ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் – சூர்ணிகை 2-15 ..

சூரணை -2
இந்த விவேகத்துக்கு பலம் என்பதை சொல்கிறது மேல்-

விவேக பலம் வீடு பற்று-

அதாவது இப்படி அவன் கொடுத்த சாஸ்திர ஜன்ய ஞானத்தாலே
நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு பலம்
த்யாஜ்யத்தை விடுகையும்
உபாதேயத்தை பற்றுகையும் என்கை-

த்யாக ஸ்வீகாரம் என்னாதே வீடு பற்றுகை என்கையாலே
வீடு முன் முற்றவும்–1-2-1-
அற்று இறை பற்று–1-2-5-
என்று ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை உள் கொண்டு அருளிச் செய்தமை தோற்றுகிறது-
(பரித்யஜ்யா மயா லங்கா )

—————————————————————————————————————————————————————————————–

சூரணை -3
த்யாஜ்ய உபாதேயம் தான் எவை என்ன சொல்லுகிறது மேல்-

த்யஜ்ய உபாதேயங்கள் ஸுக துக்கங்கள்-
(வீடு பற்றுதல் -என்றதைச் சொல்லாமல் த்யாஜ்ய உபாதேயங்கள் -பர்யாய சப்தங்கள் )

அதாவது -ஸுகீ பவேயம் துக்கி மா பூவம்-என்று சர்வருக்கும்
துக்கம் அநிஷ்டமாய் ஸுகம் இஷ்டம் ஆகையாலே
துக்கம் த்யாஜ்யம் ஸுகம் உபாதேயம் என்கை-

————————————————————————————————————————————————————————

சூரணை -4
இவை தான் கர்ம அனுகுணமாக நின்ற நின்ற நிலைகளிலே உண்டாகையாலே
இவற்றின் பரம அவதியை சொல்லுகிறது மேல்-

இவற்றுக்கு எல்லை இன்பு துன்பளி பன்மா மாயத்து அழுந்துகையும்
களிப்பும் கவர்வும் அற்று பேர் இன்பத்து இன்புருகையும்-

அதாவது துக்கத்துக்கு பரம அவதி -இன்பு துன்பளி-திருவாசிரியம் -6– -என்று தொடங்கி
(இன்பு துன்பளி தொல் மா மாய பிறவியில் நீங்கா பல் மா மாயத்து அழுந்தும் –திருவாசிரியம் -6)
ஸுக துக்க அவாஹங்களாய் அநாதியாய் துஸ்தரமாய் இருந்துள்ள
பிரகிருதி சம்பந்த நிபந்தனமான ஜன்மங்களில் நின்றும் ஒருகாலும்
நீங்காமைக்கு உருப்பானவையாய்
பல வகை பட்டு இருப்பனவாய்
அகப்பட்டார் தப்ப அரிதா மவையாய்
இன்னமுது-திருவாய் மொழி -7-1-8– என்று தோன்றி
(இன்னமுது எனது தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த முன்ன மாயம் எல்லாம் –திருவாய் மொழி -7-1-8-)
எத்தனையேனும் அறிவுடையாரையும் கலங்கப் பண்ணுகையாலே
ஆச்சர்யங்களாய் இருந்துள்ள
சப்தாதி விஷயங்களில் அகப்பட்டு
அழுந்துமா -என்கிற படி
அனந்த க்லேச பாஜனமான-ஜிதந்தா- சம்சாரத்தில் அழுந்துகை-

சுகத்துக்கு பரம அவதி
களிப்பும் கவர்வும் அற்று -என்று தொடங்கிச் சொல்லுகிற
(களிப்பும் கவர்வும் அற்று பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று ஒளிக் கொண்ட சோதி மயமாய் –திருவாய் -2-3-10 -)
அல்ப அஸ்திரத் வாதி தோஷ துஷ்டமான விஷய லாபத்தாலே வரும் கர்வமும்
தத் அலாபத்தாலே வரும் க்லேசமும்
கழிந்து ஷட் பாவ விகாரங்களும் -அஸ்தி ஜாயதே இத்யாதி -நீங்கி
சுத்த சத்வ தயா பிரகாசமாய் இருக்கிற அப்ராக்ருத விக்ரகத்தை பெற்று
அந்தமில் பேர் இன்பம்-திருவாய் –10-9-11-என்கிற படி
(வந்து அவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை -திருவாய் –10-9-11-)
அபரிமித ஆனந்த மயமான பரமபதத்திலே அடியார்கள் குழாங்களை உடன் கூடி
சுழி பட்டோடும் சுடர் சோதி வெள்ளத்து இன்புற்று-திருவாய் -8–10–5-
(வழி பாட்டோட அருள் பெற்று மாயன் கோல மலரடிக் கீழ் சுழி பாட்டோடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்று –திருவாய் -8–10–5-)
என்கிற படி
அநவரத பகவத் அனுபவத்தாலே ஆனந்த நிர்பரனாய் இருக்கை-

