எம்பி ரானைஎந் தைதந்தை தந்தைக்குந்
தம்பி ரானைத்தண் தாமரைக் கண்ணனைக்
கொம்பு அராவுநுண் நேரிடை மார்பனை
எம்பி ரானைத் தொழாய்மட நெஞ்சமே!
பொ-ரை : எனக்கு உபகாரத்தைச் செய்தவனை, என் குடிக்கெல்லாம் உபகாரத்தைச் செய்தவனை, குளிர்ந்த செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையவனை, பூங்கொம்பையும் பாம்பையும் போன்ற நுட்பமான மெல்லிய இடையையுடைய திருமகளைத் திருமார்பில் உடையவனை, எம்பிரானை, மடமையையுடைய மனமே! வணங்குவாய்.
வி-கு : ‘கொம்பராவு’ என்பது, உம்மைத்தொகை, ‘நேரிடை’ என்பது, அன்மொழித்தொகை. ‘மடம்’ என்பது, கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமை.
ஈடு : மூன்றாம் பாட்டு. 1‘இறைவன் சொரூபம் இருந்தபடி கண்டாயே! நீயும் 2உன் சொரூபத்துக்குச் சேர நிற்கப்பாராய்’ என்கிறார்.
எம்பிரானை-மேல் பாசுரத்திற்கூறிய அவன் நீர்மையை நினைத்து ‘என் நாயன் ஆனவனை’ என்கிறார், எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை – தம்மளவிலேயாய் 3அடியற்று இருக்கையன்றியே, தம் குடிக்கு நாயகன் ஆனவனை என்கிறார். இவர் இப்படித் துதித்தவாறே, 4பிரயோஜநாந்தரபரருடைய பாசுரத்துக்கும் 5அநந்யப் பிரயோஜனருடைய பாசுரத்துக்கும் வேற்றுமை அறியுமவன் ஆதலின், ‘இப்படித் துதிக்கிறவர் யாவர்?’ என்று குளிர நோக்கினான். ‘தண் தாமரைக் கண்ணனை’ என்கிறார். ‘ஆயின், 6‘என்னை வைக்கின்றவர்களையும், வெறுக்கின்றவர்களையும். கொடிய தன்மை
களை யுடையவர்களையும், தூய்மை அற்றவர்களையும், மனிதர்களுள் தாழ்ந்தவர்களையும் நான் சம்சாரத்தில் தள்ளுகிறேன்,’ என்னுமவன் இப்படிக் குளிர நோக்குகைக்குக் காரணம் என்?’ என்று பார்த்தார்; குளிர் நோக்கும்படி செய்கின்றவர் அருகே இருக்கக் கண்டார்; கொம்பு அராவு நுண் நேர் இடை மார்பனை – கொம்பு போலவும் பாம்புபோலவும் இருப்பதாய், அது தானும் நுண்ணியதாய் இருந்துள்ள இடையையுடைய பெரிய பிராட்டியாரைத் திருமார்பிலேயுடையவனை என்கிறார். அரவு என்பது அராவு என வந்தது, நீட்டல் விகாரம்; 1‘நச்சராவணை’ என்பது போன்று, இனி, கொம்பராவு இடை என்பதற்குக் ‘கொம்பை லகூகரியாநின்றுள்ள என்று பொருள் கூறலுமாம். எம்பிரானை – அச்சேர்த்திக்கு ஒருகால் ‘எம்பிரானை’ என்கிறார். தொழாய் – தொழப்படும் பொருள் – ஒரு மிதுனமாய் ஆயிற்று இருப்பது. மடநெஞ்சமே – ‘தொழுதுஎழு’ என்னலாம்படி பாங்கான நெஞ்சு ஆதலின் ‘மட நெஞ்சமே’ என்கிறார். மடம் – பவ்யம்; உரிமை.
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply