான் ஒத்து-அடிமை கொள்வாரைப் போலே புகுந்து – என் உயிர் உண்ட மாயனால்-என்னை வெறும் தரை யாக்கின ஆச்சர்ய பூதனாலே -கீழே திருவருள் என்று மறைத்துச் சொன்ன வார்த்தையை வெளியிடுகிறார் -கிட்டின போது தாழ நின்று மின்மினி பரக்க பரிமாறும் ஆச்சர்யம்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–என்னாத்மாவை நிச்சேஷமாக புஜிக்க செய் தேயும் இத்தலையிலே சிறிது சேஷித்தது –அவன் சாபேஷனாய்ப் போகையாலே இத்தலையிலே சிறிது சேஷித்தது என்று இருக்கிறார் -இப்போது இருந்து கிலேசப்படக் காண்கையாலே சிறிது தொடங்கிற்று உண்டு என்கிறார் -ஒரு சர்வஞ்ஞான் இல்லாத ஒன்றிலே இத்தனை வியாமோஹம் பண்ணக் கூடாது என்று இருக்கிறார் –

——————————————————————-

நாள் தோறும் என்னை அனுபவித்து – புஜியா நின்றாலும் பெறாப்   பேறு பெற்றால் போலே வந்து புஜியா நிற்கிற இவனுடைய குணவத்தை ஒன்றும் பொறுக்க மாட்டு கிறிலேன் என்கிறார் –

கோள்  உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8-

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்–என் பக்கல் ஒரு உபகாரம் கொண்டான் அன்றிக்கே நிர்ஹேதுகமாக வந்து என் ஆத்ம வஸ்துவை அனுபவித்தான் -இதுக்கு முன்பு இப்படி இருபத்தொரு நற் சரக்கு பெற்று அறியாதானாய் என் பக்கலிலே அபி நிஷ்டன் ஆனான் என்றுமாம் -தான் என்னால் கொள்ளப் படாதே என்னை புஜித்தான் என்றுமாம் –
நாளும் நாள் வந்து -ஒரு நாள் அனுபவித்து நம்மது அன்றோ என்று கை வாங்கி இருக்கை அன்றிக்கே நாள் தோறும் நாள் தோறும் அபூர்வமாக அனுபவியா நின்றான் –
என்னை முற்றவும் தானுண்டான்-சம்சாரத்திலே அணு பரிமாணமான இவ்வஸ்துவை விபுவான தான் விளாக்குலை கொண்டு அனுபவித்தான் என்கிற இது தனக்கு ஏற்றமாம் படி கௌரவியா நின்றான் -சிறிய என்னாருயிர் என்றது -தான் தம்மைப் பார்த்து -அவனுடைய ஆதரத்தைக் கொண்டு சொல்லுகிறார் இது –
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு-கறுத்த நீர் கொண்டு எழுந்த மேகம் போலே இருந்துள்ள வடிவை யுடையனாய் -வர்ஷிக்கைக்கு அம்மேகம் படிந்த ஸ்தலம் போலே இருக்கிற திருக் காட்கரையிலே வந்து நின்று அருளின என் ஸ்வாமிக்கு -வடிவது -வூரது -தனக்கு என்ன குறை யுண்டாய் இப்படி ஈடுபடுகிறான் –
ஆள் அன்றே பட்டது-அடிமை புக்க அத்தனை அல்லது ராவணாதிகளைப் போலே எதிர் அம்பு கோத்தேனோ
என் ஆர் உயிர் பட்டதே–-ஓர் ஆத்மவஸ்து படும்பாடு இது -எதிர்த்தார் உடம்பு இழத்தல் புண் பட்டத்துக்கு மருந்து இட்டு ஆற்றுதல் செய்யும் அளவின்றி பட்டது -குணத்தால் வரும் நோவு ஸ்வரூப கதமாய் பரிஹாரம் இல்லை இ றே –

———————————————————————

நீரேயோ இப்பாடு பட்டீர் -குண அனுபவமே யாத்ரையான நித்ய ஸூ ரிகளும் படும்பாடு இது அன்றோ -என்ன -அவர்கள் தான் நான் பட்டது பட்டார்களோ -என்கிறார் –

ஆர்  உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது--நான் பட்ட பாட்டை நித்ய ஸூ ரிகளில் சிலர் பட்டார் யுண்டோ -பகவத் குணங்களுக்கு அபூமியாய் இருக்கிற சம்சாரத்தில் நான் பட்ட பாடு நித்ய விபூதியில் உள்ளார் பட்டார்களோ –இங்கு எனது உயிர் பட்டது –அங்கே ஆருயிர் பட்டது –என்று அருளிச் செய்வர் எம்பெருமானார் -நவோடையான ஸ்த்ரீக்கு அனுபவத்தில் புதுமையாலே ஆர்த்தி மிக்கு இருக்கும் இ றே -என்று நம்பிள்ளைக்கு நஞ்சீயர் அருளிச் செய்வர் –
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்--தம்மை நோவு படுத்தின வற்றை சொல்லுகிறார் -பெரிய இதழை யுடைய தாமரை போலே இருந்துள்ள கண்ணையையும் சிவந்த வாயையும் யுடையனாய் –
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்--கறுத்த எழிலை யுடைத்தான மேகம் போலே வடிவை யுடையனாய் -திருக் காட்கரையை கோயிலாக யுடையனாய்
சீர் எழில் நால் தடம் தோள் –வீர ஸ்ரீ யையும் யுடைத்தாய் எழிலையும் யுடையதாய் கற்பக தரு பணைத்தால் போலே நாலாய் சுற்று யுடைத்தான தோள்களையும் யுடைய –
தெய்வ வாரிக்கே–தெய்வங்கள் படும் கடலுக்கு -தெய்வங்களுக்கு உத்பாதகனானவனுக்கு -ஸ்வ தந்திரர்க்கு உத்பாதகனானவன் கிடீர் பர தந்த்ரனான என்னை அழிக்கிறான் -வடிவு அழகையும் அவ்வூரில் இருப்பையும் காட்டி யாய்த்து இவரை அழித்தது –

——————————————————————-

தம்மோடு கலந்த எம்பெருமானுக்கு தம்மிலும் அபி நிவேசம் மிக்கு இருந்த படியையும் அத்தாலே மிகவும் நோவு பட்ட படியையும் அருளிச் செய்கிறார் –

வாரிக்  கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

வாரிக் கொண்டு -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று நித்ய ஸூ ரிகளுக்கும் அவகாசம் கொடேன் என்று ஆய்த்து-இவர் பாரித்தது -வழு விலா வடிமை செய்ய வேண்டும் -என்றார் இ றே –
உன்னை –சர்வ சேஷியாய் விபுவான உன்னை /விழுங்குவன் -சேஷ பூதனுக்கு கைங்கர்யம் இ றே தாரகம் -/காணில் –உன்னைக் காணப் பெறில் /
என்று-ஆர்வுற்ற -இப்படி அபி நிவேசித்த ஆர்வத்தை யுற்ற / என்னை ஒழிய–என்னளவு பாராதே / என்னில் முன்னம்-பாரித்துத்--நான் பாரித்த அளவும் அன்றிக்கே நான் பாரித்த காலத்துக்கு முன்பே பாரித்து –ஆச்சார்ய விஷயீ காரத்துக்கு பின்பு இ றே இவருடைய பாரிப்பு -/ சம்பந்தத்துக்கு திரஸ்கார ஹேது இல்லாமையால் -அவனுடைய பாரிப்பு சத்தா ப்ரயுக்தம் இ றே
தான் என்னை–விபுவாய் ஸ்வதந்த்ரனான தான் -அணு பரிமாணனாய் பரதந்த்ரனான என்னை –
முற்றப் பருகினான்-தன் குண சேஷ்டிதாதிகளைக் காட்டி -என்னை நீராக்கி -நிச்சேஷமாகப் பருகினான் -வஸசா சாந்வயித்வைநம் லோச நாப்யாம் பிபன்நிவ -என்கிறபடியே -இத்தலையை அழித்துப் பரிமாறினான் -என்கிறபடியே –விழுங்குமவன் காணில் -என்று இ றே இவர் பாரித்தது
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–பரம உதாரனாய் சந்நிஹிதன் ஆனவன் –கடியனே-போக தசையில் விரைந்து இருக்கும் -எதிர்த்தலைக்கு ஒன்றும் விட்டுக் கொடான் -என்கை –

——————————————————————

நிகமத்தில் ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் இத்திருவாய் மொழி வல்லார்க்கு ஜென்மம் முடித்து அதுக்கு அடியான சம்சாரமும் நசிக்கும் -என்கிறார் –

கடியனாய்க்  கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற-கம்சன் தான் நினைத்த நினைவை அவன் தன்னோடே போம்படி பண்ணினான் / கடியனாய்க் -தன் பக்கலில் இன்றிக்கே வந்தேறி -என்கை –
பிரான் தன்னைக்-முன்பு உபகாரகன் ஆனவன் கிடீர் நம்மை அழித்தான் -உகந்தாரை அழிக்கை இ றே பாதகம் ஆவது -விரோதிகளை அழிக்குமது உபகாரம் இ றே
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்-கம்ச விஜயத்துக்கு கொடி கட்டிற்று திரு நகரி யாய்த்து -ஸ்வாமி விஜயத்துக்கு உரிய அடியார் இருந்த இடத்தே இ றே கொடி கட்டுவது –
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் -சமுதாய சோபையை யுடைத்தாய் இருக்கை -கட்டடங்க அழகியதாய் இருக்கை -விஜயம் யுண்டானவாறே பிரசஸ்தி மாலைகளும் செல்லா நிற்கும் இ றே
சன்மம்-முடிவு எய்தி –ஜென்ம பரம்பரைகளுக்கு வசனத்தை லபித்து / நாசம் கண்டீர்கள் எம் கானலே–ஜன்மத்துக்கு அடியான சம்சாரமும் நசிக்கும் /கானல் -ம்ருகத்ருஷ்ணிகை-இன்னம் பிறக்க இராதே பகவத் குண அனுபவம் சாத்மிக்கும் தேசத்திலே புகுவர்கள் –

———————————————————————

கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –9-6–

October 22, 2016

கீழில் திருவாய் மொழியில் பிறந்த வ்யஸனத்தின் மிகுதியாலே முடித்தல் -எம்பெருமானைப் பெற்று தரித்தலான ஆழ்வாரை
இப்போது ஒரு சம்ச்லேஷம் -இன்றிக்கே இருக்கச் செய்தே-இவருடைய ஜீவநாத்ருஷ்டம்-இருத்தும் வியந்தில் எம்பெருமான்
தன்னோடு தலை தடுமாறாக பரிமாறின பரிமாற்றத்தை ஸ்மரிப்பிக்க -அத்தாலே உணர்ந்து
-இன்னுயிர்ச் சேவலில் -விஸ்லேஷத்தாலே ஸூ க துக்க அனுபவங்களுக்கு பாத்தம் இல்லாத படியான தசையில்
-பிராட்டி -சமா த்வாதச சத்ராஹம்-என்று ராம குணம் ஸ்மரணம் பண்ணி அதி ப்ரீதை யானால் போலே-
-சம்ச்லேஷ தசையில் அவனுடைய வியாமோஹத்தை மிகவும் ஸ்மரித்து-ப்ரீதி பிரகர்ஷத்தாலே அத்யந்தம் சிதிலர் ஆகிறார் –

———————————————————————

திருக் காட்கரையிலே  எம்பெருமானுடைய ஆச்சர்யமான பரிமாற்றங்களை நினைத்த தோறும் என் நெஞ்சு மிகவும் சிதிலம் ஆகா நின்றது -என்கிறார்

உருகுமால்  நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-

பகவத் குண அனுபவத்துக்கு -பிரதம உபகரணமான நெஞ்சு உருகா நின்றது -ஆத்மாவுக்கு பொறுக்க ஒண்ணாத படி அபி நிவேசமானது மிகா நின்றது –இவ் வபி நிவேச அதிசயமானது மறந்து தரிக்க ஓட்டுகிறது இல்லை -அதி சபலனான நான் என் செய்வேன் -மாயன் -ஆச்சர்யமான ஸுந்தரியாதிகளை யுடையவன் –

———————————————————————–

திருக் காட்கரையில் எம்பெருமானைக் குறித்து உன்னோடு நான் பரிமாறின பரிமாற்றத்தை நினைக்க ஷமன் ஆகிறிலேன் என்கிறார் –

நினைதொறும்  சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2-

நெஞ்சு இடிந்து உகும்-ஹிருதயம் கட்டு அழிந்து நீராகா நின்றது
வினை கொள் சீர்-எல்லாருடைய துக்கங்களையும் போக்கக் கடவியான கல்யாண குணம் –சேஷ்டிதங்களோடு கூடின குணங்கள் என்றுமாம் -குணமாவது -ஸுசீல்யம் / சேஷ்டித்தமாவது -இக்குண க்ருதமான தாழ்ந்த பரிமாற்றம் -ஸூ க்ரீவம் நாதம் இச்சதி -இத்யாதி
ஆர் உயிர்–ஆத்மா / சுனை கொள் பூஞ்சோலை– சுனைகளோடு கூடின அழகிய சோலை / என் அப்பா-எனக்கு பந்து வானவனே
ஆள் செய்யும் நீர்மையே -எம்பெருமான் தன்னோடு அக்ரமமாகப் பரிமாறின படியை விநயத்தாலே ஆள் செய்யும் நீர்மை -என்கிறார்-

———————————————————————–

அடிமை கொள்ளுகிறோம் என்று க்ருத்ரிமத்தாலே என்னை விஸ்வசிப்பித்து என்னுள்ளே புகுந்து தன் குணங்களாலும் அக்ரம ப்ரவ்ருத்திகளாலும் அவன் என்னை சர்வ ஸ்வாபஹரம் பண்ணின படிகள் அனுசந்திக்க ஷமன் ஆகிறிலேன் என்கிறார் –

நீர்மையால்  நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3-

தான் சேஷியாகவும் நான் சேஷமாகவும் நான் நினைத்தபடியே என்னோடு பரிமாறுவாரைப் போலே க்ருத்ரிமித்து புகுந்து தன் குணங்களாலே என்னை ஈடுபடுத்தி -எனக்கு தன்னால் அல்லது செல்லாத படி பண்ணி -என்னை புஜிப்பதும் செய்து அத்தாலே தனக்குப் பிறந்த புஷ்கல்யம் தெரியும்படி இருக்கிற திருச் சோலையை யுடைய திருக் காட்கரையிலே எழுந்து அருளி இருப்பதும் செய்து -எனக்கு பரம பந்துவாய் -என்னோட்டை கலவியாலே புதுக் கணித்த திரு நிறத்தை யுடையவனாய் இருந்துள்ளவனுடைய என்னை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணின குண சேஷ்டிதங்களை அறிய ஷமன் ஆகிறிலேன் –

———————————————————————–

அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே–9-6-4-

தான் சேஷியாகவும் -ஜகத் எல்லாம் சேஷமாயும் முறையே தப்பாமே எல்லோரோடும் கலக்கிறவன் -அவ்வளவு அன்றிக்கே அதி ஷூத்ரனான என் பக்கலில்  பண்ணின வ்யாமோஹம் எனக்கு அறிய நிலம் அன்று என்கிறார் -வெறி -நாற்றம் –

——————————————————————

என்னை அடிமை கொள்வாரைப் போலே புகுந்து என்னுடைய சரீரத்தையும் ஆத்மாவையும் ஓக்க புஜித்தான் ஒருவன் படியே -என்று விஸ்மிதர் ஆகிறார் –

திருவருள்  செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–9-6-5-

அழகு மிகா நின்றுள்ள திருச் சோலையை யுடைய திருக் காட்கரையிலே என்னை விஷயீ கரிப்பதும் செய்து கறுப்பு வளரா நின்றுள்ள திரு மேனியை யுடையனாய் ஆஸ்ரித பவ்யனான கிருஷ்ணனுடைய முகப்பில் ஒன்றாய் முடிவில் ஒன்றாய் இருக்கும் ப்ரவ்ருத்திகள் –

———————————————————————-

என்னை அடிமை கொள்வாரைப் போலே வந்து மிகவும் நலியும் கிருஷ்ணனுடைய வஞ்சனங்களை அவனைக் கண்டவாறே மெய்யென்று இருப்பன் -என்கிறார் –

எம்  கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-9-6-6-

அவன் வஞ்சகன் என்று ஒரு நால் அறிந்தால் பின்னை தப்பினாலோ என்னில் -எனக்கு பவ்யரைப் போலே இருக்கிற கிருஷ்ணனுடைய வஞ்சனங்கள் எனக்கு மெய்யாய் இருக்கும் —செம்மாய் நிற்கும் என்றது -சேமம் போலே இருக்கும் என்றுமாம் -அதி சபலனானவன் புஜித்த கோதான இவ்வாத்மா மீளவும் உயிர் பெய்து இராப்பகல் -எனக்கு பவ்யனான கிருஷ்ணனே -என்று கூப்பிட்டு அவன் எழுந்து அருளி இருந்த திருக் காட்கரையை ஏத்தா நின்றது  / புன் கண்மை -யாவது -பேகணிப்பு என்றும் சொல்லுவார் –

———————————————————————-

எம்பெருமான் என்னை அடிமை கொள்வாரைப் போலே வந்து புகுந்து என்னுயிரை மாள நேரே  புஜித்து பின்னையும் புஜியாதானாய் இருக்கும் –

காட்கரை  ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-

வேட்கை நோய் கூர-அபி நிவேசம் மிக / கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே-நிச்சேஷமாக புஜிக்கப் பட்டே பின்னையும் சிறிது சேஷித்தது -தான் சாபேஷனாய் போகையாலே –

———————————————————————

நாள் தோறும் என்னை அனுபவித்து – புஜியா நின்றாலும் பெறாப்   பேறு பெற்றால் போலே வந்து புஜியா நிற்கிற இவனுடைய குணவத்தை ஒன்றும் பொறுக்க மாட்டு கிறிலேன் என்கிறார் –

கோள்  உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8-

இதுக்கு முன்பு இப்படி இருப்பது ஓன்று பெற்று புஜித்து அறியாதாரைப் போலே என்னுயிரைத் தான் அபி நிவிஷ்டனாய் புஜித்தான் -நிர்ஹேதுகமாய் வந்து என்னை விஷயீ கரித்தான் என்றும் சொல்லுவார் -என்னால் கொள்ளப் படாதனனாய் தான் என்னை புஜிக்கும் என்று கருத்து -இப்படி நாள் தோறும் வந்து என்னை நிச்சேஷமாக புஜித்தான் –நிரதிசய போக்யனான திருக் காட்கரை அப்பனுக்கு நான் அடிமையான அத்தனை யன்றே –என்னை இங்கனம் படுத்த வேணுமோ –

———————————————————————–

தன்னோடு பரிமாறுவாரை எல்லாரையும் இப்படியே யன்றோ அவன் படுத்துவது என்னில் -அவனுடைய குணத்துக்கு தலை நீர்ப்பாடான திரு நாட்டில் உள்ளார் தான் நான் பட்டது பட்டாரோ -என்கிறார் –

ஆர்  உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-

பெரிய இதழை யுடைய தாமரைப் பூ போலே இருக்கிற கண்ணையும் சிவந்த வாயையும் யுடைத்தாய் -கறுத்த எழிலையும் உடையது ஒரு மேகம் போலே யாயத் திருக் காட்கரை யைக் கோயிலாகவும் கொள்வதும் செய்து அழகிய எழிலோடும் கூடின நாலு பெரிய தோளையும் யுடைய தெய்வ வாரிக்கு –தெய்வ வாரியாவது -தெய்வங்கள் படும் ஆகரம்

——————————————————————–

தம்மோடு கலந்த எம்பெருமானுக்கு தம்மிலும் அபி நிவேசம் மிக்கு இருந்த படியையும் அத்தாலே மிகவும் நோவு பட்ட படியையும் அருளிச் செய்கிறார் –

வாரிக்  கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

உன்னைக் காணில் அசேஷ சேஷ விருத்தியையும் பண்ணி புஜிக்க வேணும் என்று அபி நிவேசித்த என்னை ஒழிய எனக்கு முன்னே கோலி -தன்னுடைய குண சேஷ்டிதாதிகளைக் காட்டி -என்னை நீராக்கி நிச்சேஷமாக்கிப் பருகினான் -/ கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே-பரம உதாரனான காட் கரை அப்பன் ப்ரணயத்தில் மிகவும் முற்பாடானாய் இருக்கும் –

——————————————————————

நிகமத்தில் ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் இத்திருவாய் மொழி வல்லார்க்கு ஜென்மம் முடித்து அதுக்கு அடியான சம்சாரமும் நசிக்கும் -என்கிறார் –

கடியனாய்க்  கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்-கண் பாராதே கம்சனைக் கொன்ற மஹா உபகாரகனை
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்-வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் -சம்ருத்தமான திரு நகரியை யுடைய ஆழ்வாருடைய சொல்லான நல்ல படியை யுடைய ஆயிரம் திருவாய் மொழியிலும் இத்திருவாய் மொழி கற்றதே ஹேதுவாக –
சன்மம் முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–துக்க ரூபமான சம்சார காந்தாரம் நசிக்கும் –

——————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –9–5–

October 22, 2016

கீழில் திருவாய் மொழியில் அவனை சாஷாத்கரித்து ப்ரீதராய் பாஹ்ய சம்ச்லேஷத்தில் பிரவ்ருத்தராய் அப்போதே
கண்ணாலே காணுதல் அணைத்தல் வார்த்தை சொல்லக் கேட்டல் செய்யப் பெறாமையாலே அவசன்னராய்
-லௌகிக பதார்த்த அனுசந்தானத்தாலே ஹிருதயத்தை அந்நிய பரமாக்கித் தரிக்க வேணும் என்று அவற்றை அனுசந்திக்கப் புக
-அவையும் அவனுக்கு ஸ்மாரகமாக-அவற்றால் நோவு பட்டவர் தம்முடைய தசையை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் என்றவர் தம் பிராண ரக்ஷணத்துக்கு ஒரு திர்யக்க்கின் காலிலே விழுகிறார் இ றே
அடியேன் உய்ந்தவாறே என்றவர் ஸ்மாரகங்கள் கையிலே நோவு படுவாராய் விழுந்தது இ றே –
கலந்து பிரிந்து நோவு படுவாள் ஒரு பிராட்டி அவன் வரக் காணாமையாலே லௌகிக பதார்த்த தர்சனத்தாலே
போது போக்கைக்காக தன்னுடைய உத்யாநவநத்திலே புக்கு போக ப்ரவணமாய் மிதுனமாய் இருக்கிற பக்ஷிகளினுடைய
வடிவுகளையும் ப்ரவ்ருத்திகளையும் பேச்சுக்களையும் கண்டு இவை அவனோட்டை கலவிக்கும் வடிவுக்கும் பேச்சுக்கும் ஸ்மாரகமாய் நலிய
இவற்றோடு நம்மோடு பகை பெரிதன்று -அவன் வரவிட்டவை யாக வேணும் -அவன் தான் நம்மை முடிக்கைக்கு உபாயம்
விஸ்லேஷம் என்று பார்த்து -அது தான் சம்ச்லேஷம் ஒழிய க் கூடாமையாலே அதுக்காக கலந்து பிரிந்தான்
நாம் அவ்வளவிலும் முடியாமையாலே சென்றற்ற சமயத்திலே ஸ்மாரகங்களை முன்னிட இவள் முடியும் என்று பார்த்து
அவன் வரக் காட்ட வந்தன என்று கொண்டு -என்னை முடிக்கைக்கு -முசல் வேட்டைக்கு அரணைப் பண்ணினால் போலே
இத்தனை பாரிப்பு வேணுமோ என்று நொந்து –
கத் யந்தரம் இல்லாமையால் அவன் குணங்களையே அனுசந்தித்து தரித்தாளாய் தலைக் கட்டுகிறது –
நம்மைப் பார்த்தாலே இழவேயாய் இருந்ததே யாகிலும் அவனைப் பார்த்தால் இழக்க வேண்டாத படி இறே அவன் குணங்கள் இருப்பது -எம்பெருமானார் உகந்த திருவாய்மொழி என்பர் –

————————————————————–

சில குயில் பேடைகளைக் குறித்து என்னை முடிக்கைக்கு இத்தனை பாரிப்பு வேணுமோ என்கிறாள் –

இன்னுயிர்ச்  சேவலும் நீரும் கூவிக் கொண்டு
இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின்
குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரானை
நீர் வரக் கூவகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும்
இத்தனை வேண்டுமோ–9-5-1-

இன்னுயிர்ச் சேவலும் -நற்சீவனான சேவலும் பஹிச்சர பிராணனைப் போலே கண் வட்டத்தில் வர்த்தியா நிற்கை -பிரிந்து படுகொலை யடிக்கும் சேவலைப் போல் அன்றிக்கே -பேடைக்கு தாரகமாய் இருக்கும் சேவலும் உண்டாவதே –
நீரும்-சேவலுக்கு இன்னுயிரான நீரும் –
கூவிக் கொண்டு-சேர்த்தியைக் காட்டி நலிகிறதுக்கு மேலே பேச்சாலும் நலிய வேணுமோ –சம்ச்லேஷ அர்த்தமாக பரஸ்பரம் பேரைச் சொல்லி அழைத்துக் கொண்டு –
இங்கு எத்தனை-இங்கு அத்தனைக்கு விஷயம் உண்டோ -பிரிவால் சென்றற்ற இதில் உங்கள் பாரிப்பு விஷயம் உண்டோ -அன்றிக்கே –
எத்தனை-என்னுயிர் நோவ மிழற்றேன்மின்–பிரிவால் தளர்ந்து இருக்கிற என்னுயிர் நோவ மிகவும் பிரணய கூஜத்தை பண்ணாதே கொள்ளுங்கோள் –உயிர் நோவ என்கையாலே உடல் சென்றற்றது என்கை -ராமசரம் போலே உயிரிலே புக்கு வியாபாரிக்கு வற்றாயிற்று இந்த த்வனி -என்னுயிர்-என்கையாலே இவற்றின் பேச்சுக்கு கேட்டு தளிர்க்கும் அவனில் தனக்கு உண்டான வ்யாவ்ருத்தி –மிழற்றுகை யாவது -நிரம்பா மென் சொல் -சம்ச்லேஷ தசையில் சொல்லத் தொடங்கி தலைக் காட்டாத பேச்சுக்கள் –
நோவ மிழற்றேன் மின் -இப்பேச்சைக் கேட்க்கில் இவள் முடியும் என்று அறிந்து பேசாது இருக்க வேண்டாவோ -ஸ்த்ரீ வதம் என்று அறிந்தால் மீள வேண்டாவோ –
குயில் பேடைகாள்-விஸாஜீதியர் செய்யுமத்தை நீங்களும் செய்ய வேணுமோ -சேவலைக் கொண்டு கார்யம் கொள்ள நினைத்தாலும் பேடையின் காலை அன்றோ பிடிப்பது –
என்னுயிர்க் கண்ணபிரானை-நீர் வரக் கூவகிலீர்-எங்களை  காதுகரைச்  சொல்லுமா போலே சொல்லுகிறது என் என்று சொல்லுகிறனவாகக் கொண்டு -எனக்கு தாரகனான கிருஷ்ணனை வரக் கூவு கிறிலி கோள் -தாரகங்கள் வ்யக்தி தோறும் வ்யவஸ்திதமாய் இ றே இருப்பது -திர்யக்குகளுக்கு த்ருணம் -மநுஷ்யர்களுக்குச் சோறு -தேவர்களுக்கு அமிர்தம் -இவளுக்கு கிருஷ்ணன் –
கண்ண பிரான் -பரார்த்தமாக தன்னை யாக்கி வைக்குமவன் –
நீர் -அந்வயத்தில் ரசம் அறியும் நீங்கள் வ்யாதிரேகத்தில் நோவு அறிய வேண்டாவோ –
வரக் கூவு கிறி லீர் -நீங்கள் அவன் முன்னே சென்று த்வனித்திகோள் ஆகில் அத்தாலே என் செல்லாமையை நினைத்து வாரானோ -அது செய்கிறிலிகோள் -என்னை நலிகைக்கு வேண்டுவது செய்கிறிகோள் அத்தனை -நானும் அவனும் சேருகைக்கு வேண்டுவது செய்கிறிலிகோள் -அழிக்க வல்லவை சேர்க்கவும் வற்று என்று இருக்கிறாள் -அவன் கார்யம் இவற்றின் இவற்றின் கையது என்று இருக்கிறாள் -கடகரானவர்கள் காதுகரே யாகிலும் ரக்ஷகர் தென்று இ றே இருப்பது –
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும்-இத்தனை வேண்டுமோ–என்னையும் அவனையும் சேர்க்கிறிலி கோள் -அல்லாத பின்பு இனி என்னை முடிக்கையாய் இருந்ததே இ றே உங்களுக்கு கருத்து -அதுக்கு இப்பாரிப்பு எல்லாம் வேணுமோ -பண்டே சென்றற்ற என்னுயிரை வாங்கி அவன் கையிலே கொடுக்கையில் கருத்து -அதுக்கு இது எல்லாம் வேணுமோ -நீங்கள் சேர இருக்கையும் -கணக்கையும் அந்யோன்யம் நாம கிரஹணம் பண்ணுகையும் -ப்ரணயக்கத்தவ த்வனியும் இது எல்லாம் வேணுமோ -நொந்தாரை ஜீவிப்ப்பிக்கை யன்றோ அரியது-முடிக்கையில் பணி யுண்டோ –

