ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் – சூர்ணிகை 17/18/19/20..

சாஸ்த்ர சார பேதங்கள் -17-முதல் -38- வரை
சூரணை 17-

ஆக சர்வேஸ்வரன் தன் கிருபையால் சம்சாரி சேதனரை உஜ்ஜீவிப்பதற்க்காக
சாஸ்திரத்தையும் சாஸ்திர தாத் பர்யமான திரு மந்தரத்தையும் வெளி இட்டான் என்றது கீழ் ..

இவை இரண்டையும் வெளி இட்ட பிரகாரம் என் ? அவற்றுக்கு விஷயம் எது ?
என்னும் ஆகாங்ஷையிலே தத் பிரகாரங்களையும் தோற்றுவித்துக் கொண்டு
விஷயங்களையும் சொல்லுகிறது மேல்-

முனிவரை இடுக்கியும்
முந்நீர் வண்ணனாயும்
வெளி இட்ட சாஸ்திர
தாத பர்யங்களுக்கு
விசிஷ்ட
நிஷ்க்ருஷ்ட
வேஷங்கள் விஷயம்-

அதாவது -இருள்கள் கடியும் முனிவர்-திருவாய் -10-7-7– -என்கிற ஸ்ம்ருதி கர்த்தாக்களான
(இருள்கள் கடியும் முனிவர் -ஸ்ருதி–ஸ்மர்த்தா -ஸ்மர்த்தர்
மனன சீலர் -ராம ஷேம மனன சீலத்வம் பரத்வாஜருக்கு -ஜகத் ரக்ஷண சிந்தை முனியே -அவனையே சொல்லுவார் )
வியாஸாதி ரிஷிகளை கிருஷ்ணத் த்வைபாயனம் வியாசம் வித்தி நாராயணம் பிரபும்
கோஹ்யன்ய புண்டரீகாஷாத் மகா பாரத க்ருத் பவேத் –என்கிற படியே
தானாகச் சொல்லலாம் படி அந்தர்யாமியாய் எடுத்து நின்று தன் முகேன வெளி இட்ட சாஸ்தரத்துக்கு
சேதனருடைய தேக விசிஷ்ட வேஷம் விஷயம்-

வதரி யாஸ்ரமத்துள்ளானை கரும் கடல் முந்நீர் வண்ணனை -என்கிற படியே
ஸ்ரீ பதரி ஹாஸ்ரமத்திலே ஸ்வேன ரூபேண நின்று வெளி இட்ட
சாஸ்திர தாத் பர்யமான திரு மந்த்ரத்துக்கு சேதனருடைய
நிஷ்க்ருஷ்ட வேஷம் விஷயம் என்கை-

இத்தால் சாஸ்த்ரத்தில் தேஹத்திலே நோக்கு
தாத் பர்யத்திலே ஸ்வரூபத்திலே நோக்கு -என்றது ஆய்த்து-

——————————————————————————————————————————————————————————————

சூரணை -18-

ஏவம் பூதமான இவை இரண்டும் சர்வ அதிகாரமோ
அதிகிருதா அதிகாரமோ என்ன சொல்லுகிறது மேல்-

தோல் புரையே போம் அதுக்கு பழுதிலா யோக்யதை வேணும்
மனம் உடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு
நானும் நமரும் என்னும் படி சர்வரும் அதிகாரிகள்-

அதாவது விசிஷ்ட வேஷம் விஷயம் ஆகையாலே
ஆந்தரமான ஸ்வரூபத்தில் ஊற்றம் இன்றியே
மேல் எழ தேஹத்திலே நோக்காய் -(மேம் பொருள் போக விட்டு உண்டே )நடக்கிற சாஸ்தரத்துக்கு
பழுதிலா ஒழுகலாறு -என்ற படி நெடுக போகிற வம்ச பிரவாகத்திலே
உத்பத்தியிலே ஆதல்
ஆசாரத்திலே ஆதல்
ஒரு பழுது அற்று இருக்கிற யோக்யதை வேணும்-

கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர்-திருவாய் -10-5-1- என்றும்
ஸ்ரத்தைவ காரணம் பும்ஸாம் அஷ்டாஷா பரிக்ரஹே என்றும் சொல்லுகிற படியே
(ஆசை உடையார்க்கு எல்லாம் இத்தையே தமிழ் படுத்தி கிருபா மாத்ர பிரசன்னாச்சார்யார் -நம் ஸ்வாமி )
ஸ்ரத்தா மாத்திரமே அமைந்த ஸ்வரூப ஸ்பர்சி யான தாத் பர்யத்துக்கு
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாரயணமே -என்று சொல்லும் படி
யோக்ய அயோக்ய விபாகமற சர்வரும் அதிகாரிகள் என்கை-

இத்தால் சாஸ்திர தாத் பர்யங்களின் அதிக்ருதாதிகாரத்வ சர்வாதிகாரத்வங்களை
தத் ஹேது சஹிதமாகச் சொல்லிற்று ஆயிற்று-

———————————————————————————————————————————————————————————————————————————-

சூரணை-19-

இனிமேல் இந்த சாஸ்திர நிஷ்டராயும்
தாத்பர்ய நிஷ்டராயும் இருக்கும் முமுஷுக்கள் படிகளைச் சொல்லுகிறது-

சாஸ்திரிகள் தெப்பக் கரையரை போலே
இரண்டையும் இடுக்கி பிறவிக் கடலை நீந்த
சாரஜ்ஞர் விட்டத்தில் இருப்பாரைப் போலே
இரு கையும் விட்டு கரை குறுகும் காலம் எண்ணுவார்கள்-

அதாவது
ஆத்மா வா அரே த்ரஷ்டவ்யாஸ் ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்யாசி தவ்ய–ப்ருஹதாரண்யம் –
ஆத்மேத் யேவோபாசீத–ப்ருஹதாரண்யம் –
ஒமித் யாத்மானாம் த்யாயத-முண்டகம் –
என்று சம்சார நிவ்ருத்தி பூர்வக பகவத் பிராப்தி சாதனமாக
பகவத் உபாசனத்தை விதித்து
அம்ருதஸ் யைஷ சேது-முண்டகம் –
பலமதே உபபத்தே-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-8-
என்று பகவானே அதற்க்கு பல பிரதானனாகவும்
சொல்லும் சாஸ்த்ரத்தில் நிஷ்டர் ஆனவர்கள்
ஆறு நீஞ்சுவார் தெப்பத்தை ஒரு கையிலே இடுக்கி
தாங்களும் ஒரு கை துழாவுமா போலே
ஸ்வ யத்னமும் தத் சாத்திய பகவத் கிருபையும் ஆகிய உபயத்தையும்
அவலம்பித்து கொண்டு -பிறவி கடல் நீந்துவார்க்கே -திருவாய் -2-8-1–என்கிற படியே
சம்சார சாகரத்தை கடக்க தேட-

ஸ்வ யத்ன நிஷேத பூர்வகமாக ஆத்மாவின் பகவத் ஏக உபாயத்தை
பிரதி பாதிக்கிற சாஸ்திர சாரமான திரு மந்த்ரஜ்ஞர் ஆனவர்கள் ஓடம் ஏறி னவர்கள்
தீரகமனார்தமான ஸ்வ யத்னத்தையும் தெப்பத்தையும் கை விட்டு -கரை குறுவது எப்போது -என்று
பார்த்து கொண்டு அதன் விட்டத்திலே இருக்குமா போலே
சம்சார ஆர்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம் விஷ்ணு போதம் விநாநாந்யத் கிஞ்சித் அஸ்தி
பாராயணம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம்-என்கிற படியே
அக்கரையும் இக்கரையும் ஊடுருவ நின்று சம்சார சமுத்ரத்தை கடத்தும்
வைகுந்தன் என்பதோர் தோணியை-நாச்சியார் -5–4– சம்சார நிஸ்தாரமாகப் பற்றி
தத் ஞான சக்தியாதி அனுசந்தானத்தாலும்
ஸ்வ பாரதந்த்ர்யாதி அனுசந்தானத்தாலும்
நிர் பரர் ஆகையாலே இரண்டு கையும் விடுமா போலே
ஸ்வ யத்ன ரூப உபாசனாதியையும்
தத் சாத்திய பகவத் கிருபையையும்
அவலம்பிக்கையை விட்டு
கேவல பகவத் கிருபையே உத்தாரகம் என்று அத்யவசித்து
கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ -திருவாய் -6–9–9 -என்றும்
ஆக்கை விடும் பொழுது எண்ணே–திருவாய் -1–2–9-என்று சொல்லுகிற படியே
பகவத் பிராப்தி ஆகிய கரையை குறுகைக்கு ஈடான கால சிந்தனை
பண்ணா நிற்பார்கள் என்கை-

