Archive for November, 2011

ஆச்சார்ய ஹிருதயம்- சூர்ணிகை -ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் -39/40/41/42/43/44/45/46/47/48/..

November 23, 2011

சூரணை-39-

இனிமேல் –சந்தங்கள் ஆயிரம்-திருவாய்-10-9-11- –என்று
திருவாய் மொழிக்கு சொன்ன வேதத்வத்தை சாதிக்கக் கோலி
பிரதமம் ஏவம் விதமாய் இருப்பதொரு வேதம் உண்டோ
என்கிற சங்கைக்கு பரிஹாரம் பண்ணுகிறார் மேல்-

எவ்வுலகத்து
எவ்வெவையும்
என்கையாலே
வேதம் பஹு விதம்-

அதாவது
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வவையும் -திருவாய்-3-1-6–என்கையாலே வேதம் ஆனது
அத்யேதாக்கள் உடைய பேதத்தாலும் ,லோக பேதத்தாலும்
பஹுவிதமாய் இருக்கும் என்கை ..
ஆகையால் அதிலே இதுவும் ஒரு விதம் என்ற கருத்து-

———————————————————–

சூரணை -40-

ஆனால் ஏக பாஷையாய் இருக்க வேண்டாவோ ?
சம்ஸ்க்ருதமும் த்ராவிடமுமாய் அன்யோன்யம் பேதித்து இரா நின்றதீ என்ன சொல்லுகிறது மேல்-

இதில் சமஸ்க்ருதம்
திராவிடம்
என்கிற பிரிவு
ருகாதி பேதம் போலே-

அதாவது
இப்படி பஹு விதமான இவ் வேதத்திலே சமஸ்க்ருத வேதம் திராவிட வேதம் என்கிற பிரிவு
சமஸ்க்ருதாம் சந்தன்னில் ருக் வேதம் ,யஜுர் வேதம்
சாம வேதம், அதர்வண வேதம் ,என்கிற பிரிவு போலே என்கை ….
இத்தால் வேத ராசி ஒன்றாய் இருக்க செய்தே ,சமஸ்க்ருத பாஷா ரூபம் ஆனவது தன்னிலே
ருகாதி ரூபேண பல படியாய் பிரிந்தால் போலே
பாஷா பேதேநவும் இப்படி பிரிந்து இருக்கும் என்ற படி-
(ஆதித்யருக்குள் அஹம் விஷ்ணு -ஏகாதச ருத்ரனுக்குள் சங்கரன் -அந்த கோஷ்ட்டிக்குள் –
நக்ஷத்திரங்களில் அஹம் – சந்திரன் -இல்லாத போதும் என்பதுக்கு த்ருஷ்டாந்தம் )

———————————————————–

சூரணை -41-

அப்படி சொல்லலாமோ ? சமஸ்க்ருத பாஷை போலே திராவிட பாஷை
அநாதி அன்றே –ஆகஸ்த்யம் அன்றோ இது ?என்ன சொல்லுகிறது மேல்-

செந்திறத்த தமிழ்
என்கையாலே
ஆகஸ்யமும்
அநாதி-

அதாவது
செம் திறத்த தமிழ் ஓசை வட சொல் ஆகி-திரு நெடும் தாண்டகம் -4- – -என்று
(ஓசை -சொல் என்ற அர்த்தத்தில் இங்கு -ஸ்தான பிரமாணத்தாலே)
சமஸ்க்ருததோடே சஹபடிதமும் , ப்ரதமோக்தமும் ஆகையாலே
அகஸ்த்ய பிரகாசிதமான மாத்ரம் கொண்டு ஆகஸ்த்யம் என்று சொல்லப் படுகிற
திராவிடமும் அநாதியாய் உள்ளது என்கை .
இத்தால் அநாதித்வம் சமஸ்க்ருத திராவிட சாதாரணம் என்றது ஆய்த்து-

————————————————————

சூரணை -42-

ஆனால் அந்த பாஷை அநாதி ஆகிறது ..
திருவாய் மொழிக்கு வேதத்வ பிரகாசமான
வசனம் உண்டோ என்ன சொல்லுகிறது மேலே-

வட மொழி மறை என்றது
தென் மொழி மறையை
நினைத்து இறே-
(பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை என்றதால் நல்ல அரக்கன் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இருப்பதால் தானே
இன சுட்டு அடை மொழி )

அதாவது
மறை-என்று கேவல வேத வாசி சப்தத்தாலே
சொல்ல அமைந்து இருக்க -வட மொழி மறை -திருவாய் -8-9-8–என்று
சமஸ்க்ருத வேதம் என்றது -திராவிட வேதம் உண்டு என்று நினைத்திறே என்கை
பிரதி கோடி இல்லாத போது இப்படி விசேஷிக்க வேண்டியது இல்லை இறே என்று கருத்து

-————————————————————————————

சூரணை-43-

ஆனால் அந்த வேதத்துக்கு அங்க உபாங்கங்கள் உண்டானவோ பாதி
இதுக்கும் அவை உண்டோ என்ன சொல்லுகிறது மேல்-

வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் )
அங்க உபாங்கங்கள் போலே
இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன் மாலைகளும்-
(இருமை -பெருமை -)

அதாவது
ருகாதி வேத சதுஷ்டயத்துக்கும்
சீஷா வியாகரண நிருக்த சந்த கல்ப ஜோதிஷங்கள் ஆகிற ஆறு அங்கங்களும்
மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்த்ராத் உப அங்கங்கள் எட்டுமாய் இருந்துள்ள பதினாலும் போலே-
(ஆதி -ஆயுர்வேதம் காந்தர்வ வேதம் அர்த்த வேதம் தனுர் வேதம் )

இந்த திராவிட வேத சதுஷ்டயதுக்கும்
இரும் தமிழ் நூல் புலவன் நங்கை யாளன்–பெரிய திருமொழி -1-7-10- -என்று
ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற திராவிட வேத சாஸ்த்ரத்தை
கரை கண்ட ஞான ஆதிக்கத்தை உடையரான திரு மங்கை ஆழ்வார் உடைய
கலியன் வாயொலி செய்த பனுவல் -பெரிய திருமொழி -1-4-10–என்று சாஸ்திர ரூபங்களான பிரபந்தங்கள் ஆறும்-
மற்றை ஆழ்வார்கள் எண்மர் உடையவும் விலஷணமான பிர பந்தங்களும் என்கை ..

நன் மாலைகள் என்றது -நய நின்ற நன் மாலை -முதல் திருவந்தாதி -57–என்று
முதல் ஆழ்வார் பிரபந்தத்தில் அருளிச் செய்தது எல்லா பிரபந்ததுக்கும் ஒக்கும் என்று நினைத்து ..

1-பொய் நின்ற ஞானமும் -திருவிருத்தம் -1––இத்யாதியாலே ஸ்வரூப விரோதியாய்
வந்தேறி யான தோஷங்களை முதல் அடியிலே பேசினால் போலே
பிரதமத்திலே -வாடினேன் வாடி-பெரிய திருமொழி -1-1-1- -இத்யாதியாலே ஸ்வ ரூபத்துக்கு
வந்தேறியான தோஷங்களை கண்டு நொந்து பேசுகையும்
2-பகவத் ப்ராவண்ய ப்ராசுர்யமும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் –எத்திறம் –ப்ராவண்ய ப்ராஸூர்யம் – /
உருகுமால் நெஞ்சம் கார் ஒக்கும் காட்கரை அப்பன் /முலையோ முழு முற்றும் போந்தில -பால்யாத் ப்ராவண்யம் /
கணபுரம் கை தொழும் பிள்ளையை -பிறர் சொல்ல கேட்டு கை தொழும் இவள் /
அருவி சோர் வேங்கடம் நீர் மலை உருகினாள் உள் மெலிந்தாள்
3-அதில் அர்ச்சாவதாரத்தில் ஊற்றமும்
செய்ய பரத்துவுமாய் –எய்துபவர்க்கு அர்ச்சாவதார எளிது -அவனாகும் நீள் கடல் வண்ணனே –
அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ-ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –
விபவம் பாடப்பிறந்தவர் அர்ச்சையை பாடுவது ஏற்றம் /
காரார் திருவேங்கடம் காணும் அளவும் போய்–ஆராமம் சூழ் / மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே/
ஏரார் முயல் வீட்டுக் காக்கை பின் போவதே
4-கலவியும் பிரிவும் மாறி மாறி வருகையும்
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான் -ஆடி ஆடி அகம் கரைந்து –வாடி வாடி இவ்வாணுதலே /
கோவை வாயாள் பொருட்டு–பூசும் சாந்து என் நெஞ்சமே -ஹர்ஷம் மிக்கு -மண்ணை இருந்து துழாவி —
ஏறிய பித்தினோடு -மாயன் திறத்தனள் இத்திரு தேறியும் தேறாமல் /
யானும் ஏத்தி –ஏத்த ஏத்த எங்கு எய்தும் /ஒரு நாள் காண வாராயே–வருத்தம் -8-5-/
எல்லியும் காலையும் திருக்கடித்தானாம் தாயப்பத்தி விட்டு -ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்காமல் சன்னிஹிதன் /
மைந்தனும் வந்திலன் என் செய்கேன் -திருக்கண்ணபுர பாசுரம் -வருத்தம் சொல்லி ஆழ்வார் /8-5-/
வருந்தாது இரு மட நெஞ்சே ஆறாம் பத்தில் நம் மேல் வினைகள் வாரா -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூ ச –
நேரான மொழி பெயர்ப்பு-சோகப்படாதே முதலில் சொல்லி –
5–அந்ய உபதேச பேச்சும்–ஆறு கிண்ணகம்-தாய் மகள் தோழி
6-அது தன்னில் ராத்ரி வ்யசனமும்-மடல் எடுக்க ஒட்டாமல் -ஊரெல்லாம் துஞ்சி /
பெண் பிறந்தார் பெரும் துயர் காண மாட்டாமல் -கண்ணனும் வாரானால் -காகுத்தனும் வாரானால் -காப்பார் யார் /
நங்கள் அடிகள்-தோழியும் நானும் ஒழிய -வியக்தமாக தோழி பாசுரம் இல்லை ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செயலில் /
கோழியும் கூவுகின்றதில்லையே -கூர் இருள் ஆயிற்றே
7-தூத ப்ரேஷணமும்
நான்கு தூது பதிகம் -அவ்வளவு தெம்பு இல்லையே ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு -நான்கு பாசுரங்களுக்கு பின்பே நேராக
ஓ மண் அளந்த தாடாளா -வரை எடுத்த தோளாளா –தண் குடந்தை நகராளா–மலையாள ஊட்டு இல்லையே
8-அநுகாரம்
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -பதிகம் -ஜெகதாகாரம் /
வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இட வகை கொள்வது யான் என்று பேசினாள்
9–மடல் எடுக்கை-மாசறு சோதி பதிகம் –/ஸ்ரீ சிறிய திருமடல் ஸ்ரீ பெரிய திரு மடல் -ஸ்ரீ திரு நறையூர் நம்பி மேல் –
10/11/12-தோழி தாய் மகள் என்னும் அவஸ்தை த்ர்யாபத்திகளும்-சாழல் பதிகம் அவ்யக்தம் தோழி பதிகம்
இவள் திறத்து இருவரும் –2-7-/-7-2-திருத்தாயார் பதிகங்கள் /
திண்ணம் என் இள மான் புகுமூர் திருக்கோளூரே-உண்ணும் சோறு / கள்வன் கொல்-அவனூர் வினவி சென்றாள்/
கரியான் ஒரு காளை வந்து–அணி யாலி புகுவார் கொலோ -கள்வன் கொல் பிராட்டி திருக்கோலம் இன்றும் சேவை உண்டே /
பொன்னிவர் மேனி -நாள் வேதம் ஓதும் -அவர் நாகரீகர் செல்வர் பெரியர்-என்னையும் நோக்கி
அன்னையும் நோக்கும் என்று அஞ்சுகிறேன் –அச்சோ ஒருவர் அழகியவா -ஸுந்தர்யம் இங்கு /
எங்கனே நீ லாவண்யம் அங்கு/இரண்டும் மகள் பாசுரங்கள்
13-இந்திரிய பய குரோசம் -ஐவர் திசை திசை எற்றி-
14-ஈஸ்வர ஸ்வாதந்த்ர்ய பயம் ,
அரவணை மேல் பள்ளி கொள்ளும் முகில் வண்ணனே அறையோ முறையோ ஸ்ரீ திருவிருத்தம் —
தடுப்பார் இல்லாத நிரங்குச ஸ்வாதந்தர்யம் /
தெள்ளியீர்-கை வளை கொள்வது தக்கதோ -ஸ்ரீ நீல மேக பெருமாள் -நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள்
15-அசக்ருத் பிரபத்தி கரணம்-ஐந்து தடவை-நோற்ற நாலும்/ உலகுண்ட பெரு வாயா ஸ்ரீ நம்மாழ்வார் / பத்து தடவை இவர்
ஸ்ரீ நைமிசாரண்யம் -ஸ்ரீ திருவேங்கடமுடையான் -ஸ்ரீ அண்ணன் கோயில் -ஸ்ரீ திருவரங்கம் -ஸ்ரீ திரு விண்ணகர்
திரு நறையூர் இடர் கெடுத்த திருவாளர் –6-9-பாட்டு தோறும் திருப்பாத பிரஸ்தாபம் இங்கும் உலகுண்ட பெரு வாயா போலே
தேரெழுந்தூர் /திருக்குறுங்குடி மகள் பாவனையில் -9-5-/ 5-9 மானே நோக்கு அங்கு நாயகா பாவம் /
16-ஆர்த்தியின் உடைய கரை புரட்சிகளும்
மாலுக்கு ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம் படி அங்கு -ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சி இவர் –
17-பர துக்க அசஹிஷ்ணுதையாலே பல காலும் ஹிதம் சொல்லுகையும்–தொடக்கமான கட்டளையாலே
மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிர பந்தங்களைக் காட்டிலும் ,இப் பிரபந்த சதுஷ்டியார்த்த ஜ்ஞாபகமாய் இருக்கையாலே
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் பிரபந்தங்களையே இதுக்கு அங்கங்கள் என்கிறது ..

மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிரபந்தங்கங்களும் எதார்த்த அனுசாரிகளாய் , இதில்
அர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பு ஆகையாலே .இதுக்கு உப அங்கங்கள் என்கிறது ..

ஆக –சீஷாயாம் வர்ண சிஷா பத சமதிகமோ வ்யாக்ரியா நிர்வசோப்யாம் சந்தஸ்
சந்தச் சிதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யோதிஷம் ரெங்கநாத ,கல்ப அனுஷ்டான
முக்தம் ஹ்யுசித கமிதயோர் நியாய மீமாம்ச யோஸ் ஸ்யாத் அர்த்த வ்யக்தி
புராண ஸ்ம்ருதிஷூ ததனுகாஸ் த்வாம் விசின் வந்தி வேதா -ஸ்ரீ ரெங்கராஜ உத்தர ஸ்தவம்-18- –என்கிற படியே
அவை அந்த வேத சதுஷ்டயத்துக்கும் உபகார அங்கங்களாய் இருக்குமா போலே
இவையும் கீழ் சொன்ன படியே இத வேத சதுஷ்டயத்துக்கும் உப அங்கங்களாய் இருக்கும் என்றது ஆய்த்து —

————————————————————————-

சூரணை -44 –

வித்யாந்தரங்களில் வேதத்துக்கு உண்டான
ஆதிக்யம் இதுக்கும் உண்டோ என்ன சொல்லுகிறது மேல் ..

சகல வித்யாதிக
வேதம் போலே
இதுவும்
திவ்ய பிரபந்த
பிரதானம்-

அதாவது
அங்கானி வேதாஸ் சத்வாரோ மீமாம்ச நியாய விஸ்தர புராணம் தர்ம சாஸ்த்ரஞ்ச வித்யா ஹ்யேதாச் சதுர்தச —என்று
சக படிதமாய் இருக்க செய்தே ,ஸ்வ அங்கோ உபாங்களான சகல வித்யைகளிலும் ,ஸ்வ வைபவத்தால் மேலாய் இருக்கும்
வேதம் போலே
ஸ்ரீ திவ்ய பிரபந்தங்களிலும் சகபடிதமாய் இருக்க செய்தே
ஸ்வ அங்க உபாங்களான சகல ஸ்ரீ திவ்ய பிரபந்தகளிலும் ஸ்வ வைபவத்தாலே இதுவும் மேலாய் இருக்கும் என்கை-

—————————————————————-

சூரணை -45-

ஆனால் அந்த வைபவத்துக்கு உடலான
சாஸ்த்ரத்வ பாகவத ஜ்ஞாரூபவத்வ நிர்தோஷத்வ ஸ்ருதித்வ சத்யத்வ அநாதி நித்யத்வங்கள்
இதுக்கும் உண்டோ என்ன சொல்லுகிறது மேல்-

வேத நூல் இரும் தமிழ் நூல்
ஆக்ஜை ஆணை
வசையில் ஏதமில்
சுருதி செவிக்கு இனிய
ஓதுகின்றது உண்மை பொய்யில் பாடல்
பண்டை நிற்கும் முந்தை
அழிவில்லா
என்னும்
லஷணங்கள் ஒக்கும்-

அதாவது
வேத நூல் பிராயம் நூறு – திருமாலை -3- என்ற அத்தை வேத சாஸ்திரம் என்றால் போலே
இத்தையும் -இரும் தமிழ் நூல் புலவன்-பெரிய திருமொழி -1-7-10–என்று பெரிய திராவிட சாஸ்திரம் என்கையாலும்
அத்தை — ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை ஆக்ஜை -பாஞ்சராத்ரம் –என்று பகவத் ஆக்ஜை ரூபமாக சொன்னால் போலே
இத்தை -ஆணை ஆயிரம் -திருவாய்-6-3-11–என்று தத் ஆக்ஜா ரூபமாக சொல்லுகையாலும் ,
அத்தை -வசையில் நான் மறை –பெரிய திருமொழி-5-3-2- என்று விப்ரலம்பாதி தோஷ ரகிதம் என்றால் போலே ,
இத்தையும் -ஏதமில் ஆயிரம்-திருவாய்-1-6-11- -என்று நிர்தோஷமாக சொல்லுகையாலும் ,
அத்தை-சுடர் மிகு சுருதி-திருவாய்-1-1-7- -என்று ஸ்ரூயதே இதி ஸ்ருதி -என்கிறபடியே
பூர்வ பூர்வோச்சாரண கிரமத்திலே சரவண இந்திரியத்தாலே கிரகிக்க படுமதாய் சொன்னால் போலே ,
இத்தையும் -கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -திருவாய்-10-6-11 -என்று ஸ்ராவ்யமாய் சொல்லுகையாலும் ,
அத்தை -வேத நூல் ஓதுகின்றது உண்மை-திருச்சந்த -72- -என்று சொல்லும் அதில் ஒரு பொய் இல்லை என்றால் போலே ,
இத்தையும் -பொய்யில் பாடல்-திருவாய்-4-3-11–என்று அசத்திய கந்த ரகிதம் இல்லை என்கையாலும்,
அத்தை பண்டை நான்மறை -பெரிய திருமொழி-5-7-1–என்று அநாதியாகவும்
நிற்கும் நான்மறை-திருவாய்-6-5-4- -என்று -அநதினத்தவம்-அழிவில்லாததாகவும்
சொன்னால் போலே
இத்தையும் முந்தை ஆயிரம் -திருவாய்-6-5-11-
அழிவில்லா ஆயிரம் -திருவாய்-9-7-11-என்று
அநாதியாய் அழிவற்று இருக்குமதாய் சொல்லுகையாலும்
இந்த லஷணங்கள் எல்லாம் இரண்டுக்கும் ஒக்கும் என்கை-

——————————————————————–

சூரணை -46-

அந்த வேதம் போலே இதுவும் அஸ்ம்ருத கர்த்ருகமாய் இருக்க வேண்டாவோ ?
ஸ்ரீ ஆழ்வார் இதுக்கு கர்த்தா என்கையாலே ,நித்யத்வ அபௌருஷேயத்வங்கள்
கூடாதீ என்ன சொல்லுகிறது மேல்-

சொல்லப் பட்ட என்ற இதில்
கர்த்ருத்வம்
ஸ்ம்ருதி
அத்தை ஸ்வயம்பூ
படைத்தான் என்றது போலே-

அதாவது
சடகோபன் சொல்லப் பட்ட ஆயிரம்–திருவாய்-8-10-11–என்று இதில்
ஸ்ரீ ஆழ்வாருக்கு சொன்ன கர்த்ருத்வம்
அநாதி நிதனா ஹ்யேஷா வாகுத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா -என்று-(அநாதி அநிதன -பண்டை நின்ற வேதத்தை )
ஸ்ம்ருதி அந்த வேதத்தை-( ஜகத்தை-) பிரம்மா சிருஷ்டித்தான் என்று சொன்னாவோ பாதி என்கை-
ஸ்வயம்பு சிருஷ்டித்தான் என்னாதே–படைத்தான்-என்றது
முன்னம் திசை முகனை தான் படைக்க மற்றவனும்
முன்னம் படைத்தனன் நான் மறைகள்-பெரிய திருமடல்-10 -என்று ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும் தர்சிப்பைக்காக ..
அநாதி நிதானமான சந்தர்ப்பம் பிரம்மாவின் வாக்கில் நின்றும் ஆவிர்பவித்த
மாத்ரம் கொண்டு ,பிரம்மாவுக்கு அதில் சொன்ன கர்த்ருத்வ உபாதி இதிலும்
ஸ்ரீ ஆழ்வாருக்கு சொன்ன கர்த்ருத்வம் ஆகையால் இத்தால் ,இதன்
நித்யத்வ அபௌருஷேயத்வ ஹானி வாராது என்று கருத்து-

———————————————————–

சூரணை -47-

பூர்வ சந்தர்ப்ப பிரக்ரியை இவர் தர்சிப்பித்து பேசினதே
உள்ளது என்னும் இடத்தை அறிவிக்கிறார் மேல்-

நால் வேதம் கண்ட
புராண ரிஷி
மந்த்ர தர்சிகளை போலே
இவரையும்
ரிஷி
முனி
கவி
என்னும்-

அதாவது
நால் வேதம் கண்ட புராண ரிஷி–நால் வேதம் கண்டானே -பெரிய திருமொழி-8-10-1–என்னும் படி
ஈஸ்வரன் தான் அடியிலே செய்தால் போல் நாலு வேதங்களையும் சாஷாத் கரித்து
அஷ்டா தச புராணம் கர்த்தா சத்யவதீ ஸுத-என்கிற படி
அஷ்டாதச புராணங்கள் உடைய ஆநு பூர்வியையும்
தர்சித்துச் சொன்ன வேத வியாச பகவானை சொல்லுகிறது
நால் வேதம் கண்டான் -என்கிற இடத்தில் ஸ்வேன ரூபேண நின்று
தர்சித்தமை அன்றிக்கே வியாச ரூபேண நின்று தர்சித்தமை தன்னை
சொல்லுகின்றது இவருக்கு கருத்தாகவுமாம் ..

சங்கீர்ண புத்தயோ தேவா பிரம ருத்ர புரஸ்ஸர சரண்யம் சரணம்
ஜக்மு நாராயண மநாமயம்..தைர் விக்ஜ்ஞாபித்த கார்யஸ்து பகவான்
புருஷோத்தம அவதீர்னோ மகா யோகி சத்யவத்யாம் பராசராத் என்றும்
கிருஷ்ண த்வைபாயனம் வியாசம் வித்தி நாராயண பிரபும் -என்றும்
பகவத் ஏவச அவதாரயா பகவான் தானாக சொல்லக் கடவதிறே..

இப்படி இருந்துள்ள ஸ்ரீ வேத வியாச பகவானை வேதங்களின் பூர்வ
சித்த அனுபூர்வியை தர்சித்து சொன்ன படியாலே
தர்சநாத் ருஷி மனந சீலோ முனி கவி கிராந்த தர்சீ-என்கிற வர்தங்களை நினைத்துக் கொண்டு
ஸ்ரூயதாம் சிம்ஹனா தோயம் ருஷேச்தச்ய மகாத்மனா
தர்மேச அர்த்தேச கர்மே ச மோஷே ச பரதர்ஷப -என்றும்
ஏவம் விதம் பாரதம் து ப்ரோக்தம் ஏன மகாத்மனா
சோயம் நாராயணஸ் சாஷாத் வியாச ரூபீ மகா முனி –என்றும்
சஷால் லோகான் பாவ்யமான கவி முக்ய பராசர்ய-என்றும்
ருஷி முனி கவி என்றும் சொல்லிற்று இறே

மந்த்ர தர்சிகள் ஆனவர்களை பூர்வ ஸித்த சந்தர்ப்பத்தை
சாஷாத் கரித்து சொன்னவர்கள் என்னும் இடம் தோற்ற
நம ருஷிப்யோ மந்த்ர க்ருத்ப்ய -என்றும்
பகவான் சௌனக முனி -என்றும்
இத்யாதிகளாலே ருஷி முனி என்று சொல்லிற்று இறே .
இவர்கள் விஷயத்திலும்
கவி சப்த பிரயோகம் உண்டாகில் வந்த ஸ்தலங்களிலே கண்டு கொள்வது ..

ஆக இப்படி இவர்களை சொன்னால் போலே த்ராவிடமான இதின் பூர்வ ஸித்த
அனுபூர்வியை சாஷாத் கரித்து பேசின இவ் ஆழ்வாரையும் –
ருஷிம் சுஷாமஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோதிதம்
சகஸ்ர சாகாம் யோத்ரா ஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம் –என்றும்
சடகோபம் முனிம் வந்தே சடானாம் புத்தி தூஷகம் , அஞ்ஞானம் ஜ்ஞான ஜனகம்
திந்திரிணீ மூல சம்ஸ்ரயம் -என்றும்
உலகம் படைத்தான் கவி யாயினேற்கு -திருவாய்-3-9-10–என்றும்
முன்பு உண்டான சந்தர்ப்பத்தை தர்சிப்பித்து பேசினவர் என்னும் இடம் தோற்ற
ருஷி என்றும் ,முனி என்றும் ,கவி என்றும் சொல்லும் என்கை ..

———————————————————–

சூரணை -48-

இன்னமும் இதன் உடைய அநாதித்வ ஸூசுகமானது ஒன்றை
தர்சிப்பிக்கிறார் மேலே-

படைத்தான் கவி
என்ற போதே
இதுவும்
யதா பூர்வ
கல்பனம் ஆமே-

அதாவது உலகம் படைத்தான் கவி -என்கையாலே
ஒன்றில் ஒன்றி உலகம் படைத்தான் -என்கிற படியே
ஒருப் பட்டு மேன்மேலும் லோக சிருஷ்டியை பண்ணும் இடத்தில்
சூர்யா சந்திர மசவ் ததா எத பூர்வ மகல்பயத்––தைத்ரியம்-என்கிற படியே
ஸ்ருஷ்ட்டி தோறும் சந்திர சூர்யாதி சகல பதார்த்தங்களையும்
யதா பூர்வ கல்பனமாய் வருமா போலே திராவிட வேதமான
இப் பிரபந்தமும் ஸ்ருஷ்ட்டி தோறும் யதா பூர்வ
கல்பனமாய் வரும் என்று தோன்றும் இறே என்கை ..

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் – சூர்ணிகை -31/32/33/34/35/36/37/38..

November 23, 2011

சூரணை-31

இவ் அசாதாரண சேவையிலே அதிகரித்தாருக்கு
சாதாரணமான வதில் அந்யவம் தன்னடையே கழியும்படியை
ச த்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார்-

ஜாதி ஆஸ்ரம தீஷைகளில்
பேதிக்கும் தர்மங்கள் போலே
அத்தாணி சேவகத்தில் பொதுவானது நழுவும்-

(அசாதரண கைங்கர்யத்தில் இழியவே சாதாரணமான கர்மம் தன்னடையே கழியும் –
ஸ்ரீ லஷ்மணன் ஸ்ரீ ராம கைங்கர்யத்தில் இழியவே ஊர்மிளை உடன் கூடின தர்ம அனுஷ்டானம்
தன்னடையே கழிந்ததே -நற்செல்வன் தங்காய்
ஸ்ரீ ஆச்சார்ய கைங்கர்யத்தில் இழியவே பகவத் கைங்கர்யம் நழுவும் –
ஸ்ரீ வடுக நம்பி பால் காய்ச்சி ஸ்ரீ நம் பெருமாள் சேவை விட்டாரே )

அதாவது
ஸ்வ கர்ம ப்ராஹ்மணஸ்ய -அத்யயனம் ,அத்யாபனம் ,யஜனம் யாஜனம் ,தானம் ப்ரதிக்ரஹணம்,
தாயாத்யம், சிலோஞ்ச்ச ,அந்யச்ச, அபரிக்ருஹீதம் ,
ஏதான் ஏவ ஷத்ரியஸ்ய அத்யாபன யாஜன பிரதிக்ரஹணாதி ,பரிஹார்யாணி ,தண்ட யுத்த தாதிகார ,
ஷத்ரியவத் வைச்யஸ்ய தண்ட யுத்த வர்ஜம் க்ருஷி கோரஷண வாணிஜ் யாதிகம் க்ராஹ்யம்–ஆபஸ்தம்ப ஸூத்ரம் -என்கையாலே
அத்யயன அத்யாபன யஜன யாஜன தான பிரதிஹ்ருக -ரூப ஷட் கர்மமும் பிராமணனுக்கு கர்தவ்யமாய்
ஷத்ரிய வைஸ்யர்களுக்கும் அத்யாபனாதி த்ரயம் ஒழிய அத்யயனாதி த்ரயமே கர்தவ்யமாய் ,
அவர்கள் தங்கள் உள்ளும் தண்ட யுத்தங்கள் ஷத்ரியனுக்கே அசாதாரணமாய் ,
க்ருஷி கோ ரக்ஷண வாணிஜ்யங்கள் வைஸ்யனுக்கு அசாதாரணமாய் ,
சுஸ்ருஷா சூத்ரச்ய இதரேஷாம் வர்ணானாம்-என்கையாலே
சூத்ரனுக்கு திரை வர்ணிக ஸூஸ்ருஷையே தர்மமே ,
இப்படி தத் ஜாத்ய அனுகுணமாக ஒருவனுக்கு உபாதேயம் ஆனது
ஒருவனுக்கு த்யாஜ்யமாக கொண்டு தர்மங்கள் பேதித்து இருக்கும் இறே-

பிரமச்சாரியான தசையில் உபாதேயமான பிஷா சரண சமிதா தரணாதிகள்
க்ருகஸ்தனான தசையில் த்யாஜ்யங்களாய் அக்னி கோத்ர அதிதி சத்காராதிகள் உபாதேயம் ஆகையாலும்
வனஸ்தனான தசையில் – -சந்த்யஜ்ய க்ராம்யமாகாரம் சர்வஞ்சைவ பாரிசாதம்-என்கையாலே
பூர்வ ஆஸ்ரமத்தில் உபாதேயமான க்ராம்யாகார பரிச்சதாதிகள் த்யாஜமாய் –
வசீத சர்வ சீரம் வா -என்று தொடங்கி சொல்லப் பட்ட சரம சீர வசனத்வ ஜடிலத்வ
மச்முருச்லோம நகதாரண வன்ய ஆகாரங்கள் உபாதேயம் ஆகையாலும்
சந்யாசியான தசையில் பூர்வ ஆஸ்ரம உபாதேயமான அக்நிஹோத்ர அதிதி சத்காராதிகளும் ஜடிலத்வாதிகளும் த்யாஜ்யமாய்
அநக்நிஸ் அநிகேதஸ் ஸ்யாத் -மனு ஸ்ம்ருதி -இத்யாதிப் படியே அனக்நித்வ அநிகேதத்வ
அசஹாயத்வாதிகளும் உபாதேயம் ஆகையாலும் ஆஸ்ரய தர்மம் பேதியா நின்றது இறே .-

ஜியோஷிடோமாதிகளில் தீஷித்தவனுக்கு வர்ணத்ரைய ஆஸ்ரம சச்துஷ்டைய சாதாரணமாய்
அகரேண பிரத்யவா எதாய அவஸ்ய கர்தவ்யமாய் போரும் நித்ய கர்மம் அநனுஷ்டேயமாய்
ஜியோதிஷ்டோமாதி தர்மமே அனுஷ்டேயம் ஆகையாலே
தீஷியிலே தர்மம் பேதித்து இருக்கும் இறே

ஆக இப்படி பிராமணாதி ஜாதிகளிலும்
பிராமசார்யாதி ஆஸ்ரமங்களிலும்
ஜியோதிஷ்டோமாதி தர்மாந்தர தீஷைகளிலும்
பேதிக்கும் தர்மங்கள் போலே
அசாதாரண விக்ரக சஹிதேஸ்வர விஷயம் ஆகையாலே
அசாதாரணமாய் ,அத ஏவ -அத்தாணி சேவகம் -திருப்பல்லாண்டு -8- -என்று
அந்தரங்க சேவை யாகிற கைங்கர்யத்திலே அதிகரித்தவர்களுக்கு
தேவதாந்த்ரி விஷயமாய் தத் சரீர பூத தேவதாத்வார தத் ஆராதனம் ஆகையாலே சாதாரணமாய் இருந்து உள்ள
கர்மம் உறங்குவான் கை பிண்டம் போலே தன்னடைவே நழுவும் என்கை –

இத்தால்
வர்ணாஸ்ரம நிஷ்டர்க்கு தத் அதிகார அநுரூப தர்மம் ஒழிய
அநுகுணமானது த்யாஜ்யதையா கழிக்கப் படுமா போலே
ஸ்வரூப யாதாம்ய தர்சிகள் ஆனவர்களுக்கு தத் அநுரூப
தர்மம் ஒழிய அனனுரூபமானது த்யாஜ்யமாய் தன்னடையே விட்டுக் கழியும் என்றது ஆயிற்று-

இப்படி இருக்கச் செய்தே ,சிஷ்டர்கள் அனுஷ்டித்து போருகிறது –
ஸ்வ அனுஷ்டத்தை-அநநுஷ்டானத்தை – பின் சென்று லோகம் நசிக்க ஒண்ணாது என்று
ஆந்ரு சம்சயத்தாலே இறே
யதி ஹ்யஹம் ந வர்த்தேயம் ஜாது கரமண்ய தந்த்ரித மம வர்த்மாநுவர்த்தந்தே மனுஷ்யா பார்த்த ஸர்வஸ –ஸ்ரீ கீதை -23-
உத் சீதே யுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம் சங்கரஸ்ய ச கர்த்தா ஸ்யாம் உபஹந்யாம் இமா பிரஜா –ஸ்ரீ கீதை -24-
என்கிற படி பரார்தமாகவே இறே இவர்கள் அனுஷ்டிப்பது –(குல வர்ண ஆஸ்ரம தர்ம ஸங்க்ரஹம் ஆகாமைக்காக
-பரார்த்தம் பரனது ஆனந்தத்துக்கு என்றுமாம் )

———————————————

சூரணை -32 –

இந்த கைங்கர்ய நிஷ்டருக்கு கர்ம நிஷ்டரோடு சேர்த்தி
இல்லாமையை சொல்லுகிறது மேல்-

சாதன சாத்தியங்களில்
முதலும் முடிவும்
வர்ண தர்மிகள்
தாச வ்ருத்திகள்
என்று துறை வேறு இடுவித்தது-

(சாதனத்தில் முதல் வர்ண தர்மிகள் என்று துறை வேறு விடுவித்து -என்றும்
சாத்யத்தில் முடிவு தாச விருத்திகள் என்று துறை வேறு விடுவித்து -என்றும் பிரித்து பொருள்
சாதனம் -உபாசனம் முதல் படி- கர்ம யோகம் – வர்ண தர்மம் –
பகவத் அனுபவம்- சாத்தியம் முடிவு தானே வ்ருத்தி கைங்கர்யம் முடிவு-
தாஸ்யம் தானே சத்யம்- நித்யம்- அந்தரங்க அத்தாணிச் சேவகம்
இந்த உயர்ந்த நிலையைக் காட்டவே அது தன்னடையே கழியும் )

அதாவது
சாதனத்தில் முதல் அடியான கர்மமும்
முடிந்த நிலமான கைங்கர்யமும் -இந்த நெடு வாசி அறிந்தவர்களை
நீங்கள் வர்ண தர்மிகள் ,நாங்கள் தாஸ வ்ருத்திகள் -என்று
உறவு அறுத்து துறை வேறு இட்டு போகப் பண்ணிற்று என்கை
அதாவது –
ஸ்ரீ திரு வயிந்திர புரத்திலே -ஸ்ரீ வில்லி புத்தூர் பகவர் -என்பார் ஒருவர்
எல்லாரும் ஒரு துறையில் அனுஷ்டானம் பண்ண ,தனியே ஒரு துறையில் அனுஷ்டானம்
பண்ணுவராய் -ஒரு நாள் அனுஷ்டானம் பண்ணி ,மீளா நிற்க செய்தே இருந்த
பிராமணர் -ஜீயரே -எங்கள் துறையில் அனுஷ்டானம் பண்ண வாராது ஒழிகிறது என்-என்ன
விஷ்ணு தாஸா வயம் யூயம் ப்ராஹ்மணா வர்ண தர்மின–அஸ்மாகம் தாஸ வ்ருத்தினாம்
யுஷ்மாகம் நாஸ்தி சங்கதி -என்று துறை வேற இட்டு போனார் ஆய்த்து-(அன்னைமீர் விடுமினோ போலே
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ கோயிலில் உள்ள சம்சாரிகள் சென்ற பின்பே ஸ்ரீ கோயிலிலுக்குள் நுழைந்த ஐதிக்யம்
ஸ்வார்த்தமான கைங்கர்யம் அங்கும் உபாசகனுக்கு -துளி ஸ்வாதந்தர்யம் ஒட்டிக் கொண்டு இருக்குமே-
அவன் திரு உள்ளத்திலும் இவன் வந்த வழி பட்டு இருக்குமே )

————————————————————

சூரணை -33 –

கீழ் -ஜாதியாதிகளில் பேதிக்கும் தர்மங்கள் போலே -சூரணை-31 என்ற இத்தாலே
ஸூசிதமான அதிகார பேதத்துக்கும் துறை வேறு இட்டு போகும் படியான
நெடு வாசிக்கும் பிரகாசகமான கர்ம கைங்கர்ய நிஷ்டர் இருவருக்கும் உண்டான
ஜென்மாதி விசேஷத்தை தர்சிப்பதாக கோலி ,பிரதமம் ஜன்ம விசேஷத்தை சொல்லுகிறது மேல்-

வேத வித்துக்களும்
மிக்க வேதியரும்
சந்தஸாம்
மாதாவாலும்
அதுக்கும் தாயாய்த்
தாயினும் ஆயின
செய்யும் அத்தாலும்
பிறப்பிக்கும் அது
இருவருக்கும் ஸ்ரேஷ்ட ஜன்மம் –

அதாவது
யேச வேத விதோ விப்ர—பாரதம்-என்கிற வேத வித்துகிகளான பூர்வ பாக நிஷ்டர்
காயத்ரீம் சந்தசா மாதா – தைத்ரீயம் என்கிறபடி சந்தசுகளுக்கு மாதாவாய் இருக்கிற
காயத்ரி உபதேசத்தாலே பிறப்பிக்கும் அது -கர்ம நிஷ்டருக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம் .

யேசாத் யாத்மவிதோ ஜனா -( ஏச அத்யாத்ம வித் )-பாரதம்-என்கிற மிக்க வேதியரான வேத தாத் பர்ய வித்துக்கள்
ரூசோ யஜூம்ஷி சாமானி ததைவா தர்வணா நிச சர்வம் அஷ்டாஷராந்தச்தம்
யச்சன்யா தபி வாங்மயம் –என்று சகல வேத ஸங்க்ரஹம் ஆகையாலே
அந்த காயத்ரிக்கும் மாத்ரு பூமியாய் – பெற்ற தாயினும் ஆயின செய்யும் –பெரிய திருமொழி -1-1-9-
என்கிற படியே சரீர உத்பாதிகையான மாதா மாத்ரம் அன்றிக்கே
உஜ்ஜீவனத்துக்கு உறுப்பான ஞானத்தை உண்டாக்கும்
திரு மந்த்ரத்தாலே பிறப்பிக்கும் அது கைங்கர்ய நிஷ்டருக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம் என்கை

சஹி வித்யாஸ் தம் ஜனயிதி தஸ் ஸ்ரேஷ்டம் ஜன்ம-ஆபஸ்தம்ப சூத்ரம் -என்கையாலே
கேவல ஜன்மம் என்னாதே ஸ்ரேஷ்ட ஜன்மம் என்கிறது ..
அது வர்ண அனுகுணமான விதி நிஷேதங்களுக்கும் தத் அநுரூப அனுஷ்டானந்தக்கும்
தத் அனுகுண பல பிராப்த்திக்கும் உறுப்பாகையாலே அவர்களுக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம் ..

இது ஸ்வரூப அனுரூபமான-( ஆத்ம ஸ்வரூபத்துக்கு இங்கு )- விதி நிஷேதங்களுக்கும் தத் அநுரூப அனுஷ்டானந்தக்கும்
தத் அநுரூப பல பிராப்த்திக்கும் உறுப்பாகையாலே இவர்களுக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம்-

(தாஸ்ய சத்யன் -சகல ஆகமங்களும் உன்னையே காட்டும்-அந்தராத்மதயா உபாசகன் – அவரவர் இறையவர் –விதி வழி அடைய நின்றனர் –
சகல பலாநாம் ப்ரசூதி தேசிகன் -சாஸ்த்ர தாத்பர்யத்தை பிடித்து தாஸ்யம் -அச்யுத சதகம் 17-20-ஸ்லோகத்தில்
இந்தக் கருத்தை அருளிச் செய்கிறார் )

————————————————————-

சூரணை -34 –

இப்படி ஸ்ரேஷ்ட ஜன்மாக்களான இருவருக்கும்
நிரூபகங்கள் இன்னது என்கிறது-

அந்தணர் மறையோர் என்றும்
அடியார் தொண்டர் என்றும்
இவர்களுக்கு நிரூபகம்-
(அந்தணர் -ப்ராஹ்மண்யமும் மறையோர் -வைதிகத்வமும்
அடியார் -சேஷத்வம் அடிமைத்தனம் அறிந்தவர் / தொண்டர் -கிஞ்சித் கைங்கர்யம் செய்தவர் என்றவாறு –
எது எது ஏன் பணி என்னாது அதுவே ஆட் செய்யும் ஈடு )

அதாவது
சாதி அந்தணர் -திருமாலை -43-
துணை நூல் மார்வில் அந்தணர் -பெரிய திருமொழி -1-5-9-
தூ யோம்பு கை மறையோர்-பெரிய திருமொழி -7-9-7-
நந்தா வன் கை மறையோர்-பெரிய திருமொழி -பெரிய திருமொழி -6-7-8-
என்று விசேஷண பூத சரீரத்வாரா வந்த வர்ணமும்
தத் பிரயுக்தமான வைதிகவத்மமும் அவர்களுக்கு நிரூபகம்-

திருமால் அடியார்-திருவாய் -5-6-11-
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார்-பெருமாள் -1-10-
திரு மாலுக்கு உரிய தொண்டர்-திருவாய் -6-9-11
திரு நாரணன் தொண்டர்-திருவாய் -3-7-4-
என்று ஆத்மா வஸ்துவுக்கு
ஞான ஆனந்தங்களில் காட்டிலும்
அந்தரங்க நிரூபகமான சேஷத்வம்
தத் பிரயுக்த கிஞ்சித் கரத்வமும் இவர்களுக்கு நிரூபகம் என்கை-

————————————————–

சூரணை -35 –

கேவலம் இவையோ நிரூபகம்
க்ராம குலாதி வியாபதேசங்களும் இல்லையோ -என்ன சொல்லுகிறது மேல்-

ஒரு தலையில்
க்ராம குலாதி வியாபதேசம்
குலம் தரும் என்னும்
மாசிற் குடி பழி என்று
பதியாக கோயிலில் வாழும் என்பர்கள்-

அதாவது
கர்ம நிஷ்டர் என்று சொல்லப் பட்ட ஒரு தலையில் சரீர அனுபந்திகளான க்ராம குலாதிகளை இட்டு
வியபதேசிக்கும் அந்த வியபதேசத்தை
கைங்கர்ய நிஷ்டரான மற்றை தலையில் உள்ளவர்கள்
குலம் தரும் -பெரிய திருமொழி-1-1-9–என்கிற படியே
திரு மந்திர சித்த பகவத் சம்பந்த ஜ்ஞான பிரயுக்தமாய்
மாசில் குடி -மூன்றாம் திருவந்தாதி –10—என்று
சேஷத்வ விரோதியான அஹங்காராதிகள் இல்லாமையாலே
நிர் தோஷமாய் இருக்கிற இக் குலத்துக்கு -(கீழ் சொன்ன வியபதேசத்தை )அவத்ய கரம் என்று கருதி
வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள்–நாச்சியார் -8-9–
கோயிலில் வாழும் வைட்டணவன்—பெரியாழ்வார் 5-1-3–என்று
பகவத் அன்வயம் உள்ள தேச சம்பந்தத்தை விட்டு வ்யவகரிப்பர்கள் என்கை ..
இது பகவத் சம்பந்தத்தை இட்டு வ்யபதேசிக்கும் அதுக்கும் உப லஷணம்.
(ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் –கதறுகின்றேன்)
ஏகாந்தீ வ்யபேதேஷ்டவ்யோ நைவ க்ராம குலாதிபி விஷ்ணுனா
வ்யபேதேஷ்டவ்யஸ் தஸ்ய சர்வம் ச ஏவ ஹி—பரமைகாந்தி தர்மம் -என்னக் கடவதிறே-

————————————————————-

சூரணை -36-

இனி உபயர் உடையவும் கூடஸ்தரை சொல்லுகிறது-

விப்ரருக்கு கோத்ர சரண சூத்ர கூடஸ்த்தர்
பராசர பாராசர்ய போதாய நாதிகள்
பிரபன்ன ஜன கூடஸ்த்தர்
பராங்குச பரகால யதி வராதிகள் .-

அதாவது
அந்தணர் மறையோர் என்கிற பிராமணருக்கு
கோத்ர கூடஸ்தர் பரசராதிகள்
கோத்ரமாவது-அபத்ய சந்ததி ( பிள்ளைப்பிறப்பின் சந்ததி ) –
சந்ததிர் கோத்ர ஜனன குலம் அபிஜனம் அன்வயம் -பர்யாய சொற்கள் -அமரகோசம் -என்னக் கடவதிறே
அந்த கோத்ரம் தான் அநேகமாய் தத் தத் கூடஸ்தரான வசிஷ்ட காஸ்யப பரத்வாஜ வத்ஸ ப்ரப்ருதிகள்
பலர் உண்டாகையாலே பராசராதிகள் என்கிறது .
சரண கூடஸ்தர் பாராசர்யாதிகள் ..

