Archive for June, 2016

பகவத் விஷயம் காலஷேபம் -126- திருவாய்மொழி – -6-1–1….6-1–5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

June 13, 2016

(ஸ்ரீ ராகவன் மஹாத்மா சர்வ லோக சரண்யன் –
ஸுவ்லபயமும் பரத்வமும் இருந்தவன் தானே சரண்யன் ஆகிறான்
அங்கு பரத்வம் பின்பு
இங்கு பரத்வம் நான்கு பாத்தால் முதலில் பின்பு ஸுலப்யம்
இரண்டுமே சரணாகதி சாஸ்திரங்கள் –
ஒன்பது திருவாய் மொழிகளால் ஸ்ரீ மத் நாராயணா குணங்களைச் சொல்லி
திருவடி ஒன்பது பாசுரங்களில் சரணம் சொல்லி
அகலகில்லேன் சரணவ்
பிரபத்யே
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் பாதம் பணிய வேண்டுமே
பக்ஷிகளை ஆஸ்ரயித்து
பிராட்டியைப் பற்றி பெருமானை ஆஸ்ரயிக்கிறார் )

முதற் பத்தால், பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்;
இரண்டாம் பத்தால், அந்தக் கைங்கர்யத்தில் களையறுத்தார்;
மூன்றாம் பத்தால், களையறுக்கப்பட்ட அந்தக் கைங்கர்யமானது பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்;
நான்காம் பத்தால், இப்படிப்பட்ட கைங்கர்யத்திற்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் என்றார்;
ஐந்தாம் பத்தால், அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்;
விரோதிகளை அழிக்கும் இயல்பினனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரண் புகுகிறார் இந்த ஆறாம் பத்தால்.

மேல் “நோற்ற நோன்பு” என்ற திருவாய்மொழி தொடங்கி நான்கு முறை சரணம் புக்க இடத்திலும் தம் அபேக்ஷிதம் பெற்றிலர்.
பலத்தோடு சம்பந்திப்பிக்கிறதாய் விரைவில் பலத்தைக் கொடுக்கக் கூடியதான உபாயத்தைப் பற்றி யிருக்கச் செய்தேயும்
அபேக்ஷிதம் கிட்டாது ஒழிவான் என்? என்னில், ஆழ்வாருடைய ஹிதத்தைப் போன்று உலகத்தினுடைய ஹிதத்துக்கும்
கடவனாகையாலே ஈஸ்வர புத்தியாலே தலைக் கட்டிற்று இல்லை.

உகந்தருளின நிலங்கள் தோறும் புக்குத் தட்டித் திரிந்தார், அங்குத் தாம் நினைத்தபடி பரிமாறப் பெற்றிலர்;
நினைத்தபடி பரிமாறக் கூடிய அவதாரத்து ஏறப் போனார், அது சென்ற காலாந்தரமாகையாலே கிட்டப் பெற்றிலர்;
அது தானே தளர்த்திக்குக் காரணமாயிற்று.
இனி, எப்பொழுதும் அண்மையிலிருப்பதாய், முகப் பழக்கத்தாலும் குறையற்று, சக்தி குறைவுமின்றிக்கே இருக்கிற
இவ்விடமே அமையும் என்று மீண்டார்;
அந்த அநுசந்தானந்தான் கால் நடை தந்து போகாதபடி ஈடுபடுத்திற்று; கால் நடை தருவார் காலிலே விழுந்து தூது விடுகிறார்.
தாம் மேலே அநுசந்தித்த அவதாரம் தூதுவர்க்குச் சென்று அறிவிக்க ஒண்ணாதபடி யாயிருந்தது;
‘இனி அறிவிக்கலாம் படி அண்மையில் நின்றானாகில் திருவண் வண்டூரிலே அறிவிப்போம்’ என்று அங்கே ஆள் விடுகிறார்.

இவர்க்குப் பிறந்தது ஞானத்தாலும் கர்மத்தாலும் உண்டான பக்தி அன்றே! ஒருவன் திருவருள் அடியாக வந்ததன்றோ.
தம் தலையிலேயும் ஒன்று உண்டாய் ‘அது நிரம்பிப் பெற வேணும்’ என்று இருக்கிலன்றோ விளம்பம் பொறுக்கலாவது,
அங்ஙன் சொல்லலாவது ஒன்று இன்றிக்கே இருந்தது. இவர் தாம் பற்றின சாதனந்தான் கால தாமதத்தைச் சகிக்கக் கூடிய தன்றே!
வேறு உபாயங்களைக் காட்டிலும் கால் வாசி ஏற்றம் உண்டே! இங்ஙனே அடிப்பட்ட உபாயத்தைப் பற்றினவர்
ஆறியிருக்க மாட்டார் அன்றோ, ஆகையாலே, ஆற்றாமை கரை புரண்டு ஆள் இட்டு அறிவிக்கிறார்.

‘சரணம் புக்கோமாகில் அத் தலையாலே பேறு ஆகுமளவும் ஆறியிருப்போம்’ என்று தரித்திருக்க வல்ல தன்மையரன்றே.
பிரஹ்மாஸ்திரம் வாய் மடியச் செய்தேயும் இவர் தூது விடுகிற இது,ஞான காரியமோ சாபல காரியமோ தெரிகிறது இல்லை;
சுருதிகளும் கூட “அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத வாக்குகள் மீண்டன” என்று பேச்சுக்கு நிலம் அன்று என்று –
“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸாஸஹ”-என்பது, தைத்திரீய ஆன. 9 : 1.-
மீண்ட விஷயத்தை மறுபாடு உருவப் பாசுரமிட்டுச் சொல்லவல்ல இவர்க்கு ‘அறிவில்லை’ என்ன ஒண்ணாது;
பறவைகளின் காலிலே விழுகிற இவர்க்கு ‘அறிவுண்டு’ என்னவும் ஒண்ணாது. ஆனால், என்னாவது? ஏது? என்னில்,
ஞான காரியமான சாபலமன்றோ இவரது. இதர விஷயங்களில் விரக்தி யன்றோ ஞானத்திற்குப் பிரயோஜனமாகச் சொல்லுகிறது,
சாபலம் ஞான காரியம் என்று சொல்லுகிறபடி யாங்ஙனம்? எனின்,
அந்த ஞான பலமாயன்றோ இவ் விஷயத்தில் சாபலம் இருப்பது. ஞானத்துக்கும் வைராக்கியத்துக்கும் சேர்விடமாய் இருப்பவர் அன்றோ இவர்.
ஞான வைராக்ய ராசயே-ஞான வைராக்ய –உலக விஷய -ஞான -அனுராக -பகவத் விஷய –என்பதால் சாபல்யமும் ஞான கார்யம் தானே
ஞானத்தால் உலக விஷயத்தில் வைராக்கியமும் பகவத் விஷயத்தில் சாபல்யமும் வருமே
நஞ்சீயர் திரைக்குள் தாம்பு தழும்பு பார்க்க ஆசைப்பட்டார் அன்றோ

இனி, தூது விடப் பார்த்தால் ஒரு ஐந்திர வியாகரண பண்டிதனைத் தூது விடுகிறது மன்றே.
இத்தால் சொல்லுகிறது, பிராட்டியில் உண்டான ஏற்றமோ? என்னில், அதுவும் உண்டு அன்றோ,
அவர் ஒருவரையும் அநுபவிக்கையால் வந்ததன்றோ அவளுக்கு உள்ளது,
இருவரையும் கூட அநுபவிக்கக் கோலுகிற ஏற்றம் உண்டன்றோ இவளுக்கு.
அத் திரு அவளைப் பற்றும் -இத் திரு இருவரையும் பற்றுமே
விஷயத்துக்குத் தகுதியாக வன்றோ கலக்கம் இருப்பது.
இனித் தான், அத் தலையில் நின்றும் வந்தார்க்கே வார்த்தை சொல்லி விட வேண்டும் என்னும் நிர்ப்பந்தம் இல்லையே இவளுக்கு;
இராவண சங்கை இல்லாமையாலே. ஆகையாலே, கண்களால் கண்டாரை யடங்கலும் போக விடுகிறாள்.

பிரிந்தார் இரங்குவது நெய்தல் நிலத்திலே யன்றோ; திருவல்லவாழ், திருவண்வண்டூர் என்பவை எல்லாம் அந் நிலங்கள் அலவோ.
தூது விடுவார், நாயகன் பக்கலிலே சில குணங்கள் கண்டன்றோ விடுவது. என்றது,

போக்கெல்லாம் பாலை, புணர்தல் நறுங்குறிஞ்சி, ஆக்கம் சேர் ஊடல் அணி மருதம் – நோக்குங்கால்
இல் லிருக்கை முல்லை, இரங்கல் நறு நெய்தல் சொல் விரிந்த நூலின் தொகை.-என்னும் பழம்பாடல் இங்கு நினைவு கூர்க.

இத் தலையில் துயரத்தை யறியுந்தனை அறிவையுமுடையனாய்,
அறிந்து நீர்மையையும் உடையவனாய்-
அறிந்தால் வருகைக்குத் தகுதியான சக்தியுமுடையனாயிருக்க வேண்டுமன்றோ என்றபடி.
அவையெல்லாம் இவள் தூது விடுகிற விஷயத்தில் குறை இல்லை.

அறிவில் வந்தால் – -“ஞான சம்பந்ந:” என்கிறபடியே,-வசிஷ்டர் இடம் கற்று -மேகம் மழை கடலில் பொழிந்தது போலே ராமர்
“யஸஸ்வீ ஜ்ஞாநஸம்பந்ந: சுசி: வஸ்ய: ஸமாதிமாந்”-என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 12.
அறிவு கொடுத்த வசிஷ்டர் முதலானோர்கட்கும் கொடுக்க வல்லனாம்படி இருப்பான் ஒருவன்.

நீர்மையில் வந்தால் “பகைவர்களிடத்தும் அன்புள்ளவன்” என்றால்
“தேவகல்பம் ருஜும் தாந்தம் ரிபூணாமபிவத்ஸலம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 21 : 6.
“கண்ணீரோடு கூடினவர்” என்னும்படியன்றோ
“ஸம்ஜாத பாஷ்ப: பரவீரஹந்தா ராமோ முஹூர்த்தம் விமநா பபூவ”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 23 : 24.
அது இருப்பது.

சக்தியில் வந்தால் “பராக்கிரமத்தாலே மகிழச் செய்கின்றவனுக்கு” என்று எதிரிகள் பக்கலிலே கேட்க வேண்டுமத்தனை.
“ஸத்ரோ: ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்ஜநீயஸ்ய விக்ரமை:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 6.

இனித் தான், நாயகனாவான் –அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடி — என்று மிக் குணங்களையுடையவன் அன்றோ,
இத்தகைய குணங்களை யுடையவன் வாராமைக்குக் காரணம், அவ் விடங்களிலே துன்புறுவார் பலர் உளராகையாலே
அவர்கள் ரக்ஷணத்திலே ஒருப்பட்டு இத் தலையை மறந்தானித்தனை; –இதுவே சிறந்த செல்வம் பெருமாளுக்கு –
காத்தலைச் செய்ய ஒருப்பட்டால்-அஸ்தமித அந்ய பாவம்
“மறைந்து போன மற்றை எண்ணங்களை யுடையதாய்” என்னும்படி யன்றோ இருப்பது;
ஆன பின்பு, துயரத்தை அறிவிக்க வருவான் என்று பார்த்தாள்.

இனி, அறிவித்தால் ஆர்த்திக்கு இத் தலையில் மேற்பட்டார் இன்றிக்கே இருக்குமன்றோ.
அறிவிக்குமிடத்தில், தான் கால் நடை தந்து போக மாட்டாள்,
தன் பந்து வர்க்கம் தனக்கு முன்னே நோவு பட்டாரன்றோ.
இனி, கால் நடை தந்து போகவல்லார் வேண்டுமே;
“யாமுடைத் துணையென்னும் தோழி மாரும் எம்மின் முன் அவனுக்கு மாய்வ ராலோ”-என்பது, ஈண்டு அநுசந்தேயம். (9. 9 : 5.)
தன் பக்கத்தில் வாழ்கிற பறவைகளை, ‘ஒரே இடத்தில் வசிப்பதால் வந்த சம்பந்தமே நம் காரியம் செய்து
தலைக் கட்டுகைக்கு உறுப்பு’ என்று பார்த்து, அவற்றின் கால்களிலே விழுந்து போக விடுகிறாள்.

சீயர், இத் திருவாய்மொழி அருளிச் செய்யப் புக்கவாறே, உருத் தோறும் அருளிச்செய்யும் வார்த்தை:
‘பாண்டவர்கள் காரியத்துக்காகத் தன்னை ஓக்கி அவர்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கூடத் திரியச் செய்தேயும்
அவர்கள் பட்ட வியசனமெல்லாம் படுகிறார் காணும் இவரும்.
அவர்கள் தாம் ஒரு தர்ம ஆபாசம் -உபாயாந்தரம்-உண்டு என்று இருக்கையாலே வியசனப்பட்டார்கள்;
இவர்க்கு அதுவுமின்றிக்கே இருக்க என் செய்யப் படுகிறார்’ என்று அருளிச் செய்வர்.

ஏ பிரபுவான கிருஷ்ணனே! நீர் ஜீவித்திருக்கும் போதும், அத்தகைய நான் ஒருவனால் மயிர் பிடித்து இழுக்கப்பட்டவளாய்
பெருந்துன்பத்தை அடைந்து பாண்டு புத்திரர்கள் இருக்கும் சபையை அடைந்தேனே!”-என்றவள் நிலையன்றோ இவளது.
“பெரிய ஆபத்து நேர்ந்த காலத்தில் பகவானாகிய ஹரி நினைக்கத் தகுந்தவர் என்று மஹாத்மாவான வசிஷ்டர்
கூறியது என்னால் அறியப்பட்டது” போலி ரக்ஷகரான கணவன்மார்களாலும் தன்னாலும் நோக்கிக் கொள்ள ஒண்ணாதபடி
அவ்வருகு பட்ட ஆபத்து அன்றோ. பகவான்-பூர்ணரன்றோ!
அபூர்ணர் காரியம் செய்ய வல்லார் என்று காணும் அவன் நினைவு.
‘ஹரி:’ – அடியார்களுடைய பகைவர்களை அழித்தலையே இயல்பாக வுடையவனைப் பற்றினாள்.
பகவான் -ஆறு குணங்களையும் சொல்லி அத்தாலே -ஞானம் முதலான குணங்களால் சொன்ன பூர்த்தியிலே
சக்தியுமுண்டாயிருக்கச் செய்தே,
ஹரி: என்று விசேடிக்க வேண்டிற்று, அல்லாதார்க்கும் இக் குணம் ஓர் ஒருகால் உண்டாகையாலே;
இவனுக்கு அங்ஙன் அன்று; இது இயல்பு என்கைக்காக எடுத்தது.–

பரத்வம் -காரணத்வம் -வியாபகத்வம் -நியந்த்ருத்வம் -முதல் நான்கில்
காருணிகத்வம் -ஐந்தாம் பத்தில் –
பரத்வ சௌலப்யம் -சேர்ந்து -இருந்தால் சரண்யத்வம் கூடுமே -அதுவே ஆறாம் பத்தில்
ராகவாயா மகாத்ம்யாய சர்வ லோக சரண்யா -சௌலப்ய பரத்வம் அங்கும் –
குணங்களைச் சொல்லி நாராயண அர்த்தம் -திருவடி -6-10 ஒன்பது பாட்டுக்களில் -அகலகில்லேன் சரணம் அடைகிறார் –

வேதம் வல்லார்களைக் கொண்டு -விண்ணோர் பெருமான் -பாதம் பணிய –அவரை விதை கொழு கொம்பு பந்தல் போலே –
பஷிகள்-வேதம் வல்லார்கள் பற்றி-பின்பு பிராட்டி பற்றி -பெருமானைப் பற்றுகிறார்

நாரதீய புராணம் -400000-ஸ்லோகங்கள் உள்ளவை -இந்த ஷேத்ரத்தில் அருளினார் என்பர் -பக்தி சாஸ்திரம் இது-

இரண்டாம் தூது இது -6-1—ராமாவதாரத்துக்கு தூது -ஏறு சேவகனார் -பம்பை வட பால் –1-4 -முதல் தூது –
தம் பிழையும் –சிறந்த செல்வமும் –படைத்த பரப்பும் –தமரோட்டை ஸஹ வாசமும் மறப்பித்த
ஷமா –தீஷா –சாரச்ய — சௌந்தர்யங்களை உணர்த்தும்
வ்யூஹ –விபவ –பரத்வ த்வய -அர்ச்சைகள்
தூது நாலுக்கும் விஷயம் –சூர்ணிகை –156-

பரத்வ -காரணத்வ -வ்யாபகத்வ -நியந்த்ருத்வ –
காருணிகத்வ -சரண்யத்வ -சக்தத்வ
சத்ய காமத்வ -ஆபத் சகத்வ -ஆர்த்தி ஹரத்வ விசிஷ்டன்
மயர்வை அறுக்க -தத்தவ வேதன மறப்பற்று
ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து
மோஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து
புருஷார்த்த பல அந்ய ருசி ஒழிந்து
விரக்தி பல ராகம் கழிய மிக்கு
பிரேம பல உபாயத்தே புகுந்து
சாதனா பல உபகாரக் கைம்மாறின்றி
க்ருதஜ்ஞாத பல பிரதி க்ருதமானத்தை யுணர்ந்து
ஆத்மா தர்சன பல பிராப்தி மரண அவதியாகப் பெற்று
கால அசத்தி பல கதிக்குத் துணை கூட்டின தம் பேற்றைப்
பிறர் அறியப் பத்துத் தோறும் வெளியிடுகிறார் –சூர்ணிகை –218

இதில் சிறந்த செல்வமும் -தீஷை -மம வ்ரதம் என்றாரே பெருமாள் -அத்தை உணர்த்தும் -விபவ -தூது
நாராதீய பக்தி சாஸ்திரங்கள் இங்கே இருந்து அருளினார் என்பர் –
சர்வ பூதேப்யோ -என் மூலம் வந்த ஆபத்தையும் தவிர்த்துக் கொடுப்பவன் -தானே கண் காட்டாத ஆபத்து –
தீஷை நினைவு படுத்தினால் வருவானே -இதுவே சிறந்த செல்வம் நினைப்பூட்டுகை –

அறிவிப்பே அமையும் -ஜீவ ஸ்வாதந்தர்யம் -கொடுத்ததும் இதுக்கத் தானே –
அறிவிப்பதால் வரவில்லை -ஆனால் அறிவிக்கவும் வேண்டும் என்று அறிந்தவர் –
அவன் கிருபைக்கும் குறையில்லை –
அபராத சஹத்வத்துக்கும் மீறி அன்றோ நமது அபராத பூயிஷ்டம்
இதில் சிறந்த செல்வம் -ஆஸ்ரித ரக்ஷணமே அவனுக்கு செல்வம் -அத்தை அறிவிக்க அமையும் -என்று தூது இதில்
தீக்ஷை -அபயம் சர்வ பூபேப்யோ ததாமி -விரதம் -உண்டே -இத்தை அறிவிக்க வருவானே
பூ -சத்தாயாம்–அவன் மூலம் வந்த ஆபத்தையும் தவிர்த்து அருளும் தீக்ஷை உண்டே -கண் காட்டாமல் இருக்கும் அது தவிர்வானே

————————————————————————————————

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1-

நம்மை தன் அழகைக் காட்டி அனன்யார்ஹன் ஆக்கிய சேஷி -சந்நிஹிதனாகி இருக்க –சம்ருத்தியால் -சிறந்த செல்வத்தால் –
அந்ய பரனாய் இருக்க கூடும் -என்ற நினைப்பால் -எப்பொழுதும் அருகில் உள்ள பேடை உடன் உள்ள சேவலை –
வரா விடில் வேற காரணங்கள் படைத்த பரப்பு போல்வன மேல் சொல்வாள் –
வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!-கண் முகப்பே வந்து மேயும் -கூடி உள்ளீர் -நானோ தனியன் –
கோபம் வெறுப்பு தோற்ற பாட்டுக்கள் தோறும் -என்பர் – பட்டர் / 10 பாசுரம் தான் கோபம் -பூர்வர் நிர்வாகம்
எப்போதே வந்து திருவடி போல் இல்லாமல் எப்போதும் கண்முகப்பே இருக்கும் ஆச்சார்யர்கள் –
செய் கொள் செந்நெல் உயர் திரு வண் வண்டூருறையும்-செந்நெல் ஒன்றே வயலை மறைக்கும் படி வளர்ந்து
நித்ய வாசம் செய்து ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யம் /-திரு வண்வண்டூ ருறையும்-அவதார பரமபத வியாவ்ருத்தி –
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு-திவ்யாயுதம் கொண்டு அந்த அழகாலே வசீகரித்து
என் பெருமான் -என் கனி வாய்ப் பெருமான் -ரஷகத்வ போக்யத்வ -இரண்டும் கொண்டு என்னை எழுதிக் கொண்டவன்
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே–பரம சேஷி -ரஷகன் -சர்வாதிகன் -சேஷத்வ அநுரூப வ்ருத்தியைப் பண்ணி –
சிறகுகளை கை கூப்புவது போலே -செய்யச் சொல்கிறார் -கை கூப்புதல் சேஷத்வ சிஹ்னம் கை கொள் சக்கரம் சேஷிக்கு அடையாளம்
சொல்ல வேண்டிய விஷயம் -கொஞ்சம் -அறிவிப்பே அமையும் -வினையாட்டியேன் -காதன்மையே –
சொல்லீர் இவைகள் இடம் சொன்னததனாலேயே வருமவன் அன்றோ
பிரிவுக்கு ஹேதுவான வினை -அபி நிவேசம் ஆதிக்யம் சொல்ல அமையும் –

கடகர் உடைய சமான தேச வர்த்தித்வம் -வந்து மேயும் -ஆழ்வார் கண் பட -தேசாந்தரம் போக மாட்டானே சிஷ்யன் -மா முனிகள்
உத்தேச்ய விஷய அனுவ்ருத்தனம் -காட்டி அருளுகிறார் -பகவான் உத்தேச்யம் பறவைகளுக்கு -ஆழ்வாருக்கு பறவைகள் உத்தேச்யம் –
இவ்வாறு பாசுரம் தோறும் பன்னீராயிரப்படியில் காட்டி அருளுகிறார்

அழகிய உப்பங்கழிகளிலே நாடோறும் வந்து மேய்கின்ற கூட்டமான குருகுகளே! வயல்களிலே நிறைந்திருக்கின்ற செந்நெற் பயிர்கள்
ஓங்கி வளர்கின்ற திருவண்வண்டூர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற, திருக்கரத்திலே கொண்டிருக்கின்ற சக்கரத்தையும்
கோவைக்கனி போன்ற வாயினையுமுடைய எம்பெருமானைக் கண்டு வினையேனுடைய காதலின் தன்மையைக் கைகளைக் கூப்பி வணங்கிச் சொல்லுங்கோள்.
குருகினங்காள்! திருவண்வண்டூர் உறையும் பெருமானைக் கண்டு கைகூப்பி வினையாட்டியேன் காதன்மை சொல்லீர் என்க. வைகல் – நாள். செய் – வயல்.
இத் திருவாய்மொழி, கலிநிலைத் துறை.

சில குருகுகளை நோக்கி, திருவண்வண்டூரிலே சென்று எம்பெருமானுக்கு என் நிலையை அறிவியுங்கோள் என்கிறாள்.

வைகல்-
நாடோறும்.
உங்கள் அளவு நீர்மையுடையார் சிலரோடே கலக்கப் பெறாமை யன்றோ எனக்கு இப் பிரிவு விளைந்தது;
அவ் விழவு எல்லாம் உங்களைக் கொண்டு தீரலாம் படியாயன்றோ எனக்கு இருக்கிறது.
ஒரு கால் கலந்து பொகட்டுப் போன அவனைப் போல் அன்றிக்கே நீங்கள் எப்போதும் இங்கே வசிக்கும் படியாகப் பெற்றேனே!
உங்கள் நீர்மையில் ஏற்றம் இருந்தபடி என்!–ஆச்சார்யர் எப்பொழுதுமே சந்நிஹிதன் -கூட இருந்து திருத்துவார் –
அவன் இருந்தும் உதாசீனனாய் –

பூங் கழிவாய்-
அழகிய கழியிடத்து.
அன்றிக்கே, பூத்த கழியிடத்து என்னவுமாம்.
ரக்ஷகனானவன் கை விடுவது, பாதகக் கூட்டங்களானவை மிகைக்கின்ற இவ் வளவிலே நீங்கள் முகங்காட்டுவதே!
அழகிய சோலை, குளிர்ந்த தென்றல், இனிய வாசனை தொடக்கமான இவையுமுளவன்றோ.
பிரிந்தவனே பாதகனாகை அன்றிக்கே, இருந்த தேசமும் பாதகமாகை.

வந்து –
“பம்பையின் கரையிலே அநுமானோடு கூடினார்” என்பதுபோலே,
“பம்பாதீரே ஹநூமதா ஸங்கத: வாநரேண ஹ”- என்பது, ஸ்ரீராமா. கிஷ்கந்த 1 : 8.
ஆள் இட்டு அறிவிக்க வேண்டிய நிலையிலே நீங்களே வந்து.
நாயகனை போலே உங்களை ஆள் இட்டு அழைக்க வேண்டாதபடி -நீங்களே வந்து –
திருவடியை இளைய பெருமாளை இட்டு பெருமாள் அழைத்தால் போலே இல்லாமல் நீங்களே வந்து –
வழி பறி உண்டவிடத்தே தாய் முகம் காட்டினாற் போலே காணும் பிராட்டியைப் பிரிந்து நோவுபடுகிற சமயத்திலே
திருவடி வந்து முகங்காட்டினபடி.

ஹநூமதா-
தளர்ந்து, –“ஆவாரார் துணை” -திருவாய். 5. 1 : 9.-என்று தடுமாறுகிற சமயத்திலே,
வெற்றித் தழும்பு சுமந்த ஆண் பிள்ளையோடே கூடப் பெற்றது என்கிறது.
வாநரேண-
சந்நியாசி வேடம் கொண்டு வந்து பிரிவை விளைத்து நலிவு பண்ணுமவனைப் போலன்றிக்கே,
செவ்வியான் ஒருவனோடே சேரப் பெறுவதே.
ஹ –
ருஷி கொண்டாடுகிறான். போகத்துக்குச் சேர்த்துக் கொள்ளுகிறோம்,
சத்தை நோக்குவாரைப் பெற்றோமன்றோ! என்று உவகை கொண்டவனாகிறான்.

வந்து மேயும்-
அவனைப் போலே தூதர்க்கும் ஆள் இட்டு அழைக்க வேண்டாதொழியப் பெற்றோமே!
ஆள் இட்டு அழைக்க வேண்டுகிறதன்றோ அவனை.
திருவடியை இளைய பெருமாளை இட்டு பெருமாள் அழைத்தால் போல இல்லையே இங்கு –
ஒரு கலத்திலே ஒக்க உண்டு ஒரு படுக்கையிலே கிடந்து தூது போவாரைப் போலே காணும் இவற்றின் படி.
அர்ஜுனன் -கிருஷ்ணன் போலே -ஸ்வா தீனமாக வந்து மேயும் –
ஆச்சார்யர்களுக்கு அர்த்தம் சரீரம் பிராணன் எல்லாம் சமர்ப்பிக்க வேண்டுமே

சீர் பெற் றொளிர் பூண் அஞ்சனை தன் சிறுவன் தன்னை முக நோக்கிக்
கூர் பற்றிய என் குலிசத்தால் கூறு படு புண் வடுத் தீர்க
ஆர் பெற்றார் நீ பெற்றது நின் அநுவற் றிடலால் அநுமனெனும்
பேர் பெற் றுலக முள்ளளவும் பெறுதி பெயராப் புகழ் என்றான்.-என்ற செய்யுள் இங்கு
நினைவு கூர்தல் தகும்.(கம். உத்தரகாண். அநுமப் பட. 34.)

மேயும்-
“வீட்டில் கூசுதல் இன்றி உணவு உண்ணப் பட்டது” என்னும்படி இருக்கை.
கதிதாநி ரஹஸ்யாநி க்ருஹே புக்தம் அசங்கிதம் தர்சிதாநி களத்ராணி ஸௌஹார்தம்
கிமத: பரம்”-என்பது, பாரதம் உத்யோகபர்.
இது, கிருஷ்ணனைப் பார்த்துக் கர்ணன் கூறியது.

ஆச்சார்யர்களுக்கு சரீரம் அர்த்தம் பிராணன் அனைத்தையும் -சமர்ப்பிக்க வேணுமே

குருகு இனங்காள்-
தர்சிதாநி களத்ராணி-“மனைவிகள் காண்பிக்கப் பட்டார்கள்.” என்கிறபடியே,
இது ஒரு சேர்த்தி இருந்தபடி என்.

வந்து மேயும் இனங்காள்-
நிருபாதிக பாந்தவமுடையார் பக்கலிலே மனைவி மக்களோடே சென்று ‘சோறு இடும்’ என்று
உண்பாரைப் போலே காணும் இவற்றின்படி.
(தர்ம புத்திரர் கிருஷ்ணர் ச பத்னி ஸஹிதமாக போல் )

குருகினங்காள்! -கைகள் கூப்பிச் சொல்லீர் என்று கூட்டுக.
பண்டை முதலிகள், ‘பத்தாம் பாசுரத்திலே, பிரணய ரோஷம் தோற்றச் சொல்லுகிறாள்’ என்று நிர்வஹிப்பர்கள்.
‘பாசுரந்தோறும், கிலாம் தோற்றச் சொல்லுகிறாள்’ என்று பட்டர் அருளிச் செய்யும்படி.
வந்து மேயும் குருகினங்காள்! கைகள் கூப்பிச் சொல்லீர்-
என்றும் பிறர்க்கு உதவி செய்யவே தேடித் திரியுமித்தினையோ, உங்கள் காரியமும் செய்ய வேண்டாவோ!
உபவாசத்தினால் மெலிந்திருக்கிற என் காரியத்தை நிறைவுற்றிருக்கிற உங்களுக்குச் செய்ய வேண்டாவோ.

பிறருக்கு உபகாரம் -ஆழ்வாருக்கு -இவரை விட்டுப் போகாமல் இருப்பது –
தங்களுக்கு உபகாரம் -அவன் இடம் போவது -என்றவாறு –
கடகர் சிஷ்யர் ஆத்மாவை பேணி -அவன் இடம் எப்பொழுது திருவடி சேர்த்து கொள்ள வேண்டும் என்று கேட்க வேண்டுமே –
சிஷ்யனின் ஆர் உயிரைப் பேணுமவன் அன்றோ ஆச்சார்யர் –
தளைப் பண்ணினவனை விடுவிக்க ரெங்க ராஜன் இடம் கூரத் ஆழ்வான் விண்ணப்பம் செய்தால் போலே –
நண்பர் குழந்தைகளை போய் பார்க்காமல்

செய் கொள் செந் நெல்-
ஒரு முதலே செய்யை விழுங்கும்படி யாயிருக்கை.
இதனால், இத்தலையை நினைக்கலாம்படியோ அங்குத்தை இனிமை இருக்கிறபடி என்பதனைத் தெரிவித்தபடி.
ஸ்ரீ வைகுந்தம் ஏற்றம் சொல்லி ஆசை வளர்ப்பதை போலே திவ்ய தேச பெருமை -சொல்லி –
இத் தலையை நினைக்கும் படியோ அங்குள்ள போக்யதை -அவன் மேல் குற்றம் இல்லை என்று
குருகுகளுக்கு சொல்வதற்காகவும் -செழிப்பு உள்ளவர் என் மணவாளன் -என்றவாறு –

“கண்ணன் மதுரையை அடைந்து கோகுலத்திற்கு எப்படி வருவார்,
மதுரையிலுள்ள பெண்களின் இனிமை பொருந்திய பாட்டுக்களாகிய தேனைக் காதுகளாலே பருகுவார்” என்பதன்றோ அவன் படி.
“மதுராம் ப்ராப்ய கோவிந்த: கதம் கோகுலம் ஏஷ்யதி
நகர ஸ்திரீ கலாலாப மது ஸ்ரோத்ரேண பாஸ்யதி”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 18 : 15.
அந்தத் தேசத்தின் இனிமையில் அகப்பட்டிருக்குமவன் நம்மை நினைக்கப் புகா நின்றானோ.

உயர் –
அங்கு வரம்பு இல்லாமையாலே முடிய உயரா நிற்குமத்தனை.
“அஹமந்நம்-நான் உணவாக இருக்கிறேன்” என்பாரளவும் செல்லத் தான் உயரா நிற்குமத்தனை.

திருவண்வண்டூர் உறையும் –
“செய்து போன மாயங்களும்” -திருவாய். 5. 10 : 1.-என்று கூப்பிட வேண்டாதபடி யாயிருக்கை. என்றது,
அவதாரத்தினின்றும் வேறுபடுத்தியபடி. –
இது நிற்கும் மாயம் –

கை கொள் சக்கரத்து-
செந்நெலின் படியாயிருக்கை. கைக்கெல்லாம் தானே ஆபரணமாயிருக்கை.
நெல் வயலை மறைத்து உயர்ந்து இருப்பது போலே திருக் கையை இடமாக கொண்ட திருச் சக்கரம்

என் கனி வாய்-
முறுவலை எனக்கு முற்றூட்டு-பூர்ண போஜனம் – ஆக்கினவன்.

பெருமான் –
வாய்க் கரையிலே எனக்கு ஜீவனத்தை இட்டு என்னை எழுதிக் கொண்டவன்.-
வாய் அழகையே -என்றுமாம் –
சேஷத்வம் –பிரணத்வம் மூலம் உணர்த்தி –திருமந்த்ரமே ஓலை -த்வம் மே அஹம் மே – இத்யாதி –

கை கொள் சக்கரத்து என் கனி வாய்ப் பெருமான் –
இராஜ புத்திரர்கள் கையில் இடைச்செறி கடைச்செறிகட்குத் தோற்றிருக்குமாறு போலே,
இடைச்செறி கடைச்செறி-மேல் கீழ் போட்டுக் கொள்ளும் மோதிரம்
திருவதரத்தில் பழுப்புக்கும்-சிகப்புக்கும் – கையும் திருவாழியுமான சேர்த்திக்குமாயிற்று இவள் எழுதிக் கொடுத்தது.
சேர்த்தியே உத்தேச்யம்- ஆழ்வாருக்கு -மிதுனம் -தான் சேர்ந்து மிதுனத்தில் கைங்கர்யம் –

கண்டு –
நான் அநுபவிக்கப் பாரித்த துறைகள் எல்லாம் நீங்கள் காண வன்றோ புகுகிறது.
இவளைப் பற்றினார்க்கு இவளைக் காட்டிலும் பேறு முற்பட்டிருக்குமன்றோ,
ஸ்ரீவிபீஷ்ணாழ்வான் முதலியோர் பக்கலிலே கண்டு கொள்வது.
திருவடி பெருமாள் உடைய ஆலிங்கனம் முதலிலே பெற்றாரே –

கைகள் கூப்பி-
இத் தலையில் இராஜ குலங்கொண்டு மேன்மை யடித்திராதீர்கள்; அவர் பழையர் அல்லர், பெருமதிப்பர் கண்டீர்,
தொழுது கொடு நில்லுங்கோள்.
“தலையில் வணங்கவுமாங்கோலோ” -திருவாய். 5. 3 : 7.-என்று இருக்குமவளன்றோ இவள் தான்;
இவள் பரிகரமும் அப்படியே அன்றோ.

சொல்லீர் –
தொழுத பின்னர் முகம் பார்த்துக் கொடு நிற்பர், பின்னர் உங்களுக்கு வேண்டின படி சொல்லுங்கோள்.
கனி வாய் -கை கொள் சக்கரம் பார்ப்பீர்கள் -பார்த்து திகைக்காமல் சொல்லீர் –
காதல் குணத்திலே கொத்தை சிறிது உண்டானாலும், தானான தன்மை போகாதே.
அஞ்சலி பரவசன் -இது தானே தானான தன்மை -பரத்வம் இல்லையே -கிருபா பரதந்த்ரன்

ஒரு பாசுரமிட்டுச் சொல்ல வேண்டாவோ? என்னில்,
காதன்மை சொல்லீர்-
இத் தலையில் பசலை நிறம் தொடக்கமான ஆற்றாமை யடங்கலும் உங்கள் பாசுரத்தில் அவன் அறியும்படி சொல்லுங்கோள்.
காதன்மை என்றவாறே, தம் மளவிலே இத் தலைக்கும் உள்ளது என்று இருப்பர்;
“ஒத்த விஷயமானால், விளையுமதுவும் ஒத்ததாய் இருப்பது” என்றன்றோ அவர் இருப்பது.
அல்லாத ஏற்றங்களைப் போன்றதே அன்றோ ஆற்றாமையில் வந்தால் இருக்கும்படியும் இத் தலைக்கு.

வினையாட்டியேன் காதன்மை சொல்லீர் –
அவர் ‘இவ் வூர்க்கு அவ் வூர் காதம்’ என்றிருந்தால்,
அப்படியே, ‘இவ் வூர்க்கு அவ் வூர் காதம்’ என்றிருக்க மாட்டாத
பாபத்தைச் செய்த என்னுடைய காதல்.-
(அத்யத்ம பிரிய -அந்த அளவு பிரியம் செய்ய முயல்கிறேன் கீதையில் உண்டே )
ந ஜீவேயம் -சொன்னது அவனுக்கு தெரியுமே -என்னுடைய காதன்மை வாசி அறிவான் –
விசதுர்சமான விஷயம் -அகர்ம வச்யன் அவன் கர்ம வச்யள் நான் -காதன்மை வாசி உண்டே –
துடிப்பு எனக்குத் தானே இருக்கும் –
தமக்கு இத் தலையை ஒழியச் செல்லும்படி யாயிருந்தாலும்,
எனக்கு அத் தலையை ஒழியச் செல்லாத படியான பாபத்தைச் செய்தேன்.
வன்னெஞ்சர் காதல் (ராமர் காதல்) -போன்றதன்றே மென்னெஞ்சர் காதல் (சீதை காதல் ) ;
மெல்லியலார் காதல் அளவல்லாத என் காதல் சொல்லீர்.
(உபய மிதுனம் பிரிந்த இத்திருவின் காதலின் ஏற்றம் )
அங்கு நின்றும் வந்தார்க்கு வார்த்தை சொல்லி விடவும் பெற்றிலேன்.
சொல்லுவார் தாழ்வே; வரவு தப்பாது என்று இருக்கிறாள்.

பெருமாள் காதல் போலே அல்ல சீதை காதல் –
ஆழ்வார் காதல் மிதுனத்தை பற்றியதால் அதிலும் மேன்மை -மென்மை உண்டே

————————————————————————————————

காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கரு நாராய்!
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே.–6-1-2-

இங்கும் அங்கும் ஆச்சார்யருக்கே அடியேன்
ஆபத் சகன் -ஞாலமெல்லாம் உண்ட நம் பெருமானை–சேஷியைக் குறித்து-
காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கரு நாராய்!-நாரை -பேடை விட்டு பிரியாமல் வெளுக்க வில்லை -பிராவண்ய அதிசயம் –
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்-வேத கோஷம் வைதிக க்ரியா கோலாகலம் -சாம்சாரிக தாபம் தட்டாத –
இந்த செல்வம் தானே அவன் மறந்து அங்கே உள்ளான் -இவற்றை அறியாத உங்களை அனுப்புகிறேன்
நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு-ஆபத் சகத்வ குணம் பிரகாசிப்பித்த உபகாரகன்
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே-பறவைக்கு அடியேன் -அங்கும் ஆச்சார்யருக்கு அடியேன் –
அஞ்சலி பண்ணி சேஷ பூதன் என் இடையாட்டம் – விஷயம்- சொல்ல வேண்டும் –

காதலுக்குரிய மெல்லிய பேடையோடு உடன் சேர்ந்து மேய்கின்ற அழகிய நாரையே! வேத வேள்விகளின் ஒலி மாறாமல்
முழங்கிக் கொண்டிருக்கின்ற குளிர்ந்த திருவண்வண்டூரில் எழுந்தருளியிருக்கின்ற நாதனும், உலகத்தை எல்லாம் புசித்த
நம்பெருமானுமான சர்வேசுவரனைக் கண்டு,
திருவடிகளைக் கைகளால் தொழுது, அடியேனுடைய தன்மையைச் சொல்லி யருளாய் என்கிறாள்.
வி-கு :- நாராய்! பெருமானைக் கண்டு தொழுது அடியேன் திறம் பணியீர் என்க. பெடை – பெண் நாரை.
கரு – என்றது, புணர்ச்சியால் உண்டாகும் அழகினை.

ஆஸ்ரித ரக்ஷண தீக்ஷை -துயர் உறுகின்றவர்களைப் பாதுகாப்பதில் உறுதி பூண்டிருப்பவனுக்கு என் ஆற்றாமையை
அறிவி என்று ஒரு நாரையை இரக்கிறாள்.
‘முன்பு போக விட்டவர்கள் கொண்டு வருவார்கள்’ என்று கொண்டு ஆறியிருக்கலாம் விஷயமன்றே!
அங்ஙனே யாகுமன்று முன்பு செய்த பிரபத்தியே அமையுமே.

காதல் மென் பெடையோடு உடன் மேயும் கரு நாராய் –
“நான் ஒரு மாதத்திற்கு மேல் ஜீவித்திருக்க மாட்டேன்” என்றால்,
“கண நேரத்திற்கு மேல் நான் ஜீவித்திருக்க மாட்டேன்” என்பாரும் உண்டு ஆகாதே.
கடக்க நின்று சொல்லளவேயாய்ப் போகாமல்,
(100 யோஜனை தாண்டி கடலுக்கு அக்கரையில் இருந்து சொன்ன வார்த்தை )
அது தன்னை அநுஷ்டான பர்யந்தமாக்கித் தலைக் கட்டுவாரையும் கிடைப்பதே.

“ஜீவிதம் தார யிஷ்யாமி மாஸம் தசரதாத்மஜ ஊர்த்வம் மாஸாத் ந ஜீவிஷ்யே
ஸத்யேந அஹம் ப்ரலீமி தே”- என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 68.
இன்னம் ஈண்டொரு திங்கள் இருப்பல் யான் நின்னை நோக்கிப் பகர்ந்தது நீதியோய்!
பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் அந்த மன்னனாணை இதனை மனக்கொள் நீ.- – கம்பராமாயணம்.
“ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10. ‘

மோஷம் போகலாம் சொல்லிக் கொண்டே பகவான் மோஷ பந்த இரண்டுக்கும் -ஹேது –
மோஷமே ஹேது ஆச்சார்யர் என்றவாறு ( விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ தானே )
முற்றறிவினர்களோடு கலவாதொழியும் படியான புண்ணியத்தைச் செய்வதே நீங்கள் முன்னம்.
‘பின்பு கூடுதல் தவிராதாகில் இப்போது பிரிந்தால் என் செய்ய வேணும்’ என்று இருப்பர்கள் அன்றோ அவர்கள்;
அத்தனை காரியப்பாடு இல்லை யன்றோ இவற்றுக்கு.
(குகப் பெருமாள் இடம் இப்படி சொல்லித்தானே பெருமாள் பிரிந்து -பின்பு கூடினால் தான்
இனிக்கும் என்றவர் தானே சர்வஞ்ஞன் வார்த்தை )

காதல் பெடை
நிரூபித்துப் பார்த்தால் காதலுக்கு அவ்வருகு ஒன்று இன்றிக்கே யிருத்தலின் ‘காதல் பெடை’ என்கிறாள். என்றது,
காதலை வடிவாக வுடைத்தா யிருக்கை
மென் பெடை
கலக்கவும் கூடப் பொறாத மிருதுத் தன்மையை யுடைத்தா யிருத்தலின் ‘மென் பெடை’ என்கிறாள்
காதல் உடைய மென் பெடை இல்லை –காதல் மென் பெடை அன்றோ -காதலே ஸ்வரூப நிரூபக தர்மம் காதல் என்றவாறு –
“புல்லிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக் கொள் வற்றே பசப்பு”-என்ற திருக் குறள் நினைவு கூர்தல் தகும்.

உடன் மேயும்
கலக்கவும் பொறாதார்க்குப் பிரியப் பொறாது என்னுமிடம் சொல்ல வேண்டாவே; –
அத்தாலே கூடத் திரியா நின்றது என்பாள் ‘உடன் மேயும்’ என்கிறாள்.
பேடையின் காதல் அறிந்து கூடத் திரியும் சேவலும் உண்டாகாதே.
அன்றிக்கே,
“இது பரிசுத்தமானது, இது ருசியுள்ளது, இது நன்றாக அலர்ந்திருக்கிறது” என்கிறபடியே காணும் இது திரிகிறது.
“இதம் மேத்யம் இதம் ஸ்வாது ப்ரபுல்லம் இதம் இத்யபி மதுலுப்த: மதுகர: பம்பா தீர த்ருமேஷூ
அஸௌ”-என்பது, ஸ்ரீராமா. கிஷ்கிந். 1 : 88.
அது வாய் அலகாலே கோத்து எடுத்துக் கொடுத்தால், பின்பு ஆராய வேண்டாதே மிடற்றுக்குக் கீழே இழித்துமித்தனை இது செய்வது.
பேடையின் நினைவு அறிந்து உண்பிக்கும் சேவலும் உண்டாகாதே!

உடன் மேயும் கரு நாராய் –
அதற்கு ஒரு குற்றம் தேடிச் சொல்லுவாரைப் போலே சொல்லுகிறாள் தன் காரியம் செய்கைக்காக.
அடுகு வளத்தைத் -போனகப் பெட்டி -தடுப்பாரைப் போலே. தன் துயர் ஒலி செவிப்பட்டால் அவற்றுக்கு
மிடற்றுக்குக் கீழ் இழியாது என்று இருக்கிறாள் காணும்.
(பட்டர் நிர்வாகம் -பாசுரம் தோறும் கிலாய்த்து பேசுவது )

கரு நாராய்
கூடத் திரிகையாலே நரை திரை நீங்கி வடிவு புகர் பெற்றிருத்தலின் ‘கரு நாராய்’ என்கிறாள்.
பிரியாதார்க்கு உடம்பு வௌாதாகாதே. தான் உடம்பு வெளுத்துக் கிடக்கிறாள் அன்றோ.

வேதம் வேள்வி ஒலி முழங்கும் தண் திருவண் வண்டூர் –
இவற்றின் அறிவு கேடு பலித்தபடி சொல்லுகிறது.
அங்கு உண்டான வேத ஒலி, வைதிகக் கிரியை, இவற்றைக் கண்டு
கால் தாழ வேண்டாவே யன்றோ இவற்றுக்கு.
தன் நாயகன் அவை கண்டன்றோ வர மாட்டாதே நிற்கிறது.
“தாந யஜ்ஞ-தானங்கள் செய்யுமிடத்தே எழுந்தருளியிருப்பாராயிற்று;

“தாந யஜ்ஞ விவாஹேஷூ ஸமாஜேஷூ மஹத்ஸூச ந த்ரக்ஷ்யாம:
புநர் ஜாது தார்மிகம் ராமம் அந்தரா”- என்பது, ஸ்ரீராமா. அயோத்.
தேசத்திலே காலத்திலே பிராப்த விஷயங்களிலே இடுவிக்கைக்காக யாகங்களிலே எழுந்தருளியிருப்பாராயிற்று.
நியாயமாக ஈட்டிய பொருள் கொண்டு செய்விக்கைக்காகவும், சடங்குகளில் தப்பினவை உண்டாகில்
அவற்றை எடுத்துக் கொடுக்கைக்காகவும்.
விவாஹேஷூ-
இரண்டு தலையையும் பொருந்தவிட்டு, பொருந்தாதார்க்கு வேண்டுவன செய்து,
ஹோமம் பண்ணுவித்துத் தலைக் கட்டிக் கொடுக்கைக்காக, விவாகம் செய்யுமிடங்களில் எழுந்தருளியிருப்பர்.
ஸமாஜேஷூ மஹத்ஸூச –
தீர்க்க சத்திரங்களிலேயாதல், உத்ஸவங்களிலேயாதல்.
ச –
யாவன் ஒருவன் ஓர் இடத்தே அத்ருஷ்ட காரியங்கள் செய்யும் அங்கே இருப்பர் என்கிறது.
ந த்ரக்ஷ்யாம: புனர் ஜாது –
அவரை அவ்வவ்விடங்களிலே இருக்கக் காண்கின்றிலோம்.
தார்மிகம் ராமம் அந்தரா –
என் தான்? இவர் இவ்விடங்களிலே இருப்பது என்? என்னில்,
தர்மங்களிலே வருகிற ஐயங்களை அறுத்துக் கொடுக்கைக்கும், அவை தப்பாதே அநுஷ்டிப்பிக்கைக்குமாக.
இப்படியே யன்றோ அவன் படிகள்.

திருவண் வண்டூர் நாதன் –
‘ஸ்ரீவைகுண்டநாதன்’ என்னுமதிற் காட்டில் உண்டான ஏற்றம் சொல்லுகிறது.
எளியாரை வலியார் பறிக்க, அங்கே கோயிற் சாந்து பூசியிருக்குமது ஓர் ஏற்றம் அன்று.
வேத ஒலியும் யாகங்களில் சாஸ்திரங்களைப் பேசுகின்ற ஒலியும் கடல் ஒலி போலே இருக்கிற,
சிரமத்தைப் போக்குகிற ஊர்.

ஞாலம் எல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு –
அம் முதன்மையோடே கூட வந்தானாகில் அங்குத்தை உதவாமையும் கிடக்குமோ? என்னில்,
அங்ஙனன்று; தளர்ந்தார் தாவளம் -ரஷகம் -என்கிறது. ஆபத்திற்குத் துணைவன் அன்றோ.
ஆபத் ரக்ஷகனான செயலைக் காட்டி என்னைத் தனக்கே உரியவனாக எழுதிக் கொண்டவன் என்பாள்
‘ஞாலம் எல்லாம் உண்ட நம் பெருமான்’ என்கிறாள்.

பாதம் கை தொழுது –
கண்டு, திருவடிகளிலே தண்டன் இட்டு.
‘கைகள் கூப்பி’ என்றதே; தொழுதார்க்கு நிற்க ஒண்ணாதே யன்றோ.
உண்ணா நிற்க, மிடற்றைப் பிடித்தாற் போலே இருப்பது ஒன்று அன்றோ தொழுது வைத்து விழாதே ஒழியுமது” என்று
பூர்வர்கள் நிர்வஹிப்பர்கள்.
“மதித்தான் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் ஸ்ரீ பாதத்தே தலை படத் தண்டன் இட்ட அன்று,
எனக்கு உண்டு பசி கெட்டாற்போலே இருக்கும்” என்று அருளிச் செய்வர் நஞ்சீயர் .
அன்றிக்கே,
கிலாம் தோற்றும்படி அவர் திருவடிகளிலே கை சென்று தாக்கும்படி விழுந்து கிடவுங்கோள் என்னுதல்; என்றது,
தீர்க்கப் பிரணாமம் பண்ணுங்கோள் என்றபடி.

பணியீர் –
அவனைக் கிட்டி நின்று, பிரணய ரோஷத்தாலே ‘நீ, நான்’
சொல்லீர் என்னாமல், “பணியீர்” என்றதன் பாவத்தை அருளிச் செய்கிறார்
‘அவனைக் கிட்டி’ என்று தொடங்கி. என்றது, நாயகனைப் பிரணய
ரோஷத்தாலே ‘நீ, நான்’ என்று சொல்லுவது போன்று, உத்தேசியரான ததீயரைச் சொல்லலாகாது என்றபடி.
“மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் நினையுங் காலைப் புலவியுள் உரிய”-என்பது, இலக்கணம்.
என்று சொல்லுமவையெல்லாம் சொல்ல ஒண்ணாதன்றோ
இவர்கள் முன்பு இவர்கள் பக்கல் உபசாரத்தில் குறையாமற் சொல்லுகிறபடி

அடியேன் –
உங்களைக் கொண்டு அழைப்பித்துக் கொள்ள இருக்கிறவனுக்கு அன்று;
அத் தலையால் வந்த இழவு நீக்கி அவனோடே சேர்க்க இருக்கிற உங்களுக்கு அடியேன் என்கிறாள்.
“எந்த நாதமுனிகளுடைய திருவடிகளானவை இம்மை மறுமை இரண்டிலும் எப்போதும்
என்னைக் காப்பாற்றும் பொருளாக இருக்கின்றனவோ” என்கிறபடியே.
“நாதாய நாத முநயே அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ சரணம் மதீயம்”-என்பது, ஸ்தோத்திர ரத்நம் 2.

அடியேன் திறமே
அவன் திறம் போல் அன்று.
என் இடையாட்டத்தைச் சொல்லுங்கோள்; சொல்லில் ஒரு மஹா பாரதத்துக்குப் போருமாகாதே.

———————————————————————————————

திறங்களாகி எங்கும் செய்களூ டுழல் புள்ளினங்காள்!
சிறந்த செல்வ மல்கு திரு வண் வண்டூருறையும்
கறங்கு சக்கரக் கைக் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே.–6-1-3-

கறங்கு சக்கரக் கைக் கனி வாய்ப் பெருமானை-ரஷகத்வ போக்யத்வங்களால்-சர்வாதிகன் –
திறங்களாக -கூட்டமாக உள்ள பஷிகள்
திறங்களாகி எங்கும் செய்களூ டுழல் புள்ளினங்காள்!-விளை நிலங்களில் நடுவே சஞ்சரிக்கும் பஷி சங்கங்கள்
சிறந்த செல்வ மல்கு திரு வண் வண்டூருறையும்-சிறந்த செல்வம் -தானே இப்பதிகம் -இது தான் இவனை மறைப்பித்தது –
நித்ய வாசம் செய்து அருளும்
கறங்கு சக்கரக் கை-பகவத் அனுபவ ஆனந்தம் -ஆஸ்ரித விரோதி நிரசனத்தாலும் -வந்த பெருமை -சுழன்று கொண்டே வரும் –
கனி வாய்ப் பெருமானைக் கண்டு -நிரதிசய போக்யமான அதர சோபை -ரஷகத்வ போக்யத்வம் கொண்ட சர்வாதிகத்வம்
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே-அவன் மேன்மைக்கு ஈடாக தாழ்ந்து -சாஷ்டாங்க பிரணாமம்-
அடியேன்-என் கார்யம் நீங்கள் இட்ட வழக்கு -பஷி பாரதந்த்ர்யம் -இடரே-விஸ்லேஷ துக்கம் –
கடகர் உடைய சமவாயம் கூட்டம் சங்கம் உத்தேச்யம் என்றவாறு

திறம் திறமாக எல்லா இடங்களிலும் வயல்களின் மத்தியிலே சஞ்சரிக்கின்ற கூட்டமான பறவைகளே! சிறந்த செல்வம் மிகுந்திருக்கின்ற
திருவண்வண்டூரிலே எழுந்தருளியிருக்கின்ற, சுழலுகின்ற சக்கரத்தைத் தரித்த திருக்கரத்தையும் கோவைக்கனி போன்ற
திருவாயினையுமுடைய பெருமானைக் கண்டு தாழ்ந்து தொழுது அடியேனுடைய துன்பத்தைச் சொல்லுங்கோள்.
செய்கள் ஊடு எங்கும் திறங்களாகி உழல் புள் என்க.
புள்ளினங்காள்: திருவண்வண்டூர் உறையும் பெருமானைக் கண்டு இறங்கித் தொழுது
அடியேன் இடரைப் பணியீர் என்க. ஊடு – உள்ளுமாம். கறங்கு – சுழலுகின்ற. இறங்கி – தாழ்ந்து

திறம் திறமாகச் சஞ்சரிக்கின்ற புள்ளினங்களைக் கண்டு, என் வியசனத்தை அறிவியுங்கோள் என்கிறாள்.

திறங்களாகி –
கூட்டம் கூட்டமாக. இவை, திரள் திரளாகத் திரிதல் நம் காரியம் செய்து தலைக் கட்ட என்றிருக்கிறாள்.
“வாயுந் திரையுகளும்” என்ற திருவாய்மொழியில் வாசனையாலே, தன் துன்பம் கண்டு பொறுக்க மாட்டாமல்
படுகின்றனவாகக் கொண்டு நினைத்திருக்கிறாள்.
அங்கு, தாம் தாம் விரும்பிய பொருள் பெறாமையாலே நோவு படுகின்றன என்று இருந்தாள்;
இங்கு, தன் இழவு கண்டு பொறுக்க மாட்டாமையாலே நோவு படுகின்றன என்று இருக்கிறாள்.
இங்ஙன் கூடுமோ? என்னில்,
“இவை பறவைகள், நம் காரியம் செய்து தலைக் கட்ட மாட்டா” என்னும் அறிவு இன்றிக்கே ஒழிந்த பின்பு,
இதுவும் கூடத் தட்டு இல்லை.
(அங்கு பகவத் அலாபத்தால் நோவு படுகின்றனவாக -திரு மாலால் நெஞ்சு கோட்பட்டாயே
இங்கு இவள் துக்கம் கண்டு துன்பம் பட
வாசி உண்டே ஆகிலும் -பிரமித்த ஆகாரம் துல்யம் இரண்டிலும் -இதுவே சாம்யம் இரண்டுக்கும் )

திறங்களாகி எங்கும் –
பிராட்டியைப் பிரிந்து பெருமாள் நோவு படுகிற சமயத்திலே முதலிகள் அடங்கலும் நாலு திக்குகளிலும் புகுந்து
அங்கும் இங்கும் திரிந்தாற் போலே காணும் இவையும் திரிகிறபடி,
தேடினால் காண்கைக்குச் சம்பாவனை இல்லாத இடமெங்கும் புக்குத் தேடா நின்றனவாதலின் ‘எங்கும்’ என்கிறாள்.
சுயம் பிரபை யுடைய பிலம் அகப்படப் புக்குத் தேடினார்கள் அன்றோ முதலிகள்.

செய்களூடு உழல் புள் இனங்காள் –
காணுவதற்குச் சம்பாவனை இல்லாத இடம் எங்கும் புக்குத் தேடுவது, காணப் பெறாதொழிவது,
உண்ணா விரதத்தை மேற் கொள்வதாய்க் கொண்டு பட்ட பாடு எல்லாம் படுகின்றன வாயிற்று.
இராமாவதாரத்துக்குப் பின்பு பிரிந்தாரைச் சேர விடுகை திரியக்குகளுக்குப் பணி என்று காணும் வாசனை.

சிறந்த செல்வம் மல்கு திருவண் வண்டூர் உறையும்-
வாராமை அவன் குற்றம் அன்று கண்டீர், அவ் வூரின் நிறைவு வேறேயும் சிலரை நினைக்க ஒட்டுமோ.
“முக்தன் ஜனங்களுடன் கூடியுள்ள இந்தச் சரீரத்தை நினைப்பதில்லை”
“ந உபஜனம் ஸ்மரந் இதம் சரீரம்”-என்பது, சாந்தோக்யம். 8. 12 : 3. என்னுமாறு போலே,
இங்குத்தை ஐஸ்வரியமும் இவனை மறக்கப் பண்ணிற்று அன்றோ. மிக்க ஐஸ்வரியம் கரை புரளும்படியான ஊர்.

அன்றிக்கே,
சிறந்த செல்வம் – தகுதியான ஐஸ்வரியம் என்னுதல்.
கலந்து கூட இருக்கிறபோது ‘நீயே எனக்கு எல்லாச் செல்வங்களும்’ என்று சொல்லி வைத்து,
இப்போது தனக்கு என்ன ஒரு சம்பத்து உண்டாயிருக்கிறபடி எங்ஙனே என்று இருக்கிறாள். ( பூர்வர் நிர்வாகப்படி )

‘திருவண் வண்டூர்’ என்கையாலே, பரமபதத்தில் வேறுபாடு.
‘உறையும்’ என்கையாலே, அவதாரத்தில் வேறுபாடு.

கறங்கு சக்கரம் கை –
பகைவர்களை அழிக்கும் விரைவாலே சுழன்று வாரா நின்றுள்ள திருவாழியைக் கையிலே
யுடையனான சர்வேஸ்வரனை. -பூர்வர் நிர்வாகப்படி –

அன்றிக்கே
பட்டர் நிர்வாகப்படி – இத்தலையைத் தோற்பித்துக் கொண்டோம் என்னும் மேன்மை தோற்ற,
ஆயுதத்தைச் சுழற்றிப் புன் முறுவல் செய்து இருக்கிறபடி யாகவுமாம்.

பொங்கு இள வாடை அரையில் சாத்திப் பூங்கொத்துக் காதில் புணரப் பெய்து கொங்கு
நறும் குழலார்களோடு குழைந்து குழலில் இனிதூதி வந்தாய் -பெருமாள் திருமொழி -6-9-

கனி வாய்ப் பெருமானைக் கண்டு –
அக வாயில் உவகை தோன்றப் புன் முறுவல் செய்து அதனாலே என்னை எழுதிக் கொண்டவனைக் கண்டு.
அவர்க்குப் புறம்பே ஐஸ்வரியம் உண்டானாலும் எங்களுக்குத் தம்மை ஒழிந்த ஐஸ்வரியம் இல்லை காணும்.
திருவுக்கும் திருவாகிய செல்வன் -பெரிய திருமொழி, 7. 7 : 1.-அன்றோ.

இறங்கி நீர் தொழுது பணியீர் –
தொழுங்கோள் என்கிறாள்; தொழுத அளவிலே நில்லாதே, முதலியார் கண்டீர் கோள்;
பிரம்புகள் படாமே கடுக விழுந்து கொடு நில்லுங்கோள் என்கிறாள்.
விழா நின்றாலும் அக வாயைச் சோதியா நிற்பர், அபிமானத்தைப் பொகட்டுக் கொண்டு விழுங்கோள் என்கிறாள்.

“அந்த அநுமான் கை கூப்பினவராய்ச் சாஷ்டாங்க பிரணாமமுடையவராய் மானச பிரணாமமுடையவராய்
“நிப்ருத: ப்ரணத: ப்ரஹவ: ஸ: அபிகம்ய அபிவாத்யச” என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 3.
இஸ் ஸ்லோகத்திலுள்ள
நிப்ருத: என்பது, ஒடுக்கமாய், அஞ்சலியையும்,
ப்ரணத: என்பது, சாஷ்டாங்க பிரணாமத்தையும்,
ப்ரஹவ: என்பது, மானச பிரணாமத்தையும் சொல்லுகின்றன.–
அபிகம்ய அபிவாத்யச–அருகில் சென்று வணங்கினார்” என்னுமாறு போலே.

பணியீர் –
இத் தலையில் நின்றும் சென்றாரை அவன் சொல்லும்படியே யாகிலும் சொல்ல வேண்டுமே.
தன்னை ஒழிந்தார் அடங்கலும் தன்னைச் சொல்லும்படியை, இத் தலையில் நின்றும் சென்றாரைச் சொல்லா நிற்கும் அவன்.
ஸ்வரூபத்தால் சொல்லுமவை இவையானால், காதலால் வருமவை சொல்ல வேண்டா அன்றோ.
(சேஷ சேஷி பாவம் அறிந்து சொல்லும் பொழுது காதலால் சொல்லும் என்பது சொல்லவும் வேண்டுமோ )

அடியேன் இடர் பணியீர் –
அவன் அறியாதனவற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமே!
அறிந்தானாகில், ஆள் விடப் பார்த்திருப்பானோ.
அடியேன் இடர் பணியீர்-
இரண்டு தலைக்கும் கலவி ஒத்திருக்க,
இத் தலைக்கு வந்த இடரை அறிவியுங்கோள் என்பாள் ‘அடியேன் இடர் பணியீர்’ என்கிறாள்.

——————————————————————————-

இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்?
விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
கடலின் மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.–6-1-4-

அபி ரூபனாய் -ஆஸ்ரித பவ்யனாய் -அன்னங்களை தூது விடுகிறார்கள் -சஜாதீயம் -அன்னமாய் நூல் பயின்றான்
இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்?-விஸ்லேஷ பிரசங்கமே இல்லாத -போகத்தில் அவஹாகித்து
இணைந்து -பரஸ்பர பவ்யமான –
விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்-விச்சேதம் இல்லாத வேத கோஷம் -குளிர்ந்த ஸ்ரமஹரமான
கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு-மநோ ஹரமான -திருமேனி -அழகை உபகரித்து
நான் இட்ட வழக்கு எனக்கு பவ்யன் -கண்ணன் பவ்யதைக்கு எல்லை காண முடியாத படி வ்யாமோஹம்
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.-அத்விதீயை -இவள் தானே -சரீரம் நைந்து சிதிலை ஆனாள் என்று சொல்லுமின்
அணைந்து ஆடும் -கடகர் உடைய பரஸ்பர பகவத் அனுபவ சௌக்யம் -அந்யோந்ய பவ்யதையும் -உத்தேச்யம்
அடியேன் என்று ஒவ் ஒருவரும் -பரஸ்பர நீச பாவம் -மடப்பம் –
துஷ்யந்தி ச ரமணீய ச போல் இருவரும் -பரஸ்பர பகவத் அனுபவ போகமும் உத்தேச்யம் –

பிரிவு இல்லாத போகத்திலே மூழ்கிச் சேர்ந்து அநுபவிக்கின்ற இளமை பொருந்திய அன்னங்களே! பிரிதல் இல்லாத வேதத்தின் ஒலியானது
ஒலித்துக் கொண்டிருக்கின்ற குளிர்ந்த திருவண் வண்டூரில் எழுந்தருளி யிருக்கின்ற கடல் போன்ற நிறத்தை யுடைய உபகாரகனும்
கண்ண பிரானுமான நெடிய திருமாலைக் கண்டு, ஒரு பெண்ணானவள் சரீரம் நிலை குலைந்து உருகுகின்றாள் என்று உணர்த்துங்கோள்.
வி-கு :- அன்னங்காள்! திருவண் வண்டூர் நெடுமாலைக் கண்டு ஒருத்தி நைந்து உருகும் என்று உணர்த்துமின் என்க.
மூழ்கி ஆடும் அன்னம் என்க. கடலின் – கடலைப் போன்ற.

சில அன்னங்களைக் குறித்துச் சரீரம் கட்டுக் குலைந்து உருகா நின்றாள் என்று சொல்லுங்கோள் என்கிறாள்.

இடர் இல் போகம் மூழ்கி –
விஸ்லேஷ கந்தமும் -பிரிவு சிறிதும் இல்லாத கலவி இன்பத்திலே மூழ்கி.
நான் செய்தபடி செய்ய, இப்படியே இருப்பாரையும் காணப் பெற்றோம் அன்றோ உலகத்திலே. –
சுக்ரீவன் துக்கம் போக்கி பெருமாள் –
போகத்தின் தொடக்கத்திலே பிரிவு பிறந்ததே யன்றோ தனக்கு
வீட்டில் ஆய்ச்சிக்கும் ஐயர்க்கும் பர தந்திரராக வேணும்,
நாடு கேட்க வேணும் என்கிற அந்ய பரதை எல்லாம் தீரும்படி தனி இடம் தேடி அனுபவிக்கப் போக,
அங்கே இராவணன் வந்து தோற்றினான் அன்றோ தனக்கு; அது இல்லை யன்றோ இவற்றுக்கு.
சீதை யாகவே பராங்குச நாயகி பேசுகிறாள் –

இடர் இல் போகம் மூழ்கி –
புணர்ச்சிக்குப் பாரித்துக் கொண்டிருந்து பிரிவோடே தலைக் கட்டும் என்னைப் போலே ஆகாது ஒழியப் பெறுவதே!
இன்னம் தரை காண்கின்றன இல்லை என்பாள் ‘மூழ்கி’ என்கிறாள்.

இணைந்து ஆடும் மடம் அன்னங்காள் –
ஒரு தலை களிக்க ஒரு தலை துடிக்க வேண்டாதபடி இருக்கை.
அன்றிக்கே,
ஒன்றன் நினைவுக்கு ஒன்று கால் எடுக்க-அனுமதி பண்ணி – அமைந்திருக்கை என்னுதல்.
ஒன்றற்குச் சொல்லுகிற தன்மை இரண்டற்கும் உண்டாயிருத்தலின் ‘மட அன்னங்காள்’ என்கிறாள்.
மடப்பம் உள்ளது பேடைக்கே யாயிருக்க, இரண்டற்கும் ஒக்கச் சொல்லுகிறது,
கலவியால் வந்த துவட்சி இரண்டற்கும் ஒத்திருத்தல் பற்றி.

விடல் இல் வேத ஒலி முழங்கும் –
அத்யயனம் மறுத்தன்றோ இவ்வூர் கிடக்கிறது. ஜனக குலம் அன்றோ ஓதுவார் இன்றிக்கே கிடக்கிறது.
“கர்மத்தால் சித்தி பெற்றவர்கள் ஜனக குலத்திலுள்ளவர்கள்” என்கிறதன்றோ.

“கர்மணை வஹி ஸம்ஸித்திம் ஆஸ்திதா ஜனகாதய: லோக ஸங்க்ரஹமேவாபி
ஸம்பஸ்யந் கர்தும் அர்ஹஸி.-என்பது, ஸ்ரீ கீதை. 3 : 20.

மற்றோர் அடையாளம் சொல்ல வேண்டுமோ, புறப்பட்டவாறே வேத ஒலி வழி
காட்டுகிறதன்றோ என்பாள் ‘முழங்கும்’ என்கிறாள். என்றது,
வேத மார்க்க அநுசாரிகள் அன்றோ நீங்கள் என்றபடி. –
மதுகைடபர் -தேடித் திரியும் ஹம்ச ரூபி சஜாதீயர் அன்றோ நீங்கள் ( திரு மெய்யம் சேவை )

கடலின் மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலை –
கடல் போலே சிரமத்தைப் போக்கக் கூடிய தான வடிவை யுடையனாய், அவ் வடிவைத் தாழ நின்று
இத் தலைக்கு முற்றூட்டாக உண்பித்து,
பின்னையும் ‘ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்னும் வியாமோகத்தை யுடையவன்.

அன்றிக்கே,
குளிர்ந்த வடிவை பவ்யரைப் போலே நின்று உண்பித்து, இப்போது எட்டாதபடி இருக்கிறவன் என்னுதல்.
அன்று தானும் தனக்கு -ஆழ்வாருக்கு -வேண்டுவதாகச் செய்தானல்லன்,
இத் தலையை அழிக்கைக்காகச் செய்தானித்தனை;
அன்று வேண்டி யிருந்தானாகில் இன்றும் வேண்டி இரானோ.

உடலம் நைந்து –
‘நெஞ்சிலே சிறிது நோவு பிறந்த அளவேயாகில், சரீரத்தை ஒரு வாட்டம் வருவதற்கு முன்னே சென்று
கைக் கொள்ளுகிறோம்’ என்று இருக்க வேண்டா.
தனித் தனியே அறிவு பெற்று அழிய வல்ல உடம்பே அன்றோ.
(முடியானே கரணங்கள் போல் தனித்தனியே ஞானம் கொண்டவை அன்றோ ஆழ்வாரது கரணங்கள் )
அவ் வுடம்போடே அணைந்து பிரிந்த இவ் வுடம்பு கொண்டு பிழைக்க ஒண்ணாது என்னுமிடம் தாமே அறிவாரே அன்று.

ஒருத்தி –
‘இன்ன காட்டிலே மான் பேடை கிடந்து உழற்றா நின்றது’ என்றால், எய்தவன் கை உணருமன்றோ.

ஒருத்தி உருகும் –
எதிர்த் தலைக்கு இது இல்லை என்னுமிடம் அறிவியுங்கோள். -அணைக்கும் பொழுது இருவர் உருகுபவள் ஒருத்தியே –

உணர்த்துமினே –
தாம் இத் தலையை மறந்தமையை நினைவூட்டுங்கோள். உணர்த்தி அற்றாரை உணர்த்த வேணுமே.
அறியாதாரை அறிவித்தல் அன்னத்துக்கே பணி யன்றோ;
பண்டும் பிறங்கு இருள் நிறம் கெட அன்னமா யன்றோ அருமறை பயந்தது.-பெரிய திருமொழி, 5. 7 : 3.-

அன்றிக்கே,
ஒருத்தி படும் பாடே என்று சொல்லுங்கோள் என்பாள் ‘ஒருத்தி உருகும் என்று உணர்த்துமின்’ என்கிறாள் என்னுதல்

——————————————————————————————————-

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண் வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.–6-1-5-

போக்யத்வ சேஷித்வ பூரணன் -சர்வேஸ்வரன் -புணர்த்த பூந்தண் துழாய் முடி -சர்வாதிகனைக் குறித்து பின்னும் சில ஹம்சங்கள்
உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மட வன்னங்காள்!-மூன்றுமே காமத்தின் பால் -உணர்த்தல் -ஊடல் -புணர்த்தல் மூன்றும்
உணர்த்தலில் அருமையையும் –ஊடலில் கிலேசம் இல்லாத புணர்த்தல் மட்டுமே இந்த மட அன்னங்களுக்கு
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண் வண்டூர்-
கதிப்பை உடைத்தான திரண்டு -வண்டல் மணல்கள் மேல் -சங்கு சேர்ந்த –
புணர்த்த பூந்தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு-தொடுக்கப் பட்ட அழகிய செவ்வித் திருத் துழாய்
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே -பக்த அஞ்சலி ஹஸ்தராய்-நீங்கள் அவன் போலே செல்வத்தில் ஈடுபட்டு
மறக்காமல் என்பதால் -அடியேனுக்கும் -உம்மை –சேர்க்கப் பட்ட -கை -திருத் துழாய் -சங்குகள் -அடியேன் மட்டும் பிரிந்து
உங்களுக்கு சேஷ பூதை-உங்களுக்கும் அடியேனுக்கும் மோஷம் பெற்று கொடுக்க வேண்டுமே என்றுமாம் -ஸ்தோத்ர ரூபமான
கடகர் உடைய பரஸ்பர விஸ்லேஷ பீருத்வம் உத்தேச்யம் -பீத ராக பய குரோதம் இல்லாதவன் தானே -கீதை –
இந்த விஷயத்தில் பயமும் உத்தேச்யம் –

உணர்த்தலின் அருமையையும் ஊடலின் அருமையையும் உணர்ந்து பிரியாமல் சேர்ந்தே மேய்கின்ற இளமை பொருந்திய அன்னங்காள்!
திணுங்கின வண்டல்களிலே மேலே சங்குகள் சேர்ந்திருக்கின்ற திருவண் வண்டூரிலே எழுந்தருளி யிருக்கின்ற, தொடுக்கப்பட்ட பூக்கயுடைய
குளிர்ந்த திருத்துழாயைத் தரித்த திருமுடியை யுடைய நம் பெருமானைக் கண்டு குவித்த கைகளை யுடையீராகி அடியேனுக்கும் துதியுங்கோள்.
அன்னங்காள்! திருவண் வண்டூர் நம்பெருமானைக் கண்டு புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமின் என்க.
திணர்த்த – கனமாகப் படிந்திருக்கின்ற.

திரியவும் சில அன்னங்களைக் குறித்து, அந்தத் தேசம் புக்காரை மறப்பிக்கும்,
நீங்கள் புக்கால் என்னையும் நினையுங்கோள் என்கிறாள்.

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மட அன்னங்காள் –
ஊடலையும் உணர்த்தலையும் உணர்ந்து உடனே திரிகிற அன்னங்காள்!
பிரிந்தால் பின்பு வரும் துக்கங்கள் எல்லாவற்றையும் நினைத்துக் கூடத் திரிகின்றன வாதலின், ‘உடன் மேயும்’ என்கிறாள்.
என்றது, பிரியவல்லார் ஆர், பின்பு நோவுபட வல்லார் ஆர், பின்பு நெய்யிலே கையிட வல்லார் ஆர்? என்று கூடத் திரியா நிற்கும் என்றபடி.
‘குற்றவாளராகிலன்றோ பின்பு பொறுப்பித்துக் கொள்ள வேண்டுவது’ என்று காணும் இவற்றினுடைய சித்தாந்தம்.
ஊடல் உணர்தல் புணர்தல் என்கிற மூன்றிலும், இவற்றுக்குப் புணர்தலேயாய்ச் செல்லுகிறபடி.
ஒரு கலத்திலே ஒக்க உண்டு திரிவாரைப் போலே. இனித் தான் போகப் பிரகாரந்தான் மூன்று வகைப்பட்டாயிற்று இருப்பது.
அவை : ஊடல், உணர்தல், புணர்தல் என்பனவாம்.

“ஊடல் உணர்தல் புணர்தல் என்கிற மூன்றிலும், இவற்றுக்குப் புணர்தலேயாய்ச் செல்லுகிறபடி.
ஒரு கலத்திலே ஒக்க உண்டு திரிவாரைப் போலே.
இனித் தான் போகப் பிரகாரந்தான் மூன்று வகைப்பட்டாயிற்று இருப்பது.
அவை : ஊடல், உணர்தல், புணர்தல் என்பனவாம்.
“ஊடல் உணர்தல் புணர்தல் இவை மூன்றும், காமத்தாற் பெற்ற பயன்” என்று மூன்றனையும்
பிரயோஜனமாகச் சொன்னார்கள் தமிழர்கள்.
இவற்றுள், ஊடலாவது, எதிர்த் தலையோடு கூடினால் காரணமில்லாமல் வருவது ஒன்று.
அது தான், ‘என்னை ஒழியக் குளித்தாய், என்னை ஒழியப் பூவைப் பார்த்தாய், உன் உடம்பு பூ நாறிற்று’
என்றாற் போலே கூறுமவை.-பிரணய ரோஷம் –
உணர்த்தலாவது, ‘உனக்கு என்று குளித்தேன்’, ‘உனக்கு ஆம்’ என்று பார்த்தேன்,
‘உன் வரவுக்கு ஒப்பித்தேன்’ என்றாற் போலே கூறுமவை.
இவை இரண்டற்கும் பின்னே நிகழ்வது கலவி.
இவை எல்லாமுண்டன்றோ இவளை உடையவனுக்கும்.
அன்றிக்கே,
உடன் மேயும் என்பதற்கு,
“இது பரிசுத்தமானது, இது ருசியுள்ளது, இது நெருப்பினால் நன்றாகப் பக்குவப் படுத்தப் பட்டது” என்னா நின்றன என்னுதல்.

“இதம் மேத்யம் இதம் ஸ்வாது நிஷ்டப்தம் இதம் அக்நிநா ஏவம் ஆஸ்தே ஸதர்மாத்மா
ஸீதயா ஹைராகவ:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 96 : 2.
என்றது, ஒன்றை ஒன்று அகன்று இரண்டுங் கூடப் பட்டினி கிடக்கை யன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.
விழுக் காட்டில் உணரப் பெறாமை கெட்டோம் என்கிறாள். என்றது, ‘கலவியை அதிகரிக்கச் செய்வது காண் இந்தப் பிரிவு என்றால்,
‘அவ்வளவும் ஆறியிருக்க வல்லார்க்கு அன்றோ பின்பு போகத்தின் நிறைவு வேண்டுவது’ என்னப் பெற்றிலேன் என்கிறாள் என்றபடி.

அன்னங்காள்!
அறிவில்லாத இவை அறிவின் பலத்தை அடைந்தன; அதனை யுடைய நான் பெற்றிலேன் என்பாள் ‘அன்னங்காள்!’ என்கிறாள்.
(நியத பிரகாரம் சேர்ந்தே இருப்பதை உணர்ந்த அன்னங்கள் -தத்வ த்ரயம் இல்லாமல் ஒரே தத்வம் என்று உணர்ந்தவை )
மட அன்னங்காள்
போகத்தால் துவட்சியடங்கலும் வடிவிலே தோற்ற இருக்கின்றனவாதலின் ‘மட அன்னங்காள்’ என்கிறாள்.

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் அன்னங்காள்’
வருவனவற்றை அறிந்து நீக்கிக் கொண்டிருப்பவர்கள், விழுக்காடு அறியாதே அகப்பட்டாருடைய காரியத்தைச் செய்து
தலைக் கட்ட வேண்டாவோ என்பாள். ‘உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் அன்னங்காள்’ என்கிறாள்.
இந் நிர்த்தேசத்தாலும் இத் திருவாய்மொழி யடங்கலும் ஊடல் அடங்கியிருத்தல் தோற்றுகிறது.

திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண் வண்டூர் –
அழுக்குக்கு இறாய்க்கக் கடவ சங்குகளானவை நீர் உறுத்தினவாறே கொழுத்த வண்டல்களிலே சேரா நிற்கும் திருவண் வண்டூர்.
திணர்த்த வண்டல்- செருமின வண்டல்கள்.
அறிவில்லாத பொருள்களுங்கூடக் கால் வாங்க மாட்டாத தேசங்கண்டீர் என்பாள் ‘சங்கு சேரும்’ என்கிறாள்.
இதனால், பிரமாணங்கட்குக் கட்டுப்பட்டவர் அல்லாதாரையும் மீள ஒட்டாத தேசங் கண்டீர் என்பதனைத் தெரிவித்தபடி.
வேறு போக்கிடம் இன்றிக்கே யிருத்தலின் ‘சேரும்’ என்கிறாள். என்றது, “மீண்டு வருதல் இல்லாதது” என்னும்படியே,
மீட்சியின்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.
மிருதுத் தன்மையாலும் குளிர்ச்சியாலும் வேறு ஒன்றனை நினைக்க ஒட்டாதிருக்கை.
சங்குகளை-வெள்ளைகளையும் கூடக் காற்கட்டுகிறதன்றோ மண்பாடு. –சாத்விகர்களை போக ஒட்டாத திவ்ய தேசம் –
ஆக, இரண்டாம் அடியால் வாராது ஒழிந்த இடம் அவன் குற்றம் அன்று கண்டீர் என்பதனைத் தெரிவித்தபடி.

புணர்த்த பூந்தண் துழாய் முடி நம்பெருமானைக் கண்டு –
தொடுக்கப்பட்டு அழகியதாய்ச் சிரமத்தைப் போக்கக் கூடியதான திருத் துழாயினைத் திருமுடியிலே யுடையவனாய்,
அதனாலே என்னைத் தனக்கே உரிமையாக்கினவனைக் கண்டு. என்றது,
நீங்கள் சென்று அறிவிக்குமித்தனையே வேண்டுவது; இங்குத்தைக்கு வருகைக்கு ஒப்பித்தபடியே
இருக்கிறவன் என்பதனைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே,
இத் தலையைத் தோற்பித்த வேண்டப்பாடு தோற்றும்படி வளையம் வைத்து முதன்மை கொண்டாடி
இருக்கின்றவனைக் கண்டு என்று பணிப்பர் பட்டர். என்றது,
தம் ஒப்பனையையும் முதன்மையையும் நம்மோடே காட்டியிருக்கிறவனைக் கண்டு என்றபடி.

புணர்த்த கையினராய் –
அங்கே சென்றால் தொழப் பார்த்திராமல், கை ஒத்துச் செல்லுங்கோள் கண்டீர். என்றது,
வழியே பிடித்துத் தொழுது கொடு போங்கோள்;
“துன்பமொரு முடிவில்லை; திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பென்றான்-என்பது, கம்பராமாயணம்.
இல்லையாகில், “பரவசப்பட்டவர்களாய் நமஸ்காரம் முதலான காரியங்களைச் செய்தார்கள்” என்கிற கண்ணழிவிலே
செலவு எழுதுவர் கண்டீர் என்றபடி.

அடியேனுக்கும் போற்றுமினே –
நீங்களும் அவனைப் போலே செய்யாதீர்கள், அங்கே புக்கால் என்னையும் நினைக்க வேண்டும்.
அதாவது, புக்காரை எல்லாம் தத்தமது பிரயோஜனத்திலே மூளப் பண்ணவல்ல தேசமாகையாலே,
இத் தலையை நினைக்க விரகு இல்லையன்றோ; “முக்தன் இச்சரீரத்தை நினைப்பதில்லை” என்னும்படி யன்றோ இருப்பது.
“நோபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்”-என்பது, சாந்தோக்யம். 3. 12 : 3.

அடியேனுக்கும் போற்றுமின் –
அடியேன் இடையாட்டத்தையும் அத் தலைக்கு அறிவிக்க வேண்டும்.

———————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம்- 125- திருவாய்மொழி – -5-10–6….5-10-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

June 12, 2016

நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்கு
ஒன்று நன்குரையாய் உலகமுண்ட ஒண் சுடரே!–5-10-6-

ஸ்திதி ஆசன சயநாதி -பிரகாரங்கள் -நினைக்க அறிய
நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன-நின்றது எந்தை –1-பாடகம் இத்யாதி -2-ஆஸ்ரித ஹிருதயங்களில் –
ஆஸ்தே–பிரமாண சித்தம் –3-தொட்டிலில் நின்று அமர்ந்து சாய்ந்தது என்றுமாம் -நினைக்க முடியாமல் பல பிரகாரங்கள்
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்-ஒருபடி ஆகாரம் இல்லாமல் -சகஸ்ர -அனுபவிக்க உருத் தெரியாத மாயங்கள் –
நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் -சிதிலமான நெஞ்சை -தரித்து நினைக்க முயல்கின்றேன்
நினைகிற்பன்? பாவியேற்கு-சைதில்யம் அடைய வைக்கும் உன் சேஷ்டிதங்கள் -ஸ்திர சிந்தை இல்லாத பாவியேன்
ஒன்று நன்குரையாய் உலகமுண்ட ஒண்சுடரே!-பிரளய ஆபத்தில் -உண்ட –
ஸ்திதோச்மி சொல்லும் படி மாஸூச சொல்லி அருள வேண்டும்

பிரளய காலத்தில் உலகத்தைப் புசித்த ஒண்சுடரே! நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைத்தற்கு அரியனவாய் இருக்கின்றன;
ஒருபடித்தாகாத உருவத்தையுடையையாய் அநுபவித்தற்கு உருத்தெரியாதவனாயிருக்கின்ற உன்னுடைய செயல்களை நின்று
நினைக்கின்றேனாகிய நான் உன்னை எப்படி நினைப்பேன்? பாவத்தைச் செய்த எனக்குச் சிறந்தது ஓர் உபாயத்தைச் சொல்லுவாய்.
நிற்றல், இருத்தல், கிடத்தல் – திவ்விய தேசங்களில். மாயங்கள்-ஆச்சரியமான செயல்கள்.
நினைகின்றேன்: வினையாலணையும் பெயர். நன்கு ஒன்று உரையாய் என்க.

அநந்தரம் ஸ்த்தித் யாசனாதி வியாபாரங்கள் ஒருபடிப்பட்ட நினைக்கலாய் இருக்கிறதில்லை
நான் நினைக்க வல்லனாம் பிரகாரம் அருளிச் செய்ய வேணும் என்கிறார் –

நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன-திரு ஊரகம்-திருப் பாடகம் -திரு வெக்கா -இவற்றிலே
நின்றபடியும் இருந்த படியும் கிடந்தபடியும்
அப்படியே ஆஸ்ரிதர் ஹிருத்யங்களிலே பிராமண சித்தமாம்படி வர்த்தித்த படியாகவும் -நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் திருத் தொட்டிலிக்குள்ளே நின்று இருந்து கிடந்த படியையும் சொன்னபடி ஆகவுமாம் –
இவ்வாகாரங்கள் என் நினைப்புக்கு அரியவாய் இரா நின்றன ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்–இப்படி ஒரு படி
அல்லாத ஆகாரத்தை யுடையவனாய் எனக்கு அனுபவிக்கைக்கு உருத் தெரியாத உன்னுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களானவற்றை
நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் நினைகிற்பன்? –சிதிலமான நெஞ்சை ஸைதில்யம் தோறும் நின்று நின்று
வருத்தி முட்ட நினைக்கப் பாரா நின்றேன்
சைத்தில்யாவஹ சேஷடிதனான உன்னை எங்கனம் ஒருபடிப்பட நினைக்க வல்லேனாவேன்
பாவியேற்கு-ஸ்த்திர சிந்தை பண்ண மாட்டாத பாபத்தை யுடையேனான எனக்கு
ஒன்று நன்குரையாய் உலகமுண்ட ஒண்சுடரே!–பிரளய ஆபத்தில் அழிகிற ஜகத்தை அமுது செய்து நோக்கி அத்யுஜ்வல்யனானவனே
சைத்தில்யார்ணவத்தில் அழுந்தாத படி அத்விதீயமாய் இருபத்தொரு விலக்ஷண உபாயம் அருளிச் செய்ய வேணும்

உன்னுடைய செயல்கள் எல்லாவற்றையும் காண விடாய்ப்பட்ட நான் நினைக்கவும் முடியாதவனாக இருக்கிறேன்;
பிரளய ஆபத்தில் உலகத்தைக் காத்தாற் போன்று, நினைக்க வல்லேனாம்படி பண்ணி என்னைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார்.

நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன நின் மாயங்கள் –
இவர் இவ் விஷயத்தில் படுகிற பாடு எல்லாம் நமக்கு இதர விஷயங்களிலே அநுபவ சித்தமன்றோ.
இவ் விஷயத்தில் இன்றிக்கே ஒழிகிறதித்தனை.

பர வ்யூஹாதி பஞ்ச பிரகாரங்கள்
பர வாசூதேவன் -வ்யூஹ வாசுதேவன் -கேசவாதி மூன்றும் இந்த நால்வருக்கும்
அந்தர்யாமி -பொதுவாக சத்தைக்காக அனைவர் உள்ளும் -லஷ்மி விசிஷ்டன் -யோகிகள் –
விபவம் –முக்கிய -ஆவேச -ஸ்வரூபம் சக்தி –
அர்ச்சாதி -வடக்கு -இத்யாதி –நின்ற இத்யாதி -வித வித ஹஸ்தம்
புஜங்க சயனம் வீர சயனம் -தர்ப்ப சயனம்-பால சயனம் மாணிக்க சயனம் வீர சயனம் – இத்யாதி

பக்தானாம் -சகலமேதது ஸமாஸ்ரிதாம் -அனைத்தும் செய்து அருளுபவர் என்பதற்கு இரண்டு விருத்தாந்தங்கள் –

போரப் பாட வல்லாராய் இருப்பார் ஒருத்தர்,வடக்கு நின்றும் பெருமாளைத் திருவடி தொழ வேண்டும் என்று வர,
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் தீர்த்தத்தின் அன்று-தீர்த்தவாரி உத்சவம் அன்று –
இருந்து திருமாலையைப் பாடிச் சமைந்துப் பெருமாளை
மத்த கஜங்களை ஏத்துமாறு போலே ஏத்தி வசமாக்கிக் கணிசம்-சபதம் – கொண்டு,
“நாயன்தே! தேவர் திருவடிகளுக்குப் போர நல்லான் ஒருத்தன், எழு நூற்றுக் காதம் ஆறு உண்டு
தேவரைத் திருவடி தொழ வேண்டும் என்று வருகிறது; இவனை அழைத்துக் கொண்டு சம்பாவனை செய்தருள வேண்டும்” என்ன
பெருமாளும் ‘அப்படியே செய்கிறோம்’ என்று திருவுள்ளமாய் அருளப் பாடிட்டு,
திருப் புன்னைக் கீழ் நின்றும் அவர் நின்ற விடத்தளவும் செல்ல நாலு கோல் தறை திருக் கைத்தலத்திலே எழுந்தருளி
விண்ணப்பஞ் செய்வார்களை எல்லாம் அருளப் பாடிட்டு,
‘வாரீர் கோள், இவன் வந்த தூரத்துக்கெல்லாம் போருமோ நாம் இவனுக்குச் செய்த தரம்’ என்று திருவுள்ளமானார்.
இப்படியே யன்றோ நம்மிழவுகளும் திருவுள்ளத்திலே பட்டவை யெல்லாம் ஆறும்படிக்கு ஈடாக முகம் தந்தருள வல்லபடியும்.
இதுவே யாம் பெரும் சம்மானம் நாடு புகழும் பரிசு –

ஒரு நாள் ஸ்ரீ வைஷ்ணவ வண்ணாத்தான் திருப் பரிவட்டங்களை அழகிதாக வாட்டி எம்பெருமானார்க்குக் கொண்டு வந்து காட்ட,
போரத் திருவுள்ளமுகந்தாராய் இவனையும் கூடக் கொண்டு பெருமாள் பாடே புக்கு,
‘நாயன்தே! இவன், திருவரைக்குத் தகுதியாகும்படி இவற்றைத் தொட்டபடி-வெளுத்த படி- பார்த்தருள வேண்டும்’ என்று காட்ட,
கண்டு போர உகந்தருளி எம்பெருமானாரை அருளப் பாடிட்டு,
‘இவனுக்காக, கம்சனுடைய ஈரங்கொல்லி நம் திறத்திற் செய்த குற்றம் பொறுத்தோம்’ என்று திருவுள்ளமானார்.