இத்தால் சாஸ்த்ரஜ்ஞர் உடையவும் சாரஜ்ஞர் உடையவும்
பிரபத்தி க்ரமம் சொல்லிற்று ஆயிற்று-

————————————————————————————————————————————————————–

சூரணை -20-

இவர்களுக்கு இவ் ஆகாரங்கள் உண்டாகுகைக்கு அடி இன்னது என்கிறது-

இவை
ஸ்வரூபத்தை உணர்ந்து உணர்ந்து உணரவும்
உணர்வைப் பெற ஊர மிக உணரவும் உண்டாம்-

அதாவது சாஸ்த்ரிகள் ஆனவர்களுக்கு
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து
உருவியந்த இந் நிலைமை உணர்ந்து உணர்ந்து உணரிலும்–திருவாய் -1-3-6- என்கிற படியே
ஆத்ம ஸ்வரூபத்தை ஜ்ஞப்த்தி மாத்ரம் அன்றிக்கே
நித்ய ஞான குணகமாய்
அந்த ஞானத்தாலே எங்கும் ஒக்க வியாபித்து
தேஹத்தில் காட்டில் வேறு பட்டு இருக்குமதாய்
அந்த ஜ்ஞாத்ருத்வ பலாயாத கர்த்ருத்வ போக்த்ருத்வ சஹிதமாய்
பகவத் சேஷமாய் இருக்கும் என்று ஸ்ரவண மனனங்களாலே சாஷாத் கரிக்கவே
ஸுவ யத்னத்தாலே சம்ஸார நிஸ்தரணம் பண்ண தேடுகை யாகிற இது உண்டாம்-

சாரஞ்ஸ்தஞரானவர்களுக்கு ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை தர்சிப்பைக்கு உடலாக
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும்
பழுதே யாம் உணர்வை பெற ஊர்ந்து திருவாய் -8–8–3-–என்கிற படியே
வைஷயிக ஞானமும் பிராணனும் சரீரமும்
மற்றும் பரிசேத்யமான பிராகிருதி விகாரங்களும் ,
பிரக்ருதியும் ஹேயம் என்னும் அறிவை பெரும் படி
நிர்ஹேதுகமாக ஈஸ்வரன் நடத்த
மெய்ம்மையை மிக உணர்ந்து-திருமாலை -38 -என்கிறபடியே
ஆத்ம ஸ்வரூபத்தை
தேஹாதி விலக்ஷணமாய்
ஞான ஆனந்த ஸ்வரூபமாய்
ஞாத்ருவாதி குணகமாய்
ததீய சேஷத்வ பர்யந்த தத் சேஷத்வ யுக்தமாய்
தத் காஷ்டையான பார தந்த்ர்ய யோக்யதை ஏக
வேஷமாய் இருக்கும் என்றே உணரவே
ஸ்வ பரத்தை அவன் மேல் புகட்டு ஸ்வ யத்ன ரஹிதையராய் இருக்கிற இது உண்டாம் என்கை-

இத்தால் இவர்கள் உடைய ஸ்வரூப ஜ்ஞான ஆகார தார தம்யமே
கீழ் சொன்ன ஆகாரங்கள் இவர்களுக்கு உண்டாகுகைக்கு ஹேது என்றது ஆயிற்று-

ஆக
முனிவரை இடுக்கியும் -சூரணை -17 -என்று தொடங்கி
இவ் வளைவாக சாஸ்திர தாத் பர்யங்களின்
விஷய பேதமும்
அதிகாரி பேதமும்
அவ் அதிகாரிகளின் பிரதி பத்தி பேதமும்
அதுக்கு அடியான ஜ்ஞான ஆகார தார தம்யமும்
சொல்லப் பட்டது-

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading