பத்தாந்திருவாய்மொழி – ‘பொருமாநீள்’
முன்னுரை
மேல் திருவாய்மொழியில், தமது எல்லா அவயவங்களிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை நினைத்து இன்புறுகின்றார் என்று மேல் திருவாய்மொழிக்கும் இத்திருவாய்மொழிக்கும் இயைபு அருளிச்செய்வர் முன்புள்ள பெரியோர்கள். 1இங்கு, மேல் எல்லா உறுப்புகளிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை அநுசந்தித்துப் பட்டர்அருளிச்செய்வதோர் ஏற்றம் உண்டு. அதாவது, மேல் திருவாய்மொழியில் ‘உச்சியுள்ளே நிற்கும்’ என்று அன்றே அருளிச் செய்தார்? பேற்றில் இனி, ‘இதற்கு அவ்வருகு ஏற்றமாகச் செய்து கொடுக்கலாவது 2ஒன்றும் இன்று; இனி, இதனுடைய பிரிவின்மையைச் செய்து கொடுக்கையே உள்ளது; பேறு கனத்து இருந்தது இது வந்த வழி என்னை?’ என்று ஆராய்ந்தார்;3இப்பேற்றின் கனத்துக்கு ஈடாக இருப்பது ஒரு நன்மை தம்மிடத்தில் இல்லாது இருந்தது; ‘ஏன இல்லையோ?’ எனின், இத்தலையில் ஏதேனும் உண்டாகப் பார்த்தாலும், வெறுப்பின்மை எதிர் முகமாதல் என்னும் இவையே உள்ளனவாம்; இவற்றைத் தாம் பெற்ற பேற்றிற்கு ஒரு சாதனமாகச் சொல்லப்போகா; ‘என்னை?’ எனில், இத்தலையில் பரமபத்தி அளவாகப் பிறந்தாலும்பேற்றின் கனத்துக்கு இதனை ஒரு சாதனமாகச் சொல்லுதற்கு இல்லையே; என் போல!’ எனில், ஒருவன் ஓர் எலுமிச்சம் பழம் கொடுத்து இராச்சியத்தைப் பெற்றால் அதற்கு அது விலையாய் இராதே; மற்றும், சர்வேஸ்வரன் அடியாக வரும் பேற்றுக்கு இத்தலையால் ஒரு காரணத்தை நிரூபிப்பதற்கும் இல்லையே? 1‘வரலாறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால்’ என்னும் படியன்றே இருப்பது? மற்றும், இவனை முதலிலே படைக்கிற போது ‘இவன் தீய வழியைத் தப்பி நல்லவழி போக வேண்டும்’ என்று உறுப்புகளைக் கொடுத்துவிடுகையாலே, இவன் தலையால் பிறந்த நன்மைக்கும் காரணம் அவனாக இருப்பான்; இனி, புத்தி முதலான எல்லாப் பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆகையாலே, வெறுப்பின்மை தொடக்கமாகப் பரிகணனை நடுவாக, பரமபத்தி முடிவாகப் பிறப்பிப்பான் ஒருவனும் இறைவனேயாவன்; ஆதலால், ‘நித்தியசூரிகள் பேற்றை, அநாதி காலம் உழன்று திரிந்த நமக்குத் தந்தான், அவன் திருவருள் இருக்கும்படி என்?’ என்று, மேல் திருவாய்மொழியில் தலைமுடிவாகப் பிறந்த சேர்க்கையாலாய சுவையை நினைத்து இன்புறுகிறார் என்பது.
1. மேல் திருப்பதிகத்தில், ‘ஆழ்வார், தம்முடைய எல்லா அவயவங்களிலும்
இறைவன் சேர்ந்த சேர்க்கையை நினைத்து இன்புறுகிறார்’ என்ற கருத்தில்,
முன்புள்ள பெரியோர்களுடைய திருவுள்ளத்தைப் பட்டர் அடி
ஒற்றினாராயினும், ‘இறைவன், ஒருவிதக் காரணமும் பற்றாத திருவருளால்
தம்முடைய எல்லா அவயவங்களிலும் சேர்ந்த சேர்க்கையை நினைத்து
இன்புறுகிறார்’ என்று பட்டர் அருளிச்செய்யும் அழகு அறிஞர் கண்டு
மகிழ்தற்குரியது. மேல் திருப்பதிகத்தில் பிறந்த ‘சர்வாங்க சம்ஸ்லேஷத்துக்கு
ஏதுவாக, இத்திருப்பதிகத்தில் ஏதாவது ஒன்றைக் கூறியது உண்டோ?’ என்று
ஆராய்ந்து பார்த்து, காணாமையாலே பட்டர் இங்ஙனம் அருளிச்செய்கிறார்.
