Archive for June, 2016

பகவத் விஷயம் காலஷேபம் -116- திருவாய்மொழி – -5-6-1….5-6-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்

June 8, 2016

கீழ் திருவாய் மொழியிலே பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாக அன்றோ சென்றன;
இரண்டுமாய்க் கலந்து சென்றால் பிரீதியாலே தலை எடுக்கவும் ஆம் அன்றோ, அது செய்யாதே,
புண்ணியத்தின் குறைவால் பிரீதி இன்மை ஒன்றே தலை எடுத்தது;
ஆகையாலே, கீழ் உரு வெளிப்பாட்டாலே அவனை நினைத்துத் தரித்தது ஒரு நிலையும் போய்,
அலாபத்தால் வரும் துவட்சியே ஆயிற்று;
இப்படித் துவண்ட இவள், பிரிவாற்றாமையாலே அவனை அநுகரித்துத் தரிக்கப் பார்க்கிறாள் இத் திருவாய் மொழியில்.

ஒவ்வோர் அர்த்தத்தைப் பற்றி உபந்யாசங்கள் செய்ய இருப்பாரைப் போலே ஞான முத்திரையும் தானுமாய்க்
கீதோபநிஷத ஆசாரியனைப் போலே இருந்தாள்; இதனைக் கண்ட திருத் தாயார்,
இது ஏதேனும் மணிமந்திர ஒளஷதம் முதலியவைகளாலே வந்த விகாரமோ’ என்று ஐயங்கொண்டு,
அத் தன்மைகள் காணாமையாலே ‘அவை அல்ல’ என்று அறிந்தாள்.
இனி, ‘அவனைப் பிரிகையாலே வந்த ஆற்றாமையாலே அநுகரித்துத் தரிக்கிறாள்’ என்று
தெளிய மாட்டுகின்றிலள் தன் கலக்கத்தாலே.
தனக்கும் தன தன்மை அறிவரியான் போலே ஸுய வைபவம் அறியார் அன்றோ –
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான் -என்கிறாள் -7 பாசுரத்தில்
இவ் வளவிலே புகுந்து ‘இது தான் என்?’ என்று வினவப் புகுந்த உறவினவர்களைப் பார்த்துத் திருத் தாயார்,
அவனுடைய வார்த்தைகளைப் பேசுகையால் வந்த ஒற்றுமையாலும்,
ஞான முத்திரை பார்வை முதலியவைகள் இருந்தபடியாலும்,
சர்வேச்வரன் இவள் பக்கல் ஆவேசித்தானாக வேணும் என்று சொல்லுகிறாள்,
‘அநுகரித்துத் தரிக்கிறாள்’ என்று அறிய மாட்டாமையாலே.

பிரிவாற்றாமை உண்டானால் அநுகரித்துத் தரிக்கக் கடவதன்றோ.
ஸ்ரீகிருஷ்ணனை அநுகரித்தார்களே அன்றோ திருவாய்ப்பாடியில் பெண்கள்;
“கிருஷ்ணே நிபத்த ஹ்ருதயா இதமூசு: பரஸ்பரம் க்ருஷ்ண: அஹம் ஏஷ லலிதம் வ்ரஜாமி ஆலோக்யதாம்கதி:”
“அந்யா ப்ரவீதி க்ருஷ்ணஸ்ய மம கீதி: நிஸம்யதாம் துஷ்டகாளீய திஷ்ட அத்ர க்ருஷ்ண:
அஹம் இதி ச அபரா”-என்பன, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 13 : 26, 27.
“கிருஷ்ணோஹம் ஏஷ லலிதம் வ்ரஜாமி ஆலோக்ய தாம்கதி: –
நான் கிருஷ்ணன், நடைச் சக்ரவத்துப் பிடிக்க வேண்டும்படியாக இங்ஙனம் நடக்கப் புகுகின்றேன்;
கண் படைத்தார் முழுதும் கண்டு கொள்ளுங்கோள் என்றாளே அன்றோ.
துஷ்ட காளீய திஷ்ட அத்ர – ஒருத்தி காளியனாய்க் கிடக்க, ஒருத்தி கிருஷ்ணனாய் ஏறி ஆடினாளே அன்றோ;”
பிரதி கூலனான காளியன் ஆனால் ஆகாதோ கிருஷ்ணனாகத் தன்னை அநுகரிக்கிற
பெண்ணின் பொடி படப் பெறில் என்று இருந்தாள்;
கிருஷ்ணனானவள் தானும் இவளைக் ‘காளியன்’ என்றே நினைத்துக் கண்ணறத்
துகைத்தாளே அன்றோ அநுகாரத்தின் மெய் ப்பட்டாலே.

அவர்கள் ஓர் அவதாரத்திலே அநுபவிக்கையாலே அங்குள்ள செயல்களை அநுகரித்தார்கள்;
இவள் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவள் ஆகையாலே –
கூந்தல் மலர் மங்கைக்கும்” என்ற பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி-
உபய விபூதிகளை யுமுடையவனை அநுகரிக்கிறாள்
இங்கு, கால், நடை தாராமையாலே அங்குப் போலே சரீரத்தால் செய்யப்படுகின்ற அநுகாரம் அன்று,
வாசிக மாத்திரத்தாலே ஆயிற்று அநுகரிக்கிறது.

ஆக, ‘பிறப்பே பரதந்திர ஜன்மத்திலே பிறந்தவள், பிறப்பே ஸ்வ தந்திரனானவன் வார்த்தையும் சொல்லா நின்றாள்,
பெண் தன்மைக்கு எல்லையான இவள், புருஷோத்தமன் சொல்லும் வார்த்தைகளையும் சொல்லா நின்றாள்,
அறிவிற்கு விஷயம் வியவஸ்திதமாக இருக்க, சர்வஜ்ஞன் சொல்லும் வார்த்தைகளைச் சொல்லா நின்றாள்’ –
அஹம் க்ருத்ஸ்நஸ் ஜகத: பிரபவ:” என்று கொண்டு,
இவள் செய்கிற படிகளைத் திருத்தாயார், வினவப் புகுந்தவர்களுக்குச் சொல்லுகிறாள்.

கீழ் திருவாய் மொழியிலே, உரு வெளிப்பாட்டாலே அநுபவித்தது விக்கிரஹ வைலக்ஷண்யத்தை அன்றோ,
அந்த விக்கரஹமே அன்றோ பற்றத் தகுந்தது; -ஸூ பாஸ் ரயம் — த்யே வஸ்து
இதில், அங்ஙனம் பற்றத் தகுந்த விக்கிரஹத்துக்கும் உள்ளான ஸ்வரூப வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது;அதனை அன்றோ பாவித்தது.
பாவனையின் மிகுதியாலே, அவனாகப் பாவித்தால் பின்னை அவன் சொல்லும் வார்த்தைகளைச் சொல்லலாய் இருக்குமே அன்றோ.
அப்படியே, விபூதி அத்தியாயத்தில் அவன் சொன்ன படிகளைப் பெரும்பாலும் அநுகரிக்கிறாள்.
அதர்வ சிரஸ்ஸிலே, சிவன் தன் வைபவத்தைப் பரக்க நின்று பேசினான், தனக்கு அடங்காத ஐஸ்வர்யமாயிருந்தது,
இவன் இப்படிப் பேசுகைக்கு அடி என்? என்று சுருதி தானே சங்கித்து, “ஸோந்தராத் அந்தரம் பிராவிசத்” என்று,
பரமாத்ம பிரவேசத்தாலே சொன்னான் என்னா நின்றதே அன்றோ. அந்தப் பாவம் வந்தால் அப்படியே சொல்லலாய் இருக்குமே.

தேகாத்மா அபிமானி -ஒன்றாக -சொல்லுவது போலே நான் -ஆத்மாவே பரமாத்வுக்கு தேகம் -இந்த அபிமானம் முற்றி ப்ரஹ்மமே நான்
பிரகாரி அவன் அளவும் செல்ல -பர்யவசனாய விதி -பாவனா பிரகர்ஷத்தாலே அவனாகவே பேசுகிறாள் –
“தத் பாவ பாவம் ஆபந்ந: ததாஸௌ பரமாத்மநா பவத்யபேதீ பேதஸ்ச தஸ்யா ஜ்ஞாந
க்ருதோபவேத்”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 6. 7:95.-காண்டித்ய கேசித்வஜர் சம்வாதம் –
“சர்வேச்வரனுடைய குணங்களைப் போன்ற குணங்களை அடைந்த ஒரு சேதனன் முக்தி தசையில்
பரமாத்மாவோடு பேதம் அற்றவனாகிறான்” என்றும்,
“தத் ஹிதத் பஸ்யந் ருஷி: வாமதேவ: ப்ரதிபேதே அஹம் மநுரபவம் ஸூர்ய: ச”-என்பது, பிரு. உபநிட. 3 : 4.
பிரஹ்மத்தைச் சாக்ஷாத்கரித்த வாம தேவ ருஷியானவர், நான் மநுவாக ஆனேன், சூரியனாகவும் ஆனேன் என்று எண்ணினார்” என்றும்,
“மத்தஸ் ஸர்வம் அஹம்ஸர்வம் மயி ஸர்வம் ஸநாதநே அஹமேவ அவ்யய; அநந்த: பரமாத்ம
ஆத்ம ஸம்ஸ்ரய:”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1, 19 : 85.
“என்னிடத்திலிருந்து எல்லாப் பொருள்களும் உண்டாயின, அநாதியான என்னிடத்திலேயே எல்லாம் லயம் அடைகின்றன” என்றும்,

கோ பவான் இதி அஹம் ஏக ருத்ரன் பிரதம மாசம் -நானே ஒருவன் பவிஷ்யாமி- இனியும் நானே இருப்பேன் –
இதி -அந்தரங்தாராந்த பிராவிசத்-உள்ளே நுழைந்து -நானே அனைத்தும் திசைகளும் -சாவித்ரி காயத்ரி அனைத்தும் நானே –
முழுவதும் புகுந்து இருக்கிறபடியால் சா தர்மம் -பேசலாமே -ப்ரஹ்மம் சொன்ன வார்த்தையை –
அன்னமயம் -பிராண மநோ விஞ்ஞான மய -அந்தரங்களுக்கும் அந்தரங்கமாய் -ஜீவனுக்கும் அந்தரமாய் -அதர்வசிகையிலும் உண்டே

“தத்பாவ பாவம் ஆபந்ந: ததாஸௌ பரமாத்மநா பவத்யபேதீ பேதஸ்ச தஸ்யா ஜ்ஞாந க்ருதோபவேத்”-
“தத் பாவ பாவம் ஆபந்ந–தத் ஸ்வ பாவம் உடையவன் ஆகையாலே —
ததா -மோஷ தசையில்
அசௌ பரமாத்மநா பவத்யபேதீ -பரமாத்மா உடன் அபேதம் -ஏகி பூதம் -பிரகாரத்வேன
அத்வைதி வாதம் இல்லை –தேவாதி பேதம் கர்மம் அடியாக வந்தது
ப்ரஹ்மத்துக்கு அஜ்ஞ்ஞானம் பலவாக தோன்றும் -பூர்வ பஷம் –
அவன் பாவம் இவன் அடைகிறான் என்று இவர்களால் -சொல்ல முடியாதே –
அவன் இவன் என்று சொன்னால் அத்வைதம் குலையுமே
தேவாதி வாசி கர்ம நிபந்தம்
பாவ சப்தம் -அவனை நினைக்க நினைக்க -நினைவே உகளித்து என்றுமாம் நிரந்தர உபாசகன் –
பாவ -அபஹத பாப்மாதி -அஷ்ட கல்யாண குணங்களில் சாம்யம் -பரம சாம்யா பத்தி அடைந்து
பாவ -சப்தம் -பாவனா பிரகர்ஷம் -நினைவே உகளித்து -நிரந்தர தியான உக்தம் –
பின்னத்வேன-அனுசந்தானம் உண்டாகுமே -நஞ்சீயர் அருளிச் செய்வாராம் –
பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே –
ஸ்வரூபத்தால் இரண்டு உண்டே -சரீராத்மா வானம் நம் சித்தாந்தம் –

ஆக, ‘இப்படிப் பிரிவாற்றாமையாலே அவனை அநுகரித்துத் தரிக்கிறாள்’ என்று அறிய மாட்டாமல்,
சர்வேச்வரன் ஆவேசித்தாற் போலே இரா நின்றது’ என்று, திருத் தாயார் வினவ வந்தவர்களுக்குச் சொல்லுகிறாள்.

———————————————————————————

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத் தீசன் வந்து ஏறக் கொலோ?
கடல் ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல் ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1-

ஜகத் சிருஷ்டி யாதிகள் எல்லாம் நானே செய்தேன் என்று சர்வேஸ்வரன் ஆவிஷ்டை யானால் போலே சொல்கிறாள்
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்-சஹாயாந்தர நிரபேஷமாக சிருஷ்டித்தவன் நானே -ஏகாரத்தால் –
உபாதான – -சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம்
நிமித்த -சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம்
-சஹகாரி-ஞானாதி கல்யாண குண விசிஷ்ட ப்ரஹ்மம்
காரண கார்ய ஸூஷ்ம ப்ரஹ்மம் -ஸ்தூல ப்ரஹ்மம் –
விசேஷணங்கள் மட்டும் மாறும் –
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்-சிருஷ்டிக்கு அனந்தரம் -அநு பிரவேசித்து -உபாதான கார்யமாகவும் –
தது தது சப்த வாச்யம் -சத்தைக்கு உள் புக வேண்டுமே –
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்-அர்த்தியாய் இரந்து அளந்து கொண்டேன்
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்-அவாந்தர பிரளயத்தில் -நைமித்திகக –
நான்முகனின் இரவில் 1000 சதுர யுகம் ஆனதும் மகா வராஹமாய்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்-உப சம்ஹரித்து -பெரும் பிரளயத்தில் -வட தள சாயி என்றுமாம் –
கடல் ஞாலத் தீசன் வந்து ஏறக்கொலோ?-சகல ஜகத்துக்கும் நியந்தா -ஆவேசமோ -ஆவேச சங்கை இல்லை -நிர்த்தாரணம்
ருத்ரன் அதர்வத சிரசில் சொன்னாரே -இவள் ருத்ரனை த்யானித்து இருந்தால் சொல்லி இருப்பாள்
கடல் ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?-அவிசேஷஜஞராய்-வைகுந்தத்து அமரர் முனிவர்-எதிர் தட்டு நாம் -இத் தேசத்தில்
கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே-இங்கேயே இருந்து -அப்ராக்ருத ஸ்வ பாவை யாக இருக்கும் என் மகள்
அப்யசிக்கின்றனவாய் உள்ள -பேசுகிற -என்ன என்று எடுத்துச் சொல்வேன்

கடலோடு கூடின உலகத்தைப் படைத்தவனும் யானே என்பாள், இந்த உலகமாக இருப்பவனும் யானே என்பாள், இந்த உலகத்தை
அளந்து கொண்டவனும் யானே என்பாள், இந்த உலகத்தைப் பிரளயத்தினின்றும் ஒட்டு விடுவித்து மேலே கொண்டு வந்தவனும் யானே என்பாள்,
இந்த உலகத்தை எல்லாம் பிரளய காலத்தில் புசித்தவனும் யானே என்பாள், உலகத்திற் கெல்லாம் தலைவனான சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?
இந்த உலகத்திலே என்மகள் சொல்லுகின்றவற்றை, இந்த உலகத்தீரான உங்களுக்கு எதனைச் சொல்லுவேன்? என்கிறாள்.
‘கடல்ஞாலம் செய்தேன்’ என்பதில், ஞாலம் என்பது, ஆகுபெயர். ஏறுதல்-ஆவேசித்தல். கொலோ என்பது, ஐயப் பொருள்.
‘கொலோ’ என்பது, ‘சம்சய உக்தி அன்று, காணுங்கோள் என்று நிர்ணயித்துச் சொல்லுகிறாள்’ என்பர் வியாக்யாதா.
“கொல்லே ஐயம்” என்பது, தொல்காப்பியம்.
இத் திருவாய்மொழி, எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.

என்மகள், உலகத்தைப் படைத்தல் முதலான செயல்களை எல்லாம் செய்தேன் நானே என்னா நின்றாள்;
எம்பெருமான் தன்பக்கல் ஆவேசித்துச் சொல்லுகிறாள் போலே இராநின்றது என்கிறாள்

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் –
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத: பிரபவ: பிரளய ஸ்ததா” என்பது, ஸ்ரீ கீதை. 7 : 6.
“நான் உலகம் அனைத்துக்கும் காரணபூதன்” என்னா நின்றாள்.
கடலோடு கூடின உலகத்திலே எல்லாப் பொருள்களும், கண்களுக்கு இட ஒரு துரும்பு இல்லாதபடி அழிந்து,
“சதேவ – சத்து ஒன்றே இருந்தது” என்கிறபடியே, தனக்கு என்ன ஒரு பெயரும் உருவமும் இல்லாதபடி அழிந்த அன்று
இதனை உண்டாக்கினேன் நான் என்னா நின்றாள். சூக்ஷ்மமான சித்து அசித்துக்களோடு கூடின பிரஹ்மமே காரணமாய்,
அது தானே ஸ்தூல அவஸ்தையை அடைதலே அன்றோ காரியமாகிறது.
சித்து அசித்துக்களோடு கூடிய பொருளே காரணமுமாய் இருக்கையாலே, புறம்பு ஒரு காரணம் இல்லாமையாலே,
தானே முதற் காரணமும் நிமித்த காரணமும் துணைக் காரணமுமாய் அன்றோ இருப்பது.
இப்படி மூன்று வித காரணங்களும் தானேயாய் இதனை உண்டாக்கினேன் நான் என்னா நின்றாள்.
‘யானே’ என்ற பிரிநிலை ஏகாரத்தால், வேறு காரணம் இல்லை என்பதனைத் தெரிவித்தபடி.

கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் –
தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநுப்ராவிஸத் தத் அநுப்ரவிஸ்ய ஸச்சத்யச்ச அபவத்”-என்பது, தைத்திரீய ஆன. 6.
“அவற்றைப் படைத்து அவற்றுள் பிரவேசித்து நின்றான், அவற்றுள் பிரவேசித்து
உயிர்ப் பொருளும் உயிரல் பொருளும் ஆனான்” என்கிறபடியே,
இவற்றை உண்டாக்கி, இவை பொருளாதல் பெயரடைதல் முதலியவைகளுக்காக அநுப் பிரவேசித்து,
இவற்றைச் சொல்லும் சொற்கள் தன்னளவும் வரும்படி இவையாகி நிற்கிறேன் நான் என்னா நின்றாள்.
வாசகமாயாதல் போதகமாயாதல் அவனைக் காட்டக் கடவன அன்றோ; தோற்றுகிற இதனைச் சொல்லிக் கொண்டு
அபர்யவசான விருத்தியாலே அவனளவும் வருதல், இக் கூட்டத்துக்கே வாசகமாயாதல் இருக்குமேயன்றோ.
“ஸச் சத்யச்சா பவத் – சேதனமும் அசேதனமும் ஆனார்” என்கிற இது, ஸ்வரூப ஐக்யம் அன்று,
“தத் அநுப்ர விஸ்ய-அவற்றுள் அநுப் பிரவேசித்து” என்றதனால், அநுப் பிரவேசத்தின் காரியம் என்னுமிடத்தைச் சொல்லுகிறது.

கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்-
மஹா பலி போல்வார், பருந்து இறாஞ்சினாற் போன்று இதனை அபஹரித்து ‘என்னது’ என்னும் அன்று,
இதனை எல்லை நடந்து மீட்டுக் கொண்டேன் நான் என்னா நின்றாள். என்றது,
இவற்றைப் படைத்து, ‘மேல் உள்ளன தாமே நடக்கின்றன’ என்று விடுகை அன்றிக்கே, இவற்றை
அடி ஒற்றிக்கொண்டு சென்று காத்தலைத் தெரிவித்தபடி.
‘அசுரத்தன்மை வாய்ந்தவர்கள் இவன் முன்பு நில்லார்களே யன்றோ’ என்னுமதனாலே,
‘இராச்சியத்தை வாங்கித் தர வேணும்’ என்று விரும்பிக் கேட்ட அளவே அன்றோ இந்திரன் பக்கல் உள்ளது;
அவனுடைய ஒளதார்யத்துக்குத் தகுதியாகத் தன்னை இரப்பாளனாக்கி, அவன் தரும் விரகு அறிந்து வாங்கினான்
தானே யாதலின் ‘யானே’ என்கிறது.

கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும் –
அசுரத்தன்மை வாய்ந்தவர்களாயிருப்பார் இதனை அழித்தல் அன்றிக்கே, பூமிக்குக் காவலாக வைத்த கடல் தானே இதனை அழிக்க,
அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்த இதனை இடந்து எடுத்தேனும் யானே என்னா நின்றாள்.
அமிழ்ந்து கிடக்கிற பூமி, ‘என்னை எடுக்க வேணும்’ என்று விரும்பியது இல்லையே அன்றோ;
தானே செய்தானாதலின் ‘யானே’ என்கிறது.

கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும் –
சிலர் இருத்தல் சிலர் அழிதல் அன்றிக்கே, படைக்கின்றவர்களோடு அழிக்கின்றவர்களோடு வேற்றுமை அற
எல்லாரையும் ஒக்கப் பிரளயம் கொள்ளப் புக, இவ் வுலகம் முழுதினையும் வயிற்றிலே வைத்துக் காப்பாற்றினேன் நான் என்னா நின்றாள்.
அப்போது வேறு சிலர் காத்தார்கள்’ என்பதற்கு, மற்று ஒருவர் உண்டாகைக்குச் சம்பாவனையும் இல்லையாதலின் ‘யானே’ என்கிறது.

கடல் ஞாலத்து ஈசன் வந்து ஏறக் கொலோ –
எல்லாப் பொருள்களையும் படைத்தவனாய் -எல்லாப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாய் -எல்லாருக்கும் வந்த
ஆபத்துகளுக்குத் துணைவனான- சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? அறிகின்றிலேன்.
‘கொலோ’ என்பது, ஐயத்தின் கண் வந்தது அன்று, காணுங்கோள் என்று அறுதி யிட்டுச் சொல்லுகிற வார்த்தை.
‘உன்னைக் கேட்டு அறுதியிட வந்தோம், நீயும் எங்களைப் போன்று ஆராயா நின்றாயே!நாங்கள் பின்னர் நிர்ணயிக்கும்படி என்?
நாங்கள் தெளியும்படி நீயே சொல்லாய்’ என்ன,

கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் –
“வைகுந்தத்து அமரர்” என்னுமாறு போன்று, நித்திய சம்சாரிகளாய், பகவத் விஷயம் புதியது உண்டறியாதே போருகிற
உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவேன்?

கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே-
நித்திய சூரிகள் சொல்லக் கூடிய வார்த்தைகளை என் மகள் சம்சாரத்திலே இருந்து சொல்லுகிற இதற்கு நான் எதனைச் சொல்லுவது?
இவை தாம், நித்திய சூரிகள் சொல்லக்கூடிய வார்த்தைகள் ஆதலின், ‘ஞாலத்து என்மகள் கற்கின்றவே’ என்கிறாள்.

—————————————————————————————-

கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வி யீர்க்கு இவை என் சொல்லுகேன்?
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.–5-6-2-

வேத வேத்யன் -வேத பிரதிபாத்யன் -சகல வேத வித்யைகளும்-தத் பிரவர்த்தனாதிகளும் -நான் இட்ட வழக்கு
124 பர வாசுதேவன் திரு நாமங்கள் -மேல் வ்யூஹ மூர்த்தி -சாஸ்திரம் கொடுத்து – தர்மம் பிரவர்த்தனம் -பலம் கொடுப்பார் –
கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்-புஸ்தக -நிரீஷனாதிகள் இல்லாமல் ஆச்சார்யா முகேன -அநந்தா வேதா –
வேதங்களுக்கு எல்லை இல்லை -வேதங்களும் சொல்லி முடிக்காதே -என்றுமாம் –
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்-வித்யைகள் பிரகாரம் -சப்தங்கள் ப்ரஹ்மாத்மகம் -சப்தங்கள் ப்ரஹ்மம் –
ஒலியும் சொல்லும் அபிநயமும் ப்ரஹ்மமே
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்-சிருஷ்டி காலத்தில் யதா பூர்வே உண்டாக்கி
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்-சம்ஹ்ருதி சமயத்தில் உப சம்ஹரித்து நெஞ்சில் வைத்து -ஸூ ஷ்ம ரூபமாக
சங்கைகளை தீர்ப்பதும் நானே என்பார் ஈட்டில்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்-வித்யா சாரம் -மூல மந்த்ரம் -ஓங்காராம் -அஷ்டாஷரம் -சாரம் -நானே
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக் கொலோ?சகல வேத பிரதிபாத்யன் -ஆவேசித்து இருக்கிறான்
கற்கும் கல்வி யீர்க்கு இவைஎன் சொல்லுகேன்?இது என் பக்கல் கற்கும் படி –
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.-வார்த்தை கற்கும் பருவம் -சப்த ராசி க்ரஹணமும் இல்லாதவள்
அன்றோ இவற்றை சொல்லுகிறாள்
வேதம் வித்யா ஸ்தானம் என்றுமாம்

கற்கப்படுகின்ற கல்விக்கு எல்லையை உடையேனல்லேன் என்னா நின்றாள், கற்கும் கல்வியாக இருப்பேனும் யானே என்பாள்,
கற்கும் கல்வியை உண்டாக்குகின்றவனும் யானே என்பாள், கற்கும் கல்வியினுடைய தாத்பர்ய அர்த்தத்தை அறுதியிடுகின்றவனும் யானே என்பாள்,
கற்கும் கல்வியினுடைய சாரமாகிய மந்திரங்களும் யானே என்பாள், கற்கும் கல்வியினாலே சொல்லப்படுகின்ற சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?
பகவத் விஷயம் என்றால் இன்று கற்க வேண்டியிருக்கிற உங்களுக்கு, இன்று வார்த்தை கற்கும்படியான பருவத்தை யுடைய
என்மகள் கண்டு சொல்லுகின்றவற்றை என் சொல்லுவேன்?

எல்லாக் கல்விகளால் அறியப்படுதலும் அக் கல்விகளைப் பரப்புதல் முதலான செயல்களும் நான் இட்ட வழக்கு என்கிறாள்.

கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும் –
அல்ப காலத்துக்குள்ளே -64 நாள்கள் -சாந்தீபனியோடே நான் கற்ற பரப்புக்கு ஓர் எல்லை இல்லை என்னா நின்றாள்.
அன்றிக்கே,
“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ”-என்பது, தைத்திரீய, ஆனந். 9 : 1.
“ஆனந்த குணத்தைக் கூற முடியாமல் அவனிடமிருந்து வேத வாக்குக்கள் மீண்டன” என்கிற சுருதிக்கு
நிலம் அன்றிக்கே இருக்கிறேன் நான் என்னா நின்றாள் என்னுதல். என்றது,
கற்கும் கல்வியினுடைய எல்லைக்குள்ளே நிற்கிறேன் அல்லேன் நான் என்கிறாள் என்றபடி.
அன்றிக்கே,
“வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை” என்கிறபடியே,
வேதாந்தங்களாலே அறியப்படுமவன் நான் என்கிறாள் என்னுதல்.-வேதாந்த – இல்லமாக உடையவன் –
இலனே-இல்லமாக உடையவன்

“கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும்” என்பதற்கு,
மூன்று வகையாகப் பொருள் அருளிச் செய்கிறார்.- மூன்றாவது பொருளில்
எல்லை என்பது, வேதாந்தமாய், இல் என்று இருப்பிடமாய்,
வேதாந்தத்தை இருப்பிடமாக உடையவன் என்பது, சொற் பொருள். வேதாந்த வேத்யன் என்றபடி.

கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும் –
அவற்றால் அறியப்படாமல் இருக்கிற அளவேயோ,
மாலிருஞ் சோலை யென்னும் மலையை யுடைய மலையை நாலிரு மூர்த்தி தன்னை நால்வேதக் கடலமுதை
மேலிருங் கற்பகத்தை வேதாந்த விழுப்பொருளின் கற்கும் கல்வி ஆகிறவன் இவனே
என்னுமதற்குப் பிரமாணம் காட்டுகிறார்-‘நீரே கல்வி’ என்று.
“நீரே கல்வி” என்கிறபடியே, அவை தாம் என் அதீநம் அலவோ என்னா நின்றாள்.
“த்வமேவ மாதாச பிதா த்வமேவ த்வமேவ பந்துஸ்ச குரு: த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவதேவ”-என்பது, சுலோகம்.

கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்-
அந்தக் கல்விகளை அவ்வக்காலங்களில் உண்டாக்குவேனும் நான் என்னா நின்றாள்.

கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும் –
அவற்றின் சந்தேகங்களைத் தீர்த்துத் தாத்பர்ய நிர்ணயம் செய்வேனும் நான் என்னா நின்றாள்.
பரக்கக் கற்று வைத்தே “சூந்யமே தத்துவம்” என்கிறார் உளரே அன்றோ.
அன்றிக்கே,
கற்கின்றவர்களும் கற்பிக்கின்றவர்களும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்னுதல்.
‘தீர்ப்பேன்’ என்ற சொல், இப்பொருளைக் காட்டுமோ? என்னில்,
தீர்க்கையாவது, அவற்றினுடைய எல்லை காண்கை அன்றோ.
ஆச்சார்ய சிஷ்ய பாவம் -தீர்ப்பது -அவற்றின் எல்லை -நானே சிஷ்யன் நானே ஆச்சார்யாராய் -நர நாரணனாய்
சிஷ்ய ஆச்சாரியார் வழக்கத்தை தீர்த்து வைப்பவனும் நானே

கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும் –
அக் கல்வியினுடைய சாரமான பிரயோஜனமும் நான் என்னா நின்றாள்.-பயன் -பிரயோஜனம் நானே –
வித்யா சாரம் -மூல மந்த்ரம் -ஓங்காராம் -அஷ்டாஷரம் -சாரம் -நானே -பன்னீராயிரப்படி நிர்வாகம்

கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக் கொலோ –
எல்லாக் கல்விகளாலும் அறியப்படுகின்ற சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?

கற்கும் கல்வி உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் –
இப்போது கற்று அறிய வேண்டும்படி, பகவத் விஷயத்தில் ஒவ்வோக் குழியிடாதே இருக்கிற
உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவது?
பாலர் எழுதும் குறி போலே -பகவத் விஷயத்தில் நீங்கள் ஆரம்ப பாடம் படிக்கிறீர்கள் என்றவாறு –

கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே –
சொன்ன வார்த்தையைச் சொல்லுமித்தனை போக்கி, தானாக ஒரு வார்த்தை சொல்ல மாட்டாத அளவாயிருக்கிற இவள்,
இவ் விஷயத்திலே இறங்குகிற எல்லையை, நான் எதனைச் சொல்லுவது?

——————————————————————————–

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்?
காண்கின்ற என் காரிகை செய்கின்றவே.–5-6-3-

பிரமாண சித்தம் -ஜகத்துக்கு -பிரதான காரணம் -பஞ்ச பூதங்கள் நான் இட்ட வழக்கு
காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்-சரம பூதமான பிருத்வி எல்லாம் -அருகில் சந்நிஹிதம் –
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்-பிரதம பூதம் –
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்-தேஜோ ஆப அன்னங்களில் பிரதானம் -உஷ்ணம் -ஸ்பர்சம் நெருப்பு
காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும்-தத் பூர்வ பாவி -நெருப்புக்கு –
இக் காற்றெல்லாம் -தாரகத்வாதி சந்நிஹிதம் என்பதால் சுட்டுப் பொருள்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்-தத் அனந்தர பாவி -நெருப்புக்கு அப்புறம் தண்ணீர் –
காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ?–கீழே காண்கின்ற -பிரத்யக்ஷம் -இங்கு காண்கின்ற -தர்ச நீயம் –
அபரிச்சின்னம் -வடிவை உடைய சர்வேஸ்வரன்
காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்?-லோகம் ஒழிய அறியாத உங்களுக்கு
காண்கின்ற என் காரிகை செய்கின்றவே-அபி ரூபை -யாராலும் காண முடியாதவற்றை காணும் இவள் –
என் என்பதாகச் சொல்லுவேன் –

பார்க்கப்படுகின்ற பூமி முழுதும் யானே என்பாள், பார்க்கப்படுகின்ற ஆகாய முழுதும் யானே என்பாள்,
பார்க்கப்படுகின்ற கொடிய நெருப்பு
முழுதும் யானே என்பாள், பார்க்கப்படுகின்ற இந்தக் காற்று முழுதும் யானே என்பாள்,
பார்க்கப்படுகின்ற கடல் எல்லாம் யானே என்பாள்,
காட்சிக்கு இனியதான கடல் போன்ற நிறத்தையுடைய சர்வேச்வரன் ஆவேசித்தானோ?
எல்லாவற்றையும் காண வல்ல என் மகள் செய்கின்றவற்றை,
காண்கின்ற உலகத்தை ஒழிய வேறு ஒன்றனையும் அறியாத உங்களுக்கு எதைச் சொல்லுவேன்?

காரணமான மண் முதலான பூதங்கள் ஐந்தும் நான் இட்ட வழக்கு என்கிறாள்.

காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்-
காணப் புக்கால் கண்டதாய்த் தலைக் கட்ட முடியாத படியான பரப்பை யுடைத்தான பூமி எல்லாம்
நான் இட்ட வழக்கு என்னா நின்றாள்.
இப்படி இருக்கிற இது தான் காரிய உருவமாக இருக்கின்ற மண்ணே அன்றோ,
கண்களுக்குத் தோற்றுகிற இது-இதுவே – இவ்வளவானால்
இதற்குங்கூடக் காரணமாய்த் தான் சாஸ்திரம் கொண்டு அறிய வேண்டும்படி இருக்குமது இவ்வளவு அல்லவே அன்றோ.
தன் மாத்திரை கந்தம்
ஸூஷ்மம் நாமம் ரூபம் அர்ஹம் அன்றோ -அதனால் அவற்றையும் காண முடியாதே –
காணப் படாத நிலம் எல்லாம் நானே -இத்தை சொன்னது அதற்கும் உப லஷணம் –
சாஸ்திரம் கொண்டே அறிய வேண்டுமே இத்தை –

காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்-
காணப் புக்கால் கண்டதாய்த் தலைக்கட்ட முடிய ஒண்ணாதபடியாய், இது தனக்குங் கூட இடத்தைக் கொடுக்கிற ஆகாயமும்
நான் இட்ட வழக்கு என்னா நின்றாள்.

காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும் –
அப்படிப்பட்ட ஒளியுள்ள பொருளும் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள்.

காண்கின்ற இக் காற்று எல்லாம் யானே என்னும் –
ஸ்பர்சம் கொண்டு அறியும்படி இருக்கிற காற்றும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள்.-
காற்றுக்கு பூத ஸூஷ்மம் ஸ்பர்சம் அன்றோ-

காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்-
காண்பார்க்குக் கண்டதாகத் தலைக்கட்ட முடியாதபடியான கடல் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள்.

காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ-
காணப் புக்கால் கண்டதாக மீள ஒண்ணாதபடியான கடல் போலே சிரமஹரமான வடிவையுடைய
சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?

காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் –
நீங்களும் என்னைப் போன்று காணா நின்றீர் கோளாகில், உங்களுக்கு நான் என்ன பாசுரமிட்டுச் சொல்லுவது;
சொல்ல ஒண்ணாமைக்கு உங்களோடு என்னோடு வாசி உண்டோ?

காண்கின்ற என் காரிகை செய்கின்றவே –
“வேத வாக்குகள் மனத்தாலுங்கூட நினைக்க முடியாதபடி எந்தப் பரம் பொருளிடமிருந்து திரும்புகின்றனவோ” என்கின்ற
அளவிட்டு அறிய முடியாத விஷயத்தை உட் புக்குப் பேசுகின்ற என் பெண் பிள்ளை செய்கிற இதனை நான் சொல்லுவது என்?

————————————————————————————————-

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனி வாய் இள மான் திறத்தே.–5-6-4-

சர்வ கிரியைகளும் நான் இட்ட வழக்கு என்கிறாள் -கிரியை கர்த்தா கர்ம பலன்கள் எல்லாம்
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்-வர்த்தமான -கர்மங்கள் –
செய்வான் நின்றனகளும் யானே என்னும்-வருங்கால கிரியைகள் –
செய்து முன் இறந்தவும் யானே என்னும்-கழிந்த கால கர்மங்கள்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்-பலத்துக்கு போக்தாவும் நானே
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்-அனுஷ்டாதக்களை உண்டாக்கி -கர்ம ஞான -சாஸ்திரம் சொல்லிய
அனைத்துக்கும் செய்ய அதிகாரிகளை உண்டாக்கி
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?-சிவந்த தாமரைக் கண்ணன் தான்
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?-செவ்வி ஒழிய அறியாத லோகத்தீர் -நேர்மை –
பெண் வருத்தம் தாய் அறிவாள்-என்று கேட்கிறீர்கள் -இங்கு நடப்பதை யார் அறிவார்கள்
செய்ய கனி வாய் இளமான் திறத்தே -பிரிந்த தசையிலும் வை வர்ண்யம் இல்லை -அநு கார தசையில் வாய் சிவந்து உள்ளதே –
அவனாகவே நினைந்து அவன் திரு வாய் வர்ணம் பெற்றாள்-
இளமை முக்தமான மான் போலே பேதை இவள் இடையாட்டத்துக்கு என்ன சொல்லுவேன்

செய்து கொண்டிருக்கின்ற காரியங்கள் எல்லாம் யானே என்னும், இனி மேல் செய்யப்படுவனவாக நிற்கின்ற காரியங்களும் யானே என்னும்,
முன் செய்து கழிந்து போன காரியங்களும் யானே என்னும், காரியங்களின் பயன்களை அனுபவிக்கின்றவனும் யானே என்னும்,
அந்தக் காரியங்களைச் செய்கின்றவர்களைப் படைக்கின்றவனும் யானே என்னும், செந்நிறம் பொருந்திய தாமரை போன்ற திருக் கண்களையுடைய
சர்வேச்வரன் ஆவேசித்தானோ? நன்மை அல்லது அறியாத இந்த உலகத்தார்க்கு, சிவந்த கோவைக் கனி போன்ற இளமை பொருந்திய மான்
போன்ற இப் பெண் விஷயத்தில் எதனைச் சொல்லுவேன்?

முக்காலத்திலும் உண்டான காரியங்களின் கூட்டம் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள்-என்கிறாள்

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும், செய்வான் நின்றனகளும் யானே என்னும், செய்து முன் இறந்தவும் யானே என்னும்
நிகழ்காலத்தில் நடக்கும் காரியக்கூட்டம், செய்யக் கடவதாய் நிற்கிற காரியக் கூட்டம், முன்பு செய்து போன காரியக் கூட்டம் இவை அடைய
நான் இட்ட வழக்கு என்னா நின்றாள்.

செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் –
“அஹம் ஹி ஸர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுவே ச நது மாம் அபிஜாநந்தி தத்வேந அத: ச்யவந்தி தே”-என்பது, ஸ்ரீகீதை. 10 : 25.
“நானே பஞ்ச மஹா யஜ்ஞம் முதலிய எல்லா நித்திய கர்மங்களின் பயனைப் புசிப்பவனும்” என்னா நின்றாள்.
அன்றிக்கே,
கிரியைகளின் பலன்களை அநுபவிக்கின்றவர்களும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்னுதல்.
அன்றிக்கே,
செய்கையாகிற கிரியையும், பலத்தை அநுபவிக்கின்றவனும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்னுதல்.

யாகத்தில் பிரயோஜன பாகமான ஹவிர்பாவம் என்றும்
ஸ்வர்க்காதி பல போக்தாக்களும் நான் இட்ட வழக்கு என்றும்
செய்கையும் பயனும் பிரித்து -இவையும் நானே -இப்படி மூன்று அர்த்தங்கள்

யாகத்தில் பிரயோஜன ரூபமான ஹவிஸ் பெற்று உண்பது நானே
ஸ்வர்க்காதி -பலன்களுக்கு போக்தாவும் நானே
செய்கை உடைய பலம் -செய்கையும் பலன் உண்பேனும்-கிரியை பலம் இரண்டும் –
கிரியை அனுஷ்டாதா பலம் பலம் அனுபவிப்பனும் யானே

செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும் –
கிரியைகளின் கர்த்தாக்களை இடுவித்து அவற்றைச் செய்விக்கின்றவனும் யானே என்னும்.
அன்றிக்கே,
அவர்கள் இவற்றைக் கொண்டு என்னை அடையும்படி செய்வேனும் யானே என்னும் என்னுதல்.

செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ –
அஸி தேஷிணா -கரிய கண்ணை யுடையவளான தன்மை நீங்கி, புண்டரீகாக்ஷன் படியாய் விட்டது. என்றது,
மையக் கண்ணாளான தன்மை போய், செய்ய கோலத் தடங்கண்ணன் படியாய் விட்டது என்றபடி.
கரும் தடம் கண்ணி -தாயார் -திரு நாமம் -திருத் தொலை வில்லி மங்கலம் –
ஆழ்வார் தன் பாவனை மாறி பெண்ணாகி அதுவும் மாறி புருஷோத்தமனாது வாசா மகோசரம் அன்றோ –

செய்ய உலகத்தீர்க்கு இவை என்சொல்லுகேன் –
சொல்ல முடியும், முடியாது என்று அறியாதே, சொல்லு, சொல்லு என்று என்னை அலைக்கிற படுபாடரான
உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவது?

செய்ய கனி வாய் இளமான் திறத்தே-
அநுகாரத்தாலே புணர்ச்சி சமயத்திற் போலே இருக்கிற இவள், உதடு செவ்வி பெற்று வரும்படி வேறுபட்டவளாய்,
மிக இளையளாய் இருக்கிறபடி நான் எதனைச் சொல்லுவது.
பிரிவில் வெளுத்திருக்கை தக்கதாக இருக்க, இவள் உதடு செவ்வி பெற்று வருகின்றதே அன்றோ அநுகாரத்தால் வந்த தரிப்பாலே.
சிவந்த கனி போலே இருக்கிற உதட்டினை யுடையளாய், இளைய மான் போலே பேதையான இவள் இடையாட்டத்தே.

———————————————————————————————–

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்
திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
திறம்பாது என் திருமகள் எய்தினவே.–5-6-5-

கிருஷ்ணாவதார சேஷ்டிதங்கள்-ஜகத் ரஷணாதி வியாபாரங்கள் நானே
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்-ஆஜ்ஞ்ஞையை அதி லங்கணம் -எல்லை தாண்டாத படி
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்-கோ ரஷணம் அர்த்தமாக அசங்காமல் -கோவர்த்தனம் -சலியாமல்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்-தப்பாத படி மிச்சம் இல்லாமல் பூதனை -கேசி –
வந்தவர் மீள வில்லையே -அரிஷ்ட தேனுகாசுராதிகள்
திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும்-திறமை -விஜய ஹேது உபாய பிராகாரங்களைக் காட்டி
சிகண்டி வைத்து பீஷ்மரை /அஸ்வத்தாமா ஹத போல்வன
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்-நினைவு தப்பாமல் -உப்புச்ச்சாறு -அசுரர்களுக்கு கொடுக்காமல் –
திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ?-ஆஸ்ரித ரஷணத்தில்-பின் வாங்காமல் திரும்பாத கை விடாத –
கடல் கரையைக் கடக்காத என்றுமாம்
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?-அறிய வேணும் என்னும் நினைவு தப்பாமல் உள்ள லோகத்தீர்
திறம்பாது என் திருமகள் எய்தினவே-லஷ்மி சமானையான தப்பாமல் பிராபித்த ஸ்வ பாவங்கள் –
ஒன்றும் விடாமல் அவனது ஸ்வ பாவங்கள் அனைத்தையும் –

நன்னெறியினின்றும் ஒருவரும் பிறழாதவாறு உலகத்தை எல்லாம் காக்கின்றவன் யானே என்னும்,
தளர்ச்சி இல்லாமலே கோவர்த்தனம் என்னும்
மலையை எடுத்தேன் என்னும், தப்பாதபடி அசுரர்களைக் கொன்றேன் என்னும், திறமைகளைக் காட்டி
அக் காலத்தில் பாண்டவர்களைக் காப்பாற்றினேன் என்னும்
தப்பாமல் சமுத்திரத்தைக் கடைந்தேன் என்னும், தன் விதிகளை ஒருவரும் தப்ப ஒண்ணாதவாறு இருக்கின்ற
கடல் வண்ணனாகிய சர்வேச்வரன் ஆவேசித்தானோ? பகவானுடைய குணங்களில் நின்றும் மீளாதவாறு என் மகள் எய்தியவற்றை,
கேட்டு அல்லது மீளாத உலகத்தார்க்கு எதனைச் சொல்வேன்?

உலகத்தைப் பாதுகாத்தல் தொடக்கமான செயல்களை எல்லாம் செய்தேன் நான் என்னாநின்றாள் என்கிறாள்.

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்-
ஒருவர் கூறை எழுவர் உடாதபடி, “இந்தப் பரமாத்மாவினிடமிருந்து பயந்து காற்று வீசுகிறது” என்கிறபடியே,
பூமியை நோக்குகிறேன் நான் என்னும்.
ஒருவர் கூறை எழுவர் உடுக்கையாவது, ஒருவன் கையில் உள்ள புடைவையை ஒருவன்,
அவன் கையிலுள்ள அதனை வேறு ஒருவன் பறிக்க,
இப்படியே ஏழு பேராகப் பறித்து உடுத்தல். இது, எளியாரை வலியார் வருத்துவதற்குத் திருஷ்டாந்தம்.
இப்படி, எளியாரை வலியார் வருத்தாதபடி அவர் அவர்கள் மரியாதைகளிலே நிறுத்திப் பூமியைக் காக்கிறேன் என்றபடி.

திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும் –
ஒரு பசுவின் மேலாதல், ஓர் ஆயன் மேலாதல் ஒரு துளிபடாதபடி கோவர்த்தன கிரியைத் தரித்துப்
பாதுகாத்தேனும் நான் என்னாநின்றாள்.

திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும் –
அசுரர்களுடைய கூட்டத்தைத் தப்பாதபடி அறுத்துப் போகட்டேன் என்னும்.

திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும் –
உலகத்தில் என் படிகளைக் காட்டி,-ஆஸ்ரித பஷபாத குணம் -பகலை இரவாக்கியும், ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுத்தும்,
பகைவர்களுடைய உயிர் நிலையைக் காட்டியும் இப்படி அன்று பாண்டவர்கள் மேல் அன்பு வைத்து
அவர்களைக் காப்பாற்றினேனும்- நான் என்னா நின்றாள்.
நகாங்க்ஷே விஜயம் க்ருஷ்ண நச ராஜ்யம் ஸுகாநிச கிம்நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகை: ஜீவிதேநவா”
“நஷ்டோ மோஹ: ஸ்மிருதி: லப்தா த்வத் ப்ரசாதாத் மயாஅச்யுத ஸ்திதிஸ்மி கத ஸந்தேஹ: கரிஷ்யே வசனம் தவ”-என்பன, ஸ்ரீகீதை. 1 : 32, 18 : 73.
“கிருஷ்ணா! வெற்றியையாவது இராச்சியத்தையாவது நான் விரும்பவில்லை” என்ற அருச்சுனனை,
“இப்போதே போரைச் செய்ய வேணும் என்கிற உன்னுடைய வார்த்தையை நிறைவேற்றி விடுகிறேன்” என்னச் செய்தானே அன்றோ.

திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்-
ஒரு தாழிக்கு உட்பட்ட தயிரை ஒன்றும் பிரி கதிர்ப்படாதபடி கடைவாரைப் போலே, சமுத்திரம் என்கிற மஹா தத்துவத்தின் நடுவே
மந்தரத்தை நட்டுக் கடைகிற இடத்துக் கீே்ழ விழுதல் மேலே கொந்தளித்தல் செய்யாதபடி கடலைக் கடைந்தேனும் நான் என்னும்.

திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ –
தன் சாசனத்தை ஒருவரால் தப்ப ஒண்ணாதபடி யாயிருக்கிற, அளவிட்டு அறிய ஒண்ணாத
தன்மையனான சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ?

திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் –
கேட்டு அல்லது கால் வாங்கோம் என்று இருக்கிற உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவது.

திறம்பாது என் திருமகள் எய்தின –
திருமகளை ஒத்த என் மகள், ஹிதம் சொல்லி மீட்க ஒண்ணாதபடி அடைந்தவற்றை நான் எதனைச் சொல்லுவது?
ஆழங்காலிலே இழிந்தார் படியைக் கரையிலே நின்றாராலே சொல்லப் போமோ.

—————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம்- 115- திருவாய்மொழி – -5-5–6….5-5-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

June 7, 2016

மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.–5-5-6-

வைஷ்ணவ வாமனத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் –
அறிய கற்று வல்லவர் வைஷ்ணவர் -பலம் -வடுக நம்பி -போலே -வைஷ்ணவ நம்பி –
ரூப வைலஷண்யம் -அவயவ சமுதாய சோபைகள்-திருமுக சோபை -ரூப புஜ வைலஷண்யம் இவள் நெஞ்சில் பூர்ணமானதே
மேலும் வன் பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்-ஆறி இருக்க வேண்டிய நாம் –
உபாய அத்யாவசியம் நமக்கு கர்த்த்வயம்
இவள் பிராப்ய த்வரித்து -பழியே வடிவாக கொண்டவள் -கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் அன்றோ
சோலை சூழ் தண் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
பழி புகழாம் படியான பிராவண்யம் -அபாகவதர் வைதால் ஸ்தோத்ரம் தானே
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும்-அழகு -அபி ரூபமாய் -கற்பகக் கொடி போன்ற மூக்கும் –
அதிலே பூ என்னலாம் படி திருக் கண்கள் -கனி -பழுத்த வாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.-அதுக்கு பரபாகமான நீல மேனி -பச்சிலை பணைத்தால்
போன்ற நான்கு தோள்களும் நிறைந்தன

இவள், மேலும் நம் குடிக்குக் கொடிய பழியை உண்டாக்குமவள் என்று சொல்லிக் கொண்டு தாயானவள்
நம்பியைக் காணுதற்கு இடம் தருகின்றிலள்,
சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின், அழகோடு மிகவும் நீண்டிருக்கின்ற
திரு மூக்கும் தாமரை போன்ற திருக் கண்களும் கோவைக் கனி போன்ற திரு வாயும் கரிய திருமேனியும் நான்கு திருத் தோள்களும்
என் நெஞ்சத்தினிடத்தில் நிறைந்து விட்டன என்கிறாள்.
நீள்கொடி : ஒருபொருட்பன்மொழி.

நம்பியுடைய திவ்விய அவயவ சோபைகள் என்நெஞ்சு நிறையப் புகுந்து நலியா நின்றன என்கிறாள்.

மேலும் நம் குடிக்கு வன் பழி இவள் என்று-
இப்போது சிலர் நான்கு வார்த்தைகள் சொல்லி விடுகை அன்றிக்கே,
மேலும் இக் குடிக்கு உருவ — நிலை நின்ற பழியை விளைக்குமவள் இவள் என்று.

அன்னை காணக் கொடாள்-
தன்னோடு ஒத்தவர்கள் சொல்லுகை அன்றிக்கே, அடியிலே என்னைப் பெறுகைக்கு நோன்பு நோற்ற
இவளும் இப்படிச் சொல்லா நின்றாள்.
முன்பு அன்னைமீர் -வளர்த்த தாய்கள் இவள் உடன் சாம்யம் உண்டே -இதில் பெற்ற தாய் –

சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை –
ஸ்ரமஹரமான சோலைகள் சூழ்ந்ததிருக் குறுங்குடி நம்பியை.

நான் கண் டபின் –
பழி புகழாம்படி இவ் விஷயத்திலே மூழ்கிய நான் கண்ட பின். என்றது, ‘பழி’ என்று அச்சம் உறுத்தி
மீட்க ஒண்ணாதபடி அவகாஹித்த-மூழ்கிய நான் கண்டபின் என்றபடி.

கோல நீள் கொடி மூக்கும் –
அழகு மிக்க கொடி போலே இருக்கிற திரு மூக்கும்,

தாமரைக் கண்ணும் –
அதன் படியேயாய் இருக்கிற தாமரை போன்ற திருக் கண்களும்,
அந்தக் கொடி பூத்தாற் போலே யாயிற்றுத் திருக் கண்கள் இருப்பது.

கனி வாயும் –
அது ஒரு பலத்தை உண்டாக்கினாற்போலே இருக்கிற கனி வாயும்,

நீல மேனியும் –
அத் தாமரையின் இலை போலே நீலமாய் இருக்கிற திரு மேனியும்,

நான்கு தோளும் –
ஒரு பெரு வெள்ளம் போலே ஆயிற்றுத் திருமேனி, அதனை நீந்துகைக்குச் சில தெப்பங்கள் போலே
இருக்கிற திருத் தோள்கள் நான்கும்,

என் நெஞ்சம் நிறைந்தனவே-
உங்கள் ஹித வசனங்கட்கெல்லாம் என் நெஞ்சில் இடம் இல்லை.

விலஸித நாசா கற்பக வல்லி இத்யாதி –பிரசன்ன சீதா குளிர்ந்த கண்களால் வாரும் என்னும்படி —
ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் இத்தை ஒற்றியே

———————————————————————————————

நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–5-5-7-

நிரதிசய தேஜோ விசிஷ்டன் -உத்துங்கமான ஸ்ப்ருஹநீய விக்ரகத்துடன் நம்பி திருக்கையில் திரு ஆழி உடன் நின்றார்
நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்-மேலும் பழி-நிறைந்த வன் பழி –
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-சிறப்பை உடைய கீர்த்தி -அந்த கீர்த்தி அதிசயத்துக்கு அகப்பட்ட நான் –
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி யொடும்-பூர்ணமான தேஜோ ராசியாலே உத்துங்க ஸ்ப்ருஹநீய திரு மேனி
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே-நிறைந்தான் -அழகிய திருக் கையில்
திரு ஆழி ஆழ்வான்- உடன் சேர்ந்து -சேர்த்தி அழகிலே -ஈடுபட்டேன்

இவள் செய்கின்ற காரியம் நம் குடிக்கு நிறைந்த கொடிய பழியைத் தருவதாகும் என்று தாயானவள் நம்பியை நான் காண்பதற்கு விடுகின்றிலள்:
சிறந்த கீர்த்தியை யுடைய திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின், நிறைந்த பிரகாசத்தின் கூட்டத்தாலே சூழப்பட்ட நீண்ட அழகிய
திருமேனி யோடும் என் மனத்துக்குள்ளே நிறைந்து நின்று விட்டான்; திருச் சக்கரமும் அழகிய கையிலே இருக்கின்றது.
சூழ்ந்த மேனி என்க நின்றொழிந்தான்: ஒருசொல்.

நம்பியுடைய திருமேனியில் அழகு வெள்ளம் என் நெஞ்சிலே வேர் வீழ்ந்தது என்கிறாள்.

நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள் –
ஆண்டாள், ஒரு நாள் பட்டரையும் சீராமப் பிள்ளையையும் காட்டி, ‘இவர்கள் விவாகத்தைச் செய்வதற்குரிய
பருவத்தை அடைந்தார்கள்,
பேசாதே இருக்கிறது என்?’ என்ன, ‘ஆகில், நாளைப் பெருமாள் பாடே போனவாறே வரக் காட்டு’ என்ன,
அவர்களையும் கொண்டு திரு முன்பே நிற்கச் செய்தே, பெருமாள் அருளப் பாடிட்டு,
ஒன்று சொல்வாய் போலே இருந்தாயே!’ என்று திரு வுள்ளமாக,
“இவர்கள் விவாகத்தைச் செய்வதற்குரிய பருவத்தினர் ஆனார்கள் என்று சொல்லா நின்றார்கள்” என்ன,
நாமே ஒத்ததான இடத்தில் சம்பந்தம் செய்து தருகிறோம்’ என்று அருளிச் செய்ய,
பிற்றை நாள் மன்னியைக் -கன்னிகையைக் -கொடு வந்து நீர் வார்த்தார்கள்.
ஆக, ‘அத்தலையாலே வருமது ஒழிய, தாம் தாம் ஒன்றை ஆசைப்படுகையும் கூடப் பழி’ என்று இருக்குங் குடி –
பிரபன்ன குடி-காணும்.

“அத பாதக பீத: த்வம் ஸர்வ பாவேந பாரத விமுக்தாந்ய ஸமாரம்ப: நாராயண பரோபவ”-என்பது, பாரதம் விஷ்ணு தர்மம்.
தர்ம புத்திரனைப் பார்த்துத் தரும தேவதை கூறியது.(வி முக்த அந்ய –சவாசனமாக விட்டு )
“அதபாதக பீத: த்வம் –
தரும புத்திரன் ஓர்-தடவப் பொய் -ஆபாசமான பொய்யினைச் சொல்லி, அதற்கு நரக தரிசனம் செய்தான்’ என்பது பிரசித்தமே அன்றோ.
அடுத்து அடுத்து ராஜ சூயங்களைச் செய்தானித்தனை போக்கி ‘விலக்கிய காரியங்களைச் செய்தான்’ என்று பிரமாணப் பிரசித்தி இல்லை.
“அத பாதக பீத: த்வம் –
மேலே செய்து போந்தவை பாதகம் என்று தோற்றி அச்சத்தை அடைந்தவனானாயாகில், -பாதகம் -நிஷித்த அனுஷ்டானம் –
அகங்கார மமகாரங்களை மூலமாகக் கொண்ட கிரியா கலாபமடைய,-ராஜ சூயை யாகங்கள்-
கிருஷ்ணனே நம் கார்யத்துக் கடவன்’ என்று அறிந்த பின்பு பாதகத்திற்கு ஒத்தனவாய்த்-சமமாய்- தோற்றின ஆயிற்று.
வி முக்தாந்ய சமாரம்ப: சர்வ பாவேன நாராயண பர: பவ-
உப்பைத் தொட்டுப் புளியைத் தொட்டு -கர்ம ஞான யோகங்கள் -நீ நின்று சிலவற்றைச் செய்யாமல்,
புறம்புள்ளவற்றை முழுதையும்-அகட- பொகட்டு,
உடையவனே நம் காரியத்துக்குக் கடவன்’ என்று அவன் பக்கலிலே பாரத்தைப் பொகட்டிருக்கப் பார்.”

இப்போது ‘பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிறது -இவ்விஷயத்தில் உள்ள-நம்பியிடத்துள்ள பிராவண்யத்தை அன்றோ;
“பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிற திருத் தாயாராயும், ‘பழி என்று மீளேன்’ என்கிற பிராட்டியாயும் ஓடுகிற
இந்த இரண்டு ஆகாரமும்- நிலைகளும் ஆழ்வார் தமக்குப் பிறந்த அவஸ்தா விசேஷங்களே அன்றோ;
பழி என்று பரிஹரிக்கப் பார்க்கிற திருத் தாயார் வார்த்தையான இடம்,
சரம ஸ்லோகத்துக்கு மேலுள்ளவற்றை அநுபாஷித்தாற் போலே இருக்கிறதாயிற்று.
(பகவத் ப்ராவண்யம் தோஷம் -உபாய அத்யவசாயத்தில் நிலை நின்ற -திட சித்தம் -திருத்தாயார் நிலை )
விடு பகுதியை தாயார் –பற்று பகுதியை மகள் -இரண்டும் ஆழ்வார் நிலை -தானே –
விடுகை வேற இடத்தில் பற்றுகை வேற இடத்தில் –
பழி என்று மீளேன்’ என்கிற இவள் வார்த்தையான இடம், சரம ஸ்லோகத்தில் நிஷ்கர்ஷம் போலே இருக்கிறதாயிற்று.
பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிற இது, உபாயத்தில் கொத்தை அறுக்கிறது;
(ஸ்வீ காரத்தில் ஸூவ பிரயத்தனம் என்ற எண்ணம் -அஹங்கார கர்ப்பம் அன்றோ-
சர்வ தர்மான் பரித்யஜ்ய என்று கொத்தை அறுத்து )
பழி என்று மீளேன், என்கிற இது, உபேயத்தில் கொத்தை அறுக்கிறது;
ஆக, உபாயத்தினுடைய நைரபேக்ஷ்யத்தை (வேறு ஒன்றினையும் விரும்பாமையைப்) பார்த்தால், தங்களுடைய
முயற்சிகள் அனைத்தும் குற்றமாயிருக்கும்;
உபேய வைலக்ஷண்யத்தைப் பார்த்தால், விரையாமல் ஆறியிருத்தல் குற்றமாயிருக்கும்;
ஆகையால், இரண்டு குற்றங்களையும் அறுக்கிறது என்றபடி. கொத்தை-குற்றம்.
ஸ்வரூபமாய் அந்வயித்ததில் மிகுதியாய்க் கழிவது ஒன்று உண்டோ? என்றபடி; (மகள் வார்த்தை )
(அடிமைத்தனத்துக்குத் தக்க கைங்கர்யமே ஸ்வரூபம் -ஒரே காரியத்துக்கு உபாய உபேய ஆகாரங்கள் உண்டே )

“பரஞ்ஜ்யோதி: உபஸம்பத்ய ஸ்வேந ரூபணே அபிநிஷ்பத்யதே”என்பது, சாந்தோக்யம். 8:12.
இங்கு, ‘தன் அசாதாரண ஆகாரத்தைப் பெறுகிறான்’ என்றது,
அபஹத பாப்மத்வாதிகள்,
சேஷத்வ பாரதந்திரியாதிகள்,
பரபக்திகள்
இவற்றைப் பெறுகிறான் என்றபடி.
ஸ்வரூப ஆவீர் பாவம் -ஸ்வேன ரூபேண-அபஹத பாப்மாதி -குணங்கள் -பரம பக்த்தாதிகள்
சேஷத்வ பாரதந்திர ஸ்வரூபம் –இவை மூன்றுமே -ஸ்வரூப அந்தர்கதம் -உபாயம் ஆகாது –
மடல் தூது அநுகாரம் -ஸ்வரூபத்துக்குள் சேரும் –
அஹங்காரம் மமகாரம் இல்லாத கைங்கர்யங்கள் வேண்டுமே-
சர்வம் பரித்யஜ்ய -சொல்லைக் கேட்டேயும் சர்வம் கரிஷ்யாமி என்றாரே -கைங்கர்யம் அனைத்தையும் செய்ய வேண்டும்
உபாயமாக எல்லா வற்றையும் சவாசனமாக விட வேண்டுமே
தன் அசாதாரண ஆகாரத்தைப் பெறுகிறான்” என்கிற இதில், மிகுதியாய்த் தியாஜ்யமாய் இருப்பது ஒன்று இல்லை அன்றோ.
உபாய அம்சத்தில் வந்தால் ‘செய்தே தீர வேண்டும் படியான காரியங்களிலேயும் உபாய புத்தி பிறக்கிறதோ’ என்று
அச்சம் கொள்ள வேண்டும் படியாயிருக்கும்; உபேயத்தைப் பார்த்தால், “நான் எல்லா அடிமைகளையும் செய்வேன்” என்கிறபடியே,
விடத் தக்கது ஒன்று இல்லையாயிருக்கும்.
பழைய நாஸ்திக்யத்தாலே செய்ய வேண்டிய காரியங்களில் சோம்பிக் கை வாங்கினதை
உபாய விரோதியான ஆகாரத்தாலே விட்டேன்’ என்னுமதுவும் வார்த்தை அன்று;
உபேய ருசியாலே செய்யுமவற்றை, ‘இவை உபேயமாகச் சேரின் செய்வது என்?’ என்று விடுமதுவும் வார்த்தை அன்று.
உலகத்தாரைப் போன்று செய்ய வேண்டிய காரியங்கள் முழுதினையும் செய்து கொண்டிருக்கச் செய்தே,
அவற்றில் உபாய புத்தி பண்ணாமலே போரும் நம் முதலிகளுடைய அநுஷ்டானமாய் இருக்கும்படி அன்றோ இது.
ஆக, ‘இது பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிற இடம், சரம ஸ்லோகத்தில் முன் பாகத்தில் நிஷ்கர்ஷம் இருந்தபடி.
இது பழி’ என்று மீளாது ஒழிகிற இடம், சரம ஸ்லோகத்தில் பின் பாகத்தில் நிஷ்கர்ஷம் இருந்தபடி.

உபாயம் நைரபேஷ்யம் பார்த்தால் ஸூ பிரவ்ருத்திகள் -பிர யத்னங்கள் கொத்தை ஆகுமே
உபேய வைலஷண்யம் பார்த்தால் த்வரியாமல் இருப்பது கொத்தையாக இருக்குமே –
இரண்டு கொத்தையும் அறுக்க -அத்தனையும் உபாய புத்தி தவிர்ந்து கைங்கர்ய புத்தியாக பண்ண வேண்டும் என்றதாயிற்று –

சிறந்த கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை –
தகுதியா யிருந்துள்ள கீர்த்தியை யுடைய திருக் குறுங்குடி நம்பியை.

நான் கண்ட பின் –
அக் கீர்த்தியைப் போன்று அங்குத்தைக்குச் சிறந்த நான் கண்ட பின்.
“யாவரொருவருக்கு அந்த ஜானகி மனைவியாக இருக்கிறாளோ அந்த இராம பிரானுடைய பராக்கிரமம்
அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது அன்றோ” என்கிறபடியே, அவனுக்கு அக் கீர்த்தியைப் போன்று,
தன்னுடைய சம்பந்தமும் ஏற்றமாம்படி இருக்குமவளே அன்றோ.

நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி யொடும்-
கங்கையின் அலைகளின் நடுவே வசிப்பாரைப் போலே ஒளிகளாகிய அலைகளின் நடுவே ஆயிற்று இருப்பது.
ஒளிகளின் நடுவே வடிவு ஊகிக்கப் படுவதாயாயிற்று இருப்பது.
அவ் வடிவு தான் எவ்வளவு போரும் என்னில், அளவிட்டு அறிதற்கு அரியதாய்ச் ஸ்லாக்கியமாய் இருக்கும்.

நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் –
ஒருநாள், சீயர் கோயிலுக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே பிள்ளானைக் கண்டு, ‘ஈச்வரனுக்கு ஸ்வரூப வியாப்தியேயோ உள்ளது,
விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, ‘சர்வ விஷயமாக ஸ்வரூப வியாப்தியே உள்ளது;
உபாசக விஷயத்தில், அவர்கள் பக்கல் அநுக்ரஹத்தாலே, அவர்கள் பற்றுக் கோடாகப் பாவித்த விக்கிரஹத்தோடே எழுந்தருளியிருக்கும்;
இனி, ஸ்வரூப வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் சாமான்ய விஷயமாகிறது,
விக்கிரஹ வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் விசேஷ விஷயமாகிறது’ என்று பணித்தானாம்.
ஸ்வரூப வியாப்திக்குப் பிரமாணம்:
யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதேபி வா அந்தர் பஹிஸ்ச தத்சர்வம் வியாப்ய நாராயண : ஸ்தித:”-என்பது,
இது, தைத்திரீய நாராயண உபநிடதம். 11 : 8.
விக்கிரஹ வியாப்திக்குப் பிரமாணம்: “நீலதோயத” என்பது. இது, தைத்திரீய நாராயண உபநிடதம். 11.

நேமி அம் கை உளதே-
வடிவழகு எல்லாம் ஒரு தட்டும், கையுந் திருவாழியுமான அழகு ஒரு தட்டுமாயாயிற்று இருப்பது. என்றது,
அவன் கையில் திருவாழி பிடித்திலனாகில் நான் பழி பரிஹரித்து மீளேனோ?
அவன் கையில் திருவாழி இருக்க, என்னாலே பழிக்கு அஞ்சி மீளப்போமோ? என்றபடி.
உங்கள் ஹித வசனங்களைக் கேட்கைக்கு உள்ளே இடம் இல்லாதபடி நிறைந்து நின்றான் என்பாள்,
நிறைந்து என் உள் நின்றொழிந்தான்’ என்கிறாள்
இனி, போக்கிடம் இல்லையாம்படி அவன் வந்து உள்ளே நிற்க, எனக்கு ஒரு போக்கிடம் உண்டோ என்பாள்,
நின்றொழிந்தான்’ என்கிறாள் என்னுதல்.
அவனை என் மனத்தினின்றும் புறப்படச் சொல்ல மாட்டீர்களோ நான் என் பழி நீக்குவதற்கு.
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியான கையிலே திருவாழியுமானால் மீளப் போமோ,
அவனுடைய நிறைவினைக் குறைக்கவோ, என் பழி நிறைவினைக் குறைக்கவோ.

——————————————————————————————

கை யுள் நன் முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
மை கொள் மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.–5-5-8-

பாவனா பிரத்யஷம் –திருஷ்டி -உருவ வெளிப்பாடு -நம்பி உடைய சர்வ அவயவ சோபைகளும் கண் முன்னால் நிற்கிறதே
கையுள் நன் முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்-ஆற்றாமையால் முகத்தை கையிலே வைத்து -மேலே சிதிலை யாகா நிற்கும் –
கன்னத்தில் கை வைக்கக் கூடாதே தாயார் -கிருஷி பண்ணின நீங்களும் -பிரேம பிராவண்யம் வளர்த்தவர்கள் –
மை கொள் மாடத் திருக்கு றுங்குடி நம்பியை நான் கண்ட பின்-நம்பி உடைய நிழலீட்டால்-மைப்படி மேனி அன்றோ -மாடங்கள் உடைய திவ்ய தேசம் –
நொந்து போவதே ஸ்வ பாவமாக உடைய நான் –
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்-சிவந்த திருக் கண்கள் -அனுபாவ்யமான கடி பிரதேசம்
முஷ்டி க்ராஹ்யமான சிறிய இடை -அவயவ சபைக்கு ஆஸ்ரயமான வடிவு -சமுதாய சோபை
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.-செறிந்த -அடர்ந்த -நீண்ட திருக் குழல் தாழ்ந்து உள்ள திருத் தோள்கள் –
கரண குண்டலங்கள் -தோளுக்கா குழலுக்கா காதுக்கா -இது -மூன்றுக்கும் இல்லை மனசுக்கு சாத்தப் பட்ட ஆபரணம்
அனுபவிக்கப் பெறாத பாவி முன்னே நிற்கின்றன –

மிருதுத் தன்மை பொருந்திய முகத்தைக் கையுள்ளே வைப்பாள், வருந்துவாள் என்று தாய்மாராகிய நீங்களும் முனியா நின்றீர்கள்;
மேகங்கள் தங்கி யிருக்கின்ற மாடங்களை யுடைய திருக் குறுங்குடியில் எழுந்தருளி யிருக்கின்ற நம்பியை நான் கண்ட பின், செந்தாமரை போன்ற
திருக் கண்களும் அல்குலும் சிறிய இடையும் வடிவும் செறிந்த நீண்ட குழல் தாழ்ந்திருக்கின்ற தோள்களும் பாவியேனாகிய என் முன்னே நிற்கின்றன.
மை-கருமையுமாம். அல்குல்-அரையின் கீழே இருப்பதோர் உறுப்பு; இருபாலார்க்கும் பொதுவானது.
“அடியும் கையும் கண்ணும் வாயும், தொடியும் உந்தியும் தோளணி வலயமும், தாளும் தோளும் எருத்தொடு பெரியை, மார்பும் அல்குலும்
மனத்தொடு பரியை” என்பது, பரிபாடல் 13. 51-54.
மொய்ய நீள் குழலும் தாழ்ந்த தோள்களும் என உம்மைத் தொகையாகக் கோடலுமாம்.

எல்லா இடத்திலும் உள்ள அங்க சோபை என் முன்னே நின்று நலியா நின்றது என்கிறாள்.

கையுள் நன் முகம் வைக்கும் –
அவனைப் பிரிகையால் வந்த தளர்த்தியாலே கையிலே முகத்தை வையா நின்றாள்.
இத்தனை சாகசத்திலே துணியும் படி ஆவதே இவள். தன் முகத்தின் வாசி தான் அறியாது ஒழிய வேணுமோ.
உபதாய புஜம் தஸ்ய லோகநாதஸ்ய சத்க்ருதம் கதம் நாம உபதாஸ்யாமி புஜம் அந்யஸ்ய கஸ்யசித்”- ஸ்ரீராமா. சுந். 21:19.
இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
“உலக நாதனான அந்த ஸ்ரீராமனுக்குத் தலைக்கு அணையாகக் கொடுத்து உதவப்பட்டது இக் கை.
இதனை மற்றொருவனுக்குத் தலைக்கு அணையாக எங்ஙனம் கொடுப்பேன்” என்னக் கடவதன்றோ.
கணவனுடைய கரத்தின் பரிசமே யாயிற்றுப் பொறுப்பது. இதனால், தன்னோடு தனக்குச் சம்பந்தமில்லாத பாரதந்திரியத்தைச் சொல்லுகிறது.
அதுவே அன்றோ “நம:” என்ற சொல்லின் அர்த்தமாகிறது.
இதனுடைய சுருக்கமாக இருக்கின்ற உகாரத்திலேயும் இது உண்டாயிருக்கச் செய்தே இங்கேயும் –
நமஸ்-சொல்லும்போது இதுவே அர்த்தமாக வேணுமே அன்றோ.

நையும்-தன் கையும் கூடப் பொறாமையாலே வருந்துவாள்
என்று அன்னையரும் முனிதிர்-
ஊரவர் கவ்வைக்கு நான் வெறுக்கிறது என்?

மை கொள் மாடம்-
பழைமையாலே யாதல்;
ஸோபயன் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 38 : 15.
“ஸ்ரீராமபிரான் தன்னுடைய திருமேனியின் ஒளியாலே தண்டகாரண்யத்தை விளங்கச் செய்துகொண்டு’ என்னுமாறு போன்று
உள்ளே நிற்கின்றவனுடைய நிழலீட்டாலே யாதல்.

நான் கண்டபின்-
அம் மாடத்தைப் போன்று நைவுக்குப் பழையேனான நான் கண்டபின்;
“நைவாய எம்மே போல்” என்னக் கடவதன்றோ.

செய்ய தாமரைக் கண்ணும்-
தனக்கே உரிமை யாக்குகின்ற திருக்க ண்களும்,

அல்குலும் –
அந்த நோக்குக்குத் தோற்றார் தரித்து இளைப்பாறும் அல்குலும்,

சிற்றிடையும் –
இரண்டும் ஒரு தொடையா யிருக்கையாலே ஊஹிக்கப்படும் இடையும்,

வடிவும்-
என்னை மீள ஒட்டாத வடிவும், மெய்யே மீள ஒட்டுகிறது இல்லை காணும் இவளை.

மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் –
காட்சிக்கு இனியதாய், கண்டார்க்கு ஒரு காலும் மறக்க ஒண்ணாதபடி இருக்கிற திருக் குழலானவை தாழ்ந்து,
அணைக்கைக்குத் தகுதியான திருத் தோள்களும்,

பாவியேன் முன் நிற்குமே –
அநுபவத்திற்குத் தகுதி யில்லாதவை முன்னே நிற்கை யாகிறது மிகுந்த கிலேசத்திற்குக் காரணமாய்
இருப்பது ஒன்றே அன்றோ.
‘முன் நிற்கும்’ என்னா நிற்கச் செய்தே அன்றோ ‘பாவியேன்’ என்கிறது.
கண்களுக்குத் தோற்றா நிற்கச் செய்தே யானைக்குக் குதிரை வையா நின்றது.

———————————————————————-

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சென்னி நீண் முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.–5-5-9-

நம்பி -அசங்க்யேத ஆபரண சோபா விசிஷ்டத்வத்தாலே அதிசயித போக்யனாக கொண்டு நெஞ்சை விட்டு போகான்
ஸ்தாவர பிரதிஷ்டை யாக நிற்கிறான்
முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்-சூரியனே பார்க்காத உன்னை முன் பார்க்கும் படி நிற்கிறாய் –
சமான துக்கைகளான தோழி -ஹித பரர் அன்னையரும் முனியும்படி
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-ஸூ ஸ்திரமான -ஸ்த்ரீத்வம் பேணாமல் புறம்பு புறப்படும் நான் –
சென்னி நீண் முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்-உத்தமாங்கம் -தலை -திரு அபிஷேகம் -ஆதி -முதலாக
உலப்பில் -எண்ணிக்கை இல்லாத -ஆபரணங்கள் தரித்து –
கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.-கன்னலும் –நிரதிசய போக்யன்-

முன்னே வந்து நிற்கின்றாய் என்று தோழிமார்களும் தாய்மார்களும் முனியா நின்றீர்கள்;
நிலை பெற்ற மாடங்களை யுடைய திருக்குறுங்குடியில்
எழுந்தருளி யிருக்கின்ற நம்பியை நான் கண்ட பின், தலையில் அணிந்திருக்கின்ற நீண்ட திரு முடி முதலான
எண்ணில்லாத ஆபரணங்களை யுடைய
எம்பெருமான், கன்னலாகிப் பாலாகி அமுதாகி வந்து என்நெஞ்சத்தை விட்டு நீங்க மாட்டுகின்றிலன்.
மன்னுதல்-நிலை பெறுதல், பொருந்துதலுமாம். உலப்பு கணக்கு: முடிவு. அணி கலம்-அணிந்திருக்கிற ஆபரணம்;
அழகிய ஆபரணமுமாம். கன்னல்-கரும்பு.

நம்பி, இனிமைகள் எல்லா வற்றோடுங் கூட என்நெஞ்சிலே புகுந்து விடுகின்றிலன் என்கிறாள்.

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர் –
தோழிமார் முன்புங்கூட நின்று அறியாள் போலே காணும் இவள் தான்.
“யா நஸக்யா புரா த்ரஷ்டும் பூதை ராகாஸகை ரபி
டதாமத்ய ஸீ தாம் பஸ்யந்தி ராஜ மார்க்க கதா ஜநா:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 33 : 8.
“எந்தச் சீதா பிராட்டி முன்பு ஆகாயத்தில் வசிக்கின்ற பூதங்களாலும் பார்ப்பதற்கு முடியாதவளோ” என்று
சொல்லப்பட்ட பிராட்டியைப் போலே இருக்குமவள் அன்றோ இவள்தான்.
இவள் துணிவைக் கண்டவாறே உகப்பாரோடு, பொடிவாரோடு வேற்றுமை அறப் பொடியத் தொடங்கினார்கள்.

மன்னு மாடம் –
“ப்லாவயாமாஸ தாம் ஸூந்யாம் த்வாரகாம்ச மஹோததி:
வாசு தேவ க்ருஹம் து ஏகம் ந ப்லாவயதி ஸாகர:”-என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5.38:9.
“கண்ண பிரானுடைய திரு மாளிகை ஒன்றனை மட்டும் சமுத்திர ராஜன் அழிக்க இல்லை” என்கிறபடியே,
பிரளயம் முதலானவற்றிலுங் கூட அழியாது என்றிருக்கிறாள்.
வஜ்ர நாபர் -அநிருத்திரன் திருக் குமாரர் -ஸ்தாபித்த வட நாட்டுக் கோயில்கள் –

நான் கண்ட பின் –
பிற்காலியாத படியான நான் கண்டபின். என்றது, நாணம் நீங்கப் பெற்ற நான் கண்ட பின் என்றபடி.

சென்னி நீண் முடி ஆதியாய உலப்பு இல் அணி கலத்தன் –
தலையான முடி தொடக்கமான முடிவில்லாத ஆபரணங்களை யுடையவன்.
அன்றிக்கே,
சென்னியில் தரித்திருக்கிற ஆதி ராஜ்ய சூசகமான திரு முடி தொடக்கமான எண்ணிறந்த
திவ்விய ஆபரணங்களை யுடையவன் என்னுதல்.
அணி கலத்தன்-
சேர்த்தி இருக்கிற படியைத் தெரிவிப்பாள் ‘அணி கலத்தன்’ என்கிறாள்.
பார் அளந்த விசும்பு அரசே —எம்மை வஞ்சித்த ஓர் அரசே -மூன்று வித கிரீடங்கள் –
செல்லப் பிள்ளை – ராஜ முடி -வைர முடி -கிருஷ்ண ராஜ முடி -மூன்று நாள்கள் உத்சவங்கள்
மூன்று பாகங்கள் –கிரீட மகுட சூடாவதம்ச —-ஆதி ராஜ்ய ஜல்பிகா –தத்வ த்ரய சம்ப்ரதாயம்

கன்னல் பால் அமுதாகி –
இவை, எல்லா ரசங்களுக்கும் உப லக்ஷணம்.

வந்து என் நெஞ்சம் கழியானே –
வந்து என் நெஞ்சில் நின்றும் போகின்றிலன்.
முன்னே நிறுத்தினவனைப் பொடிய மாட்டார்கள்; ‘பெற்றோம், பிழைத்தோம்’ என்று,
‘முன்னின்றாய்’ என்று என்னைப் பொடியுமித்தனை காணும் இவர்கள் வல்லது.
எனக்கு மறக்கை தேட்டம், முடியாமை இருக்கிறேனத்தனை.
நம்பி புகுந்து விடுகின்றிலன்

————————————————————————————-

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக் கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10-

நித்ய ஸூரி போக்யன் –அதுஜ்ஜ்வலமான பிராப்ய விக்ரகம் -அகவாயில் பிரகாசியா நின்றது -அநந்ய கோசரமாகும் படி
கழிய மிக்க தொர் காதலள் இவள் என்று அன்னை காணக் கொடாள்-இவள் கை கழிய -மூன்றாவது காதல் –
பேரமர் காதல் -பின் நின்ற காதல் –
மூவர் முதல் ஆழ்வார்கள் -சேர்த்தே ஸ்ரீ ரெங்கத்தில் நடக்கும் -ஆகவே மூன்று திருவாய் மொழி குணங்களை சேர்ந்தே பார்ப்போம்
பிரேமதாயித்வம் -அதிக்ரம ப்ரேமம் மடல் –அனுயாயி பிரேமம் -ஸ்மாரக பிரேமம் -இந்த மூன்று காதலும்
மூன்று திருவாய் மொழிக்கும் கல்யாண குணம் -ப்ரேமம் கொடுக்கும் –
அதிக்ரம -5-3-அனுதாயி -பின் நின்ற காதல் -4-4-இப்பொழுது இதில் -5-5-ஸ்மாரக ப்ரேமம்
சேவை பண்ணி வைத்தவள் -அன்னை -இப்பொழுது காணக் கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-ஆஸ்ரிதரை ஆனந்யார்கார் ஆக்கும் –
அபி நிவேச அதிசயம் உடைய நான்
குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே-ஸூரி சங்கங்கள் பரஸ்பரம்
கூடி இருந்து குளிர்ந்து -சேஷ வ்ருத்தி பண்ணி –
கை தொழுவது -அநு கூல சேஷ வ்ருத்தி செய்வதை -சேஷ பூதர் ஆவதற்கு கைங்கர்யம்
செய்ய வேண்டுமே முக் கரணங்கள் சமர்ப்பித்து
தேஜோ ராசி மத்யத்திலே எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே-
சுழன்று கெட்டிப் பட்டு செறிந்த தேஜஸ் -உயர்ந்து அத்விதீயமான
பிராப்ய விக்ரகம் நெஞ்சுக்குள் தோன்றா நிற்க– யாருக்கும் -ஸூய யத்னத்தால் அறிய முடியாதே
பர அனுக்ரகத்தால் காணலாம்

மிக அதிகமானதொரு காதலையுடையவள் இவள் என்று, தாயானவள், காண்பதற்கு என்னை விடுகின்றிலள்;
குற்றம் இல்லாத கீர்த்தியையுடைய
திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பிறகு, நித்திய சூரிகள் கூட்டங்கூட்டமாகக் கூடிக் கைகூப்பித் தொழுது
வணங்கச் சோதி வெள்ளத்தின் நடுவில் தோற்றுகிற ஒப்பற்ற வடிவம் எனது மனத்துக்குள்ளே தோன்றுகிறது;
இதனை, எத்தனையேனும் ஞானமுடையராயிருப்பினும் அறிந்து கோடல் அரிது.
கழி: உரிச்சொல்; மிகுதிப் பொருளைக் காட்டும். வழு-குற்றம். தேவர்-நித்திய சூரிகள்.

நம்பியுடைய திருமேனி என் நெஞ்சிலே பிரகாசிக்கிறபடி ஒருவர்க்கும்-கோசரம் அன்று – அறிய ஒண்ணாது என்கிறாள்

கழிய மிக்கது ஓர் காதலள் இவள் –
எல்லாருடைய காதலைக் காட்டிலும் வேறுபட்ட காதல்; -இதர விசஜாதீய காதல்-
அன்றிக்கே,
நாள் கழியக் கழியப் பெருகி வருகிற காதல் என்னுதல்.
“ஸோகஸ்ச கில காலேந கச்சதாஹி அபகச்சதி
மம ச அபஸ்யத: காந்தாம் அஹந்யஹநி வர்ததே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 4.
நாட்டார், “நாள் செல்லச் செல்லச் சோகத்தை மறந்து போகா நிற்பர்கள்;
எனக்கு, அங்ஙன் அன்றிக்கே, நாள் செல்லச் செல்லச் சோகம் பெருகி வாரா நின்றது” என்னக் கடவதன்றோ.

அன்னை காணக் கொடாள்-
‘இவள் ஒரு விஷயத்திலே காதலைச் செய்யக் கண்டேனாக வல்லேனே’ என்றிருக்குமவளும் காண வேண்டுகின்றிலள்.
ஆனால், இப்போது இங்ஙனம் படுகிறது என்? என்னில்,
தர்மி லோபம் வரும்படிப் பிராவண்யத்திலே மூழ்கினவளாக ஒட்டாளே,
சரீரம் உண்டாய் மேல் நடக்க வேணும் என்று இருப்பவள் அன்றோ.
காண்கையாவது –
அநுசந்தித்தல்.
அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம் இன்றே நாம் காணா திருப்பதுவும்-என்றேனும்
கட் கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட் கண்ணேல் காணும் உணர்ந்து.-என்றது, பெரிய திருவந். 28.
“நெஞ்சு என்னும் உட் கண்” என்னக் கடவதன்றோ. நெஞ்சையுங் கூட வாய் கட்டா நின்றாள்.

வழு இல் கீர்த்தி –
குறை வற்ற கீர்த்தியை யுடைய. நான்-அக் கீர்த்திக்குப் பிரிந்து நிலைபெறுதல் இல்லாதது போன்று,
அவனை ஒழியத் தனித்து நிலை பெறுதல் இல்லாத நான்.

கண்ட பின் –
இவர்க்கு இப்போது காட்சியாவது தான் ஏது? என்னில்,
அடியில், ‘பொய்ந் நின்ற ஞானம்’ தொடங்கி ‘முனியே நான்முகனே’ என்ற பாசுரம் அளவும் செல்ல ஒரே வாக்கியமே அன்றோ,
நடுவில் உள்ளவை அநுபவப் பிரகாரங்களாலே பிறக்கிற விசேடங்களே அன்றோ.

குழுமித் தேவர் குழாங்கள் கைதொழ –
திரள் திரளான நித்திய சூரிகள், கிண்ணகத்தில் இழிவாரைப் போலே கை கோத்துக் கொண்டு இழியும்படி.

சோதி வெள்ளத்தினுள்ளே எழுவது ஓர் உரு-
தேஜஸாம் ராஸிமூர்ஜிதம்”-இது, ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 9:67.-“ஒளிகளின் திரள்” என்கிறபடியே,
தேஜஸ்ஸின் நடுவே ஊகிக்கப்படுவதா யன்றோ வடிவு இருப்பது.

என் நெஞ்சுள் எழும் –
நித்திய சூரிகள் நடுவே தோன்றுமாறு போலே என் நெஞ்சுக்குள்ளே பிரகாசியா நின்றது.

ஆர்க்கும் அறிவு அரிது –
எனக்கு மறக்க ஒண்ணாதாப் போல ஆயிற்று, தம் முயற்சியால் அறிவார்க்கும் அறிய ஒண்ணாதிருக்கிறபடியும்.

———————————————————————–

அறி வரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே.–5-5-11-

பகவத் சேஷத்வம் ஸ்வரூப லாபம் கிட்டும் –
அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி-ஸூவ பிரயத்தனத்தால் -அறிய முடியாதவன் பிரான் –
தானே தன்னைக் காட்டும் ஆஸ்ரிதர்க்கு -ஸூசகம் திரு ஆழி திருக்கையில்
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சட கோபன் சொன்ன-ஸ்லாக்கியமான புஷ்பங்கள் –நன்மை -அனுபவ யோக்யதையான
ஞானாதி -விஷய வைலஷண்யம் -கர்மம் கைங்கர்யத்தில் புகும் –
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்-ஆயுத அவயவ ஆபரண ரூப-சிஹ்னங்கள் உடைய -திருக் குறுங்குடி
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே-ஞான பிரகாசம் பிறக்கும் படி அர்த்தானுசந்தானம்
பகவத் அசாதாராண சம்பந்தம் -அனுபவ -தத்பரராய் ஈடுபட்டு வர்த்திப்பார் –

தங்கள் தங்கள் முயற்சியால் அறிய ஒண்ணாத பிரானும், சக்கரத்தை அழகிய கையிலே தரித்திருக்கின்றவனுமான சர்வேச்வரனையே பேசி,
வாசனை பொருந்திய சிறந்த மலர்களைத் தேடி, நல்ல திருக் குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபராலே அருளிச் செய்யப்பட்ட ஆயிரம்
திருப் பாசுரங்களுள் திருக் குறுங்குடியதன் மேல் சொன்ன குறிகளைக் கொண்ட இப் பத்துப் பாசுரங்களையும் அறியக் கற்று வல்லவர்கள்
ஆழ்ந்த கடலால் சூழப்பட்ட இந்தப் பூ லோகத்திலே வைஷ்ணவர்கள் ஆவார்கள்.
அலற்றி நாடி சொன்ன இவை பத்து என்க. வல்லார் ஞாலத்துள்ளே வைட்ணவர் என்க.

இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்தே வைஷ்ணவர்கள் என்கிறார்.

அறிவு அரிய பிரானை-
நாம் பெறுதல் இழத்தல் செய்கிறோம், தம் முயற்சியால் சாதித்துக் கொள்ளப் படுவது அன்றிக்கே ஒழியப் பெற்றோமே முன்னம்.
வஸ்து தான் உண்டானால் நினைத்த போது பெற்று அநுபவிக்கலாமே அன்றோ.
இவர்கள்- தாய் மார்கள் -பின்னைத் தங்கள் முயற்சியாலே அறியுமவர்களோ? என்னில்,
ஆக வேணுமே அன்றோ, ‘மீட்கலாம்’ என்று இருந்த போதே,
தங்கள் தங்களாலே அறியவுமாம்’ என்று இருந்தார்களாக வேணுமே அன்றோ.

ஆழி அம் கையனையே அலற்றி –
“சங்கினோடும் நேமியோடும்” என்று, தொடங்கின படியே தலைக் கட்டுகிறார்.
அவனைக் கை விடாமல் -இடைவிடாமல் -அநுபவித்ததித்தனை இதற்கு முன்பெல்லாம்;
இதில், கையும் திருவாழியுமான அழகை யாயிற்று உருவச் சொல்லிக் கூப்பிட்டது.

நறிய நன் மலர் நாடி-
பரிமளத்தை யுடைத்தாய் நன்றாயிருக்கிற மலர்களைத் தேடிக்கொண்டு,
“அடி சூட்டலாகும் அந் தாமம்” -இது, திருவாய்.-2. 4 : 11.-என்னக் கடவதன்றோ.

நன் குருகூர்ச் சடகோபன்-
இந்தக் காதல் உண்டாகைக்கு அடி அவ்வூரில் பிறப்பாயிற்று.

குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருக்குறுங்குடி யதன் மேல்-
ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு, நம்பியுடைய அழகினை மெய் காட்டுக் கொண்ட இப் பத்தும் திருக் குறுங்குடி விஷயம்.
அன்றிக்கே,
திவ்விய ஆயுதங்களும் திவ்விய ஆபரணங்களும் சேர்ந்த சேர்த்தியாலுண்டான நம்பியுடைய
அழகைத் திரளச் சொன்ன பத்தும் என்னுதல்.

அறியக் கற்று வல்லார்-
இதனைக் கற்று அறிய வல்லவர்.
அறியக் கற்கையாவது,
ஸ்ரீ வைகுண்டத்தில் நித்திய சூரிகள் நடுவே இருக்கிற இருப்பைக் காட்டிலும்,
திருக் குறுங்குடியில் நிற்கிற நிலையிலே குணாதிக்யம் உள்ளது என்னுமிடத்தை அறிந்து கற்க வல்லவர்கள்.
வஸ்துவுக்குக் குணத்தாலே அன்றோ உயர்வு; அந்தக் குணாதிக்யம்-சௌலப்யாதிகள் எங்கே உண்டு, அங்கே அன்றோ ஏற்றம்.

ஆழ் கடல் ஞாலத்துள்ளே வைட்ணவர் –
மரு பூமியான சம்சாரத்தில் இருக்கச் செய்தே நித்திய சூரிகளோடு ஒக்கச் சொல்லலாம் படி ஆவர்கள்
உகந்தருளின நிலங்களில் வாசி அறியுமவர்கள்.

———————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஸூ மோஹ சதி பாவநாயா பூம்நா பாவனா
த்ருஷ்ட்டி ஹரே அவயவ ஆபரணாதி த்ருஷ்ட்யா
பிரத்யஷதக தத் அனுபூத் அவாப்தி தஸ்ய
ப்ரீத்யா ஸூஸா முனி அயுஜ்யதை பஞ்சமே

ஸூ மோஹ சதி பாவநாயா பூம்நா -மிக அதிகமான பாவனா -உரு வெளிப்பாடு-
பாவனா த்ருஷ்ட்டி -பாவனா ப்ரத்யக்ஷம் –
ஹரே அவயவ ஆபரணாதி த்ருஷ்ட்யா பிரத்யஷதக-கண் முன் தோற்ற
தத் அனுபூத் அவாப்தி தஸ்ய -தோற்றினாலும் அனுபவிக்க முடியாமல்
ப்ரீத்யா ஸூஸா முனி அயுஜ்யதை பஞ்சமே – ப்ரீதி அப்ரீதி சமம் -தள்ளப்பட்ட

———————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

சங்காத்யை யஜ்ஞ ஸூ த்ராபி ததா சார்ங்கம் முகைபி
துளஸ்யா பிம்ப உஷ்டாத்யை ஸூ நாசா நிரவதிக ஜோதி
ஊர்ஜ்வஸ்ய மூர்த்தியா நேத்ராப்ஜாதி நிதம்ப
அசேஷ ஆபரண ஸூசமையா ஸ்வஸ்யை பக்தைர்

1-சங்காத்யை –சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும் செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே

2-யஜ்ஞ ஸூ த்ராபி –மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திரு மறுவும் மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே

3-ததா சார்ங்கம் முகைபி –வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும் நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே

4-துளஸ்யா –பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்–பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே

5-பிம்ப உஷ்டாத்யை –தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும் தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே

6-ஸூ நாசா –கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும் நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே

7–நிரவதிக ஜோதி ஊர்ஜ்வஸ்ய –நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும் நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே

8-மூர்த்தியா நேத்ராப்ஜாதி -நிதம்ப—செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும் மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே

9– அசேஷ ஆபரண ஸூசமையா –சென்னி நீண் முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்–கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே

10-ஸ்வஸ்யை பக்தைர்–குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.

இவற்றாலும் ஸ்மாரகமான ப்ரேமம் -கழிய மிக்கதோர் காதல் -விஸ்லேஷ சமயத்திலும் மறக்க ஒண்ணாதபடி பிரகாசித்து -ப்ரேமம் –

—————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 45-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

அவதாரிகை –
இதில்-உரு வெளிப்பாட்டாலே பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் -என்று ரஷகனுடைய குண ஞானத்தாலே மீளவும் தெளிவு குடி புகுந்து
நம்பியைத் தென்குருங்குடி நின்ற -1-10–என்று
முன்பு அனுபூதமான ஸ்ரீ நம்பி உடைய வடிவு அழகு நெஞ்சிலே ஒருபடிப்பட பிரகாசிப்பிக்கையாலும்
யதா மநோ ரதம் அவ் வடிவு அழகைக் கண்ணால் கண்டு
அனுபவிக்கப் பெறாமையாலும்
ப்ரீத்ய அப்ரீத்ய சமமாய் செலுகிற தம் தசையை ஸ்ரீ நாயகனோடு கலந்து பிரிந்து
உரு வெளிப்பாட்டாலே உருவ நோவுபட்டு செல்லுகிற ஸ்ரீ பிராட்டி பேச்சாலே அருளிச் செய்கிற
எங்கனயோ – வில் அர்த்தத்தை-எங்கனே நீர் முனிவது -என்று தொடக்கி அருளிச் செய்கிறார் -என்கை —
அது ஆண் தன்மையான அனுபவம் -இது பெண் தன்மையான அனுபவம் –
உரு வெளிப்பாடு –முன்பு அனுபூத அனுபவம் இருக்க ரசாந்த்ரம் தேடுவது அன்றோ –

————————————————–

எங்கனே நீர் முனிவது என்னை யினி நம்பி அழகு
இங்கனே தோன்றுகின்றது என் முன்னே -அங்கன்
உரு வெளிப்பாடா வுரைத்த தமிழ் மாறன்
கருதும் அவர்க்கு இன்பக் கடல்—45-

—————————————————

வியாக்யானம்–

எங்கனே நீர் முனிவது என்னை –
இவ் வாற்றாமைக்கு ஊற்றுவாயான நீங்கள் இவ் வபிநிவேசம் உடைய என்னை பொடிவது எங்கனே –
எங்கனயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர் -என்றத்தை பின் சென்றபடி –

இனி -எங்கனே நீர் முனிவது –
ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் –இனி முனியக் கூடுமோ –
அதுக்கு முன்னே அன்றோ முனிய வேண்டுவது –
அதுக்கு மேலே
சந்திர காந்தாநனம் ராமம் அதிவ்ய பிரிய தர்சனம் -என்னும்படி-ருசி ஜனக லாவண்ய விபவமானது
அசௌ புருஷ ரிஷப ராம -என்னும் படி-உருவ வெளிப்பாடாய் –

ஸ்ரீ நம்பி அழகு இங்கனே தோன்றுகின்றது என் முன்னே –
குண விக்ரஹ சௌந்தர்யாதிகளால் பூரணரான ஸ்ரீ நம்பி யுடைய
திவ்ய ஆயுத
திவ்ய ஆபரண
திவ்ய அவயவ சோபைகள் ஆனது
அது கண்டு உகக்கிற என் முன்னே பிரத்யஷமாகத் தோன்றா நின்றது –
அதாவது –
சங்கினோடும் நேமியோடும் -என்றும்
மின்னு நூலும் குண்டலமும் -என்றும்
வென்றி வில்லும் தண்டும் வாளும் -என்றும்
பூம் தண் மாலை தண் துழாய் பொன் முடியும் வடிவும் -என்றும்
தொக்க சோதித் தொண்டை வாயும் -என்றும்
கோல நீள் கொடி மூக்கும் -என்றும்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியோடும் -என்றும்
செய்ய தாமரைக் கண்ணும் -என்றும்
சென்னி நீண் முடி யாதியாய உலப்பில் அணி கலத்தன் -என்றும்
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் -என்றும்-இப்படி அடி தொடங்கி முடி அளவும் அனுபவித்த பிரகாரத்தை
அங்கன் உரு வெளிப்பாடா வுரைத்த –
அப்படியே-உரு வெளிப்பாடு என்கிற துறையிலே வைத்து அருளிச் செய்த –

தமிழ் மாறன் –
ஸ்ரீ திராவிட ப்ரஹ்ம தர்சியான ஸ்ரீ ஆழ்வார் -ஸ்ரீ நம்பி விஷயமாக எங்கனயோ -அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் -என்றபடி –

கருதும் அவர்க்கு இன்பக் கடல் –
அபிநிவேசத்துடன் அனுபவிப்பார்க்கு ஆனந்த சிந்துவாய் இருப்பார் –
சென்னி நீண் முடி யாதியாய வுலப்பில் அணி கலத்தன் கன்னல் பாலமுதாகி வந்து என்நெஞ்சம் கழியான்-என்று
ஸ்ரீ ஆழ்வார் தமக்கு அவ் வாகாரம் இனிதாய் இருக்குமா போலே
அவர் சம்பந்திகள் ஆனவர்களுக்கும் ஸ்ரீ ஆழ்வார் அப்படியே இருப்பார் -என்றபடி –

—————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -114- திருவாய்மொழி – -5-5-1….5-5-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

June 7, 2016

மாசறு சோதி” என்ற திருவாய்மொழியில் “நாடும் இரைக்கவே, யாம் மடல் ஊர்ந்தும்” என்று மடல் ஊரப் பாரித்தாள்;
பாரித்தபடியே தலைக்கட்டப் பெறாமையாலே “ஊரெல்லாம் துஞ்சி” என்ற திருவாய்மொழியில்
1-ஊரெல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள் இருளாய் என்று முதலிலே மடல் ஊருகைக்கு
விஷயந்தான் -பழிச் சொற்கள் -இல்லாதபடி பழி சொல்லுவாருங்கூட உறங்கினார்கள்’ என்று வெறுத்தாள்;
ஏசிப் பேசினால் தானே அவனைப் பற்றி ஸ்மரணம் வரும் –
2-“அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்” என்று,
சூரியோதயத்திற்குச் சூசகமும் கூட இல்லையாயிற்று’ என்று வெறுத்தாள்;
3- “நீயும் பாங்கு அல்லை காண் நெஞ்சமே” என்று-வேறு – ‘ஒன்றை நினைத்துத்
தரிக்கைக்கு விரகு அற்றது’ என்றும் வெறுத்தாள்.

“மாசறு சோதி” என்ற திருவாய் மொழியில், பிராப்பியத்தைப் பெற வேண்டும் என்னும்
மனோ வேகத்தாலே உபாய அத்யவசாயம் கலங்கினபடி;
ஊரெல்லாம்” என்ற திருவாய் மொழியில், அந்த மனோ வேகமுங் கூடக் கலங்கினபடி; –
எரு நீர் இல்லாமல் பயிர் விளையாதே –
இத் திருவாய்மொழியில், ‘ரக்ஷகன் அவன்’ என்னும் தெளிவும் செல்லா நிற்க, பிராப்பிய ருசி நலிகிறபடி.
மடல் -பிராப்ய த்வரை -காள ராத்ரி வியசனம் -இழந்த உபாய அத்யவசாயமும் பிராப்ய த்வரையும் மீண்டதே –
மூன்று ஹேதுக்களும் போனத்தை அருளிச் செய்கிறார் மேலே

இந்தக் குறைகள் -மூன்று வெறுப்புகள்- எல்லாம் தீரும்படி போதும் விடியப் பெற்று,
அன்னையரும் தோழியரும் துஞ்சுவர்” என்கிற இழவு தீர
உகப்பாளும் பொடிவாரும் ஹிதம் சொல்லுவாருமாகப் பெற்றது இத் திருவாய் மொழியில்.
என்றது, பின்னர், உறவினர்கள் அனைவரும் உணர்ந்து,
1-“தீர்ந்த என் தோழி” என்ன வேணும்படி இவளுடைய துணிவு கண்டு உகப்பாளும்,
2- “எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்” என்ன வேண்டும்படி பொடிவாரும்,
3-“தோழிமீர் என்னை இனி உமக்கு ஆசை இல்லை” என்ன வேண்டும்படி ஹிதம் சொல்லி அலைப்பாருமாகப் பெற்றது;
அவ் வழியாலே அவர்கள் தாம் இவ் விஷயத்தினை நினைப்பூட்டுகின்றவர்கள் ஆவர்களே அன்றோ.

சூரியனும் உதித்துப் பொருள்களைக் காணவும் பெறுகையாலே வியசனமும் பாலி பாயப் பெற்றது.
இவ்வளவு ஆஸ்வாசம் உண்டானவாறே, நெஞ்சு நினைத்துத் தரிக்கைக்கும் துணையாயிற்று என்றபடி.
இப்படி இரவு வியசனம் போம்படி போது விடியப் பெறுகையாலே ஒரு தரிப்பும் உண்டாய், அவனை அநுபவிக்கப் பெறாமையாலே
ஆற்றாமைக்கும் காரணமாய் நோவு பட்டுச் செல்லா நிற்க, உணர்ந்த உறவினர்கள் அனைவரும்,
நீ இப்படி இவ்விஷயத்தில் எல்லை இல்லாத காதலை யுடையவளா யிருத்தலாகிற இது உனக்குக் குடிப் பழி,
உன்னுடைய பெண் தன்மைக்குப் போராது, அவன் தலைமைக்கும் போராது’ என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க,
இவர்கள் உகந்தருளின நிலங்களின் வாசி அறியார்கள்’ என்று இருந்தாள் இவள்,

நீங்கள், சிலர் காட்டக் கண்டீர் கோள் அல்லாமையாலே இவ் விஷயத்தை உள்ளபடி அறிந்திலீர்கோள்;
நான் அங்ஙன் அன்றிக்கே, அவன் தானே மயர்வு அற மதிநலம் அருளித் தன்னைக் காட்டக்
காண்கையாலே உள்ளபடி கண்டேன்;
ஆகையாலே, நம்பியுடைய வடிவழகிலும் ஒப்பனை அழகிலும் ஆபரணச் சேர்த்தியிலும் பெருமையிலும்
நீல மேனி -1-வடிவு அழகு–நீல மேனி /-
2-ஒப்பனை அழகு–பூம் தண் மாலை /3-மின்னு நூலும் குண்டலும் -ஆபரண அழகு /4-பொன் முடி வேண்டற்பாடு
நான் உங்கள் ஹித வசனத்துக்கு மீளாதபடி அகப்பட்டேன்’ என்று இங்ஙனம் தம் படிகளைச் சொல்லா நிற்கச் செய்தே;
தம் முயற்சி கொண்டு அறிவார்க்கு அறிய ஒண்ணாதபடி பெற்றோமே அன்றோ,
இவ் வஸ்து தான் உண்டாகப் பெற்றால் நாம் பெற்ற போது பெறுகிறோம், பிறர் அறியாது
ஒழியப் பெற்றோமே யன்றோ’ என்னும் பிரீதியோடே தலைக் கட்டுகிறது.

ஸூவ யத்னத்தால் காண்பார் -அறிவரிய பிரான் -அறிவுக்கு அரிய –
பிரான் -உபகாரகன் –தன்னால் காட்டக் கொடுப்பவன் -ஆழி யங்கை பிரானை அலற்றி –
ஸ்வகத ஸ்வீகார நிஷ்டர்களுக்கும் உபாசகர்களுக்கும் கிட்ட அரியவன் –
பரகத ஸ்வீகார நிஷ்டர்களுக்கு அவன் காட்டக் காண்கையாலே-காணலாம் என்றபடி

ஆக, போதும் விடிந்து ஹிதம் சொல்லி அலைப்பாரும் உண்டாகப் பெறுகையாலே ஒரு தரிப்பும்,
அதுதான் நினைத்த விடியலாகப் பெறாமையாலே ஒரு பிரீதி இன்மையும்;
அவனை நினைக்கப் பெறுகையாலே ஒரு பிரீதியும்,
அதுதான் அநுபவமாகப் பெறாமையாலே ஒரு பிரீதி இன்மையும்;
சூரியன் உதித்துப் பொருள்களைப் பார்க்கப் பெறுகையாலே ஒரு பிரீதியும்,
அதுதான் அவனைக் காணப் பெறாமையாலே ஒரு பிரீதி இன்மையுமாய்;
பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாகச் செல்லுகின்றன.

நன்று; “ஏழையராவி” -7-7-என்ற திருவாய்மொழியும், ‘உரு வெளிப்பாடு’ சொல்லா நின்றதே,
அதற்கும் இத் திருவாய் மொழிக்கும் வேற்றுமை என்? என்னில்,
அதில், “இணைக் கூற்றங்கொலோ” என்றும், “உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அர்க்கர்கட்கும் எவ்விடம்” என்றும்
பாதகத் தன்மை உறைத்திருக்கும்; இதில், மேலே உண்டான துக்கம் நீங்குதல் உண்டாம்படி நினைத்துத் தரிக்கவும் பெற்று,
அது தான் அநுபவமாகப் பெறாமையாலே வந்த பிரீதி இன்மையுமாய், –
இப்படிப் பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாகச் செல்லுகிறதாக இருக்கும்.

1-ஜாபாலி பகவானும் வார்த்தை சொல்லி, ‘ஸ்ரீ வசிஷ்ட பகவானும் இக்குடியில் போந்த படிகள் எல்லாவற்றையும் சொல்லி,
இனி மீண்டு திருவபிடேகம் செய்துகொள்ள அமையும் என்ன, பெருமாள் ‘அங்ஙனம் செய்வது இல்லை’ என்று
முடிய நின்றபடியைக் கண்டவாறே, நகரத்து ஜனங்கள் எல்லாம் உகப்பது செய்தார்கள், வெறுப்பதும் செய்தார்கள்;
ரக்ஷகனானவன் தொடங்கின காரியத்திலே இப்படி முடிய நின்ற இடம் நம்முடைய ரக்ஷணத்துக்கும் உண்டே அன்றோ’ என்று
உகப்பதும் செய்தார்கள்; ‘அதனாலே நாம் பெற்றது என்? இப்போது பதினான்காண்டு இழந்திருக்கும்படி வேண்டி இருந்ததே!’ என்று
வெறுப்பதும் செய்தார்களே அன்றோ.
2-பிராட்டியைத் திருவடி தொழுதபோது, ‘நாம் இலங்கையை அடைவதற்குரிய ஆற்றல் உண்டாகப்பெற்றோமே அன்றோ’ என்று உகப்பதும்
செய்தான், ‘இவள் அவரைப் பிரிந்து இந்த நிலையில் இருப்பதே!’ என்று வெறுப்பதும் செய்தான்.
3-பிராட்டி, திருவடி வார்த்தையைக் கேட்டபோது “வாநர! உன்னால் சொல்லப்பட்ட பெருமாள் என்னை அல்லது அறியார்,
பிரிவாலே தளர்கின்றார் என்ற இரண்டு வார்த்தைகளும் விஷத்தோடு கூடின அமுதம் போல் இருக்கிறது” என்று,
பெருமாள் என்னைப் பிரிந்த இடத்தில் என்னை அல்லது அறிந்திலர் என்று சொன்னது எனக்கு இனியதாயிருந்தது,
அவர் பிரிவாலே தளர்கின்றார் என்று சொன்னபடியாலே வெறுப்பாய் இருந்தது என்றாளே அன்றோ.
அப்படியே, இவர்க்கும் பிரீதி அப்ரீதிகள் சமமாகச் செல்லுகின்றன.

திரு மங்கை ஆழ்வாரால் கடைசியில் பேசப் பெற்ற திவ்ய தேசம் –
சுந்தர பரி பூரணன் -நின்ற இருந்த கிடந்த நம்பிகள் திருக் கோலம் -ஆழ்வாராகவே திருவதரித்த எம்பெருமான் -அன்றோ –
நம் ஆழ்வார் விக்ரகம் தனியாக இங்கு இல்லை –
வைஷ்ணவ நம்பி -குருகியவன் -குறுங்குடி -நெடும் தகை -கரண்ட மாடு பொய்கை –உருவ வெளிப்பாடு -மானஸ பிரத்யஷம்
-5-3-/5-4/5-5- மூன்று காதல் தசைகள் -பேரமர் காதல் -பின் நின்ற காதல் கழிய மிக்கதோர் காதல்
நான்கு நாயகி பாவம் தொடர்ந்து -5/3 –5/4 –/5-5 தலைமகள் -5-6 தாயார் -அடுத்த நான்கும் நோற்ற நான்கு –

பிரத்யஷமாக தோற்றுவதே உருவ வெளிப்பாடு –ப்ரீதி அப்ரீதி -முனியே நான் முகனும் வரை மானஸ அனுபவம் தானே –
பூர்வ அனுபூத ரசத்தை மறந்து — ரசாந்தரமாகச் செல்லுவதே மானஸ அனுபவம் –
பரத்வம் பஜநீயத்வம் இத்யாதி -பராங்குச பக்தி கடல் தழும்பி இருக்கும்
இக்கரை அக்கரை தொட்டு காவேரி போவது போலே நடுவிலும் உண்டே -எல்லா மநோ பாவமும் உண்டே பூர்த்தியாக
அனுபூத ரசம் அனுபவியா நிற்கச் செய்தே -ரசாந்தரம் தேடிச் செல்வதே உருவ வெளிப்பாடு –
வ்ருஷே வ்ருஷே -பயத்தாலே மாரீசன் -உருவ வெளிப்பாட்டால் பயந்தான் –
இங்கு பிராவண்யத்தால் உருவ வெளிப்பாடு இவளுக்கு

—————————————————————————————————

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.–5-5-1-

நம்பி உடைய அசாதாராண சிஹ்னம் -ஆழ்வார்கள் உடனும் -பிரதான அவயவ சோபை -நெஞ்சு ஈடுபட்டது என்கிறாள்
எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!-நீங்கள் பிரியம் செய்யாதே -நல்லது கண்டு உகக்கும் என்னை
ஒ -உகக்கப் பிராப்தமாய் இருக்க முனிவது எங்கனே ஒ
நங்கள் கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-நாங்கள் குடிக்கு அசாதாராண பூதராக -கோல வடிவு அழகிய நம்பி
திவ்ய தேசத்துக்கும் அழகு என்றுமாம் -கல்யாண குண பரி பூர்ணர் -அனுபவித்த பின்பு
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்-பிராப்ய பூதர் என்பதற்கு அடையாளம் –
விரோதி நிரசனம் நேமி -அனுபவம் கொடுக்க பாஞ்ச ஜன்யம்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.-அத்விதீயமான -திவ்ய அவயவங்களில் நெஞ்சு ஈடுபட்டதே

தாய்மார்களே! நீங்கள் என்னைக் கோவித்துக்கொள்வது எப்படி? நம்முடைய அழகிய திருக்குறுங்குடியில் எழுந்தருளி யிருக்கின்ற நம்பியை
நான் பார்த்த பிறகு, என்னுடைய நெஞ்சமானது, நம்பியின் திருக் கைகளிலே உள்ள சங்கோடும் சக்கரத்தோடும்
தாமரை போன்ற திருக்க ண்களோடும்
சிவந்த கோவைக் கனி போன்ற ஒப்பற்றதாயிருக்கிற திரு அதரத்தோடும் செல்கின்றது. நான் என் செய்வேன்?
நங்கள் என்பதில் ‘கள்’ அசைநிலை. “திங்களும் மறுவுமெனச் சேர்ந்தது, நங்கள் அன்பென நாட்டி வலிப்புறீஇ” என்றவிடத்து
நங்கள்:கள், அசை’ என்றார் நச்சினார்க்கினியர். (சிந். 1334.) நம்பி-பூர்ணன்.
இத் திருவாய்மொழி, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.

திருக் கைகளில் ஆழ்வார்களோடே சேர்ந்த நம்பி திரு முகத்தின் அழகிலே,
என் நெஞ்சமானது மிகவும் ஈடுபடா நின்றது என்கிறாள்.

அன்னைமீர்காள் முனிவது எங்ஙனேயோ –
ஹிதம் சொல்லத் தொடங்கினவாறே தந்தாமை மறக்குமித்தனையோ.–பிரான் இருந்தமை காட்டினீர் –

என்னை முனிவது எங்ஙனேயோ –
ஒன்றை நீக்குவதற்குப் பார்த்தால் அதனுடைய நிதானம் அறிந்து நீக்க வேண்டாவோ. என்றது,
என்னுடைய பிராவண்யத்தை நீக்குதற்குப் பார்த்தால், எனக்கு இவ்வளவான பிராவண்யத்தை விளைத்த
நம்பியுடைய அழகினை அறிந்து அதனை அன்றோ பொடிவது என்றபடி.

என்னை நீர் முனிவது எங்ஙனேயோ –
என்னுடைய நிலைக்கும் உங்களுடைய ஹித வசனத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு.
நீர் என்னை முனிவது எங்ஙனேயோ –
நம்பியுடைய அழகினை அறிந்து அநுபவிக்கிற நீங்கள், அதிலே துவக்குண்டு இருக்கிற
என்னை மீட்கப் பார்க்கிறபடி எங்ஙனேயோ?

அன்னை மீர்காள் நம்பியை நான் கண்ட பின் –
இந்தக் குல தர்மத்துக்கு நான் ஏதேனும் தப்ப நின்றது உண்டோ.
“பேராளன் பேரோதும் பெரியோரை”-பெரிய திருமொழி, 7. 4 : 4- என்றும்,
“எவரேலும் அவர்”-திருவாய்மொழி, 3. 7 : 1. என்றும் நீங்கள் சொல்லுகிற வார்த்தைகளைக் கேட்டு
வளர்ந்தவள் அன்றோ நான்.
தாம் தாம் செய்வனவற்றை வயிற்றிற் பிறந்தார் செய்தவாறே குற்றமாமித்தனையேயோ.

புத்திரர்களாகவுமாம், சிஷ்யர்களாகவுமாம், பகவத் விஷயத்தில் ஓர் அடி வர நின்றவர்கள் சிலாகிக்கத் தக்கவர்களத்தனை அன்றோ;
கூரத்தாழ்வார் ஓரளவிலே நங்கையார் திருவடி சார்ந்தவாறே, ‘இன்னமும் ஒரு விவாகம் செய்து கொள்வேமோ’ என்று ஆராய்ந்து,
இது தான் கிரமத்திலே வந்து ஆழ்வானுக்கு விரோதமாகத் தலைக் கட்டும்;
இனித் தான் -ப்ரஹ்மசாரீ க்ருஹஸ்தோ வா வானப் பிரஸ்தோத பிக்ஷுக: அநாஸ்ரமீந திஷ்டேத்து தினம் ஏகம் அநாபதி”-சாமான்ய தர்மம்-
பிரஹ்மசாரி யாகவாவது இல்லறத்தா னாகவாவது வானப் பிரஸ்தனாகவாவது சந்நியாசி யாகவாவது ஒருவன் இருக்க வேண்டும்;
ஆபத்து இல்லாத சமயத்தில் ஒருநாள்கூட ஓர் ஆச்ரமத்திலும் சேராதவனாக இருக்கக் கூடாது” என்று சாஸ்திரம் சொல்லா நின்றது;
இந்தச் சாஸ்திரத்தின் அர்த்தத்தை அநுஷ்டிப்போமோ! பாகவத பரிசர்யையைச் செய்வோமோ! என்று ஆராய்ந்து,
அந்தச் சாமான்ய தர்மத்திற் காட்டில் இந்த விசேஷ தர்மமே பிரபலம்’ என்று அதனைத் தவிர்ந்தார்.

நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் –
நங்கள் நம்பி-
கடகர் களான -உங்களை அறியா விட்டால் அவ்விஷயத்தையும் அறியாது ஒழிய வேணுமோ என்கிறாள்.
இக்குடிக்கு -ஏக போகம் -முற்றூட்டுப் போலே காணும் நம்பியுடைய அழகு என்பாள்‘நங்கள் நம்பி’ என்கிறாள்.
சர்வேச்வரனை நோக்கிப் பல விரதங்களை நோற்றுப் பெற்றவர்களைப் போலன்றிக்கே,
நம்பியை அடைந்தாயிற்று இவரைப் பெற்றது.
உடைய நங்கையார் நம்பியை அடைந்து ஆழ்வாரைத் திருவயிறு வாய்த்தார்’ என்பது பிரசித்தமே அன்றோ.
நெடுங்காலமும் கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவி” அன்றோ பெற்றது.

கோலம்’
என்கிற இது, நகரத்துக்கு வேண்டும் அலங்காரங்களை யுடைத்தாயிருக்கும் என்று, திருக்குறுங்குடிக்கு விசேடணம் ஆதல்;
அன்றிக்கே,
நம்பியினுடைய அழகினைச் சொல்லுதல்.

நம்பியை
தாம் அகப்படுவதற்கு வேண்டிய கல்யாண குணங்களால் நிறைவுற்று இருப்பவன் என்பாள் ‘நம்பியை’ என்கிறாள்.

நம்பியை நான்-
அகப் படுத்துகைக்கு அழகு சீலம் முதலிய குணங்களால் அத் தலை குறைவற்றிருக்குமாறு போலே ஆயிற்று,
அகப் படுக்கைக்குரிய ஆசையால் இத் தலை குறைவற்றிருக்கிறபடி என்பாள் ‘நம்பியை நான்’ என்கிறாள்.

கண்ட-
நீங்களும் நம்பியைக் கண்டன்றோ ஹிதம் சொல்லுகிறது என்பாள் ‘கண்ட’ என்கிறாள்.

கண்ட பின்
காண்பதற்கு முன்னே மீட்டீர் அல்லீர்கோளே, இனி மீட்கப்போமோ? என்பாள் ‘கண்ட பின்’ என்கிறாள்.
தண்ணீர் போன பின்னர் அணையைக் கட்டுதல் அன்றோ நீங்கள் செய்கிறது என்றபடி.
மீட்கப் போகாதேபடி இப்போது வந்தது என்? என்ன,
கை மேலே ஒரு முகத்தாலே தான் அகப் பட்டபடியைச் சொல்லுகிறாள் மேல்:

சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே –
இதனால், நீங்கள் ஹிதம் சொல்லுவது நெஞ்சுடையார்க் கன்றோ என்கிறாள் என்றபடி.
சங்கினோடும் –
செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல்” என்கிறபடியே, கரு நிறமான திரு மேனிக்குப் பரபாகமான
வெளுத்த நிறத்தையுடைத்தான ஸ்ரீ பாஞ்சசன்யத்தோடும்,
நேமி யோடும் –
இந்தக் கைக்கு இது ஆபரணமானால், வேறு ஒன்று வேண்டாதே தானே ஆபரணமாகப் போரும்படி
இருக்கிற திருச் சக்கரத்தோடும்,
தாமரைக் கண்களோடும் –
மலர்ச்சி முதலியவைகளால் தாமரை போன்று இருக்கிற திருக் கண்களோடும்,–
இதனால், கண் காணக் கை விட்டுப் போயிற்றுக் காணும்.
செம் கனி வாய் –
கண்ட போது, நான் உன் சரக்கு அன்றோ, “தவாஸ்மி-உன்னுடையவன் ஆகிறேன்” என்ற முறுவலோடும்,
செம் கனி வாய் ஒன்றினோடும் –
சம்சார யாத்திரையை முக்தன் மறக்குமாறு போலே, இவ் வருகுண்டான வற்றோடு அவ்வருகுள்ள வற்றோடு வேற்றுமை அற
எல்லாவற்றையும் மறக்கும்படி செய்ய வல்லதான திரு அதரத்தோடும். –
இதற்கு மட்டும் ஒன்றினோடு என்பதற்கு அர்த்தம் காட்டி அருளுகிறார் –
அன்றிக்கே,
ஜாதி, பொருள்கள் தோறும் நிறைந்து இருக்குமாறு போலே, நெஞ்சு அழகு தோறும் சொல்லா நின்றது என்னுதல்.
சர்வேச்வரனோடு சாம்யம் பெற்றதாகிலும் தெரிகிறது இல்லை.
அவன் எங்கும் பரந்திருக்கச் செய்தே ஆகாசத்தினது பரப்புப் போலன்றிக்கே பொருள்கள் தோறும் நிறைந்து இருக்குமாறு போலே,
இதுவும் அழகுகள் தோறும் நிறைந்து இரா நின்றது.
உம்மைத் தொகை
ஒவ் ஒன்றுக்கும் – செல்கின்றது-
இன்னமும் தறை கண்டது இல்லை. நாங்களும் எல்லாம் நம்பியுடைய அழகினை அநுபவித்திருக்கிறோம் அன்றோ,
எங்கள் சொற்களை மறுக்கலாகாது காண்; என்ன,
உங்கள் சொற்களை மறுத்தேனே யாகிலும் நம்பியுடைய திரு முகம் மறுக்க ஒண்ணாது என்கிறாள்.
எங்களுக்கு இப்படி இராமல் ஒழிவான் என்? என்ன,

என் நெஞ்சமே –
உங்களைப் போலன்றிக்கே, அவன் தானே காட்டப் பெறுகையாலே முழுக்க அநுபவித்த என் நெஞ்சமானது.

மீண்டும் இப்போதாக ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் வர அருளிச் செய்கிறார்
எங்ஙனேயோ என்னை முனிவது நீர் –
பிராவண்யமே ஸ்வபாவமாம்படி வளர்த்து வைத்து, இப் போதாகப் பொடிகிற படி எங்ஙனேயோ?
முன்பு நீங்கள் கற்பித்துப் போந்து, அது பயன் பட்டவாறே பொடியு மத்தனையோ?
கோலம்-
உங்கள் ஹித வசனத்துக்கும் மீளாதபடியான அழகு.
திருக் குறுங்குடி நம்பியை-
பரத்துவத்தில் முதன்மையிலேயோ அகப்பட்டது மீளுகைக்கு.
நம்பியை-
குணங்களில் நிறைவின்மை உண்டாய்த் தான் மீளுகிறதோ
நான் கண்ட பின்-
இவ் விஷயத்தில் ஆசை இல்லாமல் மீளுகிறேனோ.
சங்கினோடும்-
ஸ்ரீ பாஞ்ச சன்யத்தோடே விசேஷித்து ஒரு சம்பந்தம் உண்டு காணும் இவளுக்கு;
திரு வாயின் அமிர்த இனிமையை அறிந்திருக்கையாலே; ஒரு கலத்திலே ஜீவிப்பாரைப் போலே.

——————————————————————————————

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திரு மறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–5-5-2-

நம்பியுடைய ஒப்பனை அழகையும் -திருத் தோள்களையும் -சர்வ தேசத்தில் வந்து நின்று அனுபவ விஷயங்கள் ஆனதே என்கிறார்
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே-என் கோணத்தில் பாருமின் -என்னை நியமித்து வார்த்தை சொல்லாமல்
பாவ உக்தமான என் நெஞ்சால் -அனுபவித்தாலும் குறி அழியாமல் இருக்கும் உங்கள் நெஞ்சு –
தென்னன் சோலைத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-தெற்குத் திக்கில் -அவன் அருள் அடியாக நான் கண்ட பின்
நீங்கள் உங்கள் பிரயத்தனத்தால் கண்டீர்கள்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்-வடிவுக்கு பரபாகமான -வர்ண கலாப திரு மேனி நின்ற நம்பி –
ப்ரஹ்ம வர்ச்சஸ் -இருபாடும் இலங்கும் மகர குண்டலங்கள்
கழற்றாத ஸ்ரீ வத்சம் -கூரத் ஆழ்வான் -ஸ்ரீ வத்சம் அம்சம்
மூல பிரகிருதி பிரதிநிதி -அஸ்த்ர பூஷணம் –
மன்னு பூணும் நான்குதோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–கழற்றாத
ஆபரண வர்க்கமும் -நான்கு புருஷார்தங்களுக்கு நான்கு தோள்கள்
ஸ்வரூப வியாப்தி மட்டும் இல்லாமல் ரூபத்தாலும் வியாபித்து -நண்ணுவார் சிந்தையுள் –
அந்தர்யாமித்வம் -ஸ்வரூபத்தால் அனைத்து உள்ளம் /
யோகி ஹ்ருத் த்யான கம்யன் -ஸ்ரீ லஷ்மீ விசிஷ்டனாய் திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனாய் இருப்பானே

என்னை முனிந்து கொள்ளாமல் என் நெஞ்சினாலே அநுபவித்துக் காண்பீராக; தெற்குத் திக்கிலே யுள்ள சிறந்த சோலைகள் சூழ்ந்த திருக் குறுங்குடி
என்னும் திவ்ய தேசத்தில் எழுந்தருளி யிருக்கின்ற நம்பியை நான் பார்த்த பின்னர், மின்னுகின்ற பூணு நூலும் குண்டலங்களும் திரு மார்பில்
எழுந்தருளி யிருக்கின்ற பெரிய பிராட்டியாரும் ஸ்ரீவத்சமும் நிலை பெற்ற ஆபரணங்களும் நான்கு திருத் தோள்களும் அங்கு அங்கே வந்து நிற்கின்றன.
நோக்கிக் காணீர்: நோக்கல் நோக்கம். அநுபவித்து அறிமின் என்பது பொருள். முனியாதே காணீர் என்க.
கண்ட பின் எங்கும் நின்றிடும் என்க. திருமறு – அழகிய மறுவுமாம்.

நம்பியுடைய தோள் அழகும் ஆபரணங்களின் அழகும் எல்லாத் திக்குகளிலும் நின்று நலிகின்றன என்கிறாள்.

நாங்களும் நம்பியை அநுபவித்தே பெண் தன்மை கெடாமல் இருக்கின்றிலேமோ? என்ன,
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் –
நீங்கள் என்னைப் பொடியாதே உங்களையே பொடிந்து கொள்ளும்படி,
இவளை யன்றோ நாம் இத்தனை சொல்லிற்று’ என்று
பின்னை உங்களை நீங்களே பொடிந்து கொள்வீர்கோள் என்றபடி.

என்னை முனியாதே –
முள்ளெயிறு ஏய்ந்தில கூழை முடி கொடா தெள்ளியள் என்பதோர் தேசிலள் என் செய்கேன்?
கள் ளவிழ் சோலைக் கண புரம் கை தொழும் பிள்ளையைப் பிள்ளை என்றெண்ணப் பெறுவரே. – பெரிய திருமொழி, 8. 2: 9.
கண புரம் கை தொழும் பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே’ என்னக் கூடியதாக இருக்க,
நம் வயிற்றிற் பிறந்த இதுவே காரணமாக, இவள் நின்ற நிலை பாராமல் நாம் பொடிந்தோமித்தனை அன்றோ” என்று
பின்னையும் உங்களை நீங்களே பொடிந்து கொள்ளுவீர்கோள்.

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்’
என்கையாலே உங்களுக்குப் பக்தி இல்லை என்கிறாள் என்றபடி.
ஆயின், பக்தியினால் அன்றிச் சாஸ்திரங்களின் அறிவைக் கொண்டு அவனை அறியப் போகாதோ? என்ன,
பக்தியா சாஸ்திராத் வேத்மி ஜனார்த்தநம்– பாரதம் உத்யோக பர். 68:5-
பக்தியுடன் சாஸ்திரத்தால் கண்ணனை அறிகிறேன்” என்கிறபடியே,
சஞ்சயனை நோக்கித் திருதராட்டிரன், நீயும் நானும் ஒரு சேர சாஸ்திர வாசனைகள் செய்து போந்தோம்.
இங்ஙனமிருக்கவும், நான் உன் பக்கலிலே கேட்டு அறிய வேண்டும்படி உனக்கு
இவ்வர்த்தத்தில் தெளிவு உண்டானபடி எங்ஙனே? என்ன,
எனக்குள்ள வாசி கேளாய்,

மாயாம் ந சேவே –
நான் வஞ்சனைகள் செய்ய மாட்டேன். அரசனுக்கு ஒரு தாழ்ச்சியும் தனக்கு ஓர் உயர்வும் சொல்லுகிறான் ஆகையாலே,
பத்ரந்தே –
உனக்கு மங்களம் உண்டாகுக என்கின்றான்.
ந வ்ருதா தர்ம மாசரே-
நான் வீண் தர்மங்களை ஒருநாளும் செய்தறியேன்.
சுத்த பாவம் கத:-
நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப்பட்டிருப்பவன்.
பக்த்யா-
வரி அடைவே கற்று அவனை அறிந்தவன் அல்லேன்,
பக்தியோடு கூடிய சாஸ்திரத்தாலே அவனை அறிந்தவன்” என்றானே அன்றோ.
“வித்யா ராஜந் ந தே வித்யா மம வித்யா நஹீயதே
வித்யா ஹீந: தமோத்வஸ்த: நாபிஜாநாஸி கேஸவம்”-என்பது, பாரதம் உத்யோக பர். 68:2.
“திருதராட்டிரரே! உமது வித்யையானது வித்யை அன்று, என்னுடைய வித்யையானது அழயாதிருக்கின்றது,
வித்யை அற்றவரும் இருளில் தள்ளப்பட்டவருமான நீர் கேசவனை அறிய மாட்டீர்” என்று,-
வணக்குடை தவ நெறி -பவ்யதயா-பக்தி
தங்கள் தங்களுக்கு என்னவும் ஒரு கைம் முதலுடையார்க்கு அவனை அறியப் போகாது என்றதே அன்றோ.
அப்படியே, நீங்களும் என் நெஞ்சினை யுடையீராய்க் கொண்டு அறியப் பாருங்கோள் என்கிறாள்.-
பக்தி சித்தாஞ்சனம்-

தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை –
நம்பியுடைய வடிவிற்கு ஆபரணம் போலே யாயிற்று ஊருக்குச் சோலை.
தெற்குத் திக்கிலே யுள்ள நன்றான சோலை என்னுதல்.
அன்றிக்கே,
தென்னன் கொண்டும்” என்னுமாறு போலே, பாண்டியனால் கொண்டாடப் படுகின்ற திருக் குறுங்குடி என்னுதல்.
“கொன்னவில் கூர்வேல் கோன்நெடு மாறன் தென்கூடற்கோன்
தென்னன் கொண்டாடும் தென் திரு மாலிருஞ் சோலையே”- என்பது, பெரியாழ்வார் திருமொழி. 4. 2 : 7.

நான் கண்ட பின் –
மின்னு நூலும் –
மேகத்தில் மின்னியது போன்றிருக்கின்ற திரு யஜ்ஞோபவீதமும்.

குண்டலமும்-
பரந்த மின் ஓரிடத்திலே சுழித்தாற் போலே இருக்கிற திரு மகர குண்டலமும்.

மார்பில் திரு மறுவும்-
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கிற ஸ்ரீ வத்சமும்.

மன்னு பூணும் –
நாய்ச்சிமாரோடு கலக்கும் போதும் கழற்ற வேண்டாதபடி இருக்கிற ஆபரணங்களும். என்றது
மிகுந்த சுகத்தைக் கொடுக்கக் கூடியதா யிருத்தலைக் குறித்த படி.

நான்கு தோளும்-
“ஸர்வ பூஷண பூஷார்ஹா: கிமர்த்தம் நவிபூஷிதா:”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 3: 15.
“எல்லா ஆபரணங்கட்கும் அழகினைக் கொடுக்கக் கூடியதான” என்கிறபடியே, ஆபரணங்கட்கு ஆபரணமாய்க்
கல்பக தரு பணைத்தாற் போலே இருக்கிற திருத் தோள்கள் நான்கும்.

வந்து எங்கும் நின்றிடும் –
‘உங்கள் ஹித வசனத்தின் படியே செய்ய வேணும்’ என்று நான் கடக்க நிற்கவும், அங்கேயும் பல வகையாக வாரா நின்றன.
“வ்ருக்ஷே வ்ருக்ஷேச பஸ்யாமி சீர கிருஷ்ணாஜிநாம்பரம் க்ருஹீத தநுஷம் ராமம் பாஸ ஹஸ்தம் இவஅந்தகம்”
என்பது, ஸ்ரீராமா. ஆரண். 39 : 14. இராவணனைப் பார்த்து மாரீசன் கூறியது.
“மர வுரி, மான் தோல் இவற்றை உடுத்திருப்பவரும், வில்லைத் தரித்திருப்பவருமான ஸ்ரீ ராம பிரானை,
பாசக் கயிற்றைக் கையிலே யுடைய யமனைப் போன்று ஒவ்வொரு மரத்திலும் பார்க்கிறேன்” என்பது போலே,
உகப்பார்க்கும் உகவாதார்க்கும் பலம் ஒன்றாய் விட்டது. நான் எங்கே ஒதுங்குவேன், சொல்லிக் காணீர் கோள்.

———————————————————————

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.–5-5-3-

இவ் வழகைக் காத்தூட்டும் -பஹிகா அந்தகா பிரகாசிக்கும் -போகாமல் நின்றிடும்
நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்-வியாபார சாமை இல்லாமல் ச்பதையாய் நிற்கும்
அறிவு அழியாமல் இருக்கும் -சிதிலை யாகா நிற்கும் -அடியிலே பரிதியிலே பிரவர்த்திப்பித்த அன்னையும் முனிந்தால்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-தம் த்ருஷ்ட்வா -சத்ரு ஹன்தாராம் -பார்த்தாராம் –
வீர வேஷம் கண்டு உகக்கும் -சீதை போலே
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்-பஞ்ச ஆயுதங்களும் -கள் அழகர் இன்றும் சேவை இவற்றுடன் –
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே-ஒரு படிப்பட நின்று -நீங்காமல் –
நெஞ்சுக்கு உள்ளும் கண்ணுக்கும் -உள்ளும் புறமும் பிரகாசிக்கின்றனவே

செயல் அற்று நிற்பாள், பின் அறிவு கலங்குவாள், பின் வருந்துவாள் என்று தாய்மாராகிய நீங்களும் முனியா நின்றீர்கள்;
மலைகளைப்போன்று மாடங்கள் உயர்ந்து காணப்படுகின்ற திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்னர், வெற்றி பொருந்திய வில்லும்
தண்டமும் வாளும் சக்கரமும் சங்கமும் ஒருபடிப் பட நின்று கண்களுள் தோன்றி நீங்குகின்றன இல்லை;
நெஞ்சுக்குள்ளேயும் நீங்குகின்றன இல்லை. என் செய்வேன்?
என்று முனிதிர்: கண்டபின் கண்ணுள் நீங்கா, நெஞ்சுளும் நீங்கா என்க.

நம்பியுடைய திவ்விய ஆயுதங்களின் சேர்த்தி அழகு, உள்ளும் புறம்பும் ஒக்க
எப்பொழுதும் தோன்றாநின்றது என்கிறாள்.

நின்றிடும் திசைக்கும் நையும் –
“சிந்நம் பிந்நம் ஸரை: தத்தம் ப்ரபக்நம் ஸஸ்த்ர பீடிதம் பலம் ராமேண தத்ருஸு:
ந ராமம் ஸீக்ர கர்ரிணம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.
“ஸ்ரீ ராம பிரானுடைய பாணங்களால் அரக்கர் சேனை அறுக்கப் பட்டதாகவும் பிளக்கப் பட்டதாகவும்
கொளுத்தப் பட்டதாகவும் முறியடிக்கப் பட்டதாகவும் கண்டார்கள்” என்கிறபடியே,
இராம பாணங்கள் ஒன்று செய்தது மற்றொன்று செய்யாதாப் போலே ஆயிற்று,
நம்பியுடைய அழகுகளும்-சேர்த்தி அழகு முக பேதத்தாலே நையும் –
ஒன்று செயல் அறுதலைப் பண்ணும், ஒன்று அறிவைக் குடி போக்கும்,
ஒன்று அறிவைக் கொடுத்து வருந்தப் பண்ணும். செயல் அற்றவள் ஆகா நின்றாள்,
அறிவு கெடா நின்றாள், வருந்தா நின்றாள் என்று என் குற்றமாக நினைத்துப் பொடியா நின்றீர்கோள்.

அன்னையரும் முனிதிர் –
தெளிந்திருப்பார் தாம் பொடியப் பெற்றதோ. இவற்றிற்கெல்லாம் தாயா யிருக்கிற இப்படிச் செய்யக் கடவதோ.
தெளிவது கலங்குவதாய் இவை தாமே யாத்திரையாகப் போந்த நீங்களும் முனியா நின்றீர்கோள்.
ஆழியொடும் பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னார் என்றறியேன்”-பெரிய திரு. 10. 10 : 9. என்னுமவர்கள் அலரோ.
இது, பெண் பிள்ளை வார்த்தை யானாலும், இங்கு, “அன்னையர்” என்றது,
அத்யவசாய நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆகையாலே, அவர்களுக்கும்
தெளிவதும் கலங்குவதும் உண்டு ஆகையாலே, இங்குப் பிரமாணமாகக் குறை இல்லை.
யௌவனத்தில் நீங்கள் செய்து போந்தவற்றை அப் பருவத்தில் நான் செய்தவாறே குற்றமாயினவோ.
இந்தக் குடிக்காகப் பகவத் பிராவண்யமே யாத்திரை போலே காணும்.

குன்றம் மாடம் திருக் குறுங்குடி-
மலைகளை நெருங்க வைத்தாற் போலே இருக்கிற மாடங்களை யுடைத்தான திருக்குறுங்குடி.

நான் கண்ட பின் –
ஆயுதம் பிடித்த பிடியில் வாசி அறியும் நான் கண்ட பின். வீரபத்தினி ஆகையாலே வாசி அறிவாளே அன்றோ!
பெருமாளுக்கு வில் எடுத்துக் கொடுப்பவள் பிராட்டி அன்றோ.
பெருமாள் ‘வில்லைத் தா’ என்ன, கொடுத்து, அவர் கையும் வில்லுமாய் நின்ற நிலையைக் கண்டவாறே,
நீர் இப்படி வில்லைத் தரித்தவராய்த் திரியப் புக்கால் உம்மை ரிஷிகள் வந்து சரணம் புகுவார்கள்;
அவர்களுக்குப் பகைவர்களான இராக்கதர்களோடு எதிரிட வேண்டி வரும்; அது பின்னை ஜாதிப் பகையாம்,
பின்னை நீரும் நானும் இரண்டு இடத்திலே இருக்க வேண்டிவரும்.
ஆன பின்னர், வில்லைப் பொகட்டுத் தாபத வேடத்தோடே திரிய அமையும்’ என்றாளே அன்றோ.
பெருமாள் பக்கல் சாங்கமே -பஷ பாதம் -சார்ங்கம் -சாடு -அன்றோ இப்படிச் சொல்லுவித்தது.

வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும் நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா –
திவ்விய ஆயுதங்களுக்கு, ஆயுதங்கள் ஆபரணங்கள் என்னும் இரண்டு இடங்களிலும் மெய்க் காட்டு உண்டு காணும்.
போர்த் தலையில் ஆயிற்று ஆயுதம் என்று அறியலாவது.

வென்றி வில்லும்
உகப்பாரோடு உகவாதாரோடு வாசி அற வெற்றியே இயல்பாக இருக்கின்ற திரு வில்லும்.
“இந்திரன் வில்லுக்கு ஒப்பானவையும் பகைவர்களைக் கொல்லக் கூடியனவுமான விற்களைப்
பிடித்துக் கொண்டு நிற்கின்ற நீங்கள்” என்கிறபடியே,
அநுகூலர் கண்டு ஜீவிக்கைக்கும், பகைவர்களுக்குப் பிடித்த பிடியிலே முடிகைக்கும் காரணமாக இருக்குமன்றோ.

தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்-
அந்த வில்லின் ஸ்வபாவத்தை யுடைத்தான மற்றைய திவ்ய ஆயுதங்களும்.

நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா-
கண் வட்டத்தை விடாதே நின்று தோன்றா நின்றன.
இவை கண் முகப்பே நின்று நலியப் புக்கவாறே,
அஞ்சிக் கண்களைச் செம்பளித்தவாறே நெஞ்சுக்குள்ளே நின்று பிரகாசிக்கத் தொடங்கின.

நெஞ்சுள்ளும் நீங்கா –
கீழே “வந்து எங்கும் நின்றிடுமே” என்றாள்;
இங்கு உள்ளும் புறம்பும் ஒக்க நலியா நின்றன என்கிறாள்.
இவற்றிற்கு வாசி என்? என்னில், நம்பியுடைய அழகுக்கு உள்ளன எல்லாம் உண்டாயிற்று இவளுக்கும்.
அவ் வழகு எங்கும் ஒக்க நலிகிறாப் போலே ஆயிற்று, இவளும் கட் கண்ணாலும் உட் கண்ணாலும் அநுபவிக்கிறபடியும்.
பக்தி பெருக்காலே இவள் வியாபகத்வம் –

——————————————————————————

நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.–5-5-4-

சோனா வேஷம் -பூரி ஜகன்னாதர் -ஏகாதசி ஸ்வர்ண ஆபரணம் சாத்தி -சேவை -வறுமை வருஷம் முழுவதும் தாக்காதே
-32 வேஷங்கள் -5 நாள்களில் சாத்துவார்கள்
பரத்வ பிரகாசகம் -இவள் பக்கல் நிற்கின்றன
நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்-கண்ண நீர் பேராமல்-அன்னையரும் கோபிக்க
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-அவன் மேன்மை கண்டு உகக்கும் நான் -அனுபவித்த பொன்
தேம் கொள்-பாட பேதம்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்-அநு பாவ்யம் -செவ்வித் திருத் துழாய் –
ஆதி ராஜ்ய ஸூசகம் ஸ்ப்ருஹநீயம் -திருமேனி
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே-திரு அரைக்குப் பாங்காய் –
மேல் ஆபரணம் விடு நாண்-உள்ளே பிரகாசியா நிற்க
கிட்டி அனுபவிக்க பெறாமல் பாவி –

கண்களிலே தண்ணீர் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கின்றன என்று அன்னையரும் முனிகின்றீர்கள்;
தேனைக் கொண்டிருக்கின்ற சோலைகளால் சூழப்பட்ட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்,
அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையும் பொன் முடியும் திருமேனியும் அழகாகத் தோன்றுகிற பட்டாடையும்
அரை நாணும் பாவியேனாகிய என்னுடைய பக்கங்களிலேயே இருக்கின்றன.
நீர்கள் நில்லா என்க. பாங்கு – தகுதி. நாண் – அரை ஞாண்.

காத்தலுக்குக் கவித்த முடியும், தனி மாலையும், பரிவட்டப் பண்பும் முதலானவை
பக்கங்களிலே நின்று என்னை நலியா நின்றன என்கிறாள்.

நீங்க நில்லா கண்ண நீர்கள் –
அவன் நீங்க, கண்களில் நீர் நீங்குகின்றது இல்லை.
அன்றிக்கே,
நீங்க நில்லா- பேர நில்லா என்னுதல்.
அன்றிக்கே
நீங்க நில்லா என்பதனை மெலித்தல் விகாரமாகக் கொண்டு நீக்க நிற்கின்றன இல்லை என்னுதல்.
நீக்க – நீங்க என வல்லொற்று மெல்லொற்றாகத் திரிந்தது.

அன்னையரும் முனிதிர்-
உங்கள் கண்கள் ஆனந்த பாஷ்பமும் பாய்ந்து அறியாவோ.

தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி-
அந்தச் சோலையில் தேனை வற்றச் செய்யமாட்டீர்களோ நான் என் கண்ண நீரையும் மாற்ற.
இந்தக் கண்ண நீர்க்கு ஸஹ்யம் அவ்வூரில் இனிமை போலே காணும்.

நான் கண்ட பின்-
அவனுடைய ஸ்வாபாவிகமான மேன்மையை அறியும் நான் கண்ட பின்.

பூந் தண் மாலைத் தண் துழாயும் –
இரண்டு உலகங்களுக்குமாக முதலியாக விட்ட, காட்சிக்கு இனிதாய்க்
குளிர்ந்த செவ்வித் திருத்துழாய்த் தனி மாலையும்,

பொன்முடியும் –
இரண்டு உலகங்களும் தன்முடியிலே செல்லும்படி கவித்த திரு முடியும்.

வடிவும் –
அம் மாலைக்கும் முடிக்கும் இசைந்த வடிவும் – ‘இவனே மாலைக்கும் முடிக்கும் உரியான்’ என்று படி எடுத்துக் காட்டலாமே.
வடிவும்’ என்பதே!” என்று ஈடுபட்டவராய் இருப்பர் நஞ்சீயர் –
மூன்றுக்கும் உம்மைத் தொகை –
இவற்றை உடைய வடிவு சொல்லாமல் -வடிவும் ஆபரண கோஷ்டியில் சேர்த்து அருளிச் செய்து உள்ளார் –

பாங்கு தோன்றும் பட்டும்-
திரு அரை பூத்தாற் போலே அங்குத்தைக்குப் பாங்காத் தோற்றுகிற திருப் பீதாம்பரமும்,

நாணும் –
விடு நாணும்,

பாவியேன் பக்கத்தவே-
அநுபவிக்கத் தருதல்- உரு வெளிப்பாடாய்த் தோன்றாதே ஒழிதல் – செய்யாத படியான மஹா பாவத்தைச் செய்தேன்.
அருகே நின்று பிரகாசித்துக் கொண்டு நின்றன; அநுபவ யோக்கியமாகப் பெறுகின்றன இல்லை.
அணைக்கத் தருதல், அகல நிற்றல் செய்கின்றன இல்லை.
புருஷோத்தமனுக்கு யஜ்ஞ்ஜோபவீதம் ஒரு நூல் மட்டும் தனியாக இருக்குமாம் -சில்ப சாஸ்திரம்

————————————————————————

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.–5-5-5-

நம்பி உடைய திரு முக -அவயவ சோபை ஆத்மகதமாக தோன்றுகிறது
பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்-அவன் வரும் சம்பாவனை உள்ள பார்ச்வங்களை பார்த்து
வரக் காணாமையாலே சிதிலை யாகா நிற்கும் -ஸ்நேஹம் பிறப்பித்த நீங்களும் கோபிக்க
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-பூர்த்திக்கு தகுதியான கீர்த்தியில் அகப்பட்ட நான் -அனுபவித்த பின்பு
தொக்க சோதித் தொண்டைவாயும் நீண்ட புருவங்களும்-திரண்ட –திரு வவதரமும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே-நீண்ட புருவங்களுக்குத் தக்க
நீண்ட திருக் கண்கள் -ஆத்மா அளவுக்கு வந்தனவே

அவன் வருவதற்குரிய பக்கத்தையே நோக்கிக் கொண்டு நிற்பாள், வருந்துவாள் என்று அன்னையராகிய நீங்களும் முனியா நின்றீர்கள்;
தக்க கீர்த்தி நிறைந்த திருக் குறுங்குடியிலே யுள்ள நம்பியை நான் பார்த்த பிறகு, கோவைக் கனி போன்ற பிரகாசம் திரண்டிருக்கிற
திரு அதரமும் நீண்ட புருவங்களும் தக்கனவான தாமரை போன்ற திருக் கண்களும்
பாவியேனாகிய என்னுடைய உயிரிடத்திலே தங்கி நலியா நின்றன.
ஆவியின் மேலன: என்பதில், மேல் என்பது, ஏழாம் வேற்றுமை யுருபு. ஆவியினிடத்தன என்பது பொருள்.

ஒன்றற்கொன்று தகுதியான நம்பியுடைய திருமுகத்தில் அழகுகள் என்
உயிர்நிலையிலே நலியாநின்றன என்கிறாள்.

பக்கம் நோக்கி நிற்கும் –
அவன் வருகைக்குச் சம்பாவனை யுள்ள பக்கத்தைப் பார்த்துக்கொண்டு நிற்குமாயிற்று.
“ந ஏஷா பஸ்யதி ராக்ஷஸ்யோ நேமாந் புஷ்ப பல த்ருமாந்
ஏகஸ்த ஹ்ருதயா நூநம் ராமம் ஏவ அநு பஸ்யதி”- என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 25.
“இந்தச் சீதை, அரக்கிமார்களையும் பார்ப்பது இல்லை, இந்தப் பூவும் பழமுமுள்ள மரங்களையும் பார்க்கிறது இல்லை,
ஒரே இடத்தில் நிறுத்திய மனத்தை யுடையவளாய் இராமனையே நிச்சயமாகப் பார்க்கிறாள்.” என்றது,
அரக்கியர்களைப் பார்ப்பதோடு புஷ்பங்களையும்

நையும்-
அந்தத் திக்கில் வந்து தோற்றாமையாலே வருந்துவாள்.

என்று அன்னையரும் முனிதிர் –
“அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்து
அடியேனை வைத்தாயால்”-என்பது, திருவாய். 3. 3 : 3.
செய்வித்த படியை அறியும் நீங்களும் முனியா நின்றீர்கோள்
“பால்யாத் ப்ரப்ருதி ஸு ஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷமி வர்த்தந:
ராமஸ்ய லோக ராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்டஸ்ய நித்யஸ:”-என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 27.
“இளமைப் பருவமே தொடங்கி சிநேகிதராய் இருந்தார்” என்னும்படி அன்றோ இவள் தன் படி.

தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் –
சொன்னபடி எல்லாம் தகும்படி இருக்கிற கீர்த்தியை யுடைய –
செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்

தொக்க சோதித் தொண்டை வாயும் –
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங்கொலோ அறியேன்?” -திருவாய். 7. 7 : 3. என்னுமாறு போன்று,
ஒளிப் பொருளே திரண்டாற் போலே இருக்கிற தொண்டை போன்ற திரு வாயும்.
தொண்டை –
கோவை. இதனை, அதரத்துக்கு ஒப்பாகச் சொல்லக் கடவதன்றோ.

நீண்ட புருவங்களும் –
உபமானம் அற்றதாய், தனக்கு ஓர் அவதி இல்லாமையாலே தன்னேற்றமே சொல்லும்படி யிருக்கிற திருப் புருவங்களும்.

தக்க தாமரைக் கண்ணும் –
அதனுடைய நெடுமைக்கு எல்லை இல்லாதது போன்று அளவிட்டு அறிய முடியாததாய்,
அப் புருவங்களுக்குத் தகுதியா யிருக்கிற தாமரைக் கண்களும்.

பாவியேன் ஆவியின் மேலனவே-
உயிர் நிலையிலே நலியா நின்றன. அகவாயில் வெளிச் சிறப்பு அழகிது.
அப்படியே புறம்பேயும் தோற்றப் பெறுகிறது இல்லை என்பாள், தன்னைப் ‘பாவியேன்’ என்கிறாள்.

——————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம்- 113- திருவாய்மொழி – -5-4–6….5-4-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

June 7, 2016

பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ் விடத்தே?–5-4-6-

அபி நிவேசமும் இரவும் நலியா நிற்க -ஸ்திரமான ரஷண உபகரணம் கொண்டவனும் வர வில்லையே –
ஜீவனை யார் ரஷிப்பார்
பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்-பேரமர் காதல் 5-3–முன்பு -கழிய மிக்கதோர் காதல் -5-5-அடுத்து –
பிறப்பிடமான நெஞ்சையே அழிக்கின்றதே-
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்-இரவு கல்பம் பேரைப் பெற்று -வந்த வாழ்வு பார்த்தீர்களே
கண் மூடும் படி மறைக்க -பின்னும் முன்னும் விரோதி இப்படி ஆனபின்பு –
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்-ஆஸ்ரிதர் வினைகளை கடிய நித்ய சந்நிஹிதன் –
ஆச்சர்ய குண சேஷ்டிதங்கள் -நம் போல்வாருக்கு சொத்து
இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ் விடத்தே?-நிரந்தர துக்க அனுபவம் பண்ணி நின்றாலும் சளையாமல் –
ஆத்மா வஸ்துவை யார் காப்பார்கள்
இந்த நித்ய வஸ்து என்றுமாம் -நித்யத்வமும் துக்கத்துக்கு ஹேதுவானதே-

விடாது பின் தொடர்ந்து நிற்கின்ற காதலாகிய நோயானது என் மனத்தினை மிகவும் வருத்தா நிற்கின்றது,
இரவாகிய ஊழிக் காலமானது முன்னே நின்று கண்களின் ஒளி மறையும்படி மூடிவிட்டது.
நிலைத்து நிற்கின்ற சக்கரத்தையுடைய எம் மாயவனும் வருகின்றிலன்;
இந்த நிலையில் நிற்கின்ற நீண்ட உயிரை இவ்விடத்திலே காப்பவர்கள் யாவர்? என்கிறாள்.
இரா ஊழி முன்நின்று புதைய மூடிற்று என்க. இவ்விடத்து நீள் ஆவியைக் காப்பவர் ஆர்? என்க.

விரஹத் துன்பமும் செல்லா நிற்க,– இரவும் ஆய் — ரக்ஷகனானவனும் வாராது ஒழிந்தால் –
முடியப் பெறாத உயிரைக் காப்பார் ஆர்? -என்கிறாள்.

பின் நின்ற காதல் நோய் –
புக்க இடம் புக்கு வடிம்பிட்டு நலிகிற காதல் நோயானது.
இடைந்து ஒதுங்குகைக்கு ஒரு நிழல் இல்லாதபடி இருக்கை.

நெஞ்சம் பெரிது அடும் –
நெஞ்சினை மிகவும் நோவு படுத்தா நின்றது.
நெருப்பானது சுருணையை வேகச் செய்து, பின்பே அன்றோ புறம்பே சென்று சுடுவது;
அப்படியே, தான் கிடக்கும் இடத்தை மிகவும் நலியா நின்றதாயிற்று

இரா ஊழி முன் நின்று கண் புதைய மூடிற்று –
காதல் நோயும் இரவாகிய கல்பமும் தம்மிலே சங்கேதித்துக் கொண்டு வந்தாற் போலே இரா நின்றது.
நான் பின்னிட்டு வருகிறேன், நீ முன்னே தப்பாமல் சூழ்ந்து கொள்’ என்று வருவாரைப் போன்று வந்தன என்றபடி.
எதிரிகள் எளியரானால் அவர்கள் கைகளில் விற்களைப் பறிப்பது பரிகசிப்பதாய்க் கொண்டு பரிபவம் செய்வாரைப் போன்று
இத் தலையில் எளிமை கண்டு இரவாகிய ஊழி, முன்னே நின்று கண்களை மறையா நின்றது.
உட் கண்ணினைக் காதல் மறையா நின்றது,
கட் கண்ணை இரவு மறைத்தது.
கண் புதைய மூடிற்றால்-
அறிகின்றதுமாய்ப் பிரகாசமுமாய் இருக்கின்ற கண் இந்திரியத்தை, அறியப் படுகின்ற பொருளான இருள் வந்து
மூடா நின்றது என்பாள் ‘கண் புதைய மூடிற்றால்’ என்கிறாள்.
அன்றிக்கே,
இருளினை ஒத்த நிறத்தினை யுடையவன் வந்து முன்னே நின்றாலும் காண ஒண்ணாதபடி
இரவாகிற ஊழி கண்களை மறையா நின்றது என்னலுமாம்.

மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்-
“எப்போதும் கைகழலா நேமியான்” என்கிறபடியே, அடியார்கட்குப் பகைவர்கள் உண்டான போதாக ஆயுதம் எடுக்கப் பார்த்திராமல்,
எப்போதும் ஒக்கக் கையிலே விடாதே கொண்டிருப்பவனாதலின், ‘மன் நின்ற சக்கரம்’ என்கிறது.
மாயவன்
பிரகாசத்தையுடைய பொருளை இட்டு இருளை அழைக்க வல்ல ஆச்சரியத்தை உடையவனாதலின், ‘மாயவன்’ என்கிறது.
இதனால், போக்குகின்ற பொருளைக் கொண்டு, போக்கப்படுகின்ற பொருளை அழைக்குமவனுக்கு,
போக்குகின்ற பொருளைக் கொண்டு போக்கப்படுகின்ற பொருளைப்
போக்குவிக்கத் தடை உண்டோ? என்பதனைத் தெரிவித்தபடி.
நிவர்த்தகம் சக்கரம் நிவர்த்தத்தை அந்தகாரம் அழிப்பவன்–பிரகாச த்ரவ்யம் -இருளை கூட்டி வந்ததே
இங்குச் சங்கல்பம் அழிய வேண்டா; வருவதாக நினைக்க அமையும்.
அஜோபிஸந் அவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபி ஸந் ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய
ஸம்பவாமி ஆத்ம மாயயா”-என்பது, ஸ்ரீ கீதை. 4 : 6.
“என்னுடைய இச்சையினாலே அவதரிக்கிறேன்” என்கிறபடியே, வருவதாக நினைக்க அமையும் என்றபடி.
ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுக்கையும்,
பிரகாசத்தையுடைய பொருளை இட்டு இருளைப் போக்கக் கடவது என்கிற
மர்யாதையைக் குலைக்கையுமாகிற இவை வேண்டா, தான் வர அமையும்;
போக்குகின்ற பொருளின் தன்மையினாலே போகின்ற பொருள் தன்னடையே போகும் -இவ்விடத்தே

இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் –
முடிய வேண்டுமளவிலே நூறே பிராயமாக இருக்கிற இவ் வாத்மாவை முடித்து நோக்குவார் ஆர்?
“அச்சேத்ய: அயம் அதாஹ்ய: அயம் அக்லேத்ய: அஸோஷ்ய ஏவச நித்ய: ஸர்வகத: ஸ்தாணு:
அசல: அயம் ஸநாதந:”-இது, ஸ்ரீ கீதை. 2 : 24.
“இவன் வெட்டத் தகாதவன், இவன் கொளுத்தத் தகாதவன், நினைக்கத் தகாதவன்,
வாட்டத் தகாதவன்” என்கிற வசனத்தைக் கொண்டு
நின்று வழக்குப் பேசா நின்றதாயிற்று ஆத்ம வஸ்து.
இதனை முடித்து நம்மை நோக்குவார் ஆர்? என்கிறது என்று இப்படி முறுகச் சொன்னது தன்னை,
இச் சொல்லுக்குக் கருத்துரையாக ஒரு தமிழ்ப் புலவன் இட்டு வைக்கிறான்
‘பிரிவிலும் முடியாத என் உயிர்ப் பகையை நீக்கி, என்னை நோக்குவார் ஆர்’ என்று.
இவ்விடத்தே-சர்வ ரக்ஷகனானவனும் உதவாத இந்த நிலையிலே இனி முடிந்து பிழைத்தலே அன்றோ சுகம்.

————————————————————————————

காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என் செய்கேனோ?–5-4-7-

தர்ச ஆங்கஷா ஜநகர்-தேவர்களை
காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்-ரஷகன் உதாவத இடந்தில்
கங்கு= எல்லையாக அடர்ந்த இருள் -பனி -நுண்ணிய
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்-அதி தூரமான /பாலது = ஸ்வபாவம்
கல்ப காலம் போலே நீண்ட இரவு
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்-அழுக்கு அற்ற ஸ்வ பாவம் -திவ்ய ஆயுதங்கள்
கோல -நீல நன் நெடும் குன்றம் ஒப்பான் -பன்னெடும் சூரிய -சந்த்ரர் பிடித்து –
தீப்பால வல் வினையேன் தெய்வங்காள்! என் செய்கேனோ?-அநிமிஷர்களை கூப்பிடுகிறார் -சஜாதீயர் என்று
அக்னி போலே தாஹத ஸ்வ பாவம் பிரபல பாபங்கள்
துக்கம் கண்டு இமைக்காமல் பார்த்து இருக்கும் தேவர்கள் –
எத்தை செய்வேன் -ரஷ்யம் தன்னையே ரஷிக்க முடியாதே –

இந்தச் சமயத்தில் காப்பவர்கள் யார்தாம்? செறிந்த இருளோடும் நுண்ணிய துளிகளோடும் நெடுமையினையே இயல்பாகவுடைய
ஊழிக் காலமாகிச் செல்கின்ற இந்த இரவுக்காலத்தில், பரிசுத்தமான தன்மையுடைய வெண்மை நிறம் பொருந்திய
சங்கையும் சக்கரத்தையுமுடைய
என் தலைவன் தோன்றானால்; தீயின் தன்மையையுடைய கொடிய வினைகளைச் செய்த என்னுடைய தெய்வங்களே!
நான் என் செய்வேன்? என்கிறாள்.
கங்கு – கரை. இருளோடும் பனித்துளியோடும் ஊழியாகச் செல்கின்ற கங்குல் என்க.
தூ – பரிசுத்தம். தீ – நெருப்பு. பால – தன்மையையுடைய. பால் – தன்மை.

இரவுப் பொழுதாகிற யுகம் செல்லா நிற்க அவன் வந்து தோற்றாமையாலே, கண் மூடாதவர்கள் ஆகையாலே
உறங்காத தெய்வங்களைக் குறித்து, நான் என் செய்வேன்? என்கிறாள்.

இவ் விடத்துக் காப்பார் ஆர் –
எல்லாரையும் காக்கின்றவனானவன் காவாதிருக்க, இவ் வளவில் பாதகர் ஆனார் காக்கின்றவர் ஆகவோ.
பாதுகாக்கின்றவன் வரவு தாழ்த்தாலும் இப் புத்தி பிறவாதிருக்கக்கூடிய இவள் இப்போது ‘காப்பார் ஆர்’ என்று
இவ் வார்த்தை சொல்லும்படி காணும் இவளுக்குப் பிறந்த நிலை வேறுபாடு, -த்ருட விஸ்வாசம் –
ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பர புரார்த்தந: மாம் நயேத் யதி காகுஸ்த்த:
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 30. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.
“சரைஸ்து ஸங்குலாம் கிருத்வா லங்காம் –
திருவடி, பிராட்டியைப் பார்த்து ‘பெருமாள் பக்கல் இனி எழுந்தருள அமையாதோ?’ என்ன,
இராக்ஷசர்கள் நெருங்கி யிருக்கிற இதனை இராம சரம் நிறைவுற்றதாக்கிக் காண் நாம் போவது,
வேற்று மனிதர் முகத்தில் விழித்துப் போகவோ?
பர புரார்த்தந:-
அவரோடே பகை கொண்டு இதற்கு முன்னர் உய்ந்து போனதும் ஒரு படை வீடு உண்டோ?
மாம் நயேத் யதி –
நயாமி பரமாம் கதிம்-மேல் கதிக்குக் கொண்டு போகிறேன்’ என்கிறவர் இரண்டு வார்த்தை சொல்லுவரோ?
காகுஸ்த்த :-
இந்திரனுடைய பகைவர்களையும் போக்குங்குடியிலே பிறந்தவர் தம் காரியத்தில் சோர நிற்பரோ?
தத் தஸ்ய சத்ருசம் பவேத்-
அவர்க்குத் தகுதியாக வுள்ளவற்றைச் செய்து போக வேண்டிய நாம், நம்முடைய ஆற்றாமையை நீக்குவதற்காக
அவர்க்கு நிறக் கேடானவற்றைச் செய்யவோ?”
இராமன் தேவியை ஓர் அரக்கன் பிரிக்க, அவள் சபித்துப் போனாள்’ என்னுதல்,
ஒரு குரங்கு மீட்டது’ என்னுதல் செய்கையாகிற இது, அவர் வில் வலிக்கு வசையாம் காண்;
அவர் வம்சத்துக்குக் கொத்தையாம் காண்;-வம்சம் -மூங்கில் –வில் -காகுஸ்தன் -சாடு – -வம்சி புல்லாங்குழல் –
அவர் விஷயத்தில் இராவணன் செய்ததனை நாமும் செய்யவோ?
இராம தனத்தை ‘என்னது’ என்றாரோடு ஒப்பர்கள் ஆவரே அன்றோ அவருடைய காத்தலைத்
தம் தலையிலே ஏறிட்டுக் கொள்ளுமவர்கள்.

அல்லன் மாக்கள் இலங்கை யதாகுமோ எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினாற் சுடுவேன் அது தூயவன் வில்லினாற்றற்கு மாசு என்று வீசினேன்.

அன்றியும் பிறிதுள்ள தொன் றாரியன் வென்றி வெஞ்சிலை மாசுணும் வேறினி
நன்றி என்பதம் வஞ்சித்த நாய்களின் நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ.

வேறு முண்டுரை கேளது மெய்ம்மையோய்! ஏறு சேவகன் மேனி யல்லால் இடை
ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண் எனக் கூறு மிவ்வுருத் தீண்டுதல் கூடுமோ?- என்ற கம்பராமாயணச் செய்யுள்கள்

எவையேனும் அச்சத்திற்குக் காரணங்கள் உள ஆனாலும் அஞ்சாதே இருக்கக் கூடிய இவள் பிரிவாற்றாமைக்கு
அஞ்சினபடியாலே அன்றோ
‘காப்பார் ஆர்’ என்ற இவ்வார்த்தை சொல்லியது.
“கஜம் வா வீக்ஷ்ய ஸிம்ஹம் வா வியாக்ரம் வா வனம் ஆஸ்ரிதா
நாஹாரயதி ஸந்த்ராஸம் பாஹூராமஸ்ய ஸம்ஸ்ரிதா”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 60 : 20.
“ஸ்ரீ ராமபிரானுடைய திருக் கைகளை அடைந்திருந்தாளாகையாலே யானைக் கூட்டங்களையும் சிங்கக் கூட்டங்களையும்
புலிக் கூட்டங்களையும் கண்டு அச்சத்தை அடையவில்லை;” ஸ்வரூபத்தோடு கூடி யிருக்கின்ற பெண் தன்மை போயிற்று,
கணையத்துக்குள் இருப்பவர்கள் அச்சத்திற்குக் காரணமான பொருள்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள் என்றபடி.
யானைக் கூட்டங்கள் சிங்கக் கூட்டங்கள் அல்லவே அன்றோ இது.

காப்பார் ஆர் இவ்விடத்து-
‘காக்கப்படுகின்ற பொருள் இவை, காக்கின்றவன் அவன்’ என்று தெளிந்து அறுதியிட்டு,
‘அம்ம’ என்று அப்புத் தட்டி – -இருந்தவளே அன்றோ, -இப்போது காப்பார் ஆர்’ என்கிறாள்;
பிறந்த ஆற்றாமையின் மிகுதியாலே. அவனுடைய சர்வ ரக்ஷகத்வம் ஓர் அச்சாய் அன்றோ இருப்பது.
இவர் அல்லிலே கிடந்து நோவு படுகிறாரே அன்றோ. அவன் உண்டாயிருக்க,
முதலிலே ஒருவர்க்கும் வருத்தம் இல்லையே அன்றோ.

அவ ரஷணே தாது அச்சு எழுத்து அகாரம்
அல் ஹல்லில் எழுத்தில் மகாரம் -அல்லில் இரவில் -ரஷ்யத்வம் -ரஷ்யகத்வம் அறிந்து ஆனந்தப்படாமல் –
ஹல் எழுத்து உயிர் மெய் எழுத்து மகாரம்-
நிர் பரரராய் இருக்க வேண்டும் -மகார நினைத்து நோவு பட வேண்டுமோ
முதலிலே அவன் உண்டாய் இருக்க கிலேசம் இல்லை -அகாரம் முதலில்
ஓர் அச்சாய்’ என்றது, சிலேடை: அச்சிலே அந்தர்ப் பூதமான அகாரத்தாலே சொல்லப்படுகின்ற பொருளாய் என்பது நேர் பொருள்
ஏக ரூபமாய் என்பது வேறும் ஒரு பொருள். ‘அல்லிலே’ என்றதும், சிலேடை: ஹல்லான மகாரத்தால் சொல்லப்படுகின்ற ஆத்ம
ஸ்வரூபத்தை நினைத்து என்பது நேர்பொருள். இரவிலே என்பது வேறும் ஒருபொருள்.
ஆக, ‘ஓர் அச்சாயன்றோ’ என்று தொடங்கும் வாக்கியத்திற்கு, அகார வாச்சியனான சர்வேச்வரனை நினைத்து, பாரம் அற்றவளாய் இருக்க
வேண்டியவளாக இருக்க, மகார வாச்சியனான ஆத்மாவை அநுசந்தித்து, ‘நம்மை நாம் எங்கே காத்துக்கொள்ளப் போகிறோம்’ என்று
நோவுபடுகிறாள் என்பது கருத்து. அச்சு-உயிர். அல்-மெய்.
அம்ம,

ம காரம் இரண்டும் காட்டி –
பிரணவத்தில், அகாரத்திலே சொல்லுகிற அவனுடைய ரக்ஷகத்வத்தையும்,
மகாரத்தில் சொல்லுகிற தன்னுடைய ரக்ஷ்யத்வத்தையும் நினைத்து
அச்சம் அற்று இருக்குமவள் கண்டீர் கலங்கினாள் என்று சுவாப தேசத்திலே அருளிச்செய்கிறார்
காக்கப்படுகின்ற பொருள்கள்’ என்று தொடங்கி.
‘அம்ம’ என்பது, சிலேடை: அம்மா என்று மகிழ்ச்சியினால் சொல்லும் வார்த்தை என்றும்,
அகார வாச்சியனான சர்வேச்வரனுக்கு மகாரவாச்சியனான
ஆத்மா காக்கப்படுகின்ற பொருள் என்றும் பொருளாம்.
அப்புத் தட்டி-துடை தட்டி என்றும், நினைத்து என்றும் பொருளாம்

கங்கு இருளில் –
எல்லையான இருள் என்னுதல்; தடித்த இருள் என்றபடி. கங்கு-எல்லை.
அன்றிக்கே, கங்குலில் இருள் என்னுதல்;
தச ராத்ரம், சப்த ராத்ரம்’ என்றால், பத்து நாள், ஏழு நாள் என்று நாள்களைக் காட்டுவது போன்று
இங்குக் ‘கங்குல்’ என்பதும் இரவாகிற காலத்தைக் காட்டுகிறது. இரவிடத்தில் என்பது பொருள்.
மருங்குல்’ என்பது ‘மருங்கு’ என வருமாறு போன்று, கங்குல் என்பது, கங்கு எனக் கடைக்குறைந்து வந்த விகாரம்.

நுண் துளியாய் –
நுண்ணிய துளியுமாய்.

சேண்பாலது ஊழியாய்ச் செல்கின்ற கங்குல்வாய் –
மிக்க நெடுமையை ஸ்வபாவமாக உடைத்தான கல்பமாய்க்கொண்டு செல்லுகிற இரவிடத்து.
தமிழர்க்கு அகத்தியரைப் போன்று இருப்பான் தமிழாசிரியன் ஒருவன்,
செல்கின்ற கங்குல் வாய் என்பதற்குச் செல்கின்ற நாளகத்து என்று உரை எழுதி வைத்தான்.

தூப் பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால் –
இருளைப் போக்கும் போது சந்திர சூரியர்கள் சேர உதித்தாற் போன்று இருக்கின்ற
திவ்விய ஆயுதங்களை யுடையவன் வருகின்றிலன்.
அந்தச் சந்திர சூரியர்கள் வேணுங்காணும் இந்த இருளைப் போக்கும் போது.

ஆங்கத் திகிரி சுடரென்றும் வெண்சங்கம் வானில் பகரும் மதி என்றும் பார்த்து” -மூன்றாந் திருவந். 67.-என்று
சொல்லக் கடவதன்றோ.
பண்டே இவள் கை கண்டு வைத்தமை யன்றோ இவை தாம்.
இருளோடே சீறு பாறு என்று போக்குவான் ஒருவனும்,
இருளோடே கண்கலந்து நின்று போக்குவான் ஒருவனுமாயிற்று.
தூய்மையை ஸ்வபாவமாகவுடைத்தான வெண் சங்கு ஆதலின் ‘தூப்பால வெண்சங்கு’ என்கிறாள்.
அன்றிக்கே, பால் என்பது, இடமாய், குறைவற்ற இடத்தை யுடைத்தான வெண்சங்கு என்னுதல்;
“பெரு முழக்கு” என்றும், “நன்றாக நிரம்பின மத்தியினின்றும் வெளிக் கிளம்பின ஒலியையுடைய
ஸ்ரீபாஞ்ச சன்னியம்” என்றும் சொல்லப்படுவது அன்றோ.
ஆயின், ‘தூய்மை’ என்ற சொல் குறைவறுதல் என்றபொருளைக் காட்டுமோ? எனின்,
‘அவன் இவ்வர்த்தத்தில் குறைவற்றவன்’ என்று சொல்ல வேண்டுவதனை ‘அவன் இவ்வர்த்தத்திலே தூயன் காண்’ என்று
வழங்கும் வழக்கு உண்டே அன்றோ. இலக்ஷணை இருக்கிறபடி.
அன்றிக்கே, தூய்மையாலும் வெண்மையாலும், வெளுப்பின் மிகுதியைச் சொல்லுகிறதாகவுமாம்;
அப்போது வேறுசொல் இடையில் வரலாகா. வந்திருப்பதனால், அவ்வாறு பொருள் கூறுதல் பொருத்தம் அன்று.

தீப் பால வல்வினையேன்-
தீய தன்மையை யுடைத்தாய்ப் பேர்க்கப் பேராதபடி மிகுந்த பாவத்தைச் செய்த நான். என்றது,
காப்பாற்றுதலையே தனக்குச் சங்கல்பமாகக் கொண்டு, காப்பாற்றுதற்குச் சம்பந்தமுள்ளவனாய்,
அதற்காகவே கருவி பிடித்திருக்கிறவனுங் கூட உதவாதபடியான பாபம் என்றதனைத் தெரிவித்தபடி.

தெய்வங்காள் என் செய்கேனோ-
1-தெய்வங்களோடு இவளுக்கு ஓர் ஒப்புமை உண்டு; அவர்கள் பிறப்புத் தொடங்கியே உறங்காதவர்கள்;
இவளோ எனின், “உண்டோ கண்கள் துஞ்சுதல்” என்றிருப்பவள். அதற்கு மேல் இப்போது இருளுக்கு அஞ்சியும் உறங்காள்.
2-தன் நிலையைக் கண்டு அதற்கு அவர்கள் உறங்காதே இருக்கிறார்களாகக் கொண்டு, அவர்களைத் தஞ்சமாக நினைத்துக் கேட்கிறாள்,
சிறை உறவு போன்று. தோழிமாருங்கூட உறங்கா நிற்கச் செய்தே அவர்கள் உறங்காதிருக்கையாலே,
அவர்களைக் காட்டிலும் இவர்களை அன்னிய உறவாக நினைத்துச் சொல்லுகிறாள்.
3-“ஆயும் அமருலகுந் துஞ்சிலும்” என்று தாய் மாரோடு ஒரு சேர எடுத்துப் பேசப் படுகிறதே அன்றோ தேவர்களையும்.
துன்பம் மிக்கால் ‘அம்மே! என் செய்வேன்’ என்றாற் போலே இருக்கிறது காணும்.

———————————————————————-

தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே.–5-4-8-

ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் ஆயுதம் எடுத்து ரஷிக்கும் கண்ணனும் வாராமல் தென்றலும் சுட என் செய்வேன்
தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்-பிரவ்ருத்தி ஷமை அல்லாத நான் என் செய்வேன்
இரவு ஒன்றே ஏழு கல்பங்கள் போலே புத்தி பூர்வகமாக என் முன்னே நின்று -தெரிந்தே வந்து –
மெய் வந்து நின்று என தாவி மெலிவிக்கும்-கிரிசமாக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்-பகலை இரவாக்க நினைவு அறிந்து செய்து அருளும் சக்கரத் தாழ்வான்
எதிர்பார்க்காமல் எத்தை செய்ய நினைத்தாலும் செய்து தலைக் கட்ட வல்லவன் -விதேயமான
வந்தாலே இருள் போகும் -ஸ்வா பாவி-கை கொள்ளுதல் -நினைவு அறிந்து கார்யம் செய்தல்
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே-தடவும் தென்றலும் சுடுகிறதே –
தை மாச தென்றலும் அவன் திரு உள்ளம் அறிந்து சுடுகிறதே
நலிய வந்தாரைப் போலே தடவுகிற -குளிர்ந்த தென்றல் -வெவ்விய அக்னியைக் காட்டிலும் -போலே என்றுமாம் -சூடா நின்றது –

தெய்வங்களே! என்ன செய்வேன்? ஓர் இரவானது ஏழு ஊழிக் காலமாக நீண்டு மெய்யாகவே என் முன்னே வந்து நின்று என்னுடைய
உயிரை வருத்துகின்றது; கையிலே வந்திருக்கின்ற சக்கரத்தை யுடைய என் கண்ண பிரானும் வருகின்றான் இலன்;
தடவுகின்ற குளிர்ந்த தென்றலானது கொடிய நெருப்பைக் காட்டிலும் கொடிதாக வருந்தா நின்றது.
இரவு மெலிவிக்கும் என்க.
கை வருதல் – கையிலே வந்திருத்தல். அன்றிக்கே, அடக்கமான என்னலுமாம்.
தைவந்த-தை மாதத்தில் வந்த. அன்றிக்கே, தடவுதலுமாம். சுடரில்: ஐந்தாம் வேற்றுமை உறழ்பொரு. ஒப்புப்பொருவுமாம்.

ஓர் இரவே பல யுகமாய் மிகவும் நலியா நின்றது, எம்பெருமானும் வருகின்றிலன்,
அதற்கு மேலே தென்றலும் நலியா நின்றது என்கிறாள்.

தெய்வங்காள் என் செய்கேன் –
மற்றும் உறங்காதிருப்பவர்கள் உளராகில் அன்றோ அவர்களைப் பார்த்துச் சொல்லலாவது.

ஓர் இரவு ஏழ் ஊழியாய் –
கீழே, ‘ஊழியாய்’ என்றது, இராத்திரி மாத்திரமேயாய் நின்று நலிந்தது என்னும்படி, இது பல கல்பமாக நலியா நின்றது.
சௌபரி, இன்பத்தை அனுபவிப்பதற்குப் பல வடிவுகள் கொண்டாற் போன்று,
இதுவும் துன்புறுத்துவதற்குப் பல வடிவுகள் கொள்ளா நின்றது என்றபடி.

மெய் வந்து நின்று-
ஈச்வரன் கட்டின மர்யாதை குலைக்க ஒண்ணாமை வந்தது மாத்திரம் அன்றிக்கே,
தனக்கே சீற்றமுடையாரைப் போலே மெய்யே முன்னே வந்து நின்று.
இராவணன் இடம் பார்த்து வந்தாற் போன்று,
விரக நிலை என்று அறிந்து நலியா நின்றது என்பாள் ‘வந்து நின்று’ என்கிறாள்.

எனது ஆவி மெலிவிக்கும் –
மோர்க் குழம்பு கொடுத்துத் தேற்றி விடு நகம் கட்டி நலிவாரைப் போன்று, ‘சென்றற்றது’ என்னும்படி இருக்கிற
என்னுடைய உயிரை உண்டாக்கி நலியா நின்றது. என்றது,
போன உயிரை மீளக் கொடுத்து நலியா நின்றது என்றபடி.

கை வந்த சக்கரத்து-
இந்தத் துன்பத்தைப் போக்குவதற்குச் சாதனம் இல்லாமல் தான் இருக்கிறானோ?
அழையா திருக்கச் செய்தேயும் நினைவறிந்து கையிலே வந்திருக்கும் திருவாழியை யுடையவன்.
கருத்து அறிந்து காரியம் செய்யும் சாதனத்தை யுடையவன் என்றபடி.
“பாவஜ்ஞேந –
இளைய பெருமாள் பர்ண சாலை சமைக்கும்போது, இருடிகளுக்கு ஓலக்கம் கொடுத்திருக்குமிடம் செய்யும்படியும்,
அக்நி சாலை சமைக்குமிடமும், இவையே யன்றோ பெருமாள் அருளிச் செய்தது;
பிராட்டியும் தாமும் ஏகாந்தமாக இருப்பதற்குரிய இடத்தைச் சமைக்கும்படியை இவருடன் தாம் அருளிச் செய்யாரே,
அவை முழுதும் கருத்து அறிந்து செய்தாராயிற்று.
அவர் தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசினால், இவரும் செவி கண்ணாகக் கேட்டுச் சமைப்பாரித்தனை. –
சஷூஸ் ச்ரவா கட்செவி –
கிருதஜ்ஞேந –
வருந்தி இவர் நினைவைப் பின்சென்ற மாத்திரம் அன்றிக்கே, அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்று பிள்ளை பெற்ற சக்கரவர்த்தி,
பெருமாளுக்குப் பொருந்துமிடம் பார்த்து மாளிகை சமைத்து முன்பு செய்து போந்த கட்டளைகள் அறிந்து, அப்படியே செய்தாராயிற்று.
தர்மஜ்ஞேந-
இதுதான் ‘தம்பியாய் இருந்து இப்படிச் செய்தார்’ என்று குணமாகை அன்றிக்கே, இது செய்யத் தக்கது’ என்று செய்தார்.
என்றது, உஜ்ஜீவனத்திற்குக் காரணமாகச் செய்ய வேண்டிய தர்மம் இது’ என்று செய்தார் என்றபடி.
த்வயா புத்ரேண-
போன ஐயர்க்கு நரகத்தைப் போக்குதற்குரிய புத்திரர் நீரே ஆவீர். என்றது,
நாம் உள்ளதனையும் இவருடைய ரக்ஷணம் இப்படிச் செல்லுகிறது, நமக்குப் பின்னர் இவர்க்கு
ரக்ஷகர் யார்? என் செய்யக் கடவது’ என்று இதுவே ஆயிற்று ஐயர்க்கு எப்போதும் நெஞ்சாறல்;
ஐயர் செய்யுமவற்றை நீர் செய்கையாலே அவர்க்குத் துக்கத்தைப் போக்கினவர் நீரே அன்றோ.
தர்மாத்மா-
ஐயரும் ஒருவரே! தாம் பரம தார்மிகர் கண்டீர்; தாம் இருந்த நாளும் நமக்கு வேண்டும் ரக்ஷணங்களைச் செய்து,
தாம் சென்ற பின்னரும் தண்ணீர்ப் பந்தலை வைப்பாரைப் போன்று உம்மை வைத்துப் போவதே!
ந ஸம்விருத்த: பிதா மம – நாம் ஐயரை இழந்தோம் அல்லோம், நீர் இழந்தீரானீரித்தனை அன்றோ.”

கை வந்த சக்கரத்து என் கண்ணன்
ஸ்ரீ பீஷ்மரைத் தொடருகிற போது கையிலே வந்திருந்ததே அன்றோ திருவாழி.
ஸ்ரீ பீஷ்மர் நெடும் போது பொருத படியால் அருச்சுனன் இளைத்தான்,
அவன் இளைத்தவாறே சர்வேச்வரன் தன் சூளுறவை மறந்தான்,
தேரில் நின்றும் குதித்துத் திருவாழியைக் கொண்டு தொடர்ந்தான், வந்து கொன்றருளீர் என்கிறான்.
“ஏஹி ஏஹி புல்லாம்புஜ பத்ர நேத்ர-என்றும் ஆணை மறுத்தாலும் சேதம் இல்லையே!
இச் சீறிச் சிவந்த கண்ணழகை அநுபவிக்கப் பெற்றால்,
ப்ரஸஹ்ய-தேவர்க்கும் வீரத்துக்கும் தோலேன்,
என் கையில் ஆயுதத்தைப் பொகடச் சொல்லித் தலையை அறுத்தருளீர்.
லோக நாத-
வீரத்துக்குத் தோலேனாகிலும் முதன்மைக்குத் தோற்பனே அன்றோ.
அன்றிக்கே,
கை வந்த சக்கரத்து என்பதற்கு, அற விதேயமான சாதனத்தை யுடையவன் என்னலுமாம்.
“ஸ்ரீ ராமபிரானுக்கு வலக்கை போன்றவர்” என்கிறபடியே, விதேயமாய்க் காரியம் செய்யும் சாதனத்தையுடையவர் என்றபடி.

என் கண்ணன்-
அடியார்கட்காகத் தன் சூளுறவையும் அழிய மாறுமவன் அலனோ.
அடியார்களுள் ஒருவர்க்குச் செய்தது எல்லார்க்குமாக இருக்குமே.
‘அடியார்கட்காகத் தன் சூளுறவை அழியமாறும்’ என்னுமிது தஞ்சமாக அன்றோ இவனைப் பற்றுகிறார் பற்றுவது.
தனக்கு என்னவும் நியதமா யிருப்பன சில உளவாகில் இவனைப் பற்றுவார்க்குப் பலம் இல்லை.

தை வந்த தண் தென்றல் –
குளிர்ந்த காலத்திலே வந்த குளிர்ந்த தென்றல் என்னுதல். தடவிக் கொண்டு வருகின்ற குளிர்ந்த தென்றல் என்னுதல்;
என்றது, கணவன் கைகளால் தன்னைத் தீண்டுவதனை நினைப்பூட்டுவதாய் இரா நின்றதாயிற்றுக் குளிர்ந்த தென்றல் என்றபடி.
தான் சென்று மண்மகளைத் தை வந்தான்” என்ற இடத்துத் தை வருதல் என்பது, தடவுதல் என்ற பொருளதாதல் காண்க.

வெம் சுடரில் தான் அடுமே –
வெவ்விய சுடரைக் காட்டிலும் அடும் என்னுதல்.
சுடரைப் போன்று நலியா நின்றது என்னுதல்.
உலகத்திலே உள்ள நெருப்பைக் காட்டிலும் நரகாக்நிக்குள்ள வாசி போருமே அன்றோ,
நரக அக்நியைக் காட்டிலும் பிரிந்த சமயத்தில், அநுகூலமான பொருள்களுக்கு.

—————————————————————————

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–

அதிசயித அந்தகாரம் -அத் அபங்குர ஐஸ்வர்யம்–அழியா செல்வன் -புண்டரீகாஷன்
வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்-தடித்த செறிந்த இருள் -நுண்ணிய பனித்துளி –
மூவரும் சேர்ந்து -இருள் குளிர் பனி தென்றல் –
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்-தனது தோற்ற அரவால் இருளைப் போக்கும் –
அழகிய உத்துங்க தேர் தோன்ற வில்லையே
பெண் படும் துக்கம் பார்க்க சஹியாமல்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்-அதிசயித ஐஸ்வர்ய ஸூசகம் -தாமரைக் கண்ணே செல்வம் -அழியாத ஐஸ்வர்யம்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.-மநோ துக்கம் யார் தீர்ப்பார் –

இந்த இரவானது, செறிந்த இருளோடும் நுண்ணிய துளிகளோடும் சேர்ந்து கொடிய நெருப்பினைக் காட்டிலும் மிக அதிகமாக எரித்து
வருத்தா நின்றது, அழகிய பிரகாசத்தையுடைய சூரியனது அழகிய பெரிய தேரும் தோன்றுகிறதில்லை;
சிவந்த பிரகாசம் பொருந்திய தாமரைபோன்ற கண்களையுடைய செல்வனும் வருகின்றான் இலன்;
நிலைபெற்று உருகிக்கொண்டிருக்கின்ற என்னுடைய மனத்துன்பத்தை நீக்குகின்றவர்கள் யார்? என்கிறாள்.
சுடரில்: ஐந்தாம் வேற்றுமை உறழ்பொரு. ஒப்புப் பொருளுமாம். தான் – இரவு. உருகுகின்றேன் – வினையாலணையும் பெயர்.

இரவும் நலியா நின்றது, சூரியோதயமும் ‘நமக்கு’ என்றவாறே வேண்டத் தக்கதாய் விட்டது,
காக்கின்றவனும் தோன்றுகின்றிலன், என் மனத்தின் துன்பத்தை இனிப் போக்குவார் யார்? என்கிறாள்.

வெம் சுடரில் தான் அடுமால் வீங்கு இருளின் நுண் துளியாய் –
இராவணன் மாரீசனைத் துணையாகக் கொண்டு வந்து தோற்றினாற் போலே ஆயிற்று,
நுண்ணிய துளியோடே செறித்த இருள் வந்து தோன்றினபடி. இரண்டும் இன்பத்திற்கு ஏகாந்தமாய் இருப்பன அன்றோ,
முழுதிவ் வையகம் முறை கெட மறைதலும் முனிவனும் முனிவெய்தி
மழுவினால் மன்னர் ஆருயிர் வவ்விய மைந்தனும் வாரானால்
ஒழுகு நுண் பனிக் கொடுங்கிய பேடையை அடங்க அம் சிறை கோலித்
தழுவு நள்ளிருள் தனிமையின் கடியதொர் கொடு வினை அறியேனே– பெரிய திருமொழி 8. 5 : 8.
ஒழுகு நுண் பனி” என்கிறபடியே, கார் காலத்தில் கைக்குள்ளே அடங்க அணைக்க வேணும்.

இருள் தானே போகத்தை வளர்ப்பதே அன்றோ. அதற்கு மேலே,
வளர்ந்த இருளும் நுண்ணிய பனியும், வெவ்விய சுடரிற் காட்டில் அடா நின்றது என்னுதல்.
வெவ்விய சுடர் போலே அடா நின்றது என்னுதல்.
இவற்றில் பிரதானம் யாது? என்னில், அது வேணுமோ,
பாதகங்கள் இரண்டு உண்டு’ என்ன அமையாதோ. இனி, இத் திருவாய்மொழியில் சொல்லுவது,
இரவின் துன்பமே அன்றோ; ஆன பின்னர், இருளுக்கே முதன்மை சொல்லிற்றாகக் கோடலும் அமையும்.

அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்-
தன்னுடைய தோற்றரவிலே துன்பங்களை எல்லாம் போக்குதலை யுடைய அழகிய சுடர் பொருந்திய சூரியனும் வருகின்றிலன்.
இது, இளைய பெருமாள் அகல நின்றாற்போலே ஆயிற்று. பிரளயத்தில் சிறிது தூரம் எஞ்சி இருக்க நீந்தி
கரையைக் கிட்டினோமோ, கிட்டினோமோ!’ என்று பார்ப்பாரைப் போலே காணும்,
இரவு முழுவதும் நோவுபட்டு, ‘விடிந்ததோ, விடிந்ததோ, என்று பார்க்கிறபடி.

செம் சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்-
சிவந்த சுடரை யுடைய தாமரை போன்ற திருக் கண்களை யுடைய செல்வத் திருமாலும் வருகின்றிலன்.
சூரியன் வந்தாலும் இருள் வருவதற்குச் சம்பாவனை உண்டே அன்றோ,
மறையாத சூரியனும் வருகின்றிலன் என்னுதல்.
அந்தச் சூரியனுடைய பிரகாசமும் எல்லா இடங்களிலும் இராதே அன்றோ,
உபய விபூதிகட்கும் பிரகாசத்தைச் செய்யுமவன் அன்றோ இவன்.
“பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன்”-இரண்டாம் திருவந். 81.-என்னக் கடவதன்றோ.
“தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணீ”-என்பது, சாந்தோக்யம். 1 : 6.
“காலையில் சூரியனுடைய ஒளியால் மலர்ந்த தாமரை மலர் எவ் வண்ணம் இருக்குமோ அவ்வண்ணமே
அந்தப் பரப் பிரஹ்மமான ஸ்ரீமந் நாராயணனுடைய திருக் கண்களும்” என்கிறபடியே,
சூரிய மண்டலத்திலே எழுந்தருளி யிருக்கிறவனும் வருகின்றிலன். என்றது,
சூரியனுடைய வரவுக்கு அருணோதயம் போலே இருப்பது ஒன்றே அன்றோ,
அந்தச் செல்வத் திருமாலுடைய வரவுக்குச் சூரியனுடைய தோற்றரவு என்றபடி.

நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார் –
மனத்திலே உள்ள துன்ப இருளைப் போக்குவார் யார்?
புற இருளைப் போக்குமவனன்றோ அந்தச் சூரியன்;
மனத்திலே உள்ள இருளானது வயிரம் பற்றின இடரே அன்றோ;
அதனைப் போக்கும்போது நிலவனுமாய் அந்தரங்கமானவனுமே வேணுமே.

ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீதுபோய் வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்தென் நெஞ்சமே!
ஞானமாகி ஞாயிறாகி ஞால முற்றும் ஓர் எயிற்று ஏனமா யிடந்த மூர்த்தி எந்தை
பாதம் எண்ணியே.- திருச்சந். 114.- என்னக் கடவதன்றோ.
ஞான ஸ்வரூபன் -இவனுக்கு ஞானம் கொடுத்து ஆந்தரமான அந்தகாரம் போக்குவானே –

நின்று உருகுகின்றேனே –
விலக்ஷண விஷயத்தில் உண்டான பிரிவானது, உருகிற்றாய் தர்மி லோபம் பிறக்கவும் ஒட்டாது,
தரிக்கவும் ஒட்டாது,
முடிய உருகினபடியே நிற்குமித்தனை.
இன்னம் ஒரு கால் காணலாமோ’ என்னும் நசை முடிய ஒட்டாது,
அப்போதைய இழவு பிழைத்திருக்க ஒட்டாது.

————————————————————

நின்று ருகுகின்றேனே போல நெடு வானம்
சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–5-4-10-

சொன்னால் போதும் -வருவான் வர மாட்டான் என்று –
இரவில் நான் ஈடுபடாமல் இருக்க பூமியை அனந்யார்ஹம் ஆக்கிக் கொண்டவன் பற்றி ஒரு வார்த்தையும் சொல்லாமல்
நின்று ருகுகின்றேனே போல நெடு வானம்-தன்னையே திருஷ்டாந்தம் -நெடு வானம் உருகி பனியாக கொட்ட –
தான் உருகி வெவ்வி -சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்-இரவு பொழுதில் –
பனி துளி பெருக -கூடி இருக்கும் இரவு
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று-மகா பலி அபஹரித்த அன்று -உலகுக்கு உபகரித்த –
இன்று நமக்கு வருவானோ
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.-ஒரு வார்த்தை ஒரு தடவை யாவது ஒரு வார்த்தை சொல்லக் கூடாதோ –

நின்று உருகுகின்றவளான என்னைப் போன்று, பரந்த ஆகாசமானது தேய்ந்து சென்று உருகி
நுண்ணிய துளியாகிச் செல்கின்ற இந்த இரவிடத்து,
மஹா பலி பூமியைக் கவர்ந்த அக் காலத்தில் ஒரு தடவை பூ லோகத்தைத் தன் திருவடிகளால் அளந்த உபகாரகன் வாரான் என்று
ஒரு வார்த்தையை ஒரு தடவை சொல்லாமல் இந்த உலகமானது உறங்காநிற்கும்; இது என்னே! என்கிறாள்.
வானம் சென்று உருகித் துளியாகிச் செல்கின்ற கங்குல் என்க. என்று ஒருகால் சொல்லாது உலகு உறங்கும் என்க.

இந்த இரவில் என்னுடைய துன்பத்தைக் கண்டுவைத்து அவன் திறமாக
ஒரு வார்த்தை சொல்லாதே உலகமாக உறங்குவதே! என்கிறாள்.

நெடுவானம் சென்று உருகி நுண் துளியாய்ச் செல்கின்ற-
எல்லாப் பொருள்கட்கும் இடம் கொடுக்கின்ற பரப்பையுடைய ஆகாசமானது,
சென்றற்று நுண்ணிய துளியாய் இற்று விழா நின்றது.
யாரைப் போன்று எனின்,

நின்று உருகுகின்றேனே போலே –
கண் கூடாகக் கண்டதனை அன்றோ உபமானமாகச் சொல்லுவது, ஆதலால்,தன்னையே சொல்லுகிறாள்.
“அப்ரமேயம் ஹி தத்தேஜ: யஸ்ய ஸா ஜநகாத்மஜா நத்வம் ஸமர்த: தாம் ஹர்த்தும்
ராம சாபாஸ்ரயாம் வநே”-என்பது, ஸ்ரீராமா-ஆரண். 37 : 18.
எவருக்கு, ஜனக குலத்தில் பிறந்த அந்தப் பிராட்டி மனைவியாக இருக்கின்றாளோ அந்தப் புருஷோத்தமனுடைய பராக்கிரமம்
அளவிட்டு அறிய முடியாததாக இருக்கிறது” என்கிறபடியே,
பெரியவர்களுடைய பெருமையும் தன் சம்பந்தத்தாலே யாம்படி இருக்குமவளன்றோ.
திருமகள் கேள்வனாகையாலே சர்வாதிகன்’ என்னக் கடவதன்றோ.
மகா தத்வம் ஆகாசத்துக்கு அணு வான தன்னைச் சொல்லலாமோ என்னில்
சீதை தேஜஸ் அளவிட முடியாமல் என்றால் போலே பராங்குச நாயகி சொல்லலாமே என்றவாறு

கங்குல் வாய்-
இப்படிச் செல்லுகிற இரவிடத்து.

அன்று ஒரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று சொல்லாது-
பிரிவாற்றாமையிலும் பிழைத்திருத்தலுக்கு நிமித்தம் அவனுடைய அடிப்பாடு. என்றது,
வரையாதே எல்லாரையும் ஒரு சேரக் காப்பாற்றியவன், தன்னாலே வந்த ஆற்றாமையைப்
போக்காது இருப்பானா’ என்னுமதே அன்றோ
ஜீவித்திருக்கைக்குக் காரணம், அதுவும் அவனுக்கு, புழுக் குறியிட்டது எழுத்தானாற் போன்று
எதுவோ ஒரு காலத்தில் வந்தது ஒன்று,
அது அவனுக்கு என்றைக்கும் உள்ளது ஒரு தன்மை அன்று காண்” என்று சொல்லுகிறார் இலர்.
(உலகு அளந்தான் வரக் கூவாய் என்று வருவதற்கு ஆண்டாள் பிரார்த்திக்க
இவரோ வாரான் என்றாகிலும் சொல்லுவார் இல்லையே)

மானத்து வண்டலுழ வோரெழுத்தின் வடிவுற்ற சீர்
மானத்து வண்ட வினையாளராயினும் மால் வளர்வி
மானத்து வண்டலமாமரங்கம் வழி யாவரினும்
மானத்து வண்டமர் தாரண்டராம் பதம் வாய்க்குமங்கே.-என்ற திவ்வியகவி திருவாக்கு

அன்று ஒரு கால்’
என்றது, அன்று அங்ஙனே ஒரு கால் செய்தானித்தனை,
அவனுக்கு எற்றைக்கும் நியதமாய் இருப்பது ஒரு தன்மை அன்று காண் என்கிறார் இலர்.
(ஒரு காலாலே அளந்தான் -என்றைக்கோ அளந்தான் -)
பிரான்’
என்னா நிற்கச் செய்தே அன்றோ ‘வாரான்’ என்கிறது. என்றது,
உலக முழுதினையும் அளந்து கொண்ட உபகாரகன் அன்றோ என்று நினைக்கிறாயாகில், பெருக்காறு பெருகினாற்போலே
அது அங்ஙனே ஒருகால் செய்து போன இத்தனை, வாராமையே காண் ஸ்வபாவம்” என்கிறார் இலர் என்றபடி.
ஒன்று-‘வரும்’ என்ன வேண்டா, ‘வாரான்’ என்ன அமையும்.
இன்னம் வருவான்’ என்னும் நசை கொண்டு ஜீவிக்க இருப்பார்க்கே அன்றோ ‘வரும்’ என்றே சொல்ல வேண்டுவது.
வரும்’ என்னவுமாம், ‘வாரான்’ என்னவுமாம்.
ஒரு கால் –
ஒரு கால் சொன்னால் பின்னையும் ஜீவிப்பார்க்கே அன்றோ இ ருகால் மட்டுச் சொல்ல வேண்டுவது.
அவன் இனி வாரான்’ என்று அறிந்த போதே மூச்சு அடங்குமே அன்றோ.

உன்னோடும் தோழமை கொள்ள வரக் கூவாய் -உலகு அளந்தான் வரக் கூவாய் -ஆண்டாள்
இங்கு வாரான் சொன்னாலும் -என்கிறாள் பராங்குச நாயகி —
அன்று ஒருகால் வையம் அளந்தபிரான் வாரான் என்று ஒரு கால் சொல்லுவார் இல்லை
ரஷிக்கத் தான் அவன் வர வில்லை -சொல்லுவாரும் இல்லை —
திரிவிக்ரமன் என்று சொல்லவும் மாட்டாமல் தூங்கி கொண்டு இருக்கிறார்கள்
அன்று ஒரு கால் -ஒரு தடவை -ஒரு திருவடியால் -வையம் அளந்தான் -இது நியத ஸ்வ பாவம் இல்லை-
என்று சொல்லுவாரும் இல்லையே

பிரான் –
லோகத்துக்கு உபகாரகன் -நானும் லோகத்தில் ஒருத்தி -பெருக்காறு போலே அது ஒரு கால் –
நடந்து அளந்து காட்டிய சேஷ்டிதம்
வாராமையே ஸ்வ பாவம் என்று சொல்லவும் ஆள் இல்லையே –

உலகு ஓ உறங்குமே –
“அன்னையரும் தோழியரும் துஞ்சுவர்” என்று எனக்கு ஆறுதல் சொல்லாமல்
அவனையும் வரச் சொல்லாமல் அனைவரும் உறங்க
உலகோ ஒ உறங்குமே
லோகத்தை அடைய இன்னார்
அன்னையர் தோழியர் முன்பு சொல்லி இங்கே உலகம் அனைத்தையும் கடிந்து கொள்கிறார்
பிரிந்தவனோடு ஒத்ததீ –
ஒ –
வையம் -அளந்த எம்பெருமான் வரவில்லையே

————————————————————————————————

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-

பரம பத பிராப்தி பலமாக அருளிச் செய்கிறார் –
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்-படுக்கை வாய்ப்புப் பெற்று -ஷீரார்ணவம் -ஜகத் ரஷணம் யோகம்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்-சம்ருத்தமான பொழில் –
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்-பண் ராகம் கிளர்ந்த விஞ்சின
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ-சரீர விச்லேஷம் பிறந்து -நிச்சயம் -அத் தேசம் புகுவார் –

உறங்குவான் போன்று யோகு செய்த பெருமானை, சிறந்த சோலைகளாற் சூழப்பட்ட திருக் குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபராலே
அருளிச் செய்யப் பட்ட பண்ணோடு விளங்குகின்ற அந்தாதி ஆயிரத்துள் இப் பத்துப் பாசுரங்களால் இச் சரீரத்தை விட்டு நீங்கி
அர்ச்சிராதி மார்க்கமாகச் சென்று பரம பதத்தில் சேராமல் இருப்பது எப்படி? என்கிறாள்.

இவர் பாசுரம் கேட்டார், இவர் தசையை அநுசந்தித்தார்-ஆகவே பிழையார்கள் என்கிறார்.
முடிந்தார் புகலிடம் அதுவாகையாலே சொன்ன இத்தனை.

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை –
அவன் வரவு தாழ்க்கையாலே ‘நம்மை மறந்து உறங்குகிறானோ’ என்று சொன்ன இத்தனை,
அவன் உறங்குகின்றிலன்; நம்மைக் காப்பதற்குரிய விதத்தைச் சிந்தனை செய்கிறானித்தனை.
“ஸ்ரீரங்கதாமநி. . . . . ஆர்த்ரயந் (த்வம்) விச்வ த்ராண விமர்சன் ஸ்கலி தயா
நித்ராஸி ஜாகர்யயா” இது, ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், உத்தர சதகம், 75.
“உலகத்தை எல்லாம் காத்தல் வேண்டும் என்ற சிந்தனையோடு கூடின ஜாகரண ரூபமாகத் திருக் கண்
வளர்ந்தருளுகின்றீர்” என்கிறபடியே,
வேறு ஒன்றிலும் நோக்கு இல்லாமல் நம்முடைய ரக்ஷண சிந்தனை செய்கிறானித்தனை யல்லது,
மறந்து உறங்குகின்றானல்லன் என்பார் ‘உறங்குவான் போல்’ என்கிறார்.
மேல் உஜ்ஜீவிப்பிக்க இருக்கிற சர்வேச்வரன், இவ் வளவிலே தன் படிகளை நினைப்பித்தான்.

சிறந்த பொழில் குருகூர் –
சர்வேச்வரன் ரக்ஷண சிந்தை செய்து கொண்டு கண் வளர்ந்தருளுகிற படியை நினைத்து
இவர் தரித்தவாறே ஊரும் தரித்தது,
ஆதலின், ‘சிறந்த பொழில் குருகூர்’ என்கிறது.

“விஷயே தே மஹாராஜ ராம வ்யஸன கர்ஸதா: அபிவ்ருக்ஷா: பரிம்லாநா:
ஸ்புஷ்பாங்குர கோரகா:”– , ஸ்ரீராமா. அயோத். 59 : 4.

“அகால பலிநோ வ்ருக்ஷா: ஸர்வே சாபி மதுஸ்ரவா: பவந்து மார்க்கே பகவந்
அயோத்யாம் ப்ரதி கச்சத:”- ஸ்ரீராமா. யுத். 127 : 19.

அரி இனம் சென்ற சென்ற அடவி களனைத்தும் வானம்
சொரி தரு பருவம் போன்று கிழங்கொடு கனிகாய் துன்றி
விரி புனன் செழிந்தேன் மிக்கு விளங்கென விளம்பு கென்றான்
புரியுமா தவனு மஃதேயாகெனப் புகன்றிட்டானால்.-என்பது, கம்பராமாயணம்.

பிரிந்த விரஹ தாபத்தால் “மரங்களும் ஸ்ரீ ராமபிரானுடைய பிரிவினாலே உண்டான சோகத்தால் பீடிக்கப்பட்டனவாகி,
மலர் அரும்பு இவைகளோடு கருகி உலர்ந்தன” என்றும்,
ஸ்ரீ ராம பிரானுடைய வரவு அணித்தாயினவாறே “வழியில் உள்ள எல்லா மரங்களும்
காலமல்லாத காலத்திலும் பழங்களையுடையனவாகவும்
தேன்களைச் சிந்துகின்றனவாகவும் ஆயின” என்றும் சொல்லலாம்படி அன்றோ இருப்பது.

நிறம் கிளர்ந்த அந்தாதி –
பண்களிலே கிளர்ந்த அந்தாதி.

இப் பத்தால் இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ-
இப் பத்தையும் சொன்னவர்களுக்குப் பகவானைப் பிரிந்த விரகத்தாலே இவரைப் போன்று,
“பேர் என்னை மாயாதால்” என்று முடிவு தேட்டமாய் நோவுபடுமது வேண்டா;
இதனைச் சொன்னவர்கள் பிழையார்கள்.
இப் பாசுரங்களைக் கேட்டு பிழைக்க மாட்டாதவர்கள் புகும் தேசம் பரம பதம் ஆகையாலே
வைகுந்தம் சேராவாறு எங்ஙனயோ’ என்று சொன்ன இத்தனை இவ்விடம்.
இத் திருப்பாசுரத்தால் ஒரு பலம் சொல்லிற்றாகவும் வேணுமே அன்றோ, இது என் சொல்லிற்று? என்னில்,
பகவத் விஷயத்தில் மூழ்கினவர்களுடைய பாசுரம் கேட்டவர்களுக்குச், சரீரம் நீங்கிய பின்னர்,
அவர்கள் பேறாக நினைத்திருக்கும் தேசத்தின் சம்பந்தம் தப்பாது என்கை.
பகவானிடத்தில் ஈடுபாடுடையவர்களுடைய பாசுரம் கேட்டுப் பொறுக்க மாட்டாதே ஈடுபட்டு இந்தச் சரீரம் நீங்கப் பெற்று-
“நீள் இரவாய் நீண்டதால்”, “ஒண் சுடரோன் வாராது ஒளித்தான்” என்று இந்த உலகத்தில் இருந்து வருந்தாமல்
மறைதலில்லாத சூரியனும் மறைதலில்லாத பகலுமான தேசத்திலே புகப் பெறுவர் என்பார் ‘வைகுந்தம் சேராவாறு’ என்கிறார்.

—————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தாம் சத் த்வராம் சகல இந்த்ரியானாம் ய
ஆச்சாதிக ரஜனி அப்யதுதிதா
வி சம்ஜ்ஞ்ஞாத்யந்தி வேலாயதிகா
விரஹனீத்வம் முநிஸ்து –

தாம் சத் த்வராம் –மடல் எடுத்த த்வரை
சகல இந்த்ரியானாம் ய ஆச்சாதிக –கண் புதைய மூட –
ரஜனி அப்யதுதிதா–இரவு வளர்ந்து கொண்டே –மோஹம் -என்கிற பெயரான இருள் -நீண்டது
வி சம்ஜ்ஞ்ஞாத்யந்தி –விவேக ஞானம் அழிந்து
வேலாயதிகா -கரை அழித்து
விரஹனீத்வம் –விரஹத்தால்
முநிஸ்து –

———————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஆபத் பந்துத்வ கீர்த்த்யா யது குல ஜெநநாத் தீர வீரத்வ
கீர்த்த்யா லோகானாம் விக்ரமாந்தாஞ்ச ஆஸ்ரித துரித க்ருதே
அத்புத ஐஸ்வர்ய சேஷ்டிதை ச சக்ராத் வேன்
கமல நயனதா சம்பதா வாமனத்வாத் ஷீராப்த சேஷ சாயி

1-ஆபத் பந்துத்வ கீர்த்த்யா –பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்–

2-யது குல ஜெநநாத் –காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்–

3–தீர வீரத்வ கீர்த்த்யா –காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்–

4–லோகானாம் விக்ரமாந்தாஞ்ச –இம் மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்–

5–ஆஸ்ரித துரித க்ருதே–கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்–

6-அத்புத ஐஸ்வர்ய சேஷ்டிதை –மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்–

7-8—ச சக்ராத் வேன்–தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்-என்றும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்-என்றும் அருளிச் செய்வதால் –

9-கமல நயனதா சம்பதா –செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்-

10-வாமனத்வாத் –அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று-

ஷீராப்த சேஷ சாயி–உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை–ஜகத் ரக்ஷணத்தில் ஜாத ரூபனாய் –

———————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 44-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

ஊர நினைந்த மடலூரவும் ஒண்ணாத படி
கூரிருள் சேர் கங்குல் உடன் கூடி நின்று -பேராமல்
தீது செய்ய மாறன் திரு வுள்ளத்துச் சென்ற துயர்
ஓதுவது இங்கு எங்கனயோ———–44-

உடன் கூடி-பரிவாரங்கள் தென்றல் இத்யாதி –

—————————————————————

அவதாரிகை –

இதில்
இரவு நெடுமையாலே நோவு படுகிற நாயகி
பாசுரத்தாலே பேசுகிற படியை அனுவதித்து அருளிச் செய்கிறார்
இது எங்கனே என்னில்
1-ஸ்வ பர ஸ்வரூபங்களை அந்யதா கரித்து
வழி அல்லா வழியிலே இழிந்தும் அவனைப் பெற வேணும் என்னும்படி
2-முடுக வடி யிடுகிற பிராப்ய த்வரையும்
3-கலங்கி-
அவன் பேற்றுக்குத் தான் த்வரிக்க வேண்டும் -நம் பேற்றுக்குத் த்வரிக்கக் கூடாதே
ஸ்வ யத்ன ரூபமான உபாயாந்தரங்களிலே மூழுகைக்கு உறுப்பான
4-தெளிவை அமுக்கி
5-கிளருகிற அஞ்ஞானம் ஆகிற வல்லிருளிலே போக்கிட
மற்றுத் தெகுடாடுகிற தம் தசையை
பிரிவாற்றாளாய் மடல் எடுக்கையில் உத்யோகித்த அளவிலே

தைவ யோகத்தாலே சூர்யன் அஸ்தமித்து மத்திய ராத்ரியாய்
சப்தாதிகளிலே நெஞ்சு பாலிபாயாமையாலே
விஸ்லேஷ வ்யசனம் ஒரு மடை செய்ய
காலமும் விடியாது ஒழிய
மடல் எடுக்கை போய் –முடிகை தேட்டமான அளவிலே
அதுவும் கிடையாமையால்
இப்படி இரவு நெடுமையால் ஈடுபட்டுப் பேசுகிற
பிராட்டி பாசுரத்தாலே அருளிச் செய்கிற
ஊரெல்லாம் துஞ்சி -யில் அர்த்தத்தை
ஊர நினைந்த மடல் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் என்கை –

———————————————————————————-

வியாக்யானம்–

ஊர நினைந்த மடலூரவும் –
குதிரியாய் மடலூர்த்தும் என்று
ஊர நினைந்த மடல் —

ஊரவும் ஒண்ணாத படி –
ஆதித்யனும் அஸ்தமித்து
பிரியம் சொல்லுவார்
ஹிதம் சொல்லுவார்
பழி சொல்லுவார்
எல்லாரும் உறங்குகையாலும்
இருள் வந்து மூடுகையாலும்
மடலூர்வதும் கூடாத படியாக –

கூரிருள் சேர் கங்குல் உடன் கூடி நின்று -பேராமல் தீது செய்ய –
அதுக்கு மேலே
அத்யந்த அந்தகாரத்தோடே
ராத்ரி யானது
கூட்டுப் படையோடு கூடி நின்று
இட்ட அடி பேராமல்
தீது செய்ய -பொல்லாங்கை உண்டாக்க –
அதாவது
ராவண மாயைக்கு அஞ்சி
சீதா அத வேண்யுத் க்ரதநம் க்ருஹீத்வா –என்றும்
விஷய தாதா நஹி மேஸ்தி கச்சிச் ச சஸ்த்ரச்ய வரவேஸ் நிராஷசய -என்றும் சொல்லுகிறபடியே
ஊர் எல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள்ளிரவாய்
நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதால் -என்றும்
மா விகாரமாயோர் வல்லிரவாய் நீண்டதால் -என்றும்
ஓயும் பொழுது இன்று ஊழியாய் நீண்டதால் -என்றும்
ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் -என்றும்
முன்னிற்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால் -என்றும்
கங்கிருளின் நுண் துளியாய் சேட்பால் அது ஊழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய் -என்றும்
ஓர் இரவேழு ஊழியாய் -என்றும்
வீங்கிருளின் உண்டுளியாய்-என்றும்
செல்கின்ற கங்குல் வாய் -என்றும் –
இப்படி தமஸ் உடன் கூடின ராத்திரி பேராமல் நின்று
துக்கத்தை யுண்டாக்க -என்றபடி

இப்படி ஆகையாலே –
மாறன் திரு வுள்ளத்துச் சென்ற துயர் ஓதுவது இங்கு எங்கனயோ -என்கிறார் –
மாறன் திரு வுள்ளத்துச் சென்ற துயர்-ஆவது –
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆர் எல்லே வல்வினையேன் ஆவி காப்பார் இனியே -என்றும்
ஆவி காப்பார் இனி யார் -என்றும்
நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே –மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தேன் -என்றும்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் யார் என்னையே -என்றும்
பேர் என்னை மாயாதால் வல் வினையேன் பின் நின்றே -என்றும்
இந் நின்ற நீளாவி காப்பார் யார் இவ் விடத்தே -என்றும்
தீப் பால வல் வினையேன் தெய்வங்காள் என் செய்கேனோ -என்றும்
என தாவி மெலிவிக்கும் -என்றும்
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார் நின்று உருகுகின்றேனே -என்றும்
அருளிச் செய்தவை ஆயிற்று –

ஆழ்வார் திரு உள்ளத்திலே அனுவர்த்தித்த துக்கம்
அது தான் அவரே பேசி அல்லது அந்யருக்கு பேசி முடியாது இறே
அது தான் வாசோ மகோசரமாய் யாயிற்று இருப்பது
ஆகையால் பேசி முடியாததை
எங்கனே பேசுவது என்று
ஈடுபடுகிறார்
எங்கனயோ -என்று வார்த்தைப் பாடு ஆதல் –

————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -112- திருவாய்மொழி – -5-4-1….5-4-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

June 6, 2016

நாடும் இரைக்கவே-யாம் மடல் ஊர்ந்தும்”-5-3-10- என்று பெரியதொரு மனோ வேக ரசமாய் அன்றோ மேலே சென்றது,
மடல் ஊரப் பெறுகை தான் அவனைப் பெறுவதைப் போன்று தேட்டமாம் படி பலக் குறைவு அதிகரித்தது;
இனித் தான், மடல் ஊரும் போது தன்னால் காதலிக்கப்பட்ட பொருளைப் படத்திலே எழுத வேணுமே,
அதற்கு நேரம் இல்லாதபடி “ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப” என்கிறபடியே, சூரியனை மறைத்தானாதல்,
இயல்பாகவே சூரியன் மறைந்ததாதல் செய்ய, அதனால் இராத்திரியாய், அது தான் மாலை நேரம் அளவு அன்றிக்கே
சரா சரங்கள் முற்றும் அடங்கிய நடு இரவாய், பழி சொல்லுவாரோடு, அநுகூலராய் ஹிதம் சொல்லி விலக்குவாரோடு வாசி அற,
எல்லாரும் ஒரு சேர உறங்குகையாலே ஓர் உசாத் துணையும் இன்றிக்கே, இவ் வளவிலே, பிரளய ஆபத்திலே உதவும் தன்மையனுமாய்
எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்றவனான புருஷோத்தமனுடைய குணங்களை நினைக்க,
அவை தாம் பிரிவிலே நினைக்கையாலே மிகவும் ஆற்றாமைக்கு உறுப்பாய், சடையினால் தூக்கிட்டுக் கொள்ளுதல் முதலியவைகளிலே
ஒருப் பட்டவரைப் போன்று முடிந்து பிழைக்க வேண்டுமளவாய், அது தன்னைப் பெறுகை மடல் ஊரப் பெறுகையைப் போன்று தேட்டமாய்;

“விஷஸ்ய தாதா-
இத்தனை நற்சரக்குத் தரும் உதாரர் இவ்வூரில் கிடைப்பாரோ?
மே-
கிடைத்தால் தான் எனக்கு இது சம்பவிக்குமோ?
சஸ்த்ரஸ்ய வா-
விஷம் போன்று சிறிது போது நின்று கொல்லுமதன்றியே கடுக முடிக்கும் ஆயுதத்தைத் தான் தருவார் உண்டோ?
வேஸ்மதி ராக்ஷஸஸ்ய-
பிரித்து வைத்து உயிர்க் கொலையாக நலிகிறவனுடைய ஊரிலே, நற் கொலைக்குச் சாதனமானதைத் தான் தருவார் உண்டோ?”

“ஸா ஜீவிதம் க்ஷிப்ரம் த்யஜேயம் விஷேண ஸஸ்த்ரேண ஸிதேநவாபி விஷஸ்யதாதா நஹிமே அஸ்தி கஸ்சித்
சஸ்த்ரஸ்யவா வேஸ்மநி ராக்ஷஸஸ்ய” என்பது, ஸ்ரீராமா. சுந். 28 : 25.

வி்ஷஸ்ய தாதா –
விஷத்தையாவது கொடுப்பவர். ‘கிடைத்தால் தான்எனக்கு இது சம்பவிக்குமோ’ என்றது, உதாரர் இருந்தாலும் பாபியான
எனக்குத் தரமாட்டார் என்றபடி. அன்றி, எனக்குப் பலியாது என்னுதல்.
சஸ்த்ரஸ்ய வா –
ஆயுதத்தை யாவது.
வேஸ்மநி ராக்ஷஸஸ்ய-
இராக்ஷசனுடைய வீட்டில்.
இப்படி முடிகை தேட்டமாம்பாடி இருக்கிற அளவிலே, ‘நாம் சர்வ ரக்ஷகராகையாலே எல்லாருடைய ரக்ஷணத்துக்குமாகத்
திருப்பாற் கடலிலே வந்து சாய்ந்தோம், உம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவராய் இருந்தோம்;
கிராமப் பிராப்தி பற்றாமை பதறுகிறீரித்தனை’ என்கிற இதனை நினைப்பிக்க;
அவன் சர்வ ரக்ஷகனாகில், நம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவனாகில்,
கிரமப் பிராப்தி பற்றாமல் பதறுகிறோமித்தனை,
நம் அம்சத்தால் உள்ள ரக்ஷணம் நமக்குச் சித்தியாதோ என்று அவன் குண ஞானத்தாலே தரித்தாராகச்
செல்லுகிறது இத் திருவாய்மொழி.

அனுபவ யோக்யமான காலம் -இரவில் -சந்நிஹிதமாக இருக்கச் செய்தேயும் -அவன் அசந்நிஹிதன் –
பிரவ்ருத்திக்கு ஷமர் இல்லாமல்
அவசன்னராய் விளம்பம் அசஹ்யமாக ரஷிக்கும் அவன் குணங்களைச் சொல்லி கூப்பிடுகிறார் –
ஆற்றாமையால் இரவு நெடுமைக்கு இரங்கி –
சூர்யன் இந்த பெண் ஆற்றாமையை பார்க்க முடியாதே என்று இருக்க —
நாயகி வார்த்தையால் அருளிச் செய்கிறார்

———————————————————————————-

ஊரெல்லாம் துஞ்சி உல கெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறி ஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல் வினையேன் ஆவி காப்பார் இனியே.–5-4-1-

ஏக ராத்ரியாக -உலகம் எல்லாம் இருளாய் நீண்டதே -சர்வ ரஷகம் சர்வேஸ்வரன் ரஷிக்க வில்லை -இனி யார் ரஷகர் ஆவார்
பழி சொல்லும் அயலார் -ஹிதம் சொல்லும் தாய் -உசாத் துணை தோழிமார் -அனைவரும் முகம் பார்க்க முடியாமல்
ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்-செறிந்த சாரமான இருள்
நீரெல்லாம் தேறி ஓர் நீளிரவாய் நீண்டதால்-ஜலம் சர மீன் சப்தம் இல்லாமல் சலனம் இல்லாமல் -அலை அடங்கி தெளிந்து
அஹோ ராத்ரா விபாகம் அற்று –
பகரல்ல -திரு வேங்கடம் இரவு எல்லாம் பகல் ஆவது போலே -6-10-
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்-பிரளய ஆபத்தில் ரஷித்த -வடிவு கொடுத்து ரஷிக்கிறான் ஆஸ்ரிதர்க்கு
இரண்டும் இல்லாமல் என்னை விட்டானே
ஆர்?எல்லே! வல் வினையேன் ஆவி காப்பார் இனியே-இனி ரஷகன் உதவாத பின்பு -அனுபவ விநாச்யம் இல்லாத வலிய
உறங்கும் ஊரரார் காக்கவோ
ஓர் இருள் விழுங்கின லோகம் காக்கவோ
ஜடம் ஜல தத்வம் காக்கவோ
பாதகமான தீர்க்க இரவு காக்கவோ
எல்லே -விஷாத ஸூசகம் தோழி விளிக்கிறாள் என்றுமாம்

ஊரிலே யுள்ள மக்கள் எல்லாரும் உறங்கி, உலகம் எல்லாம் செறிந்த இருளாகி,
நீர் என்று பேர் பெற்றவை எல்லாம் தெளிந்து ஒரே நீண்ட
இரவாகி நீண்டு விட்டது; உலகங்கள் எல்லாவற்றையும் பிரளய காலத்தில் புசித்த நம் பாம்பணையான் வருகின்றான் இலன்;
தோழீ! வலிய வினைகளைச் செய்த என்னுடைய உயிரை இனிக்காப்பவர்கள் யார்? என்கிறாள்.
துஞ்சவும் இருளாகவும் தேறவும் இக்காலம் நீள் இரவாக நீண்டது என்க. துஞ்சுதல் – உறங்குதல்.
ஆல் – அசைநிலை. அன்றி, ஆகையாலே என்று பொருள் கோடலுமாம்.
இத் திருவாய்மொழி, தரவு கொச்சகக் கலிப்பா.

பிரளய ஆபத்திலே வந்து உதவினவன், என்னை விரஹ நோயாகிய பிரளயம் கோக்க, வந்து உதவாத பின்னர்,
இனி, நான் பிழைத்திருத்தல் என்பது ஒரு பொருள் உண்டோ? என்று தன் ஜீவனத்திலே நசை அறுகிறாள்.