சரணங்கள் ஆனவை -வேத சாகைகள்
தத் அத்யாதிகளையும் கௌணமாக சரண சப்தத்தாலே சொல்லக் கடவது .
சரண சப்த காடக காலாபாதி சாகா விசேஷஷு முக்ய தத்தத் யாயிஷு புருஷே ஷு கௌண-என்கையாலே
இவ் இடத்தில் சாகைகளைச் சொல்லுகிறது ..
சர்வ சாகைகளுக்கும் பிரதான பிரவர்தகன் பாராசர்யனாக இருக்க செய்தேயும்
பின்பு தத் தத் சாகைகளுக்கு தனி தனி பிரவர்தகரான கடக லாப கண்வராதிகளும் உண்டாகையாலே
பாராசர்யாதிகள் என்கிறது-

சூத்ரம் ஆவது -கர்ம அனுஷ்டான பிரதி பாதகமான கல்பம் .
சீஷாயாம் வர்ண சிஷா—ஸ்ரீ ரெங்கராஜ உத்தர சதகம் -18- -என்று தொடங்கி சொல்லி வருகிற அளவிலே
கல்பேனுஷ்டானம் முக்தம் -என்றது இறே ..
அது தானும் பலவாய் ,தத் தத் கர்த்தாக்கள் ஆன ஆபஸ்தம்ப ஆஸ்வலாயநாதிகளும் உண்டாகையாலே
போதாயானாதிகள் என்கிறது .
ஆக இவர்கள் விப்ரருக்கு கூடஸ்த புருஷர்கள் .

அடியார் தொண்டர் -என்கிற பிரபன்ன ஜனங்களுக்கு கூடஸ்தர்
பத்யு ஸ்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞய சம்பதம் (மயர்வற மதிநலம் அருளப்பெற்றவருக்கு மொழி பெயர்ப்பு )
பிர பன்ன ஜன கூடஸ்தம் பிரபத்யே ஸ்ரீ பராங்குசம் -ஸ்ரீ பராங்குச அஷ்டகம் -4–.
என்கிற நம் ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் தொடக்கமான
எல்லா ஆழ்வார்களும் ,எம்பெருமானார் முதலிய ஆச்சார்யர்களும் என்கை .
கூடஸ்தர் ஆகிறார் –மூல பூதர் இறே
உபதேச அனுஷ்டானங்களாலே பிரபத்தி மார்க்கத்தை தலை பெருத்தி வளர்த்தவர்கள் ஆகையால் இவர்களை
பிர பன்ன ஜன கூடஸ்தர்கள் என்கிறது –

(ப்ரஹ்ம ஞானம் அளித்தவர் ஸ்ரீ நம்மாழ்வார் – கைங்கர்யம் செய்ய உணர்த்தியவர் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –
ஆச்சார்ய அபிமானம் அனுஷ்டானம் ஸ்ரீ ராமானுஜர் )

————————————————————————-

சூரணை-37-

இனி இரண்டு தலைக்கும் பிராமணிய வைஷ்ணவத்ய
சித்தி ஹேது நியமங்களை தர்சிப்பிகிறார் மேல்-

அத்யயன ஞான அனுஷ்டானங்களாலே
பிராமண்யம் ஆகிறார் போலே
சந்தங்கள் ஆயிரம் அறிய
கற்று வல்லார் ஆனால்
வைஷ்ணவத்த ஸித்தி-
(அத்யயனம் ஞானம் அனுஷ்டானம் மூன்றுக்கும் அறிய கற்று வல்லார் மூன்று சப்தங்கள் )

அதாவது
ஸ்வ அத்யாயோத்ய தவ்ய–என்கிற படியே –
ப்ரதமம் வேதத்தை ஆச்சார்ய உச்சரண அனுச்சாரண முகேன
அஷர ராசி க்ரஹணம் பண்ணுகை யாகிற அத்யயனத்தை பண்ணி
மீமாம்ச ஸ்ரவணாதிகளாலே தத் அர்த்த ஞானம் பிறந்து
தத் அனுரூபமான அனுஷ்டானமும் உண்டானால் பிராமண்யம் சித்திக்குமா போலே ,

சந்தங்கள் ஆயிரம்–திருவாய்-10-9-11- என்ற படியே
சந்தோ ரூபமாய் சகஸ்ர சாகையாய் இருக்கிற திருவாய் மொழியை
அறியக் கற்று வல்லார் வைட்டணவர்––திருவாய்-5-5-11-என்கிற படியே
அத்யே தவ்யம் திவிஜ ஸ்ரேஷ்டை வேத ரூபம் இதம் க்ருதம்-
என்கிற பிரகாரத்திலே ஆச்சர்ய உச்சாரண அனுசாரண முகேன
அப்யசிக்கை யாகிற அத்யயனத்தை பண்ணி
உபதேச முகத்தாலே
தத் அர்த்த ஞானம் பிறந்து
தத் அனுரூபமாக அனுஷ்ட்டிக்கவும் வல்லார் ஆனால் ஆய்த்து வைஷ்ணத்வம் சித்திப்பது என்கை –

————————————————————

சூரணை -38-

அந்த வேத அத்யயனாதிகள் உடையவர்களுக்கு
இந்த வேத அத்யயனாதிகள் இல்லாத அளவில் வைஷ்ணத்வ அஸித்தி ஒழிய
பிராமணிய ஹானி இல்லையே என்ன சொல்லுகிறது மேல் ..

இந்த உள் பொருள் கற்று உணர்ந்து
மேலைத் தலை மறையோர் ஆகாதாரை
அயல் சதுப் பேதிமார் என்று
உத்பத்தி நிரூபிக்கும்-

அதாவது
மிக்க வேதியர் வேதத்தின் உள் பொருள் -கண்ணி நுண் – 9—என்று உபநிஷத் குஹ்யமான
இந்த திராவிட வேதார்த்தத்தை -கற்று உணர்ந்த மேலை தலை மறையோர்-முதல் திருவந்தாதி -66–என்கிற படியே
ஆச்சார்ய உபதேச முகேன கற்று அறிந்து உத்க்ருஷ்டரான
வேதாந்திகள் ஆகாதவரை -அயல் சதுப் பேதிமார் -திருமாலை -39-என்று —
வேத அத்யயன பிரயோஜனம் ஈஸ்வரனை உள்ளபடி அறிந்து ,
ஸ்வரூப அனுரூபம் புருஷார்த்தம் கைங்கர்யம் என்று இருக்கையாய்
இருக்கிற இந்த ஞான பாவத்தாலே ,நாலு வேதங்களையும் அதிகரிக்கச் செய்தே
அந்த வேதத்தோடு தங்களுக்கு ஒட்டு இன்றி அதுக்கு அசலானவர்கள் என்று அறுதி இட்டு –
விஷ்ணு பக்தி விஹீநோய சர்வ சாஸ்த்ரார்த்த வேத்யபி
ப்ராஹ்மண்யம் தஸ்ய ந பவேத் தாஸ் யோத்பத்திர் நிரூப்யதாம் -பாத்ம புராணம் –என்கிற படியே
இவர்கள் பிராமணர் அல்லர் என்று உத்பத்தி ஆராயப் படும் என்கை ..
யா புத்ர பிதரம் த்வேஷ்டிதம் வித்யா தந்த்யரேசதம் -யோ விஷ்ணும் சததம் த்வேஷ்டி தம்
வித்யா தந்த்யரேசதம் –என்னக் கடவதிறே..

ஆக கர்ம கைங்கர்யங்கள் -26-என்று தொடங்கி–
இவ்வளவாக இரண்டும் இன்னத்துக்கு அனுகுணம் என்றும்
இவற்றுக்கு பிரேரக ஆஸ்ரய விஷய பேதங்களும்
இவற்றின் சாதாரண அசாதாரணத்வமும்
அசாதாரண அன்வயத்தில் சாதாரண நிவ்ருத்தியும் ,
கைங்கர்ய நிஷ்டருக்கு கர்ம நிஷ்டரோடு பொருந்தாமையும்
அதுக்கு அடியாக இருவருடைய ஜன்ம நிரூபக கூடஸ்த பேதங்களும் ,
இருவருக்கும் பிராமணிய வைஷணத்வ ஸித்தி ஹேதுக்களும் ,
திராவிட வேதார்த்த ஞான அபாவத்தில் ஸ்வாதீத வேதாநன்வயராய் நிஹீனத்வ புத்தயர்ஹராம் படியும் சொல்லிற்று-

சாஸ்த்ர சாஸ்த்ர தாரதம்ய பிரகரணம் முற்றிற்று

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆச்சார்ய ஹிருதயம்- சூர்ணிகை-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் -21/22/23/24/25/26/27/28/29/30..

November 22, 2011

சூரணை -21 –

ஸ்வரூப ஞானம் என்றும்
ஸ்வரூப யாதாத்மா ஞானம் என்றும்
ஆத்ம ஸ்வரூப விஷய ஞானத்திலே தார தம்யம் உண்டு இறே
அதில் பதிம் விச்வசஸ்ய-ஸ்ரீ புருஷ ஸூக்தம்- என்றும்
யஸ்யாஸ்மி என்றும்
நஹி விஜ்ஞாதர் விஜ்ஞாதேர் விபரிலோபோ வித்யதே ஞாநாத் யேவாயம்புருஷ -ப்ருஹதாரண்யம்-6-3-10–என்றும்
ஆத்மாவுக்கு பகவத் சேஷத்வத்தையும் ஜ்ஞாத்ருத்வத்தையும் சொல்லி
அந்த ஜ்ஞாத்ருத்வ கார்யமான போக்த்ருத்வ பிரயோஜனமாக
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மண விபச்சிதா -தைத்ரியம் -என்று பகவத் அனுபவத்தையும்
சொல்லுகிற சாஸ்திர முகத்தாலே ஸ்வரூபத்தை அறியும் அளவில்
பகவத் சேஷத்வமும் பகவத் அனுபவ போக்த்ருத்வமும் இறே பிரகாசிப்பது
அந்த சாஸ்திர தாத் பர்யமான திரு மந்த்ரத்தில் உள் புக்கால் இறே
பாரதந்திர போக்யதா ரூபமான ஸ்வரூப யாதாத்ம்யம் பிரகாசிப்பது
இதுவே ஸ்வரூப யாதாத்ம்யம் என்னும் இடத்தை அறிவிக்கிறார் மேல்-
(சேஷத்வம் -அகாரம்/ லுப்த சதுர்த்தி -பரமாத்மாவுக்கே ஜீவாத்மா சேஷன் -சேஷத்வம் ஸ்வரூபம்-தாதரத்தே சதுர்த்தி- லுப்த சதுர்த்தி /
போக்த்ருத்வம் மகாரம்-ஞாத்ருத்வம் -மன ஞானே–மன அவபோதனே-
பாரதந்தர்யம் நம /-போக்யதை-நாராயணாய நம -பிரார்த்தனா சதுர்த்தி இங்கு -அஹம் அன்னம் –அவன் -அந்நாதா –
தட்டு மாறும் சீலம் காட்கரையிலே கொழிக்கும் சந்தன குசுமாதிகள் போலே நாராயணாய நம -என்றபடி )

சேஷத்வ போக்த்ருத்வங்கள்
போல் அன்றே
பாரதந்திர போக்யதைகள்-

அதாவது –
சேஷத்வம் ஆவது இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரம்
பாரதந்த்ர்யம் ஆவது சேஷிக்கு இஷ்டமான படியே விநியோகப் படுகை
கட்டிப் பொன் போலே சேஷத்வம்
பணிப் பொன் போலே பாரதந்த்ர்யம்-என்னக் கடவதிறே
ஆகையால் சேஷ வஸ்துவை சேஷிக்கு இஷ்டமான படியே
விநியோகப் படுத்தும் அது பாரதந்த்ர்யம்

போக்த்ருத்வம் ஆவது ஜ்ஞாத்ருத்வ பலத்தாலே
போக தசையிலே விளைகிற ரசங்களுக்கு தான் போக்தாவாகை
போக்யதை யாவது பதார்த்த கதமான ரச வர்ணாதிகள் போக்தாவுக்கு
போக்யமாய் இருக்கும் போலே
ஆத்ம கதமான ஜ்ஞானாதிகளும் ஈஸ்வரனுக்கே போக்யமாய் இருக்கை
ஆகையால் இஷ்ட விநியோக அர்ஹ மாத்ரமாய் சேஷத்வம் போல் அன்றே
இவ் வஸ்துவை சேஷிக்கு இஷ்டமான படி விநியோகப் படுத்தி கொடுக்கிற
பாரதந்த்ர்யம்
போகத்தில் ஸ்வார்ததா புத்தி ஹேதுவான போக்த்ருத்வம் போல் அன்றே அந்த
போக்த்ருத்வத்தை சேஷி உடைய பிரிய உபயோகி ஆக்கிக் கொடுக்கிற
போக்யதை என்ற படி-

————————————————————

சூரணை -22 –

இவ் அர்த்தத்தை ஸ்வரூப யாதாத்ம்ய பிரகாசமான
திரு மந்த்ரத்திலே தர்சிப்பிக்கிறார்-

ஜ்ஞான சதுர்த்திகளின் மேலே இறே
ஆநந்த ஷஷ்டிகளுக்கு உதயம்-
(ஞான -மகாரம் -/ லுப்த சதுர்த்தி முன்னால்/போக்யதை -ஆனந்தம் -நாராயணாய அர்த்தம் / ஷ்ஷடி -நமஸ் -பாரதந்தர்யம் /
சதுர்த்தி ஞானங்களுக்கு மேலே இறே ஷ்ஷடி ஆனந்தங்களுக்கு உதயம் என்று சொல்லாமல் —
உத்கீத பிரணவத்தை பிரதமத்தில் மாறாடி-என்பதால் – அச்சு எழுத்து குறைவாக -அல்ப அக்ஷரம் பூர்வம் -என்பதாலும் -)

அதாவது ஆத்ம வாசியான ம காரத்திலே -மன – ஜ்ஞானே -என்கிற
தாதுவிலே உதிதமாய்
போக்த்ருத்வ பிரகாசமாய் இருக்கிற ஜ்ஞானத்தின் மேலே இறே
அந்த மகார விவரண ரூபமாய் போக்யதா பிரகாசகமான சதுர்த்தியில்
ஆனந்தத்துக்கு உதயம்
பிரதம அஷரத்தில் சேஷத்வ வாசியான லுப்த சதுர்த்தியின் மேலே இறே
பாரதந்த்ர்ய பிரகாசமான நமஸுக்கு உதயம் என்கை-

இத்தால் ஆத்ம ஸ்வரூபத்தின் உடைய சேஷத்வ போக்த்ருத்வங்கள்
உதித்து இருக்க செய்தே அதன் மேலே ஸ்வரூப யாதாத்ம்ய வேஷமாக
உதித்தவை ஆகையாலே
சேஷத்வ போக்த்ருத்வங்களில் -பாரதந்த்ர்ய போக்யதைகளுக்கு
நெடு வாசி உண்டு என்றது ஆயிற்று-

இந்த யோஜனைக்கு அல்பம் அனுபபத்தி உண்டு
ஷஷ்டி என்கிற இது -முக்ய விருத்தி யாலே ஆதல்
கௌன விருத்தியாலே ஆதல் நமஸை காட்டாமையாலே
ஷஷ்ட்யந்த பதம் என்கிறதை ஷஷ்டி என்று சொல்லிற்று ஆகாதோ என்னில்
அது சேராது –நமஸு இரண்டு பதம் ஆகையாலும் அதில் உத்தர பதமே
ஷஷ்ட்யந்தம் ஆகையாலும் ..
ஆனால் செய்ய அடுப்பது என் என்னில் இன்னும் ஒரு யோஜனை சொல்லப் படுகிறது-
(ஞாத்ருத்வமும் போக்த்ருத்வமும் -தங்கள் விரோதிகளை -ஸ்வாதந்த்ரத்தையும் ஸ்வார்த்தத்தயா போக்த்ருத்வத்தையும் –
உதிப்பத்தை சகிக்கும் -ஆனால் பின்பு தள்ளும் -ந -நிஷேதையாலே-
ஆகவே நமஸ் நாராயணாய நம என்று கூட்டி பொருள் என்றவாறே –
சேஷத்வத்துக்கு மேலே ஸ்வாதந்தர்யம் உதிப்பதால் அது தாழ்வு -பாரதந்தர்யம் உயர்ந்தது என்றவாறு
இத்தை விசாரிக்கவே ஸ்ரீ மா முனிகள் ஸ்ரீ மேல்கோட்டைக்கு எழுந்து அருளி ஸ்ரீ ஆய் ஸ்வாமிகளைக் கண்டு
இருவரும் ஸ்ரீ திருக்குருகூருக்கு மீண்டார்கள் )

அதாவது த்ருதிய அஷரத்திலே -மன -ஜ்ஞானே -என்கிற தாதுவிலே உதிதமாய்
போக்த்ருத்வ பிரகாசமான ஜ்ஞானத்தின் மேலே இறே மகார விவரணமான சதுர்த்தியில்
சொல்லப் படுகிற போகத்தில் காகாஷி ந்யாயத்தாலே நமஸ் சப்தத்தாலே கழிக்க படுகிற
ஸ்வ பிரயோஜனத்வ பிரயுக்தமான ஆனந்தத்துக்கு உதயம்
பிரதம அஷரத்திலே சேஷத்வ வாசியான சதுர்த்தியின் மேலே இறே-

நஜ்ஞாலே நிஷேதிக்க படுகிற ஸ்வ ரஷணே ஸ்வ பிரவ்ருத்தி ஹேது பூத
ஸ்வதந்த்ர்யா பிரகாசி யான ஷஷ்டிக்கு உதயம் என்கை
இத்தால் சேஷத்வ பிரகாசமான சதுர்த்தியின் மேலே ஸ்வ ரக்ஷண ஹேது பூத
ஸ்வதந்த்ர்ய வாசியான ஷஷ்டி உதிக்கையாலும்
போக்த்ருத்வ பிரகாசமான ஜ்ஞானத்தின் மேலே போக
ஸ்வார்ததா புத்தி மூலமான ஆனந்தம் உதிக்கை யாலும்
சேஷத்வ போக்த்ருத்வங்கள் ஸ்வரூப விரோதி உதய சஹங்களாய் இருக்கும்
நமஸிலே பாரதந்த்ர்யம் உதித்த பின்பு ஸ்வ ரஷணே ஸ்வ யத்னம் நிவ்ருத்தம் ஆகையாலும்
நமஸ் சப்த அனுக்ருஹீதையான-(நாராயணாயா நம )சரம சதுர்த்தியிலே ஈஸ்வரனுக்கு போக்யமாய் இருக்கையே
ஆத்மாவுக்கு வேஷம் என்று தோற்றின பின்பு ஸ்வ பிரயோஜனம் நிவ்ருத்தம் ஆகையாலும்
பாரதந்த்ர்ய போக்யதைகள் ஸ்வரூப விரோதி உதய சஹங்கள் அன்று .

ஆகையால் ஸ்வரூப விரோதி உதய சஹங்களான சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல அன்றே
அத்தை சகியாத படி இருக்கும் பாரதந்த்ர்ய போக்யதைகள் என்றது ஆயிற்று-

————————————————————

சூரணை -23 –

இப்படி ஸ்வரூப யாதாம்ய ஞான தசையில் தோற்றுகிற பாரதந்த்ர்யாதிகள்
ஸ்வரூப ஞான தசையில் தோற்றுகிற சேஷத்வாதிகளை திரஸ் க்ருதமாக்கும்
படி சொல்லுகிறது-

முளைத்து எழுந்த
சூர்ய துல்ய
யாதாத்ம்ய சரமம்
விதியில் காணும்
பிரதம மத்யம தசைகளை
பகல் விளக்கும் மின்மினியும் ஆக்கும்-
(பகல் விளக்கு வீண் –மின்மினி அல்பம் என்றவாறு )

அதாவது
முளைத்து எழுந்த திங்கள் தானாய்-திரு நெடும் தாண்டகம் -1—என்றும்
யதா சூர்யஸ் ததா ஞானம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6–5–62- என்றும் சொல்லப் பட்ட
ஸ்வரூப சாஷத்கார ஞானத்தின் உடைய யாதம்ய அவஸ்தையான
சரமம் என்று ஸ்வரூப யாதாம்ய வேஷமாக பின்பு சொன்ன பாரதந்த்ர்ய போக்யதைகளைச் சொல்லுகிறது
ஸ்வரூப சாஷாத் கார ஞானத்திற்கு சந்த்ரனை திருஷ்டாந்தமாக ஆழ்வார் அருளிச் செய்தது
தமக்கு பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே
அயத்ன சித்தம் ஆகையாலும் அந்த ஞானம் தான் ஆஹ்லாத கரமாய் இருக்கையிலுமாம் இறே-

இங்கும் உணர்வை பெற மிக ஊர உணர்வும் உண்டாம் -சூரணை -20
என்று இந்த ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பகவத் பிரசாத லப்தமாக இறே சொல்லிற்று
யதா சூர்யா -என்கிற இதில் ஸ்வ யத்னத்தாலே வந்த க்லிஷ்டதை தோற்றிற்று ஆகிலும இவ் இடத்தில் அது அவிவஷிதம்
ஞானத்தின் உடைய பிரகா அதிசயம் சொல்லுகிற மாத்திரமே அபேஷிதம்-

ஏவம்பூதமாய் இருந்துள்ள சாஷாத் காரத்தின் உடைய ஞானத்தின் உடைய
யாதாத்ம அவஸ்தையிலே பிரகாசிக்கிற பாரதந்த்ர்ய போக்யதைகள் ஆகிற சரமங்கள் –
ஸ்வரூபத்தை உணர்ந்து உணர்ந்து உணரவும் -சூரணை -20 -கீழ் சொன்ன ந்யாயத்தாலே –
விதியிலே காண்பார்– திருக் குறும் தாண்டகம் -18–என்கிற படியே
சாஸ்திர விதி பிரகாரேன ஸ்ரவண மனநாதிகளாலே தர்சிக்க படுகிற
பிரதம தசையான சேஷத்வத்தையும்
மத்யம தசையான போக்த்க்ருத்வத்தையும் –
பகல் விளக்கும் மின் மினியும் போலே
அப்ரயோஜனமாகவும் அல்ப பிரகாசமாகவும் பண்ணும் என்கை –

பிரண வோதிதமான ஸ்வரூபத்தின் உடைய யாதாத்ம்ய யத்வேன மத்யம சரம பதங்களிலே
பின்பு உதிக்கும் அவை ஆகையாலே ,பாரதந்த்ர்ய போக்யதைகளை சரமங்கள் என்கிறது
பிரதம அஷரத்தில் சதுர்த்தியிலே பிரதம ஏவ சேஷத்வம் உதிக்கை யாலும்
அநந்தரம் தத் ஆஸ்ரய வாசியான சரம அஷரத்தில் உத்தர பத த்வயத்தில்
பாரதந்த்ர்ய போக்யதை உதயத்துக்கு முன்னே
நடுவே ஜ்ஞாத்ருத்வ பலாயாத போக்த்ருத்வம் உதிக்கை யாலும்
சேஷத்வ போக்த்ருதவங்களை பிரதம மத்திய தசைகள் என்கிறது-

ஆக இவ் வாக்யத்தால்
ஸ்வ யதன ஸ்வ பிரயோஜன கந்த அசகங்களாய்
ஸ்வ சேஷி போகாத்யந்த அனுகூலங்களாய்க் கொண்டு ஸ்வரூபத்தை நிறம் பெறுத்தும்
இப் பாரதந்த்ர்ய போக்யதைகள்
இவ் ஆகாரங்கள் இல்லாத சேஷத்வ போக்த்ருதவங்களை
திரஸ் க்ருதமாக்கி தானே மேலாய் இருக்கும் என்ற தாயிற்று-

————————————————————

சூரணை -24 –

இப்படி இருந்துள்ள ஸ்வரூப ஞானத்தையும் ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞானத்தை
உடையவராய் சாஸ்த்ரிகள் -சூரணை -19 –இத்யாதி வாக்யத்தில் பிரவ்ருத்தி பரராயும்
நிவ்ருத்தி பரராயும் சொல்லப் பட்ட அதிகாரிகளுக்கு பிரவர்த்த நிவர்தககங்கள்
இன்னது என்கிறது மேல்-

நாலில்
ஓன்று பிரவர்தகம்
ஓன்று நிவர்தகம்-

அதாவது சேஷத்வ போக்த்க்ருத்வங்களும்
பாரதந்திர போக்யதைகளும் ஆகிற நாலிலும் வைத்து கொண்டு
சேஷத்வ போக்த்ருத்வங்களே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்று தர்சித்த சாஸ்த்ரஜ்ஞர்களை-
போக்த்ருத்வம் ஆனது போக்தாவனவன் போக்ய சித்திக்கு யத்னம் பண்ண வேண்டாவோ என்னும் நினைவாலே
போக்ய பூத பகவத் விஷய லாப அர்த்தமான உபாய பிரவர்தியிலே மூள்விக்கும்-

பாரதந்த்ர்ய போக்தைகளையே ஸ்வரூப யாதாம்ய வேஷம் என்று தர்சித்த சாரஜ்ஞரை
போக்யதை ஆனது -போக்தாவான ஈஸ்வரன் அன்றோ
ஸ்வ போக்யமான இவ் வஸ்துவை பெருகைக்கு யத்னம்
பண்ணுவான் –தத் போக்ய பூதமான இவ் வஸ்துவுக்கு தல் லாபத்துக்கு
யத்தனிக்க பிராப்தி இல்லை என்னும் நினைவாலே
உபாய பிரவர்த்தியில் நின்று மீள்விக்கும் என்கை-

உபாயத்வ அனுசந்தானம் நிவர்த்தகம் –
உபேயத்வ அனுசந்தானம் பிரவர்த்தகம் -ஸ்ரீ வசன பூஷணம் –சூர்ணிகை -87-

————————————————————

சூரணை-25 –

ஆனால் சேஷத்வ போக்த்க்ருத்வங்கள் இவர்களுக்கும் உண்டே
அவை செய்வது என்ன என்ன சொல்லுகிறது மேல்-

முற்பாடர்க்கு க்ரிய அங்கம் ஆனவை இரண்டும்
செயல் தீர்ந்தார் வ்ருத்தியிலே ஸ்வ நிர்பந்தம் அறுக்கும்-

(கர்ம யோகத்துக்கு அங்கங்களே சேஷத்வமும் போக்த்ருத்வமும்
செய்த வேள்வியர் -செயல் தீர்ந்தார்
வ்ருத்தி -கைங்கர்யம்
போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையில் கொழிக்கும்
அடுத்த திருவடியை நீட்டினாரே ஆழ்வார்
பேரக்குழந்தை காலை தாத்தா கன்னத்தில் அடித்துக் கொள்ளுமாறு –
ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ ராமானுஜர் ஐதிக்யமும் உண்டே
படியாய்க்கிடந்து பவளவாய் காண வேண்டுமே -எதிர் விழி கொடுக்கும் பாரதந்தர்யம் –
போக்த்ருவத்துக்கும் விநியோகம் உண்டே-அவன் அனுபவத்துக்கு உறுப்பாகும் -)

அதாவது சாஸ்த்ரஜ்ஞர்கள் -என்று சொல்லப் பட்ட உபாசகருக்கு
போக்த்க்ருத்வம் ஆனது போக்ய சித்திக்கு உடலான யத்னத்திலே மூட்டுகையாலும்
அது தான் ஆத்ம ஞான பூர்வகமாக யத்தனிக்க வேண்டுகையாலே சேஷத்வமும்
அதுக்கு உறுப்பாகையாலும்-உபாசன பிரதம பாவியான -கர்மத்துக்கு உத்பத்தியிலே
சக கரித்துக் கொண்டு தத் அங்கங்களாய் இருக்கிற அவை இரண்டும்
செயல் தீர சிந்தித்து வாழ்வார்-நான்முகன் -88-
(போக்யம் என்று அறிந்து -சிந்தித்து செயல் தீர்ந்தார் -)-என்கிற படியே
இவ் ஆத்மா செய்யக் கடவது ஒன்றும் இல்லை
எம்பெருமானே நிர்வாககன் -என்று அனுசந்தித்து
உபாய ரூப ப்ரவர்தியிலே நிவ்ருத்தரான பிர பன்னருடைய
கைங்கர்ய ரூப பிரவர்த்தியில் அவன் உகப்பை பின் செல்லும் அது ஒழிய
தங்கள் நிர்பந்தத்தை தவிர்க்கும் என்கை-

பரகத அதிசய ஆதான இச்சையா உபாதேயத்வ மேவ
யஸ்ய ஸ்வரூபம் ச சேஷ (-சேஷத்வ லக்ஷணம் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூக்திகள் )-
என்கிற படியே -பரகத அதிசய கரத்தவ ரூபமான சேஷத்வம்
ஸ்வ ஆஸ்ரயா இச்சையா வரும் ஸ்வ நிர்பந்தத்தை தவிர்க்கும் இறே

இனி போக்த்க்ருத்வம் ஸ்வ நிர்பந்தத்தை தவிர்க்கை யாவது
பாரதந்த்ர்ய போக்யதா ஞானம் பிறந்தவன் உடைய போக்த்க்ருத்வம்
ஆகையாலே ,ஸ்வ ரசத்துக்கு உடல் அன்றிக்கே ,சேஷி ரசத்துக்கு உடலாய் இருக்கை..
ஆனந்தம் அவன் ப்ரீதியை துளிர் எழுப்ப – என்கிற படியே
இவனுடைய போக்த்க்ருத்வம் சேஷியானவன் ப்ரீதிக்கு வர்தகமாய் இறே இருப்பது
ஆகை இறே -அஹம் அன்னம் அஹம் அன்னம் -தைத்ரியம்-என்று ஸ்வ போக்யதையை முன்னிட்டு
சேஷியை உகப்பிக்க இழிந்தவன் -அஹம் அந்நாத-தைத்ரியம் -என்று ஸ்வ போக்த்க்ருத்வத்தையும் புரஸ் கரிக்கிறது
இப்படி அல்லாத போது ஒரு சேதனனோடு அனுபவித்ததாய் இராது இறே
இவற்றை எல்லாத்தையும் உள் கொண்டு ஆய்த்து —
வ்ருத்தியிலே ஸ்வ நிர்பந்தம் அறுக்கும் -என்று அருளி செய்தது-

————————————————————

சூரணை -26 –

இந்த க்ரியா வ்ருத்தி சப்தங்களால் சொன்ன கர்ம கைங்கர்யங்கள்
இவர்களுக்கு எதுக்கு அநுகுணமாய் இருக்கும் என்ன சொல்லுகிறது-

கர்ம கைங்கர்யங்கள்
சத்ய அசத்ய
நித்ய அநித்திய
வர்ண தாஸ்ய
அனுகுணங்கள்-

அதாவது கர்மம் அசத்யமாய்–அநித்யுமுமான வர்ணத்துக்கு அநுகுணமாய் இருக்கும்
கைங்கர்யம் சத்தியமாய் நித்யமுமான தாஸ்யத்துக்கு அநுகுணமாய் இருக்கும் என்கை-

வர்ணத்தை அசத்தியம் அநித்தியம் என்கிறது ஆத்மாவுக்கு உள்ள வேஷம் அல்லாமையாலே
சததைக ரூபம் அன்றிக்கே -ஔ பாதிகமுமாய் அநித்யமுமாய் நச்வரமான
தேக அவதியாய் போருகையாலே

தாஸ்யத்தை சத்யம் நித்யம் என்கிறது-திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் திருப்பல்லாண்டு -11– என்கிறபடியே
ஆத்மாக்கு உள்ள வேஷம் ஆகையாலே
சததைக ரூபமாய் யாவதாத்மா அனுவர்த்தி யாகையலே-

வர்ண அனுகுணம் என்றது -வர்ணத்துக்கு சேர்ந்தது என்ற படி-
தாஸ்ய அனுகுணம் என்றதும் அப்படியே-தாஸ்யத்துக்கு சேர்ந்தது என்ற படி-

(விசிஷ்ட வேஷத்தை பொறுத்தே இருக்கும் கர்மம் -அசத்திய அநித்ய வர்ணம்
கைங்கர்யம் நிஷ்க்ருஷ்ட வேஷம் பொறுத்தே இருக்கும் -சத்யமாயும் -நித்யமாயும் தாஸ்யம்
திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -தாஸ்யம் பழைமை நித்யம் -அங்கும் உண்டே நிருபாதிகம் -சத்யம் )

————————————————————

சூரணை -27 –

இவை இரண்டுக்கும் பிரேரகங்கள் எவை என்ன சொல்லுகிறது-

இவற்றுக்கு
விதி ராகங்கள்
பிரேரகங்கள்-

அதாவது –
யஜேத -யஜுர் வேதம்-
ஜூஹுயாத்–கர்ம மீமாம்சை-இத்யாதி யான சாஸ்திர விதி கர்மத்துக்கு பிரேரகம்
அசேஷ சேஷ தைகரதி யாகிற ராகம் கைங்கர்யத்துக்கு பிரேரகம் என்கை .
(பிரேரகம் தூண்டுபவை-காதல் -நின் கண் வேடகை எழுவிப்பேனே -இசைவித்து –
ஒழிவிலா காலம் எல்லாம் வழு விலா அடிமை -அசேஷ -சேஷதைக ரதி ரூபம் நித்ய கிங்கரோ பவாமி
அனுபவம் -ப்ரீதியைத் தூண்ட -அது கைங்கர்யத்தில் தூண்டும்
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம்-இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் -மூவாறு மோசம் மோகிக்கப் பண்ணுமே )
பகவத் அனுபவ ஜனித ப்ரீதி காரிதம் இறே கைங்கர்யம் .
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் -திருவாய் -10-8-10–என்ன கடவது இறே-
(கிரமம் படி இல்லாமல் -பணி செய்து முதலில் பாதம் பெற்றது அப்புறம் -உபாசகருக்குத் தானே கிரமம் )

————————————————————

சூரணை -28 –

இவற்றுக்கு ஆஸ்ரயம் யார் என்ன சொல்லுகிறது-

மண்டினாரும்
மற்றையாரும்
ஆஸ்ரயம்-

அதாவது
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டினார்-திருக் குறும் தாண்டகம் -19–
என்று உகந்து அருளின நிலங்களிலே அத்ய அபிநிவிஷ்டராய் இருக்கிற பிர பின்னர்
கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயம்-

விளக்கினை விதியின் காண்பார் மெய்மையைக் காண்கிற்பாரே -திருக் குறும் தாண்டகம்-18–என்று கீழில் பாட்டில் சொன்ன
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே -திருக் குறும் தாண்டகம் -19—மற்றையரான
உபாசகர் கர்மத்துக்கு ஆஸ்ரயம் என்கை-

(சாஸ்திரம் – -உபாசனம்-விளக்கினை விதியில் காணும் மற்றையரான உபாசகர் -கர்மத்துக்கு ஆஸ்ரயம்
சாஸ்த் தாத்பர்யம் -திருமந்திரம் —பிரபன்னர் -அர்ச்சாவதார திவ்ய மங்கள விக்ரஹ கைங்கர்யம் -என்றவாறு )

இத்தால் கர்ம கர்த்தாக்களையும்
கைங்கர்ய கர்த்தாக்களையும் சொல்லிற்று ஆய்த்து-

————————————————————

சூரணை -29 –

இவற்றுக்கு விஷயம் ஏது என்ன சொல்லுகிறது-

அருள் முடிய நிறுத்தி அடைய நின்றதும்
நல்லதோர் அருள் தன்னாலே
நன்றும் எளியன் ஆகிறதும் விஷயம்-

அதாவது
எத் தவம் செய்தாருக்கும் அருள் முடிவது ஆழியான் பால் -நான்முகன் 2–என்கிற படியே
ஆஸ்ரயண பல சித்தி தன்னுடைய பிரசாதத்தாலே யாம்படி –
தன் மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக -திருவாய் -5-2-8–என்ற படியே
தனக்கு தனுபூதரான தேவதைகளை நிறுத்தி –
அவரவர் விதி வழி அடைய நின்றனர் -திருவாய்-1-1-5–என்கிற படியே
ஆஸ்ரயிக்கிற சேதனர் வித்யுக்த பிரகாரேன ஆஸ்ரயித்து பலம்
பெரும் படி தேவதாந்தர்யாமியாய் நின்ற இடம் கர்மத்துக்கு விஷயம் .

நல்லதோர் அருள் தன்னாலே காட்டினான் திரு அரங்கம் -திருமாலை -10–என்றும்
கருத்துக்கு நன்றும் எளியனாய்-திருவாய்-3-6-11- -என்று சொல்லுகிறபடியே
கேவல ஸுய க்ருபையாலே அத்யந்த சுலபனாய் கொண்டு
அர்ச்சாவதாரமாய் நிற்கிற இடமே கைங்கர்யத்துக்கு விஷயம் என்கை-

————————————————————

சூரணை -30 –

இவ்வோ நிலைகளை விஷயமாக உடைத்தாய் ஆகையாலே
கர்ம கைங்கர்யங்கள் இப்படி சொல்லப் பட்டன என்கிறார்-

இவற்றாலே சாதாரணம்
அசாதாரணம்
என்னும்-

அதாவது
இப்படி தேவதா அந்தர்யாமியையும் அர்ச்சாவதார தையும் விஷயமாக உடைய இவ் ஆகாரங்களாலே
சாதாரண விக்ரக விசிஷ்டனை விஷயமாக உடைய கர்மத்தை சாதாரணம் என்றும்
அசாதாரண விக்ரக விசிஷ்டனை விஷயமாக உடைய கைங்கர்யத்தை அசாதாரணம் என்றும் சொல்லும் என்கை-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அருளி செயல் அரங்கம் -பெரிய ஆழ்வார் திரு மொழி சாரம் ..

November 22, 2011
மங்களா சாசனம் அவர்களுக்கு காதா சித்தம் இவருக்கு நித்யம்
பொங்கும் பரிவால் இவருக்கு பெரிய ஆழ்வார்  -மற்றவர்க்கு மங்கும் பரிவு
வண்ண மாடங்கள்-சூழ்-
அவதரித்த மகிழ்வால் எண்ணம் சுண்ணம் தூவி மகிழ
திரு கோஷ்டியூர் -கம்ச வதத்துக்கு தேவர்கள் கோஷ்டியாக பேசி முடிவு எடுத்த இடம்
திரு பிரிதி தொடக்கம்-திரு கோஷ்டியூர் -குறிக்க வண்ண மாடங்கள் சூழ்
மண்டினார்க்கு உய்யல் அல்லால் மற்று யாருக்கு –
உகந்து அருளின நிலங்கள் தான் தஞ்சம்
மண் -வாமனன் திரு அடி பட்ட வஸ்து -குழந்தைக்கு பிடிக்கும்
காட்ட சொல்ல -ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம்
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன்
அந்த குழந்தைக்கு -திரு கால்களுக்கு என்ன ஆகுமோ -பொங்கும் பரிவு இங்கும்

சீத கடல்-உள் அமுதம்-பாத கமலங்கள் காணீரே
திரு அடி பற்றும் சம்ப்ரதாயம்
திண் கழலாய் இருக்கும் -விடாதே
கிருத்தியம் சூன்யம்-நஷத்ரம் -தெரிவிக்க கூடாது என்று
அத்தத்தின் பாத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முன் பாத்தா பின் பாத்தா -முன் பத்து ரோகிணி பின் பத்து சரவணம்
திரு அரங்கம் திரு வேம்கடம் திரு கச்சி மூன்றும் -ரோகிணி/ஹஸ்தம்/திரு வோனம் சூசிப்பிக்கும்
ரேவதி-மீண்டும் நம் பெருமாள் வந்த பின்பு
பூர்வத்தில் ரோகிணி -கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்
மானி குறளனே தாலேலோ-யசோதை பாவனை
பாலா லீலை அனைத்தையும் அனுபவிகிறார்

அளந்திட தூணை -அவன் தட்ட -சப்பாணி
உன் இடமும் இருக்கிறன் என் இடமும் இருக்கிறான்
அவன் உடல் அமைப்புக்கு தக்க தூண் -ஹிரண்யன் காட்ட
அவனே தட்ட-ஹிரன்யனே தட்ட
ஆங்கே வளர்ந்திட்டு-அழகியான் தானே அரி உருவம் தானே
நாரசிம்க வபு ஸ்ரீமான்
உளம் தொட்டு-நெஞ்சில் கொஞ்சம் அனுகூல்ய எண்ணம்  இருக்கிறதா
அடியவர்களை ரஷிக்க வந்த அவதாரம்
தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே
மக்களை பெறுவார்கள்-
தளர் நடை -பாசுரம் பலன்
ஐதீகம் -கூரத் ஆழ்வான்-ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் மிகுந்து

பாகவத அபசாரம் பண்ணாத மக்களை பெறுவார்கள்
தூதனாய்-சிறியத்தான்-பட்டர் –
ஓலை கட்டி தூது போன பெருமை -கண்ணனுக்கு தானே
துரும்பால் கிளறிய சக்கர கையன்-
நாலூர் ஆச்சான் பிள்ளை-உண்மையான வார்த்தை சொன்னவனுக்கு  கண் போனதே
தானம் கொடுத்தவனுக்கு பாதாளம் -நாலூர் பிள்ளையநூர் -தானம் விலக்கியமை/ குரு வசனம் கேளாமை
கோவிந்தன் என்னை புறம் புல்குவான்- சொட்டு சொட்டாக
யசோதை பாவனையில்-குழந்தை செய்வது எல்லாம் அனுபவித்தார்
மெச்சூது -அன்று பாரதம் -அப்பூச்சி காட்டுகின்றான் -அரையர் ஐதீகம்
என் சினம் தீர்வன் நானே -அரையர் ஐதீகம் இதிலும்
மாசுச-கள்வம் பொதி அறை கண்ணன்-கலியன் -அதனால் மாசுச சொல்கிறான்
காளியன் பொய்கை- கதம்ப -திரு அடி ஸ்பர்சம் -தளிர் புரியும் திரு வடி என் தலை மேல் –
திரு கண் நோக்காலும்-திரு அடி  அடைந்தாரை பூதராக்கும் நெடு நோக்கு –
களிறு கண்ணா கண்ணா கூப்பிட வைக்கும் கிருஷ்ணா பக்தர் இவர்
தொழும் காதல் களிறு அளிப்பான்-கரச்த கமலம் பாதத்தில் சேர்க்க
மலை எடுத்து மகிழ்ந்து கல் மாரி காத்தான் -அஹம் வோ பாந்தவ –
கோவர்த்தனம் என்னும் கொற்ற குடை  எடுத்தும் கையில் -கோலமும் அழிந்தில வாடிற்றில

பக்தி ரூப கைங்கர்யம் பீதி இன்றி
திரௌபதி பிரகலாதன் கஜேந்த்திரன் -மூன்றிலும்  -ஆபத்து வலை இருந்தது -தப்பினான்
உஜ்ஜீவிக்க பெற்றோம்
தாயை போலே பாட வல்லார் தாமும் அனுக்கர்களே
கோவில் கொண்ட கோபாலன்
கேசவன் கண்ணன் பிறந்து —
சாயை போல்- எம்பார் எம்பெருமானார் பாதுகை சிரசில் வைத்து அர்த்தம் அருளிய ஐதீகம்
 -நிழல் போல் நெருங்கி இருக்கும் பாக்கியம் பெறுவோம்
 இப் பொழுதே சொல்லி வைத்து பெருமான் திரு அடி அடைவோம்
பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் – சூர்ணிகை 17/18/19/20..

November 21, 2011

சாஸ்த்ர சார பேதங்கள் -17-முதல் -38- வரை
சூரணை 17-

ஆக சர்வேஸ்வரன் தன் கிருபையால் சம்சாரி சேதனரை உஜ்ஜீவிப்பதற்க்காக
சாஸ்திரத்தையும் சாஸ்திர தாத் பர்யமான திரு மந்தரத்தையும் வெளி இட்டான் என்றது கீழ் ..

இவை இரண்டையும் வெளி இட்ட பிரகாரம் என் ? அவற்றுக்கு விஷயம் எது ?
என்னும் ஆகாங்ஷையிலே தத் பிரகாரங்களையும் தோற்றுவித்துக் கொண்டு
விஷயங்களையும் சொல்லுகிறது மேல்-

முனிவரை இடுக்கியும்
முந்நீர் வண்ணனாயும்
வெளி இட்ட சாஸ்திர
தாத பர்யங்களுக்கு
விசிஷ்ட
நிஷ்க்ருஷ்ட
வேஷங்கள் விஷயம்-

அதாவது -இருள்கள் கடியும் முனிவர்-திருவாய் -10-7-7– -என்கிற ஸ்ம்ருதி கர்த்தாக்களான
(இருள்கள் கடியும் முனிவர் -ஸ்ருதி–ஸ்மர்த்தா -ஸ்மர்த்தர்
மனன சீலர் -ராம ஷேம மனன சீலத்வம் பரத்வாஜருக்கு -ஜகத் ரக்ஷண சிந்தை முனியே -அவனையே சொல்லுவார் )
வியாஸாதி ரிஷிகளை கிருஷ்ணத் த்வைபாயனம் வியாசம் வித்தி நாராயணம் பிரபும்
கோஹ்யன்ய புண்டரீகாஷாத் மகா பாரத க்ருத் பவேத் –என்கிற படியே
தானாகச் சொல்லலாம் படி அந்தர்யாமியாய் எடுத்து நின்று தன் முகேன வெளி இட்ட சாஸ்தரத்துக்கு
சேதனருடைய தேக விசிஷ்ட வேஷம் விஷயம்-

வதரி யாஸ்ரமத்துள்ளானை கரும் கடல் முந்நீர் வண்ணனை -என்கிற படியே
ஸ்ரீ பதரி ஹாஸ்ரமத்திலே ஸ்வேன ரூபேண நின்று வெளி இட்ட
சாஸ்திர தாத் பர்யமான திரு மந்த்ரத்துக்கு சேதனருடைய
நிஷ்க்ருஷ்ட வேஷம் விஷயம் என்கை-

இத்தால் சாஸ்த்ரத்தில் தேஹத்திலே நோக்கு
தாத் பர்யத்திலே ஸ்வரூபத்திலே நோக்கு -என்றது ஆய்த்து-

——————————————————————————————————————————————————————————————

சூரணை -18-

ஏவம் பூதமான இவை இரண்டும் சர்வ அதிகாரமோ
அதிகிருதா அதிகாரமோ என்ன சொல்லுகிறது மேல்-

தோல் புரையே போம் அதுக்கு பழுதிலா யோக்யதை வேணும்
மனம் உடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு
நானும் நமரும் என்னும் படி சர்வரும் அதிகாரிகள்-

அதாவது விசிஷ்ட வேஷம் விஷயம் ஆகையாலே
ஆந்தரமான ஸ்வரூபத்தில் ஊற்றம் இன்றியே
மேல் எழ தேஹத்திலே நோக்காய் -(மேம் பொருள் போக விட்டு உண்டே )நடக்கிற சாஸ்தரத்துக்கு
பழுதிலா ஒழுகலாறு -என்ற படி நெடுக போகிற வம்ச பிரவாகத்திலே
உத்பத்தியிலே ஆதல்
ஆசாரத்திலே ஆதல்
ஒரு பழுது அற்று இருக்கிற யோக்யதை வேணும்-

கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர்-திருவாய் -10-5-1- என்றும்
ஸ்ரத்தைவ காரணம் பும்ஸாம் அஷ்டாஷா பரிக்ரஹே என்றும் சொல்லுகிற படியே
(ஆசை உடையார்க்கு எல்லாம் இத்தையே தமிழ் படுத்தி கிருபா மாத்ர பிரசன்னாச்சார்யார் -நம் ஸ்வாமி )
ஸ்ரத்தா மாத்திரமே அமைந்த ஸ்வரூப ஸ்பர்சி யான தாத் பர்யத்துக்கு
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாரயணமே -என்று சொல்லும் படி
யோக்ய அயோக்ய விபாகமற சர்வரும் அதிகாரிகள் என்கை-

இத்தால் சாஸ்திர தாத் பர்யங்களின் அதிக்ருதாதிகாரத்வ சர்வாதிகாரத்வங்களை
தத் ஹேது சஹிதமாகச் சொல்லிற்று ஆயிற்று-

———————————————————————————————————————————————————————————————————————————-

சூரணை-19-

இனிமேல் இந்த சாஸ்திர நிஷ்டராயும்
தாத்பர்ய நிஷ்டராயும் இருக்கும் முமுஷுக்கள் படிகளைச் சொல்லுகிறது-

சாஸ்திரிகள் தெப்பக் கரையரை போலே
இரண்டையும் இடுக்கி பிறவிக் கடலை நீந்த
சாரஜ்ஞர் விட்டத்தில் இருப்பாரைப் போலே
இரு கையும் விட்டு கரை குறுகும் காலம் எண்ணுவார்கள்-

அதாவது
ஆத்மா வா அரே த்ரஷ்டவ்யாஸ் ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்யாசி தவ்ய–ப்ருஹதாரண்யம் –
ஆத்மேத் யேவோபாசீத–ப்ருஹதாரண்யம் –
ஒமித் யாத்மானாம் த்யாயத-முண்டகம் –
என்று சம்சார நிவ்ருத்தி பூர்வக பகவத் பிராப்தி சாதனமாக
பகவத் உபாசனத்தை விதித்து
அம்ருதஸ் யைஷ சேது-முண்டகம் –
பலமதே உபபத்தே-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-8-
என்று பகவானே அதற்க்கு பல பிரதானனாகவும்
சொல்லும் சாஸ்த்ரத்தில் நிஷ்டர் ஆனவர்கள்
ஆறு நீஞ்சுவார் தெப்பத்தை ஒரு கையிலே இடுக்கி
தாங்களும் ஒரு கை துழாவுமா போலே
ஸ்வ யத்னமும் தத் சாத்திய பகவத் கிருபையும் ஆகிய உபயத்தையும்
அவலம்பித்து கொண்டு -பிறவி கடல் நீந்துவார்க்கே -திருவாய் -2-8-1–என்கிற படியே
சம்சார சாகரத்தை கடக்க தேட-

ஸ்வ யத்ன நிஷேத பூர்வகமாக ஆத்மாவின் பகவத் ஏக உபாயத்தை
பிரதி பாதிக்கிற சாஸ்திர சாரமான திரு மந்த்ரஜ்ஞர் ஆனவர்கள் ஓடம் ஏறி னவர்கள்
தீரகமனார்தமான ஸ்வ யத்னத்தையும் தெப்பத்தையும் கை விட்டு -கரை குறுவது எப்போது -என்று
பார்த்து கொண்டு அதன் விட்டத்திலே இருக்குமா போலே
சம்சார ஆர்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம் விஷ்ணு போதம் விநாநாந்யத் கிஞ்சித் அஸ்தி
பாராயணம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம்-என்கிற படியே
அக்கரையும் இக்கரையும் ஊடுருவ நின்று சம்சார சமுத்ரத்தை கடத்தும்
வைகுந்தன் என்பதோர் தோணியை-நாச்சியார் -5–4– சம்சார நிஸ்தாரமாகப் பற்றி
தத் ஞான சக்தியாதி அனுசந்தானத்தாலும்
ஸ்வ பாரதந்த்ர்யாதி அனுசந்தானத்தாலும்
நிர் பரர் ஆகையாலே இரண்டு கையும் விடுமா போலே
ஸ்வ யத்ன ரூப உபாசனாதியையும்
தத் சாத்திய பகவத் கிருபையையும்
அவலம்பிக்கையை விட்டு
கேவல பகவத் கிருபையே உத்தாரகம் என்று அத்யவசித்து
கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ -திருவாய் -6–9–9 -என்றும்
ஆக்கை விடும் பொழுது எண்ணே–திருவாய் -1–2–9-என்று சொல்லுகிற படியே
பகவத் பிராப்தி ஆகிய கரையை குறுகைக்கு ஈடான கால சிந்தனை
பண்ணா நிற்பார்கள் என்கை-

இத்தால் சாஸ்த்ரஜ்ஞர் உடையவும் சாரஜ்ஞர் உடையவும்
பிரபத்தி க்ரமம் சொல்லிற்று ஆயிற்று-

————————————————————————————————————————————————————–

சூரணை -20-

இவர்களுக்கு இவ் ஆகாரங்கள் உண்டாகுகைக்கு அடி இன்னது என்கிறது-

இவை
ஸ்வரூபத்தை உணர்ந்து உணர்ந்து உணரவும்
உணர்வைப் பெற ஊர மிக உணரவும் உண்டாம்-

அதாவது சாஸ்த்ரிகள் ஆனவர்களுக்கு
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து
உருவியந்த இந் நிலைமை உணர்ந்து உணர்ந்து உணரிலும்–திருவாய் -1-3-6- என்கிற படியே
ஆத்ம ஸ்வரூபத்தை ஜ்ஞப்த்தி மாத்ரம் அன்றிக்கே
நித்ய ஞான குணகமாய்
அந்த ஞானத்தாலே எங்கும் ஒக்க வியாபித்து
தேஹத்தில் காட்டில் வேறு பட்டு இருக்குமதாய்
அந்த ஜ்ஞாத்ருத்வ பலாயாத கர்த்ருத்வ போக்த்ருத்வ சஹிதமாய்
பகவத் சேஷமாய் இருக்கும் என்று ஸ்ரவண மனனங்களாலே சாஷாத் கரிக்கவே
ஸுவ யத்னத்தாலே சம்ஸார நிஸ்தரணம் பண்ண தேடுகை யாகிற இது உண்டாம்-

சாரஞ்ஸ்தஞரானவர்களுக்கு ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை தர்சிப்பைக்கு உடலாக
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும்
பழுதே யாம் உணர்வை பெற ஊர்ந்து திருவாய் -8–8–3-–என்கிற படியே
வைஷயிக ஞானமும் பிராணனும் சரீரமும்
மற்றும் பரிசேத்யமான பிராகிருதி விகாரங்களும் ,
பிரக்ருதியும் ஹேயம் என்னும் அறிவை பெரும் படி
நிர்ஹேதுகமாக ஈஸ்வரன் நடத்த
மெய்ம்மையை மிக உணர்ந்து-திருமாலை -38 -என்கிறபடியே
ஆத்ம ஸ்வரூபத்தை
தேஹாதி விலக்ஷணமாய்
ஞான ஆனந்த ஸ்வரூபமாய்
ஞாத்ருவாதி குணகமாய்
ததீய சேஷத்வ பர்யந்த தத் சேஷத்வ யுக்தமாய்
தத் காஷ்டையான பார தந்த்ர்ய யோக்யதை ஏக
வேஷமாய் இருக்கும் என்றே உணரவே
ஸ்வ பரத்தை அவன் மேல் புகட்டு ஸ்வ யத்ன ரஹிதையராய் இருக்கிற இது உண்டாம் என்கை-

இத்தால் இவர்கள் உடைய ஸ்வரூப ஜ்ஞான ஆகார தார தம்யமே
கீழ் சொன்ன ஆகாரங்கள் இவர்களுக்கு உண்டாகுகைக்கு ஹேது என்றது ஆயிற்று-

ஆக
முனிவரை இடுக்கியும் -சூரணை -17 -என்று தொடங்கி
இவ் வளைவாக சாஸ்திர தாத் பர்யங்களின்
விஷய பேதமும்
அதிகாரி பேதமும்
அவ் அதிகாரிகளின் பிரதி பத்தி பேதமும்
அதுக்கு அடியான ஜ்ஞான ஆகார தார தம்யமும்
சொல்லப் பட்டது-

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அருளி செயல் அரங்கம் -திரு பல்லாண்டு சாரம் ..

November 21, 2011

திரு பல்லாண்டு

மங்களாசாசனம் -ஆசனம் மூடி போல்
நன்மை உண்டாக வேண்டும் என்று வேண்டுதல்-மங்கள ஆசாசனம்
கண்ணன் மறு அவதாரம் பெரிய வாச்சான் பிள்ளை -ஆவணி ரோகிணி திரு அவதாரம்
ஸ்ரீ நாத முனிகள் அருளிய தனியன்
குரு முகம் -ஆச்சார்யர் சிஷ்யர் பரம்பரை
தத்வ தர்சினி உபதேசம் முக்கியம்-கைங்கர்யம் செய்து பெற்று கொள்ள வேண்டும்
அசேஷான்-ஒன்றும் குறை இன்றி கற்றார்
பட்டன்-உபகாரன் –
முதல் குறி கொள் பொன் கிளி பெற்று கைங்கர்யம் பிரதானம்
சாது பரித்ராணம் பிரதானம் -அவன் அவதாரம்
ஒரு திரு மகள் போல் வளர்த்து -ஜனகன் குலசேகர் போல்
அமரர்களால் தொழ படும் பெரிய பெருமாளுக்கு மாமனார்
பூயோ பூயோ நம -வணங்குகிறோம்
பாண்டிய பட்டர் -அருளிய தனியன்
மின்னார் தட மதிள் சூழ்  வில்லி புத்தூர் ஒரு கால் சொன்னால் போதும்
திரு பல்லாண்டு தான் காவல் போல் மதிள் அவனுக்கு
கிளி அறுத்து சித்தாந்தம் அறுதி இட்டார்
கீழ்மை-நரகம்/சம்சாரம்
மனசை-நெஞ்சமே நல்லை நல்லை/ முன்புற்ற நெஞ்சே
பந்தம் மோஷம் பட மனசே காரணம்
ஆத்மானம் மனசால் உயர்த்தலாம் -சாஸ்திர வாக்கியம் -சரம உபாயம்-பாண்டியன் கொண்டாட -பட்டர் பிரான் வந்தான் என்று கொண்டாடினான்

விருது ஊதி–வேண்டிய வேதங்கள் ஓதி
ஈண்டிய சங்கம் எடுத்து ஓத -சங்கம்=வித்வான் கூட்டம்
ஆத்மா தத்வம் /ஹிரண்ய கர்ப்பம்-பூர்வ பஷம் என்று கொண்டு
அதற்க்கு மறுதலித்து வேண்டிய வேதம்-அவர் அவர்களுக்கு வேண்டிய வேதம்
அபேத சுருதி கொண்டே ஸ்வாமி-ஸ்ரீ பாஷ்யம் அருளியது போல்
சம்ப்ரதாயம் வேண்டிய வேதம் மட்டும் இல்லை
பேசின பேச்சுக்கு தானே கிளி இறங்கிற்று
பதிம் விச்வச்ய -அவனுக்கு அடிமை தாச பூதர் இயற்கையில்
முகப்பே கூவி பணி கொள்ள வேண்டும்
அவனை பிரிந்து தத்வம் ஏதும் இல்லை
சேஷ சேஷி அர்த்தம் -அவனுக்கு மங்களம் ஆசாசனம்/ அவனுக்கே அதிசயம் விளைவிப்பவன்
பர கத அதிசய ஆதேன உபாதேய -மேன்மை விளைவித்து கொண்டே இருக்க வேண்டும்
பாடி தான் மேன்மை வர வேண்டியது இல்லை -நம் கடமை
திரு பள்ளி எழுச்சி பாடுவது கடமை பெருமாள் தூங்காமலும் -ஸ்ரீ ராமாயணம்
உறங்குவான் போல் யோகு செய்தாலும் -இரவு முழுவதும் உத்சவம் நடந்தாலும்
திரு பள்ளி எழுச்சி
அவனுக்கு ஆனந்தம்- ஏற்படாதது ஏற்பட வைக்கிறோம் –
சிக்கனே செம் கண் மாலே -மலர்ந்த செம் கண் ஆழ்வாரை கொண்டதால்
கிருபை அடியாக விகாசம் விகாரம் கருணை பொலிந்து கொண்டே இருப்பவனுக்கு –

முயல்கின்றேன் அவன் தன மாய் கழல் க்கு அன்பையே-வர்த்த மானம்
பிரதி பாத்ய விஷயம்-பல்லாண்டு தெளிவாக பாசுரம் தோறும்
கரண களேபரம் தொடக்கம் கிருஷி கார்யம்
சாஸ்த்ரம்  கொடுத்து /அவதாரம் செய்து /அவஜானம் மாம் மூட
மாதவனே கண்ணுற நிற்கிலும் காண கில்லா
மானை கொண்டு மான் பிடிப்பது போல்
ஆனி சுவாதி
கற்று -பயன்-கைங்கர்யம்-உகப்பு -நித்யம் –
பிரசாத பரமம் நாதவ் -இரட்டை -மால்யோ-
மாமா கேதம் உபாததவ் -கிருகம் தேடி வந்தீர்களே
தந்யோ பாக்கியம் அர்ச்சை இஷ்யாமி
உகந்து கொண்டான்
எட்டு வித புஷ்பம் பிடிக்கும்
இதனால் சூடி கொடுத்த நாச்சியார்
வில் யாகம் வந்தவன் அலங்காரம் செய்து கொண்டு
வஸ்திரம்/நாறிய சாந்தம் /புஷ்பம் வரிசையாக
அழகன் அலங்காரன்   பாண்டியன் கருப்பு -எட்டு மாசம் -மழை காலம்

இரவுக்கு பகல்
அந்த லோகத்துக்கு இங்கு
ஞானி பாட -செல்வ நம்பி -கேட்டு
பர தேவதை பற்ற சோழ
யார் பர தேவதை சபை கூட்ட
வித்வான் ஆக இருந்து கைங்கர்யம் இல்லை என்றால்
பூ தொடுப்பதும் நான் தான் செய்கிறேன்-நின்றனர் இருந்தனர்
அனைத்தும் அவன் கொடுத்த சரீரம் கொண்டு அவனால் செய்கிறோம்
காரணம் து தேயதா -பொதுவான வாக்கியம்
மயங்காமல் அனைத்தும் போய் நாராயண அனுவாகம்
கோர்க்க பட்ட பஞ்ச சன்யம் போல் சங்கங்கள் ஊத அடுத்த அர்த்தம்
ஞானம் -அனுகூலம் -இது தானே ஆனந்தம் -தனித்து ஓன்று இல்லை
கோஷம் இட்டு -வர
குழந்தை ப்ரக்ம ரதம் வர காண வரும் தாய் தந்தை போல் வந்தார்கள்
கண்ணன் வேஷம் போட்டு பரிசு வாங்கிய குழந்தை போல்
அகங்காரம் இன்று -இறுமாந்து இராமல் தன்னை பாராமல் அவனை பார்த்து
பொங்கும் பரிவு -யானை மேல் மணி தாளம் கொண்டு

ஞானம் விட பிரேமம் அதிகம் கொண்டு -தன் கப்பிலே தட்டு மாறி
முதல் இரண்டு /அடுத்து மூன்று
இனியது தனி அருந்தேல்/அனைவரும் வாழ ஆசை கொண்டு
சேஷ வஸ்து -ராஜ்யச்ய அஹம் அஸ்ய – தெரியாமல் அசித் துல்யமாக இருக்கிறோம்
தங்கள் போல்வாரை மட்டும் இன்றி அனைவரையும் அழைக்கிறார்
பிரயோஜனாந்தர பரரையும்-ஆர்த்தன்-ஐஸ் வர்யார்த்தி
அபூர்வ ஐஸ் வர்யார்திலந்தவற்றை பெற புதிசாக
இந்திரிய சுகம் ஆசை -இந்திரியா ராமன் -ஆத்மா ராமன்-கைவல்யார்த்தி -ஜிக்ஜாசி
தோட்டம் போல் அனுபவித்து –
பகவத் லாபார்த்தி -ஞானி பக்தன்-மிகவும் பிடித்தவன் -மம ஆத்மா

மூவரையும் கூபிட்டு
அடைவிலே சேர்ந்து /கூட வந்தவர் உடன் பல்லாண்டு பாடுகிறார்
பலன் சொல்லி முடிக்கிறார்
நான்கு பல்லாண்டு தாம் மனுஷ்யர் தேவர் பிரம -நான்கு
மனுஷ்யர் தேவர் பிரம்மா பல பிரம்மா -நன்கு
வயிறு பிடிக்கிறார் -கதே ஜலே சேது பந்தம்
என்றோ நடந்த
மல் ஆண்ட திண் தோளை காட்ட
பய நிவர்தகங்களுக்கு பயம் பட்டார்
அஹம் வேதமி மகத்மனாம் -சொன்னவர்
தாடகை- பல்லாண்டு பாடுகிறார் விஸ்வாமித்ரர்
பரசுராமன்-கண்டு பயந்து பாலானாம் மம புத்ரானம் அபயம் -தசரதன்
ஏன் மங்களம் -கௌசல்யை
சீதை திக் பாலர்-காக்கட்டும்
சொரூபத்துக்கு அனுரூபம் இது தான்
தோளை பார்த்து -பல்லாண்டு

முப்பத்து மொவருக்கு முன் சென்று
திவ்ய ஆயுத திவ்ய ஆபரணம் பிராட்டி கண்டு பல்லாண்டு
சங்கம்- உள் வெளி வர்ணம் சேர்க்கை கண்டு பல்லாண்டு
திரு மந்த்ரம் அர்த்தம்
அடியோமோடும் சேஷத்வம்
பல்லாண்டு நம சப்தம்
ஜிதந்தே போற்றி தோற்றோம்
நாராயண -மல் ஆண்ட திண் தோள் மணி வண்ணா
உபய விபூதி நாதத்வம்
ஆய உன் சேவடி செய்ய திரு காப்பு
உண்டாகுக வினை சொல் இன்றி
பாடி முடித்த திருப்தி இல்லை

வரம்பு ஒழித்து கைவல்யார்த்தி
ஏடு-தாழ்ந்த மசான பூமி இடுவதன் முன்னம் வாங்கோ
ஏடு சரீரம்
பால் ஏடு தனித்து பிரித்த சூஷ்ம சரீரம்
மூன்று அர்த்தம்
அண்டம் உன் இடம் இருக்கே -அசுரர் ஒழிகின்ற -இழந்த செல்வம்
3 /6 /9 பகவத் லாபார்த்தி ஏழு படிகால் -குறை இன்றி அடிமை செய்து
4 /8 /11/சங்கு  சக்கர லாஞ்சனை- கண்ணன் இது இருந்தால் உள்ளே விட சொன்னான்
வளையல் மெட்டி போல் –
5 /7 /10 -கதி த்ரயம்- மொன்றுக்கும் அவனை பிரார்த்திக்க வேண்டும்
நாட்டினான் தெய்வம் எங்கும்
உபாசனம் பண்ணி இவன் திரு மேனி அழகாய் கண்டு வருவான்
அதனால் கேட்டதுஎல்லாம் கொடுக்கிறான்
கழுத்துக்கு பூண்
தாரகம்  போனகம் போஷகம் அனைத்தும் கொடுக்க
தோடு பிறர் பார்த்து பொறாமை பட
அதுவும் கொடுக்கிறான்
தந்து என்னை -வெள் உயிர் ஆக்க வல்ல
வரும் பொழுது உள்ள தன்மை மாறி

அல் வழக்கு ஒன்றும் இல்லா –
நானும் உனக்கு பல அடியேன்-சொல்லும் படி மாற்றினார்
எங்கேயோ திரிந்த கஷ்டம் மனசில் படாமல் வைப்பான்
அன்று ஈந்த கன்று -மேல் வைக்கும்
அக் குற்றம் -அவ இயல்பே ஆள் கொள்ளும்
திரு மந்த்ரம் அர்த்தம் முடித்து
அல்வழக்கு பலவும் தள்ளி
தேக ஆத்மா விவாகம் -முதலில்
ச்வாதந்த்ரம்  எண்ணம் முடித்து
தேவதந்த்ரம் பஜனம் தள்ளி
உபயான்தரம் சம்பந்தம் தள்ளி
அவன் ஒருவனே போக்கியம் பந்து பிராபோயம்
தன் உகப்புக்கு இன்றி -அவன் உகப்புக்கு
பிரார்தன யாம் சதுர்த்தி முதலில்
இந்த ஆய அவனுக்கு
பல்லாண்டு பாடும்நல் வழக்கு ஒன்றே கொண்டு
சூழ்ந்து இருந்து பாடுவது
பவித்ரன் அவன்
பரமேட்டி வைகுண்ட நாதன்
நீண்ட சார்ங்கம் பற்றி- விரும்பி பாடிய சொல்
இன்று கிடைத்த நாள் நல்லது
நமோ நாராயணா சொல்லி அங்கும் சூழ்ந்து இருந்து ஏத்த பெறுவார்
இங்கு நித்யம் இல்லை
அங்கு நித்யம்
சூழ்ந்து இருந்து ஏத்தி கைங்கர்யம் பண்ண பெறுவோம்
பெரிய வச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் – சூர்ணிகை 16..