2. ‘ஒன்றும் இன்று’ என்பது என்? பரமபதத்தில் கொண்டுபோய் அனுபவிக்கிறது
ஏற்றம் அன்றோ?’ என்ன, ‘அன்று’ என்கிறார் ‘இனி, இதனுடைய
பிரிவின்மையைச் செய்து கொடுக்கையே உள்ளது’ என்பதனாலே. ஆதலால்
பேறு கனத்திருந்தது என்று கூட்டுக.
3. ‘இப்பேற்றின் கனத்துக்கு ஈடாக இருப்பது ஒரு நன்மை தம்மிடத்தில்
இல்லாதிருந்தது’ என்ற வாக்கியத்தை, ‘அங்ஙனமிருந்தும், நித்தியசூரிகள்
பேற்றை, அநாதி காலம் உழன்று திரிந்த நமக்குத் தந்தான்’ என மேல்
வரும் வாக்கியத்தோடே கூட்டுக.
கீழில் சர்வாங்க சம்ச்லேஷம் அனுபவித்து -நிர்விருத்தர் ஆகிறார் -சந்தோஷம் படுகிறார்
முன்பு உள்ள முதலிகள் நிர்வகிக்கும் படி -பட்டர் தம் வைபவம் எல்லாம் காட்டும் திருவாய் மொழி –
நிர் கேதுகமாக தானே வந்து கலந்தானே என்ன ஆசார்யம் -சர்வாங்க சம்ச்லேஷம் நிதானம் சேர்த்து கொண்டாடுகிறார் -பட்டர்
உச்சி உள்ளே நிற்கும் என்றே கீழ் சொல்லிற்று -வேறே என்ன வேண்டும் -உள்ளே -வந்து விட்டு விடாமல்
நிரந்தர ஸ்தானம் – பேற்றில் இதற்க்கு அவ்வருகே ஏற்றம் கொடுக்க ஒன்றும் இல்லை
இதனுடைய அவிச்செதம் இடையூறு செய்யாமல் இருந்தால் போதும்
வெளியே போக சொல்லாமல் இருந்தாலே போதும் –
பேறு கனத்து இருக்கிறது இது வந்த வழி என்ன என்று ஆராய்ந்தார் –
பேற்றின் கணத்துக்கு ஈடாக நன்மை சாதனம் தம் தலையில் ஒன்றுமில்லையே
அத்வேஷம் ஆதல் ஆபிமுக்கியம் ஆதல் தான் உண்டு
துவேஷம் இன்றி -திரு முகம் திருப்பாமல் –அத்தை சாதனமாக சொல்லப் போறாதே –
உபாய லாகவம்-பல்குத்வம் -அல்பம்
உபேய கெளரவம்-பார்த்து
இத்தலையில் பரம பக்தி பர்யந்தம் ஏற்பட்டாலும் பேற்றின் கனத்துக்கு இதை சாதனம் ஆக்க முடியாது –
எலுமிச்சம் பிள்ளை கொடுத்து ராஜ்ஜியம் பெற்றால் அது விலை சாதனம் ஆகாதே
ராஜா உடைய ப்ரீதி தானே காரணம்
அது போல் அவன் கிருபை தான் காரணம் –
நிர் கேதுக கிருபை பிரபாவம்
இத்தலையால்- ஓர் அடி நிரூபிகலாய் இராதே அவன் -அடியாக வரும் பேற்றுக்கு
வரவாறு ஓன்று இல்லை வாழ்வு இனித்தால் -பெருய திரு வந்தாதி
சிருஷ்டிக்கும் பொழுது கரண களேபரங்கள் கொடுத்து
நல்ல வழியில் போக –தீய வழி தப்பி -உபகரணங்கள் –
இவன் தலையால் வரும் நன்மைக்கும் அடி அவன் தானே
புத்யாதி அனைத்தைக்கும் அவன் தானே நிர்வாகன் –
அத்வேஷம் தொடக்கமாக -பரி கணனை -மத்யம் எண்ணிலும் வரும் -பரம பக்தி முடிவாக –
காரணம் தானே -பிறப்பிப்பான் -அவன் தானே –
இழவுக்கு அடி கர்மம் -பேற்றுக்கு அடி கிருபை -ஸ்ரீ வசன பூஷணம்
பரதன் சரணா கதி 14 வருஷம் பின்பு பலித்தது
திரு உள்ளம் இன்றி போனால் தள்ளிப் போகும் –
திரு உள்ளம் தான் பேற்றுக்கு அடி –
இழவுக்கு அடி -இஷ்டம் இல்லை கர்மம் காரணத்தால்
விபரீத பிரவ்ருத்தன் சாஸ்திரம் -மீறி -பண்ணுவதற்கு வருத்தம் கூட தெரிவிக்காமல் -இருக்க
இழவுக்கு அடி கர்ம
நித்ய சூரிகள் பேற்றை -அநாதி காலம் சம்சாரித்து போந்த நமக்கு -எம்பெருமான் தந்தான்
விஷஈகாரம் இருந்த படி ஏன்
தலை மண்டை இட்டு உன்மச்தகமாக சம்ச்லேஷ ரசத்தை அனுபவித்த சந்தோஷம் –
இங்கு நிர் கேதுக கிருபை உடன் சேர்த்து மேலும் சந்தோஷம் அடைகிறார் –
பட்டர் நிர்வாகம் காரணத்துடன் மேலே சந்தோஷம்
திரள அர்த்தம் முதல் பாடு நிதான பாட்டு இந்த திருவாய் மொழிக்கு
பொருமா நீள்படை ஆழிசங் கத்தொடு
திருமா நீள்கழல் ஏழுல கும்தொழ
ஒருமா ணிக்குற ளாகி நிமிர்ந்தஅக்
கருமா ணிக்கம்என் கண்ணுள தாகுமே.
பொ-ரை : பகைவர்களோடு போர் செய்கின்ற பெருமை பொருந்திய நீண்ட ஆயுதங்களான சக்கரம் சங்கு என்னும் இவற்றோடு, செல்வத்தைத் தருகின்ற பூஜிக்கத் தக்க நீண்ட திருவடிகளை ஏழுலகத்துள்ளாரும் தொழுது வணங்கும்படி, ஒப்பற்ற பிரமசரிய நிலையையுடைய குட்டையனாகி, பின் வளர்ந்த அந்தக் கரிய மாணிக்கம் போன்ற இறைவன் என் கண்களில் இருக்கின்றவன் ஆனான்.
வி-கு : ‘ஆழி சங்கத்தோடு கழலைத்தொழ ஆகி நிமிர்ந்த அக்கரு மாணிக்கம்’ எனக் கூட்டுக. ‘நீள்படை, நீள்கழல்’ என்பன வினைத்தொகைகள். மாணி – பிரமசாரி. மாணிக்கம் என்பது சொல்லால் அஃறிணையாதலின், உளதாகும் என அஃறிணை முடிபு கொடுத்து ஓதினார். ‘என் கண்’ என்பதில், கண் என்பது பெயர்ச்சொல். ஏழாம் வேற்றுமை யுருபாகக் கொள்ளினும் அமையும்.
இத்திருவாய்மொழி, துள்ளல் ஓசையில் வழுவி, நாற்சீர் நாலடியான் வருதலின் கலி விருத்தம் எனப்பெறும்.
ஈடு : முதற்பாட்டு. இத்திருவாய்மொழியில் அருளிச்செய்கிற பொருள்களை எல்லாம் தொகுத்து அருளிச்செய்கிறார். இப்பாசுரத்தில், மகாபலி, தன் வரவை நினையாதே இருக்க, அவன் பக்கலிலே இரப்பாளனாய்ச் சென்று தன்னுடைமையைத் தனது ஆக்கியது போன்று, நான் நினைவு இன்றிக்கே இருக்கத் தானே வந்து தன் வடிவழகை என் கண்ணுக்கு இலக்கு ஆக்கினான் என்று அவன் தன்மையை நினைந்து இனியர் ஆகிறார்.
பொரு – இத்தால், திரு உலகு அளந்தருளுகிற போது, திவ்விய ஆயுதங்கள் நமுசி முதலாயினார்கள் மேலே பொருதபடியைச் சொல்லுகிறார். இனி, திவ்விய ஆயுதங்கள் தாம் ஒருவரை ஒருவர் ஐயங்கொண்டு பொருகிறபடியைச் சொல்லுகிறார் என்று கோடலுமாம். ஆயின், நமுசி முதலாயினார்களோடே பொரும் என்ற பொருள் பொருந்துவதாம்;1‘இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரிகான்று, அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி-விடங்காலும், தீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான், பூவார் அடிநிமிர்த்த போது’ என்றார் பூதத்தாழ்வாரும். திவ்விய ஆயுதங்கள் தம்மில் தாம் பொருதல்என்ற போது – 1அஸ்தான பயசங்கையாலே ஒருவரை ஒருவர் ஐயங்கொண்டு பொருகிறார்கள் என்றபடி. 2‘ஸ்ரீராகவனைச் சரணமாக அடைந்தேன்’ என்ற விபீஷணனை அன்றே ‘கொல்லுங்கள்’ என்றார்கள்? 3‘ஸ்ரீபரதனைக் கொல்லுவதில் பாவத்தை நான் பார்க்கின்றேன் இல்லை’ என்றார் இளைய பெருமாள். மா – அவற்றின் வடிவின் பெருமையைச் சொல்லுகிறது. அன்றி, அடியார்கள் திறத்தில் இறைவனைக்காட்டிலும் அவர்களுக்கு உண்டான பக்ஷபாதத்தைச் சொல்லுகிறது என்று கோடலுமாம். ஆக, இதனால், 4‘விஷ்ணுவை வழிபட்டு வணங்குகிற உயிர்களை, ஒன்றாலும் தடுக்கப்படாதவைகளான சக்கரம் முதலிய ஆயுதங்கள் எல்லா ஆபத்துகளினின்றும் காப்பாற்றுகின்றன’ என்கிறபடியே,5சர்வேஸ்வரன் எதிரியானாலும் அவன் கையிலே காட்டிக்கொடாமல் நோக்கும் பெருமையைச் சொல்லுகிறது.
நீள் படை ஆழி சங்கத்தோடு – நீள் படையான ஆழி சங்கத்தோடே கூட. ‘ஆயிரங்காதம் பறப்பதன் குட்டி ஐந்நூறு காதம் சிறகடிக்கொள்ளும்’ என்னுமாறு, படைகள் சர்வேஸ்வரன் அதிகரித்த காரியத்திலே அவன் தன்னிலும் முற்பட்டு இருப்பவை ஆதலின் ‘நீள்படை’ என்கிறார். திரு மா நீள் கழல் ஏழ் உலகும் தொழ – செல்வத்திற்கு அறிகுறியானவையும், சிரமேற்கொள்ளத் தக்கவையும், ஆசை சிறிது உடையார் இருந்த இடம் எல்லையாக வளர்வனவும் ஆன திருவடிகளை ஒரு சாதந அனுஷ்டானம் பண்ணாதாரும் தொழும்படியாக. 6‘நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ என்று ஆசைப்பட்டுக் கிடக்கும் திருவடியையன்றே ஆசைஇல்லாதார் தலைகளிலும் வைத்தான் என்பார், ‘ஏழ்உலகும் தொழ’ என்கிறார். ஒரு – இவன் தானே இவ்வடிவை இன்னம் ஒருகால் கொள்ள வேண்டும் என்னிலும் வாயாதபடி இரண்டாவது இல்லாத தாய் இருக்கை மாணி-திருமகள் கேள்வன் என்று தோன்றாதபடி இரப்பிலே தழும்பு ஏறுகை. குறளாகி-கோடியைக் காணியாக்கியது போன்று, பெரிய வடிவைக் கண்ணாலே முகக்கலாம்படி சுருக்கின படி. நிமிர்ந்த-அடியிலே நீர் வார்த்துக் கொடுத்தவாறே நிமிர்ந்த படி. வாசுதேவ தரு ஆதலின் ‘நிமிர்ந்த’ என்கிறார், நிமிர்ந்த அக்கருமாணிக்கம் – நெய்தற்காடு அலர்ந்தாற்போலே ஆகாயம் முழுதையும் தன் வடிவழகாலே பாரித்தபடி. மயர்வற மதிநலம் அருளப்பெற்ற தம்மாலும் அளவிட்டு அறிய முடியாது இருத்தலின்‘அக்கருமாணிக்கம்’ என்று சுட்டுகிறார். என்கண் உளதாகும்-ஏழ் உலகத்துள்ளார் வாசி அறிந்திலர்; அவ்வாசி அறியுமவராகையாலே ‘என் கண் உளதாகும்’ என்கிறார். கண் என்று இடமாம், என்னிடத்தாகும் என்னவுமாம். மாணிக்கம் என்கையாலே, ‘உளதாகும்’ என்கிறார்.
1. இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப-இடத்திருக்கையில் ஸ்ரீபாஞ்சஜன்யமானது
அப்போது அப்போது பிறந்த வெற்றியை நினைத்து ஆரவாரித்தது; எரி
கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி – அங்ஙனம் ஆர்ப்பதற்கு
அவசரமின்றிக்கே, திருவாழி, நெருப்பை உமிழ்ந்து பகைவர்களை ‘வாய், வாய்’
என்று ஒடுங்கப்பண்ணியது; விடங்காலுந் தீவாய் அரவணை-
திருவனந்தாழ்வான் பகைவர்கள் மேலே கிடந்த இடத்தே கிடந்து
நெருப்பை உமிழ்ந்தான்; அவன், ஆங்கு ஆரவாரமது கேட்டு அழலுமிழும்
பூங்கார் அரவணை’யாவன் அன்றே? அப்பரமபதத்திலும் இப்படிச்
செய்யுமவன், பகைவர்கள் நிறைந்திருக்கும் இத்தேசத்தில் இப்படிச்
செய்யச்சொல்ல வேண்டுமோ? ஆங்கு ஆரவாரமாவது, “அஹமந்நம்
அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாத: அஹமந்நாத: அஹமந்நாத:” என்னும்
ஆரவாரம். அஹமந்நம்-நான் பகவானுக்கு இனியன்; அஹமந்நாத: – நான்
பகவானாகிற இன்பத்தை அனுபவிக்கிறவன். (தைத்திரீய உபநிடதம், பிரு. 10.)
‘அங்கே அது கேட்டு அப்படிப் படுகின்றவர்கள் இத்தேசத்தில் இது
கண்டால் சொல்ல வேண்டுமோ?’ என்றபடி. ‘இவர்கள் இப்படி
அலமருகைக்கு அடி என்?’ என்னில், அரவணைமேல் தோன்றல்
திசையளப்பான் பூவார் அடி நிமிர்த்த போது-திருவனந்தாழ்வானைப்
படுக்கையாகவுடைய சர்வேஸ்வரன் காடும் ஓடையும் அளக்கைக்காகப்
புஷ்பஹாஸ சுகுமாரமான திருவடிகளை நிமிர்த்த போது, எல்லாம்
படவேண்டாவோ அவன் இப்படி வியாபாரியாநின்றால்?’
(இரண்டாந்திருவந். 71.)
நினைவு இன்றி இருக்க மகா பலி எதிர் பார்க்காமல்
வடிவு அழகை
தன் உடைமை தான் யாசித்து பெற்றான்
ஆழ்வார் ஓட -இசைவித்து தன் தாள் இணை கீழ் வைக்கும் அம்மான்
தானே வந்து வடிவு அழகை காட்டு இனியர் ஆகிறார் -தான் ஒரு நினைவு இன்றிக்கே இருக்க –
இனி நின்ற நீர்மை இனி உறாமை யாசித்தாரா -பிறர்தித்தாரா –
பேற்றின் கனத்தை பார்த்தால் இது எல்லாம் சாதனமே இல்லை
லாட்டரி சீட்டு வாங்கி -வாங்காதவனுக்கு கிடக்காதே -அது போல்
அத்வேஷம் ஆபி முக்கியம் பரம பக்தி வரை பேற்றுக்கு ஈடாகாது
அக்கரு மாணிக்கம்-வடிவு அழகை காட்டி –
பொரு மா -நீள் படை -திவ்ய ஆயுதங்கள்
எழ உலகம் தொழும் படி
ஒரு மாணி குறளாகி நிமிர்ந்த
ஆயுதங்கள் பொரு –
திரு உலகு அளந்த போது நமுசி போல்வார் இடம் பொருததை சொல்கிறது
முன்னைய வண்ணமே -மன்னு நமுசியை வானில் சுழற்றிய
ஒருவர ஒருவர் அதி சங்கை பண்ணி போருகின்றனவாம்
இடம் கை -வலம் புரி நின்று ஆர்ப்ப -நம் பிள்ளை வியாக்யானம்
தொனிக்க -எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி
விஷம் உமிழ்ந்து -தோன்றல்-அரவு ஆணை மேல்
திசை அளப்பான் பூவர் அடி நிமிர்த்த போது திசைகள் எல்லாம் அளப்ப போத
ஆங்கு ஆராவாரமது கேட்டு
நின்று ஆர்ப்ப அப்பொழுது அப்பொழுது
விஜயம்தோறும்
ஒவ் ஒரு உலகம் அளக்கும் பொழுது
நீள் படை போரும்
எரி கான்று -நெருப்பை உமிழ்ந்து விரோதிகளை வாய் வாய் என்று ஒடுங்க பண்ணிற்று
விடம் காலும் தீ வாய் அரவணை
கிடந்த இடத்தே கிடந்தது
ஸ்ரீராப்தி -இருந்த இடத்தில்
நெருப்பை உமிழ்ந்தான்
விரோதி பூயிஷ்டமான இத் தேசத்தில் -அவன் இப்படி செய்ய சொல்ல வேணுமோ
அங்கே உள் பட செய்வான்
ஆங்கு ஆராவரம் அது கேட்டு -சாம கானம் கோஷம்
அஹம் அன்னம் அஹம் அன்னம் –அஸ்தானே பய சங்கை -விரோதிகள் நுழையவே முடியாதே
ஞானம் சங்கோசம் ஏற்படாத இடம் பிரமை கூட வராதே -அங்கே சத்வமே -நிலவும்
விஷய வைலஷ்ணயம் அடியாக -வந்தது –
விடம் காலும்-தீவாய் அரவணை
ஆங்கு தேசம் அது ஆரவாரமும் அது -சாம கானம் வேதானாம் சாம வேதோ அஸ்மி –
சங்கை வர கூடாத இடம் -நித்ய முக்தர் கோஷம் இனிமை தான்
பரிவு பொங்குவதை காட்ட
அங்கே அது கேட்டு அப்படி படுகிறவர்கள்
இங்கே இது கண்டு இப்படி -பட சொல்ல வேணுமோ –
அலமருக்கைக்கு அடி என்
அரவணை மேல் தோன்றல் -மென்மை
காடும் ஓடையும் அளக்க புஷ்பகாச சுகுமார திருவடியைநிமிர்த்த போது எல்லாம் பட வேண்டாவோ
பூவார் அடி –
பொன் தகட்டில் மாணிக்கம் போல் அரவணையில் படிந்த கரு மாணிக்கம்
பொரும் மா நீள் படை –
தன்னில் தான் பொருது -அஸ்தானே பய சங்கையில் ஒருவர் ஒருவரை பொருது
இளைய பெருமாள் குக பெருமாள் குக பெருமாள் பரிகிரகம் -அதி சங்கை செய்தது போல் –
ஒரு நாள் முகத்தில் பட்டவரை வடிவு அழகு படுத்தும் பாடு -அங்கே
ராகவன் சரணம் கதா -வந்த விபீஷணன் வத்யதாம் கொல்ல தக்கவன்
பெருமாளுக்கு என்ன செய்வானோ பயம் -சுக்ரீவன்
பரதச்ய வதே தோஷம்- ந பஸ்யாமி -இளைய பெருமாள் பரதன் மேல் சங்கை -கைகேயியை நல்லவள் ஆக்கி விடுவான்
பயப்பட வேண்டாத இடத்தில் பயம்
மா –
அவற்றில் வடிவில் பெருமை
ஆஸ்ரித விஷயத்தில் அவனில் இவற்றுக்கு உள்ள பஷ பாதம் -குணங்களில் பெருமை
விஷ்ணுதர்மம் -க்ரிஷ்ணச்யபிரியாமல் ரஷ்யந்தி -சகல ஆபத்தில் இருந்தும் -விஷ்ணுவை உபதேசிதவனை
சர்வேஸ்வரன் எதிரி யானாலும் காக்கும் –
ஆகை இறே -மெல்ல மெல்ல பின் தொடர்ந்தது சென்றது –
சரணாகதி ஆவாரோ என்ற நப்பாசையால் காக்காசுரனை
துர்வாசர் -அம்பரீஷன் தீர்த்தம் சுவீகரித்து -சபிக்க -அம்பரீஷன் காலில் விழ
கழுத்தை அறுக்க போனாலும் –
பிராட்டி புருஷகாரம் வளையம்
எம்பெருமானே ஏவிய அஸ்தரமும் மெல்லே சரணாகதி ஆவாரோ என்கிற நப்பாசை
ஆகையிலே சரணாகதி செய்ய முடிந்தது பின்
பொரு மா நீள் படை
மகத்தை
நீள் படை -ஆயிரம் காதம் பறக்கும் கருடன் குட்டி பிறந்த உடனே ௫௦௦ காதம் பறக்கும்
அவனிலும் மூர் பட்டு இருக்கை
ஆயுதங்களும் அவன் கூட வளர்ந்ததே உலகு அளந்த பொழுது
ஒக்க வளரும் -ஆழி எழ சங்கும் வில்லும் எழ
உலகம் கொண்ட வாறே
அப்படி வளர்ந்த
கதா புனா ஆசை படும் திருவடி கொண்டு
துத்வத் சரணாம் புஜம் -ஆசை படைத்தார் அனைவர் தலையிலும் வைத்து
திரு -ஐஸ்வர்யா சூசகம்
சங்கு சக்கரம் பொறித்த
மா பரம பூஜ்யம் ஆனா திருவடி
நீள் கழல் ஆசா லேசம் உள்ளார் மேல் தீண்டும் திருவடி
திரு கமல பாதம் வந்து என் கண்ணுள்ளே ஒக்கின்றதே
என் அளவு வந்து
குண திசை பாதம் நீட்டி -என் அளவும் மண்டங்குடி வரை நீண்டது -கிழக்கே தான் திருவடி –
உத்தர சிரத்தர அடையவளஞ்சான் கொடஉண்டே
வர நீட்டிய திருவடி
ஏழு உலகும் தொழ சாதனா அனுஷ்டானம் பண்ணாதவரும் தொழும் படி
ஒரு ஒப்பற்ற -இந்த வடிவை இவனே கொளல முடியாத படி
மாணி குறள் வாமன பிரமச்சாரி
கொண்ட கோல குறள் உருவாய் முன்
ஸ்ரீய\ பதி மான் தொலை போத்தி கொண்டு -அவள் கடாஷம் விழாமல்
இறப்பிலே தழும்பு எறுகை
குறளாகி -கோடியை காணி ஆக்கினது போல் –
பெரிய வடிவை கண்ணாலே முகக்கும் படி சுருக்கி –
அடியிலே நீர் வார்த்த கொடுத்த வாறே நிமிர்ந்தான்
வாசு தேவ தரு இறே –
சம்சார நிழல் கொடுக்கும் மரம்
நெய்தல் கடு அலர்ந்தால் போல் ஆகாச அவகாசம் வரை வடிவு அழகு பரப்பின படி
அக்கரு மாணிக்கம்
அ- அந்த மயர்வற மதி நலம் அருளினவனாலும் பரிசெதிக்க ஒண்ணாத படி
என்கண் உளதாகுமே
என் கண் -என்னிடம் உளதாகும்
கரு மாணிக்கம் என்பதால் கண்ணில் கரு விழி
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.