ஊர் எல்லாம் துஞ்சி-
ஊரவர் கவ்வை தாரகமாக மடல் ஊர இருந்தோம், இனி யார் பழி தாரகமாக நாம் மடல் ஊர்வது என்கிறாள்.
சிலர் உறங்கச் சிலர் உணர்ந்திருக்கை அன்றிக்கே, எல்லோரும் ஒரு சேர உறங்கினார்கள்.
திருவடி செல்லுகிற ஷணத்திலே அரக்கியர்கள் முழுதும் உறங்கினாற் போன்று
பழி சொல்லுவார் முழுதும் உறங்கினார்களாயிற்று.
அன்றிக்கே,
இவள் பிறந்த ஊர் ஆகையாலே இவள் நிலையைக் கண்டு சோகித்து, கோரை சாய்ந்தாற் போன்று
எல்லோரும் ஒரு சேர உறங்கின படியைச் சொல்லிற்று ஆகவுமாம். நாக பாசத்தால் கட்டுண்ட அன்று
ஒரு ஜாம்பவான், மஹாராஜர், திருவடி தொடக்கமானார் தாம் உணர்ந்திருந்தமை உண்டே அன்றோ;
இங்கு அங்ஙனம் ஒருவர் இலராயிற்று.
ஆக, பழி சொல்லுவாரோடு ஹிதம் சொல்லுவாரோடு உசாத் துணையாவாரோடு வாசி அற,
எல்லோரும் ஒரு சேர உறங்கினார்கள் என்கை.
இதனால், என் சொல்லியவாறோ? எனின்,
பழி சொல்லி அலைப்பாருங்கூட இல்லாதபடி எல்லோரும் கூட உறங்குகையாலே, சிலருடன் உசாவிக் காலத்தைக் கழிக்க
ஒண்ணாதபடியான நிலை பிறந்தபடி சொல்லுகிறது.
ஊர் எல்லாம் உறங்கிற்றாகில், புறம்பே யுள்ள உலகத்திலே சென்றாகிலும்
உசாத் துணையாவார் உளராகில் பார்த்தாலோ? என்னில்,

உலகு எல்லாம் நள் இருளாய் –
பிரளயம் கோத்தாற் போலே உலகமடைய இருளே ஆயிற்று.
நள்
என்று, நடுவாதல், செறிவாதல்-சாரமான இருள்; நடுவான இருள், செறிவான இருள் என்றபடி.
அன்றிக்கே,
எல்லாப் பொருள்களினுடையவும் ஒலி அடங்கில் இராத்திரி தனக்கெனவே ஓர் ஒலி உண்டு;
அதனைச் சொல்லுகிறதாதல்.
ஆக, கண்களுக்குப் புலப்படுவது ஒன்றும் இல்லாதபடி ஆயிற்று என்றபடி.

நீர் எல்லாம் தேறி-
தண்ணீரில் வசிக்கும் பிராணிகள் முழுதும் ஆழ இழிந்து, அங்குள்ள ஒலியும் அடங்கிற்று.
‘ஊர் எல்லாம் துஞ்சி’ என்கையாலே, சிலர் வார்த்தை கேட்டுப் போது போக்குமது இல்லை என்கை.
‘உலகெல்லாம் நள்ளிருளாய்’ என்கையாலே, கண்களுக்குப் புலப்படும் பொருள் ஒன்று இல்லாமையாலே
ஒன்றைக் கண்டு போது போக்குமது இல்லை என்கை.
நீர் எல்லாம் தேறி’
என்கையாலே, முதலிலே காதுக்கு விஷயம் இல்லை என்கை.
இவை தாம் மற்றைய இந்திரியங்களின் காரியங்கட்கும் உபலக்ஷணமாய் இருக்கின்றன.
பகலிலே ஆனால் இந்திரியங்கள் தனது தனது விஷயங்களிலே பல்லி பற்றுகையாலே ஆற்றாமை அரையாறு பட்டு இருக்கும்,
இராத்திரியில் எல்லா இந்திரியங்களுக்கும் பிரிந்த விஷயம் ஒன்றுமே இலக்கு ஆகையாலே, ஆற்றாமை கரை புரண்டு இருக்கும்.

ஓர் நீள் இரவாய் நீண்டதால்-
பண்டும் இராத்திரி நெடுகா நிற்கச் செய்தே பகலும் இரவுமாக வருமே அன்றோ, இப்பொழுது பகல் விரவாத இரவு ஆயிற்று.
மனிதர்களுடைய இரவினைக் காட்டிலும் தேவர்களுடைய இரவு நீண்டிருக்குமானால் அதற்கு எல்லை உண்டு,
அங்ஙனமும் ஓர் எல்லை இல்லையா யிருந்தது என்பாள் ‘நீண்டதால்’ என்கிறாள்.

பார் எல்லாம் உண்ட-
பிரளய ஆபத்திலே இன்னார் இனியார் என்னாதே எல்லாரையும் ஒரு சேரக் காப்பாற்றியவன்.
பிரளய ஆபத்தில் அகப்பட்டார் எல்லார்க்கும் உண்டான ஆபத்து இவள் ஒருத்திக்கும் அகப்பட்டார் எல்லார்க்கும் உண்டான
ஆபத்து இவள் ஒருத்திக்கும் உண்டு போலே காணும்; பிரளயத்தில் சிலர் மடல் எடுக்கப் புக்கு அதுவும் மாட்டாத நிலை உண்டாகி,
அன்று உதவி செய்தது. என்றது, தங்கள் தங்களால் போக்கிக் கொள்ள ஒண்ணாத படியான ஆபத்து வந்தால் உதவுமவன் என்றபடி.
பிரளய ஆபத்து அங்கு -தம்மால் வந்த ஆபத்து இங்கு –

நம் பாம்பு அணையான் –
திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையவன். என்றது, உகந்தார்க்கு உடம்பு கொடுக்குமவன் என்றபடி.
ஆக, சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாதவரான நித்திய சூரிகள் படியும் இல்லை யாயிற்று,
சம்சாரிகள் படியும் இல்லை யாயிற்றே நமக்கு! என்கிறாள்.
நித்திய சூரிகளை நித்திய அநுபவம் செய்விக்கும்; சம்சாரிகளுக்கு விருப்பம் இல்லாதிருக்கவும் தான் அறிந்ததாக
ஆபத்தை யுடையரானவாறே வந்து ஆபத்தைப் போக்குவான் தன்னுடைய சம்பந்தத்தாலே.
நம்-
தன்னோடு கலந்து, கூப்பிடுகைக்கு வேண்டுவது கொடுத்த படியாலே ‘நம்’ என்கிறாள்.
த்வரை விளைத்த உபகாரத்வம் தோன்ற –

வாரானால் –
வயிற்றிலே வைத்துக் காக்க வேண்டா,
உடம்போடே அணைய வேண்டா,
வந்து முகம் காட்ட அமையுமே அன்றோ.
“த்ருஷ்ட ஏவஹி நஸ்ஸோகம் அபநேஷ்யதி ராகவ:
தமஸ் ஸர்வஸ்ய லோகஸ்ய சமுத்யந் இவ பாஸ்கர:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 83 : 9.
“உதிக்கின்ற சூரியன் ஆனவன், உலகம் எல்லாவற்றிலும் உள்ள இருளைப் போக்குவதைப் போன்று,
பெருமாள் பார்க்கப்பட்ட வுடனேயே நமது வருத்தத்தைப் போக்குவார்” என்னக் கடவதன்றோ. இனி-இவ்வளவில்,

ஆவி காப்பார் ஆர் –
பிரளய ஆபத்தில் அகப்பட்டாரைப் போன்று ஆபத்தோடு கூடி இருக்கிற நான் காக்கவோ?
“எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ”-9-9- என்கிறபடியே,
இவளுக்கு அவன் வேணும்’ என்று என் பேற்றுக்கு எனக்கு முன்னே நோவு படுகிற தோழி காக்கவோ,
ஹிதம் சொல்லுகிற தாயார் காக்கவோ,
பழி சொல்லுகிற ஊரார் காக்கவோ?

எல்லே –
என்ன ஆச்சரியம்!
அன்றிக்கே,
எல்லே’ என்று தோழியை விளிக்கிறாள் ஆதல்.
மேலே, “அன்னையரும் தோழியரும்” என்று அவர்களும் உறங்கினார்கள் என்னா நிற்கச் செய்தேயும்,
தன் ஆபத்தே செப்பேடாக ‘இவ் வளவில் அவள் உணர்ந்திருக்கச் சம்பாவனை உண்டு’ என்று நினைத்து ‘எல்லே’ என்கிறாள்.

வல் வினையேன் –
எல்லாரையும் காப்பாற்றுகின்றவனுமாய், உடம்போடு அணைந்தாரைப் பிரியாதவனுமாய் இருக்கிற அவன் வந்து
உதவாதபடியாய் இருக்கிற மஹா பாவத்தைச் செய்தேன்.

வல் வினையேன் ஆவி-
பிரிவே காரணமாக நூறே பிராயமாயிருக்கிற என்னுடைய உயிரை.
பிரிவிற்குச் சளையாத இது இனி முடியப் புகுகிறதோ’ என்று இருக்கிறாள். ரக்ஷகனானவன் வந்திலன்,
எனக்கு முன்னே தோழி நோவுபட்டுக் கிடந்தாள், இனி வேண்டாதவர்கள் ரக்ஷகர் ஆகவோ.

——————————————————————————–

ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2-

ஆபி ரூப்யம் பிரகாசிப்பித்தது -ஆஸ்ரித பவ்யனான கிருஷ்ணன் வர வில்லை –
நெஞ்சே நீயும் விதயம் இல்லை -இனி பிராண ரஷகர் யார்
ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி-இருட்டு வளர -கடலை மண் விண் அனைத்தையும் மூடி
வியாப்ய பதார்த்தம் -தமஸ் -காரணம் வியாபகம் -கார்ய பதார்த்தம் இங்கே காரணங்களை மூட -ஆச்சர்யம்
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்-அவ்வளவும் நிற்காமல் மேலே மேலே மூட வளர்ந்து -ஜகத் அளவும் –
அநேகம் ஆதித்யர்களாலும் பதிக்க முடியாத இரவு -வலிமை -தமோ மய ராத்ரியேயாய்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்-கரு நெய்தல் பூ போன்ற நிறம் -நிறம் எனக்கு ஸ்வம்மான கண்ணன்
பவ்யனும் அபவ்யனுமாகும் படி செய்த பாபங்கள்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே-நீயும் கை விட்டாயே -கண்ணன் போலேவே -பாங்கு -பவ்யம் -உதவி
அநு கூலிக்க வில்லை -ரஷகன் -உசாத் துணை இருவரும் இல்லை

ஆழ்ந்த கடலையும் பூமியையும் ஆகாயத்தையும் மூடிக் கொண்டு பெரிய விகாரத்தை யுடையதாய்
ஒப்பற்ற வலிய இருள் மயமான இரவாயே நீண்டு விட்டது;
நீலோற்பல மலர்போன்ற நிறத்தை யுடையவனாகிய என் கண்ணபிரானும் வருகின்றான் இலன்; பாவியேனாகிய என்னுடைய நெஞ்சமே!
நீயும் அநுகூலமாய் இருக்கின்றாய் இல்லை; ஆதலால், இனி என் உயிரைக் காப்பவர் யார்? என்கிறாள்.
காலம் மூடி விகாரமாகி இரவாய் நீண்டது என்க. வண்ணனாகிய கண்ணன் என்க.

இந் நிலையில் ஸ்ரீ கிருஷ்ணனும் வருகின்றிலன்; நெஞ்சமே! என்னுடைய சம்பந்தத்தாலே, நீயும்
அவனைப் போன்று பாங்கு அன்றிக்கே ஒழிந்தாய் என்கிறாள்.
இருள் அன்ன மா மேனி — சஜாதீயன் -கிருஷ்ணன் சொல்லுக்கு தானே கறுப்பு அர்த்தம் என்பதால்
கண்ணன் சொல்லாமல் கிருஷ்ணன் என்கிறார் –

ஆவி காப்பார் இனி யார் –
கண்ணனும் வாரான், நெஞ்சமே! நீயும் பாங்கு அல்லை – இனி-ஆவி காப்பார் யார் –
உதவுமவன் உதவிற்றிலன், நெஞ்சும் பாங்கு அன்றிக்கே ஒழிந்தது, இனி, காப்பவர் யார்?

ஆழ் கடல் மண் விண் மூடி –
அளவிட முடியாததான கடல், எல்லாப் பொருள்களுக்கும் இடம் கொடுக்கக் கூடியதான பூமி,
அந்தப் பூமிக்கும் இடம் கொடுக்கக் கூடியதான ஆகாசம் இவற்றை முழுதும் மறைத்து.
காரணப் பொருள்களைக் காரியப் பொருள்களிலே ஒன்று மறைத்தது.

மா விகாரமாய் –
பின்னரும் அவ்வளவில் முடிவு பெறுவதாய் இருக்கிறது இல்லை, மஹா விகாரத்தை யுடைத்தாய்ப் பரம பதத்தையும்
கணிசிக்கிறாப் போலே இரா நின்றது. விஸ்வரூபத்தைக் காட்டின சர்வ சக்தி செய்வன எல்லாம் செய்யா நின்றது என்றபடி.

ஓர் வல் இரவாய்-
திருவாழியை இட்டுத் துண்டித்து உதவவரிலும் வர ஒண்ணாதபடி செறிந்திருக்கை.
இரவுக்கும் இருளுக்கும் வேற்றுமையை நினையாமையாலே, இருளை ‘இரவு’ என்கிறாள்.

நீண்டதால் –
ஒரு முடிவு காண ஒண்ணாது.

காவி சேர் வண்ணன் –
அலர்ந்த கரு நெய்தல் இதழ் போன்ற நிறத்தையுடையவர்” என்கிறபடியான நிறத்தை யுடையவன்.
என்றது, இருளோடு ஒரு கோவையான நிறம் என்றபடி.
“புல்லேந்தீவர பத் ராபம் சதுர் பாஹும் உதீக்ஷ்யதம் ஸ்ரீ வத்ஸ வக்ஷ ஸம் ஜாதம்
துஷ்டாவ ஆநக துந்துபி:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 3 : 8.
ஆநக துந்துபி-வஸூ தேவர் –
இருள் அன்ன மா மேனி அன்றோ. கறுப்பு உடுத்து வருவாரைப் போன்று வரலாமே அன்றோ.
யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம் வல் வினையைக் கானும் மலையும் புகக் கடிவான் – தானோர்
இருளன்ன மாமேனி எம் மிறையார் தந்த அருளென்னும் தண்டால் அடித்து.–என்பது, பெரிய திருவந். 26-

என் கண்ணன்-
கம்சன் காவலாக வைத்த தீயோர் கண் படாதபடி இருளிலே வந்து உதவினவன்.
நள்ளிருட் கண் வந்த எந்தை பெருமானாரே அன்றோ.
தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நள்ளிருட் கண் வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
முந்தி வானம் மழை பொழியும் மூவா உருவின் மறையாளர்
அந்தி மூன்றும் அனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே.-பெரிய திருமொழி.7-5-

வாரானால்-
கம்சன் போன்ற தாமசப் பிரகிருதிகளை அழிக்க வருமவன் தம்ஸ்ஸீ தன்னையே அழிக்க வந்தால் ஆகாதோ?
“வந்தானாகில் அப்போதே விடியும் இவளுக்கு; பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன் என்பதன்றோ பெரியார் திரு வாக்கு.

பாவியேன் நெஞ்சமே
உனக்கும் அவனோடு ஒத்த சம்பந்தமே அன்றோ. அவன் உதவும் தன்மையன் அல்லாதவனா யன்றே உதவாது விட்டது,
என்னுடைய சம்பந்தமே அன்றோ. என் மார்விலே அணைக்கை அன்றோ அவன் உதவாது ஒழிகிறது,
அது உனக்கும் ஒக்குமே அன்றோ.

நீயும் பாங்கு அல்லையே-
ஒரு தன்மையாலே ஒற்றுமை உண்டானால் வேறு ஒரு தன்மையாலே வேறுபாடு உண்டானால் ஆகாதோ?
ஸ்வந்திரனாய்ப் பரதந்திரனான அவனைப் போன்று ஆக வேணுமோ
ஸ்வரூபத்தால் ஸ்வதந்த்ரன் பிரணயித்தவத்தால் ஏறிட்டுக் கொண்ட பாரதந்தர்யம்
பாரதந்திரியமே ஸ்வரூபமான நீயும்.
அவனுக்குக் காதலனாம் தன்மை தவிர்ந்தது என்றால் ஸ்வாதந்திரியமே ஜீவிக்கும்;
உனக்கு அங்ஙன் ஒன்று இல்லையே.
அவனுக்குக் காதலனாம் தன்மை தவிர்ந்தது -பாரதந்த்ர்யம் போகும் -நிபந்தனம் -இது ஸ்வரூபம் -ஸ்வாதந்திரியமே ஜீவிக்கும்;
இருவர் பவ்யராக இருந்தால், அவர்களிலே ஒருவன் பவ்யன் அன்றிக்கே ஒழியில் மற்றையவனும் பவ்யனாகாது ஒழிய வேணுமோ.
ஸ்வரத்தால் நீயும் கூட பங்கு இல்லையே என்று சொல்ல வேண்டும் –
என் கண்ணனும் வாரானால்’, ‘என் நெஞ்சமே’ என்று -இருவர் பவ்யராக-இருப்பதால் –
ஒரு சேரச் சொல்லலாய் இருக்கிறதே அன்றோ.
பிள்ளை உறங்கா வல்லி தாசர் இருளை சேவிப்பார் –

—————————————————————————————

நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3-

அநிஷ்ட நிவர்த்த சீலன் சக்கரவர்த்தி திருமகன் -வர வில்லை -பராதீனை -முடியவும் பெற வில்லை –
நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்-சர்வ கார்யத்துக்கும் பிரதான காரணம் நெஞ்சு
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்-இதுவே கல்ப காலமாக நீண்டதே –
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்-ஆஸ்ரித விரோதிகளை சுட்டுப் பொகடும்-கடிய ஸ்ரீ சார்ங்கம் –
ககுஸ்த வம்சம் -இந்த்ரன் காளை மாடு -அதன் மேலே அமர்ந்து அசுரர்களை வென்றவன் –
பெயர் மட்டும் அப்படி போலே -பர உபகார சீலக் குடி -ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளை ரஷித்தான் –
எனது பாபமே காரணம் -உதவாமைக்கு அடி
ஸ்வா தந்த்ரம் இல்லாத பெண் பிறவி -முடியவும் விரகு அறியேன்

நெஞ்சமே! நீயும் அநுகூலமாய் இருக்கின்றாய் இல்லை, நீண்ட இரவும் குறையும் காலமாயிராமல் கல்பமாக நீண்டுவிட்டது;
பகைவர்களை வருத்துகின்ற கொடிய வில்லையுடைய என் காகுத்தனும் வருகின்றான் இலன்;
வில்வினையே னாகிய யான் பெண்ணாகப் பிறந்ததனால் இறப்பதற்குரிய வகையை அறிகின்றிலேன் என்கிறாள்.
நெஞ்சமே பாங்கு அல்லை, இரவும் நீண்டது, காகுத்தன் வாரான், வல்வினையேன் பெண் பிறந்து மாயும் வகை அறியேன் என்க.
பிறந்து – பிறந்ததனால். காகுத்தன் – ஸ்ரீ ராமபிரான்; ககுத்தன் வமிசத்தில் பிறந்தவன்.

எல்லாத் துக்கங்களையும் போக்கும் தன்மையனான ஸ்ரீ ராம பிரானும் வருகின்றிலன்,
பரதந்திரப்பட்டவள் ஆகையாலே முடியவும் விரகு அறிகின்றிலேன் என்கிறாள்.

நெஞ்சமே! நீயும் பாங்கு அல்லை காண் –
கங்கையின் அக் கரையைச் சேர்ந்த அன்று, இளைய பெருமாளைப் பார்த்து,
பிள்ளையாய், நீயும் படை வீடு ஏறப் போ’ என்றாரே அன்றோ
வன வாசம் இவரை ஒழியவும் தலைக்கட்டலாம் என்று மயங்கி;’ அப்படியே, இவரும் தம் திரு வுள்ளத்தைப் பார்த்து,
நீயும் பாங்கல்லை காண்’ என்கிறார்.
மன ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:பந்தாய விஷயாஸங்கி
முக்த்யை நிர்விஷயம் மந:”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 28.
இம்மை மறுமைகளுக்குக் காரணம் மனமே” என்கிறபடியே, நெஞ்சைக் கொண்டே அன்றோ எல்லாம் பெற இருக்கிறது,
அப்படி இருக்கச் செய்தேயும், இன்னாப்பாலே சொல்லுகிறார்.

நீள் இரவும் ஓயும் பொழுது இன்றி ஊழியாய் நீண்டது-
முதலிலே நெடிதான இரவானது, அதற்கு மேலே, ஒரு முடிவு காண ஒண்ணாதபடி இரா நின்றது. என்றது,
அடி காண ஒண்ணாத படியுமாய், முடிவுக்கும் ஓர் எல்லை காண ஒண்ணாதபடி இரா நின்றது.
அடி முடி அற்று இருப்பது இதுவே-
முடிவு காண ஒண்ணாதிருக்கச் செய்தேயும் அடி யற்று இருப்பன உண்டே அன்றோ, இது அப்படி இருக்கிறது இல்லை.
பிரத்வம்சாபாவம் -முதலில் இருந்து பின்பு இல்லாமல் /பிராகபாவம் -முதலில் இல்லாமல் அப்புறம் /இது அடி முடி காணாமல் –
அபாவத்தில் நான்கு வகைகள் உண்டே –
நின்ற விடத்தில் நின்றும் கால் வாங்கக் கூடிய தன்றிக்கே இருத்தலின் ‘ஓயும் பொழுதின்றி’ என்கிறாள்.
சாத்தன், கூத்தன்’ என்பது போன்று சில பெயர்களை யுடையவர்களாய், அவர்கள் தாங்கள் ஜீவிக்கப் புக்கவாறே
சிறு பேர் தவிர்ந்து ‘சோழக் கோனார்’, ‘தொண்டை மானார்’ என்று பட்டப் பெயர் பெற்று வாழுமாறு போன்று,
இரவு என்ற பெயர் நீங்கிக் ‘கல்பம்’ என்னும் பெயரை யுடைத்தாகா நின்றது என்பாள் ‘ஊழியாய்’ என்கிறாள்.
அது தனக்கும் ஓர் முடிவு உண்டே அன்றோ, அதுவும் இல்லை யாயிற்று இதற்கு என்பாள் ‘நீண்டதால்’ என்கிறாள்.

காயும் கடுஞ்சிலை என் காகுத்தன் வாரானால்-
ஒருத்தியுடைய நெடிதானே இரவைப் -சீதை உடைய வியசனம் – போக்குவதற்காக-
வில்லை வளைத்துப் பிடித்த வில்வலியை யுடையவனும் வருகின்றிலன்.
காயும் கடும் சிலை-
பகைவர்கள் மேல் காயா நிற்பதாய், பகைவர் பக்கல் பெருமாள் கண் பார்க்கிலும் தான் கண் பாராத படியான வில் ஆதலின்
காயும் கடும் சிலை’ என்கிறாள்.
அவனது சார்ங்கம் என்னளவிற் கண்டிலேன்.-பக்ஷபாதம் -அன்பு -சார்ங்கம் -சாடு –
பிராட்டிக்கு உதவினதும் ‘தனக்கு உதவிற்று’ என்றிருக்கிறாளாதலின் ‘என் காகுத்தன்’ என்கிறாள்.
“தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்று இலேன் தஞ்சம் என்று நான் தஞ்சமாக நினைத்திருக்குமவனும் வருகின்றிலன்.
“சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான்” என்கிறபடியே,
பிராட்டியுடைய விராதியைப் போக்கியது அவளுக்குக் காரியம் செய்தானாக நினைத்திருக்கை அன்றிக்கே,
தன் சினம் தீர்ந்தானாயிருக்குமவன்.-உம்மிடம் சினம் தீர்க்க வர வேண்டாமே யாரும் எதிர்க்க வில்லை –
கீழே “கண்ணனும் வாரானால்” என்றாள்;
காகுத்தன் வாரானால்
முடி சூடிய அரச புத்திரர் அல்லாதார் தாம் தவிருகிறார்கள்,
முடி சூடி நோக்கும் குடியிலே பிறந்தவனுக்கு வரத் தட்டு என்?
ககுஸ்த குலத்தில் பிறந்தவனும் வாராது ஒழிவதே! என்பாள் ‘காகுத்தன் வாரானால்’ என்கிறாள்.
அன்றிக்கே,
பகைவர்கள் வரப் போர் செய்ய இருக்கை அன்றிக்கே, தானே எடுத்து விட்டுச் சென்று
பொருமவனும் வருகின்றிலன் என்பாள் ‘காகுத்தன் வாரானால்’ என்கிறாள் என்னலுமாம்.
செற்றார் -திறல் அழிய -சென்று செருச் செய்யும் குற்றம் ஒன்றும் இல்லாத கோவலன் —
தானே செல்பவன் அன்றோ இவன் -மூன்று குற்றங்கள் இல்லாமல் –
1-வாரணாஸ்ரம தர்மம் நிறைந்தவன் –2-தானே சென்று –3-ஆயுதம் இல்லாதவரை அடிக்க மாட்டார் –
“அபியாதா பிரஹர்தா ச ஸோநாநய விஸாரத:”-என்பது, ஸ்ரீராமா. அயோத், 1 : 29.
“அபியாதா – முன் செல்பவர்” – பகைவர்கள் வரப் பொர இருக்கை அன்றிக்கே,
எடுத்து விட்டுப் பொருகையும் தமக்கே பணியா யிருக்கும்.
பிரஹர்த்தாச-அடிப்பவர்” –
தூசித் தலையில் நின்று, ‘முதல் வெட்டு யாரது’ என்றால், அதில் முற்பாடும் தம்மதா யிருக்கும்.
சேநா நய விசாரத:-
சேனையை நடத்துவதில் சமர்த்தர்”-தாம் போகாமல், தூசியும் அணியும் பேரணியுமாக வகுத்து விட்டால்,
இட அணி வல அணி பேர் அணி பின் அணி -ஒரு சேர நின்று பொருவித்தாற் போலே
வென்று மீளும்படி படை கோக்க வல்லவர்.
வராமலே அடிக்க வல்லவன் -இவர் மனசை அடித்தது வாராமல் இருந்து அன்றோ இதுவும் ஒரு வகை அணி வகுப்பு –

மாயும் வகை அறியேன்-
இவன் வாராமை அறிந்தால் இனி முடிந்து போதல் அன்றோ சுகம், முடியும் விரகு அறிகின்றிலேன்.

வல் வினையேன்-
முடிந்து போதல் சுகமாய்த் தேட்டமானால் அதுவும் கிடையாத படியான பாவத்தைச் செய்தேன். என்றது,
பாபமானது, அழிவிற்குக் காரணமாகை அன்றிக்கே ஜீவித்தற்குக் காரணம் ஆவதே! என்றபடி.
ஜீவிக்கை தேட்டமான போது அரிதாம், முடிந்து போதல் தேட்டமான போது அரிதாம்,
ஏதேனுமாக வேண்டாததைக் கொடுப்பது பாபமா மித்தனை அன்றோ.
புண்யம் தானே ஜீவன ஹேது -இங்கு பாபம் செய்து ஜீவிக்கிறேனே என்கிறாள் -விநாசத்துக்கு ஹேதுவான –
பாபம் -அநிஷ்டம் நடத்திக் கொடுக்குமே -இவளுக்கு அநிஷ்டம் ஜீவனம் –அசஹ்யம் இப் பொழுது

பெண் பிறந்தே –
பர தந்திர ஜன்மத்திலே பிறந்தார்க்கு நினைத்த போது முடியப் போமோ.
பிறர்க்காக ஜீவிக்க வேண்டும் பர தந்திரமான பிறவியிலே
பிறத்தற்குத் தகுதியான மஹா பாவத்தைச் செய்தேன்.
“நாஸா நாம் ஆகர: க்ரோத: ஆஸா பரிப வாகர:
வியாதீ நாம் ஆகர: தோயம் – பாபா நாம் ஆகர: ஸ்திரிய:”-என்பது, மஹாபாரதம்.
“பெண்கள் பாவங்களுக்குக் காரணமானவர்கள், பாவத்தால் வந்தவர்கள்” என்னக் கடவ தன்றோ.
“ந ச அஸ்ய மாதா ந பிதா நச அந்ய: ஸ்நேஹாத் விஸஷ்டோஸ்தி மயா ஸமோ வா
தாவத் ஹி அஹம் தூத ஜிஜீவிஷேயம் யாவத் ப்ரவ்ருத்திம் ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 30.
“நசாஸ்ய மாதா” – பிராட்டி திருவடியைக் கண்ட பின்னர், பெருமாள் பக்கல் பிரணய ரோஷத்தாலே
‘இவன் அவர் வர விட்ட ஆள்’ என்று சீறிச் சில வார்த்தைகள் அருளிச் செய்ய,
‘தேவரீர் எழுந்தருளி இருந்த இடம் அறியாமல் இருந்தாரித்தனை அல்லது அன்பின் திறத்தில் ஊற்றம் போராமையோ,
அறிந்த பின்பு இனித் தாழ்த்தாராகி லன்றோ குற்றமாவது’ என்று,
அந்தச் சிவிட்கு ஆறும்படி சில வார்த்தைகளை விண்ணப்பம் செய்து,
பின்னையுந்தான், ‘அவரைப் பிரிந்து பத்து மாதங்கள் ஆயினவே, இவ்வளவும் முடிந்து போகாமல்
தரித்திருந்த தன்றோ தேவரும்’ என்பது
தனக்குக் கருத்து என்னுமிடம் தோற்ற இருந்தான் திருவடி;
அதுவோ உனக்கு நினைவு! வாராய், நாட்டார்க்கு, மாதா என்றும் பிதா என்றும் உடன் பிறந்தார் என்றும் பந்துக்கள் என்றும்
பல தலையாக இருக்கையாலே அன்பானது எங்கும் பாலி பாய்ந்திருக்கும்;
பெருமாள் அங்ஙன் அன்றிக்கே, எல்லார் பக்கல் செய்யும் அன்பையும் என் பக்கலிலே ஒரு மடையாகச் செய்து வைக்கையாலே,
எல்லாம் செய்தாலும், கடலை அணை செய்து பகைவர் கூட்டத்தைக் கிழங்கு எடுத்துத் ‘தண்ணீர் தண்ணீர்’ என்று வருகை தவிரார்;
தாபத்தாலே வருந்தினவன் விடாய்ப்பட்டுப் பந்தல் ஏற வரக் கொண்டு தண்ணீர்ச் சால் உருண்டு கிடந்தால் பிழையாதாமாறு போன்று,
அவர் இப்படி வரக் கொண்டு நான் இன்றிக்கே இருப்பேனாகில் பின்னை அவரைக் கிடையாது என்று,
அவருக்காக என்னை நோக்கிக் கொண்டிருந்தேன்; அவரைக் கண்ட பிற்றை நாள்-அநாதரித்து உபேஷித்தான் என்று அறிந்த பின்பு –
நான் இருந்தேனாகில் காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது என்றாளே அன்றோ.
“தூத” – முன்பு, “வாநர” என்பது போன்று சொல்லிப் போந்தவள்,
இப்போது அவர் பக்கல் உண்டான சிவிட்கு இவ்வளவும் ஏறிப் பாய்ந்து,
அவர் வரவிட வந்தவன் அன்றோ நீயும் என்றாளே அன்றோ–அவர் சம்பந்தம் சொல்லி தூத என்கிறாள்

வல் வினையேன் பெண் பிறந்தே மாயும் வகை அறியேன் –பீஷ்மன் முதலானோர்களாக வேணுமாகாதே:
ஞானமுடையவர்களாதல் ஸ்வதந்திரர்களாதல் செய்ய வேணும்.
அறிவிலிகளான பெண் பிறந்தார்க்கு நினைத்தபடி முடியப் போமோ.

————————————————————————

பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் இம் மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–5-4-4-

அபேஷித்த பூமியை அளந்து கொண்ட ப்ரீதியாலே புதுக் கணித்த அவயவாதி சோபையாலே செருக்கனான –
திரிவிக்ரமனும் வர வில்லையே
பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று ஒண் சுடரோன் வாரா தொளித்தான் –
அளவிட முடியாத சிந்தா ரோகம் -மநோ வியாதி –பரதந்த்ரைகள் மிருது ஸ்வ பாவம் -பெண் –
துஸ் சஹமான துக்கம் காண மாட்டாமல் -சூரியன்
தர்ச நீயமான தேஜஸ் -ஈஸ்வரன் ஆஜ்ஞ்ஞைப் படி செய்ய வேண்டியவன் –
ஆராய்ந்தாலும் அறிய ஒண்ணாத படி ஒழிந்தான்
இம் மண்ணளந்த-சுட்டுச் சொல் -இ -தனக்கே என்று கொண்ட ப்ரீதி –
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்-பரந்த திருக் கண்கள் -சிவந்த திருவாய் –
எம் போல்வாரையும் அனந்யார்ஹை ஆக்கி -இந்த அவயவ சோபையாலே அடிமை கொண்டவன்
ஏறு -ரிஷபம் போலே செருக்கி -மேணானிப்பு -சிங்கம் தேஜஸ் புலி கோபம் யானை பெருமிதம் –
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?-நினைவுக்கு பெரிய அவாங்மநோ கோசரமான –
மநோ வியாதி யார் தவிர்ப்பார் –

பெண்ணாகப் பிறந்தவர்கள் அடைகின்ற பெரிய துன்பத்தைக் காண மாட்டேன் என்று
சூரியன் வராமல் ஒளித்துக் கொண்டான்;
இந்த மூவுலகத்தைத் தன் திருவடியால் அளவிட்ட, பெரிய கண்களையும் சிவந்த வாயினையுமுடைய
நம் கார் ஏறு வருகின்றானிலன்;
எண்ணுதற்கும் மிக்கதாயுள்ள மனத்தின் நோயை என்னைத் தீர்ப்பார் யார்? என்கிறாள்.
என்று ஒளித்தான் என்க. அளந்த காரேறு என்க. பசுவைப் பாலைக் கறந்தான் என்பது போன்று,
நோயை என்னைத் தீர்ப்பார் யார் என
இரண்டு செயப்படுபொருள் வந்தது. அன்றி, என்னுடைய நோயைத் தீர்ப்பார் யார்? என
வேற்றுமை மயக்கமாகக் கோடலுமாம்.

கண்டார்க்குப் பொறுக்க ஒண்ணாதபடி வியசனம் செல்லா நிற்க,
வரையாதே காப்பாற்றும் ஸ்ரீ வாமநனும் வருகின்றிலன்;
என்னுடைய மனத்தின் துன்பத்தைப் போக்குவார் யார்? என்கிறாள்.-
கண்டார் -ஒண் சுடர் ஆதித்யனும் –

பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று –
பரதந்திர ஜன்மம் ஆகையாலே முடிந்து போகவும் பெறாமல், மிருதுத் தன்மையை யுடையவர்களாகையால்
பிரிவும் பொறுக்க மாட்டாமல் இருக்கிற பெண்கள் அநுபவிக்கிற மஹா துக்கத்தைக் காண்கின்றிலேன் என்று.
சர்வ ரக்ஷகன் பொறுக்குமித்தனை போக்கிப் பாதுகாத்தலிலே ஏக தேசம் சேர்ந்தவர்களுக்குப் பொறுக்கப் போமோ?
புருஷோத்தமன் பொறுக்குமித்தனை போக்கிப் புருஷர்களால் பொறுக்கப் போமோ?

ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் –
தன் தோற்றரவிலே எல்லாக் கிலேசங்களும் போகும்படியான பிரகாசத்தை யுடையவனும் வாராதே மறைந்தான்.
பீஷா அஸ்மாத் வாத: பவதே”-என்பது, தைத்திரீயகோபநிடதம். 8.
நெடுங்கடல் நிற்பதும் ஞாயிறு காய்வதும் நிற்றலுங் கால்
ஒடுங்கி நடப்பதும் தண் கார் பொழிவதும் ஊழி தனில்
சுடுங்கனல் பற்றிச் சுடாதே இருப்பதும் தும்பை புனைந்து
அடுங்கன லாழி அரங்கேசர் தம் திரு ஆணையினே.- என்பது, திருவரங்கத்து மாலை.
“அந்தப் பரம் பொருளிடமிருந்து உண்டான ஆணைக்குப் பயந்து காற்றானது வீசுகிறது” என்கிறபடியே,
பகவானுடைய கட்டளையாலே முப்பது வட்டம் வர வேணுமே யன்றோ, அதுவும் செய்திலன் என்பாள் ‘வாராதே’ என்கிறாள்.
இங்ஙனமிருப்பவன் ‘ஈச்வரன் ஆணையை மறுத்தால் வேணுமாகில் தலையை அறுத்து வைக்குமித்தனை அன்றோ,
இக் கொடுமை என் கண்களால் காணப் போகாது’ என்று ஈசுவரபடர் தேடி வந்தாலும் காணாதபடி
மறைந்தான் என்பாள் ‘ஒளித்தான்’ என்கிறாள்.
“ஒளியவன் விசும்பு இயங்கும் தேரும் போயிற்று”-பெரிய திருமொழி, 8. 5 : 2-என்னக் கடவதன்றோ.
அன்றிக்கே,
சுழன்றிலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய் மறைந்தான்”, பெரிய திருமொழி–9-4-6-
தாரின் ஆசையில் பரகால நாயகி நெஞ்சு போனதே -அங்கேயே -தாழ்ந்ததே –உசாவவும் துணை இல்லையே
“அந்தத் தூசியும் காணப்படவில்லை” என்பன போன்று,
வரவுக்கு அறிகுறியும் காண ஒண்ணாதபடி மறைந்தான் என்னுதல்.

இம் மண் அளந்த –
இந்தப் பூமிக்கு என்ன துயர் உண்டாக அளந்து கொண்டான்.
பூமிக்கு மஹா பலியால் உண்டான இடரினளவோ எனக்கு இரவால் உண்டான இடர்?
வரையாமல் எல்லாரையும் காக்குமவன்.

கண் பெரிய செவ்வாய் நம் கார் ஏறு வாரானால்-
கிருபையால் பெரியனாய்ப் பூமியை அளந்து,
பூமியிலுள்ளார் இடர் போகும்படி குளிரக் கடாக்ஷித்து,
அதனால் உண்டான பிரீதியின் மிகுதி தோற்றப் புன்முறுவல் செய்கையாலே
சிவந்த அதரத்தை உடையவனான நம் கார் ஏறு வருகின்றிலன்.
நம்-
எல்லார் விஷயமாகச் செய்யும் ரக்ஷணத்தையே இயல்பாக வுடையவன் என்பாள் “நம்” என்கிறாள்
சர்வ ரக்ஷகனுடைய காக்கப்படும் பொருள்களில் தானும் சேர்ந்தவள் ஆகையாலே ‘நம்’ என்கிறாள் என்பது கருத்து.
கார்-
இவற்றைக் காப்பாற்றுகையாலே தன் நிறம் பெற்றிருப்பவன் என்பாள் ‘கார்’ என்கிறாள்.
ஏறு0
‘அது தன் பேறு’ என்னுமிடம் தோற்ற மேனாணித்திருப்பவனாதலின் ‘ஏறு’ என்கிறாள்.
வாரானால்-
இரக்க வேண்டா, அளக்க வேண்டா, வடிவைக் காட்ட அமையம் என்பாள், “வாரானால்” என்கிறாள்.
இனி, ‘என் கார் ஏறு’ என்று பாடமான போது, பண்டு என்னோடே கலந்ததனாலே
தன் நிறம் பெற்று மேனாணித்திருந்தவன் என்று பொருள் கூறுக.

எண் பெரிய சிந்தை நோய் –
யஸ்ய அமதம் தஸ்ய மதம்-
“எவன் அறியாதவனாக எண்ணுகிறானோ அவன் அறிந்தவன், எவன் அறிந்தவனாக எண்ணுகிறானோ
அவன் அறியாதவன்” என்கிறபடியே,
வேதாந்தங்கள், நிலம் அன்று என்று மீண்ட பகவத் விஷயத்தை, இத்தனை போதும் பேசினார்;
தம்முடைய சிந்தையின் வியாகுலம் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஞானத்துக்கும் அறிய முடியாததாயிருந்தது.
‘எண் பெரியது’ என்னுமித்தனை, ‘இவ்வளவு’ என்னப் போகாது. -எண்ணுவதற்கு அரியதான –
பிரிந்த விஷயத்துக்குத் தக்கதாய் அன்றோ சிந்தையின் வியாகுலம் தான் இருப்பது, அதற்கு ஒரு முடிவு இல்லையே.
“தச் சித்த விமலாஹ்லாத க்ஷீண புண்ய சயா ததா தத் அப்ராப்தி மஹா துக்க விலீநா ஸேஷ பாதகா.”
“சிந்தயந்தீ ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம் நிருச்வாஸ தயா முக்திம்
கதா அந்யா கோப கந்யகா.”-என்பன, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13 : 21-22.
“கண்ணனை அடையப் பெறாமையால் பெருந்துன்பத்தை அடைந்தவளாய் எல்லாப்
பாவங்களினின்றும் நீங்கினவள்” என்றாற் போலே

சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் –
மனத்தின் துன்பம் போமித்தனையே வேண்டுவது, அவனை மறக்கவும் அமையும்.
“ஏது செய்தால் மறக்கேன்” என்னுமவர்கள் அலரோ இவர்கள் தாம். அவனை மறக்கவுமாம் நினைக்கவுமாம்,
துன்பம் போமித்தனையே வேண்டுவது. இப்போது ‘மறக்கவும் அமையும்’ என்றது,
மறத்தல் உத்தேஸ்யமாகச் சொன்ன வார்த்தை அன்று;
ஓடுகிற துன்பத்தின் மிகுதியைச் சொன்ன படியேயாம்.
பிரிவு நிலையில் நினைவு தான் மிகுந்த ஆற்றாமைக்குக் காரணமாய் இருக்குமே அன்றோ;
“கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்”
“காட்டேன்மின் நும்முரு என் உயிர்க்கு அது காலன்” என்னக் கடவதன்றோ.

என்னையே –
இவள் ஒருத்திக்குமே உள்ளது ஒரு வியசனமாயிற்று; ஆதலின், ‘என்னையே’ என்கிறாள்.
நாட்டார் நினைத்துத் துக்கங்களைப் போக்கிக் கொண்டு போகா நின்றார்களே அன்றோ,
சாதன புத்தியாக இழிந்தவர்கட்கு அது செய்யலாமிறே, “தியானிக்கக் கடவன்” என்ற நினைவு
தன்னையே விதியா நின்றதே அன்றோ;
அவனுடைய படியிலே இழிந்தார்க்கே அன்றோ இது உள்ளது.-

——————————————————————————————————

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல் வினையேன் பின் நின்றே.–5-4-5-

உபகார சீலன் கண்ணனும் வர வில்லை -நாம அவ சேஷை யானேன் -பேர் அளவில் நிற்கிறேன்-
ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்-பிரியம் சௌஹார்த்தம் -இருவரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்-நீர்மை என்னே ஆச்சர்யம் -சொல்லாமல் –
தீர்க்கையான இரவில் உறங்கா நின்றார்கள்
நீர் என் செய்தீர் என்றுமாம் –
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்-அவர்கள் ஆராய தசையிலும் ஆராயும் உபகார சீலன் —
நம் கண்ணனும்–நமக்கு பவ்யன்-
இப்படி ஔதார்ய பவ்யனாக இருந்தும் வர வில்லை
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே.-பேர் மட்டும் உள்ளது –
தெற்கு நோக்கி கை கூப்புகிறோம் இன்றும்
ஆழ்வார் பட்ட பாடு எல்லாம் பட்டர் -சமக்யா பந்தத்தி -தேசிகன்
பிரபல பாவம் -பிராப்யர்கள் வராமல் இருக்கும் படி -முடிய ஒட்டாமல் பெயர் மட்டும் உள்ளதே
சத் பாவாக சூசகம் -அத்யந்த அவசாத அளவிலும் -பெயர் மட்டும் –

தாய்மார்களும் தோழிமார்களும் இவள் தன்மையாதாக இருக்கின்றது என்று ஆராயாமல்,
நீண்ட இரவு முழுதும் தூங்குகின்றார்கள்;
மேகம் போன்ற நிறத்தை யுடைய நம் கண்ண பிரானும் வருகின்றான் இலன்; என்னை ஆராய்கின்றவர்கள் யாவர்?
கொடிய தீவினையே னாகிய எனக்குப் பின்னே நின்று பெயரானது என்னை முடிய ஒட்டுகின்றது இல்லை என்கிறாள்.
நீர் – நீர்மை. துஞ்சுவர் வாரான் ஆதலால், என்னை ஆராய்வார் ஆர்? என்க. வல் வினையேன் பின் நின்று
பேர் என்னை மாயாது என்க. மாய்தல்-மறைதல், அழிதல்.

ஆபத்தில் உதவும் அன்னையரும் தோழியரும் ஆராயகின்றிலர்கள்; அவர்கள் உதவாத போது உதவும்
கிருஷ்ணனும் வருகின்றிலன்; பெயரளவில் நிற்கின்றவள் ஆனேன் என்கிறாள்.

என்னை ஆராய்வார் ஆர் –
“பிராப்தவ்யம் து தஸா யோகம் மயா ஏதத் இதி நிஸ்சிதம்
தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ தூர்பலா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 40.
“பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுக்கிறேன்” என்கிறபடியே,
திருவடி சென்று அரக்கியர்களை நலியப் புக, இவர்கள் இராவணன் சோறுண்டு வாழ்ந்து பரதந்திரப் பட்டவர்களாகையாலே
என்னை நலிந்தார்களாகில், தங்களாலே வந்தது ஒன்று அன்றாகில்,
அது தனக்கு நாமும் ‘பொறுத்தோம்’ என்று நேர்த்தரவு கொடுத்த பின்பு இனி இவர்களை நலிகிறது என்? என்ன
‘இராவணனும் பட்டானாகில் நம்மைப் பல நாட்கள் நலிந்து போந்த இப் பெண் பையல்களை
இப்போது பொறுக்க வேண்டுகிறது என்?’ என்ன,
“துர்பலா – ‘சிலர் நம்மை நலிந்தார்கள்’ என்று நாம் அவர்களை நலியப் புக்கால், அப்போதே அவர்கள்
கண் குழிவு காண மாட்டாதார் பின்பு செய்வது என் பொறுக்காமல்.”
இராவணனும் பட்டு, பெருமாளும் வெற்றியினை யுடையரான பின்பு, இனி இது ஒழிய வேறு ஒரு தௌர்பல்யம் இல்லையே அன்றோ.
ஆக, இப்படித் தன்னை நலிந்த அரக்கியர்களையும், நீங்கள் அஞ்சாதே கொள்ளுங்கோள் என்று
“தத:ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்து: விஜய ஹர்ஷிதா
அவோசத் யதி தத் தத்யம் பவேயம் ஸரணம் ஹி வ:”- என்பது, ஸ்ரீராமா. சுந். 58 : 90.
“உங்களை நான் காப்பாற்றுகிறேன்” என்னக் கூடிய அவள், இப்போது, தன்னை ஆராய்வார் தேட்டமாய்,
ஆர் என்னை ஆராய்வார்’ என்கிறாளே அன்றோ

அன்னையரும் தோழியரும் –
என் நிலையைக் கண்டு என்னைப் போன்றே உறக்கத்தைத் துறந்தவர்களோடு,
உறக்கம் துறக்கக் கூடாது’ என்று விலக்குகின்றவர்களோடு வாசி அற ஒக்க எடுக்கும்படியாய் வந்து விழுந்தது. என்றது,
என் நினைவே நினைவாய் இருக்குமவர்களோடு
தங்களுக்கு என்ன ஒரு நினைவுண்டாய் நியமிக்கத் தக்கவர்களோடு வாசி அற்றது என்றபடி.

அன்னையரும் தோழியரும் நீர் என்னை என்னாதே நீள் இரவும் துஞ்சுவர் –
அன்னையரும் தோழியருமான நீங்கள், என் பட்டாய் என்னாதே,
நீள் இரவும் துஞ்சுதிர் என்று சொல்லுவாரும் உளர்.
அன்றிக்கே,
அன்னையரும் தோழியரும் இது ஒரு நீர்மை இருக்கும்படியே! என்னே! என்னாமல்,
நீள் இரவும் துஞ்சுவார்கள் என்னுதல். என்றது,
அவன், தன்னைப் பொகட்டுப் போய்
வேறு சிலவற்றால் போது போக்தித் தன்னை நினையாமலே இருக்கச் செய்தேயும்,
தான் அவனை ஒழியப் போது போக்க மாட்டாதே இருப்பதே!
இது ஒரு நீர்மையே! என்னே ஆச்சரியம்! என்று இப்படிச் சொல்லாமல் தூங்குவர்கள் என்றபடி.
முன்னிலைப் பெயர் பண்புப் பெயர் இரண்டு அர்த்தங்களில் –
“நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதிப் பின்னீர பேதையார் நட்பு”–திருக்குறள்- என்புழிப் போன்று,
நல்லவர் ஸ்நேஹம் பூர்ண சந்திரன் போலே வளரும் என்றவாறு-
ஈண்டும் ‘நீர்’ என்பது,
நீர்மை என்ற பொருளில் வந்தது. எனக்கு உறங்காமையே தன்மையாம்படி,
நீள் இரவும் துஞ்சுவர்-
நெடிதான இரவு முழுதும் அவர்களுக்கு உறங்குகையே தன்மையாய் விட்டது என்பாள்
நீள் இரவும் துஞ்சுவர்’ என்கிறாள்.

கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால் –
ஒரு நீர்ச் சாவியிலே ஒரு பாட்டம் மழை பெய்தாற்போலே குளிரும்படியான வடிவை யுடையனுமாய்,
“அந்தக் கோப ஸ்திரீகளுக்கு மத்தியில் வந்து தோன்றினான்” என்கிறபடியே, முன்பு உதவிப் போந்தவனும் வருகின்றிலன்.
“தாஸாம் ஆவிரபூத் சௌரி: ஸ்மயமான முகாம் புஜ:
பீதாம் பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மந்மத மந்மத:”-என்பது, ஸ்ரீ பாகவதம், 10 : 32.
“தாஸாம்-அந்தப் பெண்களுக்கு.” என்றது, அவர்கள் பூர்வ அவஸ்தையைப் பற்றியே அன்றோ.
நம் கண்ணனும் வாரானால்-
பெண்களுக்கு உதவிப் போந்தவனும் வருகின்றிலன் என்பாள் ‘நம் கண்ணனும் வாரானால்’ என்கிறாள்.

பேர் என்னை மாயாதால் –
அவனோடு ஒத்திருக்கின்றதே! பேரும்.
அவன் வருகின்றிலன்,
இது போகிறதில்லை.
நான் காரியத்திலே முடிந்தேனா யிருக்கச் செய்தேயும் ‘இன்னாள், இன்னாள்’ என்கிற இப் பெயர்
என்னை முடிந்தேனாக ஒட்டுகிறது இல்லை.
ஆழ்வாருடைய திருநாமம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குச் சத்தைக்குக் காரணமாக இருப்பது போன்று
அவர் தமக்கும் சத்தைக்கு ஹேதுவானபடி.
அடியுடைய பெயர் -பகவத் கடாஷம் -உடையவர் -சடாரி என்றுமாம் –
ஆகையாலே எல்லார்க்கும் தாரகமாக இருக்குமே.
இதனுடைய அடி யுடைமையே அன்றோ எல்லாரும் தலை மேல் தாங்குவது.
பேர் என்னை மாயாதால் –
பெயர் அளவில் நிற்கின்றவள் ஆனேன் என்ற படி

வல் வினையேன் –
நான் முடியச் செய்தேயும் என்னை முடித்தேன் ஆகாத படி செய்யும் படியான பெயரைப்
படைக்கக் கூடிய மஹா பாவத்தைச் செய்தேன்

பின் நின்று –
நான் முடியச் செய்தேயும் இப் பெயரானது எனக்குப் பின்னும் நின்று முடிந்தேனாக ஒட்டுகிறது இல்லை.
வருகிற போது ஒரு சேர வந்தால், போகிற போதும் ஒரு சேரப் போக வேண்டாவோ.
“அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிஸ்ய நாமரூபே வ்யாகர வாணி” என்பது, சாந்தோக். 6:3.
“நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருத்யாநாஞ்ச ப்ரபஞ்சநம்
வேத ஸப்தேப்ய ஏவ ஆதௌ தேவாதீநாம் சகார ஸ:”-என்பது. ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 5 : 63.
“பெயர்களையும் உருவங்களையும் உண்டு பண்ணக் கடவேன்” என்றும்,
“தேவர்கள் முதலான எல்லாப் பிராணிகளுக்கும் பெயர்களையும் உருவங்களையும் அந்தப் பரமாத்மா
முதலில் செய்தருளினார்” என்றும்-ஒக்கச் சொல்லக் கடவதன்றோ.
முற்பட வந்தார்க்கு முற்படப் போக வேண்டி இருக்க, பிற்படவும் போகலாகாதோ?
நாமம் ரூபத்துக்கு முற்பட வந்தும் பிற்பட போக வில்லையே -என்கிறார்

————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம்- 111- திருவாய்மொழி – -5-3–6….5-3-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

June 6, 2016

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-

ஆகர்ஷகமான ஸ்வ பாவத்தில் அகப்பட்டேன் -ஆசை என்னிடம் தவிருமின் –
அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!-சமான சுக துக்கம் -பிரியமான அபிரியமான
குண தோஷம் வாசி இல்லை
பிரதமஜ நித் யசூரிகளுக்கு முதல்வன்
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்-மீட்க நினைக்க உங்களுக்கு -ஆசையை விடுமின்
முன்னை அமரர் முதல்வன்–பரத்வம் / வண் துவராபதி-பரத்வம் -சௌலப்யன் -நிர்வாககன் -நீர்மை
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே-சௌந்தர்யம் -/ மாலே மணி வண்ணா ஆலின் இலையாய் -போலே
இரண்டும் இல்லா வடிவு அழகு -ஆபி ரூப்யன் -விட ஒண்ணாத ஆபி ஜாத்யம் -வாஸூதேவன்
நாலு பாடும் கண்ணியான வலை -இது -பரத்வ சௌலப்யம் சௌந்தர்யம் ஆபி ஜாத்யம்

தோழியர்களே! முற்பட்டவர்களான நித்திய சூரிகளுக்குத் தலைவனும் வளம் பொருந்திய துவாரகை என்னும் திவ்விய தேசத்திற்கு அரசனும்
மணி வண்ணனுமான வாசுதேவனுடைய வலைக்குள்ளே அகப்பட்டேன்: ஆதலால், இனி, தாயானவள் எந்தக் காரியத்தைச் செய்தால் என்ன?
ஊரிலுள்ள மக்கள் எந்தப் பழிச் சொற்களைக் கூறினால் என்ன? என் பக்கல் உங்களுக்கு ஆசை வேண்டாம் என்கிறாள்.
என்னை, என்பது: வேற்றுமை மயக்கம். வண்ணம்-நிறம். வசுதேவன் குமரன்; கண்ணபிரான்.

மேல் ‘அன்னை, நீ செய்கிற இதனைப் பொறுக்க மாட்டாள்’ என்ன, “அன்னை என் செய்யும்” என்று,
அவள் பொறாமல் செய்வது என்? என்னுமளவிலே நின்றாள்.
இப் பாசுரத்தில், நீ இப்படி ஒரு விஷயத்தில் அறுதியிட்டிருப்பதை அறிந்தால்,
அவள் பிழைக்க மாட்டாள் என்ன, அவள் பிழைத்தால் என்? முடிந்தால் என்? என்கிறாள்.

அன்னை என் செய்யில் என்-
அவள் பிழைத்தால் என்? முடியில் என்? என்கிறாள்.
குரவ : கிம் கரிஷ்யந்தி தக்தாநாம் விரஹாக்நிநா”-என்பது ஸ்ரீ விஷ்ணுபுராணம், 5. 18 : 22
“விரக அக்னியினால் கொளுத்தப்பட்டிருக்கிற நமக்குப் பெரியோர்கள் என்ன செய்வார்கள்” என்கிறபடியே,
கிம் கரிஷ்யந்தி-முடியாதே இருப்பார்க்கு அன்றோ இதனை நீக்க வேண்டுவது, கையற்றார்க்கு இது கொண்டு காரியம் என்?
நன்று; – ‘தாயாருடைய நாசம் ஒரு தலையாகவும் மீளாதபடியாய், இவள் நாயகனுடைய
அழகு முதலானவைகளில் ஈடுபட்டவள் ஆனாள்’ என்று ஊரார் பழி சொல்லுவார்களே என்ன

ஊர் என் சொல்லில் என்-
அவர்கள் பழி சொல்லில் என்? குணங்களைச் சொல்லில் என்? “கொல்லை” என்னுதல், “குண மிக்கனள்” என்னுதல்,
இத்தனை அன்றோ அவர்கள் பழி சொல்லுவது.

தோழிமீர்-
‘தாய் என் செய்யில் என், ஊர் என் சொல்லில் என்’ என்று நீங்கள் மேல் விழுந்து என்னை இவ் விஷயத்தில்
ஈடுபாடு உடையவளாக ஆக்குகை அன்றிக்கே,
தாய் பிழையாள், ஊரார் பழி சொல்லுவர்கள்’ என்று இதனைப் பழியாகச் சொல்லுமளவு உங்களது ஆன பின்பு.

என்னை –
தாய் வாயிற் சொற் கேளாள் தன் ஆயத்தோடு அணையாள்” என்கிற
தாயார் பிழையாள், ஊரார் பழி சொல்லுவார்கள்’ என்றால் மீளாதபடி இவ் விஷயத்தில் ஈடுபாடுடையவளாய் இருக்கிற என்னை.
இனி-உங்கள் சொல்லும் கேளாதபடி கைகழிந்த பின்.

உமக்கு –
இது பழி’ என்று மீட்கப் பார்க்கிற அளவிலே நிற்கிற உங்களுக்கு.
ஆசை இல்லை-இனி என் பக்கல் உங்களுக்கு நசை அற அமையும்.

தோழிமீர் –
இதற்கு முன்பு எல்லாம் ‘தோழி’ என்று உயிர்த்தோழி ஒருத்தியையும் பார்த்து வார்த்தை சொல்லிப் போந்தாள்;
இப்போது இவளுடைய துணிவின் மிகுதியைக் கண்டவாறே ‘ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தை சொல்லியாகிலும் மீட்க வேணும்’
என்று ஆய வெள்ளம் எல்லாம் திரண்டன; அதனாலே ‘தோழிமீர்’ என்கிறாள்.

அகப்பட்டேன்-
“இப்போது ‘ஹிதம்’ என்கிற புத்தியாலே ஒரு வார்த்தை சொன்னோமே யாகிலும், ஊரார்க்கும் தாய்மார்க்கும் இவ்வருகே
எங்களிடத்தில் ஒரு வாசி நினைத்திருக்க வேண்டாவோ உனக்கு” என்ன, அது அப்படியே, அதில் குறை இல்லை;
என்னைக் கடல் கொண்டது காணுங்கோள், நான் என் செய்வேன் என்கிறாள்.

முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன் –
“சிறியார் பெரியார்’ என்ற வாசி இன்றிக்கே எல்லாரையும் ஒரு சேர ஆழப் பண்ணும் கடலிலே அன்றோ நான் அகப்பட்டது.
“ரூப ஒளதார்ய குணை:”-ரூபம் என்றது, வடிவழகை. ஒளதார்யம் என்றது, அதனை எல்லாரும் அநுபவிக்கலாம்படி
தன்னை முற்றக் கொடுத்துக் கொண்டிருக்கையை. “குணம்” என்றது, கொள்ளுகிறவனைக் காட்டிலும் தாம் தாழ நின்று கொடுக்கும் சீலத்தை.
தன் மேன்மை தோற்ற இருந்து கொடுக்கும் அன்று ஆள் பற்றதே அன்றோ; அதற்காகத் தாழ நின்றாயிற்றுத் தன்னைக் கொடுப்பது.
“பும்சாம்” – அந்த அழகும் கொடையும் சீலமும் வயிர உருக்கானவாம்; என்றது,
பலம் அற்ற பெண்கள் படுமதனை வன்னெஞ்சரையும் படுத்த வல்லனவாம் என்றபடி.
அன்றிக்கே,
பிரகிருதி புருஷர்கள்” என்றாற்போலேயாய், அசித்துக்கு வேறுபட்டவர்கள் எல்லாரையும் ஈடுபடுத்த வல்லன என்னவுமாம்.
“திருஷ்டி சித்தாபஹாரிணம்”-கண்களுக்கு மனத்தின் துணை வேண்டாமலே, கண்களைப் பின் செல்லுமத்தனை நெஞ்சு.
தாய் வேறு, கன்று வேறு ஆக்கும் விஷயம் அன்றோ என்றபடி. -மனம் இந்த்ரியம் பிரித்தால் போலே –

‘முன்னை அமரர்
“எந்தப் பரமபதத்தில் எல்லாவற்றையும் காண்கிறவர்களும், எப்பொழுதும் உள்ளவர்களும், பகவானுடைய அநுபவத்தில்
எப்பொழுதும் ஒருபடிப்பட்டவர்களும்” என்னும்படி இருக்கிறவர்கள் ஆகையாலே ‘முன்னை அமரர்’ என்கிறது.

முதல்வன்
நித்திய சூரிகளுக்கும் சத்தைக்குக் காரணமாயிருக்கிற மேன்மை யுடையவன் ஆதலாலே ‘முதல்வன்’ என்கிறது.
அன்றிக்கே,
அப்பொழுதைக்கு அப்பொழுது ஆசைப்படக்கூடிய விஷயமானவன் என்னுதல்.
ஆக, அத்தகைய விஷயத்திலே அன்றோ நான் அகப்பட்டது என்பதனைத் தெரிவித்தபடி.

வண் துவராபதி மன்னன்’ என்றதனால்,
முதன்மை தோற்ற ஓலக்கங் கொடுத்துக் கொண்டிருக்கிற துறை அல்லாததிலேயோ நான் இழிந்தது’
“பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னுமதில் நாயகராக வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில்” என்கிறபடியே
பெண்களுக்கு உடம்பு கொடுத்துக்கொண்டிருக்கிற நம் துறையிலே அன்றோ இழிந்தது என்பதனைத் தெரிவிக்கிறாள்.
அன்றிக்கே,
மன்னன்’ என்றதனால் மேன்மை தோற்ற ஓலக்கங் கொடுத்துக் கொண்டிருக்கிற இடமே நன்றாய் விட்டது
நீர்மை தோற்ற இருக்கிற இடத்தில் விழுகிற பிரம்புகளிற் காட்டில் என்பதனைத் தெரிவிக்கிறாள் ஆதலுமாம்.

மணி வண்ணன்-
அவ் விரண்டும் இல்லையே யாகிலும் விட ஒண்ணாததாயிற்று வடிவழகு. காதலி துவக்குண்பது வடிவழகிலே அன்றோ.

வாசு தேவன்-
வடிவழகு இல்லையாகிலும் விட ஒண்ணாததாயிற்றக் குடிப்பிறப்பு.
“ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹாநாம் முக்யஸ்ய விதிதாத்மந: ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ருசைந்ய பிரதாபிந:”
என்பது ஸ்ரீராமா. சுந். 33 : 15, 16. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.
“நான் தசரத சக்கரவர்த்தியினுடைய மருமகள்” என்கிறபடியே, பிராட்டி தனக்குப் பேற்றுக்கு உடலாக நினைத்திருப்பது
‘சக்கரவர்த்தி மருமகள்’ என்னும் இதனையே காணும். “எதிரியின் படையினை வருந்தச் செய்யுமவர்” என்கிறபடியே,
எங்கள் மாமனார் உளராகில் எனக்கு இவ்விருப்பு இருக்க வேணுமோ?
பகைவர்களும் ஜீவிக்க, ஜீவித்தவரோ அவர்.

முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன்-
அவனுடைய அருள் அற்ற தன்மையோடு -நீர்மையோடு,- ஊராருடைய பழியோடு புகழோடு வாசி அற்றாற் போலே,
அவன் மேன்மையோடு சௌலப்யத்தோடு வாசி அற இரண்டும் மனக் கவர்ச்சியாய் இருக்கிறதாயிற்று இவளுக்கு.

வலையுள் . . . அகப்பட்டேன் –
அந்தப் பொதுவானதில் அன்றிக்கே, அவன் என்னைக் குறித்து நோக்கின நோக்கிலும்
புன்முறுவலிலும் அன்றோ நான் அகப்பட்டது.
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் வலையாக அபிநயித்துப் பாடா நிற்க,
எம் பெருமானார் திருக் கண்களைக் காட்டி யருளினார்,
கமலக் கண் என்னும் நெடுங்கயிறு” என்னக் கடவதன்றோ.
அநுகூலம் போலே இருந்து தப்பாதபடி அகப் படுத்திக் கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன்

————————————————————————————————

வலையுள் அகப்படுத்து என்னை நன் நெஞ்சம் கூவிக் கொண்டு
அலை கடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவுமாங் கொலோ? தையலார் முன்பே.–5-3-7-

ஆஸ்ரயர் அர்த்தமாக ஷீராப்தி நாதன் -பள்ளி கொண்டு அருளி -ஆழ்வார் கைப் பிடிக்க வந்தானே
வலையுள் அகப்படுத்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு-ஆகர்ஷக குண சேஷ்டிதங்களால் அகப்படுத்தி
என்னிலும் முன் அகப்பட்ட நல்ல நெஞ்சே -அடி அறுத்து அபஹரித்துக் கொண்டான் -திரைக்குள் -அலைக்குள் -இருந்து -பொருந்தும் படி
அலை கடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்-ஏகாந்தமாக -கிடை அழகைக் காட்டி அடிமை -அழகுக்கு காத்தூட்டும் -ரஷணம் ஆழிப் பிரான்
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு-பரிவட்டம் -விஸ்தீரணம் -இருவரும் ஒக்க -தோழியைக் கொண்டாடுகிறாள்
தலையில் வணங்கவு மாங்கொலோ? தையலார் முன்பே-குத்தல் பேசினவர்கள் முன்னால்-வந்ததுக்கு பெரும் கும்பீடு –
கும்பிடு நட்டமிட்டு ஆடி –பழி சொல்பவர்கள் முன் -அவன் வந்த உபகாரம் தோன்ற –

கலையைக் கொண்டிருக்கின்ற அகன்ற அல்குலையுடைய தோழீ! வலையிலே என்னையும் அகப்படுத்திச் சிறந்த மனத்தையும்
அழைத்துக் கொண்டு அலைகளை யுடைய கடலிலே பள்ளி கொண்டிருக்கின்ற அம்மானாகிய ஆழிப் பிரான் தன்னை,
இந்தப் பெண்களுக்கு முன்பு நம் கண்களாலே கண்டு தலையாலே வணங்கவும் ஆகுங் கொல்லோ என்கிறாள்.
ஆழிப் பிரான் தன்னைக் கண்டு வணங்கவும் ஆகும் கொல்? என்க. கலை-புடைவை. மேகலாபரணமுமாம்.
தலையில்-தலையால். வேற்றுமை மயக்கம். தையலார்-பெண்கள்.

என்னை வலியுள் அகப்படுத்து
அவனிடத்தில் குணம் இன்மையைச் சொல்லுகிற பெண்கள்-என்னை வலியுள் அகப்படுத்து-
என்னைத் தப்பாதபடி புன் முறுவல், கடைக் கண் நோக்கம் முதலியவைகளிலே அகப்படுத்தி.

நல் நெஞ்சம் கூவிக் கொண்டு –
தான் என்றால், “நெஞ்சே இயற்றுவாய் எம்மோடு நீ கூடி” என்று
நான் பிற்பாடையாம் படி என்னிற் காட்டிலும் -முற்படும் படியான நெஞ்சைத் தன் பக்கலிலே நொடித்துக் கொண்டு.

அலை கடல் பள்ளி அம்மானை-
“ஸ்ரீமத் துவாரகையில் இருக்கில், ‘பெண்களுக்கு ஓலக்கங் கொடுத்த இடம்’ என்று சம்பந்தம் சொல்லிக் கொண்டு வரக்கூடும்” என்று
எட்ட ஒண்ணாத நிலத்திலே பின்னையும் போய்ப் புக்கான்.
பின்னையும் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் –ஆழ்வார் நெஞ்சை அபஹரித்த பின்பு மீண்டும் ஷீராப்தி நாதன் ஆனான் என்றபடி –
அலை கடல்
பெண் பிறந்தார்க்கு நினைக்க ஒண்ணாதபடி கொந்தளிக்கிற கடல் என்பாள் ‘அலை கடல்’ என்கிறாள்.
அம்மான்-
பெரிய செல்வம் கைப்பட்டவாறே கடல் ஓடத் தொடங்கினான். -அம்மான் -ஸ்வாமி -ஆழ்வார் -சொத்தை பெற்றதும் —

ஆழிப்பிரான் தன்னை –
‘புக ஒண்ணாத நிலத்திலே புக்கான்’ என்று விட ஒண்ணாத படியாயிற்றுக் கையும் திருவாழியுமான அழகு.
கடல் ஓடியாகிலும் பெற வேண்டியாயிற்று இருப்பது.

கலை கொள் அகல் அல்குல் தோழி-
நல்ல புடைவையை யுடைத்தான அகன்ற நிதம்பப் பிரதேசத்தையுடைய தோழீ! என்றது,
உன் வடிவு போலே அநுகூலமாய் இருக்க வேண்டாவோ உன் வார்த்தையும் என்றபடி.
அன்றிக்கே,
அவள் மடியிலே கிடந்து சொல்லுகிறாள் ஆகவுமாம்.
மேல், “தோழிமீர், என்னை இனி உமக்கு ஆசை இல்லை” என்றாள்; இங்கே,
‘தோழி நம் கண்களாற் கண்டு’ என்று விளிக்கிறாள்; இவை சேரும்படி என்? என்னில்,
தாய்மார் சொல்லுகிற வார்த்தையை இவர்களும் சொல்லுகையாலே
தோழிமீர் என்னை இனி உமக்கு ஆசை இல்லை” என்றாள்.
இங்ஙனம் பேசுவாரை விட்டுத் “தீர்ந்த என் தோழி” என்னலாம்படி நெஞ்சு கலந்து ஒரு நீராய் இருக்கிற
உயிர்த் தோழியைப் பார்த்து வார்த்தை சொல்லுகிறாள்.

நம் கண்களால் கண்டு-
இப்போது இவள் ஹிதம் சொன்னாளே யாகிலும், காணும் போது நான்கு கண்களாலே காணும் காண்பது;
அல்லது, இரண்டு கண்களாலும் காண வேண்டாள்.-இடைக் கண் கடைக் கண்கள் நான்கும் என்றுமாம் –

தலையில் வணங்கவும் ஆம் கொலோ தையலார் முன்பே-
‘பிரிந்த இடத்தில் தன்னுடைய பெண் தன்மைக்குப் போரும்படி அவன் தானே வரப் பார்த்திருந்திலள்,
அவனும் வரவு தாழ்த்தான்’ என்று பழி சொல்லுகிற இவர்கள் முன்பே அவனும் வந்து, அவன் வந்த உபகாரத்துக்குப்
பிரதி உபகாரமாகத் தலையாலே வணங்கப் பெற வல்லமோ!

இத் திருவாய்மொழியை ஆழ்வான், இராஜேந்திர சோழனில் சந்தியா சதஸ்ஸிலே நிர்வஹித்துக் கொண்டிருக்க,
ஆ மருவி நிரை மேய்த்தான் நம்பியார்’ என்பார் நூறு வயது போந்திருப்பார் ஒருவர், நடுங்க நடுங்க எழுந்து நின்று,
ஆழ்வான்! தலைமகள் தலையாலே வணங்கப் பெறுமோ?’ என்ன, ‘பெறும், சிஷ்டாசாரம் உண்டு காணும்;
ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் “தலையாலே தொழுதலையும் செய்வாய்”என்று அநுஷ்டித்தாள் காணும்’ என்று அருளிச் செய்தார்.
“கர்மத்தினாலேயே பல சித்தியைப் பெற்றார்கள் ஜநக குலத்திலுள்ளவர்கள்” என்கிறபடியே,
ஜநக குலத்திலுள்ளவர்களிலும் ஆசாரத்தில் மேற்பட்டார் இலர் அன்றோ.

கௌசல்யா லோக பர்த்தாரம் சுஷுவேயம் மனஸ்விநீ தம் மம அர்த்தே
சுகம் பிருச்ச சிரஸா ச அபிவாதய”- என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 56.

ஈண்டு நானிருந் தின்னுயிர் மாயினும் மீண்டு வந்து பிறந்து தன் மேனியைத்
தீண்ட லாவதோர் தீவினை தீர்வரம் வேண்டினாள் தொழுது என்று விளம்புவாய்- என்பது, கம்பராமாயணம்.

இதனால், மனைவிக்குரிய பிரணய ரோஷத்தால் அன்றிக்கே,
அஹம் சிஷ்யாச தாஸீச” என்கிறபடியே, சேஷத்வத்துக்குத் தகுதியாகச் சொன்னாள்- என்றபடி.

மநஸ்விநீ கௌசல்யா லோக பர்த்தாரம் யம் சுஷீவே
நாட்டில் பெண்கள் ‘இங்கு இருக்கும் நாள்களுக்கு நமக்கு ரக்ஷகனாய்ப் பின்பு நரகத்தில் புகாதபடி விலக்குவதற்கும்
ஒரு பிள்ளை வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெறுவர்கள்;
அங்ஙன் அன்றிக்கே, என் மாமியார் தன் நெஞ்சில் உண்டான பரந்த நோக்கத்தாலே, ‘உலகத்துக்கெல்லாம் ரக்ஷகனாக வல்லான்
ஒரு பிள்ளையைப் பெற வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெற்றார்; அவர் நினைவு தப்பலாமோ?
அந்த உலகத்துக்குள்ளே இருக்கிற ஒரு பெண் அல்லளோ நான்.
இனி, ‘நாட்டில் பெண்கள் கணவன்மார்கள் சமர்த்தர்களான போது ஆதரித்தும், சமர்த்தர்கள் அல்லரான போது உபேக்ஷித்தும்
போரக் கடவர்களாய் இருப்பர்கள் என்பது ஒன்று உண்டு; நீ எல்லா நிலைகளிலும் அவரை ஆதரித்துப் போருவாய்’ என்று
அவர் என்னைக் குறித்துச் சொல்லி விட்டார்; நானும் அப்படியே செய்து போரா நிற்க, கிண்ணகத்தில் குமிழிக் கீழே சாவி போமாறு போலே,
தாம் என்னுடைய ரக்ஷணத்தில் நெகிழ நின்றது அவர் நினைவு குறைவு பட்டது ஆகவோ என்று சொன்னேன் என்று சொல்லு.
தம் மம அர்த்தே சுகம் பிருச்ச –
எங்களுடைய ரக்ஷணத்துக்கு நாங்கள் பிரார்த்தித்துப் பெற வேண்டுவது ஒன்று இல்லையே அன்றோ,
அதுவும் அவர் நினைவில் உண்டு ஆகையாலே; இனி,கிரமப் பிராப்தி பற்றாமையால் உள்ளதே அன்றோ இப்போது படுகிறது.
தாம் உளராக எங்களுடைய ரக்ஷணம் தப்பாதே அன்றோ; ஆன பின்பு, தம்முடைய உண்மையை ஆகாசிக்கை யன்றோ இனி
எங்களுக்கு உள்ளது; ஆகையாலே, அங்குத்தைக்கு ஒரு குறையும் இல்லையே என்று கேட்டேன் என்று சொல்லு.
சிரசா அபிவாதய ச-
நாட்டார் அளவு அன்றிக்கே, தாம் விசேடித்து என்னைக் கைப் பிடிக்கையால் உண்டான வாசியை யான் பெறாத பின்பு,
நாட்டாரைப் போலவாகிலும் பெறக் குறை இல்லை அன்றோ.-சகாரம் உம்மைத் தொகைக்கு தாத்பர்யம் அருளிச் செய்கிறார் —
இனி நாட்டர் பெறுவது பெறப் பார்த்தால், அவர்கள் தம் பக்கல் செய்யுமத்தையும் செய்ய வேணுமே அன்றோ;
ஆன பின்பு, நான் என் தலையாலே தம் திருவடிகளிலே வணங்கினேன் என்று நீ எனக்காக
அவர் திருவடிகளிலே விழு என்றும் அருளிச் செய்தாள்.”

இது தான் ஊடுதலால் உண்டாகும் சீற்றம் தலை எடுத்துச் சொல்லுகிற வார்த்தையோ,
அபேக்ஷை தோற்றச் சொல்லுகிற வார்த்தையோ’ என்ன,
மேலே, திருவடி வந்த போது பிரணய ரோஷத்தாலே வந்த சிவிட்குத் தோற்றச் சொன்ன வார்த்தைகள் அடைய
மாறும்படி குளிர அவன் வார்த்தை சொல்ல,
பின்பு திருவுள்ளத்திலே ஓர் ஆறுதல் பிறந்து, பெருமாளைச் சேராமையால் உண்டான குறைபாடும் கிடக்க
அருளிச் செய்கிற பாசுரம்’ என்று அருளிச் செய்தார்.
தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது எழுவாள் –

———————————————————————–

பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8-

அநாயாசேன அகில விரோதிகளை நிரசிக்கும் -அவனை நான் கிட்டுவது என்றோ –
பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை போய் முதல் -வேர் உடன் சாய்த்து
சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட–கேசி -குவலயா பீடம்
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந்நாள் கொலோ?-விரோதிகள் பற்றாசு தொலைய -ஆடு அழைப்பார் இல்லை
ஸ்மிதம் பண்ணி -தூய வெளுத்த தந்த பந்த காந்தி
தொண்டை பழம் போலே சிவந்த அதர சோபையும்-கோபிகளுக்கு தன்னை அனுபவிக்கக் கொடுத்த உபகாரகன்
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே-வெட்கப்படும் படி என்றாக கிட்டுவோம் –
கண்ணன் என்னைக் கைப்பிடிக்க இவர்கள் வெட்கப் படுவார்களே

பேயின் முலையை உண்டு சகடத்தின் மேலே பாய்ந்து மருத மரங்களின் நடுவே சென்று அவற்றை வேரோடு கீழே தள்ளிப் புள்ளின்
வாயைப் பிளந்து யானையைக் கொன்ற, தூய்மை பொருந்திய புன் சிரிப்பையும் கோவைக் கனி போன்ற திருவாயினையுமுடைய
பிரானை, தோழீ! தாய்மார்கள் நாணுறும்படியாகச் சேர்வது எப்பொழுதோ? என்கிறாள்.
பேய் – பூதனை, சகடம்-சகடாசுரன். புள்-பகாசுரன். களறு-குவலயாபீடம்.
அட்ட பிரானை அன்னையர் நாண உறுகின்றது எந்நாள் கொலோ? என்க.
தாய்மார், ஐவராதலின் அன்னையர் என்கிறாள். “ஐவர் நலன் ஓம்ப” என்றார் திருத்தக்கதேவரும். தூ-பரி சுத்தம்.

மஹோபகாரகனைக் ‘குணம் இல்லாதவன்’ என்று சொல்லுகிற தாய்மார் ‘இவனை யாகாதே நாம் குணம் இல்லாதவன் என்றது’ என்று
நாணம் உறும்படி அவனைக் காண்பது என்றோ! என்கிறாள். அவன், தன் சத்தையை உண்டாக்கி, நம் சத்தையைத் தந்தான்’
நாம் அவன் சத்தையால் உண்டான பலத்தைப் பெறுவது என்றோ என்கிறாள்.

பேய் முலை உண்டு –
பூதனையால் வந்த ஆபத்தைத் தப்பி,

சகடம் பாய்ந்து-
உணர்ந்து நோக்க ஒண்ணாதபடி காவலாக வைத்த சக்கரம் அசுர ஆவேசத்தாலே ஊர்ந்து வர அதனை வருத்தம் இன்றியே முறித்து,
முக்தன் செய்த வியாபாரம் என்பதால் போரப் பொலிய பல பாசுரங்கள் அருளிச் செய்தார்கள் என்றபடி –

மருதிடை போய் முதல் சாய்த்து-
நிர்விவரமாக -மருதுகள் -இரட்டை என்றும் அறிய முடியாமல் நின்றபடி –
தவழ்ந்து போகா நிற்க இடைவெளி இல்லாமல் வழியிலே நின்ற மருத மரங்களின் நடுவே போய்த்தான்
அவற்றைத் தப்பிப் போன அளவே அன்றிக்கே, அவை தம்மை வேரோடு பறித்து விழ விட்டு.
அன்றிக்கே,
முதல் சாய்த்து-குருந்தத்தைப் பறித்துப் போகட்டு என்னுதல்.

புள் வாய் பிளந்து-
பகாசுரனை வாயைக் கிழித்து,

களிறு அட்ட –
குவலயாபீடத்தைக் கொன்ற,

தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானை –
தடையாக வந்தவை தாம் பிரபலமா யிருக்கச் செய்தேயும், தன் வீரத்துக்கு அவை பாத்தம் போராமையாலே புன் முறுவல் செய்து நின்றபடி.
என்றது, வெண் முறுவலையும் சிவந்த அதரத்தை யுமுடைய உபகாரகனை என்றபடி.
அன்றிக்கே,
தூய்தான பற்களின் வரிசைகளையும், தொண்டைக் கனி போன்ற அதரத்தை யுமுடையவனை என்னுதல்.
இப்போது அவனை அழிக்க நினைத்து மடல் எடுக்கிறாளாகில், அவன் உபகாரத்தைச் சொல்லுவான் என்? என்னில்
இவையே யன்றோ இவள் தான் அவனை அழிக்க நினைத்தபடி. என்றது, அச்சம் உறுத்தி முகங்காட்டுவித்துக் கொள்ளப் பார்க்கிற
இத்தனை போக்கி, அவனை அழிக்க உத்தேசியமாகச் செய்கிறாள் அல்லள் என்றபடி.
அவ் வுபகாரங்கள் எல்லாம் தனக்காகச் செய்தது என்று இருக்கிறாள் ஆதலின் ‘பிரான்’ என்கிறாள்.

பூத் தரு புணர்ச்சி, புனல்தரு புணர்ச்சி, களிறுதரு புணர்ச்சி என்பன சில சங்கேதங்கள் உண்டு தமிழர்க்கு.
பூத் தரு புணர்ச்சியாவது, இவள் ‘உத்தியான வனத்திலே பூக் கொய்ய’ என்று புறப்பட்டுப் பூக் கொய்யாநிற்க,
அருங்கொம்பிலே எட்டாதே நின்ற பூவை இவள் ஆசைப்பட்டால் ஒருவன் தன்னைப் பேணாதே மரத்தின்மீது ஏறி
அம்மலரைப் பறித்துக் கொடுக்க, ‘இவன் தன்னைப் பேணாதே தன் நினைவைத் தலைக்கட்டினான்’ என்று அதற்காகத் தன்னைக் கொடுத்தல்.
புனல் தரு புணர்ச்சியாவது, புதுப்புனல் ஆடப் போய் நீரிலே இழிந்து விளையாடா நிற்க, ஒரு சுழி வந்து இவளைக் கொடுபோக,
அதில் நின்றும் எடுத்து ஏறவிட்டதற்காகத் தன்னைக் கொடுத்தல். களிறு தரு புணர்ச்சியாவது, வீதியிலே நின்று விளையாடா நிற்க,
யானையின் கையிலே அகப்படப் புக, அதன் கையில் நின்றும் தன்னை மீட்டமைக்குத் தன்னைக் கொடுத்தல் என்று ஒரு மரியாதை கட்டினார்கள்;
இவளை நோக்கினதற்காக, இவள், தன்னை அவனுக்கு ஆக்குதல் என்பதே அன்றோ இங்கே சொல்லப்பட்டது;
அவ்வளவு அன்றிக்கே, இவள் தலைமை இருந்தபடி; அவன். தன்னைத் தப்புவித்த உபகாரத்துக்கு அநந்யார்ஹமாக இவள் தன்னை
அவன் தனக்கு எழுதிக் கொடுக்கிறாள். அங்கு ஒவ்வோர் உபகாரத்துக்கே அன்றோ அப் பெண்கள் தங்களை அவ்வவர்க்கு உரிமையாக்குவது,
இங்கு எல்லா உபகாரங்களையும் செய்தால் அவனுக்கு ஆக்காது ஒழிய ஒண்ணாதே அன்றோ.

தோழீ! நாம் உறுகின்றது எந்நாள் கொலோ?-
தோழீ! அவன், தன்னை உளனாக்கி வைத்தான், இனி நாம் அவனைக் கிட்டுவது என்றோ?

சோகஸ்ய அஸ்ய கதா பாரம் ராகவ: அதிகமிஷ்யதி பிலவமாந: பரிச்ராந்த: ஹதநௌ: சாகரே யதா” -ஸ்ரீராமா. சுந். 37 : 5.
“ஸ்ரீராமபிரான் இந்தத் துக்கத்தினுடைய கரையை எப்பொழுது அடையப் போகிறார்?” என்றாற்போலே காணும் தோழி தான் இருப்பது;
ஆதலின், ‘நாம் உறுகின்றது’ என்கிறாள். ‘இப்போது அவனை அடைந்து, நம் பிரயோஜனம் பெற ஆசைப் படுகிறோம் அல்லோம்;
பின்னை எற்றிற்கு? என்னின்,

அன்னையர் நாணவே-
பிரிந்த பின்பு அவன் தானே வருமளவும் ஆறி இருந்திலள்,
அவன் தான் வரவு தாழ்த்தான்’ என்று இருவர்க்கும் பழி சொல்லுகிற தாய்மார் முன்பே,
‘நாம் இத் தலை மடல் எடுக்குமளவாம்படி பிற்பாடரானோமே!’ என்று, “எனக்கு இது மிகவும் நாணத்தைத் தருகின்றது,
நீங்கள் என் அபராதத்தைப் பொறுக்க வேண்டும்” என்கிறபடியே,-பெருமாள் ரிஷிகளைப் பார்த்து லஜ்ஜித்து வார்த்தை சொன்னால் போலே
அவன் நாணமுற்று வந்து நிற்கிற படியைக் கண்டு, ‘இவனையோ நாம் இவ் வார்த்தை சொன்னோம்’ என்று
தாய்மார்கள் நாணமுற்றுக் கவிழ்தலை இடும் படியாக.

———————————————————————————-

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9-

சர்வ ஸ்வபஹாரம் பண்ணி -எட்டாத பரம பதம் -அலை கடல் பள்ளியில் இருந்து மீண்டும் வந்த வழியே மீண்டார்
இதில் தான் மடல் இடுவேன் என்கிறாள்
நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன் நெஞ்சம் கூவிக் கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை-மிகவும் உயர்ந்த வானம் -பரமாகாச சப்த வாச்யம் பரமபதம்
ஸூரிகளுக்கு பிரான் -இங்கு செய்யும் பிரகாரங்களைப் பிரகாசித்து -ஆழ்வார் சொத்தைக் காட்டுவானாம்
இருள் தரும் மா ஞாலத்தில்
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்-ஆணை இட்டுச் சொல்கிறார் -எனக்கு விதேயமான தோழி
அனைத்து உலகங்களிலும் -பிரசித்தமாம் படி -என்னால் முடிந்த அளவும் –
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே-மிருக்குகள் அடங்க -தப்பாக -நாணம் அற்ற பெண் -போலே மடல் –

என் தோழீ! ஆணை; என்னுடைய நாணத்தையும் நிறையையும் கவர்ந்து, நல்ல நெஞ்சினையும் அழைத்துக் கொண்டு
மிக உயர்ந்திருக்கின்ற பரம பதத்திலே சென்று தங்கி யிருக்கின்ற தேவ பிரானை, உலகுகள் தோறும் அலரைத் தூற்றி
என்னால் செய்யக் கூடிய மிறுக்குகளைச் செய்து அடங்காதவளாய் மடல் ஊர்வேன் என்கிறாள்.
அலர்-பிறர் கூறும் பழமொழி. தூற்றுதல்-பலர் அறியச் செய்தல், குதிரி-தடையில்லாத பெண்; அடங்காதவள்.
ஊர்தும்: தனித் தன்மைப் பன்மை.
“மடல் ஊர்தும்” என்றதனால், மடல் ஊராமை உணர்க.

நெஞ்சு விம்மல் பொருமலாகா நிற்கவும், தன் பெண் தன்மையாலே இதற்கு முன்பு மறைத்துக் கொண்டு போந்தாள்;
இனி, ‘அவனை அழிக்கப் புகுகிற நாம், யார்க்கு மறைப்பது’ என்று அது தன்னையே சொல்லுகிறாள்.

நாணும் நிறையும் கவர்ந்து-
சத்தையோடு கூடி வருகின்ற நாணத்தையும் கொண்டான், களவு கலந்தால் வருமதனையும் கொண்டான். என்றது,
வாசல் விட்டுப் புறப்படச் செய்யக் கூடியதல்லாத நாணத்தையும் கைக் கொண்டு,
அக வாயில் ஓட்டம் தாய்மார்க்கும் சொல்லக் கூடிய தன்றிக்கே இருக்கும் அடக்கத்தையும் கைக் கொண்டான் என்றபடி.

என்னை-
அவ் விரண்டனையுமே நிரூபகமாகவுடைய என்னை

நல் நெஞ்சம் கூவிக் கொண்டு-
பறித்துக்கொண்ட நாணையும் நிறையையும் தந்தாலும் இட்டு வைப்பதற்குக் கலம் இல்லாதபடி,
அவற்றுக்குப் பற்றுக்கோடான, என்னிற் காட்டிலும் தன் பக்கல் அன்பிலே ஊற்றமுடைய
மனத்தைத் தன் பக்கலிலே நொடித்துக் கொண்டு
இவற்றைக் கொண்டு இன்னம் கடலிலே கிடக்கில்’ இவள் மனோ வேகம் இருந்தபடியால்
திரை மேலே-அலை மேலே- நடந்து வந்து கையும் மடலுமாக நிற்கவும் கூடும்’ என்று பார்த்து
எட்டா நிலத்திலே சென்று இருந்தானாயிற்று என்கிறாள் மேல்

சேண் உயர் வானத்து இருக்கும்-
மிக்க ஒக்கத்தை யுடைத்தான வானத்திலே இருக்கும். என்றது, அந்தர ஜாதிகளான இந்திரன் முதலாயினோர்கள்
குடி இருப்பில் அன்றிக்கே பரமபதத்தில் இருப்பதனைக் குறித்தபடி. சேண் என்றாலும் உயர்வு, உயர் என்றாலும் உயர்வு;
ஆக, இரண்டாலும் மிக்க உயர்வினைக் குறித்தபடி.

தேவ பிரான் தன்னை-
இங்கே வந்து கொண்டு போன நாணும் நிறையுமான ஒடுக்கு மாட்டைப் பாரித்துக் கொண்டு
தன் வெற்றியைக் காட்டிக் கொண்டிருக்கிறபடி.
அன்றிக்கே,
பிரமன் முதலாயினோர் ஓலக்கம் போலப் பேறு இழவு முதலியவைகளில் வருகின்ற துடிப்பு அறியாத ஓலக்கம் அன்றிக்கே
சம்சார மண்டலத்திற் போய் நான் பெற்றுக்கொண்டு வந்தவை இவை’ என்று தன் வெற்றியைக் காட்டிக் கொண்டிருக்கிற ஓலக்கம்
முதன் முன்னம் அதுவாகப் பெற்றோமே என்பாள் ‘தேவபிரானை’ என்கிறாள் என்னலுமாம்.
பிரிவினால் வரும் வியசனம் அறியார்களே யாகிலும் சேர்க்கையால் வரும் ரசம் அறிவார்களே அன்றோ முன்னம்.

தேவபிரான் தன்னை
அவன் தானும் ‘பிரளயத்துக்கு அழியாத நிலம்’ என்னுமித்தனை யாயிற்று அவ் விடத்துக்கு ஏற்றமாக நினைத்திருப்பது;
விரஹப் பிரளயம் ஏறிப் பாயாத இடம் இல்லை’ என்று அறிய மாட்டுகின்றிலன்;
அறிந்தானாகில் கிடந்த இடத்தே கிடக்குமே!
அன்றிக்கே,
நீயே பார்ப்பாயாக அவ் வோலக்கமும் அவனும் அவ் விருப்பும் என்கையிலே படப் புகுகிற பாடு;
இருந்த இடத்தே இருக்க ஒட்டுவேன் என்று இருக்கிறாயோ? என்பாள்
தேவபிரான் தன்னை’ என்கிறாள் என்னலுமாம்.
இப்போது இங்ஙனே ஒரு வாய்ப் பகட்டுச் சொல்லுகிறாய்,
அது செய்து தலைக் கட்ட வல்லையாகப் புகுகிறாயோ? என்ன,

ஆணை என்கிறாள்.
இவள் இப்போது அவன் மேல் ஆணை இடுகிறாளோ, தோழி மேல் ஆணை இடுகிறாளோ? என்னில்,
அழிக்க நினைக்கப்பட்டவன் மேல் ஆணை இடாளே,ஆதலால், தோழி மேல் ஆணையாமத்தனை.
இதற்கு உடன் பட்ட தோழியை ஒழிய, ‘வேறு ஒரு பர தேவதை உண்டு’ என்று இராளே, இவள் தான்.
என் தோழி-
இது வார்த்தை யளவேயாய்ப் போகாமல், இவள் இத்தனையும் செய்து தலைக் கட்டப் பெறுவது காண்’ என்னும் தன் நினைவு
தோன்ற இருந்தாள் தோழி; அவளைப் பார்த்து ‘என் தோழி’ என்று அணைத்துக் கொள்ளுகிறாள்.
அன்றிக்கே,
ஆணை என்
இவள் எண்ணம் கூடப் புகாநின்றதோ என்று இருந்தாள் தோழி; அவளைப் பார்த்து ஆணை என்? என்கிறாள் என்னுதல்;
ஆணை என்-
தடை என்? ஆணை-தடை. என்றது, அவன் என் சொல் வழியே வருமாகில், நீ என் கருத்திலே ஒழுகுவுதியாகில்,
தாய்மார் தொடக்கமானார் வார்த்தை கொண்டு காரியம் இல்லை யாயிற்ற பின்பு, இனித் தடை என்? என்றபடி.
அவன் இவள் வழியே வருகையாவது என்? என்னில், சர்வாதிகன் ஆகையாலே அழிய விடானே,
இத் தோழி தானும் இவள் கருத்திலே நடப்பாள் ஒருத்தியே.

உலகு தோறு அலர் தூற்றி-
உலகங்கள் எங்கும் புக்கு அழிக்கக் கடவேன்.
என்னை ஊரார் பழி சொல்லும்படி செய்தானாகில், தன்னை உலகம் எல்லாம் பழி சொல்லும்படி செய்கிறேன்.
அசாதாரண விபூதியிலுள்ளார் தாம் பிறர் அறியும்படி இரார்களே அன்றோ’ என்றிருக்கைக்கு,
அவ் வோலக்கத்திலே வந்தாலோ நான் சொல்லுவது; என் கையிலே வழி யடையப் படப் புகுகிற பாடு பார்ப்பாயாக.
அங்கு தோஷங்களை குணமாகக் கொள்வார்கள் -இங்கோ குணங்களையும் தோஷங்களாக கொள்வார்களே –

ஆம் கோணைகள் செய்து-
என்னாலான மிறுக்குக்களை எல்லாம் செய்யக் கடவேன்.
கோணைகள் –
மிறுக்குக்கள்.
என்றது என் சொல்லியவாறோ? எனின், நான் கையும் மடலுமாகப் புறப்பட்டவாறே,
‘நம் குண நிஷ்டர்படி இது அன்றோ’ என்று – குணங்கொண்டாடி அதிலே செலவு எழுதக் கடவன்;
ராமாயாணம் மகா பாரதம் போன்ற புராணங்களில் எழுதப் பண்ணுவேன் –
அன்று, நான் உன்னைப் பெறுகைக்குச் சாதந அநுஷ்டானம் பண்ணுகிறேன்’ என்னக் கடவேன்.
அன்றிக்கே,
நான் கையும் மடலுமாகச் சென்றவாறே அஞ்சி எதிரே புறப்பட்டு நிற்கக் கடவன்,
அப்போதாக அவன் காலிலே குனியக் கடவன்.
“வட்டிக்கு மேல் வட்டி ஏறின கடன் போலே” என்னும்படி தொட்டு விடக் கடவேன்.
கோவிந்தேதி யதா அக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாசிநம்
ருணம் பிரவிருத்தம் இவ மே ஹ்ருதயாத் ந அபசர்பதி” என்பது, பாரதம் உத்யோகபர். 58:22.
“தலையாலே வணங்கின அந்தப் பரதாழ்வானுடைய வார்த்தை என்னால் செய்யப் படவில்லை” என்று
புண்படும் படி செய்யக் கடவேன். என்றது,
பிள்ளை தலையாலே இரந்த காரியத்தை மறுத்துப் போந்தோம் என்னும்படி செய்யக் கடவேன் என்றபடி.
மாம் நிவர்த்தயிதும் ய : அஸௌ சித்ரகூடம் உபாகத: சிரசா யாசத: தஸ்ய வசனம் ந க்ருதம் மயா”-ஸ்ரீராமா. யுத். 24:19
நான் இதனைச் செய்தால், அவர் தம் மனிச்சு அழியாமைக்காக, ‘தம்மோடு அசாதாரண பந்தமுடையார் தங்கள்
ஆதரத்தாலே செய்யக் கடவது ஒன்று அன்றோ இது’ என்னக் கடவன்,
அது அன்று இது, நான் சாதந அநுஷ்டானம் செய்கிறேன்’ என்னக் கடவேன்.
எக் காலத்திலும் கை கூப்பிக் கொண்டு நிற்பார்கள், அதுவே மிகவும் விருப்பம் என்பது தோன்றும்படியாகச்
சந்தோஷத்துடன் இருப்பார்கள்” என்கிற இதிலே செலவு எழுதப் பார்ப்பர் அவர்;
அங்ஙனம் அன்று, உன் உடம்பு பெறுகைக்காகச் செய்கிறேன்’ என்னக் கடவேன்.
புருஷார்த்தமாக இல்லை சாதனம் என்பதை அடித்துச் சொல்வேன் –

குதிரியாய்-
குத்ஸிதா ஸ்த்ரீ; குஸ்திரீ என்கிற பதத்தைக் குதிரி என்கிறதாய், அதாகிறது, அடங்காத பெண்ணாய்
தடை இல்லாத பெண் என்கிற படியாய், தடை யுடையேன் அன்றிக்கே என்னுதல்;
அன்றிக்கே,
குதிரி என்பது,
செப்பு என்ற பொருளதாய், பெண்களுக்குச் செல்வமாவன: நாணும் நிறையுமே யன்றோ,
அவற்றை இட்டு வைக்கும் கலமே அன்றோ சரீரம், அவை போகையாலே வெறும் சரீர மாத்திரமேயாய் என்னுதல்;
அன்றிக்கே,
பனை மடலைக் குதிரையாகச் செய்து கையிலே கொள்ளக் கடவர்கள் மடல் ஊருகின்றவர்கள்,
அதனை யுடையேனாய் என்னுதல்.

மடல் ஊர்துமே-
‘செய்யக் கடவதாயிற்ற பின்பு, இனி, ஒன்றை நினைத்து ஒன்றைச் சொல்லுகிறது என்?’
என்று பார்த்து அது தன்னையே சொல்லுகிறாள்.

—————————————————————————-

யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10-

பக்தி -இரண்டையும் பொறுக்கும் -பிரபத்தி -ஒன்றையும் பொறுக்காது -பகவான் -தன்னைப் பொறுக்கும்
நிரதிசய போக்யன்-அசாதாராண சிஹ்னங்கள் எங்கும் பலி தூற்று ஜகத் ஷோபம் கலங்கும் படி
மடலூர்ந்து திருக் கழுத்தில் உள்ள -மாலைச் சூடுவோம் –
யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்-அத்யந்த அபி நிவேசம் -ஏதேனும் ஒரு படியாக -ஸ்த்ரீத்வம் இல்லாமல்
கையும் திரு ஆழியுமான அழகை உபகரித்த
தூ மடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்-செவ்வியிலே தூயதான ஸ்ரமஹரமான -தர்ச நீயமான
பூந்தாரைக் கொண்டு -பெருமாள் சீதைக்கு சம்மானம் -செய்தது போலே –
கையிலே மடல் வாங்கிக் கொள்ள -மாலை வாங்கி சூடிக் கொள்வோம் -பன்மை -மடல் சூட துணிந்த கௌரவ உக்தி
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்-பழி -உலகு எங்கும் குறும் தெரு தோறும் -ஈடு அல்லாத மடலை
யா மாடம் இல்லாமல் -எந்த வித மடப்பமும் இல்லாமல்
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.-நா மடங்காத படி -சொல்ல முடியாத பழி சொற்கள் -நாடு கலங்கும்படி –

மடம் முதலான குணங்கள் ஒரு சிறிதும் இன்றித் தெருக்கள்தோறும் அயல்பெண்கள் நாக்கும் மடங்காமலே பழிகளைத் தூற்ற நாடும்
கூப்பிடும்படியாக, யாம் மடலை ஊர்ந்தாயினும் எம்முடைய சக்கரத்தைத் தரித்த அழகிய கையையுடைய எம்பெருமானுடைய
பரிசுத்தமான இதழையுடைய குளிர்ந்த அழகிய திருத்துழாய் மலரைச் சூடக் கடவோம் என்கிறாள்.
எம் ஆழி அங்கைப் பிரானுடைத் தூமடல் தண்ணம்துழாய் மலரை, தையலார் பழி தூற்ற நாடும் இரைக்க மடம் யா இன்றித் தெருவு தோறும்
யாம் மடல் ஊர்ந்தும் சூடுவோம் என்க.
இனி, தெருவுதோறு தையலார் தூற்ற எனக் கூட்டலுமாம். யா என்பது, அஃறிணைப் பன்மை வினாப்பெயர்.
யாவை அல்லது, எவை என்பது பொருள்.
“மடல் ஊர்ந்தும்” என்றதனானே, ஊராமை உணர்தல் தகும்.

உலகம் எல்லாம் கலக்கம் உறும்படி மடல் ஊர்ந்தாகிலும், தனக்கு மேல் ஒன்று இல்லாததான
இனிமையை யுடையவனைக் காணக் கடவேன் என்கிறாள்.

யாம் மடல் ஊர்ந்தும்-
செய்யக் கடவது அல்லாததனைச் செய்தே யாகிலும். என்றது,
“சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந: மாம் நயேத் யதி காகுத்ஸ்த:
தத் தஸ்ய சத்ருசம் பவேத்”- ஸ்ரீராமா. சுந். 39:30.
“என்னை அழைத்துக் கொண்டு போவாராயின் அச்செயல் அவருக்குத் தக்கதாகும்” என்று இருக்கக் கூடிய நாம்,
மடல் ஊர்ந்தே யாகிலும் என்றபடி.
1-பெற்று அன்றித் தரியாத உபேய வைலக்ஷண்யம், –2-அதற்கு அடியான உபாய வைலக்ஷண்ய அநுசந்தானம்,
3–‘அவ் வுபாயந் தன்னாலே பேறு’ என்கிற துணிவு, 4-வேறு ஒன்றினை உபாயமாக நினையாமை,
5- முறையிலே பெறுகிறோம் என்று நினையாமை ஆகிய இவைகளே, –
இங்கு ‘மடல்’ என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. -ஐந்தாவது அங்கி -மற்றவை அங்கங்கள்

“மடல் ஊர்தும்” என்றாள் கீழே ; ‘இது உனக்கு வார்த்தை அன்று,
முதல் தன்னிலே பெண்கள் மடல் ஊர்தல் ஆகாது என்று விலக்கி யுள்ளார்கள். அதற்கு மேல், நீயோ எனின்,
“ராமஸ்ய தயிதா பார்யா நித்யம் பிராண ஸமாஹிதா”- சங்க்ஷேப ராமாயணம் பால காண்டம்.
“எப்பொழுதும் உயிரை ஒத்த நாயகன் நன்மையிலேயே நோக்கங்கொண்டவள்” என்கிறபடியே.
உன்னை அழிய மாறியும் அவனுக்கு நன்மையையே விரும்புகின்றவளாய் இருப்பவள் ஒருத்தி,
அவனோ எனின், உன் பக்கல் வருகைக்கு உன்னைக் காட்டிலும் விரைகின்றவனாவான் ஒருவன்,
முறையிலே பெறுகிறோம் என்று நினையாமையால் படுகிறாயித்தனை, நீ சாகஸத்திலே ஒருப்படுகிற இது
‘உன் ஸ்வரூபத்தோடு சேராது’ என்ன, அது பார்க்க ஒண்ணாதபடி காண் எனக்கு
அவன் பக்கல் உண்டான அன்பின் மிகுதி என்கிறாள்.

எத் திணை மருங்கினும் மகடூஉ மடன் மேல் பொற்புடை நெறிமை இன்மை யான”-என்ற தொல்காப்பியச் சூத்திரம்,
“கடலன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்” என்ற திருக்குறள்-

யாம் மடல் ஊர்ந்தும்-
இப்படி இருக்கிற என் ஸ்வரூபத்தை அழிய மாறியாகிலும் பெறத் தவிரேன்.
செய்யக் கடவது அல்லாததனைச் செய்தாகிலும் பெறக் கடவேன்.
ஆத்மாவோடு சேராத செயலைச் செய்தே யாகிலும் பெறக் கடவேன்.
யாம்-
பிரணவத்தில் சொல்லப்பட்ட சேஷத்வத்திற்கு உரியதான ஆத்மாவுக்கு வாசக சப்தம்
இருக்கிறபடி யாயிற்று ‘யாம்’ என்பது.
அத் தலையைக் கொண்டே அன்றோ இவனை நிரூபிப்பது.
அஹம் அர்த்தம் -மகாரம்-சேஷ பூதன் –அகாரம் சேஷி –
ஆறி இருக்காமல் -ஸுவ பிரயோஜனம் கூடாதே -மடல் எடுப்பதால்
அஹம் அர்த்தம் உடன் சேராத செயல் –
யாம்
முதலில் சொல்லி
ஆழி அம் கைப் பிரான் –
பின்னால் சொல்லி -பிரணவம் -அகாரம் சொல்லித் தானே மகாரம் –
பிரணவத்தை விட இங்கே நன்றாக அருளிச் செய்த படி –கேட்டு திருந்த வேண்டியது ஜீவாத்மா தானே
ராஜ புருஷன் -சப்தம் முன்னால் இருந்தாலும் சேவகனுக்கு முக்கியம்

எம் ஆழி அம் கைப் பிரானுடைத் தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம்-
எம் பிரான்’
என்றதனால் நாராயண சப்தார்த்தம் சொல்லப்படுகிறது.
இவனைக் கொண்டு அன்றோ அவனை நிரூபிப்பது.
அகாரம் நாராயணம் நடுவில் மகாரம் விளங்குகிறார் -அவனை இட்டே சேஷன்-
இவன் கைங்கர்யம் செய்யச் செய்ய நாராயணன் -பெருமை பெருகிறானே –
அவன் கையும் திருவாழியுமாகப் புறப்பட்டாற்போலே அன்றோ நான், கையும் மடலுமாகப் புறப்பட்டால் இருப்பது என்பாள்
இரண்டும் அமோகம் -வீணாகாதே –ஈஸ்வரத்வம் திரு ஆழி காட்டும் –
பிரணயித்வம் மடல் காட்டுமே – தேஜோ கரம் இரண்டும் இருவருக்கும்

ஆழி அம் கைப் பிரான்’
என்கிறாள். நான் கையும் மடலுமாகப் புறப்பட்டால், அஞ்சி எதிரே வந்து தன்கையில்
ஆபரணத்தை வாங்கி என் கையிலே இட்டு, தன் தோளில் மாலையை வாங்கி என் தோளிலே இட்டானாகில் குடி இருக்கிறான்;
இல்லையாகில் எல்லாங்கூட இல்லை யாகின்றன. -உபய ஸ்வரூபமும் அழியும் என்றவாறு –
ஆபரணம் என்பதால் இங்கு ஆழி -மோதிரம் என்றபடி -திவ்யாயுதமும் திவ்யாபரணம் தானே அநு கூலர்களுக்கு –
என் தோளில் மாலையைப் பாராய், நான் செவ்வி மாலை சூட வேணுங்காண் என்பாள் ‘பிரானுடைத் தூ மடல்’ என்கிறாள்.
விரஹத்தாலே தன் மார்பின் மாலை சருகாய் அன்றோ கிடக்கிறது, செவ்வி மாலை உள்ளது அவன் பக்கலிலே அன்றோ.
நன்று; ஒன்றைச் சொல்லுகிறாயாகில் செய்து தலைக் கட்டப் புகுகிறாயோ,
உன் பெண் தன்மை உன்னைக் காற்கட்டுங்காண் என்ன,

யா மடம் இன்றி-
அதுவோ! பெண் தன்மை இல்லாதார் -ஸ்வ தந்த்ரர்-செய்யுமதனை முதலிலே செய்யக் கடவோம்.

தெருவு தோறு-
“உலகு தோறு அலர் தூற்றி” என்றாளே கீழே; அங்ஙனம் உலகமாகத் திரண்டிருக்க உலகத்திற்காக ஒரு
வார்த்தை சொல்லி விடுவேனோ, தெருவுகள் தோறும் புக்கு, அறியாதார் எல்லாரும் அறியும்படி அலர் தூற்றக் கடவேன்.
கிருஹ அர்ச்சனைகள் அர்ச்சக பராதீனம்’ என்று ஒரு மூலையிலே புக்கு இருக்க ஒட்டுவேனோ.
அர்ச்சை பிராவண்யமும் அழிப்பேன் என்றபடி –

1-வேற்றுப் பெண்கள் நாக்குப் புரளாத படியான பழிகளை எல்லாம் சொல்ல.
சிசுபாலன் முதலானார் வாயில் கேளாதவற்றை எல்லாம் என் வாயிலே கேட்க அன்றோ புகுகிறான்.
அன்றிக்கே,
2-அவர்கள் நா, மீளாமல் உருவப் பழி சொன்ன படியே இருக்கும் படியான பழிகளைத் தூற்ற என்றுமாம்.
அன்றிக்கே,
3-நாம் தங்களுக்கு அடங்காமல் மடல்கொண்டு புறப்பட்ட பழியைத் தூற்ற என்னலுமாம்.

நாடும் இரைக்கவே –
அவன் என்னுடைய ஊரவர் கவ்வை நீக்கிலனாகில், நான், தன்னை நாடாக இரைக்கும்படி பண்ணுகிறேன். என்றது,
உலகமெல்லாம் கலங்கும்படி செய்கிறேன்.
ஒருத்தி ஒருவனைப் படுத்திற்றே! ஒருவன் முகங்காட்டிற்றிலன்’ என்னும்படி செய்கிறேன் என்றபடி.
அவனைப் பற்றி அறிவிக்கும் வாக்கியங்களும் அவனை அடையும் சாதனங்களைப் பற்றி அறிவிக்கும் வாக்கியங்களும்
எல்லாம் அழிய அன்றோ புகுகின்றன;
நாராயணன் பரதத்வம் பர ஜோதிஸ் வாக்யங்கள் -அழிக்கப் பார்க்கிறாள் –
நிதித்யாசி தவ்ய -உபாசன பரமான வாக்யங்கள் அழிக்கப் பார்க்கிறாள் –
ஒருவன் உளனாகில் ஆசைப் பட்டவள் இப்படிப் பட இருக்குமோ ஆன பின்னர் நிரீஸ்வரங்காண் உலகம்’ என்னும்படி செய்கிறேன்.
அவனோடே கலந்த என் வார்த்தை ஒழிய, -அடி இல்லாத வேதம் சொன்ன வார்த்தைகளைக் கேட்பர்களோ?
பிரமேய சிரேஷ்டமானத்தை அழித்தேன், இனிப் பிரமாண சிரேஷ்டமானது தானே நில்லாதே அன்றோ.
ஆசைப் பட்டார்க்குப் பலம் இதுவான பின்பு இனி உபாசனத்துக்குப் பலம் இல்லை’ என்று கை வாங்கி
நாஸ்திகராம்படி உலகினரனைவரையும் செய்கிறேன்.

நாடும் இரைக்க யாம் மடல் ஊர்ந்தும்-
நாட்டார் சொல்லும் பழி தானே தாரகமே அன்றோ. “ஊரவர் கவ்வை எருவாக” என்றாளே,
அதிலே அன்றோ வேர் ஊன்றித் தரிப்பது.
அயல் தையலார்—நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே—அதுவே தாரகம்

———————————————————————————-

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11-

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை-அலை எரிந்து இரைக்கும் சப்திக்கும்
அபி வ்ருத்தமான நிறம் இவனைப் போலவே –
அழகை ஆஸ்ரிதற்கு அனுபவிப்பிக்கும் ஸ்வ பாவன்
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன-பரிமளம் மிக்க சோலை -சர்வ கந்தன் வந்ததால் ஆகுமே
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்-பா இனங்கள் நிறைந்த அந்தாதி –
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.-மடல் எடுக்காமல் -ஆழ்வார் பெற்ற பலன் கிட்டுமே
வைகுண்ட நாதன் கிட்டே வருவதால் இருந்த தேசமே பரம பதம்
சப்த மாத்ர உச்சாரணம் செய்ய வல்லார்களுக்கு -ஆனந்தாவஹமாக இருக்குமே –

ஒலிக்கின்ற கரிய கடல் போன்ற நிறத்தை யுடையவனான கண்ணபிரானை, வாசனை பொருந்திய சோலைகளால் சூழப்பட்ட திருக் குருகூரில்
அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச் செய்த நிரை நிரையாக அமைந்திருக்கின்ற அந்தாதியான ஒப்பற்ற ஆயிரம் திருப் பாசுரங்களுள் இப்பத்துத்
திருப் பாசுரங்களையும் சொல்ல வல்லவர்களுக்குத் தாங்கள் தாங்கள் இருக்கின்ற ஊர்கள் எல்லாம் வைகுந்த மா நகரமேயாகும் என்றவாறு.
இரைத்தல் – ஒலித்தல். விரை – வாசனை. நிரை-வரிசை. அந்தாதி-முதற்செய்யுளின் அந்தமானது,
அடுத்த செய்யுளின் ஆதியில் அமையும்படி பாடுவது.
அந்தம்-ஈறு. ஆதி-முதல். “அந்தம் முதலாகத் தொடுப்பது அந்தாதி” என்பது, இலக்கணம்.
வைகுந்தம் – அழிவில்லாதது; பரமபதம்.

இந்தத் திருவாய்மொழி கற்க வல்லார்கள் இருந்த தேசத்தே அவ் வெம்பெருமான் தானே வந்து எப்பொழுதும் சேர்ந்திருப்பான் என்கிறார்.

இரைக்கும் கருங்கடல் வண்ணன் –
அனந்தாழ்வான் பணித்தாராக நஞ்சீயர் வந்து பட்டரிடத்தில்
“‘வில்லைக் கொண்டு வா, ஆசீவிஷத்திற்கு ஒத்த பாணங்களையும் கொண்டு வா’ என்றபோது
கடல் கீழ் மண் கொண்டு மேல் மண் எறிந்தாற் போலே யாயிற்று, இவள் ‘மடல் ஊர்வன்’ என்ற துணிவைக் கேட்டு
அவன் தன் சர்வாதிகத்வம் கலங்கினபடி” என்று அருளிச் செய்தார்.

வண்ணன்-
ஸ்வபாவத்தை யுடையவன் என்றபடி.
இரைக்குங் கருங்கடல் வண்ணன் –
ஓதம் கிளர்ந்த கடல் போலே சிரமஹரமான வடிவை யுடையவன்.
மடல் ஊர்ந்தாகிலும் பெற வேண்டும்படியான வடிவைச் சொன்ன படி.

வண்ணன் –
வடிவையுடையவன்.

கண்ணபிரான் தன்னை –
அவ் வடிவை, அவதரித்து எனக்கு உபகரித்த கிருஷ்ணனை. வடிவழகு இது. ஸ்வாபாவம் இது. இங்ஙனம் இருக்க
நான் மடல் ஊராது ஒழிவது எங்ஙனயோ?

விரைக் கொள் பொழில் குருகூர் –
இவர் கையும் மடலுமாகப் புறப்பட்டவாறே ‘அவன் வரவு அணித்து’ என்று ஊரானது உண்டான பரிமளத்தால் –
சஞ்சாத பரிமளம் -நிறைவு பெற்றபடி.

நிரைக் கொள் அந்தாதி –
இவர் முன்னடி தோற்றாதே மடல் ஊரச் செய்தேயும், பிரபந்தமானது,
எழுத்தும் அசையும் சொல்லும் பொருளும் அடியும் தொடையும் பாவும் இசையும் தாளமும் அந்தாதியும்-பத்தும் பத்தாக — சேர விழுந்தபடி.
இவர் முன்னடி தோற்றாதபடி கலங்கிச் சொல்லச் செய்தேயும் பகவானுடைய திருவருள் காரணமாகப் பிறந்த பிரபந்தம் ஆகையாலே,
இலக்கணங்கள் ஒருசேர விழத் தட்டு இல்லையே அன்றோ.
“சுலோகத்திற்குரிய எல்லா இலக்கணங்களும் அமைந்த ஸ்ரீ ராமாயணமானது சோகத்திற்குப் பின்பு சொல்லப்பட்ட காரணத்தால்
சோக வேகத்தால் சொல்லியதாம்” என்கிறபடியே, சோக வேகத்தால் சொல்லச் செய்தேயும் பிரஹ்மாவினுடைய
திருவருளால் எல்லா இலக்கணங்களோடு கூடி இருந்தாற்போலே.

உரைக்க வல்லார்க்கு –
மடல் எடுக்க வேண்டா, இப்பாசுர மாத்திரத்தைச் சொல்ல அமையும்.

தம் ஊர் எல்லாம் வைகுந்தமாகும் –
அவர்களுக்கு உத்தேசிய பூமி பரமபதமாம்.
அன்றிக்கே,
நாடு அறிய மடல் எடுத்துக் கொண்டு இவர்கள் புறப்பட வேண்டாமல், இவர்கள் இருந்த இடங்களிலே
அவன்தானே வந்து எப்பொழுதும் சேர்ந்தே இருக்கையாலே, இவர்கள் இருந்த இடம் தானே பரம பதமாம் என்னுதல்.
அவன் சந்நிதி உள்ள இடம் ஸ்ரீ வைகுண்டமாகக் குறை இல்லை அன்றோ.
இப் பாசுரங்களைச் சொன்ன அளவிலே இது கூடுமோ? என்ன ஒண்ணாது;
இப் பாசுரங்களில் சொல்லுகிற பகவானுடைய குணங்களைப் பார்த்தால், ‘இந்த வார்த்தை தானும் மிகை’ என்னலாம்படி இருக்கும்;
இது கூடாதாகில், பரிபூர்ண சமாஸ்ரயணத்துக்கும் பலம் இல்லையாம்;
இங்ஙன் அன்றாகில், புருடோத்தமன் இதர சஜாதீயன் ஆனான் ஆமே

—————————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

பூர்வ அனு சம்ஹித மநோ ஹர சௌரே மூர்த்தி
சம்ச்லேஷ லோல ஹிருதய தஸ் அலாப கிண்ண
ஹ்ருதய லாபே ஸூய யத்னம் அபி கர்த்தும் –
இத்யேஷூ தூக்காது பார்யா தசாயாஞ்ச

பூர்வ அனு சம்ஹித மநோ ஹர சௌரே மூர்த்தி -மலியும் சுடர் ஒளி மூர்த்தி அன்றோ
சம்ச்லேஷ லோல ஹிருதய தஸ் அலாப –மா லோலன்
லாபே ஸூய யத்னம் அபி கர்த்தும் -உபாயாந்தாராம் பற்றி அறியாத ஆழ்வாரோ என்னில் –
அபி சப்தம் இத்யேஷூ தூக்காது பார்யா தசாயாஞ்ச -பார்யா தசையில் மடல்

———————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

ஜோதிர் உபாங்க கத்வாத் சரசிஜ நயன அநிஷ்ட
வித்வம்ச கத்வாத் ஸ்ரீ தசரசித தயா உத்கிருஷ்ட
சௌலப்ய யோகாத் ரஷாயாம் சாவயதானாத்
சுபகத தனு சோபகார அஸ்த்ர வஸ்த்ரத்வாத்–

1-ஜோதிர் உபாங்க கத்வாத் –மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை-ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை

2-சரசிஜ நயன –என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்

3–அநிஷ்ட வித்வம்ச கத்வாத் –ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை சார்ந்து சுவைத்த
செவ் வாயன் என்னை நிறை கொண்டான்

4-5–ஆஸ்ரித தயா –பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன்–என்றும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும்-என்றும் அருளிச் செய்கையாலே

6-உத்கிருஷ்ட சௌலப்ய யோகாத் –வண் துவராபதி மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே-

7–ரஷாயாம் சாவயதானாத் –அலை கடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்

8-சுபகத தனு –தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானை

9-சோபகார –சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான்

10-அஸ்த்ர வஸ்த்ரத்வாத்–ஆழி அங்கைப் பிரானுடைத் தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்

ஸூ ஆஸ்ரிதற்கு -அதி பிரேமம் உண்டாக்கி -ஆஸ்ரிதர் -தப்பாகிலும் அடைய யத்னம் பண்ணும்படி செய்து அருளுபவன் —

———————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 43-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

மாசறு சோதிக் கண்ணன் வந்து கலவாமையால்
ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல் -ஏசறவே
மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்
உள் நடுங்கத் தான் பிறந்த ஊர்———-43-

————————————————————–

அவதாரிகை –

இதில்
கீழ் -5-2-பிரஸ்துதமான வடிவு அழகை அனுபவிக்கப் பெறாமல்
மடல் எடுக்கிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
இப்படி இவர் பிறரைத் திருத்தி-4-10-
அவர்களுக்கு மங்களா சாசனம் பண்ணி கை ஒழிந்த பின்பு-5-2-
மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் -என்று
அவன் சௌந்தர்யாதிகளை அனுசந்தித்து
பழைய தம் இழவு-ஏறாளும் இறையோன் இழவு- 4-8- தலை எடுத்து
வழி அல்லா வழியில் இழிந்து
இரண்டு தலையையும் அழித்தாகிலும் அவனோடு கலக்கக் கடவோம்
என்று ப்ராப்ய ருசி பாரவச்யத்தாலே
முன்னாடி தோற்றாமல் கண் கலங்கிச் செல்லும்
தம் தசா விசேஷத்தை
அவனோடு கலந்து பிரிந்து
ஆற்றாமையாலே கண்ணான் சுழலை இட்டு
நாடாகப் பழி சொல்லும்படி
அவனுக்கு அவத்யம் விளைவித்து
என்று மடலூருகையில் ஒருப்பட்டு சொல்லுகிறாள்
ஒரு பிராட்டி பேச்சாலே அருளிச் செய்கிற
மாசறு சோதி- யில் அர்த்தத்தை
மாசறு சோதி கண்ணன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-

———————————————————

வியாக்யானம்–

மாசறு சோதிக் கண்ணன் வந்து கலவாமையால் ஆசை மிகுந்து –
மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் -என்றும்
என் செய்ய வாய் -மாசறு சோதி -மணிக்குன்றம் -என்றும்
எம் கண்ணன் -என்றும்
சொல்லும் படி அத்யாகர்ஷகமான வடிவைக் கொண்ட கிருஷ்ணன்
தன் ஸ்வரூபத்துக்கு சேர தானே மேல் விழுந்து வந்து
அநுபவிப்பியாமையாலே
அபி நிவேசம் அதிசயத்து -அதாவது –

பாசறவெய்தி -என்றும்
என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப்பூர்ந்த -என்றும்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி யோர் சொல்லிலேன் -என்றும்
காதல் கடல் புரைய விளைத்த -என்றும்
கொடிய வன்னெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -என்றும்
மணி வண்ணன் வாசுதேவன் வலை யுள் அகப்பட்டேன் -என்றும்
தலையில் வணங்க வுமாம் கொலோ -என்றும்
எந்நாள் கொலோ யாம் உறுகின்றது -என்றும்
அருளிச் செய்தவை -என்கை –

இப்படி ஆசை அதிசயிக்கையாலே –
பழிக்கு அஞ்சாமல் –
ஊரார் தாயார் தொடக்கமானவர்
இவள் மடலூர ஒருப்படுகிற தசையைக் கண்டு
இது குடிப் பழியாய்த் தலைக் கட்டும் என்று நிஷேதிக்க
ஏவம் விதமான பழிக்கு பணைக்குமவள் ஆகையாலே
அஞ்சாதே –
அப் பழிச் சொல்லே தாரகமாக
அதாவது –
சீதே தஸ்மாத் துக்கம் அதோ வநம் -என்று வனத்தை நிஷேதித்து அருளிச் செய்ய
அக்ரதஸ் தேக மிஷ்யாமி -என்றும்
யான சக்யா புரா த்ரஷ்டும் போதை ராகாசகை ரபி
தாமத்ய சீதாம் பஸ்யந்தி ராஜ மார்க்க கதா ஜனா -என்றும் சொல்லுகிறபடியே
ஊரவர் கவ்வை தோழி என் செய்யும் -என்றும்
என் செய்யும் ஊரவர் கவ்வை தோழி இனி நம்மை -என்றும் –
தீர்ந்த என் தோழி என் செய்யும் ஊரவர் கவவையே -என்றும்
ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னை சொல் நீர் மடுத்து -என்றும்
அன்னை என் செய்யுமே -என்றும்
அன்னை என் செய்யில் என் – ஊர் என் சொல்லில் என் தோழிமீர் -என்றும்
அவர்கள் நிஷேத வசனங்களை ஒரு சரக்கு அறச் சொன்னவை -என்கை –

பழிக்கு அஞ்சாமல் ஏசறவே –
அபவாத பீதி இன்றிக்கே ஏசும் எல்லை கடந்து
அன்றிக்கே
எல்லாரும் துக்கிக்க -என்றுமாம் –
அன்றிக்கே
ஏசவே -என்ற பாடமான போது
பழி சொல்லவும் சொல்லி-ஏச என்று ஆகவுமாம்-

மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான் உள் நடுங்கத் தான் பிறந்த ஊர் –
அதாவது
குதிரியாய் மடலூர்துமே -என்றும்
நாடுமிரைக்கவே –யாம் மடலூர்ந்தும் -என்றும்
ஜகத் ஷோபம் பிறக்கும்படி
இஜ் ஜகத்திலே மடலூர ஆழ்வார் ஒருப்பட்டார்
தாம் அவதரித்த இவ் ஊரில் உள்ளார்
இச்சாஹாச பிரவ்ருதியைக் கண்டு ஹ்ருதயம் கம்பிக்கும்படியாக-கம்பனம் -நடுக்கம் –
இப்படி உத்யோகித்த இது ஏதாய் விளைகிறதோ -என்று
தாமும் அவ் ஊரில் அவதரித்தவர் ஆகையாலே
இவரும் தளும்புகிறார்-

——————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -110- திருவாய்மொழி – -5-3-1….5-3-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

June 6, 2016

மலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் தன்னை” என்று,
வடிவழகையும் குணங்களையும் சௌலப்யத்தையும் அநுசந்தித்தார்; இப்படி அநுசந்தித்து,
கண்ணன் தன்னை-சுலபனுமாய் –மாயப்பிரான் தன்னை-ஆச்சரியமான குணங்களையும் செயல்களை யுமுடையவனுமாய்
அவை இல்லையே யாகிலும் விட ஒண்ணாத
மலியும் சுடரொளி மூர்த்தி தன்னை-வடிவழகை யுமுடையனான இவனோடு தன்னை-மெய் யுறு புணர்ச்சியை விரும்பி
அவனை அணைக்கக் கோலிக் கையை நீட்ட,
அவன் அகப் படாமல் கை கழிந்து நிற்க, அதனாலே கலங்கி —
ஒரு பிராட்டி தசையை அடைந்து மடல் எடுக்கையிலே புகுகிறார் இத் திருவாய் மொழியில்.

மடல் எடுக்கையாவது,வைக்கோல் போர் சுட்டுப் பொறி கொறிக்கையைப் போன்றது ஒன்றாம். —
பிரயத்தனம் அதிகம் -பலம் கிஞ்சித் -என்றவாறு —
தூதர்களை விட்டு பதிலுக்கு எதிர் பார்த்தல் போன்றவை – போர் சுட்டுப் பொறி கொறிக்கையைப் போன்றது –
‘அநீதி செய்யாதே கொள்ளுங்கோள்’ என்று பிறரைத் திருத்தினவர்,
‘நீர் செய்யப் பார்க்கிற இது அநீதி, அதனைத் தவிரும்’ என்று- பிறர் திருத்தவும் திருந்தாதபடி ஆனார்.
பகவத் விஷயத்தில் பிரவணர் -ஈடுபடும் படியாகப் பிறரைத் திருத்துகிற இவரை,
‘பகவானிடத்தில் பிரவணர் ஈடுபாடு ஆகாது’ என்று திருத்தப் பார்த்தால் திருந்தாரே அன்றோ.

அன்றிக்கே, “ஏறாளும் இறையோனும்’ –4-8–என்று திருவாய்மொழியில்,
அவனுக்கு உறுப்பு அல்லாத யானும் என்னுடைமையும் வேண்டா என்று
அலாபத்தாலே கூப்பிடும் தம்மோடு ஒக்கக் கூப்பிடுகைக்குத் துணை தேடி உலக ஒழுக்கத்தை நினைத்த இடத்து,
தாம் பகவத் விஷயத்திலே ஈடுபாடுடையவராய் இருக்குமாறு போலே
அவர்கள் இதர விஷயங்களிலே ஈடுபாடுடையவராய் இருக்கிறபடியைக் கண்டு,
அவர்கள் கேட்டிற்கு நொந்து நண்ணாதார்-4-9-
-அவர்களுக்குப் பகவானுடைய பரத்துவத்தை எடுத்துக் கூறித் திருத்தி,–ஒன்றும் தேவும் –4-10-
‘இவர்களிலே ஒருவனாக இருக்கிற என்னை, இவர்களையும் திருத்தும்படி ஆக்குவதே சர்வேச்வரன்!’ என்று
அவன் தமக்குச் செய்த உபகாரத்தை நினைத்து,–கையார் சக்கரத்து–5-1-
தாம் திருத்தத் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களாசாசனம் செய்து,–பொலிக–5-2-
இப்படிப் பிறருடைய நலத்துக்கு வேண்டுவன எல்லாம் செய்து கை ஒழிந்த பின்பு பழைய தம் இழவே தலை எடுத்து,
(இப்படி சங்கதி ஐம்பது பாசுரத்துக்கும் –
இதில் ஆற்றாமை கரை புரண்டு -இதற்கு தான் அவன் கிருஷி பண்ணுகிறான் )
‘வழி அல்லா வழியே யாகிலும் கிட்டுமத்தனை’ என்னும் படியான விடாய் பிறந்து மடல் எடுக்கையிலே
ஒருப் பட்டுப் பேசுகிறார் இத் திருவாய் மொழியில் என்னுதல்.

ஒவ்வொரு விஷயத்திலே ஒவ்வொருவருக்குப் பற்று உண்டானால் அவ் விஷயங்கள் கிடையாவிட்டால்
‘அவற்றை அப்போதே பெற வேணும்’ என்னும்படியான மனோ வேகம் பிறந்தால், பின்பு அவ் விஷயங்கள் இருந்த இடங்களிலே
புகை சூழ்ந்து புறப்பட வேண்டி இருப்பது ஒரு சாகசத்தைச் செய்து புறப்பட விடுவித்து முகத்திலே விழிப்பாரைப் போலே,
‘அத் தலைக்குப் பழியை விளைத்தாகிலும் முகத்திலே விழிக்கு மத்தனை’ என்று சாகசத்திலே ஒருப்பட்டு,
தனக்கு இவ்வளவாகப் பிறந்த நிலையை அந்யாப தேசத்தாலே பேசுகிறார்.

அபிமத விஷயத்தைப் பிரிந்து ஆற்ற மாட்டாதார் மடல் எடுக்கக் கடவர்கள்’ என்று ஒன்று உண்டு தமிழர் சொல்லிப் போருவது.
அதாவது, “ஒத்த சீலம் வயது ஒழுக்கம் உடையவளை” என்கிறபடியே,
சீலத்தாலும் வயதாலும் குடிப்பிறப்பாலும் வடிவழகாலும் செல்வத்தாலும் குறைவற்று இருப்பவர்களான இருவர்,
அவர்களில் ‘அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடி’ என்பன போன்று சொல்லுகிற நாயகனுடைய லக்ஷணங்கள் நாயகனும் உடையவனாய்,
‘நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு’ என்பன போன்று சொல்லுகிற நாயகியுடைய லக்ஷணங்கள் நாயகியும் உடையவளாய்,
இப்படி இருவரும் குறைவற்று, இவர்கள் தாமும் தக்க யௌவனப் பருவத்தை யுடையவர்களுமாய் இருக்க;
திராவிட லஷணம் –அறிவு -வேண்டியவற்றை வேண்டிய காலத்தில் அறிதல் சம்யஞ்ஞானம்–நிறைவு -ஐஸ்வர்ய பூர்த்தி
ஓர்ப்பு -நிரூபண சாமர்த்தியம் –கடைப்பிடி -ஸ்வீகரித்த விஷயத்தில் யாவதாத்மாபாவி உறுதியாய் இருக்கை -வ்ரதம் மம என்பவன் –

இவர்களைப் புறம்பே கூட்டுவார் ஒருவரும் இன்றிக்கே இருக்க, இவனும் தெய்வாதீனமாக ‘வேட்டைக்கு’ என்று புறப்பட,
இவளும் ‘பூக் கொய்து விளையாட’ என்று உத்தியானத்திற்குப் புறப்பட, அவ் விடத்திலே தெய்வம் கூட்டுவிக்க
இருவர்க்கும் கண் கலவி உண்டாக, சிலர் காரணமாக வந்த கலவி அல்லாமையாலே பிரிவோடே முடிவுற்றுப் பிரிய,
குணாதிகர்களாகையாலே இருவர்க்கும் ஆற்றாமை விஞ்சி, ஒருவரை ஒழிய ஒருவர்க்குச் செல்லாமை பிறக்க,
இரண்டு தலையையும் அழித்தாகிலும் பெறப் பார்ப்பது.

ஸ்வாபதேசம்
வேட்டைக்கு -ராவணாதிகளை நிரசிக்கை -ராம கிருஷ்ணனாக அவதரிக்கை -வேட்டையாடி வருவானை பிருந்தாவனத்தில் கண்டேனே –
பூ கொய்ய –என்பது விஷய பிரவணர் ஆவது -அல்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று
தோட்டம் -பெய்த கா -லீலா விபூதி
தெய்வம் கூட்டுவிக்க என்றது -யாத்ருச்சிக்க தெய்வ கடாஷம் -ஸூஹ்ருதம்
தோழிமார் -தூர்த்தர் உடன் இசைந்தோம் -விஷய ப்ரவண சஹகாரிகள்-
கண் கலவி -காந்தர்வ விவாகம்
காந்தர்வ விவாகம் -நாசௌ புருஷகாரம் இல்லாமல் -ஸ்வா தந்த்ரம் -கடாஷம் -பட்டாலும் படும் -விட்டாலும் விடுமே –

மடல் ஊர்தல் என்பது தான், தலைவியைப் பிரிந்த ஆற்றாமையாலே தலைவன் தலைவியை ஒரு படத்திலே எழுதி,
வைத்த கண் வாங்காதே அவ் வுருவைப் பார்த்துக் கொண்டு பனை மடலைக் குதிரையாகக் கொண்டு,
தலைவியைப் பிரிந்த போது தொடங்கிக் கண்ட போக உபகரணங்கள் எல்லாம் நெருப்பினாலே கல்பிக்கப்பட்டதாகத் தோற்ற,
ஊணும் உறக்கமும் இன்றிக்கே, உடம்பிலே துளி நீரும் ஏறிட்டுக் கொள்ளாதே, தலை மயிரை விரித்துக் கொண்டு திரியா நின்றால்,
இத் தீயச் செயலைக் கண்ட அரசர் முதலானோர் ‘கெட்டோம் இவனுக்கு ஒரு பெண்ணினிடத்தில் இத் துணை அன்பு இருப்பதே!’ என்று
அவர்கள் அவனை அத் தலைவியோடு கூட்டக் கூடுதல், இல்லையாகில், இதுவே காரணமாக இரண்டு தலையிலுள்ள உறவினர்களும் கைவிட,
அலக்குப் போர் போலே ஒருவர்க்கு ஒருவர் புகலாய் அங்ஙனம் கூடுதல், தோழிமார் கூட்டக் கூடுதல், ஆற்றாமை கூட்டக் கூடுதல்,
தலைவியானவள் குணங்களால் சிறந்தவளா யிருப்பாளே யாகில் பழிக்கு அஞ்சிக் கூடக் கூடுதல், இவை இத்தனையும் இல்லை யாகில்,
முடிந்து போதல் செய்கையாகிற சாகசமானதொரு தொழில் விசேடமாயிற்று.

இது தன்னை, “கடலன்ன காமத்த ராகிலும் மாதர், மடலூரார் மற்றையார் மேல்” என்று உயிரின் அளவல்லாதபடி
ஆற்றாமை கரை புரண்டாலும் பெண்கள் மடல் ஊரக் கடவர்கள் அல்லர்;
நாயகன் தன் ஆற்றாமையாலே மடல் எடுக்க உலகின் மேல் வைத்துச் சொல்லுவான்,
பின் ‘நான் வரை பாயப் புகா நின்றேன், மடல் எடுக்கப் புகா நின்றேன்’ என்று தோழிக்கு வந்து அறிவிப்பான்,
அறிவித்த பின்னரும் அவள் கூட்டிற்றிலளாகில் பின்பு அவன் இது செய்யக் கடவன்; இத்தனை அல்லது,
பெண்கள் மடல் எடுக்கக் கடவர்கள் அல்லர் என்று இங்ஙனே ஒரு மரியாதை கட்டினார்கள் தமிழர்கள்-
கடலன்ன காமத்த ராயினும் பெண்டிர் மடலேறார் மைந்தர் மேல் என்ப – மடலூர்தல்
காட்டுகேன் வம்மின் கலிவஞ்சி யார் கோமான் வேட்டமா மேற் கொண்ட போழ்து–என்பது, நச்சினார்க்கினியர்
“கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்.” என்பது, திருக் குறள்.

இங்கு அங்ஙன் அன்றிக்கே, பிராட்டி தான் மடல் எடுப்பதாக இரா நின்றது;
தமிழர் ‘பெண்கள் மடல் எடுக்கக் கடவர் அல்லர்’ என்று சொன்ன இது, சேரும்படி என்? என்னில்,
அவர்கள் ஒரு தலையிலே தான் அதனை இசைந்தார்களே, அப்படி இசைகைக்குக் காரணம், ஆற்றாமையே;
அவ் வாற்றாமை இருவர்க்கும் ஒத்த பின்பு ஒருவர்க்கு மாத்திரம் ஒதுக்குவார் யார்?
இதற்கு ஒரு மரியாதை கட்டுகையாவது, ஆசைக்கு ஒரு வரம்பு இட்டார்களாமித்தனை.
அப்போது பின்னை அரசர் ஆணைக்கு நிற்க வேணும், இன்றேல் வேலி யடைத்தால் நிற்க வேணும்;
ஆகையால், அவர்கள் அன்பின் தன்மையை அறிந்திலர்களாமித்தனை.
(சாஹசம் ஷாட் குணம் ப்ரோக்தம்-ஆறு மடங்கு இருக்கும் -காமம் ஆண்களை விட பெண்களுக்கு பெருத்ததாக இருக்கும்
ஆகையால் பெருமை குறைவாக இருக்க வேண்டும் -)
வரம்பு அழியவாகிலும் முகங்காட்டி வைத்துக் கொண்டு தரிக்க வேண்டும்படியாய் இருப்பது ஒரு விஷயம் புறம்பு இல்லையே;
இங்ஙனம் இருப்பார் சிலரைக் கல்பித்துக் கொண்டார்கள் இத்தனையே.
மடல் ஏறுவர் கடவுளர் வந்தால் -பரிபாடல் -ராக பிராப்தம் மடல் எடுப்பது –

இனி, இவர் தாம், “வளவேழ் உலகு” என்ற திருவாய் மொழியில், நாம் அவனோடே கலத்தலாகிற இது
அவனுக்குத் தாழ்வினை விளைவிப்பதாம், நம் பேற்றுக்காக அவனோடே கலந்து அவனுக்குத் தாழ்வினை விளைப்பதிற் காட்டில்
நாம் அகன்று முடிந்தாகிலும் அவனுக்கு அதிசயத்தைச் செய்ய அமையும் என்று இருக்குமதனோடும் சேராது;
இனி, “ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய் மொழியில், அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாவும்,
ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களும் நசித்துப் போக அமையும் என்று சொன்ன அதனோடும் சேராது;
எனக்குக் கிடைக்காத அவனும் வேண்டாம் என்கிறார் -இதில் –
ஆக, இவர் தம்
1-ஸ்வரூபத்தோடும் சேராது.
2- ஆசையற்றவர்களாய் இருப்பவர்களும் செய்வது ஒன்று அன்று.
3- ஞானாதிகராய் இருப்பவர்களும் செய்வது ஒன்று அன்று. -மூன்று சங்கை – -ஆறு சமாதானங்கள் –
ஆனால், இது இருந்தபடி என்? என்னில்,
இவற்றிற் கெல்லாம் சமாதானம், பட்டர் திரு மடல் வியாக்கியானம் அருளிச் செய்கிற போது அருளிச் செய்தருளினார்;
இங்குத்தைக்கும் வேண்டுவன சொல்ல வேணுமே அன்றோ.

ஞானத்தால் மேம்பட்டவர்களாய் இருப்பவர்கள் ஜனக குலத்தில் பிறந்தவர்களா யுள்ளவர்களுக்கு மேல் இலரே அன்றோ;
அக் குடியிலே பிறந்த பிராட்டியானவள், “எந்தப் பிராட்டி முன்பு ஆகாசத்தில் சஞ்சரிக்கின்றவைகளான பூதங்களாலும்
பார்ப்பதற்கு முடியாதவளோ அந்தப் பிராட்டியை இப்பொழுது இராஜ வீதியிலுள்ள மக்கள் எல்லாரும் பார்க்கின்றார்கள்” என்கிறபடியே,
வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திலள் -கம்பர் –
பெருமாள் காட்டிற்கு எழுந்தருளுகிற காலத்தில் “மன்னன் இராமன் பின் வைதேகி என்றுரைக்கும்,
அன்ன நடைய அணங்கு நடந்திலளே” என்கிறபடியே, அவர் பின்னே புறப்பட்டுப் போகையாலே சிஷ்டாசாரம் உண்டாயிருந்தது;
மேலும், மயர்வற மதிநலம் அருளப் பெற்ற இவர் அநுஷ்டிக்கையாலே இது தானே பிரமாணமாகத் தட்டு இல்லையே அன்றோ.
“பெரியவன் எது எதனைச் செய்கிறானோ அது அதனையே மற்ற ஜனங்களும் செய்கிறார்கள்; அந்தப் பெரியவன்
எதைப் பிரமாணமாகச் செய்கிறானோ அதனையே உலகமும் அநுசரிக்கின்றது” என்கிறபடியே,
சத்துக்களுடைய அநுஷ்டானத்தைப் பிரமாணமாகக் கொள்ளக் கடவதன்றோ.
ஆனாலும், காமம் விலக்கப்பட்டிருக்கிறதே? என்னில்,
அவை நிலை நில்லாமையாலே சிற்றின்பத்தில் காமமேயே யன்றோ விலக்கப்பட்டிருக்கிறது.
பகவத் விஷயத்தில் காமத்தை “தியானம் செய்யத்தக்கவன்” என்கிறபடியே, விதியா நின்றதே அன்றோ.
வேதாந்தங்களிலே விதிக்கப்பட்ட பக்தியை அன்றோ இங்குக் காமம் என்கிறது.
வளவேழ் உலகு”என்ற திருவாய் மொழியில், நாம் கிட்டுகை அவனுக்குத் தாழ்வினைத் தருவதாம் என்று அகன்ற இவர்,
அத் தலையை அழித்து முகங் காட்டுவித்துக் கொள்ளப் பார்க்கிற இது இவர் ஸ்வரூபத்தோடு சேருமோ? என்னவும் வேண்டா;
ஆறு சமாதானங்கள் -சொல்லி அருளுகிறார் இதற்கு மேலே
1-அங்கு அகல நினைத்ததும் அத் தலைக்கு வரும் தாழ்வினை நீக்குகைக்காக அன்றோ; தமக்கு ஆற்றாமை கரை புரண்டு இருந்தது,
‘தன்னை ஆசைப் பட்டார் பெறாமலே முடிய, முகங் காட்டாமலே இருந்தான்’ என்கிற தாழ்வினை நீக்குகைக்குச் செய்கிறாராகையாலே.
கைத் தலை சேவை ஆழ்வாருக்கு தானே -ப்ரேமம் பராங்குச நாயகிக்கு தானே -ஸ்வரூபத்துடன் சேரும் –

2-அங்கு அகன்றது ஞான காரியம்; இங்கு மேல் விழுகிறது பக்தியின் காரியம்.
இத்தனை கலங்கப் பண்ணிற்றில்லை யாகில், அத் தலையில் வைலக்ஷண்யத்துக்குத் தாழ்வாம்;
இவர் தாம் இப்படிக் கலங்கிற்றிலராகில் இவருடைய பிரேமத்துக்குத் தாழ்வாம். அவன் அருளியதும் மதி நலமே அன்றோ,
அவை படுத்துகிற பாடே அன்றோ இவை எல்லாம். மதியின் காரியம் அது; பக்தியின் காரியம் இது.

3-இனித் தான் சித்தோபாயத்தை மேற் கொண்டு அது பலியா விட்டால் ஸ்வரூபத்தை வேறு வகையாகச் செய்யுமித்தனை அன்றோ;
அவன் ஸ்வரூபம் வேறுபட்டால் இத் தலை சொல்ல வேண்டாவே அன்றோ. இத் தலையில் கர்த்தவ்யம் இல்லையாகில் அவனுக்கு
அசக்தி இல்லையாகில் நடுவில் விளம்பத்துக்குக் காரணம் என்? என்று தோற்றுமே அன்றோ.
இவர் தாம் ‘மடல் எடுக்கக் கடவேன்’ என்று துணிந்த துணிவுக்கு மேற்பட அநுஷ்டிக்க வேண்டுவது இல்லையே யன்றோ

4-குணாதிக விஷயம் ஆகையாலே. ஆற்றாமையையும் உண்டாக்கி அம்பும் தொடுக்க வேண்டும் படியான விஷயத்தை அன்றே இவர் பற்றியது.
கடலைப் பெருமாள் சரணம் புக்க இடத்தில் அக் கடல் தானாக வந்து முகங்காட்டாமையாலே நாலு மூன்று அம்பை விட,
உடம்பிலே பாதி வெந்த பின்பே யன்றோ வந்து முகங் காட்டியது; இங்கு அது வேண்டாமையாலே,
“ஓ இலக்குமணா! வில்லைக் கொண்டு வா, ஆசீ விஷத்திற்கு ஒப்பான பாணங்களைக் கொண்டு வா,
சமுத்திரத்தை வற்றச் செய்யப் போகிறேன், வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்” என்றதைப் போன்று,
‘மடல் ஊர்வேன்’ என்று அச்சம் உறுத்தி முகங் காட்டுவித்துக் கொள்ளப் பார்க்கிறார்.
தம்முடைய ஸ்வரூபத்தில் கலக்கம் தொடர்ந்து நிற்கச் செய்தேயும்
அவனுடைய குண ஞானத்தில் கலக்கம் இன்றிக்கே இருக்கிறது காணும் இவர்க்கு.
ராம பானம் விடாய் போகிறேன் பயப்படுத்தி கார்யம் போலே மடலூருவேன் அச்சுறுத்தி கார்யம் இங்கும்
(மதி -நலம் -இரண்டையும் அருளப் பெற்றார் அன்றோ-
பிரேமாதிக்யத்தால் தன் ஸ்வரூபத்தில் கலங்கி -ஞானாதிக்யத்தால் அவன் ஸ்வரூபத்தில் தெளிவுடன் இருக்கிறார் என்றபடி )

5-“ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய் மொழியில், அவனுக்கு உறுப்பு அல்லாத நானும் என்னுடைமையும் வேண்டா என்று
முடித்துக் கொள்வாய் பார்த்த இடத்தில், அது தம் கையது அன்றிக்கே, அவன் உளனாக இது அழியாததாய் இருந்தது;
இனி அத் தலையே பிடித்து வேர்ப்பற்றோடே அழிக்கப் பார்க்கிறார்; உண்டாம் போதும் அத் தலையாலே உண்டாய்,
இல்லையாம் போதும் ஒன்றும் இல்லையாம்படி அன்றோ வஸ்துவின் ஸ்வரூபந்தான் இருப்பது.
வேர்ப் பற்று -நிரூபகம் ரஷண தர்மம் -ஒளியை அளித்தால் மணி இல்லையே -மடல் எடுத்தால் நிரூபகம் அழிந்து அவனையும் அழித்தார்
இத்தை தானே 4-8 வேண்டிக் கொண்டார் -பிரமம் இருந்தால் தான் ஜீவாத்மா சத்தையா காரணம் -அப்ருதக் சித்த விசேஷணம் அன்றோ

6 “உயிரினாற் குறை இலம்” என்றார் அங்கு; இங்கு, உயிர்க்கு உயிரினால் குறை இலம் என்கிறார்.
“ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய் மொழியில், அவனுக்கு உறுப்பு அல்லாத நானும் என்னுடைமையும் வேண்டா என்றார்;
இதில், எனக்கு உறுப்பு அல்லாத அவனும் அவனுடைமையும் வேண்டா என்கிறார்.
(இங்கு ஆற்றாமை விஞ்சி இருக்கும் என்றபடி -உயிருக்கு உயிர் -பரமாத்மா தானே )
“இராவணன் மாயா சிரசைக் காட்டின போது, மற்றைய பெண்கள் மனத்தோடு படாமலே அழுமாறு போன்று,
தன் ஆற்றாமையாலே கூப்பிட்டு, சத்தையோடே இருந்தாள், இவ் வார்த்தை கேட்டபோதே முடியாதிருப்பான் என்?” என்று பட்டரைச் சிலர் கேட்க,
ஜீவனத்திற்கும் முடிதலுக்கும் நிமித்தம், ஞான அஜ்ஞானங்கள் அல்ல; அத் தலையில் சத்தையும் அது இல்லாமையும் ஆயிற்று;
அதற்கு அழிவில்லாமையாலே இருந்தாள்’ என்று அருளிச் செய்தார்.

இப்படி அத் தலையை அழித்தாகிலும் முகங் காட்டுவித்துக் கொள்ள வேண்டும்படி தமக்குப் பிறந்த நிலை விசேஷத்தை,
எம்பெருமானோடே கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி. ஆற்றாமை மீதூர்ந்திருக்கச் செய்தே இவள் தரித்திருந்த இருப்பைக் கண்டு,
தோழியானவள், ‘முன்புத்தை அளவுகள் அன்றிக்கே, இவள் தேறி இருந்தாள், அவன் வாராதிருக்க இவளுக்கு
இத்தனை தேற்றம் உண்டாம் போது, சாகசங்களிலே துணிந்தாளாக வேணும்’ என்று பார்த்து,
நீ செய்ய நினைக்கிற இது, உன் தலைமைக்கும் அவன் தலைமைக்கும் உன் மதிப்புக்கும் உன் பிறப்புக்கும் உன்னுடைய
மர்யாதைகளுக்கும் தகாது கண்டாய்’ என்ன, ‘என் ஸ்வரூபத்தை அழித்தாகிலும் மடல் எடுக்கை தவிரேன்’ என்று
துணிந்து துணிவைத் தோழிக்கு அறிவிக்க; இதனைக் கேட்டு அஞ்சி, சர்வேச்வரன், இருந்த இடத்தில் இருக்க மாட்டாமை
வந்து முகங்காட்டித் தானும் சத்தை பெற்று இவளையும் தரிப்பித்தானாய்த் தலைக் கட்டுகிறது.
(அடியேன் சொல்லாமல்-யாம் மடலூர்தூம் -தலைமை நம்மாழ்வார் கூடஸ்தர் /ஆதி மூர்த்தி -அவன் தலைமைக்கும் /
நிறை கொண்டான் -உன் மதிப்பிக்கும் /குதிரியாய் மடலூர்த்தும் –உன் பிறப்புக்கும் –தகாது கண்டாய்’ -)

இவர் மடலிலே துணிந்தால் கடுக வந்து முகங்காட்டிப் பிழைக்கில் பிழைக்கு மித்தனை போக்கி,
இல்லை யாகில் சத்தை கிடக்க விரகு இல்லை அன்றோ அவனுக்கு;
(ஆழ்வார் சத்தை இருந்தால் தானே தனக்கு சத்தை என்று இருப்பானே இவன்)
பிரஹ்மாஸ்திரத்துக்குத் தப்ப ஒண்ணாதே அன்றோ அவனுக்கு.
இதற்கு முன்னர், ‘அவனாலே பேறு’ என்று போந்தாரே யாகிலும், அடையத் தக்கதான கைங்கர்யத்துக்கு முன்பு
உள்ளனவாய் இருப்பன பர பக்தி பர ஞான பரம பக்திகள் என்பன சில உளவே அன்றோ, அவை தவிர ஒண்ணாதே.
இனி, பக்திமானுக்கும் பக்தி உண்டு, பிரபந்நனுக்கும் பக்தி உண்டு, ருசியை ஒழியப் பரபத்தி பண்ணக் கூடாதே,
பக்திமானுடைய பக்தி, விதி ரூபமாய் வரும்; பிரபந்நனுடைய பக்தி, ருசி காரியமாயிருக்கும்.
(பிரபத்தி -அதிகாரி விசேஷணம் ருசி தானே பக்தி இவனுக்கு -பக்தனுக்குய சாதனம் )
பக்திமானுக்குச் சாதன ரூபமாயிருக்கும், பிரபந்நனுக்குத் தேக யாத்திரைக்கு உறுப்பாக இருக்கும்.
பக்திமானுக்குப் பலத்திலே சிரத்தை இல்லாத போது அந்தப் பக்தி தவிரலா யிருக்கும்
பிரபந்நனுக்கு ஸ்வரூபத்தோடு கூடியதாய் வருமதாகையாலே ஒரு காலும் தவிராததா யிருக்கும்.

—————————————————————————–

மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1-

இவளுடைய வியவசாயம் அறிந்த தோழி விலக்க உத்யோகிக்க -ஊரார் பழி -அவனுடைய ஆபி ரூப்யத்தில் அகப்பட்ட
என்னை பழி என்ன செய்யும்
மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை-அவயவ சோபையும் சமுதாய சோபைகள்-
மாணிக்க மலை போலே பரம போக்யமானவன்
பிரணயிதவத்தால் வந்த தாழ்ச்சியாலே—நாடியே-தேடி தேடித் போகிறேன் -நிரந்தரமாக
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே-ஆசு குற்றம் அற்ற சீல ஸ்வ பாவன்
தான் முற்பாடாக வந்து அனுபவிப்பித்த -மூர்த்தி ஸ்வாமி
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்-மேனியில் பசுமை -அழிந்து வெளுத்து காதல் நோய் வசப்பட்டு
அறிவும் இழந்து -லௌகிக ஞானம் இழந்து
பாசு -ஸ்நேஹம் -பாசம் -மிகவும் எய்து -அற எய்தி என்றுமாம்
வழி அல்லா வழியில் போகசக் கூடாது என்ற அறிவும் இழந்து
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என் செய்யுமே?-அலவலைப் பேச்சு ஆராவாரப் பேச்சு என்ன செய்யும் –

தோழீ! அழுக்கு நீங்கிய ஜோதி சொரூபமானவனும் சிவந்த வாயினையுடைய மாணிக்கமலை போன்றவனும் குற்றம் நீங்கிய
சீலத்தை யுடையவனும் காரணனா யிருக்கின்ற மூர்த்தியுமான எம்பெருமானை விரும்பியதனால், சரீரத்திலுள்ள பசுமை நிறம்
நீங்கப் பெற்று அறிவும் நீங்கி எத்தனை காலத்தேமாயினோம்; ஊராருடைய பழிச்சொல் நம்மை என் செய்யும்? என்கிறாள்.
சோதியும் குன்றமும் சீலனும் மூர்த்தியுமான எம்பெருமான் என்க. நாடி-நாடியதனால். எனை-எத்தனை.
நாளையம்-நாட்களையுடையேம். கவ்வை-ஒலி; பழிச்சொல்.
இத் திருவாய்மொழி, கலி நிலைத்துறை.

அழகாலும் சீலத்தாலும் மதிப்பாலும் பழிப்பு அற்றது ஒரு விஷயம் ஆயிற்று அது, நீ செய்யப் புகுகிற இதனால்
அவ் விஷயத்துக்குப் பழிப்பை உண்டாக்கப் புகுகிறாயே” என்று தோழி சொல்ல, நான் அவ் விஷயத்துக்குப் பழிப்பை
உண்டாக்கப் புகுகிறேன் அல்லேன், பழிப்பை அறுக்கப் புகுகின்றேன் காண் என்கிறாள்.

(அரும்பத விளக்கம்-மடல் எடுத்தால் சௌந்தர்யம் சௌசீல்யம் மதிப்புக்கு பழி யாது என்னில் –
நாயகன் -நாயகி இடம் பரம பிரணயி-சௌந்தர்யத்தை தானே மேல் விழுந்து காட்டி விட வேண்டும்
என்பதாய் இருக்க -மடல் எடுத்தால் கொத்தை யாகுமே
சீலம் -தலை தடுமாறுதல் -போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையில்-உன்ன என்னதாவி —
என்னில் முன்னம் பாரித்து என்னை முற்றம் பருகினான் –
இவள் தட்டு மாறி மடல் எடுக்க -ஸ்த்ரீத்வம்- இது கொத்தை சுசீல்யத்துக்கு
மதிப்பு காரணத்வம் -ஸ்ருஷ்டித்ததே தன்னை அடைய -கொடுக்காமல் மடல் எடுத்ததால் -கொத்தை வருமே
மடல் எடுத்து மூன்றுக்கும் கொத்தை என்றபடி )

மாசு அவனுக்கு அறுத்தது இவள் மடல் எடுத்ததால்
அறும் பிரகாரம் -சர்வ பிரகார விலஷணையாய் இருப்பவளே மடல் எடுத்ததால் -அவன் அழகு பிரசித்தம் ஆகுமே –
மடல் எடுக்க தொடங்கின உடனே அவன் முகம் காட்டுவானே -நாட்டார் -தவிக்க விடாமல் பெருமை பாராமல் வந்தானே
என்பார்களே -இத்தால் சௌசீல்யம் பிரசித்தம் ஆகுமே
இதே போலே அவன் சுசீல்யமும் காரணத்வ பிரயுக்தமான மதிப்பும் அபரிச்சின்னம் என்று தெரியுமே
நாரீனாம் உத்தமி இவள் என்பவள் பிரபன்ன ஜட கூடஸ்தர் -படைத்தவன் -சர்வாதிக வஸ்துவாக
இருக்க வேண்டும் -மதிப்பும் தோற்றுமே

சோதி உடையவர் மேல் மடல் எடுத்தேன் -மடல் எடுத்ததால் அழகு பெற்றார் -இரண்டு நிர்வாகங்கள் –

மாசு அறு சோதி-
கலந்து பிரிந்தவள் ஆற்றாமை இன்றிக்கே மர்யாதைகளை நோக்கிக் கொண்டிருத்தலானது அத் தலைக்குத் தாழ்வு போலே காணும்;
பிரிந்தால், இப்படிச் செய்யாத அன்று குற்றமே அன்றோ அழகிற்கு.
நான் என்னுடைய மர்யாதைகளைக் குலைத்தாகிலும்
கெடுவாய், அவ் வடிவு குற்றங்கட்கு எல்லாம் எதிர்த் தட்டானது காண். -சோதி -ஒளி பெருமை வடிவு அர்த்தங்கள் உண்டே –
ஆதலால், நான் மடல் எடாது இருக்கை அவ் வடிவிற்குக் குற்றத்தை உண்டாக்குகை காண்.
‘அவன் அவ் வடிவை உகந்தார்க்குக் கொடான்’ என்னும் பழியைத் துடைக்கக் காண் நான் பார்ப்பது;
“பக்தர்களுக்காகவே என்கிற உடம்பைத் ‘தனக்கு’ என்று இருக்கையாகிற இது அவ் வடிவிற்குக் குற்றமே அன்றோ.
‘மடல் எடுத்தல் மாசு’ என்று இருக்கிறாள் தோழி; ‘மடல் எடாது ஒழிகை மாசு’ என்று இருக்கிறாள் இவள்.
பிரிவில் இப்படி ஆற்றாமை விளையாதாகில் நாம் காண்கிற விஷயங்களைப் போன்றது ஆகுமே.
வடிவிலே அணைந்தவள் ஆகையாலே முற்பட வடிவிலே -சௌந்தர்யத்தில் முதலில் -மண்டுகிறாள்.
அன்றிக்கே,
மேல், ‘ஆசு அறு சீலனை’ என்னா நிற்கச் செய்தே, குணத்திலும் விக்கிரஹம் மனக் கவர்ச்சியைச் செய்கையாலே
‘மாசு அறு சோதி’ என்று முற்பட வடிவழகைச் சொல்லுகிறாள் என்னுதல். -ஐயப்பாடு அறுத்த அழகனூர் அரங்கன் அன்றோ –
நான் மடல் எடுக்க நினைத்த அளவிலே மாசு அற்று வருகிறபடி பாராய் என்கிறாள்.
(தோழி பார்த்து கொண்டு இருக்கவே பாராய் -உன் சங்கை -மடல் எடுத்த படியால் மாசறு சோதி –
நேற்று வரை சோதி -இன்று தான் இப்படி -குறை நீங்கிற்று இப்பொழுது தான் )

என் செய்ய வாய்-
அவாக்யநாதர:” என்கிறபடியே, வேறுபாடு இல்லாமல் இருக்கக் கூடிய பரம் பொருள், என்னோடே கலந்து அதனால் வந்த
பிரீதிக்குப் போக்கு விட்டுப் புன் முறுவல் செய்து வேறுபாட்டினை அடையக் கூடிய பொருள் போலே வேறுபட்டவன் ஆகா நிற்க,
நான் அவனைப் பிரிந்து வேறுபடாதவளாய் இருக்கவோ.
ஒரு வார்த்தை சொல்லக் கூடியவன் அன்றிக்கே, முகம் பார்த்து வார்த்தை சொல்லுகைக்குத் தன்னோடு ஒப்பது ஒரு
வேறு பொருள் இல்லாமையாலே அநாதரித் திருக்குமவன். ‘கர்மங் காரணமாக வருகின்ற வேறுபாடு இல்லை’ என்ற இத்தனை போக்கி,
அடியார்களோடு கலத்தலாலும் பிரிதலாலும் வருகின்ற வேறுபாடு இல்லை எனில், ஒரு சேதனனோடு கலந்தது அன்றிக்கே ஒழியுமே அன்றோ.
பண்டு ஸ்மிதம் –
ராஜ சூயை யாகத்தில் ஊர் பூசல் -த்ரௌபதி சிரித்ததால் மகா பாரதம் -இவன் ஸ்மிதத்தால் இவள் மடல் எடுக்கிறாள்
அவன் கலந்த போது செய்த புன் முறுவல் அன்றோ என்னை மறைவு அற்ற வழியாகிய மடல் எடுக்கையிலே மூட்டிற்று.
சம்சாரி முத்தன் ஆவானே ஆனால் அவனுக்குப் பிறக்கும் உவகை போலே காணும் இத் தலையைப் பெற்று
அவன் புன் முறுவல் பூத்து நின்ற நிலை
மலர் புரையும்-தளிர் புரையும் திருவடி -கிருபையால் விகாரம்

என் செய்ய வாய் மணிக் குன்றத்தை-
இவளுடனே கலந்ததனால் உண்டான பிரீதியாலே புன்முறுவல் பூத்து வடிவிலே வேறுபாடு தோற்ற நின்ற நிலை ஆயிற்று
இவளைக் கையும் மடலுமாம்படி தொட்டு விட்டது. வாய்க் கரையிலே நின்று மடல் எடுக்கிறாள்;
கழுத்துக்கு மேலே அன்றோ இவள் மடல் எடுக்கப் பார்க்கிறது.-மனஸ் சஹாயம் இல்லாமல் –
மணிக் குன்றத்தை –
மாணிக்க மலை போன்று இனியன் ஆனவனை.-மணிக் குன்ற பெருமாள் -தஞ்சை மூன்று கோயில்களில் ஓன்று –
அதாவது, ‘கழுத்துக்கு மேலே அன்றிக்கே, மெய்யே மடல் எடுக்கச் செய்துவிட்டது என்கிறாள். என்றது, -ஹிருதயமாகவும் என்றுமாம் –
என்னோடே வந்து கலந்ததனாலே வடுவில் வைவர்ண்யம் போய்ப் புகர்த்துக் குளிர்ந்து நிலை பெற்றபடியும்,
பிரிவை நினைத்துக் கால் வாங்க மாட்டாதே நின்ற நிலையுங் காண் என்னை மடலிலே துணியப் பண்ணிற்று என்கிறாள் என்றபடி.
அசலம் பிரிவை பிரசங்கிக்கவும் மாட்டோம் மலை போல் நிற்கிறேன் -என்கிறான் மலைக் குன்றப் பெருமாள் அன்றோ –

ஆசு அறு சீலனை –
குற்றம் அற்ற சீலத்தை யுடையவனை, என்றது, அவன் கலக்கிற போது என் பேறாகக் கலந்தானாகில் அன்றோ
நானும் பிரிவில் என் பேற்றுக்கு வேண்டுமதனைச் செய்திருக்கலாவது;
அம் மேன்மை யுடையவன்–ஆதி மூர்த்தியை- இப்படித் தாழ நின்று -இதனால் -ஆசு அறு சீலனை-
என்னைப் பெற்ற இது பெறாப் பேறாகத் தான் நினைத்திருக்க, நான் அவனைப் பிரிந்து வைத்து,
வரில் பொகடேன், கெடில் தேடேன்’ என்று நினத்திருக்கலாமோ?
அவன் தன் குணம் பரிஹரித்துப் போக, -சீலத்து குறை வராமல் -அவன் பேறாக கலந்ததால் –
என்னைப் பழி பரிஹரித்திருக்கச் சொல்லுகிறாயோ?
ஆக, ‘ஆசறு சீலனை’ என்றதனால், வெறும் வடிவழகு கண்டு அன்று காண் என்பதனைத் தெரிவித்தபடி.

ஆதி மூர்த்தியை –
1-ஜகத்துக்கு காரணம் –
2-இவள் காதல் பெறுவதற்கும் காரணம் என்றவாறு –
‘ஒப்பற்ற குடியிலே பிறந்த உனக்கு, அவன் தானே வர இருக்குமது ஒழிய நீ பதறுகிற இதனால் உன் மதிப்பை
அறுத்துக் கொள்ளப் பார்க்கிறாயே’ என்ன, நான் மதிப்பை அறுத்துக் கொள்ளப் பார்க்கிறேன் அல்லேன்,
மதிப்பை உண்டாக்கிக் கொள்ளப் பார்க்கிறேன் என்கிறாள்;
“காரணப் பொருளே தியானம் செய்யத் தக்கது” என்று சாஸ்திரங்கள் ஒரு மிடறு செய்கிற விஷயத்தை அன்றோ நான் ஆசைப்பட்டது,
இவ் விஷயத்தை ஆசைப் பட்டுப் பெறாதே முடிந்தாலும் அது தானே மதிப்பாம் படியான விஷயம் அன்றோ.
வியாக்கியானம் செய்வதற்கு முன்பேயும் ஒரு பொருள் உண்டு இதற்கு அருளிச் செய்வது:
பூர்வஜ -“ஆத்மாக்கள் உஜ்ஜீவிப்பதற்கு முற்பாடனாய்க் கிருஷி செய்யுமவன்” என்கிறபடியே, நம்முடைய கலவிக்கு
அவன் முற்பாடனாகச் செய்தே, பிரிவில் ஆற்றாமைக்கு நான் பிற்பட்டவள் ஆகவோ என்பது.
(சாஸ்திரம் விஸ்வ பாவன காரணத்வம் சொல்லி பூர்வஜ ப்ராவண்யத்துக்கு முற்பாடன் சொன்னதை
ஒரே வார்த்தையால் வேதம் தமிழ் செய்த இவர் அருளிச் செய்கிறார்
பிரியும் பொழுது ஆற்றாமைக்கு நாம் தானே முற்பாடானாய் இருக்க வேண்டும் -ஆகவே தவிக்கிறேன் என்கிறார் )

“ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவந நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேஸ மஹாபுருஷ பூர்வஜ”
இங்கே, ‘ஜிதந்தே புண்டரீகாக்ஷ’ என்றதனால், பிரணவத்தால் சொல்லப்பட்ட சேஷத்துவமும்,
நமஸ்தே’ என்றதனால், நமஸ் சப்தத்தால் சொல்லப்பட்ட பாரதந்திரியமும்,
விஸ்வ பாவந’ என்றதனால், நாராயண சப்தத்தால் சொல்லப்பட்ட காரணத்வமும்,
நமஸ்தேஸ்து’ என்றதனால், கைங்கர்யப் பிரார்த்தனையும்,
ஹ்ருஷீ கேச’ என்றதனால், ‘உனக்கே நாமாட் செய்வோம்’ என்கிறபடியே,
கைங்கர்யத்தால் தனக்குப் பலன் இல்லாமையும் சொல்லுகிறது.
இந்தச் சுலோகத்தில் ‘விஸ்வ பாவந’ என்றதனால், ஜகத் காரணத்வம் சொல்லி இருப்பதனால், ‘பூர்வஜ’ என்பதற்கு,
சேதந உஜ்ஜீவனத்திற்கு முற்பாடனாய்க் கிருஷி பண்ணுமவன் என்ற பொருள் கொண்டு
நம்முடைய கலவிக்கு அவன் முற்பாடனாய்’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்-
இத்தையே ஆதி மூர்த்தி என்று காட்டி அருளுகிறார்

ஆனாலும், காதலனைப் பிரிந்தாள், உடனே மடல் ஊர்ந்தாள்’ என்னாமே,
சில நாள் ஆற்றாமையோடே பாடு ஆற்றிக் கிடந்தாள்,
பின்பு தன்னால் பொறுக்க ஒண்ணாமையான அளவு ஆனவாறே மடல் எடுத்தாள்’ என்னும்
வார்த்தை படைக்க வேணுங் காண்’ என்ன,

நாடியே பாசறவு எய்தி-
1-பகவத் தத்துவம் உள்ள இடம் எங்கும் புக்குத்-காரார் திரு வேங்கடம் காணும் அளவே போய்-
தேடிக் காணாமையால் நசை அற்றுத்
துக்கத்தை யுடையேனாய்ப் பின்பே அன்றோ மடல் எடுத்தது;
பாசறவு-துக்கம். -நாடி நாடி –நரசிங்கா என்று வாடும் இவ் வாணுதலே –
அன்றிக்கே,
2-பாசு என்று பசுமையாய், அது அறுகையாவது, வைவர்ண்யமாய், வைவர்ண்யத்தை மேற் கொண்டு என்னுதல்.
அன்றிக்கே,
3-பாசு என்று பாசமாய், அதாவது, பற்றாய், உறவினர்கள் பக்கல் பற்று அற்று என்னுதல்;
அன்றிக்கே,
4-சிநேகம் அடைய அவன் பக்கலிலே எய்தி என்னுதல்.
இன்றோ, நான் எத்தனை காலம் உண்டு இப்படிக் கிலேசப்படுகிறது என்பாள் ‘எனை நாளையம்’ என்கிறாள். என்றது,
அவன் என்னைப் பெறுகைக்குப் பட்ட காலம் எல்லாம் போராவோ நான் அவனப் பிரிந்து பட்டவை என்றபடி.
காலம் எல்லாம் தேடிக் காணப் பெறாமல் துக்கப் பட்டுத் திரிந்த தத்தனை யாகாதே தான்;
சிறைக் கூடத்திலே பிறந்து அங்கே வளருமாறு போலே. பிரிவினாலே ஊகிக்கப் படுமித்தனை காணும் புணர்ச்சி.
எல்லாம் செய்தாலும் இது அறிவுடையார் செய்வது ஒன்று அன்று என்ன,

அறிவு இழந்து எனை நாளையம் –
அறிவு குடி போய் எத்தனையோர் காலத்தோம்.
மயர்வற மதி நலம் அருளின அன்றே போயிற்று இல்லையோ நம்முடைய அறிவு.
(உலகு அறிவு போயிற்று -இருப்பது அவன் ஞானம் மட்டுமே -ஆகவே மடல் எடுப்பதே பிராப்தி )
அவர் அறிவே இருந்தது -என்றபடி -பறவை முதலானவற்றின் காலிலே விழுந்து தூது விட்ட அன்று,
அது ஞான கார்யம்’ என்று இருந்தாயோ,
இன்று இருந்து கற்பிக்கைக்கு–உபதேசிக்கைக்கு -;
அன்றே மதி எல்லாம் உள் கலங்கிற்று இல்லையோ.
தன் பக்கல் கை வைத்தால் மற்றொன்று அறியாதபடி செய்யும் விஷயமே அன்றோ,
‘பேரின்பமெல்லாம் துறந்தார் தொழுதார் அத் தோள்’–பூதத்தார் –42- என்னக் கடவதன்றோ.
“ஜனங்களின் மத்தியில் இருக்கிற இந்தச் சரீரத்தை நினையாமலே சஞ்சரிக்கிறான்” என்கிறபடியே,
பேற்றினைப் பெறுகிற சமயத்திலே இவ் வருகுள்ள வற்றை நினையாதபடி செய்கையே அன்றிக்கே,
ஞானம் பிறந்த சமயமே பிடித்தும் இவ் வருகுள்ள வற்றை நினையாமலே செய்ய வல்ல விஷயம் அன்றோ?
தன்னை அநுசந்தித்து உலக யாத்திரையையும் அநு சந்திக்கும் படியோ அவன் படி.
நன்று; நீ எல்லாம் சொன்னாலும் பழிக்கு அஞ்சவேண்டுங் காண் என்ன,

ஏசு அறும் ஊரவர் –
1-இவளை ஒரு பழி சொன்னோமாய் விட வல்லோமே’ என்று அதிலே
அற்று இருக்கிற-துணிந்திருக்கிற ஊரார் என்னுதல்; என்றது,
ஏசுகையில் துணிந்திருக்கிற ஊரார் என்றபடி. இதனால், மடல் எடுக்கை நமக்குக் குற்றமாகில் அன்றோ
அவர்களுக்கும் பழி சொல்லுகையும் குற்றமாவது என்கிறாள் என்றபடி.
அன்றிக்கே,
2-பகவத் விஷயத்தில் கை வைத்தவர்களுக்கு ஒரு பழி சொன்னோமாய் விட வல்லோமே’ என்று
துக்கப் பட்டிருக்கிற ஊரார் என்னுதல்; –ஏசறும் – துக்கப் பட்டிருக்கின்ற.
அன்றிக்கே,
3-ஏசற்று இருக்கிற நமக்கு. அதாவது, ஏசும் எல்லையைக் கடந்திருக்கிற நமக்கு என்னுதல்; என்றது,
அறிவுடையார்க்கு வரக் கூடியதான பழி, அது வாசனையோடே குடி போன நமக்கு வாராது காண்;
இதற்கு அஞ்ச வேண்டா என்கிறாள் என்றபடி.

ஊரவர் கவ்வை –
பகவத் விஷயத்திலே கை வைத்தார் ‘இது பழி’ என்னில் அன்றோ பழியாவது,
இதற்குப் புறம்பாய் நின்ற ஊரார்கள் சொல்லுமது நமக்குப் பழியோ.

தோழி –
சமானமான துக்கத்தையும் சுகத்தையுமுடைய உனக்கு ‘இது பழி’ என்று தோற்றில் அன்றோ எனக்கு மீள வேண்டுவது.

என் செய்யுமே –
ஏசு அறும் எல்லையிலே நிற்கிற எனக்கு, இது -மடல் எடுத்தல் -ஏசாம்படி இருப்பார்
சொல்லும் வார்த்தை கொண்டு கார்யம் என்?
ஊரார் பழி, புகழாம் எல்லையிலே அன்றோ நாம் நிற்கிறது. அவர்கள் சொல்லுகிற
இது நமக்குத் தாழ்வேயோ, தாரகமாமித்தனை அன்றோ?
“அலர் எழ ஆருயிர் நிற்கும்”-திருவாய்-7-3-8- என்னக் கடவதன்றோ.-
அபவாதம் உதிக்குமாகில் பூர்ண பிராணன் நிற்கும் -தாரகம் -அபாகாவதர் தூற்றுவதே –
அலர் தூற்றிற்று அது முதலாக் கொண்ட என் காதல்”-திருவாய்-7-3-8- என்கிறபடியே,
அவர்கள் பழி தாரகமாக அன்றோ மடல் எடுக்க இருக்கிறது.
ராமானுஜ சம்பந்திகள் -போக கூடாது -ஆத்ம குணம் நிறைந்த கூரத் ஆழ்வான்-
கோயிலுக்கு உள்ளே போக சொல்ல போக மறுத்தார் –
நாஸ்திகன் வாயால் ஆஸ்திகன் பட்டம் பெறுவதே பேறு என்றபடி –

——————————————————————

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப் பூர்ந்தவே.–5-3-2-

அவன் கண் அழகாலே என் சர்வத்தையும் அபஹரித்து -என் வை லஷண்யம் எல்லாம் போன பின்பு
இனி என்ன கவலை இவர்கள் வசவால் –
என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான் பூரணமாக அபஹரித்தான்
ஸ்த்ரீத்வ பூர்த்தி போன படியால்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவெய்தி-கண் முன்னால் தோன்றும் மாமை நிறம் இழந்து –
ஆச்ரயமான சரீரமும் மெலிந்து
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.-இழந்தவற்றை சொல்லிக் கொள்கிறாள் –
அவனது வாய் கண் குறி அழியாமல் இருக்க
கண்ணும் வெளுத்து இப்படி ஆன பின்பு

முதல் பாட்டில் -மத்யே ஒருவர் எழுந்து அருள மீண்டும் சங்கதி சொல்லக் கேட்டதும் மீண்டும் அருளிச் செய்கிறார் இதில்

தோழீ! என்னுடைய செந்தாமரைக் கண்ணன், என்னுடைய நிறையைக் கொண்டான்; முன்பு இருந்த சிறந்த மாமை நிறமும்
நீங்கிச் சரீரமும் மெலிவை அடைந்து என்னுடைய செவ்வாயும் கருங்கண்களும் பசலை நிறத்தை அடைந்தன;
ஆதலால், இனி ஊரவர் கூறுகின்ற பழிச் சொற்கள் நம்மை என் செய்யும்? என்கிறாள்.
இழக்க எய்த பயப்பு ஊர்ந்த என்க. பயப்பு – பசப்பு. ஊரவர் கவ்வை இனி நம்மை என் செய்யும் என்க.
மாமை-அழகு. நிற விசேடமுமாம்.

மேல் திருவாய் மொழியில் நின்றும் இத் திருவாய் மொழிக்குப் புகுருகைக்கு வழி இரண்டாக இருக்கும்.
சீலம் இல்லாச் சிறியன்”4-7- என்ற திருவாய் மொழியிலே கூப்பிட்டார்; கூப்பிடச் செய்தேயும் வந்து முகங்காட்டாமையாலே,
அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாவையும் ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களையும் எனக்கு வேண்டா–4-8- என்றார்;
இப்படி ஒழியப் புறம்பே பேறு இழவுமாய் இருக்கிற சம்சாரிகள் படியைக் கண்டு வெறுத்தார்;–4-9-
‘ஈச்வரனும் கை வாங்கிய இவர்களை நான் திருத்துவேன்’ என்று, பகவானுடைய பரத்வத்தை எடுத்துச் சொல்லித் திருத்தினார்;4-10-
‘இவர்களிலே ஒருவனாக இருக்கிற எனக்கு இவ் வாசி உண்டாவதே!’ என்று பகவானுடைய கிருபையைக் கொண்டாடினார்;5-1-
தாம் திருத்தத் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்தார்;5-2-
தொடங்கின காரியம் முடிந்தவாறே பழைய இழவே தலை எடுத்து,
தம் ஆற்றாமையாலே மடல் ஊர்ந்தாகிலும் பெறப் பார்க்கிறார் என்னுதல்.
அன்றிக்கே,
மேலே, “மலியும் சுடர் ஒளி மூர்த்தி”-5-2-11- என்று வடி வழகை அநுசந்தித்தார், பின்பு புறக் கலவியை விரும்பினார்,
அப்போதே பெறாமையாலே, வழி அல்லா வழியே மடல் ஊர்ந்தாகிலும் பெறப் பார்க்கிறார் என்னுதல்.

மாசறு சோதி . . . . . . என் செய்யுமே – என் செய்ய வாய் மாசறு சோதி மணிக் குன்றத்தை என்று சேர்த்துக் கொள்வது,
‘இனி, விசேஷணந் தோறும் ஒரு பொருள் சொல்ல வேணும்’ என்னுமதனாலே சொன்னோம்” என்று அருளிச் செய்வர்.

ஊரவர் சொல்லும் பழி நம்மை என் செய்யப் புகுகிறது என்று நின்றாள் பிரகாரம் கீழ்;
இது என்ன வார்த்தை சொன்னாய் ஆனாய்,
எல்லாம் செய்தாலும் பழி நீக்கப்பட வேண்டுங் காண் என்ன, நான் ‘பழி நீக்கப்பட வேண்டா’ என்றேன் அல்லேன்,
பழி நீக்கப்படுதற்கு உரிய எல்லை கடந்தது காண் என்கிறேன் என்கிறாள்.

ஊரவர் கவ்வை இனி நம்மை என் செய்யும் தோழீ’
என்று, தன் வடிவழகைக் காட்டுகிறாள். இம் முதலடியில் உள்ள ‘இனி’ என்ற சொல்லின் பொருளைப் பாசுரத்தில்
மேல் உள்ள மூன்று அடிகளும் விரிக்கின்றன.
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான், முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி
என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப்பு ஊர்ந்த; ஊரவர் கவ்வை இனி நம்மை என் செய்யும் தோழீ என்று கூட்டுக.

இனி நம்மை-
தோழி, தன் வாயாலே ‘மடல் ஊரக் கடவதன்று’ என்று விலக்கவும் கூட,
உடம்பு வெளுத்தல் அவளுக்கும் ஒத்திருக்கையாலே, ‘இனி என்னை’ என்னாமல், ‘இனி நம்மை’என்கிறாள்.
தோழிமாரும் “எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ” என்னக் கடவதன்றோ. -முன்னமே ஈடுபடுவர்களே -என்றவாறு –
“எனக்கு அவன் வேணும்’ என்னும் தலைவி;
இவளுக்கு அவன் வேணும்’ என்னும் தோழி என்னும் இதுவே யாயிற்று வாசி.
ஸ்வார்த்ததா கந்தமும் இல்லாமல் –
தலைவியைக் காட்டிலும் தோழிக்கு ஆற்றாமை விஞ்சி இருக்கும்; அதற்குக் காரணம், தலைவனைப் பிரிகையால் உண்டான
ஆற்றாமை மாத்திரமே தலைவிக்கு உள்ளது, தலைவி நோவு படக் காண்கையாலும்,
தலைவியும் தலைவனுமாகச் சேர இருக்குமது காணப் பெறாமையாலும் தோழிக்கு இரட்டித்திருக்குமே அன்றோ.

‘பெருமாளும் பிராட்டியுமான இருப்பிலே பிரிவு விளைந்தது’ என்று இளைய பெருமாள் மஹாராஜர்க்கு அறிவிக்க,
அவ்வார்த்தை செவியிலே படப்பட, பெருமாள் திருமேனியில் வை வர்ண்யம் இவர் உடம்பிலே மாறிற்றாயிற்று;
“ஸ ஸ்ருத்வா வாநரேந்த்ரஸ்து லக்ஷ்மணேந ஈரிதம்வச :ததாஸீத் நிஷ்பிரப:
அத்யர்த்தம் ராகு க்ரஸ்த இவ அம்சுமான்” – ஸ்ரீராமா. சுந். 35 : 36-
(ஸூர்ய புத்ரன்-ஸூ க்ரீவன் / இந்திரன் புத்ரன் வாலி /ராகு பிடிக்க பிடிக்க மாறுவது போலே -)
“அத்யர்த்தம் நிஷ்பிரப :- இழந்திருந்த தன்மை வாசா மகோசரம்” பிராட்டியைப் பிரிகையில் உண்டான ஆற்றாமை அன்றோ
பெருமாளுக்கு உள்ளது, பெருமாளுடைய ஆற்றாமையைக் காண்கையாலும்,
பிராட்டியும் பெருமாளுமாகச் சேர இருக்கக் காணப் பெறாமையாலும் மஹாராஜர்க்கு அவ்வள வன்றிக்கே, மிக்கிருக்குமே அன்றோ
‘அர்த்தம்’ என்ற சொல் பொருளை உணர்த்தும் சொல்லாயிற்று.
அதி அர்த்தமாவது, சொற்களைக் கடந்தது. என்றது, வாசா மகோசரம் என்றபடி.
‘தோழி இனி நம்மை
“நம் இருவர்க்கும் சுக துக்கங்கள் ஒன்றே” என்கிறபடியே, தனக்கும் தோழிக்கும் உள்ள சம்பந்தத்தை முன்னிட்டுக் கொண்டு
‘தோழி இனி நம்மை’ -என்கிறாள். என்றது, ‘பழி’ என்று நீக்குதற்குப் பார்க்கிறவள் தன்னையும் பழி சொல்லுகிறாள் அன்றோ,
“நம்மிருவர்க்கும் சுக துக்கங்கள் ஒன்றே” என்றிருக்குமது அவளுக்கும் உண்டு ஆகையாலே.
பழிக்கு அஞ்ச வேண்டாமல் இருப்பதற்கு நமக்கு இப்போது வந்தது என்? என்ன-

என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான் –
‘என்னுடைய ஆத்மாவும் ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களும் நீ இட்ட வழக்கு அன்றோ’ என்கிற
அக வாயில் தண்ணளி தோற்றும்படி வாத்சல்யத்தாலே குதறிச் சிவந்த தாமரையைப் போன்ற திருக் கண்களாலே குளிர நோக்கி
‘நானும் என்னுடைமையும் உன்னது’ என்று சொல்லுவாரைப் போலே வந்து
இத் தலையிலுள்ள எல்லாச் செல்வத்தையும் கொள்ளை கொண்டு போனான். என்றது,
எனக்குக் கொடுப்பவனைப் போலே இருக்க நோக்கி, என்னை உரி கூறை கொண்டு போனான் என்றபடி.
சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாய் இருந்தன; “தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசி” என்னக் கடவதன்றோ.
சத்யம் வத சர -உண்பது தர்மம் வத சொல்லி விட்டு செய்யாமல் -போலே

என்னை நிறை கொண்டான் –
அவன் புருஷோத்தமனாய் இருக்கும் தன்மைக்குத் தாமரைக் கண்ணனாய் இருத்தல் எல்லையாய் இருக்குமாறு போல ஆயிற்று
இவள் பெண் தன்மைக்கு நிறை எல்லையாய் இருக்கும்படி.
அவன் புருஷோத்தமன் ஆனாற் போலே ஆயிற்று, இவள் பெண்ணுக்குள்ளே உத்தமியாய் இருக்கும்படி. –
நாரீணாம் உத்தமி அன்றோ இவள் –

என் தாமரைக் கண்ணன்-
பிரிவோடே இருந்து மடல் ஊர்ந்து பழி விளையா நிற்கச் செய்தேயும்
என்னுடையவன்’ என்னலாம்படி காணும் அவன் கிட்டினால் இருக்கும்படி;
ஆதலின், ‘என் தாமரைக் கண்ணன்’ என்கிறாள்.

என்னை நிறை கொண்டான்-
நூறாயிரம் புருஷோத்தமர்கள் கூடினாலும் தோற்றுப் போம் இதற்கு மேற்படச் செய்யலாவது இல்லை என்றாயிற்று,
இவளுடைய பெண் தன்மைக்குரிய அபிமானந்தான் இருப்பது; ஆதலின், ‘என்னை நிறை கொண்டான்’ என்கிறாள். என்றது,
கடலைத் தறை காணுமாறு செய்வது போன்று, என்னைச் செய்தான் என்றபடி.
தன்னுடைய ஆண் தன்மை முழுதையும் அழிய மாறி என்னுடைய பெண் தன்மையைக் கொண்டான் என்பாள்
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்’ என்கிறாள். என்றது,
தான் தோற்றுப் போலே காணும் இவளைத் தோற்பித்தது என்றபடி.
மன்னார் குடி ராஜகோபாலன் -அவள் தோட்டைப் போட்டுக் கொண்டு அவளை தோற்பித்தால் போலே
ஒரு காதில் குண்டலமும் ஒரு காதில் தோடும் உடன் இன்றும் சேவை
‘என்னை நிறை கொண்டான்’ என்று இவள் தான் தோழிக்குச் சொல்லும்படி அன்றோ பண்ணிற்று.

நிறையாவது,
அடக்கம். அகவாயில் ஓடுகிற இது பிறர்க்குத் தெரியாதபடி மறைத்துக் கொண்டிருக்கை அன்றோ.
நான் எனக்கு ஓடுகிற நிலையை உனக்கு வாய் விட்டுச் சொல்லும்படி அன்றோ செய்தது.
தோழி தானும் இவள் வடிவிலே வேறுபாடு கொண்டு “உற்ற நன்னோய் இது தேறினோம்” என்று இவள் அகப்பட்டபடி
அறியுமித்தனை போக்கி, இவள் தான் தோழிக்கும் வாய் விட்டுச் சொல்லாதபடி அன்றோ பெண்மை தான் இருப்பது.
“என்னைப் பார்த்து ஒன்றும் வார்த்தை சொல்ல வில்லை” என்னக் கடவதன்றோ.
( சுமந்திரன் இடம் ஒன்றும் சொல்ல வில்லையே சீதா பிராட்டி )
நிறை கொண்டான்’ என்கிற இதனை விரித்துப் பேசுகிறாள் மேல்:
தீர்பாரையில் இவள் சொல்லாமல் தோழியாகவே ஊகித்துச் சொல்லும் படியான நினை யன்றோ –
நைவமாம் கிஞ்சித் -அழுகையே செய்தியாக சொல்லி -சுமந்த்ரன் -அங்கு வெட்கி
ஒரு வார்த்தையும் பேச வில்லை -என்றான் -இவளுக்கு எல்லாம் கொண்டானே

உன்னிடத்தில் அவன் கொண்டவை தாம் யாவை? என்ன, ‘நிறை கொண்டான்’ என்ற சொல்லுக்குள் அடங்கி
கிடக்குமவற்றை எண்ணுகிறாள்: வியாக்யானம் மேல் –
‘மடல் ஊர்வேன்’ என்கிற என் வாயை நீ புதைத்தால்,
என் வடிவு மடல் எடுக்கிற இதனை என் கொண்டு மறைப்பாய் என்கிறாள்.

முன் செய்ய மாமை இழந்து-
இதற்கு மூன்று விதமாகப் பொருள் அருளிச் செய்வர்:
1-தன் பக்கல் கை வைப்பதற்கு முன்னே, அதாவது, பிறந்த போதே உண்டான நிறத்தை இழந்து என்னுதல்.
அன்றிக்கே,
2-மற்றைய வற்றை இழப்பதற்கு முன்னே நிறத்தை இழந்து என்னுதல்;
முன்பு தோற்றினவற்றைப் பறித்துக் கொண்டு, பின்பே அன்றோ கிழிச் சீரையை அறுத்துக் கொள்வது;
அவன் தானும் முந்துற விரும்பியது இந் நிறத்தைக் காணும்.
அன்றிக்கே,
3-முன்னே காணக் காண நிறத்தை இழந்து என்னுதல்.
இப் பாசுரத்தில் ‘செய்ய மாமை’ என்கிறாள்; முன்னே “மணி மாமை” என்கிறாள்;
இவ் விரண்டாலும் சிவப்பும் கறுப்பும் அல்ல இங்குச் சொல்லுகிறது;
இரண்டிலும் ஒரு சேர ஏறின பிரயோஜனம், -ஸ்ப்ருஹணீயத்வம்-‘விரும்பத் தக்க தன்மை’ என்பதே யாகும்.
அவனோடு கலந்து பெற்ற நிறத்தைத் தனமாக நினைத்திருந்தபடியால் ‘மாமை இழந்து’ என்கிறாள்.
சம்பந்தம் முன் இழந்தது – /முதலில் இழந்தது -/பார்த்து இருக்கும் பொழுதே இழந்தேன் –

மேனி மெலிவு எய்தி-
நீர்ப் பண்டம் போலே காணக் காணச் சரீரம் சருகு ஆகா நின்றதாயிற்று.
ஆஸ்ரயம் உண்டானால் அன்றோ தொங்குவது; ஆதலால், இனி அவன் வந்தாலும் நிறம் வந்தாலும்
தொங்குகைக்கு ஆஸ்ரயம் இல்லை என்பதைத் தெரிவித்த படி.

என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பு ஊர்ந்த –
அவயவியாகத் தேடுகிறேனோ, அவயவங்கள் தோறும் வற்றி வருகிறபடி பாராயோ? என்கிறாள்.
இப்போது“செய்ய வாயும் கருங்கண்ணும்’ என்று தன்னுடைய அவயவங்களைத் தானே புனைந்துரைக்கிறாள் அல்லள்;
அவன் வந்து கிட்டின போது அவனுடைய ஸ்ரீ சகஸ்ர நாமங்களுக்கு -ஸ்தோத்ரம் -விஷயம் இவையே அன்றோ,
அதனைச் செவியாலே கேட்டிருக்குமே, அதனாலே சொல்லுகிறாள். என்றது,

தான் இழந்த முறை சொல்லா நிற்கச் செய்தே,
அவன் உகந்த முறை தோன்றா நின்றது காணும் இவளுக்கு என்றபடி.
அவன், தனக்கு இவற்றை எல்லாச் செல்வங்களுமாக நினைத்திருந்த படியால்,
இவளும் ‘உன்னது என்னது’(தன்னது என்று அவன் அபிமானத்தவை தன்னது என்று இருக்குமவள் என்றபடி )
என்று ஒரு தலை பற்றுகிறாள் ‘என் வாய்’ என்று.
ஆத்ம ஸ்வரூபமும் பிராப்ய அந்தர் கதமாய் அன்றோ உத்தேஸ்யமாவது, இங்ஙன் அன்றாகில்,
“மம என்ற இரண்டு எழுத்துகள் நாசத்திற்குக் காரணமாகின்றன.
பிராப்ய பூதனுக்கு உப யுக்தம் -மதியம் என்ற காரணத்தால் ஆத்மாவை கொண்டாடுகிறோம்
என்னது என்று அவன் அபிமானித்ததால் இவள் தன்னது என்கிறாள் –
ந-மம என்ற மூன்று எழுத்துகள் மோக்ஷ பதவிக்குக் காரணமாகின்றன” என்கிற வழியாலே பற்றுகிறாள் அன்றே என்றபடி.
அவன் வாய் புகு சோறு பறி யுண்ணா நின்றது என்பாள் “செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பு ஊர்ந்த” என்கிறாள்.
“செங்கனி வாய் நுகர்ந்தான்”, “மண நோக்கம் உண்டான்”-பெரிய திரு மொழி-8-10-1- என்னக் கடவதன்றோ. –
இவள் வாயும் கண்ணும் அவனுக்கு ஆகாரம் அன்றோ –
செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பு ஊர்ந்த-கடலும் மலையும் குடியிருப்புமான இடங்கள் எல்லாம் பிரளய காலத்தில் ஒரே வெள்ளமாய்
இருக்குமாறு போலே எங்கும் ஒக்க வைவர்ண்யமே யாயிற்று.-ஒரே வெளுப்பு ஆயிற்று.
விஷம் பரந்தாற் போலே காணக் காண வண்டல் இட்டு வை வர்ண்யமானது பரப்பு மாறிற்று.

——————————————————————————————-

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ் வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3-

விரோதி நிவர்த்தகன் -அதி சேஷ்டிதங்களுக்கு அகப்பட்டேன்
ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை-ஸ்தன்யார்த்தத்தால்-அந்ய பர வியாபாரத்தால்
சார்ந்து சுவைத்த செவ் வாயன் என்னை நிறை கொண்டான்-
மாச திரு நஷத்ரம் ரோஹிணி- தொட்டில் போட்டு -சகடம் 7 மாசம் –
கீதை 67 வயசில் அருளினான் -அதி சைசவ முக்த சிசு -பேய் முலை-சுவைத்து -தாய் முலைப் பாலில்
அமுது இருக்க –சுவைத்து -பித்தர் என்றே பிறர் ஏச நின்றானே
பருவம் நிரம்பா செயலாலே ஏன் நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்-கூடியும் விலகியும் -மீண்டும் மீண்டும் –
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே-என் உடன் நெஞ்சு ஆகும் படி -என்னைப் போலே உள்ளக் கிடக்கை உடைய
அலர்-என்ன செய்யும் -நிறை மீட்டுக் கொடுக்குமோ -அவரை தவிர வேறு ஒருவரை அடையேன்

ஊர்ந்து வந்த சகடாசுரனை உதைத்துக் கொன்ற திருவடிகளை யுடையவனும், சார்ந்து பூதனையின் முலையைச் சுவைத்த சிவந்த
வாயினை யுடையவனுமான கண்ண பிரான் என் நிறையைக் கொள்ளை கொண்டான்;
சென்றும் வந்தும் அவன் சம்பந்தமான வார்த்தைகளை ஒழிய வேறு வார்த்தைகளை யுடையேன் அல்லேன்;
அறுதியை யுடைய என் தோழீ! ஊராருடைய பழிச் சொல் என்ன காரியத்தைச் செய்யும் என்கிறாள்.
தீர்ந்த-எல்லாவற்றையும் விட்டு நீங்கிய. “தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டாகும்’ என்பது தொல்காப்பியம்.
தோழி ஊரவர் கவ்வை என் செய்யும் என்க.

“என் செய்யும் ஊரவர் கவ்வை” என்றாள்; ‘எல்லாம் செய்தாலும் பழி நீக்க வேண்டாவோ’ என்று இருப்பாளே அன்றோ இவள்;
1-இது பழி’ என்று நீக்க ஒண்ணாதபடி எனக்கு ஈடுபாட்டினை விளைத்தவன் எவ்வளவிலே நிற்பவன்,
2-இது பழி’ என்று மீளாதபடி இவ்விஷயத்தில் ஈடுபட்டவளாய் இருக்கிற நான் எவ்வளவிலே நிற்கிறேன்,
3-இது பழி’ என்று சொல்லுகிறவர்கள் தாம் எவ்வளவிலே நிற்கிறார்கள்,
4-அவர்கள் சொல்லுகிறவற்றைச் சொல்லுகிற நீ தான் எவ்வளவிலே நிற்கிறாய் என்கிறாள்.
நால்வர் நிலைகளையும் நான் சொல்கிறேன் கேள் என்கிறாள்-

ஊரார் பழி புகழாம் என்னும் எல்லையிலே நான் நிற்கிறேன்
பகவத் விஷய அவஹானத்தையே தோஷம் என்கிறார்களே இவர்கள்
சமான சுக துக்க உன்னுடைய நிலை அன்றோ
அசுர நிரசனம் -பூதனை -சகடாசுரன் -இவள் பக்கல் பிராவண்யம் விளைக்கச் செய்த செயல்கள் என்கிறாள்
இது அவனுக்கு சத்தா பிரயுக்தம் -பிறந்ததே இவளுக்கு ப்ராவண்யம் வளர்க்கவே
“எந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் -எல்லா அவதாரங்களும் இவளுக்கு பிராவண்யம் வளர்க்கவே –
பழிக்கிற சமயத்திலே உபகாரங்களைச் சொல்லுதல், மிக்க ஈடுபாட்டினை உண்டாக்குவதற்குக் காரணங்கள் என்கிறார் –
ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்” என்பது போன்றவைகளைத் திருவுள்ளம் பற்றி
ஈடுபாட்டினை விளைத்தவன் எவ்வளவிலே நிற்பவன்’-என்கிறார்.

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்-
ஊருகிற சகடம் அன்று; அது செய்வது எல்லாம் செய்து முடிந்தது; இவன் ஜீவன அதிருஷ்டத்தாலே தப்பின இத்தனை.
இரண்டு சகடத்தை இரண்டு அருகும் இழுத்து நடுவே தொட்டிலை இட்டு கண் வளர்த்திப் போனாள் தாயார்;
பாடி காப்பாரே களவு காணுமாறு போலே, காவலாக வைத்த சகடமே அசுர ஆவேசத்தாலே ஊர்ந்து வந்ததாயிற்று.
அசேதனமான சகடத்தில் அசுரர்கள் ஆவேசித்து நலிவதாக ஊர்ந்து வந்ததித்தனை அன்றோ.
அதுவும் செய்வது எல்லாம் செய்து, இவனும் அகப்படுவது எல்லாம் அகப்பட்டு நின்றான்;
திருவடிகளினுடைய செயலாலே தப்பின இத்தனை ஆதலின் ‘உதைத்த பாதத்தன்’ என்கிறாள்.
இவனை அடி காத்துத் திரிந்ததித்தனை.

உதைத்த பாதத்தன்-
முலை வரவு தாழ்க்கச் சீறி நிமிர்த்தத் திருவடிகளுக்கு இலக்காய்த்
துகளாய்ப் போயின இத்தனை ஆதலின் ‘உதைத்த பாதத்தன்’ என்கிறாள்
கிருஷ்ணன் முலைப் பாலை விரும்பினவனாய்க் கொண்டு திருவடிகளை மேலே நிமிர்த்தான், அழுதான்” என்பது விஷ்ணு புராணம்.
நமக்குப் புகலான திருவடிகள் தாமே நமக்கு விருப்பம் இல்லாதவைகளையும் போக்கித் தருமாயிற்று.-
ஆபத்து அடியேனுக்கு அன்றோ வந்தது –
சகடாசுரனைக் கொன்ற இது, பருவம் நிரம்பிக் கம்சனைக் கொன்ற செயலோடு ஒக்கச் சொல்லலாம்படி யன்றோ இதற்கு
முன்பே பூதனையைக் கொன்ற செயல். சகடம் வந்து கிட்டின போது சிலராலே நீக்கப் படலாம்;
பூதனை தாய் வடிவு கொண்டு வந்து நலியப் புக்கால் அதற்குப் பரிஹாரம் இல்லையே அன்றோ,
ஈன்றோரே நஞ்சு இட்டாற்போலே இருப்பது ஒன்றே அன்றோ.

பேய் முலை சார்ந்து சுவைத்த செவ் வாயன் –
பிள்ளைகள் முலை உண்ணப் புக்கால் தாய்மார்களுடைய முலைக் கீழே முட்டினவாறே பால் சுரக்கும்,
பின்னைப் பாலை உண்டு உபகாரத்தின் நினைவாலே முகத்தைப் பார்த்துப் புன்முறுவல் செய்வார்கள்;
அப்படியே, அவளும் தாயாய் வந்து முலை கொடுக்கையாலே இவனும் பிள்ளையாயே முலைக்கீழே முட்டி முலை உண்டு,
உபகாரத்தின் நினைவாலே முகத்தைப் பார்த்து அதரத்தில் பழுப்புத் தோற்ற புன்முறுவல் செய்தாயிற்று முலை உண்டது.
மழலை மென்னகை இடை இடை அருளா வாயிலே முலை இருக்க என் முகத்தே” என்னக் கடவதன்றோ.
உயிரை வற்ற வாங்கி உண்ட வாயான்” என்கிறபடியே, முலைப் பாலோடே இரங்கி உயிரையும் சுரக்கும்படியாக ஆயிற்று முலை உண்டது.
விஜயா முஹூர்த்தம் வாமனன் -திருவவதாரம் -கிருஷ்ணன் அவதரித்த முஹூர்த்தம் விஷமும் அமிர்தமாயிற்றே –
புன்முறுவல் செய்து முலை உண்டமைக்குப் பிரமாணம் காட்டுகிறார் “மழலை மென்னகை” என்று தொடங்கி.
குழகனே! என் தன் கோமளப் பிள்ளாய்! கோவிந்தா! என் குடங் கையில் மன்னி
ஒழுகு பேரெழில் இளம் சிறு தளிர்போல் ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா
மழலை மென்னகை இடை இடை அருளா வாயிலே முலை இருக்க என் முகத்தே
எழில் கொள் நின் திருக் கண்ணினை நோக்கம் தன்னையும் இழந்தேன் இழந்தேனே.-இது, பெருமாள் திருமொழி.

“சுவைத்த” என்றதற்குப் பிரமாணம் காட்டுகிறார் “உயிரை” என்று தொடங்கி.
முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே.- இது, பெரிய திருமொழி.

ஆக, இதற்கு முன்பெல்லாம், சகடாசுரனைக் கொன்றதும், பூதனையின் பாலைக் குடித்து அவளை அழித்ததும்,
கம்சன் வரவிட்டன வற்றைப் போக்கினான்’ என்று இருந்தாள் அவள்;
எனக்குத் தன் பக்கலிலே ஈடுபாட்டினை உண்டாக்குகைக்காகச் செய்தான்’ என்று இருக்கிறாளாயிற்று இவள்.
பருவம் நிரம்பிக் காதலனாய் அதில் வல்லவனான பின்பு செய்தவை அலவோ இவளுக்குத் தன் பக்கல் ஈடுபாடு
மிகைக்குச் செய்தவையாவது, பால்யத்திலே செய்தவை இவளுக்கு உடலாம்படி எங்ஙனே? என்னில்,
இவளுக்குத் தன் பக்கல் ஈடுபாட்டினை உண்டாக்குதல் அவனுக்குச் சத்தா பிரயுக்தம் என்கை.
“எந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்” என்று அவற்றை ஒழியவேயும் பின்பு செய்த காரியங்கள் எல்லாம்
தனக்காகச் செய்தான் என்று இருக்கிறாள் ஆயிற்று இவள்.

என்னை நிறை கொண்டான் –
ஒரு செயலாலே இரண்டு பெண்களைக் கொன்றான்.
பார்த்த கடாஷம் பூதனை தன் ஆத்மா சமர்ப்பணம் பண்ணும் படி ஆயிற்றே –
தன்னை ஆசைப்பட்டாரில் உகவாதார்க்கே நன்றாயிற்று; அவளை நற் கொலையாகக் கொன்றான்,
என்னை உயிர்க் கொலையாகக் கொன்றான்.
அவனுடைய செயல்களிலே ஒன்று குறைதல், நான் இழந்தவற்றிலே ஒன்று குறைய இழத்தல் செய்யில் அன்றோ
நீ சொல்லுகிற வார்த்தையைக் கேட்க வல்லேனாவது.
ஆகில், இத்தகைய நிலைகள் உளவானால் அவ் விஷயத்தை மறந்து உலக யாத்திரையிலே புகுந்து புறம்பு ஏதேனும்
ஒன்றைக் கொண்டு போது போக்கிக் கொண்டு இருக்க வேண்டாவோ,
எல்லாம் செய்தாலும் இழக்காலாவது ஒன்றோ நிறை? என்ன,

பேர்ந்தும் பெயர்ந்தும்-போயும் வந்தும்.
என்றது, பிரிந்தும் கலந்தும் என்றபடி.
அவனோடு அன்றி ஓர் சொல் இல்லேன்-அவன் சம்பந்தத்தையுடைய வார்த்தை அல்லது
வேறு ஒரு வார்த்தையை யுடையேன் அல்லேன்.
மறக்கையாவது, நினைப்பனவற்றிலே ஒன்றாக வேணுமே நான் ஆறி இருக்கைக்கு,
ஏது செய்தால் மறக்கேன்” என்னக் கடவதன்றோ.
நாட்டார், தங்கள் தங்கள் காதலர் காதலிகளோடு கலந்த போது அவர்களை நினைத்து,
பெயர இருந்த போது அவர்களை மறந்திருப்பர்கள்,
இதர விஷய ஸ்மரணமே மறக்கை யாகும் -அனுபூத விஷய மறக்கை இதர விஷய நினைப்பதில் ஒன்றாகும் –
சம்ச்லேஷத்தில் இதர விஷய ஸ்மரணம் இல்லையே -விஸ்லேஷ தசையிலும் அப்படியே –
அவனே பிராப்தம் -கால தேச விஷய பரிச்சின்னம் அன்றோ அவன் –
என்று மாற சொல்கிறாய் -கூடிப் பார்த்து தான் மறக்கப் பார்க்க வேண்டும் என்ன -தோழி இது என்ன -என்ன
அதே போலே பிரிந்தாலும் மறக்க முடியாதே –
கலந்து பிரிந்த விஷயத்தினுடைய தன்மையாலே; நான் பிரிந்த இது உலகத்தில் வேறுபட்ட பொருளாகையாலே,
பிரிந்த போது மறக்கலாய் இருந்தது இல்லை, இனிக் கூடித்தான் பார்ப்போமோ மறக்கலாமாகில் என்கிறாள்.
கூடினாலும் மறக்கலாமோ? என்னில், கூடின காலத்தில் மறப்பது செய்யலாமாயின்
பிரிந்த போது மறக்கலாவதென்று வியதிரேக உக்தி.

அன்றிக்கே,
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இல்லேன்
என்பதற்கு, ‘அவனை மற, அவனை நினை’ என்றே நீ சொல்லுவது,ஆகையாலே,
அவனை ஒழிய எனக்கு வேறு ஒரு சொல் இன்றிக்கே இருந்தது என்கிறாள் என்னுதல்.
இவள் இப்படிச் சொன்னவாறே விலக்குகிற தோழி உகந்தாள், யாங்ஙனம்? எனின்,
நாம் இவளை அவனோடு சேர்ப்பதற்குப் பட்ட பாடும், அப்படிச் சேர்ப்பித்த நாமே இவளை மறப்பிக்க முயற்சி செய்தாலும்
மறவாதபடி உட் புகுந்த வாறும் என்னே! என்று உகந்தாள்; இவள், விலக்குகிற வார்த்தைகளை விட்டு
இவள் மனத்தினைக் கண்டாள் ‘தீர்ந்த என் தோழி’ என்கிறாள்.

தீ்ர்ந்த என் தோழி –
தாய்மார் சொல்லுகிற நல் வார்த்தைகளை நீயும் சொல்லுகையாலே,
நீயும் அவர்களைப் போன்று விலக்குகிறாய்’ என்று இருந்தேன்,
உன் நினைவு இதுவாகப் பெறுவதே! நீ நீயே யாம்படி இருந்தாய் வர இரு என்கிறாள்.
“இராவணன் வரவிட்ட ஆள்” என்று ஐயம் உற்று இருந்தவள், “பெருமாள் பக்கல் நின்றும் வந்தவன்” என்று
அறிந்த பின்பு அவனைக் கொண்டாடிற் போலே. என்றது, “பெருமாளால் அநுப்பப் பட்டவனா யிருப்பதனாலே,
ஓ வானர உத்தமனே! என்னுடன் இரஹசியமான சமாசாரங்களைச் சொல்லுவதற்கும் தகுதி யுள்ளவன் ஆகிறாய்” என்றாள் என்றபடி.
“தோழிமாருடனே சுகமாக இருப்பாய்” என்கிற அவர்கள் படியாய் இருந்தாயே நீ என்கிறாள் என்றபடி.
“நான் அங்கு ஸ்ரீ ராம பிரானுடைய திரு மாளிகையில் பன்னிரண்டு வருடங்கள் முடிய,
மனிதர்களுக்குரிய போகங்களை அநுபவித்துக் கொண்டு எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவளாய் இருந்தேன்” என்கிறதும்
உன்னோடே சொல்லக் கூடியதாய் இருந்தது.

“அர்ஹஸேச கபி சிரேஷ்ட மயா ஸம்அபிபாஷிதும் யத்யபி ப்ரேஷி தஸ்தேந ராமேண
விதிதாத்மநா” சுந். 36 : 10. பிராட்டி, திருவடியைப் பார்த்துக் கூறியது.
“சம்அபிபாஷிதும்” என்றதிலே யுள்ள “சம், அபி” என்ற உப சர்க்கத்திற்குப் பொருள் அருளிச் செய்கிறார்
நான் அங்கு” என்று தொடங்கி. என்கிறதும் –
என்கிற இரஹசியமும். உன்னோடே – திருவடியோடே.
“சமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே புஞ்ஜாநா அமாநுஷாந் போகாந் சர்வ காம சம்ருத்திநீ”- சுந். 33 : 17.

அத் தோழி தானும், பிறர் கூறுகின்ற நல் வார்த்தைகளும் இவள் செவியிற் படும்படியோ இவள்
தான் நின்ற நிலை’ என்று அறிகைக்காகச் சொன்னாளித்தனை அன்றோ.
ஊரார் பழிக்கு அஞ்சி அன்றோ நான் விலக்குகிறது என்ன,

என் செய்யும் ஊரவர் கவ்வையே.
ஆகில், உனக்கு வார்த்தை சொல்ல அடுப்பது இப்படியே காண், ‘நாட்டார் பழி சொல்லுவர்கள்’ என்று சொல்லாமல்
‘என் நினைவு இருந்தபடி இது’ என்று செல்லலா வதுண்டாகில் சொல்லிக் காணாய் என்கிறாள்.
ஊரார் பழி கொண்டு காரியம் என்? உன் நெஞ்சிற் குறை இல்லாமையே அன்றோ எனக்கு வேண்டுவது என்கிறாள்.

எல்லாம் செய்தாலும் -லோகத்தார் பழி தவிர்க்க வேண்டும் -தோழி இது பழி என்று சொல்பவர்கள்
நான் எங்கே நீ எங்கே அவன் எங்கே ஊரார் எங்கே பழி அனைவரும் சொன்னாலும் கவலை இன்றி இருக்க செய்தான்
சேஷ்டிதங்கள் -செய்தவன் என்னை நிறை கொண்டான் அவனை தவிர வேறு சொல் இல்லையே
அவனை விட முடியாதபடி ஈடுபாடு செய்த பிரான் ஊரார் பழி சொன்னாலும் விட முடியாத ஈடுபாடு கொடுத்து அருளி
அத்தா அரியே என்று உன்னை அழைக்க பித்தா என்பார் லோகத்தார்

——————————————————————————-

ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னை சொல் நீர் படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-

பக்தி விளைவித்த கிருஷிகன் செயல்களை அருளிச் செய்கிறார் -அபி நிவேசம் வளரும் படி கிருஷி பண்ணின உபகாரகன்
சீலன் -அனுபகாரனவனைப் போலே குறையச் சொல்லக் கடவையோ
தன்னை மீட்கைக்காக வார்த்தை சொல்லிய தோழியை -வாய் வார்த்தையாக பேசியதையும் பொறுக்காமல் அருளிச் செய்கிறார் –
ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து-அலர் தானே எரு -அன்னை நிரந்தர ஹித வசனம் -நீர் -பாத்தி கட்டி நிறுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்-ஆசை யாகிய நெல் -நெஞ்சம் விளை நிலம் -நாத்து –
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த-ஊர் பூசல் விளைவித்த காதல் -கடல் போலே –அமர் சமர் -பெரிய சண்டை –
பெரிய அமர்த்தி -இருப்பிடம் போட்டு சிம்ஹாசனத்தில் உட்கார்ந்த காதல் என்றுமாம்
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?-வர்ஷுவக ஸ்வ பாவம் -இத்தை வைத்தே காதல் வளர்த்தான் -திரு மேனி அழகு –
நமக்கு பவ்யனான -கண்ணன் -தோழி -நீ தானே சேர்த்து வைத்தாய் -அவளா நீ இன்று கடியன் என்று பழி சொல்வதா –

ஊரிலுள்ளவர்களால் பேசப் படுகின்ற அலராகிய எருவை இட்டு, தாயினால் பேசப் படுகின்ற நல் வார்த்தைகளாகிற தண்ணீரைப் பாய்ச்சி,
அன்பாகிய நெல்லை விதைத்து அதனை முளைப்பித்த நெஞ்சமாகிய பெரிய வயலிலே, பொருந்திய பெரிய காதலைக் கடலைப் போலே
உண்டாக்கிய மேகம் போன்ற திரு மேனியை யுடைய நம் கண்ண பிரான் கடியன் ஆவானோ? என்கிறாள்.
முளைத்த – முளைப்பித்த. காதலைக் கடல் புரைய விளைவித்த கண்ணன் என்க. கடியனே என்ற ஏகாரம்,
கடியன் ஆகான் என்னும் பொருளை யுடையது; எதிர்மறை.

என் செய்யும் ஊரவர் கவ்வை” என்றாள்; ஊரார் சொல்லும் பழியேயாய், அவன் தான் நமக்கு உடலானானோ அவர்கள்
சொல்லும் பழி பொறுத்திருக்கைக்கு; ஆனபின்பு, அவன் கடியன் காண் என்றாள்.
ஏதேனும் ஒன்றைச் சொல்லியாகிலும் மீட்க வேணுமே அவளுக்கு, ‘அவன் அருள் அற்றவன் காண்’ என்ன;
கெடுவாய், நீ சொல்லும் வார்த்தையே இது,அவன் நமக்கு என்ன குறை செய்தான்’ என்ன,
ஊரவர் பழி சொல்லிலும் மீளாதபடியான ஈடுபாடு உண்டான இடத்திலும் இந் நிலையில் வந்து முகங் காட்டிற்றிலன் கண்டாயே’ என்ன;
அவன் இப்போது வந்து முகங் காட்டிற்றிலனாகிலும், தான் முகங் காட்டாத போதும் தன்னை ஒழிய
நாம் மற்றொன்றால் பொருந்தாத படி செய்தானே! அவன் செய்த படி பொல்லாதோ என்கிறாள்.

கடியனே –
பிரிநிலை -ஏகாரம் கடியன் அல்லன் -அதீத பக்தியால் -பேசும் பாசுரம் -6-2- பிரணய ரோஷம் அங்கு தான்
இதில் அதிக பிராவண்யம் கொண்டு பேசுகிறாள்
தோழி சொன்னது கொண்டு பதில் சொல்வதாக -கொண்டால் –
தீர்ந்த என் தோழி -பிராவண்யம் கண்டு உகப்பவள் -அவள் சொல்ல மாட்டாளே
முகம் காட்டாது இருக்க கடியன் அல்லன் சொல்லக் கூடுமோ
கடியன் அல்லாமையை சாதிக்கும் இவள் -முகம் காட்டாது இருக்க -ஊரார் பழிக்க -அத்தனை காதல் மட்டும்
விளைவித்ததை சொல்வான் என் என்னில்
சமாதானம் -தோழி -கடியன் -சொல்லி மீட்க பார்க்கிறாள் -இவளை ரஷிக்க-ஏதாவது சொல்லி மீட்கப் பார்க்கிறாள் –
ஜாபாலி பெருமாளை திரும்ப சொல்லிய வார்த்தைகள் போலே –

ஊரவர் . . . . . . விளைவித்த கண்ணன்
இவை எல்லாம் செய்தாய் நீயோ.
ஊரவர் கவ்வை எருவாக –
அநுகூலம் இல்லாதவர்களை விட்டு நீங்கிய அன்று தொடங்கி ஊரவர் பழி சொல்லத் தொடங்கினார்கள் காணும்.
தங்களை விட்டுப் போருவதற்கு முன்னே “விபீஷணஸ்து தர்மாத்மா” என்றார்களே அன்றோ;
இவன் இக் குடியில் உள்ளார்படி அல்லன், இவனுக்கு வாசி உண்டு; அந்த வேறுபாட்டினைச் சொல்லுகிறது “தர்மாத்மா” என்று.
“மறக்குடி அறஞ் செய்யக் கெடும்” என்றதே அன்றோ. “அரக்கர் செயலை உடையவன் அல்லன்” என்பது போன்று,
ஜாதி மாத்திரமே இவன் பக்கல் எடுத்துக் கொள்ளலாவது.
பிராதி கூல்ய நிவ்ருத்தி மாத்ரத்திலே பழி சொல்வார் உண்டோ -விபீஷணம் -குல பாம்சனம் -என்றார்களே –
ஹிம்சாதி பண்ணாத தர்மாத்மா -சனாதன தர்மம் பெருமாளை ஆத்மாவாகக் கொண்டவன் –
ராஷசர்களுக்கு தர்மம் சாமான்யர்களுக்கு அதர்மம் அன்றோ –
அறத்தை செய்யச் செய்ய அரக்கர் குடி மறக்குடி -கிராத வம்சம் -கெடுமே -தர்மாத்மா -என்பதே பழி என்றவாறு –

ஊரார் சொல்லுகிற பழியை இவளுடைய அன்புக்கு எருவாக இட்டான்.
ஊரார் பழி சொல்லிற்றிலர்களாகில் இவள் தானும் கை வாங்கி இருக்குங் காணும்; என்றது,
இவள், ‘மறப்பேன்’ என்னும் அன்றும் மறக்க ஒண்ணாதபடி ஊரார் நினைவினை உண்டாக்குகின்றவர்கள்
தன்மையிலே நிற்பர்கள் ஆயிற்று என்றபடி.

அன்னை சொல் நீர்படுத்து-
தாயாரும் இதற்கு முன்பெல்லாம் ‘என் மகள்’ என்றே இருந்தாள், ஊரார் பழி சொல்லப் புக்க பின்பாயிற்று இவள் அறிந்தது.
தாயாருடைய ஹித வசனத்தை நீராகப் பாய்ச்சி.
எருவாவது, அடியிலே ஒருகாலே இட்டுவிடுவதே அன்றோ, நீர் மாறாமல் பாய்ச்ச வேணுமே;
ஊரார் ஒருகால் சொல்லி விடுவர்களித்தனையே, தாயார் வீட்டுக்குள்ளே இருந்து எப்போதும் ஒரே தன்மையாக
ஹிதம் சொல்லா நிற்குமே அன்றோ; அதனால், அன்னை சொல்லை ‘நீர்’ என்கிறாள்.

ஈர நெல் வித்தி –
அன்பாகிற நெல்லை வித்தி. இவள், அன்பு இருக்கும்படி ஆராய்ச்சி செய்ததும் இவ் விஷயத்திலே ஆயிற்று;
“முலையோ முழு முற்றும் போந்தில பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே” என்கிறபடியே,
இளமைப் பருவம் தொடங்கி வேறு ஒன்றினையும் அறியாள்.
புறம்பே சில விஷயங்களிலே பற்று உண்டாய் விரக்தி பிறக்க வேண்டா ஆயிற்று இவளுக்கு.
தன் சம்பந்தமான ஞானத்துக்கு உபகாரகமான மூல சுக்ருதமும் அவன் தானே ஆயிற்று.-ஆகவே –
முளைத்த -என்னாமல்– முளைப்பித்த என்று கொள்ள வேண்டும் –

முளைத்த –
எருவும் இட்டு நீரும் பாய்ச்சினாலும் முளைக்கும்போதும் முளைப்பிக்கும் சக்தி உண்டாகும்போதும் அவன் உண்டாக்க வேண்டுமே;
ஆதலின், “முளைத்த” என்கிறது. “சரீர ஆரோக்யம் செல்வம்” என்னும் பொருளைத் தொடக்கமாகவுடைய சுலோகத்திலே
சுகத்திற்குச் சாதனங்களையும் சொல்லி, அவற்றுக்குப் பலமான சுகத்தையும் தனித்துச் சொல்லி,
இரண்டற்கும் பகவான் திருவருள் வேணும் என்று சொல்லியிருக்கிறதே அன்றோ.
“சரீர ஆரோக்யம் ஐஸ்வர்யம் அரிபக்ஷ ஜயஸ் ஸுகம் தேவி த்வத் திருஷ்டி திருஷ்டானாம் புருஷாணாம் ந துர்லபம்”
என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 9 : 125. இது, திருமகளைப் பார்த்து இந்திரன் துதிப்பது.
இது, பிராட்டி விஷயமாயினும், பிராட்டிக்கும் ஈச்வரனுக்கும்
உண்டான அபேதத்தைப் பற்ற, பிராட்டி விஷயமான இச்சுலோகம்-இவ்விடத்திற்குப் பிரமாணமாகத் தட்டு இல்லை என்க.
வரவாறு ஓன்று இல்லையேல் -சாதனம் அவன் பண்ண சாதனப் பலனை இவள் அனுபவிக்கிறார்
விஷய வைலஷண்ய அதீநாயாக இச்சாயாகா -அவிதேயத்வாத் -ஞானைத்தை மட்டுமே விதிக்க முடியும் –
விஷயத்தை படிக்க ஞானம் விதிக்கலாம் -இச்சை தானே உருவாகும் -என்றபடி -ஸ்ரீ பாஷ்யத்தில் அருளிச் செய்தாரே –
ஆத்மாவாலே ச்ரோதவ்யா மந்தவ்யா -எல்லாம் விதி இல்லை –
இங்கு ஆழ்வார் விஷயத்தில் இச்சையும் உண்டாக்கி அருளினார் என்றபடி

சிறியதைப் பெரியது நலியுமாறு போலே, ஒருவன் செய்த புண்ணியத்தினுடைய பலத்தை வேறு ஒருவன் பறித்துக் கொள்ளாமல்
அப் புண்ணியத்தைச் செய்தவனே அநுபவிக்கும்படி செய்யும் போதும் அவன் திருவருள் வேணுமே.

நெஞ்சப் பெருஞ் செய்யுள் –
நெஞ்சமாகிற பெரிய செய்யிலே. கலவியும் பிரிவும் என்னும் இவற்றாலே புடைபடுத்திப் பரமபதத்தைப் போன்று
பரப்புடைத்தாம் படி பெருக்கினானாதலின் ‘நெஞ்சப் பெருஞ் செய்யுள்’ என்கிறாள்.
ஆக, ஊரார் அலராகிற எருவை இட்டு, தாயாராலே எப்பொழுதும் பேசப்படுகின்ற ஹித வசனமாகிற நீரை நிறுத்தி,
ஆசையாகிய நெல்லை வித்தி முளைத்த நெஞ்சமாகிற பெரிய விளை நிலத்துக்குள்ளே என்றபடி.

பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த –
பெரிதாய் அமர்ந்த காதல் ஆயிற்று. என்றது, ஊரார் சொல்லும் பழிக்கும் தாயாருடைய ஹித வசனத்துக்கும் மீளாதபடி
ஆத்மாவோடு கட்டுப் பட்டிருக்கின்ற காதல் என்றபடி.
இங்கே ‘கடல் புரைய’ என்றது,
கடலின் மிகப் பெரிதால்” -7. 3 : 6.என்னா நின்றது;
அதனில் பெரிய என்னவா” -10. 10 : 10 என்று,
ஈச்வரன் தன்னை விளாக்குலை கொள்ளும்படியான காதல் என்னா நின்றது;
ஆக, “பொய்ந்நின்ற ஞானம்” தொடங்கி இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட காரியம் இதுவாயிற்று.
கைங்கர்யத்திற்கு முன் ஷணத்தில் இருப்பதொன்றாய் இருக்குமே அன்றோ பரம பக்தி என்பது.
அது உண்டாக வேணுமே அன்றோ அவ் வருகு போம் போது; அங்கே போன பின்னர்
அங்குள்ளாரது ஒரு படியாய் இவரது ஒருபடியாய் இருக்க ஒண்ணாதே.
முதலிலே மயர்வற மதி நலம் அருளினது தன்னையே இவ்வளவாகப் பெருக்கினானாயிற்று.
அன்றிக்கே,
பெரிய போரை விளைக்கக் கூடியதான காதல் என்னுதல். என்றது,
ஊர்ப் பூசலை விளைத்த காதல் என்பதனைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே,
காமவேள் மன்னுஞ் சிலையாய் மலர்வாளி கோத்து எய்கிற காதல் என்னுதல்.
நன்று; ஈரம் என்பதற்கும், காதல் என்பதற்கும் வேறுபாடு என்? என்னில்,
“த்யாயதோ விஷயாந் பும்ஸ: ஸங்கஸ்தேஷு உபஜாயதே ஸங்காத் ஸம்ஜாயதே காம:
காமாத் குரோத: அபிஜாயதே”- என்பது, ஸ்ரீ கீதை. 2 : 62.
“விஷயங்களை நினைக்கின்ற ஒரு மனிதனுக்கு அந்த விஷயங்களிலே சங்கம் உண்டாகிறது,
அந்தச் சங்கத்தால் காமம் உண்டாகிறது, அந்தக் காமத்தால் குரோதம் உண்டாகிறது” என்கிறபடியே,
அதிலே ஓர் அவஸ்தா விசேடமாம். முன் நிலையைப் பற்ற, மேல் பிறக்கும் நிலை விசேடம்
வேறு பொருள் என்னலாம்படி அன்றோ இருப்பது.

கார் அமர் மேனி –
அடியிலே எருவும் இட்டு நீரும் பாய்ச்சினாலும், மேல் மழை பெய்யாதாகில் அப் பயிர் தலை குளிர்ந்து இராதே அன்றோ;
வடிவாலே ஆயிற்று மழை பெய்தது. நீர் உண்ட மேகம் போலே குளிர்ந்த வடிவு.

நம் கண்ணன் –
வடிவையும் தந்து தன்னையும் நமக்குத் தந்த கிருஷ்ணன். வெறும் வடிவில் பசை கண்டு அகப்படுமவள் அன்று,
அக வாயில் தண்ணளியும் உண்டாக வேணுமாயிற்று. கிருஷ்ணன் என்றால்
பெண்களுக்குச் சேஷ பூதன்’ என்பது பிரசித்தமே அன்றோ.

தோழி-
நீ தான் யாராய் இவ் வார்த்தை சொல்லுகிறாய்.
இரண்டும் உனக்கே பணியோ; ‘நீர்மை யுடையவன்’ என்று பொருந்த விடுகையும் உனக்கே பணியாய்,
‘அருள் அற்றவன்’ என்று அகற்றப் பார்க்கையும் உனக்கே பணியாயோ இருப்பது!

கடியனே –
இவ் விஷயத்தில் இப்படிப் பொருந்த விட்ட நீயே மீட்கப் பார்த்தாலும் மீளாதப டியான ஈடுபாடு உண்டாம்படி செய்தானாகில்,
இனி அவன் என் செய்வான். முன்பு நீர்மை யுடையவனாகச் சொல்லப் பட்டவன், இன்று பழிக்கும்படி கடியன் ஆனானோ?

ஊரவர் கவ்வை எருவாக அன்னை சொல் நீராக நீளும் இந் நோய்.-என்ற திருக் குறளை இங்கு ஒப்பு நோக்குக.

—————————————————————————————————-

கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத் தோழி! அன்னை என் செய்யுமே!–5-4-5-

குண ஹீனன் ஆனாலும் அனன்யார்ஹன் ஆக்கி அருளினான்
கடியன் -சீக்ர பிரவ்ருத்தி பண்ணி -ஸுவ கார்யத்தில் புலி -வேகம்
கொடியன் -கார்யம் தலைக் கட்டியதும் புரிந்து பாராமல் போகும் கொடியவன்
நெடியமால் -போகப் புக்கால் விலக்க ஒண்ணாத படி மேன்மை -மறக்க முடியாத படி –
உலகங் கொண்ட அடியன் -தன்னதே -அனன்யார்ஹம் ஆக்கிக் கொண்ட -எதிர் தலைக்கு ஒன்றும் ஒட்டாத படி
காலில் கீழ் கொள்ளும் கிருத்ரிமன்
அறிவரு மேனி மாயத்தன்-அழகாலே மயக்கும் -ஸ்வ பாவன் -விவேக ஞானம் -அருமையாக இருப்பதால்
கீழ் சொன்னவை தெரியாதே -ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!-குற்றம் சொல்லி மீட்க முடியாத -எனக்கு பவ்யம் இல்லாத நெஞ்சை
கொடியவனை கொடியவன் என்று சொல்வதை கேட்காத கொடுமையான நெஞ்சே
துடி கொள் இடை மடத்தோழி! அன்னை என் செய்யும் எல்லே –
முற்பாடனகா மேல் விழுவான் -கடியன்
புறம்புள்ள உறவில் பற்று அறுத்து -கொடியன் /
அதிசய வ்யாமோஹத்தான்-நெடியமால்
கால் கீழ் கொண்டவன் /பரிச்சேதிக்க அரியவன் /ஆச்சர்ய சேஷ்டிதங்கள்/என்றே நெஞ்சு கொள்ளுமே
என் நெஞ்சம் -செய்தவை எனக்கு அநு கூலம் என்பதால்
இடை அழகு -மடப்பம் -உடைய தோழி
பிரணய தாரையில் வாசி அறிவாயே -என்கிறாள் -மீட்கையில் நோக்கம் என்று அறிந்தேன் –
நிஷேதிப்பது அன்னைக்கு அஞ்சி என்றபடி

கடியன், கொடியன், நீண்ட மால், உலகத்தைத் தாவி அளந்த திருவடிகளை யுடையவன், அறிதற்கு அரிய திருமேனியை யுடைய
மாயத்தை யுடையவன் ஆகிலும், கொடிய என் மனம் அவன் என்றே கிடக்கும்; என்ன ஆச்சரியம்! துடியினது வடிவத்தைக் கொண்ட
இடையினையும் மடப்பத்தினையுமுடைய தோழீ! தாய் என்ன செய்ய மாட்டுவாள் என்கிறாள்.
முதல் இரண்டு அடிகளின் பொருள்களை வியாக்கியானத்திற் காணல் தகும். துடி-உடுக்கை.

நீ அவனுக்கு நீர்மை இல்லை, அவன் அருள் அற்றவன்’ என்றாயாகிலும், அச் சொல்லுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை காண்,
அவன் குணம் இல்லாதவன் என்று நீ சொல்லுவது என்னை மீட்கைக்காக அன்றோ, அதுவும் நான் அவனைப் பற்றுகைக்கு
உறுப்பாகச் சொன்னாய் ஆயினாயித்தனை என்கிறாள்.

கடியன் கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட அடியன்
அவன் குணம் இல்லாதவன் என்று சொல்லும் போதும் நானே சொல்ல வேணுங்காண்;
நீ மூட்டிக் கடக்க நின்றாயித்தனை போக்கி, அவனைக் கலந்து உட்புகா நின்ற என்னளவு தெரியுமோ உனக்கு அவனை;
ஆன பின்னர் அவை தம்மையும் நான் சொல்லக் கேள் என்கிறாள்.
கடியன்-
கூரியன்; தன் காரியத்திலே நோக்குள்ளவன். என்றது, தனக்கு ஒரு காரியம் உள்ளது ஆனால்,
எதிர்த்தலையின் அளவு பாராதே மேல்விழுந்து வந்து கலக்குமவன் என்றபடி. கடுமை-கூர்மை.

கொடியன் –தான் மேல் விழுந்து வந்து கலக்கச் செய்தே ‘பிரியேன்’ என்ன வல்லவன். என்றது,
கலவியின் மத்தியத்திலே பிரிவினை நினைத்தவன் இனிச் செய்ய மாட்டாதது ஒன்று உண்டோ? என்றது,
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான்” என்கிறபடியே,-திருப் புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே –
கலக்கச் செய்தே மற்று ஒன்றினை நினைக்க வல்லவனுக்கு இனிச் செய்ய அரியது ஒன்று உண்டோ? என்றபடி

நெடிய மால்-
மால் என்பது பெருமை. நெடிய என்பது, அதன் மிகுதியைக் குறிக்கின்றது. அறப் பெரியவன் என்றபடி.
இதனால், கை புக்கு இருக்கச் செய்தேயும் அளவிட ஒண்ணாதபடி இருக்குமவன் என்கை.
பிரிய நினைக்கின்றான்’ என்று அறியா நிற்கச் செய்தேயும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவு” என்ன திரு விருத்தம் -திருமலை உத்தேச்யமாக போகும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அங்கே தடுக்க முடிந்தது ஒண்ணாதபடியாய் இருக்கை. என்றது,
மேல் விழுந்து வந்து கலவா நிற்கச் செய்தே பிரிய நினைத்தால், அதனை அறியச் செய்தேயும், ‘நீ பிரிய நினைத்தாய்’ என்று
மடி பிடித்துக் காற்கட்டி விலக்க ஒண்ணாத படியாய் இருக்கை.

உலகம் கொண்ட அடியன் –
பிறர் உடைமையைத் தனக்கு ஆக்க நினைத்தால் பின்னையும் அவர்களுக்கு ஓர் அடியும் எஞ்சாதபடி செய்யுமவன்.
அவர்களைப் பின்னே பாதாளத்திலே தள்ளுமவன். பாதாளங் கலவிருக்கை கொடுக்குமவன்.
ஒன்றைக் கொள்ளப் பார்த்தால், அவர்களுக்கு ஒன்றும் எஞ்சாதபடி கொள்ளும் திருவடிகளை யுடையவன்.

அறிவு அரு மேனி
கிட்டினால், ‘இத்தலைக்கு எல்லாச் செல்வத்தையும் தர நினைக்கின்றானோ, எல்லாச் செல்வத்தையும்
கொள்ளை கொள்ள நினைக்கின்றானோ, என்று அறிய ஒண்ணாத படியான வடிவை யுடையவன்.
என்னுடைய ஆத்மாவும் என்னுடைமைகளும் நீ இட்ட வழக்கு’ என்பாரைப் போலே சொல்லி ஆயிற்று
இத் தலையில் ஆத்மாவையும் மற்றைச் செல்வத்தையும் கொள்ளை கொள்வது. என்றது,
தன்னையும் தன்னுடைமையையும் இவள் இட்ட வழக்கு ஆக்கி, பின்னை யாயிற்று இவளைத் தனக்கு ஆக்கிற்று என்றபடி.

மாயத்தன்-
நானும் என்னுடைமையும் நீ இட்ட வழக்கு’ என்ற இவ் வார்த்தையை நினைத்து அதிலே நெஞ்சு மூழ்கி யிருக்க,
அவ்வளவிலே கண்களிலே மணலைத் தூவி அகல வல்லவன்.

ஆகிலும்-
நீ சொல்லிச் சொல்ல மாட்டாதவையும், சிசுபாலன் முதலானோர் சொல்ல மாட்டாதவையும் எல்லாம்
நான் சொல்ல வல்லவள் அன்றோ அவை விடுகைக்கு உறுப்பாகப் பெற்றேனாகில்.

கொடிய என் நெஞ்சம் –
உல்லோகமாய் உலகத்திற்கு வேறுபட்டதான என் நெஞ்சு. என்றது,
நாட்டாருக்கு, குணம் பற்றுகைக்குப் பற்றாசாய்த் தோஷம் விடுகைக்கு உடலாய் இருப்பது;
அங்ஙனன்றிக்கே,
குண ஹாநி தன்னையே பற்றுகைக்கு உடலாகக் கொள்ளும்படியான என் நெஞ்சம் என்றபடி.

அவன் என்றே கிடக்கும்-
இத் தோஷங்கள் அவன் உடைமைகள் அன்றோ என்று ஈடுபட்டுக் கிடக்கும் என்று பிள்ளான் பணிப்பர். என்றது,
அவன் கடியன் என்றால் அவன் கடுமை இப்போதே காண வேணும்;
அவன் கொடியன் என்றால், அவன் கொடுமை இப்போதே காண வேணும்;
அவன் அடைய முடியாதவன் என்றால், அவன் அடைய முடியாதவனான படியை இப்போதே காண வேணும்;
அவன் எல்லாச் செல்வங்களையும் கொள்ளை கொள்பவன் என்றால், அவன் எல்லாச் செல்வங்களையும்
கொள்ளை கொள்ள நான் இழந்திருக்க வேணும்;
அவன் அறிய முடியாதவன் என்றால், அவன் அறிய முடியாதவனாக இருக்கும் தன்மையை இப்போதே அறிய வேணும் என்ற படியாம்.

அன்றிக்கே,
என் நெஞ்சுக்கு மாயாவாத ருசி உண்டோ? அறிகின்றிலேன் என்பர் சீயர். என்றது,
விசேஷணாம்சத்தில் தாத்பரியம் இன்றிக்கே, விசேஷ்யத்திற்கு அவ்வருகு அறிகின்றது இல்லை என்றபடி.
அத்வைத ருசி -விசேஷணங்கள் இல்லாத கண்ணன் -தோஷங்கள் இல்லாத கண்ணன் மட்டுமே நெஞ்சிலே பட –
நிர் விசேஷம் ப்ரஹ்மம் என்றபடி
இதனால், அவனுடைய சம்பந்தம் குணம் காரணமாக வந்தது அன்று, ஸ்வரூபத்தோடு கூடியிருப்பது என்கை.
குண க்ருத தாஸ்யம் இல்லை -ஸ்வரூப பிரயுக்த தாஸ்யம் என்றபடி

எல்லே-
என்னே! இஃது ஓர் ஆச்சரியம் இருக்கும்படியே!
அன்றிக்கே,
உன்னை மீட்க நினைத்த நான் சொன்னபடியே அன்றிக்கே ஒழிந்த பின்பு, இனி, நீ நினைத்த படியே நினைத்திரு’ என்று
போகப் புக்காள் தோழி; இங்ஙனே வாராய் என்று அவள் கையைப் பிடித்து ‘எல்லே’ என்று அழைக்கிறாள் என்னலுமாம்.

இவள் இப்படிச் சொன்னவாறே, ‘இது ஓர் அன்பின் தன்மை இருந்தபடி என்?’ என்று நினைத்தவாறே
தோழிக்கு ஒரு விகாரம் பிறந்தது; அதனைக் கண்டு
துடிகொள் இடை மடம் தோழி’ என்கிறாள்.
துடியோடு ஒத்திருக்கிற இடையையும், ஆத்ம குணத்தையுமுடைய தோழீ!
அன்றிக்கே,
உன் வடிவிற்கும் குணத்திற்கும் என் பக்கலுண்டான அன்பிற்கும் ஈடாக வார்த்தை சொல்லப்பாராய் என்கிறாள் என்னுதல்.
நான் அது அறியாமையாலும் வேண்டாமையாலும் சொல்லுகிறேனோ, தாய் சொல்லுமதற்கு அஞ்சிக் காண்
நான் இப்படிச் சொல்லுகிறது என்ன,

அன்னை என் செய்யுமே-
உன் சொல் கேளாத நான், இனி, தாய் சொல்லோ கேட்கப் புகுகிறேன்.
அநசூயை, பிராட்டியைப் பார்த்துப் ‘பெண்களுக்குத் தெய்வம் கணவனே காணும்’ என்ன,
கேட்ட பிராட்டி நாணமுற்றுக் கவிழ்தலை இட்டிருந்தாள்; ‘நான் இவர் பக்கல் ஈடுபாடுடையவளாய் இருக்கிற இருப்புக்குக் காரணம்,
பெருமாள் பக்கல் உண்டான குணங்களாலே என்றே அன்றோ நாட்டார் நினைத்திருப்பது;
தெய்வ சம்பந்தத்தால் அவருக்குக் குணமுண்டான தித்தனை போக்கி, குணங்கள் இல்லாதவருமாய் அழகு இல்லாதவருமானாலும்
நான் அவரை விட மாட்டாதே இருக்கும் இருப்பைக் காட்டலாமே அன்றோ அவரைக் குணங்களோடு
பிரித்து வைக்கப் பெற்றதாகில்’ என்றாளே அன்றோ.
ஒரு விஷயத்தில் பாவ பந்தம் உறைத்திருப்பார் வார்த்தையாயிற்று இது.
“வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது; என்னக் கடவதன்றோ. நன்று;
“இது, குணாதிக விஷயத்தில் சொல்லுகிற வார்த்தையாகில், ‘கரும்பின் புழு கரும்பு அன்றி உண்ணாது’ என்ன வேண்டவோ? என்னில்,
அவனுக்கு இந் நன்மைகள் இல்லையே யாகிலும் நான் அவனை விட மாட்டேன்’ என்கிற பாவ பந்தத்தில் உறைப்புத் தோற்றும்படி
மாறாடிச் சொல்லுகிறதல்லது, குணாதிக விஷயத்தில் இது இருப்பதாமோ என்க.
என் ஸ்வரூபத்தைப் பார்த்தால் நான் உன்னை விட மாட்டேன்,
நீ நீ அன்றிக்கே இருந்தாலும் என்னால் விடப் போகாது..

ஏது செய்தால் மறக்கேன்? மனமே! தொழுதும் எழு
தாது மல்கு தடம்சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே.- என்பது, பெரிய திரு. 9. 3 : 3.

———————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம்- 109- திருவாய்மொழி – -5-2–6….5-2-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

June 4, 2016

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6-

சாம்சாரிக சகல கிலேசங்களும் தீரும் படி -ஆஸ்ரித சம் ரஷண அர்த்தமாக -சர்வேஸ்வரன் அடியார்கள் எங்கும் பரந்து இருக்க
கீழ் சொன்ன அரக்கர் அசுரர் ஸ்வ பாவங்கள் உடையவர்களை -இவர்களைப் பிடித்து உய்மின்
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்-சரீரம் முடித்து -பிராணன் -உண்ணும் -வியாதி சரீர மநோ-இரண்டும் –
பகையும் பசியும் போன்ற க்ரூர ஸ்வ பாவங்கள் எல்லா வற்றையும்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார்-அடியார்கள் -செய்தன -அவனைப் பற்றினதால்
கடிவதற்க்காக போந்தார்கள்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்-எங்கும் நிறைந்து -பாடி ஆடி
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–தேவதாந்திர விஷயாந்த்ரங்கள் -உபாய போக்யமாகக் கொண்டு
சேஷத்வ வ்ருத்தி கைங்கர்யம் பண்ணி உய்யலாமே -கீழ் உய்யும் வகை இல்லை என்றவர்களுக்கும் உய்ய வழி அருளிச் செய்கிறார் –

உயிரைக் கொன்று உண்ணுகின்ற நோய் என்ன, பகை என்ன, பசி என்ன, மற்றும் தீயனவாயுள்ளன எவை எவை உன்ளனவோ
அவை எல்லாவற்றையும் இவ் வுலகத்தில் விடாமல் நின்று போக்குவதற்காக, சக்கரத்தைத் தரித்த சர்வேச்வரனுடைய அடியார்கள் வந்தார்கள்;
வந்து செய்த காரியம் யாது? எனின், இசை பாடியும் துள்ளி ஆடியும் இவ் வுலகத்திலே பெரிதும் பரந்தார்கள்;
தொண்டீர்! மனத்தைச் செந்நெறியிலே நிறுத்திச் சென்று தொழுது உஜ்ஜீவிப்பீர்களாக என்கிறார்.
இவ்வுலகில் நின்று கடிவான் என்று மாற்றுக. போந்தார் பரந்தார் – போந்தார்களாகிப் பரந்தார்கள். போந்தார்: முற்றெச்சம்.
நன்று பரந்தார் எனக் கூட்டுக. “நன்று பெரிது” என்பது தொல் காப்பியம். தொண்டீர் சிந்தையைச் செந்நிறுத்தித் தொழுது உய்ம்மின் என்க.

எல்லாத் துக்கங்களையும் போக்குகைக்காக ஸ்ரீ வைணவர்கள் உலகமடையப் பரந்தார்கள்;
அவர்களோடே நீங்களும் அவனை அடைந்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார்.

கொன்று உயிர் உண்ணும் விசாதி-
சரீரத்தின் பிரிவினைப் பிறப்பித்துப் பிராணன்களைக் கொள்ளை கொள்ளும் படியான வியாதி
அன்றிக்கே,
பிராணனைப் பிரித்துச் சரீரத்தை முடிக்கும் வியாதி என்னுதல்.
இப் பொருளில், உயிர் என்பதற்குச் சரீரம் என்பது பொருள்.
கொன்று உயிர் உண்ணும் வியாதி-தேக விச்லேஷம் உயிர்” என்பதற்கு, இரண்டு பொருள்;
ஒன்று, பிராணன். மற்றொன்று, சரீரம்.

கொன்று -பிராணனை அபஹரிக்கும் வியாதி
பகை பசி –
அப்படிச் செய்யும் பகையும் பசியும். இப்படிப் பிரித்துச் சொல்லுகிறது என்?

தீயன எல்லாம் –
தண்ணியவை எல்லாம்.

நின்று இவ் வுலகில் கடிவான் –
இவ் வுலகில் விடாமல் நின்று போக்குகைக்காக.

நேமிப் பிரான் தமர் போந்தார்-
கையும் திருவாழியுமான அழகிலே தோற்றிருக்குமவர்கள் வந்தார்கள்.
நேமிப் பிரான் தமர்-ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்திலே நித்திய சூரிகள்.-
எம்பெருமானார் நிர்வாஹத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்கள்.

போந்த நேமிப் பிரான் தமர், நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்-
நன்றான இசை பாடியும், பரபரப்போடு நிருத்தம் பண்ணியும், இப்படிப் பூமி அடையப் பரந்தார்கள்.

சென்று தொழுது உய்ம்மின்-
அவர்கள் பாடே சென்று அவர்களைத் தொழுது உஜ்ஜீவித்துப் போகுங்கோள் என்னுதல்.-ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹம்
அவர்களோடே சென்று சர்வேச்வரனை அடைந்து உஜ்ஜீவித்துப் போகுங்கோள் என்னுதல்.-எம்பெருமானார் நிர்வாஹம்

தொண்டீர் –
தக்கது அல்லாத விஷயத்தில் தொண்டு பட்டிருக்கிற நீங்கள். என்றது,
திருந்துகைக்கு யோக்கியதை யுடைய நீங்கள் என்றபடி.
அது செய்யுமிடத்தில்,

சிந்தையைச் செந் நிறுத்தியே-
தொழுத பின்னர் “எனக்கு ஒன்று தா, உனக்கு ஒன்று தருகிறேன்” என்னாமல் வணங்குங்கோள் என்கிறார்.

——————————————————————————————

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்ப தெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-

தேவதாந்தர பரரைக் குறித்து -அவனை ஒழிய -இவர்களுக்கு ரஷண சக்தி இல்லையே -அவனே தேவாதி தேவன்
நித்ய நைமித்திக கர்மங்களை -சரீரத்வ புத்தியாகக் கொண்டு அனுஷ்டிக்கப் பாருமின் –
நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்-சுபாஸ்ரயம் அல்லாமல் வலிய பிடித்து -வைக்க வேண்டுமே
பேரேன் என்று நெஞ்சு நிறைய அவன் தானே நிர்ஹேதுகமாக புகுவான் -பிராப்யம் அவனுக்கே தானே உண்டு –
உஜ்ஜீவனன் ஏற்படுத்தும் போதும் அவனாலே
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே-திரும்ப கிட்டி -நமக்கு அருள அவர்கள் இவன் இடம் சென்று –
கிட்டி கிடீர் இவர்கள் கொடுப்பது மார்கண்டேயனும் சாஷி
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை-மனதை கறுப்பாக-வெறுத்து வைக்காமல் –
இதர தேவதா பரதவ பிரதிபத்தி பண்ணுவதே கறுத்த மனம்
இதர தேவதைகள் மேலே ஸ்ரத்தையும் இவன் தானே உண்டு பண்ணுகிறான் -நாட்டினான் –தெய்வம் எங்கும் —
நல்லதோர் அருள் தன்னால் காட்டினான் இவனே சரீரி அவர்கள் சரீரம்
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே-எல்லாம் அவன் மூர்த்தி -கிருஷ்ணனுக்கு
சரீர வடிவம் -அறிந்து -சர்வ யஜ்ஞ்ஞானாம் போக்தா ச பிரபுரேவச –செய்கின்ற கிரிசைகள் எல்லாம் யானே என்னும் -இத்யாதி
பாகவத உத்கர்ஷ ஹேதுவான இவனுக்கு பாரம்யம் அருளிச் செய்கிறார்

உங்கள் உள்ளத்திலே நிறுத்திக் கொள்ளுகின்ற தெய்வங்கள் உங்களை உஜ்ஜீவிப்பித்துக் கொள்ளுவதும்
மீண்டும் அவன் திரு வருளாலே யாகும்;அதற்கு மார்க்கண்டேயனே சான்று ஆவான்;
தண்ணிய மனம் சிறிதும் வேண்டாம்; கண்ண பிரானைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை;
ஆதலால், உங்களால் செய்யப்படுகின்ற நித்திய நைமித்திக கர்மங்கள் எல்லாவற்றையும் சர்வேச்வரனுக்குச்
சரீரமாக இருப்பவர்கள் இந்தத் தேவர்கள் என்ற எண்ணத்தோடு அவர்களுக்கு இடுங்கோள் என்கிறார்.
நிறுத்திக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்வது அவனொடே கண்டீர் என்க. ‘அவனொடே’ என்றது,
அவன் திருவருளாலே யாகும் என்றபடி- கரி – சான்று. ‘கறுத்த’ என்பது, ஈண்டுக் குற்றத்தைக் காட்டுகின்றது.
இறுத்தல் – கொடுத்தல். அவன் மூர்த்தியாயவர் – அவனுக்குச் சரீரமாக இருப்பவர்கள்.

நாங்கள் பல நாள் தேவதைகளுக்குப் பச்சை இட்டு ஆராதித்துப் போந்தோம்; அதன் முடிவு கண்டு, பின்பு பகவானைப் பற்றுகிறோம் என்ன,
நீங்கள் ஆராதிக்கின்ற தேவதைகள் உங்களைக் காப்பாற்றுவதும் அவன் பக்கலிலே கொடு சென்று காட்டிக் கொடுத்தாயிற்று,
ஆன பின்பு, அவனையே ஆராதிக்கப் பெறில் அழகிது; அதுவும் மாட்டீர் கோளாகில், நீங்கள் அவர்களுக்கு இடுகிறவற்றை
இவர்கள் அவனுக்குச் சரீரமாக உள்ளவர்கள், இவர்கள் முகத்தாலே நாம் பகவானை ஆராதிக்கிறோம்’ என்று
புத்தி பண்ணி யாகிலும் இடுதற்குப் பாருங்கோள் என்கிறார்.

நிறுத்தி –
தியானம் செய்தற்குரிய பொருளை நிலைத்திருக்கச் செய்கையும் தியானம் செய்கிறவனுக்கே பாரமாயிற்று.
தியானம் செய்கிற இவன் எடுத்த, நிறுத்த, நிற்கின்றவையே யன்றோ அந்தத் தெய்வங்கள்.
(த்யே வஸ்து -உள்ளத்தில் நிறுத்தும் பொறுப்பு -த்யானம் பண்ணுபவனுக்கே –
ஸ்ரீ மன் நாராயணனே அந்தர்யாமி -ஆகவே இந்த நியமம் இவன் இடம் இல்லையே )

நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் –
உங்களுடைய இருதயங்களிலே கொள்ளுகின்ற தேவதைகள். ‘புறம்பே சிலர் அறியில் பரிஹசிப்பர்கள்’ என்று
தாங்களே அறிந்ததாக உபாசிப்பவர்கள் என்பார் ‘உள்ளத்துக் கொள்ளும்’ என்கிறார்.

உம்மை உய்யக்கொள்-
உங்களை உஜ்ஜீவிப்பித்துக் கொண்டார்கள் ஆகிறபடி.

மறுத்தும் அவனோடே கண்டீர்-
நீங்கள் ‘அவனிலும் இவர்கள் அடையத் தக்கவர்கள்’ என்று பற்ற, இவர்கள் உங்களை
அவன் பக்கலிலே கொண்டுபோய் அன்றோ காப்பாற்றுவது.
”காப்பாற்றுவதில் நிலைநிற்கின்றவரும் எல்லா ஆத்மாக்களுக்கும் ஈச்வரனாயும் மஹாத்மாவாயும் இருக்கிறவருமான விஷ்ணுவைத் தவிர,
காப்பாற்றும் திறன் வேறு ஒருவர்க்கும் இல்லை என்பது பிரசித்தம்” என்கிறபடியே, என்றும் ரக்ஷண தர்மம் கிடப்பது அவன் பக்கலிலேயாம்.

வேறு சிலரை ஆராதிக்க அவனே பலத்தைக் கொடுக்கிறவன் ஆவான் என்பது என்? என்ன
மார்க்கண்டேயனும் கரியே-
இவ்வர்த்தத்திற்குச் சாக்ஷி மார்க்கண்டேயன்.
அம்மார்க்கண்டேயன் பலநாள் தேவனை ஆராதிக்க, அவனைப் பார்த்து, ‘பலநாள் நீ நம்மை ஆஸ்ரயித்தாய்,
இந்த ஆஸ்ரயணம் பாழே போக ஒண்ணாது, உன்னோடு என்னோடு வேற்றுமை இல்லை,
உனக்கு ஒரு புகல் காட்டித் தருகிறேன் போதரு’ என்று
சர்வேச்வரன் பக்கலிலே கொண்டு சென்று, அவனுடைய விருப்பத்தைத் தலைகட்டிக் கொடுத்தான்;
ஆனபின்னர், இதற்குச் சான்று அவனே என்றபடி.

கறுத்த மனம் ஒன்றும் வேண்டா-
புன் சிறு தெய்வங்களைப் பரம்பொருளாக நினைத்து இருக்கும் தண்ணிய மனம் உங்களுக்கு வேண்டா.

கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை-
“வேதங்களும் மூன்று அக்நிகளும் ஐந்து ஆஹீதிகளும் எல்லாத் தேவர்களும் தேவகியின் புத்திரனான கண்ணபிரானே” என்கிறபடியே,
அவனுக்குச் சரீரமாக அல்லது ஸ்வதந்திரமாயிருப்பது ஒரு தேவதை இல்லை.
“எந்த எந்த பக்தன் எந்த எந்தச் சரீரத்தைச் சிரத்தையுடன் அருச்சிப்பதற்கு விரும்புகிறனோ அவன் அவனுக்கு
அந்த அந்தச் சிரத்தையையே நிலைநிற்கும்படி செய்கிறேன்” என்கிறபடியே, அக்கண்ணபிரானுக்குச் சரீரமாக உளராகில் ஆமித்தனை.

இறுப்பது எல்லாம் அவன் மூர்த்யாயவர்க்கே இறுமின் –
ஆனபின்பு, நீங்கள் அவ்வத் தேவர்கட்குக் கொடுக்கும் சமாராதநத் திரவியங்களை எல்லாம்
‘இவர்கள் அவனுக்குச் சரீரமாக இருப்பவர்கள்’ என்று புத்திபண்ணி, அவர்களுக்குக் கொடுக்கப் பாருங்கோள்.
‘இறுப்பது எல்லாம்’ என்றது, “தேவதாந்தராய-பிற தேவதையின் பொருட்டு” என்று தோற்றுகிற நித்திய
நைமித்திகக் காமங்களை யெல்லாம் என்றபடி.
‘அவன் மூர்த்தியாயவர்க்கே’ என்றது, அவனுக்குச் சரீரமாக இருக்கிற அவர்களுக்கே என்றபடி.
ஆக, “அந்தராத்மா சர்வேச்வரன்’ என்று புத்திபண்ணி அவனுக்குச் சாமாராதனம் செய்கிறோம்
என்ற எண்ணத்தோடு செய்யுங்கோள் என்றபடி.

—————————————————————————————–

இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8-

சர்வ தேவதா நாயகன் -ஸ்ரீ வத்ச நாயகன் -கிருஷ்ணன் -அடியார்கள் -எங்கும் நிறைந்து இருக்க
இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி-கடமை நித்ய நைமித்திக கர்மங்கள் செய்ய -சமஸ்த லோகங்களிலும்
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே-சக்கரவர்த்தி வரி வசூல் பண்ண ஆள்களை வைப்பது போலே
பரஸ்பரம் பாவயந்த -இட்ட பணி-சிஷ்யனையும் தன்னையும் தன் ஆச்சார்யருக்கு சிஷ்யர் என்றே எண்ண வேண்டுமே
நாநா ருசி -குண அனுகுணமாக –சர்வம் ப்ரஹ்மாத்மகம்-சரீர பேதங்களை -கர்ம ஆராத்ய தேவதைகளாக
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி ஸ்ரீ வத்சம் மகா லஷ்மி உடன் சேர்ந்த -சர்வாதிகத்வ ஸூ சகம் -சேஷ பூதர்கள்
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.-சாம்சாரிக தோஷத்தால்
வெறுக்காமல் -கொடு உலகம் காட்டேல் -ததீய சம்பந்தம் அறிந்து வெறுக்காமல்
சர்வ உத்கருஷ்டர் -எங்கும் நிறைந்து இருக்க -உஜ்ஜீவனத்துக்கு இவர்களை பணிவதே வழி

தெய்வங்களுக்கு எல்லாம் நாயகனான அந்தச் சர்வேச்வரன் தானே, நீங்கள் கொடுக்க வேண்டிய பொருள்களைக் கொடுத்து,
அவர்கள் அருளைப் பெற்று உஜ்ஜீவிக்கும்படி, தன் சரீரத்தையே எல்லா உலகங்கட்கும் தெய்வங்களாக நிறுத்தினான்;
ஸ்ரீவத்சம் என்னும் மறுவும் பிராட்டியும் தங்கியிருக்கின்ற திருமார்பையுடையவனான அவ் வெம்பெருமானுடைய அடியார்கள்
இசைகளைப் பாடிக் கொண்டு இந்த உலகத்திலே வெறுப்பு இல்லாமல் நிறைந்து வசிக்கின்றார்கள்;
நீங்களும் அவர்களை அடைந்து வணங்கி உய்ந்து போகுங்கோள் என்கிறார்.
உண்ண நிறுத்தினான்; தன்மூர்த்தியை எல்லா உலகுக்கும் தெய்வங்களாக நிறுத்தினான் என்க. பூதங்கள் மிக்கார் என முடிக்க.
பொருளை நோக்கி ‘மிக்கார்’ என உயர்திணை முடிபு கொடுத்து ஓதுகிறார். நீர் மேவித் தொழுது உய்ம்மின் என்க.

இராஜசராயும் தாமசராயும் உள்ள சேதநர் குணங்களுக்குத் தகுதியாக அடையலாம்படி இதர தெய்வங்களை உலகம் அடங்கப் பரப்பி வைத்தான்;
ஆகையாலே, அவனுடைய அசாதாரண விக்கிரஹத்தில் தோற்றிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் உலகம் அடங்கப் பரந்தார்கள்;
நீங்களும் அவர்களைப் போன்று அவனை ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் என்கிறார்.

இறுக்கும் இறை இறுத்து உண்ண தன் மூர்த்தி தெய்வங்களாக எவ்வுலகுக்கும் நிறுத்தினான்-
செய்த பயிருக்குக் கடமை இறுக்குமாறு போன்று, உங்களுடைய புண்ணிய பாவங்களுக்குத் தகுதியாக
அவ்வவ் தேவதைகளுக்குக் கொடுக்கும் திரவியங்களைக் கொடுத்து ஜீவிக்கைக்காக,
எல்லா உலகங்களிலும் தனக்குச் சரீரமாக இருக்கிற தேவதைகளை நிறுத்தினான். என்றது,
இராஜாக்கள் ஊர்தோறும் கூறு செய்வார்களை வைக்குமாறு போன்று நிறுத்தி வைத்தான் என்பார் ‘நிறுத்தினான்’ என்கிறார்.

அத் தெய்வ நாயகன் தானே –
இவ் வுலகிலுள்ளாரோடு அந்தத் தேவர்களோடு வேற்றுமை யற எல்லார்க்கும் ஒக்க நியமிக்கின்றவனாய் இருக்கிற தானே

மறுத் திரு மார்வன் –
ஸ்ரீ வத்ஸத்தையும் பிராட்டியை யுமுடைய மார்வன் என்னுதல்;
ஸ்ரீ வத்ஸத்தை யுடைய அழகிய மார்வை யுடையவன் என்னுதல்.

அவன் பூதங்கள்-
அவனுடைய அசாதாரண விக்கிரஹத்தில் தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்.

கீதங்கள் பாடி வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார்-
பிரீதியின் மிகுதியாலே கீதங்களைப் பாடி, ‘சம்சாரத்தில் வசிக்க வேண்டியிருந்ததே!’ என்கிற
வெறுப்பு இன்றிக்கே பூமி எங்கும் பரந்தார்கள்.

நீர் மேவித் தொழுது உய்ம்மின் –
ஆன பின்பு, நீங்கள் சென்று அவர்களை அடைந்து உஜ்ஜீவியுங்கோள் என்னுதல்;
அந்தச் சத்துவ குணத்திலே நிலை நின்ற பெரியோர்களைப் போன்று நீங்களும் வேறு ஒரு பயனைக்
கருதாதவர்களாய்ச் சர்வேச்வரனை அடைந்து உஜ்ஜீவித்துப் போகுங்கோள் என்னுதல்.

—————————————————————

மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-

ஆஸ்ரிதரைக் கை விடாத -அபிரச்சுத ஸ்வ பாவன் -அச்சுதன் -கைங்கர்ய குண நிஷ்டர்கள் உலகம் எங்கும் நிறைந்து இருக்க
மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள் வேதப் புனித இருக்கை-ருக் -வேதம் -ஸ்வரூப ரூப குண பிரதிபாதிதம்
புனிதம் -பாவனம் -புருஷ ஸூ க்தம் -நாராயண அனுவாதம்
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே-ஆராதனா ரூபம் ஞானம் கலந்த பக்தி ஞான விதி
பூவாலே புகையும் -சாத்துப்பொடி இத்யாதி
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–அநந்ய பிரயோஜனராய் -சேஷ வ்ருத்தி ஆராதனை
கைங்கர்ய குண நிஷ்டர்கள் -வைகுந்தத்து அமரரும் முனிவரும் -முனிவர்களும் யோகிகளும் –
பரதன் -இளைய பெருமாள் போல்வார் -மிக உடைத்தானதால் அவர்களைத் தொழுது உய்மின்

வேதங்களிலேயுள்ள பரிசுத்தமான ஸ்ரீ புருஷ சூக்தங்களை நாக்கினாலே உச்சரித்துக் கொண்டு, பக்தி மார்க்கத்தினின்றும் வழுவாமல்,
பூவும் புகையும் விளக்கும் சாந்தமும் தண்ணீரும் ஆகிய இவற்றாலே நிறைந்தவர்களாய்க்கொண்டு பொருந்தி, அடியார்களை நழுவ
விடாதவனான சர்வேச்வரனைத் தொழுகின்ற அடியார்களாலும் பகவர்களாலும் உலகமானது நிறைந்திருக்கின்றது;
ஆதலால், நீங்கள் அவர்களை அடைந்து வணங்கி உய்ந்து போகுங்கோள் என்கிறார்.

உலகு அடியாரும் பகவரும் மிக்கது; நீர் மேவித் தொழுது உய்ம்மின் என்க. ‘நீர்கள்’ என்பதில் ‘கள்’ அசைநிலை.
“பிரிந்தவற் கிரங்கிப் பேதுற்று அழுதநம் கண்ணினீர்கள்” (சிந். 1391.) என்றவிடத்துக் ‘கள்’ என்பதனை
அசைநிலை என்றார் நச்சினார்க்கினியர்.
மலிந்து – மலிய; எச்சத் திரிபு. அடியார் என்பதற்கு, இல்லறத்தார் என்றும்,
பகவர் என்பதற்குத் துறவறத்தார் என்றும் பொருள் கூறுவதும் உண்டு.

பகவத்குண நிஷ்டரும் கைங்கர்ய நிஷ்டருமான ஸ்ரீ வைஷ்ணவர்கள், பூமி எங்கும் பரந்தார்கள்;
நீங்களும் அவர்களோடு ஒக்க வேறு பயன்களைக் கருதாதவர்களாய் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்.

நீர் மேவித் தொழுது உய்ம்மின் –
நீங்கள் வேறு பயன் ஒன்றனையும் கருதாதவர்களாய்க் கொண்டு ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள்.

வேதப் புனித இருக்கை நாவிற் கொண்டு –
வேதத்தில் அவன் விபூதி விஷயமாகப் பரக்குமவற்றை அன்றிக்கே, அசாதாரண விக்கிரஹத்திலும் குணங்களிலும்
ஸ்வரூபத்திலுமாகப் பரந்திருக்கிற ஸ்ரீ புருஷ சூக்தாதிகளை நாக்கிலே கொண்டு.
நாவில் கொண்டு -நாவினால் நவிற்று -அஹ்ருதயமாக சொன்னதை அடியாருக்கும் பகவருக்கும்
கொள்ளாமல் நமக்குக் கொள்வதே பொருந்தும் –

அச்சுதன் தன்னை-
இவர்கள் நாவிலே கொண்டு மனத்தோடு படாமல் சொன்னால் அதனை மனத்தொடு பட்டதாகக் கொண்டு “
அவர்களை விட மாட்டேன்” என்னுமவன்.

ஞானவிதி பிழையாமே-
பக்தியினாலே தூண்டப்பட்டுச் செய்கின்ற காரியங்களில் ஒன்றும் தப்பாமல்.
ஞானம்’ என்கிறது, ஞான விசேஷமான பக்தியை.

பூவின் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து –
பூவோடே கூடின புகை தொடக்கமான சமாராதந உபகரணங்களை மிகுத்துக் கொண்டு.

மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகம்-
அவனை விடாமல் நின்று அடிமை செய்யுமவர்களாலும்,
குணங்களை அநுசந்தானம் செய்வதற்கு அவ்வருகு ஒன்றுக்கும்
ஆற்றல் இல்லாதே இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களாலும் மிக்கது உலகம். என்றது,
தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும்,
கிடந்த இடத்தே கிடந்து குணாநுபவம் செய்யும் ஸ்ரீ பரதாழ்வானையும் போலே இருப்பாரே
ஆயிற்று உலகம் அடைய என்றபடி.
ஆதலால், நீங்களும் மேவித் தொழுது உய்ம்மின் என்க.

—————————————————————————

மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திரு மூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.–5-2-10-

சர்வாதிகன் -சர்வேஸ்வரன் -சேஷ பூதர்கள் -ஆஸ்ரயநீயத்வம் பிரதிபாதித்து -பிரயோஜ நாந்தர அர்த்தமாக –
தேவதைகள் அபிலஷித பதங்கள் பெற்றவோபாதி -நீங்களும் அவனை ஆஸ்ரயித்து-
கால தோஷம் இல்லாமல் -செய்யப் பாருமின் -மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திரு மூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்-வஸ்த்ரம் இல்லாத –
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!-இதர விஷய சபலர்கள் -திரண்ட தேவதா சமூகங்கள்
போக்ய போக உபகரண போக ஸ்தானங்கள் இவர்களே
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே-புத்திக்கு அபகர்ஷம் -கலியினால் வந்தது –
பகவத் அர்ச்சக விமுகராக பாஷண்டிகள் -ஆவார்கள் -அந்த கலி தோஷம் போனதே –

சிவனும் பிரமனும் இந்திரனும் முதலாகத் திரண்ட அமரர் கூட்டங்கள் கண்ண பிரானுடைய விக்கிரஹத்தைப் பொருந்திப் பற்றிக் கொண்டு
மிக்க உலகங்கள் தோறும் எல்லா விடங்களிலும் பரந்திருக்கின்றன; தொண்டீர்! நீங்களும் அவர்களைப் போன்று தொழுவீர்களே யானால்,
கலியுகத்தின் தோஷங்கள் ஒன்றும் இல்லையே யாம் என்றவாறு.
குழாங்கள் மேவிப் பரந்தன என்க. அன்றிக்கே, மேவித் தொக்க அமரர் எனக் கூட்டலுமாம்.

நீங்கள் அடைகின்ற தேவதைகள் செய்கிற இதனை நீங்களும் செய்தீர் கோளாகில்,
யுகம் காரணமாகப் பொருந்தி வருகின்ற தோஷங்களும் போம் என்கிறார்.

மிக்க உலகுகள் தோறும் கண்ணன் திருமூர்த்தி மேவி-
பரந்திருக்கின்ற உலகங்கள் எங்கும் கிருஷ்ணனுடைய அசாதாரண விக்கிரஹத்தைப் பற்றுகோடாகப் பற்றி.

நக்கபிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத் தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன-
நக்க பரன் குழாங்கள் போல பல குழாங்கள் -என்பதால் பரந்தன
உருத்திரனோடே பிரஹ்மாவும் இந்திரனும் இவர்கள் தொடக்கமாகத் திரண்ட தேவ கூட்டங்கள் எங்கும் ஒக்கப் பரந்து
விரிந்த செல்வத்தையுடையன ஆயின;

தொண்டீர் ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலை-
வகுத்தது அல்லாத விஷயத்திலே தொண்டு பட்டுத் திரிகிற நீங்கள், அவர்களோடு ஒக்கச் சர்வேச்வரனை அடைந்து வணங்கப் பெறில்
உங்கள் தோஷம் போகையே அன்றிக்கே, யுகம் காரணமாகப் பொருந்தி வருகின்ற தோஷமும் போம் என்கிறார்.

——————————————————————————–

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-

அழுக்குகள் போக்கும்
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்-அசாதாராண சேஷ பூதர்கள் –
ஸூ விஷய ஞான பிரேம வ்ருத்தி மூன்றையும் செய்து
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்-மிக்க ஒளி நிறைந்த -திரு மேனி -உடையவன்
உபகாரகன் -அனுபவிப்பித்து -மாயத்தை –
கலி வயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்-கலி -சம்ருத்தமான செழிப்பு மிடுக்கு -குல வை லஷண்யம்
ஒலிபுகழ் ஆயிரத்து இப் பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.-ஒலி-எங்கும் புகழும் பகவத் குண பிரதை
தேவதாந்திர பரத்வம் சங்கை –ஸ்ரீ வைஷ்ணவர் நமக்கு சாம்யம் -பிரதிபத்தி –பிரயோஜநாந்தரம்-பிராவண்யரூபம் அழுக்குகள்

கலியுகம் காரணமாக வருகின்ற தோஷங்கள் ஒரு சிறிதும் இன்றிக்கே, தன் அடியார்களுக்குத் திருவருள் புரிகின்ற, நிறைந்த மிக்க
சுடரையுடைய திவ்விய மங்கள விக்கிரஹத்தையுடையவனும் மாயப்பிரானும் கண்ணனுமான சர்வேச்வரன் விஷயமாக, வளப்பம் பொருந்திய
வயல்களாற் சூழப்பட்ட தெற்கேயுள்ள சிறந்த திருக்குருகூரிலே அவதரித்த காரிமாறனாகிய ஸ்ரீ சடகோபராலே அருளிச்செய்யப்பட்ட தழைத்த
புகழோடு கூடின ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களும் உள்ளத்திலேயுள்ள குற்றங்களை நீக்கும் என்றபடி.
இன்றிக்கே, அருள்செய்யும் மாயப்பிரான் என்க. கண்ணன் தன்னைச் சடகோபன் (சொன்ன) ஆயிரம் என்க. தென்-அழகுமாம்.

இத் திருவாய் மொழி கற்றார்க்கு, மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்துவ சங்கையும், எம்பெருமான் பக்கல் வேறு
பிரயோஜனங்களை விரும்புகின்ற தன்மையுமான மனத்தின் தோஷங்கள் எல்லாம் போகும் என்கிறார்.

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே-
“எவனுடைய மனத்தில் கோவிந்தன் இருக்கிறானோ அவனுக்குக் கலியுகம் கிருதயுகமாக இருக்கிறது;
எவனுடைய மனத்தில் கிருஷ்ணன் இல்லையோ அவனுக்குக் கிருதயுகம் கலியுகம் ஆகிறது” என்கிறபடியே,

கலி தோஷங்கள் ஒன்றும் வாராதபடி தன் அடியார்க்கு அருள் செய்யும்.
நாட்டுக்கு இட்ட அஃகம்-மூல தனம் – அல்லவே யன்றோ அந்தப் புரத்துக்கு -அடியார்க்கு -இடுவது.

மலியும் சுடர் ஒளி மூர்த்தி-
சுடர் என்றும் ஒளி என்றும் பரியாயமாய், இரண்டாலும் மிகுதியைச் சொல்லுகிறது.
மலிதல்-
நிறைதலாய், மிக்க ஒளியாலே நிறைந்த வடிவு என்றபடி.
இதனால், அருள் செய்யாது ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவழகைக் கூறியபடி.

மாயம் பிரான் கண்ணன் தன்னை-
ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடைய கண்ணனை ஆயிற்றுக் கவி பாடிற்று.

கலி வயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்-
கலி என்று, மிடுக்குக்கும் ஆரவாரத்துக்கும் பெயர். இவற்றால், பூ சாரத்தைச் சொல்லுதல்;
நடுவது, அறுப்பது, உழுவதாகச் செல்லும் ஆரவாரத்தைச் சொல்லுதல்.
இப்படிப்பட்ட வயல்களை யுடைத்தா யிருந்துள்ள திரு நகரியில் ஆழ்வார் அருளிச் செய்த

ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்து உள்ளத்தை மாசு அறுக்கும்-
பிரசித்தமான புகழை யுடைத்தான ஆயிரத்திலும், இந்தப் பத்தும்,
1-வேறு தேவர்கள் பக்கல் பரத்துவ சங்கை பண்ணுதல்,-கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
2-ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் சஜாதீய புத்தி பண்ணுதல்,-தொழுது தொழுது நின்று ஆர்க்கும்
3-பாகவத ரல்லாதாருடைய சக வாசம் நன்று என்று இருத்தல்,-ஊழி பெயர்த்திடும் கொன்றே
4-வேறு பிரயோஜனங்களை விரும்புதல் ஆகிற மானச தோஷங்களைப் போக்கும்.-சிந்தையை செந்திருத்தியே

கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை கறுத்த மனம் வேண்டா -அனன்யார்ஹ சேஷத்வம்
சென்று தொழுது உய்மின் -நமஸ் ததீய சேஷத்வம்
சிந்தையை செந்திருத்தியே-திருதிய பத -ஐஸ்வர்ய-கைவல்ய நிவ்ருத்தி -புருஷார்த்தம்
மாசு அறுக்கும்– ஸ்வரூப உபாய புருஷார்த்தம் மாசு– மூன்றையும் சொன்ன படி –

————————————————————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

முனி த்ருதீயே ஆசாஸ்தி மங்களம் ஆலோக்யன்
கலி நாத் ஆத்மா உபதேச விபைவி சமித
அஹப்ருந்தம் ஆரப்த வைஷ்ணவ சம்ருத்தி
சமுதயமானம் ஜகத் அக சமனத்வம் –

முனி த்ருதீயே ஆசாஸ்தி மங்களம் -மங்களா சாசனம் பண்ணி அருளி –
ஆலோக்யன் -பரந்த பூமியை கண்டு
ஆத்மா உபதேச -தன்னால் உபதேசிக்கப்பட்ட
விபைவி சமித -பெருமையால் அழிக்கப்பட்ட
கலி நாத்-கலி முதலான தோஷங்கள்
ஜகத் அக சமனத்வம் – கல்யாண குணம் -அகம் எல்லாம் ஒழித்து-

———————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

பரிட காந்தௌ சரச துளைசௌ அலங்க்ருத தாத்ரு பாவே தாதா ஸ்வ பாவம்
வைகுண்டத்வே ச சக்ர பிரகரண வசித நியந்தா தேவதா ஸ்தாபதாநௌ
ஸ்வா நா நத்ஜயேயம் சகல நியமனே சர்வ கர்ம இஜ்ஜ்ய பாவே
நித்யா சக்தா ஜகத் அக சமணம் பிராக கிருஷ்ணம் சடாரி-

1–பரிட காந்தௌ –கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்-

2–சரச துளைசௌ அலங்க்ருத –வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே–

3–தாத்ரு பாவே தாதா ஸ்வ பாவம்–கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே-உதார குணம்

4–5-வைகுண்டத்வே ச –உம்மை தொகை 4/5/-தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்-என்றும்
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி-என்றும் அருளிச் செய்கையாலே -ஸ்ரீ வைகுண்டமும் ஸ்ரீ ஷீராப்தியும்

6–சக்ர பிரகரண –நேமிப் பிரான் தமர் போந்தார்-

7—8-வசித நியந்தா தேவதா ஸ்தாபதாநௌ –தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
ஆதி சப்தத்தால் – ஸ்ரீ யபதித்வம்
தன்மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே மறுத் திரு மார்வன்–என்றும் அருளிச் செய்கையாலே

9-ஸ்வா நா நத்ஜயேயம் –அச்சுதன் தன்னை–கை விடாதவன்

10-சகல நியமனே சர்வ கர்ம இஜ்ஜ்ய பாவே –ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே–
சர்வ நியாந்தா -கர்மங்களால் ஆராதிக்கப்படுபவன்

நித்யா சக்தா ஜகத் அக சமணம் –கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன்–அகங்கள் சமணப்படுத்தப் பட்டனவே-திரு அவதாரம்

பிராக கிருஷ்ணம் சடாரி-

———————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 42-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

பொலிக பொலிக வென்று பூ மகள் கோன் தொண்டர்
மலிவு தன்னைக் கண்டு உகந்து வாழ்த்தி -உலகில்
திருந்தார் தம்மைத் திருத்திய மாறன் சொல்
மருந்தாகப் போகும் மனமாசு———–42-

——————————————————–

அவதாரிகை –

ஒன்றும் தேவில் -தாம் திருத்த
திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களாசாசனம் பண்ணியும்
திருந்தாதவரைத் திருத்தியும் செல்லுகிற
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ்
ஒன்றும் தேவிலே தாம் பண்ணின
பகவத் பரத்வ உபதேசத்தைக் கேட்டு
சம்சார பரமபத விபாகம் அறும்படி
நாடாக திருந்தின பாகவத சம்ருத்தியைக் கண்டு ஹ்ருஷ்டராய்
தாம் திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களா சாசனம் பண்ணியும்
திருந்துகைக்கு யோக்யதை யுடையாரை உபதேசித்துத் திருத்தியும்
திருந்தாதவரை உபேஷித்தும் செல்லுகிற
பொலிக பொலிக பொலிக – வில் அர்த்தத்தை
பொலிக பொலிக -என்று துடங்கி அருளிச் செய்கிறார் என்கை-

—————————————————–

வியாக்யானம்–

பொலிக பொலிக வென்று பூ மகள் கோன் தொண்டர் மலிவு தானும் கண்டு உகந்து வாழ்த்தி –
ஜெயத்பதி பலோ ராமோ லஷ்மணஸ் ஸ மஹாபலா
ராஜா ஜயதி ஸூக்ரீவோ ராகவேணா அபிபாலிதா -என்னும்படி

பூ மகள் கோன் தொண்டர் மலிவு தன்னைக் கண்டு உகந்து
பொலிக பொலிக என்று வாழ்த்தி –
பூ மகள் கோன் தொண்டர் மலிவாவது –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் மலியப் புகுந்து -என்றும்
மாதவன் பூதங்கள் மண் மேல் பண் தான் பாடி நின்றாடி -என்றும்
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் இரியப் புகுந்து -என்றும்
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய் -என்றும்
இவ் வுலகத்து வைகுந்தன் பூதங்களேயாய் -என்றும்
பகை பசி தீயன வெல்லாம் நின்று இவ் வுலகில் கடிவான்
நேமிப் பிரான் தமர் போந்தார் ஞாலம் பரந்தார் -என்றும்
மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே -என்றும்
இப்படி நித்ய சித்தர்
ஸ்வேத தீப வாசிகள்
முதலான திருமால் அடியார்கள் எங்கும் திரண்ட சம்ருத்தி –
நித்ய சித்தருக்கும்
ஸ்வேத தீப வாசிகளுக்கும் சாமானராய்த்
திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்கள் -என்றுமாம்-

கண்டு –
தமர்கள் கூட்டம் நாளும் வாய்க்க நங்கட்கு -என்னும்படியாக
தம் கண்களாலே கண்டு

உகந்து –
கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக்கு இனியன கண்டோம் -என்று ஹ்ருஷ்டராய் –

வாழ்த்தி –
அந்த சம்ருத்திக்கு பொலிக பொலிக பொலிக
என்று மங்களா சாசனம் பண்ணி

உலகில் திருந்தார் தம்மைத் திருத்திய மாறன் சொல் மருந்தாகப் போகும் மனமாசு-
ஒன்றும் தேவில் உபதேசத்தாலும் திருந்தாதே
ஒதுங்கி இருந்தவர்களைக் குறித்து
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -என்றும்
எவ்வுலகும் தன மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே –என்றும்
ஒக்கத் தொழ கிற்றீர் ஆகில் கலி யுகம் ஒன்றும் இல்லையே -என்று
இப்படி பரத்வ உபதேசம் பண்ணி திருத்தியும்

அதிலும் திருந்தாதவர்களைக் குறித்து
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் உய்யும் வகை இல்லை தொண்டீர்
உழி பேர்த்திடும் கொன்றே -என்று
தேடி தடவிப் பிடித்து
பிரத்யா புரச்சரமாய்த் திருத்தியும் சொல்லுகிற ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தி
ஔஷதம் அடியாக மநோ மாலின்யம் நிவ்ருத்தமாம் –

ஸ்ரீ வைஷ்ணவ சஜாதீய புத்தியும்
தேவ தாந்த்ரங்கள் இடத்தில் பரதவ புத்தியும் இறே மநோ மாலின்யம் ஆவது
மனனகம் மலமறக் கழுவி -என்று இறே அருளிச் செய்தது –

விஷ வ்ருஷ பலங்கள் கை கூடினவர் -சம்சாரம் -விஷ வ்ருஷம் -கேசவ பக்தியும் -பாகவத சமாப்தம்
அடிமை புக்காரையும் ஆட் செய்வாரையும் காண
லோக த்வீ பாந்தரங்களில் நின்றும் போந்த தேவர் குழாங்களைக் கண்டு காப்பிட்டு
ப்ரஹ்லாத விபீஷணர் சொற் கேளாத அரக்கர் அசுரர் போல்வாரைத் தடவிப் பிடித்து
தேச கால தோஷம் போக எங்கும் இடம் கொண்டவர்களை மேவித் தொழுது உஜஜீவியுங்கோள்
நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுத்தினவனை மேவிப் பரவும் அவரோடு ஒக்கத் தொழில்
யுக தோஷம் இல்லையாம் என்று விஷ்ணு பக்தி பரராக்கிக் கண்ணுக்கு இனியன காட்டலாம்படி யானார்
கண்ணில் நோக்கிக் காணும் பக்தி சித்தாஞ்சனத்தை இடுகிறார் அஞ்சாம் பத்தில்
என்று இறே ஆச்சார்ய ஹிருதயத்தில் நாயனாரும் அருளிச் செய்தது-

————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -108- திருவாய்மொழி – -5-2-1….5-2-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

June 4, 2016

ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயைக் காண்கைக்காக நித்திய சூரிகள் இங்கே வர,
அவர்களைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார்.
இத் திருவாய்மொழியால்” என்று ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பணிப்பர்.
அங்ஙன் அன்றிக்கே, “நண்ணாதார் முறுவலிப்ப’ என்ற திருவாய் மொழியிலே, சம்சாரிகள் படுகிற கிலேசத்தை நினைத்து,
அதற்குப் பரிஹாரமாக, ‘ஒன்றுந் தேவும்’ என்ற திருவாய் மொழியிலே பகவானுடைய பரத்துவத்தை எடுத்துப் பேசித் திருத்த,
அதனாலே திருந்திச் சம்சாரம் பரமபதம் என்ற வேறுபாடு இல்லாமல் அங்குள்ளாரும் இங்கே வரலாம்படி இருக்கிற இருப்பைக் கண்டு
மங்களாசாசனம் செய்கிறார்” என்று இங்குள்ளார் பக்கலிலே பிராதாந்யம் தோற்ற எம்பெருமானார் அருளிச் செய்வர்.

தாம் பகவானுடைய பரத்துவத்தை எடுத்துப் பேச, அதனாலே திருந்தின
சத்துவ குணமுடையார் அடங்கலும் எங்கும் பரந்திருக்கிறபடியையும்,
குறிக்கோளின்மையாலும் அறிவின்மையாலும் இராஜசராயும் தாமசராயுமுள்ளார் குறைந்தவர்களா யிருக்கிற படியையும்,
சத்துவ குணமுடையார் மேற்கொண்ட தாகையாலே ‘உத்தம தர்மமான ஸ்ரீ வைஷ்ணவ தர்மமே பிரசித்தமாய்ப் போருகிற படியையும்,
அதற்கு மாறுபட்ட தர்மங்கள் மறைந்தவைகளாய்ப் போருகிற படியையும், தேச காலங்கள் அதிகாரிகள் அங்கங்கள் என்கிறவற்றுக்கு
உண்டான நன்மைகள் “எல்லாத் தர்மங்களுக்குள்ளே வைஷ்ணவ தர்மம் உத்தமமானது” என்கிறபடியே,
பகவானுடைய ஸ்பரிசத்தாலேயா யிருக்கிற படியையும், (பாகவத ஸ்பர்சம் என்னாமல் பகவத் ஸ்பர்சம் என்றது –
இவர்கள் பகவானுக்கு பிரகாரம் -தஷிணோ பாஹூ இளைய பெருமாள் போலே –
கொல்லை மூக்கரிந்த்திட்ட குமரனார் -போலே அபி நாபாவம் -விட்டுப் பிரிக்காத சம்பந்தம் உண்டே )
அது இல்லையாகில் எல்லா நன்மைகளும் உண்டானாலும் அவை அடையத்
தண்ணியனவா யிருக்கிற படியையும் சொல்லி,
தம்மாலே திருந்தின ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவடிகளிலே விழுந்தும்,
திருந்துகைக்குத் தகுதியுடையாரைத் திருத்தியும்,
திருந்தாதாரை உபேக்ஷித்தும்,
இப்படி, கூட்டங்கூட்டமாக நிறைந்திருக்கும் பாகவதர்களைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார்.-

இத்திருவாய்மொழிக்கு இரண்டு வகையாக அவதாரிகை அருளிச்செய்கிறார்.
ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை’ என்றது, ஆழ்வார் உபதேசத்தாலே
திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய கூட்டத்தைத் தெரிவித்தபடி,
நித்தியசூரிகள் இங்கே வர’ என்றது, இத் திருவாய்மொழியில் வருகின்ற “தேவர்கள் தாமும் புகுந்து”,
நேமிப்பிரான் தமர் போந்தார்” என்னும்
பாசுரப் பகுதிகளைத் திருவுள்ளம் பற்றி. ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்திலே நித்தியசூரிகளுக்குப் பிராதாந்யம் தோற்றும்.
இதனால், “ஒன்றும் தேவும்” என்ற திருவாய்மொழிக்கும், இத்திருவாய்மொழிக்கும் நேரே பொருள் இயைபு தோன்றும்.
இடையேயுள்ள “கையார் சக்கரம்” என்ற திருவாய் மொழி, பிராசங்கிகம். (இடைபிறவரல்.)

பாசுரங்களில் கூறப்படும் பொருள்களை உட்கொண்டு அவற்றை விவரணம் செய்கிறார்
‘தாம் பகவானுடைய’ என்று தொடங்கி. “கடல்வண்ணன்பூதங்கள்” என்றதனைத் திருவுள்ளம் பற்றிச்
சத்துவ குணமுடையார்’ என்றும்,
“மலியப் புகுந்து” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘எங்கும் பரந்திருக்கிறபடியையும்’ என்றும்,
“உள்ளீரேல்” என்றதனை நோக்கிக் ‘குறைந்தவர்களாயிருக்கிறபடியை’ என்றும் அருளிச்செய்கிறார்.
‘சத்துவ குணமுடையார் மேற்கொண்டதாகையாலே’ என்றது,
மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
“பெரிய கிதயுகம்பற்றி” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘உத்தம தர்மமான ஸ்ரீ வைஷ்ணவ தர்மமே
பிரசித்தமாய்ப் போருகிறபடியையும்’ என்கிறார்.
‘அதற்கு மாறுபட்ட தர்மங்கள் மறைந்தவைகளாய்ப் போருகிற படியையும். என்றது.
திரியும் கலியுகம் நீங்கி” என்றதனைத் திருவுள்ளம்பற்றி அன்றி,
“சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே” என்றதனைத் திருவுள்ளம் பற்றி எனலுமாம்.
‘தேச காலங்கள்’ என்றது “மண்மேல், கலியும் கெடும்” என்றதனைத் திருவுள்ளம் பற்றி.
இவை இரண்டும் அதிகாரி அங்கங்களுக்கும் உபலக்ஷணம்.

கொசித் கொசித் என்று -எப்போதோ எப்போதோ —இவர் ஆவிர்பாவம் கலியும் கெடும் போலே ஸூசிதம்
பாகவதம் -த்ராவிடேஷூ மகா பாகவதர்கள் -நாராயண பராயதா –நாராயணா எல்லாமாகக் கொண்டு இருப்பார்கள் –
தாமிரபரணி கரையில் -பயச்வினி-பாலாற்று -கரையில் வேகவதி வைகை-காவேரி கரையில் தோன்றுவார்கள் –
ராமானுஜ திவாகர – -கலித் த்வம்சம்-பவிஷ்யகார ராமானுஜ விக்ரகம் மதுரகவி ஆழ்வாருக்கும் –
நாத முனிகளுக்கும் பிரசாதித்து அருளினார்
வஜ்ர நாபன் என்பவர் -ஸ்ரீ கிருஷ்ணன் உடனே இருந்தவர் என்பர் -ஸ்ரீ கிருஷ்ணன் சந்ததியில் வந்தவர் என்றும் சொல்வர்-
வடக்கில் ஸ்ரீ கிருஷ்ண விக்ரகம் பல இடங்களில் -பிரதிஷ்டை செய்து அருளினார் என்பர்

——————————————————————————————————

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-

நிரவதிக -சர்வேஸ்வரனால் லப்த சத்தை -பாகவத சம்ருத்தி கண்டு மங்களா சாசனம் அருளுகிறார்
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்-ரத்னங்கள் -குணங்கள் -குண ரூப வை லஷண்யம்-இரண்டாலும்
அபரிச்சின்ன மாஹாத்ம்யம்
லப்த ஸ்வரூப சத்தை -அனன்யார்ஹ சேஷத்வம் பாரதந்த்ர்யம்
பூ சத்தை பெற்றவர்கள் -இருக்கிற படி இருப்பு பெற்றவர்கள் –
மண் மேல் -மேட்டு மடை -பகவத் விஷயத்துக்கு
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்-சம்ருதம் ஆகும் படி -ஓர் இருவர் உண்டாகில் -இல்லை -வந்து புகுந்து
பகவத் குணங்களை இசையுடன் பாடி நர்த்தனம் பாடி எங்கும் விஸ்தரமாக
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
அவித்யா கர்மா ஜன்மா வாசனை ருசி -சாபம் -நியத கர்மம் -சாபமும் வரமும் –
கிருபா -தலைவிதி -அனுபவ விநாசம் பல கல்பங்கள் ஆகுமே
வலிய சாபம் -பிரபல -போகும் படி
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை கலியுங் கெடும் கண்டு கொண்மின்
தத் பலமாக நலியும் –துன்பப்படுத்தும் -நரகங்கள் சிதிலம் ஆகுமே -கர்மம் போனால் அதன் காரியங்கள் எல்லாம் போகுமே
நமனுக்கு இங்கு -இந்த விபூதியில் இல்லை -இதுக்கு அடியான கால தோஷமும் போகும் -அதாவது
கலி யுகத்திலே கிருத யுகம் தன்மைகள் வந்தனவே என்றவாறு
இது பிரத்யஷம் -க்ருத யுக தன்மை வ்ருத்தி பாகவதர்களால் -மாதவன் பூதங்கள் மண் மேல் இருப்பதால்-என்றவாறு –
ஸ்ருதி சாந்தி சாந்தி சாந்தி போலே பொலியும் பொலியும் பொலியும் -பூதங்கள் –

கடல் போன்ற நிறத்தையுடைய சர்வேச்வரனுடைய அடியார்கள் பூமியின் மேலே கூட்டம் கூட்டமாகப் புகுந்து இசையோடு பாடி ஆடிச் சஞ்சரிக்கக் கண்டோம்;
ஆதலால், உயிரைப் பற்றியுள்ள வலிய பாபங்கள் அழிந்தன, எல்லாரையும் வருத்துகின்ற நரகலோகமும் கட்டு அழிந்து போயிற்று, யமனுக்கு இந்த உலகத்தில்
ஒரு வேலையும் இல்லை. இவற்றிற்கெல்லாம் காரணமான கலிகால தோஷமும் கெடும். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கோள்; பொலிக! பொலிக!! பொலிக!!!
பொலிதல்-நீடு வாழ்தல். உயிர் வல் சாபம் போயிற்று என்க. பூதங்கள்-பாகவதர்கள். உழிதரல்-சஞ்சரித்தல்.
இத் திருவாய்மொழி, அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.

ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய கூட்டத்தைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார்.

பொலிக பொலிக பொலிக –
நீடூழி வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும்.
“சாந்தி: சாந்தி: சாந்தி:” என்று வைதிகமான மங்களாசாசனங்கள் மும் முறை சொல்லக் கடவதாயிருக்குமே யன்றோ?
ஆதலால், ‘பொலிக பொலிக பொலிக’ என்கிறார்.
‘பெரியாழ்வாரைப் போலே முற்படப் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்து, பின்பு பாகவதர்களுடைய கூட்டத்திற்கு
மங்களாசாசனம் செய்ய வேண்டாவோ?” என்ன, -நம்பிள்ளை கேட்க –
அப்படியே யன்றோ செய்தது,
“வீற்றிருந்தேழுலகு” என்ற திருவாய்மொழியால் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்தார் கண்டீரே;
பின்னை இத் திருவாய் மொழியிலே பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்கிறார்” என்று நஞ்சீயர் அருளிச் செய்தார்.
பரமாசாரியரான இவரைப் பின் சென்றாரித்தனை காணும் பெரியாழ்வாரும்.

உயிர் வல் சாபம் போயிற்று-
உயிரினுடைய வலிய சாபம் போயிற்றது.
சாபத்தாலே பற்றப்பட்டவரைப் போலே அநுபவித்தால் அல்லது அழியாதது ஆகையாலே, பாபத்தைச் ‘சாபம்’ என்கிறார்.
அன்றிக்கே, ஆத்மாவைப் பற்றிக் கிடக்கிற அவித்யை முதலானவைகள் போயிற்றன என்னுதலுமாம்.

நலியும் நரகமும் நைந்த-
கர்மங்களுக்குத் தகுதியாகச் சேதனர்களைக் கொண்டு போய் வருத்துகின்ற நரகங்களும் சிதிலமாயின.
நரக அநுபவத்திற்கு ஆள் இல்லாமையாலே, நரகங்களும் கட்டி மேய்க்கை தவிர்ந்து கோப்புக் குலைந்தன.
ஆயின், அவ்விடங்கட்கு அதிகாரிகளா யிருக்குமவர்கள் செய்வன என்? என்னில்,

இங்கு நமனுக்கு யாது ஒன்றும் இல்லை-
யமனும் தனக்கு அடைத்த இந் நிலத்தில் ஆராயலாவது ஒன்று இல்லை;
இனிப் பரம பதத்தில் சென்று ஆராயில் ஆராயு மத்தனை என்பார் “இங்கு” என்கிறார்.
தர்ம புத்திரனுக்கும் ஒருகால் நரக லோகத்தைக் காணுதல் செய்ய வேண்டியிருந்ததே யன்றோ, அதற்கும்
ஆள் இல்லை என்பார் ‘யாது ஒன்றும் இல்லை’ என்கிறார்.
இவை எல்லாம் உண்டாவன கிருத யுகத்திலே அன்றோ, கலி யுகத்திலே உண்டாவன ஆமோ? என்னில்,

கலியும் கெடும்-
அந்தக் கலி காலமும் அழிந்து போகும். மேலே சொல்லிக் கொண்டு போந்தவற்றை இறந்த காலத்திலே ஆக்கி,
‘கலியும் கெடும்’ என்ற இதனை எதிர் காலத்திலே ஆக்கி நிர்வஹிக்கவுமாம்.
அன்றிக்கே, இவையும் எல்லாம் போயிற்றன, ‘கலியும்’ நசித்தது என்றே இருக்க அமையும் என்று,
இங்ஙனே ஒரே ரீதியாகச் சொல்லவுமாம்.
நன்று; கலிக்கு அடைத்த காலமாய் இருக்கச் செய்தே, ‘கெடும்’ என்பது என்? என்னில்,

கண்டு கொண்மின்-
அநுபவத்தால் அறியுமதற்கு உபதேசம் வேணுமோ? நீர் ‘இது கெடும்’ என்று சொல்லுகிறது என் கொண்டு? என்னில்,
‘கடல் வண்ணன்’ என்று தொடங்கி, விடை அருளிச் செய்கிறார் மேல்:
“எந்தத் தேசத்தில் திரு அஷ்டாக்ஷர மந்திர சித்தியை யுடைய பெருமை பொருந்திய
பாகவதர்கள் வசிக்கின்றார்களோ-மதிக்கப்படுகிறார்களோ
அங்கு வியாதி துர்பிக்ஷம் தஸ்கர-களவு முதலானவை நடமாடுகின்றன இல்லை” என்கிறபடியே,
நாராயணயா அர்த்தம் -பகவத் ஏக போகத்வம் -விரோதி -வியாதி -விஷய ப்ராவண்யம்
உபாயத்வ விரோதி -ஸூவ ரஷணம் ஒழிகை – நமஸ் அர்த்தம் பஞ்சம் –
ஆத்மா அபகாரம் தஸ்கரம் –களவு -பிரணவம் அர்த்தம் –
பாகவத சஞ்சாரம் இல்லாமையே யன்றோ இப் பொல்லாங்குகள் உண்டாவதற்குக் காரணம்;
அவர்கள் சஞ்சாரம் உண்டான பின்பு இவை நிற்குமோ?
அன்றிக்கே நாட்டில் உள்ள வியாதி களவு பஞ்சம் -இத்யாதி குலம் தரும் செல்வம் தரும் இத்யாதி

கடல் வண்ணன் பூதங்கள்-
அவனுடைய சிரமஹரமான வடிவழகை அநுசந்தித்து அதனாலே தங்கள் சத்தையாம்படி இருக்குவர்கள்.
“பூ ஸத்தாயாம்” என்று தாதுவாகையாலே, அவன் சத்தையே சத்தையாய் அறுகையாலே
‘பூதம்’ என்ற சொல் அடியார்களைக் காட்டுகிறது.

மண் மேல்-
அவன் அழகிலே தோற்றிருப்பவர்கள் உள்ளது பரம பதத்திலே அன்றோ? என்ன, இங்கே என்று படி எடுத்துக் காட்டுகிறார். –
மண் பிடி எடுத்து காட்டுகிறார் –
பகவானுடைய அநுபவத்திற்கு மேட்டு மடையான சம்சாரத்தில் மரு பூமியில் தண்ணீர் போலே
எங்கேனும் ஒருவர் இருவர் உண்டாமத்தனை யன்றோ? என்ன,

மலியப் புகுந்து-
“அடியார்கள் குழாங்கள்” என்கிறபடியே, நெருங்கப் புகுந்து.

இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்-
சந்தோஷத்தின் மிகுதியாலே பாடுவது, உடம்பு இருந்த இடத்திலே இராமல் ஆடுவதாய்க் கொண்டு,
யமன் முதலானோர்கள் தலை மேலே அடியிட்டுச் சஞ்சரிக்கக் கண்டோம்.
உழி தருகை-
பயம் இல்லாமல் எங்கும் சஞ்சரித்தல்.

கடல் வண்ணன் என்று தொடங்கி, உழி தரக் கண்டோம், வல்லுயிர்ச் சாபம் போயிற்று, நலியும் நரகமும் நைந்த, நமனுக்கு இங்கு
யாது ஒன்றும் இல்லை, கலியும் கெடும், கண்டு கொண்மின், பொலிக பொலிக பொலிக என்று கூட்டுக.

——————————————————————————————

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-

பண் தான் பாடி -பாட பேதம் –
பரத்வ பிரகாசம் -ஸ்ரீ யபதித்வம் -மாதவன் -சர்வேஸ்வரன் குணங்களில் வித்தராய் -பாகவதர்களை மங்களா சாசனம் பாட
அநு கூல வர்க்கங்களைக் கூப்பிடுகிறார்
மேலே பெரியாழ்வார் ஐஸ்வர்ய கைவல்யார்த்திகளையும் கூப்பிடுவாரே
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
திருத் துழாய் சாத்தி இருக்கும் அழகை அனுபவிக்கும் பிராட்டி உண்டே -சேஷ பூதர்கள்
இந்த போகம் அனுபவிக்க நிலம் இல்லாத பூமியில் -அனுபவித்து பரவசப்பட்டு
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே-பண் தான் -பாட பேதம் -ராகம் மிகுந்து இருக்கும் படி-
பிரேம பாரவச்யத்தால் பாடி ஆடி வியாபாரியா நிற்க
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்-நிரந்தர அனுபவம் -அஹம் அன்னம் அஹம் அன்னம்
அஹம் அன்னம்-அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத போலே –
முன்பு சாந்தி போலே -காட்டி அருளினார் –அனுபவிக்கத் தக்க ஸ்ரீ வைஷ்ணவர்கள்
கீழே பொலிக ஸம்ருத்தி சாந்தி போலே இங்கு அனுபவ விஷயம் ஆகையால் அஹம் அந்நாத –
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்-நிரந்தர அனுவ்ருத்தி பண்ணி ச ஹர்ஷ கோலா ஹலம் –
இந்த போகத்தை இழக்காமல் எல்லீரும் வாருமின் –

கண்டோம் கண்டோம் கண்டோம், கண்களுக்கு மகிழ்ச்சியைக் கெடுக்கக் கூடிய கூட்டங்களைக் கண்டோம்; தொண்டீர்!எல்லீரும் வாருங்கோள்;
தொழுது தொழுது ஆரவாரிப்போம்; வண்டுகள் படிந்திருக்கின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாயைத் தரித்தவனான சர்வேச்வரனுடைய
அடியார்கள் இத்த உலகத்திலே பண்ணோடு பாக்களைப் பாடிக் கொண்டு நின்று ஆடிக் கொண்டு எங்கும் பரந்தவர்களாய்த் திரிகின்றார்கள்.
‘பூதங்கள்’ என்பது சொல்லால் அஃறிணையாதலின், ‘திரிகின்றன’ என அஃறிணைச் சொல்லால் முடிந்தது.

இந்த ஸ்ரீவைஷ்ணவர்களுடைய கூட்டத்தை அநுபவிப்பதற்கு அநுகூலர் எல்லாரும் வாருங்கோள் என்கிறார்.
(கண்ணுக்கு இனியன கண்டோம் -பன்மை என்பதால் பாகவத சமுதாயம் கூட்டம் )

கண்டோம் கண்டோம் கண்டோம் –
காணப் பெற்றோம். பிரீதியின் மிகுதியாலே, பலகாலும் சொல்லுகிறார்.

கண்ணுக்கு இனியன கண்டோம்-
”கொடு உலகம் காட்டேலே” – திருவாய். 4. 9 : 10.-என்கிறபடியே, பாகவதர் அல்லாதாரைக் கண்ட இன்னாப்புத் தீர,
பாகவதர்களுடைய கூட்டத்தைக் காணப் பெற்றோம்.

தொண்டீர் எல்லீரும் வாரீர் –
பாகவதர்கள் விஷயத்தில் ஆசையுள்ளவர்களாய், பேராளன் பேர் ஓதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே” என்று
இருப்பார் அடையத் திரளுங்கோள்.
‘வாருங்கோள்’ என்பது, என்ன பிரயோஜனத்துக்கு? என்னில்,

தொழுது தொழுது நின்று ஆர்த்தும் –
பிரயோஜனத்துக்குப் பிரயோஜனம் தேட வேணுமோ? கை மேலே பிரயோஜனமன்றோ.
தொழுகை பிரயோஜனம் -சடக்கென அப்பொழுதே ப்ரத்யக்ஷ பலம்-பிரத்யஷ பலன் சடக்கென காணலாம் –
‘தொழுது தொழுது’ என்ற அடுக்குத் தொடரால், அது தானே பிரயோஜனமாயிருக்கிறது என்பதனைத் தெரிவித்தபடி.
ஆர்த்தும் என்றது, ஆர்த்துக் கொள்ளுவோம்; சந்தோஷத்தோடு கூட ஆரவாரம் செய்வோம் என்றபடி.

வண்டு ஆர் தண் அம் துழாயான் மாதவன் பூதங்கள் –
வண்டுகள் மாறாதபடியான செவ்வித் துழாய் மாலையையுடையனாய், திருமகள் கேள்வன் ஆகையால் வந்த
ஏற்றத்தை யுடையனாய் இருக்கிறவனுடைய
ஸ்ரீய:பதித்வத்திலும் ஒப்பனையிலும் தோற்றிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள்.
மாதவன்” என்ற பதத்தை நோக்கி ‘ஸ்ரீய:பதித்வத்திலும்’ என்றும்,
“வண்டார் தண்ணம் துழாயான்” என்றதனைத் திருவுள்ளம் பற்றி
‘ஒப்பனையிலும்’என்றும் அருளிச் செய்கிறார்.

மண் மேல் பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே-
“ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே” என்னும் தேசம் ஒழிய, அதற்கு மாறுபட்ட பூமியிலே,
பர பிரேரிதராய் -வேறு ஒன்றனாலே தூண்டப் பட்டவர்களாய் அன்றிக்கே,
தங்கள் பிரீதிக்குப் போக்கு விட்டு, பண் மிகும்படி நின்று தாங்களே பாடி, அது இருந்த இடத்தில்
இருக்க ஒட்டாமையாலே ஆடி, பரந்து திரிகின்றார்கள்.
‘தாங்களே பாடி’ என்று பொருள் அருளிச் செய்வதனால், “பண் தாம் பாடி” என்ற பாடமே ஏற்புடைத்து.
“பண் தான் பாடி” என்பது இப்பொழுதுள்ள பாடம்.

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும் எனக் கூட்டுக.

—————————————————————

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3-

ஆஸ்ரித அர்த்த்தமாக வடிவு -சௌந்தர்யாதிகளில் வித்தர் -ஆனவர்கள் -இந்த விபூதியிலும் –
திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து-
அதரோதரம் -ஆகும் ஸ்வ பாவம் கலி யுகம் -நீங்கி -அவர்களும் வந்து -சாத்விகர் கோஷ்டி தேட்டம் அன்றோ அவர்களுக்கும்
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்-கிருத யுகம் தொடக்கி -ஆனந்த சாகரம் பெருக
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் -சியாமள -வடிவு -ஸ்வாமி-அநவதிக குண சாகரம் –
ஆழங்கால் பட்ட பாகவதர்கள்
மண் மேல் இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே-விஸ்தாரமாக பாடி -இருக்க –

பொருள்களின் தன்மையை மாற்றுகின்ற கலியுகம் நீங்கும்படியாகவும், பெருமை பொருந்திய கிருதயுகத்தின் தன்மையை யுடைத்தாய்ப்
பேரின்ப வெள்ளம் பெருகும் படியாகவும், நித்திய சூரிகளும் புகும்படியாகவும், கரிய முகில் வண்ணனும் கடல் வண்ணனும்
எம்மானுமாகிய சர்வேச்வரனுடைய அடியார்கள்
இந்த உலகத்தின் மேலே ஆரவாரம் உண்டாகும்படியாகப் புகுந்து இசையோடு பாடி எல்லா இடங்களையும் தங்களுக்குரிய இடங்களாகக் கொண்டார்கள்.
நீங்கி, தேவர்கள் தாமும் புகுந்து என்னும் செய்து என்னும் வாய்பாட்டு வினை யெச்சங்களைச் செய என்னும் வாய்பாட்டு எச்சமாகத் திரித்துக் கொள்க.
நீங்கப் புகப் பெருகக் கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல் எங்கும் இடம் கொண்டன என்க. பூதங்கள் கொண்டன என்க.

நித்திய சூரிகளும் புகுந்து பரிமாறும்படி சம்சாரம் அடைய ஸ்ரீ வைஷ்ணவர்களே யானார்கள் என்கிறார்.

திரியும் கலியுகம் நீங்கி –
“கலியுகத்தில் தந்தையின் வார்த்தையைப் புத்திரன் கேட்க மாட்டான்,
மருமகளும் மாமியார் வார்த்தையைக் கேட்க மாட்டாள், உடன் பிறந்தவர்களும் மூத்தவன் வார்த்தையைக் கேட்க மாட்டார்கள்,
வேலைக்காரர்கள் யஜமானன் வார்த்தையைக் கேட்க மாட்டார்கள், மனைவி கணவன் வார்த்தையைக் கேட்க மாட்டாள்,

“ந ச்ருண்வந்தி பிது: புத்ரா ந ஸ்நுஷா ந சகோதரா:ந ப்ருத்யா ந களத்ராணி பவிஷ்யதி அதர உத்தரம்”-என்பது, பாரதம் மோக்ஷ தர்மம்.

முதற் பெருந் தேவெனும் முகுந்தன் பூசனை அதர்ப்பட ஆற்றிடார், அரிய மாமறை விதத்தொடு முரணிய விரியும், ஆகம மதத்தொடு மருவுவர்,
மாக்கள் என்பவே. மைந்தர் தம் மாமியர் மாமனார் சொலச் சிந்தை உண்மகிழ்ந்து தீங்கெனினும் செய்குவர்;தந்தையர் தாயர் சொற்
சார்ந்து கேட்கலர்; நிந்தனை புரிகுவர்; நிலத்தின் என்பவே.- பாகவதம் பன்னிரண்டாங்கந்தம் கலிதன்மம் உரைத்த அத். செய்.15. 20.

இப்படிக் கீழ் மேலாக மாறும்படி ஆகப் போகிறது” என்கிறபடியே, பொருள்களின் தன்மையானது
மாறாடும் படியான கலி காலமானது கழிந்தது.
அன்றிக்கே,
போவது வருவதாகத் திரிகின்ற கலிகாலம் என்னலுமாம்.

தேவர்கள் தாமும் புகுந்து-
இவ் வருகில் உண்டாக்கப் பட்டவர்களான இந்திரன் முதலான தேவர்கள்;
அன்றிக்கே, அவர்கள் சம்பந்தம் சிறிதும் பொறுக்க மாட்டாமல் வாந்தி பண்ணும்
நித்திய சூரிகளும் அகப்பட ‘இவ் விடம் சம்சாரம்’ என்று பாராமல் புகுந்து என்னுதல்.

பெரிய கிருதயுகம் பற்றி –
கலி காலம் முதலிய காலங்களால் மறைக்கப்படுதல் இல்லாத ஒரு போகியான கிருத யுகத்தை யுடையராய்.
பற்றி –
பற்றினவராய்; இது, தேவர்களுக்கு அடைமொழி.
அன்றிக்கே, ஆப்பான் ‘ஆதி சிருஷ்டியில் கிருத யுகத்தைக் காண் சொல்லுகிறது’ என்பராம்.
இங்கு, பற்றி என்பதற்குத் தொடங்கி என்பது பொருள்.
பற்றி உடையார் தொடங்கி வந்து இப்படி மூன்று அர்த்தங்கள் –

பேர் இன்ப வெள்ளம் பெருக –
அந்தம் இல்லாத பேரின்ப வெள்ளம் இங்கே உண்டாகும்படி.

பெரிய கிருதயுகம்பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருக –
ஆதி கிருதயுகம் தொடங்கி நடுவுள்ள கலிகாலத்தின் தோஷங்கள் தெரியாதபடி பேரின்ப வெள்ளம் பெருகிற்று.
‘கிண்ணகம் இத்தைப் பற்றிப் பெருகிற்று’ என்னக் கடவதன்றோ.
அன்றிக்கே, பற்றி என்பதற்கு, கலியைப் போகப் பற்றி என்றும், கிருதயுகத்தைப் புகுரப் பற்றி என்றும் பொருள் கூறலுமாம்

கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் –
“மேகஸ்யாமம் – நீருண்ட மேகம் போல் கரிய” என்கிற வடிவைக் காட்டி என்னை எழுதிக் கொண்டாற் போன்று,
எழுதிக் கொள்ளும் சிரமஹரமான வடிவிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்.

மண் மேல் இரியப் புகுந்து –
பெரிய ஆரவாரத்தோடே சஞ்சரிப்பது நித்திய விபூதியிலே யன்றோ; சம்சாரத்திலே ஆரவாரத்தோடே புகுந்து.

இசை பாடி-
பகவானை அநுபவிப்பதனால் உண்டாகும் பிரீதியாலே பாடி.

எங்கும் இடம் கொண்டனவே –
எங்கும் தங்களுக்கு இடமாகக் கொண்டார்கள். புறச் சமயத்தாருக்கும் குத்ருஷ்டிகளுக்கும் இடம் இல்லாதபடி
சிஷ்யர்களும் சிஷ்யர்களுக்குச் சிஷ்யர்களுமாக எங்கும் பரந்தார்கள்.
“வாநரங்களால் சூழப்பட்டுள்ள மதில் அகழி இவற்றின் பிரதேசங்களை, வானரங்களால் செய்யப்பட்டது போல் இருக்கிற
பிராகாரமாக அரக்கர்கள் கண்டார்கள்” என்கிறபடியே, பிரதி கூலர்க்கு இடம் இல்லாதபடி ஆயிற்று என்றபடி.
“கிருத்ஸ்நம் ஹி கபிபி; வியாப்தம் பிராகார பரிகாந்தரம் தத்ருஸூ ராக்ஷசா தீநா:
பிராகாரம் வாநரீகிருதம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 41; 97.

————————————————————————————

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4-

ஆஸ்ரித உபகாரகன் அரணவ சாயி -குணங்களில் வித்தராய் -பாஹ்ய சமயங்களை உத்பாடனம் பண்ணுவாரைப் போலே
அநேக வித ஹர்ஷ சேஷ்டிதங்கள் செய்யா நின்றார்கள் –
இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே-வைதிக சங்கோசம் பிறக்கும் படி -சர்வ பிரதேசங்களிலும்
பௌத்த ஆர்ஹதன் சாருவாகர் -பொகட்டு
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்-விச்தீர்ணமான —
ஆஸ்ரித அர்த்தமாக கண் வளர்ந்து அருளும் -பாகவதர்கள் முழுவதும் பரந்து
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி-அவனை நினைத்து நர்த்தனம் -கிடந்தும் -இருந்தும் -நின்றும்
குண சேஷ்டித பிரகாசம் கீதங்கள் பாடி
சஞ்சரித்தும் -எவ்வாறு நடந்தனை -என்னும்படி நடை -ஆச்சார்ய அனுஷ்டானம் -தாசரதி ச்ரேஷ்டன் –
நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே–ஹர்ஷத்தால் மேல் கிளம்பியும் -சசம்பரம ந்ருத்தனம்
இப் பாட்டும் கீழ் உடன் அந்விதம்-கிருத யுக ஸ்வ பாவம் –பொலிக -பாட்டுடன் என்றுமாம் -கடல் வண்ணன் பூதங்கள் என்றாரே –

எல்லா இடங்களையும் தமக்கு உரிய இடமாகக் கொண்டுள்ள புறச்சமயங்களை எல்லாம் பறித்துப் பொகடுமாறு போன்று, விசாலமான கடலிலே
யோக நித்திரை செய்கின்ற சர்வேச்வரனுடைய அடியார்களேயாகிக் கிடந்தும் இருந்தும் எழுந்தும் பலப்பல இசைகளைப் பாடிக் கொண்டு
நடந்தும் பறந்தும் ஆடியும் நாடகம் செய்யா நின்றார்கள்.
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்கள் இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
ஆய் நாடகம் செய்கின்றன என முடிக்க. பூதங்கள் செய்கின்றன என்க.

அசைக்க முடியாதவாறு வேர் ஊன்றி யிருக்கின்ற புறச் சமயங்களை எல்லாம்
வேரோடே அறுப்பாரைப் போன்று எங்கும் வைஷ்ணவர்களேயாகி,
பகவானுடைய குணங்களை அநுபவிப்பதனால் உண்டாகின்ற சந்தோஷத்தாலே
களித்துத் திரியா நின்றார்கள் என்கிறார்.

இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
பயிர் தேயும்படி களை வளருமாறு போலே சத்துவ குணத்தை யுடைய பெரியோர்கள் ஒதுங்கும்படி வளருகின்ற
புறச் சமயங்களை எல்லாம் பறித்துப் பொகடுவாரைப் போலே.
‘போலே’ என்பான் என்? என்னில், சத்துவ குணமுடைய பெரியோர்கட்குப் ‘பிறரை நலிய வேணும்’ என்ற
ஓர் எண்ணம் இல்லையே அன்றோ
நெற் செய்யப் புற்றேயுமா போலே, இவர்கள் ஊன்ற ஊன்ற அவர்கள் தாமாகவே தேய்வார்கள் அத்தனை.
“நெற் செய்யப் புற் றேய்ந்தாற் போல நெடும்பகை தற் செய்யத் தானே கெடும்”-என்பது, பழமொழி நானூறு. 83.

தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய் –
தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பிக் கண் வளர்ந்தருளுகைக்கு ஈடான பரப்பை யுடைய திருப் பாற்கடலிலே
கண் வளர்ந்தருளுகிற அழகை நினைத்து,
“பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும், காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும்” என்று
அதிலே ஈடுபட்டிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களேயாய்.

கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி நடந்தும் பறந்தும் குனித்தும் –
தங்களுக்கு விருப்பமான எல்லாக் காரியங்களுக்கும் தகுதியாம் படி பூமியைக் கைக் கொண்டு, ஒவ்வோர் இடத்திலே இருந்தும்,
ஒவ்வோர் இடத்திலே நின்றும், பகவானுடைய அநுபவத்தின் மிகுதியால் வந்த களிப்பினால் பலப் பல பாட்டுக்களைப் பாடியும்,
மனத்தைக் கொள்ளை கொள்ளும்படியாக உலாவியும், கால் தரையிலே பாவாதபடி பரபரப்போடு நிருத்தம் செய்தும்.
நாடகம் செய்கின்றன –
இவர்கள் செய்யும் காரியம் இவர்க்கு வல்லார் ஆடினாற் போலே இருக்கை.
“எம்பெருமானாருடைய நிற்றல் நடத்தல் படுத்தல் முதலியவைகளை நாம் கொண்டாடுமாறு போலேயும்,
ஆளவந்தாருடைய நடையை அரசன் கொண்டாடினாற் போலேயும் இவர் கொண்டாடுகிறபடி” என்று அருளிச் செய்வர் நஞ்ஜீயர்.
இங்கும் கீழ் பாட்டுடன் அந்வயம் –

——————————————————————————–

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5-

பிரதி கூலர் -அசுரர் ராஷசர் ஸ்வ பாவம் உள்ளவர்களை -ஸ்ரீ வைகுண்ட நாதன் குணம் வித்தர் -உங்களை நிரசித்து பொகடுவார்கள்
செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து-இவர்கள் செய்கிற வியாபாரம் -பக்தர்கள் -உயர்ந்த ஒன்றாக இருக்குமே
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி-பரமபதன் நிலையன் பூதங்களே யான படி –
ஆச்சர்ய -மாயை -இச்சை -வ்ருத்திகளால் -நிரந்தர வாசம் பண்ணி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்-ராஜச தாமச பிரக்ருதிகள் -இருப்பீர்கள் ஆகில்
உய்யும் வகை இல்லை தொண்டீர் உழி பெயர்த்திடும் கொன்றே-யுகம் பெயர்த்திடும் -இதர விஷய சபலம் உடையரவர்களாக
-தொண்டீர் -விஷயாந்தர -மேல் சோறு கூறைக்காக சேவா -செய்பவர்கள் -நாய் தொழில் –
நிரசித்து -முதல் கார்யம் -மேலே ஊழி பெயர்த்து கலி கிருதி யுகம் ஆகும் படி -இதில் ஐயம் இல்லை -நீங்களும் மாறுவதே நலம்

இதர விஷயங்களில் தொண்டு பூண்டு இருப்பவர்களே! இவர்கள் செய்கின்றது என்னுடைய கண்களுக்கு ஒரு காரியத்தைச் செய்வது
போன்று இருக்கின்றது; அது யாது? எனின், இந்த உலகத்திலே ஸ்ரீ வைகுண்டநாதனுடைய அடியார்களேயாகித் தங்கள் இச்சையாலே
எங்கும் நிலைபெற்று உங்களையும் கொன்று இந்தக் காலத்தையும் மாற்றி விடுவார்கள் போலே இருக்கின்றது; இதில் சந்தேகம் இல்லை;
ஆதலால், அரக்கர்களாயும் அசுரர்களாயும் பிறந்தவர்களாய் இருப்பீர்களேயானால், உங்களுக்குப் பிழைத்தற்குரிய வழியில்லை என்றவாறு.
தொண்டீர்! செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்றது; இவ்வுலகத்து, வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும்
மன்னிக் கொன்று ஊழி பெயர்த்திடும்; ஐயம் ஒன்று இல்லை; அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் (உங்களுக்கு)
உய்யும் வகை இல்லை என்று கூட்டுக.
மன்னி – மன்னுதலால், கொன்று ஊழி பெயர்த்திடுவார்கள் என்க.

ஸ்ரீ வைஷ்ணவர்கள், அசுர இராக்ஷசரான உங்களையும் முடித்து யுகத்தையும் பேர்ப்பர்கள் என்கிறார்.

செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்றது –
செய்கிறபடி பார்த்தேனுக்கு என் கண்களுக்கு ஒன்று போலே இராநின்றது.
என்போலே இராநின்றது? என்றால்

இவ் வுலகத்து வைகுந்தன் பூதங்களேயாய் –
பகவானுடைய குணங்களுக்கு மேட்டு மடையான சம்சாரத்தில் நித்திய விபூதியில் இருப்புக்குத்
தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களேயாய்.

மாயத்தினால் எங்கும் மன்னி-
“மாயா வயுநம் ஞானம்” என்கிறபடியே, இச்சை என்ற பொருளைக் குறிக்கிற ஞானத்தாலே.
இச்சையாலே எங்கும் புகுந்திருந்து.

ஐயம் ஒன்று இல்லை-
இங்கே இருந்தே அவ் விருப்புக்குத் தோற்றிருப்பர்கள்’ என்றதில் ஒரு சந்தேகம் இல்லை.
அன்றிக்கே,
பேர்த்திடும்’ என்னுமதில் ஒரு சந்தேகம் இல்லை என்னலுமாம்.

அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் உய்யும்வகை இல்லை –
ராக்ஷஸ தன்மை வாய்ந்தவர்களாயும் ஆசுரத் தன்மை வாய்ந்தவர்களாயும் இருப்பார் மனித சரீரத்தை ஏறிட்டுக் கொண்டு,
ஸ்ரீ வானர சேனையின் நடுவே சுக சாரணர்கள் புகுந்தாற்போலே புகுரப் பார்த்தீர் உளராகில்
உங்களுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை. என்றது,
“ஒன்றும் தேவும்” என்ற திருவாய் மொழியைக் கேட்டுச் சம்சாரம் திருந்தின படி.
“வாழ் ஆட்பட்டு நின்றீர் உள்ளீரேல்” என்று தேட வேண்டாதே, எல்லாரும் வாழாட்பட்டு,
‘அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்’ என்று தேட வேண்டும் படியாயிற்று என்றபடி.

தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே –
பிறர்க்குத் தொண்டு செய்தல் நாய்த் தொழிலாகும்” என்கிற மற்றை விஷயங்களிலே
தொண்டு பட்டிருக்க உங்களைக் கல்பந்தானே வருத்திக் கொண்டு, தானும் பேரும் என்னுதல்;
அன்றிக்கே,
வைகுந்தன் பூதங்கள் உங்களையும் கொன்று ஊழியையும் பேர்ப்பர் என்னுதல்.

—————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம்- 107- திருவாய்மொழி – -5-1–6….5-1-11–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

June 4, 2016

புறமறக் கட்டிக் கொண்டு இருவல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே–5-1-6-

தோஷத்துடன் இருக்கச் செய்தே -நெஞ்சில் படாதபடி -அவன் பிரகாசிப்பித்த விலஷண விக்ரகம் அனுபவித்து ஹ்ருஷ்டர் ஆகிறார்
புறமறக் கட்டிக் கொண்டு இரு வல் வினையார் குமைக்கும்-கர்மங்கள் உயர் திணை -பீடிக்கும்
முறை முறை யாக்கை புகல் -தேவாதி சரீரங்களில் பஹூ பிரகாரமாக -ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்-தவிரும்படி
நிற முடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக்கண்-தர்ச நீயமான -நான்கு வகை -சுற்று உடைத்தான
அற முயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே-ரஷணம் தர்மம் -உத்யுக்தனான -சேஷியானவனை சேவித்தே
இழவு தீரும் படி அபரோஷித்து -ஆந்தர விக்ரக அனுபவ ப்ரீதி -இனி சரீர சம்பந்தம் இல்லை என்னும் பிரதி பத்தி ஏற்படும் படி இருந்ததீ –

புறத்திலே ஒன்றும் தோன்றாதவாறு நலமுறக் கட்டிக் கொண்டு வருத்துகின்ற கொடிய இரண்டு வினைகளாலே சரீரத்தில்
முறை முறையாகப் புகுதல் தவிரும்படியாக, நிறத்தையுடைய விசாலமான நான்கு திருத் தோள்களையும் சிவந்த திருவாயினையும்
சிவந்த தாமரை போன்ற திருக் கண்களையும் அறத்தையே செய்கின்ற சக்கரத்தைத் தரித்த அழகிய திருக்கையையும்
கரிய மேனியையுமுடைய சுவாமியைக் கண்டுகொண்டேன் என்கிறார்.
கட்டிக் கொண்டு குமைக்கும் வினையார் என்க. ‘வினையார்’ என்பதில் ஆர் விகுதி, இழித்தற்கண் வந்தது.
யாக்கையிலே முறை முறை புகல் ஒழிய அம்மான் தன்னைக் கண்டுகொண்டொழிந்தேன் என்க.
கண்டு கொண்டொழிந்தேன்’ என்பது, ஒரு சொல்.

“போர வைத்தாய் புறமே” என்று இவர் நொந்தவாறே, ‘இவருடைய இழவை மறப்பித்து உளராக்கி நடத்த வேண்டும்’ என்று
பார்த்துத் தன் வடிவழகைக் காட்ட, அவ் வடிவழகைக் கண்டவாறே தம் முடம்பை மறந்து பிரீதராய், கண்டு கொண்டேன் என்கிறார்
இவரை மெய்ம் மறக்கப் பண்ணிற்று அவன் வடிவு.

புறம் அறக் கட்டிக் கொண்டு-
பிணைத்த இடம் அறிந்து இவனால் அவிழ்த்துக் கொள்ள ஒண்ணாதபடியாக, புச்சம் தோன்றாதபடி உள் முடியாக முடிந்து.
“என்னுடைய மாயையானது தாண்ட முடியாதது” என்கிறபடியே, சர்வ சக்தியான தான் பிணைத்த
பிணை ஒருவரால் அவிழ்க்க ஒண்ணாது என்றானே அன்றோ.-ஸ்ரீ கீதாச்சார்யன் –

இரு வல் வினையார் குமைக்கும்-
இரு வகைப்பட்ட மஹாபாவங்கள் தகர்க்கும்.

குமைக்கும் முறை முறை யாக்கை –
புண்ணியங் காரணமாகத் தேவ சரீரத்தை அடைந்தும், பாவம் காரணமாக
விலங்கு முதலான சரீரங்களை அடைந்தும், இவ் விரண்டு வினைகளும் காரணமாக மனித சரீரத்தை அடைந்தும்
படும் பாட்டுக்கு ஒரு முடிவு இல்லை அன்றோ? திறந்து கிடந்த வாசல் தோறும் நுழைந்து திரியும் பொருள் போலே,
கர்மங்களுக்குத் தகுதியாகத் தேவர்கள் முதலான சரீரங்கள் தோறும் பிரவேசித்துத் திரியும்.

புகல் ஒழிய –
புகுதல் தவிர. ஞான ஆனந்த லக்ஷணமான ஆத்மாவே அன்றோ தோன்றுதல் வளர்தல் முதலான தொழில்களை யுடையதாய்,
நிலை இல்லாத சரீரத்திலே அகப்பட்டு நோவுபடுகிறது. அது தவிர,

கண்டு கொண்டொழிந்தேன் –
உத்தேசிய வஸ்துவைக் கண்டு அநுபவிக்கப் பெற்றேன். பிறவி நீங்கினேன் என்றபடி.

நி்றமுடை நால் தடம் தோள் –
“எல்லா ஆபரணங்களையும் அலங்கரிக்கைக்குத் தகுதியாக இருக்கிற திருத் தோள்கள்” என்கிறபடியே,
ஆபரணத்திற்கு ஆபரணமாய், நான்காய், சுற்றுடைத்தான திருத் தோள்களை யுடையனாய்.

செய்ய வாய் செய்ய தாமரைக் கண் –
“விலாசத்தோடு கூடிய திரு முறுவலுக்கு ஆதாரமான திருமுக மண்டலத்தை யுடையவர்” என்கிறபடியே,
“முறுவல் எடுத்த கலம்” என்னும்படி திரு முகத்தைச் செவ்வி பெறுத்தா நின்றுள்ள புன்சிரிப்பையும், இழவு மறக்கும்படி
குளிரக் கடாக்ஷிக்கிற திருக் கண்களையுமுடையனாய்.

அறம் முயல் ஆழி அம் கை-
அடியார்களைக் காப்பாற்றுதலாகிற பரம தர்மத்திலே தன்னிலும் முயலா நின்றுள்ள
திருவாழியை யுடைய அழகிய திருக்கையையும்,

கரு மேனி –
அதற்குத் தப்பிலும் தப்ப ஒண்ணாத குளிர்ந்த வடிவழகையும்,

அம்மான் தன்னை –
‘இவை எல்லாம் எனக்கு’ என்று அநுபவிக்கும்படியான சம்பந்தத்தை யுமுடையவனைக் காணப் பெற்றேன் என்க.
“அந்தத் துவாரத்தின் மத்தியில் பரமாத்மாவினது அப்ராகிருதமான சரீரமானது மெல்லியதாயும் மேல் நோக்கின
பிரகாசத்தையுடையதாகவும் இருக்கிறது; அத் திருமேனி எங்ஙனம் இருக்கிறது? எனின்,
கரிய மேகத்தை நடுவிலுடையதான மின்னற்கொடி போன்று மெல்லியதாகவும்
உருக்கின தங்கம் போன்ற காந்தியையுடையதாயுமிருக்கிற
ஒரு சிகை இருந்தால் அதுபோன்று இருக்கிறது” என்கிறபடியே, இருதயத்திலே இருக்கிற படி.
முன்பு இவ்வுடம்பு அவ்வுடம்பை மறப்பித்தாற் போலே இப்போது அவ்வுடம்பு இவ்வுடம்பை மறப்பித்தது.

மாலின்யம் போக்கி அடிமை கொண்டான்
மாலின்யம் என்ன -சரீர சம்பந்தம் ஐந்தாம் பாட்டில் அறிவித்து-இவரின் இழவை -மறப்பித்து தனது வடிவு அழகை காட்டி –
தம்முடைய உடம்பை மறந்து ப்ரீதராய் கண்டு கொண்டேன்-இவரை -மெய் மறக்க பண்ணிற்று அவன் வடிவு அழகு

“நிறமுடை நால் தடந்தோள்” என்பது போன்றவைகளால் இறைவன் தன்னுடைய வடிவழகைக் காட்டுகையாலே
இவருடைய இழவை மறப்பித்தல்’ பொருள் ஆற்றலால் போதரும்.
வடிவழகை’ என்றது, “நிறமுடை நால் தடம் தோள்” என்பது போன்றவைகளால் பெறுதும்.
“கண்டுகொண்டு” என்றதனால், அவன் ‘காட்ட’ என்பது போதரும்.
உடம்பை மறந்து’ என்றது தம்முடைய பிரகிருதி சம்பந்தத்தை அநுசந்தித்தபடியால் வந்த துக்கத்தை மறந்து என்றபடி.
‘மெய்’ என்றது சிலேடை: சரீரமும், சத்தியமும் என்பன பொருள்.
மெய்ம் மறக்கப் பண்ணிற்று -சரீரம் காரணமாக வந்த துக்கத்தை மறக்கப் பண்ணிற்று.

————————————————————————————

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம் மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.–5-1-7-

கிருபா அதிசயத்தால் -எத்தனை நிகர்ஷ்டருக்கும் ஸூவ விஷயத்தில் ஆசையை விளைவித்து தானும் ஆசை கொள்ளும்
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?-அமுதனார் -சுரம் வைத்து -அவனை
மேலாகவும் தம்மை கீழாகவும் காட்டி அருளுவாராம்
நிருவாதிக ஸ்வாமி- உபகாரகன் –
ஸூரிகளாலும் அளவிட முடியாதபடி -அங்கே உள்ளவன் –
கிருத்ரிம உக்தாதிகளை பண்ணும் நீசன் –
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கையை தலை மேல் வைத்து கூப்பி -கூப்பிட்டு -பாரமார்த்திக பிரேமம் -உள்ளவனாய் ஆனேனே
கஜேந்திர -ஜன்மாத் அபகர்ஷம் பாராமல் –
தும்பிக்கையால் தாமரை -கைங்கர்யம் உத்யுக்தமான -கிலேசம் ஒழித்து
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.-
என் பக்கல் அபி நிவிஷ்டன் ஆனானே
ஆதலால் மகா பாபிகளுக்கும் தப்ப ஒண்ணாத கிருபை பலம் கொடுத்தே தீரும்

எல்லார்க்கும் சுவாமியும் திருவாழியைத் தரித்திருக்கின்ற உபகாரகனுமான அந்தச் சர்வேச்வரன் எவ்விடத்திலே உள்ளவன்,
யான் எங்கே உள்ளவன், துதிக்கையையுடைய யானையினது துன்பத்தை நீக்கினவனே! என்று சொல்லிக் கைகளைத் தலையிலே
வைத்துக்கொண்டு மனத்தொடு படாமலே கூப்பிட, அது உண்மையான பக்தியாக மாறும்படி நின்றேன்; எம்பிரானும் என்மேலே
காதல் உள்ளவன் ஆனான்; ஆதலால், எத்தகைய பெரிய பாவங்களைச் செய்தவர்கட்கும் புண்ணியம் வாய்க்குமிடத்தில் வாய்த்தே விடும் என்கிறார்.
‘எவ்விடத்தான்’ என்பது, பரமபதத்திலே உள்ள தன்மையைக் காட்டுகிறது. பாவியர்க்கும் உம்மை, இழிவு சிறப்பு.
வாய்க்கின்று என்பது, கின்று விகுதிபெற்ற வினையெச்சம்.

அவன் கிருபையாலே தாம் பெற்ற பேற்றினைக் கண்டு ஆச்சரியத்தை அடைந்தவராய்ப் பகவானுடைய கிருபை நடையாடா நிற்க,
சிலர்க்கு ‘நான் தீவினையேன்’ என்று இழக்க வேண்டா என்கிறார்.

அம்மான் –
சர்வேச்வரன்.

ஆழிப் பிரான் –
கையும் திருவாழியுமான அழகை நித்திய சூரிகளுக்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்குமவன்.

அவன் எவ்விடத்தான் –
அவன் எத்தகைய பெருமை பொருந்திய நித்திய சூரிகளால் ஆராதிக்கப்படுமவன்.

யான் ஆர் –
நித்திய சம்சாரிகளுக்கும் இவ்வருகாய் இருந்தேன் யான்.
பிள்ளையமுதனார், ‘அம்மான் ஆழிப்பிரான்’ என்று மேலே காட்டி, ‘யான் ஆர்’ என்று குறையச் சொல்லிக் காட்டுவர்.

எம் மா பாவியார்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் –
எல்லா வழியாலும் மஹாபாவத்தைப் பண்ணினவர்கள் பக்கலிலும் பகவானுடைய கிருபை பெருகப் புக்கால் தடை இல்லை கண்டீர்.
பகவானுடைய கிருபை பெருகப் புக்கால் ‘கரையிலே நின்றோம்’ என்னத் தப்ப விரகு இல்லை. நீர் கிட்டினபடி என்? என்ன,
பாபம் இல்லாதவருக்கு பள்ள மடை -பாபம் உள்ளவர்க்கு மேட்டு மடை -வெள்ளம் வந்தால் வாசி இல்லையே –
கர்மம் ஆகிய கரையிலே -நின்றால் அத்தையும் சேர்த்து அழித்துப் போகுமே –

கைம் மா துன்பு ஒழித்தாய் என்று-
உயர்ந்த பிறவி ஆசாரம் ஞானம் இவைகள் ஒன்றும் இன்றிக்கே இருக்கின்ற யானையானது முற்பிறவியின் வாசனையாலே,
முட்பாய்ந்தவாறே ‘அம்மே!’ என்பாரைப் போலே நோவு பட்டவாறே திருவடிகளை நினைக்க, சர்வாதிகனான தான் தன் மேன்மை பாராமல்
மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து காப்பாற்றிய நீர்மையை நினைத்து, ‘இது ஓர் உபகாரம் இருக்கும்படியே!’ என்று
அந்த உபகாரத்தின் நினைவாலே அன்புள்ளவர்கள் சொல்லும் பாசுரத்தை அன்பு இல்லாத நான் சொன்னேன்.

கை தலை பூசல் இட்டே –
தலையிலே கையை வைத்து வாயாலே கூப்பிட்டு என்னுதல்;
மாறாதே அஞ்சலி செய்து என்னுதல்;
தலையிலே வைத்த கை மாறாமல் என்னுதல்.

பூசல் இடுதல் –
பிரசித்தமாகக் கூப்பிடுகைக்கும், ஒன்றோடு ஒன்று சம்பந்திக்கிறதற்கும் பேர்.

கை தலை பூசல் இட்டே”
என்றதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார். முதற்பொருள், பூசலிடுதல்-கூப்பிடுதல்.
இரண்டாவது பொருள், பூசலிடுதல் என்பது, கூட்டுகையாய் தலையிலே கையையும் கையையும் கூட்டி அஞ்சலி செய்து என்றபடி.
மூன்றாவது பொருள், தம் எளிமை தோன்றக் கையைத் தலைமேலே கூட்டி வைத்து என்றபடி.
“இட்டே” என்ற ஏகாரத்திலே நோக்காக ‘மாறாமல்’ என்கிறார்.

மெய்ம் மாலாய் ஒழிந்தேன் –
யானைக்கு உதவினது தங்களுக்கு உதவி செய்தது என்று இருக்கும் பர சம்ருத்தியேகப் பிரயோஜநர் அந்த உபகாரத்திற்குத் தோற்று
உபகாரத்தின் நினைவாலே அஞ்சலி செய்து சொல்லும் பாசுரத்தை, மனத்தொடு படாமலே சொல்லி அது நெஞ்சிலே ஊற்றிருந்து
பொய்ம் மால் போய் மெய்ம் மாலாய் விழுந்தது. நன்று; அவன் உம்மளவில் செய்தது என்? என்ன, அருளிச் செய்கிறார் மேல்:

எம்பிரானும் என் மேலோனே-
எனக்கு உபகாரகனானவனும், கலியர் சோறு கண்டாற்போலே என் பக்கலிலே வந்து மேல் விழுந்தான். என்றது,
நான் மெய் சொன்ன அன்றோடு பொய் சொன்ன அன்றோடு வாசி அற என்றும் ஒக்க
மெய்ம் மாலாய்ப் போருகின்றவன் விடுவானோ என்றபடி.
இது இருந்த படியால், எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் –
எவ்வளவு மஹா பாவத்தைப் பண்ணினார்க்கும் பகவானுடைய கிருபை பெருகா நின்றுள்ள இடத்தில் தப்ப விரகு இல்லை அன்றோ?

“கைம் மா துன்பொழித்தாய்” என்றதனைக் கடாக்ஷித்து “மெய்ம் மாலாய் ஒழிந்தேன்” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘யானைக்கு’ என்று தொடங்கி. பர சம்ருத்தியேகப் பிரயோஜநர்-பிறருக்கு வந்த நன்மைகளையே
தமக்கு வந்ததாக நினைப்பவர்கள்;
நித்திய சூரிகள். ‘மனத்தொடு படாமலே சொல்லி’ என்றது, இத் திருப் பதிகத்தின் முதற் பாசுரத்தைத் திருவுள்ளம்பற்றி.

———————————————————————————————–

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8-

உபய விபூதி நாதன் -என் நெஞ்சுக்குள் புகுந்து -மேல் விழுந்து -அனைத்தும் காட்டி அருளினான்
மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்-சர்வ பிரகார உத்க்ருஷ்டர்கள் –
நித்ய சூரி களுக்கு சமமாக ஞான பக்த்யாதிகளால்
மாலார் வந்து இன நாள் அடியேன் மனத்தே மன்னினார்
சர்வாதிகர் -அபிமுகராய் வந்து -அடியேன் -அனன்யார்ஹ சேஷத்வமே பற்றாசாக – பேரேன் என்று நெஞ்சு நிறைய புகுந்து
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.-கயல் விளி-குணாதிகர் -பிரிய ஹிதங்கள்-
இவர்கள் கிட்டி பிறக்கும் ஹர்ஷம் தம்மை அனுபவித்து பெரும் படி –

மேன்மை பொருந்திய நித்தியசூரிகளாலும் நிலத் தேவர்களாகிய ஸ்ரீ வைஷ்ணவர்களாலும் பொருந்தி வணங்கப்படுகின்ற திருமால் ஆனவர்,
இப்பொழுது அடியேன் மனத்திலே வந்து நிலை நின்றார்; இனி மேல், சேல் போன்ற கண்களையுடைய பெண்களும் பெரிய செல்வமும்
சிறந்த புத்திரர்களும் மேலான தாயும் தகப்பனும் அவரே ஆவார் என்க.
நிலத் தேவர்-திருமாலடியார். மன்னுதல்-நிலைபெறுதல். ‘சேல் ஏய்’ என்பதில் ‘ஏய்’ உவம உருபு.

உபயவிபூதி நாதனானவன் என் பக்கலிலே மேல்விழுந்து என்னை விடாதே மனத்திலே புகுந்திருந்தான்; நானும், இனி
நித்ய சூரிகளைப் போலே நித்ய சம்சாரத்தை விட்டு, அவனையே எல்லா உறவு முறையுமாகப் பற்றப் பார்த்தேன் என்கிறார்.

மேலாத் தேவர்களும் –
நித்ய சூரிகளும். நிலத் தேவரும் – பூசுரரான ஸ்ரீ வைஷ்ணவர்களும்.

மேவித் தொழுஉம் மாலார் –
இளையபெருமாளும், இடக்கை வலக்கை அறியாத குரங்குகளும் ஒக்க அடிமை செய்தாற்போல, இரண்டு உலகங்களில்
உள்ளவர்களும் ஒரு மிடறாகச் சேர்ந்து அடிமை செய்யும் சர்வாதிகனானவன்.

வந்து –
தான் இருக்குமிடத்தே நான் செல்லுதல் தகுதியாக இருக்க, நான் இருந்த இடத்திலே தானே வந்து.

இன நாள் –
இப்போது, என்றது, முக் கணத்தில் அறியாது இருக்க, இங்ஙனே விடிந்து கொண்டு நிற்கக் கண்டேன் என்றபடி.
இப்படி வருகைக்குக் காரணம் என்? என்னில்,

அடியேன்-
விட ஒண்ணாத சம்பந்தத்தை இட்டு வந்தான்.
வந்து செய்தது என்? என்னில்,

மனத்தே மன்னினார் –
மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான்”-பேயாழ்வார்-3- என்கிறபடியே,
பரம யோகிகள் நெஞ்சிலும், திருப் பாற் கடலிலும்,
பெரிய பிராட்டியார் திருமுலைத் தடங்களிலும் இருக்கக்கூடிய அவன்,
நித்ய சம்சாரியாய்ப் போந்த என் நெஞ்சிலே தாவரத்தைப் போன்று நிலைபெற்று நின்றான்.
இனி, நீர் செய்யப் பார்த்தது என்? என்ன, இனி, இவனை ஒழிய எனக்கு ஒரு செயல் உண்டோ? என்கிறார் மேல்:

சேல் ஏய் கண்ணியரும் –
தங்கள் நோக்காலே துவக்க வல்ல பெண்களும்.
பெரும் செல்வமும்-
நிரவதிகமான செல்வங்களும்.
நன்மக்களும் –
குணங்களால் மேம்பட்ட புத்திரர்களும்.
மேலாத் தாய் தந்தையும் –
தங்கள் தங்களை அழித்து மாறியாகிலும் குழந்தைகளை நோக்கும் தாய் தந்தையர்களும் எல்லாம்.

இனி அவரே ஆவார்-
இனி அவரையே எனக்காகப் பற்றப் பார்த்தேன் என்கிறார். துக்கங்களைக் கொடுக்கக்கூடிய அவர் அவர்களுடைய
சம்பந்தத்தால் துக்கப்பட வேண்டா என்பார் ‘அவரே ஆவார்’ எனப் பிரிநிலை ஏகாரங் கொடுத்து ஓதுகிறார்.
தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் இருப்பிடமும் காப்பவனும் சிநேகிதனும் மோக்ஷ உலகமும்
ஸ்ரீமந் நாராயணனாகவே இருக்கிறான்” என்பது உபநிடதம்.
யானோ தசரத சக்கரவர்த்தியிடத்தில் தகப்பன் என்ற முறையைப் பார்க்கிறேன் இல்லை;
எனக்கு ஸ்ரீ ராமபிரானே தமையனும் சுவாமியும் உறவினர்களும் தமப்பனுமாக இருக்கிறார்” என்றார் இளைய பெருமாள்.
அஹம் தாவத் மஹாராஜே பித்ருத்வம் நோபல க்ஷயே பிராதா பர்த்தாச பந்துஸ்ச பிதாச மம ராகவ:”-அயோத். 58 : 31.

நற்றாதை நீ தனிநாயகன் நீ வயிற்றிற் பெற்றாயும் நீயே பிறரில்லை பிறர்க்கு நல்கக்
கற்றா யிது காணுதி இன்றெனக் கை மறித்தான் முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அனான்.- என்பது கம்ப ராமாயணம்.

—————————————————————-

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

சன்ம விடாய்க்கு நிழல் ஆழ்வார் திருவடிகளே -கிருபா பரவசன்-அவன் என்று காட்டி அருள்கிறார் –
நிர்ஹேதுக கிருபை நம் அனைவருக்கும் பிரவஹிக்குமே
விந்த்யா மலைக்கு தெற்கில் இருந்து இதே நிலையில் ஸ்ரீ ராமானுஜர் -பெரும் தேவித் தாயார் தேவ பெருமாள் -தோன்றி அருளினார்கள் –
ஹ்ருஷ்டராக அருளிச் செய்கிறார் -ஆழ்வார் இதில் -நமக்காக அருளிச் செய்கிறார் –
சர்வ வித பந்து -அசாதாராண விக்ரகத்துடன் என்னுடன் கலந்தான் –
ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்-துணை யாவார் யார் என்று –
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்-சம்சார சமுத்திர மத்யத்தில் நின்று கரை ஏற முடியாமல் நடுங்க
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
திவ்ய சௌந்தர்யாதிகள் உடன் -அவ்வடிவுக்கு அழகு கூட்டும் திவ்ய ஆயுதங்கள் உடனும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே-என்னுடனும் ஆனார் -உம்மைத் தொகை -திருச் சங்கு திருச் சக்கரத்துடன் போலே
தாழ்ந்த என்னுடனும் ஆனான் -நைச்ய பாவத்துடன் -அசாதாராண விக்ரகத்துடன் கூடினான் –
ஆ ஆ -காலம் தாழ்ந்தோமே என்று -விதி என்று சொல்லிப் போந்தை அருள் என்று வெளியிடுகிறார் இதில் –

துணை ஆவார் யார்? என்று, அலைகளையுடைய நீரையுடைய கடலிலே அழுந்துகின்ற கப்பலைப் போன்று, பிறவியாகிய பெருங்கடலுள்
நின்று நான் நடுங்கிக் கொண்டிருக்க, தெய்வத் தன்மை பொருந்திய திரு மேனியோடும் திருச் சக்கரத்தோடும் திருச்ச ங்கினோடும்
அந்தோ! அந்தோ!! என்று இரங்கி வந்து அடியேனோடும் கலந்தான் என்கிறார்.
நாவாய் என்றது, நாவாயிலுள்ளவர்களைக் குறித்தது. ஆகு பெயர். நான் துளங்க அருள் செய்து ஆனான் என்க.
ஆஆ என்பன: இரக்கத்தைக் காட்டுகின்ற குறிப்பு இடைச்சொல்.

பல சொல்வதனால் பயன் என்? நான் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும்படி தன் கிருபையால்
பிரகிருதி சம்பந்தம் இல்லாத வடிவோடே வந்து கலந்தான் என்கிறார்.

துணை ஆவார் ஆர் என்று –
துணை ஆவார் யார்? என்று.

அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க-
கொந்தளிப்பையுடைய கடலுக்குள்ளே அழுந்துகிற நாவாய் போலே, பிறவிப் பெருங்கடலிலே நின்று நான் நடுங்க.
நாவாய் போல்’ என்கிற இடத்தில், நாவாய் மாத்திரத்தை நினைத்த போது, ‘ஆவார் ஆர் துணை’ என்றதனைக் கரையிலே
நின்றவர்களுடைய வார்த்தை ஆக்குக. அதற்குக் கருத்து, நோவு படா நிற்கவும் உணர்த்தி அற்று இருந்தபடியைத் தெரிவித்தபடி.
நடுங்குகையாவது, அசைந்து வருகை.-மானஸ சலனம் நாவாயில் உள்ளோரை குறிக்கும் பொழுது –
திரு நாவாய் – -பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் -சூர்ணிகை -180-
அன்றிக்கே, ‘நாவாய் போல்’ என்பதனைக் ‘கட்டில் கத்துகிறது’ என்பது போன்று ஆகு பெயராகக் கொண்டு, ‘நாவாய்’ என்பதற்கு,
நாவாயிலே இருக்கின்ற மக்கள் என்று பொருள் கோடலுமாம்.
இவ்விதமான நடுக்கத்தில் சர்வேசுவரன் செய்தது என்? என்னில்,

தேவார் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும் ஆஆ என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே-
பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்விய உறுப்புகளோடும் அவ் வுறுப்புக்களில் சேர்ந்த திவ்விய ஆயுதங்களோடுங்கூட வந்து,
ஐயோ! ஐயோ! என்று என் பக்கலிலே கிருபையைச் செய்து என்னோடே வந்து கலந்தான்.-ஆவா என்று ஆராய்ந்து அருளினான் –

பின் இரண்டு அடிகட்கு, “கையில் ஆழ்வார்களோடு பொருந்தினாற் போலே என்னோடே வந்து கலந்தான்” என்று ஆளவந்தார்
அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பணிப்பர்.
இதனை எம்பெருமானார் கேட்டருளி
இங்ஙனேயாக அடுக்கும், ‘கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி வாராய்’ -திருவாய். 6. 9 : 1.-என்றாயிற்று இவர் ஆசைப்பட்டிருப்பது;
ஆசைப்பட்டபடியே திவ்விய ஆயுதங்களோடே வந்து கலந்தான்” என்று அருளிச் செய்தார்.
இவர் தாம் பூ வேளைக்காரரைப் போலே, இவை காணாதபோது கை மேலே முடிவார் ஒருவரேயன்றோ.
பூ வேளைக்காரர் – அரசர்களுக்கு அவ்வக்காலங்களில் பூ இடாவிடில் குத்திக் கொண்டு முடியுமவர்கள்.
இவை காணாத போது’ என்றது, இவற்றைக் கைமேலே காணாத போது என்றபடி.
கைமேலே முடிவார்” என்பதற்குப் போரிலே முடிவார் என்பது வேறும் ஒரு பொருள்.
கேசவன் தமர்” என்ற திருவாய்மொழி தொடங்கி லோபத்தாலே, கிருபையை, ‘விதி’ என்ற சொல்லால் சொல்லிப் போந்தவர்
இப் பாசுரத்தில் அதனை ‘அருள்’ என்று வெளியிடுகிறார்.
ஸ்வரூபத்திற்குத் தகுதியாகச் சேஷியாகவே வந்து கலந்தான் என்பார் ‘அடியேனொடும் ஆனானே’ என்கிறார்.

அப்ராகிருதமாய் அழகியதான திருமேனியோடே திருவாழியோடும் ஸ்ரீ பாஞ்ச சன்னியத்தோடும் பொருந்தினாற்போலே,
அப்ராகிருத விக்கிரகத்தோடே என்னோடே வந்து கலந்தான் என்பது, ஸ்ரீ-ஆளவந்தாருடைய திருவுள்ளக் கருத்து.
“அடியேனொடும்” என்ற உம்மையாலே, கையில் ஆழ்வார்களோடு சேர்ந்தார்போலே என்னோடும் சேர்ந்தான் என்றபடி.
கோலத்தோடும்” என்ற உம்மை, அசை நிலை.

——————————————————————————-

ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே.–5-1-10-

அசாதாராண விக்ரக விசிஷ்டன் -சர்வ அவதாரங்களை அனுபவிப்பித்து -என்னுடன் கலந்தான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் -மத்ச்யமுமாய் -கூர்மமுமாய் -வன வாரகமுமாய்
கார் வண்ணனே.வள்ளல் -கருமை நிறம் ஔதார்யம் இரண்டிலும் -இன்னம் -பிரசவிக்க பிரசவிக்க ஒளி விஞ்சி –
காள மேகம் -பவிஷ்யத் -கற்கியாம் –
ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து-இப்படி சொன்னதே கொண்டு உகந்து வந்தானே
வாய் வார்த்தையாக -சொன்னதை -உக்தியையே பற்றாசாகக் கொண்டு
தானே இன் னருள்செய்து என்னை முற்றவும் தானானான்
அபேஷா நிரபேஷமாக-நிரதிசய போக்யதையை -சர்வ அவதார விசிஷ்டையையாய்க் கொண்டு வந்து சம்ச்லேஷித்தான்
அவ் வவதார வைலஷண்யத்தை அனுபவிப்பித்தான்

மீனாகியும் ஆமையுமாகியும் நரசிங்கமுமாகியும் குட்டையனாகியும் காட்டில் வசிக்கும் பன்றியுமாகியும் இன்னம் கற்கியும் ஆகின்ற
கார் வண்ணன், என்னை அடிமை கொண்டவன் ஆனான் என்றேன்; என்ற அந்த வார்த்தையை மட்டும் கொண்டு மகிழ்ந்து வந்து
தானாகவே இனிய திருவருளைச் செய்து எனக்கு எல்லா உறவு முறையும் தானே ஆனான் என்கிறார்.
என்ற அஃதே’ என்பது, ‘என்றவஃதே’ என்று வால் வேண்டும், ‘என்றஃதே’ என வந்தது, தொகுத்தல் விகாரம்.
வந்து செய்து முற்றவும் ஆனான் என்க. என்னை: வேற்றுமை மயக்கம். எனக்கு என்பது பொருள்.
மீன் – மத்ஸ்யம், ஆமை – கூர்மம். குறள் – வாமனம். ஏனம் – வராகம். கற்கி – கற்கி அவதாரம்; கற்கி – குதிரை.

சர்வேசுவரன் தன் கிருபையாலே ஐம்புல இன்பங்களில் ஈடுபாட்டை அறுத்துத் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த
மஹோபகாரத்தை நினைத்த க்ருதஜ்ஞதையே பற்றாசாக வந்து, என்னோடே நிரவதிக சம்ஸ்லேஷத்தைச் செய்தான் என்கிறார்.

ஆளுடையான் ஆனான்-
என்னை அடிமை கொள்வான் ஆனான் என்று, அறியாதே இங்ஙனே ஒரு வார்த்தை சொன்னேன்.

என்ற அஃதே கொண்டு-
என்று கூறிய இந்த வார்த்தை மாத்திரத்தையே கொண்டு.
நான் இப்படிச் சொல்லுகைக்குத் தான் செய்த கிருஷி முழுதையும் மறந்தான், –
இந்த வார்த்தையையே குவாலாக நினைத்தான்
(ஸ்ருஷ்ட்டி அவதாராதி முகத்தால் பண்ணின கிருஷி பலம் அன்றோ
தடுப்பை விலக்கியதுமே பலிக்கும் -)

உகந்து –
பலத்தை அநுபவிக்கின்ற என்னது அன்றிக்கே, சந்தோஷமும் தன்னதே ஆயிற்று.-பல போக்தாவும் அவனே –
நாம் போக்யம் என்ற உணர்வே வேணும்
அதமன் -நாம் போக்தா விஷயாந்தரங்கள் போக்யம் – என்ற நினைவு
மத்யமன் -நாம் போக்தா -அவன் போக்கியம் – என்ற நினைவு
உத்தமன் -நாம் போக்யம் அவன் போக்தா -என்ற நினைவு

வந்து-
வருதலும் மாறாடிற்று. -சந்தோஷம் மாறாடினாற் போலே,

தானே இன் அருள் செய்து-
நான் வேண்டிக் கொள்ளாதிருக்கத் தானே தன் பேறாகத் திருவருளைச் செய்து.

என்னை முற்றவும் தானானான்-
உள்ளோடு புறம்போடு வேற்றுமை அறக் கலந்தான் என்னுதல்; எனக்கு எல்லா விதமான இனிய பொருள்களும் ஆனான் என்னுதல்.
அன்றிக்கே, என்னைத் தனக்கு எல்லாவிதமான இனிய பொருள்களாகவும் கொண்டான் என்னுதல்.
“ஆக முற்றும் அகத்து அடக்கி”–திருவாய்மொழி. 4. 3 : 3.- என்றாரே அன்றோ முன்னரும்.
“என்னை முற்றவும் தானானான்” என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச் செய்கிறார்.
முதற்பொருள், என்னை-என்னோடு, முற்றவும் – உள்ளும் புறம்புமான எல்லாவிடத்திலும், தான் ஆனான் – தான் என்னோடு கலந்தான் என்பது.
இரண்டாவது, என்னை – எனக்கு, முற்றவும் – எல்லா விதமான இனிய பொருள்களும் தானானான் என்பது.
மூன்றாவது, என்னைத் தனக்கு எல்லாவிதமான இனிய பொருள்களுமாகக் கொண்டான் என்பது.

மீனாய் –
உலகில் உள்ள சாதிகட்கு எல்லாம் வேறுபட்டவனான தான், ஞானத்தைக் கொடுக்கும் பொருட்டுத்
தண்ணீரில் சஞ்சரிக்கின்ற சாதியன் ஆனான்.
ஆமையும் ஆய் –
எல்லாவற்றையும் தாங்கும் பொருட்டுக் கூர்மத்தின் வடிவையுடையவன் ஆனான்.
நரசிங்கமும் ஆய் –
உடனே விரோதியைப் போக்குகைக்காக இரண்டு வடிவுகளைச் சேர்த்துக் கொண்டு வந்து பிறந்தான்.
குறள் ஆய் –
கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு இரப்பாளன் ஆனான்.
கான் ஆர் ஏனமும் ஆய் –
பிறவிப் பெருங்கடலில் நின்றும் என்னை எடுக்கைக்கு வராகத்தினது உருவத்தைக் கொண்டான்.
(தாத்பர்ய சந்திரிகை -கீதையில் -அஹம் -பிரதானம் -இறுதியில் சொன்னதை மேலே உள்ள -35- விஷயத்துக்கும் கொண்டது போலே
எனக்கு ஞானம் அளிக்கவும் -என்னை தயாரிக்கவும் -எனக்காக உபய வேஷம் -உபாய உபேயம் என்றவாறும் –
எனக்காக இரப்பாளனாகி அஹம் மே த்வம் மே -என்றும் கொள்ள வேண்டும் )
“ஸ்ரீ ராமபிரான் தன் திருமேனியின் ஒளியாலே தண்ட காரண்யத்தை விளங்கச் செய்துகொண்டு அப்போது தோன்றிய
இளஞ்சந்திரனைப் போன்று காணப் பட்டார்” என்கிறபடியே, காடு அடங்க மயிற்கழுத்துச் சாயல் ஆக்கும்படியான
வடிவை யுடையவன் என்பார்‘கானார் ஏனம்’ என்கிறார். –காடு அடங்கக் கோலம் செய்தலைக் குறித்தபடி.
கோலம் -அழகு பன்றி இரண்டு பொருள் –
அன்றிக்கே, மனித சஞ்சாரம் இல்லாத காட்டிலே வாழ்கின்ற ஏனம் என்பார் ‘கானார் ஏனம்’ என்கிறார் என்னலுமாம்.

இன்னம் கற்கி ஆம் –
மேல் வரும் விரோதத்தைப் போக்குகைக்கும் இன்னம் கற்கியாக இருந்தான் என்றது,
என் காரியம் சமைந்த பின்பும் “சம்சாரத்தில் நின்றும் கால் வாங்குந்தனையும் இவர்க்கு என் வருகிறதோ?” என்று
கொண்ட குதை–எடுத்துக் கொண்ட உத்யோகம் – மாறுகின்றிலன் என்றபடி.
நான் தப்புகைக்குப் பிறந்த பிறவிகளைப் போலவே போரும் அவன்
என்னைக் காப்பாற்றுவதற்காகப் பிறந்த பிறவிகளும்.
நான் கர்மத்தாலே பிறந்த பிறவிகள் அடையத் தானும் அநுக்கிரஹத்தாலே பிறந்தான்.

கார் வண்ணனே-
நீர் கொண்ட மேகம் போலே இருக்கின்றானத்தனை. மழை பெய்தானாய் இருக்கின்றிலன்.
எப்போதும் மழை பெய்யக் காத்து இருக்கும் மேகம் -என்றவாறு –
வண்ணம் – ஸ்வபாவம். மீ்னாய் என்று தொடங்கி, என்னை முற்றவும் தான் ஆனான் என முடிக்க.

சூழிக் களிறுய்ய வெவ்வாய் முதலை துணித்த உக்ர பாழித் திகிரிப் படை அரங்கேசர் படைப்பவன் தன்
ஊழிப் பொழுதொரு சேலாய் ஒருசெலுவுட் கரந்த ஆழிப் பெரும்புனல் காணாது தேடுவர் அவ்விடத்தே.–என்றார் திவ்ய கவியும்.

அரு மறையார் இருக்கெசுர் சாமத்தினோடும் அதர்வணமாகிய சதுர் வேதங்கள் தம்மைத்
திருடி எடுத்துக் கொண்டே உததி சேரும் தீயனுக்கா மச்சாவதாரமாய் நீ
ஒரு செலுவிற் சமுத்திரத்தைச் சுருக்கியே வைத்து உக்கிரத்தாற் சோமுகாசுரனைக் கொன்றிட்டு
இருளறவே விதி படைக்க அவ்வேதத்தை இரங்கி அளித்தனை அரியே! எம்பி ரானே!–என்றார் பிறரும்.

திரிக்கின்ற பொற் குன்றழுந்தாமல் ஆமைத் திரு வுருவாய்ப் பரிக்கின்றதிற் பெரும் பாரமுண்டே பண்டு நான் மறை நூல்
விரிக்கின்ற உந்தி அரங்கேசர் தந்திரு மேனியின் மேல் தரிக்கின்றது மகரக் கடலாடைத் தராதலமே.– திருவரங்கத்துமாலை. 24.

“தீ செங் கனலியும் கூற்றமும் ஞமனும் மாசிலா யிரங்கதிர் ஞாயிறும் தொகூஉம்
ஊழி ஆழிக் கண் இரு நிலம் உரு கெழு கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும்”– பரிபாடல்

———————————————————————–

கார் வண்ணன் கண்ண பிரான் கமலத் தடங்கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே.–5-1-11-

ஆவீர் பூத ஸ்வரூப சேஷத்வ பாரதந்த்ர்ய -குண -சம்பத் விசிஷ்டராய்க் கொண்டு கிருஷ்ணன் திருவடிகளைப் பிராபிப்பார்கள்
கார் வண்ணன் கண்ண பிரான் கமலத் தடங்கண்ணன் தன்னை-உபகாரகன் -அவதரித்து -போக்யம்-
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன-ஏர்களின் வளம் மிகுதி
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்-சீரும் சந்தமும் -பா இனம் -அர்த்த பிரகாசகம் –
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே.-ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்று –
ஸ்ரத்தையால் சொல்லுவார்களுக்கு பலன் -தெளிந்த மனத்துடன் -அமிருத பானம் பண்ணுவாரைப் போலே –

மேகம் போன்ற நிறத்தை யுடையவனும், தாமரை போன்ற விசாலமான திருக் கண்களை யுடையவனுமான கண்ண பிரானை,
ஏர்களை யுடைய வளம் பொருந்திய அழகியனவான வயல்களால் சூழப்பட்ட திருக் குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபராலே
அருளிச் செய்யப்பட்ட சீர்களோடும் வண்ணங்களோடும் கூடின தமிழ்ப் பாசுரங்கள் இவை ஆயிரத்துள் இந்தப் பத்துத் திருப் பாசுரங்களையும்
அமிருத பானம் பண்ணுவாரைப் போன்று விருப்பத்துடன் சொல்லுகின்றவர்கள், பொலிந்து இறைவன் திருவடிகளை அடைவார்கள் என்றவாறு.
கமலத் தடங் கண்ணனாகிய கண்ணபிரான் என்க. கண்ண பிரானைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன தமிழ்கள் என்க.
தமிழ்கள்-தமிழ்ப் பாசுரங்கள். இப்பத்தையும் உரைப்பார் பொலிந்து அடிக் கீழ்ப் புகுவார் என்க. அடிக் கீழ்-திருவடிகளிலே. கீ்ழ்: ஏழாம் வேற்றுமை உருபு.
ஆர் வண்ணம்-பருகுகிற வண்ணம். ஆர்தல் – பருகுதல்; அல்லது, புசித்தல். வண்ணம்-வகை. “பருகுவன் அன்ன ஆர்வத்தனாகி” என்றார் நன்னூலார்.

இந்தப் பத்தையும் கற்க வல்லவர்கள், தனக்குமேல் ஒன்று இல்லாததான
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை யுடையராய் அவன் திருவடிக் கீழே புகப் பெறுவர் என்கிறார்.

கார் வண்ணன் –
காளமேகம் போலே சிரமஹரமான வடிவை யுடையவன்.

கண்ண பிரான் –
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து அவ் வடிவை என்னை அநுபவிப்பித்தவன்.

கமலத் தடங்கண்ணன் தன்னை –
மலர்ந்த தாமரைத் தடாகம் போலே குளிர்ந்து செவ்வியை யுடைத்தான திருக் கண்களை யுடையவன்.
அன்றிக்கே, வடிவு முழுதும் கண்களாய் இருக்கிறபடி. -திரு மேனி முழுவதும் திருக்கண் வியாபிக்க -பட்டர் –
மேலே “நிறமுடை நால் தடந்தோள்” என்று தமக்குக் காட்டிச் சமாதானம் செய்த வடிவைக் கூறியபடி.
ஆக, இவர் சரீரத்தின் சம்பந்தத்தை நினைத்து அஞ்சின போது, சிரமஹரமான வடிவைக் காட்டித் தன்னை
முழுக்கக் கொடுத்துத் திருக் கண்களாலே குளிர நோக்கி நின்ற நிலையைத் தெரிவித்தவாறு.

ஏர் வளம் ஒண் கழனிக் குருகூர்-
நிறைந்த ஏர்களை யுடையதாய் அழகியதான வயலோடே கூடின திருநகரி.
வளம்’ என்று மிகுதிக்கும் அழகுக்கும் பேர். இங்கு மிகுதியைச் சொல்லுகிறது.

சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் –
சீரியதான பிரகாரத்தையுடைய அழகிய தமிழ் என்னுதல்;
கவிக்கு உறுப்பான சீரையும் வண்ணத்தையுமுடைய அழகிய தமிழ் என்னுதல்.
‘சீர்’ என்பது, செய்யுளில் ஏக தேசம். வண்ணம்-ஓசை.

ஆர் வண்ணத்தால்-
நிறைவாக என்னுதல். ஆர்தல்-பருகுதலாய்,
“தொண்டர்க்கு அமுது உண்ண” என்கிறபடியே, பருகுவாரைப் போலே என்னுதல். என்றது,
மிக்க ஆசையோடு உரைத்தலைக் குறித்தபடி.

பொலிந்தே அடிக் கீழ்ப் புகுவார் –
நம்பிக்கை மாத்திரமேயாய் ருசி இன்றிக்கே இருக்கப் போய்ப் புகுதல் அன்றிக்கே,
எம்பெருமானாரைப் போலே நூறு ஆண்டுகள் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே இருந்து, பின்பு தாய் நிழலிலே
ஒதுங்குவாரைப் போலே அவன் திருவடிகளிலே புகப்பெறுவர்.
தாய்க்கு உகப்பு –சேய்க்கு பிராப்தம்

—————————————————————————————-

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆதே முநிஸ்ய சாதகஸ்ய பஞ்சம
ஸ்ரேயஸ் ஹித போதன ஸ்வயீத மீஷமான
ஏதத் விரோதி பஹூளஸ்ய-மம -அத்ர ஹேது
சௌரே கிருபை ஏவ மகாதீதி ச சம்ஸ்ய பூயக

ஆதே முநிச்ய சாதகஸ்ய பஞ்சம -ஐந்தாம் பத்து ஆதியில்
ஸ்ரேயஸ் ஹித போதன ச்வயீத மீஷமான –ஹிதம் சொல்லி திருத்தும் படியான பெருமை –
ஏதத் விரோதி பஹூளச்ய-மம -அத்ர ஹேது -விரோதி கூட்டங்களை தள்ள
சௌரே கிருபை ஏவ மகாதீதி ச சம்ஸ்ய பூயக -மீண்டும் மீண்டும் கூறி -சௌரே கிருபை ஒன்றே ஹேது

நிருஹேதுக கிருபா என்றும் அவனுக்கு -இங்கு கிருபா பரவச்த்வம் -என்றும் -தேசிகர்
பேர் அருளின் தன்மை -மகா காருண்யம் -மா முனி-

———————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

காரி ஸூனு சக்ர ஸூவ ஜன வசதயா ரஷணம் உத்ய பாவாத்
பவ்யத்வாத் ஸ்வாத்மதானாத் அமல தனுதயாத்
ஸ்ரீ கஜேந்திர அவநாஸ் ச நாநா பந்துத்வ யோகாத்வாத்
விபதி சஹிதயாத் வ்யாஜ மாத்ராத் அபிலாஷாத்

1-காரி ஸூனு சக்ர –கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே

2-ஸூவ ஜன வசதயா –எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்–ஆஸ்ரிதர் இட்ட வழக்கு-

3-ரஷணம் உத்ய பாவாத் —வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே–திருப் பாற் கடலில் -அவதார மூலம்

4-பவ்யத்வாத் —-என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே–அவதரித்து ரக்ஷணம் அனுஷ்டிக்கை —

5–ஸ்வாத்மதானாத் —கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை நண்ணியும் நண்ணகில்லேன்—
ஆஸ்ரிதருக்கு ஸ் வ ஆத்மாவை அனுபவிக்கும் உபகாரகன்

6–அமல தனுதயாத்—அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே—குற்றம் அற்ற திரு மேனி

7-ஸ்ரீ கஜேந்திர அவநாஸ்ச –கைம் மா துன்பொழித்தாய்! —

8-நாநா பந்துத்வ யோகாத்வாத்—சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்–
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே–அனைத்து பந்தும் அவரே —

9–விபதி சஹிதயாத் –ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும் நாவாய் போல்-

10–வ்யாஜமாத்ராத் அபிலாஷாத்–ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து தானே
இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்

கிருபா பரவசராய் -கிருபைக்கு பரவசப்பட்டு குணம்-

———————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 41-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

கையாரும் சக்கரத்தோன் காதல் இன்றிக்கே இருக்க
பொய்யாகப் பேசும் புறனுரைக்கு -மெய்யான
பேற்றை யுபகரித்த பேர் அருளின் தன்மைதனை
போற்றினனே மாறன் பொலிந்து ——-41-

——————————————————

அவதாரிகை –

இதில்
சம்சாரிகளையும் திருத்தும் படியாக சர்வேஸ்வரன் பண்ணின
நிர்ஹேதுக விஷயீ காரத்தாலே வித்தராகிற
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்

1-ஸ்வ பிராப்தி சாதனங்களில் இறங்காமல்
2-துர் விஷயங்களிலே மண்டி
3-இவ் வனர்த்தத்தை உணரவும் அறியாதே
4-அத்யந்தம் உபேஷ்யனாய்-
5-சம்சாரிகளில் அந்ய தமனான என்னை

1-இவை ஒன்றுமே பாராமல் நிர்ஹேதுகமாக அங்கீகரித்து
2-தன் திருவடிகளிலே சேஷத்வத்தையும் அறிவித்து
3-கைங்கர்யத்தால் அல்லாது செல்லாதபடி பண்ணி
4-பிறரையும் திருத்தும்படியான சதிரையும் உண்டாக்கி
5-என் பக்கல் வ்யாமுக்தனாய் என்னோடு வந்து கலந்தான் என்று ப்ரீதர் ஆகிற
கையார் சக்கரத்து -அர்த்தத்தை
கையாரும் சக்கரத்தோன் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் என்கை –

——————————————————————————————

வியாக்யானம்–

கையாரும் –
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே -என்று தொடங்கி
விதி வாய்க்கின்றது காப்பார் ஆர் -என்னும் அளவும்
கடாஷித்து
அருளிச் செய்தபடி –

கையாரும் -சக்கரத்தோன் –
திருக்கை நிறையும்படி
திரு ஆழியை தரித்தது
அதுவே நிரூபகம் ஆனவன் –

காதல் இன்றிக்கே இருக்க –
ஸ்வ விஷய பக்தி இன்றிக்கே இருக்க –

கையாரும் -சக்கரத்தோன் -காதல் இன்றிக்கே இருக்க –பொய்யாகப் பேசும் புறனுரைக்கு –
சக்கரத்து உன்னையே அவி இன்றி ஆதரிக்கும் என் ஆவியே -என்னும்படி
தத் விஷயத்தில் ப்ரேமம் உண்டாக வேண்டி இருக்க

இவ் வழகைக் கண்டு இருக்கவும் தத் அனுகுணமான
அக்ருத்ரும பிரேமம் இன்றிக்கே
க்ருத்ரிம பிரேமத்தாலே இவற்றைப் பேசி அனுபவிக்கிற படியை கண்டு
போட்கனாய் இருக்கிற மித்ர பாவத்தையே பார்த்து
அந்த அஹ்ருத்யமான உக்திக்கு –

பொய்யாகப் பேசும் புறன் உரையாவது –
பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே யாடி -என்றும்
என்று என்றே சில கூத்துச் சொல்ல -என்றும்
புறமே சில மாயம் சொல்லி -என்றும்
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் -என்றும்
இப் புடைகளிலே சொன்னவை –

ஏவம் விதமான
மித்ரபாவ
மாத்ர ஜல்பிதங்களுக்கு
மெய்யான பேற்றை யுபகரித்த-
யதா ஞானம் உடையார் பேறும்
சத்யமான பேற்றை
உபகரித்த –
அதாவது –
மெய்யே பெற்று ஒழிந்தேன் -என்றும்
என்னாகி ஒழிந்தான் -என்றும்
உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன் -என்றும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண்டு ஒழிந்தேன் -என்றும்
எம்பிரானும் என் மேலானே -என்றும்
மாலார் வந்து இன்னாள் அடியேன் மனத்தே மன்னினார் -என்றும்
அடியோனோடும் ஆனானே -என்றும்
ஆனான் ஆளுடையான் என்னை முற்றவும் தானான் -என்றும்
பேசும்படியான இப் பேற்றை என்றபடி –

இத்தை யுபகரிக்கை அடி என் என்னில்
பேர் அருள் -என்கிறது
அதாவது –
விதி வாய்க்கின்றது காப்பார் ஆர் -என்றும்
எம்மா பாவியேற்கும் விதி வாய்கின்று வாய்க்கும் -என்றும்
ஆவா வென்று அருள் செய்து -என்றும்
தானே இன்னருள் செய்து -என்றும்
அருளிச் செய்தவை-என்கை –

பேர் அருளின் தன்மைதனை -போற்றினனே மாறன் பொலிந்து-
அதாவது
இரும்பைப் பொன் ஆக்குவது போலே
நித்ய சம்சாரிகளுக்கும்
நித்ய சூரிகள் பேற்றை உபகரிக்கும்
எம்பெருமான் உடைய நிர்ஹேதுக
கிருபா பிரவாஹத்தின் ஸ்வபாவத்தை
ப்ரீதியாலே அருளிச் செய்தார் -ஆழ்வார் -என்கை
க்ருபயா பர்யபாலயத் -என்னுமா போலே-

———————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-