November 20, 2011

சூரணை-16-

இனி மேல் சாஸ்திர பிரதி பாத்யார்த்த விசேஷங்களை சங்க்ரஹேண பிரதி பாதித்து கொண்டு
ஏவம் பூத சாஸ்திர அப்யாசம் அநேக யோக்யதா சாபேஷதையா துஷ்கரம் என்று தானே திரு உள்ளம் பற்றி
ஈத்ருசா நேக யோக்யதா நிர் அபேஷத்வேன ஸூகரமாய் சாஸ்திர தாத்பர்யமுமான திருமந்த்ரத்தை ஈஸ்வரன்
வெளி இட்டு அருளிய படியை அருளி செய்கிறார் மேல்-

சதுர் விதமான தேக வர்ண ஆஸ்ரம அதிகாரி
பல மோஷ சாதன கதி யுக தர்ம வியூக ரூப
கிரியாதிகளை அறிவிக்கிற
பாட்டுப் பரப்புக்கு
பெரிய தீவினில்
ஒன்பதாம் கூறும்
மானிட பிறவியும் ஆக்கை நிலையும்
ஈரிண்டில் ஒன்றும்
இளைமையும்
இசைவும் உண்டாய்
புகுவரேலும் என்கிறதுக்குள்ளே விக்னமற
நின்றவா நில்லா
பிரமாதியை கொண்டு அறக் கற்கை அரிது என்று இறே
வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியில்
முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை
தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும்
ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும் தேனும் பாலும் அமுதமாக
வெடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-

சதுர் விதம் என்கிறது மேல் சொல்லுகிற எல்லா வற்றிலும் அனுவர்த்திக்கிறது

அதாவது
1-தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர –ஆகாரேன நாலு வகை பட்ட தேகம்-
2-ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய சூத்திர ரூபேண நாலு வகை பட்ட வர்ணம்
3-பிராமச்சரயா கார்கஸ்த்ய வானப்ரஸ்த சந்த்யா சாத்மக தயா நாலு வகைப் பட்ட ஆஸ்ரமம்
4-ஆர்த்தோ ஜிஜ்ஞாசு அர்த்தா அர்தாதீ ஜ்ஞானி-ஸ்ரீ கீதை -7–16– -என்கிற நாலு வகை பட்ட அதிகாரம்
5-தர்ம அர்த்த காம மோஷங்கள் என்கிற நாலு வகை பட்ட பலம்
6-சாலோக்ய சாமீப்ய சாருப்ய சாயுஜ்யங்கள் என்கிற நாலு வகை பட்ட மோஷம்
7-கர்ம ஞான பக்தி பிர பத்தி கள் என்கிற நாலு வகை பட்ட ஸாதனம்
8-பஞ்சாக்னி வித்யோக்த பிரகாரேண வரும் கர்ப்ப கதி யாம்ய கதி தூமாதி கதி அர்ச்சிராதி கதி என்கிற நாலு வகைப் பட்ட கதி
9-கிருத த்ரேதா த்வாபர கலிகள் என்கிற நாலு வகை பட்ட யுகம்
10-த்யாயன் க்ருதே யஜந் யஜ்ஜை த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயன் யதாப்நோதி தாதாப்நோதி
கலவ் சங்கீர்த்திய கேஸவம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6–12–16–என்று சொன்ன
த்யான யஜன அர்ச்சன சங்கீர்த்தனங்கள் ஆகிய நாலு வகை பட்ட யுக தர்மம்
11-வாசுதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர் ஆகிய நாலு வகை பட்ட வியூகம்
12-கிருதாதி யுகங்களில் – பாலின் நீர்மை செம் பொன் நீர்மை பாசியின் பசும் புறம் போலும் நீர்மை பொற்புடைத் தடத்து
வண்டு விண்டுலாம் நீல நீர்மை –திருச்சந்த -44- படியே சொல்லுகிற ஸீத பீத ஸ்யாம நீல தயா -நாலு வகைப் பட்ட ரூபம்
13-ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்கார மோஷ பிரதத்வங்கள் என்கிற நாலு வகை பட்ட கிரியை
ஆதி சப்தத்தாலே மற்றும்-சதுர் வித மான பிரமேய விஷயங்களை சொல்லுகிறது
14-வாசுதேவாத் உத்பன்னரான கேசவ நாராயண மாதவர்கள்
-சங்கர்ஷணாத் உத்பன்னரான கோவிந்த விஷ்ணு மது சூதனர்கள்
பிரத்யும்நாத் உத்பன்னரான த்ரி விக்கிரம வாமன ஸ்ரீதரர்கள்
அனுருத்நாத் உத்பன்னரான ஹ்ருஷீகேச பத்ம நாப தாமோதரர்கள்-என்ற நாலு வகை பட்ட வியூகாந்தரம்
15-ஆமோத பிரமோத சம்மோத வைகுண்ட ரூபேண
நாலு வகைப் பட்ட வியூகஸ்தானம் முதலானவை பலவும் உண்டு இறே-

ஆக இப்படி
பல சதுர் விதமான அர்த்த விசேஷங்களை பிரகாசிப்பிக்கிற-
பாட்டும் முறையும் -என்கிற பாட்டில் சொல்லுகிற சாஸ்திர விஸ்தரத்துக்கு-

பெரிய தீவினில் இத்யாதி —
நாவலம்பெரிய தீவு -என்கிற போக மோஷ சாதன அனுஷ்டான பூமி ஆகையாலே
த்வீபாந்தரங்களில் உத்க்ருஷ்டமான ஜம்பூத்வீபத்தில் –

நவ கண்டத்திலும் வைத்து கொண்டு
வர்ஷாந்தரங்களை போலே ப்வ்மமான ஸ்வர்க்கம் என்னலாம் படி போக பூமி இராதே
ஸ்வர்க்க மோஷ ரூபமான பலங்களுக்கு சாதன அனுஷ்டானம் பண்ணுகைக்கு ஈடான ஸ்தலமாய்
யந்தி தேவா கில கீத கானி தன்யாஸ்து எ பாரத பூமி பாகே
ஸ்வர்க்கா பவர்க்கா ச்பதமார்க்க பூதே பவந்தி பூய புருஷாஸ் சுரத்வாத்
என்று தேவர்களும் ஸ்லாகிக்கும் படி யான நவம கண்டமான
பாரத வர்ஷமும்

துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷண பங்குர–ஸ்ரீ பாகவதம்-11-2-21- என்றும்
அத்ர ஜன்ம சகஸ்ராணாம் சகஸ்ரைரபி சத்தம,கதாசித் லபதே ஜந்து மனுஷ்யம் புண்ய சஞ்சயாத்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2–3–24-
என்றும் சொல்லுகிற படியே
மானிட பிறவி அந்தோ-திருக் குறும் தாண்டகம் -8- என்று துர்லபமாக சொன்ன மனுஷ்ய ஜன்மமும்-

துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷண பங்குர–ஸ்ரீ பாகவதம்-11-2-21 -என்கிற படியே
மின்னின் நிலையில மன் உயிர் ஆக்கைகள் –திருவாய் -1-2-2-என்று அஸ்திரமாக சொன்ன
சரீரத்தின் உடைய ஸ்தர்யமும்

சாஸ்திர ஞான யோக்ய வர்ணங்களில்
பிரதம கண்யமாய்-குலங்களாய ஈர் இரண்டில் ஓன்று என்கிற ப்ராஹ்மண ஜன்மமும்-

தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரேயசே சதா -என்கிற படியே
புத்தி கொழுந்து விட்டு அப்யசிக்கைக்கு உறுப்பான கிளர் ஒளி இளமை -என்கிற பால்யமும்

யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம்-பெரிய திருவந்தாதி -26- -என்கிறபடியே
எல்லாத்துக்கும் இசைவு வேண்டுகையாலே
இதில் மூழுகைக்கு உறுப்பான இச்சையும் உண்டாய்-

வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவர் ஏலும் என்று
சதாயூர் வை புருஷ என்று வேத சாஸ்த்ரோக்தமான ஆயுஸு நூறும்
மனுஷ்யர்கள் தாங்கள் புகுந்தாகள் ஆகிலும் என்று சொல்லுகிற இந்த ஆயுசுக்குள்ளே

அனந்தபாரம் பஹுவேதி தவ்யம் அல்பஸ் ச காலோ பஹவஸ்ச விக்நா–உத்தர கீதை -7-10–என்றும்
ஸ்ரேயாம்சி பஹிவிக்னானி பவந்தி மஹதாமபி-என்றும் சொல்லுகிறபடியே
சாஸ்திர அப்யாசம் பண்ண வரும் விக்னங்களும் அற்று

நின்றவா நில்லா நெஞ்சு-பெரிய திருமொழி -1-1-4- – என்றும்
சஞ்சலம் ஹி கிருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்-ஸ்ரீ கீதை -6-34-என்றும் சொல்லுகிற படி
ஒரு விஷயத்தில் அரை ஷணமும் நில்லாதே இவனை அடர்த்து தன் வழியே இழுக்கும்
மனசை கொண்டு -கலை அறக் கற்ற மாந்தர் -திருமாலை 7–என்கிறபடி சுருதி ஸ்ம்ருதாதி
சாஸ்த்ரங்களை தாத்பர்யம் கை படும் படு அதிகரிக்கை
ஆமாறு அறிவுடையார் ஆர் அவர் அரிது அன்றே-பெரிய திருவந்தாதி -37- -என்று
தாத் பர்யத்தில் உற்று நிற்கை யுக்தமாம் படி அறிவுடையார் ஆகை அரிதன்றோ
என்கிற படியே அரிது என்று திரு உள்ளம் பற்றி இறே-

வேத சார உபநிஷத் இத்யாதி —
அசாரம் அல்ப சாரஞ்ச சாரம் சார தரம் த்யஜேத் ,பஜேத் சார தமம் ,
சாஸ்த்ரே ரத்னாகரே இவாம்ருதம் -ஸ்ரீ வைகுண்ட தீக்ஷிதீயம் —என்று சார தமமான சாஸ்த்ரத்தை
பஜிப்பான் என்கையாலே வஹ்ய மாணத்தின் சார தமத்தை தர்சிப்பிக்கிறார் மேல்-

(ஆற்ற நல் வகை காட்டும் அம்மான் -வீற்று இருந்து ஏழு உலகம் அடுத்து இனி யாம் உறாமை -சொல்லாமல் விட்டது
ஆழ்வார் உளராகைக்காக -ஸ்ரீ ஈடு -நாளை வதுவை போலே சாத்மிக்க சாத்மிக்க அருள வேண்டுமே –
வேத சாரம் உபநிஷத் இத்யாதி இதில்
அசாரம் பாஹ்யம் -அல்ப சாரம் வேதம் -சாரம் உபநிஷத் –சார தரம் நாராயண அநுவாகம்
-சார தமம் -ஸ்ரீ விஷ்ணு காயத்ரி -திருமந்திரத்தின் சாரதமம் தர்சிப்பிக்கிறார் )

வேத சார உபநிஷத் என்றது
பூர்வ பாகத்தில் சாரமான வேதாந்தம் என்ற படி
அயதார்த்த பிரதி பாகம் ஆகையாலே அசாரமான பாஹ்ய
சாஸ்திரங்கள் போல் அன்றிக்கே யதா பூத வாதியாய் இருந்ததே ஆகிலும்
சேன விதி முதலாக ஜியோதிஷ்டோஹமாதிகள் ஈறாக
ஐகிக பாரலௌகிக புருஷார்த்த சாதனங்களை பிரதி பாதிக்கிற பூர்வ பாகம்
சூத்திர புருஷார்த்த தத் சாதனம் பிரதி பாதம் ஆகையாலும்
சாஸ்திர ஆஸ்திக்யம்–பிரகிருதி ஆத்மா விவேகம் ..இவற்றை பிறப்பிக்கும்
மாத்ரம் ஆகையாலும் அல்ப சாரமாய் இருக்கும்

அங்கன் இன்றிக்கே அனந்த ஸ்திர பல ப்ரஹ்ம ஸ்வரூபாதி களையும் —
தத் பிராப்தி சாதனத்தையும் –பிரதி பாதிக்கையாலே
உபநிஷத் பாகம் சாரமாய் இருக்கும்-

அது தன்னிலும் அவ் உபநிஷத்துகளில் சொல்லுகிற
பர ப்ரஹ்ம பர தத்வ பரம் ஜோதி பரமாத்மாதி சாமான்ய வாசி சப்தங்களாலும்
விசேஷ வாசியான சம்பு சிவாதி சப்தங்களாலும்
பிரதி பாடுகிறவன் நாராயணனே என்று பகவத் பரத்வத்தை ஸூஸ் ஸ்பஷ்டமாக
பிரதி பாதிக்கிற அநந்ய பரமான நாராயண அனுவாகம் சார தரமாய் இருக்கும்-

அது தன்னிலும் காட்டிலும் சர்வ ஸ்மாத் பரதத்வத்துக்கு பிரதான லிங்கமான
அவனுடைய சர்வாந்தர ஆத்மவத்தை பிரகாசிப்பதாய்
அவ் வியாபகமான சகல பகவன் மந்த்ரங்களிலும் ஸ்ரேஷ்டராயிருக்கிற
வியாபக மந்திர த்ரயத்தையும் பிரதி பாதிக்கிற விஷ்ணு காயத்ரி சார தமமாய் இருக்கும்-

இப்படி உள்ள காயத்ரியிலே
வியப்யாத்யஹாராதி சாபேஷமான வியாபகாந்தரங்களில் வ்யாவிருத்தம் ஆகையாலே –
(எவற்றை வியாபிக்கிறார் -எத்தாலே வியாபிக்கிறார் என்று ஸ்பஷ்டமாக இல்லாத விஷ்ணு போல் இல்லாமல் –
வாசுதேவாயா என்பதை போலே அத்யாஹாரம் பண்ண வேண்டாதே)
நாராயணாய வித்மஹே-என்று ஆதரம் தோற்ற பிரதமத்திலே ஓதப் படுகிற –
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே –
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -என்கிற படியே
வேதாந்த தாத்பர்யமாய் –
ரூசோ யஷும்ஷி சாமானி ததைவா தர்வணா நிச , சர்வம் அஷ்டாஷர ஆந்தச்தம்-என்கிற படியே
சகல வேத ஸங்க்ரஹமுமான -திரு மந்த்ரத்தை-

தெய்வ வண்டு இத்யாதி
வேத சாரமாய்
தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திரு நாமம்-
என்னும் படி இருக்கிற இத்தை வேதத்தில் நின்றும் அவன் கிரஹிக்கிற போது
கிரஹித்த பிரகாரத்தை த்ரி பிரகாரமாக வர்ணித்து அருளிச் செய்கிறார்-

அதாவது
தூவி அம் புள் உடை தெய்வ வண்டு—திருவாய் -9-9-4- ஆகையாலே -ஷட் பதமானது
சாகா சஞ்சாரம் பண்ணி மதுவை எடுக்குமா போலே ,
(விபீஷணன் இடம் நம்பிக்கை ஆகிற தேன்-விதுரர் இடம் -பரதன் இடம் பாரதந்த்யம் –இத்யாதிகளை கிரஹித்து
திருமந்த்ரார்த்தம் தானே திருவாய்மொழி )
சார பூத சமஸ்தார்த்த போதக தயா சர்வ ரசமான தேன் போலே இருக்கிற
இத்தை வேத சாகைகளிலே தேனை கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும்-

அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் -பெரிய திருமொழி-5-7-3–என்கிற படி
ஹம்ச ரூபியானவன் ஆகையாலே அன்னமானது நீரிலே கலந்து கிடக்கிற
பாலை விவேகித்து எடுக்குமா போலே
நானும் சொன்னேன் நமரும் உரைமின்-பெரிய திருமொழி -6-10-6- -என்னும் படி இருக்கையாலே
(ரிஷிகளும் சொன்னார்கள்-மற்றைய ஆழ்வார்களும் சொன்னார்கள் -நானும் உம்மைத் தொகை )
சர்வாதிகாரமான பால் போலே இருக்கிற இத்தை
ஓதம் போல் கிளர் வேத நீரனே-திருவாய் -1-8-10- பாலை கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும்-

அமுதம் கொண்ட பிரான்–பெரிய திருமொழி -6-10-3–என்கிற படியே
அசுர பய பீதராய் அமரத்வ சாபேஷரான தேவர்கள் உடைய ரஷணார்த்தமாக
விலஷண போக்யமாய் , விநாச ஹரமும் ஆகையாலே ,அமிர்தம் போல் இருக்கிற இத்தை
நால் வேத கடலிலே அமிர்தத்தை –பெரியாழ்வார் திருமொழி -நாலாம் பத்து
கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும் சொல்லுகிறது –

ஆக
இப்படி வேத சாராமான இத்தை
ஸ்வயமேவ எடுத்து
அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் -வதரி யாஸ்ரமத்து உள்ளானே–பெரிய திருமொழி -1-4-4 -என்கிற படியே
நித்ய சூரிகளுக்கு போக்யமாய்
பரம ஆகாச சப்த வாச்யமான பரம பதத்தை கொடுப்பதான
நிர்ஹேதுக கிருபையால்
நர நாராயணனாய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன்-பெரிய திருமொழி -10-6-1- என்கிற படியே
ஸ்ரீ பதரிகாஸ்ரமத்திலே நர நாராயண ரூபேண அவதரித்து
தானே சிஷ்யனுமாய் ஆச்சர்யனுமாய் நின்று ஸ்வரூப சாஸ்திரம்
சங்குசிதம் ஆகாமல் -சிங்காமை -சுருங்கி விடாமல் -உபதேச அனுஷ்டாங்களாலே வித்ருதமாம் படி பண்ணிற்று
அறக் கற்கை அரிது என்று இறே -என்றதோடு அன்வயிக்கிறது-

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் – சூர்ணிகை 2-15 ..

November 20, 2011

சூரணை -2
இந்த விவேகத்துக்கு பலம் என்பதை சொல்கிறது மேல்-

விவேக பலம் வீடு பற்று-

அதாவது இப்படி அவன் கொடுத்த சாஸ்திர ஜன்ய ஞானத்தாலே
நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு பலம்
த்யாஜ்யத்தை விடுகையும்
உபாதேயத்தை பற்றுகையும் என்கை-

த்யாக ஸ்வீகாரம் என்னாதே வீடு பற்றுகை என்கையாலே
வீடு முன் முற்றவும்–1-2-1-
அற்று இறை பற்று–1-2-5-
என்று ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை உள் கொண்டு அருளிச் செய்தமை தோற்றுகிறது-
(பரித்யஜ்யா மயா லங்கா )

—————————————————————————————————————————————————————————————–

சூரணை -3
த்யாஜ்ய உபாதேயம் தான் எவை என்ன சொல்லுகிறது மேல்-

த்யஜ்ய உபாதேயங்கள் ஸுக துக்கங்கள்-
(வீடு பற்றுதல் -என்றதைச் சொல்லாமல் த்யாஜ்ய உபாதேயங்கள் -பர்யாய சப்தங்கள் )

அதாவது -ஸுகீ பவேயம் துக்கி மா பூவம்-என்று சர்வருக்கும்
துக்கம் அநிஷ்டமாய் ஸுகம் இஷ்டம் ஆகையாலே
துக்கம் த்யாஜ்யம் ஸுகம் உபாதேயம் என்கை-

————————————————————————————————————————————————————————

சூரணை -4
இவை தான் கர்ம அனுகுணமாக நின்ற நின்ற நிலைகளிலே உண்டாகையாலே
இவற்றின் பரம அவதியை சொல்லுகிறது மேல்-

இவற்றுக்கு எல்லை இன்பு துன்பளி பன்மா மாயத்து அழுந்துகையும்
களிப்பும் கவர்வும் அற்று பேர் இன்பத்து இன்புருகையும்-

அதாவது துக்கத்துக்கு பரம அவதி -இன்பு துன்பளி-திருவாசிரியம் -6– -என்று தொடங்கி
(இன்பு துன்பளி தொல் மா மாய பிறவியில் நீங்கா பல் மா மாயத்து அழுந்தும் –திருவாசிரியம் -6)
ஸுக துக்க அவாஹங்களாய் அநாதியாய் துஸ்தரமாய் இருந்துள்ள
பிரகிருதி சம்பந்த நிபந்தனமான ஜன்மங்களில் நின்றும் ஒருகாலும்
நீங்காமைக்கு உருப்பானவையாய்
பல வகை பட்டு இருப்பனவாய்
அகப்பட்டார் தப்ப அரிதா மவையாய்
இன்னமுது-திருவாய் மொழி -7-1-8– என்று தோன்றி
(இன்னமுது எனது தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த முன்ன மாயம் எல்லாம் –திருவாய் மொழி -7-1-8-)
எத்தனையேனும் அறிவுடையாரையும் கலங்கப் பண்ணுகையாலே
ஆச்சர்யங்களாய் இருந்துள்ள
சப்தாதி விஷயங்களில் அகப்பட்டு
அழுந்துமா -என்கிற படி
அனந்த க்லேச பாஜனமான-ஜிதந்தா- சம்சாரத்தில் அழுந்துகை-

சுகத்துக்கு பரம அவதி
களிப்பும் கவர்வும் அற்று -என்று தொடங்கிச் சொல்லுகிற
(களிப்பும் கவர்வும் அற்று பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று ஒளிக் கொண்ட சோதி மயமாய் –திருவாய் -2-3-10 -)
அல்ப அஸ்திரத் வாதி தோஷ துஷ்டமான விஷய லாபத்தாலே வரும் கர்வமும்
தத் அலாபத்தாலே வரும் க்லேசமும்
கழிந்து ஷட் பாவ விகாரங்களும் -அஸ்தி ஜாயதே இத்யாதி -நீங்கி
சுத்த சத்வ தயா பிரகாசமாய் இருக்கிற அப்ராக்ருத விக்ரகத்தை பெற்று
அந்தமில் பேர் இன்பம்-திருவாய் –10-9-11-என்கிற படி
(வந்து அவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை -திருவாய் –10-9-11-)
அபரிமித ஆனந்த மயமான பரமபதத்திலே அடியார்கள் குழாங்களை உடன் கூடி
சுழி பட்டோடும் சுடர் சோதி வெள்ளத்து இன்புற்று-திருவாய் -8–10–5-
(வழி பாட்டோட அருள் பெற்று மாயன் கோல மலரடிக் கீழ் சுழி பாட்டோடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்று –திருவாய் -8–10–5-)
என்கிற படி
அநவரத பகவத் அனுபவத்தாலே ஆனந்த நிர்பரனாய் இருக்கை-

கவர்வுடன் கூடிய களிப்பு இங்கு -அங்கு ஸ்வரூப ஆவிர்பாவம் -கர்மம் அற்று –
இயற்கையான ஆனந்தம் -சுத்த சத்வ மயம் -அப்ராக்ருதம் -அம்ருத சாகரத்தில் நிமக்நராய் அங்கு அன்றோ

இதுக்கு மேலே ஏழு படிக்கட்டுக்கள் காட்டி அருளுகிறார் –
அர்த்த பஞ்சக ஞானம் -ஞாதவ்ய பஞ்சக ஞானம் -அறிந்து கொள்ள வேண்டிய ஐந்தும் -நிரதிசய ஆனந்த ஹேது
ஞாதவ்ய பஞ்சக அஞ்ஞானம் -சம்சாரத்துக்கு ஹேது
சத்வம் -அசத்வம்-அடுத்த படி –
இவற்றுக்கு ஹேது ஜென்ம ஜாயமான கால கடாக்ஷம் இருப்பதும் இல்லாமலும்
கடாக்ஷத்துக்கு அடி கிருபா-கர்மமும்
அநாதிகால அவித்யா / ஸுஹார்த்தம் இவற்றுக்கு காரணம் –
இங்கு சாஸ்த்ர ஞானம் -மேலே சொன்னது அர்த்தபஞ்சக ஞானம் இருப்பதும் இல்லாமையும் —
சர்வ பூத ஸுஹார்த்தம் -கிருபா -கடாக்ஷம் -சத்வ குணம் -ஞானம் -மோக்ஷம்
அவித்யா -கர்மம் -ஜென்மம் -சத்வம் -அஞ்ஞானம் -அனந்த கிலேச பாஜநம்-இப்படி படிக்கட்டுக்கள்
இவற்றுக்கு அடி -அசித் அயன சம்பந்தம் இவற்றுக்கு மூலம் –
இப்படி ஏழையும் அருளிச் செய்கிறார் –
அசித் சம்பந்தமும் அயன சம்பந்தமும் நித்யம் அநாதி –
அசித் சம்பந்தம் அந்தத்துடன் கூடியது
ஒழிக்க ஒழியாத நவவித சம்பந்தம் அவனுடன் தானே –

———————————————————————————————————————————–

சூரணை-5
ஏவம் பூத துக்கமும் சுகமும் இவனுக்கு உண்டாக ஹேது என்ன சொல்லுகிறது மேல்-

அநந்த க்லேச நிரதிசய ஆனந்த ஹேது
மறந்தேன் அறியகிலாத உணர்விலேன் ஏணிலேன் அயர்த்து என்றும்
உய்யும் வகை நின்ற ஒன்றை நன்கு அறிந்தனன்
உணர்வினுள்ளே ஆம் பரிசு என்றும்
சொல்லுகிற ஞாதவ்ய பஞ்சக ஞான -அஞ்ஞானங்கள் –

அதாவது சம்சார சாகரம் கோரம் அநந்த க்லேச பாஜனம் -ஜிதந்தா -1–என்கிற
சம்சார ஆரப்ய ப்ரயுக்த அனந்த துக்க ஹேது
மறந்தேன் உன்னை முன்னும் -என்கிற பர விஷய அஞ்ஞானமும்
(மறந்தேன் உன்னை முன்னும் மறந்த மதியால் மனத்தால் இருந்தேன் எத்தனையும் அதனால்
இடும்பைக் குழியில் பிறந்தே ஏய்த்து ஒழிந்தேன் -பெரிய திருமொழி -6-2-2–)
என்னை அறியகில்லாதே -என்கிற ஆத்ம விஷய அஞ்ஞானமும்
(யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -திருவாய் 2-9 -9)
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன் -என்கிற விரோதி விஷய அஞ்ஞானமும்
(கோடிய மனத்தால் சினத்தொழில் புரிந்து திரிந்து நாயினத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால் -பெரிய திருமொழி -1-6-6-)
பிறவி நோய் அறுப்பான் ஏணிலேன் இருந்தேன் -என்கிற உபாய அஞ்ஞானமும்
(பிறவி நோய் அறுப்பான் ஏணிலேன் இருந்தேன்- பெரிய திருமொழி -1-6-1-)
ஆழி அம் கையானை ஏத்தாது அயர்த்து -என்கிற புருஷார்த்த விஷய அஞ்ஞானமும்-
(கரந்துருவின் அம்மானை அந்நான்று தொடர்ந்த ஆழி அம் கையானை ஏத்தாது
அயர்த்து -பெரிய திருவந்தாதி -82 )
ஜ்ஞாதவ்யார்த்த பஞ்சக ஞான அபாவம்-

நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸுக பாவைக லக்ஷணா–ஸ்ரீ விஷ்ணு புராணம் –6 -5–59 -என்கிற
பகவத் பிராப்தி ரூப மோஷ ப்ரயுக்த நிரதிசய ஸுக ஹேது
(ஸூக பாவைக லக்ஷணம் -பகவத் பிராப்தி ரூபம் -நிரதிசய ஆனந்தம் -ஸ்ரீ வைகுண்டம் ஸ்தானம் –
பகவத் பிராப்தி ரூப மோக்ஷ பிரயுக்த-நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவைக லக்ஷணம் -துக்கம் கலசாத -ஆனந்தம் )
நின்னை நெஞ்சில் உய்யும் வகை உணர்ந்தேன் -என்கிற பர விஷய ஞானமும்
(இவையாய நின்னை நெஞ்சில் உய்யும் வகை உணர்ந்தேன் -பெரிய திருமொழி -6-3-6-)
நின்ற ஒன்றை உணர்ந்தேன் -என்ற ஆத்ம விஷய ஞானமும்-
(அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆம் அவை நன்கு அறிந்தனன்—திருவாய் -5-7-8-)
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆம் அவை நன்கு அறிந்தனன்-என்ற விரோதி விஷய ஞானமும்
அவனது அருளால் உறல் பொருட்டு என் உணர்வின் உள்ளே நிறுத்தினேன் -திருவாய்-8-8-3–என்கிற உபாய விஷய ஞானமும்
ஆம் பரிசு அறிந்து கொண்டு -என்கிற புருஷார்த்த விஷயம் ஆகிற ஞானமும்
(மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து ஆம் பரிசு அறிந்து கொண்டு –திருமாலை -38-)
ஆகிய இவை ஜ்ஞாதவ்யார்த்த பஞ்சக ஞானம் என்கை-

இத்தால் ஞாநான் மோஷ அஞ்ஞானாத் சம்சார -ஆகையாலே
பிராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம்
பிராப்துஸ்ச பிரத்யக் ஆத்மன
பிராப்து உபாயம் பலம் பிராப்தே
ததா பிராப்தி விரோதி ச
வதந்தி சகலா வேதாஸ் ச இதிகாச புராண கா
முனய ச மகாத்மானோ வேத வேதார்த்த வேதின–ஸ்ரீ ஹாரீத சம்ஹிதை –
என்கிற படியே சகல சாஸ்திர தாத் பர்யமாய்
ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு அவஸ்ய ஞாதவ்யமான அர்த்த பஞ்சகத்தையும்
அறியாமையும் அறிகையுமே சம்சார மோஷங்களுக்கு ஹேது என்ற தாயிற்று-

———————————————————————————————————————————————————————————————————————————–

சூர்ணிகை -6
இவ் வஞ்ஞானாதிகளுக்கு அடி எது என்ன சொல்லுகிறது மேல்-

இவற்றுக்கு காரணம் இரண்டில் ஒன்றினில் ஒன்றுகைகள்-

அதாவது இவ் அர்த்த பஞ்சக அஞ்ஞானத்துக்கு காரணம்
முத்திறத்து வாணியத்து இரண்டில் ஒன்றுகை ஆகிய ரஜஸ் தமஸ் பிரசுரதை-
(முத்திறத்து வாணியத்து இரண்டில் ஒன்றும் நீசர்கள் மத்தராய் மயங்குகின்றது -திருச்சந்த -68)

இவ் அர்த்த பஞ்சக ஞானத்துக்கு காரணம்
முக் குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில் ஒன்றுகை ஆகிய சத்வ பிரசுதை என்கை-
(ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி முக் குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில் ஒன்று
நின்று அங்கு இரு பிறப்பு அறுப்பதோர் அறிவரும் தன்மை –திரு வெழு கூற்று இருக்கை )

ரஜஸ் தமச்கள் அன்யதா ஞான விபரீத ஞான ஹேதுவாய்
சத்வம் யதா ஞான ஹேதுவாய் இறே இருப்பது-

அங்கு தான் சுத்த சத்வம் மிஸ்ர சத்வம்-ரஜஸ் தமஸ் கலந்த இங்கு -அதுவும் த்யாஜ்யம்

——————————————————————————————————————————————————————————————————————————–

சூர்ணிகை-7
இவற்றுக்கு நிதானம் எது என்ன சொல்லுகிறது மேல்-

சத்வ அசத்வ நிதானம் இருள் தரும் அமலங்களாக வென்னும்
ஜன்ம ஜாயமான கால கடாஷங்கள்-

சத்வ நிதானம் இருள் தரும் வென்னும்
ஜன்மம்
ஜாயமான கால கடாஷங்கள்-
அசத்வ நிதானம் அமலங்களாக வென்னும் ஜாயமான கால கடாஷங்கள்-

அதாவது
சத்வ இதரங்களான ரஜஸ் தமஸ்களுக்கு நிதானம்
இருள் தரும் மா ஞாலத்தில் இனி பிறவி நான் வேண்டேன் –வாட்டாற்றான் அடி வணங்கே-என்கிற
அஜ்ஞான அவஹமான சம்சாரத்தில் ஜன்மம் –
அவிவேக தின்முகம் -துக்க வர்ஷினி –சம்சாரம் –ஸ்ரீ ஆளவந்தார்

சத்வத்துக்கு நிதானம் –
ஜாயமானம் ஹி புருஷம் யாம் பச்யேத் மது ஸூதன சாத்விகஸ் சது விஞாயேஸ் ச வை மோஷார்த்த சிந்தக-மோக்ஷ தர்மம்-
என்கிற படியே ஜாயமான காலத்திலேயே –அவன் கண்களால் கமலக்கண்ணன் –அமங்கலங்களாக விளிக்கும் -திருவாய்-1-9-9–என்கிற
நிரமலத்வகரமான பகவத் கடாஷம் என்கை-
இந்த ஸ்லோகத்தில் நான்கு படிகளும் உண்டே -கடாக்ஷம் தொடங்கி மோக்ஷ அர்த்த சிந்தக –
அங்கண் மா ஞாலம் பாசுரம் அர்த்தம் -த்யான ஸ்லோகம் இதுவே
பூதாத்தி ரகு நந்தன -பூதராக்கின நெடு நோக்கு -அசுத்தி போக்கினை கடாக்ஷங்கள்-

————————————————————————————————————————————————————————–

சூர்ணிகை-8
இவை தனக்கு மூலம் எது என்ன சொல்கிறது மேல்-

இவற்றுக்கு மூலம் இரு வல் அருள் நல் வினைகள்-

இரு வல் வினை -பாப புண்ய ரூப வலிய கர்மாக்கள்
அருள் நல் வினை -கிருபா மூலம் வரும் ஸூஹ்ருதம் –இவனும் அறியாதே சாஸ்திரமும் அறியாதே —
வரவாறு ஒன்றும் இல்லாமல் வெறிதே அருள் செய்வான்

அதாவது
இஜ் ஜென்மத்துக்கு மூலம்
சார்ந்த இரு வல் வினை-
சார்ந்த இரு வல் வினைகளும் சரிந்து மாய பற்று அறுத்து தீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி
வீடு திருத்துவான் – திருவாய்-1-5-10–என்று
ஆத்மா உடன் பிரிக்க ஒண்ணாத படி பொருந்தி கிடக்கிற
பிரபலங்களான புண்ய பாபங்கள்-

இக் கடாஷத்துக்கு மூலம்
தொல் அருள் நல் வினை–
தொல் அருள் நல் வினையால் சொலக் கூடுங்கோல் தோழிமீர்காள் தொல் அருள்
மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நாமம்-திருவாய்-5-9-10-
என்கிற அவனுடைய ஸ்வாபாகிக கிருபை ஆகிய ஸூஹ்ருதம் என்கை-
தொல் அருள் பூர்வ ஸூஹ்ருதம் -கிருபையால் நம் தலையில் போடுகிறார் அன்றோ

இரு வல் லருள் நல் வினைகள் என்றது
இரு வல் வினையும் அருள் நல் வினையும் என்ற படி-

————————————————————————————————————————————————————————-

சூர்ணிகை-9
இவை தன்னுக்கு அடி என்ன சொல்லுகிறது மேல்-

கர்ம க்ருபா பீஜம் பொய் நின்ற அருள் புரிந்த என்கிற
அவித்யா சௌஹார்த்தங்கள்-

நிதானம் மூலம் பீஜம் நிமித்தம் அடி -பர்யாய சப்தங்ககள்

அதாவது கர்மத்துக்கு பீஜம்
பொய் நின்ற ஞானம்-திருவிருத்தம் 1– என்ற அவித்யை-

கிருபைக்கு பீஜம்
அருள் புரிந்த சிந்தை -அடியார் மேல் வைத்து -இரண்டாம்-59
நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து
வேம்பின் பொருளை நீர்மையாயினும் பொன்னாழி பாடென்று அருள் நீர்மை தந்த அருள் -இரண்டாம் -58-
-என்கிற சௌஹார்தம் என்கை-

ஈஸ்வரஸ்ய ச சௌஹார்தம் -என்று இவ் ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு அவன் கிருஷி
பண்ணுகையில் இழிகைக்கு மூல காரணமாக சௌஹார்தத்தை சொல்லிற்று இறே-
ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -யாத்ருச்சிக ஸூஹ்ருதம் -விஷ்ணோர் கடாக்ஷம் -அத்வேஷம் -ஆபிமுக்யம் –
சாத்விக சமாகமம்—ஆச்சார்ய அபிமானம் மூலம் விஷ்ணு பிராப்தி
கீழ் மேல் ஆறு படிகள் இவற்றைக் குறிக்கும்
இஸ் சௌஹார்தம் அடியாக ஆயிற்று இவ் ஆத்மா விஷயமாக
அவன் திரு உள்ளத்தில் இரக்கம் பிறப்பது-

—————————————————————————————————————————————————————————————-

சூர்ணிகை -10
இவ் அவித்யா சௌஹார்தங்களுக்கு அடி என்ன சொல்லுகிறது மேல்-

ஏதம் நிமித்தம் முன்னமே முதல் முன்னமே யான
அசித் அயன அநாதி சம்பந்தங்கள்-

ஏதத் சப்தத்தாலே இரண்டையும் பராமர்சிக்கிறது
அதாவது
அவித்யைக்கு நிமித்தம்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே
(யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும் மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -திருவிருத்தம் -95-)
என்கிற அநாதியான அசித் சம்பந்தம்-

சௌஹார்தத்துக்கு நிமித்தம்
அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே-
(சார்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே –திருவாய் -2-3-5-)
என்று அநாதியான அயன சம்பந்தம் என்கை
அயன சப்தத்தாலே ஈஸ்வரனை சொல்கிறது
நாராயணன் இறே —

ஆக
அநாதி அசித் சம்பந்தம் அடியாக அவித்யையாய்
அதன் அடியாக புண்ய பாப ரூப கர்மமாய்
அது அடியாக அஜ்ஞான ஹேதுவான ஜென்மமாய்
அது அடியாக ரஜோ தமஸ் அவிருத்தயாய்
அது அடியாக அர்த்த பஞ்சக ஞான அபாவமாய்
அது அடியாக அஜ்ஞாநாத் சம்சார என்கிற படியே சம்சார துக்கம் வரும்-

அநாதி அயன சம்பந்தம் அடியாக
பகவத் சௌஹார்த்தம் உண்டாய்
அது அடியாக கிருபை உண்டாய்
அது அடியாக விசேஷ கடாஷம் உண்டாய்
அது அடியாக சத்வ விருத்தி உண்டாய்
அது அடியாக அர்த்த பஞ்சக ஞானம் உண்டாய்
அது அடியாக ஞானான் மோஷம் -என்கிற படியே
மோஷ ஸுகம் உண்டாம் என்று ஆய்த்து-

——————————————————————————————————————————————————————————————————————

சூர்ணிகை– 11
இவ் உபய சம்பந்தமும் ஆத்ம வஸ்துவுக்கு செய்யும் அவற்றை சொல்லுகிறது மேல்-

இவை கிட்டமும் வேட்டு வேளானும் போலே ஒண் பொருள் பொருள் அல்லாதவை
என்னாதே நானிலாத யானும் உளன் ஆவான் என்கிற ஸாம்யம் பெற
தின்றூதி அந்தமும் வாழ்வும் ஆகிற ஹானி சத்தைகளை உண்டாக்கும்-

இவை கிட்டம் போலே -ஒண் பொருள் என்னாதே நானிலாத என்கிற ஸாம்யம் பெற
தின்று அந்தம் ஆகிற ஹானியை உண்டாக்கும்-

இவை வேட்டு வேளானும் போல பொருள் அல்லாதவை என்னாதே யானும் உளன் ஆவான் என்கிற
ஸாம்யம் பெற ஊதி வாழ்வும் ஆகிற சத்தையை உண்டாக்கும்-

அதாவது
அசித் சம்பந்தம்
தன்னோடு சேர்ந்த மாணிக்கத்தை ஒளி அற தின்று உரு அழித்து தன்னை போலே
ஆக்கும் கிட்டம் போலே –
(எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள்-திருவாய் –1-2-10-)
அந் நலத்து ஒண் பொருள் -என்கிற விலக்ஷண ஜ்ஞான குணகமாய்
ஸூயம் பிரகாசமான வஸ்து என்று இதன் சீர்மை பாராதே-
(இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு -1-2-4-)-இல்லது-என்றும்-
யன்நாஸ்தி – ஸ்ரீ விஷ்ணு புராணம் -2–12–37- என்றும்
சொல்லுகிற தன்னோடே-நானிலத முன் எலாம்-திருச்சந்த –65 -என்கிற ஸாம்யம் பெரும் படியாக ஞானம் லேசம் அற தின்று
அந்தமும் வாழ்வும் என்கிற வற்றில் அந்தம் ஆகிற ஹானியை உண்டாக்கும்
அசந்நேவ ச பவதி-தைத்ரியம்-என்கிற படியே சத்தா ஹானியை பண்ணும் என்கை-

அயன சம்பந்தம்
கீட பேசக்ருதா ருத்த குட்யாந்தர அனுசிந்தயன் சம்ப்ரம்பபய யோகேன விந்ததே தத் ஸ்ரூபதாம்-என்கிற படியே
ஏதேனும் ஒரு கீடத்தை கொண்டு வந்து வைத்தூதி
ஸ்வ சாம்யாபந்னம் ஆக்கும் வேட்டு வேளானைப் போலே
பொருள் அல்லாத என்னை-திருவாய்-5-7-3–என்கிற படியே
ஞான அபாவத்தாலே அவஸ்து சப்த வாச்யமாய் கிடக்கிற
இதின் சிறுமை பாராதே ஸ்வரூபேண விபுவான தன்னோடு
பரமம் ஸாம்யம் உபைதி-முண்டகம் –3-1-3–என்கிறபடியே
உள்ள உலகு அளவும் யானும் உளன் ஆவான் -(வினைப்படலாம் விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால்
உள்ள உலகு அளவும் யானும் உளன் ஆவன் என் கொலோ உலகு அளந்த மூர்த்தி உரை –பெரிய திருவந்தாதி –76- )என்று
ஜ்ஞனத்வாரா வரும் விபுத்வ ஸாம்யம் பெறும்படி
தன் நிறமாக ஊதி வாழ்வு ஆகிய சத்தையை உண்டாக்கும் என்கை-
தன்நிறம் -உண்டாக்கும் என்றது அஷ்ட குணங்களில் சாம்யம் என்றபடி
பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல்லுயிர்க்கு எல்லாம் அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான்
அரங்க மா நகர் அமர்ந்தானே –பெரிய திருமொழி -5-7-2-என்கிறபடி வாழ்வாகிற இருப்பை உண்டாக்கும் –
சந்த மேனம் ததோ விது-தைத்ரியம்- என்று பகவத் ஞான அனந்தரம்
ஆத்ம சத்தா சித்தியாக சொல்லிற்று இறே-

———————————————————————————————————————————————————————–

சூரணை 12
இப்படி அநாதியாக சொன்ன உபய சம்பந்தமும்
ஆத்மாவுக்கு நித்தியமாய் இருக்குமோ -அந்தம் உண்டோ -என்கிற சங்கையில் சொல்லுகிறது மேல்-
(மோக சாந்த்யர்த்தமாக -நித்ய ஆத்மா -கர்மா பற்று இன்றி செய்ய வேண்டியதை ஸ்ரீ கீதையில் இரண்டாவது அத்யாயம்
கர்மத்தால் சரீரம் -காரணம் போனால் கார்யம் போகுமே -கர்மாதீனமே தேகம் கவலைப்படாதே என்று அருளிச் செய்கிறார் -)

ஓன்று
கூடினதாய்
பற்று அறுக்க மீண்டு ஒழிகையாலே
பழ அடியேன் -என்னும் அது ஒன்றுமே ஒழிக்க ஒழியாதது-

அதாவது
அசித் சம்பந்தம் -பெரும் துயர் இடும்பையில் பிறந்து கூடினேன் –
என்கையாலே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் அன்றிகே வந்தேறியாய்
-வினை பற்று அறுக்கும் -என்ற ஒரு சர்வ சக்தி ஸ வாசனமாக போக்க
அடைந்த வரு வினையோடு அல்லல் நோய் பாவம் மிடைந்து அவை மீண்டு ஒழிய –
என்கிற படி நிவ்ருத்தமாய் விடுகையாலே
திரு மாலே நானும் உனக்கு பழ அடியேன் -என்னும் படி
அநாதியாய் இருக்கிற சேஷ சேஷி பாவ ரூப பகவத் சம்பந்தம் ஒன்றுமே
-உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்கிற படி
ஈஸ்வரனாலும் சேதனனாலும் கழிக்கப் பார்த்தாலும்
கழிக்கப் போகாது என்கை-
வந்தேறி இல்லையே —

இத்தால்
அசித் சம்பந்தம் ஆகந்துகமாய் கர்மோபாதிகம் ஆகையாலே
அநித்யமாய் இருக்கும்
அயன சம்பந்தம்
அநாதியாய் நிருபாதிகம் ஆகையாலே
நித்தியமாய் இருக்கும் என்றது ஆயிற்று-

ஆனால் ஆகந்துகமான இத்தை அநாதி என்பான் என் என்னில்
வந்தேறின காலத்துக்கு அடி தெரியாமையாலே
அநாதி என்று பிரமாணங்கள் சொல்லுகையாலே
ஒரு நாள் வரையிலே பகவத் பிரசாதத்தாலே அது
கழிய காண்கையாலே வந்தேறி என்னும் இடம் நிச்சிதம் இறே-

———————————————————————————————————————————————————————————————————-

சூரணை -13
இவ் அயன சம்பந்தமே கீழ் சொன்ன சாஸ்திர பிரதானத்துக்கு
ஹேது என்கிறார் மேல்-

இந்த உதர தரிப்பு திரை குணிய விஷயம் ஆனவற்றுக்கு பிரகாசம்-

அதாவது
இந்த நாராயணத்வ பிரயுக்தமான குடல் துவக்கு
திரை குணிய விஷயா வேதா -என்கிற படி சத்வ ரஜஸ் தமோ
குண த்ரய வச்யரான சேதனரை விஷயமாக உடைய வேதங்களை
பிரகாசிப்பைக்கு ஹேது என்ற படி
தம பிரசுரராயும் ரஜோ பிரசுரராயும் சத்வ பிரசுரராயும் இருக்கும்
சேதனர் உடைய ருசி அனுகுணமான
புருஷார்த்த
தத் சாதனங்களை இறே
பூர்வ பாகத்தில் பரக்க சொல்கிறது
ஆகையால் திரை குணிய விஷயம் ஆனவை என்கிறது-

இத்தால் -நீர்மையினால் அருள் செய்தான் -என்று கீழ் சொன்ன
சாஸ்திர பிரதானத்துக்கு பிரதான ஹேது – சம்பந்தம்- என்றது ஆயிற்று-

————————————————————————————————————————————————————————————————————————-

சூரணை-14
இப்படி சம்பந்தம் அடியாக செய்தான் ஆகில்
மோஷ ஹேதுவான சாஸ்திரங்களையே காட்டாதே
ஐகிக பார லௌகிக போக சாதனவிதயா கதயா பந்த ஹேதுவான
சாஸ்திரங்களையும் காட்டுவான் என் என்ன சொல்லிகிறது மேல்-

வச்தலையான மாதா பிள்ளை பேகணியாமல் மண் தின்ன விட்டு
பிரத் ஔஷதம் இடுமா போலே எவ் உயிர் க்கும் தாயாய் இருக்கும்
வண்ணமான இவனும் ருசிக்கு ஈடாக பந்தமும் பந்தம்
அறுப்பதோர் மருந்தும் காட்டும் இறே-

அதாவது
வாச்தல்யை யுக்தையான பெற்ற தாய் ஆனவள்
மண்ணை ஆசை பட்ட பிள்ளை பேகணியாமல் முந்துற
மண்ணைத் தின்ன விட்டு பின்னை அதுக்கு மாற்று மருந்து இடுமா போலே
எவ் உயிர்க்கும் தாயோன் -என்றும் தாய் இருக்கும் வண்ணமே -என்றும்
(திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் எல்லா எவ் உயிர்க்கும் தாயோன் தான் ஒருவனே -திருவாய் -1-5-3- -என்றும்
தாய் இருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்று இருத்தி உய்யக் கொண்டான் -பெரிய திருமொழி -11-6-6- -என்றும்)
சொல்லுகிற படி சகல ஆத்மாக்கள் அளவிலும் மாத்ருவத் வச்தலனான இவனும்
சேதனர் உடைய ருசிக்கு ஈடாக பந்தங்களையும் தர்சிப்பித்து ,பின்னை
பந்த நிவ்ருத்தக பேஷஷம் ஆனவற்றையும் தர்சிப்பிக்கும் இறே என்கை-

இத்தால்
இப்படி செய்தது சம்பந்த பிரயுக்த வாச்தல்ய கார்யம் ஆகையாலே
சம்பந்த கொத்தை வாராது என்றது ஆயிற்று-

—————————————————————————————————————————————————————————-

சூரணை -15
இப்படி வச்தல்யத்தால் செய்தான் ஆகையிலும்
குண த்ரய வச்யரான சேதனருக்கு ருசி அனுகுணமான பல
சாதனங்களை விதிக்கிற பந்ந்தக சாஸ்திரங்களையும் தர்சிப்பித்தால்
அவர்கள் சம்சரித்தே போகைக்கு உடல் ஆகாதோ என்ன அதுவும்
க்ரமேண அவர்கள் ஈடேற இட்ட வழி என்கிறார் மேல்-
(மஹா கிரம -676-திரு நாமம்-க்ரமேண படிக்கட்டுகளை கட்டி வைத்து இருப்பவர் )

அது தானும்
ஆஸ்திக்ய
விவேக
அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தி
பார தந்த்ர்யங்களை உண்டாக்கின வழி-

அதாவது
மோஷைக சாஸ்திரம் மாத்ரம் தர்சிப்பியாதே சேன விதி முதலான
பந்தக சாஸ்திரங்களையும் தர்சிப்பித்து தானும் தம பிரசுரராய்
அர்த்தார்த்த ஜனத்துக்காக பரஹிம்சா சீலராய் திரிகிற நாஸ்திகரை குறித்து
மோஷத்தை விதித்தால் ,அவர்களுக்கு அது ருசியாமையாலே
அந்த பரஹிம்சா ரூபமான அபிசார கர்மத்தை
சியேனந அபிசரன் யஜதே—ஆபத்ஸ்தம்ப சூத்ரம் -என்று விதித்து தத் பல சித்தியாலே
அவனுக்கு சாஸ்திரம் உண்டு என்கிற ஆஸ்திக்யத்தை உண்டாக்கி-

ஆஸ்திகன் ஆன பின்பு
ஜியோதிஷ்டோமேன ஸ்வர்க காமோ யஜதே–இத்யாதிகளாலே
ஸ்வர்க்காதி புருஷார்த்த தத் சாதனங்களை விதித்து
அவ் வழியாலே பிரகிருதி ஆத்ம விவேகத்தை உண்டாக்கியும்
இப்படி பிரகிருதி ஆத்ம விவேகம் பிறந்த பின்பு ஆத்ம போகத்துக்கு வழி காட்டி-
அவ் வழியாலே அந்ய சேஷ நிவ்ருத்தியை உண்டாக்கி-

அநந்தரம்
பரமாத்மா போக வைலஷண்யத்தையும்
தத் பிராப்தி சாதன பக்தியையும் காட்டி அவ் வழியாலே
ஸ்வ ஸ்வாதந்த்ர்யா நிவ்ருத்தியையும் உண்டாக்கியும்-

அநந்தரம்
உபாயாந்தர துஷ் கரத் வாதிகளாலே தளரும் அளவில்
ஸ்வ யத்ன நிவ்ருத்தி ரூப பிரவ்ருதியில் மூட்டி
ஸ்வ ரூப யாதாத்மா வேஷமான பார தந்த்ர்யத்தை உண்டாக்கியும்-
இப்படி கிரமத்திலே ஈடேறுகைக்கு இட்ட வழி என்ற படி-

இவை கிட்டமும் வேட்டு வேளானும் போலே -சூர்ணிகை 11- தொடங்கி
இவ் வளவாக சம்சார மோஷ காரண பரம்பரைகளிலே சரம அவதிகளான
அசித் அயன சம்பந்தங்கள் ஆத்ம வஸ்துவுக்கு செய்யுமவைகளும்
அதில் அசித் சம்பந்தம் அநித்தியம்
அயன சம்பந்தம் நித்யம் என்றும்
அந்த அயன சம்பந்தம் கீழ் சொன்ன சாஸ்திர பிரதானத்துக்கு ஹேது என்றும்
அதில் மோஷைக சாஸ்திரம் அன்றிக்கே பந்தக சாஸ்திரத்தையும் தர்சிப்பித்து
வச்தலன் ஆகையாலே சேதன ருசி அனுகுணம் ஆக வேண்டும் என்றும்
அது தானும் கிரமத்திலே அவர்களை உஜ்ஜீவிப்பிக்கைக்கு இட்ட வழி என்றும் சொல்லிற்று ஆயிற்று-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் – சூர்ணிகை 1 ..