கவர்வுடன் கூடிய களிப்பு இங்கு -அங்கு ஸ்வரூப ஆவிர்பாவம் -கர்மம் அற்று –
இயற்கையான ஆனந்தம் -சுத்த சத்வ மயம் -அப்ராக்ருதம் -அம்ருத சாகரத்தில் நிமக்நராய் அங்கு அன்றோ

இதுக்கு மேலே ஏழு படிக்கட்டுக்கள் காட்டி அருளுகிறார் –
அர்த்த பஞ்சக ஞானம் -ஞாதவ்ய பஞ்சக ஞானம் -அறிந்து கொள்ள வேண்டிய ஐந்தும் -நிரதிசய ஆனந்த ஹேது
ஞாதவ்ய பஞ்சக அஞ்ஞானம் -சம்சாரத்துக்கு ஹேது
சத்வம் -அசத்வம்-அடுத்த படி –
இவற்றுக்கு ஹேது ஜென்ம ஜாயமான கால கடாக்ஷம் இருப்பதும் இல்லாமலும்
கடாக்ஷத்துக்கு அடி கிருபா-கர்மமும்
அநாதிகால அவித்யா / ஸுஹார்த்தம் இவற்றுக்கு காரணம் –
இங்கு சாஸ்த்ர ஞானம் -மேலே சொன்னது அர்த்தபஞ்சக ஞானம் இருப்பதும் இல்லாமையும் —
சர்வ பூத ஸுஹார்த்தம் -கிருபா -கடாக்ஷம் -சத்வ குணம் -ஞானம் -மோக்ஷம்
அவித்யா -கர்மம் -ஜென்மம் -சத்வம் -அஞ்ஞானம் -அனந்த கிலேச பாஜநம்-இப்படி படிக்கட்டுக்கள்
இவற்றுக்கு அடி -அசித் அயன சம்பந்தம் இவற்றுக்கு மூலம் –
இப்படி ஏழையும் அருளிச் செய்கிறார் –
அசித் சம்பந்தமும் அயன சம்பந்தமும் நித்யம் அநாதி –
அசித் சம்பந்தம் அந்தத்துடன் கூடியது
ஒழிக்க ஒழியாத நவவித சம்பந்தம் அவனுடன் தானே –

———————————————————————————————————————————–

சூரணை-5
ஏவம் பூத துக்கமும் சுகமும் இவனுக்கு உண்டாக ஹேது என்ன சொல்லுகிறது மேல்-

அநந்த க்லேச நிரதிசய ஆனந்த ஹேது
மறந்தேன் அறியகிலாத உணர்விலேன் ஏணிலேன் அயர்த்து என்றும்
உய்யும் வகை நின்ற ஒன்றை நன்கு அறிந்தனன்
உணர்வினுள்ளே ஆம் பரிசு என்றும்
சொல்லுகிற ஞாதவ்ய பஞ்சக ஞான -அஞ்ஞானங்கள் –

அதாவது சம்சார சாகரம் கோரம் அநந்த க்லேச பாஜனம் -ஜிதந்தா -1–என்கிற
சம்சார ஆரப்ய ப்ரயுக்த அனந்த துக்க ஹேது
மறந்தேன் உன்னை முன்னும் -என்கிற பர விஷய அஞ்ஞானமும்
(மறந்தேன் உன்னை முன்னும் மறந்த மதியால் மனத்தால் இருந்தேன் எத்தனையும் அதனால்
இடும்பைக் குழியில் பிறந்தே ஏய்த்து ஒழிந்தேன் -பெரிய திருமொழி -6-2-2–)
என்னை அறியகில்லாதே -என்கிற ஆத்ம விஷய அஞ்ஞானமும்
(யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -திருவாய் 2-9 -9)
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன் -என்கிற விரோதி விஷய அஞ்ஞானமும்
(கோடிய மனத்தால் சினத்தொழில் புரிந்து திரிந்து நாயினத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால் -பெரிய திருமொழி -1-6-6-)
பிறவி நோய் அறுப்பான் ஏணிலேன் இருந்தேன் -என்கிற உபாய அஞ்ஞானமும்
(பிறவி நோய் அறுப்பான் ஏணிலேன் இருந்தேன்- பெரிய திருமொழி -1-6-1-)
ஆழி அம் கையானை ஏத்தாது அயர்த்து -என்கிற புருஷார்த்த விஷய அஞ்ஞானமும்-
(கரந்துருவின் அம்மானை அந்நான்று தொடர்ந்த ஆழி அம் கையானை ஏத்தாது
அயர்த்து -பெரிய திருவந்தாதி -82 )
ஜ்ஞாதவ்யார்த்த பஞ்சக ஞான அபாவம்-

நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸுக பாவைக லக்ஷணா–ஸ்ரீ விஷ்ணு புராணம் –6 -5–59 -என்கிற
பகவத் பிராப்தி ரூப மோஷ ப்ரயுக்த நிரதிசய ஸுக ஹேது
(ஸூக பாவைக லக்ஷணம் -பகவத் பிராப்தி ரூபம் -நிரதிசய ஆனந்தம் -ஸ்ரீ வைகுண்டம் ஸ்தானம் –
பகவத் பிராப்தி ரூப மோக்ஷ பிரயுக்த-நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவைக லக்ஷணம் -துக்கம் கலசாத -ஆனந்தம் )
நின்னை நெஞ்சில் உய்யும் வகை உணர்ந்தேன் -என்கிற பர விஷய ஞானமும்
(இவையாய நின்னை நெஞ்சில் உய்யும் வகை உணர்ந்தேன் -பெரிய திருமொழி -6-3-6-)
நின்ற ஒன்றை உணர்ந்தேன் -என்ற ஆத்ம விஷய ஞானமும்-
(அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆம் அவை நன்கு அறிந்தனன்—திருவாய் -5-7-8-)
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆம் அவை நன்கு அறிந்தனன்-என்ற விரோதி விஷய ஞானமும்
அவனது அருளால் உறல் பொருட்டு என் உணர்வின் உள்ளே நிறுத்தினேன் -திருவாய்-8-8-3–என்கிற உபாய விஷய ஞானமும்
ஆம் பரிசு அறிந்து கொண்டு -என்கிற புருஷார்த்த விஷயம் ஆகிற ஞானமும்
(மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து ஆம் பரிசு அறிந்து கொண்டு –திருமாலை -38-)
ஆகிய இவை ஜ்ஞாதவ்யார்த்த பஞ்சக ஞானம் என்கை-

இத்தால் ஞாநான் மோஷ அஞ்ஞானாத் சம்சார -ஆகையாலே
பிராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம்
பிராப்துஸ்ச பிரத்யக் ஆத்மன
பிராப்து உபாயம் பலம் பிராப்தே
ததா பிராப்தி விரோதி ச
வதந்தி சகலா வேதாஸ் ச இதிகாச புராண கா
முனய ச மகாத்மானோ வேத வேதார்த்த வேதின–ஸ்ரீ ஹாரீத சம்ஹிதை –
என்கிற படியே சகல சாஸ்திர தாத் பர்யமாய்
ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு அவஸ்ய ஞாதவ்யமான அர்த்த பஞ்சகத்தையும்
அறியாமையும் அறிகையுமே சம்சார மோஷங்களுக்கு ஹேது என்ற தாயிற்று-

———————————————————————————————————————————————————————————————————————————–

சூர்ணிகை -6
இவ் வஞ்ஞானாதிகளுக்கு அடி எது என்ன சொல்லுகிறது மேல்-

இவற்றுக்கு காரணம் இரண்டில் ஒன்றினில் ஒன்றுகைகள்-

அதாவது இவ் அர்த்த பஞ்சக அஞ்ஞானத்துக்கு காரணம்
முத்திறத்து வாணியத்து இரண்டில் ஒன்றுகை ஆகிய ரஜஸ் தமஸ் பிரசுரதை-
(முத்திறத்து வாணியத்து இரண்டில் ஒன்றும் நீசர்கள் மத்தராய் மயங்குகின்றது -திருச்சந்த -68)

இவ் அர்த்த பஞ்சக ஞானத்துக்கு காரணம்
முக் குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில் ஒன்றுகை ஆகிய சத்வ பிரசுதை என்கை-
(ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி முக் குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில் ஒன்று
நின்று அங்கு இரு பிறப்பு அறுப்பதோர் அறிவரும் தன்மை –திரு வெழு கூற்று இருக்கை )

ரஜஸ் தமச்கள் அன்யதா ஞான விபரீத ஞான ஹேதுவாய்
சத்வம் யதா ஞான ஹேதுவாய் இறே இருப்பது-

அங்கு தான் சுத்த சத்வம் மிஸ்ர சத்வம்-ரஜஸ் தமஸ் கலந்த இங்கு -அதுவும் த்யாஜ்யம்

——————————————————————————————————————————————————————————————————————————–

சூர்ணிகை-7
இவற்றுக்கு நிதானம் எது என்ன சொல்லுகிறது மேல்-

சத்வ அசத்வ நிதானம் இருள் தரும் அமலங்களாக வென்னும்
ஜன்ம ஜாயமான கால கடாஷங்கள்-

சத்வ நிதானம் இருள் தரும் வென்னும்
ஜன்மம்
ஜாயமான கால கடாஷங்கள்-
அசத்வ நிதானம் அமலங்களாக வென்னும் ஜாயமான கால கடாஷங்கள்-

அதாவது
சத்வ இதரங்களான ரஜஸ் தமஸ்களுக்கு நிதானம்
இருள் தரும் மா ஞாலத்தில் இனி பிறவி நான் வேண்டேன் –வாட்டாற்றான் அடி வணங்கே-என்கிற
அஜ்ஞான அவஹமான சம்சாரத்தில் ஜன்மம் –
அவிவேக தின்முகம் -துக்க வர்ஷினி –சம்சாரம் –ஸ்ரீ ஆளவந்தார்

சத்வத்துக்கு நிதானம் –
ஜாயமானம் ஹி புருஷம் யாம் பச்யேத் மது ஸூதன சாத்விகஸ் சது விஞாயேஸ் ச வை மோஷார்த்த சிந்தக-மோக்ஷ தர்மம்-
என்கிற படியே ஜாயமான காலத்திலேயே –அவன் கண்களால் கமலக்கண்ணன் –அமங்கலங்களாக விளிக்கும் -திருவாய்-1-9-9–என்கிற
நிரமலத்வகரமான பகவத் கடாஷம் என்கை-
இந்த ஸ்லோகத்தில் நான்கு படிகளும் உண்டே -கடாக்ஷம் தொடங்கி மோக்ஷ அர்த்த சிந்தக –
அங்கண் மா ஞாலம் பாசுரம் அர்த்தம் -த்யான ஸ்லோகம் இதுவே
பூதாத்தி ரகு நந்தன -பூதராக்கின நெடு நோக்கு -அசுத்தி போக்கினை கடாக்ஷங்கள்-

————————————————————————————————————————————————————————–

சூர்ணிகை-8
இவை தனக்கு மூலம் எது என்ன சொல்கிறது மேல்-

இவற்றுக்கு மூலம் இரு வல் அருள் நல் வினைகள்-

இரு வல் வினை -பாப புண்ய ரூப வலிய கர்மாக்கள்
அருள் நல் வினை -கிருபா மூலம் வரும் ஸூஹ்ருதம் –இவனும் அறியாதே சாஸ்திரமும் அறியாதே —
வரவாறு ஒன்றும் இல்லாமல் வெறிதே அருள் செய்வான்

அதாவது
இஜ் ஜென்மத்துக்கு மூலம்
சார்ந்த இரு வல் வினை-
சார்ந்த இரு வல் வினைகளும் சரிந்து மாய பற்று அறுத்து தீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி
வீடு திருத்துவான் – திருவாய்-1-5-10–என்று
ஆத்மா உடன் பிரிக்க ஒண்ணாத படி பொருந்தி கிடக்கிற
பிரபலங்களான புண்ய பாபங்கள்-

இக் கடாஷத்துக்கு மூலம்
தொல் அருள் நல் வினை–
தொல் அருள் நல் வினையால் சொலக் கூடுங்கோல் தோழிமீர்காள் தொல் அருள்
மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நாமம்-திருவாய்-5-9-10-
என்கிற அவனுடைய ஸ்வாபாகிக கிருபை ஆகிய ஸூஹ்ருதம் என்கை-
தொல் அருள் பூர்வ ஸூஹ்ருதம் -கிருபையால் நம் தலையில் போடுகிறார் அன்றோ

இரு வல் லருள் நல் வினைகள் என்றது
இரு வல் வினையும் அருள் நல் வினையும் என்ற படி-

————————————————————————————————————————————————————————-

சூர்ணிகை-9
இவை தன்னுக்கு அடி என்ன சொல்லுகிறது மேல்-

கர்ம க்ருபா பீஜம் பொய் நின்ற அருள் புரிந்த என்கிற
அவித்யா சௌஹார்த்தங்கள்-

நிதானம் மூலம் பீஜம் நிமித்தம் அடி -பர்யாய சப்தங்ககள்

அதாவது கர்மத்துக்கு பீஜம்
பொய் நின்ற ஞானம்-திருவிருத்தம் 1– என்ற அவித்யை-

கிருபைக்கு பீஜம்
அருள் புரிந்த சிந்தை -அடியார் மேல் வைத்து -இரண்டாம்-59
நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து
வேம்பின் பொருளை நீர்மையாயினும் பொன்னாழி பாடென்று அருள் நீர்மை தந்த அருள் -இரண்டாம் -58-
-என்கிற சௌஹார்தம் என்கை-

ஈஸ்வரஸ்ய ச சௌஹார்தம் -என்று இவ் ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு அவன் கிருஷி
பண்ணுகையில் இழிகைக்கு மூல காரணமாக சௌஹார்தத்தை சொல்லிற்று இறே-
ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -யாத்ருச்சிக ஸூஹ்ருதம் -விஷ்ணோர் கடாக்ஷம் -அத்வேஷம் -ஆபிமுக்யம் –
சாத்விக சமாகமம்—ஆச்சார்ய அபிமானம் மூலம் விஷ்ணு பிராப்தி
கீழ் மேல் ஆறு படிகள் இவற்றைக் குறிக்கும்
இஸ் சௌஹார்தம் அடியாக ஆயிற்று இவ் ஆத்மா விஷயமாக
அவன் திரு உள்ளத்தில் இரக்கம் பிறப்பது-

—————————————————————————————————————————————————————————————-

சூர்ணிகை -10
இவ் அவித்யா சௌஹார்தங்களுக்கு அடி என்ன சொல்லுகிறது மேல்-

ஏதம் நிமித்தம் முன்னமே முதல் முன்னமே யான
அசித் அயன அநாதி சம்பந்தங்கள்-

ஏதத் சப்தத்தாலே இரண்டையும் பராமர்சிக்கிறது
அதாவது
அவித்யைக்கு நிமித்தம்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே
(யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும் மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -திருவிருத்தம் -95-)
என்கிற அநாதியான அசித் சம்பந்தம்-

சௌஹார்தத்துக்கு நிமித்தம்
அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே-
(சார்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே –திருவாய் -2-3-5-)
என்று அநாதியான அயன சம்பந்தம் என்கை
அயன சப்தத்தாலே ஈஸ்வரனை சொல்கிறது
நாராயணன் இறே —

ஆக
அநாதி அசித் சம்பந்தம் அடியாக அவித்யையாய்
அதன் அடியாக புண்ய பாப ரூப கர்மமாய்
அது அடியாக அஜ்ஞான ஹேதுவான ஜென்மமாய்
அது அடியாக ரஜோ தமஸ் அவிருத்தயாய்
அது அடியாக அர்த்த பஞ்சக ஞான அபாவமாய்
அது அடியாக அஜ்ஞாநாத் சம்சார என்கிற படியே சம்சார துக்கம் வரும்-

அநாதி அயன சம்பந்தம் அடியாக
பகவத் சௌஹார்த்தம் உண்டாய்
அது அடியாக கிருபை உண்டாய்
அது அடியாக விசேஷ கடாஷம் உண்டாய்
அது அடியாக சத்வ விருத்தி உண்டாய்
அது அடியாக அர்த்த பஞ்சக ஞானம் உண்டாய்
அது அடியாக ஞானான் மோஷம் -என்கிற படியே
மோஷ ஸுகம் உண்டாம் என்று ஆய்த்து-

——————————————————————————————————————————————————————————————————————

சூர்ணிகை– 11
இவ் உபய சம்பந்தமும் ஆத்ம வஸ்துவுக்கு செய்யும் அவற்றை சொல்லுகிறது மேல்-

இவை கிட்டமும் வேட்டு வேளானும் போலே ஒண் பொருள் பொருள் அல்லாதவை
என்னாதே நானிலாத யானும் உளன் ஆவான் என்கிற ஸாம்யம் பெற
தின்றூதி அந்தமும் வாழ்வும் ஆகிற ஹானி சத்தைகளை உண்டாக்கும்-

இவை கிட்டம் போலே -ஒண் பொருள் என்னாதே நானிலாத என்கிற ஸாம்யம் பெற
தின்று அந்தம் ஆகிற ஹானியை உண்டாக்கும்-

இவை வேட்டு வேளானும் போல பொருள் அல்லாதவை என்னாதே யானும் உளன் ஆவான் என்கிற
ஸாம்யம் பெற ஊதி வாழ்வும் ஆகிற சத்தையை உண்டாக்கும்-

அதாவது
அசித் சம்பந்தம்
தன்னோடு சேர்ந்த மாணிக்கத்தை ஒளி அற தின்று உரு அழித்து தன்னை போலே
ஆக்கும் கிட்டம் போலே –
(எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள்-திருவாய் –1-2-10-)
அந் நலத்து ஒண் பொருள் -என்கிற விலக்ஷண ஜ்ஞான குணகமாய்
ஸூயம் பிரகாசமான வஸ்து என்று இதன் சீர்மை பாராதே-
(இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு -1-2-4-)-இல்லது-என்றும்-
யன்நாஸ்தி – ஸ்ரீ விஷ்ணு புராணம் -2–12–37- என்றும்
சொல்லுகிற தன்னோடே-நானிலத முன் எலாம்-திருச்சந்த –65 -என்கிற ஸாம்யம் பெரும் படியாக ஞானம் லேசம் அற தின்று
அந்தமும் வாழ்வும் என்கிற வற்றில் அந்தம் ஆகிற ஹானியை உண்டாக்கும்
அசந்நேவ ச பவதி-தைத்ரியம்-என்கிற படியே சத்தா ஹானியை பண்ணும் என்கை-

அயன சம்பந்தம்
கீட பேசக்ருதா ருத்த குட்யாந்தர அனுசிந்தயன் சம்ப்ரம்பபய யோகேன விந்ததே தத் ஸ்ரூபதாம்-என்கிற படியே
ஏதேனும் ஒரு கீடத்தை கொண்டு வந்து வைத்தூதி
ஸ்வ சாம்யாபந்னம் ஆக்கும் வேட்டு வேளானைப் போலே
பொருள் அல்லாத என்னை-திருவாய்-5-7-3–என்கிற படியே
ஞான அபாவத்தாலே அவஸ்து சப்த வாச்யமாய் கிடக்கிற
இதின் சிறுமை பாராதே ஸ்வரூபேண விபுவான தன்னோடு
பரமம் ஸாம்யம் உபைதி-முண்டகம் –3-1-3–என்கிறபடியே
உள்ள உலகு அளவும் யானும் உளன் ஆவான் -(வினைப்படலாம் விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால்
உள்ள உலகு அளவும் யானும் உளன் ஆவன் என் கொலோ உலகு அளந்த மூர்த்தி உரை –பெரிய திருவந்தாதி –76- )என்று
ஜ்ஞனத்வாரா வரும் விபுத்வ ஸாம்யம் பெறும்படி
தன் நிறமாக ஊதி வாழ்வு ஆகிய சத்தையை உண்டாக்கும் என்கை-
தன்நிறம் -உண்டாக்கும் என்றது அஷ்ட குணங்களில் சாம்யம் என்றபடி
பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல்லுயிர்க்கு எல்லாம் அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான்
அரங்க மா நகர் அமர்ந்தானே –பெரிய திருமொழி -5-7-2-என்கிறபடி வாழ்வாகிற இருப்பை உண்டாக்கும் –
சந்த மேனம் ததோ விது-தைத்ரியம்- என்று பகவத் ஞான அனந்தரம்
ஆத்ம சத்தா சித்தியாக சொல்லிற்று இறே-

———————————————————————————————————————————————————————–

சூரணை 12
இப்படி அநாதியாக சொன்ன உபய சம்பந்தமும்
ஆத்மாவுக்கு நித்தியமாய் இருக்குமோ -அந்தம் உண்டோ -என்கிற சங்கையில் சொல்லுகிறது மேல்-
(மோக சாந்த்யர்த்தமாக -நித்ய ஆத்மா -கர்மா பற்று இன்றி செய்ய வேண்டியதை ஸ்ரீ கீதையில் இரண்டாவது அத்யாயம்
கர்மத்தால் சரீரம் -காரணம் போனால் கார்யம் போகுமே -கர்மாதீனமே தேகம் கவலைப்படாதே என்று அருளிச் செய்கிறார் -)

ஓன்று
கூடினதாய்
பற்று அறுக்க மீண்டு ஒழிகையாலே
பழ அடியேன் -என்னும் அது ஒன்றுமே ஒழிக்க ஒழியாதது-

அதாவது
அசித் சம்பந்தம் -பெரும் துயர் இடும்பையில் பிறந்து கூடினேன் –
என்கையாலே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் அன்றிகே வந்தேறியாய்
-வினை பற்று அறுக்கும் -என்ற ஒரு சர்வ சக்தி ஸ வாசனமாக போக்க
அடைந்த வரு வினையோடு அல்லல் நோய் பாவம் மிடைந்து அவை மீண்டு ஒழிய –
என்கிற படி நிவ்ருத்தமாய் விடுகையாலே
திரு மாலே நானும் உனக்கு பழ அடியேன் -என்னும் படி
அநாதியாய் இருக்கிற சேஷ சேஷி பாவ ரூப பகவத் சம்பந்தம் ஒன்றுமே
-உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்கிற படி
ஈஸ்வரனாலும் சேதனனாலும் கழிக்கப் பார்த்தாலும்
கழிக்கப் போகாது என்கை-
வந்தேறி இல்லையே —

இத்தால்
அசித் சம்பந்தம் ஆகந்துகமாய் கர்மோபாதிகம் ஆகையாலே
அநித்யமாய் இருக்கும்
அயன சம்பந்தம்
அநாதியாய் நிருபாதிகம் ஆகையாலே
நித்தியமாய் இருக்கும் என்றது ஆயிற்று-

ஆனால் ஆகந்துகமான இத்தை அநாதி என்பான் என் என்னில்
வந்தேறின காலத்துக்கு அடி தெரியாமையாலே
அநாதி என்று பிரமாணங்கள் சொல்லுகையாலே
ஒரு நாள் வரையிலே பகவத் பிரசாதத்தாலே அது
கழிய காண்கையாலே வந்தேறி என்னும் இடம் நிச்சிதம் இறே-

———————————————————————————————————————————————————————————————————-

சூரணை -13
இவ் அயன சம்பந்தமே கீழ் சொன்ன சாஸ்திர பிரதானத்துக்கு
ஹேது என்கிறார் மேல்-

இந்த உதர தரிப்பு திரை குணிய விஷயம் ஆனவற்றுக்கு பிரகாசம்-

அதாவது
இந்த நாராயணத்வ பிரயுக்தமான குடல் துவக்கு
திரை குணிய விஷயா வேதா -என்கிற படி சத்வ ரஜஸ் தமோ
குண த்ரய வச்யரான சேதனரை விஷயமாக உடைய வேதங்களை
பிரகாசிப்பைக்கு ஹேது என்ற படி
தம பிரசுரராயும் ரஜோ பிரசுரராயும் சத்வ பிரசுரராயும் இருக்கும்
சேதனர் உடைய ருசி அனுகுணமான
புருஷார்த்த
தத் சாதனங்களை இறே
பூர்வ பாகத்தில் பரக்க சொல்கிறது
ஆகையால் திரை குணிய விஷயம் ஆனவை என்கிறது-

இத்தால் -நீர்மையினால் அருள் செய்தான் -என்று கீழ் சொன்ன
சாஸ்திர பிரதானத்துக்கு பிரதான ஹேது – சம்பந்தம்- என்றது ஆயிற்று-

————————————————————————————————————————————————————————————————————————-

சூரணை-14
இப்படி சம்பந்தம் அடியாக செய்தான் ஆகில்
மோஷ ஹேதுவான சாஸ்திரங்களையே காட்டாதே
ஐகிக பார லௌகிக போக சாதனவிதயா கதயா பந்த ஹேதுவான
சாஸ்திரங்களையும் காட்டுவான் என் என்ன சொல்லிகிறது மேல்-

வச்தலையான மாதா பிள்ளை பேகணியாமல் மண் தின்ன விட்டு
பிரத் ஔஷதம் இடுமா போலே எவ் உயிர் க்கும் தாயாய் இருக்கும்
வண்ணமான இவனும் ருசிக்கு ஈடாக பந்தமும் பந்தம்
அறுப்பதோர் மருந்தும் காட்டும் இறே-

அதாவது
வாச்தல்யை யுக்தையான பெற்ற தாய் ஆனவள்
மண்ணை ஆசை பட்ட பிள்ளை பேகணியாமல் முந்துற
மண்ணைத் தின்ன விட்டு பின்னை அதுக்கு மாற்று மருந்து இடுமா போலே
எவ் உயிர்க்கும் தாயோன் -என்றும் தாய் இருக்கும் வண்ணமே -என்றும்
(திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் எல்லா எவ் உயிர்க்கும் தாயோன் தான் ஒருவனே -திருவாய் -1-5-3- -என்றும்
தாய் இருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்று இருத்தி உய்யக் கொண்டான் -பெரிய திருமொழி -11-6-6- -என்றும்)
சொல்லுகிற படி சகல ஆத்மாக்கள் அளவிலும் மாத்ருவத் வச்தலனான இவனும்
சேதனர் உடைய ருசிக்கு ஈடாக பந்தங்களையும் தர்சிப்பித்து ,பின்னை
பந்த நிவ்ருத்தக பேஷஷம் ஆனவற்றையும் தர்சிப்பிக்கும் இறே என்கை-