ஆகவே பக்தனுக்காகவும் அபக்தனுக்காகவும் செய்து அருளினார் என்பதைக் காட்டிய வாறே
அனைத்து உலகும் வாழப் பிறந்த எதிராசர் அன்றோ –

நின்ற வாறும் –
இலங்கையின் வாசலிலே கையும் வில்லுமாய் நின்றபடியாதல்,
வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய் நின்றபடியாதல்;
“கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீ ராம பிரானையும் இளைய பெருமாளையும் தன்
கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்”
“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ் சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ்காந். 19 : 25.
வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய்க் கொண்டு வென்றி புனைந்து நின்ற பெருமாளையும்,
அவரை இடுவித்துக் கொல்லுவித்த தம்பியாரையும், இருவரையும் தொடர்ந்து பின்பற்றி முடிசூட இருக்கிற
மஹாராஜரையும் கண்ட இவள் ‘நமக்குப் பகைவர்கள்’ என்றிராமல், –
ஸுபா-நல்ல மனமுடையவளானாள் அவர் பக்கல் சாங்கத்தாலே.
சாங்கத்தாலே. -பக்ஷபாதம் என்றும் வில்லும் என்றும் சாடு-
இனித் தான், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே கல்லைக் கட்டிக் கொண்டு விழுந்து முடிந்து போவாரைப் போலே
கொடிய தன்மையனானவாறே முடிந்து போனான் வாலி; இவர் செய்த குற்றமுண்டோ? என்று இருந்தாள்.
அவர் தம் உயிர் நிலையிலே நலிந்தாரை விட்டு வைப்பரோ.
(வல்லசுரர் புக்கு அழுந்த தயரதன் பெற்ற மரகத மணித்தடம் அன்றோ -)

இருந்தவாறும்-
“பர்ண சாலையில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ ராமனை” என்று இருந்த இருப்பும்,-
கபில நதி கோதாவரி நதி சங்கமம் பஞ்சவடி –
“உடஜே ராமம் ஆஸீநம் ஜடா மண்டல தாரிணம்”– ஸ்ரீராமா. அயோத். 99 : 25.

கிடந்தவாறும்-
“ஸ்ரீ ராமன் கடற்கரையில் கடலை நோக்கிக் கிழக்கு முகமாகக் கையைக் கூப்பிக் கொண்டு படுத்தார்” என்கிறபடியே,
“அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:”– ஸ்ரீராமா. யுத். 21 : 1.

தருண மங்கையை மீட்பதோர் நெறி தரு கென்னும் பொருள் நயந்து நன்னூல் நெறி யடுக்கிய புல்லில்
கருணை யங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி வருண மந்திரம் எண்ணினன்
விதிமுறை வணங்கி. -கம்பராமாயணம், வருணனை வழிவேண்டு படலம், 5.

கடற்கரையிலே கிடந்த கிடையும்.
“ப்ரதிஸிஸ்யே-எதிர் நோக்கிப் படுத்தார்” என்கிறதன்றோ,
ஒரு கடலோடே ஒரு கடல் ஸ்பர்சித்து பொறாமை கொண்டு கிடந்தாற்போலே இருக்கையாலே;
“கருணையங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி” என்றான் அன்றோ. என்றது,
பின்பு விடக் கடவதாகத் தொடுத்த அம்பு முன்பு விடமாட்டாமை இல்லை அன்றோ;
அப்படிப்பட்ட அம்பு இருக்க, தம் தோள் வலி கிடக்க, தரம் போராதார் முகங்காட்டாதே இருக்கப்
பொறுத்துக் கிடந்த கிடையைச் சொல்லுகிறது.

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ என்று திரளச் சொல்ல அமையுமாயிருக்க,
‘நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும்’ என்கிறார் அன்றோ,
தனித் தனியே உளுக்கினபடி.

நின்றானாகில் ‘நிலையார நின்றான்’-
நிலையார நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே”– பெரிய திருமொழி. 6. 9 : 8.– என்பார்கள்;
‘நின்றவன், இருத்தல் சாய்தல் செய்யிற் செய்வது என்?’ என்று வயிறு பிடிக்க வேண்டும்படி யன்றோ அது இருப்பது;

இருந்தானாகில், “பிரான் இருந்தமை காட்டினீர்” என்னும்படி இருக்கும்

குழையும் வாண் முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்ண பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தாலொக்கும் கண்ண நீரொடு அன்று தொட்டும் மையாந்திவள்
நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும் அத்திசை யுற்று நோக்கியே.– திருவாய். 6. 5 : 5.

கிடந்தானாகில், “கிடந்ததோர் கிடக்கை” என்பர்கள்.
“எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும் எங்ஙனம் மறந்து வாழ்கேன்
ஏழையேன் ஏழையேனே.”– திருமாலை. 23.

அங்ஙன் அன்றிக்கே,
கோவர்த்தன மலையைத் தூக்கிப் பிடித்து நின்ற நிலையாதல்,
திருக் குரவைக்கு முற் ஜாமமாகப் பெண்களோடே கழகம் இருந்த இருப்பாதல்,
ஓரொருத்தர் மடியிலே சாய்ந்த படியாதல்.

அன்றிக்கே
“நிற்பதும் ஒர் வெற்பகத் திருப்பும் விண் கிடப்பதும், நற் பெருந் திரைக் கடலுள்” என்கிறபடியே,
திருமலையிலே நின்றபடியும்,
பரம பதத்திலே இருந்தபடியும்,
திருப் பாற் கடலிலே திருக்கண் வளர்ந்தருளின படியுமாகவுமாம்.

அன்றிக்கே,
“நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே” என்கிறபடியே,
நிற்பதும் ஒர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெருந் திரைக் கடலுள் நானிலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பது மிருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே.– திருச்சந்த விருத். 65.

இவர் திருவுள்ளத்திலே திகழு மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றபடியும்
“திகழு மணிக்குன்ற மொன்றே ஒத்து நின்றான் புகழும் புகழ் மற்றெனக்கும் ஓர் பொருளே.”–, திருவாய். 8. 7 : 5.
“செவ்வாய் முறுவலொடு எனதுள்ளத்திருந்த அவ்வாய் அன்றி யான் அறியேன்” என்னும்படி இருந்தபடியும்

“செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத் திருந்த அவ்வா யன்றி யானறியேன் மற்றருளே.”–, திருவாய். 8. 7 : 7.

“நின்றும் இருந்தும் கிடந்தும்” என்கிறபடியே, தம் திருவுள்ளத்திலே கிடந்தபடியும் என்னுதல்.

நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும் ஒன்றுமோ ஆற்றான் என் நெஞ்சகலான்.”-என்பது, பெரிய திருவந். 35.

அன்றிக்கே,
திருவூரகத்திலே நின்றபடியும், திருப்பாடகத்திலே இருந்தபடியும், திருவெஃகாவிலே கிடந்தபடியும் என்னுதல்.
வைகுந்தத்தில் நின்று புளிங்குடி கிடந்து -போகய பாக த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம்

நம் பெருமாள் நிற்க -பெரிய பெருமாள் கிடக்க -நம் பெருமாள் -நாச்சியார் திருக்கோலம் இருந்து
திருவல்லிக்கேணி -நின்றும் இருந்தும் கிடந்தும் -பரந்தும் -நடந்தும் -சேவிக்கலாம்-
திரு நீர் மலையிலும் நின்றான் இருந்தான் நடந்தான் கிடந்தான் –

ஆடவர்கள் எவ்வாறு அகன்றொழிவார் வெஃகாவும் பாடகமும் ஊரகமும் பஞ்சரமா – நீடியமால்
நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ மன்றார் மதிற்கச்சி மாண்பு.-என்னும்
பழம்பாடல் இங்கு நினைவு கூர்தல் தகும்.

‘நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும்’ என்று ‘ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பாடா நிற்க,
‘இவை யெல்லாம் தொட்டிலிலே’ என்று அருளிச் செய்தார் எம்பெருமானார்.
தொட்டிற் பழுவைப் பிடித்துக் கொண்டு நிற்கும்படியும்,
தரித்து நிற்க மாட்டாமை விழுந்திருக்கும்படியும்,
அது தான் பொறுக்க மாட்டாமை சாய்ந்து கிடக்கும்படியும் சொல்லுகிறது.

அன்றிக்கே,
போரார் வேற்கண் மடவாள் போந்தனையும் பொய்யுறங்கி-சிறிய திருமடல். கண்ணி. 31.
அவள் போனவாறே எழுந்திருந்து நின்றவாறும்,
அடி ஓசை பட்டவாறே வந்து இருந்தபடியும்,
நிழல் ஆடினவாறே முன் கிடந்த தானத்தே ஓராதவன் போல் கிடந்தவாறும் என்றுமாம்.

நினைப்பரியன-
அவை ஒரு கால் செய்து போகச் செய்தேயும் இவர்க்கு இன்றுங்கூட நினைக்கவும் அரிதாயிரா நின்றன.
“இமையோர் தமக்கும் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும்
ஈனச் சொல்” -திருவிருத்தம். 98-ஆம் பாசுரம்.-என்றார் அன்றோ முன்பே.

ஒன்று அலா உருவாய் –
இவர் தமக்கு ஒன்றே போருமாகாதே உள்ளதனையும் நோவு படுகைக்கு.
ஏக –ஓன்று -ந ஏக -ஓன்று அலா -சகஸ்ர நாம திரு நாமங்கள் –
ஒன்று அல்லாத பிரகாரங்களை யுடையவாய்

அருவாய நின் மாயங்கள்-
கண்களால் பார்க்க முடியாமலிருக்கிற உன்னுடைய ஆச்சரியமான செயல்களை.

நின்று நின்று நினைகின்றேன்
நினைத்துத் தலைக் கட்ட மாட்டார், நினையாதிருக்க மாட்டார்.
வருந்தி உன்னை நினைக்கப் புகுவன், நினைக்க மாட்டுகின்றிலேன்.
அன்றிக்கே,
நினைக்கை தான் தேட்டமாய் நினைக்கலாவதொரு வழி ஏதோ என்று ஆராயா நின்றேன்.

உன்னை எங்ஙனம் நினைகிற்பன் –
முற்றறிவினனும் வரம்பில் ஆற்றலை யுடையவனுமான நீ, நான் உன்னை நினைக்கலாவது ஒரு வழி யிட்டுத் தர வல்லையே.
(பிரளய ரக்ஷணம் அறிந்து ரஷிக்க வல்ல சர்வஞ்ஞான் சர்வ சக்தன் )

‘தொண்டு எல்லாம் நின்னடியே தொழுது உய்யுமா கண்டு’ –
தொண்டெலாம் நின்னடியே தொழுது உய்யுமா கண்டு தான் கணபுரம் தொழப் போயினாள்
வண்டுலாம் கோதை என் பேதை மணி நிறம் கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே.– பெரிய திருமொழி, 8. 2 : 8.
அடியார்கள் அனைவரும் –
ஐஸ்வர்யார்த்திகள், ஆத்ம பிராப்தி காமர், பகவத் பிராப்தி காமர் இவர்கள் முழுவதும் சென்று கிட்டித் தங்கள் தங்கட்குரிய
பிரயோஜனங்களைப் பெற்று மீளுகிறபடியைக் கண்டு, ‘தான் கண புரம் தொழப் போயினாள்’-
தானும் கலந்து பரிமாறி மீளலாம் என்று போனாள்;
‘தான்’-விஷயத்தையே பார்க்குமித்தனையோ, தந்தாமையும் பார்க்க வேண்டாவோ.
ஒரு பிரயோஜனத்துக்காகப் போவார்க்கன்றோ அது கொண்டு மீளலாவது,
தன்னையே பிரயோஜனமாகப் பற்றிப் போவார்க்கு மீள விரகு உண்டோ.
இப்படியே அன்றோ பகவத் பிராவண்யமுடையார்படி.

பாவியேற்கு-
என்னை ஒழிந்தாரடங்கலும் நினைப்பாரும் நினைத்தவற்றைப் பெறுவாருமாய்க் கண்டீர் செல்லுகிறது!
“நினைப்பவர்கட்கு மங்களத்தைக் கொடுக்கிறார்” என்கிறபடியே யன்றோ நாடு அடங்கலும்.
ஆயாஸ: ஸ்மரணே க: அஸ்ய ஸ்ம்ருதோ யச்சதி ஸோபநம் பாபக்ஷய:
ச பவதி ஸ்மரதாம் தம் அஹர்நிஸம்- – ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 17 : 78. ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் கூறியது.

ஒன்று நன்கு உரையாய்
அருச்சுனனுக்குச் சொன்னாற்போலே எனக்கும் ஒரு நல் வார்த்தை சொல்ல வல்லையே.
அவ்வளவாகாதே இவர் தம்மதும்.
‘இனி, பேற்றிற்கும் விரோதி போகைக்கும் கடவேன் நான்’ என்றான் அன்றோ.
அவ்வளவே யன்றோ வேண்டுவது, பின்பு வருமது தன்னடையே வருமதன்றோ.
ஆத்ம ஸ்வரூபத்தின் சித்தி யன்றோ பேறு ஆகிறது. பேற்றின் பலமான கைங்கரியம் சொல்ல வேண்டாவே,
பேற்றின் அளவுமன்றோ பிரமாணம் சொல்லுவது. அதற்கு அப்பாலுள்ளது பிரமாணத்துக்கு விஷயம் அன்றே.
வாசா மகோசரம் அன்றோ அது-
அப்படியே ‘உனக்கும் நானே கடவேன்’ என்று ஒரு வார்த்தை சொல்ல வல்லையே.
(ஸ்வரூப ஆவிர்பாவம் அடைகிறான் பிராப்தி அளவு பிரமாணம் -அவ்வருகு உள்ள அனுபவ
ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் வாசோ அகோசரம் அன்றோ )

உலகம் உண்ட ஒண் சுடரே!
உண்டி உடல் காட்டுமே. நினைக்கை குற்றமாய் விட்டதோ. நினைவுங்கூடத் தேட்டமானால்
நீயே செய்து தலைக் கட்ட வேண்டாவோ.
(நினைக்கின்றேன் என்று சொன்னதே குற்றம் -நீயே அறிந்து செய்ய வல்லை அன்றோ )
இவை, ஆபத்துங்கூட அறிவிக்க மாட்டாத சமயத்திலே நீயே அறிந்து வயிற்றிலே வைத்து நோக்கி,
இந்த உபகாரத்தை இவை அறியாதொழிய ‘இது உன் பேறு’ என்னுமிடம் வடிவில் புகரிலே
தோற்ற இருப்பான் ஒருவன் அல்லையோ.
‘உன் பேறாக ரக்ஷித்தாய்’ என்பதனை மெய்யே யன்றோ சொல்லுகிறது-
மெய்யே -சத்தியமாக -சரீரமே லோகம்-
(ஜகம் சரீரமான படியால் நீயே ரக்ஷித்தாய் என்றபடி )

இங்கிதம் நிமிஷிதம் -தாவகம் -உன் செயல் எல்லாம் நைவிக்கும் –

————————————————————————————————

ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மை யோடின்மையாய் வந்து என்
கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே! என் கண் கட்குத்
திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே.–5-10-7-

பாஹ்ய சம்ச்லேஷம் பண்ணி நினைத்த படி பண்ணப் பெறாமல் -மானஸ அனுபவம் மாத்ரம் -காணுமாறு அருளுவாய்
ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மை -ஒண் சுடரோடு -உண்மையாக வந்து -வருகிறாய் -இருளுமாய் இன்மையாய் நின்ற-
யோடின்மையாய் வந்து என்-புறவாயில் பிரகாசம் இல்லாமல் –உள்ளத்தில் ஒளியாய் -தேஜஸ் -உண்மைக்கு -பிரகாசத்துக்கு
கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன-உன்னை அனுபவியாதபடி -உள்ளே கரந்து-படுத்தும் பாடு
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே! என் கண் கட்குத்-நினைத்துப் பார்க்கும் நெஞ்சு சிதிலம் ஆகா நின்றேன்
கரிய மாணிக்கமே -உனது வடிவமே காரணம் இந்த சைதில்யத்துக்கு ஹேது
திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே-பிராப்யமான உருவை திண்மையாக கண்களுக்கு காணும் படி
நிரந்தரமாக -அருள வேண்டும்
கலந்து பாட பேதம் -நீ கலசி எனைச் செய்கின்றன-என்றுமாம்

உண்மையோடு வந்து ஒண் சுடராய் நின்றவாறும், இன்மையோடு வந்து இருளுமாய் நின்றவாறும்,
என் கண்களால் காண முடியாதவாறு உள்ளே மறைந்து நின்று நீ செய்கின்றவற்றையும் எண்ண வேண்டும் என்று
கொண்ட மனத்தோடு வருந்தா நின்றேன்; என் கரிய மாணிக்கமே! உன் திரு உருவினை என் கண்களால் நன்கு காணும்படி
ஒரு நாள் திரு வருள் புரிதல் வேண்டும்.
உண்மை – மனத்தில் உளனாந்தன்மை. இன்மை – வெளிப்புறத்தில் காணப்படாத தன்மை. நின்றவாற்றையும் செய்கின்றவாற்றையும்
எண்ணுதல் கொள் சிந்தை என்க. என் கண்கட்கு ஒருநாள் திருவுருவைத் திண் கொள்ள அருள வேண்டும் என்கிறார்.

அநந்தரம் பாஹ்ய சம்ச்லேஷம் பண்ணி நினைத்தபடி அனுபவிக்கப் பெறாதே மானஸ அனுபவமேயாய் கிலேசியாதபடி
என் கண்கள் ஸ்த்திர அநு பாவம் பண்ணும்படி உன் திவ்ய மங்கள விக்ரஹ வடிவைக் காட்ட வேணும் என்கிறார்

ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மை யோடின்மையாய் வந்து என்–என் அகவாயில் பிரகாசித்து உளனாகிற ஆகாரத்தோடே
புறவாயில் ப்ரகாசத்தினுடைய இல்லாமையை யுடையனாய்க் கொண்டு வந்து ஒள்ளிய தேஜஸ்ஸோடு ஸஹவஸ்த்திதமான
இருள் என்னலாம்படி நின்ற பிரகாரமும் என்
கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன–கண் உன்னை அனுபவியாதபடி உள்ளே மறைந்து நின்று நீ என்னை செய்கிறவற்றை
கலந்து என்ற பாடமாய் -கலசி -என்றுமாம் –
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே! என் கண் கட்குத்-எண்ண வேணும் என்று கொள்ளுகிற
நெஞ்சோடு சிதிலனாகா நின்றேன்
என்னுடைய இந்த சைத்திலயத்துக்கு ஹேதுவாய் நீல ரத்னம் போலே இருக்கிற வடிவை யுடையவனே
திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே.–உன்னுடைய ப்ராப்தமாய் போக்யமான ரூபத்தை காண ஆசைப்பட்ட
என் கண்களுக்கு திண்மையை யுடைத்தாக காணும்படி ஒருகால் அருள வேணும் –

மானச அனுசந்தானமேயாய் நிலை குலைந்து போகாமல், கண்களால் கண்டு அநுபவிக்க
வல்லேனாம்படி செய்தருள வேண்டும் என்கிறார்.

உண்மையோடு இன்மையாய் வந்து ஒண் சுடரோடு இருளுமாய் நின்றவாறும் –
எனக்கு உண்மையோடே ஒண் சுடராய் நிற்கும் மனத்தின் கண்ணே;
இன்மையோடு இருளாய் நிற்கும் புறத்திலே காண்கையில்.
அன்றிக்கே,
அடியார்கட்குத் தன் படிகளில்-சேஷித்வம்- ஒன்றும் குறையாதபடி காட்டிக் கொடுத்து,
அவர்கட்கு ‘இவ்வளவு’ என்று அளவிட்டு அறியும்படி பிரகாசித்து நின்றபடியும்,
அடியரல்லாதார்கட்குத் தன் படிகளில் ஒன்றும் தெரியாதபடி செய்து, அதனாலே அவர்களுக்கு ‘இல்லை’ என்னும்படி
இருளச் செய்து கொண்டு நின்றபடியும் என்னுதல்;
அடியார்கட்கு ஒண் சுடரோடு உண்மையாய் நின்றும், அடியரல்லாதார்க்கு இருளோடு இன்மையாய் நின்றும் என்க.

வந்து என் கண் கொளா வகை நீ கரந்து என்னைச் செய்கின்றன –
இவை யெல்லாம் தவிர, என் பக்கல் பரிமாறுகிற வேறுபாடும்.
ஒண் சுடராதல், இருளாதல் இரண்டத்தில் ஒன்றாகப் பெற்றிலேன்; நடுவே நின்று கிலேசியா நின்றேன்.
முத்தர்க்குக் கூட்டு அல்லர், சம்சாரிகளுக்குக் கூட்டு அல்லர்; அந்தரப்பட்டு நிற்கிறாரன்றோ இவர் தாம்.
என் நெஞ்சிலே வந்து புகுந்து கண்களுக்கு விஷயமாகாமல் மறைய நின்று நீ என்னை நலிகிறவற்றையும்.

கண் கொளா வகை –
கண் பார்க்காதபடி. எண் கொள் சிந்தையுள் நைகின்றேன்

எண்ணப் புக்கு,
மனோ ரத மாத்திரத்திலே நையா நின்றேன்.
பெற்ற அம்சம் கொண்டு காரியம் கொள்ள மாட்டுகின்றிலேன்.
கைப் புகுந்தது கொண்டு மேல் உள்ளது பெற விரகு பார்க்க மாட்டுகின்றிலேன்.

என் கரிய மாணிக்கமே –
கண்களுக்கு விஷயமாகிற பொருள்களைக் கொண்டு நான் காலம் போக்க மாட்டாதபடி,
உன் வடிவின் சுவட்டினை அறிவித்தாயே.
‘இவ் வடிவினைப் பிரிந்தார்க்கு ஜீவிக்கவுமாம்’ என்று தோற்றி யிருந்ததோ.

என் கண் கட்கு –
இவற்றின் விடாய் உனக்குத் தெரியுமன்றோ?
‘நான் பெற்றேன்’ என்றாலும் ஆறியிராதவை யன்றோ?
வேறொன்று இட்டு மறைக்கலாமவை அன்றே.

திண் கொள்ள –
‘மானசாநுபவத்தைப் பிரத்யக்ஷ சமாநாகாரமாகப் பண்ணினோமே’ என்று நீ சொல்லுமது எனக்கு வார்த்தை யன்று காண்.
கனாவில் கண்ட காட்சி போன்று மானசாநுபவம் ஆக ஒண்ணாது;
நன்கு கண் கூடாகக் காண வேண்டும். இங்ஙன் செய்யப் போமோ? என்னில்

“கண்ட கனாவின் பொருள் போல யாவும் பொய்; காலனென்னும்
கண்ட கனாவி கவர்வதுவே மெய்”-என்பது, திருவரங்கத்தந்தாதி.

சிலர்க்கு எப்பொழுதும் காணக் கூடியவனாக இருக்கிறாயே.-
சதா பஸ்யந்தி ஸூரய-ஸ்ம்ருதிக்கு மட்டும் இல்லையே அங்கே

ஒரு நாள் அருளாய் –
ஒரு நாள் அமையும் என்கிறாரல்லர்,
விடாயின் பெருமை சொல்லுகிறார்;
விடாய் கொண்டவன் ‘ஒரு கால் நாக்கு நனைக்க அமையும்’ என்றாற்போலே.
‘கிட்டினால் பின்னை விடும் படி சொல்லுகிறோம் என்று.

உன் திரு உருவே –
இது ஏதேனும் உன்னதோ! நோக்கிக் கொண்டு கிடக்கைக்கு;
“உன் திரு மேனி உனக்காக அன்று, உன் அடியார்கட்காகவே” அன்றோ
பிரிநிலை ஏவகாரம் இது உனது திரு உருவமே அன்றே என்னது அன்றோ பக்தானாம்

—————————————————————————————

திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொருவிலுன் தனி நாயக மவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோருங் கண்ணீர் என் செய்கேன் அடியேனே.–5-10-8-

சர்வாதிகத்வ ஸூசகம் சிருஷ்டி யாதி வியாபாரங்களைக் கேட்கும் பொழுது எல்லாம் நெஞ்சு உருகி கண்ணீர் சோர நின்றது –
திரு வுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந் தாமரை மேல் திசை முகன் கருவுள் வீற்றிருந்து -சர்வாதிகத்வம் -திசை முகன் ஆகிய கரு –
அந்தராத்மா -நியாமகன் -சரீர ஆத்மா பாவம் படைத்திட்ட கருமங்களும்-ஒன்றி உள்ளே இருந்த
பொருவிலுன் தனி நாயக மவை -ஒத்தார் மிக்கார் இல்லாமல் -பொருத்தம் இல்லாதவன் -அத்விதீய நாயக பிரகாசகம்
கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு-கேட்கும் -பிரமாண முகத்தால் -நெஞ்சு கட்டுக் குலைந்து நெகிழ்ந்து
அருவி சோருங் கண்ணீர் என் செய்கேன் அடியேனே-கண்ணீர் அருவி போலே விழா நின்றது
நீ இட்ட வழக்கு பர தந்த்ரன் -அடியேன் செய்ய வேண்டுவது ஒன்றும் இல்லை -சம்பந்தம் உள்ளதால் விட மாட்டிகிறிலேன்
சைதில்யம் பிரயத்தனமும் பண்ண முடியாதே அடியேன் -ஆண்டான் தானே பண்ண வேண்டும்

அழகிய வடிவத்தோடு மஹாப் பிரளயத்தில் திருக் கண் வளர்ந்தருளின படியும், திரு வுந்தித் தாமரையிலே பிரமனாகிய சரீரத்திலே
அந்தராத்மாவாக எழுந்தருளி யிருந்து எல்லாவற்றையும் உண்டாக்கின செயல்களுமாகிய, ஒப்பு இல்லாத உன்னுடைய தனித் தலைமை
பொருந்திய செயல்களைக் கேட்குந்தோறும் என் நெஞ்சமானது ஒருபடிப் பட நின்று நிலை குலைந்து
கண்ணீரானது அருவி போன்று விழா நின்றது; அடியேன் என்ன செய்வேன்?
கரு – சரீரம். வீற்றிருத்தல் – வேறு ஒன்றற்கில்லாத சிறப்போடு எழுந்தருளி யிருத்தல். நாயகம் – தலைமை. நெக்கு – நிலை குலைந்து

அநந்தரம் -உன்னுடைய சர்வாதிகத்வ ஸூசகமான ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களைக் கேட்க்கும் தோறெல்லாம்
என் நெஞ்சு நெகிழ்ந்து கண்ணீர் சோரா நின்றது -நான் என் செய்வேன் -என்கிறார்

திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன்–காரணமான ஏகார்ணவ ஜலத்திலே
அழகிய திருமேனி கண் வளர்ந்த படியும்
அவ்வடிவில் கொப்பூழில் சிவந்த தாமரையின் மேலே யுண்டான சதுர்முகனாகிற
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்–கருவுக்குள்ளே அந்தராத்மாவான வேறுபாடு தோன்றும்படி இருந்து –
அவன் ஸ்ருஷ்ட்டி பண்ணினான் என்னும்படி நீ ஜகத்தை ஸ்ருஷ்டித்த வ்யாபாரங்களுமாகிற
பொருவிலுன் தனி நாயக மவை கேட்குந்தோறும் என்நெஞ்சம் நின்று நெக்கு–எதிர் இல்லாத உன்னுடைய அத்விதீய நாயகத்தவ ப்ரகாசகமான
அவற்றை பிராமண முகத்தாலே கேட்க்கும் தோறும்
அருவி சோருங் கண்ணீர் என்செய்கேன் அடியேனே.–ஏன் நெஞ்சு ஒருபடிப்படி நின்று கட்டுக்குலைந்து நெகிழ்ந்து கண்ண நீரானது
அருவி போலே விழா நின்றது -நீ இட்ட வழக்காம்படி பரதந்த்ரனான நான் எத்தை செய்வேன்
சம்பந்தம் யுண்டாகையாலே விட மாட்டு கிறிலேன்
ஸைதில்யம் பிறவாதபடி யத்னிக்க மாட்டு கிறிலேன்

உன் குணங்களையும் செயல்களையும் கேட்ட கேட்ட போது தோறும் நையா நின்றேன்,
என் செய்கேன் என்கிறார்.

திரு உருவு கிடந்தவாறும் –
காந்தி மிக்க வடிவோடே சமுத்திரத்திலே-ஏகார்ணவத்திலே – திருக் கண் வளர்ந்தருளின படியும்.
காணத் தக்க வடிவத்தோடே சமுத்திரத்திலே திருக் கண் வளர்ந்தருளின படியும்.

கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசை முகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும் –
ஏகார்ணவத்திலே படைத்தலிலே நோக்குள்ளவனாய்த் திருக் கண் வளர்ந்தருளிப் பின்பு அக் காலம் வந்தவாறே
எழுந்திருந்து இவற்றை எல்லாம் உண்டாக்கினான்,
பிரஹ்ம சிருஷ்டியளவும் செல்ல அதற்கு மேலே உள்ளனவற்றையெல்லாம் தானே உண்டாக்கிப் பின்பு
திருநாபியிலே உண்டான தாமரைப் பூவில் பிரமனுடைய பிறப்பிற்குத் தான் ஆதாரமாய்,
பின்பு அவன் தன்னைத் தனக்கு ஆதாரமாகக் கொண்டு
இவ் வருகு உண்டான காரிய வர்க்கங்களை அடங்கலும் உண்டாக்கினபடியும்.

அந்தர்யாமியாக இருந்தாலும் அவனே ஆதாரம் –லௌகிக திருஷ்டியில் அருளிச் செய்கிறார் –
“பிரமனே! உன்னுள் பிரவேசித்து நான் பின்பு படைப்புத் தொழில் செய்வேன்” என்றும்,
“இந்தப் பிரமனும் உருத்திரனும் தேவர்களில் சிறந்தவர்கள்” என்றும் வருகிறபடியே,
சதுர்முகனாகிற சரீரத்தைப் பெற்று நின்று செய்கிறான் என்பதாம்.

“ஸ்ருஷ்டிம் தத: கரிஷ்யாமி த்வாம் ஆவிஸ்ய”-என்பது, விஷ்ணு தர்மம்.

“ஏதௌ த்வௌ விபுதஸ்ரேஷ்டௌ”-என்பது, நாராயணீயம் நாம நிர்வசன அத்.
பிரசாத க்ரொதஜௌ-அனுக்ரகத்தால் நான்முகனும் குரோதத்தால் ருத்ரனும் –

இன்ன ஆசனத்தை யுடையனாய்க் கொண்டு’ என்றாற் போலே,
‘கருவுள் வீற்றிருந்து’ என்கிறார்.
வீற்றிருத்தலாவது,
தன் ஐஸ்வர்யத்தால் உள்ள மேன்மை தோன்ற இருத்தல்.
பொற் குப்பியில் மாணிக்கம் போலே. -ஹிரண்ய கர்ப்பனை பொற் குப்பி –

படைத்திட்ட கருமங்களும் –
உண்டாக்கின வியாபாரங்களும்.

பொருவில் உன் தனி நாயகம் அவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு அருவி சோரும் கண்ணீர்
ஒப்பின்றிக்கே அத்விதீயமாய் ஐஸ்வர்யப் பிரகாசமான
உன் குணங்களையும் செயல்களையும் கேட்குந்தோறும்
என் நெஞ்சமானது மலை நெகிழ்ந்தாற் போன்று நெகிழ்ந்து, கண்ண நீர் அருவியாய்ப் பாயா நின்றது.

என் செய்கேன் அடியேனே –
பர தந்திரனான நான் காரியம் செய்து கொள்ளப் பார்த்திருக்கிறாயோ,
வேறு ஒன்றாலே போது போக்கித் தரித்திருக்கவோ,
நான் எதனைச் செய்வேன்?

—————————————————————————————-

அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
நொடியு மாறவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்துகும்
கொடிய வல் வினையேன் உனை என்று கொல் கூடுவதே.–5-10-9-

அர்த்தியாய் இருந்து அபேஷிதம் தலைக் கட்டிக் கொண்ட -அகலம் குறைந்து நீளம் நீண்ட வீடுகள் – வரவு அதிகம் செலவு குறைவு ஆகுமே
ஈரடியாலே முடித்துக் கொண்டான் -ஸ்திர சித்தனாக உன்னைக் கூடுவது என்றோ
அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும்-அடி நகராமல் வளர்ந்தான் -நின்ற இடத்திலே -கேட்ட இடத்திலே –
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்-தர வேண்டும் என்றவன் மறுக்காமல் -யஜ்ஞ் வாடம் தன்னிலே நின்றே
பிரம்ம லோகம் பர்யந்தம் ஆகாசம் வரை -பிரதான்யம் மேன்மை சாமர்த்தியம்
நொடியு மாறவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்துகும்-சொல்லும் தோறும் கேட்கும் தோறும் –
அவாப்த சமஸ்த காமனாய் இருந்து ஆஸ்ரிதர்களுக்காக இரந்து கார்யம் செய்தாயே
கொடிய வல் வினையேன் உனை என்று கொல் கூடுவதே.பிராயச் சித்தம் பண்ணிக் கழிக்க முடியாதே
கொடிய வல் வினையேன்-பிரேம ரூபம் காமம் -கண்ணனுக்கே -உடை குலைப் படாத படி என்று கூடுவேன்

மூன்று அடிகளை யாசித்த விதமும், யாசித்த அவ் விடத்திலேயே நின்று கொண்டு ஆழ்ந்த கடல்களையும் பூ லோகத்தையும் தெய்வ லோகத்தையும்
இரண்டு அடிகளிலே முடியும் படியாக அளந்து முடித்துக் கொண்ட முக்கியமும், அவற்றைச் சொல்லும் விதம் கேட்குந் தோறும் என் நெஞ்சமானது
உன்னுடைய சீல குணத்திலேயே கரைந்து உருகா நின்றது; மிகக் கொடிய பாவியேனான யான் தேவரீரைக் கூடுவது என்றுகொல்?
மூன்று அடியை இரந்தவாறும் என்க. நொடியுமாறு – சொல்லும் வகை. உன்னைக் கூடுவது என்று கொல் என்க.

அநந்தரம் அர்த்தியாய் இருந்தும் அபேக்ஷிதம் தலைக் கட்டிக் கொண்ட யுன்னுடைய அபதானங்களைக் கேட்க்கும் தோறும் எல்லாம்
என் நெஞ்சம் உருகா நின்றது -ஸ்த்திர சித்தனாம்படி உன்னைக் கூடுவது என்று -என்கிறார் –

அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும் –த்ரை லோக்யத்தையும் அபேக்ஷியாதே
மூன்று அடியை தர வேணும் என்று அவன் மாறாத படி அபேக்ஷித்த பிரகாரமும் -அவன் இசைந்து உதகம் பண்ணின
யஜ்ஞ வாடம் தன்னிலே நின்றே அகாதமான சமுத்ரங்களையும் -சப்த த்வீபையான பூமியையும் ப்ரஹ்ம லோக பர்யந்தமான ஆகாசத்தையும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்–இரண்டு அடியால் முடியும்படியாக தன் நினைவு தலைக் கட்டிக்
கொண்ட ப்ராதான்யமும் ஆகிற
நொடியு மாறவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்துகும்-அவற்றை சொல்லும் பிரகாரம் கேட்க்கும் தோறும் என் நெஞ்சமானது
நொடிதல்–சொல்லுதல் –
அவாப்த ஸமஸ்த காமனாய் வைத்து ஆஸ்ரித அர்த்தமாக அர்த்தியான உன்னுடைய சீல ஸ்வரூபத்திலே கரைந்து ஒழுகிப் போகா நின்றது
கொடிய வல் வினையேன் உனை என்று கொல் கூடுவதே.–ஒரு பிராயச்சித்த சாத்தியம் இன்றியே அனுபவித்துக் கழிக்க ஒண்ணாதே
அநிஷ்டாவஹமான ப்ரேம ரூபமாய் இருக்கிற பாபத்தை யுடையேனான நான் உடை குலைப் படாத படி
நிலை நின்று அனுபவிக்கும்படியாக உன்னை என்றோ கூடுவது

திரிவிக்கிரம அவதாரத்திற் செய்த செயலை அநுசந்தித்து அதனாலே உருக்குலைகின்ற நான்
தரித்து நின்று உன்னை அநுபவிப்பது என்று என்கிறார்.

அடியை மூன்றை இரந்தவாறும் –
இவை அபேக்ஷிக்க மாட்டாத அன்றும் இவற்றின் ஹிதத்தைச் சிந்தனை செய்யுமளவேயோ-படைத்திட்ட கருமங்களும்-
இவை உண்டானாலும் சிறியதைப் பெரியது நலியாதபடி நோக்குவான் அவன் என்கிறது.
நேராய்ப் போகாமே மூன்று அடியை இரந்தானாதலின் ‘அடியை மூன்றை’ என்கிறார்.
இரண்டு அடி இரந்தானாகில் அவனைச் சிறை செய்ய விரகு இல்லையே.

அங்கே நின்று –
கடக்க நான்கு அடி போனானாகில், ‘வஞ்சனை செய்தான்’ என்று அவன் வழக்குப் பேசலாமன்றோ.

ஆழ் கடலும் மண்ணும் விண்ணும் ஈரடியால் முடிய முடித்துக் கொண்ட முக்கியமும் –
ஆழ் கடலும்-இவருடைய நெஞ்சினைக் கரைக்க அடி இட்டபடி.
பூமி ஆகாசம் முதலியவைகள் அடங்கலும் இரண்டு அடிகளிலே அடங்கும்படிக்குத் தகுதியாக அளந்து
தலைக் கட்டிக் கொண்டபடியும்.

முக்கியம் –
வேண்டற்பாடு. அதாவது, அடியார்கட்காகச் செய்த வஞ்சனையால் வந்த வேண்டற்பாடு இருக்கிறபடி.
அன்றிக்கே,
தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களும் தன் திருவடிகளின் கீழே அகப்படுகையாலே
வந்த வேண்டற்பாடு என்னலுமாம்.

நொடியுமாறு அவை கேட்குந்தோறும் –
திரு வுலகு அளந்தருளின சரிதையை வியாசர் முதலானார் சொல்லா நிற்பர்கள்,
அவர்கள் சொல்லும் பிரகாரங்களைக் கேட்குந்தோறும்.
இதனால்,தாம் சொல்ல வேண்டா என்றபடி.
நொடிதல்-சொல்லுதல்.

என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும் –
மஹாபலியைப் போலே ஒளதார்யம் கொண்டாடுகிறேன் அல்லேன்,
இந்திரனைப் போலே இராஜ்யம் ஆளுகிறேன் அல்லேன்,
என்னுடைய மனமானது உன் பக்கலிலே உருக்குலைந்து மங்கா நின்றது.

கொடிய வல் வினையேன் –
“எவனுடைய திரு நாமங்களைச் சொல்லுதலால் ஒரு மனிதன் பெரிய பயத்தில் நின்றும் விடுபடுகிறானோ” என்கிறபடியே,
“யந் நாம ஸங்கீர்த்தநதோ மஹா பயாத் விமோக்ஷ மாப்நோதி”-என்பது, விஷ்ணு தர்மம்.
திரு நாம சங்கீர்த்தனம் மஹா பாதகங்களையும் போக்கும் என்று சொல்லா நிற்க,
அது தானே-சைதில்ய ஹேதுவாகும் படி – நிலை குலைவதற்குக் காரணமாம்படி மஹா பாவத்தைச் செய்தேன்.

உன்னை என்று கொல் கூடுவதே –
நான் தரித்து நின்று உன்னை அநுபவிப்பது என்றோ?
அநுபவிப்பதற்கு வந்து கிட்டுவது என்றோ?

——————————————————————————

கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!–5-10-10-

ஆஸ்ரித அர்த்தமாக அரும் தொழில் செய்து உபகரித்த அமிருத மர்த்தன விருத்தாந்தம் -கேட்டு தளர்கிறேன் –
நிலை நின்று சரித்ரம் கேட்கும் படி அருள வேணும்
கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை-தேவர்களும் அசுரர்களும் கூடி நின்று –
ஓய்ந்து போக தானும் கூடி நின்று -மத்து கயிறு கூர்ம -சம்விதாங்களைப் பண்ணி
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்-அசுரர்களை விடுவிக்க ஸ்திரீ வேஷ பரிக்ரகம் மோகன புரி -திரு மோகூர்
திருக் கோலம் எடுத்துக் கொண்டு -மயக்கி –
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை-விஸ்மய நீய ஆகாரம் -வடிவும் -ஆத்மாவை உருக்கி
அனுபவ விரோதிகளை நிரசனம் -நித்ய சம்ஸ்லிஷ்டம்
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே-அதே போலே நானும் ஆக வேண்டுமே

தேவர்கள் என்ன, அசுரர்கள் என்ன, இவர்களோடு கூடித் திருப்பாற் கடலைக் கடைந்த விதமும், அதினின்றும் தோன்றிய அமுதத்தைத்
தேவர்களே உண்ணும்படி அசுரர்கள் அதனை விடக் கூடிய காரியங்களையே செய்து போன ஆச்சரியமும் என் சரீரத்திற்குள் நுழைந்து
என் உயிரை உருக்கி உண்டிடுகின்றின; நச்சு நாகணையானே! உன்னை அறியும் தன்மையைச் சொல்லாய்.
விடு என்பது, வீடு என நீண்டது; நீட்டல் விகாரம். வீடும் வண்ணம் – அழியும்படி என்றுமாம். வித்தகம் – ஆச்சரியம். நச்சு – நஞ்சு.

அநந்தரம் -ஆஸ்ரித அர்த்தமாக அரும் தொழில் செய்து உபகரித்த அம்ருத மதன வ்ருத்தாந்தங்களானவை என்னை சிதிலமாக்கா நின்றது
உன்னை நிலை நின்று அனுபவிக்கும்படி அருளிச் செய்ய வேணும் என்கிறார்

கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை–தேவ அசுரர்கள் இருவரோடும் கூடி நின்று ஷீரார்ணவ ஜலத்தை –
மத்தும் கயிறும் ஆதாரமும் முதலான சம்விதானங்களைப் பண்ணி கடைந்த பிரகாரமும்
அங்குத் தோற்றின அம்ருதமானது தேவர்களுண்ணும்படி அசுரர்ளை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்-விடுவிக்கும் பிரகாரங்களையுடைய ஸ்த்ரீ வேஷ பரிக்ரஹாதிகளை
பண்ணிப் போன விஸ்மய நீய ஆகாரமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை–உள்ளே புக்கு என் ஆத்மாவை
நீர்ப்பண்டமாக யுருக்கி க்ரஸித்து விடா நின்றன
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!–அனுபவ விரோதிகளை அழியச் செய்யும் விஷத்தை யுடையனான
திருவனந்த ஆழ்வானோடே நித்ய ஸம்ஸ்லிஷ்டனானவனே
உன்னை நித்ய அனுபவம் பண்ணும் பிரகாரம் அருளிச் செய்ய வேணும் –

சமுத்திரத்தைக் கடைந்த ஆச்சரியமான செயலை நினைத்து நிலை குலையா நின்றேன், தரித்து நின்று
உன்னை அநுசந்திக்க வல்லேனாம்படி விரகு சொல்ல வேண்டும் என்கிறார்.

கூடி நீரைக் கடைந்தவாறும் –
‘நாம் சமமாகப் பிரித்துக் கொண்டு உண்ணக் கடவோம்’ என்று அசுரர்களோடு கூடிச் சமுத்திரத்தைக் கடைந்த படியும்.
கடைந்து பிடித்துக் காணும் இவருடைய ஆவியை உருக்கிற்று.
(வெண்ணெய் உண் என்னும் ஈனச் சொல்லும் -இதுவும் கடைந்து –சாடு )

அமுதம் தேவர் உண்ண அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும் –
பல வேளையில் வந்தவாறே பிரயோஜன ரூபமான அமுதத்தை அநுகூல வர்க்கமான தேவ ஜாதியே உண்டு,
ஆசுரப் பிரகிருதிகள் ‘அமுதத்தை நாய்க்கு இடு’ என்று அதனை விட்டு அவர்கள் பின் தொடரும் படிக்குத் தகுதியாக,
காணத் தக்க பெண் வடிவினைக் கொண்டு போன ஆச்சரியமான செயலும்.
“விஷ்ணுவானவர் மாயையினால் அசுரர்களை மயங்கச் செய்து பெண் வடிவைக் கொண்டவராய்” என்கிறபடியே,
“மாயயா மோஹயித்வா தாந் விஷ்ணு: ஸ்திரீ ரூபமாஸ்த்தித:”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா.
நண்ணாத வாளவுண ரிடைப்புக்கு வானவரைப்
பெண்ணாகி அமுதூட்டும் பெருமானார் மருவினிய
தண்ணார்ந்த கடன்மல்லைத் தலசயனத் துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப்பொழுதும் எண்ணோமே.-என்பது, பெரிய திருமொழி. 2. 6 : 1.

வானவரைப் பெண்ணாகி அமுதூட்டும் பெருமானார் கடைந்தவாற்றாலும் வித்தகத்தாலும். ஊடு புக்கு-
தோற்புரையே போகாமல் மர்மத்திலே புக்கு.

எனது ஆவியை-
“சேதிக்க முடியாதது, தகிக்க முடியாதது” என்கிற ஆத்ம வஸ்துவை.

உருக்கி உண்டிடுகின்ற நின் தன்னை –
நீர்ப் பண்டமாக்கி, முடித்து விடாதே ஒழிகிற உன்னை.
புருஷோத்தமன் ‘இப்படிச் செய்வதே’! என்று இக் குணத்தைச் சொன்ன வளவிலே உருக் குலையா நின்றேன்

நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!
தரித்து அநுபவிக்கும்படி நல் விரகு சொல்ல வேண்டும்.-
உம்மைத் தரிப்பிக்கப் போமோ நம்மால் என்ன, ‘நச்சு நாகணையானே’ என்கிறார். என்றது,
ஒருவன் பரம போகியாய் நின்று தரித்து உன்னை அநுபவிக்கப் பண்ணிக் கொடுத்திலையோ;
அப்படியே நானும் தரித்து உன்னை அநுபவிக்கும்படி செய்தருள வேண்டும் என்றபடி.

———————————————————————————

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-

பரம பதம் ஆனந்த பிராப்தி பலம் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்-திரு வனந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து அருளும் நம் ஸ்வாமி-
ஏகாரம் -மாம் ஏகம்- பற்றும் எண்ணமும் உபாயம் இல்லை -ச்வீகாரத்தில் உபாய புத்தி தவிர்க்கிறது
என்றும் ஒக்க மநோ ரதம் உடையராய்க் கொண்டு -ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்-ஆக -சட கோபன் தரிக்கப் பெற -அவராக உளராகும் படி
வாசிக கைங்கர்யம் பெற்று அனுபவிக்க வல்லவர்கள்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே–பெரிய பரம ஆகாசம் -மா கம் -பொதுப் பெயர் -சிறப்பித்து -வைகுந்தம் –
ஆறு –எனக்கு -நின் பாதமே -சரணாக தந்து ஒழிந்தாய் போலே -யாவதாத்மாபவி நித்யமாக ஆனந்த நிர்பரராய்
நூற்கை -பண்ணுகை – பாடுகை

திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே சயனித்திருக்கின்ற நம்பெருமானுடைய திருவடிகளே உபாயம் என்று,
திருக் குருகூரில் அவதரித்த மாறனான ஸ்ரீ சடகோபர் எப்பொழுதும் ஒரே எண்ணத்தை யுடையவராய்த் தாம் உளராதற்பொருட்டு
அருளிச் செய்த அந்தாதியாகிய ஆயிரம் திருப் பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப் பாசுரங்களையும் கற்க வல்லவர்கள்
பரமாகாசமான ஸ்ரீ வைகுண்டத்தை யடைந்து எப்பொழுதும் ஆனந்தத்தை யுடையவராயிருப்பர்.
மா -பரம -கம் -ஆகாசம் பரமாகாசம் பொதுப்பெயர்
ஸ்ரீ வைகுண்டம் சிறப்புப் பெயர்
குருகூர்ச் சடகோபன் மாறன் நமக்குப் பிரான் சரணே சரண் என்று நாடொறும் ஏக சிந்தையனாய் ஆக நூற்ற அந்தாதி என்க.
வல்லார் வைகலும் மகிழ்வெய்துவர். மாகம்-ஆகாசம்.

அநந்தரம் இத் திருவாய் மொழிக்கு பலமாக பரம பதத்தில் ஆனந்த ப்ராப்தியை அருளிச் செய்கிறார் –

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்–திருவனந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளின
நம்முடைய ஸ்வாமியானவன் திருவடிகளே உபாயம் நமக்கு என்று என்றும் ஓக்க
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்-மநோ ரதத்தை யுடையராய்க் கொண்டு ஆழ்வார்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்-தாம் உளராக்கைக்கு அருளிச் செய்த அந்தாதியான
ஆயிரத்திலும் அத்விதீயமான இவை பத்தையும் அப்யஸிக்க வல்லவர்கள்
நூற்கை -பண்ணுகை –
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–பரம ஆகாசமான ஸ்ரீ வைகுண்டத்திலே யாவதாத்மா பாவியான காலம் எல்லாம்
ஆனந்த நிர்ப்பரராய் இருக்கப் பெறுவர்கள்
இது ஆசிரியத் துறை –

முடிவில். -இப் பத்தும் கற்றார் பரம பதத்திலே சென்று நித்தியாநுபவம் பண்ணப் பெறுவர் என்கிறார்.

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று
திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய சர்வேச்வரன் திருவடிகளே நமக்கு உபாயம் என்று.
ஆதிசேடனைப் படுக்கையாக வுடைத்தா யிருத்தல் அறப் பெரியவனுக்கு லக்ஷணமாகையாலே,
சர்வாதிகனே சரண்யன் என்கிறது.

இவனுடைய உபாய பாவத்தில் புருஷகாரமாக வல்லார் அவள் பரிகரத்திலுள்ளாராகாதே.
பிராட்டி சம்பந்தம் ஆர்த்தமாக -இங்கு உண்டே -திருமந்தரம் சரம ஸ்லோகம் போலே –
சப்தத்தில் த்வயத்திலே தானே -அதுவே உலகம் உண்ட பெரு வாயா–வில் தானே
படுக்கை கிடப்பது அந்தப்புரத்தி லன்றோ.

நம் பிரான்
அடியார்கள் விஷயத்தில் உபகார சீலனாதலின் ‘நம் பிரான்’ என்கிறது.

சரணே சரண்
‘சரணே சரண்’ என்ற ஏகாரத்தாலே, வேறு உபாயத்தை விரும்பாத உபாயம் என்கிறது.
இத்தால் ‘ஏக’ பதத்தில் அர்த்தம் சொல்லுகிறது.–ஈஸ்வர நைரபேஷ்யம் -பல பிரபத்தி என்றும் சொல்வார்கள் –
உபாய எதிர்பார்க்க மாட்டார் -அதிகாரி ஸ்வரூபம் வேண்டுமே –
ஆகிஞ்சன்யம் அனந்யகதி மகா விஸ்வாசாதிகள் எல்லாம் இதுவே –
அன்றிக்கே,
சம்சார சம்பந்தப்பட்ட ஸ்வபாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும்
அப்படி அடிக்கழிவு செய்வார் ஒருவரல்லரே இவர்.
மஹா விஸ்வாசமாகிறது, இஃது ஒழிய வேறொன்றில் கால் தாழாதொழிகை ஆம்.

நாடொறும் ஏக சிந்தையனாய் –
புறம்பு உண்டான சிந்தனை போய், இவ் விஷயத்திலே ஒரே தன்மையான எண்ணத்தை யுடையராய்,
பொருள் ஈட்டுதற்குச் செல்வார் ஒருவர் ஒரு சிராயை -மரக்கலம் -நம்பி நாலாண்டு பதிற்றாண்டு இழியா நின்றார்களன்றோ,
பேற்றின் சீர்மையைப் பார்த்தால் அவ்வளவாகிலும் வேண்டாவோ இவ் விஷயத்தில்.
சம்சாரத்தின் இயல்பால் வியசனங்கள் தொடர்ந்து வந்தாலும் உறுதி குலையாமே போருமதன்றோ ஸ்வரூபமாவது.
மித்ர பாவேனே –ஸூசகம் -தொழுது எழு மிகை என்பான் என் என்னில் -மகா விஸ்வாசம் இதில் வைப்பது சுலபம் தானே –

குருகூர்ச் சடகோபன் மாறன்-
அவை யெல்லா வற்றிற்கும் அடியான பிறப்பு இருக்கிறபடி.

ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் –
தாம் உளராகைக்காகச் சொன்ன அந்தாதி ஆயிரத்திலும் இப் பத்தினைக் கற்க வல்லவர்கள்.

குருகூர்ச் சடகோபன் மாறன்–
காரி மாறன் நம்மாழ்வார் ஆக இப்பத்து -சத்தை இத்தாலே தான் பெற்றார் –

மாக வைகுந்தத்து –
மஹாகாசம் என்று பேரையுடைய ஸ்ரீவைகுண்டத்திலே.

வைகலும் மகிழ்வு எய்துவர்-
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நித்திய அநுபவம் பண்ணப் பெறுவர்.
‘அநுசந்தானத்துக்குத் தடை வாராதபடி பண்ணி யருள வேண்டும்’ என்று பிரார்த்திக்க வேண்டும் படியான சம்சாரத்தை விட்டு,
பகவானுடைய அநுபவத்துக்கு நழுவுதல் ஒரு நாளும் இல்லாத பரம பதத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர் என்றபடி.
‘மா’ என்றது, மஹத் என்னும் தத்துவத்தினை. ‘கம்’ என்றது ஆகாசம்.

————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

அந்த்யே சௌரே அர்ச்சாஞ்ச மௌன நியதாம்
அபஹாய ஆலாப யோக்ய விபவே புனர் ஆகத சௌ
சித்தச்ச தஸ்ய தத் குண கண ஸ்மரணே நிஜச்ச்ய
சைதில்ய விக்னம் சமனம் தம் மயானத்த அயாசதே-

அந்த்யே -கடைசி பதிகத்தில்
சௌரே அர்ச்சாஞ்ச மௌன நியதாம் –அர்ச்சைக்கு உள்ள நியமம் -கீழே மூன்றிலும் சரணாகதி -அர்ச்சையில்-
சத்ய சங்கல்பனின் சங்கல்பம் குலைக்ககே கூடாதே -இதனாலே தானே விபவத்துக்குப் போனார் –
அபஹாய -அறிந்து -விட்டு
ஆலாப யோக்ய விபவே -விபவம் தானே யோக்யம்
புனர் ஆகத சௌ-கீழே படி விபவத்திலே இழிகிறார்-பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் என்று போனவர் திரும்பி
சித்தச்ச தஸ்ய தத் குண கண ஸ்மரணே நிஜச்ச்ய-குணக் கூட்டங்களை நினைத்து
சைதில்ய விக்னம் சமனம் தம் மயானத்த அயாசதே-சிதிலம் போக்க பிரார்த்தனை –
அதே விபவ பெருமாள் இடம் சரணாகதி
கீழே கிருபை குணம் பார்த்தோம்
சக்தி பத பரதத்வம் -பதிகத்துக்கு குணம் -ஸூ அனுபவ யோக்யதைக்கு சக்தி பதத்தை அருளுவார் –

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ப்ராதுர் பாவாதி வ்ருத்தை ரிஷப கண கமணாத் பூதனாதி நிரசனம்
மோஹார்த்தம் பவ்த்யா க்ருதியை கிரி வர பஜன ஸூவீக்ருதே
ஸ்தான பேதைகை தேஜஸ் த்வாந்தாதி பாவாத்
ஜல நிதி சயநாத் பிஷணாத் த்ரிபாதம் பீயூஷம் ஸ்பர்சநீயாத்

1-ப்ராதுர் பாவாதி வ்ருத்தை–பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்-சரித்திரங்கள் -ஆஸ்ரித ரக்ஷணார்த்தம்-

2-ரிஷப கண கமணாத்-வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்-

3-பூதனாதி நிரசனம்–ஆதி -சகடாசுர பங்கம் -நவநீத சோரம்–
பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள நீ யுன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே

4–மோஹார்த்தம் பவ்த்யா க்ருதியை–கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்–கிருத்ரிம வியாபாரம்

5-கிரி வர பஜன ஸூவீக்ருதே–உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்-
கிரி ராஜ் -தானே ஸ்வீகரித்து -அஹம் கோவர்த்தனோஸ்மி –
அஹம் ஹி ஸர்வ யாஜ்ஜானாம் போக்தா பிரபு-

6-ஸ்தான பேதைகை—-நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்–பேதங்கள் பலவும் பார்த்தோம்

7-தேஜஸ் த்வாந்தாதி பாவாத்—-ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மை யோடின்மையாய் வந்து என்
கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன—ஆஸ்ரிதர் மெய்யனாய் அநாச்ரிதற்கு பொய்யனாய் இருக்கையால்

8–ஜல நிதி சயநாத் —-திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்–ஏகார்ணவம் சயனம்–

9-பிஷணாத் த்ரிபாதம்–அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்-

10-பீயூஷம் ஸ்பர்சநீயாத்–கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்-

எம்பெருமான் ஆஸ்ரித ஹிருதயம் சிதிலை யாக்கி நிற்கிறான்–

———-

இத்தம் காருண்யா நிக்னம் துரித ஹர ஜனம் பிரேம தீவ்ரம் துகானாம்
லோகாநாம் ரஷிதாரம் ஸ்மருதி விஷயம் அஹம் பாவனா கோசாரம் ச
தீனானாம் சச்சரண்யாம் ஸ்வ ரஸ க்ருத நிஜ ப்ரேயதாவாஞ்சமுசசே
பிராப்தம் சக்தி ப்ரதம் ஸ்ரீ பதி மிக சடகே ஸ்ரேயஸே மேக ஹேதும் –ரத்னாவளி –69-

1-இத்தம் காருண்யா நிக்னம் –காருண்யா கடல் -விதி வாய்க்கின்றது காப்பார் யார் -காருண்யம்-

2-துரித ஹர ஜனம் –பொலிக பொலிக போயிற்று வல் உயர் சாபம் -நலியும் நரகமும் நைந்த –

3-பிரேம தீவ்ரம் துகானாம்–மாசறு சோதி பிரேமத்தால் தூண்டப்பட்டு-

4-லோகாநாம் ரஷிதாரம் –காகுத்தன் வாரானால் இத்யாதி–

5-ஸ்மருதி விஷயம் –உருவ வெளிப்பாடு -ஐந்தாம் பதிகம்-

6-அஹம் பாவனா கோசாரம் ச–யானே என்னும் -சரீராத்மா பாவம்

7-தீனானாம் சச்சரண்யாம் –நோற்ற நோன்பிலேன் –ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழி ந்தாய்-

8-ஸ்வ ரஸ க்ருத –ஆராவமுது –

9-நிஜ ப்ரேயதாவாஞ்சமுசசே–சென்று கிட்ட ஆசைப்பட்டு போக முடியாமல் கதறினார்

10-பிராப்தம் சக்தி ப்ரதம் –பிறந்த வாறும் வளர்ந்த வாறும்–இத்யாதி

ஸ்ரீ பதி மிக சடகே ஸ்ரேயஸே மேக ஹேதும்–காருணிகத்வம்-ஐந்தாம் பத்தில் -பேர் அருள் கண்ணா -மா முனிகள்
பரத்வம் காரணத்வம் வியாபகத்வம் நியந்த்ருத்வம் -முதல் நான்கும் பரத்ப பரம்
பரம சுலபம் ஐந்தாம் பத்து -கருணா சாகரம் அன்றோ இவன் —

————

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

தயா நிக்நம் பக்தைர் அக விமதனம் பிரேம ஜனகம்
ஜகத் ரஷா தீக்ஷம் ஸ்ம்ருதி ஜூஷாமஹம் பாவ விஷயம்
சரண்யம் தீனானாம் ஸ்வ ரஸ க்ருத தாஸ்யாபி உபகமம்
பிரகாக்யவ் தம் பிராப்தம் பிரச கனக்ர்த்தம் பஞ்சம சதே–12–

1-தயா நிக்நம் –தயா ஊற்று அவன்

2-பக்தைர் அக விமதனம் –பக்தர்களுக்கு பிறர் பாபங்களை போக்கும் சக்தி அளிப்பவன்

3-பிரேம ஜனகம் –தன் பால் ஆதாரம் பெறுக வைக்கும் அழகன்
ஜகத் ரஷா தீக்ஷம் –ரக்ஷணத்தில் தீக்ஷை -மம விரதம் என்பவன் அன்றோ
ஸ்ம்ருதி ஜூஷாமஹம் பாவ விஷயம் –நினைப்பவர் ஸூ பாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹத்தில்-ஆழங்கால் படும்படி விஷயமானவன்
சரண்யம் தீனானாம் -தீனர்களுக்கு புகலிடம்
ஸ்வ ரஸ க்ருத தாஸ்யாபி உபகமம் –ப்ரீதி காரித கைங்கர்யங்களை கொடுத்து அருளுபவன்
பிரகாக்யவ் தம் பிராப்தம் பிரச கன க்ர்த்தம் பஞ்சம சதே–பக்தியில் அசக்தர்களுக்கு பிரபத்தி -அர்ச்சையில் சரண் அடையச் செய்வித்து
இங்கேயே இப்பிறப்பே கைங்கர்ய ரசம் அளிப்பவன் –

இத்தம் காருண்யா நிக்னம் துரித ஹர ஜனம் பிரேம தீவ்ரம் துகானாம்
லோகாநாம் ரஷிதாரம் ஸ்மருதி விஷயம் அஹம் பாவனா கோசாரம் ச
தீனானாம் சச்சரண்யாம் ஸ்வ ரஸ க்ருத நிஜ ப்ரேயதாவாஞ்சமுசசே
பிராப்தம் சக்தி ப்ரதம் ஸ்ரீ பதி மிக சடகே ஸ்ரேயஸே மேக ஹேதும் –ரத்னாவளி –69-

1-இத்தம் காருண்யா நிக்னம் –காருண்யா கடல் -விதி வாய்க்கின்றது காப்பார் யார் -காருண்யம்-

2-துரித ஹர ஜனம் –பொலிக பொலிக போயிற்று வல் உயர் சாபம் -நலியும் நரகமும் நைந்த –

3-பிரேம தீவ்ரம் துகானாம்–மாசறு சோதி பிரேமத்தால் தூண்டப்பட்டு-

4-லோகாநாம் ரஷிதாரம் –காகுத்தன் வாரானால் இத்யாதி–

5-ஸ்மருதி விஷயம் –உருவ வெளிப்பாடு -ஐந்தாம் பதிகம்-

6-அஹம் பாவனா கோசாரம் ச–யானே என்னும் -சரீராத்மா பாவம்

7-தீனானாம் சச்சரண்யாம் –நோற்ற நோன்பிலேன் –ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழி ந்தாய்-

8-ஸ்வ ரஸ க்ருத –ஆராவமுது –

9-நிஜ ப்ரேயதாவாஞ்சமுசசே–சென்று கிட்ட ஆசைப்பட்டு போக முடியாமல் கதறினார்

10-பிராப்தம் சக்தி ப்ரதம் –பிறந்த வாறும் வளர்ந்த வாறும்–இத்யாதி

ஸ்ரீ பதி மிக சடகே ஸ்ரேயஸே மேக ஹேதும்–காருணிகத்வம்-ஐந்தாம் பத்தில் -பேர் அருள் கண்ணா -மா முனிகள்
பரத்வம் காரணத்வம் வியாபகத்வம் நியந்த்ருத்வம் -முதல் நான்கும் பரத்ப பரம்
பரம சுலபம் ஐந்தாம் பத்து -கருணா சாகரம் அன்றோ இவன் —

————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 50-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

அவதாரிகை –

இதில்
அவதார சேஷ்டிதங்களை தரித்து நின்று அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும்
என்று பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்-ஸ்தான த்ரயத்திலும் தம் அபேஷிதம் கிடையாமையாலே ஸ்ரீ அர்ச்சா ஸ்தலங்களிலே
ஆஸ்ரிதர் நினைவுக்கு ஈடாக ஆலோக ஆலாப ஆலிங்கநாதிகளான அனுபவ விசேஷங்களை வுபகரித்து
அருளக் கடவோம் அல்லோம் -என்று அவன் சங்கல்ப்பித்து அருளுகையாலேயாய் இருக்கும்
நம் அபிமதம் சித்தியாது ஒழிந்தது-அவன் சங்கல்பம் குலையும்படி அங்கு நிர்பந்திக்கக் கடவோம் அல்லோம் –
ஆஸ்ரிதர் நினைவு அறிந்து முகம் கொடுத்த அவதாரத்தில் செல்லுவோம் -என்று
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலே அனுபவிப்பதாகச் செல்ல அதுவும் கை கழிந்து தாம் பிற்பாடராய் அத்தாலே நொந்து
அவ் வவதார குண சேஷ்டிதங்களை யாகிலும் அனுசந்தித்து தரிப்போம் என்று பார்த்த இடத்தில்
அதுவும் விஸ்லேஷ தசையில் அனுசந்திக்கையாலே சைதில்யத்தை விளைக்க
நான் தரித்து நின்று உன் குண சேஷ்டிதங்களை அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்று
சரணம் புகுகிற -பிறந்த வாற்றில் அர்த்தத்தை
பிறந்து உலகம் காத்து அளிக்கும் -என்று அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————————

பிறந்து உலகம் காத்து அளிக்கும் பேர் அருட் கண்ணா உன்
சிறந்த குணத்தால் உருகும் சீலத் -திறம் தவிர்ந்து
சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன்
வாய்ந்த பதத்தே மனமே வைகு–50-

இந்த பத்து திருவாய் மொழிகளுக்கும் பேர் அருள் தானே குணம் –

—————————————————————

வியாக்யானம்–

பிறந்து உலகம் காத்து அளிக்கும் பேர் அருட் கண்ணா –
மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரை பிறந்த பிறவியை-பிறந்தவாறும் -என்று ஈடுபடும்படி அவதரித்ததும்
மற்றும் —
கள்ள வேடத்தை கொண்டு போய்ப் புரம்புக்க வாறும் -என்றும்
சீரால் பிறந்து சிறப்பால் வளராதே அன்றே பிறந்து அன்றே வளர்ந்து அடியை மூன்றை இரந்த வாறும் –
அம்ருத மதன அர்த்தமாக ஆவிர்பவித்து கூடி நீரைக் கடைந்த வாறும் –என்று இப்படி
பூ பார நிர்ஹரண அர்த்தமாகவும்-திரிபுர தஹன அர்த்தமாகவும்-த்ரைலோக்ய அபஹரண அர்த்தமாகவும்
அம்ருத மதன அர்த்தமாகவும் திருவவதரித்து ஜகத்தை ரஷித்து
நோக்கிப் போரும் நிரவதிக கிருபணாவானனான ஸ்ரீ கிருஷ்ணனே
கீழே -நல்லருள் நம்பெருமான் -என்றார் இறே அப்படியே-நிரவதிக தயாவானவன் –

உன் சிறந்த குணத்தால் உருகும் சீலத் -திறம் தவிர்ந்து –
உனக்கு அனுரூபமான கல்யாண குண அனுசந்தானத்தாலே த்ரவி பூதானாம் ஸ்வபாவ பிரகாரம் நிவ்ருத்தமாய் –

சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் –
உன்னைக் கிட்டி-அனுபவிக்கும் படியாக ஸ்தைர்யத்தைச் செய்து அருள வேணும் –
அதாவது –
பிறந்தவாறு -என்று தொடங்கி -நிறந்தனூடு புக்கென தாவியை நின்று நின்று உருக்கி உண்கின்றன -என்றும்
என்னை யுன் செய்கை நைவிக்கும் -என்றும் –
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே-என்றும்
வெள்ள நீர் சடையானும் -என்று தொடங்கி -என்னுயிரை உருக்கி உண்ணுமே -என்றும்
உண்ண வானவர் கோனுக்கு -என்று தொடங்கி –என் நெஞ்சு எரி வாய் மெழுகு ஒக்கு நின்றே -என்றும்
திஷ்டந்தம் – ஆஸிநம் – பிரதிசிஸ்யே -என்னும்படி நின்றவாறு -இத்யாதி
எங்கனம் மறந்து வாழ்கேன் என் செய்வேன் உலகத்தீரே -இத விஷயத்தில் நம்மைத் தானே கேட்க வேணும் –

நின்று நின்று நினைகின்றேன் உன்னை எங்கனம் நினைகிற்பன் -என்றும்
ஒண் சுடரோடு -என்று தொடங்கி -எண் கொள் சிந்தையுள் நைக்கின்றேன் -என்றும்
திருவுருவு கிடந்த வாறும் -என்று தொடங்கி — என் நெஞ்சம் நின்று நெக்கருவி சோறும் கண்ணீர் -என்றும்
அடியை மூன்றை இரந்த வாறும் -என்று தொடங்கி –
என் நெஞ்சம் நின்றனக்கே கரைந்து உகும் -என்றும்
கூடி நீரைக் கடைந்த வாறும் -என்று தொடங்கி -ஊடு புக்கு எனதாவியை உருக்கி யுண்டிடுகின்றன-என்றும்
சொல்லப் படுகிற இவை நிவ்ருத்தமாய்

உன்னை என்று கொல் சேர்வதுவே -என்றும்
உன்னை என்று தலைப் பெய்வனே -என்றும்
பாவியேற்கு ஓன்று நன்கு உரையாய் -என்றும்
என் செய்கேன் அடியேனே -என்றும்
கொடிய வல்வினையேன் உன்னை என்று கொல் கூடுவதே -என்றும்
நின் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே-என்று
தரித்து நின்று உன்னை அனுபவிக்கப் பெறுவேன் -என்றவை என்கை –

சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்று
தாம் தரித்து நின்று அனுபவிக்கும் பிரகாரம் பண்ணி அருள வேணும் என்று
அர்த்தித்த-ஞானாதி குணங்களை யுடையரான-ஸ்ரீ ஆழ்வார் உடைய –

வாய்ந்த பதத்தே –
பரஸ்பர-சத்ருசமாய்-பொருந்தி இருக்கிற திருவடிகளிலே –

மனமே வைகு –
மனசே தங்கிப் போரு-

அவருக்கு
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் ஆனாப் போலே
உனக்கும் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே பிராப்தம் என்று சென்று அங்கேயே தங்கிப் போரு-

———————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -124- திருவாய்மொழி – -5-10-1….5-10-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

June 12, 2016

திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்திலே சென்று புக்கு அங்கு நிற்கின்றவனோடே பரிமாற வேண்டும் என்று
மநோ ரதித்துக் கொண்டு போக, கால் நடை தாராமல் நடுவழியிலே விழுந்து கிடந்து கூப்பிட்டார்;

இனி, “இவ்வளவில் குணாநுபவம் பண்ணியாகிலும் தரிப்போம்” என்று பார்க்க,
அது தானும் பேற்றினைப் போன்று அரிது என்னலாம்படி சைதில்யத்தை விளைப்பிக்க;
எல்லா அவஸ்தைகளிலும், உன்னைப் பிரிந்து நின்றாலும் தரித்து நின்று
குணாநுபவம் பண்ண வல்லேனாம்படி செய்தருள வேணும் என்று திருவடிகளிலே சரணம் புகுகிறார்.

மோஷத்துக்கு சரணாகதி பண்ண வில்லை -தரிக்கவே -இது -வேற நான்கும் வேற ரீதியில் –

கூரத்தாழ்வானுடைய நிர்வாஹத்தைச் சுருங்க அருளிச் செய்கிறார்.
‘குணாநுபவம் பண்ணியாகிலும்’ என்ற இவ்விடத்திலே
“கோவிந்தன் குணம் பாடி —- ஆவி காத்திருப்பேனே” என்னும் நாய்ச்சியார் திருமொழி அநுசந்தேயம். 8. 3.

இருடிகளுக்குண்டான சம்சார பயத்தை ஒத்ததாயிற்று ஆழ்வார்களுக்குப் பகவானைப் பிரிந்த விரஹத்தால் வரும் கிலேசம்;
அவர்கள், தங்கள் தங்கள் பேற்றிற்குத் தாங்கள் தாங்கள் சில முயற்சிகள் செய்யா நிற்பர்கள்,
இவர்கள் அத்தலையாலே பேறாகுமளவும் அசோகவனத்திலே பிராட்டியைப் போன்று துடியா நிற்பர்கள்;
அவர்களுக்குத் தங்கள் தலையிலேயும் சில கிடக்கையாலே விளம்பம் பொறுக்கலாம்,
இவர்களுக்கு அங்ஙன் சொல்லலாவது ஒன்று இல்லையாகையாலே கிடந்து அலமாப்பார்கள்.
‘அவன் அடியாலே நம் பேறு’ என்றிருக்குமவர்களுக்கு ஒரு கண்ணழிவு இல்லையே சொல்லலாவது.
“இரகு வம்சத்தில் அவதரித்தவரே! உம்மை நீங்கினால் சீதா பிராட்டி உயிர் வாழாதது போன்று,
நானும் உயிர் வாழ மாட்டேன்” என்கிறபடியே,

“நச ஸீதா த்வயா ஹீநா நச அஹமபி ராகவ முஹூர்த்தமபி ஜீவாவ:
ஜலாந் மத்ஸ்யாவிவ உத்ருதௌ:-என்பது, ஸ்ரீராமா. அயோத், 53 : 31.

லாபாலாபங்களில் பிராட்டியையும் தம்மையும் ஒரு தன்மையராகச் சொன்னாரன்றோ இளைய பெருமாள்.
“சுவாமியே! சிறந்த பிரீதியானது எப்பொழுதும் தேவரீரிடத்திலேயே நிலைத்து விட்டது, பக்தியும் நியதமாக இருக்கிறது,
என் எண்ணமும் வேறிடத்தில் எனக்குச் செல்வது இல்லை” என்று,
திருவடி ஸ்ரீராமாவதாரம் ஒன்றிலும் சக்தனாயிருக்குமாறு போன்று,

“ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:பக்திஸ்ச நியதா வீர
பாவோ நாந்யத்ர கச்சதி”-என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16.

இவர் எல்லா அவதாரங்களிலும் எல்லாச் செயல்களிலும் அகப்பட்டிருப்பார் ஒருவர்.
அர்ச்சாவதாரத்தில் தம் அபேக்ஷிதம் பெற ஆசைப்பட்டவர், அது கிடையாமையாலே அவதாரங்களிலே போகிறார்;
விபவம் உள்ள இடத்தே சென்றால் சிறிது அபேக்ஷிதம் கிடைக்கும்’ என்று இருப்பரே.
நன்று; அவதாரங்களிலே இழந்தார்க்கும் இழவு தீர்க்கிற இடம் அர்ச்சாவதாரமாயிருக்க, இதனை விட்டு,
‘பெறலாம்’ என்று அவதாரமுள்ள இடம் தேடிப் போகையாவது என்? என்னில்,
அர்ச்சாவதாரத்தில், கண்களால் காண முடியாதவனான தன்னை,
சம்சாரிகள் கண்களுக்கு விஷயமாக்குகையும்
விரும்பினவை அனைத்தையும் கொடுக்கையும் ஒழிய,
குளிர நோக்குதல், வினவுதல், அணைத்தல் செய்யக்
கடவோம் அல்லோம் என்று சங்கல்பித்திருக்கையாலே,
‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பம் குலையும்படி அதி நிர்ப்பந்தம் செய்யக் கடவோமல்லோம்’

‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பம் குலையும்படி’ என்ற இவ்விடத்திலே,
“கூரத்தாழ்வான் ஆர்த்தராய்ச் சரணம் புக, பெருமாளும் இரங்கி ‘மூன்றாம் நாளைக்கு வீடு தந்தோம்’ என்ன,
‘ஆழ்வான் திரு மதிளுக்குப் புறம்பானார்’ என்னக் கேட்டு
உடையவர் ஓடிச் சென்று, ‘ஆழ்வான் நாம் இங்கே இருக்க உமக்குப் பரம பதத்தே போக வேண்டிற்றோ’ என்ன,
அடியேன் சம்சாரத்திலே அடிக் கொதிப்பாலே மறந்தேன்’ என்ன,
‘ஆகில் நாமும் சரணம் புக்கால் இன்னம் சில நாள் ஆழ்வானை இங்கே வைக்க இரங்குவர்’ என்று திரு வாசலளவும் சென்று,
‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பத்தைக் குலைக்க வேண்டா’ என்று மீண்டு எழுந்தருளினார்” என்ற
சரிதம் அநுசந்திக்கத் தகும். என்றது,
நான் ஒருவன் தோன்றிப் பெருமாளை இரண்டு வார்த்தை சொல்லுவாராகச் செய்யலாமோ என்றபடி.
‘அதி நிர்ப்பந்தம் செய்யக் கடவோம் அல்லோம்’ என்கையாலே, நிர்ப்பந்தித்தால் செய்வர் என்பது கருத்து.

“ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா
ஸம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 2.
என்று, “அந்தக் கிருஷ்ணனும் துவஜம், வஜ்ஜிரம், தாமரை என்னும் இந்த ரேகைகளை அடையாளமாகவுடைய
கைகளாலே நன்றாகத் தொட்டு இழுத்து அன்போடு கெட்டியாக ஆலிங்கனம் செய்து கொண்டார்” என்னும்

கிருஷ்ணாவதாரத்திலே போந்தார் அண்மைக் காலமாகையாலே.
இவ்வாழ்வார்கள் கிருஷ்ணாவதாரம் என்றவாறே போர மண்டியிருப்பர்கள்,
இதற்குக் காரணம் என்’ என்று பட்டரைக் கேட்க,
ஒருவனுக்கு உண்டான துக்கம் சில நாள்கள் கழிந்தால் பொறுக்கலாம், அணித்தானால் ஆறியிருக்கப் போகாதே அன்றோ;
அப்படியே, அல்லாத அவதாரங்களைப் போல அன்றிக்கே, சம காலமாகையாலே,
‘ஒரு செவ்வாய்க்கிழமை முற்படப் பெற்றிலோம், பாவியேம்! பல்லிலே பட்டுத் தெறிப்பதே’ என்னும் இழவாலே
வயிறு எரிதலாலே யாயிருக்கும்’ என்று அருளிச் செய்தார்.

இனித் தான், இராமவதாரத்தில், தமப்பன் சம்பரனனாய்- கொன்றவனாய் – ஏக வீரனாய் இருப்பான் ஒருவன்;
பிள்ளைகள் தாம் ஆண் புலிகள், குடி தானே வன்னியம் அறுத்திருப்பதொரு குடி; இவை எல்லாம் மிகையாம்படி,
குணத்தாலே நாடுகளை யெல்லாம் ஒருமார்வு எழுத்தாக்கிக் கொண்டிருப்பர்கள்,
ஆகையால் எதிரிகள் என்கிற சொல்லும் இல்லை; இங்கு அங்ஙன் அன்றிக்கே,
தமப்பன் ஒரு சாது விருத்தன்; பிறந்தது கம்சன் சிறைக் கூடத்திலே, வளர்ந்ததும் அவனகத்து அருகே;
ஸ்ரீ பிருந்தாவனத்திலே எழும் பூண்டுகளகப்பட அசுர மயமாயிருக்கும்;
ரக்ஷகரானவர்கள் ஓர் அடி தாழ நிற்கில் பாம்பின் வாயிலே விழும்படி யாயிற்று இவன் தன் படிகள் இருப்பன;
அப்படியானால் வயிறு எரியாதே செய்வது என் இவர்கள்;

அக்காலத்திலே உணர்ந்து நோக்கப் பெற்றிலர்கள்,
அவ்விழவுக்கு இன்று இருந்து நோவு படுகிறார்கள்.
அவர்களிலே ஒருவரான இவர் சொல்லுகிறபடி யன்றோ இது, ‘தெரிந்துணர்வு’ என்ற திருப்பாசுரம்;

தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன் வாளா
இருந்தொழிந்தேன் கீழ் நாள்களெல்லாம் – கரந்துருவின்
அம்மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து.-என்பது, பெரிய திருவந்தாதி. 82.

புலையாம் பிறவி பிறந்தென் செய்தோம் பொன்னி பொன் கொழிக்கும்
அலையார் திருவரங்கத் தெம்பிரான் நம தன்னையொடும்
தொலையாத கானம் கடந்த அந்நாள் தடந்தோறும் புல்லாய்ச்
சிலையாய்க் கிடந்திலமே நெஞ்சமே கழல் தீண்டுகைக்கே.-என்னும் திருப்பாசுரம் ஒருபுடை ஒப்பு நோக்கலாகும்.

மாயா மிருகத்தின் பின்னே சென்று இளைத்து மீண்டு எழுந்தருளின போது அடி சுட்டுப் பொறுக்க மாட்டாமையாலே
தழைகளை முறித்துப் பொகட்டு அவற்றிலே நின்று ஆறி எழுந்தருளினார் என்று கேட்டு,
‘பாவியேன்! அன்று உதவி அத் திருவடிகளிலே என் தலையை மடுக்கப் பெற்றிலேன்,
ஒரு பயனுமின்றியே கழிந்தனவே யன்றோ அநாதி காலம் எல்லாம் என்று நொந்தாரன்றோ.
இப்படியன்றோ கழிந்தனவற்றிற்கு இவர்கள் வயிறு எரியும்படி.

‘திருநீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே’ என்றும் வயிறு பிடித்தாரன்றோ இவர்.
“தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திருநீல மணியார் மேனியோடு
என் மனம் சூழ வருவாரே.”- என்பது, திருவாய். 8. 3 : 6.

சங்கர மங்கலம் -பெண்மணி திரு வல்ல வாழ் வந்து -ஏகாதசி விரதம் -இருந்து த்வாதசி -சேவிக்க வருவாளாம்
தொலகாசுரன் தடுக்க -பிரமச்சாரி -வேஷம் கொண்டு அழித்து-மூன்று கூறாக்கி
தலைப்பகுதி – -தலையாறு -இடைப்பகுதி -கால் பகுதி -வெவேற இடங்களில் போக -இவன்
பிரமச்சாரி -அங்கி அவிழ -பெண் மணி -திருமார்பில் பிராட்டியைக் கண்டு -திருமார்பை மறைத்து –
திரு இருப்பைக் காட்ட -திரு வல்ல வாழ் -திரு வாழ் மார்பன் –திருவல்லா –என்றே இங்கே பழக்கம்
கண்ட கர்ணன் தபஸ் இருந்த திவ்ய தேசம் இது என்பர்-
கிருபையைக் காட்டி அருளினான் இங்கு –

‘இவர் அவனுடைய அவதாரங்களையும் உலகைப் படைத்தல் முதலான வியாபாரங்களையும்,
“தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர் நடை நடந்த” – பெரியாழ்வார் திருமொழி, 1. 7 : 11.-என்கிறபடியே,
அடியார்களை வாழ்விக்கவும், பகைவர்களை அழியச் செய்யவும் அடி யிட்டு அப்படி வளர்ந்தருளின
கிருஷ்ணாவதாரத்தையும் அநுசந்தித்து மிகவும் சிதிலரான இவர்,–
1-தரித்து நின்று உன்னை அநுசந்திக்க வல்லேனாம்படி செய்தருள வேணும் என்று அவனைச் சரணம் புகுகிறார்” என்று
ஆழ்வான் பணிக்கும். -தரித்து நின்று அநுசந்திக்க–மானஸ அனுபவம்

அன்றியே,
2-‘பிரிந்திருக்கும் சமயத்திலே உன் குணங்கள் மனத்திலே நிலை பெற்று மிகவும் நலிய,
அதனாலே நெருக்குண்டு நோவு படுகை தவிர்ந்து, உன் திருவடிகளிலே வந்து சேர்ந்து உன்னைக் கிட்டி அநுபவிக்கும்படி
செய்தருள வேண்டுமென்று அவனைக் குறித்து அருளிச் செய்கிறார்’ என்று எம்பார் அருளிச் செய்வர்.–
உன் திருவடிகளிலே வந்து சேர்ந்து உன்னைக் கிட்டி அநுபவிக்கும்படி–காயிக அனுபவம்

அங்ஙனம் அன்றிக்கே,
3-“சர்வேஸ்வரன் கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்துத் திருவாய்ப்பாடியிலே வளர்ந்தருளா நின்றான்’ என்று கேட்டு,
‘அங்கே மநோ ரதித்தபடியே நாம் கலந்து பரிமாறலாம்’ என்று தெற்குத் திருவாசலாலே சென்று புக,
‘இப்போது இங்ஙனே வடக்குத் திரு வாசலாலே புறப்பட்டுத் தன்னுடைச் சோதி யேற எழுந்தருளினான்’ என்று
கேட்டு விழுந்து கிடந்து கூப்பிடுகிறார்” என்று
பிள்ளான் பணிப்பர் என்று அருளிச்செய்வர்.-பாவியேன் பல்லில் பட்டுத் தெறிப்பதே -வருத்தம் —

கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்–கடாக்ஷித்து ஸ்ருஷ்டிகள்
அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்–கடாக்ஷித்து பகைவர்களை அழியச் செய்ய
“நின்று நின்று நினைகின்றேன்” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து எழுகின்றது ஆழ்வான் நிர்வாகம்.

எம்பார் நிர்வாகம், “என் கண் கட்குத் திண் கொள்ள” என்பது போன்றவைகளிலே நோக்காக எழுந்தது.

“செய்து போன மாயங்களும்” என்றதிலே நோக்கு, பிள்ளான் நிர்வாகம்.

கோ கோபிரளர் மக ரிஷிகள் –வாசு தேவர் மூலவர் -சேவை ஸ்ரீ வித்யா ராஜகோபாலன் உத்சவ சேவை –
இருந்த இடமே- 32-சேவை பெற்றார்களே -மன்னார்குடி சேவை

————————————————————————————

பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–5-10-1-

அவதாராதி சேஷ்டிதங்கள் சங்க்ரஹேண அருளிச் செய்கிறார்
பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்-பிரகாரங்கள் -இரண்டாவது ஆறு மோசம் மோகித்த –
அஜாயமானோ பஹூதா விஜாயதே –அவனே தோன்றி -அஜோபிசன் -பிறப்பிலி -நாராயணாத் பிரம்மா ஜாயதே
இதர சஜாதீயனாய்ப் பிறந்த -அஜகத் ஸ்வ ஸ்வபாவனாய் -பெருமைகளை குறைக்காமல் -ஆஸ்ரித சம்ரஷண அர்த்தம்
அகர்ம வச்யன் -இச்சை அடியாக -கைக் கீழ் விரோதி கால் கீழ் விரோதி -சகடாசுரன் -ஆஸ்ரிதர் அபிமானித்த த்ரவ்யமே தாரகம்
60 வயசில் -படையை -கை செய்து-வகுத்து வ்யூஹம் –
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்-விஜய உபாய பிரகாரங்கள் காட்டி -அவதார கார்யம் சமைந்து மண்ணின் பாரம் குறைத்து
தன்னுடைச் சோதி எழுந்த மாயங்கள் -தனித்து இருந்தே பழக்கம் இல்லாதவன் -தனியாக போக
பெருமாள் புல் வாசி இல்லாமல் அனைத்துக்கும் கூட்டிச் சென்றாரே –தாருகன் இடம் செய்தி சொல்லி விட்டு -தனித்துப் போன மாயம் –
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற -மர்மமான ஹிருதாயப் பிரவேசம் புக்கு –
ஆத்மாவை ஷணம் தோறும் த்ரவ்யம் ஆக்கி -உண்கின்ற க்ரஹிசியா நிற்கும்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?-இச்–சுட்டுப் பொருள் நித்ய சந்நிஹிதன் -தேஜஸ் உடையவன் –
வானைப் போலே அளவிட முடியாத ஸ்வபாவங்களை சிதிலம் ஆகாமல் அனுபவிக்கும் படி -உன்னை என்று சேர்வது

பிறந்த விதமும் வளர்ந்த விதமும் மஹாபாரத யுத்தத்திலே அணிகளை வகுத்துப் பாண்டவர்கட்குப் பல திறங்களையும் காட்டிக்
காரியங்களைச் செய்து தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளிய ஆச்சரியமான காரியங்களும் மார்பினுள்ளே நுழைந்து என்னுடைய
உயிரை உருக்கி நின்று நின்று உண்கின்றன; இந்தச் சிறந்த வான் சுடரே! உன்னை யடைவது என்று கொல்?
கைசெய்து-அணி வகுத்து. காட்டியிட்டு: ஒருசொல், ஆறும் ஆறும் மாயங்களும் புக்கு நின்று நின்று உருக்கி உண்கின்ற என்க.
நின்று நின்று: அடுக்குத் தொடர். உண்கின்ற: முற்று. உண்கின்ற சுடரே என எச்சமாகக் கோடலுமாம்.
இத் திருவாய்மொழி ஆசிரியத் துறை.

இத் திருவாய்மொழியில் சொல்லப்படுகின்ற அர்த்தத்தைச் சுருக்கமாக அருளிச் செய்யா நின்று கொண்டு;
உன்னுடைய அவதாரம் முதலானவைகள் என்னை மர்மத்திலே தொட்டு நைவிக்கின்றன.
இந்த நையுந் தன்மை நீங்கி உன்னைத் தரித்து நின்று நான் அநுசந்திப்பது எப்போது? என்கிறார்.

பிறந்தவாறும் –
தாய் தந்தையர்கட்குக் காற்கட்டு அறும்படி யன்றோ பிறந்தது. -பாசம் அறுத்து —
தன்னைப் பெற்றவர்களுடைய பந்தத்தை அறுத்துக் கொண்டு வந்து பிறப்பாரும் உளரோ.
‘இவன் அன்றோ நமக்குக் காற்கட்டு ஆனான்’ என்றிருந்தார்கள் அவர்கள்;
அது பொறுக்க மாட்டாமல், ‘உங்களுடைய கட்டு நான் பொறுக்க மாட்டேன்’ என்று விட்டான்.
தந்தை காலில் விலங்கு அற அன்றோ வந்து தோன்றிற்று,-பெரிய திருமொழி 8. 5 : 1.-
பிறக்கிற போதே தாய் தந்தையர்கள் காலில் கிரந்தியை அறுத்துக் கொண்டு காணும் பிறந்தது.
நானும் பிறந்து அர்ஜுனா நீயும் பிறக்க வேண்டுமோ –

பிறந்தவாறும் –
பிள்ளாய்! பிறக்கிற போதும் ஒரு விளக்கு எரிந்தால் ஆகாதோ, தானே விளக்காக அன்றோ பிறந்தது.
ஆயர் குலத்தினில் தோன்று மணி விளக்கன்றோ.

பிறந்தவாறும்-
கர்மங்கட்குக் கட்டுப்படாதவனான தான் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவரோடு ஒக்கப் பிறப்பது,
பிறந்தால் -ஆஸ்ரித சம்ரக்ஷணமே -அடியார்களைப் பாதுகாத்தலே தனக்குப் பிரயோஜனமாக இருப்பது,
அவர்கள் ஆபத்துப் படுங்காலமே தனக்குப் பிறக்கைக்கும் காலமாவது,
பிறவா நின்றால் தன் ஐஸ்வர்யத்தில் ஒன்றும் குறையாமற் பிறப்பது,
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை -பிரகிருதி சம்பந்தமில்லாத திருமேனியை இதர சஜாதீயமாக்கா நிற்பது,
தன் பிறப்பை அநுசந்தித்தாருடைய பிறவிகள் போகும்படியாக இருப்பது,
இவை யெல்லாவற்றையும் நினைக்கிறது. –

‘நமக்காக இவர்கள் பிணை பட்டுச் சிறையிருக்கும்படி இவர்களுக்கு இங்ஙனே பிறப்பதே!’ என்று
ஈடுபடா நிற்பனவான படிகளை யெல்லாம் நினைக்கிறது.

ஜன்மம் கர்மம் எனக்கே திவ்யமாக உள்ளம் உருகும் படி உள்ளதே -சிலர் தான் உண்மை அறிவார்
அறிந்தார் ஜன்மம் அதே சரீரத்திலே போகும் –
நியாய சாஸ்திரம் தலை குனியும் -எதோ உபாசனம் ததோ பலம் பொய்யானதே –
பிறந்தார் பால் குடித்தார் நினைத்தால் பிறக்காமல் பால் குடிக்க வேண்டாமல் போவதே –
அவதார ரகசியம் நான்கு ஸ்லோகங்கள் -ஆறு விஷயங்கள் –
1-மெய் 2-பெருமைகள் குறையாமல் -3-சுத்த சத்வ மயம்
4-இச்சையால் பிறக்கிறான் -5- சாது சம் ரஷணம் -தர்ம சம்ஸ்தாபனம் -6-துஷ்ட நிக்ரகம் –

பிறந்தவாறும் –
“ஆவிர்பூதம்” – தோன்றுதல் என்றதனைக் கொண்டு, தோன்றினவாறும் என்னாதொழிவான் என்? என்னில்,
சம்சாரிகள் பத்து மாதங்கள் கருவிலே தங்கி யிருப்பார்களே யாகில்
“பிறகு பன்னிரண்டாவது மாதமான சித்திரை மாதத்தில் நவமிதிதியில்” என்கிறபடியே,
பன்னிரண்டு மாதங்கள் கர்ப்பத்திலே தங்கி யிருக்கையாலும்,
“ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ”என்பது, ஸ்ரீ ராமா.பால. 18 : 8.
“பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட வப் பாங்கினால்-வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்
என் இளங்கொங்கை அமுதமூட்டி எடுத்து யான்”-என்பது, பெரியாழ்வார் திருமொழி. 3. 2 : 8.
ஒருத்தி மகனாய் பிறந்து -வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும்

அவளுக்கு முலை சுரக்கையாலும், முலை பெறாவிடில் இவன் தான் நோவு படுகையாலும்,
தன்னைக் கட்டவும் அடிக்கவுமாம்படி எளியனாக்கி வைக்கையாலும் பிறந்தவாறும் என்கிறார்.
பகல் கண்ட குழியிலே இரவிலே விழுவாரைப் போன்று, பருவம் முற்றினவளவிலே “எத்திறம்” என்று மோஹித்து விழக்கடவ இவர்,
அதற்கும் அவ்வருகே சென்று இழிகிறாரன்றோ, கலக்கம் இருக்கிறபடி.
‘எத்திறம்’ என்று அங்கே ஆறு மாதங்களும்,
‘பிறந்தவாறும்’ என்று இங்கே ஆறு மாதங்களும் மோஹித்துக் கிடந்தார் என்று பிரசித்தமன்றோ!
ஸ்ரீபரதாழ்வான் ஸ்ரீராமபிரானுடைய பிரிவாலே மோஹித்துத் தறைப்பட்டுக் கிடக்க,
தாய் மார் அடங்கலும் சுற்றும் பார்த்து நிற்க, “சத்ருக்நாழ்வான் செயலற்று நின்றான்” என்கிறபடியே,
ஸ்ரீ சத்துருக்நாழ்வான் கிட்டவுங்கூடப் பயப்பட்டுச் செயலற்றவனாய் நின்றானன்றோ

மோஹித்துக் கிடந்த தசையில் இவரை நோக்கினார் இன்னார் என்பதனைத்
திருஷ்டாந்தத்தோடு அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீபரதாழ்வான்’ என்று தொடங்கி.

“ததவஸ்தம் து பரதம் ஸத்ருக்ந: அநந்தரஸ்தித:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 87 : 4.

அப்படியே, நல்லார் நவில்-திருவிருத்தம்-100-.-குருகூரன்றோ,
உலகத்தில் அறிவுடையாரங்கடலும் திரண்டு இவர் படிகளைக் கண்டு அறிவு கெடும்படி அன்றோ
இவர் கலங்கிக் கிடந்த கிடை.

வளர்ந்தவாறும் –
வளர்ந்தபடியை அநுசந்தித்தால் பிறந்தவாற்றிலே கால் வாங்கி இளைப்பாற வேண்டும்படி யன்றோ இருப்பது.
பிறக்கிற போது சிறைக் கூடத்திலே தான் பிறந்தால், வளருகிற போது நாட்டாரைப் போன்று வளரத்தான் பெற்றதோ.
விபவத்தில் ஓர் அந்தர்யாமி பட்டது அன்றோ பட்டான் –

வளர்ந்தவாறும் –
பூதனை முதலாயினோர்கள் உயிர்கள் மாளவும், யசோதை முதலானவர்களுடைய சிநேகம் வளரவுமன்றோ வளர்ந்தது.
“தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர் நடை நடந்து” –பெரியாழ்வார் திருமொழி,-1. 7 : 11.-என்கிறபடியே,
மிடறுமெழு மெழுத்தோடே வெண்ணெய் விழுங்கிப் போய்ப் படிறு பல செய்து இப்பாடி எங்கும் திரிய அன்றோ அவர்கள் உகந்திருப்பது.

வளர்ந்தவாறும் –
தீம்புகளாலே தாய்க்குச் சிநேகம் வளருமாற்றினைக் காட்டுகிறார் ‘மிடறு மெழு’ என்று தொடங்கி.

மிடறு மெழு மெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப் போய்ப்
படிறு பல செய்து இப் பாடி யெங்கும் திரியாமே
கடிறு பலதிரி கானதரிடைக் கன்றின் பின்
இடற என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே!-என்பது, பெரியாழ்வார் திருமொழி.

வளர்ந்தவாறும் –
இவன் கால் நெடுக நெடுக, பகைவர் உடலும் மாண்டது, அநுகூலர் உடலும் மாண்டது;
பொட்டத் துற்றி’ –பெரியாழ்வார் திருமொழி, 3. 5 : 1.-என்றும்,
‘வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடையிட்டு’ -பெரியாழ்வார் திருமொழி, 2. 9 : 1.-என்றும்
அநுகூலர் உடல் அன்றோ மாண்டது.(உடல் -ஐஸ்வர்யம் அர்த்தம் -வெண்ணெய் )
இப்படிப் பகைவர் மண்ணுண்ணவும், தான் நெய்யுண்ணவும், அநுகூலர் கண்ணுண்ணவுமன்றோ-
(கடாக்ஷிக்க-சேவிக்க )- வளர்ந்தருளிற்று.-

பெரிய பாரதம் –
‘மஹா பாரதம்’ என்றன்றோ பிரசித்தி.

கை செய்து –
கையும் அணியுமாக வகுக்கை தொடக்கமான பூசல் உள்ளனவற்றை யெல்லாம் நினைக்கிறது.

ஐவர்க்குத் திறங்கள் காட்டியிட்டு –
அறிவு பிறப்பதற்கு முன்பு சத்தையே பகைவர் அழிவதற்கு உடலாயிற்று,
இருள் ஒளிகள் ஓர் இடத்தில் சேர்ந்திருத்தல் இல்லை அன்றோ; -சஹ அவஸ்தானம் கிடையாதே –
பருவம் நிரம்பின பின்பு அநுகூலர்க்குக் கையாளான படி.

‘திறங்கள்’ என்றது,
தூது சென்றும், தேரை ஓட்டியும், ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுத்தும், பகலை இரவாக்கியும்,
எதிர்கள் உயிர் நிலைகளைக் காட்டிக் கொடுக்கை தொடக்கமானவற்றை யெல்லாம் சொல்லுகிறது.

செய்து –
இப்படிச் செய்து. போன மாயங்களும் –
அடியார்களைக் காப்பாற்றுவதற்காக வந்து பிறந்து அவர்களுடைய
ஆபத்துக்களைப் போக்கி உபகரித்தால், ‘இது நமக்காகச் செய்தானன்றோ’ என்று இருக்கை யன்றிக்கே,

“க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருது லோசந: மோஹியித்வா ஜகத் ஸர்வம் கத:ஸ்வம் ஸ்தாநமுத்தமம்”-என்பது, பாரதம்.

இவன் தன்னோடே எதிரிடும் படியான சம்சாரத்திலே இராமல், ஓரவசரத்திலே இங்கு நின்றும்
போன ஆச்சரியமான செயல்களும். என்றது,
“நீண்ட கண்களையுடைய ஸ்ரீ கிருஷ்ணன், பூமியின் பாரத்தை நீக்கி உலகத்தை யெல்லாம் மோஹிக்கச் செய்து
மேலான இடமான தன் பரமபதத்தை அடைந்தார்” என்று, வந்து திருவவதாரம் செய்து,
அநுகூலர் காரியங்கள் அடையத் தலைக்கட்டி, பிரதிகூலரை யடைய முட்கோலுக்கு இரையாக்கி,
அனுகூலரை யடையக் கண்களாலே விழவிட்டு, இரு திறத்தாரையும் நோவு படுத்தி,
இங்கு நின்றும் போய்த் தப்பப் பெறுவதே! என்கிறது.
“ஸ்வம் ஸ்தாநம் உத்தமம் – தன்னுடைய உத்தமமான ஸ்தானத்தை” என்கிறபடியே,
இங்குள்ளாரடங்கலும் எதிரம்பு கோக்குமாறு போலேயன்றோ அங்குள்ளாரடங்கலும் எதிர் ஏற்கப் போனபடி.

நிறந்தனூடு புக்கு-
தோல் புரையே போமதன்று, மர்மத்திலே நலிகிறபடி.

எனது ஆவியை –
அல்லாதார் அடங்கலும் இவற்றைக் கேட்டு உண்டு உடுத்துக் காலம் போக்கித் திரியா நின்றார்களன்றோ.

ஆவியை நின்று நின்று உருக்கி-
வெட்ட முடியாததும் எரிக்க முடியாததுமா யிருக்கிற ஆத்மாவை இடைவிடாதே நையும்படி செய்யா நின்ற.

நின்று நின்று உருக்கி உண்கின்ற –
அவை -அவன் சேஷ்டிதங்கள் -ஒரு கால் போகச் செய்தேயும்,
இவை உருவ நின்று நலியா நின்றன.

இச் சிறந்த வான் சுடரே!
தகுதியாய் அளவிட முடியாததான இவ் வழகை யுடையவனே!
அவன் பிறக்கப் பிறக்க வாயிற்று ஒளி மிக்குப் பொலிவது. -சுடர் -அழகு – தேஜஸ்-
இறந்த காலமாயிருக்கச் செய்தேயும், இவர்க்குச் சம காலம் போலேயும் கண்களுக்கு விஷயமாயிருத்தலின்,
‘இச் சிறந்த’ என்று சுட்டுகிறார்.
பிரமாணம் மூலம் நாம் அறிவது எல்லாம் இவருக்கு பிரத்யக்ஷம்

வான் சுடர் இங்கே வந்த பின்பு –சிறந்த வான் சுடரே-சிறந்தது என்றுமாம்.
வான் சுடராக இருந்து இங்கு பிறந்து சிறந்த வான் சுடர் ஆனதே
(சுடர் -ஒளி -அழகு இரண்டும் )
பிறந்தவாற்றாலும், வளர்ந்தவாற்றாலும், பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத் திறங்கள் காட்டியிட்டுச்
செய்து போன மாயங்களாலும்,
நிறந்தன் ஊடு புக்கு எனது ஆவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற இச் சிறந்த வான் சுடரே! என்று,
அவன் தனக்கு விசேடணமாக்குதல்.
உருக்கி உண்கின்ற என்று, குண பரமாக்குதல்; என்றது,
‘பிறந்தவாறு’ என்று தொடங்கி, மாயங்களும் உருக்கி உண்கின்றன என்றபடி. –
இதுவே நிர்வஹித்துப் போருமது.

உன்னை என்று கொல் சேர்வதுவே –
நான் தரித்து நின்று அநுசந்திக்க வல்லேனாம்படி செய்தருள வேண்டும்.என்கிறார். –
மானஸ -கூரத் ஆழ்வான் நிர்வாகம் –

அன்றிக்கே,
சேருகையாவது இரண்டு தலையும் சேருகையாய், நான் அநுசந்தித்து நைகின்றவனாதல் தவிர்ந்து
உன்னைப் பிரியாதபடி கிட்டப் பெறுவது என்று? என்கிறாராகவுமாம்.–
காயிக -எம்பார் நிர்வாகம் –

—————————————————————————-

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்தும்
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும்
முதுவைய முதல்வா! உனை என்று தலைப் பெய்வனே?–5-10-2-

அபிமத விஷயத்தில் உன் வியாபாரங்கள் என்னை சிதிலை யாக்கின
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்தும்-வது -நப்பின்னை –
வார்த்தை காதில் பிறந்த உடனே மேல் விழுந்து -கொன்றது
அசூர ஆவிஷ்டமான கிருத்ரீமா -கேசி -கோபிமார் அஞ்சாத படி வாய் பிளந்தது
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்-மது பிரவஹிக்கும் குழல் -குரவை கூத்து ராச க்ரீடை இனிய வியாபாரங்கள்
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும்-
நப்பின்னை -பரிணமயம்-இது கேசி நிரசனம் -அது -ராச க்ரீடை உது -விசேஷித்து சொல்லலாவது இல்லை –
அனைத்தும் உருக்குமே -அதி பிரவணன் ஆனேன் -நிரதிசய போக்யன்-உன் செயல்கள் என்னை நைவிக்கும்
முதுவைய முதல்வா! உனை என்று தலைப் பெய்வனே?-பிரதான காரண பூதன் -உன்னை என்று கிட்டுவேன்
அழிந்த ஜகத்தை உண்டாக்கிய நீ சிதிலையான அடியேனை இல்லை பெறச் செய்வது பெரிய செயலோ

கல்யாண வார்த்தைகள் பிறந்த அளவிலே இடபங்களின் மேல் வீழ்ந்து அவற்றைக் கொன்றதும்,
வஞ்சனை பொருந்திய கேசி என்பவனுடைய வாயினைப் பிளந்ததும், தேன் சிந்துகிற கூந்தலையுடைய பெண்களோடு
குரவைக் கூத்தினைக் கோத்து ஆடிய குழகும், அது இது உது என்னலாவன அல்ல; உன் செய்கைகள் என்னை நைவிக்கும்;
பழமையான உலகங்கட்கெல்லாம் முதல்வனே! உன்னை என்று வந்து சேர்வேன்?
வதுவை-திருமணம். மாவினை என்பதில், இன்: சாரியை; ஐ: இரண்டனுருபு.
மா-குதிரை. மதுவை என்பதில், ஐ: இடைச்சொல். குரவை-ஒருகூத்து விசேடம். குழகு-சாமர்த்தியம்.

ஏறு அடர்க்கை தொடக்கமான உன் செயல்கள் என்னை நைவிக்கின்றன;
நான் தரித்து நின்று அநுபவிக்கும்படி செய்ய வேண்டும் என்கிறார்.
இனி அல்லாத அவதாரங்களையும் ஆராய்ந்தால் இத் தன்மையனவாய் இருக்குமன்றோ,
ஆகையாலே அவ்வருகு போக மாட்டார், அடியில் இழிய மாட்டார்,
(வேறே அவதாரங்களில் போக மாட்டார் -கிருஷ்ண பிறந்தவற்றிலும் போக மாட்டார் )
இனி வளர்ந்த வாற்றிலே ஏறப் போமித்தனை யன்றோ.
“சீராற் பிறந்து” என்ற திருப்பாசுரம் அநுசந்தேயம்.

சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமனாகாக்கால் பேராளா! – மார்பாரப்
புல்கி நீ உண்டுமிழ்ந்த பூமி நீர் ஏற்பரிதே? சொல்லு நீ யாமறியச் சூழ்ந்து.-என்பது, பெரிய திருவந்தாதி, 16.

சீரால் பிறந்து -சீர்மை உடன் பிறந்து -உபலானத்துடன் வளராமல் –
காச்யபர் -அதிதி -நீல நிறத்துடன் -நெடும் தகை -ஆலமர் வித்தின் —
நீல வரை நெடும் தகை அன்றோ ஆலமர் வித்தாக வந்தான் -கம்பர் –
சக்கரவர்த்தி அஸ்வமேத யாகம் -பண்ணி -சிநேக உத்தரமாக -வா போகு -என்று வளர்த்தால் போலே இல்லாமல் –
பேர் வாமனன் -ஸ்ரீ யபதி இல்லாமல் சிறுமைக்கு வாசகம் -நெடும் தகை பேர் போனதே –
மார்பாலே புல்கி -நீர் அளந்த நீர் உமிழ்ந்த -இரந்து –கொடுத்து கை நீண்ட உன் கையால் –
பேராளா -ஜகத் ரஷணத்தில் பேர் அன்பு கொண்டவனே
ஆராய்ந்து அறிவி –

மோகித்தத்தால் அடியில் இழிய மாட்டார்
பிறந்தவாறு அவனே செய்தததால் இச்சாதீனம் . – இவரால் சொல்லலாவது இல்லை
இனி, அநுகூலர்க்குக் கண்டு பரிவதற்கும் விஷயமுள்ளது வளர்ந்தவாற்றிலே யன்றோ,
அவ் வளர்ந்தவாறு தான் இருக்கிறபடி சொல்லுகிறார்.

வதுவை வார்த்தையுள் –
‘எருதுகள் ஏழனையும் கொன்றவர்க்கு இவளைக் கொடுக்கக் கடவோம்’ என்று பிறந்த பிரசித்தி.
வதுவை-விவாகம்.

ஏறு பாய்ந்ததும்-
ஏறுகளின் மேல் விழுந்த படியையும். இவர்க்கு யமன் வாயிலே விழுந்தாற் போலே யாயிற்று இருக்கிறது,
பொய்கையிலே பாய்ந்தாற்போலே இரா நின்றதாயிற்று அவனுக்கு.
கருமாரி பாய்ந்தால் ஆகாதோ என்னும்படி அன்றோ –
காமாஷி ஆலயம் சங்கு த்வயம் மத்யம் விழுகை -அவளுடைய இன்பம்.

மாய மாவினை வாய் பிளந்தும்-
கம்சனாலே தூண்டப் பெற்றதாய் வஞ்சனை பொருந்திய வேடம் கொண்டு வந்ததாயிற்று.
வஞ்சனையாகக் குதிரை வடிவங்கொண்டு வாயினை அங்காந்து கொண்டு ஓர் அசுரன் வந்து தோன்ற,
சிறு பிள்ளைகள் துவாரங்கண்ட இடத்தில் கை நீட்டும் வாசனையாலே அதன் வாயிலே கையை நீட்டினான்.
முன்பு கண்டறியாதது ஒன்றைக் கண்ட காட்சியாலே கை விம்மிற்று, பூரித்தவாறே இரண்டு கூறாய் விழுந்தான்.
ஸ்ரீ நாரத பகவான் “உலகம் அழிந்தது” என்று வந்து விழுந்தாற்போலே இவர்க்கு இப்போது இருக்கிறது.
“நன்கு திறந்த வாயையுடையவனும் மஹா பயங்கரமானவனுமான அந்த அசுரன் இடியினாலே பிளக்கப்பட்ட மரம்
போலே கிருஷ்ணனுடைய திருக் கையாலே இரண்டு கூறு செய்யப்பட்டவனாய்க் கீழே விழுந்தான்” என்பது ஸ்ரீ விஷ்ணு புராணம்.

“வ்யாதிதாஸ்ய: மஹா ரௌத்ர: ஸ: அஸுர: கிருஷ்ணபாஹுநா
நிபபாத த்விதாபூத: வைத்யுதேந யதா த்ரும:”-என்பது ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 16 : 7.
இத்தால்,-கேசி -தானே இறுதி விரோதி –
ஸ்ரீ பிருந்தாவனத்துக்கு வழி இசங்கும்படி பெண்களுக்கு வன்னியம் அறுத்துக் கொடுத்தபடி.

மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்-
தேன் பெருக்கு எடுக்கின்ற கூந்தலையுடைய பெண்களோடு குரவையின் கோப்பிலே தன்னையும் ஒருவனாக்கித் தொடுத்தபடி.
அவர்கள் நினைவினைக் குலைத்து அபிமானம் நீங்கினவர்களாகச் செய்து, அவர்களோடு ஒக்கத் தான் கலந்தான்.
அதாவது, வேற்றாள் என்ன ஒண்ணாதபடி இவர்களிலே ஒருவன் என்னலாம்படி புக்கு நின்றானாயிற்று என்றபடி.
மதுவை வார் குழலார் என்றது, மதுவார் குழலார் என்றபடி. சொற்பாடு.
குழகு சாமர்த்தியம் லீலா வியாபாரம்-

அது இது உது என்னலாவன அல்ல –
அதுவாகவுமாம், இதுவாகவுமாம், உதுவாகவுமாம், எனக்கு இதில் ஒரு நிர்ப்பந்தம் இல்லை.

என்னை உன் செய்கை நைவிக்கும் –
அச் செயலாகவுமாம், இச் செயலாகவுமாம், உச் செயலாகவுமாம், அவற்றில் எனக்கு ஒரு தாத்பர்யம் இல்லை;
உன்னுடைய செயல்களாகையும், நானாகையுமே எனக்கு நோவு படுகைக்கு வேண்டுவது.
“இத்தால் சொல்லிற்றாயிற்று, இப் பாசுரத்தில் மூன்று பொருள்கள் சொல்லப்படுகின்றன.
அவை யாவன: அனுகூல சம்ஸ்லேஷமும், பிரதிகூல நிரசனமும், மத்தியஸ்த ரக்ஷணமும்;
இவற்றையே, ‘அது இது உது’ என்கிறது” என்று பிள்ளான் பணிக்கும்.

முது வையம் முதல்வா –
பழையதான பூமிக்குக் காரணமானவனே! என்னுதல்;
பூமிக்குப் பழைய காரணமானவனே! என்னுதல்.
இவர் தம்மதும் அவ்வளவாகாதே தான். பிரளயம் கொண்ட உலகம் போலே யாகாதே இவரும் அழிந்தபடி.
இத்தோடு ஒக்க இவரையும் அடி தொட்டும் உண்டாக்க வேண்டி இருக்கிறபடி.

உன்னை என்று தலைப் பெய்வனே –
உன்னை நினைத்து நிலை குலைந்தவனாகாதே தரித்து நின்று அநுசந்திக்கும்படி செய்ய வேண்டும்.
அன்றிக்கே,
உன்னை வந்து கிட்டப்பெறுவது என்றோ என்றுமாம்.
தலைப் பெய்கை-கிட்டுகை–

இத் திருவாய்மொழியில், கிட்டுகைக்கு வாசகங்களான சொற்களெல்லாம்,
ஆழ்வான் நிர்வாஹத்திலே மானசாநுசந்தான பரங்கள் என்றும்
எம்பார் நிர்வாஹத்திலே சரீரத்தாலே கிட்டுதல் என்றும் கொள்க.

—————————————————————————————————

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள நீ யுன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-

நவ நீத சௌர்ய-வ்ருத்தாந்தம் -வந்தே பிருந்தாவனம் சரம்-84 க்ரோசம் -168 மைல் விரஜா -வல்லவீ ஜன வல்லபன் ஜெயந்தி சாம்பவம் தாம –
பிறந்த அன்றே -வைஜயந்தீ விபூஷணம் -ஹர்த்தும் கும்பே விநிதிகர ஸ்வாது ஹையங்கவீனம் – புத்துருக்கும் வெண்ணெய்-
இளம் பச்சை நிறம் நீர்த்து -த்ருஷ்ட்வா தாம –தடம் கண்கள் பனி மல்கும் தன்மையான் -வாய் வாய் -அழவும் முடியாதே -கால் கால் -ஓடவும் முடியாமல்
நாப கச்சயன்-வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை -வெண்ணெயையும் பெண்களையும் ஒழித்து விடுவார்கள்-ந திஷ்டன் மித்யா கோபத்துடன் -கோபால விம்சதி
தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்-
பால சேஷ்டிதங்கள் என் நெஞ்சை உருகப் பண்ணா நிற்கின்றன -மதுரகவி ஆழ்வாரையும் கண்ணி –என் அப்பன் சொல்ல வைத்ததே
பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிற-யசோதை போலே அலங்கரித்து
பித்தர் என பிறர் எச நின்றாயே -வேற்று முலையை அறிந்து உண்ட தெளிவும் -பிள்ளை தெரியாமல் தேற்றம் தெரியாமல் -கேச பாசம் இருவருக்கும் –
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்-சகடாசுரன் -அசுரா விஷ்டமாய் -சாடு -சக்கரம்
சிவந்த பாதம் ஒன்றால் -உதைத்ததா சிவந்ததா -சிவந்தது உதைத்ததா -பால பராக்ரமும் –
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்-அமுது செய்த வார்த்தை பிறந்த அளவிலே
நெய் வைத்தேனே காணோமே -சொன்னதும்
மூடன் சத்திரம் பெருக்குவான் வார்த்தை கேட்டதும் என்னால் முடியாது என்றவன் போலே
களவு காண வேண்டும் என்றே இருந்தானே -பரிவாலே கையிலே கோல் கொள்ள -பயப்படுத்த தான் -அடிக்க இல்லை –
வெண்ணெய் பிள்ளைக்கு நிறைய உண்டால் என்ன ஆகுமோ என்கிற பரிவு –
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனை கோல் கொண்டு பயப்படுத்த
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே-பீதனாய் கொண்டு ஒடுங்க -வெண்ணெய் உண்ட பிள்ளை –
திருக்கால் வெளியில் தொங்க யமுனை தொட பார்த்து தூய யமுனை ஆனதே -ததிபாண்டன் கஷ்டப்பட்டு உள்ளே வைத்தானே
தாமரைக் கண்கள் நீர் மல்க -முன் காலத்தில் செய்து போனவை இன்று ஆழ்வார் கண் முன் வந்து நையுமே
300 தேவமான வருஷம் கழித்து தானே நம்மாழ்வார் -யுக சந்தி நடுவில் உண்டே –

பூக்கள் வைத்த கூந்தலையுடைய பூதனையினது பாலை உண்ட பிள்ளைத் தனத்திலே தெளிவும், வஞ்சனையினால் ஒப்பற்றவனான
சகடாசுரன் இடம் விட்டுப் பெயர்ந்து சென்று அழியும்படி சிவந்த ஒரு திருவடியினால் உதைத்துத் தள்ளிய நின் சிறிய வீரமும்,
நெய்யை உண்ட வார்த்தை பிறந்தவளவிலே தாயானவள் கோலினைக் கையிலேஎடுக்க நீ உன் தாமரை போன்ற திருக்கண்களில்
நீர் மிகும்படி அச்சங்கொண்டு நின்ற நிலையும் வந்து என்னுடைய மனத்தினை உருக்காநின்றன.
“பெய்யும் பூங்குழல்” என்பதனை, “பிள்ளை”க்கு அடையாக்கலுமாம். சாடு பேர்ந்து இறச் செய்த சிறுச்சேவகம் என்க. சாடு-சகடம்.
கோல் கொள்ள கண்கள் நீர் மல்க நின்ற நிலை என்க. உருக்குங்கள்: கள், அசைநிலை.

நீ இளமைப் பருவத்தில் செய்த உன்னுடைய செயல்கள் என்னை நலியா நின்றன என்கிறார்.

பெய்யும் பூங்குழல் பேய் முலை உண்ட பிள்ளை-
பிரதிகூலருடைய பிராணன்களும் அடியார்கள் சம்பந்தமுடைய திரவியமுமே தாரகமாக வளர்ந்தான் என்று
‘வளர்ந்தவாறு’ என்று சொன்ன இடத்தை விவரிக்கிறது இங்கு.
பிள்ளையைத் திருமஞ்சனம் செய்து ஒப்பித்துக் கண் வளரப் பண்ணிக் கடக்க நின்றாள் யசோதைப் பிராட்டி,-
அகாரம் கட்டி வைத்து ஆகாரம் கட்டப் போனாள் -ஆ -கறவைகள்-
அவ்வளவிலே வந்து கிட்டினாள் பூதனை. இங்கு, ‘பெய்யும் பூங்குழல்’ என்பது, பிள்ளைக்கு அடைமொழி.
பெய்யும் பூங்குழலையுடைய பிள்ளை பேய் முலையுண்ட தேற்றம் என்று கூட்டுக.
அன்றிக்கே,
‘பெய்யும் பூங்குழல்’ என்பதனை, ‘பேய்’க்கு அடைமொழி யாக்கலுமாம்; என்றது,
‘பிள்ளை அனுங்க ஒண்ணாது’ என்று தாய்மார் எப்போதும் ஒப்பித்தபடியே இருப்பர்களாயிற்று,
இவளும் அப்படியே வந்தாளாயிற்று என்றபடி. பிணக் கோலமாக ஒப்பித்து வந்தாள் காணும் என்கிறார் என்றபடி.
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி யன்றோ. வைத்த பூக்களை யுடைய மயிர் முடியை யுடைய பேய்.

பிள்ளைத் தேற்றம் –
ஐஸ்வர்யமான ஞானம் இன்றிக்கே, ‘தாய் முலை’ என்றும், ‘வேற்று முலை’ என்றும் அறியும் தெளிவு.
மிகச் சிறிய இளமைப் பருவத்திலும் பிள்ளைகள் முலைவாசி அறிவர்கள் அன்றோ.
இவனும் ‘தாய்’ என்றே நினைத்து உண்டான் காணும். பால்யத்தில் தெளிவு இருக்கிறபடி. என்றது,
யசோதைப் பிராட்டி முலை கொடுக்கும் போது பிரீதியினாலே செய்யும்-முக்த ஜல்பிதங்களை – மழலைச் சொற்களை
இவள் பக்கலிலே செய்தானாயிற்று.
‘பாதகர்’ என்று அறியவுமாம், அறியாதிருக்கவுமாம், பகைவர்கள் கிட்டினால் முடியக் கடவதான பொருளின் ஸ்வபாவம் இருக்கிறபடி.

பேர்ந்து –
அதற்கு மேலே

ஒர் சாடு இற –
தீமை செய்வதில் இதனோடு ஒப்பது இல்லை கண்டீர். ஒர்-அத்விதீயம் –
‘பிரதி கூலம்’ என்று சங்கிக்கவும் ஒண்ணாது கண்டீர்.
பூதனையை, ‘இன்னாள்’ என்று ஆராய்கைக்காகிலும் விஷயம் உண்டு,
யசோதையைக் கண்டவாறே ‘இவள் யார்’ என்று ஆராய்ச்சிப் படுமன்றோ,
இது ரக்ஷகமாக வைத்தது கண்டீர். இற – ‘தளர்ந்தும் முறிந்தும்’ என்கிறபடியே முறிய.

செய்ய பாதம் –
சிவந்த திருவடிகள். என்னுடைய ஜீவனத்தைக் கொண்டு கண்டீர் விரோதியைப் போக்கிற்று என்கிறார்.
இவர்க்கு ஜீவனம் அடியிலே கல்பித்தன்றோ கிடப்பது.

ஒன்றால் –
‘இன்ன திருவடி’ என்று நியதி இல்லை யன்றோ; கறுவிச் செய்கின்றான் அன்றே.

செய்த நின் சிறுச் சேவகமும் –
நீ சேவகம் செய்ய அடியிட்டபடியும். என்றது, அரச குமாரனாய்ப் பிறந்து, பருவம் நிரம்பி, ஆயுதப் பயிற்சி செய்து,
வசிஷ்டர் முதலியவர்களைப் பின் சென்று, விஸ்வாமித்திரர் முதலியோர் பக்கலிலே அத்திரங்களைப் பெற்றுப்
பின்பே யன்றோ தாடகை மாரீசன் சுபாகு முதலியவர்களைக் கொன்றது;
அவை யெல்லாம் பருவம் நிரம்புவதற்கு முன்பே, வாயாலும் காலாலுமாயிருக்கிறபடி இங்கு. -முலை உண்டதும் சகடாசுர நிரசனமும்
வாயால் வலியார்க்குத் தாயாரும் வேண்டாவாயிற்றுக் காணும்.
இவனைப் போன்று கால் கடியார் இலர், ஆகையாலே யன்றோ காலிலே கொடி கட்டி வைக்கிறது.
“எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்து உதவி செய்தவனே!
சங்கு சக்கரம் கொடி தாமரைப்பூ மாவட்டி வச்சிரம் முதலிய ரேகைகளாலே அலங்கரிக்கப் பட்டிருக்கிற உன் இரண்டு திருவடித் தாமரைகளும்
காலிலே கொடி இருப்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘எல்லார் தலைகளிலும்’ என்று தொடங்கி.
“கதாபுந: ஸங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்தாங்குஸ வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வச் சரணாம்புஜ த்வயம் மதீயமூர்தாநம் அலங்கரிஷ்யநி”-என்பது தோத்திர ரத்நம், 31.
என் தலையை எப்போது அலங்காரம் செய்யப் போகின்றன” என்பது ஸ்தோத்திர ரத்நம்.
பருப்பயத்து –திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் –
ஒண் மிதியில் — அப்போதும் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து அண்ட மீது போயிற்றதும் கடுகித் திருவடிகள் அன்றோ.
ஓர் அடியும் –சாடு உதைத்த திருவடியும் -இவனுக்கு சாடு உதைத்தும் உலகு அளப்பதும் வாசி இல்லாமல் அன்றோ ஒன்றாய் இருப்பது

நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரைக் கண்கள் நீர் மல்க பையவே நிலையும் –
பருவம் நிரம்புவதற்கு முன்பு, தான் பிரதிகூலரை அஞ்சப் பண்ணுமாறு போலே காணும்
பருவம் நிரம்ப நிரம்ப அநுகூலர்க்குத் தான் அஞ்சும் படியும்.

நெய் உண் வார்த்தையுள்-
நெய்யைக் குறியிட்டுக் கடக்க வைத்துப் போய்ப் பின்னர் வந்து பார்த்தாள்
குறி அழிந்து கிடக்கையாலே ‘நெய் களவு போயிற்று’ என்றாள்;
அவ்வளவிலே பையாக்க-பயந்து- விழிக்கத் தொடங்கினான்.

அன்னை கோல் கொள்ள –
‘மாதா அன்றோ எடுத்தாள்’ என்னும் வேறுபாடு அறிகின்றிலன்.
அவள் வார்த்தை அன்றோ ‘உந்தம் அடிகள் முனிவர் – வாரீர் பிள்ளாய், உங்கள் தமப்பனார் கேட்பராகில் உம்மைப் பொடிவர்.
உன்னை நான் என் கையிற்கோலால் நொந்திட மோதவும் கில்லேன்’ இதுதான் இருக்கிறபடி கண்டீரே;
இதனைக் கொண்டு இனி, நீர் ஒன்றும் செய்யாதபடி பண்ணிக் கொள்ளலாமன்றோ வல்லார்க்கு, நான் அதற்குச் சக்தை ஆகின்றிலேன்.

அன்னை கோல் கொண்ட பின் இவள் கண்ண நீர் விழ விட்டது மயக்கத்தின் காரியம் என்கிறார் ‘மாதா அன்றோ’ என்று தொடங்கி.
ஆயின், அவள் அடியாளோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘அவள் வார்த்தை’என்று தொடங்கி. “உந்தம் அடிகள்” என்ற பாசுரத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘வாரீர்’ என்று தொடங்கி.
உந்த மடிகள் முனிவர் உன்னை நான் என்கையில் கோலால்
நொந்திட மோதவுங் கில்லேன் நுங்கள்தம் ஆநிரை எல்லாம்
வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண
அந்தியம் போதுஅங்கு நில்லேல் ஆழியங் கையனே வாராய்.-என்பது, பெரிய திருமொழி, 10. 5 : 8.

“தாயெடுத்த சிறுகோலுக்கு உளைந்தோடித் தயிருண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரிவளையே”-என்பது, பெரிய திருமொழி, 8. 3 : 5.

தாய் எடுத்த சிறுகோலுக்கு உளைந்து- ஓடி அன்றோ. ‘அச்சம் உறுத்துகிறபடி இது, பட்டாலும் நோவாது’ என்று அறிகின்றிலன்.
தமப்பனார் எடுத்தாராகிலும் சிறிது ஆறலாம் காணும், ஹிதத்தை விரும்புகிறவராகையாலே அது தக்க தன்றோ;
உகப்பே பின் செல்லக் கடவ இவள் பொடிந்தால் பின்னைப் பொறுக்கப் போகாதன்றோ.
இவள் தான் இப்படிச் செய்வான் என்? என்னில், சிநேகம் இன்றிக்கே ஒழிந்தால் இன்னார் என்று
உண்டோ கல்லும் தடியும் கொள்ளுகைக்கு.-சிநேகம் -அன்பு – நெய் சாடு

நீ உன் தாமரைக் கண்கள் நீர் மல்க –
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கிற நீ, அதற்கு மேலே கண்களும் கோட் புக்கால் பொறுக்கப் போமோ.
கோட் புக்கால்-நூதனமாக அலர்ந்தால்-
வன் தாம்புகளால் புடைக்க அலந்தான் அலர்ந்தான் -பட்டர் நஞ்சீயர் சம்வாதம் –
“பிராட்டிக்குத் தகுந்தவர் பெருமாள்” என்கிறபடியே அவனுக்குத் தகுதியான கண்கள் ஆதலின் ‘உன் தாமரைக் கண்கள்’ என்கிறது.
“துல்ய ஸில வயோ வ்ருத்தாம் துல்யாபிஜன லக்ஷணாம்
ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேய மஸி தேக்ஷணா”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 15.

‘தக்க தாமரைக் கண்’ என்னக் கடவதன்றோ. பையவே நிலையும்-‘அடிக்க’ என்று அவள் கோலை எடுத்தாள்;
அவளைப் பார்த்து நின்று கண்ண நீரை விழ விடா நிற்பது, உடம்பு வெளுப்பதாய்ப் பேகணித்து நின்ற நிலையும்:
அன்றிக்கே
அஞ்சி அவள் முகத்தைப் பார்த்து நிற்கச் செய்தே பின்பே கால் வாங்கக் கணிசித்து மாட்டாதொழிவது,
ஊன்ற நிற்க மாட்டாதொழிவதாய்த் துறையில் கால் பாவாதபடி பொய்க்க-பைய -மெள்ள- அடியிட்டுக் கொண்டு நின்ற நிலை காணும் என்னுதல்.
இதுவே வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை திருக் கோலம் -சதங்கை அழகியார் -இன்றும் எல்லார் கிருஹங்களிலும் சேவை சாதிக்கின்றானே

பைய – மெள்ள.
வந்து என் நெஞ்சை உருக்குங்களே –
அச் செயல்கள் என்னை நலியா நின்றன. உனக்காகில் தப்பியாகிலும் போகலாம்,
அதுவும் ஒண்ணாதபடி புக்க இடம் புக்கு வடிம்பிட்டு நலியா நின்றன.
பையவே வந்து என் நெஞ்சை உருக்கும் –
என்னை ஓர் அடி போக ஒட்டாதே காற் கட்டா நின்றன என்கிறார்.
நெஞ்சை உருக்கும்-இவர் நெஞ்சிலே அடியிட்டபடி. உருக்கும்-முதல் நெஞ்சினை உருக்க அடியிட்டது.

————————————————————————————-

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-

திரி புர வாசிகள் -அசுரர்களை -அந்தர் பேதம் செய்து -சாம தான பேத தண்டம் -பிரகாரம் என் ஆத்மாவை சிதிலம் ஆக்கி
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை -பொருந்தாத வேஷம் -வேத வேத்யன் –
ஏறிட்டுக் கொண்டு கிருத்ரிம வேஷம் -அழகாலும் -பேச்சாலும் –
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்-அங்குத்த அச்ய்ரர்கள் இடம் உள் புக்கு கலந்து உள்ளம் பேதம் செய்து -உபாச்யன் ருத்ரனைக் கொண்டே
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்-கங்கை நீர் -கங்காதரன் -விஷ்ணுராத்மா பகவதோ
சரீரி சரீர ஆத்மபாவம் அப்ருதக் சித்த பிரகாரம் பிரமாண சித்தம்
உள்ள முள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.-நெஞ்சுக்குள்ளே -ஞான வ்ருத்திகள் தோறும் அவஹாகித்து உருக்கும்

வஞ்சனை பொருந்திய வேடத்தைக் கொண்டு சென்று திரிபுரத்திலே புகுந்த விதமும், அங்குள்ள அசுரர்களோடு கலந்து அவர்களுடைய
மனங்களை வேறுபடுத்தி உயிர்களைப் போக்கிய உபாயங்களும், கங்கையைத் தரித்த சடையையுடைய சிவபிரானும் உன் பக்கல் வேறு
அல்லாதபடி விளங்க நின்றதும், என் மனத்திற்குள்ளே புக்கு என் உயிரை உருக்கி முடிக்கின்றன.
கள்ள வேடம் – புத்த வேடம். அசுரர் – திரிபுரவாசிகள். உள்-ஞானம். புக்கவாறும் உபாயங்களும் விளங்க நின்றதும்
உள் குடைந்து உயிரை உருக்கி உண்ணும் என்க.

பௌத்தாவதாரச் செயல் மிகவும் என்னை நலியா நின்றது என்கிறார்.
அநுகூலர் விஷயத்தில் களவு சொல்லிற்று மேற்பாசுரத்தில்;
பிரதி கூலர் விஷயத்தில் களவு கண்டபடி சொல்லுகிறது இப் பாசுரத்தில்.

கள்ள வேடத்தைக் கொண்டு –
“திருடன் எப்படி ஊரை விட்டுத் துரத்தத் தகுந்தவனோ வேத பாஹ்யனாய்ப் பிரசித்தனாயிருப்பவனும் அப்படியே துரத்தத் தக்கவன்,
“யதாஹி சோர: ஸ ததாஹி புத்த: ததாஆகதம் நாஸ்திகம் அத்ர வித்தி தஸ்மாத்திய: சங்க்யதம: ப்ரஜாநாம் ந நாஸ்திகேந
ஸ்யாத்” என்பது, ஸ்ரீராமா. அயோத். 109 : 34.
இவ்வுலகில் நாஸ்திக்யமானது புத்தனுக்குச் சமானம் என்று அறிந்து கொள்ளவும்;
ஆகையினால், எவன் மனிதர்களுக்குள் அவைதிகன் என்று சந்தேகப் படத்தக்கவனோ
அந்த நாஸ்திகனோடு எதிர் முகமாக இருக்கக் கூடாது” என்கிறபடியே,
வஞ்சனை பொருந்திய வேடத்தைக் கொண்டு
“எல்லா வேதங்களாலும் அறியப்படுமவனும் நானே” என்று வேதப் பொருளாய் விளங்கும் சர்வேச்வரன்,
வேத அப்ராமாணிக வேடத்தைக் கொண்டு. கண்டார் மனங்கள் அடங்கலும் கொள்ளை கொள்ளும்படி
கறுத்து நெய்த்த வடிவும் வடிந்த காதும் இடுக்கின புத்தகமுமாய் நின்ற நிலையைக் காணும் நினைக்கிறது.
‘இவன் சொன்னதற்கு மேற்பட அர்த்தம் இல்லை’ என்று கேட்டார் நெஞ்சிலே தேறும்படி யன்றோ வடிவை இட்டு மயக்கினபடி.

போய் –
‘காலுக்குட்பட்ட அற்பப் பிராணிகள் நோவு படுகின்றன’ என்னும் அச்சம் தோன்றப் பொய்க்க
அடியிட்டுக் கொண்டு போனபடி. என்றது, அவர்கள் தாம் சாஸ்திரங்கட்கு விரோதமானவற்றில் நடக்கச் செய்தேயும்,
முகப்பில் நின்று ஒன்று போலே இருக்க, ‘பர ஹிம்சை செய்யலாகாது, கள் உண்ணலாகாது, பொய் பேசலாகாது,
சிற்றின்பத்தில் ஆசை கூடாது’ என்றாற்போலே சில சொல்லுவர்களாயிற்று,
அவை யெல்லாம் தோற்றும்படிக்குத் தகுதியாகப் போனபடி.
பெருமாள் ‘வனத்திற்கு எழுந்தருள’ என்று புறப்பட, ஜாபாலிகன் மீண்டு புகுரும்படிக்குத் தகுதியாகச் சில வார்த்தைகளைச் சொல்ல,
பெருமாள் சிவிட்கு என்று செவியைப் புதைத்து, ‘வாராய், என்முன்னே நின்று தர்மத்தில் ருசி குலையும் படிக்குத் தகுதியாக
நாஸ்திக வாதம் செய்வதே, உன்னை வெறுக்கிறது என், உன்னைக் கொண்டு காரியம் கொண்ட ஐயரை யன்றோ வெறுப்பது’ என்ன,
‘நாயன்தே! நீர் மீண்டு எழுந்தருளித் திருவபிடேகம் பண்ணி யருளி, ஸ்ரீ பரதாழ்வான் கண்களிலே கண்ணநீரை மாற்றினவாறே,
நான் நாஸ்திகனாகை தவிர்ந்து ஆஸ்திகனாம்படி பாரீர்’ என்ன, அவ்வளவிலே இவனை “ஜாபாலி பிராஹ்மணோத்தமன்” என்றார்கள் அன்றோ.

“ஆஸ்வாஸயந்தம் பரதம் ஜாபாலி: ப்ராம்மணோத்தம: உவாச ராமம் தர்மஜ்ஞம் தர்மாபேதம் இதம் வச:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 108 : 1.

நாங்களும் எல்லாம் நூல் இட்டு இருக்கையாலே, பிராஹ்மணர்கள் என்று கொள்ளுகிறோம் இத்தனை.
பிராஹ்மணனாகிறான் பிரஹ்ம சம்பந்தியானவன் அன்றே; அது உள்ளது இவனுக்கே அன்றோ,
இவ்வளவிலே உலோகாயத மதத்தை உபந்யசித்தான் ஒருவன் அன்றோ.

புரம் புக்கவாறும்-
ஊரைக் கிட்டினவாறே செய்த நியதிகளை யெல்லாம் நினைக்கிறது. என்றது,
விதித்த ஹிம்சையையும் சாமான்ய ஹிம்சையைப் போன்று ஆக்கப் புகுகிறவனாகையாலே,
பசும் புல்லும் சாவமிதியாதே கூசி அடியிட்டுப் புக்கபடி.

கலந்து-
இவர்களிலே ஒருவனாய்ப் புக்கு நின்று இவ் வர்த்தத்தை உபந்யசித்தபடி.
தன் வார்த்தையை நம்புகைக்காக இவர்களோடே ஒரு நீராகக் கலந்து பரிமாறினபடி.

அசுரரை உள்ளம் பேதம் செய்திட்டு –
அசுரத் தன்மை வாய்ந்தவர்களான இவர்களுக்கு அவைதிக மதத்தை உபந்யசித்து வைதிக சிரத்தையைப் போக்கினானாயிற்று.
ஆயின், இவர்களுக்கு வைதிக சிரத்தை உண்டோ? என்னில்,
“இராக்கதர்களுடைய வீடுகள் தோறும் அக்நி ஹோத்ரங்களும் வேதாத்யயனங்களும் இருக்கின்றன.
கருணை சத்தியம் ஆசாரம் இவைகள் இராக்கதர்களுக்குக் கிடையாது” என்கிறபடியே,
“அக்நி ஹோத்ரா: ச வேதா: ச ராக்ஷஸாநாம் க்ருஹேக்ருஹ தயா ஸத்யம் ச ஸௌசம்ச ராக்ஷஸாநாம் நவித்யதே”-என்பது.

எல்லார்க்கும் சில உண்டாகை தவிரா. தர்ம ருசியுள்ளவை யுண்டாகிலும் குலைந்து போம்படி மதி பேதங்களைச் செய்தானாயிற்று.

உயிர் உண்ட உபாயங்களும் –
இவர்களுடைய உயிர்களைப் போக்கின உபாயங்களும். என்றது,
இவர்களுடைய வைதிக சிரத்தையைப் போக்கிப் பிணத்தினைப் போன்றவராகும்படி பண்ணி,
நின்றான் ஒரு பிக்ஷுகனுக்குங்கூட-பிரம கபாலம் கொண்ட ருத்ரனும் அடிக்கும் படி – மேல்விழலாம் படி அவர்களை அடி அறுத்து,
‘நான் செய்தேன்’ என்று கவி பாடுவித்துக் கொள்ளலாம்படி செய்தபடி.
‘அவன் செய்தான்’ என்று சொல்லா நிற்கச் செய்தேயும் இந்தச் செயல் ஒன்றும் அவன் தலையிலே
சேராதபடி சொன்னபடி பாரீர்;
“அளவிட முடியாத பராக்கிரமத்தை யுடையவனும் பூஜ்யனுமாயிருக்கிற சிவனுக்கு, சர்வ வியாபியான விஷ்ணுவானவர்
அந்தர்யாமியாக இருக்கிறார்;
“விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்ய அமித தேஜஸ: தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம்
ஸ விஷேஹே மஹேஸ்வர:-என்பது, பாரதம் கர்ண பர்வம்.

“மலை போற் பொறுத்தாரும் தாஅம், பணிவில் சீர்ச் செல் விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித் தொல் புகழ் தந்தாரும் தாம்”-என்பது, பரிபாடல்.

அப்படி இருப்பதனாலே, அந்தச் சிவன், திரிபுரங்களை அழிக்குங்காலத்தில் வில்லை வளைத்து
நாணை ஏற்றுதலாகிற அந்தக் காரியத்தை மிகவும் பொறுத்துக் கொண்டான்” என்கிறபடியே யன்றோ.
சேதனனைக் கொண்டு காரியங் கொண்டதோடு, அசேதனத்தைக் கொண்டு காரியங் கொண்டதோடு வாசி இல்லை இவனுக்கு.
சிவன் தன்னோடு அவன் கையில் வில்லோடு வாசியில்லை இவனுக்கு.
காரண நிலையில் சித்து அசித்துக்களைக் கொண்டு காரியங்கொண்டதைப் போன்றதாயிற்று.
முன்பு அவன் தானே செய்வானாகக் கொண்டு எடுத்துப் பார்த்தான் அன்றோ;
அது முடியாதொழிய, பின்னர் இவன் உள்ளீடாய் நிற்கையாலன்றோ செய்து தலைக் கட்ட வல்லனாயிற்று.

பண்டு ஓர் அரசன் “சிவனே பரம் பொருள்” என்று எழுதி, ‘எழுத்திட்டுத் தாருங்கோள்’ என்ன,
அப்படிப் பலரும் எழுதி எழுத்திடா நிற்கச் செய்தே,
ஒருவர் வாராய், நீ இந்த ஓலை கெடாமே நோக்கி வைத்தால் அன்றோ இவனுடைய பரத்துவம் சாதிக்கலாவது;
நீ நினைக்கிற தேவதைக்கு உண்டாவ உயர்வுகள்‘சர்வேச்வரனாலே’ என்று பிரமாணங்கள் சொல்லா நின்றன;
ஆன பின்னர், இன்று, நீ சொல்ல நான் எழுந்திட்டுப் போகிறேன்;
நாளை ஒரு விவக்ஷிதன் தோன்றி ‘இவன் அறிவீனனாயிருந்தானே!’ என்னக் கேட்பதில்
இன்று நீ நினைத்ததைச் செய்துகொள்ள மாட்டாயோ” என்றார்.

உபாயங்களும் –
அப்போது இருந்து சிந்தித்தவற்றை யெல்லாம் நினைக்கிறது.

‘சர்வேச்வரன் அந்தராத்மாவாய் நிற்கையாலே செய்தான்’ என்றதனால் பலிதமான சிவனுடைய உயர்வு
பகவானுக்கு அதீனப்பட்டது என்றதற்கு ஐதிஹ்யம் காட்டுகிறார் ‘பண்டு ஓர் அரசன்’ என்று தொடங்கி.
‘ஒருவர்’என்றது, கூரத்தாழ்வானை. விவக்ஷிதன்-அறிவுடையவன்.
இங்கு
அவத்தப்புன் சமயச்சொற் பொய்யை மெய்யென்று அணிமிடறு புழுத்தான்தன் னவையின் மேவிச்
சிவத்துக்கு மேற்பதக்குண் டென்று தீட்டும் திருக்கூர வேதியர்கோன் செவ்வி பாடப்
பவத்துக்கம் பிணிநீங்க நரகந் தூரப் பரமபதம் குடிமலியப் பள்ளி கொள்ளும்
நவத்துப்புச் செங்கனிவாய்க் கரிய மேனி நம்பெருமாள் அரங்கேசர் ஆடி ரூசல்.-என்ற திருப்பாசுரம் நினைத்தல் தகும்.

வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும் –
“பிரஹ்ம ருத்திரர்கள் நடுவே நின்றது ஒரு முதல் களவு உண்டு, அதனைச் சொல்லுகிறது” என்று
ஆளவந்தார் அருளிச் செய்ததாகத் திருமாலையாண்டாள் பணிப்பர். என்றது, -மத்யே விரிஞ்சக்ரீசம் பிரதம -விஷ்ணு அவதாரம் –
சிவனையும் தன்னையும் சமமாகச் சொல்லலாம்படி திரிமூர்த்தி மத்திய நிலையைச் சொல்லுகிறது என்றபடி.
இதனை எம்பெருமானார் கேட்டருளி, “அழகிது, அத்தனை தூரம் தேடிப் போக வேணுமோ,
இவன் தன் விஷயத்திலே, முன்பு செய்த உபகாரத்துக்கு ஓர் அளவு உண்டோ,
இதுதானே அமையாதோ” என்று அருளிச் செய்தார்.

கங்கையைத் தன் சடையில் ஏகதேசத்திலே தரித்த பிரபாவத்தை யுடைய சிவனும் உன் பக்கல்
வேறு அல்லாதபடி தோற்ற நின்றமையும். என்றது,
‘சரீரமாக இருப்பவன்’ என்னுமிடம் தோன்ற நின்றபடி.
இங்ஙன் சொல்லுகிறது என்? இதனை ஐக்கியமாகக் கொண்டாலோ? என்னில்,
அங்ஙன் கொள்ளுமன்று
“விஷ்ணு: ஆத்மா – விஷ்ணு அந்தர்யாமியாக இருந்தார்” என்கிற பிரமாணத்திற்கு விஷயமின்றிக்கே ஒழியுமே.
“நலந்திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்,
கலந்திழி புனலால் புகர் படு கங்கை”-பெரியாழ்வார் திருமொழி. 4. 7 : 2.
அவனுடைய சேஷத்வத்துக்கும் இவனுடைய சேஷித்வத்துக்கும் பிரமாணம் ஒரு வெள்ளம் என்கிறார் காணும்.
சிவன் சடையில் கொன்றையும் சர்வேச்வரன் அடியில் திருத்துழாயும் கூடி வந்து இழிகிறபடி.
அலகனந்தா பாகீரதி இரண்டும் கலக்கும் -முடி மலரும் திருவடி துழாயும் கலந்து இரண்டு நிறங்களில் வரும்
கண்டம் என்னும் கடி நகரே பிரமாணம்
அண்டகோளகைக் கப்புறத்ததா யகிலமன் றளந்த-
புண்ட ரீகமென் பதத்திடைப் பிறந்துபூ மகனார்
கொண்ட தீர்த்தமாய் அரன் கொளப் பகிரதன் கொணர-
மண்ட லத்து வந் தடைந்த திம்மாநதி மைந்த.-கம்பராமாயணச் செய்யுள் இங்கு ஒப்பு நோக்குதல் தகும்.

உள்ளம் உள் குடைந்து –
என் மனத்திலே புக்கு மூழ்கி. என் உயிரை உருக்கி உண்ணும் –
“சேதிக்க முடியாதது, எரிக்க முடியாதது” –ஸ்ரீ கீதை. 2 : 24.-என்கிற ஆத்மாவைப் புக்கு அழித்து நோவு படுத்தா நின்றன.
ஞானத்திற்கு வழியாக இருக்கின்ற மனத்திலே புகுந்து ஆத்மாவை நீராக்கி முடியா நின்றன.

புத்த அவதார விருத்தாந்தம்
கள்ள வேடம் கொண்டு பொய் புறம் புக்கவாறும் -கதையை அரும் பதத்தில் அருளிச் செய்கிறார்
சில அசுரர்கள் ருத்ரனை நோக்கி தபஸ் பண்ணி -மூன்று பட்டணங்கள் -பெற்று -சஞ்சரிக்கும் -தன்மை –
மூன்றும் கூடினால் பேர் ஆபத்து வரும் என்றான் –
யஜூர் வேதம் -அயஸ்மை-இரும்பால் – ரஜத-பொன் கோட்டை -வெள்ளிக் கோட்டை –
தேவர்களை அந்தணர்களை அழித்து -யாகாதிகள் நடக்காமல் தேவர்களுக்கு பல ஷயம் பிறந்தது –
பட்டணங்கள் -கிட்டவும் போக முடியாமல் -தேவார்கள் ருத்ரன் இடம் பிரார்த்திக்க -நச்சு மரம் ஆகிலும் நட்ட மரங்களை வெட்டுவார் உண்டோ
எனக்கு செய்யப் போகாது என்ன -கூப்பீடு இடம் சென்று விண்ணப்பம் செய்ய
பெரிய திருவடி மேல் ஆரோஹித்து –அசுரர்கள் தர்ம சரத்தை கொண்டு இருப்பதால் தேவர்கள் தங்களால் அழிக்கப் போகாது என்ன
ஒரு அம்சம் மட்டும் கைக் கொண்டு -அசுரர்கள் பலம் பெற்று இருக்க -வ்ருத்த புத்தனாகக் கொண்டு புறப்பட்டு
ஏட்டையும் இடுக்கி கையில் புல்லையும் -தர்பம்
தர்ம நிஷ்டன் வார்த்தை சொல்லி -அவர்கள் இவனை விஸ்வசித்து யாகம் பண்ண -என்ன பலன்
சமித்து எதற்கு -ஹோமம் பண்ண -என்ன -தத்வரம் காஷ்டம் தின்ன பிறக்கும் -புல்லை தின்னும் பசுவே தேவலை -ஹவுஸ் எதுக்கு கேட்டு
தேவர்களுக்கு -கட்டிப் போகும் சோற்றை அங்கு உள்ளார்க்கு கொடுக்க -அவர்கள் உண்ண நம் பசி தீருமோ
எங்கோ ஆஹூதி கொடுத்து அவர்கள் திருப்தி பெற்று உங்களுக்கு பலன்
ஆடுகள் எதுக்கு -ஹோமம் -ஆட்டு வாணிகன் பரம தார்மிகன் காணும் என்று
இப்படி கிருத்ரிம உக்திகளால் பிரமிக்கப் பண்ணி -வார்த்தையை விஸ்வசித்து யாகம் பண்ணினதை விட்டு தர்ம சிந்தனை விட்டு ருத்ரனை சபிக்க
அவன் இடம் இவர்கள் உன்னை தூஷிக்கிறார்கள் -பூமி தேர் -மேரு வில் சர்வேஸ்வரன் அம்பு -சம்ஹரித்தான் –

——————————————————————————–

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன் படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.–5-10-5-

அதி மானுஷ சேஷ்டிதங்களை அனுசந்திக்கும் -சீல வ்ருத்திகள் -அக்னி சகாயம் மெழுகு போலே நெஞ்சு உருகா நின்றது
உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்-அட்டு குவி சோற்று -அன்ன கூட உத்சவம் -மலைக்கு திரை
உங்கள் கண்ணை மூடுவதே -அஹம் கோவர்த்தநோச்மி
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்-ஏழு நாள்கள் -ஆயர் அஞ்ச அஞ்சா முன் -கல் மாரி-ரஷிக்கும் கோவர்த்தனம் என்று காட்டி –
மண்ணை முன்படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்-விசேஷ உபகாரம் முன்பு சொல்லி -மேல்
உலகத்துக்காக சாமான்யமான -உபகார பரம்பரைகள் -அன்யாபிமானம் தீரும் படி அளந்து -அவாந்தர பிரளயத்தில் இடந்து
நைமித்திக்க பிரளயம் -மூன்று லோகங்கள் -அழிந்த -ஆச்சார்யமான குண சேஷ்டிதங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.-நினைக்கும் தோறும் மனஸ் அழியா நின்றதே

தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் உண்ணுவதற்கு ஆயர்கள் சித்தம் செய்த உணவினைப் புசித்ததும், பல நிறங்களையுடைய
பெரிய கோவர்த்தன மலையை எடுத்து மழையைக் காத்ததும், பூலோகத்தை முன்னே உண்டாக்கிப் பிரளய காலத்தில் புசித்து
மீண்டு உமிழ்ந்ததும், திரிவிக்கிரமனாய் அளந்ததும், வராகமாகி இடந்து சேர்ந்ததுமான ஆச்சரியம் பொருந்திய செயல்களை
நினைக்குந்தோறும் என் மனம் அவற்றிலே நிலைபெற்று நெருப்பில் அகப்பட்ட மெழுகினைப் போன்று உருகா நிற்கும்.
வானவர்கோன் உண்ணற்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் என்க. வண்ணம்-வர்ணம். மணந்த-பூமிப் பிராட்டியோடுங்கூடிய:
நெஞ்சு நின்று எண்ணுந்தோறும் எரிவாய் மெழுகு ஒக்கும் என்க.

அடியார்களுக்காகவும் பொதுமையில் எல்லார்க்குமாகவும் செய்த செயல்களை நினைக்குந்தோறும்
என் மனமானது மிகவும் அழியா நின்றது என்கிறார்.

வானவர் கோனுக்கு உண்ண ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்-
தான் பிறந்து வளருகிற ஊரிலே சிலர் மழையின் பொருட்டு இந்திரனுக்குச் சமைத்த அடிசிலைத் தான் புகுந்து உண்ட அதுவும்.
“நாம் பிறந்து வளருகிற ஊரிலே வேறேயும் ஓர் அடையத் தக்க பொருள் உண்டாகையாவது என்?” என்று,
பொறாமையாலே “வாரீர் கோள், இந்திரனாகிறான் எவன், கண்டறியாதான் ஒருவனோ நமக்கு உதவி செய்யப் புகுகின்றான்;
ஆன பின்பு, மேகங்களும் வந்து பணியும் படிக்குத் தக்கதாய்ப் புல்லும் தண்ணீருமுடைத்தாய்
பசுக்களுக்கும் இடம் கொடுத்து நிற்கிற மலை யன்றோ நமக்கு எல்லாம் கடவது!’ என்று சொல்ல,

ஆயர்கள் ஆகையாலே சொல்லிற்றுக் கேட்பார் சிலரே;
இனி இவன் தானே சொன்னவை மறுக்க ஒண்ணாதபடியாயிருக்குமே;
இம்மலையின் முன்னே இடுங்கோள்” என்ன, அங்கே கொடுவந்து குவித்தார்கள்;
அதனைத் தான் புக்கிருந்து அமுது செய்தான். தனக்கே உரியராயிருப்பாருடைய பொருளை வேறே சிலர்க்குக் கொடுக்கையாவது,
மஹிஷீ ஸ்வேதத்தைப் பிறர்க்குக் கொடுத்த அளவே யன்றோ. அவன் தன் பரிகரத்தோடுங்கூட இதனைக் கொண்டு
திருப்தனாக இருக்க, இதனைத் தான் கைக் கொண்டானாயிற்று.

அவன் குரோதத்தாலே மழை பெய்யும்படி செய்தான்.
வண்ணமால் வரையை எடுத்து மழை காத்ததும் –
அடை கொண்டு பாழ் போக்குவான் ஒருவன் அன்றே.
அடை கொண்டு பாழ் போக்குவான்-ரஷிக்கிறேன் என்று சொல்லி கை விட மாட்டான் -என்றும்
க்ஷேத்ரம் பெற்று பாழாக விட மாட்டானே -என்றுமாம்
“நாம் விரும்பிய பொருளைப் பெற்றோமாகில் என் செய்தால் நல்லது” என்று பொகட்டுப் போகாதே,
பலவிதமான தாதுக்களையுடைத்தாய், ஒருவரால் கணிசிக்க ஒண்ணாத பெரிய மலையை,
சுகுமாரமான கையைக் கொண்டு ஏழு நாள் ஒருபடியே தரித்து,
ஒரு பசுவின் மேலேயாதல் ஓர் ஆயன் மேலேயாதல் ஒரு துளி விழாத படி காத்தும்.
அவனைக் கொல்ல வேண்டியதாய் இருக்கச் செய்தேயும், ‘தேவ சாதியினனான இவனை நலிகிறது என்,
பசிக் கோவத்தாலே செய்தானாகில் தானே கை ஓய்ந்து விடுகிறான், அவ்வளவும்
நம்முடைய பொருளை நாம் கடகிட்டு நோக்குவோம்’ என்று கருணை காரணமாக அவனைக் கொல்லாதே விட்டான்.
‘நம் விபூதியை இவன் நோக்க வல்லன், இவன் கண்ணுடையன்,’ என்றே யன்றோ இவனைத் தான் இங்குத்தைக்கு இட்டது;
கண்ணுடையன்-ரக்ஷணம் செய்பவன் ஆயிரம் கண் உடையவன்
இப்படி இருக்கச் செய்தேயும் இவன் கண்ணறையர் -கண் இல்லாதவன் -செய்வதனைச் செய்தான்.
21 மைல் பரிக்ரமம் துரோணாச்சலம் பிள்ளை கிரி ராஜம் கோவர்த்தன கிரி – கீழே வைக்காமல் போக வேண்டும்
அனுபவித்து உள்ளம் கனக்க கீழே வைக்க -இங்கேயே இருந்தது என்பர் –ஒவ் ஒரு வருஷமும் குறைந்து வருமாம் –

மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்து மணந்த மாயங்கள்
‘வேண்டா’ என்றாலும் வேறு தெய்வங்களை வணங்குதல் தவிராதார் ஓர் ஊரார் அளவன்றிக்கே,
இருக்கிற பூலோகத்திலுள்ளார் விஷயத்திற் செய்யுமவற்றைச் சொல்லுகிறது.
விரும்பாமல் இருக்கவே இவற்றை உண்டாக்கி, பிரளய ஆபத்துக்கள் வர இவை நோவு படாதபடி வயிற்றிலே வைத்து நோக்கி,
‘உள்ளே கிடந்து மறைந்து போக ஒண்ணாது’ என்று பார்த்து வெளி நாடு காணப் புறப்பட விட்டு,
பின்பு மஹாபலி போல்வார் கவர்ந்து கொள்ள எல்லை நடந்து மீட்டுக் கொடுத்து, பின்பு
அவாந்தர பிரளயங்கொண்ட பூமியை மஹா வராஹமாய் எடுத்துக் கொண்டு ஏறி, இவையெல்லாம்
பிராட்டிப் படுக்கைப் பற்றாகையாலே அவளுக்குப் பிரியமாகச் செய்து அவளோடே கலந்த ஆச்சரியமான செயல்களை.
மணந்த மாயங்கள்-மணத்தல்-கலத்தல்.

எண்ணுந்தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே –
அவனுடைய ரக்ஷணத்திலும் பரப்பு உண்டாகாதே இவருடைய பாரிப்பு.
எண்ண மாட்டார், எண்ணாதிருக்க மாட்டார்; ரக்ஷணத்திற்கு அவன் சமைந்தாற்போலே காணும் அழிகைக்கு இவர் சமைந்தபடி.
தரிக்க எண்ணுவார் -எண்ண சிதிலம் ஆவாரே அதனால் எண்ண மாட்டார் -மாறி மாறி அன்றோ இவர் நிலை –
இதனை நினைத்தே நாட்டார் உண்டு உடுத்துக் காலம் போக்கா நின்றார்களாதலின் ‘என் நெஞ்சு’ என்கிறார்.
நெருப்பின் அருகில் இருக்கும் மெழுகு போலே உருகா நின்றது என்பார் ‘எரிவாய் மெழுகு ஒக்கும்’ என்கிறார்.
அது ஒருகாலே உருகுதல் கரிதல் செய்யுமன்றோ, இது உருகினபடியே இரா நின்றதாதலின் ‘நின்றே’ என்கிறார்.

———————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம்- 123- திருவாய்மொழி – -5-9–6….5-9-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

June 11, 2016

காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6-

பாடுகிற வண்டும் -ஆழ்வார் போலே -புத்துத் தென்றல் -கடலும் கடல் சார்ந்த -ஆஸ்ரித அர்த்தமாக இரந்து-வாமனன் கழல்
காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!காண்பது என்றோ –
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்-உயர்ந்த பணைத்து-மரங்கள் -கடல் கரை சோலை
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.-பிராமச்சர்யம் வாமனத்வம் -கொண்ட தர்சநீய விக்ரகம் –
மகோ உபகாரகன் -அழகைக் காட்டி ஆட்கொண்ட உபகாரகன் -மலர்த் தாமரைப் பாதங்களை
காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!-அதர சோபை –விதேயமான –
அபிமதம் படி பரிமாறப் பெறாத பாபம்-

கோவைக் கனி போன்ற வாயினையுடைய பெண்களே! எல்லாவிடங்களிலும் வண்டுகளினுடைய பாண் குரலும் இளந்தென்றலுமாக,
மிக உயர்ந்திருக்கின்ற கிளைகளையுடைய மரங்கள் நெருங்கியிருக்கின்ற வளப்பம் பொருந்திய கானலையுடைய திருவல்லவாழ்
என்ற திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற மாட்சிமை அமைந்த அழகிய பிரானாகிய வாமனனுடைய
தாமரை மலர்போன்ற திருவடிகளை, வினையேன் காண்பது எந்நாளோ? என்கிறாள்.
மடவீர்! மலர்த்தாமரைப் பாதங்கள் வினையேன் காண்பது எஞ்ஞான்றுகொலோ? என்க. பண் என்பது, பாண் என வந்தது, விகாரம்.
பாண் – இசை. எங்கும் வண்டின் குரலும் பசுந்தென்றலுமாக, மரம் ஓங்கு செழுங்கானல் என்க. சேண் ஓங்கு சினைமரம் என்க.
அன்றி, சேண் என்பதனைச் சினைக்கும், ஓங்கு என்பதனை மரத்திற்கும் அடை ஆக்கலுமாம். கானல்-கடற்கரைச்சோலை.

திருவல்லவாழிலே நின்றருளின ஸ்ரீ வாமனனுடைய இனிமையை யுடையதான திருவடிகளை நான் காண்பது என்றோ? என்கிறாள்.

வினையேன் காண்பது எஞ்ஞான்று கொலோ-
(கண்கள்)குழந்தைகள் செய்தபடி செய்ய, நான் முன்னம் என் பசி தீர்த்துக் கொள்வது என்றோ.
உலகநடைக்கு ஒத்ததல்லாத பாவத்தைச் செய்தேன் என்பாள், தன்னை
‘வினையேன்’ என்கிறாள். என்றது,
காணாமைக்குப் பாவம் பண்ணினாரும் கூடக் காணும்படியான விஷயத்தை,
காண்கைக்கு யோக்கியதை உண்டாய் வைத்தே காணாதபடியான பாவத்தைப் பண்ணினேன் என்றபடி.

காமரு சீர் அவுணன் -கொண்டாடி -காணப் பெற்றானே -வாமனன் கோலத்தையும் விஸ்வரூப திரிவிக்ரமன் -கண்டு
அதற்கு மேலே திருவடியையும் சென்னியிலே ஏறப் பெற்றானே
மாண் குறள் கோலப்பிரானே யன்றோ. இனி,

‘காண்பது எஞ்ஞான்று கொலோ வினையேன்’
என்பதற்கு, நீங்கள் காட்டுகைக்கு விரைய ஆறி யிருக்கக்கூடிய நான்,
இன்று ‘காண்பது எஞ்ஞான்று கொலோ’ என்னும்படியான பாவத்தைப் பண்ணினேன் என்னுதலுமாம்.

கனி வாய் மடவீர்-உங்களை நான் பண்டு போலே காண்பது என்றோ.
“ஞானிகளுக்கு நான் மிகவும் பிரியமுள்ளவன், அவர்களும் எனக்குப் பிரியமுள்ளவர்களே” என்னும்படியன்றோ அவர்கள் இருப்பது.
இவள் மாசுடை உடம்பொடு தலை உலறி வாய்ப்புறம் வெளுத்திருக்க, அவர்கள் தங்களைப் பேணி இரார்களே.
அவர்கள் பண்டு போலே இருக்கக் காண்கையும் இவளுக்கு விருப்பமானபடி.

“கனிவாய் மடவீர்” என்றதனை இப்பொழுதுள்ள நிலைக்கு விசேஷணமாக்காமல்
‘பண்டு போலே காண்பது’ என்று இறந்த காலமாக்கிப் பொருள் அருளிச் செய்வதற்குக் காரணம் என்? என்ன,
இவள் அதரம் வெளுத்திருக்க, அவர்கள் அதரம் செவ்வி பெற்றிருக்கக் கூடாமையாலே என்று கூறத் திருவுள்ளம் பற்றி,
இவள் விஷயத்தில் அவர்களுக்கு உண்டான சிநேகத்தைத் திருஷ்டாந்த மூலமாகக் காட்டுகிறார்
‘ஞானிகளுக்கு’ என்று தொடங்கி.
“ப்ரியோஹி ஜ்ஞாநிந: அத்யர்தம் அஹம் ஸச மம ப்ரிய:”-என்பது, ஸ்ரீகீதை. 7 : 17. என்றது,
ஞானி விஷயத்தில் ஸர்வேச்வரன் மிகவும் சிநேகித்திருக்குமாறு போன்று,
இவர்களும் இவள் விஷயத்திலே மிகவும் சிநேகித்தவர்களாயிருப்பார்கள் என்றபடி.

பாண் குரல் வண்டினொடு-
இவற்றின் குரல் ஓசையில் வெள்ளோசையாய்க் கழியுண்பது இல்லை, பரப்பு அடங்கலும் பாட்டாக இருக்கும். என்றது,
இயல் கற்று இசையோடு கூட்டிற்று அன்று அவற்றுக்கு, பேச்சே தொடங்கி இசை என்றபடி.
‘தேன் போலே இனிய பாட்டு’ என்னுமது போய்,
வடிவே தேனாய்
அதற்கு மேலே பாட்டும் ஆனால் மிகவும் இனியதாயிருக்குமன்றோ.
அன்றிக்கே,
பாண் குரல் – இசை ரூபமான மிடற்றோசை என்னுதல்.

பசுந்தென்றலுமாகி எங்கும் –
கலப்பு அற்ற தென்றலுமாயிருக்கை. என்றது,
பலவிடங்களிலே காலிட்டு வாராதே தாய் தலைத் தென்றலா யிருக்கையைத் தெரிவித்தபடி.
(மேல் வரும் தென்றலுக்குத் தாயாய் -பொதிகை மலை அருகில் இருப்பதே ஆழ்வாரைத் தாக்கவே )
அன்றிக்கே, பசுந்தென்றல்-இளந்தென்றல் என்றுமாம்.

சேண் சினை ஓங்கு மரம் செழுங்கானல் –
கவடுகளானவை -கிளைகள் -சுற்றிலே பணைத்திருப்பனவாய் மேலோக்கத்தை உடைத்தான
மரங்களை யுடைத்தாகையாலே அழகிய சோலையையுடைய.
அன்றிக்கே,
செழுங்கானல் என்பதற்கு, காண்பதற்கு இனிய கானல் என்னுதல்
கானல்-
கடற்கரைச் சோலையாதல்,
நெய்தல் நிலமாதல்.
சினைக்கு ஓக்கம், சுற்றிலே வளர்தல்.
மரத்துக்கு ஓக்கம், மேலே உயர்தல்.

மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்கள் காண்பது எஞ்ஞான்று கொலோ-
தன்னுடைமை பெறுகைக்குத் தான் இரப்பாளனாய், பெருவிலையனான வடிவினைச் சிறுகவிட்டு
மிக்க அழகையுடையவனாய், சௌலப்யத்தையும் அழகையும்
(‘சௌலப்யத்தையும் அழகையும்’ என்றது, “மாண்”, “கோலம்” என்ற
சொற்களைத் திருவுள்ளம்பற்றி. )
திருவல்லவாழில் அடியார்களை அநுபவித்துக்கொண்டு நிற்கிறவனுடைய தனக்குமேல் ஒன்றில்லாததான
இனிமையை யுடையதான திருவடிகளைக் காண்பது எஞ்ஞான்று கொலோ?

மலர்த்தாமரைப் பாதங்கள்
அப்போது அலர்ந்த தாமரை போலே எல்லையற்ற போக்யமான திருவடிகள் என்பாள் ‘மலர்த்தாமரைப் பாதங்கள்’ என்கிறாள்.
அடியிலே இவர்க்குத் தானே அன்றோ ருசியை உண்டாக்கினான்.
வாமனனைச் சொன்னதற்கு, பாவம் அருளிச் செய்கிறார் ‘அடியிலே’ என்று தொடங்கி.
தமக்குத் திருவடிகளிலே ருசி பிறந்தது வாமனன் திருவருளாலே-என்பது கருத்து.-‘
அடிகள் அடிகள்’ என்று வாய்புலற்றும்படி அன்றோ திருவடிகளில் இனிமை இருப்பது.

———————————————————————————–

பாதங்கள் காண்ப தெஞ்ஞான்று கொலோ அன்றிக்கே
பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்

பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்!
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இஞ்ஞால முண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே.–5-9-7-

தர்ச நீய தடாகங்கள் உடைய –நிர்வாகன் -ஆபத் சகன் -திருவடிக்கு மேலே உள்ள
பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்!
பூவையாவது அணிந்து நித்யமாக தொழ முடியுமோ என்றவாறு –
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்-சமுத்ரம் போலே தடாகம்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்-முகம் கண் அழகு -இவை எல்லாம் ஏந்தி –
தடாகத்தில் தாமரை செங்கழு நீர்
மாதர்கள் கண் -முகம் -அழகுகள் ஒன்றும் இல்லாத படி -ஏந்தும் -கழிக்கும் படி -என்றவாறு –
ஒவ் ஒரு அழகுக்கு திருஷ்டாந்தம் -என்றுமாம் –
நாதன் இஞ்ஞால முண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே.-ஸ்வாமி –பிரளயம் கொள்ளாத படி
திரு வயிற்றில் வைத்து நோக்கி -சம்சாரம் பிரளயம் கொள்ளாதபடி ரஷகன்

பாவை போன்ற பெண்களே! தண்ணீர் நிறைந்த பெரிய குளங்களானவை, உயர்ந்த தாமரை மலர்களையும் செங்கழுநீர் மலர்களையும்,
பெண்களினுடைய ஒளி பொருந்திய முகத்தையும் கண்களையும் போன்று ஏந்திக்கொண்டிருக்கின்ற திருவல்லவாழ் என்ற திவ்விய தேசத்திலே
எழுந்தருளியிருக்கின்ற நாதனும் இவ்வுலகங்களை எல்லாம் உண்ட நம்பிரானுமான சர்வேச்வரனுடைய மலர்களால் மேலே
அலங்கரிக்கப்பட்ட திருவடிகளை நாடோறும் தொழுவதற்குக் கூடுமோ? என்கிறாள்.
மேல் பூ அணி பாதங்கள் தொழக் கூடுங்கொல் என மாற்றுக.
தாமரையை முகத்துக்கும், செங்கழுநீரைக் கண்ணுக்கும் முறை நிரல் நிறையாகக்கொள்க.
தடம் ஏந்தும் திருவல்லவாழ் என்க. அன்றி, தடத்துள் இருக்கின்ற தாமரையும் செங்கழுநீரும் முகத்தையும் கண்ணையும் போன்று
உயர்ந்து பொலிகின்ற திருவல்லவாழ் என்னுதல்.

அவன் திருவடிகளிலே நித்யமாகப் பூவை அணிந்து தொழ வல்லோமே! என்கிறாள்.

பாதங்கள் மேல் பூ அணி தொழக் கூடுங்கொல்-
திருவடிகளின் மேலே மலர்களை அணிந்து நமக்குத் தொழக் கூடவற்றோ.

பாவை நல்லீர் –
இவளை விலக்குவதற்கு ஆற்றல் இல்லாதவர்களாய் மரப்பாவைகளைப் போன்று இருந்தபடி.
அன்றிக்கே,
எழுதின பாவை போன்று இருந்தார்கள் என்னுதல்.
அன்றிக்கே,
விலக்காமையாலே மகிழ்ந்து பெண்களில் நல்லரானவர்களே! என்று விளிக்கிறாள் என்னுதல்.

“பாவை” என்பதற்கு,
மரப்பாவை என்றும்,
கொல்லிப்பாவை என்றும்,
பிரதிமை என்றும் மூன்று வகையாகப் பொருள் அருளிச் செய்கிறார்
‘இவளை விலக்குவதற்கு’ என்று தொடங்கி.
முதற்பொருள், விலக்குதற்கு ஆற்றல் இல்லாமையைக் குறித்தது.
இரண்டாவது பொருள், அழகிய உறுப்புகளையுடையவர்கள் என்பதனைக் குறித்தது.
மூன்றாவது பொருள்,ஸ்வாதந்திரியம் இல்லாதவர்கள் என்பதனைக் குறித்தது.

குவளை அம் கண்ணி கொல்லி யம் பாவை -நின் தாள் நயந்து இருந்த என் பாவை -செழும் கடலில் அமுதினில் பிறந்த
அவளை விட என் மகள் அழகு என்கிறார் பரகால நாயகி திருத் தாயார்

ஓதம் நெடுந்தடுத்துள் உயர்தாமரை செங்கழுநீர் –
கடல் போலே பெருத்திருந்துள்ள தடாகங்களினுள்ளே ஓக்கத்தை யுடைத்தான தாமரை செங்கழுநீரானவை.

மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும்-
அவ்வூரில் பெண்களினுடைய ஒளியை யுடைத்தான முகத்தையும் கண்களையும் தரியா நின்றன. என்றது,
ஊருக்கும் வயலுக்கும் வாசி தெரிந்து கோடல் அரிதாயிருக்கையைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே,
திருவோலக்கத்திற்படியே அவற்றைத் தள்ளும்படி யாயிருக்கை என்னுதல்.

திருவல்ல வாழ் நாதன் –
ஸ்ரீ வைகுண்ட நாதனைக் காட்டிலும் ஏற்றம். என்றது,
ஸ்ரீ வைகுண்டத்துக்குக் கடவனாய் இருக்கிறது, அந்தப் புரத்துக்குக் கடவன் என்கிற அளவே அன்றோ,
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப இருக்கிற இடமே -திருவாய். 4. 9 : 10.-அன்றோ;
இது அங்ஙன் அன்றிக்கே,
ஒருவர் கூறையை எழுவர் உடுக்கிற தேசத்திலே தரிசு அற இருக்கிற இடமே அன்றோ என்றபடி.
தரிசர் -ஏழையர் -குறும்பர் என்றுமாம்

இஞ் ஞாலம் உண்ட-
ஆபத்தே செப்பேடாக வயிற்றிலே வைத்து நோக்கும். என்றது,
மேன்மை பாராதே தளர்ந்தார் தாவளமாயிருக்கும் என்றபடி.
தளர்ந்தார் தாவளம்-தளர்ந்தவர்கட்கு ஆதாரமாயிருப்பவன்.-தாவளம் க்ருஹம் –
அது கதையில் கேட்க வேண்டி இருந்ததோ? எனின்,

நம் பிரான் தன்னை –
சம்சாரப் பிரளயங்கொண்ட என்னை எடுத்து இவ்வளவாக்கி உபகரித்தவன்.
நாடொறும் பாதங்கள் மேல் அணி பூந்தொழக் கூடுங்கொல்?

————————————————————————————–

நாடொறும் வீடின்றியே தொழக் கூடுங்கொல் நன்னுதலீர்!
ஆடுறு தீங் கரும்பும் விளை செந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே.–5-9-8-

அழகிய விலை நிலங்கள் -நித்ய சந்நிஹிதன் -சகல சம்ச்லேஷ ஸ்வ பாவமாக -திருவடிகளை -நிரந்தர அனுபவம்
நாடொறும் வீடின்றியே தொழக் கூடுங்கொல் நன்னுதலீர்!-தர்ச நீயமான -திருவடி தூளிகள் பொருந்திய திரு நெற்றி
ஆடுறு தீங் கரும்பும் விளை செந் நெலுமாகி எங்கும்-ஆலையில் -இனிய கரும்பு -விளைந்த செந்நெல்
மாடுறு பூந்தடஞ் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்-பரிசரம் -பூத்த தடாகங்கள் -வயல் -சூழ்ந்த திவ்ய தேசம் –
நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே.–நிரந்தர வாசம் -மகோபாகரகன்

நல்ல நெற்றியையுடைய பெண்களே! எல்லாவிடங்களிலும் அரைக்கப்படுகின்ற மதுரம் பொருந்திய கரும்புகளும் வளைந்திருக்கின்ற
செந்நெற்பயிர்களுமாக, பக்கங்களில் பொருந்தியிருக்கின்ற அழகிய குளங்களையும் அவற்றைச் சார்ந்து சூழ்ந்திருக்கின்ற
வயல்களையுமுடைத்தாயிருக்கின்ற குளிர்ந்த திருவல்லவாழ் என்ற திவ்விய தேசத்தில் நித்தியமாக எழுந்தருளியிருக்கின்ற பிரானுடைய நிலம்
தாவிய நீண்ட திருவடிகளை, நாள்தோறும் இடையீடு இல்லாமல் தொழுவதற்குக் கூடுமோ? என்கிறாள்.
எங்கும் கரும்பும் செந்நெலும் ஆக தடம் சேர்ந்து வயல் சூழ்ந்த திருவல்லவாழ் என்க.
பிரானுடைய நீள்கழலைத் தொழக் கூடுங்கொல்? என்க. மாடு-பக்கம்.

சர்வ சுலபனானவன் திருவடிகளிலே சர்வ காலமும் இடைவிடாதே அடிமை செய்யக் கூடவற்றே! என்கிறாள்.

நாடொறும் வீடு இன்றியே தொழக் கூடுங்கொல்-
‘நாடொறும்’ என்று, ஒவ்வொரு பக்ஷத்திலும் செய்யும்-தர்ச பூர்ணமாஸ – யாகங்களைப் பிரிக்கிறது.
‘வீடு இன்றியே’ என்று நித்திய அக்நி ஹோத்ரத்தைப் பிரிக்கிறது.
“ஒழிவில் காலமெல்லாம்” என்கிறபடியே யன்றோ இவர் பிரார்த்திப்பது.
ஆசாரிய உபதேசத்தை நம்பி விரும்புகிற நம்மைப் போல் அன்றியே,
தாஸ்யம் ரசித்து ராகத்தாலே -அடிமை ரசித்து ஆசையாலே விரும்புகிறாரே அன்றோ.

நல்லுதலீர் –
அவன் வந்த உபகாரத்துக்கு அவன் திருவடிகளிலே விழுந்து வணங்கிய வணக்கத்தினால்
புழுதி படிந்த நெற்றியுடையவர்களாக உங்களைக் காண வல்லேனோ.
“தலையில் வணங்கவுமாங் கொலோ”-திருவாய். 5. 3 : 7.– என்று தொழக் கடவளே, அப்போது இவர்களும் தொழுவர்களே;
இவளுக்குக் கைங்கர்யத்தில் உகப்புப் போலே, இவள் பேறே தங்களுக்கு உகப்பாயிருக்குமவர்களே.

ஆடு உறு தீங்கரும்பும் விளை செந்நெலுமாகி எங்கும்-
கரும்புகள் எப்போதும் ஆடுகையிலே உற்றிருக்கை, -காற்றிலே அசைந்து -ஆலையிலே இடும் என்றுமாம்
செந்நெலும் எப்போதும் அறுக்கைக்குப் பக்குவமாய் விளைந்து கிடக்கை. என்றது,
அங்குள்ளவை முழுதும் பக்குவமாய்க் காணும் இருப்பது என்றபடி.

மாடு உறு பூந் தடம் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ் –
மருங்கே யுற்றிருப்பதாய்ப் பூக்களை யுடைத்தான தடாகங்களைச் சேர்ந்த வயல்களாலே
சூழப்பட்டிருப்பதாய்ச் சிரமஹரமான திருவல்லவாழிலே.
ஊரைத் தடாகங்கள் சூழ்ந்து,தடாகங்களை வயல்கள் சூழ்ந்திருக்க, இப்படிகளாலே குளிர்ந்து காணும் ஊர் தான் இருப்பது.

நீடு உறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே –
குணாகுண நிரூபணம் பண்ணாதே எல்லார் தலைகள் மேலும் பொருந்தும்படி சுலபமான திருவடிகளைக் கொண்டு,
அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாமல் நித்திய வாசம் செய்கிற உபகாரமே இங்குத்தைக்குத் தன்னேற்றம்.
நிலம் தாவிய நீள்கழல் நாடொறும் வீடு இன்றியே தொழக் கூடுங்கொல்? என்க.

‘குணாகுண நிரூபணம் பண்ணாதே’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து,
சௌலப்யம். ஸ்ரீ வாமனனுக்கும் இவனுக்கும் ஒக்கும்,
நீடுறைகின்றதே இவனுக்குத் தன்னேற்றம் என்பது. இங்குத்தை – இவ்விடம்.

——————————————————————————————————–

கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ?
குழல் என யாழும் என்னக் குளிர் சோலை யுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே.–5-9-9-

சரணாகதி ப்ரகரணம் என்பதால் பாசுரம் தோறும் திருவடி பிரஸ்தாபம்
மதுபான மத்தமான வண்டுகள் –அவனை அடைந்தவளாக பெறுவோமோ
கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ?-கையில் கழலும் வளைகள் -காரணப் பெயர்
கழலாமல்-பூரித்து சம்ச்லேஷத்தில் -எப்போது தொழுவோம் -கண்டு கை தொழுது கிட்ட -உபகாரம் –
கைம்மாறாக கை தொழக் கூடுமோ –
அவன் அருள் கூடும் படி கை தொழுவோமா -என்றுமாம்
குழல் என யாழும் என்னக் குளிர் சோலையுள் தேனருந்தி-குளிர்ந்த சோலைகள் -தேனைப் பானம் பண்ணி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்-சிறிய பிராயம் -இசை பாடும்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே-கையும் திருவாழியுமான எம்பெருமான் கிருபை –
அறியவும் -ஞான தர்சன பிராப்தி -மூன்றுக்கும்
தேஜஸ் -மிக்கு சுழன்று -வேகமாக சுழன்று-அதனாலே தேஜஸ் -தேஜஸே சுழலும் என்றுமாம் –
ஸ்வா பாவிக கிருபை -ஸ்ரீ வல்லபன் கோலப் பிரான்

இளமை பொருந்திய அழகிய வண்டுகளானவை, குளிர்ந்த சோலையிலே தேனைக் குடித்துக்
குழலைப் போலவும் யாழைப் போலவும்
இசையைப் பாடுகின்ற திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற
சுழலின் மலி ‘சக்கரப் பெருமானுடைய தொல்’ அருளால்,
சுழலுகின்ற வளையல்கள் தங்கும்படியாக நாம் கண்டு தொழுவதற்குக் கூடுமோ? என்கிறாள்.
வண்டுகள் தேன் அருந்தி குழல் என்ன யாழும் என்ன இசை பாடும் திருவல்லவாழ் என்க.
தொல் அருளால் கண்டு தொழக்கூடுங்கொல்? என்க.
குழல், யாழ் என்பன: ஆகுபெயர். மழலை-இளமை. வரி-கீற்றுமாம்.
சுழலின் மலி-சுழலுதலில் மிகுந்த. இது, சக்கரத்திற்கு அடை.

நம்முடைய கழலுகிற வளைகள் பூரிக்க அவனைக் கண்டு தொழும்படி அவன் அருள் கூடவற்றே! என்கிறாள்.

கழல் வளை பூரிப்ப
“வெள் வளை” – திருவாய்– 10. 3 : 7– என்னுமாறு போலே.
‘கழல் வளை’ என்று, வளைக்கு விசேடணமாய் விட்டது காணும்.
இவளைக் கை விடுகையாலே அன்றோ இது விசேடணமாக வேண்டிற்று. பூரிப்ப – பூர்ணமாக.
அவன் கை விட்டால் வளையல்களும் கை விடுமே
அவன் வரில் கை மேலே காணலாமே இவற்றை. ‘பூரிப்ப’ என்பதனை,
(சடக்கெனக் காணலாம்
அவன் கையில் சுழலும் சக்கரத்தையும் காணலாம்
இவள் கையில் வளையல்கள் பூரிக்கக் காணலாமே )

மேலே வருகின்ற ‘நாம் கண்டு கை தொழக் கூடுங்கொலோ’ என்றதனோடு முடிக்க.
பிரிவில் வளை கழலுவது தனக்கே யானாலும் காட்சி எல்லார்க்கும் ஒக்குமாதலின் ‘நாம்’ என்கிறாள்

குழல் என்ன யாழும் என்ன
குழல் என்னவுமாய் யாழ் என்னவுமாய் இருக்கை.
நாட்டில் இனியவற்றை எல்லாம் சேரக் கேட்டாற்போலே இருக்கை.
“வீரியத்தில் விஷ்ணுவை ஒத்தவர், பிரியமாகப் பார்க்கப்படுவதில் சந்திரனை ஒத்தவர்” என்னுமாறு போலே.
ஒன்றற்குப் பல பொருள்களை உவமை கூறுதற்கு மேற் கோள் காட்டுகிறார்‘வீரியத்தில்’ என்று தொடங்கி.
“விஷ்ணுநா ஸத்ருஸோ வீர்யே ஸோமவத் ப்ரிய தர்ஸந:
ஸ்தைர்யா ஹிமவான் ஷமயா பிருத்வீ இவ ”-என்பது, ஸ்ரீ ராமா. பால. 1 : 18.

குளிர் சோலையுள் தேன் அருந்தி –
சிரமஹரமான சோலையிலே குளிருக்குப் பரிஹாரமாகத் தேனைக் குடித்து.
அருந்தி – குடித்து.

மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ் –
இளமையோடு கூடியதாய்க் காண்பதற்கு இனியதாயிருக்கின்ற வண்டுகள்,
பிரீதிக்குப் போக்குவிட்டுப் பாடா நின்றுள்ள திருவல்லவாழ்.

இசை பாடும்-
செருக்கருமாய் ஸுகுமாரருமாயிருப்பார், ‘மரம்’ என்று சந்தனத்தைக் கழித்துப் புழுகு நெய்யை
ஏறிட்டுக் கொண்டு திரியுமாறு போலே,
இவையும் இயலை விட்டு இசையையே பாடுகின்றனவாதலின் ‘இசை பாடும்’ என்கிறது.
(பாவின் இன்னிசை பாடித் திரிவனே போல் -இசையே உத்தேச்யம் )

சுழலின் மலி சக்கரப் பெருமானது –
பகைவர்களை அழிக்க வேண்டும் என்னும் விரைவாலே மிகவும் சுழன்று வாரா நின்றுள்ள
திருவாழியை யுடைய சர்வேஸ்வரன்.
அன்றிக்கே,
சுழலின் மலி சக்கரம் என்பதற்கு,
சுழல்வது போலத் துளங்கா நின்றுள்ள-( அசையக் கூடிய-) சக்கரம் என்னுதல்.

தொல் அருள் –
இயல்பாகவே அமைந்த அருள்.
அருளாலே, கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடவற்றே என்க.

—————————————————————–

தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10-

ஆராட்டு உத்சவம் -தீர்த்தவாரி போலே -மூலவர் தான் சேர நாட்டில் முக்யத்வம் -பலி பேரரை எழுந்து அருளி உத்சவம் –
விலஷண புருஷ வாசஸ்த்தானமான -நிருபாதிக சம்பந்த உக்தன்
தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?-ஸ்வாவாபிக உபகாரத்வன் –
திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -அனுக்ரகம் பழைமை
சம்சாரம் பரமபதம் -வாசி இல்லாமல் அவன் அருளால் அனுபவித்து தொழும் படி
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்-நல் அருள் -ஸூஹ்ருதம் -அடியாக –
சத்கர்மா -பகவான் அனுக்ரகமே ஸூஹ்ருதம்
இவனும் அறியாமல் -சாஸ்திரமும் அறியாமல் -ஈஸ்வரன் திரு உள்ளத்தாலே –
பகவத் காருண்யத்தால் கிட்டிய புண்ணியத்தால் தொழக் கூடுமோ
அவன் சந்நிஹித ஸ்ரீ செல்வம் உடைய –
த்ரிபாத் -விபூதியில் -மடி மாங்காய் -ஓன்று பத்தாக்கிக் கொண்டு நடாத்திப் போகுமே -யாத்ருச்சிகாதி –

நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்-அவனிலும் விஞ்சின அருளை –
அவனுக்கு தொல் அருள் இவர்களுக்கு நல்லருள் –
பகவத் ஞானம் ப்ரேமாதி -ரூபமான -ஆதி கைங்கர்யம் –கல்யாண குணங்கள் தரித்து –
நலமான மங்களா சாசானம் பண்ணும் என்றுமாம்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.-நம்மை அனுபவிப்பிக்கும் பெருமான் -சமஸ்த குண விபூதி உக்தன்
ஸ்வரூப ரூபம் குணம் விபூதி நான்குக்கும் வாசகங்கள் திரு நாமங்கள் -உகந்து இருக்கும் தோழி மீர்காள் –

உதாசீனன் -பாபத்துக்கு –ஆத்ய பிரவ்ருத்தி முதல் முயற்சி உதாசீனன் -இரண்டாவது -பிரவ்ருத்தியில் அனுமதி
மூன்றாவது பிரவ்ருதியில் தூண்டி -என்பர் -ஆதிக்யத்துக்கு உட்பட்டே செயல் -என்பதால் –உதாசீனனாக இருப்பது அவன் சங்கல்பம் –

தோழிமீர்காள்! எம்பெருமானுடைய தொல் அருளை மண்ணுலகும் விண்ணுலகமும் அநுபவித்துத் தொழும்படி நின்ற திருநகரம்,
எம்பெருமானுடைய கல்யாண குணங்களைக் கொண்டாடிப் பேசுகின்ற நல்ல அருளையுடைய ஆயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கியிருக்கின்ற
திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற நல்லருளை யுடைய நம்பெருமான் நாராயணனுடைய திருநாமங்களை,
எம்பெருமானுடைய தொல்லருளால் உண்டான புண்ணியத்தாலே சொல்லுவதற்குக் கூடுமோ? என்கிறாள்.
தொல் அருள் – இயல்பாகவே உள்ள அருள். தொல் அருளைத் தொழ நின்ற திருநகரமாகிய திருவல்லவாழ் என்க.
நலனேந்தும் நல் அருள் ஆயிரவர் தங்கியிருக்கின்ற திருவல்லவாழ் என்க. நாராயணனுடைய நாமங்களை நல்வினையால்
சொலக் கூடுங்கொல்? என்க. தொல்லருளால் உண்டாய நல்வினை என்க.

இயல்பாகவே அமைந்துள்ள அவனுடைய கிருபையாலே அவனைக் காணப் பெற்று,
பிரீதியாலே இனியதாய்க் கொண்டு திரு நாமங்களைச் சொல்லக் கூடவற்றே என்கிறாள்.

தொல் அருள் நல் வினையால் சொலக் கூடும் கொல்-
அவனுடைய ஸ்வாபாவிகமான அருளாலே அவனைக் காணப் பெற்று, அதனால் வந்த பிரீதியாலே
உகந்து கொண்டு திரு நாமத்தைச் சொல்லக் கூடவற்றோ என்னுதல்;
நல்வினை – உகப்பு.
அன்றிக்கே,
ஸ்வாபாவிகமான கிருபையால் உண்டான புண்ணியத்தாலே அவனைக் கண்டு
திருநாமங்களைச் சொல்லக் கூடவற்றோ என்னுதல்.
நல்வினை-புண்ணியத்தாலே -ஸூஹ்ருதத்தாலே

“நா, நீர் அற்று இருக்கை பாபத்தின் பலம் அன்றோ.-புண்ணியத்தாலே- ஸூஹ்ருதத்தாலே-நாக்கிலே
நீர் உண்டாய்த் திரு நாமம் சொல்ல வல்லோமே என்கிறாள்’
என்று அம்மங்கி அம்மாள் வாக்கியார்த்தமாக அருளிச் செய்வர் என்று அருளிச் செய்வர்.

நா, நீர் அற்றிருக்கை’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து,
நாநீர் அற்றிருக்கை பாபத்தின் பலமானால், நாக்கில் நீர் வருதல்
புண்ணியத்தின் பலமாகையாலே, அவனுடைய கிருபையாகிற புண்ணியத்தாலே நாக்கிலே
நீர் உண்டாய்த் திருநாமம் சொல்ல வல்லோமே என்கிறாள் என்பது

தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்
தன்னுடைய கண்ணழி வற்ற கிருபையை இவ் வுலகத்திலுள்ளாரும் நித்திய விபூதியிலுள்ளாரும்
தொழ நின்ற மஹா நகரம்.
(குறை அற்ற கிருபை அங்கு -குணங்களை பாராட்டி வணங்க )

நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ் –
மக்களைக் காப்பாற்றுவதில் எம்பெருமானைக் காட்டிலும் அநுக்கிரஹ சீலர்களாயிருக்குமவர்கள்.

“நலன் ஏந்தும்” என்பதற்கு இரண்டு பொருள்:
ஒன்று, அவனுடைய கல்யாண குணங்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற ஊர் என்பது.
பிரேமத்தாலே அவனுடைய ரக்ஷகத்வத்தைத் தாங்கள் ஏறிட்டுக்கொண்டு அவனுக்கு மங்களாசாசனம்
செய்கிற ஊர் என்பது மற்றொரு பொருள்.
(ரக்ஷகத்வம் மாறாடி -பிரேமத்தில் தட்டு மாறி மங்களா சாசனம் )

நலன்-அன்பு. இவ்விரு பொருள்களையும் முறையே அருளிச் செய்கிறார்
அவனுடைய’ என்று தொடங்கியும், ‘அன்பாலே’ என்று தொடங்கியும்.
அவனுடைய கல்யாண குணங்களைக் கொண்டாடி வசிக்கின்ற ஊர் என்னுதல்.
அன்றிக்கே,
அன்பாலே மங்களாசாசனம் செய்து வசித்துக்கொண்டிருக்கும் ஊர் என்னுதல்.

நல் அருள் நம் பெருமான் –
நல்ல அருளை யுடையவனாய் நமக்கு ஸ்வாமியாயிருக்குமவன்.
நல்லருளாவது, வாத்சல்யம். வாத்சல்ய ஸ்வாமித்வங்கள், நாராயண சப்தார்த்தமாகும்.
அர்த்தத்தை அருளிச் செய்து பின்பு சப்தத்தை அருளிச்செய்கிறார்:
(அஸூயை நல்லதை பொல்லாதாக எண்ணுவது -பொறாமை –
எதிர்பதம் வாத்சல்யம் தீமையையே நல்லதாகக் கொள்வது )

நாராயணன் நாமங்களே –
நாராயண சப்தம், தர்மி நிர்த்தேசம்.-

நாராயண சப்தமும் சர்வேச்வரனுடைய திருநாமம் அன்றோ,
இதனைப் பிரதானமாகச் சொல்லுவான் என்? என்ன,
‘நாராயண சப்தம்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார்.
‘தர்மி நிர்த்தேசம்’ என்றது, ஸ்வரூப நிரூபகம் என்றபடி.
‘இந்த ஸ்வபாவங்களாலே’ என்றது, வாத்சஸ்ய ஸ்வாமித்வங்களாலே என்றபடி.
குணங்களில் வைத்துக் கொண்டு
ஞான ஆனந்த அமலத்வ ஆதி குணங்கள் நிரூபகங்களாய், அல்லாத குணங்கள்
இவற்றாலே நிரூபிதமான ஸ்வரூபத்திற்கு விசேஷணமானாற்போலே,
திரு நாமங்களிலும் நாராயண சப்தம் ஸ்வரூப நிரூபகமாய்,
அல்லாத திருப் பெயர்கள் இந்தத் திரு நாமத்தாலே நிரூபிதமான வஸ்துக்கு உண்டான
குணங்களுக்கும் செயல்களுக்கும் வாசகமாயிருக்கும் என்றபடி.
இந்த ஸ்வபாவங்களாலே நிரூபிதமான வஸ்துவுக்கு உண்டான
குணங்களுக்கும் செயல்களுக்கும் வாசகங்கள் மற்றைத் திருநாமங்கள்.

(ஸ்ரீ யபதித்தவம் –நிரூபக-நிரூபிதமான ஸ்வரூபத்திற்கு விசேஷண-இன்னான் இனையான்
இரண்டுமாகவும் இருக்கும் ஸ்ரீ குண ரத்ன கோசம் -)

———————————————————————————–

நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11-

பகவத் அனுபவ யோக்யதை ஜன்மம் பெறுவார்கள் -பலம் –
நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்-பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையவன் –
பிரதானம் நாராயணன் -நாமம் –
தேவோ நாம சகஸ்ரவான் -நம் ஸ்வாமி என்று சர்வரும் பற்றும் படி சர்வேஸ்வரன் -திருவடி மேல் –
நினைத்தபடி பரிமாற்றம் பெறாத நிலையிலும் ஷேமம்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த-ஷேமகரத்வ புத்தி -ரூப வியவசாயம் முயற்சி —
சடகோபனுக்கும் -திருக் குருகூருக்கும் -ஷேமம் கொள் –
தவிப்பையே பகிர்ந்து -நமக்கு ஷேமம் கொடுத்து அருளும் –திருவடிகளே ரஷகம் என்று விஸ்வசித்து ஆராய்ந்து உரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்-பாடல்கள் ஆயிரம் என்னாமல் -குணம் சொல்ல வந்த பாசுரங்கள் தானே
யானி நாமானி கௌனானி-ஆயிரம் பாசுரங்கள் -குணங்கள் திருநாமங்கள்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.-ரஷாயுக்தமான அழகிய திவ்ய தேசம் –
பிறந்தே-சரீர சம்பந்தம் உடன் இருந்து வைத்தும்
சிறந்தார்-பகவத் அனுபவம் சிறப்பை பெறுவார் –
மெலிவிலும் சேமம் கொள்விக்கும் கிருபை தென்னகரிலே நித்யம் -கிருபா குணம் இப்பத்துக்கும் –

ஆயிரம் திரு நாமங்களை யுடைய நம்பெருமானது திருவடிகளையே தமக்குக் காவலாகப் பற்றின தென்குருகூர்ச் சடகோபராலே ஆராய்ந்து
அருளிச் செய்யப்பட்ட திரு நாமங்களைப் போன்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள், இவை பத்துத் திருப் பாசுரங்களும் சேமத்தைக் கொண்டிருக்கின்ற
அழகிய திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தின் மேலனவாம்; இவற்றைச் சொன்னவர்கள் இந்தச் சரீர சம்பந்தத்தோடே
இருந்தும் பகவானுடைய அநுபவமாகிற சிறப்பினையுடையவராவர்கள் என்றவாறு.
அடிமேல் – திருவடிகளை. திருவடிகளிலே என்னலுமாம். சேமம்-காவல். தென்-அழகு. தெற்குத் திசையுமாம்.
செப்புவார் பிறந்தே சிறந்தார் என மாற்றுக. செப்புவார்: வினையாலணையும் பெயர்.

இத் திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்து வைத்தே பகவானுடைய
குணாநுபவத்தாலே எல்லாரிலும் சிறந்தவர்கள் என்கிறார்.
(விண்ணுள்ளாரிலும் சீரியர் ஆவர் )

நாமங்கள் ஆயிரமுடைய நம் பெருமான் –
“ஸ்வயம் பிரகாசகனான சர்வேச்வரன் ஆயிரம் திருப் பெயர்களை யுடையவனாயிருக்கிறான்” என்கிறபடியே,
குணங்களுக்கும் செயல்களுக்கும் வாசகமான திருப் பெயர்களை யுடையவனாகையாலே சர்வேச்வரனாகப் பிரசித்தனானவன்.
“தேவோ நாம சகஸ்ரவான் ஸஹஸ்ர பாஹு: ஸர்வஜ்ஞோ தேவோ நாம ஸஹஸ்ரவாந்”-என்பது, பாரதம்.
‘நம்’ என்பது, பிரசித்தியைக் காட்டும். பெருமான்-சர்வேச்வரன்.
“நம் பெருமாள் நம் மாழ்வார் நஞ்சீயர் நம் பிள்ளை என்பர் அவரவர் தம் ஏற்றத்தால்”-என்றது உபதேச ரத்தினமாலை.
‘ந என்பது, சிறப்புப் பொருள் உணர்த்தும்; நக்கீரன், நச்செள்ளை என்றாற்போல’ என்பர் நச்சினார்க்கினியர்.

அடி மேல் சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் –
புறம்புள்ள காற் கட்டுக்களை விட்டு, அவன் திருவடிகளையே தமக்கு ரக்ஷகமாகப் பற்றின ஆழ்வார்.

தெரிந்து உரைத்த நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் –
அவனுடைய திரு நாமங்கள் போலே, குணங்களையும் செயல்களையும் தெரிவிக்கின்ற ஆயிரத்திலும் ஆய்ந்து உரைத்த.
ஆயிரம் திருப் பெயர்களைச் சொன்னால் அவன் குணங்கள் தோற்றுமாறு போலே யன்றோ,
இவற்றாலும் அவன் குணங்களும் செயல்களும் தோற்றும்படி.

‘ஆயிரம் பாசுரங்களில் இவை பத்து’ என்னாமல், “நாமங்களாயிரத்துள் இவை பத்தும்” என்பான் என்? என்ன,
“நாமங்களாயிரமுடைய” என்றதனைத் திருவுள்ளத்தே கொண்டு, அதற்கு விடை அருளிச் செய்கிறார்
‘ஆயிரம் திருப்பெயர்களை’ என்று தொடங்கி. தோற்றும்படி ஆகையாலே
திருநாமங்களான ஆயிரம் என்னக் குறை இல்லை என்பது எஞ்சி நிற்கிறது.

தென் நகர் –
அழகிய நகரி.

சிறந்தார் பிறந்தே –
ஒருவனுக்குப் பிறக்கை போக்கித் தாழ்ச்சி இன்றிக்கே இருக்க,
அவனுக்குப் பல பிறப்பாய் ஒளி வருமாறு போலே,
இவர்களும் இங்கே பகவானுடைய குணங்களை அநுபவம் பண்ணுகையாலே சீரியர்கள்.

பிறந்தே சிறந்தார் என்று கூட்டுக.
பிறவியினையுடையராயிருந்தும் சிலாக்கியராயிருப்பார். பிறவியில் சிலாக்யதை கூடாது என்னுமதனையும்;
இத்தகைய பிறவியினை யுடையராயிருந்தும், சர்வேச்வரனுக்குப் பிறக்கப் பிறக்கக் குணங்கள்
புகர் பெற்று வருமாறு போன்று, இவர்களும் பகவதநுபவம் பண்ணுகையாலே சிலாக்கியராயிருப்பார்கள்
என்னுமதனையும் அருளிச் செய்கிறார் ‘ஒருவனுக்கு’ என்று தொடங்கி.
ஒருவனுக்கு – சம்சாரி சேதனனுக்கு.
பிறக்கை போக்கி-பிறக்கையைப் பற்ற; என்றது, பிறவியைக் காட்டிலும், வேறு ஒன்று தாழ்ச்சியின்றிக்கே
இருக்கையைத் தெரிவித்தபடி.
“சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர்”- திருவிருத்தம். 79.– என்னக் கடவதன்றோ.

இந்தப் பத்தினைக் கற்க வல்லவர்கள்; என்னைப் போலே அவன் இருந்த தேசத்திலே போகப் புக்கு
பலக் குறைவின் காரணமாக நடு வழியிலே விழுந்து நோவு படாதே
உகந்தருளின தேசத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர்கள்.
இவர்களுடைய ஜன்மங்கள் கர்மங்காரணமாக இருக்கச் செய்தே அவனுக்கு உறுப்பாகையாலே முக்தர்களுடைய
சரீரத்தைக் காட்டிலும் சிலாக்கியம்.
அடியார்களின் பொருட்டு அவதரித்த பகவானுடைய அவதாரம் போலே சிலாக்கியம்.

———————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

அன்யம் முனி பிரதிகதஸ் தத ஏவ கேதாத் அன்யம்
திவ்ய தேசம் கந்தும் பிரவ்ருத்தர் மநஸா அபிது
தத் போக்யதாம் அபித தத்த தத் அதீச பாதௌ
யாயாம் கதா இத் யகதயத் நவமே சைதைன்யம் –

அன்யம் முனி பிரதிகதஸ் -ஆசைப்பட்டது கிடையாமல்
தத ஏவ கேதாத் அன்யம் திவ்ய தேசம் கந்தும் பிரவ்ருத்தர் -வேறே திவ்ய தேசம் போக
மநஸா-மனசாலே போக உத்யோகித்தார் – ஆழ்வார் அனுபவம் மாநசமே தானே
தது ஈச -தத் அதீச -பாதௌ -திருவடிகளை
யாயாம் கதா -சென்று சேர்வது எப்போதோ -கழல் காண்பது ஒவ் ஒரு பாசுரத்தில் உண்டே
இத் யகதயத் -என்று அருளிச் செய்தார்
நவமே சைதைன்யம் -தீனரான ஆழ்வார்

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

காரேஸ் தனுஜா பவதி ஹரி ஸ்வாமித்வாத் ஸம்ஸ்ருதானாம் உபகரண
ரசாத் ஸ்வ இஷ்ட ஸம்ஸ்லேஷ கத்வாத் ஸர்வ ஆஸ்வாசகத்வத் பூம்நா
கபட வடுதயா தாருணா திவ்ய ஸ்தான உபாஸத்வாத்
பிரமத் தரி பரணாத் நாராயணத்வாத் அத்யாசன்ன ஸ்ரீதானாம்

காரேஸ் தனுஜா பவதி ஹரி–காரி மாறனுக்கு பிறந்த -ஆழ்வார் இப்படி கூறினார்
1-ஸ்வாமித்வாத்–திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ

2-ஸம்ஸ்ருதானாம் உபகரண ரசாத்–திருவல்ல வாழ் நகருள்
நின்ற பிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே-

3-ஸ்வ இஷ்ட ஸம்ஸ்லேஷ கத்வாத்–திரு வல்ல வாழ்
நச்சரவின் அணை மேல் நம்பிரானது நன்னலமே-

4-ஸர்வ ஆஸ்வாசகத்வத் பூம்நா–கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை
என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே-

5-கபட வடுதயா–திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–வஞ்சகன்-

6-தாருணா–திருவல்லவாழ்
நாதன் இஞ்ஞால முண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே

7-திவ்ய ஸ்தான உபாஸத்வாத்–திருவல்லவாழ்
நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே

8-பிரமத் தரி பரணாத்–திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே.-

9–நாராயணத்வாத்–திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே-
சர்வ நியந்த்ருத்வ -கீழே வாத்சல்யம் ஸ்வாமித்வம் பார்த்தோம் –
இங்கு வேறே நிர்வாகம் -தத் புருஷ பஹு வ்ரிஹி சமாவாச அர்த்தங்கள்

10-அத்யாசன்ன ஸ்ரீதானாம்–திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே–
அணித்தாக வந்து நித்ய வாசம் செய்து அருளுகிறார்-

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 49-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

அவதாரிகை –

இதில் ஸ்ரீ திரு வல்ல வாழ் ஏறச் செல்ல-புறச் சோலையில் போக்யதையால் நலிவு பட்டுப் பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்-
பெரிய ஆற்றாமையோடு ஸ்ரீ திருக் குடந்தையிலே புக்க இடத்திலும் தம்முடைய அபேஷிதம் கிடைக்கப் பெறாமையாலே
அங்கு நின்றும் புறப்பட்டு திருவடிகளே உபாயம் –என்று துணிந்த துணிவு கை கொடுத்து நடத்த
ஸ்ரீ திரு வல்ல வாழ் ஏறப் போய்-முட்டப் போக மாட்டாமல் மிகவும் தளர்ந்து
ஊரில் புறச் சோலையில் கிடந்து-அங்கு உண்டான வாத்திய கோஷ-வைதிக கிரியா கோலாகலம் செவிப்பட
மது மல்லிகை தொடக்கமான போக்யதை அனுசந்திக்கையாலும்-உள்ளுப் புக்கு அனுபவிக்க பெறாமையலும்
தமக்கு உண்டான ஈடுபாட்டை ஸ்ரீ நாயகன் இருப்பிடத்தே செல்லுவதாக புறப்பட்டுப் போய்
கிட்டி அனுபவிக்கப் பெறாமையாலே நடுவே கிடந்தது நோவு பட்டு
அங்கே புக்கு அவனைக் கண்டு ஸ்தோத்ரம் பண்ணப் பெறுவது என்றோ நாம் -என்று
தன் தளர்த்தியை பாங்கிமாருக்கு உரைக்கிற ஸ்ரீ நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிற
மானேய் நோக்கில் அர்த்தத்தை-மா நலத்தால் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார்-என்கை –

——————————————————–

மா நலத்தால் மாறன் திரு வல்ல வாழ் புகழ் போய்
தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் -மேல் நலங்கித்
துன்புற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு
பின் பிறக்க வேண்டா பிற—49-

பிரமத்துடன் ப்ரேமத்துடன் என்றுமாம் –
பின் பிறக்க வேண்டா பிற-அப்யாசத்துக்கு பின்பு திருவடிகளுக்கு ஆட்படாத ஜென்மம் பெற மாட்டார்
திருவடி கைங்கர்யம் இங்கே கிடைத்தாலும் அதே பேறு தான் -பகவத் அனுபவ ப்ரீதி ஜெனித கைங்கர்யம்
சாண்டில்ய வ்ருத்தாந்தம் -பெரிய திருவடி

———————————————–

வியாக்யானம்–

மா நலத்தால் மாறன்-
பெரிய பிரேமத்தாலே ஆழ்வார் –

திரு வல்ல வாழ் புகழ் போய் –
பிரேம ப்ரேரிதராய் பிரவேசிக்கைக்காக போய் –

தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் —
அவ் ஊர் தன் அருகில் -தான் இளைத்து -வீழ்ந்து-உள்ளே புக்கு அனுபவிக்க பெறாமால்
ஊரின் புறச் சோலையிலே
பல ஹானியாலும்-அங்குத்தை போக்யதையாலும்-நகர சம்ப்ரமங்களாலும்
கால் நடை தாராமல் தளர்ந்து வீழ்ந்து –

மேல் நலங்கித்-
அதுக்கு மேலே-தோழி மார் நிஷேத வசனங்களாலும் கலங்கி –

துன்புற்றுச் –
பகவத் அலாபத்தாலே மாறுபாடு உருவின துக்கத்தை யுடையராய் –

சொன்ன சொலவு –
அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகள்-
அதாவது
பத்ம சௌ கந்திகவஹம் -என்றும்
பத்ம கேசர சம்ஸ்ருஷ்ட -என்றும் -இத்யாதிப் படியே
வைகலும் வினையேன் மெலிய வானார் வண் கமுகும்
மது மல்லிகை கமழும் தேனார் சோலைகள் சூழ் -என்றும்
பொன்றிதழ் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவித் தென்றல் மணம் கமழும் -என்றும்
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும் -என்றும்
பாண் குரல் வண்டினொடு பசும் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழும் கானல் -என்றும்
ஓத நெடும் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர் -என்றும்
மாடுறு பூம் தடம் -என்றும்
மழலை வரி வண்டுகள் இசை பாடும் -என்றும்
விஸ்லேஷ தசையில் அங்குத்தையில் பரிமளம் அசஹ்யமாய்-கால் கட்டுகிறபடியையும்

மற்றும் உண்டான போக்யதைகளும் அப்படியே யாகியும்
வினையேன் மெலியப் பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க என்றும்
மாடுயர்ந்த ஓமப் புகை கமழும் என்றும்
நல்ல அந்தணர் வேள்விப் புகை மை நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் -என்றும்
வேத வைதிக க்ரியா கோலா ஹலங்களுக்கும்
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம் -என்றும்
நகர சம் ப்ரமங்களும்
நாயகன் வேத பிரதிபாத்யன் ஆகையாலும் வைதிக கர்ம சாமாராத்யன் ஆகையாலும்
ஸ்மாரகத்வேன பாதகம் ஆயிற்று
நகர சம்ப்ரமம் தானும் சம்ப்ரமத்துடனே புகப் பெறாமையாலே பாதகம் ஆயிற்று

அதுக்கு மேலே
என்று கொல் தோழிமீர் காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ-என்றும்
நிச்சலும் தோழிமீர் காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ-என்றும் –
பிரிய பரைகள் ஹித பரைகளாய் நிஷேதிக்கை யாலும்
தனக்கு ஓடுகிற த்வரையாலே அதுவும் சைதில்ய ஜனகம் ஆயிற்று –

கோனாரை அடியேன் கூடுவது என்று கொலோ -என்றும்
நின்ற பிரான் அடி நீர் அடியோம் கொண்டு சூடுவது என்று கொல் -என்றும்
நீடுறைகின்ற பிரான் கழல் காண்டும் கொல் நிச்சலுமே -என்றும்
நம்பிரானது நன் நலமே -என்றும் –
எந்நலம் கொல் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே -என்றும்
மாண் குறள் கோலப் பிரான் மலர் தாமரைப் பாதங்கள் காண்பது எஞ்ஞான்று கொலோ -என்றும்
நிலம் தாவிய நீள் கழலை -நாடொறும் வீடின்றியே தொழக் கூடும் கொல் -என்றும்
யாம் கண்டு கை தொழக் கூடும் கொலோ -என்றும்
நல்லருள் நம்பெருமான் நாராயணன் நாமங்கள்
தொல்லருள் நல் வினையால் சொலக் கூடும் கொல் -என்றும்
இப்படி திருவடிகளை தொழுகையும்-திரு நாமத்தாலே ஸ்துதிக்கையும்
பிரார்த்யம் ஆகையாலே சைதில்யம் மிக்கு இருக்கும் இறே-

இப்படி ஆகையாலே
மேல் நலங்கி-துன்பமுற்று சொன்ன சொல் இவை யாயிற்று –
இத்தசையிலும் –
அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் -என்று இறே
இவர் அத்யாவசியம் குலையாது இருக்கும் படி –

துன்பமுற்று சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு –
இப்படி விஸ்லேஷ வ்யசன உக்தராய் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்தியான
இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லாருக்கு –

பின் பிறக்க வேண்டா –
இதன் அப்யாச அநந்தரம்-ஜன்மம் பரிக்ரஹம் பண்ண வேண்டா
ஜென்மத்தை முடித்தே விடும்
பிற -என்று அவ்யயம்
அன்றிக்கே
திருவடிகளுக்கு அசலான ஜன்மம் எடுக்க வேண்டா -என்றாகவுமாம் –

பின்பு கற்க வேண்டா பிற -என்ற பாடம் ஆன போது
இத்தை ஒழிய வேறு ஒன்றை அப்யசிக்க வேண்டா என்றபடி –

—————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -122- திருவாய்மொழி – -5-9-1….5-9-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

June 11, 2016

(நோற்ற நாலும்
அர்ச்சையில் நான்கும் வைபவத்தில் ஒன்றும்
ஆண் பாவத்தால் நான்கும் பெண் பாவத்தில் ஒன்றும்
ஐந்தாம் பத்தில் நான்கும் ஆறாம் பத்தில் ஆறாம்
ஐந்தும் ஐந்து தேச திவ்ய தேசம்-பாண்டிய சோழ சேர வட விபவம் -இவர் துறை ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் தானே
சேர நாட்டு திவ்ய தேச அனுபவம் நம்மாழ்வார் ஆழ்ந்து அருளிச் செய்வார்
திருமங்கை ஆழ்வார் பத்து இடங்களில் சரணாகதி )

திருக் குடந்தையிலே சென்று புக்கவிடத்திலும் தம் எண்ணம் நிறைவேறாமையாலே திருவல்லவாழ் ஏறப்போக ஒருப்பட்டார்;
திருக் குடந்தையிலே சென்று புக்கவிடத்தில் தம் எண்ணம் சித்தியாதது போன்று,
திருவல்லவாழிலே முட்டப் போகவுங் கூட அரிதாயிற்று;
அங்ஙனம் அரிதாம்படி தமக்குப் பிறந்த துன்பத்தை அந்யாபதேசத்தாலே-அந்ய உபதேசம்- அருளிச் செய்கிறார்.

“மாசறு சோதி”-5-3- என்ற திருவாய்மொழியில், இவர் தாம் மடல் எடுக்கப் புக்கு, ‘அவனுக்குத் தாழ்வாம்’ என்று தவிர்ந்தார்;

ஸ்வாபதேசத்திலே சங்கித்துப் பரிஹரிக்கிறார் ‘மாசறு சோதி’ என்று தொடங்கி. ‘அவனுக்குத் தாழ்வாம்’ என்றது,
அவனுடைய ரக்ஷகத்வத்துக்குத் தாழ்வாம் என்றபடி. “ஊரெல்லாம்” என்ற திருவாய்மொழியின் முன்னுரையில்
‘சூரியன் மறைகையாலே மடல் எடுக்கை தவிர்ந்தார்’ என்று அருளிச் செய்தாரே யாகிலும், இங்கு,
‘அவனுக்குத் தாழ்வாம் என்று தவிந்தார்’ என்று அருளிச் செய்கையாலே, இதுவும் ஒரு காரணமாகக் கோடல் தகும்.
(அங்கு இரவு வந்ததால் மடல் எடுக்கவில்லை -இதுவும் ஒரு நிர்வாகம் )

இங்கு, ஆற்றாமை தோற்றக் கண்ட திருப்பதிகள் தோறும் புக்குத் திரியா நின்றார்;
இதற்கு அடி யாதும் தெரிகிறதில்லை.
அங்கு, அவன் ஸ்வரூபம் பரிஹரித்தார்,
இங்கு, தம்முடைய ஸ்வரூபம் நோக்கப் பார்க்கிறார்;

‘இதற்கு அடி யாதும் தெரிகிறதில்லை’ என்று சங்கையை இரண்டு விதமாகப் பரிஹரிக்கிறார்
‘அங்கு அவன்’ என்று தொடங்கியும்,
‘அங்கு வடிவிலே’ என்று தொடங்கியும்.
‘அவன் ஸ்வரூபம் பரிஹரித்தார்’ என்றது, அவனுடைய நிருபாதிக ரக்ஷகத்வத்துக்குத் தம்முடைய முயற்சி விரோதமாகையாலே,
தம்முடைய முயற்சியை விட்டார்-மடல் எடுப்பதைத் தவிர்த்தார் – என்றபடி.
‘இங்கு, தம்முடைய ஸ்வரூபம் நோக்கப் பார்க்கிறார்’ என்றது, அநுபவம் இல்லாத போது சத்தை கிடவாமையாலே,
திருப்பதிகள் தோறும் புக்காகிலும் அவனை அநுபவித்துச் சத்தையை நோக்கப் பார்க்கிறார் என்றபடி.
இதனால், தம்முடைய சத்தையை உண்டாக்கியே அத்தலையை நோக்க வேண்டுகையாலே தம்முடைய சத்தையைச் சித்திக்கும் பொருட்டுத்
திருப்பதிகள் தோறும் புக்கு அநுபவிக்கப் பார்க்கிறார் என்று பரிஹரித்தாராயிற்று.

அங்கு வடிவிலே அணைய வேணும் என்று ஆசைப்பட்டார்;

அங்கு, வடிவிலே அணைய வேணும் என்று ஆசைப்பட்டார்’ என்றது, “மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை” என்றதனைத்
திருவுள்ளம் பற்றி. ‘ஆசைப்பட்டார்’ என்றது, ஆசைப்பட்ட மாத்திரமாகையாலே
“தத் தஸ்ய சத்ருஸம் பவேத் – அச்செயல் அவருக்கு ஒத்ததாகும்” என்றிருக்கலாம் என்றபடி.

பின்பு இவ்வளவும் வர அந்த வடிவிலே இறங்கி மூழ்கினபடியாலே ஆற்றாமை முறுகி,
“கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்” என்கிறபடியே,

“கொம்மை முலைகள் இடர்தீரக் கோவிந் தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவந்தான் என்”-என்பது, நாய்ச்சியார் திரு. 13 : 9.

அடிமை செய்ய ஆசைப்படுகிறார்.
‘அடிமை செய்ய ஆசைப்படுகிறார்’ என்றது, “அடி கூடுவது என்று கொலோ” என்றதனைத் திருவுள்ளம் பற்றி.

இனி, இவர் தமக்குக் கலவியாவது, மானச அநுபவம் என்றே யன்றோ திருவாய்மொழியின் முன்னுரையிலே அடியிலே சொல்லிற்று;

‘திருவாய்மொழியின் முன்னுரையிலே’ என்றது, முதற் பத்திலே ‘திருமகள் கேள்வன் ஒன்றிலே’ என்றபடி.

இங்ஙனேயிருக்க, திருவல்ல வாழ் ஏறப் புறப்பட்டுப் போகையாவது என்? உறவினர்கள் விலக்குதலாவது என்? என்னில்,

‘புறப்பட்டுப் போகையாவது என்?’ என்றதன் பின், ‘முடியப் போக மாட்டாமல் புறச் சோலையிலே விழுந்து கிடக்கையாவது என்’ என்பது
எஞ்சி நின்றது; அதனைக் கூட்டிக் கொள்க.

அந்த மானச அநுபவத்திற்கு ஒரு கலக்கம் வர அமையுமன்றோ.

இரண்டற்கும் விடை அருளிச் செய்கிறார் ‘அந்த’ என்று தொடங்கி.
‘அந்த மானச அநுபவத்திற்கு ஒரு கலக்கம் வர அமையும் அன்றோ’ என்றது,
திருவல்லவாழ் ஏறப் போகிறது, மானச அநுபவமாய், முடியப் போக மாட்டாமல் புறச்சோலையிலே விழுந்து கிடக்கை, மானச அநுபவ
அபாவத்தால் வந்த கலக்கம் என்றபடி.
“உறவினர்கள்” என்றது, ஸ்வாபதேசத்தில், சம்பந்த ஞான உபாய அத்யவஸாய நிலைகளை.
‘அவர்கள் விலக்குதல்’ என்றது, சம்பந்த ஞான உபாய அத்யவஸாய நிலைகளோடு கூடினவராய் நிரூபிக்குமளவில், தம் முயற்சி, அவனையே
ரக்ஷகனாகக் கொண்டிருத்தல் அவனுக்கே பரதந்திரப் பட்டிருத்தல் ஆகிற ஸ்வரூபத்திற்கு முரண்பட்டதாகத் தோன்றுதலைக் குறித்தபடி.

நான்கு வீதிகளில் நான்கு பிரகரணங்கள் -ஆச்சார்ய ஹிருதயம் -சாதித்து அருளி நாயனார் –
சம்பந்தம்-ஞானம் -தோழி பாசுரம் -பிரணவார்த்தம்
உபாய அத்யவசாயம் -தாயார் -நமஸ் சப்தார்த்தம்
பேற்றுக்கு த்வரிக்கை -தலைமகள் -நாராயணாயார்த்தம் –

எம்பெருமானோடே கலந்து பிரிந்து பிரிவாற்றாமையாலே நோவு படுகிறாள் ஒரு பிராட்டி, தன்னுடைய குடிப் பிறப்பு முதலானவற்றையும் பாராமல்,
(பிராசங்கிகமாகச் சங்கித்துப் பரிகாரம் செய்து, பின், இத் திருவாய்மொழியில் அருளிச் செய்யப்பட்ட பொருளை விரித்து அருளிச் செய்கிறார்
‘எம்பெருமானோடே’ என்று தொடங்கி.
ஆபி ஜாதியாதிகளையும்-‘குடிப் பிறப்பு முதலானவற்றையும்’ என்ற உம்மை, அவனுடைய ரக்ஷகத்வம் முதலான குணங்களைத் தழுவுகிறது.)
திருவல்லவாழ் ஏறப் புறப்பட்டுப் போகப் புக, இதனை அறியும் தோழிமார் வந்து
‘இது கார்யம் அன்று, நம் தலைமைக்குப் போராது காண்’ என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க,
‘இனி, நீங்கள் சொல்லுகிறவற்றால் நான் பெற்றது என்;
1-அவ்வூரில் திருச்சோலையும்,
2-அங்குண்டான பரிமளத்தைக் கொய்துகொண்டு புறப்படுகிற தென்றலும்,
3-அங்கே தேனைக் குடித்துக் களித்துப் பாடாநின்றுள்ள வண்டுகளினுடைய இனிதான மிடற்றோசையும்,
4-ஊரிலுண்டான வைதிகக் கிரியைகளின் கோலாஹலங்களும்,
5-நகர சம்பிரமங்களும், இவையெல்லாம், -இந்த ஐந்தும் –

இத் திருவாய்மொழியில் வருகின்ற
1-“தேனார் சோலைகள்”,2- “தென்றல் மணம் கமழும்”, 3-“பாண் குரல் வண்டு”, 4-“பாடு நல் வேத ஒலி”, 5-“மண்ணும்
விண்ணும் தொழநின்ற” என்ற பாசுரப் பகுதிகளைத் திருவுள்ளம் பற்றி -“அவ்வூரில் திருச்சோலையும்” என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.

நீங்கள் என்னை மீட்க நினைப்பதைப் போன்று ‘அங்கே போரு போரு’ என்று-ஒரே திசை நோக்கி -அழையா நின்றன;
ஆன பின்பு, நீங்கள் சொல்லுகிறவற்றால் பெற்றது என்’ என்று தன் துன்பத்தை அவர்களுக்கு அறிவுறுத்தி
அவர்களை வேண்டிக் கொண்டு;
திருவல்லவாழிலே நான் நினைத்தபடியே போய்ப் புக்குப் பரிமாற வல்லேனே என்று அவர்களுக்குச் சொல்லுகிறாளா யிருக்கிறது.

இத் திருவாய்மொழியில் வருகின்ற
“மானேய் நோக்கு நல்லீர்”, “நன்னலத் தோழிமீர்காள்” என்பனவற்றைத் திருவுள்ளம் பற்றி
‘அவர்களை வேண்டிக் கொண்டு’ என்கிறார்.

‘இதுதான் நான் அநுபவித்தேன்’ என்று சீயர் அருளிச் செய்வர்.
பட்டர் திருவடிகளை ஆஸ்ரயித்துப் பின்பு ஒரு கால் மேல் நாட்டுக்கு எழுந்தருளி மீண்டு
பெரிய விரைவோடே ‘திருநாளுக்கு உதவ வேணும்’ என்று வர,
திருக்கரம்பன் துறையளவிலே வந்தவாறே நினைவின்றிக்கே காவிரி பெருகிக் கிடக்க;
இராத் திருநாள் எழுந்தருளி இங்குண்டான சம்பிரமங்களெல்லாம் செவிப் படுவது,
வந்து புகுரப் பெறாதொழிவதாய்க் கொண்டு ‘போர நோவு பட்டோம்’ என்று அருளிச் செய்வர்.

ஏகத த்வித த்ரிதர்கள் -மானச புத்ரர்கள் சனகாதிகள் -சுவேதத் தீபத்தைச் சென்று கிட்டி, உள்ளுப் புகுகைக்குத்
தகுதியில்லாமையாலே புறம்பே நின்று, அங்குள்ளார் எம்பெருமானைக் கண்டு படுகிற சம்பிரமத்தைச் செவியாலே கேட்டு நிற்பது,
கண்ணாலே காணப் போகாதொழிவதாய்க் கிடந்து- பட்டாற்போலே கிடந்து கூப்பிடுகிறாராயிற்று இவரும்.

அங்குத்தை வியாபாரங்களும் செவிப்படா நிற்கக் கிட்டப் பெறாமல் சமீபத்தில் நின்று நோவு பட்டமைக்கு இரண்டு திருஷ்டாந்தங்கள்
காட்டுகிறார் ‘இது தான்’ என்றும், ‘ஏகத த்வித த்ரீதர்கள்’ என்றும் தொடங்கி.
‘திரு நாள்’ என்றது, மார்கழி மாதத்து அத்யயன உத்ஸவத்தை.
‘ஏகத த்வித த்ரிதர்கள்’ என்றது, பிரஹ்மாவினுடைய மானச புத்திரர்களான இருடிகளை.

ஸ்ரீ வல்லபன் — கோலப்பிரான் -ஆறு திவ்ய தேசங்கள் நடுவில் நடு நாயகமாய் —
நோற்ற நாலும் 5 சரணாகதி -10 தடவை -திருமங்கை -அசக்ருத் சரணாகதி –
இது மட்டும் நாயகி பாவம் சரணாகதி –
வேத சதுஷ்டயம் -அங்கம் -17 வித பொருத்தம் -தூது நாயகி -அநுகரிக்க -மடல் -ஊடல் போல்வன -அசக்ருத் பிரபத்தி கரணம்
-திரு இந்தளூரில் ஆணாக ஊடி –
பிராட்டி சம்பந்தம் உலகம் உண்ட -ஒன்றிலும்
அர்ச்சையில் நான்கும் விபவத்தில் ஒன்றும் என்றுமாம் –
ஐந்தும் -ஐந்து விதம் -பாண்டிய -சோழ –சேர -வட நாட்டு திவ்ய தேசம் -விபவம் ஒன்றும் –
இவர் துறை -தேர் கடாவிய கனை கழல் மேலே பிராவண்யம் –

—————————————————————————————–

மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-

கோனாரை அடியேன்-நாயகி -பிரேம தசையில் இருந்தாலும் ஸ்வாமி தாஸ பாவம் மாறாதவர் -அடிச்சியோம் என்பாரே –
ப்ரேமம் புருஷார்த்தம் மற்ற சம்ப்ரதாயம்
கைங்கர்யமே புருஷார்த்தம் நம்மது –

நிரதிசய போக்யமான சோலைகளை உடைய -திவ்ய தேசம் -நிருபாதிக ஸ்வாமி திருவடிகளை
என்று கிட்டுவேன் -தடுக்க வந்த தோழிகளைக் குறித்து தலைமகள்
மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய-மான் விழி போன்ற மருண்ட கண்கள் -என் பக்கல் நலமே நிரூபகம் –
நினைத்த படி கிட்டி பரிமாற ஒண்ணாத -எப்பொழுதும் மெலியும் படியாக
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்-மெலிய மெலிய கமுகு வளருகின்றன -இதுவே தாரகம் –
நல்ல திவ்யதேசம் நல்ல ஸ்வாமி என்கிறாள்
ஆகாசம் முழுவதும் -மல்லிகைக்கு உடம்பைக் கொடுக்கும் கமுகு -வண்மை
இவனுக்கு தெரிய வில்லையே -என்றவாறு -அத்துடன் சேர்த்தியாலே மது பெருகும் -பரிமளத்துடன்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்-மதுவும் பரிமளம் ஆக்ருஷ்டம் வண்டுகள்
எண்ணிறந்த யானைகள் -புறப்பாடு இங்கே உண்டே –
மெலிய வானார் கமுகு-மெலிய கோனார் -இவரும்-ஸ்வாமி ஆனார் –
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?
மேன்மைக்கு தோற்ற அடியேன் -திருவடிகளில் என்று சேர்வேன் -என்றவாறு

மான் பார்வை போன்ற பார்வையை யுடைய பெண்களே! வினையேன் நாள் தோறும் மெலியும் படியாக, ஆகாயம் வரையிலும் உயர்ந்திருக்கிற
வளவிய பாக்கு மரங்களும், தேன் பொருந்திய மல்லிகையும் வாசனை வீசுகின்ற தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருவல்லவாழ்
என்னும் திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற சர்வேச்வரனுடைய திருவடிகளிலே அடியேன் சேர்வது என்று கொல்? என்கிறாள்.
“மானேய்” என்பதில், ஏய்: உவம உருபு. நோக்கு – கண்கள். பார்வையுமாம். கமுகு-பாக்கு மரம். மல்லிகை – முல்லை விசேடம்.
கோனார் என்பதில், கோ என்பதற்கு, தலைவன் என்பது பொருள்; னகர ஒற்று, சாரியை; ஆர், உயர்வுப்பொருளைக் காட்ட வந்த விகுதி.
இத் திருவாய்மொழி, கலிநிலைத்துறை.

தோழிமாரைக் குறித்து, திருவல்ல வாழிலே நின்றருளின சர்வேச்வரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவது என்றோ? என்கிறாள்.

மான் ஏய் நோக்கு நல்லீர் –
“நான் திருவல்லவாழிலே போய்ப் புகும்படி உங்கள் கண்களாலே குளிர நோக்கித்
திருவருள் புரிய வேணும் என்கிறாள்” என்று பிள்ளான் பணிப்பர்.–நோக்கு -கடாஷம் / கண்

மான் ஏய் நோக்கு நல்லீர் –
மானை ஒத்த நோக்கினை யுடையீராய் எனக்கு நல்லவர்களே!
அன்றிக்கே,
‘பிரிவாற்றாமையாலே நோவு பட்டும், சோலை யழகிலே ஈடுபட்டும், நம்முடைய ஹித வசனத்தாலே தளர்ந்தும் இருக்கின்ற இவளுக்கு,
‘போகலாகாது’ என்று விலக்கும் நம்முடைய வார்த்தைகள் செவிப்படுமாகில், இவள் மோஹிக்கும் என்று
விலக்குகிற காரியம் தோற்றும்படி காதரேக்ஷணைகளாய்க் கொண்டிருக்க, ‘மான் ஏய் நோக்கு நல்லீர்’ என்கிறாள் என்னுதல்.

முதலிகள் பெருமாள் திரு முகம் கன்னி விடும் என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வானை குற்றம் சொல்லாமல் இருந்தது போலே இவர்களும் –
இவள் தனக்கு “அசூயையில்லாத” என்னும் இவ்வளவே அன்றோ வேண்டுவது.
“இதம் து தே குஹ்ய தமம் ப்ரவக்ஷ்யாமி – -வைப்பாக வைத்ததையுமெல்லாம்-(பக்தி யோகம் -) சொல்லா நின்றேன் கேள். அநஸூயவே –
“இதம் து தே குஹ்ய தமம் ப்ரவக்ஷ்யாமி அநஸூயவே ஜ்ஞாநம் விஜ்ஞாந ஸஹிதம் யத்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே அஸூபாத்”-என்பது, ஸ்ரீ கீதை. 9 : 1.
அத்தலை குறைவற்ற பின்பு இத்தலை கிடக்குமோ.”–அத்தலை -அர்ஜுனன் -இத்தலை -ஸ்ரீ கிருஷ்ணன்
பக்தி யோகம் விரிவாக அருளிச் செய்வதற்கு முன்பு -பொறாமை இல்லாததே அதிகாரம் -என்றவாறு –
நிஷேதிக்காமல் இருந்ததே நன்மை என்றவாறு –

வைகலும் வினையேன் மெலிய –
ஒரு கால் மெலிந்து தரித்திருப்பார்க் கன்றோ பிரிவாற்றலாவது.

வைகலும் மெலிய –
காலம் கழியக் கழியக் காதல் கழியும்படி யன்றோ-விஷயாந்தரங்களை -சிற்றின்பத்தை விரும்பி யிருப்பார்க்கு இருப்பது;
மனனம் பண்ணி, பாவனையாய், பின்பு தரிசனமாய், பிரத்யக்ஷ சமான ஆகாரமாய்,
பின்பு சரீரம் நீங்குங் காலத்தைப் பார்த்திருப்பார்படி அன்றோ இது.

“தஸ்ய தாவ தேவ சிரம் யாவந் ந விமோக்ஷ்யே அத ஸம்பத்ஸ்யே” என்பது, சாந்தோக்யம்.
“தஸ்ய-அந்த எனக்கு,
அத ஸம்பத்ஸ்யே-பின்பு சம்பந்நனாகக் கடவேன் என மேலே வருகின்ற தன்மை ஒருமை வினைமுற்றோடு கூட வேண்டுமே.
மே -அத்யாகாரம் செய்துகொண்டு -அந்த எனக்கு -உத்தம -புருஷ வாக்கியம் –
யாவந்ந விமோக்ஷயே – எத்துணைக் காலம் சரீரத்தினின்றும் விடுபடாமல் இருக்கிறேனோ,
தாவ தேவ சிரம் – எனக்கு அவ்வளவே கண்டாய் விளம்பம்.
அத ஸம்பத்ஸ்யே – பின்பு சம்பந்நனாகக் கடவேன்.” என்றது,

எத் துணைக் காலம் சரீரத்தினின்றும் விடுபடாமலிருக்கிறேனோ, அத் துணைக் காலந்தான் எனக்குத் தாமதம் அவனைப் பெறுவதற்கு;
சரீரம் விடுபட்ட பின், அவனை நான் பெறுவேன் என்பது இவ்வுபநிடத வாக்கியத்தின் பொழிப்புரையாகும்.
“இந்த ஆத்மா இந்தச் சரீரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைந்து தானான நிலையைப் பெறுகிறான்” என்றபடி.
எஷ ஸம்பிரஸாத: அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்ஜ்யோதி: உபசம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யேத’-என்பது, சாந்தோக்யம்.
இப்படிச் சரீரம் விட்டு நீங்கும் தினத்தைப் பார்த்திருப்பார் படி அன்றோ இது.

வைகலும் வினையேன் மெலிய –
தன்னைப் பிரியும்படி மஹாபாவத்தைப் பண்ணின நான், நாடோறும் தொடர்ந்து வருகிற வியசனத்தாலே மெலிவினை யுடையவளாக.
ஒரு நாள் மெலியப் பொறுக்க மாட்டாத தன்மையினை யுடையவள் காண்!- நெடுநாள் நோவு படுகிறாள்.

திருவடி கண்டு போந்த பின்பு பிராட்டி படுவன வெல்லாம் படுகிறாளாயிற்று இவளும்.
ஓர் இரவின் வியசனத்தைத் திருவடி-நம்மாழ்வார் -சடாரி தானே இவர்– பொறுக்க மாட்டிற்றிலன் அன்றோ;
இவள் நாள் தோறும் மெலிவதற்குப் பிராட்டியின் மெலிவினைத் திருஷ்டாந்தம் காட்டுவதற்குத் திருவுள்ளம் பற்றி அதற்கு அவதாரிகை
அருளிச் செய்கிறார் ‘ஒருநாள் மெலிய’ என்று தொடங்கி.
‘திருவடி கண்டு போந்த பின்பு’ என்றது, இலங்கையிலே போந்து பிராட்டியைக் கண்ட பின்பு என்றபடி.
பிரிவுற்ற நிலையிலே பிராட்டி பட்ட படிக்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘இமாம்’ என்று தொடங்கி.

“இமாம் அஸித கேசாந்தாம் ஸத பத்ர நிபேக்ஷணாம் ஸு கார்ஹாம் துக்கிதாம் த்ருஷ்ட்வா மமாபி வ்யதிதம் மந:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16.
“இமாம் அஸித கேஸாந்தாம்-
மை வண்ண நறுங்குஞ்சியை யுடையவர்க்கும் பேணத் தகும் குழலையுடையவள் காண்.
இங்கே திருநெடுந்தாண்டகம் 21-ஆம் திருப்பாசுரம் அதுசந்தேயம்
ஸத பத்ர நிபேக்ஷணாம் –
ராம கமலா பத் ராக்ஷ -‘கமலக் கண்ணன்’ என்கிற கண்களாலே கண்டு கொண்டிருக்கத் தக்க கருங் கண்களை யுடையவள் காண்.
ஸுகார்ஹாம்-
அவர் மடியிலே இருக்கத் தகுமவள்.
துக்கிதாம் த்ருஷ்ட்வா-
இந்த இருப்பு இருக்கத் தகாதவளைக் கண்டு.
மமாபி வ்யதிதம் மந:-
இன்ப துன்பங்களுக்கு அழியாத என்னுடைய நெஞ்சுங்கூட வருந்திற்றுக் காண்.”
இப்படியே காணும் இவளுக்கும் இருக்கிறபடி.

வினையேன் –
நாள் செல்ல நாள் செல்ல ஆசை கழியாதபடியான பாவத்தைச் செய்தேன்
மெலிய, திருவல்லவாழ் உறையும் என்னுதல்.
மெலிய-நீர்ப்பண்டமாய் அழிகிறபடி.

வான் ஆர் வண் கமுகும் மது மல்லிகை கமழும் தேனார் சோலைகள் சூழ் திரு வல்ல வாழ் உறையும் கோனாரை –
இதனால், இத்தலை மெலிய மெலிய அத்தலை மல்கா நின்றது என்பதனைத் தெரிவித்தபடி.
அவ்வூரிற் சோலைக்கு நீர் இத் தலையில் மெலிவு போலே காணும்.

ஆகாயத்தைக் கண் செறி இட்டாற் போல் இருத்தலின் ‘வானார்’ என்கிறது.
இவள் இருக்கிற இடம், “மரங்கள் எல்லாம் உலர்ந்து விட்டன” என்னும்படியாக இருக்கும்.
அவன் இருக்கிற இடம், “காலம் அல்லாத காலத்திலும் மரங்கள் பலத்தைக் கொடுக்கக் கூடியனவாக இருக்கும்.”
“அபி விருக்ஷா: பரிம்லாநா:”, “அகால பலி நோ வ்ருக்ஷா:” என்பன, ஸ்ரீராமா.

காட்சிக்கு இனியதாக இருத்தலின் ‘வண் கமுகு” என்கிறது.
“குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளை முத்தும், தலையார்ந்த இளங்கமுகு” இது, பெரிய திருமொழி, 6. 9 : 8.
என்னுமாறு போலே இருத்தல்.
அன்றிக்கே,
கொடி தொடர வேண்டாதே, தானே கொடிக்கு உடம்பு கொடுத்து நிற்கிற ஒளதார்யம் என்னலுமாம்.
மெய்யே கொடுக்கிற ஒளதார்யம் அன்றோ இது. -மெய் சரீரம் சத்யம் –
மதுவை யுடைத்தான மல்லிகைகளின் பரிமளம் இவள் இருந்த இடத்தே வந்து அலை எறிதலின், ‘மல்லிகை கமழும்’ என்கிறாள்.
மலட்டுக் கொடியாயிராமல் பூகத்தோடே அணைந்து பரப்பும் பூவாயிருத்தலின், ‘மது மல்லிகை’ என்கிறாள்.
இதற்கு முன்பு சொன்னவை எல்லாம் ஆஸ்ரய மாத்திரமேயாய்த் தேனே மிக்கிருத்தலின்,தேனார் சோலைகள்’ என்கிறாள்.

ஆக, வானார் வண் கமுகுகள் தேன் வெள்ளத்திலே அலைந்து,
பிரளய காலத்தில் மார்க்கண்டேயன் பட்டவெல்லம் படாநின்றன என்றபடி.
இருவரும் கூட இருந்து மது பானம் பண்ணிக் களிக்க வேண்டி யிருக்க,
நான் மெலியத் தாமே மதுபானம் பண்ணி வாழ்கின்றவர் என்பாள்,
‘தேன் வெள்ளமிடுகிற சோலைகள் சூழ்ந்த திருவல்லவாழ் உறையும் கோனாரை’ என்கிறாள்.

பாவியேன், இவ்வளவிலே “மதுவையும் குடிப்பது இல்லை” என்ன வேண்டாவோ.
“ந மாம்ஸம் ராகவோ புங்க்தே ந சாபி மது ஸேவதே”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 42. திருவடி கூறியது.
இவர், இவ்வாற்றாமையோடே இருந்து சோலையைக் கவி பாடுகிறது, உள்ளே நிற்கின்றவனைப் போன்று இவையும்
இனிய பொருளாக இருக்கையால் அன்றோ. மனத்தினை உள் முகமாக்கி அநுபவிக்க மாட்டாதார்க்கு,
தன்னை அவர்கள் கண்களுக்கு இலக்காக்கிக் கொண்டு உபாய வஸ்து நிற்கிறாப் போலே காணும் இவையும்.

யாவர்க்கும் தொழுகுலமான சர்வேச்வரனுடைய உபாய பாவத்தில் நிலை போலே.
நித்தியப் பிராப்யனாய்க் கொண்டு அங்கே இருக்கிறவன், அடியார்கள் உகந்தது ஒரு பொருளைத் திருமேனியாகக் கொண்டு
முகங்கொடுத்துக் கொண்டு நிற்பது போலே, அங்குள்ளாரும் இங்கே போந்து
தாவரங்களையும் ஜங்கமங்களாயும் விலங்குகளாயும் அவனை விடமாட்டாதே நிற்கிறபடி.

நித்தியரும், முக்தரும், சம்சாரிகளில் ருசியுடையாரும் உகந்தருளின நிலங்களைப் பற்றி யன்றோ கிடப்பது.
“இயல்பாயமைந்த சேஷத்வத்தையுடைய நித்திய ஸூரிகளும், சம்சார சம்பந்தம் நீங்கப்பெற்ற முக்தர்களும்,
பாவங்கள் எல்லாம் நீங்கி இனிமேல் சரீர சம்பந்தம் இல்லை என்னும்படி முடிவான சரீரமுடையவர்களான முமுக்ஷு க்களும் ஆகிய இவர்கள்,
மனிதப் பிறவியையும் விலங்கின் பிறவியையும் தாவரப் பிறவியையும் விரும்பினவர்களாய்க் கொண்டு
ஸ்ரீரங்கத்தை எப்போதும் பற்றியிருக்கிறார்கள் என்று பௌராணிகர்கள் சொல்லி வைத்தார்கள்;

நித்திய ஸூரிகள், தாவரம் முதலானவைகளாக இங்கே தங்கியிருப்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘இயல்பாயமைந்த’ என்று தொடங்கி.

“அஹ்ருத ஸஹஜ தாஸ்யா: ஸூரய: ஸ்ரஸ்தபந்தா: விமல சரம தேஹா இத்யமீ ரங்கதாம”
மஹித மநுஜ திர்யக் ஸ்தாவரத்வா: ஸரயந்தே ஸுநியதம் இதி ஹஸ்ம ப்ராஹு: எப்யோ நம: ஸ்தாத்”-என்பது, ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்.

இப்படிப்பட்ட மனித விலங்கு தாவரங்களின்பொருட்டு நமஸ்காரம் ஆகுக” என்றார் பட்டர்.
இராமாவதாரத்திலும் ஒரு இலக்குமணன் முதலியோர்கள், வானரங்களின் உருவத்தை அடைந்தார்கள்,

‘சர்வேஸ்வரன் அவதரித்த இடத்திலே நித்தியசூரிகள் முதலானோர்களும் அவதரிப்பர்கள்’ என்பதற்கு அநுஷ்டானமும் காட்டுகிறார்
‘இராமாவதாரத்திலும்’ என்று தொடங்கி. இலக்குமணன் முதலியோர்கள்-நித்தியர்கள். வானரங்களின் உருவத்தை யடைந்தவர்கள்
-தேவர்கள். விபீஷணன் முதலியோர்-முமுக்ஷு க்கள்.

வானுளோ ரனைவரும் வான ரங்களாக் கானினும் வரையினும் கடித டத்தினும்
சேனையோ டவதரித் திடுமின் சென்றென ஆனன மலர்ந்தனன் அருளின் ஆழியான்.
வளையொடு திகிரியும் வடவை தீதர விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்
இளைஞர்கள் எனவடி பரவவேகி நாம் வளைமதில் அயோத்தியில் வருதும் என்றனன்.- என்பன, கம்பராமாயணம்.

விபீஷணன் முதலியோர் பற்றிக் கிடந்தார்கள். அது போன்று. அதிலும் நடையாடித் திரிகின்றவர்கட்குப் போகைக்கும் தகுதி
உண்டேயன்றோ, அதுவும் இல்லையே அன்றோ ஸ்தாவரங்களுக்கு.

ஜனநாதப் பிரஹ்மராயர் திருமுடிக்குறையிலே ஒரு மரம் வெட்டப்புக,
(திருமுடிக்குறை – பெருமாளுடைய திருமுடிப் பிரதேசமான உபய காவேரியின் மத்தியப் பிரதேசம். )
அதனை எம்பார் கேட்டு ‘அல்லாளப் பெருமாளே! ஈஸ்வர விபூதியை அழிக்கப் பார்த்தாயோ’ என்ன,
இவர் சொல்லும் வார்த்தையைக் கேட்கைக்காக, ‘ஈஸ்வர விபூதி அல்லாத இடம் உண்டோ’ என்ன,
‘அவை போல் அல்ல காண் இவை; சார்வ பௌமனான ராஜாவும் தேவியுமாக முற்றூட்டாகக்
குடநீர் வார்த்து ஆக்கும் சோலை போலே, பெருமாளும் பெரிய பிராட்டியாருங்கூடக் கைதொட்டு ஆக்குமவை காண்’ என்று அருளிச் செய்தார்.

உகந்தருளின நிலங்களிலே மெய்யே பிரதிபத்தி விளைந்தார்க்கு அங்குள்ளவை எல்லாம் உத்தேஸ்யமாகத் தோன்றுமன்றோ.
கால் வாங்கி யல்லது நிற்க ஒண்ணாத சம்சாரம் அவனுக்குரியது என்னும் தன்மையாலே ஒருகால் உத்தேஸ்யமாகா நின்றதன்றோ.
பிரமாணத்தில் பிறக்கும் எண்ணம் போலன்று கண்களுக்கு இலக்கானால் இருப்பது,
முக்தரைப் போன்று பிரத்தியக்ஷ சமானமன்றோ ஆழ்வார்க்குத் ததீயத்வ ஆகாரம்.
பிரமாணத்தை நம்பினவனுக்கு இங்ஙனமல்லது எண்ணம் இல்லையன்றோ.

நல்லான், பட்டர் திருவடிகளை ஆஸ்ரயித்து நெடுங்காலம் சேவித்து, பின்பு மரண தசையிலே பட்டர் எழுந்தருளி,
‘என் நினைத்திருந்தாய்’ என்ன, “ஒரு சர்வ சக்தி உபகரிக்கும் போது
‘இங்ஙனம் கனக்கவாகாதே உபகரிப்பது’ என்று நினைத்திருந்தேன்” என்ன,
‘அது என், உன் தேசத்தை விட்டு உறவினர்களை விட்டு நெடுந்தூரம் போந்து இங்ஙனம் நோவுபட்டுத்
திருவடி சேரக் கிடந்தாயாகில் இங்கு உபகாரம் என்?’ என்ன,
‘வேறு தேசத்திலே இருந்து பொருள் அல்லாதவனாய் விழுந்து போகக் கடவ என்னை இவ்வளவும் அழைப்பித்து,
உம்முடைய திருவடிகளை அடையச் செய்து ருசியை விளைப்பித்து, இத் தேசத்திலே
உம்முடைய கண் வட்டத்திலே சரீரம் நீங்கும்படி செய்தானே’ என்ன,
‘ஆனாலும் தானாக அபிமானித்த சரீரம் போகா நிற்க, நீ இங்ஙனம் நினைத்திருந்தது என் கொண்டு?’ என்ன,
‘பிரமாணம் கொண்டு நினைத்திருந்தேன்’ என்றான்.

“ஈஸ்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸு க்ருதம் ததா விஷ்ணோ: ப்ரஸாதம் அத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்விகை:
ஸம்பாஷணம் ஸதாசார்ய ப்ராப்திம் ச”–என்பது, அநுசந்தேயம்.–
இதற்கே ஆறு படிகள் ஸ்ரீ ரங்கத்தில்
“ஆசாரிய லாபம் பகவானாலே” என்ற ஸ்ரீ வசன பூஷண-ஸ்ரீ ஸூக்தி

கண்ணழிவற்ற வெளிச் சிறப்புடையார்க்கு இங்ஙனமன்றோ இருப்பது.
இருவராய்க் கொண்டு பரிமாற வேண்டும் தேசத்திலே தனியே நிற்கின்றான் காண் என்பாள்
‘தேனார் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் கோனாரை’ -என்கிறாள்.
அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதித்தொழியாது தங்கியிருத்தலின் ‘உறையும் கோனாரை’ என்கிறாள்.

நாராயண சப்தத்திலும்
பிரணவத்திலும் போலே,
‘கோனாரை அடியேன்’ என்கிறாள்.
அவனைச் சொல்லும் போது தம்மையிட்டல்லது சொல்லப் போகாது;
தம்மைச் சொல்லும் போதும் அவனையிட்டல்லது சொல்லப்போகாது.

‘கோனாரை’ என்ற இடம், நாராயண சப்தார்த்தம்;
‘அடியேன்’ என்ற இடம், பிரணவார்த்தம்.
பிரணவம், ஜீவப் பிரதானம்; நாராயண பதம், ஈஸ்வரப் பிரதானம்.

‘நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும்’ என்று மேலே கூறியதனை விவரிக்கிறார் ‘கோனாரை’ என்று தொடங்கி.
‘நான்காம் வேற்றுமை’என்றது, ‘நாராயணாய’ என்ற பதத்திலேயுள்ள ‘ஆய’ என்னும் உருபினை.

‘அடி கூடுவது என்று கொலோ’ என்ற இடம்,
நான்காம் வேற்றுமையின் பொருள்; ‘என்று கொலோ’ என்று பிரார்த்தனையோடு தலைக் கட்டுகிறதன்றோ.
கோனாரை அடியேன் – நாயகன் தைரியத்தையுடைய நாயகன்–இவள் தைரியம் இல்லாதவள்.
அடியேன் அடி கூடுவது என்று கொலோ – ஸ்வரூபத்துக்குத் தகுதியாக
வேற்றுமையின் பொருளோடே-விபக்தி உடன் – தலைக் கட்டுகிறபடி.

எல்லா அளவிலும் ஸ்வரூபம் அழியாதன்றோ.
தாமாகவுமாம்,
பிராட்டிமார் தசையை அடைந்தவராகவுமாம்,
அதற்கும் அவ்வருகே சில அவஸ்தைகளை யுடையராகவுமாம்,
எல்லாக் காலத்திலும் ஸ்வரூபம் மாறாது;
பிண்டத்வ கடத்வ கபாலத்வ சூர்ணத்வங்களாகிற நிலை வேறுபாடுகளை அடைந்தாலும் மண்ணான வடிவுக்கு அழிவில்லை யன்றோ.

தாமான தன்மையில் “அடி தொழுது எழு”-திருவாய். 1. 1 : 1.-என்பர்;
பரோப தேசத்தில் “திண்கழல் சேர்” – திருவாய். 1. 2 : 10.-என்பர்;
தூது விடப் புக்கால் “திருவடிக் கீழ்க் குற்றேவல்”- திருவாய். 1. 4 : 2.– என்பர்;
பிறரைச் சொல்லப் புக்கால் “தாட் பட்ட தண்துழாய்த் தாமம் காமிற்றாயே” திருவாய். 2. 1 : 2.-என்பர்;
கலங்கி மடல் எடுக்குமளவானாலும் “தலையில் வணங்கவுமாங்கொலோ” –திருவாய். 5. 3 : 7.-என்பர்;
பித்தேறிச் சொல்லும் போதும் “கண்ணன் கழல்கள் விரும்புமே” – திருவாய். 4. 4 : 8.-என்னுதல்,
“ஏறிய பித்தினொடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு” -திருவாய். 4. 4 : 7.-என்னுதல் சொல்வார் இத்தனை.

—————————————————————————————

என்று கொல் தோழி மீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ!
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித்
தென்றல் மணங் கமழும் திருவல்ல வாழ் நகருள்
நின்ற பிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே.–5-9-2-

ஸ்ரீ வல்லபன் கோலப்பிரான் -நிஷேத முகத்தாலே தன்னை நலிகிறவர்கள் தங்களையே பார்த்து –
பரிமளம் பிரவகிக்கும் -திவ்ய தேச -எம்பெருமான் -திருப்பாத தூளை சிரஸா வகிப்பது என்றோ
என்று கொல் தோழி மீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ!-சமான சுக துக்கம் –
அபிமதம் பெற துணை என்று நம்பிய எம்மை – ஆத்மனி பஹூ வசனம்
தடுத்ததால் என்ன பலன் -உங்களுக்கும் ஸ்வரூப நாசம் -கார்ய கரமும் இல்லை –
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித்-பொன் போலே –தாதுக்கள் -மகரந்தம் -குருக்கத்திப் பூ -மேலில் பூவுடன்
தென்றல் மணங் கமழும் திருவல்ல வாழ் நகருள்-சுகுமாரம் -உள்ளே போனால் வெக்கை தட்டுமே –
நின்ற பிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே.-உபகாரகன் -அடிப்பொடி -உபகரிக்க வில்லையே -இருந்தும் -சந்நிஹிதனான உபகாரம் உண்டே –
இதுவே பெரிய உதவி -இதற்குத் தோற்று அடியோம் -சேஷத்வ அனுரூபமாக ஸ்வீகரித்து -தோழிகளைக் கூட்டிக் கொண்டு -சேர்த்து –

தோழிமீர்காள்! என்னை வருத்தி என்ன காரியத்தைச் செய்தீர்கள்? பொன்னைப் போன்று விளங்குகின்ற புன்னை என்ன, மகிழ் என்ன,
புதிய மாதவி என்ன, இவற்றின் மேலே பொருந்தித் தென்றலானது வாசனை வீசுகின்ற திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தில் நின்ற
திருக் கோலமாய் எழுந்தருளி யிருக்கின்ற பிரானுடைய திருவடிகளில் பொருந்திய நீற்றினை அடியோங்கள் கொண்டு சூடுவது என்று கொல்? என்கிறாள்.
தோழிமீர்காள்! பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவது என்று கொல்! எம்மை: தனித் தன்மைப் பன்மை. மகிழ்-வகுளம்.
மாதவி-குருக்கத்தி. நீறு-புழுதி. அடியோம்: உளப்பாட்டுத் தன்மைப் பன்மை.

விலக்குகிற தோழிமார் தங்களைப் பார்த்தே, அவன் பாத ரேணுவை நான் சூடுவது என்று? என்கிறாள்.
கீழ் திருப்பாசுரம்,
“மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி – என்னுடைய தலையை எப்பொழுது அலங்கரிக்கப் போகிறது” (ஸ்தோத்திர ரத்நம். 31.)
என்றதன் பொருள்.
“கதா நு ஸாக்ஷாத்கர வாணி சக்ஷு ஷா – என் கண்களால் உன் திருவடிகளை எப்பொழுது காணப் போகிறேன்”
(ஸ்தோத்திர ரத்நம். 30.) என்றதன் பொருள் இத் திருப்பாசுரம்.

என்று கொல் தோழிமீர்காள் –
‘எல்லை கடந்த பிராவண்யம் ஆகாது’ என்று விலக்குகிறவர்களையே, தன் பேற்றுக்கு நாள் அறுதியிட்டுத்
தருமவர்களாகக் கேட்கிறாளே யன்றோ.
அவர்கள் உலக அபவாதத்தைப் பற்றி விலக்குகிறார்கள்;
இவள், தனது பேற்றினை, அவர்கள் தங்கள் பேறாக நினைத்திருக்கும் ஐக கண்ட்யத்தாலே கேட்கிறாள்.
தோழிமாரே யன்றோ; இவளுடைய லாபாலாபமே யன்றோ அவர்களுக்கும் பேறு இழவு.

தோழிமீர்காள் என்று கொல் –
உங்களுக்கு நான் பெறும் நாள் ஆராய்கையிலே யன்றோ அதிகாரம்.
என் பிரக்ருதியை அறிந்து அவ்வழியில் செல்வது அன்றோ போவது உங்கள் க்ருத்யம் –

எம்மை-
உங்களுடைய கையாலும் காலாலும் துகை யுண்கிற என்னை. -ஹிதப் பேச்சாலும் காற்றாலும்
அன்றிக்கே,
அவ்வூரிலே புக்கல்லது தரிக்கமாட்டாத என்னை என்னுதல்.

நீர் –
என்னுடைய உஜ்ஜீவனத்தையே எண்ணுவதற்குரிய நீங்கள்.
அன்றிக்கே,
எனக்குப் பிரியமே செய்து போந்த நீங்கள் என்னுதல்.

நலிந்து என் செய்தீரோ –
எனது பிரக்ருதியை-தன்மையை அறியும் நீங்கள் என் வழியே போக வேண்டாவோ.
அன்றிக்கே,
உங்கள் தன்மைக்கு இது சேர்ந்ததோ, என் தன்மைக்கு இது சேர்ந்ததோ? என்னுதல்.
சம்பந்த ஞானம் உணர்த்துவதில் சேர்ந்ததோ -பேற்றில் த்வரிக்கும் என் ஸ்வ பாவத்துக்கும் சேராதே
அன்றிக்கே,
தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ என்பதற்கு,
உங்களுக்கு அவசியம் நலிய வேண்டினால் தென்றலை யன்றோ நலிய அடுப்பது என்னுதலுமாம். –
என்ன மீளவொட்டாமல் காற்கட்டா நிற்க, நான் மீளும்படி என்?

செல்லுகிற உன்னை நலியாமல், தென்றலை நலிவான் என்? என்ன, அதற்கு விடை கூறுகிறாள்
‘என்னை மீளவொட்டாமல்’ என்று தொடங்கி.
‘காற்கட்டா நிற்க’ என்றது, சிலேடை: காற்று வருத்தா நிற்க என்பது பொருள். பந்தமாக நிற்க என்பது தொனி.

பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி –
புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும்” – பெரிய திருமொழி, 5. 1 : 6.-என்கிறபடியே,
பொன்னைப் போன்று பிரகாசிக்கின்ற புன்னை, அப்படியே இருக்கிற மகிழ், -புது மாதவி-அப்போது அலர்ந்த குருக்கத்தி.
இதனால், நலிகைக்கு இவை அமையாதோ,
‘கடினமான ஸ்வபாவத்தை யுடையராயிருப்பார்-மரங்கள் – செய்வதை மிருதுத் தன்மை வாய்ந்தவர்களாயிருக்கிற
நீங்கள் செய்யவோ என்கிறாள் என்றபடி.

மீது அணவித் தென்றல் மணம் கமழும்-
இவற்றின் மேலே தென்றலானது வந்து அணைந்து பரிமளத்தைக் கொண்டு போந்து கமழா நின்றது.

மீது அணவி-
‘ஆழ இழியில் பூவில் வெக்கை தட்டும்’ என்று மேலெழத் தீண்டி, அங்குள்ளன வெல்லாம் கொண்டு போந்து கமழா நின்றது
என்பாள் ‘மீது அணவி’ என்கிறாள். என்றது,
“தாமரைப் பூக்களின் தாதுக்களோடு சேர்ந்தது” என்னுமாறு போலே,
பூவில் கால் படாமே மேல் எழுந்த பரிமளத்தைக் கொண்டு போருகிறது என்றபடி.

வெக்கை தட்டாமல் மேலே ஸ்பர்சித்ததற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘தாமரை’ என்று தொடங்கி.
“பத்ம கேஸர ஸம்ஸ்ப்ருஷ்டோ வ்ருக்ஷாந்தர விநிஸ்ஸ்ருத:” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 1 : 71 என்றது,
மகரந்தங்களிலே மேலே ஸ்பர்சித்து வந்தாற்போன்று, இந்தத் தென்றலும் மீது அணவி வந்தது என்றபடி
மால்ய வானில் விரஹ தாபத்தால் பெருமாள் -பிராட்டி மூச்சுக்காற்று போல் கிஷ்கிந்தா

அத் தலையில் உள்ளவை அடங்கக்கொண்டு –தந்தாமது ஒன்றும் கொடாதே போருகை —
அந் நிலத்துள்ள பொருள்கட்கெல்லாம் ஸ்வபாவம் கண்டீர்.
கலம்பகன் அல்லது சூடப் பொறாத சுகுமாரரைப் போலே காணும் தென்றலின் ஸ்வபாவம் என்பாள்.
‘பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித் தென்றல் மணம் கமழும்’ என்கிறாள்
இதனால், பூவில் பரிமளத்தைத் தேடுவாரைப் போலே காணும் இது பரிமளத்தில் கலம்பகன் தேடுகிறபடி என்பதனைத் தெரிவித்தபடி.

செருக்கராயிருக்கும் இராஜ புத்திரர்கள் முலை சரிந்தாரைப் ‘போகத்திற்குத் தகுதி யுள்ளவரல்லர்’ என்று கழிக்குமாறு போன்று,
கழிய அலர்ந்தவற்றைப் பாராமல் போருகிறது என்பாள் ‘புது மாதவி மீதணவும்’ என்கிறாள்.
கண்களுக்குத் தோற்ற நின்று நலியாமையாலே காணும் ‘நோவில்லை’ என்றிருக்கிறது. -ரூப ரஹித ஸ்பர்சவான் காற்று –
இவர்களுக்கு லாபாலாபம் ஒத்திருக்கச் செய்தேயும், ஹித புத்தி தொடர்ந்து நிற்பதனாலே இவை நெஞ்சிற் படாதே யன்றோ.
‘இவர்கள் தாம் அந்வயத்தில் கூடாவிட்டால் வியதிரேகத்திலும் கூடலாகாதோ’ என்று காணும் இவள் நினைத்திருக்கிறது.

இவர்களுக்குப் பேறும் இழவும் ஒத்திருந்தாலும் இவர்கள் இவள் தான் ஆக மாட்டார்களே,
இவளுக்கே வருமவை யன்றோ இவை யெல்லாம்.

‘பொன் திகழ் புன்னை மகிழ்’ என்றதனால், கண் இந்திரியத்திற்குக் கவர்ச்சிகரமா யிருப்பதனைத் தெரிவித்தபடி.

‘தென்றல் மணம் கமழும்’ என்றதனால், சரீரத்திற்கும் மூக்கிற்கும் அங்ஙனம் இருப்பதனைத் தெரிவித்தபடி.

திருவல்ல வாழ் நகருள் நின்ற பிரான் –
அவன் அத்தனை விடுவதும் செய்திலன். நான் நோவுபடா நிற்க, இவ்வளவிலே ஸ்ரீ வைகுண்டத்திலே இருக்கை யன்றிக்கே.
திருவல்ல வாழிலே புகுந்து கிட்டவிருக்கு மிதற்கு மேற்பட உபகாரம் உண்டோ.
“இது பல” என்னுமாறு போலே காணும் இவ்வளவில் ஆஸ்வாசம். “ஒரே பூமியில் இருக்கிறோம்” என்று சொல்லப்பட்டதன்றோ.

புணர்ச்சி யின்றிக்கே இருக்க, இங்ஙனம் இருத்தலை மாத்திரம் உபகாரமாகக் கொள்ளலாமோ? என்ன, பெருமாள் பிராட்டியைப்
பிரிந்திருக்கச் செய்தேயும் தாம் இருந்த பூமியிலே அவள் இருத்தல் காரணமாக ஆஸ்வாசித்தாற்போலே என்கிறார் ‘இது பல’ என்று-தொடங்கி.

“பஹு ஏதத் காமயாநஸ்ய ஸக்யம் ஏதேந ஜீவிதும் யத் அஹம் ஸா ச வாமோரூ: ஏகாம் தரணிம் ஆஸ்ரிதௌ”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 10.
“காற்றே வீசுக” என்று, –வாஹி வாத யத: காந்தா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 6.-
இவர் கையாலே தொட வேண்டாதபடி இடைச்சுவரான கடல் கிடந்தே யாகிலும், ஒரு படுக்கையிலே இருப்பாரைப் போலே
அவள் இருந்த பூமியிலே இருக்கப் பெற்றோமே என்றாரே யன்றோ பெருமாள்.
காலைப் பிடித்து ‘நீ இப்படிச் செய்ய வேணும்’ என்று வேண்டிக் கொள்ளுகிறாரே யன்றோ இவருடைய செல்லாமை.
“வாஹி வாத யத காந்தா– காற்றே வீசுக” என்றதனை, ரசோக்தியாக அருளிச் செய்கிறார்
‘காலைப் பிடித்து’ என்று தொடங்கி. காலை – காற்றை.

நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவது என்று கொல்
பூவில் சுண்ணம் பெறுவது என்றோ. மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போலக் காணும்.
அடியோம் கொண்டு சூடுவது –
இவர்கள், இப்போது பிரிய நின்றார்களே யாகிலும் கலக்கும் போது அநுபவம் இவர்களுக்கும்
ஒத்திருக்குமாதலின் ‘அடியோம்’ என்கிறாள்.
அவன் வந்தாலும் இவளுக்கு முன்னே கொண்டாடுவது இவர்களை யன்றோ.

சீதை பெருமாள் திரு உள்ளம் நினைவையே நோக்கி இருக்க –
பெருமாள் மக்கள் நலத்திலே திரு உள்ளம் இருக்க –
அத்தாலே மகிழ்வாள் இறே சீதா பிராட்டியும்

ஸ்ரீ பரதாழ்வானை, ‘பிள்ளாய்’ உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போது?” என்ன,
“பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி, நானும் எனக்கு வகுத்த முடி சூடி,
இருவரும் முறை தப்பாமே கூறு ஒக்க நின்ற அன்று” என்றான்;
அது போன்று, இவளும் ‘அடியோம் கொண்டு சூடுவது என்று’ என்கிறாள்.
கால் கூறு விஞ்சப் பெற்றானே ஸ்ரீ பரத ஆழ்வான் –
மாலடி மேல் -அரசு அமர்ந்தான் அடி -குலசேகரன் —
பிராதா திருவடி -சேஷித்வ லஷணம் -இவனுக்கு தலை ஓட்டில் பொறி -சென்னியில் பொரித்துக் கொண்டானே
“கோலமாம் என் சென்னிக்கு உன் கமலமன்ன குரை கழலே”-இது, திருவாய். 4. 3 : 6.– என்னுமவர் அலரோ.
ஹயக்ரீவர் -ஸ்தோத்ரம் -திருவடி துகள் தானே தலை எழுத்து மாற்றும் நமக்கு –

இப்படிப் பிரார்த்தித்த பேர் உண்டோ? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார்
‘ஸ்ரீ பரதாழ்வானை’ என்று தொடங்கி.
“யாவந்ந சரணௌ ப்ராது: பார்த்திவ வ்யஞ்ஜநாந்விதௌ ஸிரஸா தாரயிஷ்யாமி
ந மே ஸாந்தி: பவிஷ்யதி”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 98 : 8.

——————————————————————————————

சூடு மலர்க் குழலீர்! துயராட்டியேனை மெலியப்
பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
மாடுயர்ந் தோமப் புகை கமழும் தண் திரு வல்லவாழ்
நீடுறை கின்ற பிரான் கழல் காண்டுங் கொல் நிச்சலுமே.–5-9-3-

வேத கோஷமும் வைதிக கிரியா தூமமும் –நித்ய வாசம் செய்து அருளும் நிரந்த உபகாரகன் –
நித்ய அனுபவம் திருவடிகளில் பண்ணப் போமோ
சூடு மலர்க் குழலீர்! துயராட்டியேனை மெலிய-விஸ்லேஷ துயர் -மெலியும் படி -வேத ஒலி-எல்லாம் அவனையே சொல்லுமே –
பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க-மெலியும் படிக்கு பாடுகிறார்கள் -விஸ்லேஷ துக்கிதையான இவள்
சர்வேஸ்வரனுக்கு திருமேனி போல நன்மை –
சமுத்திர அலைகள் போலே முழங்க
மாடுயர்ந் தோமப் புகை கமழும் தண் திரு வல்லவாழ்-எல்லா பரிசரங்களிலும் -ஹவிஸ் கந்தம் பரப்ப –
நீடுறை கின்ற பிரான் கழல் காண்டுங் கொல் நிச்சலுமே-நிரந்தர வாசம் -நித்ய அனுபவம் பண்ணக் கூடுமோ -என்கிறார் –
திரு விருத்தம் ஐந்து வியாக்யானங்கள் -வெளிப்படை ஸ்வா பதேசம் கிழவித்துரை -பல அர்த்தங்கள் உண்டே இங்கும் அதே போலே

மலர்களைச் சூடிக்கொண்டிருக்கின்ற கூந்தலையுடைய தோழிமீர்காள்! பிரிவின் துன்பத்தால் வருந்துகின்ற யான், மேலும் மேலும்
மெலியும்படியாகப் பாடுகின்ற சிறந்த வேதங்களின் ஒலியானது கடலில் அலைகள் முழங்குமாறு போன்று முழங்க,
பக்கங்களில் உயர்ந்து எழுகின்ற ஓமப்புகையானது வாசனை வீசுகின்ற தண்ணிய திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தில்
நித்திய வாசம் செய்கின்ற எம்பெருமானுடைய திருவடிகளை நாள் தோறும் காண்போம் கொல்லோ?
துயராட்டியேன் மெலியப் பாடும் வேத ஒலி திரைபோல் முழங்க, ஓமப்புகை கமழும் திருவல்லவாழ் என்க.
காண்டும்: உளப்பாட்டுத் தன்மைப்பன்மை வினைமுற்று. கொல்: ஐயத்தின்கண் வந்தது.

தோழிமாரைப் பார்த்து, நான் அவனை நித்தியாநுபவம் பண்ணப் பெறும் நாள் என்று? என்கிறாள்.

சூடு மலர்க் குழலீர்-
‘உங்களைச் சூடு மலர்க் குழலாராக நான் காண்பது என்றோ’ என்று பிள்ளான் பணிப்பர்.என்றது,
இவள் பூவுக்கு இறாய்க்க, அவர்கள் மலர்களைச் சூடி இரார்களே யன்றோ என்றாயிற்று அபிப்பிராயம்.
அங்ஙன் அன்றிக்கே,
அவன் தான் வந்து இவள் பக்கல் பாவ பந்தம் உறைக்க உறைக்கக் கொண்டாடுவது இவர்களை யாகையாலே,
பெரிய திருநாள் சேவித்தார் இரட்டைகள் அழுக்கானாலும் மடி குலையாமல் வைக்குமாறு போன்று, இவர்களும் அவன் கொடுத்த
மாலையின் செவ்வி யழிந்ததே யாகிலும் மாறாதே வைத்துக் கொண்டிருப்பர்களே அன்றோ;
அது இவளுக்கு நினைவூட்டுவதாய் நலியா நின்றதாதலின் ‘சூடு மலர்க் குழலீர்’ என்கிறாள் என்னுதல்.
தென்றலுக்குப் பிழைக்கிலும் இவர்களுடைய தரிசனத்திற்குப் பிழைக்கப் போகிறதில்லை.
கால் ஒரு கையும் மயிர் ஒரு கையுமாகப் பிடித்து நலிகின்றது காணும்.
அவன் தான் வந்தாலும் இவளுக்கு முன்னே விரும்புவது இவள் சம்பந்தமுடையார்களை அன்றோ.

“தத்ர காஷாயிந:-
அங்குக் காவி உடையணிந்தவர்களை;” தங்கள் தங்களைப் பேணுமவர்கள் அல்லாமையாலே
அழுக்குச் சட்டையும் தாங்களுமா யன்றோ இருப்பது.
ஒரு சம்வாதம் காட்டுவதற்காக, மேலே கூறியதனை அநுவதிக்கிறார் ‘அவன்தான்’ என்று தொடங்கி.
சொல்லப் போகும் அர்த்தத்திற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘தத்ர’ என்று தொடங்கி.
“தத்ர காஷாயிந: வ்ருத்தாந் வேத்ர பாணீந் ஸ்வலங்க்ருதாந் ததர்ஸ விஷ்டிதாந் த்வாரி
ஸ்த்ர்யத்யக்ஷாந் ஸு ஸமாஹிதாந்”–ஸ்ரீராமா. அயோத். 16 : 3.
இந்தச் சுலோகத்தில் “ஸு அலங்கிருதாந்” என்பதுவே இங்கு வேண்டுவது.
“ஸு அலங்கிருதாந்” என்றதிலுள்ள “ஸு ” என்ற பதத்துக்குப் பொருள்
அருளிச்செய்கிறார் ‘பெருமாளுடையவும்’ என்று தொடங்கி.

“விருத்தாந் – முதிர்த்தவர்களை;”
தொண்ணூற்றைந்து வயதுக்கு மேலாய் ஆசையற்றவர்களாய் இருப்பாரை அன்றோ அந்தப்புரங்களுக்கு வைப்பது.
“வேத்ர பாணீந்-பிரம்பைக் கையிலுடையவர்களை;”
பெருமாள் விற் பிடித்தாற்போல அவர்கள் பிரம்பு பிடித்தபடி.
விற்பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் பிரம்பு பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் காணும்.
“ஸுஅலங்க்ருதாந் – தங்களை அலங்கரித்தவர்களை;”
பேணாத பரிவட்டங்களையுடையராய் விருத்தருமாய் இருந்தார்களாகில்
இவர்களுக்கு அலங்காரமாவது என்? என்னில்,
பெருமாள் சக்கரவர்த்தி மாளிகையிலே போய்த் திருமஞ்சனம் ஆடி அமுது செய்து
( ஆடி அமுது செய் அப்பனும் உண்டிலன் — )
மீண்டு திவ்ய அந்தப்புரத்துக்கு எழுந்தருளும் போது, சக்கரவர்த்தியைப் போன்று, பழையராகையாலும் தங்கள் பரிவாலுமாக
இவரை மடியிலே வைத்து அணைத்து உச்சியை மோந்து விடுவர்கள்;
அதனாலே, குங்குமக் குழம்பும் கோயிற்சாந்துமாக இருப்பர்கள்.
பெருமாளுடையவும் பிராட்டியுடையவும் ஒப்பனை போலன்று இவர்கள் ஒப்பனை.
அப்படியே இவர்களும் ‘சூடுமலர் குழலீர்” என்னும்படியாயிருக்கிறபடி.

துயராட்டியேனை மெலியப் பாடு நல் வேத ஒலி-
எனக்குத் துயரை விளைத்தற்காகவே யன்றி, பிராஹ்மணர் வேண்டிச் செய்கிறார்களன்றே.
பிராஹ்மணராகில் தார்மிகராயிருக்க வேண்டாவோ? பெண் கொலை செய்யலாமோ?

துயராட்டியேன் –
நலிவார்க்கு ஆஸ்ரயம் வேண்டாவோ? நலிகைக்குத் தென்றலே அமையாதோ?
(இணைக் குற்றங்கள் போல் தென்றலுடன் சேர்த்து இந்த வேத ஒலியும் )
திருவடி நடு இரவில் சென்று பிராட்டியைக் கண்டு சில வார்த்தை விண்ணப்பம் செய்ய,
அவள் இவனை ‘இன்னான்’ என்று அறுதியிட மாட்டாதே,
‘முன்பு சந்யாசி வேடம் கொண்டு அவர் பக்கல் நின்றும் என்னைப் பிரித்தாய்,
இப்போது வானர வேடம் கொண்டு சில வார்த்தைகளைச் சொல்லி நலியா நின்றாய்,
ஸ்வம் பரித்யஜ்ய ரூபம் ய: பரிவ்ராஜக ரூபவாந் ஜநஸ்தாநே மயா த்ருஷ்ட: த்வம் ஸ ஏவ அஸி ராவண:”
“உபவாஸ க்ருஸாம் தீநாம் காம ரூப நிஸாசர ஸந்தாபயஸி மாம் பூய: ஸந்தாபம் தந்ந ஸோபனம்”–ஸ்ரீராமா. சுந். 34 : 15, 16.
திருவடியை இராவணனாக நினைத்துப் பிராட்டி கூறியது.-
ராஷச ஜாதியில் ராவணன் துன்புறுத்தியது போலே என்கிறாள்-
(ராக்ஷஸ ஜாதி ப்ராஹ்மணன் ராவணன் பறவை ஜாதியில் ப்ராஹ்மணர் பெரிய திருவடி )

இவையெல்லாம் உனக்கு ஆகாது காண்.’ வருத்துதல் அழகன்று – வாராய், நீயும் உன்னை உகந்தாரைப் பிரிந்து
நோவுபடுகிறாயன்றோ என்றாள் பிராட்டி.
மெலியப் பாடும்
செய்யத் தக்கனவானாலும் சிலர்க்கு நலிவானால் தவிர வேண்டாவோ? என்பாள் ‘மெலியப் பாடும்’ என்கிறாள்.
பாடும்-
அவர்கள், எல்லாம் சமைந்தாலல்லது குருகுலத்தை விட்டு நீங்கார்களாதலின் ‘பாடும்’ என்கிறாள்.
(பாடும் -வர்த்தமானம் –இருப்பதுக்கு வியாக்யானம் -)
இவள் தனக்கு வேத ஒலியைக் கேட்டவாறே, நாயகன் பேர் வைத்துப் புணர்த்த புணர்ப்பினைக் கேட்டாற்போலே
காணும் அஸஹ்யமாயிருக்கிறபடி.
இருவரும் கூட இருந்து கேட்கக் கூடியதனைத் தனி யிருந்து கேட்கப் புக்கால் பொறுக்க ஒண்ணாதே யன்றோ.
அவன் பெயர் வைத்துப் புணர்த்தாலும் “சீதையினுடைய மஹத்தான சரிதம்” என்றே யன்றோ புணர்ப்புத் தான் இருப்பது.

“காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஸீதாயா: சரிதம் மஹத்” என்பது,- ஸ்ரீராமா. பால. 4 : 7.

நடையினின் றுயர் நாயகன் தோற்றத்தின் இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பியதோ மறுமாக் கதை சடையன் வெண்ணெய் நல்லூர் வயிற்றந்ததே.- என்பது, கம்பராமாயணம்.

இனித்தான், “தேவரீருக்குப் பூமிப் பிராட்டியும் பெரிய பிராட்டியும் தேவிகளாக இருக்கிறார்கள்”,–
“ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்ந்யௌ” என்பது, புருஷ சூக்தம்.

“எல்லா ஆத்மாக்களுக்கு நியமிக்கின்றவளாயிருப்பவள்”,–“ஈஸ்வரீம் ஸர்வபூதாநாம்”-என்பது, ஸ்ரீ சூக்தம்.

“விஷ்ணு பத்னியானவள் இந்த உலகத்திற்குத் தலைவி” என்று அவன் விரும்பிக் கேட்பது.-
“அஸ்ய ஈஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ”- என்பது, ய. 4. 4. 37.

பாடு நல் வேதம்
ஈஸ்வரனைப் பாடுகிற பழம் புணர்ப்பான வேதம் ஆதலின் ‘பாடு நல் வேதம்’ –
“வேதாநாம் ஸாமவேதோஸ்மி தேவாநாம் அஸ்மி வாஸவ:”-என்பது, ஸ்ரீ கீதை. 10 : 22.
அன்றிக்கே,
இசையை யுடைத்தான சாமவேதம் என்னுதல்
“உளன் சுடர் மிகு சுருதியுள்” என்று மற்றைப் பிரமாணங்களைக் காட்டிலும் உயர்ந்த பிரமாணமாதலின், ‘நல் வேதம்’ என்கிறது.
அன்றிக்கே,
“வேதங்களுக்குள் சாம வேதம் நான் ஆகிறேன்” என்கிற உயர்வினைச் சொல்லுகிறதாதல்.
ஆக,
ஸ்வரத்திலே குற்றமுண்டாதல்;
“வேதங்களுக்குள்ளே சாம வேதம் நான் ஆகின்றேன்” என்கிறபடியே
அந்தரங்கமான வேதமன்றிக்கே ஒழிதல் தான் செய்ததாகில் நான் ஆறி யிருக்கலாயிற்றே என்கிறாள் என்றபடி.

வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க-
ஓதம் கிளர்ந்த கடல் போலே காணும் சாமவேதத்தின் ஒலி இருக்கிறபடி.
அதில் பருவம் ஒழிந்த நாட்களும் பகலும் ஆறியிருக்கலாமே என்பாள் ‘முழங்க’ என்கிறாள்.
எல்லா வளவிலும் இவர்க்கு வேதத்திற் கிடக்கிற பிராவண்யம் பாரீர்,

பிராட்டியான நிலையிலும் வேதத்தைச் சொல்லுகிற ஸ்ரீ சூக்தியை அநுசந்தித்து
வியாக்யாதாவின் ஈடுபாடு, ‘எல்லாவளவிலும்’ என்று தொடங்குவது. ‘எல்லாவளவிலும்’ என்றது,
தாமான தன்மையோடு பிராட்டியான தன்மையோடு வாசியற எல்லா அவஸ்தைகளிலும் என்றபடி.

முதல் வார்த்தைதான் “உளன் சுடர்மிகு சுருதியுள்” –திருவாய்.-1. 1 : 7.-என்பதேயன்றோ.
“யாதொருவனுடைய ஸ்வரூபத்தை எல்லா வேதங்களும் சொல்லுகின்றனவோ” என்றும்,-
“ஸர்வே வேதா: யத் பதமாமநந்தி” என்பது.— “ஸர்வே வேதா: யத்ரைகம் பவந்நி” என்பது.
“எல்லா வேதங்களும் எந்தப் பரம்பொருளிடத்தில் ஒரே முகமாய் ஆகின்றனவோ” என்றும்,
“எல்லா வேதங்களாலும் அறியப்படுமவன் யானே” என்றும் –. அன்றோ பிரமாணங்கள் கூறுகின்றன.

மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும்
“ஓத்துச் சொல்லிச் சொல்லாத விடமெல்லாம் -அத்யயன காலங்களிலும்-வைதிகக் கிரியைகளே யாய்க் கிடக்குமித்தனை.
மாடு – பக்கம்.
ஆகாசமடங்கலும் இடமடைத்து, வைமானிகரை முகம் பார்த்து அநுபவிக்க வொட்டாதபடி எழா நின்றது.
“கர்மங்களைச் செய்து அவற்றாலே சித்தி பெற்றவர்கள் ஜனகன் முதலானவர்கள்”
பலம் கிடைத்த பின், கர்மங்களைச் செய்வதில் நின்றும் நீங்கி யிரார்களோ,
“கமழும்” என்று நிகழ்காலமாகச் சொல்லுவான் என்? என்ன,
ஞானாதிகர் ஆகையாலே பலத்தில் நினைவு இல்லை என்கிறார் ‘கர்மங்களை’ என்று தொடங்கி.
“கர்மணைவ ஹி ஸம்ஸித்திம் ஆஸ்திதா ஜனகாதய: லோக ஸங்க்ரஹமேவாபி ஸம்பஸ்யந் கர்தும் அர்ஹஸி”- என்பது ஸ்ரீகீதை. 3 : 20.
என்கிறபடியே, ஞானத்தில் நிலை நின்றவர்களே அன்றோ.
இனி, பலத்தை நினைத்துக் கர்மங்களைச் செய்து பலம் கிட்டினவாறே மீளுமவர்கள் அன்றே
கமழும்-
ஹோமப்புகையும், ஹவிஸ்ஸினைக் கொள்ள வந்து நிற்கிற எம்பெருமானுடைய மாளிகைச் சாந்துமாகக்
கமழுகின்றன ஆதலின் ‘கமழும்’ என்கிறாள்.

திருவல்லவாழ் நீடு உறைகின்ற பிரான் –
அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே பிற்பாடர்க்கு உதவும்படி ஸ்ரமஹரமான திருவல்லவாழிலே
நித்திய வாசம் செய்கிற உபகாரகன்.

கழல் காண்டும் கொல் நிச்சலுமே-
அவன் இங்கே நித்திய வாசம் செய்யா நின்றால், நாமும் நித்திய வாசம் செய்யும் தேசத்தில் போய்ப் பெறக்கூடிய
பேற்றினைப் பெற வல்லோமே. அங்கும் போனால் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே யிருத்தலன்றோ.
காண்டல் மாத்திரம் போதியதாமோ? என்ன,
அதற்கு விடை அருளிச் செய்கிறார் ‘அங்கும் போனால்’ என்று தொடங்கி. அங்கும் -பரமபதமும்.

கீழ் திருப்பாசுரம்,
“மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி – என்னுடைய தலையை எப்பொழுது அலங்கரிக்கப் போகிறது” (ஸ்தோத்திர ரத்நம். 31.)
என்றதன் பொருள்.
“கதா நு ஸாக்ஷாத்கர வாணி சக்ஷு ஷா – என் கண்களால் உன் திருவடிகளை எப்பொழுது காணப் போகிறேன்”
(ஸ்தோத்திர ரத்நம். 30.) என்றதன் பொருள் இத் திருப்பாசுரம்.

——————————————————————————————–

நிச்சலும் தோழிமீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ?
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதணவும் தண் திரு வல்ல வாழ்
நச்சரவின் அணை மேல் நம்பிரானது நன்னலமே.–5-9-4-

சோலைகள் உடன் கூடிய மாடங்கள் -ஆஸ்ரித நித்ய சம்ஸ்லேஷன் -நித்ய சந்நிஹிதன் உபகாரகன் -இடம்
என் ஆத்மா சென்ற பின்பு -நலிந்து என்ன பயன்
நிச்சலும் தோழிமீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ?-ஹிதம் சொல்வபரே தோழன் -பிரியம் -பரத்வமே ஸ்வரூபம்
உங்கள் அபிமதம் நிஷேதித்து போக முடியாமல் இருக்கச் சொல்லும் -நலிந்து என்ன கார்யம்
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்-சோலை வாய்ப்பு
மச்சணி மாடங்கள் மீதணவும் தண் திரு வல்ல வாழ்-மாடிகள் பல உடைய மாடங்கள் -நிழல் கொடுக்கும்
நச்சரவின் அணை மேல் நம்பிரானது நன்னலமே-ஆத்மாவே அவனதாக போன பின்பு -அநாஸ்ரிதற்கு நணுக ஒண்ணாத
அழல் உமிழும் -நமக்கு பிரகாசிப்பித்த உபகாரகன் நற்சீவன் அவன் பக்கம் -அவன் ஸ்நேஹம் என்னிடம் என்றுமாம்

தோழிமீர்காள்! எம்மை நீங்கள் நாள் தோறும் வருத்தி என்ன காரியத்தைச் செய்தீர்கள்? பசிய இலைகளை யுடைய நீண்ட பாக்கு மரங்களும்,
பலா மரங்களும், வாழைகளும், மச்சினையுடைய அழகிய மாடங்களின் மேலே புல்லிக் கொண்டிருக்கின்ற குளிர்ந்த திருவல்லவாழ் என்னும்
திவ்விய தேசத்தில் ஆதிசேட சயனத்தின் மேலே எழுந்தருளி யிருக்கின்ற நம் பெருமானிடத்திலே யுள்ளதாம் எனது உயிரானது.
நன்னலம் நம்பிரானது; ஆதலால், எம்மை நீர் நலிந்து என்செய்தீர் என்க. நஞ்சு அரவு – நச்சரவு. அரவு – பாம்பு.

‘இங்ஙனம் மநோரதித்தல் ஈடு அன்று’ என்று விலக்குகிற தோழிமாரைக் குறித்து, என்னுடைய நல்ல உயிரானது
அவன் பக்கலது, உங்களுடைய வார்த்தைகள் பயன் அற்றவை என்கிறாள்.

நிச்சலும் தோழிமீர்காள்! எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ –
தோழிமார் ‘உனக்கு இத்தனை யாகாது காண்’ என்று பல காலும் சொல்லுவர்களே, அது பலியாதிருக்கச் செய்தேயும்,
இவளை இழக்க ஒண்ணாது என்று பார்த்து மீண்டும் சொல்லத் தொடங்கினார்கள்;
நீங்கள் நலிதல் தவிரமாட்டீர்கோளாகில் நான் இருந்த இடத்தே போய் நலியுங்கோள் என்கிறாள்.
என்னுடைய நல்ல உயிரானது அவன் பக்கலிலேயான பின்பு நீங்கள் சொல்லுகிறவற்றால் என்ன பிரயோஜனம் உண்டு.
எனக்கு ‘அவனைக் காண வேண்டும்’ என்னும் ஆசை எப்பொழுதும் செல்லுகிறாப் போலே,
உங்களுக்கும் ‘என்னை மீட்க வேண்டும்’ என்கிற இந்த நினைவு மாறாதே செல்லுகிறபடி.

தோழிமீர்காள்!
நீங்கள் நீங்களாய்ச் சொல்லுகிறீர்களோ, தாய்மாராகச் சொல்லுகிறீர்களோ,
இத்தனை பேர் ஸ்வரூப ஞானமில்லாதார் உளர் ஆனீர்களே.
ஒன்று சொல்லுவார் சொல்லும் போது தம்மை அறிந்தன்றோ சொல்லுவது.-
சம்பந்தம் உணர்த்த வேண்டிய நீங்கள் உபாய அத்யவசாயம் சொல்லும் தாய் பேச்சு பேசவா –

நீர் எம்மை-
உங்களை அழிய மாறியும் என்னுடைய ஜீவனமே எண்ணக் கூடிய நீங்கள், உங்களுடைய
நல் வார்த்தை நெஞ்சிற்பட்டால் ஜீவியாத என்னை.
நீர் நலிந்து-
தாங்கள் தாங்கள் நலிவு பட்டும் பிறரை நோக்குவார், தாங்களே பிறரை நலியவும் பார்ப்பாரோ
என்பாள் ‘நீர் நலிந்து’ என்கிறாள்.
என் செய்தீரோ-
நான் ஜீவிப்பேன் என்று நினைத்தோ! உங்கள் ஸ்வரூபத்தோடு சேர்ந்ததாக நினைத்தோ
என்பாள் ‘என் செய்தீரோ’ என்கிறாள்.
அன்றிக்கே,
என் செய்தீரோ என்பதற்கு, ஒன்று செய்வது ஒரு பிரயோஜனத் தளவுமன்றோ, லாபாலாபம் அறிந்தாலும்
கை வாங்க வேண்டாவோ என்னுதல்.

எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ –
பிராவண்யத்தை விளைப்பதற்கு முற்பாடரானால் பேற்றிற்கு முற்பாடராக வேண்டாவோ. –
சம்பந்த ஞானம் கொடுத்தவர்களே பிராப்தியை விலக்கவோ-
நிச்சலும் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ என்பதற்கு,
“மாசறு சோதி” என்ற திருவாய்மொழி தொடங்கி இவ்வளவும் வர ஹிதம் சொல்லுகிற நீங்கள்
என்ன பிரயோஜனம் பெற்றீர்கோள்’ என்று பிள்ளான் பணிப்பர்.

பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
அந் நிலத்திலே அகப்பட்டாரையும் சிலர் மீட்க நினைப்பாரோ.
ஹிதம் சொல்லுவார் பசுமையுள்ள விடத்தே யன்றோ சொல்லுவது, இங்குப் பசலை பூத்தன்றோ கிடக்கிறது.
பிரியாதிருப்பார்க்குப் பசுமை மாறாதே யன்றோ.
“பச்சிலை நீள் கமுகு என்றாற் போலே, பச்சிலை நீள் பலவும் பச்சிலை நீள் தெங்கும் பச்சிலை நீள் வாழைகளும்’ என்று
உய்ந்த பிள்ளை கூட்டி அருளிச் செய்வர் காணும்” என்று சீயர் அருளிச் செய்வர்.

‘பச்சிலை நீள் கமுகு’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து என்? என்னில்,
“பச்சிலை நீள்” என்ற அடைமொழிகளை, பலா தெங்கு வாழைகளுக்கும் தனித் தனியே கூட்டிக் கொண்டு
பொருள் அருளிச் செய்ய வேண்டும் என்று ‘உய்ந்த பிள்ளை’ என்ற பெரியார் அருளிச் செய்வர்
என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் என்பது.
பச்சிலை நீள் பலவும், பச்சிலை நீள் தெங்கும், பச்சிலை நீள் வாழைகளும் என்று கூட்டுக.

மச்சு அணி மாடங்கள் –
பல நிலங்களை யுடைத்தாகையாலே அலங்காரத்தை யுடைத்தான மாடங்கள்.
மச்சு-மேல்தளம். மீது அணவும் – செல்வப் பிள்ளைகளுக்கு அணுக்கன் இட்டாற்போலே காணும்
கவிந்து கொண்டு நிற்கிறபடி.

தண் திருவல்லவாழ் –
சிரமம் நீங்கும்படி சோலை செய்த ஊர். ஆக, பசுமை மாறாத இலைகளை யுடைத்தாய் நீண்ட கமுகும்,
அப்படிப்பட்ட பலவும், தெங்கும், வாழைகளும், மச்சுக்களின் நிரையை யுடைத்தான மாடங்களின் மேலே,
அவ் வந் நிலங்களுக்கு நிழல் செய்யும்படி அணவின குளிர்ந்த திருவல்லவாழிலே என்றபடி.

நஞ்சு அரவின் அணை மேல் –
மேலும் சுற்றும் சோலையுண்டானால் கீழும் சோலையுண்டாக வேண்டுமோ.
இங்கும் குளிர்ச்சி, வாசனை, மென்மைகளால் குறை இல்லையே.

நஞ்சு அரவின் அணை-
படுக்கையும் தானேயாய்க் காத்து ஊட்டவும் வற்றாயிருக்கை.
பின் மூன்று அடிகட்குக் கருத்து, போகிகளாய் இருப்பார் விடாமல் வசிக்கக்கூடிய தேசம் என்பது.
இளையபெருமாள் கையும் வில்லுமாய் வெளிக்காவல் நிற்க, பெருமாளும் பிராட்டியுமாய்க் காட்டிலே இன்பம் அநுபவித்தாற்போலே.
மூவரும் காட்டிலே இன்பத்தை அநுபவித்தார்களே யன்றோ, அப்படியே இங்கும் காவல் உண்டாயிருக்கிறபடி.
அநந்த முகமான காவலேயன்றோ.

பெருமாளும் இளையபெருமாளும் பிராட்டியும் சிருங்கி பேர புரத்திலே தங்கியிருந்த அன்று ஸ்ரீ குகப் பெருமாள் இளைய பெருமாளைப் பார்த்து,
‘பெருமாளும் பிராட்டியும் திருக்கண் வளரா நின்றார்கள், உமக்குத் தகுதியாம்படி திருவடிகளிலே தலையாம்படி படுக்கை படுத்தேன்;
நாங்கள் காடராய் அங்கே இங்கே திரிகையாலே எங்களுக்கு உறக்கம் வராது. நீர் இராஜ புத்திரராகையாலே சுகுமாரர்;
‘பரதன் முதலானோர் வருவர்கள்’ என்று அஞ்ச வேண்டா, நானும் என் பரிகரமும் உண்டு, நீர் திருக் கண் வளர்ந்தருளும்’ என்ன,
‘தாசரதி சீதையோடு கூடப் பூமியில் உறங்கும் பொழுது என்னால் நித்திரை அடைய எவ்வாறு முடியும்?’
“கதா தாஸரதௌ பூமௌ ஸயாநே ஸஹ ஸீதயா ஸக்யா நித்ரா மயா லப்தும் ஜீவிதம் வா ஸு காநி வா”– ஸ்ரீராமா. அயோத். 9.

வாரீர், மஹா ராஜனான சக்ரவர்த்தி அறுபதினாயிரம் ஆண்டு குழந்தை யில்லாதவனாய் வருந்திப் பெற்ற சுகுமாரரான பெருமாள்
தரைக் கிடை கிடக்க எனக்குக் கண்ணுறங்குமோ? அவர் தாம் வசிஷ்டர் முதலான முனிவர்கள் கீழே தரையிலே இருந்தும் அறிவர்.
அதுவுமின்றிக்கே இருக்கிற பிராட்டியோடே கூடக் கிடக்கிறபடி பாரீர்; ஆனபின்பு, எனக்கு உறக்கம் உண்டாய்
அது போகைக்கு நினைவு பண்ணி இருக்கிறேன் அல்லேன் காணும், உறக்கம் தேட்டமாய்க் கிடையாமையாலே இருக்கிறேன்.

நம் பிரானது நன்னலமே-
“இந்தச் சீதா பிராட்டியினுடைய மனமானது அந்தப் பெருமாளிடத்தும், அவருடைய மனமானது
இந்தப் பிராட்டியிடத்தும் நிலை பெற்றிருக்கிறது” என்னும்படியே, இருந்ததாகில் நான் ஆறியிரேனோ.

“அஸ்யா தேவ்யா மந: தஸ்மிந் தஸ்யச அஸ்யாம் ப்ரதிஷ்டிதம் தேந இயம் ஸ ச தர்மாத்மா முஹூர்த்தமபி ஜீவதி”–ஸ்ரீராமா. சுந். 15 : 52.
என்றது, பிராட்டிக்கு மனம் பெருமாள் பக்கலிலேயாய், உயிர் தன் பக்கலிலேயாய்க் கிடந்தது; எனக்கு அங்ஙன் அன்றிக்கே,
உயிரும் மனமும் பெருமாள் பக்கலிலேயான பின்பு ஆறியிருக்கப் போமோ என்கிறார் என்றபடி.
இரண்டும் அங்கே ஒரு தலைத்த பின்பு நான் எங்ஙனே ஆறி யிருக்கும்படி.
‘இரண்டும் அங்கே ஒரு தலைத்த பின்பு’ என்றது,
பிராட்டியைப் போன்று மனம் மாத்திரமின்றிக்கே, உயிரும் மனமும் அங்கே ஒரு தலைத்த பின்பு என்றபடி.
“நன்னலம் நம் பிரானது” என்ற போதே, மனமும் அங்கே ஈடுபட்டு விட்டது என்பதும் தானே போதரும். நலம்-உயிர்.

நஞ்சு அரவின் அணைமேல் நம் பிரானது நன்னலம்-
திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்த வடிவழகைக் காட்டி என்னை அநந்யார்ஹமாக்கினவன் பாடது என்னுடைய நற் சீவன்.
அன்றிக்கே,
திருவனந்தாழ்வானைப் போலே என்னை அநந்யார்ஹமாக்கினவன் என்னலுமாம்.
நற்சீவன் அவன் பக்கலிலேயாயிருக்க, கேவலம் சரீரத்துக்கு ஹிதம் சொல்லுகிற இதனால் பிரயோஜனம் என்?
அவன் பக்கலிலே சென்று ஹிதம் சொல்லுங்கோள் வேணுமாகில்.
“நம் பிரானது நன்னலம் எம்மை நீர் நலிந்து என் செய்தீர்” என்று கூட்டி,
பாவம் அருளிச் செய்கிறார் ‘நற் சீவன்’ என்று தொடங்கி.

———————————————————————————————————————–

நன்னலத் தோழிமீர்காள்! நல்ல அந்தணர் வேள்விப் புகை
மைந்நலங் கொண்டுயர் விண் மறைக்கும் தண் திருவல்ல வாழ்
கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை
என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே.–5-9-5-

விலஷணர் -அக்னி ஹோத்ர தூமம் ஆகாசம் மறைக்கும் -திவ்ய தேசம் நிரதிசய போக்ய பூதன் -என்று காண்பேன்
நன்னலத் தோழிமீர்காள்! நல்ல அந்தணர் வேள்விப் புகை-நல்ல -என்னிலும் மிக நல்ல -தோழிகள் -அநந்ய பிரயோஜனர் –
அதி பிரவணர் நல்ல அந்தணர்கள் -பகவத் ஆராதனா ரூபம்
மைந்நலங் கொண்டுயர் விண் மறைக்கும் தண் திருவல்ல வாழ்-த்ரவ்யங்கள் -கொண்டு ஹோமம் -கறுத்த புகை
உயர்ந்த ஆகாசம் -தன்னிறமாகும் படி மறைத்து நிழல் -கொடுத்து குளிர்ந்த திவ்ய தேசம்
கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை-கரும்பின் கோதற்ற கட்டி –
தயா சதகம் முதல் ஸ்லோகம் பிரபத்யே பிரணாவாகாரம் ஸ்ரீநிவாச அனுகம்ப்யா -தயா உருகி அருவியாக -கட்டியே திருமலை –
ஸ்ரீ தேசிகன் -நித்யம் சுலபம் இனிமை –
பாஹ்ய ஆப்யந்திர விபாகம் இல்லாமல் -எங்குமே இனிமை -உணர் முழு நலம் -எங்கும் ஞான ஆனந்த மயம் போலே
அப்பொழுதே நுகர வேண்டிய பக்குவ பலம் -கனி -இனிமைக்கு மேலே இழந்த சத்தையை உண்டாக்கும் அமுதமாகவும் இருப்பானே
ஆத்ம ஷேமம் -சம்ஸ்லேஷித்த காலத்தில் என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே.
நலத்தை பறித்துக் கொண்டு -புஜித்து-அனுபவித்து -ஆழ்வார் உடைய -ரூப குணம் ஸ்வரூப குணம் அனைத்தையும் கொண்டு
அத்தாலே தேஜஸ் மிக்கு -ஆத்ம குணம் சமம் தமம் பக்தி வைராக்கியம் -ரூப குணம் -அழகு
என்னிலும் பெரு விடாய் கொண்ட கண்கள் பார்க்க வேண்டுமே -என்று அவற்றுக்காக பிரார்த்திக்கிறார் –
ஆழ்வார்களும் இந்த்ரியங்களும் தனித் தனியாக விரும்புமே முந்துற்ற நெஞ்சம் –

சிறந்த அன்பினையுடைய தோழிமீர்காள்! சிறந்த பிராமணர்களாலே செய்யப்படுகின்ற யாகங்களினின்றும் மேல் எழுகின்ற புகையானது,
கரிய நிறத்தைக் கொண்டு உயர்ந்த ஆகாசத்தை மறைக்கின்ற குளிர்ந்த திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி யிருக்கின்ற
வெல்லக் கட்டியை பழத்தை இனிய அமுதத்தை என் நலத்தை எல்லாம் கொண்ட சுடரை என் கண்கள் காண்பது என்று கொல்? என்கிறாள்.
வேள்விப் புகை விண் மறைக்கும் திருவல்லவாழ் என்க. கன்னல்-கரும்பு.

நான் செய்தபடி செய்ய, இக் கண்கள் விடாய் தீரக் காணப் பெறுவது என்று? என்கிறாள்.

நல் நலம் தோழிமீர்காள்-
நலமாவது,
இவள் பக்கல் இவர்களுக்கு உண்டான அன்பு.
நன்னலமாவது,
தங்கள் காரியம் தலைக் கட்டிக் கொள்ளுகை யன்றிக்கே இருக்கை.
ஆன பின்பு, ‘தாய்மார்கள் பழி சொல்லுவர்கள்’ என்று அஞ்சி என் வழியே உங்களுக்கு ஒழுகாதிருக்கப் போமோ.

(ராமர் தன்னலம் பாராமல் சுக்ரீவன் நலம் -பார்த்தார் சுக்ரீவனும் தன்னலம் பாராமல் பெருமாள் நலம் பார்த்தார்
அதே போல் நீங்களும் தாய் நலம் பாராமல் என் நலம் பார்க்க வேண்டாமோ என்னும் நினைவால் இந்த திருஷ்டாந்தம் )

“குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் சேர்க்கை எப்படி தோழிமார்களுக்கும் இவளுக்கும் உண்டான ஸ்நேகத்துக்குத் திருஷ்டாந்தம்
காட்டுகிறார் ‘-இருவரும் பிறர் நலம் விரும்பி அன்றோ நண்பர்கள் ஆனார்கள்
“வாநராணாம் நராணாம் ச கதம் ஆஸீத் ஸமாகம:”- என்பது, ஸ்ரீராமா. சுந். 35 : 2.-உண்டாயிற்று?” என்றது,
குருகுலத்தில் வாசம் செய்யாத விலங்குகளுக்கும் வசிஷ்ட சிஷ்யர்களான இராஜ புத்திரர்களுக்கும்
இது ஒரு சேர்த்தி உண்டானபடி எங்ஙனே;
சாஸ்திரங்களை அறிந்தவர்கள் அலரோ குரு குல வாசத்திற்குத் தக்கவர்; என்ன,
மேல் இதற்குக் காரணம் சொல்லுகிறான்.

“இராமனுக்கும் சுக்கிரீவனுக்கும் இந்த விதமாகச் சிநேகமானது உண்டாயிற்று;”
“ராம சுக்ரீவயோ: ஐக்யம் தேவி ஏவம் ஸமஜாயத” — ஸ்ரீராமா. சுந். 35 : 32.-என்றது, நிர்ஹேதுகத்வம் என்றபடி.
தங்களையும் அறியாதே எங்களையும் –இஷ்வாகு குலக் கொழுந்து -குரங்கு ஜாதி – அறியாதே
இங்ஙனே விழுந்து கொடு -ஐக்யம்-நிற்கக் கண்டோமித்தனை.

அதாவது,
1-இளைய பெருமாள் கையும் வில்லுமாய் உணர்ந்து கொண்டு நின்று நோக்கக் கூடிய அந்தப்புரக் காரியத்துக்கு
அடியேன் வரும்படி யன்றோ அவர்கள்-சங்கதரான படி – ஒருங்கு சேர்ந்தபடி.
2-இளைய பெருமாள் அடிமையில் தப்பி நின்ற அளவுக்கும்-மாரீசன் வ்ருத்தாந்தம்- திருவடியைக் கொண்டு
இழையிட வேண்டும்படியாக அன்றோ அவர் நிலவரானபடி;
இளைய பெருமாள் பேர நிற்கை யன்றோ பிரிய வேண்டிற்று.
3-தங்கள் அளவிலும் பெருக்கப் பார்த்தார்கள். ஐச்வரியம் அவனுக்குக் காடு படும்படியன்றோ பார்த்தது.
“ஏவம் ஸமஜாயத –

“ஏவம் ஸமஜாயத – இந்த விதமாக உண்டாயிற்று” என்றதற்கு, மூன்று வகையாகப் பாவம் அருளிச்செய்கிறார். அவற்றுள்,
முதலது,
‘தங்களையும்’ என்றது முதல் ‘ஒருங்கு சேர்ந்தபடி’ என்றது முடிய. என்றது, அந்தப்புரக் காரியத்திற்கு அடியேன்
வரும்படியன்றோ அவர்கள் சேர்ந்தது என்று கருத்து. ‘தங்களையும்’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து,
தங்கள் பெருமையையும் எங்கள் சிறுமையையும் பாராமல் நினைவின்றிக்கே சேர விழுந்தது என்பது.
இரண்டாவது பாவத்தை அருளிச் செய்கிறார்
‘இளைய பெருமாள் அடிமையில்’ என்று தொடங்கி. என்றது,
தம்பியான இளைய பெருமாளுடைய அபராதத்தையும் நான் பொறுப்பிக்கும்படி என்பது கருத்து. நிலவர்-அந்த ரங்கர்,
இளையபெருமாள் அடிமையில் தப்ப நின்றாரோ? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார்
‘இளையபெருமாள் பேர நிற்கை’ என்று தொடங்கி.
மூன்றாவது கருத்தை அருளிச் செய்கிறார்
‘தங்கள் அளவிலும்’ என்று தொடங்கி. ‘தங்கள் அளவிலும் பெருக்கப் பார்த்தார்கள்’ என்றது,
தங்களுடைய ஐஸ்வர்யத்தைக் காட்டிலும், அதிகமான ஜஸ்வர்யத்தை யுடையராகும்படி பார்த்தார்கள் என்றபடி.
மேல் வாக்யத்தை விவரணம் செய்கிறார் ‘ஐச்வரியம்’ என்று தொடங்கி. ‘காடுபடும்படி’ என்றது, நிறைவுற்றதாம்படி என்னுதல்;
காட்டுக்கெல்லாம் தலைவனாகும்படி என்னுதல்.
இவ்வாறு உண்டாயிற்று”-
இப்படியன்றோ நட்பு இருப்பது; இவர்களும் தோழிமார்கள் அன்றோ.

நல்ல அந்தணர் வேள்விப் புகை மைந்நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் –
வேறு பிரயோஜனங்களை நினைக்காதவர்களான பிராமணர்களுடைய யாகங்களில் உண்டான ஹோமப் புகையானது,
வெளிறு கழித்துக் கொண்டு ஆகாயத்தளவன்றியே உயர்ந்த சுவர்க்க லோகத்தை மறைக்கும். என்றது,
கருமை நிறம் கொண்டு எழுகிற புகைகள், இங்கே கண்ணழிவறப் புண்ணியங்களைச் செய்து
சம்சார வெக்காயம் தட்டாதபடி சென்று தேவ மாதரோடே அநுபவிக்கிற
வைமாநிகரை முகத்தோடு முகம் பார்க்க ஒட்டாமல் மறைக்கிறபடியைத் தெரிவித்தபடி.
இருவராய்க் கலப்பாரை முகத்தோடு முகம் பார்க்க ஒட்டாமை அந்நிலத்திலுள்ளார்க்கு
ஸ்வபாவம் போலே காணும் – அவர்கள் புகைத்தல் இருக்கிறபடி.

நல்ல அந்தணர் –
வேறு பிரயோஜனங்களைக் கருதாதவரான பிராமணர்கள்,
இதனால், அவர்கள் கண்டீர்கோள் அத்தலைக்குத் தகுதியாகப் பரிமாறுகிறபடி;
ஆன பின்பு, நீங்களும் அப்படியாயிருக்க வேண்டாவோ என்பதனைத் தெரிவித்தபடி.

தண் திருவல்லவாழ் கன்னல் அம் கட்டி தன்னை –
கரும்பினுடைய கோது அற்ற கட்டியை. ‘இன்ன மலையின் கட்டி’ என்னுமாறு போலே, ‘திருவல்லவாழ் கட்டி’ என்கிறாள்.
கனியை –
அவ்வளவும் பார்த்திருக்க வேண்டாதபடி பக்குவமான பழமாயிருக்கை.
இன் அமுதந்தன்னை –
உடம்பைப் பூண் கட்டிக் கொடுக்க வற்றாயிருக்கை. என்றது,
அநுபவிப்பதற்குத் தக்க ஆற்றலைக் கொடுக்கையைத் தெரிவித்தபடி.
(போக்தா என்பதை விட போக்யமாக இருப்பதே ஏற்றம் –
அவன் நம்மை அனுபவிக்க அத்தை நாம் அனுபவிக்க ஆற்றல் வேண்டுமே )
தேவர்களுடைய உப்புச் சாறு போலன்றிக்கே, ஆத்ம உஜ்ஜீவனம் பண்ணிக் கொடுக்க
வற்றதாயிருத்தலின் ‘இன்னமுதம்’ என்கிறாள்.
சரீர ஜீவனம் -அது -இது ஆத்மா உஜ்ஜீவனம் கொடுக்குமே

என் நலம் கொள் சுடரை –
என்னுடைய அழகை யெல்லாம் கொள்ளை கொண்டு, அதனாலே ஒளி யுருவனாயிருக்கிறவனை. என்றது,
இவளுடைய அழகையெல்லாம் கொள்ளை கொண்டது தன் பேறு என்னுமிடம்
வடிவிலே தோற்றும்படி இருக்கையைத் தெரிவித்தபடி.
அனுபவித்து பிரயோஜனம் பெற்றது அவன் தானே -அதனால் அவனே போக்தா -தான் போக்கியம் என்றபடி
போக்த்ருத்வம் விட போக்யமாகும் தன்மை சிறந்ததே -பாரதந்த்ர்யம் விட சேஷத்வம் சிறந்ததே
அன்றிக்கே, என்னை எழுதிக் கொண்ட அழகை யுடையவனை என்றுமாம்.

என்று கொல் கண்கள் காண்பதுவே-
‘நான் பட்டது பட, குழந்தை ஜீவிக்கப் பெறுவது காண்’ என்பாரைப் போலே,
என் கண்களின் விடாய் தீர்வது என்றோ? என்கிறார்
“முடியானே” என்கிற திருவாய்மொழியிற்கூறிய கரணங்களை யுடையவர் அன்றோ.
இந்திரியங்களும் தாமும் தனித்தனியே சேதன சமாதியாலே விடாய் கொள்ளுகின்றவர் அன்றோ.

கரணங்கள் விடாய்க்கக் கூடுமோ? என்னுமதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘துக்கத்தால்’ என்று தொடங்கி.

“யதா தம் புருஷ வ்யாக்ரம் காத்ரை: ஸோகாபி கர்ஸிதை: ஸம்ஸ்ப்ருஸேயம் ஸகாமாஹம் ததா குரு தயாம் மயி”
என்பது, ஸ்ரீராமா. சுந். 40 : 3. திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
“துக்கத்தால் மிக அதிகமாக இளைத்திருக்கிற என் உறுப்புக்களால் புருஷ ஸ்ரேஷ்டரான அந்தப் பெருமாளை
நான் தொடக் கூடியவாறு திருவருள் புரிய வேண்டும்” என்றாள் பிராட்டி.
குழந்தைகள் ஜீவித்தால் பசி கெடுவார் அபிமாநிகள் அன்றோ.

—————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம்- 121- திருவாய்மொழி – -5-8–6….5-8-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

June 11, 2016

சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6-

நித்ய ஸூ ரி சேவ்யன் -நிரதிசய போக்யன் -என் விரோதிகளைப் போக்கி உன் திருவடிகளில் சேர்த்து கொள்ள வேண்டும்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!-பகவத் அனுபவம் -ஸ்வா பாவிக புகழ் -அனுபாவ்யனாய் கண் வளர்ந்து அருளி
நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹன்
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!-மிடறு போலே போது செய்யாதே -கபம் -நேரம் கடந்து -இசை போலே சரவண போக்யமாய் –
கீழே கண்ணால் – போக்கியம் -நித்ய போக்கியம் நாக்குக்கு இனியன் -வாயார பாடலாம் ஸ்துதிக்கு -இனியன்
ஞானப் பலம் -ஆகையால் மனசுக்கு போக்கியம் -மனசு வழியாக புலன்களுக்கு -த்வாரம் -ஞானத்துக்கு –
பாக்ய அப்யந்தர சர்வ இந்த்ரி யங்களாலும் அனுபவியா நின்றாலும் மிக சிறந்த சிங்கம் -மேணானித்து-அனுபவித்து முடிக்க முடியாதே
சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்–உன்னுடைய திருவடிகளுக்கே ஆட்பட்டு அனன்யார்ஹன்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்-துஷ் பூரம் -ஸ்வா பாவிக தொடர்பு இருந்தாலும் துராசை ஆகிய குழியை துரத்து
எத்தனை நாள் அகன்று இருக்க வேண்டும்
இதுக்கு அடியான என் அநாதி கால கர்மங்களை அறுத்து ஸ்வரூப பிராப்தம் உன் திருவடிகளை சேரும் படி சூழ்ந்து அருள வேண்டும்

இயல்பாக அமைந்த புகழையுடைய பெரியோர்கள் நித்தியவாசம் செய்கின்ற திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் திருக்கண் வளர்கின்றவனே!
நித்திய சூரிகளுக்குத் தலைவனே! யாழினிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே! என்னுடைய பழைமையான இரு வினைகளையும் அறுத்து
உனது திருவடிகளைச் சேர்வதற்குரிய முறையை யான் அறிந்திருந்தும், தூர்க்க முடியாத இந்திரியங்களாகிற குழியை நிறைத்துக்கொண்டு
எத்தனை காலம் உன்னை நீங்கி இருப்பேன்? உன்னைச் சேர்வதற்குரிய உபாயத்தைச் செய்தருள வேண்டும்.
ஊழ்-முறைமை, தூரா-நிறைதல் இல்லாத. தூர்த்து-நிறைத்து. எனை-எத்தனை. அரியேறே! சூழ்கண்டாய் என்க, அரி ஏறு-ஆண் சிங்கம்.

உன் இனிமையை அநுபவிக்கிற எனக்கு ஒரு பிரிவு வாராதபடி உன்னை அடைவதற்குத் தடையாகவுள்ள விரோதிகளையும் போக்கி,
உன்னைப் பெறுவது ஒரு விரகு பார்த்தருள வேண்டும் என்கிறார்

என் தொல்லை வினையை அறுத்து உன் அடி சேரும் சூழ் கண்டாய் –
என்னுடைய பழமையான கர்மங்களை வாசனையோடே போக்கி,
உன் திருவடிகளை நான் வந்து கிட்டுவது ஒரு வழியை நீயே பார்த்தருள வேண்டும்.
கிரமத்திலே செய்கிறோம் என்ன, அதற்கு எல்லை என்? என்கிறார்.
உன் அடி சேரும் ஊழ் கண்டிருந்தே –
உன் திருவடிகளைக் கிட்டும் முறையை அறிந்து கொண்டிருந்தே.
நாட்டாரைப் போன்று உன்னை அறியாது ஒழியப் பெற்றிலேன் என்பார் ‘இருந்தே’ என்கிறார்.
“உன்னடி சேரும்” என்பதனை, “உன்னடி சேரும்படி சூழ்கண்டாய்” என்றும்,
“உன்னடி சேரும் ஊழ் கண்டிருந்தே” என்றும் முன்னும் பின்னும் கூட்டுக. “ஊழ்” என்றது, சேஷ சேஷிபாவ முறையினை.
தூராக் குழி தூர்த்து-
நிறைக்க இயலாத இந்திரியங்களுக்கு இரை இட்டு
எனை நாள் அகன்று இருப்பன் –
இன்னம் எத்தனை நாள் இங்ஙனே இருக்கக் கடவேன்?
ஸ்ரீபரதாழ்வான் போல்வார்க்கோ ஒரு நாள் இட்டுக் கொடுக்கலாவது என்றபடி.
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் –
‘பிரிந்திருக்கும் நாள் எத்துணை’ என்று கேட்க வேண்டாதவர்கள், அவன் கண்வட்டத்தில் வசித்து
வாழப் பெறுகையாலே வந்த சிலாக்யமான புகழையுடையவர்கள்.
அன்றிக்கே, தொல்புகழ் என்பதற்கு, பழைய புகழ் என்னலுமாம்.
விஷய சந்நிதி தமக்கும் அவர்களுக்கும் ஒத்திருக்க, அவர்கள் வாழ்கிறபடி எங்ஙனே? என்னில்
தம்மைப் போன்று கூப்பிடாமையாலே நினைத்த பரிமாற்றம் பெற்றார்கள் என்று இருக்கிறார்.

வானோர் கோமானே –
அவர்கள் சிலவர் நாள் நடையாடாத தேசத்திலே வசிக்கிறவர்கள் காணும்
யாழின் இசையே –
மி்டற்று ஓசை போன்று கர்மத்துக்குத் தகுதியாகப் போது செய்கை அன்றிக்கே இருத்தல்.
போது செய்கை -கண்ட த்வனி -சொல்லாமல் -ச்லேஷ்மாதிகளால் கபம் -வாதம் பித்தம் கபம் மூன்றும் உண்டே –
“யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே” –திருவாய்மொழி. 2. 3 : 7.-என்னக் கடவதன்றோ.
அமுதே – ‘செவிக்கு அதுவாய்,-யாழின் இசையாய் – நாவிற்கு வேறு ஒன்று தேட வேண்டாதபடி இனிய பொருளாயிருக்கை.
அறிவின் பயனே –
ஞானத்துக்குப் பிரயோஜன ரூபமான சுகம். மனத்திற்கு இனிய பொருளாயிருக்கிறபடி.
அரி ஏறே –
எல்லாப் பொருள்கட்கும் வேறுபட்ட தன்மையை யுடையவனாயிருத்தலால் வந்த மேனாணிப்பையுடையவனே!
விசஜாதீயத்வம் -ச்வேதர சமஸ்த வஸ்து விலஷணம் -சர்வ சேஷி -நியந்தா -வியாப்தா –
அன்றிக்கே. கண்களுக்கு முகக்கொள்ள ஒண்ணாத இனிமையையுடையவன் என்றுமாம்.
இங்குள்ளார்க்கும் அங்குள்ளார்க்கும் உன்னை அநுபவிக்கக் கொடுத்து நிரதிசய போக்கியனாயிருக்க,
நான் இந்திரியங்களுக்கு இரை இட்டு எத்தனை காலம் அகன்றிருக்கக் கடவேன் என்கிறார்.

————————————————————————————————

அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!
எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.–5-8-7-

விக்ரக வை லஷண்யம் காட்டி அடிமை கொண்ட பின்பு திருவடியைக் கொடுத்து அருள வேண்டும்
அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!-ஸ்வ தந்த்ரம் மட்டும் இல்லாமல் ச்பருஹநீயம் -திருமேனி ஒளி-வாத்சல்யம் அமிருத வர்ஷி
நீல தோயாத மத்யஸ்தா -கரு நீல மேகம் -தண்ணீர் நிரம்பிய -வித்யுத் லேகா இவ பாஸ்வரா -தஸ்யா சிகையா மத்யே பரமாத்மா விவஸ்திதயா-
நெருப்பு ஜ்வாலை- ஜ்வாலைக்குள் கருத்த மேகமா –
சிகைக்கு நடுவில் பெருமாள் -வெளியில் இருள் -மின்னல் -நடுவில் சிகை -நடுவில் கருத்த மேகம் -அழகா திகைப்பா பயமா -அனைத்தும் கலந்து –
கிரணங்கள் வீச –பொன் ஒளிக்கு ஆஸ்ரயமான கறுத்த திரு மேனி
எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே
ஜ்யேஷ்டா நஷத்ரம் கேட்டை நஷத்ரம் -அக்னி போல சிவந்து
ஆஸ்ரித விரோதிகளுக்கு -பவளமே மலை -எரிகின்ற பவளக் குன்றம் என்றுமாம்
ஸ்த்ரிமான வடிவு உடையவனாய் -நான்கு தோள்களையும் காட்டி என்னை எழுதிக் கொண்டவனே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
வாசிகாதி கைங்கர்யம் கொண்டே -அடிமைக்கு பிரதி சம்பந்தி மிதுனம் -லஷ்மி சஹிதன் கோமளவல்லி தாயார் உடன் சந்நிஹிதன்
பிராப்யமான உன் திருவடிகளைத் தந்து அருள வேண்டும் –
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.
திருமந்தரம் சரம ஸ்லோகம் போலே -நோற்ற நான்கும் –ரகஸ்ய த்வயம் போலே என்பர் திருமாலே -உண்டே இங்கே –
த்வய பிரக்ரியை -அடிமை கொள்வதை -உத்தர வாக்யார்த்தம் தானே -வாக்ய த்வயம் போலே அகலகில்லேன்

அரியேறே! அழகிய பொன்னின் சுடரே! சிவந்த கண்களையுடைய கரிய முகிலே! நெருப்புப் பொருந்திய பவளக்குன்றே!
நான்கு திருத்தோள்களையுடைய எந்தையே! உன்னுடைய திருவருளாலே என்னைப் பிரிதல் இல்லாத அடிமை கொண்டவனே!
திருக்குடந்தையில் திருக்கண் வளர்கின்ற திருமாலே! இனி, தரித்திரேன், உன்னுடைய திருவடிகளைத் தந்து என் பிறவியை நீக்குவாய்.
வியாக்கியானத்துக்குப் பொருந்த “எரியேய் பவளக் குன்றே!” என்று திருத்தப்பட்டது. இப்பொழுதுள்ள பாடம், ‘எரியே பவளக்குன்றே’ என்பது.
‘அடிமை கொண்டாய்!’ என்பதனை விளிப்பெயராகக் கொள்ளாது, அடிமை கொண்டாய், ஆகையாலே,
சரணம் தந்து சன்மம் களையாய் எனக் கோடலுமாம். களையாய் என்றது, களைய வேண்டும் என்றபடி. உடன்பாட்டு முற்று.

உன் கிருபையாலே உன் வைலக்ஷண்யத்தைக் காட்டி அடிமையாதல் அல்லது செல்லாதபடி ஆக்கின பின்பு,
உன் திருவடிகளைத் தந்து பிறகு சம்சாரத்தை அறுக்க வேண்டும் என்கிறார்.

அரியேறே-
தன்னினின்றும் வேறுபட்ட பொருள்களுக்கெல்லாம் தானே கடவனாகையாலே வந்த மேனாணிப்பு.
சர்வ வஸ்து விசஜாதீயன் முன்பு -இங்கு சர்வ வஸ்து நிர்வாஹன் –
என் அம்பொன் சுடரே –
அம்மேன்மைக்குச் சிறிது உள்ளாகப் பார்த்தவாறே பிரகாசித்துத் தோற்றுகிற ஒளியாலே விலக்ஷணமான
பொன் போலே விரும்பத்தக்கதான ஒளியையுடையவனே!
அவ்வடிவில் வாசியைத் தமக்கு அறிவித்தவனாதலின் ‘என் அம்பொன் சுடரே’ என்கிறார்.
செங்கண் கருமுகிலே –
அதற்கும் -மேன்மைக்கும் ஒளிக்கும் -அடியான திருக்கண்களும் திருமேனியும் இருக்கிறபடி.
எரி ஏய் பவளக் குன்றே –
நக்ஷத்திர மண்டலம் வரையிலும் ஓங்கிய பவளக்குன்றே! சமுதாய சோபை இருக்கிறபடி. எரி-கேட்டை நக்ஷத்திரம்.
அன்றிக்கே, எரி ஏய்ந்த பவளக்குன்று போலே இருக்கை என்னுதல். என்றது, அக்நி போலேயுள்ள ஒளியையுடைய பவளக்குன்றே! என்றபடி.
இதனால் ஒளியையும், விரும்பப்படுகின்ற தன்மையையும் நினைக்கிறது.–
உகவாதார்க்கு நெருங்கவும் கூடாத தன்மையனாய், அநுகூலர்க்கு ஒளியால் விருப்பத்திற்கு விஷயமாய் இருக்கையைத் தெரிவித்தபடி.
அளவிடற்கு அரியவன் என்பார் ‘குன்றே’ என்கிறார்.
நால்தோள் எந்தாய் –
கல்பக தரு பணைத்தாற்போலே இருக்கிற திருத்தோள்களைக் காட்டி என்னைத் தனக்கே உரியவனாக எழுதிக்கொண்டவனே!
‘திருவடி தோற்ற துறையிலே ஆயிற்று இவரும் தோற்றது.

உனது அருளே பிரியா அடிமை என்னைக் கொண்டாய்-
உன்னுடைய கேவல கிருபையாலே என்னை நித்திய கைங்கரியத்தைக் கொண்டாய்.
அருள் – அருளாலே.
குடந்தைத் திருமாலே-
அடிமை கொள்ளுகைக்காகப் பெரிய பிராட்டியாரோடேகூடத் திருக்குடந்தையிலே வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறவனே!
‘ஒரு தேச விசேடத்தே’ என்னாதபடி தேசத்தில் குறை இல்லை, திருமகள் கேள்வனாகையாலே பேற்றிற் குறை இல்லை.
“சீதாபிராட்டியாரோடுகூட நீர் மலைத்தாழ் வரைகளில் உலாவும்பொழுது நான் எல்லாவித கைங்கர்யங்களையும்
எப்பொழுதும் பண்ணுவேனாக” என்ற இளையபெருமாளைப் போலே பற்றுகிறார் இவரும்.

“பவாஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்கிரத: ஸ்வபதச்ச தே”-ஸ்ரீராமா. அயோத். 31 : 25.
பெருமாளைப் பார்த்து இளையபெருமாள் கூறியது.

இனி தரியேன்-
அந்தச் சேர்த்தியைக் கண்டபின்பு என்னால் பிரிந்து தரித்திருக்கப் போகாது.
தாய் தந்தையர்கள் அண்மையிலிருப்பாருமாய் ஸ்ரீமான்களுமாய் உதாரருமாய் இருக்க,
குழந்தை பசித்துத் தரித்துக் கிடக்கவற்றோ. தரியாமை எவ்வளவு போரும் என்ன,
கோமள வல்லித் தாயார் திருக் கோலம் -அவனுக்கும் ஆராவமுத ஆழ்வார் திருக் கோலம் அவளுக்கும் மாற்றி
குத்து விளக்கு பாசுரம் சாத்தி சேவை இன்றும் உண்டே
உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே –
முலை கொடுத்துச் சிகித்சிப்பாரைப் போலே, முற்படத் திருவடிகளைத் தந்து,
பின்பு பிறவியின் சம்பந்தத்தை அறுக்க வேண்டும். -‘புண்ணார் ஆக்கையின் புணர்வினை அன்றோ அறுக்கப் புகுகிறது;

மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம் புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந் தெய்த் தொழிந்தேன்
விண்ணார் நீள்சிகர விரையார் திரு வேங்கடவா! அண்ணா! வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே.– பெரிய திருமொழி.

அதற்கு அடியிலே தரிப்பித்துக் கொண்டு, பின்னை அறுக்க வேண்டும் என்கிறார்.
ராஜ புத்திரன் சிறையில் இருந்தால் முடி வைத்து சிறை விடுவிப்பாரைப் போலே-
திருப்பாவை அனுசந்தானம் செய்து கொண்டே சிகிச்சை பண்ணுவார்களாம் பட்டரை-

———————————————————————–

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-

ஹேம மகரிஷி திருக்குமாரியாக – கோமள வல்லி தாயார் -பொற்றாமரையில் –ஹேமா புஷ்கரணி –
ப்ருகு மகரிஷி தான் செய்த தவற்றுக்கு தபஸ் -அவரே ஹேமா மகரிஷி –
திருக் கல்யாணம் -வேகவதி -தாயாரே துரத்தி வர -ஒழிந்த ஸ்ரீநிவாசன் -பாதாள ஸ்ரீநிவாசன் —
பிரணவம் -பிரணவாராக விமானம் ஸ்ரீ ரெங்கம் -அதன் விரிவான -வைதிக விமானம் –
ஸ்ரீ ராமரே இங்கே பிரதிஷ்டை -செய்து அருளினார் –தேர் உடன் வந்து -மகர சங்கராந்தி அன்று –
அதனாலே ஸ்ரீ -சாரங்க பாணி -வந்து தாயாரை திருக் கல்யாணம் –உபாயமும் பரம போக்யமும் அவனே –
களை கண் அற்றாரை யுருக்கும் மாதுர்யம் குடமூக்கிலே ப்ரவஹிக்கும் –இனிமை —காவேரி -போலே –
விபரீதமே பலிக்கிலும் -அநந்ய கதி -திருவடிகளை விடாமல் இருக்க அருள் செய்ய வேண்டும் -சரம தசையிலும் –
களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்-அனுபவிக்கப் பெறாத துன்பத்தை போக்கு -போக்காமாலும் -உன் முடிவு -துக்க நிரசக வஸ்து வேறு இல்லேன் –
அறிவிப்பு போலே அருளிச் செய்கிறாய்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
துக்க நிவர்த்தாக பரிகரம் உண்டே -ஆஸ்ரித அர்த்தமாக -சக்கரம் ஏந்தி இங்கே கண் வளர்ந்து அருளும் -அத்யாச்சர்ய
சௌந்தர்ய உக்தன் -அழகே ஆச்சர்யப்படுத்தும் உன்னை அனுபவிக்கப் பெறாத ஆர்த்தி யாலே
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது-எப்போதோ ஏதோ வேணும் என்கிற பயம் உள்ளதே -உடலம் தளர்ந்து -உன்னை அனுபவிக்கப் பெறாமல்
உடலம் தளர்ந்து என் ஆவியும் சரிந்து போம் -நிலை நுழைந்து போகும் பொழுது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே-சித்த தௌர்பல்யம் -பெறவாதே-உன் திருவடிகலையை ஒருங்க
-பிராப்யம் பிரபாகமாக பிடித்துப் போம் படி அருள வேண்டும்

வளைந்த வாயையுடைய சக்கரத்தைப் படையாக வுடையவனே! திருக்குடந்தையில் திருக்கண் வளர்ந்தருளுகின்றவனே! மாமாயனே!
என் துன்பத்தைப் போக்குவாய்; போக்காதொழிவாய்; துணையாவார் வேறு ஒருவரையுமுடையேன் அல்லேன்; சரீரம் தளர்ந்து என் உயிரும்
இந்த உடலை விட்டு நீங்கிப்போகின்ற காலமாயிற்று; தளராமல் உன் திருவடிகளை ஒருபடிப்படப் பிடித்துக்கொண்டு போவதற்கு நீ சம்மதிக்க வேண்டும்.
“துன்பம் என்பதனை இடைநிலைத் தீவகமாக முன்னும் பின்னும் கூட்டுக. களைகண் – துணை. இளைத்தல் – நெகிழ்தல்.

“தரியேன்” என்ற பின்பும் முகங்கிடையாமையாலே கலங்கி; அநுபவம் பெற்றிலேனேயாகிலும்,
‘உன் திருவடிகளே தஞ்சம்’ என்று பிறந்த விசுவாசம் குலைகிறதோ என்று அஞ்சா நின்றேன்;
அது குலையாதபடி பார்த்தருள வேண்டும் என்கிறார்.
விஸ்வாசம் குலையாது போக வேண்டும் என்கைக்கு பிரசக்தி ஏது என்னில் -தரியேன் -பல தடவை சொல்லியும் -பேறு கிட்டாமல் இருக்கவே –

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் –
நீ உன் காரியத்தைச் செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய், நான் குறைவற்றேன், -ரஷணம்-அவன் கார்யம் தானே
“நீயே உபாயமாக எனக்கு ஆவாய்” என்கிற அம்சத்தில் குறையில்லை;
அஹமஸ் அபராதானாம் ஆலய அகிஞ்சன அகதி – “த்வம்ஏவ உபாயபூதோ மே பவ இதி ப்ரார்த்தநாமதி:”என்றது,
சரமஸ்லோக பூர்வார்த்த பிரதிபாத்ய அதிகாரியின் செயலில் குறை இல்லை என்றபடி.–அறிவிப்பே அமையும் –
சர்வ பாபேப்யோ-மோஷயிஷ்யாமி-“எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்” என்னும் உன் கூறு செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய்.
பூர்வ கூறு நமது கர்த்தவ்யம் -உத்தர கூறு உன்னுடையது அன்றோ –
அப்படிச் செய்கிறோம் என்னாமையாலே, என்னுடைய ரக்ஷணத்துக்காக அன்றோ இக்கிடை என்கிறார் மேல்:
வளைவாய் நேமிப்படையாய்-
பார்த்த இடம் எங்கும் வாயான திருவாழியை ஆயுதமாகவுடையவனே!
களையாதொழிகைக்குச் சொல்லலாம் கண்ணழிவு உண்டோ? என்பார் ‘நேமிப்படையாய்’ என்கிறார்.
என்றது, ‘பரிகரம் இல்லை என்னப் போமோ; கைகழிந்து போயிற்று, இனிப் படை திரட்ட வேண்டும்’ என்னும் கண்ணழிவு உண்டோ? என்றபடி.
தொழுவித்துக் கொள்ளும் கைக்கு பரிகரம் உண்டு -சங்கு சக்கரம் ஏந்தும் கையான் -தொழும் கைக்கு அஞ்சலி பரிகரம் உண்டே
வில் கை வீரன் வெறும் கை வீரன் -அகிஞ்சனன் -நம-என்பதே முமுஷுக்கு வீரத்தனம் –
உன் கையில் ஆயுதத்துக்கு வாய் இல்லாத இடம் உண்டோ, அது வாய் படைத்த பிரயோஜனம் பெற வேண்டாவோ? என்பார் ‘வளைவாய்’ என்கிறார்.
மா ஸூ ச சொல்ல வேண்டாமோ -வாய் படைத்த பிரயோஜனம் இது அன்றோ –
நேமிப் படையாய் களைகண் மற்றிலேன் –
அப்படி இருப்பது என் கையில் ஓர் ஆயுதம் உண்டோ, பிறர் கையில் ஓர் ஆயுதம் உண்டோ, உன் கையில் ஆயுதம் இல்லையோ.
அநந்ய கதித்வத்தை மீண்டும் ஆவிஷ்கரிக்கிறார் –
குடந்தைக் கிடந்தாய் மா மாயா –
திருக் குடந்தையிலே வந்து ஆச்சரியமான அழகோடே திருக்கண் வளர்ந்தருளுகிறது அடியார்களுக்காக அன்றோ.
நீ “மாம்” என்றதன் பின் இவ்வருகுள்ள ஏற்றமெல்லாம் பாராய். இதனால், அவதார தசையிலும் அர்ச்சாவதாரம் சுலபம் என்றபடி.
38 வருஷம் -காந்தாரி சாபம் -மா ஸூ சா சொல்லி பின்பு 38 வருஷத்துக்கு பின்பே தன்னுடைச் சோதி எழுந்து அருளினான் –
“குடந்தைக் கிடந்தாய்” என்று அர்ச்சாவதார சௌலப்யம் சொல்லுகையாலே, ‘நீ, “மாம்” என்றதன்பின்’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார். “மாம்” என்பது, சரமஸ்லோகத்திலுள்ள ஒரு பதம்.
‘நீ மாம் என்றதன்பின்’ என்றது, கிருஷ்ணாவதார சௌலப்யத்தைத் திருவுள்ளம்பற்றி.
ஏற்றமெல்லாம் என்றது, அர்ச்சக பராதீனனாயிருக்கிற ஏற்றம் எல்லாம் என்றபடி.
நேமிப் படையாய்-சக்தி வைகல்யம் சொல்ல ஒண்ணாது,
குடந்தைக் கிடந்தாய் – ‘சுலபன் அல்லன்’ என்ன ஒண்ணாது,
மா மாயா-‘ருசியை உண்டாக்குமவன் அல்லன்’ என்ன ஒண்ணாது என்றபடி.

உடலம் தளரா –
சரீரம் கட்டுக் குலைந்து. தளரா-தளர.
எனது ஆவி சரிந்து போம்போது –
என் உயிரானது முடிந்து போகுமளவாயிற்றுக் கண்டாய். ‘போம்போது’ என்றது, போகும் அளவாயிற்று என்றபடி.
நன்று; இதுதான் அந்திம ஸ்மிருதி ஆனாலோ? என்னில், “கட்டைபோன்றவனை, கல் போன்றவனை” என்றும்,
“நான் நினைக்கிறேன்” என்றும் சொல்லுகிறதை இவர் அறியாதவர் அன்றே;
-“ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாணசந்நிபம் அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்”என்பது, வராஹசரமம். ‘
இவர்தாம் அவ்வதிகாரிகளும் – ‘உபாசகர்களும்’ -அலரே.

ஆதலால், பிரிவுத் துன்பத்தாலே சரீரமும் தளர, உயிரும் சரீரத்தை விட்டுப் போகும் தசையாயிற்று என்கை
இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் போத நீ இசை –
அபேக்ஷிதம் பெற்றிலேனேயாகிலும், நான் விரும்பியது சித்திக்கும்படி உன் திருவடிகளைப் பற்றின பற்று நெகிழாமற் பண்ணி அருளவேண்டும்.
அநுபவம் கிடையாமையாலே, ‘அதற்கு அடியான உபாய அத்யவசாயமும் குலைகிறதோ’ என்று அஞ்சி,
இது குலையாமல் பார்த்தருள வேண்டும் என்கிறார். ஒருங்க – ஒரு படிப்பட.

———————————————————————————————————————-

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9-

எனது அனுமதியைப் பிறப்பித்து -கிடை அழகு -சேவித்த பின்பு நடை அழகு காண வேண்டுமே
இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!-அநாதி காலம் -விமுகனான என்னை -நம் பாட்டுக்கு ஆழ்வார் அருளிச் செய்கிறார் –
பட்ட பாட்டைப் பகிர்ந்து கொள்கிறார் -ஓம் என்று இசைவித்து
அநந்ய பரனாகும் படி இதுவே பிராப்யம் பிராபகம்
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!-இப்படி ஸ்வரூப ஞானம் பிறந்தார்க்கு பிராப்யன் ஆகும் படி பிராப்ய அனுபவம் விச்சேதம் இல்லாத –
இந்த்ராதிகள் அசையுடைய அமரர்கள் -கல்பம் தானே இருப்பார்கள் -அனுபவத்திலும் -நித்யம் இல்லையே இவர்களுக்கு
அநந்த கருட விஸ்வக்சேனர் -போன்றார்களுக்கு -தலைவர்களுக்கு தலைவன்
சமஸ்த த்ரிவித காரணன் -சர்வாதிகன் -விக்ரகம் உடையவன் -ஐஸ்வர்யம் -என்றுமாம் –
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை-ஆஸ்ரிதர் அனுபவ அர்த்தமாக -திருமழிசை ஆழ்வார் நம்மாழ்வார் போன்றோர் மணிகள்
தார்ச நீயமான பெரு விலையனான ரத்னங்கள்
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண -உலகத்தில் பரந்து -பகர ஸ்தோத்ரம் பண்ண என்றுமாம்
கிட்டுவானா இல்லையோ -என்று உலகோர் -இடம் உள்ள அசைவு -இந்த சங்கை உன்னால் அன்றோ போனது
துர்லப சங்கையால் வந்த அலைச்சல் தீர்ந்ததே நீ கிடந்ததால்
-நம்முடைய ஆராவமுதன் அன்றோ -வாராயே.சாரங்கபாணி தளர் நடை -நடவாயே – வருக வருக வாமன நம்பி –
நடந்த கால்கள் நொந்தவோ -ஸ்தோத்ரம் பண்ணும் படி -நடை அழகு காணும் படி
துக்க சாகரத்தில் -இல் இல்லம் வீடு -அமிழ்ந்து போகும் லோகம் என்றுமாம்
அசைவு இல்லா லோகம் நித்ய விபூதி -ஸ்தோத்ரம் பண்ணும் படி என்றுமாம் –
அமர்ந்த அழகைத் தான் அங்கே சேவை -இங்கு தானே கிடந்த அழகு -இத்தை அங்கே இருந்து ஸ்தோத்ரம்
இடம் வலம் கொள்ளும் -விஷய சப்தமி -பெருமாள் அசையும் அசைவிலே ஈடுபட்டு உலகம் ஸ்தோத்ரம் பண்ணும் என்றுமாம் –

என்னை உடன்படச் செய்து உனது திருவடிகளிலே சேரச்செய்த அம்மானே! அழிதல் இல்லாத நித்தியசூரிகளுக்குத் தலைவரான
சேனைமுதலியாருக்குத் தலைவனே! திசைகளில் எல்லாம் ஒளியை வீசுகின்ற செழுமைபொருந்திய சிறந்த இரத்தினங்கள் சேர்ந்திருக்கின்ற
திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்திலே, வருத்தம் இல்லாதவாறு உலகமானது பரவும்படி திருக்கண் வளர்கின்றவனே! நான் காணும்படி வர வேண்டும்.
இசைவித்து இருத்தும் அம்மான் என்க. வில் – ஒளி. வாராய்; உடன்பாடு; வரவேண்டும் என்றபடி.

சர்வேச்வரனாய் வைத்து எல்லாராலும் பற்றப்படுமவனாகைக்காக இங்கே வந்து அண்மையில் இருப்பவனாய் எனக்கு
அடிமையால் அல்லது செல்லாதபடி செய்த நீ, கண்களால் நான் காணும்படி வர வேணும் என்கிறார்.

என்னை இசைவித்து –
நெடுநாள் விமுகனாய் நித்திய சம்சாரிகளுக்கும் இவ்வருகாயிருக்கிற என்னை அடிமையிலே இசைவித்து.
இசையாத என்னை இசைவித்த அருமை வேணுமோ இசைந்திருந்த நீ காரியம் செய்கைக்கு.-
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சினை வஞ்சித்து -எதிர் சூழல் புக்கு -ஒருவனை வளைக்க ஊரை வளைப்பாரைப் போலே –
உன் தாள் இணைக்கீழ் இருத்தும் –
நித்தியசூரிகள் அடிமை செய்கின்ற உன் திருவடிகளிலே இருத்தினவனே!
சாக்கியம் கற்றோம் -இத்யாதி -பரகு பரகு என்று திரியாதபடி தன் திருவடிகளிலே விஷயமாம்படி செய்யுமவன் என்கை.
“நிழலும் அடிதாறும் ஆனோம்” என்கிறபடியே, மிதி அடியாம்படி ஸ்ரீசடகோபன் ஆக்கி.

அழகு மறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான் நிழலும் அடிதாறு மானோம் – சுழலக்
குடங்கடலை மீதெடுத்துக் கொண்டாடி அன்றத் தடங்கடலை மேயார் தமக்கு.- பெரிய திருவந்தாதி.

பெருங்காற்றில் பூளை போலே யாதானும் பற்றி நீங்கும் விரதமாய் அன்றோ முன்பு போந்தது.
ஆளை யாவுனக் கமைந்தன மாருத மறைந்த பூளை யாயின கண்டனை இன்று போய்ப் போர்க்கு
நாளை வாவென நவின்றனன் நாகிளங் கமுகின் வாளை தாவுறு கோசலை நாடுடை வள்ளல்.-என்பது, கம்பராமாயணம்.
அம்மானே-
பேறு இவரதாயிருக்க, அவன் இசைவிக்க வேண்டின சம்பந்தம் சொல்லுகிறது.
அசைவு இல் அமரர் தலைவா –
நித்தியசூரிகளுக்குத் தலைவனான ஸ்ரீசேனாபதியாழ்வானுடைய காரியமும் இவன் புத்தியதீனமாய் இருக்கிறபடி.
அசைவில்லாத அமரர் – நித்தியசூரிகள். அசைவில்லாமையாவது, பிரமன் முதலியோருடைய அழியாமை போலே ஆபேக்ஷகமன்று.
கல்ப காலத்தை எல்லையாக உடையது அன்று என்றபடி.
அன்றிக்கே, குறைதல் விரிதல் இல்லாமல் எப்பொழுதும் ஒரே தன்மைத்தான ஞானத்தை யுடையவர்கள் என்னுதல்.
ஆதிப் பெருமூர்த்தி-
இவ்வருகுள்ளாருடையவும் சத்தைக்குக் காரணமாக இருப்பவனே! என்றது,
உலகத்திற்கெல்லாம் காரணமாயிருக்கின்ற சர்வாதிகனே! என்றபடி. மூர்த்தி – ஐஸ்வர்யம் உடைய ஸ்வாமி.

திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை
– திசைகளிலே ஒளி பரவாநின்றதாய், காட்சிக்கு இனியதாய், பெருவிலையனான இரத்தினங்கள் சேராநிற்கிற திருக்குடந்தையிலே.
அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய் –
உலகமானது வருத்தம் அற்று அடையும்படி கிடந்தாய்.
வருத்தம் அறுதலாவது, கண்களால் காண முடியாதவனை நாம் எங்கே அடையப் போகிறோம் என்கிற வருத்தம் தீர்தல்.
அன்றிக்கே, அசைவில்லாத உலகமான நித்திய விபூதியிலுள்ள நித்தியசூரிகளும் வந்து அடையும்படி கிடந்தாய் என்னுதல்.
அன்றிக்கே, அசைவுண்டு – இடம் வலம் கொள்ளுகை, அதனைக் கண்டு உலகமானது பரவும் படி கிடந்தாய் என்னுதல்.
ஆக சத்தையை நோக்கி, மேலுள்ளனவற்றை இவர்கள் தாமே நிர்வஹித்துக் கொள்ள இருக்கை அன்றிக்கே,
மேலுள்ளனவற்றையும் தானே செய்வானாக நினைத்து வந்து கிடக்கிறபடியைத் தெரிவித்தபடி
கிடந்தாய் காண வாராய் –
திருக்கண் வளர்ந்தருளுகின்ற அழகினைக் கண்டு அநுபவித்தேன், இனி நடையழகு கண்டு நான் வாழும்படி வரவேணும்.
செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை என்பதற்கு, -புருஷ ரத்னங்கள் – -‘ஆராவமுதாழ்வார், திருமழிசைப்பிரான் போல்வார்
புருஷரத்நங்கள் சேரும் திருக்குடந்தை’ என்று நிர்வஹிப்பர்கள்.

——————————————————————————————–

வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10-

கண்டு அனுபவிக்க ஒண்ணாத படி -அகவாயில் நின்று -அந்தர்யாமியாக இருந்து -உருவாய் வராமல் -அருவாக வந்து -அந்தர்யாமி என்றுமாம் –
நிரதிசய சாரச்யதையை விளைவிக்கும் உன்னை -அர்ச்சாவதார அடிமை புகுந்து -பின்னும் -கண்ணிட்டு கொண்டு நடை அழகை காட்டாமல்
வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!-அபஷய விநாசம் இல்லாமல் -என் மாயா -தேய்தல் அளித்தால் இல்லா நித்ய மங்கள விக்ரகம்
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!-போகய பூதன் -சேஷ பூதன் -நிரதிசய சாரச்யத்தை விளைவித்து -ஆவி அகம் -மனஸ்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை-பிரதி பந்தகங்கள் போகும் படி வாசா கைங்கர்யம் கொண்டு –
கண்ணால் கண்டு அனுபவிக்க அசாதாராண திவ்ய தேசம் சந்ந்ஹிதனாகி-சௌலப்யம் சௌந்தர்யம்
ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?—அனன்யார்ஹன் அநந்ய கதி -இன்னமும்
-உகந்து அருளின நிலங்களில் முகம் காட்டி -எத்தனை திவ்ய தேசங்களில் வாசல் தோறும் உழல்வேனோ -ஆட்பட்டவர்கள் -ஆர்த்தி வந்த பின்பும் —

புறத்தில் காணும்படி வாராமல் அருவாய் மனத்தின் கண் தோன்றிக் காட்சி அளிக்கின்றவனே! அழிதல் இல்லாத திருமேனியையுடையவனே!
ஆராவமுதம் போன்று அடியேனுடைய நெஞ்சுக்குள்ளே தித்திக்கின்றவனே! தீராத வினைகள் எல்லாம் தீரும்படியாக என்னை அடிமை கொண்டவனே!
திருக்குடந்தையாகிய திவ்விய தேசத்தையுடையவனே! உனக்கு அடிமைப்பட்டும் இன்னமும் இங்கே அடியேன் அலைந்து திரிவேனோ?

சரீரத்தையுடையவன். ஆவியகம் – ஆவியில்; அகம்: ஏழாம் வேற்றுமையுருபு. தீர ஆண்டாய் என்க. உழலுதல்- அலைந்து திரிதல்.

‘திருக்குடந்தையிலே புக, நம் மனோரதம் எல்லாம் சித்திக்கும்’ என்று செல்ல, நினைத்தபடி தாம் பெறாமையாலே,
இன்னமும் எத்தனை திருவாசல் தட்டித் திரியக் கடவேன் என்கிறார்.

வாராஅருவாய்-
வாராத அருவாய். என்றது, புறத்திலே கண்களாலே கண்டு அநுபவிக்கலாம்படி வாராத அரூபிப் பொருளாய் என்றபடி.
ரூபமுமுண்டு அரூபனும் உண்டு நம் சம்ப்ரதாயம் -அரூபமும் ஒரு வகை ரூபம் தானே -சர்வசக்தன்
அருவாய் வரும் என் மாயா –
மறந்து பிழைக்க ஒண்ணாதபடி அகவாயிலே அருவாய்க் கொண்டு பிரகாசிக்கின்ற ஆச்சரியத்தையுடையவனே!
‘அருவாய்’ என்ற பதத்தை இங்கேயும் கூட்டிக்கொள்வது.
அகவாயிலே அருவாய்க்கொண்டு’ என்றது, அரு என்று ஆத்மாவாய், அகவாயிலே தாரகனாய்க்கொண்டு என்றபடி.
மாயா மூர்த்தியாய் – நித்தியமான திவ்விய மங்கள விக்கிரஹத்தையுடையவனே! -அபஷய விநாசம் இல்லாத-
நித்ய திவ்ய சமஸ்தானம் -அப்ராக்ருதம் அன்றோ –
“அல்லாதாருடைய சரீரங்கள் முழுதும் பிறத்தல் இறத்தல்களை யுடையனவாயன்றோ இருப்பன.
ஆராவமுதாய்-
நிரதிசய இனியனாய்க்கொண்டு எனக்கு மறக்க ஒண்ணாதபடி இருக்கின்றவனே!
அடியேன் ஆவி யகமே தித்திப்பாய்
-என்றும் உனக்குச் சொத்தாகவுள்ள என் நெஞ்சினுள்ளே உன் இனிமையைத் தோற்றுவித்து அநுபவிப்பித்தவனே!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்-
அநுபவித்தே போகக் கூடியனவாய், உன்னை ஒழிய வேறு ஒருவரால் போக்க ஒண்ணாத,-ஈஸ்வர அனுக்ரக விநாசம் –
உன்னை அநுபவிப்பதற்குத் தடையாகவுள்ள கருமங்களைப் போக்குவித்து,
‘அடியேன் ஆவியகமே தித்திப்பாய்’ என்னும்படி புகுர நிறுத்தினவனே!
அன்றிக்கே, “பிணியும் ஒழிகின்றதில்லை பெருகுமிதுவல்லால்” என்கிறபடியே,
“தீர்ப்பாரை யாம் இனி” என்று திருவாய்மொழியில் கூறிய வினைகள் தொடக்கமானவற்றைப் போக்கி
என்னை அடிமை கொண்டாய் என்றுமாம்.
திருக்குடந்தை ஊராய் –
என்னை அடிமை கொள்ளுகைக்குத் திருக்குடந்தையிலே வந்து அண்மையில் இருப்பவனே! என்றது,
நான் கிட்டாத அம்சத்துக்கு நீ கிட்ட வந்து கிடக்கிறவனே! என்றபடி.
நீ இருக்கிற பரமபதத்தே நான் கிட்டவேண்டும்படியாயிருக்க, நான் இருக்கிற இடத்திலே நீ கிட்ட வந்து கிடக்கிறவனே! என்றபடி

ஒரு நத்தம் இல்லாதான் ஒருவனையோ நான் பற்றிற்று. இதனால், பரத்துவம் வியூகம் விபவம் என்னுமிவற்றைக்காட்டிலும்
இதற்கு உண்டான வேறுபாட்டினைத் தெரிவிக்கிறார்.
உனக்கு ஆட்பட்டும் –
சம்சாரிகளை அநுபவிப்பிக்க வந்து கிடக்கிற உனக்கு ஆட்பட்டும்.
அடியேன் –
யாருடைய வஸ்து இங்ஙனே அலமந்து திரிகிறது.
இன்னம் உழல்வேனோ-
என்னுடைய முயற்சிகள் எல்லாவற்றையும் உன் திருவடிகளிலே பொகட்டு, நீ செய்து தலைக்கட்டக் கடவையாக
நினைத்திருக்கிற நான், இன்னம் எத்தனை திருப்பதிகள் புக்குத் தட்டித் திரியக்கடவேன் என்கிறார்.

——————————————————————————-

உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11-

மௌக்த்யம் தீர்ந்து -அறியாமை தீர்ந்து -அப்யசிக்க வல்லார்கள் பகவதீயர்களுக்கு கம நீயர்கள் ஆவார் —
காமர்களுக்கு -மான் போன்ற அழகிய கண் -கொண்ட பெண்கள் போலே
முற்றுவமை -உபமானம் தருவித்து -தாவி வையம் கொண்ட தடம் தாமரை -போலே திருவடி தருவித்துக் கொள்ளுவது போலே
நித்ய சூரிகள் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் விரும்புவார்கள்
உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்-பூதனை -விரோதி நிரசன ஸ்வ பாவன் –
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்-உபாயமாக முன்பு பிரகாசிப்பித்த -அவையே –
ஆறு எனக்கு நின் பாதமே -தந்து ஒழிந்தான் -அதே கழல்கள் -என்பதால் அவையே என்கிறார்
அபிமத சித்திக்கு இவையே உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்-சப்த ஸ்வரத்துக்கும் உத்பாதியான -குழலைக் காட்டிலும் மிக்க இனிமை
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.-மௌக்த்யம் அறியாமை தீர -ஆந்தர பாவம் அநந்ய கதித்வம் அறிந்து
மானைப் போலே இருக்கும் திவ்ய மகிஷிகளுக்கு -அப்சரஸ் மதி முக மடந்தையர்
காமரைப் போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு த்ருஷ்டாந்தமாகவும் கொள்ளலாம்

உழலை கோத்தாற்போலே இருக்கின்ற எலும்புகளையுடைய பூதனையினது முலை வழியே அவளுடைய உயிரையும் உண்டவனான
கண்ணபிரானுடைய திருவடிகளையே உபாயமாகக் கொண்ட குருகூர்ச் சடகோபராலே வேய்ங்குழலின் இசையைக்காட்டிலும் இசை மிகும்படியாக
அருளிச் செய்யப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் இளமை தீரும்படி வல்லவர்கள்
மானைப் போன்ற பார்வையையுடைய பெண்களுக்கு மன்மதனைப் போன்றவரேயாவர்.
உழலை – தடைமரம், “பெண்ணெனும் உழலை பாயும் பெருவனப்புடைய நம்பி” என்பது, சிந். 713.
பேய்ச்சி – பூதனை.‘அவளை’ என்பது உருபு மயக்கம்.
‘குழலின்’ என்பதில், இன் என்பது, ஐந்தாம் வேற்றுமையுருபு; ஒப்புப்பொருளில் வந்தது.
உறழ்பொருவுமாம். ‘ஏய்’ என்பது, உவமை உருபு. நோக்கியர்க்குக் காமர் என்க.

இப்பத்தைப் பழுது அறக் கற்க வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகரைப்போலே
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இனியர் ஆவர் என்கிறார்.

உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான் –
உழலை -தடை மரம் -கோத்தாற்போலே இருக்கிற எலும்புகளையுடைய பூதனை முலைவழியே அவளுடைய உயிரை உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன் –
விரோதிகளை அழிக்கின்ற ஸ்வபாவத்தையுடைய கண்ணபிரானது திருவடிகளையே,
விருப்பமில்லாதவைகள் நீங்குவதற்கும் விருப்பமுள்ளவைகளை அடைவதற்கும் உபாயம் என்று அறுதியிட்ட ஆழ்வார்.
விரோதிகளைப் போக்குவதும் அவனைத் தருவதும் திருவடிகளேயாம் என்பார் ‘அவையே’ என ஏகாரம் கொடுத்து ஓதுகிறார்
பலியாவிட்டாலும் தம்மடி விடாதவரே அன்றோ இவர்; ஆதலின், ‘கொண்ட’ என்கிறார்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் –

கருங்கண் தோகை மயிற்பீலி யணிந்து கட்டிநன் குடுத்த பீதக வாடை
அருங்கல வுருவின் ஆயர் பெருமான் அவனொரு வன் குழலூதின போது
மரங்கள் நின்றுமது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள்தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே.– பெரியாழ்வார் திருமொழி.

“இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும்வகை மணிவண்ணவோ என்று கூவுமால்”– திருவாய், 6, 5 : 9.

திருக்குழல் ஓசையிற்காட்டிலும் விஞ்சி, கேட்டார் நோவுபடும்படியாக இருக்கிற ஒப்பற்ற
ஆயிரம் திருவாய் மொழியில் இப்பத்தையும், மரங்கள் நின்று மதுதாரைகள் பாய்தல் அன்றோ அங்கு,
மரங்களும் இரங்கும் வகை இங்கு; இனி, நாம் இரங்குகிற இது தன்னேற்றமே அன்றோ இங்குத்தைக்கு;
ஆதலின், ‘குழலின் மலிய’ என்கிறது.
மழலை தீர வல்லார் –
இளமை தீர வல்லார். என்றது, ‘வரில் பொகடேன், கெடில் தேடேன்’ என்று இருக்கை அன்றிக்கே,
இவர் சொன்ன ஆற்றாமையோடே சொல்ல வல்லார் என்றபடி.
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்” என்பதே அன்றோ இவர் ஆற்றாமை.
மான் ஏய் நோக்கியர்க்குக் காமர் –
மானை ஏய்ந்த நோக்கையுடைய பெண்களுக்குக் காமுகரைப் போலே ஆவர். ஆவது என்? என்னில்,
“தூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்றிருப்பன்” என்ற இவர் இது பலமாகச் சொல்லும் போது
மேற்கூறியதோடு முரண்பட்டதாம்; ‘ஆனால், சொல்லிற்றாயிற்று என்? என்றால்,
மேல் கொடிதான நரகம்” என்னா நிற்கச் செய்தேயும், விஷயத்தில் ஈடுபாடுடையவர்கள் அது பாராதே மேல் விழுமாறு போலே,
இது கற்றாரை எம்பெருமானும் ஸ்ரீவைஷ்ணவர்களும் மேல் விழுந்து இனியராகக் கொள்ளுவர்கள் என்றபடியாம்.
இங்ஙன் அன்றாகில் –விப்ரலம்பகர் -வஞ்சனை யுள்ளவர் வார்த்தையாமே அன்றோ.
இவர் பிராமாணிகர் அன்றிக்கே ஒழிவரே. பிரகரணத்துக்குத் தகுதியாக அன்றோ தலைக்கட்டி இருப்பதும்.
‘அவர்களுக்குப் போல்’ என்ற ஒரு தொடர் இங்குக் கண்டிலோமே! என்னில்,
முற்றுவமை என்ற ஒரு இலக்கணம் இருக்கிறபடி.
உவமை புக்க இடத்தே உபமேயமும் வரக்கடவது. “தாவி வையங்கொண்ட தடந் தாமரைகள்” என்னாநின்றதே அன்றோ.

——————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆஸ்வாச லப்த த்ருதினா சஹா முனி அஷ்டமேன
மநஸா சமீபத்திய அப்ரதிம ஆபிரூப்யம்
ஆலோக்ய சாந்த்ய வாசக பரிரம்பனாத
அப்ராப்தவான் மாதுர்யம்

ஸ்ரீ கும்ப கோணம் அப்ரதிம ஆபிரூப்யம்
மாதுர்யம் -கல்யாண குணம் கரைய உருக்கும்-

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

நிஸ் சமுத் அம்ருத்யத்வாத் ஸ்வ வச ஜநிதய்யா அநந்ய பாவப் பிரதாதாநாத்
மர்யாதா அதீத கீர்த்த்யா நளின நயன நாயகத்வாத் ஸூராணாம்
சர்வ ஸ்ரேஷ்ட்யாதி யோகாத் நிரதிசய தீப்தி ஸ்ப்ருஹணீயமான
அநீதர கதிதாதி ஆவஹ ஆதி ஆசன்ன பாவாத்

1-நிஸ் சமுத் அம்ருத்யத்வாத் –ஆரா அமுதே!

2-ஸ்வ வச ஜநிதய்யா–எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே–

3-அநந்ய பாவப் பிரதாதாநாத் –உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்

4–மர்யாதா அதீத கீர்த்த்யா–செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!-

5-நளின நயன –செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!-

6-நாயகத்வாத் ஸூராணாம் —-சர்வ ஸ்ரேஷ்ட்யாதி யோகாத்–வானோர் கோமானே!–என்றும்
உனதருளே பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! –என்றும் –

7–நிரதிசய தீப்தி–குடந்தைத் திருமாலே!–ஸ்ப்ருஹணீயமான திவ்ய விக்ரகம்

8–அநீதர கதிதாதி ஆவஹ –களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்-
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!–இசைவித்து -அநந்ய பிரயோஜனத்வம் சங்க்ரஹம் –

9- ஆதி -அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!–

10-ஆசன்ன பாவாத்–தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை ஊராய்! –

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 48-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

அவதாரிகை –

அகிஞ்சனராய்-ஆர்த்தியோடே பிரபத்தி பண்ணி இருக்கச் செய்தேயும் ஸ்ரீ ஆராவமுதாழ்வார்
இவர் ஸ்ரீ நம்மாழ்வார் -என்று அபிமானித்து அபேஷிதம் செய்யாமையாலே
அலமந்து ஆர்த்தராய் அருளிச் செய்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஸ்ரீவர மங்கை வாணன் திருவடிகளிலே சரண் புக்க விடத்திலும் அங்கே தம் அபேஷிதம் கிடையாமையாலே
ஆஸ்ரித ரஷண தீஷிதனான ஸ்ரீ சர்வேஸ்வரன் நம் கார்யம் செய்யாமை இல்லை –
எங்கே கார்யம் செய்ய நினைத்து இருக்கிறான் என்று தெரியாது என்று ஸ்ரீ திருக் குடந்தையிலே ஸ்ரீ ஆராவமுதாழ்வார்
திருவடிகளிலே செல்லவே நம் அபிமதம் சித்திக்கும் என்று மநோ ரதித்து சென்ற இடத்தில்
அவர் எழுந்து இருத்தல்
இருத்தல்
உலாவி அருளுதல்
இன் சொல்லுச் சொல்லுதல்
குளிர நோக்குதல்
அரவணைத்தல்–செய்து அருளக் காணாமையாலே
ஸ்ரீ பிராட்டியும் அவனுமான சேர்த்தியும் யுண்டாய்–நமக்கு அபேஷையும் யுண்டாய் இருக்க
அபிமதம் பெறாது ஒழிவோமோ-என்று துடித்து இவ்வளவிலும் திருவடிகளே உபாயம் என்னும் துணிவு குலையாது ஒழியப் பெற்றோமே
என்று வருந்தி தரித்தாராய் தலைக் கட்டுகிற ஸ்ரீ ஆராவமுதத்தில் அர்த்தத்தை அருளிச் செய்கிறார்
ஸ்ரீ ஆராவமுதாழ்வார் -என்று தொடங்கி -என்கை –

————————————————————–

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை
தாராமையாலே தளர்ந்து மிக -தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி யலமந்தான்
மாசறு சீர் மாறன் எம்மான் —48-

ஆராவமுதன் -ஆழ்வார் ஆதரித்த -என்று பிரித்தும் பொருள் உரைப்பார் உண்டு

——————————————————————

வியாக்யானம்–

ஆராவமுதாழ்வார் –
சஹபத்ன்யா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத் -என்று ‘கூட்டித் தேடி அனுபவிக்கும் படி
நிரதிசய போக்யராய் –
ஸ்ரீ மான் ஸூக ஸூபத -என்னும்படி- ஏரார் கோலம் திகழக் கிடந்த ஸ்ரீ ஆராவமுதாழ்வார் –

ஆதரித்த பேறுகளை -தாராமையாலே-
இவர் அபேஷித்த புருஷார்த்தங்களை – அதாவது –
கிடந்தாய் கண்டேன் -என்றும்
அம்மா மலர்க்கண் வளர்கின்றானே -என்றும்
காண வாராயே -என்றும்-அருளிச் செய்யும் இடங்களிலே
அபேஷிதம் ஆனததை-
ஸ்ரீ குடந்தையுள் கிடந்த வாறு எழுந்து இருந்து -என்கிறபடியே
எழுந்து இருக்க வேணும் -என்றும்
ஸ்ரீ குடந்தை திரு மாலான தேவர்
தாமரை மங்கையும் நீயும் -என்னும்படி
இருவரும் கூட இருந்து அருள வேணும் -என்றும்
தாமரைக் கண்களால் நோக்கி அருள வேணும் -என்றும்
பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வர வேணும் -என்றும்
சில பரிமாற்றங்களை அபேஷிக்க-அப்போதே அது பெறாமையாலே –

தளர்ந்து மிக –
ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவன் -என்னும்படி
அத்யவசன்னராய்- தீராத ஆசையுடன் -அபி நிவேசம் போவது அனுபவத்தாலே ஆகையாலே
அனுபவம் பேராமல் முடியாத வபி நிவேசத்தோடே –

ஆற்றாமை பேசி யலமந்தான் –
அதாவது –
அடியேன் உடலம் நீராய் யலைந்து கரைய உருக்குகின்ற -என்றும்
என்னான் செய்கேன் -என்றும்
உன்னைக் காண்பான் நான் அலப்பாய் -என்றும்
தூராக்குழி தூரத்து எனை எத்தனை நாள் அகன்றிருப்பன் -என்றும்
தரியேன் இனி -என்றும்
உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ -என்றும்–பேசினவை என்கை –
இத்தசையிலும்
உன்தாள் பிடித்தே செலக் காணே -என்றும்
களை கண் மற்றிலேன் -என்றும்-இவர்க்கு அடியில் இப்படி அத்யாவசியம் இருக்கும்படி இது வாயிற்று –

மாசறு சீர் மாறன் எம்மான் –
இவ்வளவான தசையிலும்-உபாயாந்தரங்களில் கண் வைக்கை யாகிற மாசு இன்றிக்கே இருக்கிற
அத்யாவச்ய ஞானாதி குணங்களை யுடையரான ஸ்ரீ ஆழ்வார் தம்மை அடைந்து பிரபன்ன ஜனமான நமக்கு ஸ்வாமி-

அன்றிக்கே
ஆற்றாமை பேசி அலமந்தான் -என்று க்ரியை-

—————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -120- திருவாய்மொழி – -5-8-1….5-8-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

June 10, 2016

ஸ்ரீ நாதமுனிகள் திருவவதாரம் -823–ஸ்ரீ கீதாச்சார்யன் தானே மனுவுக்கு அருளிச் செய்ததை மீண்டும் வெளியிட்டால் போலே அன்றோ –
திராவிட ஸ்ருதி தர்சகாய நம-திரு நாமம் ஸ்ரீ ஆராவமுத ஆழ்வாருக்கு -அகதிகளுக்கு ஒரே சரண் அன்றோ இவன் –
மகர சங்கராந்தி–ஸ்ரீ கோமள வல்லித் தாயார் – பொற்றாமரை -தேரோடு இற ங்கி திருக் கல்யாணம் –
ஸ்ரீ ஆராவமுத ஆழ்வார் -ஸ்ரீ திரு மழிசை பிரான்
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் அழியாமல் இருக்க ஆராவமுதம் -சரீரம் அழியாமல் இருக்கவே அமுதம் -உப்புச் சாறு –

ஸ்ரீ சிரீவரமங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே வீழ்ந்து
அநந்ய கதியாக-வேறு கதி இல்லாதவராய்க் கொண்டு சரணம் புக்கார்;
இவர் அப்படிப் பெரிய ஆர்த்தியோடே சரணம் புகச் செய்தேயும் வந்து முகங்காட்டாதிருக்க;
கடலில் அமிழ்ந்துவார் அங்கே ஒரு மிதப்புப் பெற்றுத் தரிக்குமாறு போலே,
“இவ்வளவிலும் ‘வேறு ஒன்றாலே பேறு’ என்றிருத்தல்,-ஆகிஞ்சன்யம் கீழே –
மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல் செய்தல் -அநந்ய கதித்வம் இதில் –
என்னும் மயக்கத்தைத் தவிர்த்தானே அன்றோ” என்று கொண்டு தரித்தார்;
தரித்த இது தான் திருக் குடந்தை யளவும் கால் நடை தந்து போகைக்கு உடலாயிற்று.

“ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்றதனைக் கடாக்ஷித்து,
‘இவ்வளவிலும்’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.
இங்கே, ‘வேறு ஒன்றாலே பேறு என்றிருத்தல், மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல் செய்தல்’ என்றிருக்கையாலே,
“ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்பதற்கு, மேல் அருளிச் செய்த மூன்று யோசனைகளையும் தவிர,
(உபாயம் ப்ராப்யம் -க்ருஹம் –
இரண்டுமே உபாயம்
சபதம் இட்டு சொன்னது -மூன்றும் )
இன்னமும் ஒரு யோசனை உண்டு என்று தோற்றுகிறது. அதாவது,
எனக்கு உன் பாதமே உபாயமாகவும், ரக்ஷகமாகவும் தந்தாய் என்பது.
“நின் பாதமே ஆறாக” என்கையாலே வேறு ரக்ஷகங்களை நீக்குகிறது;
“நின் பாதமே சரணாக” என்கையாலே வேறு உபாயங்களை நீக்குகிறது;
ஆக, “ஆறு” என்றதனால், ஆகிஞ்சந்யமும், “சரண்” என்கையாலே, அநந்யகதித்வமும் போதரும்.
ஆகிஞ்சந்யமாவது, வேறு உபாயம் இன்மை. அநந்யகதித்வமாவது, வேறு இரக்ஷகரில்லாமை.

தரித்த இது தான் திருக் குடந்தையளவும் கால்நடை தந்து போகைக்கு உடலாயிற்று.
என் தான்? இங்கு, தம் விருப்பம் கிட்டா தொழியவும் அங்கு ஏறப் போக வேண்டுவான் என்? என்னில்,
வஸ்து ஐக்கியம் உண்டே -பிரபத்தி ஒரு தடவை தானே பண்ண வேண்டும் -விசுவாசம் குலையாதோ என்னில் –
‘ஒரு கால் சரணாகதி செய்தோம், அது பலித்தது இல்லை’ என்னா,
நாஸ்திக புத்தியாலே விசுவாசம் குலைந்து ருசியும் நெகிழுமவரன்றே;
“அடியார்களுக்காக எழுந்தருளி யிருக்கிறவன் நம் காரியம் செய்து தலைக் கட்டாமை இல்லை,
‘இன்ன இடங்களிலே செய்யக் கடவோம்’ என்று அறுதி யிடப்பட்டதா யிருக்குமே அன்றோ,
ஆன பின்பு, இங்குச் செய்யப் பார்த்திலனாகில் மற்றோர் இடத்தில் செய்கிறான்;
(ராஜா ஆசன பேதத்தாலே கார்யம் செய்யுமா போல் )
ஸ்ரீ ரெங்கம் போன்ற இடங்களில் சரண் அடைந்த கலியன் திருக் குருங்குடியிலே பேறு பெற்றாரே –

இனித் தான், ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரீ பெருமாளை மீட்டுக் கொண்டு வந்து திருமுடி சூட்ட வேண்டும்’ என்று பாரித்துக் கொண்டு செல்ல.
‘பதினான்கு ஆண்டும் கழித்தல்லது மீளோம்’ என்ற ஸ்வதந்திரனே அன்றோ;
ஆகையாலே, நமக்கு நான்கு நாள் தாழ்த்ததே யாகிலும் நம் காரியம் செய்யாமை இல்லை” என்று பார்த்து,
ஸ்ரீ திருக் குடந்தையிலே சென்று புகவே நாம் விரும்பினவை அனைத்தும் கிட்டும்,
நமக்கு ஒரு குறையும் இல்லை’ என்று ஸ்ரீ திருக் குடந்தையை அடைந்தார்.

அவ்வாறு அடைய, ஸ்ரீ பரதாழ்வான் ‘இராச்சியத்துக்கு நிமித்தமானவனானேன்’ என்றதாலே ஒரு புண்பாடும்,
தாயைக் கொண்டு இராச்சியத்தை வாங்கிப் பெருமாளைக் காடேறப் போகவிட்டான்’ என்று நாட்டார் சீறுபாறு என்றிருப்பார்கள்”
என்றத்தாலே வந்ததொரு அச்சத்தையுமுடையவனாய்க் கொண்டு;
(ஆழ்வார் ப்ரவ்ருத்திகளை உபாயாந்தரம் என்று சங்கை கொள்வானோ என்ற புண்பாடும்
அன்னை ஊரார் என் சொல்வார் என்ற பயமும்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என்று சொல்லிக் கொள்பவர் அன்றோ ஆழ்வாரும் )
நான் திருவடிகளிலே சென்று கிட்டினால்,
ஏபிஸ்ச ஸசிவை: ஸார்த்தம் ஸிரஸா யாசிதோ மயா
பிராது: ஸிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்துமர்ஹஸி”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 101 : 12.
உடன் பிறந்தவன் அல்லனோ! சிஷ்யன் அல்லனோ! தாசன் அல்லனோ!
என் பக்கல் மலர்ந்த முகத்தராய்த் திரு அருள் செய்யாதொழிவரோ! என்று பார்த்து;

அம்பு எய்வார் படை திரட்டிக் கொண்டு போமாறு போல, திரு வயோத்தியிலுள்ளாரில் மரங்கள் அகப்பட ஆர்த்தியில்
தன்னில் குறைந்த பொருள்கள் இல்லை அன்றே, நம் ஆர்த்தி கண்டு மீண்டிலராகிலும் ஆர்த்தர் பலரையும் கண்டால்
மீளாமை இல்லை என்று பார்த்து “இந்த மந்திரிமார்களோடுங்கூட என்னால் தலையால் வணங்கி யாசிக்கப்பட்ட தேவரீர்,
பின் பிறந்தவனும் சிஷ்யனும் தாசனுமான அடியேனுக்குத் திருவருள செய்ய வேண்டும்” என்கிறபடியே,
இவன் செல்ல;

ஸ்ரீ பெருமாளும் “இராச்சிய தந்திரங்களில் குறைவு படாமல் நடத்தா நின்றாயே?
காரியங்கள் செய்யுமிடத்தில் மந்திரிகளோடு கூடிச் செய்யா நின்றாயே? என்பன போலே
இவனுக்கு இடம் அற வார்த்தைகள் கேட்டாற்போலே;

இவர் அடைந்த இடத்தில் திருக் கண்களை அலர விழித்துக் குளிர நோக்கி யருளுதல்,
திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்தல், அணைத்தல் செய்யக் கண்டிலர்.
“அந்த ஸ்ரீ கிருஷ்ணன், என்னை அக்ரூரனே! என்று அருளிச் செய்வர்” என்றாற்போலே
பகைவன் சோறு உண்டு வளர்ந்தவன் மனோ ரதம் பெற்றானே அன்றோ;
(அக்ரூரரும் யாதவ வம்சம் )
அப்படியே தம்மையும் கிட்ட வந்து அணைக்கப் பெறாமையாலே மிகவும் துக்கித்தவராய்,
இனிமையாலும் ஈடுபட்டு, அழகு முதலாயினவற்றாலும் போர நொந்து,
(ஆரா அமுதம்-போக்யதை -செந்தாமரைக் கண்ணன் -ஸுந்தர்யம்
உனக்கு ஆட்பட்டும் இன்னும் உழல்வேனோ -போர நொந்து )
பால் குடிக்கும் குழந்தை தாய் பக்கலிலே கிட்ட முகம் பெறா விட்டால்
அலமந்து நோவு படுமாறு போலே, அவன் சந்நிதியிலே தளர்ந்து கிடந்து கூப்பிட்டு,
இன்னம் எத்தனைத் திரு வாசல் தட்டித் திரியக் கடவேன் என்னும் ஆர்த்தியோடே தலைக் கட்டுகிறார்.
(அநந்ய கதி ஞானம் உடையவர் அன்றோ -இவன் நித்ய சந்நிதி உள்ள வேறே திவ்ய தேசங்களைச் சொன்னவாறு )

————————————————————————————————————–

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-

உன்னுடைய நிருபாதிக சம்பந்தம் அடியாக –நிரதிசய போக்யமான -அழகில் ஈடுபட்டு —சிதிலம் ஆக்கும் படி பண்ணி –
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே–நிரந்தரம் அனுபவம் செய்தாலும் குறைபடாத திகட்டாத –
போக்யதைக்கு தோற்று அடிமை புகுந்த -சரீரம் -அன்பு தானே தனக்கு வேஷமாகக் கொண்டு –
பகவத் ஸ்வரூப திரோதானமான சரீரமே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!-அந்த அன்பு உருகி ஜல மயமாம் படி -ஆஸ்ரயம் தெரியாதபடி -அபரிச்சின்ன
போக்யதா வ்யாமோஹம் உடையவன் கிடந்தவாறு எழுந்து இருந்து பேசின கேசவன் அன்றோ –
சீரார் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக் குடந்தை-கனத்தாலே-சீர் -அழகு என்றுமாம் –
விஞ்சின செந்நெல் கதிர்கள் -கவரி வீசும் -அதுக்கு அடியான நீர் வாய்ப்பு -திருக் குடந்தையில்
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே-அழகு வளர்ந்து –கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
என்னாமல்-கண்டதுடன் சரி –உச்சி முகர்ந்து -தழுவி -நினைத்த படி பரிமாற்றம் பண்ண வில்லையே

எம்மானே! தெவிட்டாத அமுதே! அடியேனுடைய சரீரமானது, உன் விஷயத்தில் அன்புதானே தனக்கு உருவமாகிப் பின்பு தண்ணீராகி
ஒரு நிலையில் நில்லாமல் கரையும்படி உருக்குகின்ற நெடுமாலே! சிறப்புப் பொருந்திய செந்நெற் பயிர்கள் சாமரையைப் போன்று
வீசுகின்ற செழுமை பொருந்திய நீரையுடைய திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் அழகு பொருந்திய ஒப்பனையானது
விளங்கும்படியாகச் சயனித்திருக்கின்றவனே! என் கண்களாலே கண்டு அநுபவிக்கப் பெற்றேன் என்கிறார்.
உடலமானது அன்பாகி நீராகி அலைந்து கரையும்படியாக உருக்குகின்ற நெடுமாலே என்க. வீசும் திருக்குடந்தை என்க.
இத் திருவாய்மொழி, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

உன் அழகாலே என்னை உருக்குகின்ற நீ கண் வளர்ந்தருளக் கண்டேன்;
குளிர நோக்குதல், அணைத்தருளுதல், செய்யக் காண்கின்றிலேன் என்கிறார்.

ஆரா அமுதே-
அநுபவியாநின்றாலும் கிரமப் பிராப்தி பற்றாத விஷயத்தைப் பிரிந்தார் எங்ஙனே ஆறி இருக்கும்படி.
என்றது, முற்படக் காட்சியாய், அதன் பின்னர் அணுகி, பின்னர் ஸ்பரிசமாய், இப்படியே அன்றோ அநுபவப் பிரகாரங்கள் இருக்கின்றன;
அத்துணைக் கிரமங்களைப் பார்த்திருக்க ஒண்ணாதபடி இருக்கையைத் தெரிவித்தபடி.

ஆரா அமுதே –
கடலில் உப்புச்சாறு குடிப்பார்க்குத் தேவ யோனியிலே பிறக்க வேணும், பிரஹ்மசரியம் அநுஷ்டிக்க வேணும்,
இத்தனையும் இருந்தால் ஒரு தடவை உண்ணக் கூடியதாக இருக்கும்;
இது அங்ஙன் அன்றிக்கே,
சர்வாதிகாரமுமாய், எப்பொழுதும் உண்ணக் கூடியதாய், பிரஹ்மசரியம் முதலான வற்றினின்றும்
நழுவுதலால் வரும் குற்றங்களையும் தானே போக்கக் கூடியதாயிருக்கும்.

வட தேசத்திலே லோக சாரங்க மஹாமுனிகள் வசித்துக்கொண்டிருக்க, இங்கேயுள்ள ஒருவன் அங்கு ஏறச்செல்ல,
‘பிள்ளாய்! தென்தேசத்தில் விசேஷம் என்?’ என்று கேட்க, ‘திருவாய்மொழி என்ற ஒரு பிரபந்தம் அவதரிக்க,
அதனைச் சிஷ்டர்கள் மேற்கொண்டு போரக் கொண்டாடிக் கொடு போகா நின்றார்கள்’ என்ன,
அதிலே உனக்குப் போவது ஒரு பாசுரத்தைச் சொல்லிக் காணாய்’ என்ன,‘“ஆராவமுதே’” என்கிற இத்துணையே எனக்கும் போம்” என்ன,
நாராயணன் முதலான நாமங்கள் கிடக்க, இங்ஙனேயும் ஒரு பெயர் உண்டாவதே’ என்று அதனைக் காண மிக்க ஆவலுடையவராய்,
இச்சொல் நடையாடுகிற தேசத்து ஏறப்போவோம்’ என்று அப்பொழுதே புறப்பட்டுப் போந்தார்.

ஆரா அமுதே –
“கதே புரோஹிதே ராம: ஸ்நாத: நியத்மானஸ: ஸஹபத்நியா விஸாலாக்ஷ்யா நாராயணம் உபாகமத்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 6 : 1.
“ஸஹபத்நியா –
பத்திநியோடு கூட” ஆழங்காலிலே இழிவார் ஒரு கொம்பை ஒரு கொடியைப் பிடித்துக் கொண்டு
இழியுமாறு போலே. கிண்ணகத்தில் இழிவார் அறிந்தவர்களைக் கைப் பிடித்துக் கொண்டு இழியுமாறு போலே,
பெருமாள் பெரிய பெருமாளை அநுபவிக்கும்போது பிராட்டியைக் கூடக் கொண்டாயிற்று இழிவது.
“விசாலாக்ஷ்யா –
பரந்த கண்களை யுடையவளோடு” இவர்க்குப் பெரிய பெருமாள் பக்கல் உண்டான பிரேமத்தின் மிகுதியைக் கண்டு,
தன்னை அணைக்கும் போதையிற் காட்டிலும் உடம்பு முழுதும் கண்களானபடி.
“நாராயணம் உபாகமத் –
நாராயணனை அடைந்தார்”
இவர் நியதி -ஜிதேந்த்ரியத்வம் -இருக்கிறபடி. இக் கண்களுக்கு இலக்காய் ஆழங்காற்படாதே அவ்வருகுபட்டார்.
இதனால் என் சொல்லியவாறோ? எனின், தான் தன்னை அநுபவிக்கும் போதும் கூட்டுத் தேட வேண்டும்படி யாயிற்று
ஆராமை இருக்கும்படி என்பதனைச் சொல்லியவாறாம்.

ஆரா அமுதே –
இத் திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான ஆற்றாமைக்கெல்லாம் வித்து இச்சொல்லே ஆயிற்று.

அடியேன் –
மயர்வு அற மதிநலம் அருளப் பெற்ற ஸ்வரூபத்தால் சொல்லுகிறார் அல்லர்,
இனிமைக்குத் தோற்றுப் புற்கவ்விச் சொல்லுகிறார்.
தோல்விக்கு -சூ சகம் -புல் கவ்விச் சொல்கிறார்
ஸ்வரூப பிரயுக்த தாஸ்யம் -கூடுமோ என்ன -இளைய பெருமாள் சொன்னது போலே -குணங்கள் தானே ஈர்க்கும்
“பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷ ஸதம் ஸ்திதே ஸ்வயந்து ருசிரே தேஸே க்ரியதாமிதி மாம் வத”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.
அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணை: தாஸ்யம் உபாகத: கிருதஞ்ஜஸ்ய பஹுஞ்ஜஸ்ய லக்ஷ்மணோ நாமநாமத:”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 4 : 12.
“பரவாநஸ்மி – அடியவன் ஆகிறேன்” என்றவர் “அவர் குணங்களால் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறேன்” என்றாற்போலே.

உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைய உருக்குகின்ற நெடுமாலே –
சேஷத்வம் ஆத்மாவுக்கு ஸ்வரூபமானால் சரீரம் அதற்கு விரோதியாய் நிற்கும் நிலை குலைந்தது.
நான்’ என்று இருக்கக்கூடிய இவர் தாம் ‘அடியேன்’ என்கிறது, விஷயத்தினுடைய இனிமையின் மிகுதியே அன்றோ;
அப்படியே சரீரமும் விஷயத்திற்கு வசப்பட்டதாய் அழிந்தபடி.
சேஷத்வமே உருவமான ஆத்மாவைத் தன் வழியே இழுக்கை தவிர்ந்து
அதன் வழியே தான் ஒழுகும்படியாயிற்று விஷயத்தினுடைய இனிமை. –
ஞானியை விக்ரகத்துடன் ஆராதிக்கும் -திருமேனி ஆத்மா தத்வம் ஆனதே –

அன்றிக்கே,
ஞான ஆனந்த ஸ்வரூபனான ஆத்மாவாதல், அதற்குத் தோள் தீண்டியான ஞானம் செல்லுதற்கு வழியான மனமாதல் அன்றிக்கே
இவற்றுக்கு அவ்வருகான தோல் சதை நிணம் எலும்பு வடிவமான சரீரமும் அழியும்படியாயிற்று என்னுதல்.
சேதனம் என்றும் அசேதனம் என்றும் கூறப்படுகின்ற வேற்றுமை அற அழிக்கவல்ல உன் பக்கலிலே அன்புக்கு இருப்பிடமாகை
தவிர்ந்து அன்பு தான் ஒரு வடிவு கொண்டாற்போலே இரா நின்றது என்பார் ‘நின்பால் அன்பாயே’ என்கிறார்.-
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் அன்றோ

உடலம் அன்பாய்,
அன்பு தான் நீராய்க் கொண்டு அலையா நின்றது என்பார் ‘உடலம் அன்பாய் நீராய் அலைந்து’ என்கிறார்.
முதல் முன்னம் கேள்வியாய், அதன் பின் மனனமாய், பின்னை பாவனையாய், அது பிரத்யக்ஷ ஸமாநாகாரமாய்க் கொண்டு
அவ்வடைவிலே வருகிறதன்றே, விஷயம்-ஆராவமுத ஆழ்வார் – அழிக்க அழிகிறதித்தனை அன்றோ.
நீர் தன் பக்கலிலே அகப்பட்டதனைக் கரைத்துத் தான் கரையாதிருக்குமாயிற்று;
இங்கு அங்ஙன் அன்று, நீர்தானாயிற்றுக் கரைகிறது என்பார் ‘நீராய் அலைந்து கரைய’ என்கிறார்.
அன்பு நீரானால், நீர் தான் கரையத் தட்டு இல்லையே.
இத்தனை அளவு இது ஆனால், அத் தலை செய்கிறது என்? என்னில்,

‘உருக்குகின்ற’
என்கிறார்; என்றது, அழிக்கைக்கு அடி இட்ட இத்தனையாயிற்று என்கிறார் என்றபடி.
அழிக்கிறவன் ‘ஆபரணங்கள்’ என்று பாராதே உருக்கி அழிக்குமாறு போலே காணும் இவனும் உருக்கி அழிக்கிறபடி.
தேசமான அணிகலனும் இவர் கை கூப்புச் செய்கையே அன்றோ.
பூசுஞ் சாந்தென் னெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய வாசகஞ் செய் மாலையே வான் பட்டாடையு மஃதே
தேசமான அணிகலனும் என் கை கூப்புச் செய்கையே ஈசன் ஞால முண்டு மிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.-என்பது, திருவாய். 4. 3 : 2.
ஆழ்வார்க்கு உள்ள உடலை உருக்கி அழிக்குமித்தனையேயோ? இவன் தனக்கு ஓர் அழிவில்லையோ? எனின்,

‘நெடுமாலே’
என்கிறார். என்றது, எதிர்த் தலையில் அழிவு கண்ட பின்பே அன்றோ இத் தலையில் அழிவு என்றபடி.
அவனுடைய வியாமோகத்தைப் பார்த்தால் இது ஒன்றும் போராத படியாயிருக்கும்.
அவனுடைய அழிவு சொல்லும் போது இனி இவ்வடைவில் சொற்களைக் கொண்டு சொல்ல ஒண்ணாது.
நெடுமால்’ என்னில் என்னுமித்தனை.
மால் – வியாமோகம். நெடுமால் – மிக்க வியாமோகத்தையுடையவனாயிருக்கை.
அன்றிக்கே,
மால் என்று பெரியோன் என்றபடியாய், அதுதானும் பிரமன் சிவன் முதலானவர்கள் அளவோ? என்னில்,
அன்று, நெடுமால் – மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன் என்கிறது என்னுதல்-சர்வேச்வரன் என்றபடி.
அவனுடைய பெருமையும் இவரை அழிக்கைக்குக் காரணமாம் இத்தனை அன்றோ.-
பரத்வமும் நீர்மையும் உருக வைக்கிறது -என்றவாறு
ருக்மிணி பிராட்டி சந்தேசம் -ஆண்டாள் 26 பாசுரம் -மாலே –என்னில் முன்னம் பாரித்து தான் முற்றப் பருகினான் –

ஆருயி ரேயோ! அகலிட முழுதும் படைத்திடந் துண்டுமிழ்ந் தளந்த
பேருயி ரேயோ! பெரியநீர் படைத்து அங் குறைந்தது கடைந்தடைத் துடைத்த
சீருயி ரேயோ! மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ!
ஓருயி ரேயோ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்குவந் துறுகோ.-என்பது, திருவாய். 8. 4 : 5.;

சீர் ஆல் செந்நெல் கவரி வீசும் –
மிக்க கனத்தை யுடைத்தான செந்நெற் கதிர்களானவை திருக் கண் வளர்ந்தருளுகிற அழகைக் கண்டு
கைங்கர்யம் செய்வாரைப் போலே அசையா நிற்கும்.
சீர் – கனமும், அழகும். ‘கவரி வீசும்’ என்றது, கவி போலே வீச என்றபடி. கவரி – சாமரை.
அன்றிக்கே,
ஆராவமுதாழ்வாருக்கு அமுதுபடி யாகிற சீர்மையை யுடையதாதலின் ‘சீரார் செந்நெல்’ என்கிறார் என்னுதல்
அப்போது “நான் சர்வேச்வரனுக்கு போக்யன்” என்கிற சீர்மை.
“மரங்கள் எல்லாம் காலம் அல்லாத காலத்திலும் பயன் அளிக்கக் கடவன” என்னுமாறு போலே,
எம்பொழுதும் செந்நெற்கள் உள்ளன என்பார் ‘வீசும்’ என நிகழ் காலத்தாற் கூறுகிறார்.என்றது,
அறுத்து நட வேண்டா போலே காணும் இருப்பது என்றபடி.
சேஷி கருத்து அறிந்து அடிமை செய்வாரைப் போலே.
(சீர்மை -நித்ய சூரிகளாய் வந்த என்று மூன்றாவது அர்த்தம் இங்கு )
அன்றிக்கே,
சேஷ வஸ்துக்களின் தொழில்கள் முழுதினையும் சேஷி தனக்கு
அடிமையாக நினைத்திருக்கிறபடியால் ‘கவரி வீசும்’ என்கிறார் என்னுதல்.

செழு நீர்த் திருக்குடந்தை –
திருக்கண் வளர்ந்தருளுகிற சௌகுமார்யத்துக்குப் போரும்படி அழகிதான தண்ணீர்
நிறைந்திருக்கின்ற திருக்குடந்தையிலே.
செழுநீர் –
பெருநீர் என்றுமாம்.

ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் –
அழகு சமைந்த ஒப்பனை நிறம் பெறும்படி திருக் கண் வளர்ந்தருளுகின்றாய்.
நாட்டார் உலாவித் திரியும்போது அவயவங்களிலுண்டான பொல்லாங்குகள் மறைந்து ஒன்று போல இருக்கும்,
ஓர் இடத்தில் இருத்தல் கிடத்தல் செய்தவாறே அழகற்ற தன்மை தோற்றிக் கண் கொண்டு பார்க்க ஒண்ணாதபடி இருப்பர்;
இங்கு அங்ஙன் அன்றிக்கே, பகைவர்களைத் தபிக்கச் செய்கின்ற ஸ்ரீராமனான அந்தப் பெருமாள்
என்னால் உறக்கத்தினின்றும் உணர்த்தப்பட்டார்” என்கிறபடியே,

வாயஸேந தத: தேந பலவத்க்லிச்யமாநயா ஸ மயா போதித: ஸ்ரீமாந் ஸுகஸுப்த: பரந்தப:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 24.
திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
சுலோகத்திலுள்ள “ஸ்ரீமாந்” என்ற சொல்லுக்கு, பாவம், ‘இவன் உணரில்’ என்று தொடங்கும் வாக்கியம்.

கிடந்த கிடைக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருத்தலின் ‘ஏரார் கோலம் திகழ’ என்கிறார்.
‘இவன் உணரில் செய்வது என்’ என்றுவயிறு பிடிக்க வேண்டி இருக்கை.
கிடந்தாய் கண்டேன் –
“சுகமாகத் தூங்குகிறவன்” என்கிறபடியே, கிடை அழகினைக் கண்களாலே காணப்பெற்றேன்,
நினைத்த பரிமாற்றம் பெற்றிலேன். என்றது, எழுந்திருத்தல், இருத்தல், உலாவுதல், ‘என் செய்தாய்’ என்று வினவுதல்,
அணைத்தல் செய்யப் பெற்றிலேன் என்றபடி.

எம்மானே-
இது நம்மது’ என்று இரா தொழியப் பெற்றேனாகில் நான் ஆறி இருக்கலாயிற்றே. என்றது,
சம்பந்தத்தைக் கொண்டு என்னை இப்படி நலியலாமோ என்கிறார் என்றபடி.
அன்றிக்கே,
வடிவினைப் போன்றே சம்பந்தமும் என்னை நலியா நின்றது என்கிறார் என்னுதல்.

————————————————————————————————-

எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?–5-8-2-

ஆஸ்ரித அர்த்தமாக அநேக அவதாரங்களை -எம்மா உருவும் -செய்து அருளின நீ –
எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே-என் கார்யம் நீ இட்ட வழக்கு -என் ஸ்வாமி -எனக்கு சத்வ உத்தோரம் பிறக்கும் படி –
மற்ற தேவதைகள் ரஜஸ் தமஸ் கலந்தே இருக்குமே -பரிசுத்த ஸ்வரூபம் ரூபம் குணம் -காட்டி என்னை அனுபவிப்பித்துக் கொண்டு
சத்தையை இத்தாலே இருத்தி -ஆள் படுத்திக் கொண்டு
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!-தேவாதி எல்லா வகைகளிலும் –
ஏ-எல்லா சுட்டி சுருக்கம் -குப்ஜா மரமாகவும் உண்டே -மா ஸ்லாக்கியம் –
இச்சா பிரகாரமாக அபிமத ஆசைப்பட்ட -அவ்வோ விக்ரகங்களில் அழகால் பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணாம் -பண்ணி
செறுக்கு-காளை போலே -அழகுடன் சேர்ந்து
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் -சிவந்து பருத்த -எங்கும் ஒக்க மலரும் -திவ்ய தேச அழகு
திருக் குடந்தை-அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?-அந்த விலஷண தாமரைப் பூ போலே
எங்கும் தாமரை -கர்ப்ப க்ருஹத்திலும் தாமரை -கண்கள்
வளரும்படி -நல்ல – நித்தரை -கண்கள் வளர்ந்து அனைவரையும் கொள்ள என்றுமாம்
அபிமான துங்கன் செல்வன் -அபிமான பங்கம் -அழகிய பெரிய மலர் -அம் மா -என்றுமாம் –
எங்கும் மலர இந்த இரண்டும் நம்மை நோக்கி மலரவில்லையே என்ற வருத்தம் தோன்ற –

எம்மானே! பரிசுத்தமான சொரூபத்தையுடையவனே! என்னை ஆள்கின்றவனே! எத்தகைய பெருமை பொருந்திய உருவங்களையும்
விரும்பும் வகையிலே மேற்கொள்கின்றவனே! அழகிய ஏறே! சிவந்த பெரிய தாமரை மலர்கள் செழுமை பொருந்திய தண்ணீர்
மேலே கண்கள் போன்று மலர்கின்ற திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் அந்த அழகிய தாமரை போன்ற
திருக்கண்களை மூடிக்கொண்டு உறங்குகின்றானே! நான் என் செய்வேன்? என்கிறார்.
மூர்த்தி – ஸ்வபாவம், வடிவுமாம்; ஏறு – இடபம். மிசைக்கண் என்றவிடத்தில் ‘கண்’ இடமுமாம். ‘வளர்கின்றானே’ என்பது,
கண்களைத் திறந்து என்னை வினவுதல் செய்யாது உறங்குகின்றானே, என் செய்வேன்! என்கிறார் என்றபடி

இப்படிக் கூப்பிடச் செய்தேயும் மறு மாற்றம் தாராமையாலே, ‘உம்முடைய கார்யம் நீரே செய்யுமித்தனை அன்றோ’
என்று இருந்தானாகக் கொண்டு முன்பு செய்த உபகாரங்களைக் கூப்பிடுகிறார்.
(பலம் உம்மதான பின்பு அதுக்கு சாதன அனுஷ்டானம் நீர் தானே செய்ய வேண்டும் -என்றதைக் குறித்து அவதாரிகை
ஆழ்வாரும் அத்தை திரும்ப சொல்லி )

எம்மானே! என் நான் செய்கேன் –
உடைமையோ! உடையவனோ உடைமையை நிர்வஹிப்பார்.
நீயே உன் காரியத்தைச் செய்து தலைக் கட்டிக் கொள்’ என்கைக்கு வெறும் நானேயாய் இருந்தேனோ.
(உபாயாந்தரங்கள் இல்லை என்னும் பிரகரணத்தில் ஸ்வாமித்வம் சொன்னதுக்கு -பரதந்த்ரன் அடியேன் அன்றோ -ஸ்வா தந்த்ரன் அல்லன் )

என் நாதனே! எம்மானே என் வெள்ளை மூர்த்தி –
“உலகத்திற்கெல்லாம் தலைவன்”, “அந்தச் சர்வேச்வரனுக்கு அடியவனாய் இருக்கிறேன்”
“பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸிவம் அச்யுதம்.”
“யஸ்ய அஸ்மி தம் நாந்தரேமி.” என்கிற பிரமாணங்கொண்டு அறிந்தேனோ.
பின்னர் எங்ஙனே செய்தபடி? என்னில், சுத்த ஸ்வரூபனாகையாலே தன் படிகளில் ஒன்றும் குறையாதபடி
எனக்குத் தன் பேறாகத் தானே காட்டக் கண்டேன்.- சிறிது மயர்வு கிடக்க நீ அருளினாயாகில் நான் ஆறி இருக்கலாயிற்றே.-
(உபாசகர் சாதன அனுஷ்டானத்துக்கு பிராப்தி இருக்கு -நான் இல்லையே துளியும் ஸ்வா தந்த்ரன் இல்லையே
ஸாஸ்த்ர வாக்கியம் கற்று அறிந்தேன் அல்லேன் உன் வெள்ளை மூர்த்தி காட்டக் கண்ட பின் ஸாஸ்த்ர வாக்கியமும் சொல்வதை அறிந்தேன் )

சாத்விகி -பலராமன் இடம் சொல்லும் விருத்தாந்தம்-
நாதன் உள்ளவர்கள் லோகே -தி -தங்கள் செயலில் தாங்கள் ஈடுபட மாட்டார்கள் -நாதர்கள் செய்வார்கள் –
பாண்டர்வகளுக்காக கிருஷ்ணன் தான் செய்ய வேண்டும் –யயாதி பெண் பிள்ளைகள் –சைப்யன் போல்வார் -தங்கள் ஸூஹுருதங்கள்
கொடுத்து மீண்டும் ஸ்வர்க்கம் ஏற்றினார்கள் போலே என்றான் -ஸ்வா தந்த்ரம் லேசமும் இல்லை என்பதால் சாதனம் செய்ய பிராப்தனும் இல்லையே

என்னை ஆள்வானே –
காட்டுகிறபோது தெரியக் காட்டி, பின்னர் என் வழியே யாக்கி என்னைக் கை விட்டாயோ. என்றது,
அஞ்சிறைமடநாராய்”, “மாசறு சோதி” தொடக்கமான திருவாய்மொழிகளிலுண்டான வியசனங்களையும் போக்கி,
குண ஞானத்தாலே தம்மைத் தரிப்பித்துக்கொண்டு போந்த படியைத் தெரிவித்தபடி.

எம் மா உருவும் ஆவாய் –
எனக்காகவும் அடியார்கட்காகவும் நீ படும்பாடு அறிவுதியே.
அன்றிக்கே,
‘எ மா உருவும் ஆவாய்’ என்று கொண்டு, எவ்வகையாலும் விலக்ஷணமான விக்கிரஹங்களை மேற்கொள்ளுகின்றவனே! என்னுதல்.
என்றது, “என்னுடையதான ஸ்வபாவத்தை ஏற்றுக்கொண்டு” என்கிறபடியே,
அவதார விக்ரஹங்களுக்கு வைலக்ஷண்யம் உண்டோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘என்னுடையதான’ என்று தொடங்கி.
“அஜோபிஸந் அவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந் ப்ரகிருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா”- என்பது, ஸ்ரீ கீதை, 4 : 6.
பிரகிருதி சம்பந்தமில்லாத தெய்வத்தன்மை பொருந்திய -அப்ராக்ருத திவ்ய சமஸ்தானம்-திருமேனியாக இருக்கை.

அஜகா அபிசன் – -பிறவாமை பெருமை விட்டுக் கொடுக்காமல் பிறக்கிறான் /தேயாமை இல்லாமல்
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானம் -அவன் திருமேனி -பஞ்ச சக்தி மயம் -வெள்ளை மூர்த்தி /பிரக்ருதிம் ஸ்வாம்
பெருமை குறையாமல் -/இச்சையால் பிறக்கிறேன் -மித்யா அத்வைதிகள்-

வேண்டுமாற்றால் –
“தனக்கு வேண்டு உருக்கொண்டு” என்கிறபடியே, இச்சையாலே என்னுதல்.
அடியார்கள் வேண்டுமாற்றால் என்னுதல்;
“தமருகந்ததெவ்வுருவம் அவ்வுருவம் தானே” -முதல் திருவந். 44.-என்னக்கடவதன்றோ.
அன்றிக்கே,
‘எ மா உருவும் ஆவாய்’ என்று கொண்டு
“எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்” என்கிறபடியே,
அடியார்களைக் காக்கும் பொருட்டு நீ கொள்ளாத வடிவு உண்டோ என்னுதல்.
எல்லா வடிவங்களும் அவன் கொண்டவையாகையாலே சிலாக்கியமாயிருக்கிறபடி;

ஆதலால், “மா உரு” என்கிறது. என்றது, –ஆவிர்பூதம்-தோன்றுதல்” என்கிறபடியே,
தத : அகில ஜகத்பத்மபோதாய அச்யுதபாநுநா தேவகீ பூர்வசந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 3 : 2.
பிரகிருதி சம்பந்தம் இல்லாத தெய்வத் திருமேனியை இதர சஜாதீயமாக்குமித்தனை என்றபடி.

“பகவானுடைய மகத்தான அந்தத் திவ்ய மங்கள விக்கிரஹமானது வேறுபட்டது” என்னுமித்தனை அன்றோ.
“ஸமஸ்தா: ஸக்தய: ச ஏதா: ந்ருப யத்ர ப்ரதிஷ்டிதா: தத் விஸ்வரூப வைரூப்யம் ரூபம்
அந்யத் ஹரே: மஹத்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 70
இது, அவனுடைய விக்ரஹம் அப்ராக்ருதம் என்பதற்குப் பிரமாணம். ‘வேறுபட்டது’ என்றது, அப்ராக்ருதமாயிருக்கும் என்றபடி.

வேண்டுமாற்றால் ஆவாய்
கர்மம் அடியாக இவன் பிறக்குமாறு போலே அன்றோ அநுக்கிரஹம் அடியாக அவன் பிறக்கும்படி என்பார்
“வேண்டுமாற்றால் ஆவாய்” என்கிறார்.
இருவர்க்கும் பிறவி ஒக்கும். இவனுக்குக் கர்மங்கள் அழியப் பிறவி நீங்கும்,
இவன் கர்மங்கள் அவன் காலிலே குனியப் போம்; அவனுக்கு நித்தியமாகச் செல்லா நிற்கும்.
இனி, அவனுக்குக் கர்மம் என்னப் பார்க்கிறது, அநுக்கிரஹத்தை அன்றோ, அதுதானும் நித்தியமே அன்றோ அவனுக்கு.
இவனுக்கு இவன் தன் அளவிலே பிறக்க அமையும், அவனுக்கு எல்லார்க்குமாகப் பிறக்க வேணுமே.
இவனுக்குக் கர்மங்காரணமாக வந்ததாகையாலே தன் பொருட்டேயாயிருக்கும்,
அவனுக்கு அநுக்கிரஹம் காரணமாக வந்ததாகையாலே பிறர் பொருட்டேயாயிருக்கும்.
(கிருபை ஷயமாகாதே ஆகவே அவன் பிறவி தொடரும் )
அருச்சுனா! உன்னுடைய பிறவிகளைப் போலவே என்னுடைய பல பிறவிகளும் கழிந்து போயின” என்றான் அன்றோ.

“பஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி தவச அர்ஜு ந தாந்யஹம் வேத ஸர்வாணி நத்வம் வேத்த பரந்தப”- என்பது, ஸ்ரீகீதை, 4 : 5.
“தவச – உனக்கும்” என்கிறது, உன்னுடைய பிறவி மெய்யாய் இருக்குமாறு போன்று,
என்னுடைய பிறவி ஐந்திர ஜாலிகம் அன்று காண் என்பதற்கு.
இப்படி இராத அன்று இவனுக்கு மார்விலே கையை வைத்து உறங்க ஒண்ணாதே.

இப்படி இராத அன்று’ என்று தொடங்கும் வாக்கியத்துக்குக் கருத்து,-
அவதாரங்கள் உண்மை யல்லவானால், அவ்வவதாரங்களில் சொல்லப்பட்ட
“ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம”- என்பது போன்ற
சுலோகங்களும் உண்மை யல்லவாம்
ஆகையாலே, அவ்வார்த்தைகளை நம்பிப் பயம் அற்றவனாயிருக்கக் கூடாதே என்பதாம்.
அன்றிக்கே, இப்படி, அவன் அனுக்ரஹத்தாலே அவதாரங்களைச் செய்யாதபோது, இவனுக்கு ‘அவனே ரக்ஷகன்’ என்று
நம்பிப் பயமற்றவனாயிருக்க விரகு இல்லையே என்னுதல்.

எழில் ஏறே –
இப்படி அடியார்கட்காகப் பிறவா நின்றால் பழைய புகரில் குறைந்து வருமோ? என்னில்,
பண்டு இல்லாத எழிலும் உண்டாயிருக்கை.
கர்மத்தால் பிறக்கில் அன்றோ நிறக்கேடாவது. பல பிறப்பாய் ஒளி வரும் முழுநலமே அன்றோ.
அவதரித்த பின்பு அந்தப் பரமாத்மா மிகுந்த ஒளியை யுடையவனாகிறான்” என்பது சுருதி.
எல்லார்க்கும் பிறக்கப் பிறக்கப் புகர் அழிந்து வரும், இவன் ஒருவனுக்கும் பிறவா நின்றால் புகர் உண்டாகா நிற்கும்.
தேசம் அறியப் புகர் உண்டாய் நெஞ்சு வெறுத்திருக்குமோ? என்னில்,
பட்டி மேய்ந்த ஓர் காரேறு – என்கிறபடியே, ‘பிறக்கப் பெற்றோம்’ என்னும் மேனாணிப்பை யுடையவனாயிருக்கும்.
“வானிளவரசு” என்கிறபடியே, பெரியாழ்வார் திருமொழி, 3. 6 : 3. “வானிளவரசு’ என்பதற்குப் பொருள்,
முதியோர்களான அமைச்சர்களின் கீழே இளவரசன் இருப்பது போன்று,
நித்திய சூரிகள் தங்கியிருக்கின்ற பரம பதத்தில் இளவரசாக உள்ளவன் என்பதாம்
அகம்படி வைத்த அரசாய் இருக்கும் அங்கு, அச் செறுப்புத் தீர, தான் விரும்பினபடி சஞ்சரிக்கப் போந்த இடமே அன்றோ இது.
ஆகையாலே, அங்கு நின்றும் போந்து பிறந்த பின்பாயிற்று ‘எழில் ஏறு’ ஆயிற்று.

அடி அறிவார், தேவரீர், பிராட்டியோடு கூடியவரும் சக்கரத்தைத் தரித்தவரும்
எங்கும் நிறைந்திருப்பவருமான நாராயணன் என்னும் தெய்வம் ஆவீர்;
தேவரீர் ஒற்றைக் கொம்புள்ள வராக அவதாரம் செய்தவர்,
சென்றவர்களும் வருகின்றவர்களுமான பகைவர்களை அழித்தவர்” என்றால்,
அது பொறாதவனாய்
“பவாந் நாராயணோ தேவ: ஸ்ரீமாந் சக்ராயுதோ விபு: ஏக ஸ்ருங்கோ வராஹ: த்வம் பூத பவ்ய ஸபத்நஜித்”
என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 13. ஸ்ரீராமபிரானைப் பார்த்துப் பிரமன் துதித்தது.
“என்னை மனிதனாகவும் இராமன் என்கிற பெயரையுடையவனாகவும்
தசரத சக்கரவர்த்திக்குப் புத்திரனாகவும் எண்ணுகிறேன்” என்றும்,
ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம் யோஹம் யஸ்ய யதஸ்சாஹம்
பகவாந் தத் ப்ரவீது மே” என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 11.
“நான் தேவனும் அலன், கந்தருவனும் அலன், இயக்கனும் அலன், அசுரனும் அலன்,
நான் உங்களுக்கு உறவினனாகத் தோன்றி இருக்கிறேன்” என்றும்
சூழ்த்துக் கொடுக்கும்படி அன்றோ அவதாரத்தில் மெய்ப்பாடு இருக்கும்படி.

நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யக்ஷோ நச தாநவ: அஹம்வோ பாந்தவோ ஜாதோ
நைதச் சிந்த்ய மதோந்யதா”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13 : 12.
இது கோவர்த்தந கிரியை எடுத்துக் குடையாகப் பிடித்து நிற்கும் கோபாலன், ஆயர்களைப் பார்த்துக் கூறியது,
சூழ்த்துக் கொடுக்கும்படி – ஆணையிட்டுக் கொடுக்கும்படி.

செம் மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை அம் மா மலர்க்கண் வளர்கின்றானே –
அவதாரகாலத்தில் உதவாதார்க்கும் இழக்க வேண்டாதபடி அன்றோ
கோயில்களிலே வந்து திருக் கண் வளர்ந்தருளுகிறது.
கோயில்களிலே’ என்ற இவ் விடத்தில்
நாகத் தணைக் குடந்தை வெஃகா திருவெவ்வுள் நாகத் தணை யரங்கம் பேரன்பில் –
நாகத் தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால் அணைப்பார் கருத்தனாவான்.-நான்முகன் திருவந்தாதி
என்ற திருப்பாசுரம் அநுசந்தேயம்.
பரிமளம் முகத்தே வந்து அலை எறிய அதுதானே துடை குத்தக் கிடந்து உறங்குகிறபடி.
அன்றிக்கே , —
‘செம் மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும்
சிவந்த பெரிய தாமரைகளானவை, காட்சிக்கு இனியதான நீரை அமுக்கி மேலே அலருகிற போது,
கடல் நிறமான வடிவையும் அங்குத்தை அவயவங்களையும் காட்டா நின்றன ஆதலின்
‘செம் மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும்’ என்கிறார் என்னுதல்
செம்மா கமலம்-
அரைக் கணத்திலே செவ்வி மாறுகிற தாமரை அங்குத்தைக்கு ஒப்பாகாதே அன்றோ, வருந்திச் சொல்லும் போதும் இத்தனை
ஏறிட்டுச் சொல்ல வேணுங்காணும் என்பார் ‘செம்மா கமலம்’ என்கிறார்.
அம் மா மலர்க் கண் வளர்கின்றானே-
அழகிய தாமரைப்பூப் போலே இருக்கிற திருக் கண்கள் அலரக் காண்கின்றிலேன் என்பார்
‘அம் மா மலர்க்கண் வளர்கின்றானே’ என்கிறார்.

அன்றிக்கே,
அவற்றோடே ஒரே சாதியினவான இரண்டு பூக்கள் அலரக் காண்கின்றிலேன் என்கிறார் என்னுதல்.

என் நான் செய்கேனே –
இவை இரண்டும் மலர்ந்தால் அல்லது தரியாதிருக்கிற நான் என் செய்கேன்?
திருக் குடந்தையிலே தாமரைகள் அலர்ந்தால் தேனைக் குடிக்கக் கூடிய வண்டுகள் தேனைக் குடித்துக் களியா நின்றன,
இத் தாமரைகள் அலர்ந்தால் தேனைக் குடிக்கக் கூடிய வண்டு இங்ஙனே பட்டினி கிடந்து போமித்தனையோ! –
தெய்வ வண்டு அன்றோ
‘இக் கூப்பீடு உருவச் செல்லும்’ என்று இருக்கிறாயோ, சென்றற்றது கண்டாய்.
‘இவை ஒழிய -திருக் கண்கள் கடாஷம் ஒழிய -மது பானம் செய்யோம்’ என்கை யன்றோ
இவர்க்கு இங்ஙன் பட வேண்டுகிறது.
இனி, இவை அலர்தலாவது, விசேஷ கடாக்ஷம் பண்ணுகை காணும்.
அவன் கண் விழியாத போது இவர் கண் விழிக்க மாட்டாரே.
(சத்தத்தையே இல்லையே –
ஆளவந்தார் -பாத பங்கஜ அமுதம் இருக்க காட்டுப்பூவை நாடுவார் உண்டோ )

—————————————————————-

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் -அஜ்ஞ்ஞரும் -ஜ்ஞானாதிகரும் பக்தி பரவசரும் –
அஜ்ஞ்ஞானத்தாலே பிரபன்னர் அஸ்மாதாதிகள்-
ஜ்ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் பூர்வாச்சார்யர்கள் -பக்தி பாரவச்யத்தாலே பிரபன்னர் ஆழ்வார்கள் –
இப்படிச் சொல்லுகிறதும் ஊற்றத்தைப் பற்ற -இம்மூன்றும் மூன்று தத்வத்தையும் பற்றி வரும் -அசித் -சித் -பரமாத்மா தத்வம் –
அசித் தத்வம் பற்றி நாம் -ஆத்ம யாதாம்ய ஞானத்தால் ஆச்சார்யர்கள் -பரமாத்மா தத்வம் பற்றி ஆழ்வார்கள்-
என்னான் செய்கேன் -என்கிற இடத்தில் இம் மூன்றும் உண்டு –என்னான் செய்கேன்-சுரத்தில் மூன்று அர்த்தங்கள் -மா முனிகள்
நான் என்னத்தை பண்ணுவேன் -நான் என்னத்துக்காக பண்ணுவேன் -நான் என்னவாக செய்வேன் –
ஒன்றைப் பற்றி இருக்கும் -முக்யமும் அதுவே –
அகிஞ்சனான நான் -உன்னை ஒழிய வேறு யார் இடமும் அபேஷை இல்லை -உம்மால் அடையும் மற்ற ஒன்றும் வேண்டாம்
எம்மாலும் பிறராலும் அடையும் நீயும் வேண்டாம்-உம்மால் அடையும் உம்மையே வேண்டுவேன்

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்-கர்த்ருத்வம் எனது அதீனம் இல்லையே –
ரஷிக்கை என்ன பிரவ்ருத்தி செய்வேன் –
நீயே ரஷகன் -வேறே யாரும் இல்லையே –என்னை என் கையில் காட்டிக் கொடுக்கிறாயோ –
என்னை பிறர் கையில் காட்டிக் கொடுக்கிறாயோ
நீயே நாளை செய்யலாம் என்று இருக்கிறாயோ -இப்பொழுது நீயே உன்னைக் கொடுத்து அருள வேண்டும்
வேத அபகார குரு பாதக தைத்ய பீடாதி -அசக்தன் நான் -துச் சஹ உபாயங்களில் மூட்ட நினைக்கிறாயோ
உனக்கு பரமாக ஏறிட்டு கொள்வாயோ -இன்னம் கெடுப்பாயோ -பல நீ காட்டி
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-அசக்தர் அப்ராப்தர் அரஷகர் -பிறர் –
ஒரு குறையும் அவர்களால் நிவர்த்திக்க வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாணாள்-உனக்கு அடியேன் -அருமையான ஸூஷ்மம் ஆத்ம வஸ்து வாழும் நாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.-உனது திருவடிகளை அவலம்பித்து வாழும் படி அருள வேண்டும் –
பிராப்யமும் உபாயமும் உன் திருவடி தான்

நான் என்ன காரியத்தைச் செய்வேன், துணையாவார் வேறு யாவர், என்னை என்செய்ய இருக்கின்றாய், உன்னால் அல்லாமல்
மற்றையோரால் ஒரு குறையும் விரும்பேன், வேலைப்பாடு அமைந்த மதில்களாற் சூழப்பட்ட திருக்குடந்தையில் திருக்கண் வளர்கின்றவனே!
அடியேனுடைய ஆத்மா இந்தச் சரீரத்தோடு சேர்ந்து வாழ்ந்திருக்கும் நாள், தொடர்ந்து செல்லுகின்ற நாட்கள் எத்துணை உண்டோ
அத்துணை நாட்கள் எல்லாம் உன் திருவடிகளைப் பிடித்துக்கொண்டே நடக்கும்படி திருவருள் புரிய வேண்டும்.
கண் – தொழில்; வேலைப்பாடு. முதனிலைத் தொழிற்பெயர். அரு – ஆத்மா. வாழ்நாள் என்பது, வாணாள் என மரீயது.

இப்படி நசை அற்றாற்போலே துடித்துக் கிடந்து கூப்பிட்ட இடத்திலும், குளிர நோக்குதல் வினவுதல் செய்யாமையாலே,
பேறு தம்மதானால் பெறுவார்க்கும் சில செய்ய வேணும் என்று இருந்தானாகக் கொண்டு, நான் என் காரியம் செய்கை
என்று ஒன்று உண்டோ, நீ செய்து தலைக்கட்டித் தரவேணும் என்கிறார்.

என் நான் செய்கேன் யாரே களைகண் என்னை என் செய்கின்றாய் –
என்மேலே விட்டிருக்கிறாயோ? பிறர் மேலே விட்டிருக்கிறாயோ? நீயே செய்யக் கடவதாக நினைத்திருக்கிறாயோ?

என் நான் செய்கேன்” என்று, தம்முடைய செயல் அறுதியும்,
“யாரே களைகண்” என்று, பிறர் ரக்ஷகர் அல்லாமையும்,
“என்னை என் செய்கின்றாய்” என்று, அவனைக் கேட்கிறதுமான இம்மூன்றாலும்
இவர்க்குண்டான மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘என்மேலே’ என்று தொடங்கி.

‘என் மேலே விட்டிருக்கிறாயோ’ என்றது, ‘இவனே சாதநாநுஷ்டானம் பண்ணுகிறான், நாம் என்’ என்று
என் மேலே யாக்கி முகங்காட்டாதிருக்கிறாயோ? அதற்கு நான் க்ஷமன் அல்லேன் என்கிறார் என்றபடி.

பிறர் மேலே விட்டிருக்கிறாயோ’ என்றது, பிறர் இவனை ரக்ஷிக்கின்றார்கள் என்று அவர்கள் மேலேயாக்கி
முகங்காட்டாதிருக்கிறாயோ?-அவர்கள் ரக்ஷிக்க மாட்டார்கள் என்றபடி.-

நீயே செய்யக்கடவதாக நினைத்திருக்கிறாயோ’ என்றது, இவர் நிலையும் பிறர் நிலையும்
இப்படியான பின்பு நாமே யன்றோ உளோம் என்று நீயே ரக்ஷிக்கப் பார்க்கிறாயோ என்றபடி.

என் நான் செய்கேன்’ என்றதனால் ‘நான் செய்வது எது’ என்று கேட்கிறார் அல்லர்,
என் நான் செய்கேன்” என்றது, அநுவாதமன்று, வினாவுமன்று;
க்ஷேபோக்தியாய், அஜ்ஞனாய் அசக்தனான நான் என்ன நான் செய்து தலைக்கட்டுவதாக
நினைத்திருக்கின்றவற்றுக்கும் எனக்கும் என்ன சேர்த்தி உண்டு என்கிறார்.
சாதநாநுஷ்டானம் செய்வேன் என்கிறார் என்றபடி.
இதனைக் காட்டுகிறார் ‘நான் செய்வது எது’ என்று தொடங்கி. இங்கே, “என் நான் செய்கேன்’
என்றவிடத்தில் இம் மூன்றும் உண்டு” என்ற ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ சூக்தி அநுசந்தேயம்

‘யாரே களை கண்’ என்றதனால்,
அமிழ்ந்துகிறார் அமிழ்ந்துகிறாரை எடுக்கவோ?
ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொள்வதற்கும் ஆள் அல்லாதவர்கள்
என் காரியம் செய்யவோ? என்கிறார்.
நெறி காட்டி நீக்குதியோ,-பெரிய திருவந்தாதி, 6 “நெறி” என்பது வேறு உபாயங்களை.
நின்பால் கரு மாமுறி மேனி காட்டுதியோ, நீ நினைத்திருக்கிறது என்? என்பார் ‘என்னை என் செய்கின்றாய்’ என்கிறார்.

ஆர்த்தி கண்டு -இரங்காமல்-அஜ்ஞ்ஞன் அசக்தன் நான் என் செய்கேன் -ஞானம் தந்தோமே என்னில் –
நீ தந்த ஞானத்தால் தான் -ஞானாதிக்யத்தால் பிராப்தன் அல்லேன் என்று உணர்ந்தேன் -ஸ்வரூப பாரதந்த்ர்யம் உணர்ந்து – –
கிடப்பது நான் என்றால் ஸ்வரூபம் விட்டாவது -தூது மடல் போலே செய்யலாகாதோ -வழி அல்லா வழி போனீரே –
ஞானம் மாத்ரம் கொடுக்க வில்லையே -பக்தி ரூபாபன்ன -ஞானம் -நலமே மிக்கு -அன்றோ கொடுத்தாய்
ஒன்றையும் அடைவு பட அனுஷ்டிக்க முடியாதே பக்தி பரவசன் ஆனேன்

என் நான்செய்கேன் யாரே களைகண் என்னை என் செய்கின்றாய் –
என்னை அறியாயோ!
பிறரை அறியாயோ!
உன்னை அறியாயோ
என்னை நானாகவன்றோ புத்தி பண்ணி இருக்கிறது.

ஆக, “என் நான் செய்கேன், யாரே களைகண், என்னை என் செய்கின்றாய்” என்ற இம் மூன்றாலும்,
உன் அபேக்ஷை ஒழிய,
முகங்காட்டாமைக்கு வேறு காரணம் இல்லை என்பது இவர்க்குத் திருவுள்ளம் என்னுமிடம் தோன்ற
அருளிச்செய்கிறார் ‘என்னை அறியாயோ’ என்று தொடங்கி.

‘அஜ்ஞனாய் அசக்தனான நான் என்ன சாதநாநுஷ்டானம் பண்ணுவேன்’ என்னுமதனைக் குறிப்பாக
அருளிச் செய்கிறார் ‘என்னை’ என்று தொடங்கி.
‘என்னை நானாக வன்றோ புத்தி பண்ணி இருக்கிறது’ என்றது, நான் என்னை ‘அஜ்ஞன், அசக்தன், அப்ராப்தன்’ என்று
புத்தி பண்ணியிருக்கவில்லையோ, சர்வஜ்ஞனாய், சர்வ சக்தியான தேவரீரைப் போன்று எண்ணி விட்டதோ என்றபடி.

யாரே களை கண்-
என்னளவு கிட்டாதார் எனக்கு ரக்ஷகர் ஆகவோ.
‘என்னளவு கிட்டாதார்’ என்றது, உன் திருவருளுக்கு என்னைப் போன்று இலக்கு ஆகாதவர்கள் என்றபடி.
அன்றிக்கே,
என்னளவு ஞான பக்தி இல்லாதவர் என்னுதல்.

என்னை என்செய்கின்றாய்-
நீ செய்து தலைக்கட்டப் பார்த்தாயோ?
அன்றிக்கே,
சாதநாநுஷ்டானம் செய்து வாரும்’ என்று நளன் தமயந்திக்கு வழி காட்டினாற்போலே-
காட்டில் உபேஷிப்பதாக நினைத்து குழப்பினான்
போகாத இடத்துக்கு வழி –கைவிடப் பார்த்தாயோ?

என் நான் செய்கேன்-
தாம் கை வாங்கின படி.

யாரே களைகண்-
பிறர் பக்கல் நின்றும் கை வாங்கினபடி.

என்னை என் செய்கின்றாய்-
“என்னை ஆராதிக்கின்றவன் ஆவாய், என்னை நமஸ்காரம் செய்வாய்” என்னப் பார்த்தாயோ?
(நமக்கே நலம் ஆதலின் -பக்தி யோகம் உபாயாந்தரம் அன்றோ )
“துக்கப்படாதே” என்னப் பார்த்தாயோ?

“என் நான் செய்கேன், ‘யாரே களைகண், என்னை என் செய்கின்றாய்” என்னும் இம் மூன்றாலும்,
ஆகிஞ்சந்ய அநந்ய கதித்வங்களும், அவனே ரக்ஷகன் என்னுமதுவும் சொல்லப் படுகின்றன என்னுமிடம் தோற்ற
அருளிச் செய்கிறார் ‘தாம்’ என்று தொடங்கி.
‘தாம் கை வாங்கினபடி’ என்றது, ஆகிஞ்சந்யத்வம்;
‘பிறர் பக்கல் நின்றும் கை வாங்கின படி’ என்றது, அநந்ய கதித்வம்;
‘அவனே ரக்ஷகன்’ என்னுமிடம் கூறுவது.

இதுகாறும் அநப்யுபகம்ய வாதத்தாலே அருளிச் செய்தார்;
இனி, அப்யுபகம்ய வாதத்தாலே அருளிச் செய்கிறார்
‘உன்னால் அல்லால்’ என்று தொடங்கி. என்றது, வேறு உபாயங்களிலே தமக்கு ஞானசக்திகளும் உண்டாய்,
வேறு தெய்வங்கட்கு மோக்ஷத்தைக் கொடுக்கும்
சக்தியுமுண்டாகிலும், ஸ்வரூபத்திற்கு விரோதமாகையாலே தமக்கு வேண்டா என்கிறார் என்றபடி.
அநப்யுபகம்யவாதம் – உடன்படாமலே பேசுகின்ற வாதம். அப்யுபகம்யவாதம் – உடன்பட்டுப் பேசுகின்ற வாதம்

உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-
“மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”- ஸ்ரீகீதை. 9. 34.
“என்னை நமஸ்காரம் செய்வாய், என்னை அடைவாய்” என்றால் எனக்குச் சோகம் போகாது கண்டாய்.
ஓதி நாம் குளித்து -நமக்கே நலம் ஆதலால் -திருப் புல்லாணி-நமக்கு நலம் தேடும் –
உபாயாந்தரம் வேண்டாம் -என் நலம் நீ தேடுவதே உக்தம் –
உபாயம் தன்னைப் பொறுக்கும் -உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -பிரபத்தி எதையும் பொறாதே –

‘யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாய பாவம் ஒரு சேதனனாலே என்றிருக்கையாலே.
அன்றிக்கே, பெறுவது உன்னையே யாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன்,
என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன்.
மற்றையவற்றிற்கும் அபிமத சித்தி உண்டேயாகிலும் காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே
ஸ்வரூப விரோதியானது எனக்கு வேண்டாம்.
கடல் கடத்தப் பெற இருத்தல், சபித்துப் பெற இருத்தல் செய்யாத பிராட்டியைப் போலே. என்றது,
இரண்டு தலைகளையும் அழிக்கையே அன்றோ. ஒருவராலும் ஒருகுறை நிரம்புவதாக வேண்டி இரேன்.
அன்றிக்கே, ‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி,
‘உன்னை ஒழியமற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை’ என்று சொல்லுவாருமுளர்.

உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்” என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச் செய்கிறார்.
அவற்றுள், முதலது, “என் நான் செய்கேன்” என்றதனை மாத்திரம் கடாக்ஷித்து அருளிச்செய்வது.
என்றது, உன்னால் வரும் உன்னை ஒழிய, வேறு உபாயங்களால் வரும் உன்னையும் வேண்டேன் என்கிறார் என்றபடி.
இதனையே அருளிச் செய்கிறார் ‘என்னை நமஸ்காரம் செய்’ என்று தொடங்கி.
அங்ஙனமாயின், ‘யாவையாலும்’ என்னாது, “யாவராலும்” என்றது என்னை? எனின்,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘யாவையாலும்’ என்று தொடங்கி.

இரண்டாவது பொருள்.
“என் நான் செய்கேன், யாரே களை கண்” என்னும் இரண்டனையும் கடாக்ஷித்து அருளிச்செய்வது. என்றது,
உன்னாலே பெறும் உன்னை ஒழிய, வேறு உபாயங்களாலும், வேறு தெய்வங்களாலும் பெறும் உன்னையும் வேண்டேன் என்கிறார் என்றபடி.
இதனையே, ‘பெறுவது உன்னையேயாகிலும்’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.
பெறுவது நம்மையானால், வேறு உபாயங்களாலும், வேறு தெய்வங்களாலும் நம்மைப் பெற்றால் விரோதம் என்? என்ன,
அதற்கு விடை அருளிச் செய்கிறார் ‘மற்றையவற்றிற்கும்’ என்று தொடங்கி. காலன் கொண்டு – காலபுருஷதானம் வாங்கி.
அப்படி வேண்டாம் என்று இருந்த பேர் உளரோ? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார் ‘கடல் கடத்த’ என்று தொடங்கி.
‘கடல் கடத்த’ என்றது, திருவடியினால் கடல் கடத்தப்பட்ட என்றபடி. ‘சபித்துப் பெற’ என்றது, பிராட்டியாகிய தான் சபித்து என்றபடி.
அப்படிச் செய்தால், அவனுடைய ரக்ஷகத்வத்துக்கும் தன்னுடைய பாரதந்திரியத்திற்கும் சேராது என்கிறார் ‘என்றது’ என்று தொடங்கி.

மூன்றாவது பொருள்: உம்மாலும் பிறராலும் சாத்யம் அல்லாத என்னை விட்டு,
உபய சாத்யமான ஐஸ்வர்யாதிகளைப் பெற்றுப்போம் என்ன,
‘உன்னால் அல்லால்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார். ‘உன்னை ஒழிய மற்றொன்றால்’ என்றது,
பிராப்யனான உன்னை ஒழிய வேறோர் ஐஸ்வர்யாதிகளால் என்றபடி.அசேதனமான ஐஸ்வர்யாதிகளை “யாவராலும்” என்றது,
பிராப்பியம் ஒரு பரம சேதனம்’ என்கிற வாசனையாலே என்க. ‘சொல்லுவாருமுளர்’ என்கையாலே,
இப்பொருள் அத்துணைச் சிறப்புடைத்தன்று என்பது போதரும்.

கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்-
இவருடைய உபாயம் அரண் செய்து கிடக்கிறபடி. ‘அவனே உபாயமும் உபேயமும்’ என்று அறுதியிட்டவர்கள்
அத்தலையில் உண்டான பரிவாலே அவனைக் காக்கை பணியே அன்றோ.
“செவ்வடி செவ்வி திருக்காப்பு” என்றாரே அன்றோ.
கண் ஆர் மதிள்-
தொழில் மிக்க மதிள் என்னுதல். செம்பாலே செய்யப்பட்ட மதில் என்னுதல்.
கன்’ என்பது, தொழிலும், செம்பும், சிக்கெனவும் எனப் பல பொருள்படும் ஒரு சொல்.

அடியேன் அரு
உனக்கு அநந்யார்ஹமாய்த் தனக்கு உரித்தல்லாத இந்த ஆத்ம வஸ்து.

வாழ்நாள் செல்நாள் எந் நாள்-
ஜீவித்துக் கொண்டு செல்லும் நாள் யாதொரு நாள்.

அந்நாள்-
அந்த நாட்கள் முழுதும்.

உன தாள் பிடித்தே செலக் காணே-
உன் திருவடிகளையே பெற்றுச் செல்லும்படி பார்த்தருள வேண்டும்.
காற்கூறும் விடாதபடி பார்த்தருள வேண்டும். ‘ஒன்றும் குறை வேண்டேன்’ என்ற பின்னர், வந்து குறை நிரப்பக் கண்டிலர்;
இனி அநுபவம் பெற்றபோது பெற, ‘உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்’ என்கிற இந்த உறுதி
குலையாதபடி பார்த்தருள வேண்டும் என்கிறார்.
அடிவிடில் உறுதி குலையுமே, அடியே பிடித்து ஜீவித்தவர் அதனை விடாரே இப்போதாக. அத்யவசாயம் இது,
ருசியில் வந்தால் பரபக்தியை யுடையவர், விளம்பத்துக்குக் காரணம் என்? என்னில்,
பக்தி விபாகத்துக்காகவும், இவருடைய பிரேமம் வழிந்த சொல்லால் நாட்டினைத் திருத்துகைக்காகவும்.

———————————————————————————————-

செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4-

அபரிச்சின்ன மாகாத்ம்யம் உடைய சர்வேஸ்வரன் அர்ச்சாவதார தசையில் -நினைத்த படி அனுபவிக்க
ஆசைப்பட்டு கிடையாமல் அலமந்து கிலேசப் படுகிறேன் –
செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!-மேலே போக காண வல்ல சக்தர் காணும் அளவும் –
அவவருக்கு மேலே செல்லும் வைபவம் உடையவர் –
குண விபூதி ப்ரதை புகழ் உடையவன்
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!-என்ன முடியாத -நெஞ்சாலும் -எண்ணிக்கையாலும் -முடிவு இன்றிக்கே
ஸ்வா பாவிக அநவதிக அதிசய அசங்க்யேய -அனுபூத அம்சத்தில் குறை இல்லை —
சர்வ உலகங்களும் -ஸ்வாமி-ஒரு குடைக் கீழ் -பிராப்ய விக்ரகம் உண்டே மூர்த்தி -அடைந்து அனுபவிக்க
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்-உன் பக்கல் பிராவண்யம் விஞ்சி இருப்பார் -நலத்தால் மிக்கார்
அனுபாவ்யனாகக் கொண்டு கண் வளர்ந்து அருளி -சர்வாதிகன் சர்வ சுலபன் -உலப்பிலானே -குடந்தைக் கிடந்தாய் -உன்னை
அத்யந்த அபி நிவிஷ்டையான நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே-தமர் உகந்த படி -கிடந்தவாறு வாழி கேசனே சேவை சாதித்தாயே
அலமந்து -நீ வர சம்பாவனை உள்ள ஆகாசம் நோக்கி -பக்தி பரவசரைப் போல அழுது -பிரபன்னர் படி தொழுது –
என்ன பண்ணுகிறேன் தெரியாமல் பிராவண்யம் -எத்தைப் பண்ணி பித்தம் தெளியும் -பாலரைப் போலே அழுது பக்வரைப் போலே தொழுதும்

மேலே போகக் காணவல்ல சக்தியையுடையவர்கள் காண வல்ல அளவுக்கும் அப்பால் போகும்படியான கீர்த்தியை யுடையவனே! முடிவு இல்லாதவனே!
எல்லா உலகங்களையுமுடைய ஒப்பற்ற மூர்த்தியே! பக்தியினால் மேம்பட்டவர்கள் தங்கியிருக்கிற திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்திலே
திருக்கண் வளர்கின்றவனே! உன்னைக் காணும்பொருட்டு நான் அலமந்து ஆகாசத்தை நோக்கி அழுவேன், தொழுவேன்.
காண்கிற்பார்: வினையாலணையும் பெயர். உலப்பு-முடிவு. நலம்-பக்தி. அலத்தல் – அலமருதல்; சுழலுதல்.

சர்வேச்வரனாயிருந்து வைத்து அடியார்கட்காகத் திருக் குடைந்தையிலே அண்மையிலிருப்பவனாக இருக்க,
நினைத்த கைங்கரியத்தைப் பெறாமையாலே நோவுபடா நின்றேன் என்கிறார்.

செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் –
உன்னுடைய குணங்களால் வந்த பிரசித்தி அடங்கலும் அழியப் புகா நின்றது கண்டாய்.
எத்தனையேனும் அளவுடையாரும் தாங்கள் நின்ற அளவுகளைக் கழித்து அவ்வருகே காணப் புக்கால்,
அவ்வளவுகளை யுடையனாயிருக்கும்.
“பேசுவார் எவ்வளவு பேசுவர்-இது மூன்றாம் திருவந். 21.–
அவ்வளவே, வக்கரனைக் கொன்றான் வடிவு”-
திவ்விய மங்கள விக்கிரஹத்தின் வைலக்ஷண்யத்தைப் பற்றிப் பேசுமவர்கள் யாதோர் அளவு சொல்லுவார்கள்,
அவ்வளவாயிருக்குமத்தனை.-ஸ்வரூபம் ரூபம் குணங்கள் எல்லாம் உப லஷணையால் சொல்லுவது போலே

உலப்பிலானே
ஸ்வரூப குணங்கள் புருஷர்களுடைய புத்திக்கு உட்பட்டவல்லாத அளவாய், தான் ஓர் எல்லையிலே இருக்குமோ? என்னில்,
உலப்பிலானே-
இயல்பிலே எல்லை காண ஒண்ணாதபடியாயிருக்கை.
தனக்கும் தன் தன்மை அறிவரியானே யன்றோ.
எல்லா உலகுமுடைய ஒரு மூர்த்தி- திருவாய்மொழி, 8. 4. 6.—
வடிவழகைக் காட்டி எல்லா உயிர்களையும் காற்கீழே இட்டுக் கொள்ளக் கூடியவனே!
அழகைக் கொண்டே நாதன் ஆனவன் –
அன்றிக்கே,
வடிவு கண்டபோதே, ‘இவனே இவற்றிற்கெல்லாம் கடவன்’ என்று தோன்றும்படியாய் இருப்பவனே! என்னுதல்.
அன்றிக்கே,
மூர்த்தி’ என்ற சொல்லானது, விக்கிரஹத்துக்கும் பெயராய், ஐஸ்வரியத்துக்கும் பெயராய் இருக்கும்.-செல்வந்தர் என்றபடி
அப்போது, எல்லா உலகங்கட்கும் நிர்வாஹகனாய் –ஒப்பற்றவனான –சர்வேச்வரன் என்றபடி.–எல்லாவுலகுமுடைய -ஒரு -மூர்த்தி
கண்டவாற்றால் உலகே தனது என்று நின்றான் -அழகு பரமாயும் ஐஸ்வர்ய பரமாயும்
இதனால், இவர்க்குப் பேறு என்? என்னில், உன் பெருமையை அழிக்க அன்றோ புகுகிறாய் என்பது.
நீர் நோவுபடுகிற இடம் என் எல்லைக்குள் அன்று என்ன ஒண்ணாதே உனக்கு.-
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால் -தொடர்ந்து பெயரை காத்துக் கொள்ள அருளிச் செய்தார்

“எல்லாவுலகுமுடைய ஒரு மூர்த்தி” என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச் செய்கிறார்,
“மூர்த்தி” என்பது விக்கிரஹமாய்,
அதனாலே அழகினை விவக்ஷித்து, விக்கிரஹ சௌந்தர்யத்தாலே எல்லா உலகங்களையும்
சேஷமாகக் கொண்டவன் என்பது, முதற்பொருள்.
“மூர்த்தி” என்பது விக்கிரஹமாய், விக்கிரஹத்தைக் கண்டவாறே ‘இவனே எல்லா உலகங்களுக்கும் சேஷி’ என்று
தோற்றும்படியாயிருப்பவன் என்பது, இரண்டாவது பொருள்.
“மூர்த்தி” என்ற சொல்லானது, விக்கிரஹத்தைக் காட்டுமோ? என்ற சங்கையையும் பரிஹரித்துக் கொண்டு,
மூன்றாவது பொருளினை அருளிச் செய்கிறார் ‘மூர்த்தி என்ற சொல்லானது’ என்று தொடங்கி.
‘அப்போது’ என்றது, செல்வத்திற்கு வாசகமான போது என்றபடி.

நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்-
நீ ஸ்வரூபங்களால் வேறுபட்டவனாய்க் கொண்டு அங்கே இருந்தாயாகில் நான் ஆறி இரேனோ,
உன்னால் அல்லது செல்லாதாருடைய தேசத்தை விரும்பிப் படுகாடு கிடவா நின்றாய்,
கிரமப் பிராப்தி பற்றாதபடி அன்பு செலுத்தியிருப்பவர்களாதலின் ‘நலத்தால் மிக்கார்’ என்கிறது.

உன்னைக் காண்பான் நான்-
ஸ்ரீ வைகுண்டம் கலவிருக்கையாக இருக்க, அடியார்களை விடமாட்டாதே திருக் குடந்தையில்
திருக் கண் வளர்ந்தருளுகிற உன்னை,
மிக்க காதலையுடைய நான், அத்தலை இத் தலையாய்க் காண ஆசைப்பட்டு அலமாவா நின்றேன்.

உன்னைக் காண்பான் நான்-
காண்கிறவன் நான் அன்றோ, காண்கிறது உன்னை அன்றோ; ஆன பின்னர், எங்ஙனே ஆறியிருக்கும்படி.

உன்னை –
மேலே கூறிய -ஆராவமுதே –மூர்த்தி -இரண்டு இனிமையும் உண்டே –
இனிமையையுடைய உன்னை என்றுமாம்.

அலப்பாய்-
அலமந்து. காணும்போது ‘கண்டு கொள்ளுகிறோம்’ என்று, சூது சதுரங்கம் பொருது ஆறியிருக்கும் விஷயமன்றே,
காணப்பெறாமையாலே வந்த துடிப்பு.

ஆகாசத்தை நோக்கி-
திருவடியினுடைய சப்தம் ஒரு திக்கிலேயாயிருக்கச் செய்தே “அந்தப் பிராட்டி குறுக்கும் மேலும் அப்படியே
கீழும் பார்க்கிறவளாய்க்கொண்டு
வாயுபுத்திரனான அநுமானை உதயபர்வத்தில் தோன்றுகிற சூரியனைப் போலப் பார்த்தாள்” என்கிறபடியே,
பிராட்டி எங்கும் ஒக்கப்பார்த்தாளே அன்றோ.
“ஸா திர்யக் ஊர்த்வஞ்ச ததாபி அதஸ்தாந் நிரீக்ஷமாணா தம் அசிந்த்ய புத்திம்
ததர்ஸ பிங்காதிபதே: அமாத்யம் வாதாத்மஜம் ஸூர்யமிவ உதயஸ்தம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 31 : 19.

‘உன்னை’ என்னா நிற்கச் செய்தே ‘ஆகாசத்தை நோக்கி’ என்பான் என்? என்னில்,
‘அலப்பாய்’ என்றாரே அன்றோ, –கலக்கத்தின் காரியம் இருக்கிறபடி.
விஷயம் அண்மையில் இருக்கச்செய்தே ஆகாசத்தைப் பார்க்கிறது. நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே.
ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோற்றினாற் போலே தம் தசையைப் பார்த்துத் தோற்றுகிறானோ’ என்று பார்த்து.
அன்றிக்கே,
ஆகாசத்தை நோக்கி என்பதற்கு, என்னுடைய நிராலம்பநதையைப் பார்த்து” என்று ஆண்டான் அருளிச் செய்வர்.
அன்றிக்கே,
வயோதிகரான தசரத சக்கரவர்த்தி அப்படியே வெம்மை தோன்ற பெருமூச்சு விட்டு ஆகாசத்தை நோக்கிய
கண்களை யுடையவராய்த் துக்கத்தால் பீடிக்கப்பட்டவன் போலக் கதறினார்” என்று கொண்டு,
கண்கள் இலக்கில் தைக்க மாட்டாதபடியாயிற்றுச் சென்றற்றபடி என்னுதல்
“ததைவ உஷ்ணம் விநிஸ்வஸ்ய விருத்தோ தசரதோ ந்ருப: விலலாப ஆர்த்தவத் துக்காத் ககநாஸக்தலோசந:”-ஸ்ரீராமா. அயோத். 13 : 16.
இது, கைகேசின் வார்த்தையைக் கேட்ட தசரதனது துக்கம்.

அழுவன் தொழுவன்-உபாசகர்கள் செய்யுமதனையும் செய்யா நின்றேன்,
பிரபந்நர்கள் செய்யுமதனையும் செய்யா நின்றேன்.
சபலர் செய்யுமதனையும் செய்யா நின்றேன்,
விரக்தர் செய்யுமதனையும் செய்யா நின்றேன்.

————————————————————————————–

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய்.–5-7-5-

உன் கண் அழகாலே ஈடுபட்டு நாநா வித தய நீயா வ்ருத்தி
பண்ணும் நான் உன் திருவடிகளில் சேரும் வகை செய்து அருள்
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்-கலங்கி அழுது -தெளிந்து வணங்கி -பிரமத்தால் ஆடி
குண பாரவச்யத்தால் பாடி ஆர்த்தியால் பிரலாபித்து புலம்பி
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்-தழுவி -காதல் பிரபல பாபம் -நான் உன்னை தழுவ
நினைக்க வினைகள் என்னை தழுவுகின்றனவே -இவ்வஸ்தையில் வாராது இருக்கவே நீ வாராமல் உள்ளாய்
பக்தி காதலே பாபம் -இஷ்டம் கிடைக்காமல் பண்ணுவதே பாபம் -வர சம்பாவனை உடைய பக்கங்கள் நோக்கி
காணாமையாலே ஸ்வரூபம் பெற்றிலோம் அபிமதம் பெற்றிலோம் உரிமை அன்பு ஆசை போனதே வெட்கி கவிழ்ந்தேன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!-ஆஸ்ரித அர்த்தமாக கண் வளர்ந்து -ரஷகம் போக்கியம் திருக் கண்கள்
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய்-சூழ்ச்சி -தெரியாத உபாயம் நீ பண்ணி அருள் -தெரிந்தால் பண்ண விட மாட்டோமே –
கை முதல் இல்லாத என்னை பிராப்தனான நீ போக்யமான திருவடிகளில் சேர்த்து கொள்வாய்

கலக்கத்தாலே அழுவேன், தெளிவாலே தொழுவேன், மயக்கத்தால் ஆடுவேன், குணங்களுக்குப் பரவசப்பட்டுப் பாடுவேன், துன்பத்தால் அலற்றுவேன்,
என்னைத் தழுவி நிற்கின்ற காதலாகிற கொடிய பாவங்களால் நீ வருவதற்குச் சம்பாவனையுள்ள பக்கத்தை நோக்குவேன், வரக் காணாமையாலே
நாணங்கொண்டு தலை குனிந்திருப்பேன், செழுமை பொருந்திய அழகிய வயல்களாற்சூழப்பட்ட திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் திருக்கண்
வளர்கின்றவனே! செந்தாமரைக் கண்ணா! வேறு கதி இல்லாதவனாய்த் தொழுகின்ற என்னை உன் திருவடிகளைச் சேரும்படி ஒரு நல் விரகு பார்க்க வேண்டும்.
ஆடிக் காண்பன் : ஒருசொல். ஆடுவேன் என்பது பொருளாம். தொழுவனேன்: வினையாலணையும் பெயர். கண்டாய்: முன்னிலை அசைச் சொல்

உன்னைக் காண வேண்டும் என்னும் ஆசையாலே இரங்குதற்குரிய செயல்கள் பலவும் செய்த இடத்திலும் காணப் பெற்றிலேன்,
உன் திருவடிகளை நான் பெறும்படி பார்த்தருள வேண்டும் என்கிறார்.

அழுவன் –
குழந்தைகள் செய்வதனையும் செய்யா நின்றேன்.
“மற்றவள் தன் அருள் நினைந்து அழுங்குழவியதுவே போன்றிருந்தேன்” என்னக் கடவதன்றோ.

குழந்தைகள் அழுவதற்குப் பிரமாணம் காட்டுகிறார் “மற்றவள் தன்” என்று தொடங்கி.
தருதுயரம் தடாயேல் உன்சரணல்லால் சரணில்லை விரைகுழுவும் மலர்ப்பொழில்சூழ் விற்றுவக் கோட்டம்மானே!
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள்நினைந்தே அழுங்குழவி யதுவேபோன் றிருந்தேனே– பெருமாள் திருமொழி. 5 : 1.

தொழுவன் –
வேதாந்த ஞானமுடையார் செய்வதனையும் செய்யா நின்றேன்
.“அஞ்சலி: பரமா முத்ரா” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து,
‘வேதாந்த ஞானமுடையார்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.-

ஆடிக் காண்பன் –
இத்தனை சோறு இடுகிறோம், ஆட வல்லையோ’ என்றால், கலியர் ஆடுமாறு போலே ஆடியும் பார்ப்பன்.
கலியர்-பசியர்
என் பட்டால் பெறலாம்’ என்று அறியாரே.

பாடி அலற்றுவன் –
காதலால் வழிந்த சொல் பாட்டாய், அதுதானும் அடைவு கெடக் கூப்பிடுகை, அலற்றுகை.

தழு வல் வினையால் –
இப்படிப் பட்டாலும் காண ஒண்ணாதே அன்றோ -‘உடன் வந்தியான-வர்த்தியான- வல்வினை.
என்னைத் தழுவி விடாதே நிற்கிற காதலாகிற பிரபலமான பாவத்தாலே.
பக்தியை, பாவம் என்கிறது,வேண்டாததைக் கொடுப்பது பாபம் ஆகையாலே.
வாராயோ என்றார்க்கு-சென்றேன் என் வல் வினையால் –போலே -சத்ருக்னன் அநக போலே –

பக்கம் நோக்கி –
துன்பமே-ஆர்த்தியே- செப்பேடாக வரும்’ என்றிருக்கையாலே, வருவதற்குச் சம்பாவனை யுள்ள திக்கைப் பார்த்து.

நாணிக் கவிழ்ந்திருப்பன் –
அங்கு வந்து தோற்றக் காணாமையாலே, ‘ஆசைப்பட்டு அழகிதாக உண்டோம்’ என்று நாணமுற்றுக் கவிழ்தலை இட்டிருப்பன்.
அன்றிக்கே,
பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன் என்பதற்கு, ‘அருகு நின்றார் இவளை என் சொல்லுவர்களோ’ என்றதற்கு
நாண முற்றுக் கவிழ்தலை இட்டிருப்பன் என்னலுமாம்.

செழு ஒண் பழனம் குடந்தைக் கிடந்தாய்-
பெருத்து அழகிதான நீர் நிலைகளை யுடைய திருக் குடந்தையிலே திருக் கண் வளர்ந்தருளுகிறவனே!

செந்தாமரைக் கண்ணா-
1-கையிலே நிதி உண்டாயிருக்க வறியர்க்கு-ஆர்த்தருக்கு- இடாதாரைப் போலே.
2-வேறு முகத்தாலே என் ஜீவனமாய்க் கிடக்கிறாய் இல்லை,
3-என் ஜீவனம் ஒருமுகம் செய்து கிடக்கிற தன்றோ.
முகாந்தரம் -சம்பந்தம் -செந்தாமரைக் கண் தானே எனக்கு ஜீவனம் –சத்தை –
ஒரு முகம் -ஒரு லஷ்யம் -செந்தாமரைக் கண் தானே

தொழுவனேனை –
புறம்பு புகல் அற்று உன்னால் அல்லது செல்லாதபடி கிருபணனான என்னை.
அன்றிக்கே,
புறம்புள்ள விஷயங்களிலே ஈடுபட்டவனாய்த் தாழ்ந்தவனான என்னை என்னுதல்.
தொழுவன்-கிருபணன் என்னுதல். தாழ்ந்தவன் என்னுதல்.

உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய் –
உன் திருவடிகளைக் கிட்டுவது ஒரு விரகு, நான் அறியாதபடி நீயே பார்த்தருள வேண்டும்.
தம்முடைய ஆற்றாமை பேற்றுக்குக் காரணம் அன்றிக்கே, அது பிரகிருதியாய்,-ஸ்வரூபம் – ‘அவனாலே பேறு’ என்று இருக்கிறபடி.
என்றது, வேறு பிரயோஜனங்களை விரும்பாதார் திறத்தில் காரிய சிந்தையும் அவனதாக இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.
தேக யாத்ரை கர்மாதீனம் -ஆத்மா யாத்ரை கிருபாதீனம் –த்ருஷ்டம் அத்ருஷ்டம் இரண்டுக்கும் நமக்கு பொறுப்பு இல்லையே
கைங்கர்யத்திலே நாம் கண் வைக்க வேண்டும் –

—————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம்- 119- திருவாய்மொழி – -5-7–6….5-7-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

June 9, 2016

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
வான மா மலையே! அடியேன் தொழ வந்தருளே.–5-7-6-

உயிரான பாசுரம்
ஆஸ்ரித உபகாரத்வத்தால் அதுஜ்ஜ்வலமாய் -இருக்கும் நீர் -என்னிடம் கைங்கர்யம் கொண்டு அருள வேண்டும் –
அனுபவித்து சேஷ வ்ருத்தி-பூமிப் பிராட்டிக்கு உதவினால் போலே எனக்கு உதவி அருள வேண்டும்
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் -பிரளய ஆபத்துக்கு நிலவன் -பூமியைக் கீண்டு எடுத்த அவதானத்தால்
இவருக்கு பண்ணின உபகாரம் -சர்வ விஷய உபகாரகன் ஸ்ரீ கிருஷ்ணன் -சௌலப்யாதி குண பிரகாசத்தால் –
எனை ஆளுடை வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!-எப்பொழுதும் எனது சத்தை அழியாமல் அடிமை கொண்டு
கைங்கர்யம் கொண்டு -பரம பதம் லோகம் போலே வாசிக கைங்கர்யம் -கொண்டது போலே – -ஹாவு ஹாவு போலே –
விலஷணம் மாணிக்க அத்யுஜ்ஜ்வலமான தேஜஸ் -ஆழ்வார் கைங்கர்யம் பெறப் பெற்றோமே என்று
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ -தேன் பொழியும் மா மரங்கள் -குளிர்ந்த ஸ்ரமஹரமான -சோலைகள் –
இங்கு வாழுபவர் சேஷ வ்ருத்திகள் செய்யும்படி
உறை வான மாமலையே! அடியேன் தொழ வந்தருளே-அவனையே விளிக்கிறார் -நித்ய வாசம் பண்ணா நிற்பானாய்-
வைகுண்ட வாசிகளுக்கு அனுபாவ்யமானாய் அபரிச்சேத்யமான-அசைக்க மாட்டாத பெரிய வடிவு -வான -மா மலை -போன்று –
ஸூ ஸ்திரமான வடிவு -நான் கைங்கர்யம் செய்யும் படி ஸ்ரீ வைகுண்டம் -அவ்விருப்பு குலைந்து வந்து –
இங்கே வந்து நித்ய சந்நிஹிதன் ஆனாயே –
ஆகாசம் கிட்டி அஞ்சன மா மலை போன்றவனே என்றுமாம் –

பிரளயம் கொண்ட நிலத்தை வராகமாகி எடுத்த என் அப்பனே! கண்ணபிரானே!
எப்பொழுதும் என்னை அடிமையாக ஆளுகின்ற தெய்வ நாயகனே!
அழகிய மாணிக்கத்தினது சுடரே! தேனையுடைய மாமரச் சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த ஸ்ரீ வரமங்கலத்திலிருப்பவர்கள்
கைகூப்பி வணங்கும்படியாக எழுந்தருளியிருக்கின்ற வானமாமலையே! அடியேன் வணங்கும்படி வந்தருள்வாயாக என்கிறார்.
வி-கு :- ஏனம் – பன்றி, தேன – தேனையுடைய, அ: ஆறாம் வேற்றுமையுருபு.
மாம்பொழில் – மாமரச் சோலை. உறை – வசிக்கின்ற.

மேற்பாசுரத்தில் அவாய் நிலையாற் போந்த கைங்கரியத்தை விரும்புகிறார் இப்பாசுரத்தில்.
வாக்ய சேஷத்தால் சொல்லப்பட்ட கைங்கர்யத்தை விரும்புகிறார் இப்பாசுரத்தில்.

ஏனமாய் நிலம் கீண்ட –
ஆபத்தை அடைந்தவர்கள் அறிவிக்கையும் மிகையாம்படி அன்றோ உன்படி இருப்பது.
காத்தல் ஒருதலையானால் உன்னைப் பேணாதவன் அன்றோ என்றபடி.

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா-
ஏனமாய்-
பிரளயம் கொண்ட பூமியை மஹா வராஹமாகி எடுத்தாய்,
ஏனமாய்–கண்ணா
சம்சார பிரளயம் கொண்ட என்னை ஸ்ரீ கிருஷ்ணனாய் எடுத்தாய்.
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே-
பிரளயத்தாற் கொள்ளப்பட்ட பூமிக்கு உதவி செய்தது தமக்கு உதவி செய்ததாயிருக்கிறபடி.
என் அப்பனே கண்ணா –
என்னைக் காப்பாற்றுவதற்கு ஏதேனும் முகம் பண்ண வேண்டுமோ?-அலங்கோலம் -கோல வராகம் –
என்னைக் காப்பாற்றுவதற்கு ஏதேனும் ஒரு கோலம் கொள்ள வேண்டுமோ?
வெறுப்பிலே நோக்காகச் சிலேடையில் வைத்து,முகம் – வேறொரு பிரகாரமும்,
வராகத்தினது முகமும். கோலம் – வராகமும், அலங்காரமும்.
கண்ணன் கோள் இழை வான்முகமே -திருவாய்மொழி, 7. 7 : 8.-அன்றோ இவர்க்கு இரக்ஷகம்.

என்றும் என்னை ஆளுடை வான நாயகனே –
தனக்குத் தகுதியானவரோடு இருக்கும்போதும் இவர் இடையாட்டமாயிற்று-ரக்ஷகமே- ஆராய்ந்து போருவது.
இவர் சத்தையே தொடங்கிக் கை தொட்டு நோக்கிக் கொண்டாயிற்றுப் போந்தது.
நித்ய சூரிகள் உடன் இருக்கும் பொழுதும் இவர் நினைவே அவனுக்கு

மணி மாணிக்கச் சுடரே –
உளரான பின்பு ஓர் ஏற்றம் செய்து கொடுத்தலன்றிக்கே, அடியே பிடித்து நோக்கிக் கொண்டு போந்து,
இச்சை பிறந்தவாறே, அவ்வளவிலே நித்தியசூரிகளுக்கு விடும் படியையும் இவர்க்கு விட்டான்.

மணி மாணிக்கச் சுடர் –
இரத்தினங்களுக்குள்ளே சிரேஷ்டமான இரத்தினம் என்னுதல்.
ஸ்ரேஷ்டமான ரத்னம் -மணி மாணிக்கம் -சுடர் -தேஜஸ் -திவ்ய மங்கள விக்ரஹம்
மணியினுடையவும் மாணிக்கத்தினுடையவும் ஒளியையுடைத்தாயிருப்பவன் என்னுதல்.-
மணி -நீல மாணிக்கம் -பத்ம- ராகம் –
சுடர் -லஷ்மி சமேதத்வாத் -தேஜஸ் -ஸ்வா பாவிக தேஜஸ் —
இரண்டு வித தேஜஸ் உண்டே -அப்ரமேயம் சீதயா உண்டே
ருசி விவசர்க்குப் பாதமே சரணாக்கும் ஔதார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் –

தேன மாம் பொழில் தண் சிரீவரமங்கலத்தவர் கைதொழ உறை –
தேனை யுடைத்தான மாம்பொழிலை யுடைத்தாகையாலே சிரமஹரமான சிரீவரமங்கல நகரத்திலுள்ளார்,
ஸ்வரூபத்திற்குத் தகுதியான கைங்கரியத்தைச் செய்யும்படி இருக்கிற.

வானமாமலையே-
நித்திய சூரிகளை அடிமை கொண்டிருக்கும் வேண்டற்பாடு-பெருமை உடன் – போலே காணும்
இங்குள்ளார் அடிமை செய்ய இருக்கிற இருப்பும்.
ஆகாசத்தில் கிட்டும் படி மலை போன்றவன் என்றுமாம் -இது திரு நாமம் அவனுக்கு

அடியேன் தொழ வந்தருளே –
நான் அடிமை செய்து வாழும்படிக்குத் தகுதியாக வந்து தோற்ற வேண்டும்.
நான் அடிமை செய்து வாழும்படிக்குத் தகுதியாக என் முன்னே நடந்து வரவேணும் என்பார் ‘வந்தருளே’ என்கிறார்.
என் கண் வட்டத்திலே உலாவி நின்று நீ அடிமை கொள்ள வேண்டும் என்றபடி.
அடிமை செய்கையாவது,
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி” என்னுமாறு போலே, அந்த நடை அழகுக்கு மங்களாசாசனம் செய்தல்.
தோற்ற வேண்டும் படி சொல்லுமோ –
வந்தருளி -நடக்கும் பொழுது -மங்களா சாசனம் செய்வதே கைங்கர்யம் -வாசிகம்
நடந்து ஓர் இடத்தில் நின்றால் இளைப்பாற சிசிரோபசாரம் பண்ண வேண்டும் –

——————————————————————-

வந்தருளி என் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழுலகும் உண்டாய்!
செந் தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே.–5-7-7-

சகல சத்தா ஹேதுவான நீ -என்னை விச்லேஷித்திப்பித்து சத்தை அழியாமல் –
மாயா சிரஸ்-கண்டு மயங்காமல் -நோக்கி அருள வேணும்
வந்தருளி என் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
பரமபதம் ஷீராப்தி -அங்கே இருந்து இங்கே வந்து -விமுகனாய் தாழ்ந்த -என் நெஞ்சை வாசஸ் ஸ்தானம்
பரமபத வாசிகள் சத்தையை அபிவிருத்தம் செய்பவன் -கொழுந்தே -அவர்கள் சத்தையே உன்னாலே –
முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழுலகும் உண்டாய்!-உலகுக்கு சத்தா ஹேது அத்விதீயன் -ஆதி காரணம் பிரதமபாவி –
பிரளய ஆர்னவத்தில் அழுந்தாதபடி சத்தையை நோக்கி திரு வயிற்றில் காத்து அருளி
செந் தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்-அநந்ய பிரயோஜனர் -கைங்கர்ய ரூபம் தொழில் -ஆர்ஜவம் –
வ்ருத்தி விசேஷம் -பகவத் ஆராதனம் -வேள்வி -இதுவே பிராப்தம்
தஸ்மான் தபஸ் சிறந்தது ந்யாசம் தானே -நிவ்ருத்தி மார்க்கம் -விடாமல் நடத்தி அருளும்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே-முடிவு இல்லா குண ப்ரதை- அகற்ற நினைத்தாலும் முடியாதே –
அனன்யார்ஹ ஸ்வரூபன் நியத பிரகாரம் -அப்ருதக் சித்தம் அன்றோ -புத்தியாலே அகற்றாதே –

பரமபதத்தில் நின்றும் வந்து என் நெஞ்சினை இடமாகக் கொண்ட வானவர் கொழுந்தே! இந்த உலகங்கட்கு ஒப்பற்ற பழைமையான
தாயும் தந்தையுமானவனே! எல்லா உலகங்களையும் பிரளயகாலத்தில் உண்டவனே! பயன் கருதாத கைங்கர்யத்தை யுடைய
ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய வேத ஒலியும் யாகங்களும் நீங்காமல் இருக்கிற சிரீவரமங்கல நகரிலே எழுந்தருளி யிருக்கின்ற எல்லை இல்லாத
புகழையுடையவனே! உனக்கு அடிமைப்பட்டுள்ள அடியேனை நீக்காமல் இருக்க வேண்டும்.
வந்தருளி: ஒருசொல், வந்தருளி கொண்ட கொழுந்தே! என்க. அகற்றேல்: எதிர்மறை.

“அடியேன் தொழ வந்தருளே” என்கிற சொல்லோடே வரக் காணாமையாலே ‘உபேக்ஷித்தானோ’ என்று அஞ்சி,
என்னை அகற்றாது ஒழிய வேண்டும் என்கிறார்.

‘வந்தருளி என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே’ என்பதற்கு, –சுரத்தாலே அறியும் பொருள் உண்டே –
“பட்டர், ஸ்ரீ புஷ்ப யாகம் அணித்தானவாறே, நஞ்சீயரைப் பலகாலும் இயல் கேட்டருளுவர்;
ஒரு கோடையிலே திருவீதியிலே நீரை விட்டு எழுந்தருளியிருந்து இப் பாட்டை இயல் சொல்லும் என்று சீயரை அருளிச் செய்து,
தாம் இதனை அநுசந்தித்திருந்து பின்பு தாமும் இப்பாசுரத்தை இயல் சொல்லி, –
சந்நிதியில் உபன்யாச உபயுக்தமாக திருப் பாசுரம் கேட்டு அருளுவாராம் –
இயமம் நியமம் முதலிய கிரமத்தாலே தியானம் செய்யத்தக்க சர்வேச்வரனை மனனம் செய்து புறம்புள்ள பராக்கை அறுத்து
அநுசந்திக்கப் புக்காலும் சுக்கான் பரல் போன்று இருக்கக்கூடிய நெஞ்சுகளைப் பதம் செய்யும்படி, தார்மிகராயிருப்பார்
இவை சில ஈரச் சொற்களைப் பொகட்டுப் போவதே!’ என்று அருளிச் செய்தார்;
நஞ்சீயர், இவ் வார்த்தையை உருத்தோறும் அருளிச் செய்வர்” என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்.

1-யம -இதரங்களில் ஓடும் இந்த்ரியங்களை மடை மாற்றுகை
ப்ரஹ்மசர்ய -அஹிம்சை -அஸ்தேய திருடாமல் -அ பரிக்ரக -வாங்கக் கூடாத வற்றை வாங்கக் கூடாதே -சத்யம் –
காமுகன் இல்லாமல் சாஸ்திரம் சொன்னபடியே -சுசி ஸ்தானம் -பண்ணிய ஸூபார்யை பக்கல் -நிரதனாகை
த்ரிவித கரணங்கள் தீமை செய்யாமல் அஹிம்சை -திருடாமை ஆத்ம அபஹாரம் பண்ணாமை -ராஜ மகேந்தரன் –
அ பரிக்ரக-சம்சாரத்தில் ஓன்று வேணும் என்று கொளாமை
உண்மை பிரியம் ஹிதம் -பேச வேண்டும்
2-நியம -இந்த்ரியங்கள் வசப்படுத்த -ஸ்வாத்யாயம் திரு நாம -வேதம் –சௌசம் பாஹ்ய சுசி ஆந்தர சுசி -பிரயோஜனம் கோலாமை
சந்தோஷம் இருப்பது வைத்து திருப்தி- – -தபஸ் உபவாசம் ப்ரஹ்ம பிராவண்யம்
3-ஆசன -மனஸ் இதர விஷயங்களில் ஓடாமல் -யோகம் அனுகுணமாக அமர்ந்து -பத்மாசானம் கூர்மம் –
பல -சக்ராசனம் -வந்ததோர் ஆசனம் சலியாமல் அமருகை-
4-பிரணாயாம -வாயு விசேஷம் -உஸ்வாச நிஸ்வாச -ரேசக -பூரகாதிகள் -கும்பகம் உள்ளே நிறுத்தி
5-பிரத்யாகாரம் -விஷய தோஷங்கள் காட்டி -அபஹரித்து உள்ளே திருப்புதல் -ப்ரஹ்மம் இடம் –
6-தாரணை -வைராக்கியம் -விஷய தோஷம் அடியாக -சுபாஸ்ரயம் பழகி வைலஷண்யம் அறிந்து தரித்து இருக்கை
7-த்யானம் -வித்யா விசேஷம் -நிரந்தரம் -இடையூறு இல்லாமல் யோகாந்தராயம் வராமல் –
குணம் உள்ள ப்ரஹ்மம் -பல-32- வித்யைகள்-குண உபசம்ஹாரம்
8-சமாதி தியான அப்யாச வசத்தால் -இந்த விஷயமே தோன்றும் படி சித்தம் தெளிந்து -உத்தான அவஸ்தையிலும்
யோகத்தின் பொழுது பெற்ற சாஷாத்காரம் நிலை நிற்கும் படி –

வந்தருளி –
நான் விரும்பாதிருக்க வந்தருளி. வெவ்வேறு தீவுகளிலுள்ள வஸ்துக்கள் இரண்டே அன்றோ சேர்கின்றன.
பரமபத நிலையனானவனும், சம்சாரத்தை இருப்பிடமாகவுடையவரும். இந்த இருவருமே அன்றோ கூடுகின்றார்கள்.
வட துருவம் தென் துருவம் சேர்ந்தால் போலே –
உத்தேஸ்ய வஸ்து இருந்த இடத்து ஏற இவன் தான் போக வேண்டியவனாக இருக்க,
அது பெறாவிட்டால் இருவரும் பாதிப்பாதி வழிதான் வரப்பெற்றார்களோ.
‘வந்தருளி’ என்று நெஞ்சுளுக்கிச் சொல்லுகிறாரன்றோ. -நெஞ்சு உருகி தாழ்ந்த குரலில் —
ஸ்ரீ ஆப்பான் திருவழுந்தூர் அரையர் கையிலே தாளத்தை வாங்கி ‘வந்தருளி, வந்தருளி’ என்று மேல் போகமாட்டாதே பாடுவராம்.

என் நெஞ்சு-
அவனை ஒழிந்த வேறு விஷயங்களை உகந்து போந்த நெஞ்சு அன்றோ.

இடம் கொண்ட –
வந்தாலும் ‘நெஞ்சுக்கு விஷயம் வேறு உண்டு’ என்பரே.
“அஹம் ஏவ ஆஹரிஷ்யாமி ஸ்வயம் லோகாந் மஹாமுநே ஆவாஸம்து அஹம் இச்சாமி ப்ரதிஷ்டம் இஹ காநநே”
என்பது, ஸ்ரீராமா. ஆரண். 5. 32, 33. சரபங்க முனிவரைப் பார்த்து ஸ்ரீராமபிரான் கூறியது.
“தேவரீரால் காண்பிக்கப்பட்ட வாசத்தையே நான் விரும்புகிறேன்” என்னா நின்றான்.
ஆக ‘நெஞ்சிடம் கொண்ட’ என்றதனால்
திரவிய குணங்கள் போலே சேர்ந்தான் என்பதனைத் தெரிவித்தபடி.
திரவியமாக இருக்கச் செய்தேயும் குணங்களைப் போன்று சில பொருள்கள் சேரக் காணா நின்றோமே யன்றோ.

வியக்தி ஜாதி -பசுமாடு –குணம் த்ரவ்யம் வெளுப்பு வேஷ்டி -வந்து அருளி -இரண்டு த்ரவ்யங்களா -த்ரவ்யமும் குணமும் போலேயோ –
த்ரவ்யமும் த்ரவ்யமும் சேர்ந்தால் இடை வெளி இருக்குமே -த்ரவ்ய குணங்கள் சேர்ந்தால் போலே சேர்ந்தார்கள் –த்ரவ்யமாக இருந்தாலும் –
ஆத்மா சரீரம் இரண்டும் த்ரவ்யம் ஞானமும் த்ரவ்யம் -போக்கு வரத்து உண்டே –
இருந்தாலும் கூடி இருக்கிறதே -கெட்டியாக -ஜீவாத்மாவும் பரமாத்மாவும் -குண வத் அப்ருதக் சித்தம் -விட்டுப் பிரியாமல் சார்ந்தே இருக்கும் –

என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே-
ஸ்ரீ வைகுண்டம் கலவிருக்கையாகவுடையவன் என் நெஞ்சு பெறுகைக்குக் காலத்தை எதிர் பார்த்துக் கொண்டிருப்பவன் ஆவதே! என்றது,
நித்திய சூரிகளுக்குத் தலையானவன் அன்றோ நித்திய சம்சாரிகளுக்குத் தலையான என் நெஞ்சு பெறுகைக்குப் பிரார்த்திக்கிறான் என்றபடி.

உலகுக்கு ஓர் முந்தைத் தாய் தந்தையே –
உலகத்துக்கு அத்விதீயனாய்ப் பழையனான தாயும் தமப்பனுமானவன்.
அங்கு இரண்டு தலையும் கூடி வருமே அன்றோ, இங்கு வெறும் ஒரு தலையேயாயிருக்கிறபடியைத் தெரிவித்தவாறு.
சேஷ சேஷி சம்பந்த ஞானம் இருவருக்கும் உண்டே -வானவர்களுக்கு –அவன் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக அன்றோ வந்து அருளுகிறான்
“உயிர்களுக்கு எவன் அழியாத தந்தையோ” என்கிறபடியே, நாலு நாட்கள் மணற் கொட்டகம் இட்டு விளையாடுமாறு போலே
அழியும் தாயும் தமப்பனும் அன்றோ அவர்கள், ஒருநாளும் அழியாத மாதா பிதாக்கள் அன்றோ இவர்கள்.
“சர்வேஷாம் ஏவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ: கச்சத்வமேநம் ஸரணம் ஸரண்யம் புருஷர்ஷபா:”
“மனிதர்களில் சிறந்தவர்களே! உலகங்களில் இருக்கிற எல்லாப் பிராணிகளுக்கும் திருமாலானாவர்
தாயும் தந்தையுமாக இருக்கிறார்; காப்பாற்றுகின்றவரான இவரை உபாயமாக அடைமின்” என்றார் மார்க்கண்டேயரும் பாண்டவர்களைப் பார்த்து
“கச்சத்வம் – ஒருதலையாகாமே நீங்களும் அவனைப் பற்றப் பாருங்கோள்.”-நமஸ் கரித்தார்கள் ஜனார்த்தனம் –
இத்தால் சரணாகதி நமஸ்காரம் என்றதாயிற்று என்பர் -ஆபி முக்கியம் பண்ணி போகச் சொன்னான் -இங்கே அவனாக வந்து அருளினான் –

முழு ஏழு உலகம் உண்டாய் –
மாதாவானவள் பத்து மாதங்கள் வயிற்றிலே வைத்துத் தரிப்பது,
‘பிறந்து வளர்ந்தால் பின்னை நம்மைப் பாதுகாப்பவனாவான்’ என்னும் பிரயோஜனத்தைப் பற்றவே அன்றோ;
இவன் அங்ஙன் அன்றிக்கே, ‘இவைதாம் நோவு படாதொழியப் பெற்றோமே’ என்று இதனைத் தன் பேறாக நினைத்திருப்பான்.

செந்தொழிலவர் –
வேறு பிரயோஜனத்தைக் கருதாத நேர்மையையுடைய தொழில் விசேடத்தையுடையவர்களுடைய. என்றது,
தேஹி மே ததாமி தே – “எனக்கு ஒன்று கொடு, உனக்கு ஒன்று தருகிறேன்” என்னாதவர்கள் என்றபடி.
அன்றிக்கே,
அவன் ரக்ஷணம் செய்வதைப் போலே இவர்களும் கைங்கரியம் செய்கின்றவர்கள் ஆதலின் ‘செந்தொழிலவர்’ என்கிறார் என்னுதல்.
இங்ஙன் அன்றாகில், வியர்த்தம் ஆமே.
ப்ரயோஜனாந்தரமும் இல்லாமல் -கைங்கர்யத்தை சாதனமாகவும் கொள்ளாமல் -கைங்கரியம் செய்கின்றவர்கள்

வேத வேள்வி அறா –
வேத ஒலியும் வைதிக கார்யங்களின் கோலாகலமும் மாறாதே செல்லுகை.
பிராப்பிய விரோதியாதல் பிராபக விரோதியாதல் இல்லாமையாலே, நாய்ச்சிமாருடைய கலவியைப் போன்று நித்தியமாய்ச் செல்லா நிற்கும்.
காதலியை அணைக்கிறதற்கு வேறு ஒரு பலம் உண்டாகில் அன்றோ இதற்கு வேறு ஒரு பலம் உண்டாய் அவ்வளவிலே தலைக் கட்டுவது.

சிரீவர மங்கலநகர் அந்தம் இல் புகழாய் –
ஸ்ரீ வைகுண்டத்திலே இருந்தானாகில் புகழுக்கு முடிவு உண்டு போலே காணும்

அடியேனை அகற்றேலே –
ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்குச் சென்று நீ படைத்த புகழை,
‘வேறு ஒரு கதியும் இல்லாதவனைக் கை விட்டான்’ என்ற பழி ஆக்கித் தலைக் கட்டுவித்துக் கொள்ளப் பாராதே கொள்ளாய்.
’அகற்றேல்’ என்பது, அரைக்கணம் தாழ்க்கப் பொறுக்க மாட்டாமை சொல்லுகிற வார்த்தை.
விளம்பம் பொறாதார் சொல்லப் பெறுவர் போலே காணும்.
இறுக்கி அணைக்க கை நெகிழ அத்தையும் பொறுக்க மாட்டாமல் சொல்லும் வார்த்தை அன்றோ –
இதனுடைய இரக்ஷணத்தில் உன்னை ஒழிய வேறு ஒரு சம்பந்தம் உண்டாய்த் தான் அகற்றுகிறாயோ என்பார் ‘அடியேனை’ என்கிறார்.

————————————————————————————-

அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணி மாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8-

அகலுகைக்கு ஹேதுவான இந்த்ரியங்கள் -சம்சாரத்தில் -வசப்படுத்தி இருத்தி -அடியேனை அகற்றேலே -இத்தையே முன்பு சொல்லி –
சொன்னதையே தானே செய்வேன் -இந்த கார்யம் செய்து இருந்தால் நீர் சொல்லி இருக்க வேண்டுமே -கதை போலே
உனக்கு விதேயமாக இருக்க -இங்கு வைத்து அகற்றப் பார்க்கிறாயோ
அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்-உன் பக்கல் விமுகரை அகற்ற நீ உண்டாக்கி வைத்த –
ஓன்று உடன் ஓன்று சேரா மாய –
குதிரை -இந்த்ரியங்கள் -கடிவாளம் மனஸ்-இத்தையும் இழுத்து போகும் -லோலாயமானம் -இந்த்ரிய ஹயைதி-
கெடுக்க மட்டும் ஒத்துப் போகும் -வலிய -ஆனால் ஒன்றுக்கு ஓன்று வேற தேடும் – மாய –
அஞ்சி இருக்கும் என்னையும் -விதேயமான என்னையும் -எலி பொறி -தூண்டில் மீன் -போலே -மயர்வற மதி நலம் அருளி இத்தை அறிந்தேன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்-உம்மைத் தொகை -என்னையும் -அறிவு பிறந்து அஞ்சி இருக்கும் என்னையும்
கால் வாங்கி கரை ஏற அரியதான -விஷயங்கள் சேற்றிலே தள்ளுது என்று அறிந்தேன் அஞ்சினேன்
பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்-விளங்கும் ஒளி-புகர் பாட பேதம் -மாடங்கள் ஓங்கி -நிர்வாகன்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே-நீ சங்கல்பம் வைக்கா விடில் அடைய அரிய-என் சுவாமி –
கோபிமார்க்கு-உன்னைக் கொடுக்க விரோதி பகாசுரன் வாயைப் பிளந்த சக்தன்
விரோதியைப் போக்காது ஒழிந்தது -அகற்ற நினைத்து -அழுத்த நினைப்போ –
கிணற்றில் விழுந்த குழந்தை தாய் வாங்கா விடில் -குற்றம் போலே –

உன் பக்கல் அன்பு இல்லாதாரை அகற்றுவதற்காக உன்னாலே உண்டாக்கி வைக்கப்பட்ட வஞ்சனைபொருந்திய கொடிய ஐந்து இந்திரியங்களான
அவற்றை உள்ளவாறே அறிந்தேன்; அவற்றின் தன்மையை அறிந்திருக்கிற என்னையும் நீக்கி, கரை ஏற அரிதான விஷயங்களாகிற சேற்றிலே
தள்ளிவிடுவாயோ என்று அஞ்சுகிறேன்; மிக்க ஒளியையுடைய மாணிக்கங்கள் பதித்த உயர்ந்த மாடங்களையுடைய ஸ்ரீவரமங்கை என்னும்
திவ்விய தேசத்தில் நித்திய வாசம் செய்கின்றவனே! என்றும் பேசுதற்கு அரிய எந்தையே! பகாசுரனுடைய வாயினைப் பிளந்தவனே!
வாணனே! எந்தாய்! பிளந்தானே! என்னையும் அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் என்க. வாழ்நன் என்பது, வாணன் என மரீஇயது.
கண்டாய்: முன்னிலை அசைச்சொல். பகர் – சொல்லப்படுகின்ற எனலுமாம். ‘பகற்கதிர்’ என்ற பாடம் சிறக்கும்.
புகற்கு அரிய – அன்பில்லாதார் அடைவதற்கு அரிய என்னலுமாம்.

உம்மை அகற்றுவதற்குக் காரணம் என்? இங்கு வந்து அண்மையினேனாய் நின்றது உமக்காக அன்றோ? என்ன,
அடிமைக்குப் பகையாக இருக்கின்ற ஐம்புல இன்பங்கள் நடையாடுகிற சம்சாரத்திலே வைத்த போதே
என்னை அகற்றினாய் அல்லையோ என்கிறார்.
(சன்னிஹிதராய் -பஹு வசனம்-ஆத்மனி பஹு வசனம் -நீர் சன்னிஹிதராக ஆவதற்காக நான் வந்தது என்றுமாம் )

அகற்ற நீ வைத்த –
சர்வசக்தியான நீ, உன்னை உகவாதார் அகன்று போம்படிக்குத் தகுதியாக,
“தைவீஹி ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே” – ஸ்ரீகீதை, 7:14.
“என்னுடைய மாயை தாண்ட முடியாதது” என்று கொண்டு வைத்த.
ஸ்லோகம் -பிரகிருதி -இந்திரியங்கள் பிரகிருதி கார்யம் தானே -அதனால் சொல்லிற்று

மாயம் வல் ஐம்புலன்களாம் அவை –
ஆச்சரியமான செயல்களைச் செய்யக் கூடியனவாய்த் தப்ப ஒண்ணாதபடியாய் இருக்கிற ஐந்து இந்திரியங்களாகிறவை,
உன்னை விரும்பாதார் அகன்று போம்படிக்குத் தகுதியாகச் சர்வேச்வரனான நீ வைத்தவை.
நீர் எங்ஙனே இது அறிந்தபடி? என்ன,

நன்கு அறிந்தனன் –
மயர் வற மதி நலம் பெறுகையாலே நான் அழகிதாக அறிந்தனன்.
உகவாதார் அகன்று போகைக்கு வைத்தோமாகில், அதனால் உமக்கு என்? என்ன,

அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய் –
உன்னால் அல்லது செல்லாதபடியாயிருக்கிற என்னையும் உன் பக்கல் நின்றும் நீ பிரித்து,
கால் வாங்க ஒண்ணாதபடியான ஐம்புல இன்பங்களிலே தள்ளப் புகா நின்றாய்.
இந்த உடம்போடு எனக்கு ஒரு சம்பந்தம் அற்றிருக்க, நீ பொதுவான இதிலே வைக்கிறது கைவிடப் பார்த்தன்றோ?
நன்று; அவன் பக்கல் காரியம் கொள்ள நினைக்கிறவர், அருளில்லாதவர்களைச் சொல்லுமாறு போன்று கொடிதாகச் சொல்லுவான் என்? என்ன,
‘நமக்கே பழியாய் வந்து விளையப் புகா நின்றது’ என்று நீர்மை யுடையார் காரியம் செய்து தலைக் கட்டுவர்கள் என்று நினைத்துச் சொல்லுகிறார்.

பகர்க் கதிர் மணி மாடம் நீடு சிரீவரமங்கை வாணனே –
மிக்க ஒளியை யுடைத்தாய், மணி மயமான மாடங்களின் ஓக்கத்தை யுடைத்தான சிரீவரமங்கைக்குப் பிரதானனானவனே!
பகர் என்பதும், கதிர் என்பதும் ஒருபொருட்சொற்கள்; மிக்க ஒளி என்பது பொருளாம்.
‘பகற்கதிர்’ என்று பாடமான போது,
சூரியலோகம் வரையிலும் செல்ல உயர்ந்து ஒளியையுடைய மணி மாடங்கள் என்று பொருள் கூறுக. பகல் – சூரியன்.

என்றும் புகற்கு அரிய எந்தாய் – நீ,
கிட்டாமல் செய்யுமதுவும் அழியச்செய்வதும் உகவாதாரை அன்றோ.
உனக்கே உரியனான என் விஷயத்திலும் அதனைச் செய்யவோ என்பார் ‘எந்தாய்’ என்கிறார்.

புள்ளின் வாய் பிளந்தானே –
உமக்குக் கிட்டுதற்குத் தட்டு என்? என்ன, பகாசுரனை அழித்தாற்போலே,
என் சரீர சம்பந்தத்தைப் போக்கியருளாய் நான் வந்து கிட்டும்படி என்கிறார்.

——————————————————————————-

புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என்
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான் மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே.–5-7-9-

மிளகாய் சேர்க்காமல் மிளகு சேர்த்தே -நித்யமாக எண்ணெய் காப்பு என்பதால் –
ஆஸ்ரித விரோதி நிரசனத்தாலே -அத்யுஜ்ஜ்வல ஸ்வ பாவனாய்- கிருபை பண்ணி அடியேன் விரோதிகளை
பிரகிருதி சம்பந்தம் அறுத்து அருள வேண்டும்
புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்!-விரோதிகளை போக்கி -இரட்டைகளை -மருது-ஸூ சகம்
சுகம் துக்கம் -விருப்பு வெறுப்பு -குபேர மக்கள் சாப வசத்தால் நிற்க – நிர்த்த்வந்தம்
எருதேழ் அடர்த்த -அவஸ்தா சப்தகங்கள் -ஸூசகம் -இது -கர்ப்பம் -தொடங்கி மரணம் -சுக துக்கம் -கொம்புகள் –
ஒவ் ஒரு அவஸ்தையிலும் -14 -மர்த்திப்பவன் -அடக்கி
என்- கள்ள மாயவனே!-அரிய முடியாத கூட ஸ்வ பாவன் -ஸூசகங்கள் பல உண்டே -பிரயத்தனத்தால் அரிய முடியாதே –
எனக்கு பிரகாசிப்பித்த மாயவன்
கருமாணிக்கச் சுடரே!-ஆஸ்ரித விரோதிகளைப் போக்கி பெற்ற தேஜஸ்
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை-அநந்ய -ரஷ்யமாம் படி -தெளிவு உடையார் -அவனே ரஷகன் –
தெளிவுக்கு ஊற்று திவ்ய தேச வாசம் -பகவத் ஸ்வரூபாதி-பிரதிபந்தங்கள் உடைய –
வேதங்கள் இவர்கள் இட்ட வழக்கு -வேத தாத்பர்யம் அறிந்து
திரு -வேதனத்தின் உண்மையான பாகம் -வேதாந்த தாத்பர்ய யாதாம்ய பாகம்
அவன் திருவடிகளே உபாயம் -அவன் திருவடிகளுக்கே கைங்கர்யம் -நாம் அநந்ய பிரயோஜனர் -ஸ்ரீ சம்பத் –
நெருங்கி வர்த்திக்கும் -குளிர்ந்த -சாம்சாரிக தாப பிரசங்கம் இல்லாத படி
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே-அனுபவிப்பைக்காக சந்நிஹிதன் ஆனாய்
அநந்ய கதி -எனக்கு உன் திருவடிகளில் கைங்கர்யம் கொடுத்து அருள வேணும்

பகாசுரனுடைய வாயினைப் பிளந்தவனே! மருத மரங்களின் நடுவே போனவனே! இடபங்கள் ஏழனையும் கொன்ற என் கள்ள மாயவனே!
கரிய மாணிக்கத்தின் சுடரே! திருநான்மறைகளிலும் வல்லவர்களான தெளிந்த ஞானமுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் நிறைந்து வசிக்கின்ற
குளிர்ந்த ஸ்ரீவரமங்கை என்னும் திவ்விய தேசத்திற்குள் எழுந்தருளியிருக்கின்ற எந்தையே! எனக்கு உஜ்ஜிவிக்கும் வகையை அருள வேண்டும்.
வல்லார் : முற்றெச்சம். வல்லாராகிய தெள்ளியார் என்க. மலிதல் – மிகுதல். இருந்த: கால மயக்கம்.

“அருஞ்சேற்றில் வீழ்த்திகண்டாய்” என்று அஞ்சுகின்ற உமக்கு நான் செய்ய வேண்டுவது என்? என்ன,
சக்தனாய் அண்மையிலிருப்பவனாயிருக்கிற நீ என் விரோதியைப் போக்கி,
உன் திருவடிகளிலே கைங்கரியத்தைத் தந்தருள வேணும் என்கிறார்.

புள்ளின் வாய் பிளந்தாய் மருதிடை போயினாய் எருது ஏழ் அடர்த்த –
கலியர் சோறு இட்ட நாட்களை எண்ணுமாறு போன்று, பண்டு உபகரித்த படிகளைச் சொல்லுகிறார்.
பகாசுரனை அழித்தாய், இரட்டை மருதமரங்களைப் பொடிபடுத்தினாய், இடபங்கள் ஏழனையும் ஊட்டியாக நெரித்தாய்.

என் கள்ள மாயவனே –
ஒருவர்க்கும் தெரியாத ஆச்சரியமான செயல்களையுடையையாய், அவை எல்லாம் எனக்குத் தெரியும்படி செய்து,
என்னை அகப்படுத்திக் கொண்டவனே! -மற்றவர்க்கு கள்ளன் –மாயவன் -எனக்கு கள்ள மாயவன்

கரு மாணிக்கச் சுடரே –
நப்பின்னைப் பிராட்டியுடைய தடைகளைப் போக்கி, அவளுக்குக் கொடுத்த உடம்பின் வாசியை எனக்கும் அறிவித்தவனே!

தெள்ளியார் –
தங்கள் தங்களுக்கும் சில உண்டேயாகிலும், அவற்றைப் பொகட்டு அவன் கைபார்த்திருக்குமவர்கள்.
இவர்கள் ஞானத்துக்கு விநியோகம் இதுவே அன்றோ. என்றது,
“ராமஸ்ய வ்யவஸாயஜ்ஞா லக்ஷ்மணஸ்ய ச தீமத:
ந அத்யர்த்தம் க்ஷு ப்யதே தேவீ கங்கேவ ஜலதாகமே”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 4.
“இராமபிரானுடையவும் அறிவிற் சிறந்தவனான இலக்ஷ்மணனுடையவும் அபிப்பிராயத்தை அறிந்த சீதை கலங்கவில்லை” என்கிறபடியே,
தெய்வ நாயகனுக்கும் தெளிவு -பெருமாள் தனியாக ஸ்ரீ தண்ட காரண்யம் போக எதிர்த்து திருத்தின
இளைய பெருமாள் சீதா பிராட்டி போலே என்றவாறு
அசோக வனத்திலே தனியிருப்பில் பிராட்டியின் தெளிவினைப் போன்ற தெளிவினையுடையவர்கள் என்றபடி.
நீ வழி தப்பினாலும் ஆஸ்ரிதரை கை விடாமல் உன்னைத் திருத்தும் தெள்ளியார் –
அன்றிக்கே,
“உவாச ச மஹாபிராஜ்ஞ: ஸ்வரேண மஹதா மஹாந்
ஸுக்ரீவம் தாந் ச ஸம்ப்ரேக்ஷ்ய கஸ்தஏவ விபீஷண:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 17 : 9.
“சுக்கிரீவ மஹாராஜரையும் மற்றைய முதலிகளையும் அழகிதாகப் பார்த்துப் பெரிய சப்தத்தோடு சொன்னான்”என்கிறபடியே’
நலியா நின்றாலும் தாய் முகமே பார்த்துக் கிடக்கும் குழந்தையைப் போலே,
“வத்யதாம் – கொல்லுதற்குரியவன்” என்கிற மஹாராஜரையும், அவரிலும் கொடிய முதலிகளையும் அழகிதாகப் பார்த்துக் கொண்டிருந்த
ஸ்ரீ விபீஷணாழ்வான் தெளிவு போன்ற தெளிவினை யுடையவர்கள் என்னுதல்.
தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரண் இல்லை விரைகுழுவும் மலர்ப்பொழில் சூழ் விற்றுவக் கோட்டம்மானே
அரிசினத்தால் ஈன்றதாய அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழுங்குழவி யதுவே போன் றிருந்தேனே.–பெருமாள் திருமொழி.
“குழவி அலைப்பினும் அன்னே யென் றோடும்”-என்பது, நான்மணிக்கடிகை.

திரு நான்மறைகள் வல்லார் –
நூறாயிரம் வரி எழுதியிருந்தாலும் அவற்றிற் போகாமல், தாத்பரியத்தைக் கிரகிக்குமவர்கள். என்றது,
ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர் ஏத்தும் திறமறிமின் ஏழைகாள் – ஓத்ததனை
வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர் சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.– இரண்டாம் திருவந். 39.-
என்றிருக்குமவர்கள் என்றபடி.

மலி தண் சிரீவர மங்கையுள் இருந்த எந்தாய் –
அவர்கள் நெருங்கி வசிக்கின்ற சிரமஹரமான சிரீவரமங்கையிலே அவர்களைப் போன்று இருக்கின்ற என் நாதனே!

எனக்கு உய்யுமாறு அருளாய் அறச்சென்றற்றது கண்டாய்,–
ஏஹி பஸ்யாமி சரீராணி போலே -விரஹ தாபம் தின்ற இவர் திருமேனியைக் காட்டுகிறார்
உன் திருவடிகளில் கைங்கர்யத்தைத் தந்தருள வேணும். -கைங்கரியம் என்றும், உய்கை என்றும் இரண்டு இல்லை இவர்க்கு.
விரைந்திலராகில் அவன் வைலக்ஷண்யத்தில் ஞானம் இல்லையாகக் கடவது,
இங்கே கால் பாவிற்றாகில் சம்சாரத்தின் தண்மையில் ஞானம் இல்லையாகக் கடவது.

———————————————————————————–

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-

ருசி காரயமாக அடையத் துடித்தாள் -பாதமே சரண் ஆக்கும் ஔதார்யம் -இங்கே கொழுந்து விடுமே
சரணங்களே தானே நம்மை பெற உபாயம் -என்று காட்டி அருளினான் -பிரகாசிப்பித்த இந்த உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லையே
நான்கு நிர்வாகங்கள் -மூன்று இதிலும் மேலே ஒன்றும் -உபாயம் க்ருஹம் திருவடி ரஷணம்-நான்கு அர்த்தங்கள்
ஆராவமுது -அநந்ய கதித்வம் -அவதாரிகையில் -ரஷித்தா அர்த்தம் அங்கே வைத்தார் –
ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் -பிராப்திக்கு வழி-புகலிடமான உபாயமாக -தந்து விட்டாய்
உனக்கோர் கைம்மாறு நான் ஒன்றிலேன்-பிரத்யுபகாரமாவது -அகிஞ்சனன்-நான் -ஒன்றும் இன்றிக்கே இருந்தேன்
என தாவியும் உனதே-ஆத்மாவும் பண்டே உன்னதே இருந்தது -திருமாலே நான் உனக்கு பழ வடியேன் -அடிமைத் தனம் -அநாதி
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
சேற்றில் இடம் கொண்ட கரும்பும் செந்நெலும் -ஸ்ரமஹரமான திவ்ய தேசம்
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!-பரிமளம் மிக்கு -திரு அபிஷேகம் -தரித்து -நித்ய சூரிகள் நிர்வாகன்
சேஷி யாகையாலும் -போக்யதை -யாகையாலும் -விபூதி பூர்த்தியாலும் -பிரத்யுபகாரத்துக்கு யோக்யதை இல்லையே
கைங்கர்யம் தானே செய்ய முடியும் -ஸ்வாமிக்கு சேஷ பூதர்-

எனக்கு உபாயம் தருமிடத்தில் உனது திருவடிகளையே உபாயமாகத் தந்தாய்; அவ்வாறு தந்த உனக்குக் கொடுப்பதற்குரிய பிரதியுபகாரம்
நான் ஒன்றனையுடையேனல்லேன்; என்னுடைய உயிரும் உன்னுடையதே; சேற்றையுடைத்தான கரும்பும் பெரிய செந்நெற்பயிர்களும்
மிகுந்திருக்கின்ற குளிர்ந்த ஸ்ரீ வரமங்கை என்னும் திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற வாசனை வீசுகின்ற பூக்கள் பொருந்திய
குளிர்ந்த திருத்துழாயைத் தரித்த திருமுடியையுடையவனே! தெய்வங்கட்குத் தலைவனே!
துழாய் முடியாய்! தெய்வநாயகனே! எனக்கு ஆறு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக்குக் கைம்மாறு ஒன்று இலேன்;
எனது ஆவியும் உனதே என்க. ஆறு – வழி. சரண் – உபாயம். தந்தொழிந்தாய் – ஒருசொல்.

“அருளாய் உய்யுமாறு எனக்கு” என்றார், அப்போதே வந்து அருளக் கண்டிலர்; ஏதேனும் நிலையிலும்
‘உன் திருவடிகளே சரணம்” என்றிருக்கும்படி என்னைச் செய்தருளின மகோபகாரத்துக்குப் பிரதி உபகாரம் இல்லை என்கிறார்.
மகா விசுவாசம் அன்றோ ஆழ்வாருக்கு -எத்தனை கூப்பாடு போட்டாலும் -இதே நிலைமை தானே இவருக்கு –
பண்ணினவற்றுக்கு குறை இல்லை -உண்டாய் உண்டு ஒழியாய் என்று இருந்தாலும் அதற்கும் உன் திருவடிகளே உபாயம் –

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் –
1–உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாயே என்று பிள்ளான் பணிப்பர்.
ஆறு – வழி. வழி – உபாயம்.
எவ்வாறு நடந்தனை? எம்மிராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே?” என்பது, பெருமாள் திருமொழி, 9 : 2.
“இப் பொய்கைக்கு”என்பது, நாய்ச்சியார் திருமொழி, 3 : 2.– என்னக் கடவதன்றோ.
சரண் – க்ருஹமாய் அத்தால் உபேயம்.
சரண் –வீடு -புகலிடம் -பிராப்யம்-ரக்ஷிதா அர்த்தங்கள்
ஆறு உபாயம் -நின் பாதங்களே உபாய உபேயம் என்றவாறு –
ஏவகாரம்-சரண் ஆகிற நின் பாதமே எனக்கு ஆறு –
கரு முகைப் பூ மாலை சும்மாடு போலே -புருஷார்த்தமாக அனுபவிப்பதை புகல் இல்லாமல் உபாயம் ஆக்குகிறோம்

2-அன்றிக்கே. “இவை இரண்டாலும் உபாயத்தையே சொல்லுகிறது’ என்று பட்டர் அருளிச் செய்வர்.
ஆறு – உபாயம். -நெடுமாற்கு அடிமை -ஒழிவில் காலம் எல்லாம் தானே உபேயம் –
“உபாயே க்ருஹ ரக்ஷித்ரோ : ஸப்த: ஸரணம் இதி அயம் வர்த்ததே ஸாம்ப்ரதம் ச ஏஷ: உபாயார்த்தைகவாசக:” என்பது, பாஞ்சராத்திரம்.
“சரணம் என்கிற இந்தச் சொல்லானது உபாயம், வீடு, காப்பவன் என்ற இம் மூன்று பொருள்களைக் காட்டும்;
இப்போது இந்தச் சரணம் என்ற சொல் உபாயத்தையே சொல்லாநின்றது” என்கையாலே ‘சரண்’ என்பதும் உபாயம்.
ஆக, எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாய் என்றபடி.
பட்டர் நிர்வாஹத்துக்கு “எனக்கு ஆறு தருமிடத்தில், நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்று
சொற்களைக் கூட்டிக் கோடல் தகும். எனக்கு – வேறு கைம்முதல் இல்லாத எனக்கு.
வேறு உபாயங்களை அநுஷ்டிக்கிறவர்களைக் காட்டிலும் தமக்கு உண்டான வேறுபாட்டினைச் சொல்லுகிறார் ‘எனக்கு’ என்ற சொல்லால்.
“நோற்ற நோன்பிலேன்”என்று தொடங்கி, வேறு உபாயம் இன்மையை முன்னிட்டுக் கொண்டு
உபாயத்தை அறுதியிடுகிற திருவாய்மொழி ஆகையாலே அதனையே நிகமிக்கிறது.
ஆறு எனக்கு -18-65 வரை சொன்னவற்றை நினைத்து -நின் பாதமே -உபாயாந்தரங்களை தள்ளி சரண் -உபாயமாக தந்து அருளினாய் –

‘நின் பாதமே’ என்ற ஏகாரத்தாலே–மாம் ஏகம் – ஏக பதத்தை நினைக்கிறது. -இத்தால் ஸ்வீகாரத்தில் உபாய புத்தியைத் தவிர்க்கிறது –
ஈஸ்வரனைப் பற்றின ஊற்றத்தாலே வேறு உபாயங்களை நெகிழுகை ஒழிய,
நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது வேறு விஷயங்களிலே ஈடுபாட்டிற்குக் காரணமாம்.
மருந்தினை யுண்டவன் ஒரு பாம்பின் வாயிலே கையினைக் கொடுத்தால் அது தீங்கினை விளையாதாம்,
மருந்து இல்லாதவன் அதனைச் செய்தால் அது மரணத்திற்குக் காரணமாம்.
இந்தத் தெளிவினைப் பிறப்பித்த உனக்கு ஒத்ததான பிரதி யுபகாரம் காணாத மாத்திரம் அன்றிக்கே,
கைம் முதல் இல்லாத நான் போலியாயிருப்பது ஒரு பிரதி யுபகாரமும் காண்கின்றிலேன்.
ஏன் வருந்துகிறீர், உம்முடைய ஆத்மாவைத் தந்தாலோ? என்ன,

எனது ஆவியும் உனதே –
அதுவும் செய்து நெஞ்சாறல் கெட்டிருப்பன் அன்றோ, நீ மயர்வற மதிநலம் அருளிற்றிலையாகில்.
ஆத்ம சமர்ப்பணம் செய்கையாவது, இராஜ மகேந்திரன் படியை எடுத்து ‘என்னது’ என்று கொண்டு
பெருமாளுக்குக் கொடுப்பாரைப் போன்று களவு வெளிப்படுதலே அன்றோ.

3-“சரண்-திருவடிகளை; ஆறாக எனக்குத் தந்தொழிந்தாய்; நின் பாதமே, எனது ஆவியும் உனதே” என்று கூட்டி
நின் பாதமே’ என்பதனைச் சபதமாக்கி நிர்வஹிப்பர் ஆப்பான் திருவழுந்தூர் அரையர்.
நின் பாதமே -உன் திருவடிகளில் ஆணை இட்டு சொல்கிறேன் -எனது ஆவியும் உனதே -என்கிறார் என்றபடி –

4-ரஷித்தா-அர்த்தம் அடுத்த பாட்டில் -மேலே அருளிச் செய்வார் –

ஹ்ருத் புண்டரீகத்தில்-எப்போதும் ஒளி விட்டு இருக்க சந்த்யா வந்தனம் –பண்ணாதவர் போலே
எம்பார் மனைவி உடன் கூடாமல் -இருள் தேடித் பார்த்தும் கிடைக்க வில்லை என்றார் –

சேறுகொள் கரும்பும் பெரும்செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை –
மிக்க சேற்றையுடைத்தான கரும்பும், அதற்கு நிழல் செய்யும்படியான செந்நெலும் மிக்குக் குளிர்ந்த சிரீவர மங்கை.

நாறு பூந் தண் துழாய் முடியாய்-
இதற்கெல்லாம் முதலியாக வைத்த வளையத்தை யுடையையாய்.

தெய்வ நாயகனே-
நித்திய சூரிகளுக்கு அதிபதியானவனே! தெய்வம்-தேவர்கள்.
எத்தனை யேனும் ஞானமுடையார்க்கும் நிர்வாஹகனாயிரா நின்றாய், ஆன பின்னர் நான் உனக்கு என்ன பிரதி யுபகாரம் பண்ணுவது.
நீயோ கனக்க உபகரித்துக் கொண்டு நின்றாய், நான் அறிவிலனாகப் பெற்றிலேன், இங்ஙனேயானாலும் நான்
சில செய்து தலைக் கட்டினேனாக ஒண்ணாதபடி நீ பரி பூர்ணனானாய். உபகாரம் கொள்ளாதார் உண்டு உடுத்துத் திரியா நின்றார்கள்,
அறிவு கேடரானவர்கள் ‘சில பிரதியுபகாரம் செய்தோம்’ என்றிரா நின்றார்கள்;
நீ நிறைவில்லாதவனாகில் இவை எல்லாம் சில செய்தனவாக நினைத்திருக்கலாமே அன்றோ,
நீயோ நிறைந்தவனாயிரா நின்றாய்; ஆன பின்னர், ஒன்று செய்து தலைக்கட்டப் போமோ.

———————————————————————————–

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–5-7-11-

நித்ய ஸூரிகளுக்கு நிரந்தர போக்யர் ஆவார்கள்
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்-நித்ய ஸூரிகளுக்கு நிர்வாகன் –
நிருபாதிக ஒழிக்க ஒழியாத சம்பந்தம் -வாத்சல்யன் –
ஸூ சேஷ வஸ்துவுக்கு அந்ய அபிமானம் வாராதபடி அளந்து கொண்டவன்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்-கொய்து கொள்ள -பூக்கள் சம்ருதம்
செய்க ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்-ஸ்ரமஹரமான -மேவிய -உடன் -அர்த்தத்துடன் உடன்பட்டு
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே-பரமபத வாசிகளுக்கு எப்பொழுதும் பரம போக்யம்
7 சீர் இரண்டு அடிகள் /-4 சீர் இரண்டு அடிகள்

நித்தியசூரிகளுக்குத் தலைவனும் நாராயணனும் திரி விக்கிரமனுமான சர்வேச்வரனுடைய திருவடிகளின் மேலே, பறித்துக் கொள்ளப்படுகின்ற
பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த ஆயிரம் திருப்பாசுரங்களுள், குளிர்ந்த
ஸ்ரீவரமங்கை என்னும் திவ்விய தேசத்தைப் பற்றிய இவை பத்துப் பாசுரங்களையும் அர்த்த ஞானத்தோடு பாட வல்லவர்கள்
நித்தியசூரிகளுக்கு எப்பொழுதும் தெவிட்டாத அமுதத்தைப் போன்றவராவர்.
ஆயிரத்துள் தண் சிரீவரமங்கை மேய இவை பத்தையும் உடன் பாட வல்லார் வானோர்க்கு வைகல் ஆராவமுது என்க. வைகல்-நாள்.

இத் திருவாய்மொழியைப் பொருள் அறிவோடு கற்குமவர்கள், நித்திய சூரிகளுக்கு என்றும் இனிய பொருளாவர் என்கிறார்.

தெய்வநாயகன் –
சர்வேச்வரன்.
நாரணன் –
தன்னுடைமை இழக்கவிடாத வத்சலன்.
திரிவிக்கிரமன் –
தன்னை இரந்தார்க்குத் தன்னை அழிய மாறியும் காரியத்தைச் செய்து தலைக்கட்டிக் கொடுக்குமவன்.

அடி இணைமிசை –
திருவடிகளிலே.

கொய் கொள் பூம்பொழில் –
நித்திய வசந்தமான சோலை என்றது, எப்போதும் கொய்கைக்குப் பக்குவமாயிருக்கை.

குருகூர்ச் சடகோபன் –
ஸ்ரீகீதையில் வேறுபாடு.
செய்த ஆயிரம் –
அர்த்தம் வேதார்த்தமே யாகிலும், வேதம் போலே தான் தோன்றியன்று ஆதலின் ‘செய்த ஆயிரம்’ என்கிறது.
பரத்துவம் போலே வேதம், அவதாரம் போலே இதிகாச புராணங்கள்,
அர்ச்சாவதாரம் போலே திருவாய்மொழி. -செய்த ஆயிரம் அன்றோ.
அன்றிக்கே,
தமப்பன் இல்லாத இழவு தீரச் சக்கரவர்த்திக்குப் பிள்ளையானாற் போன்று,
வேதமும் இவர் பக்கல் வந்து பிறந்தது ஆதலின் ‘செய்த ஆயிரம்’ என்கிறது என்னுதல்.

செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே –
செய்யா வதற்குரியர் அந்தணரே யாராயின் ஏனை இதற்குரியர் அல்லாதார் இல்.-என்பது,
இங்கு ஒப்பு நோக்குதல் தகும். திருவள்ளுவ மாலை, 23.

உடன் பாட வல்லார் –
அபிப்பிராயத்தோடு பாட வல்லார். என்றது, இவருடைய உபாய சூந்யதையை நினைத்துப் பாடவல்லார் என்றபடி.

வைகலும் வானோர்க்கு ஆராவமுதே –
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நித்திய சூரிகளுக்கு இனியபொருளாகப் பெறுவர்.
தேவசாதிகள் அமுதம் பெற்றுக் கிருதார்த்தராமாறு போலே,
நித்திய சூரிகள் ‘இவர்களைப் பெற்றோம்’ என்று கிருதார்த்தராவர் என்பார் ‘அமுதே’ என்கிறார்.
வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் பகவத் ருசியை யுடைய அவர்கள்,
வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் பகவத் ருசியையுடைய இவரை விரும்பி இருக்கையாலே,
வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாதவராய் இதனை அனுபவிக்க வல்லரானவர்கள் நித்திய சூரிகளுக்கு அமுதாவர்.

————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆஸ்வஸ்தவான் அத முனி தஸ்மை நிவேத்ய
தத் உபாய தீ யைவ கிஞ்சித் ஆஸ்வஸ்தவான
அத முனி ஏவஞ்ச சக அநவதிக அநதிக
தத் ஆப்தௌ இதர சாதன ஸூன்யதாம் ஸ்வாம் –

தஸ்மை நிவேத்ய –அவனைப் பற்றி எடுத்து கூறி
தத் உபாய தீ யைவ -உபாயம் என்கிற புத்தியை
கிஞ்சித் -சற்றே
ஆஸ்வஸ்தவான அத முனி -ஆசுவாசம் அடைந்தார் -பதற்றம் தீர்ந்தார்
ஏவஞ்ச சக -இப்படிப்பட்டவராக இருந்தாலும் –
பரீத் அப்ரீத் சமமாக நடாவாக இருக்க அனுகரித்து தரிக்கப் பார்த்தாரே -5-6-
அநவதிக அநதிக அபிமதம் அடையாமல்
தத் ஆப்தௌ இதர சாதன ஸூன்யதாம் -ஸ்வாம் -வேறே சாதனம் கிடையாது என்பதை
அவனைக் குறித்தே அருளிச் செய்கிறார் இதில் –

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

சர்பாத் அதிசேயதாத் அதிரத பரணாத் சா
அநு கம்ப யோகாதி சத் சாஹாயத்யாத் அசேஷ
அந்தர நிலதயத் பூ சமுத்ருத சர்வேஷாம் தாத பாவாத்
இதர ஜன துராதர்ஷன் ஆதி சரண்யம் தீநாநாம்

1-சர்பாத் அதிசேயதாத் –அரவின் அணை அம்மானே!-

2-அதிரத பரணாத் சா –சங்கு சக்கரத்தாய்!-

3-அநு கம்ப யோகாதி –அருள் செய்து அங்கு இருந்தாய்–நிரவதிக காருண்யம் உடையவர் ஆகையால்

4–சத் சாஹாயத்யாத் –தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர் ஏறி வீற்றிருந்தாய்!–

5-அசேஷ அந்தர நிலதயத் –எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!

6-பூ சமுத்ருத –ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே!-

7–சர்வேஷாம் தாத பாவாத் –உலகுக்கோர் முந்தைத் தாய் தந்தையே! –

8—9–இதர ஜன துராதர்ஷன் ஆதி –அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்-என்றும்
புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என் கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!–என்றும்
ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையவன்

10–சரண்யம் தீநாநாம்–ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்-

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 47-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

அவதாரிகை –

இதில்-ஸ்ரீ வானமாமலை-(நேராக பெருமாள் திரு நாமம் அன்றோ ) திருவடிகளிலே வணங்கி
பிரவணராய் சரணம் புக்க படியைப் பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
அப்ரீதியாலே அனுகரித்து தரிக்க வேண்டும்படி அபிநிவேசம் அதிசயித்து செல்லா நிற்கச் செய்தேயும்
ஸ்வ அபிமதம் பெறாமையாலே அவசன்னராய்-இப்படி அனுபவ ருசி ரூபமான
தம் அபிநிவேசத்தை சாதனமாகக் கருதி அது முற்றினவாறே கார்யம் செய்கிறோம் என்று
ஸ்ரீ ஈஸ்வரன் நினைத்து இருந்தானாகா கொண்டு பேற்றுக்கு உறுப்பாக சாஸ்திர சித்தமான
கர்மாத் யுபாயங்களிலே-தமக்கு மறந்தும் அந்வயம் இல்லாமையை சொல்லிக் கொண்டு
அவன் அடியிலே காட்டின உபாயம் ஒழிய-(சிலேடை -பாட்டுக்கு அடி -திருவடி) வேறு ஒரு உபாயம் இல்லை -என்று
சம்சாரி சம்ரஷண அர்த்தமாக
ஸ்ரீ பிராட்டிமாரோடும்-ஸ்ரீ நித்ய பரிகரத்தோடும் கூட ஸ்ரீ வர மங்கையிலே வந்து எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ வான மா மலை திருவடிகளிலே-வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிற
நோற்ற நோன்பில் – அர்த்தத்தை-அருளிச் செய்கிறார்
நோற்ற நோன்பாதியிலேன்-என்று தொடங்கி -என்கை-

———————————————————

நோற்ற நோன்பாதி யிலேன்  உன் தனை விட்டாற்ற கில்லேன்
பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே -சாற்றுகின்றேன்
இங்கு என்னிலை (இது) என்னும் எழில் மாறன் சொல் வல்லார்
அங்கு அமரர்க்கு ஆராவமுது—-47-

————————————————————

வியாக்யானம்–

நோற்ற நோன்பாதியிலேன் –
இத்தால்-மோஷ சாதனமாக-சாஸ்திர சித்தமான கர்மாதி உபாயங்களில் எனக்கு அந்வயம் இல்லை —
ராவணோ நாம துர்வ்ருத்தோ ராஷஸோ ராஷசேஸ்வரா
தஸ்யாஹம் அனுஜோ ப்ராதா விபீஷண இதி ஸ்ருத -இத்யாதிகளாலே
முன்னிட்டு சரணம் அடைந்தால் போலே
நோற்ற நோன்பிலேன் -என்கிற பாட்டை கடாஷித்து அருளிச் செய்தபடி –

உன் தனை விட்டாற்ற கில்லேன் –
தாரகனுமாய்-போக்யனுமாய்-இருக்கிற உன்னை விட்டு-தரிக்க மாட்டு கிறிலேன்-
இவ் வாற்றாமை எனக்கு ஸ்வரூபம் இத்தனை —

ஆனால் பேற்றுக்கு சாதனம் என் என்னில் –
பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே –
மோஷ உபாயம்
அரவின் அணை ஏறி வீற்று இருந்து -என்றும் –
சீவர மங்கை வாணனாய்-என்றும்
கருளப் புட்கொடி சக்கரப்படை வான நாடனாய்-
இப்படி அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிற தேவர் அடியிலே அருளின நிர்ஹேதுக கிருபையே –
அதாவது –
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -என்றும்
தமியேனுக்கு அருளாய் -என்றும்
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட -என்றும்
அருளாய் உய்யுமாறு -எனக்கு -என்றும்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -என்றும் – அருளிச் செய்தவை-என்கை –
( பேர் அருள் -நிர்ஹேதுக கிருபை அன்றோ -பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு அன்றோ )

மற்றும் உண்டான பாட்டுக்கள் -அருளுக்கு அடியான அவன் படிகளையும்
அதுக்கு உடலாகத் தம் படிகளையும்-அருளிச் செய்தவையாய் இருக்கும் –

பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே சாற்றுகின்றேன் –
ஆகையாலே அவன் நிர்ஹேதுக கிருபையே சாதனம் -என்னுமது எல்லாரும் அறியும்படி
பறை அறைந்து சாற்றுகின்றேன் -என்கிறார் –

இங்கு என்னிலை என்னும் –
இவ்விடத்தில்-இவ்வர்த்த விஷயத்தில் – என்னுடைய நிஷ்டை இது என்னும்
அத்தலையில் பூர்த்தியாலே-இத்தலையில் ஆகிஞ்சன்யத்தை முன்னிடுகை இறே
பரதந்த்ரனான ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்னும் –

எழில் மாறன் -சொல் வல்லார்
சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் ஆகிற ஆத்ம பூஷணத்தாலே அபிராமராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் உடைய
வுபாய நிஷ்கர்ஷகமான இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் –

அங்கு அமரர்க்கு ஆராவமுது –
அவ்விடத்தில்-
அளப்பரிய ஆராமுதை அனுபவிக்கிற ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு
நித்ய அபூர்வமான அம்ருதமாகப் பெறுவார்
ஸ்ரீ சிரீவர மங்கை மேய பத்துடன் வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே –
என்றத்தை அருளிச் செய்தபடி –

————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -118- திருவாய்மொழி – -5-7-1….5-7-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

June 9, 2016

மேல் திருவாய்மொழியில் அநுகரித்துத் தரிக்கப் பார்த்தார்;
அநுகரித்துத் தரிக்க வேண்டும்படியான கலக்கம் பிறந்த இடத்திலும் வந்து முகங்காட்டிற்றிலன்; இதற்குக் காரணம் என்?
தன் பக்கல் ஆசை சிறிதுடையார்க்குத் தானே வந்து முகங்காட்டிக் காப்பாற்றக்கூடிய சர்வேச்வரன்
நம் பக்கல் ஆறி இருக்கைக்கு நிபந்தனம் என்?’ என்று பார்த்தார்;
இனி இங்ஙனேயாமித்தனை; நம் பிரகிருதி ஸ்வபாவத்தாலே தன்னால் அல்லது செல்லாதபடியாயிருப்பதோர் ஆற்றாமை உண்டாயிருந்தது;
அது நமக்கு ஸ்வரூபம்’ என்று அறியாதே ‘உபாயம்’ என்றிருந்தானாக வேணும் என்று பார்த்து,
தம் கையில் ஒன்று இல்லாமையை அறிவித்து அவன் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.

“ஆற்றகிற்கின்றிலேன்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி. ‘உபாயம் என்றிருந்தானாக வேணும்’ என்றது,
ஆற்றாமையாவது சிநேகமாய், சிநேகத்தை முன்னாகக் கொண்ட தியானம் பக்தி யாகையாலே,
இது உபாயமாகவேணும் என்றிருந்தானாகவேணும் என்றபடி.–
பிரசக்தி -தஸ்ய பிரதி நிஷேதம் -இருந்தால் தானே சொல்ல வேண்டும் –

கடற்கரையின் வெளியில் மஹாராஜரை உள்ளிட்ட முதலிகளோடும், லக்ஷ்மணம் புண்ய லக்ஷ்மணம்” என்பது, ஸ்ரீராமா. யுத். 18:7.-
“புண்ணியத்தையே இலக்ஷணமாகவுடைய இளைய பெருமாள்” என்கிற தம்பியோடுங்கூட எழுந்தருளி யிருக்க,
ராவணோ நாம துர்வ்ருத்தோ ராக்ஷஸோ ராக்ஷஸேஸ்வர: தஸ்ய அஹம் அநுஜோ ப்ராதா விபீஷண இதி ச்ருத:” என்பது, ஸ்ரீராமா. யுத். 17:10.
ஸ்ரீவிபீஷணாழ்வான் “கெட்ட ஒழுக்கத்தை யுடையவன், இராவணன் என்று பிரசித்தி பெற்றவன், அரக்கர்களுக்கெல்லாம் அரசனான
அரக்கன் இருக்கிறான்; நான் அவனுக்குப் பின் பிறந்த தம்பி; விபீஷணன் என்று பிரசித்தி பெற்றவன்” என்று தன்னுடைய தாழ்ச்சியை
முன்னிட்டுக்கொண்டு பெருமாள் திருவடிகளிலே விழுந்தாற்போலே,
இவரும், அவன் கடற்கரையிலே தனி இருந்த இழவு தீர,
பிராட்டிமாரோடும் நித்திய பரிகரத்தோடுங் கூடச் சிரீவரமங்கல நகரிலே திருவனந்தாழ்வான் மேலே எழுந்தருளியிருக்கின்ற
வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிறார்.

இவர் தாம் என் கொண்டு அவனை வடிம்பிடப் பார்க்கிறது என்னில், அவன் காத்தற்குரிய பொருள்களை விரும்பியுள்ளான்,
காவலனை விரும்புதல் தமக்கு உண்டாயிருந்தது; ஆன பின்னர், இதற்கு மேற்பட சம்பந்தம் உண்டோ? என்று.

நோற்ற நோன்பு -நாலிலும் சரணாகதி -ரகஸ்ய த்வயம் படி-திருமந்தரம் -சரம ஸ்லோகம்
-5-7 முதல் 6-10 நாராயணா –சராணாகதி பூர்வாக கல்யாண குணங்கள் அனுபவம்
6-10- வாக்ய த்வயம் பிரக்ரியை படி சரணாகதி –
ஸ்ரீ வைகுண்ட இருப்பு போலே -சேவை -அமர்ந்த திருக் கோலம் -கூந்தல் –கேள்வன் -வைகுண்ட நாதன் -ஸ்வயம் வ்யக்த ஷேத்ரம்
தோத்தாத்ரி -தெற்கு கோடி வடக்குக் கோடி அமர்ந்த திருக் கோலம் -பத்ரி விசால் -நாராயணன் –
நடுவில் நின்றது -திருவேங்கடம்-ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்களில் -கிடந்தது ஸ்ரீ ரெங்கம் மட்டுமே
நாச்சியார் அனுக்ரகம் -பொன்னடிக்கால் ஜீயர் -பெண்ணாகப் பாவித்து -கனுப்பொடிக்கு
இன்றும் ஸ்வாமி திருமடத்துக்கு -உத்சவம் கண்டு அனுபவிக்கிறார் –
ருசி விவசர்க்குப் பாதமே சரணாக்கும் ஔதார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் -சூர்ணிகை -163-

நீசர்களை ரக்ஷிக்க அன்றோ இங்கே வீற்று இருந்து அருளுகிறார் -ரஷ்ய
ரஷக அபேக்ஷையும் இருக்க அடியேன் இழக்கவோ

——————————————————————————————————–

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-

உன்னை லபிக்கைக்கு -1-சாஸ்திர உக்தமான உபாயங்கள் இல்லை -உன்னை ஒழிய செல்லாதபடி அபி நிவிஷ்டனான நான் –
விட்டுப் பிரிந்து இருக்க முடியாத நான் –2-ஆஸ்ரித சம்ச்லேஷத்தால் உபகாரகன் நீ -மித்ரா பாவேன-அத்வேஷம் மாத்ரமே பற்றாசாக
3-அவசர பிரதீஷனான உனக்குப் புறம்போ சாஸ்திர உக்த உபாயம் இல்லை -உனக்கு நான் புறம்போ -நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்
4-உம்மை ஒழிய செல்லாமை அபி நிவிஷ்டமமும் இருக்கு -ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன்–உனக்கு நான் புறம்போ -நீரும் உபகாரகன் -உனக்கு நான் புறம்போ -அரவின் அணை அம்மானே!
ரஷகன் தேடி அவசர பிரதீஷன் -உனக்கு நான் புறம்போ -சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர் வீற்றிருந்த எந்தாய்!
நான்கு காரணங்கள்
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்
பல வியாப்தமாம் படி அனுஷ்டிதமாம் படி நோன்பு –
நோற்ற அடை மொழி -பலத்துடன் சேர வேண்டுமே -கர்ம யோகம் உடையேன் அல்லேன்
ஆகையாலே -நுண் அறிவும் இல்லை -சுதர்ம -கர்ம யோகம் -ஞான வைராக்கியம் உடன் செய்ய -த்ரிவித பரித்யாகம் –
சமதா அசலா புத்தி -மனசில் தெளிவு பிறந்து -ஞான யோகம் அமரும் –
ஜன்மாந்திர சகஸ்ரேஷூ -கிருஷ்ண பக்தி -பக்தி ஆரம்ப விரோதிகளை எரிக்க கர்ம ஞான யோகங்கள் –
மோஷ விரோதி பாபங்கள் போன பின்பே -உபாசன மகாத்ம்யத்தால் அழித்து
பிராரப்ய கர்மாக்கள் தொலைத்து –
ஞான யோகத்தால் மட்டும் -புலன்களை அடக்கின உத்தம அதிகாரிகளுக்கு -ஒரு சிலருக்கு -யோக்யதை இருந்தாலும்
கர்ம யோகம் தான் பண்ண வேண்டும்
நம்மைப் பார்த்து பிறர் பின்பற்றும்படி இருப்பதால்
கர்ம யோகம் இல்லாமல் ஞான யோகம் வர பிரசக்தி இல்லை –
ஸூ தர்ம கர்ம யோகம் -த்ரிவித தியாகம் உடன் அனுஷ்ட்டித்தால் தான் ஞான யோகம் பிறக்கும்
ஸூ ஷ்மம் நுண் அறிவு -ஆகிலும்-பக்தி யோகம் இல்லை தெளிவாக சொல்லாமல் -பகவத் பிராப்திக்கு -இது வேண்டுமே –
கர்ம ஞான யோகம் ஆத்மா சாஷாத்காரம் தான் கொடுக்கும் –
பக்திஸ்ஸ ஞான விசேஷம் -மற்றவர் -சொல்லி இருக்க -அறிவு ஒன்றும் இல்லாத மூன்றையும் –
அறிவு -அறிவு ஓன்று -அறிவு ஒன்றும் – ந பக்திமான் -நின் கண் பக்தன் அல்லன் -உபய சாத்தியமான பக்தி இன்றிக்கே இருக்கச் செய்தேயும் –
3 அத்யாயம் -கர்ம யோகம் -நேராக ஆத்மா சாஷாத்காரம் –
ஞான யோகம் தான் வேண்டாம் -கர்மத்திலே ஞான பாகம் உண்டே -அது வேணும் -ஞான பாகமே ஏற்றம் –
அதுவே ஞான யோகம் பண்ணும் கார்யம் -பலமும் கொடுக்கும் -இத்தை 4 அத்யாயத்தில் விளக்கி -ஆகிலும் இதனால் –
இனி உன்னை விட்டொன்று-ஆற்ற கிற்கின்றிலேன் -இனி -உன்னுடைய குண அனுசந்தானம் பிறந்த பின்பு -ரஷணைக சீலனான உன்னை
ஒரு வினாடி பொழுதிலும் விட்டு இருக்க வல்லேன்
அரவின் அணை அம்மானே!ஆஸ்ரித சேஷனுக்கு திருமேனி உபகரித்த அசாதாராண ஸ்வாமி -ஸ்பர்சத்தால் விகஸித்த-
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
சேற்று நிலத்தில் தாமரை -புஷ்கரணி -பெயர் -செந்நெல் உடன் கலந்து -தர்ச நீயமான -நெல் குடை போலே தாமரைக்கு இருக்குமே –
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.-ஆஸ்ரித சம் ரஷணத்துக்கு -இத்தால் அடியேனுக்கு உபகாரம்
ரஷண சீலனான உனக்கு ரஷ்ய பஹிர் பூதன் அல்லேன்

செய்த கர்மயோகத்தையுடையேனல்லேன், ஞான யோகத்தையுடையேனல்லேன், அப்படியானாலும், இனி உன்னைப் பிரியச் சிறிதுபொழுதும்
பொறுக்கமாட்டுகின்றிலேன்; ஆதிசேஷசயனத்தையுடைய அம்மானே! சேற்று நிலங்களிலே தாமரைகள் செந்நெற்பயிர்களுக்கு மத்தியில்
மலர்கின்ற ஸ்ரீவரமங்கை என்னும் திவ்விய தேசத்தில் வீற்றிருக்கின்ற எந்தையே! காப்பாற்றுகின்ற உனக்கு அங்கே புறம்பு அல்லேன்.
அம்மானே! எந்தாய்! நோன்பிலேன், நுண்ணறிவிலேன், ஆகிலும் உன்னை விட்டு ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன்,
உனக்கு அங்குமிகை அல்லேன் என்க. ஒன்றும் – சிறிதும். கில்: ஆற்றலையுணர்த்தும் இடைச்சொல்.
கிற்கின்றிலேன் – ஆற்றலையுடையேனல்லேன். வீற்றிருந்த : காலமயக்கம்.
இத்திருவாய்மொழி ஆசிரியத்துறை.

என்னுடைய பேற்றுக்குக் காரணமாயிருப்பதொரு கைம்முதல் என்னிடத்தில் இல்லை,
இல்லாமையாலே ரக்ஷகன் வேண்டும் என்ற விருப்பம் உண்டு;
பரிபூர்ணரான தேவர், காத்தற்குரிய பொருள்களை விரும்புகின்றவராய் இருந்தீர்;
ஆகையாலே, தேவரே என் விருப்பத்தை முடித்தருள வேண்டும் என்கிறார்.

“நோற்ற நோன்பிலேன்” என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘என்னுடைய’ என்று தொடங்கியும்,
“ஆற்றகிற்கின்றிலேன்” என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘ரக்ஷகன் வேண்டும்’ என்று தொடங்கியும்,
“சிரீவரமங்கலநகர் வீற்றிருந்த” என்றதனைத் திருவுள்ளம் பற்றிக் ‘காத்தற்குரிய பொருள்களை’ என்று தொடங்கியும் அருளிச் செய்கிறார்.
மேல் திருப் பாசுரத்திலே “அருளாய்” என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘என் விருப்பத்தை முடித்தருள வேண்டும்’ என்கிறார்.

நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் –
கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேன் அல்லேன், ஞானயோகத்தையுடையேன் அல்லேன்,
உன்னுடைய திருவடிகளில் பக்தியுடையேன் அல்லேன்” என்கிறார்.
“ந தர்மநிஷ்டோஸ்மி ந ச ஆத்மவேதீ ந பக்திமான் த்வத் சரணாரவிந்தே
அகிஞ்சந : அநந்யகதி : ஸரண்ய த்வத் பாத மூலம் ஸரணம் ப்ரபத்யே”.
“ந தர்ம நிஷ்டோஸ்மி –
கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேனல்லேன்” என்றது,
நாட்டார் ‘இவன் சில செய்யா நின்றான்’ என்றிருக்கைக்கும்,
அது கண்டு நான் ‘நமக்குச் சில உண்டு ஆகாதே’ என்று மயங்குவதற்கும்,
நீ கை விடுகைக்கும் வேண்டுவது உண்டு;
ஆனால் பலத்தோடே கூடியிருப்பது ஒன்று இல்லை என்றபடி.-
ந தர்மவான் அஸ்மி சொல்லாமல் நிஷ்டை இல்லை என்கிறார்-
“ந ச ஆத்மவேதீ-
ஞானயோகமுடையேனல்லேன்” என்றது, தாச்சீல் யந் –தத் ஸ்வ பாவம் -தோன்ற இருப்பன்,
எனக்கு அதுதானும் இல்லை.ஆத்மா வேதன ஸ்வ பாவமும் இல்லை
“தத் ஞானம்; அஜ்ஞானம் அத: அந்யத்உக்தம்”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 5 : 57.
“அந்தப் பரமனைப் பற்றிய ஞானம் தான் ஞானம் என்ற சொல்லால் சொல்லக் கூடியது;
ஆகையால், மேற்சொல்லிய ஞானத்திற்கு வேறானது அஜ்ஞானமாகச் சொல்லப்பட்டது” என்கிறபடியே,
அல்ப ஞானம் இருந்தாலும் லௌகிக ஞானத்துடன் கூடி இருக்குமே
ஆத்மாவைப் பற்றிய உண்மையான ஞானத்தை முன்னாகக் கொண்ட ஈச்வர ஞானம் எனக்கு இல்லை என்றபடி.
“ந பக்திமான்-
பக்தியுடையேனல்லேன்”பக்தி இல்லை என்று சொல்ல வேண்டாவே அன்றோ,
மேற்சொல்லிய அவை இரண்டும் உண்டானால் வருமதுவே அன்றோ அது.
அவை இரண்டும் இல்லாமையாலே, பக்தியும் இல்லை என்கிறார் என்றபடி.

‘நோன்பிலேன்’ என்ன அமையாதோ? ‘நோற்ற நோன்பிலேன்’ என்ன வேண்டுமோ? என்ன
சாதனங்களைச் சமைய அநுஷ்டித்து, பலத்தோடே கூடியிருப்பதாகப் பார்த்திருக்கலாவது
ஒன்று இல்லை என்கைக்காகச் சொல்லுகிறார்.
என்றது, சக்கர்வர்த்தி, ஸ்ரீ வசுதேவரைப் போலே பேற்றுக்கு அடியாக நினைத்திருக்கலாவது ஒன்றில்லை என்றபடி.
“ந தர்மநிஷ்டோஸ்மி –
கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேனல்லேன்” என்கிற இடத்தில், ‘தர்மம் இல்லை’ என்னாமல்,
தர்மநிஷ்டனாகப் பெறுகின்றிலேன் என்றாற்போலே,
‘அறிவிலேன்’ என்னாமல், ‘நுண்ணறிவிலேன்’ என்கிறார். என்றது,
ஆத்ம ஞானம் முன்னாகப் பரம்பொருளின் சொரூபத்தைக் காணும் அளவாக அறியும் அறிவை யுடையேனல்லேன் என்றபடி.

“ந பக்திமான்” என்றும், “நின்கணும் பக்தன் அல்லேன்” என்றும் எடுத்துக் கழித்த அளவு
இங்கும் எடுத்துக் கழியாது ஒழிவான் என்? என்னில்,
குளித்து மூன்றனலை யோம்பும் குறிகொள் அந்தணமை தன்னை ஒளித்திட்டேன் என் கணில்லை; நின் கணும் பத்தனல்லேன்;
களிப்ப தென் கொண்டு? நம்பி! கடல்வண்ணா! கதறுகின்றேன்; அளித்தெனக் கருள் செய் கண்டாய் அரங்கமா நகருளானே.– திருமாலை, 25.
“கரும ஞானங்களால் அலங்காரம் பண்ணப்பட்ட மனத்தை யுடையவனுக்கு” என்கிறபடியே,
அவை இரண்டும் உண்டானால் வருமதுவே யன்றோ பக்தி; அவை இல்லாமையாலே எடுத்துக் கழிக்கவும் வேண்டாவே அன்றோ.
ஆனால், இதைப் போன்று, ‘கர்மம் இல்லை’ என்ற போதே, ‘ஞானம் இல்லை’ என்பது போதருமே அன்றோ,
அதனை எடுத்துக் கழிக்க வேண்டுவது என்? என்னில், முற்பிறவியில் கர்மங்கள் முடிந்த அளவிலே மரணம் உண்டானால்
அடுத்த பிறவியிலே ஞானம் உண்டாகக் கடவது. ஆயின், பக்தியும் அப்படி ஆனாலோ? என்னில்,
ஞான கர்மங்கள் இரண்டும் உண்டானால்
பக்திஸ்ச ஞான விஸேஷ:” என்றும், “ஞானம் கனிந்த நலம்” என்றும் சொல்லுகிறபடியே,
பக்தி கூடி அல்லது நில்லாது, ஆன பின்பு, இங்கு அப்படி ஆக ஒண்ணாது.
‘உன்னைவிட்டு ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன்’ என்று இவர் சொல்லுகிற இது, பக்தி அன்றோ,
“உபய பரிகர்மித ஸ்வ அந்தஸ்ய ஏகாந்திக ஆத்யந்திக பக்தியோ கைகலப்ய:”-என்பது, —
ஏகாந்திக அத்யந்திக -அவனைப் பற்றியே இடைவிடாமல் –
ஆத்மசித்தி“சிநேகத்தை முன்னிட்ட தியானமானது பக்தி” அன்றோ; ஆன பின்பு, இது உபாயம் ஆனாலோ? என்ன,
அங்ஙனம் ஒண்ணாது அன்றோ,
கரும ஞானங்களோடு கூடியுள்ள மனத்தை யுடையவனுக்கு உண்டாகும் பரபக்தி அன்றோ
சாஸ்திரங்களில் சாதனமாகச் சொல்லிப் போருகிறது;
“ஸ்நேஹ பூர்வம் அநுத்யானம் பக்தி: இதி அபிதீயதே பஜ இதி ஏஷதாது: வை ஸேவாயாம் பரிகீர்தித:
தஸ்மாத் ஸேவாபுதை: ப்ரோக்தா பக்தி ஸப்தேந பூயஸீ”
இது, அங்ஙன் அன்றிக்கே, அவனுடைய திருவருள் காரணமாக வந்தது ஆகையாலே இது ஸ்வரூபமாமித்தனை.

அங்ஙன் அன்றிக்கே,
புராணங்களிலே தனித்தனியே கர்ம ஞானங்களைச் சாதனமாகச் சொல்லுகையாலே சொல்லிற்றாகவுமாம்.
“ஜ்ஞான பக்தி அந்விதம் கர்ம ஜனகாதிஷு த்ருஸ்யதே
கர்ம பக்தி அந்விதம் ஜ்ஞானம் ப்ராயேண பரதாதிஷு(ஜடபரதர் இடம் ஞானம் தூக்கி இருக்கும் )
கர்ம ஜ்ஞாநாந் விதா பக்தி: ப்ரஹ்லாத ப்ரமுகாஸ்ரயா”-என்ற சுலோகம் இங்கே நோக்கல் தகும்.
கர்ம ஞான ரஹித்யம் -பக்தி ராஹித்தியம் உப லஷணம் -சாதனம் இல்லை என்றால் சாத்தியம் இருக்காதே
புராண பிரகிரியையில் -கர்ம ஞானம் இல்லை என்றது பக்தியும் இல்லை -என்றவாறு –
சாதனம் இல்லா விடில் சாத்தியம் கிட்டாது என்றபடி இங்கு

அவை இல்லையாகில், முதல் இல்லாதார் பலிசை இழக்குமத்தனை அன்றோ? என்ன,
(முதல் -கர்ம ஞான பக்திகள் -வட்டி பகவத் பிராப்தி
முதல் இல்லா விடிலும் முதல்வன் நீ என்னிடம் உண்டே –
முதலும் அவன் வட்டியும் அவன் -வைத்த மா நிதி -வைத்த முதல் மா நிதி வட்டி வளர்ந்து கொண்டே இருக்குமே )
ஆகிலும் –
இங்ஙனம் இருந்தே யாகிலும்.(பிரசாத லப்த பக்தி சாதனம் ஆகாதே -ஸாத்ய பக்தி
சாதனமாக கொண்டு இருந்தேன் ஆகில் ஆகிலும் பத பிரயோஜனம் வ்யர்த்தம் )
‘ஆற்றகிற்கின்றிலேன்’
என்னுமிதனை, ‘உபாயம்’ என்றிருந்தாராகில், ‘ஆகிலும்’ என்கைக்கு இடம் இல்லை.
ஆனால், நீர் இந்நாள் வரை ஆறி இருந்தீரே? என்ன,

இனி-
உன்னையும் அறியாதே என்னையும் அறியாதே இருந்த அன்று இழக்க அமையாதோ,
உன் நிறைவும் என் குறைவும் அறிந்த இன்றும் இழக்க வேண்டுமோ?
ஒருவன் கையிலே சோறும் உண்டாய் அவன் இடுவானுமானால்,-காருணிகனாயும் இருந்து –
ஒருவனுக்குச் சோறும் இன்றிக்கே பசியனும் ஆனால் இழக்க வேணுமோ?
இனி –
என் கையிலேயும் ஒன்று உண்டாய் அது சமையும் தனையும் ஆறி இருக்கிறேனோ.
ஸ்வரூபத்தை உபாயத்திலே செலவு எழுதிக் கைவிடப் பார்க்கில் பார்க்குமித்தனை.
அநாதி காலம் மெய் மறந்து இழந்த காலம் போராதோ, நான் மெய்யாக இசைந்த இன்றும் இழக்க வேண்டுமோ?
(உனக்கு சரீரம் என்று அறிந்த பின்பு–மெய் உண்மை என்றும் சரீரம் என்றும் சாடு)

உன்னை விட்டு
நீயும் என்னைப் போலே இருந்தாயாகில் நான் ஆறி இரேனோ,
நானும் சிறிது செய்து வரவேண்டும்படியோ நீ இருக்கிறது.
அன்றிக்கே,
உயிரை விட்டு உடல் தரிக்கவற்றோ என்னலுமாம்.

ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் –
உன்னுடைய ஸ்வரூப ஞானம் என்னுடைய தாரணத்துக்குக் காரணமாய் இருக்கிறதில்லை.
“அங்ஙனம் அழைத்துக் கொண்டு செல்லும் செயல் அவருக்குத் தக்கதாகும்” என்று ஆறி இருக்கைக்கும் ஒருவழி உண்டே அன்றோ அவளுக்கு.
கடலை அணை செய்யவும் இராவணனை அழியச் செய்யவும் வேண்டாவே அன்றோ இவளுக்கு.
இதுகாறும் தம்முடைய நிறைவின்மையைச் சொன்னார்; இனி, அவனுடைய பூர்த்தியைச் சொல்லுகிறார்:

அரவின் அணை அம்மானே –
அரவினை அணையாகவுடைய சர்வேச்வரனே!
பாம்பினைப் படுக்கையாகவுடைமை, அறப் பெரியவனாந் தன்மைக்கு இலக்கணமே அன்றோ.
உன்னுடைய போகப் பிராவண்யம் என்னால் ஆறி இருக்கலாயிருக்கிறதோ?
நீ பரம போகியாயிருக்க, என்னால் ஆறியிருக்கப்போமோ?

சேற்றுத் தாமரை செந்நெலூடு வளர் சிரீவரமங்கல நகர் –
சேறுகளிலே தாமரைகளானவை செந்நெலூடே அவற்றுக்கு அணுக்கன் இட்டாற்போலே அலரா நிற்கின்ற தேசம்.
“நித்திய ஸூரிகளுடைய நகரம் அயோத்தி என்னும் பரம பதம்” என்னும்படியான பரம பதத்திற் காட்டில் தனக்கு நகரமாக விரும்பி வாழ்கின்ற தேசம்.
சம்சாரிகளுடைய இரக்ஷணத்துக்காக நித்திய வாசம் செய்யும் தேசம். பரம பதத்தையும் மறக்கச் செய்யும் தேசம் என்பார்
‘சேற்றுத்தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கல நகர்’ என்கிறார்.
அன்றிக்கே,
அரசர்கள் எடுத்துவிட்ட இடத்தே பரிகரமும் புகுமித்தனை யன்றோ என்னுதல்.

வீற்றிருந்த-
‘அங்கே இருக்கக்கூடிய நமக்கு, இவ்விருப்பு இருக்க வேண்டா நின்றதே!’ என்னும் வெறுப்போடு அன்றிக்கே,
தட்டியிலிருந்தவன் முடி சூடினாற்போலே தன் வேறுபாடு தோற்ற இருக்கை (அங்கே சிறை இருப்பு போலே அவாக்ய அநாதர )

எந்தாய் –
அங்குத்தை இருப்பு நித்தியசூரிகளுக்கு ஆனாற்போலே, இவ்விருப்பு எனக்காக அன்றோ இருக்கிறது.
சிரீவரமங்கல நகரான அங்கே வீற்றிருந்த எந்தாய்! என்க.

உனக்கு மிகை அல்லேன் –
பரம பதத்திலே நெடுங்கை நீட்டாக இருந்தாயாகில் நான் தரித்திருக்கலாயிற்றே, எனக்காக வந்த இடத்தை நான் இழக்கவோ.
அங்கே வீற்றிருந்த உனக்கு மிகை அல்லேன் –
காக்கும் பொருள்களைத் தேடிக் கொண்டிருக்கின்ற உனக்குப் புறம்பு அல்லேன்.
அன்றிக்கே,
உனக்கு மிகை அல்லேன் –
“குருஷ்வ மாம் அநுசரம் வைதர்மம் நேஹ வித்யதே க்ருதார்த்த : அஹம் பவிஷ்யாமி தவச அர்த்த: ப்ரகல்பதே”-என்பது,
ஸ்ரீராமா. அயோத். 31 : 32. பெருமாளைப் பார்த்து இளைய பெருமாள் கூறியது.
“என்னை அடியவனாகக் கொள்வதில் சேவ்ய சேவக பாவம் மாறாடிக் கிடக்கிறது இல்லை” என்று,
மற்றைப் போதைக்கு நான் இரேன். என்றது, உனக்கு மிகையான போது அல்லேனாய் விடுவேன் என்றவாறு.
(உனக்கு மிகையான போது அல்லேனாய் ஆகி விடுவேன் )
இத்தால் தமக்கு இலாபம் என்? என்ன, அங்கே “தேவரீருக்கே பிரயோஜனம் கிடைக்கப் போகிறது” என்கிறபடியே,
இத்தால் வரும் பிரயோஜனமும் தேவரீருடையதே.
பால் குடிக்கும் குழந்தையை, பால் குடித்து வயிறு நிறையக் கண்டு உகக்கும் தாயைப் போலே, அடிமையாக இருப்பவன்
ஸ்வரூபம் பெற்று அடிமைசெய்கை சேஷிக்குப் பேறே அன்றோ.

தமேவ சரணம் கச்ச -தம் சப்தம் மாம் என்று தன்னையே காட்டுகிறான் -சர்வ தர்மான்-சரம ஸ்லோகம் -சரணாகதி
ஸ்வ தந்திர லேசம் உள்ளவனுக்கு புரியாதே -பிரவ்ருத்தி மார்க்க நிஷ்டன் -ஷத்ரியன் அன்றோ
18-65 மீண்டும் 9 அத்யாயம் ஸ்லோகம் மன்மனாபவ சொல்லி -பக்தி ஆரம்ப விரோதி பாபங்களைப் போக்க
தன்னைப் பற்ற அருளிச் செய்து பக்தி மார்க்கம்
ரகஸ்ய த்ரயத்தில் தான் இது பிரபன்னனுக்கு –ஸ்வ தந்திர பிரபத்தி -ஸ்ரீ கீதையில் அங்க பிரபத்தி –
சர்வ தர்மான் – -தர்மம் -பிராயச்சித்த தர்மங்களை விட்டு -அந்த ஸ்தானத்தில் இவனைப் பற்றி -சர்வ பாபேப்யோ பக்தி
ஆரம்ப விரோதிகளைப் போக்க –தன்னைக் குறைத்து இப்படி அருளிச் செய்கிறானே -சர்வேஸ்வரன் –
உபாய புத்தியை விட்டு-அவனைப் பற்ற மோக்ஷம் விரோத பாபங்களை போக்கி -சோகம் போக்கி அருளுகிறார் ஸ்வ தந்த்ர ப்ரபன்னனுக்கு
நித்ய நிரவத்ய கைங்கர்யத்தில் மனசை வைப்பான் இவன்-
மோஷ உபாயமாக பற்றச் சொல்லி ரகஸ்ய த்ரயத்தில் –
கை முதல் இல்லை -ஆகிஞ்சன்யம் / போக்கிடம் இல்லை -அநந்ய கதித்வம் -நாலு பேர் உடன் விபீஷணன் இவற்றைக் காட்ட –
ஆகிஞ்சன்யம் நோற்ற நோன்பு திருவாய்மொழி —
அநந்ய கதித்வம் -ஆராவமுது திருவாய்மொழி –
இரண்டு கை சேர்த்து கைம்முதல் இல்லை -இரண்டு கால்களை சேர்த்து -வேறே போக்கிடம் இல்லை காட்ட
நால்வருடன் வந்தான் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இவை காட்ட –
த்வயார்த்தம் தீர்க்க சரணாகதி என்பது சார சங்க்ரஹத்தில் அருளிச் செய்தார் –
அபாய பிரதான சாரமான ஸ்ரீ ராமாயணமும் தீர்க்க சரணாகதியான திருவாய் மொழியும் தானே சம்ப்ரதாயத்துக்கு அரண்கள் –

————————————————————————————–

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-

அநந்தரம் -என்னை அங்கீ கரிக்கைக்கு அநிஷ்டம் பிரதிபந்தங்கள் உண்டானாலும் -நிவர்த்தகன் நீ ஆகையாலே -செய்து அருள வேண்டும்
அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் -சித்த சாதன நிஷ்டன் முடிந்து ஆனந்திப்பதோ ஆரம்பித்து அலமாந்து இருப்பதோ இல்லை
நித்ய சூரிகள் நித்ய சம்சாரிகள் இரண்டிலும் இல்லை –
நிஷ்பன்ன உபாயனாய்க் கொண்டு -செய்த வேள்வியர் -க்ருத க்ருத்யர் -நீ இருக்கும் பிராப்ய பூமியில் இல்லை
உபாய ஸூநயமாய் ஆறி இருக்கை அன்றோ உள்ளது -நிர பேஷனாய் இங்கும் இல்லை
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான் -அள்ள அள்ள குறை அற்ற போக்யன் -அடைய துடிப்பு அபி நிவேசம் மிக்கு
அந்ய பரரான லௌகிகர் -நிலைகள் ஒன்றிலும் அல்லேன் எங்குற்றேனுமலேன்
இலங்கை செற்ற அம்மானே!-ஆஸ்ரித விஷயத்தில் பிரதி பந்தகமான இலங்கையை அழித்து சீதையை கொண்டாயே
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை-சந்தரன் பதம் அளவும் உயர்ந்த மாடங்கள் -பிற்பாடர் இழக்காத படி
நித்ய வாசம் -செய்து அருளும்
சங்கு சக்கரத்தாய்! -ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு பரிகரம் உண்டே -போக்யமாயும் உள்ள திவ்யாயுதங்கள்-உண்டே
தமியேனுக்கு அருளாயே.-தனியேனுக்கு-உன்னை ஒழிய துணை இல்லாத -லோகத்தில் யார் உடனும் பொருந்தாத –
நித்ய முக்தர் பத்தர் முமுஷுக்கள் ஈஸ்வரன் -விலஷணர் அன்றோ ஆழ்வார் -கிருபை பண்ண வேண்டும் –

ஒரு சாதனத்தைச் செய்து முக்தியை அடைந்தவனாயிருக்கிறேன் அல்லேன்,
சாதனத்தைச் செய்கின்றவர்களில் ஒருவனாயிருக்கிறேன் அல்லேன்,
உன்னைக் காண வேண்டும் என்கிற ஆசையிலே அகப்பட்டு நான் உபாயங்களைச் செய்வதற்கு ஆற்றலுடையேனும் அல்லேன்;
இலங்கையை அழித்த அம்மானே! சந்திரமண்டலம் வரையிலும் பொருந்தும்படி மாணிக்கங்கள் பதித்த மாடங்கள்
உயர்ந்திருக்கின்ற ஸ்ரீவரமங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற சங்கினையும் சக்கரத்தினையுமுடையவனே!
வேறு துணை இல்லாத எனக்குக் கிருபை செய்தருள வேண்டும்.
அம்மானே! சங்குசக்கரத்தாய்! அங்குற்றேனல்லேன், இங்குற்றேனல்லேன், ஆசையில் வீழ்ந்து எங்குற்றேனுமல்லேன்,
தமியேனுக்கு அருளாய் என்கிறார்.
திங்கள்சேர் என்பதற்கு, சந்திரன் வந்து தங்கியிருக்கும்படியாக என்று பொருள் கூறலுமாம். மணி – அழகுமாம்.

“ஆற்றேன்” என்றால் பெற்றது என், தடைகள் இன்னம் உண்டே? என்ன,
பிராட்டிக்கு வந்த தடைகளைப் போக்கியது போன்று,
அடியேனுடைய விரோதியையும் போக்கியருள வேண்டும் என்கிறார்.

அங்குற்றேன் அல்லேன் –
முக்தர் இந்தச் சம்சாரத்திலே – -உலாவினாற் போன்று சித்த சாதனனாய்த் -பேறு நிச்சயம்
என்று உணர்ந்து -திரிகிறேன் அல்லேன்.

இங்குற்றேன் அல்லேன் –
இங்கே இருந்து சாதனங்களைச் செய்கின்றவர்களிலே ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன்.

உபாசகர், ஆரப்த யோகர் என்றும், ஆரூட யோகர் என்றும் இரு வகையர்.-
அவர்களில் ஆரூட யோகர் படி தமக்கு இல்லை என்கிறார் என்று கூறத் திருவுள்ளம் பற்றி அதனை அருளிச் செய்கிறார்
‘முக்தர்’ என்று தொடங்கி.‘சித்த சாதனனாய்’ என்றது, சாதனங்கள் எல்லாம் அநுஷ்டித்துப் பலத்தினை
அநுபவிப்பதற்காக அங்கே செல்ல இருக்கிற ஆரூட யோகனாய் என்றபடி.
ஆரப்த யோகர் படி தமக்கு இல்லை என்கிறார் என்று கூறத் திருவுள்ளம் பற்றி அதனை அருளிச் செய்கிறார்
‘இங்கே இருந்து’ என்று தொடங்கி. ‘சாதனங்களைச் செய்கின்றவர்களிலே’ என்றது,
சாதன அநுஷ்டானம் செய்ய ஆரம்பித்த ஆரப்த யோகரிலே என்றபடி.
ஆக, மேல் திருப்பாசுரத்தில் “நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்” என்று சொன்ன உபாயம் இன்மையை,
இத் திருப்பாசுரத்தில்
“அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்” என்று வேறு வகையாக அநுபாஷிக்கிறார் என்பதாம்.

அன்றிக்கே,
“ஸ உத்தம : புருஷ : ஸதத்ர பர்யேதி ஜக்ஷத்கிரீடந் ரமமாண:
ஸ்திரீபிர்வா யாநைர்வா ஜ்ஞாதிபிர்வா ந உபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்” என்பது, சாந்தோக்யம், 8. 12 : 3.
“சனங்களுடன் இந்தச் சரீரத்தை நினையாதவனாகிறான்” என்கிறபடியே,-
உன்னை அநுபவித்துச் சம்சாரத்தை நினையாதிருக்கிறேன் அல்லேன்.

இங்குற்றேன் அல்லேன் –
“மறந்தேன் உன்னை முன்னம்” -பெரிய திருமொழி, 6. 2 : 2. என்கிறபடியே, உன்னை மறந்து,
“அவர் தரும் கலவியே கருதி” -பெரிய திருமொழி- 1. 1 : 1.என்கிறபடியே,
அதுவே பேறாக இருக்கிறேன் அல்லேன் என்னுதல்.
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை -திருவிருத்தம், 95-நல் வீடு செய்கையாலே அப்படி இருக்க மாட்டாரே.
இவ் வுலக இன்பங்களில் ஏதேனும் ஒன்றனைப் பற்றிப் பகவத் விஷயத்தை விட்டே போம்படியான
இந்தச் சம்சாரி சேதனனுடைய நினைவானது
மீண்டும் தொடராதபடி அதனை நன்றாக விடுவிக்கையாலே என்றபடி.

உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து யான் எங்குற்றேனும் அல்லேன்-
ஆனால், ஒரு காலத்திலாகிலும் சில செய்ய வல்லீரோ? என்னில்,
‘ஆனால்’ என்றது, ஆருடயோகரும் ஆரப்த யோகரும் அல்லீராகில் என்றபடி.
‘செய்ய வல்லீரோ’ என்றது சாதனங்களை அநுஷ்டிப்பதற்கு யோக்கியதை தான் உமக்கு உண்டோ? என்றபடி
அது, முன்பே தானே உன்னை விட்டு ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்” என்று சொன்னேனே அன்றோ.
ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியவர்கள் அதற்கு ஆற்றல் உள்ளவராய் இருக்க வேண்டும் அன்றோ.

‘உன்னைக் காண வேணும்’ என்னும் ஆசையாலே வலிமை குன்றினவனாய்த் தளர்ந்தேன்.-
ஆதலால் சாதனங்களைச் செய்வதற்கு ஆற்றலுடையவன் அல்லேன். இது, பூர்வர்கள் நிர்வாஹம்.

அங்குற்றேன் அல்லேன் – நித்திய சூரிகளோடு கூட அங்கே இருக்கிறேன் அல்லேன்.
இங்குற்றேன் அல்லேன்-சம்சாரிகளைப் போன்று இங்கே உண்டு உடுத்துப் போருகிறேன் அல்லேன்.
இங்ஙனே ஆனால்,-பக்தி பாரவச்யத்தால் -நிரதிசய பக்தியால் – நீ வந்து முகங்காட்டுமளவும்
நடு ஓர் இடத்தில் நிற்கப் பொறாதவனாக இருக்கிறேன். -( எங்குற்றேனும் அல்லேன்-உம்மைத்தொகை )
பிரபந்நர் ஆர்த்தப் பிரபந்நர் என்றும், திருப்தப் பிரபந்நர் என்றும் இரு வகையர்;
அவர்களுள், திருப்தப் பிரபந்நனல்லேன் என்கிறார்
உன்னைக் காணும் அவாவில் -நிரதிசய பக்தியால் -வீழ்ந்து யான் எங்குற்றேனுமல்லேன் –
“காலாழும்”(பெரிய திருவந்.) என்றபடியே, பக்தி பாரவஸ்யத்தாலே அசக்தனான நான்,
மேலும் சாதந அநுஷ்டானத்துக்குத் தக்கவனல்லேன் என்றபடி.

“ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம்” -பெரிய திருமொழி, 4 : 9 : 3-என்கிறபடியே,
அந்த ஆசையிலே வீழ்ந்து கரையேறமாட்டாதே தடுமாறா நின்றேன்.–உம்மைத் தொகை -நடுவிலும் இல்லாமல் –
பக்தி பாரவஸ்யத்தாலே, “சேஷிசெய்தபடி கண்டிருக்கிறோம்” என்று ஆறியிருக்கப் பொறுமை யுடையவனல்லேன் என்றபடி.
இதனால், திருப்தப் பிரபந்நன் அல்லேன் என்றபடி.

இலங்கை செற்ற அம்மானே-
தம் தலையில் ஒன்றும் இல்லாமையைக் கண்டார், ஒன்றும் இல்லாதார் பெற்ற இடத்தைப் பார்க்கிறார்;
கைம்முதல் அற்றவன் முன்பு ஈட்டி வைத்த செல்வத்தை வாங்கிப் பார்க்குமாறு போலே.
தன் பேறாகக் கொள்ளுமவன் என்பார் ‘அம்மானே!’ என்கிறார்.
இலங்கையில் இருந்து அங்கு உற்றார்கள் இடம் பொருந்தாமல் உம்முடனும் சேராமல் இருக்க -இலங்கை செற்ற அம்மானே-
அன்றிக்கே,
ஸ்வரூபம் பிரகாசித்தால், அவன் தலையிலே தள்ளி வைக்கவுங்கடவதாய், அவனும் பிராட்டிமாரைப் போன்று
மேல் விழுந்து விரோதிகளையும் போக்கி அணைக்கைக்கு வேண்டும் சம்பந்தம் உண்டாய்க் காணும் இருப்பது என்னுதல்.
நன்று; அவை எல்லாம் செய்தமை உண்டு, ஆனாலும், அதற்குப் பிற்பட்டதே? என்ன,
அக்கண்ணழிவு அறுத்துவைத்தாய் அன்றோ என்கிறார் மேல்:

திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவரமங்கலநகர் உறை-
சந்திர மண்டலம் வரை செல்ல உயர்ந்து இரத்தின மயமான மாடங்களை யுடைய சிரீவரமங்கல நகரிலே,
அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்தியவாசம் செய்கின்றாயில்லையோ?

நீடுகை –
நீட்சியையுடைத்தாயிருக்கை. அன்றிக்கே, திங்கள் சேர் மணிமாடம் நீடு என்பதற்கு,
சந்திரனோடே சேரும்படி மாணிக்க மயமான மாடங்கள் வளர்கின்ற என்னுதல்.
அது அப்படியேயானாலும் பரிகரம் இல்லையே? என்ன,

சங்கு சக்கரத்தாய் –
அங்ஙன் கண்ணழிவு சொல்லலாமோ? ஒரோ கைக்குப் படை அன்றோ கூட நிற்கிறது என்கிறார்.
அங்கு ஒரே கையில் ஒரே வில்-
இங்கு, “இலக்குமணனே! வில்லைக் கொண்டு வா” என்னவேண்டும் குறை உண்டோ.
பிறர் கை பார்த்திருக்கவேண்டும் குறை உண்டோ இங்கு. பரிகரங்களை அழைத்துக் காரியம் கொள்ளவேண்டும்படியோ உனக்கு இருக்கிறது.
1-நீ அண்மையிலிருப்பவன் அல்லாமையோ,-நீ சந்நிஹிதன் —
2-நீ ஆற்றலுடையவன் அல்லாமையோ,
3-உனக்குப் பரிகரம் இல்லாமையோ,
4-பரிகரம் தான் கை கழிய நின்றோ,-
சங்கு சக்கரத்தாய் -இதுவே நிரூபகம் – எதனாலே தான் இழக்கிறது? என்ன, அவை எல்லாம் அப்படியே,
இத்தலை இப்படிக் குறைவற்றிருந்தாலும் பிரயோஜனம் இல்லையே,
அத்தலையும் குறைவற்றிருக்க வேணுமே? -இச்சை-ருசி உள்ளதா -என்ன,

தமியேனுக்கு –
1- இத்தலையும் குறைவற்றது என்கிறார். ருசி உள்ளதே –
அங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன், -அங்கே சதா பஸ்யந்தி அன்றோ
இங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன். -இங்குள்ளார்க்கு இவ்விஷயத்தை அறியாமையாலே பிரிவு இல்லையே.
தமியேனுக்கு-
2-உன்னை ஒழியத் துணை இல்லாத எனக்கு. ஸ்வரூபத்தைச்‘சாதனம்’ என்று
செலவு எழுதிக் கழிக்கில் கழிக்குமித்தனை. -சாதநாந்தர சூன்யன்
அவாவில் வீழ்ந்து -பக்தி -சிநேக பூர்வம் உபாயம் ஆகாதோ -என்னில் இது ஸ்வரூபம் தானே –
சாதனம் என்று இத்தை எழுத ஒண்ணாதே
நீ உபாயம் ஆனாலும் உபாயத்தைப் பிரதிபத்தி பண்ணுவார் வேண்டாவோ.-
பிரபன்ன ஜன கூடஸ்தர் என்னை அன்றோ சொல்கிறார்கள் –
தமியேன்-
3-பிராட்டியில் வேறுபாடு அங்காகில் ஒரு திரிசடையாகிலும் உண்டே அன்றோ,
இங்கு “ஆவார் ஆர் துணை” என்னும்படி அன்றோ தனிமை. ஆயின், செய்யவேண்டுவது என்? என்ன,

பிரிந்து இருக்கும் எனக்கு-உபாய ஸூன்யனான எனக்கு -சம்சாரத்தில் துணை இல்லா எனக்கு -இப்படி மூன்றும்

அருளாயே –
என் வெறுமையும் உன் நிறைவும் அறிகைக்கு, நீ அடியில் தந்த அருள் இன்று குடி போயிற்றோ,
அன்று நான் விரும்பாதிருக்க அருளின நீ, விரும்புவதற்குத் தகுதியைப் பிறப்பித்துப் பொகடவோ.
ருசியை உண்டாக்குவார் ஒருவரும், உபாயத்தை அநுஷ்டிக்கிறவர் ஒருவருமாயோ இருப்பது.
நின்னருளே புரிந்திருக்கிற எனக்கு அருளாயாகில் பின்னை யார்க்கு வேறு அருள இருக்கிறாய்.

————————————————————————————-

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-

இதில் பிரத்யுபகாரம் இல்லை -ஆகிஞ்சன்யம் முதல் பாசுரம் -அடுத்த பாசுரம் –பிரதி பந்தக நிரசனம்
அதிசயித பரத்வ ஸூ சக ஆகாரம் -அங்கீ கரித்து அருளிய உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் செய்ய ஒன்றும் இல்லையே
கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா -சர்வேஸ்வர -அடையாளம் -நானும் அனுபவிக்கும் படி கொடுத்து அருளி
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -வஸ்து என்று சொல்லவும் கூடாத –
புத்தியும் பண்ணவும் முடியாத -வஸ்துதாம் உபதாயோகம் –
அசந்நேவ-ப்ரஹ்மம் தெரியாமல் அசத்தாக -லப்த ஸ்வரூபன் ஆக்கி சந்தமேனம் என்னும் படி
வாசிகமான கைங்கர்யமும் கொண்டாய்-அத்தை முழுவதும் நடக்க
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு -ஞானாதிசயம் உடையார் -நான்கு வகை
வேதம் வல்லவர்கள் -பகவத் சம்பந்தம் -அறிவார்கள் என்பதால் வாழ்கிறவர்கள்
தெருள் கொள் -வேதத்துக்கும் விசேஷணம்
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே -நிரவதிக கிருபை பண்ணி –
இந்த திவ்ய தேசத்தில் பண்ணியது தமக்கு செய்தால் போலே
என்னை அடிமை கொள்ளவே அங்கு நித்ய வாசம் செய்து அருளுகிறாய்-
இதற்கு பிரத்யுபகாரம் பண்ணியதாக அறியேன் -அதனால் நீயே அருள வேண்டும் -தமியேனுக்கு அருளாய் -கீழ் உடன் அந்வயம்

ஸ்ரீ சடாரியிலே நம்மாழ்வார் -அதனால் சடாரி சாதிக்கும் பொழுதும் இங்கே கொஞ்ச நேரங்கள் தான் –
அருளாய் என்றீர் -அருளக் கடவோம் -அதில் ஒரு தட்டில்லை –
சாஸ்திர பலம் -பிரயோக்தா– அருள் பெறுவார் இடம் சிறிது வேண்டுமே
கர்த்தா சாஸ்த்ரார்த்வத்-கர்த்ருத்வம் -ஜீவாத்மா -சாஸ்திரம் உபதேசிப்பதும் கர்த்தாவா இடம்
சேதனன் பிரயோக்தாவாக இருக்கும் பொழுது தானே சாஸ்திரம் பலம் கொடுக்கும்
மேல் உற்றக் கிட்ட -மேட்டுக் குடி மக்களுக்கா -கீழ் உற்றவனுக்கு ஏதேனும் உண்டோ என்ன –
இத்தலையில் கிஞ்சித் காரம் விட்டு -உபாய பாவத்தை விட்டு -உன் கிருபையாலே செய்து அருளாய்
இவ்வளவும் வர -முன் மயர்வற மதி நலம் அருளின பின்பு -விதி வாய்க்கின்றது சொல்ல வைத்த பின்பு –
மேலும் நீயே செய்து அருள வேண்டும் -உன் பெருமையையும் என் சிறுமையையும் பாராதே நிர்ஹேதுகமாக –
பிராப்தியையும் நீயே செய்து அருள வேணும்
கறை அணி மூக்கு போலே கருடப்புள் -கறுத்த திரு முகம்

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட
உன்னை அறிந்தோ
மேலும் சொல்ல வேண்டுமோ உன் உயர்த்தி
த்வஜமாக -அருளாழிப் புள் -ஆஸ்ரிதர் இடம் கூட்டி வர
பெருமைக்கு நிரபேஷ சாதகம்
மேலே சொல்வது மிகை -நீர்மைக்கு -அருளாழிப் புள்
சக்கரப்படை -அதுவும் வர வேண்டும் படியோ இது இருப்பது
அருளார் திருச் சக்கரம் -இதுவும் நீர்மைக்கு –
வான நாட -ஓன்று எடுக்கவும் ஓன்று பிடிக்கவும் வேண்டுமோ
இருந்தாலே போதுமே -இருப்பிடமே அமையும்
வாசச் ஸ்தானம் -சர்வாதிக லஷணம் -மூன்றும் -இவை ஓர் ஒன்றே அமைந்து இருக்க -சர்வ பிரகார பரி பூர்ணன்
கருடன் டகாரம் ளகாரமாய் கருள
கருள் -கறுப்பாய்-சீற்றமாய் -பிரதிபஷம் மேல் சீற்றம்
கருள் உடைய பொழில் மருது -பெரியாழ்வார்

என் கார் முகில் வண்ணா –
பெருமை பார்க்காமல் அனுக்ரஹித்தாயே
வர்ஷிக்கும் ஸ்தலம் தான் பார்த்தாயோ –
உன் பெருமையை பார்க்காமல்-நீசன் என்றும் பார்க்காமல் ஔதார்யம் -செய்து அருளி -பிரயோஜன நிரபேஷமாய் பண்ணின படி
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
அவஸ்துவாக- இருக்க –வஸ்து முன்பு உண்டாய் அதுக்கு உத்கர்ஷம் செய்து அருளினாயோ
அசந்நேவ -விஷயீ காரத்துக்கு முன்பு -நஷ்டம் பராக் -திருக் கண் கடாஷம் முன்பு –
சந்தேமேனம் என்று உஜ்ஜீவிக்கும் படி செய்து அருளி -அடிமையில் ருசியைப் பிறப்பித்து அடிமையும் கொண்டாய்
பெரு மக்கள் உள்ளார் போலே நித்ய சூரிகள் போலே -உண்டாக்கி மட்டும் இல்லாமல் ஜீவனம் கொடுத்தாய் -கைங்கர்யமே ஜீவனம் –
கார் முகில் என்றது பலித்த படி –

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா –
சர்வாதிகன் -தாழ்ச்சி பாராமல் -அருளி -அடிமை கொண்டு –

என்-
முன்பு பண்ணின உபகாரங்கள் -அனுபூய அம்சம் உண்டு- போராது
அடி தொழுது எழப் பண்ணினீர்
ஸூ நிஷ்கர்ஷகம் சொல்வது ஞான கார்யம் -ஈச்வரோஹம் என்று இருப்பது அஜ்ஞ்ஞான கார்யம்

தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ்
ஞானம் சொல்லி -வாழ் -தனியாக -அனுபவம் சொல்வது எதனால் -திவ்ய தேச வாசமே உஜ்ஜீவனம் –
இருப்பதே தானே சிறப்பு -வேத தாத்பர்யம் -செழும் பொருள் கை வந்தவர்கள் -அவனாலே அவனை அடைவது
நான்கு வேதங்களையும் நிர்வகிக்கும் சக்தர் -நிறைந்து பலர் -வேத அர்த்த பூதனைக் கண்டு அனுபவிப்பவர்கள்
பலர் வாழ்
ஸ்ரீ வைகுண்டம் போலே திரள் திரளாக -வேத அர்த்தம் கண்டு அனுபவிப்பவர் -அவனே வேத அர்த்தம் -அவனுக்கு கைங்கர்யம் செய்வதே -வாழ்ச்சி
கைங்கர்யம் செய்வதே கற்றதன் பலன் -கற்றபின் நிற்க அதற்குத் தக
வள்ளுவர் இடைக்காதர் ஔவையார் குரு முனி வாய் மொழி -கொண்டே பாடினேன் -என்பார்
வேதார்த்தம் தெய்வ நாதனை அனுபவிப்பது
கங்கையில் உள்ள மீன்கள் -அங்கே வாசம் செய்தாலும் ஞானம் இல்லையே –தேவாலாய பஷிகள் -தீர்த்தானி புண்ய ஆயதன-மட்டும் போதாதே
ஞானமும் அத்துடன் சேர்த்த வ்ருத்தியும் வேண்டுமே -வாழ் -கைங்கர்யம் செய்து வாழ்கிறது

சிரீவர மங்கல நகர்க்கு அருள் செய்து அங்கு இருந்தாய்
நகரில் உள்ளாருக்கு தன்னைக் கொடுக்கும் இருப்பு தனக்கு செய்தால் போலே -தன் பேறாக அவன் நினைக்க -இவரும் தன் பேறாக
என்னை அடிமை கொள்ள அங்கு வந்து இருந்தாய் -என்றுமாம்
கைங்கர்யம் விச்சேதம் வரக் கூடாது என்று இங்கே நித்ய வாசம் செய்து அருளுகிறாய் -மீதி பாசுரங்களும் முடிக்க வேண்டுமே

அறியேன் ஒரு கைம்மாறே-
நீ இவ்வளவாக செய்த உபகார பரம்பரைகளுக்கு நான் ஒன்றும் செய்ததாக அறியேன் -பண்ணுவதற்கு ஏதும் இல்லை
ஏதும் இல்லை முன்னும் பின்னும் -குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய் போலே
காரணமாகவும் ஏதும் பண்ண வில்லை பிரதியுபகாரமாகவும் ஏதும் பண்ண வில்லை
முன்பு உபகரித்ததுக்கு ஹேது என் பக்கல் கிஞ்சித் உள்ளது என்று சொல்ல முடியாதே
ஆகவே நீயும் மேலும் நிர்ஹேதுகமாக அருள வேண்டும்
ஹேது இல்லை -ஆனால் -வாங்கிக் கொள்ள நீர் இருந்தீரே -என்றும் சொல்ல முடியாதே
வஸ்துவாகவே நான் இல்லையே -நீர் தான் வஸ்து ஆக்கி அருளினீர்
மேல் உள்ளவற்றையும் நீயே செய்து அருள வேண்டும் என்கிறார்

——————————————————————————-

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணி
நீறு செய்த எந்தாய்! நிலம் கீண்ட அம்மானே!
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
ஏறி வீற்றிருந்தாய்! உனை எங்கு எய்தக் கூவுவனே?–5-7-4-

கேவலம் -கிருபையாலே ரஷித்து அருள வேணும் -மதியை ஏவ தயையால் ஏவ –
ஆஸ்ரித சம் ரஷண ஸ்வ பாவன் -என் அபேஷை சாதனம் ஆவது எங்கே
உமது இரக்கமும் -ஆஸ்ரிதருக்கு இரங்கி அல்லது தரியாத உன் ஸ்வ பாவம் -பாண்டவர்களுக்கு அருளியது போல் –
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணி-தனித் தனி விரோதம் -மாறு சேர் படை
சல்யன் -மாமா -உபசாரத்தில் மயங்கி -கர்ணனுக்கு சாரதி -சல்ய சாரத்வம் -பிரசித்த வார்த்தை இதனாலே
பாண்டவர்கள் -தனியரான ஐவர் -கையாளாய்-சகாய பூதன் -பீடிதரான அன்று -மாயப்போர் பண்ணி –
நீறு செய்த எந்தாய்! நிலம் கீண்ட அம்மானே!-இரு நிலம் அவித்த -சமஸ்த சேனைகளையும் பூ பாரம் தவிர்த்து –
மகோ உபகாரகன் -கேவலம் கிருபையாலேயே ரஷித்த இடம் அன்றோ இது –
வியாபார ஷமையும் அல்லாத -பிரளயம் கொண்ட பூமி -வராக கோபாலர் வம்ச பூமிகளை –
இடந்து எடுத்து -ஸ்வாமி -பாண்டவர் என்னையே -கொண்டவர்கள் -பூமி -வியாபரிக்காத -என்னைப் போலே
பிற்பாடர் ஆனீர் -என்ன
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர் ஏறி வீற்றிருந்தாய்! -இழக்காமல் தானே -பிராப்ய பிராபக ஞானம் உணர்ந்த –
வைதிக பகவத் சமாராதனம் இடை விடாமல் நடக்கக் கூடிய -அவர்கள் உடன் ஒக்க கலந்து -ஏறி ஆராத்யனாய் -வீற்று இருந்து
உனை எங்கு எய்தக் கூவுவனே?-அபேஷா நிரபேஷனாக ஸ்வயம் ஏவ -அநந்ய சாத்யனான-உன்னை
எங்கே பிராபித்தாக கூவுவேன் -நீயே தானே வர வேண்டும் –
உம்மை மற்று ஒன்றால் அடைய முடியாது -நீர் எழுதின சாஸ்திரம் அறிவித்த பின்பு –
நீ வரித்து திருமேனி காட்டினால் தானே காண முடியும் -நீ கூவுதல் வருதல் செய்ய வேண்டுமே —
உன் திருவடிகளை கொடு வினையேனும் பிடிக்க

பகைவர்களாகச் சேர்ந்த சேனையையுடைய துரியோதனன் முதலிய நூறு பேர்களும் அழியும்படி, தனியரான பஞ்சபாண்டவர்களுக்காக
வஞ்சனையையுடைய போரைச் செய்து சாம்பலாகச் செய்த என் தந்தையே! பிரளயம் கொண்ட பூமியை எடுத்து வந்த அம்மானே!
தெளிந்த ஞானத்தையுடையவர்களுடைய வேத ஒலியும் யாகங்களும் நீங்காமல் இருக்கின்ற ஸ்ரீவரமங்கல நகரிலே சூடி ஏறி வீற்றிருந்தவனே!
உன்னை அடைவதற்கு எந்த விதமான முயற்சியைச் செய்வேன்?
மாயப் போர் பண்ணி நூற்றுவர் மங்க நீறுசெய்த எந்தாய் என்க. ஞானத்தாருடைய வேதமும் வேள்வியும் என்க.
உன்னை எய்த எங்குக் கூவுவன்? ஓர் என்பது, வேறு துணை இன்மையைக் காட்ட வந்தது.

‘வெறும் உன் கிருபையாலே காத்தருள வேண்டும்’ என்னா நின்றீர், நாம் இதற்கு முன்னர் அங்ஙனம் செய்த இடம் உண்டோ? என்ன,
ஒன்று இரண்டு உதாஹரணங்களை எடுத்துக் காட்டி. இங்ஙனே செய்தது இல்லையோ, எனக்கும் செய்தருள வேண்டும் என்கிறார்.

மாறு சேர் படை நூற்றுவர் –
பகைவர்களாய்க் கொண்டு வந்து சேர்ந்த படையையுடைய நூற்றுவர்.
துரியோதனாதியர்கட்குத் துணையாளராய் வருகை அன்றிக்கே, தனித்தனியே பகைவர்களாய் வந்து கிட்டினார்களாதலின்,
‘மாறு சேர்’ என்கிறது.
அன்றிக்கே,
படையோடு கூடிப் பகைவர்களாய்ச் சேர்ந்த நூற்றுவர் என்றுமாம்.சேனை படைக்கலம் என்று இரண்டும்
த்விஷதந்நம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத் பாண்டவாந் த்விஷஸே ராஜந் மம பிராணாஹி பாண்டவா:”
“பகைவனுடைய சோற்றைப் புசிக்கலாகாது” என்கிறபடியே, தனக்குப் பகைவர்களாக நினைத்திருக்கிறபடி.

மங்க –
மாள -விளக்குப்பிணம் போலே காண ஒண்ணாதவாறு செய்தபடி.

ஓர் ஐவர்க்காய் –
இரண்டு பக்கங்களும் ஒத்திருக்க, ஒரு தலையிலே நின்றாயத்தனை அன்றோ.
கேவலம் கிருபையாலே தாழ்ந்த தலையிலே நின்றாயே –
உளனான ஒரு சாரதியும்கூட முதன்மை யற்றவனாம்படி தனியரான ஐவர் ஆதலின் ‘ஓர் ஐவர்’ என்கிறது.
ஐவர்க்காய் –
அவர்களுக்குத் தன்னை வேண்டியவாறு உபயோகப்படுத்திக் கொள்ள வைத்தபடி.

அன்று –
போரிலே நோக்குள்ளவர்களாய் வந்த அன்று.

மாயம் போர் பண்ணி –
ஆச்சரியமான போரைச் செய்து.
அன்றிக்கே,
வஞ்சகமான போரைச் செய்து என்னுதல். என்றது,
பகலை இரவாக்கியும்,
ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுத்தும்,
பகைவர்களுடைய உயிர்நிலையைக் காட்டிக் கொடுத்தும் செய்தமையைத் தெரிவித்தபடி.-மாயப்போர் தேர்ப்பாகு-

நீறு செய்த –
“கூறாய் நீறாய் நிலனாகி” -திருவாய். 6. 10 : 2.-என்கிறபடியே, சாம்பல் ஆக்கின.

எந்தாய் –
எந்தையே! பாண்டவர்களுக்காகத் துரியோதனாதியர்களை அழித்ததும் தம் பேறாக இருக்கிறபடி.
நீர் சொல்லுகிறவை எல்லாம் செய்தமை உண்டு ஆனாலும், அவர்கள் எனக்குப் பவ்யர் அலரோ? என்ன,
ஆயின், அதுவும் பாராதே அன்றோ நீ பூமியைக் காப்பாற்றியது என்கிறார் மேல்:

நிலம் கீண்ட அம்மானே-
அது கிடக்கிடு வேணுமாகில், அதற்கு ஒன்று சொல்லுகிறாய்;
பிரளயம் கொண்ட இப்பூமிக்கு என்ன தக்கோர்மை இருந்தது நீ செய்வதற்கு?
‘எடுக்க வேணும்’ என்ற விருப்பமும் இல்லாமல், செய்ந்நன்றி யறிதலும் இல்லாமல் இருக்கிற இந்தப் பூமிக்கு
உதவி செய்தாயில்லையோ? இங்கு ஒருதலையே அன்றோ உள்ளது.-வராஹ நாயனார் மட்டுமே ச்நேஹித்தார் பூமி சொத்து என்பதால்

அம்மானே –
‘உடைமை இழக்க ஒண்ணாது’ என்று, வெறும் உன் கிருபையாலே செய்த இத்தனை அன்றோ.

தேறு ஞானத்தர் வேத வேள்வி அறா –
அநுஷ்டானத்தையும் அநநுஷ்டானத்தையும் விகல்பிக்கலாம்படி தெளிந்திருக்குமவர்கள்.
அநநுஷ்டானம் சாதனம் ஆகாதே அன்றோ. ‘விலக்கிய ஒழுக்கங்கள் நமக்கு இரக்ஷகம் ஆகா’ என்றிருக்குமாறு போன்று,
‘விதித்த ஒழுக்கங்களும் நமக்கு இரக்ஷகம் ஆகா’ என்றிருக்குமவர்கள். ஆனால், இவற்றைச் செய்வது என்?என்னில்,
சர்வேச்வரனுடைய ஆணையைச் செய்தவன் ஆகிறான்.
அன்றியும், விலக்கிய ஒழுக்கங்கள் இராசத தாமத குணங்களை வளர்ப்பிக்குமாறு போலே,
விதித்த ஒழுக்கங்களும் சத்துவ குணத்தை வளர்ப்பிக்கக்கூடியனவாய் இருப்பனவே அன்றோ.-ஞான யோகம் வளர இது வேணுமே
அன்றியும், சேதனன் ஆகையாலே ஒரு தொழிலைச் செய்தன்றி நில்லானே.
“ஸத்வாத் ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோபஏவச ப்ரமாத மோஹௌ தமஸோ பவத: அஜ்ஞாநமேவச”- ஸ்ரீ கீதை, 14 : 17.
“சத்துவ குணத்தினின்றும் ஞானம் உண்டாகின்றது” என்கிறபடியே, ஞானத்துக்கும் காரணமாக இருக்குமே அன்றோ, ஆகையாலே,
அநுஷ்டிக்கத் தக்கனவாகக் கடவனவேயாம்.

சிரீவரமங்கல நகர் ஏறி வீற்றிருந்தாய்-இவனும் அவர்களிலே ஒருவனாய்
ஒரு சேரக் குடி ஏறி இருக்கிறபடி. ‘இவர்கள் நடுவே இருக்கப் பெற்றோமே’ என்று பெறாப்பேறு பெற்றனாய் இருக்கிறபடி.

உன்னை-
வேறு உபாயங்களாலே அடைய முடியாதவனான உன்னை.

எங்கு எய்தக் கூவுவன் –
நீ இவ்விருப்பு இருக்கைக்கு நான் செய்தது ஏதேனும் சாதனம் உண்டாகில் அன்றோ என்பேற்றுக்கு நான் ஏதேனும் செய்வது. என்றது,
இவ்வளவாகச் செய்த நீ இனியும் உன் கிருபையாலே செய்தருள வேணும் என்றபடி.

—————————————————————————————-

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!–5-7-5-

காரார் திருமேனி காணும் அளவும் போய்-நிறைய அருளினாய் -திரு மந்த்ரார்த்தம் போல்வன -மேலும் வேண்டுமே –
அதே போலே இவரும் நீ நிறைய அருளி உள்ளே இன்னும் வேண்டும் என்கிறார் இதில்
ஆஸ்ரித விரோதிகள் -ஆசூர பிரக்ருதிகளை அந்தர் பேதம் பண்ணி அழிக்கும் -ஸ்வ பாவன்
ஆஸ்ரிதர்க்கு என்று நித்ய வாசம் -அனுபாவ்யனாய் -இப்படி இருக்கிற நீர் -நான் பிரவர்த்திக்க வேண்டுமோ
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று-புருஷார்த்த பிராப்திக்கு பிரார்திக்கை அனுரூபமோ
அனன்யார்ஹ சேஷ பூதன் பர தந்த்ரன்
திருக் கமல பாதம் தானே வந்தது
அசுரர்கள் -எவ்வ தெவ்வத்துள் புத்தாதி விக்ரகம் கொண்டு –தெவ்வம் -சத்ருக்கள்-
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!-கறுத்த காது நீண்ட பெரிய வயிறு தலை மொட்டை புத்த அவதாரம்
நெஞ்சை கலக்கும் சியாமள திரு மேனி -மயக்கி வேத ஸ்ரத்தை விட வைத்து
தன் பால் ஆதாரம் பெருக வைத்த -ஐயம் அறுத்த அழகு இங்கு வேதம் ஆதரவு அழித்த அழகு
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்-க்ருதக்ருத்யர் -பூமியிலே சூரி சாமான்யர் ஞானாதி ஐஸ்வர்யம் -பூ சுரர்கள்
கை விடாமல் வர்த்திக்கும் திவ்ய தேசம்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!-அவர்களால் சேஷ வ்ருத்தி -பண்ணும் படி -இருந்தாய்
நானும் -அவர்கள் போலே சேஷத்வ ஞானம் உடைய நானும் கண்டேன்
ஆனபின்பு என் விரோதியையும் பேதித்து -உன்னை அனுபவிப்பிக்கவும் நீயே செய்து அருள வேணும்

பேற்றினைப் பெறுதற்கு நான் உன்னை அழைத்தல் எனக்குத் தகுதியாகுமோ? எவ்வகைப்பட்ட பகைவர் கூட்டத்துள் நீயும்
ஒருவனாகச் சேர்ந்து புத்தமுனியாய் நின்று வஞ்சகமாகக் காரியங்களைச் செய்த கரிய மேனியையுடைய அம்மானே!
ஐவகையான யாகங்களைச் செய்தவர்களும் பூ தேவர்களுமான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
நீங்காமல் எழுந்தருளி யிருக்கின்ற ஸ்ரீ வரமங்கல நகரிலே எல்லாரும் கை கூப்பி வணங்கும்படியாக எழுந்தருளியிருக்கின்றாய்;
அதனை அடியேனும் கண்டேன்.
எய்தக் கூவுதல் எனக்கு ஆவதே என்க. தெவ்வத்துள்: தெவ் – பகை. அத்து: சாரியை. உள்: ஏழாம் வேற்றுமை உருபு.
நின்று செய்யும் அம்மான் என்க. வையத்தேவர் – நிலத்தேவர்; ஸ்ரீ வைஷ்ணவர்கள்.

அடியார்கள் பக்கலிலே நாம் வைத்திருக்கும் பக்ஷ பாதத்தையும் சிரீவரமங்கல நகரில் இருப்பையும் உமக்குக் காட்டினோமே,
“எங்கு எய்தக் கூவுவன்” என்று ஒன்றும் பெறாதாரைப் போன்று, கூப்பிடா நின்றீரே? என்ன,
செய்த அம்சத்தை அறிந்தேன், அதனாலே நிறைவு பெற்றவன் ஆகின்றிலேன் என்கிறார்.

இதே போலே கலியனும் -செய்த அம்சங்கள் உண்டு —வாழ்ந்தே போம் -இந்தளூரீரே–
சிந்தை தன்னில் நீங்காது இருந்த திருவே -போதாதே -தழுவி முழுசி பரிமாற்ற வேண்டும்

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு –
பொகடு, அதுகிடக்கிடாய், இந்தத் திருமகள் கேள்வனைக் கண்ட உனக்கு -விபரீத லஷ்ணையால் –
‘இவன் சாதன அநுஷ்டானம் பண்ணுவான்’ என்று தோற்றி இராதோ.
உன்னிலும் என்னை நான் அறிவேனே அன்றோ! என்னால் செய்யலாவது உண்டோ என்று கேட்கிறார்,
‘அவனாலே பேறு என்றிருக்குமவர் ஆகையாலே’; நீ கைவிட்ட அன்று நான் அநுஷ்டிக்கும்படி,
திருமகள் கேள்வனான உன்னோடு ஒக்க விகல்பிக்கலாம்படி இருந்தேனோ என்கிறார்.
எய்தக் கூவுதல் ஆவதே –
நீ எனக்குக் கைப்படும்படியாக விரும்புதல் ஆவதே.
எனக்கு-
வலி இல்லாதான் ஒருவன் தலையிலே ஒரு மலையை வைத்தாற்போலே இருக்கிறது காணும் இவர்க்கு.
“மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவ ஏஷ்யஸி யுக்தா ஏவம் ஆத்மானம் மத் பராயண:” என்பது, ஸ்ரீ கீதை, 9: 34
“என்னை வணங்குவாய்” என்றால்,உபாயாந்தர பக்தி யோகம் விதித்தால் – பின்னர் இல்லை யாவரே அன்றோதான்.
இனி, பிரபலனாயிருப்பான் ஒருவன் அதனைத் தள்ளி ‘அஞ்சாதே கொள்’ என்ன வேண்டுமே அன்றோ,
ஆகையாலே, அவன், பகைவர்களை அழித்த தன்மையை அருளிச் செய்கிறார் மேல்:

எவ்வ தெவ்வத்துளாயும் ஆய் நின்று கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே –
அடியர் அல்லாதார் பக்கல் செய்வதனை, வேறு கதியற்ற வற்றவர்களாயிருக்கின்ற அடியார் பக்கலிலும் செய்யப் புக்கதோ இப்போது.
அங்கு வைதிக ஸ்ரத்தை குலைத்தீர் -இங்கு நீயே உபாய அத்யவசாய ஸ்ரத்தை குலைக்கப் பார்க்கிறீர் –
எவ்வ தெவ்வத்துளாயும் ஆய் நின்று –
எவ்வகைப்பட்ட பகைவர்கள் கூட்டங்களினுள்ளே புக்கு.
தெவ்வர் – பகைவர். தெவ்வம்-பகைவர் கூட்டம். “தெவ்வர் அஞ்சு”- பெருமாள் திருமொழி —10-3- என்னக்கடவதன்றோ.
கைதவங்கள் செய்யும்-
வஞ்சகங்களைச் செய்கின்ற. என்றது, புத்த முனியாய் அவர்கள் நடுவே புக்கு நின்று அவர்களுக்குண்டான
வைதிக சிரத்தையைப் போக்கினமையைத் தெரிவித்தபடி.

கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே –
வசனங்களாலும் யுக்திகளாலும் வஞ்சகங்களைச் செய்து வைதிக சிரத்தையைப் போக்கி,
அவ்வளவிலும் கேளாதார்க்கு வடிவைக் காட்டி வாய் மாளப் பண்ணினபடி.என்றது,
தன்னுடைய வார்த்தைகளாலே அவர்களைச் சவப்பிராயராக்கி,
ஒருவன் அம்புக்கு இலக்காம்படி செய்து வைத்தமையைத் தெரிவித்தபடி.

அம்மானே-
சம்பந்தம் ஒருத்திருக்கச் செய்தே, நீ அவர்களை அழியச் செய்தது அடியார்களுக்காக அன்றோ?
உன்னை ஒழிய -ஒரு தெய்வம் உண்டு’ என்று இருக்கின்றவர்களை அழித்ததைப் போன்றதே அன்றோ.
உன்னை ஒழிய -‘ஒரு தெய்வம் இல்லை’ என்றிருக்கிற என்னை ஒன்று செய்யச் சொல்லுகையாவது.
“ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே” -திருவாசிரியம், 7.-என்றாரே அன்றோ இவர்.
அவர்களுடைய வைதிக சிரத்தையை அழித்தாற்போலே இருக்கிறதாயிற்று,
சித்த சாதனத்தைப் பற்றி இருக்கின்ற தன்மையினின்றும் நெகிழ்த்துச் சாதனத்திலே மூட்டுகிற இது.

செய்த வேள்வியர் –
சித்தோபாய நிஷ்டர்கள்.
“ஸர்வே வேதா: ஸர்வ வித்யா: ஸசாஸ்த்ரா: ஸர்வே யஜ்ஞா: ஸர்வ இஜ்யஸ்ச கிருஷ்ண:
விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணா: தத்த்வத: யே தேஷாம் ராஜன் ஸர்வயஜ்ஞா: ஸமாப்தர்:”-என்பது, பாரதம்.
“அரசனே! எந்தப் பிராஹ்மணர்கள், கிருஷ்ணனை உள்ளபடி அறிகின்றார்களோ அந்தப் பிராஹ்மணர்களுக்கு எல்லா
யாகங்களும் முடிந்தவைகள் ஆகின்றன” என்றாரே அன்றோ.
வேறு ஒன்று செய்யுமவனுக்குக் குறை கிடப்பதும் ஓர் அம்சம் உண்டே அன்றோ.
சித்தோபாய நிஷ்டர்கள் செய்ய வேண்டுமவற்றை எல்லாம் செய்து முடித்தவர்கள் அலரோ.

வையத் தேவர் –
பூசுரர்.

அறாச் சிரீவரமங்கல நகர் கைதொழ இருந்தாய் –
அவர்கள் நித்தியவாசம் செய்கிற ஸ்ரீ வரமங்கல நகரிலே அங்குள்ளவர்கள் அடிமை செய்ய,
அதுவே தாரகமாக இருந்தாய்.

அது நானும் கண்டேன் –
ஸ்ரீவைகுண்டத்தைக் கல விருக்கையாகவுடைய நாம் இங்கே வந்து உமக்காக இருக்க, ஒன்றும் செய்திலோமாகச் சொன்னீரே? என்ன,
இருந்தாய், அதில் தடை இல்லை, நான் அநுபவித்த அம்சத்தை இல்லை செய்கிறேன் அல்லேன்;
அநுபவித்த அம்சம் போராமல் படுகிறேன். என்றது, தேவர் செய்தருளின அம்சம் இவ்வளவு உண்டு,
அதில் குறை இல்லை, எனக்கு அவ்வளவால் போராது என்கிறார் என்றபடி.
திருவடிகளில் கைங்கரியமே யாத்திரையாகப் பெற வேண்டும் என்பது அவாய் நிலை.

———————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம்- 117- திருவாய்மொழி – -5-6–6….5-6-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

June 8, 2016

இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தெனும் யானே என்னும்
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்?
இன வேற் கண்ணி என்மகள் உற்றனவே.–5-6-6-

ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்கள் செய்தேனும் யானே
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்-மூங்கில்கள் உள்ள ஸ்ரீ கோவர்த்தன கிரி
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்-திரள வந்த எருதுகள்
இன ஆன் கன்று மேய்த்தெனும் யானே என்னும்-சிறிய வயசில் கன்றுகளை -வான் கன்று –
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்-திரளான பசுக்களை -வயசு வந்ததும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்-இடைப் பிள்ளைகளுக்கு தலைவன் -தனக்கு நேரான தன்னேராயிரம் பிள்ளைகள் -வாரணம் ஆயிரம் –
பரமம் சாம்யம் -தன் இனத்தவர் -இவர்கள் இனத்தவர் அவன் அன்றோ
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?-சங்கமான கூட்டமான ஸூரிகள் -சாம்யா பத்தி அடைந்தவர்கள் என்றுமாம்
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்?-தன்னில் தான் செறிந்த வேல்
இன வேற் கண்ணி என் மகள் உற்றனவே–அதே கண் அழகு பெற்ற –

கூட்டம் கூட்டமான மூங்கில்களை யுடைய கோவர்த்தனம் என்னும் மலையைத் தூக்கினவனும் நானே என்னும், ஒத்த இடபங்களைக் கொன்றவனும்
யானே என்னும், ஒத்த பசுவின் கன்றுகளை மேய்த்தேனும் யானே என்னும், ஒத்த ஆயர்களுக்குத் தலைவனும் யானே என்னும்,
கூட்டம் கூட்டமான நித்திய சூரிகளுக்குத் தலைவனான சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? வேலை ஒத்த கண்களையுடைய நல்லவர்களான
உங்களுக்கு, வேலை ஒத்த கண்களை யுடையவளான என் மகள் அடைந்தனவற்றை என் சொல்லுவேன்?

ஸ்ரீ கோவர்த்தன மலையைத் தூக்கித் தரித்திருத்தல் முதலான, ஸ்ரீ கிருஷ்ணனுடைய செயல்களை எல்லாம் செய்தேன் நான் என்னா நின்றாள்.

இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்-
அணுக்கனைக்-குடையை- கவிழ்த்துப் பிடித்தாற்போலே, திரள் திரளான மூங்கிலை யுடைத்தான மலையை வருத்தம் இன்றியே
தரித்தேன் நான் என்னா நின்றாள்.

இனம் ஏறுகள் செற்றேனும் யானே என்னும் –
ஒன்று இரண்டு அன்றிக்கே யமனுக்கு ஒத்தனவாக இருக்கிற இடபங்கள் ஏழனையும் ஒரு காலே ஊட்டியாக-கழுத்தாக –ஊண் – என்றுமாம்
நெரித்துப் போகட்டேன் நான் என்னும்.

இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும் –
வத்ஸ மத்யகதம் பாலம் நீலோத்பல தளச்சவிம்” என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா.- 5. 17 : 19.
“கன்றுகளின் நடுவில் உள்ளவனும் இளமைப் பருவமுடையவனும்” என்கிறபடியே, என்னோடு ஒத்த பருவமுள்ள
கன்றுகளை மேய்த்தேனும் நான் என்னும்.
வான் பெரிய கன்று என்றுமாம்-பருவம் ஒத்து -ஸ்ரீ கிருஷ்ண திருக்கர ஸ்பர்ஸத்தால் பெரியனவாயின

இன ஆநிரை காத்தேனும் யானே என்னும் –
முன்பு பிரஹ்மசர்யம் அநுஷ்டித்துப் பின்பு இல்லற தர்மம் அநுஷ்டிப்பாரைப் போலே, இளமைப் பருவத்தில்
கன்றுகளை மேய்த்து, பருவம் நிரம்பின பின்பு பசுக்களை மேய்த்தேனும் நான் என்னும்.

இன ஆயர் தலைவனும் யானே என்னும் –
“தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடை இட்டு வருவான்” -பெரியாழ்வார் திருமொழி. என்கிறபடியே
என்னோடு ஒத்த பருவத்தில் பிள்ளைகளும் நானுமாகத் தீம்பு செய்து திரிகிற இடத்தில் அவர்களில் என்னளவு தீம்பு செய்கின்றவர்கள் இலர் என்னும்.

இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ-
வேறு ஒன்றிலும் விருப்பம் இல்லாதிருத்தலுக்குத் தன்னோடு ஒத்திருக்கிற நித்திய சூரிகளுக்கு நிர்வாஹகனான
சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?
அன்றிக்கே,
இனத் தேவர் என்பதற்கு, தனியே அநுபவிக்க ஒண்ணாமையாலே திரள் திரளாக இருக்கிற நித்திய சூரிகள் என்னுதல்.
“அடியார்கள் குழாங்கள்” என்னக் கடவதன்றோ.

இனம் வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன் –
இவள் நிலை எவ்வளவாய்த் தலைக் கட்டுகிறது என்று, வேல் ஒழுங்கு போலே கூர்க்கப் பார்த்துக் கொண்டிருக்கிற
உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவேன்? ஏன் தான், சொல்ல அருமை என்? என்ன,

இனம் வேல் கண்ணி என் மகள் உற்றன-
தன் கண்களுக்கு இலக்கானார் படுமதனைத் தான் படுகிறபடியைச் சொல்லப் போமோ?
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல் நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே”- திருவிருத்தம் –
என்பதே அன்றோ இவள் கண்களுக்கு இலக்கானார் படுவது.

———————————————————————————-

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்து ஏறக் கொலோ?
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.–5-6-7-

ஜகத்தில் பந்துக்கள் அளவில் அவன் படி எல்லாம் -அவன் நடக்கும் படிகள் -தானாக சொல்லிக் கொள்கிறாள்
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்-ந த்வேஷி -ந பிரிய -கர்மங்கள் போன்ற உபாதியாலே கிட்டுதல் இல்லை –
உள்ளபடி அறிந்து கிட்டுதல் -யாரும் இல்லை -ஏக வசனம் யாரும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்-இந்த ஜகத்தில் நிருபாதிக சம்பந்தம் -தாரதம்யம் இல்லாமல் அனைவருக்கும்
உண்டே -சமோஹம் சர்வ பூதேஷு -சோபாதிக உறவினர் இல்லை -பஹு வசனம் எல்லாரும் –
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்-உற்றாராம் படி ஆக்குபவனும் நான் –
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்-பிரயோஜ நாந்தரம் கேட்டு பெற்று போவார்கள் -அதில் சிக்கி
என்னை இழப்பார்கள் -அவற்றைக் கொடுத்து உறவு அறுத்து கொள்வான்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்-அநந்ய பிரயோஜனராய் கிட்டினார்களுக்கு நெருங்கிய உறவு ஆவேன் –
உற்றாரிலி மாயன் வந்து ஏறக் கொலோ?-எத்தனை அளவுடையார்கள் ஆனாலும் உற்றார் இல்லாதவன் முட்டக் கண்டு கிட்டினார் இல்லை –
ஸூ பிரயத்தனத்தால் லபித்தார் யாரும் இல்லை -பந்துக்கள் உங்களுக்கு
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே-ஸூ பிரயத்தனத்தால் -இல்லாமல் -மயர்வற மதி நலம் அருளப் பெற்று
அவன் பிரசாதத்தால் உற்றவள் -பேசினதை என் பிரயத்தனமும் இல்லாமல் அவன் பிரசாதமும் இல்லாமல் நான் என்ன சொல்வேன் –

எனக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பாள், இங்கு எல்லாரும் எனக்கு உறவினர்களே என்பாள், உறவினர்களை உண்டாக்குகின்றவனும்
யானே என்பாள், உறவினர்களை அழிக்கின்றவனும் யானே என்பாள், உறவினர்களுக்குப் பொருந்தியவனும் யானே என்பாள்,
உறவினர்கள் ஒருவரும் இல்லாத மாயனாகிய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? இங்கு வந்து சேர்ந்திருக்கின்ற உங்களுக்கு,
என்னுடைய பேதைப் பருவத்தையுடைய மகள் பொருந்தி உரைக்கின்ற வார்த்தைகளை எதனைச் சொல்லுவேன்?

ஸ்ரீ எம்பெருமான் அடியார்கள் விஷயத்தில் இருக்கிற இருப்பைத் தன் படியாகப் பேசா நின்றாள் என்கிறாள்.
பந்துக்கள் அளவில் அவன் படி எல்லாம்-கீழே பன்னீராயிரப்படி

எனக்கு உற்றார்கள் யாரும் இல்லை என்னும்-
எனக்கு ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்கள் ஒருவரும் இலர் என்னும்.
அன்றிக்கே,
என்னுடைய சம்பந்தம் அறிந்து என்னோடு சிநேகிக்கக் கூடியவர் ஒருவரும் இலர் என்னும் என்னுதல்.
“பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸவம் அச்யுதம்” என்பது,-தைத்திரீய நாரா.
“உலகங்கட்கு எல்லாம் தலைவன்” என்று இதனை ஓதி வைத்தே வேறு தெய்வங்களை வணங்குதல் அன்றோ செய்வது.

எனக்கு உற்றார்கள் இங்கு எல்லாரும் என்னும்-
எனக்கு, காரணம் இல்லாமல் வந்த பந்துக்கள் அல்லாதார் இலர் என்னும்.
அவர்கள் இப்படி -தப்பாக -இருக்கச் செய்தே காரணமில்லாமல் வந்து பந்துவாய் எல்லாரிடத்திலும் அன்புடையனாயிருப்பன் என்னுதல்.

உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்-
அவர்களிலே சிலர் வந்து என்னை அடையும்படி செய்கின்றேனும் யானே என்னும்.
தேஷாம் சத்த யுக்தாநாம் —பஜனம் ப்ரீதி பூர்வகம் –ததாமி புத்தி யோகம் – நான் பேர் அன்புடன் கொடுக்கிறேன் -என்றபடி
பஜனம் என்றாலே ப்ரீதி பூர்வகம் தானே புத்தி யோகம் ப்ரீதி பூர்வகம் ததாமி என்று அந்வயம் -தாத்பர்ய சந்திரிகை –
ப்ரீதி தானே உபாயம் -பக்தி இல்லை -இரக்கமே உபாயம் என்றபடி –

உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்-
அவர்களுக்கு வேறு பிரயோஜனங்களிலே ருசி உண்டானால், அந்தப் பிரயோஜனங்களைக் கொடுத்து
என் பக்கல் நின்றும் அகற்றுவேனும் யானே என்னும்.
அன்றிக்கே,
அவர்களை அழகு முதலியவைகளாலே அழிப்பேனும் யானே என்னா நின்றாள் என்று
ஸ்ரீ முதலி ஆண்டான் பணித்தானாக ஸ்ரீ இளைய பெருமாள் பணிப்பர்.
அநந்ய பிரயோஜனர்களை -பிரபன்னர்களுக்கு அழகைக் காட்டி துடிக்க வைக்கிறேன் -ஏழையர் ஆவி உண்ணும் -இணைக் கூற்றங்கள் –

உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும் –
என் பக்கல் வேறு பிரயோஜனங்களை விரும்பாதவர்களாய் என்னை அடைகின்றவர்கட்கு, என்னளவு வேறு
பிரயோஜனங்களை விரும்பாதவர் இலர் என்னுதல்.
த்ரிவித பரிச்சேத ரஹிதன் என்பதால் அவனும் அநந்ய பிரயோஜனர் அனைவருக்கும் அனந்யராக அனுபவிப்பான் –
ஸ்ரீ இளைய பெருமாள் -பிராதா பிதா -சொன்னான் -பெருமாளும் அவரையே பிதா சர்வம் என்றாரே –
அன்றிக்கே,
என்னையே எல்லா உறவு முறையுமாகப் பற்றினவர்கட்கு, நானும் அவர்களையே எல்லா உறவு முறையுமாக இருப்பேன் என்னுதல்.

உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ –
இற்றைக்கு முன்பு தம் முயற்சியால் கிட்டினவர்கள் ஒருவரும் இல்லாதபடி இருக்கிற ஆச்சரியத்தையுடைய ஸ்ரீ சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?
(அடையக் கொலோ இல்லையே -அவன் அனுக்ரஹம் பேற்றுக்கு உபாயம் என்றதாயிற்று )

உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்-
இங்ஙனம் சந்தேகிக்கலாமோ, உறவினர்களுக்கு அறுதியிட்டுச் சொல்லவேணுங் காண் என்ன,
உறவு முறையராமித்தனையோ வேண்டுவது, சொல்ல வேண்டுவன இருந்து சொல்ல வேண்டாவோ,
என்ன பாசுரத்தைச் சொல்லிச் சொல்லுவேன்? ஏன் தான், சொல்ல ஒண்ணாமைக்கு வந்தது என்? என்னில்,

என்னுடைப் பேதை உற்று உரைக்கின்றவே-
பருவம் நிரம்பாத என் பெண், மறுபாடுருவத் தைத்துச் சொல்லுகிறவற்றை, கரையிலே நிற்கிற நான் எதனைச் சொல்லுவது?
திருத் தாயாரான நிலையும் இவர்க்கே உள்ளது ஒன்றாகில் இங்குச் சொல்ல ஒண்ணாதபடி கலங்குகையாவது என்? என்னில்,
“தனக்கும் தன் தன்மை அறிவரியான்” என்கிறபடியே, ஸ்ரீ சர்வேச்வரனை, தன் படி தானும் அறியான் என்று
சொல்லுமாறு போலே, தம் நிலை தமக்குங் கூடப் பேச்சுக்கு நிலம் அன்று என்கிறது.
(பராங்குச நாயகிக்கே -மகளுக்கே தெரியாதே -)

—————————————————————————

உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசை முகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக் கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்?
உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே.–5-6-8-

ஜகத் பிரதானர் -பிரமன் ருத்ரர் முனிவர்கள் இவள் ஆதீனம்
உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும்-ருத்ரன் ஈஸ்வரன் என்ற பிரசித்தன் -வேதத்தால் சொல்லப்படும் ருத்ரன் -எனக்கு பிரகார பூதன்
பரன் திறம் அன்றி தேவர் இல்லையே -அவனுக்கு சரீரம் இல்லாத தேவர் இல்லை என்றபடி –
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்-ச பிரம்மா-நான் முகன் -ச சிவா சேந்திர-ச ஹரி சேர்த்து சொல்லி -சந்தசுக்கு சேராதே பஞ்சாதிக்கு –
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்-தச பிரஜாபதிகள் -இவர்களைக் கொண்டு மேலே நான் முகன் சிருஷ்டி
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்-இந்த்ரனும் -முப்பத்து முக்கோடி தேவர் தலைவன்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்-தேவ ரிஷிகளுக்குள் நான் நாரதர் -ராஜ ரிஜி -ஜனகன் -ப்ரஹ்ம ரிஷி விசுவாமித்திரர் –
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக் கொலோ?-சப்தம் போடும் முகில் நீல தோயதம்-வித்யுத் மின்னல் -தாயார் –
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?-சொல்லு சொல்லு விடாமல் சொல்லும் உங்களுக்கு
உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே.-லோக மரியாதை அல்லாத இவள் -சுகுமாரம் -தர்ச நீயம் –
ஆஸ்ரய வியதி ரேகத்தில் தரைப்படும் கொடி -கொள் கொம்பு வேண்டுமே -சிதிலை யாவாள் –சிந்தா சமுத்ரம் -ஜனகன் -கவலைக் கடல் —

தாமத புராணங்களிலே சொல்லப்படுகின்ற சிவபிரானும் யானே என்பாள், அவனுக்கும் தமப்பனாகச் சொல்லப்படுகின்ற பிரமனும் யானே என்பாள்,
சொல்லப்படுகின்ற தேவர்களும் யானே என்பாள், சொல்லப்படுகின்ற தேவர்கள் தலைவனான இந்திரனும் யானே என்பாள், உரைக்கின்ற
முனிவர்களும் யானே என்பாள், வேதங்களிலே பிரசித்தமாகச் சொல்லப்படுகின்ற மேகம் போன்ற நிறத்தையுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?
சொல்லு சொல்லு என்று பேசுகின்ற உங்களுக்கு, உலக விஷயத்தைக் கடந்து பேசுகின்ற அழகிய கொடி போன்ற என் பெண் விஷயத்தில் எதனைச் சொல்லுகேன்?

உலகத்திற்குப் பிரதாநரான பிரமன் முதலான தேவர்கள் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்கிறாள்.

உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும் –
வேதத்திலே பகவானுடைய விபூதிகள்-செல்வங்கள் பரக்கச் சொல்லப் படுகின்ற இடங்களிலே யாதல்,
அர்த்தவாதம்-புனைந்துரையாகப் பேசப் படுகின்ற இடங்களிலே யாதல்-(பேச நின்ற என்றபடி )
சொல்லப் படுமவனாய், தன்னுடைய கோஷ்டிக்கு உபகாரகனான சிவன் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள்.
அன்றிக்கே,
“ருத்ராணாம் ஸங்கர: ச அஸ்மி வித்தேஸ: யக்ஷரக்ஷஸாம் வஸூநாம் பாவக: ச அஸ்மி மேரு: ஸிகரிணாம் அஹம்”- என்பது, ஸ்ரீ கீதை. 10 : 23.
“பதினோர் உருத்திரர்களுக்குள்ளே சங்கரன் நான் ஆகின்றேன்” என்கிறபடியே, ஸ்ரீ சர்வேச்வரனுக்குப் பிரகாரமாகச்
சொல்லப்பட்டவனாதலின் ‘உரைக்கின்ற’ என்கிறார் என்னுதல்.

உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும் –
“விரூபாக்ஷாய பிரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய”- என்பது, சாம வேதம்.
பிரமர்கள் பதின்மர் :- மரீசி, அத்திரி, அங்கிரசு, புலஸ்தியர், புலகர், கிரது, வசிஷ்டர், தக்ஷர், பிருகு, நாரதர் என்பவர்கள்.
“விரூபாக்ஷனும் பிரமனுக்கு ஜ்யேஷ்ட புத்திரனுமான சிவன்” என்கிறபடியே, அந்தச் சிவனுக்கும் தமப்பனாகப் பிரமாணப்
பிரசித்தனாயிருக்கின்ற பிரமனும் நான் இட்ட வழக்கு என்கிறாள்.

உரைக்கின்ற அமரரும் யானே என்னும் –
பிரமனாலே படைக்கப்பட்டவர்களாய், நித்திய சிருஷ்டிக்கு உரியவர்களாகச் சாஸ்திரங்களிலே சொல்லப்படுகின்ற பிரமர்கள்
பதின்மர்களும் நான் இட்ட வழக்கு என்னும்.
“ப்ரஹ்மா தக்ஷாதய: கால: ததைவ அகில ஜந்தவ: விபூதய: ஹரே: ஏதா ஜகத: ஸ்ருஷ்டி ஹேதவ:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 22 : 31.
“நகிரிந்த்ர த்வத் உத்தர:” என்பது, ருக்வேதம்.
அன்றிக்கே,
“பிரமன் என்ன, தக்ஷர் முதலான பிரஜாபதிகள் என்ன, இவர்கள் முதலானவர்கள் ஸ்ரீ சர்வேச்வரனால் நியமிக்கப்படுகின்ற
பொருள்கள்; உலகத்தைப் படைப்பதற்குக் காரணர்களாக இருக்கிறார்கள்” என்கிறபடியே,
பகவானுக்குப் பிரகாரமாகச் சொல்லப்படுகின்றவர்களாதலின் ‘உரைக்கின்ற அமரர்’ என்கிறாள் என்னுதல்.

உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்-
“இந்திரனே! உன்னைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவருமிலர்” என்று சொல்லப்படுகின்ற இந்திரனும் யானே என்னும்.
“வேதாநாம் ஸாமவேத: அஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ:” என்பது, ஸ்ரீ கீதை. 10 : 22.
அன்றிக்கே,
“வேதங்களில் சாமவேதம் நானாக இருக்கிறேன், தேவர்களில் இந்திரன் நானாக இருக்கிறேன்” என்கிறபடியே,
ஸ்ரீ பகவானுக்குப் பிரகாரமாகச் சொல்லப்படுகின்றவன் ஆதலின், ‘உரைக்கின்ற’ என்கிறாள் என்னுதல்.

உரைக்கின்ற முனிவரும் யானே என்னும் –
வேதத்தின் அர்த்தங்களை நினைத்து, உலகத்திற்குச் செய்ய வேண்டியனவற்றைச் சொல்லும்
மனு முதலான முனிவர்களும் நான் இட்ட வழக்கு என்னும்.

உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக் கொலோ –
வார்த்தை சொல்லுவதாய், கழுத்தே கட்டளையாக நீரை முகந்து, மின்னி, முழங்கி, வில்லிட்டு வருவதொருமேகம் போலே
வடிவழகையுடைய ஸ்ரீ சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?
அன்றிக்கே,
உரைக்கின்ற -“நீலதோயத மத்யஸ்த்தா” என்பது, தைத்திரீய நாராயண உப. 11
“கருமை நிறத்தையுடைய மேகத்தின் நடுவில் இருப்பதான மின்னல் போலே” என்கிறபடியே,
நீருண்ட மேகம் போலே என்று சொல்லப்படுகிற என்னுதல்.

உரைக்கின்ற உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் –
சிலவற்றைச் சொல்லுமித்தனையேயாய், ‘சொல்லலாம், சொல்ல ஒண்ணாது’ என்று பாராதே,
சொல்லு சொல்லு என்று வருத்துகின்ற உலகத்தீரான உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவது?

உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே –
அதுவும் சொல்லி ஒழிவேனே அன்றோ வார்த்தை சொல்லிற்றிலள் ஆகில். ‘கோமளம்’ என்கையாலே, சௌகுமார்யத்தைச் சொல்லிற்று.
‘கொடி’ என்கையாலே,–சார்ந்தே இருக்கும் தன்மையை –
“பதி ஸம்யோக ஸு லபம் வய: த்ருஷ்டவா ச மே பிதா” என்பது, ஸ்ரீராமா.அயோத். 118 : 36. அநசூயைப் பார்த்து ஸ்ரீ பிராட்டி கூறியது.
“கணவனை அடைதற்குரிய வயதினை யுடையவள்” என்கிறபடியே,
ஒரு கொள் கொம்போடே சேராத போது தறைப்படும் பருவம் என்பதனைச் சொல்லிற்று.

———————————————————————————

கொடிய வினை யாதும் இலனே என்னும்
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்?
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.–5-6-9-

குரூரமான கர்ம பிரகாரங்கள் எல்லாம் இவள் இட்ட வழக்கு
கொடிய வினை யாதும் இலனே என்னும்-கர்ம சம்பந்தம் இல்லை –கர்மம் இவனை தீண்டாது -பலனும் இல்லையே
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்-வினைகளும் நான் -நிக்ரஹ ரூபம் -தானே பாபங்கள் -அனுக்ரஹம் -ப்ரீதி ரூபம் புண்ணியம் –
தன்னடையே போவதால் சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-இஷ் சப்தம் இதனால் தான் –
ராஜ குமாரன் -சிறை -அதிகாரி அறிந்ததும் –
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்-பிரதி கூலரை செய்விப்பவனும் நானே -ஷிபாமி ஆசூர யோநிஷூ தள்ளி –
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்-ததாமி புத்தி யோகம் –
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்-பெருமாள் ராவணனை கொடியான் சொல்ல மாட்டாரே -தாயார் வார்த்தை -பராங்குச நாயகி தானே சீதை
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?-ஆஸ்ரித விரோதிகளுக்கு மிருத்யு சமன் பெரிய திருவடி -கொடியிலே ஆன் புள் -என்றுமாம்
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்?-உலகத்தீர் -அதி நிர்பந்தம் பண்ணும் -நமக்கு நிலம் இல்லை என்று விடாமல்
பராங்குச நாயகி நிலை பேச முடியாது சொல்லியும்
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.-தன்னை இதில் கொடியேன் என்று சொல்லிக் கொள்கிறாள்
உங்களுக்கு சொல்ல முடியாமல் இவள் நோய்க்கு மருந்தும் அறியாமல் –
கோலங்கள் தர்ச நீயமான சேஷ்டிதங்கள் -ஒருப்பாட்டுடன் செய்பவை

கொடுமை பொருந்திய கர்மங்கள் ஒரு சிறிதும் எனக்கு இல்லை என்னும், கொடிய கர்மங்கள் ஆவேனும் யானே என்னும்,
கொடிய பாவங்களைச் செய்விப்பவனும் யானே என்னும், கொடிய பாவங்களைத் தீர்க்கின்றவனும் யானே என்னும்,
கொடியவனான இராவணனுடைய இலங்காபுரத்தை அழித்தேனே என்னும், பகைவர்களுக்குக் கொடுமையை விளைவிக்கின்ற
கருடப்பறவையை வாகனமாகவுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? கொடுமையையுடைய உலகத்தீர்க்கு, மஹாபாவியேனான
என்னுடைய கொடி போன்ற பெண்ணானவள் செய்கின்ற அழகிய காரியங்களைப் பற்றி என் சொல்லுவேன்?

கர்மங்களுக்குக் கட்டுப்படாமை முதலான, ஸ்ரீ பகவானுடைய வார்த்தைகளைத் தன்னுடையனவாகப் பேசாநின்றாள் என்கிறாள்.

கொடிய வினை யாதும் இலனே என்னும் –
கர்மங்களுக்குக் கட்டுப்பட்டவர்களை அருளின்றி நலியும் கர்மங்கள் எனக்கு ஒன்றும் இல்லை என்னும்.
“தயோ: அந்ய: பிப்பலம் ஸ்வாது அத்தி அநஸ்நந் அந்ய: அபிசாக ஸுதி”-என்பது, உருக்கு வேதம்.
“ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா”-என்பது. ஸ்ரீ கீதை. 4.14.
“ஜீவாத்மாவுக்கு வேறுபட்ட சர்வேச்வரன் கர்மபலத்தை அநுபவியாமல் மிகவும் பிரகாசிக்கிறான்” என்றும்,
ஸூபர்ணா -கதி சாதனம் -ஞானம் கர்மம் –சோபன ஞானம் படித்தவை -ச யுஜவௌ-சாம்யா பத்தி உண்டே இரண்டுக்கும்-சமானம் வ்ருஷம் –
“என்னைக் கர்மங்கள் ஒட்டுவன இல்லை, கர்ம பலத்தில் எனக்கு ஆசை இல்லை” என்றும் சொல்லப்படுகிற அவன்
படிகளைத் தான் சொல்லா நின்றாள். “நாட்டிற் பிறந்து படாதன பட்டு” என்கிற இடம், இச்சையால் வருவனவே அன்றோ.

கொடிய வினை ஆவேனும் யானே என்னும் –
நான் இவற்றால் தொடப்படாத மாத்திரமேயாய், அவைதாம் எனக்குப் புறம்பாய் இருக்கின்றனவோ;
அந்தப் பாவங்கள் தாம் என்னுடைய நிக்கிரஹமே யன்றோ என்னும்.

கொடிய வினை செய்வேனும் யானே என்னும் –
அடியார்களுடைய பகைவர்களுக்குக் கொடியதான பாவத்தை விளைப்பேனும் யானே என்னும்.
ஈண்டுச் ‘செய்வேன்’ என்றது அடியார்களுடைய பகைவர்களைப் பாவங்களிலே மூட்டுகையைக் குறித்தபடி.
“என்னைப் பகைக்கின்ற அத்தகையரும் கொடுந்தன்மையரும் இழிந்தவருமான பாவிகளை எப்பொழுதும்
பிறப்பு இறப்பு பரம்பரைகளில் அவற்றிலும் அசுரப்பிறவிகளில் தள்ளுகிறேன்” என்பது ஸ்ரீ கீதை.

கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்-
என்னை வந்து அடைந்தவர்கட்கு அவை வந்து கிட்டாதபடி- “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:”-என்பது, ஸ்ரீ கீதை. 18. 66
“எல்லாப் பாவங்களில் நின்றும் விடுவிக்கிறேன்” என்பேனும் யானே என்னும்.
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்-
சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமை யுடையவனாதலின் ‘-பெரிய திருமொழி, 5. 7 : 7.-கொடியான்’ என்கிறது.
இவ்விடத்தில் ‘கொடியான்’ என்றது, திருத் தாயார் வார்த்தை காண்’ என்று அருளிச் செய்வர் ஸ்ரீ நஞ்சீயர்,
எதிரிகளை இவன் ஒன்றாக மதித்திருந்தானாகாமைக்கு; அவனாலே ஆவேசிக்கப்பட்டவள் அன்றோ இவள்.

கொடிய புள்ளுடையவன் ஏறக்கொலோ –
“தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந் க்ஷிபாமி அஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு”- என்பது, ஸ்ரீ கீதை. 16. 19.
அடியார்களுடைய பகைவர்களுக்கு யமனை ஒத்தவனான ஸ்ரீ பெரிய திருவடியை வாஹனமாகவுடைய ஸ்ரீ சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?

கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் –
‘கேட்க வேணும்’ என்று திரண்டு கிடக்கிற உலகத்தீர்க்கு என்னுதல்.
‘இது கூடும்; கூடாது’ என்று பாராமல் ‘சொல்லு சொல்லு’ என்று நிர்ப்பந்தித்து ஸ்வ காரியத்தில்
நோக்குள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு எதனைச் சொல்லுவது என்னுதல்.

கொடியேன் கொடி என்மகள் கோலங்களே –
இவள் அநுகரித்துச் சொல்லுகிற பாசுரங்களைக் கேட்க வேண்டும் படியான பாவத்தைச் செய்த என்னுடைய மகள்
செய்கிற காணத்தக்க இனியவான செயல்களை. அன்றிக்கே, ஒருப்பாடுகளை என்னுதல்.

———————————————————————————————-

கோலங் கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோல மில் நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்
கோலம் கொள் தனி முதல் யானே என்னும்
கோலம் கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ?
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே.–5-6-10-

ஸ்வர்க்க நரகாதிகள் -சகல பலன்களும் -இவற்றை தேடித் போகும் ஆத்மாக்களும் -நான் இட்ட வழக்கு –
கோலங் கொள் சுவர்க்கமும் யானே என்னும்-தர்ச நீயம் -மோஷ விரோதி இதுவும் -பரமபத வாசல் -ஸ்வர்க்க வாசல் –
கோல மில் நரகமும் யானே என்னும்-வை லஷண்யம் இல்லா துக்கோத்தரமான நரகம்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்-நிரதிசய ஆனந்த ரூப வைலஷண்யம் -விளங்கும் பரம பதமும் நானே
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்-பலன்களை பற்றுக் கொள்ளும் ஒருப்பாடு -ஏக மனசாக முயலும் -நரகத்துக்கும் முயல்கிறார்களே –
ஸ்வா பாவிக அநவதிக அதிசய -பண்ணுவது எல்லாம் இதற்காகவே –
கோலம் கொள் தனி முதல் யானே என்னும்-தன் நினைவில் வைத்து சகல காரண வஸ்து -சஹாயாந்தர –
பிரகிருதி /சங்கல்ப ரூப ஞானம் /சர்வேஸ்வரன் மூன்றையும் முதல் என்பதால்
கோலம் கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ?-இந்திர தனுஸ் பசுத்த வடிவு ச்புரிக்கிற மின்னும் நாநா வர்ணம் –
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?-ஒருப்பட்டு நிற்கும் -கேட்டு அல்லது போவோம் -தர்ணா -இருந்து —
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே.-கோதை -அழகிய மாலை கூந்தல் -கூந்தல் உடைய பெண் -என்ன வென்று சொல்ல இயலும் –

அழகினைக் கொண்டுள்ளதான சுவர்க்கமும் யானே என்பாள், அழகு இல்லாத நரகமும் யானே என்பாள், அழகோடு விளங்குகிற பரமபதமும் யானே என்பாள்,
அழகினைக் கொண்ட உயிர்களும் யானே என்பாள், அழகினைக் கொண்டிருக்கின்ற ஒப்பற்ற மூலப்பகுதியும் யானே என்பாள், அலங்காரத்தைக் கொண்ட
மேகம் போன்ற நிறத்தையுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? அலங்காரத்தைச் செய்துகொண்டு வந்து நிற்கிற உலகத்தீர்க்கு,
அழகோடு விளங்குகிற மாலையைத் தரித்த கூந்தலையுடைய என் மகளுக்கு உண்டான நிலைகளைப் பற்றி எதனைச் சொல்லுவேன்?

சுவர்க்கம் முதலான பொருள்கள் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்கிறாள்.

கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும் –
சுகரூபமான சுவர்க்கமும் யானே என்னும். நிலை நில்லாமையாலே, முகப்பில் காட்சிக்கினியதாந் தன்மையைப் பற்ற,‘கோலம் கொள்’ என்கிறது.
‘நரகத்தோடு ஒத்திருக்கச் செய்தே, வாசலிலே கழஞ்சு செம்மண் பூசி இருக்குமாறு போலே காண்’ என்று அருளிச் செய்வர் நஞ்சீயர்.

கோலம் இல் நரகமும் யானே என்னும் –
மேல் எழப் பார்க்கையில் அங்ஙனமும் ஒன்று இன்றியிலே இருக்கிற நரகமும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள்.

கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும் –
மீண்டு வருந்தன்மை இல்லாததாய்ச் சுகத்திற்கே இருப்பிடமானதான மோக்ஷமும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள்.
“கடல் ஞாலம் செய்தேன்” என்று, படைப்புத் தொடங்கி, “மோக்கமும் யானே”என்று மோக்ஷம் முடிவாகத் தன்னுடைய காரியம் என்கிறாள்.

கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்-
நாடகம் கட்டி ஆடுவாரைப் போலே தேவனாகவும், மனிதனாகவும், இப்படிப் பல வகையான சரீரங்களை
மேற்கொள்ளுகிற ஆத்மாக்களும் யானே என்னும்.
அன்றிக்கே,
கோலம் கொள் உயிர்கள் – ஞான ஆனந்த லக்ஷணமான உயிர்கள் என்னுதல்.

கோலம் கொள் தனி முதல் யானே என்னும் –
இவற்றிற்கெல்லாம் காரணமான மூலப்பகுதியும் யானே என்னும்.
அன்றிக்கே,
சங்கல்ப ரூப ஞானத்தைச் சொல்லுதல்.
அன்றிக்கே,
விசித்திர காரிய காரிணியான மூலப் பகுதியையும் சங்கல்ப ரூப ஞானத்தையும் பிரகாரமாக வுடையனாய்,
எல்லா நற்குணங்களையுமுடையனான சர்வேச்வரன் என்னுதல்.

கோலம் கொள் முகில் வண்ணன் –
திருமேனிக்கு மேகத்தை ஒப்பாகச் சொல்லும்போது அலங்கரித்துச் சொல்லவேணுமாதலின் ‘கோலம் கொள் முகில்’ என்கிறது.
மின்னி முழங்கி வில்லிட்டு வந்து தோற்றின போதாயிற்று ஒப்பாகச் சொல்லலாவது.

கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் –
‘கேட்க வேணும்’ என்று ஒருப்பட்டிருக்கிற உலகத்தீர்க்கு நான் எதனைச் சொல்லுவது.
அன்றிக்கே,
மயிரும் உகிரும் பேணி, உடம்பு பேணி வந்து அலங்கரித்துக்கொண்டு நிற்கிற உங்களுக்கு என்னுதல்.

கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கு-
அழகிய மாலையையும் மயிர்முடியையுமுடைய என் மகளுக்குப் பிறந்த அவஸ்தைகளை. என்றது,
இவள் மாலையையும் மயிர் முடியையும் கண்டார் படுகிற பாட்டைத் தான் பட்டு அநுகரித்துச் சொல்லுகிறவற்றை
நான் எதனைச் சொல்லுவது என்றபடி.

——————————————————————————————–

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-

சர்வாதிகன் -ஸ்ரீ மன் நாராராயணன் -சர்வேஸ்வரனை அனுகரித்து -சர்வ லோக சம்பாவநீயராய் -போற்றப் படுபவர் ஆவார் –
பகவத் கிஞ்சித் காரம் -பாகவத கிஞ்சித் காரம் -பலன் கிட்டும்
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை-வாசம் செய் பூம் குழலாள் -விலஷண -இயற்க்கை மணம்
குற்றம் குற்றமே -கதை அறிவோம் -நிரதிசய போக்ய போதை -நித்ய யௌவன சோபை –
ரூப வை லஷண்யம் உடைய பூமிப் பிராட்டி -அபிஜாதர் -இவளுக்கு மட்டும் -கும்பன் திரு மகள் -கண்ணன் விரும்பின குலம்
என்பதால் -கொழுந்து சிரோ பூஷணர் போலே -கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே –
யசோதை போலே நப்பின்னை பிராட்டியாரும் -அபிமத சர்வேஸ்வரன் -ஆசைக் காதலன் -தன்னை -ஹ்ரீச்ச லஷ்மி ச -பத்னீ த்ரயம் புருஷோத்தமன் –
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு-பாவனா பிரகர்ஷம் -உகளிக்க –
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து-நிர்வாககர் -குருகூர் ஜகத்த்ல் மன்னி -இங்கே சடகோபன் மன்னி என்றுமாம் -அந்தரங்க வ்ருத்தி
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்-ஆராய்ந்து அருளிச் செய்த
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்-விலஷணம் -அநு கரித்து அருளிச் செய்தது -பாவ வ்ருத்தி உடன் அப்யசிக்க வல்லார்கள்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்-சிரசா வஹிக்கும் படி -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கைங்கர்யம் செய்யும் பலன் கிட்டும் –
ஆராதிக்க பாக்கியம் பெற்றவர்கள் -ஏய்ந்த -பொருந்திய என்றுமாம் -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ -செல்வம் நித்யமாக இருக்கும் –

மயிர் முடியை யுடைய பெரிய பிராட்டியார்க்கும் பூமிப் பிராட்டிக்கும் ஆயர் குலத்துக்குக் கொழுந்து போன்ற நப்பின்னைப் பிராட்டிக்கும்
கணவனான சர்வேச்வரனை, பொருந்திய வளப்பத்தையுடைய வழுதி நாடரும், நிலை பெற்ற திருக் குருகூரில் அவதரித்த சடகோபருமான
நம்மாழ்வாரால் குற்றேவல் செய்து ஆராய்ந்து சொல்லப்பட்ட தமிழ்ப் பாசுரங்கள் ஆயிரத்துள் இப்பத்துப் பாசுரங்களையும் வல்லவர்கள்,
தரித்த பெரிய செல்வத்தையுடையவர்களாகிச் சர்வேச்வரனுடைய அடியார்களைப் பூசிப்பதற்குப் புண்ணியம் செய்தவர்கள் ஆவார்கள்.

இத் திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்யப் பெறுவர்கள் என்கிறார்.

கூந்தல் மலர் மங்கைக்கும் –
சர்வேச்வரனுடைய ஐச்வரியத்துக்கும் காரணமாயிருக்கிற பெரிய பிராட்டியார். -திருவுக்கும் திருவாகிய செல்வா –
அன்றிக்கே,
“நித்யைவ ஏஷா ஜகந்மாதா விஷ்ணோ : ஸ்ரீ : அநபாயிநீ யதா ஸர்வ கதோ விஷ்ணு :
ததைவ இயம் த்விஜோத்தம”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுராணம், 1. 8 : 17.
த்விஜோத்தம-அந்தணர் குல மைத்ரேயரைப் பார்த்து பராசரர் -இவளும் சர்வ வியாபகை
எங்கள் ஆழ்வான் விஷ்ணு சித்தம் -வியாக்யானம் -அவன் விபு -இவள் அணு-ஜீவாத்மா
அவன் ஸ்வரூபத்தால் வியாப்தி -இவள் தர்ம பத்னி -விட்டுப் பிரியாமல் இருப்பதால் -இதனால் பெற்ற சக்தியால் வியாப்தி –
சேஷ பூதை-சொல்லிக் கொள்வாள் –
இயற்கையில் பெருமை உண்டு -பத்னியான படியால் அடங்கி குறைத்து கொண்டு ஜீவாத்மா கோஷ்டியில் இருப்பதாக
சொல்லிக் கொள்வாள் தேசிக சம்ப்ரதாயம் –
“சர்வேச்வரனுடைய செல்வமாக இருப்பவள்” என்கிறபடியே, சர்வேச்வரனுடைய செல்வமாயிருக்கிற பெரிய பிராட்டியார் என்னுதல்.

மண் மடந்தைக்கும் –
அந்தச் செல்வத்திற்கு விளை பூமியாயிருக்கிற ஸ்ரீ பூமிப்பிராட்டி.

குல ஆயர் கொழுந்துக்கும் –
அதனுடைய பல உருவமாயிருக்கும் நப்பின்னைப் பிராட்டி.

கேள்வன் தன்னை –
“உலகங்கட்குத் தலைவனாகிய இறைவன் இலக்குமியோடு கூடி எழுந்தருளியுள்ளான்” என்கிறபடியே,
இவர்களுக்குப் பதியாயுள்ளவனை. இதனால், ஓர் அவதார மாத்திரமன்றிக்கே, உபய விபூதிநாதனான பூர்ண விஷயத்திலே
அநுகரிக்கிறார் என்று தோற்றி இருக்கிறபடி.

வாய்ந்த –
வாய்க்கையாவது, கிட்டுகை. அநுகாரத்தாலே கிட்டின படியை நினைக்கிறது.

குற்றேவல் செய்து-
ஆழ்வார், திருவடிகளில் அந்தரங்க அடிமைகள் செய்தபடியாயிற்று இவை தாம். என்றது, வாசிகமாக அடிமை செய்தபடியாயிற்று என்றபடி.
நன்று; அநுகாரம் அடிமையானபடி எங்ஙனே? என்னில், அப்படியாகத் தட்டு என்? கொள்ளுகிறவன் கருத்தாலே.
அவன் உகப்பே அன்றோ அடிமையாலும் புருஷார்த்தம்.-இளைய புன் கவிதை — எம்பிராற்கு இனிய வாறே –
‘நம்முடைய பிரிவில் அநுகரித்துத் தரிக்க வேண்டும்படி சம்சாரத்திலே இப்படி உண்டாவதே!’ என்று திருவுள்ளம் போர உகக்கும்,
அது அடிமையாய்த் தலைக் கட்டுமித்தனை.

ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் –
ஆராய்ந்து சொன்ன தமிழ்த் தொடை ஆயிரத்திலும் இப் பத்தைக் கற்க வல்லவர்கள்.

உலகில் ஏந்து பெரும் செல்வத்தராய் –
இந்த உலகத்தில் எல்லாரும் கொண்டாடும்படி ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை யுடையராய்.
அன்றிக்கே.
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டா தான் தன்னையே தான் வேண்டும் செல்வம் போல் மாயத்தால்
மின்னையே சேர் திகிரி வித்துவக் கோட்டம்மா! நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே.- பெருமாள் திருமொழி.-என்கிறபடியே,
உலகத்திலே முகந்தெழு பானையான எல்லை யில்லாத செல்வத்தை யுடையராய்க் கொண்டு என்னுதல்.

திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே –
ஸ்ரீமத் புத்திரர்களை ஆராதிக்கப் பெறுவர்கள். திருமால் அடியாரை ஆராதிக்கையாவது, இவர் அநுகாரத்தாலே
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பிரியமுள்ளவராக ஆனாற்போலே, இது கற்றார்களும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பிரியத்தைக்
கொடுக்கக் கூடிய கைங்கரியத்தைச் செய்யப் பெறுவர் என்கை. என்றது, இவர் அநுகரித்த இப் பாசுரங்களைச் சொல்லுகை.
“தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்”- 9. 4 : 9. என்னக் கடவதன்றோ.

———————————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சோகஞ்ச தம் சோகம் விஞ்ச பரி சௌரெ
அகிலானாம் சர்க்காதி கர்து அநுகார ரசேன
தத் பாவ பாவித மனா முனீர் சஷ்டே தஸ்ய
பிரவ்ருத்தி அகிலா மயா சரிதா இதி

சோகஞ்ச தம் –காதல் மிக்கு -சோகம் விஞ்ச -பேர் அமர் காதல் பின் நின்ற காதல்
கழிய மிக்கதொரு காதல் விஞ்சி -அப்ரீதி தலைக்கு மேலே போக -சோகம் ஆற்ற அநுகாரம்
பரி சௌரெ அகிலானாம் -ஜகத்தில் அனைவரது
சர்க்காதி கர்து அநுகார ரசேன -சர்க்காதி ஸ்ருஷ்ட்டி முதலான கிரியைகளை எல்லாம் தொடங்கி
தத் பாவ பாவித மனா முனீர் சஷ்டே-ஆறாம் பத்தில் நான்காம் திருவாய்மொழியில் -அவனது பாவமே அடைந்து பேசின ஆழ்வார்
தஸ்ய பிரவ்ருத்தி அகிலா மயா சரிதா இதி -என்று கூடினார் -ப்ரஹ்ம ப்ரவ்ருத்திகள் அனைத்தும்
ஓன்று விடாமல் தாமே செய்ததாக அநுகரித்து தரித்தார்

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஸ்ரஷ்ட்ருத்வாதி ஜகத்தியா சகல வித கலா வர்த்தகத்வேன பூத அந்தராத்மத்வேன
க்ருதி உத்தரணம் பூ பர நிராகத சைலேந்திர உத்தாரண-கிரி ராஜ்
வ்ருஷ காண மர்த்த ஸூ யஜன ஹிததையாஆஸ்ரித ஹித துஷ் கர்ம
உன்மூல ஆத்யைகி ஆதி -சுப அசுப சங்க்ரஹனம் தன்மைய பிரதத்வம்-

1-ஸ்ரஷ்ட்ருத்வாதி ஜகத்தியா –கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்–இத்யாதி —

2-சகல வித கலா வர்த்தகத்வேன–கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்–இத்யாதி –

3-பூத அந்தராத்மத்வேன –காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்–இத்யாதி

4-க்ருதி உத்தரணம் –செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்–இத்யாதி

5-பூ பர நிராகத–திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்–இத்யாதி

6-சைலேந்திர உத்தாரண கிரி ராஜ் வ்ருஷ காண மர்த்த–இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்–இத்யாதி

7-ஸூ யஜன ஹிததையா–உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்-இத்யாதி

8-ஆஸ்ரித ஹித துஷ் கர்ம உன்மூலஆத்யைகி –உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும்–இத்யாதி

9–ஆதி -சுப அசுப சங்க்ரஹனம் –கொடிய வினை யாதும் இலனே என்னும்—இத்யாதி என்றும்
கோலங் கொள் சுவர்க்கமும் யானே என்னும்-இத்யாதி என்றும்

தன்மைய பிரதத்வம்–தன்னைப் போலே பேச வைக்கும் திருக்குணம் –
கோபிகள் அனுகரித்து தரித்தால் போலே அஹம் புத்தியால் -ஸோஹம்-சரீராத்மா பாவம் அந்தராத்மா பாவம் –

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 46-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

அவதாரிகை-

இதில் அனுகாரத்தாலே தரிக்கப் பார்க்கிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
எங்கனயோ -வில் பிரீதி அப்ரீதி சமமாய் சென்ற இடத்தில்
ப்ரீத்யம்சம் தலை எடுத்து தரிக்கைக்கு யோக்யதை உண்டாய் இருக்க
பாஹ்ய ஹானியாலே அப்ரீதி யம்சமே தலை எடுத்து
பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படி-ஆற்றாமை கரை புரண்டு
ஸ்ரீ கோபிமார் ஸ்ரீ கிருஷ்ணனை அனுகரித்து தரித்தால் போலே இவரும் உபய விபூதி நாதனை அனுகரித்து
தரிக்கப் பார்க்கிற படியைக் கண்டு கண் கலங்கின பரிவர் சந்நிஹிதர்க்கு விலஷணராய் சொல்லிச் செல்லுகிற க்ரமத்தை
ஸ்ரீ நாயகனைப் பிரிந்த ஆற்றாமையாலே-தத் பிரகாரங்களை அனுகரித்து தரிக்கப் பார்க்கிற
தலைவி நிலையை வினவ வந்தவர்களுக்கு
ஸ்ரீ திருத் தாயார் -ஸ்ரீ சர்வேஸ்வரன் ஆவிஷ்டன் ஆனானோ -என்று
க்லேசத்தாலே சொல்லுகிற துறையிலே வைத்து அருளிச் செய்கிற -கடல் ஞாலத்தில் அர்த்தத்தை
கடல் ஞாலத்து ஈசனை -என்று துடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————-

கடல் ஞாலத்து ஈசனை முன் காணாமல் நொந்தே
உடனா வனுகரிக்கலுற்று திடமாக
வாய்ந்து அவனாய்த் தான் பேசும் மாறன் உரையதனை
ஆய்ந்துரைப்பார் ஆட்செய்ய நோற்றார் –46-

திடமாக–அனுகரித்தபடியால் பெற்ற உறுதி–5-2- உறுதி இருந்தது -5-3/5-4/5-5–தளர்ந்து போனாரே –
மீண்டும் அவனை அனுகரித்து -அதனால் பெற்ற -கொஞ்சம் உறுதி -தானாக பேசாமல் -திருத் தாயார் பேச்சாக –

————————————————–

வியாக்யானம்–

கடல் ஞாலத்து ஈசனை –
கடல் சூழ்ந்த பூமியில் உள்ளோர்க்கு நியந்தாவாய்-அத்தாலே சர்வ நிர்வாஹகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை

முன் காணாமல் நொந்தே –
பிரத்யஷ சாஷாத் காரம் பண்ணாமல் நொந்து -அதாவது –
சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் -என்றும்
அறிவரிய பிரானை -என்றும்-அருளிச் செய்த மானஸ சாஷாத்கார மாத்ரம் ஒழிய
பிரத்யஷ சாஷாத்காரம் இல்லை -என்றபடி – அத்தாலே அவசன்னராய் –

உடனா வனுகரிக்கலுற்று –
அனந்தரமாக
ஸ்ரீ கோபிமார் ஸ்ரீ கிருஷ்ணனை அனுகரித்து தரித்த படியை ஆராய்ந்து
தாமும் அனுகரித்து தரிப்பதாக திரு உள்ளத்திலே உற்று –

திடமாக வாய்ந்து –
திருட அத்யாவச்ய யுக்தராய்-வாய்ந்த வழுதி வள நாடன் -என்னும்படி-பாவ பந்தத்தோடு கிட்டி –

அவனாய்த் தான் பேசும் -அதாவது –
1-கடல் ஞாலம் -என்றும்
2-கற்கும் கல்வி என்றும்
3-காண்கின்ற -என்றும்
4-செய்கின்ற -என்றும்
5-திறம்பாமல் -என்றும்
6-இனவேய்-என்றும்
7-உற்றார்கள் என்றும்
8-உறைக்கின்ற -என்றும்
9-கொடிய வினை -என்றும்
10-கோலங்கொள் -என்றும்
11-கூந்தல் -என்றும்
என்கிற இவை ஆதியாக -பத்தும் பத்தாக -(சொல்லாமல் விடப்பட்ட பலவும் உண்டே -ஆகவே ஆதி )

1-ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்கள்
2-சகல வித்யா வேதனமும் வித்யா ப்ரவர்தகத்வாதிகளும்
3-காரணமான பூத பஞ்சகங்களும்
4-கால த்ரயத்தால் உண்டான க்ரியா ஜாதங்களும்
5-ஜகத் ரஷண பிரமுகமான சேஷ்டிதங்களும்
6-ஸ்ரீ கோவர்த்தன உத்தரணம் முதலான ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களும்
7-ஸ்ரீ எம்பெருமான் ஆஸ்ரித நாஸ்ரித விஷயங்களில் இருக்கும் இருப்பையும்
8-ஜகத் பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதி பிரகாரித்வமும்
9-அகர்ம வச்யத்வ பிரமுகமானவை
10-ஸ்வர்க்க ப்ரமுகவானவையாய்

இப்படி உக்தங்கள் ஆனவை எல்லாம் நான் இட்ட வழக்கு என்று
யானே என்ன வாய்ந்து ஏறப் பேசி –ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் –என்றபடி
அவனாகவே அனுகரித்த பிரகாரத்தை அருளிச் செய்யும்-

மாறன் உரையதனை –
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியானத்தை –

ஆய்ந்துரைப்பார் –
ஆய்ந்த தமிழ் மாலை யாயிரத்து இவையும் ஓர் பத்து என்று
இதன் வைபவத்தை ஆராய்ந்து அனுசந்திப்பார் –

ஆட் செய்ய நோற்றார் –
ஸ்ரீ திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்கள் -என்னும்படி
ஸ்ரீ ஆழ்வாருக்கு அடிமை செய்ய நோற்றார் ஆவார்
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே-என்று இறே அவர் இருப்பது

அஹத்வா ராவணம் சங்க்யே ச புத்ரம் சஹ பாந்தவம்–
கொடியான் இலங்கை செற்றேனே -என்னக் கடவது இறே-
(மூல பிரமாணம் –கொடியான் என்றதுக்கு-பெருமாள் வார்த்தை இல்லை -தாயார் வார்த்தை என்று ஈட்டில்-
அனைத்தும் தலைமகள் வார்த்தையாக இருந்தாலும் -அதுக்கும் பிரமாணம் காட்டி அருளுகிறார் –
மூல பலத்தை அழிக்கும் படி கொடியான் அன்றோ )

——————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-