————————————————————————-

உங்கள் சேவலும் நீங்களுமாய் கொண்டு ப்ரணய கூஜிதங்களாலே என்னை நலியாதே கொள்ளுங்கோள்-என்று சில அன்றில் பேடைகளை தய நீயமாக இரக்கிறாள்  –

இத்தனை  வேண்டுவது அன்று அந்தோ
அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் உன் சேவலும்
கரைந்து ஏங்குதீர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன்
அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர்
அவன் கையதே–9-5-2-

இத்தனை வேண்டுவது அன்று-என்னை முடிக்கைக்கு இத்தனை வேண்டுவது இல்லை -குயில்களைப் பார்த்து -இத்தனை வேண்டுமோ என்னா நிற்க -இடையிலே அன்றில்களின் உடைய த்வனி நலிய -இத்தனை வேண்டா -என்ன வேண்டும்படி இ றே இவள் தசை -குயில்களினுடைய த்வனியிலே பணி போந்து செல்லா நிற்க நடுவே ஒளி யம்பு விடுவாரைப் போலே அன்றில்கள் தவனிக்க -புரிந்து பார்த்து –இவை யமையாதோ -நீங்களும் வேணுமோ -என்கிறாள் இ றே -இப்படி சொன்ன இடத்திலும் மேன்மேல் என தவனிக்க தொடங்கிற்று —அந்தோ—அதிலே தான் சோர்ந்து பரவச காத்ரையாய்– ஐயோ என்கிறாள் –
அன்றில் பேடைகாள்–குயில் பேடைகளில் காட்டில் உங்கள் பக்கல் ஒரு வாசி கண்டிலோம் -அவற்றில் காட்டில் வ்யதிரேகத்தில் ஆற்றாமை மிக்கு இ றே இவற்றுக்கு இருப்பது –உங்கள் சேவலில் காட்டிலும் ஒரு வாசி கண்டிலோம் -குயில் பேடைகளில் காட்டிலும் ஒரு வாசி கண்டிலோம் -நலிவுக்கு விஸாஜாதீயரிலும் அவ்வருகாய் சஜாதீயரிலும் அவ்வருகாய் இருந்தி கோள் -நாங்கள் என் செய் தோம் என்ன
எத்தனை நீரும் உன் சேவலும்–கரைந்து ஏங்குதீர்–நீரும் -சேவலினுடைய கருத்து அறிந்து பரிமாறுகிற நீரும் –
நும் சேவலும் – உங்கள்  கருத்து அறிந்து பரிமாறுகிற உங்கள் சேவலும்
எத்தனை கரைந்து ஏங்குதிர் -ப்ரணயத்தில் இழுந்தமை தோற்ற பரிமாறா நின்றி கோள் -இருவர் கூடக் கலக்கும் சமயமோ இது -என்னை நலிகைக்கு அன்றோ கலந்தி கோள் அத்தனை – கலந்தால் தான் உங்கள் தசை வாய் தோற்ற விட வேணுமோ –உங்களை அழிய மாறி அன்றோ என்னை நலிகிறது –
வித்தகன் கோவிந்தன்-அவன் ஒரு க்ஷண காலம் தாழ்க்கும் அளவில் எங்களை இட்டு அவன் நலிவிக்கிறவனாகச் சொல்ல வேணுமோ -என்ன அவன் படிகளை என் வாயிலே கேளுங்கோள் என்கிறாள் –வித்தகன் -விஸ்மயநீயன்-இப்போது அனுகூலர்க்கு அரிய வித்தகனாய் இருந்தவன் —கோவிந்தன் -சர்வ ரக்ஷகன் -இத்தால் ரக்ஷகராவாரைப் போலே இருந்து பாதகனாவன் -ரக்ஷகன் என்று பற்றப் போகாது -பாதகன் என்று விடப் போகாது
மெய்யன்-அல்லன் ஒருவர்க்கும்   -பரம பிரணயி -சர்வ ரக்ஷகன் என்று இருக்கிற உங்களுக்கும் பொய்யே பலிப்பது –ராமோ த்விர் நபி பாஷதே –நத்யஜேயம்–ஏதம் விரதம் மம -என்னும் ராமாவதாரத்தை போலே இ றே நீங்கள் நினைத்து இருப்பது –கபந்தனுக்கும் மெய் சொல்லி -திருவடிக்கு மெய் சொல்லுமவன் அல்லனே -ஆயுதம் எடேன் என்று சொல்லி ஆயுதம் எடுக்கையும் பகலை இரவாக்குகையும் இ றே இவ்வாதாரத்தில் க்ருத்யம் –
இப்படிச் சொல்லவும் அவை விடாதே கூவிற்றன -முடிந்தேன் ஆகாதே -என்கிறாள் –
அத்தனை ஆம் இனி-இனி அத்தனை யாகாதே என்கிறாள் –
என் உயிர்-அவன் கையதே–என்னுடைய பிராணன் அவன் கைப் பட்டது -அவன் நினைவேயாய்த் தலைக் கட்டின பின்பு என்னுடைய பிராண ரக்ஷணத்துக்கு உங்கள் கால் பிடிக்க வேண்டா வாகாதே –

————————————————————————

அற நோவு பட்ட என்னை நலியாதே கொள்ளுங்கோள்என்று அன்றில் பேடைகளை திரியவும் மீளவும் இரக்கிறாள்-

அவன்  கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3-

அவன் கையதே என் ஆர் உயிர் -என்னுடைய பிராணன் அவன் கையதே -மிதுனமானால் பிராணன்கள் மாறாடி அன்றோ இருப்பது -உங்களுக்கு இது அவ்யுத்பன்னமோ -அஸ்யா தேவ்யா-
அன்றில் பேடைகாள்-வியதிரேகத்தில் ஆற்றாமையை அறியும் நீங்கள் இதில் இழியாது ஒழிய வேண்டாவோ -உன்னை நலிகிறோமோ -எங்களுக்கு கலவி ஸ்வபாவம் அன்றோ
எவன் சொல்லி -ப்ரணய தசையில் உள்ளனவாய் எனக்கு துஸ் ஸஹமான சில யுக்திகளைப் பண்ணி -அவை சொன்ன பாசுரம் தன் வாயால் சொல்ல மாட்டுகிறிலள்
நீர் குடைந்து -ஒன்றிலே ஓன்று அவகாஹித்து
ஆடுதிர் -பரிமாறா நின்றி கோள்-ஆட்டம் -நடை யாட்டம்
புடை சூழவே-சுற்றியே சஞ்சரியா நின்றி கோளே -அடை மதிள் படுத்துகைக்கு சுற்றிலே விட்டுக் கொண்டு இருப்பாரைப் போலே -செவியைப் புதைத்து பிழைப்பேனோ -கண்ணைப் புதைத்து பிழைப்பேனோ –
தவம் செய்தில்லா வினையாட்டியேன் -என்னை முடிக்க நினைத்து வந்த உங்களுக்கு -என் பிராணனை இங்கே வைத்து தருகைக்கு ஈடான பாக்யத்தை பண்ணப் பெற்றிலேன் -கபோதம் போலே உங்களுக்கு உபகரித்து உங்கள் பிரியம் காணப் பெறாத பாப கர்மா ஆனேன் -அவனைப் போலே பிரிவுக்கு இளையாத படி பாக்யத்தை பண்ணப் பெற்றிலேன் -என்று பிள்ளான் நிர்வாஹம் –
உயிர் இங்கு உண்டோ-என் உயிர் நோவ மிழற்றின அன்றே அங்கே போய்த்தே என் பிராணன் -என் பக்கல் உண்டோ என்று விளக்கு ஏற்றி காட்டுவரைப் போலே இருக்கிறது –
எவன் சொல்லி நிற்றும் -எத்தைச் சொல்லி தரிப்போம் -உங்கள் ஒருப்பாடு இதுவான பின்பு தரிக்க விரகு உண்டோ
நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–பிரணய பரவசமான உங்களுடைய த்வனியைக் கேட்டும் -பிரிவாற்றாமை தரிக்கிலும் உங்கள் த்வனிக்கு பிழைக்க வல்லோமோ -உங்கள் த்வனி கேட்டாரை முடிக்குமதன்றோ -உங்கள் செவியைப் புதைத்தோ நீங்கள் கூப்பிடுவது -நிஸ் வனம் சக்ர வாகாநாம் நிஸம்ய ஸஹ சாரிணாம் புண்டரீக விசாலாஷீ கதமேஷா பவிஷ்யதி –

——————————————————————-

சில  மயில்களைக்  குறித்து நீங்கள் உச்சமாக கூவி என்னை நலியாதே கொள்ளுங்கோள் என்கிறாள் –

கூக்குரல்  கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–9-5-4-

கூக்குரல் கேட்டும் –நீங்கள் கூவுகிற த்வனியைக் கேட்டு வைத்தும் -இவற்றினுடைய த்வனி செல்லாத இடம் இல்லை என்று இருக்கிறாள் –
நம் கண்ணன்-வட யஷி பிரசித்தி போலே இது ஒரு யுண்டாக்கி வைப்பதே –
மாயன் -ஆச்சர்ய சீலன் -பிரிந்தால் தரிக்க ஒண்ணாத படி கிட்டின போது கையைக் காலைப் பிடித்து தாழ நின்று பரிமாறுமவன் –
வெளிப்படான்-இவள் பிழையாள் -என்று தோற்றுகிறிலன் -தாஸாம் ஆவீரபூத் -என்னுமவன் கிடீர் -ருஷியும் ஆவீரபூத் -என்றான் -இவளும் வெளிப்பாடான என்றாள்-கை கழிய போகான் -மறைந்து நின்று தோற்றும் என்று இருக்கிறாள் –
மேற் கிளை கொள்ளேன் மின்-மேலான கிளை உச்சைஸ்ஸான த்வனி -ஜாதி உசிதமாய் ப்ரணய ப்ரவ்ருத்தமான உச்ச சப்தத்தை பண்ணாதே கொள்ளுங்கோள் -இவள் பிரிவால் நோவு பட்ட தசையில் உயர்ந்த தானத்தில் தவனிக்கத் தொடங்கிற்று –
நீரும் சேவலும்-ஓன்று தொடங்கின தானத்தில் ஸஹ சரமும் தொடங்கி குறையும் கூட முடியா நின்றது –
கோழி காள்-மயில்களை சொல்கிறது –
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே-உன்னுடைய சர்வ கரணங்களையும் அபஹரிக்க வந்த நாங்கள் நீ நிஷேதித்தவாறே தவிருவுதுமோ-என்ன அதுவாகில் -அவையும் அவன் பக்கலின-அதுக்கும் அங்கே செல்லுங்கோள் -அங்கே போய் இவை த்வனிக்க அவனுக்குத் தரிப்பரிதாய் வந்த முகம் காட்டும் என்னும் நினைவாலே சொல்லுகிறாள் -ஆகில் இப்பேச்சும் சேஷ்டிதமும் கூடின படி என் என்ன
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–வியசன வாசனையால் தேஹமும் பிராணனும் நடுவே நின்று க்லேசப்படுகிற இத்தனை -பிடித்து விட்ட கொம்பு போலே வாசனையே உள்ளது -நோவு பட வேண்டுவது யுண்டு -உங்களுக்கு நலிகைக்கு ஆஸ்ரயம் இல்லை –

————————————————————————

தன்னினவாய் இருந்து நலிகிற பூவைகளைக் குறித்து -அவன் தான் என்னை முடிக்கைக்கு அழகிதான நல்  விரகு பார்த்தான் -உங்களுக்கு இங்கே விஷயம் இல்லை -என்கிறாள் –

அந்தரம்  நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5-

அந்தரம் நின்று உழல்கின்ற--உங்களுக்கு இங்கு நலிகைக்கு விஷயம் இன்றிக்கே இருக்க நடுவே நின்று வியர்த்தமே க்லேசப் படிகிறி கோள் -இத்தனை –
யானுடைப் பூவைகாள்-என்னுடைய பூவை காள்-சர்வ சாதாரணராய் இருப்பார் செய்யுமத்தை -சிலருக்கு ஸ்வம்மாய்ப் இருப்பார் செய்யக் கடவதோ -ஸ்வ தந்த்ரன் செய்யுமத்தை பரதந்த்ரமான நீங்களும் செய்யக் கடவதோ -நான் எனக்கு என்ன யமையும் ஆகாதே பாதகம் ஆகைக்கு -அவனும் என்னுடையவனாகை இ றே நலிந்து -கலந்தார் செய்யக் கடவத்தை வயிற்றில் பிறந்தார் செய்யக் கடவதோ –
நும் திறத்து ஏதும் இடை இல்லை-உங்கள் இடையாட்டாத்தில் என்னை நலிகைக்கு ஓர் அவகாசம் இல்லை -உங்கள் பாரிப்புக்கு என் பக்கல் ஓர் அவகாசம் இல்லை என்றுமாம் –
குழறேன்மினோ-அநஷரரசமான பேச்சை காட்டி முடியாதே கொள்ளுங்கோள் –உருவின வாள் உறையில் விடுங்கோள் -என்னுமா போலே -கெடுவிகோள் உங்கள் வாயைப் புதையுங்கோள் -என்கிறாள் –
இந்திர ஞாலங்கள் காட்டி-கண்டார்க்கு விட ஒண்ணாத வடிவையும் -சீலத்தையும் -சேஷ்டிதத்தையும் காட்டி -இவை நிலை நில்லாமையாலே பொய் காண் -என்கிறாள் –
இவ் ஏழ் உலகும் கொண்ட-பிறர் உடைமை கொள்ளும் இடத்தில் சேஷியாத படி கொள்ளுமவன் –
நம் திரு மார்வன் -பிரணயித்தவத்தால் வந்த ப்ரஸித்தியை எனக்கு காட்டி -பிராட்டியோடு பழகிற்றும் பிரணயியாய் அன்று -அத்தைக் காட்டி கண்டாரை அகப்படுத்திக் கொள்ளுகைக்காக -சில பொய்களைக் காட்டி மஹா பலி பக்கலிலே நின்றும் பூமியைக் கொண்டால் போலே கலந்து பரிமாறுகிறான் என்று தோற்றும் படி சில பொய்களைச் செய்து விஸ்லேஷிக்கை -என்னை முடிக்கைக்கு உபாயம் என்றுமாம் -நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–நம்மை முடிக்கைக்கு நல் விரகு தானே பார்த்தான் -உங்களுக்கு இங்கு அவகாசம் இல்லை -சர்வ சக்தியானவன் -உத்தியோகித்த கார்யத்திலே குறை கிடப்பதாய் அதிலே நீங்கள் சஹகரிக்கிறி கோளோ-நம்மை முடிக்க பார்த்த பார்வை அழகிதாக பார்த்தான் என்று தன்னிலே நொந்து சொல்லுகிறாள் -என்றுமாம் –

———————————————————————-

-தன் தசையை அறியாதே திரு நாமத்தை சொல்லுகிற கிளியைக்  குறித்து எனக்கு அஸஹ்யமான தசையில் சொல்லவோ உன்னை வளர்த்தது –  என்று அத்தை  நிவர்த்திப்பிக்கிறாள் –

நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6-

நன்கு எண்ணி -திரு நாமம் சாத்மிக்கும் தசையை அறிந்து சொல்லவும் -அஸஹ்யமான தசையில் தவிரவும் அன்றோ உன்னை வளர்த்தது –
நான் வளர்த்த-ஏக புத்ரைகளைப் போலே யாயத்து வளர்த்தது -நான் ஒன்றை ஆதரிக்க வமையாகாதே அந்யதாவாகைக்கு–அவனும் கிளியோபாதி பவ்யனாய் இ றே இருப்பது -சிறு கிளிப் பைதலே-சிறுமை -பருவம் -பைதல் -வயஸூ க்குத்தக்க பாகமும் இன்றிக்கே இருக்கை -உன் பசற்றனம் இ றே நலிகைக்கு அடி –
இன் குரல்–கூரிய வேல் -என்னுமா போலே –
நீ மிழற்றேல் -நிரம்பா மென் சொல்லாலே என்னை முடியாதே கொள் -மாத்ரு வதத்திலேயும் ப்ரவர்த்திப்பார் உண்டோ –
என் ஆர் உயிர்க் காகுத்தன்-வ்யதிரேகத்தில் தரிக்க அரிதாம் படி இ றே கிட்டின போது பரிமாறின படி -தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாக -என்று இ றே இவர் இருப்பது –
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் -உன்னுடைய சிவந்த வாய் போலே இருக்கும் வாயை யுடையவன் -உபமானத்தைச் சொல்லி சேர்த்து விடுமது ஒழிய உபமேயம் தன்னை பேச முடியாது
கண்ணன் கை காலினன்-உன்னைப் போலே சிவந்த கண்ணையும் கையையும் திருவடிகளையும் உடையவனே –
நின் பசுஞ்சாம நிறத்தன்–உன்னுடைய குளிர்ந்த ஸ்யாமமான நிறத்தை யுடையவன் –பசுஞ்சாமம் -ஸ்யாமமாய் -எரித்து இருக்கை யன்றிக்கே குளிர்ந்து இருக்கை -பச்சை நிறம் என்னவுமாம் -ஓர் உடம்பில் இத்தனை பகை தேடி வைக்கலாமோ
கூட்டு உண்டு நீங்கினான்–கலந்து என் பிரக்ருதியை அறிந்து வைத்து பிரிந்தான் -அவன் கூட இருந்தால் அன்றோ உன் படிகள் அனுகூலமாய் இருப்பது -தனி இருப்பில் நலிவார் ராவணாதிகள் அன்றோ -அனுகூலர் நலிவாரோ-

———————————————————————–

அவன் வடிவுக்கு போலியான மேக மாலையைக் கண்டு உங்கள் வடிவைக் காட்டி என்னை முடியாதே கொள்ளுங்கோள் -என்கிறாள் –

கூட்டுண்டு  நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-

கூட்டுண்டு நீங்கிய-ஏக தத்வம் என்னும் படி கலந்து பிரிந்த பின்பு அவனுடைய அவயவ சோபை இருந்த படி என்னுதல் -இவளோடு கலக்கையால் வந்த சோபை என்னுதல் –
கோலத் தாமரைக் கண் செவ்வாய்–தர்ச நீயமான தாமரை போலே இருக்கிற கண்ணையும் சிவந்த வாயையும் உடையவனாய் –
வாட்டமில் என் கரு மாணிக்கம்-பிரிந்த பின்பும் மறக்க ஒண்ணாத படி ஸ்மாரகமாய் நலிகிற நீல ரத்னம் போலே இருக்கிற நிறத்தை யுடையனாய் –கலந்த போதை வடிவில் பிரிந்த செவ்வி பிரிந்த பின்பும் அப்படியே இருக்கிற படியைச் சொல்லிற்று ஆகவுமாம் –
இத்தலையை வெறும் தரை ஆக்கின பின்பு நிறம் இரட்டித்த படி -நைவ தம்சான் ந மசகான்-என்று அவன் இருக்க அரை க்ஷணம் தாழ்த்தான் என்னா இவ்வார்த்தையைச் சொல்லுகிறாள் இ றே
கண்ணன் மாயன் போல்-ஆச்சர்ய பூதனான கிருஷ்ணனைப் போலே -கலந்த போது காலைக் கையைப் பிடித்து பரிமாறி பவ்யனாய் இருந்த படி
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்காள்-வளைத்த வில்லோடு கூடி மின்னா நின்றுள்ள மேக சமூகங்காள் -கௌஸ்துப ஸ்தானீயமாய் இ றே மின் –
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–ம்ருத்யு சத்ருசமான உங்கள் வடிவைக் காட்டாதே கொள்ளுங்கோ-அவ்வடிவைக்ள் கொண்டு அகல இருந்தவனோடு உங்களோடு வாசி யற்று இருந்ததீ -அது என் என்னில்
என் உயிர்க்கு அது காலனே–-பண்டே விரகம் தின்ற என்னுடைய ப்ராணனுக்கு ம்ருத்யு –-குழாங்கள் -என்று வைத்து -அது -என்கிறது -காண மாட்டாமையாலே முகம் மாறிச் சொல்லுகிறாள் –

—————————————————————

சில குயில்களைக் குறித்து -வேண்டா என்று இரந்து பிரார்த்திக்க மேன்மேல் திரு நாமத்தைச் சொல்லி நலிந்து கோள்-உங்களை வளர்த்த பிரயோஜனம் பெற்றேன் இ றே என்று இன்னாதாகிறாள் –

உயிர்க்கு  அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8-

உயிர்க்கு அது காலன் என்று-தோல் புரையே போமது யன்று –அது -என்கிறாள் -தன் வாயால் சொல்ல மாட்டாமையாலே -காலன் என்று-நலிகை அன்றிக்கே முடிக்கும் என்று -உம்மை -நீங்களே இரந்து என் கார்யம் செய்யும் உங்களை
யான் -உங்களுக்கு ஜனனியாய் மறக்க ஒண்ணாத நான் –
இரந்தேற்கு-உங்களை நியமித்தேனோ –என் செல்லாமையாலே சரணம் புகுந்த எனக்கு
நீர்-நியாமரான நீங்கள் -சரணாகத காதுகள் ஆனிர் கோள்
குயிற் பைதல் காள்-உங்கள் பால்யம் என் பிராணனோடு போய்த்திறே -பருவம் நிரம்பாமையிலும் தாய் வாசி அறிய வேண்டாவோ -நாங்கள் செய்தது என் என்ன –
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்-தீரா மாற்றாலே நெஞ்சைப் புண் படுத்தி வைக்கும் கிருஷ்ணன் திரு நாமங்களையே அவ்யக்தமாகச் சொல்லி முடித்தி கோள் -ம்ருத சஞ்சீவனமான ராம குணங்களை ஒரு காள் சொல்லலாகாதோ
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்-பயிற்றிய -தயிரும் பழம் சோறும் -பாலும் வெஞ்சோறும் அவ்வவ காலங்களுக்கு உசிதமாகத் தந்து திரு நாமங்களை கற்பித்ததற்கு பிரதியுபகாரம் பண்ணினி கோள்
நல் வளம் ஊட்டினீர் -நல்ல சம்பத்தை புஜிப்பித்தி கோள் -நான் காலம் தோறும் உங்களுடைய ரக்ஷணம் பண்ணிப் போந்தேன் -நீங்களும் இவ்விடங்களில் நலிந்து போந்தி கோளே
பண்பு உடையீரே –பிராப்தியும் பவ்யத்தையும் கிடக்க சால நீர்மை யுடையீராய் இருந்தி கோள் -ரக்ஷக விஷயத்தில் நிர்த்தயராய் இருந்தி கோள் -பண்பு -குணம்

——————————————————————

மதுபான மத்தமாய்க் கொண்டு பாடுகின்றன சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து உங்களுடைய த்வனிகள் துஸ் சஹமாய் இருந்தன -நீங்கள் பாடாதே கொள்ளுங்கோள் என்கிறாள் – –

பண்புடை  வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்-9-5-9-

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
நீர்மையை யுடைய வண்டோடே கூடின தும்பிகாள் -பண் மிக்க ஆளத்தி வையாதே கொள்ளுங்கோள் –பண்புரை என்ற பாடமான போது பண்பான உரையாய் முரலுகையைச் சொல்லுகிறது -பண்ணை முரலா நின்ற -என்றுமாம்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
புண்ணின் விவரத்திலே வேலைக் கொண்டு குத்தாப் போலே இரா நின்றது உங்கள் இனிய த்வனி -கீழில் பதார்த்தங்கள் எல்லாம் கூடப் புண் படுத்தின -அதிலே நலிகின்றன இவை
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்-கண் பெரும் கண்ணன்
குளிர்ந்த பெரிய நீரை யுடைய பொய்கையிலே தாமரைப் பூ அலர்ந்தால் போலே யாய் அவ்வளவு இன்றிக்கே பெரிய கண்களை யுடைய கிருஷ்ணன்
நம் ஆவி உண்டு எழ நண்ணினான்–அவ் அழகைக் காட்டி என்னை முடித்துப் பிரிந்து போனான் –

—————————————————————–

திரள இருக்கிற நாரைக் குழாங்கள் தன்னை முடிக்க மந்திரிக்கின்றனவாகக் கொண்டு -நான் முடிந்தேன் -இனி நீங்கள் திரண்டு பிரயோஜனம் என் -என்கிறாள்

எழ  நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-9-5-10-

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
போக்கிலே ஒருப்பட்டு நாமும் நம் வான நாடனொடு ஒன்றினோம் -கடலைக் குளப்படியிலே மடுத்தால் போலே தன்னை இலக்காக்கி இத்தலையை வெறும் தறையாக்கி தன்னைக் கொண்டு அகன்றான் -நாமும் அயர்வறும் அமரர்கள் அதிபதியோடே ஒரு மிடறு ஆனோம் -நித்ய ஸூ ரிகளும் அவனுமாய் இருந்து நம்மை முடிக்க எண்ணின் படியே நாமும் இசைந்தோம் -அவன் முடிக்க நினைக்க நாம் ஜீவிக்க எண்ணி இடக்கைப் புரி முறுக்குகை தவிர்ந்து நாமும் முடிகையிலே துணிந்தோம் -நித்ய ஸூரிகளும் ச்சந்தா அனுவர்த்திகள் ஆகையால் அவன் கருத்தே கருத்தாய் இருப்பார்கள் இ றே –
பழன நல் நாரைக் குழாங்கள் காள்-நீர் நிலங்களிலே வர்த்திப்பதாய் -தொடங்கின கார்யம் முடிக்க வல்ல சாமர்த்தியத்தை யுடைத்தான நாரைக் குழாங்கள்
பயின்று என் இனி-திரண்டு பிரயோஜனம் என் -நான் அவன் கருத்தை பின் செல்ல நினையாத அன்று அன்றோ உங்கள் மந்திரத்துக்கு பிரயோஜனம் உள்ளது -முதலிகள் திரள் திரளாக இருந்து பெருமாளையும் பிராட்டியையும் சேர்க்கைக்கு விரகு பார்த்தால் போலே -இவை திரள் திரளாக இருந்து தன்னையும் அவனையும் பிரிக்கைக்கு விசாரிக்கிறன என்று இருக்கிறாள் -அவன் வேண்டுவரைச் சேர்க்கையும் வேண்டாதாரை முடிக்கையும் திர்யக்குகள் பணி என்று இருக்கும் இ றே -ராமாவதார வாசனையால் –
வான நாடன் -நாரைக் குழாங்கள்-என்கையாலே உபய விபூதியும் வேணுமோ ஒரு அபலையை முடிக்கைக்கு
இழை நல்ல ஆக்கையும் -ஆபரணத்தாலே அழகிதான சரீரம் என்னுதல் -ஆபரணம் பூண்டால் போலே இருக்கிற வி லக்ஷண சரீரம் என்னுதல்
பையவே புயக்கு அற்றது-க்ரமேண பசை அற்றது என்னுதல் –க்ரமத்தில் போகத் தொடங்கிற்று என்னுதல் –புயத்தல் என்று போதல் ஆதல் –புயக்கு-என்று ஆகர்ஷகம் ஆதல் –
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே—ஈஸ்வர விபூதி சம்ருத்தமாக வேணும் என்கிறாள் -நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் -இ றே -தாம் தாம் முடிய நினைப்பார் நாடு வாழ்க என்பாரைப் போலே -சொல்லுகிறாள் என்று ஆளவந்தார் நிர்வாஹம் -நான் பட்ட பாடு நாடு படாது ஒழிய வேணும் -என்று எம்பெருமானார் –
நான் முடிய என்னார்த்தி காணாதே லோகம் அடைய பிழைக்கும் -என்று பட்டர் –

———————————————————

நிகமத்தில் இத்திருவாய் மொழியினுடைய நீர்மை ஹ்ருதயத்தில் படில் ஆரேனுமாகில் தரியார் -என்கிறார்

இன்பம்  தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே-9-5-11-

இன்பம் – எங்கும் தழைத்த-எங்கும் தழைத்த இன்பம் -/ தலைப் பெய்து-லோகம் எல்லாம் வெள்ளமிட்ட நிரதிசய ப்ரீதியை யுடையராய்க் கொண்டு
பல் ஊழிக்குத்-தன் புகழ் ஏத்தத் –கால தத்வம் உள்ளதனையும் தன் குணங்களை ஏத்தும் படி
தனக்கு அருள் செய்த-சம்சாரிகளில் அந்நிய தமரானவர்க்கு மயர்வற மதிநலம் அருள் செய்த படி –
மாயனைத்-சம்சாரிகள் நடுவே என்னை ஒருவனையும் விசேஷ கடாக்ஷம் பண்ணின ஆச்சர்ய பூதனை -அங்கனம் அன்றிக்கே –இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த –தன் புகழை -பல் ஊழிக்குத்- தனக்கு அருள் செய்த மாயனைத்-அனுபவிப்பார்க்கு நிரதிசய ஆனந்தத்தை விளைப்பதாய் -எங்கும் ஒக்கப் பரம்பின தன் கல்யாண குணங்களை கால தத்வம் உள்ளதனையும் நான் அனுபவிக்கும் படி பண்ணினான் -என்றுமாம் -இவர் குண ஞானத்தால் தரித்தார் -என்கிறது –தன் புகழ் ஏத்த தனக்கு அருள் செய்த –என்றத்தைக் கொண்டு இ றே -நித்ய ஸூ ரிகள் அனுபவத்தையும் தமக்கு அவர்களோபாதி பிராப்தியை யும் அனுசந்தித்து நோவு பட்டார் -என்றும் ஓக்க இழந்து இருக்கிற சம்சாரிகள் படியைப் பார்த்த வாறே அவர்களில் அவ்விருப்பு தானே பேறாய்த் தோற்றிற்று-உபாயரில் வ்யாவ்ருத்தி யுண்டு இ றே இவர்க்கு
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை-சடகோபன் சொல் -என்று பரோக்ஷ நிர்த்தேசம் ஆகையால் தனக்கு அருள் செய்த என்னலாய் இ றே -வால்மீகீர் பகவான் ருஷி -என்னுமா போலே
ஒன்பதோடு ஒன்றுக்கும்- மூ வுலகும் உருகுமே–கீழ் ஒன்பது பாட்டிலும் உண்டான வியஸனம் ஸூ கம் என்னலாம் படி வியஸனம் மிக்கு இருந்த பத்தாம் பாட்டு -இவற்றை யுடைய இத்திருவாய் மொழி
-ஸ்மாரக பதார்த்தங்களாலே ஜீவனத்தில் நசையோடே நோவு பட்ட ஒன்பது பாட்டோடு ஜீவனத்தில் நசை அற்ற ஒரு பாட்டுக்கும் விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி இன்றிக்கே சிதிலராவார் –
கீழே நம் ஆர்த்த த்வனி கேட்டு நாட்டுக்கு நோவு பட வேண்டா -என்றார் -பின்னையும் நாட்டுக்கு ஸைதில்யமே சேஷித்து விட்டது –

—————————————————————-

கந்தாடை     அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –9-5–

October 22, 2016

கீழில் திருவாய் மொழியில் அவனை சாஷாத்கரித்து ப்ரீதராய் பாஹ்ய சம்ச்லேஷத்தில் பிரவ்ருத்தராய் அப்போதே
கண்ணாலே காணுதல் அணைத்தல் வார்த்தை சொல்லக் கேட்டல் செய்யப் பெறாமையாலே அவசன்னராய்
-லௌகிக பதார்த்த அனுசந்தானத்தாலே ஹிருதயத்தை அந்நிய பரமாக்கித் தரிக்க வேணும் என்று அவற்றை அனுசந்திக்கப் புக
-அவையும் அவனுக்கு ஸ்மாரகமாக-அவற்றால் நோவு பட்டவர் தம்முடைய தசையை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் என்றவர் தம் பிராண ரக்ஷணத்துக்கு ஒரு திர்யக்க்கின் காலிலே விழுகிறார் இ றே
அடியேன் உய்ந்தவாறே என்றவர் ஸ்மாரகங்கள் கையிலே நோவு படுவாராய் விழுந்தது இ றே –
கலந்து பிரிந்து நோவு படுவாள் ஒரு பிராட்டி அவன் வரக் காணாமையாலே லௌகிக பதார்த்த தர்சனத்தாலே
போது போக்கைக்காக தன்னுடைய உத்யாநவநத்திலே புக்கு போக ப்ரவணமாய் மிதுனமாய் இருக்கிற பக்ஷிகளினுடைய
வடிவுகளையும் ப்ரவ்ருத்திகளையும் பேச்சுக்களையும் கண்டு இவை அவனோட்டை கலவிக்கும் வடிவுக்கும் பேச்சுக்கும் ஸ்மாரகமாய் நலிய
இவற்றோடு நம்மோடு பகை பெரிதன்று -அவன் வரவிட்டவை யாக வேணும் -அவன் தான் நம்மை முடிக்கைக்கு உபாயம்
விஸ்லேஷம் என்று பார்த்து -அது தான் சம்ச்லேஷம் ஒழிய க் கூடாமையாலே அதுக்காக கலந்து பிரிந்தான்
நாம் அவ்வளவிலும் முடியாமையாலே சென்றற்ற சமயத்திலே ஸ்மாரகங்களை முன்னிட இவள் முடியும் என்று பார்த்து
அவன் வரக் காட்ட வந்தன என்று கொண்டு -என்னை முடிக்கைக்கு -முசல் வேட்டைக்கு அரணைப் பண்ணினால் போலே
இத்தனை பாரிப்பு வேணுமோ என்று நொந்து –
கத் யந்தரம் இல்லாமையால் அவன் குணங்களையே அனுசந்தித்து தரித்தாளாய் தலைக் கட்டுகிறது –
நம்மைப் பார்த்தாலே இழவேயாய் இருந்ததே யாகிலும் அவனைப் பார்த்தால் இழக்க வேண்டாத படி இறே
அவன் குணங்கள் இருப்பது –
எம்பெருமானார் உகந்த திருவாய்மொழி என்பர் –

——————————————————————–

சில குயில் பேடைகளைக் குறித்து என்னை முடிக்கைக்கு இத்தனை பாரிப்பு வேணுமோ என்கிறாள் –

இன்னுயிர்ச்  சேவலும் நீரும் கூவிக் கொண்டு
இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின்
குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரானை
நீர் வரக் கூவகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும்
இத்தனை வேண்டுமோ–9-5-1-

விரஹ வியஸனம் அறிந்து இருக்கிற குயில் பேடைகாள்-உங்களுக்கு நற்சீவனான   சேவல்களும்
அவற்றுக்கு அபிமதைகளான நீங்களும் பரஸ்பர சம்ச்லேஷ அர்த்தமாக அழைத்துக் கொண்டு –
விஸ்லேஷ த்தாலே தளர்ந்து இருக்கிற இருக்கிற என் உயிர் நோவ மிகவும் கூஜிதத்தை பண்ணாதே கொள்ளுங்கோள்-
காதுகரைச் சொல்லுமா போலே எங்களை இங்கனம் சொல்லுவான் என் -என்றனவாகக் கொண்டு
தாரகனான கிருஷ்ணனை வரக் கூவு கிறிலி கோள்-ஆனபின்பு என்னை முடிப்பார்க்கு  இத்தனை பாரிப்பு வேணுமோ –

————————————————————————–

உங்கள் சேவலும் நீங்களுமாய் கொண்டு ப்ரணய கூஜிதங்களாலே என்னை நலியாதே கொள்ளுங்கோள்-என்று
சில அன்றில் பேடைகளை தய நீயமாக இரக்கிறாள்  –

இத்தனை  வேண்டுவது அன்று அந்தோ
அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் உன் சேவலும்
கரைந்து ஏங்குதீர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன்
அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர்
அவன் கையதே–9-5-2-

அன்றில் பேடைகாள்-– பெண் பிறந்தீர் அல்லீரோ / எத்தனை நீரும் உன் சேவலும்–கரைந்து ஏங்குதீர்--நாங்கள் என் செய்த்தோம் என்ன மிகவும் கரைந்து நின்றி கோள் / வித்தகன் கோவிந்தன் மெய்யன்-அல்லன் ஒருவர்க்கும்–உன்னோடுள்ள கலவியே தாரகமாய் இருக்கிற அவன் ஒரு க்ஷணமும் பிரியும் அளவில் அங்கனம் எங்களை இட்டு நலிவிக்கிறனவாகக் கொடுமை சொல்ல வேணுமோ -அவன் தானே வருகிறான் இ றே -என்ன -அவன் அங்கனம் ப்ரணய ஸ்வபாவரைப் போலே இருக்குமத்தனை -/ ஒருவருக்கும் மெய்யன் அல்லன் –உங்களுக்கும் இத்தனையே பலிப்பது / அத்தனை ஆம் இனி என் உயிர்-அவன் கையதே–இப்படிச் சொல்லவும் அவை விடாதே கூவப் புக்க வாறே முடிந்தேன் ஆகாதே -என்கிறாள் –

——————————————————————-

அற நோவு பட்ட என்னை நலியாதே கொள்ளுங்கோள்என்று அன்றில் பேடைகளை திரியவும் மீளவும் இரக்கிறாள்-

அவன்  கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3-

அன்றில் பேடைகாள் என்னுடைய பிராணன் அவன் கையிலேயாய் இருக்கச் செய்தே என்னை முடிக்க வேணும் என்று எனக்கு துஸ் சஹமாம் படி ப்ரணய தசையில் உள்ளன சில யுக்திகளை பண்ணிக் கொண்டு ஒன்றிலே ஓன்று அவகாஹித்து சஞ்சரியா நின்றி கோள்-உங்களுக்கு நலியலாம் படி ப்ராணனைத்
தருகைக்கு ஈடான பாக்யத்தை பண்ணாது இருக்கிற என்னுடைய பிராணன் என் பக்கலில் உண்டோ / தவம் செய்தில்லா வினையாட்டியேன்-என்கிறது விஸ்லேஷித்தாலும் அவனைப் போலே தரித்து இருக்கைக்கு பாக்யம் பண்ணிற்று இலேன் -என்றுமாம்
பிரணய பரவசமாய் கொண்டு ப்ரவ்ருத்தமான உங்களுடைய த்வனியைக் கேட்டு எத்தைச் சொல்லி தரிப்போம் –

————————————————————————-

சில கோழிகளைக் குறித்து நீங்கள் உச்சமாக கூவி என்னை நலியாதே கொள்ளுங்கோள் என்கிறாள் –

கூக்குரல்  கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–9-5-4-

உங்களுடைய கூக்குரலைக் கேட்டு வைத்தும் ஆச்சர்ய சீலனாக ப்ரசித்தனான கிருஷ்ணன் இவள் பிழையாள் என்று பார்த்து தோற்றி அருளுகிறிலன் -கோழிகாள் உங்களுடைய சேவல்களும் நீங்களும் உங்களுடைய ஜாதியுசித்தமாக ப்ரணய ப்ரவ்ருத்தமான உச்ச சப்தத்தைப் பண்ணாதே கொள்ளுங்கோள் -உன்னுடைய சர்வ கரணங்களையும் அபஹரித்து உன்னை என்று வந்த நாங்கள் கூவாது இருப்போமோ -என்றனவாகக் கொண்டு என்னுடைய சர்வ கரணமும் பண்டே அவன் பக்கலின — இனி என் செய்ய வருந்துகிறிகோள் -என்ன ஆகில் -இப்பேச்சும் இச் சேஷ்டிதமும் கூடின படி எங்கனம் என்னில் -அவை போகச் செய்தே வ்யஸன வாசனையால் தேஹமும் பிராணனும் நடுவே நின்று துக்கப் படுகின்றன வித்தனை –

———————————————————————

தன்னினவாய் இருந்து நலிகிற பூவைகளைக் குறித்து -அவன் தான் என்னை முடிக்கைக்கு அழகிதான நல்  விரகு பார்த்தான் -உங்களுக்கு இங்கே விஷயம் இல்லை -என்கிறாள் –

அந்தரம்  நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5-

நலிகைக்கு ஒரு காரணம் இன்றிக்கே இருக்கச் செய்தே-என்னை நலிந்து கொண்டு  சஞ்சரிக்கிற  என்னுடைய பூவைகாள் -உங்களுடைய பாரிப்புக்கு என் பக்கல் அவகாசம் இல்லை -குழறாதே கொள்ளுங்கோள்  -பிரணயித்தவ ப்ரஸித்தியை யுடையனாய் இருந்துள்ள எம்பெருமான் பண்டு இந்த லோகத்தை தனக்காக்கிக் கொள்ளுகைக்குச் சில பொய் செய்தால் போலே என்னோடே கலந்து பரிமாறுகிறானாகத் தோற்றும் படி சில பொய்களை சொல்லி விஸ்லேஷிக்கை என்னை முடிக்கைக்கு உபாயம் என்று அவன் தானே நல்ல விரகு பார்த்தான் -என்னை முடிக்கப் பார்த்த பார்வை -அழகிதாகப் பார்த்தான் என்று தன்னிலே நொந்து சொல்லுகிறாள் என்றுமாம் –

——————————————————————–

தன் தசையை அறியாதே திரு நாமத்தை சொல்லுகிற கிளியைக்  குறித்து நான் ஸ்வஸ த்தையாய் இருந்த போது எனக்கு இனிதாக திரு நாமத்தை சொல்லக் கேட்க்கைக்கு அன்றோ உன்னை நான் வளர்த்தது –எனக்கு அசாதாம்யமான தசையில் திரு நாமத்தை சொல்லாதே கொள் என்று அத்தை  நிவர்த்திப்பிக்கிறாள் –

நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6-

உன்னுடைய சிவந்த வாயும் கண்ணும் கையும் காலும் போலே இருக்கிற திருப்பவளம் தொடக்கமான திவ்ய யவயவங்களை யுடையவனுமாய் உன்னுடைய குளிர்ந்த ஸ்யாமமாய் இருந்துள்ள திரு நிறத்தை யுடையனாய் எனக்கு நல்லுயிராய் இருக்கிற காகுத்ஸத்தன் இனி என்னோடே சம்ச்லேஷித்து என் பிரக்ருதியை அறிந்து வைத்தே பிரிந்தான் –

———————————————————————

அவன் வடிவுக்கு போலியான மேக மாலையைக் கண்டு உங்கள் வடிவைக் காட்டி என்னை முடியாதே கொள்ளுங்கோள் -என்கிறாள் –

கூட்டுண்டு  நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-

என்னோடே கலந்து பிரிகையாலே அழகிய தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களையும் சிவந்த திருப் பவளத்தையும் -எனக்கு மறக்க ஒண்ணாத படி சிலாக்யமான கறுத்த திரு  நிறத்தையும் யுடையனாய் அத்யாச்சர்யமான வடிவு அழகையும் யுடையவனாய் என்னைப் பிரிந்து ஒரு வட்டமும் இன்றிக்கே இருக்கிற கிருஷ்ணனைப் போலே -வளைந்த வில்லோடு கூட மின்னா நின்றுள்ள மேக சமூகங்காள்-உங்கள் வடிவைக் காட்டாதே கொள்ளுங்கோள் -என் செய்ய என்னில் -என்னுடைய பிராணனுக்கு அது ம்ருத்யு –அது -என்று மேகங்களுடைய வடிவைக் காண மாட்டாமை ப்ராங் முகியாய் இருந்து சொல்லுகிறாள் –

————————————————————-

சில குயில்களைக் குறித்து -வேண்டா என்று இரந்து பிரார்த்திக்க மேன்மேல் திரு நாமத்தைச் சொல்லி நலிந்து கோள்-உங்களை வளர்த்த பிரயோஜனம் பெற்றேன் இ றே என்று இன்னாதாகிறாள் –

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8-

குயில் பிள்ளைகாள் -அவனுடைய திரு நாமங்களை நீங்கள் சொல்லில் நான் முடிவன் -அவற்றைச் சொல்லாது ஒழிய வேணும் -என்று உங்களை இரந்த எனக்கு -கிருஷ்ணனுடைய திரு நாமங்களையே சொல்லி என்னைக் கொன்றி கோளே –காலங்கள் தோறும் உங்களுக்கு அபேக்ஷிதம் ஆனவற்றையே தேடி யிட்டு உங்களை சொல்லி அப்யசித்ததற்கு பிரதியுபகாரம் பண்ணினி கோள் -சாலத் தக்கராய் இருந்தி கோள்-

—————————————————————

மதுபான மத்தமாய்க் கொண்டு பாடுகின்றன சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து உங்களுடைய த்வனிகள் துஸ் சஹமாய் இருந்தன -நீங்கள் பாடாதே கொள்ளுங்கோள் என்கிறாள் –

பண்புடை  வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்-9-5-9-

நீர்மையை யுடைய வண்டோடே கூடின தும்பிகாள் -பண் மிழற்றாதே கொள்ளுங்கோள் –பண்புரை -என்ற பாடமான போது -பண்ணை முரலா நின்றுள்ள வண்டோடே கூடியது –
புண்ணின் விவரத்திலே வேலைக் கொடு குத்தாப் போலே இரா நின்றது உங்களுடைய இனிய த்வனிகள் -குளிர்ந்த நீர் வெள்ளத்திலே பெரிய தாமரைப் பூ அலர்ந்தால் போலே யாய் -அவ்வளவு அன்றிக்கே பெரிய கண்களை யுடைய கிருஷ்ணன் அவ்வழ கைக்காட்டி என்னை மாய்த்துப் பிரிந்து போனான் -குளிர்ந்த நீர் வெள்ளத்தை யுடைய தடாகம் தாமரைப் பூ பூத்தால் போலே பெரிய கண்களை யுடைய கிருஷ்ணன் என்றுமாம்

—————————————————————-

திரள இருக்கிற நாரைக் குழாங்கள் தன்னை முடிக்க மந்திரிக்கின்றனவாகக் கொண்டு -நான் முடிந்தேன் -இனி நீங்கள் திரண்டு பிரயோஜனம் என் -என்கிறாள் –

எழ நண்ணி  நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-9-5-10-

இங்கே இருந்து அவனை புஜிக்கும் ஆசையைத் தவிர்ந்து -அவன் கருத்தின் படியே நானும் முடிந்தேன் -பழனங்களில் இருப்பதும் செய்து நீங்கள் கோலின படியே முடிக்க வல்ல நாரைக் குழாங்கள் காள் –திரண்டு இனி என் –இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது--விலக்ஷணமான சரீரமும் க்ரமேண பசை அற்றது –தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே--இப்படி தளர்ந்து முடியப் புகுகிறவள்  எம்பெருமானுடைய விபூதி சம்ருத்தமாக என்கிறாள் —நான் பட்ட துக்கம்  ஒருவரும் படாது ஒழிய வேணும் என்று தன்னுடைய நோவின் மிகுதியாலே  சொல்லுகிறாள் என்றுமாம் –நான் போக லோகம் எல்லாம் அடைய என்னார்த்தி காணாதே பிழைக்கும் ஆகாதே -என்றுமாம் –

——————————————————————-

நிகமத்தில் இத்திருவாய் மொழியினுடைய நீர்மை ஹ்ருதயத்தில் படில் ஆரேனுமாகில் தரியார் -என்கிறார் –

இன்பம்  தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே-9-5-11-

லோகம் எல்லாம் வெள்ளமிட்ட நிரதிசய ப்ரீதியை யுடையராய்க் கொண்டு கால தத்வம் உள்ளதனையும் தன் புகழை ஏத்தும் படி தனக்கு அருள் செய்த ஆச்சர்ய பூதனை -ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் -ஒன்பது பாட்டில் உண்டான -வியஸனம் -ஸூ கம் என்னும் படி வியஸனம் மிக்கு இருக்கிற பத்தாம் பாட்டு ஒன்றையும் யுடைய -இத்திருவாய் மொழி கேட்டால் -விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி இன்றிக்கே சிதிலராவார் –

——————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்