November 20, 2011

ஆச்சார்ய ஹிருதயம்- சூர்ணிகை 1 ..
இதில் முதல் சூரணை யாலே –

ஹர்த்தும் தமஸ் சதசதீ ச விவேக்துமிசோ மானம் பிரதீப மிவ காருணிகோ ததாதி-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத்தர -1–என்கிற படியே ,
ஆகஸ்மிகக் ரூபவானான சர்வேஸ்வரன் அஞ்ஞரான சம்சாரி-சேதனருக்கு
சத் அசத் விவேக பரிகரமாக சாஸ்திர பிரதானதத்தை பண்ணி-அருளின படியை அருளி செய்கிறார்-

காருணிகனான சர்வேஸ்வரன் –
அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி-
பிறங்கு இருள் நீங்கி
மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு
நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு
மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை
நீர்மையினால் அருள் செய்தான்-

காருணிகனான சர்வேஸ்வரன்–

கிருபா யோகச்ச ஸாஸ்வதாத்– ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -கிருபா விசிஷ்ட ஸ்வதந்த்ரன் என்ற படி-
கிருபாவான் ஆனாலும் ஸ்வதந்த்ரன் அன்று ஆகில் தான் நினைத்த படி கார்யம் செய்ய போகாது-
கேவல ஸ்வதந்த்ரன் ஆனாலும் சம்சார மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான ஸ்வாதந்த்ர்யம்-
சேதன உஜ்ஜீவன அர்த்தமான க்ருஷிக்கு உறுப்பு ஆக மாட்டாது-
ஆன பின்பு க்ருபா விசிஷ்டமான ஸ்வாதந்த்ர்யம்- இறே
சம்சார சேதன உஜ்ஜ்ஜீவன விஷயமாக-அவன் பண்ணும் க்ருஷிக்கு ஹேது வாவது-

அதவா
சர்வேஸ்வரன் என்று ஈசேசிதவ்ய சம்பத்ததை சொல்லுகிற தாகவுமாம்-
க்ருபா யோகாச்ச ஸாஸ்வதாத் –என்ற அனந்தரம் -ஈசேசி தவ்ய சம்பந்தாத் அநிதம் பிரதமாதபி-ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -என்கையாலே
க்ருபா யோகமும் சம்பந்தமும் இரண்டும் சம்சார சேதன-சம் ரஷணமார்த்த பிரவ்ருத்தி ஹேது இறே –
க்ருபா யோகத்துக்கு மேலே-சம்பந்தம் உக்தம் ஆகையாலே சம்பந்த பிரதான்யம் சொல்லிற்று ஆகிறது .-
இத்தால் இவை நம்முடைவை அன்றோ என்கிற அபிமானத்தோடே-
பர துக்க அசஹிஷ்ணுத்வ ரூபையான கிருபையும் கூடுகையாலே-
உத்தரோத்தரம் சேதன உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணும் போரும் அவன்-என்றது ஆய்த்து

அறிவிலா மனிசர் –
அறிவிலா மனிசர் எல்லாம் -திருமாலை -13—என்கிற படி
அஞ்ஞான தமோ யுக்தரான சேதனர் -அந்தம் தம இவ அஞ்ஞானம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-62–என்னக் கடவது இறே
ஹர்த்தும் தம -ஸ்ரீ லஷ்மி தந்திரம்-1–என்று அஞ்ஞானத்தை தமஸ் சப்தத்தாலே அருளி செய்தார் இறே
இத்தால் அநாதய அஞ்ஞான அந்த காரத்தாலே அபி பூதராய் அத்தாலே
பிரகிருதி-ஆத்மா விவேகம் முதலான ஒரு விவேகம் இன்றிக்கே இருக்கிற சம்சார சேதனர் என்கை

உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி –
உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி என்றும்
ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் என்றும் சொல்லுகிற படியே
தைல வர்திகளால் உண்டான வழுக்கு அன்றிக்கே திணுங்கின
தேஜஸ் ஆய் இருக்கிற ஞானம் ஆகிற உஜ்ஜவல தீப பிரகாசத்தை உடைத்தாய்
ஞானத்தை விளக்கு என்கிறது ஸ்வ பர பிரகாசத்வம் ஆகிற ஸ்வாபவ சாம்யத்தாலே–

பிறங்கு இருள் நீங்கி –
பிறங்கு இருள் நிறம் கெட என்றும்
பின் இவ் உலகினில் பேர் இருள் நீங்க என்றும்
சொல்லுகிற படியே மிகுந்த அஞ்ஞான அந்த காரம் போய்

மேல் இருந்த நந்தா விளக்கை கண்டு
வேதார்த்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கு என்றும்
நந்தா விளக்கு என்றும்
வேத விளக்கினை என்றும்
சொல்லுகிற படியே வேதாந்தங்களில் சர்வ ஸ்மாத் பரனாக பிரகாசியா நிற்ப்பானுமாய்
நித்தியமாய்
ஸ்வயம் பிரகாசமான ஞானத்தை ஸ்வரூபமாக உடையவனுமாய்
வேதை க சமதி கம்யனுமான தன்னை
என் தக்க ஞானக் கண்களால் என்கிறபடியே-கண்டு
என்கிற படியே ஞான சஷுசாலே தர்சித்து

நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு
இவை அன்றே நல்ல இவை அன்றே தீய என்கிற படியே
சத் அசத் விவேகம் பண்ணுகைக்கு
சத் அசதீச விவேக்தும் –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -உத்தர -1- -என்றார் இறே
நல்லதும் தீயதும் விவேக்கிகைக்கு -என்கிற இது ஸாமான்யேன
விலஷண அவிலஷண விவேகத்தை காட்டுமே ஆகிலும்
இவ் இடத்தில் பகவத் விஷயம் நன்று சம்சாரம் தீது என்று விவேகிக்கையைக் காட்டக் கடவது
நந்தா வேத விளக்கை கண்டு நல்லதும் தீயதும் விவேக்கிகைக்கு -என்கையாலும்
விவேக பலமான த்யாக ஸ்வீகார விஷயங்கள் சம்சார மோஷங்கள் ஆகவே மேல் சொல்லுகையாலும் ..
(விவேக பலம் வீடு பற்று மேலே வரும் )
பகவத் விஷயத்தை கண்ட பின்பு சத் அசத் விவேகம் பண்ணுகை யாவது என் என்னில் ?
பிரதி கோடி கண்டால் ஒழிய அதின் தோஷம் -யதாவாக-ஹேயதாக தோன்றாமை யாலும்
இத்தை பற்ற இது நன்று இது தீது என்னும் போது உபய கோடியும் கண்டு கொள்ள வேண்டுகையாலும் சொல்லிற்று

மறையார் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின பிரதீபமான கலைகளை
மறையார் விரிந்த விளக்கை என்றும்
துளக்கமில் விளக்கம் என்றும் சொல்லுகிற படியே
அகாரோ வை சர்வா வாக்-என்கையாலே
வேத ரூபேண விஸ்த்ருதம் ஆய்த்து தான் என்னும் படி
சகல வேத காரணமாய் , தனக்கு ஒரு காரணம் இல்லாமையாலே ,
சலனம் இன்றிகே சகலார்த்த பிரகாசமாய் இருக்கிற அ காரத்தில் நின்றும் உத்பன்னமாய்
தீபாதுத்பன்ன பிரதீபம் போலே -மானம் பிரதீபமிவ -என்கிற படியே
த்யாஜ்ய உபாதேய அர்த்தங்களை ஸ்புடதரமாக பிரகாசிபதாய் நின்று உள்ள
பன்னு கலை நால் வேதம் என்றும்
கலைகளும் வேதமும் -இத்யாதியாலும்
சொல்ல படுகிற ஸ்ருதியும் தத் உப ப்ரும்ஹணங்களுமான சாஸ்த்ரங்களை ..

மறையார் விரிந்த விளக்கை என்றும்
துளக்கமில் விளக்கமாய் என்றும்
அகாரத்தை ஈச்வரனோடு சாமாநாதிகரித்து
அ இதி ப்ரஹ்ம -என்கிற படியே வாச்ய வாசக சம்பந்த்தாலே-(அக்ஷராணாம் அஹம் அஸ்மி -ஸ்ரீ கீதை )

நீர்மையினால் அருள் செய்தான்
நீர்மை– ஸ்வ பாவம் –தன் ஸ்வாபத்தினால் கொடுத்தான் என்கை
(ஸ்வரூபம் -தனிமை -ஸ்வம் ஆஸ்ரய ரூபாயதி -ஸ்வ பாவம் -பொது -)
அதாவது தன் சேஷித்வ ஸ்வாபத்தாலே என்னுதல் -சமுச்சயமாதல்-
சேஷித்வம் காருணிகத்தவம் இரண்டும் மூன்று யோஜனைகள்
பூர்வ யோஜனை-நீர்மையினால் என்கிறதற்கு பூர்வர்கள் இட்ட -பெரிய திரு மொழி-2-8-5—வியாக்யனத்திற்க்கும்
இந்த உதிர தெறிப்பு திரை குணிய விஷயம் ஆனவற்றுக்கு பிரகாசம்-சூத்ரம் -13-என்று இவர் தாமே மேல் அருளி செய்வதற்கும் சேரும்
நடுவில் யோஜனை -காருணிகனான -என்று இவர் பிரதமத்திலே எடுத்ததுக்கும்
ஸ்ரீ பட்டர்–கருணிகோ ததாதி-என்று அருளி செய்ததற்கும் -சேரும்
மூன்றாம் யோஜனை–காருணிகனான சர்வேஸ்வர -என்கிற இடத்தில் சொன்ன இரண்டாம் யோஜனைக்கு சேரும்-

ஆக இச் சூர்ணையால் அஜ்ஞரான சம்சாரி சேதனர் ஞான பிரகாசத்தை உடையவராய்
அந்த அஞ்ஞானம் நீங்கி தன்னைக் கண்டு சத் அசத் விவேகம் பண்ணுகைக்கு உறுப்பாக
ஸ்ரீ ஈஸ்வரன் சாஸ்திர பிரதானம் பண்ணின படியை தன் நிதாதானத்தோடே அருளிச் செய்தார் ஆய்த்து

முன்னோர் போற்றும் பொருளே அன்றி அவர் மொழியும்
பொன்னே போல் போற்றுவம்-நன்னூல்

மானம் பிரதீபமிவ காருணிகோ ததாதி -பட்டார் ஸ்ரீ ஸூக்தி –

எறியும் நீர் வெறி கொள் வேலை மா நிலத்து உயிர் கள் எல்லாம்
வெறி கொள் பூம் துவள மாலை விண்ணவர் கோனை ஏத்த
அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில்
பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் ஒழிந்து ஒழியும் அன்றே -திரு மாலை -13-

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி
வைத்து அவனை நாடி வலைப் படுத்தேன் –மெத்தெனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் என் நெஞ்சத்து
பொன்றாமை மாயன் புகுந்து -மூன்றாம் திரு அந்தாதி -94-

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் -இரண்டாம் திரு அந்தாதி -1-

உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி-
உணர்வு எனும் பெரும் பதம் -வாடினேன் வாடி பாசுரத்தில் -இந்த பாசுரத்தில்
இங்கு பிரசக்தி லேசமும் இல்லை –
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி பிறங்கு இருள் நிறம் கெட-திரு மங்கை ஆழ்வார்
பின் இவ் உலகினில் பேர் இருள் நீங்க -பெரிய ஆழ்வார்
இவை இரண்டையும் சேர்த்து அருள தான் — பிறங்கு இருள் கெட்டு — என்றும்
பேர் இருள் நீங்கி –என்றும் அருளாமல்
பிறங்கு இருள் நீங்கி என்று அருளி செய்கிறார்

வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கு-பெரிய ஆழ்வார்
நந்தா விளக்கே -திரு மங்கை ஆழ்வார்
மிக ஞான மூர்த்தியாய வேத விளக்கினை கண்டு -நம் ஆழ்வார்
மூன்றையும் சேர்த்து மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு –

இவை அன்றே நல்ல இவை அன்றே தீய -நம் ஆழ்வார்
சதச்தீச விவேக்தும் -பட்டர்
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை -திரு மங்கை ஆழ்வார்
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கமில் விளக்கமாய் -ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார்-

இந்த சூர்ணையில்
ஞானம் ஒரு விளக்கு
எம்பெருமானை ஒரு விளக்கு
அகாரம் ஒரு விளக்கு
சாஸ்திரம் ஒரு விளக்கு-பிரதீபமான -(மானம் பிரதீபமிவ காருணிகோ ததாதி -பட்டர் )
கலைகளை -விசேஷ்யம் -கலைகளும் வேதமும் நீதி நூலும் -என்றும் –
பன்னு கலை நால் வேதம்-என்றும் ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்

மறையாய் விரிந்த விளக்கு-எம்பெருமானை ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்
இவர் சகல வாக்குக்கும் வித்தான அ காரத்தை சொல்லி சாமாநாதி கரண்யா நிதானத்தினால்
எம்பெருமான் பொருள் படுகிறான்-

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆச்சார்ய ஹிருதயம்- ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் – அவதாரிகை ..

November 19, 2011

ஆச்சார்ய ஸ்வாந்த வக்தாரம் அபிராம வராபிதம்
ஸ்ரீ கிருஷ்ண தநயம் வந்தே ஜகத் குரு வராநுஜம் –

திராவிடம் நாய ஹ்ருதயம் குரு பர்வ க்ரமாகதம்
ரம்யா ஜாமாத்ரு தேவேந தர்சிதம் க்ருஷ்ண ஸூநுநா –

பண வாள் அரவு அணை பள்ளி பயில்பவர்க்கு எவ் உயிரும்
குணா போகம் என்று குருகைக்கு அதிபன் உரைத்த தூய
உணர் பாவின் உள் பொருளும் அறியா உலகு அறிய
மணவாளன் மாறன் மனம் உரைத்தான் வண் முடும்பை வந்தே–குண போகம் -அடிமை என்றவாறு-

மாதவத்தோன் மாறன் மனம் கூறும் மணவாளன்
தோ தவத்தித் தூய் மறையோரான பெற்றார் –நீதி யினால்
ஆங்கு அவர் தாள் சேர் பெற்றாராய் மணவாள மா முனி
பூம் கமலத் தாள்கள் நெஞ்சே போற்று-

ஸ்ரீய பதியாய் சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரன் நிரதிசய ஆனந்த மயமான ஸ்ரீ வைகுண்டத்திலே-
நித்ய நிர்மல ஞானாதி குணகராய் ஸ்வ சந்தான அனு வ்ருத்தி ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி பேதரான நித்ய ஸூரிகளாலே-
அநவரத பரிசர்யமான சரண நளினனாய் கொண்டு எழுந்து அருளி இரா நிற்க,
லீலா விபூதி விபூதியில்-உள்ளோர் அவர்களோபாதி தன்னை அனுபவிக்க பிராப்தி உண்டாய் இருக்க ,-
இழந்து கிடக்கிற படியைக் கண்டு ,அதி வியாகுலனாய் ,இவர்களை உஜ்ஜீப்பிக்க உண்டான நசையாலே ,

அசித விசேஷிதான் பிரளய அசீமகி சம்ஸ்ரத கரண களேபர கட யிதம் தயமாநின-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்-உத்தர சதகம் -41- என்கிற படியே-
கரண களேபர விதுரராய் அசித விசேஷிதராய் அத ஏவ போக மோஷ சூன்யராய் கிடக்கிற தசையிலே-,
தயமான மனா வாய்க் கொண்டு-ஸ்வ சரண கமல சமாஸ்ரய அனேப கரணமான-கரண களேபரங்களை கொடுத்து-
ஞான விகாசத்தையும் பிரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தியையும் உண்டாக்கி-
ஞான கார்ய மான- த்யாஜ்ய உபாதேய விவேக பரிகரமாக–
மானம் பிரதீபமிவ காருணிகோ ததாதி –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்-உத்தர சதகம்-1- -என்கிற படி
வேத பிரதானத்தை பண்ணி அநந்தரம் .-

மன்வாதிகளுக்கு அந்தர்யாமியாய் நின்று சேதனருடைய விசிஷ்ட வேஷ விஷயமான-சாஸ்த்ரத்தை வெளி இட்டு அருளி ,
அந்த சாஸ்திர அப்யாசம் அநேக யோக்யதா சபேஷமாய்-சிரகால சாத்யமுமாய் இருக்கையாலே ,
துஷ்கரமாய் இருக்கிற படியை திரு உள்ளம் பற்றி-,
தாத்ருச யோக்யதா நிரபேஷத்வாதிகளாலே , ஸூகரமாய் ,சேதன நிஷ்க்ருஷ்ட வேஷ விஷயமான-
திரு அஷ்டாஷர ப்ரஹ்ம வித்யயை ஸ்வயமேவ வெளிப் படுத்தின அளவிலும்-கார்ய கரம் ஆகாமையாலே,
ஓலைப் புறத்தில் செல்லாத ராஜ்யத்தை எடுத்து விட்டு-செலுத்திக் கொள்ளும் ராஜாக்களைப் போலே
தாமே சென்று திருத்தக் கடவோம் என்று- ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாத்வ அவதார முகேன ,
இவர்கள் இருக்கிற இடத்தில்-தான் வந்து திருத்தப் பார்த்த இடத்திலும் ,ஒருவரும் திருந்தக் காணாமையாலே

விஜாதீயரான நம்மால் ஒரு படி யாலும் இவர்களைத் திருத்தப் போகாதாய் இருந்தது .-.
இனி இணைக்கு பார்யை இட்டு மிருகம் பிடிப்பாரைப் போலே-சஜாதீயரை கொண்டே கார்யம் கொள்வோம் என்று அறுதி இட்டு
அதற்க்கு-ஆஆம் முதல்வரை உண்டாக்குகைக்காகா சர்வ பூத ஸூ ஹ்ருத்தான தன்னுடைய நிர்கேதுஹ பிரசாதத்தாலே-,
எங்கும் பார்த்து இலக்கு காணாமல் வாரா நிற்க
அந்த பார்வை தனக்கு பள்ள மடையான தென் திசை யான அளவிலே-
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து – திருவாய் –2-6-8— என்கிற படியே
ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறி-நித்ய சம்சாரயாய் போகிற இவர் மேல் பட,
அந்த நிர்ஹேதுக கடாஷ விசேஷ லப்த திவ்ய ஞான பக்திகரான ஆழ்வார்-

தத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை விசத விசததர விசத தமமாக அனுபவித்து-
அவ் அனுபவ பரிவாக ரூபேண பேசுகிற பாசுரமானது
சோக வேக ஜனிதமான -மாநிஷோத் -யாதி ஸ்லோகம்–
(மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வம் அகம ஸாஸ்வதீஸ்ஸமா –யத் க்ரௌஞ்ச மிதுநா தேகம் அவதீ காம மோஹிதம்–பாலா -2-15-)
பிரம்மா வின் பிரசாதத்தாலே
சர்வ லக்ஷண உபேதமான பிர பந்தமாய் தலைக் கட்டிற்று-
இதி தானும் திராவிட வேததயா விஸ்தீர்ணமாய் ,அநேகார்த்த பிரதி பாதகமாய் இருக்கையாலே-
இதில் தாத்பர்யார்தம் சர்வர்க்கும் பிரதி பத்தி விஷயமாகை அரிது என்று பார்த்து-,
இதில் அர்த்த விசேஷங்களையும் ,இவற்றில் ஆழ்வார் திரு உள்ளக் கருத்தின் பிரகாரத்தையும்-,
இவ் ஆச்சார்ய ருசி பரிகிருஹீதமான அர்த்தமே எல்லாருக்கும் தஞ்சம் என்னும் அத்தையும்-,
இவர் தம்முடைய பரம கிருபையினாலே ,பிரகாசிப்பியா நின்று கொண்டு-,
ஆசார்ய பரம்பரா ப்ராப்தமான இவ் அர்த்தங்கள் எல்லோருக்கும் பிரதிபத்தி யோக்யமாம் படி-
அதி ஸங்க்ரஹ அதி விஸ்தரமாக இவ் ஆச்சர்ய ஹிருதய பிரபந்த முகேன அருளிச் செய்கிறார்-

ஆத் யஸ்ய ந குலபதே -ஸ்தோத்ர ரத்னம் -5- என்கிற படியே வைதிக சந்தானத்துக்கு பிரதம ஆச்சார்யான ஆழ்வார்-
அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்களில் அவருடைய திரு உள்ளக் கருத்துகளைச் சொல்லுகையாலே-இறே
இப் பிர பந்தத்துக்கு ஆச்சார்ய ஹிருதயம் என்று நிரூபகம் ஆய்த்து.

இப் பிரபந்தத்தில் இவர் அருளிச் செய்கிற வாக்யங்கள் எல்லாம் அருளிச் செயல் சந்தைகள் சேர்த்து-அருளிச் செய்கிறது —
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்கள் பேசின திவ்ய ஸூக்திகள் ஆகையாலே-
ஆப்த தமமுமாய் அத்யந்த போக்யமுமாய் இருக்கிற இதுவே தமக்கு அநவரத அபிமதம் ஆகையாலும் ,-
முகம் அறிந்தவன் கோத்த முத்து பெரு விலையனாம் போலே சந்தைகளே தாம் சேர்த்த சாதுரியாலே-
அருளிச் செயலில் ரசஞ்ஞருக்கு இதில் அர்த்தத்திலும் காட்டிலும் சப்தம் தானே
மிகவும் இனிதாய் இருக்கும்-என்னும் அபிப்ப்ராயத்தாலும் –
ஆகையால் இப் பிரபந்தம் சப்த அர்த்தங்கள் இரண்டின் ரசத்தாலும் விசேஷ ஜனன மநோ கரமாய் இருக்கும்-

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-