இத்தால்
இப்படி செய்தது சம்பந்த பிரயுக்த வாச்தல்ய கார்யம் ஆகையாலே
சம்பந்த கொத்தை வாராது என்றது ஆயிற்று-

—————————————————————————————————————————————————————————-

சூரணை -15
இப்படி வச்தல்யத்தால் செய்தான் ஆகையிலும்
குண த்ரய வச்யரான சேதனருக்கு ருசி அனுகுணமான பல
சாதனங்களை விதிக்கிற பந்ந்தக சாஸ்திரங்களையும் தர்சிப்பித்தால்
அவர்கள் சம்சரித்தே போகைக்கு உடல் ஆகாதோ என்ன அதுவும்
க்ரமேண அவர்கள் ஈடேற இட்ட வழி என்கிறார் மேல்-
(மஹா கிரம -676-திரு நாமம்-க்ரமேண படிக்கட்டுகளை கட்டி வைத்து இருப்பவர் )

அது தானும்
ஆஸ்திக்ய
விவேக
அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தி
பார தந்த்ர்யங்களை உண்டாக்கின வழி-

அதாவது
மோஷைக சாஸ்திரம் மாத்ரம் தர்சிப்பியாதே சேன விதி முதலான
பந்தக சாஸ்திரங்களையும் தர்சிப்பித்து தானும் தம பிரசுரராய்
அர்த்தார்த்த ஜனத்துக்காக பரஹிம்சா சீலராய் திரிகிற நாஸ்திகரை குறித்து
மோஷத்தை விதித்தால் ,அவர்களுக்கு அது ருசியாமையாலே
அந்த பரஹிம்சா ரூபமான அபிசார கர்மத்தை
சியேனந அபிசரன் யஜதே—ஆபத்ஸ்தம்ப சூத்ரம் -என்று விதித்து தத் பல சித்தியாலே
அவனுக்கு சாஸ்திரம் உண்டு என்கிற ஆஸ்திக்யத்தை உண்டாக்கி-

ஆஸ்திகன் ஆன பின்பு
ஜியோதிஷ்டோமேன ஸ்வர்க காமோ யஜதே–இத்யாதிகளாலே
ஸ்வர்க்காதி புருஷார்த்த தத் சாதனங்களை விதித்து
அவ் வழியாலே பிரகிருதி ஆத்ம விவேகத்தை உண்டாக்கியும்
இப்படி பிரகிருதி ஆத்ம விவேகம் பிறந்த பின்பு ஆத்ம போகத்துக்கு வழி காட்டி-
அவ் வழியாலே அந்ய சேஷ நிவ்ருத்தியை உண்டாக்கி-

அநந்தரம்
பரமாத்மா போக வைலஷண்யத்தையும்
தத் பிராப்தி சாதன பக்தியையும் காட்டி அவ் வழியாலே
ஸ்வ ஸ்வாதந்த்ர்யா நிவ்ருத்தியையும் உண்டாக்கியும்-

அநந்தரம்
உபாயாந்தர துஷ் கரத் வாதிகளாலே தளரும் அளவில்
ஸ்வ யத்ன நிவ்ருத்தி ரூப பிரவ்ருதியில் மூட்டி
ஸ்வ ரூப யாதாத்மா வேஷமான பார தந்த்ர்யத்தை உண்டாக்கியும்-
இப்படி கிரமத்திலே ஈடேறுகைக்கு இட்ட வழி என்ற படி-

இவை கிட்டமும் வேட்டு வேளானும் போலே -சூர்ணிகை 11- தொடங்கி
இவ் வளவாக சம்சார மோஷ காரண பரம்பரைகளிலே சரம அவதிகளான
அசித் அயன சம்பந்தங்கள் ஆத்ம வஸ்துவுக்கு செய்யுமவைகளும்
அதில் அசித் சம்பந்தம் அநித்தியம்
அயன சம்பந்தம் நித்யம் என்றும்
அந்த அயன சம்பந்தம் கீழ் சொன்ன சாஸ்திர பிரதானத்துக்கு ஹேது என்றும்
அதில் மோஷைக சாஸ்திரம் அன்றிக்கே பந்தக சாஸ்திரத்தையும் தர்சிப்பித்து
வச்தலன் ஆகையாலே சேதன ருசி அனுகுணம் ஆக வேண்டும் என்றும்
அது தானும் கிரமத்திலே அவர்களை உஜ்ஜீவிப்பிக்கைக்கு இட்ட வழி என்றும் சொல்லிற்று ஆயிற